மாசி மஹா சிவராத்திரி 2024 மார்ச் மாதம் எட்டாம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வருகிறது... அதை பற்றி சற்று விரிவாக பார்ப்போம்....
சிவராத்திரி, அதாவது சிவபெருமானின் பிரியமான இரவு. ஆண்டு முழுவதும் மொத்தம் 12 மாத சிவராத்திரி விரதங்கள் உள்ளன. சிவன் மற்றும் பார்வதி தேவியின் திருமணம் பால்குன் மாதத்தின், கிருஷ்ண பக்ஷத்தில், பதினான்காம் நாளில் நடந்தது. பாரம்பரியத்தின் படி, இந்த நாளில் போலேநாத் முதன்முறையாக சிவலிங்க வடிவில் காட்சியளித்தார். அதனால் தான் ஒவ்வொரு மாதமும் கிருஷ்ண பக்ஷத்தின் பதினான்காம் நாளில் மகிழ்ச்சி, செழிப்பு, சந்ததி மற்றும் வெற்றிக்காக மாசி சிவராத்திரி விரதம் அனுசரிக்கப்படுகிறது. லட்சுமி தேவி, சரஸ்வதி தேவி, பார்வதி தேவி மற்றும் ரதி தேவியும் மாதாந்திர சிவராத்திரி விரதத்தைக் கடைப்பிடித்தனர். 2024 புத்தாண்டில் மாசிக் சிவராத்திரி விரதங்களின் தேதிகள் மற்றும் முக்கியத்துவத்தைக் காண்போம்.
மாசிக் சிவராத்திரி 2024 பட்டியல்: இந்த பண்டிகை கொண்டாடப்படும் அனைத்து தேதிகளையும் பின் வரும்.
மாசிக் சிவராத்திரி 2024 தேதிகள்
1.ஜனவரி 9, 2024, செவ்வாய் - பௌஷ் மாசிக் சிவராத்திரி
2.பிப்ரவரி 8, 2024, வியாழன் - மக மாசிக் சிவராத்திரி
3.மார்ச் 8, 2024, வெள்ளி - மஹா சிவராத்திரி, ஃபால்குன் சிவராத்திரி
4.ஏப்ரல் 7, 2024, ஞாயிறு - சைத்ர மாசிக் சிவராத்திரி
5.மே 6, 2024, திங்கட்கிழமை - வைஷாக மாசிக் சிவராத்திரி
6.ஜூன் 4, 2024, செவ்வாய் - ஜ்யேஷ்ட மாசிக் சிவராத்திரி
7ஜூலை 4, 2024, வியாழன் - ஆஷாட மாசிக் சிவராத்திரி
8.ஆகஸ்ட் 2, 2024, வெள்ளி - ஷ்ரவன் மாசிக் சிவராத்திரி
9.செப்டம்பர் 1, 2024, ஞாயிறு - பாத்ரபாத மாசிக் சிவராத்திரி
10.செப்டம்பர் 30, 2024, திங்கள் - அஷ்வின் மாசிக் சிவராத்திரி
11.அக்டோபர் 30, 2024, புதன் - கார்த்திகை மாசிக் சிவராத்திரி
12.நவம்பர் 29, 2024, வெள்ளி - மார்கழி மாசிக் சிவராத்திரி
மாசிக் சிவராத்திரி விரதத்தின் முக்கியத்துவம்:
பதினான்காம் நாள் விரதம் அனுஷ்டிப்பதால் சிவபெருமானின் அருட் பலன்கள் கிடைக்கும் என்று சிவபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிவராத்திரி என்பது சிவன் மற்றும் சக்தியின் சங்கமத்தைக் குறிக்கும் பண்டிகையாகும். மத நம்பிக்கைகளின் படி, சிவபெருமானின் அருள் விரதத்தை கடைபிடிக்கும் பக்தர்களின் அதிர்ஷ்டத்தை மாற்றும். திருமணத்தில் சிரமங்களை எதிர்கொள்பவர்கள் அவருடைய ஆசீர்வாதத்தால் தடைகளை சமாளிப்பார்கள் என்று நம்பப்படுகிறது.
மாசிக் சிவராத்திரி இரவில் ஏன் பூஜை செய்யப்படுகிறது:
புராண நம்பிக்கைகள் மற்றும் சிவபுராணத்தின் படி, ஒவ்வொரு மாத சிவராத்திரி விரதத்தின் நாளிலும் இரவில் நான்கு பிரகாரங்களில் (நான்கு பாகங்கள்) சிவனை வழிபடுவது மரபு.
பார்வதி தேவியுடன் சிவபெருமான் திருமணம் சதுர்த்தசி இரவில் நடந்தது. இரவில், பக்தர்கள் சிவ தியானத்தில் கவனம் செலுத்த முடியும், இது நள்ளிரவு நேரத்தை சிவலிங்க வழிபாட்டிற்கு சிறந்த நேரமாக மாற்றுகிறது.
JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
புதன், 10 ஜனவரி, 2024
மஹா சிவராத்ரி 08:03: 2024
இளையாற்றங்குடி மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
இளையாற்றங்குடி மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் உள்ள திருவிடைமருதூரில் ஸ்வாமிகள் அவதரித்தார். அவருடைய தந்தையார் பெயர் சோஷத்ரி சாஸ்திரிகள். தந்தை ரிக் வேதத்திலும் அதன் பிரயோகங்களிலும் வல்லவர் சிறந்த சிவபக்தர். திருவிடைமருதூரில் உறையும் மஹா லிங்க ஸ்வாமியின் அருளால் தனக்கு மகன் பிறந்ததால் அவனுக்கு மஹா லிங்கம் என்றே பெயர் சூட்டி மகிழ்ந்தார். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கு ஏற்ப பிற்காலத்தில் பிரகாசிக்கப் போகும் மஹா லிங்கமும் குழந்தை பருவத்திலேயே சிறந்து விளங்கினார். அவன் முகத்தில் தெரிந்த கம்பீரமான தேஜஸ் கண்களில் தெரிந்த ஒளி எந்த ஒரு காரியத்தையுமண சுறுசுறுப்புடன் செய்து முடிக்கும் சாதுர்யம் போன்றவை பலராலும் வியந்து பேசப்பட்ட விஷயங்கள்! ஐந்து வயது முடிந்த பிறகு உபநயனம் செய்து வைக்கப்பட்டது. இளமைப் பருவத்தில் தன் தந்தையாரிடமே வேதத்தைக் கற்றார். தினமும் செய்ய வேண்டிய ஆசார அனுஷ்டானங்களை முறையாகச் செய்து வந்தார். அவருடைய கீர்த்தி திருவிடைமருதூரில் மட்டுமில்லாமல் பல இடங்களிலும் பேசப்பட்டது.
அப்போது காஞ்சி சங்கர மடத்தில், 64வது பீடாதிபதியாக இருந்தவர் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் (1814-1851)வேதம், சாஸ்திரம் போன்றவற்றில் சிறந்து விளங்கிய திருவிடைமருதூர் மஹா லிங்கம் என்ற இளைஞனைப் பற்றி இந்த ஆசார்யருக்கு தகவல் தெரிந்திருந்தது. அவர் 1846ல் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரிக்குத் தாடங்கபிரதிஷ்டை [தாடங்கம் என்பது காதல் அணியும் ஆபரணம்] நடத்தினார். இந்த நிகழ்வுக்கான வைதீக விஷயங்களை முன்னின்று கவனிக்கும் படி மஹா லிங்கத்தைப் பணித்தார் ஆசார்யர். அதை சிரமேற் கொண்டு செய்து முடித்தார் மஹா லிங்கம். இத்தனை சின்ன வயதில் இப்படிப்பட்ட ஒரு பெரும் பணியை ஏற்று நடத்தி முடித்த மஹா லிங்கத்தின் சாதுர்யம் பலரையும் அவர் பக்கம் திரும்ப வைத்தது. அதற்கு ஆசார்யரும் விதி விலக்கல்ல. எத்தனையோ பண்டிதர்கள், மன்னர்கள், பிரமுகர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்ட ஒரு நிகழ்வின் பிரதான வைதீக காரியத்தை இளைஞன் கச்சிதமாக முடித்து விட்டானே! பலரும் பிரமிக்கும் படி பாரட்டுகளைப் பெற்று விட்டானே என்று சந்சோஷப்பட்டார் 64 வது பீடாதிபதி. அப்போது அவர் ஒரு தீர்மானத்துக்கும் வந்தார். நமக்குப் பிறகு இந்த பீடத்தை அலங்கரிக்க இவரே தகுதியானவர். இவரால் தான் மடத்தன் பெருமைகள் மேலும் உயரும் என்று தீர்மானித்தார். மஹா லிங்கத்தின் பெற்றோரை வரவழைத்துப் பேசி சம்மதம் வாங்கினார். ஒரு சுபதினத்தில் மஹா லிங்கத்துக்கு சந்நியாச தீட்சை வழங்கினர். காஞ்சி காமகோடி மடத்தின் சம்பிரதாயப்படி என்னென்ன போதிக்க வேண்டுமோ அனைத்தையும் போதித்து அருளினார் 64 வது பீடாதிபதி. மஹா லிங்கத்துக்கு மஹா தேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என்று தீட்சா நாமம் சூட்டினார். 1851ல் கும்பகோணம் ஸ்ரீ மடத்தில் 64 வது பீடாதிபதி சமாதி எய்த பின் 65 வது பீடாதிபதியாகப் பொறுப்பேற்றுக்கொண்டார். மஹா லிங்கம் என்கிற மஹா தேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்.
ஆலயங்கள் நிறைந்து நிற்கும் புண்ணிய பூமி. சைவமும், வைணவமும் சரிசமமாக சஞ்சாரம் செய்யும் சமத்துவ பூமி. மொத்தத்தில் ஆன்மிகம் பல்கிப் பெருகி மனதைப் பரவசமாக்கும் புனித பூமி காஞ்சி மாநகர். எண்ணற்ற திரு கோவில்கள் இந்த நகரம் முழுதும் தரிசிக்கக் கிடைக்கின்றன. அருள்மிகு காஞ்சி காமாட்சியின் திருச்சந்நிக்கும் ஸ்ரீவரதராஜ பெருமாளின் தரிசனத்துக்கும் இறையருள் பெறும் நாட்டத்துடன் எந்நேரமும் கூடும் பக்தர்கள் கூட்டத்துக்கு அளவே இல்லை. காஞ்சிக்குப் பெருமை சேர்ப்பதே ஸ்ரீ சங்கரமடம் தான். ஆதிசங்கரரால் நிர்மாணிக்கப்பட்ட இந்த மடத்துக்கு அவரே முதல் ஆசார்யராக விளங்கினார். பேதங்கள் மலிந்திருந்த அந்தக் காலத்தில் இந்து மதத்தின் பெருமைகளை அனைவருக்கும் எடுத்துக்கூறி சமய உணர்வுகளை ஊட்டினார். இந்து மதம் ஏன் உயர்ந்தது என்பதை விளங்கினார்.
அவரில் துவங்கி இன்று 69 வது காஞ்சி காமகோடி பீடாதிபதியாக ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளும் 70 வது காஞ்சி காமகோடி பீடாதிபதியாக சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளும் திகழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு முன் 68 வது பீடாதிபதியாக திகழ்ந்தவர்தான் கலியுக தெய்வம் என்று நாடே போற்றும் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என்கிற மகா பெரியவர். இந்த புனிதமான மடத்தில் 65 வது பீடாதிபதியாக விளங்கியவர் மஹா தேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் காலம் கி.பி.1851-1890. திருவிடைமருதூரில் அவதரித்தவர். காரைக்குடிக்கு அருகில் உள்ள இளையாற்றங்குடியில் நாட்டுக்கோட்டை செட்டியார்களுக்கு சொந்தமான நித்யகல்யாணி சமேத கயிலாயநாதர் ஆலயத்துக்கு அருகே அதிஷ்டானம் கொண்டுள்ளார். நாட்டுக்கோட்டை நகரத்தார் கொண்டாடும் ஒன்பது சிவாலயங்களுள் இது பிரதானமான ஸ்தலம். இதை இளையாத்தங்குடி என்று சொல்வார்கள். புதுக்கோட்டையில் இருந்து சுமார் 42 கி.மீ. தொலைவில் புதுக்கோட்டையில் இருந்து நமணசமுத்திரம் திருமயம் கீழச்செவல்பட்டி வழியாக இளையாற்றங்குடியை அடையலாம். கீழச்செவல்பட்டியில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் காரைக்குடியில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் பிள்ளையார்பட்டியில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் திருப்பத்தூரில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் நாட்டில் பல பகுதிகளுக்கும் யாத்திரையாகச் சென்று மக்களிடையே பல ஆன்மிகக் கருத்துக்களைப் போதித்து வந்த மஹா தேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். சிவகங்கை மற்றும் காளையார் கோவில் ஆகிய தலங்களையும் தரிசித்தார். அப்போது ஸ்வாமிகளைத் தரிசிக்க வந்த நகரத்தார் எங்கள் பகுதிக்கும் தாங்கள் எழுந்தருள வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ வாத்தியங்கள் முழங்க இளையாற்றங்குடி ஷேத்திரத்துக்கு வந்தார்.
ஸ்ரீ நித்யகல்யாணி சமேத கயிலாயநாதரை தரிசித்து விட்டு நகரத்தாரின் பக்தியையும் சேவையையும் பார்த்துப் பெரிதும் மகிழ்ந்தார். அதற்கேற்றார் போல் ஸ்வாமிகள் தங்குவதற்கும் அவருடைய சிவ பூஜைக்கும் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் கச்சிதமாகச் செய்திருந்தனர். ஸ்வாமிகள் பல நாட்கள் இங்கு தங்கியிருந்து தங்களுக்கு ஆசி வழங்கிச் செல்லும் படி வேண்டினர் நாட்டுக்கோட்டை செட்டியார் பெரு மக்கள். அவர்களது அன்பான வேண்டுகோளை ஏற்று நிரந்தரமாகவே அங்கு தங்கி விட்டார் ஸ்வாமிகள் என்பது தான் உண்மை. தனது ஜீவன் முக்தியடையப் போவது இங்கே தான் என்பதையும் இறைவன் சித்தத்தால் ஒரு கட்டத்தில் உணர்ந்து கொண்டார். மஹா தேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். அதற்கான ஒர் இடத்தையும் அவரே தேர்ந்தெடுத்தார் நகரத்தாருக்குச் சொந்தமான நிலத்தில் குறிப்பிட்ட ஒர் இடத்தைத் தேர்ந்தெடுத்து அதை அவர்களிடம் இருந்து கேட்டு வாங்கிய ஸ்வாமிகள் அந்த இடத்தில் தான் சமாதி கொண்டுள்ளார். ஸ்வாமிகள் இன்று இளைப்பு ஆறும் குடிதான் இளையாற்றங்குடி. காரணம் சிறு வயது முதல் அவர் சுற்றித் திரிந்த ஷேத்திரங்கள் ஏராளம். தனது இறுதிக் காலத்தில் அமைதியான சூழ்நிலையை விரும்பி இங்கே இளைப்பாற்றிக் கொண்டிருக்கிறார் என்பார்கள்.
தனக்குப் பிறகு ஒர் ஆசார்யரை நியமித்து விட வேண்டும் என்று விரும்பினார் ஸ்வாமிகள். உதயம்பாக்கத்தைச் சேர்ந்தவரும் பிரம்மசர்ய விரதம் காத்து வரும் பாலாற்றங்கரையில் வசித்து வந்தவருமான சுவாமி நாதன் என்ற இளைஞரைத் தேர்ந்தெடுத்து சந்நியாச தர்மப்படி தீட்சை வழங்கினார். பூஜை விதிகளையும் மடத்து சம்பிரதாயங்களையும் உபதேசித்ததுடன் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என்ற தீட்சா நாமத்தையும் அருளினார். இதையடுத்து இளைய மடாதிபதியாக பொறுப்பேற்ற ஸ்ரீ சந்திர சேகரேந்திர ஸ்வாமிகள் [மகா பெரியவர் அல்ல] மஹா தேவேந்திர ஸ்வாமிகளுக்குப் பணி விடை செய்து வந்தார். தான் சமாதி ஆகப் போகும் சில நாட்களுக்கு முன்னரே அதை சூசகமாக உணர்ந்து விட்டார் மஹா தேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். முக்காலமும் உணர்ந்தவர் ஆயிற்றே! சமாதி அடைவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் ஒரு மாலை வேளையில் இளையாற்றங்குடி கயிலாயநாதர் ஆலயத்துக்கு அருகில் உள்ள தோப்புகளையும் பிற பகுதிகளையும் சுற்றிப் பார்த்துக் கொண்டே வந்தார். ஒர் இடத்தை கடந்து செல்ல நேரிட்ட போது அங்கேயே அப்படி நின்றார்.
அவர் மனதில் ஏதோ ஒரு மின்னல் தோன்றியது. தனக்குப் பின்னால் பவ்வயமாக நடந்து வந்து கொண்டிருந்த தேவஸ்தானத்தின் டிரஸ்டியான செட்டியரசர் பிரமுகர் ஒருவரைத் தன்னருகே வருமாறு அழைத்தார். செட்டியார் ஓடோடி வந்து ஸ்வாமிகள் முன் வணங்கி நின்றார். முட்சொடிகள் புதர் போல் மண்டிக் கிடந்த அந்த இடத்தைச் சுட்டிக்காட்டி இந்த நிலத்தை எமக்குத் தருவீர்களா? என்று கேட்டார் ஸ்வாமிகள். எந்த நோக்கத்துக்காக அந்த இடத்தை ஸ்வாமிகள் கேட்கிறார் என்று செட்டியாருக்கு புலப்படவில்லை என்றாலும் ஸ்வாமிகளே வாய் விட்டு ஒரிடத்தைத் தருமாறு கேட்டு விட்டாரே. அவருக்குப் போய் செடி, கொடிகள் மண்டிப்போன இடத்தைத் தருவதா? சிவன் கோவிலுக்கு அருகே நல்ல இடமாகப் பார்த்துத் தரலாம். தினமும் தரிசனத்துக்குச் சென்று வருவதற்கும் அவருக்கு வசதியாக இருக்கும் என்று நினைத்து தன் ஆசையை ஸ்வாமிகளிடம் பவ்யமாகச் சொன்னார். ஆனால் ஸ்வாமிகள் இந்த இடம் தான் எமக்குத் தேவை. உங்களால் கொடுக்க இயலுமா? என்று கேட்டார். ஸ்வாமிகள் இப்படிக் கேட்டதும் மனம் உருகிய செட்டியார் தங்களின் விருப்பப்படியே நிறைவேற்றுகிறேன். கவலை வேண்டாம் ஸ்வாமி என்று சொன்னாரே தவிர ஸ்வாமிகளின் எண்ணத்தை அவரால் அறிந்து கொள்ள முடிய வில்லை. ஸ்வாமிகள் தனது இறுதி நாட்களில் இருக்கிறார் என்பதை செட்டியார் அப்போது அறிந்திருக்க வில்லை. மறு நாள்! ஸ்வாமிகளின் உடல் நலன் லேசாக பாதிக்கப்பட்டது.
மூன்றாம் நாள் 20.03.1890 அன்று ஸ்வாமிகள் முக்தி அடைந்தார். நாட்டுக்கோட்டை நகரத்தார் இன பிரமுகர்கள் உட்பட பலரும் மள மளவெனக் குவிந்தனர். இளையாற்றங்குடி என்கிற ஷேத்திரத்துக்குத் தனது வருகையால் ஒரு புதுப் பொலிவைக் கொடுத்தவர். மஹா தேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என்பதை அவர்கள் நன்றாகவே உணர்ந்திருந்தார்கள். அவருக்கு செய்ய வேண்டிய கடைசிக் காரியங்கள் முறையாக நடக்க வேண்டுமே என்கிற அக்கறையில் அனைவரும் கூடினர். குறிப்பிட்ட ஒரு நிலத்தை ஏன் விடாப்பிடியாகக் கேட்டார் ஸ்வாமிகள் என்பது இப்போது தான் தேவஸ்தான டிரஸ்டியான அந்த செட்டியாருக்குப் புரிந்தது!
நாட்டின் பல பகுதிகளால் இருந்தும் ஆன்மிகப் பெருமக்கள் குவிந்தனர். காஞ்சி மடத்தில் 63வது ஆச்சார்ய ஸ்வாமிகள் ஸித்தி ஆன செய்தியை எவரெவருக்குத் தெரிவிக்க வேண்டுமோ அனைவருக்கும் ஆட்கள் மூலம் தகவல் அனுப்பினார்கள் நகரத்தார் பெருமக்கள். கீர்த்தனங்கள் பாடப்பட்டன. நாம கோஷம் கூட்டமாக வெளிப்பட்டது. கயிலாய நாதர் கோவிலுக்கு வடக்குத் திசையில் உள்ள விரிவான ஒரு தோட்டத்தில் ஸ்வாமிகள் விரும்பிக் கேட்ட அதே இடம் தான் அதிஷ்டானம் அமைக்கப்பட்டது. ஸித்தி பெற்ற தினத்தில் இருந்து தொடர்ந்து ஒரு மண்டல காலத்துக்கு பூஜைகள் பாராயணங்கள் என்று வேத கோஷம் நிறைந்து காணப்பட்டது.
விஜயநகரம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கொல்லங்கோடு, கொச்சி போன்ற சமஸ்தானத்தில் பிரதிநிதிகள் மண்டலாபிஷேக காலத்தில் இளையாற்றங்குடிக்கு வந்திருந்து ஸ்வாமிகளுக்கு தங்கள் சமஸ்தான சார்பாக உரிய மரியாதையை செலுத்தி வணங்கினார்கள். ஏழைகளுக்குப் பல வகையான தானங்கள் வழங்கப்பட்டன. இறைத்திருப் பணியில் தங்களை பெரிய அளவில் ஈடுபடுத்திக் கொண்ட நகரத்தார் பெருமக்கள் பின்னாளில் ஸ்வாமிகளின் அதிஷ்டானத்தை திருக்கோவிலாக கட்டி பராமரித்து வருகிறார்கள்.
புது பெரியவா வரவுக்குப் பின் காஞ்சி மடத்தின் பெருமையும் புகழும் திக்கெட்டும் பரவியது. தினமும் நடக்கும் சந்திர மௌளீஸ்வர பூஜையைத் தவிர வேத பாராயணங்கள் விசேஷ ஹோமம் என மடத்தில் எப்போதும் மந்திர கோஷம் தான். வேள்விப் புகைதான். புது ஆசார்யரின் கீர்த்தி பற்றிக் கேள்விப்பட்டுப் பல பண்டிதர்களும் பொது ஜனங்களும் நாட்டின் பல பகுதிகளில் இருந்து புறப்பட்டு காஞ்சிக்கு வந்து அவரை தரிசனம் செய்தனர். எத்தனை நாட்களுக்குத் தான் மடத்தில் இருந்து கொண்டே எல்லாவற்றையும் கவனிப்பது எனவே ஷேத்திராடனம் புறப்பட விருப்பம் கொண்டார் ஸ்வாமிகள். மடத்தைச் சேர்ந்த பரிவாரங்களுடன் மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோவில், சிதம்பரம், விழுப்புரம் எனக் கிளம்பினார். செல்லும் இடத்தில் எல்லாம் சிறப்பான வரவேற்பு. புது ஆசார்யர் வருகிறார் என்றதும் அக்கம் பக்கத்துக் கிராமங்களிலிருந்து எண்ணேற்றோர் தரிசிக்க வந்தனர். ஆந்திரப் பிரதேசம், பூரி ஜகந்நாதர் திருக்கோவில், விஜயநகர சாம்ராஜ்ஜியம் எனப் பயணம் தொடர்ந்தது. மடத்துக்கு தானமாகப் பல கிராமங்களை எழுதித் தந்தனர். ஆந்திர மன்னர்கள் 03.07.1885 அன்று விஜயநகரத்துக்கு சென்றார் ஸ்வாமிகள். விஜயநகர ராஜாவான ஆனந்த கஜபதி மகாராஜா நகரத்து எல்லையிலேயே யானை, குதிரை, ராஜ பரிவாரம் ஆகியவை புடைசூழ வாத்தியங்கள் முழங்க பூர்ண கும்ப மரியாதையோடு வரவேற்று மஹானின் கால்களில் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தான். விஜயநகரத்திலேயே சாதுர்மாஸ்ய விரதத்தை மேற்கொண்டார். ஆந்திராவில் பிரபலமாகத் திகழ்ந்த ஜமீன்தார்களும் ராஜாக்களும் தங்களது ஊருக்கு ஸ்வாமிகள் எழுந்தருள வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் தூனி பார்லிகிமேடி பித்தாபுரம். பொப்பிலி வெங்கடகிரி போன்ற நகரங்களுக்கு விஜயம் செய்தார். கோதாவரி கிருஷ்ண ஆகிய புண்ணிய நதிகளில் ஸ்நானம் செய்து காளஹஸ்தியை அடைந்தார். காளஹஸ்தி மஹா ராஜாவின் உபசரிப்பை ஏற்றுக்கொண்டு காளஹஸ்தீஸ்வரரை தரிசித்தார்.
அதன் பின் சென்னை வழியாகக் காஞ்சிபுரத்தை அடைந்தார். சில நாட்களுக்குப் பிறகு யாத்திரை மீண்டும் தொடர்ந்து. திருப்பாதிரிப்புலியூர். தாஞ்சாவூர், தென் ஆற்காடு, திருச்சி, கோவை, கேரள தேசம் ஆகிய இடங்களுக்குப் பயணித்து சூழ்நிலைக்கு ஏற்றாவறு ஆங்காங்கு தங்கி பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.
அப்போது கும்பகோணம் வந்த ஸ்வாமிகள் மஹாமக நிகழ்வில் கலந்து கொண்டார். தனது வாழ் நாளில் தெற்கே ராமேஸ்வரத்தில் இருந்து வடக்கே காசி வரை நாட்டின் பல பகுதிகளுக்கு பாதயாத்திரையாகவும் பல்லக்கிலுமாகப் பயணித்து ஏராளமானோருக்கு ஆசிகளை வழங்கினார் மஹா தேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். திறமை எவரிடம் இருந்தாலும் அவருக்கு உரிய மரியாதை கொடுத்து கௌரவிக்க ஸ்வாமிகள் எப்போதுமே தயங்க மாட்டார். சிவபுராணம் கேட்பதில் ஸ்வாமிகளுக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. அதைப் பொருத்தமான நபர் பிரசாங்கம் செய்தால் வெகு சுவாரஸ்யமாகக் கேட்டு ரசிப்பார். அந்தக் காலத்தில் தஞ்சை மாவட்டத்தில் ரிஷி வந்தியம் என்னும் கிராமத்தில் வெங்கட்ராம ஐயர் என்பவர் வசித்து வந்தார். சத்தான பல விஷயங்களைக் கற்றுக் தேர்ந்த பழுத்த சிவபக்தர். தவிர மிராசுதாராகவும் இருந்தார். தனது பணிகள் போக எஞ்சிய நேரத்தில் உள்ளூர் அன்பர்களுக்கு சிவபுராண சொற்பொழிவு நிகழ்த்துவார். பக்தியுடனும் உருக்கத்துடனும் வெங்கட்ராம் ஐயர் நிகழ்த்தும் சிவபுராண உபன்யாசங்களைக் கேட்க நூற்றுக்கணக்கான பேர் திரளுவார்கள்.
மஹா தேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். வெங்கட்ராம ஐயரைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவருடைய சிவபுரணப் பிரசங்கத்தைக் கேட்க வெகுவாக ஆவல் கொண்டார். எனவே கும்பகோண மடத்தில் தான் தங்கியிருந்த நாட்களில் வெங்கட்ராம ஐயரை அங்கே வரச் செய்து சிவபுராண உபன்யாசம் செய்யுமாறு சொன்னார். வெங்கட்ராம ஐயரும் கும்பகோண மடத்துக்கு வந்து அங்கேயே சில நாட்களில் தங்கி தினமும் சொற்பொழிவு ஆற்றினார். உபன்யாச நாட்களில் தினமும் ஸ்வாமிகள் நேரில் வந்து அமர்ந்து உபன்யாசத்தைக் கேட்டு வந்தார். இது வெங்கட்ராம ஐயருக்குப் பெரும் சந்தோஷத்தைக் கொடுத்தது. சிவபூஜை செய்வதில் மிகவும் தேர்ந்தவர் மஹா தேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். அவர் சிவ பூஜை செய்யும் நேர்த்தியைக் கண்டு பண்டிதர்கள் பலரும் வியந்துள்ளனர். தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயருக்குப் பதினெட்டு வயதாக இருக்கும் போது ஸ்வாமிகள் சிவ பூஜை செய்யும் காட்சியை மனமாரக் கண்டு தரிசித்திருக்கிறாராம். அதோடு உ.வே.சாமிநாதனின் புராணப் பிரசங்கங்களையும் ஸ்வாமிகள் கேட்டுப் பராட்டி இருக்கிறாராம். ஸ்வாமிகள் இசையிலும், வேதத்திலும் அபார ஞானமும் புலமையும் உள்ளவர். வேத வித்துக்களையும் சங்கீத வித்வான்களையும் தகுந்த நேரத்தில் ஆதரித்து அவர்களுக்கு ஊக்கம் அளித்திருக்கிறார். ஸ்வாமிகளிடம் கொண்டிருந்த அபரிமிதமான அன்பின் வெளிப்பாட்டால் அவர் மேல் கீர்த்தனம் இயற்றியவர்கள் பலர். அவர்களுள் மைசூர் சதாசிவராவ், முத்துசாமி தீட்சிதரின் வம்சத்தவரான சுப்பராம தீட்சிதர், திருவாரூர் யக்ஞேஸ்வர ஆஸ்ரமி கவிகுஞ்சரா பாரதியார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
ஸ்ரீ மஹா தேவேந்திர சரஸ்வதி ஸ்வாமியின் திருக் கோவிலைத் தரிசிப்போமா?
ஸ்வாமிகளது பூத உடலை வைத்து அதன் மேல் ஒரு சிவாலயத்தை எழுப்பி உள்ளனர். எனவே ஒரு சிவ தலத்துக்கான பலி பீடம், நந்திதேவர் ஆகியவை இங்கே அமைந்துள்ளன. கருங்கல் திருப்பணி உள்ளே நுழைவதற்கு முன் ஒரு கல்வெட்டு அதில் அதிஷ்டானமும் அதைச் சேர்ந்த கட்டடங்களும் இளையாத்தங்குடி கயிலாயநாத ஸ்வாமி, நித்ய கல்யாணி அம்மை தேவஸ்தானத்துக்கு முற்றிலும் சொந்தமானது என்று குறிக்கப்பட்டுள்ளது. கைலி, சட்டை, பனியன் அணிந்து உள்ளே செல்லக்கூடாது. கருவறை பகுதி அத்தனை பவித்திரமானது. ஸ்வாமிகளின் சமாதியின் மேல் அமைந்துள்ளது லிங்கத் திருமேனி. அர்த்த மண்டபம், மஹா மண்டபம், பெரிய முன் ஹால் போன்றவை உள்ளன். மஹா மண்டபத்தில் விநாயகரும் தண்டாயுதபாணியும் வீற்றிருக்கிறார்கள். இதை அடுத்த அர்த்த மண்டபத்தில் இன்னொரு விநாயகரும் ஆதிசங்கரரும் தரிசனம் தருகிறார்கள்.
கருவறையில் காணப்படும் லிங்கத் திருமேனியின் பாணம், சாளக்கிராமத்தால் ஆனது. மடி மற்றும் ஆசாரம் காரணமாக இவருக்கான நைவேத்தியம் தினமும் குமுட்டி அடுப்பில் தான் தயராகிறது. பெரும்பாலும் நெய் கலந்த சாதம் அல்லது தயிர் சாத்தை ஸ்வாமிகளுக்கு நைவேத்தியம் செய்கிறார்கள். நகரத்தாரின் கட்டுப்பாட்டிலும் அருகிலும் இருக்கும் கயிலாயநாதர் ஆலயத்தில் இருந்து சிறிது அரிசி, வெல்லம், எண்ணெய் போன்றவை தினமும் அதிஷ்டானத்துக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த அதிஷ்டானத் திருக் கோவிலுக்கு1992, 2003ஆகிய வருடங்களில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. தினமும் நான்கு கால பூஜைகள் நடந்து கொண்டு இருகின்றன.
லிங்கத்திருமேனிக்கு அபிஷேக காலத்தில் திரவியம், தேன், பால், சந்தனம் போன்ற பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடக்கிறது. பிரதோஷ தினங்களில் நந்திதேவருக்கும், சதுர்த்தசியில் விநாயருக்கும், ஏகாதசி மற்றும் துவாதசியில் ஆதிசங்கரருக்கும் அபிஷேகங்கள் நடக்கின்றன. இங்கு சிறப்பாக நடந்து வரும் வேத பாடசாலையில் பதினைந்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கிருஷ்ண யஜுர் வேதம் பயின்று வருகிறார்கள். வேதம் படிக்கும் வித்துக்களைப் பார்த்தாலே அழகு தான்! பாடசாலையும் ஆலய அபிஷேகங்களையும் கவனித்து வரும் வருணகுமார சர்மா, ஏகாதசி, துவாதசி போன்ற சில தினங்களில் லிங்கத் திருமேனிக்குப் பட்டு வஸ்திரம் அணிவிப்பேன். மற்ற நாட்களில் காவி வஸ்திரம் தான். இங்கு பூஜை செய்வதற்கு மடியும் ஆசாரமும் மிக மிக அவசியம். சுத்த, பத்தம் இல்லாமல் உள்ளே போக கூடது. ஒரு வேளை அப்படிப் போனாலும் வாசல் நிலைப்படி நம் உச்சந்தலையில் இடித்து நமது சுத்தக் குறைவை உணர்த்தி விடும். ஸ்வாமிகளை ஆழ்ந்து தியானித்து தரிசிப்பவர்கள் அவருடைய சக்தியை இந்த சந்நிதியில் உணர முடியும். ஸ்வாமிகள் இன்றைக்கும் இங்கு மானசீகமாக இருக்கிறார். தன்னை வணங்கும் பக்தர்களைக் காத்து வருகிறார். பக்தர்கள் எவருமே இல்லாத போது சந்நிதியில் ஸ்வாமிகள் சிரிப்பது போன்ற சத்தத்தையும் பேசுவது போன்ற ஒலியையும் நான் அவ்வப்போது கேட்டதுண்டு. அந்த அனுபவங்களை நினைத்து மெய் சிலிர்க்கிறேன் என்றார் நம்மிடம். அதிஷ்டானம் மற்றும் வேத பாடசாலையின் தேவைகளை ஸ்ரீ காஞ்சி மடத்தின் மேற் பார்வையுடன் அவ்வப்போது கவனித்து வருகிறார்கள்.
அதிஷ்டானத்தை ஒட்டி வெளிப்பக்கம் ஒரு பிரமாண்ட வில்வ மரம் இருக்கிறது. மஹா தேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். இங்கே தங்கியிருந்த காலத்தில் இருந்தே இந்த வில்வ மரம் இருந்து வருகிறது. இதன் இலைகளை அவரே பறித்து ஸ்ரீ சந்திர மௌளீஸ்வரருக்கு பூஜை செய்வாரம். இது போன்ற உயர்வான வில்வ இலைகளை இது வரை சிவபூஜைக்குக் கிடைத்தில்லை என்பாராம் ஸ்வாமிகள். அந்த அளவுக்கு இந்த வில்வ மரத்தின் மேல் ஒர் ஈடுபாடு. காஞ்சி மகா பெரியவருக்கு மஹா தேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மேல் பெரும் அபிமானம் உண்டு. புதுக்கோட்டை பகுதிக்கு யாத்திரையாக வரும் போதெல்லாம் மறக்காமல் இளையாற்றங்குடிக்கு வந்து அதிஷ்டானத்தில் தங்கி, தியானத்தில் ஈடுபடுவது வழக்கம்.
1925ல் காஞ்சி மஹா பெரியவர் இனையாற்றங்குடிக்கு வந்த போது இங்கு வியாஸ பூஜை நடத்தி சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டார். தவிர மஹா தேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு ரொம்பவும் அபிமானமான வில்வ மரத்தடியில் ஒரு கொட்டகை போட்டு அதில் தங்குவாரம். வில்வ மரத்தை பிரதட்சணம் வருவாராம். ஸ்வாமிகளின் திருவடி பட்ட இந்த இடம் பவித்திரமானது என்று நெகிழ்வாராம். இந்த வில்வ இலைகளைக் கொண்டு ஸ்வாமிகளின் அதிஷ்டானத்தை பூஜிப்பாராம். பாரத தேசமெங்கும் புனித யாத்திரை மேற் கொண்டு எத்தனையோ திருத்தலங்களைத் தரிசித்து ஆன்மிக எழுச்சி ஏற்படுத்திய மஹா தேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் இன்றும் இளையாற்றங்குடியில் இளைப்பாறிக் கொண்டிருக்கிறார். இது அந்த மண்ணில் மைந்தர்கள் செய்த நற்பயனால் விளைந்தது என்றே தான் சொல்ல வேண்டும். நாட்டுக்கோட்டை நகரத்தார் இல்லை என்றால், வேதமும் இல்லை கோவிலும் இல்லை என்று காஞ்சி மஹா பெரியவர் அடிக்கடி சொல்வார்.
பூம்புகாரில் இருந்து சுமார் 400 வருடங்களுக்கு முன் இங்கு இடம் பெயர்ந்த அந்த நட்டுக்கோட்டை நகரத்தாரை ஆசிர்வதிக்க என்றே இந்த அதிஷ்டானம் அந்தப் பகுதியில் அமைந்தது போலும்!
நவராத்திரி
நவராத்திரியின் சிறப்புப் பற்றியும், இதை அனுஷ்டிக்க வேண்டிய முறை, கிடைக்கக்கூடிய பலன்கள் பற்றியும் தேவி மஹாத்மியத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. முன்னொரு காலத்தில் சும்பன், நிசும்பன் என இரு அசுரர்கள் இருந்தார்கள். அவர்கள் தெய்வங்களிடம் வரம் பல பெற்று, தங்களை அழிக்க யாருமில்லை என்று தலைக்கனம் பிடித்துத் திரிந்தார்கள். அவர்களது ஆட்சிக்காலத்தில் மக்கள் மிகவும் அல்லலுற்றனர். தவசீலர்களால் வேள்விகளைச் செய்ய முடியவில்லை. அனைவரும் இந்த இரு அரக்கர்களையும் கண்டு அஞ்சி நடுங்கினர். இனியும் இப்படியே போனால் மக்கள் தாங்கமாட்டார்கள் என்று எண்ணிய தேவர்கள், மஹா விஷ்ணுவிடமும், சிவனிடமும் முறையிட்டனர். அவர்கள் பிரம்மனையும் சேர்த்துக் கொண்டு, என்ன செய்வது என ஆலோசித்தனர். ஆண்கள் யாராலும் அந்த இரு அசுரர்களையும் வெல்ல முடியாது என்பது வரம். அதனால் தேவர்களும் மூவர்களும் அன்னை ஆதி சக்தியை நோக்கிப் பிரார்த்தித்தனர்.
மக்களின் துன்பம் கண்டு சகியாத அவளும் மிக அழகான மங்கையின் வடிவம் கொண்டு பூமிக்கு வந்தாள். அவளுடைய அழகுக்கு யாரும் நிகர் இல்லை என விளங்கினாள். பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரும் தங்களுடைய சக்திகளை எல்லாவற்றையும் ஒன்று திரட்டி அன்னைக்கு அளித்து விட்டு, சிலை என ஆனார்கள். அதே போல இந்திரனும் திக்குப் பாலர்களும் தங்களுடைய ஆயுதங்களை எல்லாம் அளித்து விட்டு சிலையாக நின்றார்கள். அப்படி அவர்கள் நின்றதால் தான் அதைக் குறிக்கும் வகையில் பொம்மைக் கொலு வைக்கும் பழக்கம் வந்தது. அன்னை அந்த ஆயுதங்களை பத்துக் கரங்களில் தாங்கி, போர்க்கோலம் பூண்டு சும்ப, நிசும்பர்களையும், அவர்களது படைத்தளபதிகளான மது, கைடபன், ரக்தபீஜனையும் அழித்து தர்மத்தை நிலைநாட்டினாள்.
அவள் வெற்றி பெற்ற தினமே விஜயதசமி. ஒன்பது நாட்கள் போர் விடாமல் நடந்தது. அதனாலேயே நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம். ஏன் ராத்திரி? ஒன்பது பகலில் கொண்டாடலாம் என்று கேள்வி எழுவது சகஜம். அந்நாட்களில் போருக்கு என்று சில சட்ட திட்டங்கள் உண்டு. மாலை நேரம் சூரிய அஸ்தமனம் ஆன பிறகு போர் புரிய மாட்டார்கள். படைகள் தங்கள் கூடாரங்களில் ஓய்வெடுத்துக் கொள்ளும். அப்போது அன்னையின் படைக்கு ஊக்கம் கொடுக்கவும், மறுநாளைய போரில் உற்சாகமாகப் போரிடவும் வேண்டி அன்னையைக் குறித்த ஆடல், பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இது ஒன்பது இரவுகள் நடந்தது. அதனாலேயே நாம் நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம்.
ஆண்டுக்கு இருமுறை நவராத்திரி கொண்டாட வேண்டும் என்று தேவி புராணம் கூறுகிறது. சித்திரையில் வரும் நவராத்திரிக்கு வசந்த நவராத்திரி என்றும், புரட்டாசியில் வரும் நவராத்திரிக்கு சாரதா நவராத்திரி என்றும் பெயர். இவ்விரு காலங்களும் எமனுடைய கோரைப்பற்களுக்குச் சமமாகும். கோடை, குளிர் என பருவகாலம் மாறும் போதுச நோய் நொடிகள் பரவும். இந்த ஆபத்திலிருந்து மக்களைக் காக்கும் படி தேவியைப் பூஜிக்க வேண்டும் என்பதால் இவ்விழாவை நடத்தினர். ஆனால், கோடையில் நடந்த சித்திரை நவராத்திரி காலப் போக்கில் மறைந்து விட்டது. புரட்டாசி சாரதா நவராத்திரியே இப்போது வழக்கத்தில் உள்ளது.
மஹாளய த்வாதச பித்ரு வர்க்கம்
[மஹாளய த்வாதச பித்ரு வர்க்கம்
]
அஸ்மத்" கோத்ரம்
1. பிதரம்
2. பிதாமஹம்
3. ப்ரபிதாமஹம் .
அஸ்மத்" கோத்ரம்.
4. மாதரம்
5. பிதாமஹி
6. ப்ரபிதாமஹி
அஸ்மத்"கோத்ரம்
7. மாதமஹம்
8. மாது பிதாமஹம்
9. மாது ப்ரபிதாமஹம் .
அஸ்மத்" கோத்ரம்
10.மாதமஹிம்
11.மாது பிதாமஹி
12. மாது ப்ரபிதாமஹி,
.......................................
[ஸர்வ பித்ருவர்க்கம்]
13.ஸாபத்னிக மாதரம் [அப்பாவின் முதல் மனைவி]
14.ஜேஷ்டபித்ருவ்யம் [பெரியப்பா அப்பாவின் அண்ணன்]
15. தத்பத்னி [பெரியப்பாவின் மனைவி]
16. தத்புத்ரம் [பெரியப்பா மகன்கள்]
17. கனிஷ்ட பித்ருவ்யம் [அப்பாவின் தம்பி]
18. தத்பத்னி [சித்தப்பா மனைவி]
19. பித்ருபஹினி [அப்பாவின் அக்கா அத்தை]
20. தத்பர்தாரம் [அத்தைகணவர் மாமா]
21.ஜேஷ்ட ப்ராதரம் [அண்ணன்]
22. தத்பத்னி [அண்ணாவின் மனைவி அண்ணி]
23.ஆத்மபத்னி [மனைவி]
24. கனிஷ்ட ப்ராதரம் [தம்பி]
25. தத்பத்னி [தம்பி மனைவி]
26. ஆத்மபஹினி [அக்கா]
27. தத்பர்தாரம் [அக்காவின் கணவர்]
28. ஆத்மகனிஷ்ட பஹினி [தங்கை]
29. தத்பர்தாரம் [தங்கை கணவர்]
30. மாதுலம் [தாய்மாமா அம்மாவின் அண்ணன்]
31. தத்பத்னி [மாமாவின் மனைவி]
32. கனிஷ்ட மாதுலம் [அம்மாவின் தம்பி]
33. தத்பத்னி [மாமாவின் மனைவி]
34.. மாத்ருஜேஷ்ட பஹினி [அம்மாவின் அக்கா]
35. தத்பர்தாரம் [பெரியம்மா கணவர்]
36. மாத்ருகனிஷ்ட பஹினி [அம்மாவின் தங்கை]
37. தத்பர்தாரம் [சித்திகணவர்]
38.ஸ்வஸீரம் [மாமனார்]
39. தத்பத்னி [மாமியார்]
40.ஸாலகம் [மச்சான்]
41. தத்பத்னி [மச்சான் மனைவி]
42.குரூம் [வித்யா குரு]
43.தத் பத்னி [குருவின் மனைவி]
44. ஆச்சார் [வீட்டு ஆச்சார்]
45.தத்பத்னி [ஆச்சார் மனைவி]
46. ஆப்தம் [நண்பன்]
47. ஸகம் [நம்மகூட இருந்தவங்க]
48.சிஷ்யம் [நம்சிஷ்யர்]
குறிப்பு: ஒன்று பெயர் கோத்ரம் எழுதவும்.
குறிப்பு: (2)
பெயர் தெரியவில்லை
[ஆண்களுக்கு யஞ்ஞப்பா]
[பெண்களுக்கு
யஞ்ம்மா]
கோத்ரம் தெரியவில்லை என்றால் [காசிப கோத்ரம்
எழுதவும்]
இப்படி தான் முறையாக சொல்ல வேண்டும் ஆனால் இன்றைய அவசர உலகத்தில் எந்த வாத்தியாரும் இப்படி சொல்லி தருவதே இல்லை என்பது வருத்தமான விஷயம்....
மஹாளய பட்க்ஷம்
மஹாளய பட்க்ஷம்
மஹாளய ஸிராத்தத்தில் ஸ்ராத்த கர்தாவிற்கு ஸம்பந்த பட்ட எல்லோருக்கும் ஹவிர் பாகம் உண்டு. ஆனால் இதர ஸிராத்தங்களில் குறிப்பிட்டவர்களுக்கு மாத்திரம் தான் ஹவிர்பாகம்.
ஸூரியன் கன்யா ராசியில் இருக்கும் கிருஷ்ண பக்ஷம் முழுவதும் மஹாளய ஸிராதத்திற்கு சிலாக்கிய மாகும். இந்த பக்ஷம் ப்ரதமையில் இயிலிருந்து சுக்ல பக்ஷம் ப்ரதமை வரை 16 நாட்கள் ஹோமத்துடன் பார்வண விதியாக ஶ்ராத்தம் செய்வது உத்தமமாகும். இதற்கு ஶக்தி இல்லா விடால் பஞ்சமி முதலோ அல்லது அஷ்டமி, தசமி முதற் கொண்டோ அமாவாசை வரையில் செய்யலாம். இதற்கும் சக்தி இல்லாதவன் நிஷித்த மில்லாத ஒரு நாளில் செய்யவும். சில முனிவர்கள் அமாவாசை வரை செய்தால் போதும் என்றும் கூறியுருப்பதால் 15 நாட்களும் அனுஷ்டிக்கலாம்.
இது முக்கிய காலம். கெளண காலத்தில் எவ்வளவு சீக்கிரம் செய்ய முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. இதிலும் செய்ய தவறினால் பித்ருக்கள் மிகவும் பெருமூச்சு விட்டு, வருத்தமடைந்து பூலோகத்தை விட்டு கிளம்புகிறார்கள். இதனால் ஐஸ்வரியத்திற்கும், ஆயுஸ், ஆரோக்கியம், புத்ர, பெளத்ராதிகளுக்கும் குறைவு ஏற்படுகிறது. மஹாளய பக்ஷத்தில் ஒவ்வொரு நாளும் செய்யும் பித்ரு ஸிராத்த மானது கயா ஸிராத்ததிற்கு சமமான பலன் என்றும், மஹா பரணியை ஐந்து மடங்கு பலன் அதிகமாகவும், வ்யதீபாதம் பத்து பங்கு அதிகமாகவும் மத்யாஷ்டமி இருபது மடங்கு அதிகமாகவும், த்வாதசி புண்ய காலத்தை நூறு மடங்கு அதிக மாகவும் மஹாளய அமாவாஸ்யையை ஆயிரம் மடங்கு அதிகமாகவும் புண்யத்தை கொடுக்க கூடியதாக சொல்ல பட்டிருக்கிறது.
பலன்கள்:- ஆதாரம் வைத்தினாத தீக்ஷிதீயம் ஸிராத்த காண்டம் உத்தர பாகம் 225ம் பக்கம். ப்ர்தமை தன லாபம்; த்விதியை சந்ததி வ்ருத்தி; த்ருதீயை இஷ்டமான வரன்; சதுர்த்தி சத்ருக்களை அகற்றும்;
பஞ்சமி ஐஸ்வர்யத்தை அடைவான்;ச ஷ்டி புகழ தகுந்தவன்; ஸப்தமி கூட்த்திற்கு தலைவன்; அஷ்டமி சிறந்த புத்தியை அடைவான்; நவமி அழகு கன்னிகையை அடைவான்;
தசமி- இஷ்டங்கள் எல்லாவற்றயும் அடைவான்; ஏகாதசி எல்லா வேதங்களையும் அடைவான்; த்வாதசி ஸ்வர்ண லாபம்; த்ரயோதசி ப்ரஜை, மேதாசக்தி; பசுக்கள் தேக புஷ்டி. ஸ்வதந்திர தன்மை; சிறந்த வ்ருத்தி; தீர்க்கமான ஆயுஸ், ஐவர்யம் சொல்லப்பட்ட எல்லா விதமான பலனும் ஸந்தேஹமில்லாமல் கிடைக்கும்;
சதுர்தசி ஆயுதத்தால் அடிபட்டும், துர்மரணம் அடைந்த வர்களுக்கும் இன்று செய்ய வேண்டும் அமாவாசை இஷ்டங்கள் எல்லாவற்றையும் அடைவான்.
பிதா, மாதாவின் இறந்த திதி தான் முக்கியமென்பதில்லை. மஹாளய பக்ஷத்தில் ஒரு நாள் மஹாளய ஸிராத்தம் செய்வதாய் இருந்தால் பஞ்சமியிலிருந்து அமாவாசைக்குள் சதுர்தசி நீங்கலாக திதி, வார, நக்ஷத்திரங்களை பார்த்து தோஷமற்ற நாட்களில் செய்யலாம்.
அமாவாசை, வ்யதீபாதம், அபபரணி, அஷ்டமீ, த்வாதசி. தகப்பனாரின் இறந்த திதி இவைகளில் மஹாளய சிராத்தம் செய்வதானால் திதி, வாரம், நக்ஷத்திரம் பார்க்க வேண்டியதில்லை. மஹாளய பக்ஷத்தில் தெய்வாதீனமாய் மஹாளய ஸிராத்தம் செய்ய முடியாவிடில், பிறகு அடுத்த பஞ்சமிக்குள் செய்வதாய் இருந்தால் ப்ரதமை, ஷஷ்டி, ஏகாதசி, சதுர்தசி வெள்ளிகிழமை கூடாது. ஒரு நாள் மஹாளயம் விஷயத்தில் புத்ரன், பத்னி இரண்டும் இல்லாதவன், சந்ததி இல்லாத விதவை; ப்ருஹ்மசாரி இம்மூவரும் அமாவாசை அன்று செய்யவும்.
மஹாளய ஸிராத்தம் செய்ய கூடாத நாட்கள்:- ப்ரதமை, சஷ்டி, ஏகாதசி, வெள்ளிக்கிழமை; கர்த்தா, கர்த்தாவின் பத்னீ, கர்த்தாவின் ஜ்யேஷ்ட புத்ரன், இவர்களது ஜன்ம நக்ஷத்திரம், வ்யதீபாத ஸம்பந்த மில்லாத ரோஹிணி, ரேவதி; த்ரயோதசி சம்பந்தமில்லாத மகம்.
தந்தையின் திதியில் செய்வதானால் இந்த நிஷித்தங்கள் கிடையாது.
அபபரணி, மத்யாஷ்டமி, கஜசாயை, வ்யதீபாதம் உள்ள நாட்களிலும் இந்த நிஷித்தம் கிடையாது. தந்தை இல்லாத புத்ரர்கள் எல்லோரும் செய்ய வேண்டும். விவாஹமான புத்ரர்கள் தனி தனியாக செய்வது விசேஷம். ஆதாரம் நிர்ணய சிந்து. கிருஷ்ண பக்ஷ பஞ்சமி முதல் சுக்ல பக்ஷ சதுர்த்தி முடிய கிருஷ்ண பக்ஷமே.. சந்திரனின் கலைகள் குறைந்த நாட்கள். மஹாளய பக்ஷத்தில் வ்ருத்தி, ஆசெளசம் நேர்ந்தால் ஆசெளசம் போன பிறகு நாள் பார்த்து செய்யவும்.
அன்ன ரூபமாக மஹாளய பக்ஷம் 16 நாட்களும் செய்ய முடியாவிடில் , ஒரு நாள் அன்ன ரூபமாகவும், மீதி நாட்கள் தர்ப்பண ரூபமாகவும் செய்யலாம். ஒரு நாள் அன்னருபமாக மஹாளயம் செய்பவன் அப்பா, அம்மா சிராத்தம் குறுக்கிட்டால் அதன் பிறகு தான் நாள் பார்த்து செய்ய வேண்டும். பித்ரு கார்யங்களை மஹாளய கிருஷ்ண பக்ஷத்தில் செய்ய வேண்டியது. ஆஷாட மாத ஆரம்பமாக க்ருஷ்ண பக்ஷத்தை கணக்கிட்டு, ஐந்தாவது, ஏழாவது அல்லது வ்ருச்சிக மாதம் பிறப்பதற்குள், கிருஷ்ண பக்ஷத்தில் தான் ஸக்ருன் மஹாளய ஸிராத்தம் செய்ய வேண்டும்.
மாத பேதம் இருந்தால், மஹாளய பக்ஷத்திற்கு பின்பு அடுத்த மாதத்தில் ப்ரத்யாப்தீக ஸிராத்தம் வந்தால் மஹாளயம் முன்பு செய்ய வேண்டும். ஆஷாட மாதத்திலிருந்து எப்பொழுது மஹாளய ஸிராத்தம் செய்கிறார்களோ அப்பொழுது எத்தனையாவது பக்ஷம் என்று ஸங்கல்பத்தில் சொல்லி கொள்ளவும். பெற்றோர்கள் இறந்து முதலாவது சிராத்தம் வரையில் அமாவாசை, மாத பிறப்பு, கிரஹணம் முதலியவற்றில் தர்ப்பணம் செய்வது என்பது விகல்பம். அதாவது செய்தாலும் செய்யலாம். செய்யாமலும் இருக்கலாம். வருஷம் முடிவதற்குள் கிரஹணம் ஏற்பட்டு தர்ப்பணம் செய்ய ஆரம்பித்து விட்டால் அந்த வருஷம் மஹாளயம் செய்ய வேண்டும்.
ஸிராத்தம், தர்ப்பணம் செய்வதற்கு உசித காலம் 10:30 மணியிலிருந்து 03:30 மணிக்குள் செய்யலாம். பக்ஷ மஹாளய தர்ப்பணம் செய்பவர் அமாவாசை தர்பணத்திற்கு பிறகு மஹாளய தர்ப்பணம் செய்ய வேண்டும். காருணீக பித்ருக்கள் பட்டியல் படியார் யாருடைய கோத்ரமும், பெயரும் தெரியுமோ அவர்கள் இறந்து போயிருந்தால், அவர்களை உத்தேசித்து தனி தனியாக வஸு ரூபமாக சொல்லி தர்ப்பணம் செய்யலாம்.
பெரியப்பா, சித்தப்பா, அண்ணா, தம்பி, பிள்ளைகள், அப்பாவுடன் கூட பிறந்த தமக்கை, தங்கைகள், மாப்பிளைகள், அக்கா, தங்கைகள், அத்திம் பேர்கள், மனைவி, மாமனார், மாற்று பெண், மைத்துனன்
குரு, ஆச்சாரியன், காப்பாற்றிய யஜமானன், சினேஹிதன் ஆகியோர்களின் பெயர்களை சொல்ல வேண்டும்.
தர்ப்பணம் என்ற சொல்லுக்கு த்ருப்தி படுத்துதல் என்று பொருள்.
இதில் இறந்தவர்களுக்கு மட்டும் அவர்களது கோத்திரம், பெயர் சொல்லி மூன்று முறை தர்பணம் செய்யவும்.
ஜ்யேஷ்ட = மூத்த; கனிஷ்ட = இளைய
அப்பாவின் சகோதரர்கள்:-----------கோத்ரான்-----------சர்மண: வஸுரூபான் பித்ருவ்யான் ஸ்வதா நமஸ் தர்பயாமி .
அண்ணன் தம்பிகள்: ------------கோத்ரான்---------சர்மண: வஸுரூபான் ப்ராத்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி. .
புத்ரர்கள்: ------------கோத்ரான் ----------சர்மண: வஸுரூபான் புத்ரான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
அப்பாவின் ஸஹோதரிகள்: (அத்தை) ----------கோத்ரா:------------தா: வஸுரூபா: பித்ரு ஸ்வஸ்ரூ : ஸ்வதா நமஸ் தர்பயாமி
அம்மாவின் ஸகோதரர்கள்: ------------கோத்ரான்-----------சர்மண: வஸுரூபான் மாதுலான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
அம்மாவின் ஸகோதரிகள்: ------------கோத்ரா:--------------தா: வஸுரூபா: மாத்ருபகினி : ஸ்வதா நமஸ் தர்பயாமி
மாப்பிள்ளை: ------------கோத்ரான்----------சர்மண: வஸுரூபான் ஜாமீ: ஸ்வதா நமஸ் தர்பயாமி
ஸஹோதரி: -----------கோத்ரா:-----------தா: வஸுரூபா: பகினி ஸ்வதா நமஸ் தர்பயாமி
பெண்: --------------கோத்ரா:---------------தா: வஸுரூபா: துஹித்ரூ ஸ்வதா நமஸ் தர்பயாமி
மனைவி: -----------கோத்ரா:----------தா: வஸுரூபா: பார்யா: ஸ்வதா நமஸ் தர்பயாமி.
மாமனார்:----------கோத்ரான்---------சர்மண: வசுரூபான் ஸ்வஸ்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி
ஸஹோதரி புருஷர் -----------கோத்ரான்------சர்மண: வஸுரூபான் பாவுகான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
மருமகள்( (மாற்றுபெண்)--------கோத்ரா:------------தா: வஸுரூபா: ஸ்நுஷா ஸ்வதா நமஸ் தர்பயாமி
மைத்துனன்: --------------கோத்ரான்---------சர்மண: வஸுரூபான் ஸ்யாலகான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
ப்ரம்ஹோபதேசம் செய்தவர்: ….-----------கோத்ரான்------சர்மண: வஸுரூபான் குரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
வேதம் கற்பித்தவர்:-----------கோத்ரான்--------சர்மண: வஸுரூபான் ஆசார்யான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
பிழைப்பிற்கு மூலகர்த்தா( யஜமானன்) ---------கோத்ரான்-------சர்மண; வஸுரூபான் ஸ்வாமிந: ஸ்வதா நமஸ் தர்பயாமி
ஸ்நேகிதர்கள்: ---------கோத்ரான்--------சர்மண: வஸுரூபான் ஸகீன் ஸ்வதா நமஸ் தர்பயாமி
தத்தத் கோத்ரான் தத்தத் சர்மண; வசு வசு ஸ்வரூபான் பித்ருவ்ய மாதுலாதி வர்க த்வய அவசிஷ்டான் ஸர்வான் காருணீக பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி
மூன்று தடவை தர்ப்பணம்.செய்யவும்.
க்ஞாதா அக்ஞாத காருணீக வர்கத்வய பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி. மூன்று தரம்.
ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயதமே வர்கத்வய பித்ரூன் வர்க த்வய காருணீக பித்ரூன் ச த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத ஒரு முறை தர்பணம்.
பூணல் வலம்
நமோ வ: பிதரோ ரசாய, நமோவ:பிதரஸ் ஸுஷ்மாய, நமோவ:பிதரோ ஜீவாய ,நமோவ: பிதர ஸ்வதாயை, நமோவ:
பிதரோ மன்யவே, நமோவ:பிதரோ கோராய, பிதரோ நமோ வோ ய ஏதஸ்மின் லோகேஸ்த
யுஷ்மாகுஸ்தேனுயே அஸ்மின் லோகே மாந் தேநு ய ஏதஸ்மின் லோகேஸ்த யூயுந் தேஷாம்
வஸிஷ்டா பூயாஸ்தயே அஸ்மின் லோகே அஹம் தேஷாம் வஸிஷ்டோ பூயாஸம்.
தேவதாஶ்ச பித்ருப்யஸ்ச மஹா யோகிப்ய ஏவச நமஸ் ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்ய மேவ நமோ நம:
இதை சொல்லிக் கொண்டே மூன்று தடவை, தர்பணம் செய்த தாம்பாளத்தை ப்ரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்து அபிவாதயே சொல்லவும்.
பூணல் இடம்.;
உத்திஷ்டத பிதரஹ ப்ரேத சூரா யமஸ்ய பந்தா மன்வேதா புராணம் தத்தா தஸ்மாஸு த்ரவிணம் யச்ச பத்ரம் ப்ரணோ ப்ரூதாத் பாகதான் தேவதாஸு.
அல்லது ஆயாத பிதரஸ் ஸோம்யா கம்பீரை: பதிபிள் பூர்வ்யை: ப்ரஜா மஸ்மப்யம் தததோ ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச ஶதஶார தஞ்ச அவரவர் ஸம்ப்ரதாயப்படி கூறி
அஸ்மாத் கூர்ச்சாத் பித்ரு,பிதாமஹ,ப்ரபிதாமஹான்,மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹி, ஸபத்னீக மாதா மஹ. மாது:பிதாமஹ, மாது:ப்ரபிதா மஹான்
தத்தத் கோத்ரான் தத்தத் சர்மண: வசு வசு ஸ்வரூபான் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டான் ஸர்வான் காருணிக பித்ரூன் ச யதாஸ்தானம் ப்ரதிஷ்டா பயாமி.
பவித்ரத்தை காதில் தரித்து , உபவீதியாய் ஆசமனம் செய்து பவித்ரத்தை போட்டுக் கொண்டு , ப்ராசீனாவீதியாய் கூர்ச்சத்தை பிரித்து கையில் எடுத்து,
யேஷாம் ந மாதா ந பிதா ந பந்து: நான்ய கோத்ரிண :தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோத் ஸ்ருஷ்டை:குசோதகை:த்ருப்யத த்ருப்யத த்ருப்யத .
என்று சொல்லிக்கொண்டு ஜலம் விடவும். பவித்ரம் அவிழ்க்கவும். பூணல் வலம். ஆசமனம் செய்ய வேண்டும்.
ஹிரன்ய கர்ப்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ: அனந்த புண்ணிய பலதம் அத: சாந்திம் ப்ரயஸ்சமே.
மயா அனுஷ்டித மஹாளய உத்திஸ்ய தில தர்ப்பண மந்திர ஸாத்குண்யம் யதா சக்தி ஹிரண்யம் ஆசார்யாய சம்ப்ரததே.
ஓம் தத்ஸத் ப்ருஹ்மார்பண மஸ்து என்று கையினால் ஜலத்தை கீழே விடவும்.
பித்துர் வர்க்கம்
ஜ்யேஷ்ட = மூத்த; கனிஷ்ட = இளைய
அப்பாவின் சகோதரர்கள்:-----------கோத்ரான்-----------சர்மண: வஸுரூபான் பித்ருவ்யான் ஸ்வதா நமஸ் தர்பயாமி .
அண்ணன் தம்பிகள்: ------------கோத்ரான்---------சர்மண: வஸுரூபான் ப்ராத்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி. .
புத்ரர்கள்: ------------கோத்ரான் ----------சர்மண: வஸுரூபான் புத்ரான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
அப்பாவின் ஸஹோதரிகள்: (அத்தை) ----------கோத்ரா:------------தா: வஸுரூபா: பித்ரு ஸ்வஸ்ரூ : ஸ்வதா நமஸ் தர்பயாமி
அம்மாவின் ஸகோதரர்கள்: ------------கோத்ரான்-----------சர்மண: வஸுரூபான் மாதுலான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
அம்மாவின் ஸகோதரிகள்: ------------கோத்ரா:--------------தா: வஸுரூபா: மாத்ருபகினி : ஸ்வதா நமஸ் தர்பயாமி
மாப்பிள்ளை: ------------கோத்ரான்----------சர்மண: வஸுரூபான் ஜாமீ: ஸ்வதா நமஸ் தர்பயாமி
ஸஹோதரி: -----------கோத்ரா:-----------தா: வஸுரூபா: பகினி ஸ்வதா நமஸ் தர்பயாமி
பெண்: --------------கோத்ரா:---------------தா: வஸுரூபா: துஹித்ரூ ஸ்வதா நமஸ் தர்பயாமி
மனைவி: -----------கோத்ரா:----------தா: வஸுரூபா: பார்யா: ஸ்வதா நமஸ் தர்பயாமி.
மாமனார்:----------கோத்ரான்---------சர்மண: வசுரூபான் ஸ்வஸ்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி
ஸஹோதரி புருஷர் -----------கோத்ரான்------சர்மண: வஸுரூபான் பாவுகான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
மருமகள்( (மாற்றுபெண்)--------கோத்ரா:------------தா: வஸுரூபா: ஸ்நுஷா ஸ்வதா நமஸ் தர்பயாமி
மைத்துனன்: --------------கோத்ரான்---------சர்மண: வஸுரூபான் ஸ்யாலகான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
ப்ரம்ஹோபதேசம் செய்தவர்: ….-----------கோத்ரான்------சர்மண: வஸுரூபான் குரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
வேதம் கற்பித்தவர்:-----------கோத்ரான்--------சர்மண: வஸுரூபான் ஆசார்யான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
பிழைப்பிற்கு மூலகர்த்தா( யஜமானன்) ---------கோத்ரான்-------சர்மண; வஸுரூபான் ஸ்வாமிந: ஸ்வதா நமஸ் தர்பயாமி
ஸ்நேகிதர்கள்: ---------கோத்ரான்--------சர்மண: வஸுரூபான் ஸகீன் ஸ்வதா நமஸ் தர்பயாமி
தத்தத் கோத்ரான் தத்தத் சர்மண; வசு வசு ஸ்வரூபான் பித்ருவ்ய மாதுலாதி வர்க த்வய அவசிஷ்டான் ஸர்வான் காருணீக பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி
மூன்று தடவை தர்ப்பணம்.செய்யவும்.
க்ஞாதா அக்ஞாத காருணீக வர்கத்வய பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி. மூன்று தரம்.
ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயதமே வர்கத்வய பித்ரூன் வர்க த்வய காருணீக பித்ரூன் ச த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத ஒரு முறை தர்பணம்.
பூணல் வலம்
நமோ வ: பிதரோ ரசாய, நமோவ:பிதரஸ் ஸுஷ்மாய, நமோவ:பிதரோ ஜீவாய ,நமோவ: பிதர ஸ்வதாயை, நமோவ:
பிதரோ மன்யவே, நமோவ:பிதரோ கோராய, பிதரோ நமோ வோ ய ஏதஸ்மின் லோகேஸ்த
யுஷ்மாகுஸ்தேனுயே அஸ்மின் லோகே மாந் தேநு ய ஏதஸ்மின் லோகேஸ்த யூயுந் தேஷாம்
வஸிஷ்டா பூயாஸ்தயே அஸ்மின் லோகே அஹம் தேஷாம் வஸிஷ்டோ பூயாஸம்.
தேவதாஶ்ச பித்ருப்யஸ்ச மஹா யோகிப்ய ஏவச நமஸ் ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்ய மேவ நமோ நம:
இதை சொல்லிக் கொண்டே மூன்று தடவை, தர்பணம் செய்த தாம்பாளத்தை ப்ரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்து அபிவாதயே சொல்லவும்.
பூணல் இடம்.;
உத்திஷ்டத பிதரஹ ப்ரேத சூரா யமஸ்ய பந்தா மன்வேதா புராணம் தத்தா தஸ்மாஸு த்ரவிணம் யச்ச பத்ரம் ப்ரணோ ப்ரூதாத் பாகதான் தேவதாஸு.
அல்லது ஆயாத பிதரஸ் ஸோம்யா கம்பீரை: பதிபிள் பூர்வ்யை: ப்ரஜா மஸ்மப்யம் தததோ ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச ஶதஶார தஞ்ச அவரவர் ஸம்ப்ரதாயப்படி கூறி
அஸ்மாத் கூர்ச்சாத் பித்ரு,பிதாமஹ,ப்ரபிதாமஹான்,மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹி, ஸபத்னீக மாதா மஹ. மாது:பிதாமஹ, மாது:ப்ரபிதா மஹான்
தத்தத் கோத்ரான் தத்தத் சர்மண: வசு வசு ஸ்வரூபான் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டான் ஸர்வான் காருணிக பித்ரூன் ச யதாஸ்தானம் ப்ரதிஷ்டா பயாமி.
பவித்ரத்தை காதில் தரித்து , உபவீதியாய் ஆசமனம் செய்து பவித்ரத்தை போட்டுக் கொண்டு , ப்ராசீனாவீதியாய் கூர்ச்சத்தை பிரித்து கையில் எடுத்து,
யேஷாம் ந மாதா ந பிதா ந பந்து: நான்ய கோத்ரிண :தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோத் ஸ்ருஷ்டை:குசோதகை:த்ருப்யத த்ருப்யத த்ருப்யத .
என்று சொல்லிக்கொண்டு ஜலம் விடவும். பவித்ரம் அவிழ்க்கவும். பூணல் வலம். ஆசமனம் செய்ய வேண்டும்.
ஹிரன்ய கர்ப்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ: அனந்த புண்ணிய பலதம் அத: சாந்திம் ப்ரயஸ்சமே.
மயா அனுஷ்டித மஹாளய உத்திஸ்ய தில தர்ப்பண மந்திர ஸாத்குண்யம் யதா சக்தி ஹிரண்யம் ஆசார்யாய சம்ப்ரததே.
ஓம் தத்ஸத் ப்ருஹ்மார்பண மஸ்து என்று கையினால் ஜலத்தை கீழே விடவும்.
உபநயனம்
உபநயனம் உத்திராயனத்தில் செய்ய வேண்டும். தை மாதம் முதல் ஆனி மாதம் முடிய உத்திராயனம். யஜுர் வேதிகள் சுக்ராஸ்தமனம் இல்லாத காலத்திலும், ருக் வேதிகள் குரு அஸ்தமனம் இல்லாத காலத்திலும், ஸாம வேதிகள் செவ்வாய் அஸ்தமனம் இல்லாத காலத்திலும், சுக்கிரன், குரு , செவ்வாய் நீச மில்லா காலங்களிலும் செய்ய வேண்டும்.
வேதம் பயிலக்கூடாத நாட்களிலும் உபநயனம் செய்யக்கூடாது.
உபநயன லக்னத்திற்கு எட்டாமிடத்தில் எந்த கிரஹமும் இருக்க கூடாது. பையனுக்கு சந்திராஷ்டம தினத்திலும் செய்ய கூடாது.
பையனின் சஷ்டாஷ்டக ராசியிலும் லக்னமாக வைக்க வேண்டாம். சுக்ல பக்ஷம் சிறந்தது. ஜன்ம சந்திர லக்னங்கள் இல்லாத நாட்களில் செய்ய வேண்டும். தாரா பலம், சந்திர பலம் நன்றாக உள்ள நாட்களில் செய்ய வேண்டும். கசரம் சுத்தமாக இருக்க வேண்டும்.
பஞ்சகம் சுத்தமாக இருக்க வேண்டும். கரி நாள், தனிய நாட்களில் செய்ய கூடாது. மரண யோகம், உத்பாத யோக நாட்களில் செய்யக்கூடாது. ஆடி, ஆவணி, புரட்டாசி ஐப்பசி கார்த்திகை மார்கழி மாதங்களில் செய்யக்கூடாது.
அமாவாசை, பெளர்ணமி, பிரதமை. ரிக்தை ஸப்தமி அஷ்டமி, நவமி த்ரயோதசி, சதுர்தசி ஆகிய திதிகளில் உபநயனம் செய்யக்கூடாது. பையன் ஜன்ம நக்ஷத்திலிருந்து எண்ணி 2,4,6,8,9 வர வேண்டும். 1,3,5,7 நக்ஷத்திரங்களில் செய்ய கூடாது. அந்தந்த தமிழ் மாத விஷ சூன்ய திதி, நட்சத்திரம் லக்னம் வேண்டாம். திதிகளின் விஷ சூன்ய ராசிகளும் வேண்டாம். வருஷம், ருது மாதம், திதி, நக்ஷதிரம் முடிவில் செய்யக்கூடாது. ஒரே நாளில் இரண்டு நக்ஷத்திரமோ, திதியோ உள்ள நாட்களும் வேண்டாம்.
திங்கள், புதன், வெள்ளி கிழமைகள் சிறந்தது. உபநயனம் செய்ய போகும் தமிழ் மாதத்தில் இரண்டு பெளர்ணமியோ அல்லது இரண்டு அமாவாசையோ அல்லது மாத பிறப்பு இரண்டோ அல்லது மாத பிறப்பு இல்லாமலோ இருக்க கூடாது.
திதி, நக்ஷத்திர, லக்ன தியாஜ்யம் இல்லாத லக்னத்தில். உபநயனம் செய்ய வேண்டும்.
பையனின் தாயார் ஆறு மாததிற்கு மேல் கர்பமாக இருந்தால் அந்த பையனுக்கு அப்போது உபநயனம் செய்ய கூடாது.
பரணி, கார்த்திகை, திருவாதிரை, ஆயில்யம், பூரம், பூராடம், கேட்டை ஆகிய நக்ஷத்திரங்கள் உபநயனம் செய்வதற்கு சிலாக்கியமில்லை.,
ஸந்தியா காலங்கள், ராத்திரி, அபராஹ்னம் மலமாசம் சிலாக்கியமில்லை.
ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய லக்னங்கள் சுபம்.
ராகு காலம், யம கண்டம், இல்லமல் இருக்க வேண்டும். சுப ஹோரையில் அமைய வேண்டும். அக்னி நக்ஷத்திர காலமும் சிலாக்கியமில்லை.
காமாக்ஷி
காமாக்ஷி அம்பாள் ஏதோ ஐநூறு வருங்களோ, ஆயிரம் வருடங்களோ பழமை இல்லை யுகங்கள் கடந்து நமக்கு இன்றளவும் காட்சி தந்து அருள்பாலித்துக் கொண்டு இருக்கிறாள் காமாக்ஷி. கிருதயுகத்தில் இருந்து இருக்கிறாள் காமாக்ஷி. திரேதாயுகத்தில் தசரத மஹாராஜா பிள்ளை வரம் வேண்டி காமாக்ஷியை தரிசித்து பிரார்த்தனை செய்த பின் தான் ராமரின் அவதாரமே. துவாபர யுகத்திலும் கிருஷ்ணரின் காலத்திலும் காமாக்ஷி அருள் பாலித்தார். தற்போது கலியுகத்திலும் நாம் அனைவரும் தரிசித்துக் கொண்டு தான் இருக்கிறோம். இருப்பதிலேயே கலியுகம் தான் மிக மோசமாக இருக்கும், பாவங்கள் நீக்கமென நிறைந்து இருக்கும், அநியாயங்கள் நடக்கும், பிராமணர்கள் ஆச்சார அனுஷ்டானத்தை விட்டு விடுவார்கள் என்பதெற்கெல்லாம் ஆதாரமாக தற்போது எல்லாம் நடந்து கொண்டு இருக்கிறது என்பதற்கு இதுவே மிக சரியான முன் உதாரணமாக இருக்கின்றது.
எங்கே சென்று கொன்று இருக்கிறது நமது கலாச்சாரமும் ஆச்சார அனுஷ்டானமும் என்றே தெரிய வில்லை. சமீபத்தில் காமாக்ஷி அம்மன் கோவிலில் கார்த்திக்குக்கு பூஜை முறை வழங்கியதே மிக பெரிய தவறு அப்படி இருக்க மேலும் இரண்டு பேர் காமாக்ஷி அம்மன் கர்ப்பகிரகத்திற்கு செல்வது எந்த விதத்தில் இவர்கள் அருகதை இருக்கிறது என்று தெரியவில்லை. கர்ப்பகிரகற்திற்குள் செல்ல சில அத்யாவசியமான சாஸ்திரங்கள் உண்டு. ஒன்று வேற்று மத பெண்ணை திருமணம் செய்து கொள்ள கூடாது, கடல் தாண்டி செல்ல கூடாது. ஆனால் இவர்கள் இன்று செய்துக் கொண்டு இருப்பது மிக பெரிய பாவ செயல். ஒன்று சங்கரும் வேற்று மத பெண்ணை திருமணம் செய்து கொண்டு உள்ளார். அதே போல் நடனம் அண்ணாவின் அண்ணா பாலசுப்பிரமணியன் அவர்களின் மகன் வெளிநாடு சென்று வந்துள்ளார். அவர் வெளிநாடு சென்றது தவறு என்று சொல்ல இல்லை. ஆனால் தற்போது காமாக்ஷி கர்ப்பகிரகத்தில் செல்வது தான் தவறு. வெளி நாடு சென்றால் அதாவது கடல் தாண்டி சென்றால் மீண்டும் கர்ப்ப கிரஷத்தின் உள்ளே செல்ல அனுமதி கிடையாது. அதே போல் தான் ஸ்ரீமடத்திலும் வெளிநாடு சென்றவர்களுக்கு பெரியவா கரங்களால் தீர்த்த பிரசாதம் தர மாட்டார்கள். இதற்கு உதாரணமாக எம். எஸ். சுப்புலக்ஷ்மி மற்றும் அவரின் கணவருக்கு மஹா பெரியவா தீர்த்த பிரசாதம் கொடுக்க வில்லை என்று நாம் படித்து தெரிந்து கொண்டு இருப்போம். இப்படி எல்லாம் சாஸ்த்திரத்தில் சொல்லப்பட்டு இருக்கும் போது அதை எல்லாம் மீறி இன்று இப்படி இவர்கள் செய்வது ஞாயமா? யார் இவர்களுக்கு சொல்வது? இவற்றை எல்லாம் யார் சரி செய்ய போகிறார்கள்? அல்லது இதையெல்லாம் நாம் சகித்துக் கொண்டு கண்டும் காணாமல் இருக்க வேண்டுமா? ஏன் இவர்களுக்கு அம்பாளிடம் பயமோ, பக்தியோ கொஞ்சம் கூடவா இருக்காது. இதை எல்லாம் சரி செய்ய வேண்டியது யாருடைய கடமை?
சாதுர்மாசிய விரதம்
இந்து சமயத்தில் சாதுர்மாசிய விரதம்
என்பது துறவிகள் மழைக்காலமான ஆடி மாத பௌர்ணமி முதல் கார்த்திகை மாத பௌர்ணமி வரை, நான்கு மாதங்கள் ஒரே இடத்தில் தங்கி, வேத வேதாந்தங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்வார்கள். இந்த மாதங்களில் துறவிகள் உணவு முறையில் சில கட்டுப்பாடுகளை வகுத்துக் கொள்வார்கள். முதல் மாதம் உணவில் காயும் பழங்களும் இருக்கும். இரண்டாம் மாதம் பால் தவிர்ப்பார்கள். மூன்றாம் மாதம் தயிரை தவிர்ப்பார்கள். நான்காம் மாதம் பருப்பு வகைகளைச் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். இந்த சாதுர்மாஸ்ய காலத்தில் கடைபிடிக்கும் விரதத்தை, வேதம் மற்றும் வேதாந்தக் கல்வியை கற்பித்த குருமார்களை நினைவு கூறும் வகையில் ஆடி மாத பௌர்ணமி அன்று துறவிகள், வேதவியாசரை வழிபட்டுத் துவக்குவார்கள். குரு பூர்ணிமா என்று அழைக்கப்படும் வியாச பௌர்ணமி நாளில் (ஆடிப் பௌர்ணமி) எங்கிருந்தாலும் குருவை மனதார வணங்கினால், தாங்கள் பெற்ற வேதாந்தக் கல்வி மேன்மேலும் சிறப்பாக வளரும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு வருடமும் ஆனி மாதத்தில் வரும் பவுர்ணமி குரு பூர்ணிமா அல்லது வியாச பூர்ணிமா என்று அழைக்கப்படுகிறது. இந்நாளில் சன்னியாச ஆசிரமத்தில் இருக்கும் சன்னியாசிகள் வியாச பூஜை செய்து வேத வியாசரை ஆராதிப்பார்கள்.
இன்று குரு பூர்ணிமா..!
வெயில்கால கதிர்திருப்பத்திற்குப் பின் வரும் முதல் பௌர்ணமி (ஆனி மாதம்) (ஹிந்தி காலன்டர் எனும் சுரியனை மையமாக வைத்து வரும் ஹிந்து காலன்டர்(அதாவது அமாவாசைக்கு மறுதினம் மாதப்பிறப்பு: அதன் அடிப்படையில் தான் எல்லாப் பண்டிகைகளும் அனுஷ்டிப்பு : அந்த வழக்கின் படி இது ஆஷாடமாதம் எனும் ஆடிமாதம்) )குரு பௌர்ணமி எனப்படுகிறது.
குரு பூர்ணிமா என்றால் என்ன?
குரு பூர்ணிமா என்பது ஒவ்வொரு ஆண்டும் ஆனி (ஆஷாட) மாதமும் வரும் பெளர்ணமி திதியை குரு பூர்ணிமா என கொண்டாடப்படுகின்றது.
தட்சிணாமூர்த்தியாக ஈசன் அமர்ந்த குரு பௌர்ணமி நாள் இன்று!
இன்று ஆனி (ஆஷாட) பௌர்ணமி. இந்த நாளை வியாச பூர்ணிமா, குரு பௌர்ணமி என்றும் அழைப்பார்கள்.
வியாசபூஜை எனும் குருவழிபாடு இந்த நாளில் விசேஷம். கல்வி, கலைகள் கற்ற மாணவர்கள் ஆடி மாதம் வரும் பௌர்ணமியில் கல்வி மற்றும் ஞானம் அளித்த குருவினை வணங்கி வழிபடுவார்கள்.
அதுமட்டுமின்றி கலை, கல்வியின் தெய்வங்களான கீதை அருளிய ஸ்ரீகிருஷ்ணர், தட்சிணாமூர்த்தி, ஹயக்ரீவர், சரஸ்வதி, குருபகவான், புதன் போன்றவர்களை வணங்கி அருள்பெறுவார்கள்.
பாரதம் சொன்ன வியாசர், ராமாயணம் எழுதிய வால்மீகி, உபநிடதங்களுக்கு விளக்கம் இயற்றிய ஆதிசங்கரர், மத்வர், ராமானுஜர் போன்ற ஞானியர்களையும் வணங்குவது வழக்கம். இந்த நாளில் ஞான வடிவாக புத்த பகவானை வணங்குவதும் பௌத்தர்களின் வழக்கம்.
தட்சிணாயணத்தின் முதல் பௌர்ணமியான இன்றுதான் ஆலமர்ச்செல்வனான தட்சிணாமூர்த்தி கல்லால மரத்தடியே தெற்கு நோக்கி அமர்ந்து, சனகாதி முனிவர்களுக்கு மௌன நிலையில் முத்திரை காட்டி உபதேசித்தார். ஆதிசிவன் குருவாக இருந்து உபதேசித்த நாள் என்பதால் இந்த பௌர்ணமி குரு பௌர்ணமி என்று அழைக்கப்படுகிறது.
குருவின் திருவருள் நிரம்பி வழியும் இந்த நாளில் நமக்கு கல்வியும் ஞானமும் வழங்கிய எல்லா குருமார்களையும் வணங்கி மானசீக வாழ்த்தைப் பெற்றுக்கொள்வோம்.
இந்த நாளில் மேற்கொள்ளப்படும் தியானமும் தவமும் சிறப்பானவை என ஆன்மிக நூல்கள் தெரிவிக்கின்றன.
ஆதியோகியாம் சிவனிடம் இருந்து அவரது 7 சிஷ்யர்களான சப்தரிஷிகளுக்கு யோக விஞ்ஞானம் பரிமாறப்பட்ட முதல் நாள், ஆதியோகியாம் சிவன் ஆதிகுருவாக பரிணமித்த திருநாள், குருபௌர்ணமித் திருநாள். ஆதிகுரு பரிமாறிய ஞானத்தை சப்தரிஷிகள் உலகமெங்கும் கொண்டு சேர்த்தனர்.
இன்றும்கூட உலகின் எந்த மூலையில் ஆன்மீக செயல்முறை பின்பற்றப்பட்டாலும் அது ஆதியோகி சிவன் உருவாக்கிய அடித்தளத்தில் இருந்தே வேர்விட்டுள்ளது.
ஏன் கொண்டாடப்படுகிறது:
ஆதி கடவுளான மகா விஷ்ணுவிடம் இருந்த வேதங்களை, அவரின் அம்சமான வியாசர் எனும் மகரிஷி 4 வேதங்களாக பிரித்தார்.
அதை மேலும் எளிமையாக புரிந்து கொள்ள 18 புராணங்களாக தொகுத்தார். இப்படி வேதங்களை மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் தொகுத்ததோடு, வழி வழியாக அது ஒரு குருவிடம் இருந்து அவரது சீடருக்கு கொண்டு வரப்பட்டது,
அப்படி வாய் மற்றும் காது வழியே கடந்து இத்தனை காலங்களாக வேதங்கள் கடந்து வந்துள்ளன.
ஹயகிரீவர் அவதாரம்:
மகா விஷ்ணு ஹயகிரீவரராக அவதரித்து குருவாக இருந்து உபதேசம் செய்ததாக கூறப்படுகிறது.
குரு பகவானன தட்சிணாமூர்த்தி:
சைவர்களைப் பொருத்த வரையில் தெற்கு திசையைப் பார்த்து கல்லால் மரத்தின் கீழ் அமர்ந்து மெளன உபதேசமாக சனாதன குமரர்கள் 4 பேருக்கு உபதேசம் செய்து வருகிறார்.
அவருடைய உபதேசங்கள் அடுத்தடுத்து வழி வழியாக சங்கராச்சார்யார்கள் மூலமாக நாம் வாழும் காலம் வரை வந்ததாக கூறப்படுகிறது.
உபதேசம் செய்த முருகப் பெருமான்:
முருகப்பெருமான் ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரத்தை குருவாக இருந்து சிவ பெருமான், அகஸ்தியர், அருணகிரி நாதர் ஆகிய மூவருக்கு சொன்னதாக கூறப்படுகிறது.
சிவ பெருமானுக்கே உபதேசம் செய்ததால் தகப்பன் சாமி என முருகன் அழைக்கப்படுகிறார்.
குரு பூர்ணிமா முக்கியத்துவம்:
மாதா, பிதா, குரு தெய்வம் என்பார்கள். பிறப்பை கொடுத்த தாய், வளர்த்தெடுக்கும் தந்தை, அறிவை கொடுக்கும் குரு ஆகியோரின் மூலமாக தெய்வத்தை பார்க்கலாம் என்பதற்காக தெய்வத்திற்கு முன் குருவை வைத்து இப்படி வரிசைப் படுத்தினார்கள்.
அப்பேற்பட்ட குருவை வணங்கும் விதமாக “குரு பூர்ணிமா” கொண்டாடப்படுகிறது. இப்படி குருவுக்கெல்லாம் குருவாக இருக்கும் வியாசர், தட்சிணா மூர்த்தி, முருகப் பெருமான் என குருக்களை வழிபடுவது வழக்கம்.
குரு பூர்ணிமா தினத்தில் நமக்கு பாடம் கற்றுக் கொடுத்த குருவை நாம் மனதார நினைத்தலும், கோயிலுக்கு சென்று வணங்குவதும் நல்லது.
தற்போது நாம் கடைப்பிடித்துக் கொண்டிருக்கும் ஆசிரியர் தினம் போலவே, காலம் காலமாக குருவை நினைக்கும் வகையில், தான் கற்று வெளியேறிய பிறகும் தன்னுடைய குருவை நினைக்க வேண்டும் என்பதற்காக பின்பற்றப்பட்டு வந்த தினம் தான் குரு பூர்ணிமா என்பதால், இன்று குறைந்த பட்சம் நம் குருவை நினைக்கவாவது செய்யலாம்.
இந்நாளில் துறவிகள் மட்டுமில்லாமல், ஞான மற்றும் மோட்ச சாஸ்திரத்தை அறிய முற்படும் அனைவரும் தங்களது குருவையும், வியாச பகவானையும் ஆராதிக்க வேண்டும். வியாச பகவானை நிமித்தமாக வைத்து, ஆதிகுருவில் (சிவபெருமான் அல்லது ஸ்ரீமன் நாராயணன்) தொடங்கி, தங்களுடைய இப்பொழுதைய குரு வரை குரு பரம்பரையில் உள்ள அனைவரையும் இந்நாளில் வழிபட வேண்டும்
எங்கே செல்கின்றது நம் சாஸ்த்திர, சம்பிரதாயம்?
எங்கே செல்கின்றது நம் சாஸ்த்திர, சம்பிரதாயம்?
காஞ்சி காமகோடி பீடத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் காமாக்ஷி அம்பாள் கோவிலில் அம்பாளுக்கு சாற்றிய அஷ்ட பந்தனம் எலி தின்று விட்டதாக சொல்லி இன்று யாருக்கும் தெரியாமல் கும்பகோணத்தில் இருந்து தினகரசர்மா அவர்களை நேற்றே வர வைத்து முறையாக செய்யப்பட வேண்டிய சாஸ்திரங்களை செய்யாமல் அவசர அவசரமாக தற்போது அஷ்ட பந்தனம் சாற்றி உள்ளார்கள். சுப்பையா ஸ்தபதி அவர்கள் முன்னிலையில். மஹா பெரியவா அதிஷ்டானத்தில் வைத்து பூஜை செய்த அஷ்டபந்தனம் எலி தின்றதாக சொல்லப்படுகிறது.
கௌரி காமாக்ஷிக்கு செய்த துரோகத்திற்கு இந்த காமாக்ஷியிடம் இவர்கள் மாட்டிக் கொண்டனர். ஏழு வருடங்களாக காமாக்ஷி கல்யாண மண்டபத்தை நிர்வாகம் செய்து வந்த காமாக்ஷியிடம் இருந்து ஒரே நாளில் வெளியேற்றி வேறு ஒருவரிடம் கொடுக்கப் பட்டதோ அதே போல், ஒரே நாளில் காஞ்சி காமாக்ஷிக்கு அஷ்ட பந்தனம் சாற்றி உள்ளார்கள். இது எந்த விதத்தில் ஞாயம்? இவர்கள் நினைத்தால் அஷ்ட பந்தனத்தை எப்படி வேண்டுமானாலும் சாற்றலாம். என்ன வேண்டுமானாலும் செய்யலாம். வெளி உலகத்திற்கு சொல்லவே வேண்டிய அவசியம் இல்லை.
சாஸ்த்திர சம்பிரதாயங்களை கடைபிடிக்க வேண்டாமா? அரசாங்கத்திடம் அனுமதி வாங்க வேண்டாமா? மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டாமா? இந்த கடுமையான கொரோனா காலத்தில் இந்த மாதிரியான தவறான காரியங்களை மடமே செய்யலாமா? மடம் எங்கே சென்று கொண்டு இருக்கிறது? கலாகர்ஷணம் செய்ய வேண்டாமா? [கலையை ஆவாகனம் செய்வது] அம்பாளின் சக்தி, அறுபத்தி நான்கு கலைகளை ஒரு குடத்தில் ஆவாகனம் செய்து அதை கொண்டு கும்பாபிஷேகம் செய்ய வேண்டாமா?. அப்படி ஏதாவது செய்தார்களா? யாக வேள்விகள் செய்தார்களா? யார் கொடுத்த யோசனையில் இவர்கள் இப்படி செய்கிறார்கள். சட்டத்தை ஆளுபவர்கள் சட்டத்தை மீறுவது போல் இவர்களும் வேதத்தை, சாஸ்திரத்தை, சம்பிரதாயத்தை, தர்மத்தை மீறுகிறார்கள். எல்லாவற்றிலும் நிபுணரான தினகரசர்மாவும் உடந்தையாக இருப்பது தான் வேடிக்கையாக இருக்கிறது. காமாக்ஷி அம்பாளின் சாபத்திற்கு வெகு விரைவில் ஆளாவார்கள். துக்ளக் ஆட்சி நடைப்பெற்று கொண்டு இருக்கிறதோ??.
ஆதி சங்கரர் காமாக்ஷியை முதல் முறையாக தரிசிக்க வந்த போது காஞ்சி நகரமே பெரும் பஞ்சத்திலும், ஊரே வறண்டும், நோயின் கொடுமையும் இருந்ததை வரலாறு சொல்கிறது. ஏன் என்றால் கபாலிகளிடம் அம்பாள் மாட்டிக் கொண்டு பல பலிகள் கொடுக்கப்பட்டு அம்பாள் கடும் கோபத்தில், உக்கிரகத்லும் இருந்தால். இதை கண்ட ஆதி சங்கரர் கமாக்ஷியின் உக்கிரத்தை தனித்து ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்த பின் தான் அம்பாள் சாந்தமடைந்தால் என்பது உண்மையான வரலாறு. இது அனைவருமே அறிவீர்கள். அன்று காபாளிகலிடம் இருந்து மீட்டார் ஆதி சங்கரர். இன்று இவர்கள் இப்படி யாரிடமும் சொல்லாமல் ரகசியமாக அஷ்ட பந்தனம் சாற்றுவதால் காஞ்சிபுர மக்களுக்கும், உலகத்திற்கும் பெறும் கேடு வந்து விடாதா? ஏற்கனவே கொரானாவால் உலகமே அல்லல் பட்டுக் கொண்டு இருக்கிறது. மக்கள் துன்பப்பட்டால் யார் அவர்களை காப்பாற்ற வேண்டும். உலகை காக்கும் பொறுப்பு இவர்களுக்கும் உண்டு என்பதை மறந்து விட்டார்களோ? ஏற்கனவே கொரானா முதல் அலை, இரண்டாம் அலை என்று மக்கள் பெரும் கஷ்டத்தில் இருந்து வருகிறார்கள். இந்த நேரத்தி ஒன்று ஞாபகம் வருகிறது, செய்தி சேனலில் ஆகஸ்ட் மாதம் முதல் கொரானா மூன்றாம் அலை மிக கொடுரமாக இருக்கும் என்று டெல்லி ஏம்ஸ் மருத்துவர்கள் நேற்று முன் தினம் சொன்னது எனக்கு இப்போது ஞாபகம் வருகிறது.
எது தர்மம்... இதோ இதுவே முறையான தர்மம் ....
செட்டியார் கடையில் இருந்து கெமிக்கல் மருந்தை சாற்றலாம்.
உலகத்திற்கு தெரியாமலும், யாரிடமும் தெரிவிக்காமலும் சாற்றலாம்.
ஒரே நாளில் பூட்டிய சாவியை எடுத்தது போல் அஷ்ட பந்தனத்தை ஒரே நாளில் ரகசியமாக மாற்றலாம்.
ஏன் என்றால் தர்மமே இவர்களுக்கு கிடையாது என்பதும் இரண்டு நாட்களுக்கு முன் காமாக்ஷி கல்யாண மண்டபம் ஒரு சாட்சி. இன்று காமாக்ஷி கோவிலில் நடந்ததும் ஒர் சாட்சி.
ஏன் இவர்கள் எதையுமே முறையாக செய்ய மாட்டார்களா? ஏன் இப்படி தவறுக்கு மேல் தவறு செய்கிறார்கள். முறையாக கௌரியிடம் பேசி என்ன நடைமுறையோ அதன் படி செய்து கல்யாண மண்டபத்தை கேட்டு இருக்கலாம். அதை செய்ய வில்லை. மடத்தின் ஸ்ரீகார்யம் டிரஸ்டிக்கள் என்ன சொல்கிறார்களோ அதன் படி தான் நடக்கும் என்கிறார் ஸ்ரீகார்யம். டிரஸ்டிகள் யார் என்றே எனக்கு புரியவில்லை. அவர்கள் தான் எல்லாவற்றையும் பார்கிறார்கள் என்றால் எதற்காக ஸ்ரீகார்யம்? தர்மத்தை மீறினால் அது நல்லதுக்கு இல்லை. எதையும் முறையாக செய்யலாம். இப்படி அராஜகமாக எடுத்தோம், கவிழ்தோம் என்று செய்ய கூடாது. ரவுடிகளின் ராஜ்யம் போல் இருக்க கூடாது. இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. எல்லாம் கலிகாலம்.
மேலும் தற்போது கார்த்திக்கு பூஜை முறை இன்று பால பெரியவா வழங்கி உள்ளார். எத்தனை பேருக்கு தெரியும் இவர் இதற மத பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார் என்று. கார்த்திக் எப்படி அம்பாளுக்கு பூஜை செய்வதற்கு உத்தரவு கொடுத்தார்கள். இதே புது பெரியவா நடனம் அண்ணாவின் மகன் ஸ்ரீராமிற்கு நான்கு வருடங்கள் முன்பே புது பெரியவா பூஜை முறை வழங்கினார். அப்போது பால பெரியவாளிடம் ஆசிர்வாதம் வாங்க சென்றார்கள். ஆனால் பால பெரியவா ஸ்ரீராமை இப்போ பூஜை முறைக்கு வேண்டாம் பிறகு நான் சொல்கிறேன் என்று சொன்ன பெரியவா இன்று வரை பூஜை முறை வழங்க வில்லை. தன்னோட குருநாதர் பூஜை செய்வதற்கு முறை கொடுத்தும் இன்றுவரை ஸ்ரீராமுக்கு வழங்க வில்லை. நடனம் அண்ணாவோ, அவரின் பையன் ஸ்ரீராமோ இன்று வரை பொருமையாகவும், பெரிய மனதோடும் இருக்கலாம், ஆனால் இன்று நடந்த சம்பவத்திற்கு பிறகு ஸ்ரீராமிற்கு பூஜை வழங்காதது மனசு ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு அனைவரும் அர்சகர் ஆகலாம் என்பதை அவருக்கு முன்பே தொடங்கி வைத்ததற்கு முதலில் பாரட்ட வேண்டும்.
பெரியவா சரணம்
அடியேனின் தந்தையை பற்றிய ஒரு நினைவாற்றல்
என்றென்றும் நீங்கா நினைவில் இருக்கிறோம் அப்பா....
தந்தையர் தினத்தை முன்னி்ட்டு அடியேனின் தந்தையோடு வரலாறு....
வெகு நாட்களாகவே அடியேனின் தந்தையை பற்றிய ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்ற ஆவளோடு இருந்தேன். இன்று தந்தையர் தினம் என்பதால் அடியேனின் தந்தை பாலு சாஸ்திரிகள் அவர்களை பற்றி மிக எளிமையாக ஒரு சிறு கட்டுரை தங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.
அடியேனின் தந்தை கும்பகோணம் பாலு சாஸ்திரிகள். இயர் பெயர் பால சுப்பிரமணியன்.1943 ஆம் ஆண்டு மன்னார்குடி மாவட்டம் சித்தமல்லியில் வெங்கடராமன் மீனாக்ஷி சுந்தராம்பாள் தம்பதிகளுக்கு ஆறு பிள்ளைகளில் இவர் கடைக்குட்டியாக பிறந்தார். உடன் பிறந்தவர்கள் நான்கு பேர் பெண்கள், இரண்டு ஆண் குழந்தைகள். அப்பாவுக்கு ஒரு அண்ணா உண்டு, சிறு வயதிலியே இறந்து விட்டார். கடைக்குட்டி சிங்க குட்டியாக பிறந்தார். அக்கால கட்டத்தில் மிகவும் சிறப்பாக வாழ்ந்த குடும்பம். அதுவும் எங்கள் தாத்தாவின் உழைப்பை சொல்லி மாளாது. தாத்தா பூரணமாக வேதாத்தியானம் படித்தவர். ஆச்சார, அனுஷ்டானத்தில் கடுமையாக இருந்தவர். ஆதனாலேயே மகனை வேத பாடசாலையில் சேர்த்து படிக்க வைத்தார். அவரும் சிறந்த முறையில் வேதாத்யானத்தை பெரும் புலமையோடு முடித்தார்.
படிப்பு முடிந்த உடன் திருமணம். திருமணத்தின் போது தந்தையின் வயது பத்தொண்பது. சிமிழி ஸ்ரீராமா & மீனாக்ஷி தம்பதிகளின் மூத்த பெண்ணை கைப்பிடித்தார். அப்போது அடியேனின் தாயாருக்கு வயது ஒன்பது. பெரிய மனுஷியாக கூட ஆகவில்லை. பதிமூன்று வயதில் அடியேனின் தாயார் முதல் குழந்தையை ஈன்றெடுத்தார். அடியோனோடு உடன் பிறந்தவர்கள் மொத்தம் நான்கு பேர். முதல் இரண்டும் பெண், மூன்றாவதாக அடியேன், நான்காவதாக ஒரு பெண் எனக்கு தங்கையாக பிறந்தாள். பின் தந்தை பிழைப்புக்காக கும்பகோணம் ராஜு சாஸ்திரிகள் அவர்களிடம் வைதீகத்திற்கு வந்தார் தந்தை. ராஜு சாஸ்திரிகள் அடியேனின் தந்தையின் மாமா ஆவார்.
கும்பகோணத்தில் பேரும், புகழோடும் குடும்பம் நடந்தது. குழந்தைகள் எல்லாம் வளரவே வருமானம் போததால் சென்னைக்கு குடி வந்தார்.
சென்னையில் குரோம்பேட்டையில் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் குடும்பத்தை தொடங்கி, படி படியாக உயரத்திற்கு வந்தார். குரோம்பேட்டையில் தனக்கென முத்திரை பதித்தார். கிரகஸ்தர்கள் அப்பாவின் மீது மிகுந்த மரியாதை வைத்தார்கள். மிகவும் எளிமையாகவும், அனைவரிடமும் அன்பாகவும் பழக்க கூடியவர். கிரகஸ்தர்கள் தங்கள் இல்லத்தில் நடைபெறும் காரியங்களுக்கு அவர்கள் என்ன கொடுக்கிறார்களோ அதை பெற்று குடும்பம் நடத்தி வந்தார். தனது கடின உழைப்பால் அவரின் பெயரிலேயே ஒரு தெரு அமைத்து, கிரகஸ்தர்களின் உதவியோடு தனக்கென ஒரு நிலம் வாங்கி அதில் ஒரு எளிமையான வீடு கட்டி பெருமையோடு வாழ்ந்து வந்தார். கிரகஸ்தர்கள் கும்பகோணம் பாலு சாஸ்திரிகள் என்ற பெயரோடு கூடவே குரோம்பேட்டை பாலு சாஸ்திரிகள் என்று அன்போடு அழைக்கப்பட்டார். இவரின் வெண்கல குரலுக்கு அனைவரும் அடிமை என்றால் அது மிகையாகாது. அப்படி ஒரு குரல் வளம் கொண்டவர். அதே நேரத்தில் வைதீக காரியங்களை எதற்காகவும் குறைக்க மாட்டார். சாஸ்திரத்தில் எப்படி சொல்லப்பட்டுள்ளதோ அப்படி செய்து தருவார். குரோம்பேட்டையில் என்னற்ற வைதீகர்களை கொண்டு வருவதற்கு பெரும் முயற்சி எடுத்து அதில் வெற்றியும் கண்டார். அப்பாவின் சிஷ்யராக இன்றும் குரோம்பேட்டையில் நிறைய வைதீகர்கள் உண்டு. அவர்கள் எல்லோரும் அப்பாவிடம் வைதீகம் பார்த்து இருக்கிறார்கள்.
வேதீகத்தையும் தாண்டி தனது சொந்த ஊரில் குலதெய்வ கோவிலான ஆகாச வீரனார் கோவிலையும் கட்டினார். வலம்புரி விநாயகர், ஆகாச வீரனார், முருகன் ஆகிய தெய்வங்களை பிரதிஷ்டை செய்து சிறப்பாக கும்பாபிஷேகம் செய்த பெருமையும் இவருக்கு உண்டு. ஆரம்ப கால கட்டத்தில் இந்த கோவிலில் உருவம் கிடையாது. தீபம், அரிவாள், கதை ஆகியவை மட்டுமே வெட்ட வெளியில் இருந்தது. வெட்ட வெளியில் எவ்வளவு காற்று அடித்தாலும் தீபம் இனையவே அனையாது. அவ்வளவு சக்தி உண்டு எங்கள் ஆகாச வீரனாருக்கு. பின் அப்பாவுக்கு உத்தரவாகி தனது உருவத்தை காட்டி அப்பாவை கோவில் கட்ட ஆகாச வீரனார் கனவில் கேட்டுக் கொண்டதின் பேரில் கோவில் அப்பாவால் கட்டப்பட்டது. கோவிலுக்கும் முதல் செங்கல்லை ஜகத் குரு ஜயேந்திர பெரியவா தான் தந்தையின் கனவில் தோன்றி எடுத்து வைத்தார். அப்போது மழை கொட்டோ கொட்டு என்று கொட்டியது என்றும் மழையில் நனைந்த படி பெரியவா முதல் செங்கல்லை எடுத்து வைத்தது போல் கனவில் அனுக்கிரஹம் செய்தா ஜயேந்திர பெரியவா. தற்போது பூஜைகளும் சிறப்பாக நடை பெற்று வருகிறது.
இவை எல்லாவற்றுக்கும் மேல் காஞ்சி ஸ்ரீ ஜயேந்திர பெரியவா மீது அளவு கடந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தார். அதனாலேயே பெரியவாளுக்கும் தந்தையை மிகவும் பிடிக்கும். பெரியவாளை இரண்டு முறை குரோம்பேட்டைக்கு அழைத்து வந்துள்ளார். முதல் முறையாக 2004 ஆம் ஆண்டு ஐந்து நாட்கள் காமாக்ஷி கல்யாண மண்டபத்தில் சந்திர மௌளீஸ்வர பூஜையோடும், இரண்டாவது முறையாக பெரியவாளின் எழுபத்தி ஐந்தாவது ஜயந்தி [2012 ஆண்டு] மஹோட்சவத்திற்காகவும் அழைத்து வந்து மிக பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்தார். காலங்கள் உருண்டு ஒடின. தந்தைக்கு எழுபது வயது பீமரதாஸாந்தி இல்லத்திலேயே வெகு விமரிசையாக நடந்தது. நாளாக நாளாக உடலில் தளர்வு ஏற்பட்டது. சர்க்கரையின் அளவு அதிகரித்து உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டது. இரண்டாயிரத்தி பதினைந்தாம் ஆண்டு பிப்ரவரி மாதம் இருபத்தி ஒன்றாம் தேதி காலை ஏழரை மணிக்கு பெரியவாளின் பாதார விந்தத்தில் சரணடைந்தார். இப்படி ஒரு தந்தை எங்களுக்கு கிடைத்த பெருமையோடும், மிகவும் பாக்கிய சாலிகளாக, தங்களின் நீங்கா நினைவோடு வாழ்ந்து வருகிறோம் அப்பா.
தந்தையை பற்றி இன்னும் எழுதுவதற்கு ஏராளமாக உள்ளது. இனினும் மிக சுருக்கமாக அடியேன் எழுதி உள்ளேன்.