ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
18. ஸ்ரீ சுரேந்திரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
பதினெட்டாவது ஆச்சார்யர் [கி.பி. 375 - 385]
ஸ்ரீ சுரேந்திரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் மஹாராஷ்டிர அந்தணர். தந்தையார் பெயர் ''மதுரா நாதர்''. இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் ''மாதவர்''.
இவருடைய யோக வல்லமை காரணமாக ‘'ஸ்ரீ யோகி திலகர்'' என்று கொண்டாடப் பட்டார். இவர் காலத்தில் "நரேந்திராதித்யன்" காஷ்மீர் மன்னராக இருந்தார். இவருடைய மருமகன் "சுரேந்திரனும்" ஒரு சிற்றரசனே.
சுரேந்திரனின் சபையில் ''துர்தீதிவி'' என்ற நாஸ்திகர், ஆஸ்தான வித்வானாக புகழ் பெற்றிருந்தார். ஸ்ரீ யோகி திலகர் பலரை வாதில் வென்ற அனுபவம் இருந்ததால் இவனையும் வாதில் வென்றார்.
இதை அறிந்த நரேந்திர ஆதித்யன் பெரும் வியப்போடு இவர் காலடியில் வணங்கி “இன்று முதல் இந்த காஷ்மீர் அரசுரிமை உங்களுடையது, உங்கள் ஆணைப்படி செயல் படுவேன்" எனக் கூறினார். அப்பேற்பட்ட பெருமை வாய்ந்தவர் இவர்.
இவர் கி.பி. 385 ஆம் ஆண்டு, தாருண வருடம், மார்கழி மாதம், வளர்பிறை பிரதமை திதி அன்று உஜ்ஜயினி அருகில் சித்தி அடைந்தார்.
இவர் 10 ஆண்டுகள் காலம் தான் பீடத்தை அலங்கரித்தார்.