புதன், 25 நவம்பர், 2020

ராமாயணம் பகுதி நான்கு

ராமாயணம் பகுதி நான்கு

தசரதரின் முன் வந்து நின்ற அந்த இளைஞன் வேறு யாருமல்ல... லட்சுமணன் தான்... தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்ற பழமொழிக்குச் சொந்தக்காரன்.தந்தையே! என் சகோதரன் எங்கிருக்கிறாரோ அங்கிருப்பதே எனக்கு பெருமை, வேலை, கடமை எனக்கருதுபவன் நான். அவர் கானகம் சென்றால் நானும் அவருடன் செல்வேன். அவரின்றி நான் இல்லை; அண்ணனுடன் செல்வதென முடிவெடுத்து விட்டேன், என்ற லட்சுமணனின் சொல் கேட்டு தசரதருக்கு இன்னும் இக்கட்டான நிலைமை ஆயிற்று. ஒரே நேரத்தில் இரண்டு மைந்தர்களை இழந்து விடுவோமோ என பயந்தார்.ஆனாலும், லட்சுமணனை தடுக்கும் சக்தி அவருக்கில்லை. இருவரும் கானகம் செல்ல தசரதர் அனுமதி அளித்தார். விஸ்வாமித்திரர் அந்த வீர சகோதரர்களுடன் காட்டுக்கு புறப்பட்டார். காட்டிற்குள் மனித ஜீவன்கள் யாருமே வருவதில்லை. தடாகை விழுங்கி விடுவாள் என்ற பயம். அங்கு வந்த பின், தாடகையை கொல்வதற்கு ராமன் யோசித்தார். ஏனெனில், அவள் ஒரு பெண். அரக்கியாக இருந்தாலும் பெண் என்பதால் அவளை கொல்வதற்கு ராமனிடம் தயக்கம் இருந்தது. விஸ்வாமித்திரர் ராமனின் எண்ணத்தை புரிந்து கொண்டார். ராமா, அவளுக்கு பெண்மைக்குரிய எந்த இலக்கணமும் கிடையாது. மனித மாமிசம் உண்ணும் பெண்மணியை கொல்வதில் எந்த தவறும் இல்லை. அவளை உடனே அழித்துவிடு, என்றார். ராமனும் விஸ்வாமித்திரரின் சொல்லில் இருந்த நியாயத்தை உணர்ந்து வில்லை எடுத்து ஒலி எழுப்பினார். அவரது நாண் அசைவில் அந்த கானகமே நடுங்கியது. விலங்குகள் ஓடி மறைந்தன. நாண் ஒலி கேட்டு கலங்கிப் போன தாடகை வெளியே வந்தாள்.  யாரடா அவன்! எனது கானகத்திற்குள் புகுந்து தைரியமாக வில்லை எடுத்தவன்! உன்னை ஒழிக்காமல் விடமாட்டேன், என கர்ஜித்தவளாக வெளியே வந்தாள்.

ராமன் வில்லெடுத்து தாடகையின் மீது அம்புமழை பொழிந்தார். தாடகை அலறிக் கொண்டே சாய்ந்தாள். உயிர் பிரிந்தது. அவளது மறைவு செய்தி அறிந்த மகன்கள் மாரீசனும், சுபாகுவும் ராமனை தாக்க பாய்ந்தோடி வந்தனர். சுபாகுவை அக்னி அஸ்திரத்தால் ராமன் சுட்டெரித்தார். மாரீசன் மீது மானவம் என்ற அஸ்திரத்தை எய்தார் ராமன். அது மயக்கும் சக்தி வாய்ந்தது. மயங்கி போன மாரீசன், எங்கோ ஓடிப் போய்விட்டான். ராமாயணத்தில் ராமனின் முதல் போர் இதுதான். போரில் வெற்றி பெற்ற ராமனை விஸ்வாமித்திரர் பாராட்டினார். ராமனுக்கும், லட்சுமணனுக்கும் பலம், அதிபலம் என்ற இரண்டு மந்திரங்களை கற்றுக் கொடுத்தார். மிக மிக களைப்பாக இருக்கும்போதோ, உடல் நலமற்ற வேளையிலோ, கவனக்குறைவாக இருக்கும்போதோ உயிருக்கு ஆபத்து உருவாகலாம். அந்த சமயத்தில் இந்த மந்திரத்தை பக்தியுடன் சொன்னால் எந்த அதர்மமும் அவர்களை அணுகாது. எனவே இந்த மந்திரங்களை ராம லட்சுமணர் மிகவும் கவனத்துடன் படித்தனர். படித்ததற்குரிய சக்தியும் அவர்களுக்கு கிடைத்தது. அரக்கர்களின் அழிவுக்கு பிறகு விஸ்வாமித்திரரின் யாகம் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. யாகம் முடிந்த பின், விஸ்வாமித்திரர் ராம, லட்சுமணர்களை மிதிலாபுரி நகருக்கு அழைத்தார். அந்நகரில், மிகச் சிறப்பு வாய்ந்த சிறப்பான வேள்வி நடத்தப்பட இருந்தது. அதைப் பார்த்த பிறகு ஊர் திரும்பலாம் என்பது விஸ்வாமித்திரரின் திட்டம். செல்லும் வழியில் கவுதம முனிவரின் ஆஸ்ரமத்தில் அவர்கள் தங்கினர்.  அங்கே சில சீடர்களைத் தவிர வேறு யாருமே இல்லை. கவுதமர் எங்கே என ராமன் விசாரித்தார். அவர் இமயமலைக்கு தவம் செய்ய சென்றுவிட்ட விபரம் தெரிந்தது. முனிவரின் மனைவி அகலிகை. அழகில் சிறந்தவள். அவளது அழகைக் கண்டு தேவேந்திரனே சபலப்பட்டான். ஒருமுறை கவுதமரைப் போலவே மாற்று உருவம் எடுத்துவந்து அவளை அடைந்தான். கோபம் அடைந்த கவுதமர் இந்திரனின் உடலழகு அழியும்படி சாபமிட்டார்.

அகலிகையை யார் கண்ணுக்கும் தெரியாமல் அதே ஆஸ்ரமத்தில் வசிக்கும்படி சொல்லிவிட்டு, களங்கமடைந்த அவள் புனிதமாவது எப்போது என்பது பற்றியும் சொல்லியிருந்தார். விஷ்ணு மானிடப் பிறப்பெடுத்து எப்போது பூமிக்கு வருகிறாரோ அவரது பாதம் படும் இடத்தில் நீ இருந்தால் மீண்டும் கற்புத்தன்மை பெறுவாய், என சொல்லியிருந்தார். இப்போது ராமபிரான் முனிவர் தங்கியிருந்த ஆஸ்ரமத்திற்கு வந்துவிட்டதால் அகலிகை சாபம் நீங்கி அனைவர் முன்னிலையிலும் தென்பட்டாள். அவள் கல்லாகக் கிடந்ததாகவும் கூறப்படுவதுண்டு. அந்தக் கல்லின்மீது ராமனின் பாதம் பட்டதும் அவள் மீண்டும் உருபெற்றாள் என்பார்கள். இந்த நேரத்தில் கவுதமரும் வந்து சேர்ந்தார். தம்பதியர் இணைந்தனர். அவர்கள் விஸ்வாமித்திரரையும், ராம லட்சுமணர்களையும் கனிவுடன் உபசரித்தனர். அகலிகை சாப விமோசனத்திற்கு பிறகு, அவர்கள் மிதிலாபுரி நகர் சென்றடைந்தனர். செல்வச்செழிப்பும், அறிவுடைய மக்களும் இணைந்த பூமி அது. காரணம் அந்நகரில் லட்சுமி நிஜமாகவே வாசம் செய்தாள். அந்நாட்டை ஜனக மகாராஜா ஆண்டு வந்தார். அவரிடம் விசித்திரமான ஒரு வில் இருந்தது. அதன் எடை மிக மிக அதிகமானது. அதை அசைக்கக்கூட யாராலும் இயலவில்லை. மன்னர் ஜனகரின் அவையில் குரு சதானந்தர் இருந்தார். அவர் கவுதம முனிவருக்கும், அகலியைக்கும் அவதரித்த திருமகன். மிதிலைக்கு வந்த ராம லட்சுமணர்களை அவர் அன்புடன் வரவேற்றார். தன் தாய்க்கு சாபவிமோசனம் அளித்த அந்த மகானை அவர் மிகவும் நேசித்தார். விஸ்வாமித்திரரிடம், முனிவரே! ஜனக மகாராஜா மிகப் பெரிய வேள்வியை நடத்த இருக்கிறார். வேள்வி முடிந்தபிறகு அவரது திருமகள் சீதைக்கு சுயம்வரம் நடத்தப்போகிறார்.  சுயம்வரத்திற்கு வரும் மன்னர்களுக்கு ஒரு போட்டி நடத்தப்படுகிறது. அரண்மனையில் இருக்கும் வில்லை நாணேற்றி யார் அம்பு எய்கிறார்களோ, அவருக்கே தன் மகள் சீதையை திருமணம் செய்து கொடுப்பதாக சக்கரவர்த்தி முடிவு செய்துள்ளார். ராமன் இந்த போட்டியில் நிச்சயமாக வெல்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனவே அவரை போட்டியில் கலந்து கொள்ள செய்யுங்கள், என்றார். விஸ்வாமித்திரரும் சம்மதித்தார். இதன் பிறகு தாங்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு மூவரும் புறப்பட்டனர். நீலவண்ணமேனியன் ஒருவன் கருணை பொங்கும் கண்களுடனும், அழகு பொங்கும் வதனத்துடனும் வருவதைக் கவனித்தன இரு அழகு விழிகள்.


அருள் மிகு அட்சயபுரீஸ்வரர் திருக் கோவில்

அருள் மிகு அட்சயபுரீஸ்வரர் திருக் கோவில்
 



மூலவர் :அட்சயபுரீஸ்வரர்
அம்மன் :அபிவிருத்தி நாயகி
தல விருட்சம் :வில்வமரம்
பழமை :1000 வருடங்களுக்கு முன்
ஊர் :விளங்குளம்
மாவட்டம் :தஞ்சாவூர்
மாநிலம் :தமிழ்நாடு
 
திருவிழா:மகா சிவராத்தரி, திருக்கார்த்திகை, திருவாதிரை   
       
தல சிறப்பு:இத்தலத்தில் சனீஸ்வர பகவான் தெற்கு நோக்கி மந்தா, ஜேஷ்டா மனைவியருடன் திருமண கோலத்தில் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.   
       
திறக்கும் நேரம்:காலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.  
     
முகவரி:அருள்மிகு அட்சயபுரீஸ்வரர் திருக்கோயில், விளங்குளம்-614 612, பேராவூரணி தாலுக்கா, தஞ்சாவூர் மாவட்டம்.போன்: +91 97507 84944, 96266 85051.  
      
பொது தகவல்:பூசம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: பெரியவர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்வர். மனதில் தெய்வபக்தி மேலோங்கி இருக்கும். மென்மையுடன் மற்றவர்களிடம் பழகுவர். கவலைகளை மறந்து சிரிக்கும் பண்பைப் பெற்றிருப்பர். எடுத்த செயலை வெற்றியோடு முடிக்கும் வைராக்கியம் இருக் கும். நண்பர்கள் மத்தியில் புகழோடு வாழ்வர். பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், சண்டிகேஸ்வரர், மனைவியருடன் சனீஸ்வரர், சூரியன், பைரவர், நந்தி, தட்சிணாமூர்த்தி, பிரம்மா, லிங்கோத்பவர், துர்க்கை, கஜலட்சுமி, நாகர், நடராஜர் சன்னதிகள் உள்ளன.

பிரார்த்தனை:பூசம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். உடல் ஊனமுள்ளவர்கள், கால் வலி உள்ளவர்கள், தோஷங்களினால் திருமணத்தில் தடை உள்ளவர்கள் இங்க வழிபாடு செய்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:பூச நட்சத்திரத்திற்குரியவர்கள் நல்லெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம், புனுகு, இளநீர், சந்தனம், பால், தயிர் ஆகிய எட்டு வகை பொருள்களால் சனி பகவானுக்கு அபிஷேகம் செய்து, எட்டு முறை சுற்றி வந்து வழிபட்டால் தீராத பிரச்னைகள் தீரும்.  

தலபெருமை: பூச பத நேசம் தரும் என்பது பழமொழி. பதன் என்பது சனீஸ்வரரை குறிக்கும். சனிபகவான் தன் பாத குறைபாடு நீங்க இத்தல் அட்சய புரீஸ்வரரை வேண்டி நிவாரணம் பெற்ற தலமே விளங்குளம். எனவே பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனிக்கிழமைகளிலோ, பூச நட்சத்திர தினத்தன்றோ, அட்சய திரிதியை நாளிலோ இத்தல இறைவனை வழிபட்டால் வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. 27 நட்சத்திரத்தில் பூச நட்சத்திரம் 8வது நட்சத்திரமாக அமைந்துள்ளது. இதனால் பூச நட்சத்திரத்திற்குரியவர்கள் இந்த நாட்களில் நல்லெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம், புனுகு, இளநீர், சந்தனம், பால், தயிர் ஆகிய எட்டு வகை பொருள்களால் சனி பகவானுக்கு அபிஷேகம் செய்து, எட்டு முறை சுற்றி வந்து வழிபட்டால் தீராத பிரச்னைகள் தீரும் என்பதும், அனைத்து வகையான சனி தோஷத்தினால் பாதிக்கப்ட்டவர்கள் இத்தலத்தில் மனைவியருடன் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கும் சனிபகவனை வழிபட்டால் தோஷங்களின் பாதிப்பு குறையும் என்பதும் ஐதீகம்.அடிக்கடி உடல் நலக்குறைவு, கடன் பிரச்னையால் அவதிப்படுபவர்கள், மன நிம்மதி வேண்டுபவர்கள், ஊனமுற்றவர்கள், கால் சம்பந்தமான நோய் உள்ளவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள் விளங்குளம் சனீஸ்வரரை வழிபட்டு வரலாம். இங்கு சனீஸ்வர பகவான் மந்தா, ஜேஷ்டா என்ற மனைவியருடன் திருமண கோலத்தில் ஆதிபிருஹத் சனீஸ்வரர் என்ற பெயரில் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தல அபிவிருத்தி நாயகியை வழிபட்டால் சகல காரியங்களும் அபிவிருத்தியாகும். இத்தலத்தில் நவக்கிரக சன்னதி கிடையாது. அதற்கு பதில் சூரியனும் அவரது புத்திரர் சனிபகவானும் தனித்தனி சன்னதிகளில் அருளுகின்றனர். விநாயகர் இத்தலத்தில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இதுபோன்ற அமைப்பை காண்பது அரிது. இவரை வழிபட்டால் அனைத்து காரியங்களிலும் விஜயம் கிடைக்கும் என்பதால் இவர் விஜய விநாயகர் என அழைக்கப்படுகிறார்.   
       
தல வரலாறு:பூச பதன் நேசம் தரும் என்பது பழமொழி. பதன் என்பது சனீஸ்வரரைக் குறிக்கும். ஒருமுறை எமதர்மராஜன், தன் தந்தையான சனீஸ்வரனின் காலில் அடிக்க அது ஊனமானது. இதற்கு நிவாரணம் தேடி பல சிவத்தலங்களுக்கு அவர் சென்றார். இத்தலத்துக்கு வந்தபோது, விளாமரவேரில் கால் இடறி அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்தார். அவர் விழுந்தநாள் திருதியையும், பூச நட்சத்திரமும், சனிவாரமும் சேர்ந்த நன்னாளாக இருந்தது. அவர் விழுந்த இடத்தில் இருந்து, பல காலமாக மறைந்திருந்த பூச ஞானவாவி தீர்த்தம் சுரந்து சனீஸ்வரரை மேல் எழுப்பி கரை சேர்த்தது. அப்போது சிவபெருமான் அட்சயபுரீஸ்வரராக சனீஸ்வரருக்கு காட்சிதந்து, திருமண பாக்கியமும் தந்தார். சனீஸ்வரரின் ஊனம் நிவர்த்தி ஆனது. விளாமரம் இருந்ததாலும், தீர்த்தம் சுரந்ததாலும் இவ்வூர் விளங்குளம் ஆனது. பூச நட்சத்திர லோகத்தில் வசித்த பூச மருங்கர் என்ற சித்தர், சனீஸ்வர லோகத்திலிருக்கும் சனிவாரி தீர்த்தத்தை எடுத்து, பூமியில் பல கோயில்களில் உள்ள தீர்த்தங்களில் அதை சேர்ப்பார். அந்த தலங்களில் எல்லாம் சனீஸ்வரருக்கு முக்கியத்துவம் உண்டாயிற்று. இந்த சித்தர் சூரியலோகத்துக்கும், பித்ரு லோகத்துக்கும் கூட தினமும் சென்று வரும் அரிய சக்தியை உடைய பித்ரசாய் என்னும் காக்கைகளுக்கு சற்குருவாக விளங்குகிறார். இவர் தினமும் இத்தலத்தில் வழிபாடு செய்வதாக ஐதீகம்.

பிரதீபன்

பிரதீபன்!

சந்திர வம்சாவளியில் பரதனை தொடர்ந்து வந்தவர்களில், பிரதீபன் என்னும் அரசன் மகாபாரதத்தில் நாம் அறிந்திராத பாத்திரம்.  பிரதீபன் ஆன்மிக நெறி அறிந்தவன். கங்கை நதிக்கரையில் மனதை அடக்கி தவம் செய்யத் தொடங்கினான். ஒருநாள் அவனைக் கண்ட  கங்கைக்கு அவன் மீது காதல் தோன்றியது.அவனது வலது தொடையில் அமர்ந்து தன்  காதலைக் கூற முற்பட்டாள். ஆனால்,பிரதீபன் அவளது காதலை மறுத்துவிட்டான்.மனித  வாழ்வின் தர்மநெறிபற்றி அவளிடம் கூறத்  தொடங்கினான். கங்கா!என்னை நீ விரும்பியதில் பிழையில்லை. ஏனென்றால்,ஒருவரை விரும்புவதன் பின்புலத்தில் சில நுட்பங்களும், விதிக்கூறுகளும் இருக்கும். ஆனால் உன்னைப் பொறுத்த வரையில், அந்த விதிக்கூறு தவறாகி விட்டது. நீ எனது இடது தொடையில் அமர்ந்து என்னை மோகித்திருந்தால், நான் உன்னை ஏற்றிருப்பேன். ஆனால் வலது தொடையில் அமர்ந்து விட்டாய். வலத்தொடை சந்ததிகளும், மருமகளும் அமர வேண்டியது.அவ்வகையில், நீயும் என் மருமகளாகிறாய். அதனால், உன்னை மணக்க ஒரு புத்திரனைத் தருவேன், என்றான். பிரதீபனுடைய பேச்சிலிருந்த தர்ம சிந்தனைக்கு கங்கையும் கட்டுப்பட்டாள்.அரசே! காலக்கணக்கிற்கு அப்பாற்பட்ட நான், காலக்கணக்கிற்கு கட்டுப்பட்ட மானிடர்களோடு சம்பந்தம் கொள்வதன் மூலம் பாவங்களைப் போக்கும் என் குணப்பாடும், உயிர்களைக் காக்கும் என் கருணையும், தாகம் தீர்க்கும் என் தயையும், எனக்குப் பிறக்கின்ற பிள்ளையிடத்திலும் குவிந்திருக்கும். இதன் மூலம் வருங்காலத்தில் பரதவம்சத்தின் போக்கிலும் அது எதிரொலிக்கும்.

அப்படி ஒரு பிள்ளையைப் பெற்றிட உங்களின் தவம் பயன்படட்டும், என்று கூறிச் சென்றாள். அவ்வாறு கங்கைக்காக, உருவான புத்திரனே  சந்தனு. சந்தனு முற்பிறப்பில் மகாபிஷக் என்ற  தேவனாக இருந்தான். ஒருசமயம் கங்கை பிரம்மலோகம் சென்றபோது, அவளை இச்சையுடன் பார்த்தான். அதனால், மானிடப் பிறப்பெடுக்க வேண்டிய சாபம் ஏற்பட்டது. அவனே, தற்போது சந்தனுவாகப் பிறந்திருக்கிறான்.  வாலிப பிராயத்தில், அவன் கங்கைக்கரைக்கு  வந்தான். அவனுக்காகவே, காத்திருந்த  கங்கையைக் கண்டான். ஆனால், அவள் தான் கங்கை என்று அவனுக்குத் தெரியவில்லை. அது தான் விதியின் மாயை. பிரம்மதரிசனத்தின் போது, மகாபிஷக்காக இருந்து அன்று கொண்ட காதல், இப்போதும் அவள் மீது ஏற்பட்டது.  கங்கைக்கோ, இரண்டு கடமைகள் இருந்தது. ஒரு புறம் இந்த சந்தனுவைச் சேர வேண்டும் என்பது. இன்னொன்று அஷ்ட வசுக்களுக்கு கொடுத்த வாக்கு.  அஷ்ட வசுக்கள் என்பவர்கள் வசிஷ்டரிடம் இருந்த காமதேனு என்னும் பசுவை கவர்ந்து  விட்டனர். இதன் காரணமாக, அவர்கள் பூமியில் பிறக்க வசிஷ்டர் சாபமிடுகிறார். அவர்கள்  பிரம்மலோகம் வந்த கங்காதேவியைச் சரணடைந்து, அவளுக்கே பிள்ளைகளாகப் பிறந்து உடனடியாக தங்களை கொன்று விடும்படி கேட்டுக் கொண்டனர். அவ்வாறு செய்வதன் மூலம், மானிடப்பிறப்பு  உடனடியாக நீங்கும் என அவர்கள் கணக்கிட்டனர். அவர்களின் கோரிக்கையை கங்காதேவியும் ஏற்றுக் கொண்டாள். இதன் காரணமாக, சந்தனுவின் காதலை ஏற்றாள்.  ஆனால், சில நிபந்தனைகளை சந்தனுவுக்கு  விதித்தாள்.

அரசே! நான் உங்கள் மனைவி ஆவதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால், என்னுடைய மூலத்தை நீங்களோ, உங்களைச்  சார்ந்தவர்களோ துளியும் அறிந்து கொள்ள முயலக்கூடாது. நான் விரும்பிச் செய்யும் எதையும் தடுக்கக் கூடாது. என்மனம் வருந்தும் விதமாக நடக்கக் கூடாது. இதில் எது நடந்தாலும், நான் அடுத்த நொடியே உங்களை விட்டுப் பிரிந்து விடுவேன், என்றாள்.  சந்தனு காதல் மோகத்தில் நிபந்தனைகளை  ஏற்றான். இருவருக்கும் திருமணம் ஆனது. கங்கை விதித்த நிபந்தனைகளின் படியே அவன் நடந்து கொண்டான். அந்த வேளையில், சாபமுற்றிருந்த அஷ்ட வசுக்கள் தங்களின் சாபவிமோசனத்திற்காக காத்திருந்து, ஒவ்வொருவராக கங்கையின் வயிற்றில் கருவாயினர். முதல் குழந்தை பிறந்தது. அந்த  பிஞ்சுக் குழந்தையை புரண்டு வரும் கங்கையில் அவள் தூக்கிவீச, ஜலபிரவாகம் அந்த குழந்தையை ஏற்றுக் கொண்டது. இதேபோல, அடுத்தடுத்து ஏழு குழந்தைகள் பிறந்தன. அத்தனைபேரும், கங்கை நதியில் மூழ்கிப் போயினர். நிபந்தனைப்படி, சந்தனு ஏதும் கேட்க முடியாமல் இருந்தான்.  எட்டாவது வசு தான், வசிஷ்டரின் ஆஸ்ரமத்திற்குச் சென்று அங்குள்ள காமதேனுவைத் திருடி  வந்தான். அவன் இம்முறை கங்கையின் வயிற்றில் கரு கொண்டான்.  கரு வளர வளர, சந்தனுவிடமும் மனதில் நிறையவே மாற்றங்கள். ஒன்றுக்கு ஏழு பிள்ளைகளை நான் நிபந்தனை என்னும் பெயரால் இழந்துவிட்டேன். இந்த பிள்ளையை அதுபோல இழக்க மாட்டேன். இவன் எனக்கு வேண்டும் என்கிற எண்ணம் மிக தீர்க்கமாகத் தோன்றுகிறது. எனவே, இந்த பிள்ளையைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் எட்டாவது பிள்ளை பிறந்து, கங்கை குழந்தையை ஆற்றில் வீச சென்றபோது, பின் தொடர்ந்த சந்தனு அவளைத் தடுத்து நிறுத்தினான்.

கங்கா! இது நாள் வரையில் உன் நிபந்தனை களுக்குக் கட்டுப்பட்டு வந்தேன். என்னைக்  கல்லாக்கிக் கொண்டேன். ஆனால், இம்முறை  அவ்வாறு இருக்க இயலவில்லை. இந்த பிள்ளையையும் நீ கொல்வதை அனுமதிக்க முடியாது. அதுமட்டுமின்றி, நீ ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறாய்  என்பதை என்னால் கேட்காமலும் இருக்க  முடியாது. நீ யார்? எதனால் இப்படி நடந்து  கொள்கிறாய். ஒரு தாய் செய்கிற காரியமா இது? என்று வெடித்துக் கதறினான். கங்கையும் பதில் கூறத் தொடங்கினாள். அரசே! இப்படி கோபத்தோடு என்னைக் கேள்வி கேட்கும்  நாளுக்காகவே காத்திருந்தேன். ரிஷிகளின்  சாபமும், விதியின் பலனும் எப்போதும் வலியவை. என் மூலமாய் அவை உங்களை நிபந்தனை  என்னும் பெயரால் கட்டிப்போட்டு விட்டன.  முதலில் நான் யார் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். உத்தமரான ஜனக மகரிஷியின் புதல்வி நான். என் பெயர் கங்கை. உங்களை நான் மணந்தது, நமக்கு எட்டுப்பிள்ளைகள் பிறந்தது என்கிற  எல்லாமே, விதியின்படி நடந்தது. அதை அறிய நீங்கள் அஷ்ட வசுக்களைப் பற்றியும், அவர்களுக்கு நான் அளித்த வாக்கினையும் தெரிந்து கொள்ள வேண்டும்.... என்று ஆரம்பித்தவள் சகலத்தையும் கூறி முடித்தாள். அனைத்தையும் கேட்ட சந்தனுவிடம் திகைப்பு....பிரமிப்பு.... அந்த பிரமிப்பில் இருந்து விடுபடாதவனாக இருந்த சந்தனுவிடம், முற்பறப்பில் அவன் மகா பிஷக் என்பவனாக இருந்து அப்போதே மோகித்த வரலாறையும் சொன்னாள். தொடர்ந்து, அரசே! எட்டாவதாகப் பிறந்த இவன்,  அஷ்ட வசுக்களின் பலம் மிகுந்த அம்சத்தை உடையவன். அவர்களின் வரத்தால் நிரம்பியவன். அஷ்ட வசுக்களும் தேவர்கள். எனவே, இவன் ஒரு தேவவரதன். அடுத்து இவன் என் அம்சங்களையும் கொண்டிருப்பவன். எனவே, இவன் கங்காதரன்.

பிறப்பிலேயே சிறப்புடைய இவனுக்கு, அரிய பல வித்தைகளைக் கற்பிக்க விரும்புகிறேன். நிபந்தனைப்படி, நீங்கள் என்னைக் கேள்வி  கேட்டதால், உங்களை விட்டும் பிரியும்  இவ்வேளையில் இவனையும் என்னோடு அழைத்துச் செல்லப் போகிறேன்.  இது என்ன நியாயம் என்று கூட நீங்கள்  கேட்கலாம். இவ்வேளையில், உங்களுக்கு நான் ஒரு வாக்கினை அளிக்கிறேன். இவனை உங்களின் சந்திர வம்சத்திற்கென்றே பெரும் வீரனாக  உருவாக்குவேன். இவன் வாலிப பிராயத்தை  எட்டியதும் பெரும் வீரனாக உங்கள் வசம்  ஒப்படைப்பேன். இப்போது எனக்கு விடை கொடுங்கள், என்றாள் கங்காதேவி. சந்தனுவால் எதுவும் பேச முடியவில்லை. காலம் வலை போல பின்னிக்கொண்டு, காரண காரியங்களோடு பல செயல்களைச் செய்து கொண்டே போகிறது. மகனைப் பிரிந்து வாழ்வது, ஒருபுறம் வருத்தமாக இருந்தாலும், அஷ்டவசுக்களின் அம்சங்களோடு அவன் உருவானதை நினைக்க  மகிழ்வாகவும் இருந்தது.  காலம் உருளத் தொடங்கியது. கங்காதேவியும் தான் அளித்த வாக்குப்படி, சகல வித்தைகளையும் மகனுக்குப் பயிற்றுவித்தாள். அதில் தேவலோக  வித்தைகளும் அடக்கம். இந்த வித்தைகள் தான், அந்த மகனை மகாபாரதத்திலேயே தனித்துக்  காட்டப் போகிறது. மேலும், துளியும் பெண் நினைப்பே இல்லாமல் அவனைக் கங்கை வளர்த்தாள். பெண்ணாசையாலேயே பிழைகள்- அதனாலேயே சாபங்கள்- பின் பலவித பிறப்புகள்..... தன் மகனுக்கு அப்படி ஒரு ஆபத்து நேரக்கூடாது  என்னும் வைராக்கியத்தைப் புகட்டினாள். சந்தனு மகாராஜாவிடம் வந்து சேரப்போகும் அந்த  இளைஞனே பீஷ்மன்.


கார்த்திகை தீபம்

கார்த்திகை தீபம்

கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாதத்தில் வரும் பெளர்ணமி திதியும், கார்த்திகை நட்சத்திரமும் கூடிய திருக்கார்த்திகை நாளில் கோயில்களிலும், வீடுகளிலும் இடம்பெறும் சிறப்பான தீபத் திருவிழாவாகும்.

கார்த்திகை மாதம் பெளர்ணமி நாளில் கார்த்திகை நட்சத்திரம் வருவதால், இம்மாதம் கார்த்திகை எனப் பெயர் பெற்றது.

கார்த்திகை நாளில் வரிசையாகத் திருவிளக்கேற்றி எங்கும் கொண்டாடும் வழக்கம் புராதன காலந்தொட்டு இருந்து வருகிறது. இந்த அழல் வழிபாடு தரிசனம் திருவண்ணாமலையில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

‘ஆடிப்பாடி அண்ணாமலை தொழ ஓடிப்போம் நமதுள்ள வினைகளே’ என்கின்றனர் அப்பர் சுவாமிகள். திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்படுவதற்கான புராண வரலாறு மிகவும் பிரசித்தமானது.

திருவண்ணாமலை புண்ணிய பூமி, ஆன்மிக பூமி. யோகிகள், ஞானிகள், தபோதனர்கள், சித்தர்கள் வாழ்ந்த வாழ்கின்ற பூமி. தன்னை நாடி வந்தவர்க்கெல்லாம் அருள் வழங்கும் மலை ஜாதி, மதம், இனம், மொழி வேறுபாடின்றி அனைவருக்கும் முக்தி தரும் மலை. உலகப் புகழ் பெற்ற தீப தரிசனம், பெளர்ணமி புகழ் கிரிவலம் வரும் மலை திருவண்ணாமலையாகும்.

அடி முடி காணமுடியாத அனற் பிழம்பாகத் திருவண்ணாமலையில் எம்பெருமான் எழுந்தருளியுள்ள தத்துவத்தை உலகிற்கு உணர்த்தவே திருமாலும் நான்முகனும் எம் பெருமானின் அடிமுடி தேடினர் என்று சொல்லப்படுகிறது.

படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும் காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பல வருடங்கள் போரிட்டனர். இவர்களின் கர்வத்தை அடக்க எண்ணிய சிவபெருமான், இவர்கள் முன் சோதிப்பிழம்பாகத் தோன்றினார். அடியையும், முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. அவ் ஜோதியின் முடியைக் காண அன்னப் பறவை வடிவங்கொண்டு சதுரமுகப் பிரம்மன் விண்ணுலகம் சுற்றினார். அடியைக் காண திருமால், வராஹ் அவதாரம் எடுத்து பாதாள லோகம் சென்று அடிமலரடியைத் தேடினார்.

அடிமுடி காணமுடியாத பரம்பொருளாக விளங்கினார் எம்பெருமான். அதனால் இருவரும் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர். அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று ஜோதிப்பிழம்பாக காட்சியருளினார்.

இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு ஆகும். யோக நெறியால் அன்றிக் காண முடியாத தெய்வ ஒளியை திருவண்ணாமலையில் ஏறத்தாழ மூவாயிரம் அடி உயரத்தில் உள்ள மலைமேல் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காணலாம்.

காந்த மலையிலே கலியுக தெய்வம் அருள்மிகு ஐயப்பனின் மகர ஜோதி!

திருவண்ணாமலையிலே அவர்தம் ஐயனின் அண்ணாமலை ஜோதி!

மலை மீது காணப்படும் பெரும் செப்புக் கொப்பரையில் இருபத்து நான்கு முழம் துணி திரியாகப் போடப்படும். ஒரு மணங்கு கற்பூரத் தூள் சேர்த்துத் திரி சுற்றப்பட்டிருக்கும். இருபது மணங்கு நெய் ஊற்றி தீபத்தை ஏற்றுவார்கள். அந்த ஜோதியைக் காண்பதற்கு பஞ்ச மூர்த்தியும் எழுந்தருளுவதாக ஐதீகம்.

இச்சோதியானது பல மைல்களுக்கு அப்பால் பல நாட்கள் ஒளி வீசும். இவ்வொளி இம்மலையை அடுத்து யாவும் செந்நிற சிகப்பு நிறம் பொருந்தி வண்ணமாய் ஒளிர்ந்திடும். ஜோதிலிங்கமாகக் காட்சி தரும் திருவாண்ணாமலை ஓர் அக்கினித் தலமாக விளங்குகிறது.

திருவண்ணாமலையில் குன்றின் சிகரத்தில் கார்த்திகை மாதத்தில் ஏற்றப்படும் ஜோதியானது. உலகம் முழுதும் உள்ள அஞ்ஞான இருளை அகற்றி மெய்ஞான ஒளியைப் பரப்பும் சிவஞான ஜோதியாகப் பிரகாசிக்கும் என்பது ஐதீகம். ‘உடம்பெனுமனையகத்து உள்ளமே தகழியாக மடம்படும் உணர்நெய்யட்டி உயிரெனும் திரிமயக்கி இடம்படு ஞானத் தீயால் எரிகொள இருந்து நோக்கிற் கடம்பமர் காளைத்தாதை கழலடி காணலாமே.’

அன்றைய தினம் பக்த கோடிகள் ஜோதியைக் கண்டு சேவிப்பதால் பஞ்ச மூர்த்திகளின் அருட்கடாட்சத்தால் பஞ்சேந்திரியங்களை அடக்கும் ஆற்றல் பெற்று, மெய்ஞான சிந்தையுடையவர்களாக விளங்குவர் என்பது உட்பொருள். இந்த ஜோதியின் காரணமாகத் தான் மற்ற இடங்களில் சொக்கப்பனை கொளுத்தும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

தீபம் ஏற்றி வழிபட முடியாத சிவ, விஷ்ணு ஆலயங்களின் முன்புறத்தே வாழை மரம் நட்டு தென்னோலைகளால் அதனை சுற்றி அடைத்து ‘சொக்கப்பானை’க்கு அக்கினியிட்டு சோதி வடிவாகக் காட்சியளிக்கச் செய்து சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவுகூர்ந்து வழிபடுவர். ஜோதி மயமாய் ஒளி வடிவினனாகிய இறைவனை உணர்த்தும். சொக்கப்பனாகிய சிவனை ஒளி வடிவாகக் காண்பிப்பதால் இது சொக்கப்பனை எனப் பெயர் பெற்றது.

சிவபெருமான் கோயில் கொண்டுள்ள ஆயிரத்தெட்டு முக்கிய ஸ்தலங்களில் காசி, சிதம்பரம், திருவாரூர், திருவண்ணாமலை, காளஹஸ்தி ஆகிய ஐந்து §க்ஷத்திரங்களும் பஞ்சமூர்த்தி ஸ்தலங்களாகக் கொண்டாடப்படுகின்றன.

பிருத்வி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் ஆகியவை பிருத்வி பஞ்சமூர்த்தி ஸ்தலங்களாகும்.

உலகத்திலேயே புண்ணியத் தலங்களுள் காசிக்குப் போவதே தலையாயப் புண்ணியமாக கருதுவர், திருவாரூரில் பிறந்தலே முத்தி கிடைக்கும் என்பர். ஆனால் இருந்த இடத்தில் இருந்தபடி மனதால் நினைத்தாலே புண்ணியம் தரும் ஸ்தலம் ஒன்று உலகில் உள்ளதென்றால் அது அண்ணாமலையாரும் உண்ணாமுலை அம்மனும் குடிகொண்டிருக்கும் திருவண்ணாமலைதான்.

பழந்தமிழ் நூலாகிய தொல்காப்பியத்தில் ‘வேலின் நோக்கிய விளக்க நிலையும்’ என்பதற்குக் கார்த்திகை நாளில் ஏற்றிய விளக்கு என்பது பொருள்.

பண்டைக் காலம் தொட்டே கார்த்திகை விழா ஒரு பெரும் பண்டிகையாக நம்மவர்கள் இன்றும் கொண்டாடி வருகிறார்கள். பழைய காலங்களில் மலைச் சிகரங்களில் விளக்கேற்றி விழா கொண்டாடி விருந்துண்டு களிகொண்டு ஆடி களித்திருப்பதை சங்க நூற்களில் சான்று உண்டு. ஆகவே மேற்கூறியதிலிருந்து கார்த்திகை விழா நமது ஆணவ இருளைப் போக்கி ஞான ஒளியைப் பெருக்குவதற்கு உகந்த விழாவாகும் என்பது விளங்குகின்றது.

அக்கினியின் சக்தியால் அழுக்கு களையப்படுகிறது. அக்கினிப் பிரவேசம் சீதா பிராட்டியை புனிதவதி எனக் காட்டியதாக இராமாயணம் உலகுக்கு உணர்த்தியது. ஹோமத்தில் எழுகின்ற அக்கினியின் வாயிலாக ஆண்டவனுக்கு அவிர்பாகம் அளிக்கின்றோம். கார்த்திகை மாதம் முதல் திகதி தொட்டு கடைசி நாள் வரை தினமும் மாலையில் வீடுகளிலும் ,ளிகிசீ8ளிலும் விளக்கேற்றி வைத்துக் கொண்டாடுவர்.

தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பெளர்ணமி ஆகிய மூன்று தினங்களிலாவது தவறாது எண்ணெய் விளக்கேற்ற வேண்டும். கார்த்திகை மாதம் 1, 28 ஆகிய இரு திகதிகளில் கார்த்திகை நட்சத்திரம் வருமாயின் 28ம் திகதி வரும் நட்சத்திரத்தில்தான் திருக்கார்த்திகைப் பண்டிகை கொண்டாடப்பட வேண்டும்.

இந்த கார்த்திகைத் திருநாள் கார்த்திகேயனுக்கும் உகந்த நாள். சிவபெருமானின் நெற்றிக் கண்ணினின்றும் தோன்றிய ஆறு அருட்சுடர் சரவணப் பொய்கையில் வந்து தங்கி ஆறு குழந்தைகளாக உருமாறி நிற்க அக்குழந்தைகளைக் கார்த்திகைப் பெண்கள் பாலூட்டிச் சீராட்டித் தாலாட்டினர்.

சிவபெருமான் பிராட்டியாருடன் சரவணப் பொய்கைக்கு எழுந்தருளி உமாதேவியார் அக்குழந்தைகளை வாரி அணைக்க, ஆறு உருவங்களும் ஓருருவாய் ஆறுமுகக் குழந்தையாய் தேவியின் திருக்கரங் களில் பேரொளிப் பிரகாசமாய் எழுந்தருளியது. அவ்வமயம் கார்த்தி கைப் பெண்டிர் சிவபெருமானைப் பணிந்து போற்றி நின்றனர்.

சிவபெருமான் அவர்களை அருள் நோக்கி உங்களுக்கு மங்களம் உண்டாகுக. உங்களால் வளர்க்கப்பட்ட இப்பாலகனுக்கு கார்த்திகேயன் என்ற திருநாமத்தைச் சூட்டுகிறோம்.

உங்களுக்கு உகந்த இக்கார்த்திகை நன்னாளில் கந்தனைப் போற்றி வழிபடுவோருக்கு அனைத்து நலங்களும் கிட்டுவதாகுக! என்று திருவாய் மலர்ந்தருளினார்.

இறைவனை விளக்கேற்றி வழிபடுவது தொன்றுதொட்டு வந்த பழக்கமாயினும், அது என்றென்றும் நலம் தரும் வழிபாடாகவும் கருதப்படுகிறது.

வைஷ்ணவ ஆலயங்களிலும் விளக்கொளிப் பெருமாள் என்று ஒரு பெருமானைக் கொண்டாடுகின்றனர். அகல், எண்ணெய், திரி, சுடரொளி ஆகிய நான்கும் அறம், பொருள், இன்பம், வீடு என்ற தத்துவங்களை உணர்த்துவது போலாகும். பலிமகராஜன் தனது உடம்பிலே தோன்றிய வெப்பத்தைக் கார்த்திகை விரதமிருந்து தீர்த்துக்கொண்டார் என்று புராணம் கூறுகிறது.

எம்பெருமான் தன்மீது திருவடி சாதித்து ஆட்கொண்ட போது தனது மறைவு நாளை தீபங்களை ஏற்றி உலகோர் அனைவரும் கொண்டாட வேண்டும் என்று அனந்தனைப் பணிந்து கேட்டான்.

திருஞானசம்பந்தர், மயிலையில் அங்கம் பூம்பாவைக்கு புத்துயிர் அளிப்பதற்காய்ப் பாடிய திருப்பதிகத்தில் ‘கார்த்திகை விளக்கீடு காணாத போதியோ’ என்று பாடியுள்ளார்.

ஒருமுறை அம்பிகை மகிஷாசுரனுடனும் போர்புரியும் போது தவறுதலாக சிவலிங்கம் ஒன்றை உடைத்துவிட்டார் என்றும், அதனால் ஏற்பட்ட தோஷத்தை நிவர்த்தி செய்து கொள்வதற்குக் கார்த்திகை தினத்தன்று தீபம் ஏற்றி விரதம் இருந்து பெருமானின் பேரருளால் தோஷ நிவர்த்தி கிடைத்ததாக தேவி புராணம் கூறுகிறது.

இவ்வாறு பெருமையும் மேன்மையும் கொண்ட கார்த்திகைத் திருநாளை திருச்செங்கோடு, வேதாரண்யம், பழனி, திருச்செந்தூர் முதலிய கோவில்களில் திருவண்ணாமலைக் கோயிலைப் போன்றே கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர். சில ஊர்களில் மந்தாரை இலையில், தீபம் ஏற்றுகிறார்கள். வடநாட்டில் தீபத்தை தீப ஓடங்களில் ஏற்றி நீரில் விடுவது உடன்பிறப்பிற்கு நன்மை பயக்கும் என்று கருதுகிறார்கள்.

கார்த்திகைத் தீபங்கள் ஏற்றும் போது கூறப்படும் மந்திரம்;

கீட: பதங்கா மதகாஸ்ச வ்ருதாஜ்லே ஸ்தயே விசரந்தி ஜீவா

த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜந்ம பாகிந:

பவந்தி நித்யம் சவ பசா ஹி விப்ரா.

இந்த மந்திரத்தைச் சொல்லி விளக்கேற்றி வழிபடுவதால், இம்மையில் அனைத்து சுபீட்சங்களுடன் வாழ்ந்து எம்பெருமானின் பேரருளால் பிறவாப் பெருவாழ்வு பெறலாம் என்பது ஐதீகம்.

தீபத்தின் ஒளி காணும் இடத்தில் ஸ்ரீதேவி மங்களம் பொங்க வாசம் புரிவாள்.

இக்கார்த்திகை தினத்தன்று நெற்பொரி வைத்து நிவேதனம் செய்வர்.

கார்த்திகை விரதத்தை பன்னிரண்டு ஆண்டுகள் கடைப்பிடித்து நாரத மகரிஷி சப்தரிஷிகளுக்கும் மேலான பதவியை அடைந்தார்.

திரிசங்கு மன்னன், பகீரதன் திருத்திகை விரதத்தின் பயனால் பேரரசானார்கள். அனைவருக்கும் பேரருள் கிட்டுவதாகுக.


ஸ்ரீ அனுமன் சாலீசா

”ஸ்ரீ ஹனுமன் சாலீஸா!”

இந்து மத பக்தர்களால் ஸ்ரீ ஹனுமத் ஜயந்தி கொண்டாடப்படுகிறது. இந்நன்னாளில் வீர ஆஞ்சநேயரைப் பணிந்து போற்றுவோம். அவரது ஹனுமான் சாலீஸாவைப் பக்தியோடு பாராயணம் செய்தால் அனைத்துச் சங்கடங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. இதை எழுதிய மஹா ஞானி ஸ்ரீ துளஸிதாஸர். இவர் ராமஆஞ்சநேய தரிசனம் பெற்ற மகான். வீட்டின் தூய்மையான இடத்தில் ஆஞ்சநேயர் படத்தின் முன்னால் இதை பாராயணம் செய்யலாம். பக்தியுடனும் அன்புடனும் ஹனுமன் சாலீஸாவைப் பாராயணம் செய்தால் அங்கே ஸ்ரீ ஹனுமானே சூட்சும வடிவில் எழுந்தருள்வான்.
இயலாதவர்கள் ஸ்ரீராம நாமப் பாராயணமும் செய்யலாம்.

ஸ்ரீ ஹநுமான் சாலீஸா

புத்தி ஹீன தனு ஜானி கேஸுமிரெள பவன குமார் |
பல புத்தி வித்யா தேஹு மோஹிம் ஹரஹு கலேச விகார் ||
ஜெய ஹனுமான் ஜ்ஞான குண ஸாகர |
ஜய கபீஸ திஹுலோக உஜாகர ||
ஸ்ரீகுரு சரண் ஸரோஜ்ரஜ் நிஜ மன முகுர ஸுதார் |
பரணோம் ரகுவர விமல யச ஜோ தாயக பலசார் ||
ராமதூத அதுலித பலதாமா |
அஞ்ஜனி புத்ர பவன ஸுத நாமா ||
மஹாவீர் விக்ரம பஜரங்கீ |
குமதி நிவார ஸுமதி கே ஸங்கீ ||
கஞ்சன பரண விராஜ ஸுவேசா |
கானன குண்டல குஞ்சித கேசா ||
ஹாத் வஜ்ர ஒள த்வாஜ விராஜை |
காந்தே மூஞ்ஜ ஜனேவூ ஸாஜை ||
சங்கர ஸுவன கேசரி நந்தன |
தேஜ ப்ராதப மஹா ஜகவந்தன ||
வித்யாவான் குணீ அதி சாதுர |
ராம காஜ கரிபே கோ ஆதுர ||
ப்ரபு சரித்ர ஸுனிபே கோ ரஸியா |
ராம லஷண ஸீதா மன பஸியா ||
ஸூக்ஷ்ம ரூபதரி ஸியஹிம் திக்காவா |
விகட ரூப தரி லங்க ஜராவா ||
பீம ரூப தரி அஸுர ஸங்ஹாரே |
ராமசந்த்ர கே காஜ ஸ (ம்) வாரே ||
லாய ஸஜீவந லகந ஜியாயே |
ஸ்ரீ ரகுபீர ஹரஷி உர லாயே ||
ரகுபதி கீந்ஹீ பஹுத படாஈ |
தும மம ப்ரிய பரதஹீ ஸம பாஈ ||
ஸஹஸ பதந தும்ஹரோ ஜஸ காவை(ம்) |
அஸ கஹி ஸ்ரீபதி கந்ட லகாவை (ம்) ||
ஸநகாதிக ப்ரஹ்மாதி முநீஸா |
நாரத ஸாரத ஸஹித அஹீஸா ||
ஜம குபேர திக்பால ஜஹா(ம்) தே |
கபி கோபித கஹி ஸகே கஹா(ம்) தே ||
தும உபகார ஸுக்ரீவஹி (ம்) கீந்ஹா |
ராம மிலாய ராஜ பத தீந்ஹா ||
தும்ஹரோ மந்தர பிபீஷந மாநா |
லங்கேஸ்’வர ப ஏ ஸப ஜக ஜாநா ||
ஜுக ஸஹஸ்ர ஜோஜந பர பாநூ |
லீல்யோ தாஹி மதுர பல ஜாநூ ||
ப்ரபு முத்ரிகா மேலி முக மாஹீ (ம்) |
ஜலதி லாங்கி கயே அசரஜ நாஹீ (ம்) ||
துர்கம காஜ ஜகத கே ஜேதே |
ஸுகம அநுக்ரஹ தும்ஹரே தேதே ||
ராம துஆரே தும ரகவாரே |
ஹோத ந ஆஜ்ஞாயா பிநு பைஸாரே ||
ஸப ஸுக லஹை தும்ஹாரீஸரநா |
தும ரச்சக காஹூ கோ டர நா ||
ஆபந தேஜ ஸம்ஹாரோ ஆபை |
தீநோ (ம்) லோக ஹா (ந்)க தே கா(ம்)பை ||
பூத பிஸாச நிகட நஹி (ம்) ஆவை |
மஹாபீர ஜப நாம ஸுநாவை ||
நாஸை ரோக ஹரை ஸப பீரா |
ஜபத நிரந்தர ஹநுமத பீரா ||
ஸங்கட தே ஹநுமாந சுடாவை |
மந க்ரம பசந த்யாந ஜோ லாவை ||
ஸப பர ராம் தபஸ்வீ ராஜா |
திந கே காஜ ஸகல தும ஸாஜா ||
ஔர மநோரத ஜோ கோஇ லாவை |
ஸோஇ அமித ஜீவந பல பாவை ||
சாரோ (ம்) ஜுக பரதாப தும்ஹாரா |
ஹை பரஸித்த ஜகத உஜியாரா ||
ஸாது ஸந்த கே தும ரகவாரே |
அஸுர நிகந்தந ராம துலாரே ||
அஷ்ட ஸித்தி நௌ நிதி கே தாதா |
அஸ் பர தீந ஜாநகீ மாதா ||
ராம ரஸாயந தும்ஹரே பாஸா |
ஸதா ரஹோ ரகுபதி கே தாஸா ||
தும்ஹரே பஜந ராம கோ பாவை |
ஜநம ஜநம கே துக பிஸராவை ||
அந்த கால ரகுபர புர ஜாஈ |
ஜஹா (ம்) ஜந்ம ஹரி - பக்த கஹாஈ ||
ஔர தேவதா சித்த ந தர ஈ |
ஹனுமத ஸேஇ ஸர்ப ஸுக கர ஈ ||
ஸங்கட கடை மிடை ஸப பீரா |
ஜோ ஸுமிரை ஹநுமத பல பீரா ||
ஜை ஜை ஜை ஹநுமாந கோஸா ஈ (ம்) |
க்ருபா கரஹு குரு தேவ கீ நாஈ (ம்) ||
ஜோ ஸத பார பாட கர கோஈ |
சூடஹி பந்தி மஹா ஸுக ஹோஈ ||
ஜோ யஹ படை ஹநுமாந சாலீஸா |
ஹோய ஸித்தி ஸாகீ கௌரீஸா ||
துளஸீதாஸ ஸதா ஹரி சேரா |
கீஜை நாத ஹ்ருதய மஹ (ம்) டேரா ||
பவந தநய ஸங்கட ஹரந, மங்கல மூரதி ரூப |
ராம லஷந ஸீதா ஸஹித, ஹ்ருதய பஸஹு ஸுர பூப ||


ஸ்ரீ ஹனுமத் கவசம்

 ”ஸ்ரீ ஹனுமத் கவசம்”


அஸ்ய ஸ்ரீ ஹனுமத்கவச ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய | ஸ்ரீராமசந்த்ரருஷி:| காயத்ரீச்சந்த:|. ஸ்ரீ ஹனுமான் பரமாத்மா தேவதா| மாருதாத்மஜ இதி பீஜம்| அஞ்ஜனாஸூனுரிதி சக்தி:| ஸ்ரீராமதூத இதி கீலகம்| மம மானஸாபீஷ்ட ஸித்யர்த்தே ஜபே வினியோக:||

ஸ்ரீ ராமசந்த்ர உவாச :-

ஹனுமான் பூர்வத: பாது தக்ஷிணே பவனாத்மஜ: |
ப்ரதீச்யாம் பாது ரக்ஷோக்ன: ஸௌம்யாம் ஸாகரதாரண: ||
ஊர்த்வம் மே கேஸரீ பாது விஷ்ணு பக்தஸ்துமேஹ்யத: |
லங்காவிதாஹக: பாது ஸர்வாபத்ப்யோ நிரந்தரம் ||
ஸுக்ரீவ ஸ சிவ: பாது மஸ்தகே வாயுநந்தன: |
பாலம் பாது மஹாவீர: ப்ருவோர்மத்யே நிரந்தரம் ||
நேத்ரே சாயாபஹாரீ ச பாது மாம் ப்லவகேச்வர: |
கபோலௌ கர்ணமூலே து பாது மே ராமகிங்கர: ||
நாஸாயாமஞ்ஜனாஸூனு: பாது வக்த்ரம் ஹரீச்வர: |
பாது கண்டம் ச தைத்யாரி: ஸ்கந்தௌ பாது ஸுரார்சித: ||
புஜௌ பாது மஹா தேஜா: கரௌ து சரணாயுத: |
நகான் நகாயுத: பாது குக்ஷௌ பாது கபீச்வர: ||
வக்ஷௌ முத்ராபஹாரீச பாது பார்ச்வே மஹாபுஜ: |
ஸீதா சோகப்ரஹர்தாச ஸ்தனௌ பாது நிரந்தரம் ||
லங்காபயங்கர: பாது ப்ருஷ்டதேசே நிரந்தரம் |
நாபிம் ஸ்ரீராமசந்தரோ மே கடிம் பாது ஸமீரஜ: ||
குஹ்யம் பாது மஹாப்ராக்ஞ: ஸக்தினீ ச சிவப்ரிய: |
ஊரூ ச ஜானுனீ பாது லங்கா ப்ராஸாத பஞ்சன: ||
ஜங்கே பாது கபிச்ரேஷ்ட: குல்பம் பாது மஹாபல: |
அசலோத்தாரக: பாது பாதௌ பாஸ்கர ஸன்னிப: ||
அங்கான்யமிதஸத்வாட்ய: பாது பாதாங்குளீஸ்ஸதா |
ஸர்வாங்காநி மஹா சூர: பாது ரோமாணி சாத்மவான் ||
ஹனுமத் கவசம் யஸ்து படேத் வித்வான் விசக்ஷண: |
ஸ ஏவ புருஷச்ரேஷ்ட: புக்திம் முக்திஞ்ச விந்ததி ||
த்ரிகாலம் ஏககாலம் வா படேன் மாஸத்ரயம் நர: |
ஸர்வான் ரிபூன் க்ஷணாஜ்ஜித்வா ஸ புமான் ச்ரியம் ஆப்னுயாத் ||
அர்தராத்ரௌ ஜலேஸ்தித்வா ஸப்த வாரம் படேத்யதி |
க்ஷயாபஸ்மார குஷ்டாதி தாபத்ரய நிவாரணம் ||
அச்வத்தமூலே அர்கவாரே ஸ்தித்வா படதி ய:புமான் |
அசலாம் ச்ரியமாப்னோதி ஸங்க்ராமே விஜயீபவேத் ||
ஸர்வரோகா: க்ஷயம் யாந்தி ஸர்வஸித்திப்ரதாயகம் |
ய: கரே தாரயேந்நித்யம் ராமரக்ஷா ஸமன்விதம் ||
ராமரக்ஷம் படேத்யஸ்து ஹனூமத் கவசம் வினா |
அரண்யே ருதிதம் தேன ஸ்தோத்ரபாடஞ்ச நிஷ்பலம் ||
ஸர்வ து:க பயம் நாஸ்தி ஸர்வத்ர விஜயீ பவேத் |
அஹோராத்ரம் படேத்யஸ்து சுசி: ப்ரயதமானஸ: ||
முச்யதே நாத்ரஸந்தேஹ: காராக்ருஹகதோ நர: |
பாபோபபாதகான் மர்த்ய: முச்யதே நாத்ரஸம்சய: ||
அக்ஷக்னோ ஜிதராக்ஷஸேச்வர மஹாதர்பாபஹாரீரணே |
ஸோயம் வானரபுங்கவோ அவது ஸதா த்வஸ்மான் ஸமீராத்மஜ: ||
வைதேஹீ கன சோக தாபஹரணோ வைகுண்டபக்திப்ரிய: |
அக்ஷக்னோ ஜிதராக்ஷஸேச்’வர மஹாதர்பாபஹாரீரணே |
ஸோயம் வானரபுங்கவோ அவது ஸதா த்வஸ்மான் ஸமீராத்மஜ: ||
|| ஸ்ரீ ராம விரசித ஸ்ரீ ஆஞ்சநேய கவசம் ஸம்பூர்ணம் ||


மகாபாரதத்தில் ஒரு நிகழ்வு இது வரை நாம் கேட்டிராதது

"மகாபாரதத்தில் ஒரு நிகழ்வு இது வரை நாம் கேட்டிராதது."

பாண்டவர்களும் திரௌபதியும் எல்லோரையும் பந்தியில் உபசரித்து உணவு பரிமாறினார்கள். துரியோதனன், துச்சாதனன், கர்ணன், சகுனி முதலானோர் வரிசையாக அமர்ந்திருந்தனர். திரௌபதி பரிமாறிக் கொண்டே துரியோதனன் இலைக்கு அருகில் வந்தாள். அவளை அவமானப்படுத்த எண்ணிய துரியோதனன் ஐவரின் பத்தினியே... இன்று யாருடைய முறை? என்று கேட்டான். திரௌபதிக்குத் தூக்கி வாரிப்போட்டது. நாடி நரம்புகளெல்லாம் தளர்ந்தன. அவளால் அந்தக் கேள்வியை ஏற்க முடியவில்லை. செய்வதறியாது பரிமாறுவதை நிறுத்தி விட்டு உள்ளே ஓடி கண் கலங்கினாள். அதே நேரம் அங்கு தோன்றினார் ஸ்ரீகிருஷ்ணர். கலங்காதே திரௌபதி! நடந்ததை நானும் கவனித்தேன். எல்லோர் முன்னிலையிலும் உன்னை அவமானப்படுத்தி அழவைக்க நினைத்திருக்கிறான் துரியோதனன். அவனுக்கு பாடம் கற்பிக்கலாம். நான் சொல்வது போல் செய். நீ மீண்டும் உணவு பரிமாறப் போ! துரியோதனன் மீண்டும் உன்னிடம் அதே கேள்வியைக் கேட்டு ஏன் பதில் கூறவில்லை? என்பான். உடனே நீ தக்ஷகன் முறை என்று சொல். அதன் பிறகு துரியோதனன் அந்த இடத்திலேயே இருக்கமாட்டான் என்றார் பகவான். கிருஷ்ணனின் வார்த்தையைத் தட்ட முடியாமல் விருந்து மண்டபத்துக்குச் சென்றாள் திரௌபதி. துரியோதனன் இலை அருகில் அவள் வந்ததும் விஷமத்துடன் அதே கேள்வியை மீண்டும் கேட்டான். எனக்குப் பதில் கூறவில்லையே இன்று யாருடைய முறை? ஸ்ரீகிருஷ்ணன் சொல்லியனுப்பியது போலவே இன்று தக்ஷகன் முறை என்று பளிச்சென பதில் தந்தாள் திரௌபதி. அதைக் கேட்டு விஷ நாகம் தீண்டியது போன்று அதிர்ந்தான் துரியோதனன். சட்டென எழுந்து அங்கிருந்து வெளியேறினான்.
திரௌபதிக்கு ஆச்சரியம். கண்ணனிடம் ஓடோடி வந்தாள். கண்ணா! இதென்ன மாயம்? யாரந்த தக்ஷகன்? அவன் பெயரைக் கேட்டதும் துரியோதனன் ஏன் இப்படிப் பேயறைந்தாற்போல் பதறி பயந்து ஓடுகிறான்? என்று கேட்டாள். கண்ணன் அதற்கான காரணத்தையும் கதையையும் சொன்னான். துரியோதனனின் மனைவி பானுமதி மகா பதிவிரதை. கணவனையே தெய்வமாகக் கருதும் உத்தமி. ஆனால் துரியோதனனோ பாண்டவர்களின் ராஜ்ஜியத்தை அடைவதில் குறியாக இருந்தான். மனைவியிடம் அன்புடன் பேசக்கூட அவனுக்கு நேரம் இல்லை. திருமணமாகி மாதங்கள் பல கடந்தும் மண வாழ்க்கையின் பயனை அடையும் பாக்கியம் பானுமதிக்குக் கிட்டவில்லை. அவனது அன்புக்காக ஏங்கினாள். தெய்வங்களை வேண்டினாள். அவள் தவம் பலிக்கும் வேளை வந்தது. ஒருமுறை முனிவர் ஒருவர் பானுமதியின் துயர் நீக்கும் வழி ஒன்றைக் கூறினார். மகிமை மிக்க மூலிகை வேர் ஒன்றை மந்திரித்து அவளிடம் கொடுத்து அதைப் பாலில் இட்டு கணவனுக்குக் கொடுக்கும் படி கூறினார் முனிவர். பானுமதியும் அதன்படியே பால் காய்ச்சி அதில் இனிப்பும் இன்சுவையும் சேர்த்து முனிவர் தந்த வேரையும் அதில் இட்டு கணவனின் வருகைக்காகக் காத்திருந்தாள். அன்று பௌர்ணமி. இரவின் இரண்டாம் யாமத்தில் அந்தப்புரம் வந்தான் துரியோதனன். அப்போது அவன் மது அருந்தியிருந்தான். பால் அருந்தும் மனோநிலையில் அவன் இல்லை. ஆசையுடன் மனைவி நீட்டிய பால் கிண்ணத்தைப் புறங்கையால் ஒதுக்கினான். கை தவறிய கிண்ணத்தில் இருந்த பால் தரையில் சிந்தியது. அப்போது அங்கே சென்று கொண்டிருந்த 'தக்ஷகன்’ எனும் நாகம் அந்தப் பாலைச் சுவைத்தது. தக்ஷகன் சர்ப்பங்களின் ராஜன். பாலைப் பருகியதும் அதிலிருந்த வேரின் வசிய சக்தியால் அவனுக்குப் பானுமதி மீது ஆசையும் நேசமும் பிறந்தது. உடனே அவன் அவள் முன் தோன்றித் தன் ஆவலை வெளியிட்டான். தன்னை வருந்தி அழைத்தது அவள் தான் என்றும் வாதாடினான். பதிவிரதையான பானுமதி பதறினாள், துடிதுடித்தாள். துரியோதனனுக்குத் தன் மனைவியின் உயர்ந்த கற்பு நெறி பற்றி நன்கு தெரியும். தான் அவளது அன்பையும் பிரேமையையும் புரிந்து நடக்காததால் விளைந்த விபரீதத்தை எண்ணித் தவித்தான்.

தக்ஷகன் கால்களில் விழுந்து தன் மனைவியின் கற்பைக் காக்க வேண்டினான். தக்ஷகன் பாம்பு எனினும் பண்பு மிக்கவன். பாலில் கலந்திருந்த வேரின் சக்தியால் உந்தப் பெற்றதால் தான் அவன் உள்ளம் பானுமதியை விரும்பியது. எனினும் அவளுக்குக் களங்கம் விளைவிக்க அவன் விரும்பவில்லை. அதே நேரம் அவளின் அன்பை இழக்கவும் தயாராக இல்லை. எனவே ஒரு நிபந்தனை விதித்தான். அந்தப்புரத்தில் அமைந்துள்ள அரச விருட்சத்தின் அடியில் உள்ள புற்றுக்கு பௌர்ணமிதோறும் பானுமதியைக் காண வருவேன். பானுமதி புற்றில் பால் ஊற்றி என்னை உபசரித்து வணங்கி அனுப்ப வேண்டும். அப்போது அவள் கற்புக்குக் களங்கம் இல்லை என்பதற்குச் சாட்சியாக அவளின் கணவனான துரியோதனனும் என்னை வணங்க வேண்டும் என்று கூறிவிட்டு மறைந்தான் தக்ஷகன். அன்று முதல் இன்று வரை பௌர்ணமி தோறும் பாம்புக்குப் பாலூற்றி வருகிறாள் பானுமதி. துரியோதனனும் பயபக்தி யோடு பங்குகொள்கிறான். இந்தச் சம்பவம் துரியோதனனுக்கும் பானுமதிக்கும் தக்ஷகனுக்கும் மட்டுமே தெரியும். இதனை வெளியே யாரிடமும் சொல்வதில்லை என்பது அவர்களுக்குள் செய்து கொண்ட ஒப்பந்தம். இதை நீ கூறியது தான் துரியோதனனின் அதிர்ச்சிக்குக் காரணம் என்றார் ஸ்ரீகிருஷ்ணர். துரியோதனனால் தனக்கு நேர்ந்த அவமானத்தைத் துடைத்து ஆறுதல் கூறிய கண்ணனுக்கு நன்றி கூறினாள் திரௌபதி.

"ஸ்ரீ கிருஷ்ணா உன் திருவடிகளே சரணம்" "


திங்கள், 23 நவம்பர், 2020

பயனுள்ள தகவல்கள்

பயனுள்ள இணையதள முகவரிகள்

நமக்கு தேவையான பயனுள்ள இணையதள முகவரிகள்

01. இந்தியதேர்தல் ஆணையம் – இணையதள முகவரி
http://www.elections.tn.gov.in/eroll

02. த‌கவல அறியும் உரிமைச் சட்டம் (RTI Act) – இணையதள முகவரி
http://www.rtiindia.org/forum/content/

03. இந்திய அரசின் இணையதள முகவரி
http://india.gov.in/

04. தமிழ்நாடு அரசின் இணையதள முகவரி
http://www.tn.gov.in/

05. உச்சநீதி மன்றத்தின் இணையதள முகவரி
http://supremecourtofindia.nic.in/

06. தமிழ்நாடு காவல்துறையின் இணையதள முகவரி
http://www.tnpolice.gov.in/

07. நீதிமன்றங்கள் (இந்தியா) இணையதள முகவரி
http://www.hcmadras.tn.nic.in/

08. இந்திய இரயில்வே-ன் இணையதள முகவரி
http://www.indianrailways.gov.in/indianrailways/indexhome.jsp

09. இந்திய தூதரம் – இணையதள முகவரி
http://www.indianembassy.org/

10. தமிழக அரசு பதிவுத்துறை இணைய தள முகவரி
http://www.tnreginet.net/

11. இந்திய பொது விவகாரத்துறை – இணையதள முகவரி
http://www.mca.gov.in/

12. சென்னை மாநகராட்சியின் இணைய தள முகவரி
http://www.chennaicorporation.gov.in/

13. தமிழ்நாடு – வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணைய தள முகவரி
http://tnvelaivaaippu.gov.in/EmploymentExchange/login/loginFrame.jsp

14. இந்திய அஞ்சல் (தபால் துறை) இணையதள முகவரி
http://www.indiapost.gov.in/nsdefault.htm

15. இந்திய சுற்றுலா – இணையதள முகவரி
http://www.incredibleindia.org/index.html

16. தமிழ்நாடு சுற்றுலா – இணையதள முகவரி
http://www.tamilnadutourism.org/

17 தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணைய தள முகவரி
http://www.tneb.in/

பன்றிக்குட்டிகளை மந்திரியாக்கிய படலம்!

பன்றிக்குட்டிகளை மந்திரியாக்கிய படலம்!

சோமசுந்தரக் கடவுளின் அருளால் சாபம் நீங்கப் பெற்ற சகலனின் பிள்ளைகள் சிவபூஜை செய்து வந்தனர். இவர்கள் சகல கலைகளிலும் வல்லவர்கள் ஆனார்கள். ஒரு சமயம் அன்னை மீனாட்சி, சுந்தரேஸ்வரரிடம் பேசிக் கொண்டிருந்த போது, சுவாமி! தாங்கள் அறிவற்ற பன்றிகளுக்கு கூட உணவுடன் ஞானத்தையும் ஊட்டிய காரணம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாமா? என்றாள். தேவி! அறிவுள்ளவன், அறிவற்றவன் என்ற பேதம் மனிதர்களுக்கு மட்டுமே, எனக்கில்லை. எல்லாரும் எனக்கு ஒன்று தான். அதனால் தான் பசியால் கதறியது பன்றிகள் என்றாலும் கூட திருவருள் புரிந்தேன். அதனால் அப்பன்றிக் குட்டிகள் அளவில்லாத வலிமையையும், வெற்றியையும் கல்வி முதிர்வையும், ஞானத்தையும் பெற்றுக் கொண்டன. இனிமேல் அவர்கள் தங்கள் அறிவால் பாண்டியனின் அமைச்சர்களாவதுடன் சிவகணங் களாகும் பேறையும் பெறுவார்கள், என்றார் சுந்தரேஸ்வரர். அன்றிரவில், ராஜராஜப் பாண்டியனின் கனவில் தோன்றிய அவர், பாண்டியனே! பன்றிமலையில் வசிக்கும் பன்னிரு அறிவுஜீவிகளை உன் அமைச்சரவையில் சேர்த்துக் கொள், என்றார். மறுநாளே, சுவாமியின் விருப்பப்படி பன்றிமலையில் இருந்து அவர்களை வரவழைத்தான் மன்னன். அவர்களுக்கு அமைச்சர் பதவி அளித்ததுடன், முந்தைய அமைச்சர்களின் புத்திரிகளையும் திருமணம் செய்து வைத்தான். பன்றிமுக வீரர்கள் பன்னிருவரும், பாண்டியனுக்குக் கவசமும் கண்ணும் போல் விளங்கினர். பன்னிரண்டு உடலுக்கும் ஓர் உயிரே என அனைவரும் கூறும்படி ஒற்றுமையாக இருந்தனர். பன்னிருவரும் ஈகையும், அறமும், புகழுமள் பாண்டியனுக்குப் பெருகுமாறு எட்டுத் திக்கிலும் வெற்றியுண்டாகச் செய்து வாழ்ந்திருந்தனர். அவர்கள் பலகாலம் பாண்டியனுக்கு உதவியாகச் செயல்பட்டு சிவபதவி பெற்றனர். இந்நிலையில் ராஜராஜனும் இறைவனடி சேர்ந்தான்.


ராமாயணம் பகுதி மூன்று

ராமாயணம் பகுதி மூன்று

தசரத சக்கரவர்த்தி மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிப் போனார். தாயார்கள் தங்கள் செல்லக் குழந்தைகளை பார்த்து பார்த்து புளகாகிதமடைந்தார்கள். சகோதரர்கள் நால்வரும் கணமும் பிரிவதில்லை. ராமனும் சுமித்திரை மகன் லட்சுமணனும் இணை பிரிவதே கிடையாது. பரதனும் சத்ருக்கனனும் ஒன்றாகத் திரிவார்கள். இந்த சகோதர ஒற்றுமை உலக சகோதரர்கள் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம். ஒருவருக்கு தலைவலித்தால், நான்கு பேருக்கும் வந்தது போல துடித்துப் போவார்கள். அப்படி ஒரு ஒற்றுமை.மனைவியை விட நல்ல குழந்தைகள் அமைவது ஒருவனுக்கு கிடைத்தற்கரிய ஒன்று. தசரத சக்கரவர்த்தி குழந்தைகள் விஷயத்தில் ரொம்ப கொடுத்து வைத்தவர். இன்றும் ராம லட்சுமணர்கள், பரத சத்ருக்கனர்கள் என்று தானே நாம் கூறிக் கொண்டிருக்கிறோம். ஆனால், மனிதன் இன்பத்தை மட்டுமே அனுபவிக்க பிறந்தவன் அல்லவே. அவன் துன்பக்கடலையும் கடந்தாக வேண்டுமே. ராமனின் பதினாறாவது வயதிலேயே சோதனையும் வந்தது விஸ்வாமித்திர முனிவரின் ரூபத்திலே. அவர் அன்று அரசவைக்கு வருகை தந்தார். இக்ஷ்வாகு குல மன்னர்கள் முனிவர்களின் பேச்சுக்கு மிகுந்த மதிப்பளிப்பவர்கள். அவர்களைத் தெய்வமாய் போற்றுபவர்கள். விசுவாமித்திரரைப் பற்றி அனைவரும் அறிவர். கோபக்காரர். கோபமுள்ள இடத்தில் குணமும் இருக்கும், திறமையும் இருக்கும் போலும்! தசரதர் விஸ்வாமித்திர மகரிஷியை வரவேற்றார்.

வர வேண்டும் மாமுனியே! தாங்கள் ராஜகுமாரராக அவதரித்தீர்கள். நாடாண்ட நீங்கள் இப்போது ராஜரிஷியாகி விட்டீர்கள். ராஜவம்சத்தவர், ஆன்மிகத்தில் முழுமையாக ஈடுபடுவதென்பது அசாத்தியமான ஒன்று. ஆனால், தாங்கள் அதை சாத்தியப்படுத்தி விட்டீர்கள். தாங்கள் அரண்மøனியில் தங்கிச் செல்வதன் மூலம், பெரும் பேறு அடைந்தவன் ஆவேன், என்று உபசரித்தார். இந்த உபசாரம் என்பது வெறும் புகழ்ச்சிக்காக அல்ல. உள்ளதை உள்ளபடி எடுத்துரைத்ததுடன், உண்மையான உபசாரமாக இது அமைந்தது. விருந்தினர்களை உள்ளன்போடு உபசரிக்க வேண்டும் என்பதைக் கூட ராமாயணம் நமக்கு கற்றுத் தருகிறது. வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும், மனிதன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை எடுத்துச் சொல்லும் இனிய இதிகாசமல்லவா இது! விஸ்வாமித்திரர் மகிழ்ந்தார். தசரதரை ஆசிர்வதித்தார். சக்கரவர்த்தி! நான் தங்கிச் செல்லும் நிலையில் இல்லை. உன்னிடம் ஒரு உதவி நாடி வந்திருக்கிறேன், செய்வாயா?. தசரதர் பதறியும், நெகிழ்ந்தும் போனார். தங்களுக்கு உதவி செய்யும் பாக்கியம் எனக்கு கிடைப்பதற்கே நான் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே! என்னிடம் அனுமதி கேட்கவே தேவையில்லை. செய் என்றால் தலை வணங்கி செய்து விட்டு போகிறேன், என்று வாக்கு கொடுத்து விட்டார் நடக்கப்போகும் விபரீதத்தை அறியாமலே. ராஜாவின் சொற்கள் விஸ்வாமித்திரரின் முகத்தில் மகிழ்ச்சி ரேகைகளை படரவிட்டன.

தசரதா! நான் உலக நன்மைக்காக கானகத்தில் ஒரு யாகம் நடத்திக் கொண்டிருக்கிறேன். அந்த யாகத்தை தாடகை என்ற அரக்கியின் புதல்வர்களான மாரீசன், சுபாகு என்பவர்கள் அழிக்க நினைக்கிறார்கள். வேள்வி குண்டத்தில் மாமிச துண்டங்களை வீசியெறிந்து வேள்வியின் நோக்கத்தையே சிதைக்க திட்டமிட்டுள்ளார்கள். என்னாலும் அவர்களை அழிக்க இயலும். ஆனால், யாகம் நடத்துவதில் நான் மிக கவனமாக இருக்க வேண்டியுள்ளது. மந்திரங்கள் சொல்வது இடையில் நின்று போகக்கூடாது. எனவே வலுவான காவலன் ஒருவன் எனக்கு வேண்டும். அவன் உன்னிடம் தான் இருக்கிறான், விஸ்வாமித்திரர் சற்றே நிறுத்தினார். யாரது! சொல்லுங்கள் மகரிஷஇ. நான் உடனே அவனை அனுப்புகிறேன். இது சத்தியம்,. தசரதர் விஸ்வாமித்திரருக்கு உதவுவதில் இன்னும் ஆர்வம் காட்டினார். ராஜா! அவன் வேறு யாருமல்ல. இந்த ராஜா பெற்ற மற்றொரு ராஜா, உன் பெரிய மகன் ராமன்,. ஆ.... தசரதர் அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டார். முனிநாதா! யாரைக் கேட்டீர்கள். என் சின்னஞ்சிறு பாலகன் ராமனையா. பதினாறே வயது நிரம்பிய அந்த சிசுவையா? அவனால், எப்படி அப்பேர்ப்பட்ட அசுரர்களை எதிர்க்க முடியும்? எனக்கு இது அதிர்ச்சியாக உள்ளது,. விஸ்வாமித்திரர் கொதித்து போய் விட்டார். தசரதா! என்னிடமே வார்த்தை மாய்மாலம் செய்கிறாயா? நான் சொல்வதை செய்வதாக வாக்களித்து விட்டு உடனே தடம் புரண்டு விட்டாயே,. அவரது கனல் வார்த்தைகள் கேட்டு அனலில் விழுந்த புழுவாய் துடித்தார் தசரதர்.

 முனிவரே! வார்த்தைகளால் என்னைக் கொல்லாதீர்கள். ராமனுக்கு பதிலாக நானே படைகளுடன் வருகிறேன். வேள்விக்கு எந்த பங்கமும் ஏற்படாமல் பாதுகாக்கிறேன். சிறுவனை அனுப்புவதில் உள்ள சிரமத்தைத் தான் சொன்னேன். நான் வாக்கு தவறுபவன் அல்ல,. தசரதர் கதறாத குறையாகச் சொன்னார்.விஸ்வாமித்திரருக்கு இன்னும் கோபம்.நான் உன் மகன் ராமனைத்தான் என்னோடு அனுப்பச் சொன்னேன். உன்னை வரச் சொல்வதாக இருந்தால் முதலிலேயே உன்னிடம் சொல்லியிருப்பேனே. ராமனை அனுப்புகிறாயா, இல்லையா? விசுவாமித்திரர் மிரட்டினார். தசரதர் செய்வதறியாது திகைத்து நிற்கையில், அரசகுரு வசிஷ்டர் இடையில் புகுந்து நிலைமையை சாந்தமாக்கினார். விசுவாமித்திரரைப் பற்றி அவர் அறியாத விஷயங்களா என்ன? தசரதரை அழைத்தார். தசரதா! ஏனிந்த தயக்கம். நம் கண்மணி ராமன், அரக்கர்களை அழிக்க தகுதி வாய்ந்தவனே! பதினாறு வயதிலேயே அவன் பெரும் சாதனை நிகழ்த்தப் போகிறான். அதற்குரிய சந்தர்ப்பம் அவனைத் தேடி வந்துள்ளது. இந்த சாதனையைச் செய்து, இக்ஷ்வாகு வம்சத்தின் பெருமையை மேலும் உயர்த்துவான். அவனை முனிவருடன் அனுப்பி வை,.அரசகுருவே சொன்ன பிறகு தசரதரால் என்ன செய்ய முடியும்? ஒருவாறாக மனதைத் தேற்றிக் கொண்டு, ராமபிரானை அனுப்ப சம்மதித்தார். அப்போது இளைஞன் ஒருவன் மன்னர் முன் துள்ளிக் குதித்து வந்து நின்றான். அவன் சொன்ன வார்த்தைகள் தசரதரின் தலையை இன்னும் சுழல வைத்தது.


ராமாயணம் பகுதி இரண்டு

ராமாயணம் பகுதி இரண்டு

குழந்தை இல்லாத கவலை தசரதரை மிகவும் வாட்டியது. அவருக்கு கவுசல்யா என்ற அன்புமிகுந்த மனைவி முதலில் அமைந்தாள். குழந்தை இல்லாததால் கேகய நாட்டுமன்னன் தன் மகள் கைகேயியை இரண்டாம் தாரமாக திருமணம் செய்துகொடுத்தார். ஆனால், அந்த பெருமாட்டிக்கும் குழந்தை பிறக்கவில்லை. அவள் அழகில் மிகவும் சிறந்தவள். ராமாயண கதாபாத்திரங்களிலேயே அழகில் சிறந்தவளாக காட்டப்படுபவள் கைகேயிதான். இதன்பின்னும் சுமித்ரா என்ற பெண்மணியை தசரதர் திருமணம் செய்தார். அவள் அறிவில் சிறந்தவள். மூன்று மனைவியர் இருந்தும் நாடாள ஒரு குழந்தைகூட பிறக்காதது அனைவர் மத்தியிலும் கவலையை எழுப்பியது. இந்நேரத்தில்  ராஜகுரு வசிஷ்டர் அரண்மனைக்குள் வந்தார். வாடிப்போயிருந்த தசரதரின் முகத்தைப் பார்த்தார். தசரதரின் கவலையை குறிப்பால் உணர்ந்த அவர், தசரதா! நீ கவலை  ஏதும் படவேண்டாம். ரிஷ்யசிருங்கர் என்ற முனிவர் இருக்கிறார். அவர் வேள்விகளை எவ்வித பங்கமும் இல்லாமல் சிறப்பாக செய்யக்கூடியவர். அவரைக்கொண்டு அஸ்வமேத யாகமும், புத்திரகாமேஷ்டி யாகமும் செய்தால் குழந்தையும் கிடைக்கும். அத்துடன் இந்த உலகமே உன் வசமாகும் என யோசனை சொன்னார்.

தசரதர் மகிழ்ந்தார். வேள்விகளின்போது மந்திர உச்சரிப்புகள் மிகச்சரியாக இருக்க வேண்டும். சிறிது பிசகினால்கூட விளைவுகள் எதிர்மறையாக இருக்கும். ஆனால் ரிஷ்யசிருங்கரின் நாக்கிலிருந்து வரும் ஒவ்வொரு மந்திர வார்த்தையும் எந்த பிசகும் இல்லாமல் மிகத்தெளிவாக இருக்கும். வசிஷ்டர் கூறியபடியே சிருங்கர் மிகச்சிறப்பாக இரண்டு வேள்விகளையும் செய்துமுடித்தார். அவரது ஆலோசனையின்படி, தசரதரும், அவரது மூன்று தேவியரும் மிகக்கடுமையான விரதங்களை மேற்கொண்டனர்.  இந்நேரத்தில் பூவுலகை ராவணன் என்ற அரக்கன் ஆண்டுகொண்டிருந்தான். அவனால் நல்லவர்கள்கூட தீய வழிக்கு சென்றுகொண்டிருந்தார்கள். நல்லதைக்கற்றுக் கொள்வதைவிட, தீயதை கற்றுக்கொள்வது மிகவும் எளிது. சாதாரண சுகங்களுக்காக தீமையான மது, மாது, சூது ஆகிய விஷயங்களில் மக்களில் ஒருசாரார்  கெட்டுக்கிடந்தார்கள். விண்ணுலகிற்கு இந்த தகவல் எட்டியது. ராவணனின் புகழ் பெருகுவதைப் பார்த்தால் தங்களது பதவிக்கும் ஆபத்து வரும் என தேவர்கள் கருதினர். அவர்கள் பிரம்மனை அணுகி, விஷயத்தை எடுத்துரைத்தனர். அவர்களிடம் பிரம்மா, தேவர்களே! அந்த ராவணனை யாராலும் கொல்ல முடியாது. அதற்குரிய வரத்தை நானே அவருக்கு கொடுத்திருக்கிறேன். ஆனால், ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் அவன் தவறிவிட்டான்.

பூவுலகில் எந்தப் பொருளாலும் தனக்கு அழிவு வரக்கூடாது எனக் கேட்ட அவன், மனிதர்களால் மட்டும் அழிவு வரக்கூடாது என கேட்கவில்லை. எனவே, யாராவது ஒருமனிதனால் மட்டுமே அவனை கொல்ல இயலும். அப்படிப்பட்ட தைரியசாலிகள் யாருமே இல்லை. அவனது மூச்சுக்காற்று பட்டால்கூட சாதாரண மனிதர்கள் அழிந்து போவார்கள். எனவே நாம் மகாவிஷ்ணுவை அணுகுவோம். அவர் என்ன சொல்கிறாரோ அதன்படி நடப்போம், என்றார். பிரம்மனும் தேவர்களும் பாற்கடலில் துயில் கொண்டிருந்த பரந்தாமனை அணுகினர். அவர்களிடம் மகாவிஷ்ணு, உங்கள் வேண்டுகோளை ஏற்கிறேன். மண்ணுலகில் மானிடனாக பிறக்கிறேன். ராமன் என்ற பெயரில் விளங்குவேன். ராமாவதார காலம் முடிந்தபின்பு மீண்டும் வைகுண்டம் திரும்புவேன், என உறுதியளித்தார். தேவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். அதேநேரம், ரிஷ்யசிருங்கர் நடத்திய வேள்வியும் நிறைவுபெற்றது. வேள்விக்குண்டத்திலிருந்து கண்களால் உற்று நோக்கமுடியாத அளவுக்கு படுபிரகாசமான ஒளிப்பிழம்பு எழும்பியது.  அதிலிருந்து ஒரு உருவம் வெளிப்பட்டது. அந்த உருவத்தின் கையில் பொன்னால் செய்யப்பட்ட ஒரு பாத்திரம் இருந்தது. பாத்திரம் நிறைய தேவலோக பாயாசம் இருந்தது.

அவ்வுருவம் தசரதன் அருகில் வந்து, மகாராஜா தசரதனே! மக்கள் மீது நீ மிகவும் அன்பு வைத்திருக்கிறாய். மக்களைக் காப்பவரை ஆண்டவன் எப்போதும் விரும்புவான். நான் கிருஷ்ணபரமாத்மாவின் தூதனாக இங்கே வந்திருக்கிறேன். இந்த தங்கப் பாத்திரத்தில் உள்ள தேவலோக பாயாசத்தை ஏற்றுக்கொள். உன் மனைவியருக்கு இதை பங்கிட்டுக்கொடு. இந்தப் பாயாசம் நோயற்ற வாழ்வைத்தரும். செல்வ வளம் செழிக்கும். முக்கியமாக, நீ கேட்கும் புத்திரபாக்கியம் கிடைக்கும். உனக்கு நான்கு குழந்தைகள் பிறப்பார்கள், என்றது. தசரதர் மிகுந்த மகிழ்ச்சியுடன் பாயாச பாத்திரத்தைப் பெற்று அரண்மனைக்குத் திரும்பினார். அந்தப் பாயாசத்தில் பாதியை முதல் மனைவி கவுசல்யாவுக்கு கொடுத்தார். மீதியிருந்ததில் பாதி பகுதியை சுமித்ராவுக்கு வழங்கினார். இதிலும் எஞ்சியதை இரண்டு பங்காக்கி அதில் ஒரு பகுதியை கைகேயிக்கு கொடுத்தார். சற்று யோசனை செய்துவிட்டு, மீதியிருந்ததை இரண்டாவது தடவையாக சுமித்ராவுக்கு கொடுத்துவிட்டார். இவ்வாறு பாயாசத்தை பிரித்துக் கொடுத்ததன் விளைவாகத்தான் பிற்காலத்தில் கைகேயியின் புத்தி தடுமாறி இருக்கவேண்டும். ஏனெனில் கைகேயிக்கு மட்டுமே குறைந்த அளவு பாயாசம் கிடைத்தது.  அவளால்தான் ராமாயணம் என்ற காப்பியமே உருவாயிற்று. பாயாசத்தை அருந்திய தேவியர் மூவரும் கர்ப்பமடைந்தனர். சித்திரை மாதத்தில் புனர்பூச நட்சத்திரத்தில்  ஐந்து கிரகங்கள் உச்சத்தில் இருந்த நிலையில் கவுசல்யா தேவிக்கு ஸ்ரீ ராமபிரான் அவதரித்தார். அடுத்தநாள் கைகேயி பூச நட்சத்திரத்தில் பரதனை பெற்றாள். ஆயில்ய நட்சத்திரத்தில் சுமித்ராவுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அவர்கள் லட்சுமணன் மற்றும் சத்ருக்கனன் ஆகியோர்.