ஞாயிறு, 22 நவம்பர், 2020

அருள் மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோவில்

அருள் மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோவில்

மூலவர்:வீரட்டானேஸ்வரர்

அம்மன்:பெரியநாயகி

தல விருட்சம்:சரங்கொன்றை

தீர்த்தம்:சூலத்தீர்த்தம்

பழமை:2000 வருடங்களுக்கு முன்

ஊர்:திருவதிகை

மாவட்டம்:கடலூர்

மாநிலம்:தமிழ்நாடு

பாடியவர்கள்:நாவுக்கரசர்,ஞானசம்பந்தர்,சுந்தரர்,மாணிக்கவாசகர்.

பாதம் பலரேத்தப் பரமன் பரமேட்டிபூதம் புடைசூழப் புலித்தோல் உடையாகக்கீதம் உமைபாடக் கெடில வடபக்கம்வேதம் முதல்வன் நின்றாடும் வீரட்டானத்தே.
திருஞானசம்பந்தர்

திருவிழா: பங்குனி சித்திரை மாதங்கள் 10 நாட்கள் திருவிழா வசந்தோற்சவம் ஸ்தல நாயகர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளல் சித்திரை சதயம் 10 நாட்கள் அப்பர் மோட்சம் திருக்கயிலாய காட்சி, வைகாசி பெருவிழா பிரம்மோற்சவம் 10 நாட்கள் பஞ்ச மூர்த்தி வீதியுலா வெள்ளி வாகன புறப்பாடு ஸ்தல நாயகர் திருத்தேரில் வீதியுலா ஆடிப்பூர உற்சவம் 10நாட்கள் மாணிக்கவாசக உற்சவம் மார்கழி 10நாட்கள் மார்கழி திருவதிகை நடராஜர் தீர்த்தவாரி, ஆருத்ரா தரிசனம் 1 நாள் திருவிழா மாசி மகா சிவராத்திரி 6 கால பூஜை கார்த்திகை 5 சோமவாரம் பங்குனி உத்திரம் திலகவதியார் குருபூஜை திருக்கல்யாண உத்திரம் சுவாமி அம்பாள் 1 நாள் உற்சவம் பிரதோச தினத்தின் போது கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்

தல சிறப்பு:இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 16 பட்டைகளுடன் கூடிய மிகப்பெரிய லிங்கம். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 218 வது தேவாரத்தலம் ஆகும்.திருவதிகை நகரின் மேற்கே சுமார் 8 கி.மீ. தொலைவில் திருவாமூர் என்ற ஊரில் பிறந்த திருநாவுக்கரசர் சமண மதத்தில் மிகவும் தீவிரமாக இருந்தார். அவரது சகோதரி திலகவதியார் சைவ சமயத்திலேயே இருந்து வீரட்டானேசுவரருக்கு தொண்டு செய்து வந்தார். அப்போது திருநாவுக்கரசருக்கு கடுமையான சூலை நோய் (வயிற்று வலி) தாக்கியது. சமண சமயத்தவர்கள் அவரது வயிற்று வலியை நீக்க எவ்வளவோ முயன்றனர்.ஆனால் முன்னை விட மேன்மேலும் வலி அதிகமானது.ஒருநாள் அதிகாலையில் திருஅதிகை அடைந்து திலகவதியாரின் காலில் விழுந்து தமது நோயைப் போக்கும் படி கூற, திலகவதியாரும் மனமிரங்கி வீரட்டானேசுவரர் சன்னதிக்கு தன் தம்பியை அழைத்து சென்று ஐந்தெழுத்தை ஓதி திருவாளன் திருநீறு அளித்தார். அந்த திருநீறை பூசிக்கொண்டு திருவாயில் போட்டுக் கொண்டவுடன் வயிற்றுவலி பனிபோல் நீங்கிவிட்டது.உடனே வீரட்டானேசுவரரை வணங்கி கூற்றாயினவாறு விலக்ககலீர் என்னும் கோதில் நீடிய திருப்பதிகம் பாடினார். அதனால் மனமகிழ்நத கண்ணுதற் பெருமான் நாவுக்கரசு என்று நின் நன்நாமம் நயப்புற மன்னுக என்று பட்டம் கொடுத்தார். அது முதல் திருநாவுக்கரசர் சைவத்தையே உயிர் மூச்சாகக் கொண்டு உழவாரம் செய்து வந்தார்.இந்த இறைவனை வழிபடுவோர்க்கு ஆணவம், கன்மம்,மாயை ஆகிய மும்மலங்களும் நீங்கும்.திருஅதிகை வீரட்டானேசுவரர் திருக்கோயிலுக்கு வந்து வழிபடுவோர்க்கு கயிலைக்கு சென்ற பலன் கிடைக்கும் என்பது உறுதி என்று பக்தர்கள்  கூறுகிறார்கள்.இத்தலத்து முருகப்பெருமான் (சுப்ரமணியர்) குறித்து அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார்

சுவாமியின் பிறபெயர்கள் :ஸ்ரீ சம்கார மூர்த்தி(திருக்கெடிலவாணர் கற்றளி கருவறையில் பின்புறம் அம்மையப்பர் (இறைவன் தன்னையே பூஜிப்பதாக ஐதீகம்)

அம்பாளின் பிறபெயர்கள் : ஸ்ரீ திரிபுர சுந்தரி

தலவிநாயகர் : சித்தி விநாயகர்.

பிற தீர்த்தங்கள் :கிணறு தீர்த்தம், சக்கர தீர்த்தம், குளம், கெடில நதி

திறக்கும் நேரம்: காலை 6மணி முதல் 12 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி: அருள்மிகு வீரட்டானேசுவரர் திருக்கோயில், திருவதிகை-607106, பண்ருட்டி போஸ்ட, கடலூர் மாவட்டம்.போன்: +91-98419 62089

பிரார்த்தனை:இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும்.இது உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது.வயிற்று வலி (அல்சர்) சத்ரு உபாதைகள் சூலைத் தீர்த்தமும் உட்கொண்டால் உடனடியாக தீர்ந்து விடும்.எதிரிகள் தொல்லை நீங்குதல், வர்க்க சாப தோச நிவர்த்தி, முன்னோர் செய்த பாவங்கள் இங்கு வழிபட்டால் நீங்கும்.குழந்தை இல்லாதவர்கள் இறைவனை வழிபட்டு அபிசேகம் செய்து அந்தப்பாலை உட்கொண்டால் உடனே குழந்தை பேறு உண்டாகும்.மேலும் வேலைவாய்ப்பு, குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்வது வழக்கமாக உள்ளது.

நேர்த்திக்கடன்: நிலை மாலை சாத்துதல், சுவாமி பொட்டுக் கட்டுதல் அம்பாளுக்கு தாலிகட்டுதல், 300 நாமங்களைக் கொண்ட அர்ச்சனை (திருசதி அர்ச்சனை) செய்தல், சகஸ்ரநாமம் 1008 நாமம் செய்தல் , சூரைத்தேங்காய் உடைத்தல் ,சுவாமிக்கு நல்லெண்ணெய், திரவிய பொடி, பால், தயிர்,பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் , வில்வம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம்.தவிர உலர்ந்த தூய வஸ்திரம் சாத்தலாம்.இது தவிர சுவாமிக்கு சங்காபிசேகம், கலசாபிசேகம் ஆகியவையும் செய்யப்படுகிறது.தவிர சுவாமிக்கு வேட்டியும்,அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிசேகம், புடவை சாத்துதல் ஆகியவற்றையும் செய்யலாம்.பஞ்சக்கனி வைத்து படைத்தல், புட்டு நிவேத்தியம் செய்தல் ஆகியவை பக்தர்களால் செய்யப்படுகிறது. தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.

தலபெருமை: வழிபட்டவர்கள் : இந்திரன், பிரம்மன், திருமால், பாண்டவர்கள், சப்தரிஷிகள், வாயு, வருணன், யமன் முதலானோர். இறைவன் தேரில் வந்ததால் இத்திருக்கோயிலின் அமைப்பும் தேர் வடிவில் உள்ளது.இத்திருக்கோயிலின் கர்ப்ப கிரக விமானத்தை பார்த்து இராஜ இராஜ சோழன் பிற்காலத்தில் தஞ்சையில் பெரிய கோயிலை கட்டினான். திவதிகை கோயிலின் நிழல் தரையில் விழாதபடி கணித சாஸ்திர முறையுடன் பல்லவர்களால் கட்டப்பட்டுள்ளது. எந்த ஆயுதமின்றி ஒரு அழகான சிரிப்பினாலேயே ஒரே நொடியில் நடைபெற்ற சிவபெருமானின் திரிபுரசம்காரம் நடைபெற்ற தலம்.முப்புரம் எரிசெய்த பெம்மான் மூவருக்கு அருள் செய்தார். ஐந்தெழுத்தால் இறைவன் மும்மலங்களையும் சிதைத்தது இத்தலத்திலே. தேவாரம் முதன் முதலில் பாடப்பட்ட தலம் இதுவே ஆகும். முதன்முதலில் தேர் ஏற்பட்ட வரலாறு இதுவே ஆகும்.இன்றைக்கு கோயில்களில் தேர் இருக்க வேண்டிய ஐதீகம் உருவானதே இத்தலத்தில்தான்.அட்ட வீரட்டானத் தலங்களில் சிறப்புடையது. அட்ட வீரட்டானத் தலங்களில் அதிக பாடல் பெற்ற தலம் இதுவே. அட்ட வீரட்டானத் தலங்களில் மூவர் தமிழும் பெற்ற சிறப்பு தலம் இது. சிதறு தேங்காய் (சூறைத் தேங்காய்) என்ற பழக்கம் உருவானதும் இத்தலத்தில்தான்.மூலவருக்கு பின்புறம் சுதையால் ஆன சுவாமி அம்பாள் திருமணக்கோலம் உள்ளது. திருநாவுக்கரசருக்கு திருமணக்கோலத்தில் காட்சி தந்த தலம் என்பதால் திருமணங்கள் நிறைய நடைபெறுகின்றன. கருவறை கோபுரம் நிரம்ப சுதைகளால் ஆனது.கருவறை விமான அமைப்பு, மண்டப அமைப்பு ரதம் போன்ற அமைப்பை கொண்டது.சித்திரையில் அப்பர் பெருமானுக்கு பத்து நாட்கள் சிறப்பாக விழா நடைபெறுகிறது. வைகாசியில் பிரம்ம உற்சவம் பத்து நாட்கள் விசாகத்தில் தேர் திருவிழாவும் திரிபுர சம்காரமும் நடைபெறுகிறது. உழவாரம் முதன்முதலில் திருநாவுக்கரசரால் இங்குதான் செய்யப்பெற்றது.பன்னிரெண்டு திருமுறைகளிலும் திரிபுரசம்கார நிகழ்ச்சியை பற்றியே அதிகமாக பாடப்பட்டுள்ளது இந்த இறைவனை வழிபடுவோர்க்கு ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களும் நீங்கும்.அம்பாள் சன்னதி சுவாமிக்கு வலப்புறம் உள்ளது தனிச்சிறப்பு. இதனால் திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் திருமணம் உடனடியாக தீர்ந்து விடும். ஆணவமாய் வந்தவர்கள் இங்கு திரும்பவும் வரமாட்டார்கள். அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த தலம். இத்தலத்தில் குனிந்துதான் விபூதி பூச வேண்டும்.

 தல வரலாறு:தாருகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் மூன்று அசுரர்கள் கடுமையான தவங்கள் செய்து பிரம்மாவிடம் வரம் பெற்று தங்களை யாராலம் வெல்லவோ கொல்லவோ முடியாது வரம் பெற்றனர்.அவர்களால் தொல்லையடைந்தவர்கள் ஈசனிடம் முறையிட்டனர். அதன்படி பூமியை தேராகவும், சூரிய சந்திரர்களை தேர் சக்கரங்களாகவும், நான்கு வேதங்களை குதிரைகளாகவும், பிரம்மாவை தேரோட்டியாகவும் மற்ற தேவர்களை எல்லாம் தேருடன் (அதற்கு வைதிகத் தேர்) வரச் செய்தார். சுவாமி மேருமலையை வில்லாகவும் வாசுகி என்னும் பாம்பை நாணாகவும் திருமாலை அம்பாகவும் அம்பின் நுனியில் அக்னியையும் வைத்து அந்த வில்லுடன் தேரில் ஏறினார். அச்சு முறிந்தது. பிள்ளையாரை வணங்காததால் தான் இப்படி என்று உணர்ந்து கணபதி பூஜை செய்து அவரது அருளை பெற்று தொடர்ந்தனர்.தேரில் வந்த அனைத்து தேவர்களும் தங்களால் தான் அந்த அசுரர்கள் மடியப்போகிறார்கள் என்று நினைத்து கொண்டிருக்க சிவபெருமான் அசுரர்கள் மீது வில் அம்பு எதையும் பயன்படுத்தவில்லை. அசுரர்களை பார்த்து சற்றே சிரித்தார்.அவ்வளவுதான்.உலகமே நடுங்கும்படியாக தீப்பிழம்பு ஏற்பட்டு அவர்கள் மூவரும் சாம்பலாயினர். தங்கள் உதவி இல்லாமலே சிவன் சம்காரம் செய்ததை உணர்ந்து தேவர்கள் வெட்கி தலைகுனிந்தனர். ஒரே சமயத்தில் தேவர்கள் அசுரர்கள இருவரது ஆணவத்தையும் அடக்கினார் ஈசன். பின்பு மூன்று அசுரர்களையும் மன்னித்து இருவரை தனது வாயில் காப்பாளர்களாகவும், ஒருவரை குடமுழா முழக்குபவனாகவும் ஆக்கி கொண்டார். மேற்கூறிய புராண வரலாறே திரிபுர சம்காரம் என்று அழைக்கப்படுகிறது.


கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்?

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்?
(ஒரு அறிவியல் பூர்வமான அலசல்)

இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும்.

எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது. பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது.

எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன்:
பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி.

கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம்.

இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி. பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும்.

நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது எதற்கு தெரியுமா?

அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.

அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்கும்.
இது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு எனர்ஜி. ரெகுலராய் கோயிலுக்கு செல்லும் ஆட்களுக்கு தெரியும் ஒரு வித எனர்ஜி அந்த கோயிலில் கிடைக்கும் என்று.

அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும் காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். இந்த காந்த மற்றும் ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.

மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு (இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்) அதை சுற்றி கண்ணாடி அது செயற்க்கை ஒளி வட்டம் வருவதற்க்கு அல்ல அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.

அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம்.

இவ்வளவு அபிஷேகம், கர்ப்பூர எரிப்பு, தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 ரூமில் நீங்கள் செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும் ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மற்றும் எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய் போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம் செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது.

அது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த எனர்ஜியை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும். பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல் எங்கும் கிடைக்காது.

இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட அதில் உள்ள மகிமை மிக அதிகம். இதை ரெகுலராய் உட்கொண்டவர்களுக்கு இது ஒரு ஆன்டிபயாட்டிக் என்றால் அதிகமில்லை.

இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.

இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை தான் இந்த தீர்த்தம்.

கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.

கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும் போது மற்றும் மஹா தீபாராதனை காட்டும் போது தான் கதவை திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக எனர்ஜி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த ஜோதியுடன் ஒன்று சேர வரும் போது தான் கதவை அல்லது திரையை திறப்பார்கள் அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும் அது போக அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும் போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம் இது தான்.
கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம். பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.

நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். மாங்கல்யம், கார் சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம் இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன் எனர்ஜீயை அப்படியே பற்றி கொள்ளுமாம். இது சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

கல் சிலையின் முன் வைத்து எடுக்கும் இவர்களை என்னவென்று கூறும் அறிவாளிகள் இதன் எனர்ஜிதான் அங்கிருந்து இதில் படும் என்பது தான் இதன் பிளஸ் பாயின்ட். எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஒரு எனர்ஜி வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும் சுற்றி வரும் ஒரு எனர்ஜு ரீசார்ஜ் பாயின்ட் தான் இந்த கோயிலின் மூலஸ்தானம்.
அது போக கோயிலின் கொடி மரத்திற்க்கும் இந்த பரிகாரத்திற்க்கு ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டென்றால் அது மிகையாகது.

கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.

அது போக கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆம் இது தான் பிற்காலத்தில் கண்டெடுக்கபட்ட லைட்னிங் அரெஸ்டர்ஸ்.

அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும் இது தான் கோயிலின் வெளி பிரகாரத்தை காக்கும் இன்னொரு டெக்னிக்கல் புரட்டக்டர்.

அது போக கோயில் கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட ஒரு விஷயம் ஏன் என்றால் எல்லா ஹை வோல்ட்டேஜெயும் நியூட்ர்ல் செய்யும் ஒரு சிறப்பு விஷயம்.

இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித ஒலியை ஏற்படுத்தும் இதுவும் ஒரு இயற்கை விஷயம் தான். நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.

சுத்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட கோயிலில் கட்டி போடும் விஷயம் இந்த எனர்ஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தான், நியதி.

கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும் சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த டேஸ்ட்டை எந்த ஒரு ஃபைவ் ஸ்டார் கிச்சனும் கொடுத்துவிட முடியாது என்பது தான் நியதி. சில கோயில்களில் இரண்டு அல்லது நாலு வாசல் இருக்கும் காரணம் இந்த எனர்ஜி அப்படியே உங்களுடன் வெளியே செல்ல வேண்டும் எனற மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் தான் இந்த கோயில் டெக்னாலஜி.


மதுரகவி ஆழ்வார்

ஆழ்வார்களும் அவதாரமும்
12. மதுரகவி ஆழ்வார்

பிறந்த இடம் : திருக்கோளூர் (தூத்துக்குடி மாவட்டம்)
பிறந்த நாள் : 9ம் நூற்றாண்டின் முற்பகுதி, சித்திரை மாதம்
நட்சத்திரம் : சித்திரை சித்திரை, (வளர்பிறை சதுர்த்தசி திதி)
கிழமை : வெள்ளி
எழுதிய நூல் : நான்முகன் திருவந்தாதி
பாடல்கள் : 96
சிறப்பு : ஆழ்வாராயிருந்து இன்னொரு ஆழ்வாரைப் பாடிய பேறு பெற்றவர், நம்மாழ்வாரைப் புகழ்ந்தவர். (வைநதேயாம்சம்)
பிற பெயர்கள் : இன்கவியார், ஆழ்வார்க்கடியான்

கருடாழ்வாரின் அம்சமாக திருக்கோளூர் என்ற திவ்யதேசத்தில் அவதரித்தவர் மதுரகவி ஆழ்வார். செவிக்கு இனிமையாக செஞ்சொற்களால் கவிதை பாடும் வல்லவர் ஆதலால் இவர் மதுரகவி ஆழ்வார் என புகழப்பட்டார். ஒருமுறை இவர் அயோத்தியில் உள்ள ராமபிரானை வணங்கி விட்டு அங்கேயே சிலகாலம் தங்கினார். ஒருநாள் தான் பிறந்த திருக்கோளூர் பெருமானை தென்திசை நோக்கி வணங்கும் போது வானத்தில் ஒரு ஜோதி தெரிவதைக் கண்டார். தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களும் அந்தத் தென்திசை நோக்கிப் புறப்பட்டார். ஆழ்வார் திருநகரி வந்தவுடன் அந்த ஜோதியைக் காணாத ஆழ்வார் அந்த ஊர் மக்களிடம் இந்த ஊரின் சிறப்பு என்ன எனக் கேட்டார். ஊர் மக்களும் அந்த ஊர் புளிய மரத்தினுள் பத்மாசனத்தில் சின் முத்திரையோடு அமர்ந்திருக்கும் நம்மாழ்வாரைப் பற்றி கூறினார்கள். நம்மாழ்வாரின் முன் சென்ற மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாருக்கு காது கேட்குமா என அறிய ஒரு குண்டுக்கல்லை தூக்கிப்போட்டார். அந்த சத்தத்தால்  நம்மாழ்வார் கண் விழித்தார். இவர் நம்மிடம் பேசுவாரா என்பதை அறிய செத்த பின் வயிற்றிலே சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடைக்கும் ? (உயிரில்லாததான உடம்பில் ஆத்மா வந்து புகுந்து எதனைஅனுபவித்து எங்கே இருக்கும் ?) எனக் கேட்டார். அதற்கு பிறந்தது முதல் பெற்றவர்களிடம் கூட பேசாத நம்மாழ்வார் மதுரகவி ஆழ்வாரிடம் அத்தைத் தின்று அங்கேயே கிடக்கும் (அந்த உடலின் தொடர்பால் ஏற்படும் இன்ப துன்பங்களை அனுபவித்தபடி அங்கேயே இருக்கும்) என்று பதில் உரைத்தார். மதுரகவி ஆழ்வார் தன்னை ஆட்கொள்ளுமாறு நம்மாழ்வாரிடம் வேண்ட அவரும் நம் பிரபந்தங்களை ஓலைப்படுத்தும் படி ஆணையிட்டார். நம்மாழ்வார் காலத்துக்குப் பின் அவரது விக்ரகத்தை ஆழ்வார் திருநகரியில் எழுந்தருளச் செய்தார். மதுரைத் தமிழ்ச் சங்கத்துப் புலவர்கள் நம்மாழ்வாரை வாதத்திற்கு அழைத்தனர். அவர் இல்லாததால்  மதுரகவி ஆழ்வார் முன்னூறு சங்கப்புலவர்கள் ஏறிய சங்கப்பலகையில் நம்மாழ்வார் பாடிய ஓலையை வைத்தவுடன் பலகை கவிழ்ந்தது. அனைத்துப்புலவர்களும் பொற்றாமரைக்குளத்துக்குள் விழுந்து விட்டனர். நம்மாழ்வார் பகவானின் அம்சம் என்பதை சங்கப்புலவர்கள் உணர்ந்தனர். மதுரகவி ஆழ்வார் தம் குருவான நம்மாழ்வாரின் பெருமைகளையும் பிரபந்தங்களையும் உலகெங்கும் பரப்பி உயர்வுற்றார். பெருமாளின் 108 திருப்பதிகளில் மதுரகவி ஆழ்வார் தனியாக மங்களாசாசனம் செய்யாமல் பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து ஒரு கோயிலை மட்டும் மங்களாசாசனம் செய்துள்ளார். அந்தக்கோயிலிலும் பெருமானைக் கூடபாடாத மதுரகவி ஆழ்வார் தன் குருவான நம்மாழ்வாரைப் போற்றி கண்ணிநுன் சிறுத்தாம்பு என்ற திவ்ய பிரபந்தத்தை பாடினார்.

ஆழ்வார்களும் அவதாரமும் இனிதே முடிந்தது. நன்றி


ஹோமம் & அறிவியல்

ஹோமம் & அறிவியல்

எனக்குள் சில நாட்களாகவே ஒரு நெருடல். “ஏன் இப்படி புதிய புதிய நோய்கள் அவதாரம் எடுக்கின்றன?” என்று. அப்போது போபால் விஷவாயு சம்பவமும் அதிலிருந்து ஒரு குடும்பம் தப்பித்ததும்  பத்திரிகைகளில் வெளியாகி இருந்த செய்தி நினைவுக்கு வந்தது. வேதம்,  இதிகாசம், புராணம் இதிலெல்லாம் நம்பிக்கை கொள்வது அல்லது விட்டு விடுவது என்பது தனிமனித விஷயம். ஆனால் சில பழமையான நூல்களில் சொல்லப்பட்டுள்ள சில பாரம்பரிய நம்பிக்கைகள் அது ஆன்மீகம் என்பதை விட அறிவியலாக இருந்திருக்கிறது என்பதை அது நினைவுபடுத்தியது. போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்லை. இதற்கு காரணம் யாகமல்ல. யாகத்தில் போடப்பட்ட பொருட்களும் அதிலிருந்த வெளிக்கிளம்பிய அனலும், மெல்லிய புகையும் தான் நச்சுப்புகையை அந்த வீட்டிற்குள் வரவிடாமல் தடுத்து நிறுத்தியதும் தான் காரணம்!

இப்படி கொடுமையான விஷ வாயுவை கூட முறியடிக்கும் சக்தி இந்த யாகத்திற்கு இருந்திருக்கிறது என்றால் இந்த ஈ, எலி, பன்றி, பறவை, கொசுக் காய்ச்சல்களை பரப்ப சுற்றுப்புற காற்றில் அலைந்து திரியும் கிருமிகளை அழிக்க முடியாமலா இருக்கும்? அதற்கும் பதில் சொல்லியிருக்கிறது அதர்வணம். சுற்றுப்புறக் காற்றில் உள்ள நோய்க் கிருமிகளையும் அசுத்தஙகளையும் நீக்கும் யாகத்தீக்கு ‘ஹோமம்’ என்று பெயரிட்டிருக்கிறார்கள். நல்ல சுற்றுப்புறத்தை ஐந்து எளிமையான அடிப்படையான மூலாதரமான விதிகளின் படி வேள்வித் “தீ” மூலம் உண்டாக்கலாம் என்கிறது சில பழங்கால வேதங்கள். அதில் ஒன்று தான் ஹோமம். அதாவது வேள்வித்தீயின் மூலம் சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்தலாம் என்கிறது வேதங்கள். இந்த ஹோமம் பற்றி ‘இன்ஸ்டிடியூட் பார் ஸ்டெடீஸ் இன் வேதிக் சையின்ஸ்’ என்ற நிறுவனம் வெளியிட்ட ஒரு கையேட்டில் காணப்பட்ட தகவல்கள் உங்கள் பார்வைக்கு…

காற்றில் ஒரு ஊசி மருந்து : “நம் உடலில் நோயை உண்டாக்கும் நச்சுக்கிருமிகளை அறவே ஒழிக்க முடியாது. ஆனால் அவற்றிலிருந்து நம்மை தற்காத்து கொள்ள வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொள்கிறோம். அது போல் நம்மை சுற்றி காற்றில் உலாவும் அசுததங்களை நம்மால் களைய முடியாத நிலையில் அவற்றின் தீய வினைகளிலிருந்து நம்மை காத்துக்கொள்ள முடியும். உடலில் ஊசி போடுவது போல சுற்றுப்புறக்காற்றில் செலுத்தப்படும் ஒரு ஊசி தான் ஹோமம். இந்த ஹோமம் நமது சுற்றுப்புறம் மட்டுமல்ல. யாகத்தீயில் இருந்து வரும் மணம் நமது மனதையும் அமைதிப்படுத்துகிறது.

ஹோமம் என்பது…. இயற்கை சமன் பாட்டிற்கும் மனித வாழ்வின் முன்னேற்றத்திற்கும் அவசியமாக இருந்து ஜீவராசிகளின் சீர் பிரமாணத்திற்காக சூரியோதத்திலும் சூரிய அஸ்தமனத்திலும் செய்யப்படும் யாகத்தின் அடிப்படையிலான செயல் முறை. சுற்றுப்புறக் காற்று தான் நமது நாசி வழியாக இழுக்கப்பட்டு உடலை உயிரோட்டமுடன் வைக்கிறது. இந்த சுற்றுப்புறக் காற்றுக்கு உயர்ந்த குணமளிக்கும் சக்தியை கொடுக்கும் ஒரு செயல்.

ஹோமம் செய்ய அடிப்படை தேவைகள்

1. நிச்சயமான நேரங்கள்

2. தீ (அக்னி) பசுஞ்சாண விரட்டியால் உண்டாக்கப்படுவது.

3. குறிப்பிட்ட அளவுடைய பிரமிட் தோற்றம் கொண்ட செப்பு பாத்திரம்.

4. சுத்தமான பசுநெய் தடவப்பட்ட முனை முறியாத பச்சரிசி

5. மந்திரங்கள்.

இதில் நிச்சயமான நேரங்கள் என்பது இயற்கையின் தாளகதியான சூரிய உதயம் மற்றும் சூரிய அத்தமனம். (சூரியோதத்தின் பல நெருப்புகள், ஒளி அலைகள், மின்சாரங்கள், ஈதர்கள் மற்றும் நுட்பமான சக்திகள் எல்லா வழிகளிலும் பரவி பாய்கின்றன. தீவிரமான இந்த ஒளி வெள்ளம் பரவசத்தை ஏற்படுத்தி சுறுசுறுப்பை உண்டாக்குகின்றது. மேலும் அது பாயும் வழியில் உள்ள எல்லாவற்றையும் சுத்தப்படுத்தி உயிர்ப்பிக்கின்றது. சூரிய அத்தமனத்தில் ஒளிவெள்ள அதிர்வுகள் மறைகின்றன. அப்பொழுது நோய்க்கிருமிகள் பெருகி அழிக்கும் சக்தியாக செயல்படும். எனவே ஹோமம் செய்தால் சுற்றுப்புறக்காற்றில் கிருமிகளின் பெருக்கத்தை தடுக்கும்)

அக்னி (தீ) மற்றும் பிரமிட் பாத்திரம்

பிரமிட் உருவ (பிரமிட் என்ற வடிவத்தை பற்றி ஆய்வு செய்த லண்டனை சேர்ந்த விஞ்ஞானிகள் அதிர்ந்து போனார்கள். காரணம், அது அறிந்து கொள்ளப்பட்ட அனைத்து விஞ்ஞான மற்றும் எலக்ட்ரானிக்ஸ் விதிகளுக்கு சவாலாக உள்ளது என்றார்கள். (psychic discoveries Behind Iron Curtain) புத்தகத்தில் பிரமிட்டின் உட்பகுதியில் இருக்கும் மின்காந்த சக்தி அதனுள் இருக்கும் பொருட்களின் சிதைவடைதலை தடுக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. (பிரமிடில் வைக்கபட்ட உடல் சிதைவுறாது. துர்நாற்றம் வீசாது)

தாமிர பாத்திரத்தில் உலர்ந்த பசுஞ்சாண விராட்டியில் நோய் பரவுதலை தடுக்கும் மூலங்கள் உள்ளதை ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. பசுஞ்சாணத்தில் மென்தால், அம்மோனியா, பீனால், இன்டால், பார்மலின் முதலிய ரசாயனங்களும் முக்கிய நோய்க்கிருமிகளை அழிக்கும் சக்தியும் உள்ளது.  யாக மரங்கள் என்று கூறப்படும் ஆல் (Ficul Bengalnesis), அத்தி (Ficus Glometra), புரசு (Butea Prondosa), அரசு (Ficus Religiosa), வில்வம் (Aegle Marmelos) ஆகிய மரங்களில் உலர்ந்த குச்சிகள் மருத்துவ சக்தி கொண்டது. இவற்றை பசுஞ்சாணத்துடன் பயன்படுத்தும் போது நன்மைகள் அதிகரிக்கும்.

செய்முறை : பசுஞ்சாண விராட்டியையும் உலர் மரக்குச்சிகளையும் பிரமிட் உருவ தாமிர பாத்திரத்தில் உள்ளே காற்றோட்டத்துடன் சரியாக எரிய வைக்க வேண்டும். அதிகாலையில் மற்றும் மாலையில் ஹோமம் நேரத்தில் (சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம்) தீ கொளுந்து விட்டு எரியவேண்டும். புகை உண்டாக்கக்கூடாது. ஜுவாலை நெருப்பாக இருக்க வேண்டும். உடையாத முழுமையான பச்சரிசி – கைக்குத்தல் அரிசியை ஒவ்வொரு நேரத்திற்கு இரண்டு சிட்டிகைகளாக இந்த நெருப்பில் போட வேண்டும். சுத்தமான பசுநெய்யை இந்த நெருப்பில் சொட்டு சொட்டாக  விட வேண்டும். இந்த நெய், உப்பு சேர்க்காத பதப்படுத்தும் பொருள் அல்லது ரசாயனங்கள் சேர்க்காத சுத்தமான பசு நெய்யாக இருப்பது முக்கியம். இப்படி வேள்வி தீயை வீட்டில், சரியாக சூரியோதத்திலும், சூரிய அஸ்தமனத்திலும் முறையே இரு தடவை செய்ய வேண்டும்.

இப்படி உருவாக்கும் வேள்வித் தீயிலிருந்து 4 வகையான வாயுக்கள் உற்பத்தியாகின்றன.

1 எத்திலின் ஆக்சைடு

2, புரேப்பலின் ஆக்சைடு

3. பார்மால்டிஹைடு

4. ப்யூட்டோ பயோலேக்டோன்.

இந்த வேள்வி தீயால் என்ன நடக்கிறது என்பதற்கு ஒரு உதாரணத்தை மட்டும் பார்க்கலாம். நெய்யை தீயில் சொட்டு சொட்டாக விடும் போது நெய்யானது உஷ்ணத்தைக் கொண்ட அசிட்டிலின் வாயுவை உற்பத்தி செய்கிறது. இது நம்மை சுற்றி இருக்கும் அசுத்தம் அடைந்த காற்றை உறிஞ்சி சுற்றுப்புறத்தை சுத்தம் செய்கிறது.

என்ன  நடக்கிறது?

இந்த ஜுவாலையின் அனல் நம்மை சுற்றி இருக்கும் நச்சுக்கிருமிகளை எல்லாம் கிரகித்து அழித்து விடும். ஒரு வீட்டில் தொடர்ந்து செய்யப்படும் போது அந்த வீட்டிலும் சுற்றுப்புறத்திலும் நோய்க்கிருமிகள் உலாவுவதற்கான வாய்ப்புகள் குறைவு. எனவே உங்கள் உடல் நலனை காக்க ஹோமம் செய்து வரலாம்.

பொது  இடங்களில் செய்யலாம்

இந்த செயலை பல ஆயிரக்கணக்கான நோயாளிகள் குவிந்து வரும் அரசு மருத்துவமனைகள், மிக அதிக மக்கள் குழுமும் இடங்களில் எல்லாம் கடைப்பிடித்தால் அந்த இடங்களில் உள்ள நச்சுக்கிருமிகள் அழிக்கப்பட்டு சுற்றுப்புறக்காற்று சுத்தமானதாக மாறிவிடும். நோயாளிகளை பார்க்க வரும் நல்ல ஆரோக்கியமுள்ள பலர் இந்த நோய்க்கிருமிகளால் பாதிப்புள்ளாகாமல் தடுக்கும் ஒரு முயற்சியாக இந்த யாகத்தீ அமையக்கூடும். மேலும் நோயாளிகளின் நோய்க்கிருமிகளும் எளிதில் அவர்களை விட்டு விலகி குணமடைய வாய்ப்பிருக்கிறது. முயற்சிக்கலாமே!

ஹோமம் நன்மைகள்

ஒருவரிடம் இருக்கும் போதைப் பொருள் பழக்கத்தின் தீவிரத்தன்மையை குறைக்கும்.

அதிசயிக்கத்தக்க அளவில் குழந்தைகளிடமும் பெரியவர்களிடமும் ஒரு அமைதியான மனதை ஏற்படுத்தும்.

முன் தலைவலி, சைனஸ், தோல் படை, மைக்ரேன் தலைவலி உள்பட சில நோய்களை குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. விவசாயத்தில் விதைகள் சீக்கிரமே முளை கிளம்பி தளிர் விடும். விளைச்சலை அதிகப்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.

பசுஞ்சாணத்தால் மெழுகப்பட்ட வீட்டின் சுவர் அணுக்கதிர் வீச்சுக்களை கூட தடுக்கும் சக்தி வாய்ந்ததாக ஒரு ரஷிய விஞ்ஞானி சொல்லியிருக்கிறார்.

நாசா விஞ்ஞானிகளின் கூற்றுப்படி பிரமிட் என்ற உருவத்தின் சக்தி சூரிய சக்தியைவிட புரட்சிகரமானதாக இருக்கும்.

பிரமிட் உருவ கட்டிடங்களில் இருக்கும் போது மனவியாதி நோயாளிகள் அபூர்வமான மன அமைதியை அடைகிறார்கள்.

பிரமிட்டில் மின்காந்த கதிர்களும், காஸ்மிக் கதிர்களும் குவிகின்றன.

இப்படி இதனை பற்றி பல தகவல்கள் தரப்பட்டுள்ளன. இங்கு சுருக்கப்பட்டிருக்கிறது.

இதை தான் பிராமணர்களாகிய நமக்கு ஔபாஷனம் என்று கொடுத்திருக்கிறார்கள்.


ஸ்ரீதர ஐயாவாள்

ஸ்ரீதர ஐயாவாள்!

ஆண்டு தோறும் திருவிச நல்லூர் ஸ்ரீதர  ஐயாவாள் இல்லக் கிணற்றில் இன்றும் கங்கை பொங்கி வருவதைக் காணலாம்; நீராடலாம். கர்நாடக சமஸ்தானத்தில் திவானாகப் பணிபுரிந்தவர் ஸ்ரீதர ஐயாவாள். இவர் தன் பதவி சொத்துக்களைத் துறந்து விட்டு தமிழக காவிரிக் கரையிலுள்ள திருவிச நல்லூரில் குடியமர்ந்து விட்டார். தினமும் அருகேயுள்ள மத்யார்ஜூனமான திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரரை தரிசிப்பார். அர்த்தஜாம பூஜையும் காண்பார். சிவன் மேல் அபார பக்தி கொண்டவர். இவரது தந்தையார் மறைந்த திதி கார்த்திகை மாதத்தில் வரும். அத்தகைய ஒரு நாளில் இவர் பிராமணர்களுக்கு சிரார்த்த சமையல் தயார் செய்ய ஏற்பாடு செய்து விட்டு காவிரியில் நீராட சென்றார். நீராடி இல்லம் திரும்பும் போது எதிரேவந்த வயதான ஏழை ஐயாவாளிடம் சுவாமி ரொம்ப பசிக்கிறது. ஏதாவது கொடுங்களேன் என கேட்டார்.

அவர் மீது இரக்கம்கொண்ட ஸ்ரீதர  ஐயாவாள் அவரை இல்லத்திற்கு அழைத்து வந்த போது சிரார்த்த சமையல் மட்டுமே தயாராக இருந்தது. பசி மயக்கத்தில் இருந்த ஏழைக்கு சிரார்த்த சமையல் உணவைக்கொடுத்து பசியாற்றினார். சிரார்த்த சமையலை திதி கொடுக்கும் அந்தணர்கள் மட்டுமே உண்ண வேண்டும். மீதம் உள்ளதை பசுவுக்குத்தான் தருவார்கள். அந்த நியதியை மீறினார் ஐயாவாள். அதனால் கோபமடைந்த அந்தணர்கள் வெளியேறி பரிகாரம் செய்தால் தான் நாங்கள் திதி கொடுப்போம் என்றனர். ஒரேநாளில் காசியிலுள்ள கங்கையில் நீராடி விட்டுவா என்பது தான் அவர்கள் சொன்ன பரிகாரம். ஒரே நாளில் எப்படி அவ்வளவு தூரத்திலுள்ள காசி சென்று கங்கையில் நீராடிவிட்டு அன்றே திரும்ப முடியும்? இதை நினைத்து வருத்தத்துடன் படுத்தவர் அசதியில் உறங்க கனவில் சிவன் காட்சி கொடுத்து உன் இல்லக் கேணியில் கங்கையைப் பிரவேசிக்கச் செய்வேன் என உறுதியளித்து மறைந்தார். இக்கனவை ஐயா எல்லாரிடமும் சொன்னார். கார்த்திகை மாத அமாவாசை. ஊரே திரண்டு ஐயா வீட்டு முன் கூடி விட்டது. ஐயாவாள் கிணற்றடியில் நின்ற படி மனம் உருக கங்காஷ்டகம் பாடினார். ஐந்தாம் பாடல் பாடியவுடன் கேணியில் கங்கை பொங்கி வழிந்து. திருவிச நல்லூர் சாலை முழுவதும் வெள்ளமாய்ப் பாய்ந்தோடினாள்! அந்தணர்கள் ஐயாவிடம் மன்னிப்பு கேட்டு விட்டு கங்கை நீராடினார்கள். இன்றளவும் கார்த்திகை அமாவாசையன்று 300 ஆண்டுகளுக்கு முன் கங்கை பொங்கி வந்தது போல ஸ்ரீதர ஐயாவாள் இல்லக் கிணற்றில் இன்று நீர் பொங்கி வருவதைக் காணலாம். நீராடலாம். கார்த்திகை மாதம் பத்து நாள் விழா நடக்கும். பத்தாம் நாள் கார்த்திகை அமாவாசையன்று காலை கிணற்றுக்கு பூஜை செய்வார்கள். முதலில் வேத விற்பன்னர்கள் நீராடிய பின் பக்தர்கள் நீராடுவார்கள். அன்று முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் நீராடினாலும் கிணற்று நீர் குறையாமலேயே இருப்பது அதிசயம்!

அட! கிணற்றுக்குள் கங்கை! கங்கா பிரவாஹம்! மக்கள் திகைக்கும் அளவுக்கு இன்றும் திரளான பக்தர்கள் நீராடுகிறார்கள்...


॥ ஶ்ரீருத்³ரத்ரிஶதி ॥

॥ ஶ்ரீருத்³ரத்ரிஶதி ॥

ௐ ஶ்ரீ॒ கு॒³ரு॒ப்⁴யோ நம॒: । ஹ॒ரி॒: ௐ ।
        ॥ ஶ்ரிருத்³ரநாம த்ரிஶதி ॥

நமோ॒ ஹிர॑ண்யபா³ஹவே॒ நம॑: । ஸே॒நா॒ந்யே॑  நம॑: ।
தி॒³ஶாம் ச॒ பத॑யே॒ நம॑: । நமோ॑ வ்ரு॒ʼக்ஷேப்⁴யோ॒ நம॑: ।
ஹரி॑கேஶேப்⁴யோ॒  நம॑: । ப॒ஶூ॒நாம் பத॑யே॒  நம॑: ।
நம॑: ஸ॒ஸ்பிஞ்ஜ॑ராய॒ நம॑: । த்விஷீ॑மதே॒ நம॑: ।
ப॒தீ॒²நாம் பத॑யே॒ நம॑: । நமோ॑ ப³ப்⁴லு॒ஶாய॒ நம॑: ।
வி॒வ்யா॒தி⁴நே॒ நம॑: । அந்நா॑நாம்॒ பத॑யே॒ நம॑: ।  
நமோ॒ ஹரி॑கேஶய॒ நம॑: । உ॒ப॒வீ॒திநே॒ நம॑: ।
பு॒ஷ்டாநாம்॒ பத॑யே நம॑: । நமோ॑ ப॒⁴வஸ்ய॑ ஹே॒த்யை நம॑: ।
ஜக॑³தாம்॒ பத॑யே॒ நம॑: । நமோ॑ ரு॒த்³ராய॒ நம॑: ।
ஆ॒த॒தா॒விநே॒ நம॑: । க்ஷேத்ரா॑ணாம்॒ பத॑யே॒ நம॑: ।  
நம॑: ஸூ॒தாய॒ நம॑: । அஹ॑ந்த்யாய॒ நம॑: ।
வநா॑நாம்॒  பத॑யே॒ நம॑: । நமோ॒ ரோஹி॑தாய॒ நம॑: ।
ஸ்த॒²பத॑யே நம॑: । வ்ரு॒ʼக்ஷாணம்॒ பத॑யே॒ நம॑: ।
நமோ॑ ம॒ந்த்ரிணே॒ நம॑: । வா॒ணி॒ஜாய॒ நம॑: ।
கக்ஷா॑ணாம்॒ பத॑யே நம॑: । நமோ॑ பு⁴வம்॒தயே॒ நம॑: ।
வா॒ரி॒வ॒ஸ்க்ரு॒ʼதாய॒ நம॑: । ஓஷ॑தீ⁴நாம்॒ பத॑யே॒ நம॑: ।
நம॑ உ॒ச்சைர்கோ॑⁴ஷாய॒ நம॑: । ஆ॒க்ர॒ந்த³ய॑தே॒ நம॑: ।
ப॒த்தீ॒நாம் பத॑யே॒ நம॑: । நம॑: க்ருʼத்ஸ்நவீ॒தாய॒ நம॑: ।
தா⁴வ॑தே॒ நம॑: । ஸத்த்வ॑நாம்॒ பத॑யே॒ நம॑: ॥

நம॒: ஸஹ॑மாநாய॒ நம॑: । நி॒வ்யா॒தி⁴நே॒ நம॑: ।
ஆ॒வ்யா॒தி⁴நீ॑நாம்॒ பத॑யே॒ நம॑: । நம॑: ககு॒பா⁴ய॒ நம॑: ।
நி॒ஷ॒ங்கி³ணே॒ நம॑: । ஸ்தே॒நாநாம்॒ பத॑யே॒ நம॑: ।
நமோ॑ நிஷ॒ங்கி³ணே॒ நம॑: । இ॒ஷு॒தி॒⁴மதே॒ நம॑: ।
தஸ்க॑ராணாம்॒ பத॑யே॒ நம॑: । நமோ॒ வஞ்ச॑தே॒ நம॑: ।
ப॒ரி॒வஞ்ச॑தே॒ நம॑: । ஸ்தா॒யூ॒நாம் பத॑யே॒ நம॑: ।
நமோ॑ நிசே॒ரவே॒ நம॑: । ப॒ரி॒ச॒ராய॒ நம॑: ।
அர॑ண்யாநாம்॒ பத॑யே॒ நம॑: । நம॑: ஸ்ருʼகா॒விப்⁴யோ॒ நம॑: ।
ஜிகா⁴ ꣳ॑ ஸத்³ப்⁴யோ॒ நம॑: । மு॒ஷ்ண॒தாம் பத॑யே॒ நம॑: ।
நமோ॑ঽஸி॒மத்³ப்⁴யோ॒ நம॑: । நக்தம்॒சர॑த்³ப்⁴யோ॒ நம॑: ।
ப்ர॒க்ரு॒ʼந்தாநாம்॒ பத॑யே॒ நம॑: । நம॑ உஷ்ணீ॒ஷிநே॒ நம॑: ।
கி॒³ரி॒ச॒ராய॒ நம॑: । கு॒லு॒ஞ்சாநாம்॒ பத॑யே॒  நம॑: ।

நம॒ இஷு॑மத்³ப்⁴யோ॒  நம॑: । த॒⁴ந்வா॒விப்⁴ய॑ஶ்ச॒  நம॑: । வோ॒  நம॑: ।
நம॑ ஆதந்வா॒நேப்⁴யோ॒ நம॑:। ப்ர॒தி॒த³தா॑⁴நேப்⁴யஶ்ச  நம॑: । வோ॒ நம॑: ।
நம॑ ஆ॒யச்ச॑²த்³ப்⁴யோ॒  நம॑: ।  வி॒ஸ்ரு॒ʼஜத்³ப்⁴ய॑ஶ்ச॒  நம॑: ।  வோ॒ நம॑: ।
நமோঽஸ்ய॑த்³ப்⁴யோ॒  நம॑: । வித்⁴ய॑த்³ப்⁴யஶ்ச॒  நம॑: ।  வோ॒ நம॑: ।
நம॒ ஆஸீ॑நேப்⁴யோ॒  நம॑: । ஶயா॑நேப்⁴யஶ்ச॒  நம॑: । வோ॒ நம॑: ।
நம॑: ஸ்வ॒பத்³ப்⁴யோ॒  நம॑: । ஜாக்³ர॑த்³ப்⁴யஶ்ச॒  நம॑: ।  வோ॒ நம॑: ।
நம॒ஸ்திஷ்ட॑²த்³ப்⁴யோ॒  நம॑: । தா⁴வ॑த்³ப்⁴யஶ்ச॒  நம॑: ।  வோ॒ நம॑: ।
நம॑ஸ்ஸ॒பா⁴ப்⁴யோ॒  நம॑: । ஸ॒பா⁴ப॑திப்⁴யஶ்ச॒ நம॑: । வோ॒ நம॑: ।
நமோ॒ அஶ்வே᳚ப்⁴யோ॒  நம॑: । அஶ்வ॑பதிப்⁴யஶ்ச॒  நம॑: । வோ॒ நம॑: ।

நம॑ ஆவ்ய॒தி⁴நீ᳚ப்⁴யோ॒  நம॑: । வி॒வித்⁴ய॑ந்தீப்⁴யஶ்ச॒  நம॑: ।  வோ॒ நம॑: ।
நம॒ உக॑³ணாப்⁴யோ॒ நம॑: । த்ரு॒ʼ ꣳ॒ ஹ॒தீப்⁴ய॑ஶ்ச॒ நம॑: । வோ॒ நம॑: ।
நமோ॑ க்³ரு॒ʼத்ஸேப்⁴யோ॒ நம॑: । க்³ரு॒ʼத்ஸப॑திப்⁴யஶ்ச॒ நம॑: । வோ॒ நம॑: ।
நமோ॒ வ்ராதே᳚ப்⁴யோ॒ நம॑: । வ்ராத॑பதிப்⁴யஶ்ச॒ நம॑: । வோ॒ நம॑: ।
நமோ॑ க॒³ணேப்⁴யோ॒ நம॑: । க॒³ணப॑திப்⁴யஶ்ச॒ நம॑: । வோ॒ நம॑: ।

நமோ॒ விரூ॑பேப்⁴யோ॒ நம॑: । வி॒ஶ்வரு॑பேப்⁴யஶ்ச॒ நம॑: । வோ॒ நம॑: ।
நமோ॑ ம॒ஹத்³ப்⁴யோ॒ நம॑: । க்ஷு॒ல்ல॒கேப்⁴ய॑ஶ்ச॒ நம॑: । வோ॒ நம॑: ।
நமோ॑ ர॒தி²ப்⁴யோ॒ நம॑: । அ॒ர॒தே²ப்⁴ய॑ஶ்ச॒ நம॑: । வோ॒ நம॑: ।
நமோ॒ ரதே᳚²ப்⁴யோ॒ நம॑: । ரத॑²பதிப்⁴யஶ்ச॒ நம॑: । வோ॒ நம॑: ।
நம॒ஸ்ஸேநா᳚ப்⁴யோ॒ நம॑: । ஸே॒நா॒நிப்⁴ய॑ஶ்ச॒ நம॑: । வோ॒ நம॑: ।
நம॑: க்ஷ॒த்த்ருʼப்⁴யோ॒ நம॑: । ஸம்॒க்³ர॒ஹீ॒த்ருʼப்⁴ய॑ஶ்ச॒ நம॑: । வோ॒ நம॑: ।
நம॒ஸ்தக்ஷ॑ப்⁴யோ॒ நம॑: । ர॒த॒²கா॒ரேப்⁴ய॑ஶ்ச॒ நம॑: । வோ॒ நம॑: ।
நம॒: குலா॑லேப்⁴யோ॒ நம॑: । க॒ர்மாரே᳚ப்⁴யஶ்ச॒ நம॑: । வோ॒ நம॑: ।
நம॑: பும்॒ஜிஷ்டே᳚ப்⁴யோ॒ நம॑: । நி॒ஷா॒தே³ப்⁴ய॑ஶ்ச॒ நம॑: । வோ॒ நம॑: ।
நம॑ இஷு॒க்ருʼத்³ப்⁴யோ॒ நம॑: । த॒⁴ந்வ॒க்ருʼத்³ப்⁴ய॑ஶ்ச॒ நம॑: । வோ॒ நம॑: ।
நமோ॑ ம்ருʼக॒³யுப்⁴யோ॒ நம॑: । ஶ்வ॒நிப்⁴ய॑ஶ்ச॒ நம॑: । வோ॒ நம॑: ।
நம॒: ஶ்வப்⁴யோ॒ நம॑: । ஶ்வப॑திப்⁴யஶ்ச॒ நம॑: । வோ॒ நம॑:

நமோ॑ ப॒⁴வாய॑ ச॒ நம॑: । ரு॒த்³ராய॑ ச॒ நம॑: ।
நம॑ஶ்ஶ॒ர்வாய॑ ச॒ நம॑: । ப॒ஶு॒பத॑யே ச॒ நம॑: ।
நமோ॒ நீல॑க்³ரீவாய ச॒ நம॑: । ஶி॒தி॒கண்டா॑²ய ச॒ நம॑: ।
நம॑: கப॒ர்தி³நே॑ ச॒ நம॑: । வ்யு॑ப்தகேஶாய ச॒ நம॑: ।
நம॑ஸ்ஸஹஸ்ரா॒க்ஷாய॑ ச॒ நம॑: । ஶ॒தத॑⁴ந்வநே ச॒ நம॑: ।
நமோ॑ கி³ரி॒ஶாய॑ ச॒ நம॑: । ஶி॒பி॒வி॒ஷ்டாய॑ ச॒ நம॑: ।
நமோ॑ மீ॒டு⁴ஷ்ட॑மாய ச॒ நம॑: । இஷு॑மதே ச॒ நம॑: ।
நமோ᳚ ஹ்ர॒ஸ்வாய॑ ச॒ நம॑: । வா॒ம॒நாய॑ ச॒ நம॑: ।
நமோ॑ ப்³ருʼஹ॒தே ச॒ நம॑: । வர்ஷீ॑யஸே ச॒ நம॑: ।
நமோ॑ வ்ரு॒ʼத்³தா⁴ய॑ ச॒ நம॑: । ஸம்॒வ்ருʼத்⁴வ॑நே ச॒ நம॑: ।
நமோ॒ அக்³ரி॑யாய ச॒ நம॑: । ப்ர॒த॒²மாய॑ ச॒ நம॑: ।
நம॑ ஆ॒ஶவே॑ ச॒ நம॑: । அ॒ஜி॒ராய॑ ச॒ நம॑: ।
நம॒: ஶீக்⁴ரி॑யாய ச॒ நம॑: । ஶீப்⁴யா॑ய ச॒ நம॑: ।
நம॑ ஊ॒ர்ம்யா॑ய ச॒ நம॑: । அ॒வ॒ஸ்வ॒ந்யா॑ய ச॒ நம॑: ।
நம॑: ஸ்த்ரோத॒ஸ்யா॑ய ச॒ நம॑: । த்³வீப்யா॑ய ச॒ நம॑: ।

நமோ᳚ ஜ்யே॒ஷ்டா²ய॑ ச॒ நம॑: । க॒நி॒ஷ்டா²ய॑ ச॒ நம॑: ।
நம॑: பூர்வ॒ஜாய॑ ச॒ நம॑: । அ॒ப॒ர॒ஜாய॑ ச॒ நம॑: ।
நமோ॑ மத்⁴ய॒மாய॑ ச॒ நம॑: । அ॒ப॒க॒³ல்பா⁴ய॑ ச॒ நம॑: ।
நமோ॑ ஜக॒⁴ந்யா॑ய ச॒ நம॑: । பு³த்⁴நி॑யாய ச॒ நம॑: ।
நம॑: ஸோ॒ப்⁴யா॑ய ச॒ நம॑: । ப்ர॒தி॒ஸ॒ர்யா॑ய ச॒ நம॑: ।
நமோ॒ யாம்யா॑ய ச॒ நம॑: । க்ஷேம்யா॑ய ச॒ நம॑: ।
நம॑ உர்வ॒ர்யா॑ய ச॒ நம॑: । க²ல்யா॑ய ச॒ நம॑: ।
நம॒: ஶ்லோக்யா॑ய ச॒ நம॑: । அ॒வ॒ஸா॒ந்யா॑ய ச॒ நம॑: ।
நமோ॒ வந்யா॑ய ச॒ நம॑: । கக்ஷ்யா॑ய ச॒ நம॑: ।
நம॑: ஶ்ர॒வாய॑ ச॒ நம॑: । ப்ர॒தி॒ஶ்ர॒வாய॑ ச॒ நம॑: ।
நம॑ ஆ॒ஶுஷே॑ணாய ச॒ நம॑: । ஆ॒ஶுர॑தா²ய ச॒ நம॑: ।
நம॒: ஶூரா॑ய ச॒ நம॑: । அ॒வ॒பி॒⁴ந்த॒³தே ச॒ நம॑: ।
நமோ॑ வ॒ர்மிணே॑ ச॒ நம॑: । வ॒ரூ॒தி²நே॑ ச॒ நம॑: ।
நமோ॑ பி॒³ல்மிநே॑ ச॒ நம॑: । க॒வ॒சிநே॑ ச॒ நம॑: ।
நம॑ஶ்ஶ்ரு॒தாய॑ ச॒ நம॑: । ஶ்ரு॒த॒ஸே॒நாய॑ ச॒ நம॑: ।

நமோ॑ து³ந்து॒³ப்⁴யா॑ய ச॒ நம॑: । ஆ॒ஹ॒ந॒ந்யா॑ய ச॒ நம॑: ।
நமோ॑ த்⁴ரு॒ʼஷ்ணவே॑ ச॒ நம॑: । ப்ர॒ம்ரு॒ʼஶாய॑ ச॒ நம॑: ।
நமோ॑ தூ॒³தாய॑ ச॒ நம॑: । ப்ரஹி॑தாய ச॒ நம॑: ।
நமோ॑ நிஷ॒ங்கி³ணே॑ ச॒ நம॑: । இ॒ஷு॒தி॒⁴மதே॑ ச॒ நம॑: ।
நம॑ஸ்தீ॒க்ஷ்ணேஷ॑வே ச॒ நம॑: । ஆ॒யு॒தி⁴நே॑ ச॒ நம॑: ।
நம॑: ஸ்வாயு॒தா⁴ய॑ ச॒ நம॑: । ஸு॒த⁴ந்வ॑நே ச॒ நம॑: ।
நம॒: ஸ்ருத்யா॑ய ச॒ நம॑: । பத்²யா॑ய ச॒ நம॑: ।
நம॑: கா॒ட்யா॑ய ச॒ நம॑: । நீ॒ப்யா॑ய ச॒ நம॑: ।
நம॒ஸ்ஸூத்³யா॑ய ச॒ நம॑: । ஸ॒ர॒ஸ்யா॑ய ச॒ நம॑: ।
நமோ॑ நா॒த்³யாய॑ ச॒ நம॑: । வை॒ஶ॒ந்தாய॑ ச॒ நம॑: ।  
நம॒: கூப்யா॑ய ச॒ நம॑: । அ॒வ॒ட்யா॑ய ச॒ நம॑: ।
நமோ॒ வர்ஷ்யா॑ய ச॒ நம॑: । அ॒வ॒ர்ஷ்யாய॑ ச॒ நம॑: ।
நமோ॑ மே॒க்⁴யா॑ய ச॒ நம॑: । வி॒த்³யு॒த்யா॑ய ச॒ நம॑: ।
நம॑ ஈ॒த்⁴ரியா॑ய ச॒ நம॑: । ஆ॒த॒ப்யா॑ய ச॒ நம॑: ।
நமோ॒ வாத்யா॑ய ச॒ நம॑: । ரேஷ்மி॑யாய ச॒ நம॑: ।
நமோ॑ வாஸ்த॒வ்யா॑ய ச॒ நம॑: । வாஸ்து॒பாய॑ ச॒ நம॑: ।

நம॒ஸ்ஸோமா॑ய ச॒ நம॑: । ரு॒த்³ராய॑ ச॒ நம॑: ।
நம॑ஸ்தா॒ம்ராய॑ ச॒ நம॑: । அ॒ரு॒ணாய॑ ச॒ நம॑: ।
நம॑: ஶ॒ங்கா³ய॑ ச॒ நம॑: । ப॒ஶு॒பத॑யே ச॒ நம॑: ।
நம॑ உ॒க்³ராய॑ ச॒ நம॑: । பீ॒⁴மாய॑ ச॒ நம॑: ।
நமோ॑ அக்³ரேவ॒தா⁴ய॑ ச॒ நம॑: । தூ॒³ரே॒வ॒தா⁴ய॑ ச॒ நம॑: ।
நமோ॑ ஹ॒ந்த்ரே ச॒ நம॑: । ஹநீ॑யஸே ச॒ நம॑: ।
நமோ॑ வ்ரு॒ʼக்ஷேப்⁴யோ॒ நம॑: । ஹரி॑கேஶேப்⁴யோ॒ நம॑: ।
நம॑ஸ்தா॒ராய॒ நம॑: । நம॑ஶ்ஶம்॒ப⁴வே॑ ச॒ நம॑: ।
ம॒யோ॒ப⁴வே॑ ச॒ நம॑: । நம॑ஶ்ஶங்க॒ராய॑ ச॒ நம॑: ।
ம॒ய॒ஸ்க॒ராய॑ ச॒ நம॑: । நம॑: ஶி॒வாய॑  ச॒ நம॑: ।
ஶி॒வத॑ராய ச॒ நம॑: । நம॒ஸ்தீர்த்²யா॑ய ச॒ நம॑: ।
கூல்யா॑ய ச॒ நம॑: । நம॑: பா॒ர்யா॑ய ச॒ நம॑: ।
அ॒வா॒ர்யா॑ய ச॒ நம॑: । நம॑: ப்ர॒தர॑ணாய ச॒ நம॑: ।
உ॒த்தர॑ணாய ச॒ நம॑: । நம॑ ஆதா॒ர்யா॑ய ச॒ நம॑: ।
ஆ॒லா॒த்³யா॑ய ச॒ நம॑: । நம॒: ஶஷ்ப்யா॑ய ச॒ நம॑: ।
பே²ந்யா॑ய ச॒ நம॑: । நம॑: ஸிக॒த்யா॑ய ச॒ நம॑: ।
ப்ர॒வா॒ஹ்யா॑ய ச॒ நம॑: ।

நம॑ இரி॒ண்யா॑ய ச॒ நம॑: । ப்ர॒ப॒த்²யா॑ய ச॒ நம॑: ।
நம॑: கி ꣳ ஶி॒லாய॑ ச॒ நம॑: । க்ஷய॑ணாய ச॒ நம॑: ।
நம॑: கப॒ர்தி³நே॑ ச॒ நம॑: । பு॒ல॒ஸ்தயே॑ ச॒ நம॑: ।
நமோ॒ கோ³ஷ்ட்²யா॑ய ச॒ நம॑: । க்³ருʼஹ்யா॑ய ச॒ நம॑: ।
நம॒ஸ்தல்ப்யா॑ய ச॒ நம॑: । கே³ஹ்யா॑ய ச॒ நம॑: ।
நம॑: கா॒ட்யா॑ய ச॒ நம॑: । க॒³ஹ்வ॒ரே॒ஷ்டா²ய॑ ச॒ நம॑: ।
நமோ᳚ ஹ்ரத॒³ய்யா॑ய ச॒ நம॑: । நி॒வே॒ஷ்ப்யா॑ய ச॒ நம॑: ।
நம॑: பா ꣳ ஸ॒வ்யா॑ய ச॒ நம॑: । ர॒ஜ॒ஸ்யா॑ய ச॒ நம॑: ।
நம॒: ஶுஷ்க்யா॑ய ச॒ நம॑: । ஹ॒ரி॒த்யா॑ய ச॒ நம॑: ।
நமோ॒ லோப்யா॑ய ச॒ நம॑: । உ॒ல॒ப்யா॑ய ச॒ நம॑: ।
நம॑ ஊ॒ர்வ்யா॑ய ச॒ நம॑: । ஸூ॒ர்ம்யா॑ய ச॒ நம॑: ।
நம॑: ப॒ர்ண்யா॑ய ச॒ நம॑: । ப॒ர்ண॒ஶ॒த்³யா॑ய ச॒ நம॑: ।
நமோ॑பகு॒³ரமா॑ணாய ச॒ நம॑: । அ॒பி॒⁴க்⁴ந॒தே ச॒ நம॑: ।
நம॑ ஆக்கி²த॒³தே ச॒ நம॑: । ப்ர॒க்கி॒²த॒³தே ச॒ நம॑: । வோ॒ நம॑: ।
கி॒ரி॒கேப்⁴யோ॒ நம॑: । தே॒³வாநா॒ ꣳ॒ ஹ்ருʼத॑³யேப்⁴யோ॒ நம॑: ।
நமோ॑ விக்ஷீண॒கேப்⁴யோ॒ நம॑: । நமோ॑ விசிந்வ॒த்கேப்⁴யோ॒ நம॑: ।
நம॑ ஆநிர்ஹ॒தேப்⁴யோ॒ நம॑: । நம॑ ஆமீவ॒த்கேப்⁴யோ॒ நம॑: ।

வெள்ளி, 20 நவம்பர், 2020

சொரிமுத்து ஐய்யனார் கோவில்

அருள் மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோயில்
 
மூலவர் : சொரிமுத்து அய்யனார், மகாலிங்கம்
தல விருட்சம் : இலுப்பை
தீர்த்தம் : பாணதீர்த்தம்
பழமை : 1000வருடங்களுக்கு முன்
ஊர் : காரையார்
மாவட்டம் : திருநெல்வேலி
மாநிலம் : தமிழ்நாடு
 



திருவிழா : ஆடி, தை அமாவாசை, கடைசி வெள்ளி, பங்குனி உத்திரம்.   
       
தல சிறப்பு:முருகனுக்கு ஆறுபடை வீடு இருப்பது போல் ஐயப்பனுக்கும் சொரிமுத்து அய்யனார் கோயில், அச்சன்கோவில், ஆரியங்காவு, குளத்துப்புழை, பந்தளம், சபரிமலை என ஆறுபடை வீடு உள்ளது. சபரிமலையிலேயே சாஸ்தா முதலில் அமர்ந்தார் என்று சொல்வதுண்டு. ஆனால், அதற்கும் முன்னதாக அமைந்த கோயிலாக இந்த சாஸ்தா கோயில் கருதப்படுகிறது. இங்குள்ள சாஸ்தா இடதுகாலை மட்டும் குத்துக்காலிட்டு, வலது காலை தொங்கவிட்டபடி, சற்றே இடப்புறமாக திரும்பியிருக்கிறார். இவருக்கு எதிரே ஒரே பீடத்தில் நந்தி, யானை, குதிரை வாகனங்கள் இருப்பதும், இவரது சன்னதியிலேயே சப்தகன்னியர்கள் இருப்பதும், முன்மண்டபத்தில் உள்ள பைரவரின் எதிரே நாய் வாகனம் இருப்பதும் விசேஷமான அம்சம். குலதெய்வம் தெரியாதவர்கள் இவரை வழிபடுகிறார்கள்.   
       
திறக்கும் நேரம்:காலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.  
     
முகவரி:அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோயில் காரையார், பாபநாசம், திருநெல்வேலி மாவட்டம்.போன்:+91 4634 250 209  
      
பொது தகவல்:மகாலிங்கம், சொரிமுத்தைய்யனார், சங்கிலி பூதத்தார், பிரம்மரட்சஸி, தளவாய்மாடன், தூசிமாடன், பட்டவராயர், அகத்தியர், பேச்சியம்மன், சுடலைமாடன், இருளப்பன், இருளம்மன், கரடிமாடசாமி, மொட்டையர், பாதாள கண்டிகை, கும்பாமணி ஆகிய காவல் தெய்வங்கள் உள்ளனர்.

பிரார்த்தனை:பக்தர்கள் பிரார்த்தனைக்காக இம்மரத்தில் கட்டும் மணிகளை, மரம் விழுங்கிவிடுவதைப் போல, உள்ளேயே பதிந்து விடுகின்றன. இதனை, மணி விழுங்கி மரம் என்கின்றனர்.

நேர்த்திக்கடன்:ஆடி அமாவாசையின் போது பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இங்குள்ள அய்யனாருக்கு பக்தர்கள் செருப்பு காணிக்கை செலுத்துகின்றனர்.  
      
தலபெருமை:பொதிகை மலை மீதுள்ள இந்தக் கோயிலில், ஆடி அமாவாசை விழா பிரசித்தம். இங்கே சாஸ்தா சொரிமுத்தைய்யனார் என்ற பெயரில், பூர்ண, புஷ்கலா தேவியருடன் அருள் செய்கிறார். சபரிமலை செல்பவர்கள் சாஸ்தாவின் முதல் கோயிலான இங்கு வந்து மாலை அணிவிக்கின்றனர்.

சிறப்பம்சம்: பந்தள மன்னர் அரண்மனையில் வளர்ந்து வந்த சாஸ்தாவின் அம்சமான ஐயப்பன், தன் இள வயதில், இப்பகுதிக்கே முதன் முதலில் வீர விளையாட்டு கற்க வந்தார். அதன் காரணமாக இங்கு முதன் முதலில் கோயில் எழுந்ததாகவும், அடுத்து அவரது வரலாற்று நிகழ்வுகள் நடந்த குளத்துப்புழை, ஆரியங்காவு, அச்சன்கோவில் தலங்களில் கோயில்கள் எழுப்பப்பட்டதாகவும், இறுதியாக அவர் தவம் மேற்கொள்ள சபரிமலை சென்ற போது தான், சபரிமலை கோயில் தோன்றியதாகவும் ஒரு கருத்து இருக்கிறது.

செருப்பு காணிக்கை: இப்பகுதியில் வசித்த பிராமணரான முத்துப்பட்டன் என்பவர், பிராமண குலத்தில் பிறந்து, சூழ்நிலை காரணமாக தாழ்த்தப்பட்ட குலத்தில் வளர்ந்த இரு பெண்களைக் காதல் திருமணம் செய்து கொண்டார். காதலுக்கு ஜாதியில்லை என்பதை முதன் முதலாக நிரூபித்த இவர், பசுக்களைப் பாதுகாக்கும் ஒரு போரில் பங்கேற்று மரணமடைந்தார். அவரை பட்டவராயன் என்று அழைத்து, இந்தக் கோயிலின் ஒரு பகுதியில் சன்னதியும் எழுப்பினர். பொம்மக்கா, திம்மக்கா என்ற தம் மனைவியருடன் பட்டவராய சுவாமி அருள்கிறார். இவர் பிராமணராயிருந்தும், தன் மாமனார் உத்தரவுப்படி, காதல் திருமணம் செய்து கொள்வதற்காக, செருப்பு தைக்கும் பயிற்சியும் எடுத்துக் கொண்டார். இதன் காரணமாக இவரது சன்னதியில் பக்தர்கள் செருப்புகளை காணிக்கையாக கட்டுகின்றனர். முதல் ஆண்டு கட்டப்படும் செருப்பை மறுஆண்டில் போய் பார்த்தால் அது தேய்ந்திருக்கும். பட்டவராயரே இந்த செருப்புகளைப் பயன்படுத்துகிறார் என்று பக்தர்கள் பரவசத்துடன் சொல்கின்றனர். இது வனப்பகுதி என்பதால் ஆட்களும் அதிகம் செல்வதில்லை. செல்பவர்களும் இந்த செருப்புகளைத் தொடுவதுமில்லை. அப்படியிருந்தும், செருப்புகள் தேய்வது, கலியுக அதிசயமாகவே இருக்கிறது. இவரிடம் வேண்டிக்கொண்டால், கால்நடைகள் நோய்கள் இன்றி இருக்கும் என்ற நம்பிக்கை இருப்பதால், கிராமப்புற மக்கள் ஏராளமாக வருகின்றனர்.

இரட்டை யானை விநாயகர்: கோயில் வளாகத்தில் இலுப்பை மரம் இருக்கிறது. இதனை, மணி விழுங்கி மரம் என்கின்றனர். பக்தர்கள் பிரார்த்தனைக்காக இம்மரத்தில் கட்டும் மணிகளை, மரம் விழுங்கிவிடுவதைப் போல, உள்ளேயே பதிந்து விடுகின்றன. இது பக்தர்களின் காணிக்கையை சுவாமி, ஏற்றுக்கொள்வதன் அடையாளமாக இருப்பதாக சொல்கிறார்கள். இம்மரத்திற்கு கீழே சங்கிலிபூதத்தார், மொட்டையர், பாதாள கண்டிகை, கும்பாமணி ஆகிய காவல் தெய்வங்கள் இருக்கின்றன. அருகிலேயே ஒரு விநாயகர் இருக்கிறார். இவருக்கு இருபுறமும் இரண்டு யானைகள் இருப்பது வித்தியாசமான அமைப்பு.   
       
தல வரலாறு:கைலாயத்தில் சிவ, பார்வதி திருமணம் நடந்தபோது பூமியை சமப்படுத்த அகத்தியரை பொதிகை மலைக்கு அனுப்பினார் சிவன். அகத்தியர் பொதிகையில் தங்கியிருந்த போது, லிங்க பூஜை செய்தார். காலப்போக்கில் அந்த லிங்கம் மண்ணால் மூடப்பட்டுவிட்டது. பிற்காலத்தில், இவ்வழியாக சென்ற மாடுகள் ஓரிடத்தில் மட்டும் தொடர்ந்து பால் சொரிந்தன. இதுபற்றி அப்பகுதி மன்னரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கே தோண்டிய போது, ஒரு லிங்கம் உள்ளே இருந்ததைக் கண்டெடுத்து கோயில் எழுப்பினார். இத்தலத்திலேயே தர்ம சாஸ்தாவுக்கும் சன்னதி கட்டப்பட்டது. சாஸ்தாவை கிராமப்புறங்களில் அய்யனார் என்பர். அய்யன் என்றால் தலைவன். இதில் மரியாதைக்காக ஆர் விகுதி சேர்ப்பர். பக்தர்களுக்கு அருளைச் சொரிபவர் என்பதால் இவர் சொரிமுத்து ஐயனார் எனப்பட்டார்.   
       
சிறப்பம்சம்: அதிசயத்தின் அடிப்படையில்: முருகனுக்கு ஆறுபடை வீடு இருப்பது போல் ஐயப்பனுக்கும் சொரிமுத்து அய்யனார் கோயில், அச்சன்கோவில், ஆரியங்காவு, குளத்துப்புழை, பந்தளம், சபரிமலை என ஆறுபடை வீடு உள்ளது. சபரிமலையிலேயே சாஸ்தா முதலில் அமர்ந்தார் என்று சொல்வதுண்டு. ஆனால், அதற்கும் முன்னதாக அமைந்த கோயிலாக இந்த சாஸ்தா கோயில் கருதப்படுகிறது. இங்குள்ள சாஸ்தா இடதுகாலை மட்டும் குத்துக்காலிட்டு, வலது காலை தொங்கவிட்டபடி, சற்றே இடப்புறமாக திரும்பியிருக்கிறார். இவருக்கு எதிரே ஒரே பீடத்தில் நந்தி, யானை, குதிரை வாகனங்கள் இருப்பதும், இவரது சன்னதியிலேயே சப்தகன்னியர்கள் இருப்பதும், முன்மண்டபத்தில் உள்ள பைரவரின் எதிரே நாய் வாகனம் இருப்பதும் விசேஷமான அம்சம். குலதெய்வம் தெரியாதவர்கள் இவரை வழிபடுகிறார்கள்.

சந்தியாவந்தனம்

அதிசய பிராமணன்; பிராமண அதிசயம்

உலகிலேயே பழைய சடங்கு ஒன்றைப் பினபற்றும் ஒரே இனம் பிராமணர்கள்; அவர்கள் உலகிலேயே பழைய சடங்கைச் செய்வதாக விக்கிபீடியா முதலிய என்சைக்ளோபீடியாக்கள் உரைக்கும்.

அது என்ன பழைய சடங்கு?

சந்தியாவதந்தனம்!

அதில் அவன் ஒரு நாளைக்கு மூன்று முறை சுமார் 100 கடவுளர், ரிஷிகள் பெயரைச் சொல்லுகிறான். தொல்காப்பியம் உரைக்கும் தமிழ் கடவுள்கள் இந்திரன், வருணன், விஷ்ணு பெயர்களையும் சங்கத் தமிழ் நூல்கள் போற்றும் சப்த ரிஷிக்களையும் , வரலாற்றுப் புருஷர்களான ஜனமேஜயன் முதலியோர் பெயர்களையும் சொல்கிறான்.

அவ்வளவு கடவுள் பெயரையும் சொல்லிவிட்டு அனத முழுமுதற் கடவுளான பிரம்மனும் நானும் ஒன்றே என்றும் சொல்லுகிறான். இது உபநிஷத மந்திரம் (அஸாவாதித்யோ பிரம்ம, பிரம்மைவாஹமஸ்மி)
சங்கத் தமிழர்கள் அதிகமாகப் புகழும் கபிலன், ஒரு பிராமணன். அவரை ‘’புலன் அழுக்கற்ற அந்தணாளன்’’ என்று புலவர் பெருமக்கள் போற்றுவர். அவர்தான் சங்கத்தமிழ் புலவர்களில் அதிக கவி மழை பொழிந்தவர்.

அந்தக் காலத்தில் பிராமணர்கள் ஒழுக்க சீலர்களாகவும், தன்னலமற்ற ரிஷி முனிவர்களாகவும் விளங்கினர்.

 இதனால் பார்ப்பனரையும் கடவுளையும் ஒன்றாகப் பார்த்தனர். ( இன்று அவர்கள் த்ரிகால சந்தியா வந்தனம் செய்யாததால் அவர்கள் மதிப்பிழந்து விட்டனர்)

திரி கால சந்தியா வந்தனம்= முக்கால சந்தியா வழிபாடு
சந்தியா= தேவியின் பெயர், சந்தி/அந்தி நேரத்தின் பெயர்0.
நான் யஜூர் வேத ஆபஸ்தம்ப சூத்திர முறைப்படியுள்ள சந்தியாவந்தனத்தை இங்கே பயன்படுத்துகிறேன். மற்றவர்கள் சில மாறுபாடுகளுடன் செய்வர்.

 சிலர் இ தைவிடக் கூடுதலான மந்திரங்களைச் சொல்லுவர். ஆயினும் முக்கியச் சடங்குகள் மாறாது
பிராமணர்களை பூசுரர்கள், அதாவது பூவுலகில் நடமாடும் தேவர்கள், என்று மனு ஸ்மிருதி முதலிய நூல்கள் விதந்து ஓதுகின்றன.

சங்கத் தமிழ் நூல்களோவெனில் பிரமணர்களை பசுக்களுடன் ஒப்பிடுகின்றன. கண்ணகியோவெனில் பார்ப்பனர்களையும், பத்தினிகளையும் விட்டுவிட்டு மதுரையை எரி! என்று அக்கினி தேவனுக்குக் கட்டளை இடுகிறாள்.

முதுகுடுமிப் பெருவழுதியோ பார்ப்பனர்களுக்கும் சிவன் கோவிலுக்கும் மட்டும் தான் தலை சாய்ப்பான் என்று புற நானூறு செப்பும். மாவீரன் சேரன் செங்குட்டுவனோவெனில் மன்னனைக் கண்டித்த பார்ப்பனன் மாடல மறை யோனுக்கு துலாபரம் செய்து தன்னு டைய எடையான 55 கிலோ தங்கத்தை அளித்ததாக சிலப்பதிகாரம் முழங்குகிறது.

பிராமணர்களின் சந்தியா வந்தனம் மாக்ஸ்முல்லர் (Max Muller) வகையறாக்களின் மண்டையில் சுத்தியல் அடி கொடுக்கிறது. அதுகள், ‘ஆரியர்கள்’ என்று வேதத்தில் இல்லாத ஒரு இனத்தை கற்பித்து அவர்கள் ஐரோப்பாவிலிருந்தோ, மத்திய ஆசியாவிலிருந்தோ நுழைந்ததாக கதை கட்டின.

அப்படி ஒரு குளிர்ப் பிரதேசத்தில் இருந்து வந்திருந்தால் தண்ணீர் சம்பந்தமான சடங்குகளே இராது. பிராமணர்களோ தண்ணீர் இல்லாமல் வாழ மாட்டார்கள்.

 பிறப்பு முதல் இறப்பு வரை எல்லா சடங்குகளிலும் தண்ணீர்தான் முக்கியம்; உலகிலேயே தண்ணீருக்கு அதிகமான சொற்களை உடைய மொழி-சம்ஸ்கிருதம்! பிராமணர்கள் வாழும் அக்கிரஹாரம் எப்போதும் நதிக்கரையில்தான் இருக்கும்
பிராமணர்கள் நாள் தோறும் நதிக்கரைக்குச் சென்று சூரிய உதயத்துக்கு முன்னரும், நடுப்பகலிலும், சூரிய அஸ்தமனத்துக்கும் முன்னரும் அந்தி நேரச் சடங்குகளைச் செய்வர்.

 இதற்கு அவர்களுக்குத் தேவையாநது தண்ணீர் ஒன்று மட்டுமே.
(சூரியனைக்) காணாமல், (நிழல்) கோ ணாமல், ( சூரியனை) கண்டு கொடு என்பது பிராமணப் பழமொழி)
சுருங்கச் சொன்னால், இது நீரைக் கொடுத்து, சூரியனின் அருளை வேண்டுவது.

உலகில் நமக்குக் கண்ணுக்குத் தெரியும் சக்திகளில் மிகப் பெரியது சூரியன். அதற்கு ஒப்பிட உலகில் வேறு ஒரு பொருளும் இல்லை. ஒவ்வொரு நிமிடமும் அதற்குள் பல கோடி ஹைட்ரஜன்  குண்டுகள் வெடிப்பதால் நமக்கு சக்தி கிடைக்கிறது.

 சூரியன் அழிந்தால் எட்டாவது நிமிடத்தில் பூமி இருண்டு விடும்; சில தினங்களுக்குள் உயிர் இனங்கள் அழியத் தொடங்கும்.

இதனால் கடவுளுக்கு நிகராக ஒரே ஒரு பொருளை மட்டுமே – ஒளியை – சூரிய ஒளியை ஒப்பிட்டனர். அதற்குப் பின் சக்தியின் வடிவான காயத்ரீ தேவியை வழிபடுவதே சந்தியா வந்தனத்தின் முக்கிய கட்டம்.

இதைச் செய்ய பத்து நிமிடம்தான் ஆகும். அதற்குள் 100 முதல் 150 பெயர்களை அவர்கள் சொல்லுவர். தனது கோத்திரம், குலம் சூத்திரம், அவர்களுக்கு மூலமான ரிஷிகளின் பெயர்க ளைப் பகருவர்.

 நவக்கிரகங்களின் பெயர்களையும் மொழிவர். திசைகள், “கை தொழு எழுவர்” என்று சங்க நூல்கள் போற்றும் சப்த ரிஷிக்களை வழிபடுவர்.

கிருஷ்ணரும் அர்ஜுனரும் பழங்குடி மக்கள் ( கோண்டுகள் – கோண்ட்வானா லாண்ட்= காண்டவ வனக் காட்டு மக்கள்) வாழும் காண்டவ இனக் காடுகளை அழித்தபோது, நாகர்களுக்கும், பாண்டவர்களுக்கும் மிகப்பெரிய பகைமை மூண்டது.

 அதற்கு சமாதனம் செய்ய ஜரத்காரு, ஆஸ்தீகர் ஆகியோர் வந்தனர். நர்மதை நதிக்கரையில் ஜனமேஜயன் செய்த சர்ப்ப யாகம் (நாகர் படுகொலை) நிறுத்தப்பட்டது. பரீக்ஷித் மஹாராஜன் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக இது நடத்தப்பட்டது.

அப்பொழுது மயன் தலைமையில் சென்ற ஒரு குழு தென் அமெரிக்காவில் மாயன் (MAYAN) நாகரீகத்தை நிறுவியது; இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவமும் பிராமணர்களின் சந்தியா வந்தனத்தில் இடம் பெறுகிறது.

  அதுவும் தொல்காப்பியர் சொல்லும் கடவுளர் பெயர்கள் அதில் இருப்பதும், உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதம் சொல்லும் காயத்ரி மந்திரம் அதில் இருப்பதும் வியப்பை ஏற்படுத்தியது. 6000 ஆண்டுகளுக்கு முன்னர் சரஸ்வதி நதி தீரத்தில் நம்மவர் செய்த ஒரு சடங்கை இன்று வரை கடைப்பிடிப்பதால் என்னை நானே படிம அச்சு (FOSSIL) — பழங்காலச் சுவடு– என்று நினைத்து பெருமை..
சந்தியா வந்தனத்தைச் செய்யும் பிராமணர் ஒவ்வொருவரும் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறத் தகுதி உடையவர்களே.


உரோமரிஷி


உரோமரிஷி

அஷ்டமா சித்தி பெற்ற 18 சித்தர்களில் இவரும் ஒருவர். இவர் புசுண்ட மாமுனிவரின் சீடராவார்.இவரின் உடல் முழுவதும் உரோமம் முளைத்திருந்தபடியால் உரோமமுனி என்று காரணப் பெயர் பெற்றார்.ஒரு பிரம்மா இறந்தால் இவருடைய மயிர் ஒன்று உதிரும் இவ்வாறு மூன்றரைக்கோடி பிரம்மா இறந்தால் மட்டுமே இவருடைய வாழ்நாள் முடியும் ஒரு உரோமமுனி இறந்தால் அஷ்டகோண (8 கோண) முனிவருக்கு ஒரு கோணல் நிமிரும் என்று கூறுவர்.இவர் கும்பகோணத்தை அடுத்த கூந்தலூரில் தங்கி தவம் செய்து வரும்போது தாடி வழியே பொன் வரவழைத்து அனைவருக்கும் கொடுத்து வந்தார்.

ஒரு சமயம் தாடி வழியே பொன் வருவது நின்றுவிடவே அந்த தாடியை உடனே நீக்கிவிட்டு இறைவனை வழிபட நீராடாமல் திருக்கோயிலை அடைந்தார். நீராடாமல் இறைவனை தரிசிக்க வந்த ரோமமுனியை விநாயகரும் முருகனும் தடுத்தனர். இதை கண்ட சித்தர் வருந்தி கோபுர வாயிலிலேயே நின்றார். புறத்தூய்மையை விட அகத்தூய்மையே சிறந்தது என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம் இச்சித்தருக்கு கோயிலுக்கு வெளியிலேயே இறைவன் தம் தரிசனத்தை அளித்ததாக கூறுவர். உரோமரிஷி அற்புதமான பாடல்களை பாடியுள்ளார். இவர் பாடல்களில் உவமை நயங்களும் சிலேடைகளும் அதிகம்.

உரோமரிஷி இயற்றிய நூல்கள்
உரோமரிஷி வைத்தியம்  1000
உரோமரிஷி சூத்திரம்  1000
உரோமரிஷி ஞானம்  50
உரோமரிஷி பெருநூல்  500
உரோமரிஷி குறுநூல்  50
உரோமரிஷி காவியம்  500
உரோமரிஷி முப்பு சூத்திரம்  30
உரோமரிஷி இரண்டடி  500
உரோமரிஷி ஜோதிட விளக்கம்

நாகாரூடம், பகார சூத்தரம்,சிங்கி வைப்பு, உரோமரிஷி வைத்தி சூத்திரம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

தியானச் செய்யுள் கனிந்த இதயம், மெலிந்த உருவம் சொரிந்த கருணை, சொல்லில் அடங்குமோ? அலையும் மனதை அடக்கி, அருள் அள்ளியே தருவாய் தாடியில் தங்கம் தந்த தெய்வமே தங்கள் திருவடி சரணம்

ரோமசித்தரின் பூஜைமுறைகள்:தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சளிட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு,அதன் மேல் ரோமரிஷி ஸ்ரீ கயிலாய கம்பளிச் சட்டைமுனி சித்தரின் படத்தை வைத்து அதற்கு முன் மஞ்சள்,குங்குமம் இட்டு முதலில் இந்த சித்தருக்காகக் குறிப்பிடப்பட்டிருக்கும் தியானச் செய்யுளை கண்மூடி மனமுருகக் கூறி ஜாதி கொண்டு பின்வரும் பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும்.

பதினாறு போற்றிகள்:
1. கயிலாயத்தில் வசிப்பவரே போற்றி!
2. ஜடாமுடிப் பிரியரே போற்றி!
3. சந்திரனை தரிசிப்பவரே போற்றி!
4. சிவசக்தியாகத் தோன்றுபவரே போற்றி!
5. நந்தி தேவரால் காப்பாற்றப்படுபவரே போற்றி!
6. சிவதாண்டவத்தை தரிசிப்பவரே போற்றி!
7. சங்கீதப் பிரியரே போற்றி!
8. தடைகளை நீக்குபவரே போற்றி!
9. காகபுஜண்டரால் பூஜிக்கப்படுபவரே போற்றி!
10. மகாலக்ஷ்மியின் அருள் பெற்றவரே போற்றி!
11. முருகப்பெருமானை வணங்குபவரே போற்றி!
12. உலகத்தைக் காப்பாற்றுபவரே போற்றி!
13. சூரியன் போன்று காட்சி அளிப்பவரே போற்றி!
14. காலத்தைக் கடந்தவரே போற்றி!
15. தெய்வீகச் சித்தரே போற்றி!
16. கைலாயத்தில் வாசம் செய்யும் ஸ்ரீ உரோமரிஷி முனியே போற்றி! போற்றி!

இவ்வாறு பதினாறு போற்றிகளையும் கூறி அர்ச்சித்த பிறகு மூல மந்திரமான ஓம் ஸ்ரீ உரோமரிஷி முனி சித்தர் ஸ்வாமியே போற்றி என்று 108 முறை ஜெபிக்க வேண்டும். பூஜைக்கு நிவேதனமாக இஞ்சி இல்லாமல் மிளகு,சீரகம் கலந்து குழைவாக செய்த வெண் பொங்கல்,பழங்கள் தண்ணீர் வைக்க வேண்டும்.பின்பு உங்கள் பிரார்த்தனையை மனமுருகக் கூற வேண்டும். நிறைவாக தீப ஆராதனை செய்யவும்.

உரோமரிஷி சித்தரின் பூஜை பலன்கள்: இவர் சந்திர கிரகத்தைப் பிரதிபலிப்பவர் ஜாதகத்தில் உள்ள சந்திர கிரக தோஷங்களை நீக்குபவர், மனம் தெளிவாக இருந்து, மனோலயம் ஏற்பட வேண்டும். என்றால் மனோன்மணி சதக்தி பெருக வேண்டுமென்றால் சந்திரனின் அருள் நமக்குக் கிடைக்க வேண்டும். இவரை முறைப்படி வழிபட்டால்...

1. மன வியாதி,மன அழுத்தம்,மனப்புழுக்கம்,மன சஞ்சலங்கள் அகன்று மன நிம்மதி கிடைக்கும்.


2. எதிலும் முடிவெடுக்க முடியாமல் தவறான முடிவுகள் எடுப்பது,நீங்கி தெளிவாக முடிவெடுக்க முடியும்.
3. சஞ்சல புத்தி நீங்கும்.


4. படிப்பிலும்,தொழிலிலும் கவனம் செலுத்த முடியாமல் இருக்கும் நிலை நீங்கி மகிழ்ச்சி பொங்கும்.


5. தாயார் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தாய், மகன், மகள் பிரச்சினைகள் அகன்று குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.இவருக்கு வெள்ளை வஸ்திரம் அணிவித்து பூஜித்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.இவரை திங்கள் கிழமை வழிபட்டால் விசேட பலன்கள் கிடைக்கும்.

ஸ்ரீராமா

ஸ்ரீராமா



ஒரு சமயம் துளசிதாசர் காசியில், கங்கையில் நீராடி விட்டு விஸ்வநாதரை தரிசித்தார். விஸ்வநாதர் கருணை காட்டுவார் என்று காத்திருந்தார். ஓயாமல் ராமநாம ஜெபம் செய்தார். இரவில் அசுவமேத கட்டத்தின் படிக் கட்டில் உட்கார்ந்து ராமாயணம் கதாகா லட்சேபம் சொல்வார்.

ஒவ்வொரு நாளும் அவர் படகில் ஏறி அக்கரைக்கு சென்று கங்கையில் நீர் எடுத்துக் கொண்டு வெகுதூரம் சென்று ஒரு காட்டில் காலைக் கடன்களை கழிப்பார். பின் உடம்பை சுத்தம் செய்து கொண்டு மீதியுள்ள தண்ணீரை ஒரு ஆலமரத்தில் கொட்டி விடுவார்.
அந்த ஆலமரத்தில் துர்மரணம் அடைந்த ஆவி ஒன்று வசித்து வந்தது. அது அந்த நீரை குடித்ததும் தாகம் அடங்கி ஒருவாறு அமைதி கிடைத்தது. இதன் பயனாக விவேகம் வந்தது. இவர் ஒரு பெரிய மகான் என்று தெரிந்து கொண்டது.
அந்த ஆவி ஒரு நாள் துளசிதாசர் திரும்பிப் போகும் வழியில் மறைத்து நின்றது. துளசிதாசரின் நடை தடைப் பட்டது. உரக்க ராமா, ராமா என்று சத்தமிட்டு கூவினார்.
அப்போது அந்த ஆவி கூறியது, பெரியவரே, பயப்பட வேண்டாம். நான் ஒரு பாவியின் ஆவி. நீங்கள் வார்த்த நீரைக் குடித்து புனிதமானேன். உங்களுக்கு ஏதாவது உதவி செய்ய விரும்புகிறேன். சொல்லுங்கள் என கேட்டது.
துளசிதாசருக்கு மனதில் ஒரே எண்ணம் தானே. ராம தரிசனம் தான் அது. அதற்கு இந்த ஆவியா உதவப் போகிறது என்றெல்லாம் யோசிக்காமல் கேட்டு விட்டார்.
எனக்கு ராம தரிசனம் கிடைக்க வேண்டும் என்று. அதற்கு ஆவி பதில் கூறியது. ‘இது உங்களுக்கு வெகு சுலபமாயிற்றே’ என்றது. எப்படி? என கேட்டார் துளசிதாசர். உங்களிடம் தான் ராமாயணம் கேட்க தினமும் அனுமன் வருகிறாரே என்றது. எனக்கு தெரியாதே என்றார் தாசர்.
ஆம். ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நேரே உட்கார்ந்திருக்கும் ஜனங்களுக்கு அப்பால் ஒருவர் உட்கார்ந்திருப்பார். நீங்கள் வருவதற்கு முன்பே வந்து விடுவார். பிரசங்கம் முடிந்து ஜனங்கள் திரும்பும்போது ஒவ்வொரு வரையும் விழுந்து வணங்கி விட்டு கடைசியில் தான் போவார்.
அவர் எப்படி இருப்பார்? என்று துளசிதாசர் கேட்டார். உடம்பெல்லாம் வெண் குஷ்டம். அசிங்கமாக இருப்பார். யாரும் தன்னை தொந்தரவு செய்யக் கூடாது. ஒதுக்க வேண்டும் என்பதற் காகவே அப்படி வருவார். அவர் கால் களை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.
ராமன் எப்போ வருவாரோ?
அன்று இரவு சொற்பொழிவின் ஆரம்பத்திலேயே தாசர் கவனித்து விட்டார். தன் கண்ணெதிரே ஆனால் சற்று தள்ளி தலையில் முக்காடிட்டுக் கொண்டிருப்பவரை பார்த்து விட்டார். அன்று பிரசங்கத்தில் சபரியின் கதை. சபரி, ராமன் எப்போது வருவாரோ? என்று வழிமேல் வழி வைத்து காத்திருக்கிறார். வழியிலே போவோர் வருவோரை எல்லாம் வினவுகிறாள். புலம்புகிறாள். ஏமாற்றி விடாதே ராமா!
ராமா! என்னை ஏமாற்றி விடாதே. எனக்கு நீ தான் கதி. எனக்கு வேறு எதிலும் நாட்டமில்லை. எங்கே சுற்றுகிறாயோ? உனக்கு யாராவது வழிகாட்ட மாட்டார்களா? நீ இங்கு வரமாட்டாயா?
உன்னைத் தேடி நான் அலைய வேண்டும். ஆனால் என்னைத் தேடி நீ வர வேண்டும் என நினைக்கிறேனே? என்ன அபச்சாரம். நான் உன்னை தேடி வர முடியாதே! யாராவது அழைத்து வர மாட்டார்களா? ராமனை நான் தரிசனம் செய்வேனா? எனக்கு அந்த பாக்கியம் உண்டா? என்று சபரியின் கதையை கூறி விட்டு மயக்கம் அடைந்து விட்டார் தாசர். சபை முழுவதும் கண்ணீர் விட்டு கதறியது. எங்கும் ராம நாம கோஷம்.
பின் வெகு நேரம் ஆயிற்று. துளசி தாசருக்கு மயக்கம் தெளியவில்லை. சிலர் நெருங்கி வந்து மயக்கம் தெளிய உதவி செய்தனர். அத்துடன் சபை கலைந்து விட்டது. பின் வெகுநேரம் கழித்து கண் திறந்து பார்த்தார் துளசி தாசர்.
எதிரே குஷ்டரோகி வடிவில் அனுமர் நின்று கொண்டிருந்தார். பிரபோ! அஞ்சன புத்ரா! என்று கதறி அழுது அவருடைய கால்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். அனுமன் கால்களை விடுவித்துக் கொண்டார். பின் தாசரை தோளில் சுமந்து கொண்டு விடுவிடுவென்று நடந்தார். பொழுது விடிந்து விட்டது. தாசரை கீழே கிடத்தினார் அனுமன். துளசி தாசரும் ‘கண் விழித்து நான் எங்கிருக்கிறேன்’ என்று வினவினார்.
இதுதான் சித்ர கூடம் இந்த இடத்திற்கு ராமகிரி என்று பெயர். ராமன் முதன் முதலில் வனவாசம் செய்த இடம். அங்கே பாரும் மந்தாகினி. இங்கே உட்கார்ந்து ராமஜெபம் செய்யும். ராம தரிசனம் கிட்டும் என்று கூறினார் அனுமன். அதற்கு துளசி தாசர் நீங்கள் கூட இருக்க வேண்டும் என்றார். நீர் ராம நாமம் சொன்னால் உமது கூடவே நான் இருப்பேன். எனக்கு என்ன வேறு வேலை என்று கூறினார் அனுமன். பின் மறைந்து விட்டார். தாசரும் ராமஜபம் செய்தார்.
எப்படி இருப்பார் ராமர்?
ராமன் வருவாரா? எப்படி வருவார்? லட்சுமணன் கண்டிப்பாக வருவாரா? எப்படி இருப்பார்? தலையில் ஜடா முடியுடன் வருவாரா? அல்லது வைரக் கிரீடம் அணிந்து வருவாரா? மரவுரி தரித்து வருவாரா? பட்டு பீதாம்பரம் அணிந்து வருவாரா? ரதத்தில் வருவாரா? நடந்து வருவாரா? என்றவாரு இடுப்பில் இருந்த துணியை வரிந்து கட்டிக் கொண்டார். கண் கொட்டாமல் இங்கும் அங்கும் பார்த்துக் கொண்டிருந்தார்.
மலைப்பாதை. ஒற்றையடிப் பாதை. இருபுறமும் புதர். அப்பால் ஒரு பாறாங்கல். அதன்மேல் நின்ற கொண்டு ராம ராம என்று நர்த்தனமாடினார். மலை உச்சியிலிருந்து வேகமாக இரண்டு குதிரைகள் ஓடி வந்தன. அவற்றின் மீது இரண்டு ராஜாக்கள். தாசர் எத்தனையோ ராஜாக்களை பார்த்திருக்கிறார். தலையில் தலைப்பாகை. அதைச் சுற்றி முத்துச் சரங்கள். கொண்டை மீது வெண் புறா இறகுகள். வேகமாக குதிரை மீது வந்தவர்கள் தாசரைப் பார்த்து சிரித்துக் கொண்டே போய் விட்டனர்.
ராமனுக்கு ஈடாவாரா?
ஆமாம். பெரிய வீரர்கள் இவர்கள்! என் ராம, லட்சுமணனுக்கு ஈடாவார் களா? தலையில் ரத்ன கிரீடமும், மார்பில் தங்க கவசமும், தங்க ஹாரமும் கையில் வில்லும் இடுப்பில் அம்புராத் தூளியும் கையில் ஒரு அம்பைச் சுற்றிக் கொண்டே என்ன அழகாக இருப்பார் கள் என்று ராமனை தியானித்தவாறே ராம நாமம் சொன்னார்.
சிறிது நேரம் கழித்து அனுமன் வந்தார். தாசரைப் பார்த்து ‘ராம லட்சுமணர்களை பார்த்தீர்களா? என்று கேட்டார். இல்லையே என்றார் தாசர். என்ன இது உமது பக்கமாகத்தானே குதிரையில் சவாரி செய்து கொண்டு வந்தார்கள் என்றார்.
ஐய்யோ! ராம, லட்சுமணர்களா? ஏமாந்து போனேனே என்று அலறினார் துளசி தாசர். அதற்கு அனுமன் ‘ராமன் உமது இஷ்டப்படி தான் வர வேண்டுமா? அவர் இஷ்டப்படி வர கூடாதா? என்று கேட்டார். உடனே தாசர், சுவாமி மன்னிக்க வேண்டும். ஒன்றும் அறியாத பேதை நான். ஏதோ கற்பனை செய்து கொண்டு வந்தவர்களை அலட்சியம் செய்து விட்டேன். வாயு குமாரா? இன்னும் ஒருமுறை தயவு செய்யும். அவர்கள் எந்த வடிவில் வந்தாலும் பார்த்து விடுகிறேன்.
எல்லாம் சரி. நீர் போய் மந்தா கினியில் இறங்கி நீராடி ஜபம் செய்யும். ராமாயண பாராயணம் செய்யும் ராமன் வருவாரா? பார்க்கலாம் என்றார். துளசிதாசரும் மந்தாகினிக்கு ஓடினார். நீராடினார். ஜபம் செய்தார். வால்மீகியின் ராமாயணத்தை ஒப்புவித்தார்.
இதனிடையே இரண்டு நாட்கள் ஆகி விட்டது. ராமாயணத்தில் பரதன் சித்ர கூடத்திற்கு வரும் முன்னால் ராம லட்சுமணர்கள் சித்ர கூடத்தில் வசித்துக் கொண்டு காலையில் மந்தாகினியில் நீராடுகிறார்கள் என்கிற கட்டத்தை படித்துக் கொண்டிருந்தார்.
எதிரே மந்தாகினியில் குளித்து விட்டு இரண்டு இளைஞர்கள் கரை ஏறி தாசரிடம் வந்தனர். ஒருவன் நல்ல கருப்பு நிறம். மற்றவன் தங்க நிறம். முகத்தில் பத்து பதினைந்து நாள் வளர்ந்த தாடி. சுவாமி கோபி சந்தனம் உள்ளதா? என்று அவர்கள் கேட்டனர். இருக்கிறது. தருகிறேன் என்றார் அவர்.
சுவாமி, எங்களிடம் கண்ணாடி இல்லை. நீங்களே எங்கள் நெற்றியில் இட்டு விடுங்கள். (வடதேசத்தில் கங்கை முதலிய நதி தீர்த்தக் கரையில் பண்டாக்கள் (சாதுக்கள்) உட்கார்ந்து கொண்டு நதியில் நீராடி வருபவர் களுக்கு நெற்றியில் திலகம் இட்டு தட்சணை வாங்கிக் கொள்ளும் பழக்கம் இன்றும் உள்ளது). அதற்கென்ன! நாமம் போட்டு விடுகிறேனே என்றார் தாசர். இடது கையில் நீர் விட்டுக் கொண்டே கோபி சந்தனத்தை குழைக்கிறார். அந்த கருப்புப் பையன் எதிரே உட்கார்ந்து முகத்தை நீட்டுகிறான். இவர் அவன் மோவாயைப் பிடித்துக் கொண்டு முகத்தைப் பார்க்கிறார். அவனது கண்கள் குருகுருவென்று இவரைப் பார்க்கின்றன. பார்த்தவுடன் மெய் மறந்து விட்டார்.
அந்தப் பையன் இவருடைய கையில் இருந்த கோபி சந்தனத்தை தன் கட்டை விரலில் எடுத்து தன் நெற்றியில் தீட்டிக் கொண்டு அவருடைய நெற்றியிலும் தீட்டினான். தன்னுடன் வந்த வனுக்கும் தீட்டினான். அவர்கள் உட்கார்ந் திருந்திருந்த படித் துறைக்கு அருகே ஒரு மாமரம். அதன் மீது ஒரு கிளி. அது கூவியது.
‘சித்ர கூடகே காடபரே பகி ஸந்தந கீ பீர
துளசிதாஸகே சந்தந கிஸே திலக தேத ரகுபீர”
பொருள்: (சித்ரக் கூடத்துக் கரையில் சாதுக்கள் கூட்டம். துளசிதாசர் சந்தனம் குழைக்கிறார். ராமன் திலகமிடுகிறார்.)
இதைக் கேட்டு துளசிதாசர் திடுக்கிட்டு சுயநினைவுக்கு வந்தார். சாது அவர்களே! என் நெற்றியில் நாமம் சரியாக இருக்கிறதா? என்று கேட்டான் அந்த கருப்பு இளைஞன். ராமா உனக்கு இதை விட பொருத்தமான நாமம் ஏது என்று கதறிக் கொண்டே அந்த இரண்டு இளைஞர்களையும் கட்டி அணைத்துக் கொண்டார் துளசி தாசர்.

வியாழன், 19 நவம்பர், 2020

ஹரிவராசனம் விஸ்வமோகனம்

ஹரிவராசனம் விஸ்வமோகனம் - முழு பொருளுடன்

பாடல் பற்றிய விவரங்கள்

இசைஅமைப்பாளர் : ஜி. தேவராஜன்

பாடியவர்கள் : கே.ஜே. யேசுதாஸ்

பாடலாசிரியர் : கம்பன்குடி குளத்தூர் ஸ்ரீனிவாச ஐயர்
 
ஹரிவராசனம் விஸ்வமோகனம்
ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம்
அரிவிமர்தனம் நித்யநர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் ஐய்யப்பா சுவாமி சரணம் ஐய்யப்பா
சரணம் ஐய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

சரணகீர்த்தனம் சக்தமானசம்
பரணலோலுபம் நர்த்தனாலஸம்
அருணபாஸுரம் பூதநாயகம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் ஐய்யப்பா சுவாமி சரணம் ஐய்யப்பா
சரணம் ஐய்யப்பா சுவாமி சரணம் ஐய்யப்பா

ப்ரணயஸத்யகம் ப்ராணநாயகம்
ப்ரணதகல்பகம் ஸுப்ரபாஞ்சிதம்
ப்ரணவமந்திரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் ஐய்யப்பா சுவாமி சரணம் ஐய்யப்பா
சரணம் ஐய்யப்பா சுவாமி சரணம் ஐய்யப்பா

துரகவாகனம் ஸுந்தரானனம்
வரகதாயுதம் வேதவ-வர்ணிதம்
குருக்ருபாகரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் ஐய்யப்பா சுவாமி சரணம் ஐய்யப்பா
சரணம் ஐய்யப்பா சுவாமி சரணம் ஐய்யப்பா

த்ரிபுவனார்சிதம் தேவதாத்மகம்
த்ரனயனப்ரபும் திவ்யதேசிகம்
த்ரிதசபூஜிதம் சிந்திதப்ப்ரதம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் ஐய்யப்பா சுவாமி சரணம் ஐய்யப்பா
சரணம் ஐய்யப்பா சுவாமி சரணம் ஐய்யப்பா

பவபயாவஹம் பாவகாவுகம்
புவனமோகனம் பூதிபூஷணம்
தவளவாஹனம் திவ்யவாரணம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் ஐய்யப்பா சுவாமி சரணம் ஐய்யப்பா
சரணம் ஐய்யப்பா சுவாமி சரணம் ஐய்யப்பா

களம்ருதஸ்மிதம் ஸுந்தரனானம்
களபகோமளம் காத்ரமோஹனம்
களபகேசரி வாஜிவாஹனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் ஐய்யப்பா சுவாமி சரணம் ஐய்யப்பா
சரணம் ஐய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

ச்ரிதஜனப்ரியம் சிந்திதப்ரதம்
ச்ருதிவிபூஷணம் ஸாதுஜீவனம்
ச்ருதிமனோகரம் கீதலாலஸம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் ஐய்யப்பா சுவாமி சரணம் ஐய்யப்பா
சரணம் ஐய்யப்பா சுவாமி சரணம் ஐய்யப்பா

பொருள்

ஹரிவராசனம் விஸ்வமோகனம்
ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம்
அரிவிமர்தனம் நித்யநர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

மிகச் சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவரும், பிரபஞ்சத்தையே தன் முறுவலால் மோகிக்கச் செய்பவரும், ஹரிதம் என்னும் குதிரையில் (ஹரித: என்றால் சூரியன், அவனது தேரில் உள்ள ஏழு குதிரைகளின் பெயர் ஹரிதம்)
பவனி வரும் சூரியனால் ஆராதிக்கப்படும் பாதங்களை உடையவரும், சத்ருக்களை அழிப்பவரும், நித்ய நர்த்தனம் புரிபவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சரணகீர்த்தனம் சக்தமானசம்
பரணலோலுபம் நர்த்தனாலஸம்
அருணபாஸுரம் பூதநாயகம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணகோஷத்தால் மகிழ்பவரும், பிரபஞ்சத்தின் இயக்கத்திற்காக நடனமாடுபவரும், உதிக்கும் சூரியனொத்த ஒளிமயமானவரும், பூத நாயகனுமாகிய ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ப்ரணயஸத்யகம் ப்ராணநாயகம்
ப்ரணதகல்பகம் ஸுப்ரபாஞ்சிதம்
ப்ரணவமந்திரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

உலகின் உண்மைப் பொருளாகவும், உலக உயிர்களுக்கு நாயகனாகவும்
தன்னை சரணடைந்தவர்க்கு எல்லாவளமும் அளிப்பவரும், ஓங்கார மந்த்ரமாய் இருப்பவரும், இசையில் ப்ரியம்/நாட்டம் உடையவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
துரகவாகனம் ஸுந்தரானனம்
வரகதாயுதம் வேதவ-வர்ணிதம்
குருக்ருபாகரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

குதிரை வானரும், அழகிய முகமுடையவரும், கதாயுதம் ஏந்தியவரும்,
தேவர்களால் வர்ணிக்கப்படுபவரும், குருவைப் போல ப்ரியம் உள்ளவரும், கீர்த்தனங்களில் ப்ரியமுடையவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
த்ரிபுவனார்சிதம் தேவதாத்மகம்
த்ரனயனப்ரபும் திவ்யதேசிகம்
த்ரிதசபூஜிதம் சிந்திதப்ப்ரதம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

மூன்றுலகிலும் அர்ச்சிக்கப்படுபவரும், எல்லா தெய்வங்களின் அம்சமாக விளங்குபவரும், மூன்று கண்களை உடையவரும், சிறந்த குருவாக விளங்குபவரும், வேண்டுவதை அளிப்பவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பவபயாவஹம் பாவகாவுகம்
புவனமோகனம் பூதிபூஷணம்
தவளவாஹனம் திவ்யவாரணம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சம்சார பயத்தை போக்குபவரும், பக்தருக்கருள்வதில் தந்தை போலும், உலகத்தை தன் மாயையால் மயக்குபவரும், விபூதி தரித்தவரும், வெள்ளை யானையை வாகனமாக கொண்டவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
களம்ருதஸ்மிதம் ஸுந்தரனானம்
களபகோமளம் காத்ரமோஹனம்
களபகேசரி வாஜிவாஹனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

மதுரமான, மிருதுவான புன்முறுவல் உடையவரும், சுந்தர முகமுடையவரும், இளமையும், மென்மையும் உடையவரும், மயங்க வைக்கும் உடலமைப்புக் கொண்டவரும், யானை, சிங்கம், குதிரை போன்ற்வற்றை வாகனமாக கொண்ட
ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ச்ரிதஜனப்ரியம் சிந்திதப்ரதம்
ச்ருதிவிபூஷணம் ஸாதுஜீவனம்
ச்ருதிமனோகரம் கீதலாலஸம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணடைந்தவர்களிடத்து அன்புடையவரும், நினைத்ததை உடனே அளிப்பவரும், வேதங்களை ஆபரணமாக அணிந்தவரும், ஸாதுக்களிடத்து
வசிப்பவரும், வேதகோஷங்களில் மகிழ்பவரும், கீதங்களில் லயிப்பவருமான
ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

 சுவாமியே சரணம் ஐயப்பா