திங்கள், 21 செப்டம்பர், 2020

ஏழுமலையான் புராணம் பகுதி ஒன்று

ஏழுமலையான் புராணம்
புரட்டாசி மாத பிரசாதம் பகுதி - 1

 பாரதத்தில் நைமிசாரண்யம் என்ற காடு இருக்கிறது. நமது தேசத்தின் கிழக்குப்பகுதியில் கோல் கட்டாவுக்கும், டேராடூனுக்கும் இடையில் உள்ளது இந்தக் காடு. தற்காலத்தில் பெருமாளின் 108 திவ்யதேசங்களுக்கு சென்று வருகின்றனர். அந்த தேசங்களில் இதுவும் ஒன்று. இந்த காட்டையே பெருமாளாக கருதி வழிபடுகிறார்கள். திருமங்கையாழ்வார் இங்கே சென்றிருக்கிறார். இவ்வூர் பற்றி பாசுரம் பாடியுள்ளார். தற்போது இங்கே பெருமாளுக்கு கோயில் இருக்கிறது. இந்த வனத்துக்கு புராணங்களில் மிகுந்த முக்கியத்துவம் உண்டு. எவ்வித இடைஞ்சலும் இன்றி தவம் செய்ய சிறந்த இடம் எது என்று திருமாலிடம் முனிவர்கள் கேட்டனர். பெருமாள் தனது சக்கரத்தை உருட்டி விட்டு, இது எங்கே போய் நிற்கிறதோ அந்த இடமே சிறந்த இடம் என்றார். சக்கரத்துக்கு நேமி என்ற பெயர். ஆரண்யம் என்றால் காடு. அந்தச்சக்கரம் உருண்டு சென்று விழுந்த இடம் நேமிஆரண்யம் என்றானது. பின்னர் இதுவே நைமிசாரண்யம் ஆகி விட்டது.


இந்தக் காட்டில் சூதர் என்ற முனிவர் வசித்தார். இவரே புராணங் களுக்கு மூலகர்த்தா. வியாசர் எழுதிய பதினெட்டு புராணங்களையும் மற்ற முனிவர்களுக்கு உபதேசித்தவர் இவர். இதுதவிர, எல்லா தெய்வங்களின் வரலாற்றையும் சொல்லியிருக்கிறார். ஒருமுறை, நைமிசாரண்யத்து முனிவர்கள் சூதமுனிவரை அணுகி, சுவாமி! தாங்கள் எங்களுக்கு, வேங்கடம் என்னும் மலையில் குடிகொண்டுள்ள சீனிவாசனின் வரலாறை உரைக்க வேண்டும், என்றனர். சூதருக்கு மிகுந்த மகிழ்ச்சி. சீனிவாசனின் கதையைக் கேட்டால் சகல பாவங்களும் நீங்கி விடும். நீங்கள் சரியானதொரு சந்தர்ப்பத்தை எனக்கும் தந்ததுடன், உங்களுக்கும் முக்தி கிடைக்கும். பக்தியுடனும், கவனமாகவும் யார் இதைக் கேட்கிறார்களோ, அவர்களுக்கு மறுபிறப்பில்லை. நீங்கள் முற்றும் துறந்த முனிவர்கள். உலகவாழ்வு பற்றிய கவலை இல்லாதவர்கள். எனவே, உங்கள் கவனம் சிதற வாய்ப்பில்லை. இல்லறத்தில் இருப்பவர்களும் கூட, இந்தக் கதையைக் கவனமாக கேட்டால் போதும். அவர்களுக்கு செல்வவளம் சித்திக்கும், வாழ்வுக்குப் பின் ஆனந்தமயமான வைகுண்டத்துக்கும் செல்லும் பாக்கியம் பெறுவார்கள், என்று சொல்லி கதை சொல்ல ஆரம்பித்தார். இந்த உலகிற்கு சீனிவாசன் வருவதற்கு காரணமே நாரத முனிவர் தான். இவர் ஓரிடத்தில் இருக்கமாட்டார். நாரம் என்றால் தண்ணீர். ஆம்... பசியாலும், களைப்பாலும் மயக்கமடையும் ஒருவனுக்கு கொஞ்சம் தண்ணீர் கொடுத்தால் போதும். போகும் உயிர் திரும்பி விடும். நாரதரும் அப்படியே. கலகங்கள் செய்தாவது உயிர்களுக்கு நன்மை தந்து விடுபவர். அதனால் தான் தண்ணீர் போல் உயிரூட்டுபவர் என்ற பெயரில் அவரது திருநாமம் அமைந்தது. தேவர்களின் நல்வாழ்வுக்காக, அசுரர்களிடையே கலகத்தை உருவாக்கி அல்லது அவர்களை இக்கட்டில் சிக்க வைக்கும் உபாயங்களை சமயோசிதமாகச் செய்யும் தைரியசாலியும் கூட. பிரம்மனின் புத்திரர் இவர். எந்நேரமும் நாராயண மந்திரத்தைச் சொல்பவர். அவர் ஒருநாள் தன் தந்தையைக் காண பிரம்மலோகம் வந்தார். அப்போது, இந்திரனின் தலைமையில் தேவர்களும் தங்கள் குறைகளைச் சொல்ல அங்கு வந்திருந்தனர். ஆனால், சரஸ்வதியின் வீணாகானம் கேட்ட அவர்கள் மெய்மறந்து நின்றனர். நாரதர் பிரம்மாவிடம், தந்தையே! திருமால் கிருஷ்ணாவதாரம் எடுத்த பிறகு பூமியில் மீண்டும் பிறக்கவில்லை. இதனால் பாவிகள் உலகத்தில் அதிகரித்து விட்டனர். இதற்கு மூல காரணம் செல்வம் சேர்க்கும் ஆசை. செல்வ ஆசை மண்ணாசையையும், பெண்ணாசையையும் தூண்டுகிறது. உலக மக்களில் நல்லவர்களைக் காப்பாற்றவும், பாவிகளைச் சீர்திருத்தவும் மீண்டும் அவர் அவதாரம் எடுத்தால் தான் பூலோகம் பிழைக்கும். எனவே, திருமாலை இவ்வுலகில் பிறக்கச் செய்வதற்குரிய கோரிக்கையை தாங்கள் தான் அவரிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். படைத்தவருக்கு, உயிர்களைப் பாதுகாப்பதிலும் பொறுப்பு இருக்கிறதல்லவா? என்றார். பிரம்மா நாரதரிடம், மகனே! நீ கலகக்காரன் என்பது ஊரறிந்த உண்மை. இன்று தந்தையிடமே கலகம் செய்ய வந்திருக்கிறாய் போலும்! நீ சகல லோகங்களிலும் சஞ்சரிப்பவன். சகல சக்திகளையும் தவத்தின் மூலம் பெற்றுள்ளாய். நீ நினைத்தாலே சகலமும் நடந்து முடிந்து விடும். நாராயணனின் திருப்பாற்கடல் முன்னால் நாங்கள் செல்ல முடியாது. ஜெய, விஜயர்கள் தடுத்து விடுவார்கள். பகவானின் அனுமதி பெற்று கரையில் நின்றே அவரைத் தரிசிக்க முடியும். நீ அப்படியா? அவரது திருவடி தரிசனத்தை கடலில் நின்றே காண்பவன் நீ.மேலும், உன் வாயில் நாராயண நாமம் ஒலித்துக் கொண்டே இருக்கும். சக்திமிக்க உன்னாலேயே அது முடியுமே! நீயே போய் நாராயணனைப் பார், என்றார். ஒருவரிடம் ஒரு விஷயத்தைச் சொல்லும் முன்பு, பிறர் சொன்னதை வைத்து சொல்லக்கூடாது. அதில் முன்பின்னாக விஷயங்கள் இருக்கும். நேரில் போய் பார்த்து கேட்டறிந்தால் சரியான தகவல்களைப் பெறலாம். நாராயணனிடம் புகார் சொல்லும் முன்பு, பூலோகத்தின் நிலைமையை நேரில் கண்டறியவும், நாராயணன் அங்கு பிறப்பதற்கு ஏற்ற இடத்தையும், அவரைப் பிறக்கப்போவதை முன்கூட்டியே முனிவர்களுக்கு அறிவிக்கவும் நாரதர் பூலோகம் வந்து சேர்ந்தார்.எத்தனையோ லோகங்கள் இருப்பதாக புராணங்களில் சொல்லப்பட்டாலும், இந்த உலகத்தின் பெயரில் தான் பூ இருக்கிறது. பூ மணக்கும் தன்மையும், வாடும் தன்மையும் உடையது. மலர்ந்த பூவைக் காணும் போது, மனம் மகிழ்கிறது. இதுபோல், நல்லவர்கள் பலர் தங்கள் செயல்பாடுகளால் இவ்வுலகை மகிழச் செய்கிறார்கள். ஆனால், இதே உலகில் பிறந்த வேறுசிலரோ, தங்கள் செயல்பாடுகளால் உலகை வாடச் செய்கிறார்கள். கெட்டவர்கள் செய்யும் கைங் கர்யத்தால் உலகமே வாடத்தானே செய்கிறது! இதனால், இந்த உலகை பூலோகம் என்றார்கள். இத்தகைய அருமை யான உலகத்தை வாழச்செய்ய வந்தார் நாரதர். மற்ற தேவர்கள் இங்கு வந்திருக்கலாமே. அவர்கள் பூமிக்கு வராமல் இவர் இங்கு வந்த காரணம் என்ன. தொடரும்....‌!

சரவணபவ பற்றிய தகவல்கள்

சரவணபவ பற்றிய தகவல்கள்



முருகன் இரண்டு வடிவங்களில் நமக்கு காட்சியளிக்கிறார்.

1. ஒருமுகம்

2. சண்முகம் (6 முகம்)

 இதில் ஒருமுகம் கொண்டவர் சுப்ரமணிய சுவாமி ஆவார். இவர் வள்ளி தெய்வானையுடன் ஒருமுகத்தோடு அருள்பாலிக்கிறார். அதனுடைய அட்சரம்தான் சரவணபவ என்பதாகும். அதேப்போல் ஆறுமுகம் கொண்டவரை சண்முகம் என்று சொல்வார்கள். இந்த ஆறுமுகம் கொண்ட கடவுளின் அட்சரம் சரவணபவ, ரவணபவச, வசரவணபவ, ணவபசரவ, பவசரவண, வசரவணப இதையே சண்முகம் என்று சொல்வார்கள்.

இந்த_சண்முகநாதரை_எதற்காக
 வழிபடலாம்?

 வெற்றி, வீரம், பராக்கிரமம் ஜாதகத்தில் 6ம் இடத்தை சரி செய்து கொள்வதற்கு இந்த சண்முக கடவுளை வழிபடுவது உத்தமம் ஆகும். இந்த சண்முகக் கடவுளுக்கு ஒரு சக்கரம் உள்ளது. இது 36 அட்சரங்களைக் கொண்டதாகும். ஏனெனில் முருகனின் பெயரை சடாட்சரன் என்றுதான் சொல்வார்கள். அட்சரம் என்றால் எழுத்து. ஆறு அட்சரங்களுக்கு உரியவரே முருகன்.

 இந்த அட்சரங்களில் 36 உரு கொண்ட எந்திரங்கள் எங்கிருக்கிறது என்றால் இரண்டு கோவில்களில் உண்டு. அதில் ஒரு கோவில் திருப்போரூர். இது முருகன் போர் புரிந்த தலமாகும். இந்த தலத்திலே முருகனுக்கு தனிப்பட்ட முறையில் சக்கரம் ஒன்று உள்ளது. எதிரிகள் தொல்லை மற்றும் நோய் நொடிகளில் இருந்து விடுபட சக்கரத்திற்கு நீங்கள் அபிஷேகம் செய்து பலன் பெறலாம்.

 அதேப்போல் மற்றொரு கோவில் மதுராந்தகம் பக்கம் பெரும்பேர் கண்டிகை என்ற ஊர். அந்த ஊரில் சிறிய குன்று இருக்கும். அதன்மேல் முருகன் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். அதன் தலவிருட்சம் ருத்ராட்சம் ஆகும்.

 இந்த ஆறுமுகக் கடவுளுக்கு எதிரிகளை வீழ்த்தவும், செவ்வாய் தோஷம் நிவர்த்தியாகவும், ஜாதக தோஷம் நீங்கவும், உடல் ஆரோக்கியம் பெறுவதற்கும் சத்ரு சம்ஹார ஹோமம் செய்யலாம். இந்த ஹோமத்தில் மலர்கள் ஆறு, தருக்கள் ஆறு, விதைகள் ஆறு போன்ற பொருட்கள் எண்ணிக்கை ஆறு கொண்டதாகப் பயன்படுத்தப்படுகிறது. இதையே கந்தசஷ்டி கவசத்தில்

'ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்துநீ றணிய
அஷ்டதிக் குள்ளோர் அடங்கிலும் வசமாய்த்"

 இதன் அர்த்தம் 36 உரு என்று சொல்லுவது 36 தடவை கந்தசஷ்டி கவசத்தை சொல்ல வேண்டும் என்பது அர்த்தம் கிடையாது. 36 அட்சரங்களை ஜெபித்துவிட்டு, கந்தசஷ்டி கவசத்தை ஜெபித்தால் கவசத்தின் முழுபலன் கிடைக்கும் என்பதுதான் இதனுடைய அர்த்தம்.

 முருகனுக்கு உகந்த சஷ்டி திதியன்று இந்த ஹோமத்தை செய்தால் மிகப்பெரிய பலன், குழந்தைப்பேறு, அறிவுக்கூர்மை, நோய்நொடி இல்லாத ஆரோக்கியமான வாழ்வு, மனோபலம், எதிரிகளின் தொல்லையில் இருந்து விடுதலை, ஆயுள் ஆரோக்கியம் அனைத்துமே கிடைக்கும். கடன் தொல்லை, நோய் தொல்லை குறைவதற்கு தேய்பிறை சஷ்டி திதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதேப்போல் வாழ்க்கையின் வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம்...
ௐ முருகா சரணம்…!!!

ராமேசுவரத்தில் உள்ள தீர்த்தங்களும் - பலன்களும்

ராமேசுவரத்தில் உள்ள தீர்த்தங்களும் - பலன்களும்




ராமேசுவரம் ராமநாதர் கோவில் அமைந்துள்ள தீர்த்தக் கடலில் நீராடுவதும் சிறப்புக்குரியது. இந்தக்கோவிலின் உள்ளே 22 தீர்த்தங்களும், வெளியே 22 தீர்த்தங்களும் இருப்பதாக கூறப்படுகிறது. கோவிலின் உள்ளே அமைந்த தீர்த்தங்கள் எல்லாம் கிணறுகளாக அமைந்தவை. ‘அக்னி தீர்த்தம்’ என்று கூறப்படும் ராமேஸ்வரம் கடலில்தான், தீர்த்தமாடுவதை தொடங்க வேண்டும். பின்னர் கோவிலில் உள்ள மற்ற தீர்த்தங்களில் நீராட வேண்டும் என்பது ஐதீகம். மற்ற தீர்த்தங்களும், அதன் பலன்களும் வருமாறு:-

தீர்த்தங்களும்.. பலன்களும்..

மகாலட்சுமி தீர்த்தம் - செல்வ வளம் பெருகும்.

சாவித்திரி தீர்த்தம் - பேச்சுத் திறன் வளரும்.

காயத்ரி தீர்த்தம் - உலக நன்மை உண்டாகும்.

சரஸ்வதி தீர்த்தம் - கல்வியில் உயர்வு தரும்.

சங்கு தீர்த்தம் - வசதியான வாழ்வு அமையும்.

சக்கர தீர்த்தம் - மன உறுதி கிடைக்கும்.

சேதுமாதவ தீர்த்தம் - தடைபட்ட பணிகள் தொடரும்.

நள தீர்த்தம் - தடைகள் அகலும்.

நீல தீர்த்தம் - எதிரிகள் விலகுவர்.

கவய தீர்த்தம் - பகை மறையும்.

கவாட்ச தீர்த்தம் - கவலை நீங்கும்.

கந்தமாதன தீர்த்தம் - எத்துறையிலும் வல்லுநர் ஆகலாம்.

பிரம்மஹத்தி தீர்த்தம் - பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

கங்கா தீர்த்தம் - பாவங்கள் அகலும்.

யமுனை தீர்த்தம் - பதவி வந்து சேரும்.

கயா தீர்த்தம் - முன்னோர் ஆசி கிடைக்கும்.

சர்வ தீர்த்தம் - முன்பிறவி பாவம் விலகும்.

சிவ தீர்த்தம் - சகல பிணிகளும் நீங்கும்.

சத்யாமிர்த தீர்த்தம் - ஆயுள் விருத்தியாகும்.

சந்திர தீர்த்தம் - கலை ஆர்வம் பெருகும்.

சூரிய தீர்த்தம் - முதன்மை ஸ்தானம் கிடைக்கும்.

கோடி தீர்த்தம் - முக்தி அடையலாம்.

சிதம்பரம் நடராஜர் கோவிலின் 75 தகவல்கள்


சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் வருமாறு:-

1. பஞ்ச பூதங்களால்தான் இந்த பிரபஞ்சமே இயங்குகிறது. பஞ்ச பூதங்களில் ஆகாயம் முதலில் தோன்றியது. அந்த வகையில் பஞ்சபூதத் தலங்களில் முதல் தலமாக சிதம்பரம் உள்ளது.

2. பஞ்சபூத தலங்கள் மற்றும் பாடல் பெற்ற தலங்களை வழிபட விரும்புபவர்கள் சிதம்பரத்தில் இருந்து தொடங்குவது நல்லது என்பது ஐதீகமாக உள்ளது. 3. வைணவத்தில் கோவில் என்றால் ஸ்ரீரங்கத்தை குறிப்பது போல சைவத்தில் கோவில் என்றால் சிதம்பரம் நடராஜரையே குறிக்கும்.

4. சிதம்பரம் நடராஜர் ஆலயம் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக அமைந்துள்ளது.

5. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய 3 பெருமைகளையும் சிதம்பரம் கொண்டுள்ளது.

6. சிதம்பரம் நடராஜரை எல்லா கடவுள்களும் வந்து வழிபட்டு பேறு பெற்றனர். இதை உணர்த்தும் வகையில் நடராஜர் ஆலயம் முழுவதும் ஏராளமான சன்னதிகள் உள்ளன.

7. நடராஜர் ஆலயத்துக்குள் தினமும் 27 லிங்கங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. இது தவிர ஏராளமான லிங்கங்கள் உள்ளன.

8. சிவாலயங்களில் கர்ப்பக்கிரக கோஷ்டத்தை சுற்றி தெய்வ உருவங்கள் இருக்கும். சிதம்பரத்தில் அத்தகைய அமைப்பு இல்லை.

9. திருவண்ணாமலை போன்றே எமன், சித்ரகுப்தன் இருவரும் சிதம்பரம் தலத்திலும் வழிபட்டுள்ளனர். இதை உறுதிப்படுத்தும் வகையில் பிரகாரத்தில் எமனுக்கும், சிவகாமி அம்மன் சன்னதி பகுதியில் சித்ரகுப்தனுக்கும் சிலை உள்ளது.

10. இங்குள்ள 4 கோபுரங்களும் சிறப்பு களஞ்சியங்களாக உள்ளன. கிழக்கு கோபுரம் ஆடல் கலையின் அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. மற்றொரு கோபுரத்தில் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி, பராசக்தி, விநாயகர், முருகன், விஷ்ணு, தன்வந்திரி, இந்திரன், அக்னி, வாயு, குபேரன், புதன், நிருதி, காமன், பத்ரகாளி, துர்க்கை, கங்காதேவி, யமனாதேவி, ராகு, கேது, நாரதர், விசுவகர்மா, நாகதேவன், சுக்கிரன், லட்சுமி, வியாக்ரபாதர், அகத்தியர், திருமூலர், பதஞ்சலி ஆகியோர் சிலைகள் உள்ளன.

11. புத்த மதத்தை தழுவிய மன்னன் அசோகன், தன் படை ஒன்றை அனுப்பி, சிதம்பரம் கோவிலை புத்த விகாரமாக மாற்ற முயன்றான். அவர்களை மாணிக்கவாசகர் தன் திறமையால் ஊமையாக்கி சிதம்பரத்தை காப்பாற்றினார்.

12. தமிழ்நாட்டில் எந்த ஒரு சிவாலயத்திலும் பார்க்க முடியாதபடி சிதம்பரம் ஆலயத்தில் மட்டுமே அரிய வகை வித்தியாசமான சிவ வடிவங்களைப் பார்க்க முடியும்.

13. தமிழ் மொழியை மட்டுமின்றி தமிழர் பண்பாட்டு கலாச்சாரத்தை பாதுகாத்த சிறப்பும் சிதம்பரம் ஆலயத்துக்கு உண்டு.

14. அறுபத்து மூவர் வரலாறு மட்டும் சிதம்பரம் கோவிலில் பாதுகாப்புடன் வைக்கப்படாமல் இருந்திருந்தால் 63 நாயன்மார்கள் பற்றி குறிப்புகள் நமக்கு தெரியாமல் போய் இருக்கும். அந்த சிவனடியார்களை நாம் தெரிந்து கொள்ளாமலே போய் இருப்போம்.

15. சிதம்பரம் கோவிலுக்குள் திருமுறைகள் உள்ளது என்பதை இந்த உலகுக்கு சொன்னவர் பொல்லாப் பிள்ளையார் ஆவார். எனவே விநாயகரை 'மூத்த நாயனார்' என்கிறார்கள்.

16. சிதம்பரம் தலத்தை நால்வரும் புகழ்ந்து பாடியுள்ளனர். எனவே திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரின் குரு பூஜை பெரிய திருவிழா போல இத்தலத்தில் கொண்டாடப்படுகிறது.

17. மாணிக்கவாசகர் மட்டுமின்றி நந்தனார், கணம்புல்லர், திருநீலச் கண்டக் குயவர் ஆகியோரும் தில்லையில் முக்தி பெற்றனர்.

18. சிதம்பரத்தில் நடக்கும் திருவிழாக்களில் திருவாதிரை திருவிழாவும் முக்கியமானது. அன்று ஒரு வாயாவது திருவாதிரைக்களி சாப்பிட வேண்டும் என்பார்கள்.

19. ஒரு தடவை இத்தலத்தில் கொடியேற்றம் நடந்த போது கொடி ஏறாமல் தடைபட்டது. அப்போது உமாபதி சிவாச்சாரியார் என்பவர் கொடிக்கவி என்ற பாடலை பாடினார். அடுத்த நிமிடம் கொடி மரத்தில் தானாகவே ஏறிய அற்புதம் நடந்தது.

20. தேவநாயனார் என்பவர் நடராஜர் மீது ஒரு சித்தாந்த பாடலை பாடி கருவறை முன்புள்ள வெள்ளிப்படிகளில் நூலை வைத்தார். அப்போது படியில் உள்ள ஒரு யானை சிற்பம் உயிர் பெற்று அந்த நூலை எடுத்து நடராஜரின் காலடியில் எடுத்து வைத்தது. இந்த அதிசயம் காரணமாக அந்த நூலுக்கு திருக்களிற்றுப்படியார் என்ற பெயர் ஏற்பட்டது.

21. முத்து தாண்டவர் என்ற புலவர் தினமும் சிதம்பரம் கோவிலுக்குள் நுழைந்ததும், முதலில் தன் காதில் எந்த சொல் விழுகிறதோ, அதை வைத்து கீர்த்தனை இயற்றி, பாடி நடராஜரை துதித்து வழிப்பட்டார். அவர் பாடி முடித்ததும் தினமும் அவருக்கு நடராஜர் படிக்காசு கொடுத்தது ஆச்சரியமானது.

22. சங்க இலக்கியமான கலித் தொகையின் முதல் பாடல் சிதம்பரம் நடராஜர் துதியாக உள்ளது. எனவே சங்க காலத்துக்கு முன்பே சிதம்பரம் தலம் புகழ் பெற்றிருந்தது உறுதியாகிறது.

23. சிதம்பரம் நடராஜருக்கு சிதம்பரத்தின் பல பகுதிகளிலும் தீர்த்தங்கள் உள்ளன.

24. ஒவ்வொரு ஆலயத்துக்கும் ஒரு தல புராணத்தை சிறப்பாக சொல்வார்கள். சிதம்பரம் ஆலயத்துக்கு புலியூர் புராணம், கோவில் புராணம், சிதம்பரப் புராணம் என்று மூன்று தல புராணங்கள் உள்ளன.

25. சங்க கால தமிழர்கள் கட்டிய சிதம்பரம் ஆலயம் இப்போது இல்லை. தற்போதுள்ள ஆலயம் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டு, சோழ மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டதாகும். 26. சங்க காலத்துக்கு முன்பு சிதம்பரம் ஆலயம் கடலோரத்தில் இருந்ததாக பாடல்கள் குறிப்பின் மூலம் தெரிகிறது.

27. சிதம்பரம் தலம் உருவான போது பொன்னம்பலம் எனும் கருவறை தென் திசை நோக்கி இருந்ததாம். பல்லவ மன்னர்கள் புதிய கோவில் கட்டிய போது அதை வடதிசை நோக்கி அமைத்து விட்டதாக சொல்கிறார்கள்.

28. முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் படையெடுப்பின் போது சிதம்பரம் தலம் பல தடவை இடித்து நொறுக்கப்பட்டது. என்றாலும் பழமை சிறப்பு மாறாமல் சிதம்பரம் தலம் மீண்டும் எழுந்தது.

29. இத்தலத்துக்கு 'தில்லை வனம்' என்றும் ஒரு பெயர் உண்டு. புலியூர், பூலோக கைலாசம், புண்டரீகபுரம், வியாக்கிரபுரம் முதலிய வேறு பெயர்களும் உண்டு.

30. மாணிக்கவாசகர் இத்தலத்தில் தங்கி இருந்த போது, கண்டப்பத்து, குயில்பத்து, குலாபத்து, கோத்தும்பி, திருப்பூவல்லி, திருத்தோணோக்கம், திருத்தெற்றோணம், திருப்பொற்சுண்ணம், திருப்பொன்னூசல், திருவுந்தியார், அண்ணப்பத்து, கோவில் பதிகம், கோவில் மூத்த திருப்பதிகம், எண்ணப்பதிகம், ஆனந்த மாலை, திருப்படையெழுச்சி, யாத்திரைப்பத்து நூல்களை பாடினார்.

31. சிவகங்கை தீர்த்த குளம் நான்கு புறமும் நல்ல படிக்கட்டுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இது போன்று தமிழகத்தில் வேறு எந்த தலத்திலும் இல்லை.

32. சிவகங்கை தீர்த்த குளம் அருகில் சிறு தூனை நட்டியுள்ளனர். அங்கியிருந்து பார்த்தால் 4 ராஜகோபுரங்களையும், ஒரு சேர தரிசனம் செய்ய முடியும்.

33. இத்தலத்து பெருமானுக்கு சபாநாயகர், கூத்த பெருமான், நடராஜர், விடங்கர், மேருவிடங்கர், தெட்சிணமேருவிடங்கர், பொன்னம்பலம், திருச் சிற்றம்பலம் என்றெல்லாம் சிறப்புப் பெயர்கள் உண்டு.

34. சிதம்பரத்தில் நடராஜர் ஆனந்த நடனம் ஆடிய இடத்தை சிற்றம்பலம் என்பார்கள். இதை சிற்சபை, சித்சபை என்றும் அழைப்பதுண்டு.

35. திருவாதிரையன்று தாமரை, செண்பகம், அத்தி போன்ற மலர்களை பயன்படுத்தி பூஜை செய்தால் நடராஜரின் முழுமையான அருளைப் பெறலாம்.

36. நடராஜருக்கு பொன்னம்பலம் என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? பொன்+அம்பலம்= பொன்னம்பலம். அம்பலம் என்றால் சபை. பொன்னாலாகிய சபையில் நடராஜர் ஆனந்த தாண்டவம் ஆடுவதால் அவருக்கு பொன்னம்பலம் என்ற பெயர் ஏற்பட்டது.

37. உலகில் உள்ள எல்லா சிவகலைகளும் அர்த்த ஜாமத்தில் இத்தலத்துக்கு வந்து விடுவதாக ஐதீகம். எனவே இத்தலத்தில் மட்டும் அர்த்தஜாம பூஜை தாமதமாக நடத்தப்படுகிறது.

38. சிதம்பரம் நடராஜருக்கு தினமும் 6 கால பூஜை நடத்தப்படுகிறது.

39. நடராஜரின் ஆனந்தத் தாண்டவத்தில்தான் இப்பிரபஞ்சத்தின் இயக்கமே அமைந்துள்ளது. அண்ட சராசரங்களும் நடராஜரின் தாண்டவத்தால் இன்பம் அடைகிறதாம்.

40. மனித உடலில் இருதய பகுதி உடலின் இரு பக்க பகுதிகளை இணைப்பது போல இதயப் பகுதியாக சிதம்பரம் கோவில் உள்ளது. நடராஜ பெருமானுக்குரிய விமானம் கூட இதய வடிவில்தான் அமைந்துள்ளது.

41. சிதம்பர நடராஜரின் வடிவம் சிவசக்தி ஐக்கியமான உருவமாகும். அதாவது அர்த்த நாரீஸ்வரத்தன்மை உடைபவர் வலப்பக்கத்தில் சிவனும், இடது பக்கத்தில் சக்தியும் உறைந்துள்ளனர். எனவே அன்னை சிவகாமி இல்லாமலும் நாம் நடராஜ பெருமானை தரிசனம் செய்யலாம்.

42. சிதம்பர ரகசியம் என்று கூறப்படும் பகுதியில் வில்வத்தளம் தொங்கும் காட்சியைப் பார்த்தால் முக்தி கிடைக்கும். இதைத்தான் 'பார்க்க முக்தி தரும் தில்லை' என்கிறார்கள்.

43. சிவபெருமானுக்கும், காளிக்கும் நடந்த நடனப்போட்டி திருவாலங்காட்டில் நடந்ததாகவும், ஆனால் தில்லைக்கு சிறப்பு ஏற்படுத்த அந்த வரலாற்றை சிதம்பரத்துக்கு மாற்றி விட்டார்கள் என்றும் மூதறிஞர் அ.ச.ஞானசம்பந்தனார் குறிப்பிட்டுள்ளார்.

44. சிதம்பரத்தில் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் திருக்கோவில் கொண்டுள்ளனர்.

45. இத்தலத்தில் மட்டுமே ஒரே இடத்தில் நின்றபடி சிவன், விஷ்ணு, பிரம்மன் ஆகிய மூவரையும் தரிசனம் செய்ய முடியும்.

46. ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் வடிவில் இந்த ஆலயம் உள்ளது.

47. இத்தலத்தில் பொன்னம்பலம் எனப்படும் சிற்றம்பலம் மற்றும் திருமூலட்டானர் கோவில் ஆகிய 2 இடங்களில் இறைவனும், இறைவியும் எழுந்தருளி உள்ளனர்.

48. சிதம்பரத்தில் அதிகாலை தரிசனமே மிக, மிக சிறப்பு வாய்ந்தது.

49. சிதம்பரம் ஆலயத்துக்குள் நுழைந்ததும் எந்த பிரகாரத்துக்கு எப்படி செல்வது! எந்த மூர்த்தியை வழிபடுவது? என்பன போன்ற குழப்பம் ஏற்பட்டு விடும். அந்த அளவுக்கு இது பெரிய ஆலயம்.

50. மனிதரின் உடம்பும் கோவில் என்பதனை விளக்கும் வகையில் சிதம்பரம்நடராசர் கோவில் அமைந்துள்ளது. மனித உடலானது அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞான மயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து சுற்றுக்களைக் கொண்டது. அதற்கு ஈடாக சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஐந்து பிரகாரங்கள் உள்ளன.

51. நடராஜர் ஆலயமும், தில்லையம்மன் ஆலயமும், இளமையாக்கினார் ஆலயமும், திருச்சித்திரக்கூடமும் இங்கு இருப்பதால், இது ‘ கோவில் நகரம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

52. நடனக்கலைகளின் தந்தையான சிவ பெருமானின் நடனமாடும் தோற்றம் நடராஜ ராஜன் எனப்படுகிறது. இதுவே மருவி நடராஜர் என அழைக்கப்படுகிறது. இக்கோவிலில்நாட்டியாஞ்சலி என்ற நாட்டிய விழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

53. உலகில் பல்வேறு இடங்களில் நாட்டியம் பயிலும் கலைஞர்கள், தங்களுடைய நாட்டியத்தை இங்கு அர்ப்பணிக்கின்றனர். அவர்கள் இங்கு வந்து நாட்டியார்ப்பணம் செய்வதை மிகப்பெரிய பாக்கியமாகவே கருதுகின்றனர்.

54. பக்தி இலக்கியத்திலும், சங்க இலக்கியத்திலும் தில்லை சிவபெருமான் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

55. இத்தலம் தில்லை என்னும் மரங்கள் அடர்ந்த காடாக இருந்ததால் இப்பெயர் பெற்றது. தில்லை என்னும் மரங்கள் இப்பொழுது சிதம்பரத்தில் காணக் கிடைக்கவில்லை. சிதம்பரத்திற்கு கிழக்கில் உள்ள பிச்சாவரத்திற்கு அருகே அமைந்துள்ள உப்பங்கழியின் கரைகளில் இம்மரங்கள் மிகுதியாக இருக்கின்றன.

56. சிதம்பரம் நடராஜர் கோயிலில் எட்டுத் திசைகளிலும் சாஸ்தாவின் எட்டு அவதாரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அந்த அவதாரங்கள் மகா சாஸ்தா, ஜகன்மோகன சாஸ்தா, பாலசாஸ்தா, கிராத சாஸ்தா, தர்மசாஸ்தா, விஷ்ணு சாஸ்தா, பிரம்ம சாஸ்தா, ருத்ர சாஸ்தா.

58. இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும். இது உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது.

59. நடராஜருக்கும் சிவகாமசுந்தரியம்பாளுக்கும் பால், பொரி, பழம் முதலியவை நைவேத்தியம் செய்து, தீபாராதனை செய்வதை திருவனந்தல் என்றும் பால் நைவேத்தியம் என்றும் அழைக்கின்றனர். இதை பக்தர்கள் தங்களின் கட்டளையாக ஏற்று செய்யலாம்.

60. நல்லெண்ணெய், திரவிய பொடி, பால், தயிர், பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். தவிர உலர்ந்த தூய வஸ்திரம் சாத்தலாம்.

61. அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிசேகம், புடவை சாத்துதல் ஆகியவற்றை செய்யலாம்.

62. இறைவன் இத்தலத்தில், நடராஜர் என்ற உருவமாகவும், ஆகாயம் என்ற அருவமாகவும், ஸ்படிக லிங்கம் என்ற அருவுருமாகவும் அருள்பாலிக்கிறார்.

63. இத்தலத்து முருகப்பெருமான் (சுப்ரமணியர்) குறித்து அருணகிரிநாதர் பத்து திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார்.

64. பெரும்பாலான பக்தர்கள், சிதம்பரம் கோயிலின் மூலவர் என்றாலே அது நடராஜர் தான் நினைத்துக் கொண்டிருப்பர். கோயிலுக்குள் நுழைந்ததும், நடராஜர் சன்னதியை தேடியே ஓடுவர். ஆனால், இத்தலத்து மூலவர் லிங்கவடிவில் ஆதிமூலநாதர் என்ற பெயரில் அருள் செய்கிறார்.

65. நந்தனார் தாழ்த்தப்பட்டவர்களை கோயிலுக்குள் வரக்கூடாது என ஒதுக்கிய காலத்திலும், சிவன் மீது கொண்ட நிஜமான பக்தியால், சர்வ மரியாதையுடன் கோயிலுக்குள் சென்று, நடராஜருடன் ஐக்கியமானார்.

66. இத்தலத்து நடராஜரைக் காண ஏராளமான வெளிநாட்டவர்கள் கூட, வருகின்றனர். அப்படிப்பட்ட அபூர்வ சிலையை, திருவிழா காலத்தில் தேரில் எடுத்து வருகிறார்கள்.

67. சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சிவகங்கை தீர்த்தக்கரையில் திருத்தொண்டத் தொகையீச்சரம் என்ற பெயரில் ஒன்பது லிங்கங்கள் உள்ளன. இந்த லிங்கங்களை ஒன்பது தொகையடியார்களாக எண்ணி வழிபடுகின்றனர்.

68. இந்த கோவில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப்பகுதி என்று கூறப்படுகின்றது.

69. பஞ்சபூத கோவில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோர்ட்டில் அதாவது சரியாக 79 டிகிரி தீர்க்க ரேகையில் அமைந்துள்ளது.

 70. சிதம்பரம் நடராஜர் ஆடிக் கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம் என்ற கோலம் 'காஸ்மிக் டான்ஸ்' என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கப்படுகின்றது.

71. திருநீலகண்ட நாயனார் அவதரித்து வாழ்ந்தபதி இதுதான்.

72. திருப்பல்லாண்டு பாடிச் சேந்தனார் தடைப் பட்ட தேரை ஓடச் செய்த மந்திரத்தலம்.

73. நடராச சந்நிதிக்கான கொடி மரம் தங்கத்தகடு வேய்ந்ததாகும்.

74. சிதம்பரம் சிவகாமியம்மன் கோவில் முன் மண்டப விமானத்தில் சிதம்பரத் தல புராணக் காட்சிகளும் தாருகா வனத்து முனிவர்களின் செருக்கைச் சிவபெருமான் அழித்த காட்சிகள் ஓவியங்களாக இடம் பெற்றுள்ளன.

75. சென்னையில் இருந்து சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த ஆலயத்துக்கு சென்று வர மாநிலத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பஸ் வசதி உள்ளது.

வாழைப்பழம்

பூவன் பழம் {பிரம்மாபழம்} மொந்தன் பழம், முகுந்தன் பழம் {விஷ்ணு பழம்} , பேயன் பழம் {சிவன் பழம்} , நேந்திரம் பழம் {இந்திரன்


பழம்} ஆன்மிக விளக்கங்கள்:

அத்ரியும் அனசூயையும் தங்களுக்கு முப்பெருந்தேவர்களின் அம்சங்களாக ஒரு குழந்தை வேண்டும் என்றும் வரம் பெற்றிருந்தார்கள்.

அந்த வரத்தை மெய்ப்பிக்க பிரம்ம, விஷ்ணு, சிவன் அவர்களிடம் குழந்தையாக வளர சித்தம் கொண்டார்கள்.

அதன்படி, பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் ஒரு நாள் அத்ரியின் ஆசிரமம் சென்று, அநசூயையைத் தாயாகப் பெற வேண்டி நின்றார்கள்.

அநசூயையும் பெரும் மகிழ்வு கொண்டு, தன் கணவரின் கமண்டலத்திலிருந்த தீர்த்தத்தைக் கொண்டு மூவரையும் சிறு குழந்தையாக்கினாள்.

அநசூயை தாயாக, முப்பெருந் தேவர்களும் மூன்று குழந்தைகளாக அத்ரி ஆசிரமத்தில் மிக மகிழ்வாக இருந்து வந்தனர்.

அநசூயையின் அளவற்ற, எல்லைகள் இல்லாத, களங்கம் எதுவும் இல்லாத நிர்மலமான, நிர்வாணமான அப்பழுக்கற்ற பாசத்தினை - குழந்தைகளான பிரம்ம விஷ்ணு சிவன் அனுபவித்து வந்தனர்.

நெடுநாட்களாக பிரம்மன் இல்லாமல் பிரம்ம லோகம் இருண்டது. விஷ்ணுவின் வைகுந்தம் வெறிச்சோடியது. ஈஸ்வரனின் கைலாயம் இயல்பாக இல்லை.

பிரம்மாவின் தேவியாகிய சரஸ்வதியும், விஷ்ணுவின் தேவியாகிய லக்ஷ்மியும், சிவனின் தேவியாகிய பார்வதியும் தமது கணவர்களைத் தேடியலைந்தனர்.

வெகு நாட்கள் தேடிய பின்னர் மூவரும் அத்ரியின் ஆசிரமத்தில் இருப்பதைக் கண்டறிந்தனர்.

முப்பெருந்தேவியர்களும் தமது கணவர்களை அழைத்துச் செல்ல அத்ரியின் ஆசிரமத்தை அடைந்தனர்.

இவர்களின் வருகை குழந்தைகளாக இருந்த மூவருக்கும் {பிரம்மா, விஷ்ணு, சிவன்} அதிர்ச்சியளித்தது.

அன்னையைப் பிரிய மனம் இல்லாதவர்கள் ஆனார்கள்.

அவர்கள் மூவரும், தங்களைத் தாய் அந௲யையிடமிருந்து  இருந்து பிர்த்துவிடுவார்களோ என்ற எண்ணத்தில், மூவரும் அத்ரியின் ஆசிரமத்திற்குப் பின்னிருந்த வாழைத தோட்டத்தில் மறைந்து கொண்டனர்.

ஒவ்வொருவரும் ஒரு வாழை மரத்தின் பின் ஒளிந்தனர்.

அவர்கள் ஒவ்வொருவரும் ஒளிந்து கொண்ட வாழை மரம் அவர்களின் அம்சம் பெறலாயிற்று.

பிரம்மா மறைந்து கொண்ட வாழை மரத்திலிருந்து பெறக்கூடிய வாழைப்பழம் தான் பூவன் பழம். பூவன் - பூவில் அமர்பவன். பிரம்மா பூவில் அமைந்திருக்கக் கூடியவர். பூவன் பழமே பிரம்ம பழம்.

விஷ்ணு மறைந்துகொண்ட வாழை மரத்திலிருந்து பெறக்கூடிய வாழைப்பழம் தான் முகுந்தன் பழம் அல்லது மொந்தன்பழம்.
விஷ்ணுவுக்கு முகுந்தன் என்ற பெயரும் உண்டு. மொந்தம்பழமே விஷ்ணு பழம். சிவன் மறைந்து கொண்ட வாழை மரத்திலிருந்து பெறக்கூடிய வாழைப்பழம் தான் பேயன்பழம்.

சிவபெருமான் ருத்ரபூமியாகிய பேய்கள் உலாத்தக் கூடிய சுடுகாட்டில் உறைபவர். அவருக்கு பேயாண்டி என்ற பெயரும் உண்டு. பேயன் பழமே சிவப் பழம்.

பிரம்ம, விஷ்ணு, சிவன் மறைந்து கொண்ட வாழை மரங்களிலிருந்து பெறக்கூடியது தான் பூவன் பழம், மொந்தன்பழம், பேயன்பழம் ஆகும்.
நேந்திரம் பழம் : சரஸ்வதி, பார்வதி, லக்ஷ்மி மூவரும் அத்ரியின் ஆசிரமத்தை அடையும் முன், தேவ நாயகனாகிய இந்திரனை அழைத்து, தமது கணவர்களை அழைத்துவரச் சொன்னார்கள். இந்திரனும் அத்ரியின் ஆசிரமம் அடைந்து, விபரம் அனைத்தையும் அறிந்து, அவனும் தாய்ப் பாசத்தினைப் பெற வேண்டி, தானும் ஒரு குழந்தையானான்.

இந்திரனைக் காணாமல் நெடு நேரமாகியதைக் கண்ட தேவியர் நேரில் ஆசிரமம் வர, இந்திரனும் வாழைத் தோட்டத்தில் உள்ள ஒரு வாழை மரத்தில் ஒளிந்து கொள்கின்றான்.

தேவியர் மூவரும் விபரம் அறிந்து, ஆசிரமத்தில் இருக்கும் வாழைத் தோட்டத்திற்கு நுழைகையில் இவர்களின் கண்களில் முதலில் பட்டது இந்திரன் தான்.

இந்திரனின் அம்சமாக இருந்த குழந்தையை இவர்கள் அழைக்க, இந்திரன் வடிவில் இருந்த குழந்தை, அன்னையின் பாசத்திற்குக் கட்டுண்டு தான் இந்திரன் இல்லை {ந: இந்திரன்} என்றது. இந்திரன் நின்ற வாழைமரத்திலிருந்து பெறப்படுவது தான் நேந்திரன் பழம்.

கடவுளின் குரல்

 "கடவுளின் குரல்"  -

"உப்புத் தண்ணீரை மூதாட்டிமேல் கொட்டச் சொன்ன மகாபெரியவர்!""

மகாபெரியவர் திருத்தல யாத்திரை மேற்கொண்டிருந்த காலகட்டம் அது. யாத்திரைக்கு இடையே வழுவத்தூர் என்ற கிராமத்தில் தமது பக்தரான ராமசுவாமி என்பவர் வீட்டில் தங்கியிருந்தார் மகான்.

ஒரு நாள் மாலை நேரம் தரிசனம் எல்லாம் முடிந்த பிறகு பக்தர் ராமசுவாமியை அழைத்தார் மகான். "பசுக்கொட்டகையில் இருந்து ஒரு பாத்திரத்தை எடுத்து, அதில் பாதியளவு தண்ணீர் நிரப்பி, இரண்டு கைப்பிடி கல் உப்பைப்  போட்டு இங்கே கொண்டு வா!" என்றார்.

அவர் சொன்னபடியே ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்பி உப்புப்போட்டு எடுத்து வந்தார், தொண்டர்.

கொஞ்சம் உயரமான திண்ணையில் உட்கார்ந்து கொண்டு தமது இரு கால்களையும் அந்த உப்புத் தண்ணீருக்குள் வைத்துக் கொண்டார், மகான்.

அவர் அப்படிச் செய்தது, புதுமையாக இருக்கவே, பலரும் அங்கே கூடிவிட்டார்கள். "இன்றைக்கு ரொம்ப நேரம் ஒரே மாதிரி அசையாம உட்கார்ந்திருந்தேனா...அதுல கால் இறுகிக் கொண்டு வலிக்கிறது...அதுக்குதான்!" யாரும் கேட்காமலே சொன்னார் பெரியவர்.

கொஞ்ச நேரம் கழித்து மகான் அந்தப் பாத்திரத்தில் இருந்து தமது திருவடிகளை எடுத்ததுதான் தாமதம். அதற்காகவே காத்திருந்ததுபோல எல்லோரும் நெருங்கி அந்த நீரை தீர்த்தமாக பாவித்து தலையில் தெளித்துக் கொண்டார்கள்.

திடீரென்று மகான், " அந்த ஜலத்தை முழுசா தீர்த்துடாதீங்கோ...ஒரு செம்புல கொஞ்சம் நிறைச்சு வையுங்கோ!" சொல்ல, இப்போது எல்லோர் மனதிலும் ஏன்? எதற்கு? என்ற கேள்வி எழுந்தது. இருந்தாலும் மகான் சொன்னபடி ஒரு செம்பில் அந்த உப்பு நீரை எடுத்து வைத்தார்கள்.

அன்று இரவு நெருங்கும் நேரம். வயதான பாட்டி ஒருவர் வந்து மகாபெரியவர் முன் நின்றார். எதுவும் பேசாமல், மகானையே பார்த்துக் கொண்டிருந்தார். அவரது கண்களில் இருந்து அருவியாக நீர் பெருகி வழிந்தது.

கொஞ்ச நேரம் அமைதியாக இருந்த மகான், "என்ன காசி, ராமேஸ்வரம் போகவேண்டும் என்று ஆசை.  ஆனால் கையில் காசு இல்லையே! என்ற ஏக்கத்தோடு என்னிடம் வந்திருக்கிறாயோ!" மென்மையாகக் கேட்டார்.

"ஆமாம் பெரியவா!" தழுதழுப்புக்கு இடையே இந்த இரட்டை வார்த்தைகளை மட்டும் உதிர்த்தார் அந்த மூதாட்டி.

எதுவும் சொல்லாமல் உள்புறம் திரும்பி, "ராமசுவாமி, அந்த செம்புல நிரப்பி வைத்த ஜலத்தை எடுத்துக் கொண்டு வா!" குரல் கொடுத்தார் மகான்.

மறு நிமிடம் செம்பு நீரை எடுத்துக் கொண்டு அவர் வர, "அதை அப்படியே அந்தப் பாட்டி தலையில் ஊற்று...!"

மகானின் கட்டளை பிறக்க, அதை அப்படியே நிறைவேற்றினார், தொண்டர்.  அடுத்ததாக, தமது கையில் இருந்த கமண்டல நீரை, காலியான செம்பில் ஊற்றிய மகான், அதையும் அந்தப் பாட்டி தலையில் ஊற்றச் சொன்னார்.

"முதல்ல ராமேஸ்வரம்...அடுத்தது காசி...ரெண்டு புண்ணிய தீர்த்தத்திலும் நீராடின பலன் உனக்குக் கிடைச்சாச்சு. கவலைப்படாமல் போ..எல்லாம் நல்லபடியாக நடக்கும்!" கை உயர்த்தி ஆசிர்வதித்தார் மகான்.

மனம் முழுக்க பரிபூரண திருப்தியுடன் புறப்பட்டார் அந்த மூதாட்டி.  இதுவரை நடந்ததெல்லாம் சாதாரணமானதாகவே தோன்றியது. இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு தகவல் வரும் வரை. அந்தச் செய்திதான், மகானின் திருவிளையாடலை உணர்த்தியது அனைவருக்கும்.

மகானை தரிசித்துவிட்டுப் போன அந்த மூதாட்டி, அதற்கு மறுநாளே முக்தி அடைந்திருந்தார். விஷயத்தை மெதுவாக மகாபெரியவரிடம் தெரிவித்தார் அணுக்கத் தொண்டர் ராமசுவாமி.

கொஞ்சமும் பதற்றமில்லாமல் அதைக் கேட்டுக்கொண்ட மகான், "அதனாலதான், நேத்திக்கே உன்னை அவளுக்குப் புண்ணிய தீர்த்த ஸ்நானம் பண்ணிவைக்கச் சொன்னேன்! கஷ்டமே இல்லாம முக்தி கிடைச்சிருக்கும் அவளுக்கு!" சொல்ல திடுக்கிட்டுப் போனார் அந்த பக்தர்.

தன்னை தரிசிக்க வரப்போகிற மூதாட்டிக்கு காசி, ராமேஸ்வர புண்ணிய தீர்த்தத்தில் நீராடும் ஆசை இருப்பதை முன்கூட்டியே தெரிந்துகொண்டு, உப்பு நீரை (ராமேஸ்வரம் கடல்நீர்) எடுத்துவைக்கச் சொன்னதும், அதையும், தமது கமண்டல தீர்த்தத்தையும் (சன்யாசிகளின் கமண்டல நீரில் கங்கை வாசம் செய்வதாக ஐதிகம்)  அந்த மூதாட்டி மேல் அபிஷேகிக்கச் சொன்னதும் ஆச்சரியம் என்றால், அவளது முக்தியை முன்கூட்டியே தெரிந்துகொண்டு, தாமதிக்காமல் அவள் ஆசையைப் பூர்த்தி செய்து புண்ணியம் தேடித் தந்தது எத்தனை பெரிய திருவிளையாடல்!   

ஹர ஹர சங்கர! ஜய ஜய சங்கர! காஞ்சி சங்கர! காமகோடி சங்கர!

மகாபெரியவா சரணம்!! குருவே சரணம்!!

ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம்🙏🙏


ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

சதுர்மாஸ்ய விரதம்

சதுர்மாஸ்ய விரதம்


இருக்கும்போது சந்யாசிகளை தரிசனம் செய்தால் கிடைக்கும் புண்ணியத்தை விளக்கமுடியுமா?

மற்றுமொரு நல்ல விஷயத்தை நினைக்க, எழுத பகிர்ந்து கொள்ள என்னை எழுத தூண்டியவர்களுக்கு மிக்க நன்றி.

------------------
சாதுர்மாஸ்யம் குருமார்களை ஆராதிக்க உகந்த காலம். நாரதர், சாதுர்மாஸ்ய காலத்தில் விரதமிருந்த சந்யாஸிகளுக்கு ஸேவை செய்த காரணத்தாலேயே ஞானம் உண்டாகி தேவரிஷியாகும் வாய்ப்பு கிட்டியதாக கூறுகிறார்.

சதுர் என்றால் நான்கு - சாதுர்மாஸ்யம் என்பது நான்கு மாதங்கள் அனுஷ்டிக்க வேண்டிய ஒரு விரதம். இது எல்லா ஆஸ்ரமத்தில் இருப்பவர்களும் அனுஷ்டிக்க வேண்டிய விரதம் தான். ஆனால் சந்யாஸிகளுக்கு இது கூடுதல் விசேஷம்.

பொதுவில் சந்யாஸிகள் ஒரே இடத்தில் ரொம்ப நாளைக்கு தங்குதல் கூடாது என்கிறது சாஸ்திரம். (அந்த ஊரின் மீதோ மக்களின் மீதோ கூட அவருக்கு பற்றுதல் உண்டாகி விடக்கூடாது என்ற நோக்கில்). இதனால் இவர்களுக்கு பரிவ்ராஜகர்கள் என்று பெயர்.

ஆனால் இப்படி தொடர்து சஞ்சரித்துக் கொண்டே இருப்பதால் அவர்களுக்கு ஆத்ம விசாரம் செய்யும் நேரம் குறையவும் வாய்ப்பு இருக்கிறது.

இதற்காக விசேஷமாக சொல்லப்படும் காலமே சாதுர்மாஸ்யம். ஆனி மாதத்து பௌர்ணமி முதல் நான்கு மாதங்களுக்கு ஒரு சந்யாஸி எங்கும் பயணப்படாமல் ஒரே இடத்தில் தங்கி இருக்க சாஸ்த்ரங்கள் வழிகாட்டுகின்றன. இது மழைக்காலமாகவும் இருப்பதைக் காணலாம்.

மழைக்காலங்களில் பூச்சி, பொட்டுக்கள் வெளியே வரும் வாய்ப்பும் அதிகம். ஒரு சந்யாஸி ப்ரயாணம் மேற்கொள்வதால் அறிந்தோ அறியாமலோ கூட இந்த புழு பூச்சிகளுக்கு துன்பம் உண்டாகலாம் என்ற காரணத்தாலும் இவர்கள் ஒரே இடத்தில் தங்குவது அவசியமாகிறது.

(சக்கரத்தில் சிக்கி பூச்சிகள் சாகுமே என்ற காரணத்தால் சக்க்ரம் வைத்த வண்டியில் கூட ஏறாமல் வாழ்நாள் முழுதும் நடந்தே பயணித்தவர் மஹாபெரியவர்.)

இப்படி பிற உயிர்களுக்கென வாழும் சந்யாஸிகள் ஒரே இடத்தில் தங்கி இருக்கும் காரணத்தால், அவருக்கு சிஷ்யர்கள் ஸேவை செய்யும் காலமே சாதுர்மாஸ்யம்.

(சாதுர்மாஸ்ய காலத்தில் சந்யாஸிகள் மட்டுமே விரதம் அனுஷ்டிப்பது என்ற முறை நம் தமிழகப்பகுதிகளில் தான் பரவலாகக் காணப்படுகிறது. ஆந்திர கர்நாடகப் பகுதிகளில் க்ருஹஸ்தர்களும் உணவுக் கட்டுப்பாடு முதல பலவகைகளிலும் விரதம் காப்பது வழக்கம்)

இன்று சாதுர்மாஸ்யம் என்று வழக்கத்தில் இருந்தாலும் (சதுர் பக்ஷம் எனும்படி 2 மாதங்களே வழக்கத்தில் இருக்கின்றன)

சந்யாஸிகளின் சாதுர்மாஸ்யம் வ்யாஸ பூஜையுடனே துவங்குகிறது. நாம் நம் குருமார்களை வணங்க வேண்டிய காலத்தில் குருமார்கள் அவர்களது குருவான வ்யாஸரை வணங்குகிறார்கள்.

இந்த சாதுர்மாஸ்யமே ஒரு சந்யாஸியின் வயது. அதாவது, ஒரு சந்யாஸியின் வயது அவரது உடலுக்கான வயது அல்ல! அவர் எவ்வளது சாதுர்மாஸ்யம் கடைபிடித்திருக்கிறாரோ அதுவே அவர் வயது. 80 வயது ஆகி இருந்தாலும் தன்னைவிட அதிக சாதுர்மாஸ்யம் அனுஷ்டித்த பால சந்யாஸியைக் கண்டால் வணங்கத்தான் வேண்டும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த சாதுர்மாஸ்ய காலமே குருவழிபாட்டுக்கு உகந்த காலம்.

நாம் வணங்கும் இஷ்ட தெய்வமே குருவாக மனித உருவில் வந்திருக்கிறது என்ற உண்மையை முதலில் உணர வேண்டும். குருவுக்கும் நம் இஷ்ட தெய்வத்துக்கும் பேதமில்லை என்பதை முதலில் உணரவேண்டும். இதை உணராமல் குருவை சாதாரண மனிதனாக எண்ணுபவன் எத்தனை பிறவி எடுத்தாலும் அவனுக்கு கதி கிடைக்காது.

அப்படிப்பட்ட குருவுக்கு நாம் வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

இந்த சாதுர்மாஸ்ய காலத்தில், அந்த நன்றிக்கடனின் வெளிப்பாடாக தான் பெற்ற நல்வாழ்வுக்காகவும், பெற்ற ஞானத்துக்காகவும், குருவை வணங்க வேண்டும்.

சாதுர்மாஸ்ய காலத்தில் தங்கள் குருவையும், குல ஆசார்யர்களையும் வணங்குவதால் எண்ணில்லா நன்மைகள் விளைகின்றன.

வ்யாஸ பூர்ணிமா, குரு பூர்ணிமா என்றெல்லாம் அழைக்கப்படும் நாளில் அவரவர் குருநாதர்களை குருதக்ஷிணையுடன் சென்று கண்டு வணங்கி ஆசி பெறுதல் வேண்டும்.

குருவில் கருணா கடாக்ஷம் படுவதால் அந்த ஒரு வருஷத்தில் நாம் அறியாமல் செய்த பாவங்கள் கரைவதோடு, வாழ்வில் முன்னேற்றம் அடைய ச்ரேயஸ் உண்டாகிறது, தர்மத்தில் கூடுதல் லயிப்பு உண்டாகிறது. (லௌகீக வாழ்வுக்கான முன்னேற்றம் - தனியே சொல்லப்படா விட்டாலும் குருவின் க்ருபையால் உண்டாகிறது).

ஆக சாதுர்மாஸ்யம் அனுஷ்டிப்பவரைக் கண்டாலே ப்ரம்மஹத்தி முதலான பாபங்கள் நீங்கி விடுவதாக பாரஹஸ்பத்ய ஸ்ம்ருதி கூறுகிறது.

சாதுர்மாஸ்ய காலத்தில் ஸந்யாஸிகளை வணங்குவதாலும் சேவை செய்வதாலும் ப்ரம்மஞானம் உண்டாகிறது என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது.

 மொத்தத்தில் இஹவாழ்வுக்கும் பரவாழ்வுக்கும் தேவையான அனுக்ரஹம் கிட்டுகிறது.

ஸர்வம் ஸ்ரீ குரு பாதார்ப்பணமஸ்து

மஹா பெரியவா அஷ்டோத்திர சத நாமாவளி

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதீஷ்வர ஜகத்குரு ஸ்ரீமத் சந்த்ரசேகரேந்த்ர மஹாஸ்வாமி ஸ்ரீசரணாரவிந்த
அஷ்டோத்திர சத நாமாவளி:-



(ஸ்ரீமட பாடம்)
1.           ஓம் ஸ்ரீ சந்த்ரஸேகரேந்த்ர-அஸ்மதாசார்யாய நமோ நம:

2.           ஸ்ரீ சந்த்ரமௌளி-பாதாப்ஜ-மதுபாய நமோ நம:

3.           ஸ்ரீ ஆசார்யபாததிஷ்டானாபிஷிக்தாய நமோ நம:

4.           ஸர்வக்ஞாசார்ய-பகவத்ஸ்வரூபாய நமோ நம:

5.           அஷ்டாங்கயோகனிஷ்டா-கரிஷ்டாய நமோ நம:

6.           ஸனகாதி-மஹாயோகி-ஸத்ருசாய நமோ நம:

7.           மஹாதேவேந்த்ர-ஹஸ்தாப்ஜ-ஸஞ்ஜாதாய நமோ நம:

8.           மஹாயோகி-விநிர்பேத்ய-மஹத்த்வாய நமோ நம:

9.           காமகோடி மஹாபீடாதீஸ்வராய நமோ நம:

10.         கலிதோஷ-நிவ்ருத்த்யேக-காரணாய நமோ நம:

11.         ஸ்ரீ சங்கரபதாம்போஜ-சிந்தனாய நமோ நம:

12.         பாரதீக்ருத ஜிஹ்வாக்ர-நர்தனாய நமோ நம:

13.         கருணாரஸகல்லோல-கடாக்ஷாய நமோ நம:

14.         காந்தி நிர்ஜித-ஸூர்யேந்து-கம்ராபாய நமோ நம:

15.         அமந்தா நந்தக்ருன்-மந்தகமனாய நமோ நம:

16.         அத்வைதானந்தபரித-சித்ரூபாய நமோ நம:

17.         கடீதட-லஸச்சாரு-காஷாயாய நமோ நம:

18.         கடாக்ஷமாத்ர-மோக்ஷேச்சா-ஜனகாய நமோ நம:

19.         பாஹு-தண்ட-லஸத்வேணு-தண்டகாயநமோ நம:

20.         பாலபாக-லஸத்பூதி-புண்ட்ரகாய நமோ நம:

21.         தரஹாஸ-ஸ்புரத்திவ்ய-முகாப்ஜாய நமோ நம:

22.         ஸூதாமதுரிமா-மஞ்ஜு-பாஷணாய நமோ நம:

23.         தபனீய-திரஸ்காரி-ஸரீராய நமோ நம:

24.         தப: ப்ரபா-ஸதாராஜத்-ஸுநேத்ராய நமோ நம:

25.        ஸங்கீதானந்த-ஸந்தோஹ-ஸர்வஸ்வாய நமோ நம:

26.        ஸம்ஸாராம்புதி-நிர்மக்ன-தாரகாய நமோ நம:

27.        மஸ்தகோல்லாஸி-ருத்ராக்ஷ-மகுடாய நமோ நம:

28.       ஸாக்ஷாத்-பரஸிவாமோக-தர்ஸனாயநமோ நம:

29.        சக்ஷுர்கத-மஹாதேஜோ-அத்யுஜ்ஜ்வலாய நமோ நம:

30.        ஸாக்ஷாத்க்ருத-ஜகன்மாத்ரு-ஸ்வரூபாய நமோ நம:

31.        க்வசித்-பாலஜனாத்யந்த-ஸுலபாய நமோ நம:

32.        க்வசின்-மஹாஜனாதீவ-துஷ்ப்ராபாய நமோ நம:

33.        கோப்ராஹ்மண-ஹிதாஸக்த-மானஸாயநமோ நம:

34.        குருமண்டல-ஸம்பாவ்ய-விதேஹாயநமோ நம:

35.        பாவனாமாத்ர-ஸந்துஷ்ட-ஹ்ருதயாய நமோ நம:

36.        பாவ்யாத்யபாவ்ய-திவ்யஸ்ரீ-பதாப்ஜாய நமோ நம:

37.        வ்யக்தாவ்யக்ததராநேக-சித்கலாய நமோ நம:

38.        ரக்தஸுக்ல-ப்ரபாமிஸ்ர-பாதுகாய நமோ நம:

39.        பக்தமானஸ-ராஜீவ-பவனாய நமோ நம:

40.        பக்தலோசன-ராஜீவ-பாஸ்கராய நமோ நம:

41.        பக்த-காமலதா-கல்ப-பாதபாய நமோ நம:

42.        புக்திமுக்தி ப்ரதாநேக-சக்திதாய நமோ நம:

43.        சரணாகத-தீனார்த்த-ரக்ஷகாய நமோ நம:

44.        ஸமாதி-ஷட்க-சம்பத்-ப்ரதாயகாய நமோ நம:

45.        ஸர்வதா ஸர்வதா லோக-சௌக்யதாய நமோ நம:

46.        ஸதா நவநவாகங்க்ஷய-தர்ஸனாய நமோ நம:

47.        ஸர்வ-ஹ்ருத்பத்ம-ஸஞ்சார-நிபுணாய நமோ நம:

48.        ஸர்வேங்கித-பர்ஜ்ஞான-ஸமர்த்தாய நமோ நம:

49.        ஸ்வப்னதர்ஸனபக்தேஷ்ட-ஸித்திதாய நமோ நம:

50.        ஸர்வவஸ்து-விபாவ்யாத்ம-ஸத்ரூபாய நமோ நம:

51.        தீன-பக்தாவனைகாந்த-தீக்ஷிதாய நமோ நம:

52.        ஜ்ஞானயோக-பலைஸ்வர்ய-மானிதாயநமோ நம:

53.        பாவ-மாதுர்ய-கலிதாபயதாய நமோ நம:

54.        ஸர்வபூதகணாமேய-ஸௌஹார்தாய நமோ நம:

55.        மூகீபூதாநேகலோக-வாக்ப்ரதாய நமோ நம:

56.        ஸீதளீக்ருத-ஹ்ருத்தாப-ஸேவகாய நமோ நம:

57.       போகமோக்ஷ-ப்ரதாநேக-யோகஜ்ஞாயநமோ நம:

58.       ஸீக்ரஸித்திகராநேக-ஸிக்ஷணாய நமோ நம:

59.       அமானித்வாதி-முக்யார்த்த-ஸித்திதாய நமோ நம:

60.       அகண்டைக-ரஸானந்த-ப்ரபோதாய நமோ நம:

61.       நித்யாநித்ய-விவேக-ப்ரதாயகாய நமோ நம:

62.       ப்ரத்யகேகரஸாகண்ட-சித்ஸுகாய நமோ நம:

63.       இஹாமுத்ரார்த்த-வைராக்ய-ஸித்திதாய நமோ நம:

64.       மஹாமோஹ-நிவ்ருத்த்யர்த்த-மந்த்ரதாய நமோ நம:

65.       க்ஷேத்ரக்ஷேத்ரஜ் ஞ-ப்ரத்யேக-த்ருஷ்டிதாய நமோ நம:

66.       க்ஷயவ்ருத்தி-விஹீனாத்மஸௌக்யதாய நமோ நம:

67.       தூலாஜ்ஞான-விஹீனாத்மத்ருப்திதாய நமோ நம:

68.       மூலாஜ்ஞான-பாதிதாத்மமுக்திதாய நமோ நம:

69.       ப்ராந்திமேகோச்சாடன-ப்ரபஞ்ஜனாய நமோ நம:

70.       ஸாந்தி-வ்ருஷ்டிப்ரதாமோக-ஜலதாய நமோ நம:

71.       ஏககால-க்ருதாநேக-தர்ஸனாய நமோ நம:

72.       ஏகாந்தபக்தஸம்வேத்ய-ஸ்வகதாய நமோ நம:

73.       ஸ்ரீ சக்ரரத-நிர்மாண-ஸுப்ரதாய நமோ நம:

74.       ஸ்ரீ கல்யாணதராமேய-ஸுஸ்லோகாய நமோ நம:

75.       ஆஸ்ரிதாஸ்ரயணீயத்வ-ப்ராபகாய நமோ நம:

76.       அகிலாண்டேஸ்வரீ-கர்ண-பூஷகாய நமோ நம:

77.       ஸசிஷ்யகண-யாத்ரா-விதாயகாய நமோ நம:

78.       ஸாதுஸங்கநுதாமேய-சரணாய நமோ நம:

79.       அபின்னாத்மைக்யவிஜ்ஞான-ப்ரபோதாய நமோ நம:

80.       பின்ன-பின்ன-மதைஸ்சாபிபூஜிதாய நமோ நம:

81.       தத்தத்விபாக-ஸத்போத-தாயகாய நமோ நம:

82.       தத்தத்பாஷா-ப்ரகடித-ஸ்வகீதாய நமோ நம:

83.       தத்ர தத்ர க்ருதாநேக-ஸத்கார்யாய நமோ நம:

84.       சித்ரசித்ர-ப்ரபாவ-ப்ரஸித்திகாய நமோ நம:

85.       லோகானுக்ரஹக்ருத்கர்ம-நிஷ்டிதாய நமோ நம:

86.       லோகோத்த்ருதி-மஹத்பூரி-நியமாய நமோ நம:

87.       ஸர்வவேதாந்த-ஸித்தாந்த-ஸம்மதாய நமோ நம:

88.       கர்மப்ரஹ்மாத்மகரண-மர்மஜ்ஞாய நமோ நம:

89.       வர்ணாஸ்ரம-ஸதாசார-ரக்ஷகாய நமோ நம:

90.       தர்மார்த்தகாமமோக்ஷ-ப்ரதாயகாய நமோ நம:

91.       பத-வாக்ய-ப்ரமாணாதி-பாரீணாய நமோ நம:

92.       பாதமூல-நதாநேகபண்டிதாய நமோ நம:

93.       வேதசாஸ்த்ரார்த்த-ஸத்கோஷ்டீ-விலாஸாய நமோ நம:

94.       வேதசாஸ்த்ரபுராணாதி-விசாராய நமோ நம:

95.       வேதவேதாங்கதத்வ-ப்ரபோதகாய நமோ நம:

96.       வேதமார்கப்ரமாண-ப்ரக்யாபகாய நமோ நம:

97.       நிர்ணித்ரதேஜோவிஜித-நித்ராட்யாய நமோ நம:

98.       நிரந்தர-மஹானந்த-ஸம்பூர்ணாய நமோ நம:

99.       ஸ்வபாவ-மதுரோதார-காம்பீர்யாய நமோ நம:

100.     ஸஹஜானந்த-ஸம்பூர்ண-ஸாகராய நமோ நம:

101.     நாதபிந்துகலாதீத-வைபவாய நமோ நம:

102.     வாதபேதவிஹீனாத்ம-போததாய நமோ நம:

103.     த்வாதஸாந்த-மஹாபீட-நிஷண்ணாயநமோ நம:

104.     தேஸகாலாபரிச்சின்ன-த்ருக்ரூபாய நமோ நம:

105.     நிர்மானசாந்திமஹித-நிஸ்சலாய நமோ நம:

106.     நிர்லக்ஷய-லக்ஷய-ஸம்லக்ஷய-நிர்லேபாய நமோ நம:

107.     ஸ்ரீஷோடஸாந்த-கமல-ஸுஸ்திதாயநமோ நம:

108.     ஸ்ரீ சந்த்ரஸேகர-ஸ்ரீஸரஸ்வத்யை நமோ நம:

இத்யேதத் குருதேவஸ்ய நாம்னாம் அஷ்டோத்தரம் ஸதம்
படனாத் பூஜனாத் தத்க்ஞானாத் பக்தானாம் இஷ்ட ஸித்திதம்.
ஸர்வம் ஸ்ரீ குரு தேவார்ப்பண மஸ்து.

"ஸ்வஸ்தி வாசனம்"

 "ஸ்வஸ்தி வாசனம்"



|| ஸ்ரீ குருப்யோ நம: ||

ஸ்ரீ மஹாத்ரிபுரஸுந்தரி ஸமேத ஸ்ரீ சந்த்ரமௌளீச்வராய நம:

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்ய ஸ்ரீசரணயோ: ப்ரணாமா:

ஸ்வஸ்தி ஸ்ரீமதகில பூமண்டலாலங்கார- த்ரயஸ் த்ரிம்சத்கோடி தேவதாஸேவித- ஸ்ரீகாமாக்ஷீ தேவீஸனாத- ஸ்ரீமதேகாம்ரநாத- ஸ்ரீமஹாதேவீ ஸநாத ஸ்ரீஹஸ்திகிரிநாத- ஸாக்ஷாத்கார- பரமாதிஷ்ட்டான- ஸத்யவ்ரத நாமாங்கித- காஞ்சீ திவ்யக்ஷேத்ரே- சாரதாமட ஸுஸ்த்திதாநாம்- அதுலித ஸுதாரஸ- மாதுர்ய கமலாஸன காமினீ தம்மில்ல ஸம்ப்புல்ல- மல்லிகாமாலிகா நிஷ்யந்த மஹரந்தஜ்ஜரீ- ஸௌவஸ்திக வாங்நிகும்ப்ப விஜ்ரும்ப்பணாநந்த- துந்துலித- மனீஷிமண்டலாநாம் அநவரதாத்வைத வித்யாவினோத ரஸிகாணாம் நிரந்தராலங்க்ருதீக்ருத- சாந்தி தாந்தி பூம்நாம்- ஸகல புவனசக்ர ப்ரதிஷ்ட்டாபக- ஸ்ரீசக்ர ப்ரதிஷ்ட்டா விக்க்யாத யசோலங்க்ருதாநாம்- நிகில பாஷண்ட ஷண்ட- கண்டகோத்காடநேந- விசதீக்ருத வேத வேதாந்த மார்க- ஷண்மத ப்ரதிஷ்ட்டாபகாசார்யாணாம்- ஸ்ரீமத் பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்ய வர்ய- ஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீமத் சங்கர பகவத்பாதாசார்யாணாம் அதிஷ்ட்டானே- ஸிம்ஹாஸனாபிஷிக்த ஸ்ரீமத் சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி ஸம்யமீந்த்ராணாம்- அந்தேவாஸிவர்ய- ஸ்ரீமத் ஜயேந்த்ர ஸரஸ்வதீ ஸ்ரீபாதாநாம்- ததந்தேவாஸிவர்ய- ஸ்ரீமத் சங்கரவிஜயேந்த்ர ஸரஸ்வதீ ஸ்ரீபாதநாம் ச சரணநளினயோ: ஸ்ப்ரச்ரயம் ஸாஞ்சலிபந்த்தம் ச நமஸ்குர்ம:|

நம் காஞ்சி காமகோடி பீடத்தின் ஆச்சார்யர்களை இந்த ஸ்வஸ்தி வாசன ஸ்லோகம் பாராயணம் செய்து வணங்குதல் என்பது நம் பாரம்பரியம் என்கின்றனர் நம் பெரியோர்கள்.  வாழ்வில் ஒருமுறையேனும் இந்த மந்திரத்தைச் சொல்லி நம் ஆச்சார்யாளை வந்தனம் செய்தோமானால் கட்டாயம் குருவருள் நமக்குண்டு என்பது திண்ணம்.

14: ஸ்ரீ வித்யா கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - 1 {கி. பி. 272 - கி. பி. 317 வரை}

 நமது ஆச்சார்ய குரு ரத்தினங்களை பற்றி தெரிந்து கொள்வோம்!!!

காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள ஆச்சார்யர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள் இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர்.

14: ஸ்ரீ வித்யா கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - 1 {கி. பி.  272 - கி. பி. 317 வரை}

ஸ்ரீ வித்யா கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - 1 ஆந்திர தேசத்தவர். 'பாபண்ண ஸோமயாஜி' என்பவரின் புதல்வர். இவருக்கு பெற்றோர் இட்ட நாமதேயம் 'நாயனா'. இவர் மந்திர சாஸ்திரத்தில் வல்லமையுடையவர். ஒரு முறை மலைய மலைப் பகுதியிலுள்ள ஒரு கிராமத்தில் இவர் தங்கியிருந்த சமயம் அங்குள்ள மக்கள் அவரை வணங்கி 'பைரவ மூர்த்தி அப்பகுதியிலுள்ள மக்களை பலி வாங்கிக் கொண்டிருப்பதாகவும் அதன் உக்கிரத்தைத் தணிக்க வேண்டும் என்றும் வேண்டினார்களாம். இவரும் மந்திரப் பிரயோகம் செய்து பைரவரை சாந்தப்படுத்தி மக்களின் பீதியைப் போக்கினார். இவர் கி. பி. 317ஆம் ஆண்டு, தாது வருடம், மார்கழி மாதம் அமாவாசையன்று மலைய மலைத்தொடரில் உள்ள அகஸ்திய கிரியில் சித்தியடைந்தார்.


வெள்ளி, 18 செப்டம்பர், 2020

ஒரு பசுவின் உருக்கமான கதை

ஒரு பசுவின் உருக்கமான கதை




ஒரு நாள் பசுவதை செய்யும் இடத்தில் ஒருவன் கோமாதாவை ஸம்ஹாரம் செய்வதற்கு வந்தவுடன் கோமாதா அவனை பார்த்து சிரித்தது. அதை பார்த்து அவன் கேட்டான்.நான் உன்னை ஸம்ஹாரம் செய்ய வந்துள்ளேன் அது தெரிந்தும் கூட நீ எதற்காக சிரிக்கின்றாய்? என்றுகேட்டான். அப்பொழுது கோமாதா சொன்னது. நான் எப்பொழுதும் மாமிசத்தை உண்டதில்லை. ஆனாலும் என் மரணம் மிகவும் கோரமாக இருக்கப் போகிறது. எந்த தப்பும் செய்யாமல் யாருக்கும் எத்தகைய ஆபத்தையும் விளைவிக்காத என்னை நீ கொன்று என் மாமிசத்தை சாப்பிடும் உன் மரணம் எவ்வளவு கோரமாக இருக்குமோ என்று நினைத்து நான் சிரித்தேன். பால் கொடுத்து உங்களை வளர்த்தேன். உங்கள் பிள்ளைளுக்கு பால் கொடுக்கிறேன். ஆனால் நான் சாப்பிடுவது புல்லை மட்டுமே. பாலிலிருந்து வெண்ணை எடுத்தீர்கள். வெண்ணையினால் நெய்யை செய்தீர்கள். என்னுடைய சாணத்தினால் வறட்டி செய்து சமையலுக்கு உபயோகித்தீர்கள். அதே போல் என்னுடைய சாணத்தினால் எருவினை தயார் செய்து விவசாயத்திற்கு பயன் படுத்தீனீர்கள். அந்த பணத்தினால் இன்பமான் வாழ்க்கையை வாழ்கிறீர்கள். ஆனால் எனக்கு மட்டும் அழுகிப் போன காய்றிளையும் காய்ந்து போன புல்லையும் தந்தீர்கள். என்னுடைய சாணத்தினால் கோபர் கேஸ் தயார் செய்து கொண்டு உங்கள் வீட்டை இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்தீர்கள். என் உடம்பில் முப்பத்தி முக்கோடி தேவர்களும் இருக்கிறார்கள். ஆனால் என்னை கசாப்புக்காரன் போல் கொல்ல வந்திருக்கிறாய்... என்னுடைய பாலிலிருந்து கிடைத்த சக்தியினால் தான் என்னை கொல்ல ஆயுதத்தை தூக்க முடிந்தது. அந்த ஆயுதத்தை தூக்கும் சக்தி உனக்கு கிடைத்தது என்னால் தான். என் மூலம் நிறைய சம்பாதித்து வீட்டை கட்டிக் கொண்டாய். ஆனால் என்னை மட்டும் ஒரு குடிசையில் வைத்தாய். உன்னை பெற்ற தாயை விட மேலாக உனக்கு அண்டையாக இருந்தேன். ஸ்ரீக்ருஷ்ண பகவானிற்கு ப்ரீதியானவள் நான்.எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுக்கும் உன் கதி என்னவாகும்? உன் வருங்காலத்தை குறித்து நினைத்து நான் சிரித்தேன் என்று சொன்னது.

(உங்களால் முடிந்த அளவு எல்லோருக்கும் இதை தெரியப்படுத்தி கோமாதாவின் ருணத்தை (கடன்) தீர்க்கவும்)