சனி, 7 செப்டம்பர், 2019

274 சிவாலயங்கள் : அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில்

மூலவர் : ஆம்ரவனேஸ்வரர்
அம்மன் : பாலாம்பிகை
தல விருட்சம் : மாமரம்
தீர்த்தம் : காவேரி
ஆகமம் பூஜை  : காமிகம்
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : ஆம்ரவனம், திருமாந்துறை
ஊர் : மாந்துறை
மாவட்டம் : திருச்சி
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், அருணகிரியார்,தேவாரப்பதிகம்

நீல மாமணி நித்திலத் தொத்தொடு நிரைமலர் நிரந்துந்தி ஆலி யாவரு காவிரி வடகரை மாந்துறை யமர்வானை மாலு நான்முகன் தேடியும் காண்கிலா மலரடி இணைநாளும் கோலம் ஏத்தி நின்றாடுமின் பாடுமின் கூற்றுவன் நலியானே.-திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 58வது தலம்.

விழா : ஐப்பசியில் அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை தீபம், வைகாசியில் ஆதிசங்கரர் ஜெயந்தி.  
      
சிறப்பு : இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பங்குனி மாதத்தில் மூன்று நாட்கள் சூரியன் தன் ஒளியை சுவாமி மீது பரப்பி பூஜை செய்வது சிறப்பு.  
      
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில், லால்குடி தாலுகா, மாந்துறை- 621 703.திருச்சி மாவட்டம்.போன்:+91-99427 40062, 94866 40260 
     
தகவல் : திருச்சி பகுதியில் உள்ள பஞ்ச சிவாலயங்களில் இத்தலமும் ஒன்று. ஆதிசங்கரர் ஆம்ரவனேஸ்வரரை பூஜை செய்து வணங்கியுள்ளார். இவர் கோஷ்டத்தில் தெற்கு பார்த்தபடி இருக்கிறார். மிருகண்டு மகரிஷியும் சுவாமியை வணங்கியுள்ளார். திருஞானசம்பந்தர் தனது இரண்டாம் திருமுறை பாடலில் சுவாமியை குறித்து பதிகம் பாடியிருக்கிறார். கோஷ்டத்தில் உள்ள துர்க்கை சாந்த கோலத்தில் இருக்கிறாள். இவளது காலுக்கு கீழே மகிஷாசுரனும் இல்லை. பிரகாரத்தில் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் தனிச்சன்னதியில் கிழக்கு பார்த்தபடி இருக்கிறார். இவரை அருணகிரியார் திருப்புகழில் பாடியுள்ளார்.மாமரங்கள் நிறைந்திருந்த தலம் என்பதாலும், மானுக்கு அருள் புரிந்த சிவதலம் என்பதாலும் இத்தலம் "மாந்துறை' என வழங்கப்படுகிறது.
     
பெருமை : தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவின் மகளாக சமுக்யா தேவி பிறந்தாள். பேரழகு கொண்டவளாக இருந்த அவளை சூரியன் மணந்து கொண்டார். அவள் சூரியனுடன் மிகுந்த அன்பு கொண்டு அவருடன் வாழ்ந்து வந்தாள். நாளுக்கு நாள் சூரியனின் உக்கிரம் அதிகரிக்கவே அவளால் வெப்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவள் சூரியனிடம் முறையிட்டும் அவர் உக்கிரத்தை குறைக்கவில்லை. ஒரு காலகட்டத்தில் அவரது வெப்பத்தை தாங்கவே முடியாது என்ற நிலைக்கு வந்த சமுக்யாதேவி, தான் தந்தையிடமே வந்துவிடுவதாக விஸ்வகர்மாவிடம் கேட்டாள். அவரோ மகளுக்கு ஆறுதல் கூறி சாந்தப்படுத்தினார். ஆனாலும் அவளால் கணவனின் உக்கிரத்தை பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. எனவே, கணவனைப் பிரிந்து செல்ல முடிவெடுத்தாள். தான் சென்றுவிட்டால் கணவன் மனம் வருந்துவார் என்று எண்ணிய அவள் தன்னில் இருந்து சற்றும் வித்தியாசம் காணமுடியாதபடி தன் நிழலில் இருந்து ஒரு உருவத்தை உண்டாக்கினாள். அவளை தனக்கு பதிலாக சூரியனின் மனைவியாக இருந்து பணிவிடை செய்யும்படி பணித்தாள். (சமுக்யாதேவியால் நிழல் வடிவமாக உருவாக்கப்பட்டவளே சாயாதேவி). பின் அவள் சூரியனைப்பிரிந்து தன் தந்தையிடமே வந்து சேர்ந்தாள். விஸ்வகர்மா அவளுக்கு பலவாறு எடுத்துச் சொல்லியும் அவள் கணவனிடம் செல்லவில்லை. தந்தையின் அனுமதியில்லாமலேயே அவருடன் தங்கியிருந்ததால் மனம் கலங்கிய சமுக்யாதேவி குதிரை வடிவம் எடுத்து இத்தலம் வந்து தன் கணவனின் உக்கிரம் குறையவும், அவரது உக்கிரத்தை பொறுத்துக் கொண்டு மீண்டும் கணவனுடன் சேரவும் சிவனை வேண்டி தவம் செய்தாள். இதனிடையே சாயாதேவியின் நடத்தையின் வித்தியாசத்தைக் கண்ட சூரியன் அவள் சமுக்யாதேவி அல்ல என அறிந்து கொண்டார். அவர் விஸ்வகர்மா மூலமாக தன் மனைவி பிரிந்து வந்ததை தெரிந்து கொண்டு, அவரிடமே தன் உக்கிரத்தையும் குறைத்தார். பின் அவர் இத்தலம் வந்து சிவனை வழிபட்டு சமுக்யாதேவியுடன் மீண்டும் சேர்ந்தார். இதன் அடிப்படையில் இங்கு நவக்கிரக சன்னதியில் சூரியன் சமுக்யாதேவி மற்றும் சாயாதேவி ஆகிய இருவருடன் இருப்பது போல அமைக்கப்பட்டிருக்கிறது. அருகிலேயே சூரியன் தனியாகவும் இருக்கிறார். பிற கிரகங்கள் அனைத்தும் சூரியனைப் பார்த்தபடியே இருக்கிறது.

சதுர்த்தி பூஜை : மான்களாக பிறந்த அசுர தம்பதியர் மற்றும் மகரிஷிக்கு சிவன் ஒரு அகங்கார சதுர்த்தியன்று (செவ்வாய்க்கிழமை சதுர்த்தி) விமோசனம் தந்ததாக ஐதீகம். இதன் அடிப்படையில் இங்கு சுவாமிக்கு செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி திதியன்று சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இந்நேரத்தில் சுவாமியை வழிபட்டால் குறைவிலாத வாழ்க்கை கிடைக்கும், பாவங்களுக்கு மன்னிப்பு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ஸ்தல வரலாறு : முன்னொரு காலத்தில் இப்பகுதி மாமரங்கள் நிறைந்த வனமாக இருந்தது. இவ்வனத்தில் தவம் செய்த மகரிஷி ஒருவர் சிவ அபச்சாரம் செய்ததால் மானாக பிறக்கும்படி சாபம் பெற்றார். அவர் இவ்வனத்திலேயே, தங்களின் முற்பிறவியில் செய்த பாவத்தால் மான்களாக பிறந்த அசுரகுல தம்பதியர்களுக்கு பிறந்தார். ஒரு நாள் குட்டி மானை விட்டுவிட்டு, தாய் மானும், தந்தை மானும் வெளியே சென்றுவிட்டன. அவை இரைதேட சென்ற இடத்தில் வேடுவ தம்பதி வடிவில் வந்த சிவனும், பார்வதியும் அவற்றை அம்பால் வீழ்த்தி சாபவிமோசனம் தந்தனர். இரவு நெடுநேரம் ஆகியும் தாய் மான் இருப்பிடத்திற்கு திரும்பாததால் கலங்கிய குட்டிமான் கண்ணீருடன் காத்துக் கொண்டிருந்தது. நேரம் ஆக, ஆக மானுக்கு பசியெடுக்கவே அது அலறியது. சிவனும், பார்வதியும் அதனைப் பெற்ற மான் வடிவில் இங்கு வந்தனர். பசியால் வாடியிருந்த குட்டி மானுக்கு பார்வதி தேவி பால் புகட்டினார். தந்தை வடிவில் வந்த சிவன் அதனை ஆற்றுப்படுத்தினார். சிவன், பார்வதியின் தரிசனம் பெற்ற குட்டி மான் தன் சாபத்திற்கு விமோசனம் பெற்று மீண்டும் மகரிஷியாக மாறியது. அவரது வேண்டுதலுக்காக சிவன் இத்தலத்தில் சுயம்புவாக எழுந்தருளினார். பார்வதிதேவியும் இங்கேயே தங்கினாள்.
--------------------------------------------------------------------------
274 சிவாலயங்கள் : அருள் மிகு சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில்

மூலவர் : சத்தியவாகீஸ்வரர்
அம்மன் : சவுந்திரநாயகி
தல விருட்சம் : ஆலமரம்
தீர்த்தம் : காயத்திரி தீர்த்தம்
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : அன்பிலாலந்துறை, கீழன்பில் ஆலந்துறை
ஊர் : அன்பில்
மாவட்டம் : திருச்சி
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்: திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர்,தேவாரப்பதிகம்

பிறவி மாயப் பிணக்கில் அழுந்தினும் உறவெலாம் சிந்தித்து உன்னி உகவாதே அறவன் எம்பிரான் அன்பிலா லந்துறை வணங்கும் நும்வினை மாய்ந்தறும் வண்ணமே. திருநாவுக்கரசர். தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 57வது தலம்.

விழா : மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம்.
      
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில், அன்பில்-621 702. திருச்சி மாவட்டம்.போன்:+91 431 254 4927 
     
தகவல் : லால்குடி சப்தரிஷீஸ் வரர் கோயில், திருமாந்துறை சிவன் கோயில் ஆகியவை உள்ளன. கோயிலின் உள்ளே சப்தமாதர், பிட்சாடனர், விசுவநாதர், விசாலாட்சி, பைரவர், முருகன் சன்னதிகள் உள்ளன. துவாரபாலகர் அருகே பிரம்மா வழிபடும் சிற்பம் உள்ளது.

பிரார்த்தனை : காதில் குறைபாடு உள்ளவர்கள் இத்தலம் சென்று விநாயகப்பெருமானை வழிபாடு செய்வது சிறப்பு. 

பெருமை : இக்கோயிலில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர் செவிசாய்த்த விநாயகர் மட்டுமே. சீர்காழியில் பிறந்து, உமையம்மை யிடம் பால் குடித்து, தேன் சுவை பாடல்கள் பாடிய திருஞானசம்பந்தர் சிவத்தலங்கள் பலவற்றிற்கு வந்தார். சிவனுக்கு இவரைச் சோதிக்க ஆசை. காவிரியில் தண்ணீர் கரை புரண் டோடச் செய்தார். ஞானசம்பந்தரால் கோயில் இருக்கும் இடத்தை அடைய முடியவில்லை. தூரத்தில் நின்ற படியே சுயம்புவாய் அருள்பாலிக் கும் சிவபெருமானைப் பாடினார்.
காற்றில் கலந்து வந்த ஒலி ஓர ளவே கோயிலை எட்டியது. அங் கிருந்த சிவமைந்தர் மூத்த விநாயகர், "இளைய பிள்ளையார்' எனப்பட்ட தன் சகோதரனுக்கு சமமான ஞானசம் பந்தனின் பாட்டைக் கேட்பதற்காக, தன் யானைக்காதை பாட்டு வந்த திசை நோக்கி சாய்த்து கேட்டு ரசித்தார். அப்போது புன்முறுவல் முகத்தில் அரும்பியது. ஒரு காலை மடக்கி இன்னொரு காலை குத்துக்காலிட்டு அமர்ந்து ரசித்த அக்காட்சியை சிற்ப மாக வடித்தார் ஒரு சிற்பி. அச்சிலை இன்றும் எழிலுற இருக்கிறது. கோயி லில் ராஜகோபுரமும் இருக்கிறது.

தல வரலாறு : இக்கோயில் அற நிலையத்துறைக்கு உட்பட்டிருந்தா லும் கூட, பாழ்பட்டுப் போனதால் தல வரலாறு தெளிவாக கிடைக்க வில்லை. மூலவர் சத்யவாகீஸ்வரர். இவர் கிழக்கு நோக்கி சுயம்புவாக எழுந்துள்ளார். பிரம்மன் வழிபட்ட மூர்த்தம் பிரம்மபுரீஸ்வரர் என்ற நாம மும் இவருக்கு உண்டு. அம்பாள் சவுந்தரநாயகி ஊர் பெயர் அன்பில் கோயிலின் பெயர் ஆலந்துறை. இரண்டும் சேர்த்து அன்பிலாந்துறை ஆனது. பிரம்மா, வாகீச முனிவர் பூஜை செய்த தலம்.
--------------------------------------------------------------------------
274 சிவாலயங்கள்  அருள் மிகு செம்மேனிநாதர் திருக்கோயில்

மூலவர் : செம்மேனிநாதர், கரும்பேஸ்வரர்
உற்சவர் : கரும்பேஸ்வரர்
அம்மன் : சிவயோகநாயகி, சவுந்தரநாயகி
தல விருட்சம் : வில்வம்
தீர்த்தம் : வேத தீர்த்தம்
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருக்கானூர்பட்டி, மணல்மேடு
ஊர் : திருக்கானூர்
மாவட்டம் : தஞ்சாவூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள் : அப்பர், சம்பந்தர்,தேவாரப்பதிகம்

நீரும் பாரம் நெருப்பும் அருக்கனும் காரும் மாருதம் கானூர் முளைத்தவன் சேர்வும் ஒன்று அறியாது திசைதிசை ஓர்வும் என்றிலர் ஓடித் திரிவரே. திருநாவுக்கரசர். தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 56வது தலம்.

விழா : ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் (ஏப்.2,3,4 ஆகிய தேதிகளில்) இத்தல இறைவனுக்கு சூரிய பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆவணி மூலம், தைப்பவுர்ணமி தினத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.  
      
சிறப்பு : இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். பங்குனி மாதத்தில் (ஏப்.2,3,4 ஆகிய தேதிகளில்) இத்தல இறைவன் மீது சூரிய ஒளி விழுகிறது. அம்மனின் விக்ரகம் சாளக்கிராமத்தால் ஆனது.  
      
திறக்கும் நேரம் : காலை 10 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 5 மணி வரை திறந்திருக்கும். திருக்காட்டுப் பள்ளியில் உள்ள குருக்களிடம் போன் மூலம் தொடர்பு கொண்டு அதன்பின் கோயிலுக்கு செல்லலாம். அருள் மிகு செம்மேனிநாதர் திருக்கோயில், திருக்கானூர், விஷ்ணம்பேட்டை - 613 105 திருக்காட்டுப்பள்ளி வழி, திருவையாறு தாலுக்கா,தஞ்சாவூர் மாவட்டம். போன் : +91-4362-320 067, +91- 93450 09344. 
     
தகவல் : கிழக்கு நோக்கிய 3 நிலை ராஜகோபுரம். பிரகாரத்தில் தெட்சிணாமூர்த்தி, விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை, பிரம்மா, சண்டிகேஸ்வரர், நாகர், மகாவிஷ்ணு, ஐயனார், சூரியன், சந்திரன், நால்வர் ஆகியோர் உள்ளனர்.

பிரார்த்தனை : திருமணத்தடை உள்ளவர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் மற்றும் கணவன் மனைவியருக்குள் கருத்து வேறுபாடு இல்லாமல் ஒற்றுமையாக இருக்கவும் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர். 
     
நேர்த்திக்கடன் : உடல் நலக்குறைவு ஏற்பட்டவர்கள் இத்தல வில்வ இலைகளால் செம்மேனிநாதருக்கு அர்ச்சனை செய்தால் விரைவில் குணமாகும். திருமணத்தில் தடை உள்ளவர்கள், சாளக்கிராமத்தினால் ஆன அம்மனுக்கு செவ்வரளி மாலை சாற்றி, நெய் தீபமிட்டால் விரைவில் திருமணம் உண்டாகும். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் சிவனுக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து எருக்கமாலை சாற்றி வழிபட்டால் விரைவில் குழந்தை பாக்கியம் ஏற்படும் என்பது நம்பிக்கை. இத்துடன் இனிப்பு பொருட்கள் நைவேத்யம் செய்து வழிபாடு செய்கின்றனர். 
     
பெருமை : ஒரு முறை அம்பிகை சிவனை நோக்கி தவமிருக்க பூமிக்கு வந்தார். தியானத்திற்கு ஏற்ற இடமாக இத்தலத்தை தேர்ந்தெடுத்து, சிவனை நோக்கி கடுமையாக தவமிருந்தார். தவத்திற்கு மகிழ்ந்த இறைவன், அக்னி பிழம்பாக காட்சி தந்தார். இதனால் இத்தல இறைவன் செம்மேனிநாதர் ஆனார். அம்மன் சிவயோகநாயகி ஆனார். கணவனும் மனைவியும் சேர்ந்து இத்தலம் வந்து வழிபட்டால், கருத்துவேறுபாடு இல்லாமல், ஒற்றுமையாக இருக்கலாம் என்பது நம்பிக்கை. கரிகால் சோழன் வாழ்ந்த ஊர்: ஒரு முறை கரிகால் சோழனின் தாய் எதிரிகளுக்கு பயந்து தன் மகனுடன் இப்பகுதியில் மறைந்து வாழ்ந்து வந்தாள். சோழநாட்டிற்கு மன்னன் இல்லாத காரணத்தினால் பட்டத்துயானை அரசாட்சிக்குரியவரை தேடி வந்தது. அப்போது திருக்கானூரில் விளையாடிக்கொண்டிருந்த கரிகாலனுக்கு மாலையிட்டு, தன் பிடரியில் அவனை ஏற்றிக்கொண்டு உறையூர் சென்றது. சோழமன்னன் ஆனான் கரிகாலன்.

ஸ்தல வரலாறு : ஜமதக்கினி முனிவருக்கும், ரேணுகா தேவிக்கும் மகனாக அவதரித்தவர் பரசுராமர். ஒரு முறை இவர் இல்லாதபோது கார்த்தவீர்யார்சுனன் என்ற அரசன் முனிவரின் ஆசிரமத்திற்கு வந்து, அவரது காமதேனு பசுவை பலவந்தமாக கவர்ந்து சென்றார்.  திரும்பி வந்த பரசுராமர் நடந்ததை கேட்டு கோபமடைந்து, கார்த்தவீர்யார்சுனனை கொன்று பசுவை மீட்டார். அத்துடன் 21 சத்திரியர்களையும் கொன்றார். இதனால் இவருக்கு "சத்திரிய தோஷம்' ஏற்பட்டது. இந்த தோஷம் போக்குவதற்காக பரசுராமர் இத்தலத்தில் நீராடி ஈசனை வழிபட்டார். சிவனின் அருளால் பரசுராமர் தோஷம் நீங்கப்பெற்றார்.
--------------------------------------------------------------------------
274 சிவாலயங்கள் அருள் மிகு ஆலந்துறையார் திருக்கோயில்

மூலவர் :ஆலந்துறையார்(வடமூலநாதர்)
அம்மன் : அருந்தவ நாயகி
தல விருட்சம் : ஆலமரம்
தீர்த்தம் : பிரம, பரசுராம தீர்த்தம்
ஆகமம் பூஜை  : சிவாகமம்
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருப்பழுவூர்
ஊர் : கீழப்பழுவூர்
மாவட்டம் : அரியலூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்  : திருஞான சம்பந்தர்,தேவாரப்பதிகம்

கோடலொடு கோங்கவை குலாவுமுடி தன்மேல்
ஆடரவம் வைத்தபெரு மான்திடம் என்பர்
மாடமலி சூளிகை யிலேறி மடவார்கள்
பாடலொலி செய்ய மலிகின்ற பழுவூரே. திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 55வது தலம்
 
திருவிழா:பங்குனி உத்திரம்  
      
ஸ்தல சிறப்பு : இத்தல சிவனுக்கு சாம்பிராணித்தைலம் பூசப்படுகிறது. லிங்கம் மிகச்சிறியது என்பதால் அடையாளம் காட்ட, அதன் மீது ஒரு குவளை கவிழ்த்தப்பட்டிருக்கிறது. இந்த குவளைக்கே அபிஷேகம் நடக்கும். பரசுராமர் தன் தாய் ரேணுகா தேவியை கொன்ற பாவம் நீங்க வழிபட்ட தலமாக இது கருதப்படுகிறது. அவர் உருவாக்கிய குளம் "பரசுராம தீர்த்தம்' எனப்படுகிறது. சில சிவன் கோயில்களில் மூலவர் சன்னதியின் நுழைவு வாயிலின் மேற்பகுதியில், கஜலட்சுமி சிற்பம் அமைத்திருப்பார்கள். ஆனால், இத்தலத்தில் பரசுராமர் சயனத்தில் இருப்பதைக் காணலாம். விநாயகர் நடனம் ஆடும் கோலமும், சண்டிகேஸ்வரரின் பஞ்சலோக சிலையும் வித்தியாசமானவை. பங்குனி 18ல், சூரியன் தன் கதிர்களால் இத்தல இறைவனை வழிபாடு செய்கிறான். திருஞானசம்பந்தரின் தேவாரப்பாடல் பெற்ற தலம். வள்ளலார் விண்ணப்பக்கவி வெண்பாவில்,"நற்கருணை வாய்க்கும் பழுவூர் மரகதமே' என்று சிவனையும், அருணகிரி நாதர் திருப்புகழில் இத்தல முருகனையும் புகழ்ந்து பாடியுள்ளனர்.  
      
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு ஆலந்துறையார் (வடமூலநாதர்) திருக்கோயில், கீழப்பழுவூர் அஞ்சல்-621 707 அரியலூர் மாவட்டம்.போன்:+91- 99438 82368 
     
தகவல் : முதலாம் பராந்தக சோழன் காலத்தில் இங்கு திருப்பணி நடந்துள்ளது. கிழக்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரத்துடன், இரண்டு பிரகாரங்கள் உள்ளன. உள் பிரகாரத்தில் கமல கணபதி, முருகன், பஞ்சபூதலிங்கங்கள், மகாலட்சுமி, லிங்கோத்பவர், அறுபத்து மூவர், சிவ துர்க்கை, சப்த கன்னியர் சன்னதிகள் உள்ளன.

பிரார்த்தனை : பிரம்மஹத்தி தோஷம் நீங்கவும், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேரவும் இங்கு வழிபாடு செய்யப்படுகிறது. 
     
பெருமை : "பழு' என்றால் ஆலமரம். எனவே சுவாமி "ஆலந்துறையார்' எனப்படுகிறார். தல விருட்சமான ஆலமரம் இப்பகுதியில் அதிகமாதலால் "திருப்பழுவூர்' என பெயர் பெற்றது.

ஸ்தல வரலாறு : கயிலாயத்தில் அன்னை பார்வதி விளையாட்டாக சிவனின் கண்ணை பொத்தியதால், சிவனின் இரு கண்களாக விளங்கும் சூரிய, சந்திரரின் ஒளி இல்லாமல் போனது. இதனால் உலக இயக்கம் நின்றது. முனிவர்களும் தேவர்களும் கலங்கி நின்றனர். அப்போது சிவபெருமான் தனது தேவியிடம், ""விளையாட்டாக தவறு செய்தாலும் மற்றவர்களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்துமானால், அது பாவமே ஆகும். இந்த பாவத்திற்கு பிராயச்சித்தமாக, நீ என்னைப் பிரிந்து பூலோகம் செல். அங்கு பல தலங்களில் தவம் செய்து இறுதியாக அங்குள்ள யோகவனத்தில் தங்கியிரு. நான் அங்கு வந்து உன்னுடன் சேர்வேன்,'' என்றார். அதன் படி பார்வதி தவத்தை முடித்து விட்டு, யோகவனத்தில் புற்று மண்ணால் சிவலிங்கம் அமைத்து, ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தாள். இறைவனும் அவளுடன் இணைந்தார். அந்த யோகவனமே இன்றைய பழுவூராகும். தவம் செய்த அம்பிகை என்பதால் அம்பாள் "அருந்தவநாயகி' எனப்படுகிறாள்.
--------------------------------------------------------------------------
274 சிவாலயங்கள் அருள் மிகு வைத்தியநாதர் திருக்கோயில்

மூலவர் :  வைத்தியநாதசுவாமி
அம்மன் : சுந்தராம்பிகை, பாலாம்பிகை
தல விருட்சம் : பனை மரம்
தீர்த்தம் : கொள்ளிடம், லட்சுமி, சிவகங்கை தீர்த்தம்
ஆகமம் பூஜை : காமிய ஆகமம்
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : மழுவாடி, திருமழபாடி
ஊர் :  திருமழபாடி
மாவட்டம் : அரியலூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள் : சம்பந்தர், அப்பர், சுந்தரர்,தேவாரப்பதிகம்

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே. சுந்தரர். தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 54வது தலம்.

விழா : மகா சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை.  
      
சிறப்பு : இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். இத்தலத்தில்தான் நந்திக்கு திருமணம் நடைபெற்றது.  
      
திறக்கும் நேரம் : காலை 6.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோயில், திருமழபாடி-621851. அரியலூர் மாவட்டம்.போன்:+91 04329 292 890, 97862 05278. 
     
பொது தகவல் : இத்தலத்திற்கு மழுவாடி என்ற பெயரும் உண்டு.

இத்தல விநாயகர் சுந்தர விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள் பாலிக்கிறார்.

பிரார்த்தனை : கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடி வைத்தியநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள ஜுரஹரருக்கு புழுங்கல் அரிசியில் ரசம் சாதம் படைக்கின்றனர். 
     
தலபெருமை : இங்கு பாலாம்பிகை, சுந்தராம்பிகை சன்னதிகள் உள்ளன. பங்குனி புனர்பூச நட்சத்திரத்தன்று நந்தி திருமணம் நடக்கிறது. "நந்தி திருமணம் பார்த்தால், முந்தி திருமணம் நடக்கும்' என்ற பழமொழியின் அடிப்படையில் ஏராளமான கன்னியர், இளைஞர்கள் பங்கேற்கின்றனர். ஒரே கல்லால் ஆன சோமாஸ்கந்தர் தனி சன்னதியில் அருளுகிறார். இங்குள்ள பிரம்மனுக்கு எதிரில் நான்கு வேதங்களும் நான்கு நந்திகளாக அமர்ந்துள்ளன. சிவன் பிரகாரத்தில் இரண்டு தெட்சிணாமூர்த்திகள் உள்ளனர். காத்தியாயினி அம்மன் சன்னதியும் இருக்கிறது. அப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடிய தலம் இது.பக்தர்கள் சிவனுக்கும் நந்திக்கும் நடுவில் இருக்கும் மூன்று குழிகளை நவக்கிரகங்களாக கருதி, அவற்றில் தீபமேற்றி வணங்குகின்றனர். மார்க்கண்டேய முனிவர், வைகாசி விசாகத்தில் மழுவேந்திய கோலத்தில் காட்சி தருகிறார். இதனால் இத்தலத்திற்கு மழுவாடி என்ற பெயரும் உண்டு.

ஸ்தல வரலாறு : திருவையாறில் வசித்த சிலாத முனிவர் குழந்தை பாக்கியம் வேண்டி சிவனை நோக்கி தவம் இருந்தார். அப்போது அசரீரி தோன்றி,""முனிவரே! புத்திரகாமேஷ்டி யாகம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். நீர் யாகம் செய்யும் நிலத்தை உழும் போது, பூமியில் இருந்து ஒரு பெட்டி கிடைக்கும். அதனுள் இருக்கும் குழந்தையை எடுத்து வளர்த்து வாருங்கள். ஆனால், அந்தக் குழந்தை 16 ஆண்டுகள் தான் உயிர் வாழும்,''என்றது.சிலாதரும் அவ்வாறே செய்ய ஒரு பெட்டியில், மூன்று கண்கள், நான்கு தோள்கள், சந்திரனை அணிந்த முடியுடன் ஒரு குழந்தை இருப்பதைக் கண்டார். வியந்து போன அவர், பெட்டியை மூடிவிட்டு மீண்டும் திறக்க பழைய அடையாளங்கள் மறைந்து அழகிய குழந்தையாக மாறியிருந்தது. அதற்கு "ஜபேசர்' என பெயரிட்டார். குழந்தைக்கு 14 வயது ஆனதும், இன்னும் 2 ஆண்டுகள் தான் குழந்தை தன்னோடு இருக்க போகிறது என்பதை நினைத்த முனிவர் மிகவும் வருத்தப்பட்டார். இதனையறிந்த ஜபேசர் திருவையாறிலுள்ள "அயனஅரி' தீர்த்த குளத்தில் ஒற்றைக்காலில் நின்றும் கடும் தவம் புரிந்தார். நீரில் நின்று தவம் புரிந்த இவரை நீர் வாழ் உயிரினங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தின்றன. இவரோ தவத்தை விடவில்லை. இவரது தவத்தில் மகிழ்ந்த சிவன், ஜபேசரை குணப்படுத்தி பூரண ஆயுளையும் தந்தார். அதன் பின் ஜபேசருக்கும், சுய சாம்பிகை என்ற பெண்மணிக்கும் திருமழபாடியில் திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு பின்னும் ஜபேசர் சிவனை நோக்கி கடும் தவம் இருந்து சிவகணங்களின் தலைமைப்பதவியையும், கயிலாயத்தின் முதல் வாயில் காவல் உரிமையையும், நந்தி தேவர் என்ற பெயரையும் பெற்றார்.
--------------------------------------------------------------------------
274 சிவாலயங்கள் அருள் மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில்

மூலவர் :வியாக்ரபுரீஸ்வரர், புலியூர் நாதர்
அம்மன் : சவுந்தரநாயகி, அழகம்மை
தல விருட்சம் : சரக்கொன்றை
தீர்த்தம் : காவிரிதீர்த்தம்
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் :திருப்பெரும்புலியூர்
ஊர் : திருப்பெரும்புலியூர்
மாவட்டம் : தஞ்சாவூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள் : சம்பந்தர்

தோடுடையார் குழைக்காதில் சுடுபொடி யாரனலாடக் காடுடையார் எரிவீசும் கையுடை யார்கடல் சூழ்ந்த நாடுடையார் பொருளின்பம் நல்லவை நாளும் நயந்த பீடுடையார் பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே. திருஞானசம்பந்தர். தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 53வது தலம்.
 
விழா : மகா சிவராத்திரி  
      
சிறப்பு : இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பொதுவாக நவக்கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் இருக்கும். ஆனால் இங்கு நவகிரகங்கள் சூரியனைப்பார்த்தபடி உள்ளது சிறப்பாகும்.  
      
திறக்கும் நேரம் : காலை 10 மணி முதல் இரவு 11 மணி மணி வரை திறந்திருக்கும்.  அருள் மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பெரும்புலியூர்- 613 203. திருநெய்த்தானம் போஸ்ட், திருவையாறு வழி, தஞ்சாவூர் மாவட்டம்.போன்:+91- 94434 47826,+91- 94427 29856 
     
தகவல் : 3 நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு பார்த்த கோயில். பிரகாரத்தில் சித்தி விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான், தெட்சிணாமூர்த்தி, நால்வர், அர்த்தநாரீஸ்வரர், சண்டிகேஸ்வரர், நவகிரகம், சோமாஸ்கந்தர், வாராஹி, பைரவர், சூரியன், சந்திரன், நந்தி, நடராஜர் சன்னதிகள் உள்ளன.
 
பெருமை : நான்கு அடுக்குகளால் ஆன தாமரை மலரின் மேல் சுவாமி மூலஸ்தானம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. அருணகிரிநாதர் இத்தல முருகனை தனது திருப்புகழில் பாடியுள்ளார். புதர் மண்டிக்கிடந்த இத்தலத்தை மதுரை சுந்தர சுவாமிகள் வெளிஉலகிற்கு தெரியப்படுத்தினார்.லிங்கோத்பவர் அருகில் அர்த்தநாரீஸ்வரர் அருள் பாலிக்கிறார்.

ஸ்தல வரலாறு : புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர், தன் தந்தை மாத்தியந்தினரிடம் தில்லை நடராஜரின் பெருமையை கேட்டறிந்து, அங்கு வந்து திருமூலநாதரை வழிபட்டு வந்தார். மரங்களில் ஏறி பூ பறிக்க புலிக்கால்களையும், அம்மலர்களை ஆராய்ந்து பார்த்து சிவபூஜை செய்ய நகங்களில் கண்களையும் பெற்றார். அதனால் இவருக்கு வியாக்ரபாதர் (வியாக்ரம்-புலி; பாதர்-கால்களை உடையவர்) என்று பெயர் வந்தது.
நடராஜரின் சன்னதிகளில் ஒரு புறம் இவரும், மற்றொரு புறம் பதஞ்சலி மகரிஷியும் உள்ளனர். புலிக்கால் முனிவராகிய இவர் வழிபட்ட தலங்கள் திருப்பாதிரிப்புலியூர், பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்), எருக்கத்தம் புலியூர், ஓமாம்புலியூர், பெரும்புலியூர் ஆகியன. பஞ்ச புலியூர்த்தலங்களில் இதுவும் ஒன்று.
--------------------------------------------------------------------------
274 சிவாலயங்கள் அருள் மிகு நெய்யாடியப்பர் திருக்கோயில்

மூலவர் : நெய்யாடியப்பர், கிருதபுரீஸ்வரர்
உற்சவர் : கிருதபுரீஸ்வரர்
அம்மன் : பாலாம்பிகை, இளமங்கையம்மை
தல விருட்சம் : வில்வம்
தீர்த்தம் : காவிரிதீர்த்தம்
ஆகமம் பூஜை  : காரண ஆகமம்
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருநெய்த்தானம்
ஊர் :  தில்லைஸ்தானம்
மாவட்டம் : தஞ்சாவூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:அப்பர், சம்பந்தர்,தேவாரப்பதிகம்

 பறையும்பழி பாவம் படுதுயரம் பலதீரும் பிறையும் புனல்அரவும் படுசடை எம்பெருமானூர் அறையும் புனல் வருகாவிரி அலைசேர் வடகரைமேல் நிறையும்புனை மடவார்பயில் நெய்த்தானம் எனீரே. திருஞானசம்பந்தர்.
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 52வது தலம்.  
      
திருவிழா : மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை  
      
சிறப்பு : இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். சிவனுக்கு நெய்யால் அபிஷேகம் ஆன பின்பு வெந்நீர் அபிஷேகம் நடப்பது தலத்தின் சிறப்பம்சமாகும்.  
      
திறக்கும் நேரம்:காலை 10 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு நெய்யாடியப்பர் திருக்கோயில், தில்லைஸ்தானம் (திருநெய்த்தானம்) திருநெய்த்தானம் போஸ்ட் - 613 203. திருவையாறு வழி, தஞ்சாவூர் மாவட்டம்.போன்:+91- 4362-260 553. 
     
தகவல் : கிழக்குநோக்கிய ராஜகோபுரம். முதற்பிராகரம் விசாலமானது. அம்பாள் கோயில் தனிக்கோயிலாகத் தெற்கு நோக்கியுள்ளது. உள் பிராகாரத்தில் விநாயகர், முருகன் சன்னதிகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, ஆகிய மூர்த்தங்கள் உள்ளன.

பெருமை : அம்மன் பாலாம்பிகை என்றும் இளமையாகவே காட்சி தருகிறாள். எத்தலத்து அம்மனையும் பாடாத திருநாவுக்கரசர், இத்தல அம்மனின் அழகில் மயங்கி,"ஏந்திளமங்கையும் நீயும் நெய்த்தானத் திருந்ததுவே' என பாடுகிறார்.  ஆண்டிற்கு 3 முறை திருவையாறிலிருந்து ஐயாறப்பர் இங்கு வருகிறார். சப்தஸ்தானத்தில் இத்தலம் ஏழாவது. திருவிழா காலத்தில் ஏழூர் பல்லக்குகளையும் ஒரே இடத்தில் கண்டு களிக்கும் சிறப்புடைய தலம். சுந்தர் வைப்புத்தலமாக பாடியுள்ளார். அருணகிரிநாதர் தன் திருப்புகழில் இத்தல முருகனை புகழ்ந்துள்ளார். ஒட்டக்கூத்தரும், புகழேந்தியாரும் பாடியுள்ளனர். காமதேனு, காசியபரிஷி, சரஸ்வதி ஆகியோர் இங்குள்ள இறைவனை பூஜித்துள்ளனர். நர்த்தன கணபதி இங்கு சிறப்பு. தெட்சிணாமூர்த்தி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். பல்லவ மன்னர்களும் திருப்பணி செய்துள்ளனர்.  இலங்கையை ஆண்ட மன்னர்கள் தங்கள் குலதெய்வமாக இத்தலத்தில் பூஜித்துள்ளனர்.

ஸ்தல வரலாறு : முன்னொரு காலத்தில் இப்பகுதியில் பசு ஒன்று தினமும் தன் பாலை குறிப்பிட்ட இடத்தில் சொரிவதை வழக்கமாக கொண்டிருந்தது. தினமும் இப்படி செய்ததால் வெயிலுக்கும், மழைக்கும் பால் முழுவதும் நெய்யாக மாறியது. ஒரு நாள் மாடு மேய்க்கும் இடையன் மறைந்திருந்து பார்க்க பசு மறைந்து விட்டது. காமதேனுவே பசுவாக வந்து பால்சொரிந்த விஷயம் இவனுக்கு தெரியவில்லை. இடையன் கூறியதைக்கேட்ட மக்கள், நெய் இருந்த இடத்தை தோண்டி பார்த்த போது, அங்கே சிவலிங்கம் இருந்தது. மன்னனுக்கும் இந்த செய்தி பரவியது. சிவபக்தனான அவன் சிவனுக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்து, தினமும் நெய்யினால் அபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்தான். இன்றும் இந்த சிவனுக்கு நெய்யினால் அபிஷேகம் நடக்கிறது. எனவே இறைவன் நெய்யாடியப்பர் ஆனார். இத்தலத்தில் நடந்த இன்னொரு வரலாறும் உண்டு. ஒரு சிவனடியார் தினமும் இறைவனுக்கு நெய் விளக்கு போட்டு திரும்பும் போது, பிரகாரத்தில் உள்ள கீரைகளை பறித்து கொண்டு போவதை வழக்கமாக கொண்டிருந்தார். வயதான காலத்தில் அவர் சிவனிடம், ""இறைவா! நான் தினமும் உனக்கு நெய் விளக்கேற்றி வழிபாடு செய்கிறேன். இப்போது எனக்கு வயதாகிவிட்டது. எனக்கு அருள்புரிந்து காக்க வேண்டும்,''என வேண்டினார். இறைவன் அசரீரியாக,""நீ எனக்கு நெய் விளக்கு போட்டதற்கு கைமாறாக, கோயில் பிரகாரத்திலிருந்த கீரையை பறித்து சென்றாய். ஆகவே உனக்கு வேறு எப்படி அருள்புரிய முடியும்,''என்றார். இவ்வாறு தல வரலாறு கூறுகிறது.
--------------------------------------------------------------------------
274 சிவாலயங்கள் அருள் மிகு ஐயாறப்பன் திருக்கோயில்

 மூலவர் : ஐயாறப்பன்
அம்மன் : தரும சம்வர்த்தினி
தீர்த்தம் : சூரிய புஷ்கரணி தீர்த்தம்
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
ஊர் : திருவையாறு
மாவட்டம் : தஞ்சாவூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள் : சம்பந்தர்.தேவாரப்பதிகம்

''புலன் ஐந்தும் பொறி கலங்கி நெறி மயங்கி அறிவு அழிந்திட்டு ஐம்மேல் உந்தி அலமந்த போதாக அஞ்சேல் என்றுஅருள் செய்வான் அமருங் கோயில்வலம் வந்த மடவார்கள் நடமாடமுழவு அதிர மழையென்று அஞ்சிச்சில மந்தி அலமந்து மரமேறி முகில் பார்க்கும் திருவையாறே''. -சம்பந்தர். தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 51 வது தலம்.     
     
தல சிறப்பு : இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கோயிலின் வெளிப்பிரகாரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்றுகொண்டு ஐயாறப்பா என உரக்க கொடுத்தால் ஏழு முறை திருப்பிக் கேட்கிறது. கோயில் என்றாலே சுவாமி சன்னதியை சுற்றுவது முக்கியமான அம்சம்.ஆனால், திருவையாறு ஐயாறப்பன் கோயிலில் சுவாமி சன்னதியை சுற்றக்கூடாது என்ற தடை உள்ளது. அம்மனின் சக்தி பீடங்களில் இது தர்ம பீடமாகும்.  
      
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.  அருள் மிகு ஐயாறப்பன் திருக்கோயில், திருவையாறு - 613 204 தஞ்சாவூர் மாவட்டம்.போன்:+91-436 -2260 332, 94430 08104 
     
பொது தகவல் : இங்குள்ள தியான மண்டபம் கட்டப்பட்ட விதம் அபூர்வமானது. சுண்ணாம்பு மற்றும் கருப்பட்டி கலந்து இது கட்டப்பட்டது. இந்த பொருட்களை சேகரித்து வைக்க மிகப்பெரிய குழிகள் தோண்டப்பட்டிருந்தன. இதைக் கட்டியவர்களுக்கு தங்கமும் வெள்ளியும் கூலியாகத் தரப்பட்டதாம். இவற்றையும் இரண்டு குழிகள் தோண்டி போட்டுவைத்திருந்தனர். ஒருவர் தன்னால் முடிந்த அளவு இவற்றை அள்ளிச் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்த நான்கு குழிகளும் இப்போதும் உள்ளன.

பெருமை : இங்கே அம்பாள் அறம் வளர்த்த நாயகி எனப்படுகிறாள். ஆண்கள் தர்மம் செய்வதைவிட குடும்பத்தில் உள்ள பெண்கள் தர்மம் செய்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.அந்த அடிப்படையில் உலக உயிர்களுக்கெல்லாம் படியளக்கும் நாயகியாக, பெண்களுக்கு தர்மத்தின் அவசியத்தை எடுத்துக்காட்டும் விதத்தில் தருமசம்வர்த்தினி என்ற பெயரில் அம்பாள் இங்கே எழுந்தருளி உள்ளாள்.எல்லா நாட்களும் நல்ல நாட்களே என்பதை வலியுறுத்தும் வகையில் அஷ்டமி திதியில் இரவு நேரத்தில் அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது. இவ்வூர் இறைவனுக்கு அர்ச்சகர் ஒருவர் பூஜை செய்து வந்தார். ஒருமுறை காசிக்கு சென்றதால் அவரால் பூஜைக்கு உரிய நேரத்தில் வரமுடியவில்லை. இந்த தகவல் அவ்வூர் அரசனுக்கு சென்றது. அவன் உடனடியாக கோயிலுக்கு வந்து பார்த்தபோது சம்பந்தப்பட்ட அர்ச்சகர் பூஜை செய்து கொண்டிருந்தார். மறுநாள் காசிக்கு சென்ற அர்ச்சகர் ஊரிலிருந்து திரும்பினார். ஊராரும் அரசனும் ஆச்சரியப்பட்டனர். இறைவன் இந்த அர்ச்சகர் மீது கொண்ட அன்பால் அர்ச்சகரின் வடிவில் வந்து, தனக்குத்தானே அபிஷேகம் செய்து கொண்டது தெரிய வந்தது. தன்னை வணங்குபவர்களுக்கு அன்பு செய்பவர் ஐயாறப்பர். அப்பர் பெருமான் இத்தலத்தில் வழிபட்டு கைலாய காட்சியை பெற்றார். எனவே இத்தலத்தில் வணங்கினால் கைலாயத்திற்கே சென்றதாக ஐதீகம். மானசரோவர் ஏரியில் மூழ்கிய அப்பர் பெருமான் இந்த திருத்தலத்தில் உள்ள குளத்தில் வந்து எழுந்தார். சூரிய புஷ்கரணி தீர்த்தம் எனப்படும் இந்த குளம் மிகவும் விசேஷமானது. இங்கே அம்பாள் மகாவிஷ்ணுவின் அம்சமாக கருதப்படுகிறாள். எனவே திருவையாறு எல்லைக் குட்பட்ட இடங்களில் பெருமாளுக்கு கோயில்களே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

சன்னதி சுற்ற தடை : இங்கே மூலவர் சுயம்புவாக எழுந்தருளி உள்ளார். அவரது ஜடாமுடி கருவறையின் பின்பக்கமும் பரந்து விரிந்து கிடப்பதாக ஐதீகம். சிவபெருமானின் ஜடா முடியை மிதிக்கக்கூடாது என்பதால் சன்னதியை சுற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆமையை மிதித்த தெட்சிணாமூர்த்தி: சுவாமி பிரகாரத்தில் உள்ள தெட்சிணாமூர்த்தி மிகவும் விசேஷமானவர். இவரை பெருமாள் வழிபட்டிருக்கிறார். பெருமாள் வழிபட்ட குரு தமிழகத்திலேயே இங்கு மட்டும்தான் உள்ளார். எனவே இவருக்கு ஹரிஉரு சிவயோக தெட்சிணாமூர்த்தி' என பெயர். இவர் முயலகனுக்கு பதிலாக ஆமையை மிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கோயிலின் வெளிப்பிரகாரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்றுகொண்டு ஐயாறப்பா என உரக்க கொடுத்தால் ஏழு முறை திருப்பிக் கேட்கிறது. அந்த அளவிற்கு இந்த கோயிலில் கட்டடக்கலை அமைந்துள்ளது.வெளிநாட்டில் உள்ள இன்ஜினியர்கள் இந்த சப்தம் கேட்பதுபற்றி ஆய்வு செய்தனர். ஆனால், இதற்கான காரணத்தை அறிய முடிய வில்லை. நவக்கிரகங்களில் இது சூரிய ஸ்தலமாகும். சூரியபகவான் இத்தலத்தில் பூஜித்துள்ளார். இக்கோயில் ஐந்து பிரகாரங்களை கொண்டது. இங்குள்ள முக்தி மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்தால் மனம் நிம்மதி கிடைக்கிறது. சூரியன் இந்த கோயிலில் மேற்கு திசை நோக்கி உள்ளார்.

தல வரலாறு : நந்தீஸ்வரருக்கும், நந்திகேசருக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்ள வேண்டும். நந்தீஸ்வரர் சிவபெருமானின் முன் காளை வடிவில் இருப்பவர். நந்திகேசர் திருக்கைலாய பரம்பரையை உருவாக்கியவர். தருமபுரம் ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம் ஆகியவை திருக்கைலாய பரம்பரையை சேர்ந்தவை. சிலாது மகரிஷி என்பவரின் மகனாக அவதரித்தவர் நந்திகேசர். பிறக்கும் போது இந்த குழந்தைக்கு நான்கு கைகள் இருந்தன. அவர் ஒரு பெட்டியில் இந்த குழந்தையை வைத்துவிட்டு மூடி திறந்தார். அப்போது குழந்தையின் இரண்டு கைகள் நீங்கி அழகான குழந்தையாக விளங்கியது. குழந்தையை திருவையாறு தலத்தில் விட்டு சென்றார். பரமேஸ்வரன் அந்த குழந்தைக்கு ஐந்து விதமான அபிஷேகம் செய்தார். அம்பிகையின் பால், நந்தி வாய் நுரை நீர், அமிர்தம், சைவ தீர்த்தம், சூரிய புஷ்கரணி தீர்த்தம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்தார். இந்த காரணத்தால் இறைவன் ஐயாறப்பர் எனப்பட்டார்.  
வரவிருக்கும் பண்டிகைகள்

09:08:19     வரலக்ஷ்மி விரதம்
15:08:19     யஜுர் & ரிக் உபாகர்மா
16:08:19     காயத்ரீ ஜபம்
23:08:19     கோகுலாஷ்டமி
02:09:19     விநாயகர் சதுர்த்தி & ஸாம உபாகர்மா
14:09:19     மஹாளயம் ஆரம்பம்
28:09:19     மஹாளய அமாவாஸ்யை
07:10:19     சரஸ்வதி பூஜை
27:10:19     தீபாவளி
15:01:20     பொங்கல் பண்டிகை   நேரம் காலை 09:00 ; 10:00
14:03:20     காரடையான் நோம்பு  நேரம் காலை 10:45 ; 12:00

சந்தோஷம் முகநூல் +91 98408 63652
தர்ப்பணம்

1.1: உதீரதாம் அவர உத்பராஸ உன்மத்யமாஹா பிதரஹ ஸோம்யாஸஹ அசூம்ய ஈஉஹு அவ்ருகா ரிதக்ஞாஸ் தேனோ வந்து பிதரோஹ வேஷூ வாதுள கோத்ரான் பாலசுப்பிரமணிய ஷர்மனஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

1.2: அங்கிரஸோன: பிதரோ நவக்வா அதர்வானோ ப்ருகவ: ஸோம்யாஸஹ தேஷாம் வயகும் ஸுமதெள யக்ஞியானாமபி பத்ரே ஸெளமனஸே ஸ்யாம வாதுள கோத்ரான் பாலசுப்பிரமணிய சர்மனஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

1.3: ஆயந்துனஹ பிதரஸ் ஸோம்யாஸோ அக்னிஷ் வாத்தா: பதிபிஹி  தேவயானை: அஸ்மின் யக்ஞே ஸ்வதயா மதந்த்து வதி ப்ருவந்துதே அவந்த் வஸ்மான் வாதுள கோத்ரான் பாலசுப்பிரமணிய ஸர்மணஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

2.1: ஊர்ஜம் வஹந்தீ ரம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் வாதுள கோத்ரான் வெங்கட்ராம சர்மணஹ ருத்ரரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி .

2.2: பித்ருப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ பிதா மஹேப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ ப்ரபிதா மஹேப்யச் ஸ்வதா விப்ய: ஸ்வதா நமஹ வாதுள கோத்ரான் வெங்கட்ராம சர்மணஹ ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

2.3: யே சே ஹ பிதரோ யே ச நேஹ யாகும்ச்ச வித்ம யாகும் உசன ப்ரவித்ம அக்னே தான் வேத்த யதிதே ஜாத வேத ஸ்தயா ப்ரதக்குஸ் ஸ்வதயா மதந்து வாதுள கோத்ரான் வெங்கட்ராம ஸர்மணஹ ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

3.1: மது வாதா ரிதாயதே மது க்ஷரந்தி ஸிந்தவ: மாத்வீர் நஸ்ஸந்த் வோஷதீ வாதுள கோத்ரான் சுப்பிரமணிய ஸர்மணஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

3.2: மது நக்த மதோஷஸீ மது மத் பார்த்திவகும் ரஜ; மது த்யெள ரஸ்து ந:பிதா வாதுள கோத்ரான் சுப்பிரமணிய சர்மணஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

3.3: மது மான் நோ வனஸ்பதிர் மது மாகும் அஸ்து சூர்யஹ மாத்வீர் காவோபவந்து ந: வாதுள  கோத்ரான் சுப்பிரமணிய ஸர்மனஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

மாத்ரூ வர்க்கம்:

வாதுள கோத்ராஹா விஜயலக்ஷ்மி தாஹா: வஸு ரூபாஹா மாத்ரூ: ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை

வாதுள கோத்ராஹா மீனாட்சி சுந்தராம்பாள் தாஹா ருத்ர ரூபாஹா பிதாமஹி ஸ்வதா நமஸ். தர்பயாமி மூன்று முறை.

வாதுள கோத்ராஹா முத்துலக்ஷ்மி தாஹா ஆதித்ய ரூபாஹா ப்ரபிதாமஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை.

மாதா மஹ வர்க்கம் தர்பணம்:

1.1: உதீரதாம் + ஹவேஷு கௌசிக கோத்ரா னு ஸ்ரீராம ஸர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

1.2 கௌசிக கோத்ரான் ஸ்ரீராம சர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

1.3 கௌசிக கோத்ரான் ஸ்ரீராம ஸர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

2.1  கௌசிக கோத்ரான் கோதண்ட ராம ஸர்மனஹ ருத்ர ரூபான் மாதுஹு பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

2.2 கௌசிக கோத்ரான் கோதண்ட ராம ஸர்மனஹ ருத்ர ரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

2.3 கௌசிக கோத்ரான் கோதண்ட ராம ஸர்மனஹ ருத்ர ரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

3.1 கௌசிக கோத்ரான் வைத்தியநாத ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

3.2 கௌசிக கோத்ரான் வைத்தியநாத ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

3.3 கௌசிக கோத்ரான் வைத்தியநாத ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது:ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

1.1,2,3: கௌசிக கோத்ராஹா மீனாட்க்ஷி தாஹா வசு ரூபாஹா மாதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை

2.1,2,3: கௌசிக கோத்ராஹா முத்துலக்ஷ்மி தாஹா ருத்ர ரூபாஹா மாதுஹு பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை

3.1,2,3: கௌசிக கோத்ராஹா வாளாம்பால் தாஹா ஆதித்ய ரூபாஹா மாதுஹு ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை.

ஞாத அஞ்ஞாத வர்க த்வய பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை

ஊர்ஜம் வஹந்தீஹி அம்ருதம்+பித்ரூன் த்ருப்யத த்ருப்யத த்ருப்யத

பூணல் வலம் : தேவதாப்பிய: ______

இதை சொல்லிக் கொண்டே மூண்று தடவை ப்ரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்து அபிவாதயே சொல்லவும். பூணல் இடம்.

ஆயாத பிதரஹ+ஷதஷாரதம் அவரவர் ஸம்ப்ரதாயப்படி கூறி அஸ்மாத் கூர்ச்சாத் பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹான், மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹி, ஸபத்னீக மாதா மஹ. மாது:பிதாமஹ, மாது:ப்ரபிதா மஹான் யதாஸ்தானம் ப்ரதிஷ்டா பயாமி.

பவித்ரத்தை காதில் தரித்து, உபவீதியாய் ஆசமனம் செய்து பவித்ரத்தை போட்டுக் கொண்டு, ப்ராசீனாவீதியாய் கூர்ச்சத்தை பிரித்து

கையில் எடுத்து, யேஷாம் ந மாதா ந பிதா ந பந்து: நான்ய கோத்ரிண :தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோத் ஸ்ருஷ்டை:குசோதகை:த்ருப்யத த்ருப்யத த்ருப்யத என்று சொல்லிக்கொண்டு ஜலம் விடவும். பவித்ரம் அவிழ்க்கவும். பூணல் வலம். ஆசமனம். செய்ய வேண்டும்.

காயேன வாசா மனசேந்த்ரி யைர்வா புத்யாத் மனாவா ப்ரக்ருதிஸ்வபாவாத் கரோமி யத்யத் சகலம் பரஸ்மை நாராயணா யேதி சமர்பயமி.
ஆவணி அவிட்டம்

அந்தணர்களாக பிறந்த ஒவ்வொருவரும் எட்டு வயதில் உபநயனம் பூணூல்

சடங்கை நடத்திக் கொள்ள வேண்டும். அதிபுத்திசாலியாக, மஹா மேதாவியாக

இருந்தால் ஐந்து வயதில் கூட பூணூல் போட்டு விடலாம். பதினாறு வயதிற்கு மேல்

உபநயனம் செய்வது என்பது பேரளவுக்கு மாத்திரமே என்று சாஸ்திரங்கள்

கூறுகின்றன.

உபநயனம் என்பதில் இரண்டு காரியங்கள் இருக்கின்றன. ஒன்று பூணூல்

போட்டது முதல் ஆசாரங்கள், ஒழுக்கங்கள் இன்றியமையாதது. ஆகவே பூணூல்

சமஸ்காரம் என்பது மனிதனை மனித வாழ்க்கையில் ஆன்மிக உயர்நிலை

அடைவதற்காக ஏற்பட்டது. இரண்டாவது, உபநயனத்தில் பூணூல் போட்டுக்

கொள்வது என்பது பிரதானமாக பேசப்படுகிறது. ஆனால் உபநயனத்தின் முக்கிய

அம்சம் ஒரு பெரியோரின் மூலம், ஒரு குருவின் மூலம், அல்லது தகப்பனாரின்

மூலம் வேதோக்தமான காயத்ரீ மந்திரத்தை ஏற்றுக்கொள்வதே முக்கிய

நோக்கமாகும். அதற்கு அங்கமாகத்தான் சுத்தமாயும், பவித்ரமாயும் பூணூல்

போட்டுக் கொள்வது. இதை வைத்துத்தான் உபநயனம், ப்ரம்மோபதேசம் என்று

சொல்லுகிறோம்.

உப நயனம் என்ற இரண்டு சொற்களின் அர்த்தம் காயத்ரீ மந்திரத்தைக்

கற்றுக் கொள்வதற்கு குருவின் சமீபம் அழைத்துச் செல்லுதல் என்று பொருள்.

இந்த வேதம் படிப்பதற்கு காலங்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன. தக்ஷிணாயனம்

என்று சொல்லக்கூடிய ஆறு மாதங்கள், வேதம் சொல்லக் கூடிய காலங்கள்.

உத்ராயணத்தில் அந்த வேதத்திற்கு அர்த்தம் தெரிந்து கொள்வதற்கு

சம்ஸ்க்ருதத்தையும், உப அங்கங்களையும், தர்ம சாஸ்திரத்தையும்

தெரிந்துகொள்ளவேண்டும். தை,மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி இந்த

ஆறு மாதங்களும் உத்தராயணம். ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை,

மார்கழி இந்த ஆறுமாதங்கள் தக்ஷிணாயனம். ஆவணி மாதத்தில் அவிட்ட

நட்சத்திரத்தில் வரக்கூடியது ஆவணி அவிட்டம். இதையே எல்லோரும்

பொதுவாக ஆவணி அவிட்டம் என்பார்கள். ஆடிமாத அமாவாசைக்கு பிறகு

ச்ராவண மாசம் என்பத சாந்திரமான கணக்குப்படி வரும். ச்ராவண மாசத்தில்

ச்ரவண நட்சத்திரத்தன்று ஒரு தோஷமும் இல்லாமல் இருந்தால் யஜுர் வேதிகள்

ஆவணி அவிட்டம், உபாகர்மா செய்து கொள்வார்கள்.

சாம வேதத்திற்கு ஆவணி ஹஸ்தம் எடுத்து இருக்கிறது. இப்படி ஒவ்வொரு

வேதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரத்திலும் மாறி வந்தாலும் ருக் வேதம்தான்

முதன்மையாக இருப்பதினால் அந்த ஆவணி அவிட்டத்தையே எல்லோரும்

உபாகர்மா என்று பெயர் வைத்து விட்டார்கள். இந்த உபாகர்மா அன்று

தக்ஷிணாயத்தில் ஆறுமாதத்திற்கான வேதபாடங்களை படித்து முடித்து உத்தராயண

ஆரம்பத்தில் அந்த வேதத்திற்கான அர்த்தங்களையும், தர்ம சாஸ்திரத்தையும்

தெரிந்து கொள்ள வேண்டும். இப்படி முடியாதவர்கள் ஆவணி அவிட்டத்தில்

தாங்கள் படித்த வேத பாகத்தை பூர்த்தி செய்து கொண்டு, ஆவணி அவிட்ட

உபாகர்மாக்களைச் செய்து கொண்டு திரும்பவும் அன்று வேத பாடங்களை

ஆரம்பம் செய்ய வேண்டும்.

இதுவரை வேத பாடங்களைப் படித்து வந்ததில் உள்ள குறைகளை

நீக்குவதற்கும், மேலும் நல்ல பலத்துடன் படிப்பதற்கு காயத்ரீ ஜபம் செய்ய

வேண்டும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.

வேத சாஸ்திர பாடங்களை அந்தந்த காலத்தில் ஆரம்பித்து

முடிக்காததற்காகத்தான் பரிகாரமாக "காமோகார்ஷீத்" ஜபம் சொல்லப்பட்டு

இருக்கிறது. ஆனால் எப்படியோ ஒரு அறியாமை இந்த விஷயத்தில் புகுந்து

விட்டது. 'காமோ கார்ஷீத்' ஜபம் செய்த பிறகு இட்லி, பலகாரம் சாப்பிடுவது என்று

ஒரு பழக்கம். இந்தப் பழக்கம் சரியல்ல.

அதேபோல் பலரும் வீட்டிலேயே வாத்தியாரை வரவழைத்து பூணூலை

மட்டும் புதிதாக மாற்றிக் கொள்கிறார்கள். மற்ற எந்த ஒரு வித வேத கர்மாவுக்கும்

அங்கு இடமில்லாமல் போய் விடுகிறது. ஆவணி அவிட்டத்தில் பூணூல் மாற்றிக்

கொள்வது முக்கியமாக இருந்தாலும், பூணூலை மாற்றிக் கொள்வது

எதற்காகவென்றால் வேதம் படிப்பதற்கு முன்பு புனிதமாக ஆகவேண்டும் என்பதே

முக்கியம். பூணூலை மாற்றிக் கொள்வதற்கு மட்டும் இல்லை. பூணூலை மாற்றிக்

கொண்ட பிறகு சிறிது அளவாவது வேதாரம்பத்தை செய்த கொள்ள வேண்டும்.

ஆகவே அவணி அவிட்டத்தில் வேதாரம்பம் செய்வது முக்கியம். அதை

ஒட்டித்தான் பூணூல் போட்டுக் கொண்டு "காமோர்கார்ஷீத்" ஜபம் செய்வது

போன்றவைகள். அதேபோல் பூணூல் போட்டுக் கொண்ட மறுநாள் காயத்ரீ ஜபம்

வரும். ஆவணி அவிட்டத்தில் வேத மந்திர ஜப சித்தி இருந்தால்தான் வேதாரம்பம்

ஸ்திரமாக இருக்கும். அதற்காகத்தான் காயத்ரீ ஜபத்தை மறுநாள் வைத்து

இருக்கிறார்கள். பலரும் அறியாமையால் பூணூல் போட்ட முதல் வருஷத்தில்தான்

காயத்ரீ ஜபம், காயத்ரீ ஹோமம் முதலியவைகள் என்று எண்ணிக் கொண்டு

இருக்கிறார்கள். தம்முடைய வாழ்க்கையிலேயே தினந்தோறம் சந்தியாவந்தனம்,

காயத்ரி ஜபம் செய்து விட்டுத்தான் வேதத்தை பாராயணம் செய்யச் சொல்லி

இருக்கிறது. ஆகவே ஒவ்வொரவரும் காய்த்ரீ ஜபத்தன்று ஆயிரம் தடவை காயத்ரீ

மந்திரத்தையும் அல்லது ஹோமத்தையும் செய்ய வேண்டும்.

பஞ்சாக்ஷரீ ஜபம், அஷ்டாக்ஷரீ ஜபம் போன்ற பல மந்திர ஜபங்கள் எல்லாம்

இருக்கின்றன. இந்த ஈஸ்வரானுக்ரஹம் சித்திக்க வேண்டும் என்றால் கூட காயத்ரீ

ஜபத்தை அதிக அளவில் செய்தால்தான் சித்திக்கும் என்றும், மற்ற ஜபங்கள் பலன்

அளிக்கும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. காயத்ரீ மந்திரம் ஒன்றுதான்

வேதத்திலிருந்து வந்தது. மற்ற எல்லா மந்திரங்களும் அதிகமாக

புராணத்திலிருந்துதான் வந்தவை. பஞ்சாக்ஷரம் போன்ற மந்திரங்களை

ஜபிப்பவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விசேஷ பலன் சொல்லப்பட்டு

இருக்கிறது. ஆனால் காயத்ரீ மந்திரம் ஜபித்த எல்லோருக்கும் ஒரே பலன்

மனத்தூய்மைதான். மனோபலம்தான். மனோபலத்தையும், மனத் தூய்மையும்

வைத்துக் கொண்டு உலகத்தில் எல்லா காரியங்களையும் சாதிக்க முடியும்.

இன்றைக்கு மனோபலமும், மனோ தைரியமும் குறைந்திருப்பதற்கு காரணமே

காயத்ரீ அனுஷ்டாணம் குறைந்து இருப்பதுதான்.

சில சமயம் ஆவணி மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வருவதினால்

தோஷமாதலால் அந்த மாதத்தில் உபநயனம், கல்யாணம் போன்ற சடங்குகள்

செய்ய மாட்டார்கள். ஆகையினால்தான் ஆவணி அவிட்டம் ஆடி மாதத்திலேயே

வந்து விடுகிறது. ச்ராவண சுத்தத்தில் முடிவான பௌர்ணமி அன்று வந்து
விடுகிறது.