விஸ்வாமித்திரருக்கு ப்ராம்மணத்தன்மை கிடைத்த வரலாறு...
பீஷ்மருக்கும் யுதிஷ்டிரருக்கும் நடந்த சம்பாஷனை. அப்பா குந்தி புத்திரனே! முன்னாள் விஸ்வாமித்ரருக்கு ப்ராமணரானதும் ப்ரம்ம ரிஷியானதும் எப்படி என்பதை சொல்கிறேன் கேள்.
பரதனுடைய வம்சத்தில் தர்மத்தில் சிறந்தவனான மிதிலன் என்ற அரசனுக்கு ஜன்னு என்ற புத்திரன் இருந்தான். அந்த ஜன்னுவுக்கு கங்காதேவி பெண்ணானாள். அவனுக்கு ஸிந்துத்வீபன் என்ற புத்திரன் உண்டானான். மஹா பலசாலியான பலாகாஸ்வன் ஸிந்துத்வீபனுடைய புத்திரன். இவனுடைய மைந்தன் தர்மஸ்வரூபமான வல்லபன். வல்லபனுடைய புதல்வன் இந்திரனு கொப்பான குசிகன். அந்த குசிகனுக்கு சிறப்புற்ற காதியெனும் புதல்வன்.
காதி தனக்கு ஸந்ததி வேண்டி வனத்தில் இருக்கையில் அவனுக்கு ஸத்யவதி என்று ஒரு கன்னிகை பிறந்தாள். ப்ருகு வம்சத்தில் உதித்த ச்யவனருடைய புதல்வர் ரிசீகரென்பவர் அந்த கன்னிகையை மணம் முடிக்க கேட்க... அந்த காதி இவரை தரித்திரனென்று நினைத்து ஒதுக்க எண்ணினான். அதனால் அவரை நோக்கி ஒற்றை காது கறுத்தவையும் சந்திரகிரகணம் போல வெண்மையாக பிரகாசிப்பவையும் வாயு வேகமுள்ள ஆயிரம் குதிரைகளை கேட்டார். (கிட்டதட்ட வரதட்சணை) அந்த மஹாத்மாவானவர் வருண பகவானை யாசிக்க அவரும் வரமாக குதிரைகளை தந்தார். அந்த குதிரைகள் கங்கா தீர்த்தில் உருவாயின..(கன்னியா குப்ஜ தேசத்தில் அந்த குதிரைகள் உருவான இடம் அஸ்வ தீர்த்தம் என்று கூறப்படுகின்றன). இதனால் பயந்த காதியானவன் உடனே தன் மகளை ரிஷீக்ருக்கு மணம் முடித்து வைத்தார். அவள் திருமணத்திற்க்கு பிறகு ஒவ்வொரு நாளும் தான் ரிஷீகரிடம் இருந்து கேட்டவைகளை தன் தாய்க்கு சொல்லிக்கொண்டு இருந்தாள். ஒரு நாள் சந்ததி விருத்திக்கான விஷயத்தை ரிஷீகர் கூற அதை தன் தாய்க்கு சொன்னாள். அதனால் அவள் தாயும் சந்ததி விருத்தியை நினைக்க அது ரிஷீக்ருக்கு தெரிந்தது. உடனே அவர் தன் மனைவியை நோக்கி நீயும் உன் தாயும் ஒரு குழந்தைகளை பெறுவீர் என்று கூறி சந்ததி விருத்திக்காக இரண்டு ஹவிஸுகளை கொடுத்து தாயை அரச மரத்தையும் மனைவியை அத்திமரத்தையும் தழுவ சொல்லி சென்றார். ஆனால் தாயானவள் விபரீத புத்தியால் தன் மகளிடம் அவள் வைத்திருகும் ஹவிஸை வாங்கி அரச மரத்துக்கு பதிலாக அத்தி மரத்தை தழுவிணாள். பின்னர் இருவரும் கர்பந்தரித்தனர்.
ஆனால் ரிஷீகர் நடந்ததை கண்டு கொண்டு... மனைவியை நோக்கி சொன்னார். ப்ரியமானவளே! இந்த விபரீத மாறுதலால் நீ சத்திரிய குழந்தையையும் உன் தாய் பிராம்மண புதல்வனையும் பெறுவார்கள். உனக்கு கொடிய செயல் உடைய சத்திரியன் பிறப்பான் என்று கூறினார். இது கண்டு அதிர்ச்சி அடைந்த அவள் மூர்ச்சையடைந்தாள். பின்பு மூர்ச்சை தெளிந்து ரிசீகரை பிராத்தித்தாள். ரிசீகரே! தயவு செய்து எனக்கு கொடிய செய்கை உடைய சத்திரியனை மகனாக பிறக்க செய்யாதீர் என்று கூற அவரும் அப்படியே ஆகட்டும் என்று சொன்னர். இதன் பலனாக ரிஷீகரின் மனைவி சத்தியவதி ஜமதக்னி என்னும் பிள்ளையை பெற்றாள். ஸத்தியவதியின் தாயும் காதியின் மனைவி விஸ்வாத்திரரை பெற்றாள். அதனாலே விஸ்வாமித்ரர் சத்திரியராய் இருந்து பிராமண்ணத்துவத்தை அடைந்து ப்ராமண சந்ததியை உண்டு பண்ணினார் (அவர் சத்திரிய அழுக்கை நீக்க 2000 வருடம் தவம் செய்து"ராஜரிஷி" பட்டம் பெற்று பின் 'ரிஷி' பட்டம் பெற்றார். பின்பு ஆயிரம் வருஷம் உண்ணாமல் தவம் செய்து பிரம்ம தேவரை மகிழ்வித்து ' பிரம்ம ரிஷி' பட்டம் பெற்றார். ஆக 3000 வருட தவத்தால் பிராம்மணத்துவத்தை பூரணமாக அடைந்தார். ஆதாரம் வால்மீகி ராமாயணம்) அவர்களுடைய புதல்வர்கள் பலர் ப்ரம்ம ஞானிகளும் பல கோத்திரங்களுக்கு முதல் புருஷர்களாக இருந்தனர். பகவானான மதுச்சந்தன், தேவராதன், அக்ஷீணன், சகுந்தன், பப்ரூ, காலபதன், யாஜ்ஞவல்க்யன், ஸ்தூணன், உலூகன், யமதூதன், ஸைந்தவாயயென், பர்ணஜங்கன், காலவ மஹரிஷி, வஜ்ர ரிஷி, ஸாலங்காயன், லீலாட்யன், நாரதன், கூர்ச்சாமுகன், வாதூலி, முஸலன், வக்ஷேக்ரீவன், ஆங்க்ரி, நைகத்ருக், சிலாயூபன், ஸிதன், சுகி, சக்ரகன், மாருதந்தவ்யன், வாதாக்னன், ஆஸ்வலாய்ன், ஸ்யாமயனன், கார்க்யன், ஜாபாலி, ஸுஸ்ருதன், காரீஷி, ஸ்ம்ஸ்ருத்யன், பரன், பௌரவன், தந்து, கபில் மஹரிஷி, தாடகாயன மஹரிஷி, உபகஹனன், ஆஸுராயண ரிஷி, மார்த்தமரிஷி, ஹிரண்யாக்ஷன், ஜாங்காரி, பாப்ரவாயணி, பூதி, விபூதி, ஸூதன், ஸூரக்ருத், அராலி, நாசிகன், சாம்பேயன், உஜ்ஜயனன், நவதந்து, பக நகன், ஸேயனந், யதி, அம்போருதன், சாருமத்ஸ்யன், சிரீஷி, கார்த்தபி, ஊர்ஜயோனி, உதாபேஷி, நாரதி மஹரிஷி ஆகிய விஸ்வாமித்ரர் மைந்தர்கள் அனைவரும் வேதங்களை வெளியிட்ட மஹரிஷிகள் ஆவார்கள். யுதிஷ்டிரரா! ரிஷீக மஹரிஷியால் வெளியிடப்பட்ட அந்த மந்திரம் பெரிது. பாரத சிரேஷ்டனே சந்திரன் சூர்ய அக்னிக்கொப்பான் விஸ்வாமித்ரர் ஜனனம் முழுவதும் என்னால் உனக்கு சொல்லப்பட்டது என பீஷ்மர் யுதிஷ்டிருக்கு உரைத்தார்.
#யுதிஷ்டிரர்
#விஸ்வாமித்ரர்
#விஸ்வாமித்ரசரிதம்
#பீஷ்மர்
#மஹாபாரதம்
#விஸ்வாமித்ரர்_சரிதம்
(இதே இன்னைக்கா இருந்தா நம்மாளுக பூணூல போட்டு நீயும் பிராமணன் தான் அதற்கு சட்டம் போட்டாச்சி ... அப்படின்னு சொல்லிருப்பானுக... இந்த மனுசன் படாத பாடு பட்டிருக்கார்... இதுக்கு தனி கோர்ஸ் டிகிரி கூட ஆரம்பிச்சிருப்பானுக...)
ராம் ராம்