ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

274 சிவாலயங்கள் : அருள் மிகு தயாநிதீஸ்வரர் திருக்கோயில்

மூலவர் :  தயாநிதீஸ்வரர்
உற்சவர் :  குலை வணங்கி நாதர்
அம்மன் :  ஜடாமகுட நாயகி
ஸ்தல விருட்சம் :  தென்னை
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : கபிஸ்தலம், ஆடுதுறைப்பெருமாள் கோவில், திருவடகுரங்காடுதுறை
ஊர் : வடகுரங்காடுதுறை
மாவட்டம் : தஞ்சாவூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள் : திருஞானசம்பந்தரர்,தேவாரப்பதிகம் நீலமா மணிநிறத் தரக்கனை யிருபது கரத்தொடல்க வாலினாற் கட்டிய வாலியார் வழிபட மன்னுகோயில் ஏலமோ டிலையில வங்கமே யிஞ்சியே மஞ்சளுந்தி ஆலியா வருபுனல் வடகரை யடைகுரங் காடுதுறையே. திருஞானசம்பந்தர்.

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 49வது தலம்.

விழா : பங்குனி உத்திர திருவிழா, நவராத்திரி பத்து நாள் விழா ஆகியவை சிறப்பாக நடக்கிறது. கார்த்திகையில் அம்பிகையை பெண்கள் 1008 முறை சுற்றி வருவது விசேஷ அம்சமாகும்.  
      
சிறப்பு : இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள் பாலிக்கிறார். சிறப்பு கர்ப்பிணிப்பெண்கள் வணங்க வேண்டிய கோயில்.  
      
திறக்கும் நேரம் : காலை 08:00 மணி முதல் 12:00 மணி வரை, மாலை 04:00 மணி முதல் இரவு 09:00 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு தயாநிதீஸ்வரர் கோயில், வடகுரங்காடுதுறை - 614 202. தஞ்சாவூர் மாவட்டம். போன் : +91 4374 240 491, 244 191 
     
தகவல் : நடராஜரின் கல் சிற்பம், சிவகாமி அம்பிகை, அர்த்தநாரீஸ்வரர், இரட்டை பைரவர், சூரியன், நாகர், சனீஸ்வரர், லிங்கோத்பவர், பிரம்மா, சுப்பிரமணியர், காசி விஸ்வநாதர், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர் ஆகியோரும் இங்கு அருள்பாலிக்கின்றனர்.  
      
பிரார்த்தனை : சில பாவங்கள் நீங்க அனுமானும் இங்கு பூஜை செய்துள்ளார். இங்குள்ள தெட்சிணாமூர்த்தியை தரிசித்தால் குரு பலம் பெருகுகிறது.
    
பெருமை : இக்கோயிலுக்கு முக்கியமாக கர்ப்பிணிப் பெண்களே வருகிறார்கள். கர்ப்பமான பெண்களை பொதுவாக கோயிலுக்கு செல்ல வேண்டாம் என சொல்வதுண்டு. ஆனால் இக்கோயிலில் சிவ பெருமான் கர்ப்பிணிக்கு அருள் செய்ததால் இந்த தலத்திற்கு வந்தால் சுகமான பிரசவம் நடக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.  திருஞான சம்பந்தர், அருணகிரி நாதரால் பாடல் பெற்றது. நவராத்திரி காலத்தில் மகாலட்சுமியை வழிபடுவதன் மூலம் செல்வச்சிறப்பு கூடும்.

துர்க்கையின் சிறப்பு : இங்கு விஷ்ணு துர்க்கை கையில் சங்கு, சக்கரத்துடன் அருள் பாலிக்கிறாள். எட்டு புஜங்கள் கொண்ட இந்த துர்க்கைக்கு பாலபிஷேகம் செய்தால் பால் நீல நிறமாக காட்சியளிப்பது சிறப்பாகும். வேறு எந்த துர்க்கை தலத்திலும் இம்மாதிரியான அதிசயம் நிகழ்வதாக தெரியவில்லை. நவராத்திரி காலத்தில் இந்த அதிசய துர்க்கையை வழிபடுவதன் மூலம் மனதில் தைரியம் அதிகரிக்கும்.

ஸ்தல வரலாறு : சிவபெருமான் தனது லீலைகளை பல இடங்களிலும் வெளிப்படுத்தியிருக்கிறார். வாலிக்கு வால் வளர அருள் செய்த இடமே குரங்காடுதுறை ஆகும். வாலிக்கு வால் அறுந்து போனது எப்போது என்பது பற்றி கேள்வி எழலாம். வாலியைக்கண்டு ராவணனே நடுங்கியிருக்கிறான். அவனை வாலால் அடிக்கும் போது ஒரு வேளை வால் அறுபட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. தனது வால் வளர அவன் சிவனை வணங்கினான். குரங்காடுதுறை தலத்திற்கு வந்து சிவனை வணங்கியதால் அவனது வால் மீண்டும் வளர்ந்தது. இங்கு சிவன் தயாநிதீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். அம்பாள் ஜடாமகுட நாயகி. சிட்டுக்குருவி ஒன்றிற்கும் சிவபெருமான் மோட்சம் அளித்துள்ளார். எனவே இவர் சிட்டிலிங்கேஸ்வரர் என்றும் வழங்கப்படுகிறார். தயாநிதி என்ற பெயருக்கு ஏற்ப கருணை மழை பொழிந்துள்ளார். செட்டி பெண் எனப்படும் கர்ப்பிணி பெண் ஒருத்தி தாகம் தாளாமல் இக்கோயில் வழியே நடந்து வந்து கொண்டிருந்தாள். அவள் தாகத்தால் இறந்து விடுவாளோ என்ற நிலைமை ஏற்பட்டது. சுற்றிலும் எங்கும் தண்ணீர் இல்லை. அவள் உயிர் போகும் தருணத்தில் அங்கிருந்த சிவலிங்கத்தை வணங்கினாள்.  சிவபெருமானே அங்கு தோன்றி அருகிலிருந்த தென்னைமரத்தை வளைத்து இளநீரை பறித்து கொடுத்தார். அந்தப்பெண் தாகம் நீங்கினாள். எனவே இறைவனுக்கு குலை வணங்கிநாதர் என்ற பெயரும் உள்ளது
274 சிவாலயங்கள் : அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்

மூலவர் :  ஆபத்சகாயர்
அம்மன் :  பெரிய நாயகி
ஸ்தல விருட்சம் :  கதலி (வாழை), வில்வம்
தீர்த்தம் : மங்கள தீர்த்தம் (பயனிற்றி அழிந்து விட்டது), காவிரி
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருப்பழனம்
ஊர் : திருப்பழனம்
மாவட்டம் : தஞ்சாவூர்
மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள் : திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர்,தேவாரபதிகம்

வேதமோதி வெண்ணூல் பூண்டு வெள்ளை எருதேறிப் பூதஞ்சூழப் பொலிய வருவார் புலியின் உரிதோலார் நாதா எனவும் நக்கா எனவும் நம்பா எனநின்று பாதந்தொழுவார் பாவந் தீர்ப்பார் பழன நகராரே.-திருநாவுக்கரசர்

தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை தலங்களில் இது 50வது ஸ்தலம்.
 
விழா : ஏழூர் சப்தஸ்தான விழா, சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம்  
      
சிறப்பு : இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். பங்குனி, புரட்டாசி பௌர்ணமிகளிலும் அதற்கு முன் பின் இரண்டு நாட்களிலும் நிலா சுவாமியின் மேல்படுகிறது.  
      
திறக்கும் நேரம் : காலை 06:00 மணி முதல் 11:00 மணி வரை, மாலை 04.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், திருப்பழனம் அஞ்சல். திருவையாறு 613 204 . தஞ்சாவூர் மாவட்டம்.போன்:+91 4362 326 668 
     
தகவல் : பழமையான ராஜகோபுரம் மூன்று நிலைகளையுடையது. கொடிமரமில்லை. பலிபீடம் நந்தி உள்ளன. வெளிச்சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளது. முன் மண்டபத்தில் வலப்பகுதி வாகன மண்டபமாகவுள்ளது. விநாயகரைத் தொழுது வாயிலைக் கடந்து உட்சென்றால் இடப்பக்கம் பிரகாரத்தில் சப்த மாதர்கள், விநாயகர், வேணுகோபாலர் சந்நிதிகளும், பல்வகைப் பெயர்களில் அமைந்த சிவலிங்கங்களும், நடராச சபையும், பைரவர், நவக்கிரகமும் உள்ளன.

ஸ்தல பெருமை : கதலிவனம் என்ற பெயரும் இத்தலத்திற்குண்டு. சந்திரன் வழிபட்ட தலம். குபேரன், திருமால், திருமகள், தர்மசர்மா என்னும் அந்தணன் முதலியோர் பூசித்து பேறுபெற்ற தலம். இத்தலம் சப்தஸ்தான தலங்களில் இரண்டாவதாகும்.

ஸ்தல வரலாறு : அழகிய வயலும் வயல் சார்ந்த இடமும் சூழ்ந்த  இடமாதலால் திருப்பழனம் என்று பெயர். ஒரு சமயம் அந்தணச் சிறுவன் ஒருவனை எமதருமன் துரத்திக் கொண்டு வரும் போது அச்சிறுவன் இத்தலத்து இறைவனைச் சரணடைந்த போது இறைவன் அச்சிறுவனுக்கு காட்சியளித்து ஆபத்தில் உதவி செய்ததால் இறைவனுக்கு ஆபத்சகாயேசுரர் என்று பெயர்.
108 திவ்ய தேசங்கள் : அருள்மிகு வீரராகவர் திருக்கோயில்

மூலவர்    :     எவ்வுள்கிடந்தான் (வீரராகவ பெருமாள் )
உற்சவர்    :     வைத்திய வீரராகவர்
தாயார்    :     கனகவல்லி
தீர்த்தம்    :     ஹிருதாபதணி
ஆகமம் பூஜை     :     பாஞ்சராத்திரம்
பழமை    :     2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்    :     எவ்வுளூர், திருஎவ்வுள்
ஊர்    :     திருவள்ளூர்
மாவட்டம்    :     திருவள்ளூர்
மாநிலம்    :     தமிழ்நாடு
பாடியவர்கள் : திருமங்கைஆழ்வார், திருமழிசைபிரான், ஸ்ரீ வேதாந்த தேசிகன்.

தையலாள் மேல் காதல் செய்த தாளவன் வாளரக்கன் பொய்யிலாத பொன்முடிக ளொன்ப தோடொன்றும் அன்று செய்த வெம்போர் தன்னிலங்கோர் செஞ்சரத் தாளூருள எய்த வெந்தை யெம்பெருமா னெவ்வுள் கிடந்தானே.-திருமங்கையாழ்வார்
     
விழா : பிரம்மோற்சவம் தை மாதம் மற்றும் சித்திரை மாதம் பத்து நாட்கள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இத்திருவிழாவிலும் கலந்து கொள்கின்றனர். பவித்ர உற்சவம் ஏழு நாட்கள் திருவிழா  இத்திருவிழாவிலும் பெருமளவில் பக்தர்கள் கூடுவர் இவை தவிர தை அம்மாவாசை, வைகுண்ட ஏகாதசி, தமிழ், ஆங்கில புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விசேஷ தினங்கள் தவிர வாரத்தின் சனிக் கிழமைகளில் பக்தர்கள் வெள்ளமென திரள்வது வழக்கம்.      
             
சிறப்பு : மூலவருக்கு சந்தன தைலத்தில் மட்டுமே அபிஷேகம். இத்தலத்து ஹிருதாபதணி தீர்த்தம் கங்கையை விட புனிதமானது. இக்குளத்தில் குளித்தால் மனதால் நினைக்கும் பாவங்கள்கூட விலகுமாம்.      
             
திறக்கும் நேரம்:காலை 5 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 4 முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.    அருள் மிகு வீரராகவர் சுவாமி திருக்கோயில், திருவள்ளூர்-602 001, திருவள்ளூர் மாவட்டம். போன் : +91-44-2766 0378, 97894 19330     
            
தகவல் : இங்குள்ள விமானம் விஜயகோடி. வனம்: வீஷாரண்யம்.      
பிரார்த்தனை : வைத்திய வீரராகவர் பிணி தீர்க்கும் வீரராகவர். மூன்று அமாவாசைகளுக்கு தொடர்ந்து வந்து பெருமாளிடம் வேண்டிக்கொண்டால் தீராத வியாதிகளும். குறிப்பாக வயிற்று வலி, கைகால் வியாதி, காய்ச்சல் ஆகியவை குணமாகி விடுகிறது. தவிர கல்யாணம் குழந்தை பாக்கியம் கிடைக்க மற்றும் கஷ்டங்கள் தீர செல்வம் பெருக இத்தலத்து பெருமாளை வேண்டிக்கொள்ளலாம்.     
            
நேர்த்திக்கடன் : பப்ளி துப்பட்டி (மேல் வஸ்திரம், அங்கி) வாங்கி பெருமாளுக்கு செலுத்தலாம். இந்த அங்கி வெளியில் எங்கும் கிடைக்காது. திருக்கோயில் அலுவலகத்தில் இந்த அங்கி கிடைக்கும்.இதன் விலை முன்னுறு ரூபாய் இத்தலத்தில் இந்த நேர்த்திகடன் மிகவும் விசேஷமானது. உருவத்தகடுகளை (வெள்ளி ,தங்கம்) செய்து போடுதல். தவிர பெருமாளுக்கு அபிஷேகம் ஆராதனை செய்தல்  நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கலாம். தாயாருக்கு ஒன்பது கஜ பட்டுப் புடவை சாத்துதலும் முக்கிய நேர்த்தி கடனாக கருதப்படுகிறது. உடம்பில் உள்ள மரு, கட்டி ஆகியவை மறைய இத்தலத்து குளத்தில் பால், வெல்லம் ஆகியவற்றை பக்தர்கள் கரைக்கிறார்கள். கோயில் மண்டபத்தில் உப்பு மிளகு ஆகியவற்றை சமர்ப்பிக்கின்றனர்.     
            
பெருமை : தொண்டை மண்டலத்தில் உள்ள மிக முக்கிய திவ்ய தேசம். இத்தலத்து குளம்(தீர்த்தம்)கங்கையை விட புனிதமானது. இக்குளத்தில் குளித்தால் மனதால் நினைக்கும் பாவங்கள்கூட விலகுமாம். ஆறுகால பூஜைகள் இன்றும் நடந்து கொண்டிருக்கும் சிறப்பு கொண்ட திருத்தலம். மார்க்கண்டேய புராணத்தில் இத்தலம் குறித்து கூறப்பட்டுள்ளது. மூலவருக்கு சந்தன தைலத்தில் மட்டுமே அபிஷேகம். சுமார் 15 அடி நீள 5 அடி உயரத்தில் பெருமாள் சயனம் கொண்டுள்ளார். லட்சுமி நரசிம்மர், சக்கரத்தாழ்வார் சன்னதிகள் இத்தலத்தில் மிகவும் விசேஷம். மிகவும் பழமையான தலம். இத்திருக்கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது.      
             
ஸ்தல வரலாறு : சாலிஹோத்ரர் எனும் முனிவர் இக்கோயில் அருகில் உள்ள புனித குளக்கரையில் ஒரு வருடம் தவம் இருந்தார். தை மாதம் அன்று தனது பூஜைகளை முடித்து விட்டு ஆகாரத்துக்காக மாவை சுவாமிக்கு நிவேதனம் செய்து விட்டு ஒரு பங்கை கொடுக்க இருந்தார். வயதான அந்தணர் வந்து அதை கேட்க இவரும் அதை கொடுத்தார். கிழவரும் புசித்து பசி இன்னும் தீரவில்லை என்று மேலும் கேட்க முனிவரும் மகிழ்ச்சியோடு மீதியையும் தந்தார். முனிவரும் அன்று முழுவதும் உபவாசம் இருந்து அடுத்த நாள் முதல் ஒரு வருடம் கழித்து திரும்பவும் தபம் செய்தார். ஒரு வருடம் கழித்து முன்பு போல் மறுபடியும் நிவேதனம் செய்த பின் விருந்தாளி வருவாரா என்று எதிர்பார்த்திருக்க அதே போல் அதே கிழவர் வந்து மாவு கேட்க முனிவரும் தந்தார். பிறகு படுத்துறங்க அந்த கிழவர் எவ்வுள் என்று வினவ முனிவரும் தன் இடத்தையே காட்டி இவ்விடம் படுத்துக் கொள்ளவும் என்றார். மறுகணமே அந்த பிராமணர் ரூபத்தில் வந்த பகவான் சயன கோலத்தில் காட்சி தந்தார். முனிவரிடம் வரம் கேள் என கூற இங்கு வரும் பக்தர்களுக்கு அவரது பிரச்னைகளை நிறைவேற்றி வைக்கும் படி கேட்க பகவானும் அவ்வாறே அருளி இங்கு எழுந்தருளியதாக இத்தல வரலாறு கூறுகிறது.
108 திவ்ய தேசங்கள் : அருள்மிகு பக்தவத்சலப்பெருமாள் திருக்கோயில்

மூலவர்    :     பக்தவத்சலப்பெருமாள்
உற்சவர்    :     பத்தராவிப்பெருமாள்
தாயார்    :     என்னைப்பெற்ற தாயார் என்ற சுதாவல்லி
தல விருட்சம்    :     பாரிஜாதம்
தீர்த்தம்    :     வருண புஷ்கரணி
ஆகமம் பூஜை     :     பாஞ்சராத்ர ஆகமம்
பழமை    :     2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்    :     தின்னனூர்
ஊர்    :     திருநின்றவூர்
மாவட்டம்    :     திருவள்ளூர்
மாநிலம்    :     தமிழ்நாடு
 
பாடியவர்கள் : ஏற்றினை இமயத்து ளெம் ஈசனை இம்மையை மறுமைக்கு மருந்தினை ஆற்றலை அண்டத் தற்புறத் துய்த்திடும் ஐயனைக் கையிலாழி யொன்றேந்திய கூற்றினை குருமாமணிக் குன்றினை நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை காற்றினைப் புணலைச் சென்று நாடிக் கண்ணமங்கையுள் கண்டு கொண்டேன். திருமங்கையாழ்வார்      
             
விழா : பங்குனியில் திருவோண, ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள் திரு நட்சத்திரங்கள், சித்ரா பவுர்ணமி, திருக்கல்யாண உற்சவம், தீபாவளி, திருக்கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி, மாசிமகம், தைப்பொங்கல், ரதசப்தமி.      
           
சிறப்பு : குபேரன் தன் நிதியை இழந்து வாடிய போது என்னைப்பெற்ற தாயாரை வழிபட்டு மீண்டும் பெற்றான் என்கிறது புராணம். இங்கு தாயார் சகல சௌபாக்கியங்களையும் தரும் வைபவ லட்சுமியாக உள்ளார். ஆதிசேஷனுக்கென சன்னதி உள்ளது தனி சிறப்பு. இந்த சன்னதியை புதன் கிழமைகளில் அர்ச்சனை செய்து நெய் விளக்கிட்டு பால் பாயாசம் படைத்தால் ராகு - கேது மற்றும் சர்ப்ப தோஷம் விலகும் என்பதும் மாங்கல்ய பலன் உண்டாகும் என்பதும் நம்பிக்கை.      
             
திறக்கும் நேரம் : காலை 07.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 04.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை திறந்திருக்கும்.     
அருள் மிகு பக்தவத்சலப்பெருமாள் திருக்கோயில், திருநின்றவூர் -602 024 திருவள்ளூர் மாவட்டம் .போன்:+91- 44-5517 3417     
            
தகவல் : இங்கு பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இங்குள்ள விமானம் உத்பல விமானம். பெருமாளின் தரிசனம் கண்டவர்கள் சமுத்திரராஜன், வருணன் ஆவர். பவுர்ணமி, உத்திரம், திருவோணம், வெள்ளி, சனிக்கிழமைகள் விசேஷ நாட்கள் ஆகும்.      
             
பிரார்த்தனை : திருமணத் தடை இருப்பவர்கள் இங்கு வந்து தரிசித்தால் தடை நீங்கும் என்பது நம்பிக்கை. ஆதிசேஷனுக்கென சன்னதி உள்ளது இவரை வழிபட்டால் ராகு, கேது மற்றும் சர்ப்ப தோஷம் விலகும் என்பதும் மாங்கல்ய பலன் உண்டாகும் என்பதும் நம்பிக்கை.
            
ஸ்தலபெருமை : பெருமாளிடம் கோபித்துக் கொண்டு வைகுண்டத்தை விட்டு "திரு'வாகிய மகாலட்சுமி இங்கு வந்து நின்றதால் "திருநின்றவூர்' ஆனது. அவளது தந்தையான சமுத்திரராஜன் அவளை சமாதானம் செய்து அழைத்துச் செல்ல வந்தான். (லட்சுமி பாற்கடலில் பிறந்தததால் சமுத்திரராஜன் தந்தையாகிறான்). அவள் வர மறுத்து விட்டாள். சமுத்திரராஜன் மீண்டும் வைகுண்டம் சென்று பெருமாளிடம் "பகவானே! தாங்கள் வந்து தேவியை அழைத்து வர வேண்டும்'' என்றான். அதற்கு பெருமாள் "நீ முன்னே செல் நான் பின்னால் வருகிறேன்'' என்கிறார். சமுத்திரராஜன் முன்னால் சென்று மகாலட்சுமியிடம் நான் உனக்கு தந்தையல்ல நீயே என்னை பெற்ற தாயார் எனவே வைகுண்டம் வந்து ஆட்சி செய்ய வேண்டும் என மன்றாடினான். பெருமாளும் சமாதானம் செய்யவே மகாலட்சுமி வைகுண்டம் செல்கிறாள். பக்தன் வேண்டுகோளுக்கிணங்க பெருமாள் இங்கு வந்ததால் அவரது திருநாமம் "பக்தவத்சலன்' ஆனது. சமுத்திரராஜன் மகாலட்சுமியை என்னைப்பெற்ற தாயே என அழைத்ததால் அதுவே இத்தலத்தின் தாயார் பெயராகி விட்டது. சமுத்திரராஜனின் வேண்டுகோளுக்கிணங்க பெருமாளும் தாயாரும் இத்தலத்தில் திருமணக்கோலத்தில் அருள் பாலிக்கிறார்கள். 

கோயில் அமைப்பு : விஜயநகர காலத்தை சேர்ந்த ராஜகோபுரம் பிரமாண்டமாக அமைந்துள்ளது. பலிபீடம், கொடிமரம், கருட சன்னதி, மகா மண்டபம், உள் மண்டபம் தாண்டி சென்றால், பெருமாள் திருமகள், பூமகளுடன் நின்ற திருக்கோலத்தில் பஞ்சாயுதம் தாங்கி சுமார் 11 அடி உயரத்தில் அருளுவதைக் காணலாம். மூலவரின் வலப்புறம் தாயார் சன்னதி உள்ளது. சுற்றுப்பிரகாரத்தில் ஆண்டாள், ஆழ்வார்கள், அனுமன், ஏரி காத்த ராமர், ஆதிசேஷன் ஆகிய சன்னதிகள் உள்ளன.

ஸ்தல வரலாறு : திருமங்கை ஆழ்வார் பல திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்து கொண்டு வரும் போது இத்தலம் வழியாக சென்றார். ஆனால், இத்தலத்தை பாடவில்லை. இதைக்கண்ட தாயார் பெருமாளிடம் உடனே சென்று ஒரு பாசுரம் பெற்று வருமாறு சொன்னார். அதற்குள் ஆழ்வார் மாமல்லபுரம் அருகே உள்ள திருக்கடன் மல்லை கோயிலுக்கு போய் விட்டார். அங்கு சென்ற பெருமாள் ஆழ்வாரிடம் பாசுரம் ஒன்றைக் கேட்டார். நீண்ட வத்தக் கருமுகிலை எம்மான் தன்னை நின்றவூர் நித்திலத் தொத்தூர் சோலை காண்டவத்தைக் கனலெரிவாய் பெய்வித்தானைக் கண்டது நான் கடல் மலலை தலசயனத்தே' என்று பாடினார் ஆழ்வார். 

இதன் பொருள் : எம்பெருமான் என் பாடல் கேட்டு வந்து நின்றதை நான் கண்டது கடன் மல்லையாகிய மாமல்லபுர திருத்தலத்தில் என்பது தான். இப்படி இந்த உலகையே காக்கும் பெருமாளே பக்தனின் பெருமையை உலகுக்கு உணர்த்த இவ்வாறு பாடல் வாங்கி சென்றார். பாடல் பெற்று வந்த பெருமாளைப்பார்த்த தாயார் என்ன இது! எல்லா தலங்களுக்கும் பத்து பாடல்களுக்கு மேலிருக்க இத்தலத்திற்கு மட்டும் ஒரு பாட்டு மட்டும் தானா? என கேட்கிறார். இதைக்கேட்ட பெருமாள் மீண்டும் ஆழ்வாரிடம் பாடல் பெற சென்றார். அதற்குள் ஆழ்வார் திருவாரூர் அருகே உள்ள திருக்கண்ணமங்கை வந்து விட்டார். அங்கே கண்ணமங்கை பெருமாளை மங்களாசாசனம் செய்யும் போது திருநின்றவூர் பெருமாள் வந்து நிற்பதை தன் ஓரக்கண்ணால் கண்ட திருமங்கை ஆழ்வார் அவரையும் சேர்த்து மங்களாசாசனம் செய்தார்.
108 திவ்ய தேசங்கள்: அருள்மிகு விஜயராகவப் பெருமாள் திருக்கோயில்

மூலவர்    :     விஜயராகவப் பெருமாள்
தாயார்    :     மரகதவல்லி
தல விருட்சம்    :     பாதிரி
தீர்த்தம்    :     ஜடாயு தீர்த்தம்
பழமை    :     1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்    :     திருப்புட்குழி
ஊர்    :     திருப்புட்குழி
மாவட்டம்    :     காஞ்சிபுரம்
மாநிலம்    :     தமிழ்நாடு
 
பாடியவர்கள் : அலங்கெழு தடக்கை யாயன் வாயாம்பர் கழியுமா லென்னுள்ளம் மென்னும் புலங்கெழு பொருநீர் புட்குழி பாடும் போதுமோ நீர்மலைக் கென்னும் குலங்கெழு கொல்லி கோமள வல்லிக் கொடியிடை நெடுமழைக் கண்ணி இலங்கெழில் தோளிக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே.
 திருமங்கையாழ்வார்

விழா : தை அமாவாசையில் தெப்ப உற்சவம், மாசியில் பிரம்மோற்ஸவம், ஆவணியில் பவித்ர உற்சவம், நவராத்திரி. திருக்கார்த்திகை.      
           
சிறப்பு : மூலவர் தன் தொடையின் மீது ஜடாயுவை வைத்துக்கொண்டு அருள் பாலிக்கிறார். பெருமாள் திருவீதி புறப்படும் போதெல்லாம் ஜடாயுவுக்கும் சகல மரியாதை உண்டு. ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்த தலமாதலால் அதற்கு மரியாதை செய்யும் விதத்தில் கொடிமரமும், பலி பீடமும் கோயிலுக்கு வெளியில் உள்ளது.      
             
திறக்கும் நேரம் : காலை 7 மணி முதல்12 மணி வரை, மாலை மணி 4 முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும், அருள் மிகு விஜயராகவப் பெருமாள் கோயில், திருப்புட்குழி - 631 502 காஞ்சிபுரம் மாவட்டம், போன்:+91- 44-2724 6501.     
          
தகவல் : மூலவரின் மேல் உள்ள விமானம் - விஜய வீர கோட்டி விமானம்      
             
ஸ்தல பெருமை : இங்குள்ள தாயார் வறுத்த பயிறை முளைக்க வைக்கும் மரகத வல்லித்தாயார் என அழைக்கப்படுகிறார். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்குள்ள ஜடாயு தீர்த்தத்தில் நீராடி மடப்பள்ளியில் வறுத்து, நனைத்த பயிறை பெண்கள் தங்களது மடியில் கட்டிக்கொண்டு இரவில் உறங்க வேண்டும். விடிந்தவுடன் அந்த பயிறு முளைத்திருந்தால் குழந்தை பாக்கியம் கட்டாயம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ராமானுஜரின் குருவான யாதவப்பரகாசர் இங்கு தான் வசித்தார். இத்தலத்தில் அசையும் உறுப்புகளைக் கொண்ட கல் குதிரை வாகனம் இருக்கிறது. சிற்பக்கலையில் இது ஒரு அதிசயமாகும். உண்மையான குதிரை போலவே அசையும் உறுப்புக்களைக் கொண்டது இந்த கல் குதிரை. இதை செய்த சிற்பி இது மாதிரி இனி யாருக்கும் செய்து கொடுப்பதில்லை என்று உறுதியோடு இருந்து உயிர் விட்டாராம். இவரது உறுதிக்கும் பக்திக்கும் பாராட்டு தெரிவித்து பெருமாள், திரு விழாவின் எட்டாம் நாளன்று அவனது பெயர் கொண்ட வீதிக்கு எழுந்தருளுகிறார்.   ராமபிரானே இங்கு ஈமக்கிரியைகள் செய்துள்ளதால், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்பவர்கள் அமாவாசையன்று இத்தலத்தில் செய்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.      
             
ஸ்தல வரலாறு : ராவணன் சீதையை சிறை எடுத்து செல்லும் வழியில் பறவைகளின் அரசனாகிய ஜடாயு சீதையை மீட்க ராவணனுடன் போரிட்டது. அவனால் வெட்டப்பட்டு மரணத்தருவாயில் இருந்தது. சீதையை தேடி அவ்வழியே வந்த ராமலட்சுமணரிடம் சீதையை ராவணன் கடத்தி சென்ற விஷயத்தை தெரிவித்தது. மரணத்தை எதிர் நோக்கி இருக்கும் தனக்கு ராமனே ஈமக்கிரியைகள் செய்ய வேண்டும் எனவும், ஸ்ரீதேவி பூதேவி சமேதராக காட்சி தந்து அருள வேண்டும் எனவும் வேண்டியபடி உயிர் விட்டது. அதன் படி ஜடாயுவை தன் வலது பக்கம் வைத்து தீ மூட்டி ஈமக்கிரியைகளை செய்தார். இதனால் ஏற்பட்ட வெப்பம் தாளாமல் வலப்புறம் இருந்த ஸ்ரீதேவி தாயார் இடப்புறமும், இடப்புறம் இருந்த பூதேவித்தாயார் வலப்புறமும் மாறி அருள் பாலிப்பதாக புராணங்கள் கூறுகிறது. எனவே தான் இங்கு மட்டும் தாயார் சன்னதி பெருமாளுக்கு இடது புறமும், ஆண்டாள் சன்னதி பெருமாளுக்கு வலது புறமும் அமைந்துள்ளது குறிப்படத்தக்கது. ஜடாயுவின் வேண்டுகோளின் படி ராமர் தன் அம்பினால் உண்டாக்கப்பட்ட தீர்த்தத்தில் ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்தார். எனவே இங்கு தீர்த்தம் ஜடாயு புஷ்கரிணி என அழைக்கப்படுகிறது.

பெயர்க்காரணம் : திரு என்றால் மரியாதை. புள் என்றால் ஜடாயு. குழி என்றால் ஈமக்கிரியை செய்தல். ராமர் ஜடாயுவிற்கு இத்தலத்தில் ஈமக்கிரியை செய்ததால் இத்தலம் திருப்புட்குழி ஆனது.
108 திவ்ய தேசங்கள்: அருள்மிகு பரமபதநாதர் திருக்கோயில்

மூலவர்    :     பரமபதநாதர்(வைகுண்ட பெருமாள்)
தாயார்    :     வைகுந்தவல்லி
தீர்த்தம்    :     ஆயிரம் தீர்த்தம்
ஆகமம் பூஜை     :     வைகானஸம்
பழமை    :     2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்    :     பரமேஸ்வர விண்ணகரம்
ஊர்    :     பரமேஸ்வர விண்ணகரம்
மாவட்டம்    :     காஞ்சிபுரம்
மாநிலம்    :     தமிழ்நாடு
 
பாடியவர்கள் : சொல்லுவன் சொற்பொருள் தானவையாய்ச் சுவை யூறாலி நாற்றமும் தோற்றமுமாய் நல்லரன் நான்முகன் நாரண னுக்கிடந்த தான் கடஞ் சூழ்ந்த ழகாய கச்சி பல்லவன் வில்லவ னென்று லகில் பல ராயாப் பல வேந்தர் வணங்கு கழல் பல்லவன் மல்லையர் கோன் பணிந்த பர மேச்சுர விண்ணகர மதுவே. திருமங்கையாழ்வார்.

விழா : வைகாசியில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், வைகுண்ட ஏகாதசி.      
 
திறக்கும் நேரம் : காலை 7.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும், அருள் மிகு வைகுண்ட பெருமாள் சுவாமி திருக்கோயில், பரமேஸ்வர விண்ணகரம் - 631 502. காஞ்சிபுரம் மாவட்டம். போன்:+91- 44 - 2723 5273.     
            
தகவல் : இத்தல பெருமாள் அமர்ந்த, சயன, நின்ற கோலத்தில் அஷ்டாங்க (முகுந்த) விமானத்தின் கீழ் அருள் பாலிக்கிறார். மணல் பாறையில் செய்யப்பட்ட இக்கோயில் சுவாமி கருவறை, முதல் பிரகாரம் ஆகியன குடவறையாக உள்ளது. இக்கோயில் மும்மாடக்கோயில் எனப்படும். முன் மண்டபத்தில் கிழக்கு தனிச்சன்னதியில் தாயார் இருக்கிறார். பிரகாரத்தில் இணைந்திருக்கும் இரண்டு மரங்களுக்கு கீழே ஆதிசேஷன் இருக்கிறார்.

ஸ்தல பெருமை : ஒரு முறை பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முத்தேவியர்களும் ஒன்றாக பூலோகத்திற்கு வந்து தவம் செய்தனர். அவர்களது தவத்திற்கு அத்திரி, பிருகு, காசிபன், கவுண்டில்யன், திரியோரிஷேயன், பரத்வாஜர் ஆகிய ரிஷிகள் உதவி செய்தனர். மூன்று தேவியர்களையும் தேவலோகத்திற்கு அழைத்துச் செல்ல சிவன், மகாவிஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் பூலோகம் வந்தனர். ரிஷிகளின் தவ வலிமையால் தேவியர்களை நெருங்க முடியாத மூவரும், ஒரு கந்தர்வ கன்னியை அனுப்பினர். அவளை கண்ட பரத்வாஜர் காமுற, ஒரு குழந்தை பிறந்தது.  வேடுவ வடிவமெடுத்த மகாவிஷ்ணு, அக்குழந்தைக்கு "பரமேச்சுர வர்மன்' என பெயரிட்டு வளர்த்தார். பிறப்பிலேயே திருமால் பக்தனாக இருந்த பரமேச்சுரனுக்கு ஆய கலைகளையும் கற்றுக்கொடுத்தார். கலைகள் அனைத்தையும் கற்று முடிப்பதற்குள் அவனுக்கு இறுதி காலமும் நெருங்கிவிட்டது.
அவனது ஆயுளை அதிகரிக்க விரும்பிய விஷ்ணு ஒரு சூசகம் செய்தார். எமன் வரும் நேரம் பார்த்து வடக்கு பக்கம் தலைவைத்து படுத்துக் கொண்டார். பொதுவாக வடக்கே தலைவைத்து படுத்தால் ஆயுள் குறையும் என்று சொல்வர்.

மனிதர்களுக்கே இந்த விதி இருக்கும்போது உலகை காக்கும் விஷ்ணு இவ்வாறு படுத்திருக்கிறார் என்றால் என்ன ஆகும்?.   அவரது நிலையைக் கண்ட எமன் ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என எண்ணி அவரருகே வந்து எழுந்திருக்கும்படி வேண்டினான். அவரோ மறுத்தார். காரணம் புரியாமல் அவன் விழித்தபோது, தன் பக்தனது ஆயுளை நீட்டித்தால், தான் எழுந்திருப்பதாககூறினார்.  பக்தனுக்கு இரங்கும் விஷ்ணுவின் கோரிக்கையை ஏற்ற எமன், பரமேச்சுரனின் உயிரை எடுக்காமல் தீர்க்காயுள் கொடுத்து சென்றுவிட்டான். இதைக்கண்ட பரமேச்சுரன் தந்தையாக இருந்த வேடுவரை யார் என கேட்க, அவர் மகாவிஷ்ணுவாக காட்சி கொடுத்தார். மகிழ்ந்த அவன், இவ்விடத்தில் அவரது மூன்று கோலங்களையும் ஒவ்வொரு நிலையில் வைத்து மும்மாடக்கோயிலாக கட்டினான். இப்பரமேச்சுர வர்மன்தான் பல்லவ வம்சத்தின் துவக்கமாக இருந்து ஆட்சி செய்தார் என்றொரு வரலாறும் கூறுகின்றனர். 

மன்னனுக்கு மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார் இத்தலத்து பெருமாளை மங்களாசாசனம் செய்யும் போது "பல்லவர்கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரமதுவே'' என அனைத்து பதிகங்களிலும் பல்லவ மன்னனின் பெருமைகளை சேர்த்து பாடியுள்ளார். மேலும், பல்லவர்களின் போர்புரியும் திறனை குறிப்பிடும்போது அவர்கள் ஒலிக்கும் பறையானது விண் அதிரும்படி இருக்கும் என குறிப்பிட்டிருக்கிறார். இதனாலேயே இத்தலத்திற்கு "பரமேச்சுர விண்ணகரம்' என்ற பெயர் வந்தது என்கின்றனர். திவ்ய தேசங்களில் மன்னனையும் சேர்த்து இத்தலத்தில் மங்களாசாசனம் செய்யப்பட்டிருப்பதால் பல்லவ மன்னனுக்கு விஷ்ணு அருளியதை உறுதிப்படுத்துகின்றனர்.

ஸ்தல வரலாறு : விதர்ப்ப தேசம் எனும் இப்பகுதியை விரோச மன்னன் ஆட்சி செய்து வந்தான். இம்மன்னன் முற்பிறவியில் பெற்ற சாபத்தின் பலனால் புத்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டு குழந்தையின்றி இருந்தான். சிவனின் தீவிர பக்தனான மன்னன், காஞ்சிபுரத்தில் குடிகொண்டிருக்கும் கைலாசநாதரை எண்ணி யாகம் செய்து அவரை வழிபட்டான். மன்னனுக்கு அருள் செய்த சிவன், மகாவிஷ்ணுவின் துவார பாலகர்களாக இருந்த பல்லவன், வில்லவன் ஆகிய இருவரையும் மகனாக பிறக்கும்படி செய்தார். விஷ்ணுவை காக்கும் பணியில் இருந்த இவர்கள் இளவரசர்களாக பிறந்துவிட்டாலும், அவர்மீது கொண்டிருந்த பக்தி மட்டும் குறையாமல் இருந்தனர். நாட்டு மக்களின் நன்மைக்காக விரதங்களைக் கடைப்பிடித்த இவ்விருவரும் விஷ்ணுவை வேண்டி இத்தலத்தில் ஒரு யாகம் செய்தனர். இவர்களது பக்தியில் மகிழ்ந்த மகாவிஷ்ணு, ஸ்ரீவைகுண்டநாதனாக காட்சி தந்தார்.
திவ்ய தேசங்கள் : அருள் மிகு பவளவண்ணபெருமாள் திருக்கோயில்

மூலவர்    :     பவளவண்ணர்
தாயார்    :     பவழவல்லி (பிரவாளவல்லி)
தீர்த்தம்    :     சக்கர தீர்த்தம்
ஆகமம் பூஜை     :     பாஞ்சராத்ரம்
பழமை    :     2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்    :     பிரவாள வண்ணர் ( திருப்பவளவண்ணம்)
ஊர்    :     திருபவளவண்ணம்
மாவட்டம்    :     காஞ்சிபுரம்
மாநிலம்    :     தமிழ்நாடு
 
வங்கத்தால் மாமணி வந்துந்து முந்நீர் மல்லையாய் மதிள் கச்சியூராய் பேராய் கொங்கத்தார் வளங்கொன்றை அலங்கல் மார்வன் குலவரையான் மடப்பாவை யிடப்பால் கொண்டான் பங்கத்தாய் பாற்கடலாய் பாரின் மேலாய் பணி வரையினுச்சியாய் பவள வண்ணா எங்குற்றா யெம்பெருமான் உன்னை நாடி யேழையே னிங்ஙணமே யுழிதருகேனே. திருமங்கையாழ்வார் 

திருவிழா : வைகாசியில் 10 நாட்கள் பிரம்மோற்சவம், பங்குனியில் 5 நாட்கள் பவித்ரஉற்சவம் மற்றும் வைகுண்ட ஏகாதசி.    

திறக்கும் நேரம் : காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.    அருள் மிகு பவளவண்ணப்பெருமாள் சுவாமி திருக்கோயில், திருப்பவளவண்ணம் காஞ்சிபுரம்  631 502. காஞ்சிபுரம் மாவட்டம்      
போன்:+91- 98423 51931.     
            
பொது தகவல் : காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு நேரே கிழக்கு திசையில் இக்கோயில் அமைந்துள்ளது. ஏகாம்பரேஸ்வரரும், பவளவண்ணரும் எதிரெதிரே பார்த்தவாறு இருக்கின்றனர். பிரகாரத்தில் பிரவாளவல்லி தாயார், ஆண்டாள் சன்னதிகள் உள்ளன. ஐந்து நிலை ராஜகோபுரம் உடையது.      
             
பிரார்த்தனை : சக்கர தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கினால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும், பாவத்திற்கு விமோசனம் கிடைக்கும், தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
            
ஸ்தல பெருமை:108 திவ்யதேசங்களில் இங்குள்ள பெருமாள் சிவந்த நிறத்துடன் ஆதிசேஷன் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கிறார்.

கோலம் : மேற்கு நோக்கி வீற்புகோலம்.

ராஜகோபுரம் : ஐந்து நிலை பார்வதிதேவிக்கு இத்தலத்தில் காட்சி தந்துள்ளார். சுவாமியின் அருகில் சந்தான கோபாலகிருஷ்ணர் இருக்கிறார். புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் இவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்கின்றனர். மகாவிஷ்ணு கிருதயுகத்தில் பால் நிறமாகவும், திரேதாயுகத்தில் பவள நிறமாகவும், துவாபாரயுகத்தில் பசுமை நிறமாகவும், கலியுகத்தில் நீலநிறமாகவும் காட்சி தந்தாராம். அவ்வகையில் பார்த்தால் இவர் திரேதாயுகத்தில் அருள் செய்தவராக இருக்கிறார்.

சத்ய க்ஷேத்ரம் : ஒரு சமயம் பிருகு மகரிஷி, மகாவிஷ்ணுவைக் காண வைகுண்டத்திற்கு சென்றார். விஷ்ணு அவரைக் கவனித்தும், கவனிக்காதவர் போல மகாலட்சுமியுடன் பேசிக் கொண்டிருந்தார். தன்னை விஷ்ணு அவமதிப்பதாகக் கருதிய மகரிஷி, அவரது மார்பில் எட்டி உதைத்தார். விஷ்ணுவோ தன்னை மிதித்த பாதம் புண்பட்டதோ என அவரது காலை வருடி விட்டார். தவறை உணர்ந்த பிருகு பூலோகத்தில் பல தலங்களுக்கும் சென்று அவரை வழிபட்டு விமோசனம் தேடிச் சென்றார். இதனிடையே காஞ்சியில் உள்ள "சத்ய க்ஷேத்ரம்' எனும் இத்தலத்திற்கு சென்று மகா விஷ்ணுவை வேண்டினால் விமோசனத்திற்கு வழி கிடைக்கும் என்றார் நாரதர். அவரது ஆலோசனைப்படி இங்கு வந்த பிருகு, சக்கரத்தீர்த்தத்தில் நீராடி விஷ்ணுவை எண்ணி தவம் செய்து வணங்கினார். அவருக்கு காட்சி தந்த விஷ்ணு குறித்த காலத்தில் விமோசனம் அளித்தார். எனவே இந்த முனிவர், கருவறையில் விஷ்ணுவை வணங்கிய கோலத்தில் இருக்கிறார்.

எண்திசை அதிபர்கள் : இங்குள்ள பிரவாளவல்லித் தாயார் சன்னதியின் முன்மண்டப மேற்கூரையில் எட்டு திசை அதிபர்களின் சிற்பங்கள் உள்ளன. இவர்களை வணங்கினால் லட்சுமி கடாட்சம் பெருகும், வீடு, மனையில் உள்ள தோஷங்கள் நீங்கும் என்பதும் நம்பிக்கை. வீடு, கட்டடங்கள் கட்டுவதில் தடை தாமதம் உள்ளவர்கள் இந்த சன்னதியின் கீழ் நின்று வணங்கினாலே தங்கள் குறை தீரும் என்று நம்புகிறார்கள். கோயிலுக்கு முன்பகுதியில் சக்கர தீர்த்தம் உள்ளது. வட்ட வடிவில் சக்கரம் போலவே உள்ள இத்தீர்த்தத்தின் மத்தியில்தான் சுவாமி சக்ராயுதம் கொண்டு அசுரர்களை வதம் செய்தார் என்கின்றனர்.

தல வரலாறு : விஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற சண்டை ஏற்பட்ட போது, அவர்களில் யார் தனது திருவடியையும், திருமுடியையும் முதலில் கண்டு வருகிறார்களோ அவர்களே பெரியவர் என தீர்ப்பளிப்பதாகச் சொன்னார் சிவன். விஷ்ணு திருவடியைக் காணச் சென்றார். அவரால் முடியவில்லை. தோல்வியை ஒப்புக் கொண்டார். பிரம்மாவோ, திருமுடியைக் கண்டுவிட்டதாக பொய் சொல்லி விட்டார். இதனால் சிவசாபம் பெற்று, பூலோகத்தில் கோயிலோ, வழிபாடுகளோ இல்லாமல் ஆனார். எனவே, சிவனை மகிழ்ச்சிப்படுத்தி சாப விமோசனம் பெற, யாகம் ஒன்றை நடத்தினார் பிரம்மன். கணவன், மனைவி இருவரும் இணைந்து நடத்தினால்தான் யாகம் பரிபூரணம் அடையும் என்பது நியதி. ஆனால், பிரம்மாவோ அவரது மனைவி சரஸ்வதி தேவியை அழைக்காமல் தனியே யாகம் செய்தார். இதனால் மனைவியின் அதிருப்தியையும் அடைந்தார். சரஸ்வதி சில அசுரர்களை அனுப்பி யாகத்தை நிறைவேறவிடாமல் செய்தாள். இதனால் கலவரமடைந்த பிரம்மா, சரஸ்வதியை சமாதானம் செய்யும்படி மகாவிஷ்ணுவிடம் வேண்டினார். விஷ்ணுவும் அவ்வாறே செய்து, அசுரர்களை அழித்து, சிதறிய ரத்தத்துடன் பவள நிறமேனியனாக (சிவந்த உடலுடன்) காட்சி கொடுத்தார்.   இதனால் சுவாமிக்கு "பவளவண்ணர்' என்ற திருநாமம் ஏற்பட்டது. இவருக்கு "பிரவாளவண்ணர்' என்றொரு பெயரும் உண்டு. இத்தலம் வந்த ஆதிசேஷன், பவளவண்ணரின் தலைக்கு மேல் குடையாக நின்றார்.
#இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட #வரலாறு...

மறைக்கப்பட்ட வரலாறு...
-----------------------------------
ஆயிரத்தி தொள்ளாயிரத்து நாற்பத்தி ஏழாம் ஆண்டு ஆகஸ்டு பதினைந்தாம் தேதி நாம் எப்படி சுதந்திரம் பெற்றோம். மௌண்ட் பேட்டன், நேருவை அழைத்து உங்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்கப் போகிறோம் அதை எப்படிக் கொடுப்பது என்று கேட்க நேருவுக்கு குழப்பமாக இருந்தது. எதை அடையாளமாக வைத்து சுதந்திரத்தைப் பெறுவது..... (பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கியது என்பதற்கு எந்த சாசனமும் இல்லை).

உடனே நேரு மூதறிஞர் ராஜாஜியை அணுகி எனக்கு இந்த நடைமுறைகள் தெரியாது. அதனால் தாங்கள் தான் தீர்வு கூற வேண்டும் என்று கூற
உடனே ராஜாஜி கவலை வேண்டாம் எங்கள் தமிழகத்தில் மன்னர்களிடம் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது ராஜ குருவாக இருப்பவர் செங்கோலைப் புதிய மன்னருக்குக் கொடுத்து ஆட்சி மாற்றம் செய்வர். நாமும் அன்னியன் கையால் சுதந்திரம் பெறுவதை விட குரு மகானின் கையால் செங்கோலைப் பெற்று ஆட்சி மாற்றம் அடையலாம் என்றார். நேருவும் நேரம் குறைவாக உள்ளது உடனே ஏற்பாட்டை செய்யுங்கள் என்று உத்தரவிட்டார்.

ராஜாஜி உடனே திருவாவடுதுறை ஆதீனத்தைத் தொடர்பு கொண்டு விஷயத்தை சொல்ல அப்போது கடும் காய்ச்சலில் இருந்த ஆதீனம் அவர்கள் உடனே முறையாக செங்கோல் தயாரித்து தங்க முலாம் பூசி இளைய ஆதீனம் தம்பிரான் பண்டார சுவாமிகளிடம் பொறுப்பை ஒப்படைத்து கூடவே ஓதுவார் மூர்த்திகளையும் உடன் அனுப்பி வைத்தார். (தேவாரத்தில் இருந்து கோளறு பதிகம் பதினோரு பாடல்களை குறித்துக் கொடுத்தார். இந்த பாடல்களை அப்போது ஓதுவார் மூர்த்திகள் பாட வேண்டும்.) ராஜாஜி அனுப்பிய தனி விமானத்தில் அவர்கள் செங்கோலுடன் டில்லி போய் சேர்ந்தனர். அப்போது ஆயிரம் ஆண்டு அடிமைத் தளையில் இருந்து பாரதத்தின் விடுதலை பெறும் விழாவிற்காக எல்லோரும் காத்திருந்தனர். அந்த சுதந்திர வைபவ தினத்தில் மௌண்ட் பேட்டனிடம் இருந்து செங்கோலை குரு மகா சன்னிதானம் திருவாவடுதுறை ஆதீனம் தம்பிரான் பண்டார சுவாமிகள் பெற்று செங்கோலுக்கு புனித நீர் தெளித்து ஓதுவார் மூர்த்திகள் வேயிறு தோளிபங்கன் என்று துவங்குகிற தேவார திருப்பதிகத்தைப் பாட பதினோராவது பாடலின் கடைசி வரி "அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே" இந்த வரியைப் பாடி முடிக்கும் போது தான் சுவாமிகள் செங்கோலை நேருவிடத்தில் கொடுத்தார்.

அந்த நிகழ்வைத் தான் நாம் சுதந்திர தினமாகக் கொண்டாடுகிறோம். இந்த நிகழ்வு தமிழுக்கும் தமிழகத்திற்கும் எவ்வளவு பெருமை... இந்த வரலாற்று விஷயத்தை பாடப் புத்தகத்தில் வெளியிட்டு நாடறிய செய்யாமல் சதி செய்யப்பட்டது. நண்பர்களே இவ்வளவு பெருமை வாய்ந்த செய்தியை நாடறியச் செய்வோம். திருவாவடுதுறை ஆதீன மடத்தில் இந்த செங்கோல் வைபவம் கருப்பு வெள்ளை புகைப்படமாக உள்ளது. புகைப்படத்தில் 15:08:1947 என்று தேதியிட்டு இருப்பதையும் நேரு கையில் செங்கோலுடன் இருப்பதையும் தம்பிரான் பண்டார ஸ்வாமிகள் அருகில் உள்ளதையும் இன்றும் திருவாடுதுறை ஆதீன மடத்தில் காணலாம்....
ஆடி மாதத்தின் சிறப்பு

சூடிக் கொடுத்த சுடர் கொடியான ஆண்டாள் அவதரித்த தினம் தான் ஆடி மாதம் பூரம் நட்சத்திரமாகும்.

இன்றைய தினத்தை எல்லா கோயில்களிலும் சிறப்பாக கொண்டாடுவார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வருகிறது. ஆடி மாதத்தில் பூரம் நட்சத்திரமும் வருகிறது. அதில் என்ன சிறப்பு. ஆனால் ஆண்டாள் அவதரித்தபின் தான் அந்த நாளுக்கு தனிச்சிறப்பு ஏற்பட்டது.

ஆண்டாள் பூமித்தாயின் அம்சம் பூமித்தாயே பூமியில் அவதரித்தால் அது சிறப்பல்லவா உயிர்களைக் காக்கும் பொருட்டு ஆண்டாள் இந்த பூவுலகில் அவதரித்து நம்மை கரைசேர்த்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள நந்தவனத்தில் ஒரு துளசிச் செடியின் அடியில் கலியுகம் பிறந்து 98 வதாக வந்த நளவருடம் ஆடிமாதம் வளர்பிறையில் பஞ்சமி திதியும் பூர நட்சத்திரம் கூடிய நன்னாளில் பெரியாழ்வார் ஆண்டாளைக் கண்டெடுத்தார்.

அவளை கோதை என்னும் பெயரிட்டு வளர்த்து வரும்படி வடபெருங்கோயிலுடையானும் அருள் பாளித்தார். அதன்படி கோதையை வளர்ந்து வந்தார் பெரியாழ்வார்.

இந்த கோதை கண்ணனை நினைத்து பாவை நோன்பு நோர்ப்பதாக எழுதிய 30 பாடல்கள் தான் திருப்பாவை.

சூடிக்கொடுத்த சுடர்கொடியான கோதையை கண்ணனே ஆட்கொள்கிறான்.

அன்றைய தினம் கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் நடத்தப்படும்.
-----------------------
அருள் மிகு விநாயகர் திருக்கோயில்

மூலவர் : ஸ்ரீ விநாயகர் (விக்னேஸ்வர்)
உற்சவர் : விக்னேஸ்வர்
பழமை : 500 வருடங்களுக்குள்
ஊர் : ஈச்சனாரி
மாவட்டம் : கோயம்புத்தூர்
மாநிலம் : தமிழ்நாடு

விழா : விநாயகர் சதுர்த்தி ஆவணி மாதம் 2 நாள் திரு விழா, சித்திரைத் திருவிழா 2 நாள் திருவிழா. மாதத்தின் கிருத்திகை, பௌர்ணமி, அமாவாசை, சதுர்த்தி, தமிழ், ஆங்கில வருடபிறப்பு, தீபாவளி, பொங்கல் தைப்பூசம், கார்த்திகை தீபம்  
      
சிறப்பு : 5 அடி உயரமும் 3 அடி பருமனும் கொண்ட பிரம்மாண்ட விநாயகர்.  
      
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு விநாயகர் திருக்கோயில், ஈச்சனாரி : 641021, கோயம்புத்தூர், போன் : 422 - 267 2000, 267 7700. 

பிரார்த்தனை : விநாயகரை மனமுருக வேண்டிக்கொண்டால் எடுத்த காரியம் தடங்கல் நீங்குகிறதாக இத்தலத்துக்கு தொடர்ந்து வரும் பக்தர்கள் கூறகிறார்கள். மேலும் தங்கள் குழந்தைகள் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குவதற்காகவும், படிப்பில் மிக உயர்ந்த நிலையை அடைவதற்காகவும் இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் வேண்டிக்கொள்கின்றனர். இவை தவி வியாபார விருத்தி, தொழில் மேன்மை, உத்தியோக உயர்வு ஆகியவையும் வேண்டி இத்தலத்து விநாயகப் பெருமானை வணங்கினால் நிச்சயம் பிரார்த்தனை நிறைவேறுகிறது.
 
நேர்த்திக்கடன் : சிதறு தேங்காய் போடுதல், கொழுக்கட்டை படைத்தல், அருகம்புல் மாலை சாத்துதல், பாலாபிஷேகம் செய்தல் முதலியன. இவை தவிர சதுர்த்தி விரதம் இருத்தல், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல், திருப்பணிக்கு பொருளுதவி செய்தல் ஆகியவை இத்தலத்துக்கு வருபவர்கள் நேர்த்திகடன்களாக செய்கிறார்கள். 
     
தலபெருமை : இத்திருக்கோயிலில் அஸ்வினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களுக்கும் ஒவ்வோர் விதமான அலங்காரம் செய்யும் நட்சத்திர அலங்கார பூஜை மிகவும் சிறப்பான ஒன்றாகும். திருக்கோயில் தினப்படி பூஜைக்கு வேண்டிய பால், பன்னீர், சந்தனம், குங்குமம், மலர் மற்றும் மின் கட்டணம் போன்றவைகளும் கட்டளைதாரர்களைக் கொண்டே நடத்தப்பட்டு வருகிறது. 5 அடி உயரமும் 3 அடி பருமனும் கொண்ட பிரம்மாண்ட விநாயகர் அமைந்த அற்புதமான திருத்தலம். கோவை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற விநாயகர் திருக்கோயில். நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து போகும் சிறப்புபெற்ற விநாயகர் திருத்தலம்.
 
தல வரலாறு : மேலைச் சிதம்பரம் என போற்றப்படும் பேரூர் பட்டீஸ்வர சுவாமி திருக்கோயிலில் பிரதிஷ்டை செய்ய 5 அடி உயரமும், 3 அடி பருமனும் கொண்ட விநாயகர் விக்ரகத்தை மதுரையில் இருந்து வண்டியில் எடுத்து வரும் வழியில் அச்சு ஒடிந்து தற்போது எழுந்தருளியுள்ள இடத்திலேயே அமர்ந்து விட்டதாகவும் பின்னர் பேரூர் எடுத்துச் செல்ல முயன்றும் இயலாமல் போய் விட்டதாம். காஞ்சி சங்கராச்சாரியார் அவர்கள் அருள் வாக்குப்படி இச்சிலை இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டதாம் இவ்வாறு விநாயகர் எழுந்தருளியுள்ள இடமே ஈச்சனாரி விநாயகர் திருக்கோயிலாக புகழ் பெற்று விளங்குகிறது.
திருஷ்டி கழிக்க என்ன செய்ய வேண்டும்?

திருஷ்டி என்பது மற்றவர்களின் தீய எண்ணங்களால் நாம் சூழப்பட்டிருப்பது. த்ருஷ் எனில் பார்த்தல். நம்மை சிலர் நோக்கும் போது நமது வளர்ச்சியைக் கண்டு பொறாமை கொண்டார்கள் எனில் அவை நம்மை தாக்கக்கூடும். தற்காலத்தில் உளவியல் அறிஞர்கள்கூட பாசிட்டிவ் திங்கிங், நெகட்டிவ் திங்திங் என எண்ணங்களின் தன்மைகளைப் பிரித்து இருக்கிறார்கள். மற்றவர்கள் இப்படித்தான் நினைக்க வேண்டும் என்று நாம் கட்டளை இடமுடியாது. எனினும் மழை பெய்தால் நாம் ஒரு குடையை பிடித்துக்கொண்டு நம்மை தற்காத்துக் கொள்கிறோமோ அது போன்று நமது புருவ மத்தியில் தூய மஞ்சளினால் ஆன குங்குமத்தை வைத்துக் கொள்ளுதல் பெண்கள் சிறப்பாக மஞ்சள் தேய்த்து நீராடுதல் வீட்டு நிலைக்காலில் மஞ்சள் போன்ற மங்கள சின்னங்களை வைத்தல் பார்த்தவுடன் மற்றவர்களின் மனதில் மாற்று எண்ணம் வருவதுபோல் நமது வீட்டுவாசலில் பொம்மைகள், படங்கள் வைப்பது, பூசணிக்காய், தேங்காய், எலுமிச்சம்பழம் போன்றவற்றை வைப்பது இப்படி பல வழிமுறைகள் தீய த்ருஷ்டியை போக்குவதற்கும் நம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் நாம் பயன்படுத்தி வருகிறோம். இவற்றில் ஒன்றுதான் மேலே குறிப்பிட்டுள்ளது. தந்திர சாஸ்திரங்களிலும் பெரியோர்களின் பழக்க வழக்கங்களினாலும் அந்தந்த ஊர்களில் இருக்கக்கூடிய வழக்கங்களிலும் உள்ளவற்றைக் கடைப்பிடிக்கலாம். இவற்றைத் தவிர நாம் முக்கியமாகக் கொள்ள வேண்டியது கடவுளின் மீது முழு நம்பிக்கை வைத்து நாம் மற்றவர்கள் மீது பொறாமைப்படாமல் இருப்பது எண்ணம் போல் வாழ்வு என்பதுபோல் நாம் தூய எண்ணத்துடன் நமது வாழ்க்கையை அமைத்துக் கொண்டோமானால் சூரியனைக் கண்ட பனி போல எப்படிப்பட்ட தீய சக்திகளும் நம்மை அண்டாத வண்ணம் கடவுள் நம்மைக் காப்பாற்றுவார்.
-----------------------