திங்கள், 3 டிசம்பர், 2018

சாப்பாடு விஷயத்தில் சாஸ்திரம்!!
==========================

தனக்குத்தானே சாதமிட்டு கொள்வது ஆயுளைக் குறைக்கும்.

 இஞ்சி, பாகற்காய், கஞ்சி, கட்டித்தயிர், கீரை, நெல்லிக்காய் இரவில் சாப்பிடக்கூடாது. 

சாப்பிட்டால் லட்சுமி அவ்வீட்டில் வாசம் செய்யமாட்டாள்.
 பால்சோறு சாப்பிடலாம்

 கிழக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் ஆயுள் வளரும்.

 மேற்கு நோக்கினால் பொருள் சேரும்.

 தெற்கு நோக்கினால் புகழ் வளரும்.

 வடக்கு மட்டும் கூடாது. நோய் வரும்.

 சாதம், நெய், உப்பு ஆகியவற்றை கையால் எடுக்கக்கூடாது. கரண்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
தல வரலாறு :

ஜமத்கனி முனிவர் – ரேணுகாதேவி தம்பதியரின் கடைசி மகனாகப் பிறந்தவர் ராமர். விஷ்ணுவின் ஆறாவது தோற்றமாகக் கருதப்படும் அவர், சிவபெருமானை வழிபட்டு, அவரிடமிருந்து ‘பரசு’ எனும் கோடாரியைப் பெற்றதால் ‘பரசுராமர்’ என்று அழைக்கப்பட்டார்.

 ஒரு நாள் ரேணுகாதேவி ஆற்றில் குளிக்கச் சென்றார். அவர் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கிய போது, வானத்தில் சென்று கொண்டிருந்த ஒரு கந்தர்வனின் நிழல், அந்த ஆற்று நீரில் தெரிந்தது. ஆற்று நீரில் தெரிந்த நிழல் உருவத்தைப் பார்த்து அவர் வியப்படைந்தார். இந்தக் காட்சி தியானத்திலிருந்த ஜமத்கனி முனிவரின் மனதில் தோன்றி மறைந்தது.

உடனே ஜமத்கனி முனிவர், தனது மகன் பரசுராமரை அழைத்து, ‘உன் தாய், கந்தர்வன் ஒருவனைப் பார்த்து மயக்கம் கொண்டு விட்டாள். உடனடியாக அவளைக் கொன்று விட்டுத் திரும்பி வா’ என்று ஆணையிட்டார். தந்தையின் ஆணையைக் கேட்டப் பரசுராமர், தனது தாய் என்றும் பாராமல் ரேணுகா தேவியைக் கொன்று விட்டுத் திரும்பினார்.

திரும்பி வந்த அவர், ‘தந்தையே, தங்களின் ஆணைப்படி நான் தங்களது மனைவியைக் கொன்று விட்டேன். ஆனால், தற்போது நான் தாயை இழந்து நிற்கிறேன். என் மனம், தாயன்பை வேண்டித் தவிக்கிறது. என் தாயின் உடலை உயிர்ப்பித்துத் தந்திட வேண்டும்’ என்று வேண்டினார்.

ஜமத்கனி முனிவரும், தான் சொன்னதைக் கேட்டு எந்த மறுப்பும் சொல்லாமல், தன் தாயையே கொன்று திரும்பிய மகனின் வேண்டுகோளை நிறைவேற்ற முன் வந்தார். உடனே அவர், தன் மனைவியின் உடலுக்கு உயிர் கொடுத்து, முன்பு போலவே திரும்பி வரச் செய்தார்.

பின்னொரு நாளில் ஜமத்கனி முனிவருடன் பகை கொண்டிருந்த அரசன் ஒருவன், யாருமில்லாத வேளையில் ஆசிரமத்துக்குச் சென்று, கண்களை மூடி தியானத்தில் இருந்த ஜமத்கனி முனிவரைக் கொன்றுவிட்டு தப்பிச் சென்று விட்டான். இதனையறிந்த பரசுராமர், அந்த அரசனைத் தேடிச் சென்று கொன்றார். அத்துடன், அரச குலத்தினர் அனைவரையும் தானே அழிப்பதாகச் சபதம் செய்தார். அதே வேளையில், திருமணம் செய்து கொண்டிருக்கும் அரசர்களை மட்டும் ஒரு வருடம் வரைக் கொல்வதில்லை என்று முடிவு செய்து கொண்டார்.

தான் செய்த சபதத்தின்படி அரச குலத்தைச் சேர்ந்த பலரையும் தேடிச்சென்று, அவர்களுடன் சண்டையிட்டு, அவர்களை அழித்துக் கொண்டிருந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, தன் தாயைக் கொன்றது, அரசர்களைப் போட்டியிட்டுக் கொன்றது போன்ற செயல்கள் அவரது மனதில் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தி, அவருக்குப் பெரும் துன்பத்தைத் தந்தது.

அந்த துன்பத்திலிருந்து விடுபட விரும்பிய அவர், இனி எவருடனும் போர் செய்ய வேண்டாம் என்று முடிவெடுத்து, இறைவழிபாட்டில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். தான் செல்லும் இடங்களிலெல்லாம் இறையுருவங்களை நிறுவி, அதற்குச் சிறப்பு வழிபாடுகளைச் செய்தபடி பயணித்துக் கொண்டிருந்தார்.

அப்படி ஒருநாள், கேரள மாநிலத்தில் ஓடிக்கொண்டிருந்த கரமனை ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தார். அந்த ஆற்றில் அவருக்குச் சிவலிங்கம் ஒன்று கிடைத்தது. அந்தச் சிவலிங்கத்தை ஆற்றின் கரைப்பகுதியில் நிறுவி வழிபாடு செய்யத் தொடங்கினார். அப்போது அவர், தன் தாயைக் கொன்ற பாவம், பல அரசர்களைக் கொன்ற பாவமெல்லாம் நீங்கியதாக உணர்ந்தார்.

அந்தக் கோவிலிலேயே தன் தாயின் ஆன்மா உயர்வுக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் ஆன்மா அமைதி வழிபாட்டுச் சடங்கினைச் (பிதுர் தர்ப்பணம்) செய்தார். அந்தச் சடங்கிற்குப் பின்பு, அவருடைய அம்மாவின் ஆன்மா உயர்வு கிடைத்தது தெரிந்து மகிழ்ந்தார். அவருக்கு ஏற்பட்டிருந்த மன வருத்தமெல்லாம் மறைந்து போனது.

பரசுராமர் சிவபெருமானை வழிபட்ட இடத்தில், அவரது பாதம் பொறிக்கப்பட்ட பீடம் ஒன்று இருக்கிறது. இந்தப் பீடத்தின் அருகில் பரசுராமர் கோடாரியுடன் நிற்கும் சிலை ஒன்று இருக்கிறது. இங்குள்ள பீடத்திற்குத் தினசரி வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

கோவில் அமைப்பு :

கரமனை ஆறு, கிள்ளியாறு, பார்வதிபுத்தனார் ஆறு ஆகிய மூன்று ஆறுகள் சேருமிடத்தில் அமைந்திருக்கும் இந்தக் கோவிலில் சிவன், விஷ்ணு, பிரம்மா என மூவருக்கும் தனித்தனி சன்னிதிகள் இருக்கின்றன. இங்குள்ள சிவ பெருமானை பரசுராமரும், விஷ்ணுவின் தோற்றமான வேதவியாசரை விபா கரண முனிவரும், பிரம்மாவை ஆதிசங்கரரும் நிறுவினர் என்று இக்கோவிலுக்கான தல வரலாறுகள் தெரிவிக்கின்றன. இக்கோவில் வளாகத்தில் பகவதி, கணபதி ஆகியோருக்கும் சிலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

ஆலயம் தினமும் அதிகாலை 5 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் தினசரி வழிபாட்டுக்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. ஆலயத்தில் ‘திருவோணம் ஆறாட்டு’ மற்றும் ‘பரசுராமர் ஜெயந்தி’ எனும் இரு விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

இத்தலத்தில் பரசுராமர் தனது தாயின் ஆன்மா உயர்வுக்கான வழிபாட்டினை (பிதுர் தர்ப்பணம்) செய்திருக்கிறார். இதே போல் ஆதிசங்கரர் அவருடைய தாய் ஆரியாம்பாளின் ஆன்மா உயர்வுக்கான வழிபாட்டினைச் செய்திருக்கிறார். இதனால், இக்கோவில் ஆன்மா உயர்வுக்கான வழிபாட்டிற்கும் (பலி, கர்மம், பிதுர் தர்ப்பணம்), கொடிய மரணமடைந்தவர்களின் ஆன்மா அமைதிக்கான வேள்விக்கும் (தில ஹோமம்) சிறந்த இடமாகக் கருதப்படுகிறது.

இங்கு தினசரி காலை 6 மணி முதல் 10 மணி வரை ஆன்மா உயர்வுக்கான சிறப்பு வழிபாடும் (பலி, கர்மம், பிதுர் தர்ப்பணம்), காலை 6 மணி முதல் 10.30 மணி வரை கொடிய மரணமடைந்தவர்களின் ஆன்மா அமைதிக்கான சிறப்பு வேள்வியும் (தில ஹோமம்) நடத்தப்படுகின்றன.

இங்குள்ள விஷ்ணுவின் தோற்றத்திலான வேதவியாசர் சன்னிதியில், குழந்தைகள் கல்வியில் சிறப்பு பெற்றிட வேண்டிச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. அருகிலுள்ள பிரம்மன் சன்னிதியில் நோயற்ற நீண்ட கால வாழ்க்கை வேண்டி வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இங்குள்ள பரசுராமர் பாதம் பொறிக்கப்பட்ட பீடத்தின் முன்பாக, அமைதியான மனநிலை அளிக்க வேண்டிப் பலரும் வணங்கிச் செல்கின்றனர்.

பிதுர் தர்ப்பணம் :

முன்னோர்களில் மூன்று தலைமுறையினர்களின் உயர்வுக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் செய்யப்படும் சடங்கை, ‘பிதுர் தர்ப்பணம்’ என்று சொல்கின்றனர். பிதுர் உலகத் தேவதைகளான வசு, ருத்ர, ஆதித்யர்களை எள் மற்றும் தண்ணீரால் நினைத்துக் கொண்டு இந்தச் சடங்கு செய்யப்படுகிறது. இந்தச் சடங்கின் முடிவில் எள் கலந்தத் தண்ணீர், இறந்தவர்கள் பூவுலகில் செய்த செயல்பாடுகளுக்கேற்பத் தற்போதடைந்திருக்கும் நிலையில் அமிர்தமாகவோ, நெய்யாகவோ, தண்ணீராகவோ, பாலாகவோ, புல்லாகவோ, ரத்தமாகவோ மாறி, அவர்கள் பெற்றுக் கொள்ளும்படியாக வேண்டிக் கொள்ளப்படுகிறது. இதன் மூலம் அந்த ஆன்மா மகிழ்ச்சியையும், உயர்வையும் அடையும் என்பது இச்சடங்கின் நம்பிக்கை.

திருவல்லம் பெயர்க் காரணம் :

திருவல்லம் பரசுராமர் கோவில் விஷ்ணுவின் தலைப்பகுதியாகவும், திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோவில் விஷ்ணுவின் உடல் பகுதியாகவும், திருவனந்தபுரம் அருகே உள்ள திருப்பாதபுரம் கோவில் விஷ்ணுவின் கால் பகுதியாகவும் விளங்குவதாக ஐதீகம். ஒரே நாளில் இம்மூன்று தலங்களுக்கும் சென்று இறைவனை வணங்குவது அனைத்து நலன்களையும், வளங்களையும் தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

முற்காலத்தில் திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமியின் தலைப் பகுதி தற்போது திருவல்லம் என்றழைக்கப்படும் பகுதி வரை நீண்டிருந்ததாம். எனவே திருவல்லம் என்ற இடத்தை தமிழில் ‘தலை’ என்று பொருள் தரும் மலையாள மொழிச் சொல்லான ‘வல்லம்’ என்ற பெயரில் அழைத்தனர். இறைவனின் தலைப்பகுதி என்பதைத் தெரிவிக்கும் விதமாகத் ‘திருவல்லம்’ என்கின்றனர். திருவனந்தபுரம் பத்மநாபரை நிறுவிய வில்வ மங்களம் சுவாமிகள் செய்த வழிபாட்டால், திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமியின் உருவம் தற்போது உள்ள அளவுக்குச் சுருங்கிப் போய் விட்டதாக இக்கோவிலின் தல வரலாறுகளில் சொல்லப்பட்டிருக்கின்றன.

அமைவிடம் :

கேரள மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரம் நகரிலிருந்து கோவளம் கடற்கரைக்குச் செல்லும் புறவழிச் சாலையில் ஆறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது திருவல்லம் திருத்தலம்.
றந்தவர்களின் ஆன்மா உயர்ந்த நிலையை அடையவும், கொடிய மரணமடைந்தவர்களின் ஆன்மா அமைதியடையவும் சிறப்பு வழிபாடுகளைச் செய்யச் சிறந்த தலமாகக் கேரள மாநிலம், திருவல்லம் பரசுராமர் கோவில் அமைந்திருக்கிறது.

திங்கள், 12 நவம்பர், 2018

எட்டுக்குள் ஒரு யோகா" !!!
 (முழுவதும் படியுங்கள்)

 "எட்டு" போடுகிறவனுக்கு "நோய்"
எட்டிப் போகும் என்பது ஒரு பழமொழி.

மனித உடல் அவரவர் கை அளவுக்கு எண்ஜான் அளவுமட்டும் இருக்கும் !!

உங்கள் வீட்டின் உள்ளோயோ அல்லது மாடியிலோ இடம் தேர்வு செய்து,
6 க்கு 12 அடி அல்லது 8 க்கு 16 அடி அளவில் செவ்வக கோடு இட்டு  அதற்குள் 8 வடிவில் வரைந்து கொள்ளுங்கள் !! இது தெற்கு வடக்காக நீளப் பகுதி இருக்கணும். காலை அல்லது மாலை, வடக்கு நோக்கி நின்று அந்த எட்டு வடிவ கோட்டின் மேல் உங்கள் நடை பயிற்சியை ஆரம்பியுங்கள். ஆண்கள் வலது கை பக்கம் பெண்கள் இடது கை பக்கமும் நடக்க ஆரம்பிக்கணும். ஆரம்பித்த இடத்திற்கே வந்த பின் அதே வழியில் தொடர்ந்து 21 நிமிடம் நடக்கணும். பின்பு மறுமுனையில் தெற்கு நோக்கி நின்று  இதேபோல் 21 நிமிடம் கையை நன்கு விசிறி மிதமான வேகத்தில் நடை பயிற்சி செய்யணும், 42 நிமிடம்.

1. பயிற்சி தொடங்கிய அன்றமார்பு சளி கரைந்து வெளியேறுவதை காணலாம்.
2. இந்த பயிற்சியை இருவேளை செய்துவந்தால் உள்ளங்கை கை விரல்கள் சிவந்திருப்பதை காணலாம். அதாவது ரத்த ஓட்டத்தை சமன் படுத்துகிறது என்று அர்த்தம்.
3. நிச்சயம் நீரிழவு நோய் (சர்க்கரை வியாதி) குறைந்து முற்றிலும் குணமாகும். (பின்னர் மாத்திரை,
மருந்துகள் தேவை இல்லை)
4. குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி, மலச்சிக்கல் போன்றவை தீரும்.
5. கண் பார்வை அதிகரிக்கும். ஆரம்ப நிலை கண்ணாடி அணிவதை தவிர்க்கலாம்.
6. கேட்கும் திறன் அதிகரிக்கும்.
7. உடல் சக்தி பெருகும் ஆதார சக்கரங்கள் சரியாக செயல்படும்.
8. குடல் இறக்க நோய் வருவதை தடுக்கும்.
9. ரத்த அழுத்தம் நிச்சயமாக கட்டுப்பாட்டில் வரும்.
10. பாத வலி, மூட்டுவலி மறையும்.
11. சுவாசம் சீராகும் அதனால் உள் உருப்புக்கள் பலம் பெரும்.

சரி! இதெப்படி நடக்கிறது என்று உங்களுக்குள் கேள்வி ஏழும். "8" வடிவில் நடை பயிற்சி செய்யும் பொழுது நீங்களே உணர்வீர்கள்.. அந்த வடிவம் "முடிவில்லாதது" மட்டுமல்ல நமது ஆதார சக்கரங்களை தட்டி எழுப்பி சம நிலை படுத்துகிறது என்பதை நமக்கு உடல் பயிற்சியாக சொல்லித்தந்தனர் சித்தர்கள்.

விருப்பம் உள்ளவர்கள் முயற்சி செய்து பலனடையுங்கள். நோய் இருப்போரும் நோய் இல்லாதோரும் இந்த 8 வடிவ நடை பயிற்சி செய்யலாம்.

1வது 21 நாளில் ---- சர்க்கரை நோயால் வரும் உள்ளங்கால் எரிச்சல், குதிவாதம், வடகலை நாடி இடகலை நாடி புத்துயிர் பெரும் !!!

2 வது 21 நாளில் ---- மூட்டு வலி, ஒட்டுக்கால், பிரச்னை குறையும் ,!!!!

3 வது 21 நாளில் ---- தொடை பகுதி பலம் பெரும் ,!!!!

4 வது 21 நாளில் ---- ஆண்மை குறைபாடு, விதைப்பை குறைபாடு சர்க்கரை நோய் அளவு, விந்து நாத அணு குறை பாடு, கல்லீரல் மண்ணீரல் குறைபாடு, கர்ப்பபை குறைபாடு குழந்தை பேறின்மை, மாத நாள் குறைபாடு, ஆண் பெண் இல்லற நாட்டமின்மை நீங்க ஆரம்பிக்கும் .!!!

5 வது 21 நாளில் ---- வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் குறையும் !!!!,

6 வது 21 நாளில் --- இரத்த அழுத்தம், இதய நோய், ஆஷ்துமா, காசம், நீர் உடம்பு, உடல் அதிக எடை குறைய ஆரம்பிக்கும் !!!!

7 வது 21 நாளில் --- தொண்டை பகுதி பிரச்சனைகள், அடிக்கடி கழுத்து பிடிப்பு, முதுகில் வாய் பிடிப்பு வராது.

8 வது 21 நாளில் --- அன்னாக்கு பகுதி விழிப்படையும், வாய் கண் காது மூக்கு கருவிகள் நோய் தன்மை தாக்காது, இரண்டு நாசியிலும் சுவாசம் ஒரே நேரத்தில் ஓடும், மூளைப் பகுதி விழிப்படையும், மூளைப் பகுதி நோய் தீரும்.

 இதை செய்ய வயது வரம்பு இல்லை, இப்பயிற்சி "வாசி யோக"த்திற்கு இணையானது இந்த எட்டு  நிலைகளில் உங்களின் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து உயிர், மனம் உடல் ஒன்றாகி காலன் தள்ளி நிர்ப்பான். மெளனமாக நடக்கணும் அல்லது ஏதாவது இறை நாமத்தை மனதில் செபித்தவாறு நடக்கணும் வாய் வழியாக சுவாசம் கூடாது !!!!

ஞாயிறு, 11 நவம்பர், 2018

ருத்ர வீணை

இது பெரும்பாலும் ஹிந்துஸ்தானி சங்கீததின் ஒரு வகையான துருபத் எனும் இசையை இசைக்க உபயோகப்படுத்தப்படுகிறது. இதற்கும் சரஸ்வதி வீணைக்கும் உள்ள வித்தியாசங்களை பார்தோமென்றால்,சரஸ்வதி வீணையில் குடங்கள் வெவ்வேறு அளவுகளில் இருக்கும் ஆனால் ருத்ர வீணையில் இரண்டு பக்கமும் சம அளவுள்ள காய்ந்து போன பூசனிக்காய்கள் பொருத்தப்பட்டிருக்கும். சரஸ்வதி வீணையில் உள்ளது போலவே இந்த வீணையிலும மெட்டுகள் பொருத்தப்பட்டிருக்கும் (அதாங்க!!அந்த தாயக்கட்டைகள்!! :-)
இந்த வீணையை வாசிக்கும் விதமே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். தண்டியின் ஒரு பகுதியில் உள்ள குடத்தை தோளின் மேல் இருத்திக்கொண்டு இந்த வகையான வீணையை வாசிப்பார்கள். இந்த இந்த வகை வீணைகள் இப்பொழுதெல்லாம் அவ்வளவாக பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் இந்தியாவின் மிக பழமையான இசை கருவிகளில் ருத்ர வீணையும் ஒன்று.

நாதத்திலிருந்தே எல்லாம் வந்தது. ஸப்த ஸவரங்களும் ஸப்த மண்டலங்கள்,ஸப்த ரிஷிகள், ஸப்த தாதுக்களாய் வந்ததாகச் சொல்வார்கள். இந்த பிரபஞ்சத்தில் அசையும், அசையாத எல்லாப் பொருள்களிலும் ஏதோ ஒரு ரீங்காரம் இசையாய் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.இசை நாடி நரம்புகளிலெல்லாம் ஊடுருவிச் சென்று மூளையை அடைந்து உணர்வுகளை மாற்றி விடும் வல்லமை உடையது.

மலையாளத்தில் தெருவ கீதங்கள் என்ற படத்தில் உள்ள இரண்டு ஜேசுதாஸ் பாடல்களை மொட்டை மாடியிலோ, தோட்டத்திலோ அமர்ந்து கொண்டு ஒலிக்கச் செய்தால் காற்றே இல்லாத நேரத்தில் கூட மெல்லிய தென்றல் காற்று வந்து உங்களைத் தழுவுவதை உணர முடியும். அமிர்த வர்ஷினி பாடினால் மழை வரும் என்கிறார்கள். வந்தது, அது ஒரு காலம். இப்போது காற்று மண்டலம் எங்கும் ஒலி, ஒளி அதிர்வுகளும், அலைகளும் குறுக்கிடுவதால் அதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவே. செல் போன் டவரில் இருந்து வரும் கதீர் வீச்சுகளால் குருவி முட்டை குஞ்சு பொரிப்பதற்கு முன்பே உடைந்து போய் குருவிகளின் எண்ணிக்கை கனிசமாகக் குறைந்து விட்டதல்லவா ? அதுபோல எத்தனையோ குறுக்கீடுகள் இசை அலைகளை வெகு தூரம் சென்று இலக்கை அடையவிடாமல் தடுத்து விடுவதாகச் சொல்லப்படுகிறது.

இயற்கையின் வடிவான இறைவனை ஆராதிக்கவும், அந்த ஆராதனையின் மூலம் உயிர்களை மகிழ்விக்கவும், அவற்றின் மனதை அமைதிப்படுத்தவும் இசைக் கருவிகள் தோன்றின. ஆதியிலிருந்தே எண்ணற்ற இசைக் கருவிகள் உருவாகியும், இடையில் அழிந்தும் மீண்டும் உயிர் பெற்றும் சிறப்புச் செய்திருக்கின்றன. தோல் வாத்தியங்கள், தந்தி வாத்தியங்கள், காற்று வாத்தியங்கள், உராய்வு வாத்தியங்கள் போன்ற எண்ணற்ற வாத்தியங்கள் இசை உலகில் ஆதிக்கம் செலுத்தி வந்திருந்தாலும், தந்தி வாத்தியங்கள் இவற்றில் தனி ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளன. தந்தி வாத்தியங்கள் அனைத்தும் யாழ் வகையைச் சேர்ந்தவைகளே. 200 தந்திகள் கொண்ட யாழ் கூட இருந்ததாகச் சொல்வார்கள். அப்படிப்பட்ட அதிசயமான யாழ் வகைகள் ஏதும் இப்போது இல்லை என்பது வேதனையான விஷயம்.

இதில் வீணை என்பது மிகவும் அற்புதமான வாத்தியம். மனித உடலையும் வீணையையும் ஒப்பிட்டு பேசுவார்கள். வீணையின் நடுவே நீளமாக காணப்படும் பகுதி மனிதனின் முதுகுத்தண்டாகவும், குடத்தை தலையாகவும், சிம்ம முகத்தை மூலாதாரமாகவும், தந்திகளை நரம்புகளாகவும், தந்திகளை இழுத்து சரி செய்வதை யோகப் பயிற்சியாகவும் கூறுவார்கள். நன்கு சுருதி சேர்தந்து வைக்கப்பட்டுள்ள வீணை அருகில் ஒலிக்கும் ஒலியை அதிர்வுகளாய் வெளிப்படுத்தும். அது போல யோகப் பயிற்சியில் சிறந்தவர் அருகில் உள்ளவர்களின் உணர்வுகளை உணர்ந்து விடுவார் என்று சொல்வார்கள். வீணையை இசைப்பவரின் பிராண சக்தி அந்த வீணையில் ஓடிக் கொண்டே இருப்பதாகச் சொல்வார்கள். வீணைகளில் எண்ணற்ற வீணைகள் இருந்தாலும், மூன்றுவிதமான வீணைகள் அங்கங்கே வாசிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் இந்திய தேசத்தை பாரம்பரியமாகக் கொண்டவை. ருத்ர வீணை, விசித்திர வீணை, சரஸ்வதி வீணை போன்றவைகளில் தென் இந்தியாவில் சரஸ்வதி வீணையே பெரும்பாலும் வாசிக்கப்படுகிறது.

மந்திர உபாசணைகளால் எத்தனைவிதமான சித்திகளைச் செய்ய முடியுமோ, அத்தனையையும் வீணையை இசைத்து ராக ஆலாபணைகளால் செய்ய முடியும். இதற்கு இராவணனை உதாரணமாகச் சொல்வார்கள்.குதிரை முக தேவர்கள் மூலம் யாழ், நாரதர்கள் வழியாக தும்புறுஎன்கிற தம்புரா, கலைவாணி இசைக்கும் ஸாரஸ்வத வீணா போன்ற இசைக் கருவிகள் எல்லாம் தேவர்களால் மனிதர்களுக்கு அருளப்பட்டது என்ற நம்பிக்கை உண்டு. இறைவனால் வழங்கப்பட்ட 64 தந்திரக்கலைகளில் கந்தர்வ தந்திரம், ருத்ரயாமளம், யக்ஷிணிதந்திரம், வீணா என்ற தந்திரங்கள் யாவும் இசையைப் பற்றியதே. இந்தத் தந்திரங்களை உபாசிப்பவர்களுக்கு இசை ஞானமும், இசைக் கருவியும் இறைவனால் வழங்கப்படும் என்று தந்திர சாஸ்திரம் சொல்கிறது.

துருபதம் என்ற பண்டைய இசைப் பாரம்பரியம் 19 ஆம் நூற்றாண்டு வரை காணப்பட்டது. அவர்கள் இசைக்கும் வீணை ருத்ர வீணையாகும். அது இறைவன் தந்தது என்றும் இறைவனின் வடிவமாகும் என்றும் எண்ணற்ற அதிசயங்களை ராக ஆலாபணைகளால் செய்யக் கூடியது என்றும் சொல்வார்கள். இதன் அமைப்பும், வடிவமும் வித்தியாசமாக இருப்பதோடு இதன் மீட்டல் லயம் நீண்ட நேரத்திற்கு இன்பம் தருபவையாக இருக்கும் எனச் சொல்லப்பட்டுள்ளது. தேக்கு மரத்தாலானது. இரண்டு குடங்களும் பதப்படுத்தப்பட்ட பூசணிக் காயால் ஆனது. இது 22 உலோகக் கட்டைகளும், ஏழு தந்திகளையும் உடையது. விசித்திர வீணையும் ருத்ர வீணையைப் போன்ற தோற்றத்தையே பெற்றிருக்கிறது. ஆனால் 16 தந்திகளையே கொண்டுள்ளது. அதில் 6 முக்கியமான தந்திகள். இதில் உலோகக் கட்டைகள்(frets) கிடையாது. மனிதன் பேசுவது போலக் கூட இதில் இசைக்க முடியும். தென்னிந்தியாவில் பிரபலமானது ஸரஸ்வத வீணை. இது பலா மரத்தின் ஒரே கட்டையால் செய்யப்படுகிறது. இதில் 24 உலோகக் கட்டைகள் உண்டு. 7 தந்திகளும் உண்டு. இதில் 4 மீட்டுவதற்கும், 3 தாளத்திற்கும் பயன்படும். இதில் இடது பக்கம் காணப்படும் சிறு பானை போன்ற அமைப்பு வடிவத்திற்காகவும், லாவகமாகக் கையாள்வதற்காக மட்டுமே.

எண்ணற்ற தேவ வாத்தியங்களும், இசைக் கருவிகளும் காலத்தால் அழிந்து விட்டாலும், இருக்கும் சிலவற்றையாவது காப்பாற்றும் கடமை நமக்கும் உள்ளது. ஏனெனில் தேவ வாத்தியங்களில் இறை சக்தி உள்ளது. அது எல்லா நிலைகளிலும் மக்களைக் காத்திருக்கின்றன என்பதை புராணங்கள் வாயிலாக அறிகிறோம். இதை அறிவுறுத்தவே எல்லா தெய்வவடிவங்கள் கைகளிலும் ஏதாவது ஒரு வாத்தியக் கருவி காணப்படுகிறது.
சாஸ்தா வழிபாடு!

அஷ்டசாஸ்தா வழிபாடு-1

யுகம் கடந்த புருஷனாக விளங்குபவர் சாஸ்தா. கிருதயுகத்தில் கந்த புராணக் கூற்றுப்படி, சூரபதுமனுக்காகவும் அசுரர் குலத்துக்காகவும் பயந்து பூமியில், பாரத தேசத்தில், தமிழ்நாட்டில், குடகு முதல் காவிரி பாயும் தீர்த்தக்கரைவழியே வந்து, வேணுபுரம் என்று வடமொழியில் கூறப்படும் சீர்காழிப் பகுதியில் தேவேந்திரன் தன் மனைவி சசிதேவியுடன் மறைந்து வாழ்ந்திருந்த போது, தேவர்கள் அவனைத் தேடிக் கண்டுப்பிடித்து, சூரபதுமன் அழிய வேண்டுமானால் முருகப் பெருமான் அவதாரம் ஆக வேண்டும் என்று சிவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கோரி, இந்திரனையும் கயிலாயம் அழைத்துச் சென்றனர். தனித்துவிடப்பட்ட இந்திராணியை சூரபதுமன் சகோதரி அஜமுகி என்ற அரக்கியிடமிருந்து சாஸ்தா காத்தருளினார். (இடம் தென்பாதிகிராமம், சீர்காழி) என்று கந்தபுராணம் கூறுகிறது. எனவே முருகனுக்கும் மூத்தோன் என்று சாஸ்தா கூறப்படுகிறார்.

அதேபோல, சிவபுராணத்தில் சிவனை மதியாது யாகம் நடத்திய ரிஷிகளுக்கும், ரிஷி பத்னிகளுக்கும் சிவன் மகிமையை வெளிப்படுத்த சிவன் பிக்ஷõடனராகவும், திருமால் மோகினியாவும் உருமாறி, அவர்களை மாயையிலிருந்து விடுபடச் செய்து நல்வழிப்படுத்திய பின், சிவ-விஷ்ணு சேர்க்கையில், அயோனிஜனாக சாஸ்தா அவதரித்ததாக வழுவூர் மகாத்மியம் கூறுகிறது. (இடம் கழினிவாசல், வழுவூர்)

பத்மாசுரன் தலையில் கைவைத்து, மோகினி மாலும் சிவனும் கூடி சாஸ்தா அவதாரமானது மரக்காணம், பாண்டிச்சேரி அருகில் உள்ள புத்துப்பட்டு என்னும் கிராமம் என்று கூறப்படுகிறது. (பத்மபுராணம்)

லலிதோ பாக்யானத்திலும் கந்த புராணத்திலும், பாற்கடல் கடைந்த சமயத்தில் மோகினி அவதாரம் எடுத்த திருமாலுக்கும் சிவனுக்கும் ஹரிஹரபுத்திரர் அவதரித்தார் என்று கூறப்பட்டுள்ளது. இவை அனைத்திலும் கிருதயுகத்தைச் சார்ந்தவையாகும்.

த்ரேதாயுகத்தில், இராமவதாரம் நடைபெற்றுது. புத்ரகாமேஷ்டி யாகத்தை தசரதன் நடத்திய போது யாககுண்டத்திலிருந்து கையில் பாயச பாத்திரத்துடன் ஓர் யுகபுருஷன் வெளிவந்தான் எனவும் மஹத்பூதம் என்றும் வால்மீகி வர்ணிப்பது சந்தானப்ராப்தி யருளும் மாணிக்க பாத்திரம் கையிலேந்தி இருக்கும் சாஸ்தாவையே குறிப்பதாகும். இராமன் தரிசனம் பெற்ற சபரி முக்தி அடைந்தது சாஸ்தாவின் அருளினால் என்பதால் தான் மதங்கமலை என்று வழங்கப்பட்ட இடம் இன்று சபரிமலை என்று அழைக்கப்படுகிறது.

இராமர் முறித்த சிவதனுசு வில் சாஸ்தாவின் ஆவேச சக்தி ஆவிர்பாகம் ஆகியிருந்ததாகவும், சாந்த மூர்த்தியான இராமன் அந்த வில்லைத் தொட்டவுடன் சாஸ்தாவின் ஆவேச சக்தி இராமரிடம் குடி புகுந்து, பிற்காலத்தில் இராவணனை அழிக்க உதவியது என்று சமூக வரலாறு நூல் ஒன்று தெரிவிக்கிறது.

துவாபர யுகத்தில் (மஹாபாரத காலம்) அரக்குமாளிகையிலிருந்து பாண்டவரைக் கைப்பற்றினார் சாஸ்தா என்று ஓர் செவி வழிக்காதை உண்டு. அர்ஜுனனுக்குப் பாசுபதாஸ்திரம் கொடுக்கும் முன்பு, அவனது வீரத்தைப் பரிட்சிக்க பரமேச்வரன் வேடுவனாகத் தோன்றி, ஒரு பன்றியை, வில்லால் அடித்துக் கொன்றது யார் என்று பிரச்சினை எழுப்பி போர் தொடுத்து, முடிவில் அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்திரம் கொடுத்தார் பரமேச்வரன். அந்த பிரச்சினைக்குக் காரணமாயிருந்த முள்ளம் பன்றியை உசுப்பி விட்டவர் சாஸ்தா என்று கூறுகிறார்கள் (ஆதாரம் : சிதம்பரம் அருகே உசுப்பூர் சாஸ்தா கோயில்)

கலியுகத்தில் பம்பையில் தவழ்ந்து பந்தள பாலகனாக வளர்ந்து மகிஷி ஸம்ஹாரம் செய்து, வன்புலி வாகனனாகத் தோன்றி பூதநாத கீதை உபதேசம் செய்தருளி சபரிமலையில் கோயில் கொண்டான் சாஸ்தா என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

இந்தியா முழுவதும் ஐயப்பன் வழிபாடு தற்போது பிரபலமாகி வருகிறது. இதில் ஐயப்பன், சாஸ்தா, ஐயனார் என பல உருவங்களில் ஐயப்பன் வழிபாடு நடைபெறுகிறது. இது தவிர ஆதிபூத நாதர், கல்யாண வரதர், மஹா சாஸ்தா, சம்மோஹன சாஸ்தா, சந்தான பிராப்தி சாஸ்தா, வீர சாஸ்தா, ஞான சாஸ்தா, வேத சாஸ்தா என எட்டு வகையான சாஸ்தா இருப்பது பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஐயப்ப பக்தர்கள் மட்டுமின்றி அனைவரும் தெரிந்து கொள்வதற்காக இந்த அஷ்ட சாஸ்தா வழிபாடு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

நடமாடும் தெய்வமாம் காஞ்சி மஹா முனியின் அருளானையின்படியும், சிருங்கேரி ஆச்சார்யாளின் அனுக்ரஹதினாலும் ஐயப்ப வழிபாட்டில்  பல்வேறு  ஆராய்ச்சிகள் செய்து, கலிகாலத்திற்கு உகந்தவாறு எட்டு வித அவதாரங்களை வடிவமைத்து கொடுத்து  ஐயப்பனின் பதமலர்களை அடைந்தவர் குருசாமி பிரம்மஸ்ரீ விஸ்வநாத சர்மா. அவரது முயற்சியின் பலனாக திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு கிராமம், பாலாஜி நகர்-சாய் நகரில்  அஷ்டசாஸ்தா திருக்கோயில் விரைவில் கட்டப்பட இருக்கிறது.

கோயில் திருப்பணிக்கு நன்கொடை தர விருப்பமுள்ளவர்கள், பொருளாகவோ, பணமாகவோ வழங்கலாம்.

தொடர்புக்கு:வில்லிவாக்கம் ஸ்ரீ விஸ்வநாத சர்மா அஷ்டசாஸ்தா ட்ரஸ்ட்
29, வடக்கு மாட வீதி, ஐயப்பன் கோயில் அருகில்,
வில்லிவாக்கம், சென்னை-600 049.
போன் : +91-44-2617 3963, 99625 62067, 99625 62068.
email: sasthakalyan@gmail.com
பெண் பக்தர்களின் கவனத்திற்கு!

நாட்டில் ஐயப்பனுக்கென பல கோயில்கள் இருந்தாலும், கேரளமாநிலம், பந்தனம் திட்டா மாவட்டத்திலுள்ள சபரிமலை  ஐயப்பன் கோயில் மட்டுமே மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டு தோறும் இந்த ஐயப்பனை தரிசிக்க கோடிக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். இதில் வெளிநாட்டு பக்தர்களும் உண்டு. இங்குள்ள ஐயப்பன் பிரம்மச்சரிய கோலத்தில் குத்துக்காலிட்டு, யோகநிலையில், சின்முத்திரையுடன் அருள்பாலித்து வருகிறார். இவரை தரிசிக்க செல்லும் பெண் பக்தர்கள் 10வயதிற்குள்ளாகவும், 50 வயதிற்கு மேலாகவும் இருக்க வேண்டும் என்பது நியதி. எனவே 11வயது முதல் 49 வயது வரை உள்ள பெண் பக்தர்களை  பம்பைக்கு மேல் செல்ல அனுமதிக்கப்படுவதே கிடையாது. அப்படி இவர்கள் வந்தாலும், பம்பையில் உள்ள கணபதி கோயிலிலேயே நிறுத்தப்பட்டு விடுகிறார்கள். அதே சமயம் 50 வயதுக்கு மேற்பட்ட பெண் பக்தர்களாக இருந்தாலும் கூட, பணியிலிருக்கும் போலீஸ்காரர்களுக்கு  பெண் பக்தர்களின் வயதில் சந்தேகம் வந்து விட்டால், அவர்களுடைய வயதை சரிபார்க்க பேன்கார்டு, டிரைவிங் லைசன்ஸ், வாக்காளார் அட்டை போன்ற போட்டோவுடன் கூடிய அடையாள அட்டையை காண்பிக்கும் படி கூறுகிறார்கள். இதில் ஏதேனும் ஒரு அடையாள அட்டை   இருந்தால் மட்டுமே அனுமதிக்கப் படுகிறார்கள். பெண் பக்தர்களின் வயதில் சந்தேகம் ஏற்பட்டு, இது போன்ற அடையாள அட்டை இல்லாத நிலையில் அவர்கள் பம்பையிலேயே நிறுத்தப்படுகின்றனர். எனவே இந்த பெண்பக்தர்களால் ஐயப்பனை தரிசிக்க முடியாது.  அதுமட்டுமின்றி, இவர்களுடன் வரும் ஆண் பக்தர்களும் இவர்களை தனியாக விட்டு விட்டு ஐயப்பனை தரிசிக்க செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே இது போன்ற நடைமுறை சிக்கலை தவிர்க்க, பெண்பக்தர்கள் தங்களுக்கான அடையாள அட்டை மற்றும் அதற்கான போட்டோ காப்பியை எடுத்து செல்ல வேண்டும். இது போன்ற விஷயங்களை சபரிமலைக்கு அழைத்து செல்லும் டிராவல்ஸ் நிறுவனங்களும், குருசாமிமார்களும் பெண் பக்தர்களுக்கு எடுத்து கூறுவது மிக மிக முக்கியம்.

ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!
தங்கும் விடுதிகள்

* யாத்ரிகர்கள் மையம் எண் 1, மொத்த அறைகள் 103,

* யாத்ரிகர்கள் மையம் எண் 2, மொத்த அறைகள் 115,

* யாத்ரிகர்கள் மையம் எண் 3, மொத்த அறைகள் 143,

* சபரிநிவாஸ், மொத்த அறைகள் 64,

* மாளிகைப்புறம் கட்டடம், மொத்த அறைகள் 16,

* மாளிகைப்புறம் ஹால்

* மராமத்து காம்ப்ளக்ஸ், மொத்த அறைகள் 22,

* நன்கொடையாளர் கட்டடம் எண்.1, மொத்த அறைகள் 24,

* நன்கொடையாளர் கட்டடம் எண்.2, மொத்த அறைகள் 16,

* நன்கொடையாளர் கட்டடம் எண்.3, மொத்த அறைகள் 24,

* நன்கொடையாளர் கட்டடம் எண்.4, மொத்த அறைகள் 24,

* நன்கொடையாளர் கட்டடம் எண்.5, மொத்த அறைகள் 24,

* நன்கொடையாளர் கட்டடம் எண்.6, மொத்த அறைகள் 24,

* நன்கொடையாளர் கட்டடம் எண்.7, மொத்த அறைகள் 24,

* கே.கே.டி. ஹால், மொத்த அறைகள் 2,

* பூரண புஷ்கலை ஹால்

* 5 காட்டேஜ்கள், மொத்த அறைகள் 51,

அறைகளை புக் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

தேவஸ்வம் நிர்வாக அதிகாரி, சபரிமலை தேவஸ்தானம், திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு, நந்தன்கோடு, திருவனந்தபுரம்-3, போன் : 0471 - 231 7983,231 6963.

சபரிமலைக்கு சென்ற பிறகு ரூம்கள் புக் செய்ய வேண்டுமானால் மராமத்து காம்ப்ளக்ஸ் அருகிலுள்ள அக்கமடேஷன் அலுவலரை தொடர்பு கொள்ளலாம். போன் : 04735 - 202 049
அவசர உதவி- முக்கிய டெலிபோன் எண்கள்

சபரிமலை சன்னிதானம்

எஸ்டிடி கோடு 04735

சிறப்பு கமிஷனர் - 202 015
தேவஸ்வம் கமிஷனர் - 202 004
லஞ்ச ஒழிப்பு போலீஸ் எஸ்.பி. - 202 081
லஞ்ச ஒழிப்புஅதிகாரி (கோயில்) - 202 058
செயல் அலுவலர் - 202 028
உதவி செயல் அலுவலர் - 202 019
நிர்வாக அலுவலகம் - 202 026
காணிக்கை தனி அதிகாரி - 202 017
மாளிகைப்புறம் கோயில் - 202 022
விருந்தினர் மாளிகை (கெஸ்ட்ஹவுஸ்) - 202 056
அறைகள் பதிவு அலுவலகம் - 202 049
செய்தித்துறை அதிகாரி - 202 048
புக் ஸ்டால் - 202 053
நிர்வாக அதிகாரி - 202 038
தனலட்சுமி பாங்க் - 202 065
அரசு அலோபதி ஆஸ்பத்திரி - 202 101
அரசு ஆயுர்வேத ஆஸ்பத்திரி - 202 102
அரசு ஹோமியோபதி ஆஸ்பத்திரி - 202 843
அரசு இதய நோய் மையம் - 202 050
கன்ட்ரோல் ரூம் எஸ்.பி. - 202 029
டி.ஐ.ஜி. முகாம் - 202 076
போலீஸ் ஸ்டேஷன் - 202 062
போலீஸ் வயர்லஸ் ஸ்டேஷன் - 202 033
போஸ்ட் ஆபீஸ் - 202 130

பம்பை

டெலிபோன் எக்சேஞ்ச் - 202 198
தேவஸ்வம் போர்டு விருந்தினர்
விடுதி தலைவர் - 202 466
நிர்வாக அதிகாரி - 202 442
பெட்ரோல் பங்க் - 202 046
உதவி மக்கள் தொடர்பு அதிகாரி - 202 339
அரசு அலோபதி ஆஸ்பத்திரி - 202 318
தனலட்சுமி பாங்க் - 202 465
கேரள அரசு போக்குவரத்து கழகம் - 202 445
மின்சார வாரியம் - 202 424
தீயணைப்பு நிலையம் - 202 333
போஸ்ட் ஆபீஸ் - 202 330
போலீஸ் கன்ட்ரோல் ரூம் - 202 324
ஐயப்ப தரிசனம் 

வழிபாடு மற்றும் பிரசாத கட்டணம்


  1    நெய் அபிஷேகம்    ரூ 10
  2    விபூதி பிரசாதம்    ரூ 15
  3    மலர் நிவேத்யம்    ரூ 15
  4    நெய்விளக்கு    ரூ 15
  5     உடையாடை சார்த்து    ரூ 15
  6    உடையாடை நடைக்கு வைத்தல்    ரூ 15
  7    வர நிவேத்யம்    ரூ 15
  8     சகஸ்ர அர்ச்சனை     ரூ 20
  9    அஷ்டோத்திர அர்ச்சனை    ரூ 20
  10    பஞ்சாமிர்தம்    ரூ 20
  11    தங்க ஆபரணபூஜை    ரூ 20
  12    நாகராஜா பூஜை    ரூ 25
  13    வல்சம் நிவேத்யம்    ரூ 25
  14    அப்பம் ஒரு பாக்கட்    ரூ 25
  15    அபிஷேக நெய் 100 மி.லி    ரூ 50
  16    பஞ்சாமிர்தம் 100 மில்லி    ரூ 50
  17     அரவணை பிரசாதம் 250 மி.லி    ரூ 60
  18    நாமகரணம்    ரூ 70
  19    பூஜித்த மணி    ரூ 70
  20    நீராஞ்சனம்    ரூ 75
  21    பூஜித்த விளக்கு    ரூ 100
  22    சோறு ஊட்டு    ரூ 100
  23    நவக்கிரகபூஜை    ரூ 100
  24    துலா பாரம்    ரூ 100
  25    எழுத்து தொடங்கி வைத்தல்    ரூ 101
  26    ஐயப்ப சக்கரம்    ரூ 120
  27    பறையடி    ரூ 120
  28     கணபதி ஹோமம்    ரூ 200
  29     முழுகாப்பு    ரூ 500
  30     உஷபூஜை    ரூ 501
  31    பகவதி சேவை    ரூ 1000
  32    அஷ்டாபிஷேகம்    ரூ 1200
  33    புஷ்பாபிஷேகம் (பூக்கள் தனி)    ரூ 2000
  34     உச்சபூஜை    ரூ 2001
  35     நித்யபூஜை    ரூ 2501
  36     களபாபிஷேகம்    ரூ 3000
  37     வெள்ளி அங்கி சார்த்து    ரூ 4000
  38     தங்க அங்கி சார்த்து    ரூ 7500
  39    உற்சவபலி    ரூ 15000
  40     சகஸ்ரகலசம்    ரூ 25000
  41     உதயாஸ்மன பூஜை    ரூ 30000
  42     படிபூஜை    ரூ 50001

மண்டல, மகர விளக்கு சீசனில் படிபூஜை நடக்காது. மாத பூஜை நாட்களிலும், மகர விளக்கு தரிசனம் முடிந்த பின்னரும் மட்டுமே படிபூஜை நடத்தப்படும்.

பம்பை

எண்வரிசை  வழிபாடு  கட்டணம்
  1    அவல் நைவேத்தியம்    ரூ 20
  2    மோதகம்    ரூ 25
  3     புஷ்பாபிஷேகம்    ரூ 1500
  4    வடை மாலை (அனுமானுக்கு)    ரூ 150
  5    மகாகணபதி ஹோமம்    ரூ 100
  6    இருமுடி கட்டு (பொருட்களுடன்)    ரூ 160

மாளிகைப்புறம்

எண்வரிசை  வழிபாடு  கட்டணம்
  1    மஞ்சள் குங்குமம்    ரூ 25
  2    மலவடி பூஜை    ரூ 15
  3     அவல் நைவேத்தியம்    ரூ 20
  4    அஷ்டோத்திர அர்ச்சனை    ரூ 20

செக்/டிராப்ட் மூலமாக நன்கொடை அளிக்க விரும்புபவர்கள் கீழ்க்கண்ட முகவரி மூலம் அனுப்பலாம்.

தி செக்ரட்ரி,
திருவாங்கூர் தேவஸ்தானம்,
நந்தன்கோடு போஸ்ட்
திருவனந்தபுரம்-695 003
கேரளா, இந்தியா
போன் நம்பர் : 0471-2315 009

அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற உணவுப்பொருட்களை மொத்தமாக நன்கொடையாக அளிக்க விரும்புபவர்கள் கீழ்கண்ட முகவரியில் சபரிமலை பம்பைக்கு அனுப்பி விடலாம்.

தி எக்ஸிக்யூடிவ் ஆபிஸர்,
சபரிமலை தேவஸ்தானம்,
திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு,
சபரிமலை-பம்பா போஸ்ட்
பத்தனம்திட்டா மாவட்டம்,
கேரளா, இந்தியா.
போன் நம்பர் : 04735-202026, 202028
வழிபாட்டு இடங்கள்

அரசனாக அச்சன் கோவிலில்

சபரி மலை ஐயப்பன் கோயிலுக்கு அடுத்து பிரசித்தி பெற்றது அச்சன்கோவில் ஆகும். அச்சன் கோவில் அரசனான ஐயப்பன் வீற்றிருக்கும் பகுதி தமிழக, கேரள எல்லையிலுள்ள செங்கோட்டையிலிருந்து 28 கி.மீ தூரத்தில் உள்ளது. கேரள மாநிலத்தின் அடர்ந்த வனப்பகுதியில் இயற்கை சூழ்நிலையில் இந்த தலம் அமைந்துள்ளது.

அச்சன்கோவில் பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்டது. பல தலங்களில் உள்ள ஐயப்பன் விக்கிரகங்கள் தீயாலும், இதர இயற்கை சக்திகளாலும் பாதிப்படைந்து மாற்றப்பட்டவை. ஆனால் அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் மட்டும் பழைய விக்ரகம் இன்றும் உள்ளது. கார்த்திகை மாதம் 30ம் தேதி புனலூர் கருவூலத்திலிருந்து அச்சன்கோவில் அரசனுக்கு திரு ஆபரணங்கள் கொண்டுவரப்படும். மார்கழி முதல்நாள் காலை கொடியேற்றத்துடன் திருவிழா நடக்கும். ஐயப்ப தலங்களிலேயே 10 நாள் திருவிழா நடப்பது சபரி மலையிலும் அச்சன் கோயிலிலும் மட்டுமே ஆகும். அச்சன்கோவிலில் நடக்கும் விழாவில் 9வது நாளன்று தேரோட்டம் நடத்தப்படும். மற்ற ஐயப்ப தலங்களில் தேரோட்டம் கிடையாது. இந்த கோயிலுக்கு ஒரு விசேஷமுண்டு. விஷப்பூச்சிகள் தீண்டினால் நள்ளிரவு நேரமானாலும் நடை திறக்கப்பட்டு ஐயப்பனின் விக்ரகம் மீதுள்ள சந்தனத்தை பூசினால் விஷம் நீங்கிவிடும் என்று இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதற்காக வைத்தியரை நாடி யாரும் செல்வதில்லை.
படிப்பு தரும் குட்டி சாஸ்தா

கேரளாவில் குளத்துப்புழை என்ற இடத்தில் சாஸ்தா கோயில் உள்ளது. இங்கு சாஸ்தா, குழந்தை வடிவில் இருக்கிறார். கருவறை நுழைவு வாயில் சிறுவர்கள் புகும் அளவிற்கு உயரம் குறைந்து உள்ளது. செங்கோட்டையில் இருந்து 50 கி.மீ., தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. விஜயதசமி தினத்தன்று இங்கு "வித்தியாரம்பம்' எனும் நிகழ்ச்சி விமரிசையாக நடக்கிறது. இந்நாளில் பள்ளியில் புதிதாக சேரவிருக்கும் குழந்தைகளுக்கு எழுத்து பயிற்சி தரப்படும். குழந்தைகளின் படிப்பு சிறப்பாக அமைந்திட "குட்டி சாஸ்தா' அருள்புரிவார் என்பது நம்பிக்கை.

குழந்தை வரம் வேண்டி வருவோரின் துன்பமும் தீர்கிறது. கோயில் முன்பு மீன்கள் துள்ளி விளையாடும் ஆறும் ஓடுகிறது. குடும்பத்துடன் சென்று ஐயப்பனை வழிபட ஏற்ற தலம்.

மாப்பிள்ளை ஐயப்பன்

சபரிமலையில் பிரம்மச்சரியம் காக்கும் சாஸ்தா கிரகஸ்த (குடும்பம்) நிலையில் ஆரியங்காவில் இருக்கிறார். செங்கோட்டையில் இருந்து 20 கி.மீ., தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. இங்கு சாஸ்தா, புஷ்கலாதேவியுடன் மாப்பிள்ளை கோலத்தில் காட்சி தருகிறார். சவுராஷ்டிரா இன மக்களின் குல தெய்வமான புஷ்கலாவிவே இங்கே சாஸ்தாவுடன் ஐக்கியமானார். அவரை சாஸ்தா திருமணம் செய்யும் காட்சியை ஒவ்வொரு டிசம்பர் மாதமும் இங்கு நடத்துவர். மதம் கொண்ட யானையை அடக்கி அதன் மேல் அமர்ந்த கோலத்தில் இங்கு சாஸ்தா இருப்பதால் "மதகஜ வாகன ரூபன்' என்றொரு பெயரும் உண்டு. இவரை வணங்கினால் தடைபட்ட திருமணங்கள் விரைந்து நடக்கும் என்பது நம்பிக்கை.

சொரிமுத்தையனார் கோயில்:

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகிலுள்ள சொரிமுத்தய்யனார் கோயிலில், தர்ம சாஸ்தாவான ஐயப்பனே இங்கு சொரிமுத்தைய்யனார் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இங்கு செல்வது முன்னொரு காலத்தில் மிகவும் கடினமானதாக இருந்தது. பொதிகை மலைக்காடுகளில், வனவிலங்குகள் ஏராளமாக வசிக்கும் காட்டுப்பகுதியில் தாமிரபரணி ஆற்றின் நடுவே இந்தக் கோயில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆடி அமாவாசை அன்று இங்கு நடக்கும் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.தாமிரபரணியில் நீராடி இந்த ஐயனை வழிபட்டால் எப்படிப்பட்ட பாவமும் விலகும் என்பது ஐதீகம். இதுகோயில் மட்டுமல்ல. மிகச்சிறந்த சுற்றுலாத்தலமும் ஆகும்.

மாம்பழத்துறை பத்ரகாளி

ஆரியங்காவில் இருந்து 20 கி.மீ., தூரத்தில் உள்ளது மாம்பழத்துறை தலம். புஷ்கலையை மணம் முடித்த சாஸ்தா தனது தொழிலுக்கு அவள் தொந்தரவாக இருந்து விடக்கூடாது என்பதற்காக இத்தலத்தில் தங்கும்படி செய்தார். இங்கு புஷ்கலை தேவி, "பகவதி' அம்மனாக "பத்திரகாளி' வடிவத்தில் அருளுகிறாள்.

பந்தளம்

சபரிமலையில் இருந்து 88 கி.மீ தூரத்தில் திருவனந்தபுரத்தையும், கோட்டயத்தையும் இணைக்கும் பாதையில் உள்ளது பந்தளம். பந்தள ராஜாவின் குடும்ப கோயில் இங்குள்ளது.மகர விளக்கு திருவிழாவின் மிக முக்கியமான நிகழ்ச்சியான திருஆபரண பெட்டி இங்கிருந்துதான் புறப்படுகிறது. மார்கழி 26ம் தேதி பந்தளத்திலிருந்து புறப்படும் திருவாபரணம் தை முதல் தேதி சபரிமலை வந்து சேருகிறது

மகர சங்கிரம தினத்தில் ஜோதிபாய் ஐயன் தெரியும் போது மட்டுமே சபரிமலை ஐயப்பனுக்கு இத்திருவாபரணங்கள் சாத்தப்பட்டிருக்கும்.

ஐயப்பன் திருவுருவில் அணிவிக்கும் ரத்ன மகுடம், நூபுரம், ஆரம், கடகம், அங்குலியங்கள், பதக்கம் ஆகியவை ஒரு பெட்டியிலும், மாளிகைபுறத்தம்மனுக்கு அணிவிக்க வேண்டிய ஆபரணங்கள் மற்றொரு பெட்டியிலும் கொண்டு வருவர். தை முதல்நாள் பிற்பகலில் திருஆபரண பெட்டி சபரிபீடம் வந்தடையும்போது, வானத்தில் பருந்துகள் தோன்றி வட்டமிட்டு, திருஆபரண பெட்டியுடன் தொடர்ந்து வரும் காட்சி கண்கொள்ளா அதிசய காட்சி.
ஐயப்பன் ஸ்லோகம் (சமஸ்கிருதம்)

மகா கணபதி தியான ஸ்லோகம்

மூக்ஷக வாஹந மோதக ஹஸ்த
சாமர கர்ண விலம்பித ஸுத்ர
வாமந ரூப மஹேச்வர புத்ர
விக்ந விநாயக பாத நமஸ்தே

மாலை அணியும் போது சொல்ல வேண்டிய மந்திரம்

ஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம் குரு முத்ராம் நமாம்யஹம்
வனமுத்ராம் சுத்த முத்ராம் ருத்ர முத்ராம் நமாம்யஹம்
சாந்த முத்ராம் சத்ய முத்ராம் வ்ருத முத்ராம் நமாம்யஹம்
சபர் யாச்ரச சத்யேன முத்ராம் பாது சதாபிமோ
குரு தக்ஷிணயா பூர்வம் தஸ்யா நுக்ரஹ காரிணே
சரணாகத முத்ராக்யம் த்வன் முத்ராம் தாரயாம் யஹம்
சின் முத்ராம் கேசரி முத்ராம் பத்ர முத்ராம் நமாம்யஹம்
சபர்யாசல முத்ராயை நமஸ்துப்யம் நமோ நம

ஸ்ரீ ஐயப்ப மூலமந்திரம்

சபரிமலையில் தந்திரி ஓதுகிற ஐயப்ப மூல மந்திரமாவது:

ஓம்! க்ரும் நம; பராய
கோப்த்ரே நம

கலியுகத்தில் எல்லாவிதமான துன்பங்களிலிருந்தும், ஆபத்துகளிலிருந்தும் மக்கள் அனைவரையும் ரட்சித்து காப்பாற்றும் சக்தியுடைய ஒரே கடவுள் ஐயப்பன்தான் என்பதே இம்மூல மந்திரத்தின் பொருள்.

சாஸ்தா காயத்ரீ

ஓம் பூத நாதாய வித்மஹே
பவநந்தனாய தீமஹி
தந்ந: சாஸ்தா ப்ரசோதயாத்

ஓம் தத் புருஷாய வித் மஹே
பூத நாதாய தீ மஹி
தந்நோ ஸாஸ்தா பிரசோத யாத்

ஸ்ரீ தர்ம ஸாஸ்தா காயத்ரீ

ஓம் பூதாதி பாய வித் மஹே
மஹா தேவாய தீ மஹி
தந்நோ ஸாஸ்தா பிரசோதயாத்

ஐயப்பன் மகா மந்திரம்

 பூதநாத ஸதானந்தா
ஸர்வபூத தயாபரா
ரக்ஷ ரக்ஷ மஹா பாஹோ
சாஸ்த்ரே துப்யம் நமோ நமஹ

ஐயப்பன் ஸுப்ரபாதம்

1. ஸ்ரீ ஹரிஹர ஸுப்ரஜா சாஸ்தா பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்தே
உத்திஷ்ட நரசார்தூல தாதவ்யம் தவ தர்சனம்
உத்திஷ்டோத்திஷ்ட சபரி கிரீச உத்திஷ்ட சாந்திதாயக
உத்திஷ்ட ஹரிஹர புத்ர த்ரைலோக்யம் மங்களம் குரு

2. குரோ ஸமஸ்த ஜகதாம் மனக்லேச ஹாரே
பக்தோ விஹாரினே மனோஹர திவ்ய மூர்த்தே
ஹேஸ்வாமி பக்தஜனப்ரிய தான சீல
ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

3. தவஸுப்ரபாதம் அமித்ர ரக்ஷக
பவது ப்ரஸன்ன மனன சுந்தர
ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மைக்ய ஸ்வரூப
ஸ்ரீ சபரிபீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

4. அகஸ்த்யாதி மஹா ரிஷிய ஸமுபாஸ்ய ஸந்த்யாம்
காந்தகிரி குஸுமானி மனோஹரானி
ஆதாய பாதயுகம் அர்ச்சயிதும் ப்ரபன்னா
ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

5. வாஸவாதி தேவகணா ஸ்வர்காத் இஹைவ ஆக தா
தர்சிதும் பவந்தம் மகர ஸங்கிரம காலே
உச்சை சரண கோஷை பஹுதா ஸ்துவந்தி
ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

6. ச்ரத்தா பக்தி ஸமன்வித ஆதீத பூஜாத்ரவ் யானி
த்வ்ய கந்தாதி ஆஜ்ய பூரித நாளிகே ரானி
க்லிஷ்டமானவ வர்க்கேன நிஜவ்ரதம் கல்பயன்தவ பார்ச்வம் ஆகதம்
ஸ்ரீ சபரிபீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

7. திவ்ய பஸ்மாலங்க்ருத லலாட காத்ர நீலவஸ்த்ரதர
ஸம்ஸார பேஷஜ துளஸீஹார ஸமாவ்ருத மார்க்க ரக்ஷக
சிஷ்டாணாம் ரக்ஷகஸ் சைவ சரணகோஷஸந்துஷ்ட
ஸ்ரீ சபரிபீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

8. ஸோம சுந்தரேஸ்ய ப்ரேம்னா சக்த்யாம் சஹரிணாஸஹே
நிக்ர ஹார்த்தம் தைத்யானாம் பாலரூபேண ஸமன்வித
அவதார யாமாஸ பம்பாதீரே பந்தளாதிப ப்ரபூஜித
ஸ்ரீ சபரிபீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

9. ஸந்யாஸரூப சபரி யாத்ரா ஸர்வாப குணவர்ஜித
ஸஸ்நேஹம் ஸோத் ஸாஹஞ்ச ஸாந்த்வனானி பணந்த
ஸமஸ்த மங்கள ஸன்மார்க்கம் ஸதா அஸ்மா ஸுப்ரதர்சிதம்
ஸ்ரீ சபரிபீடாச்ரம ஸ்தானினே தவஸுப்ரபாதம்

10. பவத்ஸகா சாத் ஈப்ஸித பலம் ஆப்னு வந்தி இஹ லோக மானவா
தத் காரணா தேவ அர்தினா தவ பார்ஸ்வ மா க தா
மாது பரிபாலனாதிவ பவிஷ்யேம ஸுகினோத்ருவம்
ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவ ஸுப்ரபாதம்

11. நிர்மானுஷ்யா ரண்யே த்வயி ஸ்தி தேஸதி
திவாம் ஸமீப யிஷ்யும் அசக் தோ பூதோபீ
தவநாமம் உக் சரன்னேவ இஹ ஆயாதே புனர்புன
ஸ்ரீ சபரி பீடாச் ரம ஸ்தானி னே தவ ஸுப்ரபாதம்

12. நிஷ்டாயாம் ஸ்திதோபி அஸ்மத் ஸ காச ஹ்ருதி ஸனனி வேஷ்ட
நசாஸ்த்ரு பக்தானாம் அசுபம் வித்ய தே க்வ்சித்
தீயந்தாம் யச கீர்த்திம் வித்யாம் புத்திம் ச்ரியம்பலம்
ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவ ஸுப்ரபாதம்

13. அப்ர மேய ப்ரபாபவ அணிமாதி ஸித்தித
அக்ஞான நாசன ஸுவிக் ஞான தாயக
ஆனந்த பூத அனாத நர்த
ஸ்ரீ சபரி பீடாச்ரம ஸ்தானினே தவ ஸுப்ரபாதம்

14. மானவாவதாரே மனு ஜாக் ருதிம் மணிகண்டா பிரதானம் ரமணிய தேஹீனம்
தனுர் தரம் தைர்ய கீர்த்திம் பஜாமி நித்யம் புவனைக நாதம்
தேவா வதாரே திசாந்த ரூபம் காந்த ச்ருங்க வாஸினம் கமனீய லோசனம்
வாஸர வார்ச்சிதம் புராண புருஷம் பஜாமி நித்யம் பூதாதி நாதம்.

15. பாண்ட் யேச ரத்னம் புவி பாலகம் பந்தனா திபம் பரமபுருஷம்
சுசிஸ்மிதம் சுத்த தே ஹினம் சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம்
அத்புத காத்ரம் கிராதவ புஷம் ஆத்யந்த ரஹிதம் ஆபத் ஸகாயம்
ஆனந்த ஸிந்தும் அரவிந்த லோசனம் பஜாமி நித்யம் த்ரிபுராரி புத்ரம்.

16. ஏனதர் நாம பனதர் திவ்யை புஷ்பவனேன விரசிதை
பக்தி பூர்வக் குதை ப்ரபாதச் லோகை
தோஷாணி த்யக் தவா குணான் ஸ்வீகுருஷ்வன்
பரீணாது பகவான் ஸ்ரீ ஹரிஹர புத்ர
ஓம் நமோ கிரிசாய சிபி விஷ்டாய
ஸ்ரீ ஹரிஹர புத்ராய ச ஓம் தத் ஸத்

சாஸ்த்ர ஸுப்ரபாதம்

1. ஸ்ரீ சேச புத்ர யுரு÷ஷாத்தம தர்ம மூர்த்தே
ஸ்ரீ மன் சுபப்ரத விசக்ஷண விச்வ மூர்த்தே
உத்தியத்தினேச சதகோடி ஸமான காந்தே
சாஸ்த ப்ரபோ ஹரிஹராதமஜ ஸுப்ரபாதம்

2. தர்மக்ஞ தர்ம பரிபாலக தர்ம சீல
ப்ரத்யக்ஷ தைவ கலி தைவத தேவதேவ
உத்புல்ல பத்ம ஸத்ருசானன தீன பந்தோ
சாஸ்த ப்ரபோ ஹரிஹராத்மஜ ஸுப்ரபாதம்

3. பூர்ணேதி பூர்ண சசி ஸுந்தர புஷ்களேதி
பத்னீத்வ யேன பரிலப்த விலாஸ கேலே
பும்ஸ்கோகில த்வனி விபோதித கீதலோல
சாஸ்த ப்ரபோ ஹரிஹராத்கஜ ஸுப்ரபாதம்

4. பூதேச பூத பவபாவி விதப்ரமேய
ஸந்யாஸி மானஸ சரச்ருதி கீயமான
அக் ஞான மோஹ திமிரா பஹ பால நேத்ர
சாஸ்த ப்ரபோ ஹரிஹராத்மஜ ஸுப்ரபாதம்

5. ஹே வீரதீர ரண சூர ஜிதாரி ராசே
வித்யா நிதே குண நிதே ஜகதாதி ஹேதோ
ஸெள பாக்ய தாண்ய தன மங்கள தாயி நஸ்தே
சாஸ்த ப்ரபோ ஹரிஹராத்மஜ ஸுப்ரபாதம்

சாஸ்தா சதகம்

ஒவ்வொரு ஸ்லோகத்தையும் கூறி சுவாமியே சரணமய்யப்பா என்று சொல்லி நமஸ்காரம் செய்ய வேண்டும்

1. லோக வீரம் மஹா பூஜ்யம் ஸர்வ ரக்ஷõகரம் விபும்
பார்வதி ஹ்ருதயானந்தம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

(சுவாமியே சரணம் ஐயப்பா)

2. விப்ர பூஜ்யம் விச்வ வந்த்யம் விஷ்ணு சம்போப்ரியம் ஸுதம்
ஷிப்ர ப்ரசாத நிரதம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

(சுவாமியே சரணம் ஐயப்பா)

3. மத்த மாதங்க கமனம் காருண்யாம் ருத பூரிதம்
ஸர்வ விக்ன ஹரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

(சுவாமியே சரணம் ஐயப்பா)

4. அஸ்மத் குலேஸ்வரம் தேவம் அஸ்மத் சத்ரு வினாஸனம்
அஸ்மத் இஷ்ட ப்ரதாதாரம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

(சுவாமியே சரணம் ஐயப்பா)

5. பாண்டியேச வம்ச திலகம் கேரள கேளி விக்ரஹம்
ஆர்த்தத் ராண பரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

(சுவாமியே சரணம் ஐயப்பா)

6. த்ரியம்பக புராதீசம் கணாதீப சமன் விதம்
கஜாடுமஹம் வந்தே சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

(சுவாமியே சரணம் ஐயப்பா)

7. சில வீர்ய ச¬முத் பூதம் ஸ்ரீநிவாச தானூர்த் பவம்
சிகியா ஹானுஜம் வந்தே சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம்

(சுவாமியே சரணம் ஐயப்பா)

8. யஸ்த தன்வந்தரி மாதா பிதா தேவோ மஹேஸ்வரா
தம் சாஸ்தார மஹம் வந்தே மஹா ரோக நிவாரணம்

(சுவாமியே சரணம் ஐயப்பா)

9. ஸ்ரீ பூத நாத சதா நந்தா சர்வ பூத தயாபரா
ரக்ஷ ரக்ஷ மாஹோ பாஹோ சாஸ்த்ரே துப்யம் நமோ நமஹ

(சுவாமியே சரணம் ஐயப்பா)

10. ஆஸ்யாம கோமள விசாலுதனும் விசித்ரம்
வயோவஸான மருணோத்பவ தாம ஹஸ்தம்

(சுவாமியே சரணம் ஐயப்பா)

11. உத்தரங்கரத்தன மகுடம் குடிலாக்ர கேசம்
சாஸ்தாரம் இஷ்ட வரதம் சரணம் ப்ரபதமே

(சுவாமியே சரணம் ஐயப்பா)

மஹாசாஸ்தா அஷ்டோத்தரம்

ஓம் மஹாசாஸ்த்ரே நம
ஓம் விச்வசாஸ்த்ரே நம
ஓம் லோகசாஸ்த்ரே நம
ஓம் தர்மசாஸ்த்ரே நம
ஓம் வேத சாஸ்த்ரே நம

ஓம் காலசாஸ்த்ரே நம
ஓம் கஜாதி பாய நம
ஓம் கஜாரூடாய நம
ஓம் கணாத் யக்ஷõய நம
ஓம் வ்யாக்ரா ரூடாய நம

ஓம் மஹாத்யுதயே நம
ஓம் கோப்த்ரே நம
ஓம் கீர்வாண ஸம்ஸேவ்யாய நம
ஓம் கதா தங்காய நம
ஓம் கதா க்ரண்யை நம

ஓம் ரிக்வேத ரூபாய நம
ஓம் நக்ஷத்ராய நம
ஓம் சந்த்ர ரூபாய நம
ஓம் வலாஹகாய நம
ஓம் தூர்வாச்யாமாய நம

ஓம் மஹா ரூபாய நம
ஓம் க்ரூரத் ருஷ்டயே நம
ஓம் அனாமயாய நம
ஓம் த்ரிநேத்ராய நம
ஓம் உத் பலாகாராய நம

ஓம் காலஹந்த்ரே நம
ஓம் நராதிபாய நம
ஓம் கண்டேந்துமௌளிதநயாய நம
ஓம் கல்ஹாரகுஸும ப்ரியாய நம
ஓம் மதனாய நம

ஓம் மாதவஸுதாய நம
ஓம் மந்தார குஸுமார்சிதாய நம
ஓம் மஹா பலாய நம
ஓம் மஹாத் ஸாஹாய நம
ஓம் மஹாபாப விநாசநாய நம

ஓம் மஹா சூராய நம
ஓம் மஹா தீராய நம
ஓம் மஹாஸர்ப விபூஷணாய நம
ஓம் அஸி ஹஸ்தாய நம
ஓம் சரதராய நம

ஓம் ஹாலாஹல தராத்மஜாய நம
ஓம் அர்ஜுநேசாய நம
ஓம் அக்னிநயநாய நம
ஓம் அநங்க மதனாதுராய நம
ஓம் துஷ்டக்ரஹாதிபாய நம

ஓம் ஸ்ரீ தாய நம
ஓம் சிஷ்டரக்ஷண தீக்ஷ?தாய நம
ஓம் கஸ்தூரி திலகாய நம
ஓம் ராஜசேகராய நம
ஓம் ராஜ ஸத்தமாய நம

ஓம் ராஜ ராஜார்சிதாய நம
ஓம் விஷ்ணு புத்ராய நம
ஓம் வநஜனாதிபாய நம
ஓம் வர்சஸ்கராய நம
ஓம் வரருசயே நம

ஓம் வரதாய நம
ஓம் வாயுவாஹனாய நம
ஓம் வஜ்ர காயாய நம
ஓம் கட்க பாணயே நம
ஓம் வஜ்ரஹஸ்தாய நம

ஓம் பலோத்ததாய நம
ஓம் த்ரிலோகஞாய நம
ஓம் அதிபலாய நம
ஓம் புஷ் கலாய நம
ஓம் வ்ருத்த பாவநாய நம

ஓம் பூர்ணாதவாய நம
ஓம் புஷ்கலேசாய நம
ஓம் பாசஹஸ்தாய நம
ஓம் பயாபஹாய நம
ஓம் பட்கார ரூபாய நம

ஓம் பாபக்னாய நம
ஓம் பாஷண்டருதி ராகனாய நம
ஓம் பஞ்சபாண்டவஸந்த்ராத்ரே நம
ஓம் ப்ரபஞ்சாக்ஷ ராச்ரிதாய நம
ஓம் பஞ்சவக்த்ர ஸுதாய நம

ஓம் பூஜ்யாய நம
ஓம் பூதசாஸ்த்ரே நம
ஓம் பண்டிதாய நம
ஓம் பரமேச் வராய நம
ஓம் பலதா பூஷ்ட ப்ரதாய காய நம

ஓம் கவயே நம
ஓம் கவீ நாமதிபாய நம
ஓம் க்ருபாளவே நம
ஓம் க்லேசநாசனாய நம
ஓம் ஸமாய நம

ஓம் அரூபாய நம
ஓம் ஸேநான்யை நம
ஓம் பக்தஸம்பத் ப்ரதாயகாய நம
ஓம் வ்யாக்ரசர்மதராய நம
ஓம் சூலிணே நம

ஓம் கபாலினே நம
ஓம் வேணுவாதநாய நம
ஓம் கலாரவாய நம
ஓம் கம்புகண்டாய நம
ஓம் கிரீடாதி விபூஷிதாய நம

ஓம் தூர்ஜடவே நம
ஓம் விரநிலாய நம
ஓம் வீராய நம
ஓம் விரேந்த்ர வந்திதாய நம
ஓம் விச்வரூபாய நம

ஓம் வ்ருஷபதயே நம
ஓம் விவிதார்த்த பலப்ரதாய நம
ஓம் தீர்க்கநாஸாய நம
ஓம் மஹாபாஹவே நம
ஓம் சதுர்பாகவே நம
ஓம் ஜடாதராய நம

ஓம் ஸநகாதிமுநிச்ரேஷ்ட ஸ்துத்யா நம

ஓம் ஹரிஹராத்மஜாய நம

நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி

ஸ்ரீ தர்ம ஸாஸ்த்று மூல மந்த்ரம்

1. ஓம் ஸ்ரீ ஹரிஹர புத்ராய
2. ஓம் புத்ர லாபாய
3. ஓம் மஹா சாஸ்த்ரேய
4. ஓம் சத்ரு நாச நாய
5. ஓம் மத கஜ வாகனாய
6. ஓம் பிரதயட்ச சூலாயுதாய
7. ஓம் வர வரத சர்வ ஜனமே
8. ஓம் வசமான ய ஸ்வாஹா
9. ஓம் சாஸ்த்று ஸ்ரீ பாபு ஜயாமி நமக
தற்பயாமி நமக

ஸ்ரீ சபரிகிரி வாசன் ஸ்தோத்திரம்
த்யானச் லோகம்

ஸனிக் தாரவ விஸார குந்தல பராம்
ஸிம்ஹா ஸனாத் யாஸினம்
ஸபூர் ஜத் பத்ர ஸுக் லுப்த குண்டல
மஹேஸ் விஸ் வாஸப் ருயோர் யுகம்
நீல கௌம வஸம் நவீன் ஜலத
ஸயாமம் ப்ரபா ஸ்த்யகா
பாயாத் பார்ஸ்வ யுகம் ஸுசரக்தா ஸகலா
கல்பம் ஸ்மரேத் ஆர்யுகம்

ஸ்ரீ மஹா ஸா ஸ்தாமாலா மந்த்ரம்

1. ஓம் ஹரி ஹர புத்ராய
2. ஓம் பிரும்ம நிஷ்டாய
3. ஓம் யோ ஹிந்த ராய
4. ஓம் ஸர்வக் ஞ பீடஸ் தியாய
5. ஓம் விஷ்ணு பிரும்ம முகாம ரார்ச்சிதாய
6. ஓம் அத்ரி வாஸாய
7. ஓம் ஸிம் ஹாஸனாய
8. ஓம் கர தல தருத் சாப பானாய
9. ஓம் சங்கு சக்ர சுரி காயுத தராய
10. ஓம் கட்கரா டாங்கி தாய
11. ஓம் கேரள க்ஷத்ரியா சார நிரதாய
12. ஓம் சிவ புத்ராய
13. ஓம் சிவங்க ராய
14. ஓம் சிவாய சிவை வராய
15. ஓம் பரி வாரி தாய
16. ஓம் சபரி கிரீந்தர பீட நிலையாய
17. ஓம் மஹிக்ஷி மர்த்தன விக்ர மாய
18. ஓம் கணபதி ஸமே தாய
19. ஓம் ஸர்வ பூதாதி பாய
20. ஓம் மஞ்சாம்பிகா பரிவாராய
21. ஓம் தர்ம சாஸ்ரே நமக

த்யானம்

1. அன்யதா சரணம் நாஸ்தித்வமேவ சரணம்
மம தஸ் மாத் காருண்ய பாவேன் ரக்ஷ்ரக்ஷ் மஹேஸ்வரா
ஆவாகனம் நஜா நாமி நஜாநாமி விஸர்ஜனம்
பூஜாம் விதிம் நஜாநாமி க்ஷம்ய தாம் பூதநாயகா

2. ஜனன மரண ரஹித பரம ஸுகதம் தேஹிமே தேஹி
த்ரை லோக்ய த்யான வாஸ ப்ரபாகர் ப்ரகாச போத
நமஸ்தோ நமஸ்தேஸ்து பகவான் ஸ்ரீ பூர்ண புஷ்களா நாத
த்ராஹிமாம் த்ராஹிமாம் பாஹி ஸர்வாப ராதம் க்ஷமஸ் வாஹிலேசம்

த்யானம்

ஓங்கார மூலம் ஜோதி ஸ்வரூபம்
பம்பா நதி தீர ஸ்ரீ பூத நாதம்
ஸ்ரீ தேவ தேவம் சதுர் வேத பாவம்
ஸ்ரீ தர்ம ஸாஸ்தார மனஸாம் ஸ்மராமி

ஸ்ரீ ஐயப்பன் நமஸ்காரம்
பஞ்ச ரத்தினம்

1. அருணோதய ஸங்காசம் நீல குண்டலதாரிணம்
நீலாம் பரதரம் தேவம் வந்தேகம் பிரம்ம நந்தனம்

2. சாப பானம் வாம ஹஸ்தே ரௌப்பிய வேத ரஞ்ச தக்ஷிணே
விலசத் குண்டல தரம் வந்தேகம் விஷ்ணு நந்தனம்

3. வியாக் ராரூடம் ரக்த நேத்ரம் ஸவர்ண மால விபூஷ்ணம்
வீர பட்டதரம் கோரம் வந்தேகம் பாண்டிய நந்தனம்

4. கிங்கிண் யொட்டியாண பூஷேஷம் பூர்ண சந்திர நிபானணம்
கிராத ரூபா சாஸ்தாரம் வந்தேகம் பாண்டிய நந்தனம்

5. பூத வேதாள ஸம்ஸேயம் காஞ்சனாத்ரி நிவாஸினம்
மணிகண்ட மிதிக் யாதம் வந்தேகம் சக்தி நந்தனம்

ஆரத்தி மங்களம்

1. மணிகண்ட வாஸருக்கும் மலையேறும் தாஸருக்கும்
மாளிகை புரத்து மஞ்ச மாதாவுக்கும்
பந்தளத்தை ஆண்டு வந்த பார் போற்றும் மன்னருக்கும்
மணிகண்ட கோபால கிருஷ்ணனுக்கும்
ஜெயமங்களம் நித்ய சுப மங்களம்

2. பஞ்சகிரி நிவாஸாய பூத நாதாய மங்களம்
ஸ்ரீ ஹரிஹர புத்ராய பஞ்ச பூதாய மங்களம்
கலியுக ப்ரத்யக்ஷ தேவாய காந்த கிரீசாய மங்களம்
சர்வ பாப வினாசாய சபரிகிரீசாய மங்களம்

3. சங்கராய சங்கராய சங்க ராய மங்களம்
சங்கரீ மனோகராய ஸாஸ்வதாய மங்களம்
குருவராய மங்களம் தாத்தாத்ரேய மங்களம்
கஜானனாய மங்களம் ஷடானனாய மங்களம்
ரகுவராய மங்களம் ராதாகிருஷ்ண மங்களம்
பூர்ண புஷ்களா ஸமேத பூத நாத மங்களம்

திவ்ய நாம ஸங்கீர்த்தனம்
தீபப் ரதக்ஷிணம் சம்பூர்ணம்
சுவாமியே சரணம் ஐயப்பா
கற்பூரம் ஹாரத்தி எடுக்க வேண்டும்

தேவர்கள் ஸ்துதி

மஹிஷி சம்காரத்தால் பெரு மகிழ்ச்சி அடைந்த தேவர்கள் பகவானைக் கீழ்காணும் ஸ்தோத்திரத்தால் துதித்தார்கள். அதன் மூலம் மிகவும் பிரிதி அடைந்த பகவான் இத்தோத்திரம் மூலம் தன்னைத் துதிப்பவர் எவராயினும் அவர்களுக்கு வேண்டும் வரம் தருவதாக அருளி இருக்கிறார். இத் தோத்திரத்தை அனைவரும் துதிப்பது மிக விசேஷமாகும்.

தேவர்கள் வேண்டுதல்

1. ஓம் நமஸ்தே பகவதே நாமோ தாராயணாயதே
ஓம் நமஸ்தே பகவதே சர்வக் ஞாய நமோ நம

2. கோர சம்சாரார்ண வஸ்ய தாரகாய நமோ நம
தாரகப் பிரம்ம ரூபாய பூத நாதாயதே நமோ நம

3. போத ரூபாய பூதாய புண்ய பூர்ணயதே நமோ நம
வர்ணத் ராய யுதேகா ஓங்காராய நமோ நம

4. பகவராய நமஸ்துப்யம் ரேபாந் தாய நமோ நம
யகாராய நமஸ்துப்யம் கோகாராய நமோ நம

5. பகவராய தகாராய ரேபாந்தாய நமோ நம
நகாராய நமஸ்துப்யம் மகாராய நமோ நம

6. ஹாபோ சங்கடம் தேக சகலம் சகலேச்வர
தேவேச விச்வ கர்த்தா ஸ்த்வம் பரிபாஹி ஜெகத்பதே

7. விச்வ பர்தா ஜய சதா விஸ்வ ஹர்த்தா ஜெயப்ரபோ
சர்வே ஷாம் ஜீவ ஜாலனா மேக ஜீவஸ்வரூபக

8. தேவ தேவ ஜயத் வம்போ சர்வதா சர்வநாயகா
தர்ம ஸாஸ்தா ஜய பகவான் ஜன்மதுக்க வினாசன

விருத்தம்

1. ஐயனே கருணாக ரானந்த மூர்த்தி
அசில லோகாதி நாதா

2. மெய்யாய் எழுந்தருளி விளையாடி வர
மருள வேண்டும் மிது சமயம் ஐயா

3. கையினால் அடியவர்கள் பூஜா நைவேத்தியமும்
நெய்யினால் விளக் கேற்றியும்

4. ஐயா நீர் இங்கு வந்து எழுந்தருள்வீர்
என்று அனைவரும் காத்திருக்கோம்

5. கருணாகரா ஓங்கார பொருளான தெய்வமே
ஹரிச் சந்திர சூடா பாலா

6. பெரிதான காட்டினில் புகுந்து வந்துன்
மனம் தெரிவிக்க ஆசைக் கொண்டோம்

7. கோர மிருக மேவிவளர் பாமாலை ஊடு
வழி தீரமாய் ஏறி வந்தோம்

8. காருண்யனே எங்கள் கண்ணெதிரில்
உந்தனை காணாது மனம் வாடுகிறோம்

9. ஐயனே உன் வசதி ஆரியங்காவிலோ
அச்சனார் கோவில் தன்னிலோ

10. தென் குளத்தூரிலோ தேவர்கள் மலர்
சொரியும் முத்தையனார் கோவில் தன்னிலோ

11. விண்ணவர்கள் போற்றும் பொன்னம்பலம்
தன்னிலோ சபரி ஹிரி வரை தன்னிலோ

12. எங்கெங் கிருக்கினும் எழியோர்கள் மீது
கிருபை செய்தருள வேண்டுமையா

13. மலைநசட்டில் வளமோங்கு மாமலையின்
வாசனை மதனே சதகோடி வடிவே

14. அந்த மதியற்ற மகிக்ஷி முகி வதை
காரணார்த்தமாய் அவதாரமான பொருளே

15. பாண்டி முதலான பல தேச வாசிகளெல்லாம்
பக்தி பூண்டிங்கு வந்தோம்

16. பரம காருண்யனே கருணை மிக காட்டியே
பரிவுடன் பவனி வருவாய்

17. வந்தால் ஒழித்திடும் என் சந்தாபமும்
எங்கள் சகல வித துரித மெல்லாம்

18. சித்திப் பறக்கடித்திடும் உனது பாத சார
சீரகத்தின் பொடியதை தந்தருள்வீர்

19. அந்தி பகல் உந்தனது நாமமே சிந்தனைகள்
செய்ய அருள் வாய்

20. பொய்யா தவமுனிவர் போற்றும் பொற்பாதனே
பூர்ணா புஷ்களை நாதனே

21. பொன்னம்பலத்தில் வளர் பூர்ணாச் சந்திர
பிரபா சோபி தானந்த திவ்யா

22. தவயோக சித்தாந்த சபரீ பீடாஸ்ரம
ஸ்தான மெய் ஞான குருவே

சபரிமலையில் இரவு நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

1. ஹரிவ ராஸனம் விஸ்வ மோஹனம்
ஹரிததீஸ்வரம் ஆ ராத்ய பாதுகம்
அரிவிமர்தனம் நித்ய நர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

2. சரண கீர்த்தனம் சக்த மானஸம்
பரணலோ லுபம் நர்த்தனாலஸம்
அருண பரஸுரம் பூத நாயகம்
ஹரி ஹராத்மஜம் தேவ மாச்ரேய

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

3. ப்ரணய ஸத்யகம் ப்ராண நாயகம்
ப்ரணவ கல்பகம் ஸுப்ர பாஞ்சிதம்
ப்ரணவ மந்திரம் கீர்த்தனப் ரியம்
ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரேய

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

4. துரக வாகனம் ஸுந்த ரானனம்
வரக தாயுதம் தேவ வர்ணிதம்
குருக்குருபாகரம் கீர்த்தனப்ரியம்
ஹரி ஹராத்மஜம் தேவ மாச்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

5. த்ரி புவனார் சுதம் தேவாத்மகம்
த்ரி நயன ப்ரபும் திவ்ய தேசிகம்
த்ரிதச பூஜிதம் சிந்தித ப்ரதம்
ஹரி ஹராத்மஜம் தேவ மாச்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

6. பவபயா பகம் பாவு காவகம்
புவன மோகனம் பூதிபூஷணம்
தவள வாகனம் திவ்ய வாரனம்
ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

7. களம்ருது ஸ்மிதம் ஸுந்தரானனம்
களப கோமளம் காத்ர மோகனம்
களப கேசரி வாஜி வாகனம்
ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

8. ச்ரித ஜனப்பிரியம் சிந்திதப்ரதம்
ச்ருதி விபூஷணம் ஸாது ஜீவனம்
ச்ருதி மனோகரம் கீதலாலஸம்
ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

மாலையை அவிழ்த்து விரதத்தினை முடித்துக் கொள்ளும் போது சொல்லும் மந்திரம்

அபூர்வ மசால ரோஹி
திவ்ய தரிசன காரிணே
சாஸ்த்ரு முத்ராத் மகாதேவ
தேஹிமே விரத விமோசனம்.