புதன், 11 பிப்ரவரி, 2015

தேடினால் கிடைப்பான்
* சமத்துவம் என்பது சொல் அளவில் மட்டுமே இருக்கிறது. கடவுளை முழுமையாக அறிந்த ஞானியின் கண்ணுக்கு உலகமே சமமாகத் தோன்றும்.
* தேடாத வரைக்கும் தான் கடவுள் எங்கோ இருப்பதாகத் தோன்றும். ஆனால்,அவனை தேடத் தொடங்கி விட்டால் நமக்கு அருகிலே இருப்பதை அறிய முடியும்.
* நோய்,துன்பம்,வறுமை குறுக்கிடும்போது பொறுமையுடன் எதிர்கொள்ள வேண்டும்.நமக்கு துன்பம் செய்தவரையும் மன்னிக்கும் பெருந்தன்மைவேண்டும்.
* உடல்,உடை இவை மட்டும் தூய்மையாக இருந்தால் போதாது.மனதில் அழுக்கு படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.அதற்கு கடவுளின் திருவடியைச் சிந்திப்பது ஒன்று தான் வழி.
* இந்த உலகத்தைப் படைத்த கடவுளுக்கு நன்றி செலுத்துவதே நைவேத்யம் படைப்பதன் நோக்கம்.   {காஞ்சி மஹா பெரியவா}



குரங்கை அடிக்காதே!

ஸ்ரீமடத்தில் மேனாவில் அமர்ந்து தரிசனம் தந்து கொண்டிருந்தார் பெரியவா.ஏராளமான கூட்டம்.தட்டு தட்டாக பழங்கள்,தேன் பாட்டில்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.திடீரென்று ஒரு குரங்குப்படை உள்ளே வந்தது. அட்டகாசம்தான்!பழங்கள் குதறப்பட்டன!தேன் பாட்டில்கள் உருண்டன!பெரியவாளிடம் போய் விஷமம் பண்ணிடுமோ?என்று சிஷ்யர்களுக்கு ஒரே கவலை.
பெரியவா முகத்தில் சஞ்சலத்தின் ரேகையே இல்லை." ஒண்ணும் பண்ணாதீங்கோ அதுகளை"விரலை சொடுக்கி ஈஸ்வராக்ஞை பிறந்தது!கொண்டுவந்த தடிகள் செயலிழந்து நின்றன.ஒருவழியாக தாங்கள் வந்த கைங்கர்யத்தை முடித்து கொண்டு ராம காரியத்துக்காக போய் விட்டன வானரங்கள்.
பெரியவா அப்போது ஒரு கதை சொன்னார்.........
தஞ்சாவூர் பக்கத்தல ஒரு க்ராமத்துல குரங்குகளோட தொல்லை தாங்கலை.அசட்டுத்தனமா மாட்டிண்ட ஒரு குரங்கை ஒர்த்தர் தடியால அடிச்சதில் உள்காயம் உண்டாகி கொஞ்ச நாள்ல அது செத்து போய்டுத்து. அடுத்தாப்ல அவருக்கு பொறந்த குழந்தைகளுக்கு பேச்சு வரலை.பொண் குழந்தை கல்யாணம் பண்ண வேண்டியிருந்தது.என்கிட்டவந்து அவர் பண்ணின பாவத்தை சொல்லி அழுதார்.மண்ணால குரங்கு பொம்மை பண்ணி உங்க ஊர் கிராம தேவதை கோவில்ல காணிக்கை மாதிரி குடுத்துடு.மனசொப்பி கல்யாணம் பண்ணிக்கறவனா பாத்து விவாஹம் பண்ணி குடு" என்றாராம்.அதன்படியே நடந்து அந்தஊமைபெண்ணுக்குசுட்டித்தனமா பேசற குழந்தையும் பிறந்ததாம்."குரங்கை அடிக்க கூடாது.அதுகள்கிட்ட கருணை காட்டணும்.ராம சேவகா பரம்பரை.நமக்கு தொந்தரவு குடுத்தா கூட ஆஞ்சநேயரை நெனனச்சுண்டு அதுகளை விட்டுடணும்"பெரியவா இருந்த சிறிய அறைக்குள் சிஷ்யர்களோ பக்தர்களோ போகமுடியாதே தவிர,எலி, அணில்,பக்ஷிகள் எல்லாம் சர்வ சுதந்திரமாக உள்ளே சுற்றித்திரியும்.போய் மரச்சொம்பில் ஏறும்; உள்ளே எட்டி பார்க்கும்"ஜில்" என்று ஜலம் கண்ணில் பட்டதும் தாகம் தீரும்வரை குடித்துவிட்டு வெளியே ஓடி விடும்.பெரியவா அவைகளின் வரவையும்,போக்கையும் ஆனந்தமாக பார்த்து அனுபவித்துக்கொண்டிருப்பார்.
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்(று)
அங்கப் பழஞ்சொல் புதுக்கும்எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம் கேள்
எம்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லா தெப்பணியும் செய்யற்க
கங்குல் பகலெங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய். 19
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்து அலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய் நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவாற்ற கில்லையால்
தத்துவம் அன்று தகவு ஏல் ஓர் எம்பாவாய்
குத்து விளக்கு - நிலை விளக்கு; கோட்டுக்கால் - தந்தக்கால்;
பஞ்ச சயனம் - ஐந்து தன்மைகளைக் கொண்ட படுக்கை
(வெண்மை, மிருது, வாசனை, அழகு, குளிர்ச்சி);
கொங்கை - மார்பகம்; மலர் - மலரையொத்த விசாலமான; மைத்தடம் - மை தீட்டிய;
தத்துவம் - ஸ்வரூபம், உண்மை, நடைமுறை, குணம், உடல் அமைப்பு, பலம்,
வலிமை, தேகபலம், இந்திரியபலம்;

பொய்கையாழ்வார்
பிறந்த ஊர் :காஞ்சிபுரம், திருவெக்கா பொற்றாமரை பொய்கையில்அவதரித்தவர்,
பிறந்த நாள் :7ம்நூற்றாண்டு
நட்சத்திரம் :ஐப்பசி திருவோணம் (வளர்பிறை அஷ்டமி திதி)
கிழமை :செவ்வாய்
எழுதிய நூல் :முதல் திருவந்தாதி
பாடல்கள் :100
சிறப்பு :திருமாலின் சங்கின் அம்சம்.
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேன்சொன் மாலை
இடராழி நீங்குகவே என்று !
இவ்வாறு நூறு பாடல்களைப்பாடியவர் பொய்கையாழ்வார்.வைணவத்தினர் இவரை கவிஞர் தலைவன் என் போற்றுகின்றனர்.இவர் காஞ்சி நகர் திருவெக்கா பொய்கையில் அவதரித்தார்.பொய்கையில் அவதரித்த காரணத்தாலேயே இவர் பொய்கைஆழ்வார் என அழைக்கப்பட்டார்.திருமாலின் கருணையால் அனைத்தையும் கற்றார்.கற்றதின் பயனாய் இம்மைக்கும் மறுமைக்கும் பயன் தரக்கூடியது திருமாலின் தொண்டு தான் என்பதை உணர்ந்தார்.அத்துடன் தன்னையே பெருமாளின் தொண்டிற்கு அர்ப்பணித்து கொண்டார்.மொத்தம் 6 திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.இவர்தான் முதலில் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை இவ்வுலகிற்கு அர்ப்பணித்தவர்.சதா சர்வ காலமும் விஷ்ணுவின் நினைப்பிலேயே இருப்பார்.தன்னையே மறந்து பகவானை பாடி மகிழ்வார்.
ஹரியும் சிவனும் ஒன்றுதான்.ஹரியை வணங்குபவர்கள் சிவனை வெறுக்க வேண்டாம்.சிவனை வெறுக்க வேண்டாம்.சிவனை வழிபடுபவர்கள் ஹரியை பழிக்க வேண்டாம்.இதை மக்களிடம் கூறிக்கொண்டதோடு ஹரியிடம் மாறாபக்தி கொண்டும் அவருக்கு சேவை செய்தும் வாழ்ந்து வந்தார்.இறைவனை அடைந்து ஒன்றாக கலப்பது தான் ஆத்மாவின் தன்மை என்றும் இறைவனை பிரிந்திருப்பது தான் துன்பங்களுக்கெல்லாம் மூல காரணம் என்பதையும் பொய்கையாழ்வார் உணர்த்துகிறார்.ஒரு சமயம் பொய்கை ஆழ்வார் திருக்கோவிலூர் மிருகண்டு முனிவரது ஆசிரமத்துக்கு சென்றார்.அங்கு பூதத்தாழ்வாரும் பேயாழ்வாரும் வந்து சேர்ந்தனர்.இவர்கள் மூவரும் நெருக்கியடித்து நிற்க அங்கு சங்கு சக்கரத்துடன் திருமால் தோன்றி மூவருக்கும் காட்சியளித்தார்.இவர் பேயாழ்வார் மற்றும் பூதத்தாழ்வாருடன் பல திவ்ய தேசங்களுக்கு சென்று பரந்தாமனைப் பாடி பணிந்தார்.பெருமாளின் 108 திருப்பதிகளில் பொய்கையாழ்வார் தனியாக மங்களாசாசனம் செய்யாமல் பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து மொத்தம் 6 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.
பொய்கையாழ்வார்,திருமங்கை ஆழ்வார்.1
1. காஞ்சிபுரம் (அருள்மிகு ஆதி கேசவ பெருமாள் திருக்கோயில்,அஷ்டபுஜம்,காஞ்சிபுரம்)
பொய்கையாழ்வார்,பூதத்தாழ்வார்,திருமங்கை ஆழ்வார்.1
1. திருக்கோயிலூர் (அருள்மிகு திரிவிக்கிரமர் திருக்கோயில்,திருக்கோயிலூர்,விழுப்புரம்)
பொய்கையாழ்வார்,திருமங்கை ஆழ்வார்,பேயாழ்வார்,திருமழிசை ஆழ்வார்.1
1. திருவெக்கா (சொன்ன வண்ணம் செய்த பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டம்)
பொய்கையாழ்வார்,பூதத்தாழ்வார்,பேயாழ்வார்,நம்மாழ்வார்,ஆண்டாள்,பெரியாழ்வார்,திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார்,திருமழிசை ஆழ்வார்,திருப்பாணாழ்வார்.2
1. திருவேங்கடம் (அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில்,திருப்பதி,சித்தூர்,ஆந்திரா)
2. திருப்பாற்கடல்
பொய்கையாழ்வார்,பூதத்தாழ்வார்,பேயாழ்வார்,நம்மாழ்வார்,ஆண்டாள்,பெரியாழ்வார்,திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார்,திருமழிசை ஆழ்வார்,திருப்பாணாழ்வார்,தொண்டரடி பொடியாழ்வார்.1
1. ஸ்ரீரங்கம் (அருள்மிகு ரங்கநாதன் திருக்கோயில்,ஸ்ரீரங்கம்,திருச்சி)

அம்பாளின் ஸ்வரூபம்-உமாஹைமவதி ( ஸ்ரீ பெரியவா )

நீதான் பரமேசுவரன் சரீரம் என்று ஸ்ரீ சங்கர பகவத் பாதர்கள் அம்பிகையைப் பார்த்துச் சொல்கிறார்.சரீரத்திற்குள் உயிர் இருக்கிறது. பல சரீரத்துக்குள் பல சரீரங்கள் இருக்கின்றன.இத்தனை உயிர்களுக்கெல்லாமும் உயிராக ஒரே மூல வஸ்துதான் இருக்கிறது. அந்த மூல வஸ்துவான பிரம்மம்தான் பரமேசுவரன் என்றால் அதன் இத்தனை தோற்றங்களுமே பராசக்தி. இது அவ்வளவும் அதற்குச் சரீரமாகவும் அது இவற்றுக்குப் பிராண வாயுவாகவும் இருக்கிறது. பிரபஞ்சம் அதிலுள்ள ஜீவராசிகள் அவற்றின் மனசு,புத்தி,சித்தம், அகங்காரம் எல்லாம் பரமேசுவரன் என்ற உயிருக்குச் சரீரம் மாதிரி. இது அத்தனைம் சாக்ஷ£த் அம்பாள்தான்.உடலும் உயிரும் மாதிரி பிரம்மமும் பிரம்ம சக்தியும் பிரியாமல் இருக்கின்றன.உடலில் எல்லா இடங்களிலும் உயிர் ஒடுகிற மாதிரி பராசக்திக்குள் முழுக்க பிரம்ம தத்வமேதான் நிறைந்திருக்கிறது.அந்த பிரம்மத்துக்கே ஒர் உடம்பு கொடுத்துப் பரமேசுவரன் என்று வைத்தால் அந்த உடம்புக்குச் சாத்திய கவசமாக இருக்கிறவள் அம்பாள்.கர்ணகவசம் மாதிரி பிரிக்கவே முடியாத கவசம்.

அம்பாள் பரமேசுவரனோடு பிரிக்க முடியாமல் கலந்திருப்பதைத்தான் ஒரு மாதிரியாக இவள் பாதி-அவர் பாதியாக ஒன்று சேர்ந்ததுபோல் அர்த்தநாரீசுவர ஸ்வரூபத்தில் பார்க்கிறோம்.சொல்லும் பொருளும் போல் ஈசுவரனும் அம்பிகையும் பிரிக்க முடியாமல் ஐக்கியமாயிருக்கிறார்கள் வாக் அர்த்தாவிவ என்று மகாகவி காளிதாஸர் சொல்கிறார்.நான் பசு என்று சொன்னால் அது'ப'என்கிற ஒரு சப்தமும்'சு'என்கிற ஒரு சத்தமும்தான். சொல்லின் சத்தத்திலோ எழுத்திலோ அந்த மிருகம் எங்கே இருக்கிறது என்று கேட்டால் எப்படிச் சொல்வது?எப்படியிருக்கிறது என்று கேட்டால் எப்படிச் சொல்வது? எப்படியிருக்கிறது எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனாலும் இந்த வார்த்தையைச் சொன்னவுடன் பசுவின் நினைப்பு உண்டாகிறது.வாக்கும் அர்த்தமும் பிரிக்க முடியாதபடி இருக்கின்றன. இப்படித்தான் பிரபஞ்சத்தில் ஜீவராசிகளில் அவற்றின் எண்ணங்கள் காரியங்கள் ஆகியவற்றில் பிரம்மம் எங்கே எப்படி இருக்கிறது என்று தெரியாவிட்டாலும் இவை எல்லாம் சொல் என்றால் பொருளாக அந்த மூலப்பொருள் இருக்கிறது.

அம்பாளுடைய ஸ்வரூபம் என்ன என்றால் நாம் பார்க்கிற அத்தனை உருவங்களும்தான். உருவங்கள் மட்டுமில்லை. எண்ணங்கள் காரியங்கள் எல்லாமும் அவள்தான்.அவளின்றி நம் சரீரம்,மனசு, உயிர் எதுவுமில்லை.சரீரம் த்வம் சம்போ.பரமேசுவரனின் சரீரமாயிருக்கிறாய் என்று சௌந்தரிய லஹரியில் சொல்கிற ஆசாரியாள் அடுத்த ஸ்லோகத்தில் நீதான் சூக்ஷ்மமான மனதாய் இருக்கிறாய் என்கிறார்.அந்த மூலமான மனஸிலிருந்து சூக்ஷ்மமான ஆகாசம் உண்டாகிறது.அது மேலும் மேலும் ஸ்தூலமாகி,காற்று, அக்னி,ஜலம்,மண் எல்லாம் வந்தன.இதெல்லாமும் நீதான் என்கிறார்.இல்லாமல் வேறு வஸ்து எதுவுமே இல்லை என்கிறார். த்வயி பரிணதாயாம் நஹி பரம்.

சம்பு என்ற உயிருக்கு சரீரம் என்று சொன்னாலும்,உயிர்,உடல் என்ற பேதமில்லாமல் ஒன்றாக இருந்ததும் நீதான்.நீயேதான் விசுவம் என்கிற சரீரமாகப் பரிணமித்தாய் என்கிறார்.த்வம் ஏவ ஸ்வாத்மானம் பரிணமயிதும் விச்வ வபுஷா.

இங்கே நம் சங்கராச்சாரியார் சொல்வது உலகம் எல்லாம் பரமாத்மாவுக்கு சரீரம்.உள்ளேயிருக்கிற உயிர் அந்தர்யாமி அவரே என்கிற ராமாநுஜ சித்தாந்தம் மாதிரி இருக்கிறது.ஆனால் அப்போதுகூட உடம்பு உயிர் என்ற வித்தியாசம் துவைதம் மாதிரி சொன்னவர் தொடர்ந்து அத்வைதத்தையே சொல்கிறார்.எங்களிடம் இருக்கிற துளித் துளி ஞானத்துக்கும் ஆனந்தத்துக்கும் மூலமான பரம ஞானமும் பரமானந்தமும் நீதான்.இந்த ஞானத்தையும் ஆனந்தத்தையும் அநுபவிப்பதற்கே ஒன்றாக இருந்தவள் இரண்டு மாதிரி ஆகி சிவயுக்தி என்ற பாவத்தைத் தாங்கியிருக்கிறாய் என்கிறார்.இது பாவம்தான். வாஸ்தவத்தில் விச்வ சரீரமும் அதன் உயிரான அம்பாளும் ஒன்றுதான்.அந்த அம்பாளும் யாருக்கு சரீரம் மாதிரி இருக்கிறாளோ அந்த சம்புவும் அவளும்கூட ஒனறுதான்.அத்வைதம்தான்.

ஒன்று எங்கேயும் இருக்கிறது என்றால் அதற்குத் தனி உருவம் எப்படி இருக்க முடியும்?காற்று அநேகமாக எங்கேயும் செல்ல முடிகிறது. அதற்கு ரூபம் இருக்கிறதோ?அம்பாளோ அதைவிட சூக்ஷ்மம். காற்று இல்லாத சூனியத்தை கூட உண்டாக்குகிறார்கள்.ஆனால் அவள் இல்லாத இடம் இல்லை.மனசு,எண்ணம் இதற்குள்ளும் இருக்கிறாள். அப்படியானால் அவளுக்கு எப்படி உருவம் இருக்க முடியும்? ஆனால் இது நம் சாமானிய நிலையில் மனசுக்கு ஹிதமாக இல்லை. அவளிடமிருந்து நாம் வந்தோம் என்பதால் அவள் அம்மாவும் நாம் குழந்தைகளும் மாதிரி.அம்மா ஒருத்தி இருக்கிறாள் என்று குழந்தைக்குத் தெரிந்து விட்டால் மட்டும் சந்தோஷப்படுமா?அவள் இருந்தால் மட்டும் போதாது.அவளைப் பார்க்க வேண்டும் பேசவேண்டும் என்று ஆசைப்படும்.

எவள் எல்லா ரூபமாகவும் இருக்கிறாள் என்று நம்மால் உணர் முடியவில்லை.அருவமாகவே நாம் அவளைத் தியானிக்க நமக்குப் பக்குவம் இல்லை.இப்படிப்பட்ட நமக்காகவே நாம் அன்பு செய்வதற்காகவே அவள் இப்போது காருண்யமும் லாவண்யமும் ஒரு ரூபமாகித் திவ்விய மங்கள விக்கிரகமாக வருகிறாள்.ரூபமில்லாத நெய்யை நன்றாகக் குளிர வைத்தால் பாளம் பாளமாகப் பெயர்த்து எடுக்கிற மாதிரி கெட்டிப்பட்டுப் போகிறது அல்லவா?இப்படித்தான் க்ருத காடின்யவத் என்கிற நியாயப்படி பக்தர்களுடைய நெஞ்சின் குளிர்ச்சியில் பரம சூக்ஷ்மமான அம்பிகை உறைந்து போய் ஸ்தூலமான பல திவ்விய ரூபங்களை எடுத்துக் கொள்கிறாள்.

அம்பாளுடைய அப்படிப்பட்ட ரூபம் எப்படி இருக்கும்.சாதாரணமாக பத்துப் பேருக்கு நூறு பேருக்கு அன்னதானம் செய்கிற ஒரு நல்ல ஜீவனின் முகத்தைப் பார்த்தால் அதில் எத்தனை அன்பு சொட்டுகிறது? அன்னதானம் செய்து பலர் வயிறாரச் சாப்பிட்டு சந்தோஷப்படுகிறபோது அந்த அன்னதாதாவின் சந்தோஷத்தைப் பாருங்கள்.அந்த சந்தோஷத்தில் அவன் முகத்தில் எவ்வளவு அன்பு சொட்டுகிறது.சாப்பிடுகிறவனைவிட சாப்பாடு போட்டவனுக்குத்தான் ஆனந்தம் அதிகம் இருக்கிறது.ஒரு பத்து பேர் அல்லது நூறு பேருக்கு மட்டும் ஒரே ஒரு வேளை சோறு போடுகிறவனுடமே இத்தனை அன்பும் ஆனந்தமும் இருக்கின்றன.மகா பாபங்களைச் செய்து காரியத்தில் செய்யாவிட்டாலும் மனஸினால் மகா பாபங்களை நினைத்து ஒரு வேளை சோறு கிடைக்கக்கூட யோக்கியதை இல்லாத நம் இத்தனை பேருக்கும் கோடாநு கோடி ஜீவன்களுக்கும் கல்பகோடி காலமாக சோறு போட்டுக் கொண்டிருக்கிற ஒருத்தி அன்ன பூரணேசுவரியான அம்பாள்தான்.அவளுடைய அன்பையும் அதனால் உண்டான ஆனந்த ஸ்வரூபத்தையும் நம்மால் கற்பனை செய்கூடப் பார்க்க முடியாது.அம்பாள் ஸெளந்தரியஸ்வரூபம் என்கிறார்கள். அவளைப் பற்றி ஸெளந்தரிய லஹரி என்றே ஆச்சாரியாள் ஸ்தோத்திரம் செய்திருக்கிறார்.இத்தனை ஸெளந்தரியம் லாவண்யம் அவளுக்கு எப்படி வந்தது என்றால் அன்புதான் அழகாகிறது. காருண்யம்தான் லாவண்யம். பாக்கி சரீர அழகு ஒர் அழகல்ல. கொஞ்சம் கோபம் வந்தால் துளி ஜுரம் வந்தால் சரீர அழகு போய்விடுகிறது.அம்பாளோ நிரந்தரமான கருணாமூர்த்தியாக எப்போதும் லாவண்யமாக இருக்கிறாள்.எந்த பக்தருக்கு அந்த ரூபத்தில் மனசு ஈடுபடுமோ அந்த ரூபத்தில் வந்து அருள் செய்வதற்காகப் பல ரூபங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறாள். ராஜராஜேசுவரி,புவனேசுவரி,துர்க்கை,காளி என்று இப்படி ஸெளம்யமாகவும் உக்ரமாகவும் பல தினுசில் அவளை ஆராதிக்க வேறு வேறு ரூபம் கொள்கிறாள்.

ஒவ்வொரு ரூபத்தையும் பிரத்யக்ஷமாகத் தரிசனம் செய்ய வேண்டுமானால்,அதற்கு உபயமாக ஒவ்வொரு மந்திரம் இருக்கிறது. மந்திரம் என்பது ஒரு சப்தக் கோவை அக்ஷரங்களின் கூட்டம். பல வடிவங்களில் இருக்கிற அம்பாளே பல சப்தங்களாகவும் அக்ஷரங்களாகவும் இருக்கிறாள்.அவளுடைய அநுக்கிரகத்தால் மகா கவியாகப் பரிணமித்த காளிதாஸர் அவளை ஸர்வ வர்ணாத்மிகேஸர்வ மந்த்ராத்மிகே என்று'சியாமளா தண்டகத்தில் 'ஸ்துதி செய்கிறார்.வர்ணம் என்றால் நிறம் என்று நினைப்பீர்கள். வர்ணம் என்றால் அக்ஷரம் என்று அர்த்தம்.ஒலி வடிவான அக்ஷரங்களும் ஒளி வடிவமான ரூபங்களும் ஒரே மூலத்திலிருந்து வந்தவைதான்.அவை ஒன்றுக்கொன்று நிரம்ப நெருக்கமான சம்பந்தம் உடையவை.ஸயன்ஸ் நிபுணர்கள்கூட இந்த ஒற்றுமையைச் சொல்கிறார்கள்.ஜலக்கரையில் பலவிதமான சப்தங்களை எழுப்பிப் பார்த்தார்கள்.அப்போது அவற்றின் அதிர்வுகளைப் பொறுத்து ஜலத்தின் மேலே மிதக்கிற லேசான துகள்கள் வெவ்வேறு உருவங்களாக அமைந்தன.நாதத்துக்கே ரூபம் கொடுக்கற சக்தி இருக்கிறது என்று இதனால் தெரிகிறது.

ஒரு பெரிய அலை மடிந்து மடிந்து சிறு சிறு அலைகளாகி அடங்குகிற மாதிரிச் சில சப்தங்கள் இருக்கின்றன. இதை வீசிதரங்கம் என்பார்கள். ஒரே கொப்புளிப்பில் பலவாகத் தெறிப்பதுபோல் விழுகிற சப்தங்களை முகுளம் என்பார்கள்.இப்படிப் பலவகைப்பட்ட சப்தங்களையெல்லாம் ஐம்பத்தொரு அக்ஷரங்களாகப் பிரித்திருக்கிறார்கள். இவற்றுக்குப் பெயர் மாத்ருகா என்பது.மாத்ரு என்றால் தாயார் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். சப்தமாகவும் எழுத்தாகவும் அம்பாள் இருக்கிறாள். இவற்றில் சில சப்தக் கோவைகளை விடாமல் ஜபிக்கும்போது அவற்றுக்குறிய ரூபங்களும் பிரத்யக்ஷமாகின்றன.இப்படிப்பட்ட சப்தக் கோவைகளைத்தான் மந்திரம் என்கிறோம்.மந்திரமே அம்பாளின் ஸ்வரூபம்தான்.கை கால் முதலான அவயங்களோடு ஆயுதங்களைத் தரித்த வடிவங்களைப் போலவே எல்லா மந்திரங்களும் அவள் வடிவம்தான்.அதோடுகூட, இந்த மந்திரங்களை ஒருமுகப்பட்ட சித்தத்தோடு தீவிரமாக ஜபம் செய்தால்,அவளே அந்தந்த மந்திரத்துக்குரிய ரூபத்தில்,சரணாகதி அவயவங்களுடனும் ஆயுதங்களுடனும் முத்திரைகள் முதலியவற்றுடனும் தரிசனம் தருவாள்.இந்த மந்திரங்கள் எல்லாவற்றுக்கும் மூலமாக இருப்பது பிரணவம்.அதிலிருந்து இந்த நாம ரூபப் பிரபஞ்ஜம் முழுக்க வந்தது. நாத ஸ்வரூபிணியான அம்பாளே ஒங்காரமாகிய அந்தப் பிரணவமும் ஆவாள்.அ,உ,ம மூன்றும் சேர்ந்து ஒம் என்று ஆகிறது.அ-சிருஷ்டி;உ- பரிபாலனம்;ம-சம்ஹாரம் என்பார்கள்.அதனால் முத்தொழிலும் செய்யும் மூல சக்தியே பிரணவம்.இதையே அம்பாளின் தொழில்களில் விசேஷமான கருணையைக்காட்டும் பரிபாலனத்தில் தொடங்கினால் உ-ம -அ -என்றாகும்.அதுதான் உமா என்பது.உபநிஷதமும் அவளை உமாஹைமவதி என்றே சொல்கிறது.

பூதங்கள் தோறும்நின் றாய்எனின் அல்லால்
   போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
    கேட்டறி யோம் உனைக் கண்டறி வாரைச்
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா!
    சிந்தனைக் கும்அரி யாய்! எங்கள் முன்வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
    எம்பெரு மான்! பள்ளி எழுந்தரு ளாயே! 

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்
     ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைத்த
     கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
     அருத்தித்து வந்தொம் பறை தருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
     வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்

ஒருத்தி-ஒரு பெண்ணுக்கு(தேவகி);ஒருத்தி-மற்றொரு பெண்ணுக்கு (யசோதை);தரிக்கிலான்-பொறுக்க,சகிக்க மாட்டாதவன்;கஞ்சன்- கயவன்,கம்சன்;அருத்தித்து-யாசித்து,உத்தேசித்து பிரார்த்தனை செய்து;திருத்தக்க-பிராட்டியும் ஆசைப் படத்தக்க,லக்ஷ்மியும் விரும்பும்;சேவகம்-வீரியம்,வீரிய குணம்,ஏவியதை செய்வது, குற்றேவல்;

வியாழன், 29 ஜனவரி, 2015

சிவ பூஜைக்கேற்ற ஊமத்தம்பூ..!
சிவபெருமானுக்கு உன்மத்தசேகரன் என்று ஒரு பெயர்இருக்கிறது.உன்மத்தம் என்றால் ஊமத்தம்பூ. ஊமத்தம்பூ மீது விருப்பம் கொண்டவன் என்று பொருள்.உன்மத்தம் என்பதற்கு பைத்தியம் என்றும் பொருள் உண்டு.சிவபெருமானுக்கும் பித்தன்(பைத்தியம்)என்றொரு பெயர் இருக்கிறது.எருக்கு, தும்பை ஆகிய பூக்களும் அவருக்கு பிடிக்கும்.அப்பைய தீட்சிதர் என்ற மகான்,பைத்தியம் பிடித்த நிலையிலும்,சிவன் மீது 50 ஸ்லோகம் கொண்ட ஸ்தோத்திரத்தைப் பாடினார்.அதற்கு உன்மத்த பஞ்சாசத் என்று பெயர்.அதில் சிவபெருமானே!உன் கருணையை என்னவென்று சொல்வேன்.எளிதாக கிடைப்பதும் மக்களால் பயன்படுத்தாததுமான ஊமத்தை,தும்பை,எருக்கு ஆகிய மலர்களை ஏற்றுக் கொண்டு எங்களுக்கு மோட்சத்தை வழங்குகிறாயே என போற்றியுள்ளார்.விலையே இல்லாத இந்த மலர்களை யாரும் கண்டு கொள்வதில்லை. ஆனால் கடவுளுக்கு எளிமையே பிடிக்கும் என்பதை உணர்த்தும் விதமாக இந்த ஸ்லோகம் அமைந்துள்ளது.


தெரியுமா உங்களுக்கு பாத்ரூமில் பாடினால் அழகு போயிடும்!
பாத்ரூமில் நுழைந்ததும் தன்னை மறந்து பாடுவது சிலரது இயல்பு.ஆனால் சாஸ்திரம் இதைப் பற்றி என்ன சொல்கிறது என்று கேளுங்கள்.எங்கு குளித்தாலும்,கங்கை,யமுனை,கோதாவரி,சரஸ்வதி,நர்மதை,சிந்து, காவிரி ஆகிய ஏழு புண்ணிய நதிகளையும் முதலில் வணங்க வேண்டும்.அதற்குரிய ஸ்லோகமாக,
“கங்கே ச யமுனே ச கோதாவரி சரஸ்வதிநர்மதே சிந்து காவேரி ஜலேஸ்மின் சந்நிதிம் குரு!”
என்று சொல்ல வேண்டும்.அதன் பின் இஷ்ட தெய்வத்திற்குரிய ஸ்லோகமோ அல்லது மந்திரமோ சொல்லலாம்.ஏதும் தெரியாதவர்கள் மவுனமாக நீராட வேண்டும்.வீண்பேச்சோ கண்ட பாட்டுகளையோ சத்தமிட்டுப் பாடக்கூடாது.இதனால் நீருக்கு அதிபதியான வருணன் கோபம் கொள்வதோடு மேனியழகைக் குறையச் செய்து விடுவதாக தர்ம சாஸ்திரம் கூறுகிறது.இனி பாத்ரூமில் படாதிர்கள்.
ருத்ராட்சத்தின் மருத்துவ குணங்கள்!
ருத்ராட்சத்தைக் கழுத்தில் அணிவதால் புற்று நோய் கூட தணியும் என்று சமீபத்தில் வெளியான சில ஆராய்ச்சிக் குறிப்புகள் வெளிப்படுத்துகின்றன.பித்தம்,தாகம்,விக்கல் போன்வற்றிற்கு இது மிகவும் நல்லது. கபம்,வாதம்,தலைவலி போன்ற நோய்களுக்கு ருத்ராட்சம் சிறந்த மருந்தாகும் என்று ஆயுர்வேதம் கூறுகின்றது.ருசியை விருத்தி அடையச் செய்யும். மன நோய்களுக்கு சாந்தம் அளிக்கும்.கண்டகாரி,திப்பிலி என்பவற்றுடன் இதைச் சேர்த்து கஷாயம் செய்து அருந்தினால் சுவாச கோசம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமடையும்.
ஐந்து முக ருத்ராட்சம் ஒன்றை எடுத்து அதில் எலுமிச்சம் சாறு விட்டு இழைத்து அந்தச் சாற்றை தேள் கொட்டிய இடத்தில் தடவினால் வலி உடனே நீங்கும்.இந்த ருத்ராட்சம் தூக்கம் இல்லாமல் துன்பப்படுபவர்களுக்கு நல்ல நிவாரணி.இதை பால்விட்டு இழைத்து அந்தச் சாற்றை கண் இமைகள் மீது தடவிக் கொண்டால் நிம்மதியான உறக்கம் வரும்.இந்த ருத்ராட்சத்தை துõளாக்கி துளசிச் சாற்றில் கலந்து உட்கொண்டால் பக்கவாத நோயும் குணமாகும்.தண்ணீரில் இதைப் போட்டு சில மணி நேரம் ஊற வைத்து, பிறகு ருத்ராட்சத்தை எடுத்துவிட்டு தண்ணீரை உட்கொண்டால் ரத்த அழுத்த உபாதைகள் நிவாரணம் ஆகும். ஒரு முக ருத்ராட்சம் மிகவும் அரிதாகக் கிடைக்கிறது.ஒரு முக ருத்ராட்சத்தை சன்யாசிகள் மட்டுமே அணிய வேண்டும்.பிறர் வீட்டில் உள்ள சாளக்கிராமம் மற்றும் விக்ரகங்களுடன் வைத்துப் பூஜை செய்யலாம். ருத்ராட்சத்தைக் கழுத்தில் மாலையாக 32ம் கை மணிக்கட்டில் 12ம் மேல் கையில் 16ம் மார்பில் 108ம் ஆக தரிக்கலாம்.
ஏக முக ருத்ராட்சத்தின் அதிதேவதை பரமசிவன்.இதை அணிவதால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.
இரண்டு முக ருத்ராட்சத்தின் அதி தேவதை ஸ்ரீகண்ட பரமசிவம்.இதை அணிவதால் பசுவைக் கொன்ற பாவம் விலகும். பொருட் செல்வம் பெருகும்.
மூன்று முக ருத்ராட்சத்தின் அதி தேவதை அக்னி தேவன்.மும்மூர்த்திகளும் சந்தோஷம் அடைவர். ஸ்திரீகளுக்குச் செய்த தோஷம் விலகும்.
நான்கு முக ருத்ராட்சத்தின் அதி தேவதை பிரம்மா.மனிதர்களுக்கு இழைத்த பாவம் விலகும்.
ஐந்து முக ருத்ராட்சத்தின் அதி தேவதை காலாக்னி ருத்ரன்.இதை அணிவதால் சதாசிவம் சந்தோஷம் அடைகிறார்.செய்யக் கூடாத செயல்களைச் செய்வதால் உண்டாகும் தோஷம் விலகும்.
ஆறு முக ருத்ராட்சத்தின் அதிதேவதை சுப்ரமணியர்.இதை அணிவதால் பிரம்மஹத்தி தோஷம் விலகும்.
ஏழு முக ருத்ராட்சத்தின் அதிதேவதை ஆதிசேஷன்.களவு தோஷமும் கோபத்தீயும் விலகும்.
எட்டு முக ருத்ராட்சத்தின் அதி தேவதை விநாயகப் பெருமான்.பாவங்கள் விலகும்.
ஒன்பது முக ருத்ராட்சத்தின் அதி தேவதை பைரவர்.இதை அணிவதால் நவ தீர்த்தங்களில் குளித்தால் என்ன புண்ணியமோ அந்தப் புண்ணியம் கிட்டும்.பைசாச உபாதைகளும் துஷ்டப் பிரயோகங்களும் விலகும்.
பத்து முக ருத்ராட்சத்தின் அதி தேவதை விஷ்ணு.நாக தோஷமும்,பைசாச தோஷமும் விலகும்.
பதினோரு முக ருத்ராட்சத்தின் அதிதேவதை பதினோரு ருத்ரர்களாகச் சொல்லப்பட்டுள்ளது.பல அஸ்வமேத யாகம் செய்த பலன்களும் பல வாஜபேய யாகம் செய்த பலனும் கிட்டும்.
ருத்ராட்சம் அணிவதால் அனைத்து நற்குணங்களும் நன்மைகளும் கிடைக்கும்.அத்தகைய ருத்ராட்சத்தை அணிந்து வாழ்வில் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று உய்வோம்.

Malibu Hindu Temple
If you are in Valley, Los Angeles or Malibu area, and you don't mind enjoying a little drive, drive towards Las Virgenes canyon in Malibu. Now...... Imagine driving through a canyon on the edge of Los Angeles and seeing a massive Hindu temple.....white against stunning blue sky. That's exactly what one encounters traveling to or from the beach via Las Virgenes Canyon Road.
Malibu Hindu temple
It is an absolutely stunning setting, up in the hills of Malibu Canyon.
A wonderful place to step away from the city, spend some time in meditation or just enjoy the beauty of an authentic Hindu temple.
Built on five acres, the temple is dedicated to Vishnu and has several shrines dedicated to Hindu deities such as Ganesha, Lakshmi and Saraswati. Each shrine has a sculpted dome and intricate carvings appropriate to each deity. The place is simply spectacular!
Address:
1600 Las Virgenes Canyon Rd
Calabasas, CA 91302
(818) 880-5552
Open every day of the year.
So, if you are in the area,stop by:)
It's free, and it's an eye-opening experience.
Enjoy

அருள்மிகு ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்-631501 காஞ்சிபுரம் மாவட்டம்
மூலவர் : வரதராஜர் (தேவராஜர்)
அம்மன்/தாயார் : பெருந்தேவி
தல விருட்சம் : அரசமரம்
தீர்த்தம் : அனந்த சரஸ்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : அத்திகிரி, திருக்கச்சி
ஊர் : காஞ்சிபுரம்
மாவட்டம் : காஞ்சிபுரம்
மாநிலம் : தமிழ்நாடு
காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
போன்: +91- 44- 2726 9773, 94439 90773
தங்கபல்லி: இவ்விடத்தில் தங்கபல்லி வெள்ளி பல்லிகளாக இருக்கும் சூரியன் சந்திரரை தரிசனம் செய்தால் நம்மீது பல்லி விழுவதால் உண்டாகும் தோசங்களும் கிரகண தோசங்களும் விலகி ஷேமம் உண்டாகும். நம் மனதில் நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம். புத்திரதோஷம் உள்ளவர்கள் அமாவாசையுடன், திங்கள்கிழமை சேர்ந்த நாளில் மரத்தையும், சன்னதியையும் சுற்றிவந்து வழிபடுகிறார்கள்.
பல்லி வரலாறு : ஸ்ரீ ஸ்ருங்கி பேரர் என்னும் முனிவரின் இரு குமாரர்கள் கௌதம முனிவரிடம் சிஷ்யர்களாக இருந்த போது பூஜைக்கு தீர்த்தம் கொண்டு வந்ததில் பல்லிகள் இறந்து கிடந்ததை கண்டு முனிவர் கோபம் கொண்டு இருவரையும் பல்லிகளாகும்படி சபித்துவிட்டார்.பிறகு சிஷ்யர்கள் வேண்டிக் கொண்டதால் காஞ்சி சென்றால் மன்னிப்பு உண்டு என கூறிவிட்டார்.பிறகு இருவரும் சப்தபுரிகளையும் சுற்றி வந்து விட்டு வரதராஜ பெருமாளிடம் மோட்சம் கேட்டனர்.பெருமாள் உங்கள் ஆத்மா வைகுந்தம் செல்ல சரீரம் பஞ்ச உலோகத்தில் என் பின்புறம் இருக்க என்னை தரிசிக்க வருபவர்கள் உங்களை தரிசித்தால் சகல தோசம் நீங்கி ஷேமம் உண்டாகும். சூரியன் சந்திரன் இதற்கு சாட்சி என்று மோட்சம் அளித்தார்.ஆகையால் இத்தரிசனம் மிக முக்கியமானதாகும். தோஷ நிவர்த்தி பெற இந்த பல்லிகளை வணங்குகிறார்கள்.

Ekapada Shiva,
The Lord stands on apasmara, the Lord stands one legged crushing my ignorance. The Lord Ekapada Shiva stands as the Trinity, as Trimurti Shiva who rises with Lord Brahma and Lord Vishnu on his side.
Shivam Shantham jagnannatham| 
Lokanugraha karakam||
Shivamekapadam nithyam|
Shikaraya namo nama||
This is the Panchakshara, a part of which is the letter Shi, To Lord Shiva who resides in its essence. Who is the keeper of peace and who preserves this world and all its creation. Who creates life in the form of Brahma, who preserves life in the form of Vishnu and who releases the soul in the form of Shiva. To the great Lord Trimurti Shiva I bow.
The all pervading Lord Shiva Trimurti echoes everywhere around me, in the morning sun, in the flame of the lamp I light, in the very form of the Linga worship, in the pure vilva leaves I offer in prayer. He resides deep within my intellect as Ekapada Shiva, crushing my ego to uplift my being.

திருமாங்கல்யத்தில் லட்சுமிகாசு, மணி ஆகியவற்றை கோர்ப்பதன் நோக்கம் என்ன?
திருமணம் முடிந்த மூன்றாம் மாதத்தில்மணப்பெண்ணுக்கு சுமங்கலிகள் நடத்தும் சடங்கு தாலி பெருக்குதல். முதன் முதலில் மஞ்சள் கயிற்றை மாற்றும் சடங்கு இது.
புதிதாக மாற்றும்போது, மங்கல ஆபரணமான தாலியோடு லட்சுமி காசு, மணி ஆகியவற்றை சேர்ப்பதன் மூலம் 
தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம்.