வியாழன், 30 ஜனவரி, 2014

குமரன் குன்றம் மலைக்கோயில் ஆலய வரலாறு

செல்வம் பெருகும் சிறந்த நலம் சேரும்
கல்வியும் கண்ணியமும் கை கூடும்-நல்ல
குமரன் திருக்குன்றம் கூடித் தொழுதால்
அமரரென வாழ்வார் அணிந்து

-திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்

1958ம் ஆண்டு டிசம்பர் திங்கள் பத்தாம் நாள் நடமாடும் தெய்வமாக நூறு ஆண்டுகள் நம்மிடையே வாழ்ந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் குரோம்பேட் டைக்கு விஜயம் செய்த பொழுது, பங்களா மலை (தற்சமயம் குமரன் குன்றம்) என்றழைக்கப்பட்ட குன்றினைச் சுட்டிக் காட்டி, “இது பிற்காலத்தில் ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி சாந்நித்யம் பெற்ற பிரார்த்தனை ஸ்தலமாக விளங்கும்” எனக்கூறி அருளாசி வழங்கினார்.

“தெய்வத்தின் குரலல்லவா!” அன்று அம்மகான் கூறிய வண்ணம் இக்கோயில் பிரசித்தி பெற்று இன்று (9-2-2014) ஸ்ரீ சுவாமி நாதஸ்வாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் ஆலய ஜீர்ணோத்தர அஷ்ட பந்தனமும், நூதன இராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது.

ஸ்ரீ பாலசுப்ரமண்ய ஸ்வாமி சத்சங்கம் என்ற அமைப்பை ஸ்ரீகாஞ்சி பெரியவர்கள் ஆசியுடன் ஆரம்பித்து, இப் பகுதி வாழ் பொது மக்களின் முழு ஒத்துழைப்புடன் 1976ல் ஸ்ரீ சித்தி விநாயகருக்கு மலையடி வாரத்தில் கோயில் கட்டினர். மலைமேல் வேல் ஒன்று கிடைத்தது. அவ் வேலை பக்தர்கள் பலர் பூஜை செய்து வந்தனர்.

09-02-1979ம் ஆண்டு ஸ்ரீ ஸ்வாமிநாத ஸ்வாமியைப் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகத்தை யும் சிறப்பாக நடத்தினர். இன்று நடைபெறும் கும்பாபிஷேகமும் பிப்ரவரி ஒன்பதாம் தேதி யன்றே நடைபெறுவதும் அவன் சித்தமே!

03-02-1983ல் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் திருக்கரத்தினால் “லகு சம்ப்ரோஷணம்” செய்து இக்கோயில் மேலும் வளர ஆசி கூறினார்கள்.

27-01-19991ல் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர், நவக்கிரகங்கள், இடும்பன் சந்நிதிகள் அமைத்து சிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஜகத்குரு சிருங்கேரி சாரதாபீடம் ஸ்ரீ சங்கராசார்ய ஸ்வாமிகள் 1995ல் விஜயம் செய்து அருளாசி வழங்கினார்கள். ஸ்ரீ ஸ்வாமிநாத ஸ்வாமி சந்நிதி விரிவுபடுத்தப் பட்டு அர்த்த மண்டபம், மகா மண்டபம், தியான மண்டபம் அமைத்து கோபுரம் கட்டப்பட்டது. ஸ்ரீ ஜெயமங்கல தன்ம காளி, சூரியன், சந்திரன், பைரவர், சரபேஸ்வரர் முதலிய மூர்த்திகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு 03-05-1998ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத நடராஜருடன், மாணிக்க வாசகரையும், சிவன் கோயில் வளாகத்தில் பிரதிஷ்டை செய்து 12-06-2005 சிறப்பாக கும்பாபிஷேகம் நடை பெற்றது. மதுரை வெள்ளியம்பலத்தில் உள்ளது போல் கால் மாறியடுவது இவர் சிறப்பாகும்.

வியாழன், 23 ஜனவரி, 2014

இன்னிக்கி அடுப்பு மூட்ட வேணாம்......வெந்நீர் வேணாம்..உச்சநீதி மன்றத்தின் ஆணை

கார்த்திகை மாசம்! ஓரளவு குளிர் ஆரம்பித்து விட்டிருந்தது. பெரியவா விடியும்முன் ஸ்நானம் பண்ணுவதால், கோட்டை அடுப்பை மூட்டி, வெந்நீர் போடவேண்டும். ராமமூர்த்தி ஐயர் கோட்டை அடுப்பை மூட்ட எழுந்தார்.

"டொக்"கென்று ஒரு சொடக்கு சத்தம் அவரை நிறுத்தியது! தாழ்வார அரைகுறை வெளிச்சத்தில் பெரியவாளின் அற்புத திருமேனி தெரிந்தது.

"இன்னிக்கி அடுப்பு மூட்ட வேணாம்......வெந்நீர் வேணாம்...."

வெந்நீர் போடாமல் இருக்கலாம். ஆனால், அடுப்பு மூட்டாவிட்டால், நைவேத்யம் தயார் பண்ண முடியாதே!

"வெங்கட்ராமனை கூப்டு!.." திருவாரூர் வெங்கட்ராமையர் என்ற சமையல் கார்யஸ்தர் வந்தார்.

"இரும்பு அடுப்பு இருக்கோன்னோ?....அதை பத்த வை! ஸ்வாமி நைவேத்யத்தை அதுல பண்ணு..."

கோட்டை அடுப்புப் பக்கம் யாரும் போகவேயில்லை. கொஞ்சம் தள்ளி உக்ராண அறை வாசலில் இரும்பு அடுப்பு பத்த வைக்கப்பட்டு சமையல் நடந்து கொண்டிருந்தது.

காலை சுமார் ஏழு மணி இருக்கும்....."மியாவ்" என்று மெல்லிசாக குரல் கேட்டது.

"அடேய்! பூனை எங்கேடா வந்துது? நைவேத்யத்துல வாயை வெச்சுடப் போறது!

ஷ்ஷ்ஷூ....ஷூ...!!! குத்து மதிப்பாக விரட்டிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால், பூனை ஓடும் சலசலப்பு எதுவும் இல்லை! பூனை எங்கே?

ராமமூர்த்தி ஐயர் கோட்டை அடுப்புப் பக்கம் போய் பார்த்தார்..அதற்குள் ஒரு தாய்ப்பூனை. அதன் மேல், தாயின் உடல் கதகதப்பும், கோட்டை அடுப்பின் கதகதப்பும் சேர, தாயின் ஏறி இறங்கும் வயிற்றின் மேல் நாலு பூனைக்குட்டிகள்!!! இன்னும் கண்கூடத் திறக்காமல்!!

ஆஹா! "கோட்டை அடுப்பு இன்னிக்கு மூட்ட வேணாம்...." என்ற உச்சநீதி மன்றத்தின் ஆணையின் அர்த்தம் இப்போதல்லவா புரிந்தது!

குளிர் தாங்காமல் தன் குட்டிகளோடு லோக ஜனனியின் திருவடி நிழலுக்கு வந்துவிட்டாள் அந்த அம்மாப் பூனை! அவளை விரட்டிவிட்டு, தனக்கு குளிருக்கு வெந்நீர் போட்டுக் கொள்ளுவாரா என்ன?

பூனைகள் நன்னா தூங்கட்டும்....எனக்கு வெந்நீர் வேணாம்!!

ஏகம் ஸத் ! நமக்கெல்லாம் வெறும் மேல் பூச்சாக சொல்லும் வார்த்தை!

பெரியவாளுக்கு? அவரே அதன் பொருள்!

ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.
Photo: இன்னிக்கி அடுப்பு மூட்ட வேணாம்......வெந்நீர் வேணாம்..உச்சநீதி மன்றத்தின் ஆணை

தெய்வங்களுக்கு வாழைப்பழம் படைப்பது ஏன்?

எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள். மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு, கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ,முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை. இது பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுகிறது. எனது இறைவா! மீண்டும் பிறவாத நிலையைக் கொடு! என வேண்டவே நாம் நமது கடவுளுக்கு வாழைப்பழம் படைக்கிறோம். அதுபோல் தேங்காய்க்கும் அந்த குணம் உண்டு. அது மட்டுமல்ல தேங்காய் , வாழைப்பழம் இரண்டும் நமது எச்சில் படாதவை.மாம்பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு, கொட்டையைப் போட்டால் அந்த விதையிலிருந்து மாமரம் உருவாகிறது. ஆனால்,தேங்காயை சாப்பிட்டுவிட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது. முழுத் தேங்காயிலிருந்து தான் தென்னைமரம் முளைக்கும். அது போல,வாழைமரத்திலிருந்து தான் வாழைக்கன்று வரும். பழம் கொட்டை என்பது கிடையாது. அப்படி நமது எச்சில்படாத இவற்றை இறைவனுக்கு உகந்ததாக நமது முன்னோர்கள் படைக்கும் மரபினை உருவாக்கினார்கள்.நாமும் இந்த மரபினைப் பின்பற்றிவருகிறோம்.

ஆலயம் சென்று வழிபடுவோர் கவனிக்கவும்

1. ஆலய நுழைவாயிலில் கை கால்களை கழுவிவிட்டு உள்ளே செல்லுங்கள். தலையில் நீரைத் தெளிக்க வேண்டாம்.
பசுவிற்கு அகத்திக்கீரை கொடுத்து வழிபடுவது ஏன்?

பசுவிற்கு அகத்திக்கீரை, பழம் கொடுத்து வழிபட்டால் நம் பாவம் தீரும் என்பது ஐதீகம். இதற்குரிய மந்திரத்தைச் சொல்லிக் கொடுத்தால் இன்னும் சிறப்பு.ஸர்வ காம துகே தேவி ஸர்வ தீர்த்தாபிசோசினிபாவனே ஸுரபி ஸ்ரேஷ்டேதேவி துப்யம் நமோஸ்துதே!எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்பவளே! எல்லா தீர்த்தங்களாலும் அபிஷேகம் செய்யப்படுபவளே! மங்கல வடிவானவளே! பெருமைக்குரிய காமதேனுவே! உன்னை வணங்குகிறேன் என்பது இதன் பொருள். இதைச் சொல்லி பசுவை வழிபட்டால், முன்னோர் சாபம், குடும்ப சாபம் தீரும். பிதுர் ஆசி பூரணமாக கிடைக்கும். குடும்பத்தில் தடைபட்ட சுபவிஷயங்கள் விரைவில் நடந்தேறும்.
 
வீட்டில் பூஜை செய்யும் போது {கம்}சிறு செம்பில் நீர் வைப்பது ஏன்?

வீட்டில் பூஜை செய்யும் போது, சிறு செம்பு கிண்ணங்களில் நீர் வைக்கிறார்கள். இதில் புண்ணிய நதிகளின் நீரை நிரப்ப வேண்டும். இதற்கு எல்லாருக்கும் வசதியிருக்காது. எனவே, வீட்டிலுள்ள நிறை குடத்து நீரை, காவிரி, கங்கை, தாமிரபரணி, வைகை போன்ற புண்ணிய தீர்த்தங்களாகக் கருதி பக்தியுடன் நிரப்ப வேண்டும். உங்கள் இஷ்ட தெய்வம் அந்த புனிதநீரில் வந்து எழுந்தருள வேண்டும் என உருக்கமாக வேண்டிக் கொள்ள வேண்டும். பூஜை முடிந்ததும் அதை பக்தியுடன் பருக வேண்டும். ஏதேனும் ஒரு சாதம், கல்கண்டு, பழம், வெற்றிலை, பாக்கு படைக்க வேண்டும். "ப்ர என்றால் "கடவுள். நாம் படைக்கும் வெறும் சாதம், "ப்ர என்ற கடவுளுடன் சம்பந்தப்படும் போது, "ப்ரசாதம் (பிரசாதம்) ஆகி விடுகிறது. இதை உண்ணும் போதும், பருகும்போதும், நம்மை தீய சக்திகள் அணுகாது. மனோபலம் பெருகும்.
 
Photo: வீட்டில் பூஜை செய்யும் போது சிறு செம்பில் நீர் வைப்பது ஏன்?

ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி

அருள்தரும் மகா பிரத்தியங்கிரா தேவி ஆலயம் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் அய்யாவடி (ஐவர்பாடி) என்ற கிராமத்தில்அமைந்துள்ளது இந்த கோவில் இந்தியாவில் இங்கு மட்டுமே உள்ளது என்பது தனி சிறப்பு. 18 சித்தர்கள் பூஜித்ததும், அகஸ்தியருக்கு காட்சி கொடுத்ததும், மேகநாதன் (இந்திரஜித்) நிகும்பலாயம் செய்ய வேண்டி வந்த இடம் இதுவே.
பஞ்ச பாண்டவர்கள் பூஜித்த ஸ்தலம். இந்த தேவியை தரிசனம் செய்தால் ரணம், ரோகம், கடன், சத்ரு இவைகளை அழித்து நமக்கெல்லாம் வேண்டிய 16 செல்வங்களையும்
கொடு்க்கக்கூடிய தெய்வம் இவள் ஒருவள் மட்டுமே. இத்தேவியை தரிசனம் செய்து எல்லா கஷ்டங்களும் நீங்க நிகுபாலயாகம் செய்து வேண்டும் வரங்களை அடைவீர். பிரதி அமைவாசை அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை யாகம் நடைபெறும். இத்திருக்கோவிலில் கரிய வண்ணமுடையவளாய், சந்திர கலை சிரத்தில் பிரகாசிக்க, சூலம், பாசம், டமருகம் ஆகிய பல ஆயுதங்களை ஏந்திய பதினெட்டு கைகளுடன் சிம்மவாகனமாக நான்கு சிங்கங்கள் அவள் முன்னே நிற்க, இடது காலை மடித்து வலது புறமாக கலைமகள் சரஸ்வதியும் வலது புறமாக அவள் மகள் மகாலெட்சுமியும் வண்ணச் சிற்பங்களாக நின்று அருள் புரிகின்றனர். இத்தல விருட்சத்தில் ஒரே ஆலமரத்தில் ஐந்து விதமான இலைகள் உள்ள அதிசயத்தை காணலாம்.

பிரத்தியங்கிரா தேவியின் மூல மந்திரம் :
ஓம் – க்ஷம்
பக்ஷஜ்வாலா ஜீஹ்வே
கராள தம்ஷ்ட்ரே
ப்ரத்யங்கரே
க்ஷம் – ஹ்ரீம்பட் – ஸ்வாஹா

தினமும் பக்தியுடன் ஜெபிப்பவர்கள் நோய் நொடியற்று, சத்ரு அழிந்து, பேய், பில்லி சூனியம் பறந்தோட, பயம் நீங்கி, பாதுகாப்பான வாழ்வி்ல் எல்லா ஆனந்தத்தையும் அடைந்து ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவியின் அருள் பெற்று நீண்ட ஆயுளுடன் இம்மண்ணுலகில் நிலைபெற்று வாழ்வார்கள். கும்பகோணத்திலிருந்து தென்கிழக்கே 8 கி.மீ தொலைவில் பிரத்தியங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ளது.
புற்று நோய் உபாதைகள் நீங்க ஸ்லோகம்

அஸ்மின் பராத்மன் நநு பாத்ம கல்பே
த்வம் இத்தம் உத்தாபித பத்மயோனி:
அனந்த பூமா மம ரோக ராசிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ

(நாராயணீயம் தசகம்-8 பாடல்-13)

பொதுப்பொருள்: குருவாயூரில் என்றும் நித்யவாசம் செய்யும் பெருமாளே, விஷ்ணுவே நமஸ்காரம். பாத்ம கல்பத்தில் நான்முகனைப் படைத்தவனே, அளவில்லாத பெருமைகளையுடைய நீ என்னுடைய நோய்கள் அனைத்தையும் நீக்கியருள வேண்டும் பெருமாளே.

(பொதுவாக, இதுநாள்வரை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்தே இல்லை என்பார்கள். ஆனால், மேற்கண்ட இந்த ஸ்லோகத்தை மனமுருகிசொல்லி மருத்துவமும் மேற்கொண்ட சிலர் அந்த உபாதையிலிருந்து மீண்டிருப்பதாக அறிய முடிகிறது.

குருவாயூரப்பன் திருவருளால் புற்று நோயும் நீங்கும் என காஞ்சி மகாசுவாமிகள் ஸ்ரீசந்த்ரசேகரேந்த்ர சரஸ்வதி சுவாமிகள் தமது அருளுரையில் சொல்லியிருக்கிறார்.)
கோவிலிலும் தனிச்சிறப்பும் !

9 கும்பகோணம் அருகே திருநல்லூரில் உள்ள சிவலிங்கத் திருமேனி ஒரு நாளைக்கு 5 முறை வெவ்வேறு வண்ணங்களில் நிறம் மாறுவதால் “பஞ்சவர்ணேஸ்வரர்” என்று பெயர்.