குமரன் குன்றம் மலைக்கோயில் ஆலய வரலாறு
செல்வம் பெருகும் சிறந்த நலம் சேரும்
கல்வியும் கண்ணியமும் கை கூடும்-நல்ல
குமரன் திருக்குன்றம் கூடித் தொழுதால்
அமரரென வாழ்வார் அணிந்து
-திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்
1958ம் ஆண்டு டிசம்பர் திங்கள் பத்தாம் நாள் நடமாடும் தெய்வமாக நூறு ஆண்டுகள் நம்மிடையே வாழ்ந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் குரோம்பேட் டைக்கு விஜயம் செய்த பொழுது, பங்களா மலை (தற்சமயம் குமரன் குன்றம்) என்றழைக்கப்பட்ட குன்றினைச் சுட்டிக் காட்டி, “இது பிற்காலத்தில் ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி சாந்நித்யம் பெற்ற பிரார்த்தனை ஸ்தலமாக விளங்கும்” எனக்கூறி அருளாசி வழங்கினார்.
“தெய்வத்தின் குரலல்லவா!” அன்று அம்மகான் கூறிய வண்ணம் இக்கோயில் பிரசித்தி பெற்று இன்று (9-2-2014) ஸ்ரீ சுவாமி நாதஸ்வாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் ஆலய ஜீர்ணோத்தர அஷ்ட பந்தனமும், நூதன இராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது.
ஸ்ரீ பாலசுப்ரமண்ய ஸ்வாமி சத்சங்கம் என்ற அமைப்பை ஸ்ரீகாஞ்சி பெரியவர்கள் ஆசியுடன் ஆரம்பித்து, இப் பகுதி வாழ் பொது மக்களின் முழு ஒத்துழைப்புடன் 1976ல் ஸ்ரீ சித்தி விநாயகருக்கு மலையடி வாரத்தில் கோயில் கட்டினர். மலைமேல் வேல் ஒன்று கிடைத்தது. அவ் வேலை பக்தர்கள் பலர் பூஜை செய்து வந்தனர்.
09-02-1979ம் ஆண்டு ஸ்ரீ ஸ்வாமிநாத ஸ்வாமியைப் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகத்தை யும் சிறப்பாக நடத்தினர். இன்று நடைபெறும் கும்பாபிஷேகமும் பிப்ரவரி ஒன்பதாம் தேதி யன்றே நடைபெறுவதும் அவன் சித்தமே!
03-02-1983ல் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் திருக்கரத்தினால் “லகு சம்ப்ரோஷணம்” செய்து இக்கோயில் மேலும் வளர ஆசி கூறினார்கள்.
27-01-19991ல் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர், நவக்கிரகங்கள், இடும்பன் சந்நிதிகள் அமைத்து சிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஜகத்குரு சிருங்கேரி சாரதாபீடம் ஸ்ரீ சங்கராசார்ய ஸ்வாமிகள் 1995ல் விஜயம் செய்து அருளாசி வழங்கினார்கள். ஸ்ரீ ஸ்வாமிநாத ஸ்வாமி சந்நிதி விரிவுபடுத்தப் பட்டு அர்த்த மண்டபம், மகா மண்டபம், தியான மண்டபம் அமைத்து கோபுரம் கட்டப்பட்டது. ஸ்ரீ ஜெயமங்கல தன்ம காளி, சூரியன், சந்திரன், பைரவர், சரபேஸ்வரர் முதலிய மூர்த்திகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு 03-05-1998ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத நடராஜருடன், மாணிக்க வாசகரையும், சிவன் கோயில் வளாகத்தில் பிரதிஷ்டை செய்து 12-06-2005 சிறப்பாக கும்பாபிஷேகம் நடை பெற்றது. மதுரை வெள்ளியம்பலத்தில் உள்ளது போல் கால் மாறியடுவது இவர் சிறப்பாகும்.