திங்கள், 13 ஜனவரி, 2014

பயம் போக்கும் பைரவர்- பிரபலமான கோயில்கள்

காசி: காசியே சிவனின் தலைமைக்காவலரான பைரவரின் பிரதான தலமாகும். காசி விஸ்வநாதர் கோயிலின் வடக்கே பைரவநாத்தில் உள்ள காலபைரவர் சன்னதியே பைரவரின் தலைமையிடம் ஆகும். இந்த சன்னதி பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். காசியில் இறப்பவர்களின் பாவபுண்ணியக்கணக்குகளை சித்ரகுப்தன் எழுதாமல், காலபைரவரே எழுதி பலன்களை அளிக்கின்றாராம்.

ராமகிரி: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நாகலாபுரத்திற்கு அருகிலுள்ள வாலீஸ்வரர் ஆலயத்தினை ஒட்டி கால பைரவருக்கான தனி ஆலயம் கி.பி. 9ஆம் நூற்றாண்டில் பல்லவர்களால் அமைக்கப்பட்டது. இந்த பைரவ ஆலயத்தில் கால பைரவர் தனது சக்தியான காளி தேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

திருவொற்றியூர்: சென்னை - பாரிமுனையிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள தியாகராஜசுவாமி ஆலயத்தில் (மாணிக்கத் தியாகர் - வடிவுடையம்மை) வட்டப்பாறையம்மன் என்னும் துர்க்கை சன்னதிக்கு எதிரே சூர சூளாமணி பைரவருக்குத் தனிகோயில் உள்ளது.

சீர்காழி சட்டநாதர் ஆலயம்: சட்டநாதராக விளங்கும் பைரவ மூர்த்திக்குத் தலைமைத் தானமாக விளங்குவது சீர்காழியாகும். திருஞான சம்பந்தர் அவதரித்த மாவட்டத்தில் அமைந்துள்ள இவ்வூரில் பிரம்மாவால் பூசிக்கப்பட்ட பிரம்மபுரீஸ்வரர் என்ற பெரிய சிவாலயம் உள்ளது. இத்தலத்திலுள்ள மலைக்கோயில் உச்சியில் தென்முகம் நோக்கி நின்ற கோலத்துடன் சட்டநாதர் காட்சி தருகிறார். இவர் பைரவரின் அவதாரமே. பிரகாரத்தில் அஷ்ட பைரவர்களுக்கென்று தனிக்கோயில் உள்ளது.

காஞ்சிபுரம் வைரவேச்சுரம்: திருக்கண்டியூரில் பிரம்மனின் சிரத்தைக் கொய்த பாவம் தீர சிவ வழிபாடு செய்த பைரவரின் தனி ஆலயம் காஞ்சிக்குத் தென்மேற்கில் அழிப்படை தாங்கி என்னுமிடத்தில் உள்ளது. இங்கு பிரம்மன் சிவலிங்கத்தை வைத்து வழிபட்டதுடன் தனது ஐந்தாவது சிரத்தைக் கிள்ளிய பைரவருக்கும் தனி சன்னதி அமைத்து வழிபாடு செய்தான். இதன் அருகிலேயே இந்தக் கால பைரவர் அஷ்ட பைரவராகி எட்டு வடிவங்களுடன் எட்டு சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்ட வைரவேச்சுரம் என்ற சிவாலயமும் உள்ளது. இத்தலத்தின் உற்சவர் காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ளது.

÷க்ஷத்ரபாலபுரம் கால பைரவர்: பைரவருக்கென்றே அமைந்த தனித்த ஆலயங்களில் இது காசிக்கு நிகரான பெருமையுடையது. கும்பகோணம் மயிலாடுதுறை வழியில் திருவாவடுதுறை அருகேயுள்ள இந்தத் தலத்தில்தான் பிரமனின் தலையைக் கொய்த கால பைரவருக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது என்று கூறுவர்.

தில்லையாடி கால பைரவ விநாயகர்: மயிலாடுதுறையிலிருந்து திருக்கடையூர் வழியாக செல்லும் வழியில் பொறையாரிலிருந்து 4 கி.மீ. தொலைவிலும், திருக்கடையூரிலிருந்து 5 கி.மீ. தொலைவிலும் தில்லையாடி அமைந்துள்ளது.

அஷ்ட பைரவ யாத்திரை தலங்கள்: காசி நகரமே பைரவரின் பிரதான தலம் என்பதால் இந்நகரின் பல்வேறு பகுதிகளில் பைரவர் தலங்கள் காணப்படுகின்றன. இவைகள் எல்லாவற்றையும் தரிசித்து வருவது இயலாத காரியம். ஆகவே மிக முக்கியமான எட்டு பைரவத் தலங்களை மட்டும் சிறப்புடன் வழிபடுகின்றனர். கார்த்திகை, மார்கழி மாதங்களில் அஷ்டமி தினத்தன்று இந்த வழிபாடு செய்யப்படுகின்றது.

வடக்கே காசி நகரில் அனுமன் காட்டில், ருரு பைரவரும், துர்கா மந்திரில் சண்ட பைரவரும், விருத்தகாளேசுவரத்தில் அஜிதாங்க பைரவரும், லட் பைரவர் கோயிலில் கபால பைரவரும், திரிலோசனகஞ்ச்சில் சங்கார பைரவரும், தேவரா கிராமத்தில் உன்மத்த பைரவரும், காமாச்சாவில் வடுக பைரவரும், காசிபுராவில் பீஷாண (பூத) பைரவரும், காசி நகரில் சிறப்பாக வழிபடப்படுகின்றனர். தெற்கில் திருப்பத்தூர், பைரவன்பட்டி, அழகாபுரி, பெருச்சிக் கோயில், திருமெய்ஞானபுரம், காரையூர், நெடுமரம், இலுப்பைக்குடி ஆகிய தலங்கள் அஷ்ட பைரவத் தலங்களாகக் குறிப்பிடப்படுகின்றன. இவர்களைத் தரிசிக்க செல்வதே அஷ்ட பைரவ யாத்திரை எனப்படுகிறது.

வைரவன்பட்டி: பிள்ளையார்பட்டியிலிருந்து 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள இந்த வைரவன்பட்டியில் மகா பைரவர் சிவகுமரனாகத் தனிச்சிறப்புடன் வீற்றிருந்து அருள்புரிந்து வருகிறார்.

சென்னிமலை: ஈரோடு அருகே உள்ள சென்னிமலையில் பைரவருக்கு தனிக்கோயில் உள்ளது.

திருப்பத்தூர் யோக பைரவர்: யோக பைரவரின் அருட்தலமான இந்த திருப்பத்தூர் மதுரையிலிருந்து காரைக்குடிக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது.

இலுப்பைக்குடி வடுக பைரவர்: காரைக்குடியிலிருந்து சுமார் 5 கி.மீ. தூரமுள்ள இந்த இலுப்பைக்குடித் தலத்தில் தான்தோன்றீஸ்வரர் - வடிவுடையம்மன் மூலவர் வடிவங்களாகத் திகழ்ந்தாலும் பரிவாரத் தெய்வமாகத் திகழும் வடுக பைரவரே சிறப்புத் தெய்வமாக வழிபடப்படுகிறார். புதுச்சேரியிலுள்ள திரு ஆண்டார் கோயில் வடுக பைரவர், திருப்பாதிரிபுலியூர் கால பைரவர், திருமயிலை கபாலீஸ்வரர், திருஒற்றியூர் பைரவர், திருவான்மியூர் பைரவர் முதலிய தலங்களிலுமுள்ள பைரவ வடிவங்கள் அதிக சக்தி உள்ளவர்களாக வழிபடப்படுகின்றனர்.

ஸ்வர்ணாகர்ஷண பைரவர் கோயில் கொண்டுள்ள தலங்கள்: திருப்பதி

ஏழுமலையான் சக்கரம் ஸ்வர்ண ஆகர்ஷண சக்கரம் என்பதால் பொன் பொருள் குவிகிறது.

சிதம்பரம்: தில்லைவாழ் அந்தணர்களின் பசிப்பிணி போக்கிட வில்வ இலைகளைத் தங்கமாக மாற்றிய ஸ்வர்ண பைரவர் சிதம்பரத்தில் நடராஜப் பெருமான் அருகிலேயே உள்ளார்.

விருதுநகர்: இரயில்வே காலனி கடைசியில் கருப்பசாமி நகரில் சுடலைமாடன் கோயிலில் ஸ்வர்ணகர்ஷண பைரவர் உள்ளார்.

ஆடுதுறை: ஆபத் சகாயேச்வரர் கோயிலில் கால பைரவர் மட்டுமல்லாது ஸ்வர்ண பைரவரும் இருக்கிறார்.

தபசுமலை: புதுக்கோட்டையிலிருந்து 18 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள தபசு மலையில் கௌசிக முனிவர் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரையும், முருகப் பெருமானையும் நேரெதிரே நிர்மாணித்து ஸ்வர்ண பைரவர், பைரவி உற்சவ மூர்த்தங்களை அமைத்துள்ளார்.

காரைக்குடி: இங்கு புகைவண்டி நிலையத்திற்கு 2 கி.மீ. தூரத்தில் உள்ளது இலுப்பைக்குடி என்னும் தலம். இங்குள்ள பைரவர் தனாகர்ஷண பைரவர் எனப்படுகிறார். ஆலயம் சிவாலயம் என்றாலும் பைரவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது.

படப்பை: தாம்பரத்திலிருந்து காஞ்சி செல்லும் சாலையில் படப்பை என்னும் ஸ்தலமுள்ளது. அங்கு துர்க்கை சித்தர் அவர்கள் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் மூர்த்திகளை சிறப்புற அமைத்துள்ளார்.

தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு தனிக்கோயில் இங்கு தான் முதன்முதலில் கட்டப்பட்டது. மிகச் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்வர்ணாகர்ஷண பைரவர் எல்லா நலமும் வளமும் பொன்னும் பொருளும் வழங்குகிறார்.

அந்தியூர்: ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள செல்லீஸ்வரர் திருக்கோயிலில் ஸ்வர்ணாகர்ஷண பைரவர் பைரவி திருவுருவம் உற்சவ மூர்த்தியாக அமைந்துள்ளது. ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கும் அன்னை பைரவிக்கும் வருடாவருடம் லட்சார்ச்சனை நடந்து வருகிறது.

தாடிக்கொம்பு: திண்டுக்கல் அருகிலுள்ள தாடிக்கொம்பு என்ற இடத்தில் அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் திருக்கோயிலில் ÷க்ஷத்திர பாலகராக இருந்து ஸ்வர்ணாகர்ஷண பைரவராக அருள்பாலிக்கிறார். சிவன் கோயில்களில் மட்டுமே காணப்படும் பைரவர் இங்கே பெருமாள் கோயிலில் வீற்றிருப்பது ஒரு தனிச்சிறப்பு.

பஞ்சமுக பைரவர்: முசிறி மாவட்டம் தாத்தையங்கார் பேட்டையில் வீற்றிருக்கும் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் யாளி வாகனத்தில் அமர்ந்து பஞ்சமுக பைரவர் அருள்பாலிக்கிறார்.

முக்கிய பைரவர் ஸ்தலங்கள்:

வைரவன்பட்டி: பிள்ளையார்பட்டி அருகே 1கி.மீ. தொலைவில் உள்ள இத்தலத்தில் பைரவரே தோண்டிய சுனை உள்ளது. இங்குள்ள பைரவர் மகா வரப்பிரசாதி. முறையோடு ஈசன் அம்மையை வணங்கி பின் பைரவரை வழிபட வேண்டும்.

திருக்கோஷ்டியூர்: பயம் போக்கும் பைரவர்- பிரபலமான கோயில்கள்

பயம் போக்கும் பைரவர்- பிரபலமான கோயில்கள்

இங்கு தெப்பம் நடைபெறுகின்ற திருக்குளத்தில் அருகே உள்ளது டி. வைரவன்பட்டி. இங்குள்ள சிவாலயத்தில் பைரவர் குழந்தை வடிவில் காட்சி தருகிறார். நாய் வாகனம் இவருக்கு இல்லை. இவர் மகப்பேறு தரும் ஆற்றல் உடையவர்.

பைரவபுரம்: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், வெண்பாக்கம் அருகில் உள்ளது பைரவபுரம். ஸ்வர்ண கால பைரவர் கோயில் இங்கே உள்ளது.

சிவபுரம்: இது கால பைரவ ÷க்ஷத்திரமாகும். திருவாயிலுக்கு வெளியே தனிக்கோயிலாக விளங்குகிறது. இத்தலம் கும்பகோணம் -சாக்கோட்டைக்கு கிழக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ளது.

எமனேஸ்வரம்: எமனேஸ்வரமுடையார் கோயிலில் பைரவர் அருள்பாலிக்கிறார். பரமக்குடியிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

காளையார் கோயில்: இங்கு இரண்டு சன்னதிகளில் பைரவர் உள்ளார். இவரை வணங்கினால் எண்ணியது வெகு விரைவில் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

திருநாகை: நாகைக் காரோணர் சன்னதிக்கு தென்பாகத்தில் புண்டரீக திருக்குளம் அமைந்துள்ளது. இத்தீர்த்தக் கரையில் தென்முகமாய் அமர்ந்திருப்பவரே கால சம்ஹார பைரவ மூர்த்தி.

மதுரை: இங்கு இம்மையில் நன்மை தருவார் கோயிலிலும், கீழ ஆவணி மூல வீதி புதுமண்டபம் எதிரிலும் தனி சன்னதியாக அருள்பாலிக்கும் கால பைரவர். மதுரையில் புட்டுத்தோப்பு புட்டு சொக்கநாதர் கோயிலில் உள்ள இரட்டை கால பைரவருக்கு இரண்டு நாய் வாகனங்கள் அமைந்துள்ளது. இது போன்ற அமைப்புள்ள பைரவரை காண்பது அரிது.

திருவண்ணாமலை: இங்குள்ள அருணாச்சலேஸ்வரர் கோயிலில் உள்ள பைரவர் மிகப்பெரிய அளவில் அருள்பாலிக்கிறார்.

திருமயம்: இக்கோயில் புதுக்கோட்டையில் அமைந்துள்ளது. இங்கு மிகப் பெரிய கோட்டை அமைந்துள்ளது. கோட்டையின் கீழ்ப் பகுதியில் காவல் தெய்வமான கால பைரவர் அருள்பாலிக்கிறார். இந்தக் கோட்டையை இவர் பாதுகாப்பதால் கோட்டை பைரவர் எனப்படுகிறார். திருமயம் கோட்டை பைரவர் சக்தி வாய்ந்தவர். இவருக்கு சிதறு காய் அடித்து வழிபட்டால் நினைத்தது நினைத்தபடி நடக்கும் என்பது நம்பிக்கை.

பொன்னமராவதி புதுப்பட்டி: இங்குள்ள பைரவர் ஆலயம் சிறப்பானது. நீண்ட நாட்கள் தீராத பிரச்சனை, தாமதமாகும் வழக்குகள் நல்லவிதமாய் முடிய இந்த பைரவரை வணங்கி வர நற்பலனை காணலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது.

சேந்தமங்கலம்: இங்கு அகோர பைரவர் பத்து கைகளுடன் தன் வாகனமான நாயுடன் காணப்படுகிறார். எட்டு கைகளில் படைக்கலன்களும், மற்ற இரண்டு கைகளில் அபய, வரத முத்திரையும் கொண்டு காணப்படுகிறார். இது சிறப்பானதொரு திருஉருவமாகும்.

முறப்ப நாடு: எந்தக் கோயிலிலும் பைரவர் சன்னதியில் ஒரு பைரவர் மட்டுமே காட்சி தருகிறார். ஆனால் முறப்ப நாடு கோயிலில் இரண்டு பைரவர்கள் உள்ளனர். ஒரு பைரவர் வழக்கம் போல் நாய் வாகனத்துடன் காட்சி தருகிறார். மற்றொரு பைரவருக்கு வாகனம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாய் வாகனத்துடன் காட்சி தருபவரை கால பைரவர் என்றும், வாகனம் இல்லாத பைரவரை வீர பைரவர் என்றும் கூறுகின்றனர். இந்த ஊர் திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் 17கி.மீ. தொலைவில் உள்ளது.

திருவாஞ்சியம்: தஞ்சை மாவட்டம் திருவாஞ்சிய ஸ்தலத்தில் மட்டுமே பைரவர் அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். எனவே இவர் ஆசன பைரவர் என அழைக்கப்படுகிறார். யம பயம் நீக்கும் தலம்.

திருச்சேறை: கும்பகோணம் அருகிலுள்ள திருச்சேறை ஆலயத்தில் சர்வ பைரவர் சன்னதி உள்ளது. இவரை வழிபட்டால் பில்லி சூன்யம் விலகும்.

திருப்பாச்சேத்தி: மதுரை - ராமேஸ்வரம் சாலையில் உள்ள திருப்பாச்சேத்தி ஆலயத்தில் பைரவர் இரண்டு நாய் வாகனங்களுடன் அருள்பாலிக்கிறார். ஒரு நாய் நின்ற கோலம், இன்னொரு நாய் அமர்ந்த கோலம். சரும நோய், வயிற்று நோய், வாத நோய், பித்த நோய், இருதய நோய் முதலிய நோய்களை நீக்குபவராக உள்ளதால் இவர் கஷ்ட நிவாரண பைரவர் என்று அழைக்கப்படுகிறார்.

நாகை: இங்கு சம்ஹார பைரவராக தெற்கில் சிம்ம வாகனத்துடன் அருள்பாலிக்கிறார்.

கும்பகோணம்: வலங்கைமான் அருகிலுள்ள ஆவூரில் ஒரே பீடத்தில் ஐந்து பைரவர்களாக எழுந்தருளி பிதுர் தோஷத்தை நிவர்த்தி செய்கிறார்கள். ஐந்து பைரவர்களை ஒரே நேரத்தில் வழிபடலாம்.

காளஹஸ்தி: இங்கு இரு பைரவர்கள் உள்ளனர். ஒன்று பைரவர். மற்றொன்று பாதாள பைரவர். கட்டுமானப் பணி தொடங்குமுன் இவர்களை வழிபட்டால் பணி தடையின்றி நடைபெறும்.

பழநி: அடிவாரத்தில் இந்தியாவிலேயே மிக உயரமான விஜய பைரவர் எழுந்தருளி, சகல தோஷங்களையும் நிவர்த்தி செய்கிறார்.

சீர்காழி: சட்டைநாதரும், திருவெண்காடு அகோர மூர்த்தியும் பைரவ வழிபாடே. இவர்களை ஞாயிற்றுக்கிழமை தரிசிப்பது மிக விசேஷமாகும். சீர்காழிக்கு செல்ல முடியாதவர்கள் சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம் ஆறகளூர் காமநாத ஈஸ்வரர் திருக்கோயிலில் பைரவர்களை வழிபட்டு இராஜகோபுரத்தில் எழுந்தருளியுள்ள முத்து சட்டைநாதருக்கு புனுகுசட்டை, கஸ்தூரி திலகமிட்டு தியான மந்திரம் கூறி வணங்கி அஷ்டபுஜத்துடன் கூடிய கால பைரவரை வணங்கி பயன் பெறலாம்.

சேலம்: இங்கே சிருங்கேரி சங்கர மடத்தில் பாரதீ தீர்த்த சுவாமிகளால் யந்திரஸ்தாபிதம் செய்யப்பட்ட பைரவர் சன்னதி உள்ளது. ஆபத்துத்தாரண மூர்த்தியாக உள்ள இந்தப் பைரவர் தனிச் சக்திமிக்கவராய் காணப்படுகிறார். மேலும் இங்குள்ள காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள காசி கால பைரவரையும் தரிசிக்கலாம்.

திருவான்மியூர்: சென்னையை அடுத்துள்ள திருவான்மியூரில் ஏழு பைரவர் சன்னதி அமைந்துள்ளன.

இலுப்பைக்குடி: இங்கே உள்ள தான்தோன்றீஸ்வரர் திருக்கோயிலில் தட்சிணாமூர்த்திக்கு இருபுறமும் சிறிய பைரவர்கள் உள்ளனர். இங்குதான் கொங்கண சித்தர் தட்சிணாமூர்த்தியின் பேரருளால் ரசவாதம் நீங்கி ஸ்வர்ணகால பைரவர் மந்திரம் கூறி செம்பைத் தங்கமாக்கினார் என்று குறிப்புகள் கூறுகின்றன.

அந்தியூர்: ஈரோட்டிலிருந்து வடக்கே 35 கி.மீ. தொலைவில் உள்ள அந்தியூரில் செல்லீஸ்வரர் திருக்கோயிலில் வீர பைரவர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

காஞ்சிபுரம்: உத்திரமேரூர் சாலையில் உள்ள இந்த திருக்கோயிலில் ஈசான்ய திசையில் பைரவர் காட்சியளிக்கிறார். சனி பகவானே வந்து பைரவரை வழிபாடு செய்ததாக வரலாறு கூறுகிறது.

திருவியலூர் (திருவிசநல்லூர்): கும்பகோணத்துக்குக் கிழக்கே நான்கு மைல் தூரத்தில் உள்ளது. இத்திருக்கோயிலின் ஈசான்ய மூலையில் ஒரே வரிசையில் நான்கு பைரவர்கள் உள்ளனர்.
பைரவர் வழிபாட்டு மந்திரங்கள்

பிரார்த்தனாவளி

ஓம் !..... ஓம் !.... ஓம் !....

ஜய கணேச ஜய கணேச ஜய கணேச பாஹிமாம்
ஸ்ரீ கணேச ஸ்ரீகணேச ஸ்ரீகணேச ரக்ஷமாம்

சரவணபவ சரவணபவ சரவணபவ பாஹிமாம்
சுப்ரமண்ய சுப்ரமண்ய சுப்ரமண்ய ரக்ஷமாம்

வேல்முருகா வேல்முருகா வேல்முருகா பாஹிமாம்
வேலாயுதா வேலாயுதா வேலாயுதா ரக்ஷமாம்

ஜய ஸரஸ்வதி ஜய ஸரஸ்வதி ஜய ஸரஸ்வதி பாஹிமாம்
ஸ்ரீ ஸரஸ்வதி ஸ்ரீ ஸரஸ்வதி ஸ்ரீ ஸரஸ்வதி ரக்ஷமாம்

மஹாலெக்ஷ்மி மஹாலெக்ஷ்மி மஹாலெக்ஷ்மி பாஹிமாம்
ஜெயலெக்ஷ்மி ஜெயலெக்ஷ்மி ஜெயலெக்ஷ்மி ரக்ஷமாம்

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி பாஹிமாம்
ஆதிசக்தி ஆதிசக்தி ஆதிசக்தி ரக்ஷமாம்

ராஜேஸ்வரி ராஜேஸ்வரி ராஜேஸ்வரி பாஹிமாம்
திரிபுரசுந்தரி திரிபுரசுந்தரி திரிபுரசுந்தரி ரக்ஷமாம்

ஜய குரு சிவ குரு ஹரி குரு பாஹிமாம்
ஜகத் குரு பரம் குரு ஸத் குரு ரக்ஷமாம்

ஆதி குரு அத்வைத குரு ஆனந்த குரு பாஹிமாம்
சித்குரு சித்கனகுரு சின்மயகுரு ரக்ஷமாம்

ஓம்சிவாய ஓம்சிவாய ஓம்சிவாய பாஹிமாம்
ஸ்ரீசிவாய ஸ்ரீசிவாய ஸ்ரீசிவாய ரக்ஷமாம்

சம்புகுமார சம்புகுமார சம்புகுமார பாஹிமாம்
சபரிகிரீஸ சபரிகிரீஸ சபரிகிரீஸ ரக்ஷமாம்

ஆஞ்ஜனேய ஆஞ்ஜனேய ஆஞ்ஜனேய பாஹிமாம்
ஹனுமந்த ஹனுமந்த ஹனுமந்த ரக்ஷமாம்

தத்தாத்ரேய தத்தாத்ரேய தத்தாத்ரேய பாஹிமாம்
தத்தகுரு தத்தகுரு தத்தகுரு ரக்ஷமாம்

கௌரஹரி கௌரஹரி கௌரஹரி பாஹிமாம்
கௌராங்கஹரி கௌராங்கஹரி கௌராங்கஹரி ரக்ஷமாம்

கங்காராணி கங்காராணி கங்காராணி பாஹிமாம்
பாகீரதி பாகீரதி பாகீரதி ரக்ஷமாம்

ஜெயராம ஜெயராம ஜெயராம பாஹிமாம்
ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ரக்ஷமாம்

ஓம் குருநாதா ஜெய குருநாதா ஓம் குருநாதா பாஹிமாம்
சிவ குருநாதா ஜெய குருநாதா ஓம் குருநாதா ரக்ஷமாம்

ஸத்குரோ ஸத்குரோ ஸத்குரோ பாஹிமாம்
பரமதயாளு பரமதயாளு பரமதயாளு ரக்ஷமாம்

ஸத்குரோ ஸத்குரோ ஸத்குரோ பாஹிமாம்
பரமக்ருபாலு பரமக்ருபாலு பரமக்ருபாலு ரக்ஷமாம்

சிவானந்த சிவானந்த சிவானந்த பாஹிமாம்
சிவானந்த சிவானந்த சிவானந்த ரக்ஷமாம்

அஷ்ட பைரவர்கள் போற்றி

ஓம் கால பைரவா போற்றி
ஓம் கல்பாந்த பைரவா போற்றி
ஓம் குரோத பைரவா போற்றிஓம் கபால பைரவா போற்றி

ஓம் சம்ஹார பைரவா போற்றி
ஓம் உன்மத்த பைரவா போற்றி
ஓம் கண்ட பைரவா போற்றி
ஓம் உக்கிர பைரவா போற்றி

காலபைரவர் போற்றி

ஓம் பைரவனே போற்றி
ஓம் பயநாசகனே போற்றி
ஓம் அஷ்டரூபனே போற்றி
ஓம் அஷ்டமித் தோன்றலே போற்றி
ஓம் அயன்குருவே போற்றி
ஓம் அறக்காவலனே போற்றி
ஓம் அகந்தையழிப்பவனே போற்றி
ஓம் அடங்காரின் அழிவே போற்றி
ஓம் அற்புதனே போற்றி
ஓம் அசிதாங்கபைரவனே போற்றி

ஓம் ஆனந்த பைரவனே போற்றி
ஓம் ஆலயக் காவலனே போற்றி
ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
ஓம் இடுகாட்டுமிருப்பவனே போற்றி
ஓம் உக்ரபைரவனே போற்றி
ஓம் உடுக்கையேந்தியவனே போற்றி
ஓம் உதிரங்குடித்தவனே போற்றி
ஓம் உன்மத்த பைரவனே போற்றி
ஓம் உறங்கையில் காப்பவனே போற்றி
ஓம் ஊழத்தருள்வோனே போற்றி

ஓம் எல்லைத்தேவனே போற்றி
ஓம் எளிதில் இரங்குபவனே போற்றி
ஓம் கபாலதாரியே போற்றி
ஓம் கங்காளமூர்த்தியே போற்றி
ஓம் கர்வபங்கனே போற்றி
ஓம் கல்பாந்தபைரவனே போற்றி
ஓம் கதாயுதனே போற்றி
ஓம் கனல்வீசுங்கண்ணனே போற்றி
ஓம் கருமேகநிறனே போற்றி
ஓம் கட்வாங்கதாரியே போற்றி

ஓம் களவைக்குலைப்போனே போற்றி
ஓம் கருணாமூர்த்தியே போற்றி
ஓம் காலபைரவனே போற்றி
ஓம் காபாலிகர்தேவனே போற்றி
ஓம் கார்த்திகையில் பிறந்தவனே போற்றி
ஓம் காளாஷ்டமிநாதனே போற்றி
ஓம் காசிநாதனே போற்றி
ஓம் காவல்தெய்வமே போற்றி
ஓம் கிரோத பைரவனே போற்றி
ஓம் கொன்றைப்பிரியனே போற்றி

ஓம் சண்டபைரவனே போற்றி
ஓம் சட்டை நாதனே போற்றி
ஓம் சம்ஹார பைரவனே போற்றி
ஓம் சம்ஹாரகால பைரவனே போற்றி
ஓம் சிவத்தோன்றலே போற்றி
ஓம் சிவாலயத்திருப்போனே போற்றி
ஓம் சிக்ஷகனே போற்றி
ஓம் சீர்காழித்தேவனே போற்றி
ஓம் சுடர்ச்சடையனே போற்றி
ஓம் சுதந்திர பைரவனே போற்றி

ஓம் சிவ அம்சனே போற்றி
ஓம் சுவேச்சா பைரவனே போற்றி
ஓம் சூலதாரியே போற்றி
ஓம் சூழ்வினையறுப்பவனே போற்றி
ஓம் செம்மேனியனே போற்றி
ஓம் ÷க்ஷத்ரபாலனே போற்றி
ஓம் தனிச்சன்னதியுளானே போற்றி
ஓம் தலங்களின் காவலனே போற்றி
ஓம் தீதழிப்பவனே போற்றி
ஓம் துஸ்வப்னநாசகனே போற்றி

ஓம் தெற்கு நோக்கனே போற்றி
ஓம் தைரியமளிப்பவனே போற்றி
ஓம் நவரஸரூபனே போற்றி
ஓம் நரசிம்மசாந்தனே போற்றி
ஓம் நள்ளிரவு நாயகனே போற்றி
ஓம் நரகம் நீக்குபவனே போற்றி
ஓம் நாய் வாகனனே போற்றி
ஓம் நாடியருள்வோனே போற்றி
ஓம் நிமலனே போற்றி
ஓம் நிர்வாணனே போற்றி

ஓம் நிறைவளிப்பவனே போற்றி
ஓம் நின்றருள்வோனே போற்றி
ஓம் பயங்கர ஆயுதனே போற்றி
ஓம் பகையழிப்பவனே போற்றி
ஓம் பரசு ஏந்தியவனே போற்றி
ஓம் பலிபீடத்துறைவோனே போற்றி
ஓம் பாபபக்ஷ?யனே போற்றி
ஓம் பால பைரவனே போற்றி
ஓம் பாம்பணியனே போற்றி
ஓம் பிரளயகாலனே போற்றி

ஓம் பிரம்மசிரச்சேதனே போற்றி
ஓம் பூஷண பைரவனே போற்றி
ஓம் பூதப்ரேத நாதனே போற்றி
ஓம் பெரியவனே போற்றி
ஓம் பைராகியர் நாதனே போற்றி
ஓம் மல நாசகனே போற்றி
ஓம் மஹா பைரவனே போற்றி
ஓம் மணி ஞாணனே போற்றி
ஓம் மகர குண்டலனே போற்றி
ஓம் மகோதரனே போற்றி

ஓம் மார்த்தாண்ட பைரவனே போற்றி
ஓம் முக்கண்ணனே போற்றி
ஓம் முக்தியருள்வோனே போற்றி
ஓம் முனீஸ்வரனே போற்றி
ஓம் மூலமூர்த்தியே போற்றி
ஓம் யமவாதனை நீக்குபவனே போற்றி
ஓம் யாவர்க்கும் எளியவனே போற்றி
ஓம் ருத்ரனே போற்றி
ஓம் ருத்ராக்ஷதாரியே போற்றி
ஓம் வடுக பைரவனே போற்றி

ஓம் வடுகூர் நாதனே போற்றி
ஓம் வடகிழக்கருள்வோனே போற்றி
ஓம் வடைமாலைப்பிரியனே போற்றி
ஓம் வாரணாசி வேந்தே போற்றி
ஓம் வாமனர்க்கருளியவனே போற்றி
ஓம் விபீஷண பைரவனே போற்றி
ஓம் வீழாமல் காப்பவனே போற்றி
ஓம் விரும்பியதை அருள்வோனே போற்றி.

மஹா ம்ருத்யுஞ்ஜய கவசம்
பைரவ உவாச

ச்ருணுஷ்வ பரமேசானி கவசம் மன்முகோதிதம்,
மஹா ம்ருத்யுஞ்சய ஸ்யாஸ்ய ந தேயம் பரமாத்புதம்

யம் த்ருத்வாயம் படித்வா ச யம் ச்ருத்வா கவசோத்தமம்
த்ரைலோக்யாதிபதிர்பூத்வா ஸுகிதோ (அ) ஸ்மி மஹேச்வரி

ததேவ வர்ணயிஷ்யாமி தவ ப்ரீத்யா வரானனே
ததாபி பரமம் தத்வம் ந தாதவ்யம் துராத்மனே

ஓம் அஸ்ய ஸ்ரீ மஹாம்ருத்யுஞ்சய கவசஸ்ய ஸ்ரீ பைரவ
ருஷி : காயத்ரீச்சன்த: ஸ்ரீ ம்ருத்யுஞ்சய ருத்ரோ தேவதா
ஓம் பீஜம், ஜம் சக்தி: ஸ: கீலகம் ஹெளம் இதி
தத்வம் சதுர்வர்கபல ஸாதனே பாடே வினியோக :
ஓம் சந்த்ர மண்டல மத்யஸ்தே ருத்ரமாலே விசித்ரிதே,
தத்ரஸ்த்தம சின்தயேத் ஸாத்யம் ம்ருத்யும் ப்ராப்தோபி ஜீவதி

ஓம் ஜூம் ஸ: ஹெளஓம் சிர: பாது தேவோ ம்ருத்யுஞ்சயோ மம
ஸ்ரீ சிவோ வை லலாடம்ச ஓம் ஹெளம் ப்ருவெள ஸதாசிவ:

நீலகண்டோ(அ)வதான்நேத்ரே கபர்த்தீ மே(அ)வதாச்ச்ருதீ,
த்ரிலோசன(அ)வதாத் கண்டௌ நாஸம் மே த்ரிபுரான்தக:

முகம் பீயுஷக்கடப்ருத் ஓஷ்டௌ மேக்ருத்திகாம்பர:
ஹனும் மே ஹாடகேசானோ முகம் வடுகபைரவ:

கன்தராம் காலமதனோ கலம் கண ப்ரியோ(அ)வது
ஸ்கன்தௌ ஸ்கந்தபிதா பாது ஹஸ்தௌ மே கிரிசோ(அ)வது

நகான்மே கிரிஜாநாத: பாயாதங்குளி ஸம்யுதான்,
ஸ்தனௌ தாராபதி: பாது வக்ஷ: பசுபதிர்மம்

குக்ஷிம் குவேரவதேன: பார்ச்வெள மே மாரசாசன:
சர்வ: பாது ததா நாபிம் சூலீப்ருஷ்டம் மமாவது

சிச்னம் மே சங்கர: பாது குஹ்ய குஹ்யகவல்லப:
கடிம் காலாந்தக: பாயாத் ஊரூ மே(அ)ந்தககாதக:

ஜாகரூகோ(அ)வதாஜ்ஜானூ ஜங்கே மே காலபைரவ:
குல்பௌ பாயாஜ்ஜடாதாரீ பாதௌ ம்ருத்யுஞ்சயோ(அ)வது

பாதரதிமூர்த்த பர்யந்தம் ஸத்யோ ஜாதோ மமாவது,
ரக்ஷõஹீனம் நாமஹீனம் வபு: பாத்வம் ருதேச்வர: (பாது அம்ருதே ச்வர:)

பூர்வே பலவிகரணோ தக்ஷிணே காலசாஸன :
பச்சிமே பார்வதீநாத உத்தரே மாம் மனோன்மன:

ஜசான்யாமீச்வர: பாயாத் ஆக்னேய்யாம் அக்னிலோசன:
நைர்ருத்யாம் சம்புரவ்யான்மாம் வாயவ்யாம் வாயுவாஹன:

ஊர்த்வம் பலப்ரமதனே: பாதாலே பரமேச் வர:
தச திக்ஷú ஸதா பாது மஹாம்ருத்யுஞ்சயச் ச மாம்

ரணே ராஜகுல த்யூதே விஷமே ப்ராணஸம்ச யே
பாயாத் ஓம் ஜூம் மஹாருத்ரோ தேவதேவோ தசாக்ஷர:

ப்ரபாதே பாது மாம் ப்ரும்மா மத்யாஹ்னே பைரவோ(அ)வது
ஸாயம் ஸர்வேச் வர: பாது நிசா யாம் நித்யசேதன:

அர்த்தராத்ரே மஹாதேவோ நிசான்தே மஹோதய:
ஸர்வதா ஸர்வத: பாது ஓம் ஜூம்ஸ: ஹெளம் ம்ருத்யுஞ்சய:

இதீதம் கவசம் புண்யம் த்ரிஷுலோகேஷு துர்லபம்
ஸர்வமந்த்ரமயம் குஹ்யம் ஸர்வயந்த்ரேஷு கோபிதம்

புண்யம் புண்யப்ரதம் திவ்யம் தேவ தேவாதிதைவதம்
ய இதம்ச படேன் மந்த்ரம் கவசம் வாசயேத்தத

தஸ்யஹஸ்தே மஹாதேவி த்ர்யம்பகஸ்யாஷ்ட ஸித்தய :
ரணே த்ருத்வா சரேத்யுத்தம் ஹத்வா சத்ரூன் ஜயம் லபேத்

ஜபம் க்ருத்வா க்ருஹே தேவி ஸ்ம்ப்ராப்ஸ்யதி ஸுகம் புன:
மஹாபயே மஹா ரோகே மஹாமாரீபயே ததா
துர்பி÷க்ஷ சத்ருஸம்ஹாரே படேத்வசமாதராத்

(இதி மஹாம்ருத்யுஞ்சய கவசம் ஸம்பூர்ணம்)

பைரவர் காயத்ரி

ஓம் தீக்ஷ்ணதம்ஷ்ட்ராய வித்மஹே
÷க்ஷத்ர பாலாய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்

ஓம் ஸ்வானத்வஜாய வித்மஹே
ஸூலஹஸ்தாய தீமஹி
தன்னோ பைரவ ப்ரஜோதயாத்

காலபைரவர் ஸ்துதி

அதிக்ருர மஹாகாய கல்பாந்த தஹநோபம
பைரவாய நமஸ்துப்யம் அனுக்ஞாம் தாதுமர்ஹஸிப

வடுக பைரவர் மஹாமந்திரம்

ஓம் - ஹ்ரீம் - க்லீம் - க்ஷ்மர்யூம் - வம் - வடுகாய
ஆபதுத்தாரணாய குரு குரு: வடுகாய - மஹா பைரவாய -
மஹா ம்ருத்யுஞ்ஜயாய - மஹா கால ராத்ரி ஸ்வரூபாய -
மஹா ப்ரளய காலாக்நி ஸ்வரூபாய - மஹா கால பைரவாய
பரசு - சக்தி - கட்க - கேட - தோமர தராய - மஹாகால கண்ட
ஸ்வரூபிணே - ப்ரத்யக்ஷருத்ர ரூபிணே - சீக்ரமஷ்டகுல
நாகானாம் - விஷம் தஹ தஹ: பந்த: பந்த: சேதய சேதய:
ஸர்வ ஜ்வரான் பக்ஷய பக்ஷய - க்ஷúத்ரான் ப்ரஹர ப்ரஹர
வித்வம்ஸய வித்வம்ஸய - பூதப்ரேத பிசாச க்ரஹாந்
ஸம்ஹர ஸம்ஹர - சிர: ப்ரப்ருதி ஸர்வாங்க சூல
பாண்டு ரோகாதீன் ஹந, ஹந, ஆசு விஷம்
ஸம்ஹர ஸம்ஹர - த்வாதசாதித்ய ஸ்வரூப வ்ருத்யசூல
தாரிணே ஏகாஹிக - த்வயாஹிக - த்ரயாஹிக -
சாதுர்யாஹிகார்த மாஸிக - ஷாண்மாஸிக, வார்ஷீக
ஸாத்ய தாஹவாத - பித்த - ச்லேஷ்ம ஸாந்நிபாதிகாதி
ஸர்வஜ்வரம் ஹந, ஹந, தஹதஹ - பசபச -
க்ருஹ்ண க்ருஹ்ண - ஆவேசய ஆவேசய - ஆர்க்ஷய ஆர்க்ஷய
ஸ்தம்பய ஸ்தம்பய - மோஹய மோஹய - பீக்ஷய பீக்ஷய -
பாசுபதாஸ்த்ரணே பந்த பந்த - சூலேன க்ருந்தய
க்ருந்தய - ப்ரஹ்ம ராக்ஷஸாந் பக்ஷய பக்ஷய ஜ்வல
ஜ்வல - மஹா பைரவாய - மஹாபதுத்தாரணாய - மம
ஸர்வ வித்யாம் குரு - மம ஸர்வ கார்யாணி
ஸாதய ஸாதய ஓம் ஹ்ராம் - ஹ்ரீம் - ஹ்ரூம் - ஹும்பட் ஸ்வாஹா

கால பைரவாஷ்டோத்ரம்
த்யானம்

ரக்த ஜ்வால ஜடாதரம் ஸுவிமலம் ரக்தாங்க தேஜோமயம்
த்ருத்வா சூல கபால பாச டமருத் லோகஸ்ய ரக்ஷõகரம்
நிர்வாணம் கந வாஹனம் த்ரிநயனம் ஆனந்த கோலாஹலம்
வந்தே ஸர்வ பிசாசநாத வடுகம் ÷க்ஷத்ரஸ்ய பாலம் சிவம்

(சிவந்த ஜடையும், பரிசுத்தமான உடலும், சிவந்த தேஜஸூம், சூலம், கபாலம், உடுக்கை முதலியவற்றை தரித்து உலகத்தை ரக்ஷிப்பவரும், நிர்வாணமாகவும், நாயினை வாஹனமாகவும் கொண்டு, முக்கண்ணனாக, ஆனந்த வடிவினனாக பூத, ப்ரேத நாதனாக ÷க்ஷத்ரங்களை ரக்ஷிப்பவராக உள்ள பைரவரை நமஸ்கரிக்கிறேன்.)

பைரவோ பூத நாதஸ்ச - பூதாத்மா - பூதபாவந:
÷க்ஷத்ரத: ÷க்ஷத்ரபாலஸ்ச - ÷க்ஷத்ரக்ஞ : க்ஷத்ரியோ விராட்

ஸ்மசான வாஸீ மாம்ஸாசீ - ஸர்ப்பராசி : ஸ்மராந்தக்ருத்
ரக்தப : பாநப : ஸித்த : - ஸித்தித : ஸித்தஸேவித :

கங்கால : கால சமந : - காலகாஷ்டா தநு : கவி :
த்ரிநேத்ரோ பகுநேத்ரஸ்ச - ததா பிங்கல லோசந :

சூலபாணி : கட்கபாணி : - கங்காளீ தூம்ரலோசந :
அபீருர்பைரவோ நாதோ - பூதபோ யோகிநீ பதி :

தநதோ தநஹாரீச : தநவாந் ப்ரீதி பாவந :
நாகஹரோ நாகபாசோ - வ்யோம கேச : கபால ப்ருத்

கால : கபாலமாலீச - கமநீய : கலாநிதி:
த்ரிலோசநோஜ்ஜவலந் நேத்ர : த்ரிசிகீ ச த்ரிலோகப :

த்ரிநேத்ர தநயோ டிம்ப : சாந்த : சாந்தஜனப்ரிய :
வடுகோ வடுவேஷஸ்ச : கட்வாங்க வர தாரக :

பூதாத்யக்ஷ : பசுபதி : - பிக்ஷúக : பரிசாரக :
தூர்தோ திகம்பர : சூரோ - ஹரிண : பாண்டுலோசந :

ப்ரசாந்த, சாந்தித : ஸித்த : - சங்கர : ப்ரிய பாந்தவ :
அஷ்டமூர்த்திர் நிதீசஸ்ச - ஞான சக்ஷúஸ் தபோமய :

அஷ்டோதார : ஷடாதார : - ஸர்பயுக்த : சிகீஸக :
பூதரோ பூதராதீச : - பூபதிர் பூதராத்மஜ :

கங்காலதாரீ முண்டீச - நாக யக்ஞோபவீதவாந்
ஜ்ரும்பணோ மோஹந : ஸ்தம்பீ மாரண : ÷க்ஷõபணஸ்ததா

சுத்த நீலாஞ்ஜந ப்ரக்ய : - தைத்யஹா முண்டபூஷித
பலி புக்பலி புக் நாதோ - பாலோ பால பராக்ரம :

ஸர்வாபத் தாரணோ துர்கோ - துஷ்டபூதநிஷேவித :
காமீ கலா நிதி காந்த : - காமிநீ வசக்ருத்வசீ

ஸர்வ ஸித்திப்ரதோ வைத்யோ - ப்ரபுர் விஷ்ணு ரிதீ வஹி
அஷ்டோத்தரசதம் நாம் நாம் - பைரவஸ்ய மஹாத்மந:

(இதை அர்ச்சனையும், பாராயணமும் செய்வதால், இருமல், கக்குவான், இழுப்பு, காசம் முதலிய நோய்கள் அகலும்.)

ஸ்ரீ சங்கராசார்யார் அருளிய கால பைரவாஷ்டகம்

1. தேவராஜ - ஸேவ்யமான - பாவனாங்க்ரி பங்கஜம்
வ்யாலயஜ்ஞஸூத்ர - மிந்துசேகரம் - க்ருபாகரம்
நாரதாதியோகிப்ருந்த - வந்தினம் திகம்பரம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே

பொருள் : இந்திரனால் சேவிக்கப் பெறுபவரும், புனிதமான திருவடி தாமரையை உடையவரும், அரவத்தை பூணூலாக அணிந்தவரும், சந்திரனை சிரசில் வைத்தவரும், கருணை கொண்டவரும், நாரதர் முதலான யோகியர் குழாங்களால் வணங்கப் பெறுபவரும், திசைகளை ஆடையாக உடையவரும், காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்.

2. பானுகோடி - பாஸ்வரம் பவாப்திகாரகம் பரம்
நீலகண்ட - மீப்ஸிதார்த்த - தாயகம் த்ரிலோசனம்
காலகால - மம்புஜாக்ஷ - மக்ஷசூல - மக்ஷரம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே

பொருள் : கோடி சூரிய பிரகாசத்துடன் விளங்குபவரும் பிறவிக் கடலிலிருந்து கரையேற்றுபவரும், முதல்வரும், நீலகண்டத்தை உடையவரும், அடியார்கள் வேண்டும் பொருளை அளிப்பவரும் முக்கண்ணரும், காலனுக்கு காலனாக இருப்பவரும், தாமரைமலர் போன்ற கண்ணையுடையவரும், சொக்கட்டானில் சூரரும், குறைவற்றவரும், காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்.

3. சூலடங்க - பாச - தண்ட - பாணி - மாதிகாரணம்
ச்யாமகாய - மாதிதேவ - மக்ஷரம் நிராமயம்
பீமவிக்ரமம் ப்ரபும் விசித்ர - தாண்டவப்ரியம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே

பொருள் : சூலம், மழு, பாசம், தண்டம் இவைகளை கையில் ஏந்தியவரும், முதல் காரணரும், கரிய திருமேனி வாய்ந்தவரும், முதல் கடவுளரும், அழிவற்றவரும், பிணியற்றவரும், பயமுறும் பராக்கிரமமும் வாய்ந்தவரும், முக்திச் செல்வரும், அற்புத தாண்டவங்களில் ஆவல் கொண்டவருமான காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்.

4. புக்திமுக்திதாயகம் ப்ரசஸ்த - சாரு விக்ரஹம்
பக்தவத்ஸலம் ஸ்திதம் ஸமஸ்தலோக - விக்ரஹம்
நிக்வணன் - மனோஜ்ஞஹேம - கிங்கிணீலஸத்கடிம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே

பொருள் : போகம், மோக்ஷம் இவைகளை அளிப்பவரும் பிரசித்தி பெற்றதும் அழகியதுமாகிய வடிவமுடையவரும், அடியார்களிடம் அன்புள்ளவரும், காத்தல் கடவுளாய் இருப்பவரும், எல்லா உலகத்தையும் தன் வடிவமாகக் கொண்டவரும், நன்கு ஒலிப்பதும் மனதைக் கவருவதாகிய சலங்கையால் பிரகாசிக்கும் இடையை உடையவருமான காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்.

5. தர்மஸேபாலகம் த்வதர்மமார்க்க நாசகம்
கர்மபாசமோசகம் ஸுசர்மதாயகம் விபும்
ஸ்வர்ண வர்ணசேஷபாச - சோபிதாங்கமண்டலம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே

பொருள் : தர்மமாகிய அணையை பாதுகாப்பவரும், அதர்ம வழியை அழிக்கிறவரும், கன்மமாயா, மலங்களை போக்குபவரும், நற்சுகம் அளிப்பவரும், எங்கும் நிறைந்தவரும், பொன்மயமான சடை கற்றையால் விளங்கும் திருமேனி உடையவரும் காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்.

6. ரத்னபாதுகா - ப்ரபாபிரமபாத - யுக்மகம்
நித்யமத்வீதிய -மிஷ்டதைவதம் நிரஞ்ஜனம்
ம்ருத்யுதர்ப்ப - நாசனம் கராலதம்ஷ்ட்ர - மோக்ஷணம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே

பொருள் : ரத்ன பாதுகைகளின் ஒளியால் அழகு பெற்ற இரு திருவடிகளை உடையவரும், நித்யரும், இரண்டற்றவரும் இஷ்ட தெய்வமாக உள்ளவரும், குற்றமற்றவரும். மறிலியின் கர்வத்தை அடக்குபவரும், கூரிய அகன்றப் பற்களால் பயமுறச் செய்பவரும், காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்.

7. அட்டஹாஸ - பின்னபத்மஜாண்ட - கோசஸந்ததிம்
த்ருஷ்டிபாத - நஷ்டபாப - ஜாலமுக்ரசாஸனம்
அஷ்டஸித்தி - தாயகம் கபாலிமாலிகந்தரம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே

பொருள் : அட்டகாச ஒலியினால் தாமரையில் தோன்றிய அண்ட கோசங்களை பிளக்குபவரும், கண்விழி நோக்கத்தால் பாபக் குவியலை அழிக்கின்றவரும், பாபம் செய்தவர்களுக்கு கடும் தண்டனை விதிப்பவரும், அஷ்ட சித்தியை அளிப்பவரும், கபால மாலையால் விளங்கும் கழுத்தை உடையவரும், காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்.

8. பூதஸங்க - நாயகம் விசாலகீர்த்திதாயகம்
காசிவாஸ - லோகபுண்ய - பாபசோதகம் விபும்
நீதிமார்க்ககோவிதம் புராதனம் ஜகத்பதிம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே

பொருள் : பூத கூட்டங்களுக்கு தலைவரும், விரிந்த புகழை அளிப்பவரும், காசியம்பதியில் வசிக்கும் மக்களது பாப புண்ணியங்களை பரிசோதிப்பவரும், எங்கும் நிறைந்தவரும், நீதி வழியில் கைதேர்ந்தவரும், பழமையானவரும், உலகத்துக்கு கர்த்தரும் காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்.

9. காலபைரவாஷ்டகம் படந்தி யே மனோஹரம்
ஜ்ஞானமுக்திஸாதனம் விசித்ர - புண்ய - வர்த்தனம்
சோகமோ ஹதைன்யலோப - கோபதாபநாசனம்
தே ப்ரயாந்தி காலபைரவாங்க்ரி ஸந்நிதிம் த்ருவம்

பொருள் : மனதுக்கு குதூகலத்தையும், ஞானம், முக்தி, சாதகத்தையும், பல வகைப்பட்ட புண்ணிய விருத்தியையும், வருத்தம், மயக்கம், ஏழ்மை, பேராசை, கோபம், தாபம் ஆகியவைகளின் நீக்கத்தையும் அளிக்கவல்லதாகிய இந்த கால பைரவாஷ்டகத்தை எவர்கள் படிக்கின்றார்களோ அவர்கள் நிச்சயமாக கால பைரவ மூர்த்தியின் திருவடியருளைப் பெறுகின்றார்கள்.

(இதி ஸ்ரீமத் சங்கராசார்ய - விரசிதம் கால பைரவாஷ்டகம் ஸம்பூர்ணம்)

கால பைரவ பஞ்ச ப்ரஹ்மஷடங்க மந்திரம்

பைரவ மூலமந்திரம்

ஓம் ஹ்ராம், ஹ்ரீம், ஹ்ரூம் : ஹ்ரைம்
ஹரௌம், க்ஷம், ÷க்ஷத்ரபாலாய நம:

பைரவ அருளை ஈட்டித் தரும் மூலமந்திரத்திற்குரிய பஞ்ச ப்ரஹ்மஷடங்க மந்திரம் பின்வருமாறு

1. ஓம் ஹோம் க்ஷம் ÷க்ஷத்ரபாலாய ஈசானமூர்த்தியே நம:
2. ஓம் ஹோம் ÷க்ஷத்ரபாலாய தத்புருஷவக்த்ராய நம:
3. ஓம் ஹும் க்ஷம் ÷க்ஷத்ரபாலாய அகோர ஹ்ருதயாய நம:
4. ஓம் ஹும் க்ஷம் ÷க்ஷத்ரபாலாய வாமதேவகுஹ்யாய நம:
5. ஓம் ஹிம் க்ஷம் ÷க்ஷத்ரபாலாய ஸத்யோஜாதாயபாதாப்யாம் நம :
6. ஓம் ஹம் ÷க்ஷத்ரபாலாய ஸ்ருதாய நம:
7. ஓம் ஹாம் க்ஷம் ÷க்ஷத்ரபாலாய சிரசேஸ்வாஹா
8. ஓம் ஹும் க்ஷம் ÷க்ஷத்ரபாலாய சிகாயைவஷட்
9. ஓம் ஹைம் க்ஷம் ÷க்ஷத்ரபாலாய கவசாயஹும்
10.ஓம் ஹெளம் க்ஷம் ÷க்ஷத்ரபாலாய நேத்ரத்யாய வெளஷட்
11. ஓம் ஹ: க்ஷம் ÷க்ஷத்ரபாலாய அஸ்த்ராயபட்

ஸ்வர்ணாகர்ஷண பைரவர் மூலமந்திரம்

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் ஸ்ரீம் ஆபதுத்தாரணாய
ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் அஜாமளபந்தநாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய மம தாரித்ரிய வித்வேஷணாய
மஹா பைரவாய நம: ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்.

ஸ்வர்ணாகர்ஷண பைரவர் மந்திரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்வர்ணபைரவாய ஹும்பட் ஸ்வாஹா
ஓம் நமோ பகவதே ஸ்வர்ணாகர்ஷண பைரவாய
தன தான்ய வ்ருத்தி கராய சீக்ரம் ஸ்வர்ணம்
தேஹி தேஹி வச்யம் குரு ஸ்வாஹா

உன்மத்த பைரவர் மந்திரம்

ஓம் ஹ்ரீம் அங்க் - க்லீம் உன்மந்தானத்த பைரவ
சர்வ சத்ரு நாசய குரு குரு ஸ்வாஹா

(தீவிரமான மனநோய்கள், சித்தபிரமை, ஹிஸ்தீரியா நோய் நீங்க)

ஸ்வர்ணாகர்ஷண பைரவ லக்ஷ்மி குபேர மந்த்ரம்

ஓம் ஸ்ரீம் கம் ஸெளம்யாய லக்ஷ்மி கணபதயே
வர வரத ஸர்வ தனம்மே வசமானாய ஸ்வாஹா !

ஓம் மஹாலக்ஷ்மீர் மஹாகாளி மஹாகன்யா சரஸ்வதி
போக வைபவ சந்தாத்திரி பக்த அனுக்கிரஹ காரிணி

ஓம் அன்னம்தா தனம்தா பூதா த்வணி
மாதி பலப்ரதா ஸித்திதா புத்திதா
சூல சிஷ்டா சார ப்ரயணா !

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் ஞானாய கமலதாரிண்யை
சக்தியை ஸிம்ஹ வாரின்யை பலாயை ஸ்வாஹா !

ஓம் யக்ஷாய குபேராய வைஸ்வரணாய
தனதான்ய பதயே தனதான்ய ஸம்ருதிர்ம்மே
தேஹி தாபாய ஸ்வாஹா !

ஓம் ஐம் க்லீம் ஸெளம் ஸர்வ மந்த்ர சொரூபிணி !
ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் பாலா புவனேஸ்வரீம்
ஹ்ரம் ஹ்ரீம் ஸ்ரூம் ஸகல ஜயகரி நமோஸ்துதே !

ஓம் ஐம் க்லாம் க்லீம் க்லூம்
ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் வம்ஸஹ
ஆபதோ தாரணாய அஜாமில பந்தனாய
லோகேஸ்வராய ஸ்ரீஸ்வர்ண ஆகர்ஷண பைரவாய
மம தாரித்தரிய வித்வேஷனாய
ஆம் ஸ்ரீம் மஹா பைரவாய ஸ்வாஹ !

ஓம் சுவாநத் த்வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி !
தந்நோ பைரவ : ப்ரசோதயாத் !!

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே !
வாயுபுத்ராய தீமஹி !
தந்நோ ஹனுமத் ப்ரசோதயாத் !!

கால பைரவ பஞ்சரத்னம்

கட்கம் கபாலம் டமருகம் த்ரிஸுலம் ஹஸ்தாம்புஜே ஸ்ந்நதம் த்ரிணேத்ரம்
திகம்பரம் பஸ்ம விபூஷிதாங்கம் நமாம்யஹம் பைரவமிந்துசூடம்

கவித்வதம் ஸத்வரமேவ மோதான் நதாலேயே ஸம்பு மனோபிராமம்
நமாமி யானீ க்ருத ஸார மேயம் பவாப்தி பாரம் கம்யந்த மாஸு

ஜராதி துக்கௌக விபேத தக்ஷம் விராகி ஸமஸேவ்ய பாதாரவிந்தம்
நரபதிபத்வ ப்ரதமாஸு நந்த்ரே ஸுராதிபம் பைரவ மானதோஸ்மி

ஸமாதி ஸம்பத் ப்ரதமான தேப்யோ ரமா தவாத்யாசித பாதபத்மம்
ஸமாதி நிஷ்டை ஸ்தரஸாதிகம்யம் நமாம்யஹம் பைரவமாதிநாதம்

கிராமகம்யம் மனஸாபி தூரம் சராசாஸ்ய ப்ரபாவதி ஹேதும்
கராக்ஷிபச் சூன்ய மாதாபிரம்யம் பராவரம் பைரவமான தோஸ்மி

பைரவர் மூலமந்திரங்கள்

அஸ்யஸ்ரீ பைரவ மஹாமந்த்ரஸ்ய ப்ருஹதாரண்ய ரிஷி: அனுஷ்டு சந்த : பைரவொ தேவதா
வம் பீஜம், மாயா சக்தி: கம் கீலகம், மம அபீஷ்ட ஸித்யர்தே ஜபே விவியோக :

ஏக ஷஷ்டி அக்ஷரம் மந்திரம் லகு சித்திப்ரதாயகம்
ஏக ஷஷ்டி சதம் குர்யாத் ஜபம் மந்திரஸ்ய சித்தியே

ஓம் ஹ்ரீம் வம் வடுகாய ஆபதுத்தாரணாய குரு குரு வடுகாய ஹ்ரீம்.

ஓம் ஹ்ராம், ஹ்ரீம், ஹ்ரூம்: ஹ்ரைம்
ஹரௌம், க்ஷம், ÷க்ஷத்ரபாலாய நம :

இலுப்பைக்குடி பைரவர் தோத்திரம்

ஒரு கையிலுடுக்கு மற்றையொரு கையினாக பாச
மொருகையின் முத்தலை சூலொரு கையிற் கபாலங்கொண்டீ
ரிருகையுங் குரைப்பாமோத்தை யிசைக்கு நாய் சூழவில்வ
மிருகையுங் சூழ்வனத்திலியல் வயிரவன்றாள் போற்றி.
- சதாவதானம் சுப்பிரமணிய அய்யர்

பைரவர் அஷ்டோத்தர சதநாமாவளி

ஓம் பைரவாய நம
ஓம் பூத நாதாய நம
ஓம் பூதாத்மனே நம
ஓம் பூதபாவநாய நம
ஓம் ÷க்ஷத்ரதாய நம
ஓம் ÷க்ஷத்ரபாலாய நம
ஓம் ÷க்ஷத்ரக்ஞாய நம
ஓம் க்ஷத்ரியாய நம
ஓம் விராஜே நம
ஓம் ஸ்மசானவாஸிநே நம

ஓம் மாம்ஸாசிநே நம
ஓம் ஸர்ப்பராசஸே நம
ஓம் ஸ்மராந்தக்ருதே நம
ஓம் ரக்தபாய நம
ஓம் பானபாய நம
ஓம் ஸித்தாய நம
ஓம் ஸித்திதாய நம
ஓம் ஸித்தஸேவிதாய நம
ஓம் கங்காளாய நம
ஓம் காலசமனாய நம

ஓம் கலாய நம
ஓம் காஷ்டாய நம
ஓம் தநவே நம
ஓம் கவயே நம
ஓம் த்ரிநேத்ரே நம
ஓம் பஹுநேத்ரே நம
ஓம் பிங்களலோசனாய நம
ஓம் சூலபாணயே நம
ஓம் கட்கபாணயே நம
ஓம் கங்காளிநே நம

ஓம் தூம்ரலோசனாய நம
ஓம் அபீரவே நம
ஓம் பைரவாய நம
ஓம் நாதாய நம
ஓம் பூதபாய நம
ஓம் யோகிநீபதயே நம
ஓம் தநதாய நம
ஓம் தநஹாரிண நம
ஓம் தநவதே நம
ஓம் ப்ரீதிபாவனாய நம

ஓம் நாகஹாராய நம
ஓம் நாகபாசாய நம
ஓம் வ்யோமகேசாய நம
ஓம் கபாலப்ருதே நம
ஓம் காலாய நம
ஓம் கபாலமாலிநே நம
ஓம் கமநீயாய நம
ஓம் கலாநிதயே நம
ஓம் த்ரிலோசனாய நம
ஓம் ஜ்வலந்ந
சிவன் துதி

நமாமி சங்கர பவானி சங்கர
உமாமகேஸ்வர தவ சரணம் (நமாமி)

ஹர ஹர ஹர ஹர ஹர ஹர சம்பா
அர்த்தனாரீஸ்வர தவ சரணம் (நமாமி)

சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சம்போ
ஸ்ரீ சைலேஸ்வரா தவ சரணம்

நந்தி வாஹனா நாக பூஷனா
சந்திர சேகரா ஜடாதரா

சூலாதார ஜோதி ப்ரகாசா
விபூதி சுந்தர விஸ்வேசா (நமாமி)

கால கால காம தஹனா
காசி விஸ்வேசா தவ சரணம் (நமாமி)

பம்பம் பம்பம் பமருக நாதா
டம்டம் டம்டம் டமருக நாதா
பம்பம் டம்பம் பமருக நாதா
ஸ்மசான வாசா தவ சரணம்

கிரிஜா ரமணா தவ சரணம்
ஹரே பசுபதே தவ சரணம் (நமாமி)

சிவபெருமான் பாடல்கள்

1. சரணம் ஈஸ்வரா... (ஹரிவராசனம் மெட்டு)

சரணம் ஈஸ்வரா ஸ்வாமி சரணம் ஈஸ்வரா
சரணம் ஈஸ்வரா ஸ்வாமி சரணம் ஈஸ்வரா

உலகம் படைப்பவர் ஈசன் உயிர்கள் காப்பவர்
உட்பகை அழிப்பவர் ஈசன் உண்மையானவர்

நலங்கள் தருபவர் ஈசன் நமது நாயகர்
நடன சுந்தரர் ஈசன் நாத ரூபமே

கங்கை கொண்டவர் ஈசன் கைலை வாசனே
கருணை மிக்கவர் ஈசன் கவலை தீர்ப்பவர்

மங்கை பாகனே மூன்று கண்ணனே
மதனை அழித்தவர் ஈசன் மௌன மூர்த்தியே (சா)

நமசிவாயமே ஈசன் நந்தி வாகனர்
நீறணிந்தவர் ஈசன் நீலகண்டரே

அமிர்தலிங்கமே ஈசன் அம்மையப்பனே
அன்பு வடிவமே ஈசன் அம்மையப்பனே (சரணம்)

2. பவனி வருகிறார் ஈசன்...

பவனி வருகிறார் ஈசன் பவனி வருகிறார்
பக்தர் நம்மை காப்பதற்கு பவனி வருகிறார்
வருகிறார் வருகிறார் வருகிறார்

1. உலகமெல்லாம் காக்கும் ஈசன் பவனி வருகிறார்
லோகமாதா பராசக்தி கூட வருகிறார்
நலங்களெல்லாம் தந்தருள பவனி வருகிறார்
நந்தி வாகனத்திலேறி பவனி வருகிறார் (பவனி)

2. எங்குமுள்ள ஈசனிங்கு பவனி வருகிறார்
எட்டு திக்கும் புகழ்ந்து பாட பவனி வருகிறார்
தங்க தேரில் அமர்ந்து கொண்டு பவனி வருகிறார்
தம்மை மக்கள் நேரில் காண பவனி வருகிறார் (பவனி)

3. ப்ரம்மா விஷ்ணு தேவரெல்லாம் சூழ்ந்து வருகிறார்
சிவ கணங்கள் பூதமெல்லாம் தொடர்ந்து வருகிறார்
வரம் கொடுத்து வாழ்வருள ஈசர் வருகிறார்
வலிய பகை அழித் தொழிக்க பவனி வருகிறார் (பவனி)

4. மகாலெக்ஷ்மி அருமையாகப் பாடி வருகிறார்
சரஸ்வதியார் வீணையிலே நாதம் தருகிறார்
மகா நந்தி மிருதங்கத்தில் தாளமிடுகிறார்
தேவலோகப் பெண்களெல்லாம் ஆடி வருகிறார் (பவனி)

5. முனிவர் ரிஷி ஞானியர்கள் வேதம் சொல்கிறார்
தேவரெல்லாம் ஈசனுக்கு போற்றி சொல்கிறார்
கனிந்த கருணை உள்ளத்தோடு ஈசன் வருகிறார்
கண்டு வணங்கிப் பயன்பெறவே மக்கள் திரள்கிறார் (பவனி)

6. கண்ணை எட்டும் தூரம் வரைக்கும் பவனி வருகிறார்
காவடியாட்டம் கரகத்தாட்டம் முன்னால் வருகுது
விண்ணை முட்டும் அதிர்வேட்டு வெடிகள் முழங்குது
பம்பை மேளம் தவில் சப்தம் நம்மை அழைக்குது (பவனி)

7. அன்பர்களே தாய்மாரே விரைந்து வாருங்கள்
அம்மையப்பன் பவனி காண ஒன்று கூடுங்கள்
நல்லவை என்றும் நடை பெற வேண்டுங்கள்
நன்றியோடு என்றும் ஈசன் புகழைப்பாடுங்கள் (பவனி)

8. வீதியெங்கும் தோரணங்கள் வளைவுகள்கட்டுங்கள்
வீடுதோறும் கோலமிட்டு விளக்கு ஏற்றுங்கள்
மாதரெல்லாம் ஒன்று சேர்ந்து நாமம் கூறுங்கள்
மகத்தான நன்மைகள் எல்லாம் வந்து சேரும் (பவனி)

9. பக்தரெல்லாம் ஒன்று கூடி பஜனை செய்யுங்கள்
பாபமெல்லாம் தீரும் மனம் உருகிப் பாடுங்கள்
சக்தி உமை நாயகனை சரணம் அடையுங்கள்
சர்வேஸ்வரன் பவனி கண்டு சுகமாய் வாழுங்கள் (பவனி)

3. சந்திர சேகர சம்பு...
(அயிகிரி நந்தினி மெட்டு)

சந்திர சேகர சம்பு மகேஸ்வர சாம்ப சதாசிவ சங்கரனே !
சுந்தர சொக்கனே சச்சிதானந்தனே ஜோதி பிரபாகர சற்குருரே !
பரமனே பார்வதி நேசனே பைரவா தூய பஞ்சாட்சரனே !
ஹர ஹர சங்கர ஜெயஜெய சங்கர அன்புடன் என்னையும் ஏற்றருளே !
கங்கஜடாதர கௌரி மனோஹர கல்யாணி மனமகிழ் கருணாகரா !
குங்கும மேனியே கணங்களின்நாதனே குற்றங்கள் பொறுத்தருள் குணநிதியே !
அம்பிகை பாகனே அம்பலவாணனே அரவினையணிந்தவனே !
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர அன்புடன் என்னையும் ஏற்றருளே !
சிதம்பர நாதனே தீனதயாளனே சாமகானப் ரியனே !
மதியணி விமலனே மன்மத தகனனே மௌன முக்கண்ண மகேஸ்வரனே !
இறைவனே முதல்வனே ஏழைபங்காளனே எழில் நீலகண்ட ஏகாம்பரனே !
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர அன்புடன் என்னையும் ஏற்றருளே !
தில்லையில் ஆடிடும் வேதம் பாடிடும் தேவர்கள் போற்றிடும் நடராஜா !
எல்லையில் கணங்களும் விஷ்ணுவும் பிரமனும் துதித்திடும் சிவராஜா !
திரிபுர சுந்தரா ராமலிங்கேஸ்வரா தாயுமான பரமேஸ்வரனே !
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர அன்புடன் என்னையும் ஏற்றருளே !
அம்மையே அப்பனே அமிர்தகடேஸ்வர ஆனந்த மூர்த்தியே பசுபதியே !
உம்மையே நம்பினேன் உனதடி வணங்கினேன் ஓங்காரநாத உமாபதியே !
அருள்தரும் நந்திமேல் அமர்ந்துடன் வருகவே ஆதியே போற்றி போற்றி
ஹரஹர சங்கர ஜெய ஜெய சங்கர அன்புடன் என்னையும் ஏற்றருளே !

4. ஒன்றானவன் உருவில்...

ஒன்றானவன் உருவில் இரண்டானவன்
உருவான செந்தமிழில் மூன்றானவன்
நன்றான வேதத்தில் நான்கானவன்
நம சிவாய என ஐந்தானவன்
இன்பச் சுவைகளுக்கு ஆறானவன்
இன்னிசை ஸ்வரங்களில் ஏழானவன்
சிந்திக்கும் பொருள்களில் எட்டானவன்
தித்திக்கும் நவரச வித்தானவன்
பத்தானவன் நெஞ்சில் பற்றானவன்
பன்னிருகை வேலவனை பெற்றானவன்
முற்றாதவன் மூல முதலானவன்
முன்னைக்கும் பின்னைக்கும் நடுவானவன்
ஆணாகி பெண்ணாகி நின்றானவன்
அனையொன்று தானென்று சொன்னானவன்
தான்பாதி உமைபாதி கொண்டானவன்
சரிபாதி பெண்மைக்குத் தந்தானவன்
காற்றானவன் - ஒளியானவன்
நீரானவன் - நெருப்பானவன்
நேற்றாகி இன்றாகி என்றைக்கும் நிலையானவன்
ஊற்றாகி நின்றானவன் - அன்பின்
ஒளியாகி நின்றானவன்

5. சித்தமெல்லாம் எனக்கு....

சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா - உன்னை
சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே (சித்தமெல்லாம்

அப்பனில்லாமல் ஒரு அம்மை இல்லை - அந்த
அம்மையில்லாமல் இந்த பிள்ளை யில்லை (சித்த

பக்திப் பெருக்கில் எந்தன் ஊர் உருக - அந்த
பரவசத்தில் உள்ளே உயிர் உருக
சக்தியெல்லாம் திரண்டு சிவம் பெருக எந்தன்
சந்ததியே உந்தனுக்கு அடிபணிய இறைவா (சித்த

கண்ணை திறந்து வைத்த கருப்பொருளே ... கோவில்
கதவை திறந்தழைத்த திருவருளே
வெண்ணைநல்லூர் உறையும் அருட்கடலே வந்து
என்னை என்றும் ஆளுகின்ற பரம் பொருளே இறைவா (சித்தமெல்லாம்

6. ஆதிசிவன் தாள் பணிந்து...

ஆதிசிவன் தாள் பணிந்து அருள் பெறுவோமே - எங்கள்
ஆதிசக்தி நாயகியின் துணை பெறுவோமே
வேதங்கள் தத்துவத்தை நாடிடுவோமே - திரு
வெண்ணீறும் குங்குமமும் சூடிடுவோமே
அஞ்செழுத்தைக் காலமெல்லாம் நெஞ்சில் வைப்போமே - அவன்
அடியார்க்கும் அன்பருக்கும் தொண்டுசெய்வோமே (ஆதி

நாவுக்கரசர் பாடிப்புகழும் நாதனல்லவா
நாதத்திற்கே பெருமை தந்த ஜீவனல்லவா
பேசும் தமிழ் பாட்டுக்கெல்லாம் தந்தையல்லவா ... அதை
பிள்ளைத் தமிழ் என்று சொன்ன அன்னையல்லவா (ஆதி

7. தாள் திறவாய் மணிக்கதவே...

தாள் திறவாய் மணிக்கதவே தாள் திறவாய்
ஆலய மணிக்கதவே தாள் திறவாய் ... மறை
நாயகன் முகம் காண தாள் திறவாய் மறை (ஆலய

ஆ.... ஆ.... மனக்கதவைத் திறந்த பரம் பொருளே
திருக்கதவும் திறக்க வர திருவருளே ஆ..ஆ..ஆ..
சிவமயமாய் மலர தாள் திறவாய் (ஆலய

ஆடுந்திருவடி கோலமறிந்திட அரனே தாள் திறவாய்
அன்னையின் மார்பினில் பொன்மணிக் கண்டிட
சிவனே தாள் திறவாய்
அருள்நெறி தெளிவுற திருமறை புகழ்பெற
அன்பே தாள் திறவாய்
ஒருமுறை இருமுறை கேட்டேன் ஒளியே தாள் திறவாய்
இறைவா தாள் திறவாய் என் தலைவா தாள் திறவாய்
இறைவா தாள் திறவாய் என் தலைவா தாள் திறவாய்
கதவே தாள் திறவாய் தாள் திறவாய்

8. அறிவே நிறைவே... (ஜனனீ ஜனனீ - மெட்டு)

அறிவே நிறைவே அருளே பொருளே
அழகானந்தனே நடராஜனே
அர்த்தநாரீசனே சர்வேஸ்வரனே
திரிலோகேசனே பிரகதீஸ்வரனே
நந்திவாகனனே சுந்தரேஸ்வரனே (அறி)

நால் வேதங்களும் பிரம்ம தேவருடன்
மால் ஓதுவதும் நமச்சிவாய மன்றோ
சுபயோகங்களும் தவயோகங்களும்
இவை வேண்டுவதும் சிவபோக மன்றோ (அறி)

உலகாதியும் நீ வளர் ஜோதியும் நீ
இன்பம் ஓங்கிடவும் துன்பம் நீங்கிடவும்
எந்தன் நெஞ்சில் நாதம் கொஞ்சிடவே
உந்தன் தஞ்ச மலர்ப்பாதம் தஞ்சமய்யா
ஆலமுண்டவனே நீலகண்டேசனே (அறி)

9. ஆடுகின்றானடி தில்லையிலே...

ஆடுகின்றானடி தில்லையிலே - அதைப்
பாடவந்தேன் அவன் எல்லையிலே
திங்களும் ஆட சூலமும் ஆட
விரிசடை மீதொரு கங்கையும் ஆட
உலகெனும் மாபெரும் மேடையிட்டான்... அதில்
உயிர்களை எல்லாம் ஆடவிட்டான்
அசைந்திடும் மரம் செடி கொடிகளிலே - அந்த
அம்பலத்தரசன் ஆடுகின்றான் (ஆடு)

தந்தையும் தாயும் போல் அவன் இருப்பான்... ஒரு
தந்தையும் தாயும் அவனுக்கில்லை
அந்நாள் தொடங்கி இந்நாள் வரையில்
ஆடிய ஆட்டம் முடியவில்லை
புட்டுக்கு ஏனோ ஆசை கொண்டான் - அவன்
பிரம்படித் தனையே தாங்கிக் கொண்டான்
மண்ணைப் படைத்தவன் மண்சுமந்தான் அது
மதுரையில் ஆடிய ஆட்டமன்றோ (ஆடு)

10. சிவபெருமானே எங்கள்...
(தீனரட்சகி - மெட்டு)

1. சிவபெருமானே எங்கள் சிவபெருமானே
சிந்தையில் குடிகொண்டவனே சிவபெருமானே - உன்
சீர்பாத சேவை செய்ய சிவபெருமானே
சீக்கிரமே வந்திடுவாய் சிவபெருமானே

2. பாம்பு தனை கழுத்தில் அணிந்த சிவபெருமானே
பார்வதியை இடத்தில் வைத்த சிவபெருமானே
பாங்காக நாங்கள் வாழ சிவபெருமானே
பாலமாக அமைந்திடுவாய் சிவபெருமானே

3. கங்கை தனை தலையில் வைத்த சிவபெருமானே
கண்ணப்பருக்கு அருள் செய்த சிவபெருமானே
கணபதியை எமக்களித்த சிவபெருமானே
கந்தனையும் சேர்த்தளித்த சிவபெருமானே

4. சந்திரனுக்கு அபயமளித்த சிவபெருமானே
சக்திசிவன் ஆனவனே சிவபெருமானே
சர்வலோக நாயகனே சிவபெருமானே
சகல பாக்கியம் அளிப்பவனே சிவபெருமானே

5. மண்டையோடு மாலையணிந்த சிவபெருமானே
மங்காத புகழ் வாய்ந்த சிவபெருமானே
மங்களங்கள் தருபவனே சிவபெருமானே
மக்கள் குறை தீர்ப்பவனே சிவபெருமானே

11. சிவனுக்கிசைந்தது....

சிவனுக்கிசைந்தது சிவராத்திரி
அவன் தேவி புகன்றது நவராத்திரி
அவளின் துணையே ஒரு சக்தி
இந்த அகிலம் காண்பது நவசக்தி (சிவ)

தவத்தில் நிலைக்கும் ஒரு பாதி
தன் சந்ததி காக்கும் மறுபாதி
விதைக்கும் உழவன் சிவனென்றால்
அதன் விளைவை சுமப்பவள் உமையன்றோ (சிவ)

இரவில் ஒரு நாள் அது மலரும்
என்றோ ஒரு நாள் அது உலரும்
இடையில் மடியில் இருத்தி வைத்து
எம்மை வளர்ப்பாள் அம்மையன்றோ (சிவ)

தாயாய் வந்தாள் ஒரு சக்தி தாகம் தீர்த்தாள் ஒரு சக்தி
ஆயகலைகள் அருள் பவளாய்
ஆக்கம் தந்தாள் ஒரு சக்தி
செல்வம் தந்தென்னை சீராட்டி
செழிக்கச் செய்தாள் ஒரு சக்தி
அல்லும் பகலும் அருகிருந்தே
ஆற்றல் கொடுத்தாள் ஒருசக்தி
உடன் பிறந்தவள் ஒரு சக்தி
உள்ளம் நிறைந்தவள் ஒரு சக்தி
தோள் தவழ்ந்தவள் ஒரு சக்தி
வாழ்வு முழுவதும் சிவசக்தி
என்பதும் ஓர் உருவாய் நின்றதும் ஆணவம் சென்றதுவே
ஒன்பது இரவுகள் அவள் நினைவாய்
ஒளிவிளக்கு ஏற்றுவோம் வாரீரோ.

சிவ நாமாவளிகள்

1. ஸம்போ புராரே ஸங்கர புராரே
ஸூலதர பணிவர கங்கண புராரே

2. மறாதேவ ஸிவ ஸங்கர ஸம்போ
உமாகாந்த ஹர த்ருபுராரே
ம்ருத்யுஞ்ஜெய வ்ருஷபத்வஜ சூலின்
கங்காதர ஹர மதனாரே

3. ஸிவ ஸங்கர பரமேஸ தயாளோ
கருணாகர ஸுரநாயக காமிதபலவர தாயக (ஸி)
ஸுத்தஸ்படிக ஸம்காஸ ஸுப்ர கைலாஸநிவெஸ (ஸி)
நீர்வேலியில் ஒரு சிவாலயம் இருந்தது.. உங்களுக்குத் தெரியுமா..?

இற்றைக்கு 150 வருஷங்களுக்கு முன் நீர்வேலி வடக்கில் ‘மோதிரக்கேணி’ என்று சொல்லப்படும் இடத்தில் ஒரு சிவாலயம் இருந்திருக்கிறது.

இக்கோவிலின் அடையாளங்கள் அண்மைக்காலம் வரை அவ்விடத்தில் இருந்து அழிந்து போயின.

இவ்வாலயம் விசாலாக்ஷி அம்பாள் சமேத விஸ்வநாதஸ்வாமி திருக்கோவில் என்று அறியப்படுகிறது. ஆனால், ஏதோ ஒரு காரணத்தால் ஏறத்தாழ ஒரு நூறாண்டுக்கு முன் அக்கோவில் சிதைந்து விட்டது.

கோவிலுக்கு உரியதாக இருந்த திருக்குளம் மட்டும் ஒரு தசாப்தத்திற்கு முன் வரை இருந்தது. ‘மோதிரக்கேணி’ என்று அழைக்கப்பட்டது. இன்றும் இவ்விடம் அப்பெயரால் அழைக்கப்படும் போதும், கோவில் அழிந்து போனது போல, குளமும் தூர்ந்து போயிற்று.

இவ்வாலயத்தில் இருந்த மூலவர் தான் இன்றும் வாய்க்காற்தரவை விநாயகர் ஆலயத்தில் வைத்து வழிபடப்பெறும் சிவலிங்கமூர்த்தியாகும். ஆதனால், அங்கும் விசாலாக்ஷியம்பாள் சமேத விஸ்வநாதர் என்றே பூஜிக்கப்படுகிறார்.

இந்த லிங்கமும், அம்பாளும், நீர்வேலி அரசகேசரி விநாயகர் ஆலயத்தில் சில காலம் வைத்து வழிபடப்பட்டு, சிவஸ்ரீ பிக்ஷாடனக்குருக்களால், வாய்க்காற்தரவை ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாயும், சிலர் குறிப்பிடுகின்றனர்.

இன்று பல புதிய கோவில்கள் எழுந்திருக்கின்றன. அது போலவே, பழைய புராதனமான கோவில் ஒன்று நமது நீர்வேலியில் இருந்து மறைந்திருக்கிறது. இவ்வாலயம் குறித்த சில செய்திகள் நீர்வேலி குறித்த வரலாற்று நூல்களிலும், செய்திகளிலும் காணப்படுகிறது.

எனினும், இவ்வாலயம் குறித்து மேலதிகமாக எவராவது, ஆய்வுகள் செய்தால், சிறப்பான செய்திகள் கிடைக்கப்பெறலாம்..
பால முகுந்தாஷ்டகம்

கராரவிந்தேன பதாரவிந்தம்
முகாரவிந்தே வினிவேசயந்தம்
வடஸ்ய பத்ரஸ்ய புடே சயானம்
பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி

ஸம்ஹ்ருத்ய லோகான் வடபத்ரமத்யே
சயான மாத்யந்த விஹீனரூபம்
ஸர்வேச்வரம் ஸர்வஹிதாவதாரம்
பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி

இந்தீவர ச்யாமள கோமளாங்கம்
இந்த்ராதி தேவார்சித பாதபத்மம்
ஸந்நான கல்பத்ருமமாச்ரிதானாம்
பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி

லம்பாலகம் லம்பித ஹாரயஷ்டிம்
ச்ருங்கார லீலாங்கித தந்தபங்க்திம்
பிம்பாதாரம் சாருவிசால நேத்ரம்
பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி

சிக்யே நிதாயாத்ய பயோததீநி
பஹிர்கதாயாம் வ்ரஜநாயிகாயாம்
புக்த்வா யதேஷ்டம் கபடேன ஸுப்தம்
பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி

களிந்தஜாந்தஸ்கித காளியஸ்ய
பணாக்ரரங்கே நடனப்ரியந்தம்
தத்புச்சஹஸ்தம் சரதிந்துவக்த்ரம்
பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி

உலூகலே பத்தமுதார சௌர்யம்
உத்துங்கயுக்மார்ஜுன பங்கலீலம்
உத்புல்ல பத்மாயத சாருநேத்ரம்
பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி

ஆலோக்ய மாதுர் முக மாதரேண
ஸதன்யம் பிபந்தம் ஸரஸீருஹாக்ஷம்
ஸச்சின்மயம் தேவமனந்தரூபம்
பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி
தசாவதார ஸ்தோத்ரங்கள்


1. மத்ஸ்யாவதாரம் (கேது)

நிர்மக்ந ச்ருதிஜால மார்கணதஸா
தத்தக்ஷணைர் வீக்ஷணை:
அந்தஸ்தந்வ திவாரவிந்த கஹநாந்
யௌதந்வதீநா மபாம்
நிஷ்ப்ரத்யூஹ தரங்க ரிங்கண மிக:
ப்ரத்யூட பாதச்ச்டா
டோலாரோஹ ஸதோஹலம் பகவதோ
மாத்ஸ்யம் வபு: பாது ந:

2. கூர்மாவதாரம் (சனி)

அவ்யாஸுர் புவநத்ரயீ மநிப்ருதம்
கண்டூயநை ரத்ரிணா
நித்ராணஸ்ய பரஸ்ய கூர்மவபு÷ஷா
நிச்வாஸ வாதோர்மய:
யத்வி÷க்ஷபண ஸம்ஸ்க்ருதோததி பய:
ப்ரேங்க்கோல பர்யங்கிகா
நித்யாரோஹண நிர்வ்ருதோ விஹரதே
தேவ: ஸஹைவ ச்ரியா

3. வராஹாவதாரம் (ராகு)

கோபாயே தநிசம் ஜகந்தி குஹநா
போத்ரீ பவித்ரீக்ருத
ப்ரஹ்மாண்ட ப்ரளயோர்மிகோஷ குருபிர்
கோணாரவைர் குர்குரை:
யத்தம்ஷ்ட்ராங்குர கோடிகாட கடநா
நிஷ்கம்ப நித்யஸ்த்திதி
ப்ரஹ்மஸ்தம்ப மஸெள தஸெள பகவதீ
முஸ்தேவ விச்ஸ்வம்பரா

4. நரஸிம்ஹாவதாரம் (செவ்வாய்)

ப்ரத்யாதிஷ்ட புராதந ப்ரஹரண க்ராம:
க்ஷணம் பாணிஜை:
அவ்யாத் த்ரீணி ஜகந்த்யகுண்ட மஹிமா
வைகுண்ட கண்டீரவ:
யத்ப்ராதுர்பவநா தவந்த்ய ஜடரா
யாத்ருச்சிகாத் வேதஸாம்
யா காசித் ஸஹஸா மஹாஸுர க்ருஹ
ஸ்த்தூணா பிதாமஹ்யபூத்

5. வாமனாவதாரம் (குரு)

வ்ரீடாவித்த வதாந்ய தாநல யசோ
நாஸீர தாடீபடஸ்
த்ரையக்ஷம் மகுடம் புநந்நவது நஸ்
த்ரைவிக்ரமோ விக்ரம:
யத்ப்ரஸ்தாவ ஸமுச்சரித த்வஜபடீ
வ்ருத்தாந்த ஸித்தாந்திபி:
ஸ்ரோதோபி: ஸுரஸிந்து ரஷ்டஸு
திஸா ஸெளதேஷு தோதூயதே

6. பரசுராமவதாரம் (சுக்ரன்)

க்ரோதாக்நிம் ஜமதக்நி பீடநபவம்
ஸந்தர்ப்பயிஷ்யந் க்ரமாத்
அக்ஷத்ராமபி ஸந்ததக்ஷய இமாம்
த்ரிஸ்ஸப்த க்ருத்வ: க்ஷிதிம்
தத்வா கர்மணி தக்ஷிணாம் க்வசந தா
மாஸ்கந்த்ய ஸிந்தும் வஸந்
அப்ரஹ்மண்ய மபாகரோது பகவா
நாப்ரஹ்ம கீடம் முநி:

7. ராமாவதாரம் (சூரியன்)

பாராவார பயோவிசோஷண கலா
பாரீண காலாநல
ஜ்வாலா ஜால விஹார ஹாரி விசிக
வ்யாபார கோரக்ரம:
ஸர்வாவஸ்த்த ஸக்ருத்ப்ரபந்ந ஜநதா
ஸம்ரக்ஷணைக வ்ரதீ
தர்மோ விக்ரஹவா நதர்ம விரதிம்
தந்வீ ஸ தந்வீத ந:

8. பலராமாவதாரம் (குளிகன்)

பக்கத்கௌரவ பட்டணப்ரப்ருதய:
ப்ராஸ்த ப்ரலம்பாதய:
தாலாங்கஸ்ய ததாவிதா விஹ்ருதயஸ்
தந்வந்து பத்ராணி ந:
க்ஷீரம் சர்க்கரயேவ யாபி ரப்ருதக்பூதா:
ப்ரபூதைர் குணை:
ஆகௌமாரக மஸ்வதந்த ஜகதே
க்ருஷ்ணஸ்ய தா: கேலய:

9. க்ருஷ்ணாவதாரம் (சந்திரன்)

நாதாயைவ நம: பதம் பவது நச
சித்ரைச் சரித்ர க்ரமை:
பூயோபிர் புவநாந்யமுநி குஹநா
கோபாய கோபாயதே
காலிந்தீ ரஸிகாய காலிய பணி
ஸ்ப்பார ஸ்ப்படா வாடிகா
ரங்கோத்ஸங்க விசங்க சங்க்ரம துரா
பர்யாய சர்யாய தே:

10. கல்கி அவதாரம் (புதன்)

பாவிந்யா தசயா பவந்நிஹ பவ
த்வம்ஸாய ந: கல்பதாம்
கல்கீ விஷ்ணுயச: ஸுத: கலிகதா
காலுஷ்ய கூலங்கஷ:
நிச்சேஷ க்ஷமகண்டகே க்ஷிதிதலே
தாரா ஜலௌகைர் த்ருவம்
தர்மம் கார்த்தயுகம் ப்ரரோஹயதி யந்
நிஸ்த்ரிம்ச தாராதர:
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது ஏன்?

சூரியன் ஒவ்வொரு ராசியிலும் ஒவ்வொரு மாதம் சஞ்சரிக்கிறார். அதில், மகர ராசிக்குள் அவர் நுழையும் நாளை தைப்பொங்கல் என்று குறிப்பிடுவர். வடநாட்டில் இதை மகர சங்கராந்தி என்பர். இந்நாளில் வீட்டு வாசலில் கோலம் இட்டும், மாவிலைத் தோரணம் இட்டும் அலங்கரிப்பர். மார்கழி மாதத்தின் கடைசி நாளான போகியன்று பழைய பொருள்களை தீயிட்டுக் கொளுத்துவதும் வீட்டின் தூய்மைக்காகவே. வேண்டாத பழமையை விலக்கி, புதுமையை வரவேற்கும் விதமாக பொங்கல் அமைந்துள்ளது. அதனால், வாழ்வில் முன்னேறுவதற்கான வழிவகை உண்டாவது இயற்கை. இதனால் தான், தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற சொல்வழக்கு ஏற்பட்டது. வயலில் விளைந்த புது நெல்லில் குத்திய அரிசியில் பொங்கலிட்டு, கண் கண்ட தெய்வமான சூரியனுக்குப் படைப்பர். பொங்கல் பானையில் பொங்கும்போது, பொங்கலோ பொங்கல் என்று ஒலி எழுப்புவர். ஒருமித்த குரலில், இதைச் சொல்லும்போது, எல்லா மங்களங்களும், நன்மைகளும் வீட்டிற்கு வந்து சேரும் என்பது ஐதீகம்.
எவ்வாறு பொங்கல் வைக்க வேண்டும்?
கண்கண்ட தெய்வமான கதிரவனுக்கு, பொங்கல் திருநாளில் முறைப்படி பொங்கலிட்டால் அவரது நல்லருளைப் பெறலாம். பொங்கலை வீட்டு வாசலில் வைப்பதே சிறப்பாகும். வீட்டு வாசலில் திருவிளக்கை ஒரு பலகையிட்டு அதன் மேல் வையுங்கள். பூ சூட்டுங்கள். வெளியே காற்றடிக்கலாம் என்பதால் ஏற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. நிறைவிளக்காக வைத்தால் போதும். விளக்கின் முன் பெரிய வாழை இலை விரித்து, வலது ஓரத்தில் சாணப்பிள்ளையாரையும், செம்மண்ணைப் பிடித்து அம்பாளாகக் கருதி பிள்ளையார் அருகிலும் வையுங்கள். இலையில் பச்சரிசி பரப்புங்கள். பிறகு, கிழங்கு, காய்கறி, வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு படைக்கவேண்டும். இரண்டு கரும்புகளை தோகையுடன் சுவரில் சாய்த்து வையுங்கள். பச்சரிசி, வெல்லம், பழம், தேங்காய் பல் சேர்த்து தயாரித்த காப்பரிசியை ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளுங்கள். பச்சரிசி களைந்த நீரை தயாராக வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பானையில் மஞ்சள் குலை கட்டி அடுப்பில் வையுங்கள். தேங்காய் உடைத்து, அதிலுள்ள தண்ணீரை பானையில் விடுங்கள். சூடம் ஏற்றி அடுப்பு பற்ற வையுங்கள். பனை அல்லது தென்னை ஓலை கிடைத்தால் அதைக் கொண்டு அடுப்பு எரிக்கலாம். கிடைக்காதவர்கள் காய்ந்த சுள்ளி விறகுகளைப் பயன்படுத்தலாம். மண்ணெண்ணெய் விட்டு அடுப்பு பற்ற வைப்பதைத் தவிர்க்கவும்.

பச்சரிசி களைந்த நீரை பானையில் ஊற்றுங்கள். தேவையானால், சிறிதளவு பசும்பால் சேர்க்கலாம். தண்ணீர் கொதித்து பொங்கியவுடன், குலவையிடுங்கள். குலவையிடத் தெரியாதவர்கள் பொங்கலோ பொங்கல் என்று முழங்கலாம். கொதித்த தண்ணீரை, எவ்வளவு அரிசி பொங்க இருக்கிறோமோ, அந்தளவுக்கு முகர்ந்து விட்டு பச்சரிசியை இடுங்கள். நேரம் செல்லச் செல்ல எரிபொருளின் அளவைக் குறைத்து விடுவது அவசியம். இல்லாவிட்டால், சாதம் பானையில் பிடிக்கும்.பொங்கல் தயாரானதும் இறக்கி விடுங்கள். பின்பு, அதே அடுப்பில் சர்க்கரைப் பொங்கல் தயார் செய்து விடுங்கள். பொங்கல் பானைகளை விளக்கின் முன் வைத்து, பூஜை செய்யுங்கள். சூரியனுக்குரிய ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம், பிற ஸ்லோகங்கள், பாடல்களைப் பாடுங்கள். பின்னர், இவற்றை வீட்டுக்குள் எடுத்துச் சென்று விடலாம். முதலில், பொங்கல், பழம் ஆகியவற்றை ஒரு இலையில் வைத்து காகத்துக்கு வைக்க வேண்டும். மதிய வேளையில், காய்கறி சமைத்ததும், திருவிளக்கேற்றி, ஒரு இலை விரித்து பொங்கல், சர்க்கரைப் பொங்கல், காய்கறி வகைகளை இலையில் வைக்க வேண்டும். அதை முன்னோருக்கு சமர்ப்பித்து பூஜை செய்ய வேண்டும். அதன் பிறகு குடும்பத்தார் ஒற்றுமையுடன் சாப்பிட வேண்டும். வெறுமனே டிவி பார்ப்பது பொங்கலன்று செய்யும் பணியல்ல. இப்படி, பொங்கலிட்டு பாருங்கள். சூரியபகவானின் அருள்பெற்று நலமுடன் வாழ்வீர்கள்.


சூரியன் பிறந்த கதை!

சாம்ப புராணம் என்ற நூலில் சூரியன் அவதரித்த கதை விரிவாகச் சொல்லப்பட்டு இருக்கிறது. பிரம்ம தேவன் படைப்புத் தொழிலை செய்வதற்குத் துணையாக ஏழு ரிஷிகளைப் படைத்தார். அவர்களை சப்த ரிஷிகள் என்று அழைப்பார்கள். அவர்கள், மரீஷி, சுத்ரி, அங்கிரஸர், புலத்தியர், புலகர், கிருது, வசிஷ்டர் என்பவர் ஆவர். இவர்களுள் மரீஷி முதல்வர். மரீஷி சம்பூதி என்பவளை மணந்தார். அவர்களுக்கு ஒரு பிள்ளை பிறந்தான். அவன்தான் கச்யபர் எனப்பட்டார்.

மகா பண்டிதரான கச்யபர் எல்லாச் சாஸ்திரங்களையும், வேதங்களையும் நன்கு ஆழ்ந்து கற்று, தேர்ச்சி பெற்று, ஞான பண்டிதராகத் திகழ்ந்தார். தட்சனின் பெண்களில் 13 பேரை இவர் மணந்தார். இவருடைய மூத்த மனைவியின் பெயர் அதிதி. இவள் கற்புச் செல்வி. கணவனே கண்கண்ட தெய்வம் என்பதை என்பதை உலகுக்கு உணர்த்திய உத்தமி. தர்மதேவதை, இவள் பெருமையை உலகுக்குக் காட்ட நினைத்தார். ஒரு நாடகம் ஆடினார். அதிதி கருவுற்றிருந்த நேரம். அந்த நிலையி<லும் அவள் கணவனுக்குப் பணிவிடை செய்வதில் ஆர்வம் காட்டினாள். ஒரு நாள் அதிதி தன் கணவன் கச்யபருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள். அந்த நேரம் வாசல் பக்கத்தில் இருந்து தாயே, பிச்சை போடு என்ற குரல் கேட்டது. தர்ம தேவதை மாறு வேடத்தில் வந்திருந்தான். குரல் கேட்டது என்றாலும், கணவனுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்த காரணத்தால், அதிதியால் உடனே சென்று உபசரிக்க இயலவில்லை. கணவன் உணவு உண்டு எழுந்தபின், அன்னமும் கையுமாக விரைந்தாள் அதிதி. அவள் வந்திருந்த நபரிடம், ஐயா பொறுத்தருள்க என்று மன்னிப்புக் கேட்டு, அன்னமிட முயன்றாள்.

வந்தவன் அதிதியைக் கோபத்துடன் நோக்கினான். உபசரிப்பு மிக நன்றாக இருக்கிறது. பெயர் மட்டும் அதிதி என்று வைத்துக் கொண்டால் போதுமா? அதிதியை (அறிவிக்காமல் வந்தவன்) எப்படிக் கவுரவிக்க வேண்டும் என்பது உனக்குத் தெரியாதா? சுவாமி கணவனுக்குப் பணிவிடை செய்ததால், வர காலதாமதமாகி விட்டது. நானோ கருவுற்றிருக்கிறேன். என்னால் இந்த நிலையில் வேகமாக நடக்கவும் முடியவில்லை நீங்கள் மன்னிக்க வேண்டும். நிலை என்ன பொல்லாத நிலை? உனக்குக் கணவன்தான் முக்கியம், அதைவிட உன் வயிற்றிலிருக்கும் கருவும் முக்கியம். உன் வீடு தேடி வந்த நான், மொத்தத்தில் அலட்சியப்படுத்தப்பட்டேன். எனவே சாபமளிக்கிறேன், உனது கரு மிருதம் ஆகக் கடவது. கடுமையான சாபம் தந்தான். மாறுவேடத்தில் இருந்த தர்ம தேவதை. மயக்கமுற்றாள் அதிதி. விரைந்து வந்த கச்யபர் நடந்ததைப் பார்த்து, ஞான திருஷ்டியால் உண்மையை அறிந்து கொண்டார். மனைவியின் மயக்கத்தை தெளிவித்தார். உண்மையை விவரித்தார். கரு அழியட்டும் என்று அவன் இட்ட சாபமானது அற்புதம் தான். புதல்வன் அற்புதமாகப் பிறப்பான் என்பதை அறிவிக்கக் கூடியது என்ற தெளிவினை மனைவிக்குத் தந்தார்.

மிருது பிண்டமாகாது. அண்டமாக மாறும் அந்த அண்டம் பிளக்கும். அதிலிருந்து ஒரு மகன் பிறப்பான். அவன் மார்த்தாண்டன் எனப்படுவான். விஷ்ணுவைப் போல வல்லமையுடன் இருப்பான். நவக்கிரகங்களுக்குத் தலைமை ஏற்பான் என்றார் கணவர், கச்யபர். மனம் தெளிந்தாள் மனைவி அதிதி. ஒரு பிரபவ ஆண்டு மகா சுக்ல சப்தமியில் விசாக நட்சத்திரத்தில் அதிதியிடமிருந்து தோன்றிய அண்டத்திலிருந்து ஒளி தோன்றியது. பன்னிரண்டு புதல்வர்கள் அவதரித்தார்கள். சரவணப் பொய்கையில் தோன்றிய ஆறு குழந்தைகள் ஒன்று சேர்க்கப்பட்டு ஸ்கந்தனானது போல் பன்னிரண்டு பிள்ளைகள் ஒன்று சேர்க்கப்பட்டு சூரியன் என்ற பெயரில் ஆயிரம் கிரணங்களோடு உலா வந்தான். இவர்கள் தனித்தனியே 12 மாதங்களுக்கு ஆதித்யர்கள் ஆனார்கள். இவ்வாறு சூரியனின் அவதாரப் பெருமையை விளக்குகிறது. சாம்ப புராணம்.
பொங்கல் பூஜை செய்வது எப்படி?

இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ஸ்டவ்வில் பொங்கல் வைக்கிறார்கள். ஆனால், சூழ்நிலைகளைக்காரணம் காட்டி, நமது பாரம்பரியத்தை மறந்து போவது முறையானதல்ல. மேலும், இளைய தலைமுறையினர், அக்காலத்தில் நாம் எப்படி பொங்கலிட்டோம் என்பதையும் தெரிந்து கொண்டு எதிர்காலத்திலும் கடைபிடிக்க வேண்டும்.

வீட்டு வாசலில் பொங்கல் வைக்க வசதியில்லாவிட்டால், தெருமக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து, நல்ல நேரத்தை தேர்ந்தெடுத்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் இணைந்து பொங்கல் வைக்க வேண்டும். கோயில்களையும் தேர்ந்தெடுக்கலாம். பால் பொங்கும் போது, சூரிய நமஸ்காரம் செய்து, ""பொங்கலோ பொங்கல் என ஒரு சேர முழக்கமிட வேண்டும். ஏனெனில், இது ஒரு ஒற்றுமைத் திருவிழா. தேரோட்டம் என்ற நிகழ்ச்சியை ஊர் ஒற்றுமை கருதி எப்படி நம் முன்னோர்கள் நமக்கு அறிவுறுத்தி சென்றார்களோ, அதுபோல பொங்கலும் மக்களிடையே ஒருமைப்பாட்டை வளர்க்கும் விழா என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே வீட்டுக்குள் காஸ்ஸ்டவ், மண்ணெண்ணெய் அடுப்பு இவற்றில் பொங்கல் வைப்பதைத் தவிர்த்து வீதியில் வைக்க வேண்டும். நகரங்களாக இருந்தாலும் கூட, கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்புஅளிக்கும் வகையில், அங்கிருந்து பனை ஓலை அல்லது தென்னை ஓலை தருவித்து பொங்கலிட வேண்டும்.

பொங்கலன்று காலையில் நல்ல நேரம் பார்த்து, வீட்டு முற்றத்தில் பெரிய அளவிலான குத்துவிளக்கேற்றி, அதன் முன் ஒரு வாழை இலையைப் போட வேண்டும். அதன் இடது ஓரத்தில் நாழி நிறைய பச்சை நெல் வைக்க வேண்டும். இலையில் பச்சரிசியை பரப்பி, அதன் மேல் கத்தரிக்காய், கருணைக்கிழங்கு, சிறுகிழங்கு, வள்ளிக்கிழங்கு, அவரைக்காய், சீனிஅவரை, பூசணித் துண்டு, பிடிகிழங்கு, காப்பரிசி (வெல்லம், பச்சரிசி கலவை) வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள்கிழங்கு ஆகியவற்றை வைக்க வேண்டும். கரும்பின் ஓலையை வெட்டாமல் நீள கரும்பாக சுவரில் சாய்த்து வைக்க வேண்டும். ஒற்றைக் கரும்பாக வைப்பதைத் தவிர்த்து இரண்டு கரும்புகள் வைக்க வேண்டும்.

பொங்கல் பானையை மண்அடுப்பு அல்லது பொங்கல் கட்டி எனப்படும் கற்கள் மீது வைக்க வேண்டும். திருவிளக்கிற்கு பத்தி, கற்பூர ஆரத்தி காட்டியபிறகு, உங்கள் குல தெய்வம் இருக்கும் கோயிலின் திசையை நோக்கி காட்ட வேண்டும். பின்னர் சூரியபகவானுக்கு ஆரத்தி காட்டியதும், ஒரு தேங்காயை உடைத்து, அதன் நீரை பானையில் விட வேண்டும்.

சுத்தப்படுத்திய பச்சரிசியை நன்றாகக் களைந்து, அந்த தண்ணீரை பானையில் விட வேண்டும். அடுப்புக்கும், பொங்கல் பானைக்கும் தூபம் (பத்தி) காட்டி, பற்ற வைக்க வேண்டும். தண்ணீர் கொதித்து பால் பொங்கும் போது குலவையிட வேண்டும். குலவை தெரியாதவர்கள் "பொங்கலோ பொங்கல் என முழங்க வேண்டும். பின்னர் பானையிலுள்ள சுடும் நீரை, அரிசி வேகும்அளவிற்கு மட்டும் வைத்துக் கொண்டு, மீதியை முகந்து விட வேண்டும். அரிசியை போட்டு, வெந்ததும் அவ்வப்போது அகப்பையால் கிண்டி கொடுக்க வேண்டும். இல்லா விட்டால், பாத்திரத்தின் அடியில் பிடித்து விட வாய்ப்புண்டு. பொங்கலை இறக்கிய பிறகு, சர்க்கரைப் பொங்கல் வைக்க வேண்டும்.

இலையின் முன்னால் இந்த பானைகளை இறக்கி வைத்து, திருவிளக்கிற்கும், சூரியனுக்கும் பூஜை செய்ய வேண்டும். ஆதித்ய ஹ்ருதயம் தெரிந்தவர்கள் அந்த ஸ்லோகங்களைச் சொல்லலாம். மற்றவர்கள் சூரியன் குறித்த தமிழ் பாடல்களைப் படிக்கலாம். பின்னர் காகத்திற்கு பொங்கல் வைக்க வேண்டும். காகம் உணவை எடுத்த பிறகு, குழந்தைகளுக்கு சர்க்கரைப் பொங்கல் கொடுக்க வேண்டும். அதன்பிறகே பெரியவர்கள் சாப்பிட வேண்டும். பின், காய்கறி வகைகள் சமைத்து வெண்பொங்கலை மதிய வேளையில் சாப்பிட வேண்டும். இரவில் முன்னோரை நினைத்து, இனிப்பு வகைகள், புத்தாடை வைத்து வணங்க வேண்டும். புத்தாடையை தானமாக கொடுத்து விட வேண்டும்.