பஞ்சகல்யாணிக் குதிரை பற்றி சரித்ர நாவல்களில் படித்திருப்போம்...
இரண்டாம் ஸரபேந்த்ர மஹாராஜா காலத்தில் கோனேரி பாபு என்பாரால் சாலிஹோத்ர ரிஷியின் நூலை அடியொற்றி... மராட்டி மொழியில் காவ்ய நடையில் இயற்றப்பட்டது துரங்கரத்னமாலா என்னும் நூல். பஞ்சகல்யாணி ஜாதிக்குரிய லட்சணங்களை இந்த நூலில் தெளிவாகச் சொல்கிறார் ஆசிரியர். மணிவாசகர் சரித்ரத்தையும் அதனூடாகப் பல்வகைக் குதிரைகளின் லட்சணங்களையும் அழகுறச் சொல்லியிருப்பது இந்நூலின் சிறப்பு... சரி... பஞ்சகல்யாணி விஷயத்திற்கு வருவோம்... நான்கு கால்களுமே பளிச்சென்ற வெள்ளை நிறத்துடன் நல்ல கம்பீரமான தோற்றத்துடன் இருக்கும் ஜாதிக்குதிரைக்குப் பஞ்சகல்யாணி என்று பெயர். இரண்டாம் ஸரபோஜி மஹாராஜாவின் " சம்பு ப்ரஸாத்" என்னும் ஐந்தரை அடி உயரமுள்ள Bor (சிகப்பு) ஜாதி பட்டத்து குதிரையும், அவர் புதல்வர் இரண்டாம் சிவாஜிமஹாராஜாவின் " விஜய ப்ரஸாத்" என்னும் ப்ரஸித்தி பெற்ற ஸாரங்க(கருப்பு) ஜாதிப் பட்டத்துக் குதிரையும் விலை மதிப்பிட முடியாத பஞ்சகல்யாணி ஸவாரிக் குதிரைகள். பாரத தேசத்தில் இந்தக் குதிரைக்கு மதிப்பு அதிகம். சந்தைகளில் தேடிப்பிடித்தே வாங்க வேண்டும். ஒரு நல்ல பஞ்ச கல்யாணியின் விலை பத்துலக்ஷ ரூபாய்க்கும் அதிகம். அதுவே கருப்பு அல்லது சிகப்புக் குதிரையானால் இன்னும் பல மடங்கு விலை சொல்வார்கள். ஆனால் பஞ்ச கல்யாணியின் மதிப்பை அறியாத மேற்கத்திய நாட்டவர்கள் நான்கு கால்களிலும் வெள்ளை நிறம் இருந்தால் அந்தக் குதிரைகளைப் பலம் சற்றுக் குறைந்தவைகள்... சண்டைக்கும்... நெடுந்தூரம் ஸவாரி செய்வதற்கும் அவ்வளவாக ஏற்றவையல்ல என்று குறைத்தே மதிப்பிடுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக