குரு என்பவர் யார்?
தண்ணீரைத் தொடாமல் நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது; குரு இல்லாமல் ஆன்மீகத்தில் முன்னேற முடியாது. அத்தகு குருவின் தன்மைகளைப் பற்றிய ஒரு சிறிய விளக்கம்.
ஓம் அக்ஞான-திமிராந்தஸ்ய ஜ்ஞானாஞ்ஜன - ஷலாகயா
சக்ஷுர் உன்மீலிதம் யேன தஸ்மை ஸ்ரீ-குரவே நம:
“நான் அறியாமையின் இருளில் பிறந்தவன், எனது கண்களை ஞான ஒளியால் திறந்த எனது ஆன்மீக குருவிற்கு எனது வணக்கங்களை சமர்ப்பிக்கின்றேன்.”
இந்த ஸ்லோகம், நம்முடைய அறியாமையை நீக்கி உண்மையான ஞானத்தை விருத்தி செய்ய உதவுபவர் ஆன்மீக குரு என்று விளக்குகின்றது. ஆன்மீக குருவின் மூலமாகநாம் முழுமுதற் கடவுளான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை அடைய முடியும்.
ஆன்மீக ஞானத்தை அடைவதற்கு குருவிடம் சரணடைய வேண்டும் என்பது ஸ்ரீமத் பாகவதத்திலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தஸ்மாத் குரும் ப்ரபத்யேத ஜிக்ஞாஸு: ஷ்ரேய உத்தமம் (11.3.21), அதாவது பரம சத்தியத்தைப் பற்றிய திவ்ய ஞானத்தை அறிய விரும்புபவர் ஆன்மீக குருவை அணுக வேண்டும்.
ஆன்மீக குரு புலன்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.
ஆன்மீக குருவின் தகுதிகளை ஸ்ரீல ரூப கோஸ்வாமி தன்னுடைய உபதேசாமிருதம் என்னும் நூலின் முதல் ஸ்லோகத்தில் பின்வருமாறு விளக்குகிறார்:
“பேச்சின் தூண்டுதல், மனதின் தேவைகள், கோபத்தின் செயல்கள் மற்றும் நாக்கு, வயிறு, பாலுறுப்புகள் ஆகியவற்றின் தூண்டுதல்களைப் பொறுத்துக் கொள்ளக்கூடிய நிதான புத்தியுள்ள ஒருவர் உலகம் முழுவதிலும் சீடர்களை ஏற்கும் தகுதி வாய்ந்தவராவார்.”
குரு சீடப் பரம்பரையில் வர வேண்டும்
பகவத் கீதையில் (4.2), ஏவம் பரம்பரா-ப்ராப்தம் இமம் ராஜர்ஷயோ விது:, உன்னதமான பகவத் கீதையின் இந்த விஞ்ஞானம் சீடர்களின் சங்கிலித் தொடர் (பரம்பரையின்) மூலமாகப் பெறப்பட்டு அவ்வாறே புனிதமான மன்னர்களால் உணரப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. எனவே, ஆன்மீக குருவானவர் அங்கீகரிக்கப்பட்ட சீடப் பரம்பரையில் வருபவராக இருத்தல் அவசியம்.
கலி யுகத்தில் நான்கு குரு சீடப் பரம்பரைகள் உள்ளன; அவற்றில் ஏதேனும் ஒரு பரம்பரையில் வரும் ஆன்மீக குருவையே ஒருவர் அணுக வேண்டும். அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனத்தில் படித்தால், அங்கு பெறப்படும் சான்றிதழ் எப்படி செல்லாததோ, அதுபோல நான்கு சம்பிரதாயங்களில் ஏதேனும் ஒன்றில் பயிற்சி பெறாத ஆன்மீகமும் வீணான கால விரயமே.
உண்மையான குரு என்பவர், அங்கீகரிக்கப்பட்ட நான்கு சம்பிரதாயங்களில் ஏதேனும் ஒன்றிலிருந்து வருபவராக இருக்க வேண்டும்.
நான்கு சம்பிரதாயங்கள் –அடிப்படை விளக்கம்
1. ருத்ர சம்பிரதாயம்: இது சிவபெருமானால் விஷ்ணு ஸ்வாமியை ஆச்சாரியராகக் கொண்டு தோற்றுவிக்கப்பட்டதாகும்.
2. ஸ்ரீ சம்பிரதாயம்: இது லக்ஷ்மி தேவியினால் தோற்றுவிக்கப் பட்டு ஆதிஷேசனின் அவதாரமான இராமானுஜாசாரியரால் பரப்பப்பட்டது. ஆழ்வார்கள் அருளிய நாலாயிர திவ்ய பிரபந்தம் ஸ்ரீ சம்பிரதாயத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. விசிஷ்டாத்வைத-வாதம் என்பது ஸ்ரீ சம்பிரதாயத்தின் தத்துவமாகும்.
3. குமார சம்பிரதாயம்: பிரம்மதேவரின் நான்கு சனகாதி குமாரர்களால் தோற்றுவிக்கப்பட்ட சம்பிரதாயம், நிம்பார்க ஆச்சாரியரால் பரப்பப்பட்டது. துவைதாத்வைத-வாதம் என்னும் தத்துவத்தை நிலைநாட்டிய நிம்பார்க சம்பிரதாயம், தற்போது பெரும்பாலும் அவருக்குப் பின் வந்த வல்லபாசாரியரின் பெயரில் அறியப்படுகிறது.
4. பிரம்ம சம்பிரதாயம்: பிரம்மதேவரால் தோற்றுவிக்கப்பட்டு மத்வாசாரியரின் மூலமாக பரப்பப்பட்டது பிரம்ம சம்பிரதாயம், அல்லது பிரம்ம-மத்வ சம்பிரதாயம். ஆச்சாரியர் மத்வர் சுத்த-த்வைத-வாதத்தை தனது தத்துவமாக நிலைநாட்டினார்.
நான்கு சம்பிரதாயங்களுக்கு இடையில் தத்துவ நுணுக்கங்களில் வேறுபாடு உள்ளபோதிலும், அடிப்படையில் நான்கு தத்துவங்களும் பகவான் விஷ்ணுவை அல்லது கிருஷ்ணரை முழுமுதற் கடவுளாக ஏற்று, அவருக்கு தொண்டு செய்யும் பக்திப் பாதையைப் பயிற்சி செய்பவர்களாக உள்ளனர். வாழ்வில் பக்குவமடைய விரும்புவோர் இந்த நான்கு சம்பிரதாயங்களில் ஏதேனும் ஒன்றில் வரும் குருவிடம் சரணடைய வேண்டும். இந்த நான்கு பரம்பரையில் வராத எந்தவொரு நபரும் ஆன்மீக குருவாக முடியாது.
பிரம்ம-மத்வ-கௌடீய சம்பிரதாயம்
சுமார் 500 வருடங்களுக்கு முன்பு சைதன்ய மஹாபிரபு தோன்றினார். சைதன்ய மஹாபிரபு, மத்வாசாரியரின் பரம்பரையில் வந்த ஈஸ்வர புரியை தனது குருவாக ஏற்ற காரணத்தினால், சைதன்யரைப் பின்பற்றுபவர்கள் பிரம்ம-மத்வ சம்பிரதாயத்தின் ஒரு கிளையாக, பிரம்ம-மத்வ-கௌடீய சம்பிரதாயத்தைச் சார்ந்தவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
இப்பரம்பரையில் வந்த பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் அவர்கள் 64 கௌடீய மடங்களை நிறுவி, அதற்கு அடித்தளம் அமைத்தார். அவரது சீடரான ஸ்ரீல பிரபுபாதர் தன்னுடைய ஆன்மீக குருவின் கட்டளையின்படி அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தை (இஸ்கான்) நிறுவி கிருஷ்ண பக்தியை உலகம் முழுவதும் பிரசாரம் செய்தார்.
சீடனின் கடமைகள்
“ஆன்மீக குருவை அணுகி உண்மையை அறிய முயற்சி செய். அடக்கத்துடன் அவரிடம் கேள்விகள் கேட்டு அவருக்குத் தொண்டு செய். உண்மையைக் கண்டவர்களான தன்னுணர்வு பெற்ற ஆத்மாக்கள் உனக்கு ஞானத்தை அளிக்க முடியும்.” (பகவத் கீதை 4.34)
உண்மையான ஆன்மீக குருவை பகவானின் நேரடி பிரதிநிதியாக ஆராதிக்க வேண்டும். ஏனெனில், அவர் பகவானின் நெருங்கிய சேவகர் என்று எல்லா சாஸ்திரங்களும் ஆன்மீக அதிகாரிகளும் ஒப்புக் கொள்கின்றனர். கிருஷ்ணருக்கும் ஜீவனுக்கும் இடையில் ஒரு பாலமாக அவர் செயல்படுகிறார். அடக்கம், கேள்விகள் கேட்டல், தொண்டு செய்தல் ஆகியவை சீடனின் முக்கிய கடமைகள் என்பதை நாம் கீதையிலிருந்து அறிகிறோம்.
“சீடனானவன் தனது ஆன்மீக குருவின் போதனைகளை தனது இதயத்தில் ஒன்றாக்கிக் கொள்ள வேண்டும், அவற்றைத் தவிர வேறு எதையும் விரும்பக் கூடாது. குருவின் பாதங்களில் பற்று கொண்டிருப்பதால் உத்தம கதியை அடைய முடியும், அவரது கருணையால் ஆன்மீக ஆசைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.” (ஸ்ரீ-குரு-வந்தனம் 2)
போலி குருக்கள்
ஆன்மீக குருவானவர் வேதங்களையும் வேத வழி வந்த நூல்களையும் பின்பற்றி தன்னுடைய சீடர்களையும் அவற்றை பின்பற்றுமாறு போதனை செய்வார். இன்றைய சமுதாயத்திலோ பல்வேறு போலி ஆன்மீக குருக்கள் மக்களைத் தம்முடைய சுய புகழுக்காகவும் செல்வத்திற்காகவும் தவறான பாதையில் வழிநடத்திச் செல்கின்றனர். காவி உடை அணிந்த எந்த ஒரு நபரும் குரு என்று மக்கள் நம்பி விடுகின்றனர். குறைந்த காலத்தில் அதிகமான சொத்துக்களைச் சேகரித்த ஏராளமான மடங்களை நாம் கண்கூடாகக் காண்கின்றோம். மக்களிடத்தில் தற்காலிகமான பௌதிக ஆசிகளை வழங்கி அவர்களிடமிருந்து நிறைய செல்வத்தைப் பெறுகின்றனர்.
அதுபோன்ற குருக்கள் மருத்துவமனைகள், கல்விக் கூடங்கள், முதியோர் இல்லங்கள் போன்றவற்றை ஏற்படுத்துகிறார்கள். ஆனால் அத்தகு சமூக நலச் செயல்கள் அனைத்தும் நாட்டை ஆளும் சத்திரியர்களுக்கு (தலைவர்களுக்கு) உண்டான செயல்களாகும். இத்தகு செயல்களுக்கும் ஆன்மீகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இன்று காவி உடை அணிந்துள்ளவர்கள் அனைவரையும் ஆன்மீகவாதிகள் என்று நம்மால் கூறி விட முடியாது.
பொதுமக்கள் ஸ்ரீமத் பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் போன்ற சாஸ்திரங்களில் உள்ள செய்திகளை அறியாத காரணத்தினால், இதுபோன்ற போலி குருமார்களிடம் செல்கின்றனர். இஃது அவர்களுடைய ஆன்மீக அறிவின்மையை எடுத்துக் காட்டுகிறது. பலருடைய தவறுகள் ஊடகங்களில் வெளிவந்த பிறகும்கூட, ஆன்மீக அறிவற்ற நபர்கள் அவர்களைப் பின்பற்றுவது வேதனைக்குரியதாக உள்ளது.
ஒருமுறை வல்லப ஆச்சாரியர் தனது சீடர்களுடன் கானகம் வழியே சென்றார். அப்போது அங்கு ஒரு நீளமான பாம்பு இறக்கும் தருவாயில் ஆயிரக்கணக்கான எறும்புகளால் கடிக்கப்படுவதைக் கண்டனர். சீடர்கள் தங்களது குருவிடம் இதுபற்றி கேட்டபோது, அந்த பாம்பு தனது முற்பிறவியில் போலி ஆன்மீகவாதியாக இருந்தது என்றும், அந்த ஆயிரக்கணக்கான எறும்புகள் அவரது சீடர்களாக இருந்தனர் என்றும் அவர் பதில் கூறினார். இன்றைய உலகிலுள்ள போலி ஆன்மீக குருமார்களின் நிலையும் அவர்களைப் பின்பற்றும் சீடர்களின் நிலையும் அதுபோன்றது என்பது உறுதி.
எனவே, போலி குருமார்களைத் தவிர்த்து உண்மையான ஆன்மீக குருவிடம் தஞ்சமடைந்து வாழ்வைப் பக்குவப்படுத்திக் கொள்ளுங்கள்.
JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
ஞாயிறு, 20 அக்டோபர், 2024
குரு என்பவர் யார்?
தீர்த்த யாத்திரை என்றால் என்ன?
தீர்த்த யாத்திரை என்றால் என்ன, அதன் பலன்கள் என்னென்ன..... என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்....
காசி யாத்திரை பற்றி சொல்ல ஆரம்பிக்கும் பொழுது, முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள் உண்டு. காசி யாத்திரை என்பது, நேரடியாக காசிக்குச் செல்லும் வழக்கம் கொண்டது இல்லை. ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்கி, காசிக்கு சென்று மீண்டும் ராமேஸ்வரம் வந்து, இந்த யாத்திரையை பூர்த்தி செய்வார்கள். ஆகையால் காசி யாத்திரை பற்றி சொல்ல ஆரம்பிக்கும் பொழுது ராமேஸ்வரத்தை பற்றி சொல்ல வேண்டியது அவசியம். காசி செல்லும் முன் ராமேஸ்வரம் தொடங்கி, பிரயாகை மற்றும் கயாவும் சேர்ந்ததுதான் காசி யாத்திரை. இதற்கு 'காசி யாத்திரா க்ரமம்' என்ற விதியும் உண்டு. ராமேஸ்வர யாத்திரையை பற்றி நன்கு முழுமையாக அறிந்து, ராமேஸ்வரம் சென்று பின்னர் காசி செல்வது நன்மை தரும்.மேலும் இந்த யாத்திரையில் சொல்லப்பட்ட அனைத்தையும் கடைப்பிடிக்க முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் பாதி அளவாவது கடைப்பிடிப்பது நன்மை தரும். அவசர அவசரமாக யாத்திரை சென்று திரும்புவது சுற்றுலா சென்று திரும்புவது போல் அமைந்து விடும். இதில் எவ்வித பயனும் இல்லை.கட்டுரைகளில் கோவில் வரலாறு பற்றி மட்டும் எழுதுவார்கள். ஆனால் நாம் அந்த கோவில்களில் உள்ள சம்பிரதாயங்களையும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் சென்று வரக்கூடிய இடங்களில் இருக்கக்கூடிய இடர்பாடுகளையும் புரிந்துகொள்ள வேண்டும். எல்லா இடங்களிலும் நன்மைகளும் உண்டு. தீமைகளும் உண்டு. ஒரு இடத்தில் அதிக கூட்டங்கள் கூடும் பொழுது, அங்கு சில பிரச்சனைகளும் உருவாகும். சில இடங்களில் அதிகார மையம் உருவாகும். சில இடங்களில் போலித் தன்மை உருவாகும். மந்திரங்களையும், சம்பிரதாயங்களையும் முழுமையாக அறியாத பொழுது, பக்தர்களுக்கு எது உண்மை? எது பொய்? என தெரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படுவதில் ஆச்சரியம் இல்லை.காசி யாத்திரையை முழுமையாக செய்ய எண்ணுபவர்களுக்கு, இந்த கட்டுரை பலன் தர வேண்டும் என்பதால் தான், இங்கே சில விஷயங்களை விரிவாக எடுத்துக் கூறுகிறோம்.ராமேஸ்வரம் யாத்திரையில் கவனிக்க வேண்டியவை:ராமநாதபுரம் வந்து தேவிப்பட்டினம் அல்லது தர்ப்ப சயனம் சென்று, அங்கு தரிசனங்களை முடிக்க வேண்டும். பின்னர் ராமேஸ்வரத்தில் லட்சுமண தீர்த்தம் சென்று வபனம் (மொட்டை அடித்துக்கொள்தல்) செய்து கொள்ள வேண்டும். இங்கே முழுமையாக மொட்டை அடிக்காமல், உச்சியில் இரண்டே இரண்டு முடிகளை விட்டுவிட்டு மொட்டை அடித்துக்கொள்வது நல்லது. (மொட்டை அடித்துக்கொள்ளும்போது, மீசை, தாடியை எடுப்பதில் சிலருக்கு உடன்பாடு கிடையாது. ஆனால் அந்தந்த தேசத்தில் உள்ள ஆச்சாரத்தை அனுஷ்டித்து நாம் சில விஷயங்களை செய்வது நல்லது. சில வட தேசங்களில் மீசையை எடுக்க மாட்டார்கள். அது அவர்கள் வழக்கம்). மொட்டை அடித்து முடித்ததும், நீராடுவதற்கு சங்கல்பம் செய்ய வேண்டும். அதாவது அங்குள்ள புண்ணிய தீர்த்தத்தில் குளிப்பதற்கு முன் செய்ய வேண்டிய சங்கல்பம். அதன்பின் இரண்ய சிரார்த்தம், பிண்ட தானம் போன்றவை அவரவர் சக்திக்கு ஏற்றபடி செய்து, அங்குள்ள தீர்த்தங்களில் நீராட வேண்டும்.அதைத் தொடர்ந்து ராமநாதரை அர்ச்சித்து வழிபட வேண்டும். இறைவனை வழிபட்டதும் தனுஷ்கோடி செல்ல வேண்டும். பொதுவாக எந்த நதி தீர்த்தம், குளம், சமுத்திரம் போன்ற இடங்களில் குளிப்பதாக இருந்தாலும், அதற்குரிய நமஸ்காரம், சங்கல்பம், தர்ப்பணம் போன்றவை செய்வது நல்லது. வலது கையால் தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டு பின் முறையாக குளிக்க வேண்டும். அர்க்கியமும் விடவேண்டும். பின் மனம் உருகி பிரார்த்தனை செய்ய வேண்டும்.ஒவ்வொரு தீர்த்தங்களும் ஒரு விசேஷ பலனை தருவதால், மொத்தம் 36 முறை நீராட வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இது ஒரே நேரத்தில் செய்ய முடியாவிட்டால், இரண்டு மூன்று நாட்களாக பிரித்துக் கொண்டு செய்வது விசேஷம் என்பது பெரியோர் கருத்து. ராமேஸ்வரத்தில் தர்ப்பணம் செய்வதைத் தவிர, சுக்ரீவன், நளன், சீதா, லட்சுமணர், ராமச்சந்திர மூர்த்தி ஆகியோரை தியானம் செய்து எல்லோருக்கும் மூன்று முறை தர்ப்பணம் விட வேண்டும். கோடிக்கரையில் ஒரு சிரார்த்தமாவது செய்ய வேண்டும். அரிசி, எள்ளு இவைகளால் பிண்ட தானம் செய்ய வேண்டும். எதுவுமே இல்லாவிட்டால் இரண்யமாக (பணம்) தாம்பூலம் வைத்து கொடுத்து விடலாம். பின் ராமேஸ்வரம் வந்து கோடி தீர்த்தத்தில் குளித்து, அந்த தீர்த்தத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த யாத்திரை முடிக்கும் பொழுது நாம் உறவினர்களையும், பெரியோர்களையும் நமது இல்லத்தில் வரவழைத்து அன்னமிட்டு யாத்திரையை பூர்த்தி செய்து கொள்வது விசேஷம்.வருட சிரார்த்தம் என்பது ஒவ்வொரு வருடமும் தாய் - தந்தையர் மரணம் அடைந்த, அதே மாதம் அதே திதி வருவதை குறிக்கும். இதை எக்காரணம் கொண்டும் நிறுத்தக்கூடாது. விசேஷ சிரார்த்தம் என்பது நாம் தீர்த்த யாத்திரை செல்லும்போது அங்கு செய்வது. இது எப்பொழுது வேண்டுமானாலும், தீர்த்த யாத்திரை செல்லும் போதெல்லாம் செய்யலாம்.ராமேஸ்வரம், காசி போன்ற இடங்களுக்கு எப்பொழுது செல்லலாம் என்று கேட்டால், வருடத்தின் 365 நாட்களும் சென்று நாம் செய்ய வேண்டிய கடமைகளை செய்யலாம். அதே நேரத்தில் அமாவாசை, மகா சங்கரனம், கிரகணம், மஹாளய பட்சம் போன்ற புண்ணிய காலங்கள் மிக விசேஷமானதாகும். இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. பல ஆன்மிக அன்பர்கள், 'எனது தாய் தந்தையாரின் சிரார்த்தத்தை வருடா வருடம் ராமேஸ்வரம் சென்று செய்கிறேன். காசி சென்று செய்கிறேன்' என கூறுவார்கள். இவ்வாறு செய்வது கூடாது. தாய் தந்தையரின் சிரார்த்தத்தை (திதி) தனியாக செய்துவிட்டு, பின் ராமேஸ்வரத்திலும், காசியிலும் செய்ய வேண்டிய விசேஷ சிரார்த்தத்தை அங்கு செய்யலாம். ஏனென்றால் தீர்த்த யாத்திரையில் வழக்கமான சிராத்தத்தை செய்வதா? அல்லது அங்கு செய்ய வேண்டிய விஷேச சிரார்த்தத்தை செய்வதா? என்ற கேள்வி எழும். தீர்த்த யாத்திரை செல்லும் போது வழக்கமான சிரார்த்த திதி வந்தால், காசி - ராமேஸ்வரம் போன்ற எல்லைக்கு செல்வதற்கு முன்பாகவே, முன்னோர்களின் வருஷ சிரார்த்தத்தை செய்துவிட்டு, பின் ராமேஸ்வரம் மற்றும் காசி சென்று விசேஷ சிரார்த்தத்தை (திதி) செய்யலாம்.
ஒரு குட்டிக்கதை
ஒரு குட்டிக்கதை
ராமர் காட்டில் இருக்கும் போது ஒரு ஆற்றங்கரையில் அது வரை பார்த்திராத துறவி ஒருவரைப் பார்த்தார்.
ஆற்றில் மூழ்கி தனது அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு, பிறகு ஜபம் செய்யத் தொடங்கினார் துறவி.
சிறிது நேரத்தில், சமித்துகளை எடுத்துக் கொண்டு அமர்ந்தார். இவர் வேள்விதான் ஏதோ ஆரம்பிக்கப் போகிறார் என்று எண்ணி, அவர் செய்வதை கவனித்தார் ராமபிரான்.
துறவியோ, கையில் வைத்திருந்த துணி மூட்டையில் இருந்து, கோதுமை மாவு எடுத்து பாத்திரத்தில் இட்டுப் பிசைந்து, சமித்துகளில் தீ மூட்டி, ஆறு ரொட்டிகளைச் சுட்டார். இரண்டில் தேனும், இரண்டில் நெய்யும், மீதி இரண்டில் ஊறுகாயும் தடவி வைத்தார்.
பிறகு மீண்டும் ஜபம் செய்தார். சிறிது நேரம் சென்றது. கண் திறந்த துறவி, ரொட்டிகளை எடுத்து வைத்து, சாப்பிட அமர்ந்தார்.
அந்த நேரம், பசியால் வாடிய பெரியவர் ஒருவர் அவ்வழியே வந்தார். பார்க்க பரிதாபமாக இருக்கவே, துறவி அவரை அழைத்து, ஊறுகாய் தடவிய ரொட்டிகளைக் கொடுத்து உண்ணச் சொன்னார்.
மீண்டும் கண் மூடி தியானத்தில்
ஆழ்ந்தார்.
திரும்பவும் கண்விழித்து எழுந்து, தேன் தடவிய இரண்டு ரொட்டிகளை எடுத்துக் கொண்டு சாப்பிட அமர்ந்தார்.
அந்த நேரம் வாடிய நிலையில் ஒரு சிறுமி அவ்வழியே வந்தாள். அவளைப் பார்த்து இரக்கப்பட்ட துறவி, அந்த ரொட்டியை அவளுக்குக் கொடுத்து சாப்பிடச் சொன்னார்.
பிறகு மீதி இருந்த நெய் தடவிய ரொட்டியை எடுத்துக் கொண்டு ஆற்றங்கரைக்குச் சென்றார்.
ரொட்டிகளை சிறிது சிறிதாகப் பிய்த்து, மீன்களுக்குப் போட்டார். பிறகு திரும்பி வந்து, சமித்துகள் எரிந்த சாம்பலை எடுத்து பாத்திரத்தில் வைத்து, ஆற்று நீரை அதில் சேர்த்து, சாம்பலைக் கரைத்து குடித்து விட்டு அமர்ந்தார்.
துறவியின் இந்த செய்கை, ராமபிரானுக்கு ஆச்சரியத்தை அளித்தது.
நேரே துறவியிடம் சென்று அவர் செய்கைக்கான காரணத்தைக் கேட்டார்.
துறவி சொன்னார், ஸ்நானம் செய்து முடித்து ஜபத்தில் அமர்ந்தேன். அப்போது, பையில் இருந்த மாவுதான் நினைவுக்கு வந்தது. அந்த மாவினை ரொட்டி சுட்டு, தேனும் நெய்யும் கலந்து சாப்பிட வேண்டும் என்று மனது ஆசைப்பட்டது.
அந்த மனதை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக ரொட்டி சுட்டேன்.
ரொட்டி சுட்டீர்கள் சரி ஆனால் நீங்கள் ஏன் அவற்றை உண்ணவில்லை? கேட்டார் ராமபிரான்.
துறவி என்பவன் புலன்களை அடக்க வேண்டும். எவ்வளவோ முயற்சி செய்து அடக்கினேன். ஆனால், மனது மட்டும் அவ்வப்போது அடம் பிடிக்கிறது.
அதன் போக்கில் விட்டு, பிறகுதான் விட்டுப்பிடித்து அதற்கு தண்டனை தர வேண்டும்.
சாம்பலாகப் போகும் இந்த உடலுக்குள் இருந்து கொண்டு, என்னமாய்ப் படுத்துகிறது இந்த மனது?
அதனால், இந்தச் சாம்பல்தான் இன்று ஆகாரம் என்று மனதுக்குக் கட்டளையிட்டு அதையே சாப்பிட்டேன்.
இதுதான் அடங்க மறுக்கும் மனத்துக்கு அடியேன் அளிக்கும் தண்டனை! என்றார் மெதுவாக!
புலனடக்கம் என்பது அவற்றை வேலை செய்யாமல் அடக்குவது என்று அர்த்தம் ஆகாது.
அப்படி புலன்களை இயங்காமல் செய்தால் நாம் அறிவற்ற சடப் பொருள் போல ஆகி விடுவோம். அவற்றை சரியான நெறியில் இயங்கச் செய்வதே அறிவுடைய செயலாகும்.
இறைவனிடம் சரணடைய வேண்டும் என்றால் என்ன?
இறைவனிடம் சரணடைய வேண்டும் என்றால் என்ன?
கிருஷ்ணரிடம் சரணடையும் முறை ஹரி–பக்தி–விலாசத்தில் (11.676) விவரிக்கப்பட்டுள்ளது:
ஆனுகூல்யஸ்ய ஸங்கல்ப:
ப்ராதிகூல்யஸ்ய வர்ஜனம்
ரக்ஷிஷ்யதீதி விஷ் வாஸோ
கோ ப்த்ருத்வே வரணம் ததா:
ஆத்ம–நிக்ஷேப-கார்பண்யே
ஷட்-விதா ஷரணாகதி.
சரணாகதி என்றால், பகவானுடைய பக்தித் தொண்டிற்கு இறுதியில் தன்னை வழிநடத்தக்கூடிய மதக் கொள்கைகளை ஒருவன் ஏற்றுக் கொள்ள வேண்டும். சமூகத்தில் தன்னுடைய நிலைக்கு ஏற்ற குறிப்பிட்ட கடமையை ஒருவன் நிறைவேற்றலாம், இருப்பினும், அவன் தனது கடமையைச் செய்து கிருஷ்ண உணர்வின் நிலைக்கு வரமாட்டான் என்றால், அவனது செயல்கள் அனைத்தும் வீணாகிவிடுகின்றன.
கிருஷ்ண உணர்வின் பக்குவநிலைக்கு ஒருவனைக் கொண்டுச் செல்லாத எதுவும் புறக்கணிக்கப்பட வேண்டும். எல்லாச் சூழ்நிலைகளிலும் எல்லா கஷ்டங்களிலிருந்தும் கிருஷ்ணர் தன்னைப் பாதுகாப்பார் என்பதில் உறுதியுடன் இருக்க வேண்டும். ஆத்மாவை உடலில் தக்க வைப்பதைப் பற்றி யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை. கிருஷ்ணர் அதனைப் பார்த்துக் கொள்வார். தன்னை எப்போதும் ஆதரவற்றவனாகவும் தனது வாழ்வின் முன்னேற்றதிற்கான ஒரே ஆதரவு கிருஷ்ணரே என்றும் அவன் நினைக்க வேண்டும்.
பூரண கிருஷ்ண உணர்வுடன் பகவானின் பக்தித் தொண்டில் ஒருவன் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்ட உடனேயே, அவன் ஜட இயற்கையின் எல்லா களங்கங்களிலிருந்தும் விடுபடுகின்றான். ஞானத்தை விருத்தி செய்தல், யோக முறையின் படி தியானம் செய்தல் போன்ற பற்பல தூய்மைப்படுத்தும் வழிகளும் தர்மங்களும் இருக்கின்றன என்றாலும், கிருஷ்ணரிடம் சரணடைபவன் பல்வேறு முறைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. கிருஷ்ணரிடம் எளிமையாக சரணடைதல், அவனை தேவையற்ற கால விரயத்திலிருந்து காக்கும். இதன் மூலம், அவன் உடனடியாக எல்லா முன்னேற்றத்தையும் அடைந்து, எல்லா பாவங்களிலிருந்தும் விடுபடலாம்.
பொருளுரை / ஶ்ரீமத் பகவத் கீதை 18 66
சனி, 19 அக்டோபர், 2024
அறிவு இல்லாத மனிதர்கள்
அறிவு இல்லாத மனிதர்கள்
😭😭😭 இவர்களுக்கு பணம் மட்டுமே பிராதானம். நம் குருநாதரை பற்றியே கவலை இல்லை அவரின் காரை பற்றி மட்டும் ஏன் கவலை பட போகிறார்கள். ஒரு விஷயம் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். 1954 மார்ச் மாதம் இருபத்தி இரண்டாம் தேதி பெரியவா பட்டத்திற்கு வந்த நாளில் அன்றன்று நடக்கும் கணக்குகளை சந்திர மௌளீஸ்வரர் சன்னதியில் இரவு படிப்பது வழக்கம். அப்போது மின்சார விளக்குகள் கூட கிடையாது. அவ்வாறு பெரியவா பட்டம் ஏற்ற நாளின் இரவு கணக்கு படிக்கப்பட்டது அன்றைய கணக்குப் படி 19,450 ரூபாய் கடனில் இருந்து. ஆனால் இன்று பல்லாயிரம் கோடி ரூபாய் மடத்திற்கு சொத்துக்களை சேர்த்து வைத்த பெரியவாளின் ஒரு புகைப்படம் மடத்தில் இருக்க கூடாது, அவரின் பெயர் இருக்க கூடாது, அவர் பயன் படுத்திய வாகனம் இருக்க கூடாது ஆனால் அவர் சேர்த்து வைத்த சொத்துக்கள், பணம், பேர் மட்டும் வேண்டுமோ? அரசியலோடு சம்மந்த படுத்தி பேச வேண்டும் என்று தோன்றுகிறது. இருப்பினும் ஒரு சில எடுத்து காட்டுக்களை இங்கே தருகிறேன். தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் பயன் படுத்திய கார், காமராஜர் பயன் படுத்திய கார் இன்றைக்கும் பத்திரமாக ஒரு கண்ணாடி கூண்டில் வைத்து பாதுகாக்கப்படுகிறது. அவ்வளவு ஏன் கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனார் செக்கிழுத்த செக்கை பத்திரமாக வைத்துள்ளார்கள் ஆனால் இங்கே நம் ஜகத் குருவின் கார் நம் கண்களில் கண்ணீரை வரவழிக்கிறது. இப்படி கல் நெஞ்சாக இருக்கும் நீங்கள் எல்லாம் ஒரு முறை திருவண்ணா மலை சென்று யோகி ராம் சுரத்குமார் அவர்களின் ஆசிரம் சென்று பாருங்கள். அவர் பயன் படுத்திய பொருட்களை எப்படி பத்திரமாக வைத்துள்ளார்கள் என்று போய் பாருங்கள். அவரின் நகம், தலைமுடி, அவர் இறுதியாக மருத்துவமணையில் இருந்த போது பயன் படுத்திய கட்டில் முதற்கொண்டு பத்திர படுத்தி வைத்துள்ளார்கள். ஆனால் இங்கு பெரியவாளின் பதுகையையே ஆட்டையை போட்டார்கள். இதே போல் இன்னும் எவ்வளவோ சொல்லலாம். இதெல்லாம் உரியவர்களுக்கு தெரியுமா? தெரியாதா? என்பது அந்த சந்திர மௌளீஸ்வர் தான் சொல்ல வேண்டும். 😭😭😭
ஆதிசங்கரர்....
ஆதிசங்கரர் நனது சன்யாசிகளுடைய தீட்க்ஷை பெறுவதற்காக குருவை தேடி சென்றார். ஒரு வழியாக தனது குருவை கோவிந்த பகவத்பாதாளை ஓம்காரேஷ்வரர் ஷேத்ரத்தில் கண்டார் ஆதிசங்கரர். பயங்கர மழை கொட்டிக் கொண்டுயிருந்தது. அப்போது நர்மதா நதியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கோவிந்த பகவத்பாதாளோ நர்மதை நதியின் அருகே ஒரு குகையில் தனது சீடர்களுடன் இருந்தார். நர்மதா நதி குகையின் உள்ளே வர தொடங்கி கொஞ்சம கொஞ்மாக குகை மூழ்க தொடங்கியது.
அப்போது தான் சங்கரர் அங்கே வந்து கோவிந்த பகவத்பாதாளிடம் சன்யாச தீட்க்ஷையும், தன்னை சிஷ்யனாக ஏற்க வேண்டும் என்று சங்கரர் கேட்க கோவிந்த பகவத்பாதாளோ இந்த நர்மதை நதி குகைக்குள் வராமல் நீ தடுத்தால் நான் உனக்கு உபதேச மந்திரத்தையும், உன்னை சிஷ்யனாகவும் ஏற்றுக் கொள்கிறேன் என்று சொன்னார். உடனே சங்கரர் மனம் உருகி வேண்டிக் கொண்டு ஒரு ஸ்லோகத்தை சொல்லி நர்மதையை தனது கமண்டலத்தில் அடைத்தார். அப்போது கோவிந்த பகவத்பாதால் கண்டேன் சிஷ்யனை என்று கூறிய படி குகையில் இருந்து ஓடி வந்து சங்கரரை கட்டி அனைத்துக் கொண்டு, சன்யாச தீட்க்ஷையும் கொடுத்து, தனது சிஷ்யனாக ஏற்றுக் கொண்டார். பிறகு சங்கரர் கமண்டலத்தில் அடங்கி இருந்த நர்மதா நதியை குரு கேட்டுக் கொண்டதற்கு இனங்க கமண்டலத்தில் இருந்த நீரை மீண்டும் அதே நதியில் விட்டார் ஆதிசங்கரர்...
சுமார் 2500 வருடத்திற்கு மேல் நடந்த இந்த நிகழ்விற்கு பின் நர்மதா நதி குகைக்கு உள்ளே வரவில்லை. சென்ற ஆண்டு தான் மீண்டும் குகையினுள் நர்மதா நதியில் இருந்து பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குகைக்குள் தண்ணீர் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது...
தீட்டு நாட்கள் [அந்த மூன்று நாட்கள்]
தீட்டு நாட்கள் [அந்த மூன்று நாட்கள்]
ஏன் தீட்டான பெண்களை வீட்டின் மூலையில் அமரவைத்து மூன்றுநாட்கள் எந்த வேலையும் செய்ய விடாமல் அமர சொன்னார்கள் நம் முன்னோர்கள் அந்த காலத்தில்
அதாவது ஆரியர்கள் வருவதற்கு முன்
பெண்களின் இரத்தபோக்கை கண்ட நம் முன்னோர்கள் அவர்களின் உடல் வலிகளை உணர்ந்து அந்த மூன்று நாட்கள் ஓய்வு அளித்தனர். அந்காலங்களில் இன்றுபோல் துணி நாப்கின் போன்ற உபகர்கணங்கள் பயன் படுத்தவில்லை மாறக வாழை மட்டைகளையும் மண் பாண்டங்களையும் பயன் படுத்தினர்.
அது மட்டுமல்லாமல் இரத்தம் தரையெங்கு விழும் என்பதால் ஒரே இடத்தில் அமர செய்தனர்.இதனால் கோவில்கள் செல்லமுடியவில்லை. விளக்கேற்றவோ வீட்டுவேலைகள் செய்தால் இரத்தபோக்கு அதிகரிக்கும் இடுப்பு வலி ,கை,கால் குடைச்சல் போன்ற விசயங்களினால் அவதிப்படுவர் என்பதினால் மட்டும்.
இதற்கு பெயர் தீட்டு என்று அந்தன கூட்டம் பொய்யுரைத்தது
ஆனால் இறைவனை எக்காலமும் வணங்கலாம் இறைவனை வணங்க சாஸ்த்திரம் தேவையில்லை
கீழே ஒரு உண்மையான வரலாறு
நமச்சிவாய வாழ்க
"மாதவிடாய் காலத்தில் ஞானசம்பந்தருடன் சோதியில் கலந்த பெண்ணைப்பற்றி தெரியுமா???"
திருஞானசம்பந்தர் தனியாக சிவசோதியில் கலக்கவில்லை. சம்பந்தரின் திருமணவிழாவில் சோதியாய் தோன்றிய சிவபெருமானுடன், திருமணவிழாவுக்கு வந்த அனைவரையும் சேர்த்துக்கொண்டு கூட்டமாக சோதியில் கலந்தவர்தான் சம்பந்தர் பெருமான்.
ஈசன் சோதியாக எழுந்ததும், எல்லோரும் சிவனோடு சேர்ந்து பேரின்பவீடான ஈசனின் திருவடிநிழலை அடைவோம் வாருங்கள் என்று சம்பந்தர் அழைத்ததும், அனைத்து மக்களும் சோதியோடு சேர்ந்தனர். ஆனால் ஒரு பெண் மட்டும் தயங்கி ஓரமாக நின்றால். அப்பெண்ணை பார்த்து சம்பந்தர், ஏனம்மா இங்கு நிற்கிறாய்!! ஈசனோடு சேர விருப்பமில்லையா?? என்று கேட்டார்.
கண்கள் கலங்கிய நிலையில், "சுவாமி, நான் தீட்டு பட்டுவிட்டேன். மாதவிடாய் காலத்தில் இருக்கிறேன். நான் எப்படி!!!!!!!!" என்று சொல்லி தன் இயலாமையையை கண்ணீரால் தெரியப்படுத்தினால்.
இதை கேட்ட ஞானசம்பந்தர் என்ன கூறினார் தெரியுமா?????
"அம்மா...... நீ தீட்டு என்று கருதுவதால் இது தீட்டு ஆகிவிடாது. அப்படியே இது தீட்டு என்றால், உன் தீட்டு வெறும் தீப்பொறிப்போன்றதே. சிவபெருமான் சோதிரூபமானவன். "இந்த சிறிய தீப்பொறி, அந்த சோதியை என்ன செய்துவிடும்" என்று சொல்லி, அப்பெண்ணை தேற்றி, அவளையும் சிவபெருமானோடு சேரச்செய்தார்.
மாதவிடாய் என்பது உடலின் இயல்பு. அது ஒருபோதும் தீட்டாகாது. 365 நாளும் சிவபெருமானை வழிபடலாம். 365 நாளும் சிவச்சின்னங்களை அனியலாம்.
மாதவிடாய் காலத்தை தீட்டு என்றும், தீட்டு நேரத்தில் ஈசனை பார்க்கக்கூடாது என்றும் சிவச்சின்னங்கள் அணியலாகாது என்றும், வீட்டின் பூசையரைக் கதவுகளை தாழிடவேண்டும் என்றும் சிவனடி சேர்ந்த நால்வர் பெருமக்களும் நாயன்மார்களும் எங்கும் சொல்லவில்லை. அவ்வளவு ஏன்...... சிவபெருமானே தம் கைபட எழுதிய திருவாசகத்திலும் அப்படி ஏதும் குறிப்பிடவில்லை.
சிவனடியை சேராதவர்களும், சிவனடியை சேர விடாதவர்களாலும் உருவாக்கப்பட்ட நெறிதான், மாதவிடாய் காலத்தில் இறைவனை பார்கவே கூடாது என்ற நெறி.
சிவபெருமான் மீது மெய்யாகவே அன்பு கொண்டவர் தொழுநோயராக இருந்தாலும், மாட்டின் தோலை உறித்து பிழைப்பு நடத்தும் புலையராக இருந்தாலும், அவர்தான் நான் வணங்கும் கடவுள் என்று சிவனடி சேர்ந்த அப்பர் பெருமான் பாடியுள்ளார். தொழுநோயைவிட மோசமானதா மாதவிடாய் காலம்????
எங்கள் வீட்டில் இந்த பழக்கம் செல்லாது. யாரும் விரும்ப மாட்டார்கள் என்று அஞ்சவேண்டாம். ஈசனோடு நெருங்கி பழக பழக, உங்கள் வீட்டாரும் ஈசனை உணர பழகிக்கொள்வர். துனிவே சிவம்.
மறையும் முறையும் எமக்கில்லை
மனமும் மொழியும் தடையில்லை
சிவனை நினைப்போம்
சிவனை உரைப்போம்
சிவனடி சேரவே சீவித்திருப்போம்.
ஒரு பசுவின் உருக்கமான கதை...
ஒரு பசுவின் உருக்கமான கதை
ஒரு நாள் பசுவதை செய்யும் இடத்தில் ஒருவன் கோமாதாவை ஸம்ஹாரம் செய்வதற்கு வந்தவுடன் கோமாதா அவனை பார்த்து சிரித்தது. அதை பார்த்து அவன் கேட்டான். நான் உன்னை ஸம்ஹாரம் செய்ய வந்துள்ளேன் அது தெரிந்தும் கூட நீ எதற்காக சிரிக்கின்றாய்? என்றுகேட்டான். அப்பொழுது கோமாதா சொன்னது.
நான் எப்பொழுதும் மாமிசத்தை உண்டதில்லை. ஆனாலும் என் மரணம் மிகவும் கோரமாக இருக்கப் போகிறது. எந்த தப்பும் செய்யாமல் யாருக்கும் எத்தகைய ஆபத்தையும் விளைவிக்காத என்னை நீ கொன்று என் மாமிசத்தை சாப்பிடும் உன் மரணம் எவ்வளவு கோரமாக இருக்குமோ என்று நினைத்து நான் சிரித்தேன்.
பால் கொடுத்து உங்களை வளர்த்தேன். உங்கள் பிள்ளைளுக்கு பால் கொடுக்கிறேன். தாய்பாலுக்கு நிகரானது எனது பால். நான் சாப்பிடுவது புல்லை மட்டுமே. பாலிலிருந்து வெண்ணை எடுத்தீர்கள், வெண்ணையினால் நெய்யை செய்தீர்கள். என்னுடைய சாணத்தினால் வறட்டி செய்து சமையலுக்கு உபயோகித்தீர்கள். அதே போல் என்னுடைய சாணத்தினால் எருவினை தயார் செய்து விவசாயத்திற்கு பயன்படுத்தீனீர்கள். அந்த பணத்தினால் இன்பமான் வாழ்க்கையை வாழ்கிறீர்கள்.
ஆனால் எனக்கு மட்டும் அழுகிப் போன காய்றிளையும் காய்ந்து போன புல்லையும் தந்தீர்கள். என்னுடைய சாணத்தினால் கோபர் கேஸ் தயார் செய்து கொண்டு உங்கள் வீட்டை இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்தீர்கள். என் உடம்பில் முப்பத்தி முக்கோடி தேவர்களும் இருக்கிறார்கள். ஆனால் என்னை கசாப்புக்காரன் போல் கொல்ல வந்திருக்கிறாய்... என்னுடைய பாலிலிருந்து கிடைத்த சக்தியினால் தான் என்னை கொல்ல ஆயுதத்தை தூக்க முடிந்தது.
அந்த ஆயுதத்தை தூக்கும் சக்தி உனக்கு கிடைத்தது என்னால் தான். என் மூலம் நிறைய சம்பாதித்து வீட்டை கட்டிக் கொண்டாய். ஆனால் என்னை மட்டும் ஒரு குடிசையில் வைத்தாய் உன்னை பெற்ற தாயை விட மேலாக உனக்கு அண்டையாக இருந்தேன். ஸ்ரீக்ருஷ்ண பகவானிற்கு ப்ரீதியானவள் நான். எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுக்கும் உன் கதி என்னவாகும்? உன் வருங்காலத்தை குறித்து நினைத்து நான் சிரித்தேன் என்று சொன்னது.
[உங்களால் முடிந்த அளவு எல்லோருக்கும் இதை தெரியப்படுத்தி கோமாதாவின் ருணத்தை [கடன்] தீர்க்கவும்]
லலிதா சகஸ்ரநாமத்தில் கூறும் அம்பிகைக்கு பிடித்த நைவேத்தியங்கள்:-
லலிதா சகஸ்ரநாமத்தில் கூறும் அம்பிகைக்கு பிடித்த நைவேத்தியங்கள்:-
சக்திதேவிக்கு ஆயிரம் திருநாமங்கள் உண்டு. அந்தப் பெயர்களால் அவளை அர்ச்சிக்கும் மந்திரங்கள் அடங்கிய நூலே லலிதா சகஸ்ரநாமம். இந்த நூலிலேயே தேவிக்கு பிடித்த நைவேத்ய வகைகள் சொல்லப்பட்டுள்ளன.
இந்த நூல் தோன்றியதன் பின்னணியில் ஒரு சுவையான வரலாறு இருக்கிறது.
பெருமாளின் அவதாரமாகக் கருதப்படுபவர் ஹயக்கிரீவர். இவர் குதிரை முகம் கொண்டவர். கல்விக்கு அதிபதி. இவரது தரிசனம் ஒருமுறை அகத்திய முனிவருக்கு கிடைத்தது.
கல்விக்கதிபதியான அவரை தன் குருவாகவே பார்த்தார் அகத்தியர். அதன் காரணமாக சக்தியின் வரலாற்றை அறிந்தார். சக்திக்கு "லலிதா' என்ற திருநாமம் சூட்டி, அவளது கதையைக் கூறினார் ஹயக்கீரிவர். அதைக் கருத்துடன் கேட்டு மகிழ்ந்த அகத்தியர், "குருவே! தாங்கள் எனக்கு லலிதா தேவியின் சரித்திரத்தை மட்டும் கூறினீர்கள். அவளுக்கு ஆயிரம் திருநாமங்கள் இருப்பதாகச் சொல்கிறார்களே! அதையும் சொல்லுங்கள்!' என்றார்.
"அது மிக, மிக ரகசியம். தேவியின் அனுமதியின்றி யாருக்கும் சொல்லக் கூடாது. இருந்தாலும் தேவியின் அதிதீவிர இறைபக்தர்களுக்கு இதைச் சொல்வதில் தவறில்லை!' என்று கூறிய ஹயக்கிரீவர், ஆயிரம் நாமங்களையும் கற்றுக் கொடுத்தார். அதில் வரும் 480வது ஸ்லோகமான, "பாயஸான்ன ப்ரியாயை' என்பதற்கு, "பால் பாயசத்தை விரும்புபவள்' எனப் பொருள்.
501வது ஸ்லோகமான, "குடான்ன ப்ரீத மானஸாயை' என்பதற்கு, "அம்பிகை சர்க்கரைப் பொங்கலை விரும்புபவள்' என்று அர்த்தம்.
526வது ஸ்லோகமான, "ஹரித் ரான்னைக ரஸியை' என்ற ஸ்லோகத்திற்கு, "மஞ்சள் பொடி கலந்த எலுமிச்சை சாதத்தை ரசித்து உண்பவள்' என பொருள் வருகிறது.
அம்பிகை குறித்த இன்னொரு ஸ்லோகமான, "தத்யான்ன ஸக்த ஹ்ருதயாயை' என்ற ஸ்லோகத்திற்கு, "இவள் தயிர் சாதம் என்றால் இதயத்தையே கொடுப்பவள்!' என்று பொருள்.
"முத் கௌத நாஸக்த...' என்ற ஸ்லோகத்திற்கு, "பாசிப்பருப்பு, அரிசியில் சமைத்த வெண்பொங்கலை விரும்புபவள்!' என்று அர்த்தம்.
"ஸர்வெளதன ப்ரீதசித்தா' என்ற ஸ்லோகத்திற்கு, "அம்பிகை கதம்ப சாதம், தேங்காய் சாதம், புளியோதரை ஆகியவற்றை உண்ணும் மனதைக் கொண்டவள்!' எனப் பொருள்.
இதையெல்லாம் முடித்த பிறகு 559வது ஸ்லோகத்தில், "தாம்பூல பூரிதமுகிச்யை' என்ற ஸ்லோகம் வருகிறது. இதற்கு, "தாம்பூலம் தரித்ததால் லட்சணமாக இருக்கும் முகத்தைக் கொண்டவள்!' எனப் பொருள்.
"தாம்பூலம்' என்பது வெற்றிலை, பாக்கைக் குறிக்கும். எனவே தான் கடவுளுக்கு நாம் நிவேதனம் படைத்து வழிபடுகிறோம்.
இதைத்தவிர அவரவருக்கு என்ன நைவேத்யமாக வைத்து பூஜிக்க முடியோமோ அதை வைத்து வணங்கலாம்.
அம்பாள் நம்மிடம் எதிர்பார்ப்பது உண்மையான, ஆத்மார்த்தமான பக்தியே!நாமும் நமக்கு தெரிந்த முறையில் அம்பாளை மனதார நினைத்து, தாயின் அருளை பெறுவோம்.
மேலும் சிந்திப்போம்.
இளையாற்றங்குடி மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்....
இளையாற்றங்குடி மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்....
ஆலயங்கள் நிறைந்து நிற்கும் புண்ணிய பூமி;சைவமும் வைணவமும் சரிசமமாக சஞ்சாரம் செய்யும் சமத்துவ பூமி;மொத்தத்தில் ஆன்மிகம் பல்கிப் பெருகி மனதைப் பரவசமாக்கும் புனித பூமி காஞ்சி மாநகர்.எண்ணற்ற திருக்கோயில்கள் இந்த நகரம் முழுதும் தரிசிக்கக் கிடைக்கின்றன.அருள்மிகு காஞ்சி காமாட்சியின் திருச்சந்நிக்கும் ஸ்ரீவரதராஜ பெருமாளின் தரிசனத்துக்கும் இறையருள் பெறும் நாட்டத்துடன் எந்நேரமும் கூடும் பக்தர்கள் கூட்டத்துக்குஅளவே இல்லை! காஞ்சிக்குப் பெருமை சேர்ப்பதே சங்கர மடம்தான்.ஆதிசங்கரரால் நிர்மாணிக்கப்பட்ட இந்த மடத்துக்கு அவரே முதல் ஆசார்யராக விளங்கினார்.பேதங்கள் மலிந்திருந்த அந்தக் காலத்தில் இந்து மதத்தின் பெருமைகளை அனைவருக்கும் எடுத்துக்கூறி சமய உணர்வுகளை ஊட்டினார்.இந்து மதம் ஏன் உயர்ந்தது என்பதை விளங்கினார்.
அவரில் துவங்கி இன்று 69-வது காஞ்சி காமகோடி பீடாதிபதியாக ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளும் 70-வது காஞ்சி காமகோடி பீடாதிபதியாக விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளும் திகழ்ந்து வருகிறார்கள்.இவர்களுக்கு முன் 68-வது பீடாதிபதியாக திகழ்ந்தவர்தான் - கலியுக தெய்வம் என்று நாடே போற்றும் ஸ்ரீசந்திரசேகரேந்திர ஸ்வாமிகள் என்கிற மகா பெரியவர்.இந்த புனிதமான மடத்தில் 65-வது பீடாதிபதியாக விளங்கியவர் மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் காலம் கி.பி.1851-1890.திருவிடைமருதூரில் அவதரித்தவர்.காரைக்குடிக்கு அருகில் உள்ள இளையாற்றங்குடியில் நாட்டுக்கோட்டை செட்டியார்களுக்கு சொந்தமான நித்யகல்யாணி சமேத கயிலாயநாதர் ஆலயத்துக்கு அருகே அதிஷ்டானம் கொண்டுள்ளார்.நாட்டுக்கோட்டை நகரத்தார் கொண்டாடும் ஒன்பது சிவாலயங்களுள் இது பிரதானமான தலம்.இதை இளையாத்தங்குடி என்றும் சொல்கிறார்கள்.புதுக்கோட்டையில் இருந்து சுமார் 42 கி.மீ. தொலைவு.புதுக்கோட்டையில் இருந்து நமணசமுத்திரம் திருமயம் கீழச்செவல்பட்டி வழியாக இளையாற்றங்குடியை அடையலாம்.கீழச்செவல்பட்டியில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவு.காரைக்குடியில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவு.பிள்ளையார்பட்டியில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவு.திருப்பத்தூரில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவு.நாட்டில் பல பகுதிகளுக்கும் யாத்திரையாகச் சென்று மக்களிடையே பல ஆன்மிகக் கருத்துக்களைப் போதித்து வந்த மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்.சிவகங்கை மற்றும் காளையார்கோவில் ஆகிய தலங்களையும் தரிசித்தார்.அப்போது ஸ்வாமிகளைத் தரிசிக்க வந்த நகரத்தார் எங்கள் பகுதிக்கும் தாங்கள் எழுந்தருள வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ வாத்தியங்கள் முழங்க இளையாற்றங்குடி ஷேத்திரத்துக்கு வந்தார்.
ஸ்ரீநித்யகல்யாணி சமேத கயிலாயநாதரை தரிசித்துவிட்டு நகரத்தாரின் பக்தியையும் சேவையையும் பார்த்துப் பெரிதும் மகிழ்ந்தார்.அதற்கேற்றாற்போல் ஸ்வாமிகள் தங்குவதற்கும் அவருடைய சிவ பூஜைக்கும் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் கச்சிதமாகச் செய்திருந்தனர்.ஸ்வாமிகள் பல நாட்கள் இங்கு தங்கியிருந்து தங்களுக்கு ஆசி வழங்கிச் செல்லும்படி வேண்டினர் நாட்டுக்கோட்டை செட்டியார் பெருமக்கள். அவர்களது அன்பான வேண்டுகோளை ஏற்று நிரந்தரமாகவே அங்கு தங்கிவிட்டார் ஸ்வாமிகள் என்பதுதான் உண்மை. தனது ஜீவன் முக்தியடையப்போவது இங்கேதான் என்பதையும் இறைவன் சித்தத்தால் ஒரு கட்டத்தில் உணர்ந்து கொண்டார்.மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்.அதற்கான ஓர் இடத்தையும் அவரே தேர்ந்தெடுத்தார் நகரத்தாருக்குச் சொந்தமான நிலத்தில் குறிப்பிட்ட ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து அதை அவர்களிடம் இருந்து கேட்டு வாங்கிய ஸ்வாமிகள் அந்த இடத்தில்தான் சமாதி கொண்டுள்ளார்.ஸ்வாமிகள் இன்று இளைப்பு ஆறும் குடிதான் இளையாற்றங்குடி.காரணம் சிறு வயது முதல் அவர் சுற்றித் திரிந்த ஷேத்திரங்கள் ஏராளம்.தனது இறுதிக் காலத்தில் அமைதியான சூழ்நிலையை விரும்பி இங்கே இளைப்பாற்றிக் கொண்டிருக்கிறார் என்பார்கள்.
தனக்குப் பிறகு ஓர் ஆசார்யரை நியமித்துவிட வேண்டும் என்று விரும்பினார் ஸ்வாமிகள். உதயம்பாக்கத்தைச் சேர்ந்தவரும் பிரம்மசர்ய விரதம் காத்துவரும் பாலாற்றங்கரையில் வசித்து வந்தவருமான சுவாமிநாதன் என்ற இளைஞரைத் தேர்ந்தெடுத்து சந்நியாச தர்மப்படி தீட்சை வழங்கினார்.பூஜை விதிகளையும் மடத்து சம்பிரதாயங்களையும் உபதேசித்ததுடன் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என்ற தீட்சா நாமத்தையும் அருளினார்.இதையடுத்து, இளைய மடாதிபதியாக பொறுப்பேற்ற ஸ்ரீசந்திரசேகரேந்திர ஸ்வாமிகள்(மகா பெரியவர் அல்ல). மகாதேவேந்திர ஸ்வாமிகளுக்குப் பணிவிடை செய்து வந்தார்.தான் சமாதி ஆகப் போகும் சில நாட்களுக்கு முன்னரே அதை சூசகமாக உணர்ந்துவிட்டார் மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். முக்காலமும் உணர்ந்தவர் ஆயிற்றே!சமாதி அடைவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் ஒரு மாலை வேளையில் இளையாற்றங்குடி கயிலாயநாதர் ஆலயத்துக்கு அருகில் உள்ள தோப்புகளையும் பிற பகுதிகளையும் சுற்றிப் பார்த்துக்கொண்டே வந்தார்.ஓர் இடத்தை கடந்து செல்ல நேரிட்டபோது அங்கேயே அப்படி நின்றார்.
அவர் மனதில் ஏதோ ஒரு மின்னல் தோன்றியது.தனக்குப் பின்னால் பவ்வயமாக நடந்து வந்து கொண்டிருந்த தேவஸ்தானத்தின் டிரஸ்டியான செட்டியரசர் பிரமுகர் ஒருவரைத் தன்னருகே வருமாறு அழைத்தார் செட்டியார் ஓடோடி வந்து ஸ்வாமிகள் முன் வணங்கி நின்றார்.முட்சொடிகள் புதர்போல் மண்டிக் கிடந்த அந்த இடத்தைச் சுட்டிக்காட்டி இந்த நிலத்தை எமக்குத் தருவீர்களா? என்று கேட்டார்.ஸ்வாமிகள்.எந்த நோக்கத்துக்காக அந்த இடத்தை ஸ்வாமிகள் கேட்கிறார் என்று செட்டியாருக்கு புலப்படவில்லை என்றாலும் ஸ்வாமிகளே வாய்விட்டு ஓரிடத்தைத் தருமாறு கேட்டு விட்டாரே.அவருக்குப் போய் செடி,கொடிகள் மண்டிப்போன இடத்தைத் தருவதா?சிவன் கோயிலுக்கு அருகே நல்ல இடமாகப் பார்த்துத் தரலாம்.தினமும் தரிசனத்துக்குச் சென்று வருவதற்கும் அவருக்கு வசதியாக இருக்கும் என்று நினைத்து தன் ஆசையை ஸ்வாமிகளிடம் பவ்யமாகச் சொன்னார்.ஆனால் ஸ்வாமிகள் இந்த இடம்தான் எமக்குத் தேவை.உங்களால் கொடுக்க இயலுமா? என்று கேட்டார்.ஸ்வாமிகள் இப்படிக் கேட்டதும் மனம் உருகிய செட்டியார் தங்களின் விருப்பப்படியே நிறைவேற்றுகிறேன்.கவலை வேண்டாம் ஸ்வாமி என்று சொன்னாரே தவிர ஸ்வாமிகளின் எண்ணத்தை அவரால் அறிந்துக்கொள்ளமுடியவில்லை.ஸ்வாமிகள் தனது இறுதி நாட்களில் இருக்கிறார் என்பதை செட்டியார் அப்போது அறிந்திருக்கவில்லை.மறுநாள்! ஸ்வாமிகளின் உடல்நலன் லேசாக பாதிக்கப்பட்டது.மூன்றாம் நாள் 20.03.1890 அன்று ஸ்வாமிகள் முக்தி அடைந்தார்.நாட்டுக்கோட்டை நகரத்தார் இன பிரமுகர்கள் உட்பட பலரும் மளமளவெனக் குவிந்தனர்.இளையாற்றங்குடி என்கிற ஷேத்திரத்துக்குத் தனது வருகையால் ஒரு புதுப் பொலிவைக் கொடுத்தவர்.மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என்பதை அவர்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள்.அவருக்கு செய்ய வேண்டிய கடைசிக் காரியங்கள் முறையாக நடக்க வேண்டுமே என்கிற அக்கறையில் அனைவரும் கூடினர்.குறிப்பிட்ட ஒரு நிலத்தை ஏன் விடாப்பிடியாகக் கேட்டார் ஸ்வாமிகள் என்பது இப்போதுதான் தேவஸ்தான டிரஸ்டியான அந்த செட்டியாருக்குப் புரிந்தது!
நாட்டின் பல பகுதிகளால் இருந்தும் ஆன்மிகப் பெருமக்கள் குவிந்தனர்.காஞ்சி மடத்தில் 63வது ஆசிõரிய ஸ்வாமிகள் ஸித்தி ஆன செய்தியை எவரெவருக்குத் தெரிவிக்க வேண்டுமோ அனைவருக்கும் ஆட்கள் மூலம் தகவல் அனுப்பினார்கள் நகரத்தார் பெருமக்கள்.கீர்த்தனங்கள் பாடப்பட்டன.நாம கோஷம் கோரஸாக வெளிப்பட்டது.கயிலாயநாதர் கோயிலுக்கு வடக்குத் திசையில் உள்ள விரிவான ஒரு தோட்டத்தில் ஸ்வாமிகள் விரும்பிக் கேட்ட அதே இடம்தான் அதிஷ்டானம் அமைக்கப்பட்டது.ஸித்தி பெற்ற தினத்தில் இருந்து தொடர்ந்து ஒரு மண்டல காலத்துக்கு பூஜைகள் பாராயணங்கள் என்று வேத கோஷம் நிறைந்து காணப்பட்டது. விஜயநகரம்,புதுக்கோட்டை,ராமநாதபுரம்,கொல்லங்கோடு,கொச்சி போன்ற சமஸ்தானத்தில் பிரதிநிதிகள் மண்டலாபிஷேக காலத்தில் இளையாற்றங்குடிக்கு வந்திருந்து.ஸ்வாமிகளுக்கு தங்கள் சமஸ்தான சார்பாக உரிய மரியாதையை செலுத்தி வணங்கினார்கள்.ஏழைகளுக்குப் பல வகையான தானங்கள் வழங்கப்பட்டன.இறைத்திருப்பணியில் தங்களை பெரிய அளவில் ஈடுபடுத்திக் கொண்ட நகரத்தார் பெருமக்கள் பின்னாளில் ஸ்வாமிகளின் அதிஷ்டானத்தை திருக்கோயிலாக கட்டி பராமரித்து வருகிறார்கள்.கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் உள்ள திருவிடைமருதூரில் ஸ்வாமிகள் அவதரித்தார். அவருடைய தந்தையார் பெயர் சோஷத்ரி சாஸ்திரிகள்.தந்தை ரிக் வேதத்திலும் அதன் பிரயோகங்களிலும் வல்லவர் சிறந்த சிவபக்தர்.திருவிடைமருதூரில் உறையும் மகாலிங்க ஸ்வாமியின் அருளால் தனக்கு மகன் பிறந்ததால் அவனுக்கு மகாலிங்கம் என்றே பெயர் சூட்டி மகிழ்ந்தார்.விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கு ஏற்ப பிற்காலத்தில் பிரகாசிக்கப் போகும் மகாலிங்கமும் குழந்தைப்பருவத்திலேயே சிறந்து விளங்கினார்.அவன் முகத்தில் தெரிந்த கம்பீரமான தேஜஸ் கண்களில் தெரிந்த ஒளி எந்த ஒரு காரியத்தையுமண சுறுசுறுப்புடன் செய்து முடிக்கும் சாதுர்யம் போன்றவை பலராலும் வியந்து பேசப்பட்ட விஷயங்கள்!ஐந்து வயது முடிந்த பிறகு உபநயனம் செய்து வைக்கப்பட்டது.இளமைப் பருவத்தில் தன் தந்தையாரிடமே வேதத்தைக் கற்றார் தினமும் செய்ய வேண்டிய ஆசார அனுஷ்டானங்களை முறையாகச் செய்து வந்தார்.அவருடைய கீர்த்தி திருவிடைமருதூரில் மட்டுமில்லாமல் பல இடங்களிலும் பேசப்பட்டது.
அப்போது காஞ்சி சங்கர மடத்தில், 64வது பீடாதிபதியாக இருந்தவர் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் (1814-1851)வேதம்,சாஸ்திரம் போன்றவற்றில் சிறந்து விளங்கிய திருவிடைமருதூர் மகாலிங்கம் என்ற இளைஞனைப் பற்றி இந்த ஆசார்யருக்கு தகவல் தெரிந்திருந்தது. அவர் 1846ல் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரிக்குத் தாடங்கபிரதிஷ்டை(தாடங்கம் என்பது காதல் அணியும் ஆபரணம்) நடத்தினார்.இந்த நிகழ்வுக்கான வைதீக விஷயங்களை முன்னின்று கவனிக்கும்படி மகாலிங்கத்தைப் பணித்தார்.ஆசார்யர்.அதை சிரமேற்கொண்டு செய்து முடித்தார் மகாலிங்கம்.இத்தனை சின்ன வயதில் இப்படிப்பட்ட ஒரு பெரும் பணியை ஏற்று நடத்தி முடித்த மகாலிங்கத்தின் சாதுர்யம் பலரையும் அவர் பக்கம் திரும்ப வைத்தது.அதற்கு ஆசார்யரும் விதிவிலக்கல்ல.எத்தனையோ பண்டிதர்கள்,மன்னர்கள்,பிரமுகர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்ட ஒரு நிகழ்வின் பிரதான வைதீக காரியத்தை இளைஞன் கச்சிதமாக முடித்துவிட்டானே! பலரும் பிரமிக்கும்படி பாரட்டுகளைப் பெற்று விட்டானே என்று சந்சோஷப்பட்டார் 64வது பீடாதிபதி.அப்போது அவர் ஒரு தீர்மானத்துக்கும் வந்தார்.நமக்குப் பிறகு இந்த பீடத்தை அலங்கரிக்க இவரே தகுதியானவர்.இவரால்தான் மடத்தன் பெருமைகள் மேலும் உயரும் என்று தீர்மானித்தார்.மகாலிங்கத்தின் பெற்றோரை வரவழைத்துப் பேசி சம்மதம் வாங்கினார்.ஒரு சுபதினத்தில் மகாலிங்கத்துக்கு சந்நியாச தீட்சை வழங்கினர்.காஞ்சி காமகோடி மடத்தின் சம்பிரதாயப்படி என்னென்ன போதிக்க வேண்டுமோ அனைத்தையும் போதித்து அருளினார் 64வது பீடாதிபதி. மகாலிங்கத்துக்கு மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என்று தீட்சா நாமம் சூட்டினார்.1851ல் கும்பகோணம் ஸ்ரீமடத்தில் 64வது பீடாதிபதி சமாதி எய்த பின் 65வது பீடாதிபதியாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.மகாலிங்கம் என்கிற மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்.
புதுப்பெரியவர் வரவுக்குப் பின் காஞ்சி மடத்தின் பெருமையும் புகழும் திக்கெட்டும் பரவியது. தினமும் நடக்கும் சந்திரமௌளீஸ்வர பூஜையைத் தவிர வேத பாராயணங்கள் விசேஷ ஹோமம் என மடத்தில் எப்போதும் மந்திர கோஷம்தான்.வேள்விப் புகைதான்.புது ஆசார்யரின் கீர்த்தி பற்றிக் கேள்விப்பட்டுப் பல பண்டிதர்களும் பொது ஜனங்களும் நாட்டின் பல பகுதிகளில் இருந்து புறப்பட்டு காஞ்சிக்கு வந்து அவரை தரிசனம் செய்தனர்.எத்தனை நாட்களுக்குத்தான் மடத்தில் இருந்துகொண்டே எல்லாவற்றையும் கவனிப்பது எனவே ஷேத்திராடனம் புறப்பட விருப்பம் கொண்டார் ஸ்வாமிகள்.மடத்தைச் சேர்ந்த பரிவாரங்களுடன் மயிலாடுதுறை,வைத்தீஸ்வரன் கோவில்,சிதம்பரம்,விழுப்புரம் எனக் கிளம்பினார்.செல்லும் இடத்தில் எல்லாம் சிறப்பான வரவேற்பு.புது ஆசார்யர் வருகிறார் என்றதும் அக்கம்பக்கத்துக் கிராமங்களிலிருந்து எண்ணேற்றோர் தரிசிக்க வந்தனர்.ஆந்திரப் பிரதேசம் பூரி ஜகந்நாதர் திருக்கோயில் விஜயநகர சாம்ராஜ்ஜியம் எனப் பயணம் தொடர்ந்தது.மடத்துக்கு தானமாகப் பல கிராமங்களை எழுதித் தந்தனர்.ஆந்திர மன்னர்கள் 3.7.1885 அன்று விஜயநகரத்துக்கு சென்றார் ஸ்வாமிகள்.விஜயநகர ராஜாவான ஆனந்த கஜபதி மகாராஜா நகரத்து எல்லையிலேயே யானை குதிரை ராஜபரிவாரம் ஆகியவை புடைசூழ வாத்தியங்கள் முழங்க பூர்ண கும்ப மரியாதையோடு வரவேற்று மகானின் கால்களில் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தான்.விஜயநகரத்திலேயே சாதுர்மாஸ்ய விரதத்தை மேற்கொண்டார்.ஆந்திராவில் பிரபலமாகத் திகழ்ந்த ஜமீன்தார்களும் ராஜாக்களும் தங்களது ஊருக்கு ஸ்வாமிகள் எழுந்தருள வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் தூனி பார்லிகிமேடி பித்தாபுரம்.பொப்பிலி வெங்கடகிரி போன்ற நகரங்களுக்கு விஜயம் செய்தார்.கோதாவரி கிருஷ்ண ஆகிய புண்ணிய நதிகளில் ஸ்நானம் செய்து காளஹஸ்தியை அடைந்தார்.காளஹஸ்தி மகாராஜாவின் உபசரிப்பை ஏற்றுக்கொண்டு காளஹஸ்தீஸ்வரரை தரிசித்தார்.
அதன்பின் சென்னை வழியாகக் காஞ்சிபுரத்தை அடைந்தார்.சில நாட்களுக்குப் பிறகு யாத்திரை மீண்டும் தொடர்ந்து.திருப்பாதிரிப்புலியூர்.தாஞ்சாவூர்,தென் ஆற்காடு,திருச்சி,கோவை,கேரள தேசம் ஆகிய இடங்களுக்குப் பயணித்து சூழ்நிலைக்கு ஏற்றாவறு ஆங்காங்கு தங்கி பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.அப்போது கும்பகோணம் வந்த ஸ்வாமிகள் மகாமக நிகழ்வில் கலந்துகொண்டார்.தனது வாழ்நாளில் தெற்கே ராமேஸ்வரத்தில் இருந்து வடக்கே காசி வரை நாட்டின் பல பகுதிகளுக்கு பாதயாத்திரையாகவும் பல்லக்கிலுமாகப் பயணித்து ஏராளமானோருக்கு ஆசிகளை வழங்கினார் மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்.திறமை எவரிடம் இருந்தாலும் அவருக்கு உரிய மரியாதை கொடுத்து கௌரவிக்க ஸ்வாமிகள் எப்போதுமே தயங்க மாட்டார்.சிவபுராணம் கேட்பதில் ஸ்வாமிகளுக்கு மிகுந்த ஆர்வம் உண்டு.அதைப் பொருத்தமான நபர் பிரசாங்கம் செய்தால் வெகு சுவாரஸ்யமாகக் கேட்டு ரசிப்பார்.அந்தக் காலத்தில் தஞ்சை மாவட்டத்தில் ரிஷிவந்தியம் என்னும் கிராமத்தில் வெங்கட்ராம ஐயர் என்பவர் வசித்து வந்தார்.சத்தான பல விஷயங்களைக் கற்றுக் தேர்ந்தவர்;பழுத்த சிவபக்தர்.தவிர மிராசுதாராகவும் இருந்தார்.தனது பணிகள் போக எஞ்சிய நேரத்தில் உள்ளூர் அன்பர்களுக்கு சிவபுராண சொற்பொழிவு நிகழ்த்துவார்.பக்தியுடனும் உருக்கத்துடனும் வெங்கட்ராம் ஐயர் நிகழ்த்தும் சிவபுராண உபன்யாசங்களைக் கேட்க நூற்றுக்கணக்கான பேர் திரளுவார்கள்.
மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். வெங்கட்ராம ஐயரைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவருடைய சிவபுரணப் பிரசங்கத்தைக் கேட்க வெகுவாக ஆவல் கொண்டார்.எனவே கும்பகோண மடத்தில் தான் தங்கியிருந்த நாட்களில் வெங்கட்ராம ஐயரை அங்கே வரச் செய்து சிவபுராண உபன்யாசம் செய்யுமாறு சொன்னார்.வெங்கட்ராம ஐயரும் கும்பகோண மடத்துக்கு வந்து அங்கேயே சில நாட்களில் தங்கி தினமும் சொற்பொழிவாற்றினார்.உபன்யாச நாட்களில் தினமும் ஸ்வாமிகள் நேரில் வந்து அமர்ந்து உபன்யாசத்தைக் கேட்டு வந்தார்.இது வெங்கட்ராம ஐயருக்குப் பெரும் சந்தோஷத்தைக் கொடுத்தது.சிவபூஜை செய்வதில் மிகவும் தேர்ந்தவர் மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்.அவர் சிவபூஜை செய்யும் நேர்த்தியைக் கண்டு பண்டிதர்கள் பலரும் வியந்துள்ளனர். தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயருக்குப் பதினெட்டு வயதாக இருக்கும்போது ஸ்வாமிகள் சிவபூஜை செய்யும் காட்சியை மனமாரக் கண்டு தரிசித்திருக்கிறாராம்.அதோடு உ.வே.சாமிநாதனின் புராணப் பிரசங்கங்களையும் ஸ்வாமிகள் கேட்டுப் பராட்டி இருக்கிறாராம் ஸ்வாமிகள் இசையிலும் வேதத்திலும் அபார ஞானமும் புலமையும் உள்ளவர்.வேத வித்துக்களையும் சங்கீத வித்வான்களையும் தகுந்த நேரத்தில் ஆதரித்து அவர்களுக்கு ஊக்கம் அளித்திருக்கிறார்.ஸ்வாமிகளிடம் கொண்டிருந்த அபரிமிதமான அன்பின் வெளிப்பாட்டால் அவர் மேல் கீர்த்தனம் இயற்றியவர்கள் பலர்.அவர்களுள் மைசூர் சதாசிவராவ்,முத்துசாமி தீட்சிதரின் வம்சத்தவரான சுப்பராம தீட்சிதர்,திருவாரூர் யக்ஞேஸ்வர ஆஸ்ரமி கவிகுஞ்சரா பாரதியார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.ஸ்ரீமகாதேவேந்திரசரஸ்வதி ஸ்வாமியின் திருக்கோயிலைத் தரிசிப்போமா?ஸ்வாமிகளது பூத உடலை வைத்து அதன் மேல் ஒரு சிவாலயத்தை எழுப்பி உள்ளனர்.எனவே ஒரு சிவ தலத்துக்கான பலிபீடம்,நந்திதேவர் ஆகியவை இங்கே அமைந்துள்ளன.கருங்கல் திருப்பணி உள்ளே நுழைவதற்கு முன் ஒரு கல்வெட்டு அதில் அதிஷ்டானமும் அதைச் சேர்ந்த கட்டடங்களும் இளையாத்தங்குடி கயிலாயநாத ஸ்வாமி,நித்ய கல்யாணி அம்மை தேவஸ்தானத்துக்கு முற்றிலும் சொந்தமானது என்று குறிக்கப்பட்டுள்ளது. கைலி,சட்டை,பனியன் அணிந்து உள்ளே செல்லக்கூடாது.கருவறை பகுதி அத்தனை பவித்திரமானது.ஸ்வாமிகளின் சமாதியின் மேல் அமைந்துள்ளது லிங்கத் திருமேனி.அர்த்த மண்டபம் மகா மண்டபம் பெரிய முன் ஹால் போன்றவை உள்ளன்.மகா மண்டபத்தில் விநாயகரும் தண்டாயுதபாணியும் வீற்றிருக்கிறார்கள்.இதை அடுத்த அர்த்த மண்டபத்தில் இன்னொரு விநாயகரும் ஆதிசங்கரரும் தரிசனம் தருகிறார்கள்.
கருவறையில் காணப்படும் லிங்கத் திருமேனியின் பாணம்.சாளக்கிராமத்தால் ஆனது.மடி மற்றும் ஆசாரம் காரணமாக இவருக்கான நைவேத்தியம் தினமும் குமுட்டி அடுப்பில்தான் தயராகிறது.பெரும்பாலும் நெய் கலந்த சாதம் அல்லது தயிர் சாத்தை ஸ்வாமிகளுக்கு நைவேத்தியம் செய்கிறார்கள்.நகரத்தாரின் கட்டுப்பாட்டிலும் அருகிலும் இருக்கும் கயிலாயநாதர் ஆலயத்தில் இருந்து சிறிது அரிசி,வெல்லம்,எண்ணெய் போன்றவை தினமும் அதிஷ்டானத்துக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.இந்த அதிஷ்டானத் திருக்கோயிலுக்கு1992,2003ஆகிய வருடங்களில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது.தினமும் நான்கு கால பூஜைகள் நடந்து வருகின்றன. லிங்கத்திருமேனிக்கு அபிஷேக காலத்தில் திரவியம்,தேன்,பால்,சந்தனம் போன்ற பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடக்கிறது.பிரதோஷ தினங்களில் நந்திதேவருக்கும் சதுர்த்தசியில் விநாயருக்கும் ஏகாதசி மற்றும் துவாதசியில் ஆதிசங்கரருக்கும் அபிஷேகங்கள் நடக்கின்றன.இங்கு சிறப்பாக நடந்துவரும் வேத பாடசாலையில்.பதினைந்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கிருஷ்ண யஜுர் வேதம் பயின்று வருகிறார்கள்.வேதம் படிக்கும் வித்துக்களைப் பார்த்தாலே அழகுதான்!பாடசாலையும் ஆலய அபிஷேகங்களையும் கவனித்து வரும் வருணகுமார சர்மா,ஏகாதசி,துவாதசி போன்ற சில தினங்களில் லிங்கத் திருமேனிக்குப் பட்டு வஸ்திரம் அணிவிப்பேன்.மற்ற நாட்களில் காவி வஸ்திரம்தான்.இங்கு பூஜை செய்வதற்கு மடியும் ஆசாரமும் மிக மிக அவசியம்.சுத்தபத்தம் இல்லாமல் உள்ளே போகக்கூடது.ஒருவேளை அப்படிப் போனாலும் வாசல் நிலைப்படி நம் உச்சந்தலையில் இடித்து நமது சுத்தக் குறைவை உணர்த்திவிடும்.ஸ்வாமிகளை ஆழ்ந்து தியானித்து தரிசிப்பவர்கள் அவருடைய சக்தியை இந்த சந்நிதியில் உணர முடியும்.ஸ்வாமிகள் இன்றைக்கும் இங்கு மானசீகமாக இருக்கிறார்.தன்னை வணங்கும் பக்தர்களைக் காத்து வருகிறார்.பக்தர்கள் எவருமே இல்லாதபோது சந்நிதியில் ஸ்வாமிகள் சிரிப்பது போன்ற சத்தத்தையும் பேசுவது போன்ற ஒலியையும் நான் அவ்வப்போது கேட்டதுண்டு.அந்த அனுபவங்களை நினைத்து மெய் சிலிர்க்கிறேன் என்றார் நம்மிடம்.அதிஷ்டானம் மற்றும் வேத பாடசாலையின் தேவைகளை காஞ்சி மடத்தின் மேற்பார்வையுடன் அவ்வப்போது கவனித்து வருபவர் சுந்தரேச ஐயர்.ஓய்வு பெற்ற ஆசிரியான இவர்.புதுக்கோட்டையில் வசித்து வருகிறார்.
அதிஷ்டானத்தை ஒட்டி வெளிப்பக்கம் ஒரு பிரமாண்ட வில்வ மரம் இருக்கிறது.மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்.இங்கே தங்கியிருந்த காலத்தில் இருந்தே இந்த வில்வ மரம் இருந்து வருகிறது.இதன் இலைகளை அவரே பறித்து ஸ்ரீசந்திரமௌளீஸ்வரருக்கு பூஜை செய்வாரம். இதுபோன்ற உயர்வான வில்வ இலைகளை இதுவரை சிவபூஜைக்குக் கிடைத்தில்லை என்பாராம் ஸ்வாமிகள்.அந்த அளவுக்கு இந்த வில்வ மரத்தின் மேல் ஒர் ஈடுபாடு.காஞ்சி மகா பெரியவருக்கு மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மேல் பெரும் அபிமானம் உண்டு.புதுக்கோட்டை பகுதிக்கு யாத்திரையாக வரும்போதெல்லாம் மறக்காமல் இளையாற்றங்குடிக்கு வந்து அதிஷ்டானத்தில் தங்கி, தியானத்தில் ஈடுபடுவது வழக்கம்.1925ல் காஞ்சி மகா பெரியவர் இனையாற்றங்குடிக்கு வந்தபோது இங்கு வியாஸ பூஜை நடத்தி சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டார்.தவிர மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு ரொம்பவும் அபிமானமான வில்வ மரத்தடியில் ஒரு கொட்டகை போட்டு அதில் தங்குவாரம்.வில்வ மரத்தை பிரதட்சணம் வருவாராம்.ஸ்வாமிகளின் திருவடி பட்ட இந்த இடம் பவித்திரமானது என்று நெகிழ்வாராம்.இந்த வில்வ இலைகளைக் கொண்டு ஸ்வாமிகளின் அதிஷ்டானத்தை பூஜிப்பாராம்.பாரத தேசமெங்கும் புனித யாத்திரை மேற்கொண்டு எத்தனையோ திருத்தலங்களைத் தரிசித்து ஆன்மிக எழுச்சி ஏற்படுத்திய மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் இன்று இளையாற்றங்குடியில் இளைப்பாறிக்கொண்டிருக்கிறார்.இது அந்த மண்ணில் மைந்தர்கள் செய்த நற்பயனால் விளைந்தது என்றேதான் சொல்ல வேண்டும்.நாட்டுக்கோட்டை நகரத்தார் இல்லையென்றால், வேதமும் இல்லை கோயிலும் இல்லை என்று காஞ்சி மகா பெரியவர் அடிக்கடி சொல்வார். பூம்புகாரில் இருந்து சுமார் 400 வருடங்களுக்கு முன் இங்கு இடம் பெயர்ந்த அந்த நட்டுக்கோட்டை நகரத்தாரை ஆசிர்வதிக்க என்றே இந்த அதிஷ்டானம் அந்தப் பகுதியில் அமைந்தது போலும்!
காஞ்சி மடம்....
தெரியுமா உங்களுக்கு காஞ்சி மடம் ஜயேந்திர பெரியவா நிர்வாகத்தில் இருந்த போது எத்தனையோ சோதனைகளை சந்தித்திருக்கிறது. வருவோர் போவோர் ஜாஸ்தி. செலவு கட்டுக்கடங்காமல் போனதும் உண்டு. ஓஹோ பெரியவா எல்லாரையும் பணம் கேட்பாளோ? அதான் இல்லை. ஒருத்தரையும் ஒரு தம்பிடி கொடு என்று கேட்டதே இல்லை. பணம் ஒரு பொருட்டாக என்னிக்கு பெரியவா மதிச்சிருக்கா. எப்படியோ மடம் நிலைமையை சமாளிச்சுண்டு தான் வந்தது. ஒரு சம்பவம் சொல்றேன். அதை நான் நேரிலே பார்த்ததாக இருக்க அவசியம் இல்லை. யாரோ சொன்னதை திருப்பி கூட சொல்லலாமே. ஏதோ ஒரு கிராமத்தில் பெரியவா கேம்ப். அன்னிக்கு நிலைமை என்னன்னு கேட்டா சுத்தமாக ஒரு சாமானும் இல்லை. அரிசி, பருப்புவகையரா ஒரு குந்து மணி கூட கிடையாது. துடைச்சு விட்டாப் போல ஆயிடுத்து. மட நிர்வாக மேனேஜர், சமையல் கட்டு நிர்வாகி காரியதரிசி எல்லோருக்கும் கவலை. எப்படி வரவாளை எல்லாம் உபசரிக்கிறது. எப்படி நிலைமையை சமாளிக்கிறது. ஒண்ணுமே ஸ்டாக் இல்லை. எப்படியோ அன்னிக்கு ராத்திரியை சமாளிச்சுடலாம். மறுநாள் காலை?? வேறு வழி எதுவும் தோன்றவில்லை. நேராக பெரியவா கிட்ட விஷயத்தை கொண்டு போக வேண்டியது தான். அப்புறம் ஈஸ்வரோ ரக்ஷது. மெதுவாக பெரியவா கிட்டே போய் விஷயத்தை எடுத்து சொன்னார்கள். அவர் எந்த கவலையும் பட்டதாக தெரிய வில்லை.
அவர்களுக்கோ ஆச்சர்யம். ''ஒரு வார்த்தை காஞ்சிபுரம் மடத்துக்கு தெரியப்படுத்தினாலோ, யாராவது ஒன்று இரண்டு பெரிய மனுஷாள், தனவான்களுக்கு சேதி போனாலோ போதுமே நிலைமை சமாளிச்சுடலாமே'' ஆனால் பெரியவரை பொறுத்தவரையில் ஓஹோ அப்படியா சரி, சரி. காமாட்க்ஷி பார்த்துக் கொள்வாள் கவலையை விடு” என்று கூறிவிட்டு, தியானத்தில் உட்கார்ந்து விட்டார். ஓஹோ அப்படியா என்று ஏதோ ஒரு சாதாரண செய்தியை எடுத்துக் கொள்வது போல இந்த காதிலே வாங்கி அந்த காதுலே விட்டுட்டாரே என்று மற்றவர்களுக்கு கவலையில் ஆழ்ந்தனர். நேரம் ஓடியது இரவு கழிந்தது. பதட்டத்தோடு பொழுதும் விடிந்தது. அதிசயம் ஒன்று நிகழ்ந்தது. பெரியவா சம்பந்தப்பட்ட ஒண்ணு ஒண்ணும் அதிசயமும் ஆச்சர்யமும் தானே. சுமார் ஏழுமணி அளவில் சூரியன் உக்ரமா மேலே எகிரிண்டு இருக்கறபோது ஒரு வண்டி எங்கிருந்தோ வந்து அவர்கள் தங்கி இருக்கிற இடத்திலே வாசலிலே நின்றது. வண்டி நிறைய மூட்டை மூட்டையா அரிசி, பருப்பு, காகறிகள், பழம் என்று வந்து இறங்கியது. ‘யார் அனுப்பினார்கள் இதை?’ பெரியவா யார்கிட்டே சொல்லி அரேஞ்ஜ் பண்ணினா?
விஷயம் இது தான். பெரியவா முகாம் போட்டிருந்த ஊருக்கு பக்கத்திலே ஒரு கிராமம். ஒரு பிரபல தனவான் வீட்டிலே ஒரு திருமணம் நடக்க ஏற்பாடாகி இருந்தது. அந்த திருமண விருந்துக்கான எல்லா உணவுப் பொருட்கள் தான் அந்த வண்டி நிறைய. ஆனால் ஏதோ கடைசி நிமிடத்தில் மாப்பிள்ளைப் பையனுக்கு அம்மை போட்டதில் கல்யாணம் நடக்க முடியாத நிலை.
வாங்கி விட்ட அத்தனை உணவுப் பொருள்களையும் என்ன செய்வது? என்று எந்த தனவான் குடும்பம் யோசித்தது. சின்ன ஊர் எங்கும் அதை பண்டம் மாற்ற முடியாது. செலவு தான் பண்ணியாக வேண்டும். அவர்கள் கூடிப் பேசி என்ன செய்வது என்று யோசித்த போது ஒருவர் சொன்னது அவர்களுக்கு சரியாக பட்டது.
''அடுத்த ஊர் ஏதோ ஒன்றிலே காஞ்சி மடத்திலே இருந்து சுவாமி வந்து முகாம் போட்டிருக்கான்னு கேள்வி பட்டேன். விஷயம் விசாரித்து இது எல்லாத்தையும் அங்கே அனுப்பினா அவாளுக்கு அன்ன தானம் பண்ணுவதற்கு ரொம்ப உபயோகமாகும். நமக்கும் நல்லபடியாக ஒரு காரியம் பண்ண சந்தோஷம் மிஞ்சும் ''என்கிறார்".
''எனக்கு அந்த கிராமம் தெரியும்". பெரியவா முகாம் போட்டிருக்கான்னும் கேள்விப்பட்டேன். நானே கூட போறேன். எனக்கும் பெரியவா தரிசனம் கிடைக்கும்'' என்று அவர்களில் ஒருவர் வண்டியில் ஏறிக்கொண்டார்.
அங்கே எல்லோருக்கும் இது மிக சிறந்த உபாயம் என்று தோன்றவே உடனே விசாரித்து வண்டியை அங்கே அனுப்பியிருக்கிறார்கள்.
மூட்டையில் அரிசி, கூடைகூடையாக காய்கறி, பழங்கள், பருப்பு, எண்ணெய் என்று சகலமும் வந்து இறங்கியதைப் பார்த்த காரியதரிசியும் பரிசாரகரும் திகைத்துப் போய், பெரியவரிடம் ஓடிப்போய் எதிரே நின்றார்கள்.
விஷயம் சொன்னார்கள். '' நான் தான் சொன்னேனே. காமாட்க்ஷி பாத்துப்பானு. உங்களுக்கு என் வார்த்தையிலே சந்தேகமோ, இல்லை காமாட்க்ஷி மேலே அத்தனை நம்பிக்கை இல்லையோன்னு தான் தோண்றது என்று சொல்லி விட்டு சிரித்தார். "சரி போங்கோ வேலையை பாருங்கோ''
எந்த ஒரு விஷயத்திழும் சிறிதும் குழப்பமே இல்லாமல், நூறு சதவிகிதம் நம்புவது என்பதில் தான் அற்புதங்கள் ஆச்சர்யங்கள் தானாகவே நிகழ்கின்றன. பெரியவா சந்ம்பந்தப்பட்ட எல்லாமே இப்படித்தான்.
''நம்பினார் கெடுவதில்லை. நான்கு மறைதீர்ப்பு’ என்று பெரியவர்கள் அனுபவ பூர்வமாகத்தான் சொல்லி இருக்கிறார்கள். மஹா பெரியவா வார்த்தைகள் அருள்வாக்கு.