திங்கள், 4 ஜனவரி, 2021

சப்த கந்த கோட்பாடுகள்

சப்த கந்த கோட்பாடுகள்




ஏழு கந்த கோட்பாடுகள்:

நாதகந்தம்

பிரவேஷகந்தம்

பூரிதகந்தம்

அந்தர் சுஷூம்னா கந்தம்

அபிலாட்ச சங்கம கந்தம்

கிரகபதார்த்த கந்தம்

அனலேஷூ கந்தம்

மேற்சொன்ன இந்த சப்தகந்தங்கள் மனிதர்களின் வாழ்க்கையில் உன்னதமானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றன. மனிதனின் ஆற்றல், சக்தி போன்றவைகளை இவை குறிப்பதோடு அவற்றால் பல சமயங்களில் மனிதனுக்கு ஏற்படும் பலமாறுதல் நிலைகளையும் சுட்டிக்காட்டுகிறது. அவைகள் என்னவென்று இங்கே தெரிந்து கொள்வோம்.

நாதகந்தம் : இது மனிதனை மனிதனாக்கக் கூடியது. அவன் பெற வேண்டிய பரிபூரண, பக்குவ உயர்ந்த நிலைகளுக்கு இறைப் பகுத்தறிவு ஒன்றே மூல காரணம்.

பிரவேஷ கந்தம்: இது ஜீவன்களின் அறிவை ஐந்தறிவு நிலைவரை மேம்படுத்தி நுண்புல உணர்வுகளை நிலைபெறச் செய்வதாகும். மனித சக்தியால் செய்ய முடியாத காரியங்களை எல்லாம் மிக அற்புதமாக செய்து முடிக்கும் ஆற்றல் உடையது இது.

பூரித கந்தம்: நியாயமான, முறையான மனித விருப்பங்களை இந்தச் சக்தியின் மூலம் பெறலாம்.

அந்தர்ஷூம்னா கந்தம்: இது மனித உள்ளத்தில் எழும் ஆசைகளை முறைப்படுத்தி, நிலைப்படுத்தி, தயாராக்கித் தரக்கூடியதாகும்.

அபிலாட்ச சங்கம கந்தம்:  இது மனிதனின் அபிலாக்ஷைகளை (விருப்பங்களை) முறையாகப் பரிணமிக்கச் செய்து அதனைக் காரியசித்தியாக்க உதவுகிறது.

கிரகபதார்த்த கந்தம்: ஊழ்வினை காரணமாக மனிதன் செயலற்றிருப்பதைத் தக்க பரிகாரம், பிராயச்சித்தம் மூலம் சீர்ப்படுத்திக் காரிய சித்திக்குத் துணை புரிகிறது இது.

அனலேக்ஷூ கந்த கந்தம்:  பகைமை, விரோதம், குரோதம், பொறாமை காரணமாக வாழ்வின் லட்சியம் சீர்குலையாமல் பாதுகாத்து சமய சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப மனிதனைச் செயல்பட வைக்கிறது இது.

அட்டமா சித்தி

அட்டமா சித்தி


யைப் பற்றி காலங்கி நாதர் கூறுவது.
 
அட்டமா சித்தி என்பது அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிரார்த்தி, பிராகாமியம், ஈசாத்துவம், வசித்துவம் என்னும் எட்டு வகையாகும்.
 
அணிமா என்பது அணுரூபமான ஆன்மாவைப் போன்றதாகும்.
 
மகிமா என்பது மிகவும் பெருமையுடையதாகும். அதாவது மிகப் பருமனாதல்
 
கரிமா என்பது தன் உடல் கண்டிப்பு கட்டுப்பாடு இன்றி கண்டிப்பு கட்டுப்பாடு உள்ளவற்றை ஊருருவிச் செல்லவல்லதாகும்.
 
லகிமா என்பது மேரு மலை போன்ற கனமான வடிவத்தைத் தூக்கினாலும் இலகுத்துவம் உடையவன் ஆதல்.
 
பிரார்த்தி என்பது வேண்டியதை அடைவது. அதாவது நினைத்த போகமெல்லாம் பெறுவது.
 
பிராகாமியம் என்பது நிறைவுடையவனாதல். அதாவன்றி குறைவின்றி இருத்தல். அன்றியும் ஒரு தேகத்திலிருந்து மற்றொரு தேகத்திலே புகுவதும், தான் நினைத்த உருவங்களை எடுத்துக் கொள்ளுதலும், ஆகாயத்தில் சஞ்சரித்தலும் விரும்பிய போகங்களை எல்லாம் அனுபவிப்பதற்குத் தகுதியாதலுமாகும்.
 
ஈசாத்துவம் என்பது ஆட்சியுள்ளவனாதல். அதாவது யாவருக்கும் தேவனாகுதல்.
 
வசித்துவம் என்பது தேவர், அசுரர், பட்சிகள், பூதங்கள், மானிடர்கள், இந்திரன் முதலிய யாவும்/யாவரும் வணங்கி நிற்றல்.

அமர்நாத் குகைக்கோவில்

அமர்நாத் குகைக்கோவில்


:-

செயைகையாக மனிதனையே உருவாக்கும் அளவிற்கு இன்று நாம் அறிவியலில் அசுர வளர்ச்சி அடைந்திருந்தாலும் கூட, இயற்கை என்ற மாபெரும் சக்திக்குமுன், அதன் எல்லையில்லா ஆற்றலிடம் மண்டியிட்டு தோற்றுத்துத்தான் போய்விடுகிறோம் என்பதில் எவர்க்கும் மாற்று கருத்து இருக்காது என்று கருதுகிறேன். எங்கும் எதிலும் அறிவியலின் அபிரிமிதமான வளர்ச்சி புரையோடிகிடக்கும் இந்த காலகட்டத்தில் கூட இன்றைய நவீன விஞ்ஞானத்தால் பதிலளிக்க முடியாத கேள்விகள் இருக்கிறது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா நண்பர்களே? அப்படிப்பட்ட கேள்வியில் ஒன்றை பற்றித்தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம். அந்த கேள்வி ஒளிந்திருக்கும் இடம்தான் {சுமார் 5000} ஆண்டுகலுக்கும் மேல் பழமைமிக்க இந்துக்களின் புனிததலமான அமர்நாத் குகைக்கோவில் (Amarnath Cave Temple).

விஞ்ஞானத்தால் பதிலளிக்க முடியாத அந்த கேள்வியை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு முதலில் அந்த கோவில் இருக்கும் இடத்தை பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள். இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகரில் இருந்து சுமார் 141 கிலோமீட்டர் தொலைவில், கடல் மட்டத்தில் இருந்து தோராயமாக 13 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்திருப்பதுதான் அமர்நாத் குகைக்கோவில். இந்துக்களின் புராண இதிகாசங்களின்படி இங்குதான் உயிர்களின் மூல ஆதாரமான சிவன், தனது மனைவியான பார்வதிக்கு வாழ்வியலின் ரகசியங்கள் பற்றி போதித்ததாக கூறப்படுகிறது. இந்துக்களின் சிவ வழிபாட்டு தளங்களில் முதன்மையானதாக கருதப்படும் இங்கு சுமார் 5000 ஆண்டுகளுக்கும் முன்பே பக்தர்கள் யாத்திரையாகவே வந்து வழிபட்டு சென்றிருக்கிறார்கள் என்று இந்துக்களின் இதிகாசங்களும் புராணங்களும் குறிப்பிடுகின்றன.

இக்கோவிலை அடைய நாம் முதலில், ஸ்ரீநகரில் இருந்து 95 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இமயமலையின் அடிவாரதத்தில் அமைந்துள்ள பகல்காம் (Pahalgam) என்ற இடத்தை அடைய வேண்டும். பகல்காம் வரை செல்ல சாலை வசதிகள் உண்டு. இந்த பகல்காம் கடல் மட்டத்தில் இருந்து கிட்டதட்ட 7,200 அடி உயரத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இமயமலையின் அடிவாரத்திலிருந்து அதாவது பகல்காமில் இருந்து அமர்நாத் பனிகுகைக்கு செல்ல செங்குத்தான பனிபாறைகளுக்கு நடுவே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவு பயணிக்க வேண்டும். பக்கதர்கள் பெரும்பாலும் பகல்காமில் இருந்து அமர்நாத்திற்கு, மூன்று அல்லது நான்கு நாட்களில் கால்நடையாக நடந்துதான் செல்கிறார்கள். நடக்க முடியாதவர்கள் குதிரை, பல்லக்கு, டோலி போன்றவற்றில் பயணம் செய்கிறார்கள்.

சுமார் 150 அடி உயரம் மற்றும் அகலம் கொண்ட அமர்நாத் குகைக்குள், மலையின் மேல் பகுதியில் இருந்து வரும் தண்ணீர், குகையின் பின்புறம் உள்ள பாறையின் நடுவில் கொட்டி, அப்படியே உறைந்து பனிக்கட்டியாக மாறி, சிவலிங்கமாக உருப்பெருகிறது. தண்ணீர் உறைந்து பனிக்கட்டியாக மாறுவது சாதாரண விஷயம்தான், வியப்பதிர்க்கில்லை. ஆனால் இங்கே ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலகட்டங்களில் அதுவும் லிங்க வடிவில் தண்ணீர் பனிக்கட்டியாக உறைவதுதான், இதுவரை புரியாத அதிசயமாக உள்ளது. இதில் எந்த விஞ்ஞானமோ அல்லது செயற்கையோ கிடையாது.

இங்கே இன்னுமொரு அதிசயம் உங்களுக்கு காத்திருக்கிறது, பனிமலை சூழ்ந்த அமர்நாத்தில் எந்த விலங்கினங்களையும், பறவைகளையும் காண முடியாது. காரணம் அங்கே எந்த உயிரினமும் வாழ முடியாது என்பதுதான். இங்குதான் நம் விஞ்ஞானத்தால் இன்றுவரை பதிலளிக்க இயலாத ஆச்சர்யம் நடந்தேறிக்கொண்டிருக்கிறது. உயிர்கள் வாழ தகுதியற்ற சூழல் நிலவும் அமர்நாத் குகைக் கோவிலில் இன்றுவரை ஒரு ஜோடி மலைபுறாக்கள் மட்டும் எப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கிறது, இவை எப்படி உயிர் வாழ்கிறது என்ற கேள்விக்கு இதுவரை இன்றைய நவீன விஞ்ஞானத்திடம் இருந்து பதில் இல்லை.

அதிசய பனிலிங்கத்தை தரிசனம் செய்வதோடு அமர்நாத் யாத்திரை நிறைவு பெறுவதில்லை. அந்தக் குகையில் வசிக்கும் இந்த ஜோடி புறாக்களைப் தரிசித்தால் மட்டுமே அமர்நாத் யாத்திரை நிறைவு பெறும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். இறைவனும், இறைவியுமே புறாக்கள் வடிவில் காட்சி தருகிறார்கள் என்பது பக்தர்களின் அசையாத நம்பிக்கை. விஞ்ஞானம் தோற்றுப்போன வெகு சொற்ப இடங்களில் அமர்ந்தும் ஒன்று என்பதே உண்மை.

அருள் மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோவில்

அருள் மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோவில்


, திருவல்லிக்கேணி
                                             {பகுதி:1}
 
திருவரங்கம் திருவேங்கடம் காஞ்சிபுரம் திருஅயோத்தி திருஅகோபிலம் ஆகிய ஐந்து திவ்ய தேசங்களையும் ஒரே இடத்தில் தரிசிக்கும் வண்ணம் அமையப்பெற்ற அற்புதத்தலம்.108 வைணவ திவ்ய தேசங்களில் பெருமாள் மீசையுடன் காட்சியளிக்கும் அழகியத் திருத்தலம். கிழக்கு, மேற்கு ஆகிய இரண்டு வாயில்களில் இரண்டு மூர்த்திகள் முதல் மூர்த்தியாக சேவை சாதிக்கும் புண்ணியத் தலம். ஸ்ரீபெரும்புதூர் மாமுனி உடையவர் இராமானுஜர் என்னும் எதிராஜரை இந்த பூமிக்கு தந்தருளிய பெருமாள் குடிகொண்டுள்ள ஒப்பற்ற தலம்.108 வைணவ திவ்ய தேசங்களில் 60வது திருத்தலம். பேயாழ்வார் திருமழிசையாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்த திருத்தலம். பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருவரங்கம் போலவே ஆண்டு முழுவதும் திருவிழா நடைபெறும் சிறந்ததொரு திருத்தலம். இவ்வாறு ஏராளமான பெருமைகளையும் மகிமைகளையும் சிறப்புகளையும் உள்ளடக்கிய ஒப்பற்ற திருத்தலம் இதுவாகும்.

திருவட்டாறு திருசிற்றாறு ஆகிய தலங்களைப் போலவே தீர்த்தத்தின் பெயரால் பெருமை பெற்ற தலங்களில் திருவல்லிக்கேணியும் ஒன்று.இத்தல தீர்த்தத்திற்கு கைரவணீஎன்று பெயர்.கைரவம் என்பதற்கு செவ்வல்லி என்பது பொருள்.புராண காலத்தில் இத்தீர்த்தத்தில் செவ்வல்லி மலர்கள் பூத்துக் குலுங்கிய காரணத்தால் தமிழில் அல்லிக்குளம் என்றும் வடமொழியில் கைரவணி என்றும் குறிப்பிட்டனர்.பிற்காலத்தில் அல்லிக்கேணி என்ற பெயரில் இத்தலம் அழைக்கப்பட்டது.திருமால் குடிகொண்டுள்ள அல்லிக்கேணி என்பதால் இவ்விடம் திருவல்லிக்கேணி எனப் பெயர் பெற்றது.

திருவல்லிக்கேணி திருத்தலத்தில் பரந்தாமனான திருமால் ஐந்து வடிவங்களில், ஐந்து சன்னதிகளில் தனித்தனியாக சேவை சாதிக்கிறார்.

அருள்மிகு வேங்கடகிருஷ்ணன் (பார்த்தசாரதி),
அருள்மிகு மனநாதர் (அரங்கநாதர்),
அருள்மிகு இராமபிரான்,
அருள்மிகு கஜேந்திர வரதர்,
அருள்மிகு தெள்ளிய சிங்கர் (நரசிம்மர்).

இந்த ஐந்து மூர்த்திகளின் கருவறைகள் மீதும் ஆனந்த விமானம் பிரணவ விமானம் புஷ்பக விமானம் சேஷ விமானம் தைவீக விமானம் ஆகிய ஐந்து விமானங்கள் அமைந்துள்ளன. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஐந்து திவ்ய தேசங்களை ஒரே இடத்தில் தரிசிக்கும் வண்ணம் அமையப் பெற்றது மிகச்சிறந்த ஒன்றாகும். அதில் மனநாதராகிய அரங்கநாதர் சன்னதி மட்டுமே மிகப் தொன்மையானது.

தலைக்குறிப்பு:
மூலவர் :வேங்கடகிருஷ்ணன்
உற்சவர் :பார்த்தசாரதி
தாயார் :ருக்மணி தாயார்
ஆகமம் :வைகானசம்
தீர்த்தம் :கைரவணீ புஷ்கரணி
புராணப்பெயர் :விருந்தாரன்ய செத்திரம்
ஊர் :திருவல்லிக்கேணி

பார்த்தசாரதி வரலாறு:பகவான் கண்ணன் துவாபரயுகத்தின் முடிவில் கிருஷ்ணாவதாரம் எடுத்த நோக்கம் முடிவுற்றதும் வைகுண்டம் செல்கிறார்.அப்போது கலியுகம் தோன்றுவதற்கான தூர்நிமித்தங்கள் ஏற்படுகின்றன.கலியின் கொடுமையால் பூமியில் அதர்மங்கள் தழைத்தோங்கும் என்பதை அறிந்த ஆத்ரேய மகரிசி தனது குருவான வியாச மகரிசியை சந்தித்து, நல்லவர்கள் கலியின் கொடுமையிலிருந்து விடுபட்டு உய்யும் வகையைக் கூறுமாறு வேண்டினார்.

அப்போது வியாசர் அதுவரை தாம் ஆராதித்து வந்த "பார்த்தசாரதி பெருமாளின்" திருமேனி உருவத்தைத் தந்து தென் பாரதத்தில் துளசிவனம் நிறைந்து காணப்படும் விருந்தாரன்யத்தில் உள்ள (ரங்கநாதர்)மனநாதன் திருக்கோயிலில் வைத்து ஆகம முறைப்படி வழிபட்டு வந்தால் சகல நன்மைகளும் ஏற்படும் என்றார்.திருவல்லிக்கேணி தலம் அமைந்துள்ள பகுதி புராண காலத்தில் விருந்தாரண்யம் என்று அழைக்கப்பட்டது.அதன்படியே ஆத்ரேய மகரிசியும் விருந்தாரண்யம் வந்து அருள்மிகு பார்த்தசாரதி சுவாமியின் திருவுருவத்தை வைத்து வழிபாடு செய்து வந்தார்.கலியின் கொடுமையிலிருந்து பூமியைக் காக்கும் பொருட்டு பார்த்தசாரதி சுவாமியை இங்கு வைக்கப்பட்டதால் அன்றுமுதல் இக்கோவிலில் அருள்மிகு பார்த்தசாரதி சுவாமியே முதன்மையான கடவுளாக வழிபாடு செய்யப்பட்டு வருகின்றனர்.

வேங்கடவன் திருநாமம்:பிற்காலத்தில் துண்டீரம் என்ற நாட்டை சுமதி என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான்.துண்டீரம் என்பதே துண்டீர மண்டலம் என ஆகி அதுவே திரிந்து பிற்காலத்தில்"தொண்டை மண்டலம்"ஆயிற்று என்பர்.அரசன் சுமதி திருமலை திருப்பதியில் கோவில் கொண்டுள்ள திருவேங்கடமுடையான் மீது தீவிர பக்தி கொண்டு வழிபட்டு வந்தான்.

இவ்வரசனுக்கு பார்த்தனுக்கு
(அர்ச்சுனனுக்கு) சாரதியாக
(தேரோட்டியாக) விளங்கிய கிருஷ்ணன் திருக்கோலத்தை தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. எனவே சுமதி தனது விருப்பத்தை நிறைவேற்றி வைக்குமாறு ஏழுமலையானான திருவேங்கடமுடையானை மனமுருகி வேண்டினான்.அவன் பக்திக்கு மனமிறங்கிய "ஏழுமலையான் வெங்கடேசர்" அவன் கனவில் தோன்றி விருந்தாரண்யம் சென்றால் விருப்பம் நிறைவேறும் என்று ஆசிர்வதித்தார்.அதன்படியே மன்னன் சுமதி விருந்தாரண்யம் வந்து ஆத்ரேய முனிவரால் வழிபாடு செய்யப்பட்டு வந்த அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோலத்தைக் கண்டு மனம் குளிர சேவித்தான்.திருமலையில் உள்ள வேங்கடநாதனே இங்கு கிருஷ்ணனாக காட்சி தருவதைப்போல உணர்ந்தான். எனவே "வேங்கட கிருஷ்ணன்" என்ற திருநாமம் சூட்டி வழிபட்டு வந்தான். அன்று முதல் இன்று வரை இத்திருக்கோயில் மூலவருக்கு "வேங்கட கிருஷ்ணன்" என்ற திருநாமமே வழங்கப்பட்டு வருகிறது.
பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வார் இத்தளத்தின் மீது பத்து பாசுரங்கள் பாடி மங்களாசாசனம் செய்துள்ளார். திருமங்கையாழ்வார் அருள்மிகு பார்த்தசாரதி சுவாமியை பெரிய திருமொழி பகுதியில், இரண்டாம் பத்து, மூன்றாம் திருமொழியில் அழகாக பாடியுள்ளார்.

விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும்
வேழமும் பாகனும் வீழ செற்றவன் தன்னை புரமெரி செய்த
சிவனுரு துயர்களை தேவை பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர்முன் நின்றானை
சிற்றவை பணியால் முடி துறந்தானைத்
திருவல்லிக்கேணி கண்டேனே.
(திருமங்கையாழ்வார்)

திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி சுவாமி தமது குடும்பத்துடன் காட்சியளிக்கிறார். ஒரே கருவறையில் பகவான் தமது உறவினர்களுடன் காட்சியளிக்கும் திருக்கோலத்தை "பஞ்ச வீர வழிபாட்டு மரபு" என்று அழைப்பது வழக்கம். இதுபோன்ற அமைப்பு திருத்தங்கல் (89வது திவ்யதேசம்)திருநறையூர் என்னும் நாச்சியார்கோவில்(14வது திவ்யதேசம்)தேரழுந்தூர் (23வது திவ்யதேசம்)ஆகிய திவ்யதேசங்களில் காணப்படுகின்றன.

கருவறையில் மூலவர் அருள்மிகு வேங்கட கிருஷ்ணன், நின்ற திருக்கோலத்தில் இரண்டே திருக்கரங்களுடன் வலது கரத்தில் "பாஞ்ச சன்யம்"என்னும் சங்கை ஏந்தி இடதுகரம் வேங்கடவனைப் போன்று கீழ் முகமாக நோக்கி தான முத்திரையைக் காட்டுகிறது. மேலும் இடுப்பின் மேல்புறம் பேரொளி வீசும் வாள் ஒன்று தொங்குகிறது.

மகாபாரதத்தில் கண்ணபிரான் யுத்தத்தின் போது ஆயுதம் எடுப்பதில்லை என்று துரியோதனனிடம் சபதம் செய்தார். பிறகு வாள் ஏன் உள்ளது? என்ற கேள்வி எழக்கூடும்.இதற்கு வைணவப் பெரியவர்கள் பகவத்கீதையில் நான்காம் அத்தியாயம் 42வது சுலோகத்தில் உள்ளதைக் கொண்டு விளக்கம் அளிக்கின்றனர்.

அஞ்ஞானத்தின் பிடியில், அதாவது உலகப் பற்றில் அடைபட்டுக் கிடந்த பார்த்தனிடம் அஞ்ஞானத்திலிருந்து பிறந்ததும் உள்ளத்தில் உறைவதும் ஆகிய இந்த பற்றிலிருந்து விடுபட ஞானமென்னும் வாளால் வெட்டி, யோகத்தில் நிலைபெறுக! பார்த்தா எழுந்திரு! என்று கூறுகிறார். நம்மைப் போன்ற சாதாரண மக்களிடம் ஏற்படக்கூடிய அஞ்ஞானம் என்னும் இருளை அகற்றுவதரற்க்காகவே பகவான் இத்தலத்தில் ஞானவாளுடன் சேவை சாதிப்பதாக வைணவப் பெரியவர்கள் கூறுகின்றனர்.

பெருமாளுக்கு வலதுபுறம் "ருக்மணி பிராட்டி" அழகிய திருமேனியோடு காட்சி தருகின்றார்.

பெருமாளுக்கு இடதுபுறம் தம்பி சாத்தகி கிழக்கு நோக்கியவாறு காட்சி தருகின்றார். சாத்தகி தனது வலது கரத்தில் கட்கம் என்ற குறுவாளை ஏந்தியும், இடது கரத்தில் வரத முத்திரையை காட்டியும் சேவை சாதிக்கிறான்.

சாத்தகி எவ்வாறு கண்ணனுக்கு தம்பி முறை ஆகவேண்டும் என்பதற்கு மகாபாரதத்தில் சில குறிப்புகள் உள்ளன. கண்ணனின் தாயார் தேவகியின் சுயம்வரத்தின் போது ஏராளமான அரசர்கள் வந்தனர். மதுராபுரியின் அரசகுமாரரான வசுதேவருக்காக அவரது சகோதரன் “சினி” என்பவன், சுயம்வரத்தில் கலந்து கொண்ட அணைத்து அசுரர்களையும் வென்று வசுதேவரை தேவகிக்கு மனம் முடித்து வைத்தான். இந்த சினியின் மகனே சத்யகன். சத்யகன் மகனே சாத்தகி. எனவே விருட்னி குலத்து வீரனான சாத்தகி கண்ணனுக்கு தம்பிமுறை ஆகிறான்.

ருக்மணி பிராட்டிக்கு வலதுபுறமாக கண்ணனின் தமையனான பலராமர் கலப்பையுடன் வடக்கு நோக்கியவாறு காட்சி தருகின்றார்.

சாத்தகிக்கு அடுத்ததாக மகன் பிரத்யும்னன் மற்றும் பேரன் அநிருத்தன் ஆகியோர் தெற்கு நோக்கியவாறு காட்சி தருகின்றனர்.

ஒருமுறை சிவபெருமான் மன்மதனை தனது நெற்றிக்கண்ணால் எரித்து விடுகிறார். இந்த மன்மதன் கண்ணனுக்கும், ருக்மணி பிராட்டிக்கும் மகனாகப் பிறக்கின்றான். பேரழகு வாய்ந்த பிரத்யும்னன், சம்பராசுரனின் அரண்மனையில் வசித்து வந்த ரதிதேவியின் அம்சமான மாயாவதி என்பவளைத் திருமணம் செய்கிறான். பிரத்யும்னன் மாயாவதி தம்பதியர்கட்கு பிறந்தவனே அநிருத்தன்.இவன் கண்ணனின் பேரன் ஆவான்.

இதுவரை நாம் திருவல்லிக்கேணி திருத்தலத்தில் கோவில் கொண்டுள்ள ஐந்து மூர்த்திகளில் ஒருவரான அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி தோன்றிய வரலாற்றை மட்டுமே ஆரிந்துள்ளோம். முழு வரலாற்றையும் அறிந்துகோள்ள இன்று ஒரு நாள் போதுமா?

தொடரும்

தேவீ கட்கமாலா ஸ்தோத்ரம்

தேவீ கட்கமாலா ஸ்தோத்ரம்




ஶ்ரீ தேவீ ப்ரார்தன
ஹ்ரீம்காராஸனகர்பிதானலஶிகாம் ஸௌஃ க்லீம் களாம் பிப்ரதீம்
ஸௌவர்ணாம்பரதாரிணீம் வரஸுதாதௌதாம் த்ரினேத்ரோஜ்ஜ்வலாம் |
வம்தே புஸ்தகபாஶமம்குஶதராம் ஸ்ரக்பூஷிதாமுஜ்ஜ்வலாம்
த்வாம் கௌரீம் த்ரிபுராம் பராத்பரகளாம் ஶ்ரீசக்ரஸம்சாரிணீம் ||

அஸ்ய ஶ்ரீ ஶுத்தஶக்திமாலாமஹாமம்த்ரஸ்ய, உபஸ்தேம்த்ரியாதிஷ்டாயீ வருணாதித்ய றுஷயஃ தேவீ காயத்ரீ சம்தஃ ஸாத்விக ககாரபட்டாரகபீடஸ்தித காமேஶ்வராம்கனிலயா மஹாகாமேஶ்வரீ ஶ்ரீ லலிதா பட்டாரிகா தேவதா, ஐம் பீஜம் க்லீம் ஶக்திஃ, ஸௌஃ கீலகம் மம கட்கஸித்த்யர்தே ஸர்வாபீஷ்டஸித்த்யர்தே ஜபே வினியோகஃ, மூலமம்த்ரேண ஷடம்கன்யாஸம் குர்யாத் |

த்யானம்
ஆரக்தாபாம்த்ரிணேத்ராமருணிமவஸனாம் ரத்னதாடம்கரம்யாம்
ஹஸ்தாம்போஜைஸ்ஸபாஶாம்குஶமதனதனுஸ்ஸாயகைர்விஸ்புரம்தீம் |
ஆபீனோத்தும்கவக்ஷோருஹகலஶலுடத்தாரஹாரோஜ்ஜ்வலாம்கீம்
த்யாயேதம்போருஹஸ்தாமருணிமவஸனாமீஶ்வரீமீஶ்வராணாம் ||

லமித்யாதிபம்ச பூஜாம் குர்யாத், யதாஶக்தி மூலமம்த்ரம் ஜபேத் |

லம் – ப்றுதிவீதத்த்வாத்மிகாயை ஶ்ரீ லலிதாத்ரிபுரஸும்தரீ பராபட்டாரிகாயை கம்தம் பரிகல்பயாமி – னமஃ
ஹம் – ஆகாஶதத்த்வாத்மிகாயை ஶ்ரீ லலிதாத்ரிபுரஸும்தரீ பராபட்டாரிகாயை புஷ்பம் பரிகல்பயாமி – னமஃ
யம் – வாயுதத்த்வாத்மிகாயை ஶ்ரீ லலிதாத்ரிபுரஸும்தரீ பராபட்டாரிகாயை தூபம் பரிகல்பயாமி – னமஃ
ரம் – தேஜஸ்தத்த்வாத்மிகாயை ஶ்ரீ லலிதாத்ரிபுரஸும்தரீ பராபட்டாரிகாயை தீபம் பரிகல்பயாமி – னமஃ
வம் – அம்றுததத்த்வாத்மிகாயை ஶ்ரீ லலிதாத்ரிபுரஸும்தரீ பராபட்டாரிகாயை அம்றுதனைவேத்யம் பரிகல்பயாமி – னமஃ
ஸம் – ஸர்வதத்த்வாத்மிகாயை ஶ்ரீ லலிதாத்ரிபுரஸும்தரீ பராபட்டாரிகாயை தாம்பூலாதிஸர்வோபசாரான் பரிகல்பயாமி – னமஃ

ஶ்ரீ தேவீ ஸம்போதனம் (1)
ஓம் ஐம் ஹ்ரீம் ஶ்ரீம் ஐம் க்லீம் ஸௌஃ ஓம் னமஸ்த்ரிபுரஸும்தரீ,

ன்யாஸாம்கதேவதாஃ (6)
ஹ்றுதயதேவீ, ஶிரோதேவீ, ஶிகாதேவீ, கவசதேவீ, னேத்ரதேவீ, அஸ்த்ரதேவீ,

திதினித்யாதேவதாஃ (16)
காமேஶ்வரீ, பகமாலினீ, னித்யக்லின்னே, பேரும்டே, வஹ்னிவாஸினீ, மஹாவஜ்ரேஶ்வரீ, ஶிவதூதீ, த்வரிதே, குலஸும்தரீ, னித்யே, னீலபதாகே, விஜயே, ஸர்வமம்களே, ஜ்வாலாமாலினீ, சித்ரே, மஹானித்யே,

திவ்யௌககுரவஃ (7)
பரமேஶ்வர, பரமேஶ்வரீ, மித்ரேஶமயீ, உட்டீஶமயீ, சர்யானாதமயீ, லோபாமுத்ரமயீ, அகஸ்த்யமயீ,

ஸித்தௌககுரவஃ (4)
காலதாபஶமயீ, தர்மாசார்யமயீ, முக்தகேஶீஶ்வரமயீ, தீபகலானாதமயீ,

மானவௌககுரவஃ (8)
விஷ்ணுதேவமயீ, ப்ரபாகரதேவமயீ, தேஜோதேவமயீ, மனோஜதேவமயி, கள்யாணதேவமயீ, வாஸுதேவமயீ, ரத்னதேவமயீ, ஶ்ரீராமானம்தமயீ,

ஶ்ரீசக்ர ப்ரதமாவரணதேவதாஃ அணிமாஸித்தே, லகிமாஸித்தே, கரிமாஸித்தே, மஹிமாஸித்தே, ஈஶித்வஸித்தே, வஶித்வஸித்தே, ப்ராகாம்யஸித்தே, புக்திஸித்தே, இச்சாஸித்தே, ப்ராப்திஸித்தே, ஸர்வகாமஸித்தே, ப்ராஹ்மீ, மாஹேஶ்வரீ, கௌமாரி, வைஷ்ணவீ, வாராஹீ, மாஹேம்த்ரீ, சாமும்டே, மஹாலக்ஷ்மீ, ஸர்வஸம்க்ஷோபிணீ, ஸர்வவித்ராவிணீ, ஸர்வாகர்ஷிணீ, ஸர்வவஶம்கரீ, ஸர்வோன்மாதினீ, ஸர்வமஹாம்குஶே, ஸர்வகேசரீ, ஸர்வபீஜே, ஸர்வயோனே, ஸர்வத்ரிகம்டே, த்ரைலோக்யமோஹன சக்ரஸ்வாமினீ, ப்ரகடயோகினீ,

ஶ்ரீசக்ர த்விதீயாவரணதேவதாஃ காமாகர்ஷிணீ, புத்த்யாகர்ஷிணீ, அஹம்காராகர்ஷிணீ, ஶப்தாகர்ஷிணீ, ஸ்பர்ஶாகர்ஷிணீ, ரூபாகர்ஷிணீ, ரஸாகர்ஷிணீ, கம்தாகர்ஷிணீ, சித்தாகர்ஷிணீ, தைர்யாகர்ஷிணீ, ஸ்ம்றுத்யாகர்ஷிணீ, னாமாகர்ஷிணீ, பீஜாகர்ஷிணீ, ஆத்மாகர்ஷிணீ, அம்றுதாகர்ஷிணீ, ஶரீராகர்ஷிணீ, ஸர்வாஶாபரிபூரக சக்ரஸ்வாமினீ, குப்தயோகினீ,

ஶ்ரீசக்ர த்றுதீயாவரணதேவதாஃ அனம்ககுஸுமே, அனம்கமேகலே, அனம்கமதனே, அனம்கமதனாதுரே, அனம்கரேகே, அனம்கவேகினீ, அனம்காம்குஶே, அனம்கமாலினீ, ஸர்வஸம்க்ஷோபணசக்ரஸ்வாமினீ, குப்ததரயோகினீ,

ஶ்ரீசக்ர சதுர்தாவரணதேவதாஃ ஸர்வஸம்க்ஷோபிணீ, ஸர்வவித்ராவினீ, ஸர்வாகர்ஷிணீ, ஸர்வஹ்லாதினீ, ஸர்வஸம்மோஹினீ, ஸர்வஸ்தம்பினீ, ஸர்வஜ்றும்பிணீ, ஸர்வவஶம்கரீ, ஸர்வரம்ஜனீ, ஸர்வோன்மாதினீ, ஸர்வார்தஸாதிகே, ஸர்வஸம்பத்திபூரிணீ, ஸர்வமம்த்ரமயீ, ஸர்வத்வம்த்வக்ஷயம்கரீ, ஸர்வஸௌபாக்யதாயக சக்ரஸ்வாமினீ, ஸம்ப்ரதாயயோகினீ,

ஶ்ரீசக்ர பம்சமாவரணதேவதாஃ ஸர்வஸித்திப்ரதே, ஸர்வஸம்பத்ப்ரதே, ஸர்வப்ரியம்கரீ, ஸர்வமம்களகாரிணீ, ஸர்வகாமப்ரதே, ஸர்வதுஃகவிமோசனீ, ஸர்வம்றுத்யுப்ரஶமனி, ஸர்வவிக்னனிவாரிணீ, ஸர்வாம்கஸும்தரீ, ஸர்வஸௌபாக்யதாயினீ, ஸர்வார்தஸாதக சக்ரஸ்வாமினீ, குலோத்தீர்ணயோகினீ,

ஶ்ரீசக்ர ஷஷ்டாவரணதேவதாஃ ஸர்வஜ்ஞே, ஸர்வஶக்தே, ஸர்வைஶ்வர்யப்ரதாயினீ, ஸர்வஜ்ஞானமயீ, ஸர்வவ்யாதிவினாஶினீ, ஸர்வாதாரஸ்வரூபே, ஸர்வபாபஹரே, ஸர்வானம்தமயீ, ஸர்வரக்ஷாஸ்வரூபிணீ, ஸர்வேப்ஸிதபலப்ரதே, ஸர்வரக்ஷாகரசக்ரஸ்வாமினீ, னிகர்பயோகினீ,

ஶ்ரீசக்ர ஸப்தமாவரணதேவதாஃ வஶினீ, காமேஶ்வரீ, மோதினீ, விமலே, அருணே, ஜயினீ, ஸர்வேஶ்வரீ, கௌளினி, ஸர்வரோகஹரசக்ரஸ்வாமினீ, ரஹஸ்யயோகினீ,

ஶ்ரீசக்ர அஷ்டமாவரணதேவதாஃ பாணினீ, சாபினீ, பாஶினீ, அம்குஶினீ, மஹாகாமேஶ்வரீ, மஹாவஜ்ரேஶ்வரீ, மஹாபகமாலினீ, ஸர்வஸித்திப்ரதசக்ரஸ்வாமினீ, அதிரஹஸ்யயோகினீ,

ஶ்ரீசக்ர னவமாவரணதேவதாஃ ஶ்ரீ ஶ்ரீ மஹாபட்டாரிகே, ஸர்வானம்தமயசக்ரஸ்வாமினீ, பராபரரஹஸ்யயோகினீ,

னவசக்ரேஶ்வரீ னாமானி த்ரிபுரே, த்ரிபுரேஶீ, த்ரிபுரஸும்தரீ, த்ரிபுரவாஸினீ, த்ரிபுராஶ்ரீஃ, த்ரிபுரமாலினீ, த்ரிபுரஸித்தே, த்ரிபுராம்பா, மஹாத்ரிபுரஸும்தரீ,

ஶ்ரீதேவீ விஶேஷணானி – னமஸ்காரனவாக்ஷரீச மஹாமஹேஶ்வரீ, மஹாமஹாராஜ்ஞீ, மஹாமஹாஶக்தே, மஹாமஹாகுப்தே, மஹாமஹாஜ்ஞப்தே, மஹாமஹானம்தே, மஹாமஹாஸ்கம்தே, மஹாமஹாஶயே, மஹாமஹா ஶ்ரீசக்ரனகரஸாம்ராஜ்ஞீ, னமஸ்தே னமஸ்தே னமஸ்தே னமஃ |

பலஶ்ருதிஃ
ஏஷா வித்யா மஹாஸித்திதாயினீ ஸ்ம்றுதிமாத்ரதஃ |
அக்னிவாதமஹாக்ஷோபே ராஜாராஷ்ட்ரஸ்யவிப்லவே ||

லும்டனே தஸ்கரபயே ஸம்க்ராமே ஸலிலப்லவே |
ஸமுத்ரயானவிக்ஷோபே பூதப்ரேதாதிகே பயே ||

அபஸ்மாரஜ்வரவ்யாதிம்றுத்யுக்ஷாமாதிஜேபயே |
ஶாகினீ பூதனாயக்ஷரக்ஷஃகூஷ்மாம்டஜே பயே ||

மித்ரபேதே க்ரஹபயே வ்யஸனேஷ்வாபிசாரிகே |
அன்யேஷ்வபி ச தோஷேஷு மாலாமம்த்ரம் ஸ்மரேன்னரஃ ||

தாத்றுஶம் கட்கமாப்னோதி யேன ஹஸ்தஸ்திதேனவை |
அஷ்டாதஶமஹாத்வீபஸம்ராட்போக்தாபவிஷ்யதி ||

ஸர்வோபத்ரவனிர்முக்தஸ்ஸாக்ஷாச்சிவமயோபவேத் |
ஆபத்காலே னித்யபூஜாம் விஸ்தாராத்கர்துமாரபேத் ||

ஏகவாரம் ஜபத்யானம் ஸர்வபூஜாபலம் லபேத் |
னவாவரணதேவீனாம் லலிதாயா மஹௌஜனஃ ||

ஏகத்ர கணனாரூபோ வேதவேதாம்ககோசரஃ |
ஸர்வாகமரஹஸ்யார்தஃ ஸ்மரணாத்பாபனாஶினீ ||

லலிதாயாமஹேஶான்யா மாலா வித்யா மஹீயஸீ |
னரவஶ்யம் னரேம்த்ராணாம் வஶ்யம் னாரீவஶம்கரம் ||

அணிமாதிகுணைஶ்வர்யம் ரம்ஜனம் பாபபம்ஜனம் |
தத்ததாவரணஸ்தாயி தேவதாப்றும்தமம்த்ரகம் ||

மாலாமம்த்ரம் பரம் குஹ்யம் பரம் தாம ப்ரகீர்திதம் |
ஶக்திமாலா பம்சதாஸ்யாச்சிவமாலா ச தாத்றுஶீ ||

தஸ்மாத்கோப்யதராத்கோப்யம் ரஹஸ்யம் புக்திமுக்திதம் ||

|| இதி ஶ்ரீ வாமகேஶ்வரதம்த்ரே உமாமஹேஶ்வரஸம்வாதே
   தேவீகட்கமாலாஸ்தோத்ரரத்னம் ஸமாப்தம் ||

சிவ பஞ்சாக்ஷரி ஸ்தோத்ரம்

சிவ பஞ்சாக்ஷரி ஸ்தோத்ரம்




ரசன: ஆதி ஶம்கராசார்ய

ஓம் னமஃ ஶிவாய ஶிவாய னமஃ ஓம்
ஓம் னமஃ ஶிவாய ஶிவாய னமஃ ஓம்

னாகேன்த்ரஹாராய த்ரிலோசனாய
பஸ்மாங்கராகாய மஹேஶ்வராய |
னித்யாய ஶுத்தாய திகம்பராய
தஸ்மை “ன” காராய னமஃ ஶிவாய || 1 ||

மன்தாகினீ ஸலில சன்தன சர்சிதாய
னன்தீஶ்வர ப்ரமதனாத மஹேஶ்வராய |
மன்தார முக்ய பஹுபுஷ்ப ஸுபூஜிதாய
தஸ்மை “ம” காராய னமஃ ஶிவாய || 2 ||

ஶிவாய கௌரீ வதனாப்ஜ ப்றுன்த
ஸூர்யாய தக்ஷாத்வர னாஶகாய |
ஶ்ரீ னீலகண்டாய வ்றுஷபத்வஜாய
தஸ்மை “ஶி” காராய னமஃ ஶிவாய || 3 ||

வஶிஷ்ட கும்போத்பவ கௌதமார்ய
முனீன்த்ர தேவார்சித ஶேகராய |
சன்த்ரார்க வைஶ்வானர லோசனாய
தஸ்மை “வ” காராய னமஃ ஶிவாய || 4 ||

யஜ்ஞ ஸ்வரூபாய ஜடாதராய
பினாக ஹஸ்தாய ஸனாதனாய |
திவ்யாய தேவாய திகம்பராய
தஸ்மை “ய” காராய னமஃ ஶிவாய || 5 ||

பஞ்சாக்ஷரமிதம் புண்யம் யஃ படேச்சிவ ஸன்னிதௌ |
ஶிவலோகமவாப்னோதி ஶிவேன ஸஹ மோததே ||

ஞாயிறு, 3 ஜனவரி, 2021

அருள் மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்


அருள் மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்
 
மூலவர்:அமிர்தகடேஸ்வரர்
உற்சவர்:காலசம்ஹாரமூர்த்தி
அம்மன்:அபிராமியம்மன்
தல விருட்சம்:வில்வம்
தீர்த்தம்:அமிர்தபுஷ்கரிணி, கங்கை தீர்த்தம்
பழமை:2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:திருக்கடவூர்
ஊர்:திருக்கடையூர்
மாவட்டம்:நாகப்பட்டினம்
மாநிலம்:தமிழ்நாடு
பாடியவர்கள்: அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரர்

தேவாரப்பதிகம்

சடையுடை யானும்நெய் யாடலானும் சரிகோவண உடையுடை யானுமை ஆர்ந்தவொண் கண்ணுமை கேள்வனும் கடையுடை நன்னெடு மாடமோங்கும் கடவூர் தனுள் விடையுடை யண்ணலும் வீரட்டானத் தரனல்லனே.திருஞானசம்பந்தர்.

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 47வது தலம்.

திருவிழா:எம சம்ஹாரம் - சித்திரை மாதம் - 18 நாட்கள் - மகம் நட்சத்திரத்தன்று இத்திருவிழா சிறப்பாக இத்தலத்தில் நடக்கும். தினமும் சுவாமி புறப்பாடு நடைபெறும் - 6 ம் நாள் அன்று கால சம்கார மூர்த்தி ஒரே ஒரு முறை வெளியே வரும். கார்த்திகை - சோம வாரம் 1008 சங்காபிசேகம் இத்தலத்தில் மிக சிறப்பாக நடைபெறும் என்பது குறிப்படத்தக்கது. புரட்டாசி நவராத்திரி, மார்கழி மாதம் விதிபாதம் அன்று ஏக தின உற்சவம் இங்கு சிறப்பாக நடக்கும். ஆடிப்பூரம், நவராத்திரி, பௌர்ணமி பூஜை ஆகியவை இத்தலத்தில் வெகு விமரிசையாக நடக்கும்,கந்தர் சஷ்டி, மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகியவை தலத்தின் சிறப்பான விசேச நாட்கள் ஆகும். தை அமாவாசை அன்று அந்தாதி பாராயணம் பாடி நிலவு காட்டி வழிபடுதல் இங்கு விசேசம். மாதாந்திர பிரதோச நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல், தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.   
       
தல சிறப்பு:இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அட்டவீரட்ட தலங்களில் இது எமனை காலால் எட்டி உதைத்து சம்காரம் செய்த தலம். கருவறைக்குள் இருக்கும் இந்த மூலவர் ஒரு லிங்கம்தான் என்றாலும் அதை உற்றுப் பார்க்கும்போது பின்னால் இன்னொரு லிங்கம் பிம்பமாக தெரியும். முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் சிவன் சன்னதி வலதுபுறம் நந்திக்கு அருகே வெளிப்பிரகாரத்தில் உள்ள கள்ள வாரண விநாயகர் சன்னதி விநாயகரின் மூன்றாவது படை வீடாகும்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 110 வது தேவாரத்தலம் ஆகும். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது கால சக்தி பீடம் ஆகும்   
       
திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.  
     
முகவரி:நிர்வாக அதிகாரி, அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், திருக்கடையூர் - 609 311. நாகப்பட்டினம் மாவட்டம்.போன்:+91- 4364 - 287 429.  
      
பொது தகவல்:பிரகாரத்தில் ஒரு சன்னதியில் பார்வதி, முருகனை வலது மடியில் அமர்த்திய கோலத்தில் "குகாம்பிகை'யாக இருக்கிறாள். இங்குள்ள "கள்ளவாரண பிள்ளையார்' துதிக்கையில் அமிர்த கலசம் வைத்தபடி காட்சியளிக்கிறார்.  பிரம்மன், அகஸ்தியர், புலஸ்தியர், வாசுகி, துர்க்கை முதலியோர் வழிபட்ட தலம் இது. விநாயகரின் அறுபடைவீடுகளில் இத்தலமும் ஒன்று. இத்தலத்து உற்சவரின் திருநாமம் காலசம்ஹாரமூர்த்தி. இவரை வணங்கினால் எமபயம் நீங்கும்.

முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் சிவன் சன்னதி வலதுபுறம் நந்திக்கு அருகே வெளிப்பிரகாரத்தில் உள்ள கள்ள வாரண விநாயகர் சன்னதி விநாயகரின் மூன்றாவது படை வீடாகும். இத்தலம் ஆயுள் விருத்தி தலம் என்ற சிறப்பு பெற்றதாகும்.

பிரார்த்தனை:சஷ்டியப்த பூர்த்தி, உக்ரரத சாந்தி, பீமரதசாந்தி, சதாபிசேகம், ஜன்ம நட்சத்திரம், ஆயுஷ்ய ஹோமம் ஆகியவை செய்வதற்கு மிகவும் புகழ்பெற்ற தலம் இது. 59 வயது முடிந்து 60 வயது தொடங்குகிறவர்கள் உக்ரரத சாந்தி பூஜை செய்கிறார்கள். 60 வயது பூர்த்தியடைந்து 61 வது வயது தொடங்குகிறவர்கள் சஷ்டியப்த பூர்த்தி பூஜை செய்கிறார்கள். 70 வயது பூர்த்தியாகி 71 வயது தொடங்குகிறவர்கள் பீமரத சாந்தி பூஜை செய்கிறார்கள். 81 வயது தொடங்குகிறவர்கள் சதாபிசேகம் மற்றும் ஆயுஷ்ய ஹோமம் செய்கிறார்கள். அறுபது வயது பூர்த்தி ஆகி தமிழ் வருடம் தமிழ் மாதம் அன்று அவரவர் பிறந்த தேதி அன்று சஷ்டியப்தபூர்த்தி (மணிவிழா) செய்து கொள்வதற்காக தமிழகம் மட்டுமல்லாது, இந்தியாவின் பிறமாநிலங்கள் மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் பக்தர்கள் இத்தலத்துக்கு பக்தர்கள் வருகிறார்கள்.

50 ஆம் கல்யாண ஆண்டு விழா, ஜாதக ரீதியான தோசங்கள் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் வழிபடுகின்றனர். இங்குள்ள அம்பாள் அபிராமி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள். இவளை வழிபடுவோர்க்கு செல்வ செழிப்பு, கல்யாண வரம், குழந்தைவரம் , கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம் ஆகியவற்றை தருகிறாள். இத்தல மூர்த்தியான காலசம்கார மூர்த்தியை வழிபட்டால் ஆயுள் பலம் அதிகரிக்கும்.

உடல் பலம் பெறும்.நோய் நொடி விலகும். எமபயம் அண்டாது. மிகச் சிறந்த பரிகாரத்தலமாகத் திகழும் இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் அமிர்தகடேசுவரரை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.

நேர்த்திக்கடன்:அங்க பிரதட்சணம் , கல்யாணவரம் வேண்டுவோர் கல்யாண மாலை சாத்துதல், குழந்தை பாக்கியம் வேண்டுவோர் குழந்தை தத்துக் கொடுத்தல் ஆகியவற்றை நேர்த்திகடன்களாக செய்கின்றனர். வியாதிகள் குணமாக சங்காபிசேகமும்,புத்திரபாக்கியம் வேண்டுவோர் ருத்ராபிசேகமும் சுவாமிக்கு செய்கின்றனர். இருதய சம்பந்தமான நோய்கள் குறிப்பாக ஹார்ட் அட்டாக் உள்ளவர்கள் இத்தலத்தில் சப்த திரவிய மிருத்யுஞ்சய ஹோமம் செய்தால் கண்டிப்பாக உயிர் பிழைக்கிறார்கள்.இது போல பலபேர் செய்து உயிர் பிழைத்திருக்கிறார்கள். அம்மனுக்கு புடவை சாத்துதலும்,அபிசேகம் செய்தலும், சந்தனகாப்பு சாத்துதலும் பக்தர்களின் முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது. மா, மஞ்சள் பொடி, திரவிய பொடி, தைலம், பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். மாங்கல்ய தோஷம் உள்ள பெண்கள், புதுத்தாலியை அம்பாள் பாதத்தில் வைத்து பூஜித்து, கட்டிக்கொண்டு, ஏற்கனவே கட்டியிருந்த தாலியை காணிக்கையாக செலுத்துகின்றனர். மேலும்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகிவற்றை செய்யலாம்.சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம். தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம்.வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.  
      
தலபெருமை:அமுதத்தை மகாவிஷ்ணு தேவர்களுக்கு பரிமாறும்முன், சிவபூஜை செய்ய எண்ணினார்.  சிவபூஜையின் போது அம்பிகையையும் பூஜிக்க வேண்டும் என்பது நியதி. எனவே, மகாவிஷ்ணு தனது ஆபரணங்களை கழற்றி வைத்தார். அதிலிருந்து அபிராமி அம்பிகை தோன்றினாள். பின் பூஜை செய்து தேவர்களுக்கு அமுதம் பரிமாறினார் மகாவிஷ்ணு.

மகாவிஷ்ணு மார்பில் அணிந்திருக்கும் ஆபரணங்களில், லட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். அண்ணனின் ஆபரணத்தில் இருந்து அபிராமி தோன்றியதால், மகாவிஷ்ணுவை, அம்பிகையின் அன்னையாகவும் கருதி வணங்குகிறார்கள். அபிராமி அம்பிகையின் பக்தரான சுப்பிரமணிய பட்டர், அம்பிகையின் முகத்தை நினைத்துக்கொண்டே, சரபோஜி மன்னரிடம் ஒரு அமாவாசை தினத்தை, பவுர்ணமி என்று கூறிவிட்டார். எனவே மன்னர், அந்நாளை பவுர்ணமி என நிரூபிக்காவிட்டால் மரணதண்டனை என்று சொல்லிவிட்டார்.

பட்டர் அக்னி வளர்த்து அம்பிகையை வேண்டி அபிராமி அந்தாதி பாடினார். அவர் 79ம் பாடல் பாடியபோது, அபிராமி தன் காதில் அணிந்திருந்த சந்திர அம்சமான தோட்டை வானில் எறியவே, அது முழுநிலவாக காட்சி தந்தது.

அபிராமி அந்தாதி பாடப்பட்ட நிகழ்ச்சி தை அமாவாசையன்று நடக்கிறது. அன்று அம்பிகை புஷ்ப அலங்காரத்தில் காட்சி தருகிறாள். அப்போது கொடிமரம் அருகில் கோயில் அர்ச்சகர்கள் ஒவ்வொரு அந்தாதியையும் பாடி, அம்பிகைக்கு தீபாராதனை காட்டுகின்றனர். 79ம் பாடல் பாடும்போது, வெளியில் மின்விளக்கினை எரியச்செய்கிறார்கள். இந்த வைபவத்தை காண ஆயிரக்கணக்கான மக்கள் திரள்வர்.

காலசம்ஹார மூர்த்தி: மிருகண்டு முனிவர் - மருத்துவதி அம்மாள் தம்பதிகளுக்கு நீண்ட நாட்களாக பிள்ளை வரம் இல்லை. மிருகண்டு முனிவர் கடுந்தவம் இருந்ததன் காரணமாக ஈசன் குழந்தை வரம் அருளினார். குறைந்த ஆயுளுடனும், நிறைந்த அறிவும் உடைய குழந்தை பிறக்கும் என்று ஈசன் கூறினார். இதனையடுத்து தனக்கு பிறந்த குழந்தைக்கு மார்க்கண்டேயன் என்று பெயரிட்டு வளர்த்தார்.16 வயது ஆனவுடன் ஆயுள் பற்றிய கவலை குடும்பத்தாருக்கு பிறந்தது.

தன் பிறப்பில் உள்ள பிரச்சினையைத் தெரிந்து கொண்ட மார்க்கண்டேயன் சிவதலங்களாகச் சென்று வழிபட்டான். 107 சிவதலங்களை வழிபட்ட பின் 108 வது சிவதலமாக திருக்கடையூர் வந்தான். அப்போது அவனது இறுதிநாளும் வந்துவிட்டது. இங்கு சிவனை வேண்டினார்.

எமன் அவரது உயிரைப்பறிக்க வந்தபோது,  எமன் அவனது உயிரைப்பறிக்க நேராக அவரே வந்து விட்டார். எமனைக் கண்ட மார்க்கண்டேயர் நேரே ஓடிப்போய் அமிர்தகடேசுவரரை இறுகக் கட்டிக் கொண்டான். எமன் பாசக்கயிறை வீசினார். அவன் வீசிய பாசக்கயிறு மார்க்கண்டேயர் மீது மட்டுமே விழாமல் லிங்க உருவில் இருந்த அமிர்தகடேசுவரரையும் சேர்த்து சுருக்குப்போட்டு இழுத்தது.

சிவபெருமான் கோபம் கொண்டு என்னையுமா இழுக்கிறாய் என்று கூறி காலனை எட்டி உதைத்து சூலாயுதத்தால் சம்காரம் செய்துவிட்டார்.அத்தோடு, ""மார்க்கண்டா! நீ என்றும் பதினாறாய், சிரஞ்சீவியாய் இரு,'' என்று அருளினார்.பின் காலன் சம்காரம் செய்யப்பட்டு விட்டதால் பூமியில் இறப்பே இல்லாமல் போய்விட்டது. பூமிதேவிக்கு பாரம் தாங்க முடியவில்லை.

தேவி ஈசனிடம் முறையிட, கோபம் தணிந்து எமனுக்கு மீண்டும் உயிர் தந்து வரம் அருளினார். சிவன் எமதர்மனின் உயிரை எடுத்ததும், திரும்பி உயிர் கொடுத்ததும் இந்த தலத்தில்தான். இவர் காலசம்ஹார மூர்த்தி என்ற பெயரில் அருளுகிறார். இத்தலத்தில் காலசம்ஹார மூர்த்தி, இடது காலை ஆதிசேஷன் தலை மீது வைத்திருக்கிறார். சூலத்திற்கு கீழே எமன் இருக்கிறார். அருகில் குண்டோதரன், ஒரு கயிற்றில் எமனை கட்டி இழுத்தபடியும், மார்க்கண்டேயர் வணங்கியபடியும் காட்சி தருகின்றனர்.

சாதாரணமாக காலசம்ஹாரமூர்த்தியை தரிசிக்கும்போது, எமனை பார்க்கமுடியாது. பூஜை செய்யும்போது பீடத்தை திறப்பார்கள். அப்போது தான் எமனைப் பார்க்க முடியும். அதாவது எமன் இல்லாமல் சுவாமி, கையில் சூலத்துடன் காட்சி தருவதை "சம்ஹார கோலம்' என்றும், எமனுடன் இருப்பதை "உயிர்ப்பித்த கோலம்' என்றும் சொல்கிறார்கள். ஆக, ஒரே சமயத்தில் "சம்ஹார' மற்றும் "அனுக்கிர மூர்த்தியை' தரிசிக்கலாம்.  இச்சன்னதியிலுள்ள பாலாம்பிகை பால (சிறுமி) வடிவில், இரு கரங்களுடன் காட்சி தருகிறாள். அருகில் லட்சுமி, சரஸ்வதி இருவரும் இருக்கின்றனர்.

சிதம்பரத்தில் ஆகாயம் ரகசியம் போல, இங்கு சுவாமிக்கு வலப்புற மதிலில் யந்திர தகடு ஒன்று உள்ளது. இதனை, "திருக்கடையூர் ரகசியம்' என்கிறார்கள். முதலில் பாபகரேஸ்வரரையும், பின் சுவாமியையும், அடுத்து யந்திர தகட்டையும் வணங்கினால் ஆயுள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. இத்தலத்தில் காலசம்ஹாரமூர்த்தி சன்னதிக்கு நேரே எமன் இரு கைகளையும் கூப்பி வணங்கி நின்ற கோலத்தில் இருக்கிறார். அருகில் எருமை நிற்கிறது.

தீர்த்த சிறப்பு: மார்க்கண்டேயர் சிவபூஜைக்காக காசியில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்தார். அவருக்காக சிவன், திருக்கடவூர் மயானம் பிரம்மபுரீஸ்வரர் கோயில் அருகே ஒரு கிணற்றில் கங்கையைப் பொங்கும்படி செய்தார். மார்க்கண்டேயர் அந்த நீரை எடுத்து சுவாமிக்கு பூஜை செய்தார். தற்போதும் இங்கேயே தீர்த்தம் எடுக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த தீர்த்தத்தில் பக்தர்கள் யாரும் நீராடுவது கிடையாது. பங்குனி மாதம் அசுபதி நட்சத்திரத்தன்று இத்தீர்த்தத்தில் கங்கை பொங்கியது. இதன் அடிப்படையில் அன்று ஒருநாள் மட்டும் பக்தர்கள் இதில் நீராட அனுமதிக்கப்படுகிறார்கள்.

மார்க்கண்டேயர் அமுதகடேசுவரர்க்கு அபிசேகம் செய்தபோது கங்கை நீருடன் இப்பிஞ்சிலமும் சேர்ந்து வந்ததாக ஐதீகம். பிஞ்சிலம் என்னும் சாதி மல்லி ஆண்டு முழுவதும் பூத்துக் கொண்டிருக்கக்கூடியது.இங்கே இம்மலர் சுவாமிக்கு மட்டுமே சாத்தப்படுகிறது. மற்றவர்கள் இதை பயன்படுத்தக்கூடாது.இதன் ஒரு பூவை எடுத்து அர்ச்சித்தால் அது 1008 தடவை அர்ச்சித்தற்கு சமம்.

சதாபிஷேகம்: திருக்கடையூரில் பூர்ணாபிஷேகம் (100வயது பூர்த்தி), கனகாபிஷேகம் (90 வயது), சதாபிஷேகம், பீமரதசாந்தி, மணிவிழா மற்றும் ஆயுஷ்ய ஹோமம் செய்து கொண்டால் ஆயுள் நீடிக்கும் என்பது நம்பிக்கை. இந்த திருமணத்தின்போது 16 கலசங்கள் வைத்து, அருகில் நவதானியங்களில் நவக்கிரகங்களை ஆவாஹனம் செய்து, ஹோமம் செய்கின்றனர். கலசங்களில் உள்ள புனித நீரை உறவினர்களைக் கொண்டு, தம்பதியர் மீது ஊற்றுகிறார்கள். இவ்வாறு செய்வதால் பாவங்கள் நீங்கிவிடுவதாக நம்பிக்கை. இந்த பூஜை செய்பவர்கள், அருகிலிருக்கும் கடவூர் மயானம் பிரம்மபுரீஸ்வரரையும் வழிபட்டால், இந்த வேண்டுதல் பூர்த்தியாவதாக ஐதீகம்.

திருக்கடையூரில் 60, 80ம் திருமணம் செய்பவர்கள் திதி, நாள், நட்சத்திரம் எதுவும் பார்க்கத்தேவையில்லை. ஆண்கள் தங்களது ஜென்ம நட்சத்திரத்தன்று திருமணம் செய்து கொள்வது மரபாக உள்ளது. அமிர்தகடேஸ்வரர் லிங்கத்தில் எமன் வீசிய பாசக்கயிறின் தடம் இருக்கிறது. இதனை சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்யும்போது மட்டுமே பார்க்க முடியும். தினமும் சாயரட்சை பூஜையின்போது மட்டும் ஆதிவில்வவன நாதருக்கே முதல்பூஜை செய்யப்படுகிறது. இவரது சன்னதிக்குள் மார்க்கண்டேயர், அமிர்தகடேஸ்வரருக்கு அபிஷேக தீர்த்தம் எடுக்கச்சென்ற பாதாள குகை இருக்கிறது.

திருக்கடையூர் கோயிலில் முதலில் வழிபட வேண்டிய மூர்த்திகள், அகத்தியர் வழிபட்ட பாபகரேஸ்வரர் மற்றும் புலத்தியர் வணங்கிய புண்ணியகரேஸ்வரர் ஆவர். இவர்களை வணங்கியபின்பே, மற்ற சுவாமிகளை வழிபட வேண்டும் என்பது ஐதீகம். இவ்விருவரையும் வணங்கும்போது பாவங்கள் நீங்கி, புண்ணியம் உண்டாவதாக நம்பிக்கை. புண்ணியகரேஸ்வரருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. இச்சன்னதி எதிரேயுள்ள சுவரில் உள்ள துளை வழியாக அகத்தியர் பூஜித்த பாவகரேஸ்வரரை வணங்கி விட்டு பின், புண்ணியகரேஸ்வரரை வணங்க வேண்டும்.  இத்தலத்து முருகனைக் குறித்து, அருணகிரியார் திருப்புகழ் பாடியிருக்கிறார்.

எமன் லிங்கத்தின் மீது பாசக்கயிறை வீசியதால் ஏற்பட்ட வடு இன்னும் சிவலிங்கத்திருமேனியில் உள்ளது. கால சம்கார மூர்த்தியாக உள்ளவர் செப்பு விக்ரகமாக முகத்தில் கோபம், கம்பீரம் எல்லாம் நிரம்பி சூலம் கீழ் நோக்கி காலன் மீது பாய்ச்சி, வலக்காலை ஊன்றி இடக்காலை உயர்த்தி எமனை எட்டி உதைக்கின்ற நிலையில் தெற்கு முகமாக நிற்கிறார். பல சித்தர்கள் வழிபாடு செய்த தலம். அதில் முக்கியமானவர் பாம்பாட்டி சித்தர் ஆவார்.

நவகிரகங்கள் இங்கு கிடையாது. நவகிரகங்களுக்கு இங்கு பவர் இல்லை.கிரக சாந்தி செய்வோர் கால சம்கார மூர்த்திக்கே பூஜை செய்து பலன் பெறுகிறார்கள். ராகு தோசங்கள் இங்கு கிடையாது. அம்பாள் மகா விஷ்ணு ஆபரணத்திலிருந்து உண்டானவள். 63 நாயன்மார்களில் காரி நாயனாரும், குங்கிலியக்கலய நாயனாரும் இந்த திருத்தலத்தில் வாழ்ந்து தொண்டு செய்து முக்தியடைந்தார்கள். அபிராமி அந்தாதி பாடிய அபிராமி பட்டர் அவதரித்த புண்ணிய பூமியும் இதுதான்.

தல வரலாறு:பிரம்மா சிவனிடம் ஞானஉபதேசம் பெற விரும்பி கைலாயம் சென்றார். சிவன் அவரிடம் வில்வ விதைகள் கொடுத்து, பூலோகத்தில் எவ்விடத்தில் விதைக்கப்பட்ட ஒரு நாழிகைக்குள் வில்வ மரம் வளர்கிறதோ, அவ்விடத்தில் ஞானஉபதேசம் செய்வதாக கூறினார். அதன்படி பிரம்மா, இத்தலம் வந்து சிவனை வணங்கினார்.

சிவன் அவருக்கு காட்சி தந்து, ஞான உபதேசம் செய்து வைத்தார். இவரே இத்தலத்தின் மூலமூர்த்தி ஆதி வில்வவனநாதராக தனிசன்னதியில் அருளுகிறார். பின், பாற்கடலில் அமிர்தம் எடுத்த தேவர்கள், விநாயகரை வணங்காமல் அதை உண்ணச்சென்றனர். எனவே, விநாயகர் அதனை மறைத்து வைத்துவிட்டார்.

பின் விநாயகரை வணங்கிய தேவர்கள், அமிர்த கலசத்தை வாங்கி சிவபூஜை செய்வதற்காக இத்தலத்தில் வைத்தனர். அப்போது அமிர்த குடம் இருந்த இடத்தில் சுயம்புலிங்கம் உண்டானது. அமுதத்தில் இருந்து தோன்றியதால், "அமிர்தகடேஸ்வரர்' என்றும் பெயர் பெற்றார்.

சிறப்பம்சம்:அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அட்டவீரட்ட தலங்களில் இது எமனை காலால் எட்டி உதைத்து சம்காரம் செய்த தலம். கருவறைக்குள் இருக்கும் இந்த மூலவர் ஒரு லிங்கம்தான் என்றாலும் அதை உற்றுப் பார்க்கும்போது பின்னால் இன்னொரு லிங்கம் பிம்பமாக தெரியும். அமிர்தகடேஸ்வரர் லிங்கத்தில் எமன் வீசிய பாசக்கயிறின் தடம் இருக்கிறது. இதனை சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்யும்போது மட்டுமே பார்க்க முடியும். முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் சிவன் சன்னதி வலதுபுறம் நந்திக்கு அருகே வெளிப்பிரகாரத்தில் உள்ள கள்ள வாரண விநாயகர் சன்னதி விநாயகரின் மூன்றாவது படை வீடாகும்.

அருள் மிகு தியாகராஜர் திருக்கோவில்

அருள் மிகு தியாகராஜர் திருக்கோவில்




மூலவர்:தியாகராஜர், வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார்
அம்மன்:கமலாம்பிகை, அல்லியங்கோதை, நீலோத்பலாம்பாள்
தல விருட்சம்:பாதிரிமரம்
தீர்த்தம்:கமலாலயம்
பழமை: 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:திருவாரூர்
ஊர்:திருவாரூர்
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்:தமிழ்நாடு
பாடியவர்கள்: சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்

தேவாரப்பதிகம்

துன்பெலாம் அற நீங்கிச் சுபத்தராய் என்பெலாம் நெக்கு இராப்பகல் ஏத்திநின்று இன்பராய் நினைந்து என்றும் இடையறா அன்பர் ஆமவர்க்கு அன்பர் ஆரூரரே.-திருநாவுக்கரசர்.

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 87வது தலம்.

திருவிழா:மார்கழி மாதம் - மார்கழி திருவாதிரை - தியாகேசர் பெருமானின் பாதம் காட்சியளிக்கிறார் என்பது மிகவும் விசேஷம் பங்குனி மாதம் - பங்குனி உத்திர - மாசி மாத அஸ்தத்தில் கொடி ஏற்றி பங்குனி மாதம் ஆயில்யத்தில் தேரோட்டம் - 10 நாட்கள் திருவிழா- வியாக்ரபாதருக்கு காட்சி தந்த சிறப்பை காட்டும் திருவிழா இது. இதுவும் இத்தலத்தின் சிறப்பான விழா ஆடிப்பூரம் - 10 நாட்கள் திருவிழா - இத்திருவிழா இத்தலத்தில் மிகவும் சிறப்பாக நடைபெறும் விழாக்களில் ஒன்றாகும் மாசி மக நாள் சுந்தரருக்கு பூதகணம் நெல் கட்டி செல்லும் விழா, சித்திரை விழா, ஆடிப்பூரம் விழா, தெப்பதிருவிழா, நிறைபணி விழா ஆகியவை இத்தலத்தின் சிறப்பான விழா நாட்கள் ஆகும் மாதாந்திர பிரதோஷம் இத்தலத்தில் மிகவும் விசேஷமானது. வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல், தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போது கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடக்கும்.   
       
தல சிறப்பு:இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தியாகராஜர் என்றால் கடவுள்களுக்கெல்லாம் ராஜா என்று பொருள். தியாகராஜர் கோயிலும் கோயில்களில் எல்லாம் முதன்மையானதாக விளங்குகிறது. 9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்), 100க்கும் மேற்பட்ட சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள், 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் என பிரமாண்டமாக விளங்குகிறது. இக்கோயிலை பெரியகோயில் என்றும் சொல்வர்.திருவாரூரில் தியாகராஜரின் முக தரிசனம் காண்பவர்கள், 3 கி.மீ. தொலைவிலுள்ள விளமல் சிவாலயத்தில் பாத தரிசனம் காண்பது சிறப்பு. கிழக்கு கோபுரத்தின் உள்புறம் உள்ள 1000 கல்தூண்கள், முன்காலத்தில், திருவிழாக்காலங்களில் பந்தல் போடுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. மரகதலிங்கம் : தியாகராஜ சுவாமிக்கு தினமும் அபிஷேகம் கிடையாது. இந்திரன் பூஜித்த, சிறிய மரகதலிங்கத்திற்கு (வீதி விடங்க லிங்கம்) தான் காலை 8.30, 11மணி, இரவு 7 மணிக்கு அபிஷேகம் நடக்கும். அபிஷேகத்திற்கு பின் சிறிய வெள்ளிப்பெட்டியில் மலர்களுக்கு நடுவே இந்த லிங்கம் வைக்கப்படும். அதன் மேல் வெள்ளிக்குவளை சாற்றி, அதிகாரிகள் முன்னிலையில் பெட்டி பூட்டப்படும். மற்ற நேரங்களில், பூட்டிய இந்த பெட்டி தியாகராஜரின் வலதுபுறத்தில் இருக்கும்.அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது கமலை சக்தி பீடம் ஆகும் சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 150 வது தேவாரத்தலம் ஆகும்.   
       
திறக்கும் நேரம்:காலை 5 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.  
     
முகவரி:அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர் - 610 001, திருவாரூர் மாவட்டம்.போன்:+91- 4366 - 242 343, +91- 94433 54302.  
      
பொது தகவல்:திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் தமிழகத்தின் புகழ்பெற்ற தலம். இந்தக் கோயிலை சுற்றிப் பார்க்க வேண்டுமானால், முழுமையாக ஒருநாள் ஆகும்.

பெரும்பாலான கோயில்களின் சுற்றுப்பிரகாரத்தில் சிறிய சன்னதிகள்தான் இருக்கும். ஆனால், திருவாரூர் கோயிலின் உள்ளே இருக்கும் சன்னதிகள், கிட்டத்தட்ட தெருவோர கோயில்களின் அளவுக்கு பெரிய அளவில் இருக்கிறது.

வீதிவிடங்க விநாயகர், அசலேஸ்வரர் (இது தனியாக பாடல் பெற்றது), கமலாம்பாள், நீலோத்பலாம்பாள், ரவுத்ர துர்க்கை, ருண விமோசனர், தெட்சிணாமூர்த்தி, ஆனந்தீஸ்வரர், சித்தீஸ்வரர், ஹயக்கிரீஸ்வரர், தட்சணேஸ்வரர், அண்ணாமலேஸ்வரர், வருணேஸ்வரர், ஓட்டு தியாகேசர், துளசிராஜா பூஜித்த கோயில், தெய்வேந்திரன் பூஜித்த லிங்கம், சேரநாதர், பாண்டியநாதர், ஆடகேஸ்வரர், புலஸ்திய ரட்சேஸ்வரர், புலஸ்திய பிரம்மேஸ்வரர், பக்தேஸ்வரர், வில்வாதீஸ்வரர் மற்றும் பாதாளேஸ்வரர் ஆகியோர் இந்த சன்னதிகளில் அருள் செய்கின்றனர்.

கோயிலின் மேற்கு கோபுர நுழைவாயிலில் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. இவரை வழிபட்டால் தொலைந்த பொருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.அம்மன் சன்னதியின் உள்பிரகார விநாயகர் சன்னதியில், ஐயப்பனும் அருள்பாலிக்கிறார்.

மாற்றுரைத்த விநாயகர் சந்நிதி மேலைக்கோபுரத்தின் எதிரில் குளக்கரையில் உள்ளது. "செங்கழுநீர் ஓடை' எனப்படும் ஓரோடை கோயிலுக்கு அப்பால் 1 கி.மீ., தொலைவில் உள்ளது.
 
பிரார்த்தனை:இத்தலத்தில் உள்ள பக்தர்கள் ராகு கால துர்க்கையை வழிபட்டு பதவி உயர்வு பணிமாற்றம் உள்ளிட்ட பல காரியங்கள் வெற்றியடையப் பெறுகிறார்கள்.

இத்தலத்து சண்முகரை வழிபட்டால் பகை விலகும் நீலோத்பலாம்பாளை வழிபட்டால் அர்த்தஜாமத்தில் நைவேத்தியம் செய்து பால் சாப்பிட்டால் குழந்தை வரம் கிடைக்கிறது.

பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவதும் நிகழ்கிறது. ருணவிமோசனப் பெருமானை வழிபட்டால் கடன் தொல்லை, உடற்பிணிகள் ஆகியன விட்டு விலகும்.

மேலும் பிரதான மூர்த்தியான தியாகேசரை வணங்கினால் திருமண வரம், குழந்தை வரம், கல்வி மேன்மை, வேலை வாய்பபு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு ஆகியவை நிறைவேறுகிறது.

மூலவர் வன்மீகி நாதரை வழிபட்டால் எண்ணற்ற வரங்களும், செல்வ செழிப்பும் கிடைக்கும், பாவங்கள் நீங்கும், ஆணவம் மறையும். அம்மன் சன்னதியில் உள்ள அட்சர பீடத்தை வணங்கினால் கல்வியறிவு பெருகும்.
 
நேர்த்திக்கடன்:வீதிவிடங்க விநாயகருக்கு பின் உள்ள பிரம்மநந்தியை மழைவேண்டி பிரார்த்தித்து இவர் மீது நீர் நிரப்பினால் மழை கொட்டும். பசுக்கள் கறவாது இருந்தால் இவருக்கு அருகு சாற்றி அதனை பசுவுக்குக் கொடுத்தால் நன்றாகப் பால் கறக்கும் கமலாம்பாளை வணங்கினால் ஞானம் கிட்டும். ஊமைகள் கூட வியாழனுக்கு குருவாவார்கள். புரட்டாசி மகர நவமியில் பால் அன்னம் நிவேதிப்பவர்கள் முக்தியடைவர். ஜூரம் நீங்க, ஆயுள் அதிகரிக்க இங்குள்ள ஜூர தேவரை மிளகுரசம் படைத்து வழிபடுகிறார்கள் மேலும்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகியவற்றை செய்யலாம். சுவாமிக்கு வைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம் தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம். வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம். நினைத்த காரியம் நிறைவேற கடவுள்களுக்கெல்லாம் ராஜாவான தியாகராஜருக்கு விஷ்ணு பகவான் செய்த "முகுந்தார்ச்சனை செய்யலாம். முசுகுந்த சக்கரவர்த்தி தியாகராஜருக்கு செய்த "முசுகுந்தார்ச்சனை' செய்யலாம்.  
      
தலபெருமை:திருநள்ளாறு  சென்றாலும்  திருவாரூர் செல்ல வேண்டும்

சதயகுப்தன் என்ற அசுரன், தேவர்களுக்கு தொந்தரவு கொடுத்தான். இவனை சனிதோஷம் பிடித்தது. எனவே நவக்கிரகங்களை எதிர்த்து போரிட்டான்.

பயந்து போன கிரகங்கள் திருவாரூர் சிவனிடம் முறையிட்டனர்.  சிவன், "என்னை நாடி வரும் பக்தர்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்கக்கூடாது' என்ற நிபந்தனையின்படி நவக்கிரகங்களை காப்பாற்றினார். எனவே, நவக்கிரகங்கள் இங்கு நேர்கோட்டில் சிவனை நோக்கியபடி அமைந்துள்ளன.   

கிரகங்கள்   பக்தர் களுக்கு தொல்லை கொடுக்கிறதா       என்பதை கண்காணிக்க விநாயகர் சிலை கிரகங்களின் சன்னதியில் உள்ளது. எனவே தான் "திருநள்ளாறு சென்றாலும் திருவாரூர் செல்ல வேண்டும்'  என்பார்கள்.

நாற்பெரும் விநாயகர் : தியாகராஜர் கோயிலில் 84 விநாயகர்கள் உள்ளனர்.  இவர்களில் நால்வருக்கு தனி சிறப்பு உண்டு. அம்மன் சன்னதி பிரகாரத்திலுள்ள, நடுக்கம் தீர்த்த விநாயகரை, நரம்புத்தளர்ச்சி உள்ளவர்கள், டென்ஷனாக இருப்பவர்கள் வழிபடுகிறார்கள்.

மேற்கு கோபுரத்தின் அருகில்         சுந்தரருக்கு சிவனால் தரப்பட்ட பொன், நிஜத்தங்கம் தானா என்பதை சோதித்துப் பார்த்து தந்த, "மாற்றுரைத்த  விநாயகர்' அருள்பாலிக்கிறார். நகை           வாங்கும்முன் பெண்கள் இவரை வழிபடுகின்றனர்.

சிவன் சன்னதியின் முதல் பிரகாரத்திலுள்ள மூலாதார கணபதி, சுருண்டு படுத்த ஐந்து தலை நாகத்தின் நடுவில் விரிந்த தாமரைப்பூ மீது நர்த்தனம் ஆடும் நிலையில் உள்ளார். யோகா பழகுபவர்கள் இவரை வணங்குவது சிறப்பு.

சுவாமி சன்னதியின் முதல் பிரகாரத்தில் அருள்பாலிக்கிறார் வாதாபி கணபதி. இந்த விநாயகர் முன்பு நின்று தான், திருவாரூர் முத்துசுவாமி  தீட்சிதர் "வாதாபி கணபதிம்' எனத்  தொடங்கும் பாடலை பாடினார்.

சந்திரனை தலையில்  சூடிய அம்பிகை : திருவாரூரில் மூலவரை வன்மீகநாதர் என்ற திருப்பெயரிட்டு அழைக்கின்றனர். இவர் தலையில் பிறைச்சந்திரனை சூடியுள்ளதைப் போல, இத்தலத்து நாயகி கமலாம்பிகையும் சந்திரனை நெற்றியில் சூடி யிருக்கிறாள். க-கலைமகள், ம-மலைமகள், ல-அலைமகள் ஆகிய முப்பெரும் தேவியரின் அம்சமாக விளங்குகிறாள்.

வலக்கரத்தில் மலர் ஏந்தியும், இடது கரத்தை இடையில் வைத்தும், கால்களை யோகாசன நிலையில் அமைத்தும் ராணி போல் காட்சி தருகிறாள்.

உதிரிப்பூக்கள் : சிவன் கோயில்களில் தேவாரம் பாடியதும், "திருச்சிற்றம்பலம்' எனக் கூறி முடிப்பார்கள். சிதம்பரம் நடராஜர் கோயிலே முதல் கோயில் என்ற அடிப்படையில், அங்கு நடராஜர் நடனமாடும் சிற்றம்பலத்தை இப்படி சொல்வதுண்டு. ஆனால், சிதம்பரம் கோயிலுக்கும் முந்தைய கோயில் திருவாரூர் எனக் கருதப்படுவதால்,         இந்தக்கோயிலில் மட்டும் தேவாரம் பாடி முடித்ததும், "திருச்சிற்றம்பலம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதில்லை.

தமிழகத்திலுள்ள தேர்களிலேயே திருவாரூர் தேர் தான் மிகவும் பெரியதாகவும், அழகாகவும் இருக்கும். இதனால் தான் "திருவாரூர் தேரழகு' என்பார்கள்.

சிவபெருமான் இத்தலத்தில் மட்டும் 364 திருவிளையாடல்கள் நிகழ்த்தியுள்ளார்.

திருவாரூரில் பிறந்தால் முக்தி என்பதால், எமனுக்கு வேலை இல்லாமல் போனது. எனவே இங்கு எமனே, சண்டிகேஸ்வரராக இருந்து இறைவனை வேண்டிதன் வேலையை காப்பாற்றிக் கொண்டார். எமபயம் உள்ளவர்கள் இங்கு வழிபடுவது சிறப்பு.

திருவாரூரில் தியாகராஜரின் முக  தரிசனம் காண்பவர்கள், 3 கி.மீ. தொலைவிலுள்ள விளமல் சிவாலயத்தில் பாத  தரிசனம் காண்பது சிறப்பு.

சிதம்பர ரகசியம் போல, தியாகராஜ ரகசியம் இந்த கோயிலின் ஸ்பெஷாலிட்டி. தியாகராஜருக்கு பின்னுள்ள மூலஸ்தானத்தில் அந்த ரகசியம் உள்ளதாக கூறப்படுகிறது.

இங்குள்ள உற்சவ அம்மன் "மனோன்மணி'க்கு ஆடிப்பூரத்தில் விழா நடக்கிறது.

கமலாம்பிகை கோபுரத்தின் உச்சியில் "ஆகாச பைரவர்' காவல் காத்து வருகிறார்.

இங்குள்ள பைரவர் "சித்தி பைரவர்' எனப்படுகிறார்.

அம்மன் மூலஸ்தானம் அருகே வலதுபுறம் கமலமுனி சித்தர் பீடம் உள்ளது.

 சிவன் சன்னதியின் பிரகாரத்தில் மிகப்பெரிய "சிவசூரியன்' அருள்பாலிக்கிறார்.

கடன் தொல்லை உள்ளவர்கள்,  இங்குள்ள ருண விமோசன ஈஸ்வரனை வழிபடுவது சிறப்பு.

வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ள ராஜநாராயண மண்டபத்தில் தான், தியாகராஜர் திருவாதிரை தினத்தில் பக்தர் களுக்கு அருள்பாலிப்பார்.

இங்கு அஷ்ட துர்க்கை சன்னதிகள் உள்ளன. இந்த துர்க்கைகளையும்,மகாலட்சுமியையும் முத்துசுவாமி  தீட்சிதர் பாடியுள்ளார். அட்சய திரிதியை, தீபாவளி நாட்களில் இங்குள்ள மகாலட்சுமிக்கு நாணயங்களால் சொர்ண அபிஷேகம் செய்வது சிறப்பு.

அம்மன் சன்னதி வெளிப்பிரகார சுவரில் 6 சீடர்களுடன் தெட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். வழக்கமாக நான்கு சீடர்களே இருப்பர்.

மகனை தடவி கொடுக்கும் தாய்:தியாகராஜர் கோயிலில், அம்பிகையான நீலோத்பலாம்பாள் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறாள். அம்மனுக்கு அருகில் ஒரு தோழி நிற்கிறாள். அவள் தோளில் முருகன் இருக்கிறார்.

முருகனின் தலையை அம்மன் தடவிக்கொடுக்கும் விதத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

வீணையில்லாத  சரஸ்வதி :சரஸ்வதி வீணை வைத்திருப்பது வழக்கம். ஆனால், திருவாரூர் சிவன் சன்னதி பிரகாரத்தில் வீணை இல்லாத சரஸ்வதியை தவக்கோலத்தில் காணலாம். இவள் சிவனை நோக்கி       தவமிருக்கிறாள்.

ஹயக்கிரீவரும் தனி சன்னதியில் லிங்க பூஜை செய்யும் காட்சியைக் காணலாம். இவரை "ஹயக்கிரீஸ்வரர்' என்கின்றனர். இந்த இருபெரும் கல்வி தெய்வங்களையும் மாணவர்கள் பூஜித்தால், படிப்பில் கவனம் அதிகரிக்கும் என நம்புகின்றனர்.

மனுநீதிச்சோழன்:தேவலோகத்தில் யார் நேர்மையானவர் என்ற போட்டி ஏற்பட்டது. எமதர்மராஜன் "நானே நேர்மையாளன்' என்றார். நாரதரோ,  பூமியில் மனுநீதிச்சோழனே நேர்மையானவன் என்றார். இதனால் எமன் பசுவாக வடிவெடுத்து, ஒரு கன்றுடன் திருவாரூர் ராஜவீதிக்கு வந்தார்.

அப்போது மனுநீதிச்சோழனின் மகன் வீதிவிடங்கன் தேரில் வந்தான். வேகமாக வந்த தேரில் சிக்கி, கன்று இறந்தது. இதையறிந்த பசு மன்னனின் அரண்மனைக்கு சென்று நீதி கேட்டது. கன்றை இழந்த பசு எவ்வளவு வேதனைப்படுமோ, அதே வேதனையை தானும் பட வேண்டும் என்பதற்காக தன் மகனை தேர்ச்சக்கரத்தில் ஏற்றி கொன்றான் சோழன்.

பசு வடிவில் இருந்த எமதர்மராஜா மனுநீதிச்சோழனுக்கு காட்சி கொடுத்து "நீயே நேர்மையானவன்' எனக் கூறி மறைந்தார். இந்த காட்சியை விளக்கும் கல்தேர் கோயிலின் வடகிழக்கு மூலையில் உள்ளது.

நிற்கும் நந்தி : சிவாலயங்களில், பொதுவாக நந்தி சிலை களை படுத்த கோலத்திலேயே காண முடியும். ஆனால், திருவாரூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள சப்தவிடங்கத்தலங்களில் மட்டும் நந்தியை நின்ற கோலத்தில் காணலாம். மேலும், இவையனைத்தும் உலோகச் சிலைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

வாசல் பிரச்னையில்   தியாகராஜர் : கிழக்கு பார்த்து அமைந்த கோயில்களில், சுவாமி வீதிஉலாவிற்கு கிழக்கு கோபுரம் வழியாகத்தான் வெளியே செல்வார். ஆனால், இங்கு ஈசான்ய திசையிலுள்ள விட்டவாசல் வழியாக வெளியே செல்கிறார்.

இந்திரனிடம் பெற்ற லிங்கத்தை முசுகுந்த சக்கரவர்த்தி இங்கு பிரதிஷ்டை செய்தார். அதை முசுகுந்தனுக்கு கொடுத்த இந்திரன், மீண்டும் அதை தேவலோகம் கொண்டு சொல்ல விரும்பினான். எனவே, தியாகராஜர் கிழக்கு வாசல் வழியாக உலா வரும் போது, அவரை மீண்டும் கொண்டு சென்று விடலாம் என நினைத்து, அங்கேயே அவன் காத்திருப்பதாக ஐதீகம்.

இந்திரனிடமிருந்து தப்புவதற்காக, தியாக ராஜரை பக்தர்கள் ஈசான்யத்தில் உள்ள விட்டவாசல் வழியாக உலா கொண்டு செல்கின்றனர். பெரும்பாலான பக்தர்கள் கோயிலுக்குள்    நுழையக் கூட கிழக்கு வாசலை தவிர்த்து விட்டு, வடக்கு மற்றும் மேற்கு வாசல் வழியாகத்தான் கோயிலுக்கு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதிக பாடல்  பெற்ற தலம் : தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் இத்தலம் தான் மிக அதிகமாக 353 பாடல்களைப் பெற்றுள்ளது. சம்பந்தர் 55 பாடல், அப்பர் 208 பாடல், சுந்தரர் 87 பாடல், மாணிக்கவாசகர் 3 பாடல்கள் பாடியுள்ளனர்.

லலிதாம்பிகை தோன்றிய தீர்த்தம் : லலிதா சகஸ்ரநாமத்தின் மொத்த   வடிவமாக, இத்தலத்து நாயகி கமலாம்பிகை விளங்குகிறாள். எனவே இங்குள்ள தீர்த்தம்        "கமலாலயம்' எனப்படுகிறது.

பங்குனி  உத்திரத்தில் இங்கு நீராடினால், கும்பகோணத்தில் 12 மகாமகம் நீராடிய பலன் உண்டு என்பது ஐதீகம். குளத்தின் நடுவே நாகநாதர் சன்னதி உள்ளது. நாகதோஷம் உள்ளவர்கள் இங்கு வழிபடுகின்றனர்.

தினம்தோறும் பிரதோஷம் : பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை தான் சிவாலயங்களில் பிரதோஷ பூஜை நடத்தப்படும். ஆனால், திருவாரூர் தியாகராஜர் கோயிலில் தினமும் மாலை 4.30 முதல் 6 மணி வரை பிரதோஷ பூஜை              நடத்தப்படுகிறது.

இதை "நித்திய     பிரதோஷம்' என்பார்கள். இந்த நேரத்தில் தியாகராஜரை முப்பத்து முக்கோடி தேவர் களும் தரிசிப்பதாக ஐதீகம். எனவே,   இந்தக் கோயிலுக்கு மாலை வேளையில் சென்றால், எல்லா தேவர்களின்     அருளையும் பெற்ற புண்ணியம்  கிடைக்கும்.
 
 தல வரலாறு:ஒருமுறை இந்திரனுக்கு அசுரர்களால் ஆபத்து ஏற்பட்டது. அதை முசுகுந்த சக்கரவர்த்தி என்பவரின் உதவியுடன் இந்திரன் சமாளித்தான். அதற்கு கைமாறாக முசுகுந்த சக்கரவர்த்தியிடம் "என்ன வேண்டும்?' என கேட்க, திருமால் தன் நெஞ்சில் வைத்து பூஜித்த விடங்க லிங்கத்தைக் கேட்டார். தேவர்கள் மட்டுமே பூஜிக்கத்தக்க அந்த லிங்கத்தை ஒரு மானிடனுக்குத் தர இந்திரனுக்கு மனம் வரவில்லை.

தேவசிற்பியான மயனை வரவழைத்து, தான் வைத்திருப்பதைப்போலவே 6 லிங்கங்களை செய்து அவற்றைக் கொடுத்தான். முசுகுந்தன் அவை போலியானவை என்பதைக் கண்டு பிடித்து விட்டார்.

வேறு வழியின்றி, இந்திரன் நிஜ லிங்கத்துடன், மயன் செய்த லிங்கங்களையும் முசுகுந்தனிடம் கொடுத்து விட்டான். அவற்றில், நிஜ லிங்கமே திருவாரூரில் உள்ளது. மற்ற லிங்கங்கள் சுற்றியுள்ள கோயில்களில் உள்ளன.

இவை "சப்தவிடங்கத்தலங்கள்' எனப்படுகின்றன. "சப்தம்' என்றால் ஏழு. திருவாரூரில் "வீதி விடங்கர்', திருநள்ளாறில் "நகர விடங்கர்', நாகப்பட்டினத்தில் "சுந்தர விடங்கர்', திருக்குவளையில் "அவனி விடங்கர்', திருவாய்மூரில் "நீலவிடங்கர்', வேதாரண்யத்தில் "புவனி விடங்கர்', திருக்காரவாசலில் "ஆதி விடங்கர்' என்ற பெயர்களில் விடங்க லிங்கங்கள் அழைக்கப்படுகின்றன.

இந்த லிங்கங்கள் கையடக்க அளவே இருக்கும். சப்தவிடங்கத்தலங்கள் உள்ள கோயில்களில் சுவாமியை "தியாகராஜர்' என்பர்.

அருள் மிகு பெரியநாயகி உடனாய பாடலீசுவரர் திருக்கோவில் திருப்பாதிரிப்புலியூர் {பகுதி – 2}


அருள் மிகு பெரியநாயகி உடனாய பாடலீசுவரர் திருக்கோவில் திருப்பாதிரிப்புலியூர் {பகுதி – 2}
 
அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஓம் தமிழ் நாள்காட்டி அன்பர்களே தன்நிகரற்ற தனிச்சிறப்பு வாய்ந்த திருப்பாதிரிப்புலியூர் திருத்தலத்தின் தெய்வங்களான அருள்மிகு பெரியநாயகி உடனாய பாடலீசுவரர் சுவாமி தோன்றிய வரலாறையும் அத்தலத்தின் சிறப்புகள் சிலவற்றையும் அறிந்து அனுபவித்தோம்.ஆண்டவர் அடியவர்களுக்கு செய்த அற்புத வரலாற்றையும் மகிமைகளையும் இனி காண்போம்.

ஞானசம்பந்தர் வழிபாடு:சமயக் குரவர்களில் முதன்மையானவராக போற்றப்படும் திருஞானசம்பந்தர் இத்தல இறைவன் மீது தேவாரப் பதிகம் பாடியுள்ளார்.திருஞானசம்பந்தர் இரண்டாம் திருமுறை பகுதியில் பாடல் – 1311ல் பாடியுள்ளார்.

முன்னநின்ற முடக்கான் முயற்கருள் செய்துநீள்
புன்னைநின்று கமழ்பா திரிப்புலி யூருளான்
தன்னைநின்று வணங்குந் தனைத்தவ மில்லிகள்
பின்னைநின்ற பிணியாக் கையைப்பெறு வார்களே
(திருஞானசம்பந்தர்)

மாணிக்கவாசகர் வழிபாடு:மாணிக்கவாசகப் பெருமான் இத்தலத்துப் பெருமானை வழிபட தில்லையிலிருந்து வந்தபோது திருப்பாதிரிப்புலியூருக்கு தென்பால் ஓடிக்கொண்டிருந்த கெடிலம் நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் மாணிக்கவாசகப் பெருமான் துயருற்றதை அறிந்த பெருமானார் நதியை நகருக்கு வடதிசையாகச் செல்லுமாறு திருப்பி விட்டு, தனது பக்தரான மாணிக்கவாசகர் தன்னை வழிபட அருள்பாலித்தாக தல வரலாறு கூறுகிறது.

அப்பர் வழிபாடு:திருவதிகை வீரட்டானேசுவரர் இறைவனுக்கு திருத்தொண்டாற்றி வந்தவர் அப்பர் பெருமானின்
(திருநாவுக்கரசர்)தமைக்கையார் திலகவதியார் ஆவார்.அப்பர் பெருமான் சமண சமயத்தைத் தழுவி தருமசேனர் என்ற பெயருடன் அச்சமயத்திற்கு தொண்டாற்றி வந்தார். தனது சகோதரன் பிற சமயம் தழுவியமைக்காக திலகவதியார் மிகவும் வருத்தமுற்றிருந்தார்.தனது சகோதரன் சைவ சமயம் திரும்ப இறைவன் அருள்புரிய வேண்டுமென்று வேண்டிக்கொண்டிருந்தார்.அதற்கு மனமிறங்கிய வீரட்டானத்து இறைவன் சூலை நோயை(வாயிற்று வழியை) உண்டாக்கினார்.இந்நிலையில் அப்பர் பெருமான் சூலை நோயால் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் சமண சமயக் குருமார்களால் அவரைக் குணப்படுத்த முடியவில்லை என்றும் அறிந்த திலகவதியார் மேலும் வருத்தமுற்று தனது சகோதரைனைக் காத்தருறுமாறு திரிபுர சம்கார மூர்த்தியான வீரட்டானத்து இறைவனை வேண்டினார்.பெருமானும் அவரது வேண்டுதலை ஏற்று அப்பர் பெருமான் சூலை நோயைத் தீர்த்தருளினார்.

அதனால் அகமகிழ்ந்த அப்பர் பெருமான் கூற்றாயினவாறு விலக்கலீர்(திருமுறை-4,பாடல்-1) என்னும் தனது முதல் தேவாரப் பாடலை திருத்தலத்தில் பாடினார்.அதனால் அகமகிழ்ந்த இறைவன் அவருக்கு திருநாவுக்கரசர் என்ற திருப்பெயரிட்டார் என்பது வரலாறு. பின்னிட்டு திருநாவுக்கரசர் சைவ சமயத்திற்கே திரும்பி திருத்தாண்டாற்றினார்.

அப்பர் பெருமான் சைவ சமயத்தைத் தழுவினார் என்பதையறிந்து சினமுற்ற சமணர்கள் இப்பகுதியை ஆட்சி செய்து வந்த சமண சமயத்தைச் சார்ந்திருந்த மகேந்திரவர்ம பல்லவன் மூலம் பல்வேறு இன்னல்களை திருநாவுக்கரசருக்கு ஏற்படுத்தினர். புத்த மதத்தைத் தழுவியிருந்த மகேந்திரவர்ம பல்லவன் இப்பகுதியில் கி.பி.600-630 களில் ஆட்சி செய்து வந்தான்.அப்போது புத்தமதத்திலிருந்து தனது தாய் மதமாகிய சைவ மதத்தைத் தழுவியதற்காக திருநாவுக்கரசரை கருங்கல்லில் கட்டி கடலில் தூக்கி வீசியபோது திருப்பாதிரிப்புலியூர் இறைவனான அருள்மிகு பாடலீசுவரரை எண்ணி பதிகம் பாடினார்.

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமசிவாயவே.
(திருநாவுக்கரசர்)

அருள்மிரு பெரியநாயகி உடனாய பாடலீசுவரர் அருளாசியால் அக்கருங்கள்ளே தெப்பமாய் மிதந்தது. அப்பர் பெருமான் அக்கருங்கல்லையே தெப்பமாகக் கொண்டு கரையேறிய அற்புதம் நிகழ்ந்த திருத்தலம் திருப்பாதிரிப்புலியூர் ஆகும். திருநாவுக்கரசர் கரையேறிய அவ்விடம் கரையேறவிட்டகுப்பம் என்ற பெயரில் அந்த ஊர் இன்றும் உள்ளது.பெரிய புராணம் இயற்றிய சேக்கிழார் இச்சம்பவத்தை மிக அழகாக பாடியுள்ளார்.திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் பகுதியில் பாடல்-1397ல் குறிப்பிட்டுள்ளார்.

வாய்ந்த சீர் வருணனே வாக்கின் மன்னரைச்
சேர்ந்தடை கருங்கலே சிவிகை ஆயிட
ஏந்தியே கொண்டு எழுந்து அருள் வித்தனன்
பூந்திருப் பாதிரிப் புலியுர்ப் பாங்கரில்
(சேக்கிழார்)

முடிவில் திருநாவுக்கரசர் அவற்றிலிருந்து மீண்டதோடு மகேந்திரவர்ம பல்லவனையும் சைவ சமயம் தழுவச் செய்தார் என்பதும் பின்னிட்டு சமண சமய வழிபாட்டுத் தலங்களையும் மடங்களையும் சைவசமயத் திருக்கோயில்களாகவும் மடங்களாகவும் மககேந்திரவர்ம பல்லவன் மாற்றினான் என்பதும் இறுதியில் சமணசமயமே அழிந்து போனது என்பதும் தனி வரலாறு. இன்றளவும் இத்திருக்கோயிலில் பழமையான புத்தரின் சிலை ஒன்று இன்றும் உள்ளது இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.மற்ற சிவத் தலங்கள் அனைத்திலும் நாயன்மார்கரள நின்ற திருக்கோலத்திலேயே நமக்கு அருளாசி வழங்குவர்.இத்திருக்கோயிலில் மட்டும் அப்பர் பெருமான் தனிச் சன்னதியில் அமர்ந்த திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

அடியவர்கள் வழிபாடு:அருணகிரிநாதர் இத்தலத்து முருகப் பெருமானைப் போற்றி ரிணமொடு குருதி நரம்பு மாறிய என்ற திருப்புகழ் பாடலைப் பாடி இத்தலத்து முருகப் பெருமானை வணங்கியுள்ளார்.வள்ளலார் இராமலிங்க அடிகளாரும் இத்தலத்து இறைவனை தரிசித்துள்ளார் என்கிறது தல புராணம்.

கோயில் அமைப்பு:கோயில் இராச கோபுரத்திற்கு முன்பாக 24 கற்றூண்களைக் கொண்டு ஊஞ்சல் மண்டபம் கட்டப்பட்டுள்ளது.ஊஞ்சல் மண்டபத்தின் மேல்பகுதியில் வடக்கிலும்,தெற்கிலும்,புராண சைவ சமய வரலாற்றை மையப்படுத்திய ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
இராஜ கோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டது.ஊஞ்சல் மண்டபம் இராச கோபுரத்திற்கு முன்பாக உள்ளதால் கோபுரத்தின் முழு அமைப்பைக் காண முடியாது.இராச கோபுரத்தைக் கடந்தவுடன் குதிரை மண்டபம் மடப்பள்ளி மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன.அவற்றைக் கடந்ததும் அருள்மிகு பாடலீசுவரர் மற்றும் அருள்மிகு பெரியநாயகி அம்பிகை ஆகியோர் தனித்தனியாக அமைக்கப்பட்ட மிகப்பெரிய சன்னதிகளில் காட்சி தந்து அருள்கின்றனர்.மேலும்,அருள்மிகு நடராசப் பெருமான்,வலம்புரி விநாயகர்,சொன்னவாற்றி விநாயகர்,யுக முனிவர்,கஜலட்சுமி, பராசக்தி அம்மன்,வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர்,பிச்சாடனர், காலபைரவர்,அருந்தவநாயகி, சாமுண்டி ஆகிய தெய்வங்கள் தனித்தனி சன்னதிகளில் அருள்கின்றனர்.

சிவகார தீர்த்தம்:சிவகர தீர்த்தம் என்பது சிவனும் சக்தியும் ஆகும். கங்கையானவள் மாசி மகத்தன்று சிவகர தீர்த்தத்தில் நீராடி தனது பாவங்கைளைப் போகிக்கி கொண்ட தீர்த்தக் குளம் இங்கு உள்ளது. அப்போதெல்லாம் கங்கை தனது புண்ணியத்தில் ஒரு பகுதியை இங்கேயே விட்டுச் செல்வாளாம். ஆகவே இத்திருக்குளத்தில் நீராடுவதன் மூலம் கங்கையில் நீராடியதன் பலனைப் பெறலாம் என்பர்.

திருவிழாக்கள்:சித்திரை வசந்தவிழா வைகாசிப் பெருவிழா தேர் பவனி ஆனி மாணிக்கவாசகர் விழா ஆடிப்பூரம் விழா புரட்டாசி நவராத்திரி விழா ஐப்பசி அன்னாபிஷேகம் கார்த்திகை சோமவார விழாக்கள் மார்கழி திருவாதிரை விழா தை சமுத்திர தீர்த்தவாரி ஆகியவை பிரசித்தம்.
இதுவரை நாம் திருப்பாதிரிப்புலியூர் திருத்தலத்தில் அருளாட்சி செய்து வரும் இறைவனின் மகத்துவங்களை எல்லாம் நிறைவாக அறிந்து தரிசித்தோம்.அப்பர் பெருமானுக்கு அருள் செய்ததைப் போல அவனியில் வாழும் அணைத்து உயிர்கட்கும் அருள் செய்ய வேண்டுமென்று வேண்டி வணங்கி திருப்பாதிரிப்புலியூர் வரலாற்றை நிறைவு செய்கிறோம்.

அருள்மிகு பெரியநாயகி
திருவடி மலரடி போற்றி! போற்றி!
அருள்மிகு பாடலீசுவரர்
திருவடி மலரடி போற்றி! போற்றி!
 போக்குவரத்து வசதி

சென்னையிலிருந்து நேரடியாகக் கடலூருக்குப் பேருந்து வசதி உள்ளது. எழும்பூரிலிருந்தும் தாம்பரத்திலிருந்தும் தொடர் வண்டி வசதிகள் உள்ளன.புதுவைக்கு தெற்கே கிழக்கு கடற்கரை சாலையில் 20 கி.மீ. தொலைவில் திருப்பாதிரிப்புலியூர் அமைந்துள்ளது.புதுவையிலிருந்து ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் கடலூருக்கு பேருந்து வசதி உள்ளது.

சன்னதித் தெருவிலும் அதனையொட்டிய பகுதிகளிலும் தங்குமிடங்கள் உள்ளன.பேருந்து நிலையம் மற்றும் தொடர்வண்டி நிலையத்திற்கு அருகிலும் தங்குமிடங்கள் ஏராளமாக உள்ளன.

தரிசனம் நேரம்:காலை 06.00 மணி முதல் பகல் 11.00 மணி வரை.மாலை 04.00 மணி முதல் இரவு 08.30 வரை.

திருக்கோயில் நிர்வாகம்:தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத் துறையின் நிர்வாகத்தில் இத்திருக்கோயில் உள்ளது.

திருக்கோயில் முகவரி:நிர்வாக அதிகாரி,அருள்மிகு பிரகன்நாயகி உடனாய பாடலீசுவரர் திருக்கோயில்,
திருப்பாதிரிப்புலியூர்,கடலூர்-2

பூஜைக்கு உரிய மலர்கள்

பூஜைக்கு உரிய மலர்கள்


எவை?

விஷ்ணு சம்பந்தப்பட்ட தெய்வங்களுக்கு மட்டும் துளசி தளத்தால் பூஜை செய்யலாம். சிவன் சம்பந்தப்பட்ட ஈஸ்வரர்களுக்கு வில்வார்ச்சனை விசேஷம். தும்பை, வெள்ளெருக்கு, கொன்றை, ஊமத்தை கொண்டு அர்ச்சிக்கலாம். விநாயகர் சதுர்த்தி தவிர மற்ற நாட்களில் பிள்ளையாருக்கு துளசி கூடாது.

சிவனுக்குத் தாழம்பூ கூடாது.

விஷ்ணுவுக்கு அட்சதையால் அர்ச்சனை கூடாது.

லட்சுமிக்குத் தும்பை கூடாது.

சரஸ்வதிக்கு பவளமல்லி கூடாது.

துளுக்க சாமந்திப்பூ அர்ச்சனைக்கு ஏற்றதல்ல.

மலரை இதழ் இதழாக அர்ச்சனை செய்யக்கூடாது.

வாடிப்போன, அழுகிப்போன, பூச்சி கடித்த, முடி, புழு கொண்ட, காய்ந்த, நுகர்ந்த, தரையில் விழுந்த மலர்களை அர்ச்சனைக்கு உபயோகிக்கக் கூடாது. ஒருமுறை சமர்ப்பிக்கப்பட்ட மலர்களை எடுத்து மீண்டும் அர்ச்சனை செய்யக்கூடாது. ஆனால் துளசி, வில்வம் ஆகியவற்றை மீண்டும் உபயோகிக்கலாம். அன்று மலர்ந்த பூக்களை அன்றே உபயோகிக்க வேண்டும். விதிவிலக்கு தாமரை போன்ற நீரில் தோன்றும் மலர்கள். செண்பக மொட்டு தவிர, மற்ற மலர்களின் மொட்டுக்கள் பூஜைக்கு உகந்தவை அல்ல.

துளசி, மகிழம், செண்பகம், தாமரை, வில்வம், மருக்கொழுந்து, மருதாணி, அருகு, நாயுருவி, விஷ்ணுக்ராந்தி, நெல்லி ஆகியவற்றின் இலைகள் பூஜைக்கு உரியவை.

கங்கா ஸ்நான மகிமை!


கங்கா ஸ்நான மகிமை!

நம்நாட்டில் ஷேத்திரத்தின் தல புராணங்களில், "கங்கை காசிக்கு சமமானது அல்லது காசியை விட உகந்தது" என்றே இருக்கும். இப்படி ஒரு ஷேத்திரத்தை மற்ற எந்த ஷேத்திரத்தோடும் ஒப்பிடாமல் காசியுடன் ஒப்பிட்டிருப்பதால், காசிதான், "ஷேத்திர ராஜா" என்று தெரிகிறது.

இதேபோல் எங்கே ஸ்நானம் செய்தாலும், "இது கங்கையைப் போல் புனிதமானது அல்லது கங்கையை விட விஷேசமானது" என்று சொல்வர். இதிலிருந்து, கங்கா ஸ்நானம்தான் ஸ்நானங்களிலேயே தலை சிறந்தது என்பது விளங்கும்.

"எவன் கொஞ்சமாவது கீதா பாராயணம் செய்து, துளியாவது கங்கா தீர்த்தத்தை குடித்து, ஒரு தடவையாவது கிருஷ்ணருக்கு அர்ச்சனை பண்ணுகிறானோ, அவனுக்கு எமனிடம் விவகாரம் ஒன்றும் இல்லை..."என்று பஜகோவிந்தத்தில் சொல்கிறார் ஆதிசங்கரர். இந்த பஜகோவிந்த ஸ்லோகத்தின்படி கீதை, கங்கை, கிருஷணர் எமன் ஆகிய நாலுக்குமே தீபாவளி சம்பந்தம் இருக்கிறது. இதன் காரணமாகத்தான் வடமாநிலங்களில் தீபாவளிக்கு முதல் நாள், "எம தீபம்" ஏற்றுகின்றனர்; தீபாவளியன்று எமனுக்கு தர்ப்பணமும் செய்ய வேண்டும்.