திங்கள், 16 டிசம்பர், 2019

ராகவேந்திரர் பகுதி-1

பிரம்மலோகத்தில் பெரும் பிரளயமே நிகழ்ந்து கொண்டி ருந்ததுஏ சங்குகர்ணா, எனது படைப்புக்கலன்களில் இந்த மண் கலயம் உடைந்து கிடக்கிறதே, ஏன் இதை என்னிடம் சொல்ல வில்லை! நீ வேலை செய்யும் லட்சணம் இதுதானா, பிரம்மன் கத்தினார்.  சங்குகர்ணன் நடுநடுங்கிக் கொண்டிருந்தான்.மன்னிக்கவேண்டும்  பிரபோ! தாங்கள் சத்திய லோகத்தில் அன்னை சரஸ்வதி யுடன் அளவளாவிக் கொண்டி ருந்த வேளையில், தங்கள் படைப்புக்கலன்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தேன். இந்த மண் கலயத்தை மேல் தட்டில் அடுக்கி வைக்க முயன்றபோது கைதவறி விழுந்து உடைந்து விட்டது. தங்களிடம் இதை எப்படி சொல்வதென தெரியாமல் தவித்தேன். இதை உடைத்த தற்காக மன்னிப்பு கேட்கிறேன், என்றவனாய் காலில் விழுந்தான். பிரம்மனின் சீற்றம் தணிய வில்லை. ஏனடா! பணியில் இருப் பவன் எதிலும் கவனமாக இருக்க வேண்டாமா! மண் கலயத்தை தரையில் வைப்பது, மற்ற உலோகக் கலன்களை மேலடுக்கில் வைப்பது என்ற பாலபாடத்தை கூட நீ அறியவில்லையாயின், எனது ஏவலாளாக இருக்கும் தகுதியை இழந்துவிட்டாய். குறிப்பாக,பக்தி மார்க்கத்தில் இருப்பவன், தன் கடமைகளை ஒழுங்காகச் செய்யத் தெரிந்தவனாக இருக்க வேண்டும். சோதனைகளைத் தாண்டும் வல்லமையுள்ளவனாக இருக்க வேண்டும். எனவே, நீ பூலோகத்தில் கடவுள் என்றால் நான் தான் என தன்னைத் தானே பெருமை பாராட்டிக் கொண்டிருக்கும் ஒரு நாத்திகனின் மகனாகப் பிற. அவனோடு சேர்ந்திருந்து பல பாடங்களைக் கற்றுக்கொள், என்று சாபமிட்டார். பிரபோ! எனக்கு தாங்கள் தரும் தண்டனை கொடுமையானது. என்னை இங்கேயே அழித்து விடுங்கள். நான் சாம்பலாகவேனும், இந்த பிரம்மலோகத்தில் கிடக்கிறேன், எனக் கதறினான். அவனது கதறல் கேட்டு பிரம்மன் மனம் இரங்கினார்.

சங்குகர்ணா! காரணகாரியங்கள் இல்லாமல் எதுவும் நிகழ்வதில்லை. உலகவுயிர்களின் தலையெழுத்தை நிர்ணயிப்பவன் நானே! இத்தனை நாளும் எனது வேலையாளாக இருக்க வேண்டும் என்பது உன்விதி. இனி, நீ பூலோகத்தில் இருக்கவேண்டும் என்ற எழுத்தை என்னாலோ மற்ற தேவர்களாலோ மாற்ற இயலாது. தலையெழுத்தை அனுபவித்தே தீரவேண்டும். நான் சொன்னபடி, பூலோக சோதனையில் வெற்றி பெற்ற பின் என்னை மீண்டும் வந்தடைவாய்,என்று ஆசி வழங்கினார். சங்குகர்ணன் அவருக்கு நன்றி தெரிவித்து நமஸ்கரித்தான்.  இந்நிலையில், பூலோகத்தில் இரண்யகசிபு என்ற மன்னன் ஆட்சி செலுத்தி வந்தான். வைகுண்டத்தைக் காவல் காத்த இவன், விஷ்ணுவை வழிபட வந்த முனிவர்களை அவமதித்ததால், அவரது சாபம் பெற்று பூமியில் மன்னனாகப் பிறந்தவன். அவன் செய்த தவறுக்கு நூறுபிறவி நல்லது செய்தோ அல்லது மூன்று பிறவிகள் நாராயணனுக்கு எதிராக தீமை செய்தோ மீண்டும் வைகுண்டத்தை அடையலாம் என்பது சாபம். காலம் குறைவாக இருந்ததால், கெட்டதை தேர்ந்தெடுத்தான் அந்த காவலன். அதன் பலனாக, இரண்யனாக பிறந்து நாராயண னுக்கு எதிரான செயல்களைச் செய்து கொண்டிருந்தான். தானே கடவுள் என்று கூறி, ஓம் இரண்யாய நமஹ என்றே நாட்டு மக்கள் சொல்ல வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தான். அவ்வாறு சொல்லாதவர்களின் சிரம் துண்டிக்கப்படும் என்று கட்டளை போட்டான். இந்த கொடுமைக்கார மன்னனின் மகனாகப் பிறந்தான் சங்குகர்ணன். இப்பிறவியில் சங்குகர்ணனுக்கு பிரகலாதன் என்று பெயர் சூட்டப்பட்டது. பிரகலாதன் பிறவியில் இருந்தே நாராயண பக்தனாகத் திகழ்ந்தான். இது இரணியனுக்குப் பிடிக்க வில்லை. பெற்ற பிள்ளையைத் தன் வழிக்கு கொண்டுவர செய்த முயற்சிகள் வீணாயின. இறுதியில், நாராயணனை நேரில் வரச்செய்ய முடியுமா எனக் கேட்டபோது, நாராயணன் நரசிம்ம அவதாரம் எடுத்து தூணிலிருந்து வெளிப்பட்டார். அவருடன் இரணியன் போரிட்டான். போரின் இறுதியில் அவன் மாய்ந்தான். பின்பு பிரகலாதனை, நாராயண மூர்த்தி அந்நாட்டின் அரசனாக் கினார்.

பிரகலாதனின் காலத்தில் மக்கள் நிம்மதியுடன் வாழ்ந்தனர். அவன் அனுஷ்டிகம், சாத்வீகம் என்ற இருவகையான புண்ணியங்களைச் சேர்த்தான். அனுஷ்டிகம் என்பது தர்மம் செய்வதால் வரக்கூடியது. சாத்வீகம் என்பது ஹிம்சை செய்தவரிடமும் அஹிம்சையைக் காட்டுவதால் கிடைக்கக்கூடியது. முந்தைய புண்ணியத்தால் செல்வம் பெருகும். வாழ்நாள் கூடும். பிந்தைய புண்ணியம் பிறப்பற்ற நிலையை ஏற்படுத்தும் இரக்க மனம் கொண்ட பிரகலாதன் இரண்டு விதமான புண்ணியங்களையும் அளவுக்கதிகமாகச் சேர்த்து விட்டான். அவன் பிரம்மனை வணங்கி, தெய்வமே! தாங்கள் எனக்கிட்ட சாபம் தீரும் காலம் வந்து விட்டதா? என மனமுருகிக் கேட்டான். பிரம்மன் அவன் முன்பு தோன்றி,சங்குகர்ணா! நீ இப்பிறவியில் அளவுக்கதிகமாக புண்ணியத்தை சேர்த்து விட்டாய். இவ்வாறு புண்ணியம் செய்பவர்கள், அந்த புண்ணியத்திற்குரிய பலன்களை பூமியில் இருந்து அனுபவிக்க வேண்டும். உலகின் சுகமான இன்பங்களை அனுபவித்த பிறகே பிரம்மலோகம் வர முடியும்,என்றார். சங்குகர்ணன் அவரிடம்,சுவாமி! அப்படியானால் எனது புண்ணியங்களைத் தீர்க்கும் வழி யாது?என்றான்.  நீ அடுத்த பிறவியிலும் மன்னனாகவே பிறப்பாய். இப்பிறவியில் மகாவிஷ்ணுவின் பக்தனாக இருந்த நீ, அடுத்த பிறவியில் பாலிகன் என்ற பெயரில் பிறந்து, அவருக்கு எதிராக செயல்படும் மக்களுக்கு ஆதரவாக இருப்பாய். எனவே, உன் புண்ணியத்தின் பெரும்பகுதி கரையும். அதன் பிறகும் நீ சேர்த்த புண்ணியங்களின் விளைவை கலியுகத்தில் தான் தீர்ப்பாய், என்று அருள்பாலித்து மறைந்தார். பிரகலாதனாய் பிறந்த சங்குகர்ணன், இப்பிறவியில் பாலிகன் என்ற மன்னனாகப் பிறந்தான். கவுரவர்களின் நண்பனாக வேண்டிய சூழல் இவனுக்கு ஏற்பட்டது. குரு÷க்ஷத்திர யுத்தத்தில் இவன் கவுரவர்களுடன் சேர்ந்து, பகவான் கிருஷ்ணரின் நண்பர்களான பாண்டவர்களுக்கு எதிராகப் போரிட்டு அழிந்தான். அடுத்த யுகமான கலியுகத்தில் பாலிகனின் அவதாரம் உலகமே வியக்கக்கூடியதாக இருந்தது.
“சாரித்ரிக நவலா சக்கரவர்த்தி”

டாக்டர் முதிகொண்ட பிரசாத் (தெலுங்கு சொற்பொழிவு)

தமிழாக்கம் – ராஜி ரகுநாதன்

பிராமணர்களின் வீழ்ச்சிக்கு வித்திட்டது யார்?

பாரத தேசத்தில் பல குலங்கள் உள்ளன. பல அமைப்புகள் உள்ளன. இவர்களுள் பிராமணர்கள் யார்? இவர்களின் தோற்றம் எப்போது நிகழ்ந்தது? பிராமணர்களால் உலகிற்கு என்ன நன்மை? இவை பற்றி சில விஷயங்களை நாம் முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.

இதைப் பற்றி கூறும் முன்பு சில கேள்விகளை கேட்டுக் கொள்வோம். இவற்றுக்கான பதில்கள் அனைவரும் அறிந்ததே!.

முதல் கேள்வி – உலகின் முதல் புத்தகம் எது? பைபிளா? இல்லை. ராமாயணமா? இல்லை. குரானா? இல்லை. மகாபாரதமா? இல்லை. மகாபாரதம் முதல் புத்தகம் இல்லை என்பதால் பகவத் கீதையும் முதல் புத்தகம் இல்லை.

பிரபஞ்சத்தில் முதன் முதல் மனிதன் எப்போது தோன்றினானோ அப்போதே ஒரு நூல் தோன்றியது. அதன் பெயர் வேதம். அந்தப் புத்தகத்தின் பெயர் ருக் வேதம். மீதி நூல்களுக்கு நம்மால் உடனே கால நிர்ணயத்தைக் கூறிவிட முடியும். பைபிள் 2013 ஆண்டுகள் பழமையானது. நியூ டெஸ்டமெண்ட். ஓல்ட் டெஸ்டமெண்ட் மோசஸ் ஆப்ரஹம் காலத்தைச் சேர்ந்தது. குரான் 1400 ஆண்டுகள் பழமையானது. பகவத்கீதை கிமு 3000 ஆண்டுகள்.

ருக் வேதத்தின் காலம் என்ன? யாராலும் சரியான பதில் அளிக்க முடியாது. வேதம் எப்போது பிறந்தது என்ற விஷயம் யாருக்கும் தெரியாது. தெரிந்து கொள்வதற்காக சில முயற்சிகள் நடந்தன. ஆனாலும் கண்டறிய முடியவில்லை.

வால்மீகி ராமாயணத்தில் ஒரு செய்தி உள்ளது. ஸ்ரீராமர் வேதத்தை வசிஷ்டரிடம் பயின்றார். வேதம் முதன்மையானதா? ராமாயணம் முதன்மையானதா? வேதத்தின் காலம்தான் புராதனமானது. ஸ்ரீகிருஷ்ணர் சாந்தீபனி என்ற ருஷியின் ஆசிரமத்தில் வேத அத்யயனம் செய்தார் என்று பாகவதத்தில் உள்ளது. அதனால் வேதத்தின் காலம் ஸ்ரீகிருஷ்ணருக்கும் முற்பட்டது. அதனால் உலகில் முதல் நூல் எது என்றால் அது ருக் வேதமே!

அடுத்த கேள்வி – வேதங்கள் எத்தனை? மொத்தம் நான்கு. ருக், யஜுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு. வேதங்களில் உள்ள மொத்த மந்திரங்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம். இவற்றுக்கு த்ரயி என்றொரு பெயர் உண்டு. த்ரயி என்றால் மூன்று என்று பொருள். வேதங்கள் மொத்தம் நான்கல்லவா? த்ரயி என்று எவ்வாறு பெயர் வந்தது? த்ரயி என்பதற்கு வேறொரு பொருளும் உண்டு.

ருக் வேதம் செய்யுள் வடிவில் உள்ளது. யஜுர் வேதம் உரைநடை வடிவம் கொண்டது. சாமவேதம் பாடல் வடிவம் கொண்டது. அதனால் செய்யுள் உரைநடை கானம் என்று மூன்று விதமாக இருப்பதால் இவற்றுக்கு த்ரயி என்று பெயரிட்டார்கள் என்பது ஒரு விளக்கம். இதற்கு பல விளக்கங்கள் உள்ளன.

அடுத்த கேள்வி – பிராமண குலம் எதற்காக ஏற்பட்டது? வேதங்களை பாதுகாப்பதற்காகப் பிறந்தது. சோமகாசுரன் என்பவன் வேதங்களை பறித்துக் கொண்டு ஓடிவிட்டான். அப்போது ஸ்ரீமகாவிஷ்ணு வேதங்களை இரட்சித்தார். இது மத்ஸ்யாவதாரத்தில் உள்ள ஒரு புராணக்கதை. இக்கதையின் பொருள் என்ன? வேதங்களுக்கு ஆபத்து ஏற்படும்போது சமுதாயத்தில் துயரம் நிலவும் என்பதால் வேத ரட்சணைக்காக பகவான் மீண்டும் மீண்டும் அவதாரம் செய்கிறான் என்பது தசாவதாரங்களின் பிரதானமான காரணம்.

பிராமண சமூகம் முதலில் எதற்காகத் தோன்றியது? வேதங்களை இரட்சித்து போற்றி பாதுகாத்து பரப்புவதற்காக. இது எந்த சந்தேகமுமற்ற பதில். இதில் எந்த ஒரு சமரசத்திற்கும் இடமில்லை. நம் முன்னோர்கள் இந்த வேலையைத்தான் செய்து வந்தார்கள்.

புருஷ சூக்தத்தில் ஒரு மந்திரம் உள்ளது.
“ப்ராஹ்மணோ அஸ்ய முகமாஸீத்
பாஹூ ராஜன்ய: க்ருத: I
ஊரு ததஸ்ய யத் வைஸ்ய:
பத்ப்யாம் சூத்ரோ அஜாயத: II
சந்த்ரமா மனசோ ஜாத:
சக்ஷோ சூர்யா அஜாயத II” – இது ஒரு குறியீட்டு விளக்கம்.
அதாவது அலங்காரம். யாருடைய அலங்காரம்? சமுதாய புருஷனை ஒரு மனிதனாக உருவகப்படுத்தியுள்ளார்கள்.

நம் உடலில் பல உறுப்புகள் உள்ளன. அவற்றுள் முகம் என்பது அறிவின் இடம். முழு நரம்பு மண்டலமும் தலையில் உள்ளது. காலில் முள் குத்தினால் செய்தி தலைக்குச் செல்கிறது. அதனால் அறிவுக் கூர்மை உடையவர்களை பிராமணர்கள் என்று அழைத்தார்கள்.

ஒரு கம்பெனியையோ அமைப்பையோ எடுத்துக் கொண்டால் அதில் நான்கு பிரிவுகள் இருக்கும். திட்டமிடல் பாதுகாப்பு பொருளாதாரம் தயாரிப்பு. இவையே பிராமணர் சத்திரியர் வைசியர் மற்றும் சூத்திரர். இவ்விதம் முழு சமுதாயத்தையும் நம் முன்னோர் திட்டமிட்டு வகுத்தார்கள். ஒரு Symmetrical சமச்சீரான அமைப்பை ஏற்படுத்தினார்கள். ஒரு பொருளை உற்பத்தி செய்யும் போது அது பாதுகாக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் அது சீரழிந்து விடும். பொருளைத் தயாரிக்க பொறியியல் திறமை வேண்டும். மூளை வேலை செய்ய வேண்டும். பின்னர் அதனை சீராக விநியோகிக்க வேண்டும். இந்த கண்ணோட்டத்தில் நம் மூதாதையர் பிராமணர் சத்திரியர் வைசியர் சூத்திரர் என்று நான்கு சமூகங்களை புராதன காலத்தில் ஏற்படுத்தினார்கள். இந்த மந்திரத்திற்கு இதுதான் பொருள்.

இவர்களில் யார் உயர்ந்தவர்கள்? கால்கள்தான் உடலைத் தாங்குகின்றன. அவை சரியாக வேலை செய்யாவிட்டால் சரீரம் சரியாக உபயோகமாகது. அதனால் கால்களின் ஸ்தானத்தில் சிலர் உள்ளார்கள். தொடைகளின் ஸ்தானத்தில் சிலர் உள்ளார்கள். புஜங்களின் ஸ்தானத்தில் சிலர் உள்ளார்கள். மொத்த உடலுக்கும் ஸ்கீமிங் மற்றும் பிளானிங் தலையில் உள்ளது. அதனால் மூளையின் ஸ்தானத்தில் பிராமணர்கள் உள்ளார்கள். இது புராதன காலத்தில் ஏற்பட்ட ஒரு சிஸ்டம்.

இந்த சிஸ்டம் பாரத தேசத்தில் மட்டுமல்ல. உலகனைத்திலும் உள்ளது. கிரேக்க தேசத்தில் கூட இவ்விதமே உள்ளது. பழைய கிரேக்க நூல்களில்… இலியட் போன்றவற்றில்…. சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், பிளாட்டோ போன்றவர்களின் நூல்களில் இதே போன்ற வகைப்படுகளே கூறப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. நாகரீகம் வளர்ந்த நாடுகள் அனைத்திலும் இத்தகைய திட்டமிடல், சமச்சீரான வகைப்பாடு காணப்படும்.

மந்திரம் படிக்கும் பொது இறுதியில் ஆசீர்வசன மந்திரம் ஒன்று வரும்.
“சர்வே ஜனா: சுகினோ பவந்து
ஸர்வே ஸந்து நிராமயா I
ஸர்வே பத்ராணி பஸ்யந்து
மாகச்சித் துக்க: பாக்பவேத் II” – என்று கூறி இன்னொரு மந்திரமும் கூறுவோம்.

“கோ ப்ராஹ்மணேப்ய சுபமஸ்து நித்யம்
லோகா சமஸ்தா சுகினோ பவந்து II”
– என்ற இந்த மந்திரத்தில் பசு மாடுகளும் பிராமணர்களும் சுகமாக இருக்கவேண்டும் என்று வருகிறது.

ஆயின் பிற விலங்குகள் சுகமாக இருக்கத் தேவையில்லையா? பிராமணர்கள் மட்டும் சுகமாக இருக்க வேண்டுமா? பிற சமூகத்தவர்கள் நன்றாக இருக்க வேண்டாமா? என்று ஒரு வினா கிளம்புகிறது. இதற்கு பதில் என்னவென்றால் பசுவும் பிராமணனும் பாதுகாப்பற்ற சமூகமாக தம்மைத்தாமே காப்பாற்றிக் கொள்ள இயலாதவர்களாக உள்ளார்கள். புலியும் சிங்கமும் தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ளக் கூடியவை. பசு தன்னைத் தானே காத்துக் கொள்ள இயலாத ஸாதுப் பிராணி. எனவே பசுக்களைப் பாதுகாக்க வேண்டும். பசு இனத்தைக் காப்பாற்றினால் அனைவருக்கும் பால் கிடைக்கும்.

பிராமணன் என்பவன் வேதங்களை ரட்சித்து பாதுகாக்கப் பிறந்தவன். பிராமணன் தன்னைத்தானே காத்துக்கொள்ள வலிமையற்றவன் என்பதால் மீதி உள்ள சமுதாயம் அனைத்தும் சேர்ந்து அவனை பாதுகாக்கவேண்டும். பாலும் வேதமும் அனைவருக்கும் பயன்படுவது. பிராமணன் தர்மப் பிரச்சாரம் செய்பவன். அதனால் அவனை சரியாக பாதுகாக்கா விட்டால் சமுதாயத்தில் தர்மப் பிரசாரம் நடைபெறாமல் சமுதாயம் சமச்சீர் நிலையை இழந்து விடும். வேத பிரச்சாரத்திற்காக பிராமணன் பாதுகாக்கப்படவேண்டும்.

சிலரின் ‘சர்நேம்’ எனப்படும் வீட்டுப் பாரம்பரிய பெயர்களைப் பார்த்தால் அதன் மூலம் சில விவரங்கள் புரியும். வட இந்தியாவில் சிலர் ‘த்விவேதி’ என்ற சர்நேம் கொண்டிருப்பார்கள். அவர்கள் இரண்டு வேதங்களில் சிறந்து விளங்குபவர்கள். ‘த்ரிவேதி’ மூன்று வேதங்களை அறிந்த குடும்பங்கள். ‘சதுர்வேதி’ நான்கு வேதங்களில் சிறந்த குடும்பங்கள். ‘உபத்ரஷ்டா’ என்ற குடும்பத்தார் யாகங்களை நடத்துபவர்கள். இவ்விதம் வீட்டுப் பெயர்களைக் கொண்டே இவர்களின் பூர்வீகர்கள் வேதங்களை எவ்விதம் காத்து வந்தார்கள் என்பதை அறியமுடிகிறது. ‘வேதம்’ என்னும் சர்நேம் கொண்டவர்களும் உள்ளார்கள்.

இவ்விதம் பல ஆயிரம் ஆண்டுகள் சிறப்பாக வழிநடத்தப்பட்ட ஒரு சமுதாயம் பாரத தேசத்திலிருந்தது. மேற்கத்திய நாடுகளின் படையெடுப்புக்குப் பிறகு நம் சமுதாயம் முழுவதும் பிரஷ்டமாகிவிட்டது… வீழ்ச்சியடைந்து விட்டது.

தமிழ்நாட்டிலிருந்து ஒரு சிறிய உதாரணம் பார்க்கலாம். இந்த சம்பவம் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. இந்தியாவிற்கு வந்த கிழக்கிந்திய கம்பெனியில் ஒரு கலெக்டர் இருந்தார். இது மதராஸ் அல்லது மதுரையில் நிகழ்ந்தது. அந்த கலெக்டர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அங்கு ஒரு தாசில்தார் எதிர்ப்பட்டார். அவர் முதலியார் வகுப்பைச் சேர்ந்தவர். கலெக்டரின் அருகில் ஒரு குமாஸ்தா இருந்தார். கோப்புகளைச் சுமந்துகொண்டு கலெக்டரின் பின்னால் நடந்து வந்து கொண்டிருந்தார். முதலியாரும் ஈஸ்ட் இந்தியா கம்பெனியில் பணிபுரிபவர். கலெக்டர் முதலியாரைப் பார்த்ததும், “ஹௌ டூ யு டூ, மிஸ்டர் முதலியார்?” என்று அவரோடு கைகுலுக்கினார். “ஐ ஆம் ஓகே சார்!” என்று கூறி முதலியார் கலெக்டருக்கு கைகுலுக்கி சல்யூட் அடித்தார். அதன்பின் முதலியார் செய்த செயலைப் பார்த்து கலெக்டருக்கு மூளை கலங்கியது கலெக்டரின் அருகிலிருந்த குமாஸ்தாவைக் கண்டதும் முதலியார் சாலையிலேயே சாஷ்டாங்கமாக விழுந்து பாத நமஸ்காரம் செய்தார்.

கலெக்டர் வினவினார், “மிஸ்டர் முதலியார்! நான் உன்னுடைய பாஸ். இவர் என்னுடைய கிளர்க். ஆனால் நீ எனக்கு கைகுலுக்கி சல்யூட் அடித்தாய். ஆனால் இவர் முன்னால் மண்டியிட்டாய். ஏன்?” என்று கேட்டார். அதற்கு அந்த முதலியார் கூறிய பதில் அந்த ஆங்கிலேயரை யோசிக்க வைத்தது.

“சார்! நாங்கள் இப்போது ஈஸ்ட் இந்தியா கம்பெனியின் பணியாளர்களாக சேர்ந்துள்ளோம். வயிற்றுப் பிழைப்புக்காக உங்களிடம் வேலை செய்கிறோம். நீங்கள் எங்கள் பாஸ். ஆனால் இந்த கிளார்க் எங்கள் குடும்பத்தின் பாரம்பரிய குரு. இவர் ஒரு பிராமணர். இவர்களின் மூதாதையர் எல்லோரும் எங்கள் மூதாதையர்களுக்கு சம்பிரதாயமாக வரும் குரு பரம்பரையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பாதங்களில் நாங்கள் விழுந்து வணங்குவது எங்களின் சம்பிரதாயம். நீங்கள் வெறும் பாஸ் மட்டுமே. அதனால் ஷேக் ஹேண்ட் கொடுத்தேன்.இது எங்கள் பாரதிய கலாச்சாரம்” என்றார்.

உடனுக்குடன் அந்த கலெக்டர் இந்த சம்பவத்தைப் பற்றி லார்டு மேக்காலேவுக்கு ஒரு கடிதம் எழுதினார். “பிராமண சமூகம் பாரத தேசத்தில் மதிக்கப்படும் வரையில் நாம் இந்தியாவில் நாம் அரசாட்சியை நிறுவ முடியாது. நம் வேர் இங்கு தரையைத் தாண்டி கீழே பாயாது. பிராமணர்கள் பிற சமூகத்தால் மதிக்கப்பட்டால் நம்மால் இந்துத்துவத்தை இந்தியாவிலிருந்து விரட்ட இயலாது” என்று எழுதினார்.

இந்தக் கடிதம் லண்டனிலிருந்த மேக்காலேவுக்கு பிப்ரவரி 2 , 1835 அன்று கிடைத்தது. உடனுக்குடன் பதில் வந்தது. “இந்திய சமுதாயத்தை அழிப்பதற்கு வழி தேடுங்கள்! பாரதிய கலாச்சாரத்தையும் ஹிந்துக்களின் வாழ்க்கை வழி விதங்களையும் எவ்வாறு அழிப்பது என்று யோசியுங்கள்! அவசரமாக முதலில் பிராமண வகுப்பை இந்தியாவிலிருந்து அழித்து ஒழிக்க வேண்டும்” என்ற பதில் பிரிட்டனிலிருந்து வந்தது.

அதன் பின் அவர்கள் தங்களுக்குத் தெரிந்த விதத்தில் தமிழ்நாட்டில் பிராமண இனத்தை அழிக்கத் தொடங்கினர். அது இந்தியாவின் பிற இடங்களுக்கும் தொடர்ந்து. இதுவே பிராமண இனத்தின் அழிவிற்கு வித்திட்ட நிகழ்ச்சி!

தற்போது நாம் எல்லாம் ஏதோ கொஞ்சம் பிராமணர்களாக வாழ்நாளை ஓட்டிக் கொண்டிருக்கிறோம். நம்மில் பலருக்கு சாப்பாட்டுக்கு குறையில்லை.

ஆனால் பிராமணர்கள் அனைவரும் அவ்வாறு அல்ல. பிறரிடம் கையேந்தும் நிலையில் பலர் உள்ளனர். மிக மிக ஏழ்மையில் வாடுகிறார்கள். பிராமணன் என்றால் சமையல்காரன் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. அது ஒரு கௌரவமான வேலைதான்… உணவளிக்கும் பணி.

மேற்கு கோதாவரி மாவட்டத்தில் முங்கொண்டா என்றொரு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பிராமணக் குடும்பங்கள் நிரம்பியிருந்தன. அனைவரும் வேத பண்டிதர்கள். இன்று அங்கு சென்று பார்த்தால் அவர்களைக் காண முடியவில்லை. என்ன ஆனார்கள்? வேறு ஊர்களுக்குப் பிழைப்பு தேடி சென்று விட்டார்கள். பறவைகளைப் போல் கூட்டமாக இடம் பெயர்ந்து விட்டார்கள். எங்கே போனார்கள்? வெளிநாடுகளுக்குச் சென்று விட்டார்கள்.

இன்று அனைத்து வெளிநாடுகளிலும் பிராமணர்கள் அதிகளவில் காணப்படுகிறார்கள். நியூஜெர்சியில் ஒரு மில்லியன் பிராமணர்கள் உள்ளார்கள். ஒருவரல்ல… இருவரல்ல! இதனை ‘ப்ரெயின் ட்ரெயின்’ என்பார்கள்.

நம் மேதமைச் செல்வங்கள் எல்லாம் இந்தியாவை விட்டு கிளம்பிச் சென்றுவிட்டன.

நம் தேசத்தை ஊழல் செய்பவர்களிடம் ஒப்படைத்து விட்டோம். இதுதான் நம் நாடு தற்போது எதிர்கொள்ளும் பிரச்சனை.

எல்லா புத்திசாலி பிள்ளைகளும் பாரத தேசத்தை விட்டு சென்றுவிட்டனர். அவர்கள் ஒரு டாலரில் உணவு உண்டு இன்னொரு டாலரை வீட்டுக்கு அனுப்புகிறார்கள். அதனைக் கொண்டு இந்தியாவில் உள்ள பெற்றோர் உயிர் வாழ்கிறார்கள். இன்று பிராமணர்களிடம் உடுத்திக்கொள்ள இரண்டாவது உடை இல்லை. நீங்கள் கோதாவரி மாவட்டம் சென்று கோனசீமா எனப்படும் இடத்தைப் பார்த்தால் அத்தகைய ஏழ்மை நிலையில் பிராமணர்கள் வசிப்பதைக் காண முடியும். இது உண்மை. இதனை யாரும் மறுக்க முடியாது.

இந்த நிலைமை ஏன் ஏற்பட்டது? இது யோசிக்க வேண்டிய விஷயம். வரலாறு தொடங்கிய நாள் முதல் பாரத தேசத்தைப் பாதுகாத்து வந்த பிராமணர்கள் இன்று அவல நிலைக்கு ஆளாகிவிட்டார்கள்.

சத்ரபதி சிவாஜியின் குரு சமர்த்த ராமதாச சுவாமி. ஸ்ரீகிருஷ்ண தேவராயரின் குரு மகா மந்திரி திம்மரசு. இவர் ராயலசீமாவில் குத்தி என்ற ஊரைச் சேர்ந்தவர். அவருடைய புத்தி கூர்மையால் முழுமையான பேரரசாக விஜயநகர சாம்ராஜ்யம் எழுந்து வளர்ந்தது.

வெளிநாட்டில் ஒரு சமூகம் உள்ளது. அவர்கள் ஜூஸ். யூதர்கள். அவர்கள் அறிவுக்கூர்மை மிகுந்தவர்கள். கடின உழைப்பாளிகள். இவர்களை ஹிட்லர் என்ன செய்தான்? 60 லட்சம் யூதர்களை ஒரே நாளில் கொன்று குவித்தான். அவர்கள் மேல் அத்தனை வெறுப்பு அவனுக்கு. அவர்கள் செய்த தவறுதான் என்ன? அவர்கள் மேதமை வாய்ந்தவர்களாக… புத்திசாலிகளாக இருந்ததுதான்!

அறிவுக்கூர்மை மிகுந்தவர்கள் எல்லாம் யூதர் சமூகத்திலிருந்து வந்தவர்களே! காரல் மார்க்ஸ் ஒரு யூதர். ஐன்ஸ்டீன் ஓர் யூதர். ஜீசஸ் கிரைஸ்ட் ஒரு யூதர். ஜீசஸ் கிரைஸ்ட் கிறிஸ்தவர் அல்ல. அவரைக் கொண்டு உருவாக்கிய மதம் கிறித்தவ மதம்.

யூத மதம் எங்கிருந்து உருவானது? அது ஹிந்து மதத்தில் இருந்து பிறந்தது. ஹிந்துக்கள் 3000 ஆண்டுகளுக்கு முன் பிற பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்த போது மத்திய தரைக்கடல் பகுதியில் நிலை பெற்றார்கள். இவர்கள் யாதவர்கள். கிருஷ்ணனின் உறவினர்கள்.

யது என்ற சொல்லே யூதர் என்றானது. மகேசா என்ற சொல் மோசஸ் என்று மாறியது. ப்ராஹ்மண் என்ற சொல் ஆப்ரஹாம் என்று மாறியது. ஓம் என்பது ஆமென் ஆனது. ஆமீன் என்றானது. ஆமீன் என்றால் சாந்தி. ஓம் சாந்தி என்று பொருள். இவர்கள் பிற்காலத்தில் தாம் பாரதியர்கள் என்பதை மறந்து போனார்கள். ஹிந்துக்கள் மீது படையெடுத்தார்கள். ஒரே மனித இனத்தில் ஏற்பட்ட வரலாற்று பரிணாமங்கள் இவை.

சாணக்கியரைப் பற்றி சிறிது பார்க்க வேண்டும். சாணக்கியர் சந்திர குப்தனின் குரு. சந்திரகுப்தன் ஒரு சக்கரவர்த்தி. சாணக்கியர் ஒரு பிராமணர். மிக எளிய ஆடையோடு இருப்பவர்.

ஒரு கிரேக்க தூதர் சந்திரகுப்தனை சந்திக்க வந்தார். தான் வந்த காரணத்தை கூறி சில ஓலைகளைக் கொடுத்தார். ஆனால் சந்திரகுப்தன் அவற்றை வாங்கிக் கொள்ளாமல் தன் குருவிடம் சென்று கொடுக்கும்படி கூறினான். ஒதுக்கமாக காட்டில் ஒரு குடிசையில் வசித்த சாணக்கியரைப் பார்த்து அந்த தூதர் வியந்து போனார். அப்போது சாணக்கியர் வறட்டி தட்டி காய வைத்துக் கொண்டிருந்தார். அவர் ஒரு பிரம்மச்சாரி.

தன் சமையலுக்கான ஏற்பாடுகளை தானே செய்து கொண்டிருந்தார். கிரேக்க தூதருக்கு ஒன்றும் புரியவில்லை. சக்கரவர்த்தியான சந்திரகுப்தனுக்கு இந்தப் பைத்தியக்கார பிராமணனா குரு? என்று விளங்காமல் விழித்தார். வந்த விஷயத்தைக் கூறி ஓலைச்சுவடிகளை அளித்தார்.

அவற்றைப் பெற்றுக் கொண்டார் சாணக்கியர். வந்தவரை உபசரித்து அமர வைத்தார். இருட்டத் தொடங்கியது. குடிசைக்குள் ஒரு சிறு கை விளக்கு எரிந்தது. மாலை சந்திரன் உதயமானான். சந்திரோதயம் ஆனவுடனே சாணக்கியர் அந்த விளக்கை அணைத்து விட்டு, “வெளியில் போய் அமரலாம், வாருங்கள்!” என்றார்.

தூதருக்கு ஒரே வியப்பு. “இருந்த ஒரு விளக்கையும் ஏன் அணைத்தீர்கள்?” என்று கேட்டார். “இந்த விளக்கை ஏற்றுவதற்கு விளக்கெண்ணெய் வேண்டும். சந்திரகுப்தனிடம் சென்று கேட்டு வாங்கவேண்டும். அரசாங்க கஜானாவை துர்விநியோகம் செய்ய எனக்கு உரிமை இல்லை. சிக்கனமாக இருக்க வேண்டும்” என்றார்.

அதுதான் தேசபக்தி. அதுதான் தேசியவாதம். அதுதான் சாணக்கியர். அதுதான் பிராமணர்கள் தேசத்திற்கு அளிக்கும் பாதுகாப்பு. அவர்கள் காட்டும் மனிதாபிமானம். அதற்காகத்தான் சாணக்கியரை நாம் இன்றளவும் போற்றுகிறோம்.

அமெரிக்காவின் போஸ்டன் நகரில் உள்ள ரோமன் கத்தோலிக்கர்கள் தம்மை ‘போஸ்டன் பிராமின்ஸ்’ என்று கூறிக் கொள்கிறார்கள்.

பிராமணியம் என்பது தூய்மையின் குறியீடு. முழுமைக்கான அடையாளம். சத்துவம் ரஜஸ் தமஸ் என்ற மூன்று குணங்கள் உள்ளன. பிராமணர்கள் சத்துவ குணச் செல்வர்கள். சத்திரியர்கள் ரஜோ குணம் நிறைந்தவர்கள். க்ஷாத்திரம் ராஜன் போன்ற சொற்கள் ராஜஸ குணத்தின் அடையாளங்கள்.

இன்றைய சமுதாயத்தில் க்ஷாத்திரம் இல்லை. வீரம் இல்லை. அனைவரும் பலவீனர்கள் ஆகிவிட்டார்கள். பிராமணனைப் போட்டு அடிக்கிறார்கள். அதில்தான் வீரம் காட்டுகிறார்கள். இன்று சமுதாயத்தில் பிராமணர்களுக்கு பாதுகாப்பில்லை. இத்தகைய சூழ்நிலை ஏன் ஏற்பட்டது?

ஏனென்றால் பிராமணர்கள் இரண்டு முக்கியமான தெய்வீக சக்திகளை இழந்து விட்டார்கள். நம் முன்னோர்களிடம் பரம்பரையாக இருந்து வந்த சக்திகள் இரண்டு. முதலாவது சாபம் கொடுப்பது. இரண்டாவது அனுகிரகம் செய்வது.

சத் பிராமணன் ஒருவனுக்கு மனம் நோகுமானால் எதிரில் இருக்கும் தீயவன் அழிந்து போவான். பிராமணன் ஆசி கூறி அனுக்கிரகம் செய்தால் அது அப்படியே நிறைவேறும்.

இன்று எத்தனையோ பிராமணர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். அவை பலவும் நிலைப்பதில்லை. காரணம் என்ன? பிராமணர்கள் காயத்ரி மந்திரத்தின் அருளை இழந்துவிட்டார்கள். யாரும் காயத்ரி மந்திர ஜபத்தை சரியாகச் செய்வதில்லை.

இன்று ஒரு கேள்வி எழலாம். எங்களுக்கு நிறைய வேலை இருக்கிறது. அதற்கெல்லாம் நேரமில்லை என்று பலரும் நினைக்கலாம்.

முன்பிருந்த சமூகச் சூழல் வேறு. இன்று அவசர யுகம் என்று கூறலாம். வயிற்றுப் பிழைப்புக்காக உழைத்தே உடலும் மனமும் சோர்ந்து போகிறது என்று கூறலாம்.

ஆனால் டிவி சீரியல் பார்ப்பதற்கும் திரைப்படம் பார்ப்பதற்கு இன்று நேரமும் மனமும் உள்ளது. அவற்றை பார்க்கா விட்டால் எந்த நஷ்டமும் இல்லை. ஆனால் காயத்ரியை ஜபம் செய்யா விட்டால் நஷ்டம் உண்டு.

‘கய்’ என்றால் உயிர் என்று பொருள். ‘த்ரா’ என்றால் ரட்சணை. நமக்கு பத்து பிராணன்கள் உள்ளன. அவை பிராணன் அபானன் வியானன் உதானன் சமானன் என்பவை. இவை பஞ்சப் பிராணன்கள்.

இவற்றைத் தவிர ஐந்து உப பிராணன்கள் உள்ளன. நாகன் கூர்மன் கிருகரன் தேவதத்தன் தனஞ்செயன்.

இந்த பிராண சக்திகள் நம் உடல் முழுவதும் பரவி உள்ளன. இவை இல்லாவிட்டால் சிவம் சவமாகிவிடும். பிராண சக்திகள் நம்மிடம் இருக்க வேண்டும் என்றுதானே நாம் விரும்புவோம்? பின் அவற்றை காத்துக் கொள்ள வேண்டாமா? காயத்திரி மந்திரத்தால் அவற்றை இரட்சித்துக் கொள்ள வேண்டும்.

மந்திரம் உச்சரித்தால் உயிர் எவ்வாறு பாதுகாக்கப்படும்? மருத்துவமனைக்குச் சென்று மருந்து வாங்கி சாப்பிட்டால் தானே உயிர் பாதுகாக்கப்படும்? என்று கேட்கலாம்.

நம் உடலில் கால் முதல் தலை வரை மின்காந்த அலைகள் பரவியுள்ளன. பிராமணர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? காலையிலேயே துயிலெழுத்து காயத்ரி ஜபம் செய்து தம் உடலில் இருக்கும் மின்காந்த சக்தி அலைகளை உறுதியாக்கிக் கொண்டார்கள். அக்காரணத்தால் அவர்கள் உடல் முழுவதும் தெய்வீக சக்தி இருந்தது.

“ஓம் பூ: புவ: ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி I
தியோ யோந: ப்ரசோதயாத் II” என்று காயத்ரியை பிரார்த்தனை செய்தார்கள். “என் அறிவைத் தூண்டுவாயாக!” என்று காயத்ரி மாதாவை பிரார்த்தனை செய்தார்கள். அறிவு தூண்டப்பட்டு பாதுகாக்கப் படாவிட்டால் என்ன ஆகும்? நம் மூளை கூர்மையடையாது. எதிலும் முன்னேற்றத்தை காண முடியாது.

அதனால் நம்முடைய முதலும் முக்கியமானதுமான கடமை பிராமணர்களைப் பாதுகாப்பது. பசுக்களைப் பாதுகாப்பது. ‘கோ’ என்ற சமஸ்கிருதச் சொல் ‘கௌ’ என்ற ஆங்கிலச் சொல்லாக மாறியது. ஆங்கிலம் சுதந்திரமான ஒரு தனிப்பட்ட மொழி அல்ல. சம்ஸ்கிருதத்தில் இருந்து பிறந்த ‘பேத்தி’ என்று கூறலாம். லத்தீனும் கிரேக்கமும் சமஸ்கிருதத்தின் சகோதரிகள். டோர் என்றால் கதவு. இது த்வார் என்ற சொல்லிலிருந்து உருவானது. நக்தா என்றால் சம்ஸ்கிருதத்தில் இரவு. அது நைட் ஆனது. எல்லா ஆங்கிலச் சொற்களுக்கும் வேர்ச் சொல் சம்ஸ்கிருதமாக இருக்கும். சமஸ்கிருதம் அனைத்து மொழிகளுக்கும் தாய்.

இன்று நாம் சமஸ்கிருதத்தைக் காப்பாற்றுகிறோமா? போகட்டும்… கௌரவ மரியாதையாவது அளிக்கிறோமா? சமுதாயத்தில் யாராவது பிராமணனை மதிக்கிறார்களா? யாருமில்லை.

இந்து மதத்திற்கும் பிராமணர்களுக்கும் சமஸ்கிருதத்திற்கும் இன்று யாரும் மதிப்பளிப்பதில்லை. பின் சமுதாயத்தை யார் பாதுகாப்பார்கள்?

பாரத தேசத்தில் ஐந்து ‘க’ காரங்கள் உள்ளன. இந்த ஐந்தும் பாதுகாக்கப் பட்டால் இந்தியா பாரத தேசமாக… புண்ணிய பூமியாக விளங்கும்.

காயத்ரி கோ கீதை கங்கை கோபாலன். இந்த ஐந்தின் மீது யாருக்கு கௌரவ மரியாதை உள்ளதோ… யார் தன் வாழ்நாளில் இந்த ஐந்தையும் காப்பதற்காக கங்கணம் கட்டி வாழ்வானோ அவனே ஹிந்து.

“நான் இந்தியாவில்தான் வசிக்கிறேன். ஆனால் பிராமணர்களின் மேல் எனக்கு மதிப்பு கிடையாது. நான் வேதங்களை மதிக்க மாட்டேன். அது ஏதோ பழைய நூல். தற்காலத்திற்கு உதவாது. அவற்றை ஏன் படிக்க வேண்டும்?” என்று கேட்பவன் ஹிந்து அல்ல.

“பசுமாட்டை நான் மதிக்க மாட்டேன். கோமாதாவை வணங்கமாட்டேன். பிற விலங்குகளைப் போல அவற்றையும் கொல்லலாம். தவறல்ல. அது எந்த விதத்தில் சிறந்தது? ஆடு தாழ்ந்தது….மாடு மட்டும் உயர்ந்ததா? ஏன் இந்த வேறுபாடு? நாய் தாழ்ந்ததா? அது மனிதனைக் காவல் காக்கிறது. அதனால் நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைப்பேன். மடியில் வைத்து சோறூட்டுவேன். நாயை அன்போடு வளர்ப்பேன். பசுவைக் காலால் உதைப்பேன்” என்பவர்களிடம் ஒரு கேள்வி.

நாயின் சிறு நீரைக் குடிக்கலாமா? அது மருத்துவ குணம் கொண்டதா? ஆனால் பசு மாட்டின் சிறுநீரை அருந்தலாம். நம் முன்னோர்கள் பஞ்சகவியம் காலையில் அருந்தி வந்தார்கள். இன்றைக்கும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் நாட்டு பசுவின் சிறுநீர் சிறிது அருந்தி வந்தால் நோயின்றி வாழமுடியும். விடியலில் எழுந்து குளித்து விட்டு சிறிது பசுஞ்சாணி அருந்த வேண்டும். இது தற்போது சாத்தியமா? சாத்தியம்தான்! அதனால் என்ன நன்மை? அல்சர் போன்ற வயிற்றுக் கோளாறுகள் வராது. சர்க்கரை நோய் நெருங்காது. கேன்சர் வராது. இது உண்மை. எந்த ஆரோக்கியக் கேடும் அருகில் நெருங்காது. நம் முன்னோர்கள் அறிவியல் பூர்வமாக ஆய்ந்து கூறியவை இவை!

பசுமாட்டின் உடலில் பதினான்கு புவனங்களும் உள்ளன என்பதால் அதனை வணங்குகிறோம். காலையில் பசுமாட்டைச் சுற்றி வந்து பிரதட்சணம் செய்து வணங்கினார்கள் நம் முன்னோர். இன்று அந்த கலாச்சாரம் கிராமங்களில்கூட தென்படுவதில்லை. காணாமல் போய்விட்டது.

கங்கையில் நாம் சேர்க்கும் கழிவுகளைப் பற்றி சற்று நினைத்துப் பாருங்கள். கல்கத்தா ஹூக்ளி நதி முழுவதும் சேறாக உள்ளது. நம் இந்திய கலாச்சாரம் போலவே நதிகளும் நாசமடைந்து விட்டன. ஊழல் நிறைந்த சமுதாயத்தில் வாழும் நாம் புண்ணிய நதிகளை பாழ் செய்து விட்டோம். நம்மை நாம் பிராமணர்கள் என்று எவ்வாறு அழைத்துக் கொள்வது?

பிராமணர்களுக்கும் பிறருக்கும் என்ன வேறுபாடு? சாணக்கியர் தன் தவ சக்தியால் ஒரு பெரிய அரசாங்கத்தை அடக்கியாளக் கூடியவராக இருந்தார்.

தங்குடூரு பிரகாசம் பந்துலு ஆந்திரப் பிரதேசத்தின் முதல் முதலமைச்சராக இருந்தவர். குள்ளமாக சிவப்பாக இருப்பார். எப்போதும் ஒரு மேலங்கி அணிந்திருப்பார். வெயிஸ்ட் கோட். ஏனென்றால் உள்ளே அணிந்திருந்த கிழிந்த சட்டையை மறைப்பதற்காக. அவ்விதம் உயர்ந்த மனிதர்கள் எளிமையை விரும்பி ஏற்றார்கள்.

இன்று ஒரு பஞ்சாயத்துபோர்டு அதிகாரியின் அறைக்குச் சென்றால் கூட அறை முழுவதும் ரூபாய் நோட்டுக் கட்டுகளை பார்க்க முடியும். மிகப் பெருஞ் செல்வம் முடங்கிக் கிடக்கிறது. இந்தியா ஏழை நாடல்ல. இந்தியா மிகப் பெரும் செல்வம் நிறைந்த நாடு. ஆனால் பொதுமக்கள் ஏழைகள். அரசியல்வாதிகள் செல்வந்தர்கள்.

வேதத்தில் உள்ளவை வெறும் பாரத தேச மக்களுக்காக கூறப்படவில்லை. முழு மனித இனத்திற்குமான சொத்துக்கள் அவை. ருக் வேதத்தில் பத்தாவது மண்டலத்தில் ஒரு மந்திரம் உள்ளது.

“சம் கச்சத்வம், சம் வதத்வம், சம் வோ மனாம்ஸி ஜானதாம், தேவா பாகே யதா பூர்வே…..”

இதன் பொருள் என்ன?

சம் கச்சத்வம் – மனித இனம் முழுவதும் ஒற்றுமையாக சேர்ந்து நடப்போம். ஓ உலக மனிதர்களே! அனைவரும் ஐக்கியமாக சேர்ந்து நடப்போம்.

சம் வதத்வம் – நாம் அனைவரும் ஒரே சிந்தனையோடு ஒரே கொள்கையில் நிற்போம்.

சம் வோ மனாம்ஸி ஜானதாம் – நாம் அனைவரும் மனம் ஒருமித்து இருப்போம். நம் அனைவர் மனமும் ஒன்று கலந்து இருக்கட்டும்.

தேவா பாகே யதா பூர்வே – நம் புராதன புண்ணிய புருஷர்கள் எவ்வாறு கூறினார்களோ நாமும் அதேபோல் வாழ்வோம்.

இந்த மந்திரத்தின் தேவை இன்றைக்கும் உள்ளதைக் காண முடிகிறது. இந்த மந்திரங்களை எழுதி எத்தனையோ கோடி வருடங்கள் கடந்துவிட்டன. இன்றைக்கும் அதற்கான தொடர்பு காணப்படுகிறது. மனித இனத்திற்குப் பயன்படும் மந்திரங்கள் இவை.

பிராமணன் காயத்ரி மந்திரத்தின் சக்தியைப் பெற்றானாகில் துஷ்ட சக்திகள் அழிந்து போகும். ஆனால் தற்காலத்தில் அத்தகைய தெய்வீக சக்தி பிராமணனிடம் அரிதாகி விட்டது. தற்போது நேர்மறையான சக்தி வாய்ந்த அலைகள் பிராமணனால் சமுதாயத்திற்கு வழங்கப் படுவதில்லை. காயத்ரி மாதா நமக்கு சக்தி அளிப்பதில்லை. ஏனென்றால் நாம் அவளை வணங்குவதை நிறுத்தி விட்டோம்.

இளைய சமுதாயம் இனியாகிலும் வேதத்தை மதித்து காயத்திரி ஜபம் செய்யக் கற்க வேண்டும். காலையில் எழுந்து குளித்து காயத்ரியை வணங்கி அவள் அருளைப் பெற முயற்சிக்க வேண்டும்.

உண்மை எப்போதும் வெல்லும். ருதா என்ற சமஸ்கிருதச் சொல்லிருந்து ட்ரூத் என்ற சொல் பிறந்தது. சத்தியமே பேச வேண்டும். சமுதாய நலனை கருத்தில் கொள்ள வேண்டும்.

பிராமணன் செய்யும் தவம் அவனுக்கு மட்டுமல்ல. அனைத்து குலத்தவருக்கும் சென்றடையும். தேசம் தலமாக விளங்கும். பிராமணர்கள் தங்களின் தாழ்ந்த நிலைமைக்கு யாரையும் குறை சொல்லிப் பயனில்லை. நாமே நம் நண்பர்கள். நாமே நம் பகைவர்கள். பிராமண தர்மத்தைப் காப்பாற்றிக் கொண்டே அவரவர் உத்தியோகங்களைச் செய்து வர வேண்டும். இன்றைக்கு நாம் ஓரளவாவது நலமாக இருக்கிறோம் என்றால் நம் பூர்வீகர்கள் செய்த தவமே காரணம்.

அறிவுக்கூர்மை மிகுந்த யூதர்களை ஹிட்லர் வேட்டையாடிக் கொன்றது போலவே தற்போது பிராமணர்கள் வேட்டையாடப்படுகிறார்கள். ஏனென்றால் பிராமணர்கள் அறிவுக்கூர்மை மிகுந்தவர்கள். பொறாமையும் அசூயையும் நிறைந்தவர்களுக்கு அறிவுத் திறன் மிக்கவர்களைப் பார்த்தால் பொறுக்க இயலாது.

இரண்டாயிரம் ஆண்டுகள் யூதர்கள் தமக்கென்று ஒரு நாடு இன்றி மேற்கத்திய நாடுகளால் அடித்து விரட்டப்பட்ட நிலையில் வாடினார்கள். 1948ல் அவர்களுக்கு ஒரு சிறிய நாடு கிடைத்தது. அதுவே இஸ்ரேல். அது தெலுங்கானா மாநிலம் அளவு நிலப்பரப்பு கொண்டது. இப்போது அவர்கள் மிகச் சக்தி வாய்ந்தவர்களாகிவிட்டார்கள். அரபு நாடுகளை எல்லாம் நடுங்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் பிராமணர்களின் மீது பல திசைகளிலிருந்தும் தாக்குதல் நடக்கிறது. பிராமணர்களை அழித்து கிறிஸ்தவர்களாக மாற்றும் முயற்சி தீவிரமாக நடக்கிறது. பகவத்கீதை மீதும் பிராமணர்கள் மீது மட்டுமே குறிவைத்து எதிர்ப்பு கிளம்புகிறது. பசுமாடுகள் கொல்லப்படுகின்றன. இந்த அழிவு சக்திகளிடமிருந்து பாரத தேசத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். நம் புராதான கலாசார செல்வத்தைப் பாதுகாக்க வேண்டும்! தர்மப் பிரசாரம் நடக்க வேண்டும்!

நன்றி......
கீதையை விட எளிய திருப்பாவை!

பகவத்கீதை சமஸ்கிருத ஸ்லோகங்களைக் கொண்டது. அதன் தமிழாக்கத்தைப் படித்தாலே தலை சுற்றும். பலமுறை படித்தால் தான் கிருஷ்ணர் அதில் என்ன சொல்லியிருக்கிறார் என புரியும். அதில் 700 ஸ்லோகங்கள் உண்டு. திருப்பாவையில் முப்பதே பாடல்கள். எளிய தமிழில் இருக்கிறது. அத்தனையும் இனிய கானங்கள். அதிலும் எம். எல்.வசந்தகுமாரி போன்றவர்கள் பாடிக்கேட்டால் காதுகளுக்கு குலோப்ஜாமூனாக இருக்கும். கீதையின் நடை கடினமானது. பல விஷயங்களைச் சொன்ன கிருஷ்ணன், இதையெல்லாம் கடைபிடித்தால் நீ என்னை அடையலாம், என்று கடைசியில் சொன்னார்.மாம் ஏகம் சரணம் வ்ரஜ ( நான் ஒருவனே சரணடையத்தக்கவன்) என்ற வரி இதை உறுதிப்படுத்தும். ஆனால், திருப்பாவையில் ஆண்டாள் முதல் பாடலிலேயே மார்கழி நோன்பிருந்து அவனைச் சரணடைந்தால் அவன் தன்னையே நமக்கு தருவான் எனச் சொல்லி விட்டாள். நாராயணனே நமக்கே பறை தருவான் என்பது அந்த வரி. எனவே, கிருஷ்ணரின் கீதையைக் காட்டிலும் ஆண்டாளின் திருப்பாவை மிக மிக உயர்ந்ததாகிறது.
சனிபிரதோஷத்தின் சிறப்பு தெரியுமா?

நித்ய பிரதோஷம், பட்சப் பிரதோஷம், மாச பிரதோஷம், மஹா பிரதோஷம், ப்ரளய பிரதோஷம் என்று ஐந்து வகையாக பிரதோஷத்தைப் பிரித்துள்ளனர். பிரதோஷம் என்றால் அனைத்துக் குற்றங்களும் பாவங்களும் சிவபெருமானால் பொறுத்து மன்னிக்கக்கூடிய காலம் என்று பொருள். ஜாதகத்தில் ஏதாவது குற்றங்கள் இருந்தால் திருமணத் தடை, புத்திரப்பேறின்மை, கடன் போன்ற கஷ்டங்கள் ஏற்படுகின்றன. பிரதோஷ விரதம் இருந்தால், சிவன் ஜாதக  குற்றங்களைப் போக்கி நன்மையளிப்பார். நாம் முற்பிறவிகளில் செய்த பாவங்களினால் எத்தனையோ இன்னல்களுக்கு ஆளாகிறோம். பிரதோஷ விரதம், இவற்றிலிருந்தும் நம்மைக் காக்க வல்லது. தினமும் மாலை சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு 24 நிமிடங்கள், பின்பு 24 நிமிடங்கள் ஆக 48 நிமிடங்கள் பிரதோஷகாலமாகும். இது நித்ய ப்ரதோஷம். வளர்பிறைதிரயோதசி திதி மாலைப்பொழுது பட்ச பிரதோஷமாகும். தேய்பிறைத் திரயோதசி திதியின் மாலைப்பொழுது மாச பிரதோஷமாகும். சனிக்கிழமையன்று தேய்பிறைத் திரயோதசி திதி கூடிவருவது தான் மஹா பிரதோஷம் என்று குறிப்பிடப்படுகிறது. இதனை சனி மஹாபிரதோஷம் என்றும் கூறுவர். தேவர்கள் பாற்கடலைக் கடைந்த பொழுது ஏற்பட்ட விஷத்தை சிவபெருமான் தாமே உட்கொண்டு உலகைக் காப்பாற்றிய நாள் இது. மற்றைய பிரதோஷங்களில் உபவாசம் (சாப்பிடாமல் இருப்பது) இருக்க இயலாதவர்கள் சனி பிரதோஷத்தன்றாவது உபவாசம் இருந்து சிவபெருமானை வழிபட்டால் எல்லா குற்றங்களும் பாவங்களும் நீங்கி சகல  நன்மைகளும் உண்டாகும்.
பாவை உணர்த்தும் தத்துவம்!

துயில் நீக்கம் என்னும் ஆன்மிக மையங்கொண்ட அலைகள் இரு பாவைகளிலும் விரிகின்றன. சிறுமியர் தம் ஒத்த வயதினரை அதிகாலையில் எழுப்பி நீராட அழைக்கின்றனர். துயில் எழுப்புதலும் நீராட அழைத்தலும் இனிய ராகங்கள் துயில் எழுப்புதல் ஆன்மாவின் துயில் நீக்கத்தை உணர்த்துகின்றது. அருளாளர்கள் அனைவரும் அழைத்த அழைப்பின் சாரம் இதுவே.

உத்திஷ்டத ஜாக்ரத எழுமின்-விழிமின் எனும் உபநிடதக் குரலுக்கு மணிவாசகரும் ஆண்டாளும் தந்த இன்னமுதப் பாவைப் பாடல்களின் வாயில் நாடகப் பாங்கினது. உள்ளே துயில்வோர்; வாசலில் எழுப்புவோர். நேரமோ இருள் நீங்கும் அதிகாலை. எழுப்பும் குரலிலோ நட்புரிமை. சில போது எள்ளல், சிலபோது நகையாடல், சிலபோது செல்லக் கடிந்துரைகள் என எப்போதும் நேயமிகு நெருக்கம். வன்செவியோ நின் செவிதான்? எனக் கேட்பவள் திருவெம்பாவைத் தோழி. ஊமையோ அன்றிச் செவிடோ? (9) என வினபுபவள் திருப்பாவைத் தோழி. ஒண்ணித்தில நகையாய் இன்னம் புலர்ந்தின்றோ? (4) என்பது திருவெம்பாவைக் குரல் எல்லே இளங்கிளியே இன்னும் உறங்குதியோ? என்பது திருப்பாவை. நாளை வந்துங்களை நானே எழுப்புவன் என்ற வள் நாணாமே போன திசை பகராய்! (6) என்பது திருவெம்பாவையின் செல்லக் கடிந்துரை. கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பர்கணனும் தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ? (10) என்பது திருப்பாவையின் செல்லக் கடிந்துரை.

இவ்வழகிய உரையாடல் சித்திரங்கள் பாவைப் பாட்டுகளின் நுழைவாயில் வரவேற்பினிமைகள், அழகியல் ஆர்வமும் ஆன்மீகத் தேடலும் உடையவர் தம் உள்ளத்தை எளிதில் பிணிக்கும் எழில் கோலங்கள்!

நீராடல் சித்திரச் சோலையும்
நோன்பின் சித்திரக்கூடமும்.

இரு பாவைப் பாடல்களுக்கும் அமைந்த பொது மையம் ஆழமானது. எனினும் அவற்றிடையே நுட்பமான வேறுபட்ட பரிமாணங்களும் உள. நீராடலின் சித்திரம் திருவெம்பாவையிலும் நோன்பின் சித்திரம் திருப்பாவையிலும் விரிகின்றன. வாழ்க்கையை இனிய நோன்பின் புனித நீராடலாக அனுபவிக்கும் ஆழப் பார்வையின் விகசிப்பாகவே திருவெம்பாவை ஒளிர்கின்றது. இயற்கை அரங்கின் அழகெல்லாம் உருக்கி நிற்கும் தடாகம் மணிவாசகக் கண்களில் இறைத் தடாகம் ஆகின்றது. பொய்கையின் கருங்குவளையும் செந்தாமரையும் நீலமேனியாளையும் செந்தமிழ் வண்ணனையும் நினைவூட்ட; அங்கம் குருகினம் அம்மையின் கைவளையும் பின்னும் அரவம் அப்பனின் பாம்பணியும் நினைவூட்ட; தங்கள் மலம் கழுவுவார் வந்து சார்தல் நீராடும் பொய்கையினைப் பரம்பொருட்சுனை ஆக்குகிறது.

பைங்குவளைக் கார் மலரால் செங்கமலப் பைம் போதால்
அங்கம் குரு கினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலம் கழுவுவார் வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த பொங்கு மடு

என ஆனந்தமடைகிறது பாடல் (திருவெம்பாவை 13)

இப்பார்வையின் பரவசத்தில் இன்னும் ஆழங்கால் படும்போது வாழ்க்கை அரங்கே இறைத் தடாகமாகின்றது. வாழும் வாழ்க்கையே பரமானந்த நீராடல் ஆகின்றது. பாய்ந்து பாய்ந்து - பாடிப் பாடி - குடைந்து குடைந்து- தோழியருடன் ஆனந்த நீராடும் வைகறை இனிமையே- திருவெம்பாவையின் ஞான மொழியில்-ஆன்மிக வாழ்க்கையின் அற்புதக் குறியீடாகின்றது. மாமத யானை மரத்தில் மறைந்திடும் அழகியல் நுட்பம் இது. பார் முதல் பூதம் பரத்தில் மறைந்திடும் ஆன்மவியல் பரவசம் இது.

வாழ்க்கையை உன்னதமான இறைக்காலத்தில் நோன்பின் சித்திரகூடமாகக் காணும் காட்சிக்கு இட்டுச் செல்கிறது. திருப்பாவை. மார்கழித் திங்கள்..... என்று தொடங்கி, நெய்யும் பாலும் நீக்கிடல், மலரும் மையும் ஒதுக்கிடல், செய்யத் தகாதன தவிர்த்தல் எனும் விரதநெறிகளைத் தருகிறது.

குள்ளக் குளிரக் குளிர்ந்து நீராடல்-இங்கு விரத அங்கமே துயில் எழுப்பும் குரலே நீட்டிக் கொள்கிறது. நந்தகோபன் மாளிகைக் காவலனை உணர்த்தி துயில் எழுப்பி-அவனைப் போற்றி மகிழ்கின்றது. கோதையின் பாவை. நோன்பின் நிறைவில் கோவிந்தன் அருளால் பெற்ற நல்லுடையும் பல்கலனும் அணியும் குதூகலம் அங்குண்டு. மூடநெய்பெய்து முழங்கை வழி வாரக் கூடி இருந்து குளிர்ந்து உண்ணும் பேறு உண்டு. அனைத்துக்கும் மேலாகச் சிங்கமென வந்து கண்ணன் சிங்காதனமிருந்து அருளும் காட்சியும் பறை பெற்றுய்தல் எனும் கைங்கர்ய பிராப்தியின் ஆனந்தமும் சித்திரக்கூடச் சிகரக் காட்சியாகின்றன.

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் மற்றை நங் காமங்கள் மாற்று என்பது வாழ்க்கையையே நோன்பாகக் காணும் கோதைப் பார்வை.
சிவமணமும் மால்மணுமும் திருவெம்பாவை சிவமணம் கமழ்வது. திருப்பாவை மால்மணம் கமழ்வது.

இறைமுகட்டின் புகழை இடையறாது ஒலிக்கும் இன்னருவி ஓசை பக்தி இலக்கியங்களின் பொதுமை. இறைப் புகழ் ஒன்றே பக்தர் நோக்கில் பொருள்சேர் புகழ் போற்றிப் புகழ்ந்திருந்து பொய் கெட்டு மெய்யாதலே நோக்கம். எனவே, என்னானாய் என்னானாய் என்னின் அல்லால் ஏழையேன் என் சொல்லி ஏத்துகேனே எனும் நெகிழ்வொலியைப் பக்தி இலக்கியங்களிலும் பொதுப் பண்பாகவே காணலாம்.

நெஞ்சம் நெகிழ்தலே பக்திவயல்களின் வளமை ஆதாரம். இறைப் புகழ்த் தொடர்களே நெஞ்சம் நெகிழ்தலின்  ஊற்றுக் கண்கள். இறைப் புகழ்த் தொடர்கள் தத்துவக் களத்திலோ-புராணக் களத்திலோ-உரிமைகெழுமிய உறவுப் பிணிப்பிலோ-அல்லது இவை மூன்றும் விரவிய இனிய சுரப்பிலோ கிளர்ந்தெழுகின்றன. இரு பாவைகளும் இவ்வகையான இறைப்புகழத் தொடர்களால் மனம் பிணிக்ககின்றன; நெகிழச் செய்கின்றன.

தேசன்- சிவலோகன்-தில்லைச் சிற்றம்பலத்துள் ஈசன்(2) என்றும்; ஆரழல் போல் செய்யா-வெண்ணீறாடி-மையார் தடங்கண் மடந்தை மணவாளன் (11) என்றும்; செங்கமலப் பொற்பாதந் தந்தருளும் சேவகன்-அங்கண் அரசு-அடியோங்கட்கு ஆரமுது(17) என்றும்; கண்ணாருமுதமாய் நின்றான்(18) என்றும்; என்னானை-என்னரையன்-இன்னமுது(7) என்றும், இன்னும் பல தொடர்களில் சிவமணம் தரும் திருவெம்பாவை.

ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்-கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் என்றும், ஆழிமழைக்கண்ணன், மாயன்- மணிவண்ணன், சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்(14) என்றும் பலவாறு புகழ்கிறது திருப்பாவை.

மாயனை-மன்னு வடமதுரை மைந்தனை-தூய பெருநீர் யமுதில் தோன்றும் அணிவிளக்கை-தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை (5) என வேகப் படிக்கட்டேறித் துரத்தித் தொடர்வது தோகைத் தமிழ்.

மழைக் காட்சியின் மனக்குளிர்ச்சியில் இரு பாவைகளும் பெறும் பரவசமும் குறிக்கத்தக்கது. இறையருளின் சாசுவதக் குறியீடு மழை. விண்ணும் மண்ணும் இணையும் அழகிய மழைக் காட்சி அழகியலாரின் கலைக் கண்களுக்கு என்றுமே, எங்குமே பெருவிருந்து. உலக ஆன்மிக இலக்கியச் சொல்லோவிய அருங்காட்சியகத்துக்கு இருபாவைகளும் தந்த அற்புதச் சித்திரங்கள் இவை.

கார்மேகத்தில் உமையவள் திருமேனி அழகையும் மின்னலில் அவளது இடையொளிக்கீற்றையும் இடிமுழக்கில் அன்னையின் பொன்னஞ்சிலம்போசையினையும் காண்பது திருவெம்பாவை. ஆழிமழைக் கண்ணா! என்ற திருப்பாவைப் பாடலிலோ மேக நிறத்தில் திருமாலின் திருமேனியையும், மின்னல் சுழற்சியில் திருக்கைச் சக்கர அருள் சீற்றத்தையும் இடிமுழக்கத்தில் பாஞ்சஜன்யத்தின் பேரொலியையும், வீசும் மழைச்சரங்களில் சார்ங்கக் கணைப்பொழிவையும் கண்டு பரவசம் கொள்கிறது. (4)

மாணிக்கவாசகர் பக்தி நெகிழ்வில் ஞானக்காட்சிகளே ததும்புகின்றன. ஞானப் பார்வையின் சொற்சித்திரங்களே திருவெம்பாவையின் பரம்பொருட் காதல் அனுபவத்தை இனிமை செய்கின்றன. ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதியை யாம் பாடக் கேட்டேயும், வாள் தடங்கண் மாதே, வளருதியோ! என்னும் தொடக்கமே ஆதியந்தமில்லாத அற்புதச் சோதியாகப் பரம்பொருளைச் சுவைக்கிறது.

பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர், போதார் புனை முடியும் எல்லாப் பொருள் முடிவே எனும் போதும்(அதலம், விதலம், சுதலம், தராதலம், இரசாதலம், மகாதலம், பாதலம் என) புராண மொழியில் தரப்படும் எழுநிலைத் தாழ்மன மண்டலங்களிலும் ஊடுருவி நீளும் பாதமலர் அழகும்; எவ்வகைப் பொருள் முடிவிலும் நீட்சி கொண்டு நிமிரும் போதார் புனைமுடி நலமும் ஞானச் சித்திரங்களாகவே அகம் நுழைகின்றன. அடிமுடி தேடிய அண்ணாமலைப் புராணத்தின் அற்புதச் சுட்டாக உணரினும் இவ்வரிகளின் ஞான மணத்தை உணரலாம்.

முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே!
பின்னைப் புதுமைக்கும்பேர்த்துமப் பெற்றியனே!

என்னும் போதும் பரம்பொருளின் காலாதீதச் சித்திரமே மனம் கொள எடுத்துரைக்கப்படுகிறது. விண்ணுக்கொரு மருந்தை வேத விழுப்பொருளை எனும் போதும்; ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும் தீர்த்தன் எனும் போதும்; பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர் விண்ணாகி, மண்ணாகி இத்தனையும் வேறாகி, எனும்போதும் ஞானச்சுவையே காதற் சுவையாகின்றது. ஆண்டாளின் இனிய பிரவாகம் காதல் வெள்ளம்; பள்ளமடை திறந்த உணர்ச்சி வேகம். அழகியல் மீதூர்ந்த அமுதச் சித்திரங்களும், புராணக் கால்வழி எழும் புனைவுச் சித்திரங்களும் அவளது ஆழ்மனம் உணர்ந்த அற்புத சத்தியங்கள்; அவளது பாவனா சக்தியின் அற்புத தரிசனங்கள்.

கோதைக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆயர்பாடி ஆகின்றது. தோழியர் ஆயர் கன்னிகையர் ஆகின்றனர். வடபத்ரசாயி திருக்கோயில் நந்தகோபன் மாளிகை ஆகின்றது. அங்கு எழுந்தருளியவன் ஆயர்பாடிக் கண்ணன் ஆகின்றான். இடையர்களது பேச்சும் இடையர் நடையும் இயல்பாகின்றன. தானே இடைச்சிறுமி ஆகின்றாள்.கோதை வாழ்வில் சீர்மல்கும் ஆய்ப்பாடி; அங்கு புழங்கும் நெய்யும் பாலும் விதவிலக்குப் பெறுகின்றன; சூழ நிற்பவை வாங்கக் குடம் நிரப்பும் வள்ளல் பெரும் பசுக்கள்; காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து ஆய்ச்சியர் மத்தினால் எழுப்பும் தயிர் அரவம் ஒலிக்கின்றது. எருமைகளைப் பனிப்புல்லுக்குச் சிறுமேய்ச்சலிடும் காட்சியும், எருமை தன் கன்றுக்கிரங்கிப் பால் சேரா நனைந்து இல்லம் சேறாகும் காட்சியும் அங்கு காணலாம். ஆயர்பாடி நாயகன் கண்ணன் ஆயர் குலத்து அணிவிளக்கு; அவனை ஓங்கி உலகளந்த உத்தமன் என்றும் பேய் முலை நஞ்சுண்டு- கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி -வெள்ளதரவில் துயில் அமர்ந்த வித்து என்றும்; புள்ளின் வாய் கீண்டான் என்றும்; ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்ந்தான் என்றும் பலவாறு புனைந்து மகிழ்வாள் ஆண்டாள். புராணக் கீற்றுகள் மாணிக்கவாசகரிடம் ஞானச் சிறகு விரிக்கும்; ஆண்டாளிடம் காதல் சிறகு விரிக்கும். வாதவூரரும், வில்லிபுத்தூரியும் தந்த அழகிய பாவைப் பாட்டுகளில் நாம் காண்பதெல்லாம்-நாம் ருசிப்பதெல்லாம் ஆன்மிக அமுத வளமே!
எல்லாம் சிவனுக்காகவே!

சிவனுடைய கருணையை, பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து என்று மாணிக்கவாசகர் போற்றுகிறார். குழந்தைக்குப் பசிக்குமே என வேளையறிந்து, பாலூட்டி பசி தீர்ப்பவள் அம்மா. சிவனோ அந்த தாயினும் மேலான அன்பு கொண்டவன் என்கிறார்.  உலகில் பிறந்த உயிர்கள் எல்லாம் உணவைத் தேடி அலைகின்றன. ஆறறிவு படைத்த மனிதன் வயிறு வளர்ப்பதற்காக மட்டும் வாழக்கூடாது. மேலான இறைவனை உணரவே, இந்தப் பிறவி என்பது பற்றி சிந்திக்க வேண்டும். திருவாசகத்திலுள்ள சுட்டறுத்தல் என்னும் பகுதியில், சிந்தித்தால் சிவனைச் சிந்திக்கிறேன். பார்ப்பதாக இருந்தால் சிவனின் திருப்பாத மலர்களைக் காண்கிறேன். அவன் திருவடிகளையே வணங்குகிறேன். அவனைப் பற்றிய மணியான வார்த்தைகளையே பேசுகிறேன், என்கிறார் மாணிக்கவாசகர்.

பொருள் புரிந்து பாடுவோம்: நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! என்னும் மாணிக்கவாசகரின் சிவபுராணத்தைப் பாராயணம் செய்து விட்டு அன்றாடப்பணிகளைத் தொடங்குவது சிவபக்தர்களின் வழக்கம். அதன் இறுதி அடி, சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப்பணிந்து என்று முடியும். சிவபுராணத்தின் பொருளைத் தெரிந்து பாடுபவர்கள், சிவலோகத்தில் ஈசனோடு வாழும் பாக்கியம் பெறுவர் என்பது இதன் பொருள். சிவபுராணம் மட்டுமில்லாமல் இறைவனுக்குரிய எந்த வழிபாட்டுப் பாடலாக இருந்தாலும் அதன் அர்த்தம் புரிந்து பாடுவதே சிறப்பு.
ஆண்டாள் பாடிய பாசுரங்கள்!

ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பெருமாளை வேண்டி திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகிய பிரபந்தங்களை இயற்றினாள். இதில் திருப்பாவை 30 பாசுரங்களும், நாச்சியார்திருமொழி 143 பாசுரங்களும் உடையது.

பூமியைக் காட்டிய தாயார்: ஆண்டாளின் இடது கையில் கல்காரபுஷ்பமும், கிளியும் உள்ளன. வலக்கையை தொங்க விட்டு பூமியைக் காட்டியபடி இருக்கிறாள். இதனை, ஆண்டாள் தன்னை வேண்டி வரும் பக்தர்களுக்கு அருள் செய்வது பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கும் கோலம் என்கிறார்கள்.

ஆண்டாளின் பிறபெயர்கள்: ஆண்டாளின் இயற்பெயர் கோதை. இவளுக்கு சூடிக்கொடுத்த சுடர்க்கொடி, ஆண்டாள், பட்டர்பிரான் புதல்வி, திருப்பாவைபாடிய செல்வி, வேயர்குல விளக்கு என்ற பெயர்கள் உண்டு.

வெள்ளிக்குறடு மண்டபம்: ஆண்டாள் சந்நிதி அர்த்தமண்டபத்தில் வெள்ளிக்குறடு மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் மாலை 6 மணிக்கு ஆண்டாள், ரங்கமன்னாருடன் ஊஞ்சலில் எழுந்தருள்வாள். இந்நேரத்தில் ஆண்டாளை தரிசனம் செய்தால், திருமண பாக்கியம் உண்டாகும் என்பது நம்பிக்கை.

ராமன் வணங்கிய பெருமாள்: ராவணனுடன் போரிடச் சென்ற ராமன் வானர சேனையுடன் சேதுக்கரையை அடைந்தார். கடலைக் கடந்து இலங்கை செல்ல வேண்டி கடலரசனை நோக்கி நாணல் புல்லின் மீது படுத்தபடி மூன்று நாட்கள் தியானத்தில் ஆழ்ந்தார். அந்த இடமே திருப்புல்லணை என்றானது. தற்போது திருப்புல்லாணி எனப்படுகிறது. ஆதிஜெகந்நாதப்பெருமாள் என்பது இவரது திருநாமம். ராமன் வாழ்ந்த திரேதாயுகத்திற்கும் முந்தியவர். இவருக்கு பெரியபெருமாள் என்ற பெயர் உண்டு. சங்கு சக்கரம் ஏந்தி நான்கு திருக்கரங்களுடன் திகழ்கிறார். ராவண சம்ஹாரத்திற்கு முன் ஜெகந்நாதரை வழிபட்ட ராமன், வெற்றி பெற்று அயோத்தி திரும்பும் போது மீண்டும் இங்கு வந்தார். இந்தக் கோயிலை மார்கழி மாதம் வழிபட்டால், இரட் டிப்பு பலன் கிடைக்கும் என்பர்.
கண்ணன் ஏன் பாண்டவர்களை காப்பாற்றவில்லை?
             (கண்ணனின் அற்புத விளக்கம்)
                 ***************************
பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலே அவருக்குப் பணிவிடைகள் செய்து தேரோட்டி பல்வேறு சேவைகள் புரிந்தவர் உத்தவர்.இவர் தனது வாழ்நாளில் தனக்கென நன்மைகளோ வரங்களோ கண்ணனிடம் கேட்டதில்லை.துவாபர யுகத்தில் தமது அவதாரப் பணியை முடித்துவிட்ட நிலையில் உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர் ''உத்தவரே இந்த அவதாரத்தில் பலர் என்னிடம் பல வரங்களும் நன்மைகளும் பெற்றிருக்கின்றனர். ஆனால் நீங்கள் எதுவுமே கேட்டதில்லை.ஏதாவது கேளுங்கள் தருகிறேன்.உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே எனது அவதாரப் பணியை முடிக்க நினைக்கிறேன்'' என்றார்.தனக்கென எதையும் கேட்காவிட்டாலும் சிறு வயது முதலே கண்ணனின் செயல்களைக் கவனித்து வந்த உத்தவருக்கு... சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாக இருந்த கண்ணனின் லீலைகள் புரியாத புதிராக இருந்தன.அவற்றுக்கான காரண காரியங்களைத் தெரிந்துகொள்ள விரும்பினார்.''பெருமானே! நீ வாழச் சொன்ன வழி வேறு; நீ வாழ்ந்து காட்டிய வழி வேறு! நீ நடத்திய மகாபாரத நாடகத்தில்... நீ ஏற்ற பாத்திரத்தில் நீ புரிந்த செயல்களில் எனக்குப் புரியாத விஷயங்கள் பல உண்டு.அவற்றுக்கெல்லாம் காரணங்களை அறிய ஆவலாக இருக்கிறேன். நிறைவேற்றுவாயா?என்றார் உத்தவர்.''உத்தவரே! அன்று குருக்ஷேத்திரப் போரில் அர்ஜுனனுக்காக நான் சொன்னது, 'பகவத் கீதை’. இன்று உங்களுக்குத் தரும் பதில்கள், 'உத்தவ கீதை’. அதற்காகவே உங்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தைத் தந்தேன். தயங்காமல் கேளுங்கள்'' என்றான் பரந்தாமன்.உத்தவர் கேட்க ஆரம்பித்தார்: ''கண்ணா! முதலில் எனக்கு ஒரு விளக்கம் வேண்டும். உண்மையான நண்பன் யார்?''

''நண்பனுக்கு ஏற்படும் துயரத்தைத் தீர்க்க உடனே அழைப்பு இல்லா மலேயே வந்து உதவி செய்பவனே உற்ற நண்பன்'' என்றான் கண்ணன்''கிருஷ்ணா! நீ பாண்டவர்களின் உற்ற நண்பன்.உன்னை அவர்கள் ஆபத்பாந்தவனாக பரிபூரணமாக நம்பினார்கள்.நடப்பதை மட்டுமல்ல;நடக்கப் போவதையும் நன்கறிந்த ஞானியான நீ... 'உற்ற நண்பன் யார்’ என்பதற்கு நீ அளித்த விளக்கத்தின்படி...முன்னதாகவே சென்று, 'தருமா! வேண்டாம் இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம் அல்லவா?ஏன் அப்படிச் செய்யவில்லை? போகட்டும்.
விளையாட ஆரம்பித்ததும், தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து, வஞ்சகர்களுக்கு நீதி புகட்டியிருக்கலாம்.அதையும் நீ செய்யவில்லை.தருமன் செல்வத்தை இழந்தான்; நாட்டை இழந்தான்; தன்னையும் இழந்தான்.சூதாடியதற்குத் தண்டனையாக அதோடு அவனை விட்டிருக்கலாம்.தம்பி களை அவன் பணயம் வைத்த போதாவது நீ சபைக்குள் நுழைந்து தடுத்திருக்கலாம்.அதையும் நீ செய்யவில்லை.திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள்.அவளைப் பணயம் வைத்து ஆடு.இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன்’ என்று சவால் விட்டான் துரியோதனன்.அப்போதாவது உனது தெய்வீக சக்தியால், அந்தப் பொய்யான பகடைக் காய்கள் தருமனுக்குச் சாதகமாக விழும்படி செய்திருக்கலாம். அதையும் செய்யவில்லை.

மாறாக, திரௌபதியின் துகிலை உரித்து அவளின் மானம் பறிபோகும் நிலை ஏற்பட்ட போதுதான் சென்று துகில் தந்தேன் திரௌபதி மானம் காத்தேன்என்று மார்தட்டிக் கொண்டாய்.மாற்றான் ஒருவன் குலமகள் சிகையைப் பிடித்து இழுத்து வந்து சூதர் சபையில் பலர் முன்னிலையில் அவள் ஆடையில் கை வைத்த பிறகு எஞ்சிய மானம் என்ன இருக்கிறது?எதனைக் காத்ததாக நீ பெருமைப்படுகிறாய்?ஆபத்தில் உதவுபவன்தானே ஆபத் பாந்தவன்?இந்த நிலையில் உதவாத நீயா ஆபத்பாந்தவன்?நீ செய்தது தருமமா?என்று கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர்.இது உத்தவரின் உள்ளக் குமுறல் மட்டுமன்று;மகாபாரதம் படித்துவிட்டு நாம் அனைவருமே கேட்கும் கேள்விகளே இவை.நமக்காக இவற்றை அன்றே கண்ணனிடம் கேட்டிருக்கிறார் உத்தவர்.பகவான் சிரித்தார்.''உத்தவரே...விவேகம் உள்ளவனே ஜெயிக்க வேண்டும் என்பது உலக தர்ம நியதி.துரியோதனனுக்கு இருந்த விவேகம் தருமனுக்கு இல்லை. அதனால்தான் தருமன் தோற்றான்'' என்றான் கண்ணன்.

உத்தவர் ஏதும் புரியாது திகைத்து நிற்க கண்ணன் தொடர்ந்தான்:
''துரியோ தனனுக்கு சூதாடத் தெரியாது. ஆனால் பணயம் வைக்க அவனிடம் பணமும் ஏராளமான ஆஸ்தியும் இருந்தது.பணயம் நான் வைக்கிறேன்.என் மாமா சகுனி பகடையை உருட்டிச் சூதாடுவார் என்றான் துரியோதனன்.அது விவேகம். தருமனும் அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு நானும் பணயம் வைக்கிறேன்.ஆனால் என் சார்பாக என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன் பகடைக்காயை உருட்டுவான்''என்று சொல்லியிருக்கலாமே?சகுனியும் நானும் சூதாடியிருந்தால் யார் ஜெயித்திருப்பார்கள்?நான் கேட்கும் எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக் காய்களில் போடத்தான் முடியுமா?அல்லது அவன் கேட்கும் எண்ணிக்கைளை என்னால்தான் போட முடியாதா? போகட்டும்.தருமன் என்னை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்துவிட்டான் என்பதையாவது மன்னித்த விடலாம். ஆனால் அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும் தவற்றையும் செய்தான்.'ஐயோ... விதிவசத் தால் சூதாட ஒப்புக்கொண்டேனே!ஆனால், இந்த விஷயம் ஸ்ரீகிருஷ்ணனுக்கு மட்டும் தெரியவே கூடாது.கடவுளே!அவன் மட்டும் சூதாட்ட மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டான்;என்னை மண்டபத்துக்குள் வர முடியாத வாறு அவனே கட்டிப் போட்டுவிட்டான்.நான் அங்கு வரக்கூடாதென என்னிடமே வேண்டிக்கொண்டான்.
யாராவது தனது பிரார்த்தனையால் என்னைக் கூப்பிட மாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில் காத்துக்கொண்டு நின்றேன்.பீமனையும், அர்ஜுனனையும், நகுல- சகாதேவர்களையும் வைத்து இழந்தபோது, அவர்களும் துரியோதனனைத் திட்டிக் கொண்டும் தங்கள் கதியை எண்ணி நொந்து கொண்டும் இருந்தார்களே தவிர என்னைக் கூப்பிட மறந்துவிட்டார்களே!

அண்ணன் ஆணையை நிறைவேற்ற துச்சாதனன் சென்று, திரௌபதியின் சிகையைப் பிடித்தபோது, அவளாவது என்னைக் கூப்பிட்டாளா?இல்லை.அவளும் தனது பலத்தையே நம்பி சபையில் வந்து வாதங்கள் செய்து கொண்டிருந்தாளே ஒழிய என்னைக் கூப்பிடவில்லை! நல்லவேளை..துச்சாதனன் துகிலுரித்தபோதும் தனது பலத்தால் போராடாமல் ஹரி... ஹரி... அபயம் கிருஷ்ணா... அபயம் எனக் குரல் கொடுத்தாள் பாஞ்சாலி. அவளுடைய மானத்தைக் காப்பாற்ற அப்போதுதான் எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது.அழைத்ததும் சென்றேன். அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன்.இந்தச் சம்பவத்தில் என் மீது என்ன தவறு?என்று பதிலளித்தான் கண்ணன்.

அருமையான விளக்கம்:கண்ணா!அசந்துவிட்டேன்.ஆனால் ஏமாறவில்லை.உன்னை இன்னொரு கேள்வி கேட்கலாமா?''என்றார் உத்தவர்.''கேள்'' என்றான் கண்ணன்.''அப்படியானால், கூப்பிட்டால்தான் நீ வருவாயா?நீயாக நீதியை நிலை நாட்ட ஆபத்துகளில் உன் அடியவர் களுக்கு உதவ வரமாட்டாயா?''
புன்னகைத்தான் கண்ணன்''உத்தவா, மனித வாழ்க்கை அவரவர் கர்ம வினைப்படி அமைகிறது.நான் அதை நடத்து வதும் இல்லை; அதில் குறுக்கிடுவதும் இல்லை.நான் வெறும் 'சாட்சி பூதம்’.நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே! அதுதான் தெய்வ தர்மம்'' என்றான்.''நன்றாயிருக்கிறது கிருஷ்ணா! அப்படியானால், நீ அருகில் நின்று, நாங்கள் செய்யும் தீமைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய். நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து பாவங்களைக் குவித்து, துன்பங்களை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும்.அப்படித்தானே?'' என்றார் உத்தவர்.
''உத்தவரே!நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நன்றாக உணர்ந்து பாருங்கள்.நான் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை நீங்கள் உணரும் போது, உங்களால் தவறுகளையோ தீவினை களையோ நிச்சயமாகச் செய்ய முடியாது.அதை நீங்கள் மறந்துவிடும்போதுதான் எனக்குத் தெரியாமல் செயல்களைச் செய்துவிடலாம் என்று எண்ணுகிறீர்கள்.

பாதிப்புக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் நிகழ்வதும் அப்போதுதான்.எனக்குத் தெரியாமல் சூதாடலாம் என்று தருமன் நினைத்தானே அதுதான் அவனது அஞ்ஞானம்.நான் சாட்சி பூதமாக எப்போதும் எல்லோருடனும் இருப்பவன் என்பதை தருமன் உணர்ந்திருந்தால் இந்த சூதாட்ட நிகழ்ச்சி வேறு விதமாகமுடிந்திருக்கும் அல்லவா?''என்றான் ஸ்ரீகிருஷ்ணன்.உத்தவர் வாயடைத்து பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தார்.ஆகா...எத்தனை ஆழமான தத்துவம்!எத்தனை உயர்ந்த சத்யம்!பகவானைப் பூஜிப்பதும் பிரார்த்தனை செய்வதும் அவனை உதவிக்கு அழைக்கும் ஓர் உணர்வுதானே!அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்ற நம்பிக்கை வரும்போது அவன் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை எப்படி உணராமல் இருக்க முடியும்?அதனை மறந்துவிட்டு எப்படிச் செயலாற்ற முடியும்?இந்த தத்துவத்தைதான் பகவத்கீதை முழுவதிலும் கண்ணன் அர்ஜுனனுக்கு உபதேசித்தான்.அர்ஜுனனுக்காகத் தேரைச் செலுத்தி வழிநடத்தினானே தவிர அர்ஜுனன் இடத்தில் தானே நின்று அவனுக்காகப் போராடவில்லை!

ஹரே கிருஷ்ணா👏

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
சித்தர்கள் பற்றிய சிலத் தகவல்கள்!

பிரம்மமுனி: பிரம்மமுனி 18 சித்தர்களில் ஒருவர்.இவரது பெற்றோர் மீன் வியாபாரம் செய்துவந்தனர். இவருக்கு பிரம்மனைப் போல படைப்புத்தொழிலை நடத்த வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.இதற்காக யாகம் செய்தார்.அந்த யாக குண்டத்திலிருந்து தோன்றிய இரண்டு பெண்கள் தங்களை திருமணம் செய்துகொள்ளும்படி முனிவரை வற்புறுத்தினர்.முனிவர் கோபத்துடன் அவர்களை சபிக்க முயலும்போது யாககுண்டத்திலிருந்த அக்னிதேவனும் வருணனும் தாங்கள் அந்த பெண்களை திருமணம் செய்துகொள்வதாக கூறினர்.இதற்கு சம்மதிக்காத முனிவர் கோபத்துடன் கமண்டல நீரை அந்தப் பெண்கள் மீது தெளித்தார்.அவர்கள் இரண்டு செடிகளாக மாறிவிட்டனர். முனிவரின் நண்பரான கோரக்கர் இதில் ஒரு செடியை எடுத்துக்கொண்டார்.பிரம்மமுனி ஒரு செடியை வைத்துக்கொண்டார். போதையைத் தரும் இந்த செடிகள் கற்ப மூலிகைகள் எனப்பட்டன.

சட்டைமுனி: சித்தர்களில் ஒருவரான சட்டைமுனி சித்தர் பல ஊர்களுக்கும் சென்றுவரும்போது ஸ்ரீரங்கம் கோபுரத்தின் கலசங்கள் கண்ணில் பட்டன.கோயிலை நோக்கி அவர் வேகமாக நடந்துவந்தும் ஜாம பூஜை முடிந்து நடை அடைக்கப்பட்டுவிட்டது. அவர் ஏமாற்றத்துடன் வாசலில் நின்று அரங்கா...அரங்கா...அரங்கா என மூன்று முறை கூறினார்.உடனே கோயில் மணிகள் ஒலித்தது.கதவுகள் தானாக திறந்தன.மக்கள் திரண்டு ஓடிவந்தனர்.சட்டைமுனி அரங்கன் அருகில் அமர்ந்திருந்தார்.ரங்கநாதர் அணிந்திருந்த சங்கு சக்கரங்கள் சட்டைமுனியின் மேல் இருந்தன. அவரை கள்வன் என நினைத்த அர்ச்சகர்கள் ஆபரணங்களை பறித்தனர்.சட்டைமுனியை அரசனிடம் கொண்டு நிறுத்தினர்.மன்னர் வியப்படைந்து மீண்டும் அவரை கோயிலுக்கு அழைத்து செல்லும்படி கூறினார்.அப்போதும் வாசலில் நின்றபடி அரங்கா...அரங்கா என மூன்று முறை கூறினார் சட்டைமுனி. உடனே கோயில் மணிகள் ஒலித்து நடை திறந்தது. ஆபரணங்கள் மீண்டும் சட்டைமுனியின் மீது தானாக வந்து அமர்ந்தன.சட்டைமுனி அங்கேயே தங்கியிருந்து இறைவன் பாதமடைந்தார்.

மச்சமுனி: பிண்ணாக்கீசர் என்பவரின் வளர்ப்புமகன் மச்சமுனி.18 சித்தர்களில் ஒருவர்.கால ஞானம் பற்றி உமாதேவியாருக்கு சதாசிவமான சிவபெருமான் உபதேசித்த காலத்தில், அதன்மீது கவனம் செலுத்தாமல் உமாதேவி உறங்கிவிட்டார்.அப்போது ஒரு மீன் இறைவன் சொன்ன கருத்துகளை கேட்டுக்கொண்டிருந்தது. அந்த மீனை முனிவராக சிவபெருமான் பிறக்கச்செய்தார்.அதுவே மச்ச முனிவர் ஆயிற்று.இவர் பெருநூல் காவியம் என்ற நூலை எழுதியுள்ளார்.

கலைக்கோட்டு முனிவர்: ரிஷ்யசிருங்கரை கலைக்கோட்டு முனிவர் என்பார்கள்.இவரது தலையில் மான்கொம்பு இருக்கும்.காட்டில் மட்டுமே வசிப்பார்.இவரது காலடிபட்டால் மழைபெய்யும். உரோமபாதன் என்ற அரசன் தன் நாட்டிற்கு அவரை வரவழைத்து மழை பெய்யச் செய்தான்.தன் மகளைத் திருமணம் செய்துகொடுத்தான்.புத்திர யோகம் இல்லாத தசரதனுக்கு புத்திரகாமேஷ்டி யாகம் செய்துவைத்து, ராமன் முதலான நான்கு மகன்களை பெற உதவினார் கலைக்கோட்டு முனிவர்.இவர் எழுதிய தாகக்கலைக்கோட்டார் பிரம்மஞானம் 32 என்ற பகுதி யோகஞான சாஸ்திர திரட்டு என்ற புத்தகத்தில் உள்ளது.

பாம்பாட்டி சித்தர்: பாம்புகளை பிடித்து, படமெடுத்து ஆடச்செய்து வேடிக்கை காட்டும் தொழிலை செய்தவர் பாம்பாட்டி சித்தர்.எவ்வளவு பெரிய விஷப்பாம்பையும் பிடித்து விஷத்தை கக்கவைத்து சாதாரண பாம்புபோல ஆக்கிவிடுவார்.விஷத்தை முறிக்கும் மூலிகைகள் பற்றி நன்கு அறிந்தவர். மருதமலையில் இவர் விஷ வைத்திய ஆய்வுக்கூடம் நடத்தியதாக சொல்லப்படுவதுண்டு.ஒருமுறை மிகப்பெரிய நவரத்தின பாம்பு ஒன்றை பிடிக்க மலைக்கு சென்றார்.அங்கு சட்டை முனிவரை கண்டார்.சட்டைமுனி பாம்பாட்டி சித்தருக்கு உபதேசம் செய்தார்.உபதேசம் பெற்ற பாம்பாட்டி, சித்தராகிவிட்டார்.இவர் கார்த்திகை மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்.இவர் பாம்பாட்டி சித்தர் பாடல் சித்தராரூடம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

ஞாயிறு, 15 டிசம்பர், 2019

பாசுரம்  1

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.

பாசுரம்  2

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத்துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

பாசுரம்  3

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

பாசுரம்  4

ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பாசுரம்  5

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.

பாசுரம்  6

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

பாசுரம்  7

கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
சின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்.

பாசுரம் 8

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை
கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

பாசுரம்  9

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்
மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ?
ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.

பாசுரம்  10

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.

பாசுரம்  11

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருகச் செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே
புற்றரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப்பெண்டாட்டி! நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.

பாசுரம்  12

கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்!
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.

பாசுரம் 13

புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே
பள்ளிக்கிடத்தியோ! பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.

பாசுரம் 14

உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானை பாடலோர் எம்பாவாய்.

பாசுரம்  15

எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ!
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்! போதருகின்றேன்
வல்லையுன் உன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடலோர் எம்பாவாய்.

பாசுரம்  16

நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னனலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கலோர் எம்பாவாய்.

பாசுரம்  17

அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்!
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த
உம்பர்கோமானே! உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கலோர் எம்பாவாய்.

பாசுரம்  18

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பாசுரம்  19

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்.

பாசுரம் 20

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்!
செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்!
செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டலோர் எம்பாவாய்.

பாசுரம் 21

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்றமுடையாய்! பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.

பாசுரம்  22

அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச்செய்த தாமரை பூப்போல
செங்கண் சிறுகச்சிறதே யெம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டும்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.

பாசுரம் 23

மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

பாசுரம்  24

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
கொன்றடச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.

பாசுரம்  25

ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பாசுரம் 26

மாலே மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய்.

பாசுரம்  27

கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவார
கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

பாசுரம் 28

கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னை
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை
சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே
இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.

பாசுரம்  29

சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்!
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.

பாசுரம்  30

வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவை
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.
 அதிகாலையில் எழுபவரே உயர்ந்தவர்!

நம்மிடையே பல ஜாதிப்பிரிவுகள் உள்ளன. அவரவர் தங்கள் ஜாதியின் சிறப்பை எடுத்துக்கூறி உயர்ந்த ஜாதியாக கொள்கிறார்கள். ஆனால் யாரொருவன் காலையில் சூரியனைப் பார்க்கிறானோ அவனே உயர்ந்த ஜாதிக்காரன் என்கிறார் வேதத்திற்கு பதம் பிரித்த அத்ரி மகரிஷி.உதைநம் கோபா அத்ருஷன் அத்ருஷன் உதஹார்ய:அத்ருஷன் அத்ருஷன் என்கிறார்.இதற்கு சூரியனை முதலில் பார்க்கும் ஜாதி உயர்ந்தது என்று பொருள்.அதாவது காலையில் சூரியன் உதிக்கும் முன்பே எந்த நாடு எழுகிறதோ அந்த நாடே உருப்படும். திருப்பாவையில் ஆண்டாள் இதையே மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாளால் என்கிறாள்.மதி என்றால் ஒளி என்றும் பொருளுண்டு.ஆயர்பாடி மக்கள் பசுக்களை மேய்ச்சலுக்காக ஓட்டிக்கொண்டு காலையிலேயே கிளம்புகிறார்கள்.அவர்களே முதலில் சூரியனைப் பார்க்கிறார்கள்.அடுத்து பெண்கள் குடங்களுடன் நீராட கிளம்பி விட்டார்கள்.அவர்கள் அடுத்ததாக சூரியனைப் பார்க்கிறார்கள். அவர்களும் கொடுத்து வைத்தவர்களே! இவர்களுக்கு பிறகு தான் சூரிய வெளிச்சம் தரையில் விழுந்து பூமியே சூரியனைப் பார்க்கிறதாம்.மதியை நிலா என்று எடுத்துக் கொள்ளலாம். பகலில் சூரியனும் இரவில் சந்திரனும் ஒளிரும் நாளே நற்செயல்கள் செய்ய உகந்த நாள்.அப்படிப்பட்ட உயர்ந்த நாளில் மார்கழி நோன்பு துவங்குகிறது, இதனால் தான் ராமபிரான் சூரியகுலத்திலும் கிருஷ்ணர் சந்திர குலத்திலும் அவதரித்தனர். இனிமேலாவது சூரியோதத்துக்கு முன் எழும் பழக்கத்தை மேற்கொண்டு உயர்ஜாதியில் ஒரு உறுப்பினர் ஆவீர்களா!
---------------------------------------------------------------------------------
12 ராசிகளுக்கான மார்கழி மாத பலன்கள்!

மார்க்கசீர்ஷம் என்ற வடமொழிச் சொல்லே தமிழில் மார்கழி ஆனது. மார்க்க என்றால் வழி.சீர்ஷம் என்றால் மேலான.ஆக மார்கழி என்றால் மேலான வழி எனப்பொருள்.பக்தியே மேலான வழி.அதிலும் இறைவனைச் சரணடைந்து விடுதல் மிக மிக உயர்ந்த வழி.இத்தகைய சிறப்பான மார்கழி மாதத்தின் 12 ராசிகளுக்கான பலன்களும் பரிகாரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.
---------------------------------------------------------------------------------
என்ன கோலம் போட்டால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?

கோலம் போட்டுக் கோலாகலமாக வாழுங்க: கோலம்போடும்போது கோடுகள் கோணல் மாணலாக இருந்தாலும் போட்டு முடித்தபின் எப்படிக் கோலாகலமான அழகுடன் இருக்கிறதோ அப்படியே கோலம் போடும் வீட்டினையும் மகாலட்சுமி தன் அருட்பார்வையால் நிறைப்பாள் என்பது ஐதிகம். கோலங்கள் தெய்வீக யந்திரங்களுக்கு சமமான கோலங்களை பூஜை அறையில் மட்டுமே போட வேண்டும். ஹ்ருதய கமலம், நவகிரக கோலங்கள், ஐஸ்வர்யக் கோலம், ஸ்ரீசக்ரக் கோலம் போன்றவை யந்திரம் போன்றவை. இவற்றை மஞ்சள் பொடியினாலும், அரிசிமாவினாலும் மட்டுமே போடுவது நல்லது. அழகுக்காக வண்ணப் பொடிகளைப் பயன்படுத்தினால் கோலத்திற்கு உரிய தெய்வம் அல்லது கிரகத்திற்கு உரிய வண்ணத்தில் போடலாம்.  இத்தகைய கோலங்களால் தெய்வீக அருள் நிரம்பும் தோஷங்கள் விலகும். சுப காரியங்களுக்காகப் போடப்படும் கோலங்கள் கண்டிப்பாக இரட்டை இழைக்கோலங்களாகத்தான் இருக்க வேண்டும் ஒற்றை இழை ஒருபோதும் கூடாது. வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் சமயத்தில் போடும் கோலங்களுக்கு காவியால் அழகூட்டுவது சிறப்பானது. இப்படிப் போடுவதால் மங்கலம் சிறக்கும்; மனை விளங்கும்.  வீட்டு வாசலில் போடும் கோலங்களில் தெய்வீக வடிவங்கள் இடம்பெறக் கூடாது. புனிதமான பொருட்களின் வடிவங்களை வரைவதைத் தவிர்ப்பதும் நல்லது. அவற்றை பூஜை அறையிலோ வீட்டின் உள்ளே போடலாம். படிக்கோலத்தின் நான்கு மூலைகளிலும் போடும் தாமரை, திசை தெய்வங்களின் ஆசியைப் பெற்றுத்தரும். வாசல் படிகளில் குறுக்குக் கோடுகள் போடுவதைத் தவிர்ப்பது நல்லது. கோலத்தின் தொடக்கமும் முடிவும் கோலத்தின் மேற்புறமாக அமையும்படி போடுவது அவசியம். ஏறு முகமான பலனை இது தரும். கோலத்தில் இடப்படும் காவி சிவ சக்தி ஐக்கியத்தை உணர்த்துகிறது. இப்படிக் கோலமிடுவது, சகல நன்மையும் தரும்.
---------------------------------------------------------------------------------
திருவெம்பாவை-பாடல் 1

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியையாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகான் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிலோர் எம்பாவாய்

பொருள்: வாள் போன்ற நீண்ட கண்களையுடைய தோழியே! முதலும் முடிவும் இல்லாத ஒளிவெள்ளமாய் பிரகாசிக்கும் நம் சிவ பெருமான் குறித்து நாங்கள் பாடுவது உன் காதில் கேட்கவில்லையா? செவிடாகி விட்டாயோ? அந்த மகாதேவனின் சிலம்பணிந்த பாதங்களைச் சரணடைவது குறித்து நாங்கள் பாடியது கேட்டு, வீதியில் சென்ற ஒரு பெண் விம்மி விம்மி அழுதாள். பின்னர் தரையில் விழுந்து புரண்டு மூர்ச்சையானாள். ஆனால், நீ உறங்குகிறாயே! பெண்ணே! நீயும் சிவனைப் பாட எழுந்து வருவாயாக!

விளக்கம்: திருவண்ணாமலையில் அண்ணாமலையார் மார்கழி அதிகாலையில் பவனி வருகிறார். அவரைத் தரிசிக்க பெண்கள் காத்து நிற்கிறார்கள். தங்களுக்கு கிடைத்த இந்த நற்பேறு தங்கள் தோழிக்கும் கிடைக்க வேண்டுமென்ற ஆசையில் அவளை எழுப்புகிறார்கள்.
---------------------------------------------------------------------------------
திருப்பதியில் இருந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வஸ்திர மரியாதை!

கைசிக ஏகாதசி விழாவையொட்டி, திருப்பதி கோவிலில் இருந்து நேற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வந்த வேங்கடமுடையான் வஸ்திர மரியாதையுடன், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பாப்பிராஜு, நிர்வாக அதிகாரி கோபால், ஸ்ரீரங்கம் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், கோவில் இணை கமிஷனர் கல்யாணி ஆகியோர் வீதியுலா வந்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
---------------------------------------------------------------------------------
மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - சிறப்பு கோலங்கள்!

மார்க்கசீர்ஷம் என்ற வடமொழிச் சொல்லே தமிழில் மார்கழி ஆனது. மார்க்க என்றால் வழி. சீர்ஷம் என்றால் மேலான. ஆக, மார்கழி என்றால் மேலான வழி எனப்பொருள். பக்தியே மேலான வழி. அதிலும், இறைவனைச் சரணடைந்து விடுதல் மிக மிக உயர்ந்த வழி. ஆண்டாள், பெருமாளைச் சரணடைந்து தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினாள். அதற்காக, முப்பது நாள் நோன்பிருந்தாள். தான் மட்டுமின்றி, மற்றவர்களும் இறைவனை அடைய வேண்டும் என்ற மேலான நோக்கில், தோழியரையும் நோன்பிருக்கும்படி வற்புறுத்தினாள். பக்தி மட்டுமின்றி பொதுநலமும் மேலான வழி என்பதை இம்மாதம் நமக்கு எடுத்துரைக்கிறது.
---------------------------------------------------------------------------------
திருப்பாவை-பாடல் 1

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!

சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்

நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்

பொருள்: அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்.

விளக்கம்: இந்த பாசுரத்தை ஆண்டாள் வைகுண்டத்தை மனதில் கொண்டு பாடுகிறாள். அதனால் தான் "நாராயணனே பறை தருவான் என்கிறாள். 108 திருப்பதிகளில் 106ஐ பூமியில் காணலாம். 108வது திருப்பதியான வைகுண்டத்தில் தான் நாராயணன் வசிக்கிறார். நாம் செய்யும் புண்ணியத்தைப் பொறுத்தே இந்த திருப்பதியை அடைய முடியும். இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.
---------------------------------------------------------------------------------