திங்கள், 14 அக்டோபர், 2013

படலம் 78: குதிரைக்கு நீராஜனம் செய்யும் முறை

78வது படலத்தில் குதிரைக்கு நீராஜனம் செய்யும் முறை கூறப்படுகிறது. முதலில் குதிரைகளுக்கு நீராஜனம் என்ற சாந்திகர்மா கூறப்படுகிறது. பிறகு ஒவ்வொரு வருடமும் ஐப்பசிமாதத்தில் சுக்லபக்ஷத்தில் அஷ்டமி, நவமி அல்லது துவாதசி பவுர்ணமி ஆகிய இந்த தினங்களில் இந்த நீராஜன கர்மா செய்யவேண்டும் என்று காலம் விளக்கப்படுகிறது. நகரத்தின் வடக்கு கிழக்கு, வடகிழக்கு திசையிலோ மற்ற இடங்களிலோ இந்த பூஜை செய்யவேண்டும் என கூறப்படுகிறது. பிறகு யாகசாலை அமைக்கும் முறையும் அங்கு வேதிகை குண்டம் அமைக்கும் முறையும் கூறப்படுகிறது. பிறகு ஆசார்யன் ரக்ஷõபந்தனம் செய்துகொண்டு நல்ல கற்புள்ள பெண்களுடன் கூடி சலங்கைமருந்து இவைகளுடன் கூடி குதிரையைகார்யாரம்பம் செய்யும் முன்னதாகவே நதீதீரம் அழைத்துச்சென்று பிறகு முன்பு முறைப்படி செய்யப்பட்ட கிழக்குமுகமாக வேதிகையை அடைந்து அங்கு குண்டசம்ஸ்காரம் அக்னி ஸம்ஸ்காரம் செய்து ஏழுதினம் காலையிலும் மாலையிலும் ஹோமம் செய்யவும், பலிவிதியும் செய்யவும் என கூறி ஹோம முறை பலி கொடுக்கும் முறை கூறப்படுகிறது. இந்த ஏழுதின வேளையிலும் நதீ, சமுத்திரம், குளம், நீர்வீழ்ச்சி இவைகளிலோ குதிரைக்கு ஸ்நானம் செய்வித்து அதிகமான மருந்துகளாலும், எள்ளு, கடுகு, தயிர், பயறு இவைகளால் நன்கு தேய்த்து, தேய்த்ததால் போக்கப்பட்ட அசுத்தங்களை உடையதும், மஞ்சள்நீராட்டியதும் ஆன குதிரைகளை அவைகளின் இருப்பிடத்திலிருந்து அழைத்து, அங்கு பிரும்மசர்யத்துடன் கூடிய ஆசார்யன் ரøக்ஷக்காகவும் வீர்யத்திற்காகவும் கட்டப்பட்ட ஓக்ஷதிகளை அந்த குதிரையின் மேல் கட்டவும் என கூறப்படுகிறது. பிறகு வெளியில் நல்லமுகூர்த்தத்தில் வேதகோஷங்களால் ஸ்தோத்திரம் செய்யப்பட்ட தினத்தில் சூர்யசந்திரர்களின் கிரணங்கள் குதிரைகளின் மேல் படாதவாறு வலம்வர செய்யச் சொல்லவும். காலையிலும் மாலையிலும் இரண்டு காலத்திலும் முக்யமான குதிரைக்கு ஸ்நானம் செய்விப்பது முக்யமாகும். தினம்தோறும் ஸ்தோத்திர ஆசீர்வாத மங்களகரமான மந்திரங்கள் முடிந்தபிறகு சுக்லபக்ஷ அஷ்டமியில் காலையில் ஸ்நானம் அனுஷ்டானம் முடித்த ஆசார்யன் வெண்கடுகாலும் கோமூத்திரத்தினாலும் குதிரைகளை ஸ்னானம் செய்வித்து நவமியில் உத்திராட நக்ஷத்திரமும் திருவோண நக்ஷத்திரமும் கூடும் சமயத்தில் நகரத்திற்கு வெளியில் அவைகள் வசிக்கட்டும் என கூறி, அவைகள் வசிக்கும் இடம் முறைப்படி கூறப்படுகிறது.

அங்கு தோரணம் மாலைகளால் அலங்காரம் செய்யப்படவேண்டும். பிறகு அரசன் எல்லா மங்கள வாத்யங்களுடன் நகர ஜனங்களுடனும் கூடி உச்சமான சங்க நாதங்களுடனும் கூடி முன்பு விதிப்படி செய்யப்பட்ட சாந்தி செய்யும் யாகக்கிரஹத்தை அடைந்து வஸ்திரம் முதலியவைகளுடன் கூடிய 8 கலசத்தில் ஓஷதிகளை ஸ்தாபித்து அந்த பூஜையை முறைப்படி செய்து முன்பு அமைக்கப்பட்ட குண்டத்தில் ஹோமம் செய்யவும் எனக்கூறி அரசனால் செய்யவேண்டிய ஹோம விதிகள் நிரூபிக்கப்படுகின்றன. அரசன் புலித்தோலின் மேல் அமர்ந்து ஆசார்யனுடன் கூடி கிழக்கு முகமாக வேத விதவான்கள், குதிரை வைத்யர்களுடன் கூடி ஹோமம் செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு அரசன் பூர்ணாஹுதியின் முடிவில் அக்னியின் சுபாசுபத்தை அறிந்து வெள்ளைச்சந்தனம் வெள்ளை மாலை இவைகளுடனும் வெள்ளை வஸ்திரத்துடன் கூடின உயர்ந்ததான குதிரையின் மேல் ஏறி தோரண சமீபம் செல்லவும். அங்கு பாட்டு வாத்யங்களால் மெதுவாக அமைதியான வார்த்தைகளால் ஹோம சேஷத்தை, பால், தயிர், வாழைப்பழம் இவைகளுடன் கூட்டி பிண்டமாக அமைத்து அந்த உத்தமான குதிரைக்கு கொடுக்கவும். அந்த குதிரை சீக்ரமாக சாப்பிட்டால் அப்பொழுது ராஜா விஷயத்தை அடைவான் என கூறப்படுகிறது. பிறகு ஆசார்யன் சாந்திகம் பவுஷ்டிகம் என்ற மந்திரங்களால் சாதாரண கும்ப தீர்த்தத்தால் ராஜாவையும், குதிரையையும் பிரோக்ஷணம் செய்யவும். பிறகு சைன்யங்களையும் பிரோக்ஷணம் செய்யவும். பிறகு ஆபிசார மந்திரத்தினால், மிருன்மயமான குதிரையை கூர்மையான சூலத்தினால் மார்பு பகுதியில் குத்தவும். இவ்வாறு குதிரைக்கு ரøக்ஷ செய்து அதன் மேல் ஏறி வெற்றி அடைவதற்காக அரசன் கிழக்கு முதலான திசைகளை அடையவும் என கூறப்படுகிறது. இவ்வாறாகவே யானை முதலியவைகளுக்கும் அரசன் நீராஜனம் என்ற சாந்திகர்மாவை செய்யவும் என கூறி அங்கு செய்ய வேண்டிய விசேஷ பூஜை முறை கூறப்படுகிறது. இவ்வாறு 78வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. குதிரைகளின் சாந்தியான கெட்ட பார்வைகளை நீக்கும் முறை பற்றி கூறுகிறேன். ஒவ்வொரு வருடமும் ஆசார்யன் ஐப்பசி மாதத்தில் செய்ய வேண்டும்.

2. நவமி, அஷ்டமி, அமாவாசை, பவுர்ணமியிலோ, திவாதசியிலோ விசேஷமாக வளர்பிறையில் செய்ய வேண்டும்.

3. நகரத்தின் கிழக்கு, வடக்கு, ஈசான திக்கிலோ அல்லது வேறு இடத்திலோ செய்யவும். அதன் செய்முறை கூறப்படுகிறது.

4. அகலம் எட்டு முழ அளவும், நீளம் பத்து முழ அளவு உயரமும் நீளபாகம் இருபது முழ அளவாகவும் யாக சாலை அமைக்க வேண்டும்.

5. ஆறு முழ அளவுள்ள நான்கு வரிசையில் மூன்று முழ மத்யமாக வேதிகை அமைக்கவும். அதன் பாதி உயரமுள்ளதாக அரசனுக்கு வேதிகை அமைக்க வேண்டும்.

6. நீண்டதான வேதிகைகளின் மத்தியில் குண்டத்திற்கு இடம் அமைக்கவும். அந்த குண்டம் ஒருமுழ அளவும் மூன்று மேகலையுடன் கூடியதாக இருக்க வேண்டும்.

7. முதலில் காப்பு கட்டுதலை செய்து சலங்கை மருந்துப் பொருள்களுடன் கூடியதும், நல்ல பெண்களுடன் கூடியதுமான குதிரையை நீரின் அருகில் அழைத்து வந்து

8. வலமாக தீர்த்த கரையில் கிழக்கு முகமாக வேதிகை அமைக்கவும். அதற்கு முன்னதாக ஹோமத்திற்காக குண்டம் அமைத்து, முன்பு கூறிய முறைப்படி செய்ய வேண்டும்.

9. குண்டஸம்ஸ்காரம், அக்னி ஸம்ஸ்காரம் செய்து உயர்வான ஆசார்யன், ஹோமம் செய்யவும். நல்ல தேஜஸ்ஸையுடைய அக்னியில் கீழே கூறுபவர்களுக்கு ஹோமம் செய்யவும், இந்த ஹவிஸை பிரம்மாவிற்கும்

10. பிறகு விஷ்ணு, அக்னி, ருத்ரன். இந்திரன், வருணன், வாயு, மலையரசன், ஸ்கந்தன், குபேரன் இவர்களுக்கும்

11. நாகர்கள், நதிகள், பிரம்மா முதலானவர்கள் ஆகிய இவர்களுக்கும் முறையே இந்த ஆஹுதி, பலி இவைகளை செய்ய வேண்டும்.

12. நதீ, சமுத்திரம், குளம், தடாகம், நீர்வீழ்ச்சி இவைகளிலோ குதிரையை ஸ்நானம் செய்வித்து நிறுத்தி வைக்கவும். முன்பு கூறப்பட்ட அவுஷதிகளாலும்

13. எள், கடுகு, மாதுளை, விதை, இவைகளாலும் தயிராலும் இந்த குதிரைகளை தேய்க்கவும், அங்கு தேய்க்கப்பட்ட சுத்தமானதும் குளித்து ஆகாரங்களை பருகி, மூழ்கியதுமான குதிரைகளை

14. பிரம்மசர்யத்துடன் கூடி குதிரை லாயத்திற்கு அழைத்துச் சென்று வீர்யத்திற்காகவும், ரøக்ஷக்காகவும் இந்த குதிரைகளுக்கு முன்பு வைக்கப்பட்ட மருந்துகளை கட்டிவிட வேண்டும்.

15. காலையிலும், மாலையிலும் ஏழுதினம் முதலாக ஹோமம் செய்யவும். நெய்யை தர்பைகளால் சுத்தம் செய்து தர்பைகளால் நெய்யை ஸமர்பிக்க வேண்டும்.

16. சமித்துக்களாலும், அக்னியில் நன்கு ஜ்வாலை உள்ளதாக இரண்டாவது தினம் ஹோமம் செய்யவும், மூன்றாவது தினம் ஸ்ருக்கினால் நெய் ஹோமம் செய்து சிவந்த நிறமானதாக குதிரையை கிரஹித்துக் கொள்ள வேண்டும்.

17. தயிர், அப்பம், அன்னம் இவைகளால் ஹோமம் செய்து நான்காவது தினம் அதிகாலையில் அருணோதய வேளையில் பிரம்ம கோஷங்களால் சப்திக்கப்பட்ட சமயத்தில்

18. சூர்யன், சந்திரன், இவைகளுடைய காந்தி குதிரைகளின் மேல் படாதவாறு அவைகளை நகர்வலம் வரச் செய்யவும். காலையில் ஸ்நானம் செய்விப்பது முக்யமாகும்.

19. இரண்டு காலத்திலும் விசேஷமாக பிரதானமாக குதிரைக்கு பிரதி தினமும் ஸ்வஸ்தி வாக்யம், ஆசீர்வாதம், மங்கள வாத்யத்துடன் கூடியதாக புண்யாகவாசனம் செய்ய வேண்டும்.

20. ஏழாவது இரவு முடிந்தவுடன் ஸ்நானம் செய்து முன்புறமாய் இருந்து கொண்டு எட்டாவது நாளில் வெண்கடுகு, கோரோஜனை இவைகளால் ஸ்நானம் செய்விக்க வேண்டும்.

21. உத்திராட நக்ஷத்ரம் சேர்ந்த திருவோண நக்ஷத்திரத்தில் சுக்லபக்ஷ நவமி திதியில் நகரத்திற்கு வெளியில் வசிக்க செய்ய வேண்டும்.

22. கிழக்கிலோ, வடக்கிலோ முன்பு கூறப்பட்டுள்ள சுத்தமான ஆவரணத்துடன் பிரதட்சிண மான தீர்த்த கரையின் வடக்கில் விசாலமான மரக் கூட்டத்தில்

23. தோரணம் அமைத்து பத்து கை நீளமும், எட்டுகை அகலமும், மாலைகளால் அலங்கரிக்கப்பட்டதும், கிழக்கு நோக்கியதுமான

24. இரண்டு பக்கத்திலும் உள்ளதுமாக கொட்டகையை அமைத்து அங்கு முன்பு போல் பூஜை கார்யத்தை செய்யவும், எல்லா மங்கள வாத்யத்துடனும் பட்டணத்து ஜனங்களுடன் கூடிய அரசன்

25. விருப்பப்பட்ட வீட்டை சங்கவாத்யங்களால் சந்தோஷப்பட்டவனாக அடைந்து, சாந்தி க்ருஹத்தில் நுழைந்து இந்த பூஜை முறையை ஆசரிக்க வேண்டும்.

26. சந்தனம், கீழாநெல்லி, மஞ்சமெழுக்கு, மனச் சிலை, ஹரிதாளம், வசம்பு, தந்தம், சீந்திக்கொடி, தினை, அர்ஜீனம்

27. மஞ்சள், ஸ்வர்ண புஷ்பம், வஹ்னிமந்தம், என்ற திரவ்யம், தர்பம், கிரிகர்ணிகை, வெட்டி வேர், கடுகு, லோஹிணி என்ற திரவ்யம்

28. ஸகதேவி, நாகபுஷ்பம், விளாம்பழம், தண்ணீர்விட்டான் (சராவரீ) ஸோமவல்லி ஆகிய திரவ்யங்களை கும்பங்களில் சேர்க்க வேண்டும்.

29. எட்டு கும்பங்களிலோ வஸ்திரம், முதலியவைகளுடன் கூடியதாகவும் சந்தனம், புஷ்பம், தூபம், தீபம், நைவேத்யங்களோடு கூடியதாயும்

30. பலவித அப்பம், முதலிய திரவ்யங்களால் பலி கொடுக்கவும், குண்டத்தில் முன்போல் முன்பு கூறிய திரவ்யங்களால் முறைப்படி ஹோமம் செய்ய வேண்டும்.

31. ராஜாவானவன், புலித்தோலிலமர்ந்த வனாகவும், குரு அமைச்சர்களுடன் கூடியவனாகவும், வேத வித்வான், குதிரை வாத்யர் இருவர்களுடன் கூடியவனாகி கிழக்கு முகமாக இருந்து

32. ஹோமாக்னியின் சுப, அசுப சகுனமறிந்து, பூர்ணாஹுதி முடிந்த பிறகு சிரேஷ்டமான குதிரையின் மேல் அமர்ந்து தோரண வாயில் சமீபம் அடைந்து

33. மெதுவாக, நல்லவார்த்தைகளாலும், கானம் வாத்யமிவைகளுடன் கூடியும், வெள்ளை சந்தன, வெள்ளை மாலை தரித்தவனாகவும் வெள்ளை வேஷ்டி அணிந்தவனாகவும்

34. ஹோமத்தின் மீதியான உருண்டையை, பால் தயிருடன் கூடியதாகவும் வாழைப்பழத்துடன் கூடியதாகவும் உயர்வான குதிரைக்கு கொடுக்கவும்.

35. சீக்கிரமாக சாப்பிட்டால் அது வெற்றியை கொடுக்கவல்லதாகும். மற்ற குதிரைகளை அத்திமரக்கிளை கொம்புகளால் நனைந்த தீர்த்தங்களால்

36. பிரோக்ஷணம் செய்து ஆசார்யன், சாந்திகம், பவுஷ்டிகம் ஆகிய மந்திரங்களால் ராஜாவையும் குதிரையும் சேனையையும் பிரோக்ஷணம் செய்ய வேண்டும்.

37. பிறகு பிராம்மணன் மண்ணினால் செய்யப்பட்ட குதிரையை அதன் மார்பு பகுதியில் சூலத்தினால் குத்தவும், ஆபிசார மந்திரங்களாலும் பெரிய கருமை நிறத்தால்

38. குதிரைக்கு ரøக்ஷயை கொடுத்து கிழக்கு முகமாக அதன் மேல் ஏறி மங்கள வாத்யங்களுடன் கூடியவனாகி ராஜாவானவன் வெற்றி அடைவதற்கு செல்ல வேண்டும்.

39. இவ்வாறாகவே யானைகளுக்கும் செய்து அதை அழைத்து வந்து அதில் அரசனை ஏற்றவும், ஆனால் அந்த யானைக்கு செய்யும் நீராஜனம் கார்த்திகை மாஸத்தில் அஸ்வினீ நக்ஷத்திரத்தில் செய்ய வேண்டும்.

40. முன்பு கூறப்பட்ட எல்லா திதிகளிலும் செய்யவும், யானையின் மேல் வலம் வருதலில் விசேஷமாக சதுரஸ்ரமான கொட்டகை அமைக்க வேண்டும்.

41. வேதிகையும், சதுரஸ்ரமாக அமைத்து பிறகு யானையின் இருப்பிடம் கூறப்படுகிறது. நூறு முழ அளவு சதுரஸ்ரமாக செய்யவேண்டும்.

42. ஐம்பது அல்லது இருபத்தி ஐந்து எண்ணிக்கை உள்ள சமமான சமித்துக்களை யானைக்காக ஹோமம் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிகாகம மஹாதந்திரத்தில் குதிரைக்கு நீராஜன விதியாகிற எழுபத்தெட்டாவது படலமாகும்.
படலம் 77: துர்கா பூஜை முறை

77வது படலத்தில் துர்கையின் பூஜா முறை கூறப்படுகிறது. முதலில் துர்காபூஜையின் காலம் விளக்கப்படுகிறது. அதில் ஐப்பசி மாதத்தில் வளர்பிறையில் அஷ்டமியிலும், நவமியிலும் உலகத் தாயான துர்கையை பூஜித்தால் அரசன் துக்கம் இல்லாதவனாகவும், எதிரியை ஜயித்தவனாகவும் ஆகிறான் என கூறப்படுகிறது. பிறகு துர்க்கா பூஜைக்காக உபயோகிக்கப்படுகிற எருமை முதலான பிராணிகள் வதம் செய்தால் அவைகள் நல்ல கதியை அடைகின்றன. அதனால் பாபம் ஏற்படாது என கூறப்படுகிறது. துர்க்கைக்கு எதிராக தேவர்கள் உயிரை விடுகிறார்களோ அவர்களுக்கு ஸ்வர்கவாசம் அப்ஸரஸ்திரீகளின் பிரயமும் ஏற்படுகின்றன. பிறகு துர்க்கா பூஜைக்காக ஒவ்வொரு நகரத்திலும் கிராமம் வீடு பலஇடங்கள் ஆகியவற்றிலும் கிழக்கு முகமாகவோ வடக்கு முகமாகவோ மண்டபம் அமைக்கவும் என கூறி மண்டபம் அமைக்கும் முறையும் அதில் வேதிகை குண்டம் அமைக்கும் முறையும் விளக்கப்படுகிறது. வேதிகையின் மேல் அரசு சின்னங்களான எல்லா ஆயுதங்களையும் அதிவாசம் செய்து பூஜிக்கவும் என கூறப்படுகிறது. பிறகு துர்க்கா பூஜை செய்யும் முறை ஹோம முறையும் சுருக்கமாக கூறப்படுகிறது. ஹோம சேஷத்தை குதிரை யானை முதலியவைகளுக்கு கொடுக்கவும் என கூறப்படுகிறது. பிறகு பலவித வாத்ய கோஷசப்தங்களுடன் ரக்ஷõபந்தனம் செய்யப்பட்ட ஐந்து யானை, குதிரை இவைகளை அலங்காரம் செய்து நகரத்தில் பிரதிதினமும் சுற்றிவர செய்யவும். பிரதிதினமும் அரசன் தங்களுடைய பிதுர்தேவர்களை பூஜித்து ராஜசின்னங்களை பழம் புஷ்பம் மாலை சந்தனம் இவைகளாலும் அப்பம் போன்ற பலவித  பக்ஷ்யவிசேஷங்களாலும் வெற்றிலையுடன் கூடிய பல நைவேத்தியங்களாலும் பூஜித்து ஹோம சேஷத்தை யானைக்கு கொடுக்கவும் என கூறப்படுகிறது.

இவ்வாறு துர்காபூஜையில் கார்யங்களின் சுருக்கம் கூறப்படுகிறது. பிறகு பூஜையின் மந்திரங்களை கூறுகிறேன் என்று சொல்லி குடை, குதிரை, கொடி, யானை, பதாகம், கத்தி, கவசம், துந்துபி என்ற வாத்யம், வில், சங்கு, சாமரம், கத்தி, ஸ்வர்ணதண்டம் சிம்மாசனம் இவைகளின் மந்திரங்கள் விளக்கப்படுகின்றன. பிறகு அரசன் அஷ்டமி தினத்தில் துர்காதேவியை பழம், நைவேத்யம், புஷ்பம், தூப தீபம், சந்தனம் இவைகளால் பூஜிக்கவும் என கூறி இந்த பூஜையின் முறை வர்ணிக்கப்படுகிறது. அங்கு தங்கம், வெள்ளி, தாமிரம், கருங்கல், மரம், மிருத்திகை இவைகளால் ஆன பிரதிமைகளில் ஏதாவது ஒரு பொருளால் சக்திக்கு தக்கவாறு பூஜிக்கவும் என கூறப்படுகிறது. அல்லது சித்திரமாகவரையப்பட்ட பிரதிமையையோ பூஜிக்கவும். முன் பகலிலோ மாத்யாஹ்னிகத்திலோ இந்த பூஜையை செய்யவும் என கூறப்படுகிறது. தியானம் செய்வதற்காக உருவத்தின் லக்ஷணம் நன்கு கூறப்படுகிறது. பிறகு பலவிதமான நாட்டிய சங்கீதங்களால் இரவை போக்கி காலையில் அருணோதய வேலையில் பிரதிமையின் முன்பாக எருமையையும், ஆட்டையும் பலி கொடுப்பதாக வெட்டவும். பிறகு மாலை வேளையில் நவமியில் அம்பாளை தேரில் ஏற்றி ராஜ்யத்தை சுற்றிவர செய்யவும். தேர் ஓடும் சமயத்தில் ராஜா சைன்யத்துடனோ அல்லது அவனால் ஏவப்பட்ட வீரனுடனோ, 8 திக்கிலும் பூதங்களுக்கு தேன் நெய் கலந்த அன்னத்தை இந்த மந்திரத்தினால் பலிகொடுக்கவும் என கூறிபலிகொடுக்கவும் மந்திரங்கள் விளக்கப்படுகின்றன. முடிவில் மனிதர்களால் சுமக்கப்பட்டதாகவோ அம்பாளை வலம் வரச்செய்யும் என வேறுவிதமாக கூறப்படுகிறது. இவ்வாறு 77வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. ஹே உயர்ந்த அந்தணர்களே, எல்லா விதமான விருப்ப பயனை தரக்கூடியதும் உலகத்திற்கு ஆபிசாரத்திற்காக ஸ்ரீ துர்கா தேவியின் பூஜை முறையை நான் கூறுகிறேன்.

2. சூரிய பகவான் கன்யா ராசியை அடைந்த பொழுது, புரட்டாசி மாத மூல நக்ஷத்ரம், சுக்ல அஷ்டமியுடன் கூடிய ஸமயம், அந்த புண்ய காலம், மஹா நவமி என்று பெரியோர்களால் கூறப்பட்டுள்ளது.

3. அல்லது ஐப்பசி மாதத்தில் சுக்ல பக்ஷத்தில் மூலம், அஷ்டமி இவைகளுடன் கூடிய புண்யகாலம், மஹாநவமி எனப்படும் இந்த புண்யகாலம் மூவுலகிலும் கிடைப்பது அரிது.

4. ஐப்பசி மாதத்தில் அஷ்டமியிலும், நவமியிலும் ஜகன்மாதாவான துர்கா பரமேச்வரியை ஆராதித்து, துன்பம் முதலான கஷ்டங்கள் நீங்கியவனாய் தன் எதிரிகளை வெல்கிறான்.

5. ஹூங்காரங்களால் கூட்டமாக கைகளைத் தூக்கிக் கொண்டு கத்தியை தரித்த அந்த தேவிக்காக, எருமை முதலிய பிராணிகள் பலியிடப்படுவதால்

6. பாபம் இல்லாமல் அந்த எல்லா பிராணிகளும் நல்ல நிலையை அடைகின்றன. தேவியின் ஆலயத்தின் எந்த பிராணிகள் உயிரை விடுகின்றனவோ

7. அம்பாளுக்கு பலியான அந்த பிராணிகளுக்கு ஸ்வர்கலோகத்தில் வசிக்கும், அப்சரஸ் ஸ்திரீகளுக்கு பிரியமானவர்களாக ஒவ்வொரு இடத்திலும் பட்டணங்களிலும் எல்லோராலும் மரியாதை செய்யப்படுகிறார்கள்.

8. ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு காட்டிலும் ஒவ்வொரு வீட்டிலும் சவுக்யத்தை அளிப்பதிலேயே நாட்டமுள்ள பதினொன்று, எட்டு, ஏழு, கை அளவுகளால் வடக்கு, கிழக்கு திசைகளில் ஆசார்யன்

9. மண்டபத்தை நிர்மாணித்து ஆக்னேய திசையில் (தென் கிழக்கில்) கை அளவிற்கு மேகலை யுடன் கூடிய அரசிலை போல் யோனி குண்டத்தை அமைக்க வேண்டும்.

10. எல்லா ராஜ பரிவார அடையாளங்களையும், எல்லா அஸ்திரங்களையும், எங்கும் வேதிகையின் மேல் பூஜிப்பதற்காக எல்லா இடங்களிலும் அவைகளை இருக்கச் செய்ய வேண்டும்.

11. ஆசார்யன் ஒவ்வொரு தினமும் அந்தந்த மந்திரங்களால் சந்தனாதி வாஸனை திரவியங்களால் அந்த அஸ்திரங்களைப் பூஜிக்க வேண்டும். துர்கை அம்மனுக்கு அந்த மந்திரங்களால் ஹோமம் நடத்தவும்.

12. ஸமித், நெய், ஹவிஸ், பாயசம் ஆகிய இவைகளால் ஹோமம் செய்ய வேண்டும். ஹோம மீதியை யானைகளுக்கும், குதிரைகளுக்கும் காணிக்கையாக அர்ப்பணிக்க வேண்டும்.

13. ரக்ஷõபந்தனம் செய்த ஐந்து யானைகளையும் ஐந்து குதிரைகளையும் நன்கு அலங்கரித்து பலவிதமான வாத்ய கோஷத்துடன் நகரத்தில் தினம் சுற்றி வரும்படி செய்ய வேண்டும்.

14. அரசர் ஒவ்வொரு நாளும் தன்னுடைய பித்ரு தேவதைகளை பூஜித்து விட்டு ராஜ சின்னங்களை பழம், புஷ்பம், சந்தனம் இவைகளால் பூஜிக்க வேண்டும்.

15. பலவித அப்பம் முதலிய நிவேதனங்களால் தாம்பூலத்துடன் கூடிய நைவேத்யங்களால் பூஜித்த பிறகு, ஹோம மீதியை பட்டத்து யானைக்கு கொடுக்க வேண்டும்.

16. அந்த யானைக்கு ஹோம மீதியை கொடுப்பதால் அரசருக்கு வெற்றி கிடைக்கிறது. அந்த பூஜை மந்திரங்களை சொல்ல இருக்கிறேன்.

17. எப்படி ஆகாயம் பூமியின் நன்மைக்காக பூமியை மறைத்துக் கொண்டு இருக்கிறதோ, அவ்வாறே குடையாகிய நீ, வெற்றி ஆரோக்கிய அபிவிருத்திக்காக அரசனை நீ மறைத்துக் கொண்டு இரு. ஓம் சம் சத்ராய நம:

18. நீ கந்தர்வ குல ஜாதியில் பிறந்தவன் பிர்மா, ஸோமன், வருணன் ஆகியோருடைய ஸத்ய வாக்யத்தால் ராஜ வம்சத்துக்கு அணியாக விளங்குகிறாய். ஓம் தும் துரங்காய நம:

19. ஹே அச்வ, அக்னி பகவானின் மகிமையாலும், ஸூர்ய பகவானுடைய தேஜஸாலும், முனிவர்களுடைய தபஸாலும் விசேஷமாக வெற்றி பெறுவாயாக.

20. பரமேஸ்வரனுடைய, பிரம்ஹசர்யத்தாலும் வாயு பகவானின் பலத்தாலும் கவுஸ்துபம் என்ற ரத்னத்தை ஸமுத்திர ராஜனின் மகனாகிய நீ ராஜகுமாரன் என்றாலும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டு

21. ராஜ்யத்திற்கு ஜீவாதாரமான விஷயத்தில் பொய் பேசுபவனும் ராஜ்யத்தின் நலத்தில் கவனம் செலுத்தாத, க்ஷத்ரியன், ப்ரும்மஹத்தி பாபம் செய்தவன் மாத்ரு ஹத்தி, பித்ரு ஹத்தி செய்தவன் எந்த பாப லோகங்களுக்கு செல்வானோ அங்கு பொய் பேசி ஜனங்களுக்கு நன்மை செய்யாத அரசன் போகிறான்.

22. சூர்யனும், சந்திரனும் வாயு பகவானும், எவ்வளவு காலம் நீ செய்த பாபங்களை பார்பார்களோ, அவ்வளவு நாள் காட்டில் வாழ வேண்டிய கதியை விரைவில் அடைவாய். அவர்களது வேகம் உனக்கு இருக்க வேண்டும்.

23. ஹே குதிரையே எங்களுக்காகப் பிராயச்சித்தத்தை அடையுங்கால் யுத்தத்தில் எதிரிகளை வென்று எஜமானருடன் சுகமாய் இரு. ஓம் அம் அச்வாய நம:

24. மஹா பலசாலியான தேவேந்திரனுடைய கொடியே ஸ்வர்கலோகத்தில் உள்ளவரும் ஸ்ரீமன் நாராயணனுடைய த்வஜமாகியுள்ள கருடபகவான் உன்னிடத்தில் சான்னித்யம் கொண்டுள்ளார். ஓம் த்வம் த்வஜாய நம:

25. காச்யபருடைய, புத்ரனும் அமிர்தத்தை அபஹரித்துக் கொண்டு வந்தவரும் மஹாவிஷ்ணுவின் வாஹநமும், போரில் யாராலும் ஆக்ரமிக்க முடியாத வவும், அளவிடமுடியாத எதிரிகளை ஒழித்துக் காட்டியவரும்

26. பலம் நிறைந்த இறக்கைகளை உடையவரும் வாயுவுக்கு ஸமமான வேகம் படைத்த கருடபகவான் த்வஜமாகிய உன்னருகில் எதிரிகளை அழிப்பவைகளே, அச்வதர்மமறிந்த வீரர்களை ரக்ஷிக்க வேண்டும்.

27. குமுதன், ஐராவதம், புஷ்ப தந்தன், வாமணன், சுப்ரதீகன், அஞ்சனன், நீலன், நாகன் ஆகிய எட்டு தேவலோகத்து யானைகள் ஆகும்.

28. இந்த யானைகளின் எட்டு வகையான புத்ரர்களும், பவுத்ரர்களும், காட்டில் பத்ரம், மந்திரம், மிருகம், கருப்பு ஜாதியில் பிறந்த யானைகளாக இருக்கின்றன.

29. வேறுவேறு வனத்தில் பிறந்தவை அந்த யானைகள் காட்டிலுண்டான அந்தக் காட்டனைகளும் வஸீ, ருத்ர, ஆதித்யர்களும் உன்னை ரக்ஷிக்கட்டும்.

30. ஏ யானை சிரேஷ்டனே, தலைவனை ரக்ஷி. உடன்பாடு கடைபிடிக்கட்டும். யுத்தத்தில் வெற்றி அடைவாயாக, நடையில் மங்களங்களை மேற்கொள்.

31. சோமனிடமிருந்து செல்வத்தையும், மஹா விஷ்ணுவிடமிருந்து பலத்தையும் சூர்யனிடமிருந்து தேஜஸ்சையும், வாயுவிடமிருந்து வேகத்தையும் மேரு மலையிலிருந்து ஸ்திரத் தன்மையையும் ருத்ரனிடமிருந்து வெற்றியும் தேவேந்திரனிடமிருந்து

32. யுத்த காலத்தில் உள்ள யானைகளும் திக் தேவதைகளுடன் திக்குகளும் அச்வினி தேவர்களும் கந்தர்வர்களும் நாற்புறமும் பாதுகாக்கட்டும். ஓம் ஹம் ஹஸ்திநே நம:

33. அக்னி பகவான், அஷ்ட வஸூக்கள், ருத்ரர்கள், வாயு, ஸோமன், மஹரிஷிகள், நாகர்கள், கின்னரர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், பூத கணங்கள், நவக்கிரஹங்கள் ஓம் கம் கஜாய நம:

34. ஆதித்யர்களுடன் கூடிய பிரதம கணங்களும், அஷ்டமாத்ருக்களுடன் கூடிய பைரவரும், சேனாதி பதியான சுப்ரமண்யரும், வருணனும், உன்னிடம் வாஸம் செய்து (புகழை உமக்குத் தரட்டும்)

35. எல்லா எதிரிகளையும் அரசன் கொல்லட்டும், வெற்றி அடையட்டும், எதிரிகளால் நாற்புறமும் வெல்லப்பட்ட தூஷனைகளையுடைய நாய்களே

36. உன்னுடைய தேஜஸால், தூஷணைகள் தொலைந்தன. அவை எதிரிகளின் மேல் காலநேமிவதத்திலும் திரிபுரஸம்ஹாரத்திலும் நடந்தது போல் விழட்டும்.

37. ஹிரண்யகசிபு, யுத்தத்திலும் தேவாசுர யுத்தத்திலும், எப்படி பிரகாசித்தாயோ அப்படி இப்பொழுது உன் பிரதிக்ஞையை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

38. நீலமாகவும் வெண்மையாகவும், உள்ள இந்த கொடியை பார்த்தே அரசனது பகைவர்கள் அழியட்டும். பலவித அஸ்திரங்களாலும் பயங்கர வியாதிகளாலும் யுத்தத்தில் ஜயிக்கப்பட்டவர்களாக ஆகட்டும்.

39.  உன்னால் ஜயிக்கப்பட்டவர்கள் உன்னை அடைந்தால் சுத்தர்களாகி உடனே நன்மை அடைந்தவர்களாக ஆகிறார்கள். பூதநா, ரேவதீ, காளராத்ரி என்று எண்ணப்படுகிறார்களோ ஏ கொடியே எல்லா எதிரிகளையும் அழித்து நீ என்னை அண்டியவனாயிருக்கிறாய். ஓம் பம் பதாகாய நம:

40. அஸி:, விசிஸந:, கட்க:, தீக்ஷணதர்மா, துராஸதி:,

41. ஸ்ரீ கர்ப:, விஜய:, தர்மதார:, என்ற எட்டு நாமாக்கள் பிரம்மாவால் உனக்கு கூறப்பட்டுள்ளன. ஓம் கம் கட்காய நம:

42. உனக்கு நக்ஷத்திரம் கிருத்திகை உனக்கு குரு பரமேஸ்வரன் உன்னுடைய உடல் தங்கமயமானது, பிரம்மா, விஷ்ணு உனக்கு

43. தந்தையும் பாட்டனாரும் நீ எங்களை எப்பொழுதும் காப்பாற்று. ஹே கவசமே யுத்தத்தில் எல்லா ஆபத்தையும் அழிக்கிறாய்.

44. என்னை ரக்ஷி, நான் ரக்ஷிக்கத்தக்கவன், குற்றமற்றவனே உனக்கு நமஸ்காரம், ஓம் வம் வர்மனே நம: ஹே துந்துபி வாத்யம் உன்னுடைய கோஷம் எதிரிகளின் உள்ளத்தைக் கலக்க வைக்கிறது.

45. மஹாராஜாக்களுடைய அரண்மனை உனக்கு வாசஸ்தலம், நீ வெற்றியை அளிப்பவன், மேகத்தின் இடியோசையால் உயர்ந்த யானைகள் எவ்வாறு சந்தோஷமடைகின்றனவோ

46. அவ்வாறு உன்னுடைய சப்தத்தால் எங்களுக்கு ஆனந்தம் உண்டாகட்டும். இடியோசை எப்படி ஸ்திரீகளுக்கு பயத்தை கொடுக்கிறதோ அவ்வாறே

47. உன்னுடைய ஒலியானது, எதிரிகளை ருத்ரருடைய கோபத்தால் பயம் உள்ளவர்களாகச் செய்யட்டும். (ஓம் தும் துந்துபயே நம:) எல்லா ஆயுதங்களுக்கும் பெரியவரே (எல்லா வில்லுக்கு நமஸ்காரம்) எல்லா ஆயுதங்களையும் அழிப்பவரே.

48. பாணத்துடன் கூடிய நீங்கள் என்னை எப்பொழுதும் காப்பாற்றுவீர்ராக, இது சாபமந்திரம், ஓம் சம் சாபாய நம: ஹே சங்கே புண்ய ஸ்வரூபமாய் மங்களத்திற்கு மங்களமாகவும்

49. மஹாவிஷ்ணுவால் எப்பொழுதும் தரிக்கப்பட்டதாயும் உள்ள தாங்கள் எனக்கு மன அமைதியை தருவீராக. இது சங்க மந்திரம், ஓம் சம் சங்காய நம:, சந்திரனை போல் பிரகாசிக்கிறவரும் பனிக்கட்டி போல் வெண்மை ஆனதும்

50. தேவர்களுக்கு பிரியமானவருமான ஹே சாமரமே என்னுடைய பாபங்களை விரட்டுவீராக, ஓம் சம்சாமராய நம: இது சாமர மந்திரம், எல்லா ஆயுதங்களுக்கும் முதன்மையான நிர்மாணிக்கப்பட்டது பரமேஸ்வரனால்

51. சூலாயுத நுனியிலிருந்து எடுத்து நல்ல பிடியை தயாரித்து துஷ்டர்களை கொல்வதற்காக சண்டிகா தேவியிடம் கொடுக்கப்பட்டவளாய் இருக்கிறாய்.

52. உன்னால் விஸ்தரிக்கப்பட்ட கத்தியானது தேவர்களுக்கு அளிக்கப்பட்டதாகும். நீ எல்லா தத்வத்திற்கும் அங்கமாகவும், எல்லா அசுபத்தையும் போக்குபவளாயும் இருக்கிறாய்.

53. ஹே கத்தியே என்னை எப்பொழுதும் காப்பாற்று எனக்கு மன அமைதியைக் கொடு என கத்தியின் மந்திரம், ஓம் க்ஷúம் க்ஷúரிகாய நம: துஷ்டர்களை விரட்டுவதற்கும் சாதுக்களை அழைப்பதற்கும்

54. பிரம்மாவால் படைக்கப்பட்டிருக்கிறாய், நீ எனக்கு புகழ், சவுக்யம் முதலியவைகளை கொடு, நீ அரசனுக்கு தேவனாக இருக்கிறாய்.

55. எல்லா எதிரிகளையும், அழிப்பாயாக, தங்க தண்டமே உனக்கு நமஸ்காரம். இவ்வாறு தங்க தண்டமந்திரம் ஓம் கம் கனக தண்டாய நம: எதிரிகளால் தாக்க முடியாததை தர்மத்திற்கு கட்டுப்பட்டது. அமைதியான ஸ்வாபம் உடையவை. சத்ருக்களை கொல்லக்கூடியது.

56. துக்கத்தை அழிக்கவல்லது, தர்மத்தை தரவல்லது அமைதியானது, எல்லா எதிரிகளையும் அழிக்கவல்லது, ஆகிய எட்டு பலம் பொருந்திய எட்டு ஸிம்மங்கள் உன்னிடம் இருக்கிறது.

57. பிராம்மணர்களால் வேதங்களில் ஸிம்மாஸனத்தின் புகழை பாடப்படுகிறது. உன்னிடம் சிவன் பிரத்யக்ஷமாக இருக்கிறான், தேவர்களின் தலைவனாக இந்திரனும் இருக்கிறான்.

58. உன்னிடம் மஹா விஷ்ணு வஸிக்கிறார், உனக்காக தவம் அனுஷ்டிக்கப்படுகிறது. எங்கும் மங்களமயமான உனக்கு நமஸ்காரம், அரசே உனக்கு மங்களம் உண்டாகட்டும்.

59. மூன்று உலகங்களையும் வெற்றி கொள்வாயாக, சாந்நித்யமாக இருக்கும் உனக்கு நமஸ்காரம், இது சிம்மாஸன மந்திரம், மந்திரத்தை முன்னிட்டதாக இந்த உலகபிரசார கர்மாவால் செய்ய வேண்டும்.

60. பழங்கள், புஷ்பங்கள், சந்தனம், தூப, தீப, நைவேத்யம் இவைகளால் அஷ்டமியில் தங்கத்தால் செய்யப்பட்ட துர்கா தேவியை பூஜிக்க வேண்டும்.

61. அல்லது தன்னுடைய சக்திக்கு ஏற்றவாறு வெள்ளியிலோ, செப்பிலோ, கல்லாலோ, மரத்தாலோ அல்லது களிமண்ணாலோ தேவியை நிர்மாணித்து ஆராதிக்கலாம்.

62. அரசர், ஸ்நானம் செய்து எல்லா ஆபரணங்களை தரித்தவராக கரந்நியாஸம் அங்கந்நியாசம் செய்து கொண்டவராக முற்பகலிலோ அல்லது மதியத்திலோ இந்த துர்கா பூஜையை செய்ய வேண்டும்.

63. துர்கை அம்மனுக்கு திவ்ய பரிமளம் நிறைந்த சந்தனம், அகில், பச்சகற்பூரம், ஜவ்வாது, குங்குமப்பூ, முதலியவைகளை காப்பு சாத்தி வாசனை நிறைந்த புஷ்பங்களாலும்

64. நீலோத்பலங்களாலும் வாசனை நிறைந்த பூக்களாலும் தூப, தீபாதிகளுடன் பழங்களுடன், கூடிய விசேஷ நைவேத்யங்களாலும், நர்தனம், கானம் மங்கள வாத்யம் ஆகியவைகளுடன்

65. தும்பை பூக்களாலும், பில்ப பத்ரங்களுடன் எட்டு கைகளுடன் கூடியவளும், மகிஷாஸூரனை வதம் செய்பவளாகவும்

66. சூலத்தை மஹிஷாஸுரன் மார்பில் குத்தியவாறு மேலே தூக்கிய வண்ணம் இருப்பவளும் கபாலம், சூலம் தரித்திருப்பவளும், வில், அம்பு, கத்தி, கேடயம் தரித்திருப்பவளும்

67. சங்கு, சக்ரம் தரித்திருப்பவளும், எல்லா விதமான ஆபரணங்களையும் அணிந்திருப்பவளும் வரத முத்ரையை தரித்திருப்பவளும், ஜபமாலையை ஒலித்துக் கொண்டிருப்பவளும் மஹிஷாஸுரனின் தலைமீது நின்று கொண்டிருப்பவனும்

68. ஸிம்மாஸனத்தில் வீற்றிருப்பவளும், மூன்று கண்களை உடையவளும், எல்லா எதிரிகளையும் அழிப்பவளும் அல்லது வரத, அபய முத்திரையுடன் கூடிய நான்கு புஜங்களுடன் கூடியவளும்

69. சங்கு, சக்ரம் ஆகியவைகளை தரித்திருப்பவளாயும் பக்தி நிறைந்தவர்களுக்கு பிரியமானவளும், அமைதி தரும் தேவதையும் ஆன மஹிஷாஸுர மர்தினியை பலவிதமான கானங்களாலும் நர்தனங்களாலும்

70. இவ்விதம் ஆராதனையால் இரவை கழித்து காலையில் அருணோதய காலத்தில் மிருதுவான கழுத்தை உடைய ஆட்டையும், மஹிஷத்தையும் கத்தியால் வெட்ட வேண்டும்.

71. நூறு, ஐம்பது, இருபத்தி ஐந்து, பன்னிரெண்டு இஷ்டபிரகாரம் பலியிடலாம். பிறகு பிற்பகலில் நவமியில், தேரில் அமர்ந்திருக்கும்.

72. துர்கையை, அரசர், சைன்யங்கள், சூழ ஊர்வலம் நடத்த வேண்டும். ராஜாவால், ஏவப்பட்ட வீரன்

73. நெய்யுடன் கூடியதும், தேன் நிறைந்ததுமான அன்னத்தை நான்கு திசைகளிலும் நான்கு மூலைகளிலும் இந்த மந்திரத்தைச் சொல்லி பூதங்களுக்கு பலி போடவேண்டும்.

74. இந்த பலியை தேவர்களும் ஆதித்யர்களும் வஸீக்களும், மருத்துக்களும், அசிவீனி தேவர்களும், ருத்திரர்களும், ஸூபர்ணர் (என்ற கருடனும்) நாகர்களும் கிரஹங்களும்

75. அஸீரர்களும், ராக்ஷஸர்களும் மாத்ரு தேவதைகளும், பாம்புகளும், பிசாசங்களும், டாகினீகளும், பைரவர்களும், யோகினிகளும், பெண் தெய்வங்களும், பெண் நரிகளும்

76. ஆண் நரிகளும், ஸித்தர்களும், கந்தர்வர்களும், வீரர்களும், வித்யாதரர்களும், மனிதர்களும், திக்பாலர்களும், லோகபாலர்களும் மற்றும் உள்ள வினாயக தேவதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

77. உலகத்திற்கு சாந்தியை அளிக்கும் சத்கர்மாக்களை பிராம்மணர்கள், மாமுனிவர்கள் செய்யட்டும் எனக்கு இடையூறு செய்ய வேண்டாம் எனக்கு எதிரிகள் இருக்க வேண்டாம்.

78. பூதங்கள், பிரேதங்கள் அஸூரர்கள் திருப்தி அடைந்து சாந்தர்களாக இருக்கட்டும் என்று பிராத்தனையுடன் தேவியை ஊர்வலமாக எழுந்தருளச் செய்ய வேண்டும், அல்லது பக்தர்களால் தூக்கப்பட்டு எல்லா விதமான விக்னங்களையும் போக்கடிக்கும் தேவியை ஊர்வலமாக எழுந்தருளச் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிகாகம மஹாதந்திரத்தில் துர்காபூஜா விதியாகிற எழுபத்தி ஏழாவது படலமாகும்.
படலம் 76: அரசர்களின் ரக்ஷõ முறை

76வது படலத்தில், அரசர்களினுடைய ரக்ஷ விதியை கூறுகின்றேன். நல்ல உத்தமமான குருவானவர் அரசனின் பொருட்டு நெற்றி, முகம், ஹ்ருதயம், நாபி, கைகளின் அடி இரண்டிலும் மந்திரத்தை நினைத்துக் கொண்டு விபூதியை கொடுக்க வேண்டும் என்பதைக் கூறி திருநீற்றின் லக்ஷணம், நினைக்க வேண்டிய மந்திரம், திருநீறு கொடுக்க வேண்டிய முறை, அங்கு, விரல்களின் தேவதைகள் என்பன போன்ற விஷயங்களை விளக்கப்படுகின்றன. பிறகு பிராமணன் க்ஷத்திரியர், வைசியர்கள், சூத்ரர்கள் விஷயங்களில் கூட ரøக்ஷயின் முறை, பூணூல் அணியும் முறை மந்திரத்தோடு நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. அங்கு அரசர் விஷயத்தில் உத்தரீயம் இரண்டு பூணூல் கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த பிரகாரம் எழுபத்து ஆறாவது படல கருத்து சுருக்கமாகும்.

1. அரசர்களுக்கான ரøக்ஷயை சுருக்கமாக கூறுகிறேன். சாஸ்திரோக்த முறையில் தயாரிக்கப்பட்ட விபூதியை வஸ்திர காயம் செய்யப்பட்டு மிருதுவாக இருப்பதும் நல்ல வாசனை உள்ளதும், பஞ்சாக்ஷராகி மந்திரங்களால் ஸம்ஸ்காரம்

2. செய்யப்பட்டதும், கொஞ்சம் சிவந்ததுமான விபூதியை அரசருக்கு, தொப்புளுக்கு மேலும் நெற்றி, முகம், மார்பு, தொப்புள் கைகளின் மூலப்பரதேசங்களிலும்

3. ஈசானாதி மந்திரத்துடன் ஜபித்துக் கொண்டும், அல்லது தனக்கு இஷ்டமான மந்திரத்தையும் ஜபித்துக் கொண்டும், ஆசார்யன், பிரம்ம, விஷ்ணு, ருத்ர ஸ்ரூபமான மூன்று நடு விரல்களால் விபூதியை பூசிக்கக் கொடுக்க வேண்டும்.

4. பிரம்மா, விஷ்ணு, ஈச்வரர்களை தியானித்துக் கொண்டு ஈசானாதி மந்திரங்களை ஜபித்துக் கொண்டு, மும்மூர்த்தீஸ்வரூபமான, மோதிர விரலுடன் கூடிய கட்டை விரலால் விபூதியை கொடுக்க வேண்டும்.

5. மோதிர விரலின் அடிபாக பர்வாக்களிலிருந்து, வரிசையாக மூன்றுபர்வாக்களிலும் (கணுக்களிலும்) மூன்று மூர்த்திகள் இருக்கின்றனர். அதற்கேற்றவாறு மந்திரங்களைச் சொல்லி யஜமானுக்கு, ஏற்ற வகையில் விபூதியை கொடுக்க வேண்டும்.

6. நான்கு வர்ணத்தாருக்கும் விபூதி விநியோகம் செய்யும் பொழுது எல்லா மந்திரங்களையும் சொல்லலாம். வேதவித்தான பிராம்ணர்களுக்கு விபூதி தரும் பொழுது ஓம் என்ற பிரணவம் முதல் நம: என்று முடிவு வரையிலாக உச்சரிக்க வேண்டும்.

7. க்ஷத்திரியனுக்கு விபூதி கொடுக்கும் பொழுது ஸ்வாஹா என்ற சொல்லை கடைசியாக கொண்டும், வைச்யனுக்கு வவுஷட் என்ற சொல்லை முடிவாக கொண்டும், நான்காம் வர்ணத்தவர்களுக்கு

8. அவரவர்களின் தேவதைகளை தியானித்துக் கொண்டும் விபூதி கொடுக்கலாம். அவரவர்களின் தேவதைகளின் மந்திரத்தால் ஜபிக்கப்பட்ட பூணூலைக் கொடுக்க வேண்டும்.

9. அரசர்க்கு இஷ்ட தேவதையின் மந்திரத்தால் ஜபிக்கப்பட்ட இரண்டு பூணூல்களை கொடுக்கவும். நல்ல உத்தரீயங்களையும் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிகாகம மஹாதந்திரத்தில் அரசனின் ரøக்ஷ முறையாகிய எழுபத்தி ஆறாவது படலமாகும்.
படலம் 75: நோய்களை தீர்க்கும் முறை

75வது படலத்தில் நோய்களை தீர்க்கும்முறை முறைப்படி கூறப்படுகிறது. முதலில் எல்லா மனிதர்களுக்கும் விசேஷமாக அரசர்கள், பசு, யானை, நாய், ஆடு, எருமை முதலிய பிராணிகளுக்கும் ஜுரம், வைசூரி, கிருஹ ஆவேசம், அபஸ்மாரம், இவைகளிலும் விசேஷமாக, குஷ்டரோகம் முதலிய வியாதி ஏற்பட்டாலும், வியாதி நிவர்த்திக்காகவும், ரோகம் ஏற்படாமல் இருப்பதற்கும், புஷ்டிக்காகவும், பலத்திற்காகவும் குறுகிய முறை கூறப்படுகிறது என்று பிரதிக்ஞை ஆகும். பிறகு தேவாலயம், நதிக்கரை மலை, காடு, இவைகளிலோ மற்ற புண்ய தேசத்திலோ அந்தந்த இருப்பிடத்தில் ரøக்ஷயுடன் கூடிய தன்னுடைய வீட்டில் பசுஞ்சாணத்தால் மெழுகப்பட்ட சுத்தமான இடத்தில் லிங்கம், மண்டலத்திலோ, கும்பம், ஸ்தண்டிலம், பலகை முதலியவைகளிலோ சிவன் முதலான தேவர்களை ஆவாஹித்து முன்பு போல் சந்தனம், புஷ்பம் தூபம், தீபம், நைவேத்யம், இவைகளுடன் கூடியதாக பூஜித்து தன்னுடைய இஷ்ட தேவரை பஞ்சகவ்ய பஞ்சாமிருதம் இவைகளால் ஸ்நபன ஸஹிதம் பூஜை செய்து ஜபம் செய்யவும் என கூறி ஜபம் செய்யும் முறை, அங்கு செய்யவேண்டிய ஹோமம் முறை விளக்கப்படுகிறது. பிறகு ஆசார்யன் கும்ப ஸமீபம் சென்று தேவனை வணங்கி நமஸ்கரித்து கும்ப தீர்த்தத்தால் வியாதியால் பீடிக்கப்பட்ட புருஷனை பிராக்ஷித்து, பிறகு மந்திரம் தியானத்துடன் கூடிய அங்குள்ள விபூதியை பூசவும். பிறகு ருத்திராதி தேவர்களுக்கு நெய்யுடன் கூடின தயிர் அன்னத்தை பலி கொடுக்கவும் என்று மனுஷ்யர்களுடன் விஷயமான வியாதி நாசன விதியில் செய்யவேண்டிய ஒரு விதி விளக்கப்படுகிறது. இங்கு ஹோமம் முடிவிலோ ருத்திராதிகளுக்கு பலி கொடுக்கவும் என்று வேறு விதமாக அறிவிக்கப்படுகிறது. பிறகு வியாதியால் பீடிக்கப்பட்ட புருஷ உருவத்திற்கு சமமாக மாவினால் உருவம் செய்து சந்தன புஷ்பம் இவைகளால் பூஜைவரை பூஜித்து பிரதிதினமும் மூன்று சந்த்யாகாலத்திலோ ஒரு காலத்திலோ பலவித காய்கறிகளுடன் கூடி பாயசம் (மிளகு) வெண் பொங்கல் சுத்தான்னம் இவைகளை நாற்சந்தியிலோ, நிழல் தரும் மரத்தின் அடியிலோ, தேரோடும் வீதியிலோ, சப்த கன்னிகைகள் கோயில் சமீபத்திலோ, சுடுகாடு முதலிய இடங்களிலோ மந்திரத்தை கூறி பலிதான முறைப்படி பலியை வைக்கவும் என கூறப்படுகிறது. இங்கு பலிதான மையத்தில் சொல்லக்கூடிய மந்திரம், சாதாரணமாக எந்த சத்வன் தேவதத்தனை அறிந்து இங்கு இருக்கிறானோ அவனுக்கு இந்த பலி ஆகட்டும் என கூறப்படுகிறது.

இந்த பலியானது ஒரு தினம் முதல் 10 தினம் வரையிலும், ஒருமாசம் முதல் வருஷம் முடியும் வரையிலும், ஒரு வருஷம் நூறு வருஷம் வரையிலும் பிராணிகளின் விஷயத்தில் விதி கூறப்படுகிறது. இவ்வாறு பலிதான விதிபிரகாரம் ஒன்று மனுஷ்யர்களுக்கு வியாதி நாச விதியாக கூறப்படுகிறது. பிறகு லிங்கம் முதலியவைகளில் தேவனை பூஜித்து ஜபஹோமம் முடிந்து லோபித்தன்மை இன்றி தங்கத்தாலோ வெள்ளியாலோ வியாதியால் பீடிக்கப்பட்டவனின் உருவத்தையும், யமரூபத்தையும் சக்ரம் போன்றோ பிரதிபிம்பம் ஏற்படுத்தி முன்பு கூறிய விதிப்படி பூஜித்து அந்த பிரதிபிம்பத்தை சிவனுக்கு தானம் செய்யவும். பிறகு வியாதி அடைந்தவன் வியாதி இல்லாதவனாக ஆகிறான். இது சந்தேகம் இல்லை எனக் கூறுகிறார். இவ்வாறு பிரதி பிம்பதான வடிவம் வேறுவிதமாக மனுஷ்யர்களின் வியாதி போக்கக் கூடிய விதியில் விளக்கப்படுகிறது. இங்கு வெறும் பலிதானம் மட்டும் நான்கு மாதம் வரையிலோ ஆறுமாதம் வரையிலோ வியாதி முடியும் வரையிலோ செய்யவேண்டும் என சுருக்கமாக வேறுவிதமாக கூறப்படுகிறது. பிறகு இரண்டு பக்ஷத்திலும் அஷ்டமி, சதுர்தசி, அமாவாசை, பவுர்ணமி, அவ்வாறு சூர்ய, சந்திர கிரஹணங்கள், விஷுவபுண்யகாலம், இரண்டு அயனங்களிலும் தன்னுடைய ஜன்ம நக்ஷத்திரம், அனுஜன்ம நக்ஷத்திரம், சுத்தமான அழகான, கோசாணம் மெழுகப்பட்ட ஸ்தண்டிலம் அமைத்து, லக்ஷணத்துடன் கூடிய 25 கலசங்களையோ, அல்லது ஐந்து, ஒன்பது கலசங்களை ஸ்தாபித்து அவைகளை முறைப்படி அந்தந்த மந்திரங்களுடன் கூடி சந்தன புஷ்ப தூப, தீபங்களுடன் விசேஷமாக பூஜித்து, அதன் முன்பாக நான்கு திக்கிலும், ஸ்தண்டிலம் அல்லது குண்டத்திலோ, சமித்து நெய் அன்னம் இவைகளால் ஹோமம் செய்யவும். அந்தகுண்டத்திலே உள்ள விபூதியால் அதன் வடக்குதிக்கில் உள்ள வியாதியால் பீடிக்கப்பட்ட புருஷனை ஸ்நானம் செய்விக்கவும். யவம் முதலிய மாவுகளால் பூசி அந்த தியானத்துடன் கூடியதாக அந்தந்த மந்திரத்தை ஸ்மரித்து அபிஷிக்கவும் அல்லது சம்ப்ரோக்ஷிக்கவும். பிறகு அங்குள்ள விபூதியை பூசவும். பிறகு ரோகி ஆசார்யனை பூஜிக்கவும். இந்த வியாதியை போக்கும் விதியானது பட்டத்தில் உள்ள அரசர்களுக்கும் அஷ்டோத்தர சதகலச ஸ்தாபனமோ ஐம்பது கலஸஸ்தாபனமோ செய்து எல்லா கலசத்திலும் ஒரே மந்திரத்தை பூஜிக்கவும் என்று அரசர்கள் விஷயத்தில் கூறப்படுகிறது.

இவ்வாறு சாதாரணமான மனிதர்களுக்கும் விஷயத்தில் செய்யவேண்டிய முறை, விபூதிஸ்நானம் கும்பதீர்த்தாபிஷேகம் தீர்த்தபிரோக்ஷணம், விபூதி பூசுதல் ஆகிய வியாதியை போக்கக் கூடிய முறைகள் நிரூபிக்கப்படுகின்றன. பிறகு அரசர், சாதாரண மனுஷ்யர்கள் விஷயத்தில் வியாதியை போக்குவதற்கு ஜலத்தின் நடுவில் நின்று கொண்டு மந்திரஜபத்தால் சாதிக்கக் கூடிய வேறு விதி வர்ணிக்கப்படுகிறது. அங்கு செய்யவேண்டிய ஹோமவிதி மந்திர தர்பணவிதி கூறப்படுகிறது. பிறகு காட்டு புரசு இலையில் மந்திரத்தினை எழுதி தங்கம், வெள்ளி இவைகளால்சிறு உருண்டை மாதிரி செய்து புரசபத்திரத்தில் எழுதியதை நுழைத்து அந்த உருண்டையை (ரøக்ஷயை) கழுத்து, காது, சிகையிலோ கட்டிக் கொள்ளவும் எனக் கூறி அங்கே செய்யவேண்டிய ஹோமம் மந்திர தர்பணம் ஜபம் வரை கூறப்படுகின்றது. இந்த கர்மாவில் பிறரை அனுக்கிரஹம் செய்யவேண்டிய விஷயத்தில் ஈடுபட்ட ஆதி சைவனே ஆசார்யனாக ஆவான் என உயர்ந்ததாக கூறப்படுகிறது. பிறகு யானைகளின் விஷயத்தில் வியாதியை போக்கக் கூடிய முறை கூறப்படுகிறது. யானை கட்டும் இடத்தின் மத்தியிலோ சிவன் கோயிலிலோ, சூலம் ஸ்தாபிக்கப்பட்ட இடத்திலோ, விஷ்ணு, துர்கை, சூர்யன், மஹாகணபதி, சாஸ்தா, சப்தமாத்திருக்கள், இவர்களின் ஆலயத்திலோ ஆற்றங்கரையிலோ, குளத்தங்கரையிலோ, ஸ்வாமி நந்தவனத்திலோ, கோசாணம் மெழுகப்பட்ட இடத்திலோ முறைப்படி ஸ்தண்டிலம் அமைத்து ஓர் கும்பம் அமைத்து அங்கு அங்கபூஜை சஹிதம் அகோராஸ்திரத்தை பூஜிக்கவும் என்று கூறி அகோராஸ்திரத்யான முறை, செய்யவேண்டிய பூஜாமுறையும் கூறப்படுகிறது. பிறகு ஹோமம் செய்யும் முறை விளக்கப்படுகிறது. பூர்ணாஹுதியின் முடிவில் அஸ்திர கும்பதீர்த்தத்தால் சம்ப்ரோக்ஷணம் அங்கு இருக்கும் விபூதியை பூசுதல் யானைகளுக்கு செய்யவேண்டும்.

அப்பொழுது வியாதிகள் அழிந்து போகின்றன. யானைகளுக்கு ஆயுள் அபிவிருத்தியும் புஷ்டியும் ஏற்படுகிறது. அவைகளின் தலைவன் விஜயத்தை அடைவான் என கூறப்படுகிறது. பிறகு அங்கு செய்யவேண்டிய பலிமுறை கூறப்படுகிறது. முடிவில் இந்த பூஜை முறையே குதிரைகளை காப்பாற்றுவதற்கும் உள்ள விதியாகும். ஆனால் புகைக்கலர் உள்ள அகோராஸ்திரத்தை உத்தமமான ஸாதகர்களால் தியானிக்கப்படவேண்டும் என்று விசேஷம் விளக்கப்படுகிறது. பிறகு வியாதியை போக்கும் விஷயத்தில் அகோரமந்திர, அகோராஸ்திர மந்திரங்களின் பூஜையால் சாதிக்க வேண்டிய பிரயோகமும், அவ்வாறே கருங்கல் முதலிய திரவ்யங்களில் அகோரமூர்த்தியை ஏற்படுத்தி ஸ்தாபித்து அந்த பூஜையால் சாதிக்கக்கூடிய பிரயோகம் ஆவரணத்துடன் கூடிய அகோர மூர்த்தியின் பூஜையின் முறையும் விளக்கப்படுகிறது. அங்கு செய்யவேண்டிய ஜப, ஹோம, பலி முறைகள் கூறப்படுகின்றன. பிறகு சாதாரண மனிதர்களுக்கும், விசேஷமான அரசர்களுக்கும், கால்நடைகளுக்கும் வியாதியை போக்கும் முறைகளில் பலவித பிரயோக விஷயங்கள் கூறப்படுகின்றன. முடிவில் அகோரமந்திரம், அகோராஸ்திர மந்திரம், இவைகளுக்கு எந்த ராஜ்யத்தில் ஹோம பலியுடன் கூடிய பூஜை நடைபெறுகிறதோ, அங்கு ஆயுள் அபிவிருர்த்தி, நோயின்மை ஏற்படும். இதற்கு சமமாக வியாதியை போக்குவதற்கு காரணமான வேறுபிரயோகம் இல்லை என்கிறார். ஆகையால் முயற்ச்சியுடன் இந்த பிரயோகத்தை அனுஷ்டிக்கவும் என கூறப்படுகிறது. இவ்வாறு 75வது படல கருத்து சுருக்கமாகும்.

1. எல்லா மனிதர்களுக்கும், அரசர்களுக்கும் உண்டாகும் நோயைப் போக்கும் முறையை சுருக்கமாகவும், விசேஷமாகவும் கூறுகிறேன்.

2. பசு, எருமை, யானை, குதிரை, ஆடு, எருது, முதலிய பிராணிகளுக்கு உண்டாகும், ஜ்வரம், மாரி, க்ருஹ பீடைகள், வலிப்பு முதலிய நோய்களைப் போக்கும் முறைகளை கூறுகிறேன்.

3. க்ஷயம் குஷ்டம் போன்ற நோய், சோகை, வயிற்றுவலி, மண்ணீரம் நோய், பைத்யம், வாத, பித்த, கபங்களின் ஆதிக்கம், தீ புண், மயக்கம், மதம் பிடித்த தன்மை, காயங்கள் இவைகளுக்கும்

4. மஹோத்ரம், இரத்தக் குழாய் வீக்கம், நீர்கட்டு இது போன்ற இன்னும், பெரிய நோய்களும், தலை, கண், பல் முதலியவைகளில் தோன்றும் நோய்கள்

5. முகம், வாய், கைகால்கள், இவைகளில் உண்டாகும் நோய்களுக்கும் கூறப்படாத நோய்களுக்கும், விசேஷமாக உண்டாகும் நோய் மற்றும் அரசர் முதலியவர்களுக்கும்

6. நோய்களை போக்குவதற்கும், மேற் சொன்ன பிராணிகளுக்கு இவை போன்ற நோய்கள் உண்டாகாமல் இருப்பதற்கும் சரீரபுஷ்டி ஏற்படுவதற்கும், உடலில் பலம் உண்டாவதற்கும் சாஸ்திர முறைப்படி விதிமுறை சுருக்கமாகக் கூறப்படுகிறது.

7. ஆலயத்திலாவது, புண்ய நிதிக்கரையிலாவது அல்லது மலை, காடு, வேறு புண்ய தேசம் இவைகளிலாவது அந்த பிராணிகள் வியாதி ஏற்பட்ட இடத்திலாவது தன் வீட்டிலாவது

8. பசுஞ்சாணத்தினால் மெழுகப்பட்ட சுத்தமானதும் மனதிற்கு நிறைவை அளிக்கக்கூடியதும், மறைவானதும் இடையூறு ஏற்படாமல் காப்பாற்றப்பட்ட, இடத்தில் லிங்கத்தில் அல்லது மண்டலத்தில், கும்பத்தில், ஸ்தண்டிலத்தில் பலகை முதலியவைகளிலோ

9. ஈஸ்வரன் முதலிய தேவதைகளை ஆவாஹனம் செய்தும், சந்தனம், புஷ்பம், தூபதீப, ஹவிர் நிவேதனம் முதலியவைகளால் பூஜித்தும்

10. பஞ்ச கவ்யம், ஸ்நபனம், அபிஷேகம் முதலியவைகளால் ஈஸ்வரனை ஆராதித்து, மந்திர ஜபமும் செய்ய வேண்டும்.

11. பத்தாயிரமோ அல்லது ஐயாயிறமோ அல்லது இரண்டாயிரத்து ஐநூறோ, அல்லது ஆயிறமோ அல்லது ஐநூறோ அல்லது நூற்றியெட்டு ஆவ்ருத்தியாவது

12. அந்த மந்திரங்களுக்கு தகுந்தவாறு ஜபம் செய்ய வேண்டும். பிறகு அந்தந்த மந்திரங்களை உச்சரித்து நோய் உண்டானவனுடைய நிலையையும் சொல்லி நோயை நாசம் செய், நாசம் செய் என்று கூறி பிறகு

13. தேவதத்தனுடைய என்ற பதத்தை விசேஷமாக படித்து ஜபத்தை செய்து விருப்பமான (இஷ்டதேவதை) தேவனிடத்தில் தெரிவிக்க வேண்டும்.

14. பிறகு ஜபத்தை சந்தனம், புஷ்பம், அக்ஷதை, அருகு இவைகளோடு இறைவனிடத்தில் அர்பணம் செய்து இறைவனை வணங்கி ஹோமம் செய்ய அனுமதி பெற்று ஹோமம் செய்யும் இடத்தை அடைய வேண்டும்.

15. ஆராதிக்கப்பட்ட ஈச்வரனுக்கு முன்புபோல் அல்லது ஈசான்ய திக்கிலாவது நான் கோண வடிவில் அல்லது வட்டவடிவ குண்டத்தில் அல்லது ஸ்தண்டிலத்திலாவது முறைப்படி சிவாக்னியை ஏற்படுத்தி

16. அதில் இஷ்ட தேவதையை ஆவாஹனம் செய்து சாஸ்திரத்தில் கூறப்பட்டபடி சந்தனம், சமித்து, அன்னம், நெய், என்று முதலியவைகளால் ஆராதிக்க வேண்டும்.

17. ஜபம் செய்ததில் பத்தில் ஒருபங்காவது அல்லது நூற்றி எட்டு ஆவ்ருத்தியாவது ஹோமம் செய்து பூர்ணாஹூதியும் செய்து, அதிலிருந்து ரøக்ஷயை எடுத்து

18. கும்பத்தில் ஆவாஹனம் செய்யப்பட்ட ஈஸ்வரனிடம் சென்று ஹோமகர்மாவை விக்ஞாபித்து துதித்து வணங்கி (ஈஸ்வரனுக்கு பரான் முகார்யம் கொடுக்க வேண்டும்)

19. கும்பத்தில் உள்ள தீர்த்தத்தால் நோயாளியை ஸ்நானம் அல்லது பிரோக்ஷணம் செய்து ஹோம பஸ்மாவினால் தகுந்த மந்திரங்களைச் சொல்லி உடம்பில் பூச வேண்டும்.

20. ஹோமத்தின் முடிவில் நெய் கலந்த தயிர் அன்னத்தால் ருத்திரன் முதலிய தேவதைகளுக்கு பலி கொடுக்க வேண்டும். இது ஓர்முறையாகும். வேறு முறையும் இப்பொழுது கூறப்படுகிறது.

21. நோயாளியின் உருவப் படிவம் போல் மாவினால் ஓர் உருவத்தையமைத்து சந்தனம் புஷ்பம் முதலியவைகளால் பூஜித்து, பலி பூஜை வரையிலுமாவது பூஜித்து,

22. பலவிதமான காய்கறி, பக்ஷணவகைகளுடன் பாயஸம், பாசிபயிறுடன் சுத்தான்னம், நெய், தயிர், அப்பம் இவைகளுடன்

23. தினந்தோறும் மூன்று ஸ்ந்த்யா காலங்களில் அல்லது ஒருகாலத்திலாவது நாற் சந்தியிலோ யக்ஞத்திற்கு தகுந்த புண்ய விருக்ஷத்தின் அடியிலாவது

24. ஸப்தமாதர்கள் ஆலயத்தின் ஸமீபத்திலோவது, மயானத்திலாவது, எது தேவதத்தனை பிடித்திருக்கிறதோ

25. அதற்கு இந்த பலி ஆகட்டும் என்பது மந்திரத்தோடு மேற்கூறிய பொருட்கள் கொடுக்க வேண்டும். பலி ஓர் தினம் முதல் பத்து நாள் வரையிலும், ஓர்மாதம் முதல் ஓர் ஆண்டு வரையிலுமாகவும்

26. ஓர் ஆண்டு முதல் நூறு வருடம் வரையிலும், மனிதர்களுக்கு பிராணிகளுக்குமாக தூப, தீபத்துடன் கூடியதாக இந்த பலியானது, கூறப்பட்டது.

27. பதாகம் என்ற உபசார கொடியை எடுத்து வந்து மேற்கூறிய பலிகளை செய்வது பொதுவானதாகும். இன்னும் வேறு விதமாகவும், நோயை தீர்க்கும் தன்மை கூறப்படுகிறது.

28. லிங்கத்திலோ அல்லது கும்பத்திலோ இறைவனை ஆவாஹனம் செய்து, ஜபஹோமங்களை முடித்துக் கொண்டு நூறு நிஷ்க்க அளவு தங்கத்திலாவது வெள்ளியிலாவது

29. ஐம்பது நிஷ்கத்திலாவது அல்லது இருபத்தைந்து நிஷ்கத்திலாவது பத்து நிஷ்கத்திலாவது ஐந்து நிஷ்கத்திலாவது

30. 2, 1/2 நிஷ்கத்தில் ஒரு நிஷ்கத்திலாவது அவரவர்கள் சக்திக்கு தக்கவாறு வ்யாதி உள்ளவனுடைய உருவம் செய்ய வேண்டும். பணக்குறைவை செய்யக்கூடாது. (நிஷ்கம் என்பது எண்பது குண்டுமணி எடை)

31. வியாதியால் பீடிக்கப்பட்டவர்களின் உருவத்தை நிர்மாணித்தோ, யமனுடைய உருவத்தையோ, பூமி சக்ரம் போன்றோ வேறு உருவத்தையோ

32. முன்கூறப்பட்ட முறைப்படி துதித்து இறைவனிடம் அர்ப்பணம் செய்ய வேண்டும். இப்படி செய்தால் ரோகம் போய் ரோகமில்லாது இருப்பது நிச்சயம்

33. இவ்விதம் செய்ய முடியாவிடில் நான்கு, ஐந்து, ஆறுமாதம் வரை பலிதானம் மட்டும் செய்தாலும் நோய் தீர்ந்து விடும்.

34. மற்றொரு விதத்தாலும் நோய் போவதற்கு முறை கூறப்படுகிறது. அஷ்டமியிலாவது, சதுர்த்தியிலாவது இரண்டு பக்ஷங்களின் பர்வாக்களிலாவது

35. கிரஹண காலத்திலாவது, விஷுவ புண்ய காலத்திலாவது, இரண்டு அயனங்களிலாவது ஜன்ம நக்ஷத்திரத்திலாவது அனு ஜன்ம நக்ஷத்திரத்திலாவது

36. பசுஞ்சாணத்தினால் மனதிற்கு நிம்மதியாக உள்ள இடத்தை அஸ்த்ர மந்திரத்தை சொல்லி பிரோக்ஷணம் செய்து, அங்கு ஸ்தண்டிலம் அமைத்து ஒன்பது கலசங்களையோ

37. இருபத்தி ஐந்து கலசங்கள் அல்லது ஐந்து கலசங்களையோ இரண்டு மரக்கால் அளவு ஜலம் பிடிக்கும் ஒரு கலசத்தையாவது வைத்து பூஜை செய்ய வேண்டும்.

38. எல்லா கலசங்களும் நூல் சுற்றப்பட்டு வஸ்த்ரங்கள் சந்தனம், அக்ஷதை, அலங்கரிக்கப்பட்டு தங்க பிரதிமைகளோடும் மருந்துகளோடும் பலவித விதைகளோடும்

39. கூர்ச்சம், மாவிலைகளோடும் சந்தனம், அக்ஷதை, இவைகளோடும் வாசனை பொருள் நிறைந்த ஜலம், உள்ளதுமான அந்த கலசங்களை அதற்கு தகுந்த மந்திரங்களாலும்

40. சந்தனம், புஷ்பம், தூபம் இவைகளாலும் விசேஷமாக பூஜித்து அந்தந்த மந்திரங்களை நூறுமுறை கூறி அதற்கு முன்போ, நான்கு திசைகளிலுமோ

41. குண்டமோ, ஸ்தண்டிலமோ, அமைத்து சிவாக்னியை ஆவாஹனம் செய்து, அதில் சமித்து, நெய் அன்னங்களோடு ஹோமம் செய்ய வேண்டும்.

42. அதிலிருந்து பஸ்மாவை எடுத்து வடக்கு பக்கத்தில் பசுஞ்சாணம் மெழுகப்பட்ட இடத்தில் பலகையில் இருக்கின்ற நோயுள்ளவர்களுக்கு ஸ்நானம் செய்வித்து

43. அந்தந்த மேற்பட்ட தேசத்திலுள்ள நோயால் பீடிக்கப்பட்டவனை ஸ்னானம் செய்விக்க வேண்டும். யவை முதலான திரவ்யங்களினால் ஆன மாவுகளாலும் பசுஞ்சானத்தாலும்

44. வியாதிக்கு தகுந்த மந்திரத்தினால் தியானத்தோடு சொல்லி எடுத்த ரøக்ஷயை உடம்பில் பூசவேண்டும்.

45. பிறகு நோய் உள்ளவன், ஆசார்யனை பூஜிக்க வேண்டும். பட்டம் சூட்டிய ராஜாக்களும் சிற்றரசர்களுக்கும் இன்னும் மஹான்களுக்கும்

46. நூற்றியெட்டு கலசங்களையாவது அல்லது ஐம்பதுக்கும் குறையாத கசலங்களை வைத்து பூஜை செய்தல் வேண்டும்.

47. எல்லா கலசங்களிலும் ஒரே மந்திரந்தான் பூஜிக்கப்படுகிறது. ஆனால் நடுவில் உள்ள கலசத்தில் விசேஷமாக பூஜிக்கப்பட்டு அந்த தீர்த்தங்களால் மேற் கூறியவர்களை ஸ்னானம் செய்விக்க வேண்டும்.

48. நோயை போக்குவதற்கு வேறு முறையும் கூறப்பட்டுள்ளது. சூர்ய உதயத்திலிருந்து ஜலத்தில் நின்று கீழ்வரும் முறைப்படி மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும்.

49. பத்தாயிரம் அல்லது ஐயாயிரம் அல்லது இருபத்தி ஐந்தாயிரம் அல்லது ஆயிரம், நூற்றியெட்டு ஆவ்ருத்தியானது மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும்.

50. ஹோம எண்ணிக்கைக்கு ஸமமாகவோ ஜப எண்ணிக்கைக்கு ஸமமாகவோ தர்பணம் செய்ய வேண்டும்.

51. சக்தி உள்ளவனாக இருந்தால் ஜலமத்தியில் நின்று நித்யம் ஜபம் செய்ய வேண்டும். இந்த விதமாகவோ காட்டுப் பூவரசுத்தோல் முதலியவைகளில்

52. நோயுள்ளவனுக்கு தக்கவாறு நல்ல நேரத்தில் நல்ல லக்னத்தில் அவரவர்களின் தேவனின் பூஜை முறைப்படியான எழுத்துக்களை குங்குமத்தால் எழுத வேண்டும்.

53. முன்பு கூறப்பட்ட ஜபம், தர்பணம், ஹோமத்துடன் கூடியும், ஜபத்தை மட்டுமோ, கோரோசனையால்

54. ஊசியால், அம்பினால், மந்திரங்களை எடுத்து எழுதி சந்தனம், புஷ்பம் முதலியவைகளால் பூஜித்து மாத்திரை போன்றோ (தாயுத்து போன்றோ)

55. தங்கத்தினாலோ வெள்ளியிலோ, தாமிரத்திலோ, பஞ்சால் ஆன நூலோ அரக்கினாலோ கட்டி வியாதி தீரும்வரை தரித்துக் கொள்ள வேண்டும்.

56. பலமில்லாதவன் பலமுள்ளவனாகவும், பூமியில் எல்லோர்களாலும் பூஜிக்கப்படுகிறான். காதிலோ கழுத்திலோ, சிகையிலோ அல்லது கையிலாவது ரக்ஷõபந்தனம் செய்ய வேண்டும்.

57. ஆனால் மந்திர ஸான்னியத்தை முன்னிட்டு இடுப்பின் கீழே கட்டுதல் கூடாது. இப்படி தினமும் பூஜிரக்கப்படும் மந்த்ரம் எல்லா பயனையும் அளிக்க கூடியது.

58. கடமையுணர்வோ கூடினவனாய் தினமும் பூஜை ஜபம் மட்டுமோ அல்லது பூஜை, ஜபம், ஹோமம், தர்பணம் இவைகளை செய்விக்க வேண்டும்.

59. இவ்வாறு எவன் செய்கிறானோ அவன் தீமைகளிலிருந்து விடுபட்டவனாகிறான். துர்பலம் உள்ளவன், பலமுள்ளவனாகவும் எல்லோராலும் மதிக்கப்படுபவனாகவும் ஆகிறான். அரசனாக இருந்தால் பலமுள்ளவனாகவும் எல்லோராலும் விரும்பத்தக்கவனாகவும் தர்மத்தில் அதிகம் ஈடுபட்டவனாகவும் ஆகிறான்.

60. சக்தியில்லாதவர்களுக்கு அவர்களால் அதிகாரம் கொடுக்கப்பட்ட ஆசார்யன் இந்த கர்மாவில் அதிகாரமுள்ளவனாக ஆகிறான், அதிலும் விசேஷமாக ராஜாவை முன்னிட்டு செய்யும் கர்மாக்களில் வேறு யாருக்கும் இடமில்லை.

61. ஆகையால் பிறர்க்கு அனுக்ரஹம் புரிவதையே குறிக்கோளாகக் கொண்ட ஆதி சைவனிடத்தில் எப்பொழுதும் பூர்ணமான நம்பிக்கை வைக்க வேண்டும். அவனே எப்பொழுதும் ஆதிசைவன் என கூறப்படுகிறான்.

62. யானைகளுக்கு உண்டாகும் நோய்களுக்கு சாந்தி சொல்லப்படுகிறது. யானைக் கொட்டாரத்தின் நடுவில் அல்லது அழகான இடத்திலும்

63. சிவாலயம், விஷ்ணு ஆலயம், துர்கை, ஸூர்யன், சாஸ்தா அவர்களின் ஆலயத்திலாவது ஸப்தமாதாக்களின் ஆலயத்திலாவது

64. நதிக்கரை, குளக்கரை, நந்தவனம், இவைகளுள் ஏதேனும் ஒன்றை பசு சாணத்தால் மெழுகி அஸ்த்ர மந்த்ரத்தை கொண்டு ஜலத்தைப் பிரோக்ஷித்து

65. முறைப்படி நெல், அரிசி முதலியவைகளால் ஸ்தண்டிலம் ஏற்படுத்தி மரக்கால் அளவு ஜலம் கொண்டதும் பொறி, தர்பம் இவைகளுடன் சேர்த்தும்

66. கூர்ச்சம், வஸ்த்ரம், வாசனைப் பொருள் நிறைந்த ஜலம் நிறைந்ததும் ஏலம், குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம் இவைகளை மூன்று பல அளவோடும்

67. அருஹம் புல்லுடன் வெள்ளை அரிசியுடனும் சேர்த்து கும்பத்தில் அகோராஸ்ரத்துடன் கூடியதாக நன்கு பூஜிக்க வேண்டும்.

68. பத்மாஸனத்தில் வீற்றிருப்பவராகவும் ஆறு கைகள் மூன்று கண்கள், உள்ளவராக ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவராகவும் பூர்ண சந்திரனுக்கு சமமான காந்தியுள்ளவராகவும்

69. கபாலம், சூலம், வில், அம்பு, கத்தி, கேடயம் இவைகளோடு கூடியவராகவும் மேல் நோக்கிய கேசபாசத்தை உடையவராகவுமாக

70. மேற்கூறிய முறைப்படி அகோராஸ்த்ர உருவ அமைப்பை தியானித்தோ முன்கூறிய உருவ அமைப்புடன் வெண்மை நிறமாகவோ

71. சந்தனம், புஷ்பம், தூப தீபங்களால் உபசரித்து உபதம்சத்துடன் தாம்பூலத்துடனும் நைவேத்யத்தை நிவேதனம் செய்ய வேண்டும்.

72. தினமும் ஆயிரம் அல்லது ஐநூறு அல்லது நூற்றியெட்டு ஆவ்ருத்தியாவது அஸ்திர மந்திரத்தை ஜபம் செய்தல் வேண்டும்.

73. அதன் முன்போ அல்லது அதன் ஈசான்ய திக்கிலோ வட்டவடிவ குண்டமாவது நாற்கோணகுண்டமாவது, அமைத்து அதில் சிவாக்னியை ஆவாஹித்து ஹோமம் செய்தல் வேண்டும்.

74. ஸமித்து, நெய், அன்னம், எள், அரிசி முதலியவைகளால் ஹோமம் செய்ய வேண்டும். பாலுள்ள மரத்திலுண்டான புரசு முதலான மரங்களிலிருந்து பில்வம் முதலியவைகளிலிருந்தும் உண்டான

75. ஸமித்துக்கள் மிக மேலானது அல்லது அருஹம்பில் மேலானது என அறியவும். ஆயிரம் அல்லது ஐநூறு அல்லது நூற்றியெட்டு ஆவ்ருத்தி முன் சொன்ன பொருளால் ஹோமம் செய்ய வேண்டும்.

76. பிறகு பிராயச்சித்தாஹுதி செய்து பூர்ணாஹுதியும் செய்ய வேண்டும். ஹோம பஸ்மாவை எடுத்து கும்பத்தில் சேர்த்து இறைவனுக்கு பராங்முகார்க்யம் கொடுக்க வேண்டும்.

77. அந்த தீர்த்தத்தால் ஸ்நானம் செய்வித்து தினமும் அந்த ஹோம பஸ்மாவை தரித்துக் கொள்ள துஷ்டக்ரஹங்கள் விலகுகின்றன. நோய்கம் அழிகின்றன. அதுமட்டுமில்லாமல் சரீரபலமும் ஏற்படுகிறது, மேலும்

78. வேறு நோய்களும் ஏற்படுவதில்லை, ஆயுள் வளர்ச்சியும் உண்டாகிறது. எங்கு இது போன்று கார்யங்கள் செய்யப்படுகிறதோ அங்கு யஜமானன் வெற்றி உள்ளவனாக ஆகிறான்.

79. கோமயத்தால் மெழுகப்பட்ட மண்டபத்தில் ருத்ரன் முதல் ÷க்ஷத்ரபாலர் வரையும் உள்ள தேவதைகளுக்கு பலி கொடுத்து திக்பாலர் பலியும் கொடுக்க வேண்டும்.

80. அல்லது யானைகொட்டாரத்தின் ஸமீபத்தில் அல்லது ஹோமம் செய்த இடத்தில் பலியை கொடுக்கவும். குதிரை முதலியவைகளுக்கும் இந்த விதியே பொருந்தும்.

81. ஆசார்யரால் தூம்ரவர்ணம் (புகை கலர்) உள்ள ஈஸ்வரன் தியானிக்கத்தக்கவர், யானை கூட்டம், குதிரை, பசு, எருமை, ஆடு இவைகள்

82. அஸ்த்ர ராஜாவின் கருணையால் நன்கு காப்பாற்றப்பட்டும், அவைகள் நோய் நீங்கியதோடு அல்லாமல் நன்கு புஷ்டியாகவும் ஆகிவிடும்.

83. முற்பகலில் அல்லது நடுபகலில் அல்லது இரவில் இதை செய்ய வேண்டும். ஒருகாலம் அல்லது இரண்டு காலம் மூன்று காலம் செய்வது விசேஷமானது.

84. அரசன் இதை தினமும் செய்வானேயானால் புண்யம் செய்தவனாய் எங்கும் வெற்றி பெற்றவன் ஆவான். யஜமானன், ஸாதகன், திருப்தியடையும்படி பூஜிக்க வேண்டும்.

85. குதிரைகளுக்கும், யானைகளுக்கும் வேறு விதமாகவும் காக்கும் முறை சொல்லப்பட்டுள்ளது. முதலில் ஜலத்தினால் தர்பணம் செய்த பிறகு

86. சாஸ்திர முறைப்படி அமைக்கப்பட்ட ஸ்தண்டிலத்தில் பதினாறு மரக்கால் அல்லது எட்டு மரக்கால் அல்லது நான்கு மரக்கால் அல்லது இரண்டு மரக்கால்

87. அல்லது ஒருமரக்கால் ஏழையாக இருந்தால் அதிலும் பாதி நெல் பரப்பி, பரப்பிய நெல்லில் பாதியுள்ள அரிசியையும் பரப்பி

88. எள், பொறியையும், பரப்பி அதன் மேல் இரண்டு மரக்கால் கொள்ளளவு உள்ள கும்பத்தை வைத்து

89. தேங்காய், வஸ்த்ரம், கூர்ச்சம், மாவிலைகளோடு கூடியதும் வாசனைப் பொருள்களோடு ஜலம் நிறைந்துள்ளதும், முன்பு கூறப்பட்ட திரவ்யங்களோடு கூடியதுமாக அமைத்து

90. அதில் முன்கூறப்பட்ட தியானத்தோடு அகோரத்தை ஆவாஹித்து சந்தனம், புஷ்பம், தூபதீபங்களோடும்

91. பாயசத்தை தாம்பூலத்துடன் நைவேத்யம் செய்து, பிறகு ஹோமத்தை நிறைவு பெறச் செய்ய வேண்டும்.

92. ஸமித், நெய், அன்னம், எள்ளு, கடுகு, பொறி, பால் உள்ள மரத்தின் ஸமித்துக்கள் அல்லது அருகு இவைகளாலும்

93. ஆயிரம் அல்லது ஐநூறு அல்லது நூற்றிஎட்டு அல்லது ஐம்பது அல்லது இருபத்தி ஐந்து ஆவ்ருத்தியாவது

94. ஒவ்வொரு திரவ்யத்தை அகோர மந்திரத்தால் அதே எண்ணிக்கையுள்ள அகோராஸ்த்ர மந்திரத்தையும் உச்சரித்துக் கொண்டு

95. இரண்டு குண்டத்திலாவது ஒரு குண்டத்திலாவது ஹோமம் செய்யவும். பிரதான மந்திரத்தால் பூர்னாஹுதியையும் தர்பணத்தையும் செய்து

96. அல்லது தனியாக பூர்ணாஹூதி செய்து, மத்தியில் நெய்யோடு கூடிய அன்னம் பலி கொடுத்து எட்டு திக்குகளிலும் பலி கொடுக்க வேண்டும்.

97. ஸ்வாஹா என்ற சொல்லை முடிவுடையதாக அகோராஸ்த்ர மந்திரத்தால் குண்டத்திற்கு ஈசான திக்கில் பலி கொடுத்தல் கூறப்பட்டுள்ளது.

98. பெரிய ஜ்வாலையுள்ள தீயையே சிகையாகக் கொண்ட ஹே அகோராஸ்த்ர தேவரே எவனால் பூஜிக்கப்பட்டு தர்பணத்தாலும், பலியாலும் ஸந்தோஷம் அடைந்தீர்களோ அப்பேற்பட்ட நீங்கள்

99. அந்த யஜமானனையும் அவன் யானைகளையும் காப்பாற்றுங்கள் என்றும் வேண்டிக் கொள்ளவும், ஸ்வாஹா என்று விசேஷமாகக் கூறி பலி, தர்பணம் கொடுக்க வேண்டும்.

100. இந்த கர்மாவை முதற்பகலிலோ, நடுபகலிலோ இரவிலோ செய்தல் வேண்டும். மஹாபலி கொடுக்க வேண்டுமானால் நடு இரவில் கொடுத்தல் வேண்டும் எப்படி எனில்

101. தேன், நெய், தயிர், பொறி, வாழைப்பழம், வடை இவைகளோடு கூடிய அன்னத்தை

102. பலவிதமான, வாத்ய கோஷங்களோடும் நாய்கள் பின்தொடர தீபமில்லாமல் கிராமத்தின் ஆரம்பத்தில் பலி கொடுத்தல் வேண்டும்.

103. ஹே பிராம்மண உத்தமர்களே அதிலும் குறிப்பாக அரண்மனையில் தீங்கு வராமல் காப்பாற்றப்பட வேண்டிய இடத்தில் அகோராஸ்த்ர தேவரின் கொடியோடு மவுன வ்ருதத்தை கடைபிடித்து

104. ÷க்ஷத்திர பாலர்களுக்கும் ருத்திரர், முதலியவர்களுக்கும் பலி கொடுத்தல் வேண்டும். பிறகு கும்பத்தில் உள்ள புண்ணிய தீர்த்தத்தால் நோயுள்ளவர்களை பிரோக்ஷிக்க வேண்டும்.

105. அகோர மந்திரத்தையும், அகோரஸ்த்ர மந்திரத்தையும் ஜபித்துக் கொண்டு, நோயுள்ளவனுக்கு பிரோக்ஷணம் செய்தும், பிறகு அந்த மந்திரங்களால் அபிமந்திரம் செய்யப்பட்ட விபூதியை அந்த இரண்டு மந்திரங்களையும் தியானித்து கொடுக்க வேண்டும்.

106. பிறகு ஹோம ரøக்ஷயும் கொடுத்தல் வேண்டும். அவர்கள் நோயிலிருந்து விடுபட்டவர்கள் ஆவார்கள். பிறகு கர்த்தா போஜனம் தட்சிணை முதலியவைகளால் ஆசார்யரை சந்தோஷிக்க செய்ய வேண்டும்.

107. ஆசார்யன் ஸந்தோஷம் அடைந்தால், அசையும் பொருள், அசையா பொருள் எல்லாம் மகிழ்ச்சி அடையும், கோயில்களிலும் அகோர தேவதை சிலாவிக்ரஹமாக அமைத்து

108. ஹோமம் பலி முதலியவைகளை செய்தல் வேண்டும். கும்பத்திலும் ஆவாஹித்து பூஜை ஹோமம் முதலியவைகளைச் செய்யலாம்.

109. இப்படி தர்பணம், ஹோமம், முதலியவைகளோடு பூஜை செய்தால் இப்பிறவியில் நோய்களும், எல்லாப் பீடைகளும் அழிந்து விடுகின்றன.

110. பூஜை ஹோமம், பலிமட்டுமாவது தினந்தோறும் செய்ய வேண்டும். எல்லா மனிதர்களுக்கும் இந்த ஹோமம் பலி கூறப்படுகிறது.

111. பூஜையின் முடிவில் ஜபத்தையும் ஹோமத்தையும் செய்ய வேண்டும். அல்லது எல்லா தீங்குகளும் நீங்குவதற்கு ஜபம் மாத்திரமாவது செய்ய வேண்டும்.

112. யானைகளின் நோய் தீருவதற்கு மற்றொரு விதமும் இங்கு கூறப்படுகிறது. தூய்மையான இடத்தையடைந்து பசுஞ்சாணத்தால் மெழுகிவிட வேண்டும்.

113. கோவை பழம் போல் செந்நிறம் உள்ளதும் இரண்டு மரக்கால் கொள்ளளவு உள்ளதுமான கும்பத்தை நூல் சுற்றி இரண்டு மரக்கால் நெல்

114. ஒரு மரக்கால் அரசி அரை மரக்கால் எள்ளு கால் மரக்கால் பொறியுள்ள ஸ்தண்டிலத்தில் ஸ்தாபிக்க வேண்டும்.

115. கும்பத்தின் மேல், ஐந்து தர்பங்களால் கூர்ச்சம் நிர்மாணம் செய்யப்பட்டும் கும்பத்தில் சந்தனம்

116. முப்பழங்களோடும், கீழாநெல்லி, விளாமிச்சவேர், ஏலம், லவங்கம் முதலிய வாசனைப் பொருளின் தூள்களையும், கும்பத்தில் ஸமர்பித்து

117. வஸ்திரம் உடுத்தி ஆதார சக்தி அனந்தாஸனம் தர்ம, ஞான, வைராக்ய ஐச்வர்யம் முதலிய ஆஸனங்களையும் கல்பித்து

118. அதர்மாதி நான்கையும் கல்பித்து அதச்சதனம் (கீழ்இதழ்) ஊர்ச்வச்சதனம் (மேல் இதழ்) இவைகளோடு கூடியும் தண்டு தளம், கர்ணிகை முதலியவைகளோடு

119. கூடிய பத்மாஸனத்தை பூஜித்து முன் சொன்ன தியானத்துடன் கும்பத்தை இறைவனுடைய மூர்த்தமாக நினைக்க வேண்டும்.

120. கும்பத்தின் நடுவில் பிரணவஸ்வரூபமான வரும், தெற்கு நோக்கியவருமான அகோர மூர்த்தியை ஆசாரியர் அகோர மந்திரத்தை உச்சரித்து பாத்யம் முதலியவைகளால் பூஜிக்க வேண்டும்.

121. சந்தனம், விளாமிச்சவேர், இவைகளோடு கூடிய தீர்த்தத்தை பாத்யமாகக் கொடுக்க வேண்டும். ஏலம், இலவங்கம் மூன்று வகை பழங்களுடன்

122. தீர்த்தத்தை ஆசமனமாக கொடுத்து பிறகு நீர், பால், தர்பை நுனி, அக்ஷதை புஷ்பம் எள்ளு இவைகளும்

123. யவை, வெண்கடுகு, இவைகளுடன் எட்டு பொருள்களுடன் கூடிய அர்க்யத்தை இங்கு கூறப்பட்டுள்ளது. சந்தனம் கோரக் கிழங்கு கீழாநெல்லி ஆகிய மூன்று சந்தனங்களை சாத்தி,

124. பலவித புஷ்பங்களால் பூஜித்து, தூபதீபம், முதலிய உபசாரம் செய்து அந்த பத்மத்தின் தளத்தில் அகோராஸ்திர மந்திரத்தை உச்சாடனத்துடன்

125. அகோராஸ்திரத்தை பூஜித்து முன் போலவே பாத்யம், ஆசமனம் அர்க்யம் கொடுத்து ஆவரணத்தோடோ, ஆவரணமில்லாமலோ பூஜித்து

126. கிழக்கு திசை முதல் அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், க்ரோத பைரவர், உன்மத்த பைரவர்

127. கபால பைரவர், பீஷணபைரவர், ஸம்ஹார பைரவர், என்ற எட்டு பைரவர்களையும் பூஜித்து பத்மத்திற்கு வெளியில் திக்பாலர்களையும் அதற்கு வெளியில் அவரவர்களின் ஆயுதங்களையும்

128. அஸ்த்ராவணம் மட்டுமோ, லோகபாலகர், பைரவர் வரையிலுமோ சந்தனம் முதலியவைகளாலும் தூபம் நெய் தீபம் முதலியவைகளால் உபசாரம் செய்து

129. காய்கறி வகைகளுடன் ஆஜ்யத்தோடு கூடியதுமான நிவேதனத்தை ஈச்வரனுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும். அகோர தேவர்க்கும் அகோராஸ்த்ரத்திற்கும் பருக நீர் முதலியவற்றை நிவேதிக்க வேண்டும்.

130. பிறகு தாம்பூலம் கொடுத்து நூற்றெட்டு ஆவ்ருத்தி அகோர மந்த்ரத்தையும் அகோராஸ்த்ர மந்த்ரத்தையும் ஜபித்து அதை அந்தந்த தேவதைகளுக்கு ஆசார்யன் ஸமர்பிக்க வேண்டும்.

131. கும்பத்தின் முன் ஐந்து ஸம்ஸ்காரங்கள் சுத்தம் செய்யப்பட்ட மணலாலான ஸ்தண்டிலத்தில் குண்டஸம்ஸ்காரமும் செய்து

132. முன் கூறிய விதம் அக்னியில் இறைவனை ஆவாஹனம் செய்து பாலுள்ள மரத்தின் ஸமித்துகளாலும் ஆஜ்யத்தாலும் அன்னத்தாலும்

133. பொறி, அக்ஷதையோடு கூடிய எள்ளாலும், நூற்றெட்டு ஆவ்ருத்தி ஹோமம் செய்து கடைசியாக அஸ்த்ரரூபமான இறைவனுக்கு தாம்பூலமும் நிவேதனம் செய்து

134. கடைசியில் பூர்ணாஹுதியும் செய்ய வேண்டும். அகோர மந்திரத்தால் ஹோமபஸ்மத்தை எடுத்து அஸ்த்ரமந்திரத்தால் அதை ரட்சிக்கவும் வேண்டும்.

135. போகாங்க பூஜையும், லயாங்க பூஜையும் செய்து அக்னியை விஸர்ஜனம் செய்ய வேண்டும். பிறகு ஹோம கர்மாவை அகோர ரூபியான கும்பத்தில்

136. அர்ப்பணம் செய்து விரும்பியதைப் பிரார்த்தித்துக் கேட்டு உத்தரவு பெற்று பராங் முகார்க்யம் கொடுத்து போகாங்க பூஜைகளை ஒடுக்கிக் கொண்டு

137. லயாங்க பூஜை செய்து உபஸம்ஹரணம் செய்ய வேண்டும். அஸ்த்ர மந்திரத்தையும் அகோர மந்திரத்தையும் மற்ற மந்திரங்களையும் ஹ்ருதய கமலத்தில் சேர்த்து

138. கும்ப தீர்த்தத்தால் நோயுள்ளவனை ஸ்னானம் செய்விக்க வேண்டும். தினந்தோறும் இவ்வாறு அந்த தீர்த்தத்தால் பிரோக்ஷணமும் செய்து கொள்ளலாம்.

139. எல்லாவற்றிற்குமோ யானைகளின் இடம் முதலிய இடங்களிலும் புரோக்ஷித்து அகோர தேவரை விட்டு அகோராஸ்த்ரத்தையாவது பூஜிக்க வேண்டும்.

140. இவ்வாறு ஒரு நாள் அல்லது மூன்று நாட்கள் ஐந்து அல்லது ஏழு நாட்கள் அல்லது பக்ஷம் ஒரு மாதம் அல்லது இரண்டு மூன்று மாதம் தினந்தோறும் இவ்வாறு.

141. தினந்தோறும் செய்தால் அரசன் முதலானவர்களுடைய நோயும் யானை முதலியவைகளுடைய நோயும் தீர்ந்துவிடும்.

142. அரசனும் யானைகளும், நோயின்றி பலம் பொருந்திய சிறந்து விளங்கும் என்பதில் ஐயமில்லை.

143. இதுவே குதிரை எருமை, ஆடு முதலிய பிராணிகளுக்கு உண்டாகும் நோயைப் போக்கவும் முடியும்

144. யாகத்தில் உபயோகித்து மிச்சமுள்ள பொருள் ஆசார்யனுக்கு கொடுப்பதோடு உணவும், நெய் முதலியவற்றையும் தினம் கொடுக்க வேண்டும்.

145. கடைசியில் சக்திக்கு தக்கவாறு தட்சிணையும் கொடுக்க வேண்டும். இவ்வாறு பகலிலும் இரவிலும் இக்கர்மாவை செய்ய வேண்டும்.

146. ஹோமத்தின் முடிவில் இரவில் தினந்தோறும் யானைக் கொட்டாரத்திலோ குதிரை லாயத்திலோ அல்லது

147. அதன் சமீபத்திலோ ஆஜ்யத்தோடு கூடிய அன்னம் பலியாகக் கொடுக்க வேண்டும். சுத்தமான கோமயத்தால் மெழுகப்பட்ட அஸ்த்ரமந்திரத்தால்

148. அகோர தேவரையும் அகோராஸ்த்ர தேவரையும் பரிவாரத்துடன் சந்தனம் புஷ்பங்களால் பூஜித்து வஜ்ரம் முதல் சக்ரம் வரையிலான ஆயுத ஆவரணத்துடன் கூடிய

149. ஸ்வாஹாந்தமாக பலிதானம் செய்ய வேண்டும். மேற்கிலோ, வடமேற்கிலோ ÷க்ஷத்திரபாலகருக்கு பலிதானம் செய்ய வேண்டும்.

150. அகோரமந்திரமின்றி அகோராஸ்த்ரத்தை மட்டுமாவது நடுவில் வைத்து அஸ்த்ராவண தேவதைகளுக்கும் ருத்திரன் முதலியவர்களுக்கு பலிதானம் செய்ய வேண்டும்.

151. எந்த ராஜ்யத்தில் இவ்விதம் பலிதானம் செய்யப்படுகிறதோ அங்கு ருத்திர பாதங்களால் உண்டான பயமும் நோயின் உபத்ரவமும் நிச்சயம் ஏற்படாது.

152. ஏதேனும் நோய், செய்கிறவனுக்கும் செய்விப்போனுக்கும் உண்டாகுமேயானால் அது உடனே நசித்து விடும். ஐயமில்ல.

153. எந்த அரசனின் ராஜ்யத்தில் அகோரதேவருக்கு அகோரசாஸ்த்ரத்திற்கும் பூஜையும் ஹோமமும் பலிதானமும் நடைபெறுகிறதோ

154. அங்கு ஆயுள் விருத்தியும் நோயற்ற தன்மையும் உண்டாகும். இதற்கு சமமாக நல்லது செய்யக் கூடியது வேறொன்றும் இல்லை ஆகையால் இதை முயற்சியுடன் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிகாகம மஹாதந்திரத்தில் வியாதிநாச விதியாகிற எழுபத்தி ஐந்தாவது படலமாகும்.
படலம் 74: வைசிஷ்ய விதாந விதி

74வது படலத்தில் வைசிஷ்ய விதாநவிதி கூறப்படுகிறது. ஆசார்யன், ஸாதகன், புத்ரகன், ஸமயி, மஹேச்வரன், என்ற ஐவரும் ஸம்ஸ்காரத்தினால் ஒருவருக்கொருவர் குணமிகுதியினால் விசேஷமாக கூறப்பட்டது. ஆசார்யலக்ஷண படலத்தில் (உ.கா 24-53 பூர்வம் - 54) ஜாதி உயர்வு இல்லாதவர்கள் சாதாரணமாக சமயீ மஹேஸ்வர: என்று மாஹேஸ்வரலக்ஷணம் இவ்வாறு கூறப்பட்டது. பிறகு பிராம்மணாதி சதுர்வர்ணத்தவர்கள் அனுலோமர்கள் ஆறுவகைப்படும். இவர்களில் ஒருவர்க்கு ஒருவர் ஜாதியினால் உயர்வு கூறப்பட்டது. பிறகு வயதினால், படிப்பினால், பக்தியினால், வைராக்யத்தினால், யோகத்தினால், கிரியையினால், நடத்தையினால் ஒன்றுக்கொன்று விசேஷம் உண்டு என்று கூறப்பட்டது. பிறகு ராஜகுரு, ராஜா, ராஜபத்தினி, ராஜ புரோஹிதர், ராஜபுத்திரர், மந்திரி இவர்களும் கூட வரிசையாக ஒருவருக்கொருவர் விசேஷமானவர். பிறகு சிவாலயத்தில் ஆசார்யன் நிஷ்களார்ச்சகர், சகளார்ச்சகர், ஜோஸ்யர் இவர்கள் ஒருவர்க்கு ஒருவர் உயர்ந்தவர். பிறகு மடாதிபதி ராஜா, ராஜாவினால் ஏற்படுத்தப்பட்டவர், நைஷ்டிகர், சிவ பக்தர்கள், பவுதிகர்கள், பரிசாரகர்கள், பூஜகர்கள், பக்தர்கள், பஞ்சாசாரியர்கள், ருத்திர கன்னிகைகள், தேவருக்குப் பணிவிடை செய்பவர்கள் இவர்கள் வரிசையாக அவர்களுடைய கார்யங்களில் விசேஷம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த இடத்தில் கூறப்படாத மற்றவர்களும் கூட அவரவர்களுடைய கார்யத்தின் வடிவிலே பிராம்மணர்கள் கிரமாக விசேஷம் அறிந்து ஆதரவுடன் பூஜிக்க வேண்டும் என கூறுகிறது. இவர்கள் அனைவரும் ஈஸ்வரனுடைய கல்யாணம், பவித்ரோத்ஸவம் முதலியவைகளில் தேசிகருடைய கட்டளையினால் விசேஷம் உண்டு என்பது தெரிகிறது. ஆகையினால் தேசிகனே சிவன் என்று அறிய வேண்டும். தேசிகனுடைய கட்டளை சிவனுடைய ஆக்ஞை என்று சிவாகமங்களில் கூறப்படுகிறது. ஆகையினால் தேசிகர் சிவனைபோல பூஜிக்க தகுந்தவர் என்று கூறப்படுகிறது. பிறகு சன்மார்க்கம் முதலியவைகளில் கிரமமாக விசேஷம் இங்கு சம்மதம் என்று கூறி சன்மார்க்கம், புத்திரமார்க்கம், ஸஹமார்க்கம், தாசமார்க்கம் என்று கூறி இந்த நான்கின் தனிப்பட்ட லக்ஷணம் கூறி கிரமமாக ஒருவருக்கொருவர் விசேஷம் என்று கூறப்படுகிறது. இந்த அனேக பிரகாரத்தினால் குணத்தோடு கூடின சைவர்களோடு கூட விசாரித்து விசேஷம் நிர்ணயிக்கவும் என்று கூறப்படுகிறது.

1. பிறகு எல்லா கார்யங்களிலும் யாவருக்கும் விசேஷம் விதிக்கப்படுகின்றது. ஆசார்யன், சாதகன், புத்ரகன், சமயி என்றும்

2. மஹேச்வரன் என இந்த ஐவரும் ஒருவருக்கொருவர் குணம் அதிகமுடையவர். ஸம்ஸ்காரத்தினால் விசேஷமாக யாகம் முதலியவைகளில் குறிப்பிட்டு கூறப்பட்டுள்ளது.

3. பிராம்மணர் முதலிய நான்கு பிரிவினர்கள் அனுலோமத்தினர் ஆறுபேர்கள் முன்பு போலவே குணம் அதிகமுள்ள பிரிவினர்கள் விசேஷமாக கூறப்படுகின்றது.

4. வயதினால், படிப்பினால், பக்தியினால், வைராக்யத்தினால், யோகத்தினால், கார்யத்தினால் பிறகு நடத்தையினாலும் விசேஷமாக கூறப்பட்டுள்ளது.

5. முதலில் ராஜகுரு, ராஜா, ராஜமஹிஷி அவர்களது புரோஹிதர் அவர்கள் புத்ரர்கள், மந்திரிகள் இவர்களை கிரமமாக விசேஷமாக கூறப்படுகிறது.

6. ஸகலமாகவோ, நிஷ்கலமாகவோ லிங்கமுள்ள சிவன் கோயிலில், ஆசார்யன், அர்ச்சகன், ஜோஸ்யரும், வரிசையாக விசேஷமாக கூறப்பட்டுள்ளது.

7. பிறகு மடாதிபதி, ராஜா அவரால் நியமிக்கப்பட்டவர், எனது பக்தர்கள் நைஷ்டிகர்கள், பவுதிகர்கள் கூலி இல்லாதவர்கள்.

8. பரிசாரகர், அர்ச்சகர்கள், பக்தர்கள், கூலி உடையவர்கள், தானாக பாடகூடியவர்கள் வீணை, மந்திரம், பாட்டு இவைகளில் முழுமையாக ஈடுபட்டவர்கள்.

9. பஞ்சாசார்யர்கள் எனது பெண்களான தேவதாசிகள், பாடுகின்றவர்கள், வாத்யம் வாசிக்கிறவர்கள் இவர்கள் முறையாக அவரவர் வேலைகளில் விசேஷமாக கூறப்பட்டுள்ளனர்.

10. ஆகையால் மற்றவர்கள் அவரவர் வேலையை அனுசரித்து பிராம்மணர் முதலியவைகளை கிரமமாக அறிந்து ஆதரவுடன் விசேஷமாக கூறப்படுகின்றது.

11. ஈச்வரனுடைய கல்யாணம், பவித்ரோத்ஸவம் முதலியவைகளை உசிதப்படி பூஜித்து ஈஸ்வரனுடைய கட்டளையால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

12. உத்தமமான குருவானவர் எதனால் தான் தேசிகன் என கூறினாரோ, ஈச்வர ஆக்ஞையே என்னுடைய ஆக்ஞையாக சிவாகமத்தில் கூறப்பட்டுள்ளது.

13. அதனால் என்னைப்போல் முதலில் எல்லோருக்கும் பூஜிக்கத் தகுந்தவர் நன்னடத்தை முதலியவைகளினாலும் வரிசையாக விசேஷமாக உள்ளவர் இங்கு ஸம்மதமாவர்.

14. ஸன் மார்க்கி, புத்ர மார்க்கீ, ஸஹ மார்க்கீ, தாச மார்க்கீ இவர்களை முறைப்படி விசேஷமாக கூறப்பட்டுள்ளது.

15. நன் நடத்தை உள்ளவன் ஸம்ஸ்காரமின்றி பக்தி உள்ளவன் யோக்யமானவன் ஒருமைப்பாட்டு உணர்வை உடையவன். அஹங்காரமின்றி சிவயோகத்தில் ஈடுபட்டுள்ளவன்.

16. எல்லா சிவாகமங்களையும் கற்றுணர்ந்த புத்ரமார்க்கீயானவன் புத்ரனுடைய அமைப்பால் செய்யப்பட்ட மனிதன் சைவாசார்யன் என்றும் சாந்தானிகர் என்றும் கூறப்படுகிறார்கள்.

17. அக்னி கார்யம் ஜபம் ஹோமம் மிகவும் ஈடுபட்டுள்ளவர் பிரவேசகர் சிவக்ஞானி அவுப தேசிகர் எனப்படுகிறார்கள்.

18. நந்தவனம் சிவலிங்கம் பிம்பம் ஆலயம் இவைகளை அமைப்பது சைவ சம்பந்த நடனங்கள் பாட்டுக்கள், ஸ்தோத்ரங்கள் வாத்யங்கள் இவைகளை செய்பவர் தாசமார்க்கீயாகும்.

19. இவ்விதமாக பலமுறைப்படி சைவர்கள் விசாரணை செய்து விசேஷமான பூஜை கார்யங்களை செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்த்ரத்தில் வைசிஷ்ய விதான விதியாகிற எழுபத்தி நான்காவது படலமாகும்.

சனி, 12 அக்டோபர், 2013

படலம் 70: ஸிம்மாசன பிரதிஷ்டா விதி

70வது படலத்தில் ஸிம்மாசனம் செய்யும் முறை கூறப்படுகிறது. முதலில் தேவர்களுக்கும் அரசர்களுக்குமான ஸிம்மாசன விதியும் மற்ற மகான்களின் ஸிம்மாசன, விதியும் கூறுகிறேன் என்பது பிரதிக்ஞை. பிறகு தேவர்கள் சிவன் முதலானவர்கள் என்பது பிரசித்தமானதே. அரசர்களில் சக்ரவர்த்தி, அதிராஜன், நரேந்திரன் என்று விசேஷமாக எண்ணத்தகுந்தது ஆகும். நான்கு சமுத்திரம் வரையிலான பூமியையார் பரிபாலனம் செய்கிறானோ, அவன் சக்ரவர்த்தி என கூறப்படுகிறான். யார் ஏழு ராஜ்யத்தை ஆள்கிறானோ அவன் அதிராஜன் எனப்படுகிறான். யார் மூன்று ராஜ்யத்தை சாசனம் செய்கிறானோ அவன் நரேந்திரன் எனப்படுகிறான். கால்படை தலைவர்களும் மற்ற அரசர்களாக விளங்குகிறார்கள் இவர்களின் ஆசனங்கள் பல விதமாகும் என கூறப்படுகின்றன. பிறகு ஸிம்மாசனங்களில் பலவித அளவுகள் உயரத்திலும், அகலத்திலும் அளவுகள் கூறப்பட்டு தேவர்களுக்கும் அரசர்களுக்கும், ஸிம்ம பீடம், சம சதுரமாகவும் வட்டமாகவோ, செய்யலாம் என கூறப்படுகின்றது. ஸிம்மாசனத்தில் பித்திகல்பனம் என்கிற சாய்மான சுவர் கூறப்படுகிறது. பிறகு உபபீடத்தில் பாதங்களின் நடுவிலோ பாதங்கள் அமைக்கவும் அங்கு பாதத்தில் பாதங்களின் நடுவில் அல்லது வேறு இடத்தில் ஸிம்ம ரூபங்களை செய்யவும். பெரிய மீன், முதலை, இலைகள் போன்ற பலவித சித்ரங்களால் அழகுபடுத்தவும் என கூறப்படுகிறது. பிறகு உபபீடத்தின் அளவு கூறப்படுகிறது. உபபீடம் ஸ்தாவரம் ஜங்கமம், என்றும் சலாசலம், என்று இருவிதமாக உதாரணம் செய்யப்பட்டுள்ளது. அந்த உபபீடமும் கருங்கல், மண், விருக்ஷம், உலோகம், சந்தனம், இவைகளாலோ பிறகு சுண்ணாம்பு பூச்சினாலோ செய்யவும் அதில் சைல பீடம் மனிதர்களுக்கு விரும்பதக்கதல்ல, தேவர்களின் விஷயத்தில் எல்லா திரவ்யமும் ஏற்றுக்கொள்ள தக்கதாகும். சந்தனம், விருக்ஷம், இவைகளால் செய்யப்பட்ட உபபீடம் தங்கம், ரத்னம், இவைகளால் அலங்கரிக்கவும் என கூறப்படுகிறது. பிறகு அரசர்களுக்கு ஸிம்மாசனம் சிரேஷ்டமாகும். அதன் லக்ஷணம் கூறப்படுகிறது என கூறி ஸிம்மாசனத்தின் உச்சியில் வைக்கப்பட வேண்டிய தாமரை முதலான பலவித உருவ விசேஷங்களை விதிப்படி கூறி பத்திரகம் சவும்யம் என்ற ஸிம்மாசனங்களின் இரண்டுவித ஸ்வரூபத்தை விளக்குகிறார். பிறகு இரண்டு விதமான சவுபத்திரம் வாஹம் என்கிற ஸிம்மாசனத்தின் ஸ்ரூப லக்ஷணம் சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு இந்த ஐந்துவித ஆசனங்களின் பின்பக்கத்தில் விஜி என்ற பெயர் உள்ள அங்க விசேஷம் செய்யப்படவேண்டும் எனக் கூறி விஜி லக்ஷணம் கூறப்படுகிறது. பிற ஸிம்மாசனத்தில் தோரணம் அமைக்கும் முறையும் நிரூபிக்கப்படுகின்றன. அங்கு தோரனத்தின் பின்பக்கத்தில் தங்க மயமான கற்பகவிருக்ஷம் அமைக்கப்படவேண்டுமென கூறப்படுகிறது. உபபீடவிஷயத்தில், பஞ்சாங்கம், அஷ்டாங்கம் 12 அங்கம் 14 அங்கம் என உபபீடங்களை செய்யும் முறை கூறப்படுகிறது.

பிறகு ஆசனங்களின் ஆயாதி என்கிற அளவு முறைகளின் விதி நிரூபிக்கப்படுகின்றன பிறகு ஆசனத்திற்காக தயார் செய்யவேண்டிய மரங்கள் கூறப்படுகின்றன. பிறகு அரசர்களின் ஸிம்மாசன விஷயத்தில் ஸம்ஸ்காரமுறை நிரூபிக்கப்படுகிறது. அதில் யஜமானனுக்கு அனுகூலமான முன்பு கூறப்பட்ட நன்மைபயக்கும் காலமே ஏற்றுக் கொள்ளப்படவேண்டும் என கூறப்படுகிறது. சில்பியை திருப்தி செய்வித்து புண்யாகபிரோக்ஷணத்திற்கு பிறகு கிருத மந்திரத்தினால் பஞ்சகவ்ய பிரோக்ஷணம் எட்டு மிருத் ஜலத்தினாலும், தர்ப ஜலத்தினாலும் சுத்தி செய்வித்து சுத்தோ தகத்தினால் ஸ்நபனம் செய்வது பிறகு பஞ்சபிரும்ம மந்திரத்தை கூறிக்கொண்டு சந்தனாபிஷேகம் செய்விப்பது ஆகியவை கூறப்படுகின்றன. பிறகு ஸ்தண்டிலத்திற்கு மேல் ஸிம்மாசனத்தை வைத்து வஸ்திரம், தர்பம், இவைகளை அதன் மேல் போர்த்தவும். ஸிம்மாசன மந்திரத்தினால் சந்தனம், புஷ்பம் இவைகளால் பூஜிக்கவும் என கூறி பூஜைக்காக ஸிம்மாஸந மந்திரம் கூறப்படுகிறது. பிறகு சிம்மாசனத்திற்கு முன்பாக ஸதண்டிலம் அமைத்து அங்கு சமித்து முதலான திரவ்யங்களால் ஹோமம் செய்யவும் ஹோம முறை கூறப்படுகிறது. பிறகு பூர்ணாஹுதிசெய்து சாந்தி கும்ப தீர்த்தத்தால் ஸிம்மாசனத்தை பிரோக்ஷித்து மறுபடியும் சந்தன புஷ்பங்களால் பூஜிக்கவும் என கூறப்படுகிறது. பிறகு நல்ல முகூர்த்தலக்னத்தில் ஸ்நானம் செய்து வெண்பட்டாடை உடுத்தி கிரீடம் எல்லா ஆபரணங்களையும் தரித்தவனாக சம்ஸாரத்துடன் கூடியவரான ராஜாவை ஸிம்மாசனத்தில் அமர்த்தவும் என ஸம்ஸ்காரமுறை கூறப்படுகிறது. பிறகு தேவனுக்கு ஸிம்மாசன ஸம்ஸ்கார விதியில் விசேஷம் உண்டு என கூறி அந்த விஷயத்தில் கும்பஸ்தாபன விதி, ஹோம விதி, கும்பதீர்த்த அபிஷேகவிதி விசேஷார்ச்சனை பூர்வமாக ஸ்வாமிக்கு ஸிம்மாசனம் ஸமர்ப்பண முறை ஆசார்யனுக்கு வஸ்திர சொர்ணாங் குலீயங்களால் ஆகிய தட்சிணை கொடுப்பது, என்ற விஷயங்கள் நிரூபிக்கப்படுகின்றன. பிறகு மற்ற மஹான்களின் ஆசன முறையும் நிரூபிக்கப்படுகின்றன. அதில் ஆசன அளவு ஆசனம் அமைக்க உபயோக திரவ்ய குறிப்பு, ஆசனம் செய்யும் முறை ஆகிய விஷயங்களும் நிரூபிக்கப்படுகின்றன. இங்கு ஆசனத்திற்கு பாதம் அமைக்கும் முறை பலமுறைகளாக வர்ணிக்கப்படுகின்றன. பலகாசனம், கூர்மா சனத்திற்கு, யோனி அமைக்கும் முறை விசேஷமாக கூறப்பட்டுள்ளன. சிம்மாசனத்திற்கு கூறப்பட்ட முறைப்படியே ஆயாதி என்ற கணக்கு முறையும் செய்யவும் என அறிவிக்கப்படுகின்றன. இவ்வாறாக 70வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. பிராம்மணோத்தமர்களே! தேவர்கள், அரசர்கள், மனிதர்கள், பெரியோர்களினுடையதுமான ஸிம்மாஸன விதியை கேளுங்கள்.

2. சிவன் முதலானோர் தேவர்கள் ஆவார். அரசர்கள் பலராவர். அதில் சக்ரவர்த்தி முதலிலும் அதிராஜன் இரண்டாவதாக கூறப்படுகிறது.

3. நரேந்திரன் மூன்றாமவர். அவர்களின் லக்ஷணம் கூறப்படுகிறது. நான்கு சமுத்ரம் வரை பரவியுள்ள பூமியை பரிபாலிப்பவன்.

4. சக்ரவர்த்தியானவான், ஏழுராஜ்யத்தை காப்பாற்றுபவன் அதிராஜன், மூன்று ராஜ்யத்தை காப்பாற்றுபவன்.

5. நரேந்திரனாவான். யானை படை தலைவன் முதலானோர் பல ராஜாக்களாக கூறப்படுகிறது. அவர்களின் ஆஸனங்கள் பலவிதமாகும்.

6. வாசற்படி உயரத்தின் மூன்றில் ஒருபாகம் உத்தமமாகும். அதில் அரைபாகம் அதிகமாகும். வாசற்படியின் அகலத்தை எட்டு பங்காகச் செய்து ஒன்பது வகையான உயரங்களாக கூறப்படுகின்றது.

7. வாசற்படியின் ஆரம்ப பாகம் எட்டு பாகம் அல்லது ஒன்பது பாகமோ அதற்கு குறைவாகவோ அரசனுக்கு சமமாக கை, துடை, தொப்பூழ் வரையிலுமோ உள்ளது.

8. பிரதேசமானம் என அரசர்களுக்கு கூறப்படுகிறது. பதினைந்து அங்குலம் முதல் இரண்டிரண்டு அங்குலமாக கூறப்படுகிறது.

9. ஐம்பத்தைந்து அங்குலம் வரை உள்ள அம்சங்கள் வரையிலாக உயரங்கள் கூறப்பட்டுள்ளன. உயரத்தின் சமமாகவோ முக்கால் பங்குக்கு மேற்பட்டதாகவோ

10. அகலத்தை இரண்டு பங்காக்கினால் நான்கு பாகமாகி புதிய அளவாகிறது. ஹீநர்களுக்கு குறைந்த அளவாயும், உயர்ந்தவர்களுக்கு எல்லாமும் கூறப்பட்டுள்ளது.

11. சிம்ம பீடம் நான்கோணமாகவோ செவ்வகமாகவோ இருக்க வேண்டும். நாற்கோணத்திற்கு சமமான விருத்தமாகவும் (வட்டம்) சக்ரவர்த்திகளுக்கு செய்ய வேண்டும்.

12. எட்டிலொரு பாகம் ஆரம்பித்து, அதில் இரண்டு பாகம் அதிகரித்து ஸிம்மாஸனத்தின் நீளம் அங்குல அளவுகளால் செய்ய வேண்டும்.

13. இரண்டங்குலம் முதல் இரண்டிரண்டங்குல அதிகரிப்பால் ஆறங்குலம் வரை செய்யவும் ஆயாம கணக்கிலும் இவ்வாறேயாம்.

14. தேவர்களுக்கு பாதத்திற்கு மேற்பட்டும் சக்ரவர்த்திகளுக்கு கால்கள் நடுவிலும் மற்றவர்களுக்கு கால்கள் முடிவிலும் வரையாக ஆயாமாதி அளவு கூறப்பட்டுள்ளது.

15. யாவர்க்கும் எல்லா அளவும் பொருத்தமானது என்று கூறி பாத அளவு கூறப்பட்டுள்ளது. ஒன்றரை அங்குலம் முதல் அரை அங்குல அதிகரிப்பாக

16. ஐந்தங்குலம் வரை பாத விஸ்தாரமாகும். அதன் சாய்வு சுவர் பாதத்தின் நான்கில் ஒருபங்கு வெளிக்கொணர்ந்து நல்ல பலமாகவும் அழகாகவும் செய்யலாம்.

17. ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு பாக விஸ்தார அளவில் ஆஸன பித்தியாகும். நீளத்தில் ஒன்பதிற்கும் அதிகமாக நீளமுடைய பித்தியின் அளவு முன்பு கூறப்பட்ட பிரிவுகளாக கூறப்படுகிறது.

18. பாதங்களின் நடுவில் உபபீடத்தில் பாதங்களை அமைக்க வேண்டும். பாதத்திற்கும், பாதநடுவிலும் சிங்க உருவங்களையும் வரையவும்.

19. முதலை, சுறாமீன் இலை வடிவான பல சித்ரங்களால் அலங்கரிக்கவேண்டும், சிம்மாஸன மூன்று பாகத்தினாலோ நான்கு பாகத்தினாலோ கீழ்பாகத்தில்

20. ஒன்று, மூன்று, இரண்டு, நான்கு மாத்ராங்குலங்களால் விஸ்தாரத்திற்காக உபபீடமாக அறிய வேண்டும். அதன் வடிவம் கூறப்படுகிறது.

21. உபபீடம் ஸ்தாவரம், ஜங்கமம் என இரு வகைப்படும். மண், கல், மரங்களாலும், தந்தங்களாலும் உலோகங்களாலும் சுண்ணாம்புக் கலவை பூச்சுகளாலும் செய்யலாம்.

22. மனிதர்களுக்கு கருங்கல்லாலான உபபீடம் கூடாது. தேவர்களுக்கு எல்லா திரவ்யமும் யோக்யமாகும். தந்தம், மரங்கள், தங்கம், ரத்னம் இவைகளினால் அலங்கரிக்கப்பட்ட

23. ராஜ சிம்மாஸனம் உயர்ந்து. அதன் உருவ அமைப்பு கூறப்படுகிறது. ஸிம்மாஸன உயரத்தில் இருபத்தியேழு பாகத்தில் ÷க்ஷபணம், பங்கஜம், களம்

24. வேத்ரம், களம், பத்மம், குமுதம், பத்ம பட்டிகை, வேத்ரம், கர்ணம், வேத்ரம், கம்பபத்ரம், கபோதம்

25. வேத்ரம், கர்ணம், நித்ரா, மசூரா, அதாரபட்டிகா இவைகளை ஏழு ஒன்றை அரைபாகமோ ஐந்து, நான்கு அதன் பாதியோ

26. அரைபங்கு, அதன்பாதி, அரையின் கால் பாகங்களாலும் அரை, கால், அரைக்கால் பாகங்களாக அமைக்கவேண்டும். அரைபாகத்துடன் பத்தொன்பது அம்சம் வரை செய்வது பத்ரகம் என்ற ஸிம்மாசனமாகும்.

27. அதன் உயரத்தில் முப்பதம்சத்தில் நான்கின் பாதி, இரண்டின் பாதி, ஒன்றரை, அரை, இரண்டின் பாதி, ஒன்றரை எட்டின் ஒருபாகம், ஒன்றரை பாகங்களால்

28. அரை, கால், இரண்டின்பாதி, ஒன்றரை, ஐந்தின் பாதி இவைகளின் தொடர்ந்ததாக (பத்மகம்) பத்மம், கம்பம், கர்ணம், கம்பம், பத்மம் வாஜனம்

29. பத்மம், கம்பம், கர்ணம், கண்டம், நித்ரா, பட்டிகா, பாதம், மேலுள்ளபட்டி நித்ரா பத்மம், கபோதகம்

30. நடுவில் நன்கு சேர்ந்ததாக மேல் நோக்கி வெளிப்பட்டு தெளிவாக அங்கங்களோடு கூடியது சவும்யம் என்று கூறப்பட்டுள்ளது. இருபத்தொரு அம்சங்களோடு கூடியது.

31. மேற்கூறியவற்றையே முன்பக்கமும் பின் பக்கமும் உடையதும், பத்ரங்களோடு கூடியது சவுபத்ரம் எனப்படும். இரண்டு பக்கமும் பத்ரத்துடனுள்ளது ஸ்ரீவஹமாகும்.

32. ஐந்து வகை ஆஸனங்களுக்கும் விஜி என்ற அமைப்பு பின்பாகம் கூறப்படுகிறது. ஆஸமனமானது பிரிக்கப்பட்ட உயரத்தையுடையதாயும் மஸூரா என்பது ஆதாரபீடத்தில் சேர்ந்ததாகும்.                     

33. விருப்பப்பட்ட உயரம் விஸ்தாரமாகவும் கூறப்பட்டுள்ளது. ஆஸன உயரபாக நடுவில் மகரதோரணம்

34. தோரண மத்தியில் பத்மாபிஷேக ஸம்பந்தமாக இருக்க வேண்டும். நக்ரபட்டிகை தோரணத்தில் கால்பாக அளவாகவும்

35. கைவைத்துக் கொள்ளுமிடம் யாளித்தலையுடையதாகவும் இருக்க வேண்டும். சிறிய தூணை வைத்து, கபோதங்களை பலவிதமாக அலங்கரிக்க வேண்டும்.

36. முதலை, சுறா மீன்கள் போன்ற பலவித சித்ரங்களாலும் அலங்கரிக்கவும். இரும்பிலானான நாராசம், கீலங்கள், பட்டிகைகளையும் சேர்க்க வேண்டும்.

37. தங்க ஜரிகைகளாலான பட்டுகளாலும், ரத்னங்களாலும் அலங்கரிக்கவும். தோரணத்தின் பின்புறம் தங்கத்தாலான கற்பக வ்ருஷத்தை அமைக்க வேண்டும்.

38. பலவிதமான ரத்னங்களால் அலங்கரிக்கப்பட்ட பலவித படங்களை உடையதான பாம்புகளையும், விஜி என்ற அமைப்பை விட்டு கற்பக வ்ருஷத்தையாவது செய்ய வேண்டும்.

39. தோரணமில்லாத விஜியையோ ஆஸனத்தை மட்டுமோ, செய்ய வேண்டும். ஐந்து அங்கத்துடன் கூடிய உபபீடம் பத்மத்தின் கீழ் சேர்க்க வேண்டும்.

40. பத்மகம் முதலியவை நான்கு வகைப்படும். பன்னிரண்டங்கம் உடையது உபாஸநம். உபபீடத்தின் பத்திலொரு பங்கில் நான்கு பாகங்களால் கண்டம் கூறப்படுகிறது.

41. க்ஷúத்ர கம்பங்களை அதன் மேலும் கீழுமான பாகத்தில் அமைக்கவும். இரண்டம்ச அளவால் இரண்டு மஹாகம்பம் செயற்பாலது. இது ஐந்து அங்கத்துடன் கூடிய உபபீடத்தை அமைக்க வேண்டியது.

42. பதினான்கம்சம் உடைய உயரத்தில் இரண்டு, ஒன்றரை, அரை, நான்கு, அரை, அரை இரண்டு, ஒன்று, அரை, அரை என்ற அளவுகளால் வரிசையாக.

43. பாதுகம், பங்கஜம், வேத்ரம், கம்பம், கண்டம், வேத்ரகம் என்றும் வேத்ரம், அப்ஜம், வாஜநம், பத்மம், கம்பம், வேத்ரம் என்று வரிசைப்படி

44. பன்னிரெண்டு பிரிவுகளை உடையதாக அழகான உபபீடம் அமைக்கவும். இருபத்தியெட்டம்சமுடைய உயரத்தில் ஜகதீ, பங்கஜம், களம்

45. வேத்ரம், களம், பத்மம், குமுதம், பத்மம், கம்பம், வேத்ரம், களம், வேத்ரம், கம்பம், நித்ரா, கபோதம்.

46. மேல்பாகத்திய மத்தியில் நன்கு சேர்க்கப்பட்ட பிரதிவாஜநமும், அதற்கு மேல் மஸூரகாதாரபட்டிகா ஆகும். கீழிருந்து மேலாக

47. ஒன்றரை அம்சங்கள் ஒன்று, அரை, அரை, அரை, அரை, ஒன்று, அரை, ஏழு பாகங்களால் அரை, அரை, ஒன்றரை,

48. அரை, அரை, ஒன்றரை ஒன்பதரை மஸூரகா தாரபட்டிகா அளவுகளால் ஸ்ரீகாந்தம் என்று பொருள்படும். இதுவே களத்திற்கு கீழ் உள்ளவைகள் இரண்டு, அரை, ஒன்றரை பாகங்களால்

49. கர்ணம், வாஜநம், நித்ரை, என்ற அளவுகள் வேதியுகைடன், பத்மம், கம்பகம், சேர்த்தால் வ்ருத்த காந்தம் என்ற பீடமாகும். முப்பத்திரண்டு பாகங்களால் நிர்மாணிக்கப்பட்டதாயும் இருக்க வேண்டும்.

50. ஒன்பதும், பத்தும் ஆன 14 அம்சத்தில் அரை, ஒன்றரை, இரண்டு, அரை, மூன்று, பாதி அரை, இரண்டு, பாதி பாதி, பாதி ஒரு பாகங்களால்

51. பாதுகம், பங்கஜம், நேத்ரம், பங்கஜம், குமுதம், பங்கஜம், வாஜநம், பத்மவேத்ரம், பங்கஜம், வாஜநம்,  தாமரை

52. வேத்ரம், வாஜநம், இவைகள் அடியிலிருந்து பதினான்கங்கத்துடன் கூடியதாகும். ஸ்ரீகாந்தம் முதலிய நான்கிற்கும் எட்டு அங்குமுடைய உபபீடமாகும்.

53. இரண்டு, ஒன்று, அரை, நான்கு, அரை அரை இரண்டு அரை பாகங்களால் பாதுகம், பங்கஜம், வேத்ரம், பத்மவேத்ரம், வாஜநம்

54. பட்டிகா, வாஜநம், பதினொன்றாக பிரிக்கப்பட்ட உயரத்தில் எல்லா இடத்திலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அஷ்டாங்கமுடைய உபபீடம் ஆகும்.

55. முன்பே பிரசாத லக்ஷணத்தில் பல விபரங்கள் கூறியுள்ளேன். எல்லா அதிஷ்டானங்கள் உபபீடத்துடன் கூடியவைகள்

56. தேசிகர்களால் நியாயமாக ஏற்றுக் கொள்ளப்படுபவையாகும். விசேஷமாக தேவர்களுக்கு தொங்குகிற பாதமாக இருப்பது நல்லது.

57. ஸிம்மாஸநாங்கத்தை தொட்டுக் கொண்டதான பாத பீடம் கூறப்பட்டுள்ளது. சிம்மாஸன அகல, உயரத்தின் நான்கிலொரு பாக அளவில்

58. கண்டத்தின் மேலும் கீழுமானவைகளால் கம்பம், பத்மம், கம்பங்களால் அலங்கரிக்கவும். நன்கு அழகான ஏழுபாகங்களால் வட்ட அளவில்

59. யவைமுதல் மாத்ர அளவுவரை அதிகத்தையும், குறைகளையும் அறியவும். எல்லா ஆஸனமும் பத்ராஸனமாகவோ செய்ய வேண்டும்.

60. கால், அரை, முக்கால் பாகமாகவோ எல்லா இடத்திலும் வெளிப்படையாகவும் அவயவத்தை வெளிப்படுத்தவும் கவர்ச்சியோடும் பலத்தோடும் நுழைவை செய்ய வேண்டும்.

61. எல்லா ஆஸனத்திலும் முதலில் செய்யும் முறை கூறப்படுகிறது. பரிதி, விபுலம், தைர்க்யம், துங்கம், ஸகலம்

62. பந்தவேதம், சதுர்பந்தக்ரஹம், முதலிய வரிசை முறைகளால் எண்ணி அறியவும். ஏழு, ஐந்து, ஒன்பது, எட்டு, ஏழு ஸங்க்யையுடைய பாகங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

63. ஆயம், வ்யயம், நக்ஷத்ரம், ஸோநி, வாரம் இவைகளை பார்த்து செய்யவும். காய்கறிகளை கொடுக்கும் மரம், மரமல்லிகை, பலாமரம், சிம்சுபம், சந்தனம்

64. திந்துகம், மருதமரம், காரகில், வேப்பமரம், பூவரசு, எலும்பிச்சை, மாமரம், வெண்பால்மரம், தேக்குமரம்.

65. பில்வம் ஆகிய ஜாதி விருக்ஷங்களில் பாலுள்ள வ்ருக்ஷங்கள் நான்கு வகைப்படும். நாவல், இலுப்பை, நரிமூக்கை, இவைகள்

66. த்ரவ்ய ஸங்க்ரஹண விதிப்படி ஆஸனதிற்காக எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு சிம்மாஸனம் செய்து அதன் ஸம்ஸ்காரத்தை செய்ய வேண்டும்.

67. காலமும் முன்பே கூறப்பட்டுள்ளது. மற்றும் யஜமானனின் நக்ஷத்ரத்தை அனுசரித்து காலத்தை பார்த்து சில்பியை திருப்தி செய்து அவரை அனுப்பி விட்டு புண்யாஹ ப்ரோக்ஷணம் செய்ய வேண்டும்.

68. ஹ்ருதய மந்திரத்தினால் பஞ்ச கவ்ய ப்ரோக்ஷணம் செய்து தர்பை நுனிதீர்த்தத்தாலும் எண்வகை மண்கலந்த நீரால் சுத்தம் செய்து

69. பஞ்சப்ரம்ம மந்திரத்தால் சுத்த ஜலத்தை அபிஷேகித்து சந்தனம், கலந்த வாசனையுள்ள நீரால் மறுபடியும் அபிஷேகம் செய்ய வேண்டும்.

70. ஸ்தண்டிலத்தில் மேல் வைத்து தர்பை, வஸ்திரங்களால் போர்த்தி சந்தனம், புஷ்பம், தூபம் இவற்றை அதன் மந்திரத்தினால் அர்ச்சிக்கவும்.

71. சிம்மாஸநாய ஹும் பண்ணம: என்று தன் பீஜ மந்திரத்தோடு கூறி

72. மந்திரத்தை கூறி (தேசிகன்) ஆசார்யன், உத்தமன் பூஜிக்க வேண்டும். சிம்மாஸ னத்தின் முன்பு ஸ்தண்டிலத்தில் ஸமித்து முதலியவைகளால் ஹோமம் செய்ய வேண்டும்.

73. சமித்து, நெய், அன்னம், எள், பொறி இவைகளை சிவமந்திரத்தை கூறி நூற்றியெட்டு ஆவ்ருத்தி ஹோமம் செய்ய வேண்டும்.

74. பிறகு பூர்ணாஹூதி செய்து, சாந்தி கும்ப தீர்த்தத்தால் பிரோக்ஷித்து சந்தனம், புஷ்பம் முதலியவைகளால் சிம்மாஸனத்தை மறுபடியும் பூஜிக்க வேண்டும்.

75. ஸ்னானம் செய்து வெண்மையான வஸ்திரம் தரித்து எல்லாவித ஆபரணங்களுடன் கிரீடம் அணிந்து, குடை, சாமரங்களுடன் கூடிய

76. ராஜாவை நல்ல சுபமுஹூர்த்த லக்னத்தில் எழுந்தருளச் செய்ய வேண்டும். சிம்மாஸனம், இதுவரை ராஜசிம்மாஸன ஆரோபணம் கூறப்பட்டது. இனி தேவர்களுக்கு கூறப்படுகிறது.

77. தத்வதத்வேஸ்வர நியாஸம், மூர்த்தி மூர்த்தீஸ்வர ந்யாஸத்துடனும், ஆஸன, மூர்த்தி பூஜை, தத்வதத்வேஸ்வர, மூர்த்தி மூர்த்தீஸ்வர ஹோமமும் செய்ய வேண்டும்.

78. ஆதார சக்தி முதற் கொண்டு, சிவாஸனம் வரை பூஜித்து இந்திரனுக்கும் ஈசானத்திற்கும் மத்தியில் சிவகும்பத்தையும், எட்டு திக்கில் அஷ்டவித்யேச கும்பங்களை ஸ்தாபித்து பூஜிக்க வேண்டும்.

79. தங்கம், வஸ்திரங்களோடு கூடிய பிரதான கும்பத்தில் சிவனை பூஜித்து, அவற்றின் வெளியில் அஷ்டகும்பங்களில் இந்திராதி லோகபாலர்களை பூஜிக்க வேண்டும்.

80. தேசிகோத்தமன் இவ்வாறு பூஜித்து முன்பு பூஜித்த மந்திரங்களால் ஹோமம் செய்து முடிவில் பூர்ணாஹூதியை செய்ய வேண்டும்.

81. ஸிம்மாஸனத்தில் ஆஸன மூர்த்தி மூலத்துடன் அர்ச்சிக்கவும். கும்பத்தில் ஆவாஹித்த சிவனை மூலமந்திரம் உச்சரித்து சிம்மாஸனத்தில் ஆவாஹித்து

82. எட்டு வித்யேச்வரர்களை எட்டு லோகபாலர்களை இவற்றை நியஸித்து அபிஷேகம் செய்யவும். அந்தந்த மந்திரங்களால் ஆசார்யன் சந்தனம், புஷ்பங்களால் பூஜிக்க வேண்டும்.

83. விசேஷார்ச்சனையுடன் பரமேஸ்வரனை அபிஷேகிக்கவும். நல்ல முஹூர்த்தத்தில் நல்ல லக்னத்தில், பரமேச்வரனை எழுந்தருளச் செய்ய வேண்டும்.

84. வஸ்திரம், தங்க மோதிரங்களால் ஆசார்யரை பூஜித்து முடிந்தவரை தட்சிணையை குருமூர்த்தியோ ஆசார்யனுக்கு கொடுக்க வேண்டும்.

85. மற்ற ஆஸனங்களின் அளவு கூறப்படுகிறது. தங்கம், வெள்ளி, தாம்பரம், பித்தளை, வெண்கலம்

86. கலப்பு உலோகம், கற்சிலை, மரம், மண் (மண்சாந்து) ரத்னங்களாலும், க்ஷüத்ர சித்திக்காக தந்தங்களாலும், தகரம், ஈயம் இரும்புகளாலும் செய்யலாம்.

87. பீடத்திற்கான திரவ்யம் கூறப்பட்டுள்ளது. அந்தந்த ஆஸன பலத்தால் இரண்டு, மூன்றங்குல முதல் ஒவ்வொரு அங்குல அதிகரிப்பால்

88. ஐந்தங்குலம் வரை விஸ்தார அளவாகும். ஒன்றேகால், ஒன்றரை, எட்டின் ஒரு பாகமான ஒன்றரையரக்கால் முக்கால் பாகமதிகமாவும்

89. இரண்டங்குலம், ஒவு அங்குலம் முதல் நூறங்குலம் வரை ஆயாமத்தின் அளவு கூறப்பட்டுள்ளது. பாதத்தின் அளவு கூறப்பட்டுள்ளது.

90. ஒரு மாத்திரை முதல் ஐந்து மாத்திரை அதிகரித்து ஐம்பது முழம் வரையிலாக பாதங்களின் நீளம் கூறப்படுகிறது.

91. அரையங்குலம் முதல் காலங்குல அதிகரிப்பால் அகலத்தில் (ஏழங்குலம் வரையும்) பதினான்கங்குலம் வரை காலின் நீளம் கூறப்பட்டுள்ளது.

92. பாதங்கள் நேராகவும், ஸிம்மபாதம், யாளிபாதம், வ்ருஷபபாதம், பூதபாதம், கழுதைக்கால் போலும் சக்ரத்தோடு கூடியதாகவோ, ஸ்வயாவமாக உள்ளதாகவோ

93. பறவை பாதம் போல், மனுஷ்ய பாதம் போல், மீதியை நல்லவைகளின் உருவம் போலாவது செய்யவும். ஸிம்மாஸனம் பத்ம பீடத்தில் இருப்பதாக செய்ய வேண்டும்.

94. ஸிம்ம சிரஸ் பாதத்துடன் கூடியதாகவாவது சிம்மாஸனம் செய்ய வேண்டும். உள்ளிட்ட முகமோ, வெளிக்கொணர்ந்த முகத்தையுடையதாகவோ  பாதத்தின் அலங்காரத்துடன் கூடியதாகவோ

95. பலவித பட்டை அமைப்பு, குச்சியமைப்புகளாலும், பறவைகள் போன்றும் தாமரைப்போன்று பத்ரங்களால், பத்ம தளங்களாலும் ரத்னங்களாலும் அலங்கரிக்கப்பட வேண்டும்.

96. அதன் முகப்பில் வளைவான அமைப்பை உடைய பலகையை சேர்க்கவும். இடைவெளியுள்ள மேலும் கீழும் உயரமான அந்த பாதங்களுடன் சேர்க்க வேண்டும்.

97. பாத்திற்கு மேல் உசிதமான பலகையை சேர்க்கவும். யவை யளவு முதல் அரை யவை அளவு அதிகரிப்பால் பதினோரு மாத்ரையளவு வரை

98. (ஸ்வர்ணம்) தங்கம் முதலிய திரவ்யங்களால் ஆன பலகாஸனம் கூறப்பட்டுள்ளது. பறவைகள் போன்ற அமைப்பு தாமரை இதழ்களாலும், மாலை முதலிய அமைப்புகளாலும் சேர்க்கப்பட்டவைகளாலும்

99. ரத்னங்களால் ஆன தாமரைகளாலும், பலவித தண்ட அமைப்புகளாலும், பலகையை அலங்கரிக்கவும். அல்லது இயற்கையழகான பலகையாவது செய்யவும்.

100. அதற்கு மேல் உருண்டை போன்ற அமைப்புள்ள பாதங்களையும், பல கலம்பங்களை யுடையதாகவும், பல சித்ரங்களை (நாடக) உடையதாகவும், இரும்பிலானான தாழ்பாளையுடையதாகவும்

101. பல பட்டங்களாலும், புஷ்பங்களாலும், நல்லத்ருடமாக சேர்க்கவும். சதுரஸ்ரம், வட்டவடிவமாகவோ அந்தந்த நீள அளவிலாவது

102. எண்கோணம், பதினாறுகோணம், பதினைந்து கோணம் முதல் ஆஸனம் செய்ய வேண்டும். அதன் பாதமும் அவ்வாறே இருத்தல் வேண்டும்.

103. மூன்று, நான்கு, ஐந்து பாதத்தையுடையதாக விருப்பப்படியாக பாதங்களை செய்ய வேண்டும். நான்கு கால், தலை, புச்சம் (வாலுடன்) கூடிய ஆமைபோல்

104. கூர்மாஸனம் செய்ய வேண்டும். மற்ற ஆஸனங்களை இவ்வாறே அறியவும் (பூஜிக்கவும்) தங்கம், புலித்தோல் முதலிய தோல்களால் முழுவதுமாக விரிக்க வேண்டும்.

105. ஆயாதி லக்ஷணங்கள் ஸிம்மாஸன விதிப்படி செய்யவும். பலகையின் பலத்தைக் கொண்டு அளவை செய்து மேற்படி கிரியையகளை செய்ய வேண்டும்.

106. மேற்கூறிய அமைப்புகளுடன் வெளியிலும் தங்கங்களின் வெளியிலும் அளவைச்செய்யவும். இந்த ஆஸனங்களில் ஸம்ஸ்காரம் முன்பே கூறப்பட்டுள்ளது.

107. ஆயாதிகளின் லக்ஷணம் முன்பு செல்லப்பட்டபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் ஸிம்மாஸனம் அமைக்கும் முறையாகிற எழுபதாவது படலமாகும்.
படலம் 73: சவுக்யகர்ம விதி

73வது படலத்தில் சவுக்யகர்ம விதி அல்லது சுத்த நிருத்த விதியோ கூறப்படுகிறது. முதலில் பிரதிஷ்டை உத்ஸவம் முதலிய கர்மாக்களில் முதலில் அவ்வாறே நித்யோத்ஸவத்தின் முடிவில் சவுக்ய கர்மவிதி செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு சவுக்ய கர்மமாகவோ அல்லது சுத்த நிருத்தமோ ருத்திர கன்னிகைகளால் செய்ய வேண்டும் என கூறி ருத்திர கன்னிகை உற்பத்தி இரண்டு விதமாக கூறப்படுகிறது. ருத்ரனால் இந்திரன் பிரதிக்காக சிருஷ்டிக்கப் பட்டதில் அப்ஸரசுகளின் குலத்தில் உண்டானவர்கள் முதலாவதான ருத்திர கன்னிகைகள் ஆவார்கள். மற்றவர்கள் தாருகாவனத்தில் விளையாடுவதற்காக சுந்தரமான உருவத்துடன் சஞ்சாரம் செய்த பகவான், தேவனான சிவனின் அழகினால் மயக்கம் அடைந்த முனி பத்தினிகளுக்கு பரமேஸ்வரனால் பார்த்த மாத்திரத்தினாலே கர்பத்தை அடைந்தவர்களில் உண்டான சந்ததிகள் ஆவர். அவர்களில் இரண்டு வித ருத்ரகன்னிகைகளுக்கும் பரதசாஸ்திரத்தில் கூறி உள்ள லக்ஷணத்துடன் கூடிய சுத்த நிருத்த ஆசரண ரூபமான அர்ச்சனையே பிழைப்பு என்றும் அவர்களின் பிரார்த்தனையை அனுசரித்து பகவான் ஆன சிவனால் கூறப்பட்டது. பிறகு சந்தோஷம் அடைந்த சிவனாலேயே இரண்டு விதமான ருத்திர கன்னிகைகளுக்கும் தீøக்ஷ செய்யப்பட்டது. பிறகு நந்தியை கூப்பிட்டு அவன் கையிலுள்ள வேத்திரம் என்ற தண்டத்தினால் ஸ்பர்சிக்கப்பட்டார்கள். பிறகு அந்த குலத்தில் உண்டான நத்தினி என்னும் பெயர் உள்ளவர்கள் பூமியில் வியவஹாரம் செய்யப்படுகிறார்கள் என்று ருத்திர கன்னிகையின் உற்பத்தியும் அவர்களின் தொழிலும் கூறப்படுகின்றன. பிறகு சுத்த நிருத்தம் ருத்திர கன்னிகைகளால் பஞ்ச ஆசார்யர்களுடன் கூடி நர்தக, மர்த்தக, காயக, வாம்சிக மவுர்விக என்று 5 ஆசார்யர்களின் பெயர் கூறப்படுகிறது. பிறகு நாட்ய வேதத்தால் சிரமம் அடைந்தவர்களும் (நாட்டிய வேதத்தை அறிந்தவர்களும்) நடிப்புடன் கூடிய பாட்டு நாட்டியம் இவைகளை அறிந்தவர்களும் சிரேஷ்டமானவர்களும் நவநாட்யங்களை அறிந்தவர்களும் குற்றமில்லா மனதை உடையவர்களும் சிவ பக்தர்களுமான சதுர்வர்ண அனுலோம ஜாதியில் பிறந்தவர்கள் பஞ்சாசாரியன் என கூறி அவர்களின் லக்ஷணம் கூறப்படுகின்றன.

பிறகு அவர்களின் தனித்தனி லக்ஷணமும் நாட்டிய காலத்தில் அவர்களின் ஸ்தானமும் அங்கு செய்ய வேண்டிய கர்மாக்களும் கூறப்படுகின்றன. முன்பே ருத்திர கன்னிகைகள் தீட்சிக்கப்பட்டவர்களாக இருந்தாலும் பிறகு பிறப்பதால் மறுபடியும் தீøக்ஷ செய்யப்படவேண்டும். அந்த தீøக்ஷயும் சுருக்கமாக கூறப்படுகிறது என்று கூறி ருத்திர கன்னிகா தீக்ஷõ முறை கூறப்படுகிறது. பிறகு ருத்திர கன்னிகைகள் 5 வயதுக் மேற்பட்டு 50 வயதுக்கு உட்பட்டவர்கள் தீøக்ஷ கர்மாக்களில் யோக்யர்கள். மற்றவர்கள் யோக்யர்கள் இல்லை. பிறகு சுத்த நிருத்தத்திற்காக மண்டபம் அமைக்கும் முறை சொல்லப்படுகிறது. பிறகு மண்டப மத்தியில் நடேச பூஜை முறை, பஞ்சாக்ஷரம் முதலான மந்திரத்தால் ஜபித்து சங்க தீர்த்தத்தால் ருத்ரகன்னிகைகளுக்கு பிரோக்ஷணம் செய்யும் முறையும், மண்டபத்தில் தண்டத்தை ஸ்தாபிக்கும் முறை, நந்தி பூஜா முறை பிறகு குருவினால் பெற்றுக் கொள்ளப்பட்ட தட்சிணைகளுடன் கூறி அந்த ஆசார்யனாலோ அல்லது சிஷ்யனாலோ வேத்திர தண்டத்தை ருத்ரகன்னிகளின் சிரசில் வைக்கும் முறையும் அவர்களுக்கு பெயர்வைக்கும் முறையும், புஷ்பாஞ்சலி தானம் செய்யும் முறையும், பிறகு சிவசன்னதியில் பரதரரால் கூறப்பட்ட பஞ்சபதி என்று பெயர் உள்ள நாட்டிய முறையும் ஆகிய இந்த விஷயங்கள் ருத்திர கன்னிகையின் தீøக்ஷ விதியில் விளக்கப்படுகின்றன. பிறகு ஐந்து ஆசார்யர்களுக்கும் செய்ய வேண்டிய தீக்ஷõவிதி கூறப்படுகிறது. ஆசார்யன் தன்னுடைய கிரஹத்திலோ ருத்ர கன்னிகைகளின் ஆசார்ய கிரஹத்திலோ சுத்தியுள்ள இடத்தில் மத்ய பாகத்தில் பரமேஸ்வரனை பரிவார ஸஹிதமாக பூஜித்து அதற்கு முன்னதாக ஸ்வர்ணம் வஸ்திரம் இவைகளுடன் கூடிய கும்பத்தை வைத்து, அந்த ஜலத்தை பஞ்சாக்ஷர மந்திரம் ஜபிக்கவேண்டும். பிறகு ஸ்நானம் செய்து வெள்ளை வஸ்திரம் தரித்த ஆசார்யர்களை கும்பதீர்த்தத்தால் பிரோக்ஷித்து பஞ்சாக்ஷரம் ஜபித்து கூர்சத்தினால் சிரசை ஸ்பரிசிக்கவும் அப்பொழுது கர்ம அதிகாரம் ஏற்படுகிறது என்று பஞ்சாசார்ய தீக்ஷõகர்மா கூறப்படுகிறது. ருத்ர கன்னிகைகளின் நாட்யத்திற்காக நுழையும் முறை கூறப்பட்டு பிறகு குறிப்பிட்ட தினத்திற்கு முன் தினம் அங்குரார்ப் பணம் செய்யவும்.

பிறகு ஆலயத்தை சுற்றி 4 மண்டபம் அமைக்கவும். கிழக்கு முகமாக இரண்டு மண்டபம் அமைக்கவும். மண்டபத்தில் பலிபீட அளவுள்ள பீடம் அமைக்கவும். எல்லா மண்டபத்திலும் ஹோமத்திற்காக குண்டமோ, ஸ்தண்டிலமோ, அமைக்கவும். பிறகு ஆரம்ப தினத்திற்கு முன் பரமேஸ்வரனை பூஜிக்கவும். நான்கு நபர்கள் ஸ்நானம் செய்தவர்களும், எல்லா அவயவ பூஷணம் தரித்தவர்களும் ஸர்வமங்களத்துடனும் ஈசனை நமஸ்கரித்தவர்களும், சாந்தர்களாயும் நியமம் உள்ளவர்களுமான ருத்ரகன்னிகைகளும் அதே லக்ஷணம் உள்ள ஐந்து ஆசார்யர்களும் மண்டபத்தில் அதிவாசம் செய்யப்படவேண்டியவர்கள் என்று பூஜைக்கு முன் தினத்தில் செய்ய வேண்டிய அதிவாச விதி கூறப்படுகிறது. பிறகு மறுதினம் காலையில் செய்யவேண்டிய கிரியைகள் கூறப்படுகின்றன. பிறகு முதலில் ஸஹஸ்ரகலச, ஸ்நபனத்துடன் கூடியதும் பிரபூத ஹவிஸ் நிவேதனம் செய்யப்பட்டதுமான பரமேஸ்வரனை பூஜிக்கவும் என்று ஆலயத்தினுள் பூஜிக்கும் முறை கூறப்படுகிறது. பின்பு மண்டப சம்ஸ்காரத்திற்கு பிறகு மத்யபீட மத்தியில் ஸதாசிவனையோ தேவியுடன் கூடிய நடராசரையோ ஆவரண சஹிதமாக பூஜிக்கவும். பிறகு அங்கு பிரம்மாவை சாங்கமாக பூஜிக்கவும். பிறகு ஆவரண விஷயத்தில் முறையாக நான்கு திக்குகளிலும் நந்தீ பிரம்மா, ஸ்கந்தர், மஹாவிஷ்ணு இவர்களை முதல் ஆவரணத்தில் பூஜிக்கவும். அதற்கு வெளியில் லோகபால ஆவரணமும், லோகபால ஆவரணத்திற்கு வெளியில் ஆயுத ஆவரணமும் பூஜிக்க வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு கிழக்கு மண்டபத்தில் கவுரியுடன் கூடிய ருத்திரனையும் முன் போல் ஆவரண ஸஹிதம் பூஜிக்கவும். தெற்கு மண்டபத்தில் ஸரஸ்வதியுடன் கூடி பிரம்மாவை லோகபாலகர் முதலான ஆவரணத்துடன் பூஜிக்கவும். மேற்கு மண்டபத்தில் யோகபாலர்களுடன் ஸ்கந்தரை பூஜிக்கவும். வடக்கு மண்டபத்தில் லோகபாலக ஆவரணசஹிதமாக மஹாவிஷ்ணுவை பூஜிக்கவும் என்று பூஜா முறை கூறப்படுகிறது. பிறகு குண்டசம்ஸ்காரம் அக்னி சம்ஸ்காரம் செய்து அந்தந்த இடத்தில் செய்ய வேண்டிய ஹோமம் கூறப்படுகிறது.

பிறகு அரங்கத்தில் ஸ்வாமியை பூஜித்து சுத்த நிருத்தம் செய்யவும். நாட்டிய ஆரம்பத்தில் ஆசார்யனை விசேஷமாக வஸ்திர ஆவரணங்களால் பூஜை செய்யவும், ஐந்து ஆசார்ய ருத்ர கன்னிகைகளின் விஷயத்தில் வஸ்திரம் முதலான பூஷணங்களுடன் கூடியதான கூலி கொடுப்பதை அவர்கள் திருப்தி அடையும் வரை கொடுக்கவும் என கூறப்படுகிறது. இங்கு ருத்ர கன்னிகையும் பஞ்சாசார்யர்களும் முன்பு கூறப்பட்ட தீøக்ஷயினால், தீøக்ஷ செய்யப்படாமல் இருந்தால் முன்பு கூறியபடி நாட்டியம் ஆடவும் என கூறப்படுகிறது. இவ்வாறு ருத்திர கன்னிகைகளின் நாட்டிய பிரவேசத்திற்கு முதலில் நுழையும் கார்ய முறை கூறப்பட்டது. பிறகு நித்யோத்ஸவத்திற்கு பிறகு செய்ய வேண்டி சுத்த நிருத்தம் கூறப்படுகிறது. பிறகு ஸ்நானம் செய்து ஸர்வ அலங்கார பூஷிதமாயும் வெள்ளை மாலை தரித்தவளாயும் உள்ள ருத்ரகன்னிகையோடு அரங்கத்தில் உள்ள பரமேஸ்வரனை பூஜித்து அதற்காக ஸ்லோகத்தில் உள்ள அர்த்தத்தை பாவனையுடன் கூடி சுத்த நிருத்தத்தை செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு ருத்திரன் இவர்கள் மூன்று சந்திகளுக்கும் அதிபர் என கூறி புஷ்பாஞ்சலி சமயத்தில் சொல்லவேண்டிய மூன்று ஸ்லோகம் கூறப்படுகிறது. அவர்களுக்கு முடிவில் ஸ்தாபனம், பிரோக்ஷணம், பிராயச்சித்தம், உத்ஸவம், ஸ்நபனம், மாச பூஜை ஹோம கர்மா, திவஜாரோஹண காலங்கள், காம்யகர்மா அனுஷ்டிக்கும் முறை தினம் ஆகிய இந்த சமயங்களில் சுத்த நிருத்தம் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. இவ்வாறாக 73வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. ஹே அந்தணர்களே, பிரதிஷ்டை, திருவிழா முதலான நிகழ்ச்சிகளிலும், நித்யோத்ஸவத்தின் முடிவிலும் செய்ய வேண்டிய சவுக்ய கர்மாவை கேளுங்கள்.

2. ருத்ர கன்னிகைகளால் சவுக்ய கர்மா செயற்பாலது. அது இரு வகைப்படும். கவுசிகரின் ப்ரீதிக்காக, ருத்ரன், அப்ஸர ஸ்தீரிகளை படைத்தார்.

3. அந்த அப்ஸர ஸ்தீரிகளின் வெகு நாளைய வம்சமானது ருத்ர கன்னிகை குலமாகும். ப்ரதிலோமர்களால் தொடப்படாதவர்கள் பொது மனிதராக இருப்பார்கள்.

4. அவர்களே ருத்ர கன்னிகைகளாவார்கள், வேறு விதமாகவும் கூறப்படுகிறது. உயர்ந்த அந்தணர்களே, முன்பு தேவதாரு வனத்தில் என்னால் விளையாட்டாக

5. கல்யாண கோலமாக அங்கு பிரவேசித்தேன் அவ்வமயம் அங்குள்ள ரிஷிர பத்னிகள் இமை கொட்டாமல் மயக்கத்துடன் பார்த்து

6. காம வேட்டை உள்ளவர்களாக நழுவிய வஸ்திரம் கேசமுடையவர்களாக ஆனார்கள். அப்பேர்பட்டவர்களை என் கருணையால் பார்த்தேன்.

7. நான் பார்த்த மாத்ரத்தில் குறைவில்லா கர்பமடைந்தார்கள், அவரவர் கர்பத்திலிருந்து உண்டானவர்கள் ருத்ர கன்னிகையராவர்.

8. அவர்கள் யாவரும் ஒன்று கூடி எங்களுக்கு என்ன தொழில் இருக்கிறது என்று கேட்க நான் கூறுகிறேன் கேளுங்கள் என்று சிவனால் கூறப்பட்டது.

9. சவுக்ய ஸஹிதமான என் அர்ச்சனாதி பூஜா சிரேஷ்டமாகும். அந்த சவுக்யம், சுத்த ந்ருத்தம் ஆகும். பரத நாட்டிய விஷயத்தில் அதன் லக்ஷணம் கூறப்பட்டுள்ளது.

10. பிரதி தினமும் என் ப்ரீத்திக்காக சவுக்ய கர்ம பூஜையில் சேர்க்கப்படவேண்டும். அந்த வம்சத்தில் ஜனித்த ஸ்திரீகளால் ஐந்து ஆசார்யனுடன் கூட செய்ய வேண்டும்.

11. இவ்வாறு பூமியில் லீலை செய்ததாக சங்கரனால் கூறப்பட்டதாகும். என்னால் சந்தோஷிக்கப்பட்டு, தீøக்ஷயால் அவர்கள் தீக்ஷிக்கப்பட்டவர்களாவர்.

12. நந்தியை கூப்பிட்டு, கையிலுள்ள தண்டத்தை கொடுத்தார். நந்தியிடமிருந்து எந்த ருத்ர கன்னிகைகளின் சிரஸில் வேத்ரமென்ற, தண்டத்தால் தொடப்பட்டதோ

13. அது முதற்கொண்டு நந்தன் என்ற பெயரால் பூமியில் இருக்கிறார்கள். நந்தி தண்டத்தினால் ஸ்பர்சிக்கப்பட்டவர்கள் சிரோதண்டிநர் எனப்படுகிறார்கள்.

14. அந்த குலத்திலுண்டானவர்களால் சுத்த ந்ருத்தம், அனுஷ்டிக்கப்பட வேண்டும். நர்தகர், மர்தகர், காயகர், வம்சகர்

15. மவுரவிகர், ஆகியவர்கள் பஞ்சாசார்யர்கள் ஆவார்கள். நான்கு வம்சத்தை அனுசரித்தவர்கள், நாட்ய வேதங்களை அறிந்தவர்கள்,

16. பாவனை, பாட்டு, ந்ருத்தங்களை அறிந்தவர்கள், வாத்யஞானத்தில் உயர்ந்தவர்கள் நவ நாட்யரஸத்தை அறிந்தவர்கள், குற்றமில்லாத என் பக்தர்களாவர்.

17. அவர்களில் உயர்ந்தவர், நடன கல்வியை அறிந்த நர்தகராவர். அவர் மாத்ரை என்னுவதில் சிரேஷ்டமும், நர்த்தனத்தில் சிரேஷ்டருமாவார்.

18. மல்ல வித்யையில் நன்கு அறிந்தவர். மர்தகராவர். அவர் சுத்த ந்ருத்தத்தில் ஈடுபட்டவரும் அங்க லக்ஷணத்தில் ஈடுபட்டவருமாவர்.

19. ஏழு ஸ்வரத்தை அறிந்தவரும் கான வித்யையை அறிந்தவரும், பாடகர் ஆவார். அவர் ஸப்தஸ்வர பேதம் அறிந்து, கானம் செய்பவராவார்.

20. குழலூதுபவரும், அவ்வாறே குழல் வித்தையில் வல்லவராயிருப்பவன், உதாத்த முதலிய பேதங்களுடன் சவுக்யத்தில் குழலூதுபவராவர்.

21. சவுக்ய காலத்தில் முரவவாத்யத்தால் சங்கீதம் செய்பவர், மவுர விகாரவர், தென் பாகத்தில் நர்த்தகரும், மர்தகரும் இருக்க வேண்டும்.

22. காயகரும் வம்சகரும் உத்தர பாகத்தில் இருக்க வேண்டும். முன் பக்கத்தில் மவுரவிகருபாக சவுக்ய காலத்தில் முரவ வாத்யம் வாசிக்க வேண்டும்.

23. முன்பு கூறப்பட்டவர்களுக்கு மறு பிறப்பு ஏற்பட்டிருந்தால் சண்டேச ஹோமத்தின் பிறகு மறுபடியும் தீøக்ஷ செய்யப்படவேண்டும். அந்த தீøக்ஷ சுருக்கமாக கூறப்படுகிறது.

24. அனுகூலமான தினத்தில் தன்னுடைய ஐந்து வயதிலிருந்து அதிகரித்து ஐம்பது வரை வயதுள்ளவர்கள், யோக்யமானவர்கள் மற்றவர்கள் ஒரு போதும் யோக்யம் இல்லாதவர்கள்.

25. சவுக்ய நிருத்தத்திற்காக லக்ஷணமுள்ள மண்டபம் செயற்பாலது. முற்பத்தி மூன்று கரத்திலிருந்து இரண்டிரண்டு ஹஸ்த அளவாக குறைக்க வேண்டும்.

26. தேவன் முதல் சூலம் வரை உள்ள இடங்கள் முறையே சிரேஷ்டம், மத்யமம், அதமம் என மூன்று விதமான இடமாகும். ஒவ்வொன்றும் மூன்று, மூன்று அளவினாலும் அவைகளில் விருப்பமானதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

27. தேவாதி நான்கு வகைகளில் தேவன் முதலான வரிசை முறைப்படி ஏற்றுக் கொள்ளவும். அல்லது எல்லோர்க்கும் ஸாமான்யமான முன்பு நிர்மாணிக்கப்பட்ட மண்டபங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

28. நர்தனத்திற்கு, (பங்க்தி) பத்துமுழம் என்ற அளவு பேதத்தால் ஏற்றுக் கொள்ளவும். எல்லா மண்டபங்களையும், நிவ்ருத்தி முதலிய கலாமயமாக பாவிக்கவேண்டும்.

29. மண்டபத்தின் நடுவில் சுத்த ந்ருத்தத்தை செய்யவும். மண்டபத்தில் நடராஜரை சந்தனம் முதலியவைகளால் அங்க பூஜையுடன் கூடியதாக பூஜிக்கவேண்டும்.

30. ருத்ர கன்னிகைகளை கூப்பிட்டு சங்க தீர்த்தத்தால் பிரோக்ஷிக்கவும். பஞ்சாக்ஷரத்தால் ஜபிக்கப்பட்டு ஸ்வாமியின் முன்பு மெழுகப்பட்ட இடத்தில்

31. பிரணவாசனமிட்டு அதன் நடுவில் ஹா என்ற தீர்த்தத்தால் சுத்தி செய்த தண்டத்தை எடுத்து

32. பூர்வாக்ரம், உத்ராக்ரமாக தண்டத்தை ஸ்தாபித்து அதில் நந்தியை சந்தன, புஷ்பங்களால் பூஜிக்க வேண்டும்.

33. புதிய வஸ்திரம், மாலை, வெண்ணீர், உத்திரீய புஷ்பமாலை, வெள்ளை சந்தனம் பூசி, அங்குலீயம் (மோதிரம்) தரித்த ஆதிசைவனானவன்

34. ஆசார்யன் ஐந்து நிஷ்க அளவு தட்சிணை முதலியவைகளை பெற்று அவரின் சிஷ்யனாவது அந்த தண்டத்தை எடுத்து தலைமுதலாக நியாஸம் செய்யச் சொல்ல வேண்டும்.

35. சிவாய நம என்று எல்லோருடைய தலையிலும் நியாஸம் செய்ய வேண்டும். சந்தனம் முதலியவைகளால் முன்பு போல் தண்டத்தை பூஜிக்க வேண்டும்.

36. ஹே நந்த என்று விளி வேற்றுமையுடன் கூடியதாக, தண்டிநீ வரையிலான சிரேஷ்டமான வேறு நாமாக்களை தருகிறேன் என்று

37. என்னுடைய உத்ஸவ காலத்தில் உன்னுடைய நாட்யத்தை அனுசரித்து இருப்பாயாக, என்று கட்டளையிட்டு சிஷ்யனின் கையில் புஷ்பங்களை கொடுக்க வேண்டும்.

38. புஷ்பாஞ்சலியை வாங்கி நமஸ்காரத்துடன் குருவிடம் கொடுக்க வேண்டும். மறுபடியும் புஷ்பங்களை எடுத்து பரமேஸ்வரனிடம் நிவேதிக்க வேண்டும்.

39. பிறகு பரத நாட்டியத்திலுள்ள பஞ்சபதி என்றதான நர்தனத்தை, சிவ சன்னதியில் சிவனின் திருப்திக்காக சவுக்ய கர்மாவிற்கு செய்ய வேண்டும்.

40. இவ்வாறே ஸ்தீரிகளின் தீக்ஷõ விதி கூறப்படுகிறது. இது பஞ்சாசார்ய விஷயங்களாகும், தேசிகருடைய வீட்டிலோ தன்னுடைய வீட்டிலோ அழகான நடுபாகத்தில்

41. அர்ச்சனாங்க விதிப்படி தேவேசரை பூஜை செய்து, ஸ்வர்ண வஸ்திரத்துடன் கூடிய கும்பத்தை ஈசன் முன்பு ஸ்தாபித்து

42. பஞ்சாக்ஷரத்தால் தீர்த்தத்தை அபிமந்திரனம் செய்து, ஸ்நானம் செய்து வெள்ளை வஸ்திரம் முதலியவைகளுடன் கூடி ஐந்து ஆசார்யர்களை

43. சிவ தீர்த்தத்தால் பிரோக்ஷித்து கூர்ச்சத்தால் தலையை தொட்டுக் கொண்டு பஞ்சாக்ஷரத்தோடு கூடியதால் கார்யங்களுக்கு உகந்தவராக ஆகிறார்கள்.

44. ருத்ர கன்னிகைகளின் நுழைதல் சுருக்கமாக கூறப்படுகிறது. நிச்சயித்த உத்ஸவ தினத்தின் முன் தினம் அங்குரார்பணம் செய்ய வேண்டும்.

45. கோயிலின் நான்கு திக்குகளிலும், கிழக்கு முகமாக இரண்டு மண்டபம் அமைக்கவும். மண்டபத்தில் பலிபீடம் போல் பீடம் செய்ய வேண்டும்.

46. எல்லா மண்டபத்தின் முன்பாக குண்டம் அமைத்து ஸ்தண்டிலம் அமைக்கவும். உத்ஸவத்தின் முன் தினம் தேவ தேவனை பூஜிக்க வேண்டும்.

47. நான்கு ருத்ர கன்னிகைகள் உணவு உட்கொள்ளாமலும், சந்தனம் முதலியவைகளுடனும் பல்துலக்கியவர்களாயும், நீராடியும் அழகான அவயங்களை உடையவர்களாயும்

48. ஸர்வமங்களமுடையவர்களாகவும், உள்ள பஞ்சாசார்யர்கள் ஈசனை நமஸ்கரிக்கப்பட்டவர்களாகவும், ரக்ஷõபந்தனமுடையவர்களாகவும்

49. உத்ஸவத்தின் முன்தினம் அதிவாசம் செய்ய வேண்டும். ஸஹஸ்ர கலசாபிஷேகம் பரமேஸ்வரனுக்கு செய்து

50. சந்தனம் புஷ்பங்களால் பூஜித்து அதிகப்படியான நிவேதனங்களை செய்யவும். மண்டப நிர்மாணத்திற்கு பின் சில்பியை திருப்தி செய்து பசுஞ்சாணம் மெழுகிட்டு

51. புண்யாஹப்ரோக்ஷணம், அந்தணர்க்கு உணவளித்து நடு பீட நடுவில் ஸதாசிவரை பூஜிக்க வேண்டும்.

52. நடராஜர், தேவியுடனோ பிரம்மாவையுமோ கிழக்கிலுள்ள இரண்டாவது மண்டபத்தின் ஆவரண பூஜையுடன் கூடியதாக பூஜிக்கவும். ஈசனின் ஆவரணமானது

53. கிழக்கில் நந்தியையும் வடக்கில் பிரம்மாவையும் பூஜிக்கவும், ஸ்கந்தரை மேற்கு திக்கிலும் விஷ்ணுவை வடக்கிலும் பூஜிக்க வேண்டும்.

54. அதற்கு வெளியில் லோக பாலர்கள் அதற்கு வெளியில் ஆயுதங்களை பூஜிக்கவும். முன்புள்ள ஆவரணப்படி கிழக்கில் கவுரி தேவீ ஸஹிதம் ருத்ரனையும்

55. தெற்கில் பிரம்மாவையும் அந்த பிரம்மாவை ஸரஸ்வதி, லோகபாலர்களுடன் கூடியதாக பூஜிக்க வேண்டும்.

56. மேற்கு மண்டபத்தில் ஸ்கந்தரை லோக பாலர்களுடன் கூடியதாக பூஜிக்கவும். வடக்கு மண்டபத்தில் லோக பாலருடன் கூடியதாக மஹாவிஷ்ணுவை பூஜிக்க வேண்டும்.

57. பிறகு குண்ட, வன்னி ஸம்ஸ்காரம் செய்து, அந்தந்த வஹ்நியில் அந்தந்த தேவர்களை சந்தனம் முதலியவைகளால் ஆவாஹித்து பூஜித்து நாடீசந்தனம் செய்து ஹோமம் செய்யவேண்டும்.

58. நூறு ஆவ்ருத்தி ஹோமம் பத்து ஆவ்ருத்தி சமித்து, நெய், அன்னம், பொறி, எள் இவைகளால் ஹோமம் செய்து பூர்ணாஹுதி செய்யவேண்டும்.

59. மண்டபத்தில் தேவரை பூஜித்து சுத்த ந்ருத்தம் செய்யவும். ருத்ர கன்னிகைகளுக்கு முன்பு கூறப்பட்ட ஸம்ஸ்காரத்தையுடைவர்களோ

60. ஸம்ஸ்காரமின்றி இருந்தால் ஸம்ஸ்காரம் செய்து ந்ருத்தம் செய்விக்க வேண்டும். ந்ருத்த ஆரம்பத்தில் தேசிகருக்கு விசேஷ பூஜை செய்து

61. பஞ்சாசார்ய கன்னிகைகளை வஸ்த்ராதி, பூஷணங்களால் உபசரித்து எவ்வளவு கொடுத்தால் திருப்தி ஏற்படுமோ அவ்வளவு கூலியை அந்த பெண்களுக்கு கொடுக்க வேண்டும்.

62. நித்யோத்ஸவத்தின் முடிவில் சவுக்யம், சொல்ல வேண்டும். ஸ்நாநம் முடித்து அணிகலன் தரித்து வெள்ளை மாலை அணிந்து

63. பஞ்சாச்சர்யர்களுடன் கூட முன்பு கூறிய ஆவரணத்துடன் நடராஜரை அர்ச்சித்து அதன் முன்பு நவநாட்டிய ரஸத்துடன்

64. ஸ்லோகத்தின் அர்த்த பாவனையோடு சுத்த ந்ருதத்தை செய்யவும். பிரம்மா, விஷ்ணு, ருத்ரனிவர்கள் மூன்று கால சந்த்யாதிபர்கள் ஆவர்.

65. காலை, மதியம், ஸாயங்காலம், கிரமமாக மூன்று ஸ்லோகங்களை படிக்கவும். மந்தார புஷ்பம் இரைத்ததினால் பலவித வாசனையால் மதங்கொண்ட வண்டு கூட்டங்களால் அழகான பாட்டு சப்தத்தையுடையதும், பலவித அங்க கரணங்களால் துதிக்கக் கூடியதுமான எனது புஷ்பாஞ்சலியானது பிரம்மாவிற்காக ஆகட்டும்.

66. பாவத்தோடு கூடியதும் ரஸத்தோடு கூடிய ந்ருத்தத்தினாலும் ந்ருத்தத்தால் உண்டானதும் வாசனை யோடும் மதங்கொண்ட வண்டுகளால் சப்திக்கப்படுவதுமான புஷ்பாஞ்சலியானது விஷ்ணுவின் பொருட்டு ஆகுக.

67. ஸாந்தாதிகர் முதலிய சிவஸம்காரம் செய்யப்பட்ட ருத்ர கன்னிகைகளால் பலவித அபிநயங்களால் கொண்டாடப்பட்டதும், பலவித புஷ்பக் கலப்புகளால் அரச அரசாங்க வளர்ச்சியின் பொருட்டு புஷ்பாஞ்சலியானது பரமேஸ்வரனின் பொருட்டு ஆகுக.

68. ஸ்தாபனத்திலும் பிரோக்ஷணத்திலும், பிராயச்சித்தத்திலும், அற்புத சாந்தியிலும், உத்ஸவத்திலும், ஸ்னபனத்தில், மாஸ பூஜையிலும், ஹோம கர்மாக்களிலும்

69. த்வஜா ரோஹண காலத்திலும் காம்ய கர்மாக்களிலும் சவுக்ய கர்மா விசேஷமாக கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் சவுக்ய கர்ம விதியாகிற எழுபத்தி மூன்றாவது படலமாகும்.