படலம் 92: ஆயிரம் பசுக்கள் தானம் செய்யும் முறை...
92 வது படலத்தில் ஆயிரம் பசு தானம் செய்யும் முறை கூறப்படுகிறது. முதலில் ஸித்தியின் பொருட்டு ஆயிரம் எண்ணிக்கை உள்ள பசுக்களின் தானம் கூறுகிறேன் என்பது பிரதிக்ஞை. கன்றுக் குட்டியுடன் கூடியதும் நல்ல குணங்களை உடையதுமான பசுக்களை தானம் செய்ய ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். அவைகளில் நல்ல குணமுடைய எட்டு பசுக்களை பூஜிக்கவும் அவைகளின் கொம்புகளில் நிஷ்க அளவுடைய தங்கமும் வெள்ளிக் குளம்பும் கழுத்தில் தங்கத்தால் நிஷ்க அளவுள்ள பட்டையும் கட்டி அவைகளுக்கு புல் கொடுக்கவும் என கூறப்படுகிறது. துலாரோஹண விதிப்படி வேதிகை, மண்டலம், குண்டம் இவைகளுடன் கூடிய மண்டபம் அமைக்கவும். துலாபார முறைப்படி சிவ ஆராதனமும் ஹோமமும் செய்யவும். பரமேஸ்வரனுக்கு ஸஹஸ்ர கலச அபிஷேகம் செய்து பெரிய பூஜை செய்யவும். பிறகு சிவனுக்கும், சிவ பிராம்ணர்களுக்கும் தட்சிணைகளுடன் கூடிய பசுக்களை கொடுக்க வேண்டும் என கூறி தட்சிணை கூறப்படுகிறது. பிறகு தான காலத்தில் கர்த்தா சொல்ல வேண்டிய ஸ்லோகம் சொல்லப்படுகிறது. முடிவில் இங்கு சொல்லப்படாத எந்த கர்மா உண்டோ அதை துலாரோஹண முறைப்படி செய்யவும் என கூறப்படுகிறது. இவ்வாறாக 92வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.
1. விருப்பத்தையடையும் பொருட்டு ஆயிரம் எண்ணிக்கையுள்ள பசுக்களை தானம் செய்யும் முறைப்பற்றி கூறுகிறேன். அவைகள் கன்று குட்டியுடனும் நல்ல குணத்துடனும் உள்ளதாகவே ஏற்கப்பட வேண்டும்.
2. எட்டு பசுக்களை கீழ்கண்டவாறு பூஜிக்கவும். ஒவ்வொரு கொம்பிலும் நிஷ்க அளவு ஸ்வர்ணத்தால் கொம்பும் வெள்ளியால் குளம்புமோ கட்டப்படவேண்டும்.
3. கழுத்தில் நிஷ்க அளவால் தங்கப்பட்டம் கட்டி பயிர்களை கொடுக்கவும். வேதிகை மண்டலத்துடன் கூடியதாக மண்டபம் அமைத்து
4. முன்பு போல் சிவபூஜையையும் ஹோமத்தையும் செய்ய வேண்டும். பிறகு சிவனுக்கு ஆயிரத்தி எட்டு கலசங்களால் ஸ்நபனம் செய்ய வேண்டும்.
5. சிவனின் பொருட்டு (சிவனுக்காக) ஆதி சைவர்களுக்கு தட்சிணையுடன் கூடியதாக பசுவை தானம் செய்யவும். தட்சிணையானது பத்து நிஷ்கமோ அதில் பாதி 5, அதில் பாதியோ (இரண்டரை), ஒரு நிஷ்கமோ கொடுக்க வேண்டும்.
6. கர்த்தாவானவன் தானம் செய்யும் காலத்தில் இந்த ஸ்தோத்ரத்தை சொல்ல வேண்டுமென கூறப்படுகிறது. காவோ மமாக்ரத நித்யம், காவ ப்ருஷ்டத ஏவ மே (பசுக்கள் நித்யம் என் முன்னாலும் பின்னாலும் நிற்கட்டும்)
7. (பசுக்கள் ஹ்ருதயத்தில் நித்யமிருக்கட்டும், பசுக்களின் மத்தியில் நான் வசிக்கிறேன்) காவோ மே ஹ்ருதயம் நித்யம் கவாம் மத்யே வஸாம்யகம் என்று கூறவும். இங்கு சொல்லப்படாத க்ரியையை துலாபார விதியில் சொல்லப்பட்டுள்ளபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் ஸஹஸ்ர கோதானம் செய்யும் முறையாகிற தொன்னூற்றி இரண்டாவது படலமாகும்.
JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
ஞாயிறு, 13 அக்டோபர், 2024
படலம் 92: ஆயிரம் பசுக்கள் தானம் செய்யும் முறை...
படலம் 91: திலதேனுதான விதி...
படலம் 91: திலதேனுதான விதி...
8. புது வஸ்த்ரம் ஸமர்ப்பித்து வெண்கல பாத்திரத்தில் மரக்கால் அளவு எள்ளை வைத்து ஒன்பது விதமான பழங்களுடன்
9. கரும்பையும் பசுவையும் தானம் செய்ய வேண்டும். தானம் செய்யப்படும் பசுவானது தங்க கொம்புகளுடன் கூடியதாகவும் வ்யாதி இல்லாததாகவும் வெள்ளி மயமான குளம்புகளை உடையதாகவும்
10. ஒவ்வொரு கொம்பிலும் ஒரு நிஷ்க பிரமாணம் தங்கமும் இரண்டு நிஷ்க பிரமாண தங்கத்துடன் குளம்பும் இருக்க வேண்டும். முன்பு போல் வேதிகை, மண்டலத்துடன் கூடின மண்டபத்தை நிர்மாணிக்க வேண்டும்.
11. முன்பு போல் பூஜை, ஹோமமும் அபிஷேகம் முதலியவைகளும் செய்ய வேண்டும். பதினோரு ருத்ரதானமும் பனிரெண்டு சூர்யதானமும்
12. அஷ்ட வித்யேசதானமும் அதன் அதிகரிப்பால் செய்ய வேண்டும். கழுத்து காதுகள் கைகள் முதலிய பஞ்ச அங்கங்களிலும் ஐந்து நிஷ்க அளவு தங்கத்தால் ஆபரணம் செய்ய வேண்டும்.
13. முன்பு போல் ஆசார்யனுக்கு கூறியபடி தட்சிணையை கொடுக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் திலதேனு தானம் செய்யும் முறையாகிற தொன்னூற்றொன்றாவது படலமாகும்.
படலம் 90: திலதேனுதான விதி...
படலம் 90: திலதேனுதான விதி...
90 வது படலத்தில் திலதேனுதான விதி கூறப்படுகிறது. பிறகு எல்லா விருப்பத்தையும் கொடுக்கக்கூடிய திலதேனு தான விதி கூறுகிறேன் என்பது பிரதிக்ஞை. துலாரோஹண முறைப்படி வேதிகை, குண்டம், மண்டலம் இவைகளுடன் கூடிய மண்டபம் அமைக்கவும். மண்டபத்திற்கு முன்பாக, 8 மரக்காலாமோ 8 படியாலோ எள்ளினால் எள்ளு ரூபமான தாமரை அமைக்கவும். அந்த எள் தாமரையை வஸ்திரத்தால் மூடி அதற்கு மத்தியில் மூன்று, பத்து நிஷ்கம், பதினைந்து நிஷ்கம் ஏழரை நிஷ்கம் இந்த அளவினாலோ அல்லது ஐந்து நிஷ்கத்தினாலோ தங்கத்தினால் கர்ணிகை என்கிற பாகம் தண்டு இவைகளால் அலங்கரிக்கப்பட்ட தங்க தாமரை செய்து வைக்கவும். அதற்கு வடக்கு பாகத்தில் 11 பிராம்ணர்களை 11 ருத்திரர்களாக ஸ்மரித்து ஆவாஹணம் செய்து பூஜிக்கவும். கிழக்கு பாகத்தில் 12 பிராம்ணர்களை 12 சூரியன் மந்திரங்களால் பூஜிக்கவும். தெற்கு பாகத்தில் 8 பிராம்ணர்களை வித்யேஸ்வரர்களாக நினைத்து பூஜிக்கவும். பிறகு 16 நபர் என்று கூறி நினைக்க வேண்டும் என்பதாக தேவதைகளின் பெயரை கூறாமல் 16 பிராம்ணர்களை வித்யேஸ்வரர்களுடன் கூட தெற்கு பாகத்தில் பூஜிக்க வேண்டும் என கூறப்படுகிறது. இந்த படலத்தில் 12வது ஸ்லோகத்தில் மூர்த்தி வித்யேச தானந்து என்று கூறப்படுவதால் இங்கு மூர்த்திகளையும் பூஜிக்க வேண்டும் என தெரிகிறது. ஆனால் அந்த மூர்த்திகள் யார் யார் என்று விளக்கப்படவில்லை. பிறகு முன்பு குறிப்பிட்டுள்ளபடி அந்தந்த மந்திரங்களால் பூஜை செய்து அந்த பிராம்ணர்களுக்கு வஸ்திரம், பஞ்சாங்க பூஷணம் முதலியவைகள் கொடுக்க வேண்டும், பிறகு ஒவ்வொருவர்களுக்கும் புதிய வஸ்திரத்தில் 1 படி அளவு எள்ளை வைத்து அந்த எள்ளுடன் கூடிய வஸ்த்திரத்தை வெங்கல பாத்திரத்தில் வைத்து அந்த பாத்திரத்தை, கரும்பு புதிய பழங்கள் இவைகளுடன் தங்க கொம்பு, வெள்ளிக்கொம்பு, இவை உடைய ஆரோக்யமான் பசுவை அந்த பிராம்ணர்களுக்கு கொடுக்க வேண்டும். துலாரோஹன விதியில் கூறப்பட்டுள்ளபடி சாதாரண பூஜை, ஹோமம், பரமேஸ்வரர் விஷயத்தில், ஸஹஸ்ர கலசங்களால் ஸ்நபனம் மஹாபூஜை செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. இங்கு ருத்திரன், சூரியன், வித்யேஸ்வரன் மூர்த்தி ஆகியவர்களின் தானங்களில் ஒரு வர்கத்தின் தானத்தையே செய்யவும் என்று வேறுமுறை கூறப்படுகிறது. இங்கு சொல்லப்படாததை துலாபார முறைப்படி செய்யவும் என கூறப்படுகிறது. இவ்வாறாக 91வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.
1. எள்ளையும் பசுவையும் தானம் செய்யும் முறையை கூறுகிறேன். அது எல்லா விருப்பத்தையும் பூர்த்தி செய்யும். வேதிகை மண்டலத்துடன் முன்பு போல் நிர்மாணிக்க வேண்டும்.
2. அந்த மண்டபத்தின் முனையில் எள்மயமான தாமரையை நிர்மாணிக்கவும். எள்ளின் அளவு எட்டு மரக்கால் அல்லது பாரம் என்ற ஓர் அளவை உடையதாகும்.
3. வஸ்திரங்களால் அதை மறைத்து அதன் நடுவில் முப்பது நிஷ்க அளவோ அதில் பாதி அளவோ தங்கத்தாலோ
4. ஐந்து நிஷ்க அளவு தங்கத்தாலோ கர்ணிகை, காம்பு இவைகளுடன் கூடியதான தங்க தாமரையை வைக்க வேண்டும். அதன் வடக்கு திசையில் ருத்ர ஸங்க்யையாகிற பதினோரு பிராம்மணர்களை
5. பதினோரு ருத்ரர்களாக பாவித்து ஆவாஹனம் செய்து பூஜிக்க வேண்டும். கிழக்கு திசையில் பன்னிரெண்டு பிராம்மணர்களையும் அதன் மந்திரங்களால் பூஜிக்க வேண்டும்.
6. தெற்கில் எட்டு வித்யேச்வர ரூபமான வித்வான்களான எட்டு நபர்களை பிராம்மணர்களை பூஜிக்க வேண்டும். நான்கு திசைகளிலும் பதினாறு பிராம்மணர்களை சந்தனம் முதலியவைகளால் பூஜிக்க வேண்டும்.
7. அந்தந்த மந்திரங்களால் வஸ்திரத்தையும், ஆவரணதேவதைகளையும் பூஜித்து கண்டம், கைகள், காதுகளில் ஆபரணங்களுடன் கூடிய பிராம்மணர்களுக்கு
படலம் 89: லட்சுமி தான முறை...
படலம் 89: லட்சுமி தான முறை...
89 வது படலத்தில் லட்சுமிதான முறை கூறப்படுகிறது. முதலில் அதிகமான ஐஸ்வர்ய ஸித்திக்காக. லட்சுமிதானம் பற்றி கூறுகிறேன் என்பது பிரதிக்ஞை. முதலில் ஆயிரம், ஐநூறு, இருநூற்றி ஐம்பது நூற்றி இருபத்தி ஐந்து, நூற்றி எட்டு, இந்த கணக்குள்ள நிஷ்கம் என்ற அளவுள்ள தங்கத்தினால் லக்ஷண முறைப்படி லட்சுமிதேவி அமைக்கவும். பிறகு அந்த லக்ஷ்மியை துலாரோஹன முறைப்படி வேதிகை, மண்டலம், குண்டம் இவைகளுடன் கூடியதான மண்டபம் அமைத்து அந்த மண்டபத்தில் விஷ்ணுவின் இடது பாகத்தில் எவ்வாறு உள்ளதோ அவ்வாறு அமைக்கவும் லட்சுமியை ஸ்ரீமந்திரம் அல்லது ஸ்ரீசூக்தத்தினாலோ அவ்வாறே மகாவிஷ்ணுவை விஷ்ணு காயத்திரியால் சந்தனம், புஷ்பம் இவைகளால் அர்ச்சனை செய்ய வேண்டும். துலாரோஹதான முறைப்படி சிவபூஜை ஹோமம் பரமேஸ்வரனுக்கு ஆயிரம் கலசம் இவைகளால் ஸ்நபனம் மஹாபூஜை செய்யவும் என கூறப்படுகிறது. அங்கு அக்னியில் ஹோமமோ செய்யலாம் என வேறு விதமாக கூறப்படுகிறது. இங்கு சொல்லப்படாத கிரியையை துலாபார முறைப்படி செய்யவும் என கிரியையின் விஷயம் கூறப்படுகிறது. இவ்வாறு 90வது படல கருத்து சுருக்கமாகும்.
1. விசேஷமான ஐஸ்வர்யத்தை உடைய லக்ஷ்மி தேவியின் தானத்தைக் கூறுகிறேன். ஆயிரம் ஸ்வர்ணத்தாலோ அல்லது அதில் பாதியான ஐநூறு தங்கத்தாலோ அல்லது அதிலும் பாதியான இருநூற்றி ஐம்பது சுவர்ணத்தாலோ
2. அல்லது அதிலும் பாதியான நூற்றி இருபத்தி ஐந்து சுவர்ணத்தாலோ லக்ஷணத்துடன் கூடிய மஹாலக்ஷ்மியை நிர்மாணிக்க வேண்டும். நூற்றி எட்டு நிஷ்கங்களாலும் இந்த மஹா லக்ஷ்மியை நிர்மாணம் செய்யலாம்.
3. முன்பு கூறியதைப்போல் வேதிகையுடன் மண்டலத்துடன் மண்டபத்தை நிர்மாணித்து அதில் மஹாவிஷ்ணுவையும் விஷ்ணுவின் இடது பாகத்தில் மஹாலக்ஷ்மியையும் ஸ்தாபிக்க வேண்டும்.
4. மஹாலக்ஷ்மியின் மந்திரத்தாலோ அல்லது ஸ்ரீ ஸூக்தத்தினாலோ அர்ச்சித்து, பூஜிக்க வேண்டும். மஹா விஷ்ணுவை, விஷ்ணு காயத்ரீ மந்திரத்தால் சந்தனம் புஷ்பம் இவைகளால் அர்ச்சிக்க வேண்டும்.
5. சிவபூஜை செய்து விசேஷமாக ஹோமத்தை செய்ய வேண்டும். ஆசார்யன் முன்பு கூறிய வண்ணம் ஒரே ஹோமமாக விஷ்ணு, மஹாலக்ஷ்மி இவர்களுக்குச் செய்ய வேண்டும்.
6. ஸ்வாமிக்கு ஆயிரம் கலசங்களால் ஸ்நபனம் செய்து பூஜித்து அபிஷேகம் செய்ய வேண்டும். ஏதாவது கூறப்படாமல் இருந்தால் முன்பு கூறியதைப் போல் செய்யவேண்டும்.
இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் லட்சுமி தான விதியாகிற தொண்ணூறாவது படலமாகும்.
படலம் 88: கணேச தான முறை...
படலம் 88: கணேச தான முறை...
88 வது படலத்தில் கணேச தான முறை கூறப்படுகிறது. முதலில் எல்லா பாபங்களையும் போக்கக்கூடிய கணேச தான முறை கூறுகிறேன் என்பது பிரதிக்ஞை. ஆசார்யன் துலாரோஹ முறைப்படி வேதிகை, மண்டலம், குண்டம் இவைகளுடன் கூடிய மண்டலம் அமைக்கவும். அதன் நடுவில் லோக பாலகர்களுடன் கூடியதாக பரமேஸ்வரனை பூஜிக்கவும். அதற்கு வெளியில் 8 திக்கிலும் ஸ்வர்ணத்தால் செய்யப்பட்ட வினாயகர்களை ஸ்தாபிக்கவும். பிறகு ஆசார்யன் சந்தனம், புஷ்பம் இவைகளால் மூன்றாவது ஆவரணத்தில் உள்ள வினாயகர்களுடன் கூடியதான அந்த மூர்த்திகளை பூஜிக்கவும். பிரதான குண்டத்தில் ஸ்வாமியை பூஜிக்கவும். மற்ற 8 குண்டங்களில் வினாயகரை பூஜித்து ஹோமம் செய்யவும் என ஹோம விதி நிரூபிக்கப்படுகிறது. பிறகு ஈசான முதலான ஏழுதிக்குகளில் ஏழு பிராம்ணர்களையும் வடக்கு திக்கில் ஒரு கன்னிகையும் ஸ்தாபித்து சந்தன, புஷ்பங்களால் ஆசார்யன் பூஜிக்க வேண்டும். பூஜிக்கப்பட்ட அவர்களுடன் அந்தந்த மந்திரங்களால் வரிசையாக விக்னேஸ்வரர்களை கொடுக்க வேண்டும். இங்கு எந்த கர்மா கூறப்படாததாக உள்ளதோ அதை துலாரோஹ முறைப்படி செய்யப்பட வேண்டும் என செயல்முறை விளக்கம் கூறப்படுகிறது. இவ்வாறு 88வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.
1. எல்லா பாபங்களையும் போக்கக்கூடிய கணேச தானத்தை கூறுகிறேன். முன்புபோல் வேதிகை, மண்டலத்துடன் கூடிய மண்டபம் அமைக்க வேண்டும்.
2. அதன் நடுவில் திக்பாலர்களுடன் கூடிய கணேசரை ஆராதிக்க வேண்டும். அதன் வெளியில் கணேசரின் அஷ்ட வித்யேசர்களை பூஜிக்க வேண்டும்.
3. அவர்கள் அனைவரையும் தங்கத்தால் நிர்மாணிக்க வேண்டும். மூன்றாவது ஆவரணத்துடன் கூடிய கணேசர்களை சந்தனம் புஷ்பமிவைகளால் அலங்கரித்து
4. பிரதானத்தில் கணபதியை உத்தேசித்து ஹோமமும், எட்டு திசைகளிலும் வித்யேசர்களை பூஜித்து ஈசானம் முதலான எட்டு திக்குகளிலும் ஏழு பிராம்மணர்களை பூஜிக்க வேண்டும்.
5. வடக்கு திக்கில் ஆசார்யன் கன்னிகையை சந்தனம் புஷ்பம் முதலியவைகளால் பூஜித்து பிறகு ப்ராம்மணர்களுக்கு அந்தந்த மந்திரங்களைச் சொல்லி மஹாகணபதியை தானம் செய்ய வேண்டும்.
6. இதில் கூறப்படாதது ஏதாவது இருந்தால் துலாரோஹண விதியில் கூறிய முறைப்படி செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் கணேச தான விதியாகிற எண்பத்தி எட்டாவது படலமாகும்.
படலம் 87: கற்பக விருக்ஷ தான விதி...
படலம் 87: கற்பக விருக்ஷ தான விதி..
87 வது படலத்தில் கற்பக விருக்ஷ தான விதி கூறப்படுகிறது. முதலில் நூறு நிஷ்க ஸ்வர்ணத்தினால் கற்பக விருக்ஷம் அமைக்கும் முறை நிரூபிக்கப்படுகிறது. முதலில் கற்பக விருக்ஷம் பல கிளைகளை உடையதாகவும் பத்திர புஷ்ப ஸமன்விதமாகவும் பல பழங்களை உடையதாகவும் அமைக்கப்பட வேண்டும். இங்கு கல்பக விருக்ஷத்தின் அங்கங்களான குச்சி, கிளை, பக்க கிளைகள் இலை, துளிர், முதலியவைகள் எல்லாம் நவரத்தினங்களால் செய்யப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. கலபக விருக்ஷத்தின் மேடை ஸ்படிகத்தினால் செய்ய வேண்டும். விருக்ஷத்திற்கு ஒரு முழ அளவே உயரமாக செய்யவேண்டும் என கூறப்படுகிறது. துலாரோஹ விதியில் கூறிப்பட்டுள்ளபடி வேதிகை, மண்டலம், குண்டம் இவைகளுடன் கூடிய மண்டபம் அமைக்கவும். அதன் மத்தியில் கற்பக விருக்ஷத்தை ஸ்தாபித்து கற்பக விருக்ஷத்தின் அடியில் லோக பாலகர்களுடன் கூடியதாகிய லிங்கம் அமைக்கவும். லோக பாலகர்களுடன் கூடிய ஈஸ்வரனை ஆசார்யன் முறைப்படி பூஜிக்கவும். பிறகு ஈஸ்வரனின் பொருட்டும், சிவபக்தர்களுக்கும் கல்பக விருக்ஷம் தானம் செய்யப்பட வேண்டும். இங்கு சொல்லப்படாத கர்மாவை துலாரோக விதிப்படி செய்யவும். இவ்வாறு 87வது படலகருத்து சுருக்கமாகும்.
1. கல்பக மர தானத்தைக் கூற இருக்கிறேன், நூறு நிஷ்க தங்கத்தால் மரத்தை
2. பல கிளைகளுடன் கூடியதும் இலை, புஷ்பங்களுடன் கூடியதும், பல விதமான பழங்களுடன் கூடியதும், நல்ல அழகுடன் கூடியதுமான
3. கற்பக வ்ருக்ஷத்தை நிர்மாணிக்க வேண்டும். அதன் கிளைகளில் முத்துக்களால் செய்யப்பட்ட மாலையும் தொங்கவிட்டு மரகதத்தால் பட்டைகளை விசித்ரமாக நிர்மாணிக்க வேண்டும்.
4. பவழங்களால் தளிர்களை தயாரிக்க வேண்டும். பத்மராகத்தால் விதவிதமான பழங்களை நிர்மாணிக்க வேண்டும்.
5. கல்ப விருக்ஷத்தின் அடிபாகத்தை, நீலக் கற்களால், நிர்மாணிக்கவும். அடிக்கிளையை வைரத்தால் தயாரிக்கவும், மரத்தின் நுனியை வைடூரியத்தாலும், புஷ்யராகத்தாலும்
6. மரத்தின் உச்சியை, கோமேகத்தால் செய்யவும். மரத்தின் மேல் கிளையை சூர்ய காந்த கற்களாலோ
7. கல்பக விருக்ஷத்தின் வேதியை சந்திர காந்தக் கற்களாலோ அல்லது ஸ்படிகத்தாலோ நிர்மாணிக்கவும். கல்பக விருக்ஷத்தின் உயரம் (சுற்றளவு) சாண் (குறிப்பு விதஸ்தி பெருவிரலுடன் பரப்பப்பட்ட விரல்கள் உள்ள இடம்)
8. எட்டு கிளைகளின் அளவும், விஸ்தரிப்பும் மேல் நோக்கி இருக்க வேண்டும். கல்பக வ்ருக்ஷத்தின் அடியில் திக்பாலர்களுடன் கூடிய சிவலிங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும்.
9. வேதிகையும், மண்டபத்தை நிர்மானித்து மண்டலத்துடன் கூடியதாகவோ அல்லது மண்டலம் இல்லாமலோ அதன் நடுவில் கல்பக விருக்ஷத்தை ஸ்தாபித்து
10. திக்பாலர்களின் ஆவரணங்களுடன் கூடிய பரமேஸ்வரனை பூஜிக்க வேண்டும். சிவார்ப்பணம் செய்து கல்பக விருக்ஷத்தை சிவாம்சமான சிவபக்தர்களுக்கு தானம் செய்ய வேண்டும்.
11. இங்கு சொல்லப்படாததை துலாபாரத்தில் கூறியது போல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் கல்பதான விதியாகிற எண்பத்தி ஏழாவது படலமாகும்.
படலம் 86: தங்க பூமி தான முறை...
படலம் 86: தங்க பூமி தான முறை...
86 வது படலத்தின் ஸ்வர்ண பூமிதானம் முறை கூறப்படுகிறது. பிறகு 7 த்வீபம், 7 சமுத்திரம், பர்வதம் இவைகளோடு கூடியதும் எல்லா தீர்த்தத்தோடு கூடியதும் மத்தியில் மேருமலையுடன் கூடியதான பூமியை ஆயிரம், தங்கங்களால் ஒரு முழங்கை அளவு செய்து அதை 9 கண்டமாக்கி பல முனிவர்கள் கூடியதாக பாவிக்கவும். துலாரோக முறைப்படி பூஜை ஹோமம் செய்யவும். மேருமலை முதலியவைகள் அந்தந்த பீஜமந்திரத்தினால் வரையவும். பரமேஸ்வரனை துலாரோஹன முறைப்படி ஆயிரம் கலசம் முதலியவைகளால் ஸ்நபனம் செய்து மஹாபூஜை செய்யவும், பிறகு அந்த பூமியை, சிவன் முதலானவர்களுக்கு கொடுக்கவும் என்று செயல்முறை விளக்கம் கூறப்படுகிறது. இவ்வாறாக 86வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.
1. தங்கமயமான பூமிதானத்தை கூறுகிறேன், ப்ராம்மணோத்தமர்களே, ஆயிரம் ஸ்வர்ணங்களால் நான்கு மூலைகளுடன் கூடியதும்
2. ஒரு முழ அளவுள்ளதும் ஏழு தீவுகளுடன் கூடியதும் ஸமுத்ரம், மலைகளுடனும் எல்லா தீர்த்தங்களுடன் கூடியதும்
3. நடுவில் மேரு பர்வதத்துடனும் கூடியதும் அழகாகவும் பல முனிவர்களுடனும் ஒன்பது கண்டங்கள் நிறைந்ததாகவும் உள்ள பூமியை நிர்மாணிக்க வேண்டும்.
4. முன்போலவே தேவபூஜையும் ஹோமமும் செய்ய வேண்டும். மேரு முதலியவைகளை அதன் பீஜாக்ஷரங்களால் ஆசார்யன் பூஜிக்க வேண்டும்.
5. பரமேஸ்வரனுக்கு ஆயிரம் கலசங்களால் அபிஷேகம் செய்யவும். முன்பு கூறியது போல் பூஜைகளை செய்ய வேண்டும்.
6. தங்கமயமான பூமியானது, சிவஸ்வரூபமாக விளங்கும் பெரியோர்களுக்கு தானமாக அர்ப்பணிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் சுவர்ண பூமிதான முறையாகிற எண்பத்தியாறாவது படலமாகும்.
படலம் 85 : எள்ளினால் ஆன மலை தானம் செய்யும் முறை...
படலம் 85 : எள்ளினால் ஆன மலை தானம் செய்யும் முறை..
.
85 வது படலத்தில் திலபர்வத தான முறை கூறப்படுகிறது. துலாரோகதான முறைப்படி மண்டலத்தின் கூடியதான மண்டபம் அமைக்கவும். ஆனால் அங்கு வேதிகையின்றி வெளி வீதியில் குண்டங்களை முறைப்படி செய்யவும் என கூறப்படுகிறது. மத்தியில் கல்பிக்கப்பட்ட மண்டலத்தில் பஞ்ச கவ்ய பிரோக்ஷணம் செய்து 100 அடி அளவுள்ள மூங்கில் முதலான திரவ்யங்களால் அமைக்கப்பட்ட தண்டத்தை அமைக்கவும். அதில் வியோம வியாபி மந்திரம் கூறி எள்ளை வைக்கவும். அங்கு எள்ளின் அளவு தண்டத்திலிருந்து ஒரு சாண் அளவு அல்லது 8 அங்குல அளவு அல்லது 4அங்குலமோ அதிகமாக இருக்கவேண்டும் அல்லது தண்ட அளவு முறையுமோ செய்யவேண்டும். ஆனால் குறைவுள்ளதாக செய்யக்கூடாது. பிறகு எள்ளை வஸ்திரங்களால் சத்யோ ஜாதாதி மந்திரத்தினால் மூடவும். அப்பேற்பட்ட எள்ளால் ஆன மலையில் தேச காலத்தை சங்கல்பித்து பூஜிக்கவும் என்று திலபர்வத அமைக்கும் முறை பிறகு திலபர்வதத்தின் முடிவில் க்ஷ்மா (பூமி) முதலிய அஷ்ட மூர்த்திகள் அதன் அதிபர்களான 8 சர்வாதி மூர்த்தீஸ்வரர்களும் 3 நிஷ்க்க பிரமானத்தால் நிர்மாணித்து வைக்கவும். திலபர்வதத்தின் மத்தியில் தேவனை விதானம் அறிந்த ஆசார்யன் யஜமானனுடன் கூடி பூஜிக்கவும். அப்பொழுது இந்த எல்லார்க்கும் தேவனான தேவதேவேசன், விருபத் த்வஜன், இவனுக்கு அர்சனை செய்யப்பட்ட போது எல்லா பலனும் நிச்சயமாக ஏற்படுகிறது என கூறி எஜமானனுக்கு தில மத்யத்திலிருக்கும் தேவ தேவனான, உமாபதியும் தரிசிக்க வைக்க வேண்டும் என கூறப்படுகிறது. இங்கு கூறப்படாத சிறிய பூஜையான அர்சனை, ஹோமம், ஸ்வாமிக்கு ஆயிரம் கலச ஸ்நபனம் மற்ற எல்லாம் துலாரோஹன முறைப்படி செய்யவும்.
பிறகு பரமேஸ்வரனை விசர்ஜனம் செய்து திலதானபுரஸ்ஸரம், சிவனின் பொருட்டு சிவதர்மத்தை அனுஷ்டிப்பவனுக்கு திலபர்வதத்தை கொடுக்கவும். பிறகு இந்த தானத்திற்கு மேன்மையான வேறு தானம் மூவுலகிலும் இல்லை என கூறப்படுகிறது. பிறகு வேறுமுறைப்படி அல்பத்திரவ்யம் பெரிய பலத்தை கொடுக்கும் தானம் என கூறப்படுகிறது என்று கூறி வேறு முறையினால் தில பர்வதம் அமைக்கும் முறை கூறப்படுகிறது. பிறகு ஆசார்யன் பசுஞ்சாணத்தால் மெழுகப்பட்ட தேசத்தில் வஸ்திரங்களை விரித்து தசாக்ஷர மந்திரத்தினால் அங்கு ஆறு மரக்கால் அளவுள்ள எள்ளை ஸ்தாபிக்கவும். கர்ணிகை கேசரங்களுடன் கூடிய எட்டு தளத்துடன் கூடிய பத்மத்தை 10 நிஷ்க அளவினால் செய்து எள்ளின் நடுவில் ஸ்தாபிக்கவும். அந்த பத்மத்தின் நடுவில் பரமேஸ்வரனை பூஜிக்கவும். ஐந்து நிஷ்க தங்கத்தினால் மனோன்மணியை அமைத்து அவ்வாறே மூன்று நிஷ்க்க தங்கத்தினால் வர்மை முதலிய 8 சக்திகளை செய்து பத்மத்தின் வடக்கு பாகத்தில் வைத்து முறைப்படி பூஜிக்கவும், அதற்கு வெளிபாகத்தில் அதே மூன்று நிஷ்க அளவில் சொர்ணமயமான எட்டு வித்யேஸ்வரர்களை அமைத்து ஸ்தாபித்து முறைப்படி பூஜிக்கவும். பிறகு உயர்ந்ததான ஆசார்யன், எல்லா கார்யத்தையும் திரவ்யங்களையும் எள்ளுடன் கூடியதாக யஜமானன் சிவபக்தர்களுக்கு கொடுக்கக் கூறவும் என்று செயல்முறை விளக்கம் நிரூபிக்கப்படுகிறது. இவ்வாறு 85ம் படலத்தின் கருத்து சுருக்கமாகும்.
1. ஓ அந்தணர்களே, திலபர்வததானம் பற்றி இப்பொழுது சொல்லப்படுகிறது. முன்புபோல் வேதிகை இல்லாமல் மண்டபம் அமைத்து
2. வெளி பாகத்தில் முன்கூறிய விதிப்படி குண்டங்களை அமைக்க வேண்டும். நடுவில் மண்டலம் அமைத்து பஞ்சகவ்யத்தால் ப்ரோக்ஷணம் செய்து
3. வெட்டப்படாத புதிய வஸ்திரங்களால் மறைத்து தும்பை புஷ்பங்களை பரப்பி புண்யாஹ ஜலத்தால் பிரோக்ஷித்து நூறு அடி உயரமுள்ள
4. மூங்கில் முதலியவைகளால் செய்யப்பட்ட தண்டத்தையும் அமைத்து, வ்யோம வ்யாபி மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு எள்ளையும் பரப்ப வேண்டும்.
5. தண்டத்திலிருந்து ஓட்டை சாணளவு அல்லது எட்டு அங்குலம் அளவு அல்லது நான்கு அங்குலம் அளவிற்கு அதிகமாகவோ எள் பரப்ப வேண்டும்.
6. தண்டத்தின் (உயர) அளவுக்கு சமமாகவோ எள்ளைப் பரப்பலாம். குறைவாக செய்யக் கூடாது, எள்ளை பரப்பி ஸத்யோஜாதாதி மந்திரங்களைச் சொல்லி வஸ்திரங்களால் எள்ளை மூட வேண்டும்.
7. பர்வதத்தின் ஸமீபம் நல்ல இடத்தை ஏற்படுத்தி, எள் மலையின் பக்கங்களில் மூர்த்தி மூர்த்தீஸ்வரர்களை விசேஷமாக பூஜிக்க வேண்டும்.
8. செய்யப்பட்ட மூன்று நிஷ்க அளவால் க்ஷமா முதலான மூர்த்திகளையும் சர்வன் முதலான மூர்த்தீஸ்வரர்களையும் பூஜிக்கவும், அதுபோல் திலபர்வதத்தின் நடுவில் தேவனான பரமசிவனை பூஜிக்க வேண்டும்.
9. முறைப்படி சாஸ்த்ரமறிந்த ஆசார்யர் யஜமானரைக் கொண்டு பூஜையையும் செய்து எள் நடுவில் தேவதேவனான ஸ்ரீ உமாபதியை யஜமானனுக்கு காண்பிக்க வேண்டும்.
10. இவனோவெனில் வ்ருஷபக் கொடியுள்ள தேவதேவனான பரமேச்வரன் என்னை இப்படி பூஜை செய்த பொழுது எல்லோரும் நினைத்தது எல்லாம் நிச்சயம் நிறைவேறும்.
11. இங்கு சொல்லப்படாததான அர்ச்சனை, ஹோமம், ஸஹஸ்ர கலச ஸ்நபனம் இவையெல்லாம்
12. துலா ரோஹணத்தில் முன் சொன்னபடி செய்ய வேண்டும். இப்படி பூஜை செய்து தேவதேவனான ஈச்வரனை விஸர்ஜனம் செய்து சிவ சின்னங்களோடு சிவதர்மத்தில் நின்று ஒழுகுகின்ற சிவஸ்வரூபமானவர்க்கு
13. ஜலதானத்துடன் எள் மலையை கர்த்தா தானம் செய்ய வேண்டும். இதைக் காட்டிலும் உயர்ந்த வேறுதானம் மூன்று உலகத்திலும் இல்லை.
14. அல்லது வேறு விதமாகவும் கொஞ்ச திரவ்யத்துடனும் பயன் அதிகம் உள்ளதுமான எப்பொழுதும் எல்லா காலத்திலும் செய்யக்கூடியதுமான திலதானம் சொல்லப்படுகிறது.
15. கோமயத்தால் மெழுகப்பட்ட இடத்தின் மேல் புதிய வஸ்திரத்தை விரித்து அதில் (மூன்று) முக்குறுணி என்ற அளவுடைய எள்ளை தசாக்ஷர மந்திரத்தால் பரப்ப வேண்டும்.
16. பத்து ஸ்வர்ணங்களால் (தங்கம்) எட்டு தளங்களோடு கூடிய கர்ணிகையுடைய (தாமரையை) கேஸரங்களோடு அமைத்து அதற்கு மேல் பாதியளவு அளவால்
17. ஐந்து தங்கங்களால் தாமரை அமைத்து அதன் நடுவில் சிவபெருமானை பூஜிக்க வேண்டும். அவருக்கு இடது பக்கத்தில் இரண்டரை தங்கங்களால் மணோன்மனீ தேவியையும் அமைக்க வேண்டும்.
18. மூன்று நிஷ்க தங்கங்களால் வாமாதி எட்டு சக்திகளையும் அமைத்து அதன் வெளியில் அதே மாதிரி மூன்று நிஷ்க தங்கத்தால் எட்டு வித்யேச்வரர்களையும் அமைக்க வேண்டும்.
19. ஆசார்யன் முறைப்படி அவற்றை பூஜித்து எஜமானனை அவை எல்லாவற்றையும் எள்ளோடு கூட சிவபக்தனுக்கு கொடுக்கும்படியாகச் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் தில (எள்மலை) பர்வததான விதியாகிற எண்பத்தைந்தாவது படலமாகும்.
படலம் 84: ஹிரண்ய கர்ப தான விதி...
படலம் 84: ஹிரண்ய கர்ப தான விதி...
84 வது படலத்தில் ஹிரண்ய கர்பதான விதி கூறப்படுகிறது. முதலில் எல்லா பொருளையும் கொடுக்க கூடியதான ஹிரண்ய கர்ப தானம் கூறப்படுகிறது என்பது பிரதிஞை. தங்கத்தினால் கீழ் மூடி மேல் மூடியுடன் கூடிய பேழை அமைக்கும் முறை கூறப்படுகிறது. அந்த பேழையை மரத்தினால் செய்து அதை தங்க தகட்டினால் கவர்ந்திருக்கும்படி செய்யவும் என கூறப்படுகிறது. அந்த பேழையில் முப்பத்திஆறு தத்வங்களை பூஜிக்கும் முறை, கூறப்படுகிறது. பிறகு துலாரோஹ முறைப்படி வேதிகையுடன் கூடிய இடத்தை மண்டலத்துடன் அமைத்து மத்தியில் நெல்லை பரப்பி அதற்கு மேல் புதிய வஸ்திரங்களால் போர்த்தப்பட்ட பேழையை வைத்து அதில் உளுந்து அளவில் துவாரம் செய்து அதில் பஞ்ச கவ்ய பஞ்சாமிருதங்களால் ஈசான மந்திரத்தை கூறி நிரப்பவும். பிறகு எவ்வாறு சிவமயம் ஏற்படுமோ அவ்வாறு காயத்திரியால் பூஜிக்கவும். பிறகு ஆசார்யன் சிவ மந்திரத்தை கூறி மூடவேண்டிய வஸ்திரத்தால் பேழையை மூடவும். பிறகு ஆசார்யன் 16 சம்ஸ்காரமான கர்பா தானம் முதலியவைகளை செய்யவும் என கூறப்படுகிறது. இங்கு தான விதி கூறப்படவில்லை. ஆனால் பிறகு சம்ஸ்காரங்களை செய்யவும் என்று அங்கு விசேஷம் கூறப்படுகிறது எனக்கூறி விசேஷமான முறை கூறப்படுகிறது. பிறகு ஸர்வ அலங்கார பூஷிதனாயும், மனைவியுடன் கூடியவனுமான கர்த்தாவை அழைத்து அவனுக்கே கர்பாதானம் முதலிய 16 சம்ஸ்காரங்களை செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு சீமந்த கர்ம முறை கூறப்படுகிறது. பின்பு மனைவியின் அருகில் 30 நிஷ்க்க அளவுள்ள எல்லா அலங்காரத்துடன் கூடியதான கன்னிகையை வைத்து சிவன் முதலானவர்களுக்கு நிவேதிக்கவும். அன்ன பிராசன கர்மாவில் பிராம்மணர்களுக்கு போஜனம் செய்விக்கவும். ஹ்ருதயலேகா மந்திரம் உச்சரித்து எல்லா கர்மாவையும் முடிக்கவும். இங்கு சொல்லப்படாததை துலாபார முறைப்படி செய்யவும் என்று செயல்முறை விளக்கம் கூறப்படுகிறது. முடிவில் யார் இவ்வாறு செய்கிறானோ அவன் முடிவில்லாத பயனை அனுபவிக்கிறான் என கூறப்படுகின்றது. இவ்வாறு 84வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.
1. எல்லா விதமான கார்ய ஸித்தியை கொடுக்கக் கூடிய நிறைய தங்கதானத்தைப்பற்றி கூறுகிறேன். ஆயிரம் நிஷ்க அளவால் (பவுனால்) கீழ் பாத்திரம் (தங்கம் வைக்கக்கூடிய பாத்திரம்) செய்ய வேண்டும்.
2. மேலுள்ள பாத்திரம், அதன் பாதியிலோ அல்லது இரண்டாயிரம் நிஷ்க அளவாலோ அல்லது முக்கால் பங்கோ அல்லது அரை பங்கோ அல்லது ஒன்றே கால் பங்கோ ஒன்றரை பங்கோ,
3. இரண்டு பாகம் அதிகமாகவோ அல்லது முடிந்த வரையிலாவது மேல் பாத்ரம் (மூடி) அமைத்து அல்லது மரத்தினாலாவது அதை தங்கப்பட்டைகளால் (தகடு) சுற்ற வேண்டும்.
4. அதன் அடி பதினைந்து அங்குலம் முதல் ஒவ்வொரு அங்குலமாக கூட்டி பத்தொன்பது அங்குலம் வரை அடி பாத்திரத்தின் விஸ்தாரம் கூறப்பட்டுள்ளது.
5. ஐம்பத்தொன்று அங்குலம் முதல் ஒவ்வோர் அங்குலமாக கூட்டி எழுபத்தைந்து மாத்ர அங்குலம் வரை பாத்திரத்தின் உயரம் கூறப்பட்டுள்ளது.
6. அகல, உயரத்தை பத்து பங்கின் ஓர்பாகம் செய்து ஒவ்வோர் அம்ச அதிகரிப்பால் பாதிக்கும் அதிகமாவுள்ள பரப்பளவால் முகத்தின் அகல அளவாகும்.
7. பிறகு பாதத்துடன் கூடியதாக்கி பாத்திரத்தின் பக்க அளவிலிருந்து வெளிக் கொணர்ந்ததாக இருக்க வேண்டும். மூன்று மாத்ரையிலிருந்து ஒன்பது மாத்ரை வரை வெளிப்படுத்தும் அளவு கூறப்பட்டுள்ளது.
8. பாத்திரத்தின் பாதம் பாத்திரத்தின் உயரம் எவ்வளவோ அவ்வளவு உயரமுள்ளதாகவோ அல்லது அதில் பாதியளவு உள்ளதாகவோ, முக்கால் அளவு உள்ளதாகவோ சமமாகவோ பலகையின் கனம் இருக்கலாம்.
9. பாதுகைக்கு மேல் நீளமோ, அகலமோ, கிண்ணத்தின் பக்கச்சுவருக்கு வெளியில் உள்ளதாக அமைக்கவும், பேழையின் வ்யாப்தியானது மாயாதத்வம் வரையிலுமோ, ப்ரக்ருதித்வம் வரையிலுமோ ஆகும்.
10. மேல்பாகம் சிவதத்வம் வரையிலும், மத்ய பாகம் புருஷதத்வம் வரையிலும் ஆகும், அதுபோலவே ஆசார்யன் தன்னையும் பாவித்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஹிரண்ய கர்பத்தின் விதி சொல்லப்படுகிறது.
11. மண்டபமானது வேதிகையுடனும் மண்டலத்துடனும் அமைத்து நடுவில் முன்போல் நெல் போட்டு
12. அதன்மேல் பேலாவை வைத்து புதிய வஸ்திரங்களால் அலங்கரித்து, இடைவெளி இல்லாமல் உளுந்தளவு த்வாரத்தில் பாலை (பேழையில்) நிரப்ப வேண்டும்.
13. அல்லது பஞ்ச கவ்யத்தாலோ பஞ்சாமிருதத்தாலோ அதை நிரப்பி ஈசானம் முதலிய பஞ்ச ப்ரம்ம மந்திரங்களால் அபிமந்திரணம் செய்ய வேண்டும். (நிரப்பவேண்டும்)
14. சிவகாயத்ரியாலும் பூஜித்து பிறகு சிவமயம் ஆகும்படியாக ஆசார்யன் பூஜிக்க வேண்டும். ஓ உயர்ந்த பிராம்மணர்களே, முன் சொன்னது போலவோ அல்லது சாமான்யமாகவோ பூஜிக்க வேண்டும்.
15. கர்த்தா கிழக்கு முகமாக உட்கார்ந்து கவுரீ காயத்ரியை ஜபிக்க வேண்டும். ஆசார்யன் சிவ மந்திரத்தை ஜபித்துக் கொண்டு கர்த்தாவை வஸ்த்திரத்தால் மூட வேண்டும்.
16. கர்பாதானம் முதலிய பதினாறு ஸம்ஸ்காரங்களையும் ஆசார்யன் செய்து வைக்க வேண்டும். பிறகு அதுபற்றி விசேஷமாகக் கூறப்பட்டுள்ளது.
17. எல்லா அலங்காரங்களால் அலங்கரிக்கப்பட்டவரும், மனைவியோடு கூடியவருமான கர்த்தாவை அழைத்து அவர் மனைவிக்கு கர்பதானம் முதலிய கிரியைகளை செய்ய வேண்டும்.
18. மனைவியின் வலது மூக்கில் அருகம்பில்லின் ரஸத்தையும் (சார்) இருபத்தொன்று அத்திப் பழங்களை பிழிந்து சாரையும் ஊற்ற வேண்டும். (பும்ஸவனம்)
19. தர்பைகளை கொண்டுவந்து தேவீ மந்திரத்தைச் சொல்லி ஸீமந்த கர்மாவை செய்ய வேண்டும். எல்லா அலங்காரங்களால் பிரகாசிக்கின்ற முப்பது நிஷ்க தங்கத்தால் செய்யப்பட்ட கன்யாபிரதிமையை
20. கர்த்தாவின் மனைவி பக்கத்தில் உட்கார வைத்து சிவனான ஆதிசைவரிடம் அர்ப்பணம் செய்ய வேண்டும். அன்னப்ராசனத்தின் பொழுது பாயஸத்துடன் பிராம்மஹணர்களுக்கு உணவளிக்க வேண்டும்.
21. ஹ்ருதய மந்திரம் உச்சரித்து எல்லா கர்மாவையும் செய்ய வேண்டும். இவ்வாறு இங்கு சொல்லப்பட்டது, சொல்லப்படாததை துலாரோஹணத்தில் சொன்னவாறு செய்ய வேண்டும்.
22. இவ்வாறு எவன் செய்கிறானோ அவன் எல்லா நன்மையையும் அடைகிறான்.
இவ்வாறு உத்திரகாமிக மஹாதந்திரத்தில் ஹிரண்ய கர்ப தான விதியாகிற எண்பத்தி நாலாவது படலமாகும்.
படலம் 83: துலாபாரம் முதலிய பதினாறு தான விதி...
படலம் 83: துலாபாரம் முதலிய பதினாறு தான விதி...
83 வது படலத்தில் துலா ரோஹ தான விதி கூறப்படுகிறது. முதலில் பிராம்ணர் முதலிய நான்கு வர்ணத்திவர்களுக்கும் விசேஷமாக அரசர்களுக்குமான விஷயத்தில் துலா ரோஹணம் முதலிய 16 தான விதி பற்றி கூறுகிறேன் என்பது நிச்சயமாகும். பிறகு துலாரோஹணம், முதலிய 16 தானங்கள் கிரஹணம் முதலிய காலங்களில் நல்ல இடத்தில் செய்யவும் என்று காலமும், தேசமும் கூறப்படுகிறது. முன்பு துலாரோகணம் முதலிய 16 தான விதியில் சாமான்யமாக மண்டபமோ, பந்தலோ, அமைக்கவும் என கூறி மண்டபம் அமைக்கும் முறையும், வேதிகை, குண்டம் அமைக்கும் முறையும் கூறப்படுகிறது. அங்கு மண்டபத்திலோ, பந்தலிலோ, வேதிகை அமைத்து அதன் சுற்றிலும் 9 நாற் கோண குண்டங்களும் அமைக்கவும். இவ்வாறு மண்டப அமைப்பு முறை கூறப்பட்டது. பிறகு தராசு அமைக்கும் முறை நிரூபிக்கப்படுகிறது. தராசின் தண்டம் முதலிய யோக்யமான வஸ்த்துக்களுக்கு தேவையான மரங்கள் கூறப்படுகின்றன. தராசின் எல்லா உருப்புகளும் ஒரேமரத்தினாலேயோ அல்லது பல மரங்களாலோ இருக்கலாம். பிறகு தராசு அமைத்து மனித உயரம் குழி தோண்டி ஸமமாக பாதசிலையை வைத்து, அதற்கு மேல் தராசு ஸ்தாபித்து, மணல் முதலியவைகளால் கெட்டிப் படுத்தவும் என கூறப்படுகிறது. பிறகு இவ்வாறு எல்லாம் தயார் செய்து சில்பி விசர்ஜனம் செய்து புண்யாக வாசனம் செய்து அலங்காரம் செய்யப்பட்டதும், மங்களாங்குரம் உடையதும், பலவித பழங்களுடன் கூடியதும் முன்பு ஏற்படுத்தப்பட்ட மண்டபத்தில் ஸர்வதோபத்திர மண்டலம் செய்யவும் மண்டபத்தின் 8 திக்கிலும், வச்சிரம் முதல் சூலம் வரையிலான 10 அஸ்திரங்களை வைக்கவும். சூலத்தின் இடப்பாகத்தில் சக்கரத்தையும் தட்சிண பாகத்தில் பத்மத்தையும் ஏற்படுத்தவும் என அறிவிக்கிறார். பூஜாவிதி நிரூபிக்கப்படுகிறது. முதலில் மண்டலத்தின் மத்தியின் இடது பாகத்தில் கவுரியுடன் கூடிய தேவதேவேசனை சந்தன, புஷ்பங்களால் பூஜித்து தெற்குபாகத்தில் பிரம்மாவையும், வடக்குபாகத்தில் விஷ்ணுவையும், சுற்றிலும் திக் பாலகர்களையும் வைத்து பூஜிக்கவும் என கூறப்படுகிறது. பிறகு நடுவில் சூர்யனையும், ஆக்னேயத்திலோ, நிருருதியிலோ பாஸ்கரன் வாயுதிக்கில் பானுவையும், ஈசான திக்கில் ரவியையும், நிருருதிதிக்கிலோ, ஆக்னேயதிக்கிலோ திவாகரனை வைத்து சந்தனம் புஷ்பம் இவைகளால் பூஜிக்கவும் என கூறப்படுகிறது. இங்கு பாஸ்கரன் திவாகரன், விஷயத்தில் திசை வேறுபாடாக கூறப்படுகிறது. பிறகு உஷா, பிரபா, பிரக்ஞா, சந்த்யா, சாவித்திரி, இவைகளை மத்ய திக்முதல் ஈசான திக்வரை வைத்து சந்தனம், புஷ்பம் இவைகளால் பூஜிக்கவேண்டும் என கூறப்படுகிறது.
நிருருதி திக்கில் விஸ்தாரா, ஆக்னேய திக்கில் சுதாரா வாயுதிக்கில் போதனா, ஈசான திக்கில் ஆப்யாயனி, மத்தியில் சூர்யன் ஆகிய இவர்களை வைத்து பூஜிக்க வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு பிரபூத, விமல, சார, ஆராத்ய முதலிய பெயர் உள்ள ஆசனங்களை கிழக்கு முதல் வடக்கு வரையிலும் மத்தியில் அந்த சூர்யனுடைய பெயரை பூஜிக்கவும் என கூறப்படுகிறது. பிறகு தீப்தா, முதலிய 8 சக்திகளும் கிழக்கு முதல் மத்யபாகம் வரையிலாக அர்ச்சித்து பூஜிக்கவும். சந்திரன் முதல் கேது வரையிலான 8 கிரகங்களையும் பூஜிக்கவும் என பூஜை முறை கூறப்பட்டது. பிறகு மந்திரத்துடன் கூறி 9 குண்டங்களிலும் செய்யவேண்டிய ஹோமம் செய்யும் முறை கூறப்பட்டுள்ளது. பிறகு மண்டலத்தில் பூஜிக்கப்பட்ட எல்லா தேவர்களையும் குண்டத்தில் பூஜித்து ஹோமம் செய்யவும். பூர்ணாஹுதி, முடித்து அரசர்களின் துலாரோக கிரியையானது அனுஷ்டிக்கவும் என அறிவிக்கப்படுகிறது. பின்பு பரமேஸ்வரனை 1000 கலசங்களாலோ பஞ்சாமிருத பஞ்சகவ்ய, பால் முதலிய திரவ்யங்களாலோ அபிஷேகம் செய்து பிரபூத ஹவிசுடன் கூடிய பெரிய பூஜை செய்ய வேண்டும். பிராம்மணர்களுக்கு உணவு அளிக்க வேண்டும். பிறகு துலா ரோஹண கிரியையானது ஆசரிக்கவும் என்று துலாரோஹண விஷயத்தின் நடைமுறை கூறப்படுகிறது. பிறகு துலாரோகவிதி விளக்கப்படுகிறது. பின்பு ஸ்னநாம் செய்தவரும் வெண்மையான வஸ்திரம் சந்தன பூச்சு உடையவரும் எல்லா அணிகலன்களை உடையவரும் வெள்ளைமாலை தரித்தவரும் ரக்ஷõபந்தனம் செய்தவரும் கத்தி, கேடயம் இவைகளை தரித்தவருமான அரசனை கூப்பிட்டு சிவதீர்த்தத்தால், சிவ மந்திரத்தால் அரசனை பிரோக்ஷணம் செய்யவும். பிறகு ஆசார்யன் புண்யாக வாசனம் செய்து பூதசுத்தி முதலாக அங்கந்நியாஸம் கரன்யாசம் செய்து கொண்டு மந்திரத்துடன் வேத கோஷ நாட்டியத்துடனும் சங்கீதத்துடனும் கூடிய அரசனையும் தங்கத்தையும் தராசில் ஏற்றவும் அப்பொழுது எஜமானனாகிய அரசன் ருத்திர காயத்திரி மந்திரம் ஜபிக்கவும் என கூறப்படுகிறது. தராசுவில் ஏற்றப்பட்ட சரீரத்துடன் அந்த தங்கம் எப்பொழுது சம எடையாக ஆகிறதோ அப்பொழுது துலா ரோஹம் செய்வதன் ஆகிறான் என்று அறிவிக்கப்படுகிறது. துலாரோஹண காலத்தில் வஸ்திர, ஸ்வர்ண, பூஷணம் இவைகளால் ஆசார்யனையும், ஹோமம் செய்தவர்களையும் பூஜிக்கவும். அவர்களுக்கு முறைப்படி தட்சிணை கொடுக்கவும் என கூறி தட்சிணை கொடுக்கும் முறை கூறுகிறார். அந்த காலத்தில் சிறையில் அடைக்கப்பட்ட எல்லா மனிதர்களையும் விடுதலை செய்யவும் என அறிவிக்கப்படுகிறது. இந்த துலா ரோஹண விதியானது 16 தான விதிகளில் சாமான்யமாக கூறப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு 83வது படல கருத்து சுருக்கமாகும்.
1. அந்தணர் முதலிய நான்கு வர்ணத்தார்களுக்கும் அரசர்களுக்கும் எல்லா விருப்பத்தையும் அளிக்கக் கூடிய பதினாறு தானங்களை கூறுகிறேன்.
2. விசேஷமாக கிரஹணம் முதலிய புண்ய காலங்களில் சுபமான இடத்தில் இருபது கை முழத்திலோ அல்லது பதினாறு கைமுழத்திலோ அல்லது எட்டு கைமுழத்திலோ
3. கொட்டகையோ, மண்டபமோ அமைத்து அதன் நடுவில் ஒன்பது, ஆறு, ஏழு கைமுழத்திலோ இரண்டு முழத்திலிருந்து அரை முழம் வரையிலோ வேதிகையை அமைக்க வேண்டும்.
4. பரப்பு அளவும் உயரமும் உள்ளதாகவும், பன்னிரெண்டு கம்பங்களோடு கூடியதும் வேதிகையும் (அமைத்து அதன் வெளியில்) அதை சுற்றி சதுரஸ்ரமான ஒன்பது குண்டங்களையும் அமைக்க வேண்டும்.
5. நான்கு வாயிற்படி உள்ளதும், நான்கு தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டதும், தர்பமாலை களோடு கூடியதும், திசைகளில் கொடிகளை யுடையதாயும்,
6. அஷ்ட மங்களம், விதானம் இவைகளோடு கூடியதுமான மண்டபம் அமைக்க வேண்டும். இங்கு கூறியது துலாபாரத்திற்கும் 16 தானங்களுக்கும் இது பொது (சாமான்யம்) ஆகும்.
7. வில்வம், அரசு, பலாசம் இன்னும் யாகத்திற்கு உபயோகமான மரங்களாலும் பலா, மா, கருங்காலி முதலிய மரங்களாலும் விசேஷமாக துலாதண்டத்திற்கு (தராசிற்கு) கூறப்பட்டுள்ளது.
8. ஒரே மரத்தாலானதும், அல்லது கலந்த மரமானாலும் தோஷமில்லை. பக்கவாட்டிலுள்ள ஸ்தம்பங்கள் ஏழு, ஆறு, ஐந்து கை முழங்கள் உயரமுள்ளனவாக இருக்க வேண்டும்.
9. மேல் உள்ள உத்தரம் ஆறு அல்லது எட்டு முழம் நீளமுள்ளதாக இருக்க வேண்டும். மும்மூன்று அங்குல குறைவாக ஒன்பது விதமாக அளவு கூறப்பட்டுள்ளது.
10. பக்கத்திலுள்ள கம்பங்களின் அகலத்தால் அவைகளின் நீளம் கூறப்பட்டுள்ளது. கால்பங்கு அதிகமானதாக முக்கால் பாகம் உயர்வாகவோ அமைக்க வேண்டும்.
11. தராசின் நீளமானது இரண்டு கரங்கள் அல்லது மூன்று கை முழங்களோடு இருக்க வேண்டும். விஷ்கம்பம் பத்து அங்குலம் இருக்க வேண்டும்.
12. விஸ்தாரம் ஒரு அங்குலம் அதிகமாகவோ, குறைவாகவோ இருக்க வேண்டும். முப்பத்தாறு அங்குலம் அளவுள்ளதாக நீளம் இருக்க வேண்டும்.
13. ஒன்பதங்குலத்தால் அகலமோ அல்லது ஐந்து யவையளவு உள்ளதாகவோ அமைக்கவும். நடுவிலிருக்கும் கம்பத்தின் உயரம் முப்பத்தாறு மாத்ரையளவு உள்ளதாக அமைக்க வேண்டும்.
14. தராசு கம்பத்தின் நுனி அடி, நடு பாகங்களில் தங்கத்தகடுகளால் அலங்கரிக்கப்பட வேண்டும். துலா தண்டத்தில் மூன்று பிடிப்பு (தொங்குகிற) சங்கிலிகள் போடப்பட்டிருக்க வேண்டும்.
15. பிடிப்பு சங்கிலிகள் தாமிரத்தாலோ, இரும்பினாலோ இருக்கலாம். நடுவிலும் மேலேயும் பிடிப்பு உள்ள தொங்கும் சங்கிலி அமைக்க வேண்டும்.
16. விட்டத்திற்கு தோரணம் என்ற பெயரும் உண்டு. அதன் நடுவில் கூர்மையான நாக்கு இரும்பினால் செய்யப்பட்ட கூம்பு போன்று இருக்க வேண்டும். அதை அந்த இரும்பு முனையால் நன்கு சேர்க்க வேண்டும்.
17. சேர்க்கப்பட்ட ஆணியையும், வலயத்தையும், ஓட்டையோடும் கூடியதாக இருக்க வேண்டும். ஏழு, எட்டு, ஆறு, நூறு மாத்ரை அளவுள்ளதாகவும் தாம்பிரத்தால் தாங்கும் தட்டு செய்யப்பட வேண்டும்.
18. ஒரு அங்குலம் அளவுள்ள நான்கு துவாரங்களோடு கூடிய நான்கு வளையங்கள் ஒரு முழ சுற்றளவு உள்ளதாக பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
19. கீழ் உள்ள தட்டுகள் பூமிக்கு மேல் ஓட்டைச் சாண் தூரத்திலோ அல்லது ஆறு அங்குலம், நான்கு அங்குலத்திற்கு மேலோ உள்ளதாக அமைக்க வேண்டும். எவ்வாறு கிழக்கு மேற்கு திசையில் இருக்கும் படியாக இருக்குமோ அவ்வாறு
20. மேலும் இரண்டு கம்பங்களின் நுனி உத்தர (வடக்கு) த்வாரத்தின் அளவு உள்ளதாகவும், நடுவில் கலசம் உள்ளதாகவும் ஏற்படுத்த வேண்டும்.
21. ஆள் உயரம் பூமியை தோண்டி கால்களை ஸமமாக அதில் வைத்து மணல்களால் ஆடாமல் ஸ்திரமாக்க வேண்டும்.
22. இவ்வாறு எல்லாம் செய்து சில்பிக்கு திருப்தி செய்து விட்டு புண்யாகவாசனம் செய்து அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில்
23. மங்களாங்குரம் செய்து பலவித பழங்களோடு கூடி ஸர்வதோபத்ரம் என்ற மண்டலத்தை புத்திமான் அமைக்க வேண்டும்.
24. மண்டபத்தின் எட்டு திக்குகளிலும் கிழக்கு முதல் வரிசையாக வஜ்ரம் முதல் சூலம் வரை எல்லாவற்றையும் ஸ்தாபித்து சூலத்திற்கு இடது புறத்தில் சக்கரத்தையும், வலதுப் புறத்தில் பத்மத்தையும் அமைக்க வேண்டும்.
25. நடுவில் தேவதேவனையும் இடது புறத்தில் கவுரீதேவியையும் ஸ்தாபித்து ஈச்வரனை சக்தி தேவியுடன் சந்தன புஷ்பங்களால் பூஜித்து வலது புறத்தில் பிரம்மாவை பூஜிக்க வேண்டும்.
26. இடது புறத்தில் விஷ்ணுவை பூஜிக்க வேண்டும், சுற்றிலும் லோபாலர்களை பூஜிக்க வேண்டும், சூர்யனை நடுவிலும், அக்னி திக்கிலோ (ரவியையும்) தென்மேற்கிலோ பாஸ்கரனையும்,
27. வடமேற்கில் பானுவையும், வடகிழக்கில் ரவியையோ வாகரரையோ பூஜிக்கவும். உஷா, பிரபா, ப்ரக்ஞை, ஸந்த்யை, ஸாவித்ரீ இவர்களையும் பூஜிக்க வேண்டும்.
28. நடுமுதல், ஈசானம் வரை உள்ள தெய்வங்களை சந்தனம், புஷ்பங்களால் பூஜிக்க வேண்டும். மேலும் நடுவில் விஸ்தாரா என்ற சக்தியையும், அக்னி திக்கில் ஸுதரா என்ற சக்தியையும்,
29. கிழக்கு முதல் வடக்கு வரை ப்ரபூதம், விமலன், ஸாரன், ஆராத்யன் என்றவர்களையும் மத்தியில் பரமஸுகனையும் பூஜிக்க வேண்டும்.
30. வாயு திசையில் போதனீ என்ற சக்தியையும், ஈசான திக்கில் ஆப்யாயனீ என்ற சக்தியையும், நடுவில் ரவியையும் பூஜிக்க வேண்டும்.
31. கிழக்கு முதல் ஈசானம் வரையிலும் நடுவிலும் தீப்தா முதலிய சக்திகளைப் பூஜிக்க வேண்டும். சந்திரன் முதல் கேது வரை எட்டு கிரஹங்களையும் பூஜிக்க வேண்டும்.
32. அதற்கு ஹோமம் செய்ய வேண்டும். அதன் விதிமுறையும் இப்பொழுது சொல்லப்படுகிறது. பிரதான ஹோமத்தில் பரமேஸ்வரனையும், திக்குகளில் எட்டு திக்பாலர்களையும் பூஜிக்க வேண்டும்.
33. மத்தியில் காயத்ரியால் ஹோமம் செய்ய வேண்டும். திக்குகளில் திக்பாலகருடைய மந்த்ரங்களால் அவரவர் பெயரை சொல்லி பிரணவத்தோடு கூட ஸ்வாஹாவை முடிவாகக் கொண்டு ஹோமம் செய்ய வேண்டும்.
34. அந்தந்த சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளபடி சிவாக்னியை ஸ்தாபித்து முகாந்தம் வரை ஹோமம் செய்யவும். லோகபாலர்களை உடைய ஈசனை ஆவாஹனம் செய்து பூஜிக்கவும்.
35. நாடீ ஸந்தானத்துடன் ஜயாதி ஹோமம் வரை ஹோமம் செய்யவும். ஸமித், ஹவிஸ், நெய், இவைகளால் ஆயிரம், நூறு
36. நூற்றெட்டு ஆவ்ருத்தி அந்தந்த திசைகளில் உள்ளதான பாயஸம், வெண் பொங்கல், சுத்தான்னம் முதலியவைகளை கொண்டு ஹோமம் செய்ய வேண்டும்.
37. பாலில் நனைத்த அருகம்பில்லால் ம்ருத்யுஞ்ஜய மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு இருபத்தைந்து ஆவ்ருத்தி ஹோமம் செய்ய வேண்டும். பிறகு வாஸ்து ஹோமம் செய்ய வேண்டும்.
38. பிராயச்சித்தமாக அகோரமந்திரத்தினால் பத்தாயிரம் ஆவ்ருத்தி ஹோமம் செய்ய வேண்டும். மண்டலத்தில் பூஜிக்கப்பட்ட எல்லா தெய்வங்களையும் பூஜித்து ஹோமம் செய்ய வேண்டும்.
39. பூர்ணாஹூதி லோகபாலர்களுக்கு செய்து க்ரியைகளை பூர்த்தி செய்ய வேண்டும். ஆயிரம் கலசங்களால் பரமசிவனை அபிஷேகம் செய்ய வேண்டும்.
40. மஹாபூஜையை செய்து அதிகமான அன்னம் முதலியவைகளை நிவேதனம் செய்ய வேண்டும். பஞ்சாமிருதம், பஞ்சகவ்யம், பால் இவைகளாலோ அல்லது ஸ்நபனம் மட்டுமோ அபிஷேகிக்க வேண்டும்.
41. அந்தணர்களுக்கு உணவளித்து பிறகு துலாரோஹணம் செய்ய வேண்டும், கீழ்வரும் அமைப்புடைய அரசனை அமைத்து வெண்மையான வஸ்திரம் உடுத்தி மேல் பூச்சு (உத்தரீயம்) செய்து கொண்டவரும்,
42. எல்லா ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவரும், வெண்மையான மாலை அணிந்தவரும், காப்புக்கட்டிக் கொண்டவரும், கத்தி, கேடயம், அமைதியாக உள்ளவருமான அரசனை அழைத்து
43. புண்யாக தீர்த்தத்தால் ப்ரோக்ஷித்து, பூதசுத்தி முதலியன செய்து சிவமந்திரத்தை உச்சரித்துக் கொண்டு சிவார்க்ய ஜலத்தால் ப்ரோக்ஷிக்க வேண்டும்.
44. ஸகளீகரணம் செய்து சிவமந்திரத்தை உச்சரித்துக் கொண்டு யஜமானனை துலாத்தில் (தராசில்) ஏற்றிவைக்க வேண்டும். யஜமானன் ருத்ர காயத்ரியை அப்பொழுது ஜபிக்க வேண்டும்.
45. ஒரு நாழிகையோ, அரை நாழிகையோ அந்த தராசில் அமர்ந்து இருக்க வேண்டும். கிழக்குமுகமாகவோ, மேற்கு முகமாகவோ தராசு தட்டின் நடுவில் அமர வேண்டும்.
46. இன்னொரு தட்டில் அமைக்கப்பட்ட தங்கத்தை சிவனை நினைத்துக் கொண்டு கூர்ச்சத்தை சிவனாக நினைத்து வேதம், நாட்டியம், வாத்யம், பாட்டு இவைகளுடன்
47. வெற்றி முழக்கத்துடன் தன்னுடைய சரீர எடைக்கு சமமான தங்கம் இருந்தால் அது துலாரோஹம் செய்ததாக ஆகிறது.
48. தன்னுடைய சரீர எடையை காட்டிலும் 100, 50, 25 எண்ணிக்கைகளால் தங்கம் இருப்பது உயர்ந்ததாகும். யஜமானனை தேவேந்திரனாக நினைத்து துலாரோஹணம் செய்ய வேண்டும்.
49. யஜமானர் ஆசார்யனை வாத்யம் முழங்க வஸ்த்ரம், தங்க ஆபரணம் இவைகளால் பூஜிக்கவும், ஹோதாக்களையும் பூஜித்து அவர்களுக்கு தட்சிணையை கொடுக்க வேண்டும்.
50. நூறு நிஷ்க அளவு தங்கமோ அல்லது 50 நிஷ்கமோ எல்லா ரித்விக்களுக்கும் கொடுக்கவும். மற்ற எல்லோருக்கும் பத்து நிஷ்க தங்கம் கொடுக்க வேண்டும்.
51. யாகத்தில் உபயோகிக்கப்பட்ட பொருட்களை ஆசார்யனுக்கு கொடுக்க வேண்டும். முன்பு சொன்னது போல் சிவார்ச்சகரை பூஜை செய்ய வேண்டும்.
52. அவருக்கு ஐம்பது நிஷ்க அளவு தங்கம் கொடுக்க வேண்டும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. தராசில் ஏற்றப்பட்ட பொருள் களை பிராமணர்களுக்கு கொடுக்க வேண்டும்.
53. சிவபக்தர்களுக்கு சிறப்பாக அதில் பாதியளவாவது கொடுக்க வேண்டும். ஆனால் ஆசார்யனுக்கு மிக சிரத்தையுடன் கொடுக்க வேண்டும்.
54. துலாரோஹண காலத்தில் சிறையில் உள்ள கைதிகளை விடுவிக்க வேண்டும். அரசாங்க பணியாளர்களுக்கும் தனித்தனியாக தங்கம் (நிஷ்கம்) கொடுக்க வேண்டும்.
55. பிராம்மண உத்தமர்களே, இது தானங்களுக்கு பொதுவானது என்று சொல்லப்பட்டுள்ளது.
இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் துலாரோஹ ஷோடச தாந விதியாகிற எண்பத்தி மூன்றாவது படலமாகும்.
படலம் 82: ரக்ஷ பந்தன விதி...
படலம் 82: ரக்ஷ பந்தன விதி...
82 வது படலத்தில் ரக்ஷõபந்தன விதி கூறப்படுகிறது. அதில் முதலாவதாக அரசர்களின் ரக்ஷõபந்தன முறை கூறப்படுகிறது. எல்லா மங்கள கரமான கார்யங்களிலும் குறிப்பிட்ட தினத்தின் முன் இரவில் ரக்ஷõபந்தனம் செய்யவேண்டும் என்று ரக்ஷõபந்தன விதியின் காலம் நிரூபிக்கப்படுகிறது. பிறகு சுத்தமான ஆசார்யன் அங்கந்நியாசம், கரந் நியாசம் செய்து தாம்பாளத்தை ஸ்தண்டிலத்தின் மேல் வைத்து புண்யாக வாசனம் முதலாக பிரோக்ஷித்து யக்ஞசூத்ர வலயம் நூதன ரக்ஷõபந்தனம் ஸ்வர்ண மயமாக பத்மம் ஸ்தாபித்து அர்க்ய ஜலத்தால் அஸ்திரமந்திரத்தை கூறி பிரோக்ஷித்து பாத்திரத்தில் வைக்கப்பட்ட உபவீதம் முதலிய பொருள்களை முறைப்படி மந்திரங்களால் அபிமந்திரிக்கவும் என்று கூறி அபிமந்திரனத்தின் மந்திரவிஷயம் கூறப்படுகிறது. இவ்வாறு மந்திரத்தினால் அபிமந்திரிக்கப்பட்டதும் சந்தனம் பூசப்பட்டதும் ரக்ஷõபந்தனம் விபூதியையும் ஈசான திக்கில் வைக்கவும். ஸ்வர்ணபுஷ்பம் முதலியவைகளை மத்ய திக் முதல் வடக்கு திக் வரை வைக்கவும் மந்திர பூர்வமாக தாம்பூலம் கொடுக்கவும். அல்லது தங்கத்தால் செய்யப்பட்டதோ அல்லது வெள்ளியால் செய்யப்பட்டதோ வெரும் அருளும் புல்லையோ ஆக்னேய திக்கிலோ நிருதி திக்கிலோ வைத்து ஹ்ருதய மந்திரத்தினால் அபிமந்திரிக்கவும் என்று வேறு விதமாக கூறப்படுகிறது. பிறகு அந்த பாத்திரத்தை வஸ்திரங்களால் மூடி எல்லா அலங்காரத்துடன் கூடிய யானையின் மேல் ஏற்றி நகரத்தை வலம் வரவும் பிறகு ஆசார்யன் ஜோஸ்யன், முதலான பிராம்ணர்களுடன் கூடி எல்லா மங்கள வாத்யங்களுடனும் சுத்த மானவரும் விபூதி அணிந்தவரும் வெண்பட்டு உத்தரீயம் தரித்தவரும் எல்லா ஆபரணமும் அலங்காரமும் உடையவரும் ஆன ராஜாவை சிம்மாசனம் முதலிய ஆசனங்களில் கிழக்கு முகமாக அமர்த்தவும் பிறகு முன்பு மந்திரிக்கப்பட்ட புண்யாக ஜலத்தினால் பிரோக்ஷித்து ஸ்வர்ண புஷ்பம் முதலியவைகளை மிருத்யுஞ்ஜய மந்திரம் கூறி எல்லா வற்றையும் அரசனிடம் கொடுத்து அவனுடைய வலக்கையில் வடக்கு முகமாக இருந்து கொண்டு மந்திர பூர்வமாகவும் விபூதி அளிப்பதன் மூலமும் ரக்ஷõபந்தனம் செய்யவும் என கூறப்படுகிறது. அல்லது ஆசார்யன் ஈசாந முதலிய மந்திரங்களினால் முறைப்படி எல்லாவற்றையும் பூஜித்து சுற்றிலும் லாஜ புஷ்பங்களுடன் கூடி தேங்காய்களை ஸ்தாபனம் செய்து பிருஹத்சாம என்ற மந்திரம் கூறி ரக்ஷõபந்தனம் விதிப்படி செய்யவும் என வேறு விதமாக கூறப்படுகிறது. பிறகு கர்த்தா, தேசிகன், ஜோஸ்யன், புரோஹிதன் மற்ற எல்லா பிராம்ணர்களையும் பூஜிக்கவும் என கூறுகிறது. முடிவில் மங்கள வாத்ய சப்தங்களுடன் இந்த விதிப்படி தேவ தேவனான பரமேஸ்வரனுக்கும் மற்ற தேவர்களுக்கும் நான்கு வர்ணத்தவர்களுக்கும் ரக்ஷõபந்தனம் செய்யவேண்டும் என கூறப்படுகிறது. இவ்வாறு 82ம் படல கருத்து சுருக்கமாகும்.
1. மங்களகரமான எல்லா கர்மாக்களிலும் அரசர்களுக்கு ரக்ஷõபந்தனத்தைக் கூறுகிறேன். மங்களகர்மா செய்வதற்குக் குறிப்பிட்ட முதல்நாள் இரவு ரக்ஷõபந்தனம் (காப்புகட்டு) செய்யவேண்டும்.
2. ஆசார்யன் சுத்தனாய் ஸகளீகரணம் செய்து கொண்டு நெல்லினால் ஸ்தண்டிலம் கல்பித்து (ஏற்படுத்தி) அதன்மேல் தம்பாளத்தை வைத்து,
3. வெண்மையான அரிசியின் மேல் ஸ்தாபிக்கப்பட்ட புண்யாக தீர்த்தத்தால் பூணூல், காப்பு, மோதிரம் இவற்றைப் பிரோக்ஷணம் செய்து,
4. தங்கமயமான காப்பையும் ஸ்வர்ணபுஷ்பத்தையும் அஸ்திர மந்திரத்தைச் சொல்லி அர்க்யத்தால் சுத்தம் செய்து அரிசியின் மேல் வைத்து,
5. சந்தன புஷ்பங்களாலும், பூஜித்து கீழ்வரும் மந்திரங்களால் அபிமந்தரணம் செய்ய வேண்டும். ஈசானமந்திரத்தால் தலையில் ஸ்வர்ண புஷ்பத்தையும், கவசமந்திரத்தால் பூணூலையும்,
6. ஹ்ருதய மந்திரத்தால் காப்பையும், மோதிரத்தையும் அபிமந்திரணம் செய்ய வேண்டும். அல்லது எல்லாவற்றையுமே அகோர மந்திரத்தால் அபிமந்திரணம் செய்யலாம்.
7. காப்பையும் விபூதியையும் ஹ்ருதயமந்திரத்தால் அபிமந்த்ரணம் செய்து அவைகளை சந்தனத்தால் பூசி ஸ்தண்டிலத்தின் ஈசானதிக்கில் வைக்க வேண்டும்.
8. நடுவிலிருந்து வடக்கு பாகம் வரை புஷ்பம் முதலியவைகளை வைக்கவும். தத்புருஷ மந்திரத்தைச் சொல்லி தாம்பூல ஸமர்பணம் செய்ய வேண்டும்.
9. தங்கத்தால் அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட காப்பை அருகுநுனி அளவிலாவது செய்து அதை ஸ்தண்டிலத்தின் தென்கிழக்கிலோ அல்லது தென் மேற்கிலோ ஹ்ருதயமந்திரத்தால் அபிமந்த்ரணம் செய்ய வேண்டும்.
10. இவ்வாறு பூஜிக்கப்பட்ட காப்பை விபூதியுடன் கூட மோதிரம், பூணூல் இவற்றையும் தாம்பாளத்தில் வைத்து வஸ்திரத்தால் மூடி எல்லா அலங்காரத்துடன் கூடியதாக யானைமேல் அதை வைத்து நகர்வலம் வந்து பிறகு
11. ஆசார்யன் நல்லவேளையில் ஜோஸ்யர் புரோஹிதர், மற்றும் பிராம்மணர்களுடன் எல்லா மங்களங்களும் கூட
12. காலைக்கடன்களை முடித்து உடல் முழுதும் விபூதியையணிந்தவராயும் வெண்பட்டு உடுத்தி எல்லா ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டவராயுமுள்ள
13. அரசனை கிழக்கு முகமாக ஸிம்மாஸனத்தில் அமரச் செய்து புண்யாஹதீர்த்தத்தால் பிரோக்ஷித்து பூவினால் முன்பு சொன்ன மந்திரங்களாலும் பூஜித்து
14. எல்லாவற்றையும் (மோதிரம், பூணூல்) அரசனிடம் கொடுத்து ம்ருத்யுஞ்ஜய மந்த்ரத்தை உச்சரித்துக் கொண்டு ஆசார்யன் வடக்கு முகமாக இருந்து அரசனின் வலது கையில் காப்புகட்டுதலை செய்ய வேண்டும்.
15. ஸர்வேச்வரனை பிரார்த்தித்து விபூதியை கொடுத்தோ அல்லது முறைப்படி ஈசாநன் முதலிய மந்திரங்களினால் விபூதியை கொடுக்க வேண்டும்.
16. ப்ருஹத்ஸாம என்ற மந்திரத்தை சொல்லி விபூதியை கொடுக்க வேண்டும். பொறி, புஷ்பங்கள் இவைகளுடன் கூட தேங்காய்களை
17. சுற்றிலும் வைத்தோ காப்பு கட்டுதலைச் செய்யவும். பிறகு யஜமானன் ஆசார்யனையும் ஜோஸ்யரையும் புரோஹிதரையும் பூஜிக்க வேண்டும்.
18. எல்லா பிராம்ணர்களையும் ஸ்வஸ்தி மங்கள வாசகத்தோடு கவுரவிக்க வேண்டும். இந்த முறைப்படியே ஸர்வேச்வரனான பரமேச்வரனுக்கும் காப்பு கட்டுதலை செய்யவேண்டும்.
19. இவ்விதமே மற்ற தேவதைகளுக்கும் பிராம்மண க்ஷத்ரிய, வைச்ய, சூத்ர என்ற நான்கு வர்ணத்தாருக்கும் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்த்ரத்தில் ரக்ஷõ பந்தன விதியாகிற எண்பத்தி இரண்டாவது படலமாகும்.