படலம் 6: மஹோத்ஸவ விதி
301. எல்லா வாத்யங்களோடும் ஆலய பிரதட்சிணம் செய்து வர வேண்டும்.
302. ஸ்தண்டிலத்தின் மேல் வைத்து புண்யாக வாசனம் செய்ய வேண்டும். அர்க்ய ஜலத்தால் பிரோக்ஷணம் செய்து சிவமந்திரத்தால் அபிமந்திரிக்க வேண்டும்.
303. சந்தனம் முதலியவைகளால் அர்ச்சித்து கவசமந்திரத்தால் அவகுண்டனம் செய்ய வேண்டும். சமித், நெய், ஹவிஸ் எள், பொறி, வெல்லம் இவைகளினாலோ
304. மூலமந்திரத்தால் நூறு ஆஹுதிகள் செய்தோ அஸ்த்ர ஹோமமோ செய்ய வேண்டும். ஐந்து அக்னியோடு கூடிய ஹோமம் எல்லாவற்றிற்கும் நன்மை பயக்கூடிய ஹோமம் ஆகும்.
305. பிராயச்சித்தம் அகோரமந்திரத்தால் செய்து பூர்ணாஹுதியோடு கூட ஸத்யஜாத மந்திரத்தால் ஸ்பர்சித்து சந்தனம் இவைகளை மூலமந்திரத்தால் கொடுக்க வேண்டும்.
306. கன்றுடன் கூடிய பசு, தங்கம், வெங்கல பாத்திரம், நல்ல வஸ்திரம் எள், நெய், அல்லது மற்றவையோ ஆசார்யன் திருப்திக்காக கொடுக்க வேண்டும்.
307. ஜலத்தானத்துடன் கூடியதாக யாத்ரா தானம் செய்ய வேண்டும். மஞ்சள் உப்பு, எள், கடுகு, இவைகளும்
308. தானம் செய்பவனுக்கு நன்மை தரக்கூடிய தாம்பூலம், அரிசி, சந்தனம், நெய், எள், எண்ணை, இவைகள் சிவதானம் என்று சொல்லப்படும்.
309. யோகிகள், தியானம், செய்பவர்கள், சிவஞானம், அறிந்தவர்கள் இப்படிப்பட்டவர்களுக்கு அந்த பூஜை தானம் எல்லா உயிரினங்களுக்கும் நன்மை பயப்பது ஆகும்.
310. சிறப்பு நாட்களில் தலைப்பாகை வஸ்திரம் முதலியவைகளை ஆசார்யனுக்கு கொடுக்க வேண்டும். ஒவ்வொரு தானத்தையும் ஜலத்தோடு சேர்ந்ததாக கொடுக்கப்படவேண்டும்.
311. சிறந்த அறிஞனான ஆசார்யனுக்கு உஷ்ணீஷம் முதலியவைகளை கொடுக்க வேண்டும். ஆசார்யனே சிவனாக ஆவான். ஆகையால் ஆசார்யனுக்கு சிவனுக்கும் வேறுபாடு இல்லை.
312. எவன் இவர்கள் இருவருக்கும் பேதத்தை பார்க்கிறானோ அவன் தாழ்வை அடைவான். எல்லா ஆகமங்களை அறிந்தவனும் அமைதியானவனும் சிவலிங்க வழிபாட்டில் ஈடுபட்டவனும்
313. நித்ய ஹோமத்தோடு கூடியவரும் சிவ பூஜைக்கு நிவேதனம் தயார் செய்பவனும் கிருஹபலி முதலியவைகளை செய்பவரும் பிøக்ஷ அளிப்பவரும் நிந்தனையில்லாதவருமான ஆசார்யனை சிவனாகவே அறிய வேண்டும்.
314. அதிகம் கூறுவானேன்? எங்கு எப்பொழுது இப்பேர்ப்பட்ட ஆசார்யன் திருப்தி அடைந்தவனாக ஆகிறானோ அப்பொழுது பொருள் அளித்தவனுக்கு அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு வித பெரும் பயனடையும் தன்மை ஏற்படுகிறது.
315. இது உண்மை, உண்மை திருப்பியும் உண்மை என மூன்று முறையாக உண்மை என்று நிச்சயிக்கிறேன். அவரின் பொருளை அபஹரிப்பவன் மூவுல கிலும் திருடன் எனப்படுவான்.
316. தேவனின் சொத்தை அபஹரிப்பதைக் காட்டிலும் ஆசார்யனுக்கு தரவேண்டியதை கொடுக்காமலிருந்தால் நூறு கல்பகோடி காலமானாலும் அந்த பாபத்திலிருந்து மீள முடியாது. ஆகையால் பாபத்தை அறிந்து
317. அவரால் சிரத்தையுடன் கொடுக்கப்பட்ட பொருள் வாங்கிக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவன் பாபத்திலிருந்து மீண்டு விடுகிறான் என்ற சொல் கேட்டிருப்பதால் தானம் கிரஹிக்கத் தக்கது. இவ்வாறு யாத்ராதானம் செய்து நைவேத்யங்கள் நிவேதனம் செய்ய வேண்டும்.
318. யாத்ராதானம் சிவலிங்க பிரதிஷ்டை முதலியவைகளில் முதலிலும் முடிவிலும் முக்யம் ஆகும். மற்ற இடங்களில் அரசனின் வெற்றிக்காக செய்யத் தகுந்தது.
319. கிரஹணம் முதலிய காலங்களில் இது மிகவும் உயர்ந்ததாக கருதப்படுகிறது. எல்லா அலங்காரத்தோடு கூடியதாகவும் முரவ வாத்யத்தோடு கூடியதாகவும்
320. சிவாச்சாரியார்களோடு கூடியவராகவும் பல்லக்கில் ஆரோஹணம் செய்வித்து ஐந்து பிரகாரங்களிலோ அல்லது அதற்கு வெளியிலோ பிரதட்சிணம் செய்ய வேண்டும்.
321. எல்லா மங்களங்களோடு கூடியும் அரச வேஷம் தரித்த காவலர்களோடும் பலவகையான ஆடல் பாடல்களோடு கூடியதாகவும்
322. பல்லக்கில் ஏறியவர்களாலும் ஸாமர்த்யமுள்ளவர்களாலும், முன்னும் பின்னும் தொடர்ந்து செல்பவர்களாலும், புஷ்பங்களால், சந்தன நீர்களால் சேவித்து வருபவர்களாலும் ஸ்வாமி வீதிவலம் வருதல் வேண்டும்.
323. அரச வேஷம் தரித்த தன்மையுள்ளவனோடும் முரவ வாத்யம் இல்லாமல் பிறகு ஆலயத்தின் உள்ளே சென்று முன் சொன்னபடி தேவனை ஸ்தாபனம் செய்யவேண்டும்.
324. ரக்ஷõ சூத்திரத்தை அவிழ்த்து விட்டு சந்தனம், புஷ்பங்களால் பூஜிக்க வேண்டும். அதன் முடிவில் சுவாமி ஊர்வலமோ அல்லது அதற்கு முன்பு ஊர்வலமோ செய்யலாம்.
325. இரவின் முடிவில் தேவதேவனை நடேச்வரனை தேரில் ஏற்றி முன்பு சொன்ன முறையில் கிராமாதி பிரதட்சிணமும் செய்விக்க வேண்டும்.
326. முடிவில் மறுபடியும் ஸ்னபனம் செய்ய வேண்டும். மற்ற பிம்பங்களுக்கும் சமான முறை இதேதான்.
327. தீர்த்த நடுவில் முதல் நாள் அல்லது அதற்கு முதல்நாளோ யுத்தாரம்பம் முதல் வேட்டையாடுதல் முடிய
328. மற்ற திருநாட்களுக்கான உற்சவ விக்ரகத்தினால் மறுபடியும் செய்ய வேண்டும். சிறப்பாக ஸ்நபனம் முன் சொன்னபடி மறுபடியும் செய்ய வேண்டும்.
329. அந்த இரவில் தீர்த்தத்திற்காக முன் சொன்ன முறையில் அங்குரார்ப்பணம் செய்ய வேண்டும். தீர்த்த உத்ஸவத்திற்காக இரவில் ஒன்பது கலசங்களை
330. சூத்ரத்தோடும் கூர்ச்சம், மாவிலை, தேங்காய் வஸ்திரம், மற்றும் வஸ்திரமில்லாமலோ கலசங்களையும் பிரதானத்திற்கு மட்டும் வஸ்திரத்துடனோ வைக்க வேண்டும்.
331. இரவில் தீர்த்தம் அல்லது ஸ்நான சமயத்திலோ காலையில் உதயத்திற்கு முன்போ தீர்த்த கார்யம் செய்யவேண்டும்.
332. தீர்த்த ஸ்தானத்தை அடைந்து பூமியை சுத்தம் செய்து இரண்டு ஸ்தண்டிலம் செய்து சூலத்திற்கு ஒன்று கலசத்திற்கு ஒன்றாக செய்ய வேண்டும்.
333. மேற்கில் சூலத்தையும் கிழக்கில் கலசங்களையும் வைக்க வேண்டும். புண்யாகம் செய்து முன்போல் தேவர்களை அழைக்க வேண்டும்.
334. திருசூலத்தில் எல்லா தீர்த்தங்களும் எல்லா துர்க்கைகளும் கூடியதாகவும், நடுவில் மனோன்மணியையும் சந்தனம் புஷ்பம் இவைகளால் பூஜிக்க வேண்டும்.
335. அந்த ஜலத்தால் சூலத்தை அபிஷேகம் செய்து நதியோ அல்லது நீர்நிலைகளில் சென்று கங்கை முதலியவைகளை ஆவாஹணம் செய்து தீர்த்த ஸங்கிரஹணம் செய்யவேண்டும்.
336. ஹே தேவி! கங்கையே! யமுனையே! நர்மதையே! ஸரஸ்வதியே! ஸிந்துவே! கோதாவரியே! காவேரி இந்த நீர் நிலைகளில் (ஆற்றில்)
337. இறைவனுடைய தீர்த்த உற்சவத்திற்கு இங்கு இருந்து அருள்பாலிக்க வேண்டும். சூரியன் மறையும் வரை பாபங்களை போக்க இங்கு இருந்து அருள வேண்டும். என்று பிரார்த்தனை செய்ய வேண்டும்.
338. தீர்த்தம் எடுத்து அதன் நடுவில் கிழக்கு நோக்கிய தலை உடையதாக சிவமந்திரத்தை சொல்லிக் கொண்டு திரிசூலத்தை ஸ்நானம் செய்விக்க வேண்டும்.
339. திரிசூலத்தை ஜலத்திலிருந்து எடுத்து ஜலத்தின் கரையில் வைக்க வேண்டும். தீர்த்த ஸங்க்ரஹணம் செய்து தீர்த்தவாரியை செய்ய வேண்டும்.
340. வெகுதூரத்தில் ஜலமிருப்பினும் தீர்த்தவாரி செய்ய இயலாவிடினும் ஆலயத்திலேயே செய்யவும் எல்லா அலங்காரங்களோடு கூடியதாக ஆலயத்தினுள் நுழைந்து
341. முன் சொன்ன முறையில் ஹோமம் பலிதானம் இவைகள் செய்து தேவ ஆஸ்தான மண்டபத்தில் சூர்ணோத்ஸவம் செய்ய வேண்டும்.
342. இறைவனுக்கு எதிரில் இரண்டு ஸ்தண்டிலம் செய்ய வேண்டும். மேற்க்கில் திரிசூலம், மற்றொரு இடத்தில் உரலை வைக்க வேண்டும்.
343. அதன் நடுவில் மஞ்சளை பொடி செய்வதற்காக வைக்கவேண்டும். வஸ்திரங்களை அணிவித்து வைத்து உரல் நடுவில் மஞ்சள் பொடியையாவது வைக்க வேண்டும்.
344. முதலில் திரிசூலத்தை பூஜை செய்து விட்டு இரவு அதிவாஸம் செய்து உரலில் ஆதார சக்தியை பூஜை செய்ய வேண்டும்.
345. உலக்கையில் ஈசனையும் பூஜை செய்து கிருதசிரோர்பணம் செய்து அருகம்பில், புஷ்பம், நெல், அரிசி, இவைகளோடு
346. இறைவனுக்கு எதிரிலோ அல்லது நேராகவோ சூலமும் (அஸ்திரதேவர்) உரலும் உலக்கையும் இருக்கலாம்.
347. வஸ்திரத்துடனோ அல்லது இல்லாமலோ உலக்கை இருக்கலாம். முதலில் உலக்கையை பூஜை செய்து பிறகு உரலை பூஜை செய்ய வேண்டும்.
348. சிவதத்வம் முதலாகவோ, அல்லது ஆத்ம தத்வம் முதலாகவோ பூஜித்து அருகம்பில்லை ஆசார்யனால் அல்லது அவரால் ஏவப்பட்டவரால் வைக்கப்படவேண்டும்.
349. அரசன் அரிசி, இவர்களாலும் அவர்களால் ஏவப்பட்ட பெரியோர்கள் புரோஹிதர்கள் பக்தர்களாலும் உலக்கையால் இடிக்கப்படவேண்டும்.
350. அரச சன்னதியில் தொண்டு செய்கின்ற பெண்களாலும் எனக்கு பணிவிடை செய்யும் கன்னிகைகளாலும் அல்லது அரசர்களால் ஏவப்பட்ட ருத்திர கன்னிகைகளாலும்
351. தாசிகளாலும் (தொண்டு செய்பவர்களாலும்) பக்தர்களாலும் நேர்மையானவர்களாலும் மற்றும் சுத்தமானவர்களாலும் ஆசார்யன் உத்தரவால் அருஹம்பில் கொடுக்கப்படவேண்டும்.
352. மற்றவிடத்திலும் தெய்வங்களுக்கும் பெண் தெய்வங்களுக்கும், ரக்ஷõபந்தனமத்தியிலும் அதன் ஆரம்பத்தில் ஸ்நான காலத்திலும் மங்களத்திற்காக இது செய்யத் தகுந்தது.
353. அதன் முடிவில் மஞ்சளை அஸ்த்ர மந்திரத்தை மூன்றுமுறை சொல்லி இடித்து அருகம்பில்லிற்கு சொன்ன முறையிலேயே மஞ்சளை சூர்ணம் செய்ய வேண்டும்.
354. அந்த சூர்ணத்தை சிவமந்திரத்தை நினைத்து அதிலிருந்து எடுத்து பலவிதமான பாத்திரங்களில் லிங்கத்திற்காகவும் பிரதிமைக்காகவும் வைக்க வேண்டும்.
355. உத்ஸவ பிரதிமைக்காகவும், திரிசூலத்திற்காகவும், பரிவாரத்திற்காகவும் ஒருபாகமும், முறையாக பிரிக்க வேண்டும்.
356. மீதமுள்ளதை ஜனங்களுக்காக கலசங்களில் எடுத்துக் கொள்ள வேண்டும். வாஸனையுடைய தைலத்தை மட்டுமோ தனி பாத்திரங்களில் எடுத்துக் கொள்ளவேண்டும். அந்திரமந்திரத்தால் பிரோக்ஷித்து ஹ்ருதய மந்திரத்தினால் பூஜிக்க வேண்டும்.
357. தேனு முத்திரையில் - அம்ருதீகரணம் செய்து தாம்பூலம் முதலியவைகளை கொடுத்து முன் சொன்ன முறையிலே ராத்திரி சூர்ணத்தையும் கொடுக்க வேண்டும்.
358. சூர்ணோத்ஸவத்தை திரிசூலத்தால் கிராமத்திலோ ஆலயத்திலோ ஆரம்பத்திலும் விரைவாக செய்யக் கூடிய பரிசாரகர்களால் செய்ய வேண்டும்.
359. ஸமுத்ரம் முதலிய அதிகமான ஜலமுள்ள இடங்களில் செய்யும் தீர்த்த உத்ஸவம் மஹாதீர்த்தம் எனப்படும். சிறிய நீர்நிலைகளில் செய்வதை கவுதுக தீர்த்தம் போல் செய்யக் கூடாது.
360. கொட்டகை முதலியவற்றால் அலங்கரிக்கப்பட்ட இடத்தில் பிம்பத்தோடும் கலச ஸ்தாபனத்தோடும் தேவதைகளை அழைப்பதோடும் கூடியதாகவும்
361. தீர்த்த கார்யத்திற்காக விக்ரஹமின்றியும் தீர்த்தவாரி செய்யலாம் ஜலத்தின் நடுவில் இருந்து தீர்த்த ஸங்கிரஹணம் செய்யவில்லை எனில்
362. தீர்த்த ஸங்க்ரஹணம் செய்து மஹா தீர்த்தமாக செய்ய வேண்டும். ரக்ஷõ ஸூத்ர விஸர்ஜனம் செய்து பக்தர்களுடன் கூடி
363. சூலம் பேரம், இவைகளோடு மஹா தீர்த்தம் செய்ய வேண்டும். பல தேவாலயங்களிலிருந்து வந்த திரிசூலங்களோடு கூடவோ
364. திரிசூலங்கள் தேவதைகளோடு கூடியதாகவுமோ செய்யலாம். அல்லது பத்மம், என்ற அஸ்திரங்களோடும் சக்ரம் கூடியதாகவும் செய்யலாம்.
365. மஹாமோடி தேவதையுடன் இருப்பின் ராத்திரியில் தீர்த்தம் அனுஷ்டிக்க வேண்டும். பகலிலும் தீர்த்தோத்ஸவம் செய்யலாம். மாத்யாஹ்னிக கால தீர்த்தோத்ஸவம் உத்தமமாகும்.
366. முற்பகலில் தீர்த்தம், மத்யமமாகும். பிற்பகலில் அதமமாகும். சந்திரகிரஹணத்தின் பொழுது தீர்த்தத்தை ராத்திரியில் செய்யும் தீர்த்தம் உத்தமமாகும்.
367. அது வேண்டும் மோடி தேவதையுடன் இருந்தால் உத்தமோத்தமமாகும். ஸமுத்ரத்தில் திதிபிரதானமாகவும் மற்ற இடங்களில் நக்ஷ்த்ரபிரதானமாகவும் ஆகும்.
368. திதி நக்ஷத்ரம் இரண்டும் சேர்ந்து வருவது அரிதாகும். முற்பகலிலோ பிற்பகலிலோ திதி, நக்ஷத்ரம் சேர்ந்திருப்பதை எடுத்துக்கொள்ளவும்.
369. சமுத்திரம் அல்லது நதிகளில் நடுப்பகலில் தீர்த்தம் கொடுப்பது சிறந்தது. நக்ஷத்ரமோ திதியோ பகலில் எது அதிகம் உள்ளதோ அதுவே ஏற்றுக்கொள்ள தகுந்தது.
370. இரண்டு நாட்களில் நக்ஷத்ரம் திதி இவைகளில் நல்ல சேர்க்கை ஏற்படுமானால் சுபயோகங்களுடன் கூடிய சமயத்தில் செய்யலாம் தீர்த்த நக்ஷத்ரம் ஒரு மாதத்தில் இருமுறை வந்தால் பின்னால் செய்வதும் சிறந்ததாகும்.
371. அங்கும் முன்பு உள்ளதில் யோகம் சேர்ந்திருக்குமேயானால் முன்பு உள்ளதையே எடுத்துக் கொள்ள வேண்டும். எந்த மாதத்தில் எந்த நக்ஷத்திரத்தில் முன்பு அனுஷ்டிக்கப்பட்டுள்ளதோ
372. அந்த மாசத்தில் அந்த நக்ஷத்திரத்தில் பின்பும் செய்ய வேண்டும். ஸ்வாயம்புவ, தைவிக, ஆர்ஷிக லிங்கம்.
373. மானுஷ லிங்க விஷயத்தில் முன்பு அனுஷ்டித்த தீர்த்த நக்ஷத்திரம், மாத நக்ஷத்ரம் 2 மாதத்தில் ஏற்பட்டால் முன்பு கொடுத்த திதியோ நக்ஷத்திரத்தையோ எடுத்துக் கொள்வது சிறந்தது.
374. ஜலத்திற்கு நடுவில் தீர்த்தத்தை ஆசார்யன் செய்ய வேண்டும். அவகாஹனம் இரண்டாகச் சொல்லப்படுகிறது. பேரத்துடன் கூடியோ (பேரம்) பிம்ப மின்றியோ தீர்த்தவாரி செய்யலாம்.
375. கரையில் தனிமையாக விக்ரஹத்திற்கு ஸ்னபனம் வைத்தும் செய்யலாம். சந்தனம் முதலிய உபசாரங்களால் பூஜை செய்யலாம்.
376. நைவேத்யம் அங்கேயோ அல்லது ஆலயத்திலுமோ கொடுக்கலாம். தீபாராதனைக்கு பிறகு எல்லா மங்களங்களோடும் நந்தவனங்களில் இறைவனை சந்தோஷபடுத்த வேண்டும்.
377. கிராமபிரதட்சிணம் செய்தாலும் செய்யலாம் அல்லது எல்லா பக்த ஜனங்களோடும் சேர்ந்துமோ இல்லாமலும் பிரதட்சிணம் செய்தாலும் செய்யலாம்.
378. எல்லா மங்கள வாத்யங்களோடும் பூர்ணாஹூதியை செய்து சுத்தமான பரிசாரகர்களோடு உள் சுற்று சுற்றி
379. இறைவனையும், இறைவியையும் வித்யேஸ்வரர்களோடு கூட கர்பகிரஹத்தில் வைத்து லிங்கத்தில் பீடத்தில் முறையாக
380. இறைவனையும் இறைவியும், பூஜித்து சுற்றிலும் வித்யேஸ்வரர்களை முறையாக பூஜிக்க வேண்டும். யாகசாலையிலுள்ள அந்தந்த ஜலத்தால் பிரோக்ஷணம் செய்து சுத்தமான தீர்த்தத்தால் இறைவனை அபிஷேகம் செய்விக்க வேண்டும்.
381. பிறகு இறைவனை சக்திக்கேற்றவாறு பூஜிக்க வேண்டும். அன்று இரவு த்வஜ அவரோஹணம் (கொடி இறங்குதல்) செய்வது சிறந்தது ஆகும்.
382. மூன்றாவது ஐந்தாவது அல்லது ஏழாவது ஒன்பதாவது நாளில் பதினொன்று பதினான்கு அல்லது பதினைந்தாவது நாளில்
383. அல்லது பதினேழு அல்லது பத்தொன்பதாவது நாளில் செய்யலாம்.
384. மூர்த்தி ஹோமம், பிறகு திசாஹோமம் செய்ய வேண்டும். த்வஜம் முதல் தீர்த்தம் வரையில் தின எண்ணிக்கை இருக்குமேயானால்
385. மறுபடியும் உத்ஸவம் ஆரம்பித்து தீர்த்தம் வரையில் எல்லாம் செய்ய வேண்டும். கொடியிறக்கும் தினத்தில் சுத்த ஸ்நபனம் செய்ய வேண்டும்.
386. லிங்கம், மூர்த்தி, விருஷபம், சூலம், கொடி இவைகளுக்கு அர்ச்சனைபடி ஸ்நபனம் செய்யவேண்டும். புஷ்பமாலைகளால் கோயிலை அலங்கரிக்கவேண்டும்.
387. கர்ப்பகிரஹத்திலிருந்து கோபுரம் வரையில் தன் சக்திக்கு தக்கவாறு கருமையான நற்புகையுடன் கூடிய தூபத்தால் உபசரிக்க வேண்டும்.
388. பலவகை நைவேத்யங்களை முறைப்படி கொடுத்து இறைவனை மகிழ்விக்க வேண்டும். பிறகு சண்டிகேஸ்வர பூஜையை ஹோமத்துடனோ அல்லது ஹோமமில்லாமலோ செய்யலாம்.
389. பிறகு கிராமபலியை அன்ன லிங்கத்தோடு கூடியதாகவும் திரிசூலத்தோடு சண்டநாதரோடு கூடியவராகவும் செய்யவும்.
390. பேரிகை, மத்தளம், படஹம், காளஹம், ஸ்ரீகண்டம், சங்கம், போன்ற வாத்யங்களை பலிகாலத்தில் வாசிக்க வேண்டும்.
391. கிராமத்தை சுற்றியுள்ள பிரம்மா முதலிய தேவர்களை விஸர்ஜனம் செய்து திவஜத்தின் ஆரம்பத்தில் அல்லது முடிவில் பலி கொடுக்க வேண்டும்.
392. கொடியை இறக்கி அந்த விருஷபத்தை விருஷப மூர்த்தத்தில் சேர்க்கவேண்டும். த்வஜாவரோஹணம் செய்யும் முன்போ செய்தபின்போ பலி கொடுக்க வேண்டும்.
393. யஜமானர் ஆசார்யனை வஸ்திரம், பவித்ரம், தர்ஜனி இவைகள் கொடுத்து கவுரவிக்க வேண்டும். அங்குரார்ப்பண காலத்தில் த்வஜாரோஹண காலத்திலும்
394. யாக அதிவாஸ காலத்திலும் ஹோம ஆரம்பகாலத்திலும் இரண்டு ஸந்திகளிலும் அல்லது ஒரு சந்தி கால பூஜைகளிலும் ஆரம்பத்திலோ அல்லது முடிவிலோ
395. நிருத்த மூர்த்தி (நடராஜர்) உத்ஸவத்திலும் தீர்த்தத்திலும் சுத்த ஸ்நபன காலத்திலும் தட்சிணை கொடுக்க வேண்டும். அந்த தட்சிணை மூன்று விதமாகும்.
396. ஆசார்யனுக்கு உயர்ந்த தட்சிணை கொடுக்க வேண்டும். ஐந்து நிஷ்கம் அதமம் இரண்டு மடங்கு மத்யமம், மூன்று மடங்கு உத்தமம்.
397. அதில் பாதி எண்ணிக்கையுடன் கூடியது அதிகமாக சொல்லப்படுகிறது. மேற்கூறியதில் இரண்டு மடங்காக கொடுப்பதும் உத்தமமென்று கூறப்பட்டுள்ளது. வேறு விதமாகவும் தட்சிணை கூறப்படுகிறது.
398. பிரதி தினமும் பாதி நிஷ்கமோ, அதில் பாதியோ கொடுக்க வேண்டும். பக்தோத்ஸவம் பிறகு செய்யலாம் அல்லது பதினைந்து நாட்களுக்கு முன்பாகவோ செய்ய வேண்டும்.
399. உத்ஸவத்தின் ஆரம்பம் அல்லது நடுவிலோ பக்த உத்ஸவம் செய்யலாம் வருடாந்திர உத்ஸவத்தில் மாஸோத்ஸவமானது
400. பலிஹோமம் இவைகளோடு கூடியதாகவுள்ள திருவீதியிலாவுடனுமோ பலியின்றியுமோ பிம்ப திருவீதி உலா செய்யலாம்.
படலம் 6/4 :தொடரும்