ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா...
30. ஸ்ரீ போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - இரண்டு....
முப்பதாவது ஆச்சார்யர் [கி.பி. 618 - 655]
ஸ்ரீ போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - இரண்டு. ஆந்திர குலத்தில் அந்தணராக பிறந்தார். இவர் காள ஹஸ்தியில் வாழ்ந்தவர்.
பெற்றோர் வைத்த பெயர் “பாலையா". இவரின் பெற்றோர்கள் பெயர் நமக்கு கிடைக்காததும், இவரை பற்றியும் நமக்கு கூடுதலாக எந்த விதமான தகவலும் கிடைத்தது நமது துரதிர்ஷ்டவசமாகவே உள்ளது.
இவர் கி.பி. 655 ஆம் அண்டு, ஆனந்த வருடம், வைகாசி மாதம், கிருஷ்ண பக்ஷம், சதுர்த்தி திதி அன்று காஞ்சியில் சித்தி அடைந்தார்.
இவர் 37 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்தார்.
JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
செவ்வாய், 19 செப்டம்பர், 2023
30. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா...
29. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
29. ஸ்ரீ பூரண போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - ஒன்று....
இருபத்தி ஒன்பாவது ஆச்சார்யர் [கி.பி. 601 - 618]
ஸ்ரீ பூரண போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - ஒன்று, ஆந்திர அந்தண குலத்தவர். இவரின் தந்தையின் பெயர் ''ஸ்ரீ பதி''. பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் ''கிருஷ்ணர்''. இவர் சந்திர மௌலீஸ்வர பூஜை செய்வதில் மிகவும் ஆர்வம் கொண்டவராக திகழ்ந்தார். இவரை பற்றியும் நமக்கு கூடுதலாக எந்த விதமான தகவல்களும் கிடைக்க வில்லை என்பது நமது துரதிர்ஷ்டவசமாகவே உள்ளது.
இவர் கி.பி. 618 ஆம் ஆண்டு, ஈச்வர வருடம், ஆவணி மாதம், சுக்ல பக்ஷம், ஏகாதசி திதி அன்று காஞ்சியில் சித்தி அடைந்தார்.
இவர் 17 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்துள்ளார்.
28. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
28. ஸ்ரீ மஹா தேவேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஒன்று...
இருபத்தி எட்டாவது ஆச்சார்யர் [கி.பி. 577 - 601]
நேசக்கரமி ஸ்ரீ மஹா தேவேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஒன்று. இவர் ஆந்திராவில் மைதிலா அந்தண மரபில் தோன்றியவர். இவர் தந்தை பெயர் ''பானுமிச்ரர்’'. பெற்றோர் இவருக்கிட்ட பெயர் ''சேஷ நாராயணர்''. இவரைப் பற்றியும் நமக்கு கூடுதலாக எந்த விவரம் கிடைக்காதது நமது துரதிர்ஷ்டவசமாகவே உள்ளது...
இவர் கி.பி.601 ஆம் ஆண்டு, ரௌத்திரி வருடம், ஐப்பசி மாதம், கிருஷ்ண பக்ஷம், தசமி திதி அன்று காஞ்சியில் சித்தி அடைந்தார்.
இவர் 24 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்தார்.
27. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
27. ஸ்ரீ சித் விலாசேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
இருபத்தி ஏழாவது ஆச்சார்யர் [கி.பி. 564 - 577]
ஸ்ரீ சித் விலாசேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள், ஆந்திர மாநில அந்தண குலத்தில் பிறந்வர். இவர் பிறந்த ஊரான ஹஸ்திகிரி இவர் பிறக்கும் பாக்கியத்தைப் பெற்ற ஊராக அமைந்தது.
தந்தையின் பெயர் ''மதுசூதனர்''. பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் ''ஹரிகேசவர்''. இவரை பற்றிய கூடுதலான விவரங்களும், தகவல்களும் நமக்கு கிடைக்காதது நமது துரதிர்ஷ்டவசமாகவே உள்ளது.
இவர் கி.பி. 577 ஆம் ஆண்டு, துன்முகி வருடம் சாந்திரமான வருடப் பிறப்பன்று காஞ்சிபுரத்தில் சித்தி அடைந்தார்.
இவர் சுமார் 13 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்துள்ளார்....
சாதுர்மாஸ்ய விரதம்...
சாதுர்மாஸ்யம்
ஒவ்வோர் ஆண்டும் ச்ராவண பௌர்ணமி முதல் கார்த்திகை பௌர்ணமி வரையில் உள்ள காலம் நான்கு மாதத்தில் சாதுர்மாஸ்யம் வரும்.அதாவது ஸ்ராவண ஏகாதசி துவாதசி முதல் கார்த்திகை ஏகாதசி துவாதசி வரையில் உள்ளவைகள் சாதுர்மாஸ்யங்கள்.நாலு மாசம் சாதுர்மாஸ்யம் என்றால் சாதுர்மாஸ்யம் ஆவணி புரட்டாசி ஐப்பசி கார்த்திகை நான்கு மாதம்.அந்த ஆவணி மாதத்தில் ஏகாதசியில் விஷ்ணு பகவான் சயனித்துக் கொள்கிறார்.இதற்கு சயன ஏகாதசி என்று பெயர். கார்த்திகை மாத ஏகாதசியில் விஷ்ணு பகவான் விழித்துக் கொள்கிறார்.இதற்கு உத்ஸான ஏகாதசி என்று பெயர்.அந்த ஆவணி மாத ஏகாதசி முதல் கார்த்திகை மாத ஏகாதசி வரை உள்ள காலங்களை நான்கு மாதங்களை சாதுர்மாஸ்யம் என்று சொல்லுவார்கள்.பொதுவாக அந்தக் காலத்திலே மழை காலம் கூட இருக்கும்.ஆகவே அந்தக் காலத்தில் ஒரே இடத்தில் தங்கி சத்சங்கங்கள்,பஜனைகள்,வேதாந்த காலட்சேபங்கள் முதலியவைகள் எல்லாம் பெரியோர்கள் எல்லாம் செய்வார்கள்.ரிஷிகள் எல்லாம் செய்வார்கள்.நாரத மஹரிஷிகூட அவர் பிறப்பதற்கு முன்பு இது போன்று சாதுக்கள்,மஹரிஷிகள் சன்யாசிகள் சாதுர்மாஸ்ய காலத்தை நான்கு மாதம் ஓரிடத்தில் அனுஷ்டானம் செய்த பொழுது அவருடைய தாயார் அவர்களுக்கு சேவை செய்து அந்த ப்ரஸாதத்தினால் நாரத மஹரிஷி பிறந்ததாக வரலாறு உண்டு.
இந்த சாதுர்மாஸ்யம் மொத்தம் இரண்டு வீதம்.ஒன்று, இல்லறத்தார்கள்.ப்ரஹ்மச்சாரிகள் க்ரஹஸ்தர்கள் ஆண் பெண் அனைவரும் நான்கு மாதங்கள் வீட்டை விட்டு வெளியே உட்கார்நது கொண்டு ஒரு பந்தலிலோ கோயிலிலோ அல்லது பொது இடத்திலோ நதி தீரத்திலோ உட்கார்நது கொண்டு இறைவனைப் பற்றி பாடல்கள் ஜபங்கள் பாராயணங்கள் ஸ்தோத்ரங்கள் த்யானங்கள் இவைகளிலேயே காலத்தை கழிப்பது பகவத் சிந்தனையைத் தவிர வேறு ஒன்றும் செய்வது இல்லை.அது ஒரு விதமான சாதுர்மாஸ்யம்.சன்யாசிகள் போன்றவர்கள் நான்கு மாத காலங்களிலும் பன்னிரெண்டு மாதங்களில் எட்டு மாதம் யாத்திரை செய்து விட்டு இந்த நான்கு மாத காலம் எந்தவித யாத்திரையும் செய்யாமல் ஒரே இடத்தில் தங்க வேண்டும்.பொதுவாக சன்யாசிகளுடைய விதி ஒரு நாளைக்கு மேல் ஒரு ஊரில் தங்கக்கூடாது.பெரிய ஊராக இருந்தால் மூன்று நாள் தங்கலாம் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.க்ராமைக ராத்ரம் ஒரு க்ராமத்துக்கு க்ராமம் ஒரு ராத்ரம் தான் தங்கலாம் என்று நியதி.சன்யாசிக்கு மூன்று நாட்கள் பெரிய ஷேத்ரங்களில் தங்கலாம் இப்படி எப்போதுமே போய்க்கொண்டிருக்கும் ஒரு இடத்தில் விச்ராந்தியாக இருந்து சில சாதனைகளை செய்வதற்கும் அதே சமயத்தில் அஹிம்சையை அடிப்படையாக கொண்ட சன்யாசிகளும் ஆனதினால் இந்த சாதுர்மாஸ்ய காலத்தில் அதாவது மழைக்காலத்தில் அந்தக் காலம் அப்பொழுது சில புழுக்கள் பூச்சிகள் எல்லாம் வெளியே வரும். அவைகளை காலில் மிதிபட்டோ மற்றவை மூலமாகவோ ஹிம்சையாகும்.அந்த ஹிம்சைகூட செய்யாமல் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகவும் அஹிம்சையை அடிப்படையாக வைத்துக் கொண்டு நான்கு மாதம் சுற்ற வேண்டாம் என்பதற்காகவும் சாதுர்மாஸ்யம் சன்யாசிகள் அனுஷ்டிப்பார்கள்.அதே நான்கு மாதங்களில் அவர்களும் த்யானங்களை செய்து கொண்டு சாதனை செய்து கொண்டு இருப்பார்கள்.
இதைத் தவிர இந்த சாதுர்மாஸ்ய காலத்திலேயே ஆகாவரண சாதுர்மாஸ்யம் என்று ஒன்று உண்டு. முதல் மாதத்திலே பால் சேர்த்துக் கொள்ளக் கூடாது மற்றவை அனைத்தையும் சாப்பிடலாம். இரண்டாம் மாதத்திலே தயிர் சாப்பிடக் கூடாது.மற்றவை அனைத்தையும் சாப்பிடலாம்.மூன்றாவது மாதத்திலே கறிகாய்கள் சாப்பிடக்கூடாது.மற்றவை அனைத்தையும் சாப்பிடலாம்.நான்காவது மாதத்திலே இரண்டாகப் பிளக்கக் கூடிய பருப்புகளை சாப்பிடக்கூடாது மற்றவை அனைத்தையும் சாப்பிடலாம்.கார்ததிகை மாதம் த்வாதசி அன்று அனைத்தையும் கலந்து வைத்து பகவானுக்கும் படைத்து விட்டு அந்த கார்த்திகை ஏகாதசி அன்று கிருஷ்ணருக்கும் ருக்மிணிக்கும் கல்யாணம் செய்து விட்டு துவாதசி அன்று பாராயணம் செய்வது வழக்கம்.பாரணை என்று சொல்லுவார்கள் பாரணை என்றால் உபவாசம் இருந்து மறுநாள் செய்வது பாரணை.அப்படி கார்த்திகை மாதம் ஏகாதசிக்கும் உபவாசம் இருந்து இந்த சாகா வ்ரதம் ப்ரகாரம் ஒவ்வொரு மாசம் ஒன்றை ஒன்றை விட்டு விட்டு கார்த்திகை மாசம் துவாதசி அன்று கிருஷ்ணனுக்கு கல்யாணம் செய்து வைத்து அன்றைய தினம் எல்லா விதப் பொருட்களையும் பகவானுக்கு நிவேதனம் செய்து பிறகு தாம் சாப்பிடுவது என்று ஒரு பழக்கம் உண்டு.இது சன்யாசிகள் க்ரஹஸ்தர்கள் ப்ரஹ்மச்சாரிகள் வானப்ரஸ்தர்கள் அனைவரும் செய்யக்கூடியது.பிராமணர்கள் மாத்திரம் அல்ல அனைத்து வகுப்பினரும் கூட செய்வார்கள்.இது மஹாராஷ்டிரத்திலும் ஆந்திராவிலும் மிகவும் பிரசித்தமாக நடைபெற்று வருகிறது.கன்னட தேசத்திலும் சில பேர் செய்கிறார்கள்.தமிழ்நாட்டிலே மிகவும் குறைந்த பேர்கள் தான் இந்த சாகா விரதத்தை கடைப்பிடிக்கிறார்கள்.
இந்த சாதுர்மாஸ்யத்தை கடைப்பிடிப்பவர்கள் மிகவும் குறைவு.
சன்யாசிகள் மாத்திரம் தான் சாதுர்மாஸ்யம் என்று பெயர் வைத்துக் கொண்டு தமிழ் நாட்டிலே கடைப்பிடிக்கிறார்கள்.அதுவும் நாலு மாசத்திற்கு முடியாததினால் இரண்டு மாசத்திலே செய்யலாம் என்று ஒரு வேத வாக்கியம் இருப்பதினால் நான்கு மாசத்திற்கு பதிலாக நான்கு பட்சமாக வைத்துக்கொண்டு நான்கு பட்சங்களிலே இரண்டு மாசங்களிலே இந்த சாதுர்மாஸ்ய வ்ரதத்தை முடித்து விடுகிறார்கள்.அப்படி நான்கு மாதத்தில் நான்கு பட்சங்களை வைத்துக் கொண்ட இரண்டு மாசத்தில் முடிக்கக் கூடிய சன்யாசிகள் கூட சிலர் சாகா வ்ரதத்தை கடைப்பிடிப்பார்கள் நான்கு மாசமும்.அதாவது பால் சேர்க்காமல் இருப்பது தயிர் சேர்க்காமல் இருப்பது காய்கறிகள் சேர்க்காமல் இருப்பது இரண்டாக பிளக்கக்கூடிய பருப்பு வகைகளை சேர்க்காமல் இருப்பது இந்த விரதத்தை மாத்திரம் நான்கு மாதம் எங்கு இருந்தாலும் கடைப்பிடிப்பார்கள்.இப்படி இந்த வகையிலும் உண்டு. இப்படி சாதுர்மாஸ்யம் என்பது பழங்காலம் தொட்டு வருகிறது.அன்றைய தினம் பூஜையில் முதல் முதல் இந்த சாதுர்மாஸ்ய ஆரம்பம் ஆவணி மாசம் ஏகாதசி அன்று(க்ராவண ஏகாதசி அன்று)முடிவு கார்த்திகை ஏகாதசி த்வாதசி அன்று.ஆனால் சாதர்மாயஸ்த்தைத் தவிர சன்யாசிகள் செய்யகக கூடிய சாதுர்மாஸ்யம் வ்யாஸ பூஜை என்பது பௌர்ணமியிலிருந்து ஆரம்பிக்கும் ச்ராவண பௌர்ணமியிலிருந்து கார்த்திகை பௌர்ணமி வரையில் நடைபெறும்.அன்றைய தினம் அவர்கள் நான்கு மாதம் வெளியேபோக மாட்டேன் என்று சங்கல்பம் செய்து கொண்டு இந்த கார்யங்களை எல்லாம் செய்வார்கள்.இது ச்ராவண மாத பௌர்ணமியிலிருந்து கார்த்திகை மாதம் பௌர்ணமி வரையில் இருக்கும்.பௌர்ணமிக்கு பௌர்ணமி அவர்களுக்கு விசேஷம்.அது போன்று சாதுர்மாஸ்ய்தைப் பற்றி விசேஷம் உண்டு.அந்த சாதுர்மாஸ்யத்தை முதன் முதலாக அந்தக்காலம் முதல் கடைப்பிடித்து வந்தவர் வேதவியாசர்.ஆகவே அந்த சாதுர்மாஸ்ய ஆரம்பத்தை வேதவியாச பூஜை என்றும் குறிப்பிடுவார்கள்.ஆகவே வியாச பூஜையைத்தான் சன்யாசிகள் சாதுர்மாஸ்ய ஆரம்பத்தில் கைக் கொள்வது.
சனி, 16 செப்டம்பர், 2023
ஸ்ரீ காஞ்சி குரு பரம்பரா....
ஸ்ரீ காஞ்சி குரு பரம்பரா....
26. ஸ்ரீ ப்ரஜ்ஞா கனேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்....
இருபத்தி ஆறாவது ஆச்சார்யர் [கி.பி. 548 - 564]
ஸ்ரீ ப்ரஜ்ஞா கனேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ''பினாகி'' நதிக்கரையில் இருந்த சிற்றூரில் பிறந்தவர். ஆந்திர அந்தண குலத்தவர். இவரது தந்தையின் பெயர் ''பிரபாகரன்''. பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் ''சோணகிரி''.
இவரை பற்றிய வரலாறுகள் தெரியாமலே போனது நமது துரதிர்ஷ்டவசமாக உள்ளது. ஆனால் இவர் சந்திர மௌலீஸ்வர பூஜையும், பசுக்களை பாதுகாப்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவராக திகழ்ந்தார்...
இவர் கி.பி. 564 ஆம் ஆண்டு, சுபானு வருடம், வைகாசி மாதம், சுக்ல பக்ஷம், அஷ்டமி திதியில் காஞ்சியில் சித்தி அடைந்தார்.
இவர் 16 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்தார்.
வெள்ளி, 8 செப்டம்பர், 2023
25. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
25. ஸ்ரீ சச்சிதானந்த கனேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
இருபத்தி ஐந்தாவது ஆச்சார்யர் [கி.பி. 527 - 548]
ஸ்ரீ சச்சிதானந்த கனேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளை "ஸ்ரீ சித்த குரு" என்று அன்புடன் அழைத்தனர். தமிழ் அந்தண மரபினர். தமிழகத்திலுள்ள ஸ்ரீ முஷ்ணத்தைச் சேர்ந்தவர். தந்தையின் பெயர் ''கிருஷ்ணர்''. இவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் ''சிவ சாம்பர்''.
இவர் பாரதம் முழுவதும் மூன்று முறை விஜயம் செய்திருக்கிறார்.
இவர் ஸ்ரீ பாதம் படாத பகுதியே இந்தியாவில் கிடையாது எனலாம். அந்த அளவிற்க்கு யாத்திரை செய்தவர். அனைத்து விதமான மக்களையும் அரவணைத்து சென்றார். இவரை மக்கள் போற்றி புகழ்ந்து கொண்டாடினர்.
இவர் தன் யோக வலிமையால் விலங்குகள் பேசும் மொழிகளை அறிந்திருந்தார். அறுபத்தி மூன்று நாயன் மார்களில் சேரமான் பெருமாள் நாயனார் இவ்வாற்றல் பெற்றிருந்ததால் கழறிற்றறிவார் எனப் போற்றப்பட்டதாக பெரிய புராணம் சொல்கிறது.
இவர் கி.பி. 548 ஆம் ஆண்டு, பிரபவ வருடம், ஆடி மாதம், சுக்ல பட்க்ஷம், பிரதமை தினத்தில் கோகர்ண க்ஷேத்திரத்தில் லிங்க ரூபியாக சித்தி அடைந்தார்.
இவர் 21 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்தார்.
24. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
24. ஸ்ரீ சித்சுகேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - ஒன்று
இருபத்தி நான்காவது ஆசார்யர் [கி.பி. 512 - 527]
ஸ்ரீ சித்சுகேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - ஒன்று கொங்கண நாட்டைச் சேர்ந்தவர். பெற்றோர் வைத்த பெயர் ''சிவ சர்மா''.
இவர் தனது அருளாட்சி காலமான பதினைந்து ஆண்டுகளையும் பெரும்பாலும் கொங்கணப் பகுதியிலேயே கழித்தார்.
இவர் கி.பி. 527 ஆம் ஆண்டு, பிரபவ வருடம், ஆவணி மாதம், சுக்ல பட்க்ஷம், நவமி திதி அன்று மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ரத்னகிரி அருகில் சித்தி அடைந்தார்.
இவர் 15 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்தார்.
வியாழன், 7 செப்டம்பர், 2023
23. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
23. ஸ்ரீ ஸத்சித் சுகேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
இருபத்தி மூன்றாவது ஆசார்யர் [கி.பி. 481 - 512]
ஸ்ரீ ஸத்சித் சுகேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஆந்திர அந்தண குலத்தவர். ஸ்ரீ காகுளம் என்ற ஊரைச் சேர்ந்தவர். இவரது தந்தையின் பெயர் ''சோம நாராயணர்''. பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் ''கிரீசர்''.
இவர் சுப்ரமண்ய ஸ்வாமி மீது பெரும் பக்தி கொண்டவர். முருகனை உபாஸனை செய்து குமரனின் பரிபூர்ண அனுக்கிரகத்தைப் பெற்றவர். இவர் காலத்தில் வாழ்ந்த பிர பல வானவியல் அறிஞரான ஆரியபட்டர் நாஸ்திகக் கொள்கையுடன் இருந்தார். அவர் பூஜ்ய ஸ்ரீ பெரியவாளுடன் வாதிட்ட பிறகே தெளிவு பெற்றவராய் வேதாந்தப் பிடிப்புடன் வாழத் தொடங்கினார்.
ஒரு முறை சூரிய கிரகணம் பற்றி ஆராய, கடல் தாண்டிச் சென்றார் ஆர்யபட்டர். அந்நாளில் கடல் தாண்டிச் செல்வது சாஸ்திர விரோதமானது என்பதால் அவர் ''சமூகப் பிரஷ்டம்'’ செய்யப்பட்டார். பூஜ்ய ஸ்ரீ பெரியவாள் தலையிட்டு உரிய பிராயச்சித்தங்களை விதித்து ஆரியபட்டரின் ''பிரஷ்டத்தை'' நீக்கினார்.
இவர் கி.பி. 512 ஆம் ஆண்டு, கர வருடம், வைகாசி மாதம், சுக்ல பட்க்ஷம் சப்தமி திதி அன்று ஜகந்நாத்திற்கு அருகில் சித்தி அடைந்தார்.
இவர் 31 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்தார்.
22. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
22. ஸ்ரீ பரிபூர்ண போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - ஒன்று
இருபத்தி இரண்டாவது ஆச்சார்யர் [கி.பி. 447 - 481]
ஸ்ரீ பரிபூர்ண போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - ஒன்று, இவர் மஹாராஷ்டிர மாநிலத்தின் அந்தண மரபினர்.
இரத்தினகிரி என்னும் ஊரைச் சேர்ந்தவர். இவரது தந்தையாரின் பெயர் ''இராமநாதர்''. பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் ''மதுரா''.
இவர் ''பூலோக தன் வந்தரி'' என்று போற்றும் அளவு மருத்துவத்திறன் வாய்ந்தவர். ''அஸ்மா பிலாபிக'' என்னும் மந்திர வல்லமை பெற்ற மந்திர சாஸ்திர விற்பன்னர். மாபெரும் யோகியாகத் திகழ்ந்தவர்.
இவர் கி.பி. 481 ஆம் வருடம் ரௌத்திரி ஆண்டு, கார்த்திகை மாதம், வளர்பிறை, நவமி அன்று ஸ்ரீ பூரி ஜகந்நாத்துக்கு அருகில் சித்தி அடைந்தார்.
இவர் 34 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்தார்.
21. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
21. ஸ்ரீ ''ஸார்வ பௌம'' சந்திர சேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - இரண்டு.
இருபத்தி ஒன்றாவது ஆச்சார்யர் [கி.பி. 437 - 447]
இவர் கொங்கண அந்தண குலத்தவர். இவரின் தந்தை பெயர் "அச்சுதன்". இவரே மூக சங்கரால் ஆட் கொள்ளப் பட்ட "மாத்ரு குப்தன்". இவர் தம் குருநாதரோடு பல விஜய யாத்திரைகள் சென்றவர். சந்திர மௌலீஸ்வரர் பூஜை செய்வதில் கை தேர்ந்தவர்.
இவர் கி.பி. 447 ஆம் ஆண்டு, விய வருடம் ஆவணி மாதம், கிருஷ்ண ஜெயந்தி அன்று காசியில் சித்தியடைந்தார்.
இவர் 10 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்தார்.