ஆதிசங்கரர் அருளிய த்வாதச லிங்க ஸ்தோத்திரம்
ஸௌராஷ்ட்ர தேசே வஸுதாவகாரே
ஜ்யோதிர்மயம் சந்த்ர கலாவதம்ஸம்
பக்திப்ராதாய க்ருதாவதாரம்
தம் ஸோமநாதம் சரணம் ப்ரபத்யே
மிகவும் புண்ணியம் வாய்ந்ததான ஸௌராஷ்ட்ர தேசத்தில், ஒளிரும் பிறைமதியை சிரசில் தாங்கிக்கொண்டு பக்தர்களுக்கு அருள்புரிவதற்காக அவதரித்த சோமநாதரை நான் சரணமடைகிறேன்.
ஸ்ரீசைலச்ருங்கே விவிதப்ரஸங்கே
சேஷாத்ரி ச்ருங்கேபி ஸதாவஸந்தம்
தமர்ஜுதம் மல்லிகா பூர்வதம்
நமாமி ஸம்ஸார ஸமுத்ர ஸேதும்
பல நல்ல அம்சங்கள் கைவரப்பெற்ற ஸ்ரீ சைலமலையின் உச்சியிலும் சேஷாத்ரி மலையுச்சியிலும் எப்போதும் வாசம் செய்பவரும் இறப்பு, பிறப்பு எனும் இரு நிகழ்வுகளுடன் கூடிய சம்சாரம் எனும் கடலில் தத்தளிக்கும் பக்தர்களுக்கு கரையாக உள்ளவருமான மல்லிகார்ஜுனரை நமஸ்கரிக்கிறேன்.
அவந்திகாயாம் விஹிதாமதாரம்
முக்திப்ரதாய ச ஸஜ்ஜநாநாம்
அகாலம்ருத்யோ பரிரக்ஷணார்த்தம்
வந்தே மஹாகாலமஹம் ஸுரேஸம்
அவந்தி என்னும் முக்தியை அளிக்கக் கூடியதும் அகால மரணத்திலிருந்து காப்பாற்றக்கூடியதும் ஆகிய உஜ்ஜயினியில் ஆட்சிபுரிபவரும் தேவர்களின் தலைவருமான மகாகாளேஸ்வரரை மனதாலும் வாக்காலும் வணங்குகிறேன்.
காவேரிகா நர்மதாயோ பவித்ரே
ஸமாகமே ஸஜ்ஜநதாரணாய
ஸதைவ மாந்தாத்ருபுரே வஸந்தம்
ஓங்காரமீசம் சிவமேக பீடே
காவேரி (நர்மதையுடன் சேரும் ஒரு ஆறு. தென்னிந்திய காவேரி வேறு), நர்மதை ஆகிய நதிகள் சங்கமிக்கும் தூய்மையான மாந்தாத்ருபுரம் என்னுமிடத்தில் உறைபவரும் பக்தர்களைக் கரையேற்றுபவருமான ஓங்காரேஸ்வரரின் பாதங்களைத் தொழுகிறேன்.
பூர்வாத்தரே பாரவிகாபிதா நே
ஸதாசிவம் தன் கிரிஜாஸமேதம்
ஸுராஸுராராதித பாத பத்மம்
ஸ்ரீவைத்ய நாதம் ஸததம் நமாமி
வடகிழக்கில் பாரவி என்னும் தலத்தில் மலைமகளோடு கூடிய சதாசிவனாக, தேவர்களாலும் அசுரர்களாலும் பூஜிக்கப்பட்ட அழகிய பாதத் தாமரைகளைக் கொண்ட ஸ்ரீ வைத்யநாதரை நமஸ்காரம் செய்கிறேன்.
ஆமர்த ஸம்ஜ்ஞே நகரேச ரம்யே
விபூஷிதாங்கம் விவிதை: க போகை
ஸித் புக்திமுக்தி ப்ரதமீக மேகம்
ஸ்ரீநாகநாதம் சரணம்ப்ரபத்யே
தாருகாவனம் எனும் ஆமர்த தலத்தில் பல்வேறு வகையான நாகங்களை அணிகலன்களாகக் கொண்டு, தர்மத்திற்கு விரோதமல்லாத போகமும் மோட்சமும் தரக்கூடிய ஈசனாக மேனியெங்கும் திருநீறு பூசிக்கொண்டருளும் பரமேஸ்வரனான நாகநாதனை வணங்குகிறேன்.
ஸாநந்தமாநந்தவநே வஸந்தம்
ஆனந்த கந்தம் ஹதபாபப்ருந்தம்
வாரணாஸி நாதமநாத நாதம்
ஸ்ரீ விஸ்வநாதம் சரணம் ப்ரபத்யே
ஆனந்தவனம், வாரணாசி எனும் அதியற்புதமான பெயர்களால் வழங்கப்படும் காசித்தலத்தில் பக்தர்களின் பாவங்களை அழிப்பவரும் ஆனந்தத்தை அளிப்பவரும் ஆதரவற்றவர்களுக்கு அபயமளிப்பதையே கடமையாகக் கொண்டவரும் ஆன காசி விஸ்வநாத மூர்த்தியை சரணடைகிறேன்.
ஸ்ரீதாம்ரபர்ணி ஜலராசியோகே
நிப்த்யஸேதும் நிசிபில்வபத்ரை:
ஸ்ரீராமசந்த்ரேண ஸமர்ச்சிதம் தம்
ராமேஸ்வராக்யம் ஸததாம் நமாமி
புனிதமான தாமிரபரணி ஆற்றின் நீர் கடலில் சங்கமமாகும் இடத்தில் அணைகட்டி ராமச்சந்திரமூர்த்தியினால் வில்வதளங்களால் அர்ச்சிக்கப்பட்ட ராமேஸ்வரம் ராமநாதரை அனவரதமும் நமஸ்காரம் செய்கிறேன்.
ஸிம்ஹாத்ரி பார்ச்வேபி தடே ரமந்தம்
கோதாவரீ பவித்ர தேசே
யந்தர்சனாத் பாதகஜாதநா:
ப்ரஜாய தே த்ரயம்பகமிமீடே
ஸிம்ஹாத்ரி மலையின் தாழ்வறையில் இனிமையாக சஞ்சரிப்பவரும், மிகப் புனிதமான தக்ஷிண கங்கை என்னும் கோதாவரி நதிக்கரையில் இருப்பவரும், எவரைக் கண்ட மாத்திரத்திலேயே பாவங்கள் விலகி ஓடிடுமோ அந்த த்ரயம்பகேஸ்வரரை வணங்குகிறேன்.
ஹிமாத்ரிபார்ச்வேபி தடே ரமந்தம்
ஸம்பூஜ்யமானம் ஸததம்முனீந்த்ரை:
ஸுராஸுரையக்ஷ மஹோரகாத்யை
கேதாரஸம்ஜ்ஞயம் சிவமீச மீடே
ஹிமாச்சலத்தின் தாழ்வறையில் சஞ்சரிப்பதை விரும்பு
பவரும் சிறந்த முனிவர்கள், தேவர்கள், அரக்கர்கள், யக்ஷர்கள், உரகர்கள் மற்றும் முனிவர்களால் எப்போதும் ஆராதிக்கப்படுபவரும் ஈசன் என்று போற்றப்படுபவருமான கேதாரேஸ்வரரை நமஸ்கரிக்கிறேன்.
ஏலாபுரி ரம்ய சிவாலயேஸ்மிந்
ஸமுல்லஸந்தாம் த்ரிஜகத்வரேண்யம்
வந்தே மஹோதாரத்ர ஸ்வபாவம்
ஸதாசிவம் தம் திஷணேச்வராக்யம்
ஏலாபுரம் எனும் எல்லோராவில் உள்ள அழகிய சிவாலயத்தில் அருளாட்சி புரிந்து வருபவரும் மூன்று உலகில் உள்ளோராலும் போற்றப்படுபவரும், மிக மிக உயர்ந்த உவமை சொல்ல இயலாத குணத்தைக் கொண்டவரும், திஷணேஸ்வரரான சிவபெருமானை வணங்குகிறேன்.
ஏதா நி லிங்கா நி ஸதைவ மர்த்யா
ப்ராத: படந்த: அமல மா நசாஸ்ச
தே புத்ர பௌத்ரைர்ச்ச தநைருதாரை:
ஸத்கீர்த்திபாஜ: ஸுகிநோ பவந்தி
இந்தப் பன்னிரு ஜோதிர் லிங்கங்களின் துதியை தூயமனதுடன் தினமும் காலையில் துதித்தால் தலை முறை தலை முறையாக செல்வம், புகழ் போன்றவை விருத்தியாகும். கார்த்திகையன்று இத்துதியை பாராயணம் செய்பவர் வாழ்வு தீபம் போல் பிரகாசிக்கும்