சனி, 24 ஆகஸ்ட், 2019

காளியை வணங்கும் முறை (ராகுதோஷம் நீங்க )

ராகு திசை நடக்கும் போதோ, ராகு பெயர்ச்சியால் ஒருவரது செயல்பாடுகள் பாதிக்கும் போதோ, நமது பணிகளில் பிறரது தலையீடு தேவையின்றி வரும்போதோ, அவர்கள் நம் பக்கமே வராமல் இருக்கவோ காளிக்கு நாமாகவே அர்ச்சனை செய்யலாம். குறிப்பாக, நவராத்திரி காலத்தில் இதைச் செய்தால் மிகவும் நல்லது.எண் கணிதப்படி ராகுவுக்குரிய எண் 4. இந்த எண் தடைகளை  தரும் என்பது நம்பிக்கை. எனவே தான் 22 (கூட்டினால் 4) ஸ்லோகம் கொண்ட அர்ச்சனையை காளிக்காக வடித்துள்ளதாக கருத வேண்டியுள்ளது. இந்த ஸ்லோகத்தை வீட்டில் மாரியம்மன் அல்லது துர்க்கை படம் முன் அமர்ந்து சொல்லலாம். கொலு வைத்திருந்தால் மேடை முன் அமர்ந்து சொல்லலாம். இந்த ஸ்லோகத்தைச் சொல்லும்போது, செவ்வரளி மலர்களை தூவ வேண்டும்.

ஓம் காள்யை நம:
ஓம் க்ருஷ்ண ரூபாயை நம:
ஓம் பராத்மகாயை நம:
ஓம் முண்டமாலாதராயை நம:
ஓம் மஹாமாயாயை நம:
ஓம் ஆத்யாயை நம:
ஓம் கராளிகாயை நம:
ஓம் ப்ரேதவாஹாயை நம:
ஓம் ஸித்தலக்ஷ்மையை நம:
ஓம் கால ஹராயை நம:
ஓம் ப்ராஹ்மை நம:
ஓம் நாராயண்யை நம:
ஓம் மாஹேஸ்வர்யை நம:
ஓம் சாமுண்டாயை நம:
ஓம் கவுமார்யை நம:
ஓம் அபராஜிதாயை நம:
ஓம் வராஹ்யை நம:
ஓம் நாரஸிம்ஹாயை நம:
ஓம் கபாலின்யை நம:
ஓம் வரதாயின்யை நம:
ஓம் பயநாசின்யை நம:
ஓம் ஸர்வ மங்களாயை நம:
----------------------------------------
தாயார் திருவடிகள் சரணம்!

கமல வல்லி கனகவல்லி கற்பகவல்லி பாதம் !
அமுதவல்லி அம்ருதவல்லி அழகியவல்லி பாதம் !

குமுத வல்லி குருகூர்வல்லி குழைக்காதவல்லி பாதம் !
புஷ்பவல்லி பூர்ணவல்லி பளவவல்லி பாதம் !

அபிஷேக வல்லி அம்புஜவல்லி அஞ்சிலைவல்லி பாதம் !
செண்பகவல்லி செங்கமலவல்லி கோமளவல்லி பாதம் !

ஆதிநாதவல்லி அம்ருதகடவல்லி அரவிந்தவல்லி பாதம் !
குறுங்குடி வல்லி கோளூர்வல்லி குளந்தைவல்லி பாதம் !

வஞ்ஜுளவல்லி வாத்ஸல்யவல்லி வரகுணவல்லி பாதம் !
வேதவல்லி வேளுக்கைவல்லி வைகுந்தவல்லி பாதம் !

மதுரவல்லி மரகதவல்லி வித்துவகோட்டுவல்லி பாதம் !
சுதாவல்லி சுந்தரவல்லி புண்டரீகவல்லி பாதம் !

கல்யாணவல்லி செங்கமலவல்லி சௌந்தர்யவல்லி பாதம் !
ரமாமணி வல்லி மோகூர்வல்லி நேர்ஒருவரில்லா வல்லி பாதம்!

தஞ்தை நாயகி ரங்கநாயகி பரிமளரங்கநாயகி பாதம் !
சார நாயகி லோகநாயகி புரு÷ஷாத்தமநாயகி பாதம் !

பூமிதேவி பூர்வாதேவி சிறுதேவி பாதம் !
மகாதேவி இந்திராதேவி வாத்ஸல்ய தேவி பாதம் !

செண்பகச்செல்வி பங்கயச்செல்வி பொற்றாமரையாள் பாதம் !
மலர்மகள் பூமகள் கடல் மகள் பாதம் !

செங்கமலநாச்சியார் மதுரவேணி நாச்சியார் தாமரை நாயகி பாதம் !
தலைச்சங்க, திருப்பேரை நாச்சியார் நரசிங்கவல்லி பாதம் !

கல்யாண நாச்சியார் உபயநாச்சியார் பாமாருக்மணி பாதம் !
அல்லிமாமலர் திருமாமகள் பூங்கோவல் நாச்சியார் பாதம் !

மலர்மங்கை நிலமங்கை மடவரல் மங்கை பாதம் !
கிரீவரமங்கை அலர்மேல் மங்கை அணிமாமலர் மங்கை பாதம் !

பொற்கொடி ஆண்டாள் செல்வத்திருக்கொழுந்து பாதம் !
பத்மாசனி பத்மாமணி பெருஞ்செல்வநாயகி பாதம் !

பெருந்தேவி கண்ணபுரநாயகி உய்யவந்த நாச்சியார் பாதம் !
லட்சுமி ஹரிலட்சுமி கருந்தடக்கண்ணி பாதம் !

செல்வநாயகி செம்மலர் பாதங்களை மனம்குளிர நினைந்திடுவோம்!
தாயார் திருவடியை தினமும் நாம் தொழுது தனமழையில் நனைந்திடுவோம்!
----------------------------------------
சூரியனின் குடும்பம்!

பெற்றோர்:காஷ்யப முனிவர்,அதிதி.
சகோதரர்கள்:கருடன்,அருணன்
மனைவியர்:உஷா,பிரத்யுஷா(சாயாதேவி)
மகன்கள்:எமதர்மன்,சனீஸ்வரர்,அஸ்வினி தேவர்கள்,கர்ணன்,சுக்ரீவன்
மகள்கள்:யமுனை,பத்திரை

பார்த்தபின் சாப்பிடுங்க:தாபனீய உபநிஷத் என்னும் நூலில் நரசிம்மருக்கு மூன்று கண்கள் உண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் வலக்கண் சூரியன், இடக்கண் சந்திரன், நடுக்கண் அக்னியாக விளங்குகிறது. புருஷ சூக்தம் என்ற நூல், விஷ்ணுவின் கண்களில் இருந்து சூரியன் உண்டானதாகச் சொல்கிறது. சூரியனை வணங்காமல் சாப்பிடுவது கூடாது என வேதம் கூறுகிறது. சூரியவழிபாடைத் தவறாமல் செய்தால் வாக்குவன்மை, ஆரோக்கியம் உண்டாகும். சூரியனைக் காணாத நாள் ஒவ்வொன்றும் வீண்நாளே என்கிறார் காஞ்சிப் பெரியவர்.

முதல் கடவுள்:மனிதன் தோன்றிய காலம் தொட்டே சூரியவழிபாடு இருந்து வருகிறது. இருளில் தவித்த மனிதன், தினமும் காலையில் கிழக்கு வெளுத்து சூரிய உதயமாவதைக் கண்டு மகிழ்ந்தான். தன் இருகைகளைக் குவித்து வணங்கி வழிபட்டான். விநாயகர், முருகன், சிவன், சக்தி, விஷ்ணு ஆகிய தெய்வ வழிபாடுகள் பிற்காலத்திலேயே தோன்றின. சூரிய வழிபாட்டுக்குரிய மதத்தை "சவுரம் என அழைத்தனர். இதனால் சூரியன், "முதல் கடவுள் என்ற சிறப்புக்கு <உரியவராகிறார்.

அம்பாளின் வலக்கண்: சூரியனைச் சிவ அம்சமாகக் கொண்டு சிவசூரியன் என்றும், விஷ்ணுவின் அம்சமாகக் கொண்டு சூரியநாராயணர் என்றும் சொல்வர். இவர் அம்பிகையின் வலக்கண்ணாக இருப்பதாகவும் கூறுவர். ஜோதிட சாஸ்திரம் சூரியனை நவக்கிரக நாயகனாகப் போற்றுகிறது. இவரைச் சுற்றியே மற்ற கிரகங்கள் நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. நவக்கிரக மண்டபத்தில் நடுவில் வீற்றிருந்து அருளுகிறார் சூரியன். இதுதவிர, சிவாலயங்களில் இவர் தனது துணைவியரான உஷா, பிரத்யுஷாவுடன் தனி சந்நிதியிலும் இருப்பார்.

சூரியமந்திரம் சொல்வோமா:சூரியவழிபாட்டுக்கு உகந்த நாள் ஞாயிறு. கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரங்கள் சிறந்தவை. திதிகளில் வளர்பிறை சப்தமி ஏற்றது. இந்த நாட்களில் காலையில் நீராடிய பிறகு, கிழக்கு நோக்கி நின்று சூரியனை வணங்க வேண்டும்.

நம:ஸவித்ரே ஜகதேச சக்ஷúஷே
ஜகத் ப்ரஸூதி ஸ்திதி நாச ஹேதவே
த்ரயீமயாய த்ரிகுணாத்ம தாரிணே
விரிஞ்ச நாராயண சங்கராத்மனே
ஜபாகு ஸும ஸங்காசம்
காஸ்யபேயம் மஹாத்யுதிம்
த்வாந்தாரிம் ஸர்வ பாபக்னம்
ப்ரணதோஸ்மி திவாகரம்
என்ற சூரிய மந்திரத்தைச் சொல்ல வேண்டும். இதன் பொருளையும் சொல்லலாம்.

பொருள்:உலகிற்குக் கண்ணாக இருப்பவனே! முத்தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றைச் செய்பவனே! வேத வடிவமே! முக்குணங்களைப் பெற்றவனே! பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்தியாகவும் திகழும் சூரியனே! உமக்கு நமஸ்காரம். காஷ்யப முனிவரின் மகனே! செம்பருத்திப்பூவின் நிறத்தைக் கொண்டவனே! இருளின் எதிரியே! பேரொளி உடையவனே! பாவங்களைப் போக்குபவனே! திவாகரனே! உம்மைப் போற்றுகிறேன். இந்த மந்திரத்தை ஜெபித்தால் நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் உண்டாகும்.
----------------------------------------
எவ்வாறு பொங்கல் வைக்க வேண்டும்?

கண்கண்ட தெய்வமான கதிரவனுக்கு, பொங்கல் திருநாளில் முறைப்படி பொங்கலிட்டால் அவரது நல்லருளைப் பெறலாம். பொங்கலை வீட்டு வாசலில் வைப்பதே  சிறப்பாகும். வீட்டு வாசலில் திருவிளக்கை ஒரு பலகையிட்டு அதன் மேல் வையுங்கள். பூ சூட்டுங்கள். வெளியே காற்றடிக்கலாம் என்பதால் ஏற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. நிறைவிளக்காக வைத்தால் போதும். விளக்கின் முன் பெரிய வாழை இலை விரித்து, வலது ஓரத்தில் சாணப்பிள்ளையாரையும், செம்மண்ணைப் பிடித்து அம்பாளாகக் கருதி பிள்ளையார் அருகிலும் வையுங்கள். இலையில் பச்சரிசி பரப்புங்கள். பிறகு, கிழங்கு, காய்கறி, வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு படைக்கவேண்டும். இரண்டு கரும்புகளை தோகையுடன் சுவரில் சாய்த்து வையுங்கள். பச்சரிசி, வெல்லம், பழம், தேங்காய் பல் சேர்த்து தயாரித்த காப்பரிசியை ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளுங்கள். பச்சரிசி களைந்த நீரை தயாராக வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பானையில் மஞ்சள் குலை கட்டி அடுப்பில் வையுங்கள். தேங்காய் உடைத்து, அதிலுள்ள தண்ணீரை பானையில் விடுங்கள். சூடம் ஏற்றி அடுப்பு பற்ற வையுங்கள். பனை அல்லது தென்னை ஓலை கிடைத்தால் அதைக் கொண்டு அடுப்பு எரிக்கலாம். கிடைக்காதவர்கள் காய்ந்த சுள்ளி விறகுகளைப் பயன்படுத்தலாம். மண்ணெண்ணெய் விட்டு அடுப்பு பற்ற வைப்பதைத் தவிர்க்கவும்.

பச்சரிசி களைந்த நீரை பானையில் ஊற்றுங்கள். தேவையானால், சிறிதளவு பசும்பால் சேர்க்கலாம். தண்ணீர் கொதித்து பொங்கியவுடன், குலவையிடுங்கள். குலவையிடத் தெரியாதவர்கள் பொங்கலோ பொங்கல் என்று முழங்கலாம். கொதித்த தண்ணீரை, எவ்வளவு அரிசி பொங்க இருக்கிறோமோ, அந்தளவுக்கு முகர்ந்து விட்டு பச்சரிசியை இடுங்கள். நேரம் செல்லச் செல்ல எரிபொருளின் அளவைக் குறைத்து விடுவது அவசியம். இல்லாவிட்டால், சாதம் பானையில் பிடிக்கும்.பொங்கல் தயாரானதும் இறக்கி விடுங்கள். பின்பு, அதே அடுப்பில் சர்க்கரைப் பொங்கல் தயார் செய்து விடுங்கள். பொங்கல் பானைகளை விளக்கின் முன் வைத்து, பூஜை செய்யுங்கள். சூரியனுக்குரிய ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம், பிற ஸ்லோகங்கள், பாடல்களைப் பாடுங்கள். பின்னர், இவற்றை வீட்டுக்குள் எடுத்துச் சென்று விடலாம். முதலில், பொங்கல், பழம் ஆகியவற்றை ஒரு இலையில் வைத்து காகத்துக்கு வைக்க வேண்டும். மதிய வேளையில், காய்கறி சமைத்ததும், திருவிளக்கேற்றி, ஒரு இலை விரித்து பொங்கல், சர்க்கரைப் பொங்கல், காய்கறி வகைகளை இலையில் வைக்க வேண்டும். அதை முன்னோருக்கு சமர்ப்பித்து பூஜை செய்ய வேண்டும். அதன் பிறகு குடும்பத்தார் ஒற்றுமையுடன் சாப்பிட வேண்டும். வெறுமனே  டிவி பார்ப்பது பொங்கலன்று செய்யும் பணியல்ல. இப்படி, பொங்கலிட்டு பாருங்கள். சூரியபகவானின் அருள்பெற்று நலமுடன் வாழ்வீர்கள்.
----------------------------------------
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது ஏன்?

சூரியன் ஒவ்வொரு ராசியிலும் ஒவ்வொரு மாதம் சஞ்சரிக்கிறார். அதில், மகர ராசிக்குள் அவர் நுழையும் நாளை தைப்பொங்கல் என்று குறிப்பிடுவர். வடநாட்டில் இதை மகர சங்கராந்தி என்பர். இந்நாளில் வீட்டு வாசலில் கோலம் இட்டும், மாவிலைத் தோரணம் இட்டும் அலங்கரிப்பர். மார்கழி மாதத்தின் கடைசி நாளான  போகியன்று பழைய பொருள்களை தீயிட்டுக் கொளுத்துவதும் வீட்டின் தூய்மைக்காகவே. வேண்டாத பழமையை விலக்கி, புதுமையை வரவேற்கும் விதமாக பொங்கல் அமைந்துள்ளது. அதனால், வாழ்வில் முன்னேறுவதற்கான வழிவகை உண்டாவது இயற்கை. இதனால் தான், தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற சொல்வழக்கு ஏற்பட்டது. வயலில் விளைந்த புது நெல்லில் குத்திய அரிசியில் பொங்கலிட்டு, கண் கண்ட தெய்வமான சூரியனுக்குப் படைப்பர். பொங்கல் பானையில் பொங்கும்போது, பொங்கலோ பொங்கல் என்று ஒலி எழுப்புவர். ஒருமித்த குரலில், இதைச் சொல்லும்போது, எல்லா மங்களங்களும், நன்மைகளும் வீட்டிற்கு வந்து சேரும் என்பது ஐதீகம்.
----------------------------------------
பொங்கல் பூஜை செய்வது எப்படி?

இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ஸ்டவ்வில் பொங்கல் வைக்கிறார்கள். ஆனால், சூழ்நிலைகளைக்காரணம் காட்டி, நமது பாரம்பரியத்தை மறந்து போவது முறையானதல்ல. மேலும், இளைய தலைமுறையினர், அக்காலத்தில் நாம் எப்படி பொங்கலிட்டோம் என்பதையும் தெரிந்து கொண்டு எதிர்காலத்திலும் கடைபிடிக்க வேண்டும்.

வீட்டு வாசலில் பொங்கல் வைக்க வசதியில்லாவிட்டால், தெருமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நல்ல நேரத்தை தேர்ந்தெடுத்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் இணைந்து பொங்கல் வைக்க வேண்டும். கோயில்களையும் தேர்ந்தெடுக்கலாம். பால் பொங்கும் போது, சூரிய நமஸ்காரம் செய்து, ""பொங்கலோ பொங்கல் என ஒரு சேர முழக்கமிட வேண்டும். ஏனெனில், இது ஒரு ஒற்றுமைத் திருவிழா. தேரோட்டம் என்ற நிகழ்ச்சியை ஊர் ஒற்றுமை கருதி எப்படி நம் முன்னோர்கள் நமக்கு அறிவுறுத்தி சென்றார்களோ, அதுபோல பொங்கலும் மக்களிடையே ஒருமைப்பாட்டை வளர்க்கும் விழா என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே வீட்டுக்குள் காஸ்ஸ்டவ், மண்ணெண்ணெய் அடுப்பு இவற்றில் பொங்கல் வைப்பதைத் தவிர்த்து வீதியில் வைக்க வேண்டும். நகரங்களாக இருந்தாலும் கூட, கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், அங்கிருந்து பனை ஓலை அல்லது தென்னை ஓலை தருவித்து பொங்கலிட வேண்டும்.

பொங்கலன்று காலையில் நல்ல நேரம் பார்த்து வீட்டு முற்றத்தில் பெரிய அளவிலான குத்துவிளக்கேற்றி அதன் முன் ஒரு வாழை இலையைப் போட வேண்டும். அதன் இடது ஓரத்தில் நாழி நிறைய பச்சை நெல் வைக்க வேண்டும். இலையில் பச்சரிசியை பரப்பி, அதன் மேல் கத்தரிக்காய், கருணைக்கிழங்கு, சிறுகிழங்கு, வள்ளிக்கிழங்கு, அவரைக்காய், சீனிஅவரை, பூசணித் துண்டு, பிடிகிழங்கு, காப்பரிசி (வெல்லம், பச்சரிசி கலவை) வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள்கிழங்கு ஆகியவற்றை வைக்க வேண்டும். கரும்பின் ஓலையை வெட்டாமல் நீள கரும்பாக சுவரில் சாய்த்து வைக்க வேண்டும். ஒற்றைக் கரும்பாக வைப்பதைத் தவிர்த்து இரண்டு கரும்புகள் வைக்க வேண்டும்.

பொங்கல் பானையை மண்அடுப்பு அல்லது பொங்கல் கட்டி எனப்படும் கற்கள் மீது வைக்க வேண்டும். திருவிளக்கிற்கு பத்தி, கற்பூர ஆரத்தி காட்டிய பிறகு உங்கள் குல தெய்வம் இருக்கும் கோயிலின் திசையை நோக்கி காட்ட வேண்டும். பின்னர் சூரியபகவானுக்கு ஆரத்தி காட்டியதும் ஒரு தேங்காயை உடைத்து அதன் நீரை பானையில் விட வேண்டும்.

சுத்தப்படுத்திய பச்சரிசியை நன்றாகக் களைந்து அந்த தண்ணீரை பானையில் விட வேண்டும். அடுப்புக்கும், பொங்கல் பானைக்கும் தூபம் (பத்தி) காட்டி, பற்ற வைக்க வேண்டும். தண்ணீர் கொதித்து பால் பொங்கும் போது குலவையிட வேண்டும். குலவை தெரியாதவர்கள் "பொங்கலோ பொங்கல் என முழங்க வேண்டும். பின்னர் பானையிலுள்ள சுடும் நீரை, அரிசி வேகும்அளவிற்கு மட்டும் வைத்துக் கொண்டு, மீதியை முகந்து விட வேண்டும். அரிசியை போட்டு, வெந்ததும் அவ்வப்போது அகப்பையால் கிண்டி கொடுக்க வேண்டும். இல்லா விட்டால், பாத்திரத்தின் அடியில் பிடித்து விட வாய்ப்புண்டு. பொங்கலை இறக்கிய பிறகு, சர்க்கரைப் பொங்கல் வைக்க வேண்டும்.

இலையின் முன்னால் இந்த பானைகளை இறக்கி வைத்து, திருவிளக்கிற்கும், சூரியனுக்கும் பூஜை செய்ய வேண்டும். ஆதித்ய ஹ்ருதயம் தெரிந்தவர்கள் அந்த ஸ்லோகங்களைச் சொல்லலாம். மற்றவர்கள் சூரியன் குறித்த தமிழ் பாடல்களைப் படிக்கலாம். பின்னர் காகத்திற்கு பொங்கல் வைக்க வேண்டும். காகம் உணவை எடுத்த பிறகு குழந்தைகளுக்கு சர்க்கரைப் பொங்கல் கொடுக்க வேண்டும். அதன் பிறகே பெரியவர்கள் சாப்பிட வேண்டும். பின் காய்கறி வகைகள் சமைத்து வெண் பொங்கலை மதிய வேளையில் சாப்பிட வேண்டும். இரவில் முன்னோரை நினைத்து இனிப்பு வகைகள் புத்தாடை வைத்து வணங்க வேண்டும். புத்தாடையை தானமாக கொடுத்து விட வேண்டும்.
----------------------------------------
நாம் தினமும் குளித்து முடித்தவுடன்

நாம் தினமும் குளித்து முடித்தவுடன்  உடம் துடைக்கும் போது முதலில் முதுகை தான் துடைக்க  வேண்டும்.பின் தான் முன்பக்கம் துடைக்க  வேண்டும்.ஏன்னேண்றால் முன்பக்கம் ஸ்ரீ தேவியும் பின்பக்கம் மூதேவியும் இருப்பாற்கல் முதலில் முன்பக்கம் துடைத்தால்  ஸ்ரீ தேவி நம்மைவிட்டு பொய்விடுவாள்.

தசாவதார ஸ்தோத்ரங்கள்


1. மத்ஸ்யாவதாரம் (கேது)

நிர்மக்ந ச்ருதிஜால மார்கணதஸா
தத்தக்ஷணைர் வீக்ஷணை:
அந்தஸ்தந்வ திவாரவிந்த கஹநாந்
யௌதந்வதீநா மபாம்
நிஷ்ப்ரத்யூஹ தரங்க ரிங்கண மிக:
ப்ரத்யூட பாதச்ச்டா
டோலாரோஹ ஸதோஹலம் பகவதோ
மாத்ஸ்யம் வபு: பாது ந:

2. கூர்மாவதாரம் (சனி)

அவ்யாஸுர் புவநத்ரயீ மநிப்ருதம்
கண்டூயநை ரத்ரிணா
நித்ராணஸ்ய பரஸ்ய கூர்மவபு÷ஷா
நிச்வாஸ வாதோர்மய:
யத்வி÷க்ஷபண ஸம்ஸ்க்ருதோததி பய:
ப்ரேங்க்கோல பர்யங்கிகா
நித்யாரோஹண நிர்வ்ருதோ விஹரதே
தேவ: ஸஹைவ ச்ரியா

3. வராஹாவதாரம் (ராகு)

கோபாயே தநிசம் ஜகந்தி குஹநா
போத்ரீ பவித்ரீக்ருத
ப்ரஹ்மாண்ட ப்ரளயோர்மிகோஷ குருபிர்
கோணாரவைர் குர்குரை:
யத்தம்ஷ்ட்ராங்குர கோடிகாட கடநா
நிஷ்கம்ப நித்யஸ்த்திதி
ப்ரஹ்மஸ்தம்ப மஸெள தஸெள பகவதீ
முஸ்தேவ விச்ஸ்வம்பரா

4. நரஸிம்ஹாவதாரம் (செவ்வாய்)

ப்ரத்யாதிஷ்ட புராதந ப்ரஹரண க்ராம:
க்ஷணம் பாணிஜை:
அவ்யாத் த்ரீணி ஜகந்த்யகுண்ட மஹிமா
வைகுண்ட கண்டீரவ:
யத்ப்ராதுர்பவநா தவந்த்ய ஜடரா
யாத்ருச்சிகாத் வேதஸாம்
யா காசித் ஸஹஸா மஹாஸுர க்ருஹ
ஸ்த்தூணா பிதாமஹ்யபூத்

5. வாமனாவதாரம் (குரு)

வ்ரீடாவித்த வதாந்ய தாநல யசோ
நாஸீர தாடீபடஸ்
த்ரையக்ஷம் மகுடம் புநந்நவது நஸ்
த்ரைவிக்ரமோ விக்ரம:
யத்ப்ரஸ்தாவ ஸமுச்சரித த்வஜபடீ
வ்ருத்தாந்த ஸித்தாந்திபி:
ஸ்ரோதோபி: ஸுரஸிந்து ரஷ்டஸு
திஸா ஸெளதேஷு தோதூயதே

6. பரசுராமவதாரம் (சுக்ரன்)

க்ரோதாக்நிம் ஜமதக்நி பீடநபவம்
ஸந்தர்ப்பயிஷ்யந் க்ரமாத்
அக்ஷத்ராமபி ஸந்ததக்ஷய இமாம்
த்ரிஸ்ஸப்த க்ருத்வ: க்ஷிதிம்
தத்வா கர்மணி தக்ஷிணாம் க்வசந தா
மாஸ்கந்த்ய ஸிந்தும் வஸந்
அப்ரஹ்மண்ய மபாகரோது பகவா
நாப்ரஹ்ம கீடம் முநி:

7. ராமாவதாரம் (சூரியன்)

பாராவார பயோவிசோஷண கலா
பாரீண காலாநல
ஜ்வாலா ஜால விஹார ஹாரி விசிக
வ்யாபார கோரக்ரம:
ஸர்வாவஸ்த்த ஸக்ருத்ப்ரபந்ந ஜநதா
ஸம்ரக்ஷணைக வ்ரதீ
தர்மோ விக்ரஹவா நதர்ம விரதிம்
தந்வீ ஸ தந்வீத ந:

8. பலராமாவதாரம் (குளிகன்)

பக்கத்கௌரவ பட்டணப்ரப்ருதய:
ப்ராஸ்த ப்ரலம்பாதய:
தாலாங்கஸ்ய ததாவிதா விஹ்ருதயஸ்
தந்வந்து பத்ராணி ந:
க்ஷீரம் சர்க்கரயேவ யாபி ரப்ருதக்பூதா:
ப்ரபூதைர் குணை:
ஆகௌமாரக மஸ்வதந்த ஜகதே
க்ருஷ்ணஸ்ய தா: கேலய:

9. க்ருஷ்ணாவதாரம் (சந்திரன்)

நாதாயைவ நம: பதம் பவது நச
சித்ரைச் சரித்ர க்ரமை:
பூயோபிர் புவநாந்யமுநி குஹநா
கோபாய கோபாயதே
காலிந்தீ ரஸிகாய காலிய பணி
ஸ்ப்பார ஸ்ப்படா வாடிகா
ரங்கோத்ஸங்க விசங்க சங்க்ரம துரா
பர்யாய சர்யாய தே:

10. கல்கி அவதாரம் (புதன்)

பாவிந்யா தசயா பவந்நிஹ பவ
த்வம்ஸாய ந: கல்பதாம்
கல்கீ விஷ்ணுயச: ஸுத: கலிகதா
காலுஷ்ய கூலங்கஷ:
நிச்சேஷ க்ஷமகண்டகே க்ஷிதிதலே
தாரா ஜலௌகைர் த்ருவம்
தர்மம் கார்த்தயுகம் ப்ரரோஹயதி யந்
நிஸ்த்ரிம்ச தாராதர:
----------------------------------------
பால முகுந்தாஷ்டகம்

கராரவிந்தேன பதாரவிந்தம்
முகாரவிந்தே வினிவேசயந்தம்
வடஸ்ய பத்ரஸ்ய புடே சயானம்
பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி

ஸம்ஹ்ருத்ய லோகான் வடபத்ரமத்யே
சயான மாத்யந்த விஹீனரூபம்
ஸர்வேச்வரம் ஸர்வஹிதாவதாரம்
பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி

இந்தீவர ச்யாமள கோமளாங்கம்
இந்த்ராதி தேவார்சித பாதபத்மம்
ஸந்நான கல்பத்ருமமாச்ரிதானாம்
பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி

லம்பாலகம் லம்பித ஹாரயஷ்டிம்
ச்ருங்கார லீலாங்கித தந்தபங்க்திம்
பிம்பாதாரம் சாருவிசால நேத்ரம்
பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி

சிக்யே நிதாயாத்ய பயோததீநி
பஹிர்கதாயாம் வ்ரஜநாயிகாயாம்
புக்த்வா யதேஷ்டம் கபடேன ஸுப்தம்
பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி

களிந்தஜாந்தஸ்கித காளியஸ்ய
பணாக்ரரங்கே நடனப்ரியந்தம்
தத்புச்சஹஸ்தம் சரதிந்துவக்த்ரம்
பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி

உலூகலே பத்தமுதார சௌர்யம்
உத்துங்கயுக்மார்ஜுன பங்கலீலம்
உத்புல்ல பத்மாயத சாருநேத்ரம்
பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி

ஆலோக்ய மாதுர் முக மாதரேண
ஸதன்யம் பிபந்தம் ஸரஸீருஹாக்ஷம்
ஸச்சின்மயம் தேவமனந்தரூபம்
பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி
----------------------------------------
சிவன் துதி

நமாமி சங்கர பவானி சங்கர
உமாமகேஸ்வர தவ சரணம் (நமாமி)

ஹர ஹர ஹர ஹர ஹர ஹர சம்பா
அர்த்தனாரீஸ்வர தவ சரணம் (நமாமி)

சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சம்போ
ஸ்ரீ சைலேஸ்வரா தவ சரணம்

நந்தி வாஹனா நாக பூஷனா
சந்திர சேகரா ஜடாதரா

சூலாதார ஜோதி ப்ரகாசா
விபூதி சுந்தர விஸ்வேசா (நமாமி)

கால கால காம தஹனா
காசி விஸ்வேசா தவ சரணம் (நமாமி)

பம்பம் பம்பம் பமருக நாதா
டம்டம் டம்டம் டமருக நாதா
பம்பம் டம்பம் பமருக நாதா
ஸ்மசான வாசா தவ சரணம்

கிரிஜா ரமணா தவ சரணம்
ஹரே பசுபதே தவ சரணம் (நமாமி)

சிவபெருமான் பாடல்கள்

1. சரணம் ஈஸ்வரா... (ஹரிவராசனம் மெட்டு)

சரணம் ஈஸ்வரா ஸ்வாமி சரணம் ஈஸ்வரா
சரணம் ஈஸ்வரா ஸ்வாமி சரணம் ஈஸ்வரா

உலகம் படைப்பவர் ஈசன் உயிர்கள் காப்பவர்
உட்பகை அழிப்பவர் ஈசன் உண்மையானவர்

நலங்கள் தருபவர் ஈசன் நமது நாயகர்
நடன சுந்தரர் ஈசன் நாத ரூபமே

கங்கை கொண்டவர் ஈசன் கைலை வாசனே
கருணை மிக்கவர் ஈசன் கவலை தீர்ப்பவர்

மங்கை பாகனே மூன்று கண்ணனே
மதனை அழித்தவர் ஈசன் மௌன மூர்த்தியே  (சா)

நமசிவாயமே ஈசன் நந்தி வாகனர்
நீறணிந்தவர் ஈசன் நீலகண்டரே

அமிர்தலிங்கமே ஈசன் அம்மையப்பனே
அன்பு வடிவமே ஈசன் அம்மையப்பனே  (சரணம்)

2. பவனி வருகிறார் ஈசன்...

பவனி வருகிறார் ஈசன் பவனி வருகிறார்
பக்தர் நம்மை காப்பதற்கு பவனி வருகிறார்
வருகிறார் வருகிறார் வருகிறார்

1. உலகமெல்லாம் காக்கும் ஈசன் பவனி வருகிறார்
லோகமாதா பராசக்தி கூட வருகிறார்
நலங்களெல்லாம் தந்தருள பவனி வருகிறார்
நந்தி வாகனத்திலேறி பவனி வருகிறார்  (பவனி)

2. எங்குமுள்ள ஈசனிங்கு பவனி வருகிறார்
எட்டு திக்கும் புகழ்ந்து பாட பவனி வருகிறார்
தங்க தேரில் அமர்ந்து கொண்டு பவனி வருகிறார்
தம்மை மக்கள் நேரில் காண பவனி வருகிறார் (பவனி)

3. ப்ரம்மா விஷ்ணு தேவரெல்லாம் சூழ்ந்து வருகிறார்
சிவ கணங்கள் பூதமெல்லாம் தொடர்ந்து வருகிறார்
வரம் கொடுத்து வாழ்வருள ஈசர் வருகிறார்
வலிய பகை அழித் தொழிக்க பவனி வருகிறார் (பவனி)

4. மகாலெக்ஷ்மி அருமையாகப் பாடி வருகிறார்
சரஸ்வதியார் வீணையிலே நாதம் தருகிறார்
மகா நந்தி மிருதங்கத்தில் தாளமிடுகிறார்
தேவலோகப் பெண்களெல்லாம் ஆடி வருகிறார் (பவனி)

5. முனிவர் ரிஷி ஞானியர்கள் வேதம் சொல்கிறார்
தேவரெல்லாம் ஈசனுக்கு போற்றி சொல்கிறார்
கனிந்த கருணை உள்ளத்தோடு ஈசன் வருகிறார்
கண்டு வணங்கிப் பயன்பெறவே மக்கள் திரள்கிறார் (பவனி)

6. கண்ணை எட்டும் தூரம் வரைக்கும் பவனி வருகிறார்
காவடியாட்டம் கரகத்தாட்டம் முன்னால் வருகுது
விண்ணை முட்டும் அதிர்வேட்டு வெடிகள் முழங்குது
பம்பை மேளம் தவில் சப்தம் நம்மை அழைக்குது (பவனி)

7. அன்பர்களே தாய்மாரே விரைந்து வாருங்கள்
அம்மையப்பன் பவனி காண ஒன்று கூடுங்கள்
நல்லவை என்றும் நடை பெற வேண்டுங்கள்
நன்றியோடு என்றும் ஈசன் புகழைப்பாடுங்கள் (பவனி)

8. வீதியெங்கும் தோரணங்கள் வளைவுகள்கட்டுங்கள்
வீடுதோறும் கோலமிட்டு விளக்கு ஏற்றுங்கள்
மாதரெல்லாம் ஒன்று சேர்ந்து நாமம் கூறுங்கள்
மகத்தான நன்மைகள் எல்லாம் வந்து சேரும் (பவனி)

9. பக்தரெல்லாம் ஒன்று கூடி பஜனை செய்யுங்கள்
பாபமெல்லாம் தீரும் மனம் உருகிப் பாடுங்கள்
சக்தி உமை நாயகனை சரணம் அடையுங்கள்
சர்வேஸ்வரன் பவனி கண்டு சுகமாய் வாழுங்கள் (பவனி)

3. சந்திர சேகர சம்பு...
(அயிகிரி நந்தினி மெட்டு)

சந்திர சேகர சம்பு மகேஸ்வர சாம்ப சதாசிவ சங்கரனே !
சுந்தர சொக்கனே சச்சிதானந்தனே ஜோதி பிரபாகர சற்குருரே !
பரமனே பார்வதி நேசனே பைரவா தூய பஞ்சாட்சரனே !
ஹர ஹர சங்கர ஜெயஜெய சங்கர அன்புடன் என்னையும் ஏற்றருளே !
கங்கஜடாதர கௌரி மனோஹர கல்யாணி மனமகிழ் கருணாகரா !
குங்கும மேனியே கணங்களின்நாதனே குற்றங்கள் பொறுத்தருள் குணநிதியே !
அம்பிகை பாகனே அம்பலவாணனே அரவினையணிந்தவனே !
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர அன்புடன் என்னையும் ஏற்றருளே !
சிதம்பர நாதனே தீனதயாளனே சாமகானப் ரியனே !
மதியணி விமலனே மன்மத தகனனே மௌன முக்கண்ண மகேஸ்வரனே !
இறைவனே முதல்வனே ஏழைபங்காளனே எழில் நீலகண்ட ஏகாம்பரனே !
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர அன்புடன் என்னையும் ஏற்றருளே !
தில்லையில் ஆடிடும் வேதம் பாடிடும் தேவர்கள் போற்றிடும் நடராஜா !
எல்லையில் கணங்களும் விஷ்ணுவும் பிரமனும் துதித்திடும் சிவராஜா !
திரிபுர சுந்தரா ராமலிங்கேஸ்வரா தாயுமான பரமேஸ்வரனே !
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர அன்புடன் என்னையும் ஏற்றருளே !
அம்மையே அப்பனே அமிர்தகடேஸ்வர ஆனந்த மூர்த்தியே பசுபதியே !
உம்மையே நம்பினேன் உனதடி வணங்கினேன் ஓங்காரநாத உமாபதியே !
அருள்தரும் நந்திமேல் அமர்ந்துடன் வருகவே ஆதியே போற்றி போற்றி
ஹரஹர சங்கர ஜெய ஜெய சங்கர அன்புடன் என்னையும் ஏற்றருளே !

4. ஒன்றானவன் உருவில்...

ஒன்றானவன் உருவில் இரண்டானவன்
உருவான செந்தமிழில் மூன்றானவன்
நன்றான வேதத்தில் நான்கானவன்
நம சிவாய என ஐந்தானவன்
இன்பச் சுவைகளுக்கு ஆறானவன்
இன்னிசை ஸ்வரங்களில் ஏழானவன்
சிந்திக்கும் பொருள்களில் எட்டானவன்
தித்திக்கும் நவரச வித்தானவன்
பத்தானவன் நெஞ்சில் பற்றானவன்
பன்னிருகை வேலவனை பெற்றானவன்
முற்றாதவன் மூல முதலானவன்
முன்னைக்கும் பின்னைக்கும் நடுவானவன்
ஆணாகி பெண்ணாகி நின்றானவன்
அனையொன்று தானென்று சொன்னானவன்
தான்பாதி உமைபாதி கொண்டானவன்
சரிபாதி பெண்மைக்குத் தந்தானவன்
காற்றானவன் - ஒளியானவன்
நீரானவன் - நெருப்பானவன்
நேற்றாகி இன்றாகி என்றைக்கும் நிலையானவன்
ஊற்றாகி நின்றானவன் - அன்பின்
ஒளியாகி நின்றானவன்

5. சித்தமெல்லாம் எனக்கு....

சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா - உன்னை
சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே (சித்தமெல்லாம்

அப்பனில்லாமல் ஒரு அம்மை இல்லை - அந்த
அம்மையில்லாமல் இந்த பிள்ளை யில்லை (சித்த

பக்திப் பெருக்கில் எந்தன் ஊர் உருக - அந்த
பரவசத்தில் உள்ளே உயிர் உருக
சக்தியெல்லாம் திரண்டு சிவம் பெருக எந்தன்
சந்ததியே உந்தனுக்கு அடிபணிய இறைவா  (சித்த

கண்ணை திறந்து வைத்த கருப்பொருளே ... கோவில்
கதவை திறந்தழைத்த திருவருளே
வெண்ணைநல்லூர் உறையும் அருட்கடலே வந்து
என்னை என்றும் ஆளுகின்ற பரம் பொருளே இறைவா (சித்தமெல்லாம்

6. ஆதிசிவன் தாள் பணிந்து...

ஆதிசிவன் தாள் பணிந்து அருள் பெறுவோமே - எங்கள்
ஆதிசக்தி நாயகியின் துணை பெறுவோமே
வேதங்கள் தத்துவத்தை நாடிடுவோமே - திரு
வெண்ணீறும் குங்குமமும் சூடிடுவோமே
அஞ்செழுத்தைக் காலமெல்லாம் நெஞ்சில் வைப்போமே - அவன்
அடியார்க்கும் அன்பருக்கும் தொண்டுசெய்வோமே (ஆதி

நாவுக்கரசர் பாடிப்புகழும் நாதனல்லவா
நாதத்திற்கே பெருமை தந்த ஜீவனல்லவா
பேசும் தமிழ் பாட்டுக்கெல்லாம் தந்தையல்லவா ... அதை
பிள்ளைத் தமிழ் என்று சொன்ன அன்னையல்லவா  (ஆதி

7. தாள் திறவாய் மணிக்கதவே...

தாள் திறவாய் மணிக்கதவே தாள் திறவாய்
ஆலய மணிக்கதவே தாள் திறவாய் ... மறை
நாயகன் முகம் காண தாள் திறவாய் மறை  (ஆலய

ஆ.... ஆ.... மனக்கதவைத் திறந்த பரம் பொருளே
திருக்கதவும் திறக்க வர திருவருளே ஆ..ஆ..ஆ..
சிவமயமாய் மலர தாள் திறவாய்  (ஆலய

ஆடுந்திருவடி கோலமறிந்திட அரனே தாள் திறவாய்
அன்னையின் மார்பினில் பொன்மணிக் கண்டிட
சிவனே தாள் திறவாய்
அருள்நெறி தெளிவுற திருமறை புகழ்பெற
அன்பே தாள் திறவாய்
ஒருமுறை இருமுறை கேட்டேன் ஒளியே தாள் திறவாய்
இறைவா தாள் திறவாய் என் தலைவா தாள் திறவாய்
இறைவா தாள் திறவாய் என் தலைவா தாள் திறவாய்
கதவே தாள் திறவாய் தாள் திறவாய்

8. அறிவே நிறைவே... (ஜனனீ ஜனனீ - மெட்டு)

அறிவே நிறைவே அருளே பொருளே
அழகானந்தனே நடராஜனே
அர்த்தநாரீசனே சர்வேஸ்வரனே
திரிலோகேசனே பிரகதீஸ்வரனே
நந்திவாகனனே சுந்தரேஸ்வரனே (அறி)

நால் வேதங்களும் பிரம்ம தேவருடன்
மால் ஓதுவதும் நமச்சிவாய மன்றோ
சுபயோகங்களும் தவயோகங்களும்
இவை வேண்டுவதும் சிவபோக மன்றோ  (அறி)

உலகாதியும் நீ வளர் ஜோதியும் நீ
இன்பம் ஓங்கிடவும் துன்பம் நீங்கிடவும்
எந்தன் நெஞ்சில் நாதம் கொஞ்சிடவே
உந்தன் தஞ்ச மலர்ப்பாதம் தஞ்சமய்யா
ஆலமுண்டவனே நீலகண்டேசனே  (அறி)

9. ஆடுகின்றானடி தில்லையிலே...

ஆடுகின்றானடி தில்லையிலே - அதைப்
பாடவந்தேன் அவன் எல்லையிலே
திங்களும் ஆட சூலமும் ஆட
விரிசடை மீதொரு கங்கையும் ஆட
உலகெனும் மாபெரும் மேடையிட்டான்... அதில்
உயிர்களை எல்லாம் ஆடவிட்டான்
அசைந்திடும் மரம் செடி கொடிகளிலே - அந்த
அம்பலத்தரசன் ஆடுகின்றான் (ஆடு)

தந்தையும் தாயும் போல் அவன் இருப்பான்... ஒரு
தந்தையும் தாயும் அவனுக்கில்லை
அந்நாள் தொடங்கி இந்நாள் வரையில்
ஆடிய ஆட்டம் முடியவில்லை
புட்டுக்கு ஏனோ ஆசை கொண்டான் - அவன்
பிரம்படித் தனையே தாங்கிக் கொண்டான்
மண்ணைப் படைத்தவன் மண்சுமந்தான் அது
மதுரையில் ஆடிய ஆட்டமன்றோ  (ஆடு)

10. சிவபெருமானே எங்கள்...
(தீனரட்சகி - மெட்டு)

1. சிவபெருமானே எங்கள் சிவபெருமானே
சிந்தையில் குடிகொண்டவனே சிவபெருமானே - உன்
சீர்பாத சேவை செய்ய சிவபெருமானே
சீக்கிரமே வந்திடுவாய் சிவபெருமானே

2. பாம்பு தனை கழுத்தில் அணிந்த சிவபெருமானே
பார்வதியை இடத்தில் வைத்த சிவபெருமானே
பாங்காக நாங்கள் வாழ சிவபெருமானே
பாலமாக அமைந்திடுவாய் சிவபெருமானே

3. கங்கை தனை தலையில் வைத்த சிவபெருமானே
கண்ணப்பருக்கு அருள் செய்த சிவபெருமானே
கணபதியை எமக்களித்த சிவபெருமானே
கந்தனையும் சேர்த்தளித்த சிவபெருமானே

4. சந்திரனுக்கு அபயமளித்த சிவபெருமானே
சக்திசிவன் ஆனவனே சிவபெருமானே
சர்வலோக நாயகனே சிவபெருமானே
சகல பாக்கியம் அளிப்பவனே சிவபெருமானே

5. மண்டையோடு மாலையணிந்த சிவபெருமானே
மங்காத புகழ் வாய்ந்த சிவபெருமானே
மங்களங்கள் தருபவனே சிவபெருமானே
மக்கள் குறை தீர்ப்பவனே சிவபெருமானே

11. சிவனுக்கிசைந்தது....

சிவனுக்கிசைந்தது சிவராத்திரி
அவன் தேவி புகன்றது நவராத்திரி
அவளின் துணையே ஒரு சக்தி
இந்த அகிலம் காண்பது நவசக்தி  (சிவ)

தவத்தில் நிலைக்கும் ஒரு பாதி
தன் சந்ததி காக்கும் மறுபாதி
விதைக்கும் உழவன் சிவனென்றால்
அதன் விளைவை சுமப்பவள் உமையன்றோ  (சிவ)

இரவில் ஒரு நாள் அது மலரும்
என்றோ ஒரு நாள் அது உலரும்
இடையில் மடியில் இருத்தி வைத்து
எம்மை வளர்ப்பாள் அம்மையன்றோ  (சிவ)

தாயாய் வந்தாள் ஒரு சக்தி தாகம் தீர்த்தாள் ஒரு சக்தி
ஆயகலைகள் அருள் பவளாய்
ஆக்கம் தந்தாள் ஒரு சக்தி
செல்வம் தந்தென்னை சீராட்டி
செழிக்கச் செய்தாள் ஒரு சக்தி
அல்லும் பகலும் அருகிருந்தே
ஆற்றல் கொடுத்தாள் ஒருசக்தி
உடன் பிறந்தவள் ஒரு சக்தி
உள்ளம் நிறைந்தவள் ஒரு சக்தி
தோள் தவழ்ந்தவள் ஒரு சக்தி
வாழ்வு முழுவதும் சிவசக்தி
என்பதும் ஓர் உருவாய் நின்றதும் ஆணவம் சென்றதுவே
ஒன்பது இரவுகள் அவள் நினைவாய்
ஒளிவிளக்கு ஏற்றுவோம் வாரீரோ.

சிவ நாமாவளிகள்

1. ஸம்போ புராரே ஸங்கர புராரே
ஸூலதர பணிவர கங்கண புராரே

2. மறாதேவ ஸிவ ஸங்கர ஸம்போ
உமாகாந்த ஹர த்ருபுராரே
ம்ருத்யுஞ்ஜெய வ்ருஷபத்வஜ சூலின்
கங்காதர ஹர மதனாரே

3. ஸிவ ஸங்கர பரமேஸ தயாளோ
கருணாகர ஸுரநாயக காமிதபலவர தாயக  (ஸி)
ஸுத்தஸ்படிக ஸம்காஸ ஸுப்ர கைலாஸநிவெஸ (ஸி)
----------------------------------------
பைரவர் வழிபாட்டு மந்திரங்கள்

பிரார்த்தனாவளி

ஓம் !..... ஓம் !.... ஓம் !....

ஜய கணேச ஜய கணேச ஜய கணேச பாஹிமாம்
ஸ்ரீ கணேச ஸ்ரீகணேச ஸ்ரீகணேச ரக்ஷமாம்

சரவணபவ சரவணபவ சரவணபவ பாஹிமாம்
சுப்ரமண்ய சுப்ரமண்ய சுப்ரமண்ய ரக்ஷமாம்

வேல்முருகா வேல்முருகா வேல்முருகா பாஹிமாம்
வேலாயுதா வேலாயுதா வேலாயுதா ரக்ஷமாம்

ஜய ஸரஸ்வதி ஜய ஸரஸ்வதி ஜய ஸரஸ்வதி பாஹிமாம்
ஸ்ரீ ஸரஸ்வதி ஸ்ரீ ஸரஸ்வதி ஸ்ரீ ஸரஸ்வதி ரக்ஷமாம்

மஹாலெக்ஷ்மி மஹாலெக்ஷ்மி மஹாலெக்ஷ்மி பாஹிமாம்
ஜெயலெக்ஷ்மி ஜெயலெக்ஷ்மி ஜெயலெக்ஷ்மி ரக்ஷமாம்

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி பாஹிமாம்
ஆதிசக்தி ஆதிசக்தி ஆதிசக்தி ரக்ஷமாம்

ராஜேஸ்வரி ராஜேஸ்வரி ராஜேஸ்வரி பாஹிமாம்
திரிபுரசுந்தரி திரிபுரசுந்தரி திரிபுரசுந்தரி ரக்ஷமாம்

ஜய குரு சிவ குரு ஹரி குரு பாஹிமாம்
ஜகத் குரு பரம் குரு ஸத் குரு ரக்ஷமாம்

ஆதி குரு அத்வைத குரு ஆனந்த குரு பாஹிமாம்
சித்குரு சித்கனகுரு சின்மயகுரு ரக்ஷமாம்

ஓம்சிவாய ஓம்சிவாய ஓம்சிவாய பாஹிமாம்
ஸ்ரீசிவாய ஸ்ரீசிவாய ஸ்ரீசிவாய ரக்ஷமாம்

சம்புகுமார சம்புகுமார சம்புகுமார பாஹிமாம்
சபரிகிரீஸ சபரிகிரீஸ சபரிகிரீஸ ரக்ஷமாம்

ஆஞ்ஜனேய ஆஞ்ஜனேய ஆஞ்ஜனேய பாஹிமாம்
ஹனுமந்த ஹனுமந்த ஹனுமந்த ரக்ஷமாம்

தத்தாத்ரேய தத்தாத்ரேய தத்தாத்ரேய பாஹிமாம்
தத்தகுரு தத்தகுரு தத்தகுரு ரக்ஷமாம்

கௌரஹரி கௌரஹரி கௌரஹரி பாஹிமாம்
கௌராங்கஹரி கௌராங்கஹரி கௌராங்கஹரி ரக்ஷமாம்

கங்காராணி கங்காராணி கங்காராணி பாஹிமாம்
பாகீரதி பாகீரதி பாகீரதி ரக்ஷமாம்

ஜெயராம ஜெயராம ஜெயராம பாஹிமாம்
ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ரக்ஷமாம்

ஓம் குருநாதா ஜெய குருநாதா ஓம் குருநாதா பாஹிமாம்
சிவ குருநாதா ஜெய குருநாதா ஓம் குருநாதா ரக்ஷமாம்

ஸத்குரோ ஸத்குரோ ஸத்குரோ பாஹிமாம்
பரமதயாளு பரமதயாளு பரமதயாளு ரக்ஷமாம்

ஸத்குரோ ஸத்குரோ ஸத்குரோ பாஹிமாம்
பரமக்ருபாலு பரமக்ருபாலு பரமக்ருபாலு ரக்ஷமாம்

சிவானந்த சிவானந்த சிவானந்த பாஹிமாம்
சிவானந்த சிவானந்த சிவானந்த ரக்ஷமாம்

அஷ்ட பைரவர்கள் போற்றி

ஓம் கால பைரவா போற்றி
ஓம் கல்பாந்த பைரவா போற்றி
ஓம் குரோத பைரவா போற்றிஓம் கபால பைரவா போற்றி

ஓம் சம்ஹார பைரவா போற்றி
ஓம் உன்மத்த பைரவா போற்றி
ஓம் கண்ட பைரவா போற்றி
ஓம் உக்கிர பைரவா போற்றி

காலபைரவர் போற்றி

ஓம் பைரவனே போற்றி
ஓம் பயநாசகனே போற்றி
ஓம் அஷ்டரூபனே போற்றி
ஓம் அஷ்டமித் தோன்றலே போற்றி
ஓம் அயன்குருவே போற்றி
ஓம் அறக்காவலனே போற்றி
ஓம் அகந்தையழிப்பவனே போற்றி
ஓம் அடங்காரின் அழிவே போற்றி
ஓம் அற்புதனே போற்றி
ஓம் அசிதாங்கபைரவனே போற்றி

ஓம் ஆனந்த பைரவனே போற்றி
ஓம் ஆலயக் காவலனே போற்றி
ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
ஓம் இடுகாட்டுமிருப்பவனே போற்றி
ஓம் உக்ரபைரவனே போற்றி
ஓம் உடுக்கையேந்தியவனே போற்றி
ஓம் உதிரங்குடித்தவனே போற்றி
ஓம் உன்மத்த பைரவனே போற்றி
ஓம் உறங்கையில் காப்பவனே போற்றி
ஓம் ஊழத்தருள்வோனே போற்றி

ஓம் எல்லைத்தேவனே போற்றி
ஓம் எளிதில் இரங்குபவனே போற்றி
ஓம் கபாலதாரியே போற்றி
ஓம் கங்காளமூர்த்தியே போற்றி
ஓம் கர்வபங்கனே போற்றி
ஓம் கல்பாந்தபைரவனே போற்றி
ஓம் கதாயுதனே போற்றி
ஓம் கனல்வீசுங்கண்ணனே போற்றி
ஓம் கருமேகநிறனே போற்றி
ஓம் கட்வாங்கதாரியே போற்றி

ஓம் களவைக்குலைப்போனே போற்றி
ஓம் கருணாமூர்த்தியே போற்றி
ஓம் காலபைரவனே போற்றி
ஓம் காபாலிகர்தேவனே போற்றி
ஓம் கார்த்திகையில் பிறந்தவனே போற்றி
ஓம் காளாஷ்டமிநாதனே போற்றி
ஓம் காசிநாதனே போற்றி
ஓம் காவல்தெய்வமே போற்றி
ஓம் கிரோத பைரவனே போற்றி
ஓம் கொன்றைப்பிரியனே போற்றி

ஓம் சண்டபைரவனே போற்றி
ஓம் சட்டை நாதனே போற்றி
ஓம் சம்ஹார பைரவனே போற்றி
ஓம் சம்ஹாரகால பைரவனே போற்றி
ஓம் சிவத்தோன்றலே போற்றி
ஓம் சிவாலயத்திருப்போனே போற்றி
ஓம் சிக்ஷகனே போற்றி
ஓம் சீர்காழித்தேவனே போற்றி
ஓம் சுடர்ச்சடையனே போற்றி
ஓம் சுதந்திர பைரவனே போற்றி

ஓம் சிவ அம்சனே போற்றி
ஓம் சுவேச்சா பைரவனே போற்றி
ஓம் சூலதாரியே போற்றி
ஓம் சூழ்வினையறுப்பவனே போற்றி
ஓம் செம்மேனியனே போற்றி
ஓம் க்ஷேத்ரபாலனே போற்றி
ஓம் தனிச்சன்னதியுளானே போற்றி
ஓம் தலங்களின் காவலனே போற்றி
ஓம் தீதழிப்பவனே போற்றி
ஓம் துஸ்வப்னநாசகனே போற்றி

ஓம் தெற்கு நோக்கனே போற்றி
ஓம் தைரியமளிப்பவனே போற்றி
ஓம் நவரஸரூபனே போற்றி
ஓம் நரசிம்மசாந்தனே போற்றி
ஓம் நள்ளிரவு நாயகனே போற்றி
ஓம் நரகம் நீக்குபவனே போற்றி
ஓம் நாய் வாகனனே போற்றி
ஓம் நாடியருள்வோனே போற்றி
ஓம் நிமலனே போற்றி
ஓம் நிர்வாணனே போற்றி

ஓம் நிறைவளிப்பவனே போற்றி
ஓம் நின்றருள்வோனே போற்றி
ஓம் பயங்கர ஆயுதனே போற்றி
ஓம் பகையழிப்பவனே போற்றி
ஓம் பரசு ஏந்தியவனே போற்றி
ஓம் பலிபீடத்துறைவோனே போற்றி
ஓம் பாபபக்ஷயனே போற்றி
ஓம் பால பைரவனே போற்றி
ஓம் பாம்பணியனே போற்றி
ஓம் பிரளயகாலனே போற்றி

ஓம் பிரம்மசிரச்சேதனே போற்றி
ஓம் பூஷண பைரவனே போற்றி
ஓம் பூதப்ரேத நாதனே போற்றி
ஓம் பெரியவனே போற்றி
ஓம் பைராகியர் நாதனே போற்றி
ஓம் மல நாசகனே போற்றி
ஓம் மஹா பைரவனே போற்றி
ஓம் மணி ஞாணனே போற்றி
ஓம் மகர குண்டலனே போற்றி
ஓம் மகோதரனே போற்றி

ஓம் மார்த்தாண்ட பைரவனே போற்றி
ஓம் முக்கண்ணனே போற்றி
ஓம் முக்தியருள்வோனே போற்றி
ஓம் முனீஸ்வரனே போற்றி
ஓம் மூலமூர்த்தியே போற்றி
ஓம் யமவாதனை நீக்குபவனே போற்றி
ஓம் யாவர்க்கும் எளியவனே போற்றி
ஓம் ருத்ரனே போற்றி
ஓம் ருத்ராக்ஷதாரியே போற்றி
ஓம் வடுக பைரவனே போற்றி

ஓம் வடுகூர் நாதனே போற்றி
ஓம் வடகிழக்கருள்வோனே போற்றி
ஓம் வடைமாலைப்பிரியனே போற்றி
ஓம் வாரணாசி வேந்தே போற்றி
ஓம் வாமனர்க்கருளியவனே போற்றி
ஓம் விபீஷண பைரவனே போற்றி
ஓம் வீழாமல் காப்பவனே போற்றி
ஓம் விரும்பியதை அருள்வோனே போற்றி.

மஹா ம்ருத்யுஞ்ஜய கவசம்
பைரவ உவாச

ச்ருணுஷ்வ பரமேசானி கவசம் மன்முகோதிதம்,
மஹா ம்ருத்யுஞ்சய ஸ்யாஸ்ய ந தேயம் பரமாத்புதம்

யம் த்ருத்வாயம் படித்வா ச யம் ச்ருத்வா கவசோத்தமம்
த்ரைலோக்யாதிபதிர்பூத்வா ஸுகிதோ (அ) ஸ்மி மஹேச்வரி

ததேவ வர்ணயிஷ்யாமி தவ ப்ரீத்யா வரானனே
ததாபி பரமம் தத்வம் ந தாதவ்யம் துராத்மனே

ஓம் அஸ்ய ஸ்ரீ மஹாம்ருத்யுஞ்சய கவசஸ்ய ஸ்ரீ பைரவ
ருஷி : காயத்ரீச்சன்த: ஸ்ரீ ம்ருத்யுஞ்சய ருத்ரோ தேவதா
ஓம் பீஜம், ஜம் சக்தி: ஸ: கீலகம் ஹெளம் இதி
தத்வம் சதுர்வர்கபல ஸாதனே பாடே வினியோக :
ஓம் சந்த்ர மண்டல மத்யஸ்தே ருத்ரமாலே விசித்ரிதே,
தத்ரஸ்த்தம சின்தயேத் ஸாத்யம் ம்ருத்யும் ப்ராப்தோபி ஜீவதி

ஓம் ஜூம் ஸ: ஹெளஓம் சிர: பாது தேவோ ம்ருத்யுஞ்சயோ மம
ஸ்ரீ சிவோ வை லலாடம்ச ஓம் ஹெளம் ப்ருவெள ஸதாசிவ:

நீலகண்டோ(அ)வதான்நேத்ரே கபர்த்தீ மே(அ)வதாச்ச்ருதீ,
த்ரிலோசன(அ)வதாத் கண்டௌ நாஸம் மே த்ரிபுரான்தக:

முகம் பீயுஷக்கடப்ருத் ஓஷ்டௌ மேக்ருத்திகாம்பர:
ஹனும் மே ஹாடகேசானோ முகம் வடுகபைரவ:

கன்தராம் காலமதனோ கலம் கண ப்ரியோ(அ)வது
ஸ்கன்தௌ ஸ்கந்தபிதா பாது ஹஸ்தௌ மே கிரிசோ(அ)வது

நகான்மே கிரிஜாநாத: பாயாதங்குளி ஸம்யுதான்,
ஸ்தனௌ தாராபதி: பாது வக்ஷ: பசுபதிர்மம்

குக்ஷிம் குவேரவதேன: பார்ச்வெள மே மாரசாசன:
சர்வ: பாது ததா நாபிம் சூலீப்ருஷ்டம் மமாவது

சிச்னம் மே சங்கர: பாது குஹ்ய குஹ்யகவல்லப:
கடிம் காலாந்தக: பாயாத் ஊரூ மே(அ)ந்தககாதக:

ஜாகரூகோ(அ)வதாஜ்ஜானூ ஜங்கே மே காலபைரவ:
குல்பௌ பாயாஜ்ஜடாதாரீ பாதௌ ம்ருத்யுஞ்சயோ(அ)வது

பாதரதிமூர்த்த பர்யந்தம் ஸத்யோ ஜாதோ மமாவது,
ரக்ஷõஹீனம் நாமஹீனம் வபு: பாத்வம் ருதேச்வர: (பாது அம்ருதே ச்வர:)

பூர்வே பலவிகரணோ தக்ஷிணே காலசாஸன :
பச்சிமே பார்வதீநாத உத்தரே மாம் மனோன்மன:

ஜசான்யாமீச்வர: பாயாத் ஆக்னேய்யாம் அக்னிலோசன:
நைர்ருத்யாம் சம்புரவ்யான்மாம் வாயவ்யாம் வாயுவாஹன:

ஊர்த்வம் பலப்ரமதனே: பாதாலே பரமேச் வர:
தச திக்ஷú ஸதா பாது மஹாம்ருத்யுஞ்சயச் ச மாம்

ரணே ராஜகுல த்யூதே விஷமே ப்ராணஸம்ச யே
பாயாத் ஓம் ஜூம் மஹாருத்ரோ தேவதேவோ தசாக்ஷர:

ப்ரபாதே பாது மாம் ப்ரும்மா மத்யாஹ்னே பைரவோ(அ)வது
ஸாயம் ஸர்வேச் வர: பாது நிசா யாம் நித்யசேதன:

அர்த்தராத்ரே மஹாதேவோ நிசான்தே மஹோதய:
ஸர்வதா ஸர்வத: பாது ஓம் ஜூம்ஸ: ஹெளம் ம்ருத்யுஞ்சய:

இதீதம் கவசம் புண்யம் த்ரிஷுலோகேஷு துர்லபம்
ஸர்வமந்த்ரமயம் குஹ்யம் ஸர்வயந்த்ரேஷு கோபிதம்

புண்யம் புண்யப்ரதம் திவ்யம் தேவ தேவாதிதைவதம்
ய இதம்ச படேன் மந்த்ரம் கவசம் வாசயேத்தத

தஸ்யஹஸ்தே மஹாதேவி த்ர்யம்பகஸ்யாஷ்ட ஸித்தய :
ரணே த்ருத்வா சரேத்யுத்தம் ஹத்வா சத்ரூன் ஜயம் லபேத்

ஜபம் க்ருத்வா க்ருஹே தேவி ஸ்ம்ப்ராப்ஸ்யதி ஸுகம் புன:
மஹாபயே மஹா ரோகே மஹாமாரீபயே ததா
துர்பி÷க்ஷ சத்ருஸம்ஹாரே படேத்வசமாதராத்

(இதி மஹாம்ருத்யுஞ்சய கவசம் ஸம்பூர்ணம்)

பைரவர் காயத்ரி

ஓம் தீக்ஷ்ணதம்ஷ்ட்ராய வித்மஹே  க்ஷேத்ர பாலாய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்

ஓம் ஸ்வானத்வஜாய வித்மஹே
ஸூலஹஸ்தாய தீமஹி
தன்னோ பைரவ ப்ரஜோதயாத்

காலபைரவர் ஸ்துதி

அதிக்ருர மஹாகாய கல்பாந்த தஹநோபம
பைரவாய நமஸ்துப்யம் அனுக்ஞாம் தாதுமர்ஹஸிப

வடுக பைரவர் மஹாமந்திரம்

ஓம் - ஹ்ரீம் - க்லீம் - க்ஷ்மர்யூம் - வம் - வடுகாய
ஆபதுத்தாரணாய குரு குரு: வடுகாய - மஹா பைரவாய -
மஹா ம்ருத்யுஞ்ஜயாய - மஹா கால ராத்ரி ஸ்வரூபாய -
மஹா ப்ரளய காலாக்நி ஸ்வரூபாய - மஹா கால பைரவாய
பரசு - சக்தி - கட்க - கேட - தோமர தராய - மஹாகால கண்ட
ஸ்வரூபிணே - ப்ரத்யக்ஷருத்ர ரூபிணே - சீக்ரமஷ்டகுல
நாகானாம் - விஷம் தஹ தஹ: பந்த: பந்த: சேதய சேதய:
ஸர்வ ஜ்வரான் பக்ஷய பக்ஷய - க்ஷúத்ரான் ப்ரஹர ப்ரஹர
வித்வம்ஸய வித்வம்ஸய - பூதப்ரேத பிசாச க்ரஹாந்
ஸம்ஹர ஸம்ஹர - சிர: ப்ரப்ருதி ஸர்வாங்க சூல
பாண்டு ரோகாதீன் ஹந, ஹந, ஆசு விஷம்
ஸம்ஹர ஸம்ஹர - த்வாதசாதித்ய ஸ்வரூப வ்ருத்யசூல
தாரிணே ஏகாஹிக - த்வயாஹிக - த்ரயாஹிக -
சாதுர்யாஹிகார்த மாஸிக - ஷாண்மாஸிக, வார்ஷீக
ஸாத்ய தாஹவாத - பித்த - ச்லேஷ்ம ஸாந்நிபாதிகாதி
ஸர்வஜ்வரம் ஹந, ஹந, தஹதஹ - பசபச -
க்ருஹ்ண க்ருஹ்ண - ஆவேசய ஆவேசய - ஆர்க்ஷய ஆர்க்ஷய
ஸ்தம்பய ஸ்தம்பய - மோஹய மோஹய - பீக்ஷய பீக்ஷய -
பாசுபதாஸ்த்ரணே பந்த பந்த - சூலேன க்ருந்தய
க்ருந்தய - ப்ரஹ்ம ராக்ஷஸாந் பக்ஷய பக்ஷய ஜ்வல
ஜ்வல - மஹா பைரவாய - மஹாபதுத்தாரணாய - மம
ஸர்வ வித்யாம் குரு - மம ஸர்வ கார்யாணி
ஸாதய ஸாதய ஓம் ஹ்ராம் - ஹ்ரீம் - ஹ்ரூம் - ஹும்பட் ஸ்வாஹா

கால பைரவாஷ்டோத்ரம்
த்யானம்

ரக்த ஜ்வால ஜடாதரம் ஸுவிமலம் ரக்தாங்க தேஜோமயம்
த்ருத்வா சூல கபால பாச டமருத் லோகஸ்ய ரக்ஷகரம்
நிர்வாணம் கந வாஹனம் த்ரிநயனம் ஆனந்த கோலாஹலம்
வந்தே ஸர்வ பிசாசநாத வடுகம் க்ஷேத்ரஸ்ய பாலம் சிவம்

(சிவந்த ஜடையும், பரிசுத்தமான உடலும், சிவந்த தேஜஸூம், சூலம், கபாலம், உடுக்கை முதலியவற்றை தரித்து உலகத்தை ரக்ஷிப்பவரும், நிர்வாணமாகவும், நாயினை வாஹனமாகவும் கொண்டு, முக்கண்ணனாக, ஆனந்த வடிவினனாக பூத, ப்ரேத நாதனாக ÷க்ஷத்ரங்களை ரக்ஷிப்பவராக உள்ள பைரவரை நமஸ்கரிக்கிறேன்.)

பைரவோ பூத நாதஸ்ச - பூதாத்மா - பூதபாவந:  க்ஷேத்ரத: க்ஷேத்ரபாலஸ்ச - க்ஷேத்ரக்ஞ : க்ஷத்ரியோ விராட்

ஸ்மசான வாஸீ மாம்ஸாசீ - ஸர்ப்பராசி : ஸ்மராந்தக்ருத்
ரக்தப : பாநப : ஸித்த : - ஸித்தித : ஸித்தஸேவித :

கங்கால : கால சமந : - காலகாஷ்டா தநு : கவி :
த்ரிநேத்ரோ பகுநேத்ரஸ்ச - ததா பிங்கல லோசந :

சூலபாணி : கட்கபாணி : - கங்காளீ தூம்ரலோசந :
அபீருர்பைரவோ நாதோ - பூதபோ யோகிநீ பதி :

தநதோ தநஹாரீச : தநவாந் ப்ரீதி பாவந :
நாகஹரோ நாகபாசோ - வ்யோம கேச : கபால ப்ருத்

கால : கபாலமாலீச - கமநீய : கலாநிதி:
த்ரிலோசநோஜ்ஜவலந் நேத்ர : த்ரிசிகீ ச த்ரிலோகப :

த்ரிநேத்ர தநயோ டிம்ப : சாந்த : சாந்தஜனப்ரிய :
வடுகோ வடுவேஷஸ்ச : கட்வாங்க வர தாரக :

பூதாத்யக்ஷ : பசுபதி : - பிக்ஷúக : பரிசாரக :
தூர்தோ திகம்பர : சூரோ - ஹரிண : பாண்டுலோசந :

ப்ரசாந்த, சாந்தித : ஸித்த : - சங்கர : ப்ரிய பாந்தவ :
அஷ்டமூர்த்திர் நிதீசஸ்ச - ஞான சக்ஷúஸ் தபோமய :

அஷ்டோதார : ஷடாதார : - ஸர்பயுக்த : சிகீஸக :
பூதரோ பூதராதீச : - பூபதிர் பூதராத்மஜ :

கங்காலதாரீ முண்டீச - நாக யக்ஞோபவீதவாந்
ஜ்ரும்பணோ மோஹந : ஸ்தம்பீ மாரண : க்ஷேபணஸ்ததா

சுத்த நீலாஞ்ஜந ப்ரக்ய : - தைத்யஹா முண்டபூஷித
பலி புக்பலி புக் நாதோ - பாலோ பால பராக்ரம :

ஸர்வாபத் தாரணோ துர்கோ - துஷ்டபூதநிஷேவித :
காமீ கலா நிதி காந்த : - காமிநீ வசக்ருத்வசீ

ஸர்வ ஸித்திப்ரதோ வைத்யோ - ப்ரபுர் விஷ்ணு ரிதீ வஹி
அஷ்டோத்தரசதம் நாம் நாம் - பைரவஸ்ய மஹாத்மந:

(இதை அர்ச்சனையும், பாராயணமும் செய்வதால், இருமல், கக்குவான், இழுப்பு, காசம் முதலிய நோய்கள் அகலும்.)

ஸ்ரீ சங்கராசார்யார் அருளிய கால பைரவாஷ்டகம்

1. தேவராஜ - ஸேவ்யமான - பாவனாங்க்ரி பங்கஜம்
வ்யாலயஜ்ஞஸூத்ர - மிந்துசேகரம் - க்ருபாகரம்
நாரதாதியோகிப்ருந்த - வந்தினம் திகம்பரம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே

பொருள் : இந்திரனால் சேவிக்கப் பெறுபவரும், புனிதமான திருவடி தாமரையை உடையவரும், அரவத்தை பூணூலாக அணிந்தவரும், சந்திரனை சிரசில் வைத்தவரும், கருணை கொண்டவரும், நாரதர் முதலான யோகியர் குழாங்களால் வணங்கப் பெறுபவரும், திசைகளை ஆடையாக உடையவரும், காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்.

2. பானுகோடி - பாஸ்வரம் பவாப்திகாரகம் பரம்
நீலகண்ட - மீப்ஸிதார்த்த - தாயகம் த்ரிலோசனம்
காலகால - மம்புஜாக்ஷ - மக்ஷசூல - மக்ஷரம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே

பொருள் : கோடி சூரிய பிரகாசத்துடன் விளங்குபவரும் பிறவிக் கடலிலிருந்து கரையேற்றுபவரும், முதல்வரும், நீலகண்டத்தை உடையவரும், அடியார்கள் வேண்டும் பொருளை அளிப்பவரும் முக்கண்ணரும், காலனுக்கு காலனாக இருப்பவரும், தாமரைமலர் போன்ற கண்ணையுடையவரும், சொக்கட்டானில் சூரரும், குறைவற்றவரும், காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்.

3. சூலடங்க - பாச - தண்ட - பாணி - மாதிகாரணம்
ச்யாமகாய - மாதிதேவ - மக்ஷரம் நிராமயம்
பீமவிக்ரமம் ப்ரபும் விசித்ர - தாண்டவப்ரியம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே

பொருள் : சூலம், மழு, பாசம், தண்டம் இவைகளை கையில் ஏந்தியவரும், முதல் காரணரும், கரிய திருமேனி வாய்ந்தவரும், முதல் கடவுளரும், அழிவற்றவரும், பிணியற்றவரும், பயமுறும் பராக்கிரமமும் வாய்ந்தவரும், முக்திச் செல்வரும், அற்புத தாண்டவங்களில் ஆவல் கொண்டவருமான காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்.

4. புக்திமுக்திதாயகம் ப்ரசஸ்த - சாரு விக்ரஹம்
பக்தவத்ஸலம் ஸ்திதம் ஸமஸ்தலோக - விக்ரஹம்
நிக்வணன் - மனோஜ்ஞஹேம - கிங்கிணீலஸத்கடிம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே

பொருள் : போகம், மோக்ஷம் இவைகளை அளிப்பவரும் பிரசித்தி பெற்றதும் அழகியதுமாகிய வடிவமுடையவரும், அடியார்களிடம் அன்புள்ளவரும், காத்தல் கடவுளாய் இருப்பவரும், எல்லா உலகத்தையும் தன் வடிவமாகக் கொண்டவரும், நன்கு ஒலிப்பதும் மனதைக் கவருவதாகிய சலங்கையால் பிரகாசிக்கும் இடையை உடையவருமான காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்.

5. தர்மஸேபாலகம் த்வதர்மமார்க்க நாசகம்
கர்மபாசமோசகம் ஸுசர்மதாயகம் விபும்
ஸ்வர்ண வர்ணசேஷபாச - சோபிதாங்கமண்டலம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே

பொருள் : தர்மமாகிய அணையை பாதுகாப்பவரும், அதர்ம வழியை அழிக்கிறவரும், கன்மமாயா, மலங்களை போக்குபவரும், நற்சுகம் அளிப்பவரும், எங்கும் நிறைந்தவரும், பொன்மயமான சடை கற்றையால் விளங்கும் திருமேனி உடையவரும் காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்.

6. ரத்னபாதுகா - ப்ரபாபிரமபாத - யுக்மகம்
நித்யமத்வீதிய -மிஷ்டதைவதம் நிரஞ்ஜனம்
ம்ருத்யுதர்ப்ப - நாசனம் கராலதம்ஷ்ட்ர - மோக்ஷணம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே

பொருள் : ரத்ன பாதுகைகளின் ஒளியால் அழகு பெற்ற இரு திருவடிகளை உடையவரும், நித்யரும், இரண்டற்றவரும் இஷ்ட தெய்வமாக உள்ளவரும், குற்றமற்றவரும். மறிலியின் கர்வத்தை அடக்குபவரும், கூரிய அகன்றப் பற்களால் பயமுறச் செய்பவரும், காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்.

7. அட்டஹாஸ - பின்னபத்மஜாண்ட - கோசஸந்ததிம்
த்ருஷ்டிபாத - நஷ்டபாப - ஜாலமுக்ரசாஸனம்
அஷ்டஸித்தி - தாயகம் கபாலிமாலிகந்தரம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே

பொருள் : அட்டகாச ஒலியினால் தாமரையில் தோன்றிய அண்ட கோசங்களை பிளக்குபவரும், கண்விழி நோக்கத்தால் பாபக் குவியலை அழிக்கின்றவரும், பாபம் செய்தவர்களுக்கு கடும் தண்டனை விதிப்பவரும், அஷ்ட சித்தியை அளிப்பவரும், கபால மாலையால் விளங்கும் கழுத்தை உடையவரும், காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்.

8. பூதஸங்க - நாயகம் விசாலகீர்த்திதாயகம்
காசிவாஸ - லோகபுண்ய - பாபசோதகம் விபும்
நீதிமார்க்ககோவிதம் புராதனம் ஜகத்பதிம்
காசிகா - புராதிநாத காலபைரவம் பஜே

பொருள் : பூத கூட்டங்களுக்கு தலைவரும், விரிந்த புகழை அளிப்பவரும், காசியம்பதியில் வசிக்கும் மக்களது பாப புண்ணியங்களை பரிசோதிப்பவரும், எங்கும் நிறைந்தவரும், நீதி வழியில் கைதேர்ந்தவரும், பழமையானவரும், உலகத்துக்கு கர்த்தரும் காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்.

9. காலபைரவாஷ்டகம் படந்தி யே மனோஹரம்
ஜ்ஞானமுக்திஸாதனம் விசித்ர - புண்ய - வர்த்தனம்
சோகமோ ஹதைன்யலோப - கோபதாபநாசனம்
தே ப்ரயாந்தி காலபைரவாங்க்ரி ஸந்நிதிம் த்ருவம்

பொருள் : மனதுக்கு குதூகலத்தையும், ஞானம், முக்தி, சாதகத்தையும், பல வகைப்பட்ட புண்ணிய விருத்தியையும், வருத்தம், மயக்கம், ஏழ்மை, பேராசை, கோபம், தாபம் ஆகியவைகளின் நீக்கத்தையும் அளிக்கவல்லதாகிய இந்த கால பைரவாஷ்டகத்தை எவர்கள் படிக்கின்றார்களோ அவர்கள் நிச்சயமாக கால பைரவ மூர்த்தியின் திருவடியருளைப் பெறுகின்றார்கள்.

(இதி ஸ்ரீமத் சங்கராசார்ய - விரசிதம் கால பைரவாஷ்டகம் ஸம்பூர்ணம்)

கால பைரவ பஞ்ச ப்ரஹ்மஷடங்க மந்திரம்

பைரவ மூலமந்திரம்

ஓம் ஹ்ராம், ஹ்ரீம், ஹ்ரூம் : ஹ்ரைம்
ஹரௌம், க்ஷம், க்ஷேத்ரபாலாய நம:

பைரவ அருளை ஈட்டித் தரும் மூலமந்திரத்திற்குரிய பஞ்ச ப்ரஹ்மஷடங்க மந்திரம் பின்வருமாறு

1. ஓம் ஹோம் க்ஷம் ÷க்ஷத்ரபாலாய ஈசானமூர்த்தியே நம:
2. ஓம் ஹோம் க்ஷத்ரபாலாய தத்புருஷவக்த்ராய நம:
3. ஓம் ஹும் க்ஷம் க்ஷேத்ரபாலாய அகோர ஹ்ருதயாய நம:
4. ஓம் ஹும் க்ஷம் க்ஷேத்ரபாலாய வாமதேவகுஹ்யாய நம:
5. ஓம் ஹிம் க்ஷம் க்ஷேத்ரபாலாய ஸத்யோஜாதாயபாதாப்யாம் நம :
6. ஓம் ஹம் க்ஷேத்ரபாலாய ஸ்ருதாய நம:
7. ஓம் ஹாம் க்ஷம் க்ஷேத்ரபாலாய சிரசேஸ்வாஹா
8. ஓம் ஹும் க்ஷம் க்ஷேத்ரபாலாய சிகாயைவஷட்
9. ஓம் ஹைம் க்ஷம் க்ஷேத்ரபாலாய கவசாயஹும்
10.ஓம் ஹெளம் க்ஷம் க்ஷேத்ரபாலாய நேத்ரத்யாய வெளஷட்
11. ஓம் ஹ: க்ஷம் க்ஷேத்ரபாலாய அஸ்த்ராயபட்

ஸ்வர்ணாகர்ஷண பைரவர் மூலமந்திரம்

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் ஸ்ரீம் ஆபதுத்தாரணாய
ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் அஜாமளபந்தநாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய மம தாரித்ரிய வித்வேஷணாய
மஹா பைரவாய நம: ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்.

ஸ்வர்ணாகர்ஷண பைரவர் மந்திரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்வர்ணபைரவாய ஹும்பட் ஸ்வாஹா
ஓம் நமோ பகவதே ஸ்வர்ணாகர்ஷண பைரவாய
தன தான்ய வ்ருத்தி கராய சீக்ரம் ஸ்வர்ணம்
தேஹி தேஹி வச்யம் குரு ஸ்வாஹா

உன்மத்த பைரவர் மந்திரம்

ஓம் ஹ்ரீம் அங்க் - க்லீம் உன்மந்தானத்த பைரவ
சர்வ சத்ரு நாசய குரு குரு ஸ்வாஹா

(தீவிரமான மனநோய்கள், சித்தபிரமை, ஹிஸ்தீரியா நோய் நீங்க)

ஸ்வர்ணாகர்ஷண பைரவ லக்ஷ்மி குபேர மந்த்ரம்

ஓம் ஸ்ரீம் கம் ஸெளம்யாய லக்ஷ்மி கணபதயே
வர வரத ஸர்வ தனம்மே வசமானாய ஸ்வாஹா !

ஓம் மஹாலக்ஷ்மீர் மஹாகாளி மஹாகன்யா சரஸ்வதி
போக வைபவ சந்தாத்திரி பக்த அனுக்கிரஹ காரிணி

ஓம் அன்னம்தா தனம்தா பூதா த்வணி
மாதி பலப்ரதா ஸித்திதா புத்திதா
சூல சிஷ்டா சார ப்ரயணா !

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் ஞானாய கமலதாரிண்யை
சக்தியை ஸிம்ஹ வாரின்யை பலாயை ஸ்வாஹா !

ஓம் யக்ஷாய குபேராய வைஸ்வரணாய
தனதான்ய பதயே தனதான்ய ஸம்ருதிர்ம்மே
தேஹி தாபாய ஸ்வாஹா !

ஓம் ஐம் க்லீம் ஸெளம் ஸர்வ மந்த்ர சொரூபிணி !
ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் பாலா புவனேஸ்வரீம்
ஹ்ரம் ஹ்ரீம் ஸ்ரூம் ஸகல ஜயகரி நமோஸ்துதே !

ஓம் ஐம் க்லாம் க்லீம் க்லூம்
ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் வம்ஸஹ
ஆபதோ தாரணாய அஜாமில பந்தனாய
லோகேஸ்வராய ஸ்ரீஸ்வர்ண ஆகர்ஷண பைரவாய
மம தாரித்தரிய வித்வேஷனாய
ஆம் ஸ்ரீம் மஹா பைரவாய ஸ்வாஹ !

ஓம் சுவாநத் த்வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி !
தந்நோ பைரவ : ப்ரசோதயாத் !!

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே !
வாயுபுத்ராய தீமஹி !
தந்நோ ஹனுமத் ப்ரசோதயாத் !!

கால பைரவ பஞ்சரத்னம்

கட்கம் கபாலம் டமருகம் த்ரிஸுலம் ஹஸ்தாம்புஜே ஸ்ந்நதம் த்ரிணேத்ரம்
திகம்பரம் பஸ்ம விபூஷிதாங்கம் நமாம்யஹம் பைரவமிந்துசூடம்

கவித்வதம் ஸத்வரமேவ மோதான் நதாலேயே ஸம்பு மனோபிராமம்
நமாமி யானீ க்ருத ஸார மேயம் பவாப்தி பாரம் கம்யந்த மாஸு

ஜராதி துக்கௌக விபேத தக்ஷம் விராகி ஸமஸேவ்ய பாதாரவிந்தம்
நரபதிபத்வ ப்ரதமாஸு நந்த்ரே ஸுராதிபம் பைரவ மானதோஸ்மி

ஸமாதி ஸம்பத் ப்ரதமான தேப்யோ ரமா தவாத்யாசித பாதபத்மம்
ஸமாதி நிஷ்டை ஸ்தரஸாதிகம்யம் நமாம்யஹம் பைரவமாதிநாதம்

கிராமகம்யம் மனஸாபி தூரம் சராசாஸ்ய ப்ரபாவதி ஹேதும்
கராக்ஷிபச் சூன்ய மாதாபிரம்யம் பராவரம் பைரவமான தோஸ்மி

பைரவர் மூலமந்திரங்கள்

அஸ்யஸ்ரீ பைரவ மஹாமந்த்ரஸ்ய ப்ருஹதாரண்ய ரிஷி: அனுஷ்டு சந்த : பைரவொ தேவதா
வம் பீஜம், மாயா சக்தி: கம் கீலகம், மம அபீஷ்ட ஸித்யர்தே ஜபே விவியோக :

ஏக ஷஷ்டி அக்ஷரம் மந்திரம் லகு சித்திப்ரதாயகம்
ஏக ஷஷ்டி சதம் குர்யாத் ஜபம் மந்திரஸ்ய சித்தியே

ஓம் ஹ்ரீம் வம் வடுகாய ஆபதுத்தாரணாய குரு குரு வடுகாய ஹ்ரீம்.

ஓம் ஹ்ராம், ஹ்ரீம், ஹ்ரூம்: ஹ்ரைம்
ஹரௌம், க்ஷம், க்ஷேத்ரபாலாய நம :

இலுப்பைக்குடி பைரவர் தோத்திரம்

ஒரு கையிலுடுக்கு மற்றையொரு கையினாக பாச மொருகையின் முத்தலை சூலொரு கையிற் கபாலங்கொண்டீ
ரிருகையுங் குரைப்பாமோத்தை யிசைக்கு நாய் சூழவில்வ
மிருகையுங் சூழ்வனத்திலியல் வயிரவன்றாள் போற்றி.
- சதாவதானம் சுப்பிரமணிய அய்யர்

பைரவர் அஷ்டோத்தர சதநாமாவளி

ஓம் பைரவாய நம
ஓம் பூத நாதாய நம
ஓம் பூதாத்மனே நம
ஓம் பூதபாவநாய நம
ஓம் க்ஷேத்ரதாய நம
ஓம் க்ஷேத்ரபாலாய நம
ஓம் க்ஷேத்ரக்ஞாய நம
ஓம் க்ஷேத்ரியாய நம
ஓம் விராஜே நம
ஓம் ஸ்மசானவாஸிநே நம

ஓம் மாம்ஸாசிநே நம
ஓம் ஸர்ப்பராசஸே நம
ஓம் ஸ்மராந்தக்ருதே நம
ஓம் ரக்தபாய நம
ஓம் பானபாய நம
ஓம் ஸித்தாய நம
ஓம் ஸித்திதாய நம
ஓம் ஸித்தஸேவிதாய நம
ஓம் கங்காளாய நம
ஓம் காலசமனாய நம

ஓம் கலாய நம
ஓம் காஷ்டாய நம
ஓம் தநவே நம
ஓம் கவயே நம
ஓம் த்ரிநேத்ரே நம
ஓம் பஹுநேத்ரே நம
ஓம் பிங்களலோசனாய நம
ஓம் சூலபாணயே நம
ஓம் கட்கபாணயே நம
ஓம் கங்காளிநே நம

ஓம் தூம்ரலோசனாய நம
ஓம் அபீரவே நம
ஓம் பைரவாய நம
ஓம் நாதாய நம
ஓம் பூதபாய நம
ஓம் யோகிநீபதயே நம
ஓம் தநதாய நம
ஓம் தநஹாரிண நம
ஓம் தநவதே நம
ஓம் ப்ரீதிபாவனாய நம

ஓம் நாகஹாராய நம
ஓம் நாகபாசாய நம
ஓம் வ்யோமகேசாய நம
ஓம் கபாலப்ருதே நம
ஓம் காலாய நம
ஓம் கபாலமாலிநே நம
ஓம் கமநீயாய நம
ஓம் கலாநிதயே நம
ஓம் த்ரிலோசனாய நம
ஓம் ஜ்வலந் நம
----------------------------------------
பைரவரைப் போற்றும் தேவாரப் பதிகம்

கும்பகோணம் - திருவாரூர் பாதையில் உள்ள திருச்சேறைத் தலத்திலுள்ள சாரபரமேஸ்வரர் ஆலயத்தில் கால பைரவர் அற்புதமாகக் காட்சியளிக்கிறார். அவரை வழிபட்ட திருநாவுக்கரசர், பைரவரைப் போற்றிப் பாடிய ஒரே ஒரு தேவாரப்பதிகம் இது.

விரித்த பல்கதிர்கொள் சூலம்
வெடிபடு தமருகம்கை
தரித்ததோர் கோலகால பயிரவனாகி
வேழம் உரித்து உமை அஞ்சக் கண்டு
ஒண்திருமேனி வாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார் சேறைச்
செந்நெறிச் செல்வனாரே

பைரவர் வழிபாடும் அதன் சிறப்புகளும்: படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் ஆற்றும் இந்த பைரவரின் வழிபாடு வடக்கேயிருந்து வந்த கபாலிக வழிபாட்டின் ஒரு பகுதியாகும். அனைத்து சிவாலயங்களில் பரிவார தெய்வ வழிபாடாக வழிபடப்படும் இந்த பைரவ வழிபாடு இல்லங்களில் திரிசூல வழிபாடாகவும் போற்றப்படுகிறது. வீடுகளில் காவல் தெய்வமான பைரவர் வடிவங்களை சிலைகளாகவோ படமாகவோ வைத்து வழிபடுவதற்குப் பதில் வீட்டின் சுவரில் திரிசூலத்தை வரைந்து அதனருகில் திருவிளக்கேற்றி வழிபடுகின்றனர். அனைத்து சிவாலயங்களிலும் வழிபாடு சூரியனிடமிருந்து ஆரம்பித்து அர்த்தசாமப் பூசையாக பைரவருடன் முடிவடைகிறது. இரவு அர்த்தசாமப் பூசை முடிந்ததும் பைரவருக்கான சிறப்பு வழிபாடுகள் செய்து ஆலயத்தின் கதவுகளை மூடி ஆலய சாவிக்கொத்தை அவரின் காலடியில் வைப்பது வழக்கம். பாதுகாப்பற்ற இந்நாளில் இப்படி சாவிகளை வைப்பதைத் தவிர்த்து பூசை முடிந்ததன் அடையாளமாக கைமணியையும் அபிஷேக கலசம் அல்லது கைச்செம்பையும் வைக்கின்றனர். ஆலயங்களில் நடைபெறும் வருடாந்திர பிரமோற்சவத்திற்கு முன்னும் பின்னும் பைரவருக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. விசேஷ தினங்களில் இவருக்கு நெய்யபிஷேகம் சிறப்பாகச் செய்யப்படுகிறது. அந்த விசேஷ தின பூசையில் எட்டுவித பட்சணங்களும், எட்டுவித அன்னங்களும், நைவேத்தியப் பொருட்களாக நிவேதிக்கப்படுகின்றன. இன்னும் எட்டுவித மலர்களால் அர்ச்சனை செய்து எட்டுவித ஆரத்திகளும் செய்யப்படுகின்றன.

வழிபாட்டிற்கு உகந்த நேரம்: பைரவருக்குரிய வழிபாட்டு நேரம் நள்ளிரவாகும். இந்த அகால நேரத்தில் பராசக்தியானவள் பைரவி என்னும் பெயரில் நடமாடுகின்றாராம். அவளுடன் இறைவனும் பைரவராக தலத்தை வலம் வருவாராம். அதனால் சித்தர்கள் அந்த நள்ளிரவு நேரத்தில் திரிபுர பைரவியையும் பைரவரையும் தியானிக்கின்றார்களாம்.

பைரவர் வழிபாட்டுக்கு ஏற்ற நாட்கள்

ஞாயிற்றுக்கிழமை: (சிம்ம ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு)

தள்ளிப்போகும் திருமணங்களுக்குப் பரிகாரம் காண மணமகனோ, மணமகளோ ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இராகு காலத்தில் (4.30-6.00) பைரவருக்கு அர்ச்சனை, ருத்ராபிஷேகம், வடை மாலை சாற்றி வழிபட்டால் தடைகள் நீங்கித் திருமணம் கைகூடும். கடன் வாங்கி வட்டியும், அசலும் கட்ட முடியாமல் தவிப்பவர்கள் இராகு காலத்தில் காலபைரவருக்கு முந்திரிப்பருப்பு மாலை கட்டி, புனுகு சாற்றி, வெண் பொங்கல் நைவேத்தியம் இட்டு வழிபட்டு பிரார்த்தனை செய்தால் நலம் கிடைக்கும்.

திங்கட்கிழமை: (கடக ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு)

வில்வார்ச்சனை செய்திட சிவனருள் கிட்டும். திங்கட்கிழமை அல்லது சங்கடஹர சதுர்த்தியன்று பைரவருக்கு பன்னீர் அபிஷேகம் செய்து சந்தனக் காப்பிட்டு புனுகு பூசி நந்தியாவட்டை மலர் மாலை அணிவித்து வழிபட்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் விலகும்.

செவ்வாய்க்கிழமை: (மேஷம், விருச்சிக ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு)

மாலையில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் இழந்த பொருளைத் திரும்பப் பெறலாம். எல்லா அஷ்டமிகளிலும் பைரவர் விரதம் இருக்கலாம். ஆனால் செவ்வாய்க்கிழமைகளில் அஷ்டமி இணைந்து வந்தால் அதைவிடச் சிறப்பான நாள் ஏதுமில்லை. குறைந்தபட்சம் 21 அஷ்டமிகள் தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும். அதிகாலையில் நீராடி, பைரவரை மனதில் நினைத்து வணங்க வேண்டும். பகலில் ஏதாவது ஒரு பொழுது மட்டும் எளிய உணவு சாப்பிடலாம். இரவில் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. அன்று மாலை பைரவருக்கு வடை மாலை சாற்றி வழிபட வேண்டும். வசதி குறைந்தவர்கள் ஒரு தீபம் மட்டும் ஏற்றினால் போதும்.மறுநாள் நவமியன்று காலை மீண்டும் கோயிலுக்குச் சென்று விநாயகர், சிவன், அம்பாள், பைரவரை வணங்கி, ஏழைகளுக்கு அன்னதானம் அளிக்க வேண்டும். சிறிதளவு சர்க்கரைப் பொங்கல் செய்து, குழந்தைகளுக்கு கொடுத்தால் நல்லது. பிறகு வீட்டிற்கு வந்து பூஜையறையில் பூஜை முடித்து, இனி என்னால் யாருக்கும் எந்தக் கெடுதலும் வராது என உறுதிமொழி எடுக்க வேண்டும். சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். பைரவ விரதத்தின் நோக்கமே கேடுகளை அழிப்பதுதான்.

புதன்கிழமை: (மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு)

நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பூமி லாபம் கிட்டும்.

வியாழக்கிழமை: (தனுசு, மீனம் ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு)

விளக்கேற்றி வந்தால் ஏவல், பில்லி சூன்யம் விலகும்.

வெள்ளிக்கிழமை: (ரிஷபம், துலாம் ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு)

மாலையில் வில்வ இலைகளாலும், வாசனை மலர்களாலும் சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வந்தால் வறுமை நீங்கி, செல்வப் பேறு கிட்டும்.

சனிக்கிழமை: (மகரம், கும்ப ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு)

சனி பகவானுக்கு குரு பைரவர். ஆகவே சனிக்கிழமை அன்று இவரை பிரத்யேகமாக வழிபடுவதால் அஷ்டமச்சனி, ஏழரைச்சனி, அர்த்தாஷ்டமச் சனி விலகி நல்லவை நடக்கும். கால பைரவர் உடலில் பூமியைத் தாங்கும் எட்டு நாகங்களும் மாலையாக இருந்து அலங்கரிப்பதால் இவரை வழிபட்டால் சர்ப்ப தோஷங்களும் நீங்கும். சனி பிரதோஷத்தன்று பைரவருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து அவரவர் வசதிக்கேற்ப தேங்காய், தேன், தயிர் அன்னம் படைத்து வழிபட்டு பிரசாதமாகப் பக்தர்களுக்கு விநியோகிக்க வழக்குகளில் வெற்றி, வியாபாரத்தில் லாபம் கிட்டும். எதிரிகளால் ஏற்படும் தொல்லை மற்றும் பில்லி, சூனியம் போன்ற மந்திரத் தொல்லைகளும் அடியோடு அகலும். அஷ்டமி திதியில் மற்றும் பிரதி தமிழ் மாதம் எல்லாத் தேதியிலும் ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷம் நட்சத்திர தினங்களிலும் பைரவரை வழிபட்டால் உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிட்டும். தொழிலில் லாபம் கிட்டும். தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி ஒவ்வொரு செவ்வாய் தோறும் பைரவரை வணங்கி கால பைரவ அஷ்டகம் படித்து வந்தால் எதிரிகளை அழித்து, கடன்கள் தீர்ந்து, யம பயம் மட்டுமில்லாது எவர் பயமுமின்றி நீண்ட நாள் வாழலாம். தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும். பஞ்ச தீபம் என்பது இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் ஆகும். இவற்றை தனித்தனி தீபமாக ஏற்ற வேண்டும். அகல் விளக்கில் ஏற்றலாம். பைரவருக்கு இந்த பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் எண்ணிய செயல்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.

இழந்த பொருட்களை மீண்டும் பெற: பைரவரின் சன்னதி முன்னால் (27) மிளகை வெள்ளைத் துணியில் சிறு மூட்டையாகக் கட்டி அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றி 27 நாள் வழிபட்டால் இழந்த பொருட்களும் சொத்துக்களும் திரும்பக் கிடைக்கும்.

குழந்தைச் செல்வம் பெற: திருமணமாகி பல வருடங்களாகியும் குழந்தைப் பேறு இல்லாதவர்கள் ஆறு தேய்பிறை அஷ்டமி நாட்களில் சிவப்பு அரளிப் பூக்களால் பைரவரை அர்ச்சனை செய்து, ஏழை குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கி வழிபடின் விரைவில் அத்தம்பதியருக்குக் குழந்தைச் செல்வம் கிட்டும்.

சனி பகவானின் அருள் கிடைக்க, தோஷம் நீங்க: சனீஸ்வரரின் குரு பைரவர் என்பதால், பைரவரை வணங்கினால், சனிபகவான் மகிழ்ந்து நமக்கு அதிக துன்பங்களைத் தரமாட்டார். எனவே, நாம் சனிக்கிழமைகளில் பைரவரை வணங்கினால் சனி பகவானால் உண்டாகும் இன்னல்கள் யாவும் நீங்கும்.

தடைபெற்ற திருமணம் நடக்கவும், எதிரிகள் தொல்லை நீங்கவும்: ஞாயிற்றுக்கிழமைகளில் இராகுகால நேரத்தில் பைரவரை வணங்க வேண்டும். அதனால் உடனே நன்மை உண்டாகும். பில்லி, சூனியம், ஏவல் அகலும். திருமணம் கைகூடும். 6 சனிக்கிழமைகளில் 6 எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் தடைபட்ட திருமணம் கைகூடும். தடைப்பட்ட அனைத்து காரியங்களும் நிறைவேறும். குடும்ப ஒற்றுமை நிலைக்கும்.

ஒவ்வொரு மாதமும் வழிபட வேண்டிய பைரவர்கள்: துவாதச ஆதித்தியர்கள் அதாவது பன்னிரண்டு ஆதித்தியர்கள் ஒருங்கிணைந்து சூரியனாகி செயல்படுவதாகவும், சூரியனே பன்னிரண்டு வித தன்மைகளுடன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தன்மை உடையவராக செயல்படுவதாகவும் கூறுவார்கள். துவாதச ஆதித்யர்களை வழிபட்டு நலம் பெறலாம். காலத்தின் நாயகனும் சூரியனைத் தனக்குள் கொண்டவருமான சர்வேஸ்வரனின் திருவடிவமான பைரவர் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பைரவராகக் காட்சி தருகிறார். எந்தெந்த மாதத்தில் எந்த பைரவர் ஆட்சி புரிகிறாரோ அந்த பைரவரை வழிபட்டு நன்மை அடையலாம்.

மாதங்கள் துவாதச ஆதித்தியர்கள் ஆதித்தியர்களின் பிராண தேவதை:

சித்திரை அம்சுமான்  சண்ட பைரவர்
வைகாசி தாதா  ருரு பைரவர்
ஆனி ஸவிதா  உன்மத்த பைரவர்
ஆடி அரியமான்  கபால பைரவர்
ஆவணி விஸ்வான்  ஸ்வர்ணாகர்ஷண பைரவர்
புரட்டாசி பகன்  வடுக பைரவர்
ஐப்பசி பர்ஜன்யன்  க்ஷேத்ரபால பைரவர்
கார்த்திகை துவஷ்டா  பீஷண பைரவர்
மார்கழி மித்திரன்  அசிதாங்க பைரவர்
தை விஷ்ணு  குரோதன பைரவர்
மாசி வருணன்   ஸம்ஹார பைரவர்
பங்குனி பூஷா   சட்டநாத பைரவர்.
----------------------------------------