எல்லோருக்கும் சொந்தமான பிள்ளை(யார்)!
மஞ்சள் பொடியிலும், களிமண்ணிலும் சாணியிலும் கூட பிள்ளையாரைப் பிடித்துப் பூஜை செய்து விடலாம். அவர் எளிதில் சந்தோஷப்படுகிறவர். எங்கே, எப்படி, எதில் கூப்பிட்டாலும் உடனே வந்து அந்தக் கல்லோ, களிமண்ணோ அதற்குள்ளிருந்து கொண்டு அருள் செய்வார். பாவித்த மாத்திரத்தில் எந்த மூர்த்தியிலும் அவர் வந்து விடுகிறார் என்று சொல்வதுண்டு. மற்ற ஸ்வாமிகளைத் தரிசனம் செய்வது என்றால், நாம் அதற்காக காலம் பார்த்து குளித்து முழுகி, அர்ச்சனை சாமான்கள் வாங்கிக் கொண்டு கோயிலுக்குப் போனாலும் நேரே அந்த ஸ்வாமியிடம் போய்விட முடியாது. பிரகாரம் சுற்றிக் கொண்டு உள்ளே போக வேண்டும். அப்போதும் கூட ஸ்வாமிக்குப் பக்கத்தில் போகக் கூடாது. கொஞ்சம் தள்ளித் தான் நிற்க வேண்டும். பிள்ளையார் இப்படி இல்லை, தெருவிலே நடக்கும் போது தற்செயலாகத் தலையைத் தூக்கினால் அங்கே ஒரு முக்கில் பிள்ளையார் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். ஒரு பேதமும் இல்லாமல் யாரும் கிட்டே போய்த் தரிசிக்க முடிகிறது. பிள்ளையாருக்கு எல்லோரும் சொந்தம். பிள்ளையார் எல்லோருக்கும் சொந்தம். குழந்தைகளுக்காக நீதி நூல்களைச் செய்த ஒளவையார் பெரியவர்களுக்குக் கூட எளிதில் புரியாத பெரிய யோக தத்துவங்களை வைத்துப் பிள்ளையார் மீதே ஒரு ஸ்தோத்திரம் செய்திருக்கிறார். அதற்கு விநாயகர் அகவல் என்று பெயர். அளவில் சின்னது தான் அந்த அகவல் ஸ்தோத்திரம். எல்லோரும் அகவல் சொல்லி அவரை வழிபடவேண்டும். பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் இதில் அதிக உரிமை உண்டு. அவ்வை பெண்ணாகப் பிறந்ததால் பெண்கள் எல்லோருக்கும் அவளுடைய இந்த ஸ்தோத்திரத்தில் பாத்தியதை ஜாஸ்தி. கொஞ்சம் கட முட என்றிருக்கிறதே, அர்த்தம் புரியவில்லையே என்று பார்க்க வேண்டாம். அர்த்தம் புரிந்தாலும் புரியாவிட்டாலும் அவ்வையின் வாக்குக்கே நன்மை செய்யும் சக்தி உண்டு என்று நம்பி அகவலை பொட்டை நெட்டுருப் போட்டுச் சொன்னாலும் போதும் அதனால் ÷க்ஷமம் அடையலாம். சொல்லச் சொல்ல தானே அர்த்தம் புரியும். பிள்ளையாரே அது புரிவதற்கான அநுக்கிரஹத்தைச் செய்வார்.