வியாழன், 24 ஏப்ரல், 2014

அரசுத்தேர்வில் வெற்றி பெற எந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்?

தேர்வில் வெற்றி பெற, முதலில் அன்றாடம் நன்கு படித்து பயிற்சி பெறுங்கள். அறிவு வளம் பெற சரஸ்வதியை வழிபடுங்கள். பயிற்சியும்,வழிபாடும் மனோபலத்தை அளிக்கும். பிறகு வெற்றிக் கனியை எளிதில் பறித்து விடலாம். வெற்றி பெற வழிபாடு மட்டுமே போதும் என்றால் புத்தகம், பேனா இவையெல்லாம் தேவையில்லாமல் போய் விடுமே!
நோய் நொடி நீங்க எந்த ஹோமத்தை வீட்டில் நடத்தலாம்?

தன்வந்திரி ஹோமம் செய்ய வேண்டும். மூலிகைப்பொருட்களால் இந்த ஹோமத்தைச் செய்வது நல்லது. கூடவே, மிருத்யுஞ்ஜய ஹோமமும் செய்யலாம்.
வடை மலை எந்தெந்த கடவுளுக்கு உகந்தது?

ஆஞ்சநேயருக்கு மட்டுமே வடைமாலை சாத்தும் வழக்கம் இருந்தது. இப்போது பைரவர், துர்க்கை போன்ற தெய்வங்களுக்கும் வடைமாலை அணிவிக்கிறார்கள். ஆபரணம் அணிவிப்பது போல பழம், காய்கறி, பட்சணம் போன்றவற்றாலும் அலங்கரித்து வழிபடும் முறையில் இதையும் ஏற்றுக் கொள்ள வேண்டியது தான்.
மந்திரம் கால்... மதி முக்கால் என்பது உண்மையா?

முயற்சியே செய்யாமல் மந்திரத்தில் மாங்காய் விழும் என்று வீணே இருப்பவர்களை எப்படியாவது திருந்தச் செய்ய இந்த முதுமொழி ஏற்பட்டது. மதி என்றால் அறிவு. அறிவுப்பூர்வமாகச் சிந்தித்து முயற்சிக்கும் போது வெற்றிக்கு உறுதுணையாக இருப்பதே மந்திரம். அதாவது முயற்சியே செய்யாமல் மந்திரத்தை மட்டும் நம்பி சோம்பேறிகளாகும் பலருக்கு சொல்லப்பட்டதே இந்த முதுமொழி. தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்ற திருக்குறளும் இங்கு சிந்திக்கத்தக்கது.
கோயிலில் நீராடச் செல்லும் போது வீட்டில் நீராடி விட்டுத் தான் போக வேண்டுமா?

குளிப்பது என்பது வேறு. புனித நீராடல் என்பது வேறு. சோப்பு முதலியவற்றைஉபயோகித்து அழுக்கைப் போக்கிக் கொள்ள புண்ணிய தீர்த்தங்கøளைப் பயன்படுத்தக் கூடாது. கோயில் குளத்தில் இறைவன் திருநாமத்தைஉச்சரித்தவாறு மூழ்கி எழ வேண்டும். இதற்கே புனித நீராடல் என்று பெயர். கோயில் குளத்தில் பல் துலக்குவது,குளிப்பது, துணி துவைப்பது போன்ற அன்றாடக் கடமைகளைச் செய்வது பாவமாகும். பலரும் புனித நீராட வேண்டிய தீர்த்தத்தை மாசுபடுத்தாமல் இருப்பது அவசியம். கோயிலில் நீராடும் முன் வீட்டில் குளித்து விட்டுச் செல்வது அவசியம்.
இன்று பறித்தாலும் என்றும் பூஜிக்கலாம்!

தெய்வங்களுக்கு பூஜை செய்வதற்குரிய மலர்கள், வீட்டுத் தோட்டத்தில் பூஜைநேரத்தில் பறித்ததாக இருப்பது ரொம்பவும் விசேஷம். இதற்காக பெரிய இடமெல்லாம் தேவையில்லை. வீட்டில் ஒரு தொட்டியை வைத்து, ஏதேனும் ஒரு மலர்ச்செடி வளர்த்தாலே போதும். இந்தப் பூக்களை பறித்த அன்றேசூட்டினால் முழு பலனும் கிடைக்கும். மறுநாள் சூட்டினால் சுமாரான பலன் கிடைக்கும் என்கிறது சாஸ்திரம். குளத்தில் பூக்கும் தாமரை, அல்லிப் பூக்கள் மற்றும் வில்வம், துளசி, விபூதிப் பச்சிலை, மருக்கொழுந்து, வெள்ளி, தங்கப் பூக்களுக்கு தோஷம் கிடையாது. அதாவது, இவற்றை எப்போது பறித்தாலும், குறிப்பிட்ட நாள் என்று இல்லாமல் எத்தனை நாள் கழித்து வேண்டுமானாலும் சூட்டலாம். அதே போல, கங்கை, யமுனை, காவிரி, தாமிரபரணி போன்ற புண்ணிய நதிகளின் தீர்த்தத்திற்கும் தோஷம் கிடையாது. இந்த தீர்த்தங்களை எப்போது வேண்டுமானாலும் பூஜைக்குப் பயன்படுத்தலாம்.
ழுகையை ஆப் பண்ணுங்க!

சந்தியா என்றால் சேர்க்கை அதாவது சந்திக்கும் நேரம் என்று பொருள். பகலும், இரவும் சந்திக்கும் மாலையிலும், இரவும், பகலும் சந்திக்கும் காலையிலும் வரும் இரண்டு நாழிகையை (48 நிமிடம்) சந்தியாகாலம் என்பர். சூரிய உதயம், மறைவுக்கு முன்வரும் 36 நிமிடமும், சூரிய உதயம், மறைவுக்குப் பின்வரும் 12நிமிடமும் இதில் அடங்கும். இந்த சமயத்தில் வாசல் தெளித்து, மாக்கோலம் இட வேண்டும். பூஜையறையில் விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். ஆண்கள் சந்தியாவந்தனம், பூஜையில் ஈடுபட வேண்டும். லட்சுமி வீட்டுக்கு வரும் இந்த நேரத்தில் விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம் ஜெபிப்பது சிறப்பு. இந்த சமயத்தில் சாப்பிடுவதோ, தூங்குவதோ, வீண் பேச்சு பேசுவதோ கூடாது என்கிறது சாஸ்திரம். குறிப்பாக டிவியில் வரும் அழுகைத் தொடர்களைப் பார்க்காமல் ஆப் செய்து விட வேண்டும். இன்று முதலாவது சந்தியா நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துங்களேன்!
உனக்கு என்ன லாபம்!

பிரச்னோத்ர ரத்ன மாலிகா என்னும் நூலில் ஆதிசங்கரர்,சம்சாரம் என்னும் பிறவிச்சக்கரத்தில் சுழன்று கிடப்பதால் உனக்கு என்ன லாபம்? என்று கேட்கிறார். இந்த கேள்வியை எப்போதும், உனக்குள்ளேயே கேட்டுக் கொண்டே இரு. அதுவே பிறவிப் பயன், என்று அவரே பதிலும் அளிக்கிறார். அதாவது,நாம் பூமியில் பிறந்த நோக்கம் என்ன? நமக்கு ஏன் ஆசை, கோபம், பாவம் இவையெல்லாம் வருகிறது. எப்போதும் ஆனந்தமாக இருக்க முடியாதா? என்றெல்லாம் அடிக்கடி எண்ணிப் பார்க்க வேண்டும். இப்படி ஆராய்ந்து பார்க்கத் தொடங்கினால் கோப தாபம் மனதில் எழாது. மனம் பக்குவப்படும். புளித்துக் கிடந்த மாங்காய், கனிந்து பழமாவது போல், மோட்சம்கிடைத்து விடும்.
குணம் தருள்வாள் பணம் தருவாள்!

எந்த தெய்வத்திற்குரிய ஸ்தோத்திரத்தைப் படித்தாலும், அதன் இறுதிப் பகுதியில் அதைப் படிப்பதால் உண்டாகும் பலன்கள் பலச்ருதி என்னும் ஸ்லோகமாக இருக்கும். சவுந்தர்ய லஹரி ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா என்னும் ஸ்லோகத்தில் அம்பிகையை வணங்குவோருக்கு உண்டாகும் பலன் பட்டியலாக இடம் பெற்றுள்ளது. இதைப்படிப்பவர்கள், சரஸ்வதி கடாட்சத்தால் உயர்ந்த அறிவும், நல்ல குணமும், லட்சுமி கடாட்சத்தால் செல்வ வளமும், நல்ல அழகும் பெறுவர் என கூறப்பட்டுள்ளது. புத்தி இல்லாதவனிடம் பணம் சேர்ந்தால் தீமையே உண்டாகும். அதனால், பராசக்தியான அம்பிகை, தன்னை வழிபடுவோருக்கு முதலில் நல்ல புத்தியைக் கொடுத்து, அதன்பின் செல்வ வளத்தை அருள்கிறாள்.
அரைகுறை வீட்டில் கிரகப்பிரவேசம் கூடாது

குடியிருக்கும் வீட்டை க்ருஹ லட்சுமி என்று தெய்வத்திற்கு ஒப்பிடுவர். நல்லநாள் பார்த்து, வாஸ்துபூஜை நடத்தி, பூமி பூஜையோடு கட்டிடப்பணி தொடங்க வேண்டும். முழுவதும்கட்டிய பிறகு, நல்லநாளில் கிரகப்பிரவேசம் செய்ய வேண்டும். புதுவீட்டில் எல்லா பணிகளும் முடிந்த பிறகு, குடிபுகுவதே உத்தமம் என்று சாஸ்திரம் சொல்கிறது. குறிப்பாக, வீட்டின் நிலை, பிரதான கதவு, மேல்கூரை அமைக்காமலும், வாஸ்துபலியிடாமலும், உறவினருக்கு உணவிடாமலும் கிரகப்பிரவேசம் செய்வது கூடாது. தற்காலத்தில் நவீன வேலைப்பாடுகள் அமைந்த புதுவீட்டில் ஹோமப்புகை பட்டால் பளபளப்பு குறைந்து விடும் என்ற எண்ணத்தில், அரைகுறையாக வேலை முடிந்திருக்கும் போதே ஹோமம் நடத்துகிறார்கள். இப்படிப்பட்ட வீடுகளில் புகுந்தால் சோதனைகள் வர வாய்ப்புண்டு. எனவே, கிரகப்பிரவேச விஷயத்தில் கவனமாய் இருங்கள்!
குணம் தருள்வாள் பணம் தருவாள்!

எந்த தெய்வத்திற்குரிய ஸ்தோத்திரத்தைப் படித்தாலும், அதன் இறுதிப் பகுதியில் அதைப் படிப்பதால் உண்டாகும் பலன்கள் பலச்ருதி என்னும் ஸ்லோகமாக இருக்கும். சவுந்தர்ய லஹரி ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா என்னும் ஸ்லோகத்தில் அம்பிகையை வணங்குவோருக்கு உண்டாகும் பலன் பட்டியலாக இடம் பெற்றுள்ளது. இதைப்படிப்பவர்கள், சரஸ்வதி கடாட்சத்தால் உயர்ந்த அறிவும், நல்ல குணமும், லட்சுமி கடாட்சத்தால் செல்வ வளமும், நல்ல அழகும் பெறுவர் என கூறப்பட்டுள்ளது. புத்தி இல்லாதவனிடம் பணம் சேர்ந்தால் தீமையே உண்டாகும். அதனால், பராசக்தியான அம்பிகை, தன்னை வழிபடுவோருக்கு முதலில் நல்ல புத்தியைக் கொடுத்து, அதன்பின் செல்வ வளத்தை அருள்கிறாள்.