வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

கடன் தீர்க்கும் அங்காரக ஸ்தோத்திரம்:

செவ்வாய்க்கிழமைகளில் சிவப்பு சந்தனம், புஷ்பம், தூப&தீபத்துடன் சர்க்கரைப் பொங்கல் சமர்ப்பித்து, ஸ்ரீசெவ்வாய் பகவானின் திருநாமப் போற்றிகளைக் கூறி, அவரை மனதார வழிபடவேண்டும்.

அத்துடன், செவ்வாய் பகவானின் திருமுன் (யந்திரம் அல்லது திருவுருவப் படத்துக்கு முன்பாக) அடுப்புக் கரியைக் கொண்டு கிழக்கு& மேற்காக மூன்று கோடுகள் கிழித்து, கீழ்க்காணும் ஸ்தோத்திரப் பாடலைப் படித்தவாறு அந்தக் கோடுகளை இடது காலால் அழித்து, அங்காரகனைப் பிரார்த்திக்க, கடன் தொல்லைகள் விரைவில் நீங்கும்.

அங்காரக மஹீபுத்ர பகவன் பக்த வத்ஸல
நமோஸ்துதே மமாசேஷம் குணமாசு விமோசய
ருணரோகாதிதாரித்ர்ய பாபக்ஷ§தபம்ருத்யவ:
பயக்ரோத மன:க்லேசா: நச்யந்து மமஸர்வதா
ருணதுக்க வினாசாய புத்ரஸந்தான ஹேதவே
மார்ஜயாம்யஸிதாரேகா: திஸ்ரோ ஜன்மஸமுத்பவா:
துக்கதௌர்பாக்யநாசாய ஸ§க ஸந்தான ஹேதவே
க்ருதரேகாத்ரயம் வாம பாதாத் ஸம்மார்ஜயாம்யஹம்
கருத்து: பூமியின் மைந்தனும் பகவானும் பக்தர்களின் மீது பிரியம் கொண்டவருமான ஸ்ரீஅங்காரக பகவானே, தங்களை நமஸ்கரிக்கிறேன். வெகு சீக்கிரம் எனது எல்லாக் கடன்களையும் போக்கியருள வேண்டும்.
என்னை வாட்டும் கடன், ரோகம் முதலானவை, தரித்திரியம், பாபம், பசி, அபிமிருத்யு, பயம், கோபம், மனக்கவலை ஆகிய யாவும் அழியட்டும்.
கடனால் ஏற்பட்ட துக்கம் விலகுவதற்கும், தொடர்ந்து குழந்தைகள் பிறப்பதற்கும் வேண்டி, முன் ஜன்ம கர்ம வினைப்பாடுகளை அழிப்பதுபோன்று இந்த மூன்று கோடுகளையும் அழிக்கிறேன் (என்றபடி மூன்று கோடுகளையும் அழிக்கவேண்டும்.).
அத்துடன், ‘மிகுந்த தேஜஸ்வியும், ஸ்ரீபரமசிவனின் வியர்வையில் இருந்து உண்டானவருமான செவ்வாய் பகவானே, தங்களை வணங்குகிறேன். மிகுந்த கடனாளியான நான் உங்களையே சரணடைகிறேன். எனது கஷ்டங்களை நீக்கி அருளுங்கள்’ என மனதார வேண்டிக்கொள்ள வேண்டும்.
இப்படி செவ்வாய்க்கிழமைகளில் ஸ்ரீஅங்காரக பகவானை வழிபடுவதால் நமது கடன்கள் யாவும் நீங்கும். நமது இல்லத்தில் தரித்திரமும், வறுமையும் அகன்று குபேர சம்பத்து உண்டாகும்.
ஆதித்ய ஹ்ருதயம் - ஸ்லோகம்


நாடியில் வந்த அகத்தியரின் உத்தரவை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்த ஸ்லோகத்தை எந்த நேரத்திலும் சொல்லலாம் என்று அகத்தியரே எனது நண்பருக்கு உத்தரவு கொடுத்துள்ளார். மனதில் உண்மையாக இருக்கவேண்டும்! அவ்வளவுதான்! ச்ரத்தையுடன் பதினோரு முறை தொடர்ந்து சொல்பவர்களுக்கு எல்லா பாதுகாப்பும் வெற்றியும், அவரின் அருளும் கிடைக்கும்!


ததோ யுத்த பரிச்ராந்தம் ஸமரே சிந்தயா ஸ்திதம்
ராவணம் சாக்ரதோ த்ருஷ்ட்வா யுத்தாய ஸமுபஸ்திதம்


தைவதைச்ச ஸமாகம்ய த்ரஷ்டுமப்யாகதோ ரணம்
உபாகம்யாப்ரவீத் ராமம் அகஸ்த்யோ பகவாந் ருஷி:


ராம ராம மஹாபாஹோ ச்ருணு குஹ்யம் ஸநாதனம்
யேந ஸர்வாநரீன் வத்ஸ ஸமரே விஜயஷ்யஸு


ஆதித்யஹ்ருதயம் புண்யம் ஸர்வ சத்ரு விநாசநம்
ஜயாவஹம் ஜபேந்த்யம் அக்ஷய்யம் பரமம் சிவம்


ஸர்வ மங்கள மாங்கல்யம் ஸர்வ பாப ப்ரணாசநம்
சிந்தாசோக ப்ரசமனம் ஆயுர்வர்த்தநம் உத்தமம்


ரச்மிமந்தம் சமுத்யந்தம் தேவாஸுர நமஸ்க்ருதம்
பூஜயஸ்வ விவஸ்வந்தம் பாஸ்கரம் புவநேச்வரம்


சர்வதேவாத்மகோ ஹ்யேஷ தேஜஸ்வி ரச்மிபாவந:
ஏஷ தேவாஸூரகணான் லோகான் பாதி கபஸ்திபி:


ஏஷ பிரஹ்மா ச விஷ்ணுச்ச சிவ: ஸ்கந்தக: ப்ரஜாபதி:
மஹேந்த்ரோ தநத: காலோ யமஸ்-ஸோமோஹ்யபாம்பதி:


பிதரோ வஸவஸ்ஸாத்யா: ஹ்யச்விநௌ மருதோ மநு :
வாயுர் வஹ்; ப்ரஜா ப்ராண க்ரதுகர்தா ப்ரபாகர :


ஆதித்ய: ஸவிதா ஸூர்ய: கக : பூஷா கபஸ்திமான்
ஸுவர்ணஸத்ருசோ பாநு: ஹிரண்யரேதா திவாகர:


ஹரிதச்வ: ஸஹஸ்ரார்ச்சி: ஸப்தஸப்திர் மரீசிமாந்
திமிரோந்மதந்: சம்பு: த்வஷ்டா மார்த்தாண்ட அம்சுமான்


ஹிரண்யகர்ப்ப: சிசிர: தபரோ பாஸ்கரோ ரவி:
அக்கர்ப்போ (அ)திதே: புத்ர: சங்க: சிசிர நாசந:


வ்யோமாநாதஸ் - தமோபேதீ ருக்யஜுஸ்ஸாமபாரக:
கநவ்ருஷ்டிரபாம் மித்ரோ: விந்த்யவீதீ ப்லவங்கம:


ஆதபீ மண்டலீ ம்ருத்யூ: பிங்கல: ஸர்வதாபந:
கவிர்விச்வோ மஹாதேஜா ரக்த: ஸர்வபவோத்பவ:


நக்ஷத்ர க்ரஹதாராணாம் அதிபோ விச்வபாவந:
தேஜஸாமபி தேஜஸ்வீ த்வாதசாத்மன் நமோ (அ)ஸ்து தே


நம: பூர்வாய கிரயே பஸ்ச்சிமே கிரயே நம:
ஜ்யோதிர்கணாநாம் பதயே திநாதிபதயே நம:


ஜயாய ஜயபத்ராய ஹர்யச்வாய நமோ நம:
நமோ நம: ஸஹஸ்ராம்சோ ஆதித்யாய நமோ நம:


நம உக்ராய வீராய ஸாரங்காய நமோ நம:
நம: பத்மப்ரபோதாய மார்த்தாண்டாய நமோ நம:


பரஹ்மேசாநாச்யுதேசாய ஸூர்யாயா யாயாதித்யவர்ச்சஸே
பாஸ்வதே ஸர்வபக்க்ஷிய ரௌத்ராய வபுஷே நம:


தமோக்நாய ஹுமக்நாய சத்ருக்நாயாமிதாத்மநே
க்ருதக்நக்நாய தேவாய ஜ்யோதிஷாம் பதயே நம:


தப்தசாமீகாரபாய வஹ்நயே விச்வகர்மணே
நமஸ்தமோபிக்நாய ருசயே லோகஸாக்ஷிணே


நாசயத்யேஷ வை பூதம் ததேவ ஸ்ருஜதி ப்ரபு :
பாயத்யேஷ தபத்யேஷ வர்ஷத்யேஷ கபஸ்திபி:


ஏஷ ஸூப்தேஷு ஜாகர்தி பூதேஷூ பரிஷ்டித:
ஏஷசைவாக் ஹோத்ரம் ச பலம் சைவாக்ஹோத்ரிணாம்


வேதச்ச க்ரதவச்சைவ க்ரது-நாம் பலமேவ ச
யா க்ருத்யா லோகேஷூ ஸர்வ ஏஷ ரவி: ப்ரபு:


ஏநமாபத்ஸூக்ரேஷூ காந்தாரேஷூ பயேஷூ ச
கீர்த்தயன் புருஷ: கச்சித் நாவாஸூததி ராகவ


பூஜயஸ்வைந மேகாக்ரோ: தேவதேவம் ஜகத்பதிம்
ஏதத் த்ரிகுதம் ஜபத்வா யுத்தேஷு விஜயஷ்யஸு


அஸ்மின் க்ஷணே மஹா பாஹோ ராவணம் த்வம் வதிஷ்யஸு
ஏவமுக்த்வா ததாகஸ்த்யோ ஜகாம ச யதாகதம்


ஏதத் உத்வா மஹாதேஜா நஷ்டசோகோ (அ)பவத் ததா
தாராயாமாஸ ஸ"ப்ரிதோ: ராகவ: ப்ரயதாத்மவான்


ஆதித்யம் ப்ரக்ஷ்ய ஜபத்வா தூ பரம் ஹர்ஷமவாப்தவான்
த்ரிராசம்ய சுசுர் பூத்வா தநுராதாய வீர்யவான்


ராவணம் ப்ரேக்ஷ்ய (அ)ஹ்ருஷ்டாத்மா யுத்தாய ஸமுபாகமத்
ஸர்வயத்நேந மஹதா வதே தஸ்ய த்ருதோபவத்


அத ரவிரவதந் ரீக்ஷ்ய ராமம் முதிதமநா: பரமம் ப்ரஹ்ருஷ்யமாண:
சிசரபதி ஸம்க்ஷயம் விதித்வா ஸூரகணமதயகதோ வசஸ்த்வரேதி



என்று கூறிய அகஸ்திய மாமுனி இறுதியாக "இரகு குலத்தில் உதித்தவனே! சூரிய பகவானை மேற்கண்ட துதிகளால் போற்றுபவனுக்கு சிக்கலான நேரங்களிலும், சோதனை காலங்களிலும் பயத்தை ஏற்படுத்தக்கூடிய காலங்களிலும்.எந்த துன்பமும் ஏற்படுவதில்லை. தெய்வங்களினாலேயே போற்றப்படுகின்ற அந்த சூரிய பகவானை முனைப்புடன் கூடிய ஒருமித்த மனத்தோடு, மூன்று முறைகள், மேற்கண்ட துதிகளின் மூலமாக வழிபட்டு வருபவன், யுத்த களத்திலே வெற்றியே காண்பான் என்று அகஸ்திய முனிவரால் அருளப் பெற்ற இந்த அற்புத துதியை, மனதை அடக்கியவரும். பேராற்றல் பெற்றவரும் பெரும் தோள் வலிமை பெற்றவருமான ஸ்ரீ ராமர் சூரிய பகவானை பார்த்தவாறே மூன்று முறைகள் ஜபித்து ராவணனை வென்ற இந்த மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்ததும், நம் பாவங்களையெல்லாம் போக்க வல்ல சிறந்த பரிகார மந்திரமான இந்த ஆதித்ய ஹ்ருதயம் என்ற மஹா மந்திரத்தை நாமும் துதித்து நன்மை அடைவோமாக!
ஸ்ரீமத் பாகவதம் சொல்லும் கண்ணனின் திருக்கதையைச் சுருக்கமாகச் சொல்லும் ஒரு சின்ன சுலோகம் இது.

ஆதௌ தேவகீ தேவி கர்ப்ப ஜனனம்
கோபீ க்ருஹே வர்த்தனம்
மாயா பூதன ஜீவிதாபஹரணம்
கோவர்த்தனோத்தாரணம்
கம்ஸ சேதன கௌரவாதி ஹனனம்
குந்தீ ஸுதா பாலனம்
ஏதத் பாகவதம் புராண கதிதம்
ஸ்ரீ க்ருஷ்ண லீலாம்ருதம்
கருட மந்திரம் மிகவும் முக்கியமானது. ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகன் கருட மந்திரத்தை உபதேசமாகப பெற்றே பல சித்திகளைப் பெற்றார்.

கருடாய நமஸ்துப்யம் ஸர்வ சர்பேந்திர சத்ரவே
வாஹனாய மஹாவிஷ்ணோ தார்க்ஷயாய அமித தேஜயே
ஓம் நமோ பகவதே, கருடாய; காலாக்னி வர்ணாய
ஏஹ்யேஹி கால நல லோல ஜிக்வாய
பாதய பாதய மோஹய மோஹய வித்ராவய வித்ராவய
ப்ரம ப்ரம ப்ரமய ப்ரமய ஹந ஹந
தஹ தஹ பத பத ஹும்பட் ஸ்வாஹா
அச்சம் அகற்றி அறிவைப் பெருக்கி வெற்றி நல்கும் காயத்ரி!

தானத்தில் சிறந்தது அன்னதானம்.
திதிகளில் சிறந்தது துவாதசி திதி.
மாதங்களில் சிறந்தது மார்கழி,

அதுபோல் மந்திரங்களில் சிறந்தது காயத்ரி என்பார்கள். கிருஷ்ண பரமாத்மாவும் கீதையில், மந்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கிறேன் என்கிறார். கௌசிகன் எனும் மன்னன் தம் தவப்பயனால் பிரம்ம ரிஷி பட்டம் பெற்று விஸ்வாமித்திரர் என்று எல்லாராலும் அழைக்கப்பட்டார். இவரே வரப்பரசாதமான காயத்ரி மந்திரத்தை நமக்களித்தவர். பிரம்மாஸ்திரம் எனும் இணையற்ற அஸ்திரத்திற்கு காயத்ரி மந்திரமே ஆதாரம். இதை பிரம்ம தேஜோ பலம் பலம் எனக் குறிப்பிடுகிறார் விஸ்வாமித்திரர் மகிமைவாய்ந்த இந்த காயத்ரி மந்திரத்தின் அதிதேவதை காயத்ரி தேவி. ஒருமுறை பிரம்மன் புஷ்கரம் என்னும் புண்ணிய ÷க்ஷத்திரத்தில் ஒரு யாகத்தைத் தொடங்கினார். அந்த யாகத்தில் பங்கேற்க சரஸ்வதி தேவி வராததால் நான்முகன் தனது சக்தியால் காயத்ரி தேவியை சிருஷ்டித்தார். காயத்ரியே சரஸ்வதியாக எழுந்தருளினாள். பிரம்மனும் தன் யாகத்தை முடித்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த தேவி செம்பருத்திப்பூ போன்ற சிவந்த நிறம் கொண்டவள். செந்தாமரையில் எழுந்தருளும் அன்னையான இவள் ஐந்து திருமுகங்களும், பத்து திருக்கரங்களும் கொண்டு திகழ்கிறாள் காயத்ரி தேவி தன் பத்து கைகளில் வர ஹஸ்தம். அபய ஹஸ்தம், அங்குசம், சாட்டை(உட்புறமும் வெளிப்புறமும் உள்ள தீயசக்திகளை நீக்குவதுþ கபாலம்(சிவ தத்தவம்) கதை (விஷ்ணு தத்துவம்), சங்கு சக்கரம், இரண்டு கைகளில் தாமரை ஏந்தியவள். நான் வேதங்களையும் நான்கு திருப்பாதங்களாகக் கொண்டவள் என சாஸ்திரங்கள் போற்றுகின்றன. வேதத்தின் மூலாதாரமாக காயத்ரி மந்திரம் திகழ்கிறது.

காயத்ரி என்கிற பதம் காய்+த்ரீ எனப் பிரிந்து பொருள் தரும். அதாவது காய் என்றால் கானத்திற்கு உரியது. பாடப்பெறுவது எனப் பொருள் கொள்ளாமல் காயத்ரி மந்திரத்தை தாளம் தப்பாமல் கூறி தியானித்தால் பெரும் பலன் உண்டு. த்ரீ என்பது த்ராயதே என்று விரிந்து காப்பாற்று எனப் பொருள்படும். அன்னை காயத்ரி தனது அபய கரங்களால் நமது பயத்தைப் போக்கியருள்வாள். கா+ய+ஆ+த்ரீ எனும் நான்கு எழுத்துக்களின் சேர்க்கைதான் காயத்ரி. இதில் கா-என்பது நீர் தத்துவமாகிய கண்களுக்குப் புலப்படும் ஸ்தூலத்தைக் குறிப்பது. இதற்கு அதிபதி பிரம்மன. ய-என்பது வாயு தத்தவமாகிய சூட்சுமத்தைக் குறிப்பது. இதற்கு அதிதேவதை விஷ்ணு. ஆ-என்பது காரணதேகம். இதன் அதிபதி ருத்ரர். த்ரீ-எனும் பதம் இம்மூவரும் சேர்ந்து நம்மைக் காப்பாற்றியருள்வர் என்பதைக் குறிக்கும். எனவே ஒருமுகப்பட்ட மனத்தோடு காயத்ரி மந்திரம் சொல்லி வழிபட மும்மூர்த்திகளின் அருளையும் பெறலாம்.

ஓம் பூர்புவஸ் ஸுவ தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோ
தேவஸ்ய தீமஹி தியோயோன் ப்ரசோதயாத்

இதுவே காயத்ரி மந்திரம் எவர் நமது அறிவைத் தூண்டி பிரகாசிக்கச் செய்கிறாரோ, அந்த ஜோதி மயமான இறைவனை தியானிப்போமாக என்பதே இம்மந்திரத்தின் பொருளாகும். எல்லா தெய்வங்களுக்கும் காயத்ரி மந்திரம் பிரார்த்தனை மற்றும் தியான சுலோகமாக உள்ளது எல்லா காயத்ரி மந்திரங்களுக்கும் பொதுவாக அமைந்தது மேற்கண்ட பிரம்ம காயத்ரியாகும். இதுதவிர மற்ற தெய்வங்களுக்குரிய நூற்றுக்கும் மேற்பட்ட காயத்ரி மந்திர சுலோகங்களும் உண்டு.

காயத்ரி மந்திர நியதிகளும் பலன்களும்: காயத்ரி மந்திரத்தைப் பொருள்புரிந்து குருமுகமாக உபதேசம் பெற்று ஜெபிக்க வேண்டும். இந்த மந்திரத்தை ஜெபம் செய்யும்போது காயத்ரி தேவியையும் சூரிய பகவானையும் ஸ்ரீமந் நாராயணனையும் தியானித்து பக்தி சிரத்தையோடு ஜெபம் செய்யவேண்டும் இதனால் மனோபலமும் வசீகர சக்தியும் கூடும். காயத்ரி மந்திரத்துக்கு ஆத்ம சுத்தி, சரீர சுத்தி மிக அவசியம். ஜெபம் செய்வதற்கான இடம். சுத்தமும் காற்றோட்டமும் வெளிச்சமும் உள்ள இடமாகத் திகழ்தல் வேண்டும். நதிக்கரைகள், திருக்குளங்கள், அமைதியான மலைப்பிரதேசங்கள், மகான்களின் அதிஷ்டானம், திவ்யதேசங்கள் போன்ற இடங்களில் அமர்ந்து தியானித்தால் கூடுதல் பலன் உண்டு. பசு மடத்தில் அமர்ந்து இம்மந்திரத்தை தியானித்தால் அசுவமேத யாகம் செய்த பலன் உண்டாகும். அதுபோன்று கோயில் கும்பாபிஷேக காலத்தில் யாக சாலையில் அமர்ந்து ஜெபம் செய்தால் பலகோடி நன்மைகள் பெறலாம். மான்தோலில் அமர்ந்து இம்மந்திரத்தை தியானித்தால் மன அமைதியும் ஞானமும் பெருகும். துளசி, பவழ மாலை பொன்மணி மாலை, ருத்ராட்ச மாலை ஆகியவற்றை ஜெபம் செய்ய எடுத்துக்கொள்ளலாம். சூரியோகயத்திற்கு முன்பிருந்து சூரியன் மறையும் காலம்வரை எப்போதும் இம்மந்திரத்தை ஜெபிக்கலாம். வைகறையிலும், அந்தி வேளையிலும் செய்வது உத்தமம். இரவு வேளைகளில் மானசீகமாக ஜெபிக்கலாம். காலையில் கிழக்கு நோக்கியும், மாலையில் மேற்கு நோக்கியவாறும் காயத்ரி மந்திரத்தை ஜெபிக்கலாம். எரிகின்ற தீபத்தைப் பார்த்தோ, அம்பாள் படத்தைப் பார்த்தவாறோ ஜெபித்தால் கூடுதல் பலனைப் பெறலாம். ஜெபம் செய்யும்போது இடையில் எழுந்து செல்லும் நிர்ப்பந்தம் ஏற்பட்டால் மீண்டும் கை, கால்களைச் சுத்தம் செய்துவிட்டு ஜெபத்தைத் தொடர்ந்து செய்யலாம்.

காயத்ரி மந்திரத்தின் அட்சரங்கள்: காயத்ரி மந்திரத்தில் 24 அட்சரங்கள் உள்ளன. அவையனைத்தும் 24 ரிஷிகள், 24 தேவதைகள், 24 பலன்களைக் குறிக்கும். 24 பாவங்களையும் நீக்கும். 24 அடசரங்களை 3 வேதத்திற்குரியவாறு பிரித்துள்ளனர் அவை தனியே 4 ஆம் பக்க பெட்டிச் செய்தியில் உள்ளன. காயத்ரி மந்திரம் பற்றி பலருக்கும் தெரிந்திருந்தாலும், அந்த மகத்தான மந்திரத்தின் பின்னணியில் உள்ள காயத்ரி தேவதை பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். காயத்ரி மந்திரம் ரிக்வேதத்திலுள்ள ஆயிரக்கணக்கான மந்திரங்களில் ஒன்றுதான் என்றாலும் 24 எழுத்துக்களைக் கொண்ட காயத்ரி மந்திரம் வேத மந்திரங்களின் சாரம்சமாகக் கருதப்படுகிறது. தன்னை ஜெபிக்கின்றவர்களுக்குப் பாதுகாப்பளித்து ஓர் அரணாகத் திகழ்வதால் காயத்ரி மந்திரத்திற்கு அப் பெயர் ஏற்பட்டது. சந்தஸ் அமைப்பிலுள்ள காயத்ரி மந்திரத்தையே வேத மாதாவாக நாம் போற்றுகிறோம். காயத்ரி, சாவித்ரி, சரஸ்வதி ஆகிய மூன்று தேவிகளுமே காயத்ரி மந்திரத்தின் அதிதேவதையாகக் கருதப்படுகின்றனர். காயத்ரி தேவி காலை சந்தியாவந்தனத்தின்போது அதிதேவதையாகவும், ரிக்வேத ரூபிணியாகவும்மூன்று அக்னிகளில் கார்ஹபத்ய அக்னியாகவும் வணங்கப்படுகிறாள். நண்பகலில் யஜுர் வேத சொரூபிணியான சாவித்ரியாகவும், மாலை வேளையில் சரஸ்வதி தேவி, சாமவேதத்தின் தேவதையாக, ஆவஹணீய அக்னியாகப் போற்றப்படுகிறாள்.

ஐந்து தலைகளோடும், பத்து கைகளோடும் தாமரை அல்லது அன்ன வாகனத்தின்மீது ஆரோகணித்திருக்கும் காயத்ரிதேவி பிரம்மாவின் மனைவி என்பதால், தன்னுடைய ஒரு முகத்தோடு, பிரம்மாவின் நான்கு முகங்களையும் கொண்டுள்ளதாக ஐதீகம். காயத்ரி தேவியின் ஐந்து முகங்களும் சிவபெருமான் நிகழ்த்துகின்ற சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம், திரோதனம், அனுக்ரஹம் (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) என்ற ஐந்து செயல்களை நினைவூட்டும் வகையில், சரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதி, மஹேஸ்வரி, மனோன்மணி என்ற தேவதைகளின் ஐந்து முகங்களைக் குறிப்பிடுவதாகவும் கருதப்படுகிறது. ஒவ்வொரு முகத்திலும் மூன்று கண்களோடு தேவி சித்திரிக்கப்படுகிறாள். படைப்புக் கடவுளான பிரம்மாவின் தேவியான சரஸ்வதி, காக்கும் கடவுளான ஸ்ரீமகாவிஷ்ணுவின் தேவியான மகாலட்சுமி, அழிக்கும் கடவுளான சிவபெருமானின் தேவியான பார்வதி ஆகிய மூவரும் ஓருருவமாக காயத்ரி தேவியாக விளங்கி நமக்கு ஞானத்தையும் வைராக்கியத்தையும் அருளுகிறார்கள். ஐந்து தேவதைகளைக் குறிக்கின்ற வகையில் சிவப்பு, முத்து நிறம், மஞ்சள், நீலம், வெண்மை ஆகிய நிறங்களில் காயத்ரி தேவியின் இருபுறங்களிலும் மகாலட்சுமியும் சரஸ்வதியும் அமர்ந்திருப்பதுபோலக் காட்டப்படுவதுண்டு.

வால்மீகி முனிவர், காயத்ரி மந்திரத்திலுள்ள 24 எழுத்துகளில் ஒவ்வொரு எழுத்திற்கும் ஆயிரம் ஸ்லோகமாக 24,000 ஸ்லோகங்களைக் கொண்டு தனது இராமாயணத்தை இயற்றியுள்ளார். 12 ஸ்காந்தங்கள், 318 அத்தியாயங்கள், 18,000 சுலோகங்களையும் கொண்ட மிகச் சிறந்த புராணம் ஸ்ரீதேவி பாகவதம், வியாச முனிவரால் தனது புதல்வர் சுகருக்கு உபதேசிக்கப்பட்டு, சனகாதி முனிவர்களுக்கு சூதரால் கூறப்பட்ட பெருமையுடைய இந்த தேவி பாகவதத்தில் 12-ஆவது ஸ்காந்தத்தில் 51 மற்றும் 52 வது அத்தியாயங்களாக அமைந்திருப்பவைதான் காயத்ரி மஹாத்மியமும், காயத்ரி ஸஹஸ்ரநாமமும், நாரத முனிவருக்கு நாராயண ரிஷியால் இவை உபதேசிக்கப்பட்டன. காயத்ரி மஹாத்மியத்தில் 24 ஸ்லோகங்களைக் கொண்ட காயத்ரி ஸ்தோத்திரம் அடங்கியுள்ளது. காயத்ரீ தேவி விஷ்ணுலோகத்தில் மஹாலட்சுமியாகவும், பிரம்ம லோகத்தில் காயத்ரியாகவும், ருத்ர லோகத்தில் கவுரி என்ற பார்வதியாகவும் விளங்குவதாக இது குறிப்பிடுகிறது. காயத்ரி மந்திரத்தை இடைவிடாது நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஜெபம் செய்து அலைபாய்கின்ற மனத்தை ஒருமுகப்படுத்தி சாதனை படைத்தவர்கள் பலர். அறிவுக்கூர்மை பெறவும், ஞாபக சக்தி வளரவும், அச்ச உணர்வு அகலவும், எதிலும் வெற்றி பெறவும், விவேகம் ஏற்படவும கைகண்ட மருந்தாக காயத்ரி மந்திரம் பயன்படுகிறது. காயத்ரியைக் காட்டிலும் சிறந்த மந்திரமில்லை. தாயை மிஞ்சிய தெய்வம் இல்லை, காசியைவிட புண்ணிய தீர்த்தமில்லை, ஏகாதசியை விஞ்சிய வேறு விரதமில்லை என்கிறது ஒரு சுலோகம். ஒவ்வோர் ஆண்டும் ஆவணி அவிட்டத்திற்கு மறுநாள் காயத்ரி ஜெபம் வரும். அன்றைய தினம் 1008 முறை காயத்ரி மந்திரம் ஜெபிக்க வேண்டுமென்பது மரபு. அன்றாடம் சந்தியாவந்தனத்தின் போதெல்லாம் முடிந்த அளவுக்கு காயத்ரி ஜெபம் செய்வது விசேஷமானதாகும்.

ரிக் வேதம்

அட்சரம் ரிஷி தேவதை பலன்

த வசிஷ்டர் அக்னி ஆயுஷம்
ஸ பரத்வாஜர் வாயு ஆரோக்கியம்
வி கவுதமர் சூரியன் ஐஸ்வர்யம்
து விஸ்வாமித்திரர் வித்யத் தனதம்
வ பிருகு யமன் காமதம்
ரே சாண்டில்யர் வருணன் வித்யாதம்
ணி லோஹித பிரகஸ்பதி காமதம்
ய கர்க பர்ஜன்ய தனதம்

யஜுர் வேதம்

அட்சரம் ரிஷி தேவதை பலன்

ப காதாப ரிஷி இந்திரன் சன்ததிதம்
கோ சனத்குமாரர் கந்தர்வன் அபிஷ்டதம்
தே தனஷப த்வேஷ்ட இஷ்டகாம்யதம்
வ பார்கவ மைத்ராவருணின் காந்ததம்
ய பராசர பவுன்யன் சிந்திகபீதம்
தீ புண்டரீக ஸுரேச கீர்தாதம்
ம க்ருத்பெ மருத சவுபாக்யம்
ஹி தக்ஷ சவுமிய அபீஷ்டதம்

ஸாம வேதம்

அட்சரம் ரிஷி தேவதை பலன்

தி கஸ்யபர் அங்கீரா த்ரைலோக்யதம்
யோ ஆத்ரேயர் அஸ்வினி ப்ராக்க்ஷயதம்
யோ ஜமதக்னி விஸ்வதேவ தேவப்ராயதம்
ந விஷ்ணு ப்ரஜாபதி த்ரைலோக்யதம்
ப்ர ஆங்கிரஸ குபேர ப்ராணுக்ரஹம்
சோ குமார சங்கர தேவஜோதி
த ம்ருக்ச்ருஷா ப்ரபா ஸ்வர்கப்ரதம்
யா பக விஷ்ணு ஸர்வலோகப்ரதம்
ஸ்ரீ ஸுப்ரஹ்மண்ய கராவலம்பாஷ்டகம்

ஹே ஸ்வாமிநாத கருணாகர தீந பந்தோ
ஸ்ரீ பார்வதிச முக பங்கஜ பத்மபந்தோ
ஸ்ரீ சாதி தேவகண பூஜித பாதபத்ம
வல்லீஸநாத மமதேஹி கராவலம்பம். 1

தேவாதி தேவஸுத தேவ கணாதிநாத
தேவேந்த்ர வந்த்ய ம்ருது பங்கஜ மஞ்ஜுபாதா
தேவாரிஷி நாரத முநீந்த்ர ஸுகீத கீர்த்தே
வல்லீஸநாத மமதேஹி கராவலம்பம். 2

நித்யான்னதான நிரதாகில ரோக ஹாரின்
தஸ்மாத் ப்ராதன பரிபூரித பக்த காம
ச்ருத்யாகம் ப்ரணவ வாச்ய நிஜஸ்வரூப
வல்லீஸநாத மமதேஹி கராவலம்பம். 3

க்ரெளஞ் சாஸுரேந்த்ர பரிகண்டந சக்தி சூல
பாஸாதி ஸஸ்த்ர பரிமண்டித திவ்யபாணே
ஸ்ரீ குண்டலீச த்ருத துண்ட சிகீந்த்ரவாஹ
வல்லீஸநாத மமதேஹி கராவலம்பம். 4

தேவாதி தேவரத மண்டல மத்யமேத்ய
தேவேந்த்ர பீட நகராத்ருத சாபஹஸ்த
சூரம் நிஹத்ய அஸுரகோடி ப்ரிர்த்யாமன
வல்லீஸநாத மமதேஹி கராவலம்பம். 5

ஹாராதி ரத்ன மணியுக்த கிரீடஹார
கேயூர குண்டல ஸஸத் கவசாபிராம
ஹே ! வீர ! தாரக ஜயாமரப்ருந்த வந்த்ய
வல்லீஸநாத மமதேஹி கராவலம்பம். 6

பஞ்சாக்ஷராதி மநுமந்த்ரித காங்கதோயை :
பஞ்சாம்ருதை : ப்ரமுதிதேந்த்ர முகைர் முநீந்த்ரே :
பட்டாபிஷிக்த ஹ்ரியுக்த பராஸநாத
வல்லீஸநாத மமதேஹி கராவலம்பம். 7

ஸ்ரீ கார்த்திகேய கருணாம்ருத பூர்ணத்ருஷ்ட்யா
காமாதி ரோக கலுஷீக்ருத திஷ்ட சித்தம்
ஸிக்த்வாதுமா மவ கலாதர காந்தகாந்த்யா
வல்லீஸநாத மமதேஹி கராவலம்பம். 8

ஸுப்ரம்மண்யாஷ்டகம் புண்யம் யேபடந்தித்விஜோத்தமா :
தே ஸர்வே முக்தி மாயாந்தி ஸுப்ரம்மண்ய ப்ரஸாதத :
ஸுப்ரம்மண்யாஷ்டகமிதம் ப்ராதருத்தாய ய : படேத் :
கோடி ஜன்ம க்ருதம் பாபம் தத்க்ஷணாதேவ நச்யதே !

தமிழ் ராமாயண ஸ்லோகம் :

ராமர் ஸ்லோகம்:

ராம நாம சுர வந்தித ராம்
ரவிகுல ஜனநிதி தந்தவராம்
சாகேதஸ்தலம் வந்தவராம்
தசரத கோசலை தந்தவராம்
விஸ்வாமித்ரர் பின் சென்றவராம்
மேவு தாடகையைககொன்றவராம்
அகலிகை சாபம் முடித்தவராம்
அரியதோர் பாணம் ஒடித்தவராம்
பாவை சீதை மணம் கொண்டவராம்
பரசுராமன் வலி கொண்டவராம்
தாய் மொழிப்படி வனம் போந்தவராம்
சாரும் குகன்பால் அன்பு மீந்தவராம்
பரதற்கு பாதுகம் ஈந்தவராம்
பரவு தண்டகவனம் போந்தவராம்
முனிவர்களுக்கு அபயம் அளித்தவராம்
முனிவர் புகழக்கண்டு களித்தவராம்
சூர்பனகைக்கு மையல் கொடுத்தவராம்
தோன்றும் கரன் படையைக்கெடுத்தவராம்
மாயமானின் பின்னே ஓடினராம்
வைதேகியைப் பிரிந்து தேடினாராம்
சபரிக்குத் தன்பதம் தந்தவராம்
சாரும் அனுமனை உகந்தவராம்
சூரனாம் வாலியை வாட்டினராம்
சுக்ரீவனை முடி சூட்டினராம்
அனுமனை சீதைபால் விடுத்தனராம்
அடையாளமும் கையில் கொடுத்தனராம்
தேவி சூடாமணி பெற்றவராம்
தென் சமுத்திரக் கரை உற்றவராம்
சரணம் விபீஷணர்க்கு ஈந்தவராம்
சமுத்திரம் அணைகட்டி போந்தவராம்
இராவணாதியரைக் கொன்றவராம்
ராட்சசர் முதலற வென்றவராம்
அன்னையை சிறை நீக்கினராம்
அவர் பெருமையை வெளியாக்கினராம்
வீடணனுக்கு முடி புனைந்தவராம்
மேவும் அயோத்தி செல்ல நினைந்தவராம்
புஷ்பக மீதில் போனவராம்
புண்ய முனிவர் விருந்தானவராம்
சேதுவில் பூஜை செய்தவராம்
சேர அரக்கர் பழி கொய்தவராம்
அனுமனை பரதன்பால் விடுத்தனராம்
அவன் உயிர் அழியாமல் தடுத்தவராம்
தமர் அயோத்திலன் மீண்டவராம்
கைகேயி மலர்ப்பதம் பூண்டவராம்
மகிழ்ச்சி எவரும் பெறக்கொண்டவராம்
மகுடாபிஷேகம் கொண்டவராம்
குவலய ரக்ஷணை புரிந்தவராம்
கோதண்ட ரக்ஷ குருவரராம் .
சுந்தரகாண்டத்தைப் பாராயணம் செய்பவர்களுக்கு சகல சவுபாக்கியங்களும் உண்டாகும். 
நவக்கிரக தோஷங்கள் முற்றிலும் அகலும். எண்ணிய எண்ணங்கள் யாவும் நிறைவேறும். வாழ்வில் நம்பிக்கை ஏற்படும். நோய்கள் விலகும். ராமச்சந்திர மூர்த்தியையும், ராமபக்தனான அனுமனையும் மனதில் தியானித்து, இந்த எளிய சுந்தரகாண்டத்தைப் படிப்போருக்கு வாழ்வில் எல்லா நன்மைகளும் வந்துசேரும்.
சுந்தர காண்டம் என்று பெயர் சொல்லுவார்
இதை சுகம் தரும் சொர்க்கம் என்று மனதில் கொள்வார்
கண்டேன் சீதையை என்று காகுஸ்தனிடம் சொன்ன
கருணைமிகு ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் பெருமையிது.
அஞ்சனை தனயன் அலைகடல் தாண்டவே
ஆயத்தமாகி நின்றான், அனைத்து வானரங்களும்
அங்கதனும், ஜாம்பவானும் அன்புடன்
விடை கொடுத்து வழியனுப்பினரே!
வானவர்கள் தானவர்கள் வருணாத் தேவர்கள்
வழியெல்லாம் சூழ நின்று பூமாரி பொழிந்தனரே!
மைநாக பர்வதம் மாருதியை உபசரிக்க
மகிழ்வுடன் மாருதியும் மைநாகனைத் திருப்தி செய்து
சுரசையை வெற்றி கண்டு ஹிம்சை வதம் செய்து
சாகசமாய் சமுத்திரத்தை தாண்டியே இலங்கை சேர்ந்தான்.
இடக்காகப் பேசிய இலங்கையின் தேவதையை
இடக்கையால் தண்டித்து இலங்கையைக் கலக்கினான்.
அழகான இலங்கையில் அன்னை ஜானகியை அங்கும்
இங்கும் தேடியே அசோக வனத்தை அடைந்தான்.
கிம்சுபா மரத்தடியில் ஸ்ரீராமனைத் தியானம் செய்யும்
சீதா பிராட்டியைக் கண்டு சித்தம் கலங்கினான்.
ராவணன் வெகுண்டிட, ராட்சசியர் அரண்டிட
வைதேகி கலங்கிட, வந்தான் துயர் துடைக்க
கணையாழியைக் கொடுத்து ஜெயராமன் சரிதம் சொல்லி
சூடாமணியைப் பெற்றுக் கொண்ட சுந்தர ஆஞ்சநேயர்
அன்னையின் கண்ணீர் கொண்டு, அரக்கர் மேல் கோபம்
கொண்டு, அசோகவனம் அழித்து அனைவரையும் ஒழித்தான்.
பிரம்மாஸ்திரத்தால் பிணைத்திட்ட ஆஞ்சநேயர்
பட்டாபிராமன் பெயர் சொல்ல
வெகுண்ட இலங்கை வேந்தன் வையுங்கள் தீ
வாலுக்கென்றான். வைத்த நெருப்பினால் வெந்ததே
இலங்கை நகரம். அரக்கனின் அகந்தையை அழித்திட்ட
அனுமானும் அன்னை ஜானகியிடம்
அனுமதி பெற்றுக் கொண்டு
ஆகாய மார்க்கத்தில் தாவி வந்தான்.
அன்னையைக் கண்டுவிட்ட ஆனந்தத்தில் மெய் மறந்தான்.
ஆறாத சோகத்தில் ஆழ்ந்திருந்த ஸ்ரீராமனிடம் ஆஞ்சநேயர்
"கண்டேன் சீதையை என்றான்.
வைதேகி வாய்மொழியை அடையாளமாகக் கூறி
சொல்லின் செல்வன் ஆஞ்சநேயர் சூடாமணியைக்
கொடுத்தான், மனம் கனிந்து மாருதியை
மார்போடணைத்து ஸ்ரீராமர் மைதிலியை சீறை மீட்க சித்தமானார்.
ஆழ்கடலில் அற்புதமாய் அணை கட்டி படைகள் சூழ
அனுமானும், இலக்குவனும் உடன் புறப்பட்டனர்.
அழித்திட்டான் இராவணனை ஒழித்திட்டான்
அதர்மத்தை அயோத்தி சென்று ஸ்ரீராமர்
அகிலம் புகழ ஆட்சி செய்தான். அவனை சரண்
அடைந்தோருக்கு அவன் அருள் என்றும் உண்டு.
எங்கே எங்கே ரகுநாத கீர்த்தனமோ அங்கே அங்கே
சிரம் மேல் கரம் குவித்து மனம் உருகி நீர் சொரிந்து
ஆனந்தத்தில் மூழ்கி இருக்கும் ஆஞ்சநேயா!
உன்னைப் பணிகின்றோம், பன்முறை உன்னை
பணிகின்றோம், பன்முறை உன்னைப் பணிகின்றோம்.
சரஸ்வதி ஸ்லோகம்.

ஊழ்வினை போக்குபவளே போற்றி
ஓம் ஊமைக்கும் அருள்பவளே போற்றி
ஓம் ஊரார் மெச்ச வைப்பவளே போற்றி
ஓம் ஊரும், பேரும் தருபவளே போற்றி
ஓம் ஊழியின் சக்தியே போற்றி
ஓம் ஊனக்கண் நீக்கி, ஞானக்கண் அருள்பவளே போற்றி
நவக்ரஹ ஸ்லோகம்

ஆதவன் சுகமும் சந்திரன் புகழும்
அன்காரனாகிய பூமிசுதன் நிதியும்
மாதவ புதனறிவும் குரு கௌரவம்
வழங்கிட சுக்கிரன் வாக்கதும் வழங்க
சாதனை மகிழ்வை சனியவர் நல்க
சக்தியாம் வலிமையை ராகு வழங்கிட
ஓதிடும் புலமை கேதுவே நல்க
உலகினில் மானுடம் வாழ்க எந்நாளும்!
திருமால் ஸ்லோகம் :

பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே..