ஞாயிறு, 9 டிசம்பர், 2018

எட்டு ஆன்ம குணங்கள்

பிறப்பு முதல் மரணம் வரை ஒவ்வொரு மனிதனும் செய்ய வேண்டிய குறிப்பிட்ட சில சடங்குகளைப் பற்றிய நம்பிக்கை இந்து மரபுகளில் உண்டு. இவை பதினாறு அல்லது நாற்பது என்ற எண்ணிக்கை கொண்டு, சம்ஸ்காரங்கள் என்று சொல்லப்படுகின்றன. ஆனால் மிக முக்கியமான இந்த நாற்பது சம்ஸ்காரங்களையும் கடைப்பிடித்தாலும் கூட எட்டு ஆன்ம குணங்கள் இல்லாதவனுக்கு எந்தவொரு பயனும் இல்லை என்று இந்து சமய நூல்கள் தெரிவிக்கின்றன. இந்து சமய நூல்கள் வலியுறுத்தும் எட்டு ஆன்ம குணங்கள் எவையென்று உங்களுக்குத் தெரியுமா?

1. தயை – அனைத்து உயிர்களிடத்தும் கருணை

2. சாந்தி – பொறுமை மற்றும் எதையும் சகித்துக் கொள்ளும் மன உறுதி

3. அனசூயை – பொறாமைப்படாமல் இருத்தல்

4. சௌச்சம் – உடல், மனம், செயலில் தூய்மை

5. அனாயாசம் – தன்முனைப்பின் காரணமாகவும் பேராசை காரணமாகவும் எழக்கூடிய வலிமிகுந்த உழைப்பு

6. மங்களம் – கலகலப்பாக இருத்தல், இறுக்கமற்று இருத்தல், நன்மையளித்தல் போன்ற நற்குணங்கள்

7. அகார்ப்பணியம் – தாராள மனம் கொண்டிருத்தல், நன்னடத்தை, தன்னைக் கீழ்மைப்படுத்திக் கொள்ளாதிருத்தல்

8. அஸ்ப்ருஹம் – வேண்டத்தகாதவற்றை விரும்பாதிருத்தல்

கருத்துகள் இல்லை: