புதன், 11 மே, 2022

சதாசிவ பிரும்மேந்திரர்


18ம் நூற்றாணடின் துவக்கத்தில், அந்தணக் குடும்பத்தில் அவதரித்தவர் சதாசிவ பிரம்மேந்திரர். சோமநாதர்-பார்வதி அம்மையார் தம்பதிக்கு அருந்தவப் புதல்வனாக அவதரித்தார் சிவராமகிருஷ்ணன். ஆம்! சதாசிவ பிரம்மேந்திரருக்குப் பெற்றோர் வைத்த பெயர் அதுதான். கல்வி-கேள்வி, சாஸ்திரம், வேதம், சங்கீதம் முதலானவற்றை முறையாகக் கற்றார். திருவிசநல்லூர் ஸ்ரீதர ஐயாவாள், கோவிந்தபுரம் போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், அப்பைய தீட்சிதர், சிவயோகி தாயுமான ஸ்வாமி, தியாகராஜர் முதலானோரெல்லாம் சதாசிவ பிரம்மேந்திரரின் சமகாலத்தவர்கள் என்று கூறப்படுகிறது.

துறவு என்றால் காவிதானா? அவதூத நிலையும் (நிர்வாணம்) ஒரு துறவுதான். சதாசிவ பிரம்மேந்திரர் இதைத்தான் கடைப்பிடித்து வாழ்ந்தார். வாழ்க்கையின் பிற்பகுதி முழுவதும் மவுன நிலை. எவரிடமும் எந்த ஒரு பேச்சும் இல்லை. காரணம்? ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இவரது குரு சும்மா இருக்க மாட்டியா! உன் வாயைக் கொஞ்ச நேரம் மூடு என்று அதிகாரமாகச் சொன்னதை. ஆண்டவன் தனக்கு இட்ட கட்டளையாகக் கருதி, அந்தக் கணம் முதல், பேச்சை நிறுத்தினார்.

மவுனமே நிரந்தரமான பரிவர்த்தனை ஆனது. அவசரமான சந்தர்ப்பங்களில் மட்டும் மணலில் எழுதிக் காண்பித்துக் குறிப்பு சொல்வார். தேசத்தின் பல பாகங்களுக்கும் சதாசிவ பிரம்மேந்திரர் சென்று வந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. துருக்கி நாட்டுக்குக்கூட இவர் சென்று வந்ததாக செவி வழிச் செய்தி உண்டு. ஒரு முறை இவர் திகம்பரராக சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது, சிற்றரசன் ஒருவனது அந்தப்புரத்தைக் கடக்க நேர்ந்தது. ஆடை இல்லாதவர் அந்தப்புரத்தின் வழியாக நடந்து செல்கிறார் என்ற தகவல். அந்த சிற்றரசனைக் கடுங்கோபத்துக்கு உள்ளாக்கியது.

ஆத்திரத்துடன் அரசவையில் இருந்து வெளிவந்த சிற்றரசன் சாலையில் சென்று கொண்டிருந்த சதாசிவரைத் தன் வாளால் சரேலென வெட்டினான். அந்த மகானின் கை வெட்டுப்பட்டு தனித் துண்டாக நிலத்தில் விழுந்தது. கை வெட்டுப்பட்டதையும் அந்த இடத்தில் ரத்தம் ஆறுபோல் வழிந்துகொண்டு இருப்பதையும் பற்றி சற்றும் உணராத சதாசிவர், எதுவுமே நடக்காதது போல், சென்று கொண்டிருந்தார்.

இந்தக் காட்சியைப் பார்த்த சிற்றரசன் விதிர்விதிர்த்துப் போனான். கை வெட்டுப்பட்டும் சலனம் இல்லாமல் ஒருவர் நடந்து செல்கிறார் என்றால், இவர் யாராக இருக்கும் என்று குழும்பிப் போய் பயம் மேலிட, அவர் பின்னே தொடர்ந்தான்.

மகானின் நிலை, தொடர்ந்து அவனை பீதிக்குள்ளாக்க, ஓடிப்போய் அவருடைய பாதம் பணிந்து தனது செயலுக்கு மன்னிப்புக் கேட்டான். அப்போது சதாசிவரிடம் எந்த மாற்றம் இல்லை. எதுவுமே நிகழாததுபோல் வெட்டுப்பட்ட இடத்தை மெல்லத் தடவிவிட்டார். அடுத்து நடந்ததை அதிசயம் என்றுதான் சொல்ல வேண்டும். ரத்தம் வழிவது சட்டென நின்று, வெட்டுப்பட்டுத் தரையில் கிடந்த அவரது திருக்கரம் தானாகவே வந்து ஒட்டிக்கொண்டது!

அதன்பின் சதாசிவரின் அருளுக்கும் ஆசிக்கும் அந்த சிற்றரசன் பாத்திரமாகிவிட்டான். இதுபோல் சதாசிவரின் வாழ்க்கையில் ஏராளமான அதிசயங்கள் நடந்துள்ளன.

சிறு வயதிலேயே பரப்பிரம்ம நிலையை எய்தியவர் சதாசிவர். அதாவது, கல், கட்டை, மனிதர், புல், பூண்டு அனைத்தையும் ஒன்றாகப் பார்க்கும் நிலைதான் பரப்பிரம்ம நிலை. எதற்கும் பேதம் பார்ப்பதில்லை. தனது வாழ்க்கையின் பெரும்பாலான பொழுதுகளைக் காவிரிக் கரை ஓரத்திலேயே கழித்தவர் சதாசிவர். அதனால்தானோ என்னவோ , எங்கெங்கோ சுற்றி இருந்தாலும் இறுதிக் காலத்தில் அருகில் உள்ள நெரூருக்கு வந்து, தான் சமாதி ஆகப்போகும் இடத்தை அவரே தேர்ந்தெடுத்தார்.

ஜீவசமாதி ஆவதற்குச் சில நாட்கள் முன்பிருந்தே சமாதி நிலையில் இருந்தார் சதாசிவர். உணவு, உறக்கம் போன்ற இயல்பான செயல்கள் எதுவும் இல்லாமல். கட்டை போல் இருக்கும் நிலை. அப்போது மட்டுமில்லை. அடிக்கடி சமாதி நிலையில் இருக்கும் சுபாவம் கொண்டவர் சதாசிவர். இப்படித்தான் ஒரு முறை கொடுமுடிக்கு அருகில் ஆற்றங்கரையில் சமாதி நிலையில் உட்கார்ந்தார் சதாசிவர். ஓரிரு நாட்கள் கழித்து காவிரி ஆற்றில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது. அப்போது கரையில், சமாதி நிலையில் இருந்த சதாசிவரையும் வெள்ளம் மூழ்கடித்துவிட்டது. கரையில் இருந்தவர்கள் பதறினார்கள். கரையில் உட்கார்ந்து தியானம் செய்த சாமியக் காணோம் என்று ஒருவர் அலற.... அடுத்தவர் சோகத்துடன் ஆத்து வெள்ளம் பாய்ஞ்ச வேகத்தைப் பாத்தீல்ல. அது அவரையும் அடிச்சிட்டுப் போயிருக்கும். வெள்ளத்துக்கு நல்லவாங்க கெட்டவங்க வித்தியாசம் தெரியவா போகுது. பாவம்! அவரோட ஆயுளு இப்படி அற்பமா முடிஞ்சு போச்சே என்று அங்கலாய்த்தார்.

இதன் பிறகு சதாசிவரைப் பற்றிக் கொடுமுடிவாசிகள் மறந்தே போய்விட்டார்கள். ஒரு கோடை காலத்தில் தண்ணீர் வற்றிய நேரத்தில், காவிரியில் வாய்க்கால் வெட்டுவதற்காக ஒரு மணல்கோட்டை மண்வெட்டி மூலம் வெட்ட ஆரம்பித்தார்கள் பணியாளர்கள். ஓர் ஆசாமி மண்வெட்டியால் வெட்டியபோது பதறிப்போனார். உள்ளே விசித்திரமான ஏதோ ஒன்றின் மேல் மண்வெட்டி பட்டதாகத் தெரிகிறது என்று அலறி, மண்வெட்டியை அப்படியே போட்டுவிட்டு ஓடிப்போய் விட்டார்!

திகிலான மற்ற பணியாளர்கள் விரைந்து வந்து. அந்த மண்வெட்டியை எடுத்துப் பார்க்க.... அதன் முனையில் ரத்தம்! இதைப் பார்த்தவர்கள் மிரண்டு போனார்கள். பிறகு, அவர்களே சமாதானம் அடைந்து, அந்தக் குறிப்பிட்ட இடத்தைச் சுற்றிலும் இருந்த மண்ணை மெதுவாக விலக்கினார்கள். உள்ளே பள்ளத்தில் உடலெங்கும் மணல் அப்பிய கோலத்தில் சமாதி நிலையில் காட்சி தந்தார் சதாசிவ பிரம்மேந்திரர். காற்றுகூட புக முடியாத அந்த மண் மூடிய இடத்தில் எத்தனை காலமாகத்தான் சமாதி நிலையில் இருந்தாரோ அந்த மகான்? இறைவனுக்குத்தான் தெரியும்.

தன் சமாதி நிலை கலைந்ததால், பள்ளத்தில் இருந்து எழுந்தார் சதாசிவ. அவர் உடலில் இருந்து மண் துகள்கள் உதிர்ந்தன. அவர் உடலில் மண்வெட்டி பட்ட இடத்தில் இருந்து ரத்தம் கசிந்து வழிந்து கொண்டிருந்தது. ஆனால் எதையுமே கண்டுகொள்ளாமல் விறுவிறு வென்று நடந்து சென்றார். பணியாட்கள் இதைக்கண்டு திகைத்துப் போனார்கள். பரப்பிரம்மத்துக்கு ஏது வலி? ரத்தத்தைக் கண்டு ஏது பயம்.?

இதுபோல், தான் சமாதி ஆவதற்குச் சில நாட்கள் முன்பும் சமாதி நிலையில் நெரூரில் இருந்தவர் சதாசிவர். பல நாட்கள் இப்படி ஓடின. திடீரென ஒரு நாள் கண்விழித்தார் பிரம்மேந்திரர் . ஏதோ சொல்லப் போகிறார் என்று அவரைச் சுற்றி இருந்தவர்கள் அனைவரும் அவரை நெருங்கினார்கள். ஊரில் இருந்த முக்கிய பிரமுகர்களை உடனே அங்கே வரச் சொல்லுமாறு கேட்டுக்கொண்டார். அந்தணர்கள் உட்பட அனைவரும் கூடினர்.

ஆனி மாதம் வளர்பிறை தசமி அன்று. பூத உடலை, தான் துறக்க இருப்பதாக அவர்களுக்கு உணர்த்தினர். தான் சமாதி ஆன பின், காசியில் இருந்து அந்தணர் ஒரு பாண லிங்கம் ஒன்றைக் கொண்டு வருவார் என்றும் அதைத் தன் சமாதிக்கு அருகில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று உணர்த்தினார். ஜீவ சமாதியாகும் நாள் நெருங்கியது காவிரி ஆற்றங்கரை ஓரம் சதாசிவர். தான் சமாதி ஆவதற்காகத் தேர்வு செய்ய இடத்தில் இருந்த புல், பூண்டுகளை அகற்றும் பணியில் ஊர்க்காரர்கள் இறங்கினர். நெரூர் பூமி, புண்ணியம் செய்த பூமி, இல்லையென்றால் இத்தனை பெரிய மகான் நம்மூருக்கு வந்து சமாதி ஆவாரா? என்று ஊர்க்காரர்கள் நெகிழ்ந்தனர். சாஸ்திரப்படி குழி வெட்டினார்கள். இன்னும் சற்று நேரத்தில் பரப்பிரம்மம். ஜீவசமாதி ஆவதைக் காண அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்தும் ஜனங்கள் திரண்டிருந்தனர். அனைவரின் முகமும் சோகம் கப்பியதாக இருந்தது.

குறித்தநேரம் வந்ததும். ஜனத்திரளில் நீந்தி. தனக்காகத் தோண்டப்பட்ட குழியை அடைந்தார் சதாசிவர். வேத மந்திர கோஷங்களின் ஒலி. அந்தப் பிராந்தியத்தையே நிறைத்தது. இரு புறமும் கூடி இருந்த மக்களின் வழிபாடுகளை எல்லாம் ஏற்றுக்கொண்டு, தனக்கான குழியில் இறங்கினார். ஜனங்கள் அனைவரையும் ஒரு முறை சந்தோஷமாகப் பார்த்தார். பிறகு குழியின் நடுவில் சமாதி நிலையில் உட்கார்ந்தார். மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்று அங்கு கூடி இருந்தவர்களுக்கு சமிக்ஞையாகச் சொன்னார். சமாதி மூடப்பட்டு சடங்குகள் நடந்தன. வந்திருந்தோர் அனைவரும் கண்ணீருடன் வழிபட்டுத் திரும்பினர். அந்த பரப்பிரம்மம். இந்த உலகத்துடனான தன் சரீரத் தொடர்பை விலக்கிக்கொண்டது சதாசிவ பிரம்மேந்திரர் சொன்னபடியே, அவர் சமாதியான பின், காசியில் இருந்து அந்தணர் ஒருவர் பாண லிங்கத்தைக் கொண்டு வந்தார். பிரம்மேந்திரருடைய விருப்பப்படி அவரது சமாதி அருகில் அந்த பாண லிங்கம் காசி விஸ்வநாதர் என்கிற திருநாமத்துடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

பிரம்மேந்திரரின் அருளுக்குப் பாத்திரமானவரும் புதுக்கோட்டை சமஸ்தான மன்னருமான விஜயரகுநாதராய தொண்டைமான் தகவல் கேள்விபட்டு நெரூர் வந்தார். காசி விஸ்வநாதருக்கு ஒரு கோயில் கட்டினார். முறைப்படி நடக்க வேண்டிய கோயில் பூஜைகளுக்கும் சமாதி வழிபாடுகளுக்கும் ஏற்பாடுகளைச் செய்தார். காசி விஸ்வநாதர் கோயிலுக்கு ஆகம பூஜை. ஜீவ சமாதிக்கு வைதீக பூஜை. கோயில் மற்றும் அதிஷ்டானம் ஆகிய இரண்டும் இணைந்த திருக்கோயிலாக இது காட்சி அளிக்கிறது.

இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கண்காணிப்பில் கோயில் இன்று இருந்து வருகிறது. காசி விஸ்வநாதர் (சதாசிவ பிரம்மேந்திரர் சொன்னபடி காசியில் இருந்து வந்த பாண லிங்கம் இதுதான்) மற்றும் விசாலாட்சி ஆகிய தெய்வங்கள் கோயிலுக்குள் அருள் புரிகின்றனர். காசி விஸ்வநாதர் சன்னதிக்குப் பின்பக்கம் பிரம்மேந்திரரின் ஜீவசமாதி அமைந்துள்ளது. சமாதிக்குக் குடை பிடித்தபடி ஒரு பிரமாண்ட வில்வ மரம் காணப்படுகிறது.

சதாசிவர், ஜீவ சமாதி ஆன பத்தாம் நாளில் இந்த வில்வ மரம் தானாக வந்தது. இப்படி ஒரு வில்வ மரம் முளைக்கும் என்கிற செய்தி புதுக்கோட்டை மகாராஜாவின் கனவில் வந்து சொல்லப்பட்டது என்பது ஆச்சரியமான விஷயம். தினமும் காலையில் ஒன்பது மணிக்கு சமாதிக்கு அபிஷேகம் நடக்கும். அப்போது ருத்ரம், சமகம், புருஷசூக்தம் முதலிய பாராயணம் நடக்கும்.

ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் காலை பத்து மணிக்கு விசேஷ அபிஷேகம் அலங்காரம் உண்டு. அன்று சகஸ்ரநாம அர்ச்சனை, புஷ்ப அலங்காரம், அன்னதானம் ஆகியவை சிறப்பாக நடைபெறும். தவிர, ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது என்றார் நாராயண உபாத்யாயா. இவர்தான், ஜீவ சமாதியின் வழிபாடுகளை தற்போது கவனித்து வருகிறார்.

மகான்களின், மரணம் என்பது உடல் நீக்கம் மட்டுமே! காலங்களைக் கடந்தும் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அருளாசிகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு. அந்த மகானின் சன்னிதியைத் தரிசித்துச் செல்லும் அன்பர்களே சாட்சி.

ஸ்ரீசதாசிவரின் திருப்பாதம் பணிவோம்.

மகானின் திருக்கரம் பட்ட மந்திர மண்!

சமஸ்தானமாக இருந்தபோது புதுக்கோட்டையின் மன்னராக விளங்கிய விஜயரகுநாதராய தொண்டைமான் சதாசிவ பிரம்மேந்திரருக்கு நெருக்கமானவர்.

திருமணம் சம்பந்தமான ஒரு கொண்டாட்டம் சதாசிவ பிரம்மேந்திரரின் வீட்டில் நடந்து கொண்டிருந்தது. அப்போது சதாசிவருக்குப் பசி எடுத்தது. தாயை அணுகி உணவு அளிக்குமாறு கேட்டார். சற்றுப் பொறுத்திருப்பா. உன் திருமணத்துக்காக கொண்டாட்டங்கள் நடந்து வருகிறது. நீ இப்போது அவசரப்படலாமா? என்று தாயார் கேட்ட போது துணுக்குற்றார் சதாசிவர்.

திருமணத்துக்கு முன்னரே பசித்த போது வயிற்றுக்குச் சோறு போட முடியவில்லை என்றால், மணமானபின் இல்லற வாழ்க்கையில் என்னவெல்லாம் கஷ்டப்பட வேண்டி இருக்கும்; எப்படியெல்லாம் சிரமங்கள் நம்மை ஆட்கொள்ளும் என்று சிந்தித்தவர், சொல்லாமல் கொள்ளாமல் வீட்டைவிட்டுப் புறப்பட்டுவிட்டார் நடந்தார்.... நடந்தார்......

தஞ்சாவூர் வழியே சென்றால். 1738 வாக்கில் புதுக்கோட்டையை அடுத்த திருவரங்குளக் காடுகளில் (இதை திருவரங்கம் என்பாரும் உண்டு) நடந்து கொண்டிருந்தபோது அந்தப் பகுதியின் மன்னரான விஜயராகுநாத ராய தொண்டைமான். மகானான சதாசிவரை சந்தித்தார். தன்னந்தனியே இருந்த மன்னரைக் கண்ட மாத்திரத்திலேயே மகானின் மனதும் இளகியது. குருவிடம் உபதேசம் கேட்கும் சீடன் கோலத்தில், சதாசிவம் முன் பணிந்தபடி நின்றார் மன்னர். மவுனத்தையே தான் கடைப்பிடித்து வந்ததால், கீழே அமருமாறு சைகை காண்பித்தார். மன்னரும் அமர்ந்தார். அதன்பின் கீழே இருந்த மணலில் சில மந்திரங்களுடன் ஸ்ரீதட்சிணாமூர்த்தி மந்திரத்தையும் எழுதிக் காண்பித்த அவருக்கு உபதேசம் செய்தார்.

அந்த மந்திரம்:

ஓம் நமோ பகவதே தட்சிணாமூர்த்தயே மஹ்யம் மேதாம் ப்ரஃஞாம் ப்ரயச்ச ஸ்வாஹா.

மந்திர உபதேசத்தைப் பெற்றுக்கொண்டபின், எந்த மணலில் சதாசிவர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி மந்திரத்தை எழுதினாரோ அந்த மணலைத் தன் இரு கைகளால் பவ்யமாக அள்ளி, தலைப்பாகையில் எடுத்துக்கொண்டு அரண்மனை திரும்பினார் தொண்டைமான். இந்த மந்திர மண்ணை பூஜையறையில் வைத்து தினமும் வழிபட்டார் மன்னர் என்கிறார். சமஸ்தானத்தின் இன்றைய ராணியான ரமாதேவி ராதாகிருஷ்ண தொண்டைமான்.

சதாசிவர் தன் கைவிரல்களால் மந்திர எழுத்துக்களை எழுதிக் காண்பித்த அந்த மணல் இன்று எங்கே இருக்கிறது.

ஞாயிறு, 23 ஜனவரி, 2022

காஞ்சி மஹா பெரியவா....

காஞ்சி மஹா பெரியவா...

காஞ்சிப் பெரியவர் 1894, மே மாதம் 20ஆம் தேதி விழுப்புரம் நகரில் அவதரித்தார். இவரது தந்தை சுப்பிரமணிய சாஸ்திரிகள், தாயார் லட்சுமி அம்மையார். இவர்களுக்கு சுவாமிகளைத் தவிர நான்கு மகன்களும், ஒரு மகளும் இருந்தனர். இதில் ஸ்வாமிகள் அவர்களின் இரண்டாவதாகப் பிறந்தவர். சுவாமிநாதன் என்ற பெயரே சுவாமிகளுக்கு பெற்றோர் சூட்டியதாகும். இவர்களது குலதெய்வம் சுவாமிமலை சுவாமிநாதன். அவரது பெயரே சுவாமிகளின் பெயராக அமைந்தது. சுவாமிநாதன் எட்டு வயது வரை தந்தையிடமே கல்வி கற்றார். பின் திண்டிவனம் ஆற்காடு அமெரிக்க மிஷன் உயர் நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பில் சேர்ந்தார். இப்பள்ளியில் கண்டிப்பும், ஒழுங்கும் நல்ல முறையில் இருந்தன. அறிவுக்கூர்மையுடன் நன்கு ஆர்வத்துடன் படித்து வந்தார். ஆண்டு தோறும் பைபிள் ஒப்புவித்தல் போட்டி நடப்பது வழக்கம். இப்போட்டியில் எப்படியும் பரிசு பெற்று விடுவது என்ற உறுதியுடன் சுவாமிநாதன் படித்து முதல் பரிசும் பெற்றார். இவர் வெற்றி பெற்றது அனைவருக்கும் ஆச்சரியத்தை தந்தது. எல்லா ஆசிரியர்களும் சுவாமிநாதனைப் பாராட்டி மகிழ்ந்தனர். ஒரு சமயம் அப்பள்ளியை ஆய்வு செய்ய உதவிக்கல்வி அதிகாரி மஞ்சக்குப்பம் சிங்காரவேலு முதலியார் வந்திருந்தார். கண்டிப்பு மிக்க அவர், மாணவர்களின் கல்வித்திறனை அறிய சிக்கலான பல கேள்விகளைக் கேட்டார். சுவாமிநாதனின் தெளிவான பேச்சு அதிகாரியின் கவனத்தை ஈர்த்தது. நிச்சயம் இந்த மாணவர் எதிர் காலத்தில் உயர்ந்த நிலையை அடைவார் என்று பாராட்டிச் சென்றார். சுவாமிநாதன் அப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது பள்ளியின் ஆண்டு விழாவில் ஷேக்ஸ்பியர் எழுதிய ஜான் மன்னர் என்ற நாடகத்தை நடத்த பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. நாடகத்தின் முக்கிய கதாபாத்திரமான ஆர்தர் இளவரசர் வேடத்தில் நடிப்பதற்கு சுவாமிநாதனைத் தேர்ந்தெடுத்தார் தலைமையாசிரியர். நாடகத்தில் நடிப்பதற்கு தன்னைத் தேர்ந்தெடுத்ததை அறிந்து சுவாமி நாதன் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. சுவாமிநாதனின் பெற்றோருக்கோ இதில் உடன் பாடில்லை. ஆனாலும், தன் பெற்றோரைச் சம்மதிக்க வைத்தார் சுவாமிநாதன். அவரது விருப்பப்படியே பெற்றோர் நாடக உடைகளை தைக்க ஏற்பாடு செய்தனர். இரண்டே நாட்களில் ஜான் மன்னருக்குரிய வசனங்களை மனப்பாடம் செய்து, அருமையாக நடித்தார். நாடகத்தைக் கண்ட தலைமை விருந்தினர் பிஷப், சுவாமிநாதனைப் பாராட்டி மகிழ்ந்தார். இன்று ஜான் மன்னரை நேரடியாக சுவாமி நாதனின் நடிப்பில் கண்டேன் என்று சொல்லி முதல் பரிசை வழங்கினார்.

அந்த சுவாமிநாதனே காஞ்சி காமகோடி 68வது பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சந்திர சேகரேந்திர ஸ்வாமிகளாகி நமக்கு அருள் பாலித்தார். காஞ்சி பெரியவர் 1914 முதல் 1918 வரை கும்பகோணத்தில் தங்கி பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தார். ஒரு சமயம், கலைமேதைகளை வர வழைத்து பாராட்டு விழா நடத்தினார். அங்கு வந்த அஷ்டாவதானிகள், சதாவதானிகள் ஆகிய பல்கலை நிபுணர்கள் ஸ்வாமிகளிடம் ஆசி பெற எண்ணினர். சதாவதானி என்பவர் நூறு விஷயங்களுக்குரிய கேள்விகளை மனதில் வாங்கிக் கொண்டு பின்னர் அவற்றுக்கு ஒன்று விடாமலும், தவறு இல்லாமலும் விடை கூறுபவர். அஷ்டாவதானி என்பவர் ஒரே நேரத்தில் எட்டு விஷயங்களை வாங்கிக் கொண்டு பதில் கூறுபவர். இவர்கள் பலமொழிகளிலும் கவிதை இயற்றும் திறன் படைத்தவர்களாக இருப்பர். ஸ்வாமிகள் தலைமையில் இத்தகைய சிறப்பு போட்டி ஒன்று ஏற்பாடாகி இருந்தது. அப்போட்டியில் கலந்து கொள்ள மூத்த சதாவதானி ஒருவர் வந்திருந்தார். அவர் தன்னுடைய செயல் திறமையினை ஸ்வாமிகளிடம் எடுத்துச் சொன்னதோடு யாரும் தன்னோடு போட்டியிட்டு வெற்றி பெற முடியாது என்று கர்வத்துடன் கூறிக் கொண்டார். போட்டி துவங்கும் முன், ஸ்வாமிகள் ஒருவரை அழைத்து, சதாவதானியிடம் கேட்கும் போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வைக்கும் படி கூறினார். பதில்களை சதாவதானி கூறும் போதே ஸ்வாமிகளின் பதில்களும் வாசிக்கப்பட்டு வந்தது. இருவர் சொன்ன விடைகளும் ஒன்றாக இருப்பதை கண்டு சதாவதானி ஆச்சரியப்பட்டார். சுவாமிகளின் பாதங்களில் விழுந்து தன்னை மன்னிக்கும் படி வேண்டினார். அதன் பின் ஸ்வாமிகள் அவருக்குப் பொன்னாடை போர்த்தி ஆசி வழங்கினார். அக்காலத்தில் சர்க்கஸ் கம்பெனி நடத்திய பேராசியர் ராமமூர்த்தி யோகக்கலையில் நிபுணராக இருந்து வந்தார். இவர் சுவாமிகளைத் தரிசிக்க வந்திருந்தார். இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தனர். பேசிவிட்டு வெளியே வந்த பேராசிரியரின் கண்களில் நீர் பெருகியது. பிரம்மச்சர்யத்தின் தெய்வீக சக்தியை ஸ்வாமிகளிடத்தில் உணர்ந்ததாகவும், இதை விட வேறு பாக்கியம் வாழ்வில் தேவையில்லை என்று மகிழ்ச்சி அடைந்தார். கும்பகோணம் அரசு கல்லூரியில் பணியாற்றிய இயற்பியல் பேராசிரியர் ராஜகோபால் ஐயரும், இன்ஜினியர் பி.வி. மாணிக்கநாயக்கரும் ஸ்வாமிகளிடம் பக்தி கொண்டவர்கள். இருவரும் ஸ்வாமிகளிடம் வானசாஸ்திரத்தைப் பற்றிப் பேசினர். அவர்களிடம், ஒரு டெலஸ்கோப் மூலமாக, இக்கலையில் நம் நாட்டு வழிமுறைக்கும், வெளி நாட்டவர் வழி முறைக்கும் உள்ள ஒற்றுமைகளை எடுத்துச் சொல்லி, ஸ்வாமிகள் விளக்கம் அளித்தார். அவரது நுணுக்கமான வானவியல் அறிவு கண்டு இருநிபுணர்களும் பெருமிதமும் ஆச்சரியமும் கொண்டனர். காஞ்சி பெரியவர் ஆற்காடு அருகிலுள்ள பூசைமலைக்குப்பம் மடத்தில், 1930ல் தங்கியிருந்தார்.

அந்த மடத்தில் இருந்த யானை மஹா பெரியவரைக் கண்டகால் துதிக்கையைத் தூக்கி நமஸ்காரம் செய்யும். பெரியவரும் யானையைத் தடவிக் கொடுத்து அன்பு காட்டுவார். ஒரு நாள் இரவில் யானையைக் கட்டியிருந்த கொட்டகை தீப்பற்றிக் கொண்டது. யானை சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடி விட்டது. மறு நாள் பாகனும், மடத்து ஆட்களும் காட்டில் யானையைத் தேடி அலைந்தும் இருக்கும் இடத்தை அறிய முடியவில்லை. சில நாட்கள் கழித்து, மடத்திலிருந்து எட்டு கி.மீ.,தொலைவில் உள்ள குளத்தில் அது நின்று கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. பாகன் குளத்தில் இறங்கி, யானையை கொண்டு வர முயற்சித்தான். அது வர மறுத்து அடம் பிடித்தது. விஷயமறிந்த பெரியவர் தானே குளத்திற்கு சென்று  யானையை அன்புடன் ஒரு பார்வை பார்த்தார். யானையின் கண்களில் கண்ணீர் பெருகியது. குளத்தை விட்டு வெளியே வந்து அவர் அருகில் நின்றது. பெரியவர் அதைத் தடவிக் கொடுத்து சமாதானம் செய்தார். இதே போல, யானையிடம் சிக்கிய பக்தரைக் காத்த நிகழ்ச்சி ஒன்றும் நடந்தது. சிதம்பரத்தில் ஆடிட்டராக இருந்தவர் பாலசுப்ரமண்யம். இவர் தமிழ் தாத்தா உ.வே.சா. பரம்பரையில் வந்தவர். அவர் மஹா பெரியவரின் தீவிர பக்தர். எப்போதும் சந்திரசேகரா ஈசா என்று உச்சரிக்கும் வழக்கம் கொண்டவர். ஒரு நாள் சிதம்பரம் நடராஜரை தரிசிக்க சென்ற ஆடிட்டருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கோயில் யானைக்கு மதம் பிடித்து வந்தவர்களைப் பயமுறுத்திக் கொண்டிருந்தது. அப்போது ஆடிட்டர் உள்ளே நுழைந்தார். அது அவரை கோபத்துடன் தூக்கியது. அவர் பயத்தில் நடுங்கினார். ஆனால் வாய் மட்டும் சந்திரசேகரா, ஈசா என்ற நாமத்தை சொல்ல மறக்கவில்லை. அப்போது அதிசயம் ஒன்று நிகழ்ந்தது. மதம் கொண்ட யானை ஒரு நிமிஷத்தில் அமைதியானது. ஆடிட்டரை கீழே இறக்கி விட்டு விட்டு பாகனுடைய கட்டுப்பாட்டுக்குள் வந்து மண்டியிட்டது. பக்தர்கள் இதைப் பார்த்து அதிசயப்பட்டனர். ஸ்வாமிகளின் மீது நாய்க்கும் கூட பக்தி உண்டு. 1927ல் மடத்தில் நாய் ஒன்று வளர்ந்து வந்தது. மடத்து பொருட்களையும், கால்நடைகளையும் பாதுகாத்து வந்தது. ஸ்வாமிகள் ஒவ்வொரு நாளும் நாய்க்கு ஆகாரம் கொடுத்தாகி விட்டதா? என்று அக்கறையாய் விசாரிப்பார். அவரைக் கண்டவுடன் அது சுற்றிச் சுற்றி வரும். ஒரு முறை சிறுவன் ஒருவன் அந்த நாயைக் கல்லால் அடித்துத் துன் புறுத்தினான். அதன் பின் அது பார்ப்பவர்களை எல்லாம் கடிக்க ஆரம்பித்தது. மடத்து அதிகாரிகள் நாயை 40 கி.மீ., தூரத்தில் இருக்கும் கிராமத்தில் கொண்டு விட்டு விட்டு வந்தனர். மஸா பெரியவருக்கு இந்த விஷயம் தெரியாது. ஆனால், நாயை விட்டு வந்தவர்கள் மடத்திற்கு வருவதற்கு முன் நாய் மடத்திற்கு வந்து சேர்ந்தது. மடத்து ஆட்களிடம், நாய் வந்து விட்டதா? என்று கேட்டார் பெரியவர். நாயும் அன்போடு பெரியவரிடம் வந்து நின்று சாந்தமானது. மடத்தில் இருப்பவர்கள் பெரியவர் செய்த அற்புதத்தை எண்ணி வியந்தனர். மடத்து நாய்க்கு இருந்த பக்தி உணர்வு மனிதர்களான நமக்கு இருக்கட்டும். ஒரு ஆங்கில எழுத்தாளர் பால்பிரண்டன் 1921ல் இந்தியா வந்தார். எழுத்தாளர் கே.எஸ். வெங்கடரமணியோடு சேர்ந்து ஆன்மிக ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டார்.

இந்திய மகான்களைத் தரிசிக்க வேண்டும் என்பது அவரது நோக்கமாக இருந்தது. வெங்கடரமணி பால் பிரண்டனிடம் காஞ்சி பெரியவர் ஒரு உண்மையான துறவி. பாதயாத்திரையாக இந்தியா முழுவதும் சென்று ஆன்மிக கருத்துக்களைப் பரப்பி வருபவர். யோக மார்க்க உண்மைகளை நன்கு அறிந்தவர். நீங்கள் அவரை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன் என்று உறுதியளித்தார். அப்போது பெரியவர் செங்கல்பட்டில் முகாமிட்டிருந்தார். அவரைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. பால் பிரண்டன் பெரியவரை சந்தித்த நிகழ்ச்சி, பகவான் கிருஷ்ணரிடம் அர்ஜுனன் உபதேசம் பெற்றதைப் போல அமைந்தது. பிரண்டன் தனக்கு ஏற்பட்ட ஆன்மிக சந்தேகங்களுக்குரிய விடைகளை பெரியவரிடம் இருந்து பெற்றார். அவரிடம் பெரியவர், திருவண்ணாமலையில் இருக்கும் ரமணமகரிஷியையும் சந்தியுங்கள், என்றார். ரமணரையும் சந்தித்து பால்பிரண்டன் ஆசி பெற்றார். பால் பிரண்டன் காஞ்சி பெரியவரிடம் தான் பெற்ற அனுபவத்தை தன் நூலில் பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார். குழந்தைப் பருவம் முதற் கொண்டே இறைப்பணியில் ஈடுபட்டிருக்கும் இப்பெரியவரை விட்டுப்பிரிய எனக்கு மனம் வரவே இல்லை. இம்மகான் பீடாதிபதியாக இருந்தாலும், அவரது மனம் அதிகாரத்தை நாடவில்லை. அவர் எல்லாவற்றையும் துறந்தவர். அவருக்கு அளிக்கும் காணிக்கைகளை எல்லாம் தகுதியுடையவர்களுக்கே பங்கிட்டு அளிக்கிறார். அவரது அழகிய உருவத்தை நான் ஒரு போதும் மறக்க முடியாது. நான் செங்கல்பட்டில் தங்கியிருந்த நாளில் அந்த ஊரையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தேன். ஸ்வாமிகளை மறுபடியும் தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் என்னுள் உதித்தது. அவர் ஒரு பெரிய கூட்டத்தில் உபதேசம் செய்து கொண்டிருந்தார். அந்த கூட்டத்தில் இருந்தவர்கள் அவர் மீது கொண்டிருக்கும் நம்பிக்கை கண்டு பெருமை கொண்டேன். கடவுள் என்ற ஒருவர் இருக்கிறார் என்ற எண்ணம் அந்த மக்களின் உள்ளத்தில் ஆழமாக இருந்தது. அவர்கள் வேறு எந்த சிந்தனையிலும் நாட்டம் செலுத்தவில்லை. அன்று இரவில் தூங்கிக் கொண்டிருந்தேன். படுத்திருந்த போது என்னுடைய உடம்பிலுள்ள நரம்புகள் அனைத்தும் முறுக்கேறி இருந்தது. யாரோ என்னை இழுப்பது போல ஒரு உணர்ச்சி ஏற்பட்டது. என்னைச் சுற்றி மின்சாரம் பாய்வது போல உணர்ந்தேன். எனது பக்கத்தில் வெளிச்சம் தோன்றியது. மிகுந்த பரபரப்பான நான் எழுந்த போது, மஹா ஸ்வாமிகளின் உருவத்தைக் கண்டேன். அதில் எந்தவித ஐயமும் இல்லை. கருணையை வெளிப்படுத்தவே அவர் வந்திருந்திருப்பதை உணர்ந்தேன். தாழ்மையுடன் இரு; நீ கோருவதை எல்லாம் அடைவாய் என்று அவர் கூறுவதை என் காதுகள் உணர்ந்தன. அதன் பின் அந்த உருவம் மறைந்து விட்டது. மறக்க முடியாத இந்த நிகழ்ச்சியை எப்போதும் என் மனம் நினைத்துக் கொண்டே இருந்தது  என்று எழுதியிருக்கிறார். பால் பிரண்டனுக்கு கிடைத்த மஹா பெரியவரின் அருள் பார்வை நமக்கும் கிடைக்கட்டும். காஞ்சி மஹா  பெரியவர், 1935ல், மிட்னாபூரில் உள்ள மடத்தில் முகாமிட்டிருந்தார். இவ்வூர் கோல்கட்டாவிலிருந்து 100 கி.மீ., தூரத்தில் உள்ளது. நாடு முழுவதும் சுதந்திரப்போராட்டம் மிகத் தீவிரமாக நடந்து கொண்டிருந்த நேரம் அது. டாக்டர்கள், கல்வியாளர்கள், தொழிலதிபர்கள் என்று பலரும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு கைதிகளாக மிட்னாபூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். பெரியவரின் வருகையைக் கேள்விப்பட்ட சிறைக்கைதிகள் எப்படியும் அவரைத் தரிசிக்க வேண்டும் என்று ஆர்வம் கொண்டனர். சிறை அதிகாரியாக இருந்த ஆங்கிலேயரிடம் அனுமதி கேட்டனர். கண்டிப்பு மிக்கவராக அந்த அதிகாரி இருந்தாலும், கைதிகளின் பக்தியுணர்வைக் கண்டு இரக்கப்பட்டு, தானும் அவர்களோடு பெரியவர் தங்கியிருந்த இடத்திற்குப் புறப்பட்டார். கூண்டிற்குள் அடைபட்ட பறவைகள் சுதந்திரமாகப் பறப்பது போல, கைதிகளும் மகிழ்ச்சியுடன் பெரியவரைத் தரிசிக்கக் கிளம்பினர். மாலை ஐந்து மணிக்கு கிளம்பிய அவர்கள், ஆறுமணிக்குள் தரிசனத்தை முடித்து விட்டு, சிறைச்சாலைக்குத் திரும்பி விட வேண்டும் என்பது அந்த அதிகாரியின் நிபந்தனை. சிறைக்கைதிகள் வந்த நேரத்தில் பெரியவர் வழக்கமான மாலை நேர பூஜையில் இருந்தார். பூஜை முடிய ஆறு மணிக்கு மேலாகும் என்று சீடர்கள் தெரிவித்தனர். உடனடியாக அவர் வெளியே வந்தால் மட்டுமே தரிசிக்க முடியும் என்ற நிலையில் என்ன செய்வதென தெரியாமல் கலங்கினர். மாலை 5.45 மணி ஆகி விட்டது. இன்னும் 15 நிமிடத்திற்குள் சிறைக்குள் சென்றாக வேண்டும். நேரம் சென்று கொண்டிருந்தது. பெரியவர் வருவதாகத் தெரியவில்லை. இனி அவரைக் காண்பதற்கு இயலாது என்ற நிலையில் ஏமாற்றமான மனதுடன் கைதிகள் அதிகாரியுடன் கிளம்ப ஆயத்தமாயினர். ஆனால் திடீரென தன் பூஜையை முடித்துக் கொண்ட ஸ்வாமிகள் வெளியே வந்தார். சிறைக்கைதிகள் தன்னைப் பார்ப்பதற்கு அனுமதித்தார். சற்றும் இதனை எதிர்பார்க்காத கைதிகள் ஆர்வத்துடன் அவரைக் காண ஓடினர். அப்போது கைதிகள் ஸ்வாமிகளிடம் ஒருமித்த குரலில் நாடு சுதந்திரமடைய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். ஸ்வாமிகளும், நாடு விடுதலை அடைந்து மக்கள் யாவரும் சுதந்திர வாழ்வு வாழ வேண்டும், என்று பிரார்த்தித்தார். தேசிய உணர்வு கொண்ட கைதிகளுக்கு பெரியவரின் சந்திப்பு உற்சாகத்தைத் தந்தது. அவர்களை ஆசிர்வதித்து பிரசாதமும் வழங்கி மகிழ்ந்தார். இந்நிகழ்வைப் பற்றி, அந்த ஆங்கிலேய அதிகாரி தன் டைரியில் துப்பாக்கி குண்டுக்கு கூட பயப்படாமல், அதை எதிர் நோக்க மார்பைத் திறந்து காட்டும் சுதந்திரப் போராட்ட கைதிகள், அந்த மஹா பெரியவரின் முன்னால், சாந்தமாக அடங்கி ஒடுங்கி நிற்பதை நான் இன்று கண்டேன். இந்த ஆன்மிகப்பணிவினை இந்தியாவில் மட்டும் தான் பார்க்க முடியும். எனக்குமே அப்பெரியவரைப் பார்த்த பிறகு நான் ஒரு சிறை அதிகாரி என்ற எண்ணமே மறந்து போனது. என் மனம் அதிகாரத்தில் இருந்து விலகி அன்பு மார்க்கத்திலும், பக்தி நெறியிலும் சென்றது. இனி அன்பு வழியே என் வழி, என்று குறிப்பிட்டுள்ளார்.

 


சனி, 22 ஜனவரி, 2022

தியாகராஜர் ஆரதனை

இன்று தியாகராஜர் ஆராதனை

என்தரோ மஹானுபாவுலு அன்தரிகீ வன்தனமுலு.....

இசைக்கலையில் உச்சநிலையாக கர்நாடக சங்கீதம் விளங்குகிறது. கர்நாடக சங்கீதத்தின் மூலம் இறைவழிபாட்டில் சிறப்புத் தன்மையை ஆழ்வார்கள், நாயன்மார்கள், அருணகிரிநாதர், புரந்தரதாசர், மீராபாய், கபீர்தாஸ், குருநானக் போன்ற மகான்கள் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இவர்களை நாதயோகிகள் என்பார்கள். இவர்களுள் முதன்மையானவர் என போற்றப்படுபவர் சங்கீத ஜோதி, சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள். 1759 முதல் 1847 வரை உள்ள 88 ஆண்டுகளை தியாகராஜ சாகாப்தம் என்று அழைப்பது பொருத்தமானதாக இருக்கும். திருவாரூரில் ராமபிரும்மம் என்பவருக்கும், சாந்தா தேவியாருக்கும் மூன்றாவது குழந்தையாக பிறந்தார் தியாகராஜர். இவர்கள் மூலகநாடு திரைலிங்க தெலுங்கு பிராமணர் வகுப்பை சேர்ந்தவர்கள். இவருக்கு ஜப்யேசன், ராமநாதன் என்ற சகோதரர்கள் இருந்தனர். இவரது தந்தை சிவ, விஷ்ணு பக்தியில் ஈடுபட்டு, திவ்யநாத பஜனை செய்து வந்தார். திருவாரூரில் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் தியாகராஜர் தனது ஆரம்பக்கல்வியை பயின்றார். பிறகு பெற்றோருடன் திருவையாறு சென்று விட்டார். 8ம் வயதில் உபநயனம் செய்வித்த போது, காயத்ரியுடன், ராமதாரக மந்திரத்தையும் தன் தந்தையிடம் உபதேசம் பெற்றார். தன் தந்தை வைத்திருந்த ராம விக்ரகத்திற்கு அன்று முதல் பூஜை செய்ய ஆரம்பித்தார். ராம கிருஷ்ணானந்தரிடம் உபதேசம் பெற்ற ராம சடாட்சரி மந்திரத்தை லட்சக்கணக்கில் ஜபம் செய்தார். இவரது தந்தையார் பரமபாகவதர். சங்கீதம் அவரது ரத்தத்தில் ஊறி இருந்தது. சிறு வயதிலேயே தியாகராஜரும் இசைத்திறமை கொண்டவராக விளங்கினார். இனிமையான குரலும் கைகொடுத்தது. தன் தாயாரிடம் ராமதாசர் மற்றும் புரந்தரதாசரின் கீர்த்தனைகளை கற்றார். திருவையாற்றில் உள்ள சமஸ்கிருத கல்லூரியில் சேர்ந்து நான்கு ஆண்டுகள் ராமாயணம் படித்தார். வால்மீகி ராமாயணத்தை படிக்கப்படிக்க, ராமபக்தியில் மூழ்கி, ராம சைதன்யர் ஆனார். ஜோதிடமும் கற்றார். தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் சரபோஜி சங்கீதத்தில் ஈடுபாடு உள்ளவர். அவரது அரசசபை வித்வானான ஸொண்டி வெங்கட ரமணய்யாவிடம் தியாகராஜர் சங்கீதம் கற்றார். அரசசபையில் பல பாட்டுக்களை பாடி பாராட்டு பெற்றார். அவர் பாடிய முதல் பாட்டு நமோ நமோ ராகவாய அதிசம் என்பதாகும். தியாகராஜர் தினமும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ராம நாமம் சொல்லி 38ம் வயதிற்குள் 96 கோடி ராம ஜபம் உருவேற்றினார். தனது 38ம் வயதின் கடைசி நாளில் உள்ளம் உருகி ஸ்ரீ ராமனை பாடும்போது கதவு தட்டிய சப்தம் கேட்டது. திறந்து பார்த்தபோது ராம லட்சுமணர்கள் விஸ்வாமித்திரர் நடத்திய யாகத்திற்கு செல்வது போன்ற காட்சியை கண்டார். அப்போது பாடியதுதான் ஏல நீ தயராது என்று புகழ் பெற்ற பாடல். தியாகராஜர் முதலில் பார்வதி அம்மையாரை மணந்தார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இறந்துவிட்டதால் அவரது தங்கையான கமலாம்பாள் என்ற உத்தமியை மணந்தார். இவர்களுக்கு சீதாலட்சுமி என்ற பெண் பிறந்தார். தியாகராஜரின் தந்தை இறக்கும் தருவாயில் மகனை அருகில் அழைத்து, ஸ்ரீ ராமமூத்தியை எப்போதும் பாடு என்று கட்டளையிட்டார். தந்தை இறந்தபிறகு தியாகராஜரின் சகோதரர்களுக்கு தம்பியின் பாட்டும் பக்தியும் பைத்தியக்காதரத்தனமாக தோன்றவே, அவரை ஊர் கோடியில் இருந்த கூரை வீட்டிற்கு அனுப்பிவிட்டனர் சொத்துக்களை அவர்களே எடுத்துக் கொண்டனர். தியாகராஜர் தனது தந்தை பூஜை செய்த ராம விக்ரகத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, அந்த சிறிய வீட்டில் ராமனை கொலுவிருக்கச் செய்தார். சதா ராம நாமமும், ராம கானமுமாகவே வாழ்ந்து வந்தார். தினமும் உஞ்சவிருத்தி (பிக்ஷை) செய்து, அதில் வரும் வருமானத்தைக் கொண்டு ஜீவித்து வந்தார். பல சீடர்கள் அவரிடம் சங்கீதம் கற்றுக் கொண்டனர். யாரிடமும் எதுவும் அவர் பெற்றுக் கொண்டதில்லை. தனது சீடர்களுடன் ராமநவமி, கிருஷ்ண ஜெயந்தி ஆகிய நாட்களைக் கொண்டாடுவார். ஒரு சமயம் ஒரு சிஷ்யன் தவறு செய்த போது, அவனை கோபித்துக் கொண்டார். ஆனால் அவரது மனைவியோ கோபத்தினால் ஏற்படும் தீமையை எடுத்துக்கூறி சாந்தப்படுத்தினார். அப்போது தன் தவறை உணர்ந்து அவர் பாடிய பாட்டு தான் சாந்தமுலேக சவுக்கியமுலேது (சாந்தம் இல்லாமல் சவுக்கியம் இல்லை). முதலில் ராமனை மட்டுமே பாடி வந்த தியாகராஜர், சிவபக்தையான அவரது மனைவியின் அறிவுரையை ஏற்று, மற்ற தெய்வங்களைப்பற்றியும் பாடலானார். சம்போ மஹாதேவ, சிவேபாஹிமாம் என்ற பாடல்கள் அதற்கு உதாரணமாகும். தியாகராஜரின் மகிமையும், கானச்சிறப்பும் நாடெங்கும் பரவியது. பலர் அவரை புகழ்ந்தாலும், பொறாமைக்காரர்களான அவரது சகோதரர்களுக்கு, அவர் புகழும், பெருமையும் பெறுவது சங்கடத்தைக் கொடுத்தது. மூத்த சகோதரர் ஜப்சேயன் அவர் எழுதிய பாட்டு புத்தகங்களை தீயிட்டு கொளுத்தி விட்டார். ஏராளமான கீர்த்தனைகள் அதனால் மறைந்து விட்டன. அவரது வீட்டிற்குள் புகுந்து ராம விக்ரகத்தை திருடிக்கொண்டு போய் காவிரியில் போட்டு விட்டார். ராம விக்ரகத்தை காணாமல் தியாகராஜர் திகைத்து உள்ளம் உருகி அற்புதமான கீர்த்தனங்களால், ஸ்ரீ ராமனிடமே தன் வருத்தத்தை முறையிட்டார். அநியாய முஸேயகுரா ரானிது ராது என்ற பாடல் அப்போது பாடப்பட்டது. அன்ன பானம் இல்லாமல் உறங்காமல் துடித்தார். ஒரு நாள் கனவில் ஸ்ரீராமன் தோன்றி ஆற்று மணலில் தான் புதைந்திருக்கும் இடத்தை சொல்லி மறைந்தார். விக்ரகம் கிடைத்த ஆனந்தத்தில், தொரிகிதிவோ (நீ எப்படித்தான் மீண்டும் கிடைத்தாயோ) ரகுவீர, ரணதீர என்ற பாடல்களால் ராமனை ஆராதித்தார். சரபோஜி மன்னர் தன்னை புகழ்ந்து பாட வேண்டும் என நிறைய பணத்துடன் ஒரு அதிகாரியை அனுப்பினார். அரசரின் அழைப்பை நிராகரித்து இறைவனைத் தவிர வேறு யாரையும் பாடமாட்டேன் என சொல்லி அவர்பாடிய சிறப்பான பாடல்தான் நிதிசால சுகமா? ராமுனி சந்நிதி ஸேவசுகமா? என்பதாகும். பிறகு சரபோஜி மன்னர் மாறுவேடத்தில் வந்து மற்றவர்களுடன் அமர்ந்து அவரது பாட்டைக் கேட்டு மகிழ்ந்தார். திருவிதாங்கூர் மன்னரான சுவாதி திருநாள் மகாராஜா தியாகராஜரை அழைத்ததும் செல்ல மறுத்து விட்டார். பின்பு தியாகராஜர் திருப்பதி, காஞ்சி, மதுரை ஆகிய க்ஷேத்திரங்களுக்கு சென்று பாடினார். திருப்பதியில் திரை போட்டு மறைந்திருந்த பெருமாளைப்பற்றி ஒரு பெண்ணின் கணவனை கீர்த்தனை பாடி உயிர்பெறச் செய்தார். மனைவி இறந்தவுடன் பற்றற்ற துறவியாக வாழ்ந்த தியாகராஜர் பகுளபஞ்சமி தினத்தன்று பஜனை பாட்டுகளை கேட்டுக்கொண்டே நாதஜோதியாக மாறி இறைவனுடன் கலந்தார். அவர் சொல்லியபடி 60 ஆண்டுகள் கழித்து அவரது கீர்த்தனைகள் புகழ்பெற்றன. 1925ம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த நாகம்மாள் என்பவர் தியாகராஜருக்காக திருவையாற்றில் கட்டிய சமாதியில் இன்றும் தியாகராஜ ஆராதனை ஒரு தூய கலைவிழாவாக சிறப்புடன் நடக்கிறது. இசையின் நோக்கம் பக்தியை வளர்க்கவே என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டியவர் சத்குரு தியாகராஜ சுவாமிகள்.தியாகராஜ ஸ்வாமிகள்

பிரமாண்டமான இரண்டு திருவிழாக்களுக்குப் பெயர் போன திருத்தலம் திருவையாறு. ஒன்று சப்த ஸ்தான உத்ஸவம். நந்தி தேவரின் திருக்கல்யாணத்தைக் கொண்டாடும் வைபவம் இது. அப்போது அருகில் உள்ள ஆறு திருத்தலங்களில் இருந்து உத்ஸவ விக்கிரகங்கள் திருவையாறுக்கு ஊர்வலமாக வந்து சேரும். ஊரே திமிலோகப்படும். இந்த விழா ஏப்ரல் மாதத் திருவிழா. அடுத்தது ஜனவரி மாதத் திருவிழா. சத்குரு ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகளின் ஆராதனை உத்ஸவம். அவர் மகா சமாதி அடைந்தது 6.1.1847 அன்று. தேய்பிறை பஞ்சமி. வருடந்தோறும் இந்த தினத்தன்று சங்கீத வித்வான்கள் அத்தனை பேரும் அங்கே கூடி, இசை அஞ்சலி செலுத்தவர். பின்னே தனக்கென்று வாழாமல் இசையையே உயிர் மூச்சாகக் கொண்டு கீர்த்தனகைள் பல இயற்றி ராம பக்தியிலேயே திளைத்த மகான் அல்லவா ஸ்ரீதியாகராஜ ஸ்வாமிகள்.

மனிதன் முடிவில் எதை எடுத்துச் செல்கிறான்? பொன்னையும் பொருளையுமா? அவன் செய்த பாவ புண்ணியங்களே அவனைப் பின் தொடர்கின்றன. வாழ் நாளில் நாம ஜபத்தில் மூழ்கி இன்புறம் பெரும் போது எத்தனை பேருக்குக் கிடைக்கும்? அப்படி ஒரு பாக்கியம் வாய்த்தது ஸ்ரீதியாகராஜர் என்கிற ஒரு புண்ணிய ஆத்மாவுக்கு. தியாகராஜரின் தந்தையான ராம பிரம்மம். ஆந்திர தேசத்தவர். பஞ்சம் காரணமாகத் தமிழகம் வந்து திருவாரூரில் குடியேறினார். அவர் ராம பக்தர். ஸ்ரீராம விக்கிரகங்களுக்குத் தினமும் ஆராதனை செய்தவர். தியாகராஜருக்கு எட்டாவது வயதில் உபநயனம் செய்து வைத்ததும் அவனுக்கு ஸ்ரீராம உபதேசமும் செய்து வைத்தார். அத்துடன் தான் பூஜித்த ஸ்ரீராம விக்கிரங்களை மகனிடமே கொடுத்து அனுதினமும் பூஜைகள் செய்யச் சொன்னார். எனவே ராமபிரானின் மேல் பக்தி கொண்டார் தியாகராஜர். மும்மூர்த்திகளில் (தியாகராஜர், ஸ்யாமா சாஸ்திரி. முத்துஸ்வாமி தீட்சிதர்) அவர் முதலாவதாகப் போற்றப்படுகிறார். பாடகர்கள் புதிது புதிதாக உருவாகலாம். ஆனால் அவர்கள் பாடும் கீர்த்தனைகள் பழையனதான்.

ஃப்ளாஸ்க்கை அருகில் வைத்துக் கொண்டு இன்றைய பாடகர்கள் ஆலாபனை செய்யும் ஸ்ரீதியாகராஜரின் கீர்த்தனைகள் எல்லாம் அவர் பசியுடன் இருந்த வேளையில் பக்தி ரசம் மனதில் ததும்ப ஆத்மார்த்தமான பாவத்தில் பாடியவையே.

தியாகராஜர் எப்படி இருப்பார்?

மெலிந்த தேகம். சிவந்த நிறம். சற்றே நீண்ட கழுத்து, சுமாரான உயரம். தலையில் குடுமி, கழுத்தில் துளசி மாலை. நெற்றியில் கோபிச்சந்தனம் என்று எளிமையே உருவானவர் அவர். அதிர்ந்து பேச் தெரியாதவர். எவருக்கேனும் ஏதேனும் உதவ வேண்டும் என்கிற மனோபவம் கொண்டவர். தினமும் காலை அனுஷ்டானங்கள் முடிந்ததும் உஞ்சவிருத்திக்காக கையில் ஒரு செம்புடன் வெளியே கிளம்புவார். வீடு தோறும் வாசலில் நின்று ராமநாத்தை ஜபிப்பார். சிறிது நேரத்திலேயே செம்பு நிரம்பிவிடும். இதுபோதும் என்கிற மனதுடன் இல்லம் திரும்புவார் தியாகராஜர். உஞ்சவிருத்தியில் சேகரித்த அரிசியை அன்னமாக்கி இறைவனுக்கு நைவேத்தியம் செய்தபிறகு வீட்டில் உள்ளவர்கள் உண்பார்கள். அப்போது எவரேனும் வந்தால் அவர்களுக்கும் உணவளிப்பார். அடுத்த வேளைக்குத் தேவைப்படுமே என்று எதையும் சேர்த்து வைக்கும் பழக்கமே தியாகராஜருக்கு இல்லை.

சங்கீதம் கற்பதற்காகப் பலரும் தங்கள் குழந்தைகளை தியாகராஜரிடம் சேர்த்தனர். அதற்கு சன்மானமாக உணவுபொருட்களையும் தருவார்கள். அவை முறையாக சமைக்கப்பட்டு இறைவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்டபின் கொடுத்தவர்களுக்கே திரும்ப வழங்கப்படும் இப்படித் தனக்கென்று எந்தப் பொருளையும் வீட்டில் சேர்த்து வைக்கப்பட்டார் அவர். தவிர, எந்த ஒரு சிஷ்யரிடம் இருந்து பணம் வாங்கும் பழக்கம் அவருக்கு இல்லை.

ஒரு நாள் காலை துறவி ஒருவர் தியாகராஜரின் இல்லம் (திருவையாறு) தேடி வந்தார்.

உங்களுடைய சங்கீத்தைக் கேட்க வேண்டும் என்று ஆவலாக உள்ளேன் என்றார் துறவி. உடனே சில கீர்த்தனைகளைப் பாடினார் தியாகராஜர் இதைக் கேட்டுத் துறவி இன்புற்றார். உணவருந்திவிட்டுச் செல்லலாமே என்றார் தியாகராஜர். சரி காவிரிக்குச் சென்று நீராடிவிட்டு வருகிறேன் பிறகு சாப்பிடுவோம். முதலில் இதை வாங்கித் கொள்ளுங்கள் என்று சுவடிகள் சிலவற்றைக் கொடுத்துச் சென்றார். போனவர் திரும்பவே இல்லை. பல இடங்களிலும் தேடிப் பார்த்தார் தியாகராஜர். துறவியைக் காணோம். அன்று இரவு அதே நினைவுடன் உறங்கிப்போனார். அவரது கனவில் தோன்றிய துறவி தியாகராஜர், உனது வீட்டுக்கு வந்த உன் கானத்தைக் கேட்டு மகிழ்ந்து நாரதனாகிய நானே. உன்னிடம் தந்த சுவடிகளில் ஸ்வரார்ணவம் மற்றும் நாரதீயம் என்னும் நூல்கள் இருக்கின்றன. சங்கீதம் சம்பந்தமான இலக்கணங்களைச் சொல்லும் இந்த நூல்கள் உனக்கு உதவும் என்று அருளி மறைந்தார். இப்படி நாரத பகவானை திரிசிக்கும் பேறு தியாகராஜருக்கு வாய்த்தது.

காஞ்சிபுரம், திருப்பதி, ராமேஸ்வரம் தனுஷ்கோடி ஸ்ரீரங்கம், திருவாரூர் உட்பட எண்ணற்ற சைவ வைணவ க்ஷேத்திரங்களையும் அங்கெல்லாம் உள்ள இறை மூர்த்தங்களையும் தரிசித்துப் பாடியுள்ளார் தியாகராஜர். ரமனைத் தவிர வேறு பல தெய்வங்களைப் பற்றி தியாகராஜர் பாடி இருக்கிறார் என்றாலும் எண்ணிக்கையில் பார்த்தாலும் அவை சொற்பம்தான்.

தனது வாழ்நாளில் மொத்தம் 96 கோடி ராம நாமத்தை இருபத்தோரு வருடங்களில் ஜபம் செய்து முடித்திருக்கிறார் தியாகராஜர் ஸ்வாமிகள். அதாவது சராசரியாக தினமும் ஒண்ணேகால் லட்சம் முறை ராமநாமத்தை ஜபித்துள்ளளார். இதுபோல் வேறு எவரும் செய்தில்லை. இதன் பலனால் ஸ்ரீராமபிரானை பலமுறை தரிசிக்கும் பாக்கியம் பெற்றார். ஸ்ரீராம் தரிசன மகிமைøயுயம் கீர்த்தனைகளாக வெளிப்படுத்தினார்.

தியாகராஜரை, வால்மீகியின் அவதாரம் என்பர். வால்மீகி முனிவர் 24,000 ஸ்லோகங்களால் ராமரைத் துதித்தக் காவியம் எழுதினார். அதுபோல் 24,000 கீர்த்தனைகளால் ராமபிரானைப் போற்றிப் பாடினார். தியாகராஜர், என்று சொல்வதுண்டு. ஆனால், அற்றுள்ள இன்று நம்மிடையே கிடைத்திருப்பது வெறும் 700 மட்டுமே என்கிறார்கள். இவை கூட அவரது சீடர்கள் சிலரின் முயற்சியால் சேகரிக்கப்பட்டவை யாம்.

சித்திரைத் திருவிழாவின் போது ஸ்ரீரங்கம் சென்றிருந்தார் தியாகராஜர். அங்கு தெற்குச் சித்திரை வீதியும் மேற்குச் சித்திரை வீதியும் சந்திக்கும் பகுதியில் ஆன்மிக அன்பர் ஒருவரது வீட்டில் தங்கினார். சற்றுத் தொலைவிலே பொன்னால் ஆன குதிரை வாகனத்தில் ஸ்ரீரங்கநாதர் கம்பீரமாக உலா வந்தார். அவரை மனம் குளிர தரிசிக்க விரும்பிய தியாகராஜர் வாசலில் நின்று வணங்கி கீர்த்தனைகள் பாடிக் கொண்டிருந்தார். இந்தநிலையில் ஸ்வாமியின் குதிரை வாகனம் அடுத்த தெருவுக்குள் திரும்பி விட்டது. எக்கச்சக்கமான கூட்டம். தியாகராஜர் அப்படியும் இப்படியும் திரும்பி ஸ்ரீரங்கநாதரின் முழுக்கோலத்தையும் தரிசிக்க முயன்றார். ஆனால், முடியாமல் போனது. இதையடுத்து நடந்ததுதான் ஆச்சரியம். அடுத்த தெருவுக்குள் நுழைந்த ஸ்ரீரங்கனின் வாகனம் அதற்கு மேல் ஓர் அடிகூட நகரவில்லை. ஸ்வாமியை சுமந்து வந்தவர்கள். திடீரென தங்களின் உடல் மரத்து விட்டதாகவும் இனியும் ஸ்வாமியை சுமக்க இயலாது என்றும் கூறி அங்கேயே வாகனத்தை இறக்கி வைத்து விட்டார்கள். அன்பர்கள் திருஷ்டி சுற்றினார்கள். தேவதாசிகளை நடனம் ஆடச் சொன்னார்கள். எதுவும் பலன் தரவில்லை.

உடனே ஆலய அதிகாரிகள் தியாகராஜர் குறித்து விசாரித்து மிக்க மரியாதையுடன் அவரை அழைத்து வந்தனர். ஸ்ரீரங்கனை பூரணமாக தரிசித்த மகிழ்ச்சியில் கீர்த்தனை ஒன்று பாடி வழிபட்டார் தியாகராஜர். ஸ்ரீராமபிரான், சீதாதேவி மற்றும் அனுமனுடன் தியாகராஜரின் இல்லத்துக்கு நேரில் வந்த அற்புதமும் ஒருமுறை நிகழ்ந்தது.

ஒரு நாள் உஞ்சவிருத்தியில் போதுமான தானியம் கிடைக்கவில்லை. எனவே அன்று முழுதும் உண்ணாமலேயே உறங்கிபோனார் தியாகராஜர். திடீரென வாசல் கதவு தட்டப்படும் சத்தம். தியாகராஜர் சென்று கதவைத் திறந்தார். வெளியில் கிழவர் ஒருவர் தன் மனைவியுடன் நின்றிருந்தார். அவருக்கு பின்னால் மூட்டை முடிச்சுகளுடன் பணியாள் ஒருவன். அவர்களை அன்புடன் வரவேற்றார் தியாகராஜர்.

சற்று இளைப்பாறுங்கள். விரைவில் போஜனம் தயராகிவிடும் என்றார். புன்னகைத்த கிழவர். தியாகராஜரே பொறும். சமைப்பதற்கான பொருட்கள் எங்களிடமே உள்ளன. மேலும் இதோ இவனே சமைப்பான் என்றார்.

அவரது பார்வையைப் புரிந்து கொண்ட பணியாள் அடுப்படிக்குச் சென்றான். பத்தே நிமிஷத்தில் தயாரானது உணவு. அனைவரும் பசியாறினர். அதன்பிறகு இறை மகிமைகள் குறித்து அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார் தியாக ராஜர், விடிந்தே விட்டது.

உங்களது புகழ் எல்லா திசைகளிலும் பரவட்டும் என்று தியாகராஜரை ஆசிர்வதித்து விட்டுப் புறப்பட்டனர். அவர்களை வழியனுப்ப வாசலுக்கு வந்த தியாகராஜர் திடுக்கிட்டார். அங்கு அவர்களைக் காணோம். தன் இல்லத்துக்கு வந்தவர்கள். ஸ்ரீராமபிரான், சீதாதேவி மற்றும் அனுமன் என்பதை அதன் பிறகே உணர்ந்தார் தியாகராஜர் கீர்த்தனை ஒன்றையும் பாடிப் பரவசமானார்.

தன் சிஷ்யர் ஒருவரது அழைப்பை ஏற்று சென்னை பட்டணத்துக்கு பயணித்தார் தியாகராஜர். அப்போது, சுந்தரமுதலியார் என்பவர் தனது சொந்த ஊரான கோவூர் திருத்தலத்துக்கு தியாகராஜரை அழைத்துச் சென்றார். அங்குள்ள இறைவனைக் கண்டு மெய்சிலிர்த்த தியாகராஜர் அங்கேயே கீர்த்தனைகள் பாடி வழிபட்டார்.

தனது வீட்டுக்கு வருமாறு தியாகராஜரை அழைத்தார் முதலியார். தியாகராஜரும் தன் சிஷ்யர்களுடன் சென்றார். அவரது வருகை ஊர் முழுக்க பரவியது. ஏராளமானோர் முதலியாரின் வீட்டில் கூடி அவரை தரிசித்தனர். பின்னர், தியாகராஜருக்கு உயர்ந்த வஸ்திரங்கள் மற்றும் பொன், பொருளை காணிக்கையாக அளித்தார் முதலியார். தியாகராஜரோ அவற்றை ஏற்க மறுத்துவிட்டார், ஆனாலும் தியாகராஜரது பல்லக்கில் பொற்காசுகளை மறைந்து வைத்தார் முதலியார். இந்த விஷயத்தை சீடர்கள் சிலரிடம் தெரிவித்தவர் காணிக்கையை ஏற்க ஸ்வாமிகள் மறுத்துவிட்டார். இருந்தாலும் ஸ்ரீராமநவமி, கிருஷ்ண ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி முதலான உத்ஸசவங்களை சிறப்புடன் நடத்த இந்தப் பொற்காசுகள் அவருக்குப் பயன்படும் என்றார்.

அதிகாலையில் அங்கிருந்து புறப்பட்டனர். அவர்கள் காட்டு வழியே பயணித்தபோது திடீரென தியாகராஜரது பல்லக்கின் மீது கற்கள் வந்து விழுந்தன. இது திருடர்களது வேலையே என்பதை அறிந்த சீடர்கள் கூக்குரலிட்டனர். பல்லக்கில் முதலியார் பொற்காசுகள் மறைத்து வைத்ததை தெரிந்து கொண்ட எவரோ, நம்மைப் பின்தொடர்கின்றனர் போல என்று உளறிக் கொட்டினர் சீடர்கள். தியாகராஜருக்கு வந்ததே கோபம்.

இதைத்தான் வேண்டாம் என்று நான் அங்கேயே சொல்லிவிட்டேனே. பொன்னும் பொருளும் நம்மிடம் இருக்கக் கூடாதப்பா. உண்மையான ராம பக்தர்களான நாம், இதன் மீது ஆசை வைக்கக்கூடாது. போகட்டும். முதலியார் மறைத்து வைத்த பொற்காசுகளை எடுத்து அந்தத் திருடர்களைக் கூப்பிட்டு அவர்களிடம் கொடுங்கள் என்றார்.

அதற்கு ஒரு சிஷ்யர், முதலியார் இதைத் தங்களுக்காகத் தரவில்லை. உத்ஸவங்கள் நடத்தப் பயன்படுத்திக் கொள்ளுமாறு சொல்லி இருக்கிறார் என்றார். அப்படியெனில் இது நமது பொருளன்று ஸ்ரீராமனின் சொத்து. அவன் பொருளை அவனே காத்துக்கொள்வான் என்றார் தியாகராஜர். பயணம் தொடர்ந்தது. கல் விழுவதும் நின்றது. பொழுது மெள்ள விடிந்தது. வழியில் ஒரு சத்திரத்தில் தங்கினர். பல்லக்கின் மீது கல்லெறிந்த கள்வர்கள் அப்போது அங்கு வந்து தியாகராஜரின் காலில் விழுந்தனர்.

ஐயா, கொள்ளை அடிக்கும் எண்ணத்துடன் நாங்கள் பல்லக்கை நெருங்கிய வேளையில். பல்லக்கின் முன்னும் பின்னுமாக வீரர்கள் இருவரில் ஏந்தி காவல் காத்துச் சென்றனர். எங்களை தாக்கவும் செய்தனர். அவர்களின் வீரம் சிலிர்க்க வைத்தது என்றனர்.

தியாகராஜர் புன்னகை பூத்தார். அப்படியா. புண்ணியும் செய்தவர்கள் நீங்கள் தகாத எண்ணத்துடன் வந்த உங்களுக்கு ராமபிரானும் இளையவர லட்சுமணனும் காட்சி தந்திருக்கிறார்கள் என்றார். பெறற்கரிய பாக்கியம் தங்களுக்குக் கிடைத்ததை எண்ணி நெகிழ்ந்த திருடர்கள் தங்களது செயலுக்கு தியாகராஜரிடம் மன்னிப்புக் கேட்டனர். அவர்களை ஆசிர்வதித்து ஸ்ரீராம நாமத்தையும் உபதேசித்தார் தியாகராஜர். இப்படி தியாகராஜரின் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்கள் ஏராளம். அனைத்தையும் இங்கே சொல்வது சாத்தியமில்லை.

தியாகராஜர், சமாதி ஆவது குறித்து பத்து நாட்களுக்கு முன்பே அவருடைய கனவில் வந்து கூறினாராம் ஸ்ரீராமன். இதையடுத்த தன் சிஷ்யர்களிடம் தான் சமாதியாகும் தினத்தை தெரிவித்த தியாகராஜர், அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய சொன்னார். அதன்படியே குறித்த தினத்தில் சமாதி ஆனார்.

இனி, தியாகராஜர் ஸ்வாமிகளின் சமாதியைத் தரிசிப்போம்.

சலசலக்கும் காவிரி நதிக்கரையோரத்தில் அமைதியான சூழலில் அமைந்துள்ளது தியாகராஜ ஸ்வாமிகளின் சமாதி.

தெற்குப் பகுதியிலேயே நுழைவாயில் [ஆனாலும் ஜனவரி மாத ஆராதனை உத்ஸவத்தின்போது கிழக்குப் பகுதியில் உள்ள நுழைவாயில் திறக்கப்படுமாம்] உள்ளே நுழைந்தால் ஸ்ரீ வால்மீகி மண்டபம் அளவில் பெரியது. பக்தர்களது நன்கொடைகள் மூலமாக கட்டப்பட்டுள்ளது. இங்கு ராமாயண சம்பங்கள் கதைச் சிற்பமாக காட்சி தருகின்றன. ஸ்ரீதியாகராஜரது கீர்த்தனைகள் ராகம் தாளம் முதலான விவரங்கள் குறிப்பிடப்பட்டு, இந்த மண்டபத்தில் கல்வெட்டு வடிவில் காணப்படுகின்றன.

தியாகராஜரின் சமாதியில் அவருடைய சிலா திருமேனி தவிர, ஸ்ரீ ராமன், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர் ஆகியோரின் ஐம்பொன் விக்கிரங்களும், உள் பிராகாரத்தில் விநாயகர், ஆஞ்சநேயர் ஆகியோரது சந்நிதிகளும் உள்ளன. தியாகராஜரின் சீடர்கள் நால்வர். இங்கு சமாதியாகி உள்ளனர். அந்த இடத்தில் நான்கு தூண்கள் எழுப்பப்பட்டுள்ளன. கிழக்கு நோக்கிய தியாகராஜரின் சிலா திருமேனி. பின்னால் ஒரு மாடமும் அதில் துளசிச் செடியும் இருந்து வந்ததாம், 1925 ஆம் ஆண்டு வரை இந்த நிலை தான். அப்போது பெங்களூரில் வசித்த நாகரத்தினம்மாள் என்பவரின் கனவில் தியாகராஜர் எழுந்தருளி தனக்கு கோயில் கட்டி, கும்பாபிஷேகம் செய்யும் படி பணித்தாராம். திருவையாறு வருகை தந்தார் நாகரத்தினம்மாள். கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பதால் பிருந்தாவனமாக இருந்து வந்த சமாதியைக் கோயிலாக மாற்ற காஞ்சி மஹா பெரியவர், ஸ்வாமி ஹரிதாஸ்கிரி ஆகியோரும் ஆலோசனை சொன்னார்கள்.

அதன் படி, துளசிச்செடி போனது. மாடத்தின் மேல் தியாகராஜர் பூஜித்த ஸ்படிக லிங்கமும். ஸ்படிக மாலையும் இடம்பெற்றது. இப்போது இதற்கும் ஆராதனை உண்டு. கோயில் கட்டியதுடன் இங்கேயே தங்கியும் இருந்தார். நாகரத்தினமாள். பின்னாளில் அவர் இறைவனடி சேர்ந்த பிறகு. தியாகராஜரின் எதிரிலேயே காவிரியின் ஓரத்தில் சமாதி கொண்டார். தினமும் அதிகாலை ஐந்தரை மணிக்கு தியாகராஜருக்கு சுப்ரபாத சேவை நடைபெறும். தியாகராஜர் எப்படி அதிகாலையில் சுப்ரபாதம் பாடி ராமபிரானை எழுப்பினாரோ, அதே போல் அதே பாடல்களைப் பாடியே திருப்பள்ளி எழுச்சி நடைபெறுகிறது.

அப்போது விளக்கேற்றி வைத்த நைவேத்தியம் காண்பிக்கப்படும். அதன் பின் காலை எட்டு மணிக்கு அபிஷேகம் பால் தேன் போன்ற திரவியங்களைக் கொண்டு தியாகராஜரின் சிலா திருமேனிக்கு அபிஷேகம் நடக்கும். இது முடிந்தும் அன்னத்தால் ஆன ஒரு மகா நைவேத்தியம் [பொங்கல், தயிர்சாதம், சர்க்கரைப் பொங்கல் போன்ற ஒரு பிரசாதம்] செய்யப்படும். வியாழக்கிழமை அன்று ஏராளமான திரவியங்கள் தியாகராஜரின் அபிஷேகத்துக்குப் பயன் படுத்தப்படும் அன்றைய தினங்களில் அபிஷேகம் நைவேத்தியம், தீபாராதனை எல்லாம் முடிவதற்கு நண்பகல், பதினோரு மணி வரை கூட ஆகிவிடுமாம். மூலவருக்கு அபிஷேகம் முடிந்ததும் விநாயகர். ஆஞ்சநேயர் போன்ற சிலா விக்கிரகங்களுக்கு அபிஷேகம் நடக்கும்.

மாலை வேளைகளில் சம்பிரதாயப்படி பஜனை பாடல்கள் பாடி வழிபடுவர். விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், டோலோறசவம், ஊஞ்சல் சேவை போன்றவை நடக்கும் நைவேத்தியத்துக்கு பால், பழம், கல்கண்டு போன்றவை பயன் படுத்தப்படும். மகா நைவேத்திய வேளையின் போது மட்டும் தான் அன்னம். பிற வேளைகளில் அன்ன நைவேத்தியம் இல்லை. தியாகராஜ ஸ்வாமிகள் சமாதி ஆனது தை பஞ்சமி தினம். எனவே ஒவ்வொரு வருடமும் அன்றைய தினத்தில் ஸ்வாமிகளுக்கு ஆராதனை உத்ஸவம் விமரிசையாக நடைபெறும். ஸ்வாமிகள் வசித்த இல்லத்தில் இருந்த உஞ்சவிருத்தி புறப்படும். நாடெங்கிலும் உள்ள ஸ்வாமிகளின் பக்தர்கள் அன்று திருவையாறில் குவிகிறார்கள். இசையால் வாழ்ந்த மஹானின் சந்நிதியில், அவரது கீர்த்தனைகளை இசைத்து அவருக்குத் தங்கள் அஞ்சலியைத் தெரிவிக்கின்றனர்.

அன்றைய தினத்தில் மூலவர் ஸ்ரீதியாகராஜருக்கும் உற்சவர் ஸ்ரீ தியாகராஜருக்கும் சமாதிக்கும் ஒரே நேரத்தில் வெவ்வேறு அர்ச்சகர்கள் அபிஷேகங்கள் செய்வார்கள். இங்கே அபிஷேகம் துவங்கும் அதே வேளையில், வால்மீகி மண்டபத்தை ஒட்டியுள்ள முன்பகுதியில் வித்வான்கள் அமர்ந்து பஞ்சரத்ன கீர்த்தனைகளை இசைப்பர். இவர்கள் கீர்த்தனைகளைப் பாடி முடிப்பதற்கு சுமார் ஒரு மணி நேரமாகும். அதற்குள் அபிஷேகமும் பூர்த்தி ஆகிவிடும். பின்னர், மகா கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்படும். இதைத் தொடர்ந்து. அன்னதானம் நடைபெறும். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை பஞ்சமி தினத்தன்று ஸ்வாமிகளின் உத்ஸவம் விக்கிரகம். நான்கு வீதிகளில் புறப்பாடாக எழுந்தருளும். ஸ்ரீராம நவாமி, தியாகராஜரின் ஜயந்தி தினமான சித்திரை மாத பூசம் போன்ற தினங்கள் விசேஷமாக அனுஷ்டிக்கப்படும். தியாகராஜர் ஸ்வாமிகள் தனது கீர்த்தனைகளால் இன்றும் நம்முடன் வாழ்கிறார். தன் சந்நிதிக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு நல்லாசிகளை வழங்கி வருகிறார். மகான்களுக்கு மரணம் ஏது? இதை மெய்ப்பிப்பது போன்ற ஒரு சம்பவம் கூட சில ஆண்டுகளுக்கு முன் நடந்தததாகச் சொல்வார்கள்.

மறைந்த சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் ஒருமுறை திருவையாறு சமாதிக்கு வந்து தியாகராஜரைத் தரிசித்தார். மனம் உருகி, கீர்த்தனைகள் பாடித் தன் அஞ்சலியை செலுத்தினார். பிறகு மாலை வேளை என்பதால் அருகே காவிரிக்கரைக்குச் சென்று சந்தியாவந்தனம் செய்து கொண்டிருந்தார். அப்போது ராம.... ராம என்கிற ஜபம் எங்கிருந்தோ ஒலித்தது. சுற்றிலும் பார்த்தார். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒருவரும் இல்லை. எனவே, நாம ஜபம் வரும் திசையை கூர்ந்து செவிமடுத்தார். அந்த ஒலி, சத்குரு தியாகராஜர் சமாதியில் இருந்தே வருகிறது என்பதை அறிந்து மெய் சிலிர்த்தார். இதுபோல் உண்மையான ராமபக்தியுடன் தியாகராஜரின் சமாதியை தரிசிக்கும் ஒவ்வொருவரும் அந்த நாம ஜபம் ஒலிப்பதை கேட்கலாம். சத்குரு ஸ்ரீ தியாகராஜரின் திருவடியைத் தொழுது அவருடைய அருளாசிக்காக இறைஞ்சுவோம்.

சத்குரு ஸ்ரீ தியாகராஜர்:-

பூர்விகம்: ஆந்திரம்

அவதரித்தது: திருவாரூரில் 04:05:1767 அன்று [சர்வஜித் வருடம் சித்திரை மாதம், 25 ஆம் தேதி, திங்கட்கிழமை, பூச நட்சத்திரம்]

பெற்றோர்: ராம பிரம்மம், சீதம்மா

உடன் பிறந்தோர்: பஞ்சநாதம் என்கிற ஜல்பேசன் [மூத்தவர்] இரண்டாவது மகன் ராமநாதன், சிறுவயதிலேயே காலமானார். தியாகராஜர் மூன்றாவது மகன்.

குருநாதர்: ஸொண்டி வெங்கடரமணய்யா.

சிஷ்யர்களில் சிலர் திருவொற்றியூர் வினை குப்பையர், ஐயா பாகவதர், வாலாஜாபேட்டை வேங்கடரமண பாகவதர், மானம்புச்சாவடி வேங்கட சுப்பையர், தில்லை ஸ்தானம் ராமையர், தஞ்சாவூர் ராமராவ், லால்குடி ராமையா, நெய்க்காப்பட்டி சுப்பையர், உமையாள்புரம் கிருஷ்ண பாகவதர், சுந்தர பாகவதர் மற்றும் கும்பகோணம் ஆராவமுது ஐயங்கார்.

குடும்பம்: மனைவி பார்வதி அம்மாள். ஐந்து வருடங்கள் மட்டும் தியாகராஜருடன் வாழ்ந்து இறைவனடி சேர்ந்தார். இவர்களுக்குக் குழந்தை இல்லை. அதன் பின் பார்வதி அம்மாளின் தங்கை கமலாம்பாளை தியாகராஜருக்குத் திருமணம் செய்து வைத்தனர். இவர்களின் மகள் சீதாலட்சுமி. இவளை குப்புஸ்வாமி என்பவருக்குத் திருமணம் செய்து வைத்தனர்.

குப்புஸ்வாமி - சீதாலட்சுமி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. பெயர் தியாகராஜன். தியாகராஜனுக்கும் குருவம்மாள் என்கிற கன்னிகைக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு வாரிசு இல்லை. எனவே தியாகராஜரின் நேர் வம்சத்தில் பிறந்தவர்கள் எவரும் இப்போது இல்லை. அதே நேரம் தியாகராஜரின் அண்ணன் ஜல்பேசனின் வம்சம் இன்று வரை தழைத்தோங்கி வருகிறது. ஜல்பேச பிரம்மம், சதாசிவ பிரம்மம். ராமுடு பாகவதர், ஸ்ரீனிவாச பாகவதர் ஆகியோரைத் தொடர்ந்து இந்த வம்சத்தில் ஐந்தாவது தலைமுறையாகத் தற்போது இருக்கும் தியாகராஜ சர்மா என்பவர் சமாதியின் பூஜைகளைக் கவனித்து வருகிறார்.


ஸ்வாமி சிவானந்தர்....

சிவானந்தர் சீரிய வாழ்விலிருந்து...

கொடுத்து மகிழ்பவர் திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையில் அவதரித்தவர் சிவானந்தர். பலரும் இவரைக் குருவாக ஏற்றனர். இவரைக் காணவரும் பக்தர்கள் கூடை கூடையாகப் பழங்களைக் கொண்டுவந்து சமர்ப்பித்துக் கொண்டே இருப்பர். அவரும் அவற்றை தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கும், சீடர்களுக்கும் வழங்கிக் கொண்டே இருப்பார். உலகின் பல பாகங்களில் இருந்தும் பணமும், அன்பளிப்புகளும் ஆஸ்ரமத்திற்கு வரும். அதன்மூலம் துறவிகளுக்கு வேண்டிய உணவு, மருத்துவ உதவி, சிறந்த நூல்கள் என்று வேண்டியவற்றைச் செய்து மகிழ்ச்சி காண்பார். தம்மிடம் இருப்பதை பிறருக்கு கொடுத்து மகிழவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதனால் சிவானந்தரை, கவியோகி சுத்தானந்த பாரதியார், கிவ்ஆனந்தர் (கொடுத்து மகிழ்பவர்) என்று போற்றினார். பிறருக்குச் சொல்லிக் கொடுங்கள் இடைவிடாத ஆன்மிகப்பயிற்சியாலும், தியானத்தாலும் சிவானந்தரிடம் எப்போதும் ஞானம் குடிகொண்டிருக்கும். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று எப்போதும் பரந்த மனப்பான்மையுடன் ஞானவிஷயங்களை வழங்கிக்கொண்டிருப்பார். இருபது முக்கிய ஆன்மிக போதனைகள், நாற்பது நல்லுரைகள், சாதன தத்துவம் உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். ஞான தானத்தை எப்போதும் எல்லோருக்கும் கொடுங்கள்! இவ்வாறு செய்தால், யார் யாருக்கு எதெது வேண்டுமோ அத்தனையையும் அவர்களுக்குக் கொடுத்தவர்கள் ஆவீர்கள், என்கிறார் சிவானந்தர். நாத்திகனுக்கே முக்கியத்துவம் தரம் குறைந்த செய்திகளுடன் வரும் பத்திரிகைகளுக்கும் சிவானந்தர் கட்டுரை அனுப்புவது வழக்கம். இதனால் சிவானந்தரை பலரும் விமர்சித்தனர். சிலர் கண்டனமே தெரிவித்தனர். அந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த சிவானந்தர், ஒரே தராசில் ஆன்மிக விஷயத்தையும், காமச் சுவையையும் எடை போட்டுப் பார்க்கும் வாசகர்கள் விரைவிலேயே ஆன்மிகவாதிகளாக மாறிவிடுவார்கள். முதலில் நாத்திகர்களையும், நம்பிக்கையற்றவர்களையும் தான், நான் ஆன்மிகவாதியாக மாற்ற வேண்டும், என்று பதிலளித்தார். அவரது கட்டுரைகளைப் படித்து விட்டு, இந்தியா, இலங்கை, பர்மா, மலேசிய நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கில் அன்பர்கள் சிவானந்தரை நாடி வந்தனர். வாங்க குழந்தையே! யாரும் எளிதில் அணுகும் விதத்தில் சிவானந்தர் மிக எளிமையான மகானாக வாழ்ந்தார். தரிசனநேரம் என்று தனியாக நேரம் எதையும் அவர் வைத்துக் கொள்ளவில்லை. தம்மிடம் வரும் பக்தர்களிடம் அவரவருடைய தாய்மொழியிலேயே பேசுவார். தமிழ், ஆங்கிலம், இந்தி, மலாய், ஜெர்மன், பிரெஞ்ச் ஆகிய மொழிகளில் வரவேற்று உபசரிப்பார். சிறுகுழந்தைகளையும் நீங்கள் என்று மதிப்புடன் உபசரிப்பார். ஒருமையில் அழைப்பதை அவர் விரும்புவதில்லை. மனிதர் மட்டுமில்லாமல் பறவை, விலங்குகளிடம் கூட அன்புடன் கவனிப்பார். பசித்த உயிர்களுக்கு உணவிடுவதை ஒரு தாய்போல செய்வதில் அவருக்கு இணை அவரே. தன்னை பெரிய மகானாக எண்ணிக்கொள்ளாமல் சாதாரண மனிதராகவே பழகுவார்.. கொலைகாரனிடமும் இறைவன் 1950, ஜனவரி 8 மாலையில், சிவானந்தரின் ஆஸ்ரமத்தில் சத்சங்க கூட்டம் நடந்து கொண்டிருந்தது. மின்விளக்கு அதிகம் இல்லாத காலம் அது. அரிக்கேன் விளக்கு எரிந்து கொண்டிருந்ததால் வெளிச்சம் மங்கலாக இருந்தது. அப்போது கோவிந்தன் என்னும் முரடன் சிவானந்தரைக் கொல்லும் நோக்கத்தில் கோடரியால் தாக்கினான். ஆனால், சிவானந்தர், தலைப்பாகை அணிந்திருந்ததால் அடி விழவில்லை. போலீசார் உடனே வந்து அவனைப் பிடித்தும் கூட அவனை தண்டிக்க சிவானந்தருக்கு மனமில்லை. பழங்கள், விபூதிபிரசாதம் கொடுத்து அவனை வழியனுப்பினார். திருடர், கொலைகாரர்களிடமும் இறைவன் இருக்கிறார் என்று எல்லாருக்கும் உபதேசம் செய்தார். மவுனமான நேரம் மனதில் ஏது பாரம் * எளிமையான அதே சமயத்தில் சத்துள்ள ஆகாரங்களை உண்ணுங்கள். உண்ணும் முன் கடவுளுக்கு சமர்ப்பணம் செய்யுங்கள். சரிவிகித உணவை உட்கொள்வதும் அவசியம்.

* மிளகாய், பூண்டு, புளி போன்ற உணவுவகைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். காபி, டீ, மாமிசம், மது போன்ற உணவுவகைகளை முழுமையாக தவிர்த்து விடுங்கள்.

* தினமும் பத்து பதினைந்து நிமிடங்களாவது யோகசனப் பயிற்சியோ, உடற்பயிற்சியோ செய்யுங்கள். நீண்ட தூர நடைபயிற்சியை அன்றாடம் மேற்கொள்ளுங்கள். முடிந்தால், சுறுசுறுப்பை உண்டாக்கும் விளையாட்டில் ஈடுபடுங்கள்.

* தினமும் இரண்டு மணி நேரமாவது மவுனத்தை கடைபிடியுங்கள். விடுமுறை நாட்களில் நான்கு மணி முதல் எட்டுமணி நேரம்வரை மவுனம் நல்லது. இது மனதுக்கு நல்லது. கண், வாய், செவி, மூக்கு, நாக்கு ஆகியவற்றை முடிந்தளவுக்கு கட்டுப்பாட்டில் வைத்திருப்பது நல்லது.

* உண்மையே பேசுங்கள்.இரக்கமும், கனிவும் கொண்டிருங்கள். எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் அனைவரிடமும் அன்பு காட்டுங்கள். ஒளிவுமறைவின்றி திறந்த மனத்துடன் எல்லோரிடமும் பழகுங்கள்.

* நெஞ்சில் நேர்மையைப் பின்பற்றி வாழுங்கள். நன்மைக்கான நேரம் வரும் வரை காத்திருங்கள். உழைத்துப் பணம் சேருங்கள். நியாயமான வழியில் வராத எப்பொருளையும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். பெருந்தன்மை உணர்வுடன் செயல்படுங்கள்.

* கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். சகிப்புத்தன்மையுடன் பிறர் குற்றங்களை மன்னிக்கவும் மறக்கவும் செய்யுங்கள். நம்மைச் சுற்றி இருப்பவர்களுடனும், சூழ்நிலைகளுடனும் ஒத்துப்போக கற்றுக் கொள்ளுங்கள்.

* தீயவர்களின் தொடர்பை விட்டு விலகுங்கள். உங்கள் சாதனைகளையும், ஆன்மிக எண்ணங்களையும் குறை கூறுபவர்கள், கடவுள் நம்பிக்கை அற்றவர்களிடம் இருந்து விலகி விடுங்கள்.

* உங்கள் தேவைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடைமைகளை அளவோடு வைத்துக் கொள்ளுங்கள். எளிய வாழ்க்கையையும், உயர்ந்த சிந்தனையையும் பெற்று வாழுங்கள்.

* பிறருக்கு நன்மை செய்து வாழ்வது தான் உயர்ந்த வாழ்வு. தன்னலமில்லாமல் பிறருக்கு சேவை செய்யுங்கள். நீங்கள் செய்யும் பணியையோ, தொழிலையேயோ கடவுளுக்குச் செய்யும் வழிபாடாகச் செய்யுங்கள். அதை அவருக்கே அர்ப்பணித்து விடுங்கள்.
* உங்கள் வருமானத்தில் இரண்டு முதல் பத்து சதவீதத்தை தானம் செய்யுங்கள். உலகமே உங்கள் குடும்பம் என்ற பரந்த நோக்குடன் வாழுங்கள்.

* பணிவுடன் எல்லா உயிர்களையும் மானசீகமாக வணங்குங்கள். ஆடம்பரம், போலி கவுரவம், டம்பம், கர்வம் போன்றவற்றை அறவே கைவிடுங்கள்.

* கடவுள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொள்ளுங்கள். கடவுளிடம் பூரண சரணாகதி அடைந்து விடுங்கள். எல்லா நிலைமையிலும் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.

* கண்ணில் காணும் அனைத்திலும் கடவுளையே காணுங்கள். காலை எழும்போதில் இருந்தே கடவுள் சிந்தனையோடு அன்றாடப் பணிகளைத் தொடங்குங்கள்.

* அன்றாடம் குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டு தெய்வப் பாடல்கள் பாடுங்கள். எளிய மந்திரங்களைச் சொல்லுங்கள். வாரம் ஒருமுறையாவது கோயிலுக்குச் சென்று மனதார வழிபாடு செய்யுங்கள். இதயத்தை இதமாக்குகிறார் சிவானந்தர்...

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம். மலேசியாவில் பணியாற்றிய மருத்துவர் ஒருவர் குறித்து, அந்த நாட்டு மக்கள் அதிசயத்துடன் பேசிக்கொண்டனர். அந்த மருத்துவர் பொருளீட்டியதை விட, ஏழைகளுக்கு இலவசமாகவோ அல்லது மிகக் குறைந்த கட்டணம் வாங்கிக்கொண்டோ செய்த மருத்துவச் சேவையே அதிகம் ! வியாதியுடன் அவரிடம் வந்த அனைவருமே நோயிலிருந்து விடுபட்டுள்ளனர். அத்தனை கைராசியுள்ள மருத்துவர் அவர். ஆனால், மக்கள் அதிசயிக்க இவை எதுவும் காரணமல்ல ! மருத்துவத்தைச் சேவையாகப் பார்த்த அதே வேளையில், அவரது உள்ளத்தில் வேறொரு விநோத சிந்தனை குடி கொண்டிருந்தது. மக்களின் உடல் உபாதைகளை என்னால் தீர்த்து வைக்க முடிகிறது. ஆனால், இதனால் மட்டுமே அவர்களின் துயரங்கள் அனைத்தும் மறைந்துவிடவில்லை. வாழ்வில், நிம்மதியும் ஆனந்தமும் அவர்கள் அடைவதில்லை. ஆக வியாதிகளைக் குணமாக்குவது மேம்போக்கான தீர்வு. உலக பந்தங்களில் கட்டுண்டு உழலும் அவர்கள் உண்மையிலேயே விடுதலை பெறவும், ஆனந்த வாழ்வும் அவர்களின் ஆன்ம நலத்தைப் பேணுவதே சிறந்த வழி ! எனத் தீர்மானித்தார். இந்தச் சிந்தனையே, தமிழ் மண்ணில் தோன்றிய அந்த மருத்துவ நிபுணரை, மனித குலத்துக்கு நல்வழி காட்டிய மகானாக உயர்த்தியது. அவர்தான் சிவானந்த சரஸ்வதி. திருநெல்வேலி மாவட்டத்தில், பத்தமடை எனும் ஊரில் வருவாய்த்துறை அதிகாரியாகப் பணிபுரிந்த வேம்பு ஐயருக்கு, 1877-ஆம் வருடம், செப்டம்பர் 8-ஆம் தேதியன்று ஆண் குழந்தை பிறந்தது. குப்புஸ்வாமி என்று குழந்தைக்குப் பெயர் சூட்டி, அன்புடன் வளர்த்து வந்தார், வேம்பு ஐயர். எட்டயபுரம் ராஜா உயர்நிலைப்பள்ளியில் பயின்ற குப்புஸ்வாமி, கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்தவனாகத் திகழ்ந்தான். 1903-ஆம் வருடம், மெட்ரிகுலேஷன் தேர்வில் சிறப்புறத் தேறினான். பிறகு, திருச்சியில் கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்து, 1905-ஆம் வருடம், தஞ்சை மருத்துவக் கழகத்தில் பயின்று மருத்துவரானார். இந்தக் கால கட்டத்தில், அவரின் தந்தை இறந்துபோனார். குடும்பத்தில் நிதி நெருக்கடி ஏற்படவே, 1913-ஆம் வருடம், மருத்துவப் பணி செய்து சம்பாதிக்கலாம் என மலேசியா சென்றார் குப்புஸ்வாமி. வறுமை காரணமாக வேலையில் சேர்ந்தாலும், எளியோரின் துயர் போக்கும் பணியாகவே மருத்துவத் துறையைப் பார்த்தார் அவர். ஐரோப்பிய மருத்துவர்கள் சிலருடன் இணைந்து, மருத்துவமனை ஒன்றை நிர்வாகித்தார். பயனுள்ள மருத்துவ நூல்களையும் எழுதி வெளியிட்டார். இவரின் மருத்துவச் சேவையைப் பாராட்டி, லண்டனில் ராயல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பப்ளிக் ஹெல்த், ராயல் ஏஷியாடிக் கழகம் முதலான புகழ்மிக்க சங்கங்கள், அவரை உறுப்பினராக நியமித்துக் கௌரவித்தன. உடல் பிணி தீர்க்கும் மருத்துவம் பார்த்து வந்தவருக்கு, மக்களின் மன ஆரோக்கியம், ஆன்ம பலம் குறித்த சிந்தனை எழுந்தது. யோகா, தியானம் என இறைநிலையை நோக்கிய பயணத்தைத் துவக்கினார். 1923-ஆம் வருடம், இந்தியா திரும்பி, காசி, நாசிக், பண்டரிபுரம், ஹரித்வார் ஆகிய தலங்களில் அலைந்து திரிந்தார். பிறர் கொடுப்பதை உண்பது, கிடைத்த இடத்தில் உறங்குவது எனப் பற்றற்ற வாழ்க்கை நடத்தியவர், ரிஷிகேஷ் தலத்தில், சுவாமி விஸ்வானந்த சரஸ்வதி என்ற மகானிடம் உபதேசம் பெற்று, 1924-ஆம் வருடம் ஜூன் 1-ஆம் தேதி, சுவாமி சிவானந்த சரஸ்வதி எனும் திருநாமத்துடன் துறவறம் பூண்டார். இமயமலை அடிவாரத்தில், கங்கைக் கரையில் உள்ள ரிஷிகேஷில் பல வருடங்கள் தங்கி, ஆன்மிகப் பயிற்சிகளை மேற்கொண்டார். அவர் எடுத்திருந்த இன்ஷூரன்ஸ் பாலிசி ஒன்று முதிர்ச்சி அடைய, அதிலிருந்து வந்த பணத்தைக் கொண்டு, 1927-ஆம் வருடம், கங்கைக் கரையிலேயே மருத்துவ சேவை மையம் ஒன்றைத் துவங்கி, ஏழைகள், யாத்ரீகர்கள், சாதுக்கள் ஆகியோருக்கு இலவச சிகிச்சை அளிக்கத் தொடங்கினார். பிறகு, தாம் அறிந்து உணர்ந்த உண்மைகளை, ஆன்மிகப் பயிற்சிகளை மேற்கொண்டார். அவர் எடுத்திருந்த இன்ஷூரன்ஸ் பாலிசி ஒன்று முதிர்ச்சி அடைய, அதிலிருந்து வந்த பணத்தைக் கொண்டு, 1927-ஆம் வருடம், கங்கைக் கரையிலேயே மருத்துவ சேவை மையம் ஒன்றைத் துவங்கி, ஏழைகள், யாத்ரீகர்கள், சாதுக்கள் ஆகியோருக்கு இலவச சிகிச்சை அளிக்கத் தொடங்கினார். பிறகு, தாம் அறிந்து உணர்ந்த உண்மைகளை, ஆன்மிகப் பயிற்சிகளின் மூலம் மக்களுக்கு எடுத்துரைத்தார். வட யாத்திரையை முடித்தவர், ராமேஸ்வரம், புதுச்சேரி அரவிந்தர் ஆஸ்ரமம், திருவண்ணாமலை ஸ்ரீரமணாஸ்ரமம் ஆகிய தலங்களுக்கு விஜயம் செய்தார். பிறகு, மீண்டும் ரிஷிகேஷ் வந்தவர், 1934- ஆம் வருடம், மார்ச் மாதம், உபயோகிக்கப்படாத மாட்டுக் கொட்டகை ஒன்றில், ஆனந்தக் குடிசை எனும் பொருள்படும் ஆனந்தக் குடிர் எனும் எளிய ஆஸ்ரமத்தைத் துவக்கினார். பிறகு, மெள்ள மெள்ள சிகிச்சைகள், மருந்தகங்கள், ஆலயங்கள், தியான மையங்கள், ஆன்மிகப் பத்திரிகை அச்சகங்கள், புத்தக வெளியீட்டு மையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய புனித வாழ்க்கை சங்கம் எனும் மிகப் பெரிய ஆன்மிகத் தொண்டு நிறுவனமாக அது வளர்ந்தது. சுவாமி சிவானந்தர் எழுதிய சுமார் 296 நூல்கள், பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலக மக்களுக்கு வழிகாட்டுகின்றன. ஆஸ்ரமத்துக்குக் கிடைக்கிற நன்கொடைகளை, மருத்துவச் சேவை, அன்னதானம் போன்ற தர்ம காரியங்களில் ஈடுபடுத்தி, பொருளாசையின்றி வாழ்வது குறித்து வாழ்ந்து காட்டினார். சுவாமிகள், தன்னை அறிந்துகொண்டு, விடுதலை பெறு, நல்லதைச் செய், அதை உடனே செய் எனும் எளிய போதனைகளால் மக்களின் மணம் கவர்ந்தார். மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்த சுவாமி சிவானந்த சரஸ்வதி, 1963-ஆம் வருடம், ஜூலை 14-ஆம் தேதி, கங்கைக் கரையில், இறைவனுடன் இரண்டறக் கலந்தார்.


செவ்வாய், 18 ஜனவரி, 2022

அர்ச்சனை....

அர்ச்சனை – 108

1. ஓம் சிவாயை நம:
2. ஓம் சிவசக்த்யை நம:
3. ஓம் இச்சா சக்த்யை நம:
4. ஓம் க்ரியா சக்த்யை நம:
5. ஓம் ஸ்வர்ண ஸ்வரூபிண்யை நம:
6. ஓம் ஜ்யோதி லக்ஷ்ம்யை நம:
7. ஓம் தீப லக்ஷ்ம்யை நம:
8. ஓம் மகா லக்ஷ்ம்யை நம:
9. ஓம் தன லக்ஷ்ம்யை நம:
10. ஓம் தான்ய லக்ஷ்ம்யை நம:
11. ஓம் தைர்ய லக்ஷ்ம்யை நம:
12. ஓம் வீர லக்ஷ்ம்யை நம:
13. ஓம் விஜய லக்ஷ்ம்யை நம:
14. ஓம் வித்யா லக்ஷ்ம்யை நம:
15. ஓம் ஜய லக்ஷ்ம்யை நம:
16. ஓம் வர லக்ஷ்ம்யை நம:
17. ஓம் கஜ லக்ஷ்ம்யை நம:
18. ஓம் காம வல்யை நம:
19. ஓம் காமாக்ஷி ஸுந்தர்யை நம:
20. ஓம் சுப லக்ஷ்ம்யை நம:
21. ஓம் ராஜ லக்ஷ்ம்யை நம:
22. ஓம் க்ருஹ லக்ஷ்ம்யை நம:
23. ஓம் ஸித்த லக்ஷ்ம்யை நம:
24. ஓம் சீதா லக்ஷ்ம்யை நம:
25. ஓம் ஸர்வ மங்கள காரிண்யை நம:
26. ஓம் ஸர்வ துக்க நிவாரிண்யை நம:
27. ஓம் ஸர்வாங்க ஸந்தர்யை நம:
28. ஓம் ஸெளபாக்ய லக்ஷ்ம்யை நம:
29. ஓம் ஆதி லக்ஷ்ம்யை நம:
30. ஓம் ஸந்தான லக்ஷ்ம்யை நம:
31. ஓம் ஆனந்த ஸ்வரூபிண்யை நம:
32. ஓம் அகிலாண்ட நாயக்யை நம:
33. ஓம் பிரம்மாண்ட நாயக்கை நம:
34. ஓம் ஸுரப்யை நம:
35. ஓம் பரமாத்மிகாயை நம:
36. ஓம் பத்மாலயாயை நம:
37. ஓம் பத்மாயை நம:
38. ஓம் தன்யாயை நம:
39. ஓம் ஹிரண்மய்யை நம:
40. ஓம் நித்யபுஷ்டாயை நம:
41. ஓம் தீப்தாயை நம:
42. ஓம் வஸுதாயை நம:
43. ஓம் வஸுதாரிண்யை நம:
44. ஓம் கமலாயை நம:
45. ஓம் காந்தாயை நம:
46. ஓம் அனுக்ரஹப்ரதாயை நம:
47. ஓம் அனகாயை நம:
48. ஓம் ஹரிவல்லபாயை நம:
49. ஓம் அசோகாயை நம:
50. ஓம் அம்ருதாயை நம:
51. ஓம் துர்க்காயை நம:
52. ஓம் நாராயண்யை நம:
53. ஓம் மங்கல்யாயை நம:
54. ஓம் கிருஷ்ணாயை நம:
55. ஓம் கன்யாகுமார்யை நம:
56. ஓம் ப்ரஸன்னாயை நம:
57. ஓம் கீர்த்யை நம:
58. ஓம் ஸ்ரீயை நம:
59. ஓம் மோஹ நாசின்யை நம:
60. ஓம் அபம்ருத்யு நாசின்யை நம:
61. ஓம் வியாதி நாசின்யை நம:
62. ஓம் தாரித்ரிய நாசின்யை நம:
63. ஓம் பயநாசின்யை நம:
64. ஓம் சரண்யாயை நம:
65. ஓம் ஆரோக்யதாயை நம:
66. ஓம் ஸரஸ்வத்யை நம:
67. ஓம் மஹாமாயாயை நம:
68. ஓம் புஸ்தக ஹஸ்தாயை நம:
69. ஓம் ஜ்ஞான முத்ராயை நம:
70. ஓம் ராமாயை நம:
71. ஓம் விமலாயை நம:
72. ஓம் வைஷ்ணவ்யை நம:
73. ஓம் ஸாவித்ரியை நம:
74. ஓம் வாக்தேவ்யை நம:
75. ஓம் பாரத்யை நம:
76. ஓம் கோவிந்த ரூபிண்யை நம:
77. ஓம் சுபத்ராயை நம:
78. ஓம் திரிகுணாயை நம:
79. ஓம் அம்பிகாயை நம:
80. ஓம் நிரஞ்ஜனாயை நம:
81. ஓம் நித்யாயை நம:
82. ஓம் கோமத்யை நம:
83. ஓம் மஹாபலாயை நம:
84. ஓம் ஹம்ஸாஸனாயை நம:
85. ஓம் வேதமாத்ரே நம:
86. ஓம் சாரதாயை நம:
87. ஓம் ஸ்ரீ மாத்ரே நம:
88. ஓம் சர்வாபாணபூ ஷிதாயை நம:
89. ஓம் மஹாசக்த்யை நம:
90. ஓம் பவான்யை நம:
91. ஓம் பக்திப்பிரியாயை நம:
92. ஓம் சாம்பவ்யை நம:
93. ஓம் நிர்மலாயை நம:
94. ஓம் சாந்தாயை நம:
95. ஓம் நித்ய முக்தாயை நம:
96. ஓம் நிஷ்களங்காயை நம:
97. ஓம் பாபநாசின்யை நம:
98. ஓம் பேதநாசின்யை நம:
99. ஓம் ஸுகப்ரதாயை நம:
100. ஓம் ஸர்வேச்வர்யை நம:
101. ஓம் ஸர்வமந்த்ர ஸ்வரூபிண்யை நம:
102. ஓம் மனோன்மன்யை நம:
103. ஓம் மஹேச்வர்யை நம:
104. ஓம் கல்யாண்யை நம:
105. ஓம் ராஜராஜேச்வர்யை நம:
106. ஓம் பாலாயை நம:
107. ஓம் தர்ம வர்த்தின்யை நம:
108. ஓம் ஸ்ரீ லலிதாம்பிகாயை நம:


மங்களம்....

மங்களம்

சங்கராய சங்கராய சங்கராய மங்களம்
சங்கரி மனோஹராய சாஸ்வதாய மங்களம்
குருவராய மங்களம் - தத்தாத்ரேயாய மங்களம்
கஜானனாய மங்களம் - ஷடானனாய மங்களம்
ரகுவராய மங்களம் - வேணுகிருஷ்ண மங்களம்
ஸீதாராம மங்களம் - ராதாகிருஷ்ண மங்களம்
அன்னை அன்னை அன்னை அன்னை அன்பினுக்கு மங்களம்
ஆதிசக்தி அம்பிகைக்கு அனந்தகோடி மங்களம்
என்னுளே விளங்கும் எங்கள் ஈசுவரிக்கு மங்களம்
இச்சையாவும் முற்றுவிக்கும் சிற்சிவைக்கு மங்களம்
தாழ்விலாத தன்மையும் தளர்சியற்ற வன்மையும்
வாழ்வினால் பயன்களும் என் வாக்கிலே வரங்களும்
பக்தியில் கசிந்தலைந்து பாடுகின்ற பான்மையும்
பாடுவோர்க்கனேக போக பாக்கியங்கள் மேன்மையும்
என்றும் ஓங்க என் கரத்து இயற்கையான சக்தியை
தந்து ஞான மூர்த்தியாய் தனித்து வைத்த சக்தியாம்
நாம கீர்த்தனம் பரந்து நாடெல்லாம் செழிக்கவும்
வேறிடாத இன்பம் பொங்கி வீடெலாம் விளங்கவும்
ஞானதீபமேற்றி என்றும் நாமகீதம் பாடுவோம்
தர்மசக்தி வாழ்கவென்று சந்தததம் கொண்டாடுவோம்


எளிமையான விநாயகர் அர்ச்சனை

ॐ सुमुखाय नम:,
ஓம் சுமுகாய நம: |

ॐ एकदंताय नम:,
ஓம் ஏகதந்தாய நம: |

ॐ कपिलाय नम:,
ஓம் கபிலாய நம: |

ॐ गजकर्णाय नम:,
ஓம் கஜகர்ணாய நம: |

ॐ लंबोदराय नम:,
ஓம் லம்போதராய நம: |

ॐ विकटाय नम:,
ஓம் விகடாய நம: |

ॐ विघ्ननाशाय नम:,
ஓம் விக்னராஜாய நம:

REPORT THIS AD

ॐ विनायकाय नम:,
ஓம் விநாயகாய நம: |

ॐ धूम्रकेतवे नम:,
ஓம் தூமகேதவே நம: |

ॐ गणाध्यक्षाय नम:,
ஓம் கணாத்யக்ஷாய நம: |

ॐ भालचंद्राय नम:,
ஓம் பாலசந்த்ராய நம: |

ॐ गजाननाय नम:।
ஓம் கஜானனாய நம: |

ॐ वक्रतुण्टाय नम: |
ஓம் வக்ரதுண்டாய நம:

ॐ सुर्प्पकर्णाय नम: |
ஓம் ஸுர்ப்பகர்ணாய நம:

ॐ हॅरँपाय नम: |
ஓம் ஹேரம்பாய நம:

ॐ स्कन्त पूर्वजाय नम: |
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம:

ॐ स्री महा गणपतये नम: |
ஓம் ஸ்ரீ மஹா கணபதயே நம:


மந்த்ர மாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம் ...

ஆதி சங்கர பகவத்பாதாள் அருளிய மந்த்ர மாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம் ...

இந்த ஸ்தவத்தின் ஒவ்வொரு பாவின் முதல் வரியின் முதல் எழுத்தும் காதி வித்யையான பஞ்சதஸி மந்திரமான “க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம்” என்பதிலிருந்தே ஆரம்பிக்கிறது. இப்பா, இறைவியை மானஸ பூஜை முறையில், ஆராதிக்க உபயோகிக்கும் வண்ணம் அமைந்துள்ளது.

சங்கரர் புஷ்ப மாலையாக அன்றோ அருளினார். அதன் பின் அதற்க்கும் மேல் ஒருபடி சென்று, த்ரிபுரசுந்தரி சன்னதி ஸ்தவத்தில், மனித குலம் உய்ய, அம்பிகையின் சான்னித்யத்தில் என்றும் குளிர்ந்திருக்க “ஷோடஸி வித்யா”யையுமன்றோ அருளினார்.


‘மந்த்ர மாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம்’ ..... मन्त्र मातृका पुष्पमालास्तवः


‘ஸ்ரீ வித்யா’ எனப்படும் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பிகையின் ஆராதனையில் மந்திரம், முத்திரை, அனுஷ்டானம் போன்ற எல்லாமே மிகவுமே விஷேஷமானது, கடினமானது. இந்த முறையில் சித்தி பெற்ற ஒருவரே, இன்னொருவருக்கு தீக்ஷை அளிக்கமுடியும். உதாரணத்திற்கு, அம்பிகையின் கட்கமாலா சித்தி அருளப்பட்டாலே, ஸ்ரீ வித்யாவின் ‘பாலா மந்திரம்’ எனும் த்ரியக்ஷரி உபதேசம் நடக்கும். த்ரியக்ஷரி சித்தியானாலே ‘பாலா திரிபுரசுந்தரி ஷடாக்ஷரி’ கிட்டும், பாலா திரிபுரசுந்தரி ஷடாக்ஷரி பாராயணம் செய்பவரே பாலாம்பிகா த்ரியக்ஷரி உபதேசம் செய்ய முடியும். பாலா திரிபுரசுந்தரி ஷடாக்ஷரி சித்தியானால் மட்டுமே அம்பிகையின் ‘சம்புடீக்ருத’ நவாக்ஷரி கிட்டும். இவற்றின் பின்னரே குருவானவர் பன்சதஸியை உபதேசிப்பதை ஆலோசிப்பர். ஸாதகர் நன்கு தேர்ச்சி பெற்றார் என குருவானவர் பல பரீக்ஷைகள் மூலம் அறிந்துகொண்ட பின்னரே, அம்பிகையின் ஷோடஸாக்ஷரி உபதேஸம் நடக்கும்.

இதில் விஷேஷம் என்னவெனில், அம்பிகையின் ஷோடஸாக்ஷரி சித்தியாயின், அந்த ஸாதகர் ஒருவிதத்தில் அம்பிகையின் மறு உருவே ஆகியிருப்பர். வரும் காலங்களில் இப்படிப்பட்ட ஸாதகர் கிடைப்பதரிது என்று, தீர்கதரிஸி ஆதி சங்கரர் நன்றாக தெரிந்துவைத்திருந்தார் என்றே சொல்லவேண்டும். இல்லையெனில், 51 அக்ஷரங்கள் கோர்த்து அமைக்க வேண்டிய அக்ஷர புஷ்பமாலாவை, (அம்பிகையின் கழுத்தை அலங்கரிக்கும் முத்துமாலை 51 முத்துக்களால் – அக்ஷரங்களாலேயே ஆனது) வெரும் 17 பத்திகளில் அடைத்து, அத்துடன் பன்சதஸியையும், ஷோடஸியையும் அதில் மறைத்து அந்த ஸ்தொத்திரத்தை, ஸ்தவமாக அதாவது அம்பிகையின் மானஸீக பூஜையாக அமைத்தது அம்பிகையின் பேரருளால் அன்றோ! அம்பிகைக்கு உகந்த 64 உபசாரங்களையும் இந்த ஸ்தவத்தினூடே இணைத்து ஒரு பரிபூரண மானஸ பூஜா முறையையன்றோ ஆதிசங்கரர் இந்த ஸ்தவத்தில் அமைத்துக்கொடுத்துள்ளார்,

அதன் சக்தியை அவர் இப்படி உரைக்கிறார். “எவரொருவர் இந்த ஸ்தவத்தை நித்யமும் முவ்வேளை பக்தியுடனும், ஸ்ரத்தையுடனும் பாராயணம் செய்கிறார்களோ அவர்கள் சிந்தையில் அம்பிகையும், நாவில் ஸ்வாதத்தின் சாரமான சரஸ்வதியும், இல்லத்தில் ஸ்ரீ எனும் பதத்திற்கே உரியவளான ஸ்ரீ லக்ஷ்மி தேவியும் நடனமாடுவார்” என்று கீலகமாய் ஆசீர்வதித்திருக்கிறார்.

சிந்தையில் சிவமும், முகத்தில் ப்ரம்ம தேஜஸும வாக் சித்தியும், இல்லத்தில் அளவிடதற்கரிய செல்வமும்..

1 : कल्लोलोल्लसिततामृताब्धिलहरीमध्ये विराजन्मणिद्वीपे
कल्पकवाटिकापरिवृते कादम्बवाट्युज्ज्वले।
रत्नस्तंभसहस्रनिर्मितसभामध्ये विमानोतमे
िन्तारत्नविनिर्मितं जननि ते सिंहासनं भावये॥

கல்லோலோல்லஸிதாம்ருதாப்திலஹரீமத்யேவிராஜன்மணி
த்வீபேகல்பகவாடிகாபரிவ்ருதேகாதம்பவாட்யுஜ்வலேமி |
ரத்னஸ்தம்பஸஹஸ்ரநிர்மிதஸபாமத்யேவிமாநோத்தமே
சிந்தாரத்னவிநிர்மிதம்ஜநதிதேஸிம்ஹாஸநம்பாவயேமிமி ||

இந்த முதல் நான்கு வரிகளிலேயே ஸ்ரீ ஆதிசங்கரர், ஒரு தீவிரமான ஸாதகனை உருவாக்குவதற்கென்றே படைத்தாரோ! ஸாதகன் அம்பிகையிடம் கூறுவதாவது “தாயே சிந்தா ரத்தினத்தினால் வடிவமைக்கப்பட்ட ஸிம்ஹாஸனத்தை உனக்கு (அ) உனக்காக சமைத்துள்ளேன்”. இங்கு அம்பிகையை “ஜனனீ – ஈன்ற தாயே” என்றழைக்கும்போது, நம்மையும் அறியாமல் அம்பாளிடத்தில் ஒரு தனி ஈடுபாடு உண்டாகிறதே! லலிதா ரஹஸ்ய சஹஸ்ரத்திலும் இத்தகைய பதம் முதலிலேயே உள்ளது – “ஸ்ரீ மாதா” என்று.

சிந்தாரத்னம் என்பது ஒரு விலை மதிப்பிட முடியாத, நாம் எதை நினைத்தாலும் உடனே கொடுக்கும் குணமுள்ள ஒரு ரத்தினக்கல் ஆகும். அப்படிப்பட்ட பல ரத்தினங்களைக் கொண்டு இழைக்கப்பட்ட விஷேஷ சிம்ஹாசனம், விமானத்தின் (கோபுரத்தின்) நடுவே இருத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த விமானமோ உத்தமமானது, ஏனெனில், உத்தமமான கோபுரம் என்று கூறப்படுவது ஏழு நிலைகள் கொண்ட ஒரு கோபுரமாகும். அவையும் விலை மதிப்பில்லா ரத்தினங்களை தங்கத்தினூடே இணைத்து செய்யப்பட்டது. இந்த விமானம் இருக்கும் இடமோ, ஓராயிரம் மறுபடியும் விலைமதிப்பிட இயலா நவரத்தின கற்களால் செய்யப்பட்ட தூண்களுள்ள மண்டபத்தில் இருத்தப்பட்டிருக்கிறது. இந்த மண்டபமோ, மஞ்சள் நிறத்திலான மூலிகைகள் வனமும், தென்றல் தவழும் கதம்ப வனத்தின் நடுவே. இது மணித்வீபமெனும் ரத்தின தீவின் நடுவே உள்ளது. இந்த தீவானது, பேரலை புரளும் அமிர்தக்கடலின் நடுவே உள்ளது.

இப்படியாக இந்த முதல் நான்கு வரியிலேயே ஸ்ரீ ஆதி சங்கரர், அலைபொங்கும் அமிர்தக்கடல், மணித்தீவு, அடர்ந்த கதம்ப வனம், தங்க வண்ண மூலிகைகள் நிறைந்த சமவெளி, ஸஹஸ்ர ஸ்தம்ப மண்டபம் கொண்ட பவனம், கோபுரம் மற்றும் விஷேஷ சிம்ஹாஸனம் கல்பித்து அம்பிகையை ஆவாஹிக்கவன்றோ தயாராகிவிட்டார்!

2 : एणाङ्कानलभानुमण्डललसच्छ्रीचक्रमध्ये सिथतां
बालार्कद्युतिभासुरां करतलैः पशांकुशौ बिभ्रतीम्।
चापं बाणमपि प्रसन्नवदनां कौसुम्भवस्त्रान्वितां
तां त्वां चन्द्रकलावतंसमकुटां चारुस्मितां भावये॥

ஏணாங்காநலபர்னுமண்டலலஸத்ஸ்ரீசக்ரமத்யேஸ்திதாம்
பாலோர்கத்யுதிபாஸுராமகரதலை:பாசாங்குசௌபிப்ரதீம் |
சாபம்பாணுமபிப்ரஸந்நவதநாம்கௌஸும்பவஸ்த்ரான்விதாம்
தாம்த்வாம்சந்த்ரகலாவதம்ஸமகுடாம்சாருஸ்மிதாம்பாவயே ||

அம்பிகையின் எந்த ஸ்தூல வடிவை ஸாதகன் த்யானம் செய்யவேண்டும் என்பதை இங்கு குறிப்பிடுகின்றார் சங்கரர். அம்பிகையானவள், அக்னி, சூர்யன் மற்றும் சந்திரன் முதலானவர்களுடைய ப்ரகாசத்திற்கும் அதிகமான ப்ரகாசத்துடன் ஸ்ரீ-சக்ர மத்தியில் கேந்த்ர பிந்துவில் ப்ரசன்ன முகத்துடனும், தனது நான்கு கைகளிலும் பாசம் அங்குஷம், சாபம் மற்றும் பாணம் போன்ற திவ்ய அஸ்த்திரங்களுடனும், சிவப்பு பட்டு உடை உடுத்தியும், செவ்வானக்கதிரோன் பொன்ற ஒளியுடன் கூடியும், ப்ரகாசமானவளாயும், மகுடத்தில் சந்திரக்கீற்று எனும் பிறையுடனும் அமர்ந்திருப்பதாக த்யானிக்க கூறுகிறார். இந்த வடிவு சௌந்தர்யலஹரியின் 7-பாடலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இந்த வடிவில் அம்பிகை காமராஜ பீஜமான “க்லீம்”கார ரூபிணியாக, காமகோடியான காமாட்சியாக சித்தரிக்கப்பட்டுள்ளாள். இவ்வடிவையே ஸர்வாபீஷ்ட ப்ரதாயினி ரூபம் என்றும் சர்வாஷா பரிபூரண சக்ரஸ்வாமினி என்றும் அழைப்பார்கள்

3 : ईशानादिपदं शिवैकफलकं रत्नासनं ते शुबं
पाद्यं कुङ्कुमचन्दनादिभरितैरर्घ्यं सरत्नाक्षतैः।
शुद्धैराचमनियकं तव जलैर्भक्त्या मया कल्पितं
कारुण्यामृतवारिधे तदखिलं संतुष्टये कल्पताम्॥

ஈசாநாதிபதம்சிவைகபலகம்ரத்னாஸனம்தேசுபம்
பாத்யம்குங்குமசந்தனாதிபரிதைரர்க்யம்ஸரத்னாக்ஷதை: |
சுத்தைராசமநீயகம்தவஜலைர்பக்த்யாமயாகல்பிதம்
காருண்யாம்ருதவாரிதேததகிலம்ஸந்துஷ்டயேகல்பதாம் ||

ஸ்ரீ திரிபுராம்பிகையின் அதிரஹஸ்யமான பஞ்சதஸியின் வாக்பவகூடத்தின் மூன்றாம் எழுத்து – ஈ

அம்பிகையின் ஆராதனை க்ரமங்களில், ஷோடசோபசார பூஜை எனும் க்ரமத்தில் முதல் நான்கு உபசாரங்கள் இங்கு விளக்கப்பட்டுள்ளது. ஆதிபரையாம் அம்பிகையின் இருப்பிடமும், அம்பாளின் திரு உருவ ஸ்மரணையும், மனதில் நிலை நிருத்தலும் முதல் இரு பாக்களில் இருந்தவையாகும். ஸாதகன், கேந்த்ர பிந்துவில் அம்பிகையை ஆசனத்தில் அமர்த்தியபின், அம்பிகையை மேலும் மனதில் ஆராதிக்கிறான்.

சங்கரர் அம்பிகையை “காருண்யாம்ருதவரிதே” காருண்யக்கடலே என பொருள் கொள்ளலாமோ! இதை இருவிதமாக அணுகலாம். ஒன்று பகுதி 1ல் கண்டது போல், அமிர்தக்கடல், மற்றொன்று, “அ-ம்ருத” என்றால் அழிவில்லாத, அல்லது இறப்பற்ற, பேரழகுடைய, மற்றும், ஸாஸ்வத:, இந்த இரு வகை பொருளும், அம்பிகைக்கு பொருத்தமானதே. வரிதே எனில், கடலே. பக்தர்பால், அம்பிகையின் அளவற்ற காருண்யத்தை இது காட்டுகிறது. தவறல்லவே, அம்பிகையே “ஸ்ரீ மாதா” வாயிற்றே!.

“ஈஸானாதிபதம் சிவைகபலகம்” என்று அம்பிகையின் இருக்கையை வர்ணிக்கிறார் சங்கரர். அம்பாளுடைய ஆஸனத்தின் கால்களாக பிரமன், விஷ்ணு, ருத்திரன் மற்றும் மஹாதேவனிருக்க, இருக்கைப் பலகையாக சதாசிவனுமிருப்பர். இதை விரிவாக லலிதா ரஹஸ்ய ஸஹஸ்ரம் நாமம் 249-ல் “பஞ்சப்ரேதாஸனாஸீனா” ல் தெரிவிக்கிறது. ஐந்து ப்ரேதங்களாவன, முறையே பிரமன், விஷ்ணு, ருத்திரன், மஹாதேவன் மற்றும் சதாசிவன். பிரமன் உருவாக்குகிறான், விஷ்ணு காக்கிறான், ருத்ரன் அழிக்கிறான், மஹாதேவன் அழிந்ததை மறைக்கிறான் (திரோதானம்) சதாசிவனோ மறுபடியும் உயிர்ப்பிக்கிறான் (அனுக்ரஹம்). இவ்வைவரும், தத்தமது ஸக்திகளாலேயே, தத்தம் பணிகளை குறைவின்றி பணிக்கின்றனர். அவர் தம் ஸக்தியை (அ) லலிதாம்பிகையின் பலவேறு பரிணாமங்களை இழந்தாரெனில், சர-த்தன்மையிலிருந்து ஸ்திர-த்தன்மைக்கு உட்பட்டாரெனில், அவர்கள் சவ்மேயன்றோ! வாக்தேவிகள், வேறு எந்த பொருள் படவும் இயற்றவில்லை என்று எண்ணுகிறேன். “சௌந்தர்யலஹரி”யும் இதைக் குறிப்பிடுகிறது. “ஸ்லொகம் ஒன்றில்” சக்தியுடனிருக்கும் சிவனாலேயே சராசரங்களை படைக்க இயலுகிறது, சக்தியிழந்த சிவன் சவமே, ஏனெனில் அவனது அசைவுகள் அனைத்தும் நீயே, நின்னை ஸ்மரிக்கும் புண்யத்தை மறந்தால், சக்தியை இழந்து சவமாகிறான் என்கிறது, மற்றும், பிரமன், விஷ்ணு, சிவன் மற்றும் மற்றெல்லா தேவர்களாலும் நீயே போற்றப்படுபவளாகிராய், என்கிறது.

இப்படியாக அம்பிகைக்கு “சுபம்” எனும் ரத்தினங்களால் ஆக்கப்பட்ட ஆஸனம் அளிக்கப்படுகிறது. ஆஸனம் மட்டுமா “சுபம்”, அம்பிகையின் அடுத்துள்ள அத்தனையுமே சுபமேயன்றோ!

இப்படியாக ஸாதகன் அம்பிகைக்கு அளிக்கப்பட்ட ஆஸனத்தில், அம்பிகை எழில் கொஞ்ச, கம்பீரமாக வீற்றிருக்க, அம்பிகைக்கு இரண்டாவது உபசாரமாக அம்பிகையின் திருக்கமலங்களுக்கு “பாத்யம்” சமர்ப்பிக்கப்படுகிறது, பாத்யம் என்பது கால் அலம்புவதற்கன்று, ஸாதகன் மரியாதை நிமித்தமாக ரத்தினங்கள், சுப லக்ஷணமாக அக்ஷதை கலந்த நீரை அம்பிகையின் பாத அரவிந்தத்திற்கு அர்ப்பணிக்கிறான். அடுத்தது “அர்க்யம்” அம்பிகையின் திருக்கரங்களுக்கு, மஞ்சள், சந்தனத்துடன் நறுமணம் கமிழும் நீர் அளிக்கிறான். பின்னர், அம்பிகைக்கு சுத்த நீர் அருந்த கொடுக்கிறான். இவை அனைத்தும் பரம பக்தியுடனும் ஸ்ரத்தையுடனும், பணிவுடனும், பரிவுடனும், பாசத்துடனும், அம்பிகை திருப்திப்படுகிற வகையில் (ஸம்ஸ்துத) அமைகிறது. இக்காரியங்களை செய்வதினால், ஸாதகன் தன் சித்தத்தை தூயதாக்கிக்கொள்கிறான். முழு ஈடுபாடுடன் எண்ணத்தில் செயல் படுகிறவனுக்கு, இந்த வரிகளில் குறிப்பிட்ட சுவாசனைகளை வரிகளை உச்சரிக்கும்போதே அனுபவிக்க வைக்கும்.

4 : लक्ष्ये योगिजनस्यरक्षितजगज्जाले विशालेक्षणे
प्रालेयाम्बुपटीर कुङ्कुमलसत्कर्पूरमिश्रोदकैः।
गोक्षीरैरपि नारिकेलसलिलैः शुद्धोदकैर्मन्त्रितैः
स्नानं देवि धिया मयैतदखिलं कल्पताम्॥

லக்ஷ்யேயோகிஜநஸ்யரக்ஷிதஜகத்ஜாலேவிசாலேக்ஷணே
ப்ராலேயாம்புபடீரகுங்குமலஸத்கர்பூரமிச்ரோதகை: |
கோக்ஷீரைரபிநாலிகேரஸலிலை:சுத்தோதகைர்மந்த்ரிதை:
ஸ்நானம்தேவிதியாமயை ததகிலம்ஸந்துஷ்டயேகல்பதாம் ||

ஸ்ரீ திரிபுராம்பிகையின் அதிரஹஸ்யமான பஞ்சதஸியின் வாக்பவகூடத்தின் நான்காம் எழுத்து – ல

அம்பிகையே, அகில லோக ரக்ஷாகரீ, யோகிகள் அடைய விழயும் பரமானந்தியே, ஜெகஜ்ஜாலே, இந்த எழியோன், உனது ஸ்னானத்திற்காக மனதால் அர்ப்பணிக்கும் சுகந்த் பன்னீர், சந்தணம், மஞ்சள், சுத்தமான கற்பூரம் கலந்த நீர், மற்றும் கோவின் அமிர்தமாம் சுத்தமான பால், இளநீர் மற்றும் வேதமந்திரங்களால் புனிதப்படுத்தப்பட்ட சுத்த ஜலம் ஆகியவற்றை அங்கீகரித்து ஏற்றருள்வாயாக! இவைகளினால் உனது மனம் குளிரட்டும்.

அம்பிகையின் இருப்பிடமான மணித்வீபத்தையும், ஆஸனத்தின் இருப்பிடமாக கூறப்பட்டுள்ள ஏழு நிலை கோபுர முள்ள ஆயிரங்கால் பவனமும், (இந்த ஏழு நிலை என்பதை மூலாதார சக்ரம் முதல் ஸஹஸ்ரார சக்ரம் வரையில் என்றும் பொருள் கொள்ளலாம்). சிம்ஹ ஆஸனமும், பாத்யம் முதல் ஆசமனம் வரை அளித்த பின் இப்பொழுது அம்பிகைக்கு, ஸ்னானம் அர்ப்பணிக்கப்படுகிறது. சங்கரர், ஆதிபரையான அம்பிகையே, யோகிகள் அடையத்துடிக்கும் பதகமலம் என்கிறார் ஏனென்றால், அம்பிகையால் மட்டுமே ஸாதகனை சிவனிடம் சேர்க்கமுடியும், லலிதா ரஹஸ்ய சஸஹஸ்ரத்தில் 727-வது நாமம் “சிவ ஞானப்ரதாயினி” என்பதாகும். ஆகையால் அம்பிகையால் மட்டுமே சிவ ஞானத்தை அருளமுடியும். அம்பிகையின் பரிபூரண அருட்கடாட்சம் கிட்டிய பின்னரே, சிவனின் கடாட்சம் பெறமுடியும். சிவனால் மட்டுமே ஜீவனை ஜீவன் முக்தனாக்கமுடியும், அல்லாது சிவனுடன் இணைய முடியும். ஆகையாலே சங்கரர், அம்பாளை “யோகிஜன லக்ஷ்யே” என்கிறார்

இந்த சுவாசனை திரவியங்களானது மனதால் கல்பிக்கப்படுவதால், அவை மிகுந்த, உயர்ந்த, தரத்தோடு கூடியவைகளாகின்றன. பாலும், இளநீரும், குளிர்ச்சி உண்டு செய்பவை, சந்தணமும், பன்னீரும் கூட. இதன் காரணம் யாதெனில், சிவெயெனப்படும் சிவ பத்னியானவள், எப்பொழுதும் பல கோடி சூரியனுக்கு இணையான ப்ரகாசத்தோடு சிவனோடு இணைந்திருக்கிறாள், (காலாக்னி ருத்ராய எனும் ஸ்ரீ ருத்ரத்தை கவனிக்க) அப்பிரகாசத்திற்கு உண்டான சூடும் இருக்குமல்லவா!, ஸாதகனால் அவ்வளவு வெப்பமான அம்பிகையை நெருங்க முடியுமா? ஆகையினாலேயே அம்பிகையை குளிர்விக்கிறான். முடிவாக அம்பிகைக்கு வேத மந்திரங்களால் புனிதப்படுத்தப்பட்ட சுத்த ஜலத்தால் அபிஷேகிக்கிறான். வேத மந்திரங்களால் ஏன் நீர் புனிதப்படுத்தல் வேண்டும்? வேதமே அம்பிகையிடமிருந்தே வந்தவை தானே! (லலிதா ரஹஸ்ய ஸஹஸ்ரம் 338) என்றால், இங்கு அளிக்கப்படும் உபசாரங்கள், ஆலயங்களில், கோவில்களில் நடப்பதைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது, அதுபோலவே ஸாதகனும் அம்பிகையை ஆராதிக்க விழைகிறான். இது ஸாதகனின் மன மாற்றத்தையே குறிக்கிறது. ஸாதகன், சிந்தையில் அம்பிகையை இருத்தி சிந்தையாலே வழிபடத் துவங்கிவிட்டான் அன்றோ! முக்திக்கு மார்கம் கண்டு கொண்டான் அன்றோ!

5 : ह्रींकाराङ्कितमन्त्रलक्षिततनो हेमाचलात्संचितैः
रत्नौरुज्ज्वलमुत्तरीयसहितं कौसुम्भवर्णांशुकम्।
मुक्तासंततियज्ञसूत्रममलं सौवर्णतन्तूद्भवं
दत्तं देवि धिया मयैतदखिलं संतुष्टये कल्पताम्॥

ஹ்ரீங்காராங்கிதமந்த்ரலக்ஷிததநோஹேமாசலாத்ஸஞ்சிதை:
ரத்னைருஜ்வலமுத்தரீயஸஹிதம்கௌஸும்பவர்ணாம்சுகம் |
முக்தாஸந்ததியஜ்ஞஸ¨த்ரமமலம்ஸெளவர்ணதந்தூத்பவம்
தத்தம்தேவிதியாமயைத்தகிலம்ஸந்துஷ்டயேகல்பதாம் ||

ஸ்ரீ திரிபுராம்பிகையின் அதிரஹஸ்யமான பஞ்சதஸியின் வாக்பவகூடத்தின் ஐந்தாம் எழுத்து – ஹ்ரீம்

ஹ்ரீங்கார மந்திரத்தையே உடலாகக் கொண்டவளே! பார்வதியே! மணிக்கற்களால் பிரகாசிக்கும் உத்தரீயத்துடன் செந்நிற ஆடையும் பொற்தந்தியில் கோக்கப்பட்ட முத்துக்களால் ஆகிய பூணூலையும் உனக்கு சமர்ப்பிப்பதாகக் கல்பிக்கிறேன்.

ஸாதகன், தனக்காக இங்கு எதையும் யாசிப்பதில்லை, முக்தியைக்கூட, எல்லாவற்றையும் அம்பிகையை சந்தோஷப்படுத்தவே அர்ப்பணிக்கிறான். அம்பிகையின் மேல் அளவில்லா பற்றினாலே இந்த உபசாரங்களை செய்கிறான். அதுவும் அந்த ஸாதகன் இருந்த இடத்திலேயே, மானசீகமாக மேரு பர்வதம் சென்று, விலைமதிப்பற்ற முத்து ரத்தினங்களையும், வேறு வேறு இடங்களில் சென்று பல பூஜைப்பொருட்களை சேகரிக்காமல், மனதிலேயே அவற்றையெல்லாம் உருவாக்கி அம்பிகைக்கு அர்ப்பணிக்கிறான். இதனால் அந்த ஸாதகனுக்கு, அம்பிகையிடத்தில் மனம் ஒன்றிட / சிலவிட அதிக நேரம் கிடைக்கிறது அல்லவா?

ஒருவழியாக அம்பிகைக்கு ரத்தினங்களால் இழையப்பட்ட உத்தமமான செம்பட்டு ஆடையை ஸ்ரீ ஆதிசங்கரிரின் துணையோடு உடுத்திவிட்டோம்.

சுத்தமான மனதும், உண்மையான பக்தியும் மனதிலிருந்தால், அன்னை அங்கிருப்பாள் அன்றோ!

 6 : हम्सैरप्यतिलोभनीयगमने हारावलीमुज्ज्वलां
हिन्दोलद्युतिहीरपुरिततरे हेमाङ्गदे कङ्कणे।
मञ्चीरौ मणिकुण्डले मकुटमप्यर्धेन्दुचूडामणिं
नासामोक्तिकमङ्गुलीयकटकौ काञ्चीमपि स्वीकुरु॥

ஹம்ஸைரப்யதிலோபநீயகமநேஹாராவலீமுஜ்வலாம்
ஹிந்தோலத்யுதிஹீரபூரிததரேஹேமாங்கதேகங்கணே ||
மஞ்ஜீரௌமணிகுண்டலேமகுடமப்யர்தேந்துசூடாமணிம்
நாஸாமெனக்திகம்அங்குலீயகடகௌகாஞ்சீமபிஸ்வீகுரு ||

ஸ்ரீ திரிபுராம்பிகையின் அதிரஹஸ்யமான பஞ்சதஸியின் மத்யகூடத்தின் முதல் எழுத்து – ஹ

இந்தப் பாடலில் வெவ்வேறு விதமான ஆபரணங்களை அம்பிகைக்கு அணிவித்தலைக் குறிப்பிடுகின்றது. கடகம், வாகுவளையம், கங்கணம், பாதகிங்கிணி, மணிகுண்டலம், மகுடம், முத்து மூக்குத்தி – பில்லாக்கு, பொன் மோதிரம், சூடாமணி, இடையணி முதலியவற்றை நான் உனக்கு (மானசீகமாக) அணிவிப்பதை நீ ஏற்றுக்கொள்வாயாக.

இந்த பாடலில் ஸாதகன், அழகு மிளிரப் பட்டுடுத்தி அன்னம் நாண நடைபயின்று ஆஸனத்தில் அமர்ந்த அன்னைக்கு, ஆபரணங்கள் சேர்த்து அழகு பார்க்கிறான். பலவிதமான ஹாரங்கள், முத்து, ஸ்வர்ணம், ரத்தினம் சேர்த்திழைத்து தயாரித்ததை அம்பிகைக்கு அணிவித்து அழகு பார்க்கிறான். இது ஸாதகனுக்கு மகிழ்வை தரவில்லை, ஆகையால் அம்பிகையின் கைகளுக்கு கங்கணம் அணிவித்து மகிழ்கிறான். நவ ரத்தினங்களாலும், தங்கத்தாலும் செய்த வளையல்களை அம்பிகைக்கு அணிவித்து அழகு பார்க்கிறான். காதிற்க்கு மணிகுண்டலங்களும், சிரசில் கிரீடமும், சினந்தாமணி ரத்தினத்தினாலும், அட்டமி யன்று தோன்றும் பிறை போன்ற நெற்றிச்சூடியையும் அணிவிக்கிறான். சம்பக புஷ்பத்தைப்போன்று பேரழகுடைய பெருமாட்டிக்கு, மூக்குத்தியும் பில்லாக்கும் எழில் கொஞ்சும் ரத்தினத்தில் செய்திட்டு சூடி மகிழ்கிறான்.

இந்த உபசாரங்களை அம்பிகைக்கு மனதளவில் ஈடுபாடோடு, பக்தியோடு செய்யும் ஸாதகன், அம்பிகையை நேரில் கண்ட அனுபவத்துடன் ஆனந்த கண்ணீர் மல்க அம்பிகையை துதிப்பதை யாம் உணர முடிகிறது.

7 : सर्वाङ्गे घनसारकुङ्कुमघनश्रीगन्धपङ्काङ्कितं
कस्तूर्रितिलकं च फालफलके गोरोचनापत्रकम्।
गण्डादर्शनमण्डले नयनयोः दिव्याञ्चनं तेऽञ्चितं
कण्ठाब्जे मृगनाभिपङ्कममलं त्वत्प्रीतये कल्पताम्॥

ஸர்வாங்கேகனஸாரகுங்குமகனஸ்ரீகந்தபங்காங்கதிதம்
கஸ்தூரீதிலகம்சபாலபலகேகோரோசநாபத்ரகம்மி |
கண்டாகர்சனமண்டலேநயநயோர்த்வ்யாஞ்ஜநம்தேsரஞ்சிதம்
கண்டாப்ஜேம்ருகநாபிபங்கம்அமலம்த்வத்ப்ரீதயேகல்பதாம் ||

ஸ்ரீ திரிபுராம்பிகையின் அதிரஹஸ்யமான பஞ்சதஸியின் காமராஜ கூடம் (எ) மத்யகூடத்தின் இரண்டாம் எழுத்து – ஸ

அம்பிகே! குங்குமப்பூ, நல்வாசனைப் பொருள்கள் சந்தனம் முதலியவற்றுடன் உன் உடலுக்குப் பூச்சாக அணிவிக்கிறேன். கஸ்தூரி, கோரோசனை ஆகியவற்றால் உனது நெற்றியில் திலகம் இடுகிறேன். முகம் பார்க்கும் கண்ணாடியுடன் உனது கண்களில் திவ்வியமான அஞ்சன மையிடுகிறேன். உனது கழுத்துக்குக் கஸ்தூரி அணிவிப்பதாகக் கல்பிக்கிறேன்.

அம்பிகையின் ஸ்னான உபசாரமும், உடையுடுத்தும் வைபவமும், நகை பூணும் வைபவமுமானபின், அம்பிகையை மேலும் அழகு செய்ய, குங்குமப்பூ கலந்த சுத்த சந்தணத்தால் தயாரிக்கப்பட்ட லேபம், உடல் பூச்சாக அணிவிக்கிறேன் அம்மா!, கஸ்தூரி, கோரோஜனம் இழைத்து தாயே உனது அகலமான நெற்றியில் திலகமிடுகிறேன், உன் கண்களுக்கு திவ்யமான அஞ்சன மை தீட்டி மகிழ்கிறேன் தாயே. உனது முளரிபோன்ற திருக்கழுத்திற்கு, கஸ்தூரி லேபமிட்டு அழகுக்கு அழகு சேர்க்கிறேன் அம்மா!

இதில் ஒரு விஷேஷம் என்னவெனில், இவ்வகை அலங்காரங்களை செய்யும்பொழுது, இறைவியும், சாதகனும் மட்டுமே தனித்துள்ளனர், சாதகன் தன் மனதிற்கு பிடித்தவாரு இறைவியை அழகூட்டி ஆராதிக்கிறான். இங்கு சங்கரர் அம்பிகையின் நெற்றியை ஒரு பலகைபோல என்றே குறிப்பிடுவதாக உள்ளது, ஆயின் சங்கரரின் சௌந்தர்யலஹரி(46)யில், அட்டமி சந்திர வடிவிலுள்ளது என்றும், அதேபோல் ரஹஸ்ய ஸஹஸ்ரம்(15)லும் குறிப்பிட்டிருப்பதை கவனித்தால், சந்தத்திற்காக சிறு பிழை சேர்த்தாரோ அல்லது குறிப்பு எடுத்தவர் பிழை சேர்த்தாரோ என என்ற கேள்வி எழுகிறது.

இதனோடு இன்னொரு விஷயமும் கூட, ஏதோ, பக்தனாகிய நாம், அம்பிகையை இப்படி ஒவ்வொரு விதமாக அழகு பார்த்து மகிழ, இறைவி அம்பிகையின் இறைவனான காமேஷ்வரன், தானும் குறுஞ்சிரிப்புடன் இதையெல்லாம் அம்பிகையுடன் சேர்ந்தே அனுபவிக்கிறான் அன்றோ! ஏனெனில், அம்பிகையின் வல பாதி காமேஸ்வரன் அன்றோ! இப்படியாக காமேஷ்வரியை அழகு பார்த்து, ஆராதித்து, அறியாமலே காமேஷ்வரனையும் ஒருசேர ஆராதிக்கிறோம்! இதை விட, பெரும் பாக்கியம் மற்றொன்று ஒன்று உண்டோ? இப்படியாக நம் எல்லோருக்கும் அய்யனையும், அம்பிகையும் ஒரே சமயத்தில் ஆராதிக்க ஆதி சங்கரர் வழி வகுத்திட்டாரே, அவருடன் இணைந்து அம்பிகையை ஆராதிப்பதின் மூலம், சங்கரருக்கு நன்றி சொல்வோமா?

8 : कल्हारोत्पलमल्लिकामरुवकैः सौवर्णपङ्केरुहैः
जातीचम्पकमालतीवकुलकैर्मन्दारकुन्दादिभिः।
केतक्या करवीरकैर्बहुविधैः कऌप्ताः स्रजो मालिकाः
संकल्पेन समर्पयामि वरदे संतुष्टये गृह्यताम्॥

கல்ஹாரோத்பலமல்லிகாமருவகை:ஸெளவர்ணபங்கேருனஹ:
ஜாதீசம்பகமாலதீவகுலகைர்மந்தாரகுந்தாதிபி: |
கேதக்யாதரவீரகை:பகுவிதா:க்லுப்தா:ஸ்ரஜேமாலிகா:
ஸங்கல்பேநஸமர்பயாமிவரதேஸந்துஷ்டயேக்ருஹ்யதாம்மிமி ||

ஸ்ரீ திரிபுராம்பிகையின் அதிரஹஸ்யமான பஞ்சதஸியின் காமராஜ கூடம் (எ) மத்யகூடத்தின் மூன்றாம் எழுத்து – க

பலவிதமான மலர்களை சூட்டி அம்பிகையை மகிழ்விப்பதை இப்பாடல் குறிப்பிடுகிறது. செங்கழுநீர், நீலம், மல்லிகை, மருக்கொழுந்து, பொற்றாமரை, ஜாதி மல்லிகை, முல்லை, மகிழம்பூ, மந்தாரை போன்ற மலர்களை சங்கல்பித்து அம்பிகே, உனக்கு மாலைகளாகவும், சரமாகவும், உதிரியாகவும் சமர்ப்பிக்கிறேன். மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வாயாக.

ஸாதகர், அம்பிகைக்கு, மாலைகள் மட்டும் அர்ப்பணிக்கவில்லை, அதோடு கூட சரமாக கோர்த்து முடியில் சூடவும் அளிக்கிறார். முடியில் சூடும் புஷ்பமானது, சிரசின் பின்புறமும், முதுகுத்தண்டின் மேலுமாக அமைந்துள்ள சக்கரத்தை பாதுகாக்கிறது. இந்த சக்கரம் அமைந்துள்ள இடத்தை ஆங்கிலத்தில் MEDULLA OBLANGETA என அழைக்கின்றனர். இதோடு அம்பிகையின் அலங்காரம் முடிகிறது.

பூவுலக மலர்களல்லாது, தேவலோகத்திற்கே உரிய தெய்வீக மலர்களால் அம்மையை, ஆதி பரையை அலங்கரிக்கும் சாதகன், பொருள்களால் ஆன மாயையை விட்டு, அருள்களால் ஆன அம்பிகையின் சாக்ஷாத்காரத்திற்கு தன்னை தயார் செய்து கொள்கிறான். அது காண், அம்பிகையின் தர்ஸன பாக்யமும், மோக்ஷமும் அடைய விழைகிறான்.

9 : हन्तारं मदनस्य नन्दयसि यैरङ्गैरनङ्गोज्ज्वलैः
यैर्भृङ्गावलिनीलकुन्तलभरैर्बध्नासि तस्यशयम्।
तानीमानि तवाम्ब कोमलतराण्यामोदलीलागृहाण्यामोदाय
दशाङ्गगुग्गुलुघृतैर्धूपैरहं धूपये॥

ஹந்தாரம்மதநஸ்யநந்தயஸியைரங்கைரநங்கோஜ்வலை:
பைர்ப்ருங்காவலிநீலகுந்தலபரை:பத்நாஸிதஸ்யாசம் |
தாநீமாநிதவாம்பகோமலதராண்யாமோதலீலாக்ருஹா-
ண்யாமோதாயதசாங்ககுக்குலுக்ருதைர்துபைரஹம்தூபயேமிமி ||

ஸ்ரீ திரிபுராம்பிகையின் அதிரஹஸ்யமான பஞ்சதஸியின் காமராஜ கூடம் (எ) மத்யகூடத்தின் மூன்றாம் எழுத்து – ஹ

“அம்பிகே! பலவகையான வாசனைப்பொருள்கள், மருத்துவ மூலிகைப் பொருள்கள், தசாங்கம், குங்கிலியம் போன்றவற்றைக் கலந்து, மன்மதனை எரித்த சிவனும் மோகிக்கும் உன் அங்கங்களுக்கும் அவனைக் கவரும் கூந்தலுக்கும் தூபம் காட்டுகிறேன்.”

ஒரு சமயம், காமதேவன் எனப்படும் மன்மதன், பரசிவனார், பார்வதியை மோஹிக்க சிவன்மேல் மலர்க்கணை தொடுக்க, சிவன் சினக்க, பஸ்மமான காமதேவனை, உயிர்ப்பிக்க காமதேவனின் மனைவி ரதிதேவி அம்பிகையை சரணடைய, அம்பிகையின் அருளால் உயிர்ப்பெற, தேகமில்லாமல், காமன் உருப்பெற, காரணமாயிருந்ததாலோ என்னமோ, காமதேவன் அம்பிகைக்கு யாரும் அளவிடமுடியாத அழகை வாரி வழங்கினான் என்றால் மிகையாகாது, இயற்கையிலேயே அம்பாளுக்கு, ப்ரக்ருதி (இயற்கை) என்ற நாமமும் உண்டல்லவா!, இயற்கையோடு அழகு சேரும்பொழுது, அழகு பேரழகாகவன்றோ பரிமணிக்கிறது!.

ஸாதகன் சிவனையும், சிவனோடிணைந்த பார்வதியையும் சிந்தையில் நிருத்துகின்றான். இப்பொழுது அந்த ஸாதகனுக்கு, ‘அம்பிகையும், ஐய்யனும் ஒன்றே’ என்று புரிய ஆரம்பிக்கிறது. ‘ஒன்றை விட்டு இன்னொன்று தனியாக இயங்குவதில்லை’ என்பதும் நன்கு விளங்குகிறது. இந்த உயரிய நிலையில், அதாவது ஸஹஸ்ரார சக்கிர பிந்துவில் சிவ-சங்கரி மைதுனம் நடக்கிறது. ‘படைக்கும் தொழில்’ துவங்குகிறது.

அம்பிகையின் ஆராதனையில் தூபமிடல் ஒரு முக்கியமான சடங்காகும். தஸாங்கம் என்பது பத்து விதமான இயற்கை பொருள்கள் கொண்டு தயாரிக்கப்படும் சுவாஸனை திரவ்யமாகும். இந்த பத்து விதமான மூலிகை மற்றும் மரப்பட்டைகள் நன்கு பொடிக்கப்பட்டு, தணலிலிடும்போது, நறுமணமுள்ள புகை வெளிப்படும். இந்த நறுமணப்புகையால், சுற்றுப்புறம் சுத்தியாகும், அதோடு நமது சிந்தையில் உள்ள கெட்ட சிந்தனைகள் நெருப்பு தணலில் எரிந்துபோய் நற்ச்சிந்தனையே மிஞ்சும். பகவத்கீதையில் கிருஷ்ணர் சொன்னதாக ஒரு ஸ்லோகம் (|||.37), ‘ரஜோகுணம் எனும், வேட்கை மற்றும், கோபம் இதனுடயே எரிந்து சாம்பலாகட்டும்’ என்று.

ஸாதகன் இப்படியாக தனது மனதையும் தூய்மைப்படுத்திக்கொள்கிறான். தூய்மையுள்ள மனதில் அம்பிகை எப்பொழுதும் இருப்பாளன்றோ!

அற்புதமான, அழகுடன், ஆதிசங்கரர், அம்பிகையின் உடலுக்கும், நீளமான, பரசிவன் மோஹிக்கும் கூந்தலுக்கும் தூபமிட்டதை அவருடனிருந்து கண்டு களிப்புற்றோம்.

10 : लक्ष्मीमुज्ज्वलयामि रत्ननिवहोद्भास्वत्तरे मन्दिरे
मालरूपविलम्बितैर्मणिमयस्तम्भेषु संभावितैः।
चित्रैर्हाटकपुत्रिकाकरधृतैर्गव्यैर्घृतैर्वधितै-
-र्दिव्यैर्दीपगणैर्धिया गिरिसुते संतुष्टये कल्पताम्॥

லக்ஷ்மீமுஜ்வலயாமிரத்னநிவஹோத்பாஸ்வந்தரேமந்திரே
மாலாரூபவிலம்பிதைர்மணிமயஸ்தம்பேஷ§ ஸம்பாவிதை: |
சித்ரைர்ஹாடகபுத்ரிகாகரத்ருதைர்கவ்யைர்க்ருதை: மிவர்திதை:
திவ்யைர்தீபகணைர்தியாகிரிஸுதேஸந்துஷ்டயேகல்பதாம் ||

ஸ்ரீ திரிபுராம்பிகையின் அதிரஹஸ்யமான பஞ்சதஸியின் காமராஜ கூடம் (எ) மத்யகூடத்தின் ஐந்தாம் எழுத்து – ல

அம்பிகையே! நானாவித ரத்தினங்களால் ஆக்கப்பட்ட திவ்ய பவனத்தில், நானாவித ரத்தினங்களால் இழைக்கப்பட்ட தூண்களில் மாலைகளைப்போல், தீபங்கள் எரிந்துகொண்டிருக்கின்றன. தங்கத்தினாலான பெண் பதுமைகள், தீபத்தை இரு கைகளாலும் ஏந்தி உன் பவனத்தை ப்ரகாசிக்க செய்துகொண்டிருக்கின்றனர். இந்த தீபங்களனைத்தையும் பசு நெய் ஊற்றி, தீபமேற்றுகிறேன் தாயே பர்வத புத்ரீ. இவையெல்லாம் உனக்கு சந்துஷ்டியை நல்குவதாக, ஏற்றுக்கொள் அம்பிகையே.

ஸாதகன், தனது மல்ங்களான கேட்கை (LUST), கோபம் போன்ற “ரஜோகுணத்தை” நெருப்பிலிட்டு பொசுக்கி, சுத்தமான, நறுமணமுள்ள ஆத்மனை அம்பிகைக்கு தூட்பமாக அர்ப்பித்ததை அனுபவித்தோமல்லவா! இங்கு ஸாதகன், அம்பிகைக்கு, பசுவின் நெய்யால் ஆன தீபங்களை அற்ப்பிக்கிறான். பசுவின் (கோ) கிடைக்கும் எல்லாப்பொருளுமே பவித்ரமாக கருதப்படுகிறது, மந்திர உச்சாடனத்தோடு, பசுவின் பால், தயிர், நெய், சாணம், மூத்திரம் கலந்தது பன்சகவ்யமாகும். இது, சேவித்தவிரின் பாவத்தையெல்லாம் பருகியவுடன் நிவர்த்திக்கிறது என்கின்றன வேதங்கள்.

அம்பிகை ஸ்ரீ மஹா திரிபுரசுந்தரியின் இருப்பிடத்தைப் பற்றி “பாகம் 1”ல் கண்டிருந்தோம். அந்த மஹா மண்டபத்தில் எவ்வளவு தீபமேற்றினாலும் ஒரு குறிப்பிட்ட தூர அளவே வெளிச்சம் இருக்கும், ஆயின், அம்பிகையின் பவனமோ ரத்தினங்களால் ஆனதன்றோ!, ஆகையால், ஒளிரும் விளக்குகளின் ஒளியை ரத்தினங்களும் பிரதிபலிக்கின்றன. ஆதலால், மண்டபமே ஒளிமயமாக இருக்கிறது.

முன்னமே பார்த்தபடி மண்டபம், தீப தோரணங்களாலும், தீபமேந்திய தங்க பதுமைகளாலும் ஒளியூட்டப்படுகிறது. அவ்வொளியாலும், அவ்வொளியின் பிரதிபலிப்பாலும் அம்பிகையையும், அம்பிகையின் மண்டபத்தையும் ஒளி வெள்ளத்தில் ஆழ்த்துகிறது. ஆயினும், ஸாதகன், ஒன்றை தெரிந்துகொள்கிறான். அது என்னவென்றால், ஒளியேயான அம்பிகை இல்லேல் ஒளியேது? என்று. இதையே நாம், “ப்ரகாஸ விமர்ஷ மஹாமாயா ஸ்வரூபிணி” என்கிறோம்.

இது கதா உபனிஷத்தில் விரிவாக உறைக்கப்பட்டுள்ளது. இதில் (II.ii.15) ப்ரம்மத்தின் முன் சூரிய, சந்திர, நக்ஷத்திர, மின்னல் உள்பட எவரும் ஜ்வலிப்பதில்லை, ப்ரகாசிப்பதில்லை, எல்லாம் ப்ரம்மத்தின், ப்ரம்ம தேஜஸான ஒளியின் பிரதிபலிப்பே என்று.

இந்த வெளிச்சமாவது, ஸாதகனின், அகக்கண்ணை திறக்கிறது. இங்கு, ஸாதகனுக்கு, அம்பிகையை, அம்பிகையின் ரூபத்தை, மனதில் ஸ்மரித்தாலே போதுமானது, அம்பிகையை தவமிருந்து அடைய வேண்டியதில்லை என்று. ஆம், ஸ்மரணையிலே சித்திக்கும் தாயிடம் தவமிருத்தல் வேண்டுமோ! இத்தருணம், அம்பிகை, ஸாதகனின் உள்ளத்தில் ஒளிர்ந்து, ஸாதகனை அளவிலா பேரின்பத்தில் ஆழ்த்துகிறாள்.

11 : ह्रींकारेश्वरि तप्तहाटककृतैः स्थालीसहस्रैर्भृतं
दिव्यान्नं घृतसूपशाकभरितं चित्रान्नभेदं तथा।
दुग्धान्नं मधुशर्करादधियुतं माणिक्यपात्रे स्थितं
माषापूपसहस्रं अम्ब सफलं नैवेध्यमावेदये॥

ஹ்ரீங்காரேச்வரிதப்தஹாடகக்ருதை:ஸ்தாலீஸஹஸ்ரைர்ப்ருதம்,
திவ்யான்னம்க்ருதஸ¨பசாகபரிதம்சித்ரான்னபேதம்ததா |
துக்தான்னம்மதுசர்கராததியுதம்மாணிக்யயாத்ரேஸ்திதம்
மாஷாபூபஸஹஸ்ரமம்பஸகலம்நைவேத்யமாவேதயே ||

ஸ்ரீ திரிபுராம்பிகையின் அதிரஹஸ்யமான பஞ்சதஸியின் காமராஜ கூடம் (எ) மத்யகூடத்தின் கடைசி எழுத்து – ஹ்ரீம்

ஹ்ரீங்காரேஸ்வரியே, தாயே பல பொற்பாத்திரங்களில் பசுவின் நெய், பருப்பு, கறிவகைகள் கலந்த திவ்யான்னம், சித்ரான்னங்கள், தேன், பாற்சோறு, பலவிதமான பழங்கள், வடைகள் முதலியவற்றை மாணிக்கப்பாத்திரங்களில் நைவேத்தியமாக சமர்ப்பிக்கின்றேன்.

‘ஓம்’ என்ற ப்ரணவம் எப்படி சக்திவாய்ந்ததோ, அதேபோல் சக்தி ப்ரணவம் எனும் ‘ஹ்ரீம்’ அற்புத சக்திவாய்ந்த பீஜ மந்திரமாகும். இதை புவனேஸ்வரி பீஜம் என்றும், மாயா பீஜம் என்றும் குறிப்பிடப்படுகிறது.

லலிதா ரஹஸ்ய ஸஹஸ்ரத்தில் 301வது நாமம் ஹ்ரீங்காரீ என்பதாகும். ஆகையினாலேயே, பன்சதஸியின் ஒவ்வொரு கூடத்தின் முடிவிலும் ‘ஹ்ரீம்’ என்ற சக்தி ப்ரணவம் உள்ளது. ஹ்ரீம் என்பது ஹ + ர + ஈ + ம மற்றும் பிந்து எனப்படும் புள்ளியால் ஆனது ஆகும். மந்திரங்களில் பிந்து எனும் புள்ளியானது மிகவும் சக்திவாய்ந்தது ஆகும். உதாரணத்திற்கு, ‘ஹ’ (ह) என்பது எழுத்தாகவும், ‘ஹம்’ (हं) என்பது மந்திரமாகிறது. இந்த ‘ஹம்’ என்பது ஹ் என்பது ஷ்ருஷ்டியையும் அ என்பது ஸ்திதியாகவும், ம் என்பது லயத்தை குறிப்பதாகவும் அமைகிறது. இந்த மந்திரம் பற்றி விரிவாக இன்னொரு பதிவில் பார்ப்போமாக. சில ஏடுகளில் இதையே சிவ-சக்தி பீஜம் என்றும் குறிப்பிடப்படுகிறது.

ஸாதகன், பொற்கிண்ணங்களில் நிவேதன பொருட்கள் அர்ப்பணிக்கப்படுகிறது. ஏன் என்றால் அவளே பொன்னிர மேனியள் அன்றோ, (ரஹஸ்ய ஸஹஸ்ர நாம த்யான ஸ்லோகம் அம்பிகையை ‘ஹேமாபாம்’ எனில் பொன்னிறமேனியள் என்றே குறிக்கிறது) பொதுவாகவே இறைவன் – இறைவியருக்கு அர்ப்பணிக்கப்படும் பொருள்கள் அனைத்துமே பொன்னால் ஆன பாத்திரங்களிலேயே அர்ப்பணிக்கப்படுகின்றன. இதன் காரணம் இரண்டு எனலாம், ஒன்று தங்கமானது மிக சுத்தமானது, எந்த பொருளும் சுலபமாக பொன்னோடு ரஸாயனக்கூட்டு ஏற்ப்படுத்திக்கொள்வதில்லை, ஆதலின், களிப்படிக்காது. இரண்டாவது அது ஒரு உயர் ரக தாதுவாகும்.

அம்பிகை, பாயஸ அன்னத்தை விரும்புபவள், அதுகாண், அரிசி, பால், சர்க்கரை கலந்து, குங்கமப்பூ, ஏலம், கற்பூரம் சேர்த்து பாயஸம் செய்து அம்பிகைக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. இதை அர்ப்பணிக்கும்போது சங்கரர், மாணிக்கத்திலான பாத்திரத்தில் அர்ப்பணிப்பாதக கூறுகிறார். (ரஹஸ்ய ஸஹஸ்ர நாம த்யான ஸ்லோகம் அம்பிகையை ‘மாணிக்ய மௌளி ஸ்புரத்’ எனில் மாணிக்கத்திலான மகுடம் சூடியவள் என்றே குறிக்கிறது)

12 : सच्छायैः वरकेतकीदलरुचाताम्बूलवल्लीदलैः
पूगैः भूरिगुणैः सुगन्धिमधुरैः कर्पूरखण्डोज्ज्वलैः।
मुक्ताचूर्न्णविराजितैः बहुविधैर्वक्त्रांबुजामोदनैः
पूर्णा रत्नकलाचिका तव मुदे न्यस्ता पुरस्तादुमे॥

ஸச்சாயைர்வரகேதகீதலருசாதாம்பூலவல்லீதலை:
பூகைர்பூரிகுணை:ஸுகந்திமதுரை:கர்பூரகண்டோஜ்வலை: |
முக்தாசூர்ணவிராஜிதைர்பகுவிதைர்வக்த்ராம்புஜாமோதனை:
பூரணாரத்னகலாசிகாதவமுதேந்யஸ்தாபுரஸ்தாதுமே ||

ஸ்ரீ திரிபுராம்பிகையின் அதிரஹஸ்யமான பஞ்சதஸியின் சக்தி கூடம் (எ) கடைசி வரியின் முதல் எழுத்து – ஸ

அம்பிகே! வெற்றிலை, வாசனைப் பாக்குத்தூள், பச்சைக்கற்பூரம், முத்திலிருந்து தயாரிக்கப்பட்ட சுண்ணம் முதலியவை கொண்ட ரத்தினத்தால் ஆன வெற்றிலைப் பெட்டியை நின் மனம் மகிழச் சமர்ப்பிக்கின்றேன்.

“பந்தன் இலை” அல்லது “கேதகீ” ஒரு சிரிய வகை இலையாகும், அது அன்னாசிப்பழச் செடி அளவே உயரம் வளரும். தாழம்பூ போல் உள்ளே இலைகளும், வெளியிலுள்ள இலையானது கடும் பச்சை நிறத்திலுமிருக்கும். நறுமணம் கோண்ட இச்செடியின் நறுமணம் அம்பிகைக்கு மிக பிரியமானதாகும். இந்த செடியின் நறுமணத்தால் சிவ பூஷணமாம் நாகங்கள் (ரஜ நாகம் கூட) கவர்ந்திழுக்கப்பட்டு இச்செடியின் அடியில் தங்கும். அதனாலோ என்னவோ அம்பிகைக்கும் இந்த நறுமணம் மிகவும் பிரியமானதாகும். உமையும், உடயானுக்கு ஆபூஷணமன்றோ, இடபாகத்தை அலங்கரிப்பவள் ஆயிற்றே! இந்த இலையின் வர்ணத்திலுள்ள வெற்றிலையும், கர்பூரவீடிகா எனும் சுவாசனை சூரணம் (பொடி) சேர்த்த, தாம்பூலத்தை அம்பிகைக்கு சங்கரர் அளிக்கிறார். கர்பூரவீடிகா சூரணமானது குங்குமப்பூ, ஏலம், லவங்கம், பச்சைகற்பூரம், கஸ்தூரி, ஜாதிக்காய், ஜாதிபத்திரி முதலியவைகளை பொடித்து சர்க்கரை சேர்த்து செய்யப்படும் ஒரு நறுமணப்பொடியாகும். அம்பிகை இதை மெல்லும்போது, அதன் நறுமணம் அகிலமெல்லாம் பரவும். இந்த வர்ணனை லலிதா ரஹஸ்ய ஸஹஸ்ரத்தின் 26-வது நாமம் எடுத்துறைக்கிறது. அம்பிகையின் வாய் லலிதா ரஹஸ்ய ஸஹஸ்ரத்தின் நாமம் 559-ல் ‘தாம்பூல-பூரித-முஃகி’ என்கிறது.

லலிதா ரஹஸ்ய ஸஹஸ்ரத்தின் 24-வது நாமம் அம்பிகையின் உதடுகள் கோவைப்பழம் போல் சிவந்து அழகாக காணப்படுகின்றன என்று. இயற்கையிலேயே அம்பிகைக்கு அழகு மிகுந்த செவ்விதழ்கள், அதோடு சங்கரர் அளித்த தாம்பூலமான வெற்றிலையுடன், கர்பூரவீடிகா சூரணத்தோடு, முத்துச்சுண்ணமும் கலந்து மெல்வதாலேயோ என்னமோ அம்பிகையின் மந்தஹாசமான புன்முறுவல், பரசிவனையே வளைத்து விட்டது. நமது ஆச்சார்யரும் அம்பிகையின் உதடுகளின் அழகில் அடிமையாகி, பல இடங்களில் இதை குறிப்பிடுகிறார் (உ) பவானி புஜங்கம் 7-ல் ‘பிம்பாதரஸ்மேர’ என்கிறார். பிம்ப என்றால் கோவைப்பழம் என்று அர்த்தம்

அம்பிகைக்கு, அழகும், பூரிப்பும் சேர்க்க, விஷேஷ நிவேதனத்தின் பின் தாம்பூலமும், ஆதிசங்கரரின் பேரருளால் அர்ப்பணிக்கும் பாக்யம் கிட்டியதன்றோ!

13 : कन्याभिः कमनीयकान्तिभिरलङ्गारामलारार्तिका
पात्रे मौक्तिकचित्रपङ्क्तिविलसत्कर्पूरदीपालिभिः।
तत्तत्तालमृदङ्गगीतसहितं नृत्यत्पदाम्भोरुहं
मन्त्राराधनपूर्वकं सुविहितं नीराजनं गृह्यताम्॥

கன்யாபி:கமநீயகாந்திபிரலங்காராமலாரார்திகா
பாத்ரேமௌக்திகசித்ரபங்க்திவிலஸத்கர்பூரதீபாலிபி: |
தத்தத்தாலம்ருதங்ககீதஸஹிதம்ந்ருத்யத்பதாம்போருஹம்
மந்த்ராராதனபூர்வகம்ஸுவிஹிதம்நீராஜநம்க்ருஹ்யதாம்மிமி ||

ஸ்ரீ திரிபுராம்பிகையின் அதிரஹஸ்யமான பஞ்சதஸியின் சக்தி கூடம் (எ) கடைசி வரியின் இரண்டாம் எழுத்து – க

அழகு மிகு கன்னியர்களால் பல விதமாக முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட தட்டில் கற்பூரம் ஏற்றி அம்பிகே, பாட்டும், நாட்டிய நடனமும், மேளதாளமும் முழங்க, வேதகோஷத்துடன் கூடிய மந்திரங்களுடனும் தாயே உன் திருப்பாதங்களுக்கு கற்பூர நீராஜனம் காட்டுகிறேன் அம்மா! ஏற்றுக்கொள்வீராக

இந்த நீராஜனம் எனும் பதத்தை அழகு குறையாமல் இன்னொரு பாஷையில் எடுத்துச்சொல்ல மிக கடினமாக உள்ளது. ஆரத்தி என்றால் அது சுமாரான அர்த்தத்தையே கொடுக்கும், ஆயினும் அதையே உபயோகிக்கிறேன்.

நீராஜனம் / ஆரத்தி செய்யும்போது, சங்கு, மேளதாளம், வேதகோஷம், ந்ருத்யம், மணியடித்தல் முதலானவையோடு செய்வதே முறை. இது மனதை இறைவியிடத்தில் அல்லது இறைவனிடத்தில் நிலைக்கச்செய்யும், அல்லாமல் மனதில் ஒருவகை கிளர்ச்சியை உண்டாக்கும், சில நேரம் உடம்பு புல்லரிக்க கூடும். அம்பிகைக்கு நீராஜனம் / ஆரத்தி செய்யும்போது, நாம் நீராஜன / ஆரத்தி ஒளியில் அம்பிகையின் சுய ஒளியைக்காணலாம்.

நீரஜன சமயத்தில் ‘கதோபனிஷத்’தின் ||.ii.15 –ல் காணப்படும் ஸ்லோகம் இசைக்கப்படும், அதன் அர்த்தம். ப்ரம்மம் ஒன்றே தன்னொளி கொண்டது, மற்ற சூரியன், சந்திரன், நக்ஷத்திரங்கள், அக்னி யாவும் ப்ரம்மத்தின் ஒளியையே ப்ரதிபலிக்கின்றன என்று. இங்கு ப்ரம்மமாக கூறுவதை அம்பிகை என்று கொள்க.

ஸ்ரீ லலிதா ரஹஸ்ய ஸஹஸ்ரம் நாமம் 806-ல் அம்பிகையை ‘பரஞ்ஜோதி’ என்றே குறிப்பிடுகிறது.

14 : लक्ष्मीः मौक्तिकलक्षकल्पितसितच्छत्रं तु धत्ते रसात्
इन्द्राणी च रतिश्च चामरवेर धत्ते स्वयं भारती।
वीणामेणविलोचनाः सुमनस्सां नृत्यन्ति तद्रागवद्भावैः
आङ्गिकसात्विकैः स्फुटरसं मातस्तदाकण्यर्ताम्॥

லக்ஷ்மீர்மௌக்திகலக்ஷகல்பிதஸிதச்சத்ரம்துதத்தேரஸாத்
இந்த்ராணீசரதிஸ்சசாமரவரேதத்தேஸ்வயம்பாரதீ |
வீணாம், ஏணவிலோசநா:ஸுமநஸாம்ந்ருத்யந்திதத்ராகவத்
பாவை:ஆங்கிகஸாத்விகை:ஸ்புடதரம்மாதஸ்தாகர்ண்யதாம்மிமி ||

ஸ்ரீ திரிபுராம்பிகையின் அதிரஹஸ்யமான பஞ்சதஸியின் சக்தி கூடம் (எ) கடைசி வரியின் மூன்றாம் எழுத்து – ல

எண்ணிலடங்கா லக்ஷோபலக்ஷ நன்முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட வெண்குடையை நின் அருகிலிருந்து ஸ்ரீலக்ஷ்மி அழகுடனும், கர்வத்துடனும் பிடிக்க, இந்திராணியும் ரதியும் நின் இருபுரமும் நின்று சுவாஸனையுடய மூலிகைகளால் செய்யப்பட்ட சாமரம்வீச, சரஸ்வதி தேவி நின் எதிரில் அமர்ந்து ‘கச்சபி’ எனும் தேவ வீணை வாசிக்க, அந்த தேவ வீணையின் இசைக்கு ஏற்ப தேவமகளிர் நாட்டியம் ஆட, இசையுடன் கூடியபாட்டும், நடனமும் உன்னால் ஏற்க்கப்படட்டும் அம்பிகே.

அம்பிகை, பாகம்-1ல் அளிக்கப்பட்ட ரத்தின ஸிம்ஹாஸனத்தில் அமர்ந்திருக்க, ஸ்ரீ லக்ஷ்மி அன்னை, அம்பிகைக்கு வெகு அருகில் நின்று பல, பல லக்ஷோபலக்ஷ வெண் முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட குடையை அன்னைக்கு வெகு அருகில் தாம் இருக்கிறோம் என்ற பூரிப்பிலும், கர்வத்திலும், தனக்கே உரிய நளினத்துடனும் குடை பிடிக்க, தேவகுல அரசனான இந்திரனின் ஸஹதர்மணியான இந்த்ராணி, தேவர் தேவிகள் எல்லோருடைய ப்ரதினிதி யாக ஒருபுரம் வெண் சாமரம் வீச, மறுபுரம் காமதேவனின் பத்தினியான ரதி தேவி இன்னொரு வெண் சாமரம் வீச, ரதிதேவிக்கு ஏன் இந்த சிறப்பு என்றால், அம்பிகைக்கு, மன்மதன் எனும் காமதேவன் ப்ரியமானவன். அம்பிகைக்கு காமதேவனுடைய செயல்களும், காமதேவனும் மிக விருப்பமானவைகள். இறைவியை இறைவனிடம் சேர்க்க தன்னையே விலையாக கொடுத்தவனன்றோ. அதுவுமல்லாமல், அம்பிகையை ஆராதிப்பவனும் கூட, லலிதா ரஹஸ்ய ஸஹஸ்ரத்தில் நாமம் 375 “காமபூஜிதா” என்றும் நாமம் 586 ல் “காமஸேவிதா” என்கிறது. அதுவுமல்லாமல், அம்பிகையே காருண்யமூர்த்தியன்றோ! நாமம் 376-ல் ஸ்ருங்கார ரஸ ஸம்பூர்ணா என்றும், நாமம் 863 “காமகேளீதரங்கிதா” என்றல்லவா பகர்கிறது.

ஸ்ரீ சரஸ்வதி, தேவ வீணையாம் கச்சபியை இசைத்து, தன் வீணையை விட மதுரமான த்வனியால் கீர்த்தனமிசைக்க (நாமம் – 27), இதையே தான் ஸ்லோகம் 66 சௌந்தர்யலஹரியும் எடுத்துறைக்கிறது.

இவையெல்லாம் அம்பிகைக்கு மிகவும் பிரியமான 64 உபசாரங்களில் ஒன்றாகும். இதைப்பற்றி மேல் விபர்ங்கள் மிக விரிவாக தந்த்ர ஸாஸ்திரங்களில் விவரிக்கப்படுகிறது. லலிதா ரஹஸ்ய ஸஹஸ்ரமும் நாமம் 235 இந்த 64 வித உபசாரங்களையே எடுத்துறைக்கிறது.

15 : ह्रींकारात्रयसंपुटेन मनुनोपास्ये त्रयीमौलिभिः
वाक्यैर्लक्ष्यतनो तव स्तुतिविधौ को वा क्षमेताम्बिके।
सल्लापाः स्तुतयः प्रदक्षिणशतं संचार एवास्तु ते
संवेशो नमसः सहस्रमखिलं त्वत्प्रीतये कल्पताम्॥

ஹ்ரீங்காரத்ரயஸம்புடேநமனுநோபாஸ்யேத்ரியீமௌலிபி:
வாக்யைர்லக்ஷ்யதநோதவஸ்துதிவிதௌகோவாக்ஷமேதாம்பிகே |
ஸல்லாபா:ஸ்துதய:ப்ரக்ஷிணசதம்ஸஞ்சாரஏவாஸ்துதே
ஸம்வேசோநமஸ:ஸஹஸ்ரமகிலம்த்வத்ப்ரீதயேகல்பதாம் ||

ஸ்ரீ திரிபுராம்பிகையின் அதிரஹஸ்யமான பஞ்சதஸியின் சக்தி கூடம் (எ) கடைசி வரியின் நான்காம் எழுத்து – ஹ்ரீம்

மூன்று ஹ்ரீங்காரங்கள் கூடிய மந்திரத்தால் உபாசிக்கப் படுபவளே! வேதாந்த வாக்கியங்களின் லட்சியமானவளே! என்னுடைய பேச்செல்லாம் உனக்கு தோத்திரங்களாகவும், என் சஞ்சாரங்களெல்லாம் உனக்குப் பிரதட்சிணமாகவும், நான் படுப்பதெல்லாம் உனக்கு நமஸ்காரங்களாகவும் இருக்கட்டும்.

உபனிஷத்களின் சூக்ஷம திருவே, உமையே, ஹ்ரீங்காரங்கள் மூன்றுடைய மந்திரத்தால் வழிபடப்படுபவளே, உன்னைப்போற்றி பாட்டெழுத யாரால் இயலும்? தாயே, என்னால் பேசப்படுபவை யாவும் நின் புகழே ஆகட்டும். எனது அங்க அசைவுகள் எல்லாம், நின் ப்ரதக்ஷிணங்களாகட்டும். கிடந்துறங்குவது, தாயே நின் பதகமலங்களுக்கு, என் ஸஹஸ்ர ஷாஷ்டாங்க நமஸ்காரங்களாக உன் அருளால் ஏற்றுக்கொள்ளப்படட்டும், என்று சங்கரர் இந்த 15வது ஸ்லொகம் செய்கிறார் என்றால், அவர் அம்பிகையின் ப்ராபவத்தை நன்கு புரிந்துகொண்டுள்ளார்.

எவராலும் விவரிக்க முடியாத ஒரு ஒளி ப்ரவாளத்தை எதோடு ஒப்பிட்டு வர்ணிப்பது? பரிணாமமே இல்லாத பொருளை எந்த பரிமாணத்தோடு ஒப்பிட்டு வர்ணிப்பது? அளவற்ற அழகை எந்த அளவை வைத்து எடை போடுவது? எல்லையில்லா கருணையுடையவளை கருணைக்கடலே என்று வர்ணிப்பது தகுமோ? கடலுக்குத்தான் எல்லையுண்டே!

இங்கு அம்பிகைக்கு நாம் சமர்ப்பித்ததெல்லாம் நாம் அவளிடமிருந்து பெற்றவைகளே. இடம், நிழல், நீர், உடை, உணவு, உணவளிக்கும் பாத்திரங்கள் என எல்லாமே அவளிடமிருந்தே வந்தவை அன்றோ?

எல்லவற்றையும் அவளாலேயே அருளப்பட்டபின், யாம் அவளுக்கு அளிப்பதுதான் ஏது? என்றம் எண்ணம் தோன்றும்போது, யாம் செய்யும் தவறுகள் நமக்கு புரிய ஆரம்பிக்கிறது. பீடங்கள் எதற்கு? அம்மை அமர்வதற்கா? அவள் அமர்ந்த பின்னேயல்லவோ அது நமக்கு மரமாக கண்டது. ரத்தினங்களே அவளேயன்றோ, பின்னர் எப்படி அவற்றை அவளுக்கு அளிப்பது? நமது, நாம் அளிக்கின்றோம் என்று. அம்பிகையை சகுண ப்ரம்மமாக வணங்கப் போய், நிர்குண ப்ரம்மமாக அல்லவோ அவளை காணவேண்டியதாயிற்று! இங்கு த்வைதம் மறைந்து அத்வைதம் உதிக்கிறது!

இனி நான் என்பது ஏது? எல்லாமே அவளேயன்றோ! என்ற எண்ணம் உதிக்கிறது.

16 : श्रीमन्त्राक्षरमालया गिरिसुतां यः पूजयेच्चेतसा
संध्यासु प्रतिवासरं सुनियतस्तस्यामलं स्यान्मनः।
चित्ताम्भोरुहमण्टपे गिरिसुता नृत्तं विधत्ते रसाद्वाणी
वक्त्रसरोरुहे जलधिजा गेहे जगन्मङ्गला॥

ஸ்ரீமந்த்ராக்ஷரமாலயாகிரிஸுதாம்ய:பூஜயேத்சேதஸா
ஸந்த்யாஸுப்ரதிவாஸரம்ஸுநியதஸ்தஸ்யாமலம்ஸ்யான்மந: |
சித்தாம்போருஹமண்டபேகிரிஸுதாந்ருத்தம்விதத்தேரஸாத்
வாணீவக்த்ரஸரோருஹேஜலதிஜாகேஹேஜகன்மங்களா ||

இந்த மந்திர அட்சர மாலையினால் அம்பிகையை காலை, மதியம் மாலையில் நிஷ்டையுடனும் பக்தியுடனும் யார் துதிக்கிறார்களோ, அவர்கள் சித்த சுத்தி அடைவார்கள்; அவர்கள் மனதில் தேவி நர்த்தனம் புரிவாள்; வாக்கில் சரஸ்வதியும் அவர்களின் இல்லங்களில் லக்ஷ்மியும் வாசம் செய்வார்கள்.

இந்த பகுதி ஸ்ரீம் என்று ஆரம்பிக்கிறது, இதை முன்பு பார்த்த பஞ்சதஸியுடன் சேர்த்தால் அது ஷோடஸாக்ஷரி மஹா மந்திரமாகிரது.

இந்த மந்திரமாத்ருகா ஸ்தவமானது, 15 பீஜங்களால் (க ஏ ஈ ல ஹ்ரீம் – ஹ ஸ க ஹ ல ஹ்ரீம் – ஸ க ல ஹ்ரீம்) ஆரம்ப எழுத்துக்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. மத்ருகா பொதுவாக ஸமஸ்க்ருத உயிர் எழுத்துக்களை குறிக்கும், சில சமயம் எல்லா எழுத்துக்களையும் குறிக்கவும் பயன்படுத்துவது உண்டு. மந்த்ர மாத்ருகா – அம்பிகைக்கே உறிய மந்திர எழுத்துக்களால் கோர்க்கப்பட்ட பூ மாலையாக, அம்பிகை அணியும் பொருட்டு அமைந்துள்ளது. லலிதா ரஹஸ்ய ஸஹஸ்ரத்தில் நாமம் 577 ல், “மாத்ருகா வர்ண ரூபிணி” அதாவது 51 எழுத்துக்களால் அலங்கரிக்கப்பட்டவள் என்றும், நாமம் 489 ல் “அக்ஷமாலாதி தரா” என்றும் அம்பிகையை போற்றுகின்றது. ஆதி சங்கரர், தீர்கதரிஸியன்றோ, ஆகையினாலேயே இந்த ஸ்தவத்தை பஞ்சதஸி மஹா மந்திரத்தின் எழுத்துக்களால் துவக்கி எல்லோரும் இன்புற்றிருக்க, அம்பிகையின் பேரருள் கிடைக்க வழி செய்துள்ளார்

இனி ஒரு விஷேஷம் கூட, அம்பிகையின் பூஜா முறைகளையும் இதில் தெளிவாக விளக்கியுள்ளார். ஆசனம், ஆயுதம், கிரீடம், அர்க்யம், பாத்யம், ஆசமனீயம், ஸ்நபநம், வஸ்த்ரம், ஆபரணங்கள், புஷ்பம், தூபம், தீபம், நைவேத்யம், பழவகைகள், கற்பூரவீடிகா கலந்த தாம்பூலம், நீராஜனம், மற்றும் உபசாரங்கள் போன்றவற்றை முதல் 14 ஸ்லோகங்களில் முடித்து 15 ஆம் ஸ்லோகத்தில் ஆத்ம நிவேதனத்தையும் செய்து காட்டிவிட்டாரே!

இந்த 16 ஆம் ஸ்லோகத்தில் இப்படி உபாஸிப்பதினால் உண்டாகும் பயனையும் உரைக்கிறார்.

17 :

इति गिरिवरपुत्रीपादराजीवभूषा
भुवनममलयन्ती सूक्तिसौरभ्यसारैः।
शिवपदमकरन्दस्यन्दिनीयं निबद्धा
मदयतु कविभृङ्गान्मातृकापुष्पमाला॥

இதிகிரிவரபுத்ரீபாதராஜீவபூஷா
புவனமமலயந்தீஸ¨க்திஸெளரப்யஸாரை: |
சிவபதமகரந்தஸ்யந்திநீயம்நிபந்தா
மதயதுகவிப்ருங்கான்மாத்ருகாபுஷ்பமாலைமிமி ||

அம்பிகையே, இந்த மாத்ருகா புஷ்பமாலை எனும் காதிவித்யா பஞ்சதஸி அடங்கிய மானஸ பூஜையை நின் திருப்பாதத்தில் ஸமர்ப்பித்து, நின் திருக்கால்களுக்கு கொலுசாக அணிவிக்கிறேன் அம்மா. நின் பாதம் பட்டு, இம்மந்திர மாலை நறுமணம் வீசட்டும், அந்த நறுமணம் உலகெலாம் உன் அருளால் வ்யாபிக்கட்டும். ஏற்றுக்கொள் தாயே.

இந்த மாத்ருகா புஷ்பமாலை மகிழ்ச்சியை தரட்டும். இதெல்லாம் மானசபூஜை. அதுவும் பஞ்சதாசாட்சரி மந்திரம் அடங்கியது.

மந்த்ர மாத்ருகா புஷ்ப மாலா ஸ்தவம் முற்றிற்று.

இப்படியாக சங்கர பகவத்பாதாள் அம்பிகைக்கு அர்ப்பித்த சகல உபசாரங்களையும் அருகிலுருந்து அவருக்கு உதவி நாமும் பங்கு கொண்டோம் அல்லவா! எப்பிறவியில் என்ன புண்யம் செய்திருந்தோமோ, இப்பிறவியில், அம்பிகையை மானஸீகமாக, ஆதி சங்கராச்சாரியாருடன் ஆராதிக்க ஒரு அவகாசம் கிட்டி நம்மை பாவனனாக்கியது!

மேற்கண்ட ஸ்தோத்திர பாராயண பலன் இங்கே, இது இந்த ஸ்லோகத்திலேயே 16-ஆம் பத்தியில் “பல ஸ்ருதியாக” உள்ளது.

“எவரொருவர், தினந்தோரும் காலையிலும் மாலையிலும் மந்த்ரபீஜாக்ஷரம் பொதிந்த இந்த ஸ்தோரத்தை மனம் வைத்து பாராயணம் செய்து தேவியை பூஜிக்கிறாரோ, அவர் மனம் அமைதி கொள்வது மட்டுமின்றி, அவர் ஹ்ருதயதாமரையில் ஸ்ரீ தேவி மகிழ்ச்சியுடன் களிநடனம் புரிவாள், நாவில், பேச்சில் ஸரஸ்வதீ நடனம் புரிவாள், வீட்டில் உலகுக்கெல்லாம் மங்கல நாயகியான லக்ஷ்மீ வாஸம் செய்வாள்.” எந்த பக்தனும், இதைவிட வேறொன்றும் இறைவனிடம் யாசிக்கப் போவதில்லையே!

குண்டலினி யோகத்தில் கிட்டும் அனைத்தும், பக்திமார்கத்தில் கிட்டிடும் போது, அல்லது, சாதாரணமான முறையில், உடலையும், உள்ளத்தையும் வருத்தாமல் எல்லாவற்றையும் அடைய வழிமுறைகள் இருக்கும்போது, ஏன் கடினமான வழிகளை தேர்வு செய்யவேண்டும்?

எளிய பக்தி மார்கம், மந்திர மார்கம், மற்றும் யந்திர தந்திர மார்கத்திற்கே, தேர்ச்சி பெற்ற குருவானவர், மிக மிக அவசியம். ஆரம்பத்தில், சாதாரண நிலையில், அனுஷ்டானங்களில் தேர்ச்சி பெற்றவர் குருவாக இருந்தால் போதும், இரண்டாவது நிலையிலேயே, தேர்ச்சி பெற்ற உபாஸகர், அதுவும் நீங்கள் தேர்வு செய்த தேவதா மூர்த்தியின் உபாஸகர் கண்டிப்பாகத் தேவை. இனி மூன்றாம் நிலையைப் பற்றியும், கடினமான நான்காம் நிலை பற்றியும் விளக்கவேண்டாம் என்று எண்ணுகிறேன்.

இனியும் ஒரு விஷயம். சிரம் தேயும், ராஜ்யம் தேயும், ந தேயா ஷோடஸாக்ஷரி என்று சொல்லப்பட்டிருக்கிறது. யான் அறிந்தவரை அதன் அர்த்தமாவது, ஷொடஸாக்ஷரியை உபாஸனை முறையை உபதேஸிக்க, அம்பிகையை அகல வேரு யாருக்கும் அதிகாரமில்லை. ஆயின், இது தான் ஷோடஸி, அம்பாளின் மிக ரஹஸ்ய மந்திரம், இதன் உபாஸனை முறைகளை அம்பிகையேதான் உபதேஸிப்பாள், அதற்கு தகுதியாக வேண்டுமென்றால், பஞ்சதஸியை உபாஸித்து அதில் சித்திபெற்று, ஷோடஸியை அம்பாளின் அனுக்ரஹத்தால் அடைவாயாக என்றல்லாவா பொருள் கொள்ள வேண்டும் அப்படி பொருள் கொண்டதால் தான், ஆதி சங்கரரிலிருந்து தீக்ஷிதர் வரை அந்த அத்புதமான மந்திரத்தை வெளியிட்டார்கள் –

உபதேசிக்கவில்லையே? முறையாக உபாஸனை செய், உன்னத நிலையடைவாய் என்றனரே தவிர.