திங்கள், 2 ஜூலை, 2018

அனுக்ரஹம் பரிபூர்ணம்...

அஞ்சலை என்ற இளம் வயதுப் பெண். அவள் ஒரு துப்புறவுத் தொழிலாளி. கணவன் இல்லை; இரண்டு சின்னச்சிறு பாலகர்கள்; கடுமையான வறுமை...

இதுதான் அஞ்சலையின் வாழ்க்கை.

பெரியவாளைப் பற்றி அவளுக்கு எதுவுமே தெரியாது! தெரிந்து கொள்ளும் சூழ்நிலையிலும் அவள் இல்லை...!

1984-ல் பெரியவா... அவள் இருந்த க்ராமத்துக்கு விஜயம் செய்தார். க்ராமத்தில் இருந்த பெரிய மனிதர்கள் முதல் எல்லோரும் பெரியவாளை தினமும் சென்று தர்ஶனம் செய்வதை கண்டாள்.

"நம்ம ஊருக்கு ஒரு ஸாமியார் வந்திருக்காங்களே...! நானும், அவரைப் போயி பாத்துட்டு வரப்போறேன்"

அக்கம்பக்கத்திலிருப்பவர்களிடம் கூறிவிட்டு, தன் குழந்தைகள் இருவரையும் அழைத்துக் கொண்டு பெரியவாளை வந்து நமஸ்கரித்தாள்.

பக்தி என்ற நிலையெல்லாம் அவளுக்கு என்னவென்றே தெரியாது.

நமஸ்காரம் பண்ணிவிட்டு குழந்தைகளுடன் நகர்ந்தவளை... தடுத்தாட்கொண்டது.... அவ்யாஜகாருண்யம்!

"அவ பேர்... என்னன்னு கேளு.."

பாரிஷதரிடம் சொன்னார்....

"ஒம்பேர் என்னம்மா? ஸாமிகிட்ட சொல்லு"

"அஞ்சலைங்க... ஸாமி ! "

"என்ன வேலை பாக்கற?.."

"துப்புறவு வேலை செய்யறேங்க ஸாமி !.."

"இவா... ரெண்டு பேரும்....?."

"இவங்க எம் பையனுங்க... ஸாமி! பெரியவன் நாலாப்பு படிக்கறான், இவன் சின்னவன் ஸாமி " 

கேட்ட கேள்விக்கு பதில் கூறிவிட்டு "அவ்வளவுதான்! " என்பதுபோல் குழந்தைகளோடு வாஸலுக்கு வந்து விட்டாள்.

பாவம் ! அவளுக்கு பக்தி பண்ணுவதில், எந்தவித முறையும் தெரியாது.

தெய்வம்... ஒருவருக்கு அனுக்ரஹம் பண்ண வேண்டும் என்று எண்ணிவிட்டால்......?????

"அவளக் கூப்டு!..."

"இந்தாம்மா! ஒன்ன... ஸாமி கூப்படறார்..."

பாரிஷதர் ஓடி வந்து அழைத்ததும், உள்ளே ஒரு வித பயத்தோடு மெல்லத் திரும்பி வந்தாள்.

"ஒம்பேரு அஞ்சலைன்னு சொன்னியே....! நீ எதுக்குமே பயப்பட மாட்டியோ?..."

அன்பும், குறும்பான புன்னகையும் பெரியவா முகத்தில் தவழ்ந்தது. (அஞ்சுதல் என்றால் பயம்)

எல்லாவற்றுக்கும் மேலே, பெரியவாளுடைய தீக்ஷண்யமான நயன தீக்ஷை அந்த ஏழைத் துப்புறவுத் தொழிலாளியின் ஹ்ருதயத்துக்குள் ஆழ்ந்து இறங்கி, தக்ஷணமே "உண்மையான மஹாபக்தை" என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டாள்!

விளையாட்டாக அவளோடு பேசுவது போல் சீண்டினார்....

"ஒன்னோட ரெண்டாவுது பிள்ளை, டில்லிலயா வேலை பாக்கறதா சொன்ன?.."

அஞ்சலைக்கு அவளையும் அறியாமல், லேஸாக சிரிப்பு வந்துவிட்டது.!

பக்கத்தில், ஒழுகும் மூக்கை உறிஞ்சிக் கொண்டு, அஞ்சலையின் புடவைத் தலைப்பை விடாமல் பிடித்துக் கொண்டு, கிழிந்து தொங்கும் ஒரு சாயம் போன நிக்கரும், பொத்தான் இல்லாத சட்டையோடு நிற்கும் தன் இரண்டாவது பாலகனைப் பார்த்தாள்.

பெரியவா கேட்ட கேள்விக்கு, சிரிப்பைத் தவிர அவளால் வேறு பதில் சொல்ல முடியவில்லை.

மிகவும் யதார்த்தமாக தெய்வத்தை மனஸில் catch பண்ணிக் கொண்டாள்.

அவளுடைய பதில் இனி எதற்கு?

அனுக்ரஹம் பரிபூர்ணம் !

அவளுக்கு பெரியவாளை பிடித்துக் கொள்ளத் தெரிந்துவிட்டது. அது போதாதா?

“எதற்காக இப்படிக் கேட்டார்?” என்றெல்லாம் கூட, அவள் மனஸை குழப்பிக் கொள்ளவேயில்லை.

( எல்லாத்தையும் படித்து, கேட்டு, அலசி ஆராயும் அறிவாளிகளான நாம்தான் குழப்பத் திலகங்களாக இருப்போம்)

தினமும் குளித்துவிட்டு, கற்பூரத்தை ஏற்றி ஸூர்யனுக்கு காட்டுவாள். அவளுடைய மனஸு முழுவதையும் பெரியவா ஆக்ரமித்திருந்தார்.

பெரியவாளுடைய ஒரு படம் கூட அவளிடம் கிடையாது.

அந்த 'மஹாஸாமி'யை படத்தில் வைத்துப் பூஜிக்கக் கூட தனக்கு அருகதை கிடையாது என்று எண்ணினாள்.

எந்த பெரிய பக்தருக்கும் தோன்றாத எண்ணமாக, எங்கும் வ்யாபித்த பெரியவாளை, பரந்து விரிந்த ஆகாஶத்தில், ஒளிப்பிழம்பாய் தோன்றும் ஸூர்யனாகக் ஆராதிக்கும் பக்குவத்தைப் பெற்றிருந்தாள்.

அவள் வாழ்வில் படிப்படியாக கஷ்டங்கள் குறைந்தன.

25 வருஷங்களுக்குப் பிறகு ரதயாத்ரையாக வந்த பெரியவா விக்ரஹத்தை, பெரியவா நேரிலேயே வந்தது போல் தர்ஶித்து பேரானந்தம் அடைந்தாள்.

"பெரியவங்க நம்மை விட்டுட்டு எங்கயும் போகலீங்க! அப்டி நெனைக்கறவங்க, அந்த தெய்வத்தைப் புரியாதவங்க! இந்த ரதத்துல... அவரு மெய்யாலுமே வந்திருக்காருன்னு நா... நிச்சியமா சொல்லுவேன்"

25 வர்ஷங்களுக்குப் பிறகு, இப்போதும் அவள் பக்கத்தில் அவளுடைய 27 வயஸு நிறைந்த அதே இளைய மகன் நின்றிருந்தான்!

"ஒன்னோட ரெண்டாவது பிள்ளை, டெல்லிலயா வேலை பாக்கறதா சொன்ன?"....

25 வர்ஷங்களுக்கு முன்பு, பெரியவா விளையாட்டு போல் கேட்ட போது, அப்போதும் அவளுடைய ரெண்டே வயஸான மகன், மூக்கை உறிஞ்சியபடி, மலங்க மலங்க பார்த்துக் கொண்டு, அவளுடைய புடவை தலைப்பை பிடித்தபடி நின்று கொண்டிருந்தான்!

அதே மகன்தான்!....  இன்று லீவில் ஊருக்கு வந்திருந்தான்....

"டில்லியில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தில் உயர் அதிகாரியாக இருக்கிறான்"

"பெரியவா எனும் அம்ருத ஸாகரம், குறிப்பிட்ட ஒரு ஸாராருக்குத்தான்!" என்ற பொய்யை, மஹாப் பொய்யென்று நிரூபித்தவர்களில், அஞ்சலையும் ஒருத்தி!

இவ்வளவு தூரம் பெரியவாளை க்ரஹித்துக் கொள்வதற்கு அவளிடம் போலித்தனமோ, படாடோபமோ இல்லாத அமைதியான நம்பிக்கை மட்டுமே இருந்தது!

ஸூர்யனின் ஒளிக்கு உயர்வு-தாழ்வு பேதங்களே இல்லை. அந்த ஒளியை க்ரஹித்து கொள்ளுவதும், தள்ளுவதும் நம்முடைய கர்மபலனே!

ஆனால், கர்மபலன் மேல் பழியை போடாமல், மனஸார துளியாவது நம்பிக்கையோடு பகவானிடம் அன்பு பூண்டால் போதும்!

ஆம்! அவன் மேல் கொள்ளும் அசைக்க முடியாத நம்பிக்கையால், நம் விதி இறந்து போகும்!
ஸ்ரீ மஹா பெரியவா
**********************************************************
காஞ்சி ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயில் சீமா பட்டாச்சாரி அவர்களின் அனுபவம் வேறு யாருக்கும் கிட்டாத பாக்யமாக அமைந்துள்ளது.

வரதர் கோயிலில் பிரும்மோத்ஸவம். ஆறாம் நாள் உற்சவம். பெருமாள் ஸ்ரீ வேணுகோபாலனாக சேவை சாதித்து அருளி வீதி வலம் வருகிறார். ஸ்ரீ வேணுகோபாலனாக அதி அற்புத அழகில் சீமா பட்டாச்சாரி பரவசமுறுகிறார்.

பெருமாள் திருவீதிவலம் ஸ்ரீ மடத்தின் எதிரே வந்தடைகிறது. ஸ்ரீமடத்திலிருந்து சாட்சாத் ஈஸ்வரரான ஸ்ரீ பெரியவா வெளியே வந்து பக்தி பரவசத்துடன் ஊர்வலம் வந்து நிற்கும் பரமனை தரிசித்து நிற்கிறார்.

சீமா பட்டர் இந்த அரிய காட்சியால் உணர்ச்சி பெருக்கெடுத்து நிற்கிறார். அப்போது அவருக்கு ஒரு அதிசய அனுபவம் ஸ்ரீ வேணுகோபாலனை தரிசித்து நிற்கும் ஸ்ரீ பெரியவாளிடம் அவர் பார்வை சென்றபோது, அங்கே ஸ்ரீ பெரியவாளை இவரால் காண இயலவில்லை. அதற்கு பதிலாக அதே இடத்தில் திரு உலாவரும் ஸ்ரீ வேணுகோபாலன் அலங்கார அழகோடு நிற்பதை தரிசித்து சற்றே சீமா பட்டர் அதிர்ச்சியுறுகிறார். இந்த அற்புதத்தை தாங்க முடியாமல் பட்டர் திணறிபோய் ஸ்தம்பித்து நிற்கிறார். பரவசத்தில் தோய்ந்தவராய் பட்டர் எல்லையில்லா ஆனந்தத்தில் மூழ்கி நிற்கிறார்.

இந்த அதி அற்புதம் ஒரு நொடிப் பொழுதில் பட்டருக்கு மட்டும் அருளப்பட்டு மறைகிறது.

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவாளே ஸ்ரீ வேணுகோபாலன் என்ற மாபெரும் ரகசியம் பட்டருக்கு இதனால் தெளிவாக அருளப்பட்டுவிட்டது.

இது உண்மைதான் என்பது ஊர்ஜிதமாக சீமா பட்டருக்கு மற்றொரு சம்பவமும் அனுபவமானது. ஸ்ரீ பெரியவாள் தேனம்பாக்கத்தில் அருளிக்கொண்டிருந்த சமயமது. ஒருநாள் பெருமாள் கோயிலிலிருந்து சீமா பட்டரை ஸ்ரீ பெரியவா அழைத்துவர ஆக்ஞையிட்டார்.

சீமா பட்டாசாரியாரும் வந்து நின்று வந்தனம் செய்தார்.

“இன்னிக்கு என்ன திதி” என்று ஸ்ரீ பெரியவா பட்டரை கேட்டார்.

பட்டர் மெதுவாக “ஏகாதசி” என்றார்.

“உபவாசம் நமக்கு மட்டும் தானே? இல்லே வரதனுக்கும் தானா?” இப்படி ஸ்ரீ பெரியவா கேட்டதும் பட்டர் வெலவெலத்து போனார்.

ஸ்ரீ பெரியவா தொடர்ந்து கேட்டார் “பெருமாளுக்கு இன்னிக்கு நைவேத்யம் ஏன் செய்யவில்லை?”

இந்த கேள்வியால் பட்டர் அதிர்ச்சி அடைந்தார். அவருடைய நாக்கு குழறியது “தெரியல்லே…. விசாரிச்சுண்டு வரேன்” என்று சொல்லிவிட்டு கோயிலுக்கு பட்டர் திரும்பிச் சென்றார்.

அங்கு சென்று விசாரித்தபோதுதான் உண்மை தெரிய வந்தது. கோயிலின் உள்கட்டில் ஏதோ தவறு நடந்துள்ளது தெரிய வந்தது. அதனால் பெருமாளுக்கு நைவேத்யம் செய்யாமல் விடுபட்டுவிட்டிருந்தது.

உடனே பட்டர் அதை சரிபடுத்தி, தக்க பிராயச்சித்தம் செய்து பெருமாளுக்கு அதன்பின்னே திருவமுது படைக்கப்பட்டது. பிரசாதத்தை உடனே ஸ்ரீ பெரியவாளிடம் பட்டர் கொண்டு சமர்ப்பித்தார்.

வரதராஜ பெருமாளுக்கு நைவேத்யம் நடக்கவில்லை என்பது ஸ்ரீ பெரியாளுக்கு எப்படி தெரிந்தது? தெரிந்திருந்தாலும் அதைப் பற்றி கவலைபடுவானேன்?

இப்படி சீமா பட்டர் சந்தேகமாக நினைக்க வாய்ப்பே இல்லாமல் போனது. சாட்சாத் ஸ்ரீ வேணுகோபாலனேதான் ஸ்ரீ பெரியவா என்ற உண்மையை அனுபவித்த பாக்யம்தான் ஏற்கனவே பட்டருக்கு கிடைத்துள்ளதே!

ஸ்ரீ வேணுகோபாலனாக சீமா பட்டருக்கு காட்சித் தந்த மகான் இன்னும் பல பக்தர்களுக்கும் அவர்கள் இஷ்ட தெய்வங்களாக தரிசிக்கும் பாக்யம் அருளியுள்ளார். பரப்பிரம்ம சொரூபத்தில் அத்தனை தெய்வங்களும் அடக்கமாகின்ற இந்த மேன்மை இயல்பல்லவா?

இப்பேற்பட்ட எல்லாமுமாகி நின்றருளும் நடமாடும் தெய்வமான ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவாளிடம் நாம் கொள்ளும் பரிபூர்ணபக்தி நமக்கெல்லாம் சர்வ ஐஸ்வர்யங்களை தந்து சகல மங்களங்களையும் அருளும்!

பெரியவாள் வாழும் காலத்திலே நாமும் வாழ்கிறோம் என்பதுதான் எத்தனை பெரிய பாக்யம் !

அவரைப் பார்ப்பதற்கும் அவரது அருள் வாக்கைக் கேட்பதற்கும் என்ன தவம் செய்தோமோ

காமகோடி தரிசனம் காணக்காணப் புண்ணியம்
ஐந்து வகை ஸ்நானங்கள் பற்றி காஞ்சி மகாபெரியவர்…

காஞ்சி மகாபெரியவர் சாஸ்திரத்தில் 5 வகை ஸ்நானங்கள் பற்றி சொல்லப் பட்டிருக்கிறது. ஸ்நானம் என்றவுடன் நாம் தினமும் செய்கிறதான ஜலத்தில் குளிப்பது… இது, ‘வாருணம்’ என்று அழைக்கப்படுகிறது.

இந்த வாருணம் என்பதும் குளம், ஆறு போன்றவற்றில் முங்கிக் குளித்தலே! இதுவே முக்கிய ஸ்நானம். மற்றபடி பாத்திரம் போன்றவற்றால் நீரை எடுத்து விட்டுக் கொள்வது போன்றவை, இரண்டாம்பட்சம்தான். இதற்கு அப்பறம் வருவதுதான், ‘கௌண’மாக கழுத்து வரை குளிப்பது, இடுப்பு வரை குளிப்பது போன்றவையெல்லாம்! ஆனால் இந்த கௌண ஸ்நானங்கள் எல்லாம், ஜலத்தால் நீரால் செய்யும் வாருணத்தில் வருவதுதான்.

இல்லங்களில் சளி,ஜுரத்தில் இருக்கும் போது விபூதி ஸ்நானம் செய்வார்கள் பெரியோர். இது இரண்டாம் வகை. இதற்கு ஆக்நேயம் என்று பெயர். அக்னி ஸம்பந்தமுடையது என்று பொருள். அக்னியின் பஸ்மத்தால் கிடைக்கும் பஸ்மத்தை,சாம்பலை ஜலம் விட்டுக் குழைக்காமல் வாரிப் பூசிக் கொள்வதை பஸ்மோத்தூளனம் என்கிறோம்.

பசுக்கள் கூட்டமாகச் செல்லும் போது எழும் குளம்படி மண் புனிதமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு கோ தூளி என்று பெயர். ஸ்ரீகிருஷ்ணனே இந்தப் பசுக்களின் குளம்படித் தூள், சந்தனப் பொடி தூவினதுபோல தனது உடம்பில் படிந்தபடி ‘கோதூளீ தூஸரிதனாக’ இருந்தானாம். இவ்வாறான ‘கோதூளி’ நம்மீது படும்படியாக நின்று அந்த மண்துகள்கள் நம் உடலில் ஏற்பது மூன்றாம் வகையான ஸ்நானம். இதன் பெயர் ‘வாயவ்யம்’. இது வாயுவுடன் சம்பந்தமுடையதாக இருப்பதால், அதாவது காற்றினால் பறக்கும் மண் தூசி என்பதால் இதன் பெயர் வாயவ்யம்.

அபூர்வமாக சில தருணங்களில் வெய்யில் அடிக்கும்போதே மழையும் பொழிகிறதல்லவா..? இவ்வாறான மழைஜலம் தேவலோகத்திலிருந்து வரும் தீர்த்தத்துக்கு சமம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதில் குளிப்பது ‘திவ்யஸ்நானம்’. இதுவே நான்காம் வகை ஸ்நானம்.

புண்யாக வாசனம், உதகசாந்தி போன்றவை செய்தபின் மந்திர ஜலத்தை புரோகிதர் நம் மீது தெளிப்பார். சந்தியாவந்தனத்தில் ‘ஆபோஹிஷ்டா’ சொல்லி நீரைத் தெளித்துக் கொள்கிறோம். இவ்வாறு அபிமந்திரித்து தெளித்துக் கொள்ளுவது ஐந்தாம் முறை. இதன் பெயர் ‘ப்ராஹ்மம்’. ‘ப்ரம்மம்’ என்றால் வேதம், வேத மந்திரம் என்று ஒரு அர்த்தம். ஆகவே வேத மந்திரத்தால் புனிதப்படுத்தப்பட்ட தீர்த்தப் புரோக்ஷணத்துக்கு, ‘ப்ராஹ்ம ஸ்நானம்’ என்று பெயர்.

பார்க்கப் போனால் எல்லா ஸ்நானமுமே ப்ராஹ்மம்தான். எந்தக் காரியமானாலும் அந்தக் காரியத்தை மட்டும் பண்ணாமல், அதோடு மந்திரத்தையும் சேர்த்து ஈச்வர ஸ்மரணையுடன், ஈஸ்வரார்ப்பணமாகப் பண்ணுவதாகவே அத்தனை ஆசாரங்களும் ஏற்பட்டிருக்கின்றன

ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர! காஞ்சி சங்கர! காமகோடி சங்கர!
மஹா பெரியவா அற்புதங்கள்
==========================

""மஹாபெரியவா அணிந்த துளசிமாலை !!""

சாதாரணமான ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவன் அவன். வயது பன்னிரண்டு அல்லது பதிமூன்று இருக்கலாம். ஐந்தாவதோ ஆறாவதோ படித்துக் கொண்டிருக்கலாம்.

மாநிறம். எண்ணெய் அதிகம் கண்டிராத தலை. தடிமனான அரை டிராயர்; கசங்கிப் போன மேல்சட்டை… அரை டிராயரும் மேல்சட்டையும் என்ன நிறம் என்பதைப் பார்த்த மாத்திரத்தில் எவரும் சொல்லி விடமுடியாது. அழுக்கேறிப் போயிருந்தாலும் அந்த ஆடைகள் அவ்வப்போது துவைத்துத் தான் அணியப் படுகின்றன என்பதை அதைப் பார்க்கும் எவராலும் புரிந்து கொள்ள முடியும். நெற்றியில் ஒரு வளைந்த கீற்றாக முறையே இல்லாமல் ஏனோ தானோ என்று விபூதி பூசப்பட்டிருந்தது. ஒருவேளை இங்கு கிளம்பி வருகிற அவசரத்தில் அவனது அம்மா இட்டு விட்டிருக்கலாம். தேர்வு காலங்களில் கிராமத்தில் இருப்பவர்கள் தெருமுனையில் உள்ள பிள்ளையார் கோவிலுக்குப் போய், ஒரு சின்ன கற்பூரத்தை ஏற்றி வைத்து, பேனாவை பிள்ளையார் பாதத்தில் வைத்து வழிபட்டு விட்டுப் பரிட்சை எழுதப் போவார்கள். இது ஒரு விதமான நம்பிக்கை. அதாவது இறைவன் அருளோடு தேர்வு எழுதப் போகிறோம் என்கிற ஒரு தைரியம் மாணவர்களுக்கு வரும். அது போல் இந்த சிறுவன் காஞ்சிபுரத்தில் வசிப்பவன் என்பதாலும், மஹா பெரியவாளின் சாந்நித்யம் பற்றி யாரோ சொல்ல – அவன் தகுதிக்கு ஏதோ கேள்விப்பட்டிருந்தாலும் இன்று தேர்வு எழுதப் போகும் முன் ஸ்ரீமடத்துக்கே வந்து விட்டான் போலிருக்கிறது.

விடிகாலை நேரத்தில் விஸ்வரூபதரிசனம் காண வந்திருந்த பக்தர்கள் பலரும் இன்னமும் நகராமல் அங்கேயே நின்றிருந்தபடி பெரியவா தரிசனத்தில் திளைத்திருந்தார்கள்.

இதைத் தவிர, காலை வேளையில் ஏராளமான பக்தர்கள் வேறு ஸ்ரீமடத்தில் குவிந்து விட்டிருந்தார்கள். நாம பஜனைகளும் சங்கர கோஷமுமாக ஸ்ரீமடமே பக்தி மணம் கமழ… அருள் நிரம்பிக் காணப்பட்டது.

இவ்வளவு கூட்டம் பெரியவா தரிசனத்திற்காகக் காத்து நின்றாலும், சிறுவனாகப் பட்டவன் வரிசையில் நின்று கொண்டிருக்கும் எந்த ஒரு பக்தரைப் பற்றியும் கவலைப் படாமல், ராஜபாட்டை போல் விறுவிறுவென்று நடந்து மஹா பெரியவாளின் சந்நிதியை நெருங்கினான்.

முகத்தில் உற்சாகம் கொப்பளிக்க, பெரியவாளைப் பார்த்தபடியே நின்றான். அவனை எவரும் தடுக்கவில்லை. ஏதும் கேள்வி கேட்கவில்லை. காரணம் – அந்தச் சிறுவனின் ஆர்வத்தையும் பரபரப்பையும் பார்த்த பின் இயல்பான அந்த பக்திக்குத் தடை போட எவருக்கும் விருப்பமில்லை.

“மடத்துக்குப் போய் சாமியைக் கும்பிடணும்னா, அவருக்குத் தோதா ஏதாவது எடுத்துட்டுப் போகணும்” என்று அவனுக்கு யார் சொல்லிக் கொடுத்தார்களோ…. தெரியவில்லை. தன் கையில் தொடுத்த ஒரு மாலையை வைத்திருந்தான்.

அந்த மாலையைப் பார்த்த பல பக்தர்களும் வெவ்வேறு விதமான உணர்ச்சிகளைத் தங்களுக்குள் வெளிப்படுத்திக்கொண்டு விமர்சித்துப் பேசினார்கள்.

சிலர் வியந்தார்கள்; சிலர் வெளியே ஏதும் பேச முடியாமல் தங்களுக்குள் கேலியாகச் சிரித்துக் கொண்டார்கள்.
பலரது விமரிசனத்துக்கும் கேலிச் சிரிப்புக்கும் உள்ளான அந்த மாலையில் அப்படி என்ன விசேஷம் என்கிறீர்களா?
அது – துளசி மாலை!

அதுவும் துளசியை அடர்த்தியாக – கொத்துக் கொத்தாக வைத்துக் கட்டப்பட்ட மாலை இல்லை. தனித் தனி துளசி இலைகளைக் கோணாமாணா என்று – ஒரு முறை இல்லாமல் கோர்த்துத் தொடுக்கப்பட்டிருந்த மாலை.

ஒருவேளை அடுத்தடுத்து துளசி இலைகளை நெருக்கமாக வைத்துத் தொடுத்திருந்தால் அதில் இடைவெளி என்பதே தெரியாமல் போயிருக்கும். ஆனால் இந்தச் சிறுவன் தொடுத்துக் கொண்டு வந்திருந்த துளசி மாலையில் இடைவெளி அதிகம் தெரிந்தது. அதனால் பார்த்தவுடன் ’மாலை’ என்று சொல்வதற்கு எவருக்கும் வாய் வராது.

இதில் இன்னொரு அலங்கோலமும் வெளிப்பட்டது. அதாவது இறைவழிபாட்டிற்குக் கொண்டு செல்கிற துளசியைப் பெரும்பாலும் வாழைநாரில்தான் கட்டுவார்கள். ஆனால் இந்தச் சிறுவன் ஒரு சணலில் இந்த ’மாலை’யைக் கட்டி எடுத்து வந்திருந்தான்.

(வீட்டில் ஏதாவது பொருளைக் கட்டி வைத்திருந்த மூட்டையில் இருந்த சணலை மட்டும் பிரித்து எடுத்திருப்பான் போலிருக்கிறது). இது போன்ற காரணங்களால் சிறுவன் எடுத்து வந்திருந்த துளசி மாலையைப் பார்த்து சிலர் சிரித்தார்கள்.

ஆனால் பக்குவப்பட்ட சிலர், ”இந்த வயதில் இந்த அளவுக்கு பெரியவாளிடம் ஒரு பக்தி இருக்கிறதே… வெறுங்கையோடு வரக்கூடாது என்கிற நாசூக்கு தெரிந்திருக்கிறதே” என்று நெகிழ்ந்தார்கள்.

ஒரு கட்டத்தில் பெரியவாளின் திருப்பார்வை அவன் மேல் விழுந்தது. ஒரு புன்னகையை உதட்டோரம் தவழ விட்டு, ”அருகில் வா” என்பது போல் அவனுக்கு ஜாடை காட்டினார்.
விறுவிறுவென்று நடந்து முன்னுக்கு வந்தான்.

”என்ன?” என்பது போல் ஆச்சரியமான முகத்துடன் தலையை மேலும் கீழும் அசைத்து ரசனையாகக் கேட்டது அந்தப் பரப்ரம்மம்.

சிறுவன் சந்தோஷமானான். தனக்கு உரிய அங்கீகாரம் இந்த சந்நிதானத்தில் கிடைத்துவிட்டது என்பதாக மகிழ்ந்தான்.

கையில் துளசி மாலையோடு பெரியவாளை இன்னும் நெருங்கி, அவரின் திருவடி அருகே இதை சமர்ப்பித்தான். பெரியவாளின் கைங்கர்யப் பணிக்காக அங்கே இருந்த சீடர் ஒருவர் அந்த துளசி மாலையை அங்கிருந்து எடுத்து வேறு இடத்தில் சேர்ப்பிப்பதற்காகக் குனிந்தார்.

சற்றே நிமிர்ந்து அந்த சீடரைப் பார்த்த பெரியவா, ’வேண்டாம்’ என்பது போல் வலது ஆட்காட்டி விரலை இடப்புறமும் வலப்புறமும் அசைத்து சமிக்ஞை செய்தார். சீடரையும் தள்ளி நிற்கச் சொன்னார். அந்த மாலையைத் தான் அகற்றுவதைப் பெரியவா விரும்பவில்லை என்பதைப் புரிந்து கொண்ட சீடன், நின்ற வாக்கிலேயே அப்படியே ரிவர்ஸில் நகர்ந்து கொண்டான்.

”எக்ஸாம் இன்னிக்கு இருக்கோ?” – சிறுவனைப் பார்த்துப் பெரியவா கேட்டார்.

இவ்வளவு பேர் கூடி இருக்கும் இடத்தில் தன்னைப் பார்த்துப் பெரியவா ஒரு கேள்வி கேட்கிறார் என்பது அந்தச் சிறுவனின் முகத்தில் ஏராளமான சந்தோஷத்தைக் கொடுத்திருந்தது. தவிர, தனக்குத் தேர்வு இருப்பதைப் பெரியவா எப்படிக் கண்டு பிடித்தார் என்கிற ஆச்சரியமும் அவன் முகத்தில். பிரகாசமானவன், “ஆமா சாமி, இன்னைக்கு சயின்ஸ்” என்று கூடுதல் தகவலையும் சொன்னான்.

”துளசி மாலையை எனக்காகக் கொண்டு வந்தியோ?” என்று அவனைப் பார்த்துக் கேட்டு, அந்த மாலையைக் கையில் எடுத்தார்.

இப்படியும் அப்படியும் அதை ஆராய்ந்தார். தான் காணிக்கையாக எடுத்து வந்திருந்த மாலையைப் பெரியவா தன் கையால் எடுத்து விட்டார் என்பதைப் பார்த்த மாத்திரத்திலேயே அச்சிறுவனுக்குப் பெருமை பிடிபடவில்லை…”எங்க வீட்டுலேயே துளசிச் செடி இருக்கு… அதுலேர்ந்து நானே பறிச்சுக் கட்டினேன்.”

அந்தப் பரப்ரம்மம் அவனைப் பார்த்துச் சிரித்தது. கூடி இருந்த திரளான பக்தர்களும் அடுத்துப் பெரியவா என்ன செய்யப் போகிறார் என்பதைக் கவனிப்பதில் ஆர்வமானார்கள். ஒரு க்ஷண நேரத்தில் இந்தச் சிறுவன் பெரியவரின் கவனத்தை இப்படிக் கவர்ந்து விடுவான் என்று அங்கிருந்த எவரும் எதிர் பார்க்கவில்லை. சிறுவன் மேல் பெரியவா செலுத்தும் கரிசனத்தைக் கண்டு, சீடர்களும் மடத்துச் சிப்பந்திகளும் கூட அதிசயப் பட்டுப் போனார்கள்.

அந்தத் துளசி மாலையை தன் கையில் எடுத்துக் கொண்டார். வலக் கரத்தால் அந்த மாலையை எடுத்துத் தன் தலைக்கு மேல் வைத்தார். என்ன புண்ணியம் செய்ததோ அந்தத் துளசி மாலை! பெரியவாளின் தலையில் அமர்ந்து கொண்டது. துளசி மாலை பெரியவா சிரசில் அப்படியே நின்றது. சுற்றிலும் நின்றிருந்த தன் பக்தர்களை இப்படியும் அப்படியும் திரும்பிப் பார்த்தார் பெரியவர்.

எல்லாப் பக்கமும் திரும்பிப் பார்க்கிற வேளையில் அவர் முகத்தில் ஒரு புன்னகை ததும்பியது. ”இந்தக் கோலத்தில் நான் எப்படி இருக்கேன்? இந்த மாலை நன்னா இருக்கா?” என்று பெரியவா கேட்பதாக எல்லோருக்கும் பட்டது.

பெரியவாளுக்கு சமர்ப்பிக்க வேண்டி பக்தர்கள் வாங்கி வந்திருந்த எத்தனையோ மலர் மாலைகள் அவருக்கு முன்னால் – சற்றும் மணம் குறையாமல் – மலை போல் குவிந்திருந்தன. ரோஜா, மல்லிகை, சம்பங்கி என விதம் விதமான மலர்களைக் கொண்டு மிகவும் நேர்த்தியாகத் தொடுக்கப்பட்டிருந்த மாலைகள் அவை.

ஆனால், அனைத்தையும் விட்டு விட்டு, ஒரு ஒழுங்குமுறையே இல்லாத, ஒரு மாலைக்கு உரிய எந்த விதமான இலக்கணத்திலும் சேராத, சாதாரண சிறுவன் கொண்டு வந்த துளசி மாலை ஏனோ பெரியவாளுக்குப் பிடித்து விட்டது. தானே அதை ஸ்வீகரித்துக் கொண்டார்.

’இதுதான் பக்தி’ என்பதை அங்கு வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் உணர்த்தும் விதத்தில், ‘இந்த மாலையை அணிந்திருக்கிற நான் எப்படி இருக்கேன்?’ என்பதாக அனைவரையும் பார்த்தாரோ?

எத்தனையோ மலர் மாலைகள் இருந்தும் அன்பின் மிகுதியால் – ஆர்வத்தின் வெளிப்பாடாகத் தொடுத்துக் கொண்டு வரப்பட்ட இந்தத் துளசி மாலை என் உள்ளத்தைக் கவர்ந்து விட்டது என்பதைப் பகட்டான பக்தர்களுக்கு உணர்த்துகிறாரோ?

பக்தி என்றால் என்ன என்பதைப் பற்றிப் பெரிதும் படிக்காத, கேட்காத இந்தச் சிறுவன் தன் செய்கையால் அங்கிருந்த அனைவருக்கும் பெரியவரின் அருட்செயலின் மூலம் உணரச் செய்து விட்டான்.

செல்வச் செழிப்பில் திளைக்கும் எத்தனையோ பக்தர்கள் குவிந்திருக்கும் இந்த சந்நிதானத்தில் தான் அன்புடன் எடுத்து வந்திருக்கும் ஒரு துளசி மாலைக்கு இவ்வளவு மரியாதையா என்று சிறுவன் திகைத்துப் போனான்.

அவன் விழிகளில் லேசாக ஈரம் ததும்பியது. சரேலென்று தரையில் விழுந்து பெரியவாளை நமஸ்கரித்தான். எழுந்து நின்றான்.

சுமார் பத்து நிமிடங்கள் கழித்துத் தான் அந்தத் துளசி மாலையைத் தன் தலையிலிருந்து எடுத்துக் கீழே வைத்தார் பெரியவா. புன்னகை அரும்ப அந்த சிறுவனை ஆசீர்வதித்தார். கல்கண்டும் குங்குமமும் கொடுத்தார்.
தன் தலையில் வைத்திருந்த மாலையை அருட் பிரசாதமாக அவனிடமே கொடுத்தார்.

அதன் அருமை தெரிந்தோ தெரியாமலோ பயபக்தியுடன் வாங்கிக் கொண்டான். எந்த ஒரு மாலையைப் பார்த்துப் பரிகசித்துத் தங்களுக்குள் விமர்சித்துக் கொண்டார்களோ, அந்த பக்தர்கள் இப்போது நெகிழ்ந்து போனார்கள். அவர்களின் பரிகசிப்புக்கு உள்ளான மாலை இப்போது புனிதம் பெற்று விட்டது.

மாலையைப் பெற்றுக்கொண்டு வெளியேறும் அந்தச் சிறுவனிடம் இருந்து, “குழந்தே, அதில் இருந்து ரெண்டு துளசி தளங்களைப் பிய்ச்சு எங்ககிட்ட தாயேன். அது பெரியவா பிரசாதம்” என்று கெஞ்சும் குரலில் கேட்டனர்.

அப்படிக் கேட்டவர்களுக்கெல்லாம் துளசி இலைகளைப் பிய்த்துக் கொடுத்துவிட்டு, “எக்ஸாமுக்கு டயமாச்சு. ஸ்கூல்ல பெல் அடிச்சுடுவாங்க..” என்று சொல்லி விட்டான் ஒரே ஓட்டம்! இன்று சயின்ஸ் தேர்வாயிற்றே!

ஹர ஹர சங்கர!! ஜெய ஜெய சங்கர !!  காஞ்சி சங்கர!! காமகோடி சங்கர!!
தை அமாவாசை சற்று நிதானமாக படிக்கவும்

🍃சிரார்த்தம், திதி, தர்ப்பணம், மஹாளயம் மற்றும் பித்ரு தோஷ பரிகாரம் – ஐயம் போக்கும் முழுமையான அறுபது தகவல்கள்.

🍃1. வீட்டில் பசியால் வாடும் தனது வயதான பெற்றோர்களுக்கு சாப்பாடு கொடுக்காமல் தெய்வத்திற்கு சர்க்கரைப் பொங்கல் போன்ற பொருட்களை நிவேதனம் செய்வதாலும் ஆடை இன்றி பெற்றோர்கள் கஷ்டப்படும் போது தெய்வங்களுக்கு பட்டு வஸ்திரங்களை அணிவிப்பதாலும் எந்த பலனும் கிடைக்காது. பித்ருதோஷம்தான் ஏற்படும்.

🍃2. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய மாதத்தில் தர்ப்பணம் நடைபெறும் நாளுக்கு முன்பாக தர்ப்பணம் செய்பவர் தனது வீட்டில் தினசரி தெய்வங்களுக்கு செய்யும் பூஜையைத் தவிர வேறு எந்த ஒரு விசேஷமான பூஜைகளையோ ஹோமத்தையோ செய்யக் கூடாது.

🍃3. தர்ப்பணம் செய்ய வேண்டிய மாதத்தில் சிரார்த்தம் செய்யும் முன்பாக தங்கள் வீட்டு மங்கள நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.

🍃4. தர்ப்பணம் செய்யும் நபர் தர்ப்பணம் செய்யும் முன்பாக அந்த மாதத்தில் மற்ற இடங்களில் நடை பெறும் எந்த ஒரு பூஜைகளிலும் ஹோமங்களிலும், ஆலய நிகழ்ச்சிகளிலும் தனது பெயர் சொல்லி சங்கல்பம் செய்து கொள்ளக் கூடாது.

🍃5. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளன்று, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து  மூடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை நிறுத்தி வைத்து விட்டு, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய தெய்வ சம்பந்தமான பூஜைகளைச் செய்ய வேண்டும்.

🍃6. சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்திருக்கும் நாளான அமாவாசையன்று பித்ருக்களுக்கு பசியும் தாகமும் அதிகமாக ஏற்படும் என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன.

🍃7. அமாவாசை திதியை பித்ரு திதி என்று கூறி அன்றைய நாளில் இறந்தவர்களின் பசியையும் தாகத்தையும் போக்க கறுப்பு எள் கலந்த தண்ணீரால்  தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனால் இறந்தவர்களின் பசியும் தாகமும் விலகி ஆசி வழங்குவார்கள்.

🍃8. அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த தண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. அன்றைய தினம் வீட்டில் தர்ப்பணம் செய்து அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரப்படவில்லை என்றால் அவர்கள் ஏமாற்றமடைந்து வருத்தப்பட்டு கோபத்தோடு செல்கிறார்கள் என்றும், ஒரு சில பித்ருக்கள் சாபம் கூட தந்து விட்டுச் செல்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

🍃9. மறைந்த முன்னோர்களுக்கு நாம் செய்யும் சிரார்த்தங்களும், தர்ப்பணங்களும் நமது குடும்பத்தினரின் நன்மைக்காவே செய்யப்படுகிறது. அகவே தவறாது சிரார்த்தத்தையும் தர்ப்பணங்களையும் செய்ய வேண்டும்.

🍃10. மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகிய நான்கு மாதங்களிலும் கிருஷ்ணபட்ச அஷ்டமி திதியன்று அஷ்டகை எனப்படும் சிரார்த்தம் செய்ய வேண்டும்.

🍃11. மன்வாதி 14 நாட்களிலும் யுகாதி 4 திதிகளிலும் பித்ருக்களுக்கு கொடுக்கப்படும் தர்ப்பணம் ஆயிரம் ஆண்டுகள் வரை முன்னோர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

🍃12. மன்வாதி யுகாதி நாட்களில் செய்யப்படும் புண்ணிய நதி நீராடல், ஜெபம், ஹோமம் ஆகியவை கூடுதல் பித்ரு புண்ணியத்தைத் தரும்.

🍃13. தமிழ் மாத பிறப்பன்று பித்ருக்களை வழிபட்டு சூரியனை வணங்குவதற்கு மிகச் சிறந்த நாள். அன்று சூரியனுக்குச் செய்யும் பூஜை மற்றும் ஏழைகளுக்குச் செய்யப்படும் தானம் ஆகியவை அளவற்ற பலனைத்தரும்.

🍃14. ஒரு வருடத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் மொத்தம் தொன்னூற்று ஆறு நாட்கள். இவைகளில் 14 மன்வாதி நாட்கள், யுகாதி நாட்கள் 4, மாதப்பிறப்பு நாட்கள் 12, அமாவாசை 12, மஹாளய பட்சம் 16, வ்யதீபாதம் 12, வைத்ருதி 12, அஷ்டகா 4, அன்வஷ்டகா 4, பூர்வேத்யு 4 நாட்கள். இந்த  நாட்களில் செய்யப்படும் தர்ப்பணத்தால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

🍃15. இந்த 96 நாட்களை விட மிக மிக உத்தமமான நாள் என்பது தாய் தந்தையருக்கு சிரார்த்தம் செய்ய வேண்டி நாள் தான்.

🍃16. துவாதியை விட அமாவாசையும், அமாவாசையை விட தாய் தந்தையருக்கு சிராத்தம் செய்யும் நாட்களும் மிகவும் புண்ணியங்களைத் தரும். ஆகவே அதிக புண்ணியங்களைத் தரும் தந்தையரின் சிரார்த்தத்தை எக்காரணம் கொண்டும் செய்யாமல் விட்டு விடக் கூடாது.

🍃17. ஒருவன் தனது தாய் தந்தைக்கு சிரார்த்தம் செய்யாமல் எனக்குச் செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக் கொள்வதில்லை என விஷ்ணுவும் சிவனும் கூறியுள்ளனர்.

🍃18. இறந்தவருக்கு வருஷம் ஒரு முறையாவது சிரார்த்தத்தைச் செய்ய வேண்டும். ஏனென்றால் அன்றைய நாளன்று இறந்த ஜீவன் காற்று வடிவில் இறந்தவரின் குழந்தைகள் வாழும் வீட்டின் வாசலில் வந்து அவர்கள் செய்யும் சிரார்த்தத்தில் தரும் உணவை சாப்பிடுவதற்காக காத்துக் கொண்டிருக்குமாம்.

🍃19. முறையாக உணவு செய்து வைத்து, ஹோமம், பிண்டதானம் செய்து நடத்தப்படும் சிரார்த்தத்துக்கு பார்வண சிரார்த்தம் என்று பெயர்.

🍃20. ஹோமம் பிண்டதானம் போன்ற சில காரியங்கள் இல்லாமல் உணவு மட்டும் வைத்து செய்யப்படும் சிரார்த்தம் சங்கல்ப சிரார்த்தம் எனப்படும்.

🍃21. ஒருவருக்கு சாப்பாடு போட என்னென்ன பொருட்கள் தேவையோ அரிசி காய்கறிகள், பருப்பு போன்ற பொருட்கள் அனைத்தையும் சமைக்காமல் அப்படியே தட்சணையுடன் அளித்துச் செய்யும் சிரார்த்தம் ஆம சிரார்த்தம் எனப்படும்.

🍃22. சிரார்த்தம் செய்தால் எவ்வளவு பணம் செலவாகுமோ அந்த பணத்தை நான்கு மடங்கு அதிகமாக்கி தட்சணையாக தந்து செய்வது ஹிரண்ய சிராத்தம் எனப்படும்.

🍃23. சிரார்த்தம் செய்ய எந்த ஒரு வசதியும் இல்லாதவர்கள் கருப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணமாக செய்யலாம்.

🍃24. சிரார்த்தம் நடத்தப்படும் இடம், சிராத்தம் செய்யும் நேரம், சிரார்த்தத்தில் பித்ருக்களாக பாவித்து பூஜிக்கப்படும் நபர், சிரார்த்தத்தில் உபயோகிக்கும் பொருட்கள், சிராத்தம் செய்யும் நபர் ஆகியவை சிரார்த்தத்துக்கு முக்கியமானவை. இவைகள் தூய்மையானவைகளாக இருந்தால் சிரார்த்தத்தின் முழுமையான பலன்கள் கிடைக்கும்.

🍃25. பித்ருக்களை சிரார்த்தம் செய்ய வேண்டிய நாளன்று முறையாக ஹோமம் செய்து சாப்பாடு போட்டு சிரார்த்தம் செய்து அவர்களுக்கு உணவளித்து, அவர்களை திருப்தி செய்தால் அவர்கள் அவர்களது குடும்பத்தினருக்கு நீண்ட ஆயுள், அழியாப்புகழ், உடல் வலிமை, செல்வம், பசுக்கள், சுகம், தானியங்கள் ஆகியவற்றை தருகிறார்கள்.

🍃26. நமது பித்ருக்களிடத்தில் சிரார்த்தத்தை சிரத்தையுடன் செய்வதாகவும், நல்ல உயர்ந்த ஆடை, தீர்த்த பாத்திரம் சிரார்த்தத்தில் வாங்கி த்தருவதாகவும், பிரார்த்தனை செய்து கொண்டு அவ்வாறே சிரார்த்தத்தை நடத்தினால் நிச்சயம் உங்கள் விருப்பம் நிறைவேறும். விரும்பிய பலன் கைகூடும்.

🍃27. ஒரே நாளில் ஏராளமான பித்ருக்களுக்கு தனித்தனியாக பல பேர் சிராத்தம் செய்யும் போது சிரார்த்த உணவு அவரவர்களின் பித்ருக்களுக்கு எவ்வாறு சரியான முறையில் சென்றடைகிறது என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படும். இதை கருத்தில் கொண்டு தான் மறைந்த முன்னோர்களின் கோத்ரத்தையும் பெயரையும் தர்ப்பணம் செய்யும் போது சொல்கிறார்கள். இதனால் ஒருவர் கொடுக்கும் தர்ப்பணம் அவரவர்களுக்கு சரியாகச் சென்றடையும்.

🍃28. பெற்றோர்களின் வருஷ சிரார்த்தமும் மாதப்பிறப்பும் சேர்ந்தால் மாதப்பிறப்பை முதலில் செய்து விட்டு பிறகு பெற்றோர்களின் வருஷ சிரார்த் தத்தைச் செய்ய வேண்டும்.

🍃29. அமாவாசையும் மஹாளயமும் ஒரே நாளில் வந்தால் முதலில் அமாவாசை தின தர்ப்பணத்தை செய்து விட்டு பிறகு மஹாளயத்தை செய்ய வேண்டும்.

🍃30. பெற்றோர்களின் வருஷாந்தர சிரார்த்தமும் மன்வாதி அல்லது யுகாதியும் ஒன்று சேர்ந்தால் முதலில் மன்வாதி அல்லது யுகாதி தர்ப்பணங்கள் செய்து விட்டு பிறகு பெற்றோர்களின் வருஷ சிரார்த்தத்தைச் செய்ய வேண்டும்.

🍃31. தாய் தந்தை இருவரில் ஒருவருக்கு மாஸிகமும் மற்றொருவருக்கு வருஷாந்திர சிரார்த்தமும் ஒரே நாளில் நேர்ந்தால், முதலில் வருஷசிராத்தம் செய்து விட்டு பிறகு மாஸிகத்தை செய்ய வேண்டும்.

🍃32. தாய் தந்தை இருவருக்கும் ஆண்டு தோறும் செய்யும் சிரார்த்தம் ஒரே நாளில் வந்தால் முதலில் தந்தைக்கு சிரார்த்தம் செய்ய வேண்டும். பிறகு தாய்க்கு அதே நாளில் சிராத்தம் செய்ய வேண்டும்.

🍃33. பெற்றோர் இறந்த மாதம் பட்ச திதியன்று உறவினர்களின் இறப்புத்தீட்டு அல்லது உறவினர்களுக்குக் குழந்தை பிறந்த தீட்டு ஏற்பட்டு விட்டால், தீட்டு எப்போது முடிவடைகிறதோ அன்று பிராயசித்தம் செய்தல் வேண்டும். பிறகு விட்டுப்போன சிராத்தத்தைச் செய்ய வேண்டும்.

🍃34. இறைவனின் ரூபமான தேவதைகளை விட பித்ருக்கள் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவர்கள். எனவே முதலில் உங்கள் மறைந்த முன்னோர் வழிபாட்டை பிரதானமாக நடத்துங்கள்.

🍃35. சிரார்த்தம், தர்ப்பணம் செய்யாதவன் சண்டாளனாகப் பிறப்பான் என்று புரா ணங்களில் கூறப்பட்டுள்ளது.

🍃36. உடல் நிலை சரியில்லாதவர்கள் உரவினர்களை யாரையாவது உதவிக்கு வைத்துக் கொண்டு சிரார்த்தம் செய்ய வேண்டும்.

🍃37. நம்மை விட்டு பிரிந்த நம் பித்ருக்கள் அனைவரும் சக்தி நிறைந்தவர்கள். அவர்கள் ஆசீர்வாதத்தினால் கோடி கோடியாக புண்ணியமும், செல்வமும் நமக்கு கிடைக்கும்.

🍃38. மஹாளயபட்சம் 15 நாட்களும் பித்ருக்களுக்கு தாகமும், பசியும் மிக அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் அருளைப் பெற வேண்டும். அந்த 15 நாட்களில் உறவினர்கள் இறந்து விட்டால் நாம் சிரார்த்தம் செய்ய வேண்டாம் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆனால் பிறகு கட்டாயமாகச் செய்ய வேண்டும்.

🍃39. பித்ரு வர்க்கம், மாத்ரு வர்க்கம் பித்ரு காருணீக வர்க்கம் என்று பித்ருக்கள் மூன்று வகைப்படுத் தப்பட்டுள்ளார்கள்.

🔥அதாவது அப்பா வகையை சார்ந்த பித்ருக்கள் பித்ருவர்க்கம் எனப்படுவார்கள்.

🔥அம்மா வகையை சார்ந்த பித்ருக்கள் மாத்ருவர்க்கம் எனப்படுவார்கள்.

🔥சித்தப்பா, மாமா,  குரு, நண்பர்கள் காருணீகவர்க்கம் எனப்படுவார்கள். இவர்களை  நினைவு கூறி தர்ப்பணங்களை செய்ய வேண்டும்.

🍃40. மக்களுக்கு தொண்டாற்றி சுயநலமின்றி அரிய இறைப்பணிகளைப் புரிந்தோர் மட்டுமே பித்ருலோகம் அடைகின்றனர் என்பதை கருடபுராணம் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது.

🍃41. நமக்காக எத்தனையோ கஷ்டங்களை தாங்கிய நம் பித்ருக்களுக்கு, மஹாளபட்சம், அமாவாசை போன்ற நாட்களில் வெங்காயம், பூண்டு, வாசனை திரவியங்கள் போன்றவை வேண்டாம்.

🍃42. கார்த்திகை மாதம் உத்திராயண புண்ணியகாலம் சுக்ல பட்சம், பவுர்ணமி திதியில் தானம் செய்ய வேண்டும். கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) துவாதசி திதியில் தானங்கள் அளிக்கலாம்.

🍃43. எள், உப்பு, பொன், பருத்தி ஆடை, இரும்பு ஆகியவற்றை தானம் அளிப்பது மிகவும் நல்லது. தானம் பெற வருபவரை மிகுந்த மரியாதையுடன் நடத்தி தானமளிக்க வேண்டும்.

🍃44. பித்ருக்கள் எங்கிருந்தாலும் சரி தத்தம் சந்ததியருடைய நல்வாழ்விற்காகப் பாடுபடுகின்றனர் என்பதில் எள்அளவும் சந்தேகம் கிடையாது.

🍃45. ஒருவர் மரண படுக்கையில் அவதிப்படும் போது அவரது மகன் அல்லது மகள் மகம் நட்சத்திரத்தன்று அகத்திக்கீரையை எருமை மாட்டிற்கு தானம் அளித்தால் மரண அவதி நீங்கும்.

🍃46. வீட்டில் வயதானவர்கள் படுக்கையோடு அவதியுற்றால் பாய், தலையணை, படுக்கை விரிப்பு போன்றவற்றை தானம் செய்வது நன்மை அளிக்கும். எள்ளுருண்டை, கடலை உருண்டை போன்றவற்றை அளிப்பது பித்ருக்களின் ஆசியைக் கூட்டும்.

🍃47. சாஸ்திரப்படி சிரார்த்த காரியங்கள் செய்பவர் திருமணம் உள்ளிட்ட விழாக்களிலும் மற்றவர் வீடுகளில் உணவு உண்ணக் கூடாது.

🍃48. சிரார்த்தம் செய்ய கூடியவர் ஒரு பக்ஷ்ஷம் நாள் முகச்சவரம் செய்யக்கூடாது. எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது, மனைவியுடன் சேர்ந்து உறங்கக் கூடாது, பிரஷ் கொண்டு பல் தேய்ப்பதும், வெற்றிலை தாம்பூலம் போடுவதும் கூடாது.

🍃49. மங்கள நிகழ்ச்சிகள் நம் வீட்டில் நடக்கும் பொழுது முதலில் பித்ருக்களின் ஆசியை நாம் முழுமையாக பெற வேண்டும். இது மிக மிக முக்கியம்.

🍃50. துவாதசி பன்னிரெண்டாம் நாளன்று பித்ரு பூஜை செய்பவன் சொர்ண லாபம் பெறுவான்.

🍃51. திரயோதசி பதிமூன்றாம் நாளன்று பித்ரு காரியங்களை சரிவர நடத்துபவனுக்கு அறிவு, ஞான சக்தி, பசுக்கள் தேக ஆரோக்கியம், சுதந்திரத்தன்மை, சிறந்த விருத்தி, தீர்க்கமான ஆயுள் பலம், ஐஸ்வர்யம், அனைத்து பலன்களும் தவறாமல் கிடைக்கும்.

🍃52. சதுர்த்தசி அன்று பித்ரு வழிப்பாட்டை சிறப்பாக செய்பவர்களுக்கு அவர்களுடைய பித்ருக்கள் ஆயுதங்களால் தாக்கப்பட்டு இறந்திருந்தால் திருப்தி அடைவார்கள்.

🍃53. மஹாளய அமாவாசை என்பது மிகவும் புண்ணிய நாளாகும். அன்று நம் பித்ருக்களை நினைத்து மனதார வணங்கினால் சகல சவுபாக்கியங்களும் தேடி வரும்.

🍃54. மஹாளய பட்சத்தின் 16 நாட்களும் சிரார்த்தம் செய்வது ஒப்பற்ற உயர்ந்த வாழ்வை அளிக்கும்.

🍃55. தர்ப்பணம் எனும் சொல்லுக்கு திருப்திப்படுத்துதல் என்று பொருள். இதில் வரும் மந்திரங்கள் அர்த்தம் பொதிந்தவை. அற்றை நன்கு தெரிந்து கொண்டு செய்வதால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

🍃56. தாய், தந்தையின் இறந்த திதிகளை மட்டும் நினைவு கொண்டு தர்ப்பண காரியங்கள் செய்தால் போதும் எனும் பழக்கம் இன்று பலரிடத்தில் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தில் இறந்த முன்னோர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து தர்ப்பண காரியங்கள் செய்ய வேண்டும். அதுதான் சிறப்பானது. முழு பலன்களையும் தரவல்லது.

🍃57. குடும்பத்தில் சன்னியாசம் வாங்கிச் சென்றவர்களுக்கு துவாதசி அன்று மஹாளய சிரார்த்தம் செய்வது மிக முக்கியம்.

🍃58. கோவில்கள், குளங்கள், கடல் போன்ற இடங்களில் செய்யப்படும் தர்ப்பணங்களுக்கு மிக அதிகமான சக்தி உண்டு.

🍃59. திருவாலாங்காடு, திருவள்ளூர், ராமேஸ்வரம், திருமயம் அடுத்து வரும்  அரண்மனைப்பட்டி, திருவண்ணாமலை, திருவிடைமருதூர், காசி, திருநள்ளாறு ஆகிய இடங்களில் தர்ப்பணம் செய்வது மிக சிறந்தது.

🍃60.  திலதர்ப்பணபுரி எனும் ஊரில் (திருவாரூர்- பூந்தோட்டம் இடையில் உள்ளது) தர்ப்பணம் செய்வது மிக மிக விசேஷமாக கருதப்படுகிறது. இங்கு ஸ்ரீ ராமரும் லட்சுமணரும் தம் தந்தையான தசரத மகாராஜாவிற்கு வஎ தர்ப்பணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.🌼

வெள்ளி, 22 ஜூன், 2018

பல்லாங்குழி {மனதை தொட்டுவிடும் கதை}

அப்போல்லாம் எல்லாராத்துலேயும் தாயக்கட்டை, பரமபதம், பல்லாங்குழி இருக்கும். விதவிதமா சோழியும். சின்ன வயசில் ஆண் பெண் பேதமின்றி எல்லோரும் விளையாடுவா. கொஞ்சம் விவரம் தெரிஞ்சதும் இதெல்லாம் பொண்கள் விளையாடர விளையாட்டுன்னு பசங்க விலகிப்போயிடுவா. இன்னிவரைக்கும் எனக்கு இது ஏன் அப்படின்னு புரியலை.

இப்போவும், 2018இல் ஆண்கள் விளையாடர எல்லா கேம்ஸும் பெண்கள் விளையாடி சிறப்பு சேர்க்கரா. ஆனால் யாராவது ஆண்பிள்ளையை பல்லாங்குழியோ சோழியை தூக்கிப்போட்டு லாவகமா பிடிச்சு விளையாட சொல்லிப்பாருங்கோ! யோசிச்சுப்பாத்தா பல்லாங்குழியை பெண்களும் இப்போ விளையாடரதா தெரியலை. இந்தக்கதைக்கும் பல்லாங்குழிக்கும் என்ன சம்பந்தம்? அதுவாவே விளங்கும். விளங்கலேன்னாலும் பரவாயில்லை.

என் 8 வயசிலேந்து 16 வயசு வரைக்கும் எல்லா விளையாட்டும் விளையாடுவேன். ரோடில் கட்டம் போட்டு அக்கம் பக்கம் இருக்கும் பசங்களுடன் {ஆதில் பெண்களும் அடக்கம்} பாண்டி விளையாடியிருக்கேன். பம்பரம், தீப்பெட்டி படம் {சீட்டுக்கட்டை தொடவிடமாட்டா}, பல்லாங்குழி, எல்லாம் கைப்பட்ட பாடு. நான் சோழியை லாவகமா போட்டு பிடித்து, தரையில் சிதற அதை அடுத்தவா எடுப்பதற்குள் அள்ளி எல்லாத்துலேயும் முதலா வந்துடணும்னு ஆசை. ஜெயகுமார் கேரம் ஆட வந்தா நான் வரலைன்னு சில பெண்கள் கிளம்பிப்போயிடுவா. ஏன்னா ஒரு முழு ரவுண்ட் நானே ஆடி ஆட்டம் முடிஞ்சுடும். இவாள்லாம் தேமென்னு பாத்திண்டிருக்கணும்.

எங்க தெருவில், ராஜீ, கீதா, சித்ரா, கோமதி, புஷ்பான்னு என் வயசுக்கொத்த பெண்கள். சில ரெண்டு வயசு கம்மி அவ்ளோதான். நாங்கள் ராமன், கண்ணன், கோவிந்து அப்புரம் ஹரி, அவன் தம்பி லக்ஷ்மணன் என்னையும் சேர்த்து 6 பசங்க. சரியா பேலன்ஸ் ஆகலையேன்னு தோண்ரதா? செட்டு செக்கிரச்சே பாண்டீ ஆட்டம்னா பாப்பாவும், ராஜீயும்தான் டீமில் வேணும்னு அடம்பிடிப்பா. வேரன்னா அதில் யார் சாமர்த்தியமா விளையாடுவான்னு பாத்து அவாளுக்காக சண்டை போட்டுப்போம்.

ராமன் எப்பவுமே உப்புக்கு சப்பாணி. சிலசமயம் லக்ஷ்மணன் “நான் விளையாட வரலை, எனக்கு வயித்து வலி”ம்பான். ஒண்ணும் இருக்காது ஆனா நிழல்லெ உக்காந்துண்டு ரெஃப்ரீ அல்லது ஏதாவது மத்யஸ்தம் பண்ண அவனை வச்சுப்போம். நானும் கண்ணணும் எப்போவுமே லீடர். கண்ணணுக்கு கோமதிமேல சாஃப்ட் கார்னெர். எல்லோருக்கும் தெரியும். ரெண்டு பேரும் தூரத்து சொந்தமாம். பீத்திக்குவான்.

ஒரே தெருவில் நாங்க எல்லோரும் பல வருஷத்துக்கு முன்னாடியே குடி வந்து பக்கத்தில் உள்ள நோய்ஸ் பற்றும் OCPM ஸ்கூலில் படிச்சு ஒண்ணா வளர்ந்தவா. மதுரை தல்லாகுளம் காமராஜ் நகர் 4ஆவது தெருன்னா நாங்கதான் பிரதானம். சம்மர் லீவில் நாங்க போட்ர ஆட்டம், செய்யர அட்ராசிடி பிரபலம். கார்த்தாலே ஏதாவது வயத்துக்கு போட்டுண்டு தெருவில் சந்திப்போம். பிளான் பன்ணுவோம். நடுவுலே சாப்பிடக்கூப்பிட்டா கலைஞ்சு போவோம், திரும்ப வந்து தொடர்வோம். கோமதியோட அம்மா எல்லாருக்கும் பக்ஷணம் செஞ்சு தருவா. எல்லாராத்துலேந்தும் சாப்பிடரத்துக்கு வரும். சாயங்காலம் 6 மணி அடிச்சா எல்லோரும் அவாவாத்துக்கு போயிடணும்.

ஒருதடவை விளையாட்டு மும்முரத்தில் அதைப்பண்ணலை.  சித்ராவோட அம்மா அவளை தொடையில் வலிக்கரா மாதிரி கிள்ளிட்டா. அப்புரம் அவ எல்லொருக்கும் சிவந்துபோன இடத்தை காண்பிச்சா. ஆர்வமா பாத்துட்டு “துத்ஸு” கொட்டினோம்.

அப்போல்லாம் லீவுன்னு விட்டா 70- நாள் கொண்டாட்டம் தான். யாராவது அப்பா அம்மா வெளியூர் போரான்னு அவாளும் போனா மத்தவாளுக்கு அழுகை வந்துடும். என்னவோ தலையில் இடி விழுந்தா மாதிரி ரெண்டுநாள் சோகமா இருந்துட்டு அப்புரம் திரும்பவும் விளையாட்டு களை கட்டும் பாருங்கோ! ஒரு வாரம் பத்து நாள் கழிச்சு போனவா திரும்பி வந்ததும் அப்படி ஒரு சிரிப்பும் மகிழ்ச்சியும் விட்ட இடத்துலேந்து நட்பை தொடருவது மாதிரி, பிரிந்திருந்த நாட்களுக்கு ஈடு செய்யரா மாதிரி.

எங்கள் அப்பா அம்மாக்களுக்கு இதெல்லாம் கொஞ்சம் ஆச்சர்யமா இருக்கும். பெருமையாவும் இருக்கும். சாயங்காலம் 530க்கு அம்மாக்கள் எல்லாரும் ஒரு திண்ணையில் கூடுவார்கள். அவா வம்பு பேசரத்துக்கு. அந்தத்திண்னையில்தான் வருஷாந்திர ஊறுகாய் என்ன பண்ரது, வடகம் எப்போ யாராத்து மாடியில் போட்ரதுன்னு ஸ்ட்ரெடிஜிக் முடிவுகள் எடுப்பா.
நாங்க விளையாட எடுத்துக்கொண்ட ஆட்டங்களை இதுவரை சொன்னதை படிச்சிட்டு நீங்க அவசரமா ஒரு முடிவுக்கு வரப்பிடாது. என்னெல்லாம் விளையாடுவோம்னு சொன்னா மலைச்சுப்போவேள்.

கிரிக்கெட், ஃபுட்பால், பேட்மின்டன், ஹாக்கி. டென்னிஸ் பந்தில் கிரிக்கேட். ஃபோர் அடிச்சால் அடிச்ச பேட்ஸ்மேன்தான் போய் பந்தை பொறுக்கிண்டு வரணும். ஹாக்கிக்கு ஒரு கல்லில் துணி சுத்தி அதை சணலால் கட்டி விளையாடுவோம். அப்புரம் செஸ், காரொம், பல்லாங்குழி, சோழி, தாயக்கட்டம், பரமபதம் இப்படி. சில இப்போ ஞாபகம் இல்லை. எறிபந்துன்னு ஒண்ணு, டென்னிஸ் பந்தில் ஓங்கி இன்னொருத்தர் மேல குறிபாத்து எறியணும். அதில் நான் சுத்த சோப்ளாங்கி. இந்த பெண்டுகள் என்னை கட்டம் கட்டி முதுகில் டின் அடிப்பா.

ஒவ்வொரு சமையம் மாறுதலுக்கு எல்லோரும் யாராத்து மாடிப்படிக்கடீலேயாவது நெறுக்கிண்டு உக்காந்து கதை சொல்லிப்போம். அதில் நான் கில்லாடி. எட்டுக்கட்டி எதையாவது சொல்லிண்டிருப்பேன். சாதாரணமா போயிண்டிருந்த கதையில் துப்பறியும் சங்கர் வருவான். கொலை நடக்கும். ரத்தம் கொட்டும். 6 ஆச்சுன்னா திடீர்னு கதையை முடிக்கணுமே, நினெச்சபோது வேகமாக நகரும். யாராவது “உஹும்” கொட்டலைன்னா சொல்ரதை நிருத்திடுவேன்னு எல்லோரும் கவனமா கேப்பா. ராஜா ராணி கதையில் சினிமா ஸ்டார் ஜெய்சங்கர் வருவான். சில பாத்திரங்களுக்கு ஜோடி யார்னு சொல்லலைன்னா ராஜீ ஞாபகப்படுத்துவா. அப்படி ஒரு காலம்.

இப்போ நினெச்சு பாத்தா மலைப்பாவும் சந்தோஷமாவும் இருக்கும்.

இப்படியே 7ஆவது, 8ஆவது வரை இருந்த எங்க காங்க் கொஞ்சமா மாற ஆரம்பிச்சது. இதுக்கு முக்கிய காரணம் பாடச்சுமை அதிகம் ஆனதே. இன்னொரு முக்கிய காரணம் நாங்க இப்படி பறவைக்கூட்டம்போல் சிறகடிச்சிண்டு சுத்தரது கண்டிப்புக்குள் வர ஆரம்பிச்சது. இன்னொரு காரணமும். முதலில் பெரியவள் ஆனது புஷ்பா.

அப்போல்லாம் அது என்ன மாயம்னு எங்களுக்கு தெரியாது. அக்கம் பக்கத்தில் இப்படி நடக்கிரது தெரியும், புஷ்பாவுக்கு அவ அம்மா சொல்லிகொடுத்துட்டா, அதுனாலெ அரையும் குறையுமா மத்ததுக்கும் தெரிஞ்சது. அதில் ஒருத்தி லக்ஷ்மணனிடம் சொல்ல அவன் எங்ககிட்டே சொல்லிட்டான் என்ன வேடிக்கைன்னா, இன்ஃபர்மேஷன் ட்ரான்ஸ்ஃபெர்னு பிற்காலத்தில் படிச்சது அன்னைக்கு சரியா நடக்கலை. மூணு பேர் மாறி வாய்மொழியா வந்த விவரம் திரிஞ்சு போய் அதைப்பத்தின க்யூரியாசிடியை அதிகப்படுத்திடுத்து. ராமன் மட்டும் புஷ்பாவாத்துக்கு போய் ஜன்னல் வழியா அவளை உக்காத்திவச்சிருக்கிரதை பாத்துட்டு வந்துட்டான். எங்களுக்கெல்லாம் அவள் சௌக்கியமாத்தான் இருக்கான்னு தெரிஞ்சு சந்தோஷப்பட்டோம்.

அப்புரம் சிலநாள் கழிச்சு எல்லோருக்கும் அவாத்துலே ஸ்வீட் கொடுத்தா. இப்போ பிராப்ளம் என்னன்னா அவள் இனிமேல் முன்னெ மாதிரி எங்களோட விளையாட வரமாட்டாளாம். அவள் வரலைன்னுட்டு அவாத்து போர்ஷனில் குடியிருந்த ராஜீயையும் அனுப்பமாட்டேனுட்டா. கொஞ்சநாள் கூட உக்காந்து பேசிண்டிருந்துட்டு, கொஞ்சமா விளையாடிட்டு மத்த பெண் உருப்படிகளும் கழண்டுண்டுட்டா. எங்களுக்கெல்லாம் எங்க உலகத்தை யாரோ பிளான் பன்ணி சிதைச்சுட்டா மாதிரி ஃபீல். அதுக்கேத்தாபுலே ஒண்ணு மாத்தி ஒண்ணா உக்காந்துடுத்துகள்.

எனக்கு மட்டும் இல்லை எங்க எல்லொருக்கும் இது ரொம்பவும் வருத்தத்தை கொடுத்தது. புஸ்தகம் வாங்க, அல்லது ஸ்கூலுக்கு போர வழியில் பாத்தா நின்னுண்டு பேசிப்போம். அல்லது இன்னொருத்தராத்துக்கு போய் அவா அப்பா அம்மா இருக்கும்போது வம்பளக்க விடுவா. ஆனா எனக்குத்தெரியும் ரூமில் இருந்துண்டு அவாளும் காதை கூர்மையா வச்சிண்டு கேட்டிண்டிருக்கான்னு.

நான் படிப்பில் படு சுட்டி. எல்லா சப்ஜெக்டிலேயும் முதல் ராங்க். அதனால் என்னை பாடம் சொல்லிக்கொடுக்க கூப்பிடுவா. அதில் மத்தவாளுக்கு கிடைக்காத ப்ரெவிலெஜ் கிடைக்கும். அதிலும் அந்த புஷ்பா, “ஜெயகுமார் சொல்லிக்கொடுத்தாதான் புரியரது அவனை கூப்பிடு இல்லைன்ன நான் அவாத்துக்கு போயிட்டு வரேன்”னு வந்துடுவா. அவ வந்தா எனக்கு என்னமோ செய்யும். அம்மா அவளுக்கு ஹார்லிக்ஸ் போட்டு கொடுப்பா, இவளும் அதை குடிக்கர சாக்கில் அதிக நேரம் இருந்துட்டு போவா.

ஒருதடவை அவ வந்தப்போ அம்மா மாடீலே துணி உலத்தப்போயிருந்தா, அப்பா ஆபீஸில். இவள் மெல்ல கிட்டக்க வந்து பல்லாங்குழி விளையாடலாமான்னு கேக்கரா. “ஏண்டி, படிக்க வந்தியா இல்லை விளையாடவா”ன்னு கேக்கரேன். அப்புரம் திட்டு வாங்கப்போரது நான்தானே? “ஒண்ணும் பரவாயில்லை ஒரே ஒரு ஆட்டம் போடலாம், விளையாடி எத்தனை மாசம் ஆச்சுடா”ங்கிரா. சரீன்னு, நான் “அம்மா, புஷ்பாவும் நானும் பல்லாங்குழி விளையாடரோம்”னு ஒரு சௌண்ட் விட்டேன். ஒரு அலிபி க்ரியேட் ஆயிடுத்து. விளையாட்டு என்னமோ கொஞ்சம் சோழியும் கொஞ்சம் புளியங்கொட்டையும் நிரவி பழைய பல்லாங்குழியில் ஆடினோம். ஒவ்வொரு ரவுண்ட் போரச்சேயும் அவள் கையை இடையே கொண்டுவரதும் வேணும்னு என் கையை பிடிச்சிண்டு நீ தப்பாட்டம் ஆடராய்னு தள்ளிவிடரதுமா போச்சு. இவ விளையாட வந்தாப்புலே தெரியலை,

ஆனாலும் இந்த விளையாட்டு இன்னும் நீடிக்கணும்னும் அவள் என் கையை பிடிச்சு கொஞ்சநாழி வச்சுக்கணும்னும் தோணித்து.

அப்புரம் எங்கம்மா கீழே வந்தா, புஷ்பாவோட அம்மா இவளைக்காணோம்னு தேடிண்டு “வாடி சமையல் ஆறிப்போரது”ன்னு இவளை அழைச்சிண்டு போனதும் நடந்தது. போரச்சே ஒரு லூக் விட்டா பாருங்கோ!

அடுத்த வருடங்களில் நான் SSLC முடிச்சேன். அப்பாவுக்கு சேலத்துக்கு மாத்தல் ஆகி கிளம்பினோம். என்னைப்போலவே லக்ஷ்மணன், கோவிந்து, ஹரி, அப்புரம் ராஜீ, கீதான்னு சிதறிப்போனோம்னு தெரிஞ்சுண்டேன். அப்போல்லாம் லெட்டர்தான். போன் கூட கிடையாது. அப்புரம் அவா அவா எங்கேயொ வேலையில் அமர்ந்து, கல்யாணம் பண்ணிண்டு குழந்தையை பெத்துண்டு. என்னோட அதிக காலம் தொடர்பில் இருந்தது ராமனும், சித்ராவும் மட்டும். அவன்கிட்டேந்து சில தகவல்கள் வரும். ஒண்ணும் முழுசா வராது.

அன்னைக்கு வேலை நிமித்தமா என்னோட பெயின்ட் கம்பேனியின் மதுரை கிளையில் சிலரை சந்திச்சு பேசவேண்டியிருந்தது. இது சமீபத்தில் நான் மாறின வேலை. கடந்த 35 வருஷமா மதுரைக்கு வரவேண்டிய சூழலே ஏற்படலை. லேடி டோக் காலேஜ் கிட்டேயே JC ரெசிடென்ஸியில் ரூம் போட்டுண்டு தங்கினேன். கூப்பிடு தூரத்தில் காமராஜ் நகர். நாளைக்கு தில்லி திரும்பணும் அதனால் ஒரு எட்டு போய் அந்த பழைய இடங்களெல்லாம் எப்படி இருக்குன்னு பாத்துடணும்னு ஆசை. போனேன்.

அப்படியே சில, சுத்தமா அடையாளம் தெரியாம மாறிப்போனது பல. எங்க அம்மாக்கள் உக்காந்துண்டு வம்பளத்த திண்ணையும் அந்த வீடும் அப்படியே, முகப்பு மட்டும் மாறினாப்புலே இருக்கவே அங்கேயே போரேன். அங்கே இப்போ யார் இருக்காளோ? அந்தாத்துக்கு எதுக்க நாங்கள் இருந்தோம், அங்கே அபார்ட்மென்ட் வந்தாச்சு. மரம் செடியெல்லாம் காணோம். கேட்டை தொறந்துண்டு உள்ளே போய் காலிங்க் பெல்லை அழுத்தரேன்.

ஒரு வயசான மாமி வரா, என் ஒத்த வயது. நெத்தியில் பொட்டில்லை. கண் பார்வை கொஞ்சம் தீக்ஷண்யம் குறைஞ்சாப்புலெ இடுக்கிண்டு “யார் வேணும்”கிரா. “நான் ஜெயகுமார், தில்லிலெந்து வரேன், முன்னாடி இங்கேத்தான் குடியிருந்தோம் இங்கேந்து மாத்திபோய் ரொம்ப வருஷம் ஆச்சு, அதுதான் ஏதோ ஒரு உந்துதலில் கிளம்பி எப்படி இருக்குன்னு பாக்கலாம்னு வந்தேன். இங்கே புஷ்பான்னு ஒரு பொண் குடியிருந்தா. அவள் அப்பா பேர் கூட ராமச்சந்திரன், பாகவதர். அவாளெல்லாம் இப்போ எங்கேன்னு உங்களுக்கு தெரியுமா”ன்னு கேக்கரேன்.

உத்துப்பாத்த அவள், “உங்களுக்கு பல்லாங்குழி விளையாட வருமா”ன்னு கேக்க என் தலை முழுசா ஒரு சுத்து சுத்திட்டு நின்னது. “புஷ்பாவா நீங்க?” “ஆமாண்டா, உள்ளே வா, என் பொண்ணு மாப்பிள்ளையை அறிமுகப்படுத்தரேன். பேத்தி ஸ்கூலுக்கு போயிருக்கா, வரத்துக்குள்ளே ஒரு ஆட்டம் போடலாம்”கிரா.
 வாழ்க்கையில் வெற்றி தரும் ஜென்ம நட்சத்திர குறியீடுகள்

அவரவர் ஜென்ம நட்சத்திரத்திற்கு உரிய வடிவங்களை தினமும் பார்த்து வந்தாலோ அல்லது பயன் படுத்தி வந்தாலோ வாழ்க்கையில் எளிதில் வெற்றியடையலாம். ராமன் தன் ஜென்ம நட்சத்திர குறியீடான வில்லேந்தி ராவணனை வென்றான். கிருஷ்ணன் தன் ஜென்ம நட்சத்திர குறியீடான தேரை ஓட்டி பாண்டவர்களுக்கு வெற்றி தேடி தந்தான்.

நட்சத்திரவடிவம்:-

 அஸ்வினி - குதிரைத்தலை

 பரணி - யோனி,அடுப்பு,முக்கோணம்

 கிருத்திகை - கத்தி,கற்றை,வாள்,தீஜ்வாலை

ரோஹிணி - தேர்,வண்டி,கோயில்,ஆலமரம்,ஊற்றால்,சகடம்

மிருகசீரிடம் - மான்தலை,தேங்கைக்கண்

திருவாதிரை - மனிததலை,வைரம்,கண்ணீர்துளி

புனர்பூசம் - வில்

பூசம் - புடலம்பூ,அம்புக்கூடு,பசுவின்மடி

ஆயில்யம் - சர்ப்பம்,அம்மி

மகம் - வீடு,பல்லக்கு,நுகம்

பூரம் - கட்டில்கால்,கண்கள்,அத்திமரம்,சதுரம்,மெத்தை

உத்திரம் - கட்டில்கால்,கம்பு,குச்சி,மெத்தை

ஹஸ்தம் - கை

சித்திரை - முத்து,புலிக்கண்

ஸ்வாதி - பவளம்,தீபம்

விசாகம் - முறம்,தோரணம்,குயவன்சக்கரம்

அனுசம் - குடை,முடப்பனை,தாமரை,வில்வளசல்

கேட்டை - குடை,குண்டலம்,ஈட்டி

மூலம் - அங்குசம்,சிங்கத்தின்வால்,பொற்காளம்,யானையின்துதிக்கை

பூராடம் - கட்டில்கால்

உத்திராடம் - கட்டில்கால்

திருவோணம் - முழக்கோல்,மூன்றுபாதச்சுவடு,அம்பு

அவிட்டம் - மிருதங்கம்,உடுக்கை

 சதயம் - பூங்கொத்து,மூலிகைகொத்து

பூரட்டாதி - கட்டில்கால்

உத்திரட்டாதி - கட்டில்கால்

ரேவதி - மீன், படகு.

வெற்றிதரும் நட்சத்திர குறியீடுகள்:- ஜோதிட சாஸ்திரத்தில் இருபத்தியேழு நட்சத்திரங்களுக்கும் உருவம் அல்லது குறியீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவைகளை நாம் வெற்றி சின்னங்களாகப்பயன்படுத்திக்கொள்ளலாம். எப்படியென்றால், நாம் வசிக்கும் வீடு,பணிபுரியும் இடம்,அணியும் ஆடை,அறிமுக முகவரி அட்டை(visiting card),கடித முகவரி ஏடு (Letter pad) இவைகளில் அவரவர் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய உருவத்தை சின்னங்களாக பயன்படுத்திவந்தால் வாழ்க்கையில் எளிதில் வெற்றி பெறலாம்.

இதற்கு ஆதாரம் ஏதாவது கிடைக்குமா என்பதை ஆய்வு செய்தபோது ,புராண இதிஹாசங்களில் ஆதாரம் இருப்பதை அறிய முடிந்தது. அவைகளை பார்ப்போம். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஜென்ம நட்சத்திரம் ரோஹிணியாகும். ரோஹிணி நட்சத்திரத்தின் உருவம் தேராகும். ஸ்ரீகிருஷ்ணர் தேரோட்டியாக இருந்து பாண்டவர்களுக்கு மஹாபாரதப்போரில் வெற்றி தேடித்தந்தார். பகவான் ஸ்ரீராமரின் ஜென்ம நட்சத்திரம் புனர்பூசமாகும். புனர்பூசம் நட்சத்திரத்தின் உருவம் வில்லாகும். ஸ்ரீராமர் வில்லேந்தி ராவணனை வெற்றி கொண்டார். 

 பகவான் ஸ்ரீவாமனரின் ஜென்ம நட்சத்திரம் திருவோணமாகும். திருவோணம் நட்சத்திரத்தின் உருவம் மூன்று பாதச்சுவடுகள் என கூறப்படுகிறது. ஸ்ரீவாமனர் ஈரேழு உலகையும் ஈரடியாய் அளந்து மூன்றாவது அடியை மஹாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து அவன் கர்வத்தை அடக்கினார்.எனவே ஸ்ரீவாமனருக்கு உலகளந்த பெருமாள் என்னும் நாமம் உண்டு.

ஸ்ரீஅனுமனின் ஜென்ம நட்சத்திரம் மூலமாகும். மூலம் நட்சத்திரத்தின் உருவம் சிங்கத்தின் வால் என ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.அனுமன் கையிலிருக்கும் ஆயுதம் சிங்கத்தின் வால் போன்ற வடிவத்தில்தான் இருக்கும்.

 ஸ்ரீருத்திரனின் ஜென்ம நட்சத்திரம் திருவாதிரையாகும். திருவாதிரை நட்சத்திரத்தின் உருவம் மண்டையோடு என ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்ரீருத்திரன் மண்டையோடுகளை மாலையாக அணிந்திருப்பவன்.

மேற்கண்ட புராண, இதிஹாச தகவல்களின் மூலமாக நாம் அறிந்துகொள்வது என்னவென்றால் நட்சத்திர உருவங்கள் அல்லது சின்னங்கள் நமக்கு வெற்றிதரும் சின்னங்களாகும். அவரவர் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய உருவத்தை,தன்னோடு வைத்திருந்தால் வாழ்க்கையில் எளிதில் வெற்றி பெறலாம்.

வெள்ளி, 15 ஜூன், 2018

Experiences with Maha Periyava: The Creator’s secret We halted for the night in a Siva temple. In a tiny hamlet on the way to Madanapalli to Chittoor. It was late in the night when we reached there and because of the fatigue caused by the long hours of walking, Periyava withdrew to rest. Since we usually began walking in the early hours of the morning, all of us, the attendants were ready the next day. Periyava said,” Let us start in the evening’. A short while later, when the day broke and the sun began to shine brilliantly, Periyava came out of the temple to give darshan. About fifty people with little children in two’s, prostrated to Him from a distance. We were surprised. The people of the village had all come the previous night in a queue, had Periyava’s darshan and left. They had come then because they did not want to miss his darshan in case Periyava left in the early hours before dawn. Why then did these people not come for darshan? “Come closer to see Periyava well.” We said, inviting them.
They did not come. “We are not allowed to come to the temple. We have been waiting all night to see Sami. Sami has come out only now” It was the stipulation of the village that they were not to come to the temple for they were considered untouchables. We went to report the matter to Periyaval. There was in fact no need for us to do that all. “There are plenty of mangoes given to us by those who came for darshan in the night. Fill a sack with the fruit and give it to them. They have not eaten anything last night. When we gave them the fruit they ate it happily. “You people have not eaten anything last night?” “No. We waited to see Sami .Sami was inside. So we waited because He had to come out anyway” How did Periyava know that they had not eaten anything in the previous night? Well that is the creator’s secret. Source: Maha Periyaval Darisana Anubhavangal
இஷ்ட தேவதை
மநுஷ்யர்கள் மனப்பான்மைகள் பல தினுசாக இருக்கின்றன. ஒவ்வொரு விதமான மனப்பான்மை உள்ளவர்களையும் ஆகர்ஷித்து, அவர்களைப் பக்தி செலுத்த வைத்து, அவர்கலுடைய மனத்தைச் சுத்தம் செய்து, சித்தத்தை ஏகாக்ர (ஒருமை) ப்படுத்தவே பரமாத்மா பல பல தேவதா ரூபங்களாக வந்திருக்கிறது.
இந்த ஹிந்துக்களுக்கு எத்தனை கோடி சாமிகள். என்று அந்நிய மதஸ்தர்கள் நம்மை கேலி செய்வதுண்டு. உண்மையில் ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்வாமி இருப்பதாக விஷயம் தெரிந்த எந்த ஹிந்துவும் எண்ணவில்லை. வைதிக மதம் ஸ்வாமி ஒருவரே என்று கண்டது மட்டுமில்லை. இந்த ஜீவனும்கூட அதே ஸ்வாமிதான் என்று வேறெந்த மதமும் கண்டுபிடிக்காததையும் கண்டுபிடித்திருக்கிறது. எனவே, பிரபஞ்ச வியாபாரத்தை நடத்துகிற மகா சக்தியாக ஒரு ஸ்வாமிதான் இருக்கிறது என்பதில் எந்த விஷயமறிந்த ஹிந்துவுக்கும் சந்தேகமில்லை. ஆனால் அந்த ஸ்வாமி பல ரூபத்தில் வரமுடியும். அப்படிப்பட்ட யோக்கியதையும் கருணையும் அதற்கு உண்டு என்று இவன் நம்புகிறான்.
ஒரே ஸ்வாமி நம் தேசத்தின் மகாபுருஷனாகளுக்குப் பல ரூபங்களில் தரிசனம் தந்திருக்கிறார். அந்தந்த ரூபங்களுக்குறிய மந்திரம், உபாஸனா மார்க்கம் எல்லாவற்றையும் அந்த மகாபுருஷர்கள் நமக்குத் தந்திருக்கிறார்கள். இவற்றை முறைப்படி அநுஷ்டித்தால் நாமும் அந்தந்த தேவதையின் அநுக்கிரகத்தைப் பெற முடியும். எந்த தேவதையாக இருந்தாலும் சரி. அது முடிவில் பரமாத்மாவே. ஆகையால், நாம் சந்தேகம் கொள்ளாமல் பூரண சிரத்தையோடு பக்தி வைத்தால் அது நமக்குச் சம்சார பந்தத்திலிருந்து விடுதலை தரும். இந்த விடுதலைக்கு நாம் பக்குவப்படுவதற்கு முன் லௌகிக வேண்டுதல்களைக்கூட நிறைவேற்றி அநுக்கிரகிக்கும்.
அவரவர் மனத்தைப் பொறுத்து ஒன்றில் பிடிமானம் கொள்வதற்கே இத்தனை தேவதைகள் இருக்கின்றன. தாயாரிடம் குழந்தைப்போல் பரமாத்மாவை அநுபவிக்க வேண்டும் என்கிற மனப்பான்மை உடையவனுக்கு தக்ஷிணாமூர்த்தி இருக்கிறார். ஆனந்தமாக ஆடிப்பாடி பக்தி செலுத்துவதற்குக் கிருஷ்ண பரமாத்மா இருக்கிறார்.
இஷ்டம் இருந்தாலும், இஷ்டம் இல்லாவிட்டாலும் ஏதோ ஒரு மகா சக்தியிடம் பக்தி செலுகத்துவது என்று ஏதோ ஒரு தத்வத்தை மட்டும் காட்டாமல், நம் மனசுக்கு எப்படி இஷ்டமோ, அதற்கு அநுசரணையாகவே அந்த மகாசக்தியை ஒரு மூர்த்தியில் பாவித்து, வெறும் தத்வத்தை ஜீவனுள்ள ஒரு அன்பு உருவகமாக பாவித்து, வெறும் பக்தி செய்வதற்கு நம் மதத்தில் உள்ள இஷ்ட தேவதை வழிபாடே வழி வகுக்கிறது. அன்போடு உபாஸிக்க வேண்டுமானால், உபாஸனைக்குறிய மூர்த்தி நம் மனோபாவத்துக்குப் பிடித்தமானதாக இருந்தால்தானே முடியும். இதனாலேயே இஷ்ட தேவதை என்று தனக்குப் பிடித்த மூர்த்தியை உபாஸிக்க நமது மதம் சுதந்திரம் தருகிறது. நம் மனப்போக்குப் பிடித்தது என்கிற நிலையில் ஆரம்பத்தில் ஏதோ ஒரு மூர்த்தியை இஷ்ட தேவதையாக்கிக் கொண்டாலும், போகப் போக அதனிடம் உண்மையான பக்தி உண்டாக உண்டாக, நமக்கென்று என்ன ஒரு தனி மனப்போக்கு? என்று அதையும் விட்டுவிட அந்த தேவதையே அநுக்கிரகம் செய்யும். அப்புறம் எல்லாமே ஒர் பரமாத்ம வஸ்துவாகத் தெரியச் செய்யும்.
அவரவரும் தமக்கு இஷ்டமான தேவதையே உபாஸிக்கும்போதே மற்றவர்களுடைய இஷ்ட தேவதைகளைப் தாழ்வாக எண்ணக்கூடாது. நமக்கு எப்படி இந்த ரூபத்தில் பரமாத்மா அநுக்கிரகம் பண்ணுகிறாரோ அப்படியே மற்றவர்கலுக்கு மற்ற ரூபங்களின் மூலம் அநுக்கிரகம் பண்ணுகிறார் என்று தெளிவு பெற வேண்டும். அந்தந்த தேவதைக்குறிய புராணத்தைப் பார்த்தால் அது ஒன்றே முழுமுதற் கடவுள். மற்ற தேவதை எல்லாம் அதற்குக் கீழானவை. இந்த அவை பூஜை செய்தன. இதனிடம் அவை தோற்றுப் போயின என்றெல்லாம் இருக்கிறதே என்று கேட்கலாம். இதற்கு நஹி நிந்தா நியாயம் என்று பெயர். அதாவது இதர தேவதைகளை நிந்திப்பது பௌராணிகரின் நோக்கமல்ல. இந்த ஒரு தேவதையை ஆராதிப்பவருக்கு மனம் சிதறாமல் இது ஒன்றிடமே தீவிரமாகப் பற்றுதல் ஏற்படுத்த வேண்டும் என்பதே புராணத்தின் நோக்கம். இதற்காகவே இந்த தேவதைக்கு மட்டும் மற்றத் தேவதைகளுக்கு இல்லாத உத்கர்ஷம் (உயர்வு) சொல்லப்படுகிறது.
மகாநுபாவர்களாக இருந்தவர்கள் எல்லாத் தேவதைகளையும் சமமாகவே பார்த்தார்கள். மகா கவிகளான காளிதாசன், பாணன் முதலியவர்கலும் ஒரே வஸ்துவைத்தான் பல மூர்த்திகளாகவும் வருகிறது என்று சந்தேகமில்லாமல் கூறுகிறார்கள்.
பக்தர்களின் மனோபாவத்தைப் பொறுத்துப் பரமாத்மா பல ரூபம் கொள்கிறபோதே, பிரபஞ்சத்தில் தன்னுடைய வெவ்வேறு காரியங்களைப் பொறுத்தும் வெவ்வேறு ரூபங்களை எடுத்துக் கொள்கிறது. ரஜோ குணத்தால் சிருஷ்டி செய்யும் போது அதற்கேற்ப பிரம்மாவாகிறது. ஸத்வ குணத்தால் பரிபாலிக்கும்போது அதற்கேற்ப மகா விஷ்ணுவாகிறது. தமோ குணத்தால் சம்ஹரிக்கும்போது அதற்குறிய முறையில் ருத்ரரூபம் கொள்கிறது. இந்த மூன்றைப் பாணனும் காளிதாசரும் ஒரே சக்தியின் மூன்று வடிவங்களாகக் குறிப்பிடுகிறார்கள். இந்த மூன்றுக்கும் பொருந்துவது முப்பத்து முக்கோடி தேவதைகளுக்கும் பொருந்தும்.
எனவே, என் தெய்வம் உசந்தது, உன் தெய்வம் தாழ்ந்தது என்று சண்டை பிடிப்பதில் அர்த்தமே இல்லை. ஆனாலும், நம் தேசத்தில் பல இஷ்ட தெய்வங்கள் இருந்தாலும் கூட, பிரதானமாக இருந்து வரும் சைவத்துக்கும் வைஷ்ணவத்துக்கும் இடையே ரொம்பவும் சண்டைதான் நடந்து வந்திருக்கிறது. நன்றாக ஆலோசித்துப் பார்த்தால் இந்த இரண்டு பிரிவுகளுக்கும் தெய்வங்களானபரமேச்வரனும் மகா விஷ்ணுவும் ஒரே வஸ்துதான் என்ற ஞானம் பெறுவோம்.
காமாட்சி அனுக்ரகம் பற்றி மஹா பெரியவா
காமாட்சி ஸகல கஷ்டத்தையும் நிவர்த்தி பண்ணிப் பரமானந்தத்தை அளிக்கிறவள். நமக்கு ஏற்படும் கஷ்டங்களுக்கு ஜ்யோதிஷ ரீதியில் நவகிரகங்களைத்தானே காரணமாகச் சொல்கிறார்கள்? இந்த நவகிரக பாதிப்பு எதுவும் அவள் பாதத்தை ஸ்மரிக்கிறவருக்கு ஏற்படாது என்று பொருள்படுமாறு ‘மூக பஞ்சசதி’யில் – வார்த்தை விளையாட்டுப் பண்ணி, ஒரு ச்லோகம் இருக்கிறது. மூக பஞ்சசதி என்பது ஞானம், பக்தி, சாக்த சாஸ்த்ர தத்வங்கள், காவ்ய ரஸம் எல்லாம் சேர்ந்ததாகக் காமாட்சியைப் பற்றி மூகர் என்பவர் அநுக்ரஹித்துள்ள ஐநூறு ச்லோகம் கொண்ட ஸ்தோத்ரம். இவற்றிலொன்று தான் நவகிரகங்களில் ஒவ்வொன்றின் தன்மையும் அம்பாளின் சரணாரவிந்தத்தில் இருப்பதாகச் சொல்லும் ச்லோகம்.
ததாநோ பாஸ்வத்தாம் அம்ருதநிலயோ லோஹிதவபு:
விநம்ராணாம் ஸௌம்யோ குருரபி கவித்வம் ச கலயந்
கதௌ மந்தோ கங்காதர-மஹிஷி காமாக்ஷி பஜதாம்
தம: கேதுர்-மாத:ஸ்தவ சரணபத்மோ விஜயதே
(பாதாரவிந்த சதகம் – 59)
சூரியன் : ப்ரகாசிப்பதாலே ‘பாஸ்வத் தாம்’ என்று அந்தப் பாதத்தைச் சொல்கிறார். நவகிரகங்களில் முதலில் வரும் ஸூர்யனின் தன்மை இதுதானே? ‘பாஸ்கரன்’ என்றே அவனுக்கு ஒரு பேர்.
சந்திரன் : அம்பாள் சரணத்திலிருந்து அம்ருதம் கொட்டுகிறது. இதை ‘அம்ருத நிலய:’ என்கிறார். யோகிகள் சிரஸின் உச்சியில் அவளுடைய பாத பத்மத்தின் அம்ருதம் பெருகுவதில் அப்படியே ‘உச்சி குளிர்ந்து’ இருப்பார்கள். ‘சரணாம்ருதம்’ என்றே சொல்வது வழக்கம். இதேபோல அம்ருதம் பெருக்குகிற தன்மை சந்திரனுக்கு உண்டு. அதனால்தான் ‘ஸுதாகரன்’ என்று பெயர்.
செவ்வாய் : ‘லோஹிதவபு:’ என்று ச்லோகத்தில் இருப்பதற்கு, ‘சிவந்த ரூபமுள்ளது’ என்று அர்த்தம். சிவப்பாயிருப்பதுதான் செவ்வாய். ‘விநம்ராணாம் ஸௌம்ய:’ அந்தப் பாதத்திலே போய் நமஸ்காரம் பண்ணுகிறவர்களுக்கு, அது ஸௌம்யமாயிருக்கிறது. மனஸுக்குப் பரமஹிதமாக, ம்ருதுவாக, சாந்தமாக இருப்பதெல்லாம் ஸௌம்யம். உக்ர தேவதை என்பதற்கு ஆப்போஸிட்டாக ஸௌம்ய தேவதை என்கிறோம்.
புதன் : ‘சோம’ என்ற சந்திரனிலிருந்து உண்டானதே ‘ஸௌம்யம்.’ நிலவு போலக் கோமளமாக, சாந்தமும் ஹிதமும் தருவதாக இருப்பதையெல்லாம் ஸௌம்யம் என்கிறோம். சோமனுக்குப் புத்ரனாக உண்டானவன் புதன். அதனால் அவனுக்கு ஸௌம்யன் என்று பேர்.
குரு : அம்பாள் பாதம் ‘குரு ரபி’ – ‘குரு: அபி’ என்கிறார். ‘குருவானதும்கூட’ என்கிறார். குரு என்றால் குணவிசேஷத்தால் பெரியது என்று அர்த்தம். அதோடுகூட, அந்தப் பாதம் க்ஷணகாலம் பட்டுவிட்டால் திருவடி தீக்ஷையினாலே ப்ரஹ்ம ஞானமே ஸித்தித்துவிடும். இப்படி ஞானம் தருவதாலும் அது குருவாயிருக்கிறது. குரு என்றால் வியாழன். குருவாரம் என்றே அந்தக் கிழமைக்குப் பேர்.
சுக்கிரன் : ‘கவித்வம் சகல யந்’ – கவித்வத்தையும் அநுக்ரஹித்துவிடுகிறது அம்பாள் பாதம். அவளருளால் அருட்கவியாகி, ஒரு காலத்தில் தாம் மூகனாயிருந்ததை லோகமெல்லாம் அறிய வேண்டுமென்பதால், ‘மூகர்’ என்றே பெயர் வைத்துக் கொண்டவர்தான் இந்த ச்லோகத்தைப் பண்ணியிருப்பவரே! நவகிரகங்களில் கவித்வகாரகன் வெள்ளிக் கிழமைக்குரிய சுக்ரன். ‘குரு’ என்று வெறுமே சொன்னால், அது தேவகுருவான ப்ருஹஸ்பதியைத்தான் குறிக்கும். அப்படியே ‘கவி’ என்று வெறுமே சொன்னால் அது அஸுர குருவான சுக்ராச்சாரியாரைத்தான் குறிப்பிடும். கவித்வ சக்தி அருளுவதால் அம்பாளின் பாதம் சுக்ரனாக இருக்கிறது.
சனி : ‘கதௌ மந்த:’ மிக மெதுவான நடை உள்ளது அம்பாள் பாதம். ‘மந்தன்’ என்று சனிக்கு ஒரு பேர். சனி, ரொம்ப மெதுவாக ஸஞ்சாரம் செய்யும் கிரஹம். ‘சனீச்வரன்’ என்று சொல்வது தப்பு. மற்ற கிரகம் எதற்கும் இல்லாத ‘ஈச்வர’ப் பட்டம் இதற்கு மட்டும் வருவதற்கு நியாயமில்லை. ‘சனைச்சரன்’ என்பதே சரியான வார்த்தை.‘சனை:’ – மெதுவாக, ‘சர’-ஸஞ்சரிப்பவன். அதைச் சுருக்கி சனி என்கிறோம்.
ராகு : ‘பஜதாம் தம: கேது:’ – அம்பாள் பாதம் தன்னை பஜிக்கிறவர்களின் தமஸுக்கு உலை வைக்கும் தூமகேதுவாக இருக்கிறது. தமஸ் என்றால் இருட்டு. துக்கம், அஞ்ஞானமெல்லாம் தான் பெரிய இருட்டு. தமஸ் என்று ராஹுவுக்கும் பெயர்.
கேது : கேது என்பது ஒன்பதாவது கிரகமென்று எல்லோருக்கும் தெரியும். ச்லோகத்தில் ராஹுவின் தன்மை மாத்திரம் நேரே அம்பாள் பாதத்துக்கிருப்பதாகச் சொல்லாமல் ஆனாலும் ‘தமஸ்’ என்ற வார்த்தையை வைத்து, மற்ற எட்டு கிரகங்களையும் நேரே அந்தச் சரண ஸம்பந்தப்படுத்திச் சொல்லியிருக்கிறது.”
யார் இந்த மூகர்…?
கவி காளிதாஸர், தண்டி, பவபூதி, வரருசி, மற்றும் 5 புலவர்கள் சேர்ந்து “நவரத்தினங்கள்” என்னும் புகழுடன் போஜராஜன் அரண்மனையில் போற்றப்பட்டனர். ஒரு சமயம் போஜராஜன் சபையில் யார் மிகச் சிறந்த கவி என்ற கேள்வி வருகையில் அன்னை பராசக்தியானவள் தண்டியையும் பவபூதியும் சிறந்த புலவர்கள் என்று கூறுகிறாள். இதனைக் கேட்ட காளிதாஸர் மிகுந்த கோபத்துடன் அவசரமாக ‘அப்படியென்றால் நான் யாரடி?’ என்று அம்பாளிடமே ஏகவசனத்தில் கேட்கிறார். அன்னையும் நிதானமாக ‘நீயே நான் தான்’ என்றவாறு தத்வமஸி என்கிற மஹா வாக்கியத்தை உணர்த்துகிறாள். ஆனாலும் காளிதாஸர் அவசரப்பட்டு அன்னையை அவதூறாக பேசியதற்கு தண்டனையாக மறுபிறவியில் ஊமையாக பிறக்கும்படி சாபமிடுகிறாள். காளிதாஸர் தாம் செய்த தவறுக்கு மனம் வருந்தி மன்னிக்கும்படி வேண்ட, தேவியும் மனமிரங்கி, ”நீ ஊமையாக பிறந்தாலும் மீண்டும் பேசும்திறனும், கவிபாடும் திறனும் பெருவாய்” என்று அருளாசி வழங்கி வாக்களிக்கிறாள் அன்னை. காலங்கள் உருண்டோடின…. சக்திபீடங்களில் முதன்மையான ஸ்ரீகாஞ்சி க்ஷேத்திரத்தில் தமது மறுபிறவியில், ஓர் அந்தண குடும்பத்தில் ஊமையாக பிறந்தார் காளிதாஸர். மூகர் என்ற பெயருடன் பால்யத்திலிருந்தே ஸ்ரீகாமாட்சி சன்னதியில் எப்போதும் அமர்ந்திருப்பார்… பக்கத்திலேயே ஒருஸ்ரீவித்யா உபாஸகரும் வாக்ஸித்தியை வேண்டி வழிபட்டு வந்தார். ஓரு நாள் அந்த உபாஸகரைக் கடாஷிக்கும் பொருட்டு அன்னை அவர் முன் பாலையாக தோன்றுகிறாள். அம்பிகையின் ஸெளந்தர்யத்தைக் கண்ட மூகர், தான் முன் ஜென்மாவில் செய்த சியாமளா தண்டகம் போன்ற கவிதைகளின் நினைவால் உந்தப்பட்டு, தேவியைப் பாட வாய் திறந்து ‘பே,பே’ என்றுசப்தமிடுகிறார். ஊமைச் சிறுவனின் உளறல் சப்தம் கேட்டு கண்விழித்த உபாஸகர், ஊமையின் அலறலுக்கு இந்த சிறுமியே காரணமென்று அவளை அந்த இடத்தைவிட்டு செல்லுமாறு உத்திரவிடுகிறார் ஸ்ரீவித்யா உபாஸகர். “சுத்த வித்யாங்குராகார த்விஜபங்க்த்தி த்வயோஜ்வலா” என்பதான சுத்த வித்தையே போன்ற பல்வரிசைகளில் ஊறி வந்த தாம்பூல ரஸத்தை தேவி மூகரின் வாயில் சேர்த்துவிடுகிறாள். உடனடியாக மூகருக்கும் வந்தது யார் என்பது முதலாக தனதுபூர்வ ஜென்ம தொடர்புகளெல்லாம் புரிகிறது. மேலும் அவர் பேசும் சக்தி மட்டுமல்லாது பாடல்களை புனையக் கூடிய கவிதாவிலாஸம் சித்தியாகிறது. இவர் ஸ்ரீகாமாட்சி மீது பாடிய 500 ஸ்லோகங்களே ”மூக பஞ்சசதி” என்று போற்றப்படுகிறது. இந்த ஸ்லோகங்களானது ஸ்ரீவித்யா மந்திரமே மாற்று உருக்கொண்டதாக சொல்லும்படியான விசேஷ அமைப்புடன் விளங்குகிறது. இந்த மூகரே பிற்காலத்தில் (கி.பி 398) காஞ்சி காமகோடி பீடத்தின் 20ஆவது ஆச்சாரியராக பட்டமேற்று 39 ஆண்டுகள் கழித்து கி.பி 437 ஆம் வருடம் ஸித்தி அடைந்தார்.
வைராக்யம் - முக்கூர் லக்ஷ்மி நரஸிம்மாச்சாரியார்

ஒரு பொருளிடத்தில் ஏன் வெறுப்பு வந்தது என்று கேட்டால் 'அதை அனுபவிக்க முடியாது என்பதால் வெறுப்பு வந்தது' எனச் சொல்வது வைராக்கியம் ஆகுமா? ஆகவே ஆகாது. வைராக்கியம் வந்து விட்டதானால் எல்லாவற்றையும் அனுபவிப்பதற்கு உடம்பிலே தெம்பும் சக்தியும்பலமும் இருக்கிற போதே அனுபவிக்காமல் விட்டுவிட வேண்டும் - விட்டுவிடத் தயாராக வேண்டும். எல்லாம் போன பிற்பாடு வைராக்கியம் வரட்டும் என்று இருந்தால் அதுவே இவரை விட்டு விடுகிறதே! அப்புறம் இவர் என்ன விடுவது! 'அதை விட்டேன்' இதை விட்டேன்' என்று சொல்வதில் பிரயோஜனம் என்ன? கைக்கு அத்தனையும் கிடைத்துக் கொண்டிருக்கிற நேரத்தில் எல்லாவற்றையும் விட்டுவிட வேண்டும். விட்ட ஸ்தானத்தில் அவனை நாம் பற்றிக் கொள்ள வேண்டும். அது தான் வைராக்கியம். தாமரை இலைமேல் இருக்கும்படியான நீர்த்துளியானது எப்படி ஒட்டிக் கொள்ளாமல் இருக்கிறதோ அந்த மாதிரி உலகியல் வஸ்துக்களிலே நாட்டமில்லாமல் இருந்து கொண்டிருக்க வேண்டும்.
ஒட்டிக் கொள்ளக்கூடாது என்றால் என்ன?
உலகத்திலே நாம் வாழ வேண்டாமா?
வாழ்வதற்கு ஒட்டுதல் வேண்டாமா?
உலகத்தில் நாம் நன்றாகவே வாழ வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. பூரணமாக வாழவேண்டும் என்கிறது. அப்படி வாழாது போனால் வாழ்த்திச் சொல்லும் மந்திரங்களுக்கு என்ன அர்த்தம் இருக்கும்? பெரிய பெரிய மந்திரமெல்லம் சொல்லி ஆசிர்வாதம் பண்ணுகிறோமே! 'எதற்காக இந்த உலகம்? என்று கேள்வி வந்துவிட்டால் அப்புறம் ஆசிர்வாதம் மட்டும் எதற்கு?
பூரணமாக இந்த உலகத்திலே நாம் இருக்க வேண்டும். கர்மானுஷ்டமான தர்மங்கள் எல்லாம் பூரணமாகப் பண்ண வேண்டும். அதைத்தான் சாஸ்திரம் வலியுறுத்துகிறது. அதற்காகத்தான் பூரண ஆயுளுடன் இரு என்று சாஸ்திரம் சொல்கிறது. ஆனால் உலக வஸ்துக்களுடைய நாட்டம் உன்னுள்ளே புகலாமா என்றால் புகக்கூடாது. அதை உள்ளுக்குள்ளே புகுத்தாமல் உலகத்திலே இருக்க முடிந்தால் எத்தனை நாள் வேண்டுமானாலும் இருக்கலாம். இதைத் தான் சாஸ்திரம் சொல்கிறது. ஒரு கப்பல் இருக்கிறது. அது சமுத்திரத்திலே போகிறது. சமுத்திரத்தில் அது போனால் தான் வாணிபம் பெருகும். பல பேர் பல இடத்துக்குப் போவார்கள். கப்பல் சமுத்திரத்திலே போகலாமா என்றால் நன்றாகப் போகலாம். சமுத்திர ஜலம் கப்பலுக்குள் வரலாமா? இது அடுத்த கேள்வி. வந்தால் என்ன ஆகும்? அவ்வளவு தான்..
அதைப் போல்தான் இந்த உலகத்திலே நாம் இருக்கலாமா என்றால் இருக்கலாம்!
ஆனால் உலக வஸ்துக்கள் நம்முள் நுழையலாமா என்றால், அந்த கப்பலுக்கு என்ன ஆகுமோ அது தான் நமக்கும்! நாம் இதிலே மூழ்கிப் போய் விட்டோமானால் மறுபடியும் கரையேறுவது எப்போது? அரிது அரிது மானிடராய்ப் பிறப்பது அரிது, நமக்குக் கிடைத்திருக்கிற இந்த ஜன்மாவை வீணடிக்கலாமா? இந்த மாதிரி ஜன்மா நமக்கு மீண்டும் அமையுமா? எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!