புதன், 9 அக்டோபர், 2024

படலம் 27: பிராயச்சித்த விதி...

படலம் 27: பிராயச்சித்த விதி...
 

27 வது படலத்தில் பிராயச்சித்த விதி கூறப்படுகிறது. அங்கு முதலில் பிராயச்சித்த கர்மாவின் ஸ்வரூபம் வர்ணிக்கப்படுகிறது. உத்தரவு இடும் அமைப்பை உடையது. தர்மம் என்று தர்ம இலக்கணம் ஆகும். அந்த விதி நிஷேதம் என உத்தரவு இரு வகைப்படும். அந்த உத்தரவில் முறைப்படி அனுஷ்டித்த பொழுது தர்மசங்கிரஹம் ஏற்படுகிறது. விபரீதமாக அனுஷ்டித்தால் அதர்மம் ஏற்படும். அதர்மத்தால் பெரிய பாபம் ஏற்படும். அந்த பாபத்தால், பாபத்தை செய்தவனுக்கு கீழ்நோக்கி செல்லும் செயல் ஏற்படும் பொழுது எந்த அனுஷ்டிக்கப்பட்ட கர்மா பாபம் செய்தவனை மேல் நோக்கி செலுத்துகிறது. அந்த கர்மாவானது பிராயசித்தம் என்று ஆகமத்தில் கூறப்படுகின்றது என பிராயச்சித்த கர்மாவின் ஸ்வரூபம் நிரூபிக்கப்படுகிறது. மேலும் பிராயக் என்ற சொல்லினால் தோஷம் என்று கூறப்படுகிறது. சித் என்ற சப்தத்தினால் இந்த ஆகமத்தில் ஆத்மா என கூறப்படுகிறது. தகாரத்தினால் தாண்டுதல் என கூறப்படுகிறது. அவ்வாறே எந்த கர்மாவினால் தோஷத்துடன் கூடிய ஆத்மாவிற்கு கீழே விழுவதிலிருந்து மேல் நோக்கி செல்லும் செயல் ஏற்படுகிறதோ அப்பேர்பட்ட கர்மாவானது பிராயச்சித்தம் என்று பிராயச்சித்த சப்தத்தின் பொருள் விளக்கம் கூறப்படுகிறது. எந்த கர்மாவில் அனுஷ்டிக்கப்பட்ட விஷயத்தில் விதியோ நிஷேதமோ இல்லையோ அந்த விஷயத்தில் புண்யமோ பாவமோ இல்லை என்று சாஸ்திர அர்த்த நிர்ணயம் கூறப்படுகிறது. பிறகு கர்மாக்கள் பல விதமாக இருப்பதாலும் நூல் அதிகப்படியாக ஆகும் பிராயச்சித்த கர்மாவை சொல்ல இயலவில்லை. பலவிதமாகவும் கூற இயலவில்லை என்கிறார். ஆகையால் பொதுவான பிராயசித்த கர்மா அல்பமாக கூறப்படுகிறது என கூறி ஸ்நானம், ஜபம், சிவத்யானம், பிராணாயாமம், பிரதிக்ஷணம், பிம்பம், ஆகமம், தன்னுடைய ஆசார்யன், தேசிகன், சைவ சித்தாந்தத்தில் அவர்களுக்கு நமஸ்காரம் செய்வது. சிவன்கோயிலை தரிசிப்பது சிவன் அக்னி குரு. பூஜை செய்வது பஞ்சகவ்யம் அருந்துவது சிவதீர்த்தம் தீட்சை புண்ய ÷க்ஷத்திரங்களில் வசிப்பது.

உபவாஸம், ஹவிஸ், போஜனம், சருபாத்திர சேஷத்தை புசிப்பது. சாந்தி, சாந்திஹோமம் திசா ஹோமம் சம்ஹிதா ஹோமம் மூர்த்தி ஹோமம் நெய்தேன், பால், இவைகளால் ஸ்நானம் செய்விப்பது ஒரு தினம் முதல் கொண்ட உத்ஸவம், சீதகும்பம், விசேஷ பூஜை இவைகள் சனாதன பிராயசித்தம் என கூறப்படுகிறது என்று கூறி அதன் பெயரும் காரியங்களும் குறிப்பிடப்பட்டு, குறிப்பிடப்பட்ட கார்யங்களை குறித்து அவைகளின் லக்ஷணம் சிறிய முறைப்படி விளக்கப்படுவது என அறிவிக்கிறார். பிறகு கவுசிகம் முதலான 5 கோத்திரத்தில் உண்டானவரும், சிவத்விஜ குலத்தில் உண்டானவரும் தலைபாகை உத்தரீயம் புதிய வஸ்திரத்துடன் கூடியவரும் 5 அணிகலன்களை உடைய ஆசார்யன் பிராயசித்தம் செய்யவும் என கூறி பிராயசித்த கர்மாவை செய்வதில் யோக்யமானவரை பற்றி நிரூபிக்கப்படுகிறது. பிறகு அத்புத சாந்தி விஷயத்தில் தினம் லக்னம் நட்சத்திரம் முதலியவைகளை பார்க்காமல் பிராயசித்த கர்மாவை எப்பொழுது  அனுஷ்டிக்கப் படுகிறதோ அது சிரேஷ்டம் ஆகும். ஏழு தினத்திற்கு பிறகு செய்வது மத்யமம். 15 தினத்திற்கு பிறகு செய்வது அதமம் ஒரு மாதத்திற்கு பிறகு செய்வது ஹீனம் ஆகும் எனப்படுகிறது. 1 மாதத்திற்கு மேலாக செய்யக் கூடாது. லிங்கம், பீடம், விமானம் இவைகளின் விஷயத்தில் பிராயசித்தம் ஏற்பட்ட சமயத்தில் முதல்பாகம் மத்யமபாகம், கடைசிபாகமோ, சேர்ப்பதற்காக கர்த்தா தேசிகன் ஸ்தானிகனோ பணம் இல்லாமையால் மனக் கலக்கத்தினாலும் ஒருவர்க்கு ஒருவர் பேராசை என்ற விஷயத்தினாலோ, பாபகர்மா ஏற்படும் என்பதாலோ இந்த பிராயச்சித்தம் குறித்து மதிக்காமல் அலட்சியம் செய்கிறானோ அவர்கள் சிவத்துவேஷி எனவும், ராஜாவிற்கு பங்கத்தை உண்டுபண்ணுபவனும், ராஜ்யத்தை கலகம் உள்ளதாக செய்பவனுமாக நிரூபிக்கப்படுகிறது. அவர்கள் மிகுந்த சிவ பக்தர்களாலும் ஆசை அற்றவர்களாலும் தபஸ்விகளாலும், தண்டிக்கத்தக்கவர்களாக ஆகிறார்கள்.

சிரத்தையுடன் கூடிஎவர்கள் பிராயச்சித்தத்தை செய்கிறார்களே அந்த மனிதர்கள் உத்தமமான மனிதர்கள் என்றும் அரசனுக்கு நன்மையையே செய்பவனாகவும் புண்ய கர்மாவை உடையவனாகவும், ராஜ்யத்திற்கு உபகாரம் செய்பவருமாகவும் ஆகிறார்கள். ஆகையால் முயற்சியுடன் பிராயசித்தம் அனுஷ்டிக்கவும் என கூறப்படுகிறது. பிறகு முன்பு கூறப்பட்டுள்ள ஸனாதன பிராயசித்த கர்மாக்களின் நடுவில் ஸ்நான, ஜபகர்மா கூறப்படுகிறது. பிரதட்சிணம் என்ற கர்மா பேதமுறைப்படி பயனை தெரிவிக்கும் முறையாக விஸ்தாரமாக கூறப்படுகிறது. சிவதீர்த்தம் அஸ்திர தீர்த்தம் இவைகளை செய்யும் முறை கூறப்படுகிறது. பிறகு உபவாசம் செய்யும் முறை விஸ்தாரமாகவும் வெவ்வாறாகவும் கூறப்படுகிறது. பிறகு சாந்தி கர்மாவானது முறைப்படி கூறப்படுகிறது. அதன் முடிவில் சாந்தியானது ஒன்று மூன்று, ஐந்து ஏழு ஒன்பது, பதினான்கு பதினைந்து, இருபத்தியொன்று, இருபத்தி ஏழு, ஆகிய எண்ணிக்கை உள்ள தினங்களால் இடைவிடாமல் அனுஷ்டிக்க வேண்டும் என 9 விதமாக நிரூபிக்கப்படுகிறது. 9 விதங்களுக்குள் செய்ய வேண்டிய முறையும் அறிவிக்கப்படுகிறது. பிறகு சாந்தி ஹோமவிதி அறிவிக்கப்படுகிறது. அந்த சாந்தி ஹோமமானது இருவகைப்படும் என கூறப்பட்டு அதில் உயர்ந்ததான சாந்தி ஹோமத்தை முதலில் கூறுகிறேன் என்று கூறி உன்னதமான சாந்தி ஹோமத்தை செய்யும் முறை நிரூபிக்கப்படுகிறது. 9 கும்பத்தை ஸ்தாபித்து பாசு பதாஸ்திர பூஜை, ஹோமம் செய்யும் முறை கும்பத்தில் உள்ள ஜலங்களால் பிரோக்ஷணம் செய்வது முதலிய செய்முறை தொகுப்புகளை கூறி சாந்தி ஹோமத்திற்கு சொல்லப்பட்ட தின சங்க்யையால் கும்பஸ்தானம் இன்றி ஹோமமோ செய்யவும் என அறிவிக்கப்படுகிறது. இருவிதம் என அறிவிக்கப்பட்ட சாந்தி ஹோமத்தில் உயர்ந்தது மட்டுமே கூறப்பட்டுள்ள மற்றவைகள் கூறப்படவில்லை.

பிறகு திசாஹோமம் செய்யும் முறை கூறப்படுகிறது. திசாஹோமம் இருவகைப்படும் அதில் ஒன்று பிராயசித்தத்திற்காகவும் மற்றொன்று ஸ்னபனம் முதலியவைகளுக்கு ஏற்றதானது என கூறி இரண்டின் செய்முறையும் இங்கு சிவாஸ்திரம் பிரத்யங்கிராஸ்திரம் இவைகளின் தியானமுறை விசேஷமாக வர்ணிக்கப்படுகிறது. பிறகு ஸம்ஹிஹோமம் செய்ய சொல்லப்படுகிறது. பிறகு இந்த ஹோமமானது எல்லா தோஷத்தையும் போக்கக் கூடியது என கூறி அந்த ஹோமம் முறை வர்ணிக்கப்படுகிறது. பிறகு மூர்த்தி ஹோமம் செய்யும் முறையும் காணப்படுகிறது. முதலாவதாக பிராயசித்தத்திற்காக செய்யக் கூடிய மூர்த்தி ஹோமம் முறைப்படி நிரூபிக்கப்படுகிறது. மற்றதான மூர்த்தி ஹோமத்தின் விசேஷமும் இங்கு கூறப்படுகின்றன என கூறி மூர்த்தி ஈசர்களின் அர்ச்சனை ஹோமத்துடன் கூடிட எட்டு குண்டம் ஐந்து குண்டம் ஒரு குண்டம் இவைகளில் செய்ய வேண்டிய மூன்று வித ஹோமம் கூறப்படுகிறது. இங்கு இந்த மூர்த்தி ஹோமமானது சம்ப்ரோக்ஷணம் பிரதிஷ்டை இவைகளில் பிராயசித்தத்திற்காக செய்யக் கூடாது என கூறப்படுகிறது. இவ்வாறு முன்பு ஸநாதன பிராயசித்த கர்மதன்மையினால் எண்ணப்பட்ட ஸ்நானம் முதற்கொண்டு மூர்த்தி ஹோமம் இவைகளான சிலபிராயசித்தங்கள் கூறப்படுகின்றன. கிருதஸ்நானம் முதலிய கர்மாக்களில் முன்பு போலவே செய்யவேண்டும் என சொல்லப்பட்டதால் மறுபடியும் கூறவில்லை என அறிவிக்கப்படுகின்றன. அதில் கிருதஸ்நான விதியும் க்ஷளத்ராபிஷேக விதியும் க்ஷீரஸ்நானம் முதலிய பலவித ஸ்நான முறையும் விசேஷ பூஜையும் 4வது படலத்தில் ஸ்நபன படலத்தில் விளக்கப்படுகிறது. 1 நாள் முதல் கொண்டதான உத்சவவிதி ஆறாவது படலத்தில் மஹோத்ஸவ விதியில் நிரூபிக்கப்படுகிறது. சீதகும்ப விதி 15ம் படலத்தில் சொல்லப்பட்டுள்ளது இவ்வாறு ஸநாதனமான பிராயச்சித்த கர்மாவுக்கும் முன்பு தெரியப்படுத்தப்பட்டவைகளுக்கும் சிலவற்றிற்கு குறிப்பு விஷயம் காணப்படுகிறது.

பிறகு நித்ய பூஜாவிதியில் ஏற்படுகிற நித்யபூஜை விடுபட்டதான விஷயங்களை கூறி அங்கு உண்டாகிற பாபங்களின் விஷயத்தை கூறி அதைப் போக்குவதற்காக செய்யப்படவேண்டிய பிராயச்சித்த கர்மாக்கள் நிரூபிக்கப்படுகின்றன. பின்பு நடுவின் நைமித்திக காம்ய பூஜாவிதியும் ஏற்படுகிற பாத்யாதி திரவ்யங்கள் குறைபாடுகளை விளக்கி அதனால் உண்டாகிற குற்றங்களையும் குறிப்பிட்டு செய்ய வேண்டிய பிராயசித்த கர்மா நீடிக்கப்படுகின்றன. பிறகு அஷ்டபந்தனம் முதலியவைகள் விடுபட்டால் அதற்கு செய்ய வேண்டிய பிராயசித்த முறையும் கூறுகிறேன் என்று சொல்லி நைமித்திக விஷயத்தில் ஏற்படுகிற தோஷங்களையும் அவ்வாறே திடீர் என்று ஏற்படுகிற தோஷங்களையும் குறிப்பிட்டு அந்த தோஷங்கள் ஏற்பட்ட காலத்தில் உண்டாகிற தோஷங்களுக்கு குறிப்பிடுவதன் மூலம் அதை போக்குவதற்கான செய்ய வேண்டிய பிராயச்சித்தங்கள் விதிக்கப்பட்டுள்ளது. பிறகு தேசம், காலம், வயது, சக்தி, ஜாதி, பக்தி இவைகளை நன்கு விசாரித்து அதற்கு தக்கவாறு பிராயத்திங்களை அனுஷ்டிக்கும் விதம் சொல்ல வேண்டுமென கூறப்பட்டுள்ளது. சிறு வயதினர், பலமில்லாதவர்கள், வயதானவர்கள், வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள், இவர்களுக்கு கால் பாகம் பாகம் பிராயச்சித்தம் கொடுக்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது. கட்டளைகள் பலவிதமாக சாஸ்திரத்தில் கூறப்படுகின்றன. அவற்றில் மோக்ஷஸ்தானம் மிக முக்யமாகக் கூறப்பட்டுள்ளது. அனுபவிக்குமிடம் சரீரமாகும். அவ்வாறே வெவ்வெறு இடங்களிலிருக்கின்றன என குறிப்பிட்டு ஆசார்யனால் பிராயச்சித்தம் ஏற்பட்ட பொழுது செய்ய வேண்டிய பிராயச்சித்தங்கள் விரிவாக கூறப்படுகின்றன. பிறகு உத்ஸவ விஷயத்தில் ஏற்படுகின்ற தோஷங்களை குறிப்பிட்டு, அவைகளேற்பட்டபொழுது உண்டாகிற குற்றங்களை அறிவித்து அங்கு செய்ய வேண்டிய பிராயச்சித்தங்கள் விரிவாகி நிரூபிக்கப்படுகின்றன. முடிவில் ஓர் ஆலயத்தில் ஏற்படும் கிரியையை ஓர் ஆசார்யனே செய்யவேண்டும். மற்றவரால் செய்யப்பட்டால் ஆசார்யகலப்பு குற்றம் ஏற்படும். அந்த குற்றம் அரசனையும், அரசவையையும் அழிக்கும் எனக்கூறப்பட்டுள்ளது.

இந்த விஷயத்தில் கேட்கின்ற முனிவர்களின் தீர்த்தம் முதலியவை சேகரிப்பது, சந்தனம், புஷ்பம், தூபமிவைகள் தயார் செய்வது, தீபங்கள், நைவேத்யங்கள் ஏற்பாடு செய்வது, உருவபிம்ப பூஜை, பரிவார பூஜை, நித்யோத்ஸம், பாடுவது முதலியவை, ஸ்நபனத்திற்கு தயார்செய்வது, அவ்வமயம் மூலலிங்கம் முதலியவைகளின் பூஜை, நித்யஹோமம், ஆகிய இவைகள் பலமனிதர்களால் செய்யப்படவேண்டியிருப்பதால் எவ்வாறு ஓர் ஆசார்யனே செய்யமுடியும் என்று கண்டனம், தீர்மானம் கூறப்படுகிறது. அங்கு சிவனால் நித்யம், நைமித்திகம், காம்ய விதிகளில் எந்த கிரியை ஓர் ஆலயத்தில் ஏற்படுகிறதோ அந்த கிரியை ஒரே ஆசார்யனாலே செய்யப்பட வேண்டும் என்று முன்பு கூறப்பட்டது. அவ்வாறே தேசிகன், புத்ரன், பேரன், பந்துக்கள், தீஷிதர்கள் அவர்களால் ஏவப்பட்ட மனிதர்கள், ஆதிசைய குளத்திலுண்டான பிராமணன், க்ஷத்ரியன், வைச்யன், சூத்ரன், அநுலோமர்கள், பாடுபவன், ஆடுபவர்கள், அவர்களால் ஏவப்பட்ட ருத்ரகன்யா, ருத்ரகன்யா, ருத்ரதாஸீ ஆகிய இவர்களால் அனுஷ்டிக்கப்பட்ட கர்மாவும் ஆசார்யனால் அனுஷ்டிக்கப்பட்டதாக ஆகிறது. எவ்வாறு அரசனால் ஏவப்பட்ட அமைச்சர் முதலியவர்களால் செய்யப்பட்ட அரசகார்யம், அரசனால் செய்யப்பட்டதாகவே எண்ணப்படுகிறதோ அவ்வாறே இங்கும் ஏற்கப்படுகிறது என்று ஸமாதானம் கூறப்படுகிறது. இவ்வாறு முப்பதாவது படல கருத்து தொகுப்பாகும்.

1. அந்தண ஸ்ரேஷ்டர்களே பிராயச்சித்த விதானத்தை கூறுகிறேன். கேளும். செய்யென்றும், செய்யாதே என்றும் சாஸ்திரம் இருவகைப்படும்.

2. சாஸ்திரத்தில் கூறிய பிரகாரம், அனுஷ்டித்தால் தர்மம் ஸித்திக்கிறது. அதற்கு மாறுதலாக அனுஷ்டித்தால் அதர்மம் ஏற்பட்டு அதனால் மஹாபாபம் ஸம்பவிக்கிறது.

3. அந்த அதர்மனுஷ்டானத்தினால் நரக பிராப்தி ஏற்படுகையில் அதைத் தடுத்து ஸ்வர்க லோக பிராப்திக்காத எந்த கர்மா அனுஷ்டிக்கப்படுகிறதோ அதற்கு பிராயச்சித்தம் என்று இங்கு ஆகமத்தில் கூறப்பட்டுள்ளது.

4. மாபெரும் பாபத்திற்கு ப்ராயம் என்று பெயர், சித் என்றால் ஆத்மா என்று பொருள் த என்ற எழுத்து தாண்டுதல் (கடப்பது) என்று பொருள் கொண்டதாகும் (பிராயச்சித்த)

5. சிவபிராம்மணர்களே! பாபத்துடன் கூடிய ஆத்மா நரகத்தில் விழுவதைத் தடுப்பதே பிராயச்சித்தம் என்று கூறப்பட்டுள்ளது.

6. எந்த கர்மாவை அனுஷ்டிக்கும் விஷயத்தில் சாஸ்திரம் விதிக்கவும் இல்லையோ அதில் புண்யமும் இல்லை பாபமும் இல்லை என்று சாஸ்திரத்தின் (ஒருமித்த) கருத்தாகும்.

7. முக்கியமான கர்மா கிழக்கு முகமாக அனுஷ்டிக்கப்பட்டால் அதற்கு பிராச்சித்தம் தேவை இல்லை. மேற்கு முகமாகவும், திசை மூலையிலும் கர்மா அனுஷ்டிக்கப்பட்டால் பிராயச்சித்தம் செய்யவேண்டும்.

8. ஹே அந்தணர்களே கர்மாக்கள் அளவற்றவைகளாக இருப்பதால் கிரந்தம் (சாஸ்திரம்) மிகவும் விரிவடையும் என்ற காரணத்தால் பிராயச்சித்தங்களில் பேதங்களை கூற இயலாது.

9. ஆகையால் சுருக்கமாக ஸ்வல்பமாக பழமையான பிராயச்சித்தம் கூறப்படுகிறது. ஸ்நானம் சிவத்யானம், பஞ்சாக்ஷரஜபம், ப்ராணாயாமம், வலம் வருதல் முதலியன (பிராயச்சித்தமாக) விதிக்கப்படுகிறது.

10. சிவலிங்கம், மூர்த்திகள், ஆகமங்கள், ஸ்வகுரு, ஆசார்யன் சிவஞானம் நிறைந்த மகான்கள் ஆகியோருடைய தர்சனம் பிராயசித்தமாகும்.

11. மேலே கூறியவர்களை நமஸ்காரம் செய்வதும், சிவாலயத்தில் தொண்டு செய்வதும், சிவாக்னி ஆசார்யன், ஆகியோருக்கு நமஸ்காரம் செய்வதும், சிவதீøக்ஷ பெற்றவர்களுக்கு (உரியவர்க்கு) அன்னதானம் செய்தலும் பிராயசித்தமாகும்.

12. கங்கை காவேரி போன்ற புண்ய நதிகளில் ஸ்நானம் செய்வதும், பஞ்சகவ்யம் சாப்பிடுவதும். சிவாஸ்த்ரஜலம் தீøக்ஷ, புண்ணிய ÷க்ஷத்திரங்களில் வாஸம் செய்வதும் (பிராயச்சித்தமாகும்)

13. உபவாசம், ஹோம சேஷத்தை புசிப்பதும், சரு பாத்திரத்தில் கடைசியில் மிஞ்சியதை புசிப்பது. சாந்தியும், சாந்தி ஹோமமும், திசாஹோமம், ஸம்ஹிதா ஹோமமும்

14. மூர்த்திஹோமம், நெய், தேன், பால் இவைகளால் பகவானுக்கு அபிஷேகமும், ஒரு நாளை முதலாகக் கொண்டு கொண்டாடுதல், குளிர்ந்த ஜலம் கும்பங்களால் பகவானுக்கு அபிஷேகம், விசேஷ பூஜை

15. ஆகிய இவைகள் யாவும் ஸாமான்யமான பிராயச்சித்தமாக கூறப்பட்டுள்ளது. அவற்றுள் சிலவற்றைப் பிரித்து அவைகளின் லக்ஷணம் கூறப்படுகிறது.

16. ஐந்து கோத்ரத்தில் ஜனித்தவர்களான ஆதிசைவ வம்சத்தில் உதித்தவரும். தலைபாகை, உத்தரீயம், புதியவஸ்திரம், ஆகியவைகளை தரித்தருப்பவரும்

17. மகர குண்டலம், மோதிரம், பூணூல், கடகம் அரைஞான் முதலியவைகளாலான பஞ்சாங்க பூஷணங்களுடன் ஆசார்யர், பிராயச்சித்த விதியை அனுஷ்டிக்க வேண்டும். பிராயச்சித்தத்தையும், அத்புதசாந்தியையும் உடனே அனுஷ்டிக்க வேண்டும்.

18. பிராயச்சித்தம், அனுஷ்டிப்பதற்கு நாள், பக்ஷம், நக்ஷத்ரம், லக்னம் முதலியவைகளை கவனிப்பது, அவசியமில்லை. இவைகளை எதிர்பார்க்காமல் உடனே பிராயச்சித்தம் அனுஷ்டிப்பது உத்தமமாகும்.

19. ஏழு தினங்களுக்குள் பிராயச்சித்தம் செய்வது, மத்யமம், ஒரு பக்ஷத்தில் செய்வது அதமமாகும். ஒரு மாஸத்தில் செய்வது மிகவும் தாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

20. மாஸத்திற்கு, பிறகு செய்யக்கூடாது. ஒரு மாஸத்துக்கு மேல் செய்ய இயலாவிடில் சாந்தி ஹோமத்துடன் செய்ய வேண்டும். லிங்கம், பீடம், விமானம் ஆகியவைகளுடன் கூடிய திருக்கோயிலுக்கும் அவற்றின் பிராயச்சித்தத்தை செய்யவேண்டும்.

21. லிங்கம், பீடம், விமானமிவைகளின் ஆரம்பத்திலோ, அல்லது நடுவிலோ, முடிவிலோ இணைப்பதற்காக ப்ராயச்சித்தமேற்பட்டபொழுது யஜமானன் ஆசார்யன்

22. அல்லது ஸ்தானீகரோ, பிராயச்சித்தத்தை குறித்து உதாசீனமாயும், பொருள்பற்றாக் குறையாலும், மனக்கலக்கத்தாலும், விருப்பு வெறுப்புகளாலும்.

23. பாப கர்மாவின் தாக்குதலாலுமோ பிராயச்சித்தம் கடைபிடிக்காமலிருந்தால் அவர்கள் என்னை விரோதிப்பவர்கள் ஆவார்கள். அரசாங்க அழிவிற்கும், அரசாங்க குழப்பத்திற்கும் பிறந்தவர்களாகிறார்கள்.

24. அப்படிப்பட்டவர்களை ஆசையற்ற தபஸ்விகளான என் பக்தர்கள் தண்டிக்கவேண்டும். ஸ்வாமி சொத்தை அபகரிப்பவர்களும் தண்டிக்க தகுந்தவர்களாவர்.

25. சிவபக்தர்களும் அரசாங்கத்திற்கு நன்மை செய்பவர்களும், அரசாங்கத்துக்கு போஷகர்களும், புண்ய கார்யம், செய்பவர்களுமான உத்தமர்கள் சிரத்தையுடன் பிராயச்சித்தத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

26. அந்த கிராமத்திற்கு மேன்மையைச் செய்கின்றவர்கள், சிவபூஜையின் அபிவிருத்திக்கு காரணமானவர்களும் நன்கு அறிந்த பிராயச்சித்தத்தை எப்படியாவது அனுஷ்டிக்க வேண்டும்.

27. பிறகு ஆசார்யன் சுத்த பஸ்மஸ்னானம் செய்து மந்திரஜபம், மந்திரமான சரீரத்தை உடையவனாகவும் வடக்கு முகமாகவோ, கிழக்கு முகமாகவோ, ஜபமாலை தரித்துக் கொண்டு

28. சிவமந்திரத்தையும் அல்லது அகோரமந் தரத்தையும், பாசுபதாஸ்த்ரமந்திரம் அல்லது அகோராஸ்த்திரம் சிவாஸ்திரம் பஞ்சபிரம்ம மந்திரம், அங்க மந்திரங்களையோ,

29. மேளா மந்திரத்தையோ அல்லது வேறு மந்திரத்தையோ, ஸமுச்சயமாக 100 ஆவ்ருத்தியிலிருந்து கோடி ஸங்க்யை ஆவ்ருத்தி வரை செய்யவும், ஜபம், ஆவ்ருத்தி செய்யும் போது ஜபத்திற்கு தக்கவாறு (அலவண) போஜனம் மிதமான ஆஹாரம் உட்கொள்ள வேண்டும்.

30. ஆஹாரமில்லாமலும், பிக்ஷõசனம் செய்தும், ஹவிஸைபுசித்தும், பாலை குடித்தும், காய், தான்யம், பிண்ணாக்கு, கிழங்கு, கனி இவைகளில் ஏதேனும் ஒன்றை புசிப்பவனாகவும் இருக்க வேண்டும்.

31. தேவதைகளின் ரூபத்தை ஸ்மரித்து கொண்டு மேற்கூறிய மந்திரங்களை ஜபித்துக் கொண்டு ஜபத்தை இறைவனிடம் ஸமர்ப்பிக்கவும் இது ஜபம் செய்யும் முறையாகும். பிறகு பிரதக்ஷிணத்தை கூறுகின்றேன்.

32. உள் பிரதக்ஷிணம் வெளி பிரதக்ஷிணம் லிங்கத்திற்கும் ஆலயத்திற்குமிடையிலுள்ள பிரதக்ஷிணம் உத்தமம் அதமமாக கூறப்படுகிறது.

33. உள் மண்டபத்திற்குள் பிரக்ஷிணம், சிறந்த பலனை அளிக்கிறது. கர்பகிருஹத்தில் பிரதக்ஷிணம் செய்ய முடியாது. அப்படி செய்தாலும் அது பல பாபங்களை தரும்.

34. கர்ப கிருஹத்தில் லிங்கத்தின் நிழல் இருக்கும், நிர்மால்யதிரவ்யங்கள் இருக்கும் ஸோம சூத்ரம் என்ற ஸ்தானத்தின் இருப்பிடமானதாலும்

35. ஆகையினால் இவைகள் அனைத்தையும் ஒதுக்கிவிட்டு எல்லா பயனையும் தரக்கூடிய உள் மண்டல தேசத்திலும் ஸோம சூத்ரம் இருக்கிறது.

36. தேவாலயத்தின் அரைபாக அளவோ அல்லது தேவாலயத்தின் முழு அளவோ நிழல் இருக்கும் நிர்மால்யமும் குவிந்திருக்கும்.

37. அவைகள் அனைத்தையும், நீக்கிவிட்டு பிரதக்ஷிணம் செய்யவேண்டும் வலமிருந்து இடது புறமாக பிரதக்ஷிணம் செய்யவேண்டும்.

38. வலது பாகம் சண்டிகேச்வரருடைய ஸ்தானம் இடதுபாகம் (கோமுகம்) ஸேரம சூத்ரஸ்தானமாகும். ஆகையால் வலமிருந்து இடமாக மெதுவான கதியுடன் பிரதக்ஷிணம் செய்ய வேண்டும்.

39. வலமிருந்து இடமாகவும் உள்ளே நித்யோத்ஸவத்திலும் தேவோத்ஸவத்திலும், கோயிலின் நிழலைத் தாண்டுவதாலும் ஏற்பட்ட தோஷம்

40. அந்த காலத்தில் ஸேவிப்பதாலும், அந்த ஸமயத்தில் தோஷம் ஏற்படுவதில்லை. ஸோம சூத்ர பிரதக்ஷிணத்திற்கு வெளியில் செய்யும் பிரதக்ஷிணம் கொஞ்சம் கூட தோஷத்தை உண்டுபண்ணுவது இல்லை. நல்லபயனை கொடுக்கும்.

41. வெளியில் பிரதக்ஷிணம் செய்கையில் பல அடிகளை வைத்து செல்வதால் ஒவ்வொரு அடியும் பத்து மடங்கு அச்வமேத யாக பலனை தருகிறது. உள்பிர தக்ஷிணத்தைக் காட்டிலும் பத்து மடங்கு விசேஷ பலன்களை அளிக்கும்.

42. சூர்யோதயம் முதற்கொண்டு சூர்யாஸ் தமனம் வரை செய்யப்படும். அங்க பிரக்ஷிணத்தின் மஹிமையை யாரும் கூற இயலாது.

43. புண்ய ÷க்ஷத்ரங்களின் மஹிமை பிரகாரம் பகவானுக்கு அங்க பிரதக்ஷிணம் செய்வது அவருக்கு ஆனந்தத்தை அளிப்பதாகும். இவ்விதம் பிரதக்ஷிணம் கூறப்பட்டது. இனி சிவதீர்த்தம் கூறப்படுகிறது.

44. பூமியில் தான்யங்களைப் பரப்பி ஸ்தண்டில மைத்து அதன்மீது வைக்கப்பட்டதும். நூல், வஸ்திரம், ஸ்வர்ணம் கூர்சம், சந்தனம் இவைகளோடு கூடியுள்ள கலசத்தில்

45. உள்ள தீர்தத்தை சிவமந்திரம் ஜபித்து அங்கமந்திரம், பஞ்சபிரம்மந்திரத்தை ஜபித்ததால் சிவதீர்த்தம் என்றும், சிவாஸ்த்ர மந்திர ஜபத்தால் ஜபித்து அஸ்திர தீர்த்தம் என்றும் கூறப்படும்.

46. பிறகு க்ருச்ரம், தப்தக்ருச்சரம் அதிக்ருச்ரம் பராகம் சாந்திராயணம் எனக்ருச்ரங்கள் கூறப்பட்டுள்ளன.

47. மூன்று நாள் ஒருவேளை மட்டும் உணவு உட்கொண்டு மூன்று நாட்கள் உபவாஸம் இருந்தால் க்ருச்ரம் எனப்படும் இந்த க்ருச்ரத்தை ப்ராஜா பத்ய வ்ரதம் எனவும் கூறுவர்.

48. மூன்று நாட்கள் வெண்ணீரைக் குடித்தும் (அல்லது) மூன்று நாட்கள் பாலை மட்டும் உட்கொண்டும் மூன்று நாட்கள் உஷ்ணமான நெய்யை உணவாக உட்கொள்ள வேண்டும். மூன்று தினமும் ஆஹாரமின்றியும் இருக்க வேண்டும்.

49. இது தப்தக்ருச்ரம் எனக் கூறப்படுகிறது. அதிக்ருச்ரம் என்பது கூறப்படுகிறது. 21 நக்ஷத்திரங்களின் (தினங்கள்) எண்ணிக்கைபடி மூன்று பலம் என்ற அளவால் பாலை உட்கொள்ள வேண்டும்.

50. (இதை) அதிக்ருச்ரம் எனக் கூறுவார். பராகம் என்பது கூறப்படுகிறது. 12 நாட்கள் ஆஹாரம், இல்லாமல் இருப்பது பராகவ்ரதம் (எனப்படும்)

51. 15 நாட்கள் சுக்ல பக்ஷத்தில் ஒவ்வோர் பிடி ஆஹாரம் அதிகமாகவும் கிருஷ்ண பக்ஷத்தில் ஒவ்வோர்பிடி குறைவாகவும் ஜலத்தையோ குடித்துக் கொண்டும் ஜீவிப்பதுசாந்திராயணவ்ரதம் ஆகும்.

52. மாலையிலும், தினத்தின் ஆரம்பத்திலும், முடிவிலும், நடுப்பகலிலும், உபவாஸத்தை முடிக்க வேண்டும். நான்குவித போஜனத்தையும் விடவேண்டும்.

53. நடுவில் கூறப்பட்ட தப்தக்ருச்ர அதிக்ருச்ரத்தில் தானமும் செய்யலாம். உபவாஸம் சொல்லப்பட்டிருக்கிறது. இங்கு சாந்தி பற்றி சொல்லப்படுகிறது.

54. நல்ல திசையில் மண்டபம் நிர்மாணித்து ஆக்னேயதிக்கிலோ, முன்பு கூறியபடி அதன் நடுவில் கைஅளவு குண்டத்தை நிர்மாணித்து

55. சில்பியை அனுப்பிவிட்டு, புண்யாஹ மந்திரத்தால் பிரோக்ஷணம் செயது ஸ்வாமியை முறைப்படி சுத்தி செய்து ஒவ்வொரு தினமும் ஸ்நபன அபிஷேகம் செய்ய வேண்டும்.

56. நிறைய சந்தனாதி திரவ்யங்களைபூசி சாந்தியை ஆரம்பிக்க வேண்டும். குண்டத்தையும் அக்னியையும் மந்திரத்தால்ஸம்ஸ்காரம் செய்து அந்த மிந்திரத்துடன் கூடிய சிவனை திருப்தி செய்யவேண்டும்.

57. அகோரமந்திரம், அல்லது சிவமந்திரம், அல்லது பாசுபதம், அகோரஸ்த்ரம் இவைகளை ஆசார்யன்ந்யாஸம் செய்து தன்சரீரத்தில் ஸித்திக்கும் படி செய்ய வேண்டும்.

58. ஹோமகுண்டத்தில் கர்ணிகையில் பூஜை செய்து ஸபரிவாரம் தேவனை திருப்தி செய்யவேண்டும். ஸமித்து, பசும்பால், தேன், த்ரிமது இவைகள் முக்கியம்.

59. பாலுடன் கூடிய அருகம்பில்லை அல்லது சுத்த அன்னம் அல்லது பாயஸத்தால் 1000 அல்லது 500 அல்லது 108 ஆவ்ருத்தி ஹோமம் செய்ய வேண்டும்.

60. ஒவ்வொரு நாளும் இந்த மந்திரத்தை உச்சரித்து கொண்டு மேலே கூறப்பட்ட திரவ்யங்களால் ஹோமம் செய்துஸ்வாஹா என்ற பதத்தின் முடிவில் ஸர்வ÷க்ஷõபநாசத்தை பிராத்தித்து

61. பகவன் ஸர்வ÷க்ஷபநாசம் குருகுரு ஸ்வாஹா என்று ஒவ்வொரு மந்திரத்திலும் 10,50,100 ஆவ்ருத்தி செய்ய வேண்டும்.

62. மேலே கூறிய மந்திரத்தை உச்சரித்து ஹோமத்தை முடித்து பூர்ணாஹூதியை செய்யவேண்டும்.வாசனை திரவியங்களுடன் கூடிய தாம்பூலத்தை நிவேதனம் செய்யவேண்டும்.

63. சிவாகாம  ஞானத்தினால் தேர்ச்சி பெற்ற வர்கள் சிவனது ஐந்து திசைகளிலும் ஐந்து முகத்தி லிருந்தும் உண்டானதான சிகாகமத்தை படிக்க வேண்டும்.

64. கிழக்கில் தத்புருஷனையும் தெற்கில் அகோரனையும், வடக்கில் வாமதேவரையும் மேற்கில் ஸத்யோஜாதனையும் ஈசானனையும் பஞ்சபிரம்ம மந்திரங்களை ஜபிக்கவேண்டும்.

65. நான்கு வேத விற்பன்னர்கள் வேதபாராயணத்தையும் 4வேதத்தையும் அத்யயனம் செய்தவர்) பலரோ அல்லது ஒருவரோ  ஸ்தோத்திரங்களைச்  சொல்லவேண்டும்

66. அந்த மந்திரங்களின் அர்த்தத்தில் ஈடுபாடுடன் சிவதீøக்ஷயினால் ஸம்ஸ்காரம் செய்யப்பட்டு ஹோமத்தில் ஈடுபாடுள்ளவர்களாலும், ஆசாரத்துடன் ஸ்னாநாதிகளை செய்து அனுஷ்டிக்க வேண்டும்.

67. ஹோமத்ரவ்யத்திலிருந்து ரøக்ஷயைத் தயாரித்து பராங்முக அர்க்யம் கொடுத்து ஈசனை அங்குஇருக்க செய்து அந்தர்பலி பஹிர்பலி இவைகளை கொடுக்க வேண்டும்.

68. ஆசமனம் செய்து உத்தரந்யாஸம் செய்து ஸ்வாமி சன்னதிக்குச் சென்று ஹோமகர்மாவை ஈச்வரனுக்கு அர்பணம் செய்து பாபக்ஷயம் ஏற்பட வேண்டுமென்று பிரார்த்திக்க வேண்டும்.

69. இவ்விதம் சாந்தி கூறப்பட்டுள்ளது. அந்த சாந்தி ஒன்பது வகைப்பட்டது ஆகும். ஒருநாள் மூன்று நாள்ஐந்து, ஏழு நாட்கள், ஒன்பது நாட்கள் பதினான்கு நாட்கள்.

70. பதினைந்து நாட்கள், 21 நாட்கள் 27 நாட்கள் என்பதாக ஆகும். இடைவிடாது சாந்தி நடைபெறும் குண்டத்தில் உள்ள அக்னிக்கு ஹோமம் முடிவதற்கு முன்பாக விஸர்ஜனம் கூறப்படவில்லை.

71. ஈச்வரனிடம் விஸர்ஜனம் உண்டு. ஆனால் அக்னிக்கு விஸர்ஜனம் கிடையாது. இவ்விதம் சாந்தி கூறப்பட்டு சாந்தி ஹோமம் கூறப்படுகிறது.

72. சாந்தி ஹோமம் இருவகைப்படும் முதல் வகை சொல்லப்படுகிறது. கிழக்கு முதலான நல்ல திசையில் ஆக்னேயத்தில் நன்கு அமைக்கப்பட்ட மண்டபத்தில்

73. தான்யாதிகளால் ஸ்தண்டிலத்தை அமைத்து குடத்தை நூல் சுற்றப்பட்டும் ஜலத்துடன் கூடியதாகவும், கூர்சம். வஸ்திரம் தங்கத்தாமரை இவைகளுடன் கூடியதாகச் செய்துவைக்க வேண்டும்.

74. மேலும், சந்தனம் பூசியதாகவும்மஞ்சள் தேங்காய் மாந்தளிருடன் கூடியதாகவும், கலசம் இருக்க வேண்டும், மேலே கூறப்பட்ட கலசத்தை சுற்றி, வஸ்திரம் கூர்ச்சம இவைகளுடன் கூடிய எட்டு கலசங்களை வைத்து

75. மத்திய கும்பத்தில், பாசுபதம்என்று பெயருள்ள வரும் ஓம்காரம் என்கிற ஆசனத்தில் அமர்ந்திருப்பவரும் யாராலும் ஆக்ரமிக்க முடியாத வரும் மஹாபலம் நிறைந்தவரும்

76. ஐந்து திருமுகங்களை உடையவரும், பத்து காதுகளை உடையவரும், தித்திப் பற்களால் பயங்கர ஸ்வரூபம் உடையவரும், யாராலும் வெல்லமுடியாதவரும், சப்தத்தை செய்பவரும்.

77. பிரம்மகபாலங்களை ஆபரணமாகக் கொண்டவரும், பிறைசந்திரனை தலையில் அணிந்தவரும் சந்திர சூர்ய அக்னிகளையும் பயங்கரமான கண்ணாக கொண்டவரும் பாம்புகளை ஆபரணமாகவும் நாக்கை வெளியே நீட்டி கொண்டு இருப்பவரும்.

78. பதினாயிரம் கோடி சூர்யர்களுக்குஸமமான தேஜஸை உடையவரும். இடையூறுகளைப் போக்குகிறவரும். பயங்கரமான அஸ்திரங்களுடன் கூடிய பத்து கைகளை உடையவரும். பயங்கரமான ஆயுதங்களை உடையவரும்.

79. கத்தி, வில், சூலம், அபயமுத்ரை, பாசம் ஆகியவைகளை வலது பாகத்திலும், கேடயம், பாணம், கபாலம், வரமுத்ரை, ஈட்டி ஆகியவைகளை இடது பாகத்திலும்.

80. பொன்னிற கொண்ட மீசை புருவம், இவைகளோடு, கூடியவரும், அதே மஞ்சள் நிறமுள்ள கேசங்களையுடைய சிவனை தியானித்து, பாசுபதாஸ்திரத்தை ஆவாஹனம் செய்து பூஜை செய்யவேண்டும்.

81. ஓம் ஸ்லீம் என்ற பதத்துடன் பம்சும் ஹும்பட் நம: என்றும் ஓங்காரத்தை ஆக்னேய திக்பாகத்திலும் ச்லீம் கார மந்திரத்தை ஈசான திக்கிலும் சொல்லி

82. பம் என்ற எழுத்தை நிர்ருதி திக்பாகத்திலும் கம் என்ற எழுத்தை வாயுதிக்கிலும் உச்சரிக்கவும் ஹ்ருதயாதி நியாஸத்தை ஓம் முதல் பட் வரை உள்ள எழுத்துக்களால் செய்து கொள்ள வேண்டும்.

83. எல்லா ஹ்ருதயம் முதலான மந்திரங்கள் பாசுபதம் என்ற வாக்கியத்தோடு கூடியதாகவும், பட் என்பதை முடிவாக கொண்ட வஜ்ராதி ஆயுதங்களை அந்த கலசங்களில் ஆவாஹனம் செய்து

84. சந்தனம் முதலிய திரவியங்களால் பகவானை ஆராதித்து கடைசியில் நைவேத்யத்தை நிவேதிக்கவும், கையளவு வட்டவடிவமான குண்டத்திலோ அல்லது ஸ்தண்டிலம் அமைத்தபூமியிலோ

85. முன்பு போல் மந்திரத்தால் நன்கு ஐந்து ஸம்ஸ்காரம் செய்யப்பட்ட அக்னியில் ஸபரிவார பாசுபதாஸ்திரத்தை ஆராதித்து திருப்தியடையும்படி செய்ய வேண்டும்.

86. சமித்து, நெய், எள் பால் தெளித்த அருகம் பில், ஹவிஸ் முதலிய திரவ்யங்களால் 1000, 500, 108 ஆவ்ருத்தி, மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு

87. ஒவ்வொரு ஆவ்ருத்திக்கும் கர்மாவை குறிப்பிட்டு பகவானை குற்றங்களின் அமைதியை செய்வாயாக (பகவந்தோஷ சாந்திம் குருகுரு) என்ற ஆசார்யன் பிராத்தித்துக் கொண்டு ஹோமம் செய்ய வேண்டும்.

88. அங்கமந்திரங்களையும் வஜ்ராதிபத்து அஸ்திரங்களையும் ஆஹூதிகளால் திருப்தி செய்ய வேண்டும். பாசுபதாஸ்திரத்தை நினைத்துக் கொண்டு பூர்ணாஹுதியைச் செய்ய வேண்டும்.

89. பாசுபதாஸ்திரத்தை நினைத்துக்கொண்டு பிராயச்சித்தாஹுதியைச் செய்து விட்டு மறுபடியும் பூர்ணாஹுதி செய்து தாம்பூலம் கொடுத்து பராங்முகார்க்யம் கொடுத்து

90. லயாங்க பூஜை செய்து கர்மாமுடியும்வரை அக்னியைஸம்ரக்ஷித்து நியமத்துடன் இருக்க வேண்டும் அல்லது ஒவ்வொருநாளும் அக்னியை செய்து அஸ்திர வடிவில் இருக்கும் சிவனை திருப்தி செய்ய வேண்டும்.

91. அந்தர்பலி, பஹிர்பலி ஆகியவை களைக் கொடுத்து மந்திரமய சரீர ஆசார்யன் ஆசமனம் செய்து அனுஷ்டித்த கர்மாவை பரமேச்வரனிடத்தில் அர்பணித்து தன்னுடைய மனோபீஷ்டத்தை பிராத்திக்க வேண்டும்.

92. ஈசனை கும்பத்திலிருந்து விஸர்ஜனம் செய்து த்வாதசாந்தத்தில் அமர்த்த வேண்டும். பிறகு அந்த கும்பதீர்த்தத்தை சுற்றிலும் பிரோக்ஷணம் செய்ய வேண்டும்.

93. கும்பஸ்தாபனம் இல்லாமல் ஸமித்நெய் அன்னம் இவைகளால் ஹோமம் செய்யவும் சாந்தி ஹோமம் சாந்தியில் கூறப்பட்ட நாட்களில் செய்ய வேண்டும்.

94. திசா ஹோமத்தை சொல்கிறேன். திசா ஹோமம் இருவகைப்படும். அதில் பிராயச்சித்தாங்கம் ஸ்நபனாங்கம் என இருவகைப்படும்.

95. லிங்கத்திலோ, பிரதிமையிலோ, பீடத்திலோ கோபுர கட்டிடத்திலோ, மண்டபத்திலோ, மாளிகைகளிலோ ஸ்தல விருக்ஷத்தின் வேர் பாகத்திலோ

96. எங்கு தோஷம் காணப்பட்டுள்ளதோ அதற்காக பிராயச்சித்தம் அந்த இடத்தின் நான்கு திசைகளிலும் நான்குகுண்டங்களை அமைத்து கொட்டகை பந்தல் ஆகியவைகளை நிர்மாணித்து

97. குண்டங்கள், நாற்கோண வடிவிலோ, வட்டவடிவிலோ ஒரு முழ அளவு உள்ளதாகவோ, ஸ்தண்டிலமாகவோ ஏற்படுத்தி அஸ்திர தீர்த்தத்தால் பிரோக்ஷணம் செய்ய வேண்டும்.

98. எல்லாவற்றிற்கும் ஆலயத்தின் நான்கு திசையிலும் கொட்டகை அமைத்து ஆசரிக்க வேண்டும் (அல்லது) ஒரே கூடாரத்தை அமைத்து எல்லாவற்றையும் செய்ய வேண்டும்.

99. நடுவில் கும்ப ஸ்தாபனம் செய்ய வேதிகை அவச்யமாகிறது. அல்லது யாகசாலையிலேயே எல்லா காரியங்களையும் செய்து முடிக்க வேண்டும்.

100. பிறகு பிரம்ம மந்திரம், அங்கமந்திரமிவைகளுடன் கூடிய சிவனின் ப்ரீதிக்காக ஈசானதிக் பாகத்தில் வேறு குண்டம் அமைக்கப்பட வேண்டும்.

101. லிங்கத்திலோ அல்லது வேறு ஸ்தண்டிலங்களிலோ சிவபெருமானை திருப்தி செய்யவேண்டும். லிங்கம் அமைத்து ஸ்தண்டிலத்தின் முன்பாக சிவாஸ்த்ரத்தை பூஜிக்க வேண்டும்.

102. நான்கு முகத்தை உடையவரும் பிரகாசிக்கிற கேசத்தை உடையவரும், மின்னல் கூட்டம் போன்ற ஒளியை உடையவரும். பிறைசந்திரனை சிரஸில் உடையவரும் தளிர் போன்ற நான்கு கையை உடையவரும்

103. இடியோசையுடன் கூடியவரும் பயங்கரமான பராக்ரமத்தை உடையவரும் பன்னிரண்டு கண்களும் கூடியவரும். சக்த்யாயுதம், சூலாயுதம், அபயமுத்ரை வரதமுத்ரையுடன் கூடியவராக

104. சிவாஸ்திரத்தை தியானம் செய்து சந்தனம் புஷ்பம் முதலியவைகளால் பூஜித்து அதனுடையதான சிவாஸ்திர மந்திரத்தினால் பூஜிக்க வேண்டும், வலது பாகத்தில் அகோரத்ஸ்திரத்தையும் மேற்கில் பாசுபதாஸ் திரத்தையும்

105. வடக்கில் ப்ரத்யங்கிராஸ்திரத்தையும் ஆராதிக்க வேண்டும். அந்த ப்ரத்யங்கிராஸ்திரமந்திரம் கூறப்படுகிறது. ஓம் ஹ்ரீம் க்ருஷண வாஸஸே

106. ஸிம்ம வதநே, மஹாவதநே, மஹாபைரவீ, ஸர்வசத்ரு

107. கர்ம வித்வம்சிநீ, பரமந்திரசேதிநி, ஸர்வபூததமநீ

108. ஸர்வபூதாந் பந்த பந்த ஸர்வ விக்னாந் சிந்தி சிந்தி

109. ஸர்வ வியாதிம் நிக்ருந்த நிக்ருந்த, ஸர்வ துஷ்டாந் பக்ஷ பக்ஷ

110. ஜ்வாலா ஜிஹ்வே கராள தம்ஷ்ட்ரே ப்ரத்யங்கிரே ஹ்ரீம் நமோஸ்து

111. தே ஸ்வாஹா இது பிரத்யங்கிரா மந்திரமாகும். பிரணவம் முதல் ஏழு எழுத்து ஹ்ருதயம், பதினைந்து எழுத்து சிரஸ்,

112. பத்து எழுத்து, சிகை, ஏழு எழுத்து கவசம் அவ்வாறே ஏழு எழுத்து நேத்ரமந்திரம். நாற்பத்தி மூன்றெழுத்து அஸ்த்ரமந்த்ரமுமாகும்.

113. பதிமூன்று எழுத்து காயத்ரீ, ஏழு எழுத்தால் ஸாவித்ரீ என்பதாகும். நம: ஸ்வாஹா, வஷட் வவுளஷட், ஹும் பட் என்ற மந்திரங்களை முடிவாக கொண்டு ஹ்ருதயாதிகளை உச்சரிக்க வேண்டும்.

114. ஸிம்ஹத்தின் முகம்போலும் உக்ரமான தித்திப்பல்லையும் அக்னியின் காந்தி போல் மேல் நோக்கிய அக்னி ஜ்வாலையை உடையவளும் கருத்தமை போன்ற நிறமும், வட்டமான சிவந்த மூன்று கண்களை உடையவளும்

115. வலது பக்கத்துக் கைகளில் சூலம், டமருகம், ஆகியவைகளை தரித்திருப்பவளும், இடது பக்க கைளில், தலையில்லாத சரீர பாகத்தையும், மாந்தளிரையும் தரித்திருப்பவளும்

116. கருப்பு வஸ்திரத்தை தரித்திருப்பவளும் ரக்தம் மாமிஸம் நிறைந்த வாயை உடையவளும் நர்த்தனத்தில் ஈடுபாடு உள்ளவளும் முத்துக்களாலான ஆபரணங்களை அணிந்து பாதாதி கேசாந்தம் ஆபரணங்களை அணிந்திருப்பவளும்

117. அட்டஹாஸ சப்தத்துடன் கூடியவளும், மான்தோலை உடுத்தியிருப்பவளும் ஆன பரமேஸ்வரியை தியானம் செய்து சந்தனம் புஷ்பம் முதலியவைகளால் பூஜிக்க வேண்டும்.

118. ஐந்து கும்பங்களில் நூல் சுற்றப்பட்டதும், வஸ்திரத்தால் சுற்றப்பட்டதும் சந்தனம் கலந்த வாசனையுள்ள ஜலத்தை உடையதும் கூர்சம், தங்கத்தாமரையுடனும்

119. தனித்தனியாக ஸ்தண்டில பூமியில் வைக்கப்பட்டதும் மூடப்பட்டதும் மாங்கொத்துடன் கூடியதும் சந்தனம் பூசப்பட்ட நியஸிக்கப்பட்ட ஐந்து கும்பங்களை ஸ்தாபித்து

120. விதிப்படி மத்திய கும்பத்தில் பரமேஸ்வரியான ப்ரத்யங்கிரா அம்பிகையையும், முன்பு கூறிய பிரகாரம் நான்கு புறமும் அஸ்திரங்களையும் பிறகு பிரத்யங்கிரா தேவியையும்

121. பூஜை செய்துவிட்டு ஹோமத்திற்காக தெரிவித்து யாகசாலையை அடைய வேண்டும். அவரவர்களின் குண்டத்தை ஸம்ஸ்கரித்து முன்புபோல் அக்னி ஸம்ஸ்காரமும் செய்து

122. சந்தனாதிகளால் அந்தந்த தேவதைகளை ஆராதிக்க வேண்டும். ஆசார்யனானவன், மூர்த்திபர்களை திருப்தி செய்ய வேண்டும்.

123. வேத மந்திரங்களைப் பாராயணம் செய்ய வேண்டும், ஜபம் ஸ்தோத்திரங்கள் முதலியவைகளை செய்ய வேண்டும் கிழக்கு முதலான அவரவர் திசையில் நன்கு அமர்ந்து கொண்டு

124. இச்சி, அத்தி, அரசு, ஆல் ஆகிய நான்கு சமித்துகள் கூறப்பட்டுள்ளன. பிரதான குண்டத்திற்கு பலாசமும், அல்லது எல்லா குண்டத்திற்குமோ புரசு சமித்தையும் ஹோமம் செய்ய வேண்டும்.

125. எள்ளு, நெய், அருகம்பில்சமித்து இவைகள் பாலில் நனைக்கப்பட்டு பன்னிரண்டங்குலம் நீளமுள்ளவைகளையும் (ஆனசமித்து) அன்னம் ஆகிய ஹோமதிரவ்யங்களால் நூறு ஆவிருத்தி, ஐம்பது ஆவிருத்தியோ

126. அந்த அஸ்திர தேவியின் தியான நினைவுடன் ஒவ்வொரு ஹோமதிரவ்யங்களாலும் 100,50, ஆவ்ருத்தி ஹோமம் செய்யவும் பிராயச்சித்தா ஹுதியுடன் தாம்பூலத்துடன் பூர்ணாஹுதி செய்ய வேண்டும்.

127. ரøக்ஷ ஸமர்ப்பித்து நிரோதார்க்யத்தையும் லயாங்கத்தையும், ஸந்நிரோதனத்தையும் செய்து பிறகு அந்தர்பலி, பஹிர்பலி செய்து விட்டு ஆசமனம் செய்து மந்திரமூர்த்தியாக இருந்து கொண்டு

128. அனுஷ்டித்த கர்மாவை ஈச்வரார்ப்பணம் செய்து பகவானை பிரார்த்தித்து, அவர் அனுக்ரஹத்தால் ஹோம பஸ்மாவை கர்தா தரித்துக் கொண்டு முறைப்படி மற்றவர்களுக்கும் கொடுக்க வேண்டும்.

129. ஆசார்யன், கும்பங்களிலுள்ள ஜலத்தால் ஸ்வாமியை அபிஷேகம் செய்து பூஜிக்க வேண்டும். இந்த ஹோமம் தேவாலயத்தில் செய்யப்பட்டால் ஸ்வாமியை ஆராதிக்க வேண்டும்.

130. (வீட்டில்) பிராயச்சித்திற்காக செய்யப்பட்டால் கும்ப ஜலத்தால் யஜமானனை பிரோக்ஷிக்க வேண்டும். எல்லாவித கஷ்டங்களையும் நிவ்ருத்தி செய்யக்கூடிய திசாஹோமம் கூறப்பட்டது.

131. இரண்டாவது பிரகாரமான திசாஹோமம் விசேஷமாக கூறப்படுகிறது. இந்த திசாபூஜையில் பிரத்யங்கிராதேவி அஸ்திரங்களுக்கும் பூஜை கூறப்படவில்லை.

132. ஸமித், நெய், அன்னம், எள், வெண்மையான அரிசியுடன் ஹோமம் விதிக்கப்படுகிறது. தத்புருஷ அகோர வாம தேவ ஸத்யோஜாத மந்திரங்களால் ஹோமம்,

133. ஸ்நபனம் முதலியவைகளை பூஜாகாலத்தில் நான்கு திசைகளிலும் அனுஷ்டிக்க வேண்டும். எல்லா தோஷங்களையும் போக்கக்கூடிய ஸம்ஹிதா ஹோமத்தை கூறுகிறேன்.

134. நல்ல திசையில் நித்யாக்னியில் யாகமண்டபத்தில் உற்சவம் முதலியவைகளில் அக்னி, மத்தியிலோ, ஸ்தண்டிலத்திலோ ஹோமத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

135. பிரம்மமந்திரம் அங்கமந்திரம், கூடிய மந்திரமான இதை சிவாகம சாஸ்திரத்தில் ஸம்ஹிதாமந்திரம் என கூறப்படுகிறது. அந்த ஸம்ஹிதா மந்திரங்களால் ஸம்ஸ்கரிக்கப்பட்ட அக்னியில் ஆசார்யனால் சந்தனாதிகளால் அர்ச்சிக்கப்பட்ட

136. சிவமந்திரத்தால் பலாசசமித்து, நெய், அன்னம் இவைகளால் நூறு ஸங்க்யை ஹோமம் செய்ய வேண்டும். சிவமந்திரத்தில் பத்தில் ஒருபாகம் பிரம்ம மந்திரம், அங்கமந்திரம், இவைகளால் ஹோமமும்.

137. பிறகு அகோரமந்திரத்தால் 25 எண்ணிக்கை ஹோமமாக செய்ய வேண்டும். இவ்விதம் பிராயச்சித்தத்தை அனுஷ்டித்து பூர்ணாஹுதியை விதிப்படி கொடுக்க வேண்டும்.

138. இது ஸம்ஹிதா ஹோமம் எனப்படும். இனி மூர்த்திஹோமம் விதிக்கப்படுகிறது. தேவலாயத்தின் எதிரிலோ மற்ற இடத்திலோ, ஸ்தண்டிலம் அமைத்து

139. அதன் மத்தியில் சிவகும்பத்தை வைக்க வேண்டும். அதன் வலது புறத்தில் வர்தனியை வைக்க வேண்டும். இவைகளை சுற்றி எட்டு கலசங்களுக்கு வஜ்ரம் முதலிய ஆயுதங்களுடன் கூடியதும்

140. நூல் சுற்றப்பட்டதும், மூடப்பட்டதும் வஸ்திரத்துடன் கூடியதும், ஹிரண்யத்துடன் கூடியதும் வாஸனை நிறைந்த தீர்த்தத்துடன் கூடிய கும்பத்தை சந்தனம், புஷ்பம், தூப, தீபங்களால் ஆராதித்து

141. மத்திய கும்பத்தில் சிவனை பூஜித்து அகோராஸ்திரத்தை வர்த்தனியில் பூஜிக்கவும் அல்லது மத்திய கும்பத்தில் சிவனை பூஜிக்காமல்

142. வர்தனீ என்ற கும்பத்தை வைக்காமல் மத்யகும்பத்தில் அகோராஸ்திரத்தை ஸாங்கமாக ஆசார்யன் பூஜிக்கவும் அகோராஸ்த்ரா ஸநாயஹும்பந் நம: என்று ஆஸனத்தையும்

143. ஆகோராஸ்த்ரமூர்த்தயே ஹும்பந்நம: என்று மூர்த்தியையும் பூஜிக்கவேண்டும் (தியானம்) ஆயிரம் சூர்யனுக்கு சமமான காந்தி உள்ளவரும் ப்ரளயகாலத்து மேகம் போன்ற சப்தத்தை உடையவரும்

144. பிரகாசிக்கின்ற பற்களை உடையவரும், தத்தங்களின் ஒளியால் பிரகாசிக்கும் முகத்தை உடையவரும் மூன்று கண்களும், மின்னல் போல் பிரகாசிக்கும் நாக்கையும் பளபளப்பாக தோற்றமளிக்கும் புருவம், மீசை, கேசத்தை உடையவரும்

145. பாம்பை பூணுலாக கொண்டவரும், சூலம், கத்தி, சிறிய உலக்கை ஆகியவை தரித்திப்பவரும் நான்கு புஜங்களையும், நான்கு முகங்களையும் பிரகாசிக்கும் அர்த்த சந்திரனை சிரோ பூஷணமாக உடையவரும்

146. நர்த்தனம் செய்பவரும், பெரிய சரீரத்தையும், பாம்பை ஆபரணமாகக் கொண்டவரும் கர்வம் கொண்ட தேவர்கள், தானவர்கள், ஆசுரர்கள், ஆகியோரை அழிப்பவருமான சிவனை தியானம் செய்ய வேண்டும்.

147. வஜ்ரம் முதல் சூலம் வரையுள்ள ஆயுதங்களை கிழக்கு முதலாக பூஜித்து பத்மத்தை ஈசான திக்கிலும் சக்ரத்தை நிர்ருதியிலுமாக பூஜிக்க வேண்டும்.

148. அதன் முன்பு ஓர் முழு அளவும் வட்ட வடிமான குண்டத்தில் அல்லது மந்திரத்தால் ஸம்ஸ்காரம் செய்யப்பட்ட ஸ்தண்டிலத்தில் ஆசார்யன், அக்னியை ஸ்தாபித்து

149. பஞ்ச ஸம்ஸ்காரங்களால் அக்னிகார்ய முறைப்படி பூஜித்து, அந்த சிவரூபமான அக்னியில் ஸாங்கமாக அகோராஸ்திரத்தை ஆவாஹனம் செய்ய வேண்டும்.

150. சமித், நெய், எள் பாலில் நனைக்கப்பட்ட அருகம்பில், சக்கரை, பால், தேன் என்ற த்ரிமதுரத்தையும் ஹவிஸ்ஸையும் 1000 அல்லது 500 அல்லது 100 ஆவ்ருத்தியாவது.

151. ஒவ்வொரு திரவ்யங்களாலும் அகோராஸ்திரத்தை சிவாக்நியில் ஹோமம் செய்ய வேண்டும். கர்மாவை குறிப்பிடும் முறையோடு சேர்த்து அங்கமந்திரங்களாலும் அஸ்திர மந்திரங்களாலும் ஆராதித்து

152. பூர்ணாஹுதி செய்து பிராயச்சித்தாஹுதி செய்து திரும்பவும் பூர்ணாஹுதி செய்து தாம்பூலம் நிவேதித்து, ஸ்தோத்திரம் செய்து வணங்கி

153. விருப்பத்தை பிராத்தித்து ஹோமரøக்ஷயை ஸ்வாமியிடம் ஸமர்பிக்க வேண்டும். ரøக்ஷயை தனக்கும் எஜமானனுக்கும் எடுத்துக்கொண்டு பராங்முக அர்க்யம் செய்ய வேண்டும்.

154. லயாங்க பூஜை செய்து சிவவ்யாஹ்ருதி ஹோமம் செய்ய வேண்டும். கர்மா முடியும்வரை நித்யம் அக்னியை ரக்ஷிக்க வேண்டும்.

155. அல்லது ஒவ்வொரு நாளும் ஸ்தண்டிலத்தில் ஹோமத்துக்காக அக்னியை உண்டாக்கலாம். ஆசார்யன் ஆசமனம் செய்து அந்தர்பலிபஹிர்பலி கொடுக்க வேண்டும்.

156. அஸ்திரரூபியான ஈசனிடத்தில் அனுஷ்டித்த ஹோமத்தை அர்ப்பணித்து விக்ஞாபனம் செய்து பிறகு கும்பதீர்த்தத்தால் பரமேஸ்வரனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.

157. சந்தனம், புஷ்பமாலை, நைவேத்யம் முதலியவைகளால் ஆராதிக்க வேண்டும். சிவனைப் பிராத்தித்து உத்தரவையடைந்து

158. யஜமானனுக்கு ஹோமகர்மாவில் பஸ்மாவை கொடுக்க வேண்டும். இங்கும் சாந்தி ஹோமம் போல் அஸ்திர மந்திரஜபங்களும் வேத பாராயணங்களும் செய்ய வேண்டும்.

159. இவ்விதமாக மூர்த்தி ஹோமம் பிராயச்சித்தத்திற்காக கூறப்பட்டது. இன்னொரு விதமான மூர்த்தி ஹோமம் விசேஷமாக இங்கு கூறப்படுகிறது.

160. மத்திய குடும்பத்தில் சிவனையும் வர்த்தினீ குடும்பத்தில் அஸ்திரத்தையும் பூஜித்து அதைச் சுற்றி எட்டு குடும்பத்தில் மூர்த்தி மூர்த்தீஸ்வரர்களை பூஜிக்க வேண்டும்.

161. எட்டு திசைகளிலும் சர்வாதி மந்திரங்களால் ஹோமத்தை அனுஷ்டிக்க வேண்டும். வேதிகையுடன் எட்டுகுண்டத்திலோ எட்டு ஸ்தண்டிலத்திலோ

162. ஸமித், நெய், பால், யவம் ஆகியவைகளால் 108 அல்லது 50 ஸங்க்யையோ 25 ஸங்க்யையோ ஒவ்வொரு திரவ்யங்களாலும் தனித்தனியாக ஹோமத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

163. புரசு, அத்தி, அரசு, ஆல் ஆகிய சமித்துக்களால் கிழக்கு முதலிய நான்கு திக்குகளிலும் வன்னி, நாயுருவி, வில்வம், இச்சி ஸமித்துக்களால் தென்கிழக்கு முதலிய நான்கு மூலைகளிலும்

164. பால், நெல் இல்லாத திரவ்யங்களாலோ பஞ்சகுண்டம் ஐந்து கடங்களாலோ பூஜித்து பஞ்சகுண்டபக்ஷத்திலோ எட்டு குண்டபக்ஷத்திலோ கிழக்கு திசையில் உள்ளதாக ஸ்தண்டிலத்தை ஸ்தாபித்து

165. விதிப்படி எல்லா மந்திரங்களாலும் ஹோமத்தை அங்குசெய்ய வேண்டும். கிழக்கிலுள்ள குண்டத்திலோ ஈசாண்ய குண்டத்திலோ ஸம்ஹிதாஹுதி செய்ய வேண்டும்.

166. பிறகு பூர்ணாஹுதி கொடுத்து கும்ப தீர்த்தத்தால் சிவனை அபிஷேகம் செய்ய வேண்டும். சந்தனம், புஷ்பம் முதலியவைகளால் சிவனை பூஜித்து மனோபீஷ்டம் ஸித்திப்பதற்கு ஈசனை பிராத்திக்க வேண்டும்.

167. இவ்விதம் சிரேஷ்டம் முதலிய பேதங்களால் மூர்த்தி ஹோமம் மூன்று வகைப்பட்டதாகும். மூர்த்தி மூர்த்தீச்வர பூஜையையும் ஹோமத்தையும் உடைய மூர்த்தி ஹோமமானது செய்ய வேண்டும்.

168. இந்த மூர்த்தி ஹோமம் ஆலய ஸம்ப்ரோக்ஷணம் மூர்த்தி பிரதிஷ்டைக்காக ஆகும். பிராயச்சித்தத்திற்காக கூறப்படவில்லை. சாந்தி ஹோமத்தில் கூறிய பிரகாரம் தின எண்ணிக்கையால் முறைப்படி செய்ய வேண்டும்.

169. இவ்வாறு மூர்த்தி ஹோமம் சொல்லப்பட்டது. முன்பே கிருதஸ்நானம் முதலியவைகள் என்னால் எதனால் கூறப்பட்டதோ அதனால் இப்பொழுது கூறப்படவில்லை.

170. ஒரு கால ஸந்த்யா பூஜை முதலியவைகளால் விடுபட்டாலும், நித்ய பூஜை லோபம் ஏற்பட்டாலும் திவாரபாலக பூஜை இல்லாமல் இருந்தாலும் பஞ்ச சுத்தி இல்லாதபோதும்

171. ஆஸன ஸம்ஸ்காரம், உபசாரம், ஆவரண பூஜை குறைந்த பொழுதும், பாத்யம் முதலான நான்கு க்ரியைகள் எண்ணைக்காப்பு, துடைத்தல் முதலானவைகளின் குறைப்பு ஏற்பட்டாலும்

172. அபிஷேகம் இல்லாத போதும் தைலம் முதலான திரவ்யங்களுடன் இருக்கும் போது பூஜிக்கப்பட்ட ஸமயத்திலும், பஞ்சகவ்யம், பஞ்சாமிருதம் இவைகளுக்கு லோபம் ஏற்பட்ட பொழுதும்

173. சந்தனம் குறைவாகச் சாத்தப்பட்டாலும் புஷ்பாதிகள் ஸ்வல்பமாக விபரீதமாக சாத்தப்பட்ட பொழுதும் தீபம், தீபாராதனை, தூபம் ஆகியவை இல்லாமலிருந்தாலும்

174. பிராம்மணர்களே நீராஜந தீபம், சர விளக்கு அணைந்தபோதோ, எலி முதலியவைகளால் தீபத்திலுள்ள நெருப்பால்

175. லிங்கம், பேரம் (பிம்பம்) ஆகமம் இவைகள் ஸ்பரிசிக்கப்பட்டாலும், அன்னியவர்ணத்தாரால் தொடப்பட்டாலும் லிங்கத்திலுள்ள வஸ்திரம் கர்பக்ருஹம் அக்னியால் தஹிக்கப்பட்டாலும்

176. தீபம், ரக்ஷõதீபம் அணைந்தாலும் மந்திரத்துடன் கூடிய ஹவிஸ்ஸை அர்பணம் செய்யும்போது திரையிடப்படாமலிருந்தாலும் சந்தனம் புஷ்பம் நிவேத்யங்களில்

177. புழு, பூச்சி, எலும்பு, நகம், கேசம் முதலியவைகள் காணப்பட்டாலும், சுவாமிக்கு அர்ப்பணம் செய்ய வேண்டிய திரவ்யங்களில் நகம், கேசம் தென்பட்டாலும்

178. கபம், கண்ணீர், ரத்தம் இவைகள் கலந்திருந்த திரவியங்களால் சிவனை பூஜை செய்தாலும் பல்லி, கரப்பு, வவ்வால் முதலிய பிராணிகள் மலத்துடன் (புழுக்கை) கலந்த திரவ்யங்களாலும் பூஜிக்கப்பட்டாலும்

179. நைவேத்யம் கொண்டு வரும் சமயத்தில் சுத்திக்காக ஜலப்ரோக்ஷணம் செய்யப்படாமல் இருந்தாலும் அந்த சமயத்தில் சங்க த்வநி இல்லாமல் இருந்தாலும்

180. முன்பே அளவிட்டு நிச்சயிக்கப்பட்ட திரவ்யம் குறைவானாலும் அதிகமானாலும் லிங்கம், மூர்த்தி பிம்பங்கள் இவைகளின் சிரஸ்ஸில் புஷ்பங்கள் இல்லாமலும்

181. முன்பு ஸமர்ப்பிக்கப்பட்ட வாடிப்போன புஷ்ப மாலையுடன் லிங்காதிகள் பூஜிக்கப்பட்டாலும் அக்னி கார்யத்தில் நித்யம் செய்ய வேண்டிய பலி கொடுக்கப்படாமல் இருந்தாலும்

182. நைமித்திகம் காம்யமான கர்மாக்களில் குண்ட, அக்னி ஸம்ஸ்காரம் இல்லாமல் இருந்தாலும், சிவாக்னி ஸம்பந்தமில்லாத அக்னியில் ஹோமம் செய்யப்பட்டாலும், வைதிகாக்னியில் ஹோமம் செய்தாலும்

183. சாதாரண அக்னி அணைந்தாலும் சைவாக்னி (சிவனை ஆவாஹித்த) அணைந்தாலும் ஹோம த்ரவ்யம் குறைவாக இருந்தாலும் நித்யோத்ஸவம் லோபமடைந்தாலும்

184. பிம்பங்கள் இருக்கும்போது பிம்பங்களை விட்டுபுஷ்பம் முதலிய லிங்கங்களால் நித்யோத்ஸவம் செய்தாலும், மழை முதலியவைகளாலும், அரசாங்கக் குழப்பத்தின் காரணமாகவும்

185. கர்ப கிருஹத்திலுள்ள தீபம் இல்லாமல் இருந்தாலும் மங்கள வாத்தியங்கள் நர்தனம் செய்யும் போது விதானத்திற்கு அழிவு ஏற்பட்டாலும்

186. பலிப்ரதானம் செய்யும் பொழுதுவாத்யம், தீபம் இல்லாமல் இருந்தாலும், பாதுகை பூஜை குறைந்தாலும் பாதுகையை வலம் வரச்செய்தல் குறைந்தாலும்

187. பாசுபதாஸ்த்ரத்தை அஸ்திர தேவரிடத்தில் பூஜிக்கப்படாமலிருந்தாலும் அல்லது அஸ்திர தேவர் விடுபட்டாலும், முறையான பிரதக்ஷிணம் குறைந்தாலும் விபரீதமாக அப்பிரதக்ஷிணம் செய்தாலும்

188. சலமூர்த்தம், அன்னலிங்கம், பாத்ரம், பாதுகை விழுந்தாலும் சவுக்யம் என்ற சுத்தந்ருத்தம் செய்யப்படாமல் இருந்தாலும் அதன் அங்கமான பஞ்ச ஆசார்யன் இல்லாமல் இருந்தாலும்

189. சவுக்ய ச்லோகங்கள் சொல்லப்படாமல் இருந்தாலும் அல்லது நர்தனம் ஆடும் தேவதாஸி கீழே தவறி விழுந்தாலும் அப்போது தீபம், ஸங்கீதம் இல்லாமல் இருந்தாலும்

190. வாத்யம், நர்தனம் இல்லாமல் இருந்தாலும் நீராஜந கிரியை செய்யாமலிருந்தாலும் அதன் அங்கமான ரøக்ஷ, பஸ்மா கொடுக்கப்படுவது இல்லாமல் இருந்தாலும்

191. கண்ணாடி, குடை, சாமரம் முதலிய உபசாரங்கள் செய்யப்படாமல் இருந்தாலும் கர்ப கிருஹத்தில் பழைய புஷ்பங்களால் அர்ச்சனை செய்யப்பட்டாலும்

192. நிர்மால்யத்துடன் கூடியதாக ஈசனை பூஜித்தாலும், நிர்மால்ய சேர்க்கையுடன் கூடிய திரவ்யங்களால் ஈசனை பூஜித்தாலும், க்ஷயம், குஷ்டம் முதலிய வியாதிகளுடன் கூடியவர்களாலும்

193. காது கேட்காதவர்களாலும் பாபரோகமுள்ளவர்களாலும், வலிப்பு போன்ற நோயுள்ளவர்களாலும் விலக்ஷணமான உருவை உடையவர்களாலும் குறைந்த அவயவம் அல்லது நீளமான அவயவம் உள்ளவர்களாலும்

194. சிகை இல்லாதவர்கள் பூஜை செய்தாலும், சந்தி பூஜை முதலான காலபூஜை காலங்கள் தாமதமானாலும், ஆதி சைவகுலத்திலிருந்து வேறுபட்டவர்களால் பூஜை செய்யப்பட்டாலும்

195. சிவபூஜைக்கு அதிகாரம் இல்லாதவர்களாலும் சம்பளம் வாங்கி பூஜை செய்பவர்களாலும் சிவபூஜை செய்யப்பட்டால் இவைகளின் பிராயச்சித்த விஷயத்தில் நித்ய பூஜைகளின் குறைகள் வரிசையாக கூறப்பட்டுள்ளது.

196. மேலே கூறப்பட்டவைகளுக்கு ஏற்றவாறு பரிஹாரமாக நித்ய பிராயச்சித்தம் கூறப்படுகிறது. உத்தமமான பூஜை செய்யுமிடத்தில் ஒருநாள் ஸந்தியா கால பூஜை நின்றால்

197. அரசருடைய பதவிக்கு ஆபத்து ஏற்படும். அப்பொழுது திசாஹோமத்தை அனுஷ்டிக்க வேண்டும். மத்தியம பூஜையில் மூர்த்தி ஹோமமும், அதம பூஜையில் சாந்தி ஹோமமும்

198. விதிப்படி பூஜைகள் செய்து இருமடங்காகவோ அல்லது மூன்று மடங்காகவோ அல்லது சமமாகவோ செய்து முடிக்க வேண்டும். உபசந்தியா கால பூஜை தடைபட்டால் குறைபட்டதற்கு செய்ய வேண்டிய பிராயச்சித்தத்தையும்

199. இரண்டு ஸந்தியாகால பூஜை தடைபட்டால் அந்த தோஷத்தின் பரிகாரத்திற்காக ஆசார்யன் ஒன்பது கலசங்களால் ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்து விட்டு அதன் பிறகு

200. முன்புகூறியபடி பிராயச்சித்தத்தை அனுஷ்டிக்க வேண்டும், மூன்று ஸந்தியாகால பூஜை நடைபெறாமல் இருந்தால் 25 கலச தீர்த்தங்களால் ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.

201. நான்கு ஸந்த்யாகால பூஜை நடைபெறாமல் இருந்தால் 50 கலசங்கள் ஸ்னபன விசேஷசமும், ஒருநாள் பூராவும் பூஜைகள் நடைபெறாமல் தடைபட்டால் (நின்று போனால்)

202. நூற்றிஎட்டு (108) கலச தீர்த்தத்தால் ஸ்வாமிக்கு அபிஷேகம் முதலியவைகள் முன்பு கூறியபடி செய்ய வேண்டும். இருதினங்கள் பூஜை நடக்காமல் இருந்தால் இரு தினங்களும் 108 கலச ஸ்னபநாபிஷேகம் செய்ய வேண்டும்.

203. அதிலும் ஸந்த்யாகால பூஜை நடக்காமல் இருந்தால் முன்பு சொன்ன பரிஹாரத்தை செய்ய வேண்டும். எவ்வளவு நாட்கள் நித்யபூஜை லோபம் ஏற்பட்டதோ

204. அத்தனை நாட்களையும் கணக்கிட்டு முன்பு கூறப்பட்டுள்ள பிராயச்சித்தத்தை செய்ய வேண்டும். ஓர் மாதம் வரை பூஜையின்றியிருந்தால் ஸம்ப்ரோக்ஷணம் செய்ய வேண்டும்.

205. பிராம்மண சிரேஷ்டர்களே அப்படி இல்லா விடில் தேவதாஸாந்நித்யம் இருக்காது. திவாரபாலகர்கள் பூஜை இல்லாமல் இருந்தால் இடையூறுகளால் துன்பம் ஏற்படும்.

206. அதற்காக, ஸம்ஹிதா ஹோமத்தை அனுஷ்டித்து அதன் பிறகு துவார பாலகர்களை ஆராதிக்க வேண்டும். பஞ்ச சுத்தி இல்லாத பூஜை செய்யப்பட்டாலும் அந்த பூஜை செய்யப்படாததே ஆகும்.

207. ஆசனாதி பூஜைகள் இல்லாமல் இருந்தால் உலகில் கெட்டநிலை உண்டாகும். சிவஸம்ஸ்காரம் இல்லாவிடில் மனிதர்கள் கெட்ட நடத்தை உடையவர்களாக இருப்பார்கள்.

208. உபசார பூஜைகள் இல்லாமல் இருந்தால் ஜனங்கள் பசி, தாகம் முதலியவைகளால் பீடிக்கப்படுவார்கள். உபசாரர்களின் வரிசைக்ரமம் மாறுபட்டால் உலகில் ஜாதிக்கலப்பு உண்டாகும்.

209. வித்யேச்வர ஆவரண (பங்கம்) ஏற்பட்ட போது ஏவப்படுபவர்களுக்கு கெட்ட நடத்தை ஏற்படும். அதன் பரிஹாரமாக சாந்தி ஹோமத்தை செய்ய வேண்டும். முறைப்படி எல்லாவற்றையும் செய்ய வேண்டும்.

210. நித்யம், நைமித்தியம், காம்யம் ஆகிய பூஜாகாலங்களில் பாத்யம் முதலான திரவ்யங்கள் குறைந்தாலும் அதன் அங்கமாக உலகத்தில் அந்த திரவ்யங்களுக்கும் குறைவு ஏற்படும்.

211. பாத்யத்ரவ்யம் அதன் அங்கலோபம் ஏற்பட்டால் பாதங்களில் ரோகம் உண்டாகும். ஆசமன திரவ்ய லோபம் ஏற்பட்டால் வாயில் ரோகம் உண்டாகும்.

212. அர்க்ய திரவ்யலோபம் ஏற்பட்டால், அர்க்யலோபமும் ஏற்பட்டால் தலைசம்பந்தமான வியாதி உண்டாகும். அருகு, புஷ்பம், அக்ஷதை அதன் அங்கம் இல்லையெனில் முன்பு கூறிய தோஷமேற்படும்.

213. எண்ணைக்காப்பு இல்லாவிடில் பொது ஜனங்கள் வியாதியால் பீடிக்கப்படுவார்கள். பஞ்சகவ்ய லோபம் ஏற்பட்டாலும் பஞ்சாமிருத லோபம் ஏற்பட்டாலும்

214. உலகில் அந்தந்த திரவியங்கள் அழிந்து போவது நிச்சயம். சந்தனம் குறைந்தாலும் அதன் அங்கமான வாசனைப் பொருள்கள் குறைந்தாலும் புஷ்பம் இல்லாமல் இருந்தாலும் அதன் அங்கமானவைகள் இல்லாமல் இருந்தாலும்

215. முனிபுங்கவர்களே! உலகில் சந்தனம், புஷ்பங்கள் அதன் அங்கமான பொருட்கள் அழிவடையும். தூபத்தில் குறைவு ஏற்பட்டாலும் அதன் அங்கமான திரவ்யங்கள் இல்லாமல் இருந்தாலும் பயங்கர நோய் உண்டாகும்.

216. கோயிலில் மணியோசை இல்லாவிடில் பிசாசுகள், ராக்ஷஸர்கள் அங்குள்ள ஜனங்களை பலவித துர்வியாதிகள் உண்டாக்கி துன்பமடையச் செய்வார்கள்.

217. தீபம் இல்லாவிடில் அதன் அங்கமான திரி, நெய் போன்ற திரவ்யங்கள் இல்லாவிட்டாலும் கண்களில் ரோகமுண்டாகும். ஆமந்திரண ஹவிஸ் லோபமானாலும் அங்கதிரவ்ய லோபமானாலும்

218. ஸ்வாமிக்கு நைவேத்யம் செய்யாமல் இருந்தாலும் நைவேத்ய அங்க திரவ்யங்கள் லோபமானாலும் நெற்பயிர்கள் அழிந்து போகும். தாம்பூலமும் அதன் அங்கதிரவ்யங்கள் லோபமேற்பட்டாலும் வாயில் வியாதி உண்டாகும்.

219. திரையிடுதல் இல்லாமலிருந்தால் ஸ்வாமியின் ஸாந்தித்யம் அழிந்து விடும். ஆசார்யன் இவைகளை அறிந்து பிராயச்சித்தத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

220. ஈசனை நன்கு பூஜித்து இருமடங்காக அந்த திரவியங்களை சிவனுக்கு ஸமர்பிக்க வேண்டும். பிறகு சாந்தி ஹோமத்தையோ அல்லது ஸ்நபனாபிஷேகத்தையோ ஆசார்யன் அனுஷ்டிக்க வேண்டும்.

221. எந்த திரவியங்களுக்கு லோபமேற்பட்டதோ அந்த திரவியத்தை 2 மடங்காக ஸமர்ப்பிக்க வேண்டும். ஸம்ஹிதா ஹோமமோ, 100 ஆவ்ருத்தி அகோர ஜபமுமோ செய்ய வேண்டும்.

222. இந்த திரவ்யங்களின் அளவை பாதி, கால், அரைகால் பாகமாக கொடுத்தால் அகோர மந்திரத்தை இருநூறு (200), நானூறு (400), அறுநூறு (600) எண்ணிக்கை முறையாக

223. ஜபித்து ஈச்வரனுக்கு அந்த திரவியங்களை இருமடங்கு ஸமர்பிக்க வேண்டும். ஆசார்யன் பாத்யாதி திரவ்யங்களை மந்திரமின்றி ஈச்வரனுக்கு கொடுத்தால்

224. அந்த பாத்யாதி திரவ்யம் கொடுக்கப்படாததாகும். பின்பு ஆசார்யன் சிவனை பூஜித்து கடைசியில் மந்திரத்துடன் திரவ்யங்களை இருமடங்காக சிவனுக்கு ஸமர்பிக்க வேண்டும்.

225. ஸ்நபன பூஜை செய்து ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். அல்லது நூறுஸங்க்யை அகோரமந்திரஜபம் செய்ய வேண்டும். நித்ய, நைமித்திக காம்யங்களில் பாத்யம் ஆசமனம் அர்க்யத்தில் குறைவு ஏற்பட்டால்

226. ஸத்யோஜோத, தத்புருஷ ஈசாந மந்திரங்களை நூறு எண்ணிக்கை ஆவ்ருத்தி செய்து இரு மடங்கு அல்லது அதே அளவு உள்ளதாகவோ பாத்யாதி உபசாரங்களைச் செய்ய வேண்டும்.

227. அருகம்புல், புஷ்பம், அக்ஷதை இல்லாமல் இருந்தால் ஹ்ருதய மந்திரத்தால் நூறு ஆவ்ருத்தி ஜபம் செய்ய வேண்டும், தினமும் நடைபெறும் தைலாபிஷேகம், துடைத்தல், அபிஷேகம் முதலியவைகளில்

228. குறைவு ஏற்பட்டால் ஹ்ருதய மந்திரத்தை நூறு ஆவ்ருத்தி ஜபித்து அவற்றை இருமடங்காக செய்ய வேண்டும். தைலாபிஷேகம் முதலியவைகளுடன் இருந்தபோது பூஜித்தால் ஸம்ஹிதா ஹோமம் செய்ய வேண்டும்.

229. நித்ய, நைமித்திக, காம்ய பூஜை முன்பு சொல்லப்பட்ட ஆவரண பூஜைகளில் குறைவு ஏற்பட்டால் ஸம்ஹிதா ஹோமம் செய்து இருமடங்காக திரவியங்களை ஸமர்பிக்க வேண்டும்.

230. இதே முறையில் பஞ்சகவ்ய பிராயச்சித்தத்திற்காக ஸம்ஹிதா ஹோமத்தை அனுஷ்டிக்க வேண்டும். முன்பு தயாரித்த சந்தனம் குறைவானால் ஸத்யோ ஜோத மந்திரத்தை நூறு ஆவ்ருத்தி ஜபம்செய்ய வேண்டும்.

231. அல்லது நூறு ஆவ்ருத்தி ஹோமம் செய்ய வேண்டும். அந்த திரவ்யங்களை இருமடங்காகவோ. ஸமமாகவோ ஸமர்ப்பிக்க வேண்டும். புஷ்பாதி திரவியங்கள் ஸமிருத்தியாக இல்லாமல் இருந்தால் அல்லது விபரீதமாக பூக்களை ஸமர்ப்பித்தாலும்

232. நூறு ஸங்க்யை ஈசான மந்திரத்தை ஜபித்து இருமடங்காக புஷ்பாதிகளை ஸமர்பிக்க வேண்டும். தூபம், தீபாராதனை ஆகியவைகளில் குறைவு ஏற்பட்டாலும் அகோர மந்திரத்தை நூறு தடவை ஜபித்து அவற்றை 2 மடங்காக ஸமர்ப்பிக்க வேண்டும்.

233. தூப, தீபம், நீராஜநம் ஸமர்பிக்கும் காலத்திலும் ஸரவிளக்கிலிருந்து எலி முதலியவைகளால் எடுக்கப்பட்ட

234. நெருப்பால் லிங்கம், பிம்பம், ஆகமங்கள் ஸ்பர்சமான சமயம் அக்னி கொஞ்சமாக இருந்தாலும் அதிகமாக இருந்தாலும் அரசனுக்கு வியாதி ஏற்படும்.

235. அக்னியால் பழுதடைந்த பாகத்தை பரிசுத்தம் செய்து, பஞ்சாமிருதாபிஷேகம், இளநீர் ஆகியவைகளை ஈசனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். அதன்கூட

236. ஈசனை பூஜித்து மூர்த்தி ஹோமத்தை செய்ய வேண்டும். அக்னி சிறிதளவுள்ளதாக இருந்தாலும் சாந்தியை முறைப்படி செய்ய வேண்டும்.

237. லிங்க, பிம்பாதிகளில் இருக்கும் வஸ்திரங்கள் அக்னியால் முழுதும் பாதிக்கப்படாமலிருந்தால் ஸம்ப்ரோக்ஷணம் முதலிய கர்மாக்களை செய்ய வேண்டும்.

238. வஸ்திர பிரதேசங்களில் அக்னியா பாதிக்கப்பட்டால் சாந்தியை செய்ய வேண்டும். ஆலயத்தில் அக்னிதாஹம் ஏற்பட்டால் அந்த பிரதேசத்திற்கு ஸம்ப்ரோக்ஷணம் செய்ய வேண்டும்.

239. தேவாலயப் பகுதிகளுக்கு ஏதேனும் இடிபாடு ஏற்பட்டிருக்குமானால் ஸ்வாமிக்கு ஸ்நபந அபிஷேகம் செய்து இடுபாடுகளை நீக்கி, கட்டிடத்தை சீர்படுத்தி பிராயச்சித்தத்தை செய்ய வேண்டும்.

240. அக்னியால் லிங்கம், பிம்பம் முதலியவைகள் வேறுநிறம் அடைந்தால் மானுஷ லிங்கமாக இருப்பின் அகற்றி, ஸ்வயம்புவமான லிங்கத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

241. சாஸ்திரத்தில் கூறிய பிரகாரம் ஸம்ப்ரோக்ஷணம் முதலியவைகளை செய்ய வேண்டும். புஸ்தகம் சிறிதளவு அக்நியால் பாதிக்கப்பட்டிருப்பினும் சாந்தி செய்ய வேண்டும்.

242. ஸகள மூர்த்தி கலையின்றி இருந்தால் சிவனுக்கு பெரிய ஸ்நபநம் செய்ய வேண்டும். தூபம் காட்டவில்லையெனில் ஸத்யோஜாத மஹாமந்திரத்தை நூறு ஸங்க்யை ஜபிக்க வேண்டும்.

243. வ்ருஷப தீபம் முதலிய தீபம் ஸமர்ப்பிக்கவில்லையெனில் அகோர மந்திரத்தை முன்னூறு ஸங்க்யை ஜபிக்க வேண்டும். தூப தீபங்களை இருமடங்காக, பகவானுக்கு அர்ப்பணிக்க வேண்டும்.

244. ரக்ஷõதீபம் அணைந்தாலும், அகோரஜபம் அறுநூறு ஸங்க்யையாகும் ஸ்வாமிக்கு ஹவிஸ் கொடுக்கப்படாவிட்டால் ஸ்நபநம் செய்து ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.

245. இருமடங்கு ஹவிஸ்ஸை கொடுக்க வேண்டும். ஆமந்த்ரண ஹவிஸ் கொடுக்காதபோதும் மேற்கூறியபடி பிராயச்சித்தம் செய்ய வேண்டும். திரை இல்லாமல் இருந்தால் கவசமந்திரத்தால் இருநூறு தடவை ஜபிக்க வேண்டும்.

246. சந்தனம், புஷ்பம், நிவேதனம் ஆகிய திரவ்யங்களில் புழு, பூச்சி, எலும்பு, நகம், கேசம் முதலியவைகள் காணப்பட்டால் முன்பு போலவே கவச மந்திரம் 200 முறை ஜபிக்க வேண்டும்.

247. நகம், கேகமிவைகளுடன் கூடிய திரவ்யம் கொஞ்சமாக இருந்தால் அதை விலக்கி விடலாம். அதிகமாக இருந்தால் அதை எறியக்கூடியது. சிவனுக்கு அர்பனம் செய்யப்பட்ட திரவ்யங்களில் நகம், ரோமம் முதலியவை தென்பட்டால்

248. அதை பஞ்சகவ்யத்தால் நனைத்து அகோர மந்திரத்தை முன்னூறு முறை ஜபிக்க வேண்டும். கபம், கண்ணீர், ரத்தம் முதலியவைகளுடன் கூடிய திரவ்யங்களால் சிவனை பூஜித்தால்

249. ஸ்வாமிக்கு ஸ்நபநம் கர்த்தாவின் விருப்பத்தை அனுசரித்து அபிஷேகம் செய்ய வேண்டும். வவ்வால் முதலிய சாமான்ய பிராணிகளின் மலத்துடன் கூடியவற்றால் பூஜை நடந்தால் முன்பு கூறியபடி ஸ்நபனம் செய்து அபிஷேகிக்க வேண்டும்

250. மடப்பள்ளியிலுருந்து நைவேத்யம் கொண்டு வரும்போது ஜலம் விடுவது செய்யாமலிருந்தாலும், நைவேத்யத்தைத் தாண்டியிருந்தாலும் தோஷமேற்படும். அதனால்

251. அர்க்ய தீர்த்தத்தால் நைவேத்யத்தை பிரோக்ஷித்து அகோர மந்திரத்தினாலும் நூறு ஆவ்ருத்தியும் சங்க முழக்கம் இல்லாமல் இருந்தாலும் நூறு (ஆவ்ருத்தி) அகோர மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

252. வாத்யங்கள் இல்லாத பொழுது தத்புருஷ மந்திரத்தால் நூறு ஆவ்ருத்தி ஜபிக்க வேண்டும். முன்பாகவே தீர்மானிக்கப்பட்ட திரவ்யம் குறைவாக இருந்தாலும், அக்குறைவை நீக்க

253. மூலமந்திரத்தை நூறு தடவை ஜபித்து இருமடங்காக அத்திரவியங்களினால் ஆராதிக்க வேண்டும். தீர்மானித்த திரவ்யங்களை முன்னதாகவே அதிகப்படுத்தினால் அது ஐச்வர்யத்தை அபிவிருத்தி செய்யும்.

254. நித்ய, நைமித்ய, காம்ய பூஜை விஷயங்களில் இது பரிஹாரமாக விளங்குகிறது. லிங்க, பிம்பங்களின் சிரஸில் புஷ்பாதிகளற்று சூன்யமாக இருந்தால், பலதோஷங்கள் உண்டாக்கும்.

255. அந்த தோஷங்கள் நீங்கி அகோர மந்திரத்தினால் நூறி ஆவ்ருத்தி ஜபித்து பூக்களால் சிவனை பூஜிக்க வேண்டும். முன்னதாக ஸந்த்யா காலத்தில் பூஜிக்கப்பட்ட வாடிய புஷ்பம் முதலியவைகளுடன் இருக்கும் போது

256. லிங்கம், பிம்பங்கள் பூஜை செய்யப்பட்டால் அரசனுக்கு பலதோஷங்கள் உண்டாகும். ஆதலால் அகோர மந்திரத்தால் நூறு ஆவ்ருத்தி ஜபம் செய்து மறுபடியும் பூஜை செய்ய வேண்டும்.

257. பலிதானம் இல்லாமலிருந்தால் எல்லா தேவதைகளும் அந்த ஸ்தானத்திலிருந்து விடுபட்டவர்களாக ஆகிறார்கள். அவைகளின் திருப்தியின் பொருட்டு இருமடங்காக பலிதானம் செய்ய வேண்டும்.

258. பத்து நாட்களுக்கு மேல் பலிதானம் செய்யாமலிருந்தாலும் சிவமூலமந்திரத்தினால் நூறு ஆஹுதிகளை செய்ய வேண்டும். நித்ய, நைமித்திக, காம்ய பூஜைகளில் ஹோமகர்மாக்கள் நடக்காமல் இருந்தாலும்

259. அவ்விடத்தில் மழை பெய்யாது பஞ்சம் ஏற்படும். அதனால் அங்கு சாந்தி ஹோமம் செய்ய வேண்டும். மறுபடியும் மூன்று மடங்காகவோ அதே அளவு முறைப்படியோ செய்ய வேண்டும்.

260. ஆசார்யனின் ஸாமர்த்யத்தினால் முன்பு கூறியதை இருஸந்த்யா காலத்திலும் செய்யலாம். தேசிகர்களால் எவ்வளவு ஹோம கார்யங்கள் தள்ளப்பட்டவைகளாக உள்ளதோ

261. நாட்கள் அதிகமானதாகவும், அதிகப்படுத்திய அந்தந்த திரவ்யங்களினால் பகவானுக்கு அர்ப்பணிக்க வேண்டும். குண்டங்களின் அளவுகள் குறைந்தாலும், ஸ்தண்டிலம் அளவின்றி இருந்தாலும் அது சத்ருக்களின் வ்ருத்தியை கொடுக்கும்.

262. அதன் பரிஹாரமாக சாந்தி ஹோமத்தை செய்து முன்புபோல் குண்டத்தையும், ஸ்தண்டிலத்தையும் அமைக்க வேண்டும். குண்ட ஸம்ஸ்காரத்தில் குறைவு ஏற்பட்டால் சிவாக்னி பலனை அளிக்காது.

263. குண்ட ஸம்ஸ்காரமில்லாத குண்டத்திலோ, ஸ்தண்டிலத்திலோ ஹோமம் செய்தாலும், சிவாக்னி கல்பனமில்லாத குண்டத்தில் ஹோமத்தை செய்தாலும்

264. அந்த ஹோமம் ஸ்வாமிக்கு ஸாந்நித்யம் ஏற்படாது. சிவசம்பந்தமில்லாத அக்னியில் செய்யப்பட்ட சிவஹோமம் வியாதியை தரும்.

265. சிவாலயத்தில் சைவாக்னியில் செய்யப்பட்ட ஹோமம் சைவமெனப்படும். சிவாலயத்தில் வைதிகாக்னி கிரியைகள் அனுஷ்டானம் தேவையில்லை.

266. புண்யாஹவாசனம் மட்டும் எவ்வாறு செய்யப்பட்டது என்றால் அது சிவாக்ஞையால் விதிக்கப்படுகிறது. இந்த விஷயத்தில் ஸ்வபுத்திசக்தியால் எதுவும் செய்யக்கூடாது.

267. சிவாலயத்தில் புண்யாஹம் முதலிய மந்திரங்கள் செய்ய வேண்டுமென்பதான வாக்யம் இருந்தால் வைதிகமான மந்திரங்களை ஸித்தாந்த முறைப்படி செய்யலாம்.

268. காமிகாதி ஆகமங்களின் பேதங்களால் ஸ்தாபிக்கப்பட்டு பூஜிக்கப்பட்ட ஈச்வரனுக்கு வேதத்தில் கூறப்பட்டதும், புராண ஸ்ம்ருதிகளால் கூறப்பட்டதுமான பூஜாக்ரமம் கிடையாது.

269. மேற்படி கூறுவானேன், பாசுபதாதிமதங்களின் பூஜைகளுக்கும், சிவன் கோயிலில் அனுமதி கிடையாது. ரக்ஷிக்கப்பட்ட அக்னி அணைந்துபோனால் யஜமானன் அழிவை அடைவான் அதற்காக

270. அகோரமந்திரத்தினால் ஆயிரம் ஆவ்ருத்தி ஜபமும் தர்பணமும் செய்ய வேண்டும். சைவாக்னி அணைந்து போனால் பத்தாயிரம் ஆவ்ருத்தி அகோரமந்திரத்தினால் ஹோமத்தையும்

271. அதே ஸங்க்யை ஜபமும் பிராயச்சித்தமாகச் செய்ய வேண்டும். ஹோமத்ரவ்யம் குறைந்திருந்தால் குறைந்த திரவ்யங்களை இருமடங்காக்கி ஆஹுதி செய்ய வேண்டும்.

272. நித்யோத்ஸவம் குறைவடைந்தால், மனிதர்களுக்கு எல்லா தோஷங்களும் உண்டாகும். அந்த தோஷம் நிவ்ருத்தி அடைய அகோரமந்திரத்தினால் நூறு ஆவ்ருத்தி ஹோமம் செய்ய வேண்டும்.

273. மூன்று ஸந்திகளிலும் பூஜை நின்று போனால் சாந்தி ஹோமம் செய்ய வேண்டும். இரவும், பகலும் ஆகிய இரு ஸமயங்களிலும் பூஜை இல்லாமல் இருந்தால் சிவனுக்கு ஸ்நபனாபிஷேகம் செய்ய வேண்டும்.

274. ஐந்து நாட்கள் பூஜை இல்லாமல் இருந்தால் ஸ்நபனாபிஷேகத்துடன் நூறு ஸங்க்யை ஹோமம் செய்ய வேண்டும். பத்து நாட்கள் பூஜை இல்லாமல் இருந்தால் ஸ்நபனாபிஷேகத்துடன் சாந்தி ஹோமத்தை செய்ய வேண்டும்.

275. பதினைந்து (15) தினங்கள் பூஜை இல்லாதிருந்தால் ஸ்நபனாபிஷேகத்துடன் சாந்தி ஹோமத்தை செய்ய வேண்டும். ஒருமாதத்திற்குள் பூஜை தடைப்பட்டால் ஸ்வாமிக்கு ஸ்நபனாபிஷேகத்துடன் திசாஹோமம் செய்ய வேண்டும்.

276. ஒருமாதத்திற்கு மேல் பூஜையின்றி இருந்தால் மூன்று நாட்கள் சாந்தி செய்யவேண்டும். பதினைந்து தினத்திற்குள்ளும், பதினைந்திற்கு மேலும் இருபத்தேழு தினத்திலும் பூஜைகள் குறைவு ஏற்பட்டால்

277. பிராயச்சித்தமானது இருமடங்காக பக்ஷம் முடியும்வரை வளர்ச்சியுடன் செய்ய வேண்டும். அந்த பிராயச்சித்தம் முடிந்ததும் பிராயச்சித்தத்தை அனுசரித்து நித்யோத்ஸவம் நடத்த வேண்டும்.

278. பிம்பத்தை வைத்து நித்யோத்சவம் செய்து கொண்டிருக்கும்பொழுது அதை விட்டு புஷ்பம் முதலான லிங்கத்தில் நித்யோத்ஸவம் செய்தால்

279. முன்னூறு (300) அல்லது இருநூறு (200) தடவை அகோரமந்திரத்தினால் ஜபம் செய்ய வேண்டும். அடைமழையாலும், அரசாங்க குழப்பங்களாலும்,

280. கர்பக்ருஹத்தில் நித்யோத்ஸவம் செய்யவும் படி ஏற்பட்டால் முன்பு கூறிய ஸங்க்யையில் பாதியை செய்ய வேண்டும். நித்யோத்சவ ஸமயத்தில் தீபம் அணைந்து போனால், தேசம் கடுமையான இருளால் சூழ்ந்து விடும்.

281. அச்சமயம் அகோரமந்திரத்தை நூறு தடவை ஜபம் செய்து இருமடங்கு தீபத்தை ஏற்ற வேண்டும். வாத்யம் இல்லாமல் இருந்தாலும், நர்த்தனம் இல்லாமல் இருந்தாலும் தோஷம் உண்டாகும்.

282. அதன் பரிஹாரத்திற்காக ஸம்ஹிதா ஹோமம் அல்லது நூறு (100) ஸங்க்யை அகோரமந்திர ஜபம் செய்ய வேண்டும். பிறகு இருமடங்கு நர்த்தனத்தையும் வாத்யத்தையும் செய்விக்க வேண்டும்.

283. விதானம் என்ற உபசாரப்பொருள் பழுதடைந்திருந்தால் அகோர மந்திரத்தை முன்னூறு தடவை ஜபம் செய்ய வேண்டும். பலிதான ஸமயத்திலும் வாத்யம், தீபம் இவைகள் இல்லாமல் இருந்தால் முன்கூறிய முன்னூறு தடவை அகோரமந்திர ஜபம் செய்ய வேண்டும்.

284. பாதுகாபூஜை குறைந்தாலும் வலம் வருதல் இல்லாமல் இருந்தாலும் கால்களில் ரோகம் உண்டாகும். அதன் பிராயச்சித்தமாக ஸம்ஹிதா ஹோமத்தை செய்ய வேண்டும். அகோரமந்திரத்தையும் ஆயிரம் (1000) முறை ஜபிக்க வேண்டும்.

285. அஸ்திரராஜர் என்ற பாசுபதாஸ்திரம் பூஜிக்கப்படாமல் இருந்தால் இடையூறு, கஷ்டங்கள் ஏற்படாது இருக்க அகோர ஜபமும், ஸம்ஹிதா ஹோமமும் செய்ய வேண்டும்.

286. உத்ஸவத்தில் விபரீதமாக பிரதக்ஷிணம் நடந்தாலும், விதிப்படி கூறப்பட்டபிரதக்ஷிணம் குறைந்தாலும் ஸம்ஹிதா ஹோமம் செய்ய வேண்டும்.

287. பிம்பங்கள் ( ஸ்வாமிகள்) திருவீதி உலா வரும்பொழுது விழுந்தால் ஸம்வத்ஸர உத்ஸவத்தில் கூறியபிரகாரம் செய்ய வேண்டும். அதேபோல் அன்னலிங்கம் முதலியவை விழுந்தாலும் ஸம்வத்ஸர உத்ஸவத்தில் கூறியபிரகாரம் செய்ய வேண்டும்.

288. பிம்பம் விழுந்தாலும் முன்கூறிய அன்ன லிங்கத்திற்கு கூறியபடி பரிஹாரங்களை செய்ய வேண்டும். பாதுகை விழுந்தால் தேசத்தில் கலஹம் உண்டாகும்.

289. அந்ததோஷ நிவ்ருத்திக்காக த்வஜத்தை அதிவாஸம் செய்வதுபோல் பாதுகையை அதிவாசம் செய்து முறைப்படி கும்பத்தை நடுவில் ஸ்தாபித்து பாதுகையை பூஜித்து அதற்கு முன்னதாக சாந்தி ஹோமம் செய்து.

290. கும்பபூஜை ந்யாஸம் முறைப்படி செய்து முடிவில் கும்பத்தால் அபிஷேகம் செய்ய வேண்டும். பாதுகை உடைந்தால் அனுகர்ம விதிப்படலத்தில் சொன்னபடி பரிஹாரம் செய்ய வேண்டும்.

291. சுத்த நிருத்தம் என்ற சவுக்யகர்மா செய்யப்படாமல் இருந்தால் நாட்யஜன உலகில் பல தொல்லைகள் உண்டாகும். அந்த ஸமயத்தில் இருபத்தைந்து (25) கலசஸ்நபனங்களால் ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.

292. அல்லது ஒன்பது (9) கலச ஸ்நபனங்களால் பஞ்சகவ்ய ஸ்நபனமுமோ செய்யலாம். எத்தனை தினங்கள் சவுக்யகர்மா என்ற சுத்தந்ருத்தம் செய்யப்படவில்லையோ, அதை இருமடங்காக செய்ய வேண்டும்.

293. பலதினங்கள் சவுக்ய கர்மாவின் லோபம் ஏற்பட்டிருந்தால் ஐம்பது (50) கலசங்களால் ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். சவுக்ய உபசாரத்தின் அங்கம் ஹீனமானால் விடுபட்ட அங்க பூஜையை இருமடங்காக செய்ய வேண்டும்.

294. சவுக்யகர்மாவின் பஞ்ச (5) ஆசார்யர்கள் தன் கடமைகளைச் செய்யாவிடில் அங்குள்ள ஜனங்கள் தத்தம் தொழிலை விட்டவர்களாக ஆகிறார்கள்.

295. அப்பொழுது ஈசனை தத்புருஷ அகோர வாமதேவ ஸத்யோஜாத மந்திரங்களை, ஒவ்வொரு மந்திரத்தையும் நூறு (100) ஆவ்ருத்தி ஜபத்தை செய்ய வேண்டும். சவுக்ய கர்மாக்கள் ஒன்றும் செய்ய முடியாவிடில் சாந்தி ஹோமத்தை செய்ய வேண்டும்.

296. சவுக்யகர்மாவை சவுக்ய ஸ்லோகமின்றி செய்தால் அந்த (சவுக்ய) சுத்தந்ருத்தம் செய்ததாக ஆகாது. அதனால் நூறு (100) தடவை அகோரமந்திர ஜபம் செய்து இருமடங்கு சவுக்ய கர்மாவை செய்யவேண்டும்.

297. சுத்தந்ருத்தம் செய்து கொண்டிருக்கையில் தேவதாஸி தவறி கீழே விழுந்தால் தேசத்திற்கு கெட்டநிலை ஏற்படும். ஆகையால் தேசத்தின் நிலைசரியாகும் வரை விதிப்படி சாந்திஹோமம் செய்ய வேண்டும், (அல்லது)

298. ஸ்வாமிக்கு ஸ்நபன அபிஷேகத்தையோ அல்லது ஆயிரம் (1000) தடவை அகோரமந்திரத்தியோ ஜபிக்க வேண்டும். சவுக்யகாலத்தில் மங்களதீபம், அணைந்து போனால் (உடைந்துபோனால்) நூறு தடவை அகோரமந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும்.

299. சவுக்ய காலத்தில் சொல்லப்பட்ட ஸங்கீதம் இல்லாமல் இருந்தால் அந்த தேசத்திற்கு பயம் ஏற்படும். அந்த பயம் நீங்க சவுக்யகர்மாவில் கூறப்பட்டுள்ளபடி பிராயச்சித்தம் செய்ய வேண்டும்.

300. சங்கீதம், வாத்யம், நர்த்தனம் இல்லாமல் இருந்தால் ஸம்ஹிதா ஹோமம் செய்ய வேண்டும். அல்லது அகோரமந்திரத்தை ஆயிரம் (1000) தடவை ஜபித்து சங்கீதம், வாத்யம், நர்த்தனத்தை இருமடங்காக ஈசனுக்கு ஸமர்பிக்க வேண்டும்.

                           படலம் :தொடரும்

செவ்வாய், 8 அக்டோபர், 2024

படலம் 26: சதாபிஷேக விதி...

படலம் 26: சதாபிஷேக விதி...

26 வது படலத்தில் சதாபிஷேக விதி கூறப்படுகிறது. முதலில் ஆயிரம் சந்தினை கண்ட தீஷிதர்களுக்கு அகால மரணத்தை போக்குவதும், ஆயுள் ஆரோக்யம், இவைகளை விருத்தி செய்வதும், புத்திரன், பேரன், தனம், பயிர்செழிப்பு இவைகளை அதிகரிக்கச் செய்வதுமான சதாபிஷேகம் பற்றி கூறுகிறேன் என்பது கட்டளை உத்தராயண காலத்தில் சுக்லபக்ஷத்தில் நல்ல திதி கிழமை லக்னம் இவைகளுடன் கூடிய நல்ல தினத்தில் அபிஷேகம் செய்யவேண்டும் என காலம் அறிவிக்கப்படுகிறது. பிறகு மண்டபத்திலோ பந்தலிலோ, கொட்டகையிலோ, சுத்தமான தேசத்தில் அபிஷேகம் செய்ய வேண்டும் என கூறி, மண்டம் முதலியவைகளை அமைக்கும் முறை கூறப்படுகிறது. பிறகு பிராமணன் முதலிய நான்கு ஜாதியில் பிறந்தவர்களும் கீழ் ஜாதியில் பிறந்தவர்களும் அந்தந்த ஜாதியில் உண்டான ஸ்திரிகளும் விசேஷமாக சக்ரவர்த்திகள் மந்திரிகள், அரசர்கள், அமைச்சர்கள், ராஜ புரோகிதர்கள், ஆகிய இவர்களின் ஸ்திரிகளும் சதாபிஷேகம் செய்ய யோக்யமானவர்கள் ஆவார்கள் என கூறப்படுகிறது. எல்லா லக்ஷணத்துடன் கூடியவரும் பஞ்சாங்க பூஷணத்துடன் கூடியவருமான சிவ திவிஜனான ஆசார்யன் அபிஷேகம் அனுஷ்டிக்கவும் என கூறப்படுகிறது. அபிஷேக தினத்திற்கு முன்தினம் ராத்திரியில் எஜமானனுக்கும் அவர் மனைவிக்கும் ரக்ஷõபந்தனம் செய்யவேண்டும் என கூறப்படுகிறது. அதில் சக்கரவர்த்தி விஷயத்தில் முக்யமான மனைவிகள் பலபேர் இருந்தால் அவர்களுக்கும் ரக்ஷõ பந்தனம் செய்யவேண்டும் என கூறப்படுகிறது. அந்த முன்தின ராத்திரியில் பால் குடித்து கம்பளம் முதலியவைகளால் செய்யப்பட்ட படுக்கையில் யஜமானன், தனியாக தெற்கு பாகத்தில் தலைவைத்துக் கொண்டு தூங்கவும் என கூறப்படுகிறது.

நன்கு அமைக்கப்பட்ட மண்டபத்தில் நூல் பிடித்து அளவு செய்யும் முறையாக மண்டலம் செய்யும் முறை கூறப்படுகிறது. பிறகு மண்டல மத்தியில் கும்பத்தை வைப்பதற்கு ஸ்தண்டிலம் அமைக்கும் முறையும் சிவ கும்பம் வர்த்தனி மற்ற கலசங்களின் அளவு பற்றியும் அந்த கும்பங்களில் நூல் சுற்றும் முறை ஆகிய பல விஷயங்கள் கூறப்படுகின்றன. சிவ கும்பம் முதலிய கும்பத்தில் நதி முதலியவைகளின் ஜலத்தால் நிரப்புவது உயர்ந்ததாகும் என கூறி அந்த கும்ப தீர்த்தத்தில் சேர்க்க வேண்டிய வாசனை திரவ்யங்கள் நிரூபிக்கப்படுகிறது. பிறகு 108 கலச ஸ்தாபன முறையும் தேவதைகளை பூஜிக்கும் முறையும் திரவ்யங்களை சேர்க்கும் முறையும் கும்ப பூஜையும் அதன் மத்தியில் உள்ள கும்பத்தில் ஸர்வாங்க பூஷிதமான சிவனையும் வர்த்தனியில் மனோன்மணியையும் பூஜிக்கவும் யஜமானன் பல மனைவிகளுடன் இருந்தால் பல வர்தனிகள் ஸ்தாபிக்கவும் அந்த எல்லா கும்பங்களிலும் மனோமணியையே பூஜிக்கவும் என கூறப்படுகிறது. இவ்வாறாக 108 கலசங்களின் பூஜை விஷயத்தில் ருத்திரர்களின் பெயர்களைக் கூறி பூஜிக்கவும் என கூறப்படுகிறது. ஆனால் முதல் ஆவரணத்தில் மட்டும் அஷ்டவித்யேஸ்வரர்களை பூஜிக்கவும் என தனியாக கூறப்படுகிறது. பிறகு யஜமானன் தீட்சிதனாக இருந்தால், தீட்சை செய்யவேண்டாம் என கூறப்படுகிறது. தீட்சை செய்யப்படவில்லை என்றால் அந்த அபிஷேக காலத்தில் தீட்சை செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு மண்டபத்தில் செய்யவேண்டிய ஹோம முறையும் நிரூபிக்கப்படுகிறது. ஹோமம் முடிவில் மேற்படி இவ்வாறு முறையாக ஹோமம் செய்து மீதம் உள்ள ராத்திரி பொழுதை கழித்து உத்தமமான ஆசார்யன் தீட்சை செய்யப்படாதவர்களின் விஷயத்தில் பிரதானமான அக்னியால் தீட்சை செய்ய வேண்டும் என கூறி தீட்சை முறையும் முறை கூறப்படுகிறது.

பிறகு சிவ பஞ்சாக்ஷரத்தினாலேயே தீட்சை செய்ய வேண்டும் என அறிவிக்கிறார். பிறகு எஜமானனின் அபிஷேக முறை வர்ணிக்கப்படுகிறது. பிறகு அரசர்களின் அபிஷேகத்தில் தங்கம், வெள்ளி, முதலிய உலோகத்தினால் செய்யப்பட்ட சஹஸ்ர தாரா பாத்திரத்தினால் அபிஷேகம் செய்யவேண்டும் மற்ற எல்லா புருஷர்களுக்கும் சததாரா பாத்திரத்தினால் அபிஷேகம் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. அபிஷேகத்திற்கு பிறகு செய்ய வேண்டிய முறை கூறப்படுகிறது. அபிஷேகம் செய்யப்பட்டவரை மனைவியுடன் கூட எல்லா அலங்காரமும் கூட பத்திராசனத்தில் அமர்த்தி தான்யங்கள் மது பாத்திரம் கன்றுடன் கூடி பசு அவைகளை தரிசனம் காண்பிக்கவும் பிறகு பந்துக்களால் பூஜிக்கப்பட்டவரும் சந்தோஷம் அடைந்தவரும் பாட்டு வாத்யத்துடன் கூடியவருமான அரசனை பல்லக்கில் ஏற்றி கிராம பிரதட்சிணம் செய்து வீட்டின் வாசலில் பலகையின் மேல் அமர்த்தி அவனுடைய பாதங்களை பாலாலும் ஜலத்தாலும் அலம்பி, மஞ்சள் நீர் விடுவதன் மூலமும் தீபத்துடன் கூடிய பெண்களால் மூன்று பிரதட்சிணம் செய்வித்து, பாதுகை போட்டுக்கொண்டு தன்னுடைய வீட்டை அடையவும் என்பதான கிரியாவிசேஷங்கள் சதா அபிஷேக விதியில் விவரிக்கப்பட்டுள்ளன. பிறகு அபிஷேக விஷயத்தில் 108 கலசத்தை ஸ்தாபனம் செய்து முறைப்படி செய்யவும் இந்த அபிஷேக முறை உத்தமமாகும். 49 கலசம் அல்லது 25 கலசம் 9 கலசம் 5 கலசம் 1 கலசம் முதலிய எண்ணிக்கை உள்ள கலசங்களால் அபிஷேகம் செய்வது வெவ்வேறு விதமாக கூறப்படுகிறது. பிறகு ஆசார்யன் மூர்த்திபர்கள் ஜபம் செய்தவர்கள் ஸ்தோத்திரம் செய்தவர்கள் பக்தர்கள் ஆகியவர்களுக்கு தட்சிணை கொடுக்கும் முறை கூறப்படுகிறது. சதா அபிஷேக பயன்கள் விளக்கப்படுகின்றன. இவ்வாறாக 26வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. ஹே அந்தணர்களே! எதிர்பாராத ஆபத்துக்களை நீக்கவல்லதும் ஆயுள் ஆரோக்யத்தை அதிகமாக தரக்கூடியதுமான சதாபிஷேகத்தை சுருக்கமாக கூறுகிறேன்.

2. தனம் பயிர்களின் வளர்ச்சி புத்திரன் முதலிய ஸந்ததிகளை பெருக்குவது அபிஷேகத்தின் பயனாகும். அபிஷேகத்தின் முன்னதாக ஆயிரம் பிறை சந்திரனை தரிசித்த பெரியோர்களுக்கு சதாபிஷேகம் கூறப்படுகிறது.

3. உத்தராயணகாலத்தில் சுக்ல பக்ஷத்தில் சிறப்பான நல்ல லக்னமுடைய நல்ல கிழமை திதி இவைகளை உடைய நன்னாளில் சதாபிஷேகம் செய்து கொள்ளவேண்டும்.

4. அமைதியான குணம் எல்லா லக்ஷணங்கள் பொருந்திய ஆசார்யர் மங்களாங்குரம் செய்யப்பட்டு நன்கு அலங்கரிக்கப்பட்ட மண்டபத்திலோ

5. கொட்டகையிலோ பந்தலிலோ வளைந்து நீட்டமுள்ள தட்டு பந்தலிலோ அலங்கரிக்க பட்ட நல்ல மண்டபத்தில் ஐந்து முதல் ஐம்பத்தைந்து முழ அளவுள்ள இடத்தில்

6. நான்கு புறமும் அளவுடன் கூடிய நான்கு வாயில்களுடனும் நன்றாக அமைக்கப்பட்டு ஒன்று முதல் இருபத்தி ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டு அழகாக உள்ள மண்டபத்தில் சதாபிஷேகம் செய்ய வேண்டும்.

7. அந்தணர், அரசர், வைச்யர், நான்காம் வர்ணத்தவர், அனுலோம பிறப்புடையவர்கள், தனிசிறப்புள்ள அரசர்கள்.

8. ராணி, அரசாங்க மந்திரிகள், அமைச்சர்கள், புரோகிதர்கள், அந்தந்த ஜாதியில் தோன்றிய பெண்களுக்குமோ சதாபிஷேகம் செய்து வைக்கலாம்.

9. (விபூதி) மோதிரம், தோள்வளை, அரைஞான் குண்டலம் யக்ஞோப வீதம் என்பதான ஐந்து அணிகலன்களுடன் கூடியதாக சதாபிஷேகம் செய்ய வேண்டும். அபிஷேகத்திற்கு முன் இரவில் ரக்ஷõபந்தனம் செய்ய வேண்டும்.

10. ஆசார்யன் யஜமானனின் வலது கையில் ரக்ஷõபந்தனம் செய்ய வேண்டும். முதன்மையான ராணிக்கு இடதுகையில் ரக்ஷõபந்தனம் செய்ய வேண்டும்.

11. முக்யமான மனைவி பல இருப்பின் அவர்களுக்கும் ரக்ஷõபந்தனம் செய்விக்க வேண்டும். அன்று இரவில் பால் அருந்தி கம்பளம் முதலான படுக்கியில்

12. தெற்கு பக்கம் தலைவைத்து தனிமையாக படுத்து உறங்க வேண்டும். முன்பு கூறப்பட்ட முறைப்படி மண்டபம் அமைத்து

13. சில்பியைத் திருப்தி செய்வித்து புண்யாஹ வாசனம் செய்ய வேண்டும். மேற்கிலிருந்து கிழக்கு நுனியாகவும் தெற்கிலிருந்து வடக்கு நுனியாகவும் பதினான்கு கோடுகள் கல்பிக்க வேண்டும்.

14. இவ்வாறு நூற்றி அறுபத்தி ஒன்பது பதங்களை உடைய மண்டபத்தை நன்கு அமைக்க வேண்டும். இந்த மண்டபத்தில் நடுவில் இருபத்தி ஐந்து பதங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

15. சுற்றிலும் எட்டுத்வாரத்துடன் கூடியதாக ஒவ்வொரு பதத்தைவிட்டு விட்டு த்வாரத்திற்காக எட்டு பதங்களை விட்டு நான்கு திசையிலும் இரண்டு பதங்களால் நான்கு த்வாரங்களை அமைக்க வேண்டும்.

16. இவ்வாறு மண்டலபதங்களை த்வாரம் மத்யபதம் இவைகளுக்கு எடுத்தது போக மீதமுள்ள பதங்கள் நூற்றி எட்டாகும். இருபத்தி ஐந்து பத மத்தியில் ஸ்தண்டிலம் அமைத்து இரண்டு மரக்கால் அளவு நெல்லை பரப்ப வேண்டும்.

17. வர்தநீ கும்பத்திற்கு அதில் பாதி நெல்லும் மற்ற கலசங்களுக்கு ஒரு மரக்கால் ஆகும். ஒரு மரக்கால் நெல் அதமம். இரண்டு மரக்கால் அளவு மத்யமமாகும்.

18. மூன்று மடங்கு அளவு உத்தமாகும் இவ்வாறு உத்தமாதிகளின் அளவு கூறப்பட்டு உள்ளது. ஒரு மரக்கால் அரை மரக்கால் கால்பாக மரக்கால் என்ற அளவு கீழ்தரமாகும்.

19. இந்த நெல் அளவானது கீழ்தரமான அளவென கூறப்பட்டுள்ளது. சாலி என்ற வகை உள்ள நெல் இல்லைஎனில் வ்ரீஹி என்ற நெல்லை உபயோகித்துக் கொள்ளவும் நெல் அளவின் பாதி அரிசியும்

20. அதில் பாதி எள்ளும் அல்லது அரிசியின் நான்கில் ஒரு பங்கு எள்ளுமோ ஏற்றுக் கொள்ள வேண்டும். குறைந்த வருமானமுள்ளவர்கள் எட்டில் ஒரு பங்கு ஸ்தண்டில த்ரவ்யங்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.

21. முப்பத்திரண்டு படி அளவு நீர்பிடிக்கும் கும்பத்தை நடுவில் சிவகும்பமாக வைக்க வேண்டும். சிவகும்ப நீரளவின் பாதி நீர் கொள்ளளவு கொண்ட கும்பத்தை வர்த்தனீ கும்பமாக ஸ்தாபிக்க வேண்டும்.

22. வெளியில் உள்ள கலசங்கள் நான்கு படி அளவுள்ள நீரில் கொள்ளளவு கொண்டதாக அமைக்க வேண்டும். ப்ரதான கலசங்களை முப்புரி நூலாலும் வர்த்தனிகளை இரண்டு இழை நூலாலும்

23. மற்ற கும்பங்களில் ஓர் இழை நூலாலும் சுற்ற வேண்டும். ஒவ்வொரு கும்பமும் தனித்தனியாக வஸ்திரம். தங்கத்துடன் கூடியதாகவும் இருக்க வேண்டும்.

24. சந்தனம் அகில், பச்சகற்பூரம் கீழாநெல்லி, விளாமிச்சைவேர் கோரோஜனை வெண்கடுகு இவைகளை கலந்து நதிதீர்த்தங்களுடன் கும்பத்தை பூரணம் செய்வது உத்தமமாகும்.

25. பலவகையான வாசனைபொருட்கள் பலவித விதைகள் பலவகையான உலோகங்கள் பலவகையான தாதுக்கள் இவைகளோடு கும்பங்களை அமைக்க வேண்டும்.

26. பலதிசைகளில் இருந்து தயாரித்த மருந்துகள் பலவகைப் பழங்கள், புஷ்பங்கள் பசுவின் சம்பந்தப்பட்ட பால் தயிர் நெய் இவைகளோடு கூடியதாக கும்பத்தை அமைக்க வேண்டும்.

27. எல்லா கும்பங்களையும் ஸ்தாபித்து பத்திர புஷ்பங்களால் பூஜை செய்ய வேண்டும். ஸ்தாபித்த கும்பங்களின் பூஜையை நூற்றிஎட்டு ருத்ர நாமார்ச்சனைகளால் செய்ய வேண்டும்.

28. உத்தமமான ஆசார்யன் ஒவ்வொரு த்ரவ்யங்களையும் அந்தந்த அளவு ஸமர்ப்பிக்க வேண்டும். சிவகும்பத்தையும் வர்த்தனியும் இரு வஸ்திரங்களால் அலங்கரிக்க வேண்டும்.

29. ஒன்பது, ஐந்து எண்ணிக்கை உள்ள ரத்னங்களை சிவகும்ப சக்தி கும்பத்தில் சேர்க்க வேண்டும். மற்ற எட்டு கும்பங்களான முதல் ஆவரணத்தில் எட்டு லோஹங்களை சேர்க்க வேண்டும்.

30. தங்கம், வெள்ளி, தாமிரம், பித்தளை, வெண்கலம், இரும்பு, ஈயம், துத்தநாகம் ஆகிய இவைகளை அஷ்டவித்யேஸ்வர கும்பங்களில் சேர்க்க வேண்டும்.

31. இரண்டாவது ஆவரணத்தில் (இவ்வாறாக) தாதுக்களை வைக்க வேண்டும். அகில், கந்தகம் அரிதாளம், தேன்மெழுகு, மனஸ்சிலை

32. பாதரசம், அப்ரம், கைரிகை, அஞ்ஜனம் (புனுகு, ஜவ்வாது) ஜாதிலிங்கம், சிந்தூரம், துத்தம், வெங்காரம், படிகாரம்

33. காந்தம் ஆகிய பதினாறுவிதமான பொருட்கள் இரண்டாவது ஆவரணத்தில் வைக்க வேண்டும். கிழக்கிலுள்ள பன்னிரண்டு கோஷ்டங்களில் இரண்டு பக்கமான த்வாரத்தில் இருப்பதாக அமைக்க வேண்டும்.

34. புரசு, கருங்காலி, மாகரம், இச்சி, ஆல், வில்வம், வன்னி, காட்டுவாழை, அரசு இவற்றிலிருந்து உண்டானதும்

35. அத்தி, நார்த்தை, மாதுளவ்ருக்ஷம் ஆகிய இந்த மரங்களின் பட்டைகளை கலசத்திற்குள் வைத்து பூஜிக்க வேண்டும். உள்பக்கம் வாமாதி ருத்ரர்களை பூஜிக்க வேண்டும்.

36. தென்கிழக்கு திசையில் உள்ள ஒன்பது கலசங்களில் ம்ருத்திகைகளை வைக்க வேண்டும். ஆற்றுமண், மாட்டு தொழுவ மண், புற்றுமண், யானை தந்த மண்

37. கடல் மண், உழுத வயல் மண், மலை மண், அரசமரத்தடி மண், புனிதமான இடத்து மண், இவைகளை கும்பத்தில் சேர்க்க வேண்டும். வெள்ளை ஆம்பல், நீலோத்பலம், வெண்தாமரை, செந்தாமரை

38. மகிழம்பூ, அரளிப்பூ, பாதிரிப்பூ, கொக்கு, மந்தாரை, ஜாதி முல்லை, (மல்லிகை) நந்தியாவட்டை பூ இவைகளையும்

39. செண்பகப்பூ ஆகிய பனிரெண்டு புஷ்பங்களை பனிரெண்டு கும்பங்களில் (தெற்கு திசையில்) சேர்க்க வேண்டும். சந்தனம், விளாமிச்சை வேர், கீழாநெல்லி குங்குமப்பூ, கற்பூரம்

40. தக்கோலம், அகில், கிராம்பு, லவங்கப்பட்டை, இவைகளை தென்மேற்கு ஒன்பது கும்பங்களில் வைக்க வேண்டும். மேற்குதிசையில் வைக்க வேண்டியவைகளை இனி கூறுகிறேன்.

41. மூங்கில் அரிசி, உளுந்து கோதுமை, நீண்ட நெல், நாயுருவி, எள், பயறு தினை, வெண்கடுகு, நீவாரம் (ஓர் வகை நெல்)

42. சாமை, துவரை இவைகளை வரிசையாக மேற்குதிக்கில் வைக்க வேண்டும். தாமரை, சங்கு புஷ்பம், விஷ்ணுக்ராந்தை, ஹம்ஸ புஷ்பம்

43. துளசி, செங்கழுநீர் பூ, இந்திரவல்லி, தாமரை, சூர்யாவர்த்தம் இந்த ஒன்பதும் வடமேற்கு திசையில் வைக்க வேண்டும்.

44. பஞ்சகவ்யம், பசுவின் பால், தயிர், கோமூத்ரம், கோசாணம், இளநீர், மாதுளம்பழம், இவைகளும்

45. நார்த்தம்பழம், வில்வம், பலாப்பழம், மாம்பழம், கொய்யாப்பழம் இவைகளை வடக்கில் வரிசையாக கும்பங்களில் வைக்க வேண்டும்.

46. வடகிழக்கு திசையில் ஒன்பது கலசங்களில் வாசனை உள்ள தீர்த்தங்களை நிரப்ப வேண்டும். இவ்வாறாக த்ரவ்யங்களை நிரப்பி சிவன் முதலானவர்களை அர்ச்சிக்க வேண்டும்.

47. மூர்த்திபர்களுடன் ஆசார்யன் ஸ்நானம் செய்து விபூதி ருத்ராக்ஷம் அணிந்து புத்தாடை கட்டிக் கொண்டு அங்கவஸ்திரம் தலைப்பாகையுடன்

48. மோதிரம் முதலான பஞ்சாங்க பூஷணங்களுடன் கூடி மண்டபத்தின் த்வாரபூஜை முதலியவைகளை செய்ய வேண்டும்.

49. நடுவில் உள்ள கும்பத்தில் சிவபெருமானை ஸாங்கோபாங்கமாக பூஜிக்க வேண்டும். ஒரே மனைவி இருந்தால் ஒரு வர்த்தனி கும்பத்தில் மனோன்மணியை பூஜிக்க வேண்டும்.

50. பல மனைவிகள் இருப்பின் அவர்களுக்கு உண்டான பூஜையை பல வர்த்தனி கும்பத்தில் மனோன்மணியையோ பூஜிக்க வேண்டும். சதாபிஷேகம் செய்து கொள்ளும் அரசன் தீøக்ஷ செய்து கொள்ளாமல் இருப்பின் அந்த காலத்தில் தீøக்ஷ செய்யப்படவேண்டும்.

51. மண்டலத்தில் கிழக்கிலோ, ஈசான்ய திக்கிலோ வடக்கிலோ, தெற்கிலோ ஹோமகுண்டம் அமைக்க வேண்டும்.

52. பிறகு இவ்வாறாக செய்யாமல் சிவகும்பத்தை மட்டுமாவது பூஜித்து தீøக்ஷக்கு புஷ்பம் போடுவது முதலியவைகளை செய்து விசேஷமாக ஹோமம் செய்ய வேண்டும்.

53. சந்தனம், புஷ்பம், தூபம், தீபம் மற்றும் விசேஷமான மற்ற உபசாரங்கள் செய்து நவாக்னி பஞ்சாக்னி அல்லது ஏகாக்னியையோ கல்பித்து பூஜிக்க வேண்டும்.

54. சமிது நெய், ஹவிஸ், பொறி, எள், மூங்கில் அரிசி, உளுந்து, மற்ற ஹோமத்திற்கு உரியதான த்ரவ்யங்களை முறைப்படி வித்வான் ஹோமம் செய்ய வேண்டும்.

55. அத்தி ஆல், அரசு இச்சி இவைகளை இந்த்ராதி திக்குகளிலும் வன்னி, கருங்காலி நாயுருவி பில்வ்ருக்ஷம் சமித்து முதலியவைகளை ஆக்னேயாதி திக்குகளிலும்

56. புரசு சமித்தால் ப்ரதாந குண்ட ஹோமம் செய்ய வேண்டும். சிவமந்திரம் ஈசனாதி பிரம்ம மந்திரம் ஹ்ருதயம் முதலான அங்க மந்திரம் இவைகளால் முறைப்படி ஹோமம் செய்ய வேண்டும். தேவிக்கு பிரதான குண்டத்தில் எல்லா த்ரவ்யங்களையும் ஹோமம் செய்யவேண்டும்.

57. மூலமந்திரத்தால் நூறு, அல்லது ஐம்பது அல்லது இருபத்தி ஐந்து என்ற எண்ணிக்கையால் ஹோமமும் பிரம்ம மந்திர அங்கமந்திரங்களால் பத்தில் ஒரு பாகம் தனித்தனியே ஹோமம் செய்ய வேண்டும்.

58. முறைப்படியே ஹோமம் செய்து இரவு பொழுதை கழித்து பிறகு குருவானவர் அந்த சதாபிஷேக கர்த்தாக்களுக்கு பிரதான அக்னியில் தீøக்ஷ செய்விக்க வேண்டும்.

59. சதாபிஷேகம் செய்து கொள்ளும் கர்த்தா தீøக்ஷ பெறப்படாதவராக இருப்பின் சிவகும்பத்தில் சிவனை பூஜிக்க வேண்டும். பஞ்சாக்ஷரத்தினால் சிவாயை நம: என்று

60. வர்த்தனி கலசத்தில் கவுரியையும் பூஜிக்க வேண்டும். மற்ற கலசங்களில் பஞ்சாக்ஷர மந்திரத்தோடு கூடியதாக ருத்ரனை அர்ச்சிக்க வேண்டும்.

61. தீøக்ஷக்காக நூறு ஆவ்ருத்தி ஹோமம் செய்து தீøக்ஷ தர்சனத்திற்கு எல்லா பாபத்தை போக்குவதற்காக ஸர்வதோபத்ரம் என்ற மண்டலத்தை அமைத்து கொள்ள வேண்டும்.

62. விரும்பிய பயன் எல்லாவற்றையும் அடைவதற்காகவும் மிகவும் நன்கு ஒளிமயமான வாழ்க்கை அமையவும் யோக்யமான ஆடை ஆபரணங்களால் அலங்கரித்தும் காலை ஸ்நானம் செய்து

63. எல்லா அலங்காரத்துடன் கூடி சதாபிஷேக மண்டபத்திற்கு கர்த்தாவை அழைத்து வரவும். கால்களை சுத்தி செய்து கொண்டு ஆசமனம் செய்து அமைதியானமனம் உடையவராக

64. அழைத்து சென்று ஓம்காரத்தினால் தெற்கு வாயிலை பிரோக்ஷித்து அந்த கர்த்தாவினாலேயே புஷ்பாஞ்சலியையும் வலம் வந்து நமஸ்கரிப்பதையும்

65. செய்யச்சொல்லி கும்பம், மண்டலம், வஹ்நி இவைகளில் இருக்கும் சிவனை பூஜித்து ஸ்நான வேதிகையில் ஆசார்யன் கீழ் கூறும் லக்ஷணம் உள்ள பீடத்தில் ஸ்தாபிக்க வேண்டும்.

66. பாலுள்ள மரத்தில் உண்டானதும் மாமரம், பலாமரம், வில்வமரம், நாவல்மரம், அரசமரம், இவைகளினால் ஆன பத்ர பீடத்தில் கர்த்தாவை அமர்த்த வேண்டும்.

67. சதாபிஷேக கர்த்தா அரசனாக இருப்பின் ஸஹஸ்ரதாரை பாத்திரத்தினால் அபிஷேகம் செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு நூறுத்வாரமுள்ள சததாரை பாத்திரத்தால் அபிஷிக்க வேண்டும்.

68. தங்கம், வெள்ளி அல்லது வேறு உயர்ந்த உலோகமுடைய தாரா பாத்திரத்தினால் அபிஷேகம் செய்ய வேண்டும். கர்த்தாவை எல்லா விதமான அலங்காரத்துடன் கூடியதாக செய்து நெல்லிமுல்லி முதலானவைகளால்

69. மற்ற ஸ்நான த்ரவ்யங்களாலும் ஸ்நானம் செய்வித்து உடம்பிலுள்ள நீரை நல்ல வஸ்திரத்தால் நன்கு துடைத்து கொண்டு அணிந்த வஸ்திரங்களை அவிழ்த்து விட்டு

70. சந்தனம் முதலியவைகளால் உடலில் பூசி வாசனை புஷ்பங்களால் அலங்கரித்து சாணம் மெழுகி அலங்கரிக்கப்பட்ட சுபமான வேறு இடத்தில்

71. ஸ்தண்டிலம் கல்பித்து அங்கே பத்ராஸநத்தை அமைக்க வேண்டும். புலித்தோல் நல்ல வஸ்திரம் ஆகியவைகளை தங்கத்தாமரையும் பத்ராசனத்தில் மேல் வைத்து

72. நடுவில் மனைவியுடன் கூடியதாக அபிஷேகம் செய்யப்பட்டவனை நடுவில் ஸ்தாபிக்க வேண்டும். அந்த கர்த்தாவை ஆசமனம் செய்யச் சொல்லி மந்திரமய சரீரமாக்கி சந்தனம் முதலியவைகளாலும் பலவித மாலைகளாலும்

73. வாசனை உள்ள புஷ்பங்களாலும் எல்லா அலங்காரத்துடனும் அலங்கரித்து பெரிய வஸ்திரத்தால் போர்த்தி அவன் முன்னிலையில் மெழுகப்பட்ட

74. இடத்தில் எல்லா தான்யங்கள் தங்கத்தால் ஆன தேன் பாத்திரத்தை ஸ்தாபிக்க வேண்டும். பால் கறக்க கூடியதும் கூடியபசுவை பார்க்கச் சொல்ல வேண்டும்.

75. பந்துக்களால் பூஜை செய்யப்பட்டவரும் சந்தோஷம் உடையவராக வஸ்திரம் ஸ்வர்ண மோதிரம் ஸ்வர்ண புஷ்பம் இவைகளாலும் மத்தளம், பாட்டு வாத்யம் இவைகளுடன் கூடி

76. பல்லக்கில் ஏறி கிராமப்ரதட்சிணத்தை செய்து மாளிகையின் வாசற்படியிலோ அதற்கு முன்னதாகவோ மெழுகப்பட்டதும் அங்குரார்ப்பணத்துடன்

77. பூர்ணகும்பம், தீபம் இவைகளுடன் கூடி பலகையின் மேல் அமர்த்தி அவரின் பாதங்களை பால் ஜலம் இவைகளினால் அலம்ப வேண்டும்.

78. பின்னர் தீபத்தோடு மஞ்சள் தீர்த்தத்தை ஸ்திரீகள் தெளித்து கொண்டு 3 முறை வலம் வருதல் வேண்டும்.

79. பிறகு பாதுகையோடு தன் கிருஹத்தில் பிரவேசிக்க வேண்டும். நாற்பத்தி ஒன்பது கலசம் அல்லது மேற்கூறியபடி நூறு கலசங்கள் வைத்து பூஜிப்பது ச்ரேஷ்டமானதாகும்.

80. இருபத்தி ஐந்து கலசம் அல்லது ஒன்பது கலசம் அல்லது ஐந்து கலசங்களாலோ அல்லது ஒரே கலசத்தாலோ அபிஷேகம் செய்து கொள்ள வேண்டும்.

81. பிறகு உயர்ந்த உத்தமான சம்பாவணையாகவும் வேலைக்காரி, வேலைக்காரன், பூமி பசு வீடு மற்றும் உபகரணங்களை குருவிற்கு தட்சிணையாக கொடுக்க வேண்டும்.

82. பின்னர் ஆசார்யர்களுக்கும், ஜபம் செய்த அந்தணர்களுக்கும் ஸ்தோத்திரம் சொன்னவர்களுக்கும், பக்தர்களுக்கும் முன்பு கூறியபடி தட்சிணையை அளிக்க வேண்டும்.

83. தன் தகுதிக்கு ஏற்றவாறு பூஜைகள் அனுஷ்டிக்க வேண்டும். இவ்வாறு எந்த கர்த்தாவானவர் சதாபிஷேகம் செய்கிறாரோ அவர் தர்மத்தில் நிலைபெற்ற மதியுடன் பூவுலகில் விளங்குகிறார்.

84. இந்த லோகத்தில் தனவானாகவும் குழந்தைகள் உள்ளவராகவும் வெற்றியுடன் கூடியதாகவும், ஆயுள், ஆரோக்யம், கார்யசித்தி மனைவி மக்களுடன் இருந்து மேலான கதியை அடைகிறார்.

85. எந்த இடத்தில் இந்நாட்டில் முறைப்படி சதாபிஷேகம் செய்யப்படுகிறதோ அவருக்கு அக்கால ம்ருத்யு இல்லை. பாபம் செய்பவனும் இருக்க மாட்டான். ஐஸ்வர்யமின்மையும் ஏற்படாது.

86. எங்கும் பயமில்லை, சத்ரு முதலியவரால் துன்பம் இல்லை. உரிய காலத்தில் மழை பெய்ய கூடியதாக மேகமும் சுபிக்ஷமும் அரசன் வெற்றியை உடையவனாகவும் எல்லா உயிர்களும் அமைதியாகவும் பசுக்கள் பால் நிறைந்தவைகளாகவும் நல்ல பயன்கள் ஏற்படும்.

இவ்வாறு உத்தரகாமிகாமக மஹாதந்திரத்தில் சதாபிஷேக முறையாகிற இருபத்தியாறாவது படலமாகும்.

படலம் 25: கோத்ர நிர்ணய விதி...

படலம் 25: கோத்ர நிர்ணய விதி...

25 வது படலத்தில் கோத்ர நிர்ணய விதி கூறப்படுகிறது. முதலில் கோத்ரங்கள் ஆயிரம், பத்தாயிரம் கோடி என்று எண்ணிக்கையில் உள்ளன. அதில் உயர்ந்ததான கோத்ரங்கள் 49 எண்ணிக்கை ஆகும் என கூறப்படுகிறது. அதில் கவுசிகர், காஸ்யபர், பரத்வாஜர், கவுதமர், அத்ரி, வசிஷ்டர், ஜமதக்னி, பார்க்கவர், ஆங்கீரஸர் மனு என்பதாக 11 ரிஷிகள் முக்கியமாக எண்ணப்படுகிறது. பிறகு முனிவர்கள் சிவ சிருஷ்டியுடன் கூடியவர்கள் சிவனின் ஐந்து முகங்களினால் தீட்சிக்கப்பட்டவர்களாக ஆகிறார்கள். தீட்சையால் சித்திக்கப்பட்டதல்ல. ஆனால் பிறப்பினால் ஜாதி சித்தம் என கூறப்படுகிறது. பிறகு க்ஷத்ரியர்களுக்கும், வைச்யர்களுக்கும் கோத்ரம் ஆசார்யர்கள் முனிரிஷி பிரயுக்தமாகவோ ஆகும் என்று சுருக்கமாக கூறப்படுகிறது. கோத்திரவிதியில் சூத்திரனுக்கு கோத்ரம் இல்லை என்று ஒப்புக்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. பிறகு ஜாதி சித்தமான கோத்திரத்தை அறிஞர்களால் விவாக விஷயத்தில் அனுசரித்து செய்ய வேண்டும். பின்பு கோத்திர விஷயத்தில் பிரதானமான முனிவர்கள் முதலில் கூறப்படுகிறது என்று கூறி 49 முனிவர்களின் பெயர் எண்ணப்படுகிறது. பிறகு எண்ணப்பட்ட முனிவர்களின் கணங்கள் பிரவரங்கள் முறைப்படி விளக்கப்படுகின்றன. அதில் எண்ணப்பட்ட இடத்தில் குறிக்கப்பட்ட பெயர்களின் கணப்ரவர இவர்களின் விரிவாக்கப்பட்ட இடத்தில் குறிக்கப்பட்ட பெயர்களும் சில இடங்களில் வேற்றுமையாக காணப்படுகிறது. அதில் உதாரணமாக சிலது காண்பிக்கப்படுகிறது. ரவுத்ரராக எண்ணப்பட்ட பெயருக்கு: விவரிக்கப்பட்ட இடத்தில் ரவுஷா: என்று வித்யாசமாக குறிக்கப்பட்டுள்ளது. அங்கு ரவுஷா: என்று சொல்லும் பொருளே நல்லதாக விளங்குகிறது. இவ்வாறே முத்பவா: கிவதிதா: என்று எண்ணிக்கை இடப்பட்டு உள்ளது.

விவரிக்கப்பட்ட இடத்தில் முத்களா: கபய: என்ற குறிப்பு காணப்படுகிறது. அங்கும் முன்பு போல் முத்களா: கபய: என்று கூறுவதே சரியாகும் என விளக்கப்படுகிறது. இவ்வாறே பார்க்கவா: என்று எண்ணிக்கை இடப்பட்ட இடத்தில் குறிக்கப்பட்ட கவுதமா: என்று விவரிக்கப்பட்ட குறிப்பு விஷயம் நிச்சய சாதக பிரமாணமாக காணப்படுவதில்லை. பிறகு சத்திரியர்களுக்கும் வைச்யர்களுக்கும் கோத்ர பிரவரவர்ணனை காணப்படுகிறது. அதில் க்ஷத்ரிய வைச்யர்களுக்கு ஆசார்ய பிரவரம் உண்டா என்று விளக்கமாக கூறப்படுகிறது. இந்த விஷயம் படல ஆரம்பத்திலும் குறிக்கப்பட்டுள்ளது. பிறகு ஸமானமான கோத்திர பிரவரங்களை அறிந்து ஸம்பந்தத்தை அனுஷ்டிக்க வேண்டும். ஸமானமான கோத்ர பிரவரத்தை ஒருபொழுதும் வரிக்க கூடாது. அறியாமையால் விவாஹம் செய்து கொண்டால் அண்ணன் மனைவி போலும், தாயை போலும் அவளைக் காப்பாற்ற வேண்டும். விவாஹ தோஷ சாந்திக்காக சாந்திராயணம் என்ற விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். பிறகு அவளுடன் அறியாமையால் ஸம்யோகம் ஏற்படும் விஷயத்தில் செய்ய வேண்டிய பிராயச்சித்த விதி விளக்கப்படுகிறது. அவளிடம் இருந்து பிறந்த (புத்திரர்கள்) எல்லாம் பிராம்மணர்கள் அல்ல என கூறப்படுகிறது. அப்பேர்பட்ட புத்திரன், பவுத்திரன், இவர்களுடன் சேர்க்கையிலும் அனுஷ்டிக்க வேண்டிய பிராயச்சித்த விதி விளக்கப்படுகிறது. இவ்வாறாக 25வது படல கருத்து சுருக்கமாகும்.

1. எல்லா ரிஷிகளுடைய கோத்திர நிர்ணயத்தை சொல்லுகிறேன் கோத்திரங்களுடைய எண்ணிக்கை ஆயிரம், பத்தாயிரம், நூறுஆயிரம் என்று விரிவாக உள்ளது.

2. இந்த இடத்தில் 49 ரிஷிகளுடைய மேன்மையான எண்ணிக்கையாக இருக்கட்டும். கவுசிகர், காசியபர், இவ்வாறே, பாரதீவாஜர், கவுதமர் மேலும்

3. அத்ரி, வசிஷ்டர், அகஸ்த்யர், ஜமதக்னி, பார்கவர், ஆங்கீரஸர், மநுவும், வேறு ரிஷிகளும் இரண்டு விதானங்களாக அந்த ரிஷிகள் சொல்லப்படுகிறார்கள்.

4. சிவ சிருஷ்டியில் தோன்றிய முனிகள் சிவ சிருஷ்டி இல்லாத முனிகள் என இரண்டு வகை ரிஷிகள் ஆகும். சிவ சிருஷ்டியால் தோன்றிய முனிகள் சிவ பெருமானுடைய ஐந்து முகங்களிலிருந்து தீட்சிக்கப்பட்ட ரிஷிகள் ஆவார்கள்.

5. கவுசிகர் முதலிய முனிவர்கள் ஐவரும் மற்றவர்கள் எல்லா இடத்தும் தீட்சிக்கப்பட்டவர்கள் ஆவார்கள். இவர்களுடைய கோத்திரமும் தீட்சையினால் இல்லை. என்னவொவெனில் அவர்களுக்கு தன் ஜாதியே கோத்திரமானது.

6. க்ஷத்தியர்களுக்கு வைசியர்களுக்கும் கோத்திரம் ஆசார்யர்களிடமிருந்து தோன்றியதாகும். அவ்வாறு சூத்தரர்களுக்கு கோத்திரம் அமையவில்லை. இவ்வாறு கோத்திரத்தின் விதிகள் கூறப்படுகிறது.

7. ஆதிசைவரிடத்தில் எப்படி கோத்திரமோ அப்படியே அனுசைவரிடமும் கோத்ரம் மதிக்க வேண்டும். பின் என்னவோ எனில் தீøக்ஷ இல்லாமையும் சிவசிருஷ்டியிலிருந்து வேறுபட்டும் இருப்பதால்

8. பெரியோர்களால் திருமணத்தில் அந்த ஜாதி ஸித்தமானது. பரிகாரமாக உள்ளது. பெண், மாப்பிள்ளை வீட்டாரின் கோத்திரத்தை அறிந்து செய்தோ, கலியுகத்தில் அறியாமலோ கோத்திரத்தை கடைபிடிக்க வேண்டும்.

9. முக்யமான ரிஷிகள் முதலில் கூறப்படுகின்றன. கவுசிகர், லோகிதர், ரவுத்ரர், விஸ்வாமித்ரர், கதர் மற்றும்

10. தனஞ்சயர், வாஜாயனர், அகமர்ஷனர், கவுசிகர், இந்திர பூர்வகர் இவர்களும் மற்றும்

11. பவுரணர், காஸ்யபர், ரேபர், சாண்டில்யர், கதர் லோகாக்ஷயர், பாரத்வாஜர்கள், ரவுக்ஷõயணர்கள் மற்றும்

12. பார்க்கவர்கள் ஆகும். சரத்வந்தர், கவுமண்டர் தீர்க்கதமர்கள் காரேண பாலயர்கள்.

13. உசனர், வாமதேவர், அத்திரி, வார்த்தக்யர், கவிஷ்டிரர், முத்கலர், வசிஷ்டர், குண்டினர், உபமன்யு, ஆகியவர்களுக்கும்

14. பராசரர், அகஸ்தியர், சாம்பவாஹனர்கள், ஸோமவாஹநர், என்ற ரிஷி கோத்திரங்கள் யக்ஞவாஹரிஷிகள் இவர்களின் கோத்ரங்களும் கூறப்படுகின்றது.

15. வத்ஸர்கள், பிதர்கள், ஆர்டிஷேனர்கள், யஸ்கரர்கள், மித்ரயுவர்கள், வைந்யர்கள் சுநர்கள், விஷ்ணு விருத்தர்கள், கண்வரிஷிகள் இந்தரிஷி கோத்திரங்களும் இதற்கு மேலும்

16. ஹாரிதர்கள், சங்கிருதி, ரதீதரர், முத்பவர் ஆகியவர்கள் 49 கோத்திரங்களாக கூறப்படுகிறது.

17. முதலில் கவுசிகர் முதலான, ரிஷிகளை பற்றி கூறப்போகிறேன். குசிகர், பார்ணஜங்கர், பாரக்யர், அவுதலி, மானி, ஆலர்வி, ப்ருகதக்னயர்

18. கட்டி, ஆபத்தி, ஆபாத்யவர், காந்தகர், பாஷ்பகர், வாச்யுகிதர், லோமகர், தனர் ஆகிய கோத்திரங்களும்

19. சாங்காயனர், கவுரர், லோகர், சவுகதர், யமதூதர், ஆனபின்னர், தாராயனர் இந்த கோத்திரங்களும் கூறப்றபட்டுள்ளன.

20.  சவுலகாயன கோத்திரம் ஜாபாலி, உதும்பர கோத்திரம் இவையும் தண்டர், புவநய கோத்திரம், யாக்ஞவல்க்யர் சவுச்ரதய கோத்ரம் அவ்வாறே

21. ஸ்யாதாமயர், ப்ராஷ்ட ஷட்கதேகர், ஆகிய கோத்ரங்களும் சாலாவதர் மயூரர், துத்சரி, கோத்ரங்களும் சொல்லப்பட்டுள்ளன.

22. சித்ரயக்ஞர், சவுமத்யர், ச்வேதுந்தாயனர், மனுவதர், மாந்தவர், முதலிய கோத்திரங்கள் சொல்லப்பட்டன.

23. எவர்கள் மிகவும் நுன்னிய பாதங்களை உடையவர்கள் இருக்கிறார்களோ அவர்கள் பாலவ்யர் என கூறப்படுகிறார்கள். கவுசிகர்கள் ராலவர், உன்மனயர் என கூறப்படுகிறார்கள்.

24. ஐந்து ரிஷிகள் கூறப்பட்டு விஸ்வாமித்ரர் தேவநாதர், ததீசி, முதலியவர்களால் மூன்று ப்ரவர ரிஷிகளாகும்.

25. லோகிதர்கள், தண்டகாயர்கள், சக்ரவர்மாயணர்கள், என்ற ரிஷிகளும் ஜக்ஷ்யயர்கள் ப்ராக்ஞர்கள், வாஜிஜெயர்கள் இவர்களும் லோஹிதர்கள் ஆவார்கள்.

26. மேலே கூறப்பட்ட ரிஷிகள் கவுசிகனின், ப்ரவரரிஷிகளாவர், விஸ்வாமித்ரர் ஷ்டைஷகயர் லோகிதர், இவர்களும் த்ரயாரிஷிகளாகும்.

27. ப்ரவரரிஷிகள் கூறப்பட்டு ரவுக்ஷர்கள், மானர்கள், உத்வலகர், ஆகிய இவர்கள் ரவுக்ஷர்களான குசிகர்கள் ஆவர்.

28. ப்ரவரிஷிகளில், த்ராயாரிஷயர்கள், விஸ்வாமித்ரர், ரவுக்ஷகர், மாணிகி இவர்கள் மூன்று பேர்களும் த்ரயாரிஷயர்கள்.

29. விஸ்வாமித்ரர், தேவஸ்ரவசர், பரிப்ரமர் ஸ்ரவுமிதர், தேவதரசர், காமகாய நிகர்

30. ஆகிய இந்த காமகாயனர்கள் என்றும் விஸ்வாமித்ரர்கள் என்றும் சொல்லப்படுகிறார்கள். த்ரயாரஷேயர்கள் கூறப்பட்டு விஸ்வாமித்ரர் அவர்களுக்கு ப்ரவரமுதல்வராக எடுத்துக் கொள்ள வேண்டும்.

31. இதே போல் வேறு ரிஷிகளுக்கும் தேவச் ராவஸர் தேவதரஸர் இந்தரிஷிகளும், கடர் ஸ்வைரந்திரி கரபர் இவ்வாறு கீழுள்ள ரிஷிகளும் கூட குறிக்கப்படுகிறார்கள்.

32. வாஜநயர், கவுக்ருத்யர்கள், ஜாணாயநர்கள், இவர்களும் கவுக்ருத்யர்கள், கவுசிரர்கள் உதும்பராயனர்கள்,

33. பிண்டிக்ரீவர்கள், நாராயணர்கள், நாரத்யர் என்று பெயருள்ள ரிஷிகளும், இவர்கள் கடாரிஷிகள் என கூறப்படுவார்கள். அவர்கள் த்ரயாரிஷிகள் என்றும் கூறப்பட்டுள்ளன.

34. விச்வாமித்ரர், கடர், ஆஷ்டிலர் தனஞ்ஜயர்கள், இவ்வாறு வேறு ரிஷி கோத்ரங்கள் உண்டு ஆச்வவீதர்கள், காரிஷயர்கள், மயூரர்கள், ஸேந்தவாயநர்கள் என்ற கோத்திரங்கள் உண்டு.

35. தலவ்யர்களும், மஹாக்ஷர்களும், புஷ்டர்களும் தனஞ்சயரிஷிகளை சேர்ந்தவர்கள், இவர்கள் ப்ரவரத்தில் உள்ள த்ரயாரிஷேயர்கள் என்று சொல்லப்படுகின்றார்கள்.

36. விச்வாமித்ரர், மதுச்சந்தர், தனஞ்சயர் என்று மூன்று ரிஷிகளும் அவ்வாறே ஆஜாயனர் ஏகவத்சர் இவர்களும்

37. முக்கியமாக சொல்லப்படுகின்ற த்ரயாரிஷேயர்கள் விஸ்வாமித்ரமும் அப்படியே மதுச்சந்தர், ஸோஜரும் ப்ரவரத்தைச் சார்ந்த மூன்று ரிஷிகள் ஆவர்.

38. அகமர்ஷணர் முதலாகவும், கவுசிகர்ளும் அப்படியே இருவர்களும் த்ரயாரிஷேயர்கள் ஆகிறார்கள். விஸ்வாமித்தரர் அகமர்ஷணர்.

39. கவுசிகளும், இந்த மூன்று ரிஷிகளும் ப்ரவர ரிஷிகளாகும் கவுசிகளும் இந்த்ர பூர்வர்களும் அப்படியே சொல்லப்படுகின்ற முனீஸ்வரர்கள்

40. த்ரயார்ஷேயர்கள் என்று அறிய வேண்டியவர்கள் வருமாறு. விஸ்ராமித்ரர் இந்திரகவுசிகர், கவுசிகர்கள் இம்மூவரும் யாககாரியத்தில் ப்ரவரரி ஷிகளாக அறிய மூன்று ரிஷிகளும் சொல்லப்படுகிறார்கள்.

41. பவுராணர் முதலியவர்கள் த்வயாரிஷியர்கள் ஆவர்கள். கவுசிகனும் அவ்வாறே ஆவார். அந்த இரண்டு ரிஷிகள் விஸ்வாமித்ரர் பவுரணர் இவர் இருவரும் ஆவர்.

42. இவ்வாறாக பத்து விதமாக கவுசிக ரிஷிகளை பற்றி கூறப்பட்டது. அவர்கள் தொடர்ந்து வரும் ரிஷிகள் அல்ல. பிறகு காஸ்யபரிஷிகளை பற்றி கூறுகிறேன். அவர்களில் காஸ்யபர் முதலானவர் ஆவார்.

43. பிறகு ஆங்கீரஸர் என்று அறியவும் மாடரர்கள், ஏதிசாயநரர்கள், இவர்களும் ஆபூத்தாரிஷிகளும், வைசிப்ரர்கள், தூமர்கள், தூம்ராயணர்கள், இந்த ரிஷிகளும் கூறப்படுகிறார்கள்.

44. கவுதமர் தவும்ராயணர், அவுத ப்ரசுரர் ஆக்ரயணர்கள் இந்த ரிஷிகளும் சொல்லப்படுகிறார்கள். ருத்ராக்நயர்களும் அப்படியே ப்ரவரரிஷிகள் பைம்பகயர்கள், பின்னால்

45. காயாதாயர்கள், அகாபாயர்கள் நிகாமமவுஷிநிகி அவ்வாறே மற்றரிஷிகள் காத்ராயணர் அவுஜ்வலயர் ரோஹிதாயநர் இப்பெயர்களுள்ள ரிஷிகளும் சொல்லப்பட்டுள்ளன.

46. பிங்காக்ஷி, மிதகும்பர்களும் மாராயணயர், இவர்களும் வைகர்ணேயர்கள் பிறகு சொல்லப்படுகின்ற ரிஷிகள் தூமலக்ஷ்மணயர் (சுரார்கள்) இந்த ரிஷிகளும்

47. கவுஷிதகேயர், வாத்ஸ்யர்கள், அக்னி சர்மாயனர் ரிஷிகோத்தரமாக எண்ணப்படுகின்றார்கள். காமி, ஜங்கோதரர் கவுரீவாயநர் தவுக்ஷகாயநர்கள்.

48. வைதம்பர்கள், தேவாயாதர்களும் மஹா சக்ரர்க்களும், இந்த பெயருள்ள ரிஷிகளும் பைடீநஸர்களும் பாந்த்ரேப்ரர்கள் பிறகு மாலாந்தர் என்ற பெயருடைய ரிஷிகோத்ரங்களும் உள்ளன.

49. வ்ருஷகணரிஷிகளும் பாநத்யர்கள், தாக்ஷபாயணர் இவ்வாறு ஹரிதாரிஷிகள் காகமித்ரர் ஆகிய ஐவர்கள் இவ்வாறே ஆவர்கள், ஸ்வைரிகர்கள் இந்த ரிஷி கோத்ரங்களும் உண்டு.

50. ஜாரமண்டர், வாயு, ஸ்வந்திவர்ஷகணாயணர் வைசம்பாயனர் கேசாயகர் இவர்களும்

51. அவுகாயநி, மார்ஜாயனர் காம்சாயனர், ஹோத சூச்யர், ஸ்தூனர், தேவர், பாகுரயர் இவர்களும்

52. பாதிகாயர், ரவரேபர், கோமயாதர், ஹிரண்யபாபர், முசலர், ஆவிஸ்ரேன்யர் இவர்களும்

53. அக்னிதேவி, சவும்யர், சூலபிந்தவர், இவ்வாறும் முன்வந்த ரிஷிகோத்ரம் மந்தர வைகர்ணய ரிஷிகளாக கூறப்படுகிறார்கள்.

54. நைத்ரவர்கள், காஸ்யபர்கள் இவர்கள் த்ரயாரிஷிகளாக கூறப்படுகிறார்கள் காஸ்யபர், ஆபத்ஸாரர், நைத்ரவர் ஆகிய ரிஷிகள் த்ரயாரிஷிகளாவர்.

55. அவ்வாறே ரேபர் காஸ்யபர் இவர்கள் த்ரயா ரிஷிகளாகும் காஸ்யர் ஆபவத்ஸாரர் ரேபர் ஆகியவர்களும் த்ரயாரிஷிகளாகும்.

56. சாண்டில்யர், கவுண்டில்யர், பாயகர், பாயிகர், ரபேரவ்யர், சவுமானவர்கள், வனஸம்ஸ்து கரேயுதர்,

57. காகுண்டேயர், காரேயர், ஷ்டைஷிகர் ஆகியவர்களும் மஹாகாயர், ஜானவம்சவர், கவுஸ்ரேயர், கார்த்தமாயனர் இவர்களும்

58. பிறகு காமசயர், மஹெளஜக்யர், மவுஞ்சாயனர், காங்காயனர் இவர்களும்

59. வாத்ஸபாலயர், கோமிலர், வேதாயனர் இவர்கள் வாச்யாயனர்களாக எண்ணப்படுகிறார்.

60. பஹூதரயர், வார்த்தீமுகர், பாகுரீ, இரண்ய பாகு, தேதேகர், கோமூத்ரர் இவர்களும்

61. வாக்ய சுண்டர், ஜானந்தரி தன்வந்திரி பிறகு ஜாலந்தரி, சாண்டில்யரின் த்ரயாரிஷிகளாக கூறப்படுகிறது.

62. காஸ்யபர், ஆபவத்ஸாரர், சாண்டிலர், மூவரும் த்ரயாரிஷிகளாகும். காஸ்யபர், ஆபவத்ஸாரர் அஸிதர் இவர் மூவரும் த்ரயாரிஷிகளாகும்.

63. சாண்டில்யர், அசிதர், அக்னி, தேவலப்ர வரர், கோகாக்ஷயர், மை(த்)ரவாதி, வேகர், தார்பாயனர் இவர்களும்

64. சைரந்திரி, பசு, பயனாயனர், கலயர், காபுஷ்டி, லவுகாக்ஷயர் இவர்களும்

65. காம்ஸபத்ரர், வாலுகாயனி, கவுனாமி, சவுதயர்கள், விரோதிகி இவர்களும்

66. சைதகிம்ஷ்டி, பேரோநிஷ்டி, ஷ்டைவிகி, சவுசுகி, யவுதகாலகி, காலேயர், லோகாக்ஷயர் இவர்களும்

67. யவுதவர், யாஜபர், இவர்கள் லோகாக்ஷய ரிஷியின் கோத்திர பிரிவினர் ஆவர். பகலில் வசிட்டர் என்றும் இரவில் கஸ்யபர் என்னும் மூன்று ரிஷிகளும் ஆவர்.

68. காஸ்யபர், ஆபவத்ஸாரர், வசிட்டர் ஆகிய ரிஷிகள் மூவரும் முன்பு கூறப்பட்ட பிரசித்தியான காஸ்யபரோடுகூட வசிட்டரும் சேர்ந்தவராகிறார்கள்.

69. பாராத்வாஜர், மாகண்டர், க்ஷõம்யாயணர், தேவாஸ்வர், உத்வஹவ்யர், பிறகு ப்ராக்வாஸயர் இவர்களும்

70. வாஹளவர், த்வ்யவுகர் அஸிநாயநர் ஆஜர், அவுமர் தவுதேகர், பரினத்தேதர், இவர்களும்

71. சைக்கேயர், பூரயர், ரூடர், சவுத்யர், காரிக்கீரிவர், வயோக்ஷிபேதர், அவுபசயர், அக்னிவேஸ்யர், சடர்கள் இவர்களும்

72. ஸ்வேலகர், தநகர்ணர், வேஸ்யர், கவுரி வாயநர், ருக்ஷர், மானபித்யர், காம்போதகர் இவர்களும்

73. பைலர், சவுஜ்வலர், காருணாதி, சுகர், பாருண்டர், இஷுமதர், அவுதேதமேகர் இவர்களும்

74. சவுரபரர், பாத்ரபதர்களாக, சொல்லப்பட்டுள்ளன. பிறகு, தேவமதயர்கள், கல்மாஷர்கள் சதோபகிருத் இவர்களும்

75. ப்ரவாஹநேயர், ஸ்தம்பஸ்தம்பி, பிறகு வாராஹயர், தேவவேலர், வலபீகயர் இவர்களும்

76. பத்ராங்ககதர், சாலாஹலயர், இவர்களும், நிருத்யாயனர், மஹாவேலர் சாலாலயர், இவர்களும்

77. சார்தூலயர், காக்ஷலர், பாஷ்களர், க்ரோதாயனர், கவுடில்யர், சைம்ஹ்யகேந்திரர் இவர்களும்.

78. பிரம்ம ஸ்தம்பர், ராஜஸ்தம்பர், இவர்களாக கூறப்பட்டுள்ளன. ஸோம அக்னி வாயு சூர்ய இந்தர யமவிஷ்ணு ஆப என்ற வார்த்தைகளை முதலாக கொண்டதாக உள்ள (ஸொமஸ்தம்பர், அக்னிஸ்தம்பர், வாயு ஸதம்பர், சூர்ய ஸ்தம்பர், இந்திரஸ்தம்பர், யமஸ்தம்பர், விஷ்ணுஸ்தம்பர், ஆபஸ்தம்பர்)

79. ஸ்தம்ப என்ற வார்த்தையுடன் கூடியதான ரிஷிகளும், அருணசிந்து கவுமுதகந்தி இவர்கள் சக்திரிஷி ஆகும். கவுதகாயனர் இவர்களும்

80. ஆத்ரேயனர், மாமண்டர், தூமகந்தர், தூம்ரர், கவுக்÷க்ஷயர், நேதுதயர் தாபயர், என்ற இவர்களும்

81. மத்ஸ்யக்ரோதர்கள் ச்யாமேயர்கள் பிறகு ÷க்ஷõ÷க்ஷயநர் என்ற பெயருள்ளவர்கள் ஆவர். காபல்யர்கள், காருபதயர்கள், காரிஷாயணர் இவர்களும்

82. பரத்வாஜவநர் இந்த இரு ரிஷிகளும் பஞ்சரிஷிகளாக சம்மதிக்கப்படுகிறார்கள். இங்கே உள்ள பாரத்வாஜர்கள் எல்லோரும் த்ரயாரிஷிகளாக கொண்டாடப்படுகிறார்கள்.

83. அங்கிரர், பர்கஸ்பத்ய, பாரத்வாஜர், இவர்கள், த்ரயாரிஷிகள், ஒருவரான ரவுக்ஷõயனர் மட்டும் சேர்ந்து ஐந்து ரிஷி ஸமூகம் என கூறப்படுகிறார்கள்.

84. பாரத்வாஜர், ஆங்கீரஸர், ப்ருஹஸ்பதி மாதவசஸர், வந்தனர், கர்க்கர் இவர்களும்

85. சாம்பராயணர், யவுகந்தராயனர், சகீனர், பாகுலகயர், பிருஷ்டயர்கள், பிரஷ்டபிந்து இவர்களும்

86. பிறகு க்ரோஷ்டகயர், சவுயாமுனி, காணாயனர், பாஜிதாக்ஷயர், இவர்களும் கோத்ராபசயர் மற்றும்

87. சதியாபசயர், ஜாநபக்வலர், பலாசசாகர், மர்கடாயனர் இவர்களும்

88. பிறகு சங்கிரஹ துல்யர், வைதூகர், காரிரோதயர், திஸ்ரோதஸர், காரவல்யர், ஆஜயர்கள் பைலயர் இவர்களும்

89. ஐந்து மூன்று என்ற முனிகளையுடைய கர்க்கர், பாரத்வாஜர் என்று கூறப்படுகிறார்கள். ஆங்கீரஸ, பாரத்வாஜ, பார்ஹஸ்பத்யர் இவர்களும் சைன்யர்கள்.

90. கர்க்கர் ஆகியவர்களும் சேர்ந்து ஐந்து ரிஷிகளாக கூறப்படுகிறார்கள். ஆங்கீரஸர் சைன்யர், கர்க்கர் ஆகியவர்களும் த்ரயாரிஷிகளாக கூறப்படுகிறார்கள்.

91. பாரத்வாஜர்கள் மூவர்களும் தொடர்ந்து இருப்பவர்கள் அல்ல. பிறகு கவுதமரைபற்றி கூறுகிறேன். ஆயாஸ்யர் தவுடிநி இவர்களும்

92. ஆணீசயர், மூடர், பாத்யர், காசாக்ஷதர், சாத்யகாயர், தைதேகர், கவுமாரர், சாத்யமுக்ரிகர் இவர்களும்

93. வ்யாப்யாபர், நைகரிஷ்டர், டைஷகி, தேவகி, கடோரி, காருணி, கீலாலயர், பார்த்திவர், இவர்களும்

94. காசிவாஜர் ஆகிய இவர்கள் கவுதமர்களாகிற ஆயாஸ்யர் என்றும் கூறப்படுகிறார்கள். இவர்களின் பிரவரத்தில் த்ரயாரிஷேயர்களும் கூறப்பட்டுள்ளன.

95. ரிஷிகள், ப்ரவரங்கள் என கூறப்படுகிறார்கள். ஆங்கீரர் ஆயாஸ்யர் கவுதமர் ரவுகின்யர் அபிஜித்துக்குள் மேலும்

96. பிறகு க்ஷீரகம்பர் சவுமுசயர், சவுர்யா முனியர், அவுபபிந்து ராயனர் மேலும்

97. ராஹூகனர், மாஷன்யர், சரத்வந்தர், இவர்களை கவுதம ரிஷிகளாக அறியவும். இவர்கள் த்ரயாஷிகளாகவும் கூறப்படுகிறார்கள்.

98. ஆங்கிரர் கவுதமர், சரத்வந்தர், ஆகிய மூவரும் த்ரயாரிஷிகளாகும், கவுமாண்டர், மாசுராக்ஷர், மாமாந்த ரேஷனர் இவர்களும்

99. பயந்த்யாதாயநர்களும் பின் கோஷ்டேயர்கள் பசவர்கள், ஊர்ஜாயனர்கள் இவர்களும் கவுதமர்களாகவும் கூறப்படுகிறார்கள்.

100. பஞ்சார்ஷேயர்கள், ஆங்கிரஸர், சவுசத்யர், காக்ஷீவதர், கவுமாண்டர், கவுதமர் இவ்வாறு ஐந்துபேறும் பிறகு தீர்கதமர் எனவும் கூறப்படுவார்கள்.

101. பஞ்சார்ஷேயர்களாக அறிந்து கொண்டு ஏகார்ஷேயமாகவும் சம்மதிக்கப்படுகிறார்கள். ஆங்கீரஸர், அவுசத்யர், காக்ஷீவதர், கவுதமர் இவ்வாறும்

102. பிறகு தீர்கதமர் என்னும் ஐந்து பர்யாயங்கள் ஆகும் காரேனு பாலயர்களும், வாஸ்தவ்யா ஓதிவர்கள்

103. ப்ருஹதுக்தர், பவுஞ்சிஷ்டர் ராஜகந்தயர், அவுதுஞ்சாயநர், என்ற பெயருள்ள ரிஷிகள் இவர்கள் காரேணுபாலகர் ஆவர்.

104. இந்த கவுதமர் மூவரும் த்ரயார் ஷேயர்கள், அங்கிரர்கள், கவுதமர் பின் காரேனு பாலி என்ற இவர்களில் த்ரயாரிஷேயர்கள் ஆவர் அவுசநஸர்

105. ஸகதிஷ்டர்கள், ப்ரசஸ்தர்களாகக் கூறப்படுகிறார்கள், சுரூபாக்ஷர்கள், மஹோதரர் விகம்ஹதர்கள் சுபுத்யர்களும், நிஹதாக்களும், குஹா என்றும்

106. சொல்லப்படுகிறார்கள். இவர்கள் எல்லாம் உசநஸர்கள் ஆவார். த்ரயாரிஷிகளாக கவுதமர்கள் அங்கிரர்கள், ஓசநர் ஆகிய ரிஷிகள் கூறப்படுகிறார்கள்.

107. ஸஹதிஷ்டர்கள், ப்ரசஸ்தர்களாக ஆகிறார்கள். சுரூபாக்ஷர்கள் மஹெளஜஸர் விகம்ஹதர்கள் அப்படியே வாமதேவரும் த்ரயாரிஷேயர்கள் என கவுதமர்களின் கோத்திர ரிஷிகள் ஆவர்.

108. ஆங்கிரஸர், கவுதமர், வாமதேவர், என்ற மூவரும் ஸமாசநத்தாலே, அத்திரி ரிஷிகளாகி சொல்லுகிறேன். முதலில் மூன்று அத்ரி ரிஷிகள் கூறப்படுகிறார்கள்.

109. போஜர், அதிதி என்பவரும் சாந்த்ரோசீ பார்வ என்பவர் காமாங்குலயரும் சைவர்களும் சகாலர், சாகலர் என்பவரும் அப்படியே

110. த்ருண பிந்துவும் பிறகு பாகந்தயர் என்று சொல்லப்படுகிறது. பிறகு மாலருகர் சொல்லப்பட்டு பின் வ்யாகலயர் சொல்லப்படுகிறது.

111. சாம்பவ்யஸநர், என்ற பெயருள்ள ரிஷியும் கார்மர்யாயநயர் என்று சொல்லப்படுகிறார். பின்பு தாக்ஷியும் தைதேஹரும், கானிஸ்பதயர் என்ற ரிஷியும் கோத்திரங்களாக நிர்ணயிக்கப்படுகிறது.

112. அவுத்தாலகி, த்ரோணிபவா கவுரி க்ரீவாயதர்கள் என்று கவிஷ்டிரர் - சொல்லப்பட்டு - சிசுபாலர் இவர்களும் கோத்ராதிகளாக கூறப்படுகிறார்கள்.

113. கவுராத்ரேயர் பின் கிருஷ்ணாத்ரேயர்கள், (அருணாத்ரேயர்கள்) அருண பூர்வமாக உள்ள ரிஷிகோத்ரங்கள், ஸ்வேத, நீல, மஹாச்யாம என்ற வார்த்தையுடன் நான்கு விதமாவார்கள்.

114. ஹாலேயர்களும், வாலேயர்கள், ஹ்ரேலேயர்கள், இவர்களும் வாமரதிநர், வைதேகர்கள், வாஜோப்ரேயர்கள் இவர்களும்

115. கவுத்ரேயர்கள், கவுபமாநர்கள், காலதபர், அநீலாயயநர் என்ற பெயருள்ள ரிஷிகளும் அங்கிரஸரிஷிகளாக அநீலாயயகர் கூறப்படுகிறார்கள்.

116. கவுரங்கியும், சவுரங்கி, மாநங்கி, புஷ்பயர், சைலேலரும் மறுபடியும் ஸாகேதாயுநர்களாக கூறப்படுகிறது.

117. பாரத்வாஜர், இந்த்ர, அதிதி, என்ற மூவரும் ஆத்ரேயர்களாகவும் த்ரியார்ஷேயர்களாகவும் சொல்லப்பட்டார்கள் பாலிகர்களும் அத்ரி

118. அர்சநாநஸர் இவ்வாறு இங்கே மூன்று ரிஷிகள் சொல்லப்படுகிறார்கள். அப்படியே வாக்பூதகர்கள் என்பவர்களும் த்ரயாரிஷேயர்களாக கூறப்படுகிறது.

119. அத்ரி, அர்ச்சநாநஸர், வாக்பூதர்கள், ஆகரிஷிகள் மூவர், பிறகு கவிஷ்டிரரிஷிகளும் மூன்று ரிஷிகளாக அறியப்படுகிறார்கள். முன் மூன்றும் த்ரயாரிஷேயர்கள்.

120. மேலும் அத்ரி, அர்சநாநஸர், என்பவரும் கவிஷ்டிரர் என்பவரும் மூன்று ரிஷிகள், முத்களர், வ்யாள ஸந்தியும், சூர்ணவர்கள், போதவாஜிகர்.

121. வைதபாவயர் என்ற இந்த ரிஷிகளும் கோத்திர ரிஷிகளாக கூறப்படுகிறார்கள் பிறகு சாலிமதர் - கவுரீமதர் - ப்ராம்மீமதர் - இந்த கோத்திர ரிஷிகளும் கூறப்படுகிறது.

122. பின்பு கவுரகயர், வாயுபூரகர், சாயநர்கள், இவ்வாறு அவர்களும் த்ரயாரிஷேயர்களான முத்கலர்கள், என கூறப்படுகிறது.

123. அர்ச்சநாநஸர், பூர்வாதி. திதி இவ்வாறு மூன்று ரிஷிகளும், கூறப்படுகிறார்கள். இவ்வாறு ஆத்ரேயர் நான்கு விதமாக இருந்து வம்சத்தோடு கூட தொடர்ந்து வருபவர்களாக இல்லை.

124. வசிட்டரை பற்றி நான் சொல்கிறேன். அதில் முதலில் வைகலிர் என்ற ரிஷி. சொல்லப்படுவதுடன். வாடரகி பின் சொல்லப்படுகிறார்கள். கவுரீச்ரவஸர் என்றும் கூறப்படுகிறார்கள்.

125. ஆச்வலாயநர் என்ற பொருளோடும் கவிட்டர்களும் ஆச்வலாயநராக கூறப்படுகிறார். சவுசி விருக்ஷர்கள் பிறகு சொல்லப்பட்டு பின் வியாக்ர பாதபர்கள் கூறப்படுகிறார்கள்.

126. அவுடுலோமி, ஜதூகர்ணர்கள், வாஷ்ட வ்யர், வாஹ்யகாயநி, கோலாயநர், கோபோஜி, பின் பவுலாயநர்களும் கோத்திர ரிஷிகளாக கூறப்படுகிறார்கள்.

127. சுந்தஹரிதர், என்பவர் சொல்லப்பட்ட காண்டேயவிதியும் இவ்வாறு சொல்லப்படுகிறது. பின் ஸப்தவேலா என்ற இந்த கோத்ர ரிஷிகள் ஹே ப்ராம்ணோத்தமர்களே வசிட்டர்களாகவும் சொல்லப்பட்டுள்ளனர்.

128. இவர்கள் ஏகார்ஷேய கோத்திர ரிஷிகளாக ஆகின்றனர். வசிட்டர் ஒருவராக ப்ரவர ரிஷியாகவும் கருதப்படுகிறார். பின்பு குண்டிநர்கள் கூறப்படுகிறார்கள்.

129. பின் குக்குலயர் சொல்லப்படுகிறார். பிறகு லோஹாயநர், ஆவிஸ்வ, அஸ்வத்த, வைகர்ணி ஆஜிவகதிரர்கள் என்று கூறப்படுகிறார்கள்.

130. பேடகர், நவக்ராமர், அஸ்மரத்யவாஹவர், ஸோமரங்கலிநர், கோகர்கள் பின் காபடவர்கள் கூறப்படுகிறார்கள்.

131. ஹிரண்யாயணர், புலாபக்ஷர், அப்படியே மாத்யந்திநிகள், சாந்தியும், ஸோபதார்தரும், கவுண்டிநரும், கோத்ர ரிஷிகளாக

132. த்ரயாரிஷேயர்களாக ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள். வசிட்டர் என்ற மகரிஷிகள் வசிட்டர், மித்ராவருணர், குண்டிநகரும் த்ரயாரிஷியாக கூறப்படுகின்றார்கள்.

133. உபமன்யு, அவுபகவர்கள், மண்டலேகயர்கள், இவர்களும் பின்பு ஜாலாகதர், ஜயர், லோகர்கள், பின் கபிஞ்ஜலர்கள் என கூறப்படுகிறார்.

134. த்ரைவர்ண, வைசாகாரி, ஸாரக்ஷர்; ரக்ஷர்கள், சைலாலயர், மஹாகர்ணாநயர், பாலசிகர் என்றும் கூறப்படுகிறார்கள்.

135. அவுத்தாஹ மாநயர், பாலாநயர் பாகர் பிறகு இவ்வாறு உன்மாயனர் என்ற பெயருள்ளவர்கள். பின் குண்டோதராயணர்கள்

136. லக்ஷ்மணேயர், பின் காசான்வயர், லாகுலயர், அந்ருக்ஷரவஸம்ஞர்களும், காபிலர்கள் வயர்கள் இவர்களும்

137. கபிகேசர்கள், இந்த கோத்ர ரிஷிகள் உபமன்யுக்கள் என்ற இவர்கள் வஸிட்டவர்களின் த்ரயாரிஷேயர்கள் ஆவர். இவர்களும் வசிட்டரும் ஆபரத்வஸுவும்

138. இந்த்ரப்ரமத என்றவரும் இவ்வாறாக மூவரும், பிறகு பராசரர் பின்பும் மூன்று பேர் சொல்லப்படுகிறார்கள். பரதவசு என்று நினைக்கப்படுகிறார்கள்.

139. பைமதாயநர் வாஜியும் கோபாலி ஆகிய ஐவரும் பிறகு கிருஷ்ணர் பராசரர், ப்ராரோஹயேர் என்று கூறப்படுகிறார்கள்.

140. கவுமுதி ப்லாக்ஷ்யரும் கூறி இவ்வாறே பிறகு வைகலியர் சொல்லப்படுகிறார். ஹார்யச்வி ஆகிய ஐவரும் அவர்களுக்கென்று கவுரர்கள் பராசரர்கள் என்ற கோத்திரங்களும் கூறப்படுகிறது.

141. கல்வாயநர் என்று கூறப்பட்டுள்ளது. கோபயர், கர்க்கயர், பிறகு ஸ்வேதயர், வாருணி, அவர்களுக்கு ஐந்து ரிஷிகளாக சொல்லப்படுகின்றார்கள்.

142. பராசரர்கள் அருணர்களாகிற பாலுக்யர், என்பவர்களும், பாதரியும் அப்படியே கர்கரும் வநர்கள் கவுகசாதயர் இந்த ரிஷிகளும்

143. இவ்வாறு அந்த ரிஷிகள் ஐந்து பிரிவாக பின் ப்ரநீலர்களும் பராசரர்களும் பிறகு சவுதவஸாநர்களும் பிரிவான ஆலம்பாயந என்று பெயருள்ளவர்களும்

144. ஸ்வர்யர்களும், காகுக்ஷதர்களும் இவ்வாறே லோமாத்யர்கள் பூர்ண காயநர்கள் சோலகா யநர் எனப்படும் அர்ணவல்கர்களும் அவ்வாறே மேலும்

145. திரும்பவும் தேவநகவுக்யர் ச்ரவிஷ்டாயநர் என்ற ரிஷிகள் பிறகு வாசவயர் பஞ்சவாஜயர்கள் அதன் பிறகு

146. ஆத்யக்ஷõயத என்று சொல்லப்படுகிறார்கள். அவ்வாறே பூதிமாஷர்கள் அப்படியே கைமீயதயர் இவர்கள் ஐந்து நீலர்கள் என்றும் பராசரர்கள்

147. கிருஷ்ணா ஜிநர்கள், காவிசுபர்கள் பிறகு ஸ்யாமாயநர், பவுஷ்கரஸாதியும் ஸ்வேதயூபய என்றும் கோத்ர ரிஷிகள் நிர்ணயம் சொல்லப்படுகிறது.

148. ஸ்வேதர்கள், பராசர்கள், ஆகிய ஐவரும் வாத்ஸ்யாயநர், இவ்வாறே ஸ்யாமேயர்கள், பார்ணயர் ஸஹசவுலியும் சவுபுதரும் மேலும்

149. ஸ்யாமர்கள், பராசரர்கள் இந்த ஆறு விதமான வரும் த்ரயாரிஷேயர்கள், என்று சொல்லப்படுகிறார்கள். வஸிட்டர், சக்தி ஸம்ஞர்கள் பராசரர் என்று மூன்று ரிஷிகளாக சொல்லுவார்கள்.

150. எல்லோரும் பராசரர்களோவெனில் இவர்கள் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு அற்றவர்கள். பின்பு அகஸ்த்யர்கள் பற்றி நான் சொல்கிறேன். அவர்களில் அகஸ்தியர் முதலில் உள்ளவராவர்.

151. சாலாத்யாக்யரும், குல்மாஷரும் தண்டியும் காலாயனர், அவுபதஹநியும், தாவணி, லாவணி பிறகு

152. லாவ்யர், அற்புதர், வைரணயர், புதாதரயர் போதரி, சைவரதயர், பின்பு ச்யாமாதயர், இவர்கள் கோத்ர ரிஷிகளாக கூறப்படுகிறார்கள்.

153. பிறகு மவுஞ்சிகியர், பாண்டூருஹி மவுஸலயர் அவ்வாறே கவுரி தீபர்களும் ரோஹிஷ்யர்கள் இவ்வாறான ரிஷிகள் த்ரயாரிஷேயர்கள்.

154. திருடச்யுதி, அகஸ்த்யரும், இத்மவாஹர் இம்மூவரும் ஸாம்பவாஹநர் என்பவர்களும் த்ராயரிஷேயர்களான அகஸ்த்யர்கள் ஆவர்.

155. த்ருடச்யுதி அகஸ்த்யரும், ஸாம்பவாஹரும் இங்கே மூன்று ரிஷிகள். ஸோமவாஹநஸம்ஞர்கள் த்ரயாரிஷேயர்களாக அகஸ்த்யர்கள் ஆவர்.

156. த்ருடச்யுதி, அகஸ்த்யரும், சோமவாஹரும் இவ்வாறே மூன்று ரிஷிகள் யக்ஞவாஹநஸம்ஞர்கள் த்ரயாரிஷிகளான அகஸ்த்தியர்கள் ஆவர்.

157. த்ருடச்யுதி, அகஸ்த்யரும், யக்ஞவாஹர், இந்த மூவரும் அகஸ்த்யர்கள். எனினும் நான்கு வகையினரானவர்கள் ஸந்ததியோடு கூடி தொடர்ந்து வருபவர்களாக இருக்கவில்லை.

158. இதன் பிறகு ஜமதக்னி வழிவாழும் ரிஷிகளை சொல்கிறேன். முதலில் வத்ஸ என்ற ரிஷி சொல்லப்படுகிறது. மார்கண்டேயர்களும் மாண்டூகர் மாண்டவ்யர், காம்ஸயர்கள் பிறகு

159. ஆலோகநர்கள் பின் தார்பாயணர்களும் சொல்லப்படுகிறார்கள். சார்கராக்ஷர்கள் பின் தேவ தாயணர், சவுசநகாயநர்கள்

160. மாண்டூகேயர்கள், பார்ஷிகர்கள், ஸாங்கப்ர பாயணர்கள், இந்த கோத்திர ரிஷிகளும் பைங்கலாயந என்பவர்களும் பைலர்கள் ஆவார்கள். தாத்ரேஷயர்கள்

161. பிறகு பாஹ்யகயர், வைச்வாநரயரும் விலோஹிதர்களும் பாஹ்யாகோஷ்டாயநர்கள், ஷ்டைஷகயர், பாணிநயர் பிறகு

162. வாக்பூதகர், காசக்ருதஸ்நர்கள் ருதபாக், ஜதிசாயநர்கள், வைஹீநரயர், வால்மீகி, ஸ்தௌலபிண்டயர் இவர்களும்

163. ததீசயரும், பாணியும் பின் சைகாவதர்கள் வாகாயநர்கள், சவுக்ருதயர் பின் பாலா நகர்கள் இவர்களும்

164. சவுவிஷ்டயர் மாண்டவியும் பிறகு ஹஸ்தாக்நயர் பின்பு சவுத்தகியர் என அறியப்பட்டு வைகர்ணர், த்ரோணஜிஹ்வயர் இவர்களும்

165. ஜாநாயநர்கள், அவுரக்ஷயர்கள் காம் பரோ தரயர்களின் கடோரக்ருத், விரூபாக்ஷ, தேவமத்யர்கள் பைரவி

166. வ்ருகாச்வர்கள், அர்காயணர், உச்சமந்யவர் மார்காயணர் சார்ங்கரவர், வாயவாபநயர் பின்னும்

167. காஹ்வாயனர்கள் காரபயர் பிறகு சந்த்ரமஸர், நோபேயர்களும் காங்கேயர்கள், யாக்ஞிகர் பாரிமாண்டலியும் இவர்களையும்

168. பாஹுமித்ராயணர், அபிசலயர், ரோஹிதாயநர்கள் பிறகு வைஷ்டபுரேயாரும், உஷ்ட்ராக்ஷர்களும் பின் உள்ள ரிஷிகளாக கூறப்படுகிறார்கள்.

169. பிறகு ராஜிதவாஹர்களும் பிறகு சாரத்வதாயநர்களும், நாலாயநர்களும் வாஸர்களும் வாநர்கள், வாத்யர்கள் என்று கோத்ர ரிஷிகளும் கூறப்படுகிறார்கள்.

170. இந்த ரிஷிகள் அனைவரும் வத்ஸர்களாகவும், பஞ்சார் ஷேயர்கள் எனவும் கூறப்பட்டனர். ஜாமதக்நயர் பார்கவர் ச்யாவநர் அவுர்வாப்நுவாநர் ஜமதிக்னயர்களின்

171. ரிஷிகள் யாககர்மாவில் பஞ்ச ப்ரவர கோத்ர ரிஷிகளாவார். விதர்கள் சைலர்கள் அப்படியே சைலர்கள் அவடர்களும் புலஸ்தயர் இந்த மஹரிஷிகளும்

172. இவர்கள் ப்ராசீந யோகர்கள் என மிகப் பழமையான முன் தொடர்புள்ள கோத்திர ரிஷிகள் எனவும் வைநபூதர்கள் பிறகு அபயஜாதர்கள் காண்டரதயர் இவர்களும் இருக்கிறார்கள்.

173. ஆர்காயணர்கள் அவ்வாறே நாஷ்ட்ராயணர்கள் மார்க்காயணர்கள், க்ரவுஞ்சாயநர்களும் ஜாமாலாக்கள் பிறகு புஜாயநர்கள்

174. இவர்கள் விதர்கள் என்றும் ஐந்து ஆர்ஷேயர்களாக ஜாமதக்நயர் வழிவந்தவர் எனவும் கூறப்பட்டுள்ளனர். பார்கவர் ச்யவநர், அவுர்வி பஞ்சரிஷீகளாவர், ஆப்நுவாநர், விதர்கள் இவர்கள்

175. ஆர்ஷ்டிஷேணர்கள், நைரதயர், க்ராம்யாணயர் இவ்வாறாக காணாயநர்கள் பின் சாந்தராயணர்கள், பைடீகலாயநர்கள்

176. கவுராம்பி, ஆம்பி சித்தர்களும் பின்பு சமநாயநர்களும் ஆர்ஷ்டிஷேணர்களும் ஜாம தக்னியின் பஞ்சார்ஷேயர்களாக கருதப்படுவர்.

177. பார்கவர் ச்யாவநர் ஆப்நுவாநர் அநூபர்கள் என்ற பெயருள்ளவருமாக கோத்ர ரிஷிகளும் ஆன்ஷ்டிஷேணார் என்ற பெயருள்ள வருமாக ஐந்து ப்ரவரம் உள்ளவர்களாக கூறப்படுகின்றனர்.

178. வத்ஸ என்ற பெயருள்ள ரிஷிகளுக்கும் ஆர்ஷ்டிஷேணர்களும் விதா என்பவர்களுக்கும் ஒருவருக்கொருவர் விவாக சம்பந்தம் இல்லாதவராக சொல்லப்படுகிறார். பிறகு ப்ருகவர்கள் (ப்ருகுரிஷி வழிவந்தவர்கள் குறித்து) கூறப்படுகிறார்கள்.

179. யஸ்கர்களும் மவுநரும் மூகரும் வாதூலர் பாஸ்கரர் பின்பு வர்ஷ புஷ்யரும் வாலேயர்களும் பிறகு ராஜிததாயநர்கள்

180. துர்திநர்கள், மாத்யமேயர்களும் தேவந்தாயநர், கவுசாம்பேயர், வாகலயர், வாஸயர் என்றும் சொல்லப்படுகிறார்கள்.

181. ஸாத்யகியும், சித்ரஸேநரும் கவுடியல்யர்களும், பிறகு அவுக்தர்கள் பாகந்தயர் பின்வார்கர்களும் ஸ்வகயர், ப்ருகு, இந்தயர்கள்

182. பிறகு போகசிதயர் இவர்கள் யஸ்கர்கள் என்று கருதப்படுகின்றனர். ப்ருகு சம்மந்தமான பார்கவகோத்ர ரிஷிகள் த்ரயார்ஷேயர்கள் எனவும் கூறப்படுகிறார்கள்.

183. ப்ருகுவும் அவ்வாறே யஸ்கர் திவோதாஸர் என்று மூன்று ரிஷிகள் மித்ரயுவர் பிறகு ரம்யாயணர்கள் தாக்ஷõயணர்கள் பிறகும்

184. ஸாபிண்டிநர் மஹாவால்யர்கள் மால்யர்கள் யாவால்யர் ஆகிய பெயருள்ளவரும் புராபிநாயர் ஏஜேயர் ராக்ஷõயணர் இந்தரிஷிகளும்.

185. கைதவாயநயர் மாஞ்ஜாயநாக்கள் மாதாயவர்கள் மித்ரயுவர்கள் இந்த ரிஷிகள் பார்கவர்களின் த்ரயாரிஷேயர்கள் என்றும் கூறப்படுகிறார்கள்.

186. ப்ருகுவும் மித்ரயுவரும் திவோதாஸ என்ற மூவரும், வைந்யர்கள் பார்தாக்கள், பாஷ்கலா வைந்ய என்ற பெயருள்ள ரிஷிகள் என்று சொல்லப்படுகிறார்கள்.

187. ப்ராம்மண சிரேஷ்டர்களே பார்கவர்கள் த்ரயாரிஷேயர்கள் என்றும் ப்ருகுவும் வைன்ய பார்தர்களும் (பார்கவ) ப்ரவரம் கொண்ட ரிஷிகள் மூவர்

188. சுனகர், சவுகந்தயர், யக்ஞபயர், கார்த்ஸமதர், காங்காயநர், மத்ஸ்யகந்தர், கார்தமாயநர் இவர்கள் ஐக்ஷர்கள் என கூறப்படுகிறார்கள்.

189. ச்ரோத்தியர்கள் தைத்தரீயர்களும் பிப்பலர்களும் பின்னர் இவ்வாறாக உள்ள இந்த சுநகர்கள் முதலிய ரிஷிகள் ஏகாரிஷேயர்களாகவும் புகழ்ந்து கூறப்படுகிறது.

190. சுனகர் ஒருவராக இருந்தாலும் அவர் பார்கவராகவே சொல்லப்படுகிறார். யஸ்கரர்களும் மித்ரயுவர்களும் வைந்யாரிஷிகளும் ஒருவர்க்கொருவர் தொடர்புடையவர்கள்.

191. சுனகர்களுடைய சம்மந்தமும் உண்டு என கருதப்படுகிறது. விஷ்ணு விருத்தர் முதலியவரோவெனில் ஆங்கிரஸரின் ஆதியாக உள்ள கோத்ர ரிஷிகள் என கூறப்படுகின்றனர்.

192. பத்ரணா மத்ரணா இவ்வாறாக ஷடமர்ஷண என்ற பெயருள்ள ரிஷி கோத்ரங்கள் ஸாத்யகி ஸாத்யகாயநர்கள்

193. பாதராயணர், வாத்ஸ ப்ராயணர் ஆருண்யர்களும், வைஹோடா, நேதுத்யர்கள், ஸ்துத்யர்கள்

194. தேவஸ்தாயநர் இந்தரிஷிகள் விஷ்ணு வ்ருத்தர்கள் என கொண்டாடப்படுகிறார்கள். இந்த கோத்திர ரிஷிகள் ஆங்கிரஸ வழிவந்த த்ரயாரிஷிகள் என கூறப்படுகிறார்கள்.

195. ஆங்கிரா, விஷ்ணு விருத்தமும் விஷ்ணு தாஸர் இம்மூவரும் த்ரயார்ஷேயர்கள் எப்பொழுதும் வைருத்யரும், ருருத்யரும், த்ராஸதஸ்யுவும் ஆக இவர்கள் மூவரும் மூன்று ரிஷிகளாவர்.

196. கந்வர்கள், சைலர், வல்கலர்கள், ஹலிநர் மோஜயர்கள் மேலும் மவுஞ்ஜியும் மாஞ்ஜயரும் மர்கடாயநர் என்ற த்ரயாரிஷிகளாக கூறப்படுகிறார்கள்.

197. மவுஞ்சிகந்தர் பின்னும் வாஜயர் ஆஜயர்களும் மார்கச்ரவஸ இவ்வாறு இந்த ரிஷிகளும் கந்வர் என்பவரின் த்ரயார்ஷேயர்களாவர்.

198. அங்கிரர்களும் அஜமீடர்களும் கண்வரும் இந்த மூன்று ரிஷிகளும், ஹரிதாக்களும் பின் கவுத்யர்களும் ஸாங்க்யர்களும் தார்பாக்களும்.

199. சைவங்கர், சர்மநாயுவும் லாபேதரர் மஹோதரர்களும் மேலும் நைமிச்ரேயர் ஹைமகவர் பின்பு மிச்ரோதரர்

200. கவுதபர்கள் கவுலயர் காரீஷய பவுலயர் மேலும் பவுண்டவரும் மாதூபர், மாந்தாதா மாண்டகாரர்கள்

201. இவ்வாறு இங்கே சொல்லியிருந்த ரிஷிகள் ஹரீதர்கள் என்று சொல்லப்படுகிறார்கள். த்ரயாரிஷேயர்கள் என்றும் அங்கிரர்களும் அம்பரீஷரும் யவுவநசவரும் மூன்று ரிஷிகளும் ஆங்கிரர் ஆவார்கள்.

202. பிறகு ஸம்க்ருதயர் தண்டியும் சம்புவும் மலகாவும் பிறகு பவுந்யரும் சைபவரும் தாரகாத்யார்களும் பரிபாவர்கள்

203. ஹாரித்ரா, வைதலேயர்களும், ஸ்ரோதாயநரும் சாரணரும் பூதிமாஷர்களும் ஆக்கிராயணர் சம்மந்தமான ரிஷிகள்

204. சாந்த்ராயனரும் ஆபர்ஷயர் அவக்ராபயர் என்றும் ஸம்க்ருதயர் என்பதில் சைவர்களும் இவர்களும் கோத்ர ரிஷியாக சொல்லப்பட்டு த்ரயாரிஷேயர்களாக கொண்டாடப்படுகிறார்கள்.

205. ஆங்கிரர்கள், ஸம்க்ருதி அம்பரீஷர் என ரிஷிகள் மூவர் ரதீதரர்கள் பின் காஹ்வாயநர்கள் நைதீரக்ஷயர் என்ற கோத்ரரிஷிகளும்

206. சைலாலயரும் லைபியும் பின் லீபாயநர்களும் கூறப்படுகின்றனர். மைக்ஷவாஹரும் சவுவாஹவாஹரும், ஹஸ்திவாஸயரும்

207. பின் ஹோமசதர் என்பவர்கள் ரதீதரர்களின் த்ரயாரிஷேயர்கள். அங்கீரர்கள், அம்பரீஷர், ரதீதர என்று மூவர்களும்

208. ஆங்கிரர்கள் விரூபரும் ப்ருஷதச்வ என்றுமோ ஆகின்றனர். முத்கலர்கள் ஹிரண்யாக்ஷர்கள் மிதாக்ஷர்கள் இவர்கள் த்ரயார்ஷேயர்கள்.

209. ருக்யர்கள் ருக்யாயநர்கள், தீர்கஜங்கர்கள் ஜங்கர் என்பவராக சொல்லப்படுகிறது. பின் தோரண பிந்தும் முத்கலர்கள் என்பதாக இந்த ரிஷிகளும் கூறப்பட்டுள்ளன.

210. த்ரயாரிஷேயர்களாக சொல்லப்பட்டுள்ளார்கள் கவசர் தைகிலாதயர் ஹம்யாச்வர்கள் கபயர்கள் வேதலர்கள் இவர்களும் கோத்ர ரிஷிகளாக சொல்லப்பட்டுள்ளனர்.

211. ஐதிசாயநர், தரச்வியும், பதஞ்ஜலியும் மிண்டி போஜஸி சார்ங்கரவர் என்றும்

212. பின் கரசிகண்டரும் பின் மவுஷீம்த்கி என்ற ரிஷிகள் அப்படியே ஸாம்சய பவுஷ்யரும் இவ்வாருள்ள கோத்ர ரிஷிகள் கூறப்படுகின்றனர்.

213. இங்கு சொல்லப்படுகின்ற ரிஷிகள் த்ரயாரிஷேயர்களான கபயர்கள் என இவர்களும் ஆங்கிரர்களும் கபித்தர்களும் அம்பரிஷி என்று மூன்று ரிஷிகள் ஆவர்.

214. விஷ்ணு வ்ருத்தாதிகள் எல்லோரும் ஒருவர் ஒருவர் சம்மந்தமில்லாதவர்கள். ராஜரிஷிகள் பற்றியும் வைச்யரிஷிகள் பற்றியும் நான் சொல்கிறேன். ஐலர்கள் புரூரவர்கள்

215. பின்னர் க்ஷத்ரியர்களுடைய (சன்ததி வழியில் வந்த) ரிஷிகள் சொல்லப்படுகிறார்கள் வாத்ஸப்ர போதகர் வைச்யர்கள் நாராஸாதீயதயர்கள்

216. ஆத்ரேயரும் ஆத்ரேயர் வாதுலர் ஸங்கிருதியும் வஸிட்டர் சுனகரும் கண்வர் யஸ்கர் இவர்கள் எட்டுபேர்கள்

217. நாரஸாத்யர்கள் மநு இங்கே ப்ரவரமாக கூறப்படுகிறது. பிறகு க்ஷத்திரிய வைஸ்யர்களுடைய ஆசார்ய ப்ரவரமோ எனில் நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.

218. ஸமான கோத்ர ப்ரவரங்களை அறிந்து சம்பந்தம் செய்து கொள்ள ஸமான கோத்ர ப்ரவரமுள்ள கன்னியை (பெண்ணை) எப்பொழுதும் வரிக்கக் கூடாது. (சமாந கோத்ர விவாகம் செய்யக் கூடாது என்பது கருத்து).

219. சகோத்ர விவாஹம் ஆகிவிட்டால் உடன் பிறந்த சஹோதரியாக பாவித்து தாயை போல காப்பாற்ற வேண்டும். அவருடைய ரக்ஷணகார்யம் ஆகாரம் வஸ்திராதிகளிலே (அவள்மனம் கஷ்டப்படாதபடி) காக்க வேண்டியது மிக முக்யமாகும்.
 
220. விவாஹ தோஷ சுத்திக்காக சாந்த்ராயன வ்ருதத்தை அனுஷ்டிக்க வேண்டும். அப்படி இருக்கும் பொழுது ப்ரமாதத்தினால் (அடக்கமின்மையால்) முதலிய சம்யோகம் செய்திருப்பானாகில்

221. அவன் எப்பொழுதும் ப்ராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டும். அதன் முறை கூறப்படுகிறது. ஓர் முறை ஸம்போகம் செய்தால் சாந்திராயண வ்ரதத்துடன்

222. ஆயிரம் அகோர மந்திர ஹோமம் செய்ய வேண்டும். இரண்டு முறை ஸம்போகம் செய்தால் சந்திராயண வ்ரதத்துடன்

223. ஒரு மாதத்திற்கு மேல் க்ருச்ரம் அனுஷ்டித்து சாந்திராயணவ்ரதத்துடன் ஹோமம் செய்தும் ஆறு மாதம் முதல் வ்ருஷம் வரை முன்பு சொல்லிய சகல விரதானுஷ்டானங்களையும் அனுஷ்டிக்க வேண்டும்.

224. அதன் மேலும் அதிக்ருச்ராசரணத்தை அனுஷ்டித்து மூன்று வருஷம் முடியும் வரை க்ருச்ராசித்த முடிவுகளில் ஸம்ஸாரத்தையகற்றும் நிர்வாண தீøக்ஷ செய்ய வேண்டும் என்று சொல்லப்படுகின்றது.

225. மேலும் அவர்களுக்கு உண்டானபுத்ரர்கள் பிராம்மணர்களாக எண்ணப்படுவதில்லை. அவர்களின் மகன், பேரன், இவர்களின் ஸம்யோக விஷயத்தில் பிராயச்சித்தம் மேற்கூறியவையேயாகும்.

226. உபவாஸம், அப்பொழுதே ஸ்நானம் பஞ்சகவ்யப்ராசநம் ஜபம் செய்தல் இவற்றையும் ஹோமங்களும் செய்வதால் நன்மக்களுக்கு ஸர்வ சங்கடத்தில் ஏற்படுகின்ற மலம் என்ற பாபதோஷங்கள் நீங்குகின்றன.

227. அப்பொழுது சூர்யோதயம் முதல் காலையில் பகலில் இரவிலும் யார் ஒருவன் நான்கு வேளை போஜனமின்றி அனுஷ்டிக்கப்படுகிறதோ என அது உபவாஸமென சொல்லப்பட்டு இருக்கிறது.

228. மூன்று காலம் குறைவுபட்டதாகவும் ராத்திரி முதல் நாள் முழுவதும் அவன் விரதம் உபவாஸம் அனுஷ்டிக்க வேண்டும். இரண்டு காலம் குறைவு ஏற்பட்டதாக துர்லபமான ஆத்மாக்களுக்கு காப்பாற்ற வேண்டிய உபவாஸ விரதங்களின் அனுஷ்டானம் குறைவு பட்டவர்களுக்கு (மேலும் அனுஷ்டானங்களை பக்தியும் அனுசரிக்க வேண்டும்.)

இவ்வாறு உத்தரகாமிகாமக மத்தியில் கோத்ரநிர்ணய விதியாகிற இருபத்தைந்தாவது படலமாகும்.

படலம் 24: ஆசார்ய அபிஷேக முறை...

படலம் 24: ஆசார்ய அபிஷேக முறை...

24வது படலத்தில் ஆசார்ய அபிஷேக முறை கூறப்படுகிறது. முதலில் எந்த கர்மாவால் ஆசார்ய தன்மை ஏற்படுகிறதோ அப்பேர்ப்பட்ட ஆசார்ய அபிஷேக விதியானது கூறப்படுகிறது. என்று பிரதிக்ஞை செய்யப்படுகின்றது ஆர்யாவர்த்த தேசத்தில் உண்டானவரும் நல்ல அழகுடன் கூடிய ஸ்ரீமான்களை தேசிகனாக உண்டாவது பெருந்தன்மையாகும் என கூறி ஆர்யாவர்த்த தேசத்தில் லக்ஷணம் கூறப்படுகிறது. எங்கு நல்ல ஆசாரமுடைய பிராம்மணர்கள் தபஸ்விகள், முனிவர்கள் வசிக்கிறார்களோ எங்கு வேதங்களும் தேவர்களும் கொண்டாடப்படுகிறார்களோ அதுவே ஆர்யாவர்த்தமாகும். விந்திய மலையின் சமுத்திர மத்தியில் இருக்கும் தேசம் ஆர்யாவர்த்த மென்று கூறப்படுகிறது. பிறகு க. முதல் எட்டு எண்ணிக்கையில் விருப்பப்பட்ட தேசம் ஆர்யாவிருத்தம் என கூறி ககாரம் முதலிய தேசங்களின் அளவு கூறப்படுகிறது. பிராம்மணர் முதலிய நான்கு வர்ணத்தவர்கள் அவரவர் அனுஷ்டானங்களில் மட்டும் உரியவர்கள் ஆவர்கள். ஆதிசைவ குலத்தில் ஜனித்தவர்கள் மட்டுமே ஸ்தாபனம் முதலிய கர்மாக்களின் உயர்ந்தவர்கள் என கூறி ஸ்தாபனம் முதலிய கர்மாக்களின் உயர்ந்தவர்கள் என கூறி ஸ்தாபனம் முதலிய கார்யங்கள் விளக்கப்படுகிறது. பிராம்மணர் முதலிய நான்கு வர்ணத்தவர்களுக்கு எந்தஎந்த கார்யங்களில் அதிகாரம் என்று விளக்கப்படுகிறது. பிறகு ஆசார்ய அபிஷேக விஷயத்தில் தள்ளுபடி செய்யப்படும் அதிகாரிகளின் லக்ஷணம் கூறப்படுகிறது. பிறகு ஆசார்ய அபிஷேக விதி கூறப்படுகிறது. அங்குரார்ப்பணத்துடன் நல்ல லக்னத்துடன் கூடிய தினத்தில் செய்யவும் என்று காலம் கூறப்படுகிறது.

பிறகு இரண்டு வேதிகைகளுடன் கூடிய மண்டபம் அமைக்கும் முறை நன்கு சிவபூஜை ஹோம லக்ஷணம் விடுபட்ட கிரியையுடன் கூடிய சிஷ்ய விஷயத்தில் தீட்சை செய்யும் விஷயம் அந்தர்பலி, பஹிர்பலி செய்யும் வரை ஆகிய விசேஷ கார்யங்கள் செய்யவேண்டும் என்பதாக விளக்கப்படுகிறது. பிறகு சுத்தி செய்யும் விஷயத்தில் உபயோகிக்க வேண்டிய பொருள்களின் விளக்கம் மண்டபத்தில் கும்பஸ்தான முறை கூறப்படுகிறது. அங்கு கும்ப லக்ஷணம் கூறியபடி 9,5 குடமோ ஸ்தாபிக்க வேண்டும் அல்லது ஒரு கும்பமோ வைக்க வேண்டும் கும்பங்களின் பூஜை செய்ய வேண்டிய தேவதைகளும் பூஜை முறையும் கூறப்படுகின்றன தென்பாகம் உள்ள வேதிகையில் கும்பஸ்தாபனம் வடக்கு பாகம் உள்ள வேதிகையில் சிஷ்யனை அமர சொல்லவும். சந்தனம், புஷ்பம் இவைகளால் பூஜிக்க வேண்டும். ஆர்த்தி எடுக்கும் முறை என்பதான கிரியா விசேஷங்கள் விளக்கப்படுகிறது. பிறகு ஆசார்யனால் சிஷ்யனுக்கு தலைப்பாகை முதலியவைகளை அளக்கும் முறையும் அரச சின்னங்களாகிய குடை, சாமரம் முதலியவைகளை கொடுக்கும் முறைகளையும் கூறப்படுகிறது. ஆசார்யனால் ஹே தேசிகரே இன்று முதல் தீட்சை சிவாகம இலக்கணம் முதலிய கார்யங்களை முறைப்படி செய்வாயாக என உத்தரவு பிறப்பித்த முறையாக அவ்வாறே இவன் உன்னுடைய அனுக்ரஹத்தால் இடையூறு இன்றி அதிகாரம் செய்யட்டும் என்று ஸ்வாமியிடம் தெரிவிக்கும் முறையும் கூறப்படுகிறது. பிறகு அங்கு செய்ய வேண்டிய ஹோம முறையும் விளக்கப்படுகிறது. ஆசார்யனால் சிஷ்யனுக்கு தன் அதிகாரத்தை ஸமர்ப்பணம் செய்வது, பிராயச்சித்த ஹோமவிதி என்பதான அபிஷேகத்திற்கு பிறகு செய்ய வேண்டிய விசேஷ பூஜைகள் விளக்கப்படுகின்றன. பின்பு இந்த முறையாலேயே ஸாதக அபிஷேகமும் கூறப்படுகிறது. ஆனால் அங்கு சாத்யமான மந்திரத்தால் பூஜிக்கப்பட்ட கடங்களால் அபிஷேகம் செய்ய வேண்டும் என்று சாதகாபிஷேக விதி அதிகமாக சுருக்கமாக காணப்படுகிறது. பிறகு புத்ரகன், ஸமயி, மஹேஸ்வரன் பரிசாரகன் இவைகளின் லட்சணம் கூறப்பட்டுள்ளது. அதில் பரிசாரகர்கள் லிங்க அர்ச்சனையில் யோக்யர்கள் இல்லை. இவ்வாறு தீட்சை முதலியவைகளில் யோக்யர் ஆவார்கள் என சொல்லப்படுகிறது. இருந்தாலும் சிவபிராம்மண குலத்தில் உண்டான மாஹேஸ்வரர்கள் சிருஷ்டி ஆரம்பத்தில் பரமேஸ்வரனால் தீட்சை செய்யப்பட்டவர்கள் அப்படி இருந்தும் என்னை அர்ச்சிப்பதற்காக அவர்களின் சக்தியின் பொருட்டு தீட்சை மறுபடியும் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. பின்பு அனுபவிக்கும் விஷயத்தில் பிரம்மசாரியோ, கிருஹஸ்தர்களுக்கு தேசிகன் ஆகிறான்.

பிறகு கிருஹஸ்தாஸ்ரம குரு ஸாந்தானிக குரு முண்டிவிரதி, விரதார்பகன் ஆதிசைவன் இவர்களின் அமைப்பு கூறப்படுகிறது. பின்பு எல்லா விரதங்களின் உத்தமமான ஆசார்ய விரதத்தின் அமைப்பு கூறப்படுகிறது. பிறகு ஆசார்ய, சாதக புத்ரக, ஸமயீ, இவர்களால் கர்மாக்களின் லக்ஷணம் கூறப்படுகிறது. நித்யநைமித்திக கர்மாக்களின் அதிகாரி நிரூபணம் அதில் ஆசார்ய ஸாதகனும் நித்ய நைமித்திக கர்மாக்களின் அதிகாரி நிரூபணம் அதில் ஆசார்ய சாதகனும் எல்லா கர்மாவிலும் நன்கு யோக்யமானவன் என்று கூறப்படுகிறது. லக்ஷம் ஸ்லோகம் அறிந்தவன் என்று குறித்து கூறப்படுகிற குருவின் அமைப்பு கூறப்படுகிறது. பின்பு நான்கு பிரிவை உடைய காமிகம் முதலிய ஆகமங்கள் சம்ஹிதை என்று சம்ஹிதா லட்சணம் கூறப்படுகிறது. பிறகு சைவம், பாசுபதம், சோம ஸித்தாந்தம், லாகுலம் என்று சைவம் நான்கு விதமாகும். இந்த நான்கு விதமான சைவ தந்திரம் மஹேஸ்வரனுடைய நான்கு முகத்திலிருந்து உண்டானதாகும். இந்த நான்கு கிரந்தங்களில் ஒன்றுக்கொன்று முன்னதானதாக சிறந்த குணத்தை உடையதாகும். இந்த நான்கு வித கிரந்தமும் வாம, தட்சிண சித்தாந்தபேதத்தினால் ஒவ்வொன்றும் மூன்று விதமாகும். அவைகளில் சித்தாந்தம் சிரேஷ்டமாகும். அந்த சித்தாந்தத்திலும் சைவ சித்தாந்தம் எல்லாவற்றிலும் உத்தமோத்தமாக கூறப்படுகிறது. பிறகு சித்தாந்த அதிமார்க்க, அத்யாத்ம வைதிக, லௌகீகம் முதலிய ஐந்து வகைகளில் ஒன்றுக்கொன்று உச்சநீச்ச பாவமும் அவைகளை கூறியவரும், அவைகளில் ஏற்பட்ட முறையும் லக்ஷணமும் விளக்கப்படுகிறது. அங்கே லௌகீக, வைதீக, அத்யாத்ம, அதிமார்க்க சித்தாந்தங்களுக்கு முறையாக பிரம்மா விஷ்ணுருத்திரன் ஈஸ்வரன் ஸதாசிவம் ஆகியவர்கள் ஐந்து காரணேஸ்வரர்கள் சொல்லப்பட்டவர்களாக கூறப்படுகிறது. பிறகு வாமம், எல்லா சாஸ்திரத்திலும், அதமம் வாமத்திலிருந்து தட்சிணம் உத்திரம், தட்சிணத்திலிருந்து கவுளம், சிரேஷ்டம் கவுளத்திலிருந்து மஹாகவுலிம் சிரேஷ்டம், பூர்வாம்ணாயம், சிரேஷ்டம், பூர்வாம்ணாயத்திலிருந்து சித்தாந்தம் உத்தமம் ஆகிறது என்று சித்தாந்தத்தின் உன்னத தன்மை விளக்கப்படுகிறது. இங்கு சித்தந்தாத்திலிருந்து உன்னத ஞானம் வேறு இல்லை என்று சாஸ்திரகுறிக்கோள் ஆகும் என கூறப்படுகிறது. பிறகு சித்தாந்தம் வேதசாரம் சித்தாந்தத்தில் கூறப்பட்டுள்ள ஆசார அனுஷ்டானம், வைதிக ஆசாரம் என கூறி வைதீக கர்மா சைவகர்மாக்களின் செயல்படும் முறையில் ஆதரிக்கும் முறை கூறப்படுகிறது.

பிறகு காமிகம் முதல் வாதுளம் வரையிலான 28 ஆகமங்களும் சிவனுடைய அங்கமாக விளக்கப்பட்டுள்ளது. இங்கு பூர்வ காமிகாகமத்தில் தந்திராவதார படலத்தில் காமிகம் பாதயுக்மம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த படலத்திலோ காமிகம் ஊர்த்வ மகுடம் என கூறப்படுகிறது. இந்த விஷயத்தில் முரண்பாட்டிற்கு பரிகாரம் கூறவேண்டும் என்று முனி சிரேஷ்டர்களின் வேண்டுதலாகும். அங்கு ஸ்ருஷ்டி, ஸம்ஹார பேதத்தால் (இரண்டு விதமாக) போக மோக்ஷ ஸித்திக்காக ஞானமய சித்திக்காக ஞானமய மானது தியான பேதத்தால் இரண்டு விதமாக வர்ணிக்கப்பட்டுள்ளது. பிறகு மனுஷ்யர்களால் ரிஷி வாக்யமும், ரிஷிகளால் தேவவாக்யமும், தேவர்களால் பிரம்ம வாக்யமும், பிரம்மாவால் விஷ்ணு வாக்யமும் விஷ்ணுவால் சிவவாக்யமும் பாதிப்பதற்கு சக்தி இல்லை என கூறப்படுகிறது. காமிகம் முதல் வாதுளம் வரை 28 ஆகமங்களும் ஈசானம் முதலிய ஐந்து முகங்களில் இருந்து உண்டானது பற்றி விளக்கப்படுகிறது. உபபேதத்துடன் 28 ஆகம தந்திரங்களை எந்த குருவானவர் அறிகிறானோ அந்தகுரு சிவனாக ஆகிறான் என கூறப்படுகிறது. பிறகு விசேஷமான ஆசார்யனால் ஆரம்பிக்கப்பட்ட கார்யத்தில் ஹீனமான குருவிற்கு அதிகாரம் இல்லை ஹீனமான குருவால் தொடங்கப்பட்ட கார்யத்தில் விசேஷ குருவிற்கு அதிகாரம் உண்டு என்று கூறப்படுகிறது. விசேஷமான குருவிற்கு மரணாதி முதலிய சம்பவங்கள் ஏற்பட்டால் வேறு குருவை அடையும் பொழுதும் பெரும் இழப்பு ஏற்படும். அதனால் அரசன், அரசாங்கம் கிராமத்தை அதிகாரம் செய்பவன் இவர்களுக்கு பெரும் (நஷ்டம்) குற்றம் ஏற்படுமென கூறப்படுகிறது. உலக பிரஸித்தமான வித்தைகள் குருவிற்கு கொடுக்கப்பட்ட அணு அளவு திரவியமும் அரசனுக்கு, புகழ் ஸெளக்யம் இவைகளை அதிகமாக ஏற்படுத்துகிறது. அந்த குருவிற்கான தானாமானது உத்தமோத்தமமாகும். யாரால் குருவினுடைய திரவ்யம் அபகரிக்க படுகிறதோ, அவன் பாபி. மட்டமான மனிதனாக அறிய வேண்டும். அவன் எல்லோராலும் வெளியேற்றப்பட்டவனாகிறான் என கூறப்படுகிறது. இவ்வாறாக 24 வது படல கருத்து சுருக்கமாகும் !!

1. எந்த அபிஷேக கிரியையால் பூமியில் தேசிகனாக ஆகிறானோ. அந்த அபிஷேக விதியை கூறுகிறேன். அந்த தேசிகன் ஆர்யா வர்தோத்பவன். ஸ்ரீமான் ஸர்வலக்ஷணம் உடையவனாக வேண்டும் ஆகிறான்.

2. எங்க ஸதாசார ப்ராம்மணர்கள், யதிகள், தபோதனர்கள், தேவர்கள், இருக்கின்றார்களோ வேதங்களின் இருக்கின்றனவோ அந்த தேசம் ஆர்யாவர்த்தம் எனப்படும்.

3. இந்த பிரதேசமானது விந்தியகடலை மட்டும் மத்தியாக உள்ளதாக கூறவில்லை. பிரஸங்கமாக க என்ற எழுத்தை உடைய எட்டுதேசமும் ஆர்யாவர்த்தம் எனப்படுகிறது.

4. கர்நாடகம், கலிங்கம், கச்சத்தீவு, காஷ்மீர், கொங்கணம், கர்ஹாடம் (கோவா) குக்குடம், கங்கதேசம் என்று கூறப்பட்டுள்ளது.

5. பிரதிஷ்டா ஸ்தாபனாதிகளில் ஆதிசைவ குலஜாதிஸ்தர்கள் ச்ரேஷ்டர்கள், ப்ராம்மணாதி நான்கு வர்ணத்தவர்கள் ஸ்வகர்மானுஷ்டான யோக்யர்கள்.

6. எல்லா மனிதர்களின் தீøக்ஷ, பிரதிஷ்டை, உத்ஸவம், ஸ்நபனம், பிராயச்சித்தம், அபிஷேகம்.

7. வியாக்யானம் ஆகிய கர்மாக்களிலும் ஆத்மார்த்த பூஜை ஸர்வ தேவார்சனமான பரார்த்த பூஜைகளில் ஆதிசைவகுருவே சிறந்தவராவர்.

8. பிராம்மணாதி மூன்று வர்ணத்தவர்கள் தீøக்ஷ, ஸ்தாபனங்களில் பிராம்மணர், க்ஷத்ரியர்களுக்கும், க்ஷத்ரியர் சூத்ர வைச்யர்களுக்கும்

9. வைச்யன் சூத்ரனுக்கும், ஸ்வ ஜாதிகளுக்கும் தீøக்ஷயில் யோக்யனாகிறான். ஆத்மார்த்த இஷ்டமான சலலிங்க பிரதிஷ்டையில் பிராம்மணாதி மூவரும் யோக்யர்கள்.

10. சூத்ரனும் சூத்ர தீøக்ஷயிலும் ஆத்மார்த்த சலலிங்க பிரதிஷ்டையிலும் யோக்யனாவான் நைஷ்டிகன் பாணலிங்கமும் க்ஷணிகலிங்கமும் ஸ்தாபிக்கலாம்.

11. ஆசார்யன் கோளகன் கருணை உள்ளவனாயும் பரிவர்த்தம் செய்பவனாயும் இருக்கிறான். அவ்வாறே பாரவேத்தா (அண்ணனுக்கு முன் தான் விவாஹம் செய்து கொள்ளுபவன்) சம்பளம் பெற்று பூஜை செய்பவன். மறுபிறப்புள்ளவன்.

12. பக்ஷ்ய நிஷித்தத்தை பக்ஷிப்பவன், குண்டம், பஸ்மஅங்குரம் கத்தியை வைத்திருப்பவன் கருப்பு பல்லை உடையவன், ஆரூடன், தள்ளப்பட்டவன்.

13. சோம்பேறி வ்ருஷலன், வ்ராத்யன், வேச்யாபதி, அசத்து, சஸ்திரத்தை உடையவன் நபும்ஸகன், வ்யாதிஸ்கன், விகார நகமுடையவன்

14. துக்கமுடையவன், பிறர்மனைவியையுடையவன், வ்ருஷலீபதி, சித்திரகாரன், பாடுபவன், நாட்டியமாடுபவன் ஆகியவர்களை விட்டுவிட வேண்டும்.

15. வேறு தேசமுடையவன், அசுத்த புத்தி, தாந்திரிகள், பிறரை குறை கூறுபவன், பலநோயை உடையவன்.

16. பிறப்பு தீட்டையுடையவன், காமுகன், வைத்யன், குதர்கம் பேசுபவன், கெட்ட வார்த்தை பேசுபவன், பவுத்தாதி சாஸ்திர விருப்பமுடையவன், சன்யாஸி, விரதத்திலுள்ளவன்,

17. சபலபுத்தியையுடையவன், முட்டாளாக சஞ்சரிப்பவன், கூலிவாங்கி பிழைப்பவன் கப்பம் வாங்குதலில் விருப்பமுடையவன், நியாஸம், வைசேஷிகம்

18. ஸாங்கயம், பலவித பேத மாயாவாதம், ஆர்ஹதமதம், பவுத்தமதம், லோகாயத சாஸ்திரம், மீமாம்ஸை

19. மற்ற குதர்க மார்க்கங்கள், காபால மதம், பாஞ்சராத்ரம், ஸோம சித்தாந்தம், பூர்வாம்னாயம் பச்சிமாம்னாயம்

20. பைரவம், கவுலசாஸ்திரம் மற்ற அனாதரவான சாஸ்திரங்களில் ஈடுபாடுடையவன் சித்தபிரமேய ஜாலத்தில் நிரந்தரமான விருப்பமுடையவன்

21. காவ்ய நாடகத்தில் ஈடுபாடுள்ளவன் பரதநாட்யத்தில் விருப்பமுடையவன், காமசாஸ்திரத்தில் பயிற்சியுள்ளவன் பதவியை பறிப்பவன்

22. ஜ்யோதிடன், புராண ஹிதமான மனதை உடையவன் ஆகிய மேற்கூறிய விஷய புருஷார்த்தங்களில் ஈடுபாடுடையவனுக்கு தீக்ஷõ செய்விக்கும் முயற்சியை விட்டுவிட வேண்டும்.

23. காமிகாதி சிவக்ஞானத்தையும் வேதார்த்த ஞானத்தையும் அறியாமையால் யா ர் ஸமமாக எண்ணுகிறானோ அவனை பிரயத்னத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.

24. சிவனால் கூறப்பட்ட ஸம்சித்த ப்ரமேயமான சைவசிந்தாந்த ஸம்சித்த ஞான, யோக கிரியை, சர்யைகளில்

25. எப்பொழுதும் விசாரம் செய்து, சிவாச்சார்யரை விட்டு வேறு இடங்களில் நியாஸாதிகளை செய்யும் துர்மதிஸ்தனை வர்ஜிக்க வேண்டும்.

26. நியாயமின்றி சிவத்ரவ்யாபஹாரியையும் கொலையாளி போலுள்ளவனையும் அல்ப வித்யா ஞானமுடையவனையும், பொறாமையுடைய வனையும். அழகில்லாதவனையும் விவர்ஜிக்க வேண்டும்.

27. ஜ்யோதிஷன், நாவிதன், சிந்திக்கும் அறிவு இல்லாதவன், ஸமானகோத்ர சம்பந்தமுடைய வனையும், பூ விழுந்த கண்ணை உடையவனையும் வர்ஜிக்க வேண்டும்.

28. மேற்கூறிய சுபலக்ஷணம் உடையவனை பகலில் நல்ல லக்ன உதயத்தில் அங்குரார்ப்பண பூர்வமாக ஆசார்யாபிஷேகம் செய்ய வேண்டும்.

29. கிழக்கு ஈசான்யம், மேற்கு, வடக்கு ஆகிய திக்கில் விதானத்தில் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில்

30. பாதிமுழ அளவுள்ள உயரமும், சதுரச்ரமாகவும் அர்த்தஹஸ்த சுற்றளவுள்ள இரண்டு வேதிகையும், நான்கு முழ விஸ்தாரமும் அதற்கு வடக்காக

31. நான்கு திக்கிலும், ஸ்வஸ்திக சின்னமும் அழகாக அமைத்து தீபமும் ஸ்தாபித்து பூமிபரிக்ரஹம் செய்து மண்டபத்தில் சிவனை பூஜித்து அக்னியிலும் பூஜிக்க வேண்டும்.

32. தீக்ஷõ ஸம்ஸ்காரத்தால் செய்யப்பட்ட க்ரியைகளை உடைய அந்தர்பலி பஹிர்பலி கொடுத்து மேற்படி இந்த விதானத்தை ஆச்ரயிக்க வேண்டும்.

33. மூஞ்சிப்பில் அன்னம், மண், விபூதி, தூர்வை கோமய கோளகம், வெண்கடுகு தயிர் இவைகளை நிமஜ்ஜனம் செய்து

34. ஒன்பது அல்லது ஐந்து தான்யங்களின் மேல் கடத்தையோ, கலசத்தையோ கூர்ச்சம் தேங்காய்

35. நூல் சுற்றி, தீர்த்தம் நிரப்பி சந்தனம் ரத்னம், ஸ்வர்ணம் இவைகளோடு கூடியதும் மாவிலை அரசிலை பலாச பத்ரத்துடனும் மாதுளம் பழத்துடன் கூடியதாக வைத்து

36. ஈசான மந்திரத்தாலும் ஒன்பது ஐந்து பவித்ரங்களால் வித்யேசர்களையும் பஞ்சபக்ஷத்தில் நிவ்ருத்யாதி கலைகளாலும் அபிமந்திரிக்க வேண்டும்.

37. ஸ்நபன விதிப்படி நூற்றி எட்டு கலசங்களை பூஜித்தோ அல்லது ஒரு கடத்தை சிவார்ச்சனமாக பூஜித்து

38. தட்சிண வேதிகையில் ஸ்தாபித்து வடக்கு வேதிகை சமீபம் சிசுவை ஸ்தாபிக்க வேண்டும். பத்ரபீடத்தில் சாங்கமாக சிவனை அதிஷ்டிதமாக

39. ஆஸனத்துடன் விரிவாக நன்கு பூஜித்து ஜலத்தால் சுத்தி செய்யப்பட்ட வர்ணமிட்ட சராவங்களால்

40. சுத்த நீரால் ஸ்நாபித்து தேசாந்தரத்திலிருந்து தயாரித்த நூல்கள் உத்தரீயம், மாலை (புஷ்பஹாரம்)

41. வெள்ள சந்தனம் பூசிய சரீரத்தையும், பஸ்மோத்தூளமாக அணிந்து இருப்பவனுமான சிஷ்யனை தென்பாகமுள்ள பத்ரபீடத்தில் அமர்த்த வேண்டும்.

42. கிழக்கு முகமாக (நின்று) இருந்து கந்த புஷ்பாதிகளால் பூஜிக்க வேண்டும். நல்ல திரிகளோடு கூடிய தான ஜ்வாலாமயமான தீபங்களால் ஆராதனை செய்து

43. பிறகு சிஷ்யனுக்கு தலைப்பாகை முதலியவைகளை கொடுக்க வேண்டும், கர்தரிக்கோல் என்ற கருவி, சிறிய மணி, ஸ்ருக்ஸ்ருவம்

44. தர்ப்பை புஸ்தகம் அக்ஷ (மாலை) ஸூத்ரம், கிரீடம், பாதுகை, சாமரம், குடை, யானை, பல்லக்கு முதலிய

45. ராஜாங்க சின்னத்தையும், உரியகாலத்தில் ச்ரத்தையுடன் கொடுக்க வேண்டும். தேசிகன் ஆரம்ப காலம் முதல் ச்ரத்தையோடும் ஆக்ஞையோடும்

46. தீøக்ஷ வ்யாக்யானங்களை அறிந்து பரீக்ஷித்து முறைப்படி செய்ய வேண்டும். அவ்வாறே தேவதேவனுக்கும் தேசிகனுக்கும் என்னால் செய்யப்பட்டதும்

47. உன்னுடைய அதிகாரத்தால் அவிக்னமான அதிகாரத்தை கொடு என்று விக்ஞாபித்து கொண்டு பிறகு குண்டசமீபம் சென்று

48. நிவ்ருத்யாதி கலைகளுக்கு தனித்தனியே ஆஹுதி செய்ய வேண்டும். அந்தந்த மந்த்ராஹுதியும் செய்து பூர்ணாஹுதி முடித்து சிஷ்யனின் வலக்கையில்

49. எரிந்த தர்ப்பையால் பஞ்சப்ரம்மஷடங்க மந்திரங்களால் கட்டைவிரல் முதலான விரல்களில் அடையாளம் செய்ய வேண்டும். சிவஹஸ்தம் ஸங்கல்பித்து தன் அதிகாரத்தை ஸமர்ப்பிக்க வேண்டும்.

50. அதற்காக விதிப்படி பிராயச்சித்தம் செய்ய வேண்டும். சிவாஸநம். அங்கமந்திரங்களாலும் தேவ நாமங்களாலும் பூஜித்து

51. அங்க மந்திரங்களால் தசாஹுதியும் சிவ மந்திரத்தால் தசாஹுதியும், சிவமந்திர பூர்ணஹுதி செய்து முடிவில் பகவானிடத்தில் மன்னித்தருளும்படி செய்ய வேண்டும்.

52. இந்த பிராகாரமாக சாதகனை அபிஷிக்க வேண்டும். ஸாத்ய மந்திரத்துடன் கூடிய கடங்களால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

53. தீக்ஷிதன் புத்ரகனாகவும் ஸம்ஸ்ரிக்கப்பட்டவன் ஸமயீயாகவும், ஸாமான்ய ஸமயீ மாஹேச்வரன் என்றும் கூறப்படுகிறான்.

54. எவன் ஜாதி உத்தாரண விஹீநநாக இருக்கிறானோ. அவன் ஸாமான்யஸமயீயாவான் அதிலும் விசேஷமாக சாக்ஷúஷ தீøக்ஷயுடன் யார் இருக்கிறானோ

55. அந்த சாக்ஷúஷ தீøக்ஷகளால் தீட்சிக்கப்பட்டவன் பரிசாரகன் என்ற பெயருடையவனாகிறான். லிங்கார்ச்சனைக்கு யோக்யமில்லாமல் இருக்கிறார்கள். தீக்ஷõகர்மாவில் ஈடுபடுவது கூறவேண்டியதில்லை.

56. சாபானுக்ரஹ கர்த்தாவாயிருந்தால் குரு முதலானவர்களையும் தீக்ஷிக்கலாம். சிவத்விஜ குல ஜாதீயர்களாயிருப்பின் மாஹேச்வரர்கள் எனப்படுவர்.

57. ஸ்ருஷ்டிக்கு முன்பு சிவனால் எல்லோரும் தீட்சிக்க பட்டவராகிறார்கள். சிவத்விஜர்களுக்கு என் பூஜைக்காக சுத்திக்காக தீøக்ஷ கூறப்பட்டுள்ளது.

58. øக்ஷ செய்தும் சரீரபந்த மாயிருப்பின் பிராயசித்தம் அனுஷ்டிக்கவும் யார் பலவிதத்தில் தீட்சிக்கபடுகிறானோ அவன் சீக்ரம் சிவனை அடைகிறான்.

59. பவுதீகன், பிரம்மச்சாரி, தேசிகன், கிரஹஸ்தர்களுக்கும் நைஷ்டிகாசாரத்தில் நைஷ்டிகனும் புக்தி முக்தியில் வரிசைக்ரமமாக இருக்கிறார்கள்.

60. புத்தி, முக்தி பிரஸித்திக்காக கிருகஸ்தனை குருவாக கூறுகிறார். எல்லோரையும் அனுக்ரஹிப்பவர் ஸாந்தானிக குருவாகிறார்.

61. அனுலோமக்ரமமாக தீøக்ஷ செய்யவும். பிரதிலோமமாக, தீøக்ஷ செய்யலாகாது. பத்னி ஸஹிதமாயும் நல்ல கேசமுடையவனையும் ஜடை, ருத்ராக்ஷம், தண்டயுதமாக வேண்டும்

62. கவுபீநம், ஒட்யானத்தையும் பரித்யக்தமாக யார் இருக்கிறானோ, அவன் கிருஹஸ்தனாகிறான். சிகைகள் இன்றியும் ஜடையுடன் கூடியதாகவுமோ

63. விரதராயும் பத்னீ ரஹிதராயும், பிக்ஷõன்னம் புசிப்பவராயும் இருக்கவேண்டும். அவன் விரதியாவான் விரதத்தை அனுஷ்டிக்க இயலாதவன் முறைப்படி விரதத்தை அனுஷ்டித்து

64. பிறகு விவாஹம் முடித்தவனாக இருப்பவன் விரதார்ப்பகன் எனப்படுகிறான். ஸ்ருஷ்டி முடிவு காலத்தில் எந்த கவுசிகாதிகள் இவனால் தீட்சிக்க பெற்றவர்களாக ஆனோர்களோ

65. (சிவனால்) அந்த குலோத்பவராக ஆகிறார்களோ, அவர்கள் சைவர்களாயும், ஸாந்தாநிகர்களாயும் ஆதிசைவர்களாயும் ஸர்வானுக்ரஹர்களாயும் இருக்கிறார்கள் என அறிய வேண்டும்.

66. அவர்களில் வர்ணாசார விரதர்கள், வர்ணாசார ரஹிதர்கள் என்று இருவகைப்படும். மூன்று பக்ஷம் கீழே படுத்து இருப்பவராயும், இரவில் சருவை புசிப்பவராயும்

67. மவுநியாகவும் மூன்றுகால ஸ்நானம் செய்பவராயும், சிவாக்னி குரு பூஜகராயும் தன் சக்தியால் ஸமூர்த்தியுடன் கூடியதாக உள்ள சிவனைஸாங்கமாக (பூஜித்து)

68. விரதங்களில் உத்தமமாக இருப்பது ஆசார்ய விரதமாகும். ஆசார்யன், ஸாதகன் புத்ரகன் ஸமயீ என ஆசார்யன் வகுக்கப்படுகிறான்.

69. நித்யம் லிங்காதிகளை பூஜிப்பதும் நித்யம், நைமித்திகத்தில் லிங்கபூஜைகள் கூறவில்லை. பிரதிதினமும் நன்கு அனுஷ்டிக்கப்படுவது நித்யமாகும்.

70. ஸ்நபனம், உத்ஸவம் சாந்த்யாதி கர்மா நைமித்திகமாகும். பிராயச்சித்தத்திலும் தன்நித்ய அனுஷ்டானத்திலும் நைமித்திகத்திலும் அதிகாரியாகிறான்.

71. ஆத்மார்த்த நைமித்தகத்தில் புத்ரகன் யோக்யனாகிறான். மற்ற கிரியைகளில் தகுதி இல்லாதவனாகிறான். ஆசார்யன், ஸாந்தானிகனும் நைமித்திகத்தில் யோக்யனாகிறான்.

72. ஆத்மார்த்திலும், பரார்த்திலும் ஸ்தாபனாதிகள் இல்லாத கார்யங்களிலும், ஆசார்ய அதிகாரமுள்ள எல்லா ஸ்தாபனாதி கிரியைகளிலும்

73. அதற்கென்று அங்கமான ஹோம கார்யங்களில் மேற்கூறிய இருவர் சாந்தாநிகர்கள் தேசிகாக்ஞையால் யோக்யனாக ஆகிறார்கள். ஸ்தாபனாதி அங்க பூதமான மங்களாங்குராதிகளில்

74. தேசிகாக்ஞை இருப்பின் அந்த இருவருக்கும் அதிகாரமுள்ளது என்கிறார். ஆசார்யன் எல்லா கிரியைக்கும் யோக்யராகிறார். ஸாந்தானிகளும் யோக்யனாகிறான்.

75. சாதகனும் அவ்வாறே இருந்து எல்லாகர்மாக்களிலும் யோக்யனாகிறார். மஹாசைவர்கள் தீக்ஷிதர்கள் நித்யகர்ம யோக்யராகிறார்கள்.

76. மஹாசைவாதிகளால் நைமித்திகம் செய்யப்பட்டால் தோஷ கல்பிதமாகும். லக்ஷ ஸ்லோகத்தை படித்தவனாயும் போகத்தையும் மோக்ஷத்தையும் கொடுக்க கூடியவரே குரு ச்ரேஷ்டர் ஆவார்.

77. ஐம்பதாயிரம் ஸ்லோகத்தை படித்தவன் மத்யமரென்றும் இருபத்தி ஐந்தாயிரம் ஸ்லோகத்தை படித்தவன் அதமம் என்று கூறப்பட்டு உள்ளது. ஸம்ஹிதா பாரகராகவோ லக்ஷõத்யாயி உபதேசகராகவோ இருக்கலாம்.

78. ஸம்ஹிதையானது நான்கு பாதத்தை உடைய காமிகம் முதலான க்ரந்தங்களாகும். சைவம் நான்கு வகைப்படும். அவை சைவம், பாசுபதம்.

79. சோம சித்தாந்தம், லாகுலம் என நான்கு வகைப்படும். இது பரமேஸ்வரனுடைய நான்கு முகங்களான தத்புருஷாதி முகத்திலிருந்து உண்டானதாகும்.

80. அந்த நான்கு பேதத்தில் ஒன்றுக்கொன்று முதன்மையான உயர்வுடையதாகும் ஒவ்வொன்றும் மூன்றுவிதமாகும்.

81. பலசித்தாந்தங்களில் சைவ சித்தாந்தம் என்கிற சித்தாந்தம் எல்லாவற்றிலும் உத்தமோத்தமமானதாகும்.

82. ஸித்தாந்தமென்பது மந்திர தந்திரமாகும். அதிமார்க்கம் அதமமானதாகும். அத்யாத்மம் மேற் சொன்னதிலிருந்து நீசம், அதிலிருந்து வைதிகமும் ஆகும்.

83. வைதீகத்திலிருந்து லவுகிதம் ஹீநமாகும். இவைகளை கூறியவர் பிரம்மாதி பஞ்சதேவதைகள் ஆகும். அந்த லவுகிகாதிகளின் பேதம் கூறப்படுகிறது.

84. ஸத்யோஜாதி மந்திரத்திலிருந்து உண்டானது அகிலார்த்தமான பிரம்மா உண்டானார். அந்த எல்லா பொருளையும் அறிந்த பிரம்மா ஞானத்திலிருந்து லவுகிக சாஸ்திரமானது, மனுஷ்யலோகத்தில் அவதரிக்கப்பட்டது.

85. சப்த சாஸ்திரம், அலங்கார சாஸ்திரம் நிருக்தம் சந்தஸ், கவுடில்யம், பரத சாஸ்திரம் ஜ்யோதிஷ சாஸ்திரம், வாத்ஸ்யாயனம் முதலியவைகள்

86. ஆயுள் சாஸ்திரம், தனுஸ்சாஸ்திரம், வ்யவசாய சாஸ்திரம், லோகாயதம், ஸாங்க்யம் ஆர்ஹதமதம்,

87. மீமாம்ஸை, தண்டநீதி, வார்த்தாத்யம், லவுகிக மதம், வாமதேவ மந்திரோத்பவமானதாகும். விஷ்ணு இரண்டாவது காரணேசர் ஆவர்.

88. அவரால் வைதிகம் கூறப்பட்டு உள்ளது. அவை அஷ்டாதச புராணம், தர்மசாஸ்திரம், வேதாந்தம், பாஞ்சராத்ரம், பவுத்தம் ஆகியவைகளாகும்.

89. அகோரமந்திரத்திலிருந்து ருத்ரன் அவதரித்து அத்யாத்ம சாஸ்திரத்தை இயற்றினார். நியாயம் வைசேஷிகம், ஸாங்க்யம் ஸேஸ்வரம் இவற்றை இயற்றினார்.

90. தத்புருஷ மந்திரத்திலிருந்து ஈச்வரன் உற்பத்தியாகி அதிமார்க்கத்தை இயற்றினார். பஞ்சார்த்தம், லாகுலம், பாசுபதம், ஆகியவையாகும்.

91. பகவான் சதாசிவர் மந்திர தந்திர பாலனம் செய்கிறார். ரிக்வேதம், யஜூர்வேதம், சாமவேதம், அதர்வண வேதங்கள் தத்புருஷாதி முகத்திலிருந்து உற்பத்தியானதாகும்.

92. பச்சிமமுக சாஸ்திரத்திலிருந்து வாமமுக சாஸ்திரமும், வாமமுகசாஸ்திரத்தில் இருந்து தட்சிணமுக சாஸ்திரமும், தட்சிணமுக சாஸ்திரத்திலிருந்து கவுலகம் அதிலிருந்து மஹா கவுலம் ச்ரேஷ்டமாகும்.

93. அதில்இருந்து பூர்வமுக சாஸ்திரம் சிரேஷ்டம், அதிலிருந்து சித்தாந்தம் உத்தமம், சித்தாந்தத்திலிருந்து உன்னதமான ஞானம் சாஸ்திரத்தில் நிச்சயமாக இல்லை.

94. மற்ற தந்த்ர சாஸ்திரங்களில் யார் முக்தர்களோ, ஸிந்தாந்தத்தில் பசுக்களாகிறார். வேதசாரமே ஸிந்தாந்தமாகும். மற்ற வேதங்கள் தள்ளப்பட்டதாகும்.

95. ஸித்தாந்த விஹிதமான ஆசாரம் வைதிகா சாரமாகும். கர்ப்பாதானாதிகர்மா, சிராத்தங்கள் செய்வித்தல் வரையிலுள்ள கர்மாக்கள்

96. வைதீக கர்மப்படி ஆசரிக்கவும் (அல்லது) சைவானுஷ்டானப்படியாவது ஆசரிக்க வேண்டும். அவனுக்கு ஜாதகர்மாதி கிரியையும் தீøக்ஷயும் செய்யப்பட வேண்டும்.

97. சமய தீøக்ஷயோடு கூடின ஸ்த்ரீயாயிருப்பின் தீøக்ஷயுடன் கூடிய புருஷனோடு விவஹாமாயிருந்தால் தீøக்ஷயுடன் கர்பாதான கிரியை செய்யப்படவேண்டும்.

98. அவ்வாறே பும்ஸவனாதி கிரியையும் சைவ முறைப்படி செய்ய வேண்டும். அவன் புத்ரனுக்கு ஜாககர் மாதி கிரியை செய்யப்படவேண்டும்.

99. புருஷார்த்த பிரஸித்திக்காக அவனுக்கும் கிரியைகள் செய்யப்படவேண்டும். வைதிகாதிகளின் ஆரம்பத்திலோ முடிவிலோ லவுகிகாதிகளை செய்ய வேண்டும்.

100. பார்யை தீøக்ஷவிஹீநமாயிருப்பின் அவளுக்கும் புத்திரனுக்கும் பர்த்தா தீக்ஷிதனாக இருப்பின் வைதீகாதி கிரியைகளை அனுஷ்டிக்க வேண்டும்.

101. கூறப்பட்டுள்ள அனுலோம ஜாதிகளுக்கு வைதீக கிரியை இஷ்டமில்லை. நல்லபிறப்புடையவனையும் ஜ்யோதிஷனையும் விட்டுவிட்டு வைதீக கிரியைசெய்யவேண்டும்.

102. எல்லா கர்மாக்களுடனும் சைவத்தில் கேவலசைவியாகும், ஸ்ருதி ஸ்ம்ருதிகளை முதற்கொண்டு எந்த அனுஷ்டானங்களை உண்டோ அவையாவன

103. அவச்யமானவைகளில் சவுசம் ஸ்நானம் ஆசமனம் ஸந்தியாவந்தனம், தர்ப்பணம், ஹோம கர்மா இவைகளிலும்

104. கர்ப்பா தானங்களை முதற்கொண்டு சரீரதஹணம், ஸ்ராத்த கர்மா, அஷ்டகாகரணம், நித்ய நைமித்திகைகளிலும்

105. வேதாத்யயன ஸம்ஸ்காரம் சோமயாகம் இவைகளில் த்விஜர்களுக்கு எது விதிக்கப்பட்டு உள்ளதோ அந்த வேதாத்யயனாதிகளிலும்

106. அந்த எல்லா கர்மாவும் வைதீக கர்மப்படி செய்யலாம். செய்யாமலும் இருக்கலாம். அனுஷ்டானம் அனுஷ்டிக்க வேண்டும். சைவகர்ம விரோதியாக எந்த கர்மாவையும் அதற்கு

107. மாறுதலாக இருப்பின் த்யாஜ்யம் செய்யவும், சைவானுஷ்டானத்தை பரித்யாகம் செய்ய கூடாது. சைவத்துக்கு விரோதமில்லாத வைதிககார்ய மெல்லாம் அனுஷ்டிக்கலாம்.

108. சைவம் வைதிகமாகவும், வைதிகம் சைவமாகவும் ஆகும். வைதீகத்திலிருந்து வெளிப்பட்டது சைவமில்லை. சைவத்திலிருந்தே சைவம் உண்டானதாகும்.

109. அவ்வாறே வைதீகத்திலிருந்து சிரேஷ்டம், சைவம், சைவத்திலிருந்து உத்தமம் எதுவும் இல்லை. காமிகாதி கிரந்தங்கள் சித்தாந்தமாகும் அதிலிருந்து மிக உயர்ந்தது ஏதுமில்லை.

110. சைவம் மூல பூதமாகும். சதுர்வேதம் அதிலிருந்து உண்டானவைகளாகும். அவ்வாறே வேத சாரமென்ற வாக்யத்தால் வைதிகம் எனப்படுகிறது.

111. எல்லா இடத்திலும் அர்த்தத்துடன் கூடியதான சைவசாஸ்திரம் கூறப்பட்டுள்ளது. எல்லா காமிகாதிகளிலும் சிவதேஹத்வமாக கூறப்படுகிறது.

112. அந்த சிவதேஹம் இரு விதங்களாகும். ஸ்ருஷ்டி, ஸம்ஹாரம் எனப்படும் காமிகாதி வாதுளம் வரையில் வாதுளம் முதல் காமிகம் வரையிலும் ஆகி கூறப்பட்டுள்ளது.

113. காமிகம் மேல் மகுடமும் யோகஜாகமம் தத்புருஷ வடிவ மகுடமும், சிந்த்யாகமம் அகோர மகுடம் காரணாகமம் வாமதேவ முக மகுடம்

114. அஜிதாகமம் ஸத்யோஜாத முகத்தின் மகுடமும் ஆகும். தீப்தாகமம் அதேபோல் ஈசான வக்த்ரம், சூக்ஷ்மாகமம் தத்புருஷ முகமும் ஸஹஸ்ராகமம் தட்சிணமுகமும் ஸஹஸ்ராகமம் தட்சிண முகமும்

115. அம்சுமானாகமம், வாமதேவமுகமும், சுப்ரபேதாகமம் ஸத்யோஜாத முகமும் ஆகிறது. மேலும் விஜயாகமம் காதாகவும், நிச்வாஸாகமம் கழுத்து பாகமாகவும்

116. ஸ்வாயம்புவாகமம் ஹ்ருதயம், அனலாகமம், நாபியாகும், வீராகமம் இடுப்பு பிரேதசமாகும், ரவுரவாகமம் ப்ருஷ்டபாகமாகும்.

117. மகுடாகமம் வலது துடை பிரதேசம், விமலாகமம் இடது துடை, சந்திரக்ஞானாகமம் இடது துடையின் நுனிபாகம் பிம்பாகம் வலது துடையின் நுனிபாகமாகும்.

118. ப்ரோத்கீதாகமம் வலது ஜானுபாகம் லலிதாகமம் இடது ஜானுபாகம் சித்தாகமம் வலது முழந்தாளாகும், சந்தானாகமம் இடதுமுழந்தாளாகும்.

119. வலது முழந்தாளின் நுனிபாகம் சார்வோக்தாகமம், இடது முழந்தாளின் நுனிபாகம் பாரமேஸ்வராகமம், கிரணம் வலது பாத தளபாகம், வாதுளாகமம், வாகபாத தளமாகும்.

120. ஸ்ருஷ்டி பேதமாக சிவன் கூறப்பட்டுள்ளது. ஸம்ஹார பேதமாக வேறுபட்டதாக கூறப்பட்டுள்ளது. ரிஷிகள் கூறினார்கள். தந்த்ராவதாரபடலத்தில் முன்பு காமிகம் பாதயுக்மம்

121. என்று கூறியதெல்லாம் பரஸ்பர விரோதமாக உள்ளதே! என்று கேட்கிறார்கள் ஈச்வரன் கூறுகிறார்: உங்களுக்காக அவதரிக்கப்பட்டவைகளை பலவிதமாக கூறப்பட்டுள்ளது.

122. எனக்கு எல்லா இடத்திலும் மகுடம், நேத்ரம் அவ்வாறே பாதம் ஹஸ்தம் த்யான முறைப்படியாகும்.

123. ஸ்ருஷ்டி ஸம்ஹாரமார்கமாக என் தேஹம் விபேதாக கூறப்படுகிறது. போக மோக்ஷ பிரசித்தக்காக எனக்கு ஞான தேஹமாக இருக்கிறது.

124. உருவமில்லாததும், ஞானமும், ஸங்கரமானதும் அதை உபாசிப்பதில் இருந்து பரஸ்பர விரோதமென்று மதியீனர்களால் கூறப்படுகிறது.

125. எந்த ஈச்வர வாக்ய முண்டோ அது பூஜித வாக்யமாக உத்தமர்களால் எண்ணப்படுவதாகும். புருஷர்கள், ரிஷிகள் இவர்களின் வாக்யம் தெய்வீக வார்த்தையற்றதாகும்.

126. தேவர்களால் பிரம்மவாக்யம் பாதிக்கப்படுவதில்லை. பிரம்மாவாக்யம் விஷ்ணுவாக்யத்தால் பாதிக்கப்படுவதில்லை. விஷ்ணுவால் சிவவாக்யம் பாதிக்கப்படுவதில்லை.

127. எல்லாவற்றிலும் மேன்மேலும் விசேஷமாக கூறப்பட்டுள்ளது. காமிகம் முதல் அஜிதாகமம் வரை ஈசான வக்த்ரத்திலிருந்து ஏற்பட்டவைகளாகும்.

128. தீப்தாகமம் முதல் சுப்ரபேதாகமம் வரையிலுள்ள ஆகமங்கள் தத்புருஷமுகத்திலிருந்து உண்டானவைகளாகும். விஜயாகமத்திலிருந்து வீரதந்தரம் வரை ஐந்தும் அகோர வக்த்ரத்திலிருந்து உண்டானதாகும்.

129. ரவுவத்திலிருந்து முகபிம் பாகமம் வரை வாமதேவமுகோத்பவமாகும். பிரோத்கீதம் முதல் எட்டு ஆகமம் ஸத்ய வக்த்ரத்திலிருந்து உண்டானதாகும்.

130. தந்த்ராவதார படலத்தில் ஸத்யாதி சப்தங்களால் ஈசானதிகளாக அறிய வேண்டும். இருபத்திஎட்டு ஆகம தந்திரம், உபாகமத்தையும் எவன் அறிகிறானோ

131. அவரே குருவாகவும், சிவனாகவும், ஆகிறார். அவரை முயற்சியோடு அறியவும் மற்ற குருவால் ஆரம்பமானதாயிருப்பினும் அவரே அதிகார தன்மையை அடைகிறார்.

132. விசிஷ்டகுருவால் ஆரம்பிக்கப்பட்ட கார்யத்தில் ஹீநருக்கு அதிகாரித்வமில்லை. ஹீநரால் ஆரம்பிக்கப்பட்ட கர்மாவில் விசிஷ்டனுக்கு தான் அதிகாரமாகும் என்கிறார்.

133. விசிஷ்டர் மரணாதி ஸம்பவத்தில் வேறான குரு பிரவேசிக்கலாம். விசிஷ்டர் இருக்கும் பக்ஷத்தில் பலாத்காரமாக அறியாமையால் பிறரிடம் பிரவேசிக்கக் கூடாது.

134. அவ்வாறு பிரவேசித்தால் பெரிய குற்றமும் அவனுக்கு பலவித சேர்க்கைகளும், குருடு ஊமைத்தன்மையும் ஏற்படும். அதனால் ராஜாதோஷ வானாகவும் ராஜ்யத்திற்கு பயமும் ஏற்படும்.

135. கிரியை கர்த்தாவிற்கும், செய்விப்பவனுக்கும், கிராமத்திற்கும் தோஷமேற்படும் லோக பிரஸித்திக்கும் ஞானத்திற்காக குருவிடம் மந்திரம் ஸ்வீகரித்து

136. திரவ்யத்தையும், நல்ல சுகம் எல்லா உலகத்திற்கு சமமான புகழ் இவைகளை செய்கிற ராஜாவானவன், உத்தமோத்தமான ராஜ்யதானம் செய்ய வேண்டும்.

137. சிவன் சொத்தை (பணம்) எவன் எடுக்கிறானோ, அவன் பாபீ கெட்ட புத்தியுடையவன், ஈனஜாதியுடையவன் எல்லோராலும் தள்ளப்பட்டவன் என அறிய வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிகாகம மஹாதந்திரத்தில் ஆசார்யாபிஷேக முறையாகிற இருபத்தி நான்காவது படலமாகும்.

24.அ. ஞான தீக்ஷõமுறை

1. அந்தணர்களே! ஞானதீøக்ஷயை கூறுகிறேன். நல்லகிழமை, நல்லதினம், பக்ஷம், நல்ல முஹூர்த்தத்தில் விசேஷமாக

2. தனிமையாக, ஜனங்களில்லா இடத்தில், நடு நிசி ஆரம்பத்தில், நல்ல ஆசிரியன், நல்ல சீடர்களுக்கு விசேஷமாக அறிவூட்ட வேண்டும். (உபதேசிக்கவும்)

3. சிவன் கோயில், குருவின் இருப்பிடம், சக்திபீடம், மடம், வீடு, தூய்மையான இடம், முதலிய இடங்களில், நன்கு அமர்ந்த கோலமாகவும், ஐந்து கோத்ரத்திலுதித்தவராயும்:

4. இருந்துகொண்டு தர்பாஸனம், புலித்தோல், கூர்மாஸனத்தில், பீட மத்தியிலோ ஸத்குரு வாஸஸ் தலத்தில் க்ஞானத்தை நினைத்து வஸிக்க வேண்டும்.

5. ஸ்நான உபசாரங்கள், பட்டு, ஆபரணங்கள், சந்தனபுஷ்பமிவைகளால் யோகபீடமத்தியில் பூஜித்து

6. பாயஸம், அப்பம், தாம்பூலம் இவைகளை நிவேதித்து, குருபாதங்களை, பதினாறு விதமான உபசாரங்களால் பூஜிக்க வேண்டும்.

7. உயர்ந்த ஆசிரியர் விசேஷமாக க்ஞானதீøக்ஷயை செய்ய வேண்டும். சரீரம், பொருள், ப்ராணன் இவற்றை ஸத்குருவிடம் ஸமர்பித்து விட வேண்டும்.

8. வெட்கமின்றி ஸாஷ்டாங்கமாக குருவின் ஸன்னதியில் நமஸ்கரிக்கவும் நல்ல சீடனுக்கு விசேஷஞானம் போதிக்க வேண்டும்.

9. சந்தனம், புஷ்பத்துடன் கூடிய கையை சிஷ்யனின் தலையில் ஸ்தாபித்து சிவகரார்பணம் செய்க. சிஷ்யனால் பூஜிக்கப்பட்ட பாதத்தை சிஷ்யனின் தலையின் மத்தியில் ஸ்தாபிக்க வேண்டும்.

10. அதன் பிறகு ஸத்பாவ க்ஞானத்தை சிஷ்யனுக்கு போதிக்க வேண்டும். முதலில் தத்வரூபம் இரண்டு தத்வதர்சனம்.

11. மூன்றாவது தத்வசுத்தி, நான்காவது ஆத்ம லக்ஷணம், ஐந்தாவது ஆத்மதர்சனம் ஆறாவது ஆத்ம சோதனம்.

12. ஏழாவது சிவ ரூபம், எட்டாவது சிவதர்சனம், ஒன்பதாவதாக சிவயோகம், பத்தாவது சிவபோகமாகும்.

13. மூன்று மூன்று பேதங்களால் நான்கு விதமாக பதி, பசு, பாசம் என்று மூன்றை விளக்கி குருவின் சொல்லின் செயலாலேயே ஜீவன் முக்திபிரகாசமேற்படுகிறது.

14. இவ்வாறு பத்துபொருள் உள்ளதாக க்ஞான மார்கத்திற்கு விதிக்கப்படுகிறது.