274 சிவாலயங்கள்: அருள்மிகு பாலைவனேஸ்வரர் திருக்கோயில்
மூலவர் : பாலைவனேஸ்வரர், பாலைவனநாதர்
அம்மன்/தாயார் : தவளவெண்ணகையாள். (மக்கள் தவளாம்பிகை, தவளாம்பாள் என வழங்குகின்றனர்.)
தல விருட்சம் : பனைமரம் மற்றும் பாலை, (பாலை இப்போது இல்லை )
தீர்த்தம் : வசிஷ்ட தீர்த்தம், இந்திரதீர்த்தம், எமதீர்த்தம் முதலியன. (புத்தகத்தில் காவிரியாறு என உள்ளது)
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருப்பாலைத்துறை, திருப்பாலத்துறை
ஊர் : பாபநாசம்
மாவட்டம் : தஞ்சாவூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்,தேவாரபதிகம்
வெந்த நீற்றினர் வேலினர் நூலினர் வந்தென் நன்னலம் வெளவினார் பைந்தன் மாதவி சூழ்தரு பாற்றுறை மைந்தர் தாமோர் மணாளரே.-திருஞானசம்பந்தர்,
தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 19வது தலம்.
திருவிழா:மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம்
தல சிறப்பு:இங்கு மூலவர் சிவன் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். ராமர் இத்தலத்தில் 108 சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலம்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.
திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30மணி வரை திறந்திருக்கும்.
முகவரி: அருள்மிகு பாலைவனேஸ்வரர் திருக்கோயில், திருப்பாலைத்துறை, பாபநாசம் அஞ்சல் - 614 205. தஞ்சாவூர் மாவட்டம்.போன்:+91-94435 24410
பொது தகவல்:இக்கோவிலில் பதினோரு கல்வெட்டுக்கள் உள்ளன. முதற் குலோத்துங்கன், விக்கிரமசோழன், இரண்டாம் ராசராசன், மூன்றாம் ராசராசன், மூன்றாம் குலோத்துங்கன் இவர்கள் காலத்துக் கல்வெட்டுக்கள் உள்ளன. இறைவர் திருப்பாலைத்துறை மகாதேவர் என்று குறிக்கப்பட்டுள்ளது. வலப்பக்கம் ஒரு பெரிய நெற்களஞ்சியம் - செங்கல்லால் கட்டப்பட்டது காட்சிதருகிறது. வட்ட வடிவில் கூம்பு முனையுடன் கட்டப்பட்டுள்ள இக்களஞ்சியம் 12 ஆயிரம் கலம் கொள்ளவுடையது.
இவ்வளவு அதிகமான நெல் வருவாயைக் கொண்டதாக இக்கோயில் விளங்கிய தென்பது நமக்குத் தெரிகின்றது. இன்று பயன்படுத்தப்படாமல் உள்ளது.
தலபெருமை:சுவாமி அம்பாள் இருவரும் கல்யாணகோலத்தில் விளங்குகின்றனர். கோஷ்டமூர்த்தங்களாக விநாயர், ஊர்த்துவதாண்டவர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேஸ்வரர் சன்னதி உள்ளது.
குடமுருட்டியாற்றின் கரையில் பனைமரத்தைத் தலமரமாகக் கொண்டுள்ளதால் இத்தலம் பாலைத்துறை என வழங்குகிறது. விநாயகர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், வசிஷ்டர் பூசித்த சிவலிங்கம், மகாலட்சுமி, பார்த்திபன், மலையத்துவசன் ஆகியோர் வழிபட்ட லிங்கங்கள் உள்ளன.
அறுபத்துமூவர் மூலவத்திருமேனிகள் உள்ளன. நடராசசபை உள்ளது. காலபைரவர், சூரியன் சன்னதிகளும் உள்ளன. திருமால், பிரமன், அஷ்டதிக்குப் பாலகர் முதலியோர் வழிபட்டதலம். இத்தலத்திற்கு அருகில் பாவநாசத்தில் விளங்கும் 108 சிவலிங்கக் கோவில் கீழைராமேச்சுவரம் என வழங்கப்பெறுவது.
தல வரலாறு:தாருகா வனத்து முனிவர்கள், இறைவனைப் புறக்கணித்து அவரையே அழிக்க எண்ணி, தீயவேள்வி செய்து புலியை வரவழைத்து, அதை இறைவன் மீது ஏவ, இறைவனும் அப்புலியின் தோலை உரித்து உடுத்திக் கொண்ட செயலைச் செய்த தலம். பாலைவனம், பிரம்மவனம், அரசவனம், புன்னாகவனம் எனப்பல பெயர்கள் இத்தலத்திற்குண்டு. திருநல்லூரைச் சேர்ந்த "சப்தஸ்தானங்களில் இத்தலமும் ஒன்றாகச் சொல்லப்படுகின்றது. பாண்டவர்களின் வனவாச காலத்தில் தௌமிய முனிவரின் ஆலோசனைப்படி அர்ச்சுனன் இத்தலத்திற்கு வந்து, வழிபட்டு வில்வித்தையின் நுட்பங்களை உணர்ந்து, பாதாள உலகம் சென்று உலூபியை மணந்து வந்தான் என்று சொல்லப்படுகின்றது.
ராமர் சிவபிரானை வழிபட்டுத் தான் செய்த கொலைப் பாவத்தைப் போக்கிக் கொண்ட காரணத்தால் இத்தலம் பாவநாசம் எனப்பெற்றது. தனிமண்டபத்தில் ஆவுடையாரோடு சிவலிங்கங்கள் வரிசையாக அமைந்துள்ளன.
JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
வியாழன், 13 ஆகஸ்ட், 2020
அருள்மிகு பாலைவனேஸ்வரர் திருக்கோயில்
Sri Tirumeni Azhagar Temple
Moolavar : Tirumeni Azhagar
Amman : Vadivambigai
Thala Virutcham : Kandamaram, Thazhai
Theertham : Mayendra theertham in front of the Temple
Old year : 2000 years old
Historical Name : Mayendirapalli
City : Mahendirapalli, Koiladipalayam
District : Nagapattinam
State : Tamil Nadu
Singers : Saint Tirugnanasambandar has praised the Lord in his Thevaram hymns. The tower is clothed by the clouds, Mayendirapalli has many palaces, tanks with blossoming Lotus flowers where the Lord is on His bull vehicle. Let us all prostrate on His feet. This is the sixth temple on the northern bank of Cauvery River praised in Thevaram hymns.
Festival : Maha Shivrathri in February-March, Margazhi Tiruvadhirai in December-January. Panguni Uthiram in February-March and Tirukarthikai in November-December are the festivals celebrated in the temple.
Temple's Speciality : The rays of Sun fall on the Lord in the month of Panguni, March-April. Generally Lord Vishnu is called Azhagar-handsome, as He is fond of dressing. Lord Shiva in Mahendrapalli is celebrated as handsome-Azhagar.
Opening Time : The temple is open from 9.00 a.m. to 12.00 a.m. and 6.00 p.m. to 7.30 p.m.
Address : Sri Tirumeni Azhagar Temple, Mahendirapalli – 609 101, Nagapattinam district.Phone:+91-4364- 292 309.
General Information : Sri Chandikeswara graces with his consort in the prakara. There is a separate shrine for Lord Sri Vinayaka with Ragu and Ketu on both sides. Lord Muruga graces from His shrine with His consorts Valli and Deivanai. There are shrines of Sri Kasiviswanatha – Mother Visalakshi, Meenakshi Sundareswarar, Bhairavar and Saneeswarar-Saturn, Sun and Moon. There is no shrine for Navagrahas- 9 planets in the temple.
Prayers : Those suffering from the evil results of past birth (poorva janma karmas), those facing adverse effects due to Sun, Moon aspects in their horoscopes have a dip in the Brahmma theertha in the temple for remedies. As the holy spring is attributed to Lord Brahmma the Creator, it is the faith of the people that Brahamma would amend the destiny of the devotee favourably. Devotees also pray for relief from snake aspects and to gain excellence in academic pursuit.
Greatness Of Temple : Handsome Shiva is praised as Tirumeni Azhagar and Mother as Vadivambikai for their beauty. Saint Tirugnanasambandar addresses the Lord as Azhagar. Lord Vishnu in Madurai is also called Azhagar in Tamil and Sundararajan in Sanskrit. Lord Shiva is Azhagar in this temple. Lord Brahmma, Sun and Moon had worshipped in this temple. During the month of Panguni (March-April) the rays of Sun fall on the Lord. On the side wall of Shriva Shrine, Lord Dakshinamurthy graces.
Temple History : For his wrong desire on Akalika wife of Maharshi Gautama, Indira was cursed by the Rishi to have eyes throughout his body. He came to Earth and prayed to Lord Shiva for relief in many places and this is one among them. As Indira – Maha Indira worshipped here the place came to be known as Mahendirapalli. A temple was erected here later.
Sri Hara Shaba Vimochana Perumal Temple
Moolavar : Hara Shaba Vimochana Perumal, Kamalanathan
Urchavar : Kamalanathan Thayar : Kamalavalli Nachiar
Theertham : Kabala Moksha Pushkarini
Agamam Pooja : Vaikanasam
Old year : 2000 years old
Historical Name : Kandana Kshetra, Pancha Kamala Kshetra
City : Kandiyur
District : Thanjavur
State : Tamil Nadu
Singers : The Lord of the temple is praised by Saint Tirumangai Azhwar in his Mangalasasanam hymns
Festival:Panguni Brahmmotsavam in March-April; Aipasi Pavithra Utsav in October-November; Vaikunda Ekadasi in December-January and Karthikai Deepam in November-December are the festivals celebrated in the temple
Temple's Speciality:The temple ranks among the 108 Divya Desas. The noteworthy feature is that all three Lords Brahmma, Vishnu and Shiva grace the devotees together in the temple
Opening Time:The temple is open from 7.00 a.m. to 12.00 a.m. and from 5.00 p.m. to 7.30 p.m
Address:Sri Hara Shaba Vimochana Perumal Temple, Kandiyur-613 202. Thanjavur district.Phone:+91- 93446 08150.
General Information:Lord Perumal appears in a standing posture facing east. The Vimana above the sanctum is called Kamalakruthi Vimana. Lord Shiva and sage Agasthya had the darshan of the Lord in this temple
Greatness Of Temple:As Perumal granted relief to Lord Shiva (Hara) of a curse, He is named Hara Shaba Vimochana Perumal – Hara-Shiva, Shaba-curse, Vimochana-relief. This is one of the 108 Divya Desas of Perumal. According to scriptures, the temple was built by Emperor Mahabali. Lord Shiva has His temple here and is praised as Kandeeswarar. The place has the reputation of being honoured as Mum Moorthy (three Lords) Sthala. Since there is no temple for Brahmma, He has His place in Kandeeswarar temple gracing with Mother Maha Saraswathi. The author of the celebrated book ‘Sri Krishna Leela Tharangini’ belongs to Tirupoonthuruthi near Kandiyur, a stauch devotee of this temple.
Saint Tirumangai Azhwar compares the glory of the Lord of this temple in his hymns with Perumals of Kanchi and Koiladi – Kanchi Perumal, Koviladi Perumal
Temple History:Lord Shiva has five faces praised as Eeshana, Tatpurusha, Agora, Vamadevam and Satyojatham. Lord Brahmma too had five faces earlier. Therefore, he developed pride that He was equal to Lord Shiva. Angry Shiva simply plucked the centre head of Brahmma. The head stuck to his hand and did not fall down. Lord Shiva, to wash off the Brahmmahathi sin wandered places with the head of Brahmma. Finally, the head fell at a place. Lord Vishnu was present there. This is that place where Lord Hara Shaba Vimochana Perumal blesses the devotees with Pooranavalli Thayar-Kamalavalli Nachiar.
செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020
படித்தேன் பகிர்கிறேன் உங்களுடன்
படித்தேன் பகிர்கிறேன் உங்களுடன்
நான் சொல்லும் நிகழ்ச்சி நடந்து பல வருடங்கள் ஆகிறது. அப்போது என் அப்பா பி.எம். நடராஜ சர்மா, திருச்சி பிஷப் ஹீபர் உயர்நிலைப் பள்ளியில் சம்ஸ்கிருத ஆசிரியராகப் பணியாற்றினார். காஞ்சி மஹா ஸ்வாமிகள் ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளிடம் மரியாதையும் பக்தியும் கொண்டவர் அவர். திருச்சி மாவட்டத்தில் காவிரியின் வடகரையில் உள்ளது நத்தம் கிராமம். ஒரு முறை மஹா ஸ்வாமிகள் அங்கு முகாமிட்டிருந்தார். அவர் நடத்தும் ஸ்ரீதிரிபுர சுந்தரி ஸ்ரீசந்திர மௌலீஸ்வரர் பூஜையை தரிசிக்க விரும்பினார் என் அப்பா. தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமை இரவில் நத்தம் கிராமத்தை அடைந்தார். பூஜை முடிந்தது அப்பாவை அங்குள்ள எவருக்கும் தெரியாது. எனவே எவரும் உபசரிக்கவில்லை. மஹா ஸ்வாமிகள் தந்த விபூதிப் பிரசாதத்தை நெற்றியில் இட்டுக் கொண்டு பந்தலில் ஒரு மூலையில் படுத்து விட்டார் அப்பா. அடுத்து வந்த சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களும் அப்படியே தான் கழிந்தன! பூஜைகளையும் ஆராதனையையும் கண்ணாரக் கண்டு தரிசித்தார். மூன்றாம் நாள் விநாயகர் சதுர்த்தி. சிறப்பு பூஜைகள் முடிந்ததும் ஸ்வாமிகளிடம் பிரசாதம் பெறச் சென்ற என் அப்பா நான் ஊருக்குப் போய் வருகிறேன்! என்றார். நிமிர்ந்து பார்த்த ஸ்வாமிகள் முதலில் பிள்ளையாருக்கு முன் உள்ள கொழுக்கட்டையை எடுத்துச் சென்று நிதானமா சாப்பிட்டப்புறம் வாங்கோ. ஊருக்குப் போறதைப் பத்தி பேசிக்கலாம்! என்றார். ஊருக்குப் போய் வருகிறேன் என்று ஒரு மரியாதை நிமித்தம் சொன்னதற்கு முதல்ல சாப்பிட்டு வா என்கிறாரே ஸ்வாமிகள்?! அப்பாவுக்கு பிரமிப்பு. ‘சரி’ என்று சாப்பிடப் போனார். சாப்பிட்டு முடித்ததும் அப்பாவை அழைத்து விசாரித்தார் ஸ்வாமிகள். என் அப்பா லால்குடி தாலூகாவில் உள்ள புதுக்குடி சீனிவாச ஜோதிடரின் பிள்ளை வழிப் பேரன் என்பதை அறிந்ததும் பெரியவா மிகவும் மகிழ்ச்சியடைந்தார். என் அப்பாவின் தாத்தாவைப் பற்றியும் அவரது காலத்தில் நடந்த பல நிகழ்ச்சிகளையும் நினைவு கூர்ந்து சொன்னார் ஸ்வாமிகள். அப்பாவுக்கோ ஆச்சரியம்! ஸ்வாமிகள் தொடர்ந்தார் ‘உன்னோட தாத்தா மலையாள தேசம் போய் ஜோதிஷத்தை முறையா கத்துண்டு வந்தவர். தேவதைகளின் உபாசனையும் உண்டு. அவர் ஆற்காடு நவாபுக்கு ஜோசியர் ஆனது ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சி. அப்போது திருச்சிராப்பள்ளி ஆற்காடு நவாப் ஆட்சியில் இருந்தது. நவாப் பிடம் பல ஜோசியர்கள் உண்டு. ஒரு நாள் நவாப் தன் கச்சேரியில் (அரசவையில்) இருந்த ஜோசியர்களுடன் தனது ஆட்சிப் பிரதேசத்தில் இருந்த அனைத்து ஜோசியர்களையும் அவைக்கு வரும் படி அறிவித்தார். புது ஜோசியர்கள் பலரும் கூடினர். அதுல உன்னோட புதுக்குடி தாத்தாவும் ஒருத்தர். கச்சேரிக்கு நவாப் வந்ததும் திவான் எழுந்து நின்று அங்கு கூடி இருந்த ஜோதிடர்களைப் பார்த்து உங்களுக்கெல்லாம் இன்று ஒரு போட்டி வைக்கப் போகிறார் நவாப். இன்று நம் நவாப் கோட்டையில் இருந்து எந்த வழியாக வெளியேறி வேட்டைக்குப் போகப் போகிறார் என்று நீங்கள் எல்லோரும் ஓலையில் எழுதிக் கூட்டுக்குள் போட்டுத்தரவேண்டும். எல்லாக் கூடுகளும் முத்திரையிடப்பட்டு எனது பாதுகாப்பில் இருக்கும். நவாப் திரும்பியதும் கூடுகளின் முத்திரைகள் உடைக்கப்பட்டு ஓலைகள் படிக்கப்படும். யார் எழுதியது சரியாக இருக்கிறதோ அவருக்கு நவாப் தக்க மரியாதை செய்வார்!’ என்று அறிவித்தார். உடனே எல்லா ஜோசியர்களும் கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு என்று அவரவர் கணக்குப்படி ஓலையில் எழுதிக் கூட்டுக்குள் போட்டுக் கொடுத்தார்கள். கடைசியில் அன்று நவாப் கோட்டையின் பிரதான வாசல்கள் வழியாகப் போகவே இல்லை. மேற்கு வாசலின் வடக்குப் புறம் (தற்போது மெயின்கார்டு கேட் எனப்படும் வாயிலுக்கு வடக்கே பெட்ரோல் பங்க் இருக்கும் வழி) கோட்டை மதிலை இடித்து வெளியேறி மேற்குத் திசையில் உறையூர் நோக்கிக் கொஞ்ச தூரம் சென்றார். பிறகு வடக்குத் திசையில் திரும்பி காவிரிக் கரை வரை போனார். அதன் பிறகு தெற்கு நோக்கித் திரும்பி வடக்கு ஆண்டார் வீதியில் இடிக்கப்பட்ட வாசப்படி (புதுப்படி சந்து என்று தற்சமயம் பெயர்) வழியாக மலைக்கோட்டை வடக்கு வீதியில் நுழைந்தார். பிறகு கிழக்குத் திசையில் திரும்பி சறுக்குப் பாறைத் தெரு வழியாகக் கிழக்கு ஆண்டார் வீதிக்கு வந்தார். மலையை வலமாக வந்து தற்சமயம் உள்ள சின்னக் கடைத் தெரு வழியாக இப்போ டவுன்ஹால் என்று சொல்லப்படுகிற கச்சேரிக்கு வந்து விட்டார். வேட்டையாடவே இல்லை. நவாப் கச்சேரிக்குத் திரும்பிய பின் ஜோசியர்கள் கொடுத்த கூடுகள் ஒவ்வொன்றும் முத்திரை உடைக்கப்பட்டு பிரிக்கப்பட்டன. ஓலைகள் எடுத்துப் படிக்கப்பட்டன. உன்னோட தாத்தா எழுதிக் கொடுத்த ஓலை ஒன்று மட்டுமே துல்லியமாக நவாப்பின் நடவடிக்கையைக் குறிப்பிட்டிருந்தது. நவாப் ஆச்சரியத்தில் மூழ்கிப் போனார். கச்சேரில இருந்தவர்களும் பிரமிச்சுப் போயிட்டா. அப்புறம் நவாப் உன்னோட தாத்தாவுக்குப் புதுக்குடியில் 80 ஏக்கர் நிலம் பட்டயம் செய்து கொடுத்தார். மலைக்கோட்டை தெற்கு வீதில மேற்கே ஒரு கருப்புக் கோயில் இருக்கு. அதுக்குப் பக்கம் இரும்புக் கிராதி போட்ட ஒசரமான ஒரு பெரிய வீடு இருக்கு. அதன் எதிரே திண்ணை உள்ள ஒரு சின்ன வீடு உண்டு. இந்த ரெண்டு வீட்டையும் தாத்தாவுக்குக் கொடுத்தார். அந்த 80 ஏக்கர் நிலம் மலைக்கோட்டைப் பகுதியில் தந்த அந்த ரெண்டு வீடுகள் எல்லாத்தையும் சிறுகச் சிறுக தர்ம காரியங்களுக்கே செலவு பண்ணினார் என்று கூறி முடித்தார் மஹா ஸ்வாமிகள். இதன் பின் அப்பாவுக்கு ஆசியளித்து வழியனுப்பி வைத்தார் மஹா ஸ்வாமிகள். மஹா ஸ்வாமிகளின் தரிசனத்துக்குப் போய் அவரிடம் இருந்து பூரண அனுக்ரஹமும் பெற்று வந்த என் அப்பா இந்த சம்பவத்தை அடிக்கடி என்னிடம் சொல்லிப் பெருமைப்படுவார்.
பெரியவா கடாக்ஷம் பரிபூரணம்
கமாக்ஷி து:க்க நிவாரண ஆஷ்டகம்
கமாக்ஷி து:க்க நிவாரண ஆஷ்டகம்
மங்கள ரூபிணி மதி அணி சூ'லினி
மன்மத பாணியலள்ளே
சங்கடம் நீங்கிடச் சடுதியில் வந்திடும்
ச'ங்கர ஸெந்தரியே !
கங்கண பாணியன் கனிமுகம் கண்டநல்
கற்பகக் காமினியே
ஜய ஜய சங்கரி கௌரி க்ருபாகரி
து:க்க நிவாரணி காமாக்ஷி !! 1
கான் உருமலர் எனநக்கதிர் ஒளி காடிக்
காத்தி டவந்திடவாள்
தான் உறு தவஓளி மதி ஓளி
தாங்கியே வீசிடுவாள் !
மான் உரு வ்ழியாள் மாதவர் மொழியாள்
மாலைகள் சூடிடுவாள்
ஜய ஜய சங்கரி கௌரி க்ருபாகரி
து:க்க நிவாரணி காமாஷி ! 2
சங்கரி ஸௌந்தரி சதுர்முகன் போட்ற்றிடச்
சபையினில வந்தவள்ளே
பொங்கு அரிமாவினில் பொன்னடி வைத்துப்
பொருந்திட வந்தவளே !
எம்குலம தழைத்திட எழில் வடிவுடனே
எழுந்தநல துர்க்கையளே
ஜய ஜய சங்கரி கௌரி க்ருபாகரி
து:க்க நிவாரணி காமாக்ஷி ! 3
தணதண தந்தண தவில்ஓலி முழங்கிட
தண்மணி நீ வருவாய்
கணகண கங்கண கதிர் ஓளிவீசிடக்
கண்மணி நீ வருவாய் !
பணபண பம்பண பறைஓலி கூவிடப்
பண்மணி நீ வருவாய்
ஜய ஜய சங்கரி கௌரி க்ருபாகரி
து:க்க நிவாரணி காமாக்ஷி ! 4
பஞ்சமி, பைரவி பர்வத புத்திரி
பஞ்சநல் பாணியள்ளே
கொஞ்சிடும் குமரனைக் குணம்மிகு வேழனைக்
கொடுத்தநல் குமரியளே !
சங்கடம் தீர்த்திடச் சமர் அது செய்தநல்
சக்தி எனும் மாயே
ஜய ஜய சங்கரி கௌரி க்ருபாகரி
து:க்க நிவாரணி காமக்ஷி 5
எண்ணியபடி நீ அருளீட வருவாய்
எம்குல தேவியளே
பண்ணிய செயலின் பலனது நலமாய்ப்
பல்கிட அருள்ளிடுவாய் !
கண்ணோளி அதனால் கருணையே காட்டிக்
கவலைகள் தீர்ப்பவளே
ஜய ஜய சங்கரி கௌரி க்ருபாகரி
து:க்க நிவாரணி காமாஷி !! 6
இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை
என்று நீ சொல்லிடுவாய்
சுடர்தரு அமுதே கருதிகள் கூறிச்
சுகமது தந்திடுவாய் !
படர்தரு இருளில் பரிதியாய் வந்து
பழவினை ஓட்டிடுவாய்
ஜய ஜய சங்கரி கௌரி க்ருபாகரி
து:க்க நிவாரணி காமக்ஷி !! 7
ஜய ஜய பாலா சாமுண்டேஷ்வரி ஜய ஜய ஸ்ரீதேவி !!
ஜய ஜய துர்க்கா ஸ்ரீ பரமெஷ்வரி ஜய ஜய ஸ்ரீதேவி !!
ஜய ஜய ஜயந்தி மங்களகாளி ஜய ஜய ஸ்ரீதேவி
ஜய ஜய சங்கரி கௌரி க்ருபாகரி து:க்க நிவாரணி காமாக்ஷி !! 8
அக⁴நாஶககா³யத்ரீ ஸ்தோத்ரம் நாரத³ உவாச
அக⁴நாஶககா³யத்ரீ ஸ்தோத்ரம் நாரத³ உவாச -
ப⁴க்தாநுகம்பிந்ஸர்வஜ்ஞ ஹ்ருʼத³யம் பாபநாஶநம் ।
கா³யத்ர்யா: கதி²தம் தஸ்மாத்³கா³யத்ர்யா: ஸ்தோத்ரமீரய ॥ 1॥
ஆதி³ஶக்தே ஜக³ந்மாதர்ப⁴க்தாநுக்³ரஹகாரிணி ।
ஸர்வத்ர வ்யாபிகேঽநந்தே ஶ்ரீஸந்த்⁴யே தே நமோঽஸ்து தே ॥ 2॥
த்வமேவ ஸந்த்⁴யா கா³யத்ரீ ஸாவித்ரீ ச ஸரஸ்வதீ ।
ப்³ராஹ்மீ ச வைஷ்ணவீ ரௌத்³ரீ ரக்தா ஶ்வேதா ஸிதேதரா । 3॥।
ப்ராதர்பா³லா ச மத்⁴யாஹ்நே யௌவநஸ்தா² ப⁴வேத்புந: ।
ப்³ரஹ்மா ஸாயம் ப⁴க³வதீ சிந்த்யதே முநிபி:⁴ ஸதா³ ॥ 4॥ வ்ருʼத்³தா⁴ ஸாயம்
ஹம்ஸஸ்தா² க³ருடா³ரூடா⁴ ததா² வ்ருʼஷப⁴வாஹிநீ ।
ருʼக்³வேதா³த்⁴யாயிநீ பூ⁴மௌ த்³ருʼஶ்யதே யா தபஸ்விபி:⁴ ॥ 5॥
யஜுர்வேத³ம் பட²ந்தீ ச அந்தரிக்ஷே விராஜதே ।
ஸா ஸாமகா³பி ஸர்வேஷு ப்⁴ராம்யமாணா ததா² பு⁴வி ॥ 6॥
ருத்³ரலோகம் க³தா த்வம் ஹி விஷ்ணுலோகநிவாஸிநீ ।
த்வமேவ ப்³ரஹ்மணோ லோகேঽமர்த்யாநுக்³ரஹகாரிணீ ॥ 7॥
ஸப்தர்ஷிப்ரீதிஜநநீ மாயா ப³ஹுவரப்ரதா³ ।
ஶிவயோ: கரநேத்ரோத்தா² ஹ்யஶ்ருஸ்வேத³ஸமுத்³ப⁴வா ॥ 8॥
ஆநந்த³ஜநநீ து³ர்கா³ த³ஶதா⁴ பரிபட்²யதே ।
வரேண்யா வரதா³ சைவ வரிஷ்டா² வரவர்ணிநீ ॥ 9॥
க³ரிஷ்டா² ச வரார்ஹா ச வராரோஹா ச ஸப்தமீ ।
நீலக³ங்கா³ ததா² ஸந்த்⁴யா ஸர்வதா³ போ⁴க³மோக்ஷதா³ ॥ 10॥
பா⁴கீ³ரதீ² மர்த்யலோகே பாதாலே போ⁴க³வத்யபி ।
த்ரிலோகவாஹிநீ தே³வீ ஸ்தா²நத்ரயநிவாஸிநீ ॥ 11॥
பூ⁴ர்லோகஸ்தா² த்வமேவாஸி த⁴ரித்ரீ லோகதா⁴ரிணீ ।
பு⁴வோ லோகே வாயுஶக்தி: ஸ்வர்லோகே தேஜஸாம் நிதி:⁴ ॥ 12॥
மஹர்லோகே மஹாஸித்³தி⁴ர்ஜநலோகே ஜநேத்யபி ।
தபஸ்விநீ தபோலோகே ஸத்யலோகே து ஸத்யவாக் ॥ 13॥
கமலா விஷ்ணுலோகே ச கா³யத்ரீ ப்³ரஹ்மலோககா³ । ப்³ரஹ்மலோகதா³
ருத்³ரலோகே ஸ்தி²தா கௌ³ரீ ஹரார்தா⁴ங்க³நிவாஸிநீ ॥ 14॥
அஹமோ மஹதஶ்சைவ ப்ரக்ருʼதிஸ்த்வம் ஹி கீ³யஸே ।
ஸாம்யாவஸ்தா²த்மிகா த்வம் ஹி ஶப³லப்³ரஹ்மரூபிணீ ॥ 15॥
தத: பராபரா ஶக்தி: பரமா த்வம் ஹி கீ³யஸே ।
இச்சா²ஶக்தி: க்ரியாஶக்திர்ஜ்ஞாநஶக்திஸ்த்ரிஶக்திதா³ ॥ 16॥
க³ங்கா³ ச யமுநா சைவ விபாஶா ச ஸரஸ்வதீ ।
ஸரயூர்தே³விகா ஸிந்து⁴ர்நர்மதே³ராவதீ ததா² ॥ 17॥
கோ³தா³வரீ ஶதத்³ருஶ்ச காவேரீ தே³வலோககா³ ।
கௌஶிகீ சந்த்³ரபா⁴கா³ ச விதஸ்தா ச ஸரஸ்வதீ ॥ 18॥
க³ண்ட³கீ தாபிநீ தோயா கோ³மதீ வேத்ரவத்யபி ।
இடா³ ச பிங்க³லா சைவ ஸுஷும்ணா ச த்ருʼதீயகா ॥ 19॥
கா³ந்தா⁴ரீ ஹஸ்திஜிஹ்வா ச பூஷாபூஷா ததை²வ ச ।
அலம்பு³ஷா குஹூஶ்சைவ ஶங்கி²நீ ப்ராணவாஹிநீ ॥ 20॥
நாடீ³ ச த்வம் ஶரீரஸ்தா² கீ³யஸே ப்ராக்தநைர்பு³தை:⁴ ।
ஹ்ருʼதபத்³மஸ்தா² ப்ராணஶக்தி: கண்ட²ஸ்தா² ஸ்வப்நநாயிகா ॥ 21॥
தாலுஸ்தா² த்வம் ஸதா³தா⁴ரா பி³ந்து³ஸ்தா² பி³ந்து³மாலிநீ ।
மூலே து குண்ட³லீ ஶக்திர்வ்யாபிநீ கேஶமூலகா³ ॥ 22॥
ஶிகா²மத்⁴யாஸநா த்வம் ஹி ஶிகா²க்³ரே து மநோந்மநீ ।
கிமந்யத்³ ப³ஹுநோக்தேந யத்கிஞ்சிஜ்ஜக³தீத்ரயே ॥ 23॥
தத்ஸர்வம் த்வம் மஹாதே³வி ஶ்ரியே ஸந்த்⁴யே நமோঽஸ்து தே ।
இதீத³ம் கீர்திதம் ஸ்தோத்ரம் ஸந்த்⁴யாயாம் ப³ஹுபுண்யத³ம் ॥ 24॥
மஹாபாபப்ரஶமநம் மஹாஸித்³தி⁴விதா⁴யகம் ।
ய இத³ம் கீர்தயேத் ஸ்தோத்ரம் ஸந்த்⁴யாகாலே ஸமாஹித: ॥ 25॥
அபுத்ர: ப்ராப்நுயாத் புத்ரம் த⁴நார்தீ² த⁴நமாப்நுயாத் ।
ஸர்வதீர்த²தபோதா³நயஜ்ஞயோக³ப²லம் லபே⁴த் ॥ 26॥
போ⁴கா³ந் பு⁴க்த்வா சிரம் காலமந்தே மோக்ஷமவாப்நுயாத் ।
தபஸ்விபி:⁴ க்ருʼதம் ஸ்தோத்ரம் ஸ்நாநகாலே து ய: படே²த் ॥ 27॥
யத்ர குத்ர ஜலே மக்³ந: ஸந்த்⁴யாமஜ்ஜநஜம் ப²லம் ।
லப⁴தே நாத்ர ஸந்தே³ஹ: ஸத்யம் ச நாரத³ ॥ 28॥
ஶ்ருʼணுயாத்³யோঽபி தத்³ப⁴க்த்யா ஸ து பாபாத் ப்ரமுச்யதே ।
பீயூஷஸத்³ருʼஶம் வாக்யம் ஸந்த்⁴யோக்தம் நாரதே³ரிதம் ॥ 29॥
॥ இதி ஶ்ரீதே³வீபா⁴க³வதே மஹாபுராணே த்³வாத³ஶஸ்கந்தே⁴
பஞ்சமோঽத்⁴யாயே ஶ்ரீஅக⁴நாஶககா³யத்ரீஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் 30॥
பிராம்மி
பிராம்மி
பிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் எனப்படுவர். பராசக்தியின் படைத்தளபதிகளான இவர்கள் பெரும்பாலான சிவாலயங்களில் சுற்றுப் பிரகாரத்தில் அருள்பாலிப்பர். சப்த கன்னியர் எனப்படும் சப்த மாத்திரிகைகள் பொதுவாக ஒரே கல்லில் வரிசையாக அமர்ந்திருப்பது போன்று அமைக்கப்படுவர். சில இடங்களில் தனித்தனித் திருமேனிகளும் கொண்டிருப்பர். நின்ற நிலையில் அமைக்கப்படுதல் பெரும்பாலும் வழக்கில் இல்லை. இருந்தருளும் நிலையில், இடது காலை மடித்து சுகாசன நிலையிலோ அல்லது உத்குடி ஆசன நிலையிலோ வைத்திருப்பர். வலது காலைத் தொங்கவிட்ட நிலையில் காணலாம். ஆகமம் மற்றும் புராணங்களில் இவர்களுக்குக் கரங்கள் பல கூறப்பட்டிருந்தாலும் பொதுவாக இரண்டு அல்லது நான்கு கரங்களுடனேயே இருப்பர். இரண்டு கரங்களானால் அபய வரதம் கொண்டிருப்பர்; நான்கு கரங்களானால் முன்னிரு கரங்களை அபயவரதமாகவும் பின்னிரு கரங்களில் தத்தமக்குரிய ஆயுதங்களைத் தாங்கியிருப்பர். கோயிலில் உள்ள இறைவனை வழிபட்ட பின் இந்த சப்தகன்னியரையும் வழிபட்டால் தான். கோயிலுக்கு சென்றதற்கான முழு பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
சப்தகன்னியரின் தோற்றம்: சிவன் அந்த காசுரனுடன் போரில் ஈடுபட்ட போது; அந்த காசுரனின் உடலில் இருந்து வழிந்த இரத்தத்திலிருந்து தோன்றிய அசுரர்களை அழிக்கும் நோக்கில், சிவன் தனது வாயிலிருந்து தோன்றிய அக்னியிலிருந்து யோகேசுவரி - என்ற சக்தியைத் தோற்றுவித்தார் என்றும்; அவள் மாகேசுவரி - என்ற சக்தியை உருவாக்கினாள் என்றும்; அவளுக்கு உதவியாக பிரம்மன் தனது அம்ச பிராம்மியையும்; விஷ்ணு தனது அம்ச வைஷ்ணவியையும்; இந்திரன் - தனது அமட்ச இந்திராணியையும் ; முருகன் - தனது அம்ச கவுமாரியையும்; வராகமூர்த்தி - தனது அம்ச வராகியையும்; யமன் - தனது அம்ச சாமுண்டியையும் படைத்து அளித்தனர் என்று வராகபுராணம் கூறுகிறது. சும்ப - நிசும்ப என்ற அரக்கர்களை அம்பிகை அழிக்கப்போர் புரிந்த போது அவளுக்கு உதவியாக இத்தேவியர்கள் உற்பவித்தனர் என்று மார்க்கண்டேய புராணம் கூறுகின்றது.
நைரிதன் என்ற அசுரனை ஒழிக்கப் பிரதம்மா யுத்தம் செய்த போது; அவருக்கு உதவி புரிவதற்காக பிற தேவர்கள் தங்களது சக்திகளை உருவாக்கி, அளித்தனர் என்று சுப்ரபேதாகமம் விளக்குகின்றது. அக்னி புராணம், மச்ச புராணம், தேவி புராணம் என்ற புராண நூல்களிலும், பூர்வ காரணாகமம், அம்சுமத் பேதாகமம் என்ற ஆகம நூல்களிலும்; விஸ்வகர்ம சாஸ்திரம், சில்பரத்தினம், ரூப மண்டலம், ரூபாவதாரம் என்ற சிற்ப சாஸ்திர நூல்களிலும்; இவர்களது உருவ அமைப்பு ஆயுதங்கள் முதலியன கூறப்படுகின்றன. ஆண் தெய்வங்களின் சக்திகளான இவர்கள் தத்தமக்குரிய ஆண் தெய்வங்களின்; ஆயுதங்கள் ஆபரணங்கள் வாகனம் கொடி என்பனவற்றினைக் கொண்டு விளங்குவர்!
இதில் ஒவ்வொரு கன்னியரும் ஒவ்வொரு சிவாலயங்களுக்கு சென்று சிவனின் அருளாசி பெற்றுள்ளனர். சப்தகன்னியரில் பிராம்மி வழிபட்ட தலம் நாகப்பட்டினம் மாவட்டம், திருஇந்தளூர், அருள்மிகு ஒப்பிலா நாயகி சமேத தான்தோன்றீசுவரர் திருக்கோயில் ஆகும்.
பிராம்மி, பிரமனுடைய அம்சம் உடையவள். நாற்றடந்தோள், அகன்ற கண்கள், ஒளிவிடும் பொன்மேனி, நாற்கரங்களில் வரதம், அபயம், கமண்டலம், அட்சமாலிகை கொண்டவளாய் அன்னக்கொடி, ஜடாமகுடம் உடையவளாய் பத்மாசனத்தில் எழுந்தருளியிருப்பாள். மயிலாடுதுறையிலிருந்து நீடூர் செல்லும் பேருந்து சாலையில் திருவழுந்தூரின் வடக்கு எல்லையில் இத்தலம் உள்ளது.
காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
பிராம்மி - ரூப லக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு)
பிரம்மனின் சக்தி பிராம்மி எனப்படுவாள். அவள் நான்கு கரங்களையும் ஒரு முகத்தையும் உடையவள். முன் இரு கரங்களை அபயவரதமாகவும், பின் இரு கரங்களில் கெண்டி - ஸ்படிக மாலைகளை உடையவள். வெண்ணிற ஆடை அணிந்தவள்; ஸ்படிக மாலையை ஆபரணமாகப் பூண்டவள். அன்னவாகனத்தின் மேல் அமர்ந்தவள்; அதையே கொடியாகவும் உடையவள். தர்ப்பைப்புல் நீரால் இல்லத்தைச் சுத்தப்படுத்துபவள்.
பிரம்மனின் அம்சமாகையால் சிருஷ்டிக்கு அதிபதியானவள்; இவள் கலைகளின் அதிதேவதை என்பதால், கலைஞானம் கிட்டும், கல்வி - கேள்விகளில் சிறந்து விளங்கலாம். அத்துடன் குழந்தைப் பேறும் கிட்டும்.
பிராம்மி பாடல்:
பேசவாம் புகழ்ப் பிராமி என்று உரைப்பவர் தான்தோன்
றீச நாதனை இமையவர் வாழ நஞ்சுண்டு
நாசமில்லியை நலந்தரு பூசனை ஆற்றித்
தேசமைந்த பல்வரத்தொடு சிறப்பெலாம் பெற்றாள்.
பிராம்மி என்ற சாவித்திரியை வழிபடுவதற்கான பூஜா முறைகள்:
ஆசன மூர்த்தி மூலம்
ஓம் - ஹ்ரீம் - பிராம்மி - ஆசனாயயாய நம:
ஓம் - ஹ்ரீம் - பம் - பிராம்மி - மூர்த்தியை நம:
ஓம் - ஹ்ரீம் - ஐம் - பம் - பிராம்மியே நம:
பிராம்மி காயத்ரி:
ஓம் - ஹம்ஸத்வஜாயை வித்மஹே;
கூர்ச்ச ஹஸ்தாயை தீமஹி;
தந்நோ, ப்ராம்மி ப்ரசோதயாத்
தியான ஸ்லோகம்:
சதுர்ப்புஜா விஸாலாட்சி;
தட்த காஞ்ச நசந்நிபா;
வரதாபய ஹஸ்தா ச
கமண்டல் வக்ஷ மாலிகா;
ஹம்ஸத்வஜா, ஹம்ஸாரூடா,
ஜடா மகுட தாரிணீ,
ரக்த பத்மாஸ நாசீகா
ப்ரம்ஹரூபிணீ, நமஸ்துதே
மூலமந்திரம்:
ஓம் - ஹ்ரீம் - ஐம் - பம் - பிராம்யை - நம:
அர்ச்சனை :
ஓம் பிராம்மியை நம
ஓம் பிதாமகாயை நம
ஓம் பரமேஷ்டியை நம
ஓம் பத்மஜாயை நம
ஓம் கமண்டலுதாயை நம
ஓம் காவேரிஜனகாயை நம
ஓம் கவோமுக்திதாயை நம
ஓம் காலரூபாயை நம
ஓம் கலாகாஷ்டரூபாயை நம
ஓம் சதுர்ஹஸ்தாயை நம
ஓம் சாத்வி காயை நம
ஓம் சாது மித்ராயை நம
ஓம் சந்துஷ்டமனசேயை நம
ஓம் சதுர்வக்த்ராயை நம
ஓம் அம்புஜஹஸ்தாயை நம
ஓம் சிவவிஷ்ணுப்ரியாயை நம
ஓம் ஹிரண்ய கர்ப்பாயை நம
ஓம் சிருஷ்டிகர்த்தியை நம
ஓம் சத்தியலோக நிவாயை நம
ஓம் வேததாரின்யை நம
ஓம் லோபாமுத்ரார்சியை நம
ஓம் தாத்ரேயை நம
ஓம் விதாத்ரேயை நம
ஓம் பத்மாசனாயை நம
ஓம் த்ரைலோக்யநாதாயை நம
ஓம் வராபயகராயை நம
ஓம் வித்யாதீசாயை நம
ஓம் ஜகன்னாதாயை நம
ஓம் ரவிவம்சசூபூஜ்யை நம
ஓம் திவ்யாம் பரதாயை நம
ஓம் லோக பூஜ்யாயை நம
ஓம் சத்ய ஸ்வரூபாயை நம
ஓம் சத்ய வாசே நம
ஓம் சகுணா ரூபாயை நம
ஓம் வாக தீசாயை நம
ஓம் விரிஞ்சீநேயை நம
ஓம் தேவ தேவாயை நம
ஓம் அக்ஷமாலாதராயை நம
ஓம் ஹிமாசலநிவாசிநியை நம
ஓம் சார பூதாயை நம
ஓம் காயத்ரியை நம
ஓம் பவ்யாயை நம
ஓம் த்ரிமூர்த்திரூபாயை நம
ஓம் சர்வஜ்ஞாயை நம
ஓம் தருண்யை நம
ஓம் சூபாயை நம
ஓம் த்ரிபதாயை நம
ஓம் த்ரிலோசநாயை நம
ஓம் தச ஹஸ்தாயை நம
ஓம் தசாயுதராயை நம
ஓம் த்ரிவேதரூபாயை நம
ஓம் சந்த்ர வர்ணாயை நம
ஓம் நித்யாயைப்ரஹ்மபூஜிதாயை நம
ஓம் மகா வித்யாயை நம
ஓம் ஸரஸ் வத்யை நம
ஓம் சர்வ வித்யாயை நம
ஓம் சர்வமந்த்ராயை நம
ஓம் சுத்த வஸ்த்ராயை நம
ஓம் சுத்த வித்யாயை நம
ஓம் வித்யாயை நம
ஓம் சௌம்யாயை நம
ஓம் ப்ரம்மலோக நிவாசிக்யை நம
ஓம் ஜல கர்ப்பாயை நம
ஓம் ஜலப்ரியாயை நம
ஓம் ஸ்வதாயை நம
ஓம் சோடச கலாயை நம
ஓம் யஞ்ஞப்ரியாயை நம
ஓம் யஞ்ஞமூர்த்தியை நம
ஓம் அக்ஷராக்ருத்யை நம
ஓம் ப்ரஹ்மமூர்த்யை நம
ஓம் சகஸ்ரபரமாம்பிகாயை நம
ஓம் விஷ்ணுஹ்ருத்காயை நம
ஓம் ஹம்ஸ ரூபாயை நம
ஓம் நிரஞ்ஜநாயை நம
ஓம் பஞ்சவர்ணமுக்யை நம
ஓம் மகாமாயாயை நம
ஓம் மகாமந்த்ரபலப்ரதாயை நம
ஓம் சர்வதந்த ரூபாயை நம
ஓம் மாயாபீஜநிவாசின்யை நம
ஓம் மாந்யாயை நம
ஓம் விசித்ராய்யை நம
ஓம் ஜகத்திதாயை நம
ஓம் சதுராயை நம
ஓம் சதமத்யாயை நம
ஓம் தசாவராயை நம
ஓம் சிருக்குஹஸ்தாயை நம
ஓம் சிருவஹஸ்தாயை நம
ஓம் கெண்டிஹஸ்தாயை நம
ஓம் அக்ஷ்ரமாலாஹஸ்தாயை நம
ஓம் வேத மாத்ரே நம
ஓம் பாலிகாயை நம
ஓம் வ்ருத்தாயை நம
ஓம் சர்வகாரணாயை நம
ஓம் சந்துஷ்டாயை நம
ஓம் சர்வேஷ்வர்யை நம
ஓம் ஆதி சக்த்யை நம
ஓம் பரமார்த்தப்ரதாயை நம
ஓம் பக்த பீஷ்டப்ரதாயை நம
ஓம் ரத்ணாபூஷணதேவியை நம
ஓம் நாத ரூபாயை நம
ஓம் ஹம்ச ரூடாயை நம
ஓம் தத்வ ஸ்வரூபாயை நம
ஓம் சச்சிதானந்த ரூபாயை நம
ஓம் சத்ய மூர்த்தியை நம
ஓம் சர்வா பீஷ்டப்பர்தாயை நம
ஓம் ஓங்கா ரூபாயை நம
ஓம் வேதஸ்வரூபாயை நம
ஓம் சாவித்ரியை நம
ஸ்ரீ பிராம்மி அஷ்ட சத ஸ்தோத்திரம் ஸம்பூர்ணா.
பூஜை: பீஜங்களுடன் கூடிய தேவி நாமம் கூறி - சமர்ப்பியாமி சொல்லி - தூப - தீப - நைவேத்ய - தாம்பூலம் - சமர்ப்பிக்க வேண்டும்.
துதி: ஹம்ஸயுக்த விமானஸ்தே
பிரஹ்மாணீ ரூபதாரிணி
கௌரி சாம்ப க்ஷரிகே
தேவி அம்பிகே நமோஸ்துதே.
----------------------------------------------------------------------------------------
ஸ்ரீ சப்தமாதா ஸ்தோத்திரம்
ஸ்ரீ சப்தமாதா ஸ்தோத்திரம்
1:ப்ராம்ஹீ
தண்டம் கமண்டலும் சத்சாத் அக்ஷத்ரமதா பயம்
பிப்ரதி கனகச்யா ப்ராஹி க்ருஷ்ணாஜினோஜவலா
2:மாஹேஸ்வரி
சூலம் பரச்வதம் க்ஷுத்ரதுந்துபிம் ந்ருகரோடிகாம்
வஹிந்தீ ஹிம ஸங்காசா த்யேயா மஹேச்வரி
3:கௌமாரி
அகுசம் தண்ட கட்வாங்கௌ பாசம்ச தததீகரை:
பந்தூக புஷ்ப ஸங்காசா கௌமாரீ காமதாயினீ
4:வைஷ்ணவி
சக்ரம் காண்டம் கபாலம்ச தத்திகண:
தமால ச்யாமளா த்யேயோ வைஷ்ணவீ விப்ரமோஜ்வகை
5:வராஹீ
முஸலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்
கனரர்சதுர்பிர் வாராஹீ த்யேயாகா லகனச்சவி:
6:இந்த்ராணி அங்குசம் தோமரம் வித்யுத்குசலம் பிப்ரதீகரை
இந்திரநீல திபேந்த்ராணி த்யேயா ஸ்ர்வஸம் ருத்திதர
7:சாமுண்டா
சூலம் க்ருபாணம் ந்ருசிர:கபாலம் ததீகரை
முண்ட ஸ்ரங்மண்டி தாத்யேயே சாமுண்டா ரக்த வக்ரஹா
சூலம் சாததீம் போலந்ருசிர:கட்கான்ஸ்வ ஹஸ்தாம்புஜை
நிர்மாம் ஸாபிமனோஹரா க்ருதிதரா ப்ரேதே நிவுண்ண சுபா
ரக்தாபா கமசண்டமுண்ட தமணீ தேவி லலாபோத்வா
சாமுண்டா விஜயம் ததாது நமதாம் பீதிப்ரணாசோத்யதா
வரலக்ஷ்மி விரதக் கதை
ஜெய மங்களா சுப மங்களா
ஜெய மங்களா சுப மங்களா
1. வரலக்ஷ்மி அம்மனுட மகிமையுள்ள கீர்த்தனங்கள்
மங்களமாகவே மகிழ்ந்து பாட
சிருங்கார கணபதியெ ஜெயமாக வந்தெனக்கு
தங்காமல் சரஸ்வதி சகாயம் வேணும் (ஜெய)
2. கைலா சந்தனிலே காட்சியுடனே இருக்கும்
கருணாகடாக்ஷரென்னும் பரமேஸ்வரர்
அவருடைய பாதத்தில் ஆனந்தமாகவே
அன்புடனே பார்வதியும் அடிபணிந்தாள் (ஜெய)
3. சொல் ப்ரியே ஈஸ்வரியே சுபகீர்த்தியுள்ளவளே
கலியிலே கல்பிச்ச விர தங்கள் தன்னில்
எந்த விரதம் அதிசயம் ஏதென நியமிச்சு
எந்தனுக்கு சொல்லுவாய் இஷ்டமாக (ஜெய)
4. உமையாளே கேளு நீ. ஒரு கதை சொல்லுகிறேன்
தரணியிலே அனேக விரதங்களுண்டு
ஆனாலும் வரலக்ஷ்மி அம்மன் விரதம் அதிசயம்
அனைவரும் ஆதரித்துக் கொள்ளவேணும் (ஜெய)
5. குண்டிலம் என்றொரு மண்டிலப் பட்டணத்தில்
சாருமதி என்ற மங்கை இருக்க
சாருமதி மங்கையை சகலரும் கொண்டாடும்
சந்தோஷ விப்ரருடைய பத்னியளாம் (ஜெய)
6. அவளுடைய மகிமை யார்தான் அறியதொரு
அருந்ததி குணசாலி அம்மன் அவளே
மாமியார் மாமனார் மாதா பிதாக்களை
குரு பூஜை பண்ணுவாள் கோபமில்லை (ஜெய)
7. பர்த்தாவின் பூஜையில் பழுதொன்றும் வாராது
பாக்யவதி சொர்ப்பனத்தில் வந்து சொன்னாள்
சிராவணமாஸத்தில் பௌர்ணமிக்குள்ளாக
சுக்ரவாரந்தனிலே சுகிர்தத்துடனே (ஜெய)
8. என்னை நீ பூஜித்து இஷ்டவரம் நான் தந்து
கஷ்டமெல்லாம் போக்கி கனவிலே
சொல்லவே வரலக்ஷ்மி சோகமெல்லாம் குளிர்ந்து
மெல்லியர் கண்முன் மறைந்து கொண்டாள் (ஜெய)
9. நல்வாக்கிய மிதுவென்று நாடெல்லாம் அறியவே
சொன்னாளே சாருமதி சுபகதைகளை சகலரும்
கொண்டாடி சந்தோஷப்பட்டுகந்து
கண்டாளே கருணா கடாட்சி யம்மனை (ஜெய)
10. உண்டு பண்ணாமலே மேதினியில் உள்ளவர்கள்
கொண்டாடி பூஜிக்கவேணும் என்று
நதியில் ஸ்னானம் பண்ணி நெற்றி குங்குமமிட்டு
பக்தியுடன் ஸூப்ர வஸ்திரம் தரித்தாள் (ஜெய)
11. நித்யமா வரலக்ஷ்மி முக்தி தரும் நாயகி
சித்தத்திலே மறைஞ்சு செல்வமாக்கும்
சித்திரம் எழுதியே சிறப்பாக கிருகந்தனில்
முத்திடித்து கோலம்போட்டு முகூர்த்தம் பார்த்து (ஜெய)
12. பத்துவித மாலையும் கட்டுடனே புஷ்பமும்
கட்டின பூப்பந்தல் கல்யாணிக்கு
ரத்னகோலம் எழுதி பஞ்சவர்ண பொடி போட்டு
ரத்ன விளக்கேற்றி இருபு றமும் வைத்தாள் (ஜெய)
13. நித்யமாமங்கையர்கள் பூஜிக்கவேணுமின்னு
பக்தியுடன் தேவியை வாருமின்னு அச்சுதன்
தேவியர்க்கு அலங்கரித்து வீதியெல்லாம்
பைங்கிளிமார் எதிர்கொண்டு பார்த்து நின்றார் (ஜெய)
14. புண்டரீ காக்ஷருடைய பூர்ணநாயகிம்மன்
தண்டின் மேலேறி சகலரும் சூழவே
மண்டலம் அதிரவே மணிமேளம் முழங்கவே
கொண்டாடி திருவீதி தன்னில் வந்தாள் (ஜெய)
15. வரலக்ஷ்மி வருகிறாள் என்று சொல்லி மங்கையர்கள்
மாணிக்க சிம்மாசனங்கள் போட்டு
கற்பூரஹாரத்தி காக்ஷியுடனே எடுத்து
கைபிடித்து கிருகந்தனிலே அழைத்து வந்தார் (ஜெய)
16. திருமஞ்சனமாடி தேன் மொழியாளுக்கு
பச்சை பசேலென்ற மஞ்சளைப் பார்த்துப்பூசி
பட்டாலே ஸரஸ்வதியை பார்த்து தலைமயிருதறி
கட்டினாள் ஒரு முடிச்சு கல்யாணிக்கு (ஜெய)
17. பீதாம்பரம் உடுத்தி பெருமை யுள்ளலக்ஷ்மிக்கு
ஆதார மாலையிட்டு அம்மன் அவளே
ஸாதூத மங்கையர்கள் சந்நிதியில் ஸ்தோத்தரித்து
போதுடனெ எழுந்திருக்க வேணுமின்னாள் (ஜெய)
18. பத்துவித மாலையும் கஸ்தூரி திலகத்தை காக்ஷியுடனே
இட்டு சித்தாக குங்குமம் சிறப்பாக இட்டு
விஸ்தாரமான கண்களுக்கு மை எழுதி
பக்தியுடன் சந்தனங்கள் தரித்தார் ஜெய)
19. சுட்டியோடு பட்டமும் சூரியசந்திர பிரபைகளும்
சட்டமான மூக்குத்தி சரப்பள்ளியுடன்
பொட்டு திருமாங்கல்யம் புது பவழமாலைகளும்
மட்டில்லா பூஷணங்கள் எடுத்து நிறைத்தாள் (ஜெய)
20. தண்டையோடு பொற்சிலம்பு கால்சிலம்பு பாடகம்
குண்டு மோகன மாலை கொப்புபோல
நத்து மூக்குத்தியும் நல்ல முத்து புல்லாக்கு
அம்மனுக்கு வேணுமென்று கொண்டு நிறைத்தாள் (ஜெய)
21. மல்லிகை செண்பகம் மணமுள்ள மல்லிகைமகிழம்பூ
வேர்கொழுந்து கொத்தரளி மாலைகளும் சூட மல்லிகை
சித்தாக செந்தாழை சிறுமடலை மாலை
கட்டிவைத்து மலர் சொரிந்தாள் வரலக்ஷ்மிக்கு (ஜெய)
22. கண்ணாடி கொண்டுமே காக்ஷியுள்ள மங்கையர்கள்
முன்னே நின்று காட்ட திருமுகம் தெரியவே
சொன்னபடி அலங்காரம் சுகமாக ஆச்சு
என்று சொல்லி பொன்னான வரலக்ஷ்மி புகழ்ந்து கொண்டாள் (ஜெய)
23. வெளிதனிலே நானிருந்தால் மேதியினியில் உள்ள
வர்கள் கண்பட்டால் திருஷ்டி கடுகிவருமே
கனகமயமாயிருக்கும் காந்தியுள்ள பொற்குடத்தில்
கடுகியிருத்தி வைத்து கருணை செய்யும் (ஜெய)
24. பூஜிக்கும் பெண்களெல்லாம் பக்தியுடனே மகிழ்ந்து
பொன்குடத்தில் முத்து எடுத்துபூக்கள் நிறைத்தார்
கொத்து மாஇலையுடன் தேங்காய் கொண்டாடியே
எடுத்து பிராணப்ரதிஷ்டை பண்ணினார் (ஜெய)
25. மங்கையர் கங்காஜல மெடுத்து வந்து
சிங்கார வரலக்ஷ்மி திருக்கைகளை
சம்பிரமாக பொடி பூசி சதுராகவே நிறுத்தி
அன்புடன் ராஜ உபசாரம் செய்தார் (ஜெய)
26.பேரியோடு மத்தாளம் பெரிய தொரு நாதசுரம்
தவுல் ஜால்ரா சாரஸங்கள் ஊத
அங்கவங்க தவளரஸம் அம்மனுக்கு வேணுமென்று
இன்பமாகவே பொற்குடத்தில் இருந்து கொண்டாள் (ஜெய)
27. தும்புரு நாரதர் சுப வீணை வாசிக்க
ரம்பை திலோத்தமை நாட்டியமாட
சந்ததம் பக்தர்கள் சந்நிதியில் ஸ்தோத்தரித்து
இந்த விரதம்போல உலகத்தில் இல்லை என்றார் (ஜெய)
28. வாத்தியாரை வரவைத்து வரிசையாய் மணை போட்டு
மகிமையுள்ள லக்ஷ்மிகதை மறவாதீர் நீர்
எந்தனுக்கு சொல்லுமென்று இஷ்டமான
மங்கையர்கள் சட்டமாக பூஜிக்க வந்திருந்தார் (ஜெய)
29. மங்கையர் சொன்னபடி மகிழ்ந்த வாத்தியார்
அன்புடனே அம்மன் சொன்ன சொப்பனத்தை
சம்பிரமமாக கல்பமாய் சகல கதை உண்டாக்கி
லக்ஷ்மிகதை சொல்லவே வந்திருந்தார் (ஜெய)
30. பூவினால் பூஜித்து பூலோக நாயகியை
அக்ஷதையால் அர்ச்சித்து ஆனந்தமாய்
பக்ஷமாய் வரலக்ஷ்மி பரதேவதை என்று
இஷ்டமான நைவெத்தியங்கள் எடுத்து நிறைந்தார் (ஜெய)
31. வடையுடனே அதிரசம் வகையான பணியாரம்
கதல ஜம்பூபலம் கனத்த தேங்காய்,
பானகம் வடைப் பருப்பு பஞ்சாமிருதம் தேனும்
இளநீரும் செங்கரும்பும் எடுத்து நிறைந்தார் (ஜெய)
32. அப்பமொடு இட்லி ஆனதொரு மோதகம்
சர்க்கரைப் பொங்கலுடன் சிறுபருப்பு பொங்கல்
கர்ச்சிக்காய் தேங்குழல் கட்டித்தயிர் சால்யான்னம்
பரிபூர்ணமாய் நிவேத்யம் செய்தாள் பாக்கிய லக்ஷ்மிக்கு (ஜெய)
33. அகில தேவர்களே நீர்வந்தது சுபமாச்சு என
சொல்லி போஜன உபசாரங்கள் செய்தார்
வந்தவர் எல்லோரும் ஆனந்தமாகவே
அந்த க்ஷணம் மேளம் அமர்த்தி கையினால் (ஜெய)
34. பந்துக்களோடே பரதேவதை சந்நிதிக்கு
வந்தாளே மங்கள ஹாரத்தி எடுக்க
பொன்னான இருபுறமும் புகழ்ந்து ஜோதிவைத்து
நன்றாக வெளுத்த திரி நனைத்துப் போட்டு (ஜெய)
35. அற்புதமான பசுவின்நெய்யை அழகு அழகாய் வார்த்து
திருவிளக்கை சேர்த்து பிடித்தார்
பொன்னான அந்த நல்ல தாம்பளம் கைபிடித்து
நன்றாகவே சிரசை வணங்கிக்கொண்டு (ஜெய)
36. கல்யாண லக்ஷ்மியைக் காண வேண்டுமென்று
சொன்னாளே மங்கள ஸ்தோத்ர கதையை
அன்னலக்ஷ்மிஅம்மன் ஆதிலக்ஷ்மி அம்மன்
பொன்னுலக்ஷ்மி அம்மன் புகழும் லக்ஷ்மி அம்மன் (ஜெய)
37. தான்யலக்ஷ்மி அம்மன் தனலக்ஷ்மி அம்மன்
சந்தான லக்ஷ்மி சகல லக்ஷ்மி
அஷ்டலக்ஷ்மி அம்மன் எல்லோரும் வந்திருந்து
கஷ்டமெல்லாம் தீர்த்து கண்டவுடனே (ஜெய)
38. பரிமள மணக்கவே பாவையர்கள் பல்லாக்கு
எடுத்து சிம்மாசனத்தில் இளைப்பாறி பின்
வெள்ளெலையும்வெடக்காயும்வெளுத்ததொரு சுண்ணாம்பும்
பல்லையொத்த பச்சக் கற்பூரம் வைத்து (ஜெய)
39. அள்ளி வெண்ணை திருடி ஆனந்தமாய் புசிக்கும்
கள்ள கிருஷ்ணன் தேவியார்க்கு கட்டி கொடுத்தாள்
மடிப்பு டனே வெற்றிலையும் மணக்க நல்ல களிப்பாக்கு
எடுத்து வெள்ளித்தட்டில் வைத்தாள் இன்பமாக (ஜெய)
40. படித்த வேதம் சொல்லும் பக்தியுள்ள ஜனங்களுக்கு
கொடுத்தாளே தாம்பூலம் வகையுடனெ
முதலாக வாத்தியாருக்கு பலகாரம் தக்ஷிணை
வரிசையாய் தாம்பூலம் வைத்துக்கொடுத்தாள் (ஜெய)
41. மட்டில்லா சந்தோஷம் மானிடருக்கு உண்டாக்க
அஷ்ட லக்ஷ்மியுடனே கிருகத்திலிருப்பாளென்று
முத்யால ஹாரத்தி வஜ்ராள ஹாரத்தி
பவழஹாரத்தி பரதேவதைக்கு (ஜெய)
42. மாணிக்க ஹாரத்தி வரலக்ஷ்மி அம்மனுக்கு வரிசையாய்
பூமிதனில் இறக்கிகொண்டு இருக்கவே
வரலக்ஷ்மி இஷ்டமாய் கிருகந்தனில்
பரிபூர்ணமாகவே இருந்து கொண்டாள் (ஜெய)
43. பட்டணத்தோட பாவையர்கள் வந்திருக்க
குணமான ஜனங்களெல்லாம் கூடித்தெருவில்
எஜமானர் முகம்பார்ப்பார் இஷ்டமாக ஸ்தோத்தரிப்பார்
உம்மைப்போல் குணமுடையவர் உலகத்திலில்லை (ஜெய)
44. சாருமதி அம்மனுக்கும் சகல குணசீலர்க்கும்
ஜய ஜய என்று சொல்லி ஜனங்களெல்லாம் சந்தோஷிக்க
வந்தவர்கள் எல்லோரும் மாளிகைக்குபோன பின்
அண்டையில் இருந்து வந்து ஜனங்கள் (ஜெய)
45. சட்டமாய் பலகாரம் தாம்பூலம்தான் தரிச்சு
லக்ஷ்மியின் சந்நிதியில் இளைப்பாறினர்
குன்றெடுத்து காத்தவருக்கும் கோபாலகிருஷ்ணனுக்கு
கோபியரை மயங்கவைத்த கோவிந்தருக்கும் (ஜெய)
46. ஈரேழு விஷ்ணுவிற்கும் எடுத்தப்பட்டம் தரிச்சவருக்கும்
எங்கள் குருநாதருக்கும் ஸ்ரீ பாலா தேவிக்கும்
கலியாண ராமருக்கும் கண்ணனான கிருஷ்ணருக்கும்
ஜெய மங்களா சுப மங்களா !
ஜெய மங்களா சுப மங்களா !
இந்தப் பாடலைத் தவறாமல் நோன்பு மறுநாள் சனிக்கிழமை சாயங்காலம், அம்மனை வழியனுப்பும்போது பாடப்படும் பாடலிது. வரலக்ஷ்மி விரதக் கதை முழுவதும் இந்தப் பாடலில் இருப்பதால், கதை படித்த பலனும் கிட்டும்.
ஓம் மகாலக்ஷ்ம்யை நமஹ !
திங்கள், 10 ஆகஸ்ட், 2020
கல் கருடன் உருவான கதை:-
கல் கருடன் உருவான கதை:-
செங்கட்பெயர் கொண்ட செம்பியர்கோன்* ’ என்றும், ‘ *காவிரிக்கரையெங்கும் எழுபது மாடக் கோயில்களைக் கட்டியவன்’* என்றும் பெயர் பெற்ற *கோச்செங்கட்சோழனின்* அந்த சாம்பல் நிறப்பட்டத்துப் புரவி, அரசலாற்றங்கரையில் வந்து நின்றபோது மாலைப்பொழுது முற்றத் தொடங்கியிருந்தது.
கரையோரத்து மரங்களிலிருந்து கூடு திரும்பிய பறவைகள் எழுப்பிய கூச்சல் எந்த இசைக் கருவியும் எழுப்ப முடியாத இன்னிசையை எழுப்பிக் கொண்டிருக்க, அந்த இரைச்சலை ரசித்தபடியே புரவியை விட்டு இறங்கினான் மன்னன் *செங்கட்சோழன்* .
நெடுநெடு’வென்ற உயரத்துடனும் ஆஜானு பாகுவான தேகத்துடனும், புரவியிலிருந்து இறங்கியவனின் பெயருக்கேற்றபடி சிவந்து கிடந்த விழிகளில் அரசலாற்றங்கரையிலிருந்து வடக்கே பிரிந்த பாதையில் சற்றுத் தொலைவில் இரண்டொரு பந்தங்களும் பத்துப் பதினைந்து குடில்களும் புலப் பட்டன.
புரவியைப் பிடித்தபடி மெல்ல நடந்தவன், குடில்களை நெருங்க நெருங்க, பாதை நன்றாகச் செப்பனிடப்பட்டிருப்பதையும், இரு புறங்களிலும் மலர்ச்செடிகளும் கொடிகளும் நேர்த்தியாகப் பராமரிக்கப்பட்டிருப்பதையும் கவனித்தான்.
அதுமட்டுமின்றி, பாதையின் இரு புறங்களிலும் கல் இருக்கைகள், உடைக்கப்பட்ட சில பாறைகள், யானைகள், குதிரைகள் பறவைகளின் கற் சிற்பங்கள் மட்டுமின்றி, அழகிய பெண்களின் சிற்பங்களும், ஓரிரு மன்னர்களின் சிற்பங்களும் கூடத் தென்பட்டன.
அந்தத் தமிழகத்து மன்னர்களின் சிற்பவரிசையில் தனது சிற்பமும் கூட நிற்பதைக் கவனித்தவன், முகத்தில் முறுவல் ஒன்று நெளிந்தது.
தேவசேனாபதியாரின் சிற்பக் கூடத்தில் பயில வட நாட்டிலிருந்தும்கூட சீடர்கள் வருகிறார்கள் என்றால் அதற்குக் காரண மிருக்கவே செய்கிறது" என்று முணுமுணுத்துக் கொண்டவன், பிரதான மாகத் தெரிந்த குடிலை நெருங்க முற்பட்டான்.
பிரதானக் குடிலின் முன்பாக தரையில் கருங்கல்லால் தளமிடப்பட்டு நடுவில் உயரமான கம்பமொன்றும் நிறுத்தப்பட்டிருந்தது.
மன்னன் அந்தக் கல்தளத்தில் கால்களைப் பதித்து இரண்டொரு அடிகள் நடக்கு முன்பாக, குடில்களின் கதவுகள் திறக்கப்பட்டு ஏந்திய பந்தங்களுடன் சிற்பியாரின் சீடர்கள் வெளிவந்தனர்.
மன்னனை நெருங்கிய சீடர்கள், வந்திருப்பவர் மன்னர் என்பதைக் கண்டு கொண்டதும் அவர்களில் ஒருவன் குடில்களின் வரிசையில் பின்னால் சற்றுத் தள்ளி தெரிந்த பெரும் குடிலை நோக்கிப் பறந்தான்.
சற்று நேரத்தில் சிற்பியார் வெளெரென்ற உடையும், அதைவிட வெளுத்து நீண்டுக் கிடந்த தாடி மீசையும் அரசலாற்றுக் காற்றில் வேகமாக அசைய, அரை ஓட்டமாகவே மன்னனை நோக்கி வந்தார்.
வர வேண்டும், வர வேண்டும் மன்னா..." என்று வரவேற்றவர், முன்னறிவிப்போ உடன் காவலரோ இன்றி தாங்கள் இப்படித் தனித்து வரலாமா" என்று கடிந்துகொள்ளவும் செய்தார்.
மன்னன் முகத்தில் மந்தகாசம் விரிந்தது. ஆசார்யரே, நான் இங்கு மன்னனாக வர வில்லை.
உமது பழைய சீடனாகத்தான் வந்திருக்கிறேன்.
அதுவும் உம்மிடம் ஏற்கெனவே நான் கேட்டிருந்தபடி உதவி கேட்டு" என்றான்.
தமது சீடர்களை நோக்கிய சிற்பி, சீடனே,சென்று கனிகளையும் பாலையும் எடுத்துக் கொண்டு எனது குடிலுக்கு வந்து சேர்" என்று உத்தரவிட்டு மன்னனின் கரத்தைப் பிடித்து அழைத்துக்கொண்டு தமது குடிலை நோக்கி நடந்தார்.
சீடன் கொண்டு வந்த கனிகளையும் பாலையும் அருந்திய மன்னன், சிற்பியை ஏறெடுத்தான்.
மன்னனின் சிவந்த விழிகளில் புலப்பட்ட கேள்வியைப் புரிந்துகொண்ட சிற்பியாரின் முகத்தில் முறுவல் விரிந்தது.
மன்னவா, நீ கேட்டபடி என் சீடனொருவனை உனக்குப் பரிசாக அனுப்பிவைக்கிறேன்.
*முப்பத்தியிரண்டு சிற்ப நூல்களையும், பதினெட்டு உப நூல்களையும்* கரதலப் பாடமாக அறிந்தவன்.
அது மட்டுமல்ல, இரு திங்களாக ‘யந்த்ர சர்வாஸ’ மந்திரத்தையும் உபதேசித்திருக்கிறேன்.
நீ எழுப்பும் அத்தனை ஆலயங்களுக்கும் தேவையான எந்த சிற்பத்தையும் வடித்துத் தரக்கூடியவன்" என்றவர்,
சற்றுத் தள்ளி நின்ற சீடனை நோக்கி, நீ சென்று மயூரசன்மனை அழைத்து வா" என்றார்.
சற்று நேரத்தில் உள்ளே நுழைந்து மன்னனையும் சிற்பி யையும் வணங்கி நிமிர்ந்தவனின் பிராயம் இருபதுக்கு மேலிராது.
கறுத்துச் சுருண்டு தோள்களை எட்டிய குழல்களும், அகன்ற நெற்றியில் சந்தனமும், விழிகளில் தீட்சண்யமுமாக நின்றவனைக் கண்டதும் மன்னன் முகத்தில் திருப்தி தெரிந்தது.
இவன் மயூரசன்மன், எனது பிரதான சீடன். உனது ஆலயப் பணிக்கு இவனை அழைத்துக் கொண்டு போகலாம் மன்னா" என்ற சிற்பி,
முதலில் இவனை எங்கு அழைத்துச் செல்லப் போகிறாய்?" என்றும் வினவினார்.
மன்னனிடமிருந்து பதில் உடனே வந்தது '' *திருநறையூருக்கு* " என்று.
‘ *செந்தளிர் கோதிக் குயில் கூவும்* ’ திருநறையூரின் ஆலயத்தை மன்னனுடன் அடைந்த மயூரசன்மனின் பார்வை திருக்குளத்தை ஒட்டி அடுக்கப்பட்டிருந்த பாறைகளின் மேல் விழுந்தது.
பார்த்தவுடன் அவை *கங்க நாட்டிலும், குவளாலபுரியிலும்* விளையும் நீரோட்டமிக்க அடுக்குப்பாறைகள் என்பது புரிந்தது அவனுக்கு.
மயூரசன்மனின் விழிகள் பாறைகளை வெறிப்பதையும், அவற்றில் விரிந்த கனவையும் கவனித்த மன்னன், அவனை நெருங்கினான்.
மயூரா... ஏன் அந்தப் பாறைகளை அப்படிப் பார்க்கிறா?" என்றான் மன்னன்.
மன்னவா, இந்த ஆலயத்தில் நான் செய்துக்க வேண்டிய சிற்பம் எது?" மயூரனின் பதில் கேள்வியாகவே வந்தது. அவனது குரலும் கனவிலிருந்து ஒலிப்பது போலிருந்தது.
இங்கு எம்பெருமானுக்கு திருமணத்தை நடத்தி வைத்த பெரிய திருவடியான கருடனைத்தான். மூலவரின் உயரமான ஆகிருதிக்கு ஏற்ற வடிவில் வடிக்க வேண்டும்" என்றான் மன்னன்.
மன்னவா, இந்த அடுக்குப் பாறைகள் பூமியின் நீரோட்டங்களுக்கு நடுவிலிருந்தவை.
இவற்றுள் சில வற்றில் நீரோட்டம் கடந்து சென்ற மெல்லிய பாதைகள் இருக்கும்.
அவற்றைத் தேர்ந்தெடுத்து, சுத்தப்படுத்தினால் காற்று ஊடே செல்லும் பாதைகிட்டும்.
காற்று சென்று வரக்கூடிய வழி கிடைத்தால் இவை சுவாசிக்கும் பாறைகளாகும்.
மனிதருக்கு சப்த நாடிகள் உள்ளது போல் இவற்றுக்கும் நாடிகள் உண்டு.
*காற்றை சுவாசிக்கும் எந்த ஜீவனும் பூமியின் விசையை எதிர்த்து நடமாடக்கூடியது.*
நாம் செய்யக் கூடிய சிற்பத்தின் நாசியில் அந்தப்பாதை வருமாறு அமைத்தால், சந்திரனின் ஒளியை உள்வாங்கும் சந்திர காந்தக் கல்லைப்போல் இவை பூமியின் விசைக்கெதிராக சக்தி பெறும்.
பின்னர், ‘ *யந்திரசர்வாஸ* ’ மந்திரமும் வடிக்கும் சிற்பத்துக்குண்டான மந்திரத்தையும் பிரயோகிக்கும்போது அவை உயிர்பெற்று விடும்."
மன்னனுடன் ஆலயத்துள் நுழைந்த மயூரசன்மன் மூலவரின் இடப்புறம் உள்ள பகுதியைத் தேர்ந்தெடுத்தான்.
மன்னவா, அந்தப் பாறைகளைக் கொண்டு இங்கு மண்டபத்தை அமைக்கிறேன். இங்கிருந்து பிராகாரத்தில் இறங்கும் வழிநெடுக நான் கூறும்படி அந்தப் பாறைகளைக் கொண்டு பாதை அமைத்து விடுங்கள்.
மண்டபத்தின் பீடத்தில் பூமியின் விசை எதிர்ப்புறம் இருக்கும்படி அமைத்து விட்டால், கருட சிற்பத்தின் எடை மிகக் குறைவாகவே இருக்கும்.
அதே பாறைகளைக்கொண்டு வெளிப் பிராகாரம் வரை பாதையாக அமைத்து விடலாம்" என்றான் மயூரசன்மன்.
சரி மயூரா, அதனால் என்ன நிகழும்?" என்றான் மன்னன்.
மயூரசன்மனின் விழிகள் மின்னின.
மன்னா, மூலவரின் உயரத்துக்கும் ஆகிருதிக்கும் ஏற்றபடி சுமக்கும் கருடனுக்கும் உருவம் அமைத்தால் ஆயிரம் மடங்கு எடையும் அதிகமாக இருக்கும்.
ஆனால், அந்த எடை இந்த மண்டபத்தில் பத்து மடங்கு குறை வாகவே இருக்கும்.
கருடன் புறப்பாடு காணும் போது கருடனைத் தூக்க நால்வரே போதும்.
மண்ட பத்தை விட்டுக் கீழிறங்கினால் தூக்குபவர் எண்ணிக்கை இரு மடங்காக வேண்டும்.
பாதை நெடுக நான் அமைக்கும் அடுக்குப்பாறைத் தளத்தில் ஈர்ப்பு விசை பாதிப்பாதியாகக் குறைந்துகொண்டே வரும்.
எனவே, மேற்கொண்டு செல்லச் செல்ல கருடன்தன் சுய எடையைப் பெற்றுவிடுவார்.
அப்போது தூக்கு பவர் எண்ணிக்கையும் இரண்டிரண்டு மடங்காக உயர்ந்துகொண்டே செல்லும்.
மீண்டும் மண்டபத் துக்குத் திரும்பி வரும்போது அதே எண்ணிக்கையில் எடை குறைந்துகொண்டே வரும்" என்றான் மயூரசன்மன்.
செங்கட்சோழனின் முகத்தில் மலர்ச்சி தெரிந்தது. அப்படியே செய்துவிடு மயூரா. உனக்கு உதவியாக கல் தச்சர்களையும், ஆட்களையும் இப்போதே ஏற்பாடு செய்கிறேன்" என்றான் மன்னன்.
தமிழகத்தின் சிற்பக்கலை அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் மயூரசன்மன் வடித்த அந்தக் கல் கருடன் இன்றளவும் அப்படியே நாச்சியார் கோயில் என்று அழைக்கப்படும் திருநறையூரில் நிற்கிறது.
மார்கழியிலும் பங்குனியிலும் பிரம்மோத்ஸவம் நடைபெறுகிறது.
கருட சேவையின்போது பிரம்மாண்டமான அந்தக் கல் கருடனை முதலில் நால்வரும்,
மண்ட பத்தை விட்டு இறங்கியதும் எண்மரும்,
பின் வெளிப் பிராகாரத்துக்கு வரும்வரை இரண்டிரண்டு மடங்காக அறுபத்திநான்கு பேர் வரை தூக்கி வர வேண்டியிருக்கிறது.
அதுமட்டுமின்றி, ஆலயத்தை விட்டு வெளி வந்ததும், கல் கருடனின் மேனியில் மனிதர்களைப் போல் வியர்வை வழியத் தொடங்குகிறது.
நமது *ஆன்மிகமும்* , *அறிவியலும்* எவர்க்கும் குறைந்தது இல்லை என்பது மீண்டும், மீண்டும் உணர்த்துகிறது..
ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020
ஸ்ரீ வைத்யநாதாஷ்டகம்
தீராத நோய் தீர்க்கும் ஸ்ரீ வைத்யநாதாஷ்டகம்.
இந்த துதியை பாராயணம் செய்தால் தீராத நோயெல்லாம் வைத்தீஸ்வரன் திருவருளால் தீரும். ஒவ்வொரு ஸ்லோகத்தையும் பாராயணம் செய்தவுடன் வைத்தீஸ்வரனை நினைத்து ஒரு நமஸ்காரம் செய்தால் அதிக பலன் கிடைக்கும் என்பது சான்றோர்கள் கருத்து.
ஸ்ரீராமஸௌமித்ரி ஜடாயுவேத
ஷடானனாதித்ய குஜார்ச்சிதாய
ஸ்ரீநீலகண்டாய தயாமயாய
ஸ்ரீவைத்யநாதாய நம: ஸிவாய
ஸ்ரீராமன், லட்சுமணன், ஜடாயு, நான்கு வேதங்கள், ஆறுமுகன், சூரியன் மற்றும் தனது ரோகத்தைப் போக்கிக்கொள்ள விரும்பிய அங்காரகன் போன்றவர்களால் பூஜிக்கப்பட்டவரும், விஷத்தைக் கண்டத்தில் தரித்தவரும், கருணையே வடிவானவருமான ஸ்ரீ வைத்யநாதன் எனும் பரமசிவனை நமஸ்கரிக்கிறேன்.
கங்காப்ரவாஹேந்து ஜடாதராய
த்ரிலோசனாய ஸ்மரகாலஹந்த்ரே
ஸமஸ்த தேவைரபி பூஜிதாய
ஸ்ரீவைத்யநாதாய நம: ஸிவாய
கங்கையின் பிரவாகத்தை சிரசில் தாங்கியவரும், சந்திர மண்டலத்தையும் சிரசில் தரித்தவரும், மூன்று கண்களை உடையவரும், மன்மதனையும் காலனையும் வதம் செய்தவரும், எல்லா தேவர்களாலும் பூஜிக்கப்பட்டவருமான ஸ்ரீ வைத்யநாதன் என்ற பரமசிவனை நமஸ்கரிக்கிறேன்.
பக்தப்ரியாய த்ரிபுராந்தகாய
பினாகினே துஷ்டஹராய நித்யம்
ப்ரத்யக்ஷலீலாய மனுஷ்யலோகே
ஸ்ரீவைத்யநாதாய நம: ஸிவாய
பக்தர்களிடத்தில் அன்பு கொண்டவரும், திரிபுர ஸம்ஹாரம் செய்தவரும், பினாகம் என்ற வில்லை தரித்தவரும், தினமும் துஷ்டர்களை ஸம்ஹாரம் செய்கிறவரும், மனிதர் வாழும் உலகத்தில் எல்லோருக்கும் புலப்படும்படியாகப் பலவித லீலைகளைச் செய்தவருமான ஸ்ரீ வைத்யநாதன் என்ற பரமசிவனை நமஸ்கரிக்கிறேன்.
ப்ரபூதவாதாதி ஸமஸ்தரோக
ப்ரணாஸகர்த்ரே முனிவந்திதாய
ப்ரபாகரேந்த்வக்நிவிலோசனாய
ஸ்ரீவைத்யநாதாய நம: ஸிவாய
பாதம் முதல் தலை வரையிலும் ஏற்படக்கூடிய எந்த ஒரு நோயையும் நாசமாக்குகிறவரும், மகரிஷிகளால் ஆராதிக்கப்பட்டவரும், சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூவரையும் முக்கண்களாகக் கொண்டவருமான ஸ்ரீ வைத்யநாதன் எனும் பரமசிவனை நமஸ்கரிக்கிறேன்.
வாக்ஸ்ரோத்ர நேத்ராங்க்ரி விஹீனஜந்தோ:
வாக்ஸ்ரோத்ர நேத்ராங்க்ரி முகப்ரதாய
குஷ்டாதி ஸர்வோன்னதரோ கஹந்த்ரே
ஸ்ரீவைத்யநாதாய நம: ஸிவாய
பேச்சுப் புலன், காது, கண், கால் முதலிய அங்கங்களை இழந்தவருக்கு அவற்றை மீண்டும் கொடுத்து சுகத்தை அளிப்பவரும், குஷ்டம் முதலிய மிகப் பெரியதான ரோகங்களைப் போக்குகின்றவருமான ஸ்ரீவைத்யநாதன் என்ற பரமசிவனை நமஸ்கரிக்கின்றேன்.
வேதாந்த வேத்யாய ஜகன்மயாய
யோகீஸ்வரத்யேய பதாம்புஜாய
த்ரிமூர்த்திரூபாய ஸஹஸ்ரநாம்னே
ஸ்ரீவைத்யநாதாய நம: ஸிவாய
வேதாந்தங்களால் அறியத் தகுந்தவரும், உலகில் உள்ள எல்லா பொருட்களுமாக இருப்பவரும், யோகீஸ்வரர்களால் தியானம் செய்யத்தக்க சரணங்களை உடையவரும், பிரம்ம-விஷ்ணு வடிவாய் விளங்குபவரும், ஆயிரம் நாமங்களை உடையவருமான ஸ்ரீ வைத்யநாதன் எனும் பரமசிவனை நமஸ்கரிக்கின்றேன்.
ஸ்வதீர்த்தம்ருத் பஸ்மப்ருதங்கபாஜாம்
பிஸாசது:க்கார்த்திபயாபஹாய
ஆத்மஸ்வரூபாய ஸரீரபாஜாம்
ஸ்ரீவைத்யநாதாய நம: ஸிவாய
தனது தீர்த்தமாகிய சித்தாம்ருத தீர்த்தத்தில் நீராடுவதாலும், தனது வைத்தீஸ்வரன் கோயிலில் கொடுக்கப்படும் மருந்து உருண்டைகளாலும், தனது விபூதியினாலும், தன் கோயிலில் உள்ள வேப்பமரத்தின் அடியிலுள்ள மண்ணினாலும், தனது குளத்து மண்ணினாலும், பிசாசு, ரோகம் போன்ற துக்கங்களையும் மனக் கவலையையும், பயத்தையும் போக்குகின்றவரும் சரீரத்தை அடைந்தவர்களுக்கு அந்தராத்மாவாய் இருப்பவருமான ஸ்ரீ வைத்யநாதன் என்ற பரமசிவனை நமஸ்கரிக்கின்றேன்.
ஸ்ரீநீலகண்டாய வ்ருஷத்வஜாய
ஸ்ரக்கந்த பஸ்மாத்யபிஸோபிதாய
ஸுபுத்ரதாராதி ஸுபாக்யதாய
ஸ்ரீவைத்யநாதாய நம: ஸிவாய
விஷம் அருந்தியதால் நீலமான கண்டத்தை உடையவரும், ரிஷபத்தை வாகனமாகக் கொண்டவரும், மாலை, சந்தனம், விபூதி ஆகியவற்றால் பிரகாசிக்கின்றவரும், நல்ல மனைவி, நல்ல குழந்தைகள் என்ற நல்ல பாக்கியங்களைக் கொடுக்கின்றவருமான ஸ்ரீ வைத்யநாதன் என்ற பரமசிவனை நமஸ்கரிக்கின்றேன்.
வாலாம்பிகேச வைத்யேச
பவரோக ஹரேதிச
ஜபேந் நாமத்ரயந் நித்யம்
மஹாரோக நிவாரணம்
(மேலே சொல்லப்பட்ட எட்டு ஸ்லோகங்களை உளமாறச் சொல்வோருக்கு) வாலாம்பிகைக்கு நாதனானவரும், வைத்தியர்களிலேயே மிகவும் சிறந்தவரும், ஜனன, மரணமென்ற ரோகத்தைப் போக்குகின்றவரும் ஆகிய வைத்யநாதரின் மூன்று நாமாக்களையும் (வாலாம்பிகேச, வைத்யேச, பவரோக ஹரேதிச) தினமும் ஜபிப்பவர்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய கொடிய நோய்கள் விலகும். இந்த அஷ்ட ஸ்லோகம் மகான்களால் தொன்று தொட்டு ஜபிக்கப்பட்டு வருகிறது என்பதே இதன் சிறப்பை விளக்கவல்லது.