சநாதன தர்மம் என்று சொல்லப்படும் நம் இந்து மதம் சிறந்தது என்று ஏன் சொல்கிறார்கள்?
1. நமது மதம் தத்துவங்களை ஆதாரமாக கொண்டது.
எந்த மகானையோ மனிதர்களையோ ஆதாரமாக கொள்ளவில்லை. பிற மதங்கள் அந்த மதத்தை தோற்று வித்த மனிதர்களை ஆதாரமாக கொண்டது.
2.நமது மதத்தின் முடிவுகள் இன்றைய விஞ்ஞானிகளின் இன்றைய கண்டு பிடிப்புகளுக்கு ஒத்து இருக்கிறது.
உதாரணமாக
1. சூன்யத்திலிருந்து எந்த பொருளையும் படைக்க முடியாது, சூன்யத்திலிருந்து பிரபஞ்சத்தை படைக்க முடியாது.
2. அனைத்தும் வட்டம் போல உள்ளது. முட்டையிலிருந்து குஞ்சு, குஞ்சுவிலிருந்து முட்டை இதே போல் சுழற்சி. பிரபஞ்சமும் தோற்றம், ஒடுக்கம், தோற்றம் ஒடுக்கம் என்று தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.
3. ஒரு சக்தி தான் இன்னொரு சக்தியாக மாறுகிறதே தவிர சூன்யத்திலிருந்து புதிதாக சக்தியை உருவாக்க முடியாது.
4. ஒரு உயிர் தான் இன்னொரு உயிராக பரிணமிக்கிறது. ஓர் அறிவு, ஈர் அறிவு என்று அறிவு படிப்படியாக விரிந்து உயர் நிலையாக மனிதனாக பரிணமிக்கிறது.
5. இந்த உலகில் எப்போதும் இரண்டு சக்திகள் உள்ளன கவர்தல் சக்தி மற்றும் விலக்கும் சக்தி.
6. இந்த உலகிற்கு எது தேவையோ அதை இந்த உலகமே உருவாக்கி கொள்ளும் படைப்பாற்றல்.
7. தொடர் மாற்றம் பற்றிய கருத்து இன்று நமது உடலில் உள்ள அணுக்கள் நாளை இன்னொருவரின் உடலுக்குள் செல்கிறது.
இவ்வாறு உடல் தொடர்ந்து மாறுகிறது.
அதே போல் மனமும் மாறிக்கொண்டே இருக்கிறது.
ஆனால் நாம் மாறுவதில்லை
8. உடலும், மனமும் ஜடப்பொருள் உணர்வு இல்லாதது. ஆனால் இந்த இரண்டையும் இயக்குவது உணர்வுப்பொருள்.
9. அனைவரின் மனமும் பிரபஞ்ச மனத்துடன் இணைக்கப்பட்டுள்ளன .
இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம். விஞ்ஞானம் நம்மிடமிருந்து இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம் உள்ளன.
3. நமது மதம் வேதங்களை ஏற்றுக்கொண்டுள்ளது. வேதங்கள் மனிதர்களால் எழுதப்படவில்லை. அவைகளின் மொழி சமஸ்கிருதம் இல்லை. அவை வேதமொழி. வேதங்கள் இது வரை எழுதப்படவில்லை. இறைவனின் வார்த்தைகளே வேதம்.
4. நமது மதம், இது வரை உலகில் தோற்றிய அனைத்து மதங்களையும், இனி தோற்றப்போகின்ற அனைத்து மதங்களையும் உள்வாங்கிக்கொள்ளும் மஹா சமுத்திரம் போல உள்ளது. அதாவது இதில் இல்லாத எந்த புதிய கருத்துக்களையும் வேறு மதத்தில் நீங்கள் காண முடியாது.
5. நமது மதத்தில் மட்டுமே மனிதன் இறைவனாக மாற முடியும் என்ற கருத்து உள்ளது. அவ்வாறு இறைவனுடன் ஒன்று கலக்கும் முக்தி நிலை பற்றி கருத்து இங்கு மட்டுமே உள்ளது.
6. உலகின் இது வரை கண்டு பிடிக்கப்பட்ட மிக உயர்ந்த தத்துவமான அத்வைத தத்துவம் வேறு மதங்களில் இல்லை.
7. நமது மதம், கடவுள் நன்மை, தீமை இரண்டையும் கடந்தவர் என்கிறது.
மற்ற மதங்களில் கடவுள் நல்லவர் என்று மட்டுமே சொல்லப்பட்டுள்ளது.
தீமையை அவரால் தடுக்க முடியாது. அவர்களை பொறுத்தவரை சாத்தான் என்பது கடவுளுக்கு கட்டுப்படாத தன்னிச்சை பெற்ற வேறு ஒரு சக்தி
8. நமது மதத்தில், மறு பிறப்பு பற்றிய கருத்து உள்ளது. ஒரு உயிர் பரிணாமம் அடைந்து வேறு உயிர்களாக மாறுவதை ஏற்றுக்கொள்கிறது. இது விஞ்ஞானிகளின் கருத்துக்கு ஒத்துவருகிறது. ஒரு உயிர் இன்னொரு உயிராக பரிமணமிப்பதை அவர்கள் ஒத்துக்கொள்கிறார்கள். ஆனால் அதை மறுபிறப்பு என்று சொன்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லையே…
9. நமது மதத்தின் கடவுள், அனைத்து இனங்களின், அனைத்து உயிர்களின் கடவுள். மனிதர்களுக்கு மட்டுமல்ல விலக்குகளுக்கும் அவரே கடவுள். அவர் மனிதர்களை மட்டும் நேசிப்பவரல்ல, இந்த உலகில் உள்ள அனைவரையும் நேசிப்பவர். அவர் நல்லவர்களை நேசிக்கிறார், தீயவர்களை வெறுக்கிறார் என்று கருத்து நமது மதத்தில் இல்லை. அவர் அனைவரையும் சமமாக நேசிக்கிறார்.
10. நமது மதத்தில் கர்மா தியரி இருக்கிறது. அதாவது ஒரு செயல் அதற்கு சமமான எதிர் செயலை உருவாக்கும். ஒருவர் துன்படுவதற்கு காரணம், அவர் அதற்கு முன்பு செய்த தீய செயல். இனி ஒருவர் இன்பமாக இருக்க என்ன செய்ய வேண்டும்? இனிமேல் நல்ல செயல்கள் செய்ய வேண்டும். இவ்வாறு மனிதனின் இன்பத்திற்கும், துன்பத்திற்கும் மனிதனே காரணமாகிறான்.
11. பிறமதங்களில் மனிதன் சூன்யத்திலிருந்து தோன்றினான் என்று சொல்கிறது. நமது மதம் மனிதன் இறைவனிலிருந்து தோன்றினான்,
இறைவனில் வாழ்கிறான், இறைவனில் ஒடுங்கி முடிவில் இறைவனாகிறான் என்கிறது.
12. எல்லையற்ற காலம் பற்றிய கருத்து நமது மதத்தில் மட்டுமே உள்ளது.
அதாவது இந்த பிரபஞ்சம் எல்லையற்ற காலம் வரை தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். ஒரு நாள் திடீரென தோன்றியது. ஒரு நாள் திடீரென அழிந்து விடும் என்ற கருத்து இல்லை. நாம் காலத்தை கடந்து வாழ்ந்து கொண்டே இருப்போம்.
13. ஆன்மாவுக்கு உருவம் இல்லை. அதே போல் இறைவனுக்கும் உருவம் இல்லை என்ற கருத்து நமது மதத்தில் மட்டுமே உள்ளது. மற்ற மதங்களின் கடவுள் ஏதோ ஒரு உருவத்தை உடையவராகவே இருக்கிறார். உருவங்களுக்கு அழிவு உண்டு என்று நமது மதமும், விஞ்ஞானமும் கூறுகிறது. அதன் படி பார்த்தால் மற்ற மதங்களின் இறைவன் ஒரு நாள் அழிந்துவிடுவார்.
14. நமது மதத்தில் மனிதன் இந்த வாழ்க்கையிலேயே முக்தியடைய முடியும் என்று சொல்கிறது. மற்ற மதங்களில் மனிதன் இறந்த பிறகு கல்லறையில், கடைசி நாள் வரும் வரை காத்திருக்க வேண்டும். நமது மதத்தின் சிறப்புகளை இன்னும் பக்கம் பக்கமாக அடுக்கிக்கொண்டே போகலாம்…