வெள்ளி, 25 அக்டோபர், 2019

நரஸிம்ஹ பாரதி சுவாமிகள்!

ஸ்ரீ சாரதா பீடத்தை தமக்குப் பின் சிறப்புடன் நிர்வகிக்க தக்கதொரு சீடர் தேடியும் கிடைக்காத நிலையில் அம்பிகையைச் சரணடைந்த நரஸிம்ஹ பாரதி சுவாமிகள் ஸ்தலத்தை விட்டுச் செல் என்ற அம்பிகையின் மொழியைக் கேட்டு அதன் பொருள் என்னவாக இருக்கும் எனச் சிந்தித்தார். மகான்களைப் பொறுத்தவரை ஸ்தலம் என்பது அவர்களுடைய தூல சரீரத்தையும் குறிப்பதாகும். எனில் தம்முடைய தூல சரீரத்தை விட்டுவிடச் சொல்லுகிறாளா அம்பிகை? அப்படி நினைத்த பொழுதில் சரீரத்தை உடனே துறந்து விடுவது என்பது சாத்தியம் இல்லையே! அப்படியே தம் யோக பலத்தால் அது சாத்தியப்பட்டாலும் கூட சாந்நித்தியம் நிரம்பப் பெற்ற பீடமாம் சாரதா பீடத்தை நிர்வகிக்கத் தக்கதொரு சீடர் கிடைக்க வேண்டுமல்லவா? அதற்குத்தானே இத்தனை பிராயத்தனமும் பிரார்த்தனையும்! இப்படி அவர் மிகுந்த பிரயத்தனம் செய்வதற்கும் அம்பிகையைப் பிரார்த்தனை செய்வதற்கும் காரணம் இல்லாமல் இல்லை.

நரஸிம்ஹ பாரதி சுவாமிகள் தமது 21 வது வயதிலேயே சாரதா பீடத்தின் பீடாதிபதி ஆனபடியாலும் தொடர்ந்து வந்த ஆறாவது நாளிலேயே அவருடை குரு அபிநவ ஸச்சிதானந்த பாரதி சுவாமிகள் ஸித்தி அடைந்து விட்டபடியாலும் பீடத்திற்குரிய சம்பிரதாயங்களை நன்கு தெரிந்து கொள்வதற்குச் சந்தர்ப்பம் இல்லாமலே போய் விட்டது. இருந்தாலும் விவரம் தெரிந்தவர்களிடம் இருந்து அனைத்துச் சம்பிரதாயங்களையும் தெரிந்து தெளிவு பெற்றார். தமக்குப் பின் பீடாதிபதி பொறுப்பை ஏற்றுக்கொள்பவருக்கு அப்படி ஒரு சிரமமான நிலை இருக்கக் கூடாது என்று நினைத்தார். அதனால் தான் தாம் தேக ஆரோக்கியத்துடன் இருக்கும் போதே தக்கதொரு சீடரைத் தேர்வு செய்யத் தொடங்கினார். ஆனால் அம்பிகையோ அவரை ஸ்தலத்தை விட்டுச் செல் என்கிறாளே! மேலும் சிந்தித்தவருக்கு ஸ்தலத்தை விட்டுச் செல் என்பதற்கு மற்றுமொரு பொருளும் விளங்கியது. சாரதா பீடத்தை விட்டுச் சிறிது காலம் வெளியே செல்ல வேண்டும் என்பது அம்பிகையின் விருப்பம் போலும் என்று பொருள் விளங்கிக்கொண்டவர். தாம் சிறிது காலம் மைசூர் சமஸ்தானத்தில் தங்கி வரலாம் என்று முடிவு செய்தார்.

அப்போது மைசூர் சமஸ்தானத்தை ஆட்சி செய்து வந்தவர் மும்முடி கிருஷ்ணராஜ உடையார். சிருங்கேரி சாரதா பீட ஆச்சார்யர்களை ராஜ குருவாகப் போற்றி வழிபட்ட வம்சம் மைசூர் அரச வம்சம். வம்ச வழி மாறாமல் கிருஷ்ணராஜ உடையாரும் நம் நரஸிம்ஹ பாரதி சுவாமிகளிடம் அளவற்ற பக்தியும் விசுவாசமும் கொண்டிருந்தார். சுவாமிகள் சாரதா மடத்துக்கு தக்கதொரு சீடரைத் தேடிக்கொண்டிருப்பதாகத் தெரிந்து கொண்டவர் ஜோதிடர்களின் ஆலோசனையுடன் பல ஜாதகங்களைப் பெற்று சுவாமிகளுக்கு அனுப்பி வைத்தார். ஒன்றும் சரிவரப் பொருந்தி வராததால் தான் இத்தனை பிரயத்தனம்! நரஸிம்ஹ பாரதி சுவாமிகள் மைசூர் சமஸ்தானத்துக்கு விஜயம் செய்ய இருப்பதாக ஸ்ரீமுகம் அனுப்பப்பட்டது. ஆசார்ய சுவாமிகளின் வருகை பற்றித் தெரிய வந்ததும் சர்வ சக்தியும் யோக ஸித்தியும் பெற்றிருந்த மகானை சாஸ்த்ரோக்தமாக பூரண கும்ப மரியாதைகளுடன் வரவேற்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கி விட்டார் மைசூர் மன்னர். நரஸிம்ஹ பாரதி சுவாமிகள் ராமேஸ்வரத்தில் சர்வதீர்த்தத்துக்கு மகிமை சேர்த்தவர் அல்லவா! அவரை வரவேற்க மந்திர புஷ்ப மந்திரத்தால் புனிதம் பெற்ற தீர்த்தம் நிரம்பிய பூரண கும்ப மரியாதை பொருத்தம் தானே! அது என்ன சர்வதீர்த்தத்துக்கு மகிமை சேர்த்த சம்பவம்? நரஸிம்ஹ பாரதி சுவாமிகள் சாரதா பீடத்தின் பீடாதிபதியானதும் தேசத்தின் பல இடங்களுக்கும் யாத்திரை சென்றார். அந்த வகையில் ஒரு முறை சிருங்கேரியில் இருந்து விஜய யாத்திரை மேற்கொண்டவர் காளஹஸ்தி, திருப்பதி, காஞ்சி, சிதம்பரம், கும்பகோணம், ஸ்ரீரங்கம் போன்ற திவ்விய க்ஷத்திரங்களைத் தரிசித்தபடி 1838 ம் ஆண்டு ராமேஸ்வரத்துக்கு விஜயம் செய்தார். ராமேஸ்வர கோயிலின் வடக்குப் பக்கத்தில் கோடி தீர்த்தம் என்று ஒரு தீர்த்தம் இருக்கிறது. ராமேஸ்வர யாத்திரை மேற்கொள்பவர்கள் கோயிலில் உள்ள அனைத்து தீர்த்தங்களிலும் ஸ்நானம் செய்து நிறைவாக இந்த கோடி தீர்த்தத்திலும் ஸ்நானம் செய்வதுடன் அந்தத் தீர்த்த நீரை சிறிது எடுத்துக்கொண்டு தங்கள் ஊருக்குச் சென்று கோடி தீர்த்த சமாராதனை என்று செய்வது மரபு!

இந்த கோடி தீர்த்தம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட சிலரின் கட்டுப்பாட்டில் இருந்தது.கோடி தீர்த்தத்தில் ஸ்நானம் செய்ய வருபவர்களிடம் காலணா பெற்றுக்கொண்டு அவர்களாகவே ஒரு குடம் நீரை எடுத்து யாத்ரீகர்களிடம் கொடுப்பார்கள். ராமேஸ்வர விஜயத்தின் போது நம்முடைய மகான் நரஸிம்ஹ பாரதி சுவாமிகள் கோடி தீர்த்தத்துக்குச் சென்ற போது அவரிடமும் அதே போல் காலணா கொடுக்க வேண்டும். என்றும் தாங்கள் தான் நீரை எடுத்து கொடுப்போம் என்றும் கூறினார்கள். சுவாமிகளுடன் வந்தவர்கள் சுவாமிகளைப் பற்றி எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கூட  அவர்கள் கேட்பதாயில்லை. சுவாமிகள் எதையும் பொருட்படுத்தவில்லை. அவருடைய பார்வையில் சற்றுத் தொலைவில் இருந்த சர்வ தீர்த்தம் தென்பட்டது. அதுவும் சாரதையின் திருவுள்ளம் தான் போலும்! உடனே தம்முடன் வந்த பரிவாரங்களைப் பார்த்து ஏன் வீணாக வீவாதம் செய்ய வேண்டும்? அதோ பாருங்கள் சர்வ தீர்த்தம்! கோடி தீர்த்தம் என்பது கோடி என்ற எண்ணிக்கைக்குள் அடங்கி விட்டது ஆனால் சர்வ தீர்த்தமோ எல்லைகள் அற்றது அல்லவா! கோடி தீர்த்தமும் அதனுள் அடக்கதான். எனவே வாருங்கள் நாம் எல்லோரும் சர்வ தீர்த்தத்தில் ஸ்நானம் செய்யலாம். என்று கூறவே சுவாமிகளும் அவருடன் வந்தவர்களும் மட்டுமல்லாது மற்றவர்களும் சர்வ தீர்த்தத்துக்கே சென்று ஸ்நானம் செய்தனர்.

இந்த நிகழ்ச்சி எங்கும் பரவி விட்டது. அதன் பின் ராமேஸ்வர யாத்திரை மேற் கொள்பவர்கள் எல்லோரும் சர்வ தீர்த்தத்தில் நீராடுவதையே வழக்கமாகக் கொண்டதால் கோடி தீர்த்தம் தன்னுடைய முக்கியவத்துவத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கத் தொடங்கியது. கோடித் தீர்த்தத்தின் மூலம் தங்கள் ஜீவனத்தை நடத்தி வந்த அந்தக் குறிப்பிட்ட பிரிவினர் மிகுந்த சிரம நிலைக்கு ஆட்பட்டார்கள். அத்துடன் கோடி தீர்த்தத்திலும் புதர்கள் மண்டி மூடத் தொடங்கி விட்டது. ஆனால் இந்த நிலை வெகு காலம் நீடிக்கவில்லை. காரணம் கோடி தீர்த்தமும் ஒரு புண்ணிய தீர்த்தம் அல்லவா? யாரோ சிலரின் அறியாமை காரணமாக அது தன் மகிமையை முக்கியத்துவத்தை இழக்கலாமா? நம் சுவாமிகள் மூலமாக சர்வ தீர்த்தத்துக்குப் பெருமை சேர்த்த சாரதாம்பிகை மீண்டும் நம் சுவாமிகளைக் கொண்டே கோடி தீர்த்தமும் மங்கிய தன் மகிமையையும் பொலிவையும் திரும்பப் பெறும்படியாகச் செய்தாள்.

நரஸிம்ஹ பாரதி சுவாமிகள் சர்வதீர்த்தத்துக்கு ஒரு மகிமை சேர்த்துச் சென்றதில் இருந்து சுமார் 35 வருடங்கள் கோடி தீர்த்தமானது தன் மகிமையையும் பொலிவையும் இழந்தே காணப்பட்டது. இந்த நிலையில் தான் 1873 ம் வருடம் மதுரைக்கு விஜயம் செய்தார் நரஸிம்ஹ பாரதி சுவாமிகள். கோடி தீர்த்தத்துக்கு உரிமை கொண்டாடிய அந்தக் குறிப்பிட்ட பிரிவினர் தங்கள் சிரம நிலை தீரவேண்டுமானால் உடனே மதுரைக்குச் சென்று சுவாமிகளைத் தரிசித்து தங்கள் வழி என்று முடிவு செய்து மதுரைக்குச் சென்றார்கள். சுவாமிகளை நேரில் தரிசித்ததும் அவருடைய திருவடிகளில் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார்கள். நடப்பது எல்லாமே சாரதாம்பிகையின் லீலை தான் என்பது சுவாமிகளுக்குத் தெரியாதா என்ன? தாம் விரைவிலேயே ராமேஸ்வரம் வருவதாகக் கூறியவர். அதேபோல் ராமேஸ்வரத்துக்கு வருகை புரிந்தார். நேராக சர்வ தீர்த்தத்துக்குச் சென்று ஸ்நானம் செய்து விட்டு தம் கமண்டலத்தில் சிறிது சர்வ தீர்த்தத்தையும் எடுத்து கொண்டு தமது பரிவாரங்களுடன் கோடி தீர்த்தத்துக்கு வந்தார். அதற்குள் கோடி தீர்த்தத்தில் மண்டிக்கிடந்த புதர்களெல்லாம் களையப்பட்டு சீர்செய்யப்பட்டிருந்தன.

கோடி தீர்த்தத்தின் அருகில் சென்ற சுவாமிகள் அம்பிகை சாரதையை தியானித்தபடி தம் கமண்டலத்தில் இருந்த சர்வ தீர்த்த நீரை கோடி தீர்த்தத்தில் ப்ரோக்ஷணம் செய்தார். பின்னர் தாம் அருகில் ஸ்நானம் செய்வதுடன் தம்முடைய பரிவாரங்களையும் ஸ்நானம் செய்ய வைத்தார். இவ்விதமாக கோடி தீர்த்தமானது இழந்த தன் பொலிவையும் மகிமையையும் முன்னிலும் அதிகமாகப் பெற்றது. சர்வ தீர்த்தத்துக்கு மகிமை சேர்த்தவரும் கோடி தீர்த்தம் தன் இழந்த பெருமையை மீண்டும் பெறச் செய்தவருமான சுவாமிகளை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை மைசூர் மன்னர் மிகச் சிறப்பாகச் செய்திருந்தார். அந்த மைசூரில் தான் சுவாமிகள் எதிர்பார்த்துக் காத்திருந்த சாரதா பீடத்துக்கான வாரிசைச் சந்திக்க நேர்ந்தது?

வியாழன், 24 அக்டோபர், 2019

Sabarimala Shree Ayyappan Temple

Lord Ayyappa is not mentioned in Puranas but Sasta, a synonym of Ayyappa, is in a Vedic hymn, as the killer of Jalandhara. There is mention about Bhoothanatha/Sastha in Brahmapurana and the name of Sasta occurs in Mahabharata also. The name of Ayyappa or Harihara Suta, the son of Hari and Hara, is nowhere found as a deity admitted in the Purnaic pantheon. Researches done in the history of south Indian rituals and religions unveil the fact that Ayyan and Amman are the two most venerated deities of the ancient Dravidians. Ayyan means literally a noble man, the term being a corruption of the Sanskrit word Aryan. In Prakrit languages it becomes ajja, atta or ayya. In Malayalam the term for father 'achan' obviously come from ajja, the corrupt word of Arya. Therefore the term 'Ayyan' is now used as a word of respect to denote father, revered person or brahmin. Adding the honorific formative 'ar' to Ayyan, it becomes 'ayyanar, who is believed to be the guardian deity of the villages of Tamilnadu. Even today you see temples of Ayyanar throughout Tamilnadu with huge statues of the deity installed on horseback. As village-guardian this deity is held in high esteem by the people. He is bestowed with many powers.

AYYAPPAN know as AYYAN who belonged to the Vellalar Kulam, was the army chief of the Pandalam royal family. He lived with his uncle Perisseri Pillai of Erumeli, Kottayam dist, Kerala. This was about ten generations ago.
Ayyan was instrumental in the defeat of Udayanan, who attacked Sabarimala and tried to demolish the ancient Sastha temple in the thick forest of present Pathanamthitta district.

Meanwhile the Royal family of King Pandya had migrated from Tamilnadu about 800 years back. The King reconstructed the destroyed Sastha temple at Sabarimala with the help of Ayyan, Vavar, a Muslim youth from Kanjirappally, Kadutha, a Nair youth from Muzhukeer, Chenganoor, Alapuzha dist.

During a clash, Ayyappan got killed. His uncle,Perissery Pillai, constructed the KOCHAMPALAM - an old small Sastha temple - at Erumeli, opposite the VAVAR PALLY (MOSQUE), constructed by Muslims in memory of Vavar swamy.
After the demise of Ayyappan people thought that he was the avathar of Lord Sastha and began to worship him. Later Ayyappan and Sastha became synonymous.

Some say that Ayyappan was the son of a Brahmin but Nalankal Krishna Pillai in his book "Mahashekthrangalkkumunpil" states that Brahmins never had the name AYYAPPAN or AYYAN.

In the age old "Elavarsevampattu" it was clearly mentioned that Ayyan belonged to "Vellalar kulam, Near Erumeli, Kottayam, Kerala.There still exists a vellala house called Puthenveedu in Erumely. In the same compound there is a 300 year old, thatched, depleted, mud house, the house of Perissery Pillai, Ayyappan's uncle and the Vellal Chieftain of Erumeli. There even today one can see the ancient sword used by Ayyappan to kill the monstrous ERUMA- mahisham. The place where the "eruma" was killed became Erumakolly and later Erumeli.

Sabarimala pilgrimers ,Ayyappans, conduct the Erumeli PETTAITHULLAL (Pettatullal is painting the face with colours and dancing with wooden weapons to make one look odd. The essence of this practice is to give up ones ego and surrender to Lord Ayyappa. )This is to commemmorate the killing of mahisham by Ayyan and is celelebrated during the month of December-January every year. "Ayyan / Ayyappan" Pillai is very common name among vellalas of Kottayam, Alapuzha, Pathanamthitta, Idukki and Ernakulam districts of Kerala. A number of Ayyappan kovils were constructed by Vellalas who migrated from Tamilnadu to Kerala e.g. Erumeli, Kanam etc.

Lakhs and lakhs of Tamilian Ayyappan devotees called the "Ayyappans" - come to Sabarimala every year to worship Tamil origin "VELLALAR KULA JHATHAN AYYAN AYYAPPAN".

The story of Mahishi: Leela and her husband Madhava were both children of learned Brahmins. They were very devout and in deep love for each other. After several years of married life, Madhavan felt that it was time for them to renounce worldly pleasures and turn entirely to spiritual ways. Leela did not agree to the proposal. She won't let him do so too. The dispute led to a hot arguement. Finally Madhava cursed her to become a she buffelo with devilish disposal.

Leela was reborn as Mahishi, the sister of Mahishasura. Both the sister and brother underwent severe penance and obtained boons from Brahma the Creator. As per the boons obtained, Mahishi could only be killed by a son born to Lord Shiva and Lord Vishnu. Since this was an impossible prospect Mahishi deemed herself to be indestructile and became very proud, agressive and arrogant.
She unleashed terror in all three worlds. The killing of Mahishasura by Durgadevi fanned the flames of arrogance. Mahishi became unstoppable. The gods under the leadership of Indra left Amarapuri not able to stop her. The rude and crude subjects of Mahishi devastated heaven.

On the earth all sacred rituals came to a grinding halt, as Mahishi would not allow any such thing. Learning and prayer became unheard of. The weight of crimes became unbearable for Mother Earth. She appealed pitiously to the Lords for redumption. They consoled her and promised proper action. Though confident in the Lords' abilities all wondered how a son will be born to two males. What they did not understand was that "Adwaitha Brahma" was beyond such sectarial considerations.

Vishnumaya: Earlier, ages before, on two occassions Lord Vishnu had taken the form of Mohini (Enchantress). The first was during "Amrithamanthana". Through the combined effort of all living beings the Sea of Milk was churned. This was necessiated by the urgent need of obtaining Amrith(Devine Nectar) to cure the gods of aging, forced on them by a curse from the irrepressible sage Durvasa. After prolonged hard work recovery of many precious items, when Amruth separated, the Asuras took it away. Lord Vishnu set off to recover it from them.
For this purpose the Lord transformed himself into a maiden of dazzling beauty. She appeared before the Asuras who were having a fight among them over the possession of the devine nectar. Dumbfounded by her beauty, the Asuras agreed to her proposals and sat in a row with closed eyes, waiting to be served. Meanwhile Mohini escaped stealthly with Amrith.

The second occassion when Lord Vishnu took the form of Mohini was with the urgent purpose of saving Lord Shiva from Bhasmasura.

Shoorpaka, an Asura performed sustained pennance and pleased Lord Shiva. The boon sought by him was that anybody whose head he touches should be reduced instantly to ashes. The boon was granted. The naive fellow wanted to put the boon to test immediately on his benefactor himself. The Lord had to take to his heels.

Lord Vishnu seeing Shiva's plight decided to take proper action. He transformed himself into the form of Mohini and appeared before Shoorpaka who was chasing the Lord. No need to say that his progress was arrested by what he saw. Temporarily his priorities changed. He wanted to have this beauty. Mohini agreed on one condition. If he wanted her, he would have to dance like her.
After a considerably long session of duet, Mohini slipped in a sequence which ended with her finger touching her own head. Deeply absorbed in Mohini's charm and the delights of dancing, Shoorpaka had forgotten all about the boon and touched his own head. He was reduced to ashes.

When Mother Earth and the gods requested for help against Mahishi, Lord Shiva remembered Vishnu Maya Mohini. Instantly Mohini appeared before Him. Her beauty was irressistaible even for the Lord. Their union resulted in the birth of a handsome child. He came to be known as Shastha. (Some texts mention the name Karthik Swami - not to be confused with Karthikeya).

Manikandha: Hariharasutha (The child born to Vishnu and Shiva) was obviously very handsome and with auspicious features. Mohini disappeared immediately, leaving the child to Shiva. He put an ornament with a beautiful jewel round the child's neck.

Aware of the purpose of the child's incarnation Mahadeva placed him on the banks of river Pampa. At about the same time the king of Pandalam, an erstwhile princely state, reached the place. He was on a hunting expedition and was separated from his retinue and was wandering in the woods. He was attracted by the child's voice. He rushed to where the child was lying. Finding a child left alone in the wilderness, far from the nearest human habitats, he decided that it was a God's gift to him. For he was childless, and had only one prayer to God, throughout his waking hours, "Lord bless me with a child!"

A sage suddenly appeared at the place and advised the king to take the child to the palace and rear him as his own. The king was delighted. So was the queen and the subjects. The king named the child Manikantha, inspired by the beautiful jewel he wore. Manikantha's arrival proved to be very auspicious for the royal house. The queen soon presented the king with a child, their own flesh and blood. However, the initial affection they had for Manikantha was not diminished. He grew up as their "First Born."

Manikantha was bestowed with all noble qualities one could wish for. He mastered all knowledge quickly. He became a master in martial arts too. In short, he was the unchallenged heir for the throne.

He started taking interest in the state's affairs and was eminently successful. When miscreants led by a muscleman named Babar (Vavar) created trouble in some parts of the state, Manikanthan was commissioned to end it. He not only defeated the opponent, but also won him over with love. An everlasting friendship started between the two. Thereafter Babar became Manikanthan's right hand in all his expeditions.

Jealousy has no discretion. It creeps in wherever good things prosper. Some of the courtiers grew jealous of the smart prince. They started spreading concocted stories to frame Manikanthan. However, the love and faith of the king in him was unfailing.

Soon the miscreants had an opportunity. The queen had a severe pain in the stomach, which none of the court's physicians could cure. The miscreants sent a man disguised as learned physician, who declared, "This can be cured only with the milk of *tigress."

The king was worried as to who will milk a tigress. One of the courtiers suggested, "There is nothing that prince Manikanthan cannot do."
The king would not agree. But the prince insisted that he would go. He loved the queen so much that he would risk even his life for her sake. While the king and many well wishers pleaded pitiously, Manikanthan set off into the forest.
In fact, fetching tigress' milk was just an excuse. He was prompted by the gods that it was time for him to attend to the purpose of his incarnation, namely, destroying Mahishi. As soon as Manikanthan was alone, the gods joined him as warriers. They soon set out for heaven to fight the fierce opponent who was occupying Indra's throne.

After a fierce battle, faught cosmically, Mahishi was killed. Her body fell at a place on the banks of river Azhutha. The demon warriers sent by Lord Shiva to assist Manikantha covered the body with stones and pebbles from the river bed.
The soul of Mahishi trapped in the body of Mahishi was released. She instantly fell in love with her saviour and requested for reciprocation. But, Manikanthan had decided to be a Brahmachari. To console her he said, "Soon I will be settled at one shrine. I will give you a place near me. If and only if, no $first timer visits me during a whole year, I will accept you."

Soon a tigress with cubs, believed to be Indra himself in disguise, appeared before Manikanthan. He mounted the tigress' back and returned home. Two tigers joined them, on either flank. The cubs follwed. When the procession reached the capital, people fled in fear. The purpose over, Manikanthan let off the tigers into the forest.

Manikanthan declared, "It is time for me to leave the palace. But I will not leave you altogether. Make a shrine for me close to Shabari's Ashram Send the construction party to the locality. Let them search for this arrow of mine. The exact place shall be indicated by this arrow."

Thus the famous shrine came into being. At various occassions, Manikanthan had promised few others to be honoured by proximity to his shrine. They were also installed with due ceremony. These include, Ganapathi, Nagaraja, Vavar, Kadutha and of course, Leela who came to be known as Malikappurathamma.

Ayyappa: There are numerous legends behind the famous shrine. One of them is supported by historical facts too. This reveals how the deity is called Ayyappa. According to this story, Ayyan Pillai was a trusted warrier of king of Panthalam. His heroic deeds were almost super human. King Pandian of the neighbouring state Madurai had once attacked Pandalam and captured a large territory including Sabarimala. Ayyan Pillai was commissioned to fight with Pandian and recapture the territory.

A shrewd general, Ayyan launched a guerilla war against Pandian forces. The preparation took 41 days. All members of the troupe were required to observe strict Brahmacharya during as required by ancient martial arts. They carried warm blankets and enough provisions to last several days in the forest and wore dark coloured cloth.

The expedition was a big success and Ayyan became a super hero, nay a demi god. He was considered an incarnation of Dharmasastha himself. The king dedicated the entire recaptured territory to Ayyan.

After Ayyan's demise a shrine came up in the place. In spite of it being inside thick forest, annual visit to the shrine became regular, the number of visitors increased every year. With the launching of the nearby Paumpa-Kakki irrigation project, roads were constructed upto the banks of river Pumpa in the early sixties. This reduced the foot-track to just over five kilometers and there was a phenomenal increase in the number of visitors to the shrine. The latest assessment indicates close to 50 lakh visitors annually.

It is believed that Sabarimala receives the largest annual collection people on a single day (Makarasankrant), Mecca during Haj being a close second.
புண் நாக்கு சித்தர்!

இறைவனின் கிருபையையும் அருளையும் மறுத்துரைப்பவர்கள் மற்றும் பொய் சொல்பவர்களின் நாக்கு புண் பொருந்திய நாக்கு எனக்கூறியவர்  தன்னாச்சி அப்பன் சித்தர்.18 சித்தர்களில் ஒருவரான இவரை முனிவர் என்றும் புண் நாக்கு சித்தர் என்றும் அழைத்தனர்.பிற்காலத்தில் புண்ணாக்குச் சித்தர் என்று பெயர் மருவியது.இவர் தனது நாக்கை பின்புறமாக மடித்து அருள்வாக்கு சொல்லி வந்ததாலும் இவர் பின்நாக்கு சித்தர் என  அழைக்கப்பட்டு புண்ணாக்கு சித்தராக மாறியிருக்கலாம் என்றும் சொல்வர்.சித்தராக வானவீதி வழியாக பறந்து வந்த இவர் நிலையாக இவ்வாலயத்தில் இருந்து சென்னிமலை சுப்ரமணியரை நினைத்து யோக நிலையில் தவம் புரிந்தார்.பின் சென்னிமலையிலேயே புண்ணாக்குச் சித்தர் ஜீவச மாதி அடைந்தார்.அவர் சமாதி அடைந்த பின் அவருடைய சிலையை பிரதிஷ்டை செய்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.ஆண்டி வடிவில்  அமைந்து அருள்பாலிக்கும் முருகனிடம் தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர் புண்ணாக்குச் சித்தர். சென்னிமலையில்1740 அடி உயரத்தில் குகை வடிவில் அமைந்துள்ள கோயிலில் இவர் அருள்பாலிக்கிறார்.வள்ளி,தெய்வானை சந்நிதிக்கு மேல் 800 அடி நீளப்பாதையில் கிழக்கு முக மாக இக்குகை உள்ளது. மக்கள் குறையைப் போக்கும் ஆலயமாக இது விளங்குகிறது.இக்குகை பழநி வரை நீண்டு செல்வதாகவும் நம்பப்படுகிறது.
ஹரிதாஸ்

முகலாய மன்னர் அக்பரது அவையில் மாபெரும் இசைக் கவியாகவும் சகல கலைகளில் விற்பன்னராகவும் விளங்கியவர் தான்சேன்.இவரது குருதான் ஹரிதாஸ்.ஒரு முறை தான்சேனிடம் இசையில் இந்த அளவுக்கு சிறப்புற்றுத் திகழ்கிறாயே தான்சேன்... உண்மையிலேயே நீ எனக்குக் கிடைத்த பெரும் கொடை என்று புகழ்ந்தார் அக்பர். அப்போது தான்சேன் மன்னா ... நான் இந்த அளவுக்கு புகழ் பெற்றுத் திகழ்கிறேன் என்றால் அதற்கு என் குருநாதர்தான் காரணம் என்றார்.அதற்கு அக்பர் குருநாதரா... யார் அவர்?அவரை ஒரு நாள் என் அரசவைக்கு அழைத்துப் பாடச் சொல்கிறாயா...நான் கவுரவரம் செய்கிறேன் என்றார் ஆர்வமாக. அதற்கு தான்சேன் மன்னா... அவர் அப்படிப்பட்டவர் இல்லை.நாம் கூப்பிட்டால் எல்லாம் வந்துவிட மாட்டார்.அவர் இருப்பது வனாந்திரம் போன்ற ஒரு பகுதியில் கிருஷ்ண பக்திதான் அவருக்கு பிரதானம் என்று ஆரம்பித்து தன் குருநாதரான ஹரிதாஸ் ஸ்ரீபாங்கே பிஹாரிஜிக்கு சேவை செய்து கொண்டிருப்பது பற்றி சொன்னார் தான்சேன்.தான்சேன்... நான் எப்படியாவது உன் குருநாதர் ஹரிதாஸை சந்திக்க வேண்டும். ஏற்பாடு செய் என்றார் அக்பர்.மன்னா...தாங்கள் மன்னர் என்கிற அடையாளத்துடன் அங்கே சென்றால் என் குருநாதரின் தரிசனம் கிடைக்காமல் போகலாம்.எனவே சாதாரண ஆளாக மாறுவேடத்தில் என்னுடன் வாருங்கள்.பிருந்தாவனத்தில் ஸ்ரீபாங்கே பிஹாரிஜி ஆலயத்தில் ஹரிதாஸ் நிகழ்த்தும் பஜனையைக் கேட்பதற்கென்றே நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் குவிவது வழக்கம். உங்களது விருப்பப்படி அவரது சங்கீதத்தை நீங்கள் அங்கே கேட்கலாம் மகிழலாம் என்றார் தான்சேன்.

மிகப் பெரிய சாம்ராஜ்யத்தையே ஆளுகின்ற மன்னன் என்றாலும் ஒரு தெய்வ சங்கீதத்தைக் கேட்க வேண்டும் என்கிற ஆசையில் தான்சேனுடன் மாறுவேடத்தில் புறப்பட்டார் அக்பர்.என்ன வேடம் தெரியுமா?தான்சேனுக்கு உதவியாளராக!அதாவது தான்சேனது தம்பூரா மற்றும் அவரது மூட்டை முடிச்சுக்களை சுமந்து வர வேண்டிய பணி. அக்பரும் தான்சேனும் பிருந்தாவனத்தை அடைந்தனர்.அன்று எக்கச்சக்க கூட்டம்.பக்தர்கள் அனைவரும் யமுனையில் நீராடிவிட்டு ஸ்ரீபாங்கே பிஹாரிஜி ஆலயம் வந்து ஹரிதாஸையும் வணங்கி கிருஷ்ணரை தரிசித்தனர்.அன்றைய தினம் ஹரிதாஸுக்கு உடல்நலக் குறைவு.எனவே அவரது சங்கீதத்தைக் கேட்க வேண்டும் என்கிற ஆசையில் வந்தவர்கள் ஏமாந்து போனார்கள் அக்பர் உட்பட.தான்சேனும் அக்பரும் ஹரிதாஸை விழுந்து நமஸ்கரித்தனர்.தன் சீடனான தான்சேனை ஆசிர்வதித்து அன்றைய  பஜனையைத் தலைமை தாங்கி நடத்துமாறு உத்தரவிட்டார் ஹரிதாஸ்.ஒரு புன்னகையுடன் அக்பரையும் ஆசிர்வதித்தார்.மகா ஞானியான ஹரிதாஸுக்கு மன்னரை அடையாளம் தெரியாதா?ஆனால் தான்சேன் அன்று அபஸ்வரமாகப் பாடினார்.கூடி இருந்த அனைவருக்கும் வியப்பு.ஆனால் குருநாதரான ஹரிதாஸுக்கு மட்டும் இதற்கான காரணம் புரிந்தது.தப்பும் தவறுமாகப் பாடிய தான்சேனை நோக்கி நிறுத்து என்பது மாதிரி கை காண்பித்து விட்டு ஹரிதாஸே பாட ஆரம்பித்தார்.

ஹரிதாஸ் கணீரென்று பாடப் பாட...அந்த நாத இன்பத்தில் தன்னையே மறந்தார் அக்பர்.பாடல் முடிந்ததும் அக்பர் ஓடோடிச் சென்று ஹரிதாஸுக்கு நமஸ்காரம் செய்தார்.பிறகு என்ன மன்னரே... உம் ஆசைப்படி என் சங்கீதம் கேட்டாயிற்று.திருப்திதானே?என்று கேட்டார். ஹரிதாஸ்.அக்பர் சிலிர்த்துப் போனார்.பகவான் ராமகிருஷ்ணர் பரமஹம்சரும் ஸ்ரீபாங்கே பிஹாரி ஆலயத்துக்கு வந்து இந்த கிருஷ்ணனின் அழகில் மயங்கி தன்னையே பறி கொடுத்தாராம். பிருந்தாவனத்தில் கிடைத்த இந்த அற்புத தரிசனத்தை விடுத்து கல்கத்தா புறப்பட அவருக்கு மனமே வரவில்லை.பிருந்தாவனத்தின் அமைதியும் பாங்கே பிஹாரிஜியின் அழகும் பரமஹம்சரைக் கட்டிப் போட்டது.இந்த ஸ்ரீகிருஷ்ணனின் சன்னதிக்கு அருகே அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தாராம்.ஸ்ரீபாங்கே பிஹாரிஜியின் சன்னதியில் இருந்து கிளம்ப முற்படும்போதெல்லாம் மாயவனான இந்த ஸ்ரீகிருஷ்ணன் பரமஹம்சரைத் தன் அருகே வரவழைத்து அவரைக் கட்டிப் பிடித்துக் கொண்டு வேறெங்கும் செல்ல விடாமல் தடுத்து நாடகம் ஆடினானாம்.வட இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மதுரா மாவடத்தில்தான் ஸ்ரீ கிருஷ்ணருடைய எண்ணற்ற திருவிளையாடல்களும் லீலைகளும் நடந்துள்ளன.மதுரா மாவட்டத்தில் இருக்கும் பிருந்தாவனம் என்கிற திவ்ய க்ஷத்திரம் ஸ்ரீகிருஷ்ணன் இன்றைக்கும் நடமாடும் புனித பூமியாகக் கருதப்படுகிறது.இந்த பிருந்தாவனத்தில் கிருஷ்ணனுக்கு எண்ணற்ற திருக்கோயில்கள் அமைந்துள்ளன.அதில் மிகுந்த சாந்நித்தியம் கொண்டதும் புராதனமானதுமான ஆலயம் - பாங்கே பிஹாரிஜி மந்திர் ஆகும்(கிருஷ்ணனை இங்கு பாங்கே பிஹாரிஜி என்கிறார்கள்.)ஹரிதாஸ் என்கிற துறவியின் முயற்சியால்தான் இந்த பாங்கே பிஹாரிஜி கோயில் பிருந்தாவனத்தில் கட்டப்பட்டது.பிரபலம் அடைந்தது.ஸ்ரீகிருஷ்ண பகவானை பிருந்தாவனத்தில் நேருக்கு நேர் தரிசனம் செய்தவர் ஹரிதாஸ்.இப்படி பல மகான்களோடு சம்பந்தப்பட்டது இந்த பாங்கே பிஹாரிஜி ஆலயம்.பிருந்தாவனம் வருபவர்கள் எத்தனையோ கிருஷ்ணன் ஆலயங்களை தரிசித்தாலும் இந்த ஆலயத்துக்கு கூடுதல் மகத்துவம் உண்டு.


வேலுண்டு வினைதீர்க்க; மயிலுண்டு வழி காட்ட- கந்த சஷ்டி ஸ்பெஷல்

குருவாய் வருவாய் முருகா!கந்தபுராணத்தில் திருத்தணி பற்றி சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளது. வெகுதொலைவில் இருந்தபடியே, திருத்தணி என்ற பெயரை உச்சரித்தாலும், கேட்டாலும், நினைத்தாலும், அவ்வூர் இருக்கும் திசை நோக்கி வணங்கினாலும் புண்ணியம் கிடைக்கும் என்கிறது தணிகைப்புராணம். இத்தலத்தின் பெருமையையும், மகிமையையும் வள்ளிக்கு முருகப்பெருமானே எடுத்துச் சொன்னதாக கந்தபுராணம் கூறுகிறது. திருத்தணி முருகனின் அருள் பெற்ற அடியார் முத்துச்சுவாமி தீட்சிதர். 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர். சங்கீத மும்மூர்த்திகளில் ஓருவரான இவர், திருத்தணி முருகன் சந்நிதியில் தியானித்துக் கொண்டிருந்தார். அப்போது, முருகன் சிறுபாலகனாய் வந்து, அவருக்கு கற்கண்டு கொடுத்தார். உடனே தீட்சிதர் முருகனைப் பற்றி பல கீர்த்தனைகளைப் பாடினார். தம் கீர்த்தனைகளில் முருகனை ""குருகுஹ என்று போற்றுகிறார். அவரையே குருவாக ஏற்றார். கலியுகத்தில், சிறந்த குரு கிடைக்காத பட்சத்தில் திருத்தணி முருகனையே மானசீக குருவாக ஏற்று வழிபடலாம். "குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்று அருணகிரிநாதரும் முருகனைப் போற்றுகிறார். பிள்ளைகள் கருத்துக்கு முன்னுரிமைகொடுங்க!முருகனுக்கு தனி வழிபாடும், முக்கியத்துவமும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே தங்களிடம் இருந்து அவரைப் பிரித்து இந்த திருவிளையாடல்களை சிவன் நிகழ்த்தினார். இதற்காக, பெற்றோரை உலகமாகக் கருதி, அவர்களைச்சுற்றி வந்த விநாயகருக்கு, ஞானப்பழத்தைக் கொடுத்தார். எதிர்பார்த்தபடியே முருகனும் கோபம் கொண்டு பெற்றோரை பிரிந்தார். மேலும், தன் மகனின் பெருமையை உலகறியச் செய்ய, மந்திர நாயகனான அவர், ஒரு மந்திரத்திற்கு பொருள் தெரியாதது போல் நடித்து, மகன் மூலம் உபதேசம் பெற்றார். குடும்பத்தில் பிள்ளைகளின் கருத்துக்கும் பெரியவர்கள் முக்கியத்துவம் தர வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக சிவகுடும்பம் அமைந்தது.

கருவறைக்குள் திரைச்சீலை:இலங்கை கதிர்காமம் முருகன் கோயில் கொழும்பிலிருந்து 230 கி.மீ., தூரத்தில் உள்ளது. இவர் "கதிரேசன் என்று போற்றப்படுகிறார். கருவறையில் எந்த வடிவில் முருகன் இருக்கிறார் என்பது ரகசியமாக உள்ளது. சந்நிதியின் கதவில் தொங்கவிடப்பட்டிருக்கும் திரையில் மயில் மீது வள்ளி, தேவசேனாவுடன் அமர்ந்திருக்கும் முருகனின் உருவம் இருக்கும். இதைப்போன்று வேறு திரைச்சீலைகளும் தொங்கவிடப்பட்டிருக்கும். இந்த திரைக்கே பூஜை நடத்தப்படுகிறது. இங்கு ஆடிஅமாவாசையன்று ஆரம்பித்து பவுர்ணமியில் முடியும் விழா பிரபலமானது. விழாவின் போது யானைமீது, முருகனுக்குரிய யந்திரம் அடங்கிய ஒரு பெட்டி எடுத்து வரப்படும். இதை முருகனாகக் கருதி மக்கள் வழிபடுகின்றன். இக்கோயிலின் பின்புறமிருக்கும் அரசமரத்தை சிங்களர்கள் வழிபடுகின்றனர். தமிழ் மக்களும், சிங்களர்களும் இணைந்து வழிபடும் கோயில் இது. கிரகபாதிப்பை போக்கும் பாடல்: ராசிபலனை தெரிந்து கொள்வதில் அனைவருக்கும் விருப்பம் அதிகம். நம் பூர்வஜென்ம பாவபுண்ணியங்களுக்குத் தகுந்தபடி வாழ்க்கை அமைகிறது என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ராசி மண்டலத்தில் அசுவினி முதலாக ரேவதி வரை 27 நட்சத்திரங்கள் உள்ளன. பிறந்த நட்சத்திரத்தைப் பொறுத்து ராசி அமைகிறது. அருணகிரிநாதர் "கந்தர் அலங்காரம் என்னும் நூலில், நட்சத்திர நாயகனான முருகனை வழிபாடு செய்யும் அன்பர்களை நாளும் கோளும் ஒன்றும் செய்யாது என்று உறுதிபடக் கூறுகிறார்.""நாள் என்செயும் வினைதான் என்செயும்எனை நாடிவந்த கோள்என் செயும்கொடுங்கூற்றென் செயும், குமரேசர்இரு தாளும் (இரண்டு பாதங்கள்), சிலம்பும் (இரண்டு சிலம்பணிகள்),சதங்கையும் (இரண்டு சலங்கையும்),தண்டையும் (இரண்டு தண்டைகள்),சண்முகமும் (ஆறு முகங்கள்)தோளும் (12 தோள்கள்)கடம்பும் (கழுத்திலுள்ள கடம்பு மாலை)எனக்கு முன்னே வந்து தோன்றிடினே. முருகனின் 27 உறுப்புகளும் 27 நட்சத்திரங்களைக் குறிக்கின்றன. இதைப் பாடினால் கிரக பாதிப்பு நீங்கும்.

நோய் தீர்க்கும் சந்தனம்: அழகே உருவான முருகப்பெருமானுக்கு, சூரபத்மனுடன் போரிட்ட போது மார்பில் காயம் ஏற்பட்டது. அந்தக் காயத்துடன் அவர் அமர்ந்துள்ள தலம் திருத்தணி. சூரனுடன் போரிட்ட கோபம் தணித்த இடம் என்பதால் "தணிகை என இத்தலம் பெயர் பெற்றது. அவரது காயத்தின் வலி குறைய சுவாமிக்கு சந்தன அபிஷேகம் செய்யும் வழக்கம் ஏற்பட்டது. அந்த சந்தனமே இங்கு பிரசாதமாக தரப்படுகிறது. அது நோய் தீர்க்கும் எனும் நம்பிக்கையுடன் பக்தர்கள் நீரில் கரைத்து குடிக்கின்றனர். சந்தனம் அரைப்பதற்காக கோயிலில் கல் ஒன்றும் உள்ளது.

திருப்புகழின் பொருள்: முருகனின் சிறப்புகளையும், அவரது அருள் வேண்டியும் அருணகிரிநாதர் பாடிய பாடல்களின் தொகுப்பே திருப்புகழ், இதன் முதல் அடியை முருகனே எடுத்துக் கொடுத்தார். "திரு என்றால் "அழகு, ஐஸ்வர்யம் என்று பொருள். அழகனாகிய, ஐஸ்வர்யம் தருகின்ற முருகனை புகழ்வதால், "திருப்புகழ் என்று பெயர் உண்டானது.

அறுபடை வீடுகள்:திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, சோலைமலை என்னும் ஆறுதலங்களும் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகள். மனிதனின் உடலில் ஆறு ஆதாரங்களாக மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை ஆகியவை இருப்பது போல, முருகனின் படை வீடுகள் திகழ்கின்றன. முருகப்பெருமானின் வாழ்க்கை வரலாற்றை இந்த ஆறுதலங்களுக்குள்ளும் அடக்கிச் சொல்வர். திருமுருகாற்றுப்படை என்னும் பழந்தமிழ் இலக்கியம் படை வீடுகளின் சிறப்பை விரிவாகக் கூறுகிறது.

தாயில்லாமல் இவர் இல்லை: முருகன் தாயின் மூலமாக பிறக்காமல், தந்தையால் மட்டுமே பிறந்தவர் என்று எண்ணுகிறோம். இது சரியானதல்ல. அசுரன் ஒருவன் சிவனிடம், தான் யார் தலையில் கை வைத்தாலும் அவர்கள் அழிந்துவிட வேண்டும் என வரம் பெற்றிருந்தான். ஒரு கட்டத்தில், சிவனது தலை மேலேயே கை வைக்க வந்தான். அவர் மறைந்து கொண்டார். பின்னர் அவன் பார்வதிதேவியின் தலை மீது கை வைக்க ஓடினான். அவள் சரவணப் பொய்கை தீர்த்தமாக மாறிவிட்டாள். சிவன் தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கி சரவணப் பொய்கையில் இட்டார். அதிலிருந்து முருகன் அவதரித்தார். இதன் மூலம் முருகன் தன் தந்தை, தாயிடமிருந்து தோன்றினார் என்பது புலனாகிறது. இதனால் முருகனை "சிவசக்திபாலன் என்றும் அழைப்பர்.

வழித்துணையாய் வா முருகா! கந்த சஷ்டி பிரார்த்தனை:
*முழுநிலவு போல குளிர்ச்சியான முகத்துடன் விளங்கும் முருகப்பெருமானே! வெற்றி தரும் வேலாயுதத்தை தாங்கியவனே! உன் அன்பைப் பெற என்மனம் ஏங்கித் தவிக்கிறது. என்னை உன் அடிமையாக ஆட்கொள்ள வந்தருள வேண்டும்.

* முருகா! என் கண்கள் காண்பதாக இருந்தால் உன் திருவடித் தாமரைகளையே காணட்டும். என் உதடுகள் உந்தன் திருப்புகழையே மட்டுமே பேசட்டும். இரவும் பகலும் என் மனம், உன் பெருமையை மட்டும் சிந்தித்திருக்கட்டும். இந்த அரிய வரத்தை நீ தந்தருளவேண்டும்.

* மாமரமாய் நின்ற சூரனை இருகூறாகப் பிளந்த வெற்றி வீரனே! கற்றவர்கள் புகழ்ந்து போற்றும் ஞானபண்டிதனே! செவ்வானம் போல சிவந்த மேனியனே! கடம்பம், முல்லை மலர்களை விரும்பி அணிபவனே! அறிவுக்கண்களைத் திறந்து ஞானத்தைத் கொடுத்தருள்வாயாக.

* முத்துப் போல பிரகாசிக்கும் புன்னகையுடன் காட்சி தருபவனே! உமையம்மையை மகிழ்விக்க வந்த சிவ பாலனே! அழகெல்லாம் ஒன்று திரண்டு வந்தது போல கோடி சூரிய பிரகாசத்துடன் விளங்குபவனே! அருட்கண்களால் என்னைக் காத்தருள்வாயாக.

*எங்கள் எண்ணம், சொல், செயலுக்கு எட்டாத பரம்பொருளே! ஆறுமுகப்பெருமானே! எனக்கு வேண்டிய
வரங்களை வாரி வழங்க பன்னிரு கரங்களுடன் வந்தருள்வாயாக.

*கருணைக்கடலே! கந்தப்பெருமானே! நமசிவாயத்தின் நெற்றிக்கண்ணில் உதித்த அருட்சுடரே! வண்ண மயில் மீது வலம் வரும் சுப்பிரமணியனே! வள்ளி மணாளனே! இதயமாகிய குகையில் வீற்றிருக்கும் குகப்பெருமானே! உனது திருவடிகளை சிந்திக்கும் பாக்கியத்தைத் தந்தருள்வாயாக.

* ஆனைமுகப் பெருமானின் தம்பியே! ஆதிபராசக்தியின் புதல்வனே! வள்ளிக்கு வாய்த்தவனே! குன்றெல்லாம் குடிகொண்டிருக்கும் குமரப்பெருமானே! சஷ்டி நாதனே! சூரபத்மனுக்கும் பெருவாழ்வளித்த புண்ணியமூர்த்தியே! எங்கள் தவறையும் மன்னித்து அருள்வாயாக.

* திருமாலின் மருமகனே! தெய்வானையை மணந்த வடிவேலனே! மலர்ந்த தாமரை போல எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பவனே! சேவல் கொடியோனே! மலைமகள் பார்வதி பெற்ற பாலகனே! மயில் வாகனனே! கிரகதோஷம் எதுவும் என்னைத் தாக்காமல் காத்தருள வேண்டும்.

*மலைக்குத் தெய்வமான குறிஞ்சிநாதனே! அன்பர் குறைகளைப் போக்கும் குகப்பெருமானே! மயிலேறும் மாணிக்கமே! தயாபரனே! முன்செய்த பாவத்திலிருந்து விடுவித்து, வாழ்க்கைப் பயணத்திற்கு வழித்துணையாய் வந்தருள்வாயாக.

*கார்த்திகைப் பெண்களால் சீராட்டி வளர்க்கப்பட்ட தவப்புதல்வனே! சரவணப் பொய்கையில் தவழ்ந்தவனே! தந்தைக்கே பாடம் சொன்ன குருநாதனே! எங்களுக்கு செல்வச்செழிப்பைத் தந்தருள்வாயாக.

* தெய்வானை மணாளனே! சரவணபவ மந்திரம் சொல்வோருக்கு உதவிட ஓடிவருபவனே! சரணடைந்தவரைக் காப்பவனே! தேவர்களைக் காத்த தேவசேனாபதியே! வாழ்நாள் முழுவதும், எனக்கு வழித்துணையாக வருவாயாக.

* சொல்லில் அடங்காப் திருப்புகழ் கொண்டவனே! உள்ளம் ஒன்றி வழிபடுவர்களுக்கு அருளைப் பொழியும் ஆறுமுகனே! திக்கற்றவர்க்கு துணை நிற்கும் திருமுருகனே! நம்பினோரைக் கரைசேர்த்திடும் நாயகனே! இந்த உலகமெல்லாம் செழிக்க வந்தருள்வாயாக.
_____________________________________________________________________________________________________
கண்களுக்குப் புலப்படாத சித்தர்கள்!

இன்றும் சித்தர்கள் உலகில் இருக்கிறார்கள்; ஆனால் அவர்கள் மனிதர்களின் கண்களுக்குப் புலப்படுவதில்லை என்கிறார்கள். ஒரு ஞானி இதற்கொரு கதை சொல்கிறார். ஒரு துறவி தம்முடைய சில சீடர்களுடன் ஒரு நகரத்திற்கு வந்திருந்தார். அந்தத் துறவிக்கு ஒரு சக்தி இருந்தது. தம் உடலிலிருந்து ஒரு துளி ரத்தம் எடுத்து அதன் மூலம் குழந்தைகளின் நோய்களை உடனுக்குடன் குணப்படுத்தும் ஆற்றல் அது. இந்த செய்தி மெல்ல மெல்ல நகரம் முழுவதும் பரவி விட்டது. தமக்கு தேவியின் அருள் கிட்டியிருப்பதாகவும் அந்த சித்தியின் மூலம் தான் தம்முடைய ரத்தத்தில் மருந்துக்குணம் இருப்பதாகவும் துறவி தெரிவித்தார். அன்று முதல் துறவியின் இருப்பிடத்தில் பொன், வெள்ளிக்காசுகளும் பழங்களும் மலர்களும் பூஜைக்கான பொருள்களும் வந்து குவியலாயின. ஏகப்பட்ட பெற்றோர்கள் நோய்வாய்ப்பட்ட தமது குழந்தைகளுடன் துறவியின் ஆசிரமத்தை முற்றுகையிடலானார்கள். நோயால் வருந்திய சின்னஞ்சிறு குழந்தைகளின் திரளான கூட்டத்தைக் கண்ட துறவியின் மனதில் கருணை பொங்கித் ததும்பியது.

மறுகணமே துறவி தம் ஆள்காட்டி விரலொன்றைத் திரிசூலத்தில் அழுத்தினார். குபுகுபுவென்று ரத்தம் வெளிப்பட்டது. ரத்தத் துளிகளின் மகிமையால் குழந்தைகளின் நிலைமையில் அப்போதே முன்னேற்றம் ஏற்பட்டது. பெற்றோர்களின் முகத்தில் வியப்பும் மகிழ்ச்சியும் பொங்கியது. ஒரு விரலில் ரத்தம் வருவது நின்றதும் துறவி தமது இன்னொரு விரலைத் திரிசூலத்தின் மேல் வைத்தார். குணமடைந்த நோயாளிகளின் கூட்டம் அங்கிருந்து மெல்ல மெல்ல நகர்ந்தது. ஆனால் நோயாளிகளின் வரிசை வளர்ந்து கொண்டே போயிற்று. துறவியின் பத்து விரல்களிலிருந்தும் ரத்தம் வெளியேறி முடிந்தாயிற்று. அதற்கு மேல் ரத்தம் நின்று விட்டது. ஆயினும், நோயாளிகளின் வருகைக்கு ஒரு முடிவு இருப்பதாகவே தெரியவில்லை. அக்கம் பக்கத்து ஊரின் மக்களும் அங்கே வரத் தொடங்கி விட்டார்கள். கதையை விவரிப்பானேன்? காரணம் கடைசி கட்டம் முழுக் கதையையும் விளக்கி விடுகிறது. அகதிகள் சிலர் இந்த விவரம் தங்களுக்கு எட்டியாதும் அந்தத் துறவியின் குடிசைக்கு விரைந்தார்கள். அங்கே அவர்கள் கண்ட காட்சி ஐயகோ!

கால்கள் ஒரு மரக்கிளையில் கட்டப்பட்டு துறவி தலை கீழாகத் தொங்கிக் கொண்டிருக்கிறார். திரிசூலத்தால் குத்தப்பட்டு உடல் முழுவதும் சல்லடைக் கண்களாகி வெளுத்துப் போய் விட்டிருக்கிறது. துறவியின் அருகில் கையில் ஒரு நோயாளிக் குழந்தையுடன் நின்ற ஒரு தம்பதியர் சுவாமி! ஒரு துளி ரத்தம் மட்டும் எங்களுக்குத் தாருங்கள். எங்களுடைய ஒரே குழந்தை இது. தங்கள் சாந்நித்தியத்திலிருந்து நம்பிக்கை இழந்து திரும்ப வேண்டிய அளவுக்கு எங்களுக்கு மட்டும் ஏன் இந்தத் துர்பாக்கியம்? என்று மன்றாடிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய மனிதர்கள் அந்த நகரத்தின் அந்நாளைய மனிதர்களிலிருந்து வேறுபட்டுவிட்டனரா? இல்லை! என்பது தான் மனிதனின் இயற்கை குணங்களை ஆராய்ந்தறிந்த உளவியல் அறிஞர்களின் கூற்று! இந்த சம்பவத்துக்குப் பிறகு இறைவனும் இறைவியும் கொஞ்சம் உஷாராகி விட்டனர். இந்தத் துறவியைப் போன்ற வரம் பெற்ற சித்தர்கள் இன்று கூட இந்த உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் இப்படி வெளிப்படையாக மனிதர்களிடையே செல்வதற்கு அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
_________________________________________________________________________________________
பத்ராசல ராமதாஸர்

கிருஷ்ணதேவராயர் ஆண்ட விஜயநகரப் பேரரசுக்கு உட்பட்ட, கொல்ல கொண்ட பல்லம் என்னும் ஊரில் லிங்கண்ணா,காமாம்பாள் தம்பதியர் வசித்தனர்.இவர்களுக்கு தெய்வீகக்குழந்தையாக1630ல் கோபன்னா பிறந்தார்.இவரது இயற்பெயர் கஞ்செர்ல கோபராஜு.இளமையிலேயே ராமாயணக் கதையை விருப்பத்தோடு கேட்பார்.இதன் காரணமாக அவரது பிஞ்சுமனத்தில் ராமபக்தி ஆழமாக வேர் கொண்டது.மகான் கபீர்தாசரிடம் ராமநாம உபதேசம் பெற்று ஜபம் செய்யத் தொடங்கினார். இரவும் பகலும் அவருடைய நாவில் ராமநாமம் ஒலித்தது. தாய்மொழியாம் தெலுங்கிலும்,சமஸ்கிருதத்திலும் தேர்ந்த புலமை பெற்றிருந்த கோபன்னா,இறைநாமத்தை சொல்லும் அற்புதக் கவிதைகளை இயற்றினான்.இல்லறமே நல்லறம் எனப் பெற்றோர் உபதேசிக்க கமலம்மா என்ற பெண்ணை மணந்து ஒரு குழந்தைக்குத் தந்தையானார்.தம்பதியர் ஒருவருக்கொருவர் பக்தியில் சளைத்தவர்கள் இல்லை என்பதை உணர்த்தும்வகையில் ஒரு நிகழ்ச்சி அவர்கள் வீட்டில் நடந்தது.

மகான் கபீர்தாசர் கோபன்னாவின் கனவில் தோன்றி ராமநாம உபதேசத்தை அருளினார்.அன்று கோபன்னாவின் வாழ்க்கை திசை திரும்பியது.எந்நேரமும் ராமநாமத்தை உச்சரித்து ராமபக்தியில் மூழ்கிப்போனார்.ஒருமுறை ஸ்ரீராமநவமியன்று வீட்டில் விசேஷ பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.பாகவதகோஷ்டியினர் பஜனை செய்து கொண்டிருந்தனர்.அடியார்களின் அன்னதானத்திற்காக சமையல்வேலை மும்முரமாக ஒருபுறம் நடந்து கொண்டிருந்தது. பஜனையில் ஈடுபட்டிருந்ததால் கமலம்மா குழந்தையை கவனிக்காமல் விட்டுவிட்டாள்.மகன் தவழ்ந்தபடியே அடுப்படிக்குள் நுழைந்து சாதம் வடித்த சுடுகஞ்சியில் விழுந்துவிட்டான்.சமையல் ஆட்கள் பதறிப்போய் கமலம்மாவிடம் தெரிவித்தனர்.பேச்சு மூச்சில்லாமல் கிடந்த பிள்ளையைக் கண்ட தாய் மனம் துடித்தாள்.ஆனால் யாரிடமும் காட்டிக் கொள்ளாமல் மங்கள ஆரத்தியில் கலந்து கொண்டு கண்ணீர் பெருக்கி நின்றாள்.பஜனை முடித்த பாகவதர்கள் விருந்துண்ட பின் வீட்டுக்கு புறப்பட்டனர்.கோபன்னாவிடம் கமலம்மா நடந்த விஷயத்தைத் தெரிவித்தாள்.தம்பதியர் ராமபிரானிடம் முறையிட்டு அழுதனர். அப்போது அங்கே ஒரு அதிசயம் நிகழ்ந்தது.கீரைத்தண்டு போல துவண்டு கிடந்த பிள்ளையின் கண்கள் அசைந்தன.அம்மா என்று மெல்ல அழைத்தான்.இருவரும் மகிழ்ச்சிப் பெருக்கில் திளைத்தனர்.அன்று முதல் கோபன்னாவின் மனம் ராமபக்தியில் முழுமையாக ஈடுபட்டு விட்டது.ராமன் மட்டுமே இனி நமக்கு கதி என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.

கோபன்னாவின் தாய்மாமன்கள் அக்கன்னாவும், மாதன்னாவும் ஐதராபாத் அரசர் தானீஷாவிடம் பணியாற்றி வந்தனர்.தங்களின் மருமகன் கோபன்னாவிற்கும் சமஸ்தானத்தில் பணியாற்ற ஏற்பாடு செய்தனர்.பத்ராசலம் நகரத்தில் வரிவசூலிக்க கோபன்னா நியமிக்கப்பட்டார்.அன்பு,நேர்மை,நல்லொழுக்கம் ஆகியவற்றால் மக்களைக் கவர்ந்தவர்,நியாயமான முறையில் வரி வசூலித்து அரசு கஜானாவுக்கு வழங்கினார்.பத்ராசலத்தில் ராமர் கோயில் இருப்பதை அறிந்த கோபன்னா மகிழ்ச்சி அடைந்தார்.காகேதய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயிலில் புதர் மண்டிக் கிடந்தது.வழிபாடு இல்லாமல் மோசமாக கிடந்த ராமசன்னதியைக் கண்டு வருந்தினார் கோபன்னா. அரசாங்கத்துக்காக வசூலித்த வரிப்பணத்தில் கோயில் வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்தார்.கட்டுமானப்பணியைத் தொடங்கினார்.வரிப்பணம் முழுவதையும் ராமர் கோயில் திருப்பணிக்கு செலவிட்டார்.ஆறுலட்சம் வராகன் செலவில் கோயிலைக் கட்டியதோடு பலவிதமான தங்க ஆபரணங்களையும் செய்து கொடுத்தார்.கோபன்னாவின் ராமபக்தியைக் கண்ட மக்கள் அவரை ராமதாசர் என்று அழைக்கத் தொடங்கினர்.மக்கள் பாராட்டினாலும் வரிப்பணத்தை செலவிட்டால் அரசாங்கம் விடுமா? மன்னர் தானீஷா ராமதாசரை கோல்கொண்டா சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.தாய்மாமனார்களால் ராமதாசருக்கு ஒரு உதவியும் செய்ய முடியவில்லை.தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் சிறையில் பல கொடுமைகளுக்கு ஆளானார்.அப்போது அவர் பாடிய பாடல்கள் மிகவும் உருக்கமானவை.இனிமேல் இந்த கோரமான அடிகளை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது.உன்னைக் கும்பிட்ட கைகளை தடி கொண்டு அடிக்கிறார்களே!என்று இவர் பாடிய பாடல்வரிகள் கல்லையும் கரையச் செய்யும் தன்மை கொண்டதாகும்.இஷவாகுகுல திலகா என்று தொடங்கும் பாடலில் ராமனுக்காக கோயில் கட்டிய செலவுக் கணக்கைக் கூறி வேதனைப்படுகிறார்.ராமா! உனக்கு கிரீடம்,ஆபரணம் செய்து அழகு பார்த்தேனே!எனக்கு அளித்ததோ கை விலங்கு அல்லவா!அரசு பணத்தை உனக்காக செலவழித்தேன்.அதை நீயே மன்னருக்கு அளித்துவிடு!என்று உள்ளம் உருகி வேண்டுகிறார்.

ஒருநாள் நள்ளிரவில் பாதுஷா தானீஷா பள்ளியறையில் இருந்தபோது ராமலட்சுமணர் இருவரும் ராமதாசரின் சேவகர் போல அவர் முன் வந்தனர்.ராமதாசர் செலுத்தவேண்டிய ஆறுலட்சம் வராகன் பணத்தையும் திருப்பி அளித்து மன்னர் கையெழுத்திட்ட ரசீதையும் பெற்று ராமதாசரின் அருகில் வைத்து விட்டு மறைந்தனர்.ராமதாசரோ இப்படி ஒரு அதிசயத்தை நிகழ்த்தியது யாரென்று தெரியாமல் தவித்தார். பின் ராமரும், லட்சுமணரும் ராமதாசரின் சேவகர் போல வந்து பணத்தைத் திருப்பி செலுத்தியதை அறிந்தார்.பாதுஷா தானீஷா ராமதாசரை சிறையில் இருந்து விடுவித்ததோடு அவரிடம் மன்னிப்பும் கேட்டார்.பத்ராசலம் ராமர் கோயிலுக்கு பல நன்கொடைகளையும் வழங்கினார்.இந்த நிகழ்ச்சிக்குப்பின் என் ராமனைக் கண்ட தானீஷாவே என்னும் பொருள்பட பாடிய தன்யுடை தானீஷா நீவு நன்னு கன்னய்யா பதமுலு என்ற அவர் பாடிய பாடல் புகழ்பெற்றது.பத்ராசலம் கோயிலில் தன் இறுதிக் காலத்தைக் கழித்து வந்தார்.1688ம் வருடம் ஸ்ரீராமனின் திருவடியில் கலந்தார்.ராமபக்தியில் சிறந்து விளங்கிய தியாகராஜருக்கு முன்னோடியாக வாழ்ந்தவர் ராமதாசர்.ராமசந்திர மூர்த்தியின் பரமபக்தனாக விளங்கும் ராமதாஸரைப் போற்றி வணங்குகிறேன் என தியாகராஜர் தனது கீர்த்தனையில் புகழ்ந்து பாடியுள்ளார்.ராமபக்திக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்த ராமதாஸரின் ராமபக்திக்கு ஈடு இணையேது. அவர் பத்ரகிரிமலையில் ஏறியபோது விஷ்ணு தூதர்கள் வந்து வைகுண்டத்திற்கு அழைத்துச் சென்றதாக பத்ராசலம் கோயில் தலவரலாறு கூறுகிறது.


ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 75 ॐ

       {நவீன விஞ்ஞானமும்}

தற்செயலாக ராமகிருஷ்ண விஜயம் புத்தகம் ஒன்று கிடைத்தது. சமீபத்தில் ஜெனிவாவில் நடந்த கடவுள் அணுவிற்கான ஆய்வு என்னும் பிரபஞ்சத் தத்துவத்திற்கான அறிவியல் தத்துவத்திற்கான சோதனை நடத்தப்பட்ட ஆராய்ச்சிக் கூடத்தின் வாயிலில் வைக்கப்பட்டிருக்கும் நடராஜர் சிலை பற்றிச் சொல்லி ஆகவேண்டும். இன்னும் சொல்லப் போனால் நடராஜரின் தலைமையிலேயே இந்த ஆய்வு நடக்கிறது என்றும் சொல்லலாம். ஜெனிவாவில் உள்ள European Center for Particle Physics Research-CERN தலைமையகத்தின் முகப்பில் கிட்ட தட்ட ஆறு அடி உயரம் ஆன நடராஜர் சிலை உள்ளது. அந்தச் சிலையின் கீழே உள்ள செவ்வகப் பீடத்தின் முகப்பில் சம்ஸ்கிருதத்திலும் ஆங்கிலத்திலும் கீழ்க்கண்டவாறு பொறிக்கப் பட்டுள்ளதாயும் கூறுகின்றனர். எங்கும் நிறைந்தவனே! நற்குணங்களின் உருவே! இந்த அண்டசராசரத்தைப் படைத்தவனே! ஆடலரசே! அந்தி நேரத்தில் ஆனந்தத் தாண்டவம் ஆடியவனே! உமக்கு நமஸ்காரம்! (மூலம் சிவானந்த லஹர், சுலோகம் 56, ஆதி சங்கரர் இயற்றியது. நன்றி இந்திய அணுசக்தித் துறை இந்திய அரசாங்கம்) இப்போது இந்திய அணுசக்தித் துறை எதுக்கு சர்வதேசப் புகழ் பெற்ற ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கூடத்திற்கு அன்பளிப்பாய்த் தர வேண்டும்? நடராஜத் திருமேனிக்கும் இயற்பியலுக்கும் என்ன சம்பந்தம்?? கிட்டத் தட்ட 1,300 கோடி வருடங்கள் முன் பேரொலியுடன் கூடிய மிகப் பெரு வெடிப்பு எனப்படும் big bang உண்டாயிற்று. அதற்கு முன்னர் அடர்த்தியான அதிக வெப்பத்துடனும் அழுத்தத்துடனும் இருந்த ஒரு சக்தித் தொகுப்பானது அதிவிரைவாக விரியவும் சுருங்கவும் செய்தது. மாறி மாறி சூடும், குளிர்ச்சியும் ஏற்பட்டது. இப்படி ஒரு பெரு வெடிப்புக்குப் பின்னர் பிரபஞ்சம் விரிவடைய அதிக வெப்பம் காரணமாய் சக்தித் தொகுப்பு சிறு துகள்களாய் பிரியத் தொடங்கியது. பன்மடங்கான துகள்களின் எண்ணிக்கை உருவாக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே பல துகள்கள் அழிந்தும் மேலும் பல துகள்கள் உருவாகவும் செய்தன. வெப்பம் குறையத் தொடங்கியதும் இச்சிறு துகள்கள் இணைந்து பெரிய துகள்கள் உருவாகிப் பிரபஞ்சமும் விரிவடைகின்றது. இவ்வாறு பல சிறு துகள்கள் சேர்ந்து இந்தப் பிரபஞ்சம் உருவானது. இன்றும் கூட இப்பிரபஞ்சத்தின் ஒரு மூலையில் சிறு அணுத்துகள்கள் சேர்ந்து பெரிய பகுதிகளாய் உருவாகிக் கொண்டிருக்கின்றன. அதே சமயம் பல துகள்கள் அழிந்து கொண்டும் இருக்கின்றன. இந்த நிகழ்வுகள் விண்வெளியில் மட்டுமின்றி சூரியனிலும் நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்வுகளால் உருவாகும் காஸ்மிக் கதிர்கள் பூமியை வந்தடைகின்றன. இந்தத் துகள்கள் நமது மூலக்கூறு பகுதியும் பிரபஞ்சத்தின் கட்டுமான கற்களும் ஆகும். தோன்றுவதும் இயங்குவதும் பின்னர் ஒடுங்குவதும் பிரபஞ்சத்தின் அடிப்படை தத்துவம் ஆகும். இதையே நம் முன்னோர் ஈசனின் ஆனந்தத் தாண்டவத்தின் தத்துவமாய்க் கருதினார்கள்.

நடராஜ வடிவின் உட்பொருள் : ஆகம சாஸ்திரம் புரியாமல் நடராஜரின் உடல் கூறு தத்துவம் புரியாது என்று சுவாமி விபுலானந்தர் கூறுகின்றார். எனினும் நமக்குப் புரிந்த அளவில் பார்ப்போம். ரிஷிகளின் தியானத்தில் தோன்றிய இந்த நடராஜ தாண்டவ வடிவம் மிக மிக நுட்பமானது. நடராஜரின் வைத்த திருவடியான வலப்பாதம் முயலகன் என்ற அசுரனின் மீதிருக்கும். அறியாமையைக் குறிக்கின்றது இது. தூக்கிய இடது திருவடியானது பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையிலான காலச்சக்கரத்திலிருந்து விடுபடும் ஆன்மாவைக் குறிக்கின்றது. உடுக்கை ஏந்திய திருக்கையானது ஆக்கலைக் குறிக்கும். உடுக்கை எழுப்பும் சப்தம் ஆனது பிரபஞ்சம் தோன்றும் போது முதன் முதல் எழுந்த சப்தத்தைக் குறிப்பதோடு அல்லாமல் அறிவியலாளர்களும் பிரபஞ்சம் தோன்றும் போது பெரும் சப்தம் ஏற்பட்டது என்பதை ஒத்துக் கொள்கின்றார்கள். விஞ்ஞானிகள் இந்த ஒலியைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். ஆன்மீக அறிவாளர்கள் இந்த ஒலியைத் தான் பிரணவம் எனப்படும் ஓம் என்னும் ஒலியாகவும் குறிப்பிடுகின்றனர். வேதங்களிலும் பிரணவம் என்னும் ஒலியில் இருந்தே பிரபஞ்சம் பிறந்ததாய்க் குறிப்பிடுகின்றது.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ

புதன், 23 அக்டோபர், 2019

சிதம்பர ரகசியம் பகுதி : 74 ॐ

{ஆங்கிலேயர், பிரெஞ்சுகாரர்களின் அடைக்கலம் பெற்ற விபரங்கள்}

சிதம்பரம் கோயில், ஸ்ரீரங்கம் கோயில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் ஆகியவை அடுத்தடுத்து அந்நியப்படையெடுப்பில் பாதிக்கப்பட்ட முக்கியக் கோயில்கள் எனத் தெரிய வருகின்றது. இந்தக் கோயில்களின் இந்தத் தாக்குதல்கள் பற்றி கங்காதேவி என்பவர் எழுதிய மதுரா விஜயம் என்னும் வடமொழி நூலில் குறிப்பிட்டிருப்பதாகவும் அறிகின்றோம். இது தவிர நாம் ஏற்கெனவே பார்த்த படி பதினெட்டாம் நூற்றாண்டில் கர்நாடக யுத்தம் மற்றும் இரண்டாம் மைசூர் யுத்தம் சமயத்திலும் சிதம்பரம் கோயிலின் தாக்குதல் முக்கியத்துவம் பெறுகின்றது. 1760ம் ஆண்டில் இருந்து 1780ம் ஆண்டு வரையிலும் கோயிலை இந்தச் சண்டைகளின் போது ஒரு கோட்டையாகவும் அரணாகவும் பயன்படுத்தி வந்ததாயும் அதற்கு முன்னால் 1753ல் இருந்து 1760 வரை பிரெஞ்சுக்காரர்களிடம் கோயில் இருந்ததாயும் சொல்கின்றனர்.
1749ல் ஆரம்பித்த இந்தச் சண்டையில் முதலில் ஆங்கிலேயர் வசம் இருந்த இந்தக் கோயில் பக்கத்துக் கோட்டையான புவனகிரியை பிரஞ்சுக்காரர்கள் வீழ்த்தியதும் அவர்கள் வசம் சென்றது. பிரெஞ்சுக்காரர்கள் சிதம்பரம் கோயிலை "செலம்பரம் பகோடா" என்ற பெயரில் அழைத்து வந்ததாய் கர்னல் சி.பி. மலேசம் என்பவரின் இந்திய சரித்திரத்தில் பிரெஞ்சுக்காரர்களின் பங்கு என்னும் சரித்திரப் புத்தகத்தில் கூறி உள்ளார். கொள்ளிடத்துக்கு வடக்கே ஆறாவது மைலில் இருந்த இந்தக் கோயிலைப் பற்றியும் தஞ்சை மராட்டி அரசன் ஷாஜி என்பவன் தனக்குத் தான் தஞ்சை சிம்மாசனம் சேரவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்ததாயும் அந்தச் சமயம் சிதம்பரத்தில் அவன் அடைக்கலம் புகுந்ததாயும் பிரெஞ்சுக்காரர்களோடு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு அந்தச் சமயம் தான் காரைக்காலை பிரெஞ்சுக்காரர்கள் வசம் கொடுத்ததாயும் சொல்கின்றார். ஹைதர் அலி கோயிலைத் தன்னுடைய முக்கிய படைத்தளமாய் ஆக்கிக் கொண்டதாயும் அங்கே 3,000 படை வீரர்கள் தங்க வைக்கப்பட்டதாயும் தெரிய வருகின்றது.இரண்டாம் மைசூர் சண்டையின் போது கர்னல் கூட் என்பவர் தென் திசை நோக்கிய தன் பயணத்தை விரிவு படுத்தினார். திண்டிவனம், வானூர், விழுப்புரம், திரிவாடி, கடலூர், விருத்தாசலம், அனைத்தும் அவருக்கு மிக சுலபமாய்க் கிடைத்துவிட்டது. பிரெஞ்சுக்காரர்களுக்கு செஞ்சியும், தியாக துர்க்கமும் மட்டுமே மிஞ்சியது. கூட் இந்த இரண்டாம் மைசூர் சண்டையின் போது கோயிலைத் தாக்கினார். ஆனாலும் விரட்டப் பட்டார். 18 பவுண்டு கன் வைத்துக் கோயில் சுவர்களைத் தகர்க்கும் முயற்சி நடைபெற்றது. இந்த முயற்சி மேல கோபுரத்தின் பக்கம் நடந்திருக்கலாம் என அனுமானிக்கப் படுகின்றது. இதன் அடையாளங்கள் இன்னமும் கோயிலின் மேல கோபுரத்தின் பக்கம் காண முடியும் என்றும் தெரிய வருகின்றது. இந்தச் சமயம் தான் நடராஜர் கோயிலில் இருந்து அப்புறப் படுத்தி இருக்க வேண்டும்.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ

செவ்வாய், 22 அக்டோபர், 2019

ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 72 ॐ
{ஆங்கிலேயர்&பிரெஞ்சுகாரர்களின் அடைக்கலம் பெற்ற விபரங்கள்}

சிதம்பரம் கோயில், ஸ்ரீரங்கம் கோயில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் ஆகியவை அடுத்தடுத்து அந்நியப் படையெடுப்பில் பாதிக்கப்பட்ட முக்கியக் கோயில்கள் எனத் தெரிய வருகின்றது. இந்தக் கோயில்களின் இந்தத் தாக்குதல்கள் பற்றி கங்காதேவி என்பவர் எழுதிய மதுரா விஜயம் என்னும் வடமொழி நூலில் குறிப்பிட்டிருப்பதாகவும் அறிகின்றோம். இது தவிர நாம் ஏற்கெனவே பார்த்த படி பதினெட்டாம் நூற்றாண்டில் கர்நாடக யுத்தம் மற்றும் இரண்டாம் மைசூர் யுத்தம் சமயத்திலும் சிதம்பரம் கோயிலின் தாக்குதல் முக்கியத்துவம் பெறுகின்றது. 1760ம் ஆண்டில் இருந்து 1780ம் ஆண்டு வரையிலும் கோயிலை இந்தச் சண்டைகளின் போது ஒரு கோட்டையாகவும் அரணாகவும் பயன்படுத்தி வந்ததாயும் அதற்கு முன்னால் 1753ல் இருந்து 1760 வரை பிரெஞ்சுக்காரர்களிடம் கோயில் இருந்ததாயும் சொல்கின்றனர்.
1749ல் ஆரம்பித்த இந்தச் சண்டையில் முதலில் ஆங்கிலேயர் வசம் இருந்த இந்த கோயில் பக்கத்துக் கோட்டையான புவனகிரியை பிரஞ்சுக்காரர்கள் வீழ்த்தியதும் அவர்கள் வசம் சென்றது. பிரெஞ்சுக்காரர்கள் சிதம்பரம் கோயிலை "செலம்பரம் பகோடா" என்ற பெயரில் அழைத்து வந்ததாய் கர்னல் சி.பி. மலேசம் என்பவரின் இந்திய சரித்திரத்தில் பிரெஞ்சுக்காரர்களின் பங்கு என்னும் சரித்திரப் புத்தகத்தில் கூறி உள்ளார். கொள்ளிடத்துக்கு வடக்கே ஆறாவது மைலில் இருந்த இந்தக் கோயிலைப் பற்றியும் தஞ்சை மராட்டி அரசன் ஷாஜி என்பவன் தனக்குத் தான் தஞ்சை சிம்மாசனம் சேர வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்ததாயும் அந்தச் சமயம் சிதம்பரத்தில் அவன் அடைக்கலம் புகுந்ததாயும் பிரெஞ்சுக்காரர்களோடு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு அந்தச் சமயம் தான் காரைக்காலை பிரெஞ்சுக்காரர்கள் வசம் கொடுத்ததாயும் சொல்கின்றார். ஹைதர் அலி கோயிலைத் தன்னுடைய முக்கிய படைத்தளமாய் ஆக்கிக் கொண்டதாயும் அங்கே 3,000 படை வீரர்கள் தங்க வைக்கப்பட்டதாயும் தெரிய வருகின்றது. இரண்டாம் மைசூர் சண்டையின் போது கர்னல் கூட் என்பவர் தென் திசை நோக்கிய தன் பயணத்தை விரிவு படுத்தினார். திண்டிவனம், வானூர், விழுப்புரம், திரிவாடி, கடலூர், விருத்தாசலம் அனைத்தும் அவருக்கு மிக சுலபமாய்க் கிடைத்து விட்டது. பிரெஞ்சுக்காரர்களுக்கு செஞ்சியும் தியாக துர்க்கமும் மட்டுமே மிஞ்சியது. கூட் இந்த இரண்டாம் மைசூர் சண்டையின் போது கோயிலைத் தாக்கினார். ஆனாலும் விரட்டப் பட்டார். 18 பவுண்டு கன் வைத்துக் கோயில் சுவர்களைத் தகர்க்கும் முயற்சி நடைபெற்றது. இந்த முயற்சி மேல கோபுரத்தின் பக்கம் நடந்திருக்கலாம் என அனுமானிக்கப் படுகின்றது. இதன் அடையாளங்கள் இன்னமும் கோயிலின் மேல கோபுரத்தின் பக்கம் காண முடியும் என்றும் தெரிய வருகின்றது. இந்தச் சமயம் தான் நடராஜர் கோயிலில் இருந்து அப்புறப்படுத்தி இருக்க வேண்டும்.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ

ஞாயிறு, 20 அக்டோபர், 2019

ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 71 ॐ

{சரித்திரத் தகவல்கள் தொடர்கின்றது}

தில்லை அம்பலத்தில் எழுந்தருளி இருக்கும் நடராஜர் சர்வதாரி வருடம் மார்கழி மாதம் 25 ம் தேதி முதல் அட்சய வருடம் கார்த்திகை மாதம் பதினான்காம் தேதி வரையிலும் அதாவது ஆங்கில வருடம் கி.பி. 1648 டிசம்பர் 24 தேதி முதல் 1686 ம் வருடம் நவம்பர் மாதம் 14 ம் தேதி வரையிலும் கிட்டத்தட்ட 37 ஆண்டுகள் 10 மாதங்கள், 20 நாட்கள் மறைந்து வாழ்ந்து வந்திருக்கின்றார். மேற்குறிப்பிட்ட காலப்பகுதியில் பற்பல இடங்களுக்கும் தில்லையாண்டவரை எடுத்துச் சென்றிருக்கும் சாத்தியக் கூறுகள் உண்டு. குறிப்பாய் ஒரு இடம் எனச் சொல்ல முடியாமல் முடிந்தவரையில் எங்கெங்கெல்லாம் முடியுமோ அங்கங்கே எல்லாம் மறைத்து வைத்திருக்கின்றனர் என்று புலனாகின்றது. பாண்டிய நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு குடுமியான் மலையில் 40 மாதங்களும் பின்னர் மதுரையில் சில காலமும் வைக்கப்பட்டிருக்கின்றார். இந்தச் செய்திகள் 46 ம் எண்ணுள்ள செப்பேட்டில் குறிக்கப்பட்டுள்ளதாய்த் தெரிய வருகின்றது. சாம்போஜி மன்னர் 1684 ம் ஆண்டு ஆரம்பித்து 1686 ம் வருடம் வரையிலும் தில்லைக் கோயிலில் திருப்பணிகள் செய்து வந்ததாயும் தெரிய வருகின்றது. மேலும் அந்தக் கால கட்டத்தில் அம்பலவாணனுக்கு "ஊருடைய முதலியார்" என்ற பெயரும் வழங்கப் பட்டிருக்கின்றது.

"மருவிய சகாத்தமாயிரமும் ஐநூற்றெழுப
துக்கு மேல் சருவதாரி
வருஷமார் கழிமாதம் ஆதித்த வாரமதில்
மன்னும் அம்பலவாணரை
அருமையொடு குடுமிமா மலையினாற் பதுமாதம்
அப்புற மதுரை தனிலே
அடவுடன் எழுந்தருளி ஆகமுப்பதியின்
னெட்டான அட்சய வருஷமும்
பரவு கார்த்திகை மாத தேதிபதி னாலுடன்
பருதிநாள் வளர்பக்கமும்
பகருத்தி ரட்டாதி திசமிக்கும் பத்தினிற்
பாருயிரே லாமுய்யவே
திருமருவு செம்பொன்மா மழைகளது பொழியுவுந்
தில்லைமா னகர் வாழவுந்
தேவர்கள் துதிக்கவு மூருடைய முதலியார்
சிற்சபையுள் மேவினாரே!"

இதன் பின்னர் தில்லைக் கூத்தன் மீண்டும் தில்லையில் இருந்து வெளியே சென்று 1696 ல் சிதம்பரம் மீண்டும் வந்தார் என்று ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள கல்வெட்டில் குறிக்கப் பட்டிருப்பதாய்த் தெரிய வருகின்றது. இதற்கு அப்போதைய முகலாய சாம்ராஜ்ய அரசன் ஆன ஒளரங்கசீப்பின் படை எடுப்புக் காரணமாய் இருக்கலாம் என்றும் சொல்கின்றனர். தென்னாட்டில் செஞ்சியில் 7 ஆண்டுகள் இந்தப் படைகள் தங்கி இருந்ததாயும் தெரிய வருகின்றது. தஞ்சை மராட்டிய வம்சத்து அரசர்களுக்குத் தில்லைக் கூத்தன் பால் உள்ள அன்பால் அச்சமயம் திருவாரூரில் தில்லைக் கூத்தனை மறைத்து வைத்திருந்ததாயும் சொல்கின்றனர். அப்போது எடுத்து செல்ல பட்ட செப்பேடுகள் பின்னாட்களில் அம்பலவாணன் தில்லைக்கு திரும்பும் போது திருவாரூரிலேயே தங்கி விட்டபடியால் அந்தச் செப்பேடுகள் திருவாரூர்ச் செப்பேடுகள் என்று அழைக்கப் பட்டதாயும் சொல்கின்றார். தில்லைப் பேரம்பலத்தில் அம்பலவாணனை மறைத்து வைத்திருந்த பெட்டியை இன்றும் காண முடிகின்றது. அடுத்து சைவ மடங்களின் தொண்டுகளைச் சிறிது காணலாம். சைவ மடங்கள் ஆன தருமபுரம் ஆதீனம், திருவாடுதுறை ஆதீனம், திருப்பனந்தாள் காசி மடம் ஆகியவை தில்லைச் சிற்றம்பலக் கூத்தன் பால் பேரன்பு பூண்டு அங்கு தொண்டு செய்வதை பெரும் பாக்கியமாய்க் கருதும் மடங்கள் ஆகும். இந்த மடங்கள் தினசரி வழிபாட்டுக்கான கட்டளைகள் மட்டு மின்றி திருப்பணிகளும் செய்து கொடுக்கின்றன. இம்மடங்கள் முறை போட்டுக் கொண்டு ஓதுவார்களையும் தயார் செய்து கோயிலுக்கு அளித்து வருகின்றது. இந்த மடங்களால் நிர்வகிக்கப் படும் திருமுறைக் கழகம் தில்லை வாழ் அந்தணர்கள், ஓதுவார்கள், மற்றும் பொதுமக்களில் விரும்புபவர்களுக்குத் திருமுறை கற்றுக் கொடுக்கும் பணியையும் செய்து வருகின்றது. எல்லாக் கால பூஜைகளிலும் தேவாரம், திருவாசகம், பெரியபுராணம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு போன்ற பஞ்ச புராணங்கள் என்று சொல்லப் படும் தமிழ் பாக்கள் தான் பாடப்பட்டு வருகின்றன. தினசரி ஒவ்வொரு கால பூஜையின் போதும் கோயிலின் முறையான ஓதுவார்களால் திருவெம்பாவையும் ஓதப்படுகிறது. இவை நந்திக்குப் பின்னர் இருந்தே ஓதப்படவேண்டும் என்பது மரபு. இந்த ஓதுவார்களை இதற்கெனவே தயார் செய்து அளிப்பதில் இருந்து ஓதுவார்களுக்கான செலவுகளையும் சைவ மடங்களே பொறுப்பெடுத்துக் கொள்ளுகின்றது. சிவன் கோயில்களில் மட்டுமே ஓதுவார்கள் என்ற தனி அடியார்கள் இருக்கின்றனர். இவர்களே தமிழிசைப் பாடல்கள் ஆன தேவார, திருவாசகப் பாடல்களை வழிபாட்டின் காலத்துக்கு ஏற்றாற்போல் பாடுகின்றனர். தற்சமயம் பாடி வருபவர்களில் ஒரு பெண்மணியும் சிதம்பரத்திலேயே இருக்கும் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் (ஓய்வு) இருவரும் திருப்பனந்தாள் மடத்தால் நியமிக்கப்பட்டு பாடிவருவதாய்த் தெரிய வருகின்றது. பரம்பரை ஓதுவார்கள் போல பாவமும் ராகமும் அமையா விட்டாலும் இறைவன் மேல் கொண்ட ஆசையும் அன்பும் தமிழின் மேல் கொண்ட ஆர்வமும் இவர்களைப் பாட வைக்கின்றது. ஒவ்வொரு கால பூஜை வழிபாட்டின் போதும் அனைத்து பக்தர்களும் இறைவனைத் தரிசிக்கும் வண்ணம் கனகசபையில் வைத்தே அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஆராதனைகளும் அபிஷேகங்களும் நடக்கும் போது பக்தர்கள் அனைவரும் கட்டுக்கோப்புடனும் ஒழுங்கு முறையுடனும் நின்று கொண்டு தரிசிப்பதோடு அல்லாமல் வெளி ஊர் பக்தர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதையும் தமிழ்நாட்டிலேயே இந்தக் கோயிலில் பார்க்க முடிகின்றது. மேலும் பாலபிஷேகம் செய்யும் போது பெரிய அண்டாக்களில் நிரப்பி வைத்து அபிஷேகம் செய்யப்படும் பாலை உள்ளூர் பக்தர்கள் தங்கள் சக்தி கேற்றவாறு பாத்திரங்கள் கொண்டு வந்து அங்கே உள்ள தீட்சிதர்களிடம் கொடுத்து அந்தப் பாலை அபிஷேகம் செய்யும் போதே நிரப்பித் தருமாறு கேட்டு வாங்கிக் கொள்கின்றனர். அநேகமாய் ஒரு லிட்டர் பாலுக்குக் குறையாமல் ஒருவருக்குக் கிடைக்கின்றது. அதே போல் இறைவனின் அபிஷேகத்துக்குப் பாலைக் கொண்டு வந்து கொடுத்த வண்ணமும் இருக்கின்றனர். அந்தச் சமயம் எந்த தீட்சிதர் வழிபாடுகள் நடத்த வேண்டிய முறையில் இருக்கின்றாரோ அவரைத் தவிர மற்றவர்கள் செய்வதில்லை. மற்றவர்கள் அவருக்கு உதவியாக அபிஷேகப் பொருட்களை எடுத்து வந்து கொடுப்பதிலும் பொது மக்களுக்குப் பிரசாத விநியோகங்கள் செய்வதிலும் ஈடுபடுவதோடு ருத்ரம், சமகம் போன்ற வேத கோஷங்களையும் ஓதுவார்களோடு சேர்ந்து அவர்களும் தேவார, திருவாசகப் பண்களை இசைப்பதிலும் ஈடுபடுகின்றனர். இறைவனைச் சிந்தையில் நிறுத்துவது தவிர வேறொன்று இருக்கக் கூடாது என்பதால் அந்த நேரம் இவை சொல்லப் படுகின்றன. கனகசபையில் ரத்தினசபாபதி, ஸ்படிக லிங்கம், பைரவர்(தனியாக அபிஷேகம் செய்வார்கள்) போன்றவர்களுக்கு அபிஷேக ஆராதனைகள் முடிந்துக் கடைசியாக ரத்தின சபாபதிக்கு கற்பூர ஆரத்தி காட்டும் போது முன்னும் பின்னும் அந்த கற்பூர ஒளியில் ரத்தின சபாபதி ஜொலிக்கும் போது கூட்டம் பித்துப் பிடித்தாற்போல் "தென்னாடுடைய சிவனே போற்றி!" "எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!" நடராஜா! திருச்சிற்றம்பலம்!" என்றெல்லாம் கோஷங்கள் எழுப்புகின்றனர். இங்கே இவை எல்லாம் முடிந்த பின்னரே மூலஸ்தானத்தில் நடராஜருக்கு கற்பூர தீபாராதனை காட்டப்படுகின்றது. நடராஜருக்குச் செய்யப்படும் அர்ச்சனைகளின் போது சொல்லப்படும் அஷ்டோத்திரம் சஹஸ்ரநாமம் மற்றும் மந்திரபுஷ்பங்கள் என்று சொல்லப் படுபவை தவிர வேறு எந்தவிதமான ஸ்தோத்திரங்களோ பாடல்களோ வேத கோஷங்களோ மூலஸ்தானத்தில் சொல்லுவதில்லை என்பதை கட்டாயமாய்க் கடைப்பிடிக்கின்றனர்.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ