செவ்வாய், 31 டிசம்பர், 2013

 

51சக்தி பீடங்கள்-பகுதி- 10

அருள்மிகு க்ஷீரராம லிங்கேஸ்வரர் திருக்கோயில்
மூலவர்:க்ஷீரராம லிங்கேஸ்வரர், திரக்ஷராமர், திரக்ஷõராமா
அம்மன்/தாயார்:மாணிக்காம்பாள்
பழமை:2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:திராக்ஷõராமா
ஊர்:பாலக்கொல்லு
மாவட்டம்:கிழக்கு கோதாவரி
மாநிலம்:ஆந்திர பிரதேசம்

திருவிழா:பிரதோஷம், சிவராத்திரி, நவராத்திரி

தல சிறப்பு:இங்குள்ள லிங்கம் பளிங்கு கல்லால் ஆனது. இந்த லிங்கத்தின் பின்புறம் மூன்று கோடுகள் உள்ளதாகவும் இதற்கு ஜடாமகுடம் தரித்து அலங்கரிப்பர் என்பதும் சிறப்பு. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது மாணிக்க சக்தி பீடம் ஆகும்.

திறக்கும் நேரம்:காலை 5.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:அருள்மிகு க்ஷீர ராம லிங்கேச்வரசுவாமி திருக்கோயில் பாலக்கொல்லு, கிழக்கு கோதாவரி மாவட்டம் ஆந்திரப்பிரதேசம்.

பொது தகவல்:கர்ப்பகிரகத்தில் கறுப்பு கற்களாலான 27 தூண்கள் உள்ளன. மூலவரான ராமலிங்கேச்வர சுவாமிக்கு இடப்புறம் தனித்தனி சன்னதியில் கோதர்னேச்வரரும், விக்னேச்வரரும் அருள்பாலிக்கின்றனர். மூலவருக்கு வலப்புறம் தனித்தனி சன்னதியில் சுப்ரமணிய சுவாமியும், ஜனார்த்தன சுவாமியும் உள்ளனர். கர்ப்பகிரகத்தின் நான்குபுறமும் உள்ள நான்கு ஜன்னல்கள் மூலம் மூலவரைக் காணலாம். மேலும் பார்வதி, லட்சுமி, நாரேச்வரலிங்கம், துண்டி விநாயகர், வீரபத்ரர், சப்தமாதர்கள், கனக துர்கா, பிரம்மா, சரஸ்வதி, குமாரசுவாமி, மகிஷாசுரமர்த்தினி, நடராஜர், தத்தாத்ரேயர், காலபைரவர், சனீஸ்வரர், ராதா கிருஷ்ணர் ஆகியோரையும் தரிசனம் செய்யலாம்.

பிரார்த்தனை:பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற இங்குள்ள சிவனை வழிபாடு செய்கின்றனர்.

நேர்த்திக்கடன்:பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் அணிவித்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

தலபெருமை:இந்தக் கோயிலில் உள்ள லிங்கம் மிகவும் பழமை வாய்ந்த ஒன்றாகும். கிழக்கு கோபுரம் 120 அடி உயரமுள்ளது. 9ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோபுரம். இதில் உள்ள பழமை வாய்ந்த சிவலிங்கம் திரேதாயுகத்தில் ராமபிரானால் வழிபடப்பட்டது. எனவே இதை ராமலிங்கேச்வர சுவாமி என்றும், க்ஷீர ராமேஸ்வர சவாமி என்றும் அழைப்பர்.

இந்தக் கோயிலில் ஒரு நாள் முழுவதும் தங்கி ராமலிங்கேச்வரரை வழிபட்டால், காசியில் ஒரு வருடம் தங்கியதற்கு சமம். கோயில் பிரகாரம் ஸ்ரீவேலுபதி என்பவரால் 10ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

தல வரலாறு:தாரகாசுரனை குமாரசுவாமி கொன்று அவன் தொண்டைப் பகுதியில் கட்டியிருந்த லிங்கத்தை உடைத்தவுடன் அது ஐந்து பகுதிகளாக தெறித்து ஐந்து இடங்களில் விழுந்தது. அப்படி விழுந்த லிங்கங்களில் இதுவும் ஒன்று.சப்த மகரிஷிகளில் ஒருவரான கவுசிக மகரிஷியின் மகன் உபமன்யு இங்கு சிவ வழிபாடு செய்து வந்தான். வழிபாட்டின் ஒரு அம்சமான பால் அபிஷேகத்துக்கு இந்தப் பகுதியில் தேவையான பால் கிடைக்கவில்லை. எனவே உபமன்யு அதற்கும் சிவபெருமானை வேண்ட அவர் தன்கையில் இருந்த திரிசூலத்தால் ஒரு பெரிய பள்ளத்தை தோண்ட, அதில் பாற்கடலில் இருந்து பால் வந்து நிரம்பியது. இதனால் உபமன்யுவின் கோரிக்கை மட்டும் நிறைவேறியதோடு மட்டுமில்லாமல் இந்தப் பகுதியில் வசித்து வந்தவர்களுக்கு தங்குதடையின்றி நிரந்தமாக பால் கிடைக்க வழியேற்பட்டது. எனவே இந்த ஊர் ஆதியில் பாலகோடா என்றழைக்கப்பட்டு காலப்போக்கில் பாலக்கொல்லு என்றழைக்கப்படலாயிற்று.

சிறப்பம்சம்:அதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள லிங்கம் பளிங்கு கல்லால் ஆனது. இந்த லிங்கத்தின் பின்புறம் மூன்று கோடுகள் உள்ளதாகவும் இதற்கு ஜடாமகுடம் தரித்து அலங்கரிப்பர் என்பதும் சிறப்பு. அம்மனின் சக்திபீடங்களில் இது மாணிக்க பீடமாகும்.

51சக்தி பீடங்கள்-குதி-9

 அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயில்
மூலவர்:மகாலட்சுமி
பழமை:2000 வருடங்களுக்கு முன்
ஊர்:கோலாப்பூர்
மாவட்டம்:கோலாப்பூர்
மாநிலம்:மகாராஷ்டிரா
திருவிழா:நவராத்திரி

தல சிறப்பு:வருடத்தின் இரண்டு முறை கர்ப்பகிரகத்தின் பலகணி வழியாக சூரியனின் கதிர்கள் மாலை வேளையில் அம்மனின் மீது படுவது சிறப்பு. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது கரவீர சக்தி பீடம் ஆகும்.

திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயில் கோலாப்பூர் (கரவீரபீடம்), மகாராஷ்டிரா.

பொது தகவல்:காளி, சரஸ்வதி, நவகிரகங்கள், பாண்டுரங்கன், காசி விஸ்வநாதன், சீதை, லட்சுமணன், மாருதியுடன் கூடிய ஸ்ரீராமன் ஆகியோரும் தரிசனம் தருகின்றனர்.

பிரார்த்தனை:தோஷங்கள் எதுவாக இருந்தாலும் இங்கு பிரார்த்தனை செய்தால் தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:இங்குள்ள அம்மனுக்கு அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

தலபெருமை:அன்னையின் கோயிலைச் சுற்றி 50 சிறு கோயில்களும் ஊர் முழுவதிலும் 3000 கோயில்களும் உள்ளன. சக்தி பீடங்களுள் ஒன்றான இக்கோயில் மராட்டிய பாணியில் கட்டப்பட்டது. தேவி, கோலாசுரன் என்ற அரக்கனைச் சிங்கவாகனத்தில் எழுந்தருளி கதையால் அழித்த தலம் இது. மகாத்வாரம் என்ற மேற்கு வாசலில் அழகிய தீபஸ்தம்பங்களைக் காணலாம். கருட மண்டபமும் கணேசர் சன்னதியும் கருவறைக்கு எதிரில் உள்ளன. அன்னை ஒரு சதுரபீடத்தில் நின்றபடி அருள்பாலிக்கிறாள். அன்னையின் சிற்பம் 1300 ஆண்டுகள் பழமையானது. மிகவும் அரிதான கரும் ரத்தினக்கல்லால் ஆனது. ஆதிசேஷன் குடைபிடிக்க அன்னை கையில் அமுதசுரபி ஏந்தி இருக்கிறாள்.

தல வரலாறு:பிரளய காலத்தில் கடல் பொங்கி எல்லா இடங்களையும் கொண்டுவிட, இந்த ஒரு பகுதி மட்டும் அன்னை மகாலக்ஷ்மியின் கரங்களின் வீரத்தால் உயர்த்தி நிறுத்தப்பட்டது. கரவீர்= கர- கை,வீர்-வீரம். காசியை விட்டு வெளியேறிய அகத்தியர் கயிலைநாதனிடம் வேண்ட, அவருக்காக ஈசன் கட்டிய, காசிக்குச் சமமான இத்தலம் குளபுரம் என்றும் அழைக்கப்பட்டது.

சிறப்பம்சம்:அதிசயத்தின் அடிப்படையில்: வருடத்தின் இரண்டு முறை கர்ப்பகிரகத்தின் பலகணி வழியாக சூரியனின் கதிர்கள் மாலை வேளையில் அம்மனின் மீது படுவது சிறப்பு.

திங்கள், 30 டிசம்பர், 2013

51சக்தி பீடங்கள்-குதி-8


அருள்மிகு பாபநாசநாதர் திருக்கோயில்

மூலவர் : பாபநாசநாதர்
அம்மன்/தாயார் : உலகம்மை, விமலை, உலகநாயகி
பழமை :2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் :இந்திரகீழ க்ஷேத்திரம்
ஊர் :பாபநாசம்
மாவட்டம் :திருநெல்வேலி
மாநிலம் :தமிழ்நாடு

திருவிழா:சித்திரையில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், சித்திரைப் பிறப்பன்று அகத்தியருக்கு திருமணக்காட்சி விழா, தைப்பூசம்

தல சிறப்பு:நவகைலாயங்களில் முதல் தலமான பாபநாசம் முதல் கிரகமான சூரியனுக்குரியதானது. சூரிய தலம் என்றும் சூரிய கைலாயம் என்றும் அழைக்கப்படுகிறது. வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகியோருக்கு ஒரு தைப்பூசத்தன்று நடராஜர் நந்தியின் கொம்புகளுக்கு இடையே நின்று நடன தரிசனம் தந்தார். எனவே இங்கு தைப்பூசத்தில் நந்திக்கு சந்தனக்காப்பு செய்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது விமலை சக்தி பீடம் ஆகும்.

திறக்கும் நேரம்:காலை 6.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:அருள்மிகு பாபநாசநாதர் திருக்கோயில், பாபநாசம்-627 551, திருநெல்வேலி மாவட்டம்.போன்:+91- 4634 - 223 268.

பொது தகவல்:ராஜகோபுரத்தை அடுத்து நடராஜர் தனிச்சன்னதியில் ஆனந்ததாண்டவ கோலத்தில் இருக்கிறார். இவரை, "புனுகு சபாபதி' என்கின்றனர்.

பிரார்த்தனை:கிரக ரீதியாகவோ, ஜாதக ரீதியாகவோ குழந்தைகளுக்கு தோஷம் இருந்தால் அவர்களை இறைவனுக்கு தத்து கொடுத்து வாங்க உகந்த ஸ்தலம் இது.

உலகம்மைக்கு அபிஷேகிக்கப்படும் மஞ்சள் தீர்த்தத்தை சிறிது அருந்தினால், திருமண, புத்திர பாக்கியங்கள் கிடைக்கும், பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பர் என்பதாக நம்புகின்றனர்.
நேர்த்திக்கடன்:சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

தலபெருமை:பெயர்க்காரணம்: அசுர குருவான சுக்ராச்சாரியாரின் மகன் துவஷ்டா என்பவனை குருவாக ஏற்றான் இந்திரன். ஒருசமயம் துவஷ்டா அசுரர்களின் நலனுக்காக யாகம் ஒன்றை நடத்தினார். இதனை அறிந்த இந்திரன் அவரை கொன்று விட்டான். இதனால் அவனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. பூலோகத்தில் பல தலங்களுக்கும் சென்று சிவனை வழிபட்டு விமோசனம் தேடினான். வியாழ பகவான் இந்திரனிடம், இத்தலத்தில் உள்ள சுவாமியை வணங்கினால் தோஷம் நீங்கும் என்றார். அதன்படி இந்திரன் இத்தலத்தின் எல்லைக்கு வந்தபோதே பாவம் நீங்கப்பெற்றான். இந்திரனின் பாவத்தை நீக்கிய சிவன் என்பதால் இவரை "பாபநாசநாதர்' என்கின்றனர். இத்தலத்திற்கு "இந்திரகீழ க்ஷேத்திரம்' என்ற பெயரும் இருக்கிறது.

சூரியதலம்: அகத்தியரின் சீடரான உரோமச முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் பல இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்யவும், அதற்கான இடங்களை தேர்ந்தெடுத்து தருமாறும் குருவிடம் கேட்டார். சிவனுக்கு பூஜை செய்த தாமரைமலர்களை தாமிரபரணியில் வீசும்படியும், அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் லிங்க பிரதிஷ்டை செய்யும்படியும் அகத்தியர் கூறினார். அதன்படி உரோமசர் தாமரை மலர்களை நீரில் விட, 9 பூக்கள் பல இடங்களில் கரை ஒதுங்கின. இந்த இடங்களில் எல்லாம் சிவலிங்க பிரதிஷ்டை செய்தார் உரோமசர். இவை "நவ கைலாய தலங்கள்' எனப்பட்டன. நவக்கிரகங்கள் ஒன்பது என்பதால் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு இடம் ஒதுக்கப்பட்டது. நவகைலாயங்களில் முதல் தலமான பாபநாசம் முதல் கிரகமான சூரியனுக்குரியதானது. சூரிய தலம் என்றும் சூரிய கைலாயம் என்றும் அழைக்கப்படுகிறது.

முக்கிளா லிங்கம்: இத்தலத்து லிங்கத்திற்கு " முக்கிளா லிங்கம்' என்ற பெயரும் உண்டு. கருவறையில் ருத்ராட்ச வடிவிலும், பிரகாரத்தில் முக்கிளா மரத்தின் கீழும் பாபநாசர் இருக்கிறார். ரிக், யஜுர், சாமம் ஆகிய மூன்று வேதங்களே கிளா மரமாக மாறி இறைவனுக்கு நிழல் தந்தும், அதர்வண வேதம் ஆகாயமாக இருந்தும் இவரை வழிபட்டது. எனவே சிவனுக்கு இப்பெயர் வந்ததாக சொல்கிறார்கள்.

சிறப்பம்சம்: பொதிகை மலையில் உருவாகி மலைகளில் விழுந்து வரும் தாமிரபரணி நதி இக்கோயிலுக்கு அருகேதான் சமநிலையடைகிறது. தினமும் உச்சிக்கால பூஜையின் போது தாமிரபரணி நதியில் மீன்களுக்கு நைவேத்திய உணவுகளைப் படைத்து பூஜைகள் செய்யப்படுகிறது. வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகியோருக்கு ஒரு தைப்பூசத்தன்று நடராஜர் நந்தியின் கொம்புகளுக்கு இடையே நின்று நடன தரிசனம் தந்தார். எனவே இங்கு தைப்பூசத்தில் நந்திக்கு சந்தனக்காப்பு செய்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது.அம்பாள் உலகம்மை சன்னதி முன்பு ஒரு உரல் இருக்கிறது. இதில் பெண்கள் விரளி மஞ்சளை இட்டு அதனை இடிக்கின்றனர். இம்மஞ்சளாலேயே அம்பாளுக்கு அபிஷேகங்கள் நடக்கிறது. அபிஷேகிக்கப்படும் மஞ்சள் தீர்த்தத்தை சிறிது அருந்தினால், திருமண, புத்திர பாக்கியங்கள் கிடைக்கும், பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பர் என்பதாக நம்புகின்றனர்

தல வரலாறு: கைலாயத்தில் சிவனுக்கும், பார்வதிக்கும் திருமணம் நடந்த போது வடக்கே தாழ்ந்து, தெற்கே உயர்ந்தது. பூமியை சமப்படுத்துவதற்காக, அகத்தியரை பொதிகை மலைக்கு அனுப்பினார் சிவன். சித்திரை மாதப்பிறப்பன்று அவருக்கு தனது திருமண கோலத்தை காட்டியருளினார். கருவறைக்கு பின்புறம் பிரகாரத்தில் கல்யாண சுந்தரராக அம்பாளுடன் ரிஷபத்தின் மீது அமர்ந்த கோலத்தில் சிவன் இருக்கிறார். அருகிலேயே அகத்தியரும் அவர் மனைவி, லோபாமுத்திரையும் வணங்கிய கோலத்தில் உள்ளனர்.

சிறப்பம்சம்: அதிசயத்தின் அடிப்படையில்: நவகைலாயங்களில் முதல் தலமான பாபநாசம் முதல் கிரகமான சூரியனுக்குரியதானது. சூரிய தலம் என்றும் சூரிய கைலாயம் என்றும் அழைக்கப்படுகிறது. வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகியோருக்கு ஒரு தைப்பூசத்தன்று நடராஜர் நந்தியின் கொம்புகளுக்கு இடையே நின்று நடன தரிசனம் தந்தார். எனவே இங்கு தைப்பூசத்தில் நந்திக்கு சந்தனக்காப்பு செய்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அம்மனின் சக்தி பீடங்களில் இது விமலை பீடமாகும்.

 51சக்தி பீடங்கள்-குதி-7

அருள்மிகு கொடுங்கலூர் பகவதி அம்மன் திருக்கோயில்

மூலவர் : பகவதி அம்மன்
பழமை :2000 வருடங்களுக்கு முன்
ஊர் :கொடுங்கலூர்
மாவட்டம் :திருச்சூர்
மாநிலம் :கேரளா

திருவிழா:தைமாதம் 1 முதல் 4ம் தேதிவரை "தாழப்புலி' என்ற உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் சுமங்கலி பெண்கள் எண்ணை, குங்குமம், மஞ்சள், பூ இவைகளை மேளதாளத்துடன் அம்மனுக்கு படைப்பார்கள். நவராத்திரி, சிவராத்திரி, ஆடி வெள்ளி தினங்களில் இங்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.

தல சிறப்பு:இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் எழுதிய காலத்திலேயே கோயில் கட்டப்பட்டதாக கல்வெட்டு கூறுகிறது. இந்த பகவதியை இவ்வூரின் தாயாக கருதுகிறார்கள். தங்கள் இல்லங்களில் நடக்கும் எந்த விசேஷமாக இருந்தாலும் முதல் மரியாதை இந்த அம்மனுக்கு தான். ஆரம்ப காலத்தில் இந்த பகவதி மிகவும் உக்கிர தெய்வமாக இருந்துள்ளாள். அப்போதெல்லாம் இவளுக்கு உயிர்ப்பலியிட்டும், கள் நைவேத்தியம் செய்தும் வழிபாடு செய்துள்ளார்கள். அதன் பின் ஆதிசங்கரர் எந்திர பிரதிஷ்டை செய்து சாந்த சொரூபியாக்கினார். ஆனால் பகவதியை இப்போது பார்த்தாலும் கோபத்துடன் பார்ப்பதை போலவே தோன்றும். உயிர்ப்பலிக்கு பதில் குங்குமத்தில் குருதி பூஜையும், கள்ளிற்கு பதில் இளநீரும் மஞ்சள்பொடியும் கலந்து நைவேத்தியம் செய்வதற்காக ஒரு நம்பூதிரியை ஆதிசங்கரர் நியமித்தார். அதன் தொடர்ச்சியாக இன்றும் இதன்படி நைவேத்யம் செய்யப்படுகிறது. கோயில் அமைப்பு: எட்டு கை, பெரிய கண், சிறிய இடை, எதிரியை அழிக்கும் கோபத்துடன் கூடிய முகம், ஆறடி உயரம், வலதுகால் மடக்கி இடது கால் தொங்கவிட்டு அமர்ந்த கோலத்தில் வடக்கு நோக்கி தலையில் கிரீடத்துடன் ஒரு அரசியைப்போல் பகவதி அருள்பாலிக்கிறாள். அம்மனின் விக்ரகம் பலா மரத்தினால் செய்யப்பட்டது. இதனை "வரிக்க பிலாவு' என்கிறார்கள். இதனால் அம்மனுக்கு சாதாரண அபிஷேகம் செய்வதில்லை. "சாந்தாட்டம்' என்ற சிறப்பு அபிஷேகம் மட்டுமே செய்யப்படுகிறது. அம்மனின் கர்ப்பகிரகத்திற்கு அருகே ஒரு ரகசிய அறை உள்ளது. இதையும் மூலஸ்தானமாக கருதி இதற்கும் சிறப்பு பூஜை செய்கிறார்கள். சிவனுக்கு கிழக்கு நோக்கி தனி சன்னதி உள்ளது. ஒரே இடத்தில் நின்று பகவதியையும் சிவனையும் தரிசிக்கும்படியான அமைப்பு இங்குள்ளது. இங்கு சிவனை விட அம்மனுக்கு தான் முக்கியத்துவம் அதிகம். கோயில் நுழைவு வாயிலில் ÷க்ஷத்திர பாலகர் உள்ளனர். அவர்களுக்கு சர்க்கரை சாதத்தில் தயிர் சேர்த்து நிவேதனம் செய்யப்படுகிறது. கோயில் முழுவதும் செம்பு தகடு வேயப்பட்டுள்ளது.

திறக்கும் நேரம்:காலை 4 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:கொடுங்கலூர் பகவதிஅம்மன் திருக்கோயில், கொடுங்கலூர், திருச்சூர் மாவட்டம். கேரளா மாநிலம்.போன்:+91- 480-280 3061.

பொது தகவல்:கோயில் அமைப்பு: எட்டு கை, பெரிய கண், சிறிய இடை, எதிரியை அழிக்கும் கோபத்துடன் கூடிய முகம், ஆறடி உயரம், வலதுகால் மடக்கி இடது கால் தொங்கவிட்டு அமர்ந்த கோலத்தில் வடக்கு நோக்கி தலையில் கிரீடத்துடன் ஒரு அரசியைப்போல் பகவதி அருள்பாலிக்கிறாள். அம்மனின் விக்ரகம் பலா மரத்தினால் செய்யப்பட்டது. இதனை "வரிக்க பிலாவு' என்கிறார்கள். இதனால் அம்மனுக்கு சாதாரண அபிஷேகம் செய்வதில்லை. "சாந்தாட்டம்' என்ற சிறப்பு அபிஷேகம் மட்டுமே செய்யப்படுகிறது. அம்மனின் கர்ப்பகிரகத்திற்கு அருகே ஒரு ரகசிய அறை உள்ளது. இதையும் மூலஸ்தானமாக கருதி இதற்கும் சிறப்பு பூஜை செய்கிறார்கள். சிவனுக்கு கிழக்கு நோக்கி தனி சன்னதி உள்ளது. ஒரே இடத்தில் நின்று பகவதியையும் சிவனையும் தரிசிக்கும்படியான அமைப்பு இங்குள்ளது. இங்கு சிவனை விட அம்மனுக்கு தான் முக்கியத்துவம் அதிகம்.

கோயில் நுழைவு வாயிலில் சேத்திர பாலகர் உள்ளனர். அவர்களுக்கு சர்க்கரை சாதத்தில் தயிர் சேர்த்து நிவேதனம் செய்யப்படுகிறது. கோயில் முழுவதும் செம்பு தகடு வேயப்பட்டுள்ளது.

பிரார்த்தனை:அம்மை நோய் கண்டவர்கள் இங்கு நேர்ந்து கொள்கிறார்கள். கண்திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்கள், மன அமைதி இல்லாதவர்கள், எதிரி தொந்தரவு உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்து பலனடைகிறார்கள்.

"துலாபார வழிபாடு' இங்கு சிறப்பு. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் துலாபாரம் காணிக்கை செலுத்துவதாக நேர்ந்து கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:பிரார்த்தனை நிறைவேறியதும் அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், அன்னதானம் செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

தலபெருமை: இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் எழுதிய காலத்திலேயே கோயில் கட்டப்பட்டதாக கல்வெட்டு கூறுகிறது. இந்த பகவதியை இவ்வூரின் தாயாக கருதுகிறார்கள். தங்கள் இல்லங்களில் நடக்கும் எந்த விசேஷமாக இருந்தாலும் முதல் மரியாதை இந்த அம்மனுக்கு தான்.ஆரம்ப காலத்தில் இந்த பகவதி மிகவும் உக்கிர தெய்வமாக இருந்துள்ளாள். அப்போதெல்லாம் இவளுக்கு உயிர்ப்பலியிட்டும், கள் நைவேத்தியம் செய்தும் வழிபாடு செய்துள்ளார்கள். அதன் பின் ஆதிசங்கரர் எந்திர பிரதிஷ்டை செய்து சாந்த சொரூபியாக்கினார். ஆனால் பகவதியை இப்போது பார்த்தாலும் கோபத்துடன் பார்ப்பதை போலவே தோன்றும்.உயிர்ப்பலிக்கு பதில் குங்குமத்தில் குருதி பூஜையும், கள்ளிற்கு பதில் இளநீரும் மஞ்சள்பொடியும் கலந்து நைவேத்தியம் செய்வதற்காக ஒரு நம்பூதிரியை ஆதிசங்கரர் நியமித்தார். அதன் தொடர்ச்சியாக இன்றும் இதன்படி நைவேத்யம் செய்யப்படுகிறது.

தல வரலாறு: சிலப்பதிகாரத்தில் கோவலன் செல்வ சீமாட்டியான கண்ணகியை திருமணம் செய்கிறான். ஆனால் கூடா நட்பால் செல்வங்களை இழந்து மிகவும் கஷ்டப்படுகிறான். சொத்துக்களை இழந்த அவன் கடைசியில் மனைவி கண்ணகியுடன் பிழைப்பு தேடி மதுரை வருகிறான். அங்கு மனைவியின் கால் சிலம்பை விற்கும் போது, மதுரை அரசியின் காணாமல் போன சிலம்பும் ஒரே மாதிரியாக இருக்க, இவன் மேல் குற்றம் சாட்டப்பட்டு மன்னனின் ஆணையால் கொல்லப்படுகிறான்.

கணவன் இறந்த செய்தி கேட்டதும் கண்ணகி கோபத்துடன் மன்னனின் அரசபைக்கு சென்று மன்னனை சபிக்கிறாள். மதுரையை எரித்து விடுகிறாள். பின் அதே கோபத்துடன் சேர நாடு நோக்கி செல்கிறாள். இவளுக்கு சேரன் செங்குட்டுவன் கோயில் கட்டி பகவதி அம்மனாக வழிபாடு செய்கிறான். இதுவே தற்போது அமைந்துள்ள கொடுங்கலூர் பகவதி அம்மன் கோயிலாகும்.

சிறப்பம்சம்: அதிசயத்தின் அடிப்படையில்: அம்மனின் விக்ரகம் பலா மரத்தினால் செய்யப்பட்டது. இதனை "வரிக்க பிலாவு' என்கிறார்கள். இதனால் அம்மனுக்கு சாதாரண அபிஷேகம் செய்வதில்லை. "சாந்தாட்டம்' என்ற சிறப்பு அபிஷேகம் மட்டுமே செய்யப்படுகிறது.

51சக்தி பீடங்கள்-குதி-6


அருள்மிகு காமாக்யாதேவி திருக்கோயில்

மூலவர்:காமாக்யாதேவி
தீர்த்தம்:பிரம்மபுத்திரா
பழமை :2000 வருடங்களுக்கு முன்
ஊர் :கவுகாத்தி
மாவட்டம்:கவுகாத்தி
மாநிலம்:அஸ்ஸாம்

திருவிழா:நவராத்திரி

தல சிறப்பு:சக்தி பீடங்கள் 51 என நூல்கள் சொல்கின்றன. அதில் இத்தலம் முதல் தலமாகும். இந்த பீடங்களில் யோனி பீடம் அசாம் மாநிலத்தில் உள்ள காமாக்யா ஆகும். இதை காமரூப் என்றும் சொல்வார்கள். அம்மனின் சக்தி பீடங்களில் இது காமகிரி பீடம்.

திறக்கும் நேரம்:காலை 5.30 மணி முதல் மதியம் 1 மணி, 2.30 முதல் மாலை 6 மணிவரை திறந்திருக்கும்.

முகவரி:அருள்மிகு காமாக்யாதேவி திருக்கோயில், தி காமாக்யா டெப்யூட்டர் போர்டு, காமாக்யா டெம்பிள் காம்ப்ளக்ஸ். கவுகாத்தி - 781 010, அசாம் மாநிலம்.போன்:+91- 361- 273 4624, 273 4654

பொது தகவல்:கவுகாத்தியில் தாரா, பைரவி, புவனேஸ்வரி ஆகியோருக்கு கோயில்கள் அமைந்துள்ளன. அருகிலுள்ள ஹஸ்தகிரி என்ற இடத்தில் சுக்ராச்சாரியார் வழிபட்ட சுக்ரேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. நரகாசுரனை சம்ஹாரம் செய்த கிருஷ்ணனுக்கு "அஷ்வகிரந்தா' என்ற இடத்தில் கோயில் இருக்கிறது. மேலும் நவக்கிரகங்களுக்கென தனி ஆலயமும், சூரியனுக்கு மட்டும் தனியாக ஒரு கோயிலும் உள்ளன.

அசாம் தலைநகர் கவுகாத்தியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் நீலாசல் என்ற மலை அமைந்திருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 700 அடி உயரத்தில் இந்த மலை மீது காமாக்யாதேவியின் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கம் பின்பற்றப்படுகிறது. புராணங்களில் இந்த இடம் நரகாசுரனால் ஆளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த மலை அடிவாரத்தில் நான்கு பக்கங்களிலும் சொர்க்கபுரி வாயில், அனுமன் வாயில், புலிவாயில், சிங்கவாயில் என்ற நான்கு நுழைவு வாயில்களை நரகாசுரன் அமைத்திருந்தான்.

பிரார்த்தனை:திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

நேர்த்திக்கடன்:அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

தலபெருமை:பத்தாம் நூற்றாண்டில் இக்கோயில் அசாம் மன்னர்களால் சீர்திருத்தப்பட்டது. 1665ல் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. வெளிப்பிரகாரத்தைப் பார்த்தால் மட்டுமே கோயில் என்று இதை சொல்ல முடியும். உள்ளே சென்றால் ஒரு குகை மட்டுமே இருக்கிறது. அதற்குள் பத்து படிக்கட்டுகள் கீழே இறங்க வேண்டும். உள்ளே இருளாக இருக்கும். மின் விளக்குகள் கிடையாது. மிகவும் பொறுமையுடன் குகையின் சுவரை பிடித்துக்கொண்டு தட்டுத்தடுமாறி கீழே இறங்க வேண்டும். பாதாளத்தில் கருவறை அமைந்துள்ளது. அங்கே ஒரே ஒரு எண்ணெய் விளக்கு மட்டும் எரிகிறது. அந்த வெளிச்சத்தில்தான் காமாக்யாவுக்கு பூஜை நடத்தப்படுகிறது.

கருவறை அமைப்பு: கருவறையில் சிறிய மலைப்பாறை போன்று ஒரு மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதை "மேரு வடிவம்' என்கிறார்கள். மேடையைச் சுற்றிலும் தண்ணீர் வலமாக போய்க்கொண்டிருக்கிறது. தண்ணீருக்கு அடியில் யோனிபீடம் அமைந்துள்ளது. அங்குள்ள பூஜாரி பக்தர்களின் கையைப் பிடித்து பீடத்தின் மீது வைத்து தேவியை வணங்கச் சொல்கிறார். தலை மேடைமீது படும்படி பக்தர்கள் வணங்குகின்றனர்.

கருவறையிலேயே உயிர்ப்பலி கொடுக்கின்றனர். பலி கொடுத்த ஆடு, கோழி போன்றவற்றின் தலைகள் நீரில் மூழ்கிக் கிடக்கின்றன. இந்த யோனிபீடத்தை தொட்டு தரிசனம் செய்ய வேண்டுமானால் பண்டாக்களை(துணை பூஜாரிகள்) அணுக வேண்டும். மேடையின்கீழ் ஓடும் தண்ணீரை "சவுபாக்யகுண்ட்' என்று அழைக்கிறார்கள். குகையிலிருந்து வெளியேறும்போது உலோகத்தால் செய்யப்பட்ட காமேஸ்வர காமேஸ்வரி சிலைகள் எட்டுவித அமைப்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதைக் காணலாம்.

பிரகாரத்தில் காமாக்யாதேவி"தசமகா வித்யா' என்ற பெயரில் பத்துவித தோற்றங்களுடன் காட்சி தருகிறாள். பிரகாரச் சுவர்களில் மங்கள சண்டி, அன்னபூரணி, நீலகண்ட மகாதேவ், மானஸாதேவி ஆகியோரின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இத்தலத்தின் மறுகரையில் "மயில்மலை' அல்லது "பஸ்மாசலமலை' எனப்படும் சிறிய குன்று இருக்கிறது. இங்கு தான் சிவனின் தவத்தைக் கலைத்த மன்மதனை எரித்த "காமதகனம்' நடந்ததாக சொல்லப்படுகிறது. இதை நிரூபிக்கும் வகையில் "உமானந்த சிவா' கோயில் ஒன்றும் இருக்கிறது. இவரை தரிசித்து விட்டு, அருகிலுள்ள அனுமன் கோயிலுக்கு செல்ல வேண்டும். இதன்பிறகே காமாக்யாவின் குகைக்கோயிலுக்கு செல்வார்கள். சென்று திரும்பும்போது, காளிதேவி தன் பரிவாரங்களுடன் சுடலையில் (சுடுகாடு) காட்சி தருவதை தரிசிக்கலாம்.

இவ்வாலயத்தில் சுயம்புவாக அமைந்த யோனிவடிவப் பாறையே தேவியாக வழிபடப்படுகிறது. அதன் அருகிலிருந்து இயற்கையாக ஊறிவரும் நீரே பக்தர்களுக்கு அபிஷேக தீர்த்தமாக வழங்கப்படுகிறது. பில்லி, சூன்யம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டோர், வசதிகள் பல இருந்தும் நிம்மதியற்றுத் தவிப்போர், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் இதுபோன்ற பல பிரச்சனைகளில் சிக்கித் தவிப்போர் இங்கு வந்து வழிபட்டு நலம் பெறுகின்றனர். வசந்த காலத்தின்போது- ஆண்டுக்கு மூன்று நாட்கள் இவ்வாலயம் மூடப்படுகிறது. காரணம். அந்த நாட்கள் தேவி விலக்காகி இருக்கும் நாட்களாம். இந்த நாட்களில் தேவி பீடத்திலிருந்து இயற்கையாக வரும் நீருற்று செந்நிறத்தில் வருவது அதிசயம்! இந்த மூன்று நாட்களில் பக்தர்களுக்கு ஆலயம் செல்ல அனுமதி இல்லையென்றாலும், ஆலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் யோகிகள் ஒன்றுகூடி வழிபாடு செய்கிறார்கள். இதனால் அவர்களின் சக்தி அதிகரிக்கிறதாம். இவ்வாலயத்தில் பைரவர், கிருஷ்ணர் உள்ளிட்ட கடவுள்களின் சன்னிதிகளும் உள்ளன.

காமாக்யா தேவியை
""மஹா மாயா மஹா காளீ மஹா மாரீ க்ஷீதா த்ருஷா!
நித்ரா த்ருஷ்ணா சைகவீரா காலராத்ரிந் துரத்யயா!!''
என்ற ஸ்லோகம் சொல்லி வணங்குவோம்.

இந்த ஸ்லோகத்தின் பொருளையும் கேளுங்கள்.

""மஹா மாயா! மஹா காளீ! மஹா மாரீ என்ற பெயர்களைக் கொண்டவளும், பசி, தாகம், தூக்கம், ஆசை ஆகியவற்றை வெற்றி கொண்டவளும், நிகரற்ற வீரியம் படைத்தவளும், தன்னை எவரும் மீறமுடியாமல் காலத்தை கடந்து நிற்கும் காலராத்ரி தேவியே! எங்களுக்கு அருள்செய்'' என்பதாகும்.

தல வரலாறு:மன்மதனை(காமன்) சிவபெருமான் எரித்த இடமாதலாலும், காமன் தனது சுயரூபம் பெற்ற பிறகு விஸ்வகர்மாவைக் கொண்டு கட்டிய கோயில் என்பதாலும் இந்த இடம் "காமரூப்' என அழைக்கப்படுகிறது. தந்தையாகிய தட்சனால் அவமதிக்கப்பட்ட சதிதேவி நெருப்பில் விழுந்து உயிர் துறக்க, இறந்த மனைவியின் உடலை சுமந்துகொண்டு கடுங்கோபத்துடன் ஊழித் தாண்டவம் ஆடினார் சிவபெருமான். இதனால் உலகெங்கும் இருள் சூழ்ந்து அழியும் நிலை உருவாக, தேவர்களும் முனிவர்களும் மகாவிஷ்ணுவை சரணடைந்தனர். விஷ்ணு பகவான் தன் சக்கராயுதத்தால் சதிதேவியின் உடலை 51 துண்டுகளாக அறுத்து பூமியில் வீழ்த்தினார். அந்த உடல் பாகங்கள் விழுந்த இடங்கள் சக்தி பீடங்கள் என்று அழைக்கப்பட்டு, அவை புனிதமாகப் போற்றி வணங்கப்பட்டு வருகின்றன. சதிதேவியின் யோனிப்பகுதி விழுந்த இடமாக காமாக்யா போற்றப்பட்டு 51 சக்தி பீடங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகத் திகழ்கிறது.

முற்காலத்தில் இந்தப் பகுதி காமரூபம், ஹரிசேத்திரம், பிரக்ஜோதிஷபுரம் என்ற பெயர்களில் விளங்கியது. இரண்யாட்சகன் பூமியை அபகரித்துச் சென்று பாதாளத்தில் ஒளித்து வைத்தபோது, மகாவிஷ்ணு ஸ்வேத வராக அவதாரம் எடுத்து பூமாதேவியை மீட்டு வந்தார். அந்த வராக வடிவத்திலேயே பூதேவியை மணந்து இந்தப் பகுதியில் வாழ்ந்து வந்தார். அப்போது அவர்களுக்குப் பிறந்த மகனே நரகாசுரன். மகாவிஷ்ணு நரகாசுரனை பிரக்ஜோதிஷபுரத்துக்கு அரசனாக்கி வைகுந்தம் புறப்பட்டார். அப்போது அவர் பூமாதேவியிடம், இவன் உலகத்துக்கு மிகவும் கெடுதல்கள் புரிவான்; அதனால் கொல்லவும் படுவான் என்று எச்சரித்தார். அப்போது பூமாதேவி, அப்படியாயின் என் கைகளால்தான் இவன் மரணம் அடைவான் என்னும் வரத்தைத் தாருங்கள் என்று கேட்க, மகாவிஷ்ணுவும் அவ்வாறே வரம் தந்து வைகுந்தம் சேர்ந்தார். பல வரங்களைப் பெற்ற நரகாசுரன் அனைத்துலகையும் அடிமைப்படுத்தி பல்வேறு கொடுமைகள் புரிந்து வந்தான். பல யுகங்கள் கடந்தன. சக்தி தேவியின் மாயாவடிவமான காமாக்யா தேவியை வழிபட்டு மேலும் பல வரங்களைப் பெற்றான் நரகாசுரன்.

இந்த நிலையில் மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதாரம் எடுத்திருந்தார். அப்போது தேவர்கள் நரகாசுரனை அழிக்குமாறு கிருஷ்ணரை வேண்ட, அவரும் மனைவி சத்யபாமாவுடன் போருக்குப் புறப்பட்டார். கடும்போர் நடந்த நிலையில் வரத்தின் காரணமாக கிருஷ்ண பகவானால் கொல்ல முடியவில்லை. அப்போது நரகாசுரன் மிகவும் கேவலமாகப் பேச, கோபம் கொண்ட சத்யபாமா வில்லை தன் கையில் எடுத்தாள். கிருஷ்ணர் அஸ்திரத்தைத் தர, நரகாசுரன் தன் மகன்தான் என்பதை அறியாத பூமாதேவியின் அம்சமான சத்யபாமா அம்பை எய்தாள். நரகாசுரன் மடிந்தான். இந்த சம்பவங்கள் எல்லாம் நடந்த பகுதி இதுதான் என்று சொல்லப்படுகிறது. நரகாசுரனுக்கு வரங்கள் பல தந்து, பின் அவன்மேல் கோபம் கொண்டு அவ்விடத்தை விட்டு அகன்றுவிட்டிருந்த காமாக்யா தேவி, அசுரனின் வதத்திற்குப் பின் மீண்டும் வந்து கோவில் கொண்டாள் என்கிறார்கள்.

அதிசயத்தின் அடிப்படையில்: சக்தி பீடங்கள் 51 என நூல்கள் சொல்கின்றன. அதில் இத்தலம் முதல் தலமாகும். இந்த பீடங்களில் யோனி பீடம் அசாம் மாநிலத்தில் உள்ள காமாக்யா ஆகும். இதை காமரூப் என்றும் சொல்வார்கள். அம்மனின் சக்தி பீடங்களில் இது காமகிரி பீடம்.

51சக்தி பீடங்கள்-குதி-5


அருள்மிகு மூகாம்பிகை திருக்கோயில்

மூலவர்:மூகாம்பிகை
தீர்த்தம்:அக்னி, காசி, சுக்ள, மது, கோவிந்த, அகஸ்தியர், அர்ச்சனை குண்டு
பழமை :2500 வருடங்களுக்கு முன்
ஊர்:கொல்லூர்
மாவட்டம்:உடுப்பி
மாநிலம்:கர்நாடகா
பாடியவர்கள்:ஆதி சங்கரர்.

திருவிழா:பங்குனி உத்திரத்தில் கொடியேற்றி மூலநட்சத்திரத்தில் தேர்த்திருவிழா. இந்த திருவிழாவின் போது மூகாசுரனுக்கும் விழா எடுக்கப்படுகிறது. நவராத்திரி, தீபாவளி. சரஸ்வதி பூஜையன்று மூகாம்பிகை சன்னதியில் உள்ள சரஸ்வதி தேவி பக்தர்களின் தரிசனத்திற்காக வெளியே பவனி வருகிறாள்.

தல சிறப்பு:ஆதிசங்கரர் முதன் முதலில் இங்கு வந்தபோது கோல மகரிஷி என்பவர் வழிபட்ட சுயம்பு லிங்கம் மட்டுமே இத்தலத்தில் இருந்தது. இந்த லிங்கத்தில் அம்பாள் அரூபமாக அருள்பாலிப்பதை உணர்ந்த அவர், அங்கிருந்த மேடையில் அமர்ந்து தியானம் செய்வார். அம்பாள் மூகாம்பிகை வடிவில் ஆதிசங்கரருக்கு காட்சி கொடுத்துள்ளார். அந்த உருவத்தை அடிப்படையாக கொண்டு மூகாம்பிகை சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த அம்மனுக்கு அபிஷேகம் கிடையாது. அலங்காரம், புஷ்பாஞ்சலி, ஆராதனை மட்டுமே நடக்கும். லிங்கத்திற்கு மட்டுமே அபிஷேகம் நடக்கும். இந்த லிங்கத்தின் நடுவில் ஒரு தங்க கோடு இருக்கிறது. இந்த தங்க கோட்டை அபிஷேகத்தின் போது தரிசிக்கலாம். இதில் இடது புறம் பிரம்மா, விஷ்ணு, சிவனும், வலது புறம் சரஸ்வதி, லட்சுமி, பார்வதியும் அருள்பாலிப்பதாக ஐதீகம். இந்த லிங்கத்தை வணங்கினால் முப்பத்து முக்கோடி தேவர்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும். இங்கு ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த கரம் இருக்கிறது. கோல மகரிஷி வழிபட்டதால் இத்தலம் கொல்லூர் ஆனது. பொதுவாக கிரகண நேரத்தில் கோயில்கள் நடை சாத்தப்படும். ஆனால் இங்கு கிரகண நேரத்திலும் தொடர்ந்து பூஜை நடக்கும். இங்கு பூஜை செய்வதற்கு பிரம்மச்சாரிகள் அனுமதிக்கப்படுவதில்லை. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது அர்த்தநாரி சக்தி பீடம் ஆகும்.

திறக்கும் நேரம்:காலை 5 மணி முதல் 1.30 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:நிர்வாக அதிகாரி அருள்மிகு மூகாம்பிகை திருக்கோயில், கொல்லூர் -576 220, குந்தாப்பூர் தாலுகா, உடுப்பி மாவட்டம். கர்நாடகா மாநிலம்.போன்:+91- 8254 - 258 245, 094481 77892

பொது தகவல்:கோயில் உள்பிரகாரத்தில் பஞ்சமுக கணபதி, சுப்ரமணியர்,பார்த்தேஸ்வரர், பிராணலிங்கேஸ்வரர், சந்திரமவுலீஸ்வரர், நஞ்சுண்டேஸ்வரர், ஆஞ்சனேயர், மகாவிஷ்ணு, துளசி கிருஷ்ணன், வீரபத்திரர் சன்னதிகள் உள்ளன. இவர்களை வழிபாடு செய்த பின் தாய் மூகாம்பிகையை வழிபாடு செய்ய வேண்டும்.தினமும் இரண்டு முறை இங்கு அன்னதானம் நடைபெறுகிறது.

பிரார்த்தனை:மூகாம்பிகை சரஸ்வதி அம்சமாக திகழ்வதால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்க பிரார்த்தனை செய்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:அம்மனுக்கு வஸ்திரம் சாற்றி சிறப்பு பூஜை செய்யலாம்.

தலபெருமை:அம்பிகை இக்கோயிலில் பத்மாசனத்தில், இரு கைகளில் சங்கு, கரத்துடன், காளி, மகாலட்சுமி, சரஸ்வதி ஆகிய முத்தேவியரின் வடிவில் அருள்புரிகிறாள். ஐம்பொன்னால் ஆன காளி, சரஸ்வதி சிலைகள் மூகாம் பிகையின் இருபுறமும் உள்ளன. முத்தேவியருக்கும் தினமும் சிறப்பு பூஜை நடக்கிறது. நவராத்திரி இக்கோயிலில் மிக விசேஷமாக கொண்டாடப்படுகிறது. ஆதிசங்கரர் இங்கு மூகாம்பிகையை, சரஸ்வதியாக பாவித்து வணங்கி, "கலா ரோகணம்' பாடி அருள் பெற்றார். சரஸ்வதி பூஜையன்று சரஸ்வதி சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. அன்று குழந்தைகள் கல்வியில் சிறப்பிடம் பெறுவதற்காக நடக்கும் வித்யாரம்ப நிகழ்ச்சி சிறப்பாக நடக்கிறது.

சகலநோய் நிவாரணி: ஒரு முறை ஆதிசங்கரர் மூகாம்பிகை நினைத்து இங்கு தவம் புரிந்து, எழ முயன்றபோது அவரால் முடியவில்லை. அவருக்காக அம்பாளே கஷாயம் தயாரித்து சங்கரருக்கு கொடுத்ததாகவும், அன்றிலிருந்து இரவு நேர பூஜைக்கு பின் கஷாயம் பிரசாதமாக வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த கஷாயத்தை சாப்பிட்டால் சகல நோய்களும் குணமாகும் என்பது நம்பிக்கை. இத்தலத்திலிருந்து தான் ஆதி சங்கரர் "சவுந்தர்ய லஹரி' எழுதியுள்ளார்.

குடஜாத்ரிமலை: கொல்லூரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் குடஜாத்ரி மலை இருக்கிறது. அனுமன் சஞ்சீவி மலையை தூக்கி சென்ற போது அதிலிருந்து விழுந்த துண்டு பகுதி குடஜாத்ரி மலையானது என்பர். இதில் 64 வகை மூலிகைகளும், 64 தீர்த்தங்களும் உள்ளன. இந்த மலையில் கணபதி குகை, சர்வஞபீடம், சித்திரமூலை குகை உள்ளன. இந்த குகையில் ஆதிசங்கரரும், கோலமகரிஷியும் தவம் செய்ததாகவும், இவர்கள் தேவைக்காக அம்பாளே ஒரு நீர் வீழ்ச்சியை இங்கு தோற்றுவித்ததாகவும் கூறுவர்.

தல வரலாறு:முன்னொரு காலத்தில் இப்பகுதியில் மூகாசுரன் எனும் அசுரன் சிவனை நோக்கி தவமிருந்தான். அவன் தவப்பயனை அடைந்துவிட்டால் உலகிற்கு துன்பம் ஏற்படும் என்பதால், தேவர்கள் அம்பிகையிடம் முறையிட்டனர். அம்பிகை, மூகாசுரனின் தவத்தைக்கலைத்து, அவனுடன் போரிட்டாள். அவன் அம்பிகையிடம் சரணடைந்தான். அவனது வேண்டுகோளுக் கிணங்க இத்தலத்தில் அவனது பெயரையே தாங்கி, "மூகாம்பிகை' என்ற பெயரில் தங்கினாள்.

சிறப்பம்சம்: அதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள சுயம்பு லிங்கத்தின் நடுவில் ஒரு தங்க கோடு இருக்கிறது. இந்த தங்க கோட்டை அபிஷேகத்தின் போது தரிசிக்கலாம்.

51சக்தி பீடங்கள்-குதி-4 

அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில்

மூலவர்:காமாட்சி அம்மன்
தல விருட்சம்:செண்பகம்
தீர்த்தம்:பஞ்ச கங்கை
ஆகமம்/பூஜை :சிவாகமம்
பழமை :3000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:கச்சி
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
பாடியவர்கள்:ஆதிசங்கரர்.

திருவிழா:மாசியில் பத்துநாள் பிரம்மோற்சவம், புரட்டாசியில் நவராத்திரி திருவிழா, ஐப்பசியில் அவதார உற்சவம் ஆகியவை ஆண்டு திருவிழாக்கள். ஒவ்வொரு பவுர்ணமியும் சிறப்பு பூஜை நடக்கும். தமிழ், ஆங்கில வருடப்பிறப்பு, விஜயதசமி, தீபாவளி, பொங்கல் நாட்களில் அம்மன் தங்கரதத்தில் உலா வருவாள்.

தல சிறப்பு:அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காமகோடி சக்தி பீடம் ஆகும். இத்தல காமாட்சி அம்மனை வேத வியாசர் பிரதிஷ்டை செய்துள்ளார். தங்க விமானத்தின் கீழ் அம்மன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அம்மனுக்கு முன்னால் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரம் உள்ளது. இத்தலத்தில் தான் ஆதிசங்கரர் ஆனந்தலஹரி பாடினார்.

திறக்கும் நேரம்:காலை 5மணி முதல் 12.30மணி வரை, மாலை 4மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்

முகவரி:அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், காஞ்சிபுரம் -631 501. காஞ்சிபுரம் மாவட்டம். போன்:+91 - 44-2722 2609

பொது தகவல்:காயத்ரி மண்டபத்திற்கு செல்லும் வழியில் அன்னபூரணி சன்னதி உள்ளது. ஐப்பசி மாதம் இங்கு அன்னாபிஷேகம் நடக்கும். இந்த சன்னிதானத்தில் தர்ம துவாரம், பிக்ஷத்துவாரம் உள்ளது.

அம்பிகையை வணங்கி பிக்ஷத்துவாரத்தின் வழியாக "பவதி பிக்ஷாம் தேஹி'' என கையேந்தி பிச்சை கேட்க வேண்டும் என்பது விதி. இப்படி செய்து வழிபட்டால் அம்பாள் நம்மை எவ்வித சிரமமும் இன்றி உணவு கொடுத்து காப்பாற்றுவாள் என்பது நம்பிக்கை.

பிரார்த்தனை:இத்தலத்தில் உள்ள அம்மன் பக்தர்களை தன் குழந்தைகளைப் போல் பார்ப்பதால் வேண்டிய வரங்கள் எல்லாமே கொடுத்தருள்கிறாள்.
அம்மனை வழிபடுவோர்க்கு ஐஸ்வர்யமான வாழ்வும் மனநிம்மதியும் ஏற்படுகிறது. இங்கு வணங்கினால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

தவிர திருமண வரம், குழந்தை வரம் ஆகியவை இத்தலத்து பக்தர்களின் முக்கிய பிரார்த்தனை ஆகும். இத்தலத்து அம்மனின் திருவடிகளில் நவகிரகங்கள் தஞ்சம் புகுந்திருப்பதனால் காமாட்சி அம்மனை வணங்குபவர்களுக்கு நவகிரக தோசம் ஏற்படுவதில்லை. எனவே நவகிரக தோசம் உள்ளவர்கள் இத்தலத்தில் வழிபடல் நலம்.

குழந்தை வரம் வேண்டுபவர்கள் இத்தலத்தில் உள்ள சந்தான ஸ்தம்பத்தை வணங்கினால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தசரத சக்கரவர்த்தி இந்த ஸ்தம்பத்தை சுற்றி வந்ததால் தான் ராமர், லட்சுமணர் பிறந்தனர் என்று கூறப்படுவதுண்டு.

நேர்த்திக்கடன்:அம்மனுக்கு புடவை சாத்துதல் , அன்னதானம் செய்தல் ஆகியவை தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகள் செய்தல் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திகடன்களாக செய்கின்றனர்.

தலபெருமை: துர்வாச முனிவரால் கிருதயுகத்தில் இரண்டாயிரம் சுலோகங்களாலும், பரசுராமரால் திரேதாயுகத்தில் ஆயிரத்து ஐநூறு சுலோகங்களாலும், தவுமியாசார்யாரால் துவாபரயுகத்தில் ஆயிரம் சுலோகங்களாலும், ஆதிசங்கரரால் கலியுகத்தில் ஐநூறு சுலோகங்களாலும் பாடப்பட்ட பெருமை காமாட்சிக்கு உண்டு. இங்கே அம்பிகைக்கு மூன்று வடிவங்கள் உள்ளன. அவற்றை ஸ்தூலம், சூட்சுமம், காரணம் என்று கூறுவார்கள். பார்த்தவுடனேயே சர்வ மங்களத்தையும் நமக்கு கோடி கோடியாக தந்தருளுவதால் "காமகோடி காமாட்சி' என அழைக்கப்படுகிறாள். காஞ்சிபுரத்திலுள்ள அனைத்து கோயில்களும் காமாட்சி கோயிலை நோக்கியே அமைந்திருக்கிறது.

இவ்வூரில் உள்ள எந்த கோயிலில் திருவிழா நடந்தாலும் உற்சவர்கள் தங்கள் கோயிலை சுற்றுவதை தவிர்த்து, காமாட்சியம்மன் கோயிலை சுற்றி வரும் பழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது. காஞ்சியில் எவ்வளவோ சிவாலயங்கள் இருந்தும், அவற்றில் அம்மன் சன்னதி கிடையாது. காமாட்சியே அனைத்து சிவாலயங்களுக்கும் ஒரே சக்தியாக திகழுகிறாள்.

மகாவிஷ்ணுவின் 108 திருப்பதிகளில் ஒன்றான கள்வர் பெருமாள் சன்னதி காமாட்சி அம்மன் மூலஸ்தானத்தின் அருகிலேயே இருப்பது சிறப்பான அம்சமாகும்.

இந்த கோயிலின் விசேஷ அம்சம் துண்டீர மகாராஜா சன்னதி ஆகும். இங்கு ஆட்சி செய்த ஆகாசபூபதி என்ற அரசனுக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. அவன் காமாட்சியை நாள்தோறும் மனமுருகி வழிபட்டு வந்தான். இவனது பக்திக்கு மகிழ்ந்த அம்மன் தனது மகன் கணபதியையே மன்னனுக்கு மகனாக கொடுத்தாள். கணபதியும் மன்னரின் குடும்பத்தில் துண்டீரர் என்ற பெயருடன் அவதரித்தார். ஆகாசராஜனுக்கு பிறகு துண்டீரரே ஆட்சியும் செய்தார்.

துண்டீரர் ஆட்சி செய்த காரணத்தினால் தான் இப்பகுதி தொண்டை மண்டலம் என்று அழைக்கப்பட்டது. துண்டீர மகாராஜா அம்மனை வணங்கிய நிலையில், காமாட்சி சன்னதிக்கு எதிரே உள்ளார். இவரை வணங்க செல்லும் போது மவுனமாக செல்ல வேண்டும். பேசிக்கொண்டு சென்றால் அம்மனை தரிசித்த பலனை இழப்பதுடன் துண்டீர மகாராஜாவின் சாபத்திற்கும் ஆளாக நேரிடும்.

சக்தி பீடத்தில் மிக முக்கியமான தலம். அம்பாள் தென்கிழக்கு திசையை நோக்கி அமர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈஸ்வரன், சதாசிவன் ஆகிய பஞ்ச பிரம்மாக்களை தனக்கு ஆசனமாக கொண்டும், நான்கு கைகளுடனும் காட்சிதருகிறாள். கைகளில் பாசம், அங்குசம், புஷ்ப வானம், கரும்புவில் ஏந்தியிருக்கிறாள். காமாட்சிக்கு லலிதா, ராஜராஜேஸ்வரி, திரிபுரை, சக்கரநாயகி ஆகிய பெயர்களும் உண்டு.

கருவறைக்குள்ளேயே மூல விக்ரகத்துக்கு அருகில் ஒற்றைக்காலில் தவம் செய்த நிலையில் காமாட்சி உள்ளது பலர் பார்த்திராத ஒன்று.

காஞ்சியில் எவ்வளவோ சிவாலயங்கள் இருந்தும் காமாட்சி கோயிலை தவிர அங்கெல்லாம் வேறு அம்பாள் சன்னதி கிடையாது.

கிருதயுகத்தில் 2000 சுலோகங்களால் துர்வாசராலும், திரேதாயுகத்தில் 1500 சுலோகங்களால் பரசுராமராலும், துவாபர யுகத்தில் 1000 சுலோகங்களால் தௌம்யா சார்யாரும், கலியுகத்தில் 500 சுலோகங்களால் மூகசங்கரரும் பாடிய பெருமை காமாட்சிக்கு உண்டு. இந்த ஆலயத்தில் ஞான சரஸ்வதி ,லட்சுமி, அரூப லட்சுமி, சியாமளா, வாராஹி, அன்னபூரணி, அர்த்தநாரீ ஸ்வரர், தர்மசாஸ்தா, துர்வாச முனிவர், ஆதிசங்கரர் ஆகியோருக்கு தனித்தனி சன்னதி உள்ளது.

இங்குள்ள பெருமாள் கள்வன் என அழைக்கப்படுகிறார். இக்கோயிலுக்குள் உள்ள இவரது சன்னதி 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக கருதப்படுகிற சிறப்பு பெற்றது.

இவ்வாலயத்தினுள் முதல் பிரகாரத்தின் மத்தியில் உள்ள காயத்ரி மண்டபத்தின் மத்தியில்தான் காமாட்சி அம்மன் வீற்றிருக்கிறாள். இம்மண்டபத்தினுள் 24 ஸ்தம்பங்கள் (தூண்கள்) உள்ளன.24 அட்சரங்கள் 24 தூண்களாக காட்சியளிப்பது இங்கு சிறப்பு.இதேநிலையில் இதே போல் மண்டபத்தின் கீழே இருப்பதாவும் ஐதீகம். அதனால் தான் விவரம் அறிந்தவர்களாக இருப்பின் காயத்ரி மண்டபத்திற்குள் சென்று நின்று வணங்கமாட்டார்கள். காரணம் அம்பாள் மீதே நிற்ககூடாது என்ற அச்சம் தான் என்றும் கூறுகின்றனர்.

துர்வாசர் இவர் சிறந்த தேவி பக்தர். லலிதாஸ்தவரத்னம் என்ற நூலை இயற்றியவர். இவரே இப்போதுள்ள அம்மனின்மூல விக்ரகத்தை பிரதிஷ்டை செய்தவர். அம்மன் முதன்முதலில் காட்சி தந்ததும் இவருக்கே.

இது அம்மனின் எதிரில் உள்ள ஸ்ரீசக்கரம் ஆதிசங்கரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. காஞ்சியில் ஒரு காலத்தில் அம்மன் மிக உக்கிரமாக விளங்கினாளாம். ஆகையால் இந்த ஸ்ரீ சக்கிரத்தை பிரதிஷ்டை செய்து அம்மனின் உக்கிர சக்தியை அருள் சக்தியாக மாற்றினாராம். இவருக்கு இக்கோயிலில் தனி சன்னதி உண்டு. இங்கு காமகோடி காமாட்சி, தபஸ் காமாட்சி, பங்காரு காமாட்சி, அஞ்சன காமாட்சி, உற்சவர் காமாட்சி ஆகிய ஐந்து காமாட்சிகள் உள்ளனர்.

காமாஷி தத்துவம் : காம என்னும் 51 அட்சரங்களைப் பார்வையாகக் கொண்டவள் அன்னை காமாஷி. கா என்றால் ஒன்று. ம என்றால் ஐந்து. ஷி என்றால் ஆறு. அதாவது ஐந்து திருநாமங்களையும் சக்தி பேதம் மூன்று. சிவபேதம் இரண்டு, விஷ்ணு பேதம் ஒன்று என்னும் ஆறு வகை பேதங்களைக் கொண்டவள். மற்றும் கா என்றால் சரஸ்வதி. மா என்றால் மகேஸ்வரி. ஷி என்றால் லட்சுமி. இம்மூன்று தேவிகளும் ஒன்றாக இணைந்தவள்.காமக் கடவுளாகிய மன்மதனிடம் தான் கரும்பும் புஷ்ப பாணமும் இருக்கும்.இவை இரண்டையும் காமாட்சி வைத்திருப்பதன் காரணம் மன்மதன் ஜீவன்களிடையே இந்த வில்லையும் அம்பையும் வைத்துக் கொண்டு அடங்காத காம விகாரத்தை உண்டாக்கி வரும்படி அவனுக்கு அச்சக்தியை அளித்திருக்கிறாள். பக்தர்களிடமும் ஞானிகளிடமும் உன் கை வரிசையை காட்டதே என்று மன்மதனிடம் கூறி அவனிடமிருந்து கரும்பையும் புஷ்ப பாணங்களையும் வாங்கி வைத்துக் கொண்டு விட்டாள் தேவி என்றும் காஞ்சி பெரியவர் கூறுகிறார்.

தல வரலாறு:பண்டாசுரன் என்ற அசுரன், யாரையும் வெல்லும் வரமும், தன்னால் அடக்கப்பட்டவரின் பலம் முழுவதையும் தனக்கே கிடைக்கும் வகையிலான வரமும் பெற்றிருந்தான். ஆனாலும், அனைவருக்கும் மரணம் உண்டு என்ற பொதுவிதியின் அடிப்படையில், அவனுக்கு ஒன்பது வயது பெண்குழந்தையால் தான் மரணம் நிகழும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது.

அவனால் தேவர்களுக்கு மிகுந்த துன்பம் ஏற்பட்டதால், அன்னை பராசக்தி காமாட்சியாக அவதாரம் எடுத்து, அவனை அழித்து இத்தலத்தில் எழுந்தருளினாள். கோபமாக இருந்த அம்மனை சாந்தப்படுத்துவதற்காக ஆதிசங்கரர் ஸ்ரீ சக்கரம் ஏற்படுத்தி, உக்கிர சக்தியை அருள் சக்தியாக மாற்றினார்.

சிறப்பம்சம்: அதிசயத்தின் அடிப்படையில்: அம்மனின் சக்தி பீடங்களில் இது காமகோடி பீடமாகும். இத்தல காமாட்சி அம்மனை வேத வியாசர் பிரதிஷ்டை செய்துள்ளார். தங்க விமானத்தின் கீழ் அம்மன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அம்மனுக்கு முன்னால் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரம் உள்ளது. இத்தலத்தில் தான் ஆதிசங்கரர் ஆனந்தலஹரி பாடினார்.

 51சக்தி பீடங்கள்-குதி-3

அருள்மிகு சாரதாதேவி (மைஹர் தேவி, சரஸ்வதி தேவி) திருக்கோயில்

மூலவர்:சாரதாதேவி (மைஹர் தேவி, சரஸ்வதி தேவி)
பழமை:2000 வருடங்களுக்கு முன்
ஊர்:மைஹர்
மாவட்டம்:சத்னா
மாநிலம்:மத்திய பிரதேசம்

திருவிழா:நவராத்திரி, அஷ்டமி நாளில் இங்கே சிறப்பு பூஜை நடக்கும்.

தல சிறப்பு:51 சக்தி பீடங்களில் இது தேவியின் மார்பு பகுதி விழுந்த இடமாக விழுங்குகிறது.

திறக்கும் நேரம்:காலை 5 மணி முதல் 8 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:அருள்மிகு சாரதாதேவி (மைஹர் தேவி, சரஸ்வதி தேவி) திருக்கோயில்,மைஹர், சத்னா மாவட்டம்.

பொது தகவல்:இக்கோயிலில் கவுரிசங்கர், காலபைரவர், துர்க்கா, பிரம்மதேவி உள்ளிட்ட தெய்வ சன்னதிகளும் உள்ளன.

பிரார்த்தனை:பிள்ளைப் பேறு கிட்டவும், கல்வி கலைகளில் சிறந்து விளங்கவும் பக்தர்கள் இங்குள்ள அம்மனை வழிபட்டுச் செல்கின்றனர்.

நேர்த்திக்கடன்:வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் இங்குள்ள அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தும், பொங்கல் வைத்தும் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.

தலபெருமை:கோயிலின் உச்சிக்குச் செல்ல 1063 படிகள் உள்ளன. கார், பஸ் செல்ல சாலை வசதியும் உள்ளது. அவை ஒரு குறிப்பிட்ட இடத்தோடு நின்றுவிடும். அங்கிருந்து 60 படிகளில் ஏறிச் சென்றுதான் தேவியை தரிசிக்க வேண்டும். ஊனமுற்றவர்கள் மற்றும் முதியோர்களின் வசதிக்காக ரோப்கார் அமைக்கப்பட்டுள்ளது. மலையடிவாரத்தில் தங்கும் வசதிகள் உள்ளன. மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம், ராஜஸ்தான், ஹிமாச்சலப் பிரதேச மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் இவ்வாலயத்திற்கு வருகிறார்கள். ஆண்டுக்கு பத்து லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தல வரலாறு:பிரம்மதேவனின் மானச புத்திரனான தட்சப் பிரஜாபதி, தன் மருமகனான சிவபெருமானை அழைக்காமல் யாகம் புரிந்ததும்; தந்தையிடம் சென்று நியாயம் கேட்ட தாட்சாயணி (சதிதேவி) அவனது அவமரியாதையைப் பொறுக்காமல் யாக குண்டத்தில் விழுந்து உயிர்விட்டதும்; இதையறிந்த சிவபெருமான் வீரபத்திரரை உருவாக்கி தட்சனின் யாகத்தை அழித்தார் என்பதும் புராணக்கூற்று. கோபம் மிக்கெழுந்த சிவபெருமான், தீயில் இறந்துபோன மனைவியைத் தன் தோளில் போட்டுக் கொண்டு ருத்ர தாண்டவமாடினார். உலகங்களனைத்தும் நடுங்கின. ஊழியின் முடிவு நெருங்குவது போலாயிற்று. அப்போது சிவனை சாந்தப்படுத்தி உலக உயிர்களைக் காக்க எண்ணிய திருமால், தன் சக்ராயுதத்தால் சதிதேவியின் உடலை ஒவ்வொரு பாகமாக வெட்டி வீழ்த்தினார். தேவியின் பாரம் தன் மீதிருந்து விலகியதை உணர்ந்த சிவன், கோபம் தணிந்து யோகத்தில் ஆழ்ந்தார். சதி தேவியின் உடல் பாகங்கள் 51 பகுதிகளாக பூமியில் விழுந்தன. அவற்றையே சக்தி பீடங்களாக பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். அவ்வகையில் தேவியின் மார்புப் பகுதி விழுந்த தலமாகத் திகழ்கிறது மைஹர் என்னும் திருத்தலம். மைஹர் என்னும் சொல்லுக்கு தாய்வீடு என்று பொருளாம். இங்குள்ள திரிகூட மலை உச்சியில் தேவியின் கோயில் அமைந்துள்ளது. இந்த அன்னை மைஹர் தேவி, சாரதா தேவி, சரஸ்வதி தேவி என்னும் பெயர்களில் அழைக்கப்படுகிறாள். இங்குள்ள சாரதா தேவியின் கல்லாலான விக்ரகம் மிகப் பழமையானது என்று சொல்கிறார்கள். அன்னையின் காலடியில் கல்வெட்டொன்றும் காணப்படுகிறது. அது போலவே இங்குள்ள நரசிம்மர் விக்ரகமும் மிகப் பழமை வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது. இவ்விரு சிற்பங்களையும் கி.பி. 502-ஆம் ஆண்டில் நூபுலதேவா என்பவர் பிரதிஷ்டை செய்தார் எனக் கூறுகின்றனர்.

சிறப்பம்சம்:அதிசயத்தின் அடிப்படையில்: 51 சக்தி பீடங்களில் இது தேவியின் மார்பு பகுதி விழுந்த இடமாக விழுங்குகிறது.

51சக்தி பீடங்கள்-பகுதி-2

அருள்மிகு வஜ்ரேஸ்வரி திருக்கோயில்

மூலவர்:வஜ்ரேஸ்வரி
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர்:நாகர்காட்
மாவட்டம்:காங்ரா
மாநிலம்:ஹிமாச்சல பிரதேசம்

திருவிழா:நவராத்திரி, ராமநவமி, மகர சங்கராந்தி

தல சிறப்பு:அம்மனின் 51 சக்திபீடங்களில் இதுவும் ஒன்று.

திறக்கும் நேரம்:காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:அருள்மிகு காங்க்ரா ஸ்ரீ வஜ்ரேஸ்வரி திருக்கோயில், நாகர்காட், காங்க்ரா மாவட்டம், இமாசலப் பிரதேசம்.போன்:+91 01892-265073

பொது தகவல்:கஜினி முகம்மது இத்திருக்கோயில் மீது 5 முறை படையெடுத்ததாக வரலாறு கூறுகிறது. 1905 ஆம் ஆண்டு பெரிய பூகம்பத்தால் இக்கோயில் தாக்கப்பட்டு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.

பிரார்த்தனை:பக்தர்கள் தங்களது பிரார்த்தனை நிறைவேற இங்கு வழிபாடு செய்கின்றனர்.

நேர்த்திக்கடன்:மகர சங்கராந்தி அன்று அம்மனுக்கு வெண்ணெய் சாற்றி வழிபடுவது சிறப்பு.

தலபெருமை:இங்கு அருள்பாலிக்கும் வஜ்ரேஸ்வரி அம்மனை, வஜ்ராபாய், வஜ்ரயோகினி என்றும் அழைக்கின்றனர். அம்பாள் பார்வதி தேவியாகக் காட்சி அளிக்கிறாள். முகத்தில் தைரியம், ஒரு தீர்மானம் பிரகாசிக்கிறது. அதைப் பார்த்தவுடன், அதன் தைரியம் வஜ்ரம் போன்று காணப்படுகிறதால் வஜ்ரேஸ்வரி என்று பெயர்.

நவராத்திரி விழா, ஸ்ரீராம நவமி போன்றவை இங்கு மிகவும் விசேஷம். மற்றும் மகர சங்கராந்தி விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மஹிஷாசுரனுடன் போரிடும் போது, தேவிக்கு சிறுகாயங்கள் ஏற்பட்டன. அதற்கு வெண்ணெய் தடவி அம்பாள் இந்த நாகர்காடில் இருந்தாராம். பிறகு நலமாயிற்று. அன்று முதல் அம்பாளுக்கு மகரசங்கராந்தி அன்று வெண்ணெய் அபிஷேகம். ஒரு வாரம் இந்த விழாவினைக் கொண்டாடுகிறார்கள்.

தல வரலாறு:பல ஆண்டுகளுக்கு முன் கலிகாலா அல்லது கலிகுட் என்ற பெயருடைய அரசன், ரிஷிகள், முனிவர்கள் உட்பட எல்லோரையும் துன்புறுத்தி வந்தான். அவன் தொல்லை எல்லை மீறவே,வசிஷ்ட மாமுனிவரின் தலைமையில் சண்டியாகம் செய்து அம்பாளை வேண்டினர். இந்த யாகத்துக்கு இந்திரலோக அதிபதியான இந்திரனுக்கு அழைப்பு இல்லை. மிகவும் கோபப்பட்ட இந்திரன், வஜ்ராயுதத்தை ஆக்ரோஷத்துடன் யாக குண்டம் மீது விட்டெறிந்தான். வஜ்ராயுதம் பல சுக்கல்களாக உடைந்தது. தேவர்களும் ரிஷிகளும் அம்பாளே எங்களைக் காப்பாற்றுங்கள் என ஓலமிட்டனர். அப்போழுது பிரமிப்பூட்டும் மின்னல்-ஒளி, அங்கு அம்சத்துடன் அம்பாள் தோன்றினாள். உடனே அந்த வஜ்ராயுத துண்டுகள் எல்லாவற்றையும் அம்பாள் விழுங்கிவிட்டாள். அசுரர்களையும் கொன்றாள். அப்பொழுது இந்த இடத்திலேயே வஜ்ரேஸ்வரி என்ற திருநாமத்துடன் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டினர் என்றொரு வரலாறு.

மற்றுமொரு கதையும் உண்டு.

தடைபடாமல் இந்த சண்டியாகம் நடக்க, இந்திரன் மற்றும் தேவர்கள் யாவரும் பார்வதி தேவியை மனமுருக வேண்டினர். தேவி, தாங்கள் அந்த கலிகால அசுரனைக் கொன்று எங்களைக் காப்பாற்றுங்கள் என வேண்டினர். அதற்கு மனம் இசைந்த அம்பாள், தக்க தருணம் நோக்கி கலிகாலனுடன் போரிட, அவனது ஆயுதங்கள் எல்லாவற்றையும் விழுங்கிவிட்டாள். கடைசியில் இந்திரன் அந்த அசுரன் மீது, தனது வஜ்ராயுதத்தை கோபத்துடன் வீசினான். அது பல துண்டுகளாகப் போக, அதிலிருந்து வந்த அம்மன் அந்த அசுரனைக் கொன்றாள். தேவர்கள் மிகவும் ஆனந்தமடைந்து வஜ்ரேஸ்வரி என பெயரிட்டு, இங்குள்ள கோவிலை கட்டினர் என்றும் கூறுகின்றனர்.

மற்றுமொரு புராணக்கதை.

தனது தந்தை தட்சன் நடத்தும் யாகத்துக்குச் சென்றாள் பார்வதி. அந்த யாகத்தில் தன்னை அர்பணம் செய்துகொள்ள, முக்கண்ணன் அங்கு மிகவும் கோபமடைந்து ருத்ரதாண்டவமாடினார். திருமால் தனது சக்ர ஆயுதத்தால் அன்னையின் தேகத்தை ஒவ்வொரு பாகமாக வெட்டி வீசினார். அன்னையின் வலது மார்பகம் இந்த இடத்தில் விழுந்ததால் இது சக்தி பீடமாக விளங்குகிறது. மகாபாரத காலத்தில் பாண்டவர்கள் கனவில் துர்காதேவியாக தோன்றி தனக்கு ஒரு கோயிலை கட்டித் தருமாறு சொன்னாள் அன்னை. அதன்படியே இத்திருக்கோயில் கட்டப்பட்டது என்கிறார்கள்.

சிறப்பம்சம்:அதிசயத்தின் அடிப்படையில்: அம்மனின் 51 சக்திபீடங்களில் இதுவும் ஒன்று.

51சக்தி பீடங்கள்-பகுதி-1

அருள்மிகு ஜ்வாலாமுகி திருக்கோயில்

மூலவர்:ஜ்வாலாமுகி
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர்:ஜ்வாலாமுகி
மாவட்டம்:காங்ரா
மாநிலம்:ஹிமாச்சல பிரதேசம்

திருவிழா:பலவித பூஜைகள் தொடர்ந்து நடக்கின்றன. துர்க்கா சப்தசதி வாசிக்கப்படுகிறது, தினமும் ஐந்து முறை ஆரத்தி எடுக்கிறார்கள்.

தல சிறப்பு:அம்மனின் 51 சக்திபீடங்களில் இது ஜுவாலாமுகி தலம். இது அன்னையின் நாக்கு பகுதி விழந்த இடமாக கருதப்படுகிறது. இங்கிருக்கும் தீச்சுடர் எண்ணெயில்லை, திரியில்லாமல் பழமையான பாறை இடுக்குகளிலிருந்து நீலநிற தீ ஜுவாலைகளையே அன்னையின் வடிவமாக வழிபடப்படுகிறது.

திறக்கும் நேரம்:காலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:அருள்மிகு ஜ்வாலாமுகி திருக்கோயில் காங்ரா, ஹிமாச்சல பிரதேசம்-176031.போன்:+91 01970-222223, 01970-222137

பொது தகவல்:சரஸ்வதி, லெட்சுமி, அன்னபூரணி உள்ளிட்ட எட்டு பெயர்களில் மற்ற ஜுவாலைகள் வணங்கப்படுகின்றன.

பிரார்த்தனை:பில்லி சூன்யம் , ஏவல் போன்ற செய்வினைகள் விலகவும், மனதில் வேதனைகள் குறையவும் பக்தர்கள் இங்கு வழிபாடு செய்கிறார்கள். பில்லி, சூன்யம், ஏவல் விரட்டும் மந்திரவாதிகள் இங்கு வந்து யந்திரபூஜை செய்கிறார்கள்.


நேர்த்திக்கடன்:பிரார்த்தனை நிறைவேறியதும் பக்தர்கள் பாலும், நீரும் சமர்ப்பித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.

தலபெருமை:அன்னை ஆதிபராசக்தியானவள் பல்வேறு வடிவங்களில் உலகெங்கும் கோவில்கொண்டு அருள்பாலித்து வருவது நாமறிந்ததே அவற்றில் சதிதேவியின் உடற்பகுதிகள் வீழ்ந்த 51 இடங்கள் சக்திபீடங்களாக புகழ்பெற்று விளங்குகின்றன. அவற்றிலொன்றான ஜ்வாலாமுகி தலம் ஒன்பதாவது சக்தி பீடமாக விளங்குகிறது. ஹீமாச்சல பிரதேசத்தில் அமைந்துள்ள இத்தலம் தேவியின் நாக்குப் பகுதி விழுந்த இடமாகக் கருதப்படுகிறது.

ஒவ்வொரு தலங்களிலும் தன்னை ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்திக் கொள்ளும் அன்னை. இங்கு தீச்சுடராகத் தன்னை வெளிப்படுத்துகிறாள். இங்குள்ள மிகப் பழமையான பாறை இடுக்குகளிலிருந்து நீலநிற தீ ஜுவாலைகள் இயற்கையாகவே வெளிப்படுகின்றன ஒன்பது இடங்களில் வெளிப்படும் இந்த ஜுவாலைகளையே தேவியின் வடிவமாக வழிபடுகின்றனர். பிரதான தெய்வமாக காளிதேவி வழிபடப்படுகிறாள். சரஸ்வதி, லட்சுமி, அன்னபூரணி உள்ளிட்ட எட்டு பெயர்களில் மற்ற ஜுவாலைகள் வணங்கப்படுகின்றன.

இந்த ஜுவாலைகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கின்றனவாம்! என்ணெயில்லை; திரியில்லை. ஆனால் தீச்சுடர்! இந்த பாறை இடுக்குகளிலிருந்து ஒருவித வாயு தொடர்ந்து வெளிப்படுவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தல வரலாறு:வெகு காலத்துக்குமுன் இப்பகுதியை காங்ரா நகரைத் தலைநகராகக் கொண்டு பூமிசந்த் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவன் சிறந்த தேவி பக்தன். அவன் கனவில் தோன்றிய இவ்வன்னை தான் சுடர் வடிவில் கோவில் கொண்டிருக்கும் இடத்தை உணர்த்தினாள். அதன்பின்னர் அவ்விடத்தைக் கண்டுபிடித்த மன்னன் அங்கே ஆலயம் எழுப்பினான். நேபாள அரசன் ஹங் என்பவன் மண்டபம் அமைத்து. மிகப்பெரிய வெண்கல மணியையும் வழங்கினான் என்ற குறிப்பும் காணப்படுகிறது.

கி.பி 1009-ல் இஸ்லாமிய மன்னன் கஜினி முகம்மதுவால் இவ்வாலயம் கொள்ளையிடப்பட்டதாகவும் கூறுகின்றனர். அதன்பின்னர் ஆட்சிபுரிந்த மொகலாயப் பேரரசர் அக்பர் இவ்வாலயத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு. அங்கு எரிந்துகொண்டிருக்கும் ஜுவாலைகளை அணைக்க உத்தரவிட்டாராம். படைவீரர்கள் நீரைப்பாய்ச்சி பலவிதங்களில் முயன்றும் ஜுவாலைகள் அணையவில்லை. அதன்பின் தேவியின் ஆற்றலைப் புரிந்து கொண்ட அக்பர் ஒரு தங்கக் குடையை காணிக்கையாகச் செலுத்தி தன் கோரிக்கை ஒன்றை நிறைவேற்றித் தருமாறு தேவியிடம் வேண்டினாராம். அதற்கு அன்னை உடன்பட வில்லை. அதற்கு அடையாளமாக அக்பர் அளித்த தங்கக்குடை சாதாரண உலோகமாக மாறிவிட்டதாம்.

இவ்வாறு பல வரலாற்று நிகழ்வுகளோடு சம்பந்தப்பட்டதாக விளங்குகிறது இந்த ஜ்வாலமுகி ஆலயம். இறுதியாக கி.பி 1813-ல் பஞ்சாப் மன்னன் ரஞ்சித் சிங் இங்கு வருகை புரிந்து ஆலயத்தை சீரமைத்து கோபுரத்துக்கு தங்கக் கவசம் அணிவித்தானாம். வெள்ளியாலான கதவையும் அமைத்தான்.

சிறப்பம்சம்:அதிசயத்தின் அடிப்படையில்: அம்மனின் 51 சக்திபீடங்களில் இது ஜுவாலாமுகி தலம். இது அன்னையின் நாக்கு பகுதி விழந்த இடமாக கருதப்படுகிறது. இங்கிருக்கும் தீச்சுடர் எண்ணெயில்லை, திரியில்லாமல் பழமையான பாறை இடுக்குகளிலிருந்து நீலநிற தீ ஜுவாலைகளையே அன்னையின் வடிவமாக வழிபடப்படுகிறது.

வியாழன், 19 டிசம்பர், 2013


வைகாசி விசாக பௌர்ணமி நாளில்தான் பிருந்தாவனத்தில்- பாண்டீர வனத்தின் ஆல மரத்தின் கீழ் ராதா- கிருஷ்ண திருமணம் நடந்ததாம். ஸ்ரீமத் பாகவதம் கூறாத ராதையை- ராதா- கிருஷ்ண திருமணத்தை கீத கோவிந்தம் என்னும் சிருங்கார ரச காவியம் கூறுகிறது. இதனை இயற்றியவர் ஜெயதேவர். அதனை மிகவும் ரசிப்பார் காஞ்சிப் பெரியவர். ஒரு சந்நியாசி சிருங்கார ரசம் கலந்த கீத கோவிந்தத்தை ரசிக்கிறாரென்றால் அது சாதாரண சிருங்கார ரசமா? அந்த ஜெகந்நாதரே ரசித்த கீதமல்லவா!

பூரி ஜெகந்நாத க்ஷேத்திரத்தில் மகாபெரிய வரின் ஆக்ஞையின் பேரில், ஜெயதேவர்- மீரா விக்ரகத்துடன் காமகோடி மடம் கட்டப் பட்டுள்ளது என்றால், கீத கோவிந்த- ஜெகந் நாத மகிமையை காஞ்சிப் பெரியவர் எந்த அளவுக்கு உணர்ந்துள்ளார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

விழுப்புரத்தில், சுப்பிரமணியன்- லட்சுமி தம்பதியருக்குத் தவப்புதல்வனாய் வைகாசி மாத அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர் மகா பெரியவர். வைகாசி விசாகப் பௌர்ணமி அன்று சிவபெருமானே ஜோதி சொரூபனாக- முருகப் பெருமானாக அவதரித்தார். (அதற்கு அடுத்த நட்சத்திரத்தில் அவதரித்தவர் மகா பெரியவர்.) சுவாமிமலை சுவாமிநாதனே குலதெய்வம் என்பதால், மகா பெரியவரின் இயற்பெயரும் சுவாமிநாதன் ஆயிற்று.

விசாக- அனுஷ நட்சத்திரங்களுக்கு வேதத்தில் "ராதா' என்று பெயராம். வட மொழியில் அனுஷத்திற்கு அனுராதா என்று பெயர். ராதைக்கு அடுத்தது. எனவே விசாகன் ராதையுமா னான். சிவனே ராதையாகப் பிறந்து கண்ணனுடன் ராச லீலை புரிந்தான் என்று தேவி புராணம் கூறுகிறது. சிவனே கந்தனாக அவதரித்தான் என்று கந்தபுராணம் கூறுகிறது. ஆக, கந்தனே ராதையானான் என் றும் சொல்லலாம். ராதையின் மகிமையை கர்க சம்ஹிதை, பிரம்ம வைவர்த்தம், தேவி பாகவதம் போன்ற நூல்கள் கூறுகின்றன. அதன்படி ராதா- மாதவன் திருமணம் நடந்த தினம் விசாக பௌர்ணமியே. எனவேதான் மகாபெரிய வருக்கு ராதா- கிருஷ்ண வைபவத்தில் விருப்பம் உண்டாயிற்று எனலாம்.

கிருஷ்ண சைதன்ய மகாபிரபு ஒரு சந்நியாசி. அவரது சீடன் ஒருவன் பிச்சை யிட்ட பெண்மணியின் முகத்தைப் பார்த்தான் என்பதை அறிந்து அவனை விலக்கினார். அதனால் அந்த சீடன் தன் உயிரையே மாய்த்துக் கொண்டான். அத்தகைய சைதன்ய மகாபிரபு ராதா கிருஷ்ண இயக்க சந்நியாசி. அவர் 12 ஆண்டுகள் பூரி ஜெகந் நாதர் கோவிலிலேயே வாழ்ந்து, தனது 50-ஆவது வயதில் ஜெகந்நாதரின் திருவடியில் கலந்தார். எனவே சந்நியாசிகளின் ராதா- கிருஷ்ண பிரேமை என்பது மிகவும் உயர்ந்த நிலை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ரமண மகரிஷியைப் பற்றி இன்று ஆன்மிக உலகம் அறிகிறது என்றால், அப்பெருமை காஞ்சிப் பெரியவரையே சாரும். அயல் நாட்டிலிருந்து வந்த பால் பிரண்டன் என்பவர் பல இந்திய ஆன்மிகவாதிகளைச் சந்தித்து விட்டு வேதனையோடு தன் நாடு திரும்ப ஆயத்தமாகும்போது, ஒரு அன்பர் மகா பெரியவரைத் தரிசிக்க காஞ்சிக்கு அவரை அழைத்து வந்தார். பெரியவரைப் பார்த்ததுமே நெகிழ்ந்து போனார் பால் பிரண்டன். அவரையே தன் குருவாகக் கொள்ள அனுமதி கேட்க, பெரியவர் அதை மறுத்து, "ரமண மகரிஷியை நாடு' என்றார்.

அங்கிருந்து திரும்பிய பால் பிரண்டன் திருவண்ணாமலை செல்லவில்லை. தன் நாடு செல்ல விமான டிக்கெட்டுக்குப் பதிவு செய்துவிட்டு சென்னை ஹோட்டலில் தங்கியிருந்தார். அன்றிரவு... அது கனவா அல்லது நனவா என்பது அவருக்குத் தெரியவில்லை. அவர் தங்கியிருந்த அறையில் தோன்றிய காஞ்சிப் பெரியவர், "அருணாச் சலம் சென்று ரமணரைத் தரிசிக்காமல் உம் நாடு திரும்ப வேண்டாம்' என்று கூறினாராம். வியந்துபோன பால் பிரண்டன் தன் பயணத் திட்டத்தை மாற்றிக் கொண்டு திருவண்ணா மலை சென்று ரமணரைத் தரிசித்தார். பேசாமலேயே ரமணரின் அனுபூதியைப் பெற்று மிகவும் நெகிழ்ந்து போனார். அந்த பால் பிரண்டன்தான் ரமணரின் புகழை உலகம் முழுக்கப் பரப்பினார். ரமணரும் ஒரு சுவாமிநாதன்- கந்த அவதாரம்தானே. காஞ்சிப் பெரியவர் திருவண்ணாமலை சென்றிருந் தாலும் ரமணரைச் சந்தித்த தில்லை. இதன் மூலம் ஆன்மிகப் பெரியவர்களுக்கு பௌதிக தரிசனம் தேவையில்லை என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

எவ்வித ஆடம் பரத்தையும் விரும்பாதவர் மகாபெரியவர். சுயநலம், பண ஆசை போன்ற அனைத்தையும் அறவே வெறுத்து ஒதுக்கியவர்; எளிமையின் சின்னம். வைணவ, கன்னட மடாதிபதி களுக்கும்; தேவார, திருப்புகழ், திருமுறை மடாதிபதிகளுக்கும் இடையே ஒற்றுமையை வளர்த்து, ஒவ்வொன்றும் சீருடன் தழைத்திட வழிவகுத்த பெருமையும் காஞ்சிப் பெரியவ ரையே சாரும்.

பெரிய பண தானம் எதையும் எதிர்பார்க் காமல், பிடியரிசித் திட்டம், மருத்துவமனையில் நோயாளிகளுக்குப் பிரசாதம் வழங்குவது, சிறைச் சாலையில் உள்ள கைதிகளுக்கு தர்மம் செய்வது, ஆன்மிகம் போதிப்பது என்று எளிமையாக அனைவரையும் சமூக நலனுக்கு இழுத்தவர் மகா பெரியவர். இத்தனை சிறப்பு வாய்ந்த பெரியவரின் கீத கோவிந்த ஈடுபாட்டை இனி காண்போம்.

ஜெயதேவரின் கீத கோவிந்தம் ராதா- கிருஷ்ண விரக பிதற்றல்களை விவரிப்பது. 24 பாடல்களே கொண்டது; அஷ்டபதி எனப்படுவது. பூரி ஜெகந்நாதரே உவந்தது- எழுதியது என்று பூரியிலும் காசியிலும் பறைசாற்றப்பட்டது. (இதில் 19-ஆவது அஷ்டபதியை எழுதும்போது ஜெயதேவர் குழப்பமாகி எழுதாமல் எழுந்து சென்றுவிட, அவர் உருவில் ஜெகந்நாதரே அந்த அஷ்டபதியை எழுதினார் என்பர்.) ராதா என்பது ஜீவாத்மா; கிருஷ்ணன் என்பது பரமாத்மா. ஜீவாத்மா- பரமாத்மா ஐக்கியத்தை- முக்தி நிலையை விளக்குபவையே இந்தப் பாடல்கள்.

பெரியவர் தன் சிறு வயதில் கும்பகோணம் மடத்திலிருந்தபோது, பாலு பாகவதர் என்பவரை மடத்திற்கு வரவழைத்து, பல நாட்கள் அந்த 24 பாடல்களையும் பாடச் சொல்லிக் கேட்டு அதன் மகிமையை உணர வைத்தார். அந்தப் பாடல்களில் உள்ள ஆண்பால்- பெண்பால் உணர்வு சார்ந்த பதங்களைத் தள்ளி, ஜீவாத்மா- பரமாத்மா இணைப்பை உணர வேண்டும் என்று கூறினார். பின்னாட்களில் ஆஞ்சனேய சுவாமி (ஸ்ரீ அனந்த ஆனந்த சரஸ்வதி சுவாமி) என்பவர் காஞ்சி மடத்திலேயே 24 அஷ்டபதி களையும் பாடுவார். இதை குடிசை யோரம் அமர்ந்து மகா பெரியவர் கேட்டு ரசிப்பார். இந்த பஜனை சம்பிரதாயம் முழுவதும் தமிழ், வடமொழி ஆகியவற்றில் 1967-லேயே மடத்தின் சார்பில் பிரசுரிக்கப்பட்டது என்றால், நாம பஜனைக்கு பெரியவர் எவ்வளவு மதிப்பளித்தார் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

காஞ்சி மடத்தின் 62-ஆவது பீடாதிபதியாக விளங்கிய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், ராதா- கிருஷ்ண அஷ்டபதிபோல் காஞ்சி காமாட்சி- ஏகாம்பரநாதர் சங்கம லீலைகளை "சிவகீதி மாலா' என்ற பெயரில் 20 அஷ்டபதிகளாக எழுதினார். அதையும் பெரியவர் கேட்டு ரசிப்பார். மகா பெரியவரின் 75-ஆவது வயது பவழ விழாவின் போது, "சிவகீதி மாலா' என்னும் சிவ அஷ்டபதியையும், ராமகவி இயற்றிய ராமாயணம் முழுதும் கொண்ட ராமாஷ்டபதியையும் பிரசுரிக்கச் செய்தார். இன்றும் அதனை காம கோடி ஆச்சாரியர்கள் பக்தி பாவத் துடன் ரசிக்கிறார்கள்.

எனவே,பெரியவாளின் அனுஷ நாட்களில் நாம சங்கீர்த்தனத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்போம்; குருவருள் பெற்று பேரின்பமுடன் வாழ்வோம்.