சனி, 12 அக்டோபர், 2013

படலம் 67: வித்யாபீட பிரதிஷ்டை

67வது படலத்தில் வித்யா பீட பிரதிஷ்டை முறை கூறப்படுகிறது. முதலில் வித்யையானது. சமஸ்கிருத பாஷையுடன் கூடியது, வேறு பாஷையுடன் கூடியது என இருவிதமாகும் என கூறப்படுகிறது. பிறகு வித்யா பீடத்திற்கு ஸ்தாபிக்க உரியதான ஸ்தாபன நிரூபணம், புஸ்தக அளவு முறை புஸ்தக நிர்மாணம் செய்ய காட்டு புரசு இலை, முதலிய திரவ்ய நிரூபணம், புஸ்தகத்தில் அக்ஷரம் எழுதும் முறை ஆகிய விஷயங்கள் கூறப்படுகின்றன. பிறகு புஸ்தகம் எழுதும் முறையின் முன்பும் படிக்கும் முன்பும் செய்ய வேண்டிய பூஜாமுறை கூறப்படுகிறது. கால வசத்தாலும் அறியாமையாலும் அழிந்ததும் சிற்றறிவு உடைய ஆசார்யர்களால், சோதிக்கப்பட்டதும், வீணான பதத்தை உடையதும் கூறியதை திரும்பவும் கூறப்பட்டுள்ளதும் முன்பின் என்ற முறையற்றதும், தன் சித்தாந்தத்திற்கு விரோதமான அர்த்தங்களை கூறியதுமான தோஷங்களை உடைய சிவஞானத்தை சொல்கிற சித்தாந்த சாஸ்திரத்திற்கு சம்ஸ்காரம் செய்யும் முறையும். அவ்வாறு பரமேஸ்வரனுடைய வித்யைகளை சிவபக்த சிஷ்யர்களுக்கு நன்கு கற்பிக்கும் முறையும், சிஷ்யனை அனுசரித்து தேச பாஷைகளின் உபாயத்தால் சுத்தமான சமஸ்கிருத சப்தங்களாலும், பிராகிருத சப்தங்களாலும், லவுகீக சப்தங்களாலும், சுலபமான வழியால் பரமேஸ்வரனுடைய வித்யையை கல்பிக்கவும் என்பதான முறையுடன் கூடியதான கல்வியை போதிக்கும் முறை. பலவித விசேஷமாக கூறப்படுகிறது. எவ்வாறு சம்பூர்ணமான, மஹாத்மாவான சிவனுக்கு முடிவு இல்லையோ அவ்வாறே சைவவித்யையை சொல்லி கொடுப்பதற்கு முடிவில்லாத பலன் கிடைக்கும் என கூறப்படுகிறது. சிவஞானத்தால் பிரகாசிக்கிறவன் பரமேஸ்வரனை போல் பூஜிக்க தக்கவன் என கூறப்படுகிறது. பிறகு சிவஞான ஸ்வரூப முடைய சிவசாஸ்திரத்தை புஸ்தகத்தில் நன்கு யார் எழுதுகிறானோ, அவனுக்கு விசேஷமான பலன்கள் நிரூபிக்கப்படுகின்றன.

சிவஞான ஸ்ரூபம் உடைய சிவ சாஸ்திரத்தை படிப்பது கேட்பது சிந்தனை செய்வது இவைகளின் பலன்கள் கூறப்படுகின்றன. போஜனம், வஸ்திர, தானம் சிவஞானத்தை உடையவர்களுக்கும் சிவஞானத்தை காப்பாற்றுபவர்க்கும் வித்யாதானத்திற்கு சொல்லப்பட்ட பலன் கூறப்படுகிறது. பிறகு எந்த ராஜ்யத்தில் சிவஞானரூபமான சிவசாஸ்திர வியாக்யானம் நன்கு நடக்கிறதோ அந்த ராஜ்யத்தில் ராஜா. அரசர்களுக்கு அரசராக ஆகிறான் எந்த ராஜ்யத்தில் ராஜ குருஸ்தானத்தில் அமைச்சர் அவையிலும், புரோகித ஸ்தானத்திலும் மற்ற எல்லா ராஜ கார்யத்திலும் சுத்த சைவம் பிரயோகிக்கப்படுகின்றனவோ அந்த ராஜ்ய அதிபர் ஸ்ரேஷ்டமான ராஜாவாகிறான். பிறகு யார் சைவ சித்தாந்தற்கு விரோதமின்றி வேதம் வேதாந்தங்கள் பாசுபதம், காரூடம், முதலிய தந்திரங்களின் அர்த்த நிச்சயத்தை செய்கிறானோ அவன் அனேக தர்மத்தை அறிந்தவன் மற்றவன் இல்லை என்கிறார் யார் சுத்த சைவ விரோதமாக சாஸ்திரத்தின் அர்த்தத்தை நிச்சயம் செய்கிறானோ அவன் தர்மத்திலிருந்து வெளியேற்றப்படுகிறான். இவ்வாறு பலவிதமாக சைவ வித்யையின் பெருமை கூறப்படுகிறது. பிறகு சைவ சாஸ்திரம் அறிந்த ஆசார்யனாலேயே அரசர்களுக்கு சாந்திகம், பவுஷ்டிகம், முதலியகர்மாக்களை முடித்து கொடுக்கவேண்டுமென கூறப்படுகிறது. இவ்வாறு வித்யாபீட பிரதிஷ்டை கூறப்படுகிறது. அங்கு வித்யாபீட பிரதிஷ்டையானது. ஆலயத்திலோ, மண்டபத்திலோ, சாலையிலோ, செய்யவேண்டும் என கூறப்படுகிறது. பிறகு வித்யா பீடம் செய்யும் முறை கூறப்படுகிறது. வித்யாபீடம் சம சதுரஸ்ரமாகவோ, நீண்ட சதுரஸ்ரமாகவோ செய்ய வேண்டும். வித்யா பீடத்தை நிர்மாணம் செய்து அதை பஞ்ச கவ்யத்தால் பிரோக்ஷணம் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு வித்யாபீட பிரதிஷ்டை விஷயத்தில் செய்ய வேண்டிய கும்பஸ்தாபனம், கும்பபூஜை, ஹோம விதி, மந்திரன்நியாம் முதலியவைகள் விளக்கப்படுகிறது. இவ்வாறு 67வது படலத்தில் கருத்து சுருக்கமாகும்.

1. சுருக்கமாக வித்யா பீட பிரதிஷ்டையை கூறுகிறேன். அந்த வித்யையானது ஸம்ஸ்க்ருதா, ஆத்மிகா என்று இரு வகைப்படும்.

2. பிரகாரத்தின் முன்பாக நான்கு திக்குகளிலும், விதிக்குகளிலும் அந்தராளத்திலும் பக்தர்களை பிரதிஷ்டை செய்யும் இடத்திலோ வித்யா பீடத்தை அமைக்க வேண்டும்.

3. மூன்று அங்குலம் முதல் ஐந்து அங்குலம் அதிகமான இருபத்தைந்து மாத்ராங்குலம் வரை புஸ்தங்களின் நீளம் இருக்க வேண்டும்.

4. ஐந்து, அங்குலத்திலிருந்து கால், கால் பாகம் கூடுதலாக பன்னிரெண்டு அங்குலம் வரை உள்ளதாகும். பெரிதெனில் பட்டி பதினைந்து அங்குலம் உள்ளதாக அமைக்கலாம்.

5. காட்டு புரசு இலை, ஸ்ரீதாளம் என்ற ஓர்வகை பனைஓலை இவைகளால் நிர்மானித்தோ தங்கம் முதலியவைகளால் நிர்மானிக்கப்பட்டது.

6. கருங்கல் போன்ற ஒரு விதமரம். மரப்பலகை, முதலியவற்றால் செய்யப்பட்டதிலோ குங்குமம் முதலியவைகளாலோ புஷ்பங்கள் முதலியவைகளாலேயோ தயாரிக்கப்பட்ட மையினால் அழகிய எழுத்துக்களால் எழுத வேண்டும்.

7. தூரிகையால் ஆன எழுதுகோலாலோ ஆசிரியரோ, சிஷ்யரோ எழுத வேண்டும். சுபமான கிழமை, யோகம், சுபநக்ஷத்ரம் கூடிய தினத்தில் ஆரம்பிக்க வேண்டும்.

8. சாதாரண ஆத்மாவினால் முயற்சியோடு சிவக்ஞானத்தை எழுதக்கூடாது. ஆத்மாக்களின் அருகில் படிக்க கூடாது.

9. பலவகை தேசங்களிலிருந்து உண்டானதும், அழகானதும் ஆன எழுத்துக்களால் நேர்மையாக எழுதவும். அந்த எழுத்தை பத்ரத்தின் ஓரத்தில் எழுதக் கூடாது.

10. சந்தனம், முதலியவைகளால் சிவமயமான மாத்ருகா எனப்படும் அக்ஷரங்களில் ஈஸ்வரனை பூஜித்து குருவுக்கு வஸ்திரம் முதலியவற்றை விருப்பத்துடன் கொடுத்து எழுத்துப் பலகையையும் பூஜிக்க வேண்டும்.

11. பசுஞ்சாணத்தால், மெழுகி கோலமிடப்பட்ட இடத்தில் வாரி இறைக்கப்பட்ட புஷ்பத்தை உடையதாகவும் தூபம் இடப்பட்டதாயும்

12. ஜ்வலிக்கின்ற தீபங்களுடன், சுத்த சைவர்களால் சூழப்பட்டு ஆசார்யர், எழுதியோ சொல்லிக் கேட்கப்பட்டோ படிக்க வேண்டும்.

13. எவ்வாறு எழுதிபடிக்க முடியுமோ அவைகளால் பிழையின்றி எழுதவும், சிவஞானத்திற்கு காலத்தினாலும் ஏமாற்றம் அடைந்ததாலும் அழிவடைந்தாலும்

14. கவனக் குறைவுள்ளவர்களாலோ எழுதப்பட்டவையாகவோ குறைவாகவோ, அதிகமாக இருந்தாலும் குறைவுள்ள அறிவுடையவர்கள் கவனமற்றவர்களால் செய்யப்பட்டதும் அழிவு அடைந்ததுமான

15. குறைந்த அறிவுடைய ஆசார்யர்களால் பரிசோதிக்கப்பட்டதும் அவசியமில்லாத பதங்களுடன் கூடியதும், சொன்னதையே திரும்பவும் கூறிய பொருளுக்கும்

16. முன் பின் தொடர்பின்றியும், தன் கோட்பாட்டிற்கும் எதிரியாயும் அதிகமாக விடுபட்ட சேர்க்கையையுடையதும்,  சொல்லிற்கு பொருளின்றி யுமாக உள்ளதுமாக

17. மேற்கூறிய முறைப்படி குற்றங்களை சிற்சில இடங்களில் யார் செய்கிறானோ அவனை ஆசார்யன், நன்கு முறைப்படுத்துதல் வேண்டும்.

18. எவன் சிவதத்வத்தை அறிந்த அறிஞனாக இருக்கிறானோ அவன் பரமேஸ்வரனுடைய வித்யைகளை சிவ பக்தர்களுக்கும் சிவ சிஷ்யர்களுக்கும் சொல்லிக் கொடுத்து அறிவிக்க வேண்டும்.

19. சிவ விதியை அனுசரித்து, வித்யாதாநமானது கூறப்படுகிறது. ஸம்ஸ்க்ருதத்தாலும் நெருக்கமான சொற்களாலும் தேசத்தின் பாஷை முறைப்படியும் வித்யாதானம் கூறப்படுகிறது.

20. பழமையான சொற்களாலும் சுத்தமான ஸம்ஸ்க்ருத சப்தங்களாலும் இங்கு உலக வழக்கு சொற்களாலும் அனுசரித்துள்ள எந்த சிஷ்யன் உள்ளானோ அவன்

21. தேசத்தின் சொல் முதலியவைகளாலும் அப்பேற்பட்ட ஆகமங்களாலும் அவ்விடத்தில் உள்ளவைகளாலும் எல்லா தேசத்திலுள்ளவர்களுக்கும் அறிவிக்க வேண்டும்.

22. பெரியோரான முழுமையான சிவனுக்கு எவ்வாறு முடியவில்லையோ அவ்வாறு எல்லா குணத்தையும் உடைய வித்யையை கொடுப்பதற்கும் முடிவில்லை என்பதாகும்.

23. வித்யையை கொடுப்பதின் பயன், ஐச்வர்யத்தையும் சிவனை அடையும் வரையிலான குணமும், புகழ், செல்வம், ஸரஸ்வதி, திருவருள், பேரொளி, பொருட் செல்வம் நன்மை இவைகளால் கிடைக்கும்.

24. எவன் சுத்தமற்ற வித்தையை அபஹரித்து உயர்ந்ததான அறிவை போதிக்கிறானோ அவன் பயங்கரமான நரகத்தையும், பாபம் செய்தவனாகவும் அறிவை அழிக்கிறவனாகவும் ஆகிறான்.

25. சிவஞானத்தை அளிக்கக் கூடிய புஸ்தகத்தை சிவனைப் போல் பூஜிக்கவும். தன்னால் இயன்றபடி தினந்தோறும் சிவாகமங்களை எழுத வேண்டும்.

26. சிவஞான புஸ்தகத்தில் எவ்வளவு எண்ணிக்கையில் எழுத்துக்கள் இருக்கின்றதோ அவ்வளவாயிரம் சிவலோகத்தில் கொடையாளியாக இருக்கிறான்.

27. முன்னதாக பத்து தலைமுறை பித்ருக்களை கரையேற்றி மற்றுமுள்ளதான பத்து தலைமுறைக்காரர்கள் தாய், தந்தை, மனைவி இவர்களுடன் ஸ்வர்கத்தை அடைந்து

28. அந்த ஸ்வர்கத்தில் மேற்கூறியவர்களை நிறுத்தியிருத்தி தான் மட்டும் சிவலோகத்தை அடைகிறான். ஒரு ஸ்லோகத்தையோ பாதி ஸ்லோகத்தையோ சிவஞானத்தை உடையதாக எவன் படிக்கிறானோ அவன்

29. படிப்பிக்கவோ, சொல்கிறானோ, நினைக்கவோ, எழுதவோ, எழுதும்படி செய்யவோ ஒரே மனதுடன் கேட்கவோ அதன் பொருளை ஆராயவோ

30. பிறர்க்கு கேட்கும்படி செய்யவோ யார் முனைகிறானோ மேற்கூறிய கார்யங்களை செய்பவனுக்கு சிவஞானமுடைய அவனுக்கு உணவு, உடை முதலியவைகளால் பெரிய புண்யபலன் கிடைக்கும்.

31. அவர் ஆயுள் முழுவதும் வரை காக்க வேண்டும். இவ்வாறாக கல்வியை கொடுப்பதின் பயனும் ஆகும். பண உதவி செய்தாவது, (செய்வதாலே) அந்த பலனை அடைகிறான்.

32. எந்த அரசாங்கத்தில் சிவாகம விரிவுரை புஸ்தகம் உள்ளதோ அந்த ராஜாவும் அந்த அரசாங்கமும் வளர்வதாகும். அவன் அரசனுக்கு அரசனாக விளங்கப்படுகிறான்.

33. அரசாங்கத்திலும் அரச குருவினிடத்திலும் மந்திரியிடத்திலும் மற்ற கார்யங்களில் புரோஹிதரிடத்திலும் மற்ற எல்லா கார்யத்திலும் மற்றவர்களின் தர்சனத்திலும்

34. சுத்த சைவனும் யோக்யனுமாக ஆவான். அவனே சாந்தாநிகனாகவும் உயர்ந்தவனாகவும் இருக்கிறான். எவன் சைவ சித்தாந்தத்திற்கு விரோதமில்லாமலுள்ள வேத வேதாங்கமும்

35. அவ்வாறு பாசுபதம் முதலிய தந்திரங்களும் காருடம் முதலிய பலவகை சாஸ்திரங்களையும் சாஸ்திரத்திற்காக நிச்சயம் செய்கிறானோ அவனே தர்மத்தை அறிகிறான். மற்றவன் அறிவதில்லை.

36. எவன் சுத்த சைவத்திற்கு முரன்பாடாக சாஸ்திரத்திற்கு நிச்சயம் செய்கிறானோ அவனுடைய புத்தி தாமசம் என்றும், அவன் தர்மத்திலிருந்து தள்ளப்பட்டவன் என்றும் கூறப்படுகிறது.

37. ஆகையால் ஆதரவோடு சுத்த சைவனானவன், சித்தாந்த சைவத்தால் சாந்தி கர்மா, பவுஷ்டிக கர்மாவை அரசன் செய்தல் வேண்டும்.

38. மற்ற எல்லோருக்கும் ஆபிசாரம் முதலான கர்மாவானது, தர்மத்தை கடைபிடித்து உயர்ந்த சாந்தானிகனால் செயற்பாலதாகும்.

39. அவனால் அனுஷ்டிக்கப்பட்ட கர்மாவானது எப்பொழுதும் அரசர்களுக்கு பலனை தரக்கூடியதாகும். இவ்வாறாக கல்வியின் பெருமை கூறப்பட்டு புஸ்தகத்தை வைக்கும் முறை கூறப்படுகிறது.

40. வித்யா சாலையின் விசாலமானது. பிராஸாதத்திலோ மண்டபத்திலோ மூன்று முழம் ஆரம்பித்து முப்பத்தி மூன்று முழம் வரை இருக்க வேண்டும்.

41. ஒரு சாலை முதலிய விதமான சாலைகளில் சாலையானது லக்ஷணத்துடன் கூடியதாக இருக்க வேண்டும். வித்யா பீடத்தின் அகலம் ஏழங்குல அளவாகும்.

42. இரண்டிரண்டு அங்குலமாக அதிகரித்து முற்பத்தியொன்று அங்குலத்தினால் அகலமும் அதே அளவு நீளமும் ஆகும், ஐம்பது முழ நீள அளவுள்ளதாகவும்

43. நாற்கோணமாகவோ, நீண்ட சதுரமாகவோ ஆகும். மற்ற ஆஸன முறைப்படியான வழியினால் எல்லாவற்றையும் செய்யலாம்.

44. பிறகு ஸம்ஸ்காரங்களை செய்து பஞ்சகவ்யத்தினால் பிரோக்ஷணம் செய்யவும். மண்டபத்தில் ஸ்தண்டிலம் அமைத்து வஸ்திரத்திற்கு மேல் பீடத்தை வைக்க வேண்டும்.

45. சிவனிடத்தில் பூஜை செய்வது போல் ஆஸனம் முதலியவைகளையும் மூர்த்தி மூர்த்தீஸ்வரர்களையும் சிவ பேதத்தில் சிவனையும், ருத்ர பேதத்திலும் சிவனையும் பூஜிக்க

46. நடுவில் சிவ கும்பத்தையும் பக்கங்களில் இரண்டு வர்தனியையும் இரண்டிலும், சிவனையும் வெளி ஆவரண தேவதைகளாக வித்யேசர்களையும்

47. சந்தனம், புஷ்பம் இவைகளால் பூஜித்து ஹோமம் முன்போல் செய்யவும். ஸமித், நெய், எள், ஹவிஸ் இவைகளுடன் கூடவும்

48. யவை தான்யத்தால் நூற்றி எட்டு ஆவிருத்தி ஹோமம் செய்து பூர்ணாஹூதி செய்யவும் பெற்றுக் கொண்ட தட்சிணையையுடையவனாய் மந்திரந்யாஸம் செய்ய வேண்டும்.

49. புஸ்தகத்தின் நடுவில் சிவனையும் அட்டைகளில் தேவியையும் பூஜிக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிகாகம மஹாதந்திரத்தில் வித்யா பீட பிரதிஷ்டா விதியாகிற அறுபத்தேழாவது படலமாகும்.
படலம் 66: சிவபக்த பிரதிஷ்டை

66வது படலத்தில் சிவபக்தர்களின் பிரதிஷ்டை முறை கூறப்படுகிறது. முதலில் போகம், மோக்ஷம் இவைகளை கொடுக்கக்கூடிய சிவபக்தபிரதிஷ்டையை கூறுகிறேன் என்கிறார். பின்பு பிராம்மணர், க்ஷத்திரியர், வைச்யர், சூத்திரர், இவைகளின் உட்பட்ட ஜாதியில் பிறந்தவர்கள் பிராம்மணாதி வர்ணித்தவரின் பெண்கள், ஆசார்யர்கள், அபிஷேகம் செய்து கொண்ட அரசன் இவர்களில் எவர்கள் சிவபக்தியுடன் கூடியதாக விளக்குகிறார்களோ, அவர்கள் இறந்தாலும், ஜீவித்து இருந்தாலும் அவர்களின் உருவத்தை ஏற்படுத்தி பிரதிஷ்டை செய்து பூஜிக்கவும் என கூறப்படுகிறது. பிறகு சைவர்கள். பாசுபதர் மஹாவ்ருததரர்கள், லாகுலர்கள், பைரவர்கள் முதலியோரும் சிவபக்தர்கள். இப்பேர்பட்ட பக்தர்கள் எந்த தந்திரத்தினால் தீøக்ஷ செய்யப்பட்டவரோ அந்த தந்திரத்தினாலேயே அவர்களுக்கு பிரதிஷ்டை முதலியவைகள் செய்யப்படவேண்டும். ஆனால் எல்லோருக்கும் சைவ சித்தாந்த முறைப்படியே பிரதிஷ்டை செய்வது உயர்ந்தது என கூறப்படுகிறது. பிறகு அந்த சிவபக்தபிம்பங்களின், ஸ்தாபன விஷயத்தில் ஸ்வதந்திரமாகவோ, பாரதீனமாகவோ பிரதிஷ்டை செய்யலாம் என இரண்டு விதமான முறை கூறப்படுகிறது. பிறகு கிராமம், நதிதீரம், தீர்த்த புஷ்க்கரணி, அல்லது வனம், சிறியவனம், மலை அல்லது அழகான இடம், ஆகிய இடங்களிலோ ஸ்வபிரதானமாக ஆலயம் அமைக்கவும் என கூறப்படுகிறது. பிறகு தேவாலயத்தில் உள்பிராகத்தில் ஆலயம் அமைத்து அங்கு பரிவார சஹிதமாக எந்த விக்ரஹம் ஸ்தாபிக்கப்படுகிறதோ அதுவும் ஸ்வதந்திர ஆலயம் ஆகும். தேவாலயம் முதலிய இடங்களிலும் எல்லா மாளிகை மண்டபம் முதலிய இடங்களிலும் பரிவாரமாக எந்த பிம்பம் ஸ்தாபிக்கப்படுகிறதோ அது பராதீனமாகும் என்று ஸ்வதந்திர பராதீன பிரதிஷ்டையின் லக்ஷணம் கூறப்படுகிறது. பிறகு கோபுரம் மண்டபம் இவைகளை அமைக்கும் முறையும் நிரூபிக்கப்படுகிறது. பின்பு முன்பு குறிப்பிடபட்ட சிவபக்தர்களின் பிரதிஷ்டை விஷயத்தில், சிவலிங்கம், சிவனுடைய பிம்ப பேதங்கள், ஸ்கந்தன், நந்தி முதலிய உருவபிம்பங்கள், அல்லது இறந்தவரின் பிரதி பிம்பம் இவைகளில் ஏதாவது ஒன்றை கற்சிலை முதலான பிம்பம் செய்யப்படும் திரவ்யங்களால் சுபம் என்ற ஆயாதி, நீளஅளவு கணக்குபடி கூடியதாக அமைக்கப்பட வேண்டும் என கூறுகிறார்.

பிறகு லிங்க விஷயம், பிம்பவிஷயத்திலும், அளவு முறை பிரதிமை அமைக்கும் முறை ஆயாதி என்ற நீள, அளவு முறை விவரிக்கப்படுகின்றன. அங்கு புருஷர்கள் ஸ்திரீகள் விஷயத்திலும் அவ்வாறே அரசர்கள் விஷயத்திலும் விசேஷம் நிரூபிக்கப்படுகிறது. பிறகு பிரதிஷ்டைமுறை கூறப்படுகிறது. பிரதிஷ்டைக்காக நல்ல காலத்தில் அங்குரார்பணம் செய்து ரத்னன் நியாசம் செய்யவும் என ரத்னநியாச முறைப்படுகிறது. நயனோன் மீலன முறையும் மந்திர பூர்வமாக கூறப்படுகிறது. பிறகு பிம்பசுத்தி செய்து சர்வ அலங்காரயுதமாக கிராமப் பிரதட்சிணம் செய்து லோகபாலர் கடத்துடன் கூடியதாக பிம்பத்தை ஜலாதி வாசம் செய்யவும் என ஜலாதிவாசம் வரையிலான கிரியைகள் கூறப்படுகின்றன. பிறகு யாகம் செய்வதற்காக மண்டபம் அமைக்கும் முறையும் கூறப்படுகிறது. பிறகு சில்பியை திருப்தி செய்து விட்டு பிராம்மண போஜனம், புண்யாக பிரோக்ஷணம் இவைகளையும் செய்து வேதிகையின்மேல் நெல் முதலான திரவ்யங்களால் ஸ்தண்டிலம் அமைத்து அங்கு தோல் முதலிய சயன திரவ்யங்களால் 5 சயனம் கல்பித்து பிறகு ஜலாதிவாசத்திலிருந்து பிம்பத்தை ஸ்நான வேதிகைக்கு அழைத்து வந்து முன்பு போல் சுத்தி செய்து வஸ்திரங்களால் போர்த்தி சந்தன புஷ்பங்களால் பூஜித்து ரக்ஷõபந்தனம் செய்து பிம்பத்தை சயனத்தில் அமர்த்தவும். பிறகு இங்கு கிழக்கு பாகத்தில் தலையணை வைத்து அங்கு பிம்ப சிரஸ் எவ்வாறு உள்ளதோ அதன் பிரகாரம் பிம்பத்தை சயனம் செய்து வைக்கவும் என கூறப்படுகிறது. இவ்வாறு சயனாதிவாசம் கூறப்பட்டு கும்பாதிவாசம் கூறப்படுகிறது. அங்கு பிம்ப சிரசின் வடக்கு பாகத்தில் கும்பம் வைக்கவும். அதை சுற்றிலும் வஸ்திர ஸ்வர்ணாதிகளால் அலங்கரிக்கப்பட்டதும் மாவிலை, தேங்காய் முதலியவைகளுடன் கூடவும் சுற்றிலும் எட்டு கும்பம் ஸ்தாபிக்கவும். கும்பத்தில் மந்திரங்களை அர்ப்பணம் செய்யவும். கும்ப முறை, கும்பத்தில் மந்திரன் நியாசமுறை கூறுகிறேன் என்று சொல்லி பூஜிக்க வேண்டிய மந்திரங்கள் நிரூபிக்கப்படுகின்றன. அங்கு ஆத்ம மந்திரமோ ஹம்ஸ மந்திரமோ பூஜிக்கப்பட வேண்டும். ஸ்திரீபக்தர்களின் விஷயத்தில் ஹ்ரீம் காரம் பூஜிக்கப்பட வேண்டும் என்பதான விஷயங்கள் சொல்லப்படுகின்றன.

பிறகு பத்னியுடன் கூடியதாக சிவபக்தர்க்கு பிரதிஷ்டை செய்யப்பட்டால் அங்கு மனைவிக்காக பிரதான கும்பத்தின் வடக்கு பாகத்தில் வர்த்தனி ஸ்தாபிக்க வேண்டும். இரண்டு மனைவியுடன் கூடியிருப்பாரேயானால் தெற்கு பக்கத்திலும் வேறு ஒரு வர்த்தனியை ஸ்தாபிக்கவும். பலவித மனைவிகள் இருந்தால் இரண்டு பக்கத்திலும் பலவர்த்தனிகள் ஸ்தாபிக்கப்பட வேண்டும். பிறகு ஸ்திரீ பிரதிஷ்டையில் எல்லாவற்றிலும் வர்த்தனியை ஸ்தாபிக்கப்படவேண்டும். பிறகு புருஷ விஷயத்தில் பரிவார கடங்களில் பிருதிவீ முதலான ஐந்து கடங்களும் மனம், புத்தி, அகங்காரம் ஆகியவையும் சேர்த்து எட்டு கடங்களையே, எட்டு கடங்களில் வசுக்கள் லோகபாலகர் இவர்களையோ பூஜிக்க வேண்டும். ஸ்திரீகளின் விஷயத்தில் எட்டு திக் தேவதைகளை பரிவார கடங்களில் பூஜிக்க வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு புருஷர்கள், ஸ்திரீகள், விஷயத்தில் தத்வ தத்வேரர், மூர்த்தி மூர்த்தீஸ்வரர் நியாசம் மாத்ருகாநியாசம், ஜீவன்நியாசம் ஆகியவைகளின் முறை விளக்கப்படுகின்றன. பிறகு குண்ட சமீபம் சென்று வஸ்திர, சந்தன, புஷ்பங்களால் பூஜித்த பிறகு குண்டசம்ஸ்காரம் அக்னிஸம்ஸ்காரம் செய்து ஹோமகர்மா முடித்து பிறகு பூஜை செய்யவும் என கூறி ஹோம முறையும், ஹோம திரவ்ய நிரூபணமும் விசேஷமாக கூறப்படுகிறது. பிறகு இரவு பொழுதை கழித்து காலையில் ஆசார்யன் ஸ்நானம், சந்தியாவந்தனம், நித்யானுஷ்டானம் செய்து பஞ்சாங்க பூஷணத்துடன் தட்சிணைகளை பெற்றுக் கொண்டு மூர்த்திபர்களுடன் கூடி துவார துவாரபாலகர்களை பூஜித்து முறைப்படி, பிம்பம், கும்பம், அக்னி இவர்களை பூஜித்து சயனத்திலிருந்து பிம்பத்தை எடுத்து முறைப்படி வாகனங்களில் ஏற்றி ஆலயத்திற்கு செல்லவும். இந்த ஸ்தாபன காலத்தில் ரத்னநியாஸ மந்திர நியாஸ, பூர்வமாக மாத்ருகான்நியாசம், ஜீவன்நியாசத்தையும் செய்து பூஜிக்கவும் என கூறி மாத்ருகான்நியாஸ ஜீவன்நியாஸ விதி விளக்கப்படுகிறது. பிறகு பரிவார கும்பங்களுடன் கூடி பிரதான கும்பஜலங்களால் அபிஷேகம் செய்யவும் என கூறப்படுகிறது.

பிறகு வஸ்திர, சந்தன, தூப, தீப நைவேத்ய உபசாரங்களாலும் மற்ற உபசாரங்களாலும் சிவபக்தரை பூஜிக்கவும் என்று பிரதிமை ஸதாபிக்கும் முறையும் இவ்வாறு நிரூபிக்கப்படுகிறது. அல்லது பிம்பத்தை ஸயனத்திலிருந்து எடுத்து ஸ்நான வேதிகையில் வைத்து மாத்ருகான் நியாசம் முதலியவைகளை செய்யவும் என்று வேறுமுறை கூறப்படுகிறது. இங்கு சலம், அசலம் என்று இருவித பிம்பங்களை அனுசரித்து பிரதிஷ்டாமுறை கூறப்படுகிறது. பிறகு நித்ய பூஜாவிதி கூறப்படுகிறது. அங்கு ஆதிசைவகுலத்தில் பிறந்தவரும், 5 கோத்திரத்தில் பிறந்தவரும், ஆசவுச, ஸ்நான சந்தியாவந்தனங்களை முடித்த ஆசார்யன் ஆலய பிரவேச முறையும் துவார பூஜாவிதியும் பூதசுத்தி, ஸ்தான சுத்தி, திரவ்ய சுத்தி, மந்திரசுத்தி, பிம்பசுத்தி செய்யும் முறையும் ஆசனமூர்த்தி பூஜையும் ஜீவன் நியாசம், பாத்யாசமன அர்க்யம் செய்யும் முறையும் அபிஷேக முறை வஸ்திரம் ஸமர்பிக்கும் முறைகளான இந்த விஷயங்கள் கூறப்படுகின்றன. பிறகு சந்தன, புஷ்ப, தூப, தீப, உபசாரங்களுடன் கூடி தாம்பூலம் காய்கறிகளுடன் கூடியதான நைவேத்யம் சமர்ப்பிக்கவும். இவ்வாறு நித்யபூஜை முறை மூன்று சந்தியாகாலத்திலோ அல்லது இரண்டு, ஒன்று சந்தியாகாலத்திலோ நித்யபூஜை செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. அயனம், விஷுவ, சங்கராந்தி, கிரஹணம் ஆகிய புண்யகாலங்களில் ஸ்நபனம் செய்யவும் என கூறி உத்தம, மத்யம, அதம, பேதத்தினால் மூன்று வித ஸ்நபன முறை நிரூபிக்கப்படுகிறது. பிறகு உத்ஸவமுறை கூறப்படுகிறது. வசதி இருந்தால் ஒவ்வொரு மாசத்திலும் உத்ஸவம் செய்யவும் அல்லது அந்த சிவ பக்தரின் பிறந்த தினத்திலோ அல்லது கர்த்தாவின் ஜன்ம தினத்திலோ உத்சவம் அனுஷ்டிக்கவும் என கூறப்படுகிறது. பிறகு ஒவ்வொருவருஷமும் கல்யாண உத்ஸவத்துடன் கூடியதாக செய்யலாம். அல்லது ஒரு தினத்திலேயும் செய்து பலிஹோமம் த்வஜாரோஹணத்துடன் கூடியதாக உத்ஸவம் செய்யவும் எஜமானன் விருப்பப்படி செய்யவும் என கூறப்படுகிறது. எல்லா சிவபக்தர்களுக்கும் உத்ஸவங்களில் அவரவர்களுக்கு கூறப்பட்டுள்ள வசதிக்கு தக்கவாறு அஷ்டமங்கலத்துடன் கூடியதான விருஷபத்தை, கொடியில் வரையவும்.

ராத்திரியில் பேரீதாடனம் செய்யவும். பிறகு சந்தனம், புஷ்பம் கூடியதாக இந்திராதி தேவர்களுக்கு பலி கொடுக்க வேண்டும் என உத்ஸவத்தில் செய்ய வேண்டிய விசேஷம் கூறப்படுகிறது. பிறகு உத்சவத்தில் அனுஷ்டிக்க வேண்டிய முறை நிரூபிக்கப்படுகிறது. உத்ஸவ ஆரம்பத்தின் முன் தின இரவில் யாகாதிவாசம் செய்ய வேண்டும் என கூறி வேதிகை குண்டத்துடன் கூடின யாகசாலா விதி கூறப்படுகிறது. பலிகொடுப்பதற்காக உத்ஸவத்திற்கு பெரிய, அல்லது சிறிய சிவபக்தரின் பிம்பத்தை முறைப்படி ஏற்படுத்தி ரக்ஷõபந்தனம் செய்து அந்த பிம்பத்தை வேதிகையின் மத்தியில் நெல் முதலியவைகளால் ஸ்தண்டிலம் அமைத்து அங்கு ஸ்தாபிக்க வேண்டும். பிரதிஷ்டைக்கு கூறப்பட்டுள்ளபடி கும்பங்களை ஸ்தாபித்து தினந்தோறும் காலையிலும் மாலையிலும் ஆசார்யன் தேவதைகளை பூஜிக்க வேண்டும். பிரதிஷ்டை முறைப்படி ஹோமம் செய்யவும் சாயந்திரம், காலையிலும் க்ஷúத்திர, பிம்பத்துடன் கூடி பலிகொடுக்கவும். பலி முடிவில் ஸர்வ அலங்காரத்துடன் கூடியதாகவும் நாட்டியம், பாட்டு இவைகளுடன் கூடியதாகவும் உத்ஸவம் செய்ய வேண்டும். வீதி வலம் வருதல் முறைப்படி செய்யவும். உத்ஸவத்தின் கடைசி தினத்தில் சூர்ணோத்சவம், தீர்த்தவாரி இவைகளை முறைப்படி செய்ய வேண்டும் என்று உத்ஸவத்தின் செய்முறை கூறப்படுகிறது. பிறகு உத்ஸவ காலத்தில் பிரதிதினமும் மூலஸ்தான பிம்பத்திற்கு, விசேஷ பூஜை செய்ய வேண்டும். உத்ஸவ முடிவில் மூலஸ்தான பிம்பத்திற்கும், உத்ஸவ பிம்பத்திற்கும் சுத்தியின் பொருட்டு ஸ்நபனம் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. அசக்தாக இருக்கும் பக்ஷத்தில் கொடி ஏற்றுதல் பலி, ஹோமம் இவைகள் இன்றியும் உத்ஸவம் மட்டுமோ செய்யலாம் என கூறப்படுகிறது. இவ்வாறு உத்ஸவ விதி நிரூபிக்கப்பட்டது. முடிவில் சிவபக்த பிரதிஷ்டை செய்யும் யஜமானனுக்கு பலஸ்ருதி கூறப்படுகிறது. இவ்வாறு 66வது படலத்தில் கருத்து சுருக்கமாகும்.

1. போக மோக்ஷத்தைக் கொடுக்கின்ற சிவ பக்தர்களின் பிரதிஷ்டையைக் கூறுகிறேன். பிராம்மணர்கள், க்ஷத்திரியர்கள், வைச்யர், நான்காம் வர்ணத்தவர் அதன் உட்பிரிவினர் மற்றும்

2. ஸ்திரீகளோ, குருமார்களோ, பட்டாபிஷேகம் செய்யப்பட்ட அரசனோ அல்லது சிவபக்தியுடன் வாழ்பவர்களோ அல்லது இறந்தோர்களோ

3. அவர்களின் உருவத்தைச் செய்து பிரதிஷ்டித்து பூஜிக்க வேண்டும். சைவர்கள் பாசுபதர்கள் உயர்ந்த நியமமுடையவர்கள்.

4. லாகுள மதத்தவர்கள் பைரவாதிகள் எவ்வழி பற்றி தீøக்ஷ பெற்றவர்களோ அவர்களுக்கு அவ்வழியிலேயே ஸ்தாபனம் முதலானவற்றைச் செய்ய வேண்டும்.

5. அனைவர்க்கும் சைவசித்தாந்த வழியினாலே ஸ்தாபனம் செய்யலாம் தனித்தன்மையானது சைவசித்தாந்தத்தை முக்யமாகக் கொண்டும், மற்ற சாஸ்திரங்களைக் கொண்டும் செய்வது என இரு வித ஸ்தாபனமாகும். தன்னிச்சையாக செயல்படுவதல் (ஸ்வப்ரதானம்) பிறர்க்கு கீழ்படிந்து (பாரங்கம்) என இருவித ஸ்தானம் கூறப்படுகிறது.

6. கிராம ஆரம்பத்திலோ நதிக்கரையிலோ, குளக்கரையிலோ, காட்டிலோ, நந்தவனத்திலோ, மலையிலோ, மனதிற்கு விருப்பமான இடத்திலோ

7. மற்ற இடங்களிலோ, ஸ்வதந்த்ர கோயிலை அமைக்க வேண்டும். தேவாலயத்தின் உள்வீதியின் ஆரம்பத்திலோ, அங்கு நிர்மாணிக்கப்பட்ட ஆலயத்தில்

8. பரிவாரங்களுடன் கூடிய ஸ்வப்ரதான ஆலயம் சிறப்பாகும். எல்லா தேவாலயத்தின் ஆரம்பத்திலோ மாளிகை, மண்டபங்களிலோ

9. பரிவாரங்கள் இல்லாமலிருப்பது அங்கம் எனப்படும். மூன்று முழம் முதல் ஆரம்பித்து இரண்டு இரண்டு முழங்களாக அதிகரித்து

10. இருபத்தியொரு முழங்கள் முடிய விமான பரப்பு கூறப்படுகிறது. ஆயாதி அளவுப்படி கர்ப்பக்ருஹம், மண்டபம் முதலானவைகளையும் பிறகு

11. ஆயாதி பிரமாணத்துடன் கோபுரம், சாலா, அமைப்பது சுபமானது. ஆத்யேஷ்டிகா ஸ்தாபனத்துடன் கருவறையை அமைக்கவும் பிறகு

12. மூர்த்தியேஷ்டகா முறை முன்பே கூறப்பட்டது. அதற்காக சிவலிங்கத்தையோ அல்லது சிவ உருவ வடிவங்களையோ அமைக்கலாம்.

13. ஸ்கந்தர், நந்தி முதலான உருவங்களாகவோ, மறைந்தவர் உருவம் போலோ அளவுடன் கற்சிலை முதலிய உரிய வஸ்துக்களினால் அமைக்க வேண்டும்.

14. கருங்கல்லாகவோ, உலோகத்தாலோ, மரத்தாலோ, மண்ணிணாலோ, நவரத்தினத்தினாலோ, பாதி உருவ அமைப்புடனோ, சுவற்றில் எழுதிய உருவமாகவோ படம் முதலியவைகளில் எழுதியோ செய்யலாம்.

15. லிங்கமாகவோ, உருவச் சிலையாகவோ ஆகில் லிங்கத்திற்குச் சொல்லிய வழியில் அவைகளின் அளவு இரண்டையும் எடுத்துக் கொண்டு ஆலயம், கர்பக்ருஹம் பிறகு

16. வாசலிலிருந்து கீழ் மேல் அளவு இவற்றை மானாங்குல அளவாகவோ, ஆறுயவை என்ற பேதத்துடன் கர்த்தாவின் மாத்ராங்குல அளவினாலோ செய்ய வேண்டும்.

17. ஆலயம் முதலான அளவில் ஒன்பது பாகமாகச் செய்வது உத்தமம். மூன்றங்குலம் முதல் அங்குலம் அங்குலமாக உயர்ந்து தொன்னூற்றி ஆறு (96) அங்குலம் வரைக்கும்

18. அளவானது இவ்வாறு ஜாதி ஆயாம்சத்தோடு கூடியதாக சொல்லப்படுகிறது. எட்டு, ஏழு, மூன்று என அதிகரித்து பனிரெண்டு, ஏழு, எட்டு அளவுகளால் குறைந்தும்

19. ஆயம், வ்யயம், யோநி, எட்டாமிடத்தை மறைப்பது, நக்ஷத்திரங்களால் அபகரித்த தினம், ஒன்பது, நான்காமிடம் அபகரித்து ஏழு, ஒன்பது என்ற எண்ணிக்கையால் அபஹரித்து

20. நாளானது, அம்சமாக கூறப்பட்டுள்ளது. யஜமானனுக்கு அனுகூலமானதும் இறந்தவர் பெயரின் எழுத்து எண்ணிக்கையை ஒத்தும் செய்ய வேண்டும்.

21. லிங்கமாக இருந்தாலும் அந்த முறையாலோ உருவச் சிலையாக இருந்தாலும் முறைப்படி கூறப்பட்ட கால பேதங்களின்படி செய்ய வேண்டும்.

22. மறைந்தவரின் உருவத்தை எட்டுதாலப்ரமாணத்தால் செய்ய வேண்டும். அமர்ந்தோ, நின்ற நிலையிலோ, வாஹனமேறிய நிலையிலோ செய்ய வேண்டும்.

23. அமர்ந்தோ, நின்றோ, பத்மாஸநத்திலமர்ந்தோ, சிம்மாஸநத்திலமர்ந்தோ, கீழேயோ, பிரதிஷ்டிக்க வேண்டும். இரண்டு முறையிலாவது செய்யும்படி கூறப்படுகிறது.

24. தனக்கு விருப்பமான ஆஸநத்துடனோ, நாற்கோணவடிவை அடைந்ததாகவோ செய்ய வேண்டும். ஆஸநத்தின் அளவு நீல அகலத்துடன் அழகாக இருக்க வேண்டும்.

25. முன்கூறிய விதிப்படி சிலாலக்ஷண முறைப்படி செய்ய வேண்டும். கேசத்துடனோ, முடிந்த கேசத்துடனோ மொட்டகையாகவோ, ஜடையுடனோ செய்ய வேண்டும்.

26. தீக்ஷõபிஷேகம் (பட்டாபிஷேகம்) செய்யப்பட்ட அரசினாகில் கிரீட மகுடத்துடன் அவரவர் விருப்பமான ஆயுதத்துடனோ, கூப்பிய கைகளுடைய நிலையிலோ

27. எல்லா லக்ஷணங்களுடனும் ஆபரணங்களை அணிந்தவராகவோ, பாடுகின்றவராகவோ, நடனம் புரிபவராக, பூஜை செய்பவராகவோ விருப்பப்படி செய்ய வேண்டும்.

28. பெண்களோவெனில் அவர்களின் உருவத்திற்கொத்த அலங்காரத்துடனோ செய்யவும். இவ்வாறான லக்ஷணத்துடன் பிரதிஷ்டை முதலானவை கூறப்படுகிறது.

29. பிரதிமை செய்யக்கூறப்பட்ட வழியிலேயே மக்கள் மெழுகு முதலியவற்றால் செய்ய வேண்டும். பிறகு பிரதிஷ்டையில் பொருட்டு முன்னதாக அங்குரார்பணத்தை செய்ய வேண்டும்.

30. ரத்னந்யாஸத்தைச் செய்து பிறகு நயோன்மீலனத்தையும் செய்ய வேண்டும். ஸ்தண்டிலத்தை முன்போல் செய்து அதன்மேல் வஸ்திரத்தை வைக்க வேண்டும்.

31. பிரணவ வடிவபீடம் அமைத்து அதன்மேல் சிலையை வைக்கவும். தங்கஊசி முனையால் கருவிழி மண்டலத்தை எழுத வேண்டும்.

32. ஜ்யோதிர் மண்டலத்தை எழுதி (பேன் என்ற பூச்சி அளவு) உசிதமான பார்வையை அமைத்து நேத்ரமந்திரத்தைச் சொல்லி இந்த கிரியை செய்ய வேண்டும்.

33. குருவானவர் தேன், நெய், தங்க அருகினால் பிந்துவால் தொட வேண்டும். தேன், நெய், நிறைந்த பாத்ரமிரண்டை அதற்கு காண்பிக்க வேண்டும்.

34. தங்க நகத்தினால் நேத்ர மந்திரத்தினால் தொட வேண்டும், தான்யம், கன்றுடன் கூடியபசு, கன்யாபெண், பிராமணர்களை

35. தர்சிக்கச் செய்து திரையை நீக்கி பிம்பசுத்தியைச் செய்ய வேண்டும் (ஸர்வ) எல்லா அலங்காரத்துடன் கிராமபிரதட்சிணம் செய்ய வேண்டும்.

36. பிம்பத்தை ஜலத்தில் அதிவாஸம் செய்யவும். லோகபாலர்கள் கும்பங்களையும் ஸ்தாபிக்கவும். யாகத்தின் பொருட்டு மண்டபத்தை இடப்பக்கமோ, முன்னாலோ பக்கங்களிலோ அமைக்க வேண்டும்.

37. அங்கு ஒன்பது, ஐந்து, ஒன்று என்ற எண்ணிக்கையில் குண்டங்களை அமைக்க வேண்டும். சிற்பியை அனுப்பிவிட்டு பிறகு பிராமண போஜனத்தை செய்ய வேண்டும்.

38. மேடையின்மேல் நெல்லால் ஸ்தண்டிலம் செய்து முன்போல் சுத்தியை செய்து கிராமபிரதட்சிணம் செய்து

39. ஜலாதிவாஸம் செய்து மண்டபத்தில் குண்டத்தை அமைத்து நெல் முதலியவற்றால் ஸ்தண்டிலம் அமைத்து தோல் முதலியவற்றால் ஐந்து விதமான சயனம் அமைத்து

40. ஆதாரசக்தி ஆனந்தனுடன் தர்மாதிகள் நான்கையும் பூஜித்து மானிடபீடத்தை பிரணவத்தால் அமைக்க வேண்டும்.

41. சிலை முதலான பிம்பத்தை ஸ்நாநவேதிகைக்கு கொண்டு வரவும். சிலையை பீடத்தில் அமர்த்தி முன்சொன்னபடி குருவானவர்

42. வஸ்திரங்களையும் சாத்தி, சந்தனாதிகளாலும், புஷ்பமாலைகளாலும் அலங்கரிக்க வேண்டும். ரக்ஷõபந்தனம் செய்யப்பட்ட பிம்பத்தை சயனத்தில் வைக்க வேண்டும்.

43. கிழக்கில் தலையணையை வைத்து அங்கு பிம்பசிரஸை வைக்கவும். தலையின் வடக்கு பாகத்தில் பிரதான கும்பத்தை ஸ்தாபிக்க வேண்டும்.

44. சுற்றிலும் வஸ்திரம், தங்கம், நூல் சுற்றுக்களால் அலங்கரிக்கப்பட்ட சந்தஜலம் நிறைந்த பழம் துளிர்களுடன் கூடிய எட்டு கும்பங்களை வைத்து

45. அவற்றில் நடுவில் பூஜிக்கப்படும் மந்திரங்களின் விதானம் இங்கு கூறப்படுகிறது. ஸ வரிசையின் கடைசி எழுத்து ஹ என்று முதல் ஒலியாகக் கொண்டு புள்ளியுடன் கூடியதாகும் ஹம்

46. ஹம் (இதை) ஆத்ம மந்திரமென்றோ, ஹம்ஸ மந்திரமென்றோ அறியவும். ஸ வுக்கு முடிவான ஹ வினாலேயே பிரம்ம, அங்கமந்திரங்களை அமைக்க வேண்டும்.

47. வித்யாங்கங்களையோ தன் நாமத்துடன் கூடியதாகவோ பூஜிக்க வேண்டும். ஸ்தீரீ பிரதிஷ்டையில் ஹ்ரீங்காரத்தோடு பிரம்மாங்கத்தோடு பூஜிக்க வேண்டும்.

48. தன் பத்தினியுடன் கூடியவராக இருந்தால் அதற்கும் பிரதிஷ்டை கூறப்படுகிறது. பிரதான கும்பத்தின் வடக்கில் மனைவியின் பொருட்டு வர்த்தனீயைச் செய்ய வேண்டும்.

49. இரண்டு பத்தினிகள் இருப்பின் தெற்கில் மற்றொரு வர்த்தனீயை வைக்கவும். அதிகமான பத்னிகளானால் அதற்கேற்ற கலசங்களை இரு பக்கங்களிலும் வைக்க வேண்டும்.

50. எல்லா ஸ்தீரீ பிரதிஷ்டைகளிலும் வர்த்தனிகள் கூறப்படுகின்றது. ப்ருதிவி முதலான பஞ்ச பூதங்கள் மனஸ், அகங்காரம், புத்தி ஆகியவைகள்

51. பரிவார கும்பங்களில் பூஜிக்கத்தக்கவர்கள், அஷ்டவஸுக்களும் ஏற்புடையன. ஸ்தீரீகளின் பரிவாரங்களில் லோகபாலர்களின் மனைவிகள் கூறப்படுகிறார்கள். (1. சசீதேவி, 2. ஸ்வாஹாதேவி, 3. ஸ்வர்காதேவி, 4. வர்காதேவி, 5. காலகண்டி, 6. நிர்மிணீ, 7. நாரிணீ, 8. சுககேதிநீ)

52. ஆண் விஷயத்தில் லோகபாலர்களையோ எட்டு கும்பங்களில் பூஜித்து சந்தனம் புஷ்பம் முதலியவற்றால் தத்வ தத்வேச்வரர்களையும் பூஜிக்க வேண்டும்.

53. ஆத்ம, வித்யா, சிவம் என்பவை தத்வத்ரயம் என கூறப்படுகிறது. ஆத்மா, அந்தராத்மா, பரமாத்மா இவர்களை பரமாத்மனம் எனவும் தத்வாதிபர்களாவர்.

54. தத்வ தத்வோச்வரர்களாக முறையாகப் பூஜிக்கவும், ஸ்திரீகளுக்கும் இம்மாதிரி ஆகும், க்ஷ்மா முதலான மூர்த்திகளும் சம்மதமே.

55. எட்டு மூர்த்திகள் என்ற விஷயத்தில் க்ஷ்மா முதலானோர்களும், அதிபர்கள் இந்தரன் முதலானோர்களும் ஆவர். ஐந்து மூர்த்திகள் என்ற விஷயத்தில் ப்ருத்வீ, முதலானோர்களும் நிவ்ருத்தி முதலான கலைகளும் ஆகும்.

56. அந்தந்த மூர்த்திபர்கள் அவரவர்களின் குண்ட மூர்த்தி ஹ்ருதயத்தில் அதற்குரிய பிரம்ம மந்திரங்களை நியஸித்து பூஜிக்கவும். அ முதல் க்ஷ வரை தலை முதலான பாகங்களில் முறைப்படி நியாஸம் செய்ய வேண்டும்.

57. ஜீவன்யாஸத்தை மூலமந்திரத்தாலும் அங்க மந்திரங்களையும் நியாஸம் செய்யவேண்டும். சந்தனம், புஷ்பம் முதலியவைகளால் பூஜித்து வஸ்த்ரத்தால் கவச மந்திரம் சொல்லி மூடி

58. பிறகு குண்ட சமீபத்தை அடைந்து அக்னி கார்யங்களை ஆரம்பிக்கவும். முன்போல் குண்ட ஸம்ஸ்காரத்தையும் பின் சிவாக்னியையும் ஸ்தாபித்து

59. அக்னி மத்தியில் பக்தரை ஆவாஹித்து ஹோமம் செய்யவும். சமித்து, நெய், அன்னம், பொறி, எள் முதலிய திரவ்யங்களை மூர்த்திபர்களோடும்

60. புரசு, அத்தி, ஆல் முதலியவற்றை கிழக்கு முதலாகவும், வன்னி, கருங்காலி, நாயுருவி, வில்வம் முதலிய சமித்துக்களால் ஆக்னேயம் முதலாகவும்

61. பிரதானத்தில் புரசு சமித்தையும் நூறு, ஐம்பது, இருபத்தைந்து என்ற எண்ணிக்கையில் ஹோமம் செய்யவேண்டும், பூர்ணாஹுதி செய்து தத்வேசர் களுக்குத் தனியாகவும்

62. மூர்த்தி மூர்த்தீச்வரர்களுக்கு தனியாகவும் மூன்று ஆஹூதிகளையும் செய்து அகோர மூலத்தால் மூன்று ஆவ்ருத்தி பிராயச்சித்த ஆஹுதிகளாக ஆசார்யர் கொடுக்க வேண்டும்.

63. சிரோபாகம் முதல் பாதம் முடிய சாந்தி கும்ப ஜலத்தால் புரோக்ஷித்து பிறகு குருவானவர் அந்தர்பலி, பஹிர்பலியையும் கொடுத்து

64. மீதமுள்ள இரவைக் கழித்து காலையில் குருவானவர் ரித்விஜர்களுடன் ஸ்நானம் செய்து ஸந்தியா வந்தனம் மற்றும் செய்ய வேண்டியவற்றைச் செய்து

65. கவுசிகர் முதலான ஐந்து கோத்திரத்தில் பிறந்தவர்களும் தலைபாகை உத்திரீயம் அணிந்தவராய் பஞ்சாங்க பூஷணர்களாய் தட்சிணையால் மகிழ்ச்சி அடைந்த மனதுடையவராய்

66. அவ்வாறே பூஜிக்கப்பட்டு மகிழ்ச்சியடைந்த மூர்த்திபர்கள், மந்திரம் ஜபிப்பவர்கள் வேதபாராயணம் செய்பவர்கள் ஜ்யோதிடர்கள் சிற்பிகள் ஆகிய இவர்களோடும்

67. ஆசார்யரானவர் த்வாரபூஜை, த்வாரபாலர் பூஜை, கும்பபூஜையும் செய்து அக்னி குண்டத்தில் பூஜையையும் பூர்ணாஹுதியையும் முறைப்படி செய்யவும்.

68. சயனத்திலிருக்கும் பிம்பத்தை எழுப்பி உசித முறையில் வாகனத்திலேற்றி ஆலயம் முதலான இடங்களுக்கோ எடுத்துச் சென்றோ ஸ்நான மண்டபத்திற்கோ கொண்டு வர வேண்டும்.

69. ரத்ன நியாஸத்தை முன்போல் செய்து ஸ்நபனத்தை செய்யவும். ஆஸனத்தில் பிரணவத்தை செய்து மூர்த்தி மூலத்தை பூஜிக்க வேண்டும்.

70. மாத்ருகா நியாஸத்தையும் பிறகு ஜீவன் யாஸத்தையும் செய்யவும். கும்ப ஜலத்தால் அபிஷேகம் செய்து சுற்றியுள்ள கும்பங்களையும் அபிஷேகித்து

71. வஸ்த்ர சந்தன புஷ்பங்களாலும் தூபதீப நைவேத்யங்களாலும் உபசாரங்களாலும் மற்றவைகளாலும் சிவபக்தரைப் பூஜிக்க வேண்டும்.

72. முடிவான உத்ஸவத்தை சக்திக்கு தகுந்தவாறு செய்யவும். அது முதல் கொண்டு அந்த பக்தரை தினந்தோறும் பூஜிக்க வேண்டும்.

73. ஆதிசைவ குலத்தில் தோன்றிய ஐந்து கோத்திரத்திலுதித்தவர்கள் அவசியமான மலவிஸர்ஜநாதிகள், சவுசம், ஸ்நானம், ஸந்தியாவந்தனம் இவற்றை

74. முடித்துக் கொண்டு ஆசார்யன் ஆலயத்தில் பிரவேசித்து ஸாமான்யர்க்கத்தை உடையவராய் திவாரத்திற்கு இருபுறமும் உள்ள புருஷன், ப்ரக்ருதி என்பதான வாயிற்காப்போரை பூஜித்து

75. கர்பகிரஹத்துள் நுழைந்து அழிவில்லாத பரமாத்மரூபியான வாஸ்துவை நடுவில் பூஜித்து பூதசுத்தியை செய்து

76. மந்திர சரீரம் உடையவராய் ஸ்தான சுத்தியையும் செய்து புஷ்பம் அக்ஷதை, ஜலத்துடன் கூடிய விசேஷார்க்யத்தைச் செய்து

77. ஆசார்யர் முன்சொன்னபடி அனைத்து திரவ்யங்களையும் பிரோக்ஷிக்க வேண்டும். பிரணவத்தை முன் கொண்டு நம என்பதை முடிவாகக் கொண்ட மந்திரங்களை மந்திர சுத்தியின் பொருட்டு சொல்ல வேண்டும்.

78. அஸ்த்ர மந்த்ர மயமான ஜலத்தால் பிம்ப சுத்தியின் பொருட்டு சிலை முதலானவற்றை அபிஷேகிக்க வேண்டும். முன்கூறியபடி ஷடுத்தாஸநத்தைப் பூஜித்து

79. அதன் மத்தியில் குருவானவர் மூர்த்தியை அந்தந்த உருவமுடையவராய் அந்தந்த மூலமந்திரத்தாலும் மூர்த்தி மந்திரத்தாலும் பூஜித்து

80. பிறகு ஜீவன்யாஸத்தை செய்து ஹ்ருதயாதிகளையும் பூஜிக்கவும். ஹ்ருதய மந்திரத்தால் பாத்யம் ஆசமனம் அர்க்யங்களை கொடுக்க வேண்டும்.

81. சுத்த ஜலத்தால் அபிஷேகித்து பஞ்சகவ்யங்களை அபிஷேகித்து, பிம்பத்தை துடைத்து வஸ்த்ரம், சந்தனம், புஷ்பம், தூபம்

82. தீப ஸஹிதம் நைவேத்யம் கொடுக்க வேண்டும். உபசாரமாக தாம்பூலத்தையும் இவ்வாறு மூன்று காலங்களிலோ இரண்டு காலங்களிலோ செய்ய வேண்டும்.

83. அல்லது ஒரு கால பூஜை செய்வதானாலும் பலி உத்ஸவத்துடனோ, இல்லாமலோ தீபாந்தமாகவோ நிவேத்யாந்தமாகவோ, சக்திக்கேற்ப பூஜிக்க வேண்டும்.

84. அயனத்திலும், விஷுவ காலத்திலும், மாத பிறப்பிலும் கிரஹணம் முதலானவைகளிலும் முன் கூறியபடி பூஜையை செய்ய வேண்டும்.

85. நடுகும்பத்தில் பக்தரையும் க்ஷ்மா முதலானவர்களை, முதல் ஆவரணத்திலும், பதினாறு ஸ்வரங்களை அதற்கு வெளி ஆவரணத்திலும் அதற்கு அடுத்த ஆவரணத்தில் ககாராதிகளையும் பூஜிப்பது ஏற்புடையது.

86. இவ்வாறு பூஜிப்பது உத்தமமாகும். இரண்டு ஆவரணத்துடன் பூஜை செய்வது மத்யமமாகும். ஒரு ஆவரணத்துடன் பூஜிப்பது அதமம் எனக் கூறப்படுகிறது.

87. உத்ஸவத்தை விமரிசையாகவெனில் ஒவ்வொரு மாதமும் செய்ய வேண்டும். பக்தருடைய ஜன்மதினத்திலோ கர்த்தாவின் ஜன்ம தினத்திலோ செய்ய வேண்டும்.

88. ஸம்வத்ஸரோத்ஸவ கார்யமானது வொரு வருடமும் கல்யாணத்துடன் ஒன்பது ஏழுநாள், ஐந்துநாள், மூன்று நாள் விழாவாகவோ

89. அல்லது ஒருநாள் விழாவாகவோ பலிஹோமத்துடன் த்வஜாரோஹனம் முதலாக அனைத்தையும் கர்த்தாவின் விருப்பப்படி செய்ய வேண்டும்.

90. எல்லா உத்ஸவங்களிலும் கொடிச் சீலையில் வ்ருஷபத்தை எழுதி அந்தந்த இனத்திற்குச் சொல்லப்பட்ட அஷ்டமங்கலப் பொருட்களுடன் கூடியதாக எழுத வேண்டும்.

91. ராத்திரியில் பக்தரின் அஸ்த்ர தேவருடன் கூட பேரீதாடனத்தைச் செய்து இந்திராதிகளுக்கு சந்தனம், புஷ்பங்களுடன் கூட பலியையும் கொடுக்க வேண்டும்.

92. உத்ஸவத்தின் முதல்நாள் இரவில் யாக அதிவாஸத்தை செய்ய வேண்டும். வேதிகையுடன் கூட யாகசாலையை முறைப்படி அமைத்து

93. கிழக்கு குண்டம் முதலான எட்டு குண்டமோ அல்லது ஐந்து குண்டங்களுடனோ எல்லா மங்களமும் பொருந்தியதாக யாகசாலை அமைத்து அங்குரார்பணத்தை செய்ய வேண்டும்.

94. பலியின் பொருட்டும் உத்ஸவத்தின் பொருட்டும் சிவபக்தர் உருவ சிலையை சிறியதாகவோ, பெரியதாகவோ செய்து ஆசார்யர் முறைப்படி பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

95. பிறகு ரக்ஷõபந்தனம் செய்து வேதிகையின் நடுவில் நெல் முதலியவைகளால் ஸ்தண்டிலம் அமைத்து கும்பங்களை ஸ்தாபிக்க வேண்டும்.

96. பிரதிஷ்டா விதியில் கூறிய முறைப்படி அவைகளை பூஜிக்கவும். ஒவ்வொரு நாளிலும் தேவர்களை காலையிலும் மாலையிலும் ஆசார்யர் பூஜிக்க வேண்டும்.

97. சந்தனம், பூக்கள் முதலியவைகளுடன் கடைசியில் ஹோமத்தை செய்ய வேண்டும். இப்பூஜையில் திரவ்யங்கள் பிரதிஷ்டையில் கூறியபடியே ஆகும்.

98. க்ஷúத்ர (மூர்த்தங்களுக்கு) பிம்பத்துடன் கூடியவைகளுக்கு மாலையிலும் காலையிலும் பலியையும் கொடுக்கவும். பலியின் முடிவில் எல்லா அலங்காரத்துடனும் கூடி மூர்த்திகளுக்கு உத்ஸவத்தைச் செய்ய வேண்டும்.

99. வாத்யம், நாட்யத்துடன் கூடியதாக வீதிவலம் வருதலை செய்யவும். முடிவில் சூர்ணோத்ஸவமும் தீர்த்தவாரியும் செய்ய வேண்டும்.

100. ஒவ்வொரு நாளும் மூல பேரத்திற்கு விசேஷமான பூஜையை செய்ய வேண்டும். முடிவில் மூலபேரத்திற்கு சுத்த ஸ்நபனத்தைச் செய்ய வேண்டும்.

101. முனீச்வரர்களே கொடியேற்றமோ, பலிஹோமமோ செய்ய இயலவில்லை என்றால் உத்ஸவம் மாத்ரமோ செய்ய வேண்டும்.

102. எந்த மனிதர் சிவபக்தபிரதிஷ்டையை செய்கிறாரோ அவர் ஆயுள், ஆரோக்யம், வெற்றி; ஐஸ்வர்யம், கீர்த்தி முதலிய பலன்களை அடைவார்கள்.

103. கடைசியில் சிவனுடன் இரண்டறக் கலப்பர். இதில் சந்தேகம் என்பது இல்லை.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் சிவபக்த பிரதிஷ்டை முறையாகிற அறுபத்தாறாவது படலமாகும்.
படலம் 65: சண்டிகேஸ்வர பிரதிஷ்டை

65 வது படலத்தில் சண்டிகேஸ்வர பிரதிஷ்டா விதி கூறப்படுகிறது. முதலில் அமைக்கும் முறை முன்னதாக சண்டிகேஸ்வரரின் பிரதிஷ்டைமுறை கூறப்படுகிறது என்று உத்தரவு. பிறகு சண்டிகேஸ்வரர்ஸ்தாபனமானது. ஸ்வத்ந்திரம் பராதீனம் என்று இருவகைப்படும். நகரம் முதலிய இடங்களில் மத்யபாகத்திலோ அல்லது எட்டு திக்கிலோ சண்டிகேஸ்வரர்க்கு ஸ்வதந்திரமாக ஆலயம் செய்ய வேண்டும். சிவாலயத்தில் ஈசான பாகத்திலோ வடக்கு பாகத்திலோ, உள்பிரகாரத்திலோ உள்பிரகாரத்திற்கும், உட்பட்ட பிரகாரத்திலோ இஷ்டப்பட்ட பிரகாரத்திலோ பராங்காலயம் என்ற ஆலயம் சண்டிகேசனுக்கு ஆலயம் அமைக்கவேண்டும் என கூறப்படுகிறது. பிறகு சண்டிகேஸ்வரர் ஆலயம் செய்யும் முறையும் அதற்கு திக் தேவதை நிர்மாணிக்கும் முறையும் கூறப்படுகிறது. அங்கு பிம்பம் பராதீனமாக இருந்தால் தெற்கு நோக்கிய துவாரத்தை உடையதாக அமைக்கவேண்டும். ஸ்வதந்திராலயம் அமைக்கும் முறையில் தெற்கு, கிழக்கு மேற்கு முகமாகவோ அமைக்க வேண்டும். ஸ்வதந்திர ஆலயம் பிரகாரம் மண்டபம் இவைகளுடனும் சுற்றிலும் பரிவார தேவதைகளுடன் உடையதாகவும் அமைக்கவேண்டும் என கூறப்படுகிறது. ருத்திரபக்தர்முதலான எட்டு பெயர்களை குறிப்பிட்டு அவைகளின் லக்ஷணம் கூறி இவைகள் பரிவாரம் என கூறப்படுகிறது. அல்லது இந்திரன் முதலிய துவார பாலகர்களையே அல்லது அதற்காக பீடங்களையோ பிரதிஷ்டை செய்யவேண்டும் என கூறப்படுகிறது. பிறகு சண்டிகேஸ்வரர் ஆலயத்தில் முன்பாக விருஷபம் மஹாபீடம் பலிபீடம் முதலியவை கல்பிக்க வேண்டும். சண்டேச அனுகர், சண்டமான்யர் என்ற இரண்டு துவார பாலகரும் அவருடைய லக்ஷணமும் கூறப்படுகிறது. அல்லது துவாரபாலகர் இல்லாததாகவும் பிரதிஷ்டைசெய்யலாம் என கூறப்படுகிறது. விக்னேஸ்வரர், பைரவர், சூர்யன் இவர்களுடன் கூடியதாகவோ அல்லது ஸ்வாமியின் பரிவார தேவதையோ சண்டிகேஸ்வரர் ஆலயத்தில் விசேஷமாக கூறப்படுகிறது. பிறகு கற்சிலை முதலான திரவ்யங்களால் பிம்பத்தை அமைப்பது முறைப்படி செய்யவேண்டும் என கூறப்படுகிறது.

பிறகு சண்டிகேஸ்வர மூர்த்தி லக்ஷணம் விளக்கப்படுகிறது. பிறகு நான்குகைகளை உடையதாகவோ சண்டிகேஸ்வரர் நிரூபிக்கப்படுகிறார். இருவிதபிரகாரமும் பலவிதமாக கூறப்படுகிறது. பிறகு சண்டிகேஸ்வரர் தேவியுடன் கூடியதாகவோ, கூடாததாகவோ என்றும், தர்மினி என்கிற தேவியின் லக்ஷணம் கூறப்படுகிறது. சண்டிகேஸ்வரரின் மூலமந்திரம் மூர்த்தி மந்திரம் ஆசன மந்திரம் ஆகியவைகளை கூறப்படுகின்றன. பிறகு பிரதிஷ்டாமுறை நிரூபிக்கப்படுகிறது. அங்குரார்பணபூர்வமாக பிரதிஷ்டை செய்யவேண்டும் ரத்னன்நியாசம் முன்பு கூறியபடி செய்யவும். ஸ்வர்ணமயமான பிம்பத்தில் ரத்னன் நியாசம் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. நயனோன்மீலன விதியும் மிக சுருக்கமாக கூறப்படுகிறது. பிம்பசுத்தி கிராம பிரதட்சிணம் செய்யவேண்டும் இந்திரன் முதலானவர்களுடன் எட்டு கும்பத்தை ஸ்தாபித்து ஜலாதிவாசம் முதலிய கிரியைகளை செய்யவும் யாகத்திற்காக குண்டம் வேதிகை, இவைகளுடன் கூடிய அமைக்கும் முறை கூறப்படுகிறது. பிறகு மண்டபத்தில் சில்பியை திருப்தி செய்து சிவ பக்தர்களுக்கு போஜனம் செய்விக்கவும். புண்யாக பிரோக்ஷணம் செய்து வாஸ்த்து ஹோமம் செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு ஜலாதிவாசத்திலிருந்து சண்டிகேஸ்வரர் பிம்பத்தை எடுத்து முன்போல் ஸ்நபன சுத்திசெய்து ரக்ஷõபந்தனம் செய்து மண்டபத்தில் வேதிகையில் அண்டஜம் முதலான சயன திரவ்யங்களை ஏற்படுத்தி அதில் சண்டிகேஸ்வரரை சயனம் செய்விக்கவும். இரண்டுவஸ்திரங்களால் மூடவும் என்று சயனாதிவாச விதி கூறப்படுகிறது. பிறகு கும்பத்தை அதிவாசம் செய்யும் முறை கூறப்படுகிறது. சண்டிகேஸ்வரரின் தலைபாகத்தில் சூத்திரம், கூர்ச்சம், வஸ்திரம் இவைகளுடன் கூடியதானதும் தங்க உளியுடன் தீர்த்தத்தை நிறப்பி மாவிலையுடன் கூடியதாக ஸ்தாபிக்கவும். பிறகு சண்டிகேஸ்வரர் அம்பாளுடன் கூடியதாக இருந்தால் கும்பத்திற்கு வடக்கு பாகத்தில் வர்த்தனிகும்பம் அமைக்கும் முன்பு கூறப்பட்ட ரூபத்யான முறைப்படி கும்பங்களை பூஜித்து சண்டிகேஸ்வரரை பூஜிக்கும் முறை மந்திரத்துடன் சுருக்கமாக கூறப்படுகிறது. சுற்றிலும் எட்டுகடங்களை ஸ்தாபித்து எட்டுலோக பாலகர்களையோ சண்டேசமூர்த்திகளையோ சந்தன புஷ்பங்களினால் பூஜித்து தத்வதத்வேஸ்வரர் மூர்த்தி, மூர்த்தீஸ்வரர் பூஜிக்கும் முறை கூறப்படுகிறது.

இவ்வாறாக கும்பத்தை அதிவாசம் செய்யும் முறை கூறப்படுகிறது. பிறகு ஆசார்யன் மூர்த்திபர்களுடன் கூடி ஹோமம் செய்யவும் என கூறி ஹோம திரவ்ய நிரூபணம் செய்யப்படுகிறது. பிறகு காலையில் ஆசார்யன் சுத்தி செய்து கொண்டு சண்டேசனை கும்பத்திலும் அக்னியிலும் பூஜித்து பிராயசித்தஹோமம் பூர்ணாஹுதி செய்து யஜமானனால் மூர்த்திபனுடன் கூடிய ஆசார்யன் வஸ்திரம் ஸ்வர்ணாபரணம் அங்குளியகம் இவைகளால் பூஜிக்கப்பட்டவராகவும் தட்சிணை பெற்றுக் கொண்டவராகவும் ஆலயத்தில் முன்னமே ஸ்தாபிக்கப்பட்ட நல்லமுகூர்த்தத்தில் சண்டிகேஸ்வரரை ஸ்தாபனம் செய்து ஸ்வாமியின் முன்பாக ஸ்தண்டிலத்தில் வைக்கப்பட்ட கும்பங்களால் மந்திரந் நியாசம் செய்யவும். பிறகு கும்பத்தில் உள்ள தீர்த்தங்களால் முறைப்படி சண்டிகேஸ்வரர்க்கு அபிஷேகம் செய்யவும். பிறகு முடிவில் ஸ்நபனம் செய்து அதிகமாக நைவேத்யம் செய்யவும். பிறகு சலபிம்பமாக இருந்தால் உத்ஸவம் செய்யவும். சண்டிகேஸ்வரர் பிம்பம் அம்பாளுடன் கூடியதாக இருந்தால் அம்பாளை பிரதிஷ்டை செய்யவும். இந்த சண்டிகேஸ்வர பிரதிஷ்டை பாலஸ்தாபனத்துடன் கூடியதாக உள்ளதா இல்லையா என விவரிக்கப்படுகிறது. இவ்வாறு பிரதிஷ்டாவிதி கூறி பிரதிஷ்டையின் பலஸ்சுருதி விசேஷமாக கூறப்படுகிறது. சண்டிகேஸ்வர பிரதிஷ்டாவிதியின் அங்கமான நித்யார்ச்சனாவிதி கூறப்படுகிறது. அங்கு ஆசார்யன் ஸ்நானம் முதலியவைகளை முடித்து அங்கன்யாசகரன்நியாசம் செய்து கொண்டு சாமான்யார்க்யம் செய்து கொண்டு துவாரம், துவார தேவதைகளை பூஜித்து ஆலயம் நுழைந்து பூதசுத்தி அந்தர்யாகம், திரவ்யசுத்தி ஸ்தானசுத்தி மந்திரசுத்தி அனுஷ்டிக்கவும் என கூறப்படுகிறது. ஸ்தான சுத்தி மந்திரசுத்தி முறை விளக்கப்படுகிறது. பிறகு பிம்பசுத்தி முறையும் நிரூபிக்கப்படுகிறது. அங்கு சண்டிகேஸ்வரனின் காயத்திரி மந்திரம் கூறப்படுகிறது. பிறகு ஆசனம் மூர்த்தி கல்பனம் ஆவாஹனம் முதலிய சம்ஸ்கார முறைகள் சுருக்கமாக கூறப்படுகிறது. அபிஷேக முறை நிரூபிக்கப்படுகிறது. வஸ்திர சந்தன, தூப, தீபம் கொடுக்கும் முறை வர்ணிக்கப்படுகிறது.

ஆவரண பூஜாமுறையும் கூறப்படுகின்றன. அங்கு ஹ்ருதயாதி மந்திரங்கள், ருத்திரபக்தர்கள், ஆயுதத்துடன் கூடிய திக்பாலகர்கள் இவர்களை, சண்டிகேஸ்வரரை சுற்றி பூஜிக்க வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு விதியில் கூறப்பட்டபடி நைவேத்யத்தை தாம்பூல ஸஹிதமாக கொடுக்க வேண்டும் என கூறப்படுகிறது. இங்கு பராதீனமான சண்டிகேஸ்வர விஷயத்தில் விசேஷம் கூறப்படுகிறது. பிறகு ஜபம் முடித்து பரிவாரபலி கொடுக்கவும் விஸ்தாரமாக செய்யும் பக்ஷத்தில் ஹோமம் செய்யவும் என்று ஹோம முறை நிரூபிக்கப்படுகிறது. பிறகு நித்யோத்சவவிதியும் கூறப்படுகிறது. பின்பு சண்டிகேஸ்வரரை ஒவ்வொரு தினமும் ஆதரவுடன் 8 காலத்திலுமோ அல்லது இஷ்டப்பட்டகாலத்திலுமோ பூஜை செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு பராதீன சண்டிகேஸ்வரர் பூஜையில் விசேஷ முறை கூறப்படுகிறது. முடிவில் இந்த சண்டிகேஸ்வரர் பூஜையானது ஆத்மார்த்தத்திலும் பரார்த்தத்திலும் சாமான்யம் என கூறப்படுகிறது. பிறகு நித்யபூஜையின் பயன்கள் விசேஷமாக காணப்படுகின்றன. பிறகு இஷ்டசித்திக்காக ஸ்நபனத்துடன் கூடிய விசேஷ பூஜை செய்யவும் என கூறி 5,9,25,50,100 ஆகிய எண்ணிக்கை உள்ள ஸ்நபனத்திலும் தேவதைகளை பூஜிக்கும் முறை கூறப்படுகிறது. பின்பு மஹோத்ஸவம், தமனாரோபநம் பவித்ரோத்ஸவம் கிருத்திகா தீபாவளி வசந்தோத்ஸவம் மாசோத்ஸவம் நவநைவேத்ய விதி இவைகளுடன் சண்டிகேஸ்வரர் விஷயத்தில் அனுஷ்டிக்கவும் என அறிவிக்கப்படுகிறது. உத்ஸவத்தில் கொடியில் உளியையோ விருஷபத்தையோ வரையலாம் என அறிவிக்கப்படுகிறது. உத்ஸவ விஷயத்தில் உத்ஸவ பிம்பத்தை அமைக்கும் முறை தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு சிவோத்ஸவத்தில் சண்டநாதற்கு உத்ஸவம் செய்யவும் என கூறி கொடுயேற்றுவது ஹோமம் பலி இவை இன்றி வெறும் பேரயாத்திரை அனுஷ்டிக்கவும் என கூறப்படுகிறது. பிறகு பிரதிஷ்டை உத்ஸவகர்மாக்கள் கூறப்படாத எந்தகர்மா உள்ளதோ அவை எல்லாம் முன்பு கூறியுள்ளபடி செய்யவும். ஆனால் அந்த எல்லா கிரியைகளும் சண்டிகேஸ்வரர்மந்திரத்துடன் கூடியதாக செய்யவேண்டும் என அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு 65வது படல சுருக்கமாகும்.

1. சண்டேசஸ்தாபனத்தை அவருடைய அமைப்பு முறை முதற் கொண்டு சொல்கிறேன். பிறர்க்கு கீழ்பட்டவர் தன்னிச்சையானவர் என்று இருமுறையாக உள்ளது என ஆகம ஒப்பாகும்.

2. சண்டேஸ்வராலயமானது நகரத்தின் நடுவிலுமோ, எட்டு திக்குகளிலுமோ, வடக்கிலோ, வடக்கிற்கும் வடகிழக்கிற்கும், நடுவிலுமோ, வடக்கிற்கும் கிழக்கிற்கும் நடுவிலோ அமைக்க வேண்டும்.

3. உள் மண்டலம் என்பதான இரண்டாம் பிரகாரத்திலோ அர்த்தஹாரம் என்பதான ஒன்றாம் பிரகாரத்திலோ விருப்பப்பட்ட பிரகாரத்திலோ ஆலயம் அமைக்கவும். பிறகு ஒன்று முதல் முற்பத்தி மூன்று முழம் வரையிலாக பரப்பளவை உடையதாயும்

4. ஆலய லக்ஷணத்தில் கூறப்பட்ட ஆயாமம் என்ற கணக்களவோடு கூடியதாயும், ஒன்று முதல் ஏழு பாகம் வரையிலான பூமி அமைப்புடன் கூடியதாயும்

5. ஆலயத்திற்கான, கோபுரத்திற்கான அளவுகளுடன் கூடிய நான்கு திசையில் சண்டிகேஸ் வரருடைய இஷ்ட தேவருடன் கூடியோ அல்லது வ்ருஷபத்துடன் கூடியதாகவோ

6. முன் சொன்ன விதிப்படியான கர்ப்பக்ருஹம் முதலானவற்றையும் ஆத்யேஷ்டிகையுடன் கூட விமான ஸ்தாபனம், ஸ்தூபிஸ்தாபனத்துடன் கூடியதாக அமைக்க வேண்டும்.

7. முனீச்வரர்களே தெற்கு வாயிலுடன் கூடியது. பிறர்க்கு கீழ்பட்டது, பராங்கம் எனவும் ஸ்வதந்தர ஸ்தாபனத்தில் தெற்கு, கிழக்கு, மேற்கு முகமாகவும்

8. திக்குகளில், தேவர்களின் கும்பங்களை நடுவிலுடையதாக ஸ்தூபியுடன் கூடியதாக முன்பு கூறப்பட்ட ஆலய விமான அமைப்புடன் கூடியதாயும்

9. முன் சொன்ன கர்ப்பக்ருஹம் முதலிய எல்லா அளவையும் இங்கு உபயோகிக்க வேண்டும். பிரகார மண்டபங்களுடன் கூட சுற்றிலும் பரிவாரத்துடன் கூடியதாகவும்

10. ருத்ரபக்தர், ருத்ரர், சண்டர், சண்டபர் மஹாபவர் அவ்வாறே டங்கபாணி, ஈசசேவதர்

11. ருத்ரகோபஜர், ஆகிய இவர்கள் எட்டு மூர்த்தியும், பரிவாரங்கள் ஆவார்கள். இவர்கள் வெண்மை நிறம், பெரிய சரீரம், அஞ்சலி ஹஸ்தம் உடையவராயும்

12. டங்கத்தை உடையவராகவோ இல்லாமலோ வீரம் முதலான ஆஸனத்தில் அமர்ந்தவராய் புலித்தோல் அணிந்தவராகவோ அல்லது சண்டரூபம் உடையவராகவோ இருப்பர்.

13. இந்திராதிகளாகவோ அல்லது பீட வடிவாகவோ கிழக்கில் ரிஷபத்துடன் பலிபீடம் முதலான பீடங்களுடன் கூடியதாக முன் போல் அமைக்க வேண்டும்.

14. தேசிகோத்தமர்களே, திவாரத்தில் இருக்கும் திவாரபாலகர்கள் இரு கைகள், தண்டம் தரிப்பவராய், சண்டாநுகர், சண்டமாந்யர் என்றவாறு அமைத்தும் அமைக்காமலுமிருக்கலாம்.

15. பலி பீடத்தில் பலியை சொல்லிய அளவுபடி கொடுக்க தேவர்கேற்ற பரிவாரங்களுடனோ, கணபதி, ÷க்ஷத்ரபாலர், சூரியன் முதலானவர்களோடு கூடியோ அமைக்கலாம்.

16. கல் முதலிய சிலைகளின் விஷயத்தின் முன் சொன்ன லக்ஷணப்படி கூடிய நடுவில் தசதாலத்துடனோ, தச தாலத்திற்கு குறைந்ததாகவோ

17. பிரதிமாலக்ஷணத்தில் சொல்லிய, ஆயாதி என்ற அளவுடன் கூடியதாக அமைத்த சண்டநாதர், பத்தபத்மாஸனத்தில் அமர்ந்தவராய் காண முடியாத அளவிற்கு அச்சுறுத்துபவராக பயத்தை கொடுப்பவராய்

18. பாம்பை பூணூலாக அணிந்தவராயும், முகத்தால் கக்குகிற தீயையுடைய கருமையான இரு நாகத்தை யுடையவராய் ஜடாமுடியை உடையவராயும், சந்திரனை தலையில் தரித்தவராயும்

19. நான்கு முகம் நான்கு கைகளுடன் அக்ஷமாலை, த்ரி சூலம் தரித்தவராய் இடது புறம் டங்கம், கமண்டலம் தரித்து, சிவந்த சூர்யனுக் கொப்பான 12 கண்களை உடையவராயோ

20. அல்லது சங்கு போன்ற வெண்ணிறத்துடன், நான்கு கைகள், மூன்று கண்கள். உடையவராய் பாதி சந்திரனை தரித்தவராய் புலித்தோல் அணிந்தவராய் வீராஸநத்தில் அமர்ந்தவராய்

21. வில், அதிகமான அம்புகளுடன் சேர்ந்த இரண்டு கைகளையும் வர ஹஸ்தம் அபய ஹஸ்தத்தாலான இரண்டு கையால் அலங்கரிக்கப்பட்டவராயும்

22. அல்லது இரண்டுகைகள், வெண்மை நிற வஸ்த்ரம், மூன்று கண்களுடையவராய் மை போன்ற காந்தியுடன் ஜடா மகுடம் உடையவராகவோ வெண்மையான சிகையை தரித்தவராகவோ

23. நின்று கொண்டோ, ஆஸனத்தில் அமர்ந்தோ, படுத்த இடது கால் தளத்தையும், தொங்கும் வலது காலுடன் கூடியதாகவோ இடதுகை

24. அல்லது வரத ஹஸ்த்தம் அமைப்பாகவோ, வலது கை டங்கத்தை தரித்ததாகவோ, கூப்பிய கைகளுடனோ அல்லது

25. சிவனைப் பார்த்து வருத்தத்துடன் வணங்கிய கையையுடையதாகவோ தலையை உடையதாகவோ உத்குடாஸநம் என்ற அமைப்புடன் அமைதியால், ஜடா முடியையும் மழுவை தரித்ததாகவுள்ளபடியோ

26. இவ்வாறு சண்டநாதருடைய பிரதிஷ்டையில் விருப்பமான ஆஸநத்துடன் கூடியவராகவோ இருப்பார் அல்லது அபயம், டங்கம், பாசம், சூலம் தரித்தவராய் இருப்பார்.

27. நான்கு கைகள் உடையவராய் சுவாமியின் உத்தரவைக் காப்பவராய் இருப்பார் சிம்ஹள தேசத்தில் பிரதிஷ்டையின் விசேஷம் சிறிது இங்கு கூறப்படுகிறது.

28. க்ருதயுத்தில் எட்டு கைகளையுடையவராயும், த்ரேதாயுகத்தில் ஆறு கைகளையுடையவராயும் த்வாபர யுகத்தில் நான்கு கைகள் உடைய வராயும் கலியுகத்தில் இரு கைகளை உடையவராயும் இருப்பார்.

29. மற்ற தேசத்தில் எங்கும், இவ்வாறான பேதம் இல்லை, ஆனால் சண்டநாதர் தேவியுடன் கூடியோ இல்லாமலோ

30. அந்த தேவியானவள் சியாமள நிறம் இருகைகள் உடையவனாய் ஆபரணங்கள் அணிந்தவளாய் நீலோத்பலம் தரித்தவளாய் தர்மனீ என்ற பெயருள்ளவளாய் இருப்பாள்.

31. இவ்வாறு நிர்மாணிக்கப்பட்ட விக்ரஹத்தை ஆசார்யர்களால் பிரதிஷ்டிக்கப்பட வேண்டும். சண்டாஸனத்தை நான்காம் வேற்றுமை முடிவாகவும் நம: என்பதாகவும்

32. ஓம் என்பதை முதலாக சண்டமூர்த்தி என்ற பதத்தையும் நம: என்பதை முடிவிலும் கூற வேண்டும். (ஓம் சண்டேசாய நம:) சதுர்த்தி விபக்தியின் முடிவான இதுவே மூர்த்தி மந்த்ரம் என கூறப்படுகிறது.

33. முன்னால் ஓம் என்பதுடன் த்வனி சண்டேஸ்வராய என்று ஹூம்பட் ஸ்வாஹா என்ற பதமானது மூல மந்தரமாகும்.

34. குருவானவர், ஈசானம் முதலானவர்களை ச காரத்துடன் சேர்த்துக் கூறவேண்டும். ஓம் சண்டேச ஹ்ருதயாய ஹூம் பண்ணம என முடிவாக ஹ்ருதியாதிகளுடன் கூறவேண்டும்.

35. குருவானவர் அந்த சண்டரின் பெயருடன் ஹூம்பட் என்பதை முடிவாக மூர்த்திகளை கூற வேண்டும். அல்லது வேறு முறையாக சண்டரின் மந்த்ரம் கூறப்படுகிறது.

36. ஞான சக்தி பதங்களுடைய மந்திரங்களால் ஹூம்பட் என்பதோடு சேர்ந்ததாய் சண்டாய என்ற பதத்துடன் கூடியவைகளாக சண்ட மந்திரம் கூறப்படுகிறது. ஓம் க்லீம் சண்டாய ஹும் பட்.

37. சண்டநாத மந்த்ரமானது வித்யாங்கங்களுடன் சேர்ந்ததாகவும் கூறப்படுகிறது. பிறகு பிரதிஷ்டையை செய்ய வேண்டும். அங்குரார்ப்பணம் முதலில் உள்ளதாக செய்ய வேண்டும்.

38. முன் சொன்ன உரிய காலத்தில் முன் போல் ரத்ன நியாஸத்தை செய்யவேண்டும், ஸ்வர்ணமயமான மூர்த்திக்கு ரத்னநியாஸம் இங்கு கூறப்படவில்லை.

39. பிம்ப பீடத்தில் தங்க தாமரையை வைத்து கண் திறப்பதை செய்ய வேண்டும். பாத்ரத்திலுள்ள தேன், நெய் இவற்றுடன் தங்கத்தையும் சேர்த்து ஹ்ருதய மந்திரத்தால்

40. மறைந்த திரைகளினால் தங்க நகத்தால் கண் திறப்பதை செய்து பிம்ப சுத்தியை முன் போல் செய்து கிராம பிரதிக்ஷிணத்தை செய்யவேண்டும்.

41. சுற்றிலும் இந்திராதி எட்டு கும்பங்களோடு சேர்ந்த ஜலத்தில் சண்டேசரை அதிவாஸம் செய்ய வேண்டும். அந்த ஆலயத்தில் முன்போ அதன் பக்கங்களிலோ யாக மண்டபத்தை அமைக்க வேண்டும்.

42. ஆசார்யர் தெற்கு மேற்கு, கிழக்குகளில் அர்த்த சந்திரவடிவான குண்டங்களை அமைக்கவும். ஒன்பது, ஐந்து, ஒன்று என்ற எண்ணிக்கையில் வட்டமாகவோ நான்கோண குண்டங்களாகவோ அமைக்க வேண்டும்.

43. முன் சொன்ன நியமங்களுடன் மண்டபத்தை அமைத்து சிற்பியை திருப்தி செய்து அனுப்பி விட்டு இடத்தில் சைவர்களுக்கும் பக்தர்களுக்கும் போஜனத்தை செய்ய வேண்டும்.

44. பின் புண்யாஹப்ரோக்ஷணம் செய்து, வாஸ்து ஹோமத்தையும் செய்யவேண்டும், ஜலத்திலிருந்து சண்டேசரை எடுத்து முன்போல் ஸ்நபனம் செய்ய வேண்டும்.

45. ரக்ஷõபந்தனத்தை செய்து ஆத்ம நியாஸங்களைச் செய்து சயனம் செய்யவேண்டும், மேடையில் மயில் தோகை முதலியவைகளாலோ

46. சுத்தமான ஐந்து பட்டுகளாலோ ஹ்ருதய மந்திரத்தால் சயனம் செய்யவேண்டும். இரு வஸ்திரங்களால் சுற்றி கும்பஸ்தாபனத்தைச் செய்ய வேண்டும்.

47. சண்டேசருடைய சிரோ தேசத்தில் நூல், கூர்ச்சம் பட்டு வஸ்த்ரம், மாந்தளிர் இவற்றுடன் தங்கடங்கமுள்ள நீருடைய கும்பத்தை ஸ்தாபிக்க வேண்டும்.

48. அவ்வாறே வெளியில் சுற்றிலும் எட்டு கும்பங்களை ஸ்தாபிக்க சண்டேசர் தேவியுடன் சேர்ந்தவராகில் வடக்கில் வர்த்தினியை பூஜிக்க வேண்டும்.

49. ஸ்தாபிக்கப்பட்ட கும்பத்தில் ஆஸநம், வித்யா தேகத்துடன் சண்டேசரை முன் சொன்ன தியான முறைப்படி ஆவாஹித்து சந்தனம் முதலியவற்றால் உபசரித்து

50. ஆசார்யன், ஹ்ருதய, சிரஸ், சிகா, கவச, நேத்ர, அஸ்த்ர மந்திரங்களை வெளியில் சுற்றிலும் ஈசானம் முதல் வடக்கு வரை பூஜிக்க வேண்டும்.

51. லோக பாலர்களையோ சண்டிகேஸ்வர அஷ்ட மூர்த்திகளாயோ சந்தனம், புஷ்பங்களால் பூஜித்து, தத்வதத்வேஸ்வர, மூர்த்தி மூர்த்தீஸ்வரர்களை பூஜிக்கவும்.

52. ஆத்ம வித்யா, சிவ தத்வங்களையும் பிரம்மா முதலியவரை அதன் அதிபர்களுடனும் க்ஷ்மா மூர்த்திகள் அதன் ஈசர்களையும் லோக பாலர்களையும் பூஜிக்க

53. முன் சொன்ன மூர்த்திகளையோ அல்லது ருத்ர பக்தர் முதலானவர்களையோ சண்ட ஆஸந மூர்த்தி மூலத்துடன் பிரும்மாங்க ஸஹிதமாய் பூஜிக்க

54. ஆசார்யர், ரித்விக்குகளுடன் ஹோமத்திற்கான குண்டத்தை அடைக. குண்டத்தையும் அக்னியையும் ஸம்ஸ்கரித்து திக்குகளில் தத்புருஷம் முதலான மூலமந்த்ரங்களையும்

55. தென்கிழக்கு முதலான கோண குண்டங்களில் ஹ்ருதயாதி மந்திரங்களையும் ப்ரும்மாங்கங்களுடன் பிரதானத்தில் சண்டேசரையும் பூஜித்து சமித்து, நெய், அன்னம், எள் முதலியவற்றால் ஹோமம் செய்யவேண்டும்.

56. நெல், பொறி, ஸத்துமா, யவைகளுடன் புரசு, அத்தி, ஆல், இச்சி சமித்துக்களை கிழக்கு முதலான திசைகளிலும் பிரதானத்தில் புரசையும்

57. வன்னி, கருங்காலி, மயில் கொந்றை, பில்வ சமித்துக்களை தென் கிழக்கு முதலிய திசை குண்டங்களிலும் தத்வம், மூர்த்தி மூர்த்தீசர்களை முறைப்படி தனியாக ஹோமம் செய்ய வேண்டும்.

58. சாந்தி கும்ப ஜலத்தை பிரோக்ஷித்து அந்தந்த மந்திரங்களின் ஜபகார்யத்தை தர்பையைத் தொடுவதின் மூலம் ஒவ்வொரு பாகத்திலும் செய்யவேண்டும்.

59. பிறகு விடியற்காலையில் ஆசார்யர் ரித்ரிஜர்களுடன் சுத்தராய் சண்டபிம்பத்தை எழுப்பி கும்பத்தையும் அக்னியையும் பூஜிக்க

60. ஆசார்யர், பிராயச்சித்தத்தின் பொருட்டு பூர்ணாஹுதியை செய்து அவர்களை வஸ்திரம், தங்க மோதிரங்களால் பூஜிக்கப்பட்டு தட்சிணையை அடைந்தவராய்

61. தட்சிணையானது ஐந்து நிஷ்கம் என்பது அதமமாகும். அதன் இருமடங்கு மத்யமம் ஆகும். அதன் மும்மடங்கு உத்தமமாகும். மற்றவர்களுக்கு முன்போல் செய்ய வேண்டும்.

62. பிரம்ம சிலைகளின் பிரதிஷ்டை விஷயத்தில் ஆசார்யன் முன் போல் நல்ல முகூர்த்தத்தில் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்து, மந்திரங்களால் பூஜிக்க

63. ஆசார்யன் சண்டேசருக்கு முன்னால் ஸ்தண்டிலத்தில் உள்ள கும்பங்களிலிருந்து கும்ப ஜலத்தை சண்டேசருக்கு அபிஷேகம் செய்யவேண்டும்.

64. ஸ்நபனம், அதிகமான மஹா நைவேத்யங்களையும் உற்சவர் எனில் உத்ஸவத்தையும் தேவியுடனோவெனில் தேவியின் பிரதிஷ்டையையும் செய்ய வேண்டும்.

65. இந்த சண்டேச்வர பிரதிஷ்டையை பாலஸ்தாபனத்துடனோ, இல்லாமலோ செய்யலாம். இவ்வாறான சண்டேசஸ்தாபனத்தை எந்த மனிதர் செய்கிறாரோ அவர்

66. ஆயுளை விரும்பியவர்கள், பூர்ண ஆயுளையும், தனத்தை விரும்பியவர் ஐஸ்வர்யங்களையும், வித்யையை விரும்பியவர்கள் குறைவிலா வித்யையையும் புத்ரனை விரும்பியவர் புத்திரனையும் அடைவர்.

67. செல்வத்தை வேண்டியவர் செல்வத்தையும் இன்பம் வேண்டுவோர் உயர்ந்த ஸ்தீரீகளையும் அடைவர் சண்டேசரை வணங்கியவருக்கு பிறவித் துன்பம் இல்லை.

68. இவ்வாறான சண்டேச ஸ்தாபனத்தில் பின் அவர் பூஜை கூறப்படுகிறது. முன் போல் ஸ்நபனம் முதலியவற்றைச் செய்து ஸகளீகரணம் செய்து

69. சண்டேசரை ஹ்ருதயத்தால் தியானித்து, சாமான்யர்க்யத்தை செய்து, ஹா என்ற சந்தனாதிகளாலோ விருப்பம் போலோ, த்வார பாலகர், த்வார பூஜை செய்து, த்வார நடுவில் அஸ்த்ரத்தால் பூஜித்து

70. ஆலயத்தினுள், பிரவேசித்து, பூதசுத்தி செய்து ஸகளீகரணம் செய்த தேஹராய் சண்டேசரை ஹ்ருதயத்தில் பூஜித்து

71. அஸ்த்ர பிராகாராதி, திக் பந்தனங்களினால், ஸ்தான சுத்தியை செய்து, ஸம்ஹிதா மந்திரங்களினால் பாத்யம், அர்க்யம், ஆசமனம் கொடுத்து

72. விசேஷார்க்யம் மட்டும் செய்து, அந்த அர்க்யத்தாலோ, த்ரவ்யத்தை ஹ்ருதய மந்திரத்தால் புரோக்ஷித்து ஹ்ருதயத்தில் மந்திர சக்தியின் பொருட்டு மந்திரங்களைக் கூறி சுத்தி செய்யவேண்டும்.

73. முன் போல் பூஜித்து, சண்டேசாநாய வித்ம ஹே எனச் சொல்லி டங்க ஹஸ்தாய தீமஹி என்ற பதத்தையும் பின்

74. தன்னஸ்ச்சண்ட என்ற பதத்தையும் பின் பிரசோதயாத் என்ற பதத்தையும் கூறி ஸாமான்யர்க்யத்தைக் கொடுத்து நிர்மால்யத்தை ஜலத்தில் விட வேண்டும் (சண்டேசாநாய வித்மஹேடங்கஹஸ்தாய தீமஹி தன்ன ஸ்சண்ட: பிரசோதாயத்)

75. சண்டரை அஸ்த்ர மந்திரத்தாலும் சாமான்யர்க்க ஜலத்தாலும் சோதித்து, ஆஸநம், மூர்த்தி, மூலத்தால் பூஜித்து, ஈசானாதி மந்திரங்களாலும் பூஜித்து

76. ஹ்ருதயாதிகளையும் அங்கங்கு பூஜித்து மூலத்தால் சண்டேசரை பிந்துவிலிருந்து ஆவாஹித்து ஸ்தாபித்து ஹ்ருதய மந்திரத்தால் ஸன்னிரோதனம் செய்து

77. ஹ்ருதயாதி மந்திரங்களை நியாஸம் செய்து, அங்கங்களையும் ஒன்றிய பாவனையாக செய்து, பாத்யம், ஆசமனம், அர்க்யம், ஹ்ருதய மந்திரத்தால் கொடுத்து

78. தைலாபிஷேகம் முதலியவைகளாலும் பஞ்ச கவ்யம், பஞ்சாம்ருதங்களாலும் அபிஷேகம் செய்து வஸ்த்ரம், சந்தனம், புஷ்பங்களால் சண்டேசரை சக்திக்கேற்ப அலங்கரித்து

79. அர்ச்சநாங்க முறைப்படி தூப, தீபங்களை ஹ்ருதய மந்திரத்தால் கொடுக்க ஹ்ருதயாதிகளையும், ருத்ரபக்தர்களையும், திக் பாலர்களுடன் அஸ்த்ரங்களையும்

80. சண்டநாதரைச் சுற்றியுள்ளதாக, ஆவரணமாக பூஜித்து அர்க்யம் முதலான உபசாரங்களையும் கொடுத்து நைவேத்யமும் தாம்பூலமும் கொடுத்து

81. பராங்கமாக இருப்பின் சிவ நிவேதனத்தையும் நிவேதிக்க. ஜபம் செய்து ஸமர்பிக்க. பரிவாரங்களுக்கு பலியையும் கொடுக்க.

82. விமர்சையாக செய்யுமிடத்தில் புரசு, நெய், அன்னங்களால், ஹோமம் செய்து மூலத்தின் தசாம்சத்தில் அங்க மந்திரங்களினால் ஹோமம் செய்து

83. நித்யோத்ஸவத்தில் சண்டேசருக்கு தனி உத்ஸவம் செய்ய வேண்டும். சண்டேச அஸ்திரத்தால் புஷ்பம், அன்னம், அக்ஷதை லிங்கங்களைப் பூஜிக்க

84. காலை, மதியம், இரவுகளிலோ, சண்டே சரின்றியோ, பாதுகா ஆராதனத்துடன் ஆலயத்தை நோக்கி நுழைய வேண்டும்.

85. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு காலங்களிலும் விருப்பமான காலங்களிலும் சண்டேசரை ஒவ்வொரு நாளும் முறையுடன் பூஜிக்க வேண்டும்.

86. சண்டநாதரின் பராங்க பூஜை முறையின் விசேஷம் இங்கு கூறப்படுகிறது. முதலில் நிர்மால்ய பூஜையையும் பீடம் முதலானவைகளில் ஹ்ருதய மந்திரங்களினால்

87. சண்டேசருக்கு என்று எது தீர்மானித்ததோ, சிவனுக்கு நிவேதிக்கப்பட்டதோ அந்த நைவேத்யம் முதலியவைகளை பூஜையின் முடிவில் சண்டேசருக்கு நிவேதிக்க வேண்டும்.

88. மூலாலயம் சென்று, சுத்த ஜலம், சந்தனம் புஷ்ப மாலைகளால் பூஜித்து அந்த பூஜிக்கப்பட்ட நிர்மால்யத்தை சண்டேசருக்கு நிவேதிக்க வேண்டும்.

89. ஆத்மார்த்த பூஜையிலும் பரார்த்த பூஜையிலும், சாமான்யமாக இம்மாதிரி சொல்லப்படுகிறது. நித்யம் இம்மாதிரி அனுசரிப்பது போக மோக்ஷத்தைக் கொடுப்பதாயுள்ளது.

90. ஆயுள், ஞாபக சக்தி, ஆரோக்யம், சவுபாக்யம் குறைவிலாச் செல்வம் மற்றவைகளும் சண்டருடைய அர்ச்சனையினால் அடையப்படுகின்றது.

91. இஷ்ட ஸித்தியின் பொருட்டு சண்டேசருக்கு ஸ்நபனம், ஹோமம் செய்ய வேண்டும். முன்பு போல் ஸ்நபனம் அமைத்து மத்திய கும்பத்தில் சண்டேசரையும்

92. தேவியுடன் எனில் வர்த்தனியில் தேவியுடன் பூஜிக்க வேண்டும். அஷ்ட மூர்த்திகளை கிழக்கு முதலான திக்குகளிலும் பஞ்ச பிரம்மத்துடன் பூஜிக்க

93. ருத்ர பக்தர்கள், எட்டு பேரை நவகலசாபிஷேகத்திலும், இந்திராதிகள், வஜ்ராதிகளை வெளியில் இருபத்து ஐந்து கலசத்திலும்

94. ஐம்பது கலசங்களில் வெளியில் சண்டேச அஸ்த்ரத்தை மட்டுமோ நூறு கலச ஸ்னபனத்தில் வெளியில் ஹ்ருதயம் மந்திரம் மாத்திரமோ பூஜிக்க

95. உத்ஸவம், தமனாரோஹனம், பவித்ரோத்ஸவங்களைச் செய்யவும். தீபாவளி, வஸந்தோத்ஸவம், தனுர்மாத பூஜை, முதலிய மாஸோத்ஸவத்தையும் செய்ய வேண்டும்.

96. நவ நைவேத்யம் என்ற பூஜையும், ஜீர்ணோத்தாரணத்தையும், பிராயச்சித்தத்தையும், செய்ய வேண்டும். மேலும், உத்ஸவத்தின் கொடியில் டங்கத்தையோ (மழு), வ்ருஷபம், மாத்திரமோ எழுத வேண்டும்.

97. சிவோத்ஸவத்திலும் சண்ட நாதருக்கு உத்ஸவத்தை இங்கு செய்ய வேண்டும். த்வஜ, ஹோம, பலியுடனோ இல்லாமல் வெறும் வீதி வலம் மட்டுமோ செய்ய வேண்டும்.

98. சண்டாஸ்த்ரத்தில் மழு போல் செய்து, அதில் சண்டிகேஸ்வரரின் பிம்பத்தை அமைக்கவும். பிரதிஷ்டை, உத்ஸவம் முதலிய கார்யங்களில் எது கூறப்படவில்லையோ அவை எல்லாவற்றையும் முன் போல் அமைப்புடன் சண்டிகேஸ்வர மந்திரத்துடன் கூடியதாக செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிகாம மஹாதந்திரத்தில் சண்டேச பிரதிஷ்டா விதியாகிற அறுபத்தி ஐந்தாவது படலமாகும்.
படலம் 64: குஹனின் ஸ்தாபனம்

64வது படலத்தில் குஹனின் ஸ்தாபனம் கூறப்படுகிறது. முதலில் இலக்கண அமைப்பு மூலம் குஹனின் ஸ்தாபனத்தை கூறுகிறேன் என்று பிரதிக்ஞை செய்யப்படுகிறது. பிறகு நகரங்களில் சிவாலயம் மலை முதலிய உயரமான பிரதேசங்கள் இவைகளில் குமரனுக்கு ஆலயம் அமைப்பது தகுந்தது என கூறி அந்த ஆலயத்தை அமைக்கும் முறை கூறப்படுகிறது. அதில் திக்தேவதைகளை அமைக்கும் விஷயத்தில் பல வகைகள் கூறப்படுகின்றன. குமரன் கிழக்கு மேற்கு தெற்கு வடக்கு முகமாகவோ பரிவரா தேவதைகளுடன் கூடியதாகவோ இருக்கலாம் என கூறப்படுகிறது. பிறகு பரிவார தேவர்கள் நிரூபிக்கப்படுகின்றன. அதில் முதலாவதாக யக்ஷன், இந்திரன் முதலிய எட்டு பெயர்களின் பெயரை குறிப்பிட்டு அவர்களின் லக்ஷணமும் கூறப்படுகிறது. இவர்கள் கிழக்கு முதல் ஈசான திக்வரை பரிவாரமாக ஸ்தாபிக்க படுபவர்களாக ஆகிறார்கள். பிறகு சகுனி முதலான எட்டு பெண் தேவதைகளின் பெயரும் கூறப்படுகின்றன. பிறகு ஷண்முகர் முதலான எட்டு பெயர்களை கூறி அவர்களின் லக்ஷணம் நிரூபணம் செய்து, அவர்கள் குஹனின் மூர்த்தீஸ்வரர்கள் என கூறப்படுகிறது. இவர்களை கிழக்கு முதலான திசைகளில் சுற்றிலும் ஸ்தாபிக்கலாம் என கூறப்படுகிறது. அல்லது இந்திரன் முதலிய எட்டு திக்பாலகர்களை மூர்த்தீஸ்வரர்களுக்காக எட்டு பீடமாகவோ ஸ்தாபிக்கலாம் என கூறப்படுகிறது. பிறகு வினாயகர், பைரவர், சூர்யன், மஹாபீடம், பலிபீடம் இவைகளையும் குஹாலயத்தில் ஸ்தாபிக்கவும். ஈஸ்வரனுக்கு சொல்லப்பட்ட பரிவாரங்களையோ ஸ்தாபிக்கலாம் என்று வேறுவிதமாக கூறப்படுகிறது. பலி பீடங்களில் இந்திராதிகளையும், மத்தியில் நவக்கிரஹாதிகளையும் பூஜிக்கவும் என கூறப்படுகிறது. பிறகு, ஜயன், விஜயன், என்ற இரண்டு துவார பாலகர்களின் லக்ஷணம் கூறப்படுகிறது.

ஈசான பாகத்தில் சாகல்யன் என்ற பெயர் உடைய ஸ்கந்த சண்டரை ஸ்தாபித்து அந்த சண்டரின் லக்ஷணம் நன்கு கூறப்படுகிறது. பிறகு கருங்கல் முதலியதான திரவ்யங்களால் பிரதிமாலக்ஷணத்தில் கூறி உள்ளபடி கர்பக்கிரஹ அளவாலோ வாசல்படி அளவாலோ, தூண்களின் அளவாலோ, ஸ்கந்தரை அமைக்கவும் பிறகு அந்த ஸ்கந்தர், 5 விதமாக இருப்பதாகவும் அவர்களின் லக்ஷணமும் கூறப்படுகிறது. பின்பு இரண்டு கை, இரண்டு கண், வலது கையில் தாமரை புஷ்பம், தொங்குகின்ற இடது கை பால ரூபன். இப்பேற்பட்டஸ்கந்தரை கிராமம் அபிவிருத்தி அடைவதற்கு ஸ்தாபிக்கவும் என்று முதலாவதான ஸ்கந்தர் நிரூபிக்கிறார். பின்பு இரண்டுகை, சிகை பூணல், தண்டத்தை தரித்த வலக்கை இருப்பில் வைத்து கொண்ட இடதுகை கவுபீனம் தரித்தவர் ஞானத்தை கொடுக்கக் கூடிய வருமான ஸ்கந்தர் மலைகள், வனங்கள் இவைகளில் ஸ்தாபிக்கப்படுபவர் என்று இரண்டாவது ஸ்கந்தர் விளக்கப்படுகிறது. பிறகு நான்கு கைமுக்கண், ஜபமாலை, சக்தி ஆயுதம், வரதம், அபயம் இவைகளுடன் கூடிய நான்கு கைகளும் இரண்டு சக்தியோடு கூடியதாகவோ அல்லது ஒரு சக்தியோடு கூடியதாகவோ நகரங்களில் பிரதிஷ்டை செய்ய கூறப்படுகிறார். இங்குகஜா, கஜவல்லி, என்று சக்தியின் பெயர் கூறப்பட்டு அவைகளின் அமைப்புமுறை கூறப்படுகிறது. பிறகு ஆறுமுகம், ஆறுகை, 12கண், ஆறு கழுத்து அல்லது ஒரு கழுத்து ஆறுதலையுடன் கூடியதாகவும், சக்தி, அபயம், கத்தி, அக்ஷமாலை கோழி, கேடயம், ஆகிய ஆறு ஆயுதங்களுடன் கூடியவரும், அரசாங்கம் அபிவிருத்தி அடைவதற்கு பிரதிஷ்டை, செய்வதற்கு தகுந்தவர் என்று நான்காவது ஸ்கந்தர் நிரூபிக்கப்படுகிறது. பிறகு சிவப்பு வஸ்திரம் தரித்தவரும், இளஞ்சந்திரனை போல் பிரகாசம் உடையவரும் கரண்டமகுடம் உடையவரும், முக்கண் உடையவரும், வலது கைகளில் சக்தியாயுதம் உலக்கை, கத்தி, சக்ரம், பாசம், அபயம் இவைகளும் இடதுகையில் வஜ்ரம் வில், கேடயம், மயில், கொடி, அங்குசம், வரதம், இவைகளை தரித்தவரும் யக்ஞோபவீதம் அணிந்தவரும், மயில்மேல் அமர்ந்தவரும், இரண்டு சக்தியோடு கூடியவருமான 5வது ஸ்கந்தர் கிராமம் முதலிய இடங்களில் பிரதிஷ்டை செய்ய தகுந்தவர் என வர்ணிக்கப்படுகிறது.

இவ்வாறாக 5வித ஸ்கந்தமூர்த்தியின் அமைப்பு நிரூபிக்கப்படுகிறது. ஸ்கந்தனுடைய மூலமந்திரம் அதில் பிரம்ம, மந்திர, அங்கமந்திர, கல்பனமுறை, ஸ்கந்தகாயத்திரி மந்திரம், கஜவல்லி, கஜவல்லியின் மந்திரம், விளக்கப்படுகின்றன. பிறகு பிரதிஷ்டாவிதி கூறப்படுகிறது. பிறகு முதலில் முன்பு கூறப்பட்ட நல்ல காலத்தில் அங்குரார்பணம் செய்து குகபிம்பத்தில் பஞ்சரத்தின நியாசம் செய்யவும். தேவிக்கு தங்க தாமரையையோ சேர்க்கவும் என ரத்னநியாச விதி கூறப்படுகிறது. பிறகு நயனோன்மீலன விதி மந்திரத்துடன் கூடியதாக நிரூபிக்கப்படுகிறது. அங்கு ஸ்கந்தர் அம்பாளுடன் கூடியதாக இருந்தால் தேவிக்கும் தனியாக நயனோன்மீலனம் செய்யவும் என கூறப்படுகிறது. பின்பு முன்புபோல் பிம்பசுத்தி செய்து கிராமபிரதட்சிணம் செய்து ஜலத்தில் ஸ்கந்தரை லம்பகூர்ச்சத்துடன் அதிவாசம் செய்யவும் பிம்பத்தை சுற்றிலும் இந்திரன் முதலான எட்டுக்கலசங்களை ஸ்தாபிக்கவும் என்று ஜலாதிவாசம் வரையிலான கிரியைகள் நிரூபிக்கப்படுகின்றன. பிறகு யாக மண்டபவிதி கூறப்படுகிறது. அந்த மண்டபத்தில் சில்பியை திருப்தி செய்வித்து பிராம்மண போஜனம் செய்வித்து பசுஞ்சாணம் மெழுகி புண்யாகவாசனம், வாஸ்து பூஜை, வாஸ்துஹோமம் செய்து அங்கு ஸ்தண்டிலம் அமைத்து, அதில் தோல் முதலியவைகளோ, அல்லது வஸ்திரத்தினாலோ சயனம் அமைக்கவும். பிறகு ஜலாதிவாசத்தில் இருந்து ஸ்கந்தரை ஸ்நபன மண்டபத்திற்கு அழைத்து ஸ்நானம் செய்வித்து சந்தனம், புஷ்பங்களால் பூஜைசெய்து ரக்ஷõபந்தனம் செய்வித்து ஸ்கந்தரை கிழக்கில் தலைவைத்ததாக சயனாதி வாசம் செய்விக்கவும். பிறகு வஸ்திரங்களால் மூடி சந்தனாதிகளால் முறைப்படி பூஜிக்கவும் என்று சயனாதிவாசமுறை விளக்கப்படுகிறது. பிறகு கும்பாதிவாச விதி விளக்கப்படுகிறது. பிறகு ஸ்கந்தரின் சிரோதேசத்தில் வஸ்திரம், முதலியவைகளுடன் கூடியதான கும்பத்தை வைத்து ஸ்கந்தரை பூஜிக்கவும். ஸ்கந்தர் தேவியுடன் கூடியதாக இருந்தால் தனியாக வர்தனி அமைத்து அதில் தேவியை பூஜிக்கவும். சுற்றிலும் எட்டு கடங்களைஸ்தாபித்து அதில் குகவித்யேஸ்வரர்களை பூஜிக்கவும். பிறகு தத்வதத்வேஸ்வரர், மூர்த்திமூர்த்தீஸ்வரர் பூஜிக்கும் முறை கூறப்படுகிறது. அதில், க்க்ஷமா முதலியவர்கள் மூர்த்திகள் லோகபாலர்கள் மூர்த்தீஸ்வரர்கள் ஆகும் அல்லது முன்பு கூறப்பட்ட ஷண்முகர்முதலானவர்களையோ மூர்த்தீஸ்வரர்களாக பாவிக்கவும் என்று மூர்த்திமூர்த்தீஸ்வரர்களின் லக்ஷணம் கூறப்படுகிறது. இவ்வாறு கும்ப அதிவாச முறை நிரூபிக்கப்படுகிறது.

பிறகு ஆசார்யன் மூர்த்திபர்களுடன் கூடி ஹோமம் செய்யவும் என கூறி ஹோமமுறையும் ஹோமத்தின் திரவ்யலக்ஷணம் மந்திர லக்ஷணம் கூறப்படுகின்றன. ஹோமகாலத்தில் கிழக்கு முதலான நான்கு திக்கில் வேதபாராயணம் ஆக்னேயம் முதலிய நான்கு விதிக்குகளில் அஸ்திரமந்திர மந்திரஜபம் செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு காலையில் சுத்தி செய்து கொண்டு மூர்த்திபர்களுடன் கூடி தேவ கும்ப அக்னி இவர்களை பூஜித்து பிராயச்சித்த ஹோமம் செய்து பூர்ணாஹுதி கொடுத்து ஆலயம் நுழைந்து நல்லமுகூர்த்த லக்னத்தில் ரத்தினங்கள் தான்யங்கள் இவைகளுடன் கூடின பிரம்மசிலை ஸ்தாபித்து அதற்குமேல் மூலமந்திரத்தை உச்சரித்துக்கொண்டு அந்தபீடத்தின் மேல் ஷண்முகரை ஸ்தாபிக்கவும் வாசல்படியை நோக்கி ஸ்வாமிக்கு முன்பாக கும்பத்தை ஸ்தாபித்து மந்திரன்நியாசம் செய்து பூஜிக்கவும் எனகூறி மந்திரன் நியாசவிதி நிரூபிக்கப்படுகிறது. பிறகு அம்பாள் இருந்தால் அம்பாளுக்கும் வர்தனிபீஜத்தை எடுத்து அம்பாளுடன் சேர்க்கவும் என கூறப்படுகிறது. பிறகு கும்பதீர்த்தங்களால் ஸ்கந்தரை அபிஷேகம் செய்யவும் என்று கும்பாபிஷேக விதி கூறப்படுகிறது. பிறகு பிரதிஷ்டைக்குபிறகு முடிவில் ஸ்நபனமும் நைவேத்யமும் செய்யவும். சலபிம்பவிஷயத்தில் உத்ஸவம் செய்யவும். ஆசார்யனையும், மூர்திபர்களையும் வஸ்திரம் முதலியவைகளால் பூஜித்து அவர்களுக்கு தட்சிணை கொடுத்து பூஜிக்கவும் என கூறப்படுகிறது. இவ்வாறு பிரதிஷ்டாவிதி நிரூபிக்கப்படுகிறது. பிரதிஷ்டை செய்வித்தவனுக்கு பலன்கள் நிரூபணம் செய்யப்படுகின்றன. பிறகு நித்யார்ச்சனா விதி கூறப்படுகிறது. இங்கு நித்ய அனுஷ்டானத்தை முடித்த ஆசார்யன் ஆலயம் நுழைந்து துவாரதேவதை துவார பாலகர் இவர்களை பூஜித்து பூதசுத்தி, அந்தர்யாகம், ஸ்தானசுத்தி, திரவ்ய சுத்தி, மந்திர சுத்தி, பிம்பசுத்தி ஆகிய இந்த கிரியைகள் நிரூபிக்கப்படுகின்றன.

பிறகு ஆசன பூஜை மூர்த்திகல்பனம் செய்வது ஆவாஹனம் முதலிய சம்ஸ்காரம் செய்வது அபிஷேகம் செய்வது சந்தன, புஷ்ப, தூப, தீப, நைவேத்ய, உபசாரங்கள் இவைகள் வர்ணிக்கப்படுகின்றன. பிறகு ஆவரண பூஜையும் நிரூபிக்கப்படுகின்றன. இங்கு கர்பாவரண, மூர்த்திபாவரண (லோகபாலாவரணி) திக்பாலாவரண ஆயுதாவரணமாகிய நான்கு ஆவரணத்தை பூஜிக்கவேண்டும் என கூறப்படுகிறது. மூன்று இரண்டு அல்லது ஒரு ஆவரணத்துடன் கூடியதாக ஸ்கந்தனை பூஜிக்க வேண்டும் என விசேஷமாக கூறப்படுகிறது. பிறகு ஆவரண பூஜை செய்தவுடன் தூப, தீப, நைவேத்ய, ஜபங்கள் செய்யவேண்டியமுறை கூறப்படுகிறது. பிறகு நித்யாக்னிகார்யம் கூறப்படுகிறது. பிறகு நாட்யமுறையும் கூறப்படுகிறது. இவ்வாறு நித்யார்ச்சனை செய்யும் முறை சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு உத்ஸவம் செய்யும் முறையும் கூறப்படுகிறது. அங்கு ஒரு தினம் முதற்கொண்டு 9தினம் வரையிலான உத்ஸவமும் ஸம்வத்சரோத்ஸவமும் செய்யவேண்டும் என்று விவரிக்கப்படுகிறது. கொடியில் மயிலை வரைந்து த்வஜாரோஹணம் செய்யவேண்டும் என கூறப்படுகிறது. அங்குரார்பணம், பேரீதாடனம் த்வஜாரோகணம் முதற் கொண்டதான உத்ஸவமோ செய்யவேண்டும் என கூறப்படுகிறது. சகுனி, முதலான எட்டு ஸ்திரி தேவதைகளின் பெயர்களும் நிரூபிக்கப்படுகிறது. பிறகு அவ்வாறே சேனாபதி முதலிய 6 குமரனின் பெயரும் கூறப்படுகிறது. சகுனி முதலான குமாரன் வரை உள்ள தேவர்கள் உத்ஸவ தினங்களுக்கு அதிபர்களாக கூறப்படுகிறது. உத்ஸவத்தில் வஜ்ரரூபமான அஸ்திர தேவரை அமைக்கவும் என கூறி அஸ்திரதேவரின் அமைப்பு முறை விளக்கமாக கூறப்படுகிறது. இவ்வாறு 64வது படல கருத்து சுருக்கமாகும்.

1. குஹனுடைய லக்ஷணங்களுடன் கூட குஹஸ்தாபனத்தைச் சொல்கிறேன். நகரம் முதலானவற்றின் மத்தியிலோ தென்கிழக்கு தெற்கு அல்லது இவைகளின் மத்தியிலோ

2. தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு இவைகளிலோ இவற்றின் மத்தியிலோ சிவாலயத்திலோ

3. மற்ற தேவாலயங்களிலோ அல்லது மலை உச்சியிலோ மலையின் பக்கத்திலோ, நதி, நந்தவனங்களிலோ

4. அரச மாளிகையிலோ, புண்ய÷க்ஷத்ரங்களிலோ, வீடுகளிலோ, பிரகார மண்டபங்களிலோ புண்ய வ்ருக்ஷங்களிலோ

5. குமாரருடைய ஆலயத்தை விருப்பப்படி ஆலய லக்ஷணத்துடன் கூடியதாக அமைக்க வேண்டும். ஒருமுழம் முதல் 33 முழம் வரை பரப்பளவு உள்ளதாக அமைக்கலாம்.

6. த்விஜர்களே, முப்பத்தி மூன்று முழத்திற்கு மேற்பட்ட அளவு கூறப்படவில்லை. அந்த குஹாலய விமானம் ஸ்கந்த ரூபமுடையதாகவோ தனியாகவோ

7. சிவன், உமாதேவி, கணபதி இவர்களுடன் கூடியதாகவோ அன்ன பறவை அமைப்பு போன்றோ எண் கோண அமைப்பு போன்றோ, தனிப்பட்ட அமைப்பு போன்றோ முருகனின் ஆலயம் அமைக்க வேண்டும்.

8. ஒரே பூமியில் ஒன்று முதல் ஏழுதல அளவு வரை இஷ்டமான தள அளவுடன் கூடியதாகவும், சிவனுக்கு கூறப்பட்டபடி கர்ப்பக்ருஹம் ஆத்யேஷ்டிகா முதலியவற்றுடன் கூடியதாகவும்

9. அவ்வாறே மூர்த்ன்யேஷ்டகா ஸ்தூபி ஸ்தாபனம் இவைகளுடன் கூடியதாகவும் விமானத்தில் திக்குகளில் ஸ்தாபிக்கப்பட்ட தேவர்களுடனும் மத்ய கும்பமான ஸ்தூபியுடன் கூடியதாகவோ

10. முன் சொன்னபடி ஆலயஸ்தாபன முறைப்படி கூடியதாகவும், முன் சொன்னபடி பிரகாரம், மண்டபங்களோடு கூடியதாக அமைக்க வேண்டும்.

11. கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு முகங்களாகவோ பரிவார தேவதைகளுடன் கூடியதாக இருக்க வேண்டுமென கூறப்படுகிறது. சந்தர்ப்பமாக அவைகள் கூறப்படுகிறது.

12. ய÷க்ஷந்திரர், ராக்ஷஸேந்திரர், பிசாசேந்தரர், பூதராஜன், கந்தர்வன், கின்னரர், அசுர நாயகர், அரக்கர் தலைவன் இவர்களை

13. கிழக்கு முதலான திசைகளிலிருந்து ஈசான திசைவரை ஸ்தாபிக்க வேண்டும். இவர்கள் நான்கு கைகளில் வரதம், அபயம், கத்தி, கேடயம் இவைகளுடன் கூடியவராகவோ

14. அல்லது கத்தி, கேடயத்துடன் கூடிய இருகைகளுடன் கூடினவர்களாக, மை போன்ற கருத்த நிறமுடையவர்களாகவும் அமைக்கவும். இவர்களை பயங்கர உருவமாகவோ, அமைதியான (சாந்த) உருவமாகவோ முடிந்த கேசத்தை உடையவராகவோ அமைக்க வேண்டும்.

15. சகுனி, ரேவதி, பூதநா, அர்த்தபூதநா இவர்களையும், வக்ரமண்டீ, சகாரீ, நிசாந்தா, மேஷதேவதா இவர்கள் சக்திகள்

16. ஷண்முகர், சக்திபாணி, கார்த்திகேயர், குஹன், ஸ்கந்தன், மயூரவாஹனர், ஸேநாநீ சக்தி ஹஸ்தர்

17. இவர்கள் குஹனின் மூர்த்தீசராவார்கள். அவர்கள் அஞ்சலிஹஸ்தம், வஜ்ராயுதம், பத்மம் தரித்தவர்களாகவும், ஸ்கந்தரின் பீஜத்தை உடையவராயும்

18. நான்கு கைகள் அல்லது இரண்டு கைகளை உடையவராகவோ ஆறுமுகம் அல்லது ஒருமுகம் உடையவராகவோ, இவர்களை கிழக்கு முதலான திக்குகளில் வரிசைப்படி ஸ்தாபிக்க வேண்டியவர்கள் ஆவர்.

19. இந்திராதிகளாகவோ அல்லது எட்டு பீடவடிவங்களாகவோ வைக்கவும். மூலவருக்கு முன், மயிலையோ, யானையையோ வைக்கவும். கணபதி, ÷க்ஷத்ரபாலர், சூர்யன் இவர்களையும் மஹா பீடத்தையும் அமைக்க வேண்டும்.

20. பலிபீடத்தையும் ஈச்வரரின் பரிவாரங்களையுமோ, பலிபீடதளங்களில் இந்திரன் முதலானவர்களையும் நடுவில் கிழக்கு முதலான (ஒன்பது) திசைகளில் ஒன்பது கிரஹங்களையும் பூஜிக்க வேண்டும்.

21. வாசற்படியின் இடது வலதுபுறத்தில் வாயிற் காவலர்களை ஸ்தாபிக்க வேண்டும். முறைப்படி அவர்கள் நீலம், சிவப்பு நிறமுடனும் இரண்டு அல்லது நான்கு கைகளுடையவர்களாகவோ

22. கத்தி, கேடயம் தரித்தவராயும், ஊசியை வைத்திருக்கும் முத்ரையையும், (எச்சரிக்கை செய்யும் முத்ரையையும்) ஆச்சர்ய முத்ரைகளையுடையவராயும், கருப்பு, சிவப்பு அல்லது வெண்மை, கரும்பச்சை, நிறமுடையவராகவோ கோரரூபத்துடனுமோ

23. ஜயன், விஜயன் என்ற பெயருடையவராய் விகாரமான முகங்களை உடையவராயும் அமைக்கவும். ஈசானத்தில் ஸ்கந்த சண்டரை நான்கு கைகளுடையவராக ஸ்தாபிக்க

24. அபயம், வஜ்ரம், பத்மம், வரதம் தரித்தவராகவோ அல்லது இருகையையுடையவராகவோ சாகல்யன் என்ற பெயரை உடைய உருவ அமைப்பாகவோ அல்லது அதற்கான பீட அமைப்பாகவோ அமைக்கலாம்.

25. உத்தம பிராம்ஹணர்களே, ஸ்கந்த அமைப்பு முறையை சுருக்கமாக கேளுங்கள். கற்சிலை முதலானவைகளால் பிம்பம் (உருவம்) அமைக்கும் முறைப்படி செய்ய வேண்டும்.

26. குஹப்பெருமானின் விக்ரஹ லக்ஷணத்தில் கூறப்பட்ட அளவு விச்வம் என்ற அமைப்பை உடையதாகவே, 14 முழம் என்ற அமைப்பை உடையதாகவோ, கர்ப்ப கிருஹம், வாயில் தூண்களுடன் கூடியதாக அமைக்கலாம்.

27. இரண்டு கைகள், இரண்டு கண்கள் உடையவராய் வலது கையில் தாமரையை தரித்தவராயும் இடது கை தொங்கிய நிலையிலும் அழகிய தோற்ற முள்ளவர் சுப்ரமண்யர் ஆவார்.

28. கிராம அபிவிருத்தியின் பொருட்டு குழந்தை வடிவமாக பிரதிஷ்டை செய்யலாம். இரண்டு கைகள், பூணூல், குடுமியையுடையவராயும், மூன்று ஒட்டியானம் போல் மூன்று மடிப்பையுடையவராயும்

29. கவுபீனம் தண்டம் தரித்தவராய் வலது கையில் தண்டமும், இடது கையை இடுப்பில் வைத்தவராயும், ஞானத்தை அளிப்பவரான ஸ்கந்தர் மலைகளிலும் வனங்களிலும் பிரதிஷ்டை செய்யத்தக்கவர்.

30. நான்கு கைகள், மூன்று கண்கள் உடையவராய் காதுகளில் ஓலைத்தோடு அல்லது மகர குண்டலம் தரித்தவராயோ, அக்ஷமாலை, சக்தியை (ஆயுதம்) தரித்த இருகைகளையுடையவராய்

31. வரதம், அபயத்துடன், இருசக்திகளுடனோ ஒரு சக்தியுடன் கூடியவராகவோ, சக்தியான தேவி இல்லாமலோ இருப்பார். அந்த தேவியின் லக்ஷணம் கூறப்படுகிறது.

32. இரண்டு கண்கள், இரண்டு கைகளுடன் சாந்த வடிவமாய், தாமரையையும் நீலோத்பவத்தையுமுடைய இருகரமுடையவராய், சியாமம், சிவப்பு நிறமுடையவராய் வலது, இடது பக்கங்களில் இருப்பவராய்

33. கவுரியின் லக்ஷணத்துடன் கூட தேவியை அமைக்கவும். அழகிய முகத்துடன் அழகு வடிவான இவர்களை கஜா என்று கஜவல்லீ எனப் பெயருடையவர்கள்

34. இம்மாதிரி லக்ஷணத்துடன் கூடியவர்கள் பட்டிணத்திலோ நகரங்களிலோ ஸ்தாபிக்க வேண்டியவர்கள். ஆறுமுகமூர்த்தி, ஆறு கைகள், பன்னிரெண்டு காது, பன்னிரெண்டு கண்களுடன் கூடியவராய்

35. ஆறு கழுத்துடனோ, ஒரே கழுத்துடனோ ஆறு தலைகளுடனோ உடையவர் ஆவார். அவர், சக்தியாயுதம், அபயம், கத்தி, அக்ஷமாலை, சேவல்

36. கேடயம் உடையவராய் தலைநகரத்தின் அபிவிருத்தியின் பொருட்டு ஸ்தாபிக்கவும். சிவப்பு பட்டுடுத்தியவராய் இளம்பிறைச் சந்திரனுக்கொப்பான காந்தியை உடையவராய்

37. கரண்ட மகுடமுடையவராய் மூன்று கண்களுடன் கூடியவராய் சக்தியாயுதம், உலக்கை, கத்தி, சக்ரம், பாசம், அபயம் இவைகளை வலப்பக்கத்தில் தரித்தவராய்

38. வஜ்ரம், வில், கேடயம், மயில்கொடி, அங்குசம், வரதம் இவைகளை இடப்பக்கத்தில் தரித்தவராய்

39. பூணூல் அணிந்தவராய், மயில் மேல் இருப்பவராய், இருதேவியருடன் கூடியவருமான இவர் கிராமங்களிலும், ஆலயப் பிரகாரம் முதலானவற்றிலும் ஸித்தியின் பொருட்டு ஸ்தாபிக்கத்தக்கவர்.

40. இம்மாதிரி ஐந்து விதமாக ஸ்கந்தரின் ஸ்தான பேதங்கள் கூறப்பட்டது. த்வாபரயுகத்திலும் மற்ற யுகங்களிலும் எல்லா இடங்களிலும் பிரதிஷ்டிப்பது ஏற்புடையது.

41. இவ்வாறு அமைத்து அவரது மந்திரங்களால் பிரதிஷ்டையை ஆரம்பித்து செய்யவும். ஸ வர்க்கத்தின் மூன்றாவது எழுத்தான ஸ என்ற எழுத்துடன் ஆறாவது உயிரெழுத்துடன் கூட ஊ (ஸூ)

42. பதினான்காவது எழுத்தான அவு என்ற எழுத்துடன் புள்ளி ஒலியையும் சேர்த்து (ஸூ,சவு) ஸூப்ரமண்யரின் நான்காவது சப்தத்தையும் நம: என்பதையும் முடிவாகவும் முதலில் பிரணவத்தையும் உடையது ஸ்கந்த மூலம் ஓ, ஸூ, சவு ஸுப்ரஹ்மண்யாய நம: (ஓ, ஸூம், சவும், ஸுப்ரமண்யாய நம:)

43. இவ்வாறு மூலமந்திரம் கூறப்படுகிறது. அதில் பிரம்மாங்க மந்திரங்களுடன் ஸ கார முடிவான ஸ காரத்துடன் நீண்ட, குறைந்த ஒளியுடன் மந்திரங்களுக்கேற்றவாறு நம: என்பதை கடைசியாகவும்

44. ஈசாநம், முதலான பதங்களோடு கூட பிரம்ம, அங்க மந்திரங்களையும் கூற வேண்டும். மகாஸேனாய என்ற பதத்துடன் வித்மஹே என்ற பதத்தையும்.

45. ஷடானனாய என்பதையும் சேர்த்து தீமஹி என்ற பதத்தையும் பிறகு தந்ந: ஸ்கந்த: என்ற பதத்துடன் முடிவில் பிரசோத்யாத் என முடிவில் பிரசோதயாத் என்று (மஹாஸேனாய வித்மஹே ஷடானனாய தீமஹி தந்ந: ஸ்கந்த : ப்ரசோதயாத்)

46. இவ்வாறு காயத்ரீ பீஜமாகும். இதை தீப முன்னால் கூறவேண்டும். (பிரகாசமாக அறியவும்) இதயத்திலிருந்து உண்டான மூலமந்திரம், மூர்த்தி மந்திரம், வித்யாதேஹ மந்திரங்களையும் கூற வேண்டும்.

47. கஜா, கஜவல்லி இவர்களின் மந்திரத்தை இவ்வாறே கூற வேண்டும். பிறகு பிரதிஷ்டையை செய்ய வேண்டும். முன்போல் அங்குரார்பணம் செய்ய வேண்டும்.

48. முன்சொல்லப்பட்ட சுபமுஹூர்த்த காலத்தில் ஐந்து வகை ரத்னங்களை நியாஸம் செய்யவேண்டும். தேவிகளுக்கு ஹ்ருதய மந்திரங்களினால் ஐந்து தங்க தாமரைகளாலோ

49. பத்மத்தை நியாஸம் செய்து நயனோன்மீலனத்தை செய்யவும். தேன், நெய் இவற்றை தங்க (ஊசி)த்துடன் பாத்திரத்தில் ஸ்தாபிக்க.

50. ஹ்ருதய மந்திரத்தை கூறி தங்க நகத்தினால் நியாஸம் செய்து, தான்யம், பசு, பிராம்மணர், தர்சனத்தை செய்யவும். திரைசீலையுடன் எல்லா மக்கள் தர்சனத்தையும் ஆசார்யன் செய்யவேண்டும்.

51. ஸ்கந்தர் தேவியுடன் கூடியவராகில் தேவிக்கும் தனியாக நயோன்மீலனம், தர்சனமிவைகளை செய்விக்கவும். ஸ்கந்தகுருவுக்கு முன்போல் பிம்ப சுத்தி செய்து கிராம பிரதட்சிணம் செய்யவேண்டும்.

52. லம்ப கூர்ச்சத்துடன் கூடிய ஸ்கந்தகுரு ஹ்ருதய மந்திரத்தினால் ஜலாதி வாஸத்தைச் செய்யவேண்டும். சுற்றிலும் இந்திராதி கலசங்களை ஸ்தாபிக்க வேண்டும்.

53. (ஆலயம்) கோயிலின் நான்கு திக்குகளிலோ அல்லது அக்னி, ஈசானதிக்கிலோ மண்டபம் அமைத்து ஒன்பது, ஐந்து, ஒன்று என்ற எண்ணிக்கையில் பத்ம குண்டங்களை அமைக்க வேண்டும்.

54. கிழக்கு, வடக்கு, ஈசான திக்கிலோ ஸ்நாந வேதிகை அமைக்கவும், சிற்பியை திருப்தி செய்து அந்தணர்களுக்கு உணவளித்து பசுஞ்சாணத்தால் மெழுகிட்டு

55. புண்யாஹப்ரோக்ஷணம் செய்து வாஸ்து ஹோமம் செய்து ஸ்தண்டிலத்தில் தோல்களாலோ பட்டுகளாலோ சயனம் அமைத்து

56. ஜலத்திலிருந்து அந்த ஸ்கந்தரை எழுப்பி முன்போல் ஸ்நபனத்தைச் செய்து சந்தனம் புஷ்பங்களால் அர்ச்சித்து ஹ்ருதய மந்திரத்தால் ரக்ஷõபந்தனம் செய்யவேண்டும்.

57. கிழக்கு சிரஸாக ஸ்கந்த மூர்த்தியை சயனத்திலேற்றி படுக்க வைக்க வேண்டும். ஆஸநம், மூர்த்திகளுடன் வஸ்த்திரங்களால் அலங்கரித்து பூஜிக்க வேண்டும்.

58. அந்த மூர்த்தியின் மூலமந்திரங்களுடன் அங்க மந்திரங்களுடன் குஹனை சந்தனாதிகளால் பூஜிக்கவும். தலைபாகத்தில் நூல் சுற்றப்பட்டு வஸ்த்ரங்களுடன் கூடிய கும்பத்தை

59. வைத்து அதில் விக்ரஹம் எவ்வாறோ அவ்வாறு ஸ்கந்தரை பூஜிக்கவும். தேவியுடன் கூடியவராகில் தனியாக வர்த்தனீயை ஸ்தாபித்து தேவியை பூஜிக்க வேண்டும்.

60. சுற்றிலும் எட்டு கும்பங்களை வைத்து அவற்றில் குஹனின் வித்யேச்வரர்களைப் பூஜிக்கவும். எல்லா கும்பங்களும் நூல், வஸ்த்ரம், ஸ்வர்ணங்களுடனிருப்பது ஏற்புடையது.

61. ஆத்ம, வித்யா, சிவங்களான தத்வத் ரயத்தை முழங்கால், கழுத்து, தலை முதலிய இடங்களில் பூஜித்து மூர்த்தீச்வரர்களையும் பூஜிக்க வேண்டும்.

62. குஹனுக்கு க்ஷ்மா முதலானவர்கள் மூர்த்திகள், லோகபாலர்கள் மூர்த்தீச்வரர்களாகும். முன்பு கூறப்பட்டபடி ஈசனாதிகளையோ, பூஜித்து ஹோமத்தை செய்ய வேண்டும்.

63. ஆசார்யன் ஆதிசைவ குலத்தில் தோன்றியவராய் ஸ்நாநம் செய்து, தலைப்பாகை பட்டு உத்தரீயம் இவற்றுடன் முன்பு போல் பஞ்சாங்க பூஷணம் தரித்தவராய் இருத்தல் வேண்டும்.

64. ஆசார்யன் மூர்த்தீபர்களுடன் குண்டஸம்ஸ்காரம், அக்னி ஸம்ஸ்காரம் செய்து பிரதான குண்டத்தில் ஸ்கந்தரை ஆவாஹித்து பிரம்ம மந்திரம், அங்க மந்திரம், நேத்ர மந்திரங்களுடன்

65. தத்வத்ரயம், அதன் அதிபர்களையும், மூர்த்தி, மூர்த்தீச்வரர்களுடன் பூஜித்து கஜை என்ற பெயர் கொண்ட வள்ளியையும் கஜவல்லி என்ற பெயர் கொண்ட தேவசேனாவும் இருக்குமாகில் பிரதான குண்டத்தில் அவர்களுக்கு ஹோமம், தர்ப்பணம் செய்ய வேண்டும்.

66. ஆசார்யர், ஆயிரமோ, ஐநூறோ, நூறோ மூலமந்திரங்களால் ஹோமம் செய்து அதன் பத்தில் ஒருபாகம் பிரம்ம, அங்க மந்திரங்களாலும், மூலமந்திரத்தில் பாதி அளவு மூர்த்தி மந்திரங்களையும் ஹோமம் செய்ய வேண்டும்.

67. ஆசார்யர், திக்கு, விதிக்களில் முறையே ஈசாநாதி, ஹ்ருதயாதி மந்திரங்களினாலும் திசைகளுக்குரிய மூர்த்தி மூர்த்தீச்வரர்களை சாந்தி குடத்துடன் ஹோமம் செய்து

68. சமித்து, நெய், அன்னம், தான்யம், எள், நெல், பொறி, அரிசி இவைகளையும் புரசு, அத்தி, அரசு, ஆல் முதலியவற்றை கிழக்கு முதலான திக்குகளிலும்

69. வன்னி, நாயுருவி, வில்வம், இச்சி முதலியவற்றை தென்கிழக்கு முதலான விதிக்குகளிலும் ஹோமம் செய்யவேண்டும். புரசு ப்ரதானத்திலும் (அல்லது) புரசை எல்லாவற்றிலுமோ ஹோமம் செய்யலாம்.

70. கிழக்கு முதலான நான்கு திக்குகளில் வேத பாராயணங்களையும் தென்கிழக்கு முதலான திசைகளில் அஸ்த்ர ஜபமும் செய்யவும். சாந்தி கும்ப ஜலத்தினால் பிரோக்ஷணம் செய்து அந்தந்த மந்திரங்களின் ஜபத்தை

71. தர்பையைத் தொடுவதினால் ஒவ்வொரு பாகமும் செய்யவும். பிறகு அதிகாலை மூர்த்திபர்களுடன் கூடி சுத்தனான ஆச்சார்யன்

72. சயனத்திலிருந்து ஷண்முகரை எழுப்பிய அதில் கும்ப, அக்னி மந்திரங்களை சேர்த்து பிராயச்சித்தமாக அகோர மந்திரத்தினால் நூற்று எட்டு ஆஹுதி செய்து

73. பூர்ணாஹுதி செய்து பிறகு ஆசார்யர் ஆலயத்தில் பிரவேசித்து முன் மண்டபத்தில் மானுஷ பதத்திலாவது தைவ பதத்திலாவது முன்போல் ஸம்ஸ்கரிக்பட்ட

74. பிரம்ம சிலையை ஹ்ருதய மந்திரத்தால் ரத்னம், தான்யம் உள்ளடங்கிய ஸ்தானமான பீடத்தில் வைத்து மூலமந்திரத்தை உச்சரித்து ஷண்முகரை ஸ்தாபிக்க வேண்டும்.

75. நல்ல லக்னம், சுபமுஹூர்த்தத்தில் வாயில் நோக்கியவராக பிரம்ம சிலையுடன் ஷண்முகரை ஸ்தாபிக்க வேண்டும்.

76. தெய்வத்திற்கு முன்னால் கும்பங்களை வைத்து மந்திரந்யாஸம் செய்ய வேண்டும். கும்பத்திலிருந்து பீஜத்தை எடுத்து ஷண்முகரின் ஹ்ருதயத்தில் சேர்க்க வேண்டும்.

77. தேவியோடு சேர்ந்து இருப்பின் வர்த்த னீ கும்பத்திலிருந்து பீஜத்தை எடுத்து தேவியின் ஹ்ருதயத்தில் சேர்க்கவும். மற்ற கும்பங்களின் பீஜத்தை பீடத்தை சுற்றிலும் சேர்க்க வேண்டும்.

78. அந்தந்த கும்பங்களின் ஜலத்தை அந்தந்த திசைகளில் அபிஷேகம் செய்யவேண்டும். ஆறுமுகருக்கு முன்போல் தத்வதத்வேச்வர, மூர்த்திமூர்த்தீஸ்வர நியாஸங்களை செய்யவேண்டும்.

79. இறுதியில் உற்சவ பேரத்தின், உற்சவத்திலும் ஸ்நபனத்தைச் செய்து மஹாஹவிர் நைவேத்யம் செய்து, குருவுக்கும் ரிக்விஜர்களுக்கும் வஸ்த்திரம் தட்சிணை முதலியவைகளுடன்

80. பொன் மோதிரங்கள் வழங்கி பிரதிமாஸ்தாபனத்தில் சொல்லியபடி பூஜிக்கவும். இங்கு எது சொல்லப்படவில்லையோ அதை பொதுவான பிரதிஷ்டையில் கூறியபடி செய்ய வேண்டும்.

81. பிராம்ஹண உத்தமர்களே, இவ்வாறு யார் ஷண்முக ஸ்தாபனத்தைச் செய்கிறார்களோ, அவர்கள் ஆயுளையும், புத்ரர்களையும் செல்வங்களையும், கல்வியையும், குற்றமில்லா உயர்ந்த மனைவியையும்

82. சவுபாக்யம், பெருஞ்செல்வம், நோயில்லாத்தன்மை, புகழ், சவுக்யம், சுபம் இவற்றை அடைந்து மேலும் மோக்ஷத்தையும் குஹப்ரதிஷ்டை செய்த மனிதன் அடைவான்.

83. விப்ரஸத்தமர்களே, அந்த ஷண்முகருடைய பூஜாமுறையை சுருக்கமாகக் கேளுங்கள். பிறகு காலையில் செய்ய வேண்டிய அவசியமான மல, மூத்திர விஸர்ஜனம் செய்து விதிப்படி ஸ்நானம் (குளியல்) செய்து

84. ஸந்தியாவந்தனம், உபஸ்தானம், மந்த்ரதர்ப்பணம் இவைகள் முன்போல் செய்யவேண்டும். நனைக்கப்பட்ட கை, கால்களை உடையவராய் ஆலயத்தில் நுழைந்து

85. ஆசமனம் செய்து ஸ்கந்த மந்திரத்தோடு ஈசானம், ஹ்ருதயம் முதலிய மந்திரங்களினால் சகளீகரணம் செய்து, அஸ்த்ரமந்திரத்தால் அர்க்யம் தயாரித்து எப்போதும் அந்த தண்ணீரால் (வாசற் படியை பிரோக்ஷித்து)

86. திவாரத்தை பிரோக்ஷணம் செய்து ஐயனையும், விஜயனையும் பூஜித்து ஸ்கந்த பெயரோடு ஹ என்று கீழ்ப்படியில் பூஜித்து உள்ளே புகுந்து நன்றாக அர்ச்சிக்க வேண்டும். ஹா என்று பூஜித்து உள்ளே நுழைந்து பூஜிக்க வேண்டும்.

87. வாஸ்து பிரம்மாவை பூஜித்து, வடக்கு முகமாய், மந்திரமய சரீரமாய், நல்ல ஆஸனத்தில் அமர்ந்து, தன் ஜீவனை (ஆத்மாவை) த்வாத சாந்தத்திலுள்ள குடிலா சக்தியிடம் காத்துக்க கொள்வதற்காக சேர்த்து மண் முதலானவைகளால் சம்பந்தப்பட்ட சரீர அமைப்புகளை சுத்தமாக்கி

88. க்ஷúப்த சக்தி அம்ருதத்தில் நனைக்கப்பட்டதன் பூத சரீரத்தை அஸ்த்ர மந்திரத்தினால் நன்கு சுத்திகரித்து கைகளில் சந்தனம் பூசி

89. ஈசான தத்புருஷ, அகோர, வாமதேவ, ஸத்யோஜாதிகளை கட்டை விரல் முதலாக நியஸித்து இரண்டு கைத்தலங்களில் வித்யாதேஹ நேத்ர மூலங்களுடனும் ஆவாஹித்து

90. சுண்டுவிரல் (முதல்) ஹ்ருதய, சிரஸ், சிகை, கவசம், அஸ்திர மூலமந் மந்திரங்களினால் நியாஸம் செய்து மறுபடியும் கரதலங்களில் மூலமந்திரத்துடன் நியஸித்து

91. அங்க நியாஸத்தையோ, மாலா மந்திரம், பிரம்ம மந்திரங்களுடனோ செய்து முப்பத்தியொரு கலாநியாஸம் மந்திர நியாஸத்துடனோ இல்லாமலோ முன்போல் செய்து

92. அர்க்ய ஜலத்தால் சரீரத்தை சுத்தி செய்து சரீரத்தை குஹ மூர்த்தியை போன்று பாவித்து நாபி குண்டத்தில் குஹனை ஆவாஹித்து ஹோமம் செய்து ஹ்ருதய மந்திரத்தினால்

93. மூலமந்திரத்தால் சரீரத்தை குஹமயமாக்கி குஹனைப் பூஜிக்கவும், அவகுண்டன திக்பந்தனங்களால் ஸ்தான சோதனமான (ஸ்தான சுத்தியை) செய்ய வேண்டும்.

94. விசேஷார்க்யத்தைச் செய்து சந்தனம், புஷ்பம் அக்ஷதைகளால் ஹ்ருதய மந்திரத்தாலோ அர்ச்சனாங்கத்தில் சொன்னபடி பூஜித்து பின், பாத்யம், ஆசமனம் இவைகளையோ

95. அர்க்யம் மாத்திரமோ செய்து அர்க்யத்தால் திரவியங்களின் பொருட்சேர்க்கையை பிரோக்ஷித்து ஹ்ருதய மந்திரத்தால் அபிமந்திரித்து நிறைவான சக்தியின் பொருட்டு மந்திரங்களை உச்சரித்து

96. நிர்மால்ய பூஜையை செய்து காயத்ரியினால் சிரஸில் அர்க்யத்தையும் கொடுத்து ஹ்ருதய மந்திரத்தினால் புஷ்பங்களை நிர்மால்யதாரியின் பொருட்டு கொடுக்க வேண்டும்.

97. நிர்மால்ய பூஜையை செய்து விட்டு பின் முன் சொன்ன வழியில் விக்ரஹ சுத்தியைச் செய்யவும் அல்லது வெளியில் நிர்மால்யத்தை விட்டு பேரசுத்தியை முன்சொன்னபடி செய்யவேண்டும். உலோக விக்ரஹமானால் ஒவ்வொரு பவுர்ணமி, அமாவாசை முதலான பர்வங்களில் அபிஷேகம் செய்யவேண்டும்.

98. சித்ரம் முதலியவைகளானால் கர்மார்ச்சைப்படி சுத்தி செய்வது ஏற்புடையது. இவ்வாறு பாவனையாக அர்ச்சனா விதிப்படி சுத்தி செய்வதால் சுத்தி ஆகிறது. தன் சரீரம், ஆத்மா, பூமி, திரவ்யம், மந்த்மரம், பிம்பம் இவைகளின் சுத்தி கூறப்பட்டது.

99. குஹனுக்கு பிரணவம் முதலானவர்களால் ஆஸநம் செய்து கல்பித்து பிரணவத்தின் நடுவில் தர்ம, அதர்மாதிகளை பூஜிக்கவும், மறுபடியும்

100. அதச்சதநம், ஊர்த்வச்சதம், பத்மகர்ணிகையின் முடிவில் குஹாஸநத்தைக் கற்பித்து ஆஸநம், மூர்த்தி இவைகளை ஆவாஹித்து ஹ்ருதயாதி மந்திரங்களால் அதில் அர்ச்சித்து

101. ஈசான முதலிய மந்திர நியாஸம் செய்து மாலாமந்திரங்கள் பஞ்சபிரும்ம, வர்ணநியாஸம் செய்து வித்யாதேஹத்தை கற்பித்து அந்த மூலமந்திரத்தால் ஷண்முகப் பெருமானை

102. இருதயத்துக்கு நேரே புஷ்பங்கள் நிரம்பிய கைகளால் ஆவாஹித்து அந்த பிந்துவிலிருந்து எடுத்து ஹ்ருதய மந்திரத்தால் அந்த பிம்பத்தில் ஸ்தாபனம் செய்ய வேண்டும்.

103. முதலில் நிஷ்டுர முத்ரையை ஹ்ருதய மந்திரத்தால் ஸன்னிதானம், அவகுண்டனமும் செய்து 1 ஆவாஹனம், 2 ஸ்தாபனம், 3 சன்னிதானம், 4 ஸந்நிரோதனம், 5 அவ குண்டனம், 6 திக்பந்தனம் இவ்வாறில் முன்பு 1 ஆவாஹனம் 2 ஸ்தாபனம் சொல்லப்பட்டன. இங்கு ஸந்நிதானம் ஸன்னி ரோகனம் அவகுண்டனம் சொல்லப்பட்டன. ஹ்ருதயம் முதல் நேத்ரம் முடிய மந்திரன்யாசத்தால் அவகுண்டனம் செய்ய வேண்டும்.

104. மஹாமுத்ரையையும், தேனு முத்ரையையும் மூலத்தால் செய்யவேண்டும். ஹ்ருதய மந்திரத்தால் பாத்யத்தை பாதத்திலும், ஆசமனத்தை முகத்திலும், சிரஸில் அர்க்யத்தையும்

105. நம ஸ்வாஹா ஸ்வதா வவுஷட் என குஹபேதமான பெயர்களின் முடிவில் சேர்ந்ததாக கொடுக்கவும். சந்தனம், புஷ்பம், தூபத்தையும் கொடுத்து பஞ்சாமிர்தங்களாலும்

106. விபூதி, மாவு, நெல்லிக்கனி இவற்றுடன் அபிஷேகித்து வஸ்த்ரத்தால் துடைத்து குஹனுடைய முகத்தில் ஆசமனத்தைக் கொடுத்து.

107. சந்தனம், அகில், பச்சை கற்பூரம், கோரைகிழங்கு முதலியவைகளால் முன் கூறிய அளவில் பொடி செய்து ஹ்ருதய மந்திரத்தால் குஹனுக்கு சாத்தி அல்லது சந்தனத்தை மட்டுமோ சாத்தி

108. காரகிலால் செய்யப்பட்ட தூபத்தை ஹ்ருதய மந்திரத்தால் கொடுக்கவேண்டும். கீழாநெல்லி, சந்தனம், சாம்பிராணித்தூளுடன் கூடியதாகவோ தூபம் கொடுக்க வேண்டும்.

109. கோரோசனை, கஸ்தூரி, புனுகு, ஜவ்வாது இவற்றையும் அன்றே மலர்ந்த வாசனையுள்ள பூக்களை முன் சொல்லியபடி அர்ப்பணம் செய்ய வேண்டும்.

110. ஹ்ருதய மந்திரத்தினால் எண்ணை முதலியவைகளினால் தயார் செய்த தீபங்களை கொடுக்கவும், மூலமந்திரத்தால் அபிமந்திரிக்கப்பட்ட ஹவிஸை (அன்னம்) கொடுத்தோ இல்லாமலோ செய்ய வேண்டும்.

111. மேற்கு வாயில் பூஜை முறையில் கூறப்பட்ட அளவே சந்தனம் முதலியவைகளின் அளவாகும். தூப தீபங்களை கொடுத்த பிறகு ஆவரண பூஜையை செய்ய வேண்டும்.

112. அக்னி, நிர்ருதி, வாயு, ஈசானம் முதலிய கிழக்கு திக்குகளில் ஹ்ருதயாதி மந்திர மூலங்களையும் வெளியில் வஸுக்களையும், மூர்த்திகளையும் அதற்கு வெளியில் இந்திராதி தேவதைகளையும்

113. பிறகு தசாயுதங்களையும் பூஜிக்கவும். மூன்று ஆவரணங்களாலோ அல்லது இரண்டு, ஒன்று ஆவரணங்களாலோ குஹனைப் பூஜித்து மறுபடியும் தூபதீபத்தைக் கொடுக்கவும்.

114. பாட்டு, மந்திரகீதங்களை இசைத்து ஜபத்தைச் செய்து ஸமர்பிக்கவும். நைவேத்யம், பலி, இவற்றை கொடுத்து குண்டத்தில் சிவாக்னியில் குஹனான முருகனை

115. ஆவாஹித்து, ஸாங்கம் பூஜித்து பூஜைக்கு அங்கமான உபசாரங்களால் பூஜித்து சருவிற்கு (ஸ்தாலீபாகம்) அக்னி எடுப்பது வரையிலாக பூஜித்து, புரசு, சமித்து, நெய்யுடன் மூலமந்திரத்தால் நூறு, ஐம்பது, இருபத்தைந்து
என்ற எண்ணிக்கையில்

116. ஹோமம் செய்யவேண்டும், அதன் பத்தில் ஓர் பங்கு என்ற எண்ணிக்கையில் ஷடங்க மந்திரங்களை ஹோமம் செய்யவேண்டும். பிறகு பூர்ணாஹுதியை நித்யோத் ஸவத்தைச் செய்ய வேண்டும்.

117. முன் சொன்னது போல் அதன் முடிவில் நாட்டியத்தை செய்யவும். ஒருநாள் முதல் ஒன்பது நாள் வரை வருடாந்திர உற்சவத்தையும் செய்ய வேண்டும்.

118. கொடியில் மயிலை எழுதி கொடி ஏற்றம் செய்யவும். அது முதல் மூன்று நாளிலோ இரண்டு நாளிலோ, அதே நாளிலோ

119. அங்குரார்ப்பண பூர்வமாகவோ, பேரீதாடன பூர்வமாகவோ, த்வஜாரோஹண பூர்வமாகவோ, ஆசார்யர் உத்ஸவத்தைச் செய்ய வேண்டும்.

120. சகுனீ, ரேவதீ, பூதநா, மண்ட பூதநா, வக்த்ரமண்டீ, நிசாந்தா, மேஷதேவதா இவர்கள் குஹனின் தேவதைகள்.

121. ஹே ப்ராம்மணர்களே சகாரீ முதலானவர்கள் சுப்ரமண்யரின் பணியாட்களாவர். ஆறு குமரர்களின் பெயர்களாவன

122. ஹேநாபதி, சுரேசர், ஹரஸூநு, ஸுராக்ரஜர், ஸூப்ரமண்யர், குமாரர் என ஆறு திருக்குமாரர்கள் ஆவர்.

123. குண்டம் ஆறு கோணமாகவோ, விருப்பமானதாகவோ, ஈசானத்திலோ, அக்னி திசையிலோ அமைக்கவும். புஷ்பத்திலோ, அரிசியிலோ வஜ்ரரூபமான அஸ்த்ரத்தை பூஜிக்க வேண்டும்.

124. இருகண்கள், இரு கைகளுடன் உக்ரரூபமாய் கோடி ஜ்வாலா கேசமுடையவராய் கூர்மையான வஜ்ரத்தை வலது கையில் தரித்தும் இடது கையில் மயிலையோ (படத்தையோ) வைத்திருப்பவர் குஹாஸ்த்ரர். சகுனீ முதல் குமாரர்கள் வரையானவர்கள் உத்ஸவ நாட்களுக்கு அதிபராக இருப்பது ஏற்புடையது.

இவ்வாறு உத்தரகாமிகத்தில் குஹ ஸ்தாபன விதியாகிற அறுபத்தி நான்காவது படலமாகும்.
படலம் 63: கங்காதர பிரதிஷ்டை

63வது படலத்தில் கங்காதர ஸ்வாமியின் பிரதிஷ்டை கூறப்படுகிறது. முதலில் அதை அமைக்கும் முறையும், பிரதிஷ்டை முறையும் கூறுகிறேன் என்பதாக உறுதி செய்யப்படுகிறது. பிறகு அந்த மூர்த்தி நான்கு கையும், மூன்று கண்ணும், ஜடாமகுடத்துடன், அலங்கரிக்கப் பட்டதாகவும் நின்ற கோலத்தை உடையதும் பிரசன்னமான முகத்தை உடையதாகவும் உள்ள தேவன் ஆவார் அவருடைய பார்ஸ்வஹஸ்த்தத்தில் மானும் மழுவும் முன்பக்க மாய் உள்ள வலதுகையில் அபயமும், இடதுகையில் கடக முத்திரையையும் கல்பிக்கவும். கடக முத்திரை உள்ள கையால், கங்கையுடன் கூடியதான ஒருஜடையை கையில் தரித்துக் கொண்டு நின்ற கோலத்தில் ஸ்வாமி இருக்கிறார் ஸ்வாமியின் (கூடிய) இடது பாகத்தில் லக்ஷணத்துடன் கூடிய தேவியை அமைக்கவும் வலதுபாகத்தில் இரண்டுகை, இரண்டு கண்கள், உடைவரும் ஹ்ருதய பூர்வமாக மஸ்தகத்தில் அஞ்சலியை உடையவராகவும் தொங்குகின்ற ஜடையை உடையவாரகவும் மரவுரியை தரித்தவராகவும் உள்ள பகீரதனை அமைக்கவும், இவ்வாறு அமைக்கப்பட்ட லக்ஷணங்களை உடையவர் கங்காதரர் ஆவர் என்று நூலால் கோடிட்டு காண்பிக்கும் முறைப்படி கங்காதர மூர்த்தியின் அமைப்பு கூறப்படுகிறது. பிறகு பிரதிஷ்டைமுறையும் கூறப்படுகிறது. பிறகு முன்பு கூறப்பட்டபடி நல்ல, காலத்தில் அங்குரார்பணம், நயனோன் மீலனம், ரத்னன் நியாஸம் முதலியவைகள் செய்யவும் என கூறி கங்கைக்கு ரத்னன்நியாஸம் செய்யவேண்டாம். பகீரதனுக்கு பஞ்சரத்னநியாசம் செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு பிம்பசுத்தி கிராம பிரதட்சிணம், ஜலாதிவாசம், செய்யவும் என்று கூறி அதன் செய்முறை விளக்கப்படுகிறது. பிறகு முன்பு கூறிய முறைப்படி யாகமண்டம் செய்து அங்கு குண்டம் அமைக்கவும் என வர்ணிக்கப்படுகிறது. பிறகு சில்பியை திருப்தி செய்து, பிராம்மண போஜனம், புண்யாக வாசனம், வாஸ்து ஹோமம் செய்து, மண்டபத்தில் ஸ்தண்டிலம் அமைத்து, சயனமும் அமைக்கவும். பிறகு ஜலாதி வாச மண்டபத்திலிருந்து ஸ்நபனம் ரக்ஷõபந்தனம் செய்து பூஜிக்கவும் என கூறி பகீரதன், கங்கை, தேவி, இவர்களுக்கு தனித்தனியாக ரக்ஷõபந்தனம் செய்யவும் என அறிவிக்கப்படுகிறது.

பிறகு பிம்பங்களுக்கு சயனாரோபணம் செய்யவும். பகீரதன், தனியான பீடத்தில் இருந்தால் அந்த பிம்பத்தை ஸ்வாமியின் பாத தேசத்தில் சயனம் செய்விக்கவும். இவ்வாறு சயானாதி வாசவிதி கூறப்படுகிறது. பிறகு கும்பங்களை அதிவாசம் செய்யும் முறை கூறப்படுகிறது. சிவனுடைய தலைபாகத்தில் சிவ கும்பம் வர்தனியையும் ஸ்தாபிக்கவும். பிறகு பகீரதனுக்கும், கங்கைக்கும், சிரோபாகத்தில் கடத்தை ஸ்தாபிக்கவும், கும்பத்தை சுற்றி அஷ்டவித்யேஸ்வர கும்பங்களை ஸ்தாபிக்கவும் முன்பு கூறிய உருவத்யான முறைப்படி ஆசார்யன் சந்தனம், புஷ்பம் இவைகளால் முறைப்படி அர்ச்சிக்கவும். தத்வ தத்வேஸ்வரர், மூர்த்திமூர்த்தீஸ்வரர், நியாசம் செய்யவும். பகீரதனுக்கு பகாரம் முதலியதான பஞ்ச மூர்த்தி மூர்த்தீச்வரர் நியாசம் சத்யோ ஜாதாதி மந்திரங்களால் செய்யவும் என கூறி பகீரதனின் மூல மந்திரமும் ஹருதயாதி ஷடங்கமூல மந்திரமும் கூறப்படுகின்றன. கங்கைக்கும் அதற்கு கூறப்பட்டுள்ள முறைப்படி, தத்வதத்வேஸ்வரர், மூர்த்திமூர்த்திஸ்வர நியாசம் செய்யவும் என கூறி கும்பத்தை அதிவாசம் செய்யும் முறை கூறப்படுகிறது. குண்ட அக்கினி ஸம்ஸ்காரம் செய்து ஹோமம் செய்யவும் என கூறி ஹோமத்தின் திரவ்ய நிரூபண முறையாக ஹோமம் செய்யும் முறை விளக்கப்படுகிறது. பிறகு ஆசார்யன் முதலானவர்களுக்கு தட்சிணை கொடுக்க வேண்டும். அந்தந்த ஸ்வாமிகளுக்கு முன்பாக கும்பத்தை வைத்து மந்திரம் நியாசம் செய்யவும் என கூறி மந்திரன் நியாசம் விளக்கப்படுகிறது. இங்கு கங்கைக்கும், பகீரதனுக்கும், மந்திரன் நியாச முறை நிரூபிக்கப்படுகிறது. தேவியானவள் ஒரே ஆசனத்துடன் கூடி இருந்தால் தனிமையாகவே பிரதிஷ்டை செய்யவும் என கூறப்படுகிறது. அந்தந்த கும்பஜலங்களால் அந்தந்த மூர்த்திக்கு அபிஷேகம் செய்யவேண்டும் என கும்பாபிஷேக விதி கூறப்படுகிறது. பிறகு கல்யாண உத்ஸவம் செய்யவும். கல்யாண உத்ஸவம் முடிவில் ஸ்நபனமும் உத்ஸவமும் செய்யவும். அதிகமாக நைவேத்யம் செய்வது யஜமானனின் விருப்பப்படி செய்யவும் என கூறப்படுகிறது. முடிவில் யார் இந்த கங்காதார் பிரதிஷ்டையை பக்தியோடு செய்கிறானோ அவன் தன்னுடைய பந்து ஜனங்களுடன் கூடி சவுக்யமாக இருந்து தன்னுடைய சரீரம் பிரியும் பொழுது சிவஸ்தானத்தை அடைகிறான் என்று பலஸ்ருதி கூறுகிறது. இவ்வாறு 63 வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. கங்காதர பிரதிஷ்டையை அதன் அமைப்பு முறையுடன் கூடியதாக சொல்கிறேன். நான்கு கைகள், மூன்று கண்களுடன் ஜடையுடன் கூடிய மகுடத்தை தரித்தவராய்

2. வலது கை அபயமாகவும், இடது கை கடக முத்ரையுடன் கூடியதாகவும், அந்த கடக கையினால் ஜடையுடன் கூடிய கங்கையை தரித்தவராய்

3. அழகு நிறைந்து இருக்கின்றவராய் பெண் மான் மழுவுவோடு கூடியனவராய் இருப்பார் ஜடையோடு சேர்ந்த உயர்ந்த கையானது காதின் உயரத்திற்கு சமமாக இருக்க வேண்டும்.

4. பிறகு ஜடையின் நடுவில் வளைந்த வடிவுடன் இருமுகம் கொண்ட கங்கையுடன் நின்ற கோலத்தில் அமைக்கவும். அந்த பிம்பத் தலைப்பாகை மூக்கிற்கு நேராகவும் வலது பாத நடுவிலுமாக

5. ஹ்ருதயத்திற்கு, இடப்பாகத்திலும், தொப்பூழ், வயிறு பிரதேசத்தின் வலது பக்கத்திலும் சூத்திரமிடவும், இடுப்பு பாக சூத்ரத்திலிருந்து நான்கு மாத்திரை அளவும் வலது முழங்காலிலிருந்து மூன்றங்குலம் ஆகும்.

6. இரண்டு கால் கட்டை விரல்களின் இடைவெளி பதினைந்து அங்குலமாகும். இரண்டு குதிகால்களின் இடைவெளி ஐந்து அங்குலமும் ஆகும். இடது காலில் முக அமைப்பு சூத்திரத்திலிருந்து இடது பாகத்தில் மூன்றங்குலமாகும்.

7. ஹே முனிபுங்கவர்களே, மற்ற சூத்திர அமைப்புகளை சந்திர சேகரரைப் போன்றதாகவும் சுவாமிக்கு இடது பாகத்தில் தேவியையும் அமைப்புடன் கூடியதாக அமைக்க வேண்டும்.

8. பகீதரனை சுவாமியின் தொப்பூழ் வரை அளவுள்ள சரீரத்தை உடையவராகவோ அல்லது சுவாமியின் மார்பு அல்லது கழுத்து வரை தாலப்ரமாணம் உள்ளவராகவும் தொங்குகின்ற ஜடையை உடையவராகவும்

9. மரவுரியை தரித்தவராயும் இரண்டு கைகளை இதயம் அல்லது மஸ்தகத்தில் தொழுத வண்ணமாயும், இரண்டுகைகள் இரண்டு கண்களுடன் கூடியவராயுமான பகீதரனுடன் கங்காதரர் இருக்கட்டும்.

10. சுபமான காலத்தில் அங்குரார்ப்பணம், ரத்னநியாஸம், நயனோன்மீலனம் செய்யவேண்டும். கங்கைக்கு ரத்னந்யாஸமின்றி நயனோன்மீலனம் செய்ய வேண்டும்.

11. பகீதரனுக்கு ஐந்து ரத்னத்தால் செய்யப்பட்ட ரத்ன நியாஸத்துடன் பிம்ப சுத்தி, கிராம பிரதட்சிணம்

12. ஜலாதிவாசம், யாகம் செய்ய தகுதியான மண்டபங்கள் யாவும் முன் சொல்லியபடி அமைத்து (நாற்கோண) குண்டங்களை ஒன்பது, ஐந்து, ஒன்று என்றும் கணக்கில் அமைத்து

13. கண் திறந்த பிறகு சிற்பியை அனுப்பி விட்டு அந்தணர்களுக்கு உணவளித்து பிறகு புண்யாக வாசனம், பிரோக்ஷணத்தையும், வாஸ்த்து ஹோமத்தையும் செய்ய வேண்டும்.

14. ஸ்தண்டிலத்தில் பிம்பத்தை சயனம் செய்வித்து பின் ஆசார்யன் பகீரதனுக்கும் கங்கைக்கும், சுவாமிக்கும் ரக்ஷõபந்தனம் செய்ய வேண்டும்.

15. பகீதரன் தனியாக பீடத்துடன் இருப்பின் சுவாமியின் பாதபிரதேசத்தில் அதை சயனம் செய்வித்தல் வேண்டும்.

16. ஸ்வாமிக்கு தலை பாகத்தில் வஸ்த்ரம் முதலியவைகளால் அலங்கரிக்கப்பட்ட கும்பத்தையும், வர்த்தனீயையும், பகீதரனின் தலைபாகத்தில் பகீதரனின் கும்பத்தையும் வைத்து

17. ஸ்வர்ண பங்கஜங்களாலோ கங்கா கும்பத்தையும் அலங்கரிக்க வேண்டும். சுற்றி எட்டு குடங்களை வைத்து வித்யேச்வரர்களையும் ஸ்தாபிக்க வேண்டும்.

18. ஆசார்யன், முன் சொல்லியபடி ரூபதியானங்களுடன் எல்லா தேவதைகளையும் சந்தனம், புஷ்பம் முதலியவைகளால் முறைப்படி பூஜிக்க வேண்டும்.

19. பரமேஸ்வரனுக்கு முன் போல் தத்வ தத்வேஸ்வர பூஜையும், பகீதரனுக்கு ஐந்து மூர்த்தீசர்களையும் பூஜிக்க வேண்டும்.

20. முன் சொல்லியபடி ஐந்து மூர்த்திகளையோ பூஜிக்க, மூர்த்தீச்வரர்களையோ நான்காவது (ப) பகாரத்திடனோடு கூடிய சத்யோஜாதம் முதலியவைகளையோ பூஜிக்க வேண்டும்.

21. மூன்றாவது பகார எழுத்தின் முடிவான (ப) நான்காவது பகாரத்தினுடன் பதினான்காம் எழுத்தான அவு ஆறாவது எழுத்தான ஊ உடன் புள்ளியுடன் சேர்த்து பவும் பகீரத என்ற வார்த்தையை நான்காம் வேற்றுமை உடையதாக கூறுவது மூல மந்திரமாகும்.

22. பகீதரனுடைய பீனாக்ஷரத்தினாலேயே ஹ்ருதயம் முதலான அங்கங்களுக்கு மந்திரங்களைக் கூற வேண்டும். கங்கைக்கு அதன் பூஜை முறையின் கூறியுள்ளபடி பூஜிக்க வேண்டும்.

23. குண்டங்களில் அக்னி கார்யங்களை முறையாகவும் சமித்து, நெய், அன்னம், பொறி முதலான பொருட்களால் ஹோமம் செய்யவும். வஸ்த்ரம் தங்க மோதிரம் முதலியவைகளால்

24. தட்சிணையையும் ஆசார்யர்களுக்கு கொடுத்து பின் மந்த்ர நியாஸம் செய்து தேவருக்கு முன்னால் கலசங்களை வைத்து குருவானவர் பூஜிக்க வேண்டும்.

25. சிவ கும்பத்திலிருந்து பீஜங்களை சுவாமியின் ஹ்ருதயத்தில் சேர்க்க வேண்டும். வர்த்தினீ கும்ப மூலத்தை பீடத்தில் சேர்க்க வேண்டும்.

26. மற்றுமுள்ள கும்ப பீஜங்களை பீட பத்மங்களில் சுற்றிலும் சேர்க்கவும். கங்கையின் மூலத்தை கங்கையின் ஹ்ருதயத்தில் சேர்க்க வேண்டும்.

27. பகீரதனுடைய கடத்தினுள் இருக்கும் பீஜத்தை பகீரதனுடைய ஹ்ருதயத்தில் சேர்த்து அந்த கும்ப ஜலத்தை அந்தந்த மூர்த்திகளுக்கும் அபிஷேகிக்க வேண்டும்.

28. சுவாமி பீடத்துடன் தேவீ இருக்குமெனில் வர்த்தினீ கும்பத்தை தேவியின் ஹ்ருதயத்தில் சேர்க்கவும். தனி பீடத்துடன் கூடிய தேவியாகில் பிரதிஷ்டையை தனியாக செய்ய வேண்டும்.

29. இறுதியில் கல்யாணத்தையும் செய்யவும், பின் ஸ்நபனம், உத்ஸவம், செய்ய வேண்டும். கர்தாவின் விருப்பம்போல் மிகுந்த நைவேத்யத்தையும் செய்ய வேண்டும்.

30. இங்கு கூறப்படாததை சாமான்ய ஸ்தாபனத்தில் கூறியபடி செய்யவும். ஈஸ்வரன் பகீரதனுடன் சேர்ந்தோ இல்லாமலோ இருப்பார்.

31. இவ்வாறு கங்காதரப் பிரதிஷ்டையை எந்த மனிதர் செய்கிறாரோ அவர் இப்பூவுலகில் ஸகல சுகமும், அடைந்து தன் பந்து ஜனங்களுடன்

32. அடைய முடியாத சிவபதத்தை தன் சரீர இறுதியில் அடைவார்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் கங்கா பிரதிஷ்டை விதியாகிற அறுபத்தி மூன்றாவது படலமாகும்.
படலம் 62: விருஷபாரூட பிரதிஷ்டை

62வது படலத்தில் விருஷபாரூடபிரதிஷ்டை செய்யும் முறை கூறப்படுகிறது. முதலில் இலக்கண முறைப்படி விருஷபாரூட பிரதிஷ்டையை கூறுகிறேன் என்பது கட்டளை. பிறகு நூல் இடும் முறைப்படி விரூஷபா ரூடமூர்த்தியின் லக்ஷணம் கூறப்படுகிறது. அவர் நான்குபுஜம் முக்கண் ஜடாமகுடம் சமமாக வளைந்ததாக சரீரம் உடையவராகவும் ஆவர் அவரின் வேறான கைகளின் வலப்பாகம் இடப்பாகம் முறையாக மானும் மழுவும் ஆகும். முன்பாக உள்ள வலக்கையில் வளைந்த தண்டத்தையும், கடக முத்திரையுடன் கூடிதாகவும் இடதுகையின் முழங்கை பாகம் விருஷப மஸ்தகத்தில் வைத்துள்ளதாகவும் பாவிக்கவும். அந்த இடது ஹஸ்தமானது. அன்னபட்சி என்ற முத்திரை உள்ளதாகவோ அதோமுக பதாக முத்திரை உள்ளதாகவோ இருக்கவேண்டும் என கூறப்படுகிறது. ஸ்வாமியின் வலதுபாகத்தில் தேவியை லக்ஷணத்துடன் கூடியதாக அமைக்க வேண்டும். தேவியுடன், கூடிய தேவராகவோ அல்லது தனிமையான தேவனாகவும் அமைக்கலாம் என கூறப்படுகிறது. தேவனுடைய பின் பாகத்தில் விருஷபத்தை அமைக்கவும். இவ்வாறு கற்சிலை முதலிய திரவ்யங்களால் தேவனை வடிவமைத்து ஸ்தாபனம் செய்யவும் என கூறப்படுகிறது. அந்த ஸ்தாபனம் செய்யும் முறை கூறப்படுகிறது. இங்கு முன்பு செய்யப்பட்ட நல்ல காலத்தில் அங்குரரர் பணம் செய்து ரத்னன் நியாசம் நயனோன் மீலனம், செய்யவும் என கூறப்படுகிறது. இந்த சமயத்தில் விருஷபத்திற்கும் நயனோன் மீலனம் செய்யவும் என அறிவிக்கிறார். பிறகு பிம்பசுத்தி கிராமபிரதட்சிணம், ஜலாதி வாசம் செய்யவும் என்று ஜலாதிவாசம் முடிவு வரையிலான கிரியைகள் கூறப்படுகின்றன. பின்பு முன்பு கூறப்பட்டுள்ளபடி மண்டபம், குண்டம் பூசைகள், கூறப்படுகிறது. பிறகு சில்பியை திருப்தி செய்து வைத்து பிராம்மண போஜனம், புண்யாஹ பிரோக்ஷணம் செய்து மண்டபத்தில் ஸ்தண்டிலம் கல்பித்து சயனம் அமைக்கவும் என கூறப்படுகிறது. ஜலாதி வாசத்தில் இருந்து எடுத்த பிம்பத்திற்கு ஸ்நபனம் செய்து ரக்ஷõபந்தனம் செய்யவும் கூறப்படுகிறது.

விருஷபத்திற்கும் முறைப்படி ரக்ஷõபந்தனம் செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு பிம்பத்தை சயனாதிவாசம் செய்யவும் என கூறுகிறார். இங்கு விருஷபமானது ஸ்வாமி பிம்பத்திலிருந்து வேறு பட்டதாக இருந்தால் ஸ்வாமியின் பாத தளத்தில் தெற்கு பாகம் தலையாக வைத்து விருஷபத்தை சயனாதிவாசம் செய்யவும் என கூறுகிறார். பிறகு சயனகும்ப அதிவாசம் பற்றி கூறுகிறார். அங்கு சிவனுடைய சிரோ தேசத்தில், சிவகும்பமும், வர்தனிகும்பமும், ஸ்தாபிக்கவும், விருஷப கும்பமானது விருஷப சிரோபாகத்தில் ஸ்தாபிக்கவும் கும்பத்தை சுற்றி வித்யேஸ்வரர்கும்பங்கள் 8 ஸ்தாபிக்கவும். சந்தன, புஷ்பம், இவைகளாலும், நைவேத்யங்களாலும் பூஜிக்கவும், தத்வ தத்வேஸ்வரர் நியாசம், மூர்த்தி மூர்த்தீஸ்வரர் நியாசம் ஸ்வாமிக்கும், விருஷபத்திற்கும் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு குண்டசம்ஸ்காரம், அக்னி ஸம்ஸ்காரம் முடித்து ஹோமம் செய்யவும் என கூறி ஹோமத்தின் திரவ்யங்களை நிரூபிக்கும் முறையாக ஹோம விதி சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு இரண்டாம் நாள். ஆசார்யன், மூர்த்திபர்களுடன், ஸ்வாமி, கும்பம், வஹ்னி, இவர்களை பூஜித்து யஜமானனால் வஸ்திரம், ஸ்வர்ணம் இவைகளால் பூஜிக்கப்பட்டவனும், தட்சிணையை பெற்றுக் கொண்டவருமாக, மந்திரன் நியாசம் செய்யவும் என கூறி மந்திரம் நியாசம் செய்யும் முறை விளக்கப்படுகிறது. இங்கு அம்பாள் தனிமையான பீடத்துடன் இருந்தால் தனிமையாக ஸ்தாபிக்க வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு கல்யாண உத்ஸவம் செய்யவும், உத்ஸவம் ஸ்நபனம் அதிகமான நைவேத்யம் செய்யவேண்டுமா, இல்லையா என விசேஷமாக கூறப்படுகிறது. இங்கு சொல்லப்படாததை சாமான்யமாக ஸ்தாபன விதியால் கூறப்பட்டுள்ளபடி செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு அவ்வாறே விருஷபமானது கனமானதாகவோ, கனம் இல்லாததாகவோ செய்யலாம் என கூறப்படுகிறது. முடிவில் யாரால் பக்தியுடன் பிரதிஷ்டை அனுஷ்டிக்கப்படுகிறதோ, அவன் இஷ்டபடி அனுபவித்து முடிவில் சிவபதத்தை அடைகிறான் என்று பலஸ்ருதியாகும். இவ்வாறாக 62வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. வ்ருஷா ரூடப்ரதிஷ்டையை அந்த லக்ஷணத்துடன் கூட கூறுகிறேன். நான்கு கை, மூன்று கண்கள், ஜடையை மகுடமாக தரித்தவராய்

2. வலது மேல் கையில் மழுவையும், இடது மேல் கையில் மானை உடையவராய் கீழ் வலக்கை கடக முத்திரையுடன் வளைந்த தண்டத்தை உடையதாயும்

3. ஸ்வாமியின் வலது முழங்கையின் அடிப்பாகம் வ்ருஷபத்தின் தலையில் இருக்க வேண்டும். இடது கீழ்கை ஹம்ஸ முத்திரையாகவோ அல்லது பதாக முத்ரையை அதோமுகமாக

4. இடது கையின் நுனி அளவுடன் தொப்பூழ் ஸூத்ர அளவு சமமாகும். இடது கையின் விரலிலிருந்து தொப்பூழ் ஸூத்ரம் வரை பதினைந்து அங்குலமாகும்.

5. அந்த மணிக்கட்டின் பக்கமானது, இரண்டங்குலம் ஆகும். முழங்கையின் அடியிலிருந்து இருதயத்தின் நடுப் பிரதேசம் வரை இருபத்தைந்து அங்குலம் ஆகும்.

6. கையின் மணிக்கட்டிலிருந்து குஹ்யத்தின் அடிப்பாகம் சமம் ஆகும். மணிக்கட்டிலிருந்து பக்கஅளவு பத்தொன்பது மாத்திரையாகும்.

7. பக்கவாட்டுக்கை மத்தியில் உள்ள கை இவைகளின் இடைவெளி ஏழங்குலம் ஆகும். நின்ற கோலத்தில் ஸமபங்க லக்ஷணம் உடையதாக அமைக்க வேண்டும்.

8. நெற்றி மூக்கு இவைகளிலிருந்து நிற்கிற வலது பாத குதிகால் நடுவரை உள்ள ஸூத்ரம் சிவ ஸூத்ரமாகும்.

9. ஹ்ருதயத்தில் உள்ள மத்ய ஸூத்ரமானது மூன்றங்குலம். நாபிக்கும் குஹ்ய தேசத்திற்கும் உள்ள ஸூத்ர இடைவெளி நான்கு மாத்திரையாகும்.

10. வலது, இடது முழங்கால்களின் இடைவெளி மூன்றங்குலம் ஆகும். வலது காலின் வளைந்த தன்மை, குதிகாலிலிருந்து ஐந்தங்குல இடைவெளியாகும்.

11. மற்ற அளவு இரண்டங்குலத்தால் சந்திரசேகரைப் போல் அமைக்கவும். இம் மூர்த்தியின் வலப் பக்கத்திலேயே தேவியை அழகாக அமைக்க வேண்டும்.

12. தன்னுடைய வலது பாகத்தில் மூர்த்தியை அனுசரித்தோ, தனியாகவோ தேவியுடன் கூடியதாகவோ ஆயுதங்கள் இல்லாமலோ மாறுதலான அங்கங்களை உடையதாகவோ

13. வ்ருஷபாரூடரை அமைக்கவும், இது மோக்ஷத்தை கொடுக்கக் கூடியது. பின் பக்கமுள்ள வ்ருஷபமானது, சுவாமியின் முழங்கால் தொடை உயர அளவாக இருக்க வேண்டும்.

14. குஹ்யத்திலிருந்து நாபியின் முடிவு வரையோ அமைத்து மற்ற உருவ அமைப்பு முன் கூறியபடி செய்யவும். இவ்வாறு பிம்பம் அமைப்பதை கற்சிலை முதலிய திரவியங்களால் செய்து பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

15. சுப முஹூர்த்தத்தில் அங்குரம், ரத்னந்யாஸம் முதலாக பிரோக்ஷணத்தை செய்ய வேண்டும். ரிஷபத்திற்கும் நயோன்மீலனம் பிம்ப சுத்தியை செய்து கிராம பிரதட்சிணமாக

16. ஜலாதி வாஸம் செய்து, யாக மண்டபத்தை அடைய வேண்டும். ஒன்பது, ஐந்து, ஒன்று என்ற எண்ணிக்கையில் குண்டங்களை அமைக்க வேண்டும்.

17. சதுரமாகவும், வட்டவடிவங்களாகவும் எண்கோணமாகவும் குண்டங்கள் இருக்கலாம். பின் சில்பியை திருப்தி செய்து அனுப்பிவிட்டு அந்தணர்க்கு உணவளித்து

18. புண்யாக பிரோக்ஷணம் செய்து, ஸ்தண்டிலத்தில் சயனம் அமைத்து ஸ்நபநம் செய்து ரக்ஷõபந்தனம் செய்யவும், வ்ருஷபத்திற்கும் முன்கூறியபடி செய்ய வேண்டும்.

19. சயன ஸ்தாபனத்தைச் செய்த பிறகு கும்பங்களை ஸ்தாபிக்க வேண்டும். சுவாமியின் சிரோ பாகத்தில் சுவாமி கும்பத்தையும் வர்தனியையும் ஸ்தாபிக்க வேண்டும்.

20. ரிஷபம் தனிபிம்பமாயிருப்பின் சுவாமி பாதத்தின் கீழ் ரிஷபத்தின் தலை தென்பாகம் இருக்கும்படியாகச் செய்து சயனத்தில் இருக்க வேண்டும்.

21. விருஷ பிம்பத்தின் தலை பாகத்தில் வ்ருஷப கும்பம் வைக்கவும். சுற்றிலும் எட்டு குடங்களில் வித்யேசர்களை பூஜிக்க வேண்டும்.

22. சந்தன, புஷ்பாதிகளையும், தூப, தீபங்களையும் கொடுத்து தத்வமூர்த்தி நியாஸங்களையும் குருவானவர் சுவாமிக்கும் ரிஷபத்திற்கும் செய்ய வேண்டும்.

23. குண்டஸம்ஸ்காரம், அக்னி ஸம்ஸ்காரங்களைச் செய்து சமித்து, நெய், அன்னம், பொறி, எள், கடுகு, உளுந்து முதலியவைகளை ஹோமம் செய்ய வேண்டும்.

24. புரசு, அத்தி, அரசு, ஆல் முதலிய சமித்துக்களை கிழக்கு முதலான குண்டங்களிலும் வன்னி, நாயுருவி, பில்வம், மயிற் கொன்னை முதலிய சமித்துக்களை அக்னி கோணாதி குண்டங்களிலும்

25. பிரதான குண்டத்தில் புரசு, சமித்தையும் அங்கு வ்ருஷபத்தையும் பூஜித்து ஹோமம் செய்ய வேண்டும். பின் இரண்டாவது நாளில் தேவர்கள் கும்பங்கள், அக்னியையும் பூஜிக்க.

26. ரித்விஜர்களுடன் ஆசார்யரும் வஸ்த்ரம், ஸ்வர்ணாபரணங்களுடன் தட்சிணையை அடைந்தவராகச் செய்து பிறகு மந்திர நியாஸத்தையும் செய்ய வேண்டும்.

27. குருவானவர் சுவாமியின் முன்னால் ஸ்தண்டிலத்தில் கும்பங்களை வைத்து பூஜித்து கும்பத்திலிருந்து மூலத்தை சுவாமியின் ஹ்ருதயத்தில் சேர்க்க வேண்டும்.

28. வர்த்தினீ குடத்தையும் தேவியின் பீடத்தின் முன் ஸ்தண்டிலத்தில் வைத்து பீஜ மந்திரங்களை பீடத்தில் சேர்க்கவும். ஈசனின் பீடத்துடன் சமமாக தேவியும் இருந்தால் வர்த்தனீ மந்திரத்தை அம்பிகை ஹ்ருதயத்தில் சேர்க்க வேண்டும்.

29. வ்ருஷபத்தின் கும்பத்திலுள்ள மூலத்தை விருஷபத்தின் ஹ்ருதயத்தில் சேர்க்கவும். மற்றுமுள்ள கும்பங்களின் பீடத்தைச் சுற்றிலும் சேர்க்க வேண்டும்.

30. தனி பீடமான தேவியாகில் பிரதிஷ்டையைத் தனியாகச் செய்ய வேண்டும். பிறகு கல்யாணத்தையும் முறைப்படி ஆசார்யர் செய்ய வேண்டும்.

31. உத்ஸவத்தையும் ஸ்நபனத்தையும், மஹா நைவேத்யங்களையும் வேண்டுமெனில் செய்யலாம். இங்கு கூறப்படாததை சாமான்ய ஸ்தாபன விதிபோல் செய்ய வேண்டும்.

32. இம்மாதிரியான வ்ருஷப வாஹன மூர்த்தியின் பிரதிஷ்டையானது சொல்லப்பட்டது. சிறியதாகவோ பெரியதாகவோ இருந்தாலும் விருஷபம் அவசியம் செய்ய வேண்டும்.

33. இம்மாதிரி பிரதிஷ்டையை அனுஷ்டிப்பவர் பக்தி, பாவனையோடு கூடியவராகில் அனைத்து இஷ்ட போகங்களையும் அனுபவித்து சிவ பதத்தை அடைவர்.

இவ்வாறு உத்தர காமிகாகம மஹாதந்திரத்தில் வ்ருஷபாரூட பிரதிஷ்டை முறையாகிற அறுபத்தி இரண்டாவது படலமாகும்.
படலம் 61: ஏகபாத திரிமூர்த்தி ஸ்தாபனம்

61வது படலத்தில் மும்மூர்த்தி ஸ்தாபனம் கூறப்படுகிறது. முதலில் இலக்கண அமைப்பு பூர்வமாக திரிமூர்த்திஸ்தாபனம் கூறுகிறேன் என்பது கட்டளை. பிறகு ரக்தவர்ணம், முக்கண் வரத அபய ஹஸ்தம் மான் மழு இவைகளுடன் ஜடாமகுடத்தையும் அலங்காரமாககொண்டவனும் ஒரு பாதத்தை உடையதும் இடுப்புபிரதேசத்திற்கு மேல் தெற்கு வடக்கு பக்கமாகிய இருஇடங்களிலும் முறையாக பாதிசரீரம் உடைய பிரம்மா விஷ்ணுவின் உருவத்தை உடையவரும் ஆகிய ஏகபாததிரிமூர்த்தி என்று ஏகபாத திரிமூர்த்தி லக்ஷணம் கூறப்படுகிறது. பிறகு இங்கு பிரம்மா விஷ்ணு ஒவ்வொருபாதத்துடன் கூடியதாகவோ அஞ்சலிஹஸ்தத்துடன் கூடியதாகவோ அமைக்கவும் என ஒருவிசேஷமாக நிரூபிக்கப்படுகிறது. பிறகு சிவலிங்கத்தின் இரண்டு பக்கங்களில் உள்அடங்கியதாகவோ அவைகள் இருக்கட்டும் என வேறு விசேஷம் கூறப்படுகிறது. அல்லது அவை இரண்டும் வெவ்வேறாக ஒரே ஆசனத்தை அடைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பிறகு மத்தியில் வேறு விதமான லிங்கம், பிரம்மா, விஷ்ணு இவைகள் இருப்பதாகவும் வேறு ஒருவிசேஷம் கூறப்படுகிறது. பிறகு மூன்று மூர்த்திகளும் தனித்தனி ஆலயத்துடன் கூடியதாகவோ அல்லது ஒரே ஆலயத்தில் சேர்ந்து இருப்பதாகவோ இருக்கலாம். கிழக்கு முகமாகவோ மேற்கு முகமாகவோ பரிவாரத்துடன் கூடியதாகவோ தனித்தனிபிராகாரத்துடனோ ஒரே பிரகாரத்துடனோ அமைந்ததாக மும்மூர்த்திகள் இருக்கலாம் என கூறப்படுகிறது. அங்கு சிவலிங்கபிரதிஷ்டை பிரம்மபிரதிஷ்டை விஷ்ணுப் பிரதிஷ்டை அந்தந்த படலத்தில் கூறப்பட்டுள்ளபடி செய்யவேண்டும் ஏகபாத திரிமூர்த்தியின் பிரதிஷ்டை கூறப்படுகிறது என உத்தரவு முன்பு சொல்லப்பட்டபடி நல்லநேரத்தை பரிசிட்சித்து அங்கு ரத்தினந்தியாசம், நயனோன்மீலனம், பிம்பசுத்தி கிராமபிரதட்சிணம் ஜலாதிவாசம் செய்யவும் என்று வரிசைக்கிரமமாக கிரியை கூறப்படுகிறது. பிறகு யாகசாலை முன்பு கூறியபடி அமைத்து குண்டம் அமைக்கும் முறை விளக்கப்படுகிறது.

பின்பு சில்பி விசர்ஜனம் செய்து மண்டபத்தில் பிராமண போஜனம் புண்யாக பிரோக்ஷணம் செய்து அங்குஸ்தண்டிலம் அமைத்து முறைப்படி ஸயனாதிவாசம் செய்யவும். ஜலாதிவாசம் முடித்து ஸ்நபனம் செய்து ரக்ஷõபந்தனம் செய்து சயனாதிவாசம் செய்யவும் என சயனாதிவாசம் செய்யும் முறை சுருக்கமாக கூறப்படுகிறது. இங்கு ரக்ஷõபந்தனம் சிவன் பிரம்மா விஷ்ணு ஆகிய மூவர்களுக்கும் வலதுகையில் தனித்தனியாக செய்ய வேண்டும் கூறப்படுகிறது. கும்பத்தை அதிவாசம் செய்யும் முறை கூறப்படுகிறது. அங்கு ருத்திரன் பிரம்மா விஷ்ணு (ருத்திரன்) இவர்களின் சிரோதேசத்தில் மூன்று கும்பம் வைக்கவும். ருத்திரனின் இடது பக்கம் வர்த்தினியை ஸ்தாபிக்கவும் அவைகளின் ரூபத்தியானத்தை நினைத்து சந்தனம் முதலியவைகளால் பூஜை செய்யவும் தத்வன்நியாசம் தத்வேஸ்வரன் நியாசம் மூர்த்திநியாசம் மூர்த்தீஸ்வரர் நியாசம் இவைகளை முறைப்படி செய்து பூஜிக்கவும். கும்பஸ்தாபன விதி கூறப்படுகிறது. பின்பு குண்டஅக்னி சம்ஸ்காரம் முடித்து ஹோமம் செய்யவும் என்று ஹோமதிரவ்ய நிரூபணபடி ஹோமம் செய்யும் முறை சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு இரண்டாம்நாள் ஆசார்யன், கும்பம், ஸ்வாமி, அக்னி இவர்களை பூஜித்து யஜமானனால் வஸ்திரம் ஸ்வர்ணங்கள் இவைகளால் பூஜிக்கப்பட்டவராகவும் தட்சிணைபெற்றுக் கொண்டவருமாக பிம்பத்திற்கு முன்பாக கடங்களை ஸ்தாபித்து மந்திரந்நியாசம் செய்யவும் எனக்கூறி மந்திரன் நியாசமுறை நிரூபிக்கப்படுகிறது. கும்பஜலங்களால் அந்தந்த ஸ்வாமிக்கு கும்பாபிஷேகம் செய்யவும் என கும்பாபிஷேகவிதி கூறப்படுகிறது. பிறகு ஸ்நபனம், உத்ஸவம் அதிகமாக நிவேதனம், இவைகளை செய்யவும். இங்கு கூறப்படாதவற்றை அந்தந்த அத்யாயங்களில் கூறப்பட்டுள்ளபடி செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு எந்த மனிதனால் மும்மூர்த்திகளுக்கு பிரதிஷ்டை செய்யப்படுகிறதோ அந்த மனிதன் இந்த லோகத்தில் சவுக்கியத்தை அடைந்து முடிவில் உன்னதமான சிவசாயுஜ்ய பதவியை அடைகிறான் என்பது பலஸ்ருதியாக காணப்படுகிறது. இவ்வாறாக 61வது படலகருத்து சுருக்கமாகும்.

1. திரிமூர்த்தியின் (மூன்று மூர்த்தியின்) பிரதிஷ்டையை அதன் அமைப்பு முறைப்படியாக சொல்கிறேன். சிவப்பு வர்ணம் உடையவராயும் மூன்று கண்களையுடையவராயும் அபய வரத ஹஸ்தமுடையவராயும்

2. மான் கோடரியோடு கூடியவராயும் ஜடாமகுடம் தரித்தவராயும் நேராக அமைந்த ஓர் பாதத்தோடு கூடியவராயும்

3. வலது, இடது இரண்டு பக்கங்களிலும் இடுப்பு பாகத்திற்கு மேல் பிரம்ம விஷ்ணுக்களின் பாதி சரீரத்துடன் கூடியதாயும்

4. பிரம்ம விஷ்ணுக்களின் அளவானது பெண் சரீரம் போல் சற்று வளைவானதாக அமைக்க வேண்டும். இரண்டு கைகளும் தொழுத நிலையில் ஒரு காலோடு கூடியவராயும் இருக்கலாம். (கால் இல்லாமலும் அமைக்கலாம்)

5. அல்லது சிவலிங்கத்தின் பக்கங்களில் பாணத்திலேயோ வெளிப்படையாகவோ அல்லது தனித்தனியாக ஒரே ஆஸனத்தில் இருப்பவர் களாகவோ

6. அல்லது நடுவில் லிங்கம் கொண்ட தனித்தனி ஆலயங்களாகவோ வலப்புறம் இடப்புறம் முறையே பிரம்மாவையும், விஷ்ணுவையும் கொண்டவராகவோ அமைப்பது சம்மதமானது.

7. தனித்தனியாகவோ, அல்லது ஒரே ஆலயத்திலோ மும்மூர்த்திகள் இருக்கலாம். பிரம்ம விஷ்ணு, சிவ ஆலயங்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்ததாகவும் இருக்கலாம்.

8. கிழக்கு முகமாகவோ அல்லது மேற்கு முகமாகவோ பரிவாரங்களுடன் சேர்ந்தோ தனித்தனி பிரகாரத்தை உடையவர்களாகவோ ஒரே பிரகாரத்தில் இருப்பவராயும் இருக்கலாம்.

9. நடராஜ மூர்த்தி முதலானவர்களை மத்தியில் ஸ்தாபிக்கப்பட வேண்டும். இவ்வாறு கூறப்பட்ட லக்ஷணமுடையவரின் பிரதிஷ்டா விதி கூறப்படுகிறது.

10. ஹே, முனிபுங்கவர்களே, சிவலிங்க பிரதிஷ்டையையும், பிரம்மா விஷ்ணு பிரதிஷ்டைகளையும் அந்தந்த விதி முறைப்படி செய்ய வேண்டும்.

11. இப்பொழுது ஏகபாதருடைய பிரதிஷ்டா விதி கூறப்படுகிறது. முன்சொல்லியபடி சுபமான காலத்தில் முன் சொல்லியபடி அங்குரார்ப்பணத்தையும்

12. ரத்னன்யாஸம், நயனோன்மீலனம் (பேரசுத்தியும்) பிம்பசுத்தியும் தனித்தனியா செய்யவேண்டும். கிராமப்ரதட்சிணம் ஜலாதிவாசம் மண்டபம் அமைப்பு முறை முதலியவைகளை செய்ய வேண்டும்.

13. குண்டங்களை ஒன்பது ஐந்து ஒன்று என்ற எண்ணிக்கையில் அமைக்க வேண்டும். அவை எண்கோணம் வட்டம், சதுர குண்டங்களாகும்.

14. சில்பியை திருப்தி செய்துவிட்டு அந்தணர்களுக்கு உணவு அளித்து புண்யாஹ ஜலத்தைப் புரோக்ஷித்து ஸ்தண்டிலத்தில் சயனம் செய்து ஸ்நானம் செய்வித்து ரக்ஷõபந்தனத்தை செய்யவேண்டும்.

15. பிரம்ம விஷ்ணு சிவனுக்கு வலது கையில் ரக்ஷõபந்தனத்தை தனித்தனியாகச் செய்ய வேண்டும். சயனாரோஹணம், கும்பஸ்தாபனத்தையும் முறையாகச் செய்ய வேண்டும்.

16. பிரம்ம விஷ்ணு, சிவனின் தலைபாகத்தில் மூன்று கும்பங்களையும் சிவகும்பத்திற்கு இடப்புறம் வர்த்தனீ கலசத்தையும் ஸ்தாபிக்க வேண்டும்.

17. அந்தந்த மூர்த்திகளை அவ்வாறே தியானித்து சந்தனம் முதலியவற்றால் பூஜிக்கவும். தத்வந்யாஸம் மூர்த்தி ந்யாஸத்தையும் அவ்வாறே செய்ய வேண்டும்.

18. ஹோம குண்டங்களில் அக்னிகார்யம் செய்து எள், கடுகு, பயறு, உளுந்து, அவரை துவரை, மூங்கிலரிசி இவைகளாலும்

19. புரசு, அத்தி, அரசு, ஆல் முதலியவற்றை கிழக்கு முதலான குண்டங்களிலும் வன்னி, நாயுருவி, பில்வம் இச்சி முதலியவற்றை தென்கிழக்கு கோண குண்டங்களிலும்

20. பிரதான குண்டத்திலும், எல்லாவற்றிலும் புரசையோ ஹோமம் செய்யலாம். பின் இரண்டாவது நாள் தேவர், கும்பம், அக்னி, இவற்றிற்கு பூஜை முதலான செய்து

21. குருவானவர் ரித்விஜர்களோடு கூடியவராய் வஸ்த்ரம் ஸ்வர்ணாபரணம் இவைகளோடு பத்து நிஷ்கம் எடையுள்ள தட்சிணைகளால் சந்தோஷம் அடைந்தவராய் இருத்தல் வேண்டும்.

22. பிறகு மந்திரந்யாஸத்தைச் செய்து பிம்பத்திற்கு முன்னால் உள்ள கும்பங்களை பூஜித்து, கும்பத்தில் உள்ள சக்தியை தேவரின் ஹ்ருதயத்தில் சேர்க்க வேண்டும்.

23. வர்தனியில் உள்ள மூலத்தை கிரஹித்து அதன் பீடத்தில் சேர்க்க, ப்ரும்ம, விஷ்ணு கும்பங்களின் மூலத்தை அந்தந்த ஹ்ருதயத்தில் சேர்க்க வேண்டும்.

24. மற்ற கும்பங்களில் உள்ள மூலத்தை பீடத்தை சுற்றிலும் சேர்க்க வேண்டும். அந்தந்த கும்ப ஜலத்தை அதற்குரிய இடங்களில் அபிஷேகிக்க வேண்டும்.

25. ஸ்நபனம், உத்ஸவம், செய்து அதிகப்படியாக நைவேத்யங்களை செய்து இங்கு கூறப்படாததை அந்தந்த வழிகளில் கூறியபடி செய்ய வேண்டும்.

26. இம்மாதிரியான த்ரீமூர்த்தி பிரதிஷ்டையானது எவரால் செய்யப்படுகிறதோ அவர் இவ்வுலகில் சுகத்தை அடைந்து கடைசியில் சிவபதத்தை அடைவார்.

இவ்வாறு உத்தரகாமிகாகம மஹாதந்திரத்தில் த்ரீமூர்த்தி ஸ்தாபன விதியாகிற அறுபத்தி ஒன்றாவது படலமாகும்.