படலம் 48: சந்திரசேகர பிரதிஷ்டை
48வது படலத்தில் சந்திரசேகர மூர்த்தி ஸ்தாபனம் கூறப்படுகிறது. முதலில் லக்ஷண முறைப்படி சந்திரசேகர பிரதிஷ்டையை கூறுகிறேன் என்பது பிரதிக்ஞை. பிறகு கற்சிலை முதலான திரவ்யங்களால் பிரதிமை செய்யவும் என கூறி சந்திரசேகர உருவ அமைப்பு சரீரத்தின் அளவை சூத்திரபாத நிரூபனப்படி கூறப்படுகிறது. இங்கு நான்கு கை மூன்று கண் சமமான பாதம் நின்ற திருக்கோலம் வரத, அபய, மான், மழுவு இவைகளை தரித்தவராகவும், ஜடாமகுடத்தால் அலங்கரிக்கப்பட்டவராகவும் இருப்பவர் சந்திரசேகர மூர்த்தியாகும். இந்த சந்திரசேகர மூர்த்தி அம்பாளுடன் கூடியதாகவோ அம்பாள் இல்லாமலோ இருப்பார் என்று சந்திரசேகருடைய மூர்த்தி லக்ஷணம் கூறப்பட்டது. நடுவில் ஜடா மகுட லக்ஷணம் கூறப்படுகிறது. அம்பாள் சேர்ந்ததாகவோ தனியான பீடத்தை உடையதாகவோ தேவி ஈசனை அணைத்தவாறோ, ஈசனால் தேவி அணைக்கப்பட்டவராகவோ இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பிறகு பிரதிஷ்டா முறை கூறப்படுகிறது. இங்கு முன்பு குறிப்பிட்ட நல்ல காலத்தில் அங்குரார்ப்பணம் செய்து ரத்னநியாஸம், நயனோன்மீலனம், பிம்பசுத்திகிராம பிரக்ஷணம், ஜலாதிவாசம் இவைகளை செய்யவும் என்ற கிரியைகளின் வரிசை கூறப்படுகிறது. பிறகு யாகத்திற்காக வேதிகை குண்டத்துடன் கூடிய மண்டபம் அமைக்கும் முறை கூறப்படுகிறது. பிறகு பிராமண போஜனம், புண்யாக வாசனம், வாஸ்து ஹோமம் முதலிய மண்டபஸம்ஸ்காரங்களை செய்து சயனத்தை முறைப்படி அமைத்து ஜலாதி வாசத்திலிருந்து மண்டபத்திற்கு வந்த பிம்பத்திற்கு ஸ்நபனம் ரக்ஷõபந்தனம் செய்து சயன செய்யவும் என்று சயன அதிவாசமுறை கூறப்படுகிறது.
பிற பிம்பத்தின் சிரோபாகத்தில் ஒரு கும்பமும் அதற்கு வர்த்தினியையும் ஸ்தாபித்து ரூபதியான முறைப்படி அவைகளுக்கு பூஜை செய்யவும், பிறகு சிவ வர்த்தினி கும்பங்களை சுற்றி வித்யேச்வர கும்பமாக 8 கும்பம் அமைக்கவும் முன்பு போல் தத்வதத்வேஸ்வர, மூர்த்தி, மூர்த்தீஸ்வர நியாஸம் செய்யவும். இவ்வாறு கும்ப அதிவாச முறை கூறப்பட்டது. பிறகு முன்பு போல் ஹோமம் செய்யவும் என கூறி திரவ்ய நிரூபண முறையாக ஹோம விதி சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு காலையில் ஆசார்யன் தேவ கும்ப அக்னி இவர்களை ஆதரவோடு பூஜித்து முன்பு போல் தட்சிணை பெற்றுக் கொண்டு மந்திரநியாஸம் செய்யவேண்டும் என கூறி மிகவும் சுருக்கமாக கூறப்படுகிறது. இங்கு அம்பாள் தனியான பீடமாக இருந்தால் தனியான மண்டபத்தில் அனுஷ்டிக்க வேண்டும் என கூறப்படுகிறது. பிரதிஷ்டை முடிவில் கல்யாணம் செய்ய வேண்டும். அவ்வாறே ஸ்நபநம், உத்ஸவம் அதிகமான நைவேத்தியம் செய்ய வேண்டும். இங்கு சொல்லப்படாத கர்மாவை சாமான்ய ஸ்தாபனத்தில் சொல்லப்பட்டபடி செய்ய வேண்டும் என்று பிரதிஷ்டா முறை மிகவும் சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு யார் இந்த சந்திரமவுலி பிரதிஷ்டையை செய்கிறானோ அந்த மனிதன் இந்த லோகத்தில் எல்லா விருப்பத்தையும் அடைந்து முடிவில் மோக்ஷமடைகிறான் என்று பலச்ருதி கூறப்படுகிறது. இவ்வாறு 48 வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.
1. எல்லா லக்ஷணத்துடன் சந்திரசேகர பிரதிஷ்டையை கூறுகிறேன். சிலா (கல்) முதலியவைகளை சேகரித்து அவைகளால் பிம்பம் செய்ய வேண்டும்.
2. நான்கு கை, மூன்று கண், ஸமமான பாதமும் வரதமும் அபயத்துடன் கூடிய கை முன்னதான பாகமாகவும்
3. இடது கை வரதமாகவும், வலதுகை அபயமுத்திரையாகவும் வலக்கை வரத கையாக அமைத்தால் இடது கையை சிம்மகர்ணிகம் என்ற அமைப்பாகவோ
4. துடையில் வைத்த கையை உடையதாகவோ கடக முத்திரையுடைய கையை உடையதாகவோ அமைக்கவும் தோள்பட்டை பக்கம் உள்ள கைகளில், மானையும் மழுவையும் உடையதாகவும்
5. மானும் மழுவும், கர்த்தரி என்ற முத்ரை அமைப்பில் சேர்ந்துள்ளதாகவும் அந்த மானும் மழுவும் எதிர்நோக்கிய முகமாகவோ, வெளிநோக்கிய முகமாகவோ அல்லது (இரண்டும் கலந்ததாகவோ) அமைக்க வேண்டும்.
6. கர்த்தரீ முத்திரை அளவு எட்டு மாத்திரையாகும். கைமத்யமாக கூறப்பட்டுள்ளது. இடுப்பிலிருந்து கர்த்தரீ மத்யபாகம் முப்பத்தோரு அங்குலமாகும்.
7. மணிக்கட்டும், கையும் நடுவிலிருந்து பன்னிரண்டு அங்குலமாகும். இடுப்பின் அடிப்பகுதி முதல் முழங்கை வரையிலும் முன்பக்கமுள்ள உள்ளங்கைகளில்
8. ஆறு ஐந்து, ஆறரை அங்குல அளவிலோ மார்பு பகுதி வரையிலும் அபய முத்திரை முடிவின் உச்சமும் தொப்புளுக்கு மேலும் ஹ்ருதய ஆரம்பமாகும்.
9. தொப்புளிலிருந்து, அபய முத்ரையுள்ள கை வரையில் மூன்று (ஆறு) அங்குலமாகும். மார்பிலிருந்து அபயமுத்திரை நுனி வரை பன்னிரண்டங்குலமாகும்.
10. கடகமுத்திரையின் அடிப்பாகமானது ஆண்குறி அடிபாக சமம் ஆகும். தொடை மூலம் முதல் கடகமுத்திரை வரை சேர்ந்ததாக உள்ள இடைவெளி மூன்றங்குலமாகும்.
11. இரண்டரை பாகமாகவோ, இரண்டு பாகமாகவோ கல்பிக்கவும் தொடை முதல் மத்யம் வரை மாத்திரைகளுக்கு முழங்கால் முதல் தொடையின் நடுபாகம் வரை உள்ள அளவு முறையாகும்.
12. ஒன்று, அரை, ஒன்றரை பங்குகளாகவும் மூன்று வகையானவைகளாக அமைத்துக் கொள்ளவும், முழங்கால் நடுவிலிருந்து ஒன்றரை அங்குல அளவாகும்.
13. முழங்கால்களின் நுனி நடு அடிபாகம் நான்கு ஐந்து, ஏழு என்ற அளவாகும். என்ற கட்டைவிரலின் இடைவெளி எட்டு அங்குலமாகும்.
14. இரண்டு கால் குரட்டு பாகங்களின் இடைவெளியில் தொங்கும் சூத்திரத்தை வரையவும், முகமும், காது கைகள் வரை, பக்கவாட்டு பக்கங்களில் மூன்று சூத்ரங்களை அமைக்க வேண்டும்.
15. பிம்பத்தின் முன்பாகம், நடுபாகம், பின்பாகத்தில் முறையே ஒன்பது தொங்கும் சூத்ரங்களை அமைக்கவும். நேராக தொங்கும் பலகையை வைத்து தொங்கும்படி செய்ய வேண்டும்.
16. நெற்றி, மூக்கு, ஹ்ருதயம், தொப்புள், ஆண்குறி, இரண்டு காலின் நடுபாகம், இவையில் முன் பக்கமாக, சூத்திரமிட்டு அவை, மூக்கு, வயிறு இவைகளை தொடும்படியாக அமைக்க வேண்டும்.
17. முகம் வரையிலும், காதணியின் அடி, மார்பகத்தின் நுனி காலின் அடிபாகம் கழுத்து, காது, மார்பகம், வெளியில் இடுப்பு பகுதி வரையிலும் தொடும்படியாக சூத்திரத்தை அமைக்க வேண்டும்.
18. முகம், முகத்தின் அடிபாகம் வரையிலும் தோள்பட்டையை தொட்டதாக தொங்கும் பக்கவாட்டு சூத்ரத்தை மூன்றாக அமைக்க வேண்டும்.
19. பிடரிபாகம், தோள்பட்டை, காதுபாகம், இடுப்பு, குதிகால் இவைகளின் நடுவிலும், பின்பக்கம் முதல் தோள்பட்டை வரை உள்ள சூத்திரம் தலையிலிருந்து தொங்கும் சூத்திர அளவாகும்.
20. உடலின் நடுவில் உள்ளது நடு சூத்ரமாகும். தலைபாகை அணிகலனிவைகளை மூன்று மாத்ரை அளவில் செய்ய வேண்டும்.
21. இரண்டு பக்கமும் முன்பக்கமும் பின்பாகமும், நான்கு கோடுகளுடன் கூடியதாகவோ நடுவில் ஏழு கோடுடன் கூடிய மகரகூடம் என்ற அமைப்பை செய்ய வேண்டும்.
22. இரண்டு பக்கத்தில் பத்திரகூடம் என்ற அமைப்பாகும். பின்பக்கத்தில் ரத்னகூடம் என்ற அமைப்பையும் முன்பக்கத்தில் பத்து அங்குலமும், அதன் அடிபாகத்தில் முக அமைப்பையும் செய்ய வேண்டும்.
23. அந்த இடப்பக்கத்தில் மும்மடங்கு அகலமுள்ளதாக ஆகும். வலது பாகத்தில் பாதிப் பிறையையும் ஸ்வாமியின் இடப்பாகத்தில் எல்லா அலங்காரமும் உடைய பாம்பையும்
24. ஐந்து சடைகளால் விசேஷமாக மூன்று சுற்றுகளால் முடிச்சை ஒரு தடவையும் மீதமான ஜடைகளை பக்கவாட்டிக் தொங்கும்படியும் அமைக்க வேண்டும்.
25. எல்லா அலங்காரங்களுடன் கூடிய இது ஜடை மயமான கிரீடமாகும். நவரத்னத்தினால் ஆன காதணியையோ சங்கினால் ஆன காதணியையோ
26. தாமரைப்பூ போன்ற காதணியையோ உடைய இடது காதையும் வலது காதில் மகர குண்டலமோ சிம்ம குண்டலமோ காதோலை குண்டலமாகவோ அமைக்க வேண்டும்.
27. பின்பாகம் காதுவரை தொங்குகிற முடியையும் பக்கவாட்டு பாகங்களில் ஜடை நுனிபாகம் தொங்குவதாகவும்
28. கர்ணிகையோடு கூடிய மாலையை கழுத்து வரை உள்ளதாகவும் மார்பையும் அமைத்து தோள் வளையுடன் கூடிய கைகளை அமைக்க வேண்டும்.
29. பத்திர வலயத்தோடும் எல்லா ரத்னங்களால் அழகானதாகவும் மாலையின் நுனி பாகத்தில் ரத்னத்தினால் அலங்கரிக்கப்பட்ட முத்து மாலையையும் அமைத்து
30. கடகமுத்திரையோடு கூடின கையை அமைத்து சன்னவீரம் என்ற அணிகலன் மேல் துண்டு, பூணூல், வயிற்றில் சூத்திரம் இவைகளை அமைக்க வேண்டும்.
31. எல்லா ரத்ன கட்டத்தினால் அழகான மாலைகளாலும், அரைஞாண் என்ற அணிகலத்தாலும், பாத சலங்கை இவைகளை உடையவராகவும், உள்ளவர்
32. சந்திரசேகர் ஆவார். அவர் தேவியுடன் கூடியோ தேவி இல்லாமலோ இருப்பார் ஒரே பீடத்துடன் கூடியவராகவோ தனியான பீடமுள்ளவராகவோ ஸ்வாமியால் அனைத்துக் கொள்ளப்பட்டதாகவோ
33. தேவியால் அனைத்துக்கொள்ளப்பட்ட தேவராகவோ ஒருவர் கொருவர் அனைத்துக் கொள்ளப்பட்டதாகவோ, அணைத்துக் கொள்ளப்பட்ட அமைப்பு இன்றியோ வளைவின்றி நேராகவோ இருக்கும் தன்மை
34. ஆகிய அமைப்புடன் கூடிய உருவ வடிவு கூறப்பட்டு பிரதிஷ்டை முதலியவைகள் கூறப்படுகிறது. பிரதிஷ்டைக்குரிய காலம் முன்பே கூறப்பட்டுள்ளது. அவ்வாறே அங்குரார்ப்பணம்
35. ரத்னன்யாசம் நயனோன்மீலமும், பிம்பசுத்தி, கிராமபிரதட்சிணம் ஜலாதி வாசம், மண்டபத்தை அடைவது முன்பு போலவே செய்ய வேண்டும்.
36. யாகாலயத்தில் ஒன்பது, ஐந்து, ஒன்று என்ற எண்ணிக்கையில் குண்டங்களை செய்ய வேண்டும். எண்கோணம், வட்டவடிவம், சதுரம் ஏதாவது ஒரு வடிவமைப்பில் அமைக்க வேண்டும்.
37. பிராம்மணபோஜநம் புண்யாஹப்ரோக்ஷணம் செய்து மரிசிபதத்துடன் வாஸ்து ஹோமம் செய்ய வேண்டும்.
38. புண்யாகவாசனம் செய்து, சயனாதி வாசம் தயார் செய்து ஸ்நபனம், ரக்ஷõபந்தனம், சயநத்தில் எழுந்தருளச் செய்வதையும் தனித்தனியே செய்ய வேண்டும்.
39. பிம்பசிரோ பாகத்தில் சிவகும்பம் அதன் உத்தரபாகத்தில் வர்தனியையும் லக்ஷணபடி ரூபத்யானத்துடன் அர்ச்சிக்க வேண்டும்.
40. வித்யேச்வர கடங்கள் ஸ்தாபித்து, பூஜிக்கவும். கும்பத்தில் தத்வ தத்வேஸ்வர மூர்த்தி, மூர்த்தீஸ்வர நியாஸம் செய்யவும் முன்பு போல் ஹோமம் செய்ய வேண்டும்.
41. குண்ட, அக்னிஸம்ஸ்காரம் செய்து சமித், நெய், அன்னம் எள், பொறி, உயர்ந்த பயிர் வகைகளாலும் ஆல், அத்தி இவைகளாலும்
42. அரசு, பலாசம் இவைகளை, திக்ஷúக்களில் ஸமித் ஹோமமும் வன்னி, நாயுருவி, பில்வம் (மயிற்கொன்னை) சமித்துகளை அக்னியாதி திக்குகளில் ஹோமம் செய்யவேண்டும்.
43. முன்மாதிரி ஒவ்வொரு ஹோமம் செய்து, பூர்ணாஹுதி செய்து மறுதினம் காலையில் தேவன் கும்பம், அக்னி, இவைகளை பூஜிக்க வேண்டும்.
44. மூர்த்திபர்களுக்கு, வஸ்திரம், தங்க மோதிரம், இவைகளால் திருப்தி செய்வித்து, குருவானவர் தட்சிணையையும் பெற்றுக் கொண்டு முன்போல் மந்திரந்யாஸம் செய்ய வேண்டும்.
45. பிம்பத்தின் முன்பு கடங்களை வைத்து கும்பத்திலிருந்து பீஜமந்திரத்தை தேவனிடம் சேர்த்து, பீடத்தில் வர்தனி பீஜ மந்திரத்தை சேர்த்து
46. ஸ்வாமியுடன் அம்பாள் சேர்ந்திருப்பின் வர்தனி, பீஜத்தை தேவியிடம் சேர்ப்பிக்கவும். மற்ற வித்யேச கும்பங்களை பீடத்தை சுற்றிலும் ஸமர்ப்பிக்க வேண்டும்.
47. தேவி தனிபீடமாக இருப்பின் தனி மண்டபம் அமைத்து பூஜிக்கவும். திருக்கல்யாணம் செய்வித்து, ஸ்நபனம் உத்ஸவத்தையும் நடத்த வேண்டும்.
48. ஸ்வாமிக்கு பலவிதமான நிவேதனம் ஸமர்பிக்கவும். இப்பகுதியில் கூறாத விபரங்கள் ஸாமான்ய ஸ்தாபனத்தில் கூறியபடி செய்ய வேண்டும்.
49. இவ்வாறு சந்திரசேகர பிரதிஷ்டையை யார் செய்கிறானோ அவன் இந்த லோகத்தில் எல்லா அபீஷ்டங்களும் இறுதியில் மோக்ஷத்தையும் அடைகிறான்.
இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் சந்திரசேகர ஸ்தாபன விதியாகிற நாற்பத்தெட்டாவது படலமாகும்.