வியாழன், 13 ஆகஸ்ட், 2020

கோரகும்பர்

கோரகும்பர்

பண்டரிபுரத்திற்கு அருகே உள்ள தோடகியில் பிறந்தவர் கோரகும்பார் மண்பாண்டம் செய்யும் குயவர் குடியில் பிறந்தவர்.

இவரின் சகோதரர் எற்றண்ணா.

கோரகும்பர் தாய் தந்தையர் எப்போதும் பண்டரிநாதனின் மேல் பக்தி கொண்டு இருந்தனர். வேலையின் போது பண்டரிநாதனின் மேல் பாடல்கள் பாடி வந்தனர். இதனால் கோரக்கும்பரும்
எற்றண்ணாவும் பக்திமானாக திகழ்ந்தனர். கோரக்கும்பருக்கு பத்மாவதி என்பவரை திருமணம் செய்வித்தனர்.

இருவரும் மிக்க அன்யோன்யமாக வாழ்ந்தனர். பத்மாவதியும் சிறந்த
பக்திமானாக இருந்தார். திருமணம் நடந்த சில வருடங்களிலேயே கோரக்கும்பரின் பெற்றோர் இறந்து போயினர்.

கோரகும்பாரின் தம்பி எற்றண்ணா
அண்ணனுக்கு தொழிலில் உதவியாக இருந்தார்.

எற்றண்ணா திருமண வாழ்வில் அதிக ஈடுபாடு இல்லாமல் இருந்தார்

ஓர் நாள் சூளையில் அடுக்கி வைத்திருந்த மண்பானைகளுக்கு எரியூட்டுவதற்காக ராட்டிகளை அடிக்கி அதற்கு தீயை வைத்தார் எற்றண்ணா.

சில பானைகளில் குட்டி பூனைகள் இருந்ததை கவனிக்கவில்லை.
சில நாட்கள் சென்று பானைகளை எடுக்கும் போது அதில் பூனை குட்டிகள் கருகி இருந்தது.

எற்றண்ணாவுக்கு மனது வலித்தது
பாவம் செய்து விட்டேன் என புலம்பினான்.

திடீரென ஓர் நாள் கங்கையில் மூழ்கி என் பாவத்தை போக்கி கொள்கிறேன் என கூறி காசி கிளம்பினான்.

தம்பி நடந்தே கங்கைக்கு செல்வதால்
கோரகும்பர் சோகத்தில் மூழ்கினார்.

கர்ப்பமான மனைவியை கூட அவர் அதிகம் கவனித்து கொள்ளவில்லை.

ஆனால் நாளுக்கு நாள் அவர் பாண்டுரெங்கனிடம் கொண்ட பக்தி அதிகமாகவே ஆகியது.

பத்மாவதி ஓர் அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள்.

கோரகும்பர் எப்போதும் மண்ணை காலால் குழைத்த வண்ணம்
பாண்டுரெங்கனை பாடிய வண்ணம் மண்பாண்டம் நிறைய செய்தார்.

வீட்டின் வரவான குழந்தையை அதிகமாக நேசிக்காத தந்தையாக சதா பாண்டுரங்கன் மேல் பித்தாகவே போனார்.

குழந்தையும் வளர்ந்து தவழ்ந்தது.

இவர் வழக்கம் போல மண்ணை காலால் குழைத்த வண்ணம் கைகள்
இரண்டையும் மேலே தூக்கி பாண்டுரங்கனை கண்களை
மூடியபடி
நினைத்து ஆடியபடி, பாடியபடி
மண்ணை மிதித்த போது
வீட்டில் இருந்து குழந்தை தவழ்ந்து சேற்றில் ஏறியதை வீட்டில் வேலையாக இருந்த பத்மாவதியும்
கவனிக்கவில்லை.

கோரகும்பரும் கவனிக்க வில்லை.

மண்ணை குழைத்த கால்கள்
குழைந்தையையும் சேற்றில் அமுக்கி மிதித்து
கூழாக ஆக்கியது.

குழந்தையை காணோமே என தேடிய பத்மாவதி கணவரின் கால்களில் கூழாகி போன குழந்தையை பார்த்து
அழுதபடி வந்த போதே கோரகும்பருக்கு நினைவு வந்தது.

பத்மாவதி "ஏன் இப்படி குழந்தையை பார்க்காமல் இப்படி செய்துவிட்டீர்களே" என கேட்ட மனைவியை "நீ தானே கவனித்துகொள்ள வேண்டும்"
என கூற,

குழந்தை வருவது கூட தெரியாமல் அப்படி என்ன தெவ்வ பக்தி வேண்டி கிடக்கு, பாண்டுரெங்கன் இப்படியா செய்ய சொன்னார் என சொன்னவுடன் கோரகும்பர் தன்னுடைய கடவுளையே தவறாக சொல்லிவிட்டாளே என சொல்லி கம்பால் அடிக்க ஆரம்பிக்கிறார்.

பத்மாவதி கோபமாய்
இனி என்னை அடிக்கவும் கூடாது
தொடவும் கூடாது இது பாண்டுரங்கனின் மேல் ஆணை என்கிறாள்.

அன்று முதல் மனைவியை தொடுவதில்லை
மனைவி தொட்டததையும் தொடுவதில்லை என சபதம் எடுத்து
தனியாக சமைத்து சாப்பிட்டார்.

கணவரை இப்படி திட்டிவிட்டோமே என வருந்திய பத்மாவதி
கோரகும்பரிடம் மன்னிப்பு கேட்டும்
அலர் மாறாததை கண்டு வருத்தப்பட்டாள்.

பத்மாவதி தன் தந்தையிடம் நடந்ததை கூறி,
அவளது தங்கையை கோரகும்பருக்கு திருமணம் செய்விக்க தந்தையோடும் தங்கையோடும் பேசி சம்மதிக்க வைத்தார்.

பத்மாவதியின் தந்தை கோரகும்பரை பார்த்து திருமணத்திற்கு சம்மதமா என கேட்டவுடன் கோரகும்பர்
அதற்கு சம்மதிக்க மறுக்கிறார்.

உறவினர்களின் வற்புறுத்தலில் திருமணம் நடக்கிறது.

திருமணம் முடிந்து ஊருக்கு கிளம்பிய கும்பாரிடம் அவர் மாமனார் எனது இரு பெண்களையும் சமமாக பாவித்து நடங்கள் என்றார்.

கோரகும்பர் சரி என சொல்லி இரண்டு மனைவியோடு ஊர் திரும்பினார்.

அக்காவை தொடுவது இல்லை அவள் தொட்ட எதையும் தொடுவது இல்லை போலவே இரண்டாவது மனைவியிடமும் இருந்தார்.

மாமனாருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றி கொண்டு வந்தார்.

சகோதரிகளுக்குள் சண்டை ஆரம்பித்தது.

இரவு பாண்டுரங்கனை பாடிவிட்டு அயர்ந்து தூங்கும் போது கோரகும்பரின் இருபக்கமும் இருவரும் படுக்க வேண்டியது என முடிவு செய்தனர்.

அது போலவே ஓர் நாள் அயர்ந்து தூங்கும் போது இருவரும் படுத்தனர்.
தூக்கத்தில் இருந்து எழுந்த கோரகும்பர் கத்தியால் ஓர் கையை துண்டித்து கொண்டார்.
அதே கத்தியை நிறுத்தி மறு கையையும் வெட்டி கொண்டார்.

மனைவிகள் இருவரும் அழுது புலம்பினர்.

அந்த நேரம்,
காசிக்கு சென்று திரும்பிய எற்றண்ணா வீட்டு கதவை தட்டி உள்ளே வந்தவுடன் கையில்லாமல் நிற்கும் அண்ணனையும்
அழும் அவரின் மனைவிகளையும்
பார்த்து வருத்தமுற்று நடந்தவைகளை கேட்டறிந்தார்.

அண்ணனின் கைகளை எடுத்து ஒட்டி
சிகிச்சை அளித்தார் எற்றண்னா.

கைகள் ஒட்டியதே தவிர வேலைகளை செய்ய முடியவில்லை. கைகள் வளைந்திருந்தது.
எற்றண்ணாவின் உழைப்பில்
அவர்கள் வாழ்ந்தனர்.

பாண்டுரங்கனின் கோவில் விழாகோலம் பூண்டது
ஸ்ரீ நாமதேவர் அவ் விழாவிற்கு வந்தார்.

நாமதேவரின் மனதிற்கு
பண்டரிநாதனின் கோவிலில் பண்டரிநாதன் இல்லாமல் இருப்பது போலும்,
களையிளந்தும் கோவில் காணப்பட்டது.

பண்டரிநாதா
நீ இங்கில்லையா என கேட்பது போல பாடல் இயற்றி பாடினார்.

அன்றிரவு நாமதேவரின் கனவில்
நான் கோரகும்பரின் வீட்டில் அவர் தம்பி எற்றண்ணாவாக இருக்கிறேன் என்றார்.

மறுநாள் காலை நாமதேவர்
வந்து பார்த்த போது
சேற்றை மிதித்தபடியும்
மண்பாண்டங்கள் செய்தபடியும்
எற்றண்ணாவாக பண்டரிநாதன்
இருந்தார். காசிக்கு சென்ற எள்றண்ணாவுக்கு பதில் பாண்டுரங்கனே எற்றண்ணாவாக.

கையிழந்த தன் பக்தனின் குடும்பம் ஏழ்மையின் பிடியில் வருத்தப்படக்கூடாதே என எண்ணிய
பாண்டுரங்கனே மண் பானை செய்து விற்று இந்த குடும்பத்தை காப்பாற்றியதை கண்ட நாமதேவருக்கு கண்களில் கண்ணீராய் வந்தது.

கோரகும்பரின் பக்தியை மனதால் மெச்சிய வண்ணம்
கோரகும்பர் அவரது மனைவிகளோடும் எற்றண்ணாவோடும் பண்டரிபுரம் வந்தார் நாமதேவர்.
பாண்டுரெங்கன் இருந்தால்தானே திருவிழா நடக்கும்.

நாமதேவர் கோரகும்பர் அவரது மனைவி இருவரும் அமர்ந்து இருக்க
எற்றண்னா கோவில் கருவறைக்குள் சென்று மறைந்துவிடுகிறார்.

நாமதேவர் நடப்பதை பார்த்து மனதுக்குள் சிரித்து கொண்டார்.

அப்போது கோவிலுக்குள் பஜனை கோஷ்டி ஒன்று உள் நுழைந்து கைகளை தட்டிய வண்ணம் பாண்டுரெங்கனை பாடுகின்றனர்.

கோரகும்பர் தன் கைகளை தூக்க முயற்சிக்கிறார். செயலற்று
வளைந்து இருந்த கைகளை தூக்க முடியாமல் துக்க மேலீட்டில் அழுதவண்ணம் பாண்டுரங்கா விட்டலா என கண்ணீரோடு பாடுகிறார்.

வளைந்த கைகள் நேராகிறது
விரல்கள் இயங்குகிறது
கைகள் நன்றாக இயங்க ஆரம்பிக்கவே பண்டரிநாதா
விட்டலா என கத்தியபடி ஆனந்த கண்ணீர் விட்டார்.

அருகில் இருந்த அனைவரும் பாண்டுரெங்கா பாண்டுரெங்கா என கோஷமிட்டனர்.

அனைவரும் மகிழ்ச்சியோடு சன்னதியில் விழுந்து வணங்கினர்

பத்மாவதி அழுதவளாய் பாண்டுரெங்கா என் கணவரின் கையை கொடுத்தது போலவே என் குழந்தையை தாருங்கள் என்னை மன்னித்துவிடு பாண்டுரங்கா என்னை மன்னித்து என் குழந்தையை தாருங்கள் என கேட்க, கருவரையில் இருந்து பத்மாவதியின் குழந்தை தவழ்ந்து வந்தது. நாமதேவர் பாண்டுரங்கனின் திருவிளையாடலை எண்ணி மகிழ்ந்தார்.

ஸ்ரீமத்யார்ஜுனேசாஷ்டகம்

ராம ராம ராம
திருவிடைமருதூர் ஸ்ரீமஹாலிங்க ஸ்வாமியை நன்கு த்யானம் செய்து கொண்டு இந்த ஸ்தோத்ரத்தை கேட்டு மன : சாந்தி, நல்ல தேஹ ஆரோக்யம் மற்றும் ஸகல பாக்யங்களையும் அடைய ப்ரார்த்திக்கிறேன்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 ஸ்ரீமத்யார்ஜுனேசாஷ்டகம்      ***********************
மஹனீயர்களான நமது ஸத்குருக்கள் சேங்காலிபுரம் ப்ரும்ஹஸ்ரீ அனந்தராம தீக்ஷிதர் அவர்கள் திருவிடைமருதூரில் விளங்கும் ஸ்ரீமஹாலிங்க ஸ்வாமி  பேரில் மனமுருகி எழுதிய ஸ்தோத்ரம் ஸ்ரீமத்யார்ஜுனேசாஷ்டகம்.

ஸ்ரீமஹாலிங்கஸ்வாமி தர்சனம் மற்றும் ஸ்மரணம் ப்ரம்ஹஹத்யாதி பாபங்களை போக்கி பக்தர்களுக்கு ஏற்படும் மஹாபயம், சித்தப்ரமம் மற்றும் ஸகல வ்யாதிகளையும் போக்கி ஸமஸ்த பாக்யங்களையும் தரும்.

சேங்காலிபுரம் ஸ்ரீதீக்ஷிதர்வாளின் இந்த உயர்ந்த ஸ்ரீமத்யார்ஜுனேசாஷ்டகத்தை நித்யம் கேட்டு பாராயணம் செய்து ஸகல ச்ரேயஸ்ஸையும் அடைய ப்ரார்த்திக்கிறோம்!!! திப்பிராஜபுரம் மோஹன்ராமதீக்ஷிதர் 🌸🌸🌸🌸🌸🌸🌸
அனைவருக்கும் இந்த Youtube link ஐ Share செய்யப்ரார்த்திக்கிறோம் 🌸🌸🌸🌸🌸🌸🌸
மத்யார்ஜுனேசம் பஜேஹம்   - ஸாம்ப மத்யார்ஜுனேசம் மஹாலிங்கமாத்யம்  மத்யார்ஜுனேசம் பஜேஹம். 
                           1.ஜ்யோதிர்மஹாலிங்க ரூபம் -      க்லுப்தபூஷம் புஜங்கேன க்ருத்தாரிப்ருந்தம்  பக்தார்த்தி ஸம்ஹார்யபாங்கம் ப்ரும்ஹவிஷ்ண்வாதி ப்ருந்தைர்முதா பூஜிதாங்க்ரிம் (மத்யார்ஜுனேசம் பஜேஹம்) 

2.ருத்ராக்ஷமாலாம் தரந்தம் ப்ரும்ஹஹத்யாதி பாபாநி ஸந்நாசயந்தம் ரக்ஷந்தமாபத்ஸுபக்தான் ப்ராந்தசித்தஸ்த தோஷான் ஸமுன்மூலயந்தம் (மத்யார்ஜுனேசம் பஜேஹம்)

 3.புண்யாச்வமேத  ப்ரசாரை :  பூதபாதாதி சோரை : பவாம்போதிதாரை : குர்வந்தி பக்தா : ப்ரஸன்னம் புத்ரபௌத்ராத்யபீஷ்டான் ஸதாபூரயந்தம்     (மத்யார்ஜுனேசம் பஜேஹம்) 

4.பஸ்மாதிபூஷா விசேஷம் புஷ்பபில்வாதி பத்ரைர்ஜுஷாணம் ஸுதோஷம் ஸர்வார்த்ததாயி ப்ரதோஷம் விப்ரவர்யௌக ஸம்ப்ரோக்த ஸாமாதி கோஷம் (மத்யார்ஜுனேசம் பஜேஹம்)

5.ஸஹ்யாத்ரிஜா தீர பாக்யம் ஸாதுபோக்யம் ஸுரேந்த்ரைர்ஸதா ஸாதும்ருக்யம் ப்ராப்யம் க்ருதானேக புண்யை : தீனரக்ஷைக தீக்ஷம் க்ருபாபூர்ண வீக்ஷம் (மத்யார்ஜுனேசம் பஜேஹம்)

6.புஷ்யோத்ஸவே புண்யகோஷ்ட்யாம்  ஸாமவேதாதி கோஷை : ப்ரமோதேன பாந்தம்  ஜ்யோதிர்மயானந்த கந்தம் ஸ்வர்ஜுனாக்யஸ்ய வ்ருக்ஷஸ்ய மூலேவஸந்தம்     (மத்யார்ஜுனேசம் பஜேஹம்)

7.புஷ்யேரதே காலதௌதே திவ்யபுஷ்பாபிராமே வ்ருஷைருஹ்யமானே பச்யந்தமத்யந்த பக்தாம் ஸுந்தராப்யாம் ப்ருஹத்ப்யாம் குசாப்யாம் யுதாம்தாம் (மத்யார்ஜுனேசம் பஜேஹம்)

 8.ஸ்தோத்ரம் க்ருதம் பக்தி பூர்வம் தீக்ஷிதானந்தராமேண பாபௌக சாந்த்யை நித்யம் படேத்யஸ்து பக்த்யா |                   தஸ்ய ஸர்வார்த்த லாபோ பவேதாசுதோஷாத் ।। (மத்யார்ஜுனேசம் பஜேஹம்)
ஸாம்ப மத்யார்ஜுனேசம் மஹாலிங்கமாத்யம்
மத்யார்ஜுனேசம் பஜேஹம்

ஸ்ரீமத்யார்ஜுனேசாஷ்டகம் ஸம்பூர்ணம்
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
தங்களது நண்பர்களுக்கும்,முகநூல் மற்றும் வாட்ஸ்அப் க்ரூப்களிலும் பகிர ப்ரார்த்திக்கிறோம்
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
We present you Shri Madhyārjuneshāshtakam written by Brahmasri Sengalipuram Anantarama Deekshitar.
From
Tippirajapuram
Mohan Rama Dikshitar

Sanskrit lyrics:

श्री मध्यार्जुनेशाष्टकम्

 मध्यार्जुनेशं भजेहम्- साम्ब मध्यार्जुनेशं  महालिड़्गमाद्यं मध्यार्जुनेशं भजेहं ||

1.ज्योतिर्महालिड़्गरूपं  क्लुप्त
          भूषं भुजड़ंगेन कृत्तारिबृन्दम्  
भक्तार्ति संहार्यपाड़्गम्  ब्रम्हविष्ण्वादि
          बृन्दैर्मुदा पूजिताड़्घ्रिम्   ।।
             (  मध्यार्जुनेशं भजेहम् )   
                            
2.रुद्राक्षमालां धरन्तम्
         ब्रम्हहत्यादि पापानि संनाशयन्तम्  ।
    रक्षन्तमापत्सुभक्तान्
          भ्रान्तचित्तस्थ दोषान् समुन्मूलयन्तम् ।।
              ( मध्यार्जुनेशं भजेहम्)    

3.पुण्याश्वमेधप्रचारै :
          भूतबाधादि चोरैर्भवाम्भोधितारै : ।         
    कुर्वन्ति भक्ता : प्रसन्नम्
           पुत्रपौत्राद्यभीष्ठान् सदापूरयन्तम्  ।।
              ( मध्यार्जुनेशं भजेहम्)

4.भस्मादिभूषाविशेषं
            पुष्पबिल्वादि पत्रैर्जुषाणम् सुतोषम् ।
    सर्वार्थदायिप्रदोषं विप्रवर्यौघ
            संप्रोक्त सामादि घोषम्  ।।                             
             (मध्यार्जुनेशं भजेहम्)

5.सह्याद्रिजा तीर भाग्यं
            साधुभोग्यं सुरेन्द्रैर्सदासाधुमृग्यम्  ।
    प्राप्यं कृतानेकपुण्यै :
            दीनरक्षैक दीक्षं कृपापूर्णवीक्षम्  ।।
                (मध्यार्जुनेशं भजेहम्)

6.पुष्योत्सवे पुण्यगोष्ट्यां
          सामवेदादिघोषै :   प्रमोदेन भान्तम्  ।
    ज्योतिर्मयानन्दकन्दं
           स्वर्जुनाख्यस्य वृक्षस्य मूलेवसन्तम्  ।।
              (मध्यार्जुनेशं भजेहम्)

7.पुष्येरथे कालधौते  -  दिव्य  
            पुष्पाभिरामे वृषैरुह्यमाने ।
    पश्यन्तमत्यन्त भक्तां
            सुन्दराभ्याम् ब्रृहद्भ्यां कुचाभ्यां युतांताम् ।।
              (मध्यार्जुनेशं भजेहम्)

8.स्तोत्रं कृतं भक्तिपूर्वम्
              दीक्षितानन्तरामेण पापौघ शान्त्यै । 
    नित्यम् पठेद्यस्तु भक्त्या  तस्य
              सर्वार्थलाभो भवेदाशुतोषात्  ।।
                (मध्यार्जुनेशं भजेहम्)

ஊத்துக்காடு வேங்கடகவி

ஊத்துக்காடு வேங்கடகவி

காலங்கள் உருண்டோடின. கண்ணனைப் பார்க்காமல் அன்னம் உண்ணமாட்டேன் என்று சில காலங்களாகவே ஆகாரம் உண்பதையே அவர் முற்றுலுமாக தவிர்த்து வந்தார். இதன் காரணமாக உடல் மெலிந்து கண்கள் சொருகி பார்வை மங்க ஆரம்பித்தது. பிரதிக்க்ஷனம் செய்யக் கூட அவரால் முடியவில்லை. தன் முழங்கால் வாயிலாகவே மிகவும் சிரமப்பட்டு ஒரு பிரதிக் பிரதிக்க்ஷனம் செய்து முடித்தார். அடுத்த பிரதிக்க்ஷனம் செய்ய முடியவில்லை. தன் பிராணன் இன்றுடன் பிரியப் போவதை உணர்ந்தார். இன்று எப்படியாவது பாடி கண்ணனை வரவழைத்துவிடலாம் என்றெண்ணி என்ன பாடலாம் என சிறிது யோசித்து பின் தாமதமில்லாமல் 'அலைபாயுதே கண்ணா!' என்று பாட ஆரம்பித்துவிட்டார். அந்த பாடல் முழுநிறைவு தருவாயை நெருங்கிவிட்டது. (நீங்கள் இனி எப்பொழுது இந்த பாடலைக் கேட்டாலும் இந்த உணர்வுடனே அந்த பாட்டில் வரும் வார்த்தைகளைக் கேளுங்கள். உயிர் பிரியும் தருவாயில் தான் பாடினார் என்று உங்களுக்கு புரிய வரும்.)

ஆனாலும் கண்ணன் வரவில்லை. மெய்மறந்து தன் தொடைகளில் தாளம் போட்டுக்கொண்டே பாடிக் கொண்டிருந்தார் வேங்கடகவி. திடீரென்று ஜவ்வாது மனமும், நாகலிங்க பூ வாசனையும், குளிர்ந்த காற்றும் அவர் மேனியில் பட ஆரம்பித்தது. அச்சமயத்தில் அவர் பார்வை முற்றிலுமாக பறிபோய்விட்டது. ஆனாலும் தான் பாடுவதை நிறுத்தவில்லை. முழு பலத்தைக் கூட்டி சங்கீதத்தைக் கூட பாட முடியவில்லை. தொடையில் தாளம் போட முடியாதபடி கை இடறியது. எதோ ஒரு குழந்தை மடியில் படுத்திருப்பது போன்று உணர்வு தோன்றியது. அப்பா யாரது? நான் கண்ணனைக் காண வேண்டுமென்று வேகத்துடன் பாடிக் கொண்டிருக்கின்றேன். அந்தக் குழந்தையிடமிருந்து பதில் இல்லை, மீண்டும் மீண்டும் கேட்டார், பதில் இல்லாத காரணத்தினால் சற்றே சினம் வந்து அந்தக் குழந்தையைக் கீழே தள்ளிவிட்டார். உடனே அந்தக் குழந்தை இதழ்களை பிரித்து பேசத் தொடங்கியது. வேங்கடசுப்பையரே! யாரைக் காண வேண்டுமென இத்துணைக் காலம் பாடினாயோ! அவன் நான் தான் என்னை நன்றாகப் பார்! என்றார். கண்ணா! என்று விழவும் சக்தியில்லாமல் கண்ணனைப் பார்த்து, என்னுடைய உடலுறுப்புகள் அனைத்தும் சரியாக இயங்கக் கூடிய காலகட்டத்தில் நீ காட்சி தரவில்லை. இப்பொழுது என் பலமும் மனபலமும் சோர்ந்தபிறகு வந்திருக்கிறாயே கண்ணா! உன்னை கையெடுத்துக் கூட வணங்க முடியவில்லை என்று கூறிக் கொண்டிருக்கும் போது வேங்கடகவியின் உடலிலிருந்து உயிர் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரிந்து கொண்டிருந்தது.

அந்த உயிரை முழுவதும் பிரியவிடாமல் கிருஷ்ணன் அனுக்கிரகித்து, பக்தா! உன் வாழ்நாள் முழுவதையும் நான் வருவேன் என்று என் பொருட்டு உன் காலங்களைக் கழித்தாய். அப்படிப்பட்ட உயர்ந்த பக்தனாகிய உன்னை பூலோகத்தில் இறக்கவிடமட்டேன் என்று தன்னுடன் வேங்கடகவியை அழைத்து தன் இருப்பிடமான பிருந்தாவனத்திற்கு சென்றார். அங்கே குசேலருக்கு நடந்ததை விட பன்மடங்கு உபசாரம் செய்தார் கிருஷ்ணர். எப்பொழுதும் இவன் என் பக்தன் என் பக்தன் என்று கூறிக் கொண்டே இருந்தார் கிருஷ்ணபரமாத்மா. பக்தா உனக்கு என்ன வேண்டும் கேள் என்றார் கண்ணன், அதற்கு வேங்கடகவி மறுபடியும் ஊத்துக்காட்டில் 'நான் பாடி நீ ஆடவேண்டுமடா கண்ணா' என்று கேட்டார். அவ்வாறாகவே மீண்டும் இருவரும் ஊத்துக்காட்டிற்கு வந்தார்கள். பக்தா உனக்கு நான் எப்படிக் காட்சி தர வேண்டும் எனக் கேட்டார். அதற்கு வேங்கடகவியும், காளிங்க நர்த்தனாகவே வா என்றார். அவ்வாறாகவே வந்து உன்னால் உன் வாயால் என் நர்த்தனத்திற்கு ஏற்றாற்போல் எப்பொழுது பாட முடியவில்லையோ அப்பொழுதே நான் இதே இடத்தில் மீண்டும் விக்கிரகமாக மாறிவிடுவேன் என்று கூறினார்.

வேங்கடகவி அப்பொழுது 'தாம்தீம் தரநதாம்............' என்று தொடங்கும் பாட்டை பாடினார்.

பாடல் முடியும் வரை பாடலுக்கு ஏற்றாற் போல் கிருஷ்ணனும் நர்த்தனம் செய்தார். நர்த்தனத்திற்கேற்றாற்போல் வேங்கடகவியும் பாடினார். இருப்பினும், சில நர்த்தன பாவனைகளுக்கு ஏற்றாற்போல் வேங்கடகவி பாட முடியாமல் தடுமாறினார். உடனே, கிருஷ்ணன் சொன்னது போல் அதே இடத்தில் மீண்டும் விக்ரகமாக மாறினார். வேங்கடகவி தன் தோல்வியை ஒப்பு கொண்ட பிறகு, அவர் அவதார நோக்கத்தை கூறி நீங்கள் நாரதராக சஞ்சரிக்கலாம் என்று கிருஷ்ணன் அனுக்கிரகம் பண்ணினார். பதிலுக்கு வேங்கடசுப்பையர், சுவாமி நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்று வெங்கட சுப்பையரிடம் கேட்க நான் என் பக்தர்களாகிய நந்தினி பட்டிக்கு கொடுத்த வரத்தில் கலியுகம் முழுவதும் இங்கயே இருக்க போகிறேன் என்றார். அதற்கு நாரதர் வைகுண்ட வாசனே வைகுண்டத்தில் இல்லாத போது பக்தனாகிய எனக்கு வைகுண்டத்தில் என்ன வேலை என்று கேட்டு கலியுகம் முழுவதும் நானும் உங்களுடன் இருந்து நான் தற்போது செய்து கொண்டிருக்கும் கைங்கரியத்தையே தொடர்ந்து செய்வேன் மற்றும் அல்லாது கலியுகத்தில் தேடி கிடைக்காத பக்தியுடன் யார் வந்து உங்களிடம் பிராத்திக்க வருகிறாரோ அவர்களின் குறைகளை நான் கேட்டு உங்களிடம் கூறும் பெறும் பாக்கியத்தை தாருங்கள் என கூறினார். இனி நான் தேவலோகத்துக்கோ வைகுண்டதுக்கோ சென்றால் உம்மிடம் தான் செல்வேன் என்று பிராத்தித்தார். அவ்வாறாகவே கிருஷ்ணன் அனுகிரகம் செய்தார். தொடர்ந்து இன்னும் கூட இரவு நேரங்களில் கண்ணனின் மீது பாடல்களை பாடிகொண்டிருக்கிறார். பாடல்களுக்கு ஏற்றார் போல் கோபிகா ஸ்திரிகளுடன் கிருஷ்ணன் நர்த்தனம் செய்து கொண்டிருக்கிறார். கிருஷ்ணனின் சலங்கை (கொலுசு) சத்தம் இன்னும் இரவு நேரங்களில் கேட்டு கொண்டிருக்கிறது. அதை இந்த ஊரில் பலரும் கேட்டுக் கொண்டிருகின்றனர். நாரதர் இங்கயே இருப்பதை கண்டு அத்தனை தேவர்களும் நாங்களும் கலியுகம் முழுவதும் நாங்களும் இங்கயே இருப்பதாக இறங்கி வந்தனர். கிருஷ்ணனும் இங்கயே இருக்கும் படி அனுகிரகித்தார். திரு கோவிலின் பிரகாரத்தை சுற்றி இன்னும் அத்தனை தேவர்களும் காவல் காத்து கொண்டிருகின்றனர்.

"இன்று நான் பிறந்தேன்" என்று வெங்கடகவி ஒரு பாடல் பாடியுள்ளார். கண்ணனால் அவர் பெருமை பெற்றதும் அவரால் ஊத்துக்காடு பெருமை பெற்றதும் உலகறிந்த செய்தியாகும்.

நாள் தோறும் கோவில் அர்ச்சகர், வெங்கட கவி துளசி மாடத்தருகே அமர்ந்து கண்ணனிடம் பாடங்கேட்டு வந்ததை நேரில் கண்டு வியப்பில் ஆழ்ந்து நிற்க நேரிட்டது. இறையருள் பெற்று வேங்கடகவி பாடிய பாடல்களைப் பக்தியோடு கேட்டு இன்புற்று மகிழ்ந்தார் அர்ச்சகர். தன் சுகனுபாவங்களைப் பிறர்க்கும் கூறி அவர்களும் அந்த பேரின்பம் பெற உதவி செய்தார். இவரால், பிறரும் வேங்கடகவியின் செயல்களைக் கண்டு வியந்து பாராட்டினார். அவர் பாடிய பாடல்களைக் கேட்டு எல்லோரும் இன்புறும் நிலையும் ஏற்பட்டது. வேங்கடகவி 65 ஆண்டு காலம் வாழ்ந்தார். வெங்கடகவியின் அமர பாடல்கள்

இசை மூவருக்கும் முற்பட்ட வேங்கடகவியின் பாடல்கள் அமரத்தன்மை கொண்டவை. கண்ணன் ஆடலை நேரில் தரிசித்த கவியின் வாக்கில் வெளிப்படும் பாடல்கள் கண்ணன் ஆடும் நடனத்தின் தாளத்திற்கு ஏற்ப அமைபவை. "பால் வடியும் முகம்" எனத் தொடங்கும் பாடலுக்கு பொருள் புரியவேண்டுமா? நேரே வாருங்கள் ஊதுக்காடுக்கு. காளிங்க நர்த்தன பெருமாளை கண்டு களியுங்கள். அப்பாடல் முழுவதும் உண்மையே என்பது அப்போது புரியும். அவரது அற்புதக் கீர்த்தனைகள் மேலும் சில. (பாடல்களின் தொடக்கம் மட்டும் தரப்படுகின்றன)

1. ஸ்ரீவிக்ன ராஜம் பஜே (கம்பீர நாட்டை)
2. நீரதஸமா நீல கிருஷ்ணா (ஜயந்தஸ்ரீ)
3. அசைந்தாடும் மயில் ஒன்று (சிம்மேந்த்ர மத்திமம்)
4. அலை பாயுதே கண்ணா (கானடா)
5. ஆடாது அசங்காது வா கண்ணா (மத்யமாவதி) 6. பார்வை ஒன்றே போதுமே (சுருட்டி)
7. நீல வானம் தனில் (புன்னாகவராளி)
8. யாரென்ன சொன்னாலும் (மணிரங்கு)
9. நீதான் மெச்சிக்கொள்ள வேண்டு (ஸ்ரீரஞ்சனி)
10. தாயே யசோதே உந்தன் (தோடி)
11. பால் வடியும் முகம் (நாட்டைக்குறிஞ்சி)
12. ஸ்வாகதம் கிருஷ்ணா (மோகனம்)
13. குழலூதி மனமெல்லாம் (காம்போதி)

எனவே, பக்தர்களே! வாழ்வில் ஒரு முறையாவது ஊத்துக்காடு சென்று கண்ணனைத் தரிசிக்க வேண்டும். கட்டாயம் சென்று பாருங்கள்.

கிருஷ்ணம் சரணம்
ஷர்வம் கிருஷ்ணாய சரணம்

மூக்கிரட்டை கீரை

மூக்கிரட்டை கீரை!!

இதை புல் என்று வெறுத்து ஒதுக்குகிறார்கள் அனால் இது ஒரு மூலிகை வெளிப்பட்டது: இதை பார்த்தால் வீட்டுக்கு தூக்கிட்டு போயிடுங்க

மூக்கிரட்டை கீரையை தனியாகவோ, மற்ற கீரைகளுடன் சேர்த்தோ சமைத்து சாப்பிடலாம். காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, புளி, உப்பு சேர்த்து வதக்கி, துவையலாக செய்தும் சாப்பிடலாம்.
இதயநோய், சைனஸ், ஆஸ்துமா, சளித் தொல்லை, ரத்த சோகையால் ஏற்படும் உடல்வீக்கம், தொப்பை, வாதக்கோளாறு, மஞ்சள்காமாலை, மலச்சிக்கல், மூலக்கோளாறு உள்ளிட்ட பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.
மூக்கிரட்டை கீரை உடம்பில் உள்ள அதிகப்படியான கழிவுகளை நீக்கும். மூக்கிரட்டை கீரையானது கல்லீரலின் செயல்பாட்டைத் தூண்டிவிட்டு வேகமாகவும் துரிதமாகவும் செயல்பட உதவுகிறது.

மூக்கிரட்டை வேருடன் சிறிது பெருஞ்சீரகம் சேர்த்து, நீர்விட்டு காய்ச்ச வேண்டும். அதை தினமும் அருந்தினால், சிறுநீர் அடைப்பு விலகுவதுடன் சிறுநீரகக்கற்கள் கரைந்து வெளியேறும்.
கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளின் கழிவுகளை முழுமையாக வெளியேற்றும் தன்மை கொண்டது. மூளைக்கு ஆற்றல் அளித்து மனதுக்கு உற்சாகத்தையும், உடலுக்கு சுறுசுறுப்பையும் தரக்கூடியது.
மூக்கிரட்டை இலை, பொன்னாங்கண்ணி மற்றும் கீழாநெல்லி இலைகளை சம அளவு எடுத்து நன்றாக அரைத்து, மோரில் கலந்து குடிக்கலாம். தொடர்ந்து இதை குடித்துவந்தால் மங்கலான பார்வை, வெள்ளெழுத்துக் குறைபாடுகள் நீங்கும்

இயற்கைவாழ்வியலைபின்பற்றுவோம்.

மகாபாரதம் போடும் விடுகதைக்கு விடை தெரியுமா?

ஊசியின் ஓட்டையில் யானை போய்விட்டது, ஆனால் அதன் வால் போக முடியவில்லை..! மகாபாரதம் போடும் விடுகதைக்கு விடை தெரியுமா?

பஞ்சபாண்டவர்களில் ஒருவரான சஹாதேவன் சந்தைக்குள் நுழைந்தான். அழகான குதிரையை அவனும் பார்த்தான். உடனே குதிரையின் உரிமையாளரை நெருங்கி, "குதிரை என்ன விலை? என்று கேட்டான்.

குதிரையின்_உரிமையாளரோ, "ஐயா! இந்த குதிரை விற்பனைக்கு அல்ல. நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொன்னால், குதிரையை இலவசமாகவே கொடுப்பேன்" என்றார். சகாதேவன் உடனே, "சரி கேள்வியைச் சொல்லுங்கள்" என்றான்.

குதிரையின் உரிமையாளர், "நன்றாகக் கவனியுங்கள்! பிறகு பதில் சொல்லுங்கள்! ஒரு பெரிய கிணறு. அதில் உள்ள தண்ணீரைக் கொண்டு ஏழு சிறிய கிணறுகளை நிரப்பலாம். ஆனால், அந்த ஏழு கிணறுகளில் இருக்கும் தண்ணீரை எடுத்து, மறுபடியும் அந்த பெரிய கிணற்றில் ஊற்றினால், பெரிய கிணறு நிரம்பவில்லை. இது ஏன்? நன்றாக யோசித்து பதில் சொல்லுங்கள்" என்றார். சஹாதேவனால் பதில் சொல்ல முடியவில்லை. அங்கேயே சந்தையில் உட்கார்ந்துவிட்டான்.

சற்று நேரத்தில்.... சகாதேவனை தேடிக்கொண்டு நகுலனும் சந்தைக்கு வந்து விட்டான். அவனும் குதிரையைப் பார்த்து, அதன் அழகில் மயங்கிப் போய் விலை கேட்டான். குதிரையின் உரிமையாளர், நகுலனிடம் ஒரு கேள்வி கேட்டார். "ஐயா! நான் ஒரு கேள்வி கேட்கிறேன். பதில் சொல்லிவிட்டு, குதிரையை இலவசமாகவே பெற்றுக்கொள்ளுங்கள்.

துணி தைக்கும் ஊசி இருக்கிறது அல்லவா? அதன் ஓட்டையின் வழியாக ஒரு யானை புகுந்து, அடுத்த பக்கம் போய்விட்டது. ஆனால் யானையின் வால் மட்டும் அந்த ஓட்டையின் வழியாகப் போக முடியவில்லை. ஏன்?" என்றார். நகுலனால் பதில் சொல்ல முடியவில்லை. அவனும் சந்தையில் உட்கார்ந்திருந்த சஹாதேவனுடன் சேர்ந்து உட்கார்ந்துவிட்டான்.

அதன் பிறகு ஒரு சில நிமிடங்களில், அர்ஜுனனும் அங்கு வந்தான். அவனும், குதிரையைப் பார்த்து, அதன் அழகில் மயங்கிப் போய் விலை கேட்டான். குதிரையின் உரிமையாளர், அர்ஜுனனிடமும் கேள்வி கேட்டார்.

"ஐயா! ஒரு வயல் காட்டில் நன்றாக விளைந்து இருந்தது. அதற்கு வேலியெல்லாம் போட்டு பாதுகாப்பாக வைத்து இருந்தார்கள். ஆனால் அறுவடை காலத்தில், அந்த வயல் காட்டில் எதுவுமே இல்லை. வேலியெல்லாம் அப்படியே இருந்தது. அப்படி இருந்தும் விளைந்த தானியங்களை எல்லாம் யார் எடுத்தார்கள்? பதில் சொல்லிவிட்டு, குதிரையை கொண்டு செல்லுங்கள்" என்றார். அர்ஜுனனால் பதில் சொல்ல முடியவில்லை. அவனும் ஆலோசனை செய்தபடி அங்கேயே உட்கார்ந்து விட்டான்.

சகோதரர்கள் மூவரும் இப்படியே உட்கார்ந்திருக்க, அரண்மனையில் அவர்களைக் காணாமல், தர்மர் திகைத்தார். பீமனைக் கூப்பிட்டு, "தம்பி! நம் தம்பிகள் மூவரையும் நீண்ட நேரமாக காணவில்லை. நீ போய், அவர்கள் எங்கு இருந்தாலும் தேடி அழைத்து வா!" என்றார்.

பீமனும் போய் தேடிப்பிடித்து, அர்ஜுனன், நகுலன், சஹாதேவன் மூவரையும் அழைத்து வந்தான். பாஞ்சாலியோடு அரியணையில் அமர்ந்திருந்த தர்மர், அவர்களைப் பார்த்ததும், "அர்ஜுனா! நீண்ட நேரமாக நீயும் உன் தம்பிகளும் இங்கு இல்லை. எங்கே போய் இருந்தீர்கள்?" எனக் கேட்டார். அதற்குப் பதிலாக அர்ஜுனன், நடந்ததை எல்லாம் சொல்லி, குதிரை உரிமையாளர் கேட்ட மூன்று கேள்விகளையும் சொன்னான்.

அதைக் கேட்டதும் தர்மர் நடுங்கினார். அதைப் பார்த்த தம்பிகள் எல்லாரும் திகைத்தார்கள். "அண்ணா! நீங்கள் நடுங்கும்படியாக என்ன நடந்தது?" எனக் கேட்டார்கள்.தர்மர் பதில் சொல்லத் தொடங்கினார்..

"தம்பிகளே! எதிர்காலத்தில் நடக்கப் போகும் விபரீதங்களை, அந்த மூன்று கேள்விகளும் சொல்கின்றன." அதை நினைத்துத்தான் நடுங்கினேன். "ஒவ்வொன்றாகச் சொல்கிறேன் கேளுங்கள்" என்று விரிவாகக் கூறினார்.

"உங்களிடம் கேள்வி கேட்டவன் கலி_புருஷன். அவன் கேட்ட முதல் கேள்வியில் பெரிய கிணறு என்பது பெற்றோர்கள். ஏழு சிறிய கிணறு என்பது அவர்களது பிள்ளைகள். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை, அவர்கள் எவ்வளவு பேர்களாக இருந்தாலும் சரி! அவ்வளவு பிள்ளைகளையும் காப்பாற்றுவார்கள். இதைத்தான் பெரிய கிணற்றின் தண்ணீரைக் கொண்டு சிறிய கிணற்றை நிரப்பினார்கள் என்பது குறிக்கிறது.

ஆனால், அந்த பிள்ளைகளோ, அவ்வளவு பேர்களும் சேர்ந்தால் கூட, தங்கள் பெற்றோரை காப்பாற்ற மாட்டார்கள். இதைத்தான் ஏழு சிறிய கிணறுகளில் உள்ள தண்ணீரைக் கொண்டு, பெரிய கிணற்றை நிரப்ப முடியவில்லை என்பது குறித்தது.

அடுத்து இரண்டாவது கேள்விப்படி, இனி வருங்காலங்களில் அக்கிரமங்கள், முறைகேடான செயல்கள் ஏராளமாக நடைபெறும். ஆனால், நல்ல செயல்கள் நடைபெறுவது மிகவும் கடினமாக இருக்கும். இதைத்தான் யானையே போன வழியில், அதன் வால் போக முடியவில்லை என்று சொல்லி இருக்கிறார்.

அடுத்து மூன்றாவது கேள்வியில், பயிர்கள் என்பது மக்களைக் குறிக்கும், பாதுகாக்கும் வேலி என்பது அதிகாரிகளைக் குறிக்கும். அதாவது மக்களைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே அவர்களை அழித்து விடுவார்கள். மக்கள்தான் வறுமையில் வாடுவார்களே தவிர, அதிகாரிகள் செழிப்பாகத்தான்



இருப்பார்கள்.

இதைத்தான், வேலி அப்படியே இருக்க, பயிர்கள் எப்படி அழிந்தன என்ற கேள்வி குறிப்பிடுகிறது என்று சொல்லி முடித்தார் தர்மர்.

கலியுகத்தில் உலகம் இப்படித்தான் இருக்கும் என்பது மகாபாரத காலத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

கிருஷ்ணர் வணங்கும் ஆறு பேர் யார்

கிருஷ்ணர் வணங்கும் ஆறு பேர் யார்

நாம் எல்லோரும் கிருஷ்ண பரமாத்மாவை வணங்குகிறோம். ஆனால் கிருஷ்ணரும் யார் யார் யாரையோ கும்பிடுகிறார். வியப்பாக இருக்கிறது அல்லவா? கள்ளக் கிருஷ்ணனின் இந்த ரகசிய செயலைக் கண்டு பிடித்தது வேறு யாரும் இல்லை. கிருஷ்ணனின் மனைவி ருக்மிணிதான் இதைக் கண்டுபிடித்தார்.

ஒரு நாள் கிருஷ்ணரும் வழிபாடு செய்வதைப் பார்த்துவிட்டு, “அன்பரே! நீர் யாரையோ வணங்குவது போலத் தெரிகிறது. அவர்கள் யார்? என்று கேட்டாள்.

கிருஷ்ணர் கொஞ்சமும் தயங்காமல் பதில் சொன்னார்:

*நித்யான்ன தாதா, தருணாக்னிஹோத்ரி, வேதாந்தவித், சந்திர சஹஸ்ர தர்சீ, மாஸோபாவாசீச, பதிவ்ரதா ச ஷட் வந்தனீயா மம ஜீவ லோகே*

பொருள்: இந்த மனிதர்கள் வாழும் பூமியில் நான் ஆறு வகையான மக்களை வணங்குகிறேன்:

தினமும் அன்னதானம் செய்வோர்,
தினமும் அக்னிஹோத்ரம் செய்வோர்,
வேதாந்தம் அறிந்தவர்கள்,
சஹஸ்ர சந்திர தரிசனம் செய்து சதாபிஷேகம் செய்துகொண்டோர், மாதா மாதம் உபவாசம் இருப்போர்,
பதிவ்ரதையான பெண்கள்.

அவர் சுருக்கமாகச் சொல்லி முடித்தாலும், பெரியோர்கள் இதற்குச் சொல்லும் விளக்கத்தை நாம் அறிந்தால்தான் அந்த ஆறு வகையான மக்களின் முழுப் பெருமையையும் நாம் அறிவோம்:

*(1).நித்ய அன்ன தாதா:* அந்தக் காலத்தில் ஒருவருக்குக் கிடைக்கும் வருமானத்தில் அல்லது நிலத்தில் அறுவடையாகும் விளைச்சலில் ஆறில் ஒரு பகுதியை மன்னருக்குக் கொடுத்து விட வேண்டும். மீதி ஐந்து பகுதிகளை அவர் ஐந்து பேரைப் பாதுகாக்கப் (பஞ்ச யக்ஞத்துக்கு) பயன்படுத்தவேண்டும். திருவள்ளுவரும் கூட:-

தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்று ஆங்கு ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை (43)

பொருள்: இறந்து போய் தென் திசையில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம் முன்னோர்கள், கடவுள், வீட்டிற்கு வரும் விருந்தாளிகள், சுற்றத்தார் (இதில் நாம் வளர்க்கும் பசு முதலிய பிராணிகளும், வீட்டில் ஊர்ந்து செல்லும் எறும்புகளும் அடங்கும்), தனது குடும்பம் என்ற ஐந்து பேரையும் போற்றுவது இல்வாழ்வானின் தலையாய கடமை.

மனு ஸ்மிருதியில் 3-72 –ல் மனு சொன்னதை வள்ளுவரும் சொல்லி இருக்கிறார். ஆகவே இமயம் முதல் குமரி வரை ஒரே கொள்கை இருந்திருகிறது. விருந்தாளிகளுக்குச் சாப்பாடு போட்டவுடன் தான் வீட்டிலுள்ளோர் சாப்பிட வேண்டும்.

*அதிதி தேவோ பவ:* (விருந்தாளி என்பவன் இறைவனுக்குச் சமம்) – என்று வேதம் கூறுகிறது.

அந்தக்காலத்தில் தான் உண்பதற்கு முன்னால் வாசல் திண்ணையில் சிறிது நேரம் உட்கார்ந்து யாரேனும் விருந்தாளிகள் அல்லது வழிப்போக்கன் வருகிறார்களா என்று பார்த்துவிட்டே உணவருந்த செல்வார்கள்.

தர்மர் நடத்திய ராஜ சூய யாகத்தில் புகுந்து பரபரப்பை உண்டாக்கிய கீரி சொன்ன கதை எல்லோருக்கும் தெரியும். இப்படி தினமும் அன்னதானம் செய்வோர், இது தவிர அன்னக்கொடி ஏற்றி ஆயிரக்கணக்கானோருக்கு அன்னம் இடுவோர் ஆகியோரை க்ருஷ்ணன் வணங்குகிறார். இவர்கள் பிரதிபலன் எதிர்பார்க்காமல் அன்னம் இடுகிறார்கள்!!

*(2).தருண அக்னிஹோத்ரி:* அந்தக் காலத்தில் ஏழு வயதில் பூணூல் போட்டவுடன் பிராமணச் சிறுவர்கள் சமிதாதானம் என்று தினமும் அக்னி வளர்த்து சமித்துக்களை நெய்யுடன் அக்னியில் ஆகுதி கொடுப்பார்கள். குருகுலம் முடித்து வீட்டுக்கு வந்தவுடன் இளைய பருவத்திலேயே திருமணமும் நடந்துவிடும். பின்னர் அவர்கள் தினமும் ஔபாசனம் என்ற அக்னி காரியத்தைச் செய்து வருவர். இதை தவிர அக்னிஹோத்ரம் என்ற அக்னி காரியம் சூரியனை உத்தேசித்து சரியாக சூரியன் உதிக்கும் காலத்திலும் அஸ்தமனம் ஆகும் காலத்திலும் நடத்த வேண்டும். இதை எல்லோரும் செய்துவிட முடியாது. தனது தந்தை ஒரு அக்னிஹோத்ரியாக இருந்தால் மட்டுமே தானும் அக்னிஹோத்ரம் செய்யமுடியும். இவர்கள் காணக்கிடைப்பது அபூர்வம். இப்படித் தவறாமல் செய்துவரு வோரை கிருஷ்ணனே வணங்குகிறார் நாம் வணங்கத் தயக்கம் உண்டோ!

*(3).வேதாந்த வித்:-* வேதங்கள் நான்கு. அதன் முடிவில் இருப்பது உபநிஷத் (வேத+ அந்தம்/முடிவு). அதை உணர்ந்தவர்கள் வேதாந்திகள். அஹம் பிரம்மாஸ்மி, தத்வம் அஸி போன்ற ஞான உணர்வு படைத்தவர்கள். வேதாந்தத்தில் நாட்டம் ஏற்பட வேண்டும் என்றால் பலகோடி ஜென்மங்களில் புனியம் செய்து இருக்க வேண்டும். உலக விஷயங்களை துறந்து வேதாந்த விஷயங்களுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்து வேதாந்த சிந்தனையிலேயே வாழ்வை கழிப்பவன் வேதாந்த வித்.
அந்த வேதாந்திகளையும் கிருஷ்ணன் வணங்குகிறார்! இவர்களும் காணக்கிடைப்பது அபூர்வம்.

*(4).ஆயிரம் பிறை கண்ட அபூர்வ சிகாமணி:* சிவனுடைய தலையில் இருப்பது மூன்றாம் பிறைச் சந்திரன். அதை மாதம் தோறும் அமாவாசைக்குப் பின்னர் மூன்றாம் நாளில் காணலாம். அடுத்த முறை காண 29 நாட்கள் காத்திருக்க வேண்டும் இப்படி ஆயிரம் முறை காண 81 ஆண்டுகள் பிடிக்கும். அப்பொழுது அவர்கள் சதாபிஷேகம் செய்து கொள்வார்கள். அத்தகையோரையும் கண்ணபிரான் வணங்குவார். இந்த பிறைச் சந்திரனைக் காணும் வழக்கத்தை ஏனைய மதத்தினரும் நம்மிடமிருந்து கற்றனர்.

ஒருவர் ஆயிரம் முறை சந்திரனைக் காண வேண்டுமானால் ஆயிரம் தடவை சிவனை நினைத்திருக்க வேண்டும். அடடா! மேகம் மறைக்கிறதே. இன்னும் சந்திரனைக் காணவில் லையே என்று ஏங்கி சிவனை நினைத்து நிற்பர். இன்னும் பலர் அவர்களது இஷ்ட தெய்வத்தையும் குல தெய்வத்தையும் வேண்டிக் காத்திருப்பர். ஆகையால்தான் கிருஷ்ணன் அவ்வளவு மதிப்பு தருகிறான்.

*(5) மாத உபவாசி:* மாதம் தோறும் இரண்டு ஏகாதசிகளிலும் உபவாசம் – உண்ணா நோன்பு—கடைப் பிடிக்க வேண்டும். அதையும் ஒழுங்காகக் கடைப்பிடிக்க வேண்டும். சுத்த உபவாசம் என்பது நிர்ஜலமாக (தண்ணீர் கூட பருகாமல்) அல்லது தண்ணீர் மட்டுமே பருகி உபவாசம் இருப்பது. இப்படி இருப்போர் கண்ணனால் வணங்கப் படுவர். இது எளிதல்ல.இப்படி இருப்போர் மிகமிகக் குறைவு. அவர்களை நாமும் வணங்குவோம்.

(6)இறுதியாக கண்ணன் கை எடுத்துக் கும்பிடுவது யாரை என்றால் *பதிவ்ரதா விரதம் அனுசரிக்கும் கற்புக்கரசிகளை!!* உலகில் வேறு எங்கும் இல்லாத ஒரு அணுகு முறை இந்து மதத்தில் மட்டும் உண்டு. சாத்திரத்தில் சொல்லபட்ட எல்லா விஷயங்களையும் மூன்று வகையில் அனுஷ்டிக்க வேண்டும். தமிழ் மொழியில் இதற்கு முன்று அற்புதமான சொற்களை படைத்து வைத்துள்ளனர்: உண்மை,வாய்மை, மெய்மை (மனோ, வாக், காயம்). இந்த மூன்று உறுப்புகளாலும் வேறு ஒரு ஆடவனையும் நினையாது கனவனை மட்டுமே தெய்வம் போலக் கருதுபவர் “பெய் எனப் பெய்யும் மழை” — என்பான் பொய்யா மொழிப் புலவன் வள்ளுவன் (குறள் 55).

அட! இப்படிப் பத்து கற்புக்கரசிகளைக் கண்டுபிடித்து வறண்ட பகுதிகளில் எல்லாம் மழை பொழியச் செய்துவிடலாமே! அவர்களுக்கு மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் போட்டுவிடலாமே என்று சிலர் நினைக்கலாம். இதன் தாத்பர்யம் என்னவென்றால் அவர்களிடம் அவ்வளவு மகத்தான சக்தி இருக்கிறது. ஆனால் அவர்கள் எளிதில் அதைப்
பிரயோகிக்க மாட்டார்கள்.

அசோகவனத்தில் சீதையைக் கண்ட அனுமன் கெஞ்சுகிறான்: தாயே உங்களைக் காணாமல் ராமன் தவிக்கிறான். என் முதுகில்/ தோளில் ஏறி அமருங்கள். அடுத்த நிமிடம் இராமனிடம் சேர்ப்பிக்கிறேன் என்று. சீதை சிரிக்கிறாள். என் கற்பின் ஆற்றலால் ஈரேழு புவனங்களையும் எரிக்கும் ஆற்றல் எனக்கு உண்டு. ஆயினும் கணவனின் வில் ஆற்றலுக்கு இழுக்கு உண்டாக்கும் எதையும் செய்ய மாட்டேன் என்கிறாள்.

நமக்கும் தெரியும் ராவணன் வதம் — என்பதே இராமாவதாரத்தின் நோக்கம் என்று.

உலகில் ஏழு நாடுகளிடம் அணுகுண்டு உள்ளது. எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண அணுகுண்டைப் பிரயோகிக்கிறார்களா? இல்லையே. இது போல பெண்களிடம் உள்ள மகத்தான ஆற்றலை அவர்கள் அரிதே பயன்படுத்துவர்.

அந்தக் காலத்தில் எல்லா பெண்களும் திரிகரண சுத்தியுள்ள (சொல், செயல், சிந்தனை = மனோ வாக், காயம்) கற்புக்கரசிகளாக இருந்தார்கள். இதனால்தான் மனு சொன்னார்:

எங்கு பெண்கள் மதிக்கப்படுகிறார்களோ, அங்கு தெய்வம் வாழும். எங்கு பெண்கள் மதிக்கப்பட வில்லையோ அங்கு என்ன நல்லது செய்தாலும் அதற்குப் பலன் இல்லை (மனு 3-56)

மரியாதைக் குறைவாக நடத்தப்பட்ட பெண்கள் சாபம் இட்டால் அந்தக் குடும்பங்கள் அடியோடு அழிந்து போகும் (மனு 3-59)

தந்தைமார்கள், கணவன்மார்கள், மைத்துனன்கள், சகோதர்கள் ஆகியோருக்கு அதிர்ஷ்டம் அடிக்க வேண்டுமானால் பெண்களை மதிப்போடு நடத்துங்கள். அவர்களை ஆடை அணிகலன்களால் அலங்கரியுங்கள் (மனு ஸ்மிருதி ஸ்லோகம் 3-55).

இப்படியெல்லாம் பாரட்டப்பட்ட பதிவிரதைகளை கண்ணன் வழிபடுவதில்
வியப்பேதும் உண்டோ? கணவனை தெய்வமாக நினைக்கும் பெண் இந்த காலத்தில் அபூர்வம் என்று சொல்லவா வேண்டும்?

*கண்ணன் வணங்கும் ஆறுவகை மக்களை எங்கெங்கெலாம் நீங்கள் காணுகிறீர்களோ அங்கெங்கெல்லாம் நிலத்தில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து கும்பிடுங்கள்!!* உங்களுக்கும்
சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.

ஸ்ரீராமஜயம்.

ஜோதிடம்

ஜோதிடர்கள் தங்கள் வாழ்வில் ஏற்றம் பெற பன்னிரண்டு விதிகளை வாராகமிஹிரர் பரிந்துரைக்கிறார்.

1. அத்வேஷி - ஜோதிடருக்கு யாரிடமும் விருப்போ, வெறுப்போ, துவேஷமோ இருக்கக் கூடாது.

2. கணிதாஹம பராகக -  வானமண்டலம் பற்றியும், ஆகமங்களைப் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும்.

3. நித்ய சந்தோஷி - நித்தமும் மகிழ்ச்சியாக,  இருப்பதைக் கொண்டு வாழ வேண்டும்,

4. முகூர்த்த குண தோஷ ஞானகா -
நல்ல, கெட்ட முகூர்த்தங்களையும், எவை நன்மை அல்லது தீமை பயக்கும் என்பதையும் அறிந்திருக்க வேண்டும்.

5. வாக்மி- வாக்குப் பலிதமுள்ளவராக இருக்க வேண்டும்,

6. குசல புத்திமான் -  ஒரு விஷயத்தை புத்தியோடு, ஞானத்தோடு கூறவேண்டும்.

7. சாந்தசஹா- சாந்தமாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டும்,

8. அமிர்த வாக்யான் - இனிய வார்த்தைகளைப் பேச வேண்டும்.

9. சௌம்யான் - சாத்வீக குணம் இருக்க வேண்டும்.

10. திரிகாலக்ஞான் - கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் பற்றி அறிந்து  கொண்டு தெளிவாகக் கூற வேண்டும்.

11. ஜித்தேந்திரியஹா-
தனது இந்திரிய ஆசைகளைக் கடந்தவராக இருக்க வேண்டும்.

12. நித்ய கர்மார்த்தா - தினசரி தனது குல ஆச்சார, அனுஷ்டானங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.

இந்தப் பன்னிரண்டு விதிகளை ஜோதிடர்களுக்கு வராகமிஹிரர் கூறி, இவற்றை அனுசரிப்பவர்களை "தெய்வக்ஞன்" என்கிறார்.....

அக்னி புராணம் பகுதி-1
 

18 புராணங்களில் ஒன்றான அக்னி புராணம் 15,000 ஸ்லோகங்கள் கொண்டது. நைமிசாரண்யத்தில் சவுனகாதி முனிவர்கள் பகவான் ஸ்ரீஹரியைக் குறித்து ஓர் அற்புத யாகத்தைத் தொடங்கினர். அதைக் காண வந்த சூதமுனிவரைப் பார்த்து முனிவர்கள் பிரமம் எனப்படும் பரம்பொருளின் சொரூபத்தை விவரித்துக் கூறுமாறு வேண்ட, அவரும் விளக்கிக் கூற ஆரம்பித்தார். மகாவிஷ்ணுவே பிரமம், பரம்பொருள் ஆவார். இந்த அண்ட சராசரங்களையும் தோற்றுவித்தவர் அவரே. தன்னையே ஒருவன் பிரமமாக உணரும் போது பிரம்ம சொரூபத்தை அடைகிறான். இந்த ஞானம் பெற இரண்டு வழிகள் உள்ளன. 1) யாகம் முதலனா கர்மாக்களைக் கடைபிடிப்பது. 2) கேள்வி ஞானம். அதாவது, பரம்பொருளைப் பற்றிச் சாஸ்திரங்கள் மூலம் அறிந்து, பகவானின் அவதார ரகசியங்களைக் கேட்டும் அறிதல் என்றார். அக்னி தேவனால் சொல்லப்பட்ட புராணம் அக்கினி புராணம் முதலில் பரந்தாமன் ஹரி சாதுக்களை ரக்ஷிக்கவும், துஷ்டர்களை அழிக்கவும் எடுத்த பத்து அவதாரங்களைப் பற்றிக் கூறலானார். அவை மச்ச, கூர்ம, வராஹ, நரசிம்ம, வாமன, பரசுராம, ஸ்ரீராம, கிருஷ்ண, புத்த, கல்கி அவதாரங்கள். முதல் ஐந்து பற்றி பல புராணங்களில் (குறிப்பாக விஷ்ணு, பாகவதம், மச்ச, கூர்ம, வராக, வாமன புராணங்களில் தனித்தனியே விளக்கப்பட்டுள்ளன. நரசிம்மாவதாரம் பிரகலாதன் வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. ராமாவதாரம் இராமாயணத்திலும், கிருஷ்ணாவதாரம் பாகவதத்திலும் விரிவாக கூறப்பட்டுள்ளன. கல்கி புராணம் தனியாக விவரிக்கப்படுகிறது. பரசுராம அவதாரமும் வேறொரு புராணத்தில் கூறப்பட்டுள்ளது. புத்தர் அவதாரம் கவுதமபுத்தர் என்ற பவுத்த மத நிறுவனருடையதே. கல்கி அவதாரம் இனிவர உள்ளது. ஆனால், அது பற்றியும் பல புராணங்களில் கூறப்பட்டுள்ளது.எனவே, கல்கி புராணம் என்பதும் 18 புராணங்களில் ஒன்றாகப் பரிணமிக்கின்றது. 2. கிருஷ்ணாவதாரம்-குறிப்புகள் பாகவதம் தசம ஸ்கந்தத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், கிருஷ்ணனைப் பற்றிய சில விவரங்கள் வெவ்வேறு நிலையில் விஷ்ணு புராணம், நாரத புராணம் ஆகியவற்றிலும் கூறப்பட்டுள்ளன. அக்னி புராணத்தில் அவை யாவும் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. கிருஷ்ணன் மனைவியர்களில் எழுவர்பட்ட மகிஷியாவர். அவர்களுள் சத்தியபாமைக்காக தேவலோகத்திலிருந்து பாரிஜாத மரம் கொண்டு வந்தது குருகுலவாசம் முடிந்து குரு தக்ஷிணையாக அவரது இறந்த மகனை உயிருடன் கொண்டுவந்தது, ருக்மிணியின் குமாரம் பிரத்தியுத்மன் அசுரனால் தூக்கிச் செல்லப்படல், அசுரனைக் கொன்று விட்டு அவன் மாயாவதியுடன் துவாரகை திரும்புதல், மற்றும் உஷை, அநிருத்தன் திருமணம், பிரம்பனையும், துவிவிதன் என்ற வானரனையும் பலராமன் வதம் செய்தது, பாண்டவர்களுக்குப் பல நேரங்களில் பலவிதமாக உதவி அருள் செய்தது, பாரதப் போர், அசுவத்தாமனால் உப பாண்டவர்கள் கொல்லப்படுதல், உத்தரை கர்ப்பம் அழியாமல் உத்தரையைக் காப்பாற்றியது. கடைசியில் அவர் தன் சோதிக்குத் திரும்பியது முதலியவை சுருக்கமாக கூறப்பட்டுள்ளன. 3. சுவயம்பு மனுவின் சந்ததி பகவான் விஷ்ணு தன் உந்திக் கொடி கமலத்தில் பிரமனைத் தோற்றுவித்து அவர் மூலம் அண்ட சராசரங்களை படைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. பிரம்மன் தம்முடைய தேகத்தை ஆண், பெண் என இரு கூறாக்கி மக்களை வளர்க்க முற்பட்டார். சுவயம்பு என்பவனாகிய முதல் மனு சதரூபை என்ற பெண்ணை மணந்து அவளிடம் பிரிய விரதன், உத்தானபாதன் ஆகிய இரண்டு பிள்ளைகளையும், உத்தானபாதன் சுருதி என்ற மனைவியிடம் உத்தமன் என்ற பிள்ளையையும், சுநீதி என்பவளிடம் துருவன் என்ற பிள்ளையையும் பெற்றான். துருவன் வரலாறு-(விஷ்ணு புராணத்தில் விரிவாக உள்ளது காண்க). இதற்குப் பிறகு இவர்கள் வம்சத்தில் பலர் தோன்றி வளர்ந்து மக்கள் பெருக்கத்தை உண்டாக்கியது. இவ்வம்சத்தில் வந்த பிரசேதசுர்கள் மரங்களைத் தீயிட்டு அழிக்க, சந்திரன் மகள் மாரீஷையை மணந்து மரங்களை வெட்டாமல் தடுத்தான். மாரீஷையிடம் தக்ஷன் பிறந்தான். தக்ஷனிடம் பிறந்தவர்களிலே சசிதேவியைப் பரமசிவனுக்கும், இருபத்தேழு விண்மீன்கள் அவன் மகள்களாகப் பிறக்க-அவர்களைச் சந்திரனுக்கும், பதின்மூன்று பெண்களைக் காசியப முனிவருக்கும் மணம் செய்து வைத்தான். 4. காசியபருடைய சந்ததி சாக்ஷúஷ மன்வந்தரத்தில் காசியபருக்கு அதிதியிடம் தேவர்களும், வைவசுவத மன்வந்தரத்தில் பன்னிரண்டு ஆதித்தர்களும் பிறந்தனர். காசியபருக்கு இரணியாட்சன், இரணியகசிபு என்பவர்களும், மற்றும் அநேக புத்திரர்களும் பிறந்தனர். காசியபரின் மனைவி சுரசை என்பவளுக்கு ஆயிரம் பாம்புகள் தோன்றின. கத்துரு என்பவளுக்கும் ஆயிரம் பாம்புகள் தோன்றின. குரோதை என்பவளுக்குக் கொம்புள்ள மிருகங்கள், தறை என்பவளுக்கு நீர் வாழ்வன, பறவைகள், சுரபிக்குப் பசுக்கள், எருமைகள், இலை என்பவளுக்குப் புல் பூண்டுகள், கவதை என்பவளுக்கு யக்ஷர்கள், ராக்ஷசர்கள், முனி என்பவளுக்கு அப்சரசுகள், அரிஷ்டை என்பவளுக்குக் கந்தர்வர்கள் ஆகியோர் பிறந்தனர். தாமரை காசியபரிடம் ஆறு பிள்ளைகளும் மற்றும் காகங்களும், குதிரைகளும், ஒட்டகங்களும் பிறந்தன. வினதை என்பவளுக்கு அருணனும், கருடனும் பிறந்தனர். பின் ஒவ்வொருவருக்கும் மேன்மேலும் பல குழந்தைகள் பிறந்திட காசியபரின் சந்ததி வளர்ந்தது. மருத்துக்களும் இந்த சந்ததியைச் சேர்ந்தவர்களே. 5. பிரமனிடமிருந்து தோன்றிய படைப்புக்கள் பிராகிருத சிருஷ்டியில், பிரமனிடமிருந்து தோன்றிய மகத் 1) தன் மாத்திரைகள் என்ற பூதங்கள். 2) வைகாசிகள் எனப்படும் இந்திரியங்கள். இந்த மூன்றுக்குப் பின் முக்கியமாக சிருஷ்டிகள். 3) திர்யச் சுரோதம் அசையாப் பொருள்கள். 4) பறவை, மிருகங்கள். 5) தேவர்கள் முதலியோர், தேவசர்க்கம். 6) அரோவச் சுரோதசுக்கள். 7) தமஸ், சத்வகுணங்கள் கூடி உண்டான அனுக்கிரங்கள். 8) 4 முதல் 8 வரை உள்ள ஐந்தும் வைகிருத சிருஷ்டியாகும். பிரமனுடைய படைப்புகளில் கவுமாரம் என்பது கடைசி ஒன்பதாவது சிருஷ்டியாகும். பிருகு, க்யாதி என்பவளையும், மரீசி, சம்பூதி என்பவளையும், அத்திரி அனுசூயையும், வசிஷ்டர் ஊர்ஜை என்பவளையும், அக்கினியின் பத்தினி சுவாஹை, அதர்மனின் மனைவி அம்சை, இத்தகைய சேர்க்கையால் மக்கள் இனப்பெருக்கம் தொடர்ந்து நடைபெற்றன. பிரமன் கண்களில் நீர் விட ருத்திரன் தோன்றினான். 6. தெய்வ ஆராதனை முறை பலன்கள் வைணவத்தில் முதலில் விஷ்வக் சேனரைத் துதிக்க வேண்டும். விஷ்ணு ஆராதனையில் முதலில் அச்சுதனையும், அடுத்து ததா, விதாதா, கங்கா முதல் ஞானம், கர்மயோகம் ஆகியவற்றிற்கு வாழ்த்துக் கூற வேண்டும். பின்னர் சந்தோஷம், சத்தியம் முதல் வசுதேவன் மற்றவர்களையும் வாழ்த்துக் கூறி வணங்க வேண்டும். அடுத்து விஷ்ணுவை முடிமுதல் அடிவரை, மற்றும் பஞ்சாயுதம் ஆகியவற்றையும் போற்றிக் கொண்டாட வேண்டும். பிறகு திருமேனியில் உள்ள அலங்காரப் பொருள்கள் மற்றும் தேவதைகளை வணங்கித் துதிக்க வேண்டும். அடுத்து ஈசானன், அவரது ஆயுதங்கள், ரிஷபம் ஆகியவற்றை இந்த வட்டத்தில் துதிக்க வேண்டும். சிவனை ஆராதிக்கையில் நந்தி முதல் பலவித சக்திகள், தர்மம் மற்ற தெய்வங்களுக்கு வணக்கம் செலுத்த வேண்டும். அடுத்து வாமை முதல் சிவை வரை உள்ள அம்பிகைகளை முறைப்படி துதிக்க வேண்டும். சூரிய ஆராதனையில் முதலில் திண்டி, உச்சைசிரவஸ் ஆகியோரைப் பின்னர் தீப்தை முதல் பிமலை ஆகியோருக்கு நமஸ்காரம் சொல்ல வேண்டும். பிறகு மந்திரம் கூறி சூரியனின் ஆசனம், கிரணம் போன்றவற்றை முறையே வணங்க வேண்டும். மந்திரங்களால் ஆராதித்தல் தெய்வ ஆராதனையின் போது முதலில் புறத்தூய்மை மிகமிக அவசியம். மந்திரங்களைச் சொல்லும் போதும் ஜபிக்கும் போதும் ஓம் சேர்த்தே சொல்ல வேண்டும். எள்ளால், நெய்யால் ஹோமம் செய்ய வேண்டும். மந்திரங்களை உச்சரித்து நீராட வேண்டும். தியானம், ஜபம் ஆகியவற்றிற்கு முன் ஆசமனம், பிராணாயாமம் செய்ய வேண்டும். கிழக்கு நோக்கி அமர்ந்து ஜபம் செய்ய வேண்டும். கரநியாசம், அங்கநியாச முறைகளால் பகவானை வணங்கி, பின்னர் முத்திரைகளைக் காட்டி உபசாரங்கள் செய்ய வேண்டும். இதுவரை கூறப்பட்டவை விஷ்ணுவை மந்திரங்களால் ஆராதிக்கும் முறை. ஹோமம் செய்தல் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள அளவுகளில் ஓமகண்டம் தயார் செய்து, கைப்பிடி நீளமாகவும் கரண்டிப் பகுதி குழிவாகவும் உள்ள மரக்கரண்டி கொண்டு அக்னியில் நெய்யை ஓமம் செய்ய வேண்டும். ஹோமம் தொடங்கும் முன் குண்டத்தினுள்ள நெருப்புக்கு அக்கினியின் சாந்நித்தியம் ஏற்படச் செய்ய வேண்டும். 
ஹரியைத் தியானித்து சமித்துக்களை எடுத்து அக்கினியில் சமர்ப்பிக்க வேண்டும். குண்டத்துக்குக் கிழக்கே மூன்று தர்ப்பங்களை வைக்க வேண்டும். ஓமத்துக்கான மரக்கரண்டி, நெய், அன்னம், தர்ப்பை ஆகியவற்றை வைத்துக் கொள்ள வேண்டும். கும்பத்தில் நீரை மந்திரித்து அப்புனித நீரால் எல்லாவற்றையும் புரோக்ஷிக்க வேண்டும். அக்கினி குண்டத்தின் முன் நெய்யை வைக்கவும். தர்ப்பையால் நெய், ஹோமக் கரண்டி ஆகியவற்றைச் சுத்திகரித்த பின்னர் ஹோமத்தைத் தொடங்க வேண்டும். ஹோமம் செய்யத் தகுதி பெற்றவனே அதைச் செய்ய வேண்டும். ஹோமம் முடித்து பகவான் விஷ்ணுவைப் பூஜிக்க வேண்டும். விஷ்ணு பூஜைக்கு அறுபத்திநான்கு உபசாரங்கள் சொல்லப்பட்டுள்ளன. 7. மனிதனுக்கான கர்மாக்கள் ஒவ்வொருவனுக்கும் விதிக்கப்பட்ட கர்மாக்கள் நாற்பத்தெட்டு. அவை முக்திக்குச் சாதகமானவை. திருமணம் முடிந்ததும் கர்ப்பாதானம், பும்சவனம், சீமந்தம்; குழந்தை பிறந்ததும் ஜாதகர்மம், நாமகரணம், அன்னப் பிரசானம்; குடுமி வைத்து உபநயனம் ஆகியவை. பிரம்மச்சாரி ஏழு வகை விரதங்கள் அனுஷ்டிக்க வேண்டும். வைஷ்ணவி, பரிதி, பௌதிகி, ஸ்நௌதிகி முடித்து கோதானம். கிரகஸ்தாஸ்ரமவர்க்கு இவற்றுடன் யாக, யஜ்ஞமும் சேர்ந்து ஏழு ஆகும். ஆவணி, மார்கழி, சித்திரை, ஐப்பசி மாதங்களில் செய்யப்படும் பார்வண சிராத்தங்கள் எட்டு. ஆதானம், அக்னிஹோத்திரம், தசம், பவுர்ணமாசகம், சாதுர்மாஸ்யம், பசுவந்தனம், சவுத்திராபணி ஆகிய ஏழும் ஹரி யக்ஞங்கள். அக்குனிஷ்தோமம், அத்யக்கினி, ஸ்தோமம், உக்தம், சோடசம், வாஜ்பேயகம், அதிராத்திரம், அப்தயாமம் ஏழும் சோமஸம்ஸ்தம் ஆகும். மேலும் ஹிரண்யநங்ரி, ஹிரண்யம் போன்று ஆயிரக்கணக்கில் சொல்லப்பட்டுள்ளன. இவை எல்லாவற்றுக்கும் மேலாகச் சிறந்து விளங்குவது அசுவமேத யாகம். உயிர்களிடம் இரக்கம், பிழை பொறுத்தல், எளிமை, சுத்தம், சுறுசுறுப்பு, பிறர் நலம் பேணுதல், தாராளம், பொருளில் பற்றற்று இருத்தல் எனச் சீவம் எட்டு வகை ஆகும். கர்மாக்களைச் செய்து, பகவானை அர்ச்சித்து, பகவான் நாமத்தை உச்சரிப்பதால் ஒருவன் நற்கதி அடைகிறான். 8. ஆலயம் எழுப்புதல் இறைவனுக்கு ஆலயம் எழுப்புபவன் முற்பிறவிகளில் செய்த பாவங்களிலிருந்து விடுபடுகிறான். ஆலயம் எழுப்ப நினைத்தாலே பாவ விமோசனம் உண்டு. கிருஷ்ணனுக்குக் கோயில் கட்டுபவரை ஆதரிப்பவர்கள் பாப விமோசனம் பெற்று அச்சுதன் லோகம் அடைவர். ஹரிக்கு ஆலயம் எழுப்புவதனால் தன் வம்சத்தில் தனக்கு முன் தோன்றியவர்கள், பின் தோன்றுபவர்கள் ஆகிய அனைவரும் விஷ்ணுலோகம் அடைவர். ஆலயம் எழுப்புவதனால் பிரம்மஹத்தி பாவம் விலகும், புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலன் கிடைக்கும். ஓர் ஆலயம் எழுப்பினால் சொர்க்கம், மூன்று எழுப்பினால் பிரம்ம லோகம், ஐந்துக்கு கைலாயம், எட்டு எழுப்பினால் வைகுந்தம் அடைவர். சகல சவுபாக்கியங்களுடன் வாழ்ந்து பிறவாப் பேரின்பம் அடைவர். ஏழை (அ) பணக்காரன், சிறிய (அ) பெரிய கோயில் கட்டுவோர்க்கும் ஒரே விதமான பலன்கள் கிட்டும். திருமாலுக்கு ஆலயம் எழுப்புவோரின் குடும்பம் வைகுந்தத்தில் ஆனந்தமாக இருக்கும். தான் ஈட்டிய பொருளில் ஒரு பகுதியைக் கொண்டாவது கிருஷ்ணன் கோயில் எழுப்ப வேண்டும். செல்வத்தை ஆலயம் எழுப்புவதில் செலவு செய்பவன் வைகுந்தம் அடைகிறான். அவனுக்கு மறுபிறவி இல்லை. 9. இறைவன் திருமேனி பிரதிஷ்டை ஆலய நிர்மானம் முடிந்த பிறகு அதில் இறைவன் திருமேனிகளைப் பிரதிஷ்டை செய்ய வேண்டும். மண், மரம், செங்கல், கருங்கல், ஐம்பொன், தங்கம் ஆகியவற்றினால் பிரதிமைகள் செய்யப்படுகின்றன. யமனுடைய ஆணை இறைவனுக்கு ஆலயம் எழுப்பியவனை, திருமேனியைச் செய்து அளிப்பவனை நரகத்துக்கு அழைத்து வரக்கூடாது. இறைவனைச் சிந்திப்பவர்கள், அவர் புகழ்பாடுபவர்களை, நாள்தோறும் அர்ச்சித்து வழிபடுபவர்களையும் தூரத்தில் காணும் போதே நெருங்காது விலகிவிட வேண்டும். ஆலயம் எழுப்பியவனது வம்சனத்தினரைக் கூட நெருங்கக் கூடாது. மத்திய தேசம், அதைச் சார்ந்த பிரதேசங்களில் உள்ள பிராம்மணர் ஆலய கும்பாபிஷேகம் ஆகிய காரியங்களைச் செய்யலாம். அவர்கள் தமது ஞானத்தால் பிரம்மனாகவே ஆகின்றனர். எனவே, அவர்களையே ஆச்சாரியனாகக் கொள்ள வேண்டும். பிரதிஷ்டை செய்யப்படும் இறைவன் திருமுகம் நகரத்தை நோக்கி இருக்க வேண்டும். விஷ்ணுவுக்கு எந்த இடத்திலும் ஆலயம் அமைக்கலாம். ஆலயம் எழுப்பவேண்டிய நிலத்தைச் சுத்தமாக்கி சமன்படுத்த வேண்டும். பூத பலிகர்மா செய்ய வேண்டும். தயிர், மாவு, கோதுமை, பொரி, உளுந்து, ஆகியவற்றை நிவேதனம் செய்து அஷ்டாக்ஷரி மந்தரத்துடன் பிரார்த்தனை செய்து நிலத்தை உழ வேண்டும். வாஸ்து பூஜை, மற்ற தேவதா பூஜைகள் செய்ய வேண்டும். புரோகிதருக்குப் பசு, ஆடை, ஆபரணங்கள் ஆகியவற்றைத் தானம் செய்ய வேண்டும். வைஷ்ணவர்கள், சிற்பிகளைக் கவுரவிக்க வேண்டும். ஆலய நிர்மாணத்திற்கான செங்கற்கள் 12 விரல்கடை நீளமும், 4 விரற்கடை அகலமும் இருக்க வேண்டும். பொருள்களை மந்திரங்கள் கூறி தூய்மைப்படுத்தி உபயோகிக்க வேண்டும். ஹோமம் வளர்த்து முறைப்படி பூஜை செய்து, பிராயச் சித்தம் முதலான ஹோமங்களைச் செய்து முடிக்க வேண்டும். பூமாதேவி ஆராதனம், கடைக்கால் போட்ட பின் புரோகிதருக்கு தானங்கள் அளிக்க வேண்டும். வாஸ்து யஜ்ஞம் மறுபடியும் ஒருமுறை நடத்த வேண்டும். ஆலயத்தில் மண்டபங்கள், பிராகாரம், மதிற்சுவர் ஆகியவை முறைப்படி அமைக்கப்பட வேண்டும். இறைவன் திருஉருவங்கள் வடிவமைக்க மண், கம்பளி, இரும்பு, ரத்தினங்கள், கல், சந்தனம், மலர்கள் ஆகியவற்றில் ஒன்றை உபயோகிக்கலாம். மலைகளிலிருந்து பாறை கொண்டு வரப்பட வேண்டும். கிடைக்காவிடில் சிம்ம வித்தை என்ற கர்மாவை உரிய மந்திரங்களுடன் செய்யப்பட்டு, அகப்படும் பாறையைக் கொண்டு வர வேண்டும். ஒரு சிறு பந்தலில் பாறையை வைத்து பகவானை வேண்டிக் கொண்டு வேலையைத் தொடங்க வேண்டும். வேலை செய்யாத நேரங்களில் பாறைகளைத் துணியால் மூடிவைத்திருக்க வேண்டும். ஹயக்ரீவர் இறைவன் திருமேனியைப் பாறையிலே செதுக்குவதற்கான அளவு விவரங்களைக் கூறியுள்ளார். தேவியின் திருஉருவத்தைச் செதுக்குவதற்கான அளவுகளையும் கூறுகிறார். சாலக்கிராமங்கள் பற்றி விவரிக்கிறார். ஸ்ரீமந்நரநாராயணனின் திருநாமங்களில் சிலவற்றின் பெயரில் பலவகையாகச் சொல்லப்படுகின்றன. ஒவ்வொரு வகைக் கல்லுக்கும் நிறம், தோற்றம், அளவு, குறிகள் முதலியன தனித்தனியே சொல்லப்பட்டுள்ளன. 10. கடவுளர் திருமேனி அமைத்தல் 1. மச்சாவதாரம் : மீன் போன்ற உடலமைப்பு. 2. கூர்மாவதாரம் : ஆமை வடிவம். 3 அ. வராகம் : பன்றியின் முகம், மனித உடல்; வலது புறத்தில் கதாயுதம் மற்ற ஆயுதங்கள்; இடப்புறம் லக்ஷ்மி, சங்கம், தாமரைமலர், லக்ஷ்மி முழங்கையில் அமர்ந்திருக்க வேண்டும். பூமியும் அதனைத் தாங்கும் அனந்தாழ்வாரும் மூலத்தருகே இருக்க வேண்டும். 3 ஆ. வராக உருவத்தை அமைப்பதில் இரண்டாம் வகை : நான்கு கைகளில் ஒன்றில் வாசுகியைப் பற்றியிருத்தல்; இடக்கையினால் பூமியைத் தூக்கி இருத்தல்; காலடியில் லக்ஷ்மி அமர்ந்திருத்தல்; வலப்புறம் சக்கரம், வாள், தண்டம், அங்குசம், இடப்புறம் சிங்கம், தாமரை மலர்; கதை, பாசம் வலப்புறத்தில் கருடனது தோற்றம்; விச்வரூபத்துக்கு நான்கு முகங்கள் இருபது கைகள் அமைக்கப்பட வேண்டும். 4. நரசிம்மம் : மனித உடல், சிங்க சிரம்; நான்கு கைகள்-இரண்டில் கதையும், சக்ராயுதமும்; மற்ற இரண்டும் அசுரன் உடலைக் கிழித்துக் கழுத்தில் மாலையாக அணிவது போல் இருத்தல். மடியில் அசுரனின் உயிரற்ற உடல் கிடத்தப் பெற்றிருக்க வேண்டும். 5. வாமனன் : குள்ளமான தோற்றம். ஒரு கையில் தண்டம், மற்றொன்றில் குடை; நான்கு கைகளுடன் கூடியதாகவும் செய்வதுண்டு. 6. பரசுராமர் : கைகளில் கத்தி, கோடரி, வில், அம்புகளுடன் 7. ஸ்ரீராமர் : இருகைகளில் வில் அம்பு. நான்கு கைகளானால் மற்ற இரண்டில் கத்தியும், சங்கும் கொண்டிருக்க வேண்டும். 8. பலராமர் : இரண்டு (அ) நான்கு கைகள். இரண்டானால் ஒன்றில் கதை, மற்றொன்றில் கலப்பை. நான்கு கைகளானால் இடதுபுறம் மேல்கையில் கலப்பை, கீழ் சங்கும், வலப்புறம் மேற்கையில் முசலம், கீழே சக்கரம். 9. கிருஷ்ண பகவான் : இரண்டு கைகள், அல்லது ஒன்றில் புல்லாங்குழல் கொண்டை, அதில் மயிற்பீலி, மிக அழகிய வடிவம். 10. புத்தர் : எளிய அழகிய உருவம், சாந்தமுகம். இடுப்பில் சிறுதுணி. மேல்நோக்கிய இதழ்கள் கொண்ட தாமரையில் அமர்ந்திருத்தல், நீண்ட காதுகள், நிர்மல இதயம், முகம். 11. கல்கி : கையில் வில்லும், அம்புராத்துணியைத் தாங்குதல். அந்தணர் கோலம்-நான்கு கைகளில் கத்தி, சக்கரம், ஈட்டி, அம்பு-குதிரை மீது இருத்தல்-சங்கத்தால் போர் முழக்கம் செய்யும் அந்தணர். 12 அ. விஷ்ணு : வலப்புறம் மேல் கையில் கதையும், கீழ்க்கையில் சங்கும், இடப்புறம் மேல்கையில் சக்கரம், கீழ்க்கை அபயஹஸ்தம். இருபுறங்களில் பிரம்மனும் ஈசனும் இருக்கலாம். ஆ. எட்டுக் கைகளுடன் கருடன் மீது ஆரோகணம். வலப்புறம் மூன்று கைகளில் கத்தி, கதை, அம்பு. இடப்புறம் மூன்று கைகளில் வில், கடகம், கமலம் ஆகியவை. மற்ற இருகரங்கள் அபயம் அளித்தல், அருளுதல் நிலை. 13. பிரத்யும்னன் : வலப்புறக் கைகளில் வஜ்ராயுதம். சங்கும், இடப்புறக் கைகளில் வில்லும், அம்பும்-நான்கு கைகளில் கதையும் கூட இருக்கும் (பிரத்யும்னன்-கிருஷ்ணன், ருக்மிணி மகன்) 14. அநிருத்தன் : (கிருஷ்ணனின் பேரன்) தோற்றம் நாராயணன் போல். நான்கு கைகள். 15. பிரம்மன் : நான்கு கைகள், நான்கு முகம், நான்கு திக்குகளை நோக்கியவாறு அன்ன வாகனத்தில் அமர்ந்திருத்தல்; வலப்புறக் கைகளில் ஜபமாலை, ஹோமக் கரண்டி; இடக்கைகளில் கமண்டலம், சிறுநெய் பாத்திரம்-வலப்பக்கம். சரசுவதியும், இடப்பக்கம் சாவித்திரியும் அமைந்திட வேண்டும். 16. பள்ளிகொண்ட பரந்தாமன் : பாற்கடலில் பாம்பணை மீது சயனித்திருத்தல், முக்காலங்களைக் குறிக்கும் மூன்று கண்கள். நாபியில் இருந்து நீண்ட காம்பு. தாமரையில் நான்கு முகங்களொடு பிரமன், லக்ஷ்மி அருகில் பாதங்களை வருடிக்கொண்டு இருத்தல், விமலை தலைப்பக்கம் சாமரை வீசுவதாக அமைத்தல். 17. ருத்திரகேசவன் என்ற விஷ்ணு : வலப்பக்கம் மகாதேவர் உருவம். இடப்பக்கம் விஷ்ணுவின் உருவம். வலப்புறம் இரு கைகளில் சூலம், மண்டை ஓடு, இடப்பக்கம் கரங்களில் கதை, சக்கரம். வலப்புறத்தில் கவுரி, இடப்புறம் லக்ஷ்மி இருக்க வேண்டும். 18. ஹயக்ரீவர் : நான்கு கைகளில் சங்கும், கதை, தாமரைமலர், வேதங்கள், இடது பாதம் சர்ப்பராஜன் அனந்தன் மீதும்; வலது பாதம் ஆமையின் மீதும் இருக்க வேண்டும். 19. தத்தாத்ரேயர் : இருகரங்களோடு, இடது மடியில் லக்ஷ்மி அமர்ந்திருத்தல். 20. விஷ்வக்சேனர் : நான்கு கைகளில் சக்கரம், கதை, கலப்பை, சங்கம். 21. சண்டிகை : இருபது கரங்கள்; வலக்கரங்களில்-சூலம், கத்தி, ஈட்டி, சக்கரம், பரசம், ஜேதம், அபேதம், அபோதம், அபயம், டமரு, சக்திகம். இடப்பக்கம் கைகளில்-கடகம், கோடரி, அங்குசம், வில், மணி, கொடி, கதை, தண்டம், கண்ணாடி, முத்தாரம் ஆகியவை. பாதத்தின் அடியில் தலை துண்டிக்கப்பட்ட எருமை வடிவம்; துண்டிக்கப்பட்ட கழுத்திலிருந்து அசுரன் மிகுந்த கோபத்தோடு வாளை உருவிக்கொண்டு சீறிப் பாய்வதாக இருக்க வேண்டும். நின்று கொண்டிருக்கும் தேவி வலது பாதத்தைச் சிங்க வாகனத்தின் மீதும் இடது பாதத்தை அசுரன் தோளின் மீதும் வைத்து அழுத்திவளாய், அவளது கரத்திலே நாக பாசத்தை இறுக்கும் பாவனையாக அமைய வேண்டும். அசுரன் புஜத்தைச் சிங்கம் பாய்ந்த நிலையில் கவ்விக் கொண்டிருக்க வேண்டும். சண்டிகை உருவுக்கு மூன்று கண்கள் இருக்க வேண்டும். சண்டிகையின் உருவங்கள் நவதத்துவங்களை விளக்கும் வகையில் ஒன்பது வகையில் உள்ளன. அவை ருத்திரச்சண்டி, பிரசண்டி, சண்டோக்ரை, சண்டநாயகி, சண்டி, சண்டவதி, சண்டரூபி, ஆதி சண்டிகை, உக்கிர சண்டி. இவை அனைத்தும் சிங்க வாகனத்தின் மீது 16 கரங்களுடன் வடிவமைக்கப்பட வேண்டும். 22. துர்க்கை : துர்க்கையின் ஒன்பது தோற்றங்களும் நின்ற நிலையில் வலது முழங்கால் முன்புறம் எடுத்து வைக்கப்பட்டதாய், இடதுகால் பின்னால் இருப்பதாக அமைக்கப்பட வேண்டும். 23. சரசுவதி : சரசுவதியின் கைகளில் புத்தகம், ஜபமாலை, வீணை இருத்தல் வேண்டும். 24. கங்காதேவி : கையில் குடம், மற்றொரு கையில் தாமரை. மகரம் என்னும் நீர் வாழினம் அவளது வாகனம். 25. யமுனை : குடம் ஏறுநுதல், ஆமை, முதுகில் ஆரோகணம். 26. பிராம்மி : குண்டம், அட்சய பாத்திரம், ஜபமாலை, ஓமக்கரண்டி, நான்கு கைகள், அன்ன வாகனம். 27. சங்கரி : ஒரு கையில் வில் அம்பு; மற்றொன்றில் சக்கரம்; காளை வாகனம். 28. கவுமாரி : இரண்டு கைகள். ஒன்றில் ஈட்டி. மயில் வாகனம். 29. வராகி : வலப்பக்கம் தண்டம், கத்தி, கதை, சங்கும்; இடப்புறம் கைகளில் சக்கரம், பூமி, தாமரை மலர் ஆகியவை. எருமை வாகனம். 30. இந்திராணி : ஆயிரம் கண்கள். இடது கையில் வஜ்ராயுதம்.
சாமுண்டி-மனித உடல் மீது அழுத்திய பாதம், மூன்று கண்கள், மெலிந்த உருவம்; கோபத்தினால் மயிர்கள் குத்திட்டிருத்தல். இடுப்பில் புலித்தோல்; இடது கைகளில் ஈட்டி, மண்டை ஓடு, சூலம். வலப்பக்கம் இரு கைகளில் சிறு வாள்கள். 31. விநாயகர் : மனித உடல், யானை, தலை, பெரிய தும்பிக்கை, உருண்டை வயிறு, மார்பில் பூணூல் உபவீத நிலை. 32. முருகன் : இளைய தோற்றம். அழகிய உருவம். இரண்டு கைகள். மயில் வாகனம்-இரு பக்கம் இரண்டு தேவியர்-ஒன்று (அ) ஆறு முகங்கள். பன்னிரண்டு கரங்கள். கிராமம் (அ) வனத்தில் திருக்கோயில் அமைந்தால் இருகரங்கள், வலது கையில் சக்திஆயுதம், இடது கையில் (சேவல்). 33. ருத்திர சண்டிகை : எட்டுக் கரங்கள், வில், கேதம், குக்குடக்கொடி, மண்டை ஓடு, கட்டாரி, சூலம், பாசக்கயிறு ஆகியவை கரங்களில். இடதுபுறம் ஒரு கை அபயஹஸ்தம். இடுப்பில் யானைத்தோல்-மண்டை ஓடு, மேகலையாக சிறு சிறு முரசுகள்-கால்கள் நாட்டிய நிலை. ருத்திர சாமுண்டியும் அவளே. அ. மகாலக்ஷ்மி : உட்கார்ந்த நிலையில் நான்கு முகங்களான மகாலக்ஷ்மி. ஆ. சித்த சாமுண்டி : மூன்று கண்கள், பத்துக் கரங்கள் இருந்தால் சித்த சாமுண்டி. தோற்றம் : சிவந்த நிறம், கைகளில் பாசம், அங்குசம். 34. பைரவி : பன்னிரண்டு கைகள். க்ஷõமை தேவியின் உருவம், வயது முதிர்ந்த நிலை, இருகரங்கள், அகன்றவாய்-சுற்றிலும் நரிகள். 35. க்ஷõமதாரி : முழந்தாளிட்ட நிலை-நீண்ட பற்கள். 36. யக்ஷணிகள் : பணிப்பெண்கள்-சஞ்சலமற்ற கண்கள் அப்சரசுகள்-அழகிய மங்கையின் உருவம் 37. நந்தீசன் : ஒரு கையில் ஜபமாலை, மற்றொன்றில் சூலம்; தேவியின் பணியாளன். 38. மகாகாளி : சுத்தி, மனிதன் தலை, கதை, கட்கம் கரங்களில். 39. சூரியன் : ஒற்றை சக்கரத்தேர்; ஏழு குதிரை. இரு கரங்களில் தாமரை மலர்கள், வலப்புறத்தில் குண்டி எனும் அதிகாரி மைகூடு, பேனா கொண்டு புத்தகத்தில் எழுதுவது போல். இடப்புறத்தில் பிங்களன் என்ற காவலன் தண்டத்துடன். இருபுறமும் இரு பெண்கள் சாமரம் வீசுதல்; அருகில் சாயா÷வி. மற்றும் பாஸ்கரன், 12 மாதங்களில் 12 வித சூரியன் வடிவம். சந்திரன், செவ்வாய், புதன், பிரகஸ்பதி, சனி, ராகு, இந்திரன், அக்கினி, யமன், நிருதி, குபேரன், விஸ்வகர்மா, ÷க்ஷத்திரபாலகர்கள், யோகினிகள், எட்டுத் திக்குகளில் உள்ள தேவதைகள், பைரவன், கிருத்திவாசன், வீரபத்திரன், லலிதா எனப் பல்வேறு வடிவமைப்புகளும் இப்பகுதியில் விவரிக்கப்பட்டுள்ளன. 11. லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தல் லிங்கத்தின் அடிப்பகுதி பிரம்ம பாகம்; மையப்பகுதி விஷ்ணு பாகம், நுனிப்பகுதி சிவபாகம். இதில் சிவபாகம் சற்றுப் பெரியதாக இருக்க வேண்டும். லிங்கத்தை அமைத்தல் : 1) உப்பினாலும், நெய்யினாலும் செய்தல், 2) துணி, மண் ஆகியவற்றாலும் தற்காலிகமாக அமைத்து வழிபடல். 3) சுட்ட மண்ணினால் லிங்கம் அமைத்தல். 4) மரம், பாறை ஆகிய ஒன்றால் செய்யப்படுவது மிகச் சிறந்தது. 5) பவழம், தங்கம் ஆகியவற்றால் ஆன லிங்க வழிபாடு அதிக பலன்களைத் தரும். 6) வெள்ளி, பித்தளை, செம்பு, துத்தநாகம், பாதரசம் ஆகியவற்றால் ஆனவை புனிதமானவை. 7) உலோக நடுவில் ரத்தினங்கள் இழைக்கப்பட்ட லிங்கங்களை வழிபடுவோர் புகழ், வெற்றி அடைவர். அவர்கள் மனோரதம் நிறைவேறும். ஈசன் எங்கும் ஆராதிக்கப்படுவர். சாஸ்திர முறைப்படி, குறிப்பிட்ட அளவுகளில் லிங்கங்களை அமைக்க வேண்டும். பரமன் ஆராதனைக்கான இடம் ஆலயமுன் அமைதல் வேண்டும். பஞ்ச கவ்யத்தால் அனைத்தும் தூய்மைப்படுத்தல் படவேண்டும். ஆராதிப்பவர்கள் பவித்திரம், மோதிரம், கங்கணம் அணிந்திருக்க வேண்டும். முறையான மரக்கொம்புகளாலேயே பந்தல் அமைக்க வேண்டும். நரசிம்ம மந்திரத்தால் பூ பரிக்கிரகம் செய்த பின் சடங்குகளைச் செய்ய வேண்டும். பந்தலின் வடமேற்கு மூலையில் ஹோம குண்டம் அமைக்கப்பட வேண்டும். எந்தத் தெய்வம் பிரதிஷ்டை ஆனாலும் உடன் அரி, அயன், அஷ்டதிக் பாலகர்களையும் ஆராதனம் செய்து பூஜிக்க வேண்டும். முடிவில் சாந்தி ஹோமம் புரோகிதர்க்கு கோதானம், சுவர்ணதானம் செய்ய வேண்டும். நாள் முழுவதும் பஜனை, தியானத்தில் ஈடுபட வேண்டும். பக்தி, சிரத்தையுடன் பரமனை ஆராதிக்க வேண்டும். திருஉருவை பிரதிஷ்டை செய்பவர்கள் தங்கள் மூதாதையர்களுக்கு வைகுந்தவாசத்தை அணிகிறார்கள். 12. ஆலயங்களுடன் திருக்குளங்கள் ஆலயத் தடாகங்கள் வருண சாந்நித்யத்தைப் பெற்றிருக்க வேண்டும். அதற்காக வருணன் திருஉருவைத் தங்கம், வெள்ளி, ரத்தினங்கள் ஆகியவற்றால் அமைக்க வேண்டும். வலதுகரம் அபயஹஸ்தம், இடதுகையில் நாகபாசம்-அன்ன வாகனம்-அவரைத் தொடர்ந்து நதிகள், சர்ப்பங்கள் வருவதாக உருவாக்க வேண்டும். குடத்தில் வருணனை ஆவாகனம் செய்ய வேண்டும். வருண சாந்நித்தியத்தை உண்டாக்க வேண்டும். புரோகிதரைக் கொண்டு ஹோமகுண்டம் அமைத்து ஹோம காரியங்களைச் செய்ய வேண்டும். புனித குடங்களில், புனித நீர்களை ஆவாஹனம் செய்ய வேண்டும். அக்குடங்களில் கிழக்குக் கடல் நீர், தென்கிழக்கு கங்கை நீர், தெற்குக்கு மழைநீர், தென் மேற்குக்கு ஊற்று நீர், மேற்குக்கு ஆற்று நீர், வடமேற்குக்கு நதி நீர், வடக்குக்குக் காய் கனிகள் பிழிந்த நீர், வடகிழக்குப் புனித தீர்த்தநீர் என்று நிரப்பி ஆராதிக்க வேண்டும் (எல்லாக் குடங்களிலும் ஆற்று நீரையும் நிரப்பலாம்.) விதிப்படி பூஜைகள் முடித்து குடங்களின் நீரை கிழக்கிலிருந்து தொடங்கி உரிய மந்திரங்கள் கூறி விஷ்ணுவின் அம்சமான வருண சிலைக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். ÷ஷாடசோபசாரங்கள் சமர்ப்பித்து, சிலையைத் தடாகத்தின் நடுவே நீருக்குள் பூமியில் புதைத்து விட வேண்டும். அதனால் நீர் புனிதமாகும், வருணன் சாந்நித்தியமும் ஏற்படும். பஞ்ச கவ்யத்தை எடுத்து மந்திரத்துடன் தடாகத்தில் நீரில் சேர்க்க வேண்டும். குளம் வெட்டி புனித நீரை உண்டாக்குபவர் ஒரு நாளிலேயே பல அசுவமேத யாகங்கள் செய்த புண்ணியத்தை அடைவர். குளம் வெட்டுவது சிறந்த தானம். அத்துடன் நந்தவனத்தையும் அமைக்க வேண்டும். இதனால் சொர்க்க வாசம் ஏற்படும். 13. நீராடும் விதி முறைகள் நீரில் மூழ்கி ஸ்நானம் செய்ய வேண்டும். அப்போது புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதாகத் தியானம் செய்து கொள்ள வேண்டும். ஸ்நானங்கள் பல வகை. தன் இரு கைகளையும் உயரே தூக்கிக் கொண்டு கிழக்கு நோக்கி சிறிது நேரம் கண் மூடி நிற்க தேகம் சூரியக் கிரணங்களால் புனிதமடைகிறது. மழை நீரிலும் இந்த ஸ்நானம் செய்யலாம். இது அக்னயக ஸ்நானம். உடலை மண்ணைக் கொண்டு தூய்மை செய்து கொள்வது மலஸ்நானம் எனப்படும். அதன் பின்னர் நீராடல் விதிஸ்நானம் கோதூளி கொண்டு தூய்மை பெறுவது மகேந்திர ஸ்நானம் ஆகும். கலசமந்திரம் (அக்கினி (அ) வருணன்) எனப்படும் ஒன்பது மந்திரங்களை உச்சரித்து தலையில் நீர் ஊற்றி கொள்ளும் ஸ்நானம் மந்திர ஸ்நானம் எனப்படும். விஷ்ணுவுக்குப் புனிதமான மந்திரத்தைக் கூறி, தேவைப்படும் போதெல்லாம் மனத்தில் தியானித்தல் மனோஸ்நானம். மூன்று காலங்களிலும் சந்தியை வழிபட வேண்டும். பரம சந்தியை எனப்படும் சந்தியா தேவியை ஞானிகள் இரவில் தம் இதயத்தில் இருந்து தியானிப்பர். வலது கை ஆள்காட்டி விரல் நுனியில் பிதுருக்கள் இடம், சுண்டு விரலின் நுனிப்பகுதி பிரஜாபதியின் இடம், கட்டை விரல் நுனிப்பகுதி பிரமன் இடம். இடது உள்ளங்கை அக்கினிக்குப் புனித இடம். வலது உள்ளங்கை சோமனுக்கானது. விரல்கள் சேரும் இடங்கள் மகரிஷிகளுக்குப் புனித இடம். நீராடும் போது அகமர்ஷணம் என்னும் கர்மா செய்வதால் நம் தேகம் பாவம் நீங்கி புனிதமடைகிறது. மேலும், அக்கினிதேவன் வசிஷ்டருக்கு சிவன், சூரியன், கபிலைப் பசு ஆராதனை விவரம் கூறினார். ஆச்சாரியார் சீடனுக்கு தீøக்ஷ அளிக்கும் முறையையும் கூறினார். அதற்கு முன் அகார மந்திரத்தால் சாந்தி ஓமம் செய்ய வேண்டும். 14. சப்த த்வீபங்கள் (தீவுகள்) ஏழு த்வீபங்களும் ஏழு கடல்களால் சூழப்பட்டு உள்ளன. ஜம்புத்வீபம் உப்புக் கடலாலும், சால்மலி மதுக்கடலாலும், குசம் நெய் கடலாலும், கிரவுஞ்சம் தயிர்க்கடலாலும், சாகம் பாற்கடலாலும், புஷ்கரம் நன்னீர் கடலாலும் சூழப்பட்டுள்ளன. ஜம்புத்வீபத்தின் அதிபதி அக்னீத்திரன், பிலக்ஷத்தீவின் அதிபதி ? 

ரமணர் & குஞ்சு ஸ்வாமிகள்

குஞ்சு ஸ்வாமி ஒரு முறை கோவிலூர் மடத்திற்கு யாத்திரை சென்று விட்டு திருவண்ணாமலை திரும்பினார்.

திரும்பியவுடன் பகவானிடம், 'பகவானே! கோவிலூர் மடாதிபதி மகாதேவ சுவாமி பகவானை ரொம்ப விசாரிச்சார்.

எல்லோரும் எப்படி இருக்காங்கன்னு ரொம்ப பிரியமா கேட்டு தெரிஞ்சுகொண்டார்.

நான் அங்கேயிருந்தபோது ராஜா சர் அண்ணாமலை செட்டியார் தரிசனத்துக்கு மடத்துக்கு வந்திருந்தார்' என்று குஞ்சு ஸ்வாமி கூறினார்.

"செட்டியார் என்ன செஞ்சார்?" என்றார் பகவான், அர்த்த புஷ்டியுடன்.

'அங்க வஸ்திரத்தை எடுத்து இடுப்புலே கட்டிக்கொண்டு ரொம்ப பணிவா சாஷ்டாங்கமாக நமஸ்காரம் பண்ணார்' என்றார் குஞ்சு ஸ்வாமி.

"நீ நமஸ்காரம் பண்ணினியோ?" என்றார் பகவான்.

தயங்கியபடியே 'இல்லை'என்றார் குஞ்சு ஸ்வாமி.

"ஏன் பண்ணலே?" என்றார் பகவான்.

'உங்களுக்கு நமஸ்காரம் பண்ணிட்டு வேற யாருக்கும் பண்றது எனக்கு சம்மதமா இல்லே' என்றார் குஞ்சு ஸ்வாமி.

பகவான் கடுமையானார்.

" ஆஹா! நீ பகவானை ரொம்ப தெரிஞ்சவனோல்லியோ!

ரொம்ப புத்திசாலி.

#இந்த_சோபாவிலே
#இருக்குற_அஞ்சடி_உடம்பா
#உன்_பகவான்?

#இந்த_ஹால்லே_தான்_பகவான் #இருக்காரா?

#வேரெங்கும்_இல்லே_பாரு.

இவ்வளவு ஏக பக்தி இருக்கறவா எதுக்கு வேற இடங்களுக்குப் போகனும்?

"வேற மடங்களுக்கு போனா அங்கேயிருக்கும் சம்பிரதாயத்தை அனுசரிக்கனும்.

"#எங்கே, #யாருக்கு_நமஸ்காரம் #பண்ணினாலும்_குருவோ,
#இஷ்ட_தெய்வமோ_அங்கே #இருக்கறதா_தியானிச்சு_நமஸ்காரம் #பண்ணினா_சேர_வேண்டிய #இடத்துக்குப்_போய்_சேர்ந்துடும்.

#இது #தான்_முறை'#என்றார்_பகவான்.

                           #நமஸ்காரம்.

#ௐ_நமோ_பகவதே_ஶ்ரீரமணாய.

#ஶ்ரீரமணார்ப்பணம்🙇🙇🙇

கர்மா....

கர்மா....

வடநாட்டில் காசிக்குச் செல்லும் வழியில் சக்கிலியன் ஒருவன் வசித்து வந்தான். அவன் திருமணமாகி நெடு நாளாய் புத்திரன் இல்லாமல் இருந்தான். சக்கிலியன் ஒரு பெரியவரிடம் தன் குறையைக் கூறினான். அவர் தர்மம் செய்தால் அதன் பயனாக புத்திரன் உண்டாவான் என தேற்றினார்....

சக்கிலியன் எந்த முறையில் தர்மம் செய்ய வேண்டுமென்று கேட்டான். அக்காலம் கோடை காலம். அவ் வழியாக காசிக்குப் போகும் ஓர் அந்தணனுக்கு ஒரு குடை, ஒரு மிதியடி, ஒரு விசிறி இம் மூன்றையும் தானமாகக் கொடுத்தால் அவர்களுடைய ஆசியால் புத்திரன் உண்டாகும் என்றார்....

தான் தாழ்த்தப்பட்டவன் ஆதலால் அந்தணனுக்கு எவ்வாறு தானம் செய்ய முடியும் என சிந்தித்தான். ஒருநாள் ஒரு குடை, ஒரு மிதியடி, ஒரு விசிறி இம் மூன்றையும் தயாரித்து எதிரிலுள்ள மரத்தடியில் வைத்து விட்டு தன் தொழிலில் ஈடுபட்டான்.

பக்தியில் மேம்பட்ட அந்தணர் ஒருவர் தன் இறுதிக் காலம் நெருங்குவதற்குள் காசிக்குச் சென்று வர வேண்டுமென்ற வைராக்கியத்தோடு கால்நடையாகப் புறப்பட்டார். அது சமயம் வெயில் காலமாதலால் வெப்பத்தால் துடிதுடித்துச் சென்று கொண்டிருந்தார்.....

வழியில் ஒரு மரத்தடியில் வைத்திருந்த குடை, செருப்பு, விசிறி இம் மூன்றையும் கண்டார். அதை மகிழ்ச்சியோடு எடுத்துக் கொண்டு அம் மூன்றையும் வைத்தவனை வாழ்த்திக் கொண்டே சென்றார். அந்தணர் காசிக்குச் சென்று திரும்பி வரும் வழியில் உயிர் துறந்தார்.....

மூன்று பொருட்களையும் தானஞ் செய்த சக்கிலியன் வீட்டில் மகனாகப் பிறந்தார். சக்கிலியன் தனக்கு மகப்பேறு உண்டானது கண்டு மகிழ்ந்தான். குழந்தை பிறந்து பேச ஆரம்பித்த பருவத்தில் யாரிடமும் பேசாமல் மௌனமாக இருந்தது. அது கண்டு பெற்றோர்கள் கவலைப் பட்டனர். குழந்தை ஞான நெறிக்கேற்ப வளர்ந்து பதினாறு வயது அடைந்தது.....

காசி அருகிலுள்ள ஊரில் கள்வர்கள் பயம் அதிகமாக இருந்தது. மக்கள் அமைதியாக வாழ முடியவில்லை.அவ்வூர் அரசனிடம் சென்று அனைவரும் முறையிட்டனர். அரசன், நாள் தோறும், தினம் ஒருவராக ஊர் சுற்றி வந்து நான்கு ஜாமங்களும் பறை கொட்டி வரும்படி ஆணை பிறப்பித்தார். அவ்வாறே மக்களும் வீட்டிற்கு ஒருவராகப் பறை கொட்டி வந்தனர்......

ஒரு நாள் சக்கிலியன் முறை வந்தது. அன்று அவன் முக்கியமாக வெளியில் செல்ல நேர்ந்தது. மனைவியிடம் ஊமை மகனை பறை அடிக்க அனுப்பும் படிச் சொல்லி விட்டுச் சென்றான். அன்றிரவு தாய் மகனை அழைத்தாள். அவன் கையில் பறையைக் கொடுத்து சாம சாமத்திற்கு அடிக்கும் படி ஜாடை காட்டினாள். ஊமைச் சிறுவன் பறையை எடுத்துக் கொண்டு குறிப்பிட்ட இடத்திலிருந்து அடித்துக் கொண்டே சென்றான்......

பிறந்தது முதல் பதினாறு பிராயம் வரையிலும் பேசாமல் இருந்தவன் முதல் ஜாமம் முடிந்ததும் பறையை நிறுத்தி வடமொழியில் ஒரு ஸ்லோகத்தைச் சொன்னான். அந் நாட்டு அரசன் அதைக் கூர்ந்து கேட்டார். இவ்வாறு சிறுவன் நான்கு ஜாமங்களுக்கும் பறை கொட்டி நான்கு ஸ்லோகங்கள் சொல்லி முடித்தான்......

பொழுது புலர்ந்தது. வீட்டிற்குச் சென்றான். பறையை வைத்தான். பழைய படி மௌனமாயிருந்தான். அன்றிரவு முழுவதும் விழித்திருந்து அச் ஸ்லோகங்களைக் கேட்ட அரசன், அவைகளின் பொருளை ஆராய ஆவல் கொண்டான்......

விடிந்ததும் தந்தை [சக்கிலியன்] வீட்டிற்கு வந்தான். மகன் தன் கடமையை ஆற்றினானா என்பதைப் பற்றி மனைவியிடம் விசாரித்தான்.....

அரசனும் காலையில் அரசவைக்கு வந்தார். மந்திரியிடம் நேற்றிரவு பறை கொட்டியவனை அழைத்து வரும்படி ஆணையிட்டார். அவர்கள் சேவகர்களுக்குக் கட்டளையிட்டனர்.அவர்கள் சேரியில் சென்று சக்கிலியனை அழைத்து அரசர் முன் நிறுத்தினர்......

சக்கிலியன் அரசரைக் கண்டு நடுக்கமடைந்தான். அரசன் சக்கிலியனை ஆசனத்தில் அமரச் செய்து, “நேற்றிரவு பறை கொட்டும் போது நான்கு ஜாமத்திற்கும் நான்கு ஸ்லோகங்கள் சொன்னீர்களே அதன் பொருள் என்ன?” என ஆவலுடன் கேட்டார். சக்கிலியன் வியப்புடன், “அரசே! நேற்றிரவு பறை கொட்டியவன் என் மகன் அவன் பேச மாட்டான் ஊமையன்!” என்றான்.உடனே அரசன் அச் சிறுவனை அழைத்து வரும் படிச் சொல்லச் சேவகர்கள் அவனை அழைத்து வந்தனர். அரசனது மனம் பக்குவம் பெற்றிருந்தது.....

சக்கிலியன் மகனைக் கண்ட அரசன் தம் சிம்மாசனம் விட்டிறங்கினார். அச்சிறுவனை எதிர் கொண்டு அழைத்தார்.ஆசனத்தில் அமரும் படி பணிவுடன் சொன்னார். இக் காட்சியைக் கண்ட அனைவரும் பிரமித்தனர். அரசர் சிறுவனை உணர்ந்தார். அவனது உள்ளக் கிடக்கையை அறிய அவாக் கொண்டு நேற்றிரவு நான்கு ஜாமங்களிலும் சொன்ன ஸ்லோகங்களின் பொருளை விளக்கும் படி வேண்டினன்.......

சிறூவன் முதல் ஸ்லோகத்தைச் சொல்லி விளக்கம் செய்தனன்

“காம; குரோதச்ச லோபச்ச தேஹே நிஷ்டந்தி
தஸ்கரா;
ஞான ரத்நாப ஹாராய தஸ்மாத் ஜாக்ரத
ஜாக்ரதா!”

சரீரத்தில் மதிப்பிடற்கரிய ரத்தினம் போன்ற மணிகள் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன. காமம், குரோதம், லோபம் ஆகிய திருடர்கள் ஞானமாகிய ரத்தினத்தை அபகரிக்கும் பொருட்டு சரீரத்தில் வசிக்கிறார்கள். ஆகையால் எச்சரிக்கையாக இருங்கள்......

சிறுவன் ஞான நெறியில் ஈடுபட்டு அந்தரங்கத்திலுள்ள ஆன்மாவை அறிந்தவன். அவ் ஆன்மாவைக் கொண்டு பரமாத்மா தரிசனம் காண முயற்சிப்பவன். ஆதலால் அவன் பார்வையும், சொற்களும் மன்னன் மதிக்கும் நிலையில் இருந்தது. மன்னன் மேலும் கேட்க அவாக் கொண்டான்.

சிறுவன் இரண்டாம் ஸ்லோகம் சொல்லி பொருள் கூறினன்

“ஜன்மதுக்கம் ஜராதுக்கம் ஜாயாதுக்கம் புந;புந:
சம்ஸார ஸாகரதுக்கம் தஸ்மாத் ஜாக்ரதா:
ஜாக்ரதா”

“பிறத்தல் மிகவும் துன்பம். பின்பு விருத்த பருவம் பெருந்துன்பம். இதனிடையில் வாலிப காலங்களில் மாதரின் மோகத்தால் அடிக்கடி உண்டாகும் துன்பங்கள் மிகப் பெரியதாகும். இவையன்றி ஜனன, மரண சம்சாரமாகிய சமுத்திரத்தில் படும் துயரம் அளவிறந்தனவாம். ஆகையால் ஆன்மாக்களே ஜாக்கிரதையாக இருங்கள்”

இரண்டாம் ஸ்லோகத்தின் மூலம் சம்சார சாகரம் தீராத துக்கம் என்றும் இதனின்று விலக அறிவு தனித்திருக்க வேண்டும் என்றும் தெளிந்தார் மன்னர். சிறுவன் சொன்ன மொழிகளைக் உபதேசமாகக் கொண்டு வாழ்நாளில் அடைய வேண்டிய மெய்ப் பொருளை அடைய ஆவல் கொண்டு அடுத்த ஸ்லோகத்தின் பொருளைக் கூறும் படி வேண்டினார்......

“மாதா நாஸ்தி பிதா நாஸ்தி பந்து ஸஹோதரா
அர்தம் நாஸ்தி க்ருஹம் நாஸ்தி தஸ்மாத்
ஜாக்ரதா ஜாக்ரதா”

“ஈன்று வளர்த்த அன்னையும்,தந்தையும் அநித்தியம்.இவையன்றி தனக்குரிமை என்றெண்ணும் பொருள்களும் அநித்தியம். தனக்குச் சொந்தம் என்றெண்ணும் வீடு முதலியவைகளும் அநித்தியம். ஆகையால் எச்சரிக்கையாய் இருங்கள்! எச்சரிக்கையாய் இருங்கள்!!

அரசன் சிறுவன் சொன்ன அறிவுரைகளைக் கேட்டு ஆனந்தம் அடைந்தார்.நான்காம் ஸ்லோகத்தின் பொருளைக் கூறும் படி வேண்ட, அவ்வாறே சிறுவன் கூறினன்.

“ஆயசா பத்தே லோகே கர்மணா பஹு சிந்தையா
ஆயுக்ஷீணம் நஜாநாதி தஸ்மாத் ஜாக்ரதா ஜாக்ரதா”

“இந்த உலகில் மனிதர்கள் நானாவித சிந்தைகளாகிய கர்ம சம்பந்தமான ஆசைகளினாலே கட்டுப்பட்டுள்ளார்கள்.இதனால் தனது ஆயுள் நாளுக்கு நாள் குறைந்து வருவதை அறிகின்றதில்லை. ஆகையினால் எச்சரிக்கையாய் இருங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். கர்மாவை வெல்ல முயலுங்கள்”......

சிறுவனின் ஞான உரைகளைக் கேட்ட மன்னர் மிக வியந்தார். சிறுவனின் தந்தையை அழைத்து “உன் மகன் ஊமையன் அல்லன். பெரிய ஞானி நான் அவன் ஞான மொழிகளைக் கேட்கும் பேற்றைப் பெற்றேன்”என்று ஆனந்தமடைந்தார்.நம்முள் இருக்கும் திருடர்களை கவனியாது புறத்தேயிருக்கும் திருட்டுகளைப் பற்றி கவலைப்பட்டு காலத்தை வீணாகக் கழிக்கின்றோம் என்பதை இக்கதை வலியுறுத்துகிறது......

ஹர ஹர சங்கர....
ஜய ஜய சங்கர.....

த்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்தோத்ரம்

ஓம் நமசிவாய

ஏழு ஜன்ம பாவம் விலகி நன்மை பெற
======================================
த்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்தோத்ரம்
-------------------------------===================
ஸௌராஷ்ட்ரே ஸோமநாதஞ்ச ஸ்ரீசைலே மல்லிகார்ஜுனம்
உஜ்ஜயின்யாம் மஹாகாலம் ஓம்காரம் அமலேஸ்வரம்
பரல்யாம் வைத்யநாதஞ்ச ஜடாகின்யாம் பீமசங்கரம்
சேதுபந்தே ச ராமேசம் நாகேசம் தாருகாவனே
வாரணஸ்யாந்து விஸ்வேசம் த்ரியம்பகம் கௌதமீ தடே
ஹிமாலயே து கேதாரம் குஸ்மேசஞ்ச சிவாலயே
ஏதானி ஜ்யோதிர் லிங்கானி சாயம் ப்ராத: படேந் நர:
சப்த ஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரனேன விநஷ்யதி
இந்த ஸ்லோகத்தை தினமும் படித்துவந்தாலும்,இந்த ஜ்யோதிர்லிங்கங்களை மனதால் நினைத்தாலிம் ஏழு ஜன்ம பாபம் விலகி நற்கதி ஏற்படும்.
இந்த ஸ்லோகத்தை சொல்ல இயலாதவர்கள் கீழ்க்கண்ட நாமமாகவும் சொல்லலாம்.
1. குஜராத்தின் சௌராஷ்ட்ரப் பகுதியில் இருக்கும் சோமநாதபுரம் சோமநாதர்
ஓம் சோமநாதாய நம:
2. ஆந்திரபிரதேசத்தின் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர்
ஓம் மல்லிகார்ச்சுன பரமேசாய நம:
3. மத்தியபிரதேசத்தின் உஜ்ஜயினி மஹாகாலர்
ஓம் மஹாகாலாய நம:
4. மத்தியபிரதேசத்தின் சிவபுரி/அமலேச்வரம் ஓம்காரேஸ்வரர்
ஓம் ஓங்காரேஸ்வராய நம:
5. மஹாராஷ்ட்ரத்தின் பரலி வைத்யநாதர்
ஓம் வைத்யநாதாய நம:
6. மஹாராஷ்ட்ரத்தின் டாகினி பீமசங்கரர்
ஓம் பீமசங்கராய நம:
7. தமிழ்நாட்டின் இராமேஸ்வரம்/சேதுபந்தனம் இராமேசர்
ஓம் ராதநாதேஸ்வராய நம:
8. மஹாராஷ்ட்ரத்தின் தாருகாவனம் நாகேசர்
ஓம் நாகேஸ்வராய நம:
9. உத்தரபிரதேசத்தின் காசி/வாரணாசி விஸ்வேசர்
ஓம் விஸ்வேஸ்வராய நம:
10. மஹாராஷ்ட்ரத்தின் கௌதமீ நதிக் கரையில் இருக்கும் நாசிக் திரயம்பகேசர்
ஓம் திரியம்பகேஸ்வராய நம:
11. உத்தராஞ்சலின் இமயமலையில் கேதார்நாத் கேதாரேஸ்வர்
ஓம் கேதாரேஸ்வராய நம:
12. மஹாராஷ்ட்ரத்தின் சிவாலயமாம் தேவசரோவர் குஸ்மேசர்
ஓம் குஸ்மேஸ்வராய நம:

ஜோதிர்லிங்கம் பன்னிரண்டுக்கும் உபலிங்கங்கள் உண்டு.

சோமநாத லிங்கத்துக்கு உபலிங்கம், மஹீநதி சமுத்திர சங்கம தீரத்தில் உள்ள அந்தகேசலிங்கம் ஆகும். பிருகு பர்வதத்துக்குச் சமீபத்திலுள்ள ருத்திர லிங்கம் மல்லிகார்ச்சுன லிங்கத்தின் உபலிங்கமாம். அதே போல, மகாகாள லிங்கத்திற்குத் துக்தேச லிங்கமும், ஓங்காரேசுவர லிங்கத்திற்குக் கர்த்தமேச லிங்கமும், உப லிங்கங்களாகச் சொல்லப்பட்டுள்ளன. யமுனை தீரத்தில் உள்ள பூதேச லிங்கம், கேதார லிங்கத்திற்கு உபலிங்கமாகும். பீமசங்கர லிங்கத்திற்கு பீமேசுவர லிங்கம்,  விசுவேச்வர லிங்கத்திற்குச் சரஸ்யேச்வர லிங்கமும், திரியம்பக லிங்கத்திற்குச் சித்தேச்வர லிங்கமும் வைத்தியநாத லிங்கத்திற்கு வைஜநாத லிங்கமும், நாகேசுவர லிங்கத்திற்கு, ஜில்லிகா சரஸ்வதி சங்கமத்திலிருக்கும் பூதேசுவர லிங்கமும், இராமேசுவர லிங்கத்திற்குக் குப்தேச்வர லிங்கமும், குஸ்மேச லிங்கத்திற்கு வியாக்கிரேசுவர லிங்கமும் உபலிங்கங்களாகும்.

திருச்சிற்றம்பலம்

ஓம் ஸ்ரீ மஹா சாஸ்தா தாஸன்
பா.சிவகணேசன்
ஓம் ஸ்ரீ மஹா சாஸ்த்ரு பரபிரம்ம ஸ்தானம்
காடந்தேத்தி