வியாழன், 26 ஏப்ரல், 2018

ஸ்ரீ மஹா பெரியவா சரணம்.

கொடுப்பதிலும் அர்த்தம் உண்டு மறுப்பதிலும் அனுக்கிரகம் உண்டு.
அன்பே உருவாய் அருளும்  கருணைக் கடலே அஞ்ஞான இருள் நீக்கும்   ஜகத்குருவே

[1] நாடி வந்தோர் துயர் தீர்க்கும் தீனதயாளனே தேடி வந்தோர் இடர் களையும்  அருட் ப்ரபாவமே

[2] ப்ரஹ்மானந்த சாகரத்தில் அமிழ்ந்துறையும் அம்ருதவர்ஷினியே தருமமே பூத உடல் கொண்டு சஞ்சரித்த  பூர்ண வஸ்துவே

[3] வாஞ்சையுடன் அருள் மழை பொழியும்  காஞ்சிபுர நிவாசனே…
நம்முடைய முன்னோற்கள் வாழ்ந்த வாழ்க்கை

அது ஒரு காலம் ! மறக்க முடியாத நினைவுகள் ! கிட்டத்தட்ட  எல்லோருமே   உரக்க பாடினார்கள்.  குரலும்  ஒரே மாதிரியாக இருந்தது  என்று சொன்னாலும்  தவறில்லை. அவர்களுக்குள்  ஒரே வித்தியாசம் அவரவர்  பிரயோகித்த ஆலாபனைகளும்  அசுர சாதகமும்  குரல் வளமும்   தான்.  எல்லோருக்குமே பக்க வாத்தியம்  ஹார்மோனியம் தான்.  சில சமயம்  கிராமபோன் அவர்கள் பாடல்களை  கிணற்றுக்குள்ளே  இருந்து  பாடுவது போல் கேட்க  செய்தால்  அது  க்ராமபோனின்  கோளாறு.  அது  ரேடியோவில்  அப்படியே  பிரதிபலித்து  சில சாமயம் ஈனஸ்வரத்தில் பாடுவது போலவும்  காட்டியது  அவர்கள் தவறில்லை.  மெழுகு தட்டுகள் (plates ) சுற்றும் போது  வேகமாக  சுற்றினால்  பாடுபவர்  அவசரம் அவசரமாக   ரயிலைப்பிடிக்க ஓடிக்கொண்டே பாடுவது  போல இருக்கும்.  தட்டு மெதுவாக சுழன்றால்  கே. எல்.  சைகால் கால் நீட்டி  ஒரு மரத்தடியில் சாய்ந்து கொண்டு பால முரளியின்  தில்லானா  பாடுவது போல் இருக்கும்.

சிலர்  பாடிவிட்டு  தானே சபாஷ் சொல்லிக்கொள்வதையும்  கேட்டிருக்கிறேன்.  3 நிமிஷ தட்டுக்கள். ஒவ்வொரு தட்டில்  ஒரே  பாடகரின் குரல்  வேறு யாரோ ஒருவர்  பாடும் குரல் மாதிரியாக  கூட  காட்டியது.

மைசூர்  ராஜா அய்யங்கார்  என்பவற்றின் குரல்  அசாத்தியமாக  இருக்கும்.  ஜகதோ தாரணா என்று ஆரம்பித்தால்   சகல  சர்க்கஸ் வேலைகளும்  காட்டி  முடிப்பார்.  கேட்கவும்  கர்ணாம்ருதமாக இருக்கும். இப்போதும் அவர்  பாடியது  you tube ல்  கேட்க  வசதி இருக்கிறது. 

அவருடைய தேவகாந்தாரி ராக  க்ஷீர சாகர சயனா  பாட்டு  பெருமாளையே  ஆஷிசேஷன்  மேலிருந்து எழுந்து  நிற்க  செய்யும். அவ்வளவு  சக்தி வாய்ந்தது.

பி.யூ. சின்னப்பா  என்று ஒருவர் பொடி  போடுபவர்  மூக்கில்  பாடுவது போல்  தோன்றினாலும்  கேட்க  சுவாரஸ்யமாக  இருக்கும்.  சிறந்த  சங்கீத ஞானம் கொண்ட அவர்  ஜகதலப்ராதாபன்  படத்தில் ஒரு  தனி கச்சேரியே மூன்று நிமிஷத்தில் பண்ணினார்.  நிறைய சின்னப்பாக்கள். பிடில், மிருதங்கம், கொன்னக்கோல்,  வீணை, வாய்ப்பாட்டு, கஞ்சிரா , கேட்கவே  சுகமாக இருக்கும்போது பார்க்கவும் செய்தால். சொர்க்கம் தான்.  அவருடைய  நடிப்பு  தத்ரூபமாக  மிருதங்க, கஞ்சிர,  வயலின் வித்வான்களின் அனுபவ பூர்வ  பாவத்தை காட்டியது. இதையே  பின்னால் பல வருஷங்களுக்கு பிறகு திருவிளையாடல்  பாடலில்  சிவாஜி கணேசன்  பல  வித்வான்களாக ''பாட்டும் நானே''  பாடிய காட்சிக்கு  வழி கோலியது.  ஒரிஜினல் ஒரிஜினல் தான்.  பி.யு. சி.  ஒருமுறை  கேளுங்கள்.  அதுவும்  நான் சொன்ன பாட்டை. you   tube ல் இருக்கிறதே.

S.G .கிட்டப்பா ஒரு மறக்க முடியாத  நாடக நடிகர் என்று புகழ் பெறக்காரணமே  அவரது குரலின் கவர்ச்சிக்க்காகவே.  இன்னும்  நிறைய  அவரது  இசைத்தட்டுகள் இருக்கின்றன. நான்  ஒவ்வொருமுறை  கேட்கும்போதும்  அவை  புதிதாகவே அப்போது தான் முதல் முதலாக கேட்பது போன்ற ஆர்வத்தை இன்று காலை வரை  அளிக்கிறது. ஹர்மோனியக்காரன்   அபஸ்வரமாகவோ, அவசரமாகவோ வாசித்தாலும் அவரது  வான முகட்டில் கருட சஞ்சாரத்தை அவனால்  எட்ட முடியாது. கிட்டப்பா  அதை லட்சியம் செய்யாமல்  சபாஷ் தான்  சொல்லிக்கொண்டு  பாடுவார்.  அசுர சாதகம்.  அபார கற்பனை. அதிசயிக்க வைக்கும்  ஆலாபனை பிடிகள். அசாத்திய ராக ஞானம்.

இளம் வயதில் காணமல் போன  எத்தனையோ  அபூர்வங்களில் ஒருவர் கிட்டப்பா.  ஒலி பெருக்கி இல்லாத  காலத்தில்  இப்படி  தொண்டை கிழிய  உரக்க பாடி இன்பமூட்டிய அவர்களை   ஒன்ஸ் மோர்   கேட்டே  பொன் வாத்தை கொன்றுவிட்டார்கள். ஒரு சில  இசை தட்டுகள்  இன்னும்  அவரை ஞாபகப்படுத்தி  கண்ணில்  நீர்  வரவழைக்க  நாம்  கொடுத்து வைத்தது அவ்வளவு தான். ஒரு  வீடியோ கூட  கண்ணில் தென்படவில்லை  என்று அறியும் போது  ஒரு  செல்வத்தை  எப்படி  இழந்து விட்டோம் என்று புரிகிறதா?

இசையால் கவரப்பட்டு  மற்றொரு  துருவ நக்ஷத்ரம் அவரோடு மேடையிலும் வாழ்க்கையிலும்  இணைந்தது. அதுவே  KBS   என்று  உலகறிந்த  கே. பி. சுந்தராம்பாள் .  ஒரு ஞானப் பழத்தை சக்கையாக  பிழிந்து   ''என்ன  என்ன என்ன'' என்று  கேட்பாரே அது  இன்னும்  ஞாபகம் இருக்க வேண்டுமே  சங்கீதப் பிரியர்களுக்கு.


எனக்கென்னவோ கிட்டப்பாவின் பாதிப்பு  அநேக  பின்னோடிகளுக்கு  புகழை அளித்தது  என்று தோன்றுகிறது.   மேலே சொன்ன மைசூர்  ராஜா அய்யங்காரை  விட  அதிக பிரபலம் வாய்ந்த  எம். கே.  தியாகராஜ  பாகவதர்  கிட்டப்பாவை விட  அதிக  புகழ் பெற  ரெண்டு  காரணங்கள் முக்கியம்.

எம். கே.  டி  காலத்தில்  திரைப்படம்  வந்து விட்டது.   அவரது பாடியது  எளிதில் பட்டி தொட்டி  எல்லாம்  பரவி மக்களை அடைந்தது.  மற்றொன்று   எம். கே . டியின் இயற்கை  வசீகரம்.   மனிதர்  தனக்கென்று  ஒரு  சிகை  பாணியை  மட்டும் அல்ல. ஜவ்வாது போட்டு, காதில் மின்னும் வைரம். பட்டு  சட்டை அங்கவஸ்திரம்.   பாடும் போது  முகம் சற்றும் கோணாமல்  சௌலப்யமாக  சங்கதிகளை வாரி  வீசினார்.   பின்னணி  உத்திகள் வளர்ந்து மேனாட்டு இசை வாத்யங்கள்  திரையுலகை  ஆக்ரமிக்க ஆரம்பித்ததால் ஹார்மோனியம் இறந்து விட்டது. அதனால்  அதன்  சப்தமும் வீடுகளிலும்  மேடைகளிலும் திரையிலும்   நின்றது.

 ஒரு பாட்டை மட்டும்  நினைவூட்டுகிறேன்.  எந்த சினிமா  என்று ஞாபகமில்லை.  ''பவழமால் வரை''  என்ற  ஒரு அபூர்வ  பாட்டு  என்னை மிகவும்  உலுக்கியது.   அந்த ஒரு வரியை மட்டுமே   பாடிக்கொண்டு  பலகாலம்  சைக்கிளில் சென்றிருக்கிறேன்.  அவர் பாடலை பாடுவது  இயலாத காரியம்  யாருக்குமே.    காந்த சக்தி கொண்ட குரல் MKT க்கு. இந்த 3 நிமிஷ பாட்டில் அவரது ராக ஆலாபனைகளை  எழுத்தில் வர்ணிக்க  முடியாது.  கேட்டு  ரசித்து மகிழ தான்  முடியும்.என்ன  சங்கதி, என்ன  சஞ்சாரம், என்ன தாளம், என்ன  பாவம்!.  மனிதர்  ஒரு  அபூர்வ பிறவி என்பதில் சந்தேகமே இல்லை.  இன்றும் அவர்  முதல்  சூப்பர் ஸ்டார் என்று  புகழ் பெற்று நிலைத்திருப்பது இதனால்  தான்.   அவரது பாடங்கள்  அவர் பாட்டுக்காகவே  வருஷக்கணக்கில்  ஓடின  என்பது அப்பட்டமான உண்மை. ஒவ்வொரு படத்திலும் அந்த மனிதர் பேசியதைக் காட்டிலும் பாடியதே  அதிகம். 30-40 பாட்டுகள் பல தரப்பட்ட  மனிதர்களையும்  ஈர்த்தது.
  
கிட்டப்பா ஊரிலேயே, செங்கோட்டையிலேயே,   மற்றொரு  டூப்ளிகேட்  தோன்றினார்.  அதேமாதிரி  பாணியில்  அவரைப் பின்பற்றியே  ஆனால்  அனாயாசமாக  கிட்டப்பா  போலவே பாடினார்.  புகழும் பெற்றார்.  அவர்  வேறு யாருமில்லை   டி . ஆர்.  மகாலிங்கம்  தான்.  ஒரே  பெயரில் இருவர்  புகழ் பெற்று  இருந்த காலம்  அது.  ஒருவரை  அதனால்  மாலி  என்று  அழைத்தார்கள்.  மேலும் அந்த மற்றொரு  டி .ஆர். மகாலிங்கம் ஒரு  புல்லாங்குழல் சிம்மம்.   அவரைப் பற்றி  நிறையவே  சொல்ல  ஆவலாக இருக்கிறது.   பின்னால்  ஒரு சந்தர்ப்பம்  அதற்கு உபயோகப் படட்டுமே.
மஹா பெரியவாவின் 100 முத்தான பொன்மொழிகள்

1. நம் தாயாகிய பூமி, நமது விருப்பங்கள் அனைத்தையும் நமக்கு அளிக்க தயாராக இருக்கிறாள். அவளைப் பாதுகாத்து போற்றுங்கள்…

2. நம் தந்தையாகிய கடவுள் சகலரிடமும் கருணை காட்டுகிறார். ஆகவே, அவரை வணங்குங்கள்…

3. பெண்கள் சமையலுக்காக வீட்டில் அரிசி எடுக்கும் போது, ஒரு கைப்பிடியை ஏழைகளுக்கு தர்மம் செய்ய எடுத்து வைக்க வேண்டும்.

4. எப்போதும் மனதை ஏதாவது ஒரு நற்பணியில் செலுத்திக் கொண்டிருந்தால் சித்த சுத்தி என்னும் உயர்ந்த மனநிலை உண்டாகும்.

5. எடுத்துச் சொல்வதைவிட மற்றவர் முன் எடுத்துக்காட்டாக வாழ்வதே மதிப்பு மிக்கதாகும்.

6. வாழ்க்கையை லாப நஷ்டக் கணக்கு பார்க்கும் வியாபாரமாக கருதுவது கூடாது. பிறர் நலனுக்காக உதவி செய்ய வேண்டும்.

8. அன்பினால் பிறருடைய குற்றத்தை திருத்தும் போது மட்டுமே நிலையான பலன் கிடைக்கும்.

9. தேவைகள் அதிகரித்துக் கொண்டே சென்றால் அதற்கேற்ப வாழ்வில் பிரச்னைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும்.

10. நல்ல விஷயத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தால் மனம் பளிங்கு போல துாய்மையாக இருக்கும்.

12. பொருளாதார நிலைக்கேற்ப தினமும் தர்மம் செய்யுங்கள். குறைந்தபட்சம் ஒரு ஏழைக்காவது கைப்பிடியளவு அரிசி கொடுங்கள்.

13. இரவு துாங்கும் முன் அன்றன்று நடந்த நன்மை, தீமைகளை மனதில் அலசி ஆராய்ச்சி செய்யுங்கள்.

14. காலையில் எழுந்தவுடன் இரண்டு நிமிடமாவது கடவுளை பக்தியுடன் வழிபடுங்கள்.

15. அக்கம்பக்கத்தினரோடு நட்புடன் பழகுங்கள். பறவை, விலங்கு என எல்லா உயிர்களையும் நேசியுங்கள்.

16. அனைவரும் அன்றாடம் அரைமணி நேரமாவது மவுனமாக இருக்கப் பழகுவது அவசியம்.

17. எண்ணம், பேச்சு, செயல் மூன்றாலும் பிறருக்கு நன்மை தரும் செயல்களில் மட்டும் ஈடுபட வேண்டும்.

18. பேசுவதில் கணக்காக இருந்தால் குடும்பத்தில் சண்டை சச்சரவு வராது. நம் சக்தியும் வீணாகாமல் இருக்கும்.

19. அன்பினால் பிறரை திருத்துவதுதான் பெருமைக்குரியது. அதுவே நிலைத்த பலனளிக்கும்.

20. நமக்குரிய பணிகளை நாமே செய்வதே உண்மையான கவுரவம். பிறர் மூலம் செய்து முடிப்பது கவுரவக் குறைவானதே.

21. தியாகம் செய்வது உயர்ந்த குணம். அதிலும் ‘தியாகம் செய்தேன்’ என்ற எண்ணத்தையும் தியாகம் செய்வது சிறந்தது.

22. ஒழுக்கம் உயிர் போன்றது. குழந்தைகளை ஒழுக்கத்துடன் வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை.

23. கடவுளிடம் இருந்து நாம் பிரிந்து வந்திருக்கிறோம். பக்தி மூலம் மீண்டும் அவரிடம் ஒட்டிக்கொள்வோம்.

24. கோபத்தால் பிறருக்கு மட்டுமில்லாமல் நமக்கும் தீமையே உண்டாகிறது.

25. அலட்சியத்துடன் பணியாற்றுவது கூடாது… யாரையும் இழிவாகக் கருதுவதும் கூடாது.

26. உயிர்கள் மீது அன்பு காட்டுங்கள்… செடிக்கு நீர் விடுவதும், விலங்கிற்கு உணவு அளிப்பதும் சிறந்த தர்மம்.

27. பக்தி உணர்வு இல்லாமல் மனிதன் கடமையில் மட்டும் கவனம் செலுத்துவது வறட்டுத்தனமானது.

28. பேச்சில் பெருந்தன்மையை வெளிப்படுத்தும் பலர், செயலில் சுயநலம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

29. நேர்மை, உண்மை, பக்தி, ஒழுக்கம், மனத்துாய்மை ஆகிய நற்குணங்களால் வாழ்க்கைத் தரம் மேம்படும்.

30. நல்ல உணவுகளால் உடல் பலம் பெறுவது போல நல்லவர்களின் நட்பால் மன நலம் காக்கப்படும்.

31. இருப்பதைக் கொண்டு திருப்தியாக வாழ்ந்தால் நிம்மதிக்கும், மகிழ்ச்சிக்கும் குறைவிருக்காது.

32. தானத்தில் சிறந்தது அன்னதானம். இதன் மூலம் மட்டுமே ஒரு மனிதனைத் திருப்திப்படுத்த முடியும்.

33. உடம்பின் அழுக்கு நீராடினால் நீங்கி விடும். உள்ளத்திலுள்ள அழுக்கை தியானப் பயிற்சியால் போக்க முடியும்.

34. கடவுள் நல்ல புத்தி கொடுத்திருக்கிறார். அதை பயன்படுத்தி நற்செயல்களில் ஈடுபடுங்கள்.

35. எதிர்பார்ப்புடன் பக்தியில் ஈடுபட்டால் அது வியாபாரமாகி விடும்.

36. பாவத்தை கணப்பொழுதில் போக்கும் சக்தி கடவுளின் திருநாமத்திற்கு மட்டுமே இருக்கிறது.

37. நல்ல விஷயங்களை நாளை என்று காலம் தாழ்த்தக் கூடாது. அவற்றைச் செய்து முடிக்க இன்றே நல்ல நாள்.

38. எல்லார் இதயங்களையும் நட்பால் வெல்லுங்கள். பிறரையும் தன்னைப் போல் நோக்குங்கள்.

39. பிறருக்கு உபதேசம் செய்யும் முன் நமக்கு தகுதி இருக்கிறதா என்று ஒரு கணம் யோசிப்பது நல்லது.

40. சேவையில் ஈடுபடுவோருக்கு மனஉறுதியோடு சாந்தமும், புன்சிரிப்பும் மிகவும் அவசியமானவை.

41. புல்லைக் கூட படைக்கும் ஆற்றல் நம்மிடமில்லை. அதனால் ‘நான்’ என்னும் ஆணவம் கூடாது.

42. மனமே கடவுளின் இருப்பிடம். அதை தூய்மையாக வைத்திருப்பது கடமை.

43. பிறர் நம்மை துன்பப்படுத்தும் போது அதைப் பொறுப்பது மனிதத்தன்மை. மறந்து விடுவது தெய்வத்தன்மை.

44. வாழ்வில் ஒழுக்கமும், நேர்மையும் இருந்து விட்டால் செய்யும் செயல் அனைத்திலும் அழகும், கலையுணர்வும் வந்து விடும்.

45. வெறிநாய் போல நாலா திசையிலும் மனம் தறி கெட்டு ஓடிக் கொண்டிருக்க கூடாது. தியானம் மூலம் அதை ஒருமுகப்படுத்த வேண்டும்.

46. பிறர் துன்பப்படும் போது பணம், உடல் உழைப்பு, வாக்கு ஆகியவற்றால் முடிந்த உதவியைச் செய்வது நம் கடமை.

47. சண்டையையும் போட்டியையும் தவிர்த்து விடுங்கள். பிறர் மேல் ஆதிக்கம் செலுத்தாதீர்கள். அது பெரிய தவறு என்பதை உணருங்கள்.

48. எல்லாரிடமும் அன்பு, பேச்சில் இனிமை இவையே தொண்டாற்றுவதற்குரிய அடிப்படை லட்சணம்.

49. சமூக சேவையும், கடவுள் பக்தியும் இணைந்து விட்டால் அகில உலகமும் நன்மை பெறும்.

50. ராமனுக்கு உதவிய அணில் போல தொண்டு சிறிதாக இருந்தாலும் போற்றுவதற்கு உரியதே.

51. நாம் நலமோடு வாழ்வதோடு, மற்றவரும் நலமாக வாழ நினைப்பவனே உத்தம குணம் கொண்டவன்.

52. தீய எண்ணம் அனைத்தும் நீங்கி விட்டால் மனம் கடவுளின் பக்கம் படிப்படியாகத் திரும்பி விடும்.

53. கடவுள் புத்தியைக் கொடுத்தும் அதைச் சரியாகப் பயன்படுத்தாமல் மனிதன் துன்பத்திற்கு ஆளாகிறான்.

54.எல்லாம் ஒன்று என்ற விழிப்பு வந்து விட்டால் ஆசை, கோபம், பாவம், பிறவி ஆகிய துன்பங்கள் நீங்கி விடும்.

55.ஒழுக்கம் உயிர் போன்றது. வாழ்வில் ஒழுக்கம் ஏற்பட்டு விட்டால், அதன் பின் எந்த துறையில் ஈடுபட்டாலும் அதில் அழகும், நேர்த்தியும் உண்டாகும்.

56. ஆசை வயப்பட்ட மனிதன் கோபத்திற்கு ஆளாகிறான். கோபம் பாவம் செய்யத் தூண்டுகிறது. அதனால், உயிர்களுக்கு பிறவிச் சங்கிலி தொடர்கிறது.

57. பிறரிடமுள்ள நல்ல அம்சங்களைப் பாராட்டி அவர்களை உற்சாகப் படுத்துவது அவசியம்.

58. போட்டி மனப்பான்மை இருக்கும் வரையில் மனநிறைவு உண்டாகாது. பணத்தாசையால்தான், மனிதர்கள் ஒருவரை ஒருவர் போட்டியாளராக கருதுகின்றனர்.

59. வெளியுலகத்தில் இருந்து மகிழ்ச்சி உண்டாவதாக மனிதன் தவறாக எண்ணுகிறான். உண்மையில் மனதிற்குள் தான் மகிழ்ச்சி இருக்கிறது.

60. வீண் பொழுதுபோக்கில் நேரத்தை செலவழிப்பதை தவிர்த்து சேவையில் ஈடுபடுவது அவசியம்.

61. உள்ளத்தில் கள்ளம் இல்லாமல் குழந்தை போல இருக்க வேண்டும் என்று புராணங்கள் நமக்கு போதிக்கிறது.

62. பெரும்பாலும் மனிதன் கோபத்தினால் தனக்கும் மற்றவருக்கும் தீங்கு செய்து கொள்கிறான்.

63. எந்த விஷயத்திலும் அலட்சிய புத்தி கூடாது. அக்கறையுடன் செயல்படுவது அவசியம்.

64. யாரையும் அலட்சியப்படுத்தும் மனப்பான்மை கூடாது. அனைவரிடமும் கண்ணியத்துடன் நடக்க வேண்டும்.

65. மனதில் எழும் ஆசைகளை சீர்படுத்திக் கொள்ள வேண்டும். தேவைகளை அதிகப்படுத்திக் கொள்வது கூடாது.

66. குடும்பக் கடமையைச் சரிவர நிறைவேற்றாமல், பெருமைக்காக சமூக சேவையில் ஈடுபடுதல் கூடாது.

67. மனம் எதை தீவிரமாக சிந்திக்கிறதோ அதுவாகவே மாறி விடும் தன்மை கொண்டது. அதனால் நல்லதை மட்டுமே சிந்திக்க வேண்டும்.

68. கடவுளிடம் இருந்து பிரிந்ததால் மண்ணில் பிறவி எடுத்திருக்கிறோம். மீண்டும் நல்லதைச் சிந்தித்து அவரோடு சேர முயற்சிக்க வேண்டும்.

69. கபடம் சிறிதும் இல்லாத குழந்தை மனம் உள்ளவனாக வாழுங்கள்.

70. கடவுளுக்கு நன்றி சொல்லவே கோவில் வழிபாட்டு முறைகளை பெரியவர்கள் ஏற்படுத்தி வைத்தனர்.

71. கடவுளின் திருநாமத்தை ஜெபிப்பதே நாக்கின் பயன். இஷ்ட தெய்வத்தின் பெயரை ஜெபிப்பதால் பாவம் நீங்கி புண்ணியம் சேரும்.

72. கோபம் என்னும் எதிரிக்கு மனதில் இடம் கொடுக்காவிட்டால், எப்போதும் நிம்மதியாக வாழலாம்.

73. பந்தைச் சுவரில் எறிந்தால் அது நம்மை நோக்கித் திரும்புவது போல கோபமும் நமக்கு எதிராகத் திரும்பி விடும்.

74. ஆசையும், கோபமும் மனிதனை பாவத்தில் தள்ளும் சக்தி படைத்தவையாக இருக்கின்றன.

75. சிந்தித்துப் பார்த்தால் யார் மீதும் கோபம் கொள்ளும் தகுதி நமக்கு இல்லை என்பதை உணர முடியும்.

76. பூமியை விட்டுச் செல்லும் முன் ‘என்னிடம் பாவமே இல்லை’ என்னும் உயர்நிலையை அடைய முயற்சி செய்.

77. அறியாமையால் மனிதன் மனதாலும், செயலாலும் பாவம் செய்யும் தீய சூழலுக்கு ஆளாகிறான்.

78. வாக்கு, மனம், உடல் இந்த மூன்றாலும் நற்செயலில் ஈடுபட்டால் தான் பாவத்தில் இருந்து விடுபட முடியும்.

79. உலகிலுள்ள எல்லாம் ஒன்றே என்ற தெளிவு வந்து விட்டால் தீய குணங்கள் யாவும் மறையும்.

80. துன்பத்தில் மட்டுமில்லாமல் கடவுளை இன்பத்திலும் மறப்பது கூடாது.

81. பிறரிடம் சொல்வதை விட துன்பத்தை கடவுளிடம் சொல்வதால் நிம்மதி கிடைக்கும்.

82. மனதில் உள்ளதை உள்ளபடி வெளிப்படுத்தவே கடவுள் மனிதனுக்குப் பேசும் சக்தியை கொடுத்திருக்கிறார்.

83. எதிலும் அதன் அளவு அறிந்து நடந்தால் மன அமைதியுடன் வாழலாம்.

84. நாம் நம்மால் முடிந்த நற்செயல்களைச் செய்து வந்தால் போதும். கடவுள் கைகொடுக்கத் தயாராக இருக்கிறார்.

85. எந்த செயலையும் அதற்குரிய முறையோடு தான் செய்ய வேண்டும். அதுவே நியாயமான வழியாகும்.

86. ஒவ்வொருவரின் பார்வைக்கும் நியாயம் வெவ்வேறானதாக தோன்றினாலும், பொது நியாயத்தைச் செய்வது நல்லது.

87. கடவுளைப் பூஜிப்பதால் மனம் சுத்தம் அடைவதோடு, புண்ணியமும் உண்டாகிறது.

88. பூஜை மட்டுமில்லாமல், சாப்பிடும் போது மனதிற்குள், ‘கருணையால் எனக்கு அன்னம் கொடுத்த கடவுளுக்கு நன்றி’ என்று சிந்திப்பது இன்னும் நல்லது.

89. உலகிலுள்ள அனைத்தும் கடவுளுக்கு சொந்தமானது. நாம் அனுபவிக்கும் எல்லாவற்றையும் அவருக்கு சமர்ப்பித்த பின்னரே பயன்படுத்த வேண்டும்.

90. பக்தியோடு உண்பதால் மனதில் நல்லெண்ணம் உண்டாகும். இந்த பழக்கம் நாம் நல்லவர்களாக வாழ்வதற்கு வழிவகுக்கும்.

91. உடலால் தீமை செய்வது போலவே, மனதால் தீமையைச் சிந்தித்தாலும் பாவமே ஏற்படும்.

92. மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் விளைவு ஏற்பட்டே தீரும். சாஸ்திரம் இதை ‘கர்ம கோட்பாடு’ என கூறுகிறது.

93. அளந்து பேசினால் புத்தியில் தெளிவும், வாக்கில் பிரகாசமும் உண்டாகும்.

94. ‘மவுனம் கலக நாஸ்தி’ என்பர். மவுனமாக இருந்தால் கலகம் உண்டாகாது என்பது இதன் பொருள்.

95. பக்தி மனதில் வேரூன்றினால் பகைவன் மீதும் அன்பு செலுத்தும் பண்பு வரும்.

96. அன்றாடம் கடவுளைத் தியானம் செய்யப் பழகினால், மனம் பாவ விஷயங்களில் ஈடுபட வாய்ப்பிருக்காது.

97. மாணவன் கல்வியை பணிவுடன் கற்க வேண்டும். பணிவு இல்லாத கல்வியால் உலகிற்கு பயன் உண்டாகாது.

98. இறைவனின் இருப்பிடமான மனதைப் பாதுகாக்க தினமும் தியானம் செய்யுங்கள்.

99. எதிர்பார்ப்பு இல்லாமல் பிறருக்கு நன்மை செய்வது புண்ணியம். சுயநலத்துடன் ஆசையால் செய்யும் அனைத்தும் பாவம்.

100. நற்செயலில் ஈடுபடுபவர்களைக் கடவுள் ஒருபோதும் கைவிட மாட்டார்.

ஓம்ஸ்ரீ மஹாபெரியவா திருவடிகளே சரணம் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர,
மெய் சிலிர்க்க வைக்கும் காஞ்சி மகா பெரியவரின் வரலாறும் சமீபத்தில் நிகழ்த்திய அதிசயமும்.

"குருவே சரணம்"

என் நெஞ்சில் அமர்ந்த ஸ்ரீஜகத்குருவே
எனக்கு தரிசனம் தர வந்தாயோ குருவே
என் நெஞ்சில் அமர்ந்த ஜகத்குருவே

கண்ணீர் பெருகிட சிந்துதே மாதுளை மணிபோல்
பார்க்கப் பரவசம் கொண்டேன் குருவே
என் நெஞ்சில் அமர்ந்த ஜகத்குருவே

பாதம் காண்கையில் ஸ்ரீநாராயணா
உன்னைப் பார்க்கையில் ஸ்ரீனிவாசா கோவிந்தா
கனவில் வந்து நீ எழுத வைத்தாயே குருவே
என் நெஞ்சில் அமர்ந்த ஜகத்குருவே

காலம் கடந்தது நினைவில் நின்றது
பாவம் களைய நீ நேரில் வந்தாயோ
பல அவதாரம் காண காட்சி கொடுத்தாய் குருவே
என் நெஞ்சில் அமர்ந்த ஜகத் குருவே

அஷ்டதிக் பாலரை இருவரை கண்டேன்
அற்புதம் அற்புதம் என்னே உன் திருக்காட்சி குருவே
என் நெஞ்சில் அமர்ந்த ஜகத்குருவே

மாநகர் காஞ்சியில் வரவழைத்தாய்
கண்டதும் என்மேல் பரிவு கொண்டாய்
எத்தனை தரிசனம் காண்பித்தாய் குருவே
என் நெஞ்சில் அமர்ந்த ஜகத்குருவே
இராமரின் காட்சியை நேரில் கண்டேன்
இராமனுஜரின் பக்தியை நேரில் கண்டேன்
ஈன்றவர்களின் பாத தரிசனம் கண்டேன் குருவே
என் நெஞ்சில் அமர்ந்த ஜகத்குருவே

முருகா என்றதும் சாமிநாதன் ஆனாய்
நமசிவாய என்றதும் சங்கரன் ஆனாய்
காமாட்சி என்றதும் கருணையோடு பார்த்தாய் குருவே
என் நெஞ்சில் அமர்ந்த ஜகத்குருவே

சரணம் சரணம் கோடி சங்கரா சரணம்
உதயம் உதயம் மனதினுள் இன்னும் உதயம் குருவே
தெவிட்டாத இன்பம், இன்பத்தில் ஒரு வாசம் குருவே
என் நெஞ்சில் அமர்ந்த ஜகத்குருவே

குருவுண்டு பயமில்லை
க்ஷேமம் உண்டு உன்னை நினைக்கையிலே குருவே
என் நெஞ்சோடு நிலை கொண்ட ஸ்ரீஸ்ரீஸ்ரீமஹா
ஜகத்குருவே.

புதன், 25 ஏப்ரல், 2018

ரொம்ப நாளாச் சிதம்பரம் பத்தி எழுதணும்னு ஆசை. ஆனால் அது ஒரு தொடராத் தான் வரும். ஆகவே இதிலேயே தொடர்ந்து எழுதணும்னு இருக்கேன். பொதுவாகச் சைவர்களுக்குக் "கோயில்" என்றாலே அது சிதம்பரத்தைத் தான் குறிக்கும். ஆனால் இங்கே நடராஜர் வருவதற்கு முன்னாலே சிவலிங்க ஸ்வரூபம் தான் இருந்திருக்கிறது. அதற்குப் பின்னர் தான் நடராஜ ஸ்வரூபம் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. தில்லை வாழ் அந்தணர்களும் நடராஜரை வழிபடுவதற்காகவே அவரோடு வந்தார்கள். முதன் முதல் இந்த ஸ்தலம் தில்லை வனமாக இருந்தது. ஆகவே இன்றும் இதற்குத் தில்லை என்ற பெயரும் உண்டு. மருத்துவ குணம் நிரம்பிய தில்லை மரத்திற்குப் பல அபூர்வமான விசேஷங்கள் உண்டு. அவை எல்லாவற்றையும் ஓரளவு தருவதற்கும், தில்லை பற்றிய முக்கியமான விவரங்கள் தருவதற்கும் இந்தப் பதிவு. முக்கியமாகத் தில்லை நடராஜரின் தாண்டவ கோல அர்த்தங்கள், கோயிலின் வழிபாட்டு முறை, தில்லை வாழ் அந்தணர்களின் வரலாறு, நடராஜர் முகமதியர் படையெடுப்பின் போது கேரளாவில் போய் இருந்த வரலாறு என்று பல புதிய தகவல்கள் இடம் பெறும். சற்று நிதானமாய்த் தான் எழுதி இருக்கிறேன். பொறுத்து இருந்து படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன். \
சிதம்பரத்துக்குப் பலமுறைகள் போயிருக்கிறேன். "சிதம்பர ரகசியம்" என்று சொல்லப்படும் தரிசனமும் பலமுறை கிடைத்துள்ளது. நம்ம நாட்டிலே அதுவும் தமிழ் நாட்டிலே இலக்கியம் பக்தியை வளர்த்ததா? அல்லது பக்தி இலக்கியத்தை வளர்த்ததா என்று சொல்வது ரொம்பவே சிரமமான வேலை. அப்படி ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தது இரண்டும்.

இந்தியக் கோயில்களைப் பற்றிப் பார்த்தோமானால் நம்ம பண்பாட்டோடு, கலாசாரமும் கோவில்களைச் சுற்றியே வளர்ந்திருப்பதைக் காணலாம். புராணக் கதைகள், கல்வெட்டுக்கள், இலக்கியங்கள் வாயிலாகவும் அறிகிறோம். அப்படி சிதம்பரம் கோயிலைப் பற்றி அறிய வேண்டுமானால் வேத காலத்தில் உபநிஷதங்கள் மூலம் அறிய முடியும். அவை யாவன: "சாந்தோக்ய உபநிஷதம், கைவல்ய உபநிஷதம், ஸ்காந்த, ஜாபால தரிசனம், வராஹ இன்னும் சிலவற்றின் மூலம் அறிய முடிகிறது.

புராணங்களை எடுத்துக் கொண்டால் ஸ்கந்த புராணம், ப்ரஹ்மநாரதீயம், சைவம், லிங்கபுராணம் மூலமும் உபபுராணங்களில் தேவி பாகவதம், வசிஷ்டலிங்கம், பவிஷ்யோத்தரம் போன்றவற்றிலிருந்தும் ஸ்தல புராணங்களில் சிதம்பர மகாத்மியம், புண்டரீகபுர மகாத்மியம், திலவன மகாத்மியம், வ்யாக்ரபுர மகாத்மியம் மற்றும் ஹேம சபாநந்த மகாத்மியத்திலிருந்தும் அறிய முடியும்.

தற்காலங்களில் நடேச விஜயம், பதஞ்சலி சரித்திரம், சங்கர திக்விஜயம், சிவலீலார்ணவம், மதுரா விஜயம் போன்றவற்றில் இருந்தும், சபாபதி விலாச நாடகம் போன்றவற்றில் இருந்தும் அறியலாம். இவ்வளவு தொன்மையான ஒரு ஊரைப் பற்றியும் அதன் கோயிலின் மகத்துவத்தைப் பற்றியும் ஓரளவுக்குத் தான் என்னால் சொல்ல முடியும்னு நினைக்கிறேன். மேற்கண்ட புராணங்களையோ, உபநிஷத்துக்களையோ நான் அதிகமாய்ப் படித்து அறிந்து கொள்ளவில்லை. என்னோட அறிவுக்கு அவ்வளவு சீக்கிரமா எல்லாம் முடியாது. மற்றபடி ஓரளவுக்கு நான் படித்தும், கேட்டும், சொல்லியும் அறிந்த தகவல்கள் இடம்பெறும்.

முதன்முதல் சிதம்பரம் பற்றியக் குறிப்புக்கள் இடம் பெற்றது "சிதம்பர மகாத்மியம்" என்னும் புத்தகத்தில். கையெழுத்துப் பிரதியாக இருந்த இந்தப் புத்தகத்தில் தான் முதலில் சிதம்பரம் பற்றியும், அதன் கோவில் பற்றியும் குறிப்புக்கள் காணப் படுகின்றன. வேத வியாசரால் எழுதப் பட்ட "ஸ்கந்த மஹாபுராணத்தில்" உள்ள "சனத்குமார சம்ஹிதை" யை ஒட்டி எழுதப் பட்ட இந்தப் புத்தகம் 26 அத்தியாயங்களைக் கொண்டது. மூத்த தலபுராணம் என்று குறிக்கப் படும் இதன் கையெழுத்துப் பிரதியையும் அதன் குறிப்புக்களையும் பற்றி Mackenzie Collections-A study of Chidambaram சொல்லுவது என்னவென்றால்:
இது வியாக்ரபாதர் ஆசிரமமாக இருந்தது. ஆதிசேஷனின் அவதாரமான பதஞ்சலி முனிவரின் யோகாசிரமமாகவும், அவர் கற்பித்துக் கொண்டிருந்த இடமாயும் இருந்தது. மற்றும் மாணிக்கவாசகர் முக்தி பெற்ற ஸ்தலம் என்னும் குறிப்பும் உள்ளது."மற்ற தலபுராணங்களில் எழுதியுள்ளவை வரும்.
சிதம்பரத்துக்குப் பலமுறைகள் போயிருக்கிறேன். "சிதம்பர ரகசியம்" என்று சொல்லப்படும் தரிசனமும் பலமுறை கிடைத்துள்ளது. நம்ம நாட்டிலே அதுவும் தமிழ் நாட்டிலே இலக்கியம் பக்தியை வளர்த்ததா? அல்லது பக்தி இலக்கியத்தை வளர்த்ததா என்று சொல்வது ரொம்பவே சிரமமான வேலை. அப்படி ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தது இரண்டும்.

இந்தியக் கோயில்களைப் பற்றிப் பார்த்தோமானால் நம்ம பண்பாட்டோடு, கலாசாரமும் கோவில்களைச் சுற்றியே வளர்ந்திருப்பதைக் காணலாம். புராணக் கதைகள், கல்வெட்டுக்கள், இலக்கியங்கள் வாயிலாகவும் அறிகிறோம். அப்படி சிதம்பரம் கோயிலைப் பற்றி அறிய வேண்டுமானால் வேத காலத்தில் உபநிஷதங்கள் மூலம் அறிய முடியும். அவை யாவன: "சாந்தோக்ய உபநிஷதம், கைவல்ய உபநிஷதம், ஸ்காந்த, ஜாபால தரிசனம், வராஹ இன்னும் சிலவற்றின் மூலம் அறிய முடிகிறது.

புராணங்களை எடுத்துக் கொண்டால் ஸ்கந்த புராணம், ப்ரஹ்மநாரதீயம், சைவம், லிங்கபுராணம் மூலமும் உபபுராணங்களில் தேவி பாகவதம், வசிஷ்டலிங்கம், பவிஷ்யோத்தரம் போன்றவற்றிலிருந்தும் ஸ்தல புராணங்களில் சிதம்பர மகாத்மியம், புண்டரீகபுர மகாத்மியம், திலவன மகாத்மியம், வ்யாக்ரபுர மகாத்மியம் மற்றும் ஹேம சபாநந்த மகாத்மியத்திலிருந்தும் அறிய முடியும்.

தற்காலங்களில் நடேச விஜயம், பதஞ்சலி சரித்திரம், சங்கர திக்விஜயம், சிவலீலார்ணவம், மதுரா விஜயம் போன்றவற்றில் இருந்தும், சபாபதி விலாச நாடகம் போன்றவற்றில் இருந்தும் அறியலாம். இவ்வளவு தொன்மையான ஒரு ஊரைப் பற்றியும் அதன் கோயிலின் மகத்துவத்தைப் பற்றியும் ஓரளவுக்குத் தான் என்னால் சொல்ல முடியும்னு நினைக்கிறேன். மேற்கண்ட புராணங்களையோ, உபநிஷத்துக்களையோ நான் அதிகமாய்ப் படித்து அறிந்து கொள்ளவில்லை. என்னோட அறிவுக்கு அவ்வளவு சீக்கிரமா எல்லாம் முடியாது. மற்றபடி ஓரளவுக்கு நான் படித்தும், கேட்டும், சொல்லியும் அறிந்த தகவல்கள் இடம்பெறும்.

புண்டரீகபுர மஹாத்மியம்:

தில்லையைப்பற்றிப் புண்டரீகபுர மஹாத்மியத்தில் சொல்லுவது:
12 அத்தியாயங்கள் உள்ள இது இரு பாகங்களைக் கொண்டது. பூர்வ பாகம் மற்றும் உத்தர பாகம். பூர்வ பாகம் 9 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. முழுதும் கிரந்த எழுத்துக்களால் ஆன பதிப்பு. 3 அத்தியாயங்கள் கொண்ட இரண்டாம் பாகம் "ரகஸ்ய அத்தியாயம்" என்றும், "பாரத்வாஜ சம்ஹிதை" என்றும் சொல்லப் படுகிறது. இது கையால் எழுதப் பட்டுள்ளது. இதன் முக்கியமான பகுதிகளில், "யந்திர லட்சணம்" "சபா லட்சணம்", "மந்திரபுர சாரம்" பற்றிய வர்ணனைகளும் இடம் பெற்றுள்ளது. "சிவ மஹா புராண"த்தில் உள்ள "ஏகாதச ருத்ர சம்ஹிதை"யை ஒட்டி உள்ள இந்தப் புண்டரீகபுர மஹாத்மியத்தில் உள்ள ஒரு அத்தியாயம் முழுதும் இந்த க்ஷேத்திரத்தில் உள்ளப் பத்து முக்கிய தீர்த்தங்களைப் பற்றியது.

திலவன மஹாத்மியம்:

ஸ்கந்த புராணத்தில் உள்ள சனத்குமார சம்ஹிதையை ஒட்டி எழுதப் பட்ட இது 8 அத்தியாயங்களைக் கொண்டது. இதில் பெரும்பாலும் "சிதம்பர ரகஸ்யம்" பற்றியும், அதன் குறிப்புக்கள் பற்றியும், சிதம்பரத்தில் உள்ள 5 சபைகள் பற்றியும் கூறுகிறது.

வ்யாக்ரபுர மகாத்மியம்:

இதுவும் ஸ்கந்த புராணத்தில் இருந்து வந்தது. ஆனால் சூத சம்ஹிதையை ஒட்டி எழுதப் பட்டது. 19 அத்தியாயங்களைக் கொண்டது. இதன் முக்கியத்துவம் எல்லாம் வல்ல அந்த ஆடவல்லானுக்கும், அவனுடைய தேவி காளியாய் வந்து போட்டிக்கு அழைத்ததையும், காளியை அவன் வென்றதையும் குறிப்பிடுவதோடு அல்லாமல், ஆடவல்லானின் முக்கியமான ஒன்பது வித ஆடல் தோற்றங்களைப் பற்றியும் விவரிக்கிறது.

இன்னும் நிறையப் புத்தகங்கள் இருக்கு சிதம்பரத்தைப் பத்தி. அவை யாவன:ஹேம சபாநாத மஹாத்மியம்: இதிலே தான் முதன் முதல் "நந்தனாரை" பற்றிய குறிப்புக்கள் கிடைக்கின்றன. திருநீலகண்டரைப் பத்தியும் இதிலே தான் குறிப்புக்கள் இருக்கின்றன. ஆகையால் இது பின்னாளில் வந்தது எனக் கொள்ளலாம். "நடேச விஜயம்" வெங்கடேஸ்வர தீட்சிதரால் எழுதப் பட்டது. இவர் மராட்டிய அரசரான ஷாஜி-2 ஆட்சியின் போது அவரால் ஆதரிக்கப் பட்டவர். இவரைத் தவிர ராமபத்ர தீட்சிதரால் எழுதப் பட்ட பதஞ்சலி சரித்திரமும் ஷாஜி-2 ஆட்சியின் போது எழுதப்பட்டது. வ்யாசகாலர் என்பவர் எழுதிய "சங்கரவிஜயம்" என்னும் நூலும், ஆதிசங்கரரும் அவருடைய முதன்மைச் சீடரான பத்மபாதரும் சிதம்பரம் வந்தது பற்றியும், நடராஜத் திருமேனியின் ரகசியம் பற்றித் தெரிந்து கொண்டது பற்றியும் எழுதி இருக்கிறார். இன்னும் நீலகண்ட தீட்சிதர் எழுதிய சிவலீலார்ணவத்திலும் , அனந்தாச்சாரியா எழுதிய "ப்ரபன்ன மந்திரத்திலும்" சிதம்பரம் பற்றிக் குறிப்புக்கள் இருக்கின்றன. பிரபன்ன மந்திரத்தில் சிதம்பரம் கோவிலுக்குள் நடராஜர் சன்னதிக்கு அருகேயே இருக்கும் கோவிந்த ராஜரைப் பற்றியும் அவர் எவ்வாறு அங்கே வந்தார் என்பது பற்றியும் இருக்கின்றன.

கங்கா தேவி எழுதிய "மதுரை விஜயத்தில்" சிதம்பரம் கோவில் மாலிக்காஃபூர் படை எடுப்பின் போது சேதமடைந்ததையும், நடராஜர் காப்பாற்றி வைக்கப் பட்டது பற்றியும் குறிப்புக்கள் கிடைக்கின்றன. இதைத் தவிர கிருஷ்ணதேவராயர் காலத்தில் சிதம்பரம் கோவில் செப்பனிடப் பட்டது பற்றியும் அறிய முடிகிறது. இது போல் இன்னும் நிறையக் குறிப்புக்கள் கிடைக்கின்றன. கோவிலுக்கு உள்ளேயே சில கல்வெட்டுக்களும் கிடைக்கின்றன. தில்லை வாழ் அந்தணர்களில் ஒருவரான உமாபதி சிவாச்சாரியார் என்பவர் தில்லை வாழ் மூவாயிரவர் பற்றியும் கோவில் நடைமுறைகள், வழிபாடு முறைகள் பற்றியும் எழுதி உள்ளார்.

நடேஸ ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம் என்பது அந்தத் தில்லை வாழ் நடேசனும், சிவகாமசுந்தரியும் பேசிக்கொள்ளுவது போல் அமைந்தது. இது எல்லாம் வல்ல அந்தப் பரம்பொருளான சிவபெருமான் மஹாவிஷ்ணுவுக்குச் சிதம்பரம் கோவில் வழிபாட்டு முறைகளையும், பழக்கங்களையும் கூறியது போல் அமைந்தது. இதைத் தவிர,"பூஜா பதஞ்சலம்" என்னும் நூலில் பதஞ்சலி முனிவர் பற்றியும் சிதம்பரம் தீட்சிதர்கள் பற்றியும் ஆதாரபூர்வமான குறிப்புக்கள் இருக்கின்றன. சாதாரணமாக சிவன் கோவில்களில் வழிபாட்டு முறைகள் சைவ ஆகமத்தை ஒட்டியே பின்பற்றப் படும். ஆனால் சிதம்பரம் கோவில் வழிபாட்டு முறைகள் "வைதீக" முறையைச் சேர்ந்தது. அது தில்லை வாழ் அந்தணர் மட்டுமே அறிந்த ஒன்று எனவும் அவர்களுக்கு சிவனே நேரிடையாக அந்த உரிமையைக் கொடுத்திருப்பது பற்றியும் பின் வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம். இனி, கோவிலைப் பற்றியும், அதன் அமைப்பைப் பற்றியும், பரிவார தேவதைகள் பற்றியும் சிறுகுறிப்புக்கள் தரப் போகிறேன். "ரகசியம்" கேட்பவர்கள் சற்றே பொறுக்கவும். 


திங்கள், 26 ஜூன், 2017

ருத்ர வீணை இது பெரும்பாலும் ஹிந்துஸ்தானி சங்கீததின் ஒரு வகையான துருபத் எனும் இசையை இசைக்க உபயோகப்படுத்தப்படுகிறது. இதற்கும் சரஸ்வதி வீணைக்கும் உள்ள வித்தியாசங்களை பார்தோமென்றால்,சரஸ்வதி வீணையில் குடங்கள் வெவ்வேறு அளவுகளில் இருக்கும் ஆனால் ருத்ர வீணையில் இரண்டு பக்கமும் சம அளவுள்ள காய்ந்து போன பூசனிக்காய்கள் பொருத்தப்பட்டிருக்கும். சரஸ்வதி வீணையில் உள்ளது போலவே இந்த வீணையிலும மெட்டுகள் பொருத்தப்பட்டிருக்கும் (அதாங்க!!அந்த தாயக்கட்டைகள்!! :-) இந்த வீணையை வாசிக்கும் விதமே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். தண்டியின் ஒரு பகுதியில் உள்ள குடத்தை தோளின் மேல் இருத்திக்கொண்டு இந்த வகையான வீணையை வாசிப்பார்கள். இந்த இந்த வகை வீணைகள் இப்பொழுதெல்லாம் அவ்வளவாக பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் இந்தியாவின் மிக பழமையான இசை கருவிகளில் ருத்ர வீணையும் ஒன்று. நாதத்திலிருந்தே எல்லாம் வந்தது. ஸப்த ஸவரங்களும் ஸப்த மண்டலங்கள்,ஸப்த ரிஷிகள், ஸப்த தாதுக்களாய் வந்ததாகச் சொல்வார்கள். இந்த பிரபஞ்சத்தில் அசையும், அசையாத எல்லாப் பொருள்களிலும் ஏதோ ஒரு ரீங்காரம் இசையாய் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.இசை நாடி நரம்புகளிலெல்லாம் ஊடுருவிச் சென்று மூளையை அடைந்து உணர்வுகளை மாற்றி விடும் வல்லமை உடையது. மலையாளத்தில் தெருவ கீதங்கள் என்ற படத்தில் உள்ள இரண்டு ஜேசுதாஸ் பாடல்களை மொட்டை மாடியிலோ, தோட்டத்திலோ அமர்ந்து கொண்டு ஒலிக்கச் செய்தால் காற்றே இல்லாத நேரத்தில் கூட மெல்லிய தென்றல் காற்று வந்து உங்களைத் தழுவுவதை உணர முடியும். அமிர்த வர்ஷினி பாடினால் மழை வரும் என்கிறார்கள். வந்தது, அது ஒரு காலம். இப்போது காற்று மண்டலம் எங்கும் ஒலி, ஒளி அதிர்வுகளும், அலைகளும் குறுக்கிடுவதால் அதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவே. செல் போன் டவரில் இருந்து வரும் கதீர் வீச்சுகளால் குருவி முட்டை குஞ்சு பொரிப்பதற்கு முன்பே உடைந்து போய் குருவிகளின் எண்ணிக்கை கனிசமாகக் குறைந்து விட்டதல்லவா ? அதுபோல எத்தனையோ குறுக்கீடுகள் இசை அலைகளை வெகு தூரம் சென்று இலக்கை அடையவிடாமல் தடுத்து விடுவதாகச் சொல்லப்படுகிறது. இயற்கையின் வடிவான இறைவனை ஆராதிக்கவும், அந்த ஆராதனையின் மூலம் உயிர்களை மகிழ்விக்கவும், அவற்றின் மனதை அமைதிப்படுத்தவும் இசைக் கருவிகள் தோன்றின. ஆதியிலிருந்தே எண்ணற்ற இசைக் கருவிகள் உருவாகியும், இடையில் அழிந்தும் மீண்டும் உயிர் பெற்றும் சிறப்புச் செய்திருக்கின்றன. தோல் வாத்தியங்கள், தந்தி வாத்தியங்கள், காற்று வாத்தியங்கள், உராய்வு வாத்தியங்கள் போன்ற எண்ணற்ற வாத்தியங்கள் இசை உலகில் ஆதிக்கம் செலுத்தி வந்திருந்தாலும், தந்தி வாத்தியங்கள் இவற்றில் தனி ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளன. தந்தி வாத்தியங்கள் அனைத்தும் யாழ் வகையைச் சேர்ந்தவைகளே. 200 தந்திகள் கொண்ட யாழ் கூட இருந்ததாகச் சொல்வார்கள். அப்படிப்பட்ட அதிசயமான யாழ் வகைகள் ஏதும் இப்போது இல்லை என்பது வேதனையான விஷயம். இதில் வீணை என்பது மிகவும் அற்புதமான வாத்தியம். மனித உடலையும் வீணையையும் ஒப்பிட்டு பேசுவார்கள். வீணையின் நடுவே நீளமாக காணப்படும் பகுதி மனிதனின் முதுகுத்தண்டாகவும், குடத்தை தலையாகவும், சிம்ம முகத்தை மூலாதாரமாகவும், தந்திகளை நரம்புகளாகவும், தந்திகளை இழுத்து சரி செய்வதை யோகப் பயிற்சியாகவும் கூறுவார்கள். நன்கு சுருதி சேர்தந்து வைக்கப்பட்டுள்ள வீணை அருகில் ஒலிக்கும் ஒலியை அதிர்வுகளாய் வெளிப்படுத்தும். அது போல யோகப் பயிற்சியில் சிறந்தவர் அருகில் உள்ளவர்களின் உணர்வுகளை உணர்ந்து விடுவார் என்று சொல்வார்கள். வீணையை இசைப்பவரின் பிராண சக்தி அந்த வீணையில் ஓடிக் கொண்டே இருப்பதாகச் சொல்வார்கள். வீணைகளில் எண்ணற்ற வீணைகள் இருந்தாலும், மூன்றுவிதமான வீணைகள் அங்கங்கே வாசிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் இந்திய தேசத்தை பாரம்பரியமாகக் கொண்டவை. ருத்ர வீணை, விசித்திர வீணை, சரஸ்வதி வீணை போன்றவைகளில் தென் இந்தியாவில் சரஸ்வதி வீணையே பெரும்பாலும் வாசிக்கப்படுகிறது. மந்திர உபாசணைகளால் எத்தனைவிதமான சித்திகளைச் செய்ய முடியுமோ, அத்தனையையும் வீணையை இசைத்து ராக ஆலாபணைகளால் செய்ய முடியும். இதற்கு இராவணனை உதாரணமாகச் சொல்வார்கள்.குதிரை முக தேவர்கள் மூலம் யாழ், நாரதர்கள் வழியாக தும்புறுஎன்கிற தம்புரா, கலைவாணி இசைக்கும் ஸாரஸ்வத வீணா போன்ற இசைக் கருவிகள் எல்லாம் தேவர்களால் மனிதர்களுக்கு அருளப்பட்டது என்ற நம்பிக்கை உண்டு. இறைவனால் வழங்கப்பட்ட 64 தந்திரக்கலைகளில் கந்தர்வ தந்திரம், ருத்ரயாமளம், யக்ஷிணிதந்திரம், வீணா என்ற தந்திரங்கள் யாவும் இசையைப் பற்றியதே. இந்தத் தந்திரங்களை உபாசிப்பவர்களுக்கு இசை ஞானமும், இசைக் கருவியும் இறைவனால் வழங்கப்படும் என்று தந்திர சாஸ்திரம் சொல்கிறது. துருபதம் என்ற பண்டைய இசைப் பாரம்பரியம் 19 ஆம் நூற்றாண்டு வரை காணப்பட்டது. அவர்கள் இசைக்கும் வீணை ருத்ர வீணையாகும். அது இறைவன் தந்தது என்றும் இறைவனின் வடிவமாகும் என்றும் எண்ணற்ற அதிசயங்களை ராக ஆலாபணைகளால் செய்யக் கூடியது என்றும் சொல்வார்கள். இதன் அமைப்பும், வடிவமும் வித்தியாசமாக இருப்பதோடு இதன் மீட்டல் லயம் நீண்ட நேரத்திற்கு இன்பம் தருபவையாக இருக்கும் எனச் சொல்லப்பட்டுள்ளது. தேக்கு மரத்தாலானது. இரண்டு குடங்களும் பதப்படுத்தப்பட்ட பூசணிக் காயால் ஆனது. இது 22 உலோகக் கட்டைகளும், ஏழு தந்திகளையும் உடையது. விசித்திர வீணையும் ருத்ர வீணையைப் போன்ற தோற்றத்தையே பெற்றிருக்கிறது. ஆனால் 16 தந்திகளையே கொண்டுள்ளது. அதில் 6 முக்கியமான தந்திகள். இதில் உலோகக் கட்டைகள்(frets) கிடையாது. மனிதன் பேசுவது போலக் கூட இதில் இசைக்க முடியும். தென்னிந்தியாவில் பிரபலமானது ஸரஸ்வத வீணை. இது பலா மரத்தின் ஒரே கட்டையால் செய்யப்படுகிறது. இதில் 24 உலோகக் கட்டைகள் உண்டு. 7 தந்திகளும் உண்டு. இதில் 4 மீட்டுவதற்கும், 3 தாளத்திற்கும் பயன்படும். இதில் இடது பக்கம் காணப்படும் சிறு பானை போன்ற அமைப்பு வடிவத்திற்காகவும், லாவகமாகக் கையாள்வதற்காக மட்டுமே. எண்ணற்ற தேவ வாத்தியங்களும், இசைக் கருவிகளும் காலத்தால் அழிந்து விட்டாலும், இருக்கும் சிலவற்றையாவது காப்பாற்றும் கடமை நமக்கும் உள்ளது. ஏனெனில் தேவ வாத்தியங்களில் இறை சக்தி உள்ளது. அது எல்லா நிலைகளிலும் மக்களைக் காத்திருக்கின்றன என்பதை புராணங்கள் வாயிலாக அறிகிறோம். இதை அறிவுறுத்தவே எல்லா தெய்வவடிவங்கள் கைகளிலும் ஏதாவது ஒரு வாத்தியக் கருவி காணப்படுகிறது.


ஆதிசங்கரர் அருளிய அபூர்வ ஸ்லோகம் நம்மில் எத்தனை பேர் தினமும் நியமநிஷ்டை தவறாமல் கடவுளை வணங்குகின்றோம்? குறைந்தபட்சம் ஒரு பூவையாவது போட்டு பூஜிக்க நமக்கு நேரம் இருக்கிறதா? அப்படியெல்லாம் இயலாமல் போவதற்க்கு முன்வினைப் பாவம் தான் என்கிறார். மற்ற எவரையும் குறை சொல்லாமல் தாமே இப்படியெல்லாம் குற்றம் செய்தவர் போல் மகேசனிடம் மன்னிப்பு கேட்கும் பாவனையில் மகத்தான ஸ்லோகம் ஒன்றை இயற்றியுள்ளார் அம்மகான். ஜகத்தின் நன்மைக்காக ஜகத்குரு இயற்றிய உயர்வான அந்ததுதி உங்களுக்காக இங்கே தமிழ் அர்த்ததுடன் தரப்பட உள்ளது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் சொல்லுங்குங்கள் உங்கள் முன்வினைப் பாவம் யாவும் முக்கண்ணனின் அருளால் தீய்ந்து வாழ்வில் பிரகாசம் பெறுவீர்கள். உலகத்தை உய்விக்க உமாமகேசனே எடுத்து வந்த அவதாரமாய் அவதரித்தார் ஆதிசங்கரர் நம்மைப் பற்றியே சிந்தித்தவர் நமக்காகவே வாழ்ந்தவர் அவருடைய சிந்தனைகள், செயல்கள், பிராத்தனைகள் எல்லாமே நமக்காகத்தான். நாம் எப்படி வாழ வேண்டும்? எப்படி தர்மத்தின் படி நடக்க வேண்டும் அறுசமயக் கடவுள்களை எப்படி வணங்கினால் அவர்களின் அருளைப் பெறலாமென்பதையெல்லாம். தம் படைப்புகளின் மூலம் உணர்த்தியவர். மன்னிக்க வேண்டுகிறேன் என்ற இந்த பிராத்தனைப்பாடல், வடமொழியில் சிவாபராத க்ஷமாபன ஸ்தோத்திரம் என்று பிரபலமாக உள்ளது. பிரபஞ்ச நாயகனான மஹாதேவனை போற்றிப் பாடும் பாடல்கள் இவை. சிவமே சிவத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டுமா? கொஞ்சம் யோசித்தால் இதுவும் இந்த வேண்டுதலும் நமக்காகவே என்பது புரியும். மானிடராகப் பிறந்த எவரும் கர்ம வினைகளில் இருந்து மன்னித்து காத்திட மகேசனை வேண்டி சங்கர மகான் இயற்றிய சக்திமிக்க துதி இது. அகத்தில் ஈசனை நினைத்து இந்த ஸ்லோகத்தை பாடித் துதித்து வர தீவினைத் துன்பம் தீர்ந்து வாழ்வில் வளமும், நலமும் சேரும் என்பது நிச்சயம். மொத்தம் பன்னிரெண்டு ஸ்லோகம் தினம் ஒரு ஸ்லோகம் அதற்கான அர்த்தங்கள் தினமும் பதிவிடப்படும். ஸ்லோகம் நம்பர் ஒன்று ஆதௌ கர்ம பிரஸங்காத் கலயதி கலுஷம் மாத்ரு குக்ஷௌஸ்திதம் மாம் விண்முத்ராமேத்ய மத்யே க்வதயதி நிதராம் ஜாடரோ ஜாதவேதா:| யத்யத்வை தத்ர துக்கம் வ்யதயதி நிதராம் சக்யதே கேன வக்தும் க்ஷந்தவ்யோ மே அபராத: சிவசிவசிவ போ ஸ்ரீ மஹாதேவ சம்போ|| கர்ப்பச் சிறையாக தாயின் வயிற்றில் பத்து மாதமிருந்தேன். அப்போது தாயின் இரைப்பையின் அசைவுகளால் இம்சிக்கப்பட்டு, அசுத்தங்களின் அருகே உழன்றேன். இவையாவும் கர்ம வினைகளின் பயனே. கடந்த பிறவியிலும் கடந்த காலங்களில் நான் செய்த தவறுகளை யெல்லாம் மன்னிக்க வேண்டுகிறேன். சிவ பெருமானே, மஹாதேவரே என் தவறுகளை யெல்லாம் மன்னித்தருள வேண்டுகிறேன். மறுபடியும் மற்றோர் தாயின் வயிற்றில் நான் பிறக்காமலிருக்க அருள வேண்டும். மீண்டும் நாளை தொடரும். ஸ்லோகம் நம்பர் இரண்டு பால்யே துக்காதிரேகோ மலலுதிவபு: ஸ்தன்யபானே பிபாஸா நோ சக்தச் சேந்திரியேப்யோ பவகுண ஜனிதா ஜந்தேவோ மாம் துதந்தி | நா நாரோகாதி துக்காத்ருதன பரவஸ: சங்கரம் நஸ்மராமி க்ஷந்தவ்யோ மே அபராத: சிவசிவசிவ போ ஸ்ரீ மஹாதேவ சம்போ|| விளக்கம் : அசுத்தத்திலேயே சுழன்று கொண்டிருந்த என்னால் அன்னையின் பாலை புசிக்க முடியவில்லை. என் அன்னை தானாகவே என் தேவையை உணர்ந்து என்னருகில் வருவதை நான் எதிர்பார்த்து நெடுநேரம் காத்திருந்தேன். பரிதாபமாக அழுதழுது என் இயலாமையை தெரியப்படுத்தினேன். ஈ,எறும்பு எண்ணாயிரம் பூச்சிகள் என் மேல் ஊர்ந்தாலும் அவைகளை அகற்றும் வழி தெரியாமல் தடுமாறினேன். ரோகங்களினால் நான் பட்ட துன்பங்கள் கடுமையானவை. முந்தை வினையின் பயனாக வந்த துன்பங்கள் இவை. இத்தகைய அவலநிலை ஏற்படாமல் பாதுகாக்க சிவனாகிய உம்மால் தான் முடியும். மஹா தேவரே என்னுடைய எல்லா பாவங்களையும் மன்னிக்க வேண்டுகிறேன். ஸ்லோகம் நம்பர் மூன்று ப்ரௌடோ அஹம் யொவனஸ்தோ விஷய விஷ தரை: பஞ்சபிர் மர்ம சந்தௌ தஷ்டோ நஷ்டோ விவேக: ஸுத தன யுவதி ஸ்வாத ஸௌக்யே நிஷண்ண:| சைவீசிந்தாவிஹீனம் மம ஹ்ருதய மஹோ மான கர்வாதிரூடம் க்ஷந்தவ்யோ மே அபராத: சிவசிவசிவ போ ஸ்ரீ மஹாதேவ சம்போ|| இப்போது நான் வயது முதிர்ந்தவன். வாலிபத்தில் ஐம்புலன்களின் மறைவான தாக்கத்தினால் விவேகத்தை இழந்தவன். பொங்கும் உணர்ச்சிகள் என்னை அலைக்கழித்து விட்டன. மழலைகள், செல்வம், பெண்கள் ஆகியவையளித்த சுகத்தில் என்னையே இழந்தேன். அகங்காரமும் ஆணவமும் என்னை உணர்வற்றுப்போகச்செய்து விட்டன. இத்தகைய அவலத்திற்கு காரணமான முந்தை வினைகளையும் மன்னிக்குமாறு மஹா தேவரே உம்மை வேண்டுகிறேன். ஸ்லோகம் நம்பர் நான்கு வார்தகேயே சேந்த்ரியாணாம் விகதகதி மதிச்சதி தைவாதி தாபை: பாபை ரோகைர் வியோகைஸ் வன வஸித வபு: ப்ரௌடிஹீனம் ச தீனம் | மித்யா மோஹாபிலாஷைர் ப்ரமதி மம மனோ துர்ஜடேர் தியான சூன்யம் க்ஷந்தவ்யோ மே அபராத: சிவசிவசிவ போ ஸ்ரீ மஹாதேவ சம்போ|| விளக்கம் : நான் மூப்படைந்து விட்டதால் புலன்கள் சக்தியை இழந்து விட்டன. அதனால் இயற்கைச் சக்திகளால் ஏற்படும் தாபம் வெளி செயல்களால் விளையும் பாவம் உள்ளே உடலில் நோயால் ஏற்படும் ரணங்கள் உடனிருந்தவர்களின் மரணத்தால் விளையும் இழப்பு என்று பல துன்பங்கள் என்னை வாட்டுகின்றன. மாயையான இச்சையால் இளமையின் சக்தி பாதிக்கப்பட்டது. இதனால் மனம் சஞ்சலப்பட்டு தியானம் என்பதே அற்றுப்போய்விட்டது. எனவே மஹாதேவரே என் பிழைகளைப் பொறுத்தருள்வீராக. ஸ்லோகம் நம்பர் ஐந்து நோ சக்யம் ஸ்மார்த்த கர்ம ப்ரதிபத கஹனப்ரத்ய வாயா குலாக்யம் ச்ரௌதே வார்தா கதம் மே த்விஜகுல விஹிதே ப்ரம்ம மார்கே ஸுஸாரே நாஸ்தா தர்மே விசார: ச்ரவண மனனயோ: கிம் நிதியாசிதவ்யம் க்ஷந்தவ்யோ மே அபராத: சிவசிவசிவ போ ஸ்ரீ மஹாதேவ சம்போ|| விளக்கம் : ஸ்ம்ருதிகர்மா என்று ஸ்ம்ருதிகளில் கூறப்பட்ட ஈஸ்வர ஆராதனையில் என்னால் ஈடுபட இயலாது. அந்த ஸ்ம்ருதிகளில் நீதி நூல்கள், வேதங்களில் எளிதில் புரிந்து கொள்ள இயலாதபடி கடின பதங்களால் சொல்லப்பட்ட அனுஷ்டானங்களைப் புரிந்து கொண்டு செய்ய இயலாது. என்னுடைய மனமும் அறிவும் தங்கள் சக்திகளை இழந்து விட்ட நிலையில் ச்ரௌத கர்மா என்கிற தியானம், சிந்தனை ஆகிய வழிகளில் ஆத்மா முழுமையாக ஈடுபட முடியாது. அன்னையின் கருவிலிருந்து முதல் பிறப்பு ஆன்மிகத் தேடலுக்காக இரண்டாம் பிறப்பு என்று இரு பிறப்பாளருக்காக விதிக்கப்பட்டிருக்கும் கேட்டல் (சிரவணம்) சிந்தித்தல் (மனனம்) ஆகியவை மூலம் தெளிவையும் பெற முடியவில்லை. இத்தகைய இழிவான நிலையிலிருந்து கொண்டு எப்படி நான் உமது அருளைக் கோர முடியும்? இருந்தாலும் மஹா தேவரே என்னுடைய தவறுகளை மன்னித்து அருளுங்கள். ஸ்லோகம் நம்பர் ஆறு ஸ்நாத்வ ப்ரத்யூஷகாலே ஸ்நபன விதிவிதௌ நாஹ்ருதம் கங்கதோயம் பூஜார்தம் வோ கதாசித்மஹீதர கஹனாத் கண்டபில்வீதலானி நாநீதா பத்ம மாலா ஸரஸி விகஸிதா கந்த புஷ்பே த்வதர்தம் க்ஷந்தவ்யோ மே அபராத: சிவசிவசிவ போ ஸ்ரீ மஹாதேவ சம்போ|| விளக்கம் : மஹா தேவரே அதிகாலையில் எழுந்து குறிக்கவில்லை. விதி முறைப்படி தங்களுக்கு அபிஷேகம் செய்ய ஒரு சிறு குடம் ஜலம் கூட கொண்டு வரவில்லை. தங்களுக்கு பூஜை செய்வதற்காக அடர்ந்த காட்டிலிருந்து பிளவு படாத வில்வ இலைகளைக் கொண்டு வரவில்லை. நறுமணம் உள்ள தாமரை மலர்களை தடாகத்திலிருந்து பறித்து வந்து உமக்கு மாலையாகச் சூட்டவில்லை. மணமுள்ள வாசனை மலர்களையும் சமர்ப்பிக்கவில்லை. மஹா தேவரே இத்தகைய எளிய அனுஷ்டானங்களைக் கூட செய்யாத என்னை மன்னிக்க வேண்டுகிறேன். ஸ்லோகம் நம்பர் ஏழு துக்தைர் மத்வாஜ்ய யுக்தைர் ததிஸித ஸஹிதை: ஸ்நாபிதம் நைவ லிங்கம் நோ லிப்தம் சந்தனாத்யை: கனக விரசிதை: பூஜிதம் ந ப்ரஸுநை:| தூபை: கர்பூரதீபைர் விவிதரஸயுநைர் நைவ பக்ஷ்யோ பஹாரை| க்ஷந்தவ்யோ மே அபராத: சிவசிவசிவ போ ஸ்ரீ மஹாதேவ சம்போ|| விளக்கம் : பால், தேன், நெய், சர்க்கரை, தயிர் இவை எதனாலும் என்னால் உமது லிங்ஙத் திருமேனிக்கு அபிஷேகம் செய்யப்படவில்லை. சந்தனம் முதலியவை பூசப்படவில்லை. மலர்கள் சமர்ப்பிக்கவில்லை. ஆபரணங்களால் அலங்கரிக்கப்படவில்லை. தூப தீபம் காட்டப்படவில்லை. புனித திரிவிளக்கு சமர்ப்பிக்கவில்லை. சுவையான உணவு பண்டங்கள் எதுவுமே நேவேதனம் செய்யவில்லை. மஹா தேவரே இத்தகைய அலட்சகயங்களும் அசட்டைகளும் என்னுடைய கர்ம வினையால் ஏற்பட்டிருப்பின் அவைகளை மன்னிப்பீராக. ஸ்லோகம் நம்பர் எட்டு நக்னோ நீஸ்ஸங்க சுத்தஸ்த்ரிகுண விர ஹிதோ த்வஸ்த மோஹாந்தகாரோ நாஸாக்ரே ந்யஸ்த த்ருஷ்டிர் விதித பவகுணோ நைவ த்ருஷ்ட: கதாசித்| உன்மன்யாவஸ்தயா த்வாம் விகித கலிமலம் சங்கரம் ந ஸ்மராமி க்ஷந்தவ்யோ மே அபராத: சிவசிவசிவ போ ஸ்ரீ மஹாதேவ சம்போ|| விளக்கம் : சங்கரனே நீர் எங்கும் எல்லாவற்றிலும் இருப்பதால் இயற்கையாகவே திகம்பரனாக ஆடையேதும் தரிக்காமல் இருப்பவன். பற்றற்றவனாயிருப்பவன். மாயையின் இருளை அழித்து விட்டவன். மூக்கின் நுனியில் பார்வையை நிறுத்தி ஆழ்ந்த தியானத்திலிருப்பவன். இந்த உலகத்தின் குணங்களை அறிந்தவன். அறிய முடியாத குறைபாடுகள் அற்ற மனதை உடையவன். எல்லோருக்கும் ஆனந்தத்தையும் மங்கலத்தையும் அளிப்பவன். அத்தகைய உம்மை நான் சிந்திக்கவில்லை. மஹா தேவரே இத்தகைய என் தவறுகளுக்கு கர்ம வனைகளேயல்லவா காரணணாக இருக்க முடியும் ! என்னை மன்னிக்க வேண்டுகிறேன். ஸ்லோகம் நம்பர் ஒன்பது சந்த்ரோத் பாஸிதசேகரே ஸ்மரஹரே கங்காதரே சங்கரே ஸ்வபைர் பூஷித கண்ட கர்ணவிவரே நேத்ரோத்த வைச்வானரே| தந்தித்வக்ருத ஸுந்தராம்பரதரே த்ரை லோக்யஸார ஹரே மோக்ஷார்தம் குரு சித்த வ்ருத்தி மகிலா மன்னயஸ்து கிம் கர்ம பி: விளக்கம் : சந்திரசேகரரே தாங்கள் சந்திரனின் பிறையொளியால் அலங்கரிக்கப்பட்ட நெற்றியையுடையவர். எம்முள் இருக்கும் தீய எண்ணங்களை அளிப்பதால் ஹரன் என்றழைக்கப்படுபவர். கங்கையை தரித்துக் கொண்டிருக்கும் கங்காதரன். ஆனந்தத்தைக் கொடுப்பதால் சங்கரன். கழுத்தும், காதும், நகத்தால் அலங்கரிக்கப்பட்ட நாகாபரணன். கணகளிலிருந்து நெருப்புச் சுடர் தெறிக்கும். வைஸ்வானரன் யானைத் தோலையணிந்தவன். மூன்று உலகங்களின் அடிப்படைத் தத்துவமானவன். மோக்ஷத்தை அளிக்கக் கூடிய பரிசுத்தமான மனத்தை நீர் எமக்களியும். அது ஒன்றை அருளினாலே போதும். மற்ற ஞானம் அனைத்தும் அதனுள்ளேயே அடக்கம் என்பதால் அனைத்தும் தானே வந்து சேரும். ஸ்லோகம் நம்பர் பத்து கிம் வர்நேன தனேன வாஜிகரிபி: ப்ராப்தேனே ராஜ்யேன கிம் கிம் வா புத்ர களத்ர பசுமிர்தேஹேன கேஹேன கிம்| ஞாத்வை தத்க்ஷண பங்குரம், ஸபதிரே த்யாஜ்யம் மனோ துரத்: ஸ்வாத் மாரத்தம் குருவாக்யதோ பஜ பஜ ஸ்ரீ பார்வதி வல்லபம்|| விளக்கம் : ஏ மனமே செல்வத்தினால் என்ன உபயோகம்? குதிரைகள், யானைகள் யாவும் நிறைந்த ராஜ்யத்தினால் என்ன பலன்? மகன், நண்பன், மனைவி, மிருகங்கள் இவைகளால் என்ன பயன்? இந்த உடலால் என்ன உபயோகம்? இந்த வீட்டால் என்ன பயன்? இவையனைத்தும் ஒரு கணத்தில் அழியக் கூடியவை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். இவை எல்லாம் உடனே துறக்கப்பட வேண்டியவை. அதன் பின் மேன்மையான குரு விடமிருந்து உபதேசம் பெற்று பார்வதி நாயகனைப் போற்றிப் பயனடைவாய். ஸ்லோகம் நம்பர் பதினொன்று ஆயுர் நச்மதி பச்ய தாம் ப்ரதி தினம் யாதி க்ஷயம் யௌவனம் ப்ரத்யாயாந்தி கதா: புனர் ந திவஸா: கலோ ஜகத் பக்ஷக:| லக்ஷ்மிஸ்தோய தரங்க பங்கசபலா வித்யுச்சலம் ஜீவிதம் தஸ்மாந்மாம் சரணாகதம் சரணத த்வம் ரக்ஷ ரக்ஷா துனா|| விளக்கம் : தினமு‌ம் நம் உயிர் தேய்ந்து கொண்டிருகாகிறது. இது கவனிக்கப்பட வேண்டும். இளமையும் அழகும் கரைந்து கொண்டிருக்கின்றன. நாட்கள் கடந்து போய்க் கொண்டிருக்கின்றன. காலம் உலகத்தை விழுங்கிக் கொண்டிருக்கின்றது. செல்வத்திற்கதிபதியான லக்ஷ்மி எங்கும் நிலையாக நிற்க மாட்டாள். அலைமகள் அலைகளைப் போல் நிலையற்றவள். இந்த வாழ்க்கையும் நிலையற்றது. மின்னலைப் போன்று கணத்தில் தோன்றி மறையக்கூடியது. அதனால் சரணமடைந்தவரைக்காக்கும் சதா சிவனே என்னையும் காப்பீராக. ஸ்லோகம் நம்பர் பன்னிரெண்டு கரசரணக்ருதம் வாக்காயஜம் கர்மஜம் வா ச்ரவணநயனஜம் வா மானஸம் வா பராதாம் விஹிதம விஹிதம் வா ஸர்வமேதத் க்ஷமஸ்வ ஜய ஜய கருணாப்தே ஸ்ரீ மஹாதேவ சம்போ| விளக்கம் : மகாதேவரே! என் கைகளினாலும் கால்களினாலும் செய்யப்பட்ட தவறுகள், சொல், உடல், செயல்களில் தவறுகள், கண், செவி ஆகியவையால் செய்யப்பட்ட தவறுகள் செய்ய வேண்டியதைச் செய்யாததால் ஏற்ப்பட்ட விளைவுகள் செய்யக்கூடாததைச் செய்தால் ஏற்பட்ட கெடு பலன்கள் என்று எல்லா குற்றங்களையும் மன்னிப்பேராக. கணக்கற்ற பாவங்களையும் மன்னிக்க கூடிய கருணா மூர்த்தியே உண்மையே பர்பூர்ணமாக சரணாகதியடைகிறேன். என்னைக் காப்பீராக. சிவாபராத க்ஷமாபன ஸ்தோத்திரம் நிறைவுற்றது.


சத்ருவை ஜயிக்க ஸுலபஸ்: ஸுவ்ரதஸ்: ஸித்தஸ்: ஸத்ருஜிச்-சத்ருதாபந: ந்யக்ரோதோ தும்பரோ ஸ்வத்தஸ் -சாணூராந்த்ர நிஷூதந: லட்சுமி கடாட்சம் ஏற்பட துரிதௌக நிவாரண ப்ரவீணே விமலே பாஸுர பாக தேயலப்யே ப்ரணவ ப்ரதி பாத்ய வஸ்துரூப ஸ்புரணாக்யே ஹரிவல்லபே நமஸ்தே. துர்மரணம் ஏற்படாமல் இருக்க அனாயாஸேச மரணம் வினாதைந்யேன ஜீவனம் தேஹிமே க்ருபயா சம்போ த்வயி பக்தி மசஞ்சலாம் புத்ரான் தேஹி யசோதேஹி ஸப்பதம் தேஹி சாச்வதீம் த்வயி பக்திஞ்ச மேதேஹி - பரத்ரச பராங்சதிம். கற்பூர ஆரத்தியின் போது ஸோமோ வா ஏதஸ்ய ராஜ்ய-மாதத்தே! யோ ராஜஸன் ராஜயோ வா ஸோமேன யஜதே! தேத ஸுவா மேதானி ஹவீம்ஷி பவந்தி! ஏதா வந்தோ வை தேவானாம் ஸவா:! த ஏவாஸ்மை ஸவான் ப்ரயச் சந்தி! தஏனம் புனஸ் ஸுவந்தே ராஜ்யாய! தே ஸூ ராஜாபவதி ராஜாதி ராஜஸ்ய ப்ரஸஹ்ய ஸாயினே நமோ வயம் வைச்ரவணாய குர்மஹே ஸமே காமான் காம காமாய மஹ்யம் காமேச்வரோ வைச்ரவணாய மஹாராஜாய நம: நதத்ர ஸூர்யோ பாதி ந சந்திர தாரகம்! நேமோ வித்யுதே பாந்தி குதோய மக்னி! தமேவ பாந்த மனுபாதி ஸர்வம் தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி! மந்திர புஷ்பம் போடும் போது யோபாம் புஷ்பம் வேத! புஷ்பவான் ப்ரஜாவான் பசுமான் பவதி! சந்த்ரமா வா அபாம் புஷ்பம்! புஷ்பவான் ப்ரஜாவான் பசுமான் பவதி! பிரதட்ஷனம் செய்யும் போது யானி காளி ச பாபானி ஜன்மாந்தர-க்ருதானிச! தானி தானி விநச்யந்தி பிரதட்ஷனபதே பதே! ஏகச்லோக சுந்தர காண்டம் யஸ்யஸ்ரீ ஹனுமான் அனுக்ரஹ பலாத் தீர்ணாம்புதிர்லீலயா லங்காம் ப்ராப்ய நிசாம்ய ராமதயிதாம் பங்க்த்வா வனம் ராக்ஷஸான் அக்ஷõதீன் விநிஹத்யவீக்ஷ?ய தசகம் தக்த்வா புரீம் தாம்புன; தீரணாப்தி; கபிபிர்யுதோ யமநமத்தம் ராமசந்த்ரம்பஜே. (இந்த ஸ்லோகத்தை தினம் பாராயணம் செய்தால் சுந்தர காண்ட பாராயணம் செய்த பலன் கிடைக்கும்.) நீராடும் போது துர்போஜன துராலாப துஷ்ப்ரதி க்ரஹ ஸம்பவம் பாவம் ஹர மம் க்ஷ?ப்ரம் ஸஹ்யகன்யே நமோஸ்துதே: கங்கே ச யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸன்னிதிம் குரு கங்கா கங்கேதி யோப்ரூயாத் யோஜனானாம் சதைரபி முச்யதே ஸர்வ பாபேப்ய: விஷ்ணுலோகம் ஸகசக்தி. விபூதி அணியும் போது பாஸனாத் பஸிதம் ப்ரோக்தம் பஸ்ம கல்மஷ பக்ஷணாத் பூதி: பூதிகரீபும்ஸாம் ரக்ஷா ரக்ஷாகரீ சுபா. ராகவேந்திரர் மந்திரம் பூஜ்யாய ராகவேந்த்ராய சத்யதர்ம ரதாயச பஜதாம் கல்பவ்ருக்ஷ?ய நமதாம் காமதேனவே கர்ப்பிணிகள் சொல்ல வேண்டிய ஸ்லோகம் ஹே, சங்கர ஸ்மரஹர ப்ரமதா தீ நாத மன்னாத ஸாம்ப சசிசூட ஹர த்ரிசூலினி சம்போ ஸுகப்ரஸவக்ருத் பவ மே தயாஸோ ஸ்ரீ மாத்ரு பூத சிவ பாலயமாம் நமஸ்தே மாத்ரு பூதேச்வரோ தேவோ பக்தானா மிஸ்டதாயக; ஸுகந்தி குந்தலா நாவ; ஸுகப்ரஸவ ம்ருச்சது ஹிம வத்யுத்தரே பார்தவே ஸுரதா நாம யக்ஷ?ணி தஸ்யா: ஸ்மரண மாத்ரேண விசல்யா கர்பிணி பவேத். சுகப்பிரசவத்திற்கான ஸ்லோகம் ஹிமவத்ய தத்ரே வார்ஸ்வே ஸீரதா நாம யக்க்ஷ?ணி தஸ்யா: ஸ்மரண மாத்ரேணா விசல்யா கர்பிணீபவேது எப்போதும் கூறிக்கொண்டேயிருக்க வேண்டிய ஸ்லோகம் ஹர நம : பார்வதீபதயே ஹர ஹர மஹாதேவ ஜானகீ காந்த ஸ்மரணம் ஜய ஜய ராம ராம ஆயுர்தேவி ஸ்தோத்திரம் இது மிகவும் சிறந்த ஸ்தோத்திரம். வியாச மஹா முனிவரால் இயற்றப்பட்டது. இதை குழந்தைகளுக்கு ஆயூஷ்ய ஹோமம் செய்கின்ற நாட்களிலும் ஷஷ்டியப்த பூர்த்தி நாட்களிலும் ஜபம் செய்து ஆயுஷ்ய ஸூக்தத்தோடு ஹோமங்கள் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் ஆயுர்தேவியின் அனுக்கிரகத்தால் நோயின்றி ஆயுர் அபிவிருத்தி ஏற்படும். எல்லா நலன்களும் ஏற்படும். இந்த ஸ்தோத்திரத்தை அனுதினமும் பாராயணம் செய்வது மிகவும் நல்லது. த்யாயேத்: ஹேமாம்புஜா ரூடாம் வரதா பய பாணிகாம் ஆயுஷா தேவதாம் நித்யாம், ஆஸ்ரிதாபீஷ்ட ஸித்திதாம் ஆயுர்தேவீ மஹாப்ராக்ஞ்யே ஸுதிகா க்ருஹவாஸிநீ பூஜிதா பரயா பக்த்யா தீர்க்கமாயுஹ் ப்ரயச்சமே ஸிம்ஹஸ்கந்த கதாம்தேவீம் சதுர்ஹஸ்தாம் த்ரிலோசனாம் ஸக்திசூல கதாபத்ம தாரிணீம் சந்த்ர மௌளிகாம் விசித்ர வஸ்த்ர ஸம்யுக்தாம் ஸர்வாபரண பூஷிதாம் ஸிம்ஹஸ்கந்த கதாம் தேவீம் சதுர்ஹஸ்தாம் த்ரிலோசனாம் ஸிம்ஹஸ்கந்த கதே தேவீ ஸுராஸுர ஸுபூஜிதே ப்ரபவாத்யப்தகே ஸங்கே ஆயுர்தேவீ நமோஸ்துதே ஆயுர்தேவீ நமஸ்துப்யாம் வர்ஷதேவீம் நமோஸ்துதே ஆயுர்தேஹி பலம் தேஹி ஸர்வாரிஷ்டம் வ்யபோஹயா ஆயுஷ் மதாத்மிகாம் தேவீம் கராள வதனோ ஜ்வலாம் கோர ரூபாம் ஸதாத்யாயேத் ஆயுஷ்யம் யாசயாம்யஹம் ஸுபம் பவது கல்யாணி ஆயுர் ஆரோக்ய ஸம்பதாம் ஸர்வ சத்ரு விநாசாய ஆயுர்தேவி நமோஸ்துதே ஷஷ்டாம்ஸாம் ப்ரகிர்தைர் ஸித்தாம் ப்ரதிஷ்டாப்யச ஸுப்ரபாம் ஸுப்ர தாம்சாபி சுபதாம் தயாரூபாம் ஜகத்ப்ரஸும் தேவீம் ÷ஷாடச ஷ்ருஷாம்தாம் சாஸ்வதஸ்திர யௌவனாம் பிம்போஷ்டீம் ஸுததீம் சுத்தாம் சரத்சந்த்ர நிபன்னாம் நமோ தேவ்யை மஹாதேவ்யை ஸித்யை ஸாந்த்யை நமோ நம சுபாயை தேவஹேனாயை ஆயுர்தேவ்யை நமோ நம வரதாயை புத்ர தாயை தனதாயை நமோ நம ஸ்ருஷ்ட்யை ஷஷ்ட்டாம்ச ரூபாயை ஸித்தாயைச நமோ நம மாயாயை ஸித்த யோகின்யை ஆயுர்தேவ்யை நமோ நம ஸாராயை சாரதாயைச பராதேவ்யை நமோ நம பாலாரிஷ்டார்ரு தேவ்யைச ஆயுர்தேவ்யை நமோ நம கல்யாண தாயை கல்யாண்யை பலதாயைச கர்மணாம் ப்ரத்யக்ஷõயை ஸ்வபுக்தானாம் ஆயுர்தேவ்யை நமோ நம பூஜ்யாயை ஸ்கந்த காந்த்யை ஸர்வேஷாம் ஸர்வகர்மஸு தேவரக்ஷண காரிண்யை ஆயுர்தேவ்யை நமோ நம ஸூத்த தத்வ ஸ்வரூபாயை வ்நதிதாயை த்ருணாம்ஸதா வர்ஜித க்ரோத ஹிம்ஸாயை ஆயுர்தேவ்யை நமோ நம: சுகப்பிரவசம் நடைபெற ஸ்ரீ கர்ப்ப ரட்சாம்பிகை ஸ்தோத்திரம் அம்பாள் சன்னதியில் பிரம்மஸ்ரீ சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷதர் அவர்களால் மெய்மறந்து இயற்றப்பட்ட ஸ்தோத்திரம். தினசரி பாராயணம் செய்ய உகந்தது. ஸ்ரீ மாதவீ கானனஸ்தே - கர்ப்ப ரக்ஷாம்பிகே பாஹி பக்தம் ஸ்துவந்தம் (ஸ்ரீ) வாதபீதடே வாமபாகே - வாம தேவஸ்ய தேவஸ்ய தேவீஸ்துதித்வம் மாந்யா வரேண்யாவதான்யா - பாஹி கர்ப்பஸ்த ஜந்தூனதா பக்த லோகான் (ஸ்ரீ) ஸ்ரீ கர்ப்ப ரக்ஷா புரேயா - திவ்ய ஸெளந்தர்ய யுக்தா ஸுமாங்கல்ய காத்ரீ தாத்ரீ ஜனித்ரீ ஜனானாம் திவ்ய ரூபாம் தயார்த்ராம் மனோக்ஞாம் பஜேதாம் (ஸ்ரீ) ஆஷாடே மாஸே ஸுபுண்யே - சுக்ர வாரே ஸுகந்தேன கந்தேன லிப்தா திவ்யாம் பராகல்ப தேஷா - வாஜ பேயாதி யாகஸ்த பக்தைஸ் ஸுத்ருஷ்டா (ஸ்ரீ) கல்யாண தாத்ரீம் நமஸ்யே -வேதி காக்ய ஸ்த்ரியா கர்ப்ப ரக்ஷா கரீம் த்வாம் பாலைஸ் ஸதாஸே விதாங்க்ரிம் - கர்ப்ப ரக்ஷார்த்த மாராது உபேதைரு பேதாம் (ஸ்ரீ) ப்ரம் மோத்ஸவே விப்ரவீத்யாம் - வாத்ய கோஷேண துஷ்டாம் ரதே ஸந்நிவிஷ்டாம் ஸர்வார்த்த தாத்ரீம் பஜேஹம் - தேவ ப்ருந்தை ரபிட்யாம் ஜகன் மாதரம் த்வாம் (ஸ்ரீ) ஏதத் க்ருதம் ஸ்தோத்ர ரத்னம் - தீக்ஷ? தானந் தராமேண தேவ்யாஸ் ஸுதுஷ்ட்யை நித்யம் படேத்யஸ்து பக்தியா - புத்ர பௌத்ராதி பாக்யம் பவேத்தஸ்ய நித்யம்: (ஸ்ரீ) நல்ல குழந்தைகளாக வளர தஞ்சம் பிறிதில்லை ஈதல்ல தென்றுன் தவநெறிக்கே நெஞ்சம் பயில நினைக்கின்றி லேன்ஒற்றை நீள்சிலையும் அஞ்சம்பம் இக்கு அலர் ஆகநின் றாய் அறியார் எனினும் பஞ்சஞ்சும் மெல்லடியார் அடி யார்பெற்ற பாலரையே மலர் அம்புகளும், நீண்ட கரும்பு வில்லும் கொண்டிருக்கும் அபிராமி வல்லியே! உன் தவநெறியே அன்றி அடைக்கலம் வேறு ஒன்றுமில்லை என நான் அறிந்தும் அவ்வழியில் முயன்று நடைபயில எண்ணவில்லை. பேதையரைப் போன்றவர்கள் இந்த செம்பஞ்சுக் குழம்பு ஒளிவீசும் பாதங்களை உடைய பெண்கள். இவர்கள் தாம் பெற்ற குழந்தைகளைத் தண்டிக்க மாட்டார்கள். எனவே விரைந்து எனக்கு அருள்புரிவாய் அன்னையே! ஆண் குழந்தை ப்ராப்த்தி உண்டாக ககனமும் வானும் புவனமும் காணவிற் காமன் அங்கம் தகனமுன் செய்த தவப்பெரு மாற்குத் தடக்கையும் செம் முகனும்முந் நான்கிரு மூன்றெனத் தோன்றிய மூதறிவின் மகனுமுண்டாயதன் றோவல்லி நீசெய்த வல்லபமே அன்னையே அபிராமியே! விண்ணுலகும் மண்ணுலகும் அறியுமாறு அந்த மன்மதனை சிவன் எரித்தார். ஆனால், நீசெய்த அருள் செயலால் அப்பெருமானுக்கு ஆறுமுகங்களும் ஈறாறு கரங்களும் உடைய ஞானக் குழந்தையே பிறந்தானே. என்னே உன் அன்பு ! ஆதிசங்கரர் அருளிய த்வாதச லிங்க ஸ்தோத்திரம் ஸௌராஷ்ட்ர தேசே வஸுதாவகாரே ஜ்யோதிர்மயம் சந்த்ர கலாவதம்ஸம் பக்திப்ராதாய க்ருதாவதாரம் தம் ஸோமநாதம் சரணம் ப்ரபத்யே மிகவும் புண்ணியம் வாய்ந்ததான ஸௌராஷ்ட்ர தேசத்தில், ஒளிரும் பிறைமதியை சிரசில் தாங்கிக்கொண்டு பக்தர்களுக்கு அருள்புரிவதற்காக அவதரித்த சோமநாதரை நான் சரணமடைகிறேன். ஸ்ரீசைலச்ருங்கே விவிதப்ரஸங்கே சேஷாத்ரி ச்ருங்கேபி ஸதாவஸந்தம் தமர்ஜுதம் மல்லிகா பூர்வதம் நமாமி ஸம்ஸார ஸமுத்ர ஸேதும் பல நல்ல அம்சங்கள் கைவரப்பெற்ற ஸ்ரீ சைலமலையின் உச்சியிலும் சேஷாத்ரி மலையுச்சியிலும் எப்போதும் வாசம் செய்பவரும் இறப்பு, பிறப்பு எனும் இரு நிகழ்வுகளுடன் கூடிய சம்சாரம் எனும் கடலில் தத்தளிக்கும் பக்தர்களுக்கு கரையாக உள்ளவருமான மல்லிகார்ஜுனரை நமஸ்கரிக்கிறேன். அவந்திகாயாம் விஹிதாமதாரம் முக்திப்ரதாய ச ஸஜ்ஜநாநாம் அகாலம்ருத்யோ பரிரக்ஷணார்த்தம் வந்தே மஹாகாலமஹம் ஸுரேஸம் அவந்தி என்னும் முக்தியை அளிக்கக் கூடியதும் அகால மரணத்திலிருந்து காப்பாற்றக்கூடியதும் ஆகிய உஜ்ஜயினியில் ஆட்சிபுரிபவரும் தேவர்களின் தலைவருமான மகாகாளேஸ்வரரை மனதாலும் வாக்காலும் வணங்குகிறேன். காவேரிகா நர்மதாயோ பவித்ரே ஸமாகமே ஸஜ்ஜநதாரணாய ஸதைவ மாந்தாத்ருபுரே வஸந்தம் ஓங்காரமீசம் சிவமேக பீடே காவேரி (நர்மதையுடன் சேரும் ஒரு ஆறு. தென்னிந்திய காவேரி வேறு), நர்மதை ஆகிய நதிகள் சங்கமிக்கும் தூய்மையான மாந்தாத்ருபுரம் என்னுமிடத்தில் உறைபவரும் பக்தர்களைக் கரையேற்றுபவருமான ஓங்காரேஸ்வரரின் பாதங்களைத் தொழுகிறேன். பூர்வாத்தரே பாரவிகாபிதா நே ஸதாசிவம் தன் கிரிஜாஸமேதம் ஸுராஸுராராதித பாத பத்மம் ஸ்ரீவைத்ய நாதம் ஸததம் நமாமி வடகிழக்கில் பாரவி என்னும் தலத்தில் மலைமகளோடு கூடிய சதாசிவனாக, தேவர்களாலும் அசுரர்களாலும் பூஜிக்கப்பட்ட அழகிய பாதத் தாமரைகளைக் கொண்ட ஸ்ரீ வைத்யநாதரை நமஸ்காரம் செய்கிறேன். ஆமர்த ஸம்ஜ்ஞே நகரேச ரம்யே விபூஷிதாங்கம் விவிதை: க போகை ஸித் புக்திமுக்தி ப்ரதமீக மேகம் ஸ்ரீநாகநாதம் சரணம்ப்ரபத்யே தாருகாவனம் எனும் ஆமர்த தலத்தில் பல்வேறு வகையான நாகங்களை அணிகலன்களாகக் கொண்டு, தர்மத்திற்கு விரோதமல்லாத போகமும் மோட்சமும் தரக்கூடிய ஈசனாக மேனியெங்கும் திருநீறு பூசிக்கொண்டருளும் பரமேஸ்வரனான நாகநாதனை வணங்குகிறேன். ஸாநந்தமாநந்தவநே வஸந்தம் ஆனந்த கந்தம் ஹதபாபப்ருந்தம் வாரணாஸி நாதமநாத நாதம் ஸ்ரீ விஸ்வநாதம் சரணம் ப்ரபத்யே ஆனந்தவனம், வாரணாசி எனும் அதியற்புதமான பெயர்களால் வழங்கப்படும் காசித்தலத்தில் பக்தர்களின் பாவங்களை அழிப்பவரும் ஆனந்தத்தை அளிப்பவரும் ஆதரவற்றவர்களுக்கு அபயமளிப்பதையே கடமையாகக் கொண்டவரும் ஆன காசி விஸ்வநாத மூர்த்தியை சரணடைகிறேன். ஸ்ரீதாம்ரபர்ணி ஜலராசியோகே நிப்த்யஸேதும் நிசிபில்வபத்ரை: ஸ்ரீராமசந்த்ரேண ஸமர்ச்சிதம் தம் ராமேஸ்வராக்யம் ஸததாம் நமாமி புனிதமான தாமிரபரணி ஆற்றின் நீர் கடலில் சங்கமமாகும் இடத்தில் அணைகட்டி ராமச்சந்திரமூர்த்தியினால் வில்வதளங்களால் அர்ச்சிக்கப்பட்ட ராமேஸ்வரம் ராமநாதரை அனவரதமும் நமஸ்காரம் செய்கிறேன். ஸிம்ஹாத்ரி பார்ச்வேபி தடே ரமந்தம் கோதாவரீ பவித்ர தேசே யந்தர்சனாத் பாதகஜாதநா: ப்ரஜாய தே த்ரயம்பகமிமீடே ஸிம்ஹாத்ரி மலையின் தாழ்வறையில் இனிமையாக சஞ்சரிப்பவரும், மிகப் புனிதமான தக்ஷிண கங்கை என்னும் கோதாவரி நதிக்கரையில் இருப்பவரும், எவரைக் கண்ட மாத்திரத்திலேயே பாவங்கள் விலகி ஓடிடுமோ அந்த த்ரயம்பகேஸ்வரரை வணங்குகிறேன். ஹிமாத்ரிபார்ச்வேபி தடே ரமந்தம் ஸம்பூஜ்யமானம் ஸததம்முனீந்த்ரை: ஸுராஸுரையக்ஷ மஹோரகாத்யை கேதாரஸம்ஜ்ஞயம் சிவமீச மீடே ஹிமாச்சலத்தின் தாழ்வறையில் சஞ்சரிப்பதை விரும்பு பவரும் சிறந்த முனிவர்கள், தேவர்கள், அரக்கர்கள், யக்ஷர்கள், உரகர்கள் மற்றும் முனிவர்களால் எப்போதும் ஆராதிக்கப்படுபவரும் ஈசன் என்று போற்றப்படுபவருமான கேதாரேஸ்வரரை நமஸ்கரிக்கிறேன். ஏலாபுரி ரம்ய சிவாலயேஸ்மிந் ஸமுல்லஸந்தாம் த்ரிஜகத்வரேண்யம் வந்தே மஹோதாரத்ர ஸ்வபாவம் ஸதாசிவம் தம் திஷணேச்வராக்யம் ஏலாபுரம் எனும் எல்லோராவில் உள்ள அழகிய சிவாலயத்தில் அருளாட்சி புரிந்து வருபவரும் மூன்று உலகில் உள்ளோராலும் போற்றப்படுபவரும், மிக மிக உயர்ந்த உவமை சொல்ல இயலாத குணத்தைக் கொண்டவரும், திஷணேஸ்வரரான சிவபெருமானை வணங்குகிறேன். ஏதா நி லிங்கா நி ஸதைவ மர்த்யா ப்ராத: படந்த: அமல மா நசாஸ்ச தே புத்ர பௌத்ரைர்ச்ச தநைருதாரை: ஸத்கீர்த்திபாஜ: ஸுகிநோ பவந்தி இந்தப் பன்னிரு ஜோதிர் லிங்கங்களின் துதியை தூயமனதுடன் தினமும் காலையில் துதித்தால் தலைமுறை தலைமுறையாக செல்வம், புகழ் போன்றவை விருத்தியாகும். கார்த்திகையன்று இத்துதியை பாராயணம் செய்பவர் வாழ்வு தீபம் போல் பிரகாசிக்கும்


இறுதியில் இறை தூதர்களா ? எமதூதர்களா ? முடிவு உங்கள் கையில்..!! இறந்தவன் மகனால் முதல் நாள் வைக்கும் பிண்டத்தால் ஆவிக்குத் தலை உண்டாகிறது. இரண்டாம் நாள் போடும் பிண்டத்தால் கழுத்தும் தோளும் மூன்றாம் நாள் பிண்டத்தால் மார்பும் நான்காம் நாளில் வயிறும் ஐந்தாம் நாளில் உந்தியும் ஆறாம் நாளில் பிருஷ்டமும் ஏழாம் நாளில் குய்யமும் எட்டாம் நாளில் தொடைகளும் ஒன்பதாம் நாளில் கால்களும் உண்டாகி பத்தாம் நாளில் புத்திரனால் பெறப்படும் பிண்டத்தால் சரீரம் முழுவதும் பூரணமாக உருவாகும். பிண்டங்களால் முழுமையான உருவத்தைப் பெற்ற ஆவி பதினோறாவது நாள் தான் சரீரத்தோடு வாழ்ந்த வீட்டிற்கு வந்து தான் உயிரோடு இருக்கின்ற பொழுது வீட்டில் நிகழ்ந்த அனைத்து சம்பவங்களையும் தன்னால் நிகழ்த்தப்பட்ட எல்லா விதமான காரியங்களையும் நினைத்துப் பார்த்து அழுது துடிக்குமாம். மீண்டும் நம்மால் இப்படி வாழமுடியாமல் போய்விட்டதே என்று எண்ணியெண்ணி அந்த ஆவி துடிப்பதை எரி மலை சீற்றத்திற்குள் அகப்பட்டு கொண்ட சிறு பறவைக் குஞ்சியின் துடிப்பிற்கு இணையாக ஒப்பிடப்படுகிறது. கடந்த கால வாழ்க்கையை மீண்டும் வாழ ஆசைப்படுவதும் சரீரப்பிரவேசத்தில் மோகம் கொள்வதும் சாதாரணமான உலகியல் வாழ்க்கையில் வாழ்ந்து உழன்ற செத்துப்போன ஜீவன்கள் தான் என்பதையும் பரமார்த்திக வாழ்வை மேற்கொண்ட ஜீவன்கள் சரீரப்பிரிவைப் பற்றியோ மரணமடைந்ததைப் பற்றியோ துளி கூடக் கவலைப்படுவதில்லை என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். வாழ்ந்த வீட்டில் வீழ்ந்து கிடந்து அழும் ஆவியை பதி மூன்றாவது நாள் எமகிங்கரர்கள் பாசக்கயிற்றால் கட்டி எமபுரிக்கு இழுத்துச் செல்வார்கள். அப்படி இழுத்துச் செல்லும் போது கூரிய பற்களுடைய ரம்பம் போன்ற இலை அமைப்புக்கொண்ட அமானுஷ்யவனாந்திரம் ஒன்றின் வழியாக அந்த ஜீவன் பயணம் செய்யும் சூழ் நிலை ஏற்படும். அப்போது வாள் போன்ற மர இலைகள் அந்த ஜீவனின் பிண்ட உடலைக் குத்தி காயப்படுத்தும். அதனால் ஏற்படும் வலியில் சுறுக்கு மாட்டப்பட்ட நாய் ஊளையிடுவது போல் ஆவி கத்தித் துடிக்கும். வைவஸ்வத என்ற நரகம் வழியாகவும் ஜீவன் இழுத்துச் செல்லப்படுமாம். அந்த நகரத்தில் உயரமான மாளிகைகள் மிக நெருக்கமாக அமைந்திருக்குமாம். அச்சத்தையும் அருவருப்பையும் ஏற்படுத்தும் கோர ரூபமுடைய பிராணிகள் பல ஜீவனைச் சூழ்ந்து கடித்துக் காயப்படுத்துமாம். மேலும் அந்நகரத்திற்குள் நுழைந்தவுடன் ஜீவனுக்குத் தாங்க முடியாத தாகம் ஏற்படுமாம். தாகம் தணிக்க இரத்தமும் சீழும் கலந்த கொடுக்கப்படுமாம். அந்த நகரத்து மேகங்களெல்லாம் இரத்தத்தையும் அழுகிய சதைத்துண்டகளையும் மழையாகப் பொழியுமாம். இத்தகைய அருவருக்கத்தக்க கஷ்டமான சூழலிலும் இறந்த ஜீவனுக்கு அதீதமான புத்திர பாசம் ஏற்படுமாம். பாவத்தின் தண்டனையும் பாசத்தின் சோதனையும ஆவியைச் சட்டையில்லாமல் பனிப்பொழிவிற்குள் அகப்பட்டக் கொண்டவனைப்போல் வருத்தி எடுக்குமாம். இப்படி வழி நெடுகலும் காற்று நிறைந்த வழியிலும் துஷ்ட ஜந்துக்கள் நிறைந்க வழியிலும் இழுத்துச் செல்லப்படும் ஜீவன் இருபத் தெட்டாவது நாளில் கொடுக்கப்படும் சிரார்த்த பிண்டத்தை உண்டு சற்று இளைபாறி முப்பதாவது நாள் யாமியம் என்ற நகரத்தை அடையும். அந்நகரில் வடவிருஷம் என்ற மரமும் பல விதமான பிரேதக்கூட்டங்களும் நிறைந்திருக்கும். அங்கு இரண்டாவது மாஸிக பிண்டத்தைப் பெற்ற பின்பு சற்று இளைப்பாறி மீண்டும் கிங்கரர்களால் இழுத்துச் செல்லப்பட்டு திரைப்பஷிக மாஸிக பிண்டத்தை வேண்டி சங்கமன் என்ற எட்க்ஷன் தலைமையில் உள்ள சௌரி என்ற பகுதியல் சிறிது காலம் தங்கி மூன்றாவது மாஸிக பிண்டத்தைப் பெறுவார்கள். ஐந்து மற்றும் ஆறாவது பிண்டத்தை உண்டு கடந்த சென்று வைதரணி என்ற நதிக்கரையை அடைவார்கள். சாதாரணமான நதிகளைப் போல் இந்த நதியில் தண்ணீர் இருக்காது. அதற்குப் பதிலாக ரத்தமும் சீழும் சிறுநீர் மலம் சளி இவைகள் ஒன்றாகக் கலந்து ஆறாக ஓடுமாம். இந்த நதியைப் பாவம் செய்த ஆத்மாக்கள் அவ்வளவு சீக்கிரம் கடக்க முடியாமல் கிங்கரர்கள் ஆழத்தில் தள்ளி அழுத்துவார்கள். புண்ணியம் செய்த ஆத்மாக்களை ஒரு நொடிப் பொழுதிற்குள் ஆற்றின் மறுகரையில் கொண்டு விட்டு விடுவார்கள். இப்படி பல இடங்களிலும் பலவிதமான அவஸ்தைகளையும் அனுபவங்களையும் பெற்றாலும் இறந்து ஏழாவது மாதம் ஆனாலும் கூட எமலோகத்திற்குச் செல்லும் பாதி வழியை மட்டும் தான் ஜீவன்கள் இது வரை கடந்து வந்திருக்குமாம். பக்குவப்பதம் என்ற இடத்தில் எட்டாம் மாத பிண்டத்தையும் துக்கதம் என்ற இடத்தில் ஒன்பதாவது மாத பிண்டத்தையும் நாதாக்தாதம் என்ற இடத்தில் பத்தாவது மாத பிண்டத்தையும் அதப்தம் என்ற இடத்தில் பதினோறாவது மாத பிண்டத்தையும் சீதாப்ரம் என்ற இடத்திலும் பன்னிரெண்டாவது மாத அதாவது வருஷாப்திய பிண்டத்தையும் பெறுவார்கள். மரணமடைந்து ஒரு வருடத்திற்குப் பின்னரே எமபுரிக்குள் ஜீவன்களால் நுழையமுடியும். எமதர்மன் முன்னால் நியாய விசாரணைக்கு ஜீவன் நிறுத்தப்படும் முன்னால்12 சிரவணர்கள் இறந்த ஆத்மா செய்த பாவ புண்ணியக் கணக்குகளைப் பார்ப்பார்கள். அதன் பின்னரே எமதர்மனால் விசாரிக்கப்பட்டு தண்டனை பெறுவார்கள். இங்கு நாம் எமலோகத்திற்குப் போகும் வழியில் ஆத்மாவிற்கு ஏற்படும் பலவிதமான கஷ்ட நஷ்டங்களைப் பார்த்தோம். தீமை மட்டுமே வாழும் காலத்தில் செய்த ஆத்மாக்கள் துன்பங்களை அனுபவிப்பது நியாயமானது தான். நன்மையைச் செய்த ஆத்மாக்கள் கூட இதே வழியில் தான் அழைத்து செல்லப்படுவார்களா? இதே துன்பங்களை தான் அனுபவிப்பார்களா என்று வினா எழும்புவது இயற்கையானது தான். நமதுசாஸ்திரங்களும் தர்மங்களும் சத்திய வழியில் வாழ்க்கை நடத்துபவர்களை மரணதேவனின் தூதுவர்கள் வந்து அழைக்க மாட்டார்கள். இறைதூதர்கள் தான் வந்து அழைத்துச் செல்வார்கள் என்று கூறுகிறது. திதி முன்னோர்களுக்கு கொடுங்கள். திருப்பம் திருப்தி கிடைக்கும்.


குரு பஞ்சகம் குருநாதா குருநாதா! குணபூஷனரே குருநாதா!! ஸ்ரீ மாதுரியின் தவப்புதல்வா!!! ஸ்ரீதரன் வணங்கும் முரளீதரா!!!! குருநாதா குருநாதா குணபூஷனரே குருநாதா மதுராபுரியின் மாமன்னா! மாதவ சேவையில் மஹாதேவா!! மஹாரண்யத்தில் உறைபவா!!! மஹாமந்த்ர கீர்த்தனம் அருளியவா!!!! குருநாதா குருநாதா குணபூஷனரே குருநாதா சைதன்ய தேவரின் மறுஉருவே! நித்யானந்தரின் திரு உருவே!! பாகவதோத்தம ஸதா சிவா!!! பார்புகழும் எங்கள் பரந்தாமா!!!! குருநாதா குருநாதா குணபூஷனரே குருநாதா அவ்யாஜ கருணாமூர்த்தே! ஹம்ஸ பக்ஷியின் அம்ஸமே!! துதிப்போரைக் காப்பவரே!!! துணையாய் என்றும் இருப்பவரே!!!! குருநாதா குருநாதா குணபூஷனரே குருநாதா பக்த பரிபாலகரே! ஷிஷ்யர்களின் நாயகரே!! (ஸத்)புத்தியைத் தருபவரே!!! (ஜீவன்)முக்தியையும் அருள்பவரே!!!! குருநாதா குருநாதா குணபூஷனரே குருநாதா ஸத் குருநாத் மஹராஜ்கீ ஜெய் இப்பாடலை எழுதியவர் ஸ்ரீதர் அண்ணா (மயிலாப்பூர்)


குல தெய்வம் யார் எனத் தெரியாதவர்கள் என்ன செய்தால் குலதெய்வத்தை நாம் அரிய முடியும்? முன் காலத்தில் சில கிராமப்புறங்களில் இருந்த பிராமணர்களுக்கு தமது குல தெய்வம் யார் என்று தெரியாமல் இருந்த போது அவர்கள் நதியில் குளித்து விட்டு பூமியில் இருந்து ஒரு பிடி களிமண்ணை எடுத்து வருவார்கள். வீட்டிற்கு வந்து அதை பிள்ளையார் பிடிப்பதைப் போல பெரியதாக பிடித்து மஞ்சள் குங்குமம் இட்டு அதையே தமது குலதெய்வமாக வணங்கி பூஜிப்பார்கள். குல தெய்வம் யார், அது ஆணா, இல்லை பெண்ணா என்பது என்பது தெரியாததினால் உருவமற்ற அதை ஒரு பீடத்தில் (அந்த காலத்தில் மரப்பலகைகள் நிறையக் கிடைக்கும் என்பதினால்) சந்தனத்தினால் ஒரு கட்டம் போட்டு அதில் வீபுதி மற்றும் மஞ்சள் குங்குமத்தையும் தூவி களிமண்ணால் செய்த பிள்ளையார் பிடியைப் போன்ற அந்த குலதெய்வ களிமண் தெய்வத்தை அதன் மீது வைத்து அதையே தமது குல தெய்வமாக எண்ணி பூஜை செய்வார்கள். வீபுதியையும், மஞ்சள் மற்றும் குங்குமத்தை தூவுவது எதற்காக என்றால் குல தெய்வம் யார், அது ஆணா, இல்லை பெண்ணா என்பது தெரியாததினால் ஆண், பெண் என்ற இருவருக்கும் பொருந்தும் வகையில் ஆணான குல தெய்வமாக இருந்தால் சந்தனம் மற்றும் வீபுதியையும், பெண்ணான குல தெய்வமாக இருந்தால் சந்தனம் மற்றும் குங்குமத்தையும் இடுவதான ஐதீகம் கொண்டு அதை செய்வார்கள். பூஜை முடிந்ததும் பூஜை அறையில் அந்த களிமண் பிடியை தமது குல தெய்வமாக கருதிக் கொண்டு ஸ்வாமி பீடத்தில் பத்திரமாக பாதுகாப்பாக உடையாமல் வைத்து விடுவார்கள். அதையே தமது குல தெய்வமாக வணங்கி வரும் போது ஒரு கட்டத்தில் நிச்சயமாக அவர்களுடைய குலதெய்வம் அவர்கள் கனவிலோ அல்லது யார் மூலமாகவோ வந்து அவர்களுக்கு தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளும். இது சத்தியமான உண்மையாகவே இருந்தது. எப்படி களிமண் உருவை படைத்து அதை பூஜித்தார்கள் என அவர் கொடுத்த விவரத்தை மேலே உள்ள படத்தில் கொடுத்து உள்ளேன். அவர் மேலும் கூறுகையில் ஒரு தவறை செய்ய கூடாது என எச்சரித்தார். பூமியில் இருந்து எடுத்த களிமண்தானே என அதை அலட்சியப்படுத்தி விடக் கூடாது. எப்போது அந்த மண் பிடியை குல தெய்வத்தின் உருவம் என்று கருதி பூஜிப்போமோ அப்போதே அதில் நம்மை அறியாமல் நம்முடைய குல தெய்வங்கள் வந்து குடியேறும். ஆகவே அதை தமது குல தெய்வம் அடையாளம் தெரியும் வரை பத்திரமாக உடையாமல் பாதுகாத்து வர வேண்டும். தேவை என்றால் தெய்வங்களை வைத்து உள்ள இடத்திலோ, பூஜை அறையிலோ ஒரு சிறிய பிளாஸ்டிக் பெட்டியிலாவது வைத்து அதை பத்திரமாக வைத்து பாதுகாக்க வேண்டும். மேலும் அதற்கு தினமும் ஒரு பூவாவது அது முடியவில்லை என்றால் அதன் பீடத்தில் சிறிது குங்குமத்தையாவது தூவி குல தெய்வமே எனக்கு உன்னை அடையாளம் காட்டுவாயாக என பிரார்த்தனை செய்து வணங்கி வர வேண்டும். வேறு எந்த பூஜையும் செய்யத் தேவை இல்லை. ஆனால் நிச்சயமாக அவரவர் பிராப்தம் போல எப்போது அவர்களுக்கு தன்னைப் பற்றிய விவரம் தெரிய வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படுமோ அப்போது அவர்களுக்கு குல தெய்வம் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளும் என்பதில் சற்றும் சந்தேகம் கிடையாது. எப்போது அவர்கள் தமது குல தெய்வத்தை அடையாளம் கண்டு கொள்கின்றார்களோ அதன் பின் அவர்கள் எப்போது அந்த ஆலயத்துக்கு செல்வார்களோ அப்போது தமது குல தெய்வமாக வணங்கி வந்த மண் பொம்மையை எடுத்துக் கொண்டு அந்த ஆலயத்தில் குல தெய்வத்தை வணங்கியப் பின் ஆலய ஸ்தல விருஷத்தின் கீழ் அல்லது ஆலயத்திலேயே ஏதாவது ஒரு மூலையில் அந்த பொம்மையை வைத்து விட்டு வருவார்கள். அல்லது ஆலயத்தில் குளம் இருந்தால் அந்த நீரில் அதைப் போட்டு விட்டு வருவார்கள் என்று கூறினார். குல தெய்வம் என்பது எத்தனை ஜென்மங்களுக்குப் பொருந்தும் வம்சக் கணக்கு என்பது என்ன என்ற கேள்வி எழுந்த போது அவர் கூறிய கீழே தந்துள்ள விவரங்கள் ஆச்சர்யமாக இருந்தன. குல தெய்வம் எத்தனை ஜென்மங்களுக்கு ஒரு வம்சத்தைக் காப்பாற்றும்? சாதாரணமாக ஏழேழு ஜென்மங்களுக்கும் குலதெய்வம் குடும்பங்களைக் காப்பாற்றும் என்பது பெரிய நம்பிக்கை. ஏழேழு ஜென்மம் என்பது 7x7 அதாவது 49 ஜென்ம ஆண்டுகள் என்பது ஒரு கணக்கு. 49 என்பதின் கூட்டுத் தொகை 4+9 = 13 இந்த எண் தான் ஒருவருடைய வம்சத்தை நிர்ணயிக்கும் முக்கியமான எண். ஒருவர் இறந்து விட்டால் பதிமூன்றாம் நாள் அன்று கிரேக்கியம் என்ற நல்ல காரியத்தை செய்வது பழக்கம். அன்று தான் உடலை விட்டு வெளியேறிய ஆத்மா சொர்கத்தை அடைகின்றது என்று நம்புகிறோம். அது போலத்தான் இறுதிக் காலமாக 13 என்ற அந்த காலத்தைக் குறிக்கும் விதத்தில் 49 ஜென்ம காலமான 13 ஜென்மத்துடன் ஒரு வம்சம் முடிவடைகின்றது என்று நம்பப்படுகின்றது . அதாவது எந்த ஒரு வம்சத்திலுமே 13 வம்சாவளியினருக்கு மேல் வணங்கும் குல தெய்வம் இருக்க முடியாது என்பது தெய்வக் கணக்கு. ஏதாவது ஒரு கட்டத்தில் அந்த வம்சத்தில் வழி வழியாக வந்தவர்களின் வம்சத்தினருக்கு குழந்தைப் பேறு இல்லாமலோ, அகால மரணங்களினாலோ, ஆண் வம்ச விருத்தி அடையாமலோ அல்லது ஏதாவது காரணத்தினால் வம்சம் அழிந்து விடும். ஆகவே ஏழேழு ஜென்மங்களுக்கு மேல் எந்த வம்சத்தினரும் இருக்க மாட்டார்கள். ஆகவே ஒரு வம்சத்தின் குல தெய்வம் என்பது 13 ஜென்மத்துக்கு வம்சா வளிகளுக்கு மட்டுமே தொடர்ந்து கொண்டு இருக்கும் என்று கூறுகிறார்கள். வம்சக் கணக்கு என்பது என்ன? வம்சம் என்பது எப்படி கணக்கிடப்படுகின்றது? ஒருவருக்கு பிறந்த மகன் அவனுக்குப் பிறந்த மகன், அவனுக்குப் பிறந்த மகன் என ஆண் குழந்தை மட்டுமே வம்சத்தில் கணக்கில் வரும். ஒருவருடைய சராசரி வயது 50 என்றால் கூட அவருடைய தாத்தாவின், தாத்தாவின் பெரும் தாத்தாவின் காலம் என 13 ஜென்மங்களுக்கு முந்தய காலம் எனக் கணக்கிட்டால் 13 x 50 = 650 ஆண்டுகள் என வரும். யாருக்காவது 650 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த அவர் சந்ததியினர் யார் என்பது தெரியுமா? அதை விட சிறிய கேள்வி, யாருக்காவது அவர்களுடைய குடும்பத்தில் 13 ஆம் வம்சத்தின் பெரிய தாத்தா யார் என்பது தெரியுமா? இதையெல்லாம் யார் குறித்து வைத்துக் கொண்டு வருகிறார்கள்? அதனால் தான் ஒரு குல தெய்வம் ஏழேழு ஜென்மம் அதாவது 49 ஜென்மங்களுக்கு அதாவது 13 ஜென்ம காலத்துக்கு ஒரு வம்சத்தைக் காப்பாற்றும் என்ற வார்த்தை வந்தது. மகள் என்பவள் திருமணம் ஆனதும் புகுந்த வீட்டிற்குச் சென்று விடுவதினால் அவளுக்கு தாய் தந்தையின் குல தெய்வத்தை தனது குல தெய்வமாக ஏற்க பாத்யதை இல்லை. அவள் புகுந்த வீட்டின் குலதெய்வமே அவள் குல தெய்வம் ஆகி விடும். பலருக்கு குல தெய்வம் யார் என்பது ஏன் தெரியாமல் உள்ளது? இதற்குக் காரணம் பூர்வ ஜென்மத்தில் ஏற்பட்ட சாபம் அல்லது முன்னோர்கள் செய்த அலட்சியமே காரணம். முன்னர் எல்லாம் வீட்டில் உள்ள பெரியவர்கள் தமது மகன்களுக்கு தாம் வணங்கும் குல தெய்வம் யார், அந்த ஆலயம் எங்கு உள்ளது என்பதைக் கூறுவார்கள். ஒரு வருடங்களுக்கு ஒரு முறையாவது தமது குல தெய்வ ஆலயத்துக்கு சென்று பூஜித்து விட்டு வருவார்கள். வீடுகளில் குல தெய்வ உண்டியல் இருக்கும். அதில் தமது காணிக்கைகளை போட்டுக் கொண்டே இருப்பார்கள். அவ்வபோது தாம் போக முடியாவிடிலும் குடும்பத்தில் யார் அங்கு செல்கிறார்களோ அவர்களிடம் அந்த காணிக்கைப் பணத்தை தந்து உண்டியலில் சேர்த்து விடுமாறு கூறுவார்கள். தமது பிள்ளைகள் வெளியூருக்குப் போகும் போது அவர்களுக்கு குல தெய்வம் யார் என்பதைக் கூறி குல தெய்வத்தின் படத்தையும் தருவார்கள். அது மட்டும் அல்ல எந்த ஒரு நல்ல காரியமும் வீட்டில் நடக்கும் போது முதல் பிரார்த்தனை குல தெய்வத்திற்குத்தான் நடைபெறும். அதற்குப் பின்னரே மற்ற பூஜைகள் துவங்கும். ஆனால் காலபோக்கில் ஏற்பட்ட நாகரீக மாற்றங்களினால் வெளியூர் செல்லும் பிள்ளைகள் குல தெய்வம் என்ற கருத்தை மறந்து விட்டார்கள். தங்கும் இடமே என்ன என்பது தெரியாத போது குல தெய்வத்தின் நினைவு அவர்களுக்கு எப்படி இருக்கும். குல தெய்வத்தின் படம் கூட அவர்களிடம் இருக்காது. திருமணம் ஆகி வேலைக்கு சென்றதும் கிடைக்கும் விடுமுறை நாட்களிலும் தமது குடும்பத்தினருடன் சேர்ந்து வெளியே செல்வதும் வெளியூர் செல்வதும் பழக்கமாகி விட்டது. ஆனால் வருடங்களுக்கு ஒரு முறையாவது குல தெய்வ ஆலயத்துக்கு சென்று வணங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவது இல்லை. குழந்தைகள் பிறந்து அவர்களுக்கு மொட்டை அடிக்கும் போது மட்டுமே குல தெய்வத்தை தேடுவார்கள். அது தெரியவில்லை என்றால் அதுவும் ஒரு சடங்கு போல பழனி, திருப்பதி அல்லது வைதீஸ்வரன் ஆலயம் என எங்காவது சென்று மொட்டைப் போட்டு விட்டு வந்து விடுவார்கள். அது மட்டும் அல்லாமல் காலப் போக்கில் தமக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு முடிவு தேட புது புது சாமியார் மற்றும் தெய்வப் பிறவிகள் என ஓடுகிறார்கள். அவர்கள் கூறுவதை செய்வார்கள். ஆனால் தம்முடைய குல தெய்வத்தை நினைக்க மாட்டார்கள். இப்படி எல்லாம் இருப்பதினால் தான் குல தெய்வத்தை மறந்து விடுபவர்களும், குலதெய்வ சிந்தனை இல்லாமல் இருப்பவர்களும் அப்போது தம்மையே அறியாமல் ஒரு சடங்கு போல வீட்டில் நடக்கும் அனைத்து பூஜை, பண்டிகைகளையும் கொண்டாடும் போது தாம் குல தெய்வத்தை மறந்து விட்டோமே என்ற எண்ணம் இருப்பது இல்லை. அப்படி செய்யும் தவறு தெரிவது இல்லை. என்ன தான் எந்த ஆலயத்தில் சென்று சடங்கை செய்தாலும் குல தெய்வத்தை மறப்பது பெற்றோர்களையே மறப்பது போன்றதே என்ற தவறு தெரிவது இல்லை. அதனால் அவர்கள் குல தெய்வத்தின் சாபங்களுக்கு ஆளாகி விட அது அவர்கள் வம்சத்தை பல வகைகளிலும் பாதிக்கின்றது. அந்த குல தெய்வ சாபம் அந்த குடும்பத்தினருக்கு தொடரும். இந்தக் விவரங்கள் எத்தனை பயனுள்ளதாக இருக்கும் என்பது தெரியாது. ஆனால் எனக்கு கிடைத்த தகவலை எப்போதும் போலவே அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள இங்கு பதிவிடுகிறேன்.