ஞாயிறு, 31 மே, 2020

96 வகை சிவலிங்கங்கள்!

ஓம் நம சிவாய! என்று நாம் நெக்குருகி பிரார்த்திக்கும்போது நம் கண் முன்னால் நிற்பது ஈசனின் லிங்க ரூபம்தான். ஏன் இப்படி சிவன் சிலா ரூபமாக இல்லாமல் லிங்க ரூபமாக வழிபடப்படுகிறார்? என்பதற்கு, லிங்க புராணம் ஒரு கதை சொல்கிறது.

ஒருமுறை பிரம்மாவுக்கும் மகாவிஷ்ணுவுக்கும் இடையே தங்களில் யார் பெரியவர்? என்ற வாக்குவாதம் ஏற்பட்டபோது மிகப் பெரிய அக்னிகோளமாக அவர்கள் நடுவே தோன்றினார் சிவபெருமான். அதுவே முதன் முதலாக இறைவன் எடுத்த லிங்க வடிவம்.

அன்று முதல் லிங்கோத்பவம் உதயமாயிற்று. லிங்கோத்பவம் என்றால் லிங்கம் தோன்றுதல் என்று பொருள். அன்று முதல் இன்று வரை சிவபெருமான் லிங்க உருவத்திலேயேதான் வழிபடப்பட்டு வருகிறார். அவ்வாறு வழிபாட்டுக்குரிய லிங்கங்கள் பலவகையாகப் பகுக்கப்பட்டுள்ளன. அவை:

சுயம்பு லிங்கம் - தானாகவே இறைவனின் இச்சைப்படி தோன்றிய லிங்கம்.

தெய்வீக லிங்கம் - தேவர்களால் பூஜிக்கப்பட்டு ரிஷிகள் மூலமாக பூமிக்கு வந்த லிங்கம்.

அர்ஷ லிங்கம் - ரிஷிகளும் முனிவர்களும் தங்கள் வழிபாட்டுக்கென உருவாக்கிய லிங்கம்.

மனுஷ்ய லிங்கம் - சாதாரண மனிதர்களால் உருவாக்கப்பட்ட லிங்கம். இந்த லிங்கம் மேலும் பல வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. குறைந்தது 96 வகை மனுஷ்ய லிங்கங்கள் இருக்கலாம் என்று மகுடாகமம் என்னும் ஆகம நூல் கூறுகிறது.

இந்த 96 வகை லிங்கங்கள் அவற்றின் அமைப்பு அதாவது பீடத்தின் அளவு பாணத்தின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து மேலும் பிரிக்கப்படுகிறது. கீழே இருக்கும் சதுரப் பகுதி பிரம்ம பாகம் எனவும், நடுப்பகுதி விஷ்ணு பாகம் எனவும் மேற்பகுதி ருத்ர பாகம் எனவும் வழங்கப்படுகின்றன.

க்ஷணிக லிங்கம் : தற்காலிக வழிபாட்டுக்குப் பயன்படுவது. அந்தக் காலத்தில் நீண்ட தூரம் பயணம் செல்பவர்கள் தங்களுடன் லிங்கத்தை எடுத்துச் செல்லாமல் ஆங்காங்கே கிடைக்கும் தெய்வீகப் பொருட்களைக் கொண்டு அன்றைய பூஜைக்காக உருவாக்கும் லிங்கமே க்ஷணிக லிங்கம் எனப்படுகிறது. இத்தகைய லிங்கங்கள், மலர், அன்னம், சந்தனம், விபூதி ஆகிய பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படலாம். அவை உருவாக்கப்படும் பொருட்களுக்கேற்றவாறு பெயர் பெறுகின்றன. உதாரணம், பூக்களால் உருவாக்கப்பட்ட லிங்கம் க்ஷணிக புஷ்ப லிங்கம் எனப்படுகிறது.

வர்த்தமானக லிங்கம் : வழிபாட்டுப் பெருமைக்குரியது. பிரம்ம பாகமும், விஷ்ணு பாகமும் ஒரே அளவு இருந்து ருத்ர பாகம் மட்டும் அதைப்போல இரு மடங்கு இருப்பதே வர்த்தமானக லிங்கம் எனப்படும். இத்தகைய லிங்கம் வழிபடுவோருக்கு முக்தி அளிக்கவல்லது.

ஆத்ய லிங்கம் : இதில் மூன்று பாகங்களும் சமமான அளவு இருக்கும். இவை தவிர புண்டரீகம், விசாலா, வத்சா மற்றும் சத்ரு மர்த்தனா என்று நான்கு வகையாகப் பிரிக்கப்படுகிறது. புண்டரீக வகை லிங்கத்தை வழிபட்டால் பெரும் புகழும், விசாலா வகை லிங்கம் பெரும் பொருளும், வத்சா லிங்கம் எல்லா வளங்களும், சத்ரு மர்த்தனா எல்லாவற்றிலும் வெற்றியையும் தருவன என்கிறது ஆகம சாஸ்திரம். ஏக முக லிங்கம், சதுர் முக லிங்கம், பஞ்ச முக லிங்கம் என முகங்களின் அடிப்படையிலும் லிங்கங்கள் பகுக்கப்படுகின்றன. இதில் பஞ்ச முக லிங்கம் என்பது சிவனுடைய தத் புருஷ, அகோர, சத்யோஜாத, வாமதேவ, ஈசான முகங்களைக் குறிக்கும். சதுர்முக லிங்கம் என்பது ஈசான முகம் தவிர மற்ற நான்கும் கொண்டது. பஞ்சபூத லிங்கங்கள் என்றும் ஒரு வகை இருக்கிறது. அவை ப்ரித்வி லிங்கம் (பூமி), வாயு லிங்கம், ஜலலிங்கம், ஆகாச லிங்கம், தேஜோ லிங்கம் (அக்னி). இவை எல்லாமே மனுஷ்ய லிங்க வகைகள்தான்.

களிமண், உலோகம் அல்லது கற்களாலும் லிங்கங்கள் செய்து வழிபடலாம் என்று காமிக ஆகய நூல் கூறுகிறது. களி மண்ணிலேயே இரண்டு வகை லிங்கங்கள் செய்யப்படுகின்றன. சுட்ட களிமண் லிங்கம், சுடாத பச்சைக் களிமண் லிங்கம், சுட்ட களி மண் லிங்கம் பொதுவாக தாந்திரீகர்களாலும், அபிசார (பில்லி சூனிய) தோஷம் உடையவர்களாலும் வணங்கப்படுகிறது. இவை தவிர நவரத்தினங்களால் ஆன லிங்கங்களும் உண்டு. அவை பன லிங்கங்கள் எனப்படுகின்றன. சில முக்கியமான வகை லிங்கங்களையும் அவை தரும் பலன்களையும் பார்ப்போம்.

1. கந்த லிங்கம் : சந்தனம், குங்குமம், மற்றும் கஸ்தூரி ஆகியன கலந்து உருவாக்கப்படுவது. இது க்ஷணிக லிங்க வகையைச் சார்ந்தது. நம் தேவைக்கேற்ற அளவில் இதை உருவாக்கிக் கொள்ளலாம். வழிபடுவதால் சிவசாயுஜ்ய மோட்சம் எனப்படும் பிறப்பில்லாத நிலை சித்திக்கும்.

2. புஷ்ப லிங்கம் : பலவகையான வாசனையுள்ள மலர்களாலும், பல நிறம் கொண்ட அழகிய மலர்களாலும்,உருவாக்கப்படுவது. வழிபடுவதால் நில சம்பந்தமான பிரச்னைகள் தீரும், நல்ல சொத்தும் சேரும்.

3. கோசாக்ரு லிங்கம் : பழுப்பு நிறத்தில் உள்ள பசுவின் சாணத்திலிருந்து உருவாக்கப்படும் லிங்கம் இது. இதை வணங்கினால் வளம் பெருகும். இதுவும் க்ஷணிக லிங்க வகையே ஆகும்.

4. வாலுக லிங்கம் : சுத்தமான மணல் கொண்டு உருவாக்கப்படும் இதை வணங்கினால் கல்வியும் ஞானமும் உண்டாகும்.

5. யவாகோதுமாசாலிஜ்ஜ லிங்கம் : இந்த லிங்கம் யவை, சோளம், கோதுமை போன்ற தானியங்களின் மாவினால் உருவாக்கப்படுகிறது. இது குழந்தை பாக்கியத்தை அருளும்.

6. சீதாகண்ட லிங்கம் : இனிப்புகளால் உருவாக்கப்படும் இது, நல்ல உடல் ஆரோக்கியத்தை அளிக்க வல்லது.

7. லவண லிங்கம் : உப்போடு மஞ்சள் மற்றும் திரிகடுகம் எனப்படும் சித்த மருந்து கலந்து செய்யப்படுகிறது. இது மற்றவர்களை வசீகரிக்கும் சக்தியை அருள்கிறது.

8. திலாப்சிஷ்த லிங்கம் : எள்ளை அரைத்து செய்யப்படும் இது, எல்லா ஆசைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்யும்.

9. பாம்ச லிங்கம் : சாம்பல் கொண்டு செய்யப்படும் இது, எல்லா நற்குணங்களையும் வளர்க்கும்.

10. கூட லிங்கம் அல்லது சீதா லிங்கம் : வெல்லத்தால் செய்யப்படும் இது, மன நிம்மதியை அருளும்.

11. வன்சங்குர லிங்கம் : மென்மையான மூங்கில் இலைகளால் ஆனது இந்த வகை லிங்கம். வழிபடுவோருக்கு நோய் நொடியற்ற நீண்ட ஆயுளைத் தரும்.

12. பிஷ்டா லிங்கம் : அரிசிமாவினால் செய்யப்படும் இந்த லிங்கம், நல்ல கல்வியறிவைத் தரும்.

13. ததிதுக்த லிங்கம் : பாலிலிருந்தும் தயிரிலிருந்தும் முழுவதுமாக தண்ணீரை நீக்கிய பிறகு இந்த லிங்கம் உருவாக்கப்படுகிறது. வணங்கியோருக்கு மன மகிழ்ச்சியையும் வளங்களையும் அருளும் தன்மையது.

14. தான்ய லிங்கம் : நவ தானியங்களால் உருவாக்கப்படும் இந்த லிங்கம், விவசாயிகளுக்கு நல்ல விளைச்சலைத் தரும்.

15. பழ லிங்கம் : பல்வகையான பழங்களால் உருவான இது, பழத்தோட்டம் வைத்திருப்பவர்களுக்கு நல்ல பலனைத் தரும்.

16. தாத்ரி லிங்கம் : நெல்லிக்காயைக் கொண்டு உருவாக்கப்படும் இது, மிகவும் கஷ்டப்படுபவர்களுக்கு அந்த வாழ்விலிருந்து விடுதலையைத் தரும்.

17. நவநீத லிங்கம் : வெண்ணெயால் உருவான இது, பணமும் புகழும் தரும்.

18. கரிக லிங்கம் : விசேஷ வகைப் புல்லால் உருவாக்கப்படும் இது, துர்மரணத்தைத் தடுக்கும்.

19. கற்பூர லிங்கம் : கற்பூரத்தினால் இது உருவாக்கப்படுகிறது. சிறந்த ஞானத்தைத் தந்து மாயையை அழிக்கும்.

20. ஆயஸ்காந்த லிங்கம் : காந்தத்தால் உருவான இது, சித்தர்கள் வணங்கும் லிங்கம். அஷ்டமா சித்திகளையும் எளிதாக அளிக்க வல்லது.

21. மவுகித்க லிங்கம் : முத்துகளை எரித்த சாம்பலிலிருந்து உருவாக்கப்படும் லிங்கம். மங்களமும், செல்வ வளமும் அருளும் தன்மையது.

22. ஸ்வர்ண லிங்கம் : தங்கத்தால் உருவானது. முக்தி அளித்து பிறவா நிலைக்கு உயர்த்தும்.

23. ரஜத லிங்கம் : வெள்ளி லிங்கம். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

24. பித்தாலா லிங்கம் : பித்தளையால் உருவாக்கப்படும் இது, பழுத்த இலை மரத்திலிருந்து உதிர்வது போன்ற பயமில்லாத மரணத்தைத் தரும்.

25. திராபு லிங்கம் : தகரத்தால் செய்யப்படும் இந்த லிங்கம், வணங்குபவருக்கு எதிரிகளே இல்லாமல் செய்து விடும் தன்மை உடையது.

26. ஆயச லிங்கம் : கந்தக அமிலத்தால் செய்யப்படும் இந்த லிங்கம் எதிரிகளின் தொந்தரவை அழிக்கும்.

27. சீசா லிங்கம் : வெள்ளீயத்தால் செய்யப்படுகிறது இந்த லிங்கம். இதை வணங்குபவர்களை எதிரிகளால் நெருங்கவே முடியாதவாறு செய்யும் தன்மையது.

28. அஷ்டதாது லிங்கம் : எட்டு வகையான தாதுக்களால் உருவாக்கப்படும் இது, சித்தி அளிக்கவல்லது.

29. அஷ்ட லோக லிங்கம் : எட்டு வகையான உலோகங்களால் செய்யப்படும் இதை வணங்கினால் தொழுநோய் குணமாகும்.

30. வைடூர்ய லிங்கம் : நவ ரத்தினங்களுள் ஒன்றான வைடூரியத்தால் உருவான இது, எதிரிகளின் எதிர்பாராத தாக்குதலிலிருந்து காப்பாற்றும்.

31. ஸ்படிக லிங்கம் : ஸ்படிகத்தால் ஆன இது, எல்லா ஆசைகளையும் நிறைவேற்றும்.

32. பாதரச லிங்கம் : பாதரசத்தால் ஆனது இந்த லிங்கம். அளவிட முடியாத செல்வத்தைக் கொடுக்கும்.

மேற்கூறிய 32 வகைகளில் முதல் 19 க்ஷணிக லிங்க வகையைச் சேர்ந்தவை. மற்றவை மனுஷ்ய லிங்க வகையைச் சேர்ந்தவை. இந்திரன் மணி மாய லிங்கத்தையும், சூரியன் தாமரமய லிங்கத்தையும், சந்திரன் முக்தி லிங்கம் எனப்படும் முத்துகளால் ஆன லிங்கத்தையும், குபேரன் ஹேம லிங்கம் எனப்படும் தங்கத்தால் ஆன லிங்கத்தையும் அணிந்திருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. நாமும் ஆகம சாஸ்திரங்கள் கூறும் பலவிதமான லிங்கங்களையும் வழிபட்டு எல்லா வளங்களும் பெற்று இந்த உலகில் வாழ்வாங்கு வாழ்வோம்! ஓம் நமசிவாய.
திருச்சிற்றம்பலம்.

கட்டுரை. தொகுப்பு.
குமார் ராமநாதன்.
சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதிகே சரண்யேத்ரியம்பகே கௌரி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே.

தேடினாலும் கிடைத்தற்கரிய அற்புதமான பழைய ஓலைச்சுவடிகளில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட மகாலட்சுமி ஸ்துதிகளை படிக்க ஏதுவாக எளிமைப்படுத்தி இங்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.தினம் கூறிவழிபட அனைத்து லஷ்மி ரூபங்களையும் ஒரேநேரத்தில் வழிபட்ட பலன் கிடைக்கும். குறிப்பாக பெண்களுக்கு மிகவும் முக்கியமானதாகும்.தினமும் பூஜை அறையில் மனமுருகி 11முறை கூறி வழிபட சகல சம்பத்துகளும் பெருகிடும்.
(பலபேர் பயன்படுத்தி பலன் பெற்றது. )

மகாலட்சுமி ஸ்துதி

1. சுத்தலக்ஷ்ம்யை புத்திலக்ஷ்ம்யை வரலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே சௌபாக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

2. வசோலக்ஷ்ம்யை காவ்யலக்ஷ்ம்யை காநலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே ச்ருங்காரலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

3. தநலக்ஷ்ம்யை தான்யலக்ஷ்ம்யை தராலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே அஷ்டைச்வர்ய லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

4. க்ருஹலக்ஷ்ம்யை க்ராமலக்ஷ்ம்யை ராஜ்யலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே ஸாம்ராஜ்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

5. சாந்திலக்ஷ்ம்யை தாந்திலக்ஷ்ம்யை க்ஷேமலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே அஸ்த்வாத்மாநந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

6. ஸத்யலக்ஷ்ம்யை தயாலக்ஷ்ம்யை ஸெளக்கிய லக்ஷ்ம்யைநமோ நம:
நம: பாதிவ்ரத்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

7. கஜலக்ஷ்ம்யை ராஜலக்ஷ்ம்யை தேஜோலக்ஷ்ம்யை நமோ நம:
நம: ஸர்வோத்கர்ஷலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

8. ஸத்வலக்ஷ்ம்யை தத்வலக்ஷ்ம்யை போதலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே விஜ்ஞானலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

9. ஸ்தைர்யலக்ஷ்ம்யை வீர்யலக்ஷ்ம்யை தைர்ய லக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே அஸ்த்வெளதார்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யைநமோ நம:

10. ஸித்திலக்ஷ்ம்யை ருத்திலக்ஷ்ம்யை வித்யாலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே கல்யாணலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

11. கீர்த்திலக்ஷ்ம்யை மூர்த்திலக்ஷ்ம்யை வர்ச்சோலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே த்வநந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

12. ஜபலக்ஷ்ம்யை தபோலக்ஷ்ம்யை வ்ரதலக்ஷ்ம்யை லக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே வைராக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

13. மந்த்ரலக்ஷ்ம்யை தந்த்ரலக்ஷ்ம்யை யந்த்ரலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே குருக்ருபாலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

14. ஸபாலக்ஷ்ம்யை ப்ரபாலக்ஷ்ம்யை கலாலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே லாவண்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

15. வேதலக்ஷ்ம்யை நாதலக்ஷ்ம்யை சாஸ்த்ரலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே வேதாந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

16. சேத்ரலக்ஷ்ம்யை தீர்த்தலக்ஷ்ம்யை வேதிலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே ஸந்தானலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

17. யோகலக்ஷ்ம்யை போகலக்ஷ்ம்யை யக்ஞலக்ஷ்ம்யை நமோ நம:
க்ஷீரார்ணவ புண்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

18. அன்னலக்ஷ்ம்யை மநோலக்ஷ்ம்யை ப்ரக்ஞாலக்ஷ்ம்யை நமோ நம:
விஷ்ணுவக்ஷேபூஷலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

19. தர்மலக்ஷ்ம்யை அர்த்தலக்ஷ்ம்யை காமலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே நிர்வாணலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

20. புண்யலக்ஷ்ம்யை சேமலக்ஷ்ம்யை ச்ரத்தாலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே சைதன்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

21. பூலக்ஷ்ம்யை தே புவர்லக்ஷ்ம்யை ஸுவர்லக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே த்ரைலோக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

22. மஹாலக்ஷ்ம்யை ஜனலக்ஷ்ம்யை தபோலக்ஷ்ம்யை நமோ நம:
நம: ஸத்யலோகலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

23. பாவலக்ஷ்ம்யை வ்ருத்திலக்ஷ்ம்யை பவ்யலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே வைகுண்டலக்ஷம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

24. நித்யலக்ஷ்ம்யை ஸத்யலக்ஷ்ம்யை வம்சலக்ஷம்யை நமோ நம:
நமஸ்தே கைலாஸலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

25. ப்ரகிருதிலக்ஷ்ம்யை ஸ்ரீலக்ஷ்ம்யை ஸ்வஸ்திலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே கோலோகலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

26. சக்திலக்ஷ்ம்யை பக்திலக்ஷ்ம்யை முக்திலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே த்ரிமூர்த்தி லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

27. நமச்சக்ராரஜ லக்ஷ்ம்யை ஆதிலக்ஷ்ம்யை நமோ நம:
நமோ ப்ரும்மானந்த லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

"சுபமஸ்து"
*லிங்க புராணம் ~ பகுதி  — 04*

*அரி, அயன் கண்ட ஜோதி*
 ======================

பிரகிருதித் தத்துவமே ஒளிப் பிழம்பாய் லிங்கமாய் மாறியது. திங்கள் முடிசூடி., நஞ்சுண்ட முக்கண்ணனே அந்த லிங்கமாகி நின்றான். பிரளய வெள்ளத்தில் ஆதிசேஷன் மீது நாராயணன் யோக துயில் கொண்டு இருந்தான். நித்திரை கலைந்து எழுந்த பிரம்மன் உலகை மீண்டும் படைக்க எண்ணுகையில் பிரளய நீரில் மாதவனைக் கண்டார். *"நாராயணன் தானே சகல உலகங்களையும் தோற்றுவிப்பவன் என்றான்."*
*"ஈரேழு புவனங்களையும் அனைத்து உயிர்களையும் படைப்பவன் நானே என்றான் பிரம்மன்."* இருவரில் யார் பெரியவன் என்ற போட்டி துவங்கி சண்டையாக மாறியது. அச்சமயம் அங்கே அவர்கள் எதிரில் ஓர் ஒளி தோன்றியது. அதன் அடிமுடி காணப்படாததால் அது என்ன என்று இருவரும் வியப்பில் ஆழ்ந்தனர்.

அதன் முடியைக் காண அன்னப்பறவை வடிவில் பிரம்மன் புறப்பட., அடியைக் காண வராக வடிவில் நாராயணன் புறப்பட்டான். இருவரும் முடி., அடி காண முடியாமல் களைத்துத் திரும்பி வந்து ஒருவரை ஒருவர் சந்தித்தனர். அவர்கள் அகந்தை அகன்றது. இருவரும் கைகூப்பி அனற்பிழம்பாக., ஜோதி லிங்கமாக நிற்கும் அப்பொருளை வணங்கினர். அண்டம் கிடுகிடு என நடுங்குமாறு பேரொலி ஒன்று கேட்டது. அப்போது *ஈசானம்., தத்புருஷம்,, அகோரம்,, வாமதேவம்,, சத்தியோஜாதம்* என்ற ஐந்து முகங்களுடன்., ஆறாவதாக *அதோமுகம்* சூட்சும முகத்துடனும்., ஜடை பிறைச் சந்திரன்., கைகளில் மான்., மழுவேந்தி எம்பெருமான் தரிசனம் அளித்தார். இருவரும் வணங்கினர். அவர்கள் அப்பொருளைப் பலவாறு போற்றி சிரம்தாழ்ந்து., கரம்கூப்பி., ரோமாஞ்சனம் பெற்றவராய் வணங்கினர்.

மகிழ்ச்சி அடைந்த ஈசனார் தன் வலப்புரத்தில் தோன்றியவன் மலரோன் என்றும்., இடப்புறத்தில் தோன்றியவன் திருமால் என்றும் கூறி இருவரும் தம் மக்களாகிய முருகன்., கணபதிக்கு ஒப்பானவர்கள் என்றுரைத்து வேண்டுவதைக் கேட்குமாறு பணித்தார். நான்முகன் அவருடைய அருளைப் பெற்ற தனக்கு வேறென்ன வேண்டும் என்று கூறி சிவனாரிடம் என்றும் குறையாத பக்தி அருள செய்யுமாறு வேண்டினார். அவ்வாறே என்று அருள் பாலித்தார் பரமன். மாதவனிடம்., பத்ம கற்பத்தில் நான்முகன் அவருக்குப் புத்திரனாக உந்திக் கமலத்தில் தோன்றுவான் என்று அருளினார். அன்று முதல் ஈசனார் லிங்க வடிவில் அடியவர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

தொடரும்.....

*கனக மஹாமணி பூஷித லிங்கம்*
*பணிபதி வேஷ்டித ஶோபித லிங்கம் |*
*தக்ஷ ஸுயஜ்ஞ னினாஶன லிங்கம்*
*தத் ப்ரணமாமி ஸதாஶிவ லிங்கம் ||*
போரில் ராமனால் வீழ்த்தப்பட்ட ராவணன் மரணப்படுக்கையில் இருந்தபோது, ராமன் பவ்யமாக அவன் காலடியில் நின்று, " இலங்கேஸ்வரா.. தங்கள் ஞானம் தங்களோடு அழிந்துவிடக்கூடாது. நீங்கள் எனக்கு உபதேசிப்பதன்மூலம், அதை இந்த உலகம் அறிந்து பயன்பெற வேண்டும். எனக்கு உபதேசியுங்கள் என்று வேண்டி நின்றான்..!

ராவணன் உபதேசித்தான்...

1.உன் சாரதியிடமோ, வாயிற்காப்போனிடமோ, சகோதரனிடமோ பகை கொள்ளாதே. உடனிருந்தே கொல்வார்கள்.

2. தொடர்ந்து நீ வெற்றிவாகை சூடினாலும், எப்போதும் வெல்வோம் என்று எண்ணாதே.

3. உன் குற்றங்களை சுட்டிக் காட்டும் நண்பனை நம்பு.

4. நான், அனுமனை சிறியவன் என்று எடை போட்டதுபோல், எதிரியை எப்போதும் எளியவன் என்று எடைபோட்டுவிடாதே.

5. வானின் நட்சத்திரங்களை வளைக்க முடியும் என்று நம்பாதே. அவை நம் வழிகாட்டிகள்.

6. இறைவனை விரும்பினாலும், மறுத்தாலும் முழுமையாகச் செய்.

ராமன் வணங்கி உபதேசங்களை பெற்றுக் கொண்டான்.

எதிரியைக்கூட வணங்கி உபதேசம் பெற்றது எவ்வளவு உயர்ந்த பண்பு அன்பர்களே..!!

பணிவும் அன்பும் எப்போதும் நம்மை உயர்த்தும்.
பொறுமையைவிட மேலான தவமுமில்லை
திருப்தியை விட மேலான இன்பமுமில்லை
இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை                                       
மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை...                                                                                                                                 

சனி, 30 மே, 2020

இன்றிலிருந்து புதிய ஆன்மீக தொடர் ஆரம்பம்...

*துவாரகையின் அரசன்*

பகுதி - 1
இந்த பூ உலகில் மோட்சம் தரவல்ல புனித க்ஷேத்திரங்கள் ஏழு! "அயோத்தி, மதுரா, ஹரித்துவார், உஜ்ஜயினி, காசி, காஞ்சிபுரம், துவாரகை' இந்த ஏழில் துவாரகைக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. இங்கே தான், நம் கண்ணுக்கு கண்ணான கண்ணன், அண்ணன் பலராமனோடு கூடி ஆட்சி புரிந்தான்.
இதனால், "துவாரகாதிபதி' என்கிற ஒரு பெயரும் கண்ணனுக்கு ஏற்பட்டது.
கண்ணன் பிறந்தது ஓரிடம்... வளர்ந்தது ஓரிடம்.... அவன் மன்னனாய் நல்லாட்சி செலுத்தியதும் ஓரிடம் தான்...! தேவகிக்கும், வசுதேவருக்கும் மகனாய் சிறைக்குள் பிறந்தவன். யசோதையின் மகனாகி மதுரா நகரில்
குறும்புகளின் சிகரங்களில் ஏறுகிறான். பின், அங்கிருந்து துவாரகை வந்ததும், அங்கே அவன் மனிதர்களுக்கே உண்டான காம்யார்த்தங்களோடு வாழ்ந்து பெற்ற அனுபவங்கள் பலப்பல! ருக்மிணி,.பாமா, ஜாம்பவதி என்று மூன்று ரத்தினப் பெண்களை மணந்ததெல்லாம் துவாரகாதிபதியாக இருந்தபோது தான்!

இதில் ஜாம்பவதியை அடையக்காரணமான சமந்தகமணி என்னும்
அதிசய ரத்தினக்கல் ஒன்றால் ஏற்பட்டஅனுபவங்கள் மிக ரசமானவை. அதற்கு முன், துவாரகைக்கு அப்படி என்ன சிறப்பு என்று பார்த்து
விடுவோமே....? ஸர்யாதி என்று ஒரு மன்னன். இந்த உலகம் அவ்வளவையும், தன் பிடிக்குள் வைத்துக் கொண்டு ஆள வேண்டும்
என்பது அவன் விருப்பம். இதனால்அகந்தை, பேராசை, கோபம்,
பொறாமை என்று வேண்டாத குணங்கள் இவனிடம் மண்டிக் கிடந்தன.

🌷இவனுக்கு பல புதல்வர்கள். அவர்களில்,
ஆனந்தன் என்பவன் மிகவும்
மாறுபட்டவன். எப்படி இரண்யனுக்கு
மகனாக பிரகலாதன் வந்து
பிறந்தானோ, அப்படி இந்த
ஸர்யாதிக்கு மகனாக ஆனந்தன் வந்து
பிறந்து விட்டான் எனலாம். ""இந்த உலகம்
எனக்கு சொந்தம் என்று கூறினால்
தவறப்பா... இந்த உலகம் பூதேவிக்கு
சொந்தம். பூதேவி அந்த ஹரிக்கு
சொந்தம். அந்த ஹரிக்கே நாமெல்லாம்
சொந்தம்,'' என்பான்.

🌷ஸர்யாதிக்கு மகனின் ஹரிபக்தியும்
சரி... தன்னை மீறிப் பேசும்
தன்மையும் சரி....
சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதே
சமயம், ஆனந்தன் கூறுவதே சத்யமான
உண்மை என்கிற ஞானமும் இல்லை.
ஒருநாள் பார்த்தான். ""அடேய்
ஆனந்தா... நீ இனி என் புதல்வனில்லை.
என் ராஜ்யத்தில் உனக்கு
இடமுமில்லை.

🌷பரந்த இந்த உலகின்
அவ்வளவு நிலப்பரப்புமே என்
ஆளுகைக்கு உட்பட்டதாகும். எனவே,
இந்த மண்ணில் எங்கும் உனக்கு
இடமில்லை. உனக்கொரு இடம்
வேண்டுமென்றால், நீ சதா போற்றும்
ஹரியிடமே கேட்டு வாங்கிக் கொள்.
அவனும், உனக்கான இடத்தை எப்படித்
தருகிறான் என்று பார்க்கிறேன்!''
என்று கூறி ஆனந்தனை
துரத்தினான்.

🌷ஆனந்தன் ஒன்றும் அதைக் கேட்டு
அசரவில்லை.
""அப்பா.. மண் மீது தான் உங்கள்
நாட்டாமை. நீர் மீதல்ல.... என்
ஞானப்பிதா பள்ளி கொண்டிருப்பது
பாற்கடல் நீர்மிசை தானே? நாரமாகிய
நீரை அணைந்து கிடப்பவன் என்பதால்
தானே, அவனை "நாரணன்' என்றே
அழைக்கிறோம்? எனவே, அவன் பள்ளி
கிடந்தருளும் அந்த கடல் நீர் மிசை நான்,
அதன் கரையை எனக்கு இடமாகக்
கொள்வேன். இனி அவன்பாடு-
என்பாடு'' என்று கூறி விட்டு
அலைகள் வந்து தழுவிச் செல்லும்
கரையில் வந்து நின்றான்.

🌷அப்பனே அடித்துத் துரத்தி விட்டானே
என்கிற கவலை கொஞ்சமும் இன்றி
அப்பனுக்கு அப்பனான அந்த ஹரியை
எண்ணித் தவம் செய்யலானான். இந்த
உலகில் காரணமில்லாமல் காரியம்
ஏது?

🌷எந்த ஆணவம் படைத்தவன்
சாதித்திருக்கிறான்? அவர்கள்
செயலின் எதிர்வினைகளால்
சாகசங்களும், சாதனைகளும்
வேண்டுமானால் நிகழ்ந்ததுண்டு.
நானே கடவுள் என்று அறிவித்துக்
கொண்டான் இரண்யன். அவனாலேயே
நமக்கெல்லாம் நரசிம்மம் கிடைத்தது.
இங்கேயும் ஸர்யாதியின் ஆணவம்
அவன் மகனையே துரத்தப் போய், ஒரு
அதிசயம் நிகழ ஆரம்பித்தது. அந்த
ஹரியும், தன் சதுர்புஜங்களோடு
சங்கு சக்கரதாரியாய் அவனுக்கு
காட்சி தந்தார்.

🌷""ஆனந்தா.. உனக்கான இடத்தை
இங்கேயே நான் தருகிறேன். உன்
காலடி பட்டு கடல் அலைகளால்
கழுவப்பட்ட இந்த பூமி இனி
உன்னுடையது. என் இருப்பிடமான
வைகுண்டத்தின் ஒரு பாகம் இது
என்றும் கூட, நீ எடுத்துக் கொள்ளலாம்''
என்று கருணை செய்தார்.
அந்த கடல் பரப்பில் நூறு யோசனை
அளவுக்கு நிலப்பரப்பு எழும்பி
நின்றது. ஸ்ரீ ஹரி அத்தோடு
நின்றாரில்லை.

🌷""ஆனந்தா.... உன்னைத் தொட்டுத்
துலங்கும் இம்மண்ணில் நானே ஒரு
காலம் அவதாரம் எடுத்து வந்து
வாழ்வேன். இங்கே என்னை ஐந்து
தினங்கள் இடையறாது
தியானிப்பவர்கள் என்னை
அடைவார்கள். அவர்களின் எலும்புகள்,
நான் முழங்கும் திருச்சங்கம் என்னும்
சங்காகி, இக்கடலில் விளையும்''
என்றும் திருவாய் மலர்ந்தார்.
அதனால் தான் அந்த புண்ணியத்தலம்,
பத்தோடு ஒன்று பதினொன்று என்று
ஆகிடாமல், "துவாரகை' என்றானது.
கடலுக்கு நடுவில் அமைந்த ஒரு
நாடாக கூர்ஜரத்துக்கு (குஜராத்)
மேற்கில் இது அமைந்தது.
கடல் மாநகரம் என்பதால் இதன்
மாளிகைகளும் சரி, தோட்டங்களும்
சரி கண்களைக் கவர்ந்திழுத்தன. இது
போக பாலங்கள், தேர் செல்லத்
தனியாய்.., யானை செல்லத் தனியாய்
என்று அதில் பல பிரிவுகள்!
எல்லாம் ஸ்ரீ ஹரியின் கட்டளையால்
விஸ்வகர்மா செய்த வேலைப்பாடு.
ஊரே ஜெகஜ்ஜோதியாக ஜொலித்தது.
வைகுண்ட பாகம் என்றால் சும்மாவா?
அன்று இப்படித் தான் துவாரகை
உருவானது.

🌷இன்று அதன் அரசர் பலராமர் ஆவார்.
அனாத்ருஷ்டன் என்பவனே தளபதி.
விகத்ரூ என்பவர் தான் பிரதான
மந்திரி. உத்தவர், கங்கர், அக்ரூரர், சத்யகர்,
சித்ரகர், ப்ருது என்று சபையில்
மந்திரி பிரதானிகள். கண்ணன் மன்னன்
தான். ஆனாலும், தலையிருக்க
வாலாடக் கூடாது என்று, அண்ணன்
பலராமருக்கு பின்னால் தன்னை
நிறுத்திக் கொண்டு விட்டான்.
அவன் பிறந்து வளர்ந்த
மதுராபுரிக்கும் அவன் அரசனே!
ஆனால், கம்ச வதத்துக்கு பின், அதை
கம்சனின் தந்தையான உக்ரசேனன்
வசமே ஒப்படைத்து விட்டான்.

🌷தாயும் தந்தையுமாகிய
வசுதேவரும், தேவகியும் இங்கேயும்
இருப்பர். அங்கேயும் இருப்பர்.
அன்றாடம் முதல் வந்தனங்கள்
அவர்களுக்கே....! கண்ணனின் பால்ய
பிராயம் தான் யசோதை வசம்
இருந்தது. இன்று கண்ணன்
அன்புடையோர் அனைவர் வசமும்
இருப்பவனாகி விட்டான். அன்று
ஆனந்தனுக்கு வரமளித்தது போலவே,
அவதார புருஷனாகி
துவாரகைக்கும் வந்து விட்டான்.

🌷துவாரகையும் கண்ணனின் கல்யாண
கோலம் காண ஏங்கியது!
அது தான் ருக்மிணி கல்யாணம்!
பொதுவில் கல்யாணங்களே அழகு
தான். அதில் தெய்வத்
திருமணங்களுக்கு ஒரு தனித்த
அழகும், அருளும் உண்டு.

🌷எப்படி என்று பார்ப்போம். விதர்ப்ப நாட்டுக்கு அரசன்
பீஷ்மகன்.
இவனுக்கு ஐந்து குமாரர்கள். ஒரு
குமாரத்தி. இந்த குமாரத்தியே
ருக்மிணி. ருக்மி, ருக்மாத்,
ருக்மபாஹீ, ருக்மகேஷ், ருக்மமாலி
என்பது அவர்கள் பெயர்கள். அதில் ருக்மி
தான் மூத்தவன். இவன் சேதி நாட்டு
அரசன் சிசுபாலனின் உயிர் நண்பன்.
சிசுபாலனுக்கே தன் சகோதரியை
மணம் செய்து தர வேண்டும் என்கிற
விருப்பமும் கொண்டிருந்தான்.
ஆனால், ருக்மிணி கண்ணபிரானைப்
பற்றிக் கேள்விப்பட்டதில் இருந்து,
மானசீகமாய் தன்னை கிருஷ்ண
பத்தினி ஆக்கிக் கொண்டு விட்டான்.
கண்ணன் வந்து தன்னை அள்ளிச் செல்ல
மாட்டானா என ஏங்கினாள்.

🌷ஆனால், தன் சகோதரன் ருக்மி, சிசுபாலனுக்கே
தன்னை மணம் முடிக்க
எண்ணியிருப்பதை அறிந்து தவித்துப்
போனாள்.
ஒரு அந்தணக் கிழவரை துவாரகைக்கு
தூது அனுப்பினாள். கிழவரும்
துவாரகைக்கு படாத பாடுபட்டு
வந்து சேர்ந்து, கண்ணனையும்
சந்தித்து ருக்மிணியின் தூதுச்
செய்தியை கூறத் தலைப்பட்டார்.

🌷இந்த தூது செய்தியோடு கூடி
கண்ணன் ருக்மிணி மணந்தது
வரையிலான சம்பவங்களைச்
சொல்வதே ருக்மிணி பரிணயம்!
இதை வாசிப்பவர்கள் மணமாகாத
பெண்களாக இருந்தால் அவர்களுக்கு
திருமணமாகும். மணமானவர்களாக
இருந்தால் புருஷனோடு இணக்கம்
அதிகமாகும்.

🌷மொத்தத்தில் கண்ணனின் ராஜானுக்ரஹம் எனும்
சந்தோஷம் வரமாகக் கிட்டும்.
வளரும்...

வெள்ளி, 29 மே, 2020

**லிங்க புராணம் ~ பகுதி  — 03*

*ஈசனின் ஐவகைத் தோற்றம்*
 ======================

1. சுவாத லோகித கற்பத்தில் பிரம்மன் ஈசனைத் தொழுது தியானிக்கும் போது., ஈசன் அவர் முன் அழகிய இளம்பாலகனாய்த் தோன்றினார். இது *சத்யோஜாதம்* என்னும் தோற்றம்.

2. படைப்புக் கடவுள் பிரம்மன்., ஈசன் திருவடிகளில் அர்ச்சித்து வேதங்களால் துதித்தார். அப்போது ஈசன் திருமேனியிலிருந்து நான்கு முனிவர்கள் தோன்ற இத்தோற்றத்தை மனதில் தியானித்து ஈசனை வழிபடுவோர் சிவலோகம் அடைவர். முப்பதாவது இரத்த கற்பத்தில் பிரம்மன் ஈசனைத் தியானித்த போது சடையில் பாம்பணிந்து., கரங்களில் மானும்., மழுவும் ஏந்தி ஈசன் தோன்றினார். இத்தோற்றம் *வாமதேவம்* எனப்படும்.

3. அப்போது பந்த பாசம் அறுத்த., தெளிந்த ஞானம் பெற்ற நால்வர் ஈசனிடம் தோன்றி உலகம் உய்ய தருமம் கடைப்பிடித்தும்., மற்றவர்களுக்கு உணர்த்தியும் பல்லாண்டுகள் வாழ்ந்து ஈசன் திருவடிகளை அடைந்தனர். இத்திருவுருவைத் தியானித்து வணங்கி வழிபடுவோர் பிறப்பிறப்பு நீங்கி செஞ்சடையோன் தாள் சேர்வர். பீதகற்பத்தில் நான்முகனுக்கு., எம்பெருமான் சடையில் இளம் மதி அணிந்து தோன்றினார். இத்தோற்றம் *தத்புருஷம்* எனப்படும். ஆனந்தம் கொண்டு பிரமன் பரமனைப் பூசித்து வேதங்களால் துதித்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த ஈசனார் அழகிய காயத்திரியை உண்டாக்கி அவருக்கு அளித்தார். உத்தமமான காயத்திரியைப் பக்தியுடன் ஆராதிப்பவர்களுக்கு நரகவாசம் இல்லை. கைலாச வாசம் தேடி வரும். ஈசன் திருமேனியிலிருந்து தோன்றிய நால்வர் நரகவாசமளிக்கும் கர்மாக்களை நீக்கி பஞ்சாக்ஷரத்தை உணர்ந்து ஜபித்து முதலில் ஈசன் திருவடியில் சேர்ந்தனர். இத்தத் புருஷனைத் தியானித்து அவரடித் தாமரையை வழிபடுவோர் பிறவிக்கடல் நீந்தி கயிலையை அடைவர்.

4. நீல கற்பத்தில் முக்கண்ணன் நெருப்பும், வாளும் கைகளில் ஏந்தி கரிய ரூபத்துடன் தோன்றினார். இது *அகோரரூபம்.* மிக்க ஆனந்தத்துடன் பிரமன் அகோர வடிவில் ஈசனைப் பூசிக்க ஐயன் மனமகிழ்ந்து வேண்டுவன கேள் என்றிட பிரமன் ஐயனிடம் என்றும் குன்றாத அன்பைத் தர பிரார்த்தித்தார். அப்போது சிவனார் யாராலும் யாகம் செய்யும் அந்தணரைத் தடுத்து நிறுத்த முடியாதென்று உரைத்தார். சிவமந்திரத்தை லட்சம் முறை உச்சரித்தோர் பாபங்கள் நீங்கி கைலாசத்தில் வீற்றிருப்பர் என்று அருள்பாலித்து மறைந்தார்.

5. விஸ்வரூப கற்பத்தில் மலரயன் சிவனாரைத் தியானித்த போது ஈசன் சடையில் பிறைச் சந்திரன்., நெற்றிக்கண்., கோரைப்பற்கள் கொண்டு இருபுறம் இரு மாதர்களுடன் தோன்றினார். இதை *ஈசானம்* என்று கூறுவார்கள் அப்போது பிரம்மன் சிவனாரின் இருபுறம் இருக்கும் மாதர்கள் யாவர் என்று வினவ., ஒருத்தி தேவர்களை ஈன்ற அன்னை., மற்றவள் வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கும் வாணி என்று கூறினார். இவ்வாறு  இப்பகுதியில் பரமனின் ஐவகைத் தோற்றம் விளக்கப்பட்டுள்ளன.

இவை தவிர சிவபெருமானுக்கு *அதோமுகம்* என்ற சூட்சும முகமும் உண்டு. அது தேவர்களுக்கு., ஞானிகளுக்கு., சித்தர்களுக்கு மட்டுமே அறியப்படும் முகமாகும்.

தொடரும்.....

🕉️ *ஓம் நமச்சிவாய* 🕉️

*ஸர்வ ஸுகம்த ஸுலேபித லிங்கம்*
*புத்தி விவர்தன காரண லிங்கம் |*
*ஸித்த ஸுராஸுர வம்தித லிங்கம்*
*தத் ப்ரணமாமி ஸதாஶிவ லிங்கம் ||*
நாராயண ! நாராயண !

*ஒரு முறை நாரத -மகரிஷி கவலையுடன் காணப்பட்டார்.*

அவரது கவலையை கண்ட அன்னை மஹாலக்ஷ்மி மகனே ஏன் கவலையாக இருக்கிறாய் என்று கேட்டாள்-.

நாரதர் --தாயே நான் செய்யும் செயல்கள் யாவும் இறுதியில் நன்மையில் முடிந்தாலும் அந்த நேரம் ஏற்படும் கலகங்களுக்கு நான் தானே காரணமாக விளங்குகிறேன் அதை எண்ணித்தான் வருத்தமாக உள்ளது தாயே என்றார் --

மஹாலக்ஷ்மி ---நாரதா அப்படி என்றால் ஒன்று செய் --ரிஷிகேசம் சென்று புனித கங்கையில் நீராடி விட்டு வா உன் கவலை யாவும் போய்விடும் பாரேன் என்றாள்--

நாரதரும் ரிஷிகேசம் வந்தார் .

கங்கையில் நீராடலாம் என்று நினைக்கும் போது பல வண்ணங்கள் கொண்ட விசித்திரமான மீன் ஒன்று நீரில் நீந்திக்கொண்டே நாரதரிடம் ---என்ன நாரதரே சௌக்கியமா என்றது ---

பேசும் மீனை அதிசியமாக பார்த்துக்கொண்டே நாரதர் ---

ம்ம் எதோ சௌக்கியமாக இருக்கிறேன் நீ நலமா மீனே என்று நாரதர் திருப்பி மீனிடம் கேட்டார் --

-மீன் கொஞ்சம் சலித்து கொண்டே நானும் எதோ நலமாக இருக்கிறேன் நாரதரே என்றது ---

நாரதர் --ஏன் மீனே உன் சலிப்புக்கு என்ன காரணம் ஏதாவது தேவையா என்று சொல் நான் வரவழைத்து தருகிறேன் என்றார் --

மீன்--நாரதரே என் நலத்தில் ஒன்றும் குறைச்சல் இல்லை ஆனால் ---

நாரதர் ---ஆனால் ---

மீன் ---ஒரே தாகமாக இருக்கிறது குடிக்க தண்ணீர் தான் கிடைக்க மாட்டேங்கிறது அதுதான் என் சலிப்புக்கு காரணம் என்றது---மீன் ---

-மீன் கூறியதை கேட்டதும் -- நாரதருக்கு கோபம் வந்தது--என்ன மீனே என்னிடமே விளையாடுகிறாயா ?!!

நீருக்குள் நீந்தி கொண்டே தாகத்துக்கு நீர் கிடைக்கவில்லை என்று என்னிடம் சலித்து கொண்டு சொல்கிறாயே உன் முட்டாள் தனத்தை என்னவென்று சொல்வது ?!!

மீன் --சிரித்துக்கொண்டே ---நீர் மட்டும் என்னவாம் பேரானந்தம் தரும் நாராயண மந்திரத்தை உம்முள் வைத்துக்கொண்டே கவலையாக எதோ நலமாக இருக்கிறேன் என்று கூறுகிறீரே நீர் கூறுவது மட்டும் நியாயமோ என்று கேட்க

நாரதர் வியப்புடன் மீனை பார்க்க --மீன் உருவம் மறைந்து திருமால் நாரதர் முன் காட்சியளித்து

நாரதா ---என் பெயரை கூறி கொண்டு நீ செய்யும் செயல்கள் யாவும் நன்மையில் தானே முடிவடைகிறது ---

கலகம் என்பது அவர் --அவர்கள் மனநிலையை பொறுத்து உள்ளது ---அதை நினைத்து நீ வருந்தி என்ன பயன் --யாவரும் நலம் பெறவேண்டும் என்று எண்ணி தானே நீ உன் கலகத்தை துவக்குகிறாய் --

உன் நோக்கம் உயர்வாக இருக்கும் போது அதில் நடக்கும் செயல்களை கண்டு நீ ஏன் வருந்தவேண்டும் ---

என்று கூறி நாரதரை திருமால் ஆசிர்வதித்து விட்டு மறைந்து போனார் .

நாரதரும் உள்ளம் தெளிவடைந்து புனித-கங்கையில் நிம்மதியாக --ஆனந்தமாக நீராடினார் ---என் கருத்து ---என்ன கவலையாக இருந்தாலும் சரி கூறுவோம் நாராயண மந்திரம் --அதுவே நாளும் பேரின்பம் --யாவும் நலமாகவும் முடியும் .

ஓம் நமோ நாராயணா !
*கட்டாயம் படியுங்கள்*
🙏🙏🙏
அவர் ஒரு பிரபல ஜோதிடர். அவர் ஒருவருடைய ஜாதகத்தை கணித்து ஒரு விஷயத்தை சொன்னால், அது அந்த பிரம்மாவே சொன்னது போல. அந்தளவு ஜோதிடத்தில் பாண்டியத்மும் நிபுணத்துவமும் பெற்றவர். எனவே அவரை சந்தித்து தங்கள் எதிர்கால பலன்களை தெரிந்துகொள்ள பல ஊர்களில் இருந்தெல்லாம் மக்கள் வருவார்கள்.

தனது எதிர்காலம் குறித்தும் மிகவும் கவலை கொண்ட ஒரு ஏழை கூலித் தொழிலாளி அந்த ஜோதிடரை சந்திக்க வந்தான்.

“நான் மிகவும் வறுமையில் இருக்கிறேன். கடன் பிரச்சனை வேறு என்னை வாட்டுகிறது. எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் வேறு. அவர்களை எப்படி கரையேற்றப் போகிறேன் என்று தெரியவில்லை. நான் நன்றாக வாழ ஏதாவது வழி இருக்கிறதா? என்று என் ஜாதகத்தை பார்த்துச் சொல்லுங்கள்” என்று தன் ஜாதகத்தை கொடுத்தார்.

ஜோதிடரும் அந்த ஏழை தொழிலாளியின் ஜாதகத்தை கணிக்கத் தொடங்கினார். சோழிகளை உருட்டிப்போட்டார். கட்டங்களாய் ஆராய்ந்தார். ஒரு கட்டத்தில் ஜோதிடரின் முகம் சுருங்கியது.

பிறகு தொழிலாளியிடம், “ஐயா எனக்கு இன்றைய தினம் மிகவும் முக்கியமான பணி ஒன்று இருக்கிறது. உங்கள் ஜாதகத்தை சற்று விரிவாக ஆராயவேண்டி இருக்கிறது. 

எனவே அது என்னிடம் இருக்கட்டும். நீங்கள் இன்று போய் நாளை இதே நேரத்திற்கு வாருங்கள். நான் உங்களுக்கு அனைத்தையும் சொல்லிவிடுகிறேன்” என்றார்.

“சரிங்க ஐயா நான் நாளைக்கு வர்றேன். இப்போ பார்த்ததுக்கு எதாச்சும் தரணுமா ஐயா?” என்று ஜோதிடரிடம் கேட்டார்.

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்… நாளைக்கு வரும்போது கொடுங்க போதும்…”

“ரொம்ப நன்றிங்க ஐயா… நான் நாளைக்கு வர்றேன்…”

தொழிலாளி அங்கிருந்து புறப்பட்டார்.

அப்போது அங்குவந்த ஜோதிடரின் மூத்த மகள், “”அப்பா… ஏன் அவர்கிட்டே அவசர வேலை இருக்குன்னு சொல்லி அனுப்பினீங்க? இன்னைக்கு எனக்கு வேலை எதுவும் இல்லை. முழுக்க முழுக்க வர்றவங்களுக்கு ஜாதகம் தான் பார்த்து பலன் சொல்லப்போறேன்னு சொன்னீங்க?” என்று கேட்டாள்.

அதற்கு ஜோதிடர், “அம்மா… அவரது ஆயுட்காலம் இன்றிரவு முடியப்போகிறது. அவரது ஜாதகம் உணர்த்துவது அதைத் தான். மேலும் சோழி உருட்டிகூட பார்த்துவிட்டேன். 

பரிகாரம் செய்வதற்கு கூட அவருக்கு அவகாசம் இல்லை. இதை அவரிடம் தெரிவிக்க மனமில்லை. அதனால்தான் பொய் சொல்லி அவரை இங்கிருந்து அனுப்பினேன்… பாவம்…” என்றார்.

இதற்கிடையில் அந்த தொழிலாளி தனது ஊரைநோக்கி வயல்வெளிகளுக்கு இடையே நடந்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென வானம் மேகமூட்டமாகி இருள் சூழ்ந்தது. சிறிது நேரத்தில் மழைதூற ஆரம்பித்து வலுப்பெற்று, இடியுடன் பலத்த மழை கொட்டியது.

வயல்வெளிக்குள் ஒதுங்க இடமின்றி, ஓட்டமும் நடையுமாக அந்த தொழிலாளி விரைந்து நடக்க ஆரம்பித்தான். சற்று தூரத்தில் ஏதோ ஒரு ஆள் அரவமற்ற கோவில் போன்ற கட்டிடம் ஒன்று தென்பட, அதை நோக்கி ஓடினான் தொழிலாளி.

அது ஒரு பாழடைந்த கிருஷ்ணன் கோவில். அங்குசென்று மழைக்கு ஒதுங்கினான் அந்த தொழிலாளி.

மண்டபத்தில் நின்றிருந்த அவர் சிதிலமடைந்து கிடக்கும் கோவிலின் நிலைமையைக் கண்டு மிகவும் வருந்தினார். “கிருஷ்ணன் குடியிருக்கும் கோவில் இப்படி கவனிப்பாரற்று சிதிலமடைந்து காணப்படுகிறதே… நான் மட்டும் ஏழையாக இல்லாமல் பணவசதியுடன் இருந்தால் இந்த கோவிலைப் புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்துவிடுவேன்’ என்று நினைத்துக்கொண்டார்.

அத்துடன் அவர் மனஓட்டம் நிற்காமல் கிருஷ்ணன் கோவிலை தான் புதுப்பிப்பதாக மானசீகமாக நினைத்துக்கொண்டார். 

கோபுரம், ராஜகோபுரம், பிராகாரங்கள், மண்டபங்களை திருப்பணி செய்து சீரமைத்தார். கும்பாபிஷேகத்திற்கு புரோகிதர்களை அமர்த்தி வேத மந்திரங்கள் முழங்க திருக்குடத்தை ஊர்வலமாக எடுத்துவந்து கும்பாபிஷேகம் நடத்தி, கருவறையில் உறையும் இறைவனை வணங்குவதுபோல் தனது சிந்தனையை ஓடவிட்டார்.

அந்த சிந்தனையினூடே அவர் மண்டபத்தின் மேற்பகுதியைப் பார்த்தபோது, அங்கே அவரது தலைக்குமேல் நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து அவரை கொத்த தயாராக இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். வினாடி கூட தாமதிக்காமல் அம்மண்டபத்தை விட்டு வெளியே ஓடினார்.

இவர் வெளியே வந்தது தான் தாமதம், அடுத்த நொடி ஒரு பேரிடி விழுந்து அந்த மண்டபம் இருந்த பகுதி அப்படியே நொறுங்கி தூள் தூளானது. அதில் ஒரு கல்லானது இவர் கால் மேல் விழுந்து தெறிக்க சிறு காயத்துடன் இவர் தப்பினார். நாகத்தை கண்ட அதிர்ச்சியிலிருந்தே மீளாத அந்த தொழிலாளி மேலும் அதிர்ச்சியில் உறைந்துபோனார். அப்போது சரியாக இரவு ஏழரை மணி.

வீட்டுக்கு சென்று தன் மனைவி மக்களிடம் தான் தப்பித்த கதையை திகிலுடன் கூறினார்.

மறுநாள் மாலை வழக்கம்போல ஜோதிடரை சந்திக்க சென்றார். தொழிலாளியை பார்த்த ஜோதிடருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. 

அவரை வரவேற்று அமரவைத்துவிட்டு ஒருவேளை தான் சரியாக பலன் கணிக்கவில்லையா என்ற சந்தேகத்துடன் மீண்டும் அந்த தொழிலாளியின் ஜாதகத்தை ஆராய்ந்தார்.

ஜோதிட நூல்களை, ஓலைச் சுவடிகளை மீண்டும் புரட்டினார். அவர் கணக்கு சரியாகவே இருந்தது. பின் அவர் எப்படி பிழைத்தார்? 

இதுபோன்ற கண்டத்திலிருந்து தப்பிக்கவேண்டுமென்றால், அந்த நபர் கிருஷ்ணன் கோவில் ஒன்றைக் கட்டி அதற்கு கும்பாபிஷேகம் செய்த புண்ணியம் பெற்றிருக்கவேண்டும் என்று ஜோதிட நூல்களில் பரிகாரம் குறிப்பிடப்பட்டிருந்தது. 

ஆனால் இவரோ பரம ஏழை. அந்த பரிகாரத்தை இவர் சொல்லியிருந்தாலும் அதை இவரால் செய்திருக்க முடியாது. இவரால் எப்படி கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்யமுடியும்? அதுவும் ஒரு இரவுக்குள்? இப்படி பலவாறு சிந்தித்தபடி, “நேற்றிரவு என்ன நடந்தது?” என்று அந்த தொழிலாளியிடம் கேட்டார்.

ஜோதிடர் தான் சென்றபோது மழை பெய்ததையும், அப்போது மழைக்கு ஒரு பாழடைந்த கிருஷ்ணன் கோயில் பக்கம் தான் ஒதுங்கியதையும் கூறினார்.

மேற்கொண்டு என்ன நடந்தது என்று ஜோதிடர் ஆர்வத்துடன் கேட்க, இவர் அந்த சிதிலமடைந்த ஆலயத்தை பார்த்த வருத்தமுற்றதாகவும், பணமிருந்தால் கும்பாபிஷேகம் செய்து வைக்கலாமே என்று தான் கருதியதாகவும் கூறினார்.

ஜோதிடருக்கு அடுத்த நொடி அனைத்தும் விளங்கிவிட்டது. இந்த தொழிலாளி மனதளவில் செய்ய நினைத்த கிருஷ்ணாலய புனருத்தாரனமும் கும்பாபிஷேகமுமே அவருக்கு முழுமையான பலன்களை தந்து கிருஷ்ணனருளால் அவரது விதி மாற்றி எழுதப்பட்டதை உணர்ந்துகொண்டார்.

“இது உங்களுக்கு மறுஜென்மம். அதுவும்  பகவான் கொடுத்த ஜென்மம். இனி உங்களுக்கு எந்தக் குறையும் இருக்காது போய் வாருங்கள்” என்று அவரை வழியனுப்பி வைத்தார்.

*ஆக, போகிற போக்கில் நம்மிடம் தோன்றும் நல்ல சிந்தனை கூட நமது விதியை மாற்ற வல்லவை. எனவே எப்போதும் நல்லதையே நினைக்கவேண்டும்.* அந்த தொழிலாளிக்கு அடிப்படையிலேயே நல்ல சிந்தனையும் பக்தியும் இருந்ததால் மழைக்கு ஒதுங்கிய இடத்தில் அப்படி ஒரு சிந்தனை தோன்றி அதன் மூலம் விதி மாற்றி எழுதப்பட்டது.

நீங்கள் கிருஷ்ண பக்தி செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரவேண்டும்.

கிருஷ்ண பக்தி என்பது மிக மிக எளிமையானது. ஆனால், தலையெழுத்தையே மாற்றவல்லது. அந்த தொழிலாளி அன்றிரவு இடி தாக்கி மரணமடையவேண்டும் என்பது விதி. ஆனால் அவர் மனதால் செய்த  கிருஷ்ண பக்தி அவரை கடைசி நேரத்தில் காப்பாற்றிவிட்டது

. இதன் பெயர் தான் வினை சுருங்குதல். அதாவது அனுபவித்தே தீரவேண்டும் என்ற விதியை மாற்றுவது. தலைக்கு வருவதை தலைப்பாகையோடு போகச் செய்யும் சக்தி கிருஷ்ண பக்திக்கு உண்டு.

ஜெய் ஸ்ரீராம்
ஜெய் கிருஷ்ணா
🙏🙏🙏
சிவருத்ர மந்திரம்!!  கடுமையான நோய்களை எதிர்க்கும் சக்தி தரும் சிவருத்ர மந்திரம்

இன்று 28/5/2020 வியாழன் அன்று பதிவு செய்து வணங்குகின்றோம் .இக்கட்டான சூழலில்

ருத்ரனை வணங்கினால் தீமைகள் நம்மை அண்டாது . ஓம் நமசிவாய

தீமைகளை அழிக்க சிவன் அவதாரம் எடுத்ததில்லை. ஆனால், தனது அம்சத்தினை அனுப்பி வைத்ததாக புராணங்கள் சொல்கின்றது, அவ்வாறு சிவன் அனுப்பிய அம்சங்களில் ருத்ரன் மிக முக்கியமானவர். இக்கட்டான சூழலில் ருத்ரனை வணங்கினால் தீமைகள் நம்மை அண்டாது

மந்திரம்:

நமஸ்தே அஸ்து பகவன் விச்வேஸ்வராய மஹாதேவாய

த்ரயம்பகாய த்ரிபுராந்தகாய த்ரிகாக்னி காலாய

காலாக்னீ ருத்ராயநீலகண்டாய ம்ருத்யுஞ்ஜாய

ஸர்வேஸ்வராய ஸதா சிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நம!

பொருள்:

எல்லா உலகங்களுக்கும் அதிபதியாக இருக்கும் விஸ்வேஸ்வரனாகிய சிவபெருமானுக்கு வந்தனம் செய்கிறோம். முக்கண்களை கொண்டவரும் திரிபுரம் எனப்படும் மூன்று லோகங்களுக்கும் தலைவனாக இருக்கும் மகாதேவரே உங்களை வணங்குகிறோம். அனைத்திற்கும் முடிவை வழங்கும் காலமாக இருப்பவரும் உலகை காக்க ஆலகால விஷத்தை பருகிய நீலகண்டர் ஆகியவரும் கொடியதை அழிகின்ற ருத்ர நடமாடி ருத்ரராகவும் சர்வேஸ்வரராகவும் இருக்கும் சிவனை வணங்குகிறேன் என்பதே இதன் பொருளாகும்.



மந்திரம் சொல்லும் முறை:

இந்த மந்திரத்தை தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் 9 முறை அல்லது 27 முறை துதித்து வரலாம். திங்கட்கிழமைகள்,பிரதோஷம் மாதசிவராத்திரி போன்ற சிவ வழிபாட்டிற்குரிய தினங்களில் சிவன் கோவிலுக்கு சென்று சிவனுக்கு பால் அபிஷேகம் செய்யும்போது இம்மந்திரத்தை 27 முறை துதித்து ஜெபிப்பதால் கிரக தோஷங்கள் உட்பட அனைத்து தோஷங்களும் நீங்கும். கடுமையான நோய்கள் சிறிது சிறிதாக குணமாகும். மனதில் இருக்கும் குழப்பங்கள் நீங்கி மனம் தெளிவு பெறும்.

நம்புங்கள்! நல்லதே நடக்கும்!!
#கர்மவினை

ஒரு நாட்டில் ஒரு மன்னன் இருந்தான். அவன் பலருக்கும் தானமளிப்பதில் பெரும் விருப்பமுடைய நல்ல மன்னன். குறிப்பாக பிராமணர்களுக்குஅன்னதானம் செய்வதில் பெரும் விருப்பமுடையவன். தினந்தோறும் அதை மேற்கொள்பவன்.. ஒரு நாள் அவன் அன்னதானம் செய்து கொண்டிருந்தான்.அவன் செய்து கொண்டிருந்த இடத்துக்கு மேலே ஒரு கழுகு ஒரு பாம்பைக் கொன்று தன் அலகில் பிடித்தவாறு பறந்தது.. கழுகின் அலகிலிருந்த செத்த பாம்பின் வாயிலிருந்து ஒரு துளி விஷம் உணவுக்குள் விழுந்தது.. சரியாக அந்த விஷம் இருந்த உணவை உண்ட ஒரு பிராமணன் அதனால் இறந்து போனான்.

இறந்த பிராமணன் யமலோகத்தில் சித்திரகுப்தன் முன்பு கொண்டு செல்லப்பட்டான். சித்திரகுப்தனுக்கு அந்த அந்தணன் இறந்ததற்கான கர்மவினையை யார்மேல் சுமத்தி அதற்கான தண்டனையை வழங்குவது என்று புரியவில்லை! பாம்பின் மேல் குற்றமில்லை ஏனென்றால் அது இறந்து போயிருந்தது. கழுகின் மேல் குற்றமில்லை ஏனென்றால் அது தன் உணவை சுமந்து கொண்டு பறந்து கொண்டிருந்தது. சரி அடுத்தது மன்னன். மன்னன் தானம் கொடுக்கும் புண்ணிய மனம் படைத்தவன்! அவன் உணவில் விஷம் கலந்தது தெரியாமல்தானே அதை அந்தணனுக்கு வழங்கினான். அப்படியானால் அந்தப் பாவம் மன்னனை எப்படி சேரும்??

குழம்பிப் போன சித்திரகுப்தன் யமதர்மனிடம் சென்று தன் சந்தேகத்தை கேட்டான். யமதர்மனும் கொஞ்சம் யோசனையில் ஆழ்ந்தான். அதன் பின் "சித்திரகுப்தா இதைப் பற்றி நீ பெரிதாக எண்ணாதே.. தண்டனையை யாருக்கு வழங்குவது என்று சிறிது காலத்தில் தானாகவே உனக்குத் தெரிய வரும்" என்றான்.. சரி என்று சித்திரகுப்தனும் திரும்பினான்.

அதே நாடு நான்கு அந்தணர்கள் அரண்மனையைத் தேடி வழி தெரியாமல் வந்தனர். அங்கு பானை விற்றுக்கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் அரண்மனைக்கு செல்லும் வழியைக் கேட்டனர். அந்தப் பெண்ணும் சரியான வழியைக் காட்டினாள். அத்துடன் விட்டிருந்தால் பரவாயில்லை.. அவள் அந்த அந்தணர்களிடம் "கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். அந்தணர்களை இந்த மன்னன் சாகடிப்பது போலத் தெரிகிறது" என்று சொன்னாள்..

அந்தக் காட்சியைக் கண்ட சித்திரகுப்தன் தன் சந்தேகத்துக்கு விடை கிடைத்து விட்டதென்று மகிழ்ந்து அந்த பானை விற்கும் பெண் மேல் அந்தக் கர்ம வினையை ஏற்றி விட்டான்..

நீதி: உனக்கு சம்பந்தம் இல்லாத ஒருவரைப் பற்றி, உனக்கு துன்பம் இழைக்காதவரைப் பற்றி, சரியான உண்மையை அறியாமல் இன்னொருவரிடம் புரளி பேசாதே.. !!!!!!!!!!!!!
உலகம் முழுவதும் *சைவ சமயமே இருந்துள்ளது.
#ஆதாரம்

*10000 வருட பழமை மிக்க சிவலிங்கம்  கண்டு பிடிப்பு ..! அமெரிக்கா வில்– எப்படி சாத்தியம்.

தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!! என்ற வாழ்த்தொலிகள் இன்றும் தமிழ்ச்சிவாலயங்களில் ஒலித்துக்கொண்டேயிருக்கின்றன.

அதெப்படி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்பது வரும் என்ற சந்தேகம் பலருக்கும் இருந்திருக்கும் அதனுடைய விளக்கங்கள்.

சிவபூமிதான் நாம் வாழும் பூமி .
இந்த ஆதாரங்களை முழுமுதல் பரம்பொருள் மகிமை என்ற புத்தகம் நெடுகக் காணலாம்.

தில்லி பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்குட்பட்ட தயால்சிங் கல்லூரியில்தமிழ்த்துறைத்தலைவராக இருக்கும் முனைவர் சிவப்பிரியா என்பவர்

இந்த ஆதாரங்களைத் தொகுத்துள்ளார்.

குவைப்பதி மலிந்த கோவே போற்றி! (திருவாசகம்)
குவைத் போன்ற அரபுநாடுகளில் இருந்த எண்ணற்ற சிவாலயங்கள் இடித்துத் தள்ளப்பட்டன.

இராமேஸ்வரம் போன்ற திருக்கோயிலைப் போன்ற அமைப்பு உடைய மக்கீஸ்வரம் என்ற சிவாலயம் இடிக்கப்பட்டு மக்கா என்ற மசூதியாக்கப்பட்டது.

இன்றும் மக்கா மசூதியில் ஏழு அடி உயரம் உள்ள லிங்கத்தைக் காணலாம்.

மக்கீஸ்வரரான லிங்கப் பரம்பொருளையே சைத்தான் என்று கூறி முகம்மதியர்கள் கல்லெறிகின்றனர்.(பக்கம் 282,283)

தமிழகத்திலுள்ள ஊரான திருமால்பேறு போன்ற அமெரிக்காவிலுள்ள பேறு என்ற இடம் திருமால் சிவபூஜை செய்த தலமாகும்.

பராசக்தி மயிலாக வந்து சிவபூஜை செய்த மயிலாபுரி இன்று மயிலாப்பூராக(சென்னை) மருவியுள்ளது.

நரசிம்மர் சிவபூஜை செய்த இடம் சிங்கபுரி,இந்தசிங்கபுரியே தற்போதைய சிங்கப்பூர் ஆகும்.(பக்கம் 350,351)

திருக்கேதீஸ்வரம்,
திருகோணமலை ஆகிய இலங்கைத் திருக்கோயில்களை தேவாரப் பதிகங்கள் துதி செய்கின்றன.(பக்கம் 351)

ஆமூர்,தைமூர் என்ற தமிழ்நாட்டுத் திருத்தலங்களைப் போன்றே தைமூர் என்ற தலம் ரஷ்யாவில் இருந்ததை இன்றும் வழங்குகின்ற இப்பெயர் எடுத்துக் காட்டுகின்றது.

உக்கிரப்பாண்டியனுக்கும் உத்திரப்பிரதேசத்திலுள்ள கல்யாணபுரத்து இளவரசிக்கும் நடைபெற்ற திருமணத்தில் சீனா,சோவியத் ஆகிய நாடுகளிலிருந்தும் அரசர்கள் கலந்துகொண்டதை திருவிளையாடற்
புராணங்கள் தெரிவிக்கின்றன.

ஜாவக நாட்டு மக்கள்(இன்றைய ஜாவா) தமிழ்நாட்டு சிவனடியார்களைப் போற்றி வணங்கியதை மதுரைக்காஞ்சி என்ற சங்க இலக்கியத்து தனிப்பாடல் தெரிவிக்கின்றது.

படைத்தல்,காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருளல் என்னும் ஐந்தொழில் புரியும் பரமசிவனைப் பிரம்மன்,விஷ்ணு,
ருத்ரன் ஆகிய மூன்று தெய்வங்களும் ஒன்றாக வந்து பூஜை செய்து தத்தமக்குரிய உலகங்களையும்,
வாழ்க்கையையும்,
பதவிகளையும் பெற்றுக்கொண்ட திருத்தலமே திரியம்பகேஸ்வரம்.இவ்வாறு மூன்று மூர்த்திகளும் ஒன்றாக வந்து மும்மூர்த்தி நாயகனைப் பூஜை செய்த திருத்தலமே அமெரிக்காவில் உள்ள திரிநாடு(த்ரிநாட்).

வட அமெரிக்காவில்கொலராடா என்ற ஆற்றங்கரையின் அருகேயுள்ள குன்றின் மீது 10,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம் கண்டறியப்
பட்டுள்ளது.

இத்தாலியில் 5,000 ஆண்டுகள் தொன்மையான சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டு அங்குள்ள பொருட்காட்சி சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

அலெக்சாண்டிரியாவில் 129 அடி உயரம் உள்ள லிங்கப்பரம்பொருள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது.

அயனீச்வரம் என்ற சிவலாயத்தைச் சுற்றி உருவான நகரமே பிற்காலத்தில் அயர்லாந்தாக மாறியது.

கிழக்கு பாரதத்தில் நாகளேச்சுரம் பிற்காலத்தில் நாகலாந்து என்று மாறியது.

பாபிலோனியா களிமண் பட்டயங்களில் சிவன் என்ற திருநாமம் காணப்படுகிறது.

சிவன் என்ற இந்த தமிழ்ப்பெயர் ஒரு மாதத்தின் பெயராகவும் இருந்தது.

சிவ நாமங்களில் எல்சடை என்ற பெயர் புகழ்பெற்று விளங்கியது.

எல் என்ற தமிழ்ச்சொல்லுக்கு இருள் என்று பொருள்.சடை என்பது ஜடா என்ற சமஸ்க்ருதச் சொல்லின் தமிழ்வடிவம்.
எல்சடை என்றால் கரிய சடையுடையவன் என்று பொருள்

சிறிய ஆசியாவில் சிவன் என்ற பெயரில் ஒரு நகரம் உள்ளது.

சிரியா நாட்டின் ஒரு நாணயத்தில் சிவவடிவம் உள்ளது.

அதிகம் பகிருங்கள் சிவனின் பெருமையையும் தமிழின் பெருமையையும் உலகறியட்டும்.

         நமசிவாய
திருச்சிற்றம்பலம்🙏