திங்கள், 12 அக்டோபர், 2020

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 27

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 27



=======
ஸ்ரீரங்க வைஷ்ணவர்கள் காஞ்சி புரத்தில் தங்கியிருக்கும் இராமானுஜரை திருவரங்கம் அழைத்து வர முயற்சிகள் மேற்கொள்கிறார்கள்.
========
வாழியெதிராசன் வாழியெதிராசன்

 ஸ்ரீரங்கத்தின் பெருமை

எல்லா வைஷ்ணவ அடியார்களும், ஆச்சாரியார்களும் அவதரிப்பது தொண்டை மண்டலமான காஞ்சி நகரிலே. ஆனால், அனைவரும் வந்து சேரும் இடம் ஸ்ரீரங்கத்தில்தான்.

வேதாந்த தேசிகன், 3 ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள் என அனைவரையும் பெற்றுக் கொடுத்தது தொண்டை மண்டலம் தான். அனைவரும் வந்து சேர்ந்தது ஸ்ரீரங்கத்திற்கு.

இப்போது திருவரங்கனாதனான அரங்கநாதப் பெருமாளே திருவுள்ளத்தில் கொள்கிறார், 'இனி நாம் இராமானுஜனை சம்பிரதாயத்திற்காக ஆக்கிவிட வேண்டும். அவருக்குத் தலைமை பொறுப்பை அலங்கரிக்கும்படி செய்ய வேண்டும்' என்று திருவுளம் கொண்டார். எல்லா ஸ்ரீ வைஷ்ணவ அடியார்களும், ஆச்சார்யார்களும் அரங்கரநாதனிடம் இராமானுஜர் ஸ்ரீரங்கம் வர வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்கள் அல்லவா?

திருவரங்கநாதன் அருகில் இருப்போரை அழைக்கிறார். அவர்கள் நம்பெருமாள் சன்னிதிக்கு சென்று, "இராமானுஜரை இங்கே நித்தியவாசம் பண்ணும்படி அழைப்பித்தருளவேண்டும்" என்று விண்ணப்பம் செய்தனர். பெரிய பெருமாளும் அப்போதே ஓலைச்சுவடியில் காஞ்சிபுரம் பேரருளாளனுக்கு திருமுகம் அனுப்புகிறார்.

(என்ன ஒரு திருவிளையாடல் பரந்தாமனுக்கு. திருவரங்கம் அரங்கநாதன், காஞ்சி தேவப்பெருமாளுக்கு ஓலைச்சுவடி அனுப்புவது. இவரும் அவர் அம்சம் தான். அவரும் இவர் அம்சம் தான். இராமானுஜரை ஸ்ரீ வைஷ்ணவ சம்பிராதாயத்திற்கு ஆக்கிக்கொடுக்க இருவருமே எப்பேர்ப்பட்ட நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள் ).

 பேரருளாளன் மறுத்தல்

பேரருளாளனும் கேட்டருளி, "தன் அபிமானத்தை விட்டு கேட்டாலன்றி இராமானுஜரை அனுப்ப மாட்டோம்"  என்றார். "அந்த அளவிற்கு இராமானுஜர் எனக்கு அவ்வளவு நெருக்கம். ஆனால், அவரை விட்டுக் கொடுப்பதாக இல்லை. 'நான்' என்ற வார்த்தையை என்று மாற்றுகிறீரோ அன்று நாம் இராமானுஜரை அனுப்புவோம்" என்று ஸ்ரீரங்கம் அரங்கநாதனுக்கு ஓலை அனுப்பினார்.

🌺🌹 திருவரங்கப்பெருமாள் அரையர்

தேவப்பெருமாள் மறுத்ததை அறிந்த ஆழ்வார், திருவரங்கப் பெருமாள் அரையரை அழைத்தார். "நீர் போய் (காதிற்குள் இரகசியமாக பேசினார்) இராமானுஜரை திருவரங்கம் அழைத்துக்கொண்டு வாரும்" என்றார்.

திருவரங்கப் பெருமாளரையர் ஆளவந்தார் சீடர்களில் ஒருவர். அவர் மிகப்பெரிய இசை வல்லுநர். அவர் காஞ்சிக்குச் சென்று இசைமாரி பொழிந்தால், இசைக்காக எதையும் தரவல்ல காஞ்சி வரதராஜப்பெருமாள் இராமானுஜரைத் திருவரங்கத்திற்குத் தந்துவிடுவார்கள் என்று அவர்கள் நம்பினார்கள்.

திருவரங்கப் பெருமாளரையர் காஞ்சியை அடைந்ததும் பேரருளாளன் திருக்கோவிலுக்குச் சென்றார். அங்கு இராமானுஜரும் பலரும் இருந்தார்கள். திருக்கச்சி நம்பிகளும் 'கச்சித்து வாய்த்தான்' திருமண்டபத்தில் ஆலவட்டம் கைங்கரியம் செய்து கொண்டிருக்கிறார். காஞ்சி திருக்கச்சி நம்பிகள் அருளிய வரதராஜர் அஷ்டகத்தை அனுஷ்டித்துக் கொண்டு சேவிக்கிறார் இராமானுஜர்.

பெருமாளரையர் வருவதை எதிர்கொண்டு அழைக்கச் செல்கிறார் திருக்கச்சி நம்பிகள். மூலவரின் சன்னிதினானத்திற்கு அழைத்துச் சென்றார். திருவரங்கப் பெருமாளரையரும் தாளம் இசைத்து ஸ்தோத்திரம் பண்ண ஆரம்பித்துவிட்டார்.

 பேரருளாளன் காட்சி தருதல்

"என் நெஞ்சமுடையான்..." என்று தொடங்கி, "உலகமேத்தும் ஆழியான் அத்தியூரான்" என்றும், "திருவடி தாமரை மலரும் பேரருளாளன்" என ஆழ்வார்கள் பாடிய பாடல்களான நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தின் சில பாடல்களை இயல், இசை, நாடகத்துடன் முத்தமிழோடு அரையர் அபிநயம் பிடித்துப் பாடினார்.

அப்போது காஞ்சி பேரருளாளன் நேரே உகந்தருளி தான் சாற்றியிருந்த முத்துமாலை, திருப்பரிவட்டமான தன் வஸ்திரம், சக்கர சாமராதி மற்றுமுள்ள பரிசில்களையும் கொடுத்தார்.

அப்போது திருவரங்கம் பெருமளரையார் மறுப்பு சொல்கிறார், "இதைப் பிரார்த்தித்து பெற அடியேன் வரவேயில்லை. நான் எதைப் பிரார்த்திக்கிறேனோ அதைக் கொடுப்பதாக இருந்தால் கொடுங்கள்" என்றார். அக்காலத்தில் எம்பெருமானிடமே எப்படியெல்லாம் நேருக்கு நேர் வாதாடி பேசியிருக்கிறார்கள்?!

ஜகம் அத்தனையும் காத்து இரட்சித்து உலகத்தையே நடத்துபவர் பெருமாள். அவரிடத்திலே போய், 'நான் ஆசைப்பட்டதை கொடு' என்றார். தேவப்பெருமாளோ "என்ன ஆசைப்பட்டீர்?" சொல்லும் என்றார்.

"நாமும் என் பெண்டீரைத் தவிர மற்ற அனைத்தையும் கேளும்" என்கிறார் தேவப்பெருமாள். நாம் என்றால் - என்னைக் கேட்காதீர். எம் பெண்டீர் - பெருந்தேவித்தாயார் அவரையும் கேட்காதீர். மற்ற அனைத்தும் தருகிறோம். நீர் கேளும்! என்றார் தேவப்பெருமாள்.

இந்த வார்த்தைக்குத் தானே காத்துக் கொண்டிருந்தார் நம் அரையர். பெருமாளும் எங்கள் இருவரைத் தவிர மற்ற அனைத்தையும் தருகிறேன் வேறு சொல்லிவிட்டார். வசதியாகப் போயிற்று, நம் அரையருக்கு. அவர் தேவப்பெருமாளிடம் அங்கிருக்கும் இராமானுஜரைக் கைகாட்டி, "இவரை எனக்குத் தந்தருள வேண்டும்" என்கிறார்.

இதைக்கேட்ட தேவப்பெருமாள் "நீர் இவரைக் கேட்பீர் என்று தெரியாமல் சொல்லிவிட்டேனே! முதல் தடவையா நான் மாற்றிப் பேசுகிறேன், நம்மையும், நம்பெண்டீரையும், நம் இராமானுஜரையும் தவிர மற்ற அனைத்தையும் கேளும் நாம் தருகிறோம்" என்றார் தேவப்பெருமாள்.

அரையரோ "தேவரீர் இரண்டு வார்த்தை அருளிச் சொல்லலாமோ? நானோ ஒரு வார்த்தை தான் பேசினேன். தேவரீரும் ஒரு வார்த்தைதான் பேச வேண்டும்" என்றார்.

காஞ்சி தேவப்பெருமாளும் "சரி, நீர் கேட்டபடி நம் இராமானுஜரை அனுப்பி வைத்தோம்! நீர் அழைத்துச் செல்லலாம்" என்றார். ஒரே ஒரு பெண்ணை பெற்று, சீரும் சிறப்புமாய் வளர்ப்பதைப் போல் இராமானுஜரை வளர்த்து, இப்போது அழகிய மணவாளனுக்குத் தாரை வார்த்துக் கொடுத்தார். அழகிய மணவாளன் என்பது ஸ்ரீரங்கம் ரங்கநாதன் உற்சவரின் திருநாமம். திருவரங்கப் பெருமாளரையருக்கோ மகிழ்ச்சி.

இராமானுஜரோ பிறந்தகத்தில் இருந்து சொல்லிக் கொண்டு புறப்படுவது போல், கூரத்தாழ்வானையும், முதலியாண்டானையும் பார்த்தருளி, அவர்களையும் அழைத்துக் கொண்டு, மடத்திற்குச் செல்லாமல் (தேவப்பெருமாள், 'திருவரங்கம் போ!' என்று உத்தரவிட்டுள்ளார் அல்லவா?) திருவரங்கம் புறப்படுகிறார்.

திருக்கச்சி நம்பிகளும் இராமானுஜரை வழி அனுப்பி வைத்துவிட்டு, கைங்கர்யத்திற்குப் புறப்பட்டார். இராமானுஜரும் திருவரங்கத்திற்குச் சென்று கொண்டிருக்கிறார்.

பெருமாள் அருளாணையின்றி இராமானுஜர் திருவரங்கம் வரமாட்டார்.
எதிராஜரின் திருவரங்கப் பிரவேசம்
இராமானுஜர் துறவு பூண்ட விஷயம் கேள்விப்பட்டு பெரிய நம்பிகள் திருவரங்கத்தில் இருந்தபடி உள்ளம் பூரித்தார். அவதார புருஷர் என்று ஆளவந்தாராலேயே மதிக்கப்பட்ட எதிராஜரை திருவரங்கத்துக்கு அழைத்து வர மடத்தில் உள்ள அனைவரும் ஒரு மனதாக முடிவெடுத்தனர். அந்தப் பொறுப்பும் பெரிய நம்பியிடமே ஒப்படைக்கப் பட்டது. போன முறை மனைவிகளின் பிணக்கினால் இராமானுஜரை திருவரங்கம் அழைத்து வர முடியாமல் போனது. அதனால் இந்த முறை தான் மேற்கொள்ளும் காரியம் வெற்றி பெற அரங்கனின் அருளை வேண்டினார் பெரிய நம்பி. உள்ளம் உருகி வேண்டி நின்ற பெரிய நம்பியின் செவியில் படுமாறு ஒரு யோசனையைக் கூறினார் அரங்கன். “தெய்வீக இசையில் வல்லவர் உன் மகன் திருவரங்கப் பெருமாள் அரையர். அவரை காஞ்சிக்கு அனுப்பி வைப்பாயாக. கச்சிப் பெருமான் முன் நின்று இச்சையுடன் அரையரைப் பாடச் சொல். அப்பாட்டுக்கு மயங்கி வரதன் அவனிடம் உனக்கு என்ன வேண்டும் கேள் தருகிறேன் என்பார், எதிராஜரே வேண்டும் என்று உறுதியுடன் கேட்கச் சொல். பெருமாள் அருளாணையின்றி இராமானுஜர் திருவரங்கம் வரமாட்டார்” என்று அருளினார்.
அவ்வாறே நிகழ்ந்தது. மனமுருகிப் பாடியதும் என்ன வேண்டும் கேள் என வரதன் சொல்ல, எதிராஜரைப் பரிசாகத் தரவேண்டும் என்று திருவரங்கப் பெருமாள் அரையர் பிரார்த்தித்தார். அருளிச் செயல்களில் பித்தரான வரதரும் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற எதிராஜரை திருவரங்கத்துக்கு அனுப்ப உடன்பட்டார். எதிராஜரும் வரதனைப் பிரிய மனமின்றி ஆனால் தன் பொறுப்புகளை நிறைவேற்றும் பொருட்டுத் திருவரங்கம் கிளம்பினார்.
முதலியாண்டானும் கூரத்தாழ்வாரும் பின் தொடர எதிராஜர் திருவரங்கம் வந்தடைந்தார். திருவரங்கமே இவரை வரவேற்க விழாக் கோலம் பூண்டிருந்தது. பெரிய நம்பிகளின் தலைமையில் எதிராஜருக்கு பெரிய வரவேற்பு அளிக்கப் பட்டது. எதிராஜர் திருவரங்கப் பெருமாள் சன்னதிக்குள் சென்று அரங்கனை கண் குளிரக் கண்டு வணங்கினார். “வாரீர் எம் உடையவரே” என்று வாழ்த்தி வரவேற்றார் திருவரங்கப் பெருமான். அன்று முதல் இராமானுஜருக்கு உடையவர் என்ற திருநாமமும் வழங்கலாயிற்று.
பெரிய நம்பிகள் இவரைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் உகுத்தார். இராமானுஜரும் அவரின் தொடர்பினால் தான் தனக்கு அரங்கனுக்கு சேவை செய்யும் பேறு கிடைத்தது என்று நன்றி நவின்றார்.


இன்னும் அனுபவிப்போம்...

உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!💐🙏

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 26

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 26



===========
 யாதவபிரகாசர் சிஷ்யனாகுதல்
=======
கூரத்தாழ்வானும், முதலியாண்டானும் காலட்சேபம் கேட்டுக் கொண்டிருக்க யாராலும் எதிர்பார்க்க முடியாத ஒரு சம்பவம் நடந்தது.

யாதவப்பிரகாசருக்கு இராமானுஜரை நினைத்து மனநிம்மதி இல்லாமல் போயிற்று. 'இராமானுஜர் சொல்லும் அர்த்தங்கள் எல்லாம் சாஸ்திரங்களுக்கு சரியாகப் பொருந்துகிறது. என்ன செய்யலாம்?' என்று யோசித்து தாயாரிடம் கேட்டார்.

"நீ ஒன்று செய். இது இதுவரை பட்டபாடு போதும். திரும்ப போய் இராமானுஜரின் திருவடிகளை ஆச்சர்யத்திரு" என்றார். "அவருடைய பக்தராக, சிஷ்யனாக வாழ்ந்துவிட்டு வாரும்" என்றார் யாதவப்பிரகாசரின் தாயார்.

"நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான். ஆனால், இத்தனை காலம் சிகை இல்லாமல் வாழ்ந்துவிட்டோம். இனி அவ்வாறு மாற வேண்டுமானால் 'பூமி பிரதட்சிணம்' தான் பிராயச்சித்தம்" என்றார் (பூமியை ஒருமுறை வலம் வருதல்). 'ஆனால், என்னால் இந்த வயதில் எப்படி பூமி பிரதட்சிணம் பண்ண முடியும்?' என்று யோசித்துக் கொண்டிருந்தார்.

அன்றிரவு யாதவப்பிரகாசர் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது, 'இராமானுஜரை ஒருமுறை வலம் வந்து, அவருடைய சிஷ்யனாக இருந்து வாரும்' என்றார் காஞ்சி தேவப்பெருமாள். அவர் கண்ட கனவின் மீது நம்பிக்கை இல்லாமல், திருக்கச்சி நம்பிகளிடம் "நீர் இறைவனிடம் கேட்டுச்சொல்லும்" என்று கேட்டார் யாதவப்பிரகாசர்.

திருக்கச்சி நம்பிகளும் தேவப்பெருமாளுக்கு ஆலவட்டம் வீசும் பொழுது கேட்க, தேவப்பெருமாள் இராமானுஜரை ஒருமுறை வலம் வரச்சொன்னார். இதை திருக்கச்சி நம்பிகளும் யாதவப்பிரகாசரிடம் சொல்ல, அவரும் "சரி,  அப்படியே ஏற்கிறேன்" என்றார்.

யாதவப்பிரகாசரும் இராமானுஜரைத் தரிசித்து, அவரை ஒரு முறை வலம்வந்து, காஷாயத்தையும், யக்ஜோபவீதத்தையும், சிகையையும், திரிதண்டத்தையும் பெற்றுக் கொண்டார். அவருக்கு சுவாமி இராமானுஜர் பட்டம் கொடுக்கிறார், "நீர் இனி கோவிந்தஜீயர் என்று அழைக்கப்படுவீர்" என்றார் இராமானுஜர்.

யாதவப்பிரகாசரை வைத்துக்கொண்டு ஒரு புத்தகத்தையே எழுத வைத்துவிட்டார் இராமானுஜர். 'யதிதர்ம சமுச்சியம்' என்ற நூலை இயற்றியவரே கோவிந்தஜீயர்தான். அதிலுள்ளவற்றை சட்ட திட்டமாகக் கொண்டு தான் எல்லா திரிதண்ட சந்நியாசிகளும் வாழ்கிறார்கள்.

யாதவர் இராமானுஜருடைய சிஷ்யராகி விட்டார் என்ற செய்தி, ஸ்ரீ வைஷ்ணவ உலகத்தில் ஒரு பரபரப்பை உண்டாக்கியது. திருவரங்கத்திலுள்ள ஸ்ரீ வைஷ்ணவர்கள் மிகவும் உற்சாகமடைந்தார்கள்.

கோவிந்தஜீயர்

கே:−27. இராமானுஜரின் வேதாந்த குருவான யாதவப்ரகாசர் கூறிய உபநிஷத் அர்த்தங்களை, இராமானுஜர் அப்படியே ஏற்றுக்கொண்டாரா?

விடை:− இல்லை.. சாஸ்திரம், சூத்திரம் எனச் சர்வமும் கற்று, வாதத்தைவிடப் பிடிவாதத்தில் அதிக நம்பிக்கையுடைய அவரது குரு, தமது பாண்டித்யத்தாலும், சந்தி பிரிக்கும் சாமர்த்தியத்தாலும் மந்திரப் பொருள்களுக்குத் தவறான மாற்றுப் பொருள் கூறும்போது அதனை இராமானுஜர் மறுத்தார். அத்தோடு குருவிடம் அவற்றின் உண்மைப் பொருள்களைத் துணிவுடனும் சொன்னார்.

கே.28:− இளையாழ்வார் இராமானுஜருக்கும் அவரது வேதாந்த குருவுக்கும் இடையே நடைபெற்ற முதல் வாதம் என்ன? அதனைக் குரு ஒத்துக்கொண்டாரா?

விடை:− ஒருநாள், தைத்ரிய உபநிஷத்தில் வரும் வேத வாக்யமான, "ஸத்யம், ஞானம், அனந்தம், ப்ரம்ம" என்பதற்குப் பொருள் கூறும்பொழுது, "ஸத்யம், ஞானம், அனந்தம்" ஆகியவை ப்ரம்மம் என்று, யாதவப்ரகாசர் தவறாகப் பொருள் கூற, இளையாழ்வார் இராமானுஜர் அதனை ஏற்காது, "ஸத்யம், ஞானம், அனந்தம்" ஆகியவை ப்ரம்மத்தின் பண்புகள். அவையே ப்ரம்மம் ஆகா. ஸத்யம், ஞானம், அனந்தம் ஆகிய பண்புகளை உடைய ப்ரம்மம் என்று பொருள் கொள்ள வேண்டும்" என்றார்.

குருவும் வேறு வழியின்றி அதனை ஏற்றுக்கொண்டார்.

கே.29:− இராமானுசருக்கும் அவரது வேதாந்த குருவுக்கும் இடையே நடைபெற்ற இரண்டாவது வாதம் என்ன? அதனைக் குரு மறுத்தாரா?

விடை:− மற்றொரு நாள், சாந்தோக்ய உபநிஷத்தில் வரும் வேத வாக்யமான "தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணி" என்பதற்குப் பொருள் கூறும் போது, குரு யாதவப்ரகாசர், "குரங்கின் பின்புறத்தை ஒத்த கண்களை உடைய நாராயணன்" என்று தவறாகப் பொருள் கூற, அதனைக் கேட்டு கண்ணீர் வடித்த இராமானுஜர், "சூரிய மண்டலத்தில் உறையும் புருஷனான ஶ்ரீமந் நாராயணனின் கண்கள் அந்தச் சூரியனின் கிரணங்களால் அலர்விக்கப்படும் சிவந்த தாமரை மலர்களை ஒத்திருக்கின்றன" என்று வினயத்துடன் பொருள் கூறினார்.

அதனையும் குருவால் மறுக்க இயலவில்லை.

கே.30:− இராமானுஜருக்கும் குருவுக்கும் இடையே நடந்த வாதங்களின் தொடர்ச்சியாய் என்ன நடந்தது?

விடை:− சீடரின் ஞானத்தைக் கண்டு குருவுக்குப் பொறாமை வந்தது. உள்ளத்தில் சீடர் மீது பகை உணர்வு தோன்றியது. சீடர் இளையாழ்வார் இராமானுஜரால் தமது அத்வைத வாதங்கள் அடியோடு அழிந்துவிடும் என எண்ணி, அவரைக் காசி யாத்திரைக்கு அழைத்;துச் சென்று, கங்கையில் "மணிகர்ணிகா" கட்டத்தில் மூழ்கடித்துக் கொல்ல, சில அந்தரங்கச் சீடர்களுடன் சேர்ந்து தனிமையில் திட்டமிட்டார் யாதவப்ரகாசர்.

கே.31:− இராமானுஜர் குரு யாதவப் பிரகாசருடன் காசி யாத்திரை புறப்பட்ட போது, அவருக்கு வயது என்ன?

விடை:− 18 வயது.

கே.32:− இளையாழ்வார் இராமானுஜருடன் காசி யாத்திரைக்கு வந்த உறவினர் யார்?

விடை:− யாதவப்ரகாசரிடம் வேதம் பயின்றுவந்த இராமானுஜரின் தம்பியும், சிற்றன்னையின் குமாரருமான கோவிந்தன்.

கே.33:− காசி யாத்திரையில் விந்திய மலைச் சாரலில் ஒரு இரவில் நடந்த முக்கிய நிகழ்ச்சி என்ன?

விடை:− இராமானுஜரின் தம்பி கோவிந்தனுக்குக் குருவின் சதித் திட்டம் தெரிந்துவிட்டது. பதறிப்போன அவர் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாது, இராமானுஜரிடம் மிகவும் இரகசியமாக அதனைத் தெரிவித்து அவரைத் தப்பிச் செல்லுமாறு செய்தார்.

கே.34:− விந்திய மலைச் சாரலில் தனியே திக்குத் தெரியாது பயணித்த இளையாழ்வார் இராமானுஜர் யாரால் காப்பாற்றப்பட்டார்? எந்த ரூபத்தில்?

விடை:− காஞ்சிப் பேரருளாளன் − பெருந்தேவித்தாயார் ஆகிய திவ்ய தம்பதிகளால்,  இராமானுஜர் காப்பாற்றப்பட்டார்.
அவர்கள் வேடன், வேடுவச்சி உருவத்தில் வந்தனர்.

கே.35:− அவர்கள் இராமானுஜரின் பெருமையை எவ்வாறு வெளிப்படுத்திக் கொண்டனர்?

விடை:− மனைவியாக வந்தவர், "இப்படிப்பட்ட புத்திரன் நமக்கில்லையே!.."என்று ஏக்கத்துடன் கூறியும், கணவனாக வந்தவர், "இப்படிப்பட்ட புத்திரன் இதுவரை உலகில் பிறக்கவில்லை, இனிமேலும் பிறக்க மாட்டான்!" என்று கூறியும், இராமானுஜரின் பெருமையை வெளிப்படுத்தினர்.

கே.36:− அதில் பெண்ணாக வந்தவர், தமது கணவரிடம் வேண்டியது என்ன?
அதனைக் கேட்டுக் கொண்டிருந்த இளையாழ்வார் இராமானுஜர், அந்தப் பெண்ணின் வேண்டுகோளை எவ்வாறு நிறைவேற்றினார்?

விடை:−  அந்தப் பெண், தமது கணவரிடம் தாகத்திற்கு அருந்துவதற்காகத் தண்ணீரை வேண்டினாள்.

இராமானுஜர், அந்தப் பெண்ணின் கணவர் கூறியபடி, சாலையோரம் இருந்த கிணற்றிலிருந்து, பொழுது புலருமுன்னர், தண்ணீரைக் கொண்டுவந்து கொடுத்து உதவினார்.

கே.37:− அந்தக் கிணற்றுக்குப் பெயர் என்ன? அந்தக் கிணறு எங்கே உள்ளது?

விடை:−அந்தக் கிணற்றின் பெயர், "சாலைக் கிணறு".
அது காஞ்சியிலிருந்து சுமார் 7கி.மீ. தொலைவில் உள்ள செவிலிமேடு அருகே உள்ளது.

(வளரும்..) வைகுண்ட பதவி அடைந்தார். அத்துடன் கோவிந்தஜீயரின் சரித்திரம் முடிந்தது.

இனி, காஞ்சிபுரத்தில் தங்கியிருக்கும் இராமானுஜரை திருவரங்கம் அழைத்து வர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இராமானுஜர் திருவரங்கம் வந்தாரா என்பதை மேற்கொண்டு வரும் பதிவுகள் மூலம் அறியலாம்.



கே:−27. இராமானுஜரின் வேதாந்த குருவான யாதவப்ரகாசர் கூறிய உபநிஷத் அர்த்தங்களை, இராமானுஜர் அப்படியே ஏற்றுக்கொண்டாரா?

விடை:− இல்லை.. சாஸ்திரம், சூத்திரம் எனச் சர்வமும் கற்று, வாதத்தைவிடப் பிடிவாதத்தில் அதிக நம்பிக்கையுடைய அவரது குரு, தமது பாண்டித்யத்தாலும், சந்தி பிரிக்கும் சாமர்த்தியத்தாலும் மந்திரப் பொருள்களுக்குத் தவறான மாற்றுப் பொருள் கூறும்போது அதனை இராமானுஜர் மறுத்தார். அத்தோடு குருவிடம் அவற்றின் உண்மைப் பொருள்களைத் துணிவுடனும் சொன்னார்.

கே.28:− இளையாழ்வார் இராமானுஜருக்கும் அவரது வேதாந்த குருவுக்கும் இடையே நடைபெற்ற முதல் வாதம் என்ன? அதனைக் குரு ஒத்துக்கொண்டாரா?

விடை:− ஒருநாள், தைத்ரிய உபநிஷத்தில் வரும் வேத வாக்யமான, "ஸத்யம், ஞானம், அனந்தம், ப்ரம்ம" என்பதற்குப் பொருள் கூறும்பொழுது, "ஸத்யம், ஞானம், அனந்தம்" ஆகியவை ப்ரம்மம் என்று, யாதவப்ரகாசர் தவறாகப் பொருள் கூற, இளையாழ்வார் இராமானுஜர் அதனை ஏற்காது, "ஸத்யம், ஞானம், அனந்தம்" ஆகியவை ப்ரம்மத்தின் பண்புகள். அவையே ப்ரம்மம் ஆகா. ஸத்யம், ஞானம், அனந்தம் ஆகிய பண்புகளை உடைய ப்ரம்மம் என்று பொருள் கொள்ள வேண்டும்" என்றார்.

குருவும் வேறு வழியின்றி அதனை ஏற்றுக்கொண்டார்.

கே.29:− இராமானுசருக்கும் அவரது வேதாந்த குருவுக்கும் இடையே நடைபெற்ற இரண்டாவது வாதம் என்ன? அதனைக் குரு மறுத்தாரா?

விடை:− மற்றொரு நாள், சாந்தோக்ய உபநிஷத்தில் வரும் வேத வாக்யமான "தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணி" என்பதற்குப் பொருள் கூறும் போது, குரு யாதவப்ரகாசர், "குரங்கின் பின்புறத்தை ஒத்த கண்களை உடைய நாராயணன்" என்று தவறாகப் பொருள் கூற, அதனைக் கேட்டு கண்ணீர் வடித்த இராமானுஜர், "சூரிய மண்டலத்தில் உறையும் புருஷனான ஶ்ரீமந் நாராயணனின் கண்கள் அந்தச் சூரியனின் கிரணங்களால் அலர்விக்கப்படும் சிவந்த தாமரை மலர்களை ஒத்திருக்கின்றன" என்று வினயத்துடன் பொருள் கூறினார்.

அதனையும் குருவால் மறுக்க இயலவில்லை.

கே.30:− இராமானுஜருக்கும் குருவுக்கும் இடையே நடந்த வாதங்களின் தொடர்ச்சியாய் என்ன நடந்தது?

விடை:− சீடரின் ஞானத்தைக் கண்டு குருவுக்குப் பொறாமை வந்தது. உள்ளத்தில் சீடர் மீது பகை உணர்வு தோன்றியது. சீடர் இளையாழ்வார் இராமானுஜரால் தமது அத்வைத வாதங்கள் அடியோடு அழிந்துவிடும் என எண்ணி, அவரைக் காசி யாத்திரைக்கு அழைத்;துச் சென்று, கங்கையில் "மணிகர்ணிகா" கட்டத்தில் மூழ்கடித்துக் கொல்ல, சில அந்தரங்கச் சீடர்களுடன் சேர்ந்து தனிமையில் திட்டமிட்டார் யாதவப்ரகாசர்.

கே.31:− இராமானுஜர் குரு யாதவப் பிரகாசருடன் காசி யாத்திரை புறப்பட்ட போது, அவருக்கு வயது என்ன?

விடை:− 18 வயது.

கே.32:− இளையாழ்வார் இராமானுஜருடன் காசி யாத்திரைக்கு வந்த உறவினர் யார்?

விடை:− யாதவப்ரகாசரிடம் வேதம் பயின்றுவந்த இராமானுஜரின் தம்பியும், சிற்றன்னையின் குமாரருமான கோவிந்தன்.

கே.33:− காசி யாத்திரையில் விந்திய மலைச் சாரலில் ஒரு இரவில் நடந்த முக்கிய நிகழ்ச்சி என்ன?

விடை:− இராமானுஜரின் தம்பி கோவிந்தனுக்குக் குருவின் சதித் திட்டம் தெரிந்துவிட்டது. பதறிப்போன அவர் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாது, இராமானுஜரிடம் மிகவும் இரகசியமாக அதனைத் தெரிவித்து அவரைத் தப்பிச் செல்லுமாறு செய்தார்.

கே.34:− விந்திய மலைச் சாரலில் தனியே திக்குத் தெரியாது பயணித்த இளையாழ்வார் இராமானுஜர் யாரால் காப்பாற்றப்பட்டார்? எந்த ரூபத்தில்?

விடை:− காஞ்சிப் பேரருளாளன் − பெருந்தேவித்தாயார் ஆகிய திவ்ய தம்பதிகளால்,  இராமானுஜர் காப்பாற்றப்பட்டார்.
அவர்கள் வேடன், வேடுவச்சி உருவத்தில் வந்தனர்.

கே.35:− அவர்கள் இராமானுஜரின் பெருமையை எவ்வாறு வெளிப்படுத்திக் கொண்டனர்?

விடை:− மனைவியாக வந்தவர், "இப்படிப்பட்ட புத்திரன் நமக்கில்லையே!.."என்று ஏக்கத்துடன் கூறியும், கணவனாக வந்தவர், "இப்படிப்பட்ட புத்திரன் இதுவரை உலகில் பிறக்கவில்லை, இனிமேலும் பிறக்க மாட்டான்!" என்று கூறியும், இராமானுஜரின் பெருமையை வெளிப்படுத்தினர்.

கே.36:− அதில் பெண்ணாக வந்தவர், தமது கணவரிடம் வேண்டியது என்ன?
அதனைக் கேட்டுக் கொண்டிருந்த இளையாழ்வார் இராமானுஜர், அந்தப் பெண்ணின் வேண்டுகோளை எவ்வாறு நிறைவேற்றினார்?

விடை:−  அந்தப் பெண், தமது கணவரிடம் தாகத்திற்கு அருந்துவதற்காகத் தண்ணீரை வேண்டினாள்.

இராமானுஜர், அந்தப் பெண்ணின் கணவர் கூறியபடி, சாலையோரம் இருந்த கிணற்றிலிருந்து, பொழுது புலருமுன்னர், தண்ணீரைக் கொண்டுவந்து கொடுத்து உதவினார்.

கே.37:− அந்தக் கிணற்றுக்குப் பெயர் என்ன? அந்தக் கிணறு எங்கே உள்ளது?

விடை:−அந்தக் கிணற்றின் பெயர், "சாலைக் கிணறு".
அது காஞ்சியிலிருந்து சுமார் 7கி.மீ. தொலைவில் உள்ள செவிலிமேடு அருகே உள்ளது.

(வளரும்..)

இன்னும் அனுபவிப்போம்....

உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 25

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 25




வாழியெதிராசன் வாழியெதிராசன்

கூரேசர்

தேவப்பெருமாள் திருவுளத்தை அறிந்த கூரத்தாழ்வான், இனி சகல ஐஸ்வர்யங்களையும் துறந்து இராமானுஜரின் திருவடி தரிசனம் பெறுவோம் என்று தன் தர்மபத்தினி ஆண்டாளை அழைத்துக் கொண்டு காட்டு மார்க்கமாகச் சென்றார்.

இரவுப்பொழுதானது. ஆண்டாள் கொஞ்சம் பயத்துடன் ஓர் இடத்தில் தங்கிவிட்டுச் செல்லலாம் என்றாள். அதைக்கேட்ட கூரத்தாழ்வான் "மடியில் கனமில்லை. எல்லாம் துறந்தாகிவிட்டது. எதற்குப் பயப்பட வேண்டும்? எல்லா சொத்தையும் துறந்துட்டு வந்துட்டோமே! இன்னும் எந்தச் சொத்தை எடுத்துட்டு வருகிறாய்?" என்றார் கூரேசர்.

"எல்லாவற்றையும் விட்டு வந்துட்டேன். ஆனால், நீர் நித்யப்படி அமுது செய்கின்ற தங்கக் கிண்ணத்தை மட்டும் எடுத்துட்டு வந்தேன்" என்றாள் ஆண்டாள். தர்மபத்தினிக்கு தன் கணவர் மீது ஆசை இருக்குமோ இல்லையோ? அந்த ஆசையால்தான் ஆண்டாள் இவ்வாறு செய்தாள்.

அப்போது கூரேசர் கூறியது, "மொத்த சொத்தும் இழந்துமே அதெல்லாம் தேவையில்லை. இனி நம் இராமானுஜர் திருவடி தரிசனம் ஒன்றே போதும்"  என்றார். "இந்தப் பாத்திரம் மட்டும் எதற்கு?" என்று தங்கக் கிண்ணத்தை தூர வீசி எறிந்துவிட்டார். "பயம் முற்றும் ஒழிந்தது. வா போகலாம்" என்றார்.

கூரத்தாழ்வான் பற்றி திருவரங்கத்து அமுதனார் 'முக்குறும்பு அறுத்தவர் கூரத்தாழ்வான்' என்கிறார். தனமதம், வித்யா மதம், ஆபிஜாத்யம் மதம் தான் நிரம்ப படித்திருக்கிறோம் என்ற மமதை கூரத்தாழ்வானுக்கு துளியும் கிடையாது. நாம் அடியார்க்கு அடியார் என்று இருந்தவர்.

இப்போது இராமானுஜரிடம் வந்து சேர, இராமானுஜர் அவரைத் தழுவிக் கொண்டார். ஸ்ரீ வைஷ்ணவத்தைப் பரப்ப அருந்துணை கிடைத்துவிட்டது என்று மனம் மகிழ்ந்தார்.

 முதலியாண்டான்

முதலியாண்டான் இராமானுஜரின் மருமகன். திரிதண்டம் வாங்கும் பொழுது, சந்நியாசிகள் எல்லாரும் சொல்லணும் 'சந்நியஸ்தம் மய:' என்னால் எல்லாம் துறக்கப்பட்டது என்று. ஆனால், இராமானுஜரோ அனந்தசரஸ் புஸ்கரணியில் ஸ்நானம் செய்து, தேவப்பெருமாளிடம் இருந்து திரிதண்டத்தை பெற்றுக்கொள்ளும் பொழுது 'நம் மருமகன் முதலியாண்டானைத் தவிர மற்ற அத்தனையும் துறந்தோம்' என்றார்.

அவர் மருமகன் என்பதற்காகத் துறக்காமல் இருக்கவில்லை. பரம பாகவதர் என்ற காரணத்தால் தான் துறக்காமல் இருந்தார். சொத்துக்களைத்தான்  துறக்க வேண்டும். பக்தர்களைத் துறக்கவேண்டும் என்று எந்த சந்நியாசத்திலும் சொல்லவில்லை.

முதலியாண்டானும், கூரேசரும் இராமானுஜரின் திருவடிகளை அடைய வந்து சேர்ந்தார்கள். பஞ்ச சம்ஸ்காரங்களைப் பெற்றுக் கொண்டு, இராமானுஜரிடத்திலே நித்யமாக காலட்சேபம் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

இப்பொழுது தான் யாரும் எதிர்பாராத சம்பவம் ஒன்று நடந்தது. அது என்ன சம்பவம் என்பதை நாளை அறியலாம்.
ஒரு நாள் திருவரங்கம் வட காவிரிக் கரையில் அன்று பலத்த வாக்குவாதம்!
பல வைணவர்கள், சில பொதுமக்கள், சில அறிஞர்கள், சில புலவர்கள் போதாதா வாக்குவாதம் தோன்ற இருப்பினும் அரணிக் கட்டையைக் கடைந்தால் தானே, வேள்விப் பொறி பறக்கும்!
அதனால் தவறில்லை!
அத்வைதம், விசிஷ்டாத்வைதம், இன்னும் பல கருத்துக்கள் குறித்த சூடு பறக்கும் விவாதம் கடைசியில் ஒரு இடத்தில் வந்து நின்று விட்டது!
யார் ஜகத்குரு?
அவரவர் அவர்களுக்குப் பிடித்தமான பேர்களைச் சொல்கிறார்கள்!
சரி வம்பே வேணாம்!
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கீதாசார்யன் அவனே ஜகத்குரு என்று ஒரு முடிவுக்கு வர...
கூரத்தாழ்வார் அலறி அடித்துக் கொண்டு, காவிரியை நோக்கி ஓடுகிறார்!
கைகளை உரக்கத் தூக்கி அலறுகிறார்!
என்னமோ ஏதோ-ன்னு சகலரும் பதற...
கூரேசர் பெருங் குரலெடுத்து கத்துகிறார்! சுலோகமாய் வர்ஷிக்கிறார்!
சத்யம் சத்யம் புன:சத்யம்! யதிராஜோ ஜகத்குரு!
ச ஏவா சர்வ லோகானாம்! உத்தார்த்தன சம்ஸயா!!
மக்களே, இந்தப் பேச்சும் தேவையோ? கீதாசார்யனா ஜகத்குருவா?
அத்தனை அத்தியாயம் சொல்லியும், சரணம் வ்ரஜ என்று சொல்லியும் பார்த்தனும் சரணம் அடைந்தானோ?
இல்லையே!!
போரில் வென்று, ராஜ்ஜியம் ஆண்டு, போகங்களில் இருந்தானே அன்றி, சரணாகதி செய்யவில்லையே!
கீதையே நேரில் கேட்டவனுக்கே
இந்தக் கதி!
ஆனால் நம் இராமானுசர் நம் அத்தனை பேரையும் கீதையை நேரில் கேட்காமலேயே உத்தாரணஞ் செய்யவில்லையா?
இத்தனை பேர்கள் சரணாகதி செய்துள்ளோமே!
அரங்கனின் இரண்டு விபூதிகளான லீலா விபூதியும், நித்ய விபூதியும் அவரிடம் அல்லவோ கொடுத்து வைத்துள்ளான்!
கண்ணனிடமா அவை இருக்கின்றன?
இதில் இருந்தே தெரியவில்லையா?
யார் ஜகத்குரு என்று கேள்வியும் எழுவதா?
அதைக் கேட்டு அடியேன் அழுவதா?
இராமானுஜ சம்பந்தத்தால் சம்சார ஜலத்தை ஸ்தம்பம் செய்தவன்,
காவேரி ஜலத்தை ஸ்தம்பம் செய்யேனோ?
சத்யம் சத்யம் புன:சத்யம்! யதிராஜோ ஜகத்குரு! யதிராஜோ ஜகத்குரு!"
அனைவரும் பாய்ந்து சென்று, கூரேசனை நீரில் மீட்டு, கரைக்கு எடுத்து வருகிறார்கள்.
கரையில் வந்தவுடன் அனைவரும் கூரேசனிடம் மன்னிப்பு கேட்க,
"ஆசார்யரை ஒருநாளும் மறுதலிக்காமல், இராமானுஜ சம்பந்தம் உடையவர்கள் ஆவீர்" என்று கூரத்தாழ்வார் மொழிஞ்சருளினார்!
"* நம் இராமானுசருக்கு முன் வந்த ஆசார்யர்கள் அனைவரும் = அனுவிருத்தி பிரசன்னாச்சார்யர்கள்!
* நம் இராமானுசன் என்னும் ஆச்சார்யனோ = க்ருபா மாத்ர ப்ரசன்னாச்சார்யர்!
அதாவது, அடிப்படை ஞானம், அனுஷ்டானம், இதில் தேறியவர்களுக்கு மட்டுமே உபதேசம் காட்டி அருளியவர்கள், அனுவிருத்தி பிரசன்ன ஆச்சார்யர்கள்!
ஆனால் நம் உடையவர் அன்றோ,
இந்த ஓராண்வழி என்னும் சங்கிலியை அறுத்து, ஒரே ஒரு நிபந்தனையை மட்டும் விதிச்சருளினார்கள்? = ஆசை வையும்! அது போதும்!
அதனால் அன்றோ, அடியோங்கள் உய்ந்தோம்! அதனால் அன்றோ, அரங்கன் உய்ந்தான்! "
இப்படிக் கூரேசன் கூற, கூட்டம் முழுதும், யதிராஜோ ஜகத்குரு! யதிராஜோ ஜகத்குரு! என்று கூவிக் குளிர்ந்தது!
ஓராண் வழியாய் உபதேசித்தார்! முன்னோர்
ஏரார் எதிராசர் இன் அருளால்
பாருலகில்
ஆசை உடையோர்க்கு எல்லாம், ஆரியர்காள், கூறும்! என்று
பேசி வரம்பு அறுத்தார் பின்!
இப்படியான ஆசார்ய அத்யந்த பக்தி கொண்டவர் கூரேசன்!
ஆசார்யரை விட வயதில் மூத்தவாராய் இருப்பினும், ஆசார்யரை நொடிப்பொழுதும் சிந்தையில் கீழ் இறக்காத இந்தப் பேருள்ளத்தை என்ன என்பது?
கூரேசரை அணுக்க மாணவராய்ப் பெற்ற உடையவர் நற்பேறா?
இராமானுசரை அணுக்க ஆசார்யனாய்ப் பெற்ற கூரேசன் நற்பேறா??
கூரத்தாழ்வார் இராமானுச முனிகள் திருவடிகளே சரணம்!

ஸ்ரீராமாநுஜ சஹஸ்ராப்தி
(1001ஆம் ஆண்டு)-பதிவு 227
🙏🙏🙏🙏🙏
நாளை,தை ஹஸ்தம்(26/01)
ஶ்ரீகூரத்தாழ்வானின் 1009 ஆவது திருநட்சத்திரம்-பாகம்1/3
🔔🍀🌹🌷🌺🌻🔔
"மொழியைக் கடக்கும் பெரும்புகழான்,வஞ்ச முக்குறும்பாம்,
குழியைக் கடக்கும்நம் கூரத்தாழ்வான்,சரண் கூடிய பின்
பழியைக்கடத்தும்,இராமானுச புகழ் பாடியல்லா,
வழியைக் கடத்தல் எனக்கினி யாதும் வருத்தமன்றே"
(இரா.நூற்.7)

கூரத்தாழ்வான் 10 தகவல்கள்:
👏👏👏👏👏👏👏👏
1.மொழிகளால் விவரிக்க முடியாத புகழுடைய,ஆழ்வான்--
i)பெரும்செல்வம்- பெருந்தேவித் தாயாரும்,
தேவப்பெருமாளுமே வியக்கும் வண்ணம் பெருஞ் செல்வந்த ராய்த் திகழ்ந்தார்.நித்யமும்,
அதிகாலையிலிருந்து நள்ளிரவு வரையில் அவரதுதிருமாளிகை யில் பாகவத ததீயாராதனை நடந்து கொண்டே இருக்கும்.இன்றும் கூரம் கிராமத்தைச் சுற்றியுள்ள பல நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களின் பத்திரங்கள் கூரத்தாழ்வான் பெயரிலேயே உள்ளது.(அவற்றை உழுது பயிரிடும் மக்கள் ஆழ்வான் சந்நிதிக்கு, குத்தகையாக விளைபொருட் களில் ஒரு பகுதியைச் சமர்ப்பிக்கிறார்கள்.)

ii)உயர்ஞானம்-- பல சாஸ்த்ரங்களையும் சிறப்பாகக் கற்று, சிறந்த பண்டிதராக விளங்கினார்;ராமானுஜருக்கே ஏதேனும் சந்தேகம் வந்தால் ஆழ்வானைக் கேட்பாராம்!

iii)உயர்ந்த அந்தணர் குலம்-அதிலும் ஒரு பிரதேசத்தை ஆளும் சிற்றரசராக விளங்கியது ஆகிய 3 செருக்குகளும், அறவே அற்றவர்.
🙏🌷🌺🌻🙏
2) பகவத் கீதை,13 ஆம் அத்யாயம்,ஸ்லோகம் 7-11ல், ஸ்ரீகிருஷ்ணபிரான், ஒரு பகவானை உணர்ந்த, உயர்ந்த ஜீவாத்மாவின் 20 குணங்களை விளக்குகிறார்.அந்த குணங்கள் அனைத்தும் பூரணமாக நிரம்பப்
பெற்றவர் நம் கூரத்தாழ்வான்:

"அமானித்வம்- பணிவு;
அதம்பித்வம்- செறுக்கின்மை:
அஹிம்சை- வன்முறையின்மை;
ஷாந்திர்- சகிப்புத்தன்மை;
ஆர்ஜவம்-நேர்மை;
ஆசார்ய உபாஸனம்- எப்போதும் ஆசார்யரையே சார்ந்திருப்பது;
சௌஸம்-தூய்மை(அகம்/புறம்);
ஸ்தைர்யம்-மன உறுதி;
ஆத்மவினிக்ரஹ-வைராக்யம்
-சுயகட்டுப்பாடு;
இந்த்ரிய அர்த்தேஷு-வைராக்யம்-புலன்களின் ஆசைகளைத் துறத்தல்;
அனஹங்கார- தற்பெருமை கொள்ளாமல் இருத்தல்;
ஜன்ம/ம்ருத்யு/ஜரா/வ்யாதி/துக்கா தோஷானுதர்சனம்--
எப்போதும் இந்த சமுதாயத்தில் உள்ள கஷ்டத்தையே பார்ப்பது;
அஸக்திர்- பற்றின்மை;
புத்ரதாரக்ருஹாதி ஷு அன்பிஷ்வங்க-மனைவி, மக்கள்,வீடு முதலியவற்றில் பற்றின்மை;
இஷ்ட,அனிஷ்ட உபபத்திஷு
நித்யம் ஸ சமசித்தத்வம்-விருப்பு/வெறுப்புற்று சம நிலையுடன் இருத்தல்;
மயிசாநந்ய யோகேன பக்தர்
அவ்யபிசாரணி-என்(கண்ணபிரான்) மேல் மட்டுமே நிலையான பக்தி;
விவிக்ததேச சேவித்வம்- தனிமையான இடத்தில் வசித்தல்.
அரதிர்ஜனஸம்ஸதி- பொதுமக்களிடம் பற்றில்லாமல் இருத்தல்;
அத்யாத்ம ஞான நித்யத்வம்-
நித்யமான ஆத்ம ஞானம்.
தத்வ ஞான அர்த்த சிந்தனம்-
உண்மையான அறிவைப் பற்றிய சிந்தனை.
🙏🙏🙏🙏🙏🙏
3.கூரம் பிரதேச ராஜாவான அவர்,ஒரு நாள் இரவு,நகர சோதனைக்காகத் தனியே சென்ற போது,ஒரு ஏழையின் வீட்டில் இருந்து அழுகுரல் கேட்டது.விவரம் கேட்ட போது,
அந்த வீட்டார்,திருமண வயதடைந்த தம் மகள்,ஜாதகப் படி,கணவனோடு கூடினால்,
கணவன் மரணம் அடைவார்
என்பதால்,திருமணம் செய்ய முடியாத கவலை என்றனர்.
ஆழ்வான்,அந்தப் பெண்ணைத் தானே மணம் செய்துகொண்டு அவர்கள் துயர் தீர்த்தார். இறுதிவரை ஆழ்வானும்.அவர் மனைவி ஆண்டாளும்,தேக சம்பந்தம் இல்லாமல் வாழ்ந்தனர்.
🍀🌳🌲🌾🌴
4.அவருடைய திருமாளிகையில் காலையிலிருந்து,இரவு வரை,
தொடர்ந்து,நாளும்,அன்ன
தானம் ந்டைபெற்றது.இரவில் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் நடை சாற்றிய பின் தான் இவர் மாளிகைக் கதவுகள் மூடப்படும்.
ஒரு நாள்,கோவிலில் சற்று தாமதமாகி விட்டது.ஆனால் ஆழ்வான் மாளிகைக் காவலாளிகள் எப்போதும் போல குறித்த நேரத்தில் கதவுகளை மூடினர்.பெரிய மணிகள் பொருத்தப்பட்ட கதவாதலால்,கதவின் சப்தம் வரதராஜப் பெருமாளுக்கும் கேட்டது.பெருந்தேவித்தாயார்பெருமாளிடம்,"என்ன கோவில் கதவு சப்தம் போல் இருக்கி றதே"என்று கேட்க, பெருமாள்
அவை கூரத்தாழ்வான் வீட்டுக் கதவுகள் அடைக்கும் சப்தம் என்றார்.'ஆழ்வான் அவ்வளவு செல்வம்படைத்தவரோ' என்று வியந்தார் தாயார்.இந்த தெய்வீக உரையாடலைச் செவியுற்ற திருக்கச்சி நம்பிகள் (பெருமாளுக்கு ஆலவட்டம்-விசிறிவீசும் கைங்கர்யம் செய்து கொண்டிருந்தவர்) மறுநாள்ஆழ்வானிடம்,இதைப்பற்றி உகந்து கூற,ஆழ்வான் மிகத் துக்கமடைந்தார்!! (அவருடைய கைங்கர்யம் பேசப்பட வேண்டி யிருக்க, அழியும் செல்வம் போற்றப் பட்டதே என்று). செல்வம் இறைவனை அறிய/அடைய தடையாக இருப்பதால் உடனே தம் செல்வமனைத்தும் துறந்து,
உடுத்தியஉடைகளுடன்,சென்று இராமானுஜரைத் தஞ்சம்
அடைந்தார்.ஆழ்வானுடன் புறப்பட்ட ஆண்டாள் நடந்து செல்லும் காட்டு வழியில்,
மடியைத் தொட்டுப் பார்த்துக் கொண்டே வந்தார்.இதைக் கவனித்த ஆழ்வான்,"மடியில் கனமிருந்தால் தானே வழியில் பயம்,ஏதாவது வைத்திருக் கிறாயா?" என்று, வினவ,அவர் "தேவரீர் உணவருந்துவதற்காக (பயன்படுத்தும்),பொன்வட்டிலை எடுத்து வந்தேன்"என்றார்
ஆழ்வான் உடனே பொன் வட்டிலை வாங்கி,காட்டில் வீசிவிட்டு,இப்பொழுது பயமின்றி நடக்கலாம் என்றார்.
👏👏👏👏👏👏
5.இவரின் இயற்பெயர் "ஶ்ரீவத்சாங்கமிஶ்ரர்",தமிழில் "திருமறு மார்பன்"(இவர் மார்பிலும் திருமறு இருந்தது ).
ராமாவதாரத்தில்,ஆதிசேஷனாகிய லக்ஷ்மண்,பகவானுக்குத் தொண்டுபுரிந்தமைக்காக,இந்த அவதாரத்தில் ஆதிசேஷ அவதாரமாகிய இராமானுஜ ருக்குத் தொண்டு புரிய, ராமபிரானின் அம்சமாகக் கூரத்தாழ்வான் அவதரித்தார்.
🔔🔔🔔🔔🔔🔔
6.இவர்திருவாய்மொழிக்கு,அதி அற்புத வ்யாக்யானம் செய்யும் போது,அதன் மேன்மையில், உருகிக் கரைந்து, மூர்ச்சித்து விடுவாராம். இதைச் செவியுற்ற ராமாநுஜர்"கூரேசர் பாவம்/நிஷ்டை அடியேனுக்கு இல்லாமல் போயிற்றே" என்றாராம்.அவர் திருவாய் மொழியில் ஆழ்ந்து திளைப்ப தால் ராமானுஜர்,அவரை 'ஆழ்வான்'என்று கொண்டா டினார்.அப்போதிருந்து அவர் "கூரத்தாழ்வான்" என்றழைக் கப்பட்டார்.
👏👏👏👏👏👏
7.முதலாம் குலோத்துங்க சோழ மன்னன் காலத்தில்,சைவம் மேலோங்கியிருந்தது.வைணவத்தை அழிக்க நினத்த மன்னன், இராமானுஜரை சைவமே
பெரிது,என்று ஒத்துக்கொள்ள வைத்துவிட்டால்அனைவரும் அதை ஏற்றுக் கொள்வார்கள் என்றெண்ணி,அவரை அழைத்து வர படை வீரர்களை அநுப்பினான்.இதை அறிந்த கூரத்தாழ்வான்,ராமானுஜரின் காஷாய உடைகளைத் தாம் அணிந்து, அரசவைக்குச் சென்று, தாமே ராமானுஜர் என்று கூறி வைணவத்தின் உயர்வை பலவாறு எடுத்து
ரைத்து,வைணவமே உயர்ந்தது என்று வாதிட்டார். அரசவையில் இருந்த, நாலூரான் என்பவன் அரசனிடம்,வந்திருப்பவர் ராமாநுஜர் அல்ல; ஆழ்வானே ராமாநுஜர் வேடத்தில் வந்திருக்கிறார் என்றான். பெரிதும் சினமடைந்த அரசன் ஆழ்வான் கண்களைப் பிடுங்குமாறுஆணையிட்டான்.
'உன்னுடைய ஆட்கள் என்னை என்ன தொடுவது?என் சம்பிரதாயத்தை நிலை நாட்டுவதற்காக,நானே என் கண்களைப் பிடுங்கி விடுகிறேன்' என்ற,ஆழ்வான் தன் கண்களைத் தானே பிடுங்கி எறிந்தார் (இராமானுஜரை ஆழ்வானது வெள்ளை உடைகளை உடுத்தச்செய்து,மேல்கோட்டை
க்கு,அனுப்பி விட்டார்)
👁👁👁👁👁👁👁👁👁👁
8.ஶ்ரீரங்கம் வந்தடைந்த ஆழ்வான்,பெரிய பெருமாளைச் சேவிக்கச் சந்நிதிக்குச் செல்ல,அங்கு காவலாளிகள்,
இராமானுஜ சம்பந்தமுடைய யாரையும் சந்நிதிக்குள் விடக்
கூடாதென்பது மன்னனின் கட்டளை என்று மறுக்க,தனக்கு தன் ஆச்சார்யன் எம்பெருமா னார் தான் வேண்டும் என்றும்,
எம்பெருமான் வேண்டாம் என்று கூறிவிட்டுத் திரும்பிச் சென்று விட்டார்!
👐👐👐👐👐👐👐👐
9.ஶ்ரீரங்கத்தை விட்டுத் திருமாலிருஞ்சோலை சென்றார்,அங்கு அழகர் மீது"ஸுந்தர பாஹுஸ்தவம்"
என்ற கிரந்தத்தை இயற்றினார்.அவர் இயற்றிய பிற கிரந்தங்கள்:

ஶ்ரீவைகுண்ட ஸ்தவம், அதிமானுஷ ஸ்தவம், ஶ்ரீவரதராஜ ஸ்தவம்,ஶ்ரீஸ்தவம்,
என்னும் கிரந்தங்கள். 'லக்ஷ்மிநாத ஸமாரம்பாம்',
'யோநித்யம் அச்யுத பதாம்புஜ'என்னும் தனியன்கள்
📖📃📚📙📘📗.
10.அரங்கனின் பேரருள் பெற்ற
அரவணைப் பிரசாதத்தை ,
உட்கொண்டதால்,இவர் மனைவியார், ஆண்டாள்,
பிள்ளைப் பேறு அடைந்து,ஶ்ரீ பராசர பட்டர்,ஶ்ரீ வேதவியாஸ் பட்டர் என்ற பெரும் ஆச்சார் யார்களை திருக்குமாரர்களா கப் பெற்றார்.இந்த இரண்டு குழந்தைகளையும்,பெரியபெருமாளும்,பெரியபிராட்டியாரும், பெரியகோயில் திருமணத் தூண்களில் தொட்டில் கட்டி வளர்த்தார்கள்.அவர்களுக்குத் திருமண வயது வந்ததும், ஆண்டாள்,ஆழ்வானிடம் "பிள்ளைகளுக்குத் திருமணம் செய்ய வேண்டுமே" என்றார். ஆழ்வான் "அதை என்னிடம் எதற்குச் சொல்கிறாய்?" என்று கேட்டார்! கொஞ்ச நேரம் கழித்து,"மாலை பெருமாளைச் சேவிக்கச் செல்லும் போது, பிள்ளைகளை வரச்சொல்" என்று கூறிவிட்டுச் சென்றார். மாலையில் பெருமாளைச் சேவித்து விட்டு,தீர்த்தம்,சடாரி பெற்றுக் கொண்டு,செல்லாமல்
நின்று கொண்டிருந்தார்.
பெருமாள், அவர் தயங்கி நிற்பதைப் பார்த்து,"ஆழ்வான்!ஏதோ சொல்ல நினைப்பது போல் தெரிகிறதே; என்ன?" என்று கேட்டார்.ஆழ்வான் மிகத் தயங்கி,"ஆண்டாள், பிள்ளை களுக்கு வயதாகிவிட்டது; திருமணம் செய்ய வேண்டும் என்று சொல்கிறாள்"என்றார்.
பெருமாள் "நீர் வீட்டுக்குப் போம்; நாம் பார்த்துக் கொள்கிறோம்"என்றார்.
மறுநாள் காலை பெரிய நம்பிகளின் திருமாளிகை யிலிருந்து,பெரியோர் அனைவரும் சீர்வரிசை களுடன் ஆழ்வான் திருமாளிகைக்கு வந்து "எங்கள் குமாரத்திகளை தேவரீர் திருக்குமாரர்களுக்கு திருமணம் செய்து ஏற்றுக் கொள்ள வேண்டும்;இது பெரியபெருமாள் நியமனம்" என்று கூறி சேவித்தார்கள் (பெருமாள் அவர்கள் கனவில் தோன்றி அவ்வாறு நியமித் தாராம்.!!)
படங்கள்:
1&2:கூரத்தாழ்வான் வைபவம்
3. அலங்காரக் கூரத்தாழ்வான்.
4.காஷாய கோல ஆழ்வான்
(ஆழ்வான் பற்றிய மேலும் இரு பதிவுகள் நாளை பதிவிடப்படும்)

---(கூரத்திலிருந்து,அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்)
ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஸ்வாமி.
ஸ்ரீ மதே பாஷ்யககாரர் நம :
ஸ்ரீ ஸ்வாமி கூரேசர்.

நான் பெற்ற பெருஞ்செல்வம்
நாலூரான் பெறும் வரம் வேண்டும்-இந்த
ஊன் பெற்றுக்கிடைத்த பலம்
அடியேனுக்குறுதி நின்னைத் தான் பெற்றேன் இனிப்பேறு வேறுண்டோ தனிமுதலே
தேன் பெற்ற துழாய் மாலை வேண்டி விரும்பி அணிபவனே திருமாலே.

ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஸ்வாமி.
ஸ்ரீ மதே பாஷ்யககாரர் நம :
ஸ்ரீ ஸ்வாமி கூரேசர்.

நான் பெற்ற பெருஞ்செல்வம்
நாலூரான் பெறும் வரம் வேண்டும்-இந்த
ஊன் பெற்றுக்கிடைத்த பலம்
அடியேனுக்குறுதி நின்னைத் தான் பெற்றேன் இனிப்பேறு வேறுண்டோ தனிமுதலே
தேன் பெற்ற துழாய் மாலை வேண்டி விரும்பி அணிபவனே திருமாலே.
🐚ஓம் நமோ நாராயணா🐚

ஸ்ரீமன் நாராயணனன் மந்திரம்

ஆர்த்தா விஷண்ணா சிதிலாச்ச பீதா
கோரேஷு ச வ்யாதிஷு வர்த்தமானா
ஸங்கீர்த்ய நாராயண சப்தமாத்ரம்
விமுக்தது கா ஸுகினோ பவந்து
கூரேசர் அருளிய நாராயணாஷ்டகம்

வைகுண்டத்தில் வாசம் செய்யும் ஸ்ரீமன் நாராயணன் மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் துதிப்பவர்களுக்கு மிகுந்த நன்மைகளை உண்டாக்கும். மாத ஏகாதசி மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று மகாவிஷ்ணுவை மனதில் நினைத்தவாறு இந்த மந்திரத்தை 108 முறை துதிப்பதால் பிறரின் வஞ்சகத்தால் நீங்கள் இழந்த சொத்துக்கள் உங்களுக்கு திரும்ப கிடைக்கும். மனக்கவலைகள் மற்றும் நோய்கள் நீங்கும்.மனோதைரியம் உண்டாகும்.

மனக்கவலை கொண்டவர்கள், துக்கத்தால் வருந்துபவர்கள், சொத்துகளை இழந்தவர்கள், பயம் கொண்டவர்கள், தீராத நோயினால் வேதனையுறுபவர்கள் என அனைவரும் ‘நாராயண’ எனும் திருநாமத்தை உச்சரித்தபோதே அந்த துன்பங்களிலிருந்து விடுபட்டு சுகமடைவார்கள். அப்படியொரு அமைதியை எங்களுக்கு அளிப்பாய் நாராயணா என்பதே இந்த மந்திரத்தின் பொதுவான பொருளாகும். ஸ்ரீமன் நாராயணனின் இந்த மந்திரத்தை துதிப்பதால் நமக்கு பல விதமான நன்மைகள் உண்டாகிறது.
<<கூரேசரின் பெருந்தன்மை >>

மேல்கோட்டையிலும், மைசூரிலும் தனது திருப்பணிகளையெல்லாம் வெற்றிகரமாக முடித்துவிட்டு ஸ்ரீரங்கம் திரும்பினார் இராமானுஜர் கூரத்தாழ்வானை கண்டு மனம் வெதும்பி, துக்கம் மேலிட அவரைத் தழுவினார். " கூரேசரே ! காஞ்சியில் பேரருளாளரான ஸ்ரீ வரத ராஜப் பெருமாள் வேண்டியவர்களுக்கு வேண்டிய வரத்தை அருளுபவர். நீர் எமக்காக அவரைத் தரிசித்து உமது கண் பார்வையை வரமாக கேளும். உம்மைக் காணும் போதெல்லாம் குற்ற உணர்ச்சி என்னைக் கொல்லுகிறது " என்று வற்புறுத்தினார். கூரேசரும் தனது குரு நாதரின் வேண்டுகோளின்படி காஞ்சிக்கு வந்து ஸ்ரீ வரத ராஜரைத் தரிசித்து " வரதராஜ ஸ்தவம் " என்கிற துதியைப் பாடினார் கூரேசர். எம்பெருமான் அவர் முன் பிரத்தட்சயமாகி  வேண்டும் வரம்" என்னவென்று கேட்க " யான் பெற்ற பேற்றை நாலூரானும் பெற்று நல்ல கதி அடைய வேண்டும் "  என்று யாசித்தாராம். எத்தனை பெருந்தன்மை கூரேசருக்கு, தன்னுடைய விழிகள் போகக் காரணமாயிருந்த நாலூரானும் மோட்சமளிக்க வேண்டும்" என்று வரம் கேட்டாரே, இதைக் கண்டு ஆசார்யர் இராமானுஜர் புளகாங்கிதமடைந்தாராம் .

இன்னும் அனுபவிப்போம்...

உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 24

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 24




இரண்டு சீடர்கள் இல்லாமல் இராமானுஜர் இருந்ததில்லை. அவர்கள் யார்?

 இரண்டு சீடர்கள்

இரண்டு சீடர்களில் ஒருவர் கூரத்தாழ்வான் மற்றொருவர் முதலியாண்டான். இவர்கள் தண்டம், பவித்ரத்தைப் போலே. முதலியாண்டான் இராமானுஜரின் தண்டம், கூரத்தாழ்வான் இராமானுஜரின் பவித்ரம் என்றும் அழைக்கப் பெறுவார்கள். எப்படி திரிதண்டத்தை விட்டுட மாட்டாரோ, கையில் போட்டிருக்கும் பவித்ரத்தை விட்டுட மாட்டாரோ அந்த ஸ்தானத்தில் தான் இராமானுஜருக்கு இவர்கள் இருவரும் இருந்தார்கள். நாம் எந்தக் கோவில் சென்றாலும் சித்திர ரூபத்தில் பார்த்தால் கூட முதலியாண்டான், இராமானுஜர் நடுவில், கூரத்தாழ்வார் இருப்பார்கள்.

முதலியாண்டான் 1027ல் பிறந்தவர். சித்திரை புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர். கூரத்தாழ்வான் இராமானுஜருக்கு முன்பாகவே 1009லேயே, தை மாதம் அஸ்தம் நட்சத்தில் திருஅவதாரம் பண்ணியவர்.

கூரத்தாழ்வானுக்கு 'ஹரீத குலதிலகர்' என்பது பேரு. முதலியாண்டானுக்கு 'தாசரதி' 'வாஹீத குலதிலகர்' என்பது திருநாமம். இப்படி இருவரும் அருகிலேயே இருந்தார்கள். கூரத்தாழ்வானுக்கு காஞ்சிபுரத்தின் அருகிலுள்ள 'கூரம்' என்ற ஊர்; முதலியாண்டானுக்கு காஞ்சிபுரம். முதலியாண்டான் இராமானுஜரின் அக்கா மகன், இராமானுஜருக்கு மருமகன்.

இவர்கள் இருவரும் சுவாமி இராமானுஜரை ஆச்சாரியாக ஏற்க வந்தார்கள்.

🌺🌻 கூரத்தாழ்வான்

காஞ்சிபுரத்தில் அரக்கோணம் அருகில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவர் பெயர் கூரேசர். நல்ல ஞானமும், ஒழுக்கமும் நிறைந்தவர். நித்யப்படி தினமும் 1000 பேருக்கு அன்னதானம் நடக்கும் கூரேசர் வீட்டில். அவர் வீட்டின் திருமாளிகை எவ்வளவு பெரியது என்றால்  இரவு வாசற்கதவை சாற்றுவார்கள், அதில் பொருத்தியிருக்கும் மணிகள் எல்லாம் 'சடார்' என்று சத்தம் போடுமாம்.

அந்தச் சந்தம் ஐந்தாறு மைல்களுக்கு அப்பால் இருக்கும் பெருந்தேவித்தாயார் காதில் விழுந்ததாம். அதைக்கேட்ட பெருந்தேவித்தாயார் தேவப்பெருமாளைப் பார்த்து "யாருடைய மணிச்சத்தமோ கேட்கிறதே?! யாரோ பெரிய பணக்காரர்கள் இருப்பார்கள் போலே!" அத்தனை பணத்திற்கு தேவதையே பிராட்டியார் தான். ஆனால், அவரோ பெரிய பணக்காரரா இருப்பார் போலே?! என்று கேட்கிறார் எனில், அவர் எத்தனை செல்வந்தராக இருந்திருப்பார்?

இதைக்கேட்டது தான் தாமதம், உடனே தேவப்பெருமாள் திருவுளத்தில் ஏற்றுக்கொண்டார். 'அப்போ அதெல்லாவற்றையும் வாங்கிக் கொள்ள வேண்டியது தான்' என்று.

தவறாக நினைக்க வேண்டாம்! சுவாமியின் கணக்கு வேறு.

யாரை அனுக்கிரகிக்க வேண்டும் என்று சுவாமி ஆசைப்படுறாரோ, முதலில் அவர்களின் பணத்தை வாங்கிடுவார். செல்வம் இருக்கிறவன் பகவானிடத்தில் வரமாட்டான். அதை வாங்கிவிட்டால் தான் அவனுக்கு பகவான் ஞாபகமே வரும். அப்போதுதான் பகவானிடத்தில் வருவான்.

இனி, 'கூரத்தாழ்வானுக்கு நிலையில்லாத செல்வத்தை நீக்கி, நிலையான செல்வத்தை நாம் அவருக்குக் கொடுப்போம்' என்று திருவுளம் கொண்டார்கள் தேவப்பெருமாளும், பெருந்தேவித்தாயாரும்.

தேவப்பெருமாள் திருவுளத்தை அறிந்த கூரத்தாழ்வான், இனி சகல ஐஸ்வர்யங்களையும் துறந்து இராமானுஜரின் திருவடி தரிசனம் பெறுவோம் என்று தன் தர்மபத்தினி ஆண்டாளை அழைத்துக் கொண்டு, காட்டு மார்க்கமாக புறப்பட்டார். அடுத்து என்ன நடந்திருக்கும்?

இன்னும் அனுபவிப்போம்...

வாழியெதிராசன் வாழியெதிராசன்

உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!🌹🙏

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 23

ராமானுஜர் வாழ்க்கை வரலாறு - பதிவு 23

ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தை விரிவாக்க இராமானுஜர் எடுக்கும் முயற்சிகளை இனி காணலாம்.

🌺🌻 கோவிந்தனை சிஷ்யனாக அழைத்தல்

தம்மைச் சுற்றி உற்சாகமும் நம்பிக்கையும் கொண்ட ஒரு சிஷ்ய பரம்பரையை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தார் இராமானுஜர். மக்களிடையே இச்சமயம் பரவ வேண்டுமானால் தீவிரமான பிரச்சாரம் தேவை. இதற்கு ஓர் இயக்கம் வேண்டும். அதுமட்டுமல்லாது ஆளவந்தாரின் ஆசைகளை நிறைவேற்ற வேண்டுவதற்கு உண்டான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். ஆகவே, இந்த பணியில் பலரைச் செயல்படுத்த முனைந்தார்.

அவரது சிற்றன்னையின் மைந்தன் கோவிந்தனின் நினைவு வந்தது. ஆனால், அவர் காளஹஸ்தியில் தங்கி அத்வைத மதத்தைத் தழுவியுள்ளார். அவர் அத்வைதமதம் தழுவ காரணம் என்னவென்றால், யாதவப் பிரகாசர் இராமானுஜரை கொல்லத் திட்டம் போட்டு கங்கை யாத்திரைக்கு சென்றார்கள் அல்லவா?  

கோவிந்தன் கங்கையில் குளிக்கும் பொழுது அவரது கையில் சிவலிங்கம் கிடைத்தது. அதை இறையருள் காரணமாக ஏற்றுக் கொண்ட அவர் காளஹஸ்திக்குச் சென்று அங்கேயே தங்கிவிட்டார்.

இவரைத்தான் இப்பொழுது ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்துக்குள் அழைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தார் இராமானுஜர்.

🌻🌺 பெரியதிருமலை நம்பிகளிடம் சொல்வது

இராமானுஜர் இரண்டு சீடர்களை அழைத்தார். அவர்களை திருமலை சென்று அங்கே இறைவனுக்கு கைங்கரியம் செய்யும் தன் தாய்மாமனான பெரியதிருமலை நம்பிகளிடம் கோவிந்தனைத் தாங்கள் திருத்தி அழைத்துவர வேண்டும் என்று கூறும்படிச் சொன்னார்.

சீடர்கள் திருமலை சென்றார்கள். பெரியதிருமலை நம்பிகளைக் கண்டு வணங்கி இளையாழ்வான் காஞ்சிபுரத்தில் சன்னியாசம் ஏற்று மடத்தின் பொறுப்பில் இருக்கிறார். அவர் கோவிந்தரை திருத்தி ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தினராக ஆக்குவதற்கு, நீங்கள் தான் கோவிந்தரை சந்தித்து அவருக்கு மனமாற்றம் ஏற்படுத்தி, இராமானுஜரிடம் அனுப்பிவைக்க வேண்டும் என்றனர். பெரியதிருமலை நம்பிகளும் அதற்கு சம்மதித்தார்.

அதன்பின் இருவர் இராமானுஜரின் சீடராக வந்து சேர்ந்தனர். அவர்களை விட்டு இன்று வரையும் இராமானுஜர் பிரிந்ததில்லை. அவர்கள் யார் என்பதை நாளைய பதிவில் அறியலாம்.

இன்னும் அனுபவிப்போம்...

உய்ய ஒரேவழி! உடையவர் திருவடி!!🙏💐


முதலில் காவுக்கு போ

மொதல்ல கயாவுக்கு போ

ஒருவர், மந்த்ராலயம் செல்வதற்காக பாம்பே மெயிலில் ஏறி உட்கார்ந்து கொண்டார்.

ரயில் தாலாட்டிய ஸுகத்தில் தூங்கிவிட்டார்! இரவு... அகாலத்தில், தூக்கக் கலக்கத்தில், மந்த்ராலயம் வந்துவிட்டது என்றெண்ணி, ஏதோ ஒரு ஸ்டேஷனில் இறங்கிவிட்டார்.

Train கிளம்பியதும் பார்த்தால்...

குண்டக்கல்!

தெலுங்கு, ஆங்கில எழுத்து கண்களில் பளிச்சென்று தெரிந்தது!

"அட, தேவுடா! எங்கியோ போய் எறங்கிட்டேனே!"

தன்னையே நொந்து கொண்டார். அதே platform-ல் மற்றொரு கோஷ்டி, தமிழ் பேசிக் கொண்டு நின்றது.

"ஸார்.... நீங்கள்ளாம் எங்க போறேள்?...... நா....  மந்த்ராலயம் போகணும். தப்பா குண்டக்கல்-ல எறங்கிட்டேன். அடுத்த train எப்போன்னு தெரியுமா?..."

"கவலப்படாதீங்கோ ஸார்! நாங்க.... பெரியவாளை தர்ஶனம் பண்றதுக்காக ஹகரி போறோம்.... பெரியவா ஸங்கல்பம்... ஒங்கள... இங்க எறக்கி விட்ருக்கு! எங்களோட வந்து பெரியவாளை தர்ஶனம் பண்ணிட்டு அப்றமா.... மந்த்ராலயம் போகலாமே!..."

பெரியவாளை.. இவர் தர்ஶிப்பது, இதுவே முதல் முறை!

எல்லோரும் வரிஸையாக நமஸ்காரம் பண்ணியதும், மந்த்ராலயத்தின் முறை வந்தது.

"இவர்..... இங்க வரதா இல்லியே? நீங்க அழைச்சிண்டு வந்தேளா?"

தூக்கிவாரிப் போட்டது!

"நா... பெரியவாளைப் பாக்காம.... மந்த்ராலயம் போகணும்னு நெனைச்சேன்...! அதான், நேர அங்க போக முடியாமப் போய்டுத்து"

பெரியவா அவரை அருகில் அழைத்து மெல்லிய குரலில் ஏதோ பேசினார்.

அவ்வளவுதான்! மயக்கம் போடாத குறையாய் அஸந்து போய் நின்றார் மந்த்ராலயம்...!

"என்ன ஸார்? என்னாச்சு? பெரியவா என்ன சொன்னா?..."

பெரியவா கேட்டது இதுதான்..............

ஒங்கம்மா... கெணத்துல விழுந்து தற்கொலை பண்ணிண்டாளா?

முதல் தடவை பார்த்து, முதல் முதலாக கேட்ட கேள்வியிலேயே மந்த்ராலயம் அதிர்ச்சி அடைந்தார்.

ஒப்புக்கொண்டார்.

"எவ்ளோ ஸீக்ரமா முடியுமோ, அவ்ளோ ஸீக்ரமா, கயா-க்குப் போயி... ஒங்கம்மாக்கு ஶ்ராத்தம் பண்ணு..! அவளுக்கு ஸத்கதி கெடைக்கும்"

என்ன ஒரு தீர்மானமான அனுக்ரஹம்!

"கெணத்துல விழுந்து உஸுரை விட்ட அவர் அம்மாவோட ஆவி, தான் நிர்கதியாத் தவிச்சுண்டு இருக்கறதை சொல்லி, தனக்கு விமோசனம் கேட்டுப் பெரியவாகிட்ட ப்ரார்த்தனை பண்ணியிருக்கும்.! அதான், மந்த்ராலயம் போக இருந்த பிள்ளையாண்டானை குண்டக்கல்-ல எறங்கப் பண்ணி, தங்கிட்ட வரவழைச்சிண்டா... பெரியவா"

ஒரு பரம பக்தர், நெகிழ்ச்சியோடு கூறினார்.

உண்மைதான். நாம் நம்புகிறோமோ இல்லையோ, நாம் காஶி, கயா யாத்திரை செல்லப்போவதாக ஸங்கல்பம் செய்து கொண்டதுமே, நம்முடைய பித்ருக்கள் ஸந்தோஷமடைந்து, கயாவில் நாம் தரப்போகும் பிண்டத்திற்காக காத்திருப்பார்கள்.

ஸ்ரீ ராகவேந்த்ர ஸ்வாமிகளுடைய பூர்வாஶ்ரம மனைவி, அவருடைய பிரிவைத் தாங்காமல் ப்ராணஹத்தி பண்ணிக்கொண்டு, ஸ்வாமிகள் முன்னால் ஆவி ரூபத்தில் வந்து அரற்றியதும், ஸ்வாமிகள் அவள் மேல் தன் கமண்டல தீர்த்தத்தை தெளித்து நல்ல கதியை அளித்தாரே!

வேறு வேறு காலங்களில், வேறு வேறு மஹான்களின் ரூபத்தில் தெய்வம் தோன்றினாலும், அந்த தெய்வத்தன்மை எக்காலத்திலும் மாறாது.

அந்த தெய்வத்தின் பலகோடி படைப்புகளில் ஒன்றான ஆறறிவு மனிதனுடைய அஹங்காரம் அழிந்தால், அனைத்தையும் அறிந்த அறிவுக்கறிவான தெய்வம், தெய்வமே! என்பதை புரிந்து கொள்வதோடு மட்டுமில்லாமல், அந்த தெய்வமாகவே ஆகிவிடலாம் என்பதையும் உணர்வான்.

ஶ்ரீ ஆசார்யாள் பாதங்களில் ஸமர்ப்பணம்


மரணம் நமது உற்ற நண்பனாக?

மரணம் நமது உற்ற நண்பனா?

வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ. மரண பயம் என்பது திக்கற்ற நிலையில் இருக்கும் மனிதர்களை நிலை குலைய வைக்கும் உணர்வாகும்.

உலகின் அனைத்து விஷயங்களையும் பட்டிமன்றம் போட்டு பேசும் அறிஞர்கள் மரணத்தை பற்றி பேச அஞ்சுகின்றனர்.

 நமக்கு மரணத்தைப் பிடிக்காமல் இருந்தாலும் நாம் மரணத்தைப் பற்றி பேசாமல் இருந்தாலும், மரண தேவன் தகுந்த நேரத்தில் பாரபட்சமின்றி நம் அனைவரையும் தழுவிக் கொள்ள காத்துக் கொண்டிருக்கிறான்.

மரணம் என்கிற சூட்சும புதிருக்கு விடை காண்பதே மனித வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.

மரணத்தை தவிர்க்க முடியுமா
கைரேகை ஜோதிட நிபுணர் ஒருவர் இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, ஆவல் காரணமாக அப்பெட்டியில் இருந்த பலரும் அவர் முன்பு கையை நீட்டினர்.

 கைரேகைகளை பார்த்த அவருக்குக் கடும் அதிர்ச்சி: காரணம், அவர்கள் அனைவருக்கும் அற்ப ஆயுளின் அறிகுறி தென்பட்டது. அவர் நெடுந்தூரம் பயணம் செய்ய வேண்டியிருந்தாலும், யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் அடுத்த நிலையத்திலேயே சில நிமிடங்களில் இறங்கி விட்டார்.

அவர் பயணித்த இரயில் வண்டியோ, அடுத்த அரை மணி நேரத்தில் சரக்கு வண்டியுடன் நேருக்கு நேர் மோதி அப்பெட்டியில் பயணம் செய்த பலரும் இறந்து போயினர்.

தன்னை மட்டும் காப்பாற்றிக் கொண்ட அவரது செயல் சரியா? தவறா? என்பதை பின்வரும் புராணக் கதை மூலம் அறிந்து கொள்ளலாம்.

ஒருமுறை எமராஜர் ஒரு குருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். அஃது அந்த குருவியின் கேடு காலம் என்பதை உணர்ந்த கருடர் உடனடியாக குருவியைத் தூக்கிக் கொண்டு பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்த ஒரு மரத்தின் பொந்தில் பத்திரமாக வைத்தார்.

கண் இமைக்கும் நேரத்தில் அந்த பொந்தில் வசித்த பாம்பு அந்த குருவியை விழுங்கி விட்டது. குருவி இறந்து போன துக்கத்தில் கருடர் மீண்டும் எமராஜரின் இடத்திற்கே வந்தார்.

அப்போது எமராஜர் கருடரை கூர்ந்து பார்க்க, கருடரோ, “நான் பகவான் விஷ்ணுவை முதுகில் சுமந்து செல்வதால் என்னை உம்மால் ஒன்றும் செய்ய முடியாது,” என்றார்.

இதைக் கேட்ட எமராஜர் கருடரிடம், “நீங்கள் என்னை தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள். அந்த குருவியை நான் உற்று நோக்கியதற்கான காரணம், அக்குருவி சில நொடிகளில் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் வசித்த ஒரு பாம்பின் வாயால் இறக்க நேரிடும் என எழுதப்பட்டிருந்தது. அஃது எவ்வாறு நடக்கப் போகிறது என்பதை நான் யோசித்துக் கொண்டிருந்தேன்,” என்றார்.

அதாவது, மரணம் எப்போது நிகழுமோ, அஃது அப்போது நிகழ்ந்தே தீரும். அதனை யாராலும் தடுக்க இயலாது.

மரணம் என்றால் என்ன?

ஆத்மாக்களான நம் அனைவருக்கும் இரண்டு உடல்கள் இருக்கின்றன: ஸ்தூல உடல், சூட்சும உடல்.

நாம் நமது கண்களால் பார்க்கக் கூடிய ஸ்தூல உடலானது, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்களால் ஆனது.

மனம், புத்தி, மற்றும் அஹங்காரத்தினால் ஆன சூட்சும உடலை நம்மால் நேரடியாக பார்க்க முடியாவிட்டாலும், அதன் இருப்பை எளிதில் உணர்ந்து கொள்ளலாம்.

இந்த இரண்டைக் காட்டிலும் நுண்ணியதாக விளங்கும் ஆன்மீக உடல் அல்லது ஆத்மாவானது முடி நுனியின் பத்தாயிரத்தில் ஒரு பங்கு அளவு கொண்டது என்பதையும், அஃது இதயத்தில் இருக்கும் ஐந்து விதமான பிராண வாயுக்களில் மிதந்து கொண்டிருக்கின்றது என்பதையும் நாம் சாஸ்திரங்களிலிருந்து அறிகிறோம்.

ஸ்தூல உடலைப் பிரிந்து ஆத்மாவும் சூட்சும உடலும் வெளியே செல்வதே மரணம் என்பதை நாம் பகவத் கீதையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

ஆத்மாவானது ஸ்தூல உடல், சூட்சும உடல் ஆகிய இரண்டையும் பிரிந்து தனது இயற்கையான ஆன்மீக ஸ்வரூபத்தை ஏற்கும்போது, அது வைகுண்டம் அல்லது மோட்ச நிலையை அடைந்து விட்டது எனலாம்.

 பகவானின் அசிந்திய சக்தியினால் கடுகளவு விதையிலிருந்து மாபெரும் ஆலமரம் எவ்வாறு உருவாகின்றதோ, அதுபோல முக்தி பெற்றவர்கள் உடலை விடும்போது அவர்கள் தங்களது இயற்கையான வைகுண்ட உடலை ஏற்கின்றனர்.

ஸ்தூல உடலின் தன்மை, அது ஒருநாள் அல்லது மறுநாள் அழிக்கப்பட வேண்டும் என்பதே. அஃது எரிக்கப்படும்போது சாம்பலாகிவிடும், புதைக்கப்படும்போது மண்ணாகிவிடும், கழுகினால் உண்ணப்படும்போது மலமாகிவிடும். ஆனால், நாம் அந்த சாம்பல் அல்ல, மண் அல்ல, மலமும் அல்ல என்பதை உணர வேண்டும்,

 நமது அடையாளம் “ஆத்மா.” இந்த உடலினுள் ஆத்மா இருக்கும்போது, அதனை எரித்தால் அது மாபெரும் குற்றம்; ஆனால் இதே உடலை விட்டு ஆத்மா பிரிந்து சென்ற பின்னர், அதனை எரிக்காமல் வைத்திருந்தால் அதுவே குற்றம்.

உடல் மாற்றம் ஏற்படுவது ஏன்?

ஒரே உடலில் அனைத்து ஆசைகளையும் அனுபவிக்க முடியாது என்பதால் வெவ்வேறு ஆசைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக இயற்கை 84 இலட்சம் வகையான உடல்களைப் படைத்திருக்கின்றது. இயற்கையானது பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றது.

 இப்பிறவியில் ஒருவர் செய்யும் செயல்களுக்கும் ஆசைகளுக்கும் தகுந்தவாறு மறுபிறவியில் அவருக்கு உடல் கொடுக்கப்படுகின்றது. இறக்கும் நேரத்தில் யார் எதை நினைக்கின்றாரோ அதை நிச்சயம் அடைவர் (பகவத் கீதை 8.6).

நீரில் விளையாட வேண்டும் என்கிற ஆசையில் உடலை விட்டால், அவனுக்கு ஒரு மீனின் உடலை இயற்கை வழங்குகின்றது. மிகுதியாக உறங்குபவனுக்கு கரடியின் உடலும், மாமிசம் உண்பவனுக்கு புலியின் உடலும், அரைகுறை உடையுடன் திரிபவர்களுக்கு மரத்தின் உடலும் (மரம் ஆடை அணியத் தேவையில்லை), வேகமாக ஓட நினைப்பவனுக்கு கங்காருவின் உடலும், பெண்ணை நினைத்து உடலை விடுபவனுக்கு பெண்ணின் உடலும், இனிப்பு உண்ண வேண்டும் என்கிற ஆசையில் உடலை விடுபவன் மீண்டும் மனிதனாகப் பிறப்பதற்கு புண்ணியம் இல்லாத பட்சத்தில் அதே வீட்டில் எறும்பாகப் பிறப்பதற்கும் இயற்கை வழிவகை செய்து கொடுக்கிறது.

ஜீவன்களின் பல்வேறு ஆசைகளின் வெளிப்பாட்டை நாம் பல்வேறு உடல்களில் காண்கிறோம். கிருஷ்ணரை நினைத்து உடலை விடுபவன் கிருஷ்ணரிடமே செல்கிறான். (பகவத் கீதை 8.5)

பத்ம புராணத்தில் 84 இலட்சம் வகையான உடல்களைப் பற்றி விரிவாக  சொல்லப்பட்டிருக்கின்றது: 9 இலட்சம் நீர் வாழ்வன, 20 இலட்சம் தாவர வகைகள், 11 இலட்சம் ஊர்வன,  10 இலட்சம் பறவை இனங்கள், 30 இலட்சம் மிருக இனங்கள், மற்றும் 4 இலட்சம் மனித இனங்கள்.

நான்கு இலட்சம் மனித வகை என்பது, தேவர்கள், கந்தர்வர்கள், அப்சரர்கள், மனிதர்கள், யக்ஷர்கள் என பலரைக் குறிக்கும். எந்த உடலை ஏற்றாலும், அந்த உடலில் வசிப்பதற்கு உகந்தாற் போன்ற ஒருவிதமான இன்பத்தை இயற்கை கொடுத்து விடுகின்றது.

உதாரணமாக, மாமிசம் உண்பவன் இறந்த பிறகு நேராக புலியின் உடலுக்குச் செல்வதில்லை. புலியின் உடலில் வசிப்பதற்குத் தேவையான மனப் பயிற்சியை நரக லோகத்தில் மேற்கொண்ட பின்னரே செல்கிறான். எமதூதர்களின் நேரடி கண்காணிப்பில் பல்வேறு சித்ரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு, அதில் தேர்ச்சி பெற்ற பிறகே அவன் புலியின் உடலுக்கு அனுப்பப்படுகின்றான்.

கண்டதை உண்பவன் பன்றியின் உடலுக்கு தகுதி பெறுகிறான்; அவன் நரக லோகத்தை அடைந்த பிறகு, மலத்தை உண்பதற்கான பயிற்சியைப் பெறுகிறான். எமதூதர்களின் சித்ரவதையில் மலத்தைச் சாப்பிடுவதற்கு நன்கு பயிற்சி எடுத்த பின்னர், அவன் பன்றியின் உடலுக்கு அனுப்பப்படுகிறான்.

பாவச் செயல்களைச் செய்பவர்கள் நரகத்தில் கடும் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் இம்மாதிரியான இழிந்த உடல்களைப் பெறுகின்றனர். பாவகரமான ஆசைகளை பூர்த்தி செய்வதற்கான பயிற்சிக் கூடமாக நரக லோகம் திகழ்கிறது.

இந்த உடலினுள் ஆத்மா இருக்கும்போது, அதனை எரித்தால் அது மாபெரும் குற்றம்; ஆனால் இதே உடலை விட்டு ஆத்மா பிரிந்து சென்ற பின்னர், அதனை எரிக்காமல் வைத்திருந்தால் அதுவே குற்றம்.

துர் மரணம் என்றால் என்ன?

ஒருவருடைய ஆயுள் அவரது சுவாசத்தை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுவதால், குழந்தை பருவத்தில் இறப்பவர்கள், சாலை விபத்தில் இறப்பவர்கள் போன்றவர்களை துர் மரணம் அடைந்தவர்கள் என்று உறுதியாகக் கூற முடியாது. தற்கொலை செய்தவர்களை நிச்சயம் துர்மரணம் என கூறலாம்.

 எண்பது வருடம் வாழ வேண்டியவர்கள் முப்பது வயதில் தற்கொலை செய்து கொண்டால், அந்த இடைப்பட்ட ஐம்பது வருடங்களுக்கு அவர்கள் வெறும் சூட்சும உடலுடன்தான் அலைந்து கொண்டிருப்பர்.

நூறு ரூபாயை தொலைத்தாலே வேதனைக்கு உள்ளாகும்போது, பல வருடங்கள் உபயோகித்த உடலை தொலைக்க நேரும்போது, எவ்வளவு வேதனையை நாம் அனுபவிக்க வேண்டும் என்பதை யோசித்துப் பாருங்கள்.

நாற்பதாயிரம் தேள்கள் ஒருநேரத்தில் கொட்டினால் என்ன வலி ஏற்படுமோ, அந்த வலியை மரணத்தின்போது அனுபவிக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

பக்தர்கள் அத்தகு வேதனைகளுக்கு உட்படுவதில்லை. அவர்கள் பௌதிக உடலைக் கைவிட்ட உடனேயே ஆன்மீக உடலை அடைகின்றனர். அத்தகு உடல் மாற்றம் தூய பக்தர்களுக்கு மின்னல் வேகத்தில் நடைபெறுகின்றது.

பக்தித் தொண்டை வாழ்க்கையின் ஒரே நோக்கமாக வைத்து செயல்படுபவர்கள், பாம்பு கடித்து இறந்தாலும், உச்சியில் இருந்து கீழே விழுந்து இறந்தாலும், விபத்தில் இறந்தாலும், நீரில் மூழ்கி இறந்தாலும், நெருப்பினால் இறந்தாலும், நினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தாலும், அனைத்தும் மங்களகரமானதாகவே கருதப்படுகிறது.

உயிர்வாழிகளின் பல்வேறு ஆசைகளுக்குத் தகுந்தாற் போல, ஜட இயற்கை 84 இலட்சம் வகையான உடல்களைத் தருகின்றது.

வாழ்வின் முக்கியமான தருணம்
மரணம் என்பது வாழ்வின் முக்கியமான தருணம், அதனைச் சூழ்ந்துதான் ஆன்மீக வாழ்க்கை தொடங்கப்படுகின்றது. பகவத் கீதையானது மரணம் நிறைந்த போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் உபதேசிக்கப்பட்டது.

ஏழு நாள்களில் பாம்பு தீண்டி இறக்க நேரிடும் என்கிற சாபத்தை பரீக்ஷித் மஹாராஜர் பெற்ற பிறகே ஸ்ரீமத் பாகவதத்தை சுகதேவ கோஸ்வாமியிடமிருந்து அவர் கேட்டார்.

இறக்கும் தருவாயில் இருப்பவன் செய்ய வேண்டிய கடமை என்ன என்கிற கேள்வியை அடிப்படையாக வைத்தே ஸ்ரீமத் பாகவதம் உபதேசிக்கப்பட்டது. சாணக்கிய பண்டிதரோ, ஒருவர் ஆன்மீக வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமெனில், நாளைக்கே தான் இறந்து விடுவேன் என்கிற மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார்.

அத்தகைய மனோநிலையில் நாம் இன்றைக்கு செய்யக்கூடிய பக்தியானது சீரும் சிறப்புமாக இருக்கும். மனித உடலை அடைவது அரிது என்றாலும், அத்தகு பாக்கியம் பெற்றவர்கள் அதனை உயர்ந்த நோக்கத்திற்காக பயன்படுத்த வேண்டும்.

மரண பயத்திலிருந்து விடுபடுதல்
அறியாமையே பயத்திற்கு அடித்தளமாக விளங்குகின்றது. மூன்று முடிச்சுகளைப் போட்டு பந்தத்திற்குள் நுழைபவன் அதிலிருந்து வெளிவர விரும்புவதில்லை, எவ்வாறு வெளியேறுவது என்பதும் அவனுக்குத் தெரிவதில்லை. மரண பயம் ஏற்படும்போது, அவனது எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாக மாறிவிடுகின்றது.

முகலாய மன்னன் ஔரங்கசீப் இந்தியா முழுவதும் பல்வேறு கோயில்களை இடித்துத் தள்ளியவன், மதுராவில் மட்டும் ஆயிரம் கோயில்களை இடித்தவன். அவனுக்கும் மரண பயம் வந்தது.

இறுதி காலக் கட்டத்தில் தன் பாவச் செயல்களை எண்ணிப் பார்த்தபோது, அவனது மனதில் மரண பயம் ஏற்பட்டது. அதனால் தனது சொத்தில் ஒரு பகுதியை புரி ஜகந்நாதரின் கோயிலுக்காக எழுதி வைத்தான். ஔரங்கசீப் எழுதிக் கொடுத்த பத்திரம் இன்றும் ஒடிசா மாநில அரசிடம் உள்ளது.

மரண பயத்திலிருந்து விடுபட விரும்புவோர் பக்தித் தொண்டினை சிறு வயதிலிருந்தே தொடங்க வேண்டும், அல்லது அதன் முக்கியத்துவத்தை அறிந்த பின், எந்த நிலையில் இருந்தாலும் உடனடியாக தொடங்க வேண்டும்.

பக்தித் தொண்டில் ஈடுபடுவதையும் அதன் முக்கியத்துவத்தை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வதையும், நாம் நமது அவசர கடமையாக மேற்கொள்ள வேண்டும்.

எமராஜன் கிருஷ்ணரின் தூய பக்தராக இருப்பதால், அவர் பக்தர்களை ஒருபோதும் தண்டிப்பதில்லை, பக்தர்கள் என்றும் பாதுகாக்கப்படுகின்றனர். தனது பக்தன் என்றும் அழிவதில்லை என்பதை உரக்கக் கூறுமாறு கீதையில் (9.31) கிருஷ்ணர் அர்ஜுனனிடம் கூறுகிறார்.

மரணத்தை வெல்வது எப்படி?

கிருஷ்ணருக்கு சேவை செய்வதே வாழ்க்கையாகவும், புலனுகர்ச்சியில் ஈடுபடுவது மரணமாகவும் கருதப்பட வேண்டும். சொந்தமாக பெரிய வீட்டைக் கட்டி அந்த வீட்டில் தனது உடலை விட வேண்டும் என்று பலரும் விரும்புகின்றனர்.

ஆனால் எந்த வீட்டில் மரணமடைகிறோம் என்பது முக்கியமல்ல, எந்த உணர்வில் மரணமடைகிறோம் என்பதே கணக்கிடப்படுகிறது. கிருஷ்ணருடைய நினைவில் உடலை விடும் பக்தர்களைப் பொறுத்தவரையில், மரணம் என்பது அவர்களது நித்தியமான வாழ்க்கையின் துவக்கம். மற்றவர்களுக்கோ அவர்களது பாவ வாழ்விற்கான தண்டனையின் துவக்கம்.

ஸ்ரீமத் பாகவதத்தில் (2.3.17) பின்வருமாறு கூறப்படுகிறது:
ஆயுர் ஹரதி வை பும்ஸாம்

உத்யன்ன் அஸ்தம் ச யன்ன் அஸௌ

தஸ்யர்தே யத்-க்ஷணோ நீத

உத்தம-ஷ்லோக-வார்தயா
சூரியன் தினந்தோறும் உதித்து மறையும்போது அனைவரின் ஆயுட்காலமும் குறைகிறது. ஆனால் பகவான் கிருஷ்ணர் சம்மந்தப்பட்ட விஷயங்களைப் பேசி தங்களது நேரத்தைச் செலவிடுபவர்களின் ஆயுளை சூரியன் குறைப்பதில்லை. கிருஷ்ண பக்தர்களின் வாழ்க்கை நிரந்தரமானது என்பதை இதிலிருந்து உணரலாம்.

இறக்கும் நேரத்திலும் கிருஷ்ணர் தன்னைக் காப்பாற்றுவார் என்கிற நம்பிக்கை பக்தர்களிடம் குடிகொண்டிருப்பதால், மரணத்திற்குப் பின்னர் கிருஷ்ணருடன் வாழப்போகும் பக்தர்கள் அந்த மரணத்தைக் கண்டு அஞ்சுவதில்லை. செல்வந்தர்கள், பலசாலிகள், விஞ்ஞானிகள், அறிஞர்கள் என யாருமே ஆத்மா அணிந்திருக்கும் ஆடையே இந்த உடல் என்னும் அடிப்படை ஞானத்தைப் புரிந்து கொள்வதில்லை.

நிரந்தரமாக வாழ வேண்டும் என்கிற ஆசை மட்டும் அனைவரிடமும் தென்படுகிறது, அதற்குரிய பாதையோ பக்தர்களுக்கு மட்டுமே தென்படுகிறது. பக்திப் பாதையை ஏற்பதற்கு பணம், உடல்பலம், படிப்பு, தவ வலிமை போன்ற எந்தவொரு பௌதிகத் தகுதியும் தேவையில்லை.

ரூப கோஸ்வாமியின் போதனை
ஒரு சாது குளக்கரையோரம் நடந்து சென்றபோது மீன்கள் நீரின் மேல் துள்ளி குதித்து விளையாடிக் கொண்டிருப்பதை கண்டார். திடீரென்று அங்கு வந்த கழுகு கண் இமைக்கும் நேரத்தில், நீர் மட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு மீனை கவ்விக் கொண்டு செல்வதை அவர் பார்த்தார்.

அந்த மீனைப் போன்று பக்தி என்னும் கடலில் மேலோட்டமாக நீந்திக் கொண்டிருந்தால், தனக்கும் அதே கதிதான் ஏற்படும் என்பதை உணர்ந்து, ஆழமான பக்திக்குச் சென்று அடைக்கலம் பெற்று கொள்ள வேண்டும் என்று அவர் உணர்ந்தார்.

பக்திக் கடலில் ஆழமாகச் செல்ல வேண்டுமானால், பக்தித் தொண்டை அழிக்கக்கூடிய ஆறு விஷயங்களைத் தவிர்க்க வேண்டும் என ரூப கோஸ்வாமி அறிவுறுத்துகிறார்:

(1) அளவிற்கு அதிகமாக உண்ணுதல் அல்லது அதிகமாக பொருள் சேகரித்தல்,

(2) அடைவதற்கு மிகவும் கடினமான பௌதிக விஷயத்தை அடைவதற்காக பெருமுயற்சி செய்தல்,

 (3) வெட்டிப் பேச்சு பேசுதல்,

 (4) ஒழுக்கக் கட்டுப்பாடு விதிகளை அதன் நோக்கத்தைப் புரிந்துகொள்ளாமல் கண்மூடித்தனமாக பின்பற்றுதல், அல்லது எதையும் பின்பற்றாமல் விட்டுவிடுதல்,

 (5) அபக்தர்களிடம் நெருங்கிப் பழகுதல், மற்றும்

 (6) பௌதிக பேராசை.

துச்சாதனன் துகில் உரிய முயற்சி செய்தபோது திரௌபதி தனது இரு கைகளையும் உயர்த்தி கோவிந்தனிடம் முழுமையாக அடைக்கலம் கொள்ளுதல்.

மரணம் நமது உற்ற நண்பனா?

மரண பயத்திலிருந்து முற்றிலும் விடுபட்டு பக்தித் தொண்டில் ஆழமாகச் செல்ல கிருஷ்ணரிடம் சரணடையுங்கள். இந்திரனின் கடும் மழையின்போது விருந்தாவனவாசிகள் கிருஷ்ணரிடம் சரணடைந்தனர், துச்சாதனன் துகில் உரிய முயற்சி செய்தபோது திரௌபதி தனது இரு கைகளையும் உயர்த்தி கோவிந்தனிடம் முழுமையாக அடைக்கலம் கொண்டாள்.

அதுபோல நாம் ஒவ்வொருவரும் கிருஷ்ணரிடம் முழுமையாக அடைக்கலம் பெற வேண்டும், அப்போது எந்தவித அச்சமும் இன்றி, விருந்தாவனவாசிகளைப் போல, திரௌபதியைப் போல மகிழ்ச்சியாக வாழ முடியும்.

இன்றைய மக்கள் (சூதாட்டத்தில் ஈடுபடாவிட்டால்கூட) பணத்திற்காக கிரிக்கெட் விளையாடுவோரையும், சினிமா சண்டையில்கூட டூப் போட்டு நடிப்பவர்களையும் ஹீரோக்களாக ஏற்று இதயத்தைப் பறி கொடுக்கின்றனர்.

உண்மையான சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் செயலாற்றியவரும், மிகப்பெரிய கோவர்தன மலையை டூப் போடாமல் இடது கை சுண்டு விரலால் தூக்கியவருமான கிருஷ்ணரிடம் ஏன் இதயத்தைப் பறி கொடுக்கக் கூடாது?

கிருஷ்ணரிடம் நமது மனதை பறி கொடுத்துவிட்டால், நாம் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் உடலை விடலாம், அது புகழத்தக்கதாக அமையும், எந்த பயமும் நமக்கு அவசியமில்லை.

அவரிடம் மனதை பறி கொடுப்பதற்கான சிறந்த வழிமுறை, அவரது திருநாமங்களை ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்று தினமும் உச்சரிப்பதே. இந்த நாமங்களை தொடர்ந்து உச்சரித்து சேவை செய்து வந்தால், நிச்சயம் மரணத்தை வென்று கிருஷ்ணருடைய திருநாட்டிற்குச் செல்ல முடியும்.

எப்படிப் பார்த்தாலும், அனைவரும் மரணத்தை சந்தித்தே ஆக வேண்டும், யாரும் மரணத்தை ஒதுக்கிவிட முடியாது. மரணம் எந்த உருவில் வந்தாலும், அது கிருஷ்ணரின் பிரதிநிதி என்பதை நாம் உணர வேண்டும்.

எனவே, மரணம் என்பது ஒருவரிடமிருந்து அனைத்தையும் பறித்து அவரை நரகத்திற்குக் கொண்டு செல்லும் விரோதியாகவும் அமையலாம், அல்லது பிறப்பு இறப்பின் சுழற்சியிலிருந்து அவரை விடுவித்து கிருஷ்ணரிடம் கொண்டு செல்லும் நண்பனாகவும் ஆகலாம்.

மரணம்–நண்பனா, விரோதியா? முடிவு, நமது கையில்...


மருதாணி

மருதாணியை
ஸ்ரீமகாலஷ்மியை மனதில் நினைத்துக் கொண்டு கையில் அணிந்துக்


கொண்டால், எந்த துன்பங்களும் நெருங்காது.
ஒருநாள் ஸ்ரீஇராமர், இராவணனை போர் செய்து கொன்றுவிட்டு சீதாதேவியை பத்திரமாக மீட்டார். 
அப்போது அன்னை சீதாதேவி ஸ்ரீஇராமரிடம், “இங்கு நான் இருந்த ஒவ்வொரு நாளிலும் என் கஷ்டங்களை காது கொடுத்து கேட்ட இந்த மருதாணி செடிக்கு ஏதாவது நாம் நன்மை செய்ய வேண்டும்.” என்று கூறி மருதாணி செடியிடம், “உனக்கு என்ன வரம் வேண்டும்.” என கேட்டாள்.
“எங்களுக்கு எதுவும் வேண்டாம். 
இன்று உன் முகத்தில் மகிழ்ச்சி தெரிகிறது. 
உன்னை போல அனைத்து பெண்களும் மகிழ்ச்சியாக இருந்தாலே எங்களுக்கும் மகிழ்ச்சிதான். அது போதும்.” என்றது மருதாணி செடி.
அதற்கு சீதை, “உன்னதமான உன் குணத்திற்கு நான் ஒரு வரம் தருகிறேன். 
உன்னை யார் பூஜிக்கிறார்களோ அல்லது யார் உன்னை கைகளில் வைத்துக்கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கு சகல நன்மைகள் கிடைக்கும். 
அவர்களின் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்.” என்ற வரத்தை தந்தார் சீதாபிராட்டி.
அதனால்தான் இன்றுவரை வடஇந்தியர்கள் திருமணத்திற்கு முந்தைய நாளில் மெஹந்தி விழா நடத்துகிறார்கள். 
இதன் காரணம், ஸ்ரீமகாலஷ்மியின் அருளாசி மணமகளுக்கும், திருமணத்தில் கலந்துக்கொள்ளும் உறவினர் பெண்களுக்கும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அத்துடன் மருதாணிக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. 
மருதாணியை ஒருவர் கையில் வைக்கும் போது, மருதாணி வைக்கபட்ட கை சிவந்தால், எந்த நபர் மருதாணி வைத்தாரோ அந்த நபர் பாசமானவர் என்பதை உணர்த்தும்.
அதனால்தான் இன்றும் சில கிராமபுரத்தில் உள்ள பெண்கள், தன் கையில் மருதாணி வைக்கும் படி தன் கணவரிடம் சொல்வாள்.
மருதாணி வைத்த பிறகு அந்த பெண்ணின் கை நன்றாக சிவந்தால், தன் கணவர் தன் மேல் நல்ல பாசமாக இருக்கிறார் என்பதை புரிந்துக்கொள்வாளாம்.
வெள்ளிகிழமையில் மருதாணியை ஸ்ரீமகாலஷ்மியை மனதில் நினைத்துக் கொண்டு கையில் அணிந்துக்கொண்டால், எந்த துன்பங்களும் நெருங்காது. 
ஸ்ரீமகாலஷ்மியின் அருளாசியும் பரிபூரணமாக கிடைக்கும்
===மருதாணியை
ஸ்ரீமகாலஷ்மியை மனதில் நினைத்துக் கொண்டு கையில் அணிந்துக்கொண்டால், எந்த துன்பங்களும் நெருங்காது.
ஒருநாள் ஸ்ரீஇராமர், இராவணனை போர் செய்து கொன்றுவிட்டு சீதாதேவியை பத்திரமாக மீட்டார். 
அப்போது அன்னை சீதாதேவி ஸ்ரீஇராமரிடம், “இங்கு நான் இருந்த ஒவ்வொரு நாளிலும் என் கஷ்டங்களை காது கொடுத்து கேட்ட இந்த மருதாணி செடிக்கு ஏதாவது நாம் நன்மை செய்ய வேண்டும்.” என்று கூறி மருதாணி செடியிடம், “உனக்கு என்ன வரம் வேண்டும்.” என கேட்டாள்.
“எங்களுக்கு எதுவும் வேண்டாம். 
இன்று உன் முகத்தில் மகிழ்ச்சி தெரிகிறது. 
உன்னை போல அனைத்து பெண்களும் மகிழ்ச்சியாக இருந்தாலே எங்களுக்கும் மகிழ்ச்சிதான். அது போதும்.” என்றது மருதாணி செடி.
அதற்கு சீதை, “உன்னதமான உன் குணத்திற்கு நான் ஒரு வரம் தருகிறேன். 
உன்னை யார் பூஜிக்கிறார்களோ அல்லது யார் உன்னை கைகளில் வைத்துக்கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கு சகல நன்மைகள் கிடைக்கும். 
அவர்களின் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்.” என்ற வரத்தை தந்தார் சீதாபிராட்டி.
அதனால்தான் இன்றுவரை வடஇந்தியர்கள் திருமணத்திற்கு முந்தைய நாளில் மெஹந்தி விழா நடத்துகிறார்கள். 
இதன் காரணம், ஸ்ரீமகாலஷ்மியின் அருளாசி மணமகளுக்கும், திருமணத்தில் கலந்துக்கொள்ளும் உறவினர் பெண்களுக்கும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அத்துடன் மருதாணிக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. 
மருதாணியை ஒருவர் கையில் வைக்கும் போது, மருதாணி வைக்கபட்ட கை சிவந்தால், எந்த நபர் மருதாணி வைத்தாரோ அந்த நபர் பாசமானவர் என்பதை உணர்த்தும்.
அதனால்தான் இன்றும் சில கிராமபுரத்தில் உள்ள பெண்கள், தன் கையில் மருதாணி வைக்கும் படி தன் கணவரிடம் சொல்வாள்.
மருதாணி வைத்த பிறகு அந்த பெண்ணின் கை நன்றாக சிவந்தால், தன் கணவர் தன் மேல் நல்ல பாசமாக இருக்கிறார் என்பதை புரிந்துக்கொள்வாளாம்.
வெள்ளிகிழமையில் மருதாணியை ஸ்ரீமகாலஷ்மியை மனதில் நினைத்துக் கொண்டு கையில் அணிந்துக்கொண்டால், எந்த துன்பங்களும் நெருங்காது. 
ஸ்ரீமகாலஷ்மியின் அருளாசியும் பரிபூரணமாக கிடைக்கும்.

காமதேனு

 *பசுவின் எந்தெந்த பாகத்தில் எந்தெந்த கடவுள்கள் வீற்றிருக்கின்றனர் என்று தெரியுமா?*

 *தலை* - சிவபெருமான்
 *நெற்றி* - சிவசக்தி
 *வலது கொம்பு* - கங்கை
 *இடது கொம்பு* - யமுனை
 *கொம்புகளின் நுனி* - காவிரி, கோதாவரி முதலிய புண்ணிய நதிகள்.
 *கொம்பின் அடியில்* - பிரம்மன், திருமால்
 *மூக்கின் நுனி* - முருகன்
 *மூக்கின் உள்ளே* - வித்யாதரர்கள்
 *இரு காதுகளின் நடுவில்* - அஸ்வினி தேவர்
 *இரு கண்கள்* - சூரியன், சந்திரன்
 *வாய்* - சர்ப்பாசுரர்கள்
 *பற்கள்* - வாயுதேவர்
 *நாக்கு* - வருணதேவர்
 *நெஞ்சு* - கலைமகள்
 *கழுத்து* - இந்திரன்
 *மணித்தலம்* - எமன்
 *உதடு* - உதய அஸ்த்தமன சந்தி தேவதைகள்
 *கொண்டை* - பன்னிரு ஆதித்யர்கள்
 *மார்பு* - சாத்திய தேவர்கள்
 *வயிறு* - பூமிதேவி
 *கால்கள்* - வாயு தேவன்
 *முழந்தாள்* - மருத்து தேவர்
 *குளம்பு* - தேவர்கள்
 *குளம்பின் நுனி* - நாகர்கள்
 *குளம்பின் நடுவில்* - கந்தர்வர்கள்
 *குளம்பின் மேல்பகுதி* - அரம்பெயர்கள்
 *முதுகு* - ருத்திரர்
 *யோனி* - சப்த மாதர் (ஏழு கன்னியர்)
 *குதம்* - லட்சுமி
 *முன் கால்* - பிரம்மா
 *பின் கால்* - ருத்திரன் தன் பரிவாரங்களுடன்
 *பால் மடி* - ஏழு கடல்கள்
 *சந்திகள்* - அஷ்ட வசுக்கள்
 *அரைப் பரப்பில்* - பித்ரு தேவதை
 *வால் முடி* - ஆத்திகன்
 *உடல்முடி* - மகா முனிவர்கள்
 *எல்லா அவயங்கள்* - கற்புடைய மங்கையர்
 *சிறுநீர்* - ஆகாய கங்கை
 *சாணம்* - யமுனை
 *சடதாக்கினி* - காருக பத்தியம்
 *வாயில்* - சர்ப்பரசர்கள்
 *இதயம்* - ஆகவணியம்
 *முகம்* - தட்சரைக் கினியம்
 *எலும்பு, சுக்கிலம்* - யாகத் தொழில்

 *அனைத்தும் பிரம்மதேவன் பசுவைப் படைத்தவுடன் அதன் ஒவ்வொரு உறுப்புகளிலும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் இடம் அளித்தார்.* *ஆனால் லட்சுமி தேவி காலம் தாழ்த்தி வந்து தான் வாசம் செய்யவும் பசுவிடம் இடம் கேட்டாள். அப்போது பசு லட்சுமிதேவியிடம், ’நீ சஞ்சல குணம் உள்ளவள். எனது அவயங்களில் எல்லா இடங்களும் அனைவருக்கும் ஒதுக்கப்பட்டு விட்டது.*

 *கழிக்கும் இடம் மட்டுமே மீதம் உள்ளது’ என்று சொன்னது.*

 *லட்சுமி தேவியும், ’அந்த இடத்தையாவது எனக்கு ஒதுக்கித் தர வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டதோடு, பசுவின் குதத்தில் தனக்கான இருப்பிடத்தைத் தேர்ந்தெடுத்தாள். லட்சுமி தேவியைப் போலவே ஆகாயகங்கையும் தனக்கான இடமாக பசுவின் சிறுநீரைத் தேர்ந்தெடுத்தாள். அதனால்தான் பசுவின் சாணம் லட்சுமியின் அம்சமாகவும், சிறுநீர் கங்கையின் அம்சமாகவும் கருதப்படுகிறது.