சனி, 27 ஜூலை, 2019

 கருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்

இந்து புராணங்களில் முக்கிய ஒன்றாக கருதப்படும் கருட புராணத்தில் மரணத்திற்கு பின்னான வாழ்வு, மறு ஜென்மம், சொர்க்கம் நரகம் போன்றவற்றை பற்றி பல்வேறு விளக்கங்கள் இருக்கிறது.

பதினெட்டு இந்து சமய புராணங்களில் ஒன்றான இதில் வாழ்வின் மேன்மைகளை பற்றி பத்தொன்பதாயிரம் ஸ்லோகங்களும் மனித வாழ்வில் செய்யும் தவறுகளுக்கு இருபத்திஎட்டு விதமான கொடூர தண்டணைகளை பற்றி விஷ்ணு கருடனுக்கு (பறவைகளின் அரசன்) விவரிப்பது போல எழுதப்பட்டிருக்கும்.

வாழும் போது மனிதர்கள் செய்யும் அவசெயல்களுக்காக மிருகத்தனமான தண்டணைகளை அவர்கள் அடைவார்கள். கருட புராணத்தை படிப்பவர்கள் தவறு செய்ய அஞ்சும் படியாக இருக்கும். விஷ்ணு இதனை ‘எமனின் சித்திரவதைகள்’ என்பார்.

இனி உங்கள் தண்டணைகளை அறிய துவங்குவோம்.

1. பன்றி முகம்: குற்றமற்றவரைத் தண்டிப்பது கொடுமையாகும். நீதிக்குப் புறம்பாக அநீதிக்குத் துணைபோவதும் அதர்மமாகும். இந்த நரகத்தில், பன்றிமுகத்துடனும் கூர்மையான பற்களுடனும் ஒரு வகை மிருகம் காணப்படும். அதன் வாயில் அகப்பட்டு, கூர்மையான பற்களால் கடிக்கப்பட்டு பாவிகள் அவதிப்படுவார்கள்.

2. அந்தகூபம்: உயிர்களைச் சித்திரவதை செய்தல், கொடுமையாகக் கொலை செய்தல் ஆகிய குற்றங்கள் புரிந்த பாவிகள் அடையும் நரகம் இது. கொடிய மிருகங்கள் கடித்துக் குதறும் நிலை ஏற்படும். விசித்திரமான மாடுகள் கீழே போட்டு மிதித்துத் துன்புறுத்தும்.

3. அக்னிகுண்டம்: பிறருக்கு உரிமையான பொருள்களை, தனது வலிமையாலும் செல்வாக்காலும் அபகரித்து வாழ்ந்த பாவிகள், பலாத்காரமாக தனது காரியங்களை நிறைவேற்றிக்கொள்பவர்கள் இந்த நரகத்தை அடைவார்கள். இங்கு பாவிகள் ஒரு நீண்ட தடியில் மிருகத்தைப்போல் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் எரியும் அக்னிகுண்டத்தில் வாட்டி எடுக்கப்படுவார்கள்.

4. வஜ்ரகண்டகம்: சேரக்கூடாத ஆணையோ பெண்ணையோ கூடித்தழுவி மகிழும் காமவெறியர்கள் அடையும் நரகம் வஜ்ர கண்டகம். நெருப்பால் செய்யப்பட்ட பதுமைகளைக் கட்டித்தழுவ ஜீவன்கள் நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.

5. தாமிஸிர நரகம்:பிறருக்குச் சொந்தமான மற்றவர் மனைவியை விரும்புவதும் அபகரிப்பதும் பாவச்செயலாகும். அதே போல் பிறரது குழந்தையை அபகரிப்பது மகாபாவமாகும். பிறரது பொருளை ஏமாற்றி அபகரிப்பது, நமக்கு தீராத துன்பத்தைத் தரும். இதற்குத் தண்டனையாக, நரகத்தில் எமகிங்கரர்கள் முள்ளாலான கட்டைகளாலும் கதைகளாலும் நையப் புடைப்பார்கள்.

6. அநித்தாமிஸ்ர  நரகம்: கணவனும் மனைவியும் சேர்ந்து மனமொத்து வாழ்வது அவசியம். அதை விடுத்து ஒருவரை ஒருவர் ஏமாற்றுதல் தவறாகும். கணவன் மனைவியை வஞ்சித்தலும் மனைவி கணவனை வஞ்சித்தலும் பாவச்செயலாகும். இத்தகையவர்கள் இந்த நரகத்தில் உழன்று, கண்கள் தெரியாத நிலையில் இருள்சூழ மூர்ச்சையாகி விழுந்து தவிக்க வேண்டியது வரும்.

7. ரௌரவ  நரகம்: பிறருடைய குடும்பத்தை, அதாவது வாழும் குடும்பத்தைக் கெடுப்பது, பிரிப்பது, அழிப்பது, அவர்களின் பொருள்களைப் பறிப்பது என்பது குற்றமாகும். இதற்குத் தண்டனையாக, ஜீவன்களை எமகிங்கரர்கள் சூலத்தில் குத்தித் துன்புறுத்துவார்கள்.

8. மகா ரெளரவ  நரகம்: மிகவும் கொடூரமாக பிறர் குடும்பத்தை வதைத்தவர்கள், பொருளுக்காக குடும்பங்களை நாசம் செய்தவர்கள் அடையும் நரகம் மகா ரௌரவமாகும். இங்கு குரு என்ற சொல்லக்கூடிய, பார்ப்பதற்குக் கோரமான மிருகம் காணப்படும். இவை பாவிகளைச் சூழ்ந்து,முட்டி மோதி பலவகையிலும் ரணகளப்படுத்தி துன்புறுத்தும்.

9. கும்பிபாகம்: சுவையான உணவுக்காக, வாயில்லா உயிர்களை வதைத்தும் கொன்றும் பலவிதங்களில் கொடுமைப்படுத்தும் பாவிகள் அடையும் நரகம் இது. எரியும் அடுப்பில் வைக்கப்பட்டுள்ள எண்ணெய்க்கொப்பறையில் போட்டு, எமதூதர்கள் பாவிகளைத் துன்புறுத்துவார்கள்.

10. காலகுத்திரம்: பெரியோர்களையும் பெற்றோர்களையும் அடித்து அவமதித்தும், துன்புறுத்தியும் பட்டினி போட்டும் வதைத்த பாவிகள் செல்லும் நரகம் இதுவாகும். இங்கு அதே முறையில் அடி, உதை, பட்டினி என்று அவர்கள் வதைக்கபடுவது உறுதி.

11. அசிபத்திரம்: தெய்வ நிந்தனை செய்தவர்களும் தர்மநெறியைவிட்டு அதர்ம நெறியைப் பின்பற்றியவர்களும் அடையும் நரகம் இது. இங்கு பாவிகள் பூதங்களால் துன்புறுத்தப்பட்டு அவதிப்படுவார்கள். இனம் புரியாத ஒரு பயம் உண்டாகும்.
பெரியவாளின் நகைச்சுவை.

ஒரு நாள் மடத்தில் உள்ளவர்களிடம் "மஹா விஷ்ணுவும்
கொசுவும் ஒண்ணு உனக்குத் தெரியுமா?" என்றார் பெரியவா.
வழக்கம் போல் தானே அந்தப் புதிரையும் விடுவிக்கிறார்.

"விஷ்ணுவின் கையில் சக்கரம் சுற்றிக்கொண்டிருக்கு கொசுவும் சக்கரமாய் சுற்றிக்கொண்டு தான் இருக்கு. கெட்டவர்கள்
விஷ்ணுவைப் பார்க்க முடியாமல் ஒதுங்கிக் கொள்வார்கள்.
கண் வலிக்காரர்கள் கொசுவைப் பார்க்க முடியாமல் ஒதுங்கி
விடுவார்கள். ச்ருதியிடம் விளையாடுபவர் விஷ்ணு.
[ச்ருதி=வேதம்] ச்ருதி முனையில் ஙொய் என்று கத்திக்கொண்டு
விளையாடும் கொசு [ச்ருதி=காது]!"
இந்த சிலேடை சொன்னதுக்குக் காரணம் மடத்தோடு
அவர்கள் இருந்த முகாமில் கொசுத்தொல்லை தாங்க முடியாது.
"அனந்தசயனம் பண்ணும் பெருமாள் தான் கொசுன்னு
நினைச்சுண்டேன்னா பகவத் ஸ்மரணையோடு தூங்கலாம்!"
என்று எல்லோரையும் சமாதானம் செய்வாராம். இப்படி
எந்தக் கஷ்டத்தையும் நகைச்சுவை ததும்ப சரி செய்து விடும்
அழகையும் பெரியவாளிடம் அனுபவிக்க முடியும்.
ஒரு நீண்ட உபன்யாசம் நடந்து கொண்டிருந்தது. பெரியவாளும்
கேட்டார். ஒரு வழியாக உபன்யாசம் முடிந்தது. உடனே பெரியவா
"சாக்கு கிடைச்சுதுன்னு நன்னா ரொம்ப நேரம் சொன்னயா?"
என்றார்? "நீ ஒக்காந்துண்டிருந்தது ஒரு சாக்குமேலே...
அந்த சாக்கைச் சொன்னேன்!" என்று தமாஷ் பண்ணினாராம்.


திவ்ய தேசம் அருள் மிகு திருநறையூர் நம்பி திருக்கோயில்

மூலவர் : திருநறையூர் நம்பி
உற்சவர் : இடர்கடுத்த திருவாளன்
தாயார் : வஞ்சுளவல்லி
தல விருட்சம் :  வகுளம் (மகிழம்)
தீர்த்தம் : மணிமுத்தா, சங்கர்ஷணம்,பிரத்யும்னம், அனிருத்தம்,சாம்பதீர்த்தம்
ஆகமம் : வைகானஸம்
பழமை : 2000 வருடங்களுக்கு மேல்
புராண பெயர் : சுகந்தகிரி க்ஷேத்ரம்
ஊர் : நாச்சியார்கோயில்
மாவட்டம் : தஞ்சாவூர்
பாடியவர்கள் : அம்பரமும் பெரு நிலனும் திசைகளெட்டும் அலைகடலும் குலவரையும் உண்ட கண்டன் கொம்பமரும் வடமரத்தினிலை மேல் பள்ளி கூடினான் திருவடியே கூடுகிற்பீர் வம்பவிழும் செண்பகத்தின் வாசமுண்டு மணிவண்டு வகுளத்தின் மலர் மேல் வைகு செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.(திருமங்கையாழ்வார்) 
      
விழா :  மார்கழி, பங்குனியில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், இவ்விழாவின் போது கருடசேவை உற்சவம் நடக்கிறது.  


    
திறக்கும் நேரம் : காலை 7.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். விலாசம் :  அருள்மிகு நறையூர் நம்பி திருக்கோயில், நாச்சியார்கோவில் - 612 602. தஞ்சாவூர் மாவட்டம். போன் :  +91- 435 - 246 7017, 94435 - 97388. 
     
தகவல் : இங்குள்ளமூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் ஹேம விமானம் எனப்படுகிறது. பிரகாரத்தில் சக்கரத்தாழ்வார் கீழே நவக்கிரகங்கள் மேலே தசாவதாரங்கள் பொறிக்கப்பட்டிருக்க அதன் மத்தியில் பிரயோக கோலத்தில் இருக்க, அருகில் மேதாவி அவரை வணங்கியபடி உள்ளார். கருட சன்னதிக்கு அருகில் 108 திருப்பதிகளின் உற்சவர் சிலைகள் இருக்கிறது. இங்கு ஒவ்வொரு மாதமும் சிரவண நட்சத்திரத்தில் விசேஷ திருமஞ்சனங்கள் நடக்கிறது.
 
ஸ்தலபெருமை : திருமங்கையாழ்வாருக்கு அருளிய பெருமாள்  நீலன் எனும் குறுநிலமன்னனாக இருந்த திருமங்கையாழ்வார் பெருமாள் மீது பக்தி கொண்டு தான் வைத்திருந்த பணத்தையெல்லாம் இறைப்பணிக்கே செலவிட்டார். அவர் வைணவர் அல்லாததால் யாரும் அவரை ஏற்றுக்கொள்ள வில்லை. இதனால் மனம் கலங்கிய அவர் இத்தலம் வந்தபோது மகாவிஷ்ணுவிடம் தன்னை ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார். அவருக்காக மனம் இரங்கிய பெருமாள் ஆச்சார்யனாக வந்து "முத்ராதானம்' செய்து வைத்தார். (முத்ராதானம் என்பது ஒருவரை பரிபூரண வைணவராக ஏற்றுக்கொள்வதற்காக அவரது இரு கைகளில் சங்கு, சக்கர அச்சு இடப்படும் அடையாளம்). ஆச்சார்யனாக வந்ததால் இத்தலத்து பெருமாள் 2 கைகளுடன் இருக்கிறார். கையில் சங்கும் சக்கரமும் முத்ராதானம் செய்த கோலத்தில் முன்புறம் தள்ளியும்  சங்கு திரும்பிய நிலையிலும் இருக்கிறது. தன்னை ஏற்றுக்கொண்டதால் திருமங்கையாழ்வார் இத்தலத்தில் 100 பாசுரங்களுக்கு மேல் பதிகங்கள் பாடி சுவாமியை "நம்பி' என்று சொல்லி மங்களாசாசனம் செய்தார். நம்பி என்றால் பரிபூரணமான நற்குணங்களால் நிறையப்பெற்றவர் என்று பொருள். திவ்ய தேசங்களில் இங்கு மட்டுமே பெருமாள் ஆச்சார்யனாக வந்து முத்ராதானம் செய்துள்ளார்.




சாவிக்கொத்துடன் தாயார் : ஸ்ரீரங்கம் கோயில் ஆண்டாளால் பெயர் பெற்றிருப்பது போல இத்தலமும் தாயாரால் பெயர் பெற்றிருக்கிறது. இங்கு தாயாரை மையப்படுத்தியே கருவறையும் அமைக்கப்பட்டிருக்கிறது. பெருமாளை விட சற்று முன்புறம் இவள் நின்ற கோலத்தில் இருக்கிறாள். நின்ற கோலத்தில் இருக்கும் தாயார் தரிசனம் விசேஷமானது. வீதியுலா செல்லும் போதும் இவளே முன்பு செல்ல அதற்கு பின்பே சுவாமி எழுந்தருளுகிறார். இவளுக்கே முதலில் அபிஷேகம் செய்யப்படுகிறது. இங்குள்ள உற்சவ தாயார் கையில் கிளியை ஏந்தி, இடுப்பில் சாவிக்கொத்து வைத்தபடி அருள்பாலிக்கிறாள். இவள்தான் அனைத்தையும் நிர்வாகம் செய்கிறாள் என்பதை உணர்த்துவதற்காக இவ்வாறு வைக்கப்பட்டிருக்கிறது.

கல் கருடசேவை : இங்கு கருடாழ்வார் தனிச்சன்னதியில் உடலில் ஒன்பது நாகங்களுடன் அருளுகிறார். இவருக்கு ஆறுகாலமும் மோதக நைவேத்யம் படைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படுகிறது என்பது சிறப்பிலும் சிறப்பு. உற்சவ காலங்களில் மரத்தால் அல்லது பிற உலோகங்களால் செய்யப்பட்ட கருடன்தான் வீதியுலா செல்வார். ஆனால் இங்கு கருடசேவையின் போது கற் சிலையாக இருக்கும் மூலவரே வீதியுலா செல்கிறார். இவரை கருவறையில் இருந்து வெளியே எடுத்துச் செல்லும்போது முதலில் நான்கு பேர் இவரை சுமந்து வருவர். பின் அப்படியே 16, 32 எனப்பெருகி இறுதியில் பலர் இவரைச் சுமக்கிறார்கள். இவர் வெளியிலிருந்து மீண்டும் கருவறை நோக்கி வரும் போது அதே எண்ணிக்கையில் ஆட்கள் குறைந்து பின் கருவறையில் வைக்கின்றனர். கருடரால் சிறப்பு பெற்ற இத்தலத்தில் சில வருடங்களுக்கு முன்புவரையில் உச்சிகால பூஜையில் இரண்டு கருடன்கள் வந்து நைவேத்ய பொருட்களை உண்டு வந்ததாம். அவற்றின் மறைவிற்கு பிறகு பிரகாரத்தில் அதற்கென தனிச்சன்னதி அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.

நாயனார் வணங்கிய பெருமாள் : கோச்செங்கணர் எனும் சோழ மன்னர் சிவன் மீது கொண்டிருந்த பக்தியால் நாயன்மார்களில் ஒருவராக இடம்பிடித்தவர். 70 சிவாலயங்கள் கட்டி சிவனை வழிபட்ட இவருக்கு வைகுண்டம் செல்ல ஆசை ஏற்பட்டது. எனவே அவர் பெருமாளை வேண்டினார். அவருக்கு இரண்டு கரங்களுடன் காட்சி தந்த பெருமாள் தனக்கு கோயில் கட்டும்படி பணித்தார். அவருக்காக இத்தலத்தில் சிவன் கோயில் அமைப்பில் யாளிகளுடன் கோபுரத்திற்கு அருகில் இருந்து பார்த்தாலும் சுவாமி தெரியும்படி மாடக்கோயில் போல இக்கோயிலைக் கட்டினான் கோச்செங்கட்சோழன். திருமங்கையாழ்வார் தனது பாசுரத்தில் இக்கோயிலை "மணிமாடக்கோயில்' என்று பாடியுள்ளார். பஞ்சகிருஷ்ண கோயில்களில் முதலாவதான இத்தலம் முக்தி தரும் பன்னிரெண்டு தலங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. விமானம் ராஜகோபுரம் போன்ற அமைப்பிலேயே இருக்கிறது.
 
ஸ்தல வரலாறு : மேதாவி எனும் மகரிஷி மகாவிஷ்ணு மீது தீவிர பக்தி உடையவராக இருந்தார். அவரையே தனது மருமகனாகப் பெற விரும்பி மகாலட்சுமி தனக்கு மகளாக பிறக்க வேண்டி இங்கு வஞ்சுள மரத்தின் கீழ் தவம் இருந்தார். மேதாவியின் பக்தியைக் கண்டு மகிழ்ந்த மகாலட்சுமி, ஒரு பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் அவர் தவம் செய்த மரத்தின் அடியில் சிறுமியாக அவதரித்தாள். சிறுமியைக் கண்ட மகரிஷி அவளுக்கு "வஞ்சுளாதேவி' எனப்பெயரிட்டு வளர்த்து வந்தார். திருமண வயதை அடைந்த அவள் தந்தையின் ஆசிரமத்திலேயே சேவைகள் செய்து வந்தார். மகாலட்சுமியை திருமணம் செய்வதற்காக மகாவிஷ்ணு, சங்கர்ஷணன், பிரத்யும்னன், அனிருதன், புருஷாத்தமன், வாசுதேவன் என ஐந்து வடிவங்கள் எடுத்து பூலோகத்தில் அவளை தேடி வந்தார். அவர்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கொரு திசையாகச் சென்று தேடினர். அவருடன் வந்த கருடாழ்வார் இத்தலத்தில் மேதாவியிடம் வளர்ந்து வந்த பிராட்டியாரைக் கண்டு, மகாவிஷ்ணுவிடம் தாயார் இருக்குமிடத்தைக் கூறினார். அவர் இங்கு வந்து வஞ்சுளா தேவியை பெண் கேட்டார். மேதாவி மகாவிஷ்ணுவிடம் தாங்கள் என் மகளை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென விரும்பினால் எப்போதும் நீங்கள் அவள் சொல் கேட்டுத்தான் நடக்க வேண்டும், அவளே அனைத்திலும் பிரதானமானவளாக இருக்க வேண்டும் என நிபந்தனை விதித்தார். மகாவிஷ்ணுவும் ஏற்றுக் கொண்டார். கருடாழ்வார் முன்னிலையில் திருமணம் நடந்தது. அப்போது மகாவிஷ்ணு கருடாழ்வாரிடம் நான் இங்கு என் மனைவி சொல் கேட்பவனாக இருப்பேன். எனவே நீயே இங்கிருந்து நான் பக்தர்களுக்கு அருளுவதைப் போல அருள் வழங்க வேண்டும்'' என்றார். கருடாழ்வாரும் ஏற்றுக் கொண்டார். எனவே இவர் இத்தலத்தில் பிரதான மூர்த்தியாகவும் இடம்பிடித்தார். தாயார் பெயரிலேயே இத்தலம் நாச்சியார் கோயில் என்ற பெயரும் பெற்றது.


திவ்ய தேசங்கள் -50

அருள்மிகு அழகிய சிங்க பெருமாள் திருக்கோயில்
மூலவர் :  முகுந்த நாயகன், அழகிய சிங்கர்
தாயார் :  வேளுக்கை வல்லி
தீர்த்தம் :  கனக சரஸ், ஹேமசரஸ்
பழமை : 1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் :  திருவேளுக்கை, வேளுக்கை
ஊர் :  காஞ்சிபுரம்
மாவட்டம் :  காஞ்சிபுரம்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள் : பேயாழ்வார்

விண்ணகரம் வெஃகா விரிதிரை நீர் வேங்கடம் மண்ணகரம் மாமாட வேளுக்கை மண்ணகத்த தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென் கோட்டி தன் குடங்கை நீரேற்றான் தாழ்வு.
விழா : வைகுண்டா ஏகாதசி
            
திறக்கும் நேரம் : காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.    
          
முகவரி : அருள்மிகு அழகிய சிங்க பெருமாள் கோயில், காஞ்சிபுரம்-631501 காஞ்சிபுரம் மாவட்டம், போன்:+91- 44-6727 1692    
           
தகவல் : நரசிம்மரின் மேல் உள்ள விமானம் கனக விமானம். இந்த பெருமாளை பிருகு முனிவர் தரிசனம் செய்துள்ளார். கோயில் சுற்றுப்பிரகாரத்தில் சுதர்சன சக்கரத்தாழ்வார் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார். நரசிம்மருக்கு எதிரில் உள்ள கருடாழ்வார் நரசிம்மரின் உக்கிரம் தாளாது சற்றே தலை சாய்த்து பயத்துடன் இருப்பது மிகவும் அதிசய அமைப்பாகும்.     
     
ஸ்தல பெருமை : பெருமாளின் 108 திவ்யதேசங்களில் ஒன்று. புராண வரலாற்றின் படி பிருகு முனிவருக்கு கனக விமானத்தின் கீழ் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி கொடுத்ததாக ஐதீகம். பேயாழ்வார் இத்தலத்தினை உப்பிலியப்பன் கோயில், கும்பகோணம், திருப்பதி போன்ற தலங்களுக்கு இணையாகப் பாடியுள்ளார். இதிலிருந்து இத்தலத்தின் சிறப்பை அறியலாம். ஆழ்வார்களைத் தவிர சுவாமி தேசிகனும் இப்பெருமாளை "காமாஸீகாஷ்டகம்' என்ற ஸ்லோகத்தால் போற்றியுள்ளார். இதை தினமும் பாராயணம் செய்தால் நரசிம்மரின் பரிபூரண அருள் கிடைக்கும். இதனை "காமாஷிகா நரசிம்ம சன்னதி' என்றும் அழைப்பார்கள்.     
            
ஸ்தல வரலாறு : திருமாலின் அவதாரங்களில் மிகவும் போற்றப்படுகிற அவதாரம் நரசிம்ம அவதாரம். பெருமாளின் காக்கும் குணம் உடனே வெளிப்பட்ட அவதாரம். பக்தனின் வார்த்தையை பகவான் உடனே காப்பாற்றிய அவதாரம். "வேள்' என்ற சொல்லுக்கு "ஆசை' என்று பொருள். இரணியனை வதம் செய்த பின் பகவான் நரசிம்மர் அமைதியை விரும்பினார். அவர் இவ்விடத்தில் ஆசையுடன் இருக்க எண்ணியதால் "வேளிருக்கை' என்றாகி, காலப்போக்கில் "வேளுக்கை' என்றாகி விட்டது. ஒருமுறை பிரம்மா யாகம் செய்த போது யாகத்தை அழிக்க அரக்கர்கள் வந்தனர். பிரம்மா பெருமாளிடம் இந்த யாகம் சிறப்பாக நடக்க அருள்புரியுமாறு வேண்டினார். பிரம்மாவின் வேண்டுதலை ஏற்றார் பெருமாள். முன்பு பிரகலாதனுக்காக நரசிம்ம அவதாரம் எடுத்த அதே திருக்கோலத்துடன் "ஹஸ்திசைலம்' என்ற குகையிலிருந்து புறப்பட்டு வேள்வியை அழிக்க வந்த அசுரர்களை விரட்டினார். அவர்கள் காஞ்சியில் இந்த இடத்தில் காணாமல் போய்விட்டார்கள். அங்கேயே மேற்கு நோக்கி அமர்ந்து யோக நரசிம்மராகி விட்டார். இவருக்கு ஆள் அரி, முகுந்த நாயகன் என்ற திருநாமங்களும் உண்டு.
-------------------------------------------------------

தண்டம் உள்ள, தண்டம் இல்லாத ஸந்யாஸிகள், ஸ்வாமிகள் என்பவர் யார்?

தண்டம் உள்ள, தண்டம் இல்லாத ஸந்யாஸிகள், ஸ்வாமிகள் என்பவர் யார் என்பதை பற்றி நண்பர்கள் கேள்வி எழுப்பி இருந்தார்கள்.

க்ரமமாக  வைதீக முறைப்படி விரஜா ஹோமம் செய்து குரு முகமாக உபதேசம் பெற்று ஸ்வீகரிப்பதே க்ரம ஸந்யாஸம். இது ஸ்மார்த்த, வைஷ்ணவ, மத்வ ஸம்ப்ரதாய ஸந்யாஸிகளுக்கு பொதுவானது.

ஸ்மார்த்த முறையில் ஸந்யாஸிகள் 10 வகையில் பிரிக்கப்படுகிறார்கள். இது ஆதிசங்கரர் உருவாக்கிய வகைப்படுத்தல். தசநாமி என்பார்கள். தீர்த்த, ஆசிரம, வன, ஆரண்ய, கிரி, பர்வத, ஸாகர, புரி, பாரதி, ஸரஸ்வதி எனும் பத்து பெயர்கள் கொண்ட சந்நியாசிகள். (உதாரணம் : ஞானானந்த கிரி, சந்த்ரசேகர ஸரஸ்வதி, பாரதி தீர்த்தர், தோதாபுரி, சந்த்ரசேகர பாரதி - போன்றவை). இவர்கள் எல்லோருமே ஏக தண்டம் கொண்டவர்கள்.

இதே போல மத்வ ஸம்ப்ரதாயத்திலும் ஸந்யாஸ தீக்ஷை உண்டு. அவர்களும் ஏக தண்டம் கொண்டவர்களே ! அவர்களுக்கு பெரும்பாலும் “தீர்த்தர்” என்ற பட்டமே அமைந்திருக்க காண்கிறோம். (உதாரணம் : ராகவேந்த்ர தீர்த்தர், வ்யாஸராஜ தீர்த்தர் போன்றவை)

ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் த்ரிதண்டம் கொண்ட பீடாதிபதிகளைப் பார்க்கிறோம். இவர்கள் பொதுவாக ஜீயர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள்.

மத்வ, வைஷ்ணவ, ஸ்மார்த்த ஸந்யாஸிகள் அத்தனை பேருக்குமே (அதாவது குருமுகமாக உபதேசம் பெற்றவர்கள்) பீடாதிபதியாக இருந்தாலும் இல்லா விட்டாலும் இவர்களுக்கு தண்டம் கட்டாயம் உண்டு. தண்ட வந்தனம், தண்ட நமஸ்காரம் எல்லாமே உண்டு.

சுருக்கமாக சொல்லப்போனால், தண்டம் இல்லாதவர் (technically) ஸந்யாஸி இல்லை.

எளிய பாஷையில் சொல்வதானால், சந்யாஸி வேறு சாமியார் வேறு

நான் அறிந்த வரை வைஷ்ணவத்தில் பீடாதிபதிகள் மட்டுமே தண்டம் தரித்த சந்யாஸிகளாக பார்த்து இருக்கிறேன். மடாதிபதி அல்லாத தனி சந்யாஸிகள் ஸ்ரீ வைஷ்ணவத்தில் உண்டா என்பதை அந்த ஸப்ரதாயத்தை அனுசரிப்பவர்கள் தெளிவு படுத்த வேண்டும்.

மத்வ ஸம்ப்ரதாயத்தில் ஸந்யாஸிகள் எக்காலத்திலும் தண்டத்தை விட்டுப் பிரிவதில்லை. பூஜாகாலத்திலும், ஆராதனை காலத்திலும் தண்டம் கட்டாயம் கையில் இருக்கத்தான் செய்கிறது. வந்தன காலத்தில் அருகே இருக்கும் சிஷ்யரிடம் கொடுப்பது வழக்கம். ச்ருங்கேரி போன்ற மடங்களில் பூஜா காலங்களிலும் யாத்ரையின் போதும் ஆசார்யாள் தண்டத்தை கையில் வைத்தும் மற்ற நேரங்கள் அறையில் வைத்து விட்டு தரிசனம் தரும் வழக்கமும் காணப்படுகிறது.

அதேசமயம் ஸ்மார்த்த ஸம்ப்ரதாயத்தில் இதற்கு இன்னும் அடுத்த படி நிலை என்று ஒன்று உண்டு. அவதூத பரமஹம்ஸ நிலை. இந்த நிலையை அடைந்தவர்கள் தண்ட கமண்டலங்களையும் மந்த்ரபூர்வமாக திரஸ்கரணம் செய்து விடுவது வழக்கம். முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் இவர்கள் சந்யாஸம் பெற்று, சந்யாஸ ஆச்ரமத்தை அனுசரித்து, அதன் பின்னரே தண்டத்தை திரஸ்கரணம் செய்திருக்கிறார்கள்.

ஞானானந்தர், சேஷாத்ரி ஸ்வாமிகள், ஜட்ச் ஸ்வாமிகள், சதாசிவ ப்ரம்மேந்த்ரர், சேந்தமங்கலம் ஸ்வாமிகள், சாந்தானந்தர் எல்லோரும் எல்லோரும் இந்த வரிசையில் வந்தவர்களே. இவர்கள் அத்தனை பேருக்கும் தண்ட கமண்டலம் உண்டு. ஆனால் அவர்கள் அதை எப்போதும் கையில் எடுத்துக் கொண்டு நடப்பது இல்லை.

ஸதாசிவ ப்ரம்மேந்த்ரர், காஞ்சி மடத்தின் 57வது பீடாதிபதி பரசிவேந்த்ர ஸரஸ்வதியின் சிஷ்யர். அவரிடம் முறையாக சந்யாஸம் பெற்றவர். காஞ்சி மடத்து பீடாதிபதியாக வந்திருக்க வேண்டியவர். தன் உடம்பு எனும் ப்ரக்ஞையை மறந்து அவதூத நிலையை எட்டிய பின் தண்ட கமண்டலங்களை திரஸ்க்ரணம் செய்து விட்டார்.

ஞானானந்தரின் குரு சிவரத்ன கிரி ஸ்வாமிகள் - ஜோஷி மடத்தின் சங்கராசார்யாராக இருந்தவர். அவரிடம் க்ரம சந்யாஸம் பெற்றவர் ஞானாந்தர். ஒரு முறை ஞானானந்தரை தரிசிக்க வந்த பக்தர் ஒருவர் "தண்டம் இல்லாத சன்யாசியை வணங்காதே" என்று சாஸ்திரம் சொல்லுகிறதே இவரை வணங்குவதா வேண்டாமா என்று யோசித்தார்.

அடுத்த நொடி ஞானானந்தர் "தன்னைத் தான் கண்டவர்க்கு கோல்தடியும் ஏதுக்கடி" என்ரு வேடிக்கையாக பாடினார். வந்த பக்தரும் தன் தவறை உணர்ந்தார். ஞானாந்தரின் சந்யாஸ தண்டம் அவரது அறையில் இருக்கும். குருபூர்ணிமை போன்ற நாட்களில் ஞானானந்தரும் கூட தண்டம் கமண்டலம் ஏந்தி விதிவத்தாக தரிசனம் கொடுப்பதுண்டு.

அதே போல குருநாதர் ஸ்ரீ  சேஷாத்ரி ஸ்வாமிகள், ஹரித்வாரத்தைச் சேர்ந்த ஸ்ரீ பாலாஜி ஸ்வாமிகள் என்ற கௌட தேசத்து ஸந்யாஸியிடம் ஸந்யாஸ தீக்ஷை பெற்றவர். காஞ்சிபுரத்து ஸர்வதீர்த்தக் கரையிலேயே சேஷாத்ரி ஸ்வாமிகள் ஸந்யாஸம் பெற்றார். பரமஹம்ஸ நிலையை அடைந்த காரணத்தால் குருநாதரி உத்தரவின் பேரில் தண்ட கமண்டலங்களை "பூ ஸ்வாஹா" என்று ஜலத்தில் விட்டு ஜாதரூபனாக ஸஞ்சரிக்கத் துவங்கினார்.

ஜட்ஜ் ஸ்வாமிகளின் தீக்ஷா நாமமும் ஸதாசிவ ப்ரம்மேந்த்ர ஸரஸ்வதி தான். அவரும் முறையாக சந்யாஸம் பெற்றவர் தான். (ராமக்ருஷ்ண அவதூத மஹராஜ் என்று குரு காஸஹஸ்தியில் அவருக்கு ஸந்யாஸம் கொடுத்தார்.)  ஜட்ஜ் ஸ்வாமிகளின் நேரடி சிஷ்யர் தான் ஸ்வயம்ப்ரகாச அவதூத ஸ்வாமிகள்(சேந்தமங்கலம் ஸ்வாமிகள்) அவர் சிஷ்யர் சாந்தானந்தர். இவர்கள் எல்லோருமே சந்யாஸத்திலிருந்து அவதூத நிலைக்கு சென்றவர்கள். அதனால் தண்டத்தை ஸ்வீகரித்து, பின்னர் விட்டவர்கள்.

ரமண மஹரிஷி க்ரமமாக சந்யாஸம் பெறவே இல்லை ! அதனால் தான் அவர் காவி கட்டவே இல்லை அவர் ஜீவன்முக்த ஞானி ! சந்யாஸியல்ல.

சின்மயானந்தா, தயானந்த ஸரஸ்வதி, விவேகானந்தர் போன்றவர்கள் துறவு வாழ்கை மேற்கொண்டவர்களேயன்றி வைதீக ஸந்யாஸ விதி என்ற கணக்கில் வருவதில்லை.

அதே போல் மிஷனரியைச் சேர்ந்தவர்கள், வைதீகமான, விதிவத்தான க்ரம ஸந்யாஸம் என்ற கணக்கில் வருவதில்லை. அதனால் அவர்களுக்கும் தண்டம் கிடையாது.

அதனால் திடீர் அம்மாக்கள், அப்பாக்கள், அண்ணாக்கள், தம்பிகள், ஸ்ரீ, ராம்ரஹீம் போன்றோர் இந்த வரிசையிலேயே கிடையாது.

முறையான குரும்பரம்பரையை சேர்ந்தவர்களே வணங்கத்தக்கவர்கள்.

அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்

சுருதி ஸூக்தி மாலா : சுலோகம்-21-30
|| ஓம் நம: சிவாய ||
சுருதி ஸூக்தி மாலா அல்லது சதுர் வேத தாத்பர்ய ஸங்க்ரஹம்
சிவலிங்க பூபதியின் ஸம்ஸ்க்ருத வ்யாக்யானத்தைத் தழுவி
தமிழில் பதவுரையும் தாத்பர்யங்களும்

சுலோகம் 21

ச்ரைஷ்ட ப்ரயுக்தமபி நாம நமஸ் த்வதீயம்
ச்ரேஷ்டோஸி ய: க்ரதுபுஜாம் பதிரக்ரியானாம் |
ச்ரேஷ்ட ச்ருதோஸி பகவந்நவிசேஷதஸ்த்வம்
மந்த்ரேஷு க்ருச்ச்ர படிதேஷு ச ஸாம கானாம் ||
“தூஷ்யது துர்ஜன :” என்பது ஒர் ந்யாயம், துஷ்டன் ஸந்தோடஷப்படட்டும் என்று அவன் சொல்லும் கக்ஷியை அங்கீகரித்தே நமது கொள்கைக்குப் பாதகமில்லை என்று ஸாதிப்பது சாஸ்திரக்காரர்கள் வழக்கம். அந்த ந்யாயப்படி மேற்கொண்ட நமஸ்க்ருத்ய ஹி வஸீயாம்ஸம் என்ற வேதப்படி, சிறந்த நிலை தான் நமஸ்கரிக்கப்படுவதற்குக் காரணம் என்று அங்கீகரித்தாலும் நம் கக்ஷிக்கு பாதகமில்லை என்று சொல்லப்படுகிறது.
பதவுரை
ச்ரைஷ்ட ப்ரயுக்தமபி நம: – சிறந்த மேன்மையால் ஏற்படும் நமஸ்காரமும், த்வதீயம் நாம – உம்மைச் சேர்ந்தது தான். அக்ரியானாம்பதி: – பசுபதியாகிய, ய: – த்வம் – யாதொரு நீர், க்ரது புஜாம் – தேவர்களுக்குள், ச்ரேஷ்டோஸி – சிறந்தவராக இருக்கிறீரோ, பகவன் – பகவானே! ஸாமகானாம் – சாமவேதிகளினுடைய, கிருச்ச்ரபடி தேஷு – க்ருச்ச்ர க்ரந்தத்தில் சொல்லப்படுகிற மந்த்ரேஷு – மந்த்ரங்களில், அவிசேஷத: – பொதுவாக (அபேக்ஷிகமன்னியில்) த்வம் – நீர், ச்ரேஷ்ட:- சிறந்தவர் என்று, ச்ருதோஸி – சொல்லப்பட்டிருக்கிறீர். “நமோ ஜ்யேஷ்டாய ச்ரேஷ்டாய என்பது ஸாமவேதிகளின் க்ருச்ச்ர க்ரந்தத்தில் படிக்கப்பட்டிருக்கும் மந்த்ரமாகும். நக்ஷத்ரேஷ்டியில் திருவாதிரை நக்ஷத்திர ப்ரகரணத்தில் சொல்லப்படும் ஆர்த்ரயா ருத்ர: ப்ரதமான ஏதி ச்ரேஷ்டோ தேவானாம் பதிரக்னியானாம் என்ற மந்த்ரம். பசுபதி ஸர்வ தேவர்களுக்குள் சிறந்தவர் என்பதை விளக்குவது இங்கு ஆதாரமாகக் கொள்ள வேண்டும்.

சுலோகம் 22

தேவாந்தரைஸ் ஸஹ நமஸ்துதி ஹூதய ஸ்தே
தோஷாய நால மலமேவ விபர்யயாய |
புத்ரார்த்தின: சருவிதெள ஸஹ சந்த்ர மெளளே
ஸோமேன ஹூத மனுசுஸ்ரீஉம ருத்ரமக்னிம் ||
இவ்விதம் 9 முதல் 21 முடிய 13 ச்லோகங்களால் வேத, புராண வசனங்களைக் கொண்டும், சுருதி, ஸ்ம்ருதி லோக (புராணம்) ந்யாய ரீத்யா, நம: சேஷித்வம் என்ற லக்ஷணம் அதிவ்யாபதி, அவ்யாப்தி, அஸம்பவ ரூப தோஷ த்ரயமில்லாமல் பரமசிவனைக் குறிக்கும் என்பதை விளக்கி விட்டு,
இப்போது உத்தேச க்ரமமாக வந்த இரண்டாவது லக்ஷணமாகிய பகவத் பத வாச்யத்வம் என்பதை 29 முதல் 34½ வரை 6½ ச்லோகங்களால் உபபாதனம் பண்ணும் நோக்கத்துடன்
நடுவில் 22 முதல் 28 முடிய 7 ச்லோகங்களால் சிவபெருமான் வேதங்களில் பிறதேவதையுடன் சேர்க்கப்பட்டு துதிக்கப்படுவதோ நமஸ்கரிக்கப்படுவதோ, கூப்பிடப்படுவதோ கிடையாது, தனியாகத்தான் துதி, நமஸ்காரம், ஆஹ்வானம் செய்யப்படுகிறார். ஏனெனில் ஸமாஸமாப்யாம் விஷமே பூஜாத: என்ற கெளதமாதி வசனப்படி, சிறந்தவரைத் தாழ்ந்தவர்களோடு ஒன்று கூட்டி மரியாதை செய்வது தகாது என்ற முறையுள்ளதல்லவா என்ற விஷயத்தை ப்ரதிபாதிப்பதால், சிவபெருமான் நம: சேஷித்வ லக்ஷணத்தையும் சிறப்பையும், ஸ்தாணா நிக்ந ந்யாயப்படி த்ருடப்படுத்துவதற்கு, இந்த ச்லோகம் ஆரம்பம்.
பதவுரை
தேவாந்தரை: ஸஹ – மற்ற தேவதைகளோடு கூட, நம : ஸ்துதி ஹூதய : – நமஸ்காரம், ஸ்துதி, ஆஹ்வானங்கள், தே – உம்முடைய, தோஷாய – சந்தோஷம் பொருட்டு, நாலம் – சக்தியுள்ளவை அல்ல. விபர்யயாயைவ அலம் – கோபத்தின் பொருட்டேயாகும். சந்திரமெளளே – சந்திரனை சிரசில் தரித்திருப்பவரே! புத்ரார்த்தின: – ஸந்ததியை விரும்புகிறவனுக்கு, சருவிதெள – விதிக்கப்பட்ட சருவை த்ரவ்யமாகக் கொண்டயாகத்தில், ஸோமேன ஸஹ – ஸோமதேவதையோடு கூட, ஹூதம் – கூப்பிடப்படுகிற, ருத்ரம – ருத்ரனை, அக்னிம் – அக்னி தேவதையாக, அனுசுச்ரும – நாங்கள் வேதங்கள் வாயிலாக அறிகிறோம். ஆதலால் ஸோமாரெளத்ர சருவில், தாங்கள் ஸோமனோடு சேர்ந்து பூஜிக்கப்படவில்லை. ஸோமனும் அக்னியும் சேர்ந்து பூஜிக்கப்படுகிறார்கள்.
விரிவுரை
மாத்வா ருத்ர சுக்ருதாமா நமோபி: – ருத்ரதேவதையே! உம்மைப் பிறருடன் சேர்த்து நமஸ்கரிப்பதால் கோபிக்கச் செய்ய மாட்டோம். வ்ருஷப – வேண்டியதை வர்ஷிக்கும் ஸ்வதந்த்ர தெய்வமே! துஷ்டுதீ – மற்றதேவதைகளுக்கு சமமாகச் செய்யும் ஸ்துதியாலும், மா சுக்ருதாம – கோபமூட்ட மாட்டோம்; மா சுக்ருதாம ஸஹூதீ – வேறு தெய்வங்களோடு சேர்த்துக் கூப்பிடுவதாலும், (யாஜ்யா புரோனுவாக்யா – மந்த்ரங்களால் சேர்த்து யக்ஞத்துக்கழைப்பதாலும்) கோபிக்கச் செய்யமாட்டோம். இந்த மந்த்ரத்தின் அர்த்தம் நிருக்தத்தில் சொல்லப்பட்டிருப்பதாவது.
கிம் ச துல்ய நமஸ்காரை: தேவாந்தரகாமிபி: |
துஷ்டுத்யா ஸத்ருச ஸ்துத்யா ஸமானாஹ்வான
கர்மணா ந வயம் சுக்ருதாம த்வாம் ஸர்வதேவ நமஸ்க்ருதம் ||
சிவபெருமானையும் விஷ்ணுவையும் கூடச்சேர்த்து ஸமமாக பாவிப்பவன் சண்டாள துவ்யனாகிறான். அவன் ஸங்கர ஜாதியைச் சேர்ந்தவனென்பது அனுமானம் செய்யப்படலாம். சூர்யனுக்கும் மினுமினுப் பூச்சிக்கும் போல, சிவனுக்கும் விஷ்ணுவிற்கும் வித்தியாசமுளது என்றெல்லாம், தத்வம், சிவதத்வ நிரூபணம், ஆதித்ய புராணம், பராசர புராணம், ஸ்காந்தம் ஹூத ஸம்ஹிதை முதலிய க்ரந்தங்களில் விவரிக்கப்பட்டிருப்பதை காண்க. ஸ்ரீமத் பாகவத்தின் 3, 4, 8-வது ஸ்கந்தத்தில் விஷமுண்டு உலகனைத்தையும் காத்த சிவபெருமானுக்கு நிகரான தெய்வம் கிடையாது என்று தெளிவாகக் கூறப்பட்டிருப்பதை, வைஷ்ணவர்களும் (முக்யமாக வைஷ்ணவப் பற்றுதல் உள்ள ஸ்மார்த்த ப்ராம்மணர்களும் தி.வி.அ) நன்கு கவனித்து தத்துவறிய வேண்டிய விஷயமாகும்.
ஸோமா ரெளத்ரம் சரும் நிர்வபேத் ப்ரஜாகாம:
என்பது சந்தானத்துக்காக விதிக்கப்பட்ட யக்ஞத்தைத் தெரிவிக்கும் வேதவாக்யமாகும்.

சுலோகம் 23

அக்னிம் ப்ரக்ருத்யகலு ருத்ரபதம் ப்ரயுங்க்தே
தத் ப்ராமஹணம் பவதி யத்ர தயோஸ் ஸஹூதி: |
ஆஹ்வானமத்ர பவத: ப்ருதகேவ த்ருஷ்டம்
யத் ப்ராதரக்னிமிதி ஸூக்த வித: படந்தி ||
ஸோமா ரெளத்ர சரு விதியில் ஸோமனோடு சேர்த்துக் குறிக்கப்படும் ருத்ரன் தாங்கள் அல்ல அக்னிதான் என்பது அடுத்த இரண்டு அர்த்தவாத வாக்கியங்களால் தெளிவாகிறது.
“ஸந்திக்தேஷு வாக்யசேஷாத்” என்றல்லவா, ஜைமினியின் மீமாம்ஸ வாக்ய ந்யாயம்?
அக்தா சர்க்கரா உபதம் தாதி என்ற விதியில் பொதுவாக நனைத்த கல்லை மேடைகட்ட உபயோகிக்க விதியிருந்தாலும், நெய்யில் நனைக்கப்பட்ட கல்லை மேடைகட்ட உபயோகிக்க வேண்டுமென்று விசேஷமான பொருள். தேஜோவை க்ருதம் என்ற துதி, பர அர்த்தவாதத்தினால் கொள்ளப்படுவது வழக்கமல்லவா என்ற நோக்கத்துடன், அந்த சந்தேகத்தைத் தெளிய வைக்கும் அர்த்தவாதங்களை எடுத்துக் கூறுகிறார்.
பதவுரை
யத்ர தயோ: ஸஹூதி: – எந்த ஸோமாரெளத்ர சருவில் ஸோமனுக்கும் ருத்ரனுக்கும் சேர்ந்து ஆஹ்வானம் காணப்படுகிறதோ, தத் – அந்த, ப்ராம்மணம் பவதி – அர்த்தத்தை நிர்ணயித்துக் கொடுக்கக் கூடிய அர்த்த வாக்யம் இருக்கிறது, இங்கு ப்ராம்மணபதம் விதி வாக்யத்தைக் குறிக்காது. அர்த்தவாத வாக்கியத்தைக் குறிக்கும். சேஷே ப்ராம்மண சப்த: என்று ஜைமினி விதிவாக்யத்திற்குப் போல, அர்ந்தவாத வாக்கியத்திற்கும் பிராம்மண பதம் வாசகம் என்பதை நிலை நாட்டியிருக்கிறார். அக்னிம் ப்ரக்ருத்யகலு – அக்னியைச் சொல்லியல்லவா, ருத்ரபதம் – ருத்ரன் என்ற பதத்தை. ப்ரயுங்க்தே – ப்ரயோகம் செய்கிறார். அத்ர – தங்களைக் கூப்பிடுமிடத்தில், பவத : – ஆஹ் வானம், – தங்களைக் கூப்பிடுவது, ப்ருதகேவ – தனியாகத்தான், த்ருஷ்டம் – காணப்படுகிறது, ஹூக்தவித: – ஹூக்தங்களை கண்டு பிடித்தவர்கள், யத் – எந்த ஹூக்தத்தை, ப்ராதரக்னி மிதி – ப்ராதரக்னிம் ப்ராதரிந்திரம் ஹவாமஹே என்பது முதலாக, படந்தி – படிக்கிறார்களோ, அங்கு உம்மைத் தனியாக அல்லவா கூப்பிடுவது தெளிவாகக் காணப்படுகிறது.

சுலோகம் 24

அக்ன்யாதிபிஸ்தவ மஹேச்வர! ஹூதிசங்கா
மாபூத் இதி ப்ரக்ருதமப் யனுஷங்க யோக்யம் |
மந்த்ர: க்ரியா பத மபாஸ்ய பதாந்தரேண
த்வாமா ஹ்வயந் நுதபதேன பினத்தி ரீ திம் ||
பதவுரை
மந்த்ர – ப்ராரதரக்னிம், ப்ராதரிந்திரம் ஹவாமஹே
என்ற மந்த்ரம், அக்ன்யாதிபி: அக்னி முதலிய தேவதைகளோடு, தவ – உம்மை, ஹூதிசங்கா கூப்பிடப்படும் ஸந்தேஹம். மாபூத் இதி – (ஜனங்களுக்கு) ஏற்படக்கூடாது என்ற நோக்கத்துடன், ப்ரக்குதம் – முன்பு சொல்லப்பட்ட, அனுஷங்க யோக்யம் – பின் வாக்கியத்தில், ஸம்பந்தப் படுத்தத் தகுத்ததாயிருந்த போதிலும் க்ரியாபதம் – ஹவாமஹே என்ற வினைச்சொல்லை, அபாஸ்ய – விட்டுவிட்டு, உமது வாக்கியத்தில் அனுஷங்க ந்யாயப்படி, மற்றதேவதை வாக்யத்தில் போல சேர்த்து ஸம்பந்தப்படுத்தாமல் விட்டு, பதாந்தரேண – உத ருத்ரம் ஹவேம் என்றபடி, ஹவேம என்று மற்றொரு தனி வினைச் சொல்லால், த்வாம – உம்மை, ஆஹ்வயந் – கூப்பிடுகிறதாய் இருந்து கொண்டு, உத – பதேன – உத என்ற பதத்தினால், அபி – என்ற சப்தத்திற்கு ஸமானமான அர்த்தத்தைக் கொடுக்கும் சக்திவாய்ந்ததினால், ரீதிம் – உமக்கு தேவதாந்தர ஸாத் ருச்யத்தை, மஹேச்வரா! பினத்தி – அடியோடு விலக்குகிறது. ருத்ரம் உத – ருத்ரனைக்கூட, ஹவேம் – தனியாகக் கூப்பிடுவதற்கு அவகாசம் அடைகிறோம் என்பது தாத்பர்யம்.
உத பதத்தால் பிரித்து, மற்றவர்களுக்கு அனுஷங்க ந்யாயப்படி, ஸம்பந்தப் படுத்தப்பட்ட க்ரியா பதத்தைக் தங்களுக்குச் சேர்க்காமல், தனியாக வினைச்சொல் கூறி உம்மைக் கூப்பிட்டது, எங்கும் எப்பொழுதும் உம்மைத் தனியாகவே கூப்பிட வேண்டும், மற்ற தாழ்ந்த சிறு தேவதையுடன் சேர்த்துக் கூப்பிட்டு ஸ்துதி நமஸ்காரம் செய்வது தவறு; உமக்கு ப்ரதீயாகாது என்ற தத்வத்தை நன்கு விளக்குகிறது.

சுலோகம் 25

ந்யாஸீ க்ருதம் வஸு பலா தமரை ரவாப்தும்
அன்வாகதோ ருதிதவானிதி ருத்ரமக்னிம் |
ருத்ராம்ஸ்த்வதுத்பவதயா மருதோ கணான்வா
ருத்ராவணேன ச பவந்த மவைமி ருத்ரம் ||
அக்னியை ருத்ர சப்தத்தால் சொல்வதற்கு காரணம் விளக்குகிறார்.
பதவுரை
அமரை: – தேவர்களால், ந்யாஸீ க்ருதம் – நியாஸமாக ஒப்படைக்கப்பட்ட, வஸு – ஸொத்தை, பலாத் – பலாத்காரமாக, அவாப்தும் – அடைவதற்கு, அன்வாகத: – பின் தொடர்ந்து வரப்பட்டவன், ருதித வான் – அழுதான் அல்லது அழச்செய்தான், இதி – என்ற காரணத்தால், அக்னிம் – அக்னி தேவதையை, ருத்ரம் – ருத்ர சப்தத்தால் சொல்லப்படுவதாக, அவைமி – அறிகிறேன். மருத: – ஸப்த மருத்துக்களையும், கணான்வா – உமது சபையோர்களான பார்ஷதர்களையும், த்வதுத்பவதயா – உம்மிடமிருந்து உண்டான காரணத்தால், “கார்ய காரணமோ ரபேத ந்யாயேன” குடத்தை மண் என்பதுபோல, ருத்ரான் – ருத்ர சப்தவாச்யர்களாகவும், பவந்தம் – உம்மை, ருத் த்ராவணேன – துக்கத்தையும் பாபத்தையும் நசிக்கச் செய்வதால், ருதி என்ற வேதஸ்வரூபமான சப்தத்தைக் கலப்பத்தின் முதலில் பிரம்மாவிற்கு ததாதி கொடுப்பதாலும், ருத்ரம் –ருத்ர சப்தவாச்யனாக, அவைமி – அறிகிறேன்.

சுலோகம் 26

யக்ஞேபி ருத்ரபதமாருண கேதுகோக்தம்
தத் சப்த மீச்வர ! ததீயமபி ஸ்மரந்தி |
யத்தத் ப்ரதேசகத ருத்ர பதாவகாசே
யக்ஞஸ்ய சப்த மனுசுச்ரும ஸாமகேப்ய: ||
யக்ஞே அபி – யாகம் என்ற அர்த்தத்திலும், ருத்ர பதம் – ருத்ரம் என்ற பதமானது, ஆருண கேது கோக்தம் – ஆருண கேதுகம் என்ற சயனத்திலும், சூர்ய நமஸ்காரத்திலும் உபயோகிக்கப்படும் மந்த்ரங்கள் அடங்கிய தைத்ரீய ஆரண்யகம் முதல் ப்ரச்னத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஈச்வர – பரமேச்வரனே! ததீயமபி – அவனுடைய பொருளையும், தத்சப்தம் – அவன் பெயரால் சொல்லப்படுவதாக, ஸ்மரந்தி – பெரியவர்கள் கருதுகிறார்கள். ஸ்வஸ்வாமி பாவ ஸம்பந்தந்தால், ராஜாவைச் சேர்ந்தவர், ராஜாவென்று சொல்லப்படுவது ஸஹஜமே. அது போல ருத்ரனை ஸ்வாமியாகக் கொண்ட யக்ஞம் ருத்ர சப்தத்தால் சொல்லப்படுகிறது. ஸாமவேத ச்ருதி பர்யாலோசனாயாம் யக்ஞம் ருத்ர சப்தவாச்யமாக விருப்பது, ருத்ரஸ்வாமிகம் என்பதால் என்ற அர்த்தம் தெளிவாகிறது. யத் – எத்தக் காரணத்தால், தத்ப்ரதேசகத ருத்ரபதாவகாசே – அந்த ஆருண கேதுகம் என்ற பெயருள்ள யஜுர்வேத ஆரண்ய பாகத்திலுள்ள ருத்ரத்தின் ஸ்தானத்தில், ஸாமகேப்ய: – ஸாமவேதம் கரை கண்டவர்களிடமிருந்து, யக்ஞஸ்ய சப்தம் – யக்ஞஸ்ய என்ற சப்தத்தை, அனுசுச்ரும – கேட்கின்றோம்.
ஒரே அர்த்தத்தைத் தெரிவிக்கும் சுருதிகளில், பதபேதமாக ஓரிடத்தில் யக்ஞ சப்தமும், மற்றோரிடத்தில் ருத்ரபதமும் கூறப்படுவதால், கதிஸாமன்ய ந்யாயத்தால் இரண்டு பதங்களும் ஒரே பொருளை குறிக்கின்றன என்பது ஏற்படுமாதலால், யக்ஞத்தை ருத்ர சப்தம் யஜுர் வேதத்தில் குறிப்பிடுவது திண்ணம்.

சுலோகம் 28

ஸந்த்யேவ தத்திதபத ப்ரதிரூபகாணி
பூரிணி பாகவத ஸாத்வத ஸந்நிபாநி |
ஸ்யாத் தாத்ருகேவ பகவானிதி சப்தரூபம்
ஷாட்குண்யஹேதுகமபி த்வதுபைதி நாந்யம் ||
பதவுரை
தத்திதபத ப்ரதிரூபகாணி – தத்திதாந்தம் போலத் தோன்றும் அகண்ட பதங்கள், பாகவத ஸாத்வதஸந்நிபாநி – பாகவதஸாத்வத, மைத்ர முதலிய, பூரிணி – பலபதங்கள், ஸந்த்யேவ – இருக்கின்றன. பகவானிடி சப்த ரூபம் – பகவான் என்கிற சப்த ரூபமும், தாத்ருகேவ ஸ்யாத் – அப்படியே தத்திதாந்த ப்ரதிரூபகம் அகண்ட பதம் என்றே இருக்க வேண்டும். பவான் என்பதுபோல பகவான் என்பது பூஜ்ய பதம் ஆனதால், ரூட பதமாகக் கொள்ளவேண்டும் தனவான் என்பதில் போல மது பூ ப்ரத்யயம் வரவேண்டிய ஆவச்யகமில்லை. உம்மிடமே ஈச்வர சப்தம் ரூடமென்று நிரூபிக்கப் பட்டதால், பூஜ்யதையும் ஈச்வரனாகிய உமக்காகையால், பகவான் சப்தம் முக்கியமாக உமக்குத் தான் பொருந்தும்.அப்படி தனவான் என்பது போல, பக: அஸ்யாஸ்தீதி பகவான் என்று வ்யுத்பத்தி செய்து, தத்திதாந்தமாகக் கொண்டு, ஆறுகுணங்கள் உடையவரைக் குறிக்கும் யெளகிக சப்தமாகக் கொண்டாலும், ஷாட்குண்யஹேதுகமபி, அந்த பகவான் என்ற சப்தரூபம், த்வத் – உம்மைத் தவிர, அன்யம் – மற்றவரை, ந உபைதி – அடையத்தக்கதில்லை குறிக்கத்தல்ல.
(1) தேவாஸுரர்கள் யுத்தம் நேர்ந்ததும் தேவர்கள் தம் ஸொந்த த்ரவ்யங்களை அக்னியிடம் கொடுத்து, ந்யாஸமாகச் செய்து விட்டுச் சென்றதாகவும், பிறகு ஜயம் பெற்றுவத்து கேட்க, அக்னி கொடுக்கமனமில்லாமல் ஓட, பின்பற்றப்பட்டு அழுததாகவும் தேவர்களை அழச் செய்ததாகவும், வரலாறு யஜுர் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. அதனால் அக்னி சில இடங்களில் ருத்ர பதத்தால் குறிக்கப் படுகிறார்.
(2) ருத்ரனிடமிருந்து உண்டானதால், மருத்துக்கள், பார்ஷதர்கள் தந்தைபெயரால் கூறப்படுகிறார்கள்.
(ஆத்மாவை புத்ர நாமாஸி என்ற ந்யாயப்படி)
(3) துக்கத்தையும் பாபத்தையும் அழிப்பதால்,
(4) ப்ரம்மாவிற்கு வேதத்தை உபதேசிப்பதால், நாதத்தால் ஸகல உலகத்தை ஸந்தோஷப்படுத்துவதால் நாதஸ்வரூபி என்பதால் ஓங்காரத்தால், வேதசப்தத்தால், ஜபிப்பவர்களுக்கு இஷ்டத்தைக் கொடுப்பதால், கஷ்டப்படும் ஜனங்களைப் பார்த்து, தந்தைபோல தயையால் தான் கஷ்டப் படுவது போல் அழுவதால், ப்ரளய காலத்தில் ஸம்ஹார மூர்த்தியைப் பார்த்து உஅலக்ம் அழுவதால் மகாதேவோ மர்த்யான் ஆவிவேச என்றபடி கத்திக் கொண்டு, ஜனங்கள் உட்ப்ரவேசித்து ஆயுளை முடிப்பவர் என்றதால் மோகாத்மக மாயையை நீக்குவதால் பக்தர்களின் ஸம்ஸார துக்கத்தை விலக்குவதால் என்ற 9 விதமான வ்யுத் பத்தியும் ஒருங்கே பொருந்துவதால் ருத்ரசப்தத்திற்குப் பரமேச்வரன் முக்கிய பொருளாவார்.
(5) ருத்ராஸ்ய ஸ சிர: ப்ரதிததாதி என்று யக்ஞத்தில் ருத்ர சப்தப்ரயோகம்.
(6) ருத்ர ஏனம் பூத்வா ஹந்யாத் என்று வாஸ்தோஷ்பதி ஹோமம் செய்யாதவனுக்குக் கடுமையான ஜ்வரம் ஸம்பவிக்கும் என்ற இடத்தில் ருத்ரசப்தம் ஜ்வரவாசகம். ரெளத்ர சப்தம் கடுமை என்ற அர்த்தத்தைக் குறிப்பது இதிலிருந்து தான் தத்திதாத்த சப்தமான தென்று, ஆறு அர்த்தங்கள் ருத்ர சப்தத்துக் கூறப்பட்டன.

சுலோகம் 29

ஐச்வர்ய மக்ர்ய மனுபாதி மதீ ச லக்ஷ்மீ:
ஞானம் ச வீர்ய யசஸீ ச விராகதா ச |
ஏதே குணா: ஷடபி தே பகஸம்க்ஞ யோக்தா:
ஸந்தீத்யனேன பகவந் ! பகவா நஸி த்வம் ||
இவ்விதம் முதல் சுலோகத்தில் குறிக்கப்பட்ட ஐந்து லக்ஷணங்களில், நம : சேஷித்வம் என்ற முதல் லக்ஷணத்தை அதிவ்யாப்தி இல்லாததாக நிரூபணம் செய்து, அஸாதாரணமாக நிலை நாட்டிய பிறகு, இரண்டாவது லக்ஷணமான பகவத் பதவாச்யத்வம் என்றதை, அஸாதாரணமாக சிவபெருமானுக்கே உரித்து என்று இது முதல் 6½ சுலோகங்களால் விளக்குகிறார். (29 – 34½).
பதவுரை
அக்ர்யம் – சிறந்த, ஐச்வர்யம் – ஈசத்தன்மையும் அநுபாதி மதீ – காரணத்தால் ஏற்படாத, ஸ்வபாவகமாள, லக்ஷ்மீ: ச ஸம்பத்தும், ஞானம் ச – அறிவும், வீர்ய யசஸீ ச – பலமும் புகழும், விராகதா ச – வைராக்யமும், இந்த உலகிலுள்ள பயன்களில் ஆசையற்றிருத்தல், ஏதே – இந்த ஷடபிகுணா: – ஆறு குணங்களும், பக ஸம்க்ஞா – பக என்ற பதத்தால் உக்தா: சொல்லப்படுகின்றன தே – அவைகள், ஸந்தி – உம்மிடத்தில் இருக்கின்றன இத்யனேன – என்ற காரணத்தால், பகவந் – பெரியவரே, த்வம் – நீர், பகவானஸி – பகவத் சப்த வாச்யராக இருக்கிறீர்.

சுலோகம் 30

ஐச்வர்ய மீசவரபத ச்ருதி ருக்ர சப்தோ
வீர்யம் யச : சிவபதம் ச தவாபிதத்தே |
ஸர்வக்ஞ காம ரிபு சப்த ஸமர்த்திதெள ச
ஸார்வக்ஞ ராக விரஹெள பவத: புராரே ||
மேற்கூறிய ஈசத்வம் முதலிய ஆறு குணங்கள் சிவபிரானிடத்து உள்ளதற்கு ப்ரமாணம் சொல்லப்படுகிறது.
பதவுரை
ஈச்வரபத ச்ருதி : ஈச்வரன் என்ற பதமாகிய சுருதியானது, (இங்கு சுருதியென்றால் வேதமென்பது பொருள் அல்ல, பூர்வமீமாம்ஸையில் விநியோஜக ப்ரமாணங்கள் ஆறில் முதலாவதாகக் கூறப்பட்ட ஜைமினி பரிபாஷைப்படி, நிரபேக்ஷோ.. சப்த : ச்ருதி : – எந்த சப்தத்தால் கேட்டவுடனே பிறர் ஸந்தர்ப்பாதிகள் உதவியில்லாமல் அர்த்தம் அறியப்படுகிறதோ, அது சுருதி என்பது கருத்து) ஈச்வரன் கோயில் என்றால் ஸந்தர்ப்பம் தேவையில்லாமல் சிவபெருமான் ஆலயம் தான் அர்த்தமாகுமல்லவா).
தவ ஐச்வர்யம் – உம்மிடமிருக்கும் ஈசத்வத்தை அபிதத்தே – சொல்லுகிறது. உக்ரசப்த : – உக்ர என்ற சப்தம் (லிங்கவிதமாக), வீர்யம் – பலத்தையும் சிவபதம். யச : ச – புகழையும், அபிதத்தே – சொல்லுகிறது. புராரே – த்ரிபுரஸம்ஹாரக் கடவுளே, (ஸ்தூல ஸூக்ஷ்ம, காரண சரீரங்களை எரித்து, ஞானத்தால் முக்தியளிப்பவரே !) ஸார்வக்ஞராக விரஹெள – ஸகல அறிவும், ஆசையற்றலும், ஸர்வக்ஞ சப்த – ஸர்வக்ஞ சப்தத்தாலும், காமரிபு சப்த – காமரிபு – (காமனை எரித்தவர்) என்ற சப்தத்தாலும், ஸமர்த்திதெள பவத : – நிலைநாட்டப்பட்டவைகளாக இருக்கின்றன.
உக்ர என்ற பதம் குரூரன் என்ற பொருளைத் தராது பலமுள்ளவன், பிறரால் அவமதிக்கப்படாதவன் என்ற பொருளைத்தான் குறிக்கும்.
உக்ரோஸ்யுக்ரோஹம் ஸ ஜாதேஷுபூயாஸம்
என்ற பிரார்த்தனை காணப்படுகிறது. அங்கு நீங்கள் பிறரால் அவமதிக்கப்படாமல் பலவானாக இருக்கிறீர். நானும் அவ்வண்ணமே, பந்துக்களால் அவமதிக்கப்படாமல் பலவானாக இருக்க வேண்டும் என்று பிரார்த்திப்பது தான் பொருத்தமானது.
“உக்ரேப்ய: கச்சித் ஓஜீயாந்”
என்ற மற்ற ச்ருதியும், ஓ ஜீயாந் – பலமுள்ளவர்களுக்குள் மிகுந்த பலமுள்ளவர் என்ற பொருளைத்தான் கொடுக்கிறது.
அதவா, அசேஷ கல்யாண குணைக கன ஈச்வர : |
சிவ இத்யுச்யதே ஸத்பி : சிவதத்வார்த்த வேதிபி : ||
என்ற புராண வசனப்படி, ஸமஸ்த கல்யாணகுண கூட்டத்தைச் சொல்லும் பதம் சிவபதம் என்பது திண்ணம். அக்கூட்டத்தில் புகழும் அடங்கியபடியால், சிவபதம் புகழைச் சொல்வதாக மூலத்தில் கூறப்படுகிறது. இந்த்ரியம் முதலிய உதவி அபேக்ஷையில்லாமல் எல்லா விஷயத்தையும் அறியும் சக்தியுடைமை ஸர்வக்ஞ்யத்வம் எனப்படும். நமக்குக் கண் அபேக்ஷை இல்லாமல், ரூபஞானம் வருவதில்லை. ஸாதன அபேக்ஷையில்லாமல், ஸகல ஞானமும் இருக்க வேண்டும் அது தான் ஸார்வஞ்யம் என்பது வாயவீயஸம்ஹிதையில் தெளிவாக கூறப்பட்டிருக்கிறது. ஈச்வரனை நிலைநாட்ட எழுதப்பட்ட ந்யாய குஸுமாஞ்சலி என்ற கிரந்தத்தில் ஸ்ரீமான் உதயனாசார்யார் அவர்களும் ஈச்வரனுடைய ஸார்வஞ்யத்தை இவ்விதமே வர்ணித்துள்ளார்.
ஸாக்ஷாத் காரிணி, நித்ய யோகினி பாத்வார அனபேக்ஷ்ய ஸ்திதெள பூதார்த்தானுபவே என்று ஆரம்பித்து, தன்மே ப்ரமாணம் சிவ : என்று, சிவனே ஸர்வக்ஞர் என்று அபிப்பிராயத்துடன் முடித்திருக்கிறார்.

ஞாயிறு, 14 ஜூலை, 2019

மஹான்களின் பெயர்களும், கோத்ரங்களும்.

ஸ்ரீ ஆஞ்சநேயர் - கௌன்டின்ய
ஸ்ரீ சூர்யன், ஸ்ரீ யமன், ஸ்ரீசனி - காஸ்யப
ஸ்ரீ சந்திரன், ஸ்ரீ புதன் - ஆத்ரேய
ஸ்ரீ செவ்வாய் - பாரத்வாஜ
ஸ்ரீ குரு - ஆங்கீரஸ
ஸ்ரீ சுக்ரன் - பார்க்கவ
ஸ்ரீ ராகு - பைட்டீனஸ
ஸ்ரீ கேது - ஜைமினி
ஸ்ரீ ஆதிசங்கரர் - அத்ரி
ஸ்ரீ த்யாகப்ரம்மம் - ஹரிதஸ
ஸ்ரீ ராகவேந்திரர் - கௌதம
ஸ்ரீ அப்பைய தீஷிதர் - பாரத்வாஜ
ஸ்ரீ குழந்தையானந்தா - கௌன்டின்ய
ஸ்ரீ ரமணர் - பராசர
ஸ்ரீ சேஷாத்திரிஸ்வாமிகள் - பௌருகுத்ஸ
ஸ்ரீ மகாபெரியவா - ஹரிதஸ
ஸ்ரீ ஜெயேந்திர பெரியவா - உசத்ய
ஸ்ரீ சேங்காலிபுரம் பெரியவா - மௌத்கல்ய

வெள்ளி, 12 ஜூலை, 2019

பூண்டி ஆற்று ஸ்வாமிகள்

ஒரு நாட்டை ஆளும் மன்னர் தன் பணி நிமித்தம் எல்லா இடங்களுக்கும் சென்று நிறை குறைகளைக் கண்டறிவது இயலாத ஒன்று. அது போன்ற சந்தர்ப்பங்களில் தன் அந்தஸ்துக்குச் சமமான பிரதிநிதிகளை( மந்திரிகளை) குறிப்பிட்ட இடத்துக்கு அனுப்பி தகவல்களை அறிந்து வரச் சொல்வார். இது அரசாட்சிக்கு மட்டுமில்ல ஆன்மிகத்துக்கும் பொருந்தும். இங்கே மன்னன் என்பவன் மகேசனுக்கு சமம் மந்திரி என்பவர் மகான்களுக்குச் சமம். மேலே சொன்ன உதாரணத்தைப் போல் தன் ஒருவனால் மட்டும் குடிமக்களைப் பாதுகாக்க முடியாது என்று கருதியோ என்னவோ மகான்களைத் திக்கெங்கும் அவதரிக்க வைத்தான் ஆண்டவன். இறைவனிடம் மக்கள் வேண்டும் வரங்களை தங்களின் தவ பலத்தால் வழங்கினார்கள் மகான்கள். அவர்களது பிணிகளைத் தீர்த்தார்கள். இவரிடம் போ... உனது பிரச்சனை தீரும் என்று பகாவனே சில மகான்களை அடையாளம் காட்டி அனுப்பி வைத்த நிகழ்வுகளையும் நம் புராண வரலாற்றில் படித்து இன்புறலாம். இந்திரியங்களை அடக்கி ஆண்ட மகான்கள் இந்தியாவில் தான் பெருமளவில் பிறப்பெடுத்தார்கள். உலகளாவிய ஆன்மிகத்தில் இந்தியாவுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகம். இந்த மண்ணில் நிகழ்ந்த இதிகாசங்களும் புராணங்களுதான் ஆன்மிகத்தின் தேவையையும் அவசியத்தையும் அனைவருக்கும் அடிகோடிட்டுக் காட்டின.உதாரணத்துக்கு ராமாயணத்தையும் மகாபாரத்தையும் சொல்லலாம்.


ஆன்மிகம் என்பது தினமும் கோயிலுக்குப் போய் தொழும் கடவுள் வழிபாடு மட்டுமல்ல..கருணை தொண்டு பரோபகாரம் போன்ற  நற்சிந்தனைகளை நம் சிந்தையில் கொள்ள வேண்டும் அவற்றை நடைமுறைப்படுத்தவும் வேண்டும். அதுவே சிறந்த ஆன்மிகம். இப்படிப்பட்ட நற்குணங்களுடன் வாழ்ந்து முக்தி அடைந்தவர்கள்தான் மகான்கள். இறப்பு என்பது இவர்களது தேகத்துக்குத்தானே தவிர ஆன்மாவுக்கு அல்ல. இன்றும் பல அதிஷ்டானங்களில் இவர்கள் சூடசுமமாக நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். உள்ளன்போடு தன்னைத் தேடி வரும் பக்தர்களை ஆசிர்வதித்து அருள்கிறார்கள் அவர்களுடன் பேசுகிறார்கள். மகான்களில் பலர் கருவில் இருந்து உருக் கொண்டதாகத் தெரியவில்லை. அப்படி என்றால் எவ்விதம் இந்த பூமிக்கு வந்தார்கள் இவர்களுக்கு ஜனன ஜாதகம் கிடையாதா? ஆன்ம பலத்தை இவர்கள் அடைந்த ரகசியம் புரியாதா? இப்படிப் பல கேள்விகள் விடை தெரியாத புதிர்தான்!ஷீரடி பாபா திடீரென ஒரு நாள் ஷீர்டி கிராமத்தில் வேப்பமரத்தடியில் தோன்றியதாக அவரது திவ்ய சரித்திரம் சொல்கிறது. பூண்டி ஆற்று ஸ்வாமிகளும் அப்படித்தான்! 

மிக சமீப காலத்தில் ஸித்தி ஆன சித்த புருஷர் பூண்டி ஸ்வாமிகள்.1978-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மூன்றாம் நாள் வளர்பிறை திரயோதசி கூடிய அனுஷ நடசத்திரத்தன்று காலை சுமார் 9.40 மணிக்கு கலசப்பாக்கத்துக்கு அருகில் உள்ள பூண்டி கிராமத்தில் முக்தி ஆனார் இவர். மூன்று நாட்கள் பக்தர்களின் அஞ்சலி தரிசனத்துக்குப் பின் இவரது உடல் ஆகம விதிப்படி பத்மாசனத்துடன் சமாதி கண்டது.  ஸ்வாமிகளின் உடலை சமாதிக்குள் இறக்கிய பின் அவரது தேகத்தைச் சுற்றி மூட்டை மூட்டையாக விபூதி, தங்கம், வெள்ளி, நவரத்தினங்கள் மற்றும் நறுமணப் பொருட்களை இட்டு நிரப்பினார்கள் அவரது பக்தகோடிகள். நடமாடும் தெய்வம் என்று நாமெல்லாம் போற்றி வணங்கும் காஞ்சி மஹா பெரியவரால் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டவர் இந்த பூண்டி ஸ்வாமிகள்.

பூண்டி ஆற்று ஸ்வாமிகள் என்பது பிற்பாடு வந்த பெயர். அதற்கு முன் வரை இவர் அழுக்குச் சாமி என்றும் மூட்டைச் சாமி என்றும் பக்தர்களால் அழைக்கப்பட்டு வந்திருக்கிறார். அதற்குக் காரணமும் உண்டு. முதன் முதலாக ஸ்வாமிகள் கலசப்பாக்கத்துக்கு (திருவண்ணாமலை - வேலூர் சாலையில் வரும் ஊர்) வந்த போது ஓர் அழுக்கு மூட்டையுடன் காணப்பட்டாராம். தவிர உடலில் ஒன்றன் மேல் ஒன்றாக பல விதமான அழுக்குச் சட்டைகளை அணிந்திருந்தாராம். அதிலிருந்து இவரை இந்தப் பெயர்களிலேயே அழைக்க ஆரம்பித்தார்கள். ஆற்று ஸ்வாமிகள் என்று இவரை பக்தர்கள் அழைக்க ஆரம்பித்ததற்கு ஒரு தனிக் கதை உண்டு. அது 1943 ஆம் வருடம்... கலசப்பாக்கம் ஆற்றில் அப்போது தண்ணீர் இல்லை. எனவே சுட்டெரிக்கும் ஆற்று மணலில் அமர்ந்து தவம் புரிய ஆரம்பித்தார் ஸ்வாமிகள். சூரியனின் வெம்மையான கிரணங்கள் ஸ்வாமிகளைப் பாதிக்கக் கூடாது என்று விரும்பிய உள்ளூர்க்காரர்கள் சிலர் இவர் அமர்ந்திருந்த இடத்துக்கு மேலே நிழல் விழும் வண்ணம் ஒரு கூரையை அமைத்தனர். இவர் அமர்ந்த நேரமோ என்னவோ... கலசப்பாக்கம் பகுதியில் திடீரென பேய் மழை பிடித்துக் கொண்டது. எங்கெங்கோ கொட்டிய நீரெல்லாம் வடிகால் தேடி கடைசியில் இந்த ஆற்றில் கலந்தது. விளைவு ஆற்றின் இரு கரையெங்கும் தொட்டுக் கொண்டு பிரவாகம் எடுத்து ஓடியது வெள்ளம். ஸ்வாமிகளுக்குப் போட்டிருந்த கூரை வெள்ளத் தோடு அடித்துக் கொண்டு போய் விட்டது. மழை ஓரளவு விட்ட பிறகு உள்ளூர்க்காரர்கள் சிலர் ஓடி வந்து ஸ்வாமிகள் அமர்ந்திருந்த இடத்தை ஆராய்ந்தனர். அங்கே கூரையும் தெரியவில்லை ஸ்வாமிகளையும் காணவில்லை. பதை பதைத்துப் போனார்கள். ஸ்வாமிகள் ஜல சமாதி ஆகி விட்டதாகத் தீர்மானித்து விட்டார்கள்.

மூன்று நான்கு நாட்கள் ஓடின.  கலசப்பாக்கம் ஆற்றில் திரண்ட வெள்ளம் மெள்ள வடியத் தொடங்கியது.  அப்போது ஆற்றங்கரைக்கு வந்த விவசாயி ஒருவர். ஸ்வாமிகள் அமர்ந்து தவம் செய்த இடத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். அங்கே ஸ்வாமிகளுக்கு நிழல் தருவதற்காகப் போடப்பட்டிருந்த கூரையின் ஒரு பகுதி மணலில் குத்திட்டு நின்றிருந்தது. அட ஸ்வாமிகளுக்கு மேலே இருந்த கூரை ஆயிற்றே இது? என்று சந்தேகப்பட்டு அங்கே பள்ளம் பறித்தார். என்னே ஆச்சரியம்... ஆற்றின் உள்ளே சில அடி ஆழத்தில் ஸ்வாமிகள் எந்த நிலையில் அமர்ந்து நிஷ்டையைத் தொடங்கினாரோ. அதே நிலையில் அப்படியே காணப்பட்டார். பரம சந்தோஷம் அடைந்த அந்த விவசாயி ஊருக்குள் ஓடிப் போய் விஷயத்தைச் சொல்லி அனைவரையும் கூட்டி வந்தார். பிறகு ஸ்வாமிகளை அவரது நிஷ்டை கலையாமல் மெள்ள வெளியே தூக்கி வந்து கரையில் அமர்த்தினார்கள் ஊர்க்காரர்கள். வெள்ளத்தோடு போய் விட்டார் என்று கருதப் பட்டவர். அப்படியே உருக்குலை யாமல் மீண்டு வந்திருக்கிறார் என்றால் இவர் சாதராணப் பிறவி அல்ல என்று தீர்மானித்து அவருக்கு அபிஷேக ஆராதனை செய்தனர்.

கலசப்பாக்கத்துக்கு ஸ்வாமிகள் வந்த ஆரம்ப நாட்களில் ஊர் எல்லையில் இருக்கும் அடர்ந்த புதருக்குள் சென்று அமர்ந்து அங்கே நிஷ்டையில் கூடி விடுவது வழக்கம். இவர் இருக்கும் இடத்தை எவராலும் கண்டு பிடிக்க முடியாது. அவரது தவத்துக்கும் தொந்தரவு இருக்காது. கலசப்பாக்கத்துக்கு ஸ்வாமிகள் வந்த சில நாட்களுக்குப் பின் ஒரு நாள் கிராமவாசிகள் இருவர் இவரிடம் வந்தனர். இருவருமே நண்பர்கள். ஏதோ ஒரு பிரச்சனையைச் சொல்லி அதற்குத் தீர்வு கேட்டனர் ஸ்வாமிகளிடம். வந்தவர்களில் ஒருவனை உன்னிப்பாகக் கவனித்த ஸ்வாமிகள். நீ மண்ணில் போகப் போகிறாயப்பா என்றார். ஆனால் அந்த இருவருக்கும் இதன் பொருள் அப்போது விளங்க வில்லை. அங்கிருந்து கிளம்பிப் போனார்கள். மறுநாள் காலை அந்த இருவரின் ஒருவன் இறந்து விட்டான். அவனைப் பார்த்து தான் ஸ்வாமிகள் மண்ணில் போகப் போகிறாய் என்று முதல் நாள் குறிப்பால் சொல்லி இருக்கிறார். இதன் விளக்கம் பிறகு தான் இன்னொருவருக்குப் புரிந்தது. இப்படி ஸ்வாமிகளின் சித்து விளையாட்டுகள் ஏராளம் நிகழ்ந்துள்ளன. பூண்டி ஆற்று ஸ்வாமிகளின் சமாதித் திருக்கோயில் அமைந்திருக்கும் இடம் அருகே முன் காலத்தில் ஒரு ஒட்டுத் திண்ணை வீடு இருக்கும். இந்தத் திண்ணை தான் ஸ்வாமிகளின் குடியிருப்பு. 1960 ஆம் ஆண்டு முதல் அவர் சமாதி ஆன 1978 ஆம் ஆண்டு வரை சுமார் 19 வருடங்கள் இந்தத் திண்ணையை விட்டு நகராமல் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தார் ஸ்வாமிகள். இவர் மல ஜலம் கழித்தோ குளித்தோ எவரும் பார்த்ததில்லை. இதே இடத்தில் அமர்ந்த வண்ணம் ஞதான் தன்னைத் தேடி வந்த பலரது பிரச்சனைகளையும் தீர்த்தாராம்.

அந்தக் காலத்தில் இந்த வீட்டுக்கு எதிரே இருக்கும் டீக்கடைக்காரர் தினமும் காலை வேளையில் டீ கொண்டு வந்து கொடுப்பார். பெரும்பாலும் எதையும் வாங்கிச் சாப்பிடும் வழக்கம் ஸ்வாமிகளுக்கு இல்லை. எனவே அந்த டீக்கடைக்காரரே தான் கொண்டு வந்த டீயை ஸ்வாமிகளின் வாய்க்கு அருகே வைத்து சாப்பிட வைப்பாராம். இது போல் பக்தர்கள் கொண்டு வரும் உணவுப் பண்டங்களை தான் விரும்பினால் மட்டுமே உண்பாராம். வாழைப்பழம் போன்றவற்றை பக்தர்கள் தோலை உரித்துக் கொடுத்தால் ஒரு வாய் சாப்பிட்டு விட்டு அப்படியே அதை ஒரு மூலையில் தூக்கி எறிந்து விடுவாராம்.  இப்படித் தூக்கி எறியப்பட்ட பழக் குவியல்களும் உணவுப் பொருட்களும் ஒரு இடத்தில் குவிந்திருக்கும். ஆனால் அதில் இருந்து எந்த விதமான ஒரு தூர்நாற்றம் வராது. மாறாக சுவையான ஒரு மணம் வீசிக் கொண்டிருக்கும். பக்தர்கள் சிலர் ஸ்வாமிகளின் வாயில் சிகரெட்டை வைத்து தீக்குச்சியால் பற்ற வைப்பார்கள். அதை ஒரு இழுப்பு இழுத்து விட்டு தூக்கி எறிந்து விடுவார். அவரது வாயில் இருந்து புகை வெளியே வராது. இத்தகைய பக்தர்களுக்கு வேறு ஒரு சிகரெட்டையோ பீடியையோ தருவார். அதை ஸ்வாமிகளின் பிரசாதமாகக் கருதி எடுத்துச் செல்வார்கள்.

ஸ்வாமிகளின் மகிமைகளைப் பற்றி அறிந்த ஒரு பெண்மணி சென்னையில் இருந்து புறப்பட்டு  கலசப்பாக்கம் வந்தார். வருகின்ற வழியில் சில திருடர்கள் இந்தப் பெண்மணியை வழி மறித்து மிரட்டி அவர் அணிந்திருக்கும் தங்க ஆபரணங்களை எல்லாம் களவாடிச் சென்று விட்டனர். ஏதடா... ஸ்வாமிகளைப் பார்க்க வந்திருக்கும் இடத்தில் இப்படி ஆகிப்போச்சே? என்று அந்த பெண்மணி அழாத குறைதான். என்றாலும் ஸ்வாமிகளைத் தேடி ஊருக்குள் வந்திருக்கிறார். அப்போது ஸ்வாமிகள் ஆற்றங்கரையில் இருந்தார். களவு போன நகைகளை வேண்டி ஸ்வாமிகளின் திருப்பாதங்களில் விழுந்து புலம்பினார். அது வரை மவுனமாக இருந்த மகான் விடு... அழுது புலம்பாதே... கலசப்பாக்கத்தில் ஒருவன் இருக்கிறான். அவனிடம் போய் நான் கேட்டதாகச் சொல்லி ஒரு இரும்புக் கம்பி வாங்கிக் கொண்டு வா... என்று அந்த ஆசாமியின் பெயர் சொல்லி அனுப்பினார்.

தங்க நகைகள் களவு போனதற்கும் இரும்புக் கம்பி வாங்கிக் கொண்டு வருவதற்கும் என்ன தொடர்பு என்கிற சிந்தனையுடனேயே. ஸ்வாமிகள் சொன்ன ஆசாமியிடம் போய் விஷயத்தைச் சொன்னார். அவரும் ஒரு கம்பியை கொடுத்து அனுப்பினார். அதை பவ்யமாக எடுத்து வந்து ஆற்றில் உலவிக் கொண்டிருந்த ஸ்வாமிகளிடம் கொடுத்தார் பெண்மணி. அந்தக் கம்பியைத் தன் கையில் வாங்கி மேலும் கீழும் பார்த்து விட்டு அடுத்த விநாடியே பெண்மணிடம் கொடுத்தார் மகான். அதைக் கையில் வாங்கிய பெண்மணியின் விழிகளில் பிரகாசம். தன் கண்களையே அவரால் நம்ப முடியவில்லை. போம்மா போ... இது இப்ப இரும்பு இல்லே. சொக்கத் தங்கம். புலம்பாம பத்திரமா வீடு போய்ச் சேர் என்று அனுப்பி வைத்தார். அது போல் கை வேறு கால் வேறாகப் பிரித்துக் காண்பிக்கும் ஹடயோகக் காட்சியில் ஒரு சுடுகாடு அருகே ஸ்வாமிகள் இருந்த போது இதைப் பார்க்க நேர்ந்த கிராமவாசிகள் சிலர் திகைத்துப் போய் விட்டனர். பிறகு சிறிது நேரத்தில் அவை அனைத்தும் ஒன்றான போது வியந்திருக்கிறார்கள்.
திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் ஏராளமான குடில்கள் உண்டு. 1963 ஆம் ஆண்டு வாக்கில் அங்கே தங்கி இருந்தார் திருமதி தலையார்கான் (பார்ஸி) சித்தர்கள் சமாதிகளைக் கண்டு தரிசிப்பதற்காக இந்தப் பெண்மணி இங்கு தங்கி இருந்தார். அப்போது அவரது குடிலில் இருந்து விலை உயர்ந்த தங்கம் மற்றும் பிளாட்டினம் நகைகள் ஒரு நாள் திருடு போய் விட்டன. உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு அந்த அம்மையார் தன் புகாரைத் தெரிவித்தார். உயர்ந்த இடத்தில் செல்வாக்கு பெற்றவர் இந்தப் பெண்மணி என்பதால் ஏழு பிரிவுகளாக போலீஸ் படை சென்று திருவண்ணாமலையின் சுற்று வட்டாரக் கிராமங்களை முற்றுகையிட்டு திருட்டுக் கும்பலை சல்லடை போட்டுத் தேடியது.

இந்த ஏழு பிரிவில் அரக்கோணம் காவல் நிலையத்தில் சப்இன்ஸ்பெக்டராக இருந்த சுந்தரவரதன் குழுவினரும் ஒரு பிரிவினர். ஒரு ஹெட் கான்ஸ்டபிள் மற்றும் இரு கான்ஸ்டபிள் ஆகியோருடன் திருட்டுக் கும்பலைப் பிடிக்கப் புறப்பட்டார் சுந்தரவரதன். அரக்கோணத்தில் இருந்து கிளம்பி போளூர் வந்ததும். ஒரு கான்ஸ்டபிள் சுந்தரவதனிடம் சார்... பக்கத்திலேயே ஒரு சாமீ இருக்கார். ரொம்ப ராசியானவர். அவரைப் பார்த்து விட்டுப் போனா குற்றவாளியை நாம் பிடிச்சுடலாம் என்றார். அதன் படி இவர்கள் நால்வரும் போகிற வழியில் பூண்டி ஸ்வாமிகளைத் தரிசித்தனர். மகானை ஏற்கெனவே அறிந்த கான்ஸ்டபிள். அவரது வாயில் ஒரு சிகரெட்டை வைத்துப் பற்ற வைத்தார். அதை வழக்கம் போல் ஒரு இழப்பு இழுத்து விட்டுத் தூர எறிந்தார். பிறகு வேறு ஒரு சிகரெட்டைக் கொடுத்து போ போ... போற காரியம் நல்லா முடியும் என்றார். பிறகு அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு திருவண்ணாமலை வந்தனர். குற்றவாளியைப் பிடிக்க இவர்களுக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்ட தானிப்பாடி என்கிற கிராமத்துக்கு வந்தனர். அந்த ஊரில் கேடி கட்டய்யன் என்பவன் போலீஸ் பதிவேட்டில் இடம் பெற்ற திருடன். ஆகவே அவனது வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தலாம் என்று அங்கே சென்றனர் போலீஸார். இவர்கள் போன போது மாலை ஐந்து மணி இருக்கும். கட்டய்யனின் மனைவி மட்டும் அப்போது வீட்டில் இருந்தாள். புருஷன் எங்கேம்மா? என்று சுந்தரவரதன் விசாரணையை ஆரம்பிக்க... அதற்கு அவர் வயல் வேலைக்குப் போயிருக்காரு. வர்றதுக்கு ராவாயிடும் என்று சொன்னாள். அப்போது ஸ்வாமிகளிடம் சிகரெட் வாங்கிய கான்ஸ்டபிள். தம் அடிப்பதற்காகத் தனியே ஒதுங்கி வீட்டின் கொல்லைப் பக்கம் ஒரு வைக்கோல்போர் அருகே வந்தார்.
வீட்டின் உள்ளே பல வகையிலும் சோதித்த குழுவினர். சந்தேகப்படும்படியாக அங்கே எதுவும் இல்லை என்று முடிவெடுத்து வெளியே வந்தனர். வந்தவர்கள் தங்களுடன் வந்த கான்ஸ்டபிளை மட்டும் காணாமல் தேடிக் கொண்டிருந்தார்கள். அதே நேரம் சப்இன்ஸ்பெக்டர் தன்னைக் கவனித்து விடப் போகிறாரே என்கிற பயத்தில் சிகரெட்டைப் பற்ற வைத்து ஒரு இழுப்பு இழுத்தார் கான்ஸ்டபிள். அப்போது அவர் திடுக்கிடும்படியான ஒரு சம்பவம் நடந்தது. அதாவது வைக்கோல்போர் திடீரென அசைய ஆரம்பித்தது. இந்த நேரம் பார்த்து சுந்தரவரதனும் அவரது குழுவினரும் இங்கே வந்து விட்டனர்.  இவர்களைப் பார்த்த மாத்திரத்தில் சிகரெட்டைப் பட்டென்று கிழே போட்டு அணைத்து விட்ட கான்ஸ்டபிள் சார்... இந்த வைக்கோல்போர் மெள்ள அசையுது சார் என்றார். அவ்வளவு தான்.... சந்தேகப்பட்டவர்கள் பரபரவெனச் செயல்பட்டு வைக்கோல்போரைப் பிரிக்க முற்பட... உள்ளே கேடி கட்டய்யன் மறைந்திருந்ததைக் கண்டு பிடித்தனர். பிறகென்ன... அவனைப் பிடித்து முறைப்படி விசாரிக்க... பார்ஸி பெண்மணியிடம் திருடியது தானே என்பதை ஒப்புக் கொண்டான் நகைகள் மீட்கப்பட்டன.

பாத்தீங்களா சார்... பூண்டி சாமீ கொடுத்த சிகரெட்டைப் பத்த வைக்கறதுக்காகத் தோட்டத்துப் பக்கம் மட்டும் நான் போகலேன்னா ஒரு திருடனை இந்நேரம் கோட்டை விட்டிருப்போம். அதான் சாமியே ஆசிர்வாதம் பண்ணி இந்த சிகரெட்டை என்னிடம் கொடுத்திருக்கிறார் போலிருக்கு என்று சம்பந்தப்பட்ட கான்ஸ்டபிள் உற்சாகம் பொங்கச் சொல்லி இருக்கிறார். அதே போல் திரும்பும் போது பூண்டிக்கு இந்தக் குழு மீண்டும் வந்தது. சிகரெட் கான்ஸ்டபிளைப் பார்த்த பூண்டி மகான் என்னப்பா... போன காரியம் நல்லபடியா முடிந்தா? என்று கேட்க... அந்த போலீஸ் படையே மகானின் கால்களில் விழுந்து ஆசி பெற்றது. ஸ்வாமிகளின் சமாதி திருக்கோயில் கருங்கல்லால் வடிக்கப்பட்டுள்ளது. பலிபீடம் நந்திதேவர் முன்புறம் இருக்க... கருவறையில் லிங்கத் திருமேனியுடன் அதிஷ்டானம் அமைந்துள்ளது. கருவறைக்கு வெளியே இரு பக்கமும் விநாயகர் மற்றும் முருகப் பெருமானின் திருவடிவங்கள் கருவறையில் முன்புறம் லிங்கத் திருமேனி பின்புறம் திருவாசியுடன் ஸ்வாமிகளின் திருவுருவம். இடக்காலை மடித்து வைத்து வலக் காலைத் தொங்க விட்டபடி சின்முத்திரை காண்பித்து ஸ்வாமிகள் அருள் புரிந்து வருகிறார். ஸ்வாமிகளின் உற்ஸவர் விக்கிரகமோ நம்மை எல்லாம் ஆசி புரியும் வண்ணம் அமைந்துள்ளது. ஸ்வாமிகளுக்கு உடன் இருந்து பணிவிடை செய்த சுப்பிரமணிய சாமி என்பவர் இப்போதும் இங்கே வசித்து வருகிறார். ஸ்வாமிகளின் அன்புக்கும் அருளுக்கும் பாத்திரமான அவரது பக்தர்கள் இன்றைக்கு அவரது திருச்சந்நிதி தேடி வந்து தங்களது மனக் குறைகளைக் கொட்டி விட்டுச் செல்கிறார்கள். அந்தக் குறைகளைத் தானே களைந்து அவர்களைக் காத்து வருகிறார் இந்த அற்புத மகான்!

வியாழன், 11 ஜூலை, 2019

சுலோகம் 110

த்யானம் யதா பவதி தத்விஷயோ யதா த்வம்
யாத்ருக்குண : ச பகவந் அதிகாரிவர்க : |
ஸர்வாணி தாநி பவதாகம ஸம்ஹிதாபி :
கல்ல்பைரிவாத்வரவிதே : உபபாதிதாநி ||
பதவுரை

த்யானம் – மனதை ஒரே விஷயத்தில் ஏகாக்ரமாக செலுத்துவது, யதா பவதி – எப்படிச் செய்யவேண்டுமோ. அதுவும் தத் விஷய: த்வம் – அந்த த்யானத்துக்கும் விஷயமானது, த்யானம் செய்யப்பட்ட வேண்டிய நீர், யதா – எந்த எந்த குணங்களோடு கூடியிருக்கிறீர் என்பதும், அதிகாரி வர்க்க:- த்யானம் செய்ய யோக்யதையுள்ள ஜனங்கள் யாத்ருக்குண: ச – எவ்விதமான குணங்களோடு கூடியிருக்க வேண்டுமென்பதும், பகவந் – பகவானே, தாநி ஸர்வாணி – அவையெல்லாம், பவத் ஆகம ஸம்ஹிதாபி:- உமது ஆகமம் என்கிற, சிவாகமம் என்ற ஸம்ஹிதைகளால் (வேத துல்யமானதால் வேதவாசகமான ஸம்ஹிதாபதம், ஆகமத்துக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது) அத்வரவிதே :- யாகம் செய்ய வேண்டிய விதியின், தந்த்ராணி – முறைகள் கல்ப்பைரிவ – கல்ப்பஸூத்ர க்ரந்தங்களில் போல, உபபாதி தாநி – ரிஷி, சந்தஸ் தேவதா, விந்யோகம், ப்ராம்மணம், இவ்வைந்துகள் உள்பட நிருபிக்கப்பட்டிருக்கின்றன.
திருச்சி உறையூர் தில்லை காளி குங்கும அலங்காரம் திரு உருவம் இன்று 10:07:19 புதன்கிழமை பதிவு செய்துள்ளோம். திருச்சி உறையூர் சாலை ரோட்டில் உள்ள அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் ஆலயம் மிகவும் பழமை வாய்ந்த ஒன்றாகும். வ்வொரு மாதப் பிறப்பை முன்னிட்டு இங்குள்ள தில்லை காளிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மாதத்தில் இரண்டு பிரதோஷ பூஜைகளும் பெளர்ணமி பூஜை அன்னதானத்துடன் அமாவாசை பூஜை வேறு எங்கும் இல்லாத வகையில் வரமிளகாய் மற்றும் குருதி அபிஷேகம் குங்கும அலங்காரத்தோடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. கோயிலின் நடுவில் பாதாளத்தில் எட்டு கைகளுடன் காளி காட்சி தருகின்றாள். 300 ஆண்டுகளுக்கு முன்பு வேப்பமரத்தடியில் பதுவாக (உருவமற்ற நிலையில்) வேப்பமரத்திற்கு பூஜை செய்தார்கள். இப்பகுதியில் உள்ள மக்கள் பொங்கலிட்டு, சில பலிகள் இட்டு வழிபட்டு வந்தனர். நாளடைவில் காலச் சுழற்சி காரணமாக பூஜைகள் குறைந்து விட்டன. சில ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள மக்களின் கனவில் சென்று இங்குள்ள பாதாளத்தில் உள்ளேன் என்று கூறியது. ஓம் சக்தி ஓம்

ஒவ்வொரு வருடமும் தைமாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை அன்று மாதமாக இருக்கும் பெண்ணிற்கு என்னென்ன திருச்சடங்குகள் சம்பிரதாயங்கள் உள்ளனவோ அனைத்தையும் தான்தோன்றீஸ்வரர் உடனுறை குங்குமவல்லிக்கு செய்வித்து, பொன், காப்பு, வெள்ளிக் காப்பு, வேப்பிலை காப்பு மற்றும் ஐந்து விதமான சித்ரான்னங்கள் நிவேதனம் செய்வார்கள்.    லட்சக்கணக்கான வளையல்கள் அணிவித்தும் குங்குமம், மஞ்சள், திருமாங்கல்ய சரடு, மஞ்சள் கிழங்கு, என மங்கல பொருட்களை அம்பிகைக்குச் சாத்தி வழிபாடு செய்து சுகப்பிரசவமாக கர்ப்பிணிகளும், குழந்தை பாக்கியம் வேண்டி தம்பதிகளும், திருமணத்தடை அகல கன்னிப் பெண்களும், மாங்கல்ய பலம் பெற சுமங்கலிகளும் இந்த பிரசாதத்தை பெற்றுச் செல்கின்றனர்.



 லட்சக்கணக்கான வளையல்கள் அணிவித்தும் குங்குமம், மஞ்சள், திருமாங்கல்ய சரடு, மஞ்சள் கிழங்கு, என மங்கல பொருட்களை அம்பிகைக்குச் சாத்தி வழிபாடு செய்து சுகப்பிரசவமாக கர்ப்பிணிகளும், குழந்தை பாக்கியம் வேண்டி தம்பதிகளும், திருமணத்தடை அகல கன்னிப் பெண்களும் மாங்கல்ய பலம் பெற சுமங்கலிகளும் இந்த பிரசாதத்தை பெற்றுச் செல்கின்றனர். முதல் நாள் கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் நடைபெற வேண்டி பிரசாதம் வழங்கப்படும். இரண்டாம் நாள் சந்தான பாக்கியம் வேண்டி வருபவர்களுக்கு அம்பாள் குஹாம்பிகையாக காட்சியளிக்கின்றாள். சந்தான பாக்கியம் வேண்டி வரும் அன்பர்களுக்கும் வளையல் பிரசாதமாக வழங்கப்படும் மூன்றாம் நாள் அம்பாள் கல்யாண திருக்கோலத்தில் காட்சி அளிக்கின்றாள். அவளை தரிசனம் செய்தால் மணமாகாத (ஆண்-பெண்) இருபாலருக்கும் விரைவில் திருமணம் நடைபெறும். பெண்கள் மாங்கல்ய பலம் பெறவும், தீர்க்க சுமங்கலியாக இருக்கவும் வேண்டிக்கொண்டு பிரசாதம் வாங்கிச் செல்கின்றனர்.

இங்குள்ள தில்லை காளிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மாதத்தில் இரண்டு பிரதோஷ பூஜைகளும் பெளர்ணமி பூஜை அன்னதானத்துடன் அமாவாசை பூஜை வேறு எங்கும் இல்லாத வகையில் வரமிளகாய் மற்றும் குருதி அபிஷேகம் குங்கும அலங்காரத்தோடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. கோயிலின் நடுவில் பாதாளத்தில் எட்டு கைகளுடன் காளி காட்சி தருகின்றாள். 300 ஆண்டுகளுக்கு முன்பு வேப்பமரத்தடியில் பதுவாக (உருவமற்ற நிலையில்) வேப்பமரத்திற்கு பூஜை செய்தார்கள். இப்பகுதியில் உள்ள மக்கள் பொங்கலிட்டு சில பலிகள் இட்டு வழிபட்டு வந்தனர். நாளடைவில் காலச் சுழற்சி காரணமாக பூஜைகள் குறைந்து விட்டன. சில ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள மக்களின் கனவில் சென்று இங்குள்ள பாதாளத்தில் உள்ளேன் என்று கூறியது.

அதன்பிறகு அதற்கு பாதாளத்தில் கோயில் கட்டி பாதாள காளி என பிரதிஷ்டை செய்யப்பட்டது. மேற்பரப்பில் தில்லை காளி அமர்ந்துள்ளார். இத்தனை சிறப்புமிக்க ஆலயத்தின் கோபுரத்தில் ஆகாச காளி எழுந்தருளியிருக்கிறாள். இவளை அமாவாசையன்று மட்டுமே தரிசிக்கலாம். (அமாவாசை அன்று இரவு 8.30 - 10.00 மணி) இதுவரை எந்தவொரு ஆலயத்திலும் இல்லாத வகையில் பாதாள காளி, தில்லை காளி, ஆகாச காளி என மூன்று வகையான காளிகள் எழுந்தருளியுள்ளார்கள். பாதாளம் முதல் ஆலயம் வரை ஒரே நேர்கோட்டில் அமைந்த ஆலயம் இதுவேயாகும். இக்காளியை வழிபாடு செய்வது பெரும் பாக்கியமாக மக்கள் கருதுகின்றனர். ஏனெனில் இப்பிரபஞ்சத்தில் காளி சக்தியை மொத்தமாக வழிபாடு செய்யும் ஒரே இடம் இக்காளி ஆலயம்தான். இக்காளியை வழிபட்டால் எல்லாவிதமான பெண் தெய்வங்களையும் வழிபாடு செய்த பெரும் புண்ணியம் கிடைக்கும். அமாவாசையன்று மட்டும்தான் ஒரே நேரத்தில் தரிசனம் செய்ய முடியும்.

ஜெயகாளி: தில்லை காளிக்கு அருகில் ஜெயகாளி சந்நதியும் உள்ளது. ஜெயகாளியின் கோஷ்டத்தில் பிரத்யங்கரா, தக்ஷண காளியும் அமைந்துள்ளது. ஒவ்வொரு அமாவாசையன்றும் காளிக்கு வரமிளகாய் தீபம் ஏற்றப்படுகிறது. மிளகாய் தீபம் ஏற்றுவதால் பங்காளி சண்டை, பில்லி சூன்யம் நிவர்த்தி, குடும்பத்தில் அமைதி, தீராத வியாதிகள் நிவாரணம் அடைதல், வராத கடன் திரும்ப வருதல், செய்வினை கோளாறு, கண் திருஷ்டி ஆகியவற்றுக்கு சிறந்த பரிகாரம் என மிளகாய் தீபத்தை ஏற்றிக் கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு அமாவாசை அன்றும் இந்த தீபம் ஏற்றப்படும். மேலும் ஜெயகாளிக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ராகு காலத்தில் வாய் பேச இயலாத குழந்தைகள் சரளமாகப் பேசவும், கல்வியில் சிறக்கவும் இஞ்சி, தேன் பிரசாதமாக வழங்கப்படுகிறது. அனைத்து சிவாலயங்களில் பைரவர் விக்ரகம் காணப்படும். பைரவர் ஆலயத்திற்கு காவலாக இருக்கக் கூடியவர்.

 இந்தக் கோயில் கி.பி. 871ல் ராசகேசரிவர்மன் என்ற சிறப்பு பெயர் பெற்ற ஆதித்த சோழனால் கட்டப்பட்டிருக்கக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த ஆலயத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் தான்தோன்றீஸ்வரர். இறைவி குங்குமவல்லி. அன்னைக்கு காந்திமதி என்ற சிறப்புப் பெயரும் உண்டு. இந்தக் கோயில் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் இவற்றுடன் கூடியதாக உள்ளது. அர்த்த மண்டபத்திற்குள் நுழையும்முன்பு வாயிலின் இருபுறமும் மிகப்பெரிய இரண்டு துவாரபாலகர் சிலைகள் உள்ளன. கருவறையில் இறைவன் பெரிய உருவில் சிவலிங்கத் திருமேனியாக எழுந்தருளியுள்ளார்.

மகாமண்டபத்தில் அம்மன் சந்நதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. அம்பாள் நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் காட்சி தருகிறாள். உட்பிராகாரத்தில் இறைவனின் எதிரே நந்தியும் தென்புறம் தட்சிணாமூர்த்தியும் செல்வ விநாயகரும், மேல்புறம் தண்டாயுதபாணியும், வடக்கே சண்டிகேஸ்வரும், வடகிழக்கு மூலையில் நவகிரக மண்டபமும், தேவகோட்டத்தின் மேல்புறம் பிரம்மா மற்றும் துர்க்கையின் திருமேனிகளும் அழகுற அமைந்துள்ளன. உறையூரை ஆட்சி செய்த சூரவாதித்த சோழன் என்ற மன்னன் சாரமா முனிவரின் செவ்வந்தி மலர் நந்தவனத்தில் ஆதிசேஷனின் மகள்களாகிய ஏழு நாக கன்னியரைப் பார்த்தான். பார்த்த மாத்திரத்தில் மோகம் கொண்டான். அவன் அவர்களை மணம் செய்துகொள்ள ஆசைப்பட்டான். ஆனால், அந்த கன்னிகையர் மறுத்துவிட்டனர். அரசன் நாகலோகம் சென்று ஆதிசேஷனின் அனுமதி பெற்று அந்த கன்னிகையரில் ஒருத்தியான காந்திமதியை மணந்தான்.

காந்திமதி சிவபக்தி மிகுந்தவள். அந்த பக்தியுணர்வு காரணமாக திருச்சிராப்பள்ளி மலையில் எழுந்தருளியிருக்கும் தாயுமானவரை நாள்தோறும் சென்று வணங்கி வந்தாள். அவள் கர்ப்பவதியானபோதும் தினந்தோறும் நடந்து சென்று இறைவனை வழிபட்டு வந்தாள். ஒருநாள் கொடிய வெப்பம் காரணமாக வழியில் மயங்கி விழ அன்று இறைவனை வழிபட இயலவில்லையே என வருந்தினாள். இந்தப் புராணச் சான்றாகவும் கர்ப்பவதியான காந்திமதி அம்மையின் நினைவாகவும் ஒவ்வொரு வருடமும் தைமாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை அன்று மாதமாக இருக்கும் பெண்ணிற்கு என்னென்ன திருச்சடங்குகள் சம்பிரதாயங்கள் உள்ளனவோ அனைத்தையும் தான்தோன்றீஸ்வரர் உடனுறை குங்குமவல்லிக்கு செய்வித்து, பொன், காப்பு, வெள்ளிக் காப்பு, வேப்பிலை காப்பு மற்றும் ஐந்து விதமான சித்ரான்னங்கள் நிவேதனம் செய்வார்கள்.

லட்சக்கணக்கான வளையல்கள் அணிவித்தும் குங்குமம், மஞ்சள், திருமாங்கல்ய சரடு, மஞ்சள் கிழங்கு, என மங்கல பொருட்களை அம்பிகைக்குச் சாத்தி வழிபாடு செய்து சுகப்பிரசவமாக கர்ப்பிணிகளும், குழந்தை பாக்கியம் வேண்டி தம்பதிகளும், திருமணத்தடை அகல கன்னிப் பெண்களும், மாங்கல்ய பலம் பெற சுமங்கலிகளும் இந்த பிரசாதத்தை பெற்றுச் செல்கின்றனர். முதல் நாள் கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் நடைபெற வேண்டி பிரசாதம் வழங்கப்படும். இரண்டாம் நாள் சந்தான பாக்கியம் வேண்டி வருபவர்களுக்கு அம்பாள் குஹாம்பிகையாக காட்சியளிக்கின்றாள். சந்தான பாக்கியம் வேண்டி வரும் அன்பர்களுக்கும் வளையல் பிரசாதமாக வழங்கப்படும் மூன்றாம் நாள் அம்பாள் கல்யாண திருக்கோலத்தில் காட்சி அளிக்கின்றாள். அவளை தரிசனம் செய்தால் மணமாகாத (ஆண்-பெண்) இருபாலருக்கும் விரைவில் திருமணம் நடைபெறும். பெண்கள் மாங்கல்ய பலம் பெறவும், தீர்க்க சுமங்கலியாக இருக்கவும் வேண்டிக்கொண்டு பிரசாதம் வாங்கிச் செல்கின்றனர்.

இந்த ஆலயமானது ராஜகேசரிவர்மா என்ற சிறப்புப் பெயர் பெற்ற ஆதித்த சோழன் காலத்தில் கி.பி. 871-907ல் கட்டப்பட்டது. தேவகோட்டத்தின் மேற்புறம் லிங்கோத்பவர் காணப்படுகிறது. இக்கோயிலில் அம்மையப்பர் திருஉருவம் காணப்படுவதால் இக்கோயிலிலும் ஆதித்த சோழன் காலத்தை சேர்ந்ததாக இருக்க வேண்டும் எனக் கூறுகிறார்கள். ஒவ்வொரு மாதப் பிறப்பை முன்னிட்டு இங்குள்ள தில்லை காளிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மாதத்தில் இரண்டு பிரதோஷ பூஜைகளும் பெளர்ணமி பூஜை அன்னதானத்துடன் அமாவாசை பூஜை வேறு எங்கும் இல்லாத வகையில் வரமிளகாய் மற்றும் குருதி அபிஷேகம் குங்கும அலங்காரத்தோடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. கோயிலின் நடுவில் பாதாளத்தில் எட்டு கைகளுடன் காளி காட்சி தருகின்றாள். 300 ஆண்டுகளுக்கு முன்பு வேப்பமரத்தடியில் பதுவாக (உருவமற்ற நிலையில்) வேப்பமரத்திற்கு பூஜை செய்தார்கள். இப்பகுதியில் உள்ள மக்கள் பொங்கலிட்டு, சில பலிகள் இட்டு வழிபட்டு வந்தனர். நாளடைவில் காலச் சுழற்சி காரணமாக பூஜைகள் குறைந்து விட்டன. சில ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள மக்களின் கனவில் சென்று இங்குள்ள பாதாளத்தில் உள்ளேன் என்று கூறியது.

அதன்பிறகு அதற்கு பாதாளத்தில் கோயில் கட்டி பாதாள காளி என பிரதிஷ்டை செய்யப்பட்டது. மேற்பரப்பில் தில்லை காளி அமர்ந்துள்ளார். இத்தனை சிறப்புமிக்க ஆலயத்தின் கோபுரத்தில் ஆகாச காளி எழுந்தருளியிருக்கிறாள். இவளை அமாவாசையன்று மட்டுமே தரிசிக்கலாம். (அமாவாசை அன்று இரவு 8.30 - 10.00 மணி) இதுவரை எந்தவொரு ஆலயத்திலும் இல்லாத வகையில் பாதாள காளி, தில்லை காளி, ஆகாச காளி என மூன்று வகையான காளிகள் எழுந்தருளியுள்ளார்கள். பாதாளம் முதல் ஆலயம் வரை ஒரே நேர்கோட்டில் அமைந்த ஆலயம் இதுவேயாகும். இக்காளியை வழிபாடு செய்வது பெரும் பாக்கியமாக மக்கள் கருதுகின்றனர். ஏனெனில் இப்பிரபஞ்சத்தில் காளி சக்தியை மொத்தமாக வழிபாடு செய்யும் ஒரே இடம் இக்காளி ஆலயம்தான். இக்காளியை வழிபட்டால் எல்லாவிதமான பெண் தெய்வங்களையும் வழிபாடு செய்த பெரும் புண்ணியம் கிடைக்கும். அமாவாசையன்று மட்டும்தான் ஒரே நேரத்தில் தரிசனம் செய்ய முடியும்.

ஜெயகாளி: தில்லை காளிக்கு அருகில் ஜெயகாளி சந்நதியும் உள்ளது. ஜெயகாளியின் கோஷ்டத்தில் பிரத்யங்கரா, தக்ஷண காளியும் அமைந்துள்ளது. ஒவ்வொரு அமாவாசையன்றும் காளிக்கு வரமிளகாய் தீபம் ஏற்றப்படுகிறது. மிளகாய் தீபம் ஏற்றுவதால் பங்காளி சண்டை, பில்லி சூன்யம் நிவர்த்தி, குடும்பத்தில் அமைதி, தீராத வியாதிகள் நிவாரணம் அடைதல், வராத கடன் திரும்ப வருதல், செய்வினை கோளாறு, கண் திருஷ்டி ஆகியவற்றுக்கு சிறந்த பரிகாரம் என மிளகாய் தீபத்தை ஏற்றிக் கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு அமாவாசை அன்றும் இந்த தீபம் ஏற்றப்படும். மேலும் ஜெயகாளிக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ராகு காலத்தில் வாய் பேச இயலாத குழந்தைகள் சரளமாகப் பேசவும், கல்வியில் சிறக்கவும் இஞ்சி, தேன் பிரசாதமாக வழங்கப்படுகிறது. அனைத்து சிவாலயங்களில் பைரவர் விக்ரகம் காணப்படும். பைரவர் ஆலயத்திற்கு காவலாக இருக்கக் கூடியவர்.

இன்றும் கடைசியாக பைரவர்க்கு பூஜை நடத்தி ஆலயத்தின் சாவியை வைத்து பூஜித்து எடுத்துச் செல்வது சிவாலயங்களில் நடைபெறுவது வழக்கம். ஏனைய ஆலயங்களில் ஒரு பைரவர் மட்டும்தான் இருப்பார். இவ்வாலயத்தில் மட்டும்தான் சிறப்பாக அஷ்ட பைரவர் தமது மனைவி மற்றும் வாகனத்துடன் சிறப்பாக காட்சி தருகின்றார். பைரவர் திருவுருவத்தை பழங்காலம் தொட்டு அறிந்திருந்தாலும் இந்த சொர்ண பைரவர் திருவுருவத்தைக் கண்டறிவது அரிது. குறிப்பிட்ட சில ஆலயங்களில் இந்த சொர்ண பைரவரின் திருமேனி உள்ளது. இவ்வாலயத்தில் மட்டும்தான் நான்கரை அடி உயரத்தில் நான்கு திருக்கரங்களுடன் பொன்குடம் ஏந்திச் சொர்ண தேவியை அணைத்தவாறு, மக்கள் கேட்கக்கூடிய வரங்களையும், பொன் பொருள் தரக்கூடிய நிலையில் சொர்ண பைரவர் எழுந்து அருளியுள்ளார். இவ்வாலயத்தில் தேய்பிறை அஷ்டபூஜை சிறப்பு வாய்ந்தது. தில்லை காளிக்கு இடதுபுறம் கருடவராகியின் திருமேனி உள்ளது. நாமும் ஒருமுறை இறைவன் தான்தோன்றீஸ்வரரையும், அன்னை குங்குமவல்லியையும் தரிசித்து நற்பயனைப் பெறுவோம்.


108 திவ்ய தேசங்கள் : 19
அருள் மிகு பக்தவத்சல பெருமாள் கோவில்

மூலவர் : பக்தவத்சலப்பெருமாள், பத்தராவிப்பெருமாள்
உற்சவர் : பெரும் புறக்கடல்
தாயார் : கண்ணமங்கை நாயகி (அபிஷேகவல்லி)
ஸ்தல விருட்சம் : மகிழ மரம்
தீர்த்தம் : தர்ஷன புஷ்கரிணி
பழமை : 3000 வருடங்களுக்கு மேல்
புராண பெயர் : லட்சுமி வனம்
ஊர் : திருக்கண்ண மங்கை
மாவட்டம் : திருவாரூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள் : திருமங்கையாழ்வார்
   
 
மங்களாசாசனம் : பண்ணினைப் பண்ணில் நின்றதோர் பான்மையைப் பாலுள் நெய்யினை மாலுருவாய் நின்ற விண்ணினை விளங்கும் சுடர்ச் சோதியை வேள்வியை விளக்கினொளி தன்னை மண்ணினை மலையை யலை நீரினை மாலை மாமதியை மறையோர் தங்கள் கண்ணினைக் கண்களாரளவும் நின்று கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன். திருமங்கையாழ்வார்

திறக்கும் நேரம் : காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
   
முகவரி : அருள் மிகு பக்தவத்சலப்பெருமாள் திருக்கோவில்  திருக்கண்ணமங்கை : 610104 திருவாரூர் மாவட்டம். போன் : +91 4366 278 288, 98658 34676

பொது தகவல் : தரிசனம் கண்டவர்கள், வருணன், ரோமசமுனி, முப்பத்து முக்கோடி தேவர்கள்.
   
ஸ்தலபெருமை : பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. ஒரு தலத்திற்கு இருக்க வேண்டிய விமானம், ஆரண்யம், மண்டபம், தீர்த்தம், க்ஷேத்ரம், நதி, நகரம் என்ற ஏழு லட்சணங்களும் அமைய பெற்றதால்,"ஸப்த புண்ய க்ஷேத்ரம்', "ஸப்தாம்ருத க்ஷேத்ரம்' என்ற பெயர் பெற்றது. இத்தலத்தில் நடந்த திருமால்- திருமகள் திருமணத்தை காண தேவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து குவிந்ததோடு எப்போதும் இந்த திருக்கோலத்தை கண்டு கொண்டே இருக்க வேண்டும் என நினைத்தார்கள். எனவே தேனீக்கள் வடிவெடுத்து கூடுகட்டி அதில் இருந்து கொண்டு தினமும் பெருமாளின் தரிசனம் கண்டு மகிழ்கிறார்கள். இன்றும் கூட தாயார் சன்னதியின் வடபுறத்தில் ஒரு தேன் கூடு உள்ளது. இந்த தேன் கூடு எவ்வளவு காலமாக உள்ளது என்பது யாருக்கும் தெரியாது. இந்த தேனீக்கள் பக்தர்களை ஒன்றும் செய்வதில்லை. பெருமாளின் 108 திருப்பதிகளில் இது ஓர் அற்புதமாகும். மோட்சம் வேண்டுபவர்கள் ஒரு இரவு மட்டும் இங்கு தங்கினால் போதும் என்பது நம்பிக்கை. பக்தர்களுக்காக ஆவி போல வேகமாக வந்து அருள் பாலிப்பதால் பக்தர் ஆவி என்றாகி "பத்தராவி' என பெயர் பெற்றார் பெருமாள். இத்தல பெருமாள் உத்பல விமானத்தின் கீழ் அருள் பாலிக்கிறார். சிவபெருமான் நான்கு உருவம் எடுத்து இத்தலத்தின் நான்கு திசைகளையும் காத்து வருகிறார். பொதுவாக எல்லா கோயில்களிலும் நான்கு திருக்கரங்களுடன் விளங்கும் விஷ்வக்சேனர், பெருமாளின் சார்பாக லட்சுமியை சந்திக்க சென்றதால் இரண்டு திருக்கரங்களுடன் அழகிய வடிவில் அருள்பாலிக்கிறார்.

தர்ஷன புஷ்கரிணி : மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்த போது வானத்தை அளந்த காலை பிரம்மன் தன் கமண்டல நீரால் அபிஷேகம் செய்தார். அதிலிருந்து தெறித்து விழுந்த ஒரு துளி இவ்விடத்தில் விழுந்தது. அதுவே தர்ஷன (தரிசன)புஷ்கரணி ஆனது. சந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க அலைந்த போது இந்த புஷ்கரணியை கண்டான். இதைப் பார்த்த உடனேயே அவனது சாபம் தீர்ந்தது. எனவே தான் இதற்கு தர்ஷன புஷ்கரணி (தரிசித்த மாத்திரத்தில் பயன் தர வல்லது) என்ற பெயர் ஏற்பட்டது. இங்குள்ள தாயாரை பெருமாள் இந்த தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து பட்ட மகிஷியாக்கினார். இதனால் இந்த தாயாருக்கு அபிஷேகவல்லி என்று பெயர்.

திருக்கண்ண மங்கையாண்டான் : நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தை தொகுத்த நாதமுனிகளுக்கு திருக்கண்ணமங்கையாண்டான் என்ற சீடர் ஒருவர் இருந்தார். இவ்வூரில் பிறந்த இவர் பெருமாளிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். கோயிலைச் சுத்தம் செய்து பெருமாளே அடைக்கலம் என்று இருந்தார். ஒரு நாள் இவர் வேதபாராயணம் செய்து கொண்டே நாய் வடிவம் கொண்டு மூலஸ்தானத்திற்குள் ஓடி ஜோதியாகி இறைவனுடன் கலந்தார். இன்றும் ஆனி மாதம் திருவோண நட்சத்திரம் இவரின் மகா நட்சத்திரமாக கொண்டாடப்படுகிறது. இவரது பெயரே இவ்வூருக்கும் நிலைத்துவிட்டது.

ஸ்தல வரலாறு : பாற்கடலை கடைந்த போது அதிலிருந்து கற்பக விருட்சம், காமதேனு ஆகியவை தோன்றியது. இறுதியில் மகாலெட்சுமி வெளிப்பட்டாள். முதலில் அவள் பெருமாளின் அழகிய தோற்றத்தைக் கண்டாள். அதை மனதில் நிறுத்தி இத்தலம் வந்து பெருமாளை அடைய தவம் இருந்தாள். திருமகள் தவம் இருக்கும் விஷயமறிந்த பெருமாள் தனது மெய்க்காவலரான விஷ்வக்சேனரிடம் முகூர்த்த நாள் குறித்து தர சொன்னார். பின் லட்சுமிக்கு காட்சி தந்து, முப்பத்து முக்கோடி தேவர்கள் புடை சூழ பெருமாள் இங்கு வந்து லட்சுமியை திருமணம் செய்தார். பெருமாள் தன் பாற்கடலை விட்டு வெளியே வந்து இங்கிருந்த லட்சுமியை திருமணம் செய்ததால் பெருமாளுக்கு "பெரும்புறக்கடல்' என்ற திருநாமம் ஏற்பட்டது. லட்சுமி இங்கு தவம் செய்ததால் இத்தலத்திற்கு "லட்சுமி வனம்' என்ற பெயரும் இங்கேயே திருமணம் நடந்ததால் "கிருஷ்ண மங்கள க்ஷேத்திரம்' என்ற பெயரும் ஏற்பட்டது.