செவ்வாய், 21 ஜனவரி, 2014

சோம்நாத் கோவில் – தோன்றிய வரலாறு


சோம்நாத் கோவில்: சோம்நாத் கோவில் துவாரகையைப் போன்றே கடற்கரையில் அமைந்துள்ளது. அது பன்னிரெண்டு “துவாதச” லிங்கங்களில் ஒன்றாகும். இதிகாச, புராணங்களில் இதைப் பற்றிய விவரங்கள் அதிகமாகவே உள்ளன. சோம்நாத, ரெயில்வே ஸ்டேசன் கட்டப்படுவதற்கு முன்பு, வெராவல் ஸ்டேசன் தான் பிரதானமாக இருந்தது. 1948 வரை, பிரபாஸ் தீர்த் என்ற பெயர்தான் பிரபலமாக இருந்து வந்தது. பிறகு வெராவல் என்ற பெயர் பழக்கத்தில் வந்தது. அருகில் சீதலா என்ற இடத்தில் சூரியன் கோவில் உள்ளது. பாரசீகர் இவ்வூரை “மீனூர்” என்றழைத்தனர். அதாவது கடவுளின் நிழல் மற்றும் ஒளி என்று சேர்த்தழைக்கப்பட்டது. இங்கிருந்து, பல ஆசிய துறைமுகங்களுக்கு பொருட்கள் வியாபாரத்திற்காக எடுத்துச் செல்லப்பட்டன. பிறகு “அர்க் தீத்” அல்லது “பாஸ்கர தீத்” என்ற பெயர் சூரியவழிபாடு காரணமாக பிரசித்தியானது. இவ்வாறு ஒருபக்கம் சூரியன், மறுபக்கம் சந்திரன் என்று இருகுழுக்கள் உருவாகின. அவர்களும் தங்களை “சூரிய வம்சத்தினர்” மற்றும் “சந்திர வம்சத்தினர்” என்று அழைத்துக் கொண்டனர். “பிரபாஸ்” என்றால், சமஸ்கிருதத்தில் “ஓளி உள்ளது” என்று பொருள்.

குஜராத் மற்றும் மத்தியத் தரைக்கடல் பகுதிகளின் இணைப்பு, தொடர்புகள்: ஒருகாலத்தில் அரேபியா முதல் குஜராத்தின் மூக்குப் போன்ற பகுதி வரை இருந்த நிலப்பகுதி எல்லாமே சேர்ந்திருந்தது. இதனால், இப்பகுதிகளில் சூரியன்-சந்திரன் வழிபாடு பிரசித்தியாக இருந்தது. அரேபியாவில் சந்திரன் மற்றும் கிழக்குப் பக்கமாக செல்ல-செல்ல சூரிய வழிபாடு இருந்தது. இதனால் தான், அரேபியாவில் சந்திரனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஈரான் போன்ற பகுதிகளிலிருந்து, சூரியனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. சந்திரனையும், சூரியனையும் தனித்தனியாக வைத்துக் கொண்டு, நேரம், நாட்கள் முதலியவை கணக்கிடப் பட்டன. சந்திரமாதம் 30 நாட்கள் மற்றும் சூரிய மாதம் / சௌர மாதம் என்பதில் சற்று அதிகமான நாட்கள் என்றிருந்தது. இரண்டையும் இணைத்தபோது, “அதிக மாதம்” என்ற கணக்கீட்டில் சரிசெய்யப்பட்டது

அல்-உஜ்ஜா, அல்-மனத், அல்-லத்: சிவலிங்க வழிபாட்டின் தொன்மை, இந்த மத்தியத் தரைகடல் பகுதிகளில் அதிகமாகவே காணப்படுகின்றது. குரானில் “அல்லாவின் புத்திரிகள்” (daughters of Allah) என்று மூன்று பெயர்கள் காணப்படுகின்றன.

அல்-உஜ்ஜா
அல்-மனத்
அல்-லத்

இதில், அல்-மனத் என்பதுதான் சோம்நாத் என்று, முகமதியர் கருதியதாகத் தெரிகிறது. முகமது நபி மெக்காவில் இருந்த பண்டைய கோவில் வளாகத்தில் இருந்த விக்கிரகங்களை உடைத்தெரிந்ததாக சொல்கிறார்கள். ஒருகாலத்தில், மெக்கா உலகத்தின் மையப்பகுதி அல்லது நாபிப்பகுதி என்று கருதப்பட்டு, அங்கு வானியல் ரீதியாக அமைக்கப் பட்ட ஒரு கோவில் இருந்தது. நடுவில் ஒரு விக்கிரகம், அதைச் சுற்றி, 27 விக்கிரங்கள், அதையும் சுற்றி 360 விக்கிரங்கள் என்றிருந்தன. இவையெல்லாம், சூரிய மண்டலம் (Zodiac), நட்சத்திரக் கூட்டம் (Asterism), அண்டத்தின் 360 பாகைப்பிரிவுகள் (360 degrees divisions) என்று தெரிகிறது. முகமது நபி, விக்கிர ஆராதனை எதிர்ப்பு என்ற கொள்கையில், அவ்விக்கிரகங்களை எல்லாம், வானியல் மகத்துவம் அறியாது, உடைத்துவிட்டதாகத் தெரிகிறது. இருப்பினும், நடுவில் இருந்த விக்கிரகத்தை உடைக்க முற்பட்டபோது, அங்கிருந்த மக்கள் மிகவும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டதால், உடைக்காமல் விடுத்தார். அதுதான் காபாவிலுள்ள கல், ஏதோ ஒரு விண்மீனின் பகுதி, எரிநட்சத்திரம் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. நடுவில் இருந்த செங்குத்துக் கல் மற்றும் சுற்றியிருந்த விக்கிரங்களில் அமைப்பு, சூரியமானியாக (Sun dial) செயல்பட்டது எனத்தெரிகிறது. இரவு-பகல் என்பததை குறிப்பிட, சூரியன்-சந்திரன் விக்கிரகங்கள் இருந்ததாகச் சொல்லப்பட்டது.

முஹமது நபி வழி பின்பற்றிய கனிஜி முஹமது: முகமது நபி எப்படி விக்கிரகங்களை அழித்தாரோ, அதே போல, பின்வந்த முகமதிய மதம் மாறியவர்கள், அவர் சொன்னதை மற்றும் செய்ததை உதாரணமாக எடுத்துக் கொண்டு பின்பற்றி வந்தனர். அத்தகைய முகமது நபி சொன்னது மற்றும் செய்தது என்பவை தொகுக்கப் பட்டு “ஹதீஸ்” என்றும் வழங்கப்பட்டது. இடைக்காலத்தில், கஜினி என்ற ஊரைச் சேர்ந்த முகமது, அல்-லத், அல்-மனத் மற்றும் அல்-உஜ்ஜா விக்கிரகங்கள் எங்கிருக்கின்றன, அவற்றை அழித்தாலும் தானும் அவ்வாறே புகழ் பெறலாம் என்று தீர்மானித்தான். அவை கிழக்கில் உள்ளன என்று கஜினியில் வாழ்ந்த பிராமணர்கள் மூலமே அறிந்து கொண்டான். இதனால், பலமுறை அப்பகுதிகளுக்கு கொள்ளையெடிக்கச் சென்றான். அப்பொழுது சோமநாதபுரத்தில் இலிங்கம் இருந்தது. அதுதான், அல்-மனத் என்று (சோநாத் தன் அல்-மனத்) தீர்மானித்துக் கொண்டு அதனை உடைத்தான். ஆனால், அங்கிருந்தவர்கள், மறுபடி-மறுபடி அத்தகைய விக்கிரகத்தை உருவாக்கி, பிரதிஷ்டை செய்து வழிபட ஆரம்பித்தனர்.

விக்கிரகம் சாக்கு வைத்துக் கொண்டு கொள்ளையடித்த முறை: இதிலிருந்தே, அவர்கள் “விக்கிரங்களை” கடவுளாக பாவிக்கவில்லை, ஒன்றை உடைத்தால், மற்றதை வைத்துக் கொண்டு வழிபடுகிறார்கள் என்பதை அறிந்து கொண்டான். இதனால், அவர்களது செல்வத்தின் சிறப்பை அறிந்து, அதனை ஒடுக்க தீர்மானித்தான். இதனால் தான், விக்கிரகத்தைக் கவர்தல், கவர்ந்த விக்கிரகத்தைத் திருப்பிக் கொடுக்க தங்கம் என்றெல்லாம் ஆரம்பிக்கப்பட்டிருக்கும். இதனால், தங்கத்தினால் செய்யப்பட்ட விக்கிரகத்திற்கு பதிலாக கல்லினால் செய்யப்பட்ட விக்கிரங்கள் வைக்கப்பட்டன எனலாம். ஒரு குறிப்பின்படி, இலிங்கம் காற்றில் மிதந்து மிதந்து கொண்டிருந்தது என்றுள்ளது. அதாவது, காந்தங்களின் உதவியால் அது மிதந்து கொண்டிருந்தது என்றும் விளக்கம் கொடுத்தார்கள். அப்படியென்றால், கல்லில்லை, இரும்பினாலும் இலிங்கம் செய்யப்பட்டு வந்த பழக்கம் தெரியவருகிறது. இதனால் தான், ஏமாந்த கஜினி முகமது, தங்கம் கேட்டு கொடிய, குரூரக் காரியங்களில் ஈடுபட்டான்.

முதல் சோமநாதப்புரக் கோவில் (முதல் நூற்றாண்டு): பிரபாச பட்டிணத்தை இன்னொரு பாரம்பரியத்தின் படி பாசுபத வழிபாட்டு முறையோடு இணைக்கிறது. பாசுபத வழிபாட்டு ஆசாரியர்கள் பலர் இருந்திருக்கின்றனர். சரித்திரரீதியில், லகுலிஷ் [லகுட் + ஈஷ் = அதாவது கையில் கொம்பு அல்லது வேல் கொண்டவர்], என்பவர்நர்மதை நதிக் கரையில் உள்ள காயவரோனா என்ற இடத்தில் (பரூச்சிற்கு அருகில்) இரண்டாம் நூற்றாண்டில் பிறந்தவர், பாசுபதமுறையின் கடைசி ஆச்சாரியராகக் கருதப் படுகிறார்.இவர் சிவனின் மறுஅவதாரமாகவே கொண்டாடப் பட்டார். இவர்தாம் பாசுபத சைவத்தைத் தோற்றுவித்தவர் என்றும் அல்லது ஏற்கெனவே இருந்த சைவத்தை சீர்திருத்தி அமைத்தார் என்றும் ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். இவர் ஆஜீவக ஜைனப் பிரிவைச் சேர்ந்தவராக இருந்து, சைவராக மாறினார் என்றும் எடுத்துக் கட்டுகின்றனர். அதாவது முதல் நூற்றாண்டு காலத்தில் ஜைனம் அங்கு வலுவிழந்தது என்றாகிறது.

மொஹஞ்சதாரோ பசுபதி சிற்பம் போன்று, சோமநாத கோவிலின், கூரைப்பகுதியில், தெற்குப் புறத்தில் ஒரு சிற்பம் இருந்தது. இதனால், முதல் சோமநாத கோவில் முதல் நூற்றாண்டிலிருந்தே இருந்திருக்கக் கூடும்.

இரண்டாம் சோமநாதப்புரக் கோவில் (ஏழாம்நூற்றாண்டு CE): பாசுபத வழிபாடு மறைந்த பிறகு, சோமநாதரின் முக்கியத்துவம் அதிகமானது. கார்லே மற்றும் நாசிக் கல்வெட்டுகள் பிரபாச தீர்த்ததில் ஸ்கைத்திய அரசன் நாஹபாணன் (Scythian conquerer Nahapana) வந்து வழிபட்டதாக இருக்கிறது.இதேபோல பாக்டீரிய கிரேக்க, பாரசிவ மற்றும் வகடக அரசர்களும் சிவனை வழிபட்டுள்ளனர். அதாவது இப்பொழுதைய வடக்கில், வடக்கிழக்கில் சிவன் வழிபாடு பரவியிருந்தது அல்லது ஏற்கெனவே இருந்ததை அறிய முடிகிறது. ஆனால், குப்தர் காலத்தைய (320-500) ஒரு கல்வெட்டுக் கூட காணப்படாதது ஆச்சரியமாக உள்ளது.

இதற்கு கே. எம். முன்ஷி, குப்தர்கள் விஷ்ணு பக்தர்களாக இருந்தமையால், அங்கு செல்லக் கூடாது என்ற முறை இருந்திருக்கக் கூடும் என்று ஹேஷ்யமாக குறிப்பிடுகிறார். ஆனால், இந்திய சரித்திரத்தைப் பொறுத்த வரைக்கும், குப்தா சந்திர குப்தா மற்றும் மௌரிய சந்திரகுப்தா இவர்களை அடையாளம் காணும் சிக்கல் இருந்துள்ளமையால், சுமார் 1,200 வருட காலக் கணக்கீடு இடைவெளி இருப்பதாக, இந்திய காலக்கணக்கீட்டு வல்லுனர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். அதன்படி பார்த்தால், அக்காலத்தில் குப்தர்கள் ஆட்சி செய்திருக்கவே மாட்டார்கள், அதனால், குப்தர் காலத்தைய கல்வெட்டு ஒன்று கூட காணப்படாததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை எனலாம். ஹர்ஷனின் வழிவந்த தாரசேனா (640-649) இப்பகுதியை ஆண்டபோது, இரண்டாவது கோவில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. இடையில், இப்பகுதி பௌத்தர்களின் ஆதிக்கத்தில் இருந்தது. முதல் கோவில் இருந்த அதே இடத்தில் இக்கோவில் கட்டப்பட்டது எனும் போது, பௌத்தர்கள் காலத்தில் முதல்கோவில் இடிக்கப்பட்டிருக்க வேண்டும்.

மூன்றாம் சோமநாதப்புரக் கோவில் (8-9 நூற்றாண்டுகள் CE): 725-26 CE காலக்கட்டத்தில், இப்பகுதியில் நெருக்கடி நிலை ஏற்பட்டது. 711 CEல் சிந்து அரேபியர்களின் ஆட்சியின் கீழ் வந்ததால், அவர்கள் இப்பகுதிகளையும் தாக்க ஆரம்பித்தார்கள். காலிப் ஹிஷம் (724-743) ஜுனாயாத் என்பவனை கவர்னராக நியமித்தான். இவனுக்குப் பிறகு தமீம் என்பவன் கவர்னரான போது, அரேபியர் ஒரு படையுடன் 731-738 CE காலத்தில் இப்பகுதியில் நுழைந்தனர். புலிகேசி அவனிஜனஸ்ரயா என்பவன் இவர்களைத் தோற்கடித்தாலும், இடையே அரேபியர்கள் இக்கோவிலை அழித்திருக்கக் கூடும். இக்கோவிலின் பிரதான மண்டபம் இக்காலத்தைச் சேர்ந்ததாக இருப்பதால், இக்காலத்தில் மூன்றவது முறையாக இக்கோவில் கட்டப்பட்டதாதத் தெரிகிறது. 1025 வரை சோமநாதப்புரக் கோவில் சிறப்பாக விளங்கி வந்தது. அப்பொழுது தான் கஜின் முகமது படையெடுத்து வந்து இக்கோவிலை அழித்தான்.

நான்காம்சோமநாதப்புரக்கோவில் (1055-1066 CE): கஜினி சென்ற பிறகு, போஜ ராஜன் (1055-1066 CE) காலத்தில் ஆட்சிக்கு வந்தான். அப்பொழுது, சோமநாதர், சாளுக்கியர்களுக்கு காக்கும் கடவுளாக இருந்தார். சியக – II (Siyaka – II) 1045ல் தங்க துலாபாரம் கொடுத்ததாக கல்வெட்டு குறிப்பிடுகின்றது. அல்-பிருனி (1031 CE), மெக்கா எப்படி முகமதியருக்கு முக்கியமானதோ, சோமநாதபுரம் இந்துக்களுக்கு புனிதச்மானது என்று குறிப்பிட்டுள்ளார். அல்-பிருனி கட்ச் மற்றும் சிந்து பகுதிகளில் இருந்த பல சிவலிங்கங்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

ஐந்தாம்சோமநாதப்புரக்கோவில் (1169 CE): இதற்குள் சித்தராஜ என்ற கூர்ஜர அரசன் 1144 CEல் ஜைன மதத்தைத் தழுவியதாக உள்ளது. 1169 CEல் இக்கோவில் மறுபடியும் கட்டப்பட்டது என்றுள்ளதால், இடையில் மறுபடியும் இக்கோவில் இடிக்கப்பட்டது என்றாகிறது. ஜைனர்கள் ஆதிக்கத்தில் இருக்கும் போது, இக்கோவில் தாக்கப்பட்டிருக்கலாம். இவ்வாறு மறுபடி-மறுபடி இக்கோவில் இடிக்கப்படுவது, கட்டப்படுவது என்றுள்ளதால், இக்கோவில் இந்து மதத்தின் எழுச்சிற்கு ஒரு சின்னமாக அமைகிறது.

சோமநாத கோவில் மறுபடி-மறுபடி மக்களால் கட்டிப் புதுப்பித்து வந்த முறை, எழுச்சி: சோமநாத் கோவில், மற்ற கோவில்களுடன், முகமதியர்களால் பலமுறை சீரழிக்கப்பட்டுள்ளது, அழிக்கப்பட்டுள்ளது, சூரையாடப்பட்டுள்ளது. ஆனால், மக்களும் விடாமல், அதனைப் புதுப்பித்து வந்துள்ளனர்.

தேதி முகமதிய / முகலாய அரசன் / தளபதி கோவில் பாதிக்கப்பட்ட விதம்

1206 CEமுகமது கஜினி கஜினி முஹமது 17 முறை படையெடுத்து வந்தது கொள்ளையடிக்கத்தான்.

1298 CEஅல்லாவுத்தீன் கில்ஜி மததுவேஷத்தால் இக்கோவிலை அழித்தான்மஹ்மூத் மததுவேஷத்தால் இக்கோவிலை அழித்தான்
தில்லி படை மததுவேஷம் மற்றும் செல்வத்தைக் கொள்ளையடித்தல்

1396 CEஜாபர்கான் வாசி-உல்-உலக் கோவிலை இடித்து மசூதி கட்டினான், மக்களை வலுக்கட்டாயமாக மதம் மாற்றினான்.

1547 CEபோர்ச்சுகீசியர் கொள்ளை அடித்தனர்.

1659 / 1665 CEஔரங்கசீப் மததுவேஷத்தால் இக்கோவிலை அழித்தான்

1701 CEமுஹமது ஆஸம் புனர்-நிர்மாணம் செய்யமுடியாத அளவிற்கு அழிக்க ஆணையிட்டான்.

சோமநாத கோவில் மறுபடி-மறுபடி மக்களால் கட்டிப் புதுப்பித்து வந்த முறை, நம்பிக்கையாளர்களின் உறுதியான மனப்பாங்கைக் காட்டுகிறது. “அழிப்பவர்கள்–உருவாக்குகிறவர்கள்” என்பதில் பங்குக் கொள்ளும் மக்களின் மனநிலையையும் எடுத்துக் காட்டுகிறது. “வன்முறை-அமைதியானமுறை” என்ற நோக்கில் அவர்கள் செயல்பட்டது மெய்ப்பிக்கப் படுகிறது. உருவ-வழிபாடு, உருவ-வழிபாடு-எதிர்ப்பு என்பது ஒரு மறைப்பு-மறுப்புவாதமாகக் கொண்டனரேயன்றி அவர்கள் உண்மைனின்று விலகித்தான் நம்பிக்கையைக் கொண்டிருந்தனர். அதனால் தான் வன்முறையை, அழிப்பை, கொடுமைகளை, கொலைகளை மாற்றுமுறையாகக் கொண்டிருந்தாலும், எல்லா மக்களையும் மாற்றமுடியவில்லை. ஆகையால் தான் மக்கள் இக்கோவிலை விடாமல் புதுப்பித்து வந்துள்ளது ஒரு சாத்துவிகமான, அமைதியான, அஹிம்சை எழுச்சியைக் காட்டுகிறது. “நீ இடித்துக் கொண்டே இரு, நான் கட்டிக் கொண்டே இருக்கிறேன்” என்பது பலவீனம் அல்ல, பலம் தான் என்றும், மெய்ப்பித்தது.
 
 
சீயமங்கலம் அவனிபாஜன பல்லவேஸ்வரம்

அவனிபாஜன பல்லவேஸ்வரம் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் சீயமங்கலம் என்னும் சிற்றூரில் அமைந்துள்ளது. வேலூரிலிருந்து செல்ல சேத்துப்பட்டு வழியாக தேசூர் அடைந்தவுடன் 2 கி.மீ. தொலைவில் சீயமங்கலம். விழுப்புரத்திலிருந்து செல்ல விரும்பினால், திண்டிவனம் சென்று காஞ்சிபுரம் சாலையில் 20 கி.மீ. பயணித்தால் தெள்ளாரினை அடையலாம். அங்கிருந்து 8 கி.மீ. தொலைவில் சீயமங்கலம் நம்மை வரவேற்கும்.

எந்த தடத்தில் சென்றாலும் வழிநெடுக வறண்ட பூமி தான் என்றாலும் செல்லும் வழியெங்கும் நிலக்கடலை சாகுபடியில் செழித்த வயல்வெளிகளின் மரகத வண்ணம் மனதினை அள்ளும். அதையும் தாண்டி மரங்களற்ற பொட்டல்வெளி, வான்வெளியினையும், மலைமுகட்டினையும் தடையின்றிக் காணச் செய்து நமது பயணத்தினை இனிமையாக்கும்.

சீயமங்கலம், அவனிபாஜன குடைவரையை ஒன்றுமே தெரியாமல் 03.6.2010 அன்று ஒருமுறையும், கொஞ்சம் தெரிந்த பின் 20.6.2010 அன்று மறுமுறையும் சென்று வந்தேன். இவ்விரண்டு முறையும் நிகான் D90 மாடல் காமிராவை பயன்படுதினேன். குடைவரையின் குறை வெளிச்சத்தில் எடுத்த படங்கள் மணிரத்தினம் படங்கள் போல மங்கலாகத் தெரிந்ததால், கெனான் 7D காமிராவுக்கு மாறினேன். எனவே, 16.10.2010 அன்று 7D. கெனான் 5D Mark IIIக்கு மிகக்குறைந்த வெளிச்சமே போதும் என்று கேள்விப்பட்டதால் 19.9.2013 அன்று கடைசி தடவையாக 5D Mark III காமிராவைப் பயன்படுத்தினேன். (செயற்கை வெளிச்சத்தை (Flashgun) தவிர்ப்பது எனது முடிவு). ஒவ்வொரு முறையும் சென்று வரும் போது எதையோ பதிவு செய்யத் தவறி விட்டோமென்ற குற்ற உணர்வு கூட எனது நான்கு முறை படையெடுப்பிற்குக் காரணமாயிருக்கலாமோ என்னவோ!

சீயமங்கலம் குடைவரையை பார்க்க வேண்டும் என்று முதல் முறை திடீரென்றுதான் புறப்பட்டேன். பயணத்தை முன்னதாக திட்டமிடுவதென்பது எனது கட்டுப்பாட்டில் இல்லை என்பதால் எல்லா பயணங்களும் திடீர் பயணங்கள் தான். புத்தகங்களும் கேமராவும் எந்த நேரமும் என்னோடு பயணிக்கும். திட்டமிடக் கூடிய விஷயங்கள், குடவரையின் திசை, சூரிய வெளிச்சத்தின் திசை என்ன? கேமராவுடன் நான் எப்படி செயல்பட வேண்டும்....? என்பவை மட்டுமே. குடைவரை அல்லது கோவில் எந்த திசை நோக்கி அமைந்திருக்கிறதோ அதற்கேற்ப எனது பயணம் காலையிலா அல்லது மாலையிலா என்று மட்டும் முடிவு செய்வது வழக்கம்.

சீயமங்கலம் சிற்றூரின் அமைவிடத்தை தெரிவித்து அக்குடைவரையைக் காண உதவி செய்தவர் அவ்வூரில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கச் செயலாளர் திரு. அன்பழகன் ஆவார். தனது ஊரில் சரித்திரப் பின்னணியுடைய கோவில் ஒன்று இருப்பதையும், அதைக் காண நான் வந்திருப்பதையும் அறிந்து மிகவும் வியப்பிலாழ்ந்தார். கோவில் அர்ச்சகரை வரவழைத்து கோவிலைத் திறக்க ஏற்பாடு செய்து ஒவ்வொரு முறையும் சலிப்பின்றி அத்தனை உதவிகளையும் செய்து தந்தார். டாக்டர் அவர்கள் கையொப்பமிட்டுத் தந்த "மகேந்திரர் குடைவரைகள்" நூலை வாங்கிப் படித்து வந்தார்.

குடைவரை என்றால் என்னவென்றே தெரியாமல் முதன் முதலில் கோவில் வளாகத்தினுள் நுழைந்தேன். காலடியில் பச்சைக் கம்பளம் விரித்தாற் போல் புல்தரை, எதிரே நீலவான பின்னணியில் மரகத உடனுறை தூணாண்டார் திருக்கோவில் வளாகம். நான்கு நிலை கோபுரம் கடந்து சென்றால் கண்முன்னே விரிவது அவனிபாஜன பல்லவேஸ்வர வளாகம்!!

சற்றேறக்குறைய ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் இதோ நான் நின்று கொண்டிருக்கும் இடம் எத்தனை சீரும் சிறப்புடன் விளங்கியிருக்கும்? சமண, சாக்கிய சமயங்களின் பிடியிலிருந்து விடுதலை கிடைத்த மகிழ்ச்சி மனதில் விரவ, தங்களூரில் எடுப்பிக்கப்பட்டுள்ள புதிய சிவாலயம் நோக்கிச் செல்லும் ஆடவர்கள்; கலகலவென சிரிப்பொலி கட்டியம் கூற, மேனியில் பலவண்ண பட்டாடை மின்ன, வகிடெடுத்து இறுக்கிப் பின்னிய நெடுங்கூந்தலில் செருகி வைத்த மலர்களின் மணம் மெல்லிய காற்றில் மிதந்து வர, விடையேறும் பாகர் பூசனைக்கு தங்கத்தட்டில் தாமரை மலர்களையும், தமது நெஞ்சில் நம்பியின் நினைவையும் சுமந்து செல்லும் அழகு மங்கையர், தங்கள் தாய்மார்களின் கரம் பற்றி நடை பயிலும் சிறார்கள் என எத்தனை வண்ணமயமாய் இவ்வளாகம் ஜொலித்திருக்கும்!!

அரண்மனை மாந்தரின் குதிரை பூட்டிய இரதங்களின் ஒலியும், விரைந்து செல்லும் குதிரைகளின் குளம்போசையும் அடிக்கடி பரபரப்பினை தெரிவிக்கும். பல்லவப் பேரரசர் மகேந்திரரும் தமது வெள்ளைப் புரவியில் கம்பீரமாய் ஆரோகணித்து வந்து இறங்கியிருப்பார் இல்லையா? அவருடன் நரசிம்ம பல்லவரும் உடன் வந்து தானிருப்பாரில்லையா? அந்நேரம் மக்கள் விண்ணை முட்டும்படி எழுப்பிய வாழ்த்தொலி இதோ என் காதில் ஒலிக்கிறது. நான் நிற்கும் இந்த பூமி மட்டுமல்ல... இந்த வளாகம் முழுக்க அப்பேரறிவாளரின் பாதம் பட்டிருக்கும் இல்லையா?

சரி... மீண்டும் தற்காலத்திற்கே திரும்பி வருவோம்! இவ்வளாகம், வடமேற்கில் நுழைவாயில் கோபுரத்தையொட்டி ஒரு மண்டபம், வடபுறம் மேற்குப் பார்வையாய் இரண்டு சிறிய கோவில்கள், தென்புறம் பெரிய பாறையின் மீது அமைந்த சிறிய கோவில், மையப்பகுதியில் பலிமேடை, கொடித்தளம், மற்றும் நந்தி மண்டபத்தினை முன்னதாகக் கொண்டு மேற்குப் பார்வையாய் அவனிபாஜன பல்லவேஸ்வரம். தென்புறப் பாறை மீதேறினால் மேற்கில் ஒரு பேரேரி அமைந்திருப்பதைக் கண்டேன்.

வெளிமண்டபத்தைத் தாண்டி கோவிலுக்குள் சென்றால், அரை இருளினூடே திருநிலை அழகியின் மண்டபம். அதற்கு அடுத்து அடவி மண்டபம். குகைக்கோவில் என்றார்கள், இருள் இருக்கும். சரி... குகையைக் காணோமே என்ற வினாவுடன் வடபுறத்துப் படியேறி முக மண்டபத்தை அடைந்த பின்னர் தான் நான் ஒரு குகைக்கோவிலின் முன் நின்று கொண்டிருக்கிறேன் என்று புரிந்தது. தனியே நிற்கும் குன்றொன்றின் மேற்குப்புறச் சரிவின் கீழ்ப்பகுதியினைக் குடைவித்து அழகியதொரு கோவில் எடுப்பிக்கப்பட்டுள்ளது. குகைக்கோவிலின் முன்புறத்தில் மூன்று பக்கங்களிலும் மண்டபம் ஒன்று எழுப்பியுள்ளார்கள் என்று அறிந்து கொண்டேன்.

கருவறை, அர்த்தமண்டபம், முகமண்டம் என மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கும் குடைவரை முகப்பில் பெரிய அளவில் இரண்டு முழுத்தூண்களும், பக்கத்திற்கொன்றாக இரண்டு அரைத்தூண்களையும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இவ்விரு அரைத்தூண்களின் இரு மருங்கிலும் உள்ள கோட்டங்களில் வீரர்களின் அழகிய சிற்பம் காணப்படுகிறது.

அர்த்தமண்டபத்திலிருந்து கருவறையை அடைய பக்கவாட்டு அணைவுடன் சிறிய படிக்கட்டுகள். கருவறையின் இரு புறத்திலும் வாயிற்காவலர்கள் நின்றிருக்க கருவறையில் லிங்கத் திருமேனி. வாயிற்காவலர்களின் உடல்மொழி அதிசயமானது. அவர்களின் முகபாவங்களில் உயிர் மின்னியதைக் காண முடிந்தது. மகேந்திரர் உண்மையிலேயே அனுபவித்துதான் இக்குடவரையை அகழ்ந்திருக்க வேண்டும்.

நெடுங்காலமாக என்னுள் தங்கியிருந்த ஒரு கேள்வி இது. ஆதியும் அந்தமும் இல்லாத சிவத்தின் ஆடலுக்கு ஆனந்த தாண்டவம் (நடராஜ வடிவம்) என்றழைக்கப்படும் அந்த அழகிய வடிவத்தினை முதன் முதலில் எவர் அளித்திருப்பார்கள்?

இதற்குச் சரியான விடை அவனிபாஜனத்தில் கிடைத்தது. முகமண்டபத்தின் தென்புறத்து அரைத்தூணில் உள்ள சிறிய கோட்டத்தில் களி நடனம் புரியும் சிவபெருமானின் அற்புதமான சிற்பம் செதுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் காணப்படும் அனைத்து ஆனந்த தாண்டவ வடிவங்களுக்கும் இந்தச் சிற்பம்தான் முன்னோடி. இங்குதான் அது சிற்ப வடிவில் முதன்முதலில் பதிவாகியிருக்கிறது என்று டாக்டர் கலைக்கோவன் மூலம் அறிந்து கொண்ட போது என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

மற்றொரு அரைத்தூணில் சிறிய கோட்டத்தில் இருக்கும் நந்தியணுக்கரின் (ரிஷபாந்திகர்) சிற்பமும் மிக அழகானதே. இதில் இறைவன் மற்றும் தேவியின் உடல்மொழி அலாதியானது. மஹேந்திர பல்லவருக்கு அளிக்கப்பட்டிருக்கும் விருதுப் பெயர்கள் அனைத்துமே அர்த்தமுள்ளவைதான்!

ஊருக்கு வெளியே நிசப்தமாய் கோவில் வளாகம். மேற்குப் புறத்தில் அழகிய குன்றுகள். கோயிலின் அருகாமையில் பரந்து விரியும் ஏரி. இத்தகைய இனிமையான இடத்தினைத் தனது குடைவரைக்காகத் தேர்வு செய்த மாமன்னர் மகேந்திரர் சிறந்த வடிவமைப்பு, திட்டமிடல், திட்டமிட்டவற்றைச் செயல்படுத்தும் மனோதிடம், கடுமையான உழைப்பு ஆகிய சிறப்பியல்களால் காலம் கடந்து நிற்கின்றார். அவரது காலத்தில் வளர்ந்து கொண்டு வந்த பல்லவப் பேரரசினை பகைவரிடமிருந்து காப்பதோடன்றி விரிவாக்கம் செய்ய வேண்டிய சூழ்நிலையில் இத்தகைய கலைப்பணிகள் எப்படி சாத்தியமானது என்னும் பெருவியப்போடு கோயிலை விட்டு வெளி வந்தேன்.

திருக்கோயில் வெளிப்புறம்:திரும்பி வருகையில் போதிய வெளிச்சமின்றி மோசமாகப் பராமரிக்கப்பட்டு வரும் அழுக்கடைந்த ஆலய வளாகம் மனதில் ஒரு நெருடலாய் நிழலாடி மனது வலித்தது. முடிந்தவரை பராமரிப்புப் பணிகளைச் செய்து வரும் அர்ச்சகரும், இந்தியத் தொல்பொருள் அளவீட்டுத்துறையும், அரசும் மட்டிலும் என்ன செய்திட இயலும்? தமிழர் ஒரு காலத்தில் வாழ்ந்த வாழ்க்கையை அவர்தம் கலாச்சாரம் பேசும் சிற்பக் களஞ்சியங்களைக் கொண்டு விளங்கும் கோயில் வளாகங்களை விளைந்த நெல்லை உலர வைக்கும் களமாகவும், சேமிப்புக் கிடங்குகளாகவும், ஆடு, மாடுகளுக்கு மேய்ச்சல் நிலமாகவும் மாற்றிந் தானம் செய்து விட்டு,

மெல்லப் பல தெய்வம் கூட்டி வளர்த்து
வெறுங்கதைகள் சேர்த்துப் – பல
கள்ள மதங்கள் பரப்புதற் கோர்மறை
காட்டவும் வல்ல....

மாக்கள் பின்னே மக்கள் செல்லத் துவங்கி விட்ட நிலை பெரும் கவலையளிக்கிறது. எங்கெங்கோ சுற்றியலைவதை விட்டுவிட்டுப் போற்றிப் புரக்கப்பட வேண்டிய சரித்திரப் பின்னணி பெற்ற கோயில்களை நோக்கி மக்கள் தங்களது உள்முகப் பயணத்தினை துவங்கினால் மட்டுமே இந்த அவல நிலையினை மாறும்.

மாறவேண்டும்.
(6 photos)
காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய இடங்கள்

ஏகாம்பரேஸ்வரர் கோயில்
:தென்னிந்தியாவின் உயரமான கோபுரங்களில் ஒன்றாக ஏகாம்பரேஸ்வரர் கோயிலின் ராஜகோபுரம் திகழ்கிறது. கோபுரத்தின் உயரம் 57 மீட்டர்.தொன்மைமிக்க இந்தக் கோயில் பல்லவ, சோழ மற்றும் விஜயநகர அரசர்களால்
புதுப்பிக்கப்பட்டது. இங்குள்ள பிருத்வி லிங்கம் தென்னிந்தியாவின்
பஞ்சலிங்கங்களில் ஒன்று என்ற பெருமையுடையது. விசாலமான ஐந்து தாழ்வாரங்களும் ஆயிரங்கால் மண்டபமும் அழகின் சிறப்பு. இத்தலத்து
அம்பாள், ஆவுடையார் மீது நின்ற கோலத்தில் இருக்கிறாள். இவளே இங்கு பிரதானம். ஆணும், பெண்ணும் சமம் என்பதை சிவன், அர்த்தநாரீஸ்வரஅம்சம் மூலமாக உணர்த்தியதைப்போல, இவள் ஆவுடையார் மீது நின்றபடி, சிவனில் சக்தி அடக்கம் என உணர்த்துகிறாள். இவளது பாதத்தின் முன்பு ஸ்ரீசக்கரம் உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய இடங்கள்

கந்த கோட்டம் சுப்ரமண்யசாமி கோயில்


காஞ்சிநகரம் புராணத்தில் இடம்பெற சுப்ரமணியசாமி கோயிலும் ஒரு காரணம். சிவன், பார்வதி இருவருக்கும் நடுவே முருகன் அமர்ந்திருப்பதுபோல ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயிலுக்கும் காமாட்சியம்மன் கோயிலுக்கும் நடுவே இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இப்போது காணப்படும் இக்கோயில்
1915இல் கட்டப்பட்டது.