புதன், 29 ஜூலை, 2020

274 சிவாலயங்கள்:அருள்மிகு பாலுகந்தநாதர் திருக்கோயில்

மூலவர் : பாலுகந்தநாதர்
அம்மன் : பெரியநாயகி
தல விருட்சம் : அத்தி
தீர்த்தம் : மண்ணியாறு
பழமை :  2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : வீராக்கண், திருஆப்பாடி
ஊர் : திருவாய்பாடி
மாவட்டம் : தஞ்சாவூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள் : திருநாவுக்கரசர்
      
ஆதியும் அறிவுமாகி அறிவுனுட் செறிவுமாகிச் சோதியுட் சுடருமாகித் தூநெறிக்கு ஒருவனாகிப் பாதியிற் பெண்ணுமாகிப் பரவுவார் பாங்கராகி வேதியர் வாழும் சேய்ஞல் விரும்பும் ஆப்பாடியாரே-திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 40வது தலம்.
 
விழா : சிவராத்திரி அமாவாசையில் சண்டேஸ்வரர் பிரமோற்சவம் கொண்டாடப்படுகிறது.  
      
திறக்கும் நேரம்:காலை 07:00 மணி முதல் 09:00 மணி வரை, மாலை 05:00 மணி முதல் இரவு 07.30 மணி வரை திறந்திருக்கும். 
    
முகவரி : அருள்மிகு பாலுகந்தநாதர் திருக்கோயில் திருவாய்ப்பாடி - 612 504. திருப்பனந்தாள் போஸ்ட். திருவிடைமருதூர் வட்டம். தஞ்சாவூர் மாவட்டம்.போன்:+91- 94421 67104
 
தகவல் : முன் மண்டபம் வவ்வால் நெற்றி அமைப்புள்ளது. வலப்பக்கத்தில் அம்மன் சன்னதி தெற்கு நோக்கி உள்ளது.
மகா மண்டபத்தில் பைரவர், சூரியன், சனிபகவான், நடராஜர் சபை, பைரவர் சன்னதிகள் உள்ளன.

ஸ்தல பெருமை : அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஈஸ்வர பட்டம் பெற்றவர் இவர். அருகிலுள்ள சேய்ஞலூர் இவரது அவதார தலமாகவும் திருவாய்ப்பாடி லிங்கம் அமைத்து வழிபட்டு முக்தி பெற்ற தலமாகவும் போற்றப்படுகிறது. மூலஸ்தானத்தின் அருகிலேயே சண்டிகேஸ்வரர் அருள் பாலிப்பது சிறப்பு.
 
ஸ்தல வரலாறு : எச்சதத்தன் என்ற வேதியருக்கும் பவித்திரைக்கும் மகனாக பிறந்தவர் விசாரசருமன். இவர் தன் இளம் வயதில் அனைத்தும் கற்றார். ஏழாவது வயதில் குல முறைப்படி உபநயனம் நடந்தது. சிவனே அனைத்தும் என நினைத்து அதன்படி வாழ்ந்து வந்தார். ஒரு நாள் கன்றுக்குட்டி தன்னை மேய்க்கும் இடையனை முட்ட பாய்ந்தது. உடனே அவன் கம்பால் அடித்தான். இதைக்கண்ட விசாரசருமன் தானே அப்பசுக்களை மேய்த்தான். தாயன்புடன் இவன் மேய்த்ததால் முன்னை விட அதிக பால் கொடுத்தது. விசாரசருமன் எப்போதும் சிவசிந்தனையிலேயே இருந்ததால் மண்ணியாற்றங்கரையில் வெண் மணலால் ஆத்திமர நிழலின் கீழ் சிவலிங்கம் செய்து வழிபட்டு வந்தான். அதற்கு பசுக்கள் சொரியும் பாலை அபிஷேகம் செய்தான். இருந்தாலும் பசுவின் சொந்தக்காரருக்கு சரியான அளவு பால் கிடைத்து வந்தது. விசாரசருமரின் இந்த செயலை பார்த்த சிலர் வேள்விக்கு உபயோகப்படுத்தும் பாலை வீணாக்குவதாக கூறினர். இவனது தந்தையும் இதை கேள்விப்பட்டு மறைந்திருந்து நடப்பதை பார்த்தார். இதையெல்லாம் அறியாத விசாரசருமன் எப்போதும் போல் நீராடி விட்டு தன் பூஜைகளை தொடர்ந்தான். பசுவின் பாலால் அபிஷேகமும் செய்தான். இதைப்பார்த்த தந்தை அவனை அடித்ததுடன் பால் குடங்களையும் தட்டி விட்டார். சிவ பூஜையில் ஆழ்ந்திருந்த விசாரசருமன் பூஜைக்கு இடையூறு செய்தவரை ஒரு கோலால் தாக்க அதுவே மழுவாக மாறி கால்களை வெட்டியது. கால்கள் வெட்டப்பெற்றவர் தன் தந்தை என்பதை அறியாத விசாரசருமன் மீண்டும் சிவ பூஜையில் ஆழ்ந்தார். இதைக்கண்ட சிவபெருமான் பார்வதியுடன் தரிசனம் தந்து என் மீது கொண்ட பக்தியால் தந்தையின் கால்களை வெட்டினாய். இனி நானே உனக்கு தந்தையாவேன் என கூறி தன் கழுத்திலிருந்த கொன்றை மாலையை விசாரசருமனுக்கு சூட்டி சண்டிகேஸ்வரர் ஆக்கினார். இறைவன் விசாரசருமன் அபிஷேகம் செய்த பாலை விரும்பி ஏற்றதால் பாலுகந்தநாதர் ஆனார். விசாரசருமன் "ஆ'(பசு) மேய்த்த தலமாதலால், "ஆப்பாடி' ஆனது.
மனவலிமை பெற!

ஸிம்ஹீம் ஸிம் ஹமுகீம் பகவத;
ஸ்ரீபைரவஸ்யோல்லஸத்
சூல ஸ்தூல கபால பாச டமரு
வ்யக்ரோக்ர ஹஸ்தாம்புஜாம்
தம்ஷ்ட்ராகோடி விசங்கடாஸ்ய
குஹராம் ஆரக்த நேத்ரத்ரயீம்
பாலேந்து த்யுதிமௌளிகாம் பகவதீம்
ப்ரத்யங்கிராம் பாவயே

அன்பரிடம் பேரன்பு கொண்டவள் பிரத்யங்கிரா.இவளைத் துதிப்பவர்க்கு பகை,எதிர்ப்பு, போன்றவை தாமாகவே விலகும்.மனோபலம் மிகும். தினமும் காலையில் குளித்துவிட்டு மனதில் ஸ்ரீப்ரத்யங்கிரா தேவியை எண்ணிக்கொண்டு 108 முறை(குறைந்தது 12 முறை)இந்தத் துதியைச் சொல்லவும்.அஷ்டமி,அமாவாசை தினங்களில் அம்பிகைக்கு செவ்வரளி அல்லது சிவப்பு மலர்களால் மாலை சூட்டி அர்ச்சிப்பது சிறப்பு.
ஆண்டாளுக்கு வயது 5020!

ஆடிதோறும் பூரநட்சத்திரம் வந்து கொண்டுதான் இருந்தது. ஆனால் ஆண்டாள் அவதரித்த பின் தான் அந்நாளுக்கு தனிச்சிறப்பு உண்டானது. அவள் பூமிப்பிராட்டியின் அம்சம். கிணற்றில் விழுந்த குழந்தையைக் காக்க எண்ணிய தாய் தானே கிணற்றுக்குள் குதிப்பதைப் போல பாசம் ஆசை  என்னும் கிணற்றுக்குள் தத்தளித்துக் கொண்டிருக்கும் உயிர்களை  காப்பாற்றி பரந்தாமனிடம் சேர்க்க பூவுலகில் அவதரித்தாள்.

பிறந்த வருடம் : ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள நந்தவனத்தில் ஒரு துளசிச் செடியின் அடியில் கலியுகம் பிறந்து 98வதாக நிகழ்ந்த நளவருடத்தில் ஆண்டாள் அவதரித்தாள். ஆடிமாதம் வளர்பிறை பஞ்சமி திதியும் பூரநட்சத்திரமும் செவ்வாய்க்கிழமையும் கூடிய நன்னாளில் பெரியாழ்வார்  அவளைக் கண்டெடுத்தார். தற்போது கலியுகம் 5117 நடக்கிறது. இவ்வகையில் ஆண்டாளுக்கு இவ்வாண்டு 5020 வது பிறந்த நாள். தான் பூஜித்து  வந்த வடபத்ரசாயி (ஸ்ரீவில்லிபுத்தூர் மூலவர்) குழந்தையை எடுத்துச் சென்றார். அவளுக்கு கோதை என்னும் பெயரிட்டு வளர்த்து வரும்படி அவர்  அருள்புரிந்தார். கோதை என்றால் நல்வாக்கு அருள்பவள் எனப்பொருள். ஆண்டாள் பெருமாளிடம் கொண்ட பக்தி காதலாக மாறியது. அவரையே தன் கணவனாக நினைத்து வாழத் தொடங்கினாள். கண்ணனோடு வாழ்ந்த கோபியர்களில் ஒருத்தியாக தன்னைக் கருதிக் கொண்டாள். ஸ்ரீவில்லி புத்தூரை கண்ணன் வசித்த ஆயர்பாடியாக கற்பனை செய்து அங்குள்ள பெண்களை கோபியராகச் சித்தரித்து அனைவருமாக இணைந்து பாவை நான்பு நோற்பதாக முப்பது பாடல்கள் எழுதினாள். அதுவே திருப்பாவை என்னும் இனிய நூல் ஆயிற்று.
ஆடியில் கூழ் வார்த்தலுக்கும் அம்மனுக்கும் என்ன தொடர்பு?

ஆடி மாதம் வந்து விட்டால் போதும் சின்னஞ்சிறிய அம்மன் கோயிலில் கூட கூழ் வார்த்தல் என்பது விமரிசையாக நடக்கும். கூழ் வார்த்தலுக்கும் அம்மனுக்கும் என்ன தொடர்பு? ஜமதக்னி முனிவரும் அவர் மனைவியான ரேணுகா தேவியும் இல்லறத்தை நல்லறமாக நடத்தி வந்தனர். தன்னுவன், அனுவன், விஸ்வாவசு, பரசுராமன் என நால்வர் பிறந்தார்கள். அதன் பின் ஒருசமயம் கார்த்தவீரியனின் பிள்ளைகள் ஜமதக்னி முனிவரிடம் பகை  கொண்டு அவரைக் கொன்று விட்டார்கள். கணவரை இழந்த ரேணுகா தேவி உயிர் வாழ விரும்பாமல் தீயில் இறங்கினாள். அப்போது இந்திரன் வருணனை அழைத்து மழை பொழியச் செய்தான். தீ அணைந்தது. ஆனால் அதற்குள் ரேணுகாதேவியின் ஆடைகள் எல்லாம் எரிந்து போய் உடலில் தீக்கொப்புளங்கள் உண்டாயின. அவள் ஆடை இல்லாத நிலையில் காட்டில் இருந்த வேப்பிலையைப் பறித்து ஆடை போல் அணிந்து கொண்டாள். இதுவே அம்மனுக்கு வேப்பிலை ஆடை அணியும் வழக்கம் உருவான வரலாறு. வேப்பிலை ஆடையில் புறப்பட்ட ரேணுகா தேவி காட்டில் வாழ்ந்தவர்களிடம் பசிக்கிறது என உணவு கேட்டாள். அங்கிருந்தவர்கள் சற்று விலகி நின்று அம்மா! நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள். நீயோ அந்தணப் பெண்ணைப் போலத் தோற்றமளிக்கிறாய். உனக்கு எங்கள் உணவைத் தரக் கூடாது. அதற்குப் பதிலாக பச்சரிசி மாவு வெல்லம், பானகம், இளநீர் இவற்றைப் பெற்றுக் கொள் என்று அளித்தனர். இந்த பச்சரிசிமாவையே திருநெல்வேலி மாவட்ட கிராமங்களில் துள்ளு மாவு என்கிறார்கள். உரலில் இட்டு இடிக்கும் போது  துள்ளிக்குதிப்பதால் இந்தப் பெயர் வந்தது. அரிசி மாவு கொண்டு ரேணுகா கூழ் காய்ச்சிக் குடித்து பசியாறினாள். அவர்கள் தந்ததைக் கொண்டு பசியாறிக் கொண்ட ரேணுகாதேவி சலவைத் தொழிலாளர்கள் வாழும் பகுதிக்கு வந்து அவர்கள் அளித்த ஆடைகளை அணிந்து கொண்டாள். அப்போது ரேணுகாதேவியின் மனதில் மீண்டும் துயரம் எழுந்தது. கணவரை எண்ணிக் கண்ணீர் சிந்தினாள். சிவபெருமான் அவளுக்கு காட்சியளித்து ரேணுகாதேவி! சக்தியின் அம்சம் நீ ! மனித குலத்தை தீமையில் இருந்து காப்பாற்றும் சக்தியை உனக்கு அளிக்கிறேன். நீ கொண்ட கொப்புளங்கள் மக்களுக்கு அம்மைக் கொப்புளங்களாக ஆகும். நீ அணிந்த வேப்பிலை ஆடையே அந்த துன்பத்தை நீக்கும் மருந்தாக அமையும். நீ உணவாகக்  கொண்ட பானகம், இளநீர், பச்சரிசி மாவு, வெல்லம் ஆகியவற்றை பக்தர்கள் நைவேத்யமாகப் படைப்பார்கள். உன்னை நாடி வழிபடுவோரின் துயரத்தை நீக்கு! என்று வரம் அளித்து மறைந்தார். அதன் பின் ரேணுகா தேவி முத்துமாரி எனப் பெயர் பெற்றாள். இந்த நிகழ்ச்சி மழைக்காலத்தின்  தொடக்கமான ஆடி மாதத்தில் நடந்தது. அதன் காரணமாகவே மாரியம்மன் கோயில்களில் ஆடி மாதத்தில் கூழ் வார்த்தலும் பெண்கள் வேப்பிலை  ஆடை கட்டி வலம் வரும் வேண்டுதலும் நடக்கின்றன. ஆகாய மழையும் அருள் மழையும் பொழியுமாறு அன்னை மாரியம்மன் புனிதமான ஆடி மாதத்தில் வேண்டுவோம்.
இன்று முதல் எட்டு நாட்களுக்கு  அஷ்டலட்சுமிகள் பற்றிய விளக்கம்.

1. கஜலட்சுமி : நான்கு கரங்களுடனும் அதில் இரு கைகள் தாமரை மலரை ஏந்த ஒரு கரம் உன்னதமான அபய முத்திரை அளிக்க நூற்றெட்டு இதழ்த் தாமரை மலரில் வசிப்பவள். வெளுத்த திருமேனி இவளுடையது பேரொளிப் பிழம்பு என விளங்கும் பேரழகு கொண்டவள் பல வகைப்பட்ட அணிமணிகளும் பூண்டு தூய ஆடையும் அணிந்தவள். இவளின் இருபுறங்களிலும் சாமரமேந்தித் தோழியர் பணி செய்யப்பட்டாடை புனைந்து அது அவளது திருவடிகள் வரை தொங்கும். இதுவே கஜலட்சுமியின் திரு அம்சமாகும்.
காவிரி வடகரை தலங்கள்

பதினான்காவது தலம்

சீகாழி தற்போது சீர்காழி

மூலவர்                        -  பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர்,
                                           சட்டைநாதர்
அம்பாள்                       -  பெரியநாயகி என்கிற
                                           திருநிலைநாயகி
தலமரம்                       -  மூங்கில் , பாரிஜாதம் ,
                                           பவளமல்லி
தீர்த்தம்                         -  பிரம்மதீர்த்தம் முதலான 22
                                           தீர்த்தங்கள்
புராண பெயர்              -   பிரம்மபுரம், சீகாழி
தற்போதைய பெயர்  -   சீர்காழி
மாவட்டம்                    -   நாகப்பட்டினம்
மாநிலம்                        -   தமிழ்நாடு
பாடியவர்கள்               -  சம்பந்தர், மாணிக்கவாசகர்

 * தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 14வது தலம்
* சம்பந்தர் பிறந்த தலம்
* சம்பந்தர் பிரம்மதீர்த்தக் கரையில் உமையம்மை முலைப்பால் உண்ட தலம்
* சம்பந்தர் முதல் தேவார பதிகம் பாடிய தலம்
* பிரம்மன் வழிபட்ட தலம் ( பிரம்மபுரம் )
* சிவனார் மூங்கில் காட்டில் காட்சியளித்த தலம் ( வேணுபுரம் )
* சூரனுக்கு பயந்த தேவர்கள் அடைக்கலமான தலம் ( புகலி )
* வியாழன் வழிபட்டு குருத்தன்மை பெற்ற தலம் ( வெங்குரு )
* பிரளய காலத்தில் சிவனார் உமையம்மையுடன் 64 கலைகளை ஆடையாகவும், சுத்தமாயைத் தோணியாகவும் கொண்டு வந்து தங்கிய தலம் ( தோணிபுரம் )
* வராகமூர்த்தி வழிபட்ட தலம் ( பூந்தராய் )
* ராகு வழிபட்ட தலம் ( சிரபுரம் )
* சண்பைப்புல்லால் மாண்ட யாதவ குலத்தோர் பழி பற்றாதிருக்க கண்ணன் வழிபட்ட தலம் ( சண்பை )
* நடராஜருடன் வாதாடிய பாவம் போக காளி வழிபட்ட தலம் ( sri காளி - சீகாழி - சீர்காழி )
* மச்சகந்தியை கூடிய கொச்சையாம் பழிச்சொல் பராசரர் வழிபட்ட தலம் ( கொச்சைவயம் )
* மலத்தொகுதி நீங்க உரோமசர் வழிபட்ட தலம் ( கழுமலம் )
* புறா வடிவில் வந்த அக்னியால் சிபிமன்னன் நற்கதி அடைந்த தலம் ( புறவம் )
* இத்தலத்தில் 22 தீர்த்தங்கள் உள்ளன. அதில் பிரம்மதீர்த்தம், காளி, பராசர, புறவநதி, கழுமலநதி, விநாயகநதி ஆகியவை முக்கிய தீர்த்தங்கள் ஆகும்.  
* இந்திரனுக்காக இத்தல இறைவன் மூங்கில் மரமாக காட்சி கொடுத்ததால் மூங்கில் தல விருட்சமாக உள்ளது.  
* மூலஸ்தானத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். பிரம்மா, விஷ்ணு, சிவன், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி, மூலவர், உற்சவர் என அனைவருமே மூலஸ்தானத்தில் கைலாய காட்சியில் உள்ள ஒரே தலம் சீர்காழி தான்.
* விநாயகர்  ரொணம் தீர்த்த விநாயகர்  என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்
* கணபாத நாயனார் தொண்டு செய்து வாழ்ந்த தலம்
* முருகன் , சூரியன் , சந்திரன் , அக்னி , ஆதிசேஷன் , கேது , வியாசர் முதலியோர் வழிபட்டு அருள் பெற்ற தலம்
* வழக்குகளில் பிரச்னை உள்ளவர்கள் , குழந்தைப்பேறு வேண்டுவோர்கள் வழிபடவேண்டிய தலம்
* பிரம்மபுரீஸ்வரர் - லிங்கவடிவம் ,
தோணியப்பர் ( ஞானப்பால் தந்தவர் ) - குருவடிவம் ,
சட்டைநாதர் - சங்கமவடிவம்
* வாமனர் செருக்குற வடுகநாதர் மார்பிலடித்து வீழ்த்தினார். பின் லட்சுமியின் வேண்டுகோளுக்கிணங்க விஷ்ணுவை உயிர்ப்பித்தார். விஷ்ணுவின் வேண்டுகோளுக்கிணங்கி எலும்பை கதையாகவும் , தோலை சட்டையாகவும் போர்த்து அருள் செய்த வடிவமே சட்டைநாதர் வடிவமாகும்
* கருவறை வெளிச்சுவரில் சம்பந்தர் வரலாறு ஓவியமாக
* சம்பந்தர் மூல மற்றும் உற்சவ மூர்த்தங்கள். அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், வெளியே தனியாக உள்ளனர்.
* சுவாமி சன்னதிக்கும் அம்மன் சன்னதிக்கும் நடுவே சம்பந்தர் சன்னதி உள்ளது
* மூன்று அடுக்குகளாக கோயில் ( பிரம்மபுரீஸ்வரர் , மலை மேல் தோணியப்பர் , அவருக்கு மேல் சட்டைநாதர் தனி சந்நிதியில் )
* சோமாஸ்கந்தர் சந்நிதி தனியழகுடன்
* வெள்ளிக்கிழமைகளில் இரவு 10மணிக்கு மேல் சட்டைநாதருக்கு சிறப்பு பூஜைகள்
* மூலவர் , அம்பாள் இருவரும் கிழக்கு நோக்கி
* அம்பாள் சந்நிதி தனிக்கோயிலாக
* சக்திபீடங்களுள் ஒன்றாக கூறப்படுகிறது. இத்தல அம்மன் மகாலட்சுமி சொரூபமாக சக்தி பீடத்தில் 11வது பீடமாக அமர்ந்துள்ளார்
*பிரம்மனுக்கு ஏற்பட்ட அகங்காரம் நீக்கிய தலம்.
* பிரளய காலத்தில் பார்வதிக்கு ஞான உபதேசம் செய்த தலம்.
* அதிக தேவார பதிகங்கள் கொண்ட தலம்
* ஆஸ்தான மண்டபம் , வலம்புரி மண்டபம் மிகவும் சிறப்பானவை
* வலம்புரி மண்டபத்தில் அஷ்ட பைரவர்களும் காட்சியளிக்கின்றனர். காசியை காட்டிலும் மிகப்பெரிய பைரவ க்ஷேத்திரம். இங்கு அசிதாங்க பைரவர், ருருபைரவர், சண்டபைரவர், குரோத பைரவர், உண்மத்த பைரவர், சம்ஹார பைரவர், பீஷண பைரவர், அகால பைரவர் என அஷ்ட பைரவர்களும் உருவமாக உள்ளனர்.   எனவே தான் காழியில் பாதி காசி என்பர். இவர்களது சன்னதிக்குள் சட்டை அணிய அனுமதியில்லை. அஷ்டமி திதிகளில் சிறப்பு பூஜை உண்டு.
* 18 சித்தர்களில் ஒருவரான சட்டை முனி சித்தர் இங்கு ஜீவ சமாதி ஆகி உள்ளார். சிவன் கோயில் பிரகாரத்தில் இவரது ஜீவ சமாதிக்கு மேல் ஒரு பீடம் உள்ளது. இங்கிருந்தபடியே உச்சியிலிருக்கும் சட்டைநாதரை தரிசிக்க முடியும். வெள்ளிக்கிழமைகளில் இரவு 10 மணிக்கு இந்த பீடத்திற்கு அபிஷேகம் நடக்கும். இரவு 12 மணிக்கு இதற்கு புனுகு சட்டம் சாத்தி, வடை மாலை அணிவித்து, பாசி பருப்பு பாயசம் நைவேத்யம் செய்யப் படுகிறது
* இக்கோயில் மூன்று அடுக்குகளைக் கொண்ட குன்றுக்கோயிலாக விளங்குகிறது. கீழ் தளத்தில் பிரம்மபுரீஸ்வரர், திருநிலை நாயகி அருள்பாலிக்கின்றனர். இது லிங்க மூர்த்தம் எனப்படும். இவருக்கு 6 கால பூஜை நடக்கிறது. பிரம்மன் இத்தலத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்தார். இதனால் இத்தல இறைவன் பிரம்மபுரீஸ்வரர் ஆனார். நடு அடுக்கில், உமா-மகேஸ்வரர் உள்ளனர். இவரை "தோணியப்பர்' என அழைக்கிறார்கள். இவருக்கு 4 கால பூஜை நடக்கிறது. இந்தக் குன்றையும் . "தோணிமலை' என்கின்றனர்.
* தை அமாவாசை , வைகாசி மூலம் , ஐப்பசி சதயம் நாட்களில் சம்பந்தருக்கு சிறப்பு வழிபாடுகள்
* அம்பாளுக்கு ஆடிப்பூரம், நவராத்திரி காலங்களில் சிறப்பு வழிபாடுகள்
* சித்திரை திருவாதிரையில் பிரம்மோற்ஸவம். இதில் 2ம் நாள் சம்பந்தருக்கு அம்பாள் பால் தந்த உற்சவம் பிரம்ம தீர்த்தத்தின் கரையில் நடக்கிறது. அன்றைய தினம் ஞானசம்பந்தருக்கு நைவேத்யம் செய்த பாலை பிரசாதமாக சாப்பிட்டால் மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம். மலைக் கோயிலில் அருள்பாலிக்கும் உமா-மகேஸ்வரருக்கு சித்திரை, ஆடி, ஐப்பசி, தை மாதப்பிறப்புகளிலும், திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை மற்றும் சிவராத்திரி நாட்களிலும் தைலாபிஷேகம் நடைபெறும். ஆடிப்பூரம், நவராத்திரி. தை அமாவாசை, வைகாசி மூலம், ஆனி ரோகிணி, ஐப்பசி சதயம் ஆகிய நாட்களிலும் சிறப்பு பூஜை உண்டு.

தரிசன நேரம்

காலை 06:00 - 12:00 &
மாலை 04:00 - 09:00

தொடர்புக்கு

04364-270235 ,
94430 - 53195

மயிலாடுதுறையில் இருந்து 21 கிமீ தொலைவிலும் , சிதம்பரத்தில் இருந்து 19 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது இந்த சீர்காழி சிவத்தலம்.


செவ்வாய், 28 ஜூலை, 2020

உதீத மகா சித்த புருஷர் - தக்கோலம்!

சென்னை அருகே சென்னை – அரக்கோணம் இருப்புப் பாதையில் தக்கோலம் என்னும் சிவத்தலத்தில் பிரஹார மதில் சுவரின் மேல் சுதை ரூபத்தில் தரிசனம் தருகின்ற ஸ்ரீஉததீ மஹா சித்புருஷரின் உருவத்தையும், கோயிலின் உட்புறம் ஒரு இரகசிய சந்நிதி அறை போல் அமைந்துள்ள ஸ்ரீஉததீ மாமுனியின் ஜீவ சமாதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள லிங்க மூர்த்தியையும் பற்றி பார்ப்போம்.  உதீத மஹரிஷி என்று அழைப்பாரும் உண்டு. பாடல் பெற்ற ஸ்தலமாக விளங்குகின்ற தக்கோலத் திருத்தலத்தில் தான் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன் வாழ்ந்து அருள்புரிந்து அன்றும் இன்றும் என்றும் ஏகாந்த ஜோதியாய் விளங்கும் ஸ்ரீஉததீ சித்புருஷர் நமக்கு அருள்புரிகின்றார்.

தக்கோலம் சிவாலயத்தில் உள்ள ஜீவசமாதி ஆலயத்தில் உறைந்திருக்கும் ஸ்ரீஉததீ சித்புருஷரானவர் நமக்குப் பலவிதமான அருள்வழி முறைகளை எடுத்துக் காட்டியுள்ளார்கள்.  கோயிலில் நுழைந்தவுடனேயே உயர்ந்த மதில் சுவரில் யோகாசனத்தில் அமர்ந்திருக்கின்ற ஸ்ரீஉததீ மாமுனிவரை கழுத்தை உயர்த்தி வான் நோக்கி மேலே நாம் தரிசனம் செய்வதே வசுபூரண தரிசனமாகும்.. இதுவரையில் சமநிலையில் கண்களை நோக்கியவாறோ அல்லது பாதாளத்தில் இருக்கின்ற தெய்வ மூர்த்தியையோ (திருச்சி மலைக்கோட்டை பாதாள அய்யனார், திருஅண்ணாமலை ஸ்ரீரமண மஹரிஷி வழிபட்ட பாதாளலிங்கம், விருத்தாலசத்திலுள்ள ஸ்ரீஆழத்துப் பிள்ளையார்) ஆஜானுபாகுவாக 10, 20 அடி உயரமுள்ள தெய்வ மூர்த்திகளை நாம் தரிசிக்கின்றோமே தவிர, என்றேனும் அண்ணாந்து பார்த்து கோபுர தரிசனம் போல ஏதாவது சித்புருஷ தரிசனம் நாம் செய்துள்ளோமா? இதுதான் உததீ மாமுனியின் உத்தமப் பேறாகும். உததீ மாமுனிவர் பலரையும் அரிய திருப்பணிகளைச் செய்ய வைத்து தம்மை அண்டி வந்தோரை அவரவரின் கர்மவினைப் ப(ல)யன்களை எளிய முறையில் சீரமைத்துத் தந்து அவர்கட்கு நல்லருள் புரிந்தவராவார். அவர்தம் முக்கியத் திருப்பணி என்னவெனில் ஆலய கோபுரங்களில் ஊடு பயிராக விளங்குகின்ற மரங்களையும், செடிகளையும் நீக்கி ஆலய கோபுரங்களைப் பாதுகாப்பதாகும். ஆலய கோபுரத்தில் செடிகள் வேர்விட்டு முளைத்து விடுமாயின் அது ஆலய கோபுரத்தையே பதம் பார்த்து விடுமல்லவா? இது மட்டுமின்றி நட்சத்திர தியான முறையிலே நட்சத்திர யோகதரிசனம் எனும் அபூர்வ யோகாசனத்தில் அமர்ந்து இரவு பூஜையிலே சிறந்து விளங்கியவரே ஸ்ரீஉததீ மாமுனியாவார். பகலெல்லாம் பல ஆலயங்கட்கும் சென்று ஆலய கோபுர மற்றும் விமானத் திருப்பணிகளை ஆற்றி, இரவில் சற்றும் உறங்காது வானத்தில் உள்ள நட்சத்ராதி, கிரஹ தேவதை மூர்த்திகளைப் பலவிதமான துதிகளால் வணங்கி கண் துஞ்சாது, சிவ மந்திரங்களை ஓதியவாறு மிகச் சிறந்த தபோபலன்களைப் பெற்று, அவற்றை ஜீவன்களின் நல்வாழ்விற்கென அர்ப்பணித்தார்.

இங்கு விடியற்காலையிலும், மாலையும் இருளும் சேரும் நேரத்திலும், இங்கு அமர்ந்து நட்சத்திர தரிசனம் பெறுவது மிகவும் சிறந்ததாகும். ஏனெனில் இங்கு தான் இரவு நேர தியான முறையில் தாமும் தியானித்துப் பிறருக்கும் உபதேசித்து நல்வழி காட்டியவரே ஸ்ரீஉததீ முனிவர்! கலியுக மனிதனானவன் பகல் நேரத்திலே, தொழில், கல்வி, குடும்பம் போன்றவற்றிற்காகச் செலவழிக்கிறானே தவிர இறைத் திருப்பணிக்காகவோ, வழிபாட்டிற்கோ அவன் ஒதுக்கும் நேரம் சில நிமிடத் துளிகளேயாகும். இரவு நேரமோ, உறக்கத்திற்கும், பலவித தீயவழிகட்கும் ஆட்பட்டதாய் அமைந்து விடுகின்றது. பின் எவ்வாறு தான் ஒரு மனிதனானவன் தன்னுடைய தெய்வீக நிலையில் முன்னேறுவதற்காக, தனக்கு அளிக்கப்பட்டுள்ள ஆயுளை நன்கு பயன்படுத்த இயலும்? இதற்கு இரவு நேர தியானங்கள் பெரிதும் உதவிபுரிகின்றன.

சில குறிப்பிட்ட திதிகளிலும், நட்சத்திரங்களிலும், நாட்களிலும் சில குறிப்பிட்ட இரவு நேரங்களில் செய்யப்படுகின்ற பூஜைகள், தியானங்கட்குப் பன்மடங்குப் பலன்கள் உண்டு. ஆதலின் இப்பூஜைகளின் இந்த அபரிமிதப் பலன்களால் செய்யாமல் விடுபட்ட பூஜைகட்கும் நந்நேரத்தை வீணே கழித்தமைக்கும் பிராயச்சித்தமாக அமைகிறது... உததீ சித்புருஷர் கலியுக மக்களின் நேரப் பற்றாக்குறை, நேரத்தை வீணாக்கும் தன்மையையுணர்ந்து, தீர்க்க தரிசனத்துடன் தான் தன் ஜீவசமாதியில் உததீ சக்திகளைத் தன் தபோ பலன்களின் திரட்சியாகப் பதித்துள்ளார். எனவே, தக்கோலத்தில், குருவாரமாக விளங்குகின்ற வியாழனன்று குருஹோரை நேரத்தில் (காலை 6 முதல் , மாலை 1 முதல் 2, இரவு 8 முதல் 9) போன்ற குரு ஹோரை நேரங்களில் 21 முழு எலுமிச்சம் பழங்களாலான மாலைகளை வைத்து குரு மந்திரங்களை ஓதி (தட்சிணாமூர்த்தி நாமாவளி, ஸஹஸ்ரநாமம், அஷ்டோத்திரம், கல் ஆலின் புடையமர்ந்து .. பாடல் .., திருமூலர், அப்பர், சம்பந்தர், மணிவாசகர் போன்றோரின் குரு துதிகளை)  நன்கு ஓதி குறைந்தது அரைமணி நேரமேனும் தியானித்து குரு பகவானுக்குரித்தான மஞ்சள் நிற எலுமிச்சம் பழம் அன்னம் போன்ற உணவுப் பண்டங்களை ஜீவசமாதிக்குப் படைத்து தானமாக அளித்திட வேண்டும். சுவாமிக்கு அணிவிக்கப்பட்ட எலுமிச்சை மாலையை இல்லத்தில் வைத்து பூஜையில் வைத்து மறுநாள் அதனை அன்னமுடன் கலந்து எலுமிச்சை சாதமாக தானமளிக்க வேண்டும்..

ஒவ்வொரு மனிதனும், இரவில் தான் பல தீய வினைகளையும், தீவினை சக்திகளையும் சேர்த்துக் கொள்கிறான்... முறையற்ற காமச் செயல்களால் விந்துக் குற்றங்களும், கொலை, கொள்ளை, போன்ற தீய செயல்களும் இரவில் தான் நிகழ்கின்றன. மனிதப் பிறப்பெடுத்த ஒவ்வொருவருக்கும் இவ்வாறாக இரவில் கூடுகின்ற தீவினை சக்திகளைக் களைய இரவு நேரப் பூஜைகளை மேற்கொண்டு அதன் பலன்களாக சமுதாயத்தைப் புனிதப்படுத்த வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் நிச்சயமாக உண்டு.

உததீ மஹரிஷியின் ஜீவாலய சமாதிக்கு வியாழன், திங்கட்கிழமைகளில் குரு ஹோரை நேரத்தில் மூலிகைக் காப்பிடுதல் மிகவும் விசேஷமானதாகும். மூலிகைகட்குரித்தானவர்கள் தானே சித்புருஷர்கள். அதிலும் உததீ மஹரிஷியானவர் மூலிகைத் தாவரங்களின் தெய்வீக சக்தியுணர்ந்து அவற்றின் சாற்றினை மூலிகா பந்தன முறைப்படி மாத சிவராத்திரி தோறும் அருகிலுள்ள ஆற்றில் கலந்து அதன் பலன்கள் யாவருக்கும் சென்றடையும் வண்ணம் மகத்தான தெய்வீகப் பணியாற்றினார்.
குறிப்பாக மாத சிவராத்திரி தோறும் தக்கோலத்தில் பள்ளியறைப் பால் நைவேதனம், மூலிகைத் தைலக் காப்பு, எலுமிச்சை அன்னதானம், நட்சத்திர பூஜைகளை நடத்தி வருதல் மிகவும் விசேஷமானதாகும்... மது, முறையற்ற காமம், பீடி, சிகரெட் போன்ற தீய பழக்கங்கட்கு அடிமையானோர் வியாழன் தோறும், குருஹோரையில் உததீ சித்புருஷ லிங்க பிரதிஷ்டா மூர்த்தியை வணங்கி அவருடைய ஜீவ சமாதிக்கு அபிஷேக ஆராதனைகளையும் அவர் மிகவும் போற்றிய கீரைகள், மூலிகைகள் கலந்த உணவு பண்டங்களையும் படைத்து ஏழைகட்குத் தானமாக அளித்து வருதலால் எத்தகைய தீயவழக்கங்கட்கும் உததீ மாமுனியின் குருவருளால் தக்க பிராயச்சித்தம் கிட்டுவதோடு அவை அறவே நீங்குவதற்கான நல்வழியும் கிட்டும் (தகவல் - http://www.kulaluravuthiagi.com/Feb1999.htm)
மஹாலக்ஷ்மி நமோஸ்துதே.....!!!

"மஹாலக்ஷ்மீம் மஹாதேவீம் விஷ்ணுவக்ஷஸ்தலாலயாம்
 சங்க சக்ர கதாஹஸ்தாம் பத்மினீம் பத்மஸம்பவாம்"

"ஸர்வ உலகங்களுக்கும் தாயான ஸ்ரீலக்ஷ்மி ஆனவளும், தனக்கு மேல் ஒரு தெய்வமில்லாதவளும், ஸ்வயம்ப்ரகாசையானவளும், மஹா விஷ்ணுவின் ஹ்ருத் பங்கஜத்தை விட்டு என்றும் அகலாதவளும், சங்கம்,சக்ரம்,கதை இவற்றை தரிப்பவளும், தாமரையாளும், அத்தாமரையில் தோன்றியவளுமான ஸ்ரீலக்ஷ்மியையே சரணமடைவோம்"

உலகங்கள் அனைத்திற்கும் அன்னையாதலின் இவள் ஜகன்மாதா. ஆதிகாரணியாதலின் இவளே ஆதிலக்ஷ்மி. அம்மஹாலக்ஷ்மி எங்ஙனம் தோன்றினாள். தோற்றமும் மறைவும் இல்லா பரம்ம வஸ்துவே அவள். ஆத்யந்தம் இல்லா மஹாசக்தியே அவள்.

ஸ்வயம்ப்ரகாசையாக தான் பரப்ரும்மமே என நின்றால் தன் குழந்தைகள் தன்னை நெருங்கி முடியாது போய்விடுமோ? என்றஞ்சி ஆதிலக்ஷ்மியாய் வடிவம் தாங்கினள் அப்பரதேவதை.

"லக்ஷ்மீ" நாமமே தேனினும் தித்திப்பது. அஷ்ட ஐஸ்வர்யங்களையும் கொடுக்கக் கூடியது. ஸகல சௌபாக்யங்களையும் தரக்கூடியது. கிடைத்தற்கரிய மோக்ஷத்தையும் அனுக்ரஹிக்கக் கூடியது. அந்த ஆதிமஹாலக்ஷ்மியே, ஸ்வயமிச்சையாக ஸகல உலகங்களுக்கும் மங்களத்தை உண்டாக்கும் வண்ணம் அழகிய ரூபம் தாங்கினள்.

"கருமேகத்தை பழிக்கும் அழகியதும், நீலோத்பல மலரை ஜயிக்கும் அழகும் பொருந்திய அடர்ந்த கூந்தல் உள்ளவளும், அஷ்டமி சந்த்ரனை போன்று அழகிய நெற்றி பொருந்தியவளும், கரும்பு வில் தோற்கும் கரும்புருவங்கள் தரித்தவளும், சூர்யனையும் சந்த்ரனையும் தன் தாமரை போன்ற கண்களாய் உடையவளும்,

எள்ளுப்பூப்போல் நாசி தரித்தவளும், வெள்ளியை பழிக்கும் மூக்குத்தி ஏற்றவளும், பவழத்தை பரிகசிக்கும் அதரம் தாங்கியவளும், பத்மராகம் போன்று கன்னங்கள் கொண்டவளும், அழகிய காதுகளில் அசைந்தாடும் மகர குண்டலங்கள் தாங்குபவளும், பௌர்ணமி நிலவைப்போல் முகக்கமலம் தரிப்பவளும்,

சதுர்புஜங்கள் கொண்டவளும், மேலிரு கரங்கள் தாமரைப்புஷ்பங்களைத் தாங்க, கீழிருகரங்கள் வரமும் அபயமும் கொடுக்க, தனது தாமரை போன்ற பாதங்களை ஆராதிக்கும் திரிமூர்த்திகளை கொண்டவளுமாய்" அப்பரதேவதை விளங்கினாள்.

தேவர்கள்,ஸித்தர்கள்,ரிஷிகள்,முனிவர்கள்,யோகிகள்,மஹான்கள் என அனைவராலும் ஆராதிக்கப்பட்டவள் இவளே. தாமரையில் தோன்றியவள் ஆதலின் இவள் "கமலா". மனதிற்கு ஆனந்தத்தை உண்டுபண்ணுவதால் இவளே "ரமா".

மங்களமே மையமாக ப்ரகாசிப்பதால் இவளே "ஸ்ரீ". ஸர்வ லோகங்களுக்கும் அன்னை ஆதலால் இவளே "மாதா". தன் பக்தர்களுக்கு மோக்ஷமளிப்பதே லக்ஷ்யமாக உடையவள் ஆதலால் இவளே "லக்ஷ்மீ" என ஆயிரமாயிரம் பெயர்கள் உண்டு.

ஆனாலும் அவள் மகிழ்வது "தாயார்" எனும் சொல்லில் தான். அண்ட சராசரங்களையும் தனது கர்ப்பத்தில் தாங்குபவள் இவளே!! தானே அனைத்துமாய் நின்றவள்.

அப்பரதேவதையே தன்னை பாற்கடலரசனின் மகள் என காண்பிக்கின்றாள்.
மயிலாப்பூர் கோலவிழி அம்மன் கோவில், கபாலீஸ்வரர் ஆலயத்திற்கு இணையான தொன்மைச் சிறப்பு வாய்ந்தது. பார்வதிதேவி மயில் உருவம் எடுத்து மயிலாப்பூர் தலத்தில் தவம் இருந்தபோது அவளை அசுரர்களிடம் இருந்து பாதுகாப்பதற்காக சிவபெருமானால் அனுப்பி வைக்கப்பட்ட பத்ரகாளி இவள் என்பது குறிப்பிடத்தக்கது.

வடக்கு திசை நோக்கி எளிய நுழைவு வாசலுடன் ஆலயம் அமைந்துள்ளது. அமர்ந்த கோலத்தில் வீற்றிருக்கும் அன்னையே, கோல விழி அம்மனாக விளங்கு கிறாள். இடது காலடியில் அசுர னின் தலையை அழுத்தி, வலது காலை மடக்கிய கோலத்தில் காட்சி தருகிறாள். வலது கரங்களில், சூலம், வாள், உடுக்கை, வேதாளம் ஏந்தியும், இடது கரங்களில் கேடயம், அங்குசம், மணி, கபாலம் ஏந்தியும் அன்னை காட்சி தருகின்றாள். சிரசில் உள்ள தீ ஜூவாலை களில் பதி னைந்து இதழ்கள், அதன் நடுவே சீறும் நாகம், திரு முடியின் இடதுபுறம் சந்திரன், கங்கை, வலது புறம் நாகம், காதணி அணிந்து, சிவசக்தி சொரூபமாக அன்னை காட்சி தருகின்றாள். இவளது இயற்பெயர் பத்ரகாளி என்பதாகும். எனவே இந்த ஆல யத்தை பத்ரகாளி அம்மன் ஆலயம் என்றும் சொல்வார்கள்.

‘பத்ர’ என்பதற்கு மங்களம் என்றொரு பொருள் உண்டு. தன்னை நாடி வருவோருக்கு மங்களங்களை அள்ளித் தருபவளாகத் திகழ்வதால், இத்தல அம்மன் பத்ரகாளியாகவும் விளங்குகின்றாள். அன்னையின் சிறப்பே அவளின் கோல விழிகள்தான். வைத்த கண் வாங்காமல் பார்க்கத் தூண்டும் கருணை அருளும் நாயகி, கோலவிழி அம்மன் என் றால் அது மிகையல்ல.

மயிலை குருஜி இந்த ஆலயத்தை புனரமைப்பதில் பெரும்பங்கு வகித்தவர். அவர் விநாயகரை வேறு இடத்தில் மாற்றி யமைக்க செய்த முயற்சிகள் மட்டும் பயனளிக்க வில்லையாம். இறைவிக்கு முன் கல்லால் ஆன சிறிய தேவி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். அபிஷேகங்கள் எல்லாம் இந்த  தேவிக்கே நடைபெறுகின்றன. பெரிய திருவுரு கொண்ட தேவிக்கு பச்சரிசி மாவில் விதவிதமான நிறங்களைக் கலந்து மாவுக்காப்பு சாற்றினால் தீராக்கடன்கள் தீர்ந்து விடுவதாக ஐதீகம். இதைத்தவிர மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக் காப்பு, முத்தங்கி என நாளரு மேனியும் பொழு தொரு அலங்காரமுமாக அன்னை அருளும் ஆலயம் இது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு  மேலான ஆலயம் என்பதை கோலவிழி அம்மனின் உற்சவ திருவுருவை ஆய்வு செய்தபோது கண்டறிந்தி ருக்கிறார்கள். கபாலீஸ்வரர் ஆலயத்தில் எந்த ஒரு விழா வானாலும் இங்கு வந்து அன்னையிடம் உத்தரவு பெற்றே நடத்துகின்றனர். ஐப்பசி மாதம் 14&ம் நாள் முதல் தை மாதம் முடிய மூன்று மாத காலங்கள் கதிர வன் தன் கிரணங்களால் அம்பிகையை வழிபடும் விதமாக கருவறை அமைப்பு உள்ளது. நாக தோசத்தால் பாதிக்கப் பட்டவர்கள், ராகு தசை நடப்பவர்களுக்கு இது பரிகாரத்தலமாக உள்ளது.

சித்திராப் பவுர்ணமியில் பூச்சொரிதல் விழா, ஆடிப்பூர விழா, தீச்சட்டி ஏந்தும் விழா, புரட்டாசியில் நவராத்திரி விழா மற்றும் 10&ம் நாள் சூரனை வதம் செய்யும் விழா, மாசியில் மூன்றாம் ஞாயிறன்று பால் குடப்பெருவிழா ஆகியவை இந்த ஆலயத்தில் நடைபெறும் குறிப்பிடத்தக்க விழாக்கள் ஆகும். இந்தக் கோவில் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

சென்னை கடற்கரைச் சாலையில் கலங்கரை விளக்கம் மற்றும் ஆல் இண்டியா ரேடியோவில் இருந்து தென்மேற்கே அரை கிலோமீட்டர் தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது. அதேபோல, கபாலீசுவரர் திருக்கோவிலுக்கு வட கிழக்கே சுமார் அரை கிலோமீட்டர் தூரம் சென்றால் கோலவிழி அம்மன் ஆலயத்தை அடையலாம்.

கோல விழியம்மன் மயிலையில் எல்லை காளியாக இருப்பவள். எனவே மயிலாப்பூரில் உள்ள எந்த ஆலயத்தில் விழா நடந்தாலும் கோல விழியம் மனுக்குத்தான் முதல் மரியாதை கொடுக்கப்படும். மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தில் 63 நாயன்மார் விழா நடக்கும்போது அனைவருக்கும் முன்னதாக முதலில் செல்வது கிராம தேவதையான கோல விழியம்மன்தான்.

பத்ரகாளியாக இந்த கோலவிழியம்மன் முதலில் மிக, மிக உக்கிரமாக இருந்தாள். குறிப்பாக அவளது கண்பார்வையில் அதிக உக்கிரம் இருந்தது. ஆதிசங்கரர்தான் இந்த அம்மனின் உக் கிரத்தை தணித்தார். சக்கரம் ஸ்தாம்பிதம் செய்து அவர் கோல விழியம்மனை சாந்த சொரூபினியாக மாற்றினார். அகோரிகள் இந்த தலத்தில் 600 ஆண்டுகளுக்கு முன்பு தவம் இருந்து பூஜைகள் செய்து கோல விழியம்மனை வழிபட்டுள்ளனர். இந்த அம்மனை வழிபட்டால் எவ்வளவு கொடூரமான ராகு தோஷமும் உடனே விலகி விடும்.

இந்த தலத்தில் ஆஞ்ச நேயர், சப்தகன்னிகள்,வராகி ஆகியோருக்கு தனித் தனி சன்னதி உள்ளது. வராகியின் வாகனமான ஆமையும் இங்கு பிரதி ஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆமைக்கு இளநீர் அபி ஷேகம் செய்து வழி பட்டால் நோய் தீரும் என்பது ஐதீகம். 27 நட்சத்திரக்காரர்களும் இங்கு பிரதட்சணம் செய்து வழிபட்டால் உரிய பலன் கிடைக்கும்.

சிலர் 27 வாரம் பிரதட்சணம் செய்வதுண்டு. 9 வாரம் பிரதட்சணம் செய்தால் எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். இதனால் இத்தலத்துக்கு இந்துக்கள் மட்டுமின்றி முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களும் வந்து வழிபட்டு செல்கிறார்கள். சந்திராஷ்டமம் நேரத்தில் ஏதாவது சொன்னாலோ, பேசினாலோ இடையூறு, பிரச்சினை ஏற்படும் என்று சொல்வார்கள். எனவே சந்திராஷ்டமம் உள்ள நாட்களில் உரியவர்கள் இந்த தலத்துக்கு வந்து வழிபட்டு சென்றால் சந்திராஷ்டமம் தாக்குதலால் எந்த பிரச்சினையும் வராது என்கிறார்கள்.

எல்லோராலும் இந்த தலத்துக்குள் எளிதில் காலடி எடுத்து வைத்து விட முடியாது. கடைசி ஜென்மத்தில் இருப்பவர்கள்தான் இந்த தலத்தில் வந்து பணிகளை செய்ய முடியும் என்று தனசேகர் பூசாரி தெரிவித்தார்.

ஆடி மாதத்தை முன்னிட்டு கோல விழி அம்மன் ஆலயத்தில் தினமும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆடியில் தினமும் அம்மனுக்கு பால், தேன், பஞ்சாமிர்தம், ஆப்பிள், சாத்துக்குடி, இளநீர், பன்னீர், அபிஷேகப்பொடி, வெற்றிவேர், சந்தனம், மஞ்சள் ஆகிய 11 பொருட்களால் அபிஷேகம் நடத்தப்படுகிறது. வசதி, வாய்ப் புள்ள பக்தர்கள் இந்த அபிஷேக பொருட்களை வாங்கிக் கொடுத்து கோல விழி அம்மன் அருளைப் பெறலாம்.

ஆடி மாதத்தில் இந்த தலத்தில் நடக்கும் தீச்சட்டி ஊர்வலம் மிகவும் புகழ் பெற்றது.
*தமிழ் நாட்டில் பிறந்ததற்கு ஒவ்வொரு தமிழரும் பெருமை கொள்ள வேண்டும்.*

இந்து சமயத்தின் ஏழு பெரும் பிரிவுகள் :

1.சைவம்
2.சாக்தம்
3.வைஷ்ணவம்
4.கணாபத்யம்
5.கெளமாரம்  
6.செளரம்         
7.ஸ்மார்த்தம் 

_சைவத்தின் முழு முதற் தெய்வமான சிவன் கோவில்களில் 283 இல்....,_
*276 கோயில்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது...!!*

_வைணவத்தின் 108 வைணவ திவ்ய தேசத் தலங்களில்......,_
*96 ஸ்தலங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது...!!*

_கெளமாரத்தின் 21 முருகன் கோவில்களில்...._
*18 கோவில்கள் உள்ளது தமிழ்நாட்டில் தான்*

_கணாபத்தியத்தில் அஷ்ட கணபதிகள் கோவில்கள் அனைத்தும்_ *தமிழ்நாட்டில் தான் உள்ளது..!!*

_செளரத்தில் சூரியனை தெய்வமாக தைப்பொங்கல் தினத்தன்று வழிபடுவது_ *தமிழ்நாட்டில் தான்...!!*

_சாக்தத்தில் பராசக்தி நவதுர்க்கை கோவில்கள் அம்மன் கோவில்கள்...._
*பெண் தெய்வங்களுக்கு கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில் தான்...!!*

மேற்கண்ட ஏழு
பெரும் பிரிவு தெய்வங்களையும் வணங்கும்....
*ஸ்மார்த்தர்கள் இருப்பதும் தமிழ்நாட்டில் தான்*

_பதிணெட்டு சித்தர்கள் தோன்றி, வாழ்ந்து,_
*ஜீவ சமாதி அடைந்ததும் தமிழ்நாட்டில் தான்...!!*

_ஆழ்வார்கள்....,  நாயன்மார்கள்.....,_
*தோன்றி வாழ்ந்து முக்தி அடைந்தது தமிழ்நாட்டில் தான்....!!*
_பஞ்சபூத கோவில்களில் நிலம், நீர், ஆகாயம், நெருப்புக்கான ஸ்தலங்கள் இருப்பது_
*தமிழ்நாட்டில் தான்*

_நவக்கிரக கோவில்கள் அனைத்தும் இருப்பது_
*தமிழ்நாட்டில் தான்*

_*12 ராசிகள் மற்றும் 27 நட்சத்திரங்களுக்கான கோவில்கள் இருப்பது*
*தமிழ்நாட்டில் தான்.*

_சப்தலிங்க ஸ்தலங்கள் இருப்பது_
*தமிழ்நாட்டில் தான்.*

இந்து பண்பாட்டின் வாழ்வியல் முறையே தமிழ்நாடு தான்.....!!

_இந்து பண்பாட்டின் மருத்துவமான இயற்கை சித்த மூலிகை மருத்துவம் உருவானதே_
*தமிழ்நாடு தான்...!!*

_இயற்கை வேளாண்மை தோன்றி செழித்தோங்கியது_
*தமிழ்நாட்டில் தான்....!!!*

தமிழ்நாடு முழுக்க முழுக்க  ஆன்மிகபூமி...!!!

"பகிருங்கள் அன்பர்களே"...!!
அனைவரும் அறிந்து கொள்ளட்டும்.....!!

தென்னாடுடைய சிவனே போற்றி..!!
நச்சுனு ஒரு பேச்சு!
~~~~~~~~~~~~~
"புராணம் என்றால் பழசு என்பதுதான் அர்த்தம். சுவாபமாக மிகவும் நல்லவர்களாகச் சிலர் இருக்கிறார்கள். சில பேரிடத்தில் கெட்ட அம்சம்தான் அதிகமாக இருக்கும். அப்படி ரொம்ப நல்லவர்களாக அல்லது ரொம்ப கெட்டவர்களாக இருக்கிறவர்களுடைய சரித்திரங்களைப் புராணங்களாகச் சொல்லியிருக்கிறார்கள். இந்தப் புராணங்களைப் பார்த்தால் ஏராளமான நீதிகள் இருக்கும். அவற்றையெல்லாம் நாம் பார்ப்பது இல்லை; தத்துவங்களைப் பார்ப்பது இல்லை. அவற்றில் இரண்டுதலை, நான்குதலை, பசுமாடு பூஜித்தது என்றுவரும். இப்படி இருப்பவற்றைப் பார்த்து, ' இது என்ன? இது எப்படி சாத்தியம்? எல்லாம் கட்டுக்கதை' என்று சொல்லிவிடுகிறோம்" - பெரியவா.

ஏழு அஞ்சில்' என்று ஒரு மரம் உண்டாம். அதன் காய் முற்றியவுடன் பூமியில் விழுந்து உடையும். உடனே உள்ளே இருக்கிற விதைகள் ஏதோ ஒரு ஆகர்ஷண சக்தியால் நகர்ந்து நகர்ந்து வந்து, மறுபடியும் தாய் மரத்தோடேயே ஒட்டிக் கொள்ளும். ஒட்டிக்கொண்டபின் மூலமான மரத்துக்குள்ளேயே மறைந்து விடும் என்கிறார்கள். பகவானிடம் இருந்து பிரிந்து வந்திருக்கிற நாமும், இப்படியே அவன் பக்கமாக நகர்ந்துபோய் முடிவில் அவனிடம் ஒட்டிக்கொண்டு ஒன்றாகிவிட வேண்டும்.

நாம் பக்தி பண்ணுகிறோம். ஆனால் எப்படி? கஷ்டம் வந்தால் மட்டும் அது நிவர்த்தியாகப் பெரிய பூஜை, சாந்தி எல்லாம் செய்கிறோம். நிவிர்த்தியானால் அநேகமாகப் பூஜையையும் அதோடு விட்டுவிடுவோம். ஆகாவிட்டாலோ சுவாமியை திட்டுவோம். எனவே, நமக்கு உண்மையான ஞானமும் பக்தியும் வர வேண்டும். தேகம், மனம், சாஸ்திரம், ஷேத்திரம், தீர்த்தம் முதலிய பல சவுகரியங்கள் இந்த உலகத்தில் தான் நமக்குக் கிடைக்கும். நாம் வாக்கினாலும், மனத்தினாலும், கை, கால் முதலியவற்றாலும் பாவம் செய்துகொண்டே இருக்கிறோம். அந்தப் பாவங்களையெல்லாம், வாக்கு, மனசு, அவயவங்களைக் கொண்டே புண்ணியம் செய்து கரைத்திட வேண்டும்.

எதைச் சாப்பிட்டால் என்ன? அன்னத்தை சாப்பிட்ட மாத்திரத்தில் வயிறு நிரம்பி விடுகிறது. ஆனால், அநேகவிதமான பதார்த்தங்கள் எல்லாம் எதற்காக என்று கேட்டால் என்ன சொல்கிறது? வயிறு நிரம்ப வேண்டும் என்பது சரி, ஆனால் நாக்கு என்ற ஒன்று இருக்கிறது அல்லவா? அது ருசி பார்க்கிறது. நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பதார்த்தத்திலே ருசி இருக்கிறது. அந்த ருசியை அனுசரித்து நாம் சாப்பிடுகிறோம். அதனால் வெவ்வேறு ருசியுள்ளவற்றைச் சுவைக்கிறோம். அதுபோல நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மூர்த்தியிடத்திலே ருசி இருக்கிறது. அதனால் அநேகவிதமான மூர்த்திகள் இருக்கின்றன. அதனால் பாரபட்சங்களை உதறிவிட்டு, தத்துவத்தில் மனத்தைச் செலுத்தி இறைவனுடன் ஒன்றிவிட வேண்டும்.

இதமான அன்பு வணக்கம் 🌹