திங்கள், 13 ஜூலை, 2020

இன்று பௌமாஸ்வினி !

இன்று பெளமாஸ்வினி. செவ்வாய் கிழமை அஸ்வினி நக்ஷத்ரம் கூடிய சுபதினம் .

ஜூலை 14-07-2020, ஆனி 30, செவ்வாய்க்கிழமை, அஸ்வினி நக்ஷத்ரம் பகல் 02.06 வரை

(14 / 7 / 2020)

இன்று பௌமாஸ்வினி = பௌமனான செவ்வாய் கிழமையும், அசுவதி நட்சத்திரமும் கூடும் நாள். அம்பாளின் வழிபாட்டுக்கு மிகவும் உகந்த நாள்.

அம்பிகையின் முன் விளக்கேற்றி தேவி அதர்வசீர்ஷத்தை ஓதினால் மஹா ம்ருத்யுவைக் கூட ஓடச்செய்திடும்.

இன்று நம்மால் இயன்ற வகையில் அவளை வழிபடுவோம். துதிகளைச் சொல்லுவோம். போற்றி வணங்குவோம்.

நமக்கெல்லாம் அன்னை அவள். எதைக் கேட்டாலும் நாம் கேட்பதற்கும் மேலே கொடுத்து விடுபவள் அன்னை. ஆயின் அவளிடம் கேட்க நமக்குத்தான் அறிவோ தகுதியோ இல்லை. நாம் கேட்டாலும் கேளாது போனாலும் நமக்கு எது நன்மையோ அதை வாரிக் கொடுக்கும் கருணைக்கடல் அவள்.

இன்றிருக்கும் சூழ்நிலையில் அவளிடம் என்ன கேட்கவேண்டுமென்று கூட நமக்குத் தெரியாது. ஆனால் அவளை சரணடைந்து விட்டால் போதும். நமக்கு என்ன கொடுக்க வேண்டுமென்று அவளுக்குத் தெரியும்.

மந்திரமோ, தந்திரமோ, ஸ்தோத்திரமோ அறிய வேண்டாம். பூஜையோ, தியானமோ, பஜனையோ தெரிய வேண்டாம். முத்திரையோ, அர்ச்சனையோ, அபிஷேகமோ செய்ய வேண்டாம். அழக்கூடத் தெரியாமல் போனாலும் பரவாயில்லை.

ஆனால் அவள் பார்த்துக் கொள்வாள் என்ற நம்பிக்கையும் சரணாகதியும் இருந்தால் போதும். அது துன்பத்தையெல்லாம் போக்கும் என்ற உண்மை புரிந்து கொண்டால் போதும்.

ஏதும் அறியாத குழந்தை அழுதால், அது பசிக்கு அழுகிறதா, பூச்சி கடித்து அழுகிறதா, வயிற்று வலியால் அழுகிறதா, தன்னை பார்க்க வேண்டி அழுகிறதா என்று அன்னைக்கு தெரியாதா என்ன?

நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு.
அம்பிகையை சரண்புகுந்தால் வரம் பெறலாம்.
மருந்தீசர் சொன்ன மருந்து
     ___________________

  நானும் எனது தம்பியும் அந்த இனிய நாட்களை மனதிலே சுமந்து மகிழ்கின்றோம்.
   அப்பொழுது எனக்கு வயது 10 இருக்கும் எனதுதம்பி குருமூர்த்திக்கு வயது 8 இருக்கும். அவனுக்கு அடுத்த தம்பி மஹாலிங்கத்திற்கு 4  வயது.
எங்கள் குடும்பம்  அப்பொழுது ஆக்கூரில் இருந்தது.  மஹாலிங்கத்திற்கு 4 வயது வரை பேச வரவில்லை. எங்களது பெற்றோர்களுக்கு கவலை வந்து விட்டது.
    அப்பொழுது மஹாபெரியவா பக்கத்து ஊரிலுள்ள ஆறுபாதிக்கு அங்குள்ள மிராசுதார் அழைப்பிற்கிணங்க பிக்ஷாவந்தனத்திற்கு
அவர்களுடைய வீட்டிற்குவந்திருந்தார். அவருடைய தரிசனம் கிடைக்கும் என்று எங்கள் பெற்றோர்களுக்கு தகவல் கிடைத்தது.  எங்கள் பெற்றோர்களுக்கு காஞ்சி மஹானை பார்த்து  தரிசித்து அவரை எனது தம்பியின் குறையைப்பற்றி சொல்லி நிவர்த்தி கேட்பது என முடிவு செய்து என்னையும் என் தம்பிகள் இருவரையும் அழைத்துக் கொண்டு ஆறுபாதி வந்து சேர்ந்தார்கள்.
     அங்கு மிராசுதார் வீட்டில் பிக்ஷாவந்தனம் எல்லாம் முடிந்து அங்குள்ள பக்தர்களுக்கெல்லாம் தரிசனம்  தந்தார்கள். எங்களது பெற்றோர்களும் வாங்கி வந்த பூ, பழங்களை ஒரு தட்டில் வைத்து நமஸ்காரம் செய்தார்கள். நாங்களும் நமஸ்காரம் செய்தோம்.
மஹாபெரியவா கல்கண்டு, திராட்சை, முந்திரி எல்லாம் கொடுத்து எங்களை ஆசீர்வாதம் செய்தார்கள். பிறகு தரிசனம்  தந்து முடிந்த பின் அவருடைய அறைக்கு போய் கொண்டிருந்தார்கள். எனது தகப்பனார் மகானுக்கு என்தம்பியின் நிலைமையை எடுத்துச் சொல்ல பின்னாடி போனார். மஹான் அவரை சாயங்காலம் அங்குள்ள ஆத்தங்கரைக்கு வரச் சொன்னார்கள்.
      பின்னர் சாயங்காலம் ஆத்தங்கரைக்கு வந்து தரிசனம் தந்தார்கள்.   அப்பொழுது எனது
தகப்பனார் எனது தம்பியின் குறையைப்பற்றி கூறி அதற்கு என்ன செய்ய வேண்டும் என கேட்டார்கள்.
       மருந்தீசர் வேப்பம் பட்டையை அறைத்து தேனில்  குழைத்து நாக்கில் தடவ சொன்னார்கள்.
பிறகு நாங்கள் ஆக்கூர் வந்து சேர்ந்தோம்.
         பெரியவா சொன்னபடி எனது அம்மா வேப்பம் பட்டையை அறைத்து தேனில் குழைத்து தம்பியின் நாக்கில் தடவி வர கொஞ்ச நாளில் எனது தம்பி பேச ஆரம்பித்து விட்டான். மஹானின் வைத்தியத்திற்கு  ஈடு இணை உண்டோ?  
    அந்த  நிகழ்ச்சி  மஹானின் தரிசனம்  ஆசீர்வாதம் எங்களுக்கு கிடைத்த பெரும் பாக்கியமாக கருதுகிறோம்.
      இதைச் சொல்ல அம்மா அப்பா இப்பொழுது இல்லை. இந்த நிகழ்ச்சி எங்கள் இருவருக்கு மட்டுமே தெரியும். இதைப்பற்றி மற்றவர்களுக்கு தெரியவாய்ப்பில்லை.
      மகானிடம் பக்தர்கள் அனுபவத்தை பிறருக்கு தெரிவித்து அதுபுத்தக வடிவில் வந்தது யாவரும் அறிந்த ஒன்றே. ஆனால் இந்த எங்களது அனுபவம் பிறருக்கு எடுத்துக்கூறவில்லை.
    
இத்தனை விஷயங்களா? என்று நம்மை மலைக்க வைக்கும் !  ஸர்வஜ்ஞரான மஹா பெரியவா நடராஜா பற்றிச் ​சொன்னது.

சிவன் கோவில்ல எல்லாம் "வ்யாகரண தான மண்டபம்"ன்னு ஒரு மண்டபம் இருக்கும். "வக்காணிக்கும் மண்டபம்" ன்னு திரிச்சு சொல்லுவா. நன்னா வக்கணையா பேசுன்னு சொல்றதே "இலக்கண சுத்தமா"பேசறதுன்னு அர்த்தம். திருவொற்றியூர்ல கூட இந்த மண்டபம் இருக்கு. சிவன் கோவில்ல மட்டும் ஏன் இப்டி ஒரு மண்டபம் இருக்கு? விஷ்ணு கோவில்ல ஏன் இல்லை? ஸிவனுக்கும் பாஷைக்கும் என்ன ஸம்பந்தம்? பேச்சே இல்லாத தக்ஷிணாமூர்த்தியா இருக்கறவராச்சே பரமேஸ்வரன்? ஒரு ஸ்லோகத்ல, பேசாத சிவன் ஆடாம அசங்காமத்தான் இருப்பார். ஆனா, அவரே ஒரே ஆட்டமா ஆடறப்போ தான் பாஷா சாஸ்திரமே பொறந்ததுன்னு சொல்லியிருக்கு. ஆடகின்ற சிவனுக்கு நடராஜான்னு பேர். 'மஹாகாலோ மஹாநட:'ன்னு அமரகோசம் சொல்றது. அம்பலக்கூத்தாடுவான் பட்டன் ன்னு ப்ராஹ்மணாளும் ஆதியில நல்ல தமிழ் பேராத்தான் வெச்சிண்டிருந்திருக்கா. பம்பாய்ல ஒரு பிரிண்டிங் ப்ரஸ்ல [நிர்ணயஸாகரா பிரஸ்] பழைய காலத்து ஸம்ஸ்க்ருத ஸாஸனங்களை ஆராய்ச்சி பண்ணின புஸ்தகம் "ப்ராசீன லேகமாலை"ன்னு ஒண்ணு இருக்கு. அந்த ஸாஸனங்கள்ள வேங்கி நாட்டோடது ஒண்ணு இருக்கு. க்ருஷ்ணா நதிக்கும், கோதாவரிக்கும் நடுவுல இருக்கறது தான் வேங்கிநாடு. அந்த நாட்ல கெடச்ச தாம்ர [காப்பர்] ஸாஸனம் ஒண்ணை புஸ்தகத்ல போட்டிருக்கா. தெலுங்கு சீமைல ராஜ்யம் பண்ணிண்டிருந்த கீழை சாளுக்ய ராஜாக்களுக்கும், நம்ம தஞ்சாவூர் சோழ ராஜாக்களுக்கும் விவாஹ ஸம்பந்தம் இருந்துது. ப்ருஹதீஸ்வரர் கோவிலைக் கட்டின ராஜராஜ சோழனோட புத்ர வம்ஸம், பௌத்ரர்களோடேயே முடிஞ்சு போய்டுத்து. அவனோட தௌஹித்ரி [பெண்வழிப் பேத்தி] அம்மங்கா தேவி, ராஜராஜ நரேந்த்ரன்….ங்கற கீழைச் சாளுக்ய ராஜாவுக்குத்தான் வாக்கப்பட்டிருந்தா. அவாளோட புள்ளை குலோத்துங்க சோழன்தான் அப்றம் சோழ நாட்டுக்கு ராஜா ஆனது. அவன் தான் ஆந்த்ர தேஸத்ல வேதாத்யயனம் வ்ருத்தியாகணும்னு, தமிழ்நாட்டுலேர்ந்து 500 ப்ராஹ்மணாளைக் கொண்டு போய் வேங்கிநாட்டுல குடியமத்தினான். ஆந்த்ரால "த்ராவிடலு" ன்னு இன்னிக்கும் இருக்கறவா எல்லாருமே இந்த 500 ப்ராஹ்மணாளோட வம்ஸாவளிதான். நடராஜாவைப் பத்தி சொல்லிண்டிருந்தேன்.. நாமெல்லாம் ஆட வேண்டிய கூத்தையெல்லாம் சேர்த்து வெச்சு அவர் ஆடறார். நடராஜ விக்ரஹத்தோட தலேல படர்ந்தா மாதிரி ஒண்ணு இருக்கும். ரெண்டு பக்கமும் நீண்டுண்டு இருக்கும். அதுல சந்த்ரன், கங்கை ரெண்டுமே இருக்கும். என்னது அது?

அதுதான் நடராஜாவோட ஜடாபாரம். இந்தக் காலத்ல photo எடுக்கறச்சே. "snap shot "ன்னு ஒண்ணு உண்டு. ஒரு வஸ்து சலனத்ல [movement] இருக்கறப்போ, திடீர்னு ஒரு அவஸரத்ல [pose] போட்டோ எடுக்கறதுதான் அது. நடராஜா ரொம்ப வேகமா நர்த்தனம் பண்றார். பண்ணி, அப்டி நிறுத்தப்போற ஸமயத்ல அவரோட ஜடாபாரம் ரெண்டு பக்கமும் நீட்டிண்டு இருக்கும். அந்த அவஸ்தையை [கோலத்தை], அந்தக் காலத்து ஶில்பி, மனஸ்ல எடுத்த "ஸ்நாப் ஷாட்"தான் அந்த ஸ்வரூபம். நடராஜாவோட கையில உடுக்கு இருக்கு. அது குடுகுடுப்பாண்டி வெச்சிருக்கறதை விடப் பெருஸ்ஸு, மாரியம்மன் கோவில் பூஜாரி வெச்சிண்டு இருக்கறதை விட சின்னது. அதுக்கு டக்கான்னும், டமருகம்ன்னும் பேர் உண்டு. பாதத்தோட தாளத்தை அனுஸரிச்சு, அந்த டமருவோட தாளமும் இருக்கும்.

வாத்யங்கள்ள மூணு வகை. சர்ம வாத்யம் [டக்கா, மேளம், கஞ்சிரா, ம்ருதங்கம் மாதிரி தோல் வாத்யங்கள்], தந்த்ரி வாத்யம் [வீணை, பிடில் மாதிரி தந்தி [கம்பி] போட்டது] வாயுரந்த்ர வாத்யம் [நாயனம், புல்லாங்குழல் மாதிரி ஓட்டை போட்டு, காத்துனால ஊதற வாத்யம்].

இதுல சர்ம வாத்யம் தண்டத்தாலேயோ, ஹஸ்தத்தாலேயோ[கைகள்] அடிப்பா. அந்த வாத்யத்தை நிறுத்தறச்சே, சாப்பு குடுக்கறது, அப்டீன்னா… சேர்ந்தாப்ல சில அடி அடிக்கறது வழக்கம். அது மாதிரி நடராஜாவோட டமருகத்ல டான்ஸ் முடியற காலத்ல "ந்ருத்த அவஸானே" ன்னு ஒரு சாப்பு த்வனி உண்டாச்சு.

நடராஜா ந்ருத்யம் பண்றார். ஸனகாதிகள், பதஞ்ஜலி, வ்யாக்ரபாதர் எல்லாரும் அவரைச் சுத்தி நிக்கறா. அவாள்ளாம் மஹா தபஸ்விகள். அதுனால நடராஜாவோட ந்ருத்தத்தை கண்ணால பாக்க முடிஞ்சுது. ஞான நேத்ரம் இருக்கறவாதான் அவரோட நடனத்தைப் பாக்க முடியும். க்ருஷ்ணனோட
விஸ்வரூபத்தை தர்ஸனம்  பண்ற சக்தியை  பகவானே அர்ஜுனனுக்குக் குடுத்தார். அதே  சக்தியை வ்யாஸாச்சார்யாள் ஸஞ்சயனுக்கும் குடுத்து அவனையும் பகவானோட விஸ்வரூபத்தை தர்ஸனம் பண்ணி த்ருதராஷ்ட்ரனுக்கு வர்ணிக்கப் பண்ணினார். நடராஜாவோட டான்ஸ் கச்சேரில விஷ்ணு
மத்தளம் கொட்டிண்டிருக்கார்; ப்ரஹ்மா தாளம் போட்டுண்டிருக்கார். இப்டியா…. ந்ருத்தம் முடியப் போற ஸமயத்ல, டமருகத்ல சாப்பு, கிடுகிடுன்னு 14  சப்தங்களா விழுந்துது. அந்த  சப்தங்களோட கணக்கு மாதிரியே வித்தைகளோட கணக்கும் பதினாலாத்தான் இருக்கு! ஹிந்து மதத்துக்கு ஆதாரம் சதுர்தஸ வித்யா [14] ன்னா….. நடராஜாவோட சாப்பும் 14 சப்தத்தையே குடுத்துது! அப்போ அங்கே இருந்தவாள்ள பாணினி மஹரிஷிங்கறவர் அந்த 14  சப்தங்களையும், 14 ஸூத்ரங்களா வ்யாகரணத்துக்கு மூலமா வெச்சுண்டு "அஷ்டாத்யாயி" ங்கற இலக்கண மூல புஸ்தகத்தை எழுதினர். இந்த பதினாலு ஸூத்ரங்களையும் ஆவணியாவிட்டம் பண்றவா கேட்டிருப்போம். மஹேஸ்வரனோட டமருலேர்ந்து வந்ததால அதுக்கு மஹேஸ்வர ஸூத்ரம்ன்னு பேர் வந்தது.

அ இ உண்
ருலுக்
ஏ ஒங்
ஐ ஔச்
ஹயவரட்
லண்
ஞம ஙண நம்
ஜ ப ஞ்
க ட த ஷ்
ஜ ப க ட த ​ஸ் ​
க ப ச ட த சடதவ்
கபய்
சஷஸர்
ஹல்

ஆவணியாவிட்டத்ல இதை சொல்றப்போ வேடிக்கையா எல்லாரும் சிரிச்சிண்டே கேட்டிருப்பேள்… இது எதைப் பத்தினதுன்னு தெரியாமலேயே சும்மா ஒப்பிச்சிருப்பேள்… பரமேஸ்வரன் உடுக்கை அடிச்சுண்டு கிர்ர், கிர்ர்ன்னு சுத்தி ஆடி முடிச்சப்போ குடுத்த சாப்புகள்தான் இதெல்லாம்.

​ஜய  ஜய  சங்கர      ஹர ஹர சங்கர                                                  ஜய  ஜய  சங்கர      ஹர ஹர சங்கர
Row 1
a) A standing ascetic naked but for a minute loin-cloth, performing panchagni tapas, i.e. 'five fires penance' standing in the sun, surrounded by four fires.
b) An ascetic, as above, stands on his hands, his eyes closed in deep meditation. His knees are slightly flexed and his feet crossed.
c) An ascetic, as above, hangs upside down from a branch of a tree.
d) An ascetic, as above, floats mid-air, his legs in padmasana. His eyes are shut; with one hand on the nose he controls his breath intake. On the ground is the tiger skin on which he was seated before levitating into mid-air.
e) An ascetic, as above, stands on his left leg, while his right leg is flexed above his left knee.

Row 2
f) An ascetic, as above, immersed up to his neck in the water of a lake in which grow clusters of lotuses.
g) An ascetic, as above, seated in utkutikasana on a tiger skin placed in the shade of a banyan tree. A yogapatta is wound around his knees and keeps them in position.
h) An ascetic, as above, stands on his head. His left hand is placed on the ground to keep his balance.
i) An ascetic, as above, stands, the palms of his hands turned upwards. A yajnopavita (sacred thread) is shown across his chest.
j) An ascetic, as above, seated in padmasana on a tiger skin. His hands are in anjali mudra, his eyes are closed.
The background of these ten scenes is a rural landscape enlineved by trees and rocks and the occasional cloud in the sky.
274 சிவாலயங்கள் -10
அருள்மிகு பல்லவனேஸ்வரர் திருக்கோயில்
        மூலவர்    :     பல்லவனேஸ்வரர்
      உற்சவர்    :     சோமாஸ்கந்தர்
      அம்மன்/தாயார்    :     சவுந்தர்யநாயகி
      தல விருட்சம்    :     மல்லிகை
      தீர்த்தம்    :     ஜானவி, சங்கம தீர்த்தம்
      ஆகமம்/பூஜை     :     சிவாகமம்
      பழமை    :     1000-2000 வருடங்களுக்கு முன்
      புராண பெயர்    :     பல்லவனேஸ்வரம், காவிரிப்பூம்பட்டினம்
      ஊர்    :     பூம்புகார்
      மாவட்டம்    :     நாகப்பட்டினம்
      மாநிலம்    :     தமிழ்நாடு
 
    பாடியவர்கள்:   
             
      திருஞானசம்பந்தர்

தேவாரப்பதிகம்

அங்கமாறும் வேதநான்கும் ஓதும்அயன் நெடுமால் தங்கணாலும் நேடநின்ற சங்கரன் தங்குமிடம் வங்கமாரு முத்தமிப்பி வார்கடலூட லைப்பர் பங்கமில்லார் பயில்புகாரிற் பல்லவனீச்சரமே.

-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 10வது தலம்.
     
             
     திருவிழா:    
             
      வைகாசி விசாகம். ஆடியில் பட்டினத்தார் விழா.      
             
     தல சிறப்பு:    
             
      இத்தலத்து இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பட்டினத்தார் அவதார தலம்.      
             
    திறக்கும் நேரம்:   
            
     காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.     
           
    முகவரி:   
           
      அருள்மிகு பல்லவனேஸ்வரர் கோயில் (பல்லவனீச்சுரம்) - காவிரிப்பூம்பட்டினம், பூம்புகார் - 609 105. சீர்காழி தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம்.      
           
    போன்:   
           
      +91- 94437 19193.     
            
     பொது தகவல்:   
             
     

இங்கு தலவிநாயகராக அனுக்கை விநாயகர் அருள்புரிகிறார். மூலஸ்தானத்தில் சிவன், பெரிய லிங்கமாக காட்சி தருகிறார். காலவ மகரிஷி இத்தலத்தில் சிவனை வழிபட்டுள்ளார். பட்டினத்தார் தனிச்சன்னதியில் வடக்கு நோக்கியபடி காட்சி தருகிறார். இவரது சன்னதி விமானத்தில் பட்டினத்தார், மனைவி, அவரது தாய் மற்றும் மகனாக வளர்ந்த சிவன் ஆகியோரது சிற்பங்களும் இருக்கிறது. இங்கு சிவனுக்கு பிரம்மோற்ஸவம் கிடையாது. பட்டினத்தாருக்காக விழா எடுக்கப்படுகிறது. இதை "அடியார் உற்சவம்' என்கிறார்கள். கொடிமரம் கிடையாது. ஆடி மாதத்தில் பட்டினத்தார் திருவிழா 12 நாட்கள் நடக்கிறது.

விழாவின் 10ம் நாளில் பட்டினத்தாருக்கு, சிவன் மோட்சம் தரும் நிகழ்ச்சி பெரியளவில் நடக்கும். மருதவாணராக பிறந்த சிவன், அவரை வளர்த்த சிவசர்மா சுசீலை தம்பதியர், பட்டினத்தார், அவரது மனைவி சிவகலை, பட்டினத்தாரின் தாய் ஞானகலாம்பிகை, பட்டினத்தாரின் சீடர் பத்ரகிரியார், நாயடியார் மற்றும் முருகனை மடியில் அமர்த்தியபடி குகாம்பிகை ஆகியோர் இங்கு உற்சவ மூர்த்திகளாக இருக்கின்றனர்.

     
             
 
    பிரார்த்தனை   
            
      அறிவான குழந்தைகள் பிறக்கவும், பொருட்கள் மீதான ஆசை குறையவும் இங்குள்ள பல்லவனநாதரிடம் வேண்டிக்கொள்கின்றனர்.     
            
    நேர்த்திக்கடன்:   
            
      பிரார்த்தனை நிறைவேறியதும் சுவாமி, அம்பாள் மற்றும் பட்டினத்தாருக்கு விசேஷ பூஜை செய்து வழிபடுகிறார்கள்.     
            
     தலபெருமை:   
             
     

இக்கோயிலுக்கு எதிரே வங்காளவிரிகுடா கடல் உள்ளது. சுவாமி, கடலை பார்த்தபடி காட்சி தருகிறார். இங்குள்ள நவக்கிரக மண்டபத்தில் அனைத்து கிரகங்களும், சுவாமியை நோக்கி, மேற்கு பார்த்தபடி இருப்பது சிறப்பான அமைப்பு. பிரகாரத்தில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். மயில் வாகனம் கிடையாது. கோஷ்டத்தில் இரண்டு துர்க்கை இருக்கின்றனர்.

ஒருவரின் காலுக்கு கீழே மகிஷன் இல்லை. சண்டிகேஸ்வரர் சன்னதியில் இரண்டு பேர் இருக்கின்றனர். இத்தலத்திற்கு அருகில்தான் காவிரி, வங்காள விரிகுடா கடலுடன் சங்கமிக்கிறது. இந்த சங்கமமே இத்தலத்தின் தீர்த்தமாகும்.  காவிரி, கடலுக்குள் புகும் இடம் என்பதால் "காவிரிபுகும்பட்டினம்' என்றழைக்கப்பட்ட இவ்வூர் தற்போது "பூம்புகார்' என்றழைக்கப்படுகிறது.

     
             
      தல வரலாறு:   
             
     

முன்னொருகாலத்தில் இப்பகுதியில் சிவநேசர், ஞானகமலாம்பிகை என்னும் சிவபக்த தம்பதியர் வசித்து வந்தனர். இவர்களுக்கு சிவன் அருளால் ஒரு மகன் பிறந்தார். திருவெண்காடர் என்று அழைக்கப்பட்ட இவர், கடல் கடந்து வாணிபம் செய்யும் பணி செய்து வந்தார். 16ம் வயதில் சிவகலை என்பவரை மணந்து கொண்டார். திருமணமாகி பல்லாண்டுகளாக இத்தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் இல்லை. எனவே, திருவெண்காடர் சிவனை வழிபட்டார்.

இவருக்கு அருள் செய்ய விரும்பிய சிவன், வறுமையில் வாடிய சிவபக்த தம்பதியரான சிவசருமர், சுசீலை என்பவர்களின் மகனாக பிறந்தார். மருதவாணர் என்று அழைக்கப்பட்டார். ஒருசமயம் சிவசருமரின் கனவில் தோன்றிய சிவன், மருதவாணரை திருவெண்காடருக்கு தத்து கொடுக்கும்படி கூறினார். அதன்படி திருவெண்காடர், மருதவாணரை தத்தெடுத்து வளர்த்தார். மருதவாணரும் தந்தையின் தொழிலை செய்தார்.

ஒருசமயம் வாணிபம் செய்து விட்டு திரும்பிய மருதவாணர், தாயாரிடம் ஒரு பெட்டியைக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். வீட்டிற்கு வந்த திருவெண்காடர், மகன் சம்பாதித்து வந்திருப்பதை காண பெட்டியைத் திறந்தார். திறந்தவருக்கோ அதிர்ச்சி! அதில் தவிட்டு உமிகளைக் கொண்டு செய்யப்பட்ட எரு மட்டும் இருந்தது. மகனை சம்பாதிக்க அனுப்ப அவன், தவிட்டு எருவைக்கொண்டு வந்ததைக் கண்டவர் கோபத்தில் அதை வீசியெறிந்தார். அதில், ""காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே'' என்று எழுதப்பட்டிருந்தது. அதைக்கண்ட திருவெண்காடருக்கு ஒரு உண்மை உரைத்தது. ""மனிதன் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் கடைசியில் பயனில்லாத காதற்ற ஊசியைக்கூட கையில் கொண்டு செல்ல முடியாது,'' என்ற உண்மையை உணர்ந்தார். உடன் இல்லற வாழ்க்கையை துறந்த அவர், இங்கு சிவனை வணங்கி அவரையே குருவாக ஏற்றார். தனது இல்லற வாழ்க்கையை முடித்து, முக்தி கொடுக்கும்படி வேண்டினார். அவருக்கு காட்சி தந்த சிவன், தகுந்த காலத்தில் முக்தி கிடைக்கும் என்றார்.

அதன்பின் பட்டினத்தார் இங்கிருந்து திருத்தல யாத்திரை மேற்கொண்டு, சென்னை திருவொற்றியூரில் முக்தி பெற்றார். காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்தவர் என்பதால் இவர், "பட்டினத்தார்' என்றழைக்கப்பட்டார். இவருக்கு அருள் செய்த சிவன் இத்தலத்தில் காட்சி தருகிறார்.

     
             
    சிறப்பம்சம்:   
             
      அதிசயத்தின் அடிப்படையில்: இத்தலத்து இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
274 சிவாலயங்கள் -9

அருள்மிகு சாயாவனேஸ்வரர் திருக்கோயில்
 மூலவர்    :     சாயாவனேஸ்வரர்
      உற்சவர்    :     -
      அம்மன்/தாயார்    :     குயிலினும் இனி மொழியம்மை
      தல விருட்சம்    :     கோரை
      தீர்த்தம்    :     ஐராவதம், காவிரி, சங்க முக தீர்த்தங்கள்
      ஆகமம்/பூஜை     :     -
      பழமை    :     1000-2000 வருடங்களுக்கு முன்
      புராண பெயர்    :     திருச்சாய்க்காடு, மேலையூர்
      ஊர்    :     சாயாவனம்
      மாவட்டம்    :     நாகப்பட்டினம்
      மாநிலம்    :     தமிழ்நாடு
 
    பாடியவர்கள்:   
             
      அப்பர், சம்பந்தர்

தேவாரப்பதிகம்

தோடுலா மலர்கள் தூவித்தொழதெழு மார்க்கண்டேயன் வீடுநாள் அணுகிற்சென்று மெய்கொள்வான் வந்தகாலன் பாடுதான் செல்லும் அஞ்சிப் பாதமே சரணம் என்னச் சாடினார் காலன்மாளச் சாய்க்காடு மேவினாரே.

-திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 9வது தலம்.
     
             
     திருவிழா:    
             
      சித்திரைப் பௌர்ணமியில் தொடங்கி இந்திர விழா 21 நாள்களுக்கு நடைபெறுகிறது. ஆடி அமாவாசையில் அன்னமளிப்பு, சித்திரை வைகாசி மாதங்களில் இயற்பகை நாயனார் பெயரில் தண்ணீர்ப் பந்தல், வைகாசியில் குமரகுருபரர் பூஜை, மார்கழியில் இயற்பகை நாயனாருக்கு ஐந்துநாள் விழா அதில் நான்காம் நாளிரவு இறைவன் காட்சி கொடுக்கும் விழாக்களும் நடைபெறுகின்றன.      
             
     தல சிறப்பு:    
             
      இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.      
             
    திறக்கும் நேரம்:   
            
     காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.     
           
    முகவரி:   
           
      அருள்மிகு சாயாவனேஸ்வரர் திருக்கோயில், சாயாவனம்- 609 105, நாகப்பட்டினம் மாவட்டம்.      
           
    போன்:   
           
      +91- 4364 - 260 151     
            
     பொது தகவல்:   
             
     

இக்கோயிலுக்கு அண்மையில்தான் பூம்புகார்க்காவல் தெய்வமான சம்பாகி அம்மன் கோயில் உள்ளது. கோயில் குளத்திற்கு தெற்கில் உள்ளது. முகப்பு வாயிலைக் கடந்ததும் கொடி மரம் இல்லை. கொடிமரத்து விநாயகர் மட்டும் உள்ளார். மாடக் கோயிலாதலின் நந்தி உயரத்தில் உள்ளார். வெளிப்பிரகாரத்தில் சூரியன், இந்திரன், இயற்பகைநாயனார் துணைவியாருடன் உள்ள சன்னதிகள் உள்ளன.

அடுத்துள்ள நால்வர் சன்னதியில் "மூவர் முதலிகளே' உளர். விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, உயர்ந்த பீடத்தில் பைரவர், நவக்கிரக சன்னதி முதலிய சன்னதிகளைத் தொழுதவாறே வலம் முடித்து படிகளேறி, வெளவால் நெத்தி மண்டபத்தை அடைந்தால் வலப்பால் பள்ளியறையும் பக்கத்தில் அம்மன் சன்னதியும் உள்ளன.

     
             
 
    பிரார்த்தனை   
            
      எதிரி பயம் இருப்பவர்கள் வில்லேந்திய வேலவரை வழிபட்டு நலம் பெறலாம்.     
            
    நேர்த்திக்கடன்:   
            
      சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.     
            
     தலபெருமை:   
             
     

கோச்செங்கண்ணன் என்ற சோழ மன்னன் நிறைய சிவாலயங்கள் கட்டினான். அதில் மாடக்கோயில்கள் தான் அதிகம். மாடக்கோயில் என்றால் "யானையால் புக முடியாத கோயில்' என்பதாகும். இக் கோயிலும் ஓர் மாடக்கோயிலாகும்.

63 நாயன்மார்களில் ஒருவர் இயற்பகை நாயனார். இவர் பிறந்து, முக்தியடைந்தது இத்தலத்தில் தான். இவரது மனைவியும் சிறந்த சிவ பக்தை. இவர்களது சிவபக்தியை உலகிற்கு எடுத்துக்காட்ட சிவன் விரும்பினார். ஒரு முறை இவர்களது இல்லத்திற்கு, சிவனடியார் வேடமிட்டு வந்தார். இயற்பகையாரிடம், ""நீ கேட்டதையெல்லாம் இல்லை என்று கூறாமல் அள்ளி கொடுப்பவன் என்பதை அறிவேன். எனவே உனது மனைவியை என்னுடன் அனுப்பி வை,'' என்றார். இயற்பகையாரும் சிறிதும் யோசிக்காமல் தன் மனைவியை சிவனுடன் அனுப்பி வைத்தார். அதற்கு இவரது மனைவியும் சம்மதித்தார். அடுத்து நான் என்ன செய்ய வேண்டும் என இயற்பகையார் சிவனடியாரிடம் கேட்க அதற்கு அவர், ""நான் உனது மனைவியை அழைத்து செல்வதால் உனது உறவினர்கள் என் மீது வெறுப்பு கொள்ள நேரிடும். எனவே இந்த ஊர் எல்லையை கடக்கும் வரை எங்களுக்கு நீ பாதுகாப்பு தர வேண்டும்'' என்றார். இயற்பகையார் அதற்கும் சம்மதித்து கையில் பெரிய வாளுடன் சிவனடியாரையும் தன் மனைவியையும் முன்னே செல்ல கூறிவிட்டு அவர்களுக்கு பாதுகாப்பாக பின்னே சென்றார். சுற்றத்தார் அவர்களைத் தடுத்தனர். இயற்பகையார் அவர்களை எல்லாம் வென்றார்.

ஊர் எல்லையை அடைந்தவுடன் சிவனடியார், ""நான் உன் மனைவியுடன் செல்கிறேன், நீ ஊர் திரும்பலாம்'' என்கிறார். இயற்பகையாரும் அதன்படி செய்தார். திடீரென அங்கிருந்த சிவனடியார் மறைந்து, வானத்தில் அன்னை உமையவளுடன் தோன்றி,""நீ உனது துணைவியாருடன் இந்த பூவுலகில் பல காலம் சிறப்புடன் வாழ்ந்து, என் திருவடி வந்து சேர்க'' எனக்கூறி மறைந்தார்.

மனிதன் மனஉறுதி மிக்கவனாகவும், தைரியசாலியாகவும் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தவே இந்த நாடகம் இறைவனால் நிகழ்த்தப்பட்டது.

வில்லேந்திய வேலவன்: இந்த தலத்தில் முருகப்பெருமான் வில் ஏந்தி போருக்கு புறப்படும் நிலையில் சத்ரு சம்ஹார மூர்த்தியாக காட்சி தருகிறார். கடலில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் இந்த முருகன் தன் வலது காலில் சிவனால் கொடுக்கப்பட்ட வீர கண்டரமணியை அணிந்திருக்கிறார். எதிரிகளை அழிக்க முருகனுக்கு சக்தி கொடுத்த வேல் எப்படியோ, அதே போல் சிவன் கொடுத்தது தான் இந்த வீர கண்டரமணி. எதிரி பயம் இருப்பவர்கள் இவரை வழிபட்டு சங்கடங்களைச் சமாளிக்கும் தைரியம் பெறலாம்.

     
             
      தல வரலாறு:   
             
     

இந்திரனின் தாயான அதிதிக்கு பூமியில் உள்ள சாயாவனேஸ்வரரை வழிபட வேண்டும் என்ற ஆசை நீண்ட காலமாக இருந்தது. அந்த ஆசையை நிறைவேற்ற அவள் பூமிக்கு வந்தாள். தாயைக் காணாத இந்திரன், அவள் சாய்க்காட்டில் இருப்பதை அறிந்து, இத்தலத்தின் சிறப்பை உணர்ந்து கொண்டான். அவள் தினமும் இத்தலத்தை தரிசிக்கும் வகையில், இந்த கோயிலையே தனது ஐராவத யானையை வைத்து தேர் பூட்டி இந்திரலோகம் இழுத்து செல்ல முயற்சித்தான்.

கோயிலை இழுத்ததுமே பார்வதி குயில் போல இனிமையாக கூவினாள். (எனவே தான் அம்மனுக்கு "குயிலினும் இனிமொழியம்மை' என்ற திருநாமம் ஏற்பட்டது.) உடனே சிவன் தோன்றி, ""இந்திரா! இந்த கோயிலை தேவலோகம் கொண்டு சென்று வழிபடவேண்டும் என்று நினைக்காமல், இங்கு வந்து வழிபட்டு நலமடைவாயாக,'' என அருள்புரிந்தார்.

     
             
    சிறப்பம்சம்:   
             
      அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
274 சிவாலயங்கள் -8
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
        மூலவர்    :     சுந்தரேஸ்வரர்
      உற்சவர்    :     -
      அம்மன்/தாயார்    :     அழகம்மை
      தல விருட்சம்    :     வில்வம்
      தீர்த்தம்    :     சந்திர தீர்த்தம்
      ஆகமம்/பூஜை     :     சிவாகமம்
      பழமை    :     1000-2000 வருடங்களுக்கு முன்
      புராண பெயர்    :     கலிக்காமூர்
      ஊர்    :     அன்னப்பன்பேட்டை
      மாவட்டம்    :     நாகப்பட்டினம்
      மாநிலம்    :     தமிழ்நாடு
 
    பாடியவர்கள்:   
             
      தேவாரப்பதிகம்

அருவரை ஏந்திய மாலுமற்றை அலர்மேல் உறைவானும் இருவரும் அஞ்ச எரியுருவாய் எழுந்தான் கலிக்காமூர் ஒருவரை யான்மகள் பாகன்றன்னை யுணர்வால் தொழுதேத்த திருமருவும் அஞ்சிதை வில்லைச் செம்மைத் தேசுண்டவர் பாலே.

-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 8வது தலம்.      
             
     திருவிழா:    
             
      மாசி பவுர்ணமியில் தீர்த்தவாரி, சிவராத்திரி, நவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம்.      
             
     தல சிறப்பு:    
             
      இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.      
             
    திறக்கும் நேரம்:   
            
     காலை 8 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.     
           
    முகவரி:   
           
      அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், (திருக்கலிக்காமூர்), அன்னப்பன்பேட்டை - 609 106. தென்னாம்பட்டினம் போஸ்ட், சீர்காழி தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம்.      
           
    போன்:   
           
      +91- 93605 77673, 97879 29799.     
            
     பொது தகவல்:   
             
      அளவில் சிறிய கோயில் இது. ராஜகோபுரம், கொடிமரம் கிடையாது. பிரகாரத்தில் சிவலிங்கத்தை வணங்கியபடி பராசர மகரிஷி காட்சி தருகிறார். கோஷ்டத்திலுள்ள துர்க்கையம்மன், எட்டு கரங்களுடன் காட்சி தருவது விசேஷம். பிரகாரத்தில் விஸ்வநாதர், அகிலாண்டேஸ்வரி அம்பாளுடன் தனிச்சன்னதியில் காட்சி தருகிறார்.

வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியருக்கு சன்னதி உள்ளது. இங்கிருந்து 6 கி.மீ., தூரத்தில் நவக்கிரக தலங்களில் புதன் தலமான திருவெண்காடு தலம் இருக்கிறது. இத்தலவிநாயகர் செல்வசித்தி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.      
             
 
    பிரார்த்தனை   
            
      நோய்கள் நீங்க, முன்வினைப் பயன்களால் அனுபவிக்கும் பாவத்தின் பலன் குறைய இங்கு வேண்டிக்கொள்ளலாம்.     
            
    நேர்த்திக்கடன்:   
            
      சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.     
            
     தலபெருமை:   
             
      மூன்று விநாயகர்: சுந்தரேஸ்வரருக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து, அதையே மருந்தாக சாப்பிட்டால் தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. ""இத்தலத்து ஈசனை வழிபட்டால் வினை, நோய் நீங்கி, செல்வம் பெருகும்,'' என்று திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் குறிப்பிட்டு பாடியுள்ளார்.

பிரகாரத்தில் வில்வவனநாதர் சன்னதியும் உள்ளது. "கலி' (துன்பம்) நீக்கும் சிவன் வீற்றிருக்கும் ஊர் என்பதால் இவ்வூர், "திருக்கலிக்காமூர்' என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள விநாயகர் மிகவும் விசேஷமானவர். அரிதாக சில சிவன் கோயில்களில் ஒரே சன்னதியில் இரண்டு அல்லது மூன்று விநாயகர்கள் அருகருகில் சேர்ந்து இருப்பர். ஆனால், இங்கு விநாயகர் சன்னதிக்கு முன்புறம் துவாரபாலர்கர் போல இரண்டு விநாயகர் இருக்கின்றனர். இத்தகைய அமைப்பை காண்பது அபூர்வம்.

தீர்த்த நீராடும் அம்பிகை: கடற்கரை, நதிக்கரைகளில் உள்ள சிவன் கோயில்களில் விழாவின்போது சிவன், தீர்த்தக்கரைக்கு எழுந்தருளி தீர்த்தநீராடுவார். ஆனால், இத்தலத்தில் மாசி மகத்தன்று நடக்கும் தீர்த்தவாரியின் போது அம்பாள் மட்டும் கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்த நீராடுகிறாள். இதற்கு ஒரு காரணமும் சொல்கிறார்கள். முற்காலத்தில் இக்கோயிலில் சிவன் சன்னதி மட்டுமே இருந்தது. ஒருசமயம் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர் ஒருவரின் வலையில் இந்த அம்பிகையின் சிலை கிடைத்தது. சிலையை அவர் எடுத்தவுடனேயே வயிற்று வலி வந்துவிட்டது.

சிலையை தூக்கி வந்த அவர், இத்தலம் அருகில் வந்தபோது வலி நின்றுவிட்டது. அதன்பின்பு இவ்விடத்தில் சிவலிங்கம் இருந்ததைக்கண்ட அவர், அம்பிகையையும் இங்கேயே பிரதிஷ்டை செய்தார். இந்த அம்பிகை கடலில் கிடைக்கப்பெற்றவள் என்பதால், வருடத்தில் ஒருமுறை இவளை பிறப்பிடமான கடலுக்கு கொண்டு சென்று தீர்த்த நீராட்டி வருகிறார்கள். நவக்கிரக மண்டபத்தில் அனைத்து கிரகங்களும் வாகனமின்றி நின்ற கோலத்தில் இருக்கின்றன.      
             
      தல வரலாறு:   
             
     

சத்தி என்னும் முனிவர் தீவிர சிவபக்தர். இவர் திரசந்தி என்பவளை மணந்து கொண்டார். திரசந்தி கர்ப்பமுற்றபோது, சத்தி முனிவரை உதிரன் என்னும் அசுரன் கொன்றுவிட்டான். திரசந்திக்கு ஒரு மகன் பிறந்தான். தாயின் மடியில் தவழ்ந்த குழந்தை தனது தாய், அமங்கலையாக (கணவனை இழந்த பெண்) இருந்ததைக் கண்டு வருந்தியது.  பராசரர் என்று அழைக்கப்பட்ட இக்குழந்தை, வேதத்தில் புலமை பெற்று மகரிஷியானார். தன் தந்தையை கொன்ற அசுரன் உதிரனை அழிக்க பெரிய யாகம் ஒன்றை நடத்தினார். இந்த யாகத்தின் பலனைக்கொண்டு உதிரனை அழித்தார்.

அசுரனாக இருந்தாலும் உயிரைக் கொலை செய்ததால் இவருக்கு தோஷம் உண்டானது. தோஷம் நீங்க அவர் பல தலங்களுக்கு யாத்திரை சென்றார். அவர் இத்தலம் வந்தபோது சிவன் காட்சி தந்து, விமோசனம் கொடுத்தருளினார். அவரது வேண்டுதலுக்காக இத்தலத்தில் எழுந்தருளினார். பராசர மகரிஷிக்கு அழகு பொருந்தியவராக காட்சி தந்ததால் இவர், "சுந்தரேஸ்வரர்' என்று பெயர் பெற்றார். வில்வ வனத்தின் மத்தியில் எழுந்தருளியவர் என்பதால் இவருக்கு "வில்வவன நாதர்' என்றும் பெயருண்டு.

     
             
    சிறப்பம்சம்:   
             
      அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
274 சிவாலயங்கள் -7


அருள்மிகு முல்லைவன நாதர் திருக்கோயில்

 
 
 
    மூலவர்    :     முல்லைவனநாதர், மாசிலாமணீசர் , (யூதிகா பரமேஸ்வரர்)
      உற்சவர்    :     -
      அம்மன்/தாயார்    :     அணிகொண்ட கோதையம்மை,( சத்தியானந்த சவுந்தரி)
      தல விருட்சம்    :     முல்லை
      தீர்த்தம்    :     பிரம்ம, சந்திர தீர்த்தங்கள்
      ஆகமம்/பூஜை     :     -
      பழமை    :     1000-2000 வருடங்களுக்கு முன்
      புராண பெயர்    :     தென்திருமுல்லைவாயில்
      ஊர்    :     திருமுல்லைவாசல்
      மாவட்டம்    :     நாகப்பட்டினம்
      மாநிலம்    :     தமிழ்நாடு
 
    பாடியவர்கள்:   
             
     

திருஞானசம்பந்தர்


தேவாரப்பதிகம்


ஊனேறு வேலின் உருவேறு கண்ணி ஒளியேறு கொண்ட ஒருவன் ஆனேற தேறி யழகேறு நீறன் அரவேறு பூணும் அரனூர் மானேறு கொல்லை மயிலேறி வந்து குயிலேறு சோலை மருவித் தேனேறு மாவின் வளமேறி யாடு திருமுல்லை வாயில் இதுவே.


-திருஞானசம்பந்தர்


தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 7வது தலம்.


     
             
     திருவிழா:    
             
      மாசி மகத்தன்று தீர்த்தவாரி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.      
             
     தல சிறப்பு:    
             
      இங்கு சிவன் மூன்றரை அடி உயரத்தில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்குள்ள லிங்கத்தில் வாளால் வெட்டுப்பட்ட காயத்தழும்பை இன்றும் காணலாம்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.      
             
    திறக்கும் நேரம்:   
            
     காலை 8 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.     
           
    முகவரி:   
           
      அருள்மிகு அணிகொண்ட கோதையம்மை சமேத முல்லைவன நாதர் திருக்கோயில், திருமுல்லைவாசல் - 609 113. நகாப்பட்டினம் மாவட்டம்.      
           
    போன்:   
           
      +91-94865 24626     
            
     பொது தகவல்:   
             
      தற்போது சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்ட இத்தலத்திலிருந்து அரை கி.மீ. தூரத்தில் கடற்கரை அமைந்துள்ளது.      
             
 
    பிரார்த்தனை   
            
      சூரிய, சந்திர கிரகணம், அமாவாசை காலங்களில் இங்கு வந்து பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபிப்பவர்களுக்கு மறு பிறப்பில்லை என்பது ஐதீகம்.     
            
    நேர்த்திக்கடன்:   
            
      சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.     
            
     தலபெருமை:   
             
     

பொதுவாக எல்லா பெரிய சிவத்தலங்களிலும் பள்ளியறை உண்டு. தினமும் அதிகாலை வேளையிலும், இரவு வேளையிலும் பள்ளியறை பூஜை நடப்பது வழக்கம். ஆனால், பள்ளியறையே இல்லாத சிவத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் திருமுல்லை வாசல் ஆகும். திருமுல்லை வாசல் என்ற இத்தலத்தின் இறைவன் முல்லைவனநாதர். மூன்றரை அடி உயரத்தில் பெரிய சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இவருக்கு யூதிகா பரமேஸ்வரர் என்ற பெயரும் உண்டு. அம்பாளின் பெயர் அணிகொண்ட கோதை என்ற சத்தியானந்த சவுந்தரி.

பஞ்சாட்சர மந்திரம் பற்றி அறிந்து கொள்ள இங்குள்ள முல்லைவன நாதரை அம்மன் வழிபட்டதால், சிவபெருமான் குருவாக இருந்து அம்மனுக்கு உபதேசித்தார். எனவே இத்தலத்தில் சிவன் குருவாக வீற்றிருக்கிறார். எனவே இங்கு பள்ளியறையும், பூஜையும் கிடையாது.

சுசாவி என்பவரின் மூத்தபிள்ளை வாமதேவர். தந்தை இறந்ததும் அவரது எலும்பை புண்ணிய தீர்த்தங்கள் பலவற்றிலும் போட்டார். அப்படி போட்டு வரும் போது இத்தலத்து தீர்த்தத்தில் போடும்போது அந்த எலும்பு, ரத்தினக்கல்லாக மாறியது. உடனே தந்தைக்கு இங்கு பிதுர் கடனாற்றினார். அத்துடன் தந்தைக்கு முக்தியளித்த தனயரானார்.

இத்தலத்தின் வாயு திசையில் உள்ள கிணற்றில் கங்கை வாசம் செய்வதாக ஐதீகம்.  இத்தலம் 1300 வருடங்களுக்கு முன் கிள்ளி வளவனால் கட்டப்பட்டது. இத்தலத்தைப்பற்றி திருஞான சம்பந்தர் பாடியுள்ளார்.

     
             
      தல வரலாறு:   
             
     

 கரிகால் சோழனின் பாட்டனார் முதலாம் கிள்ளி வளவன் சரும நோயால் மிகவும் வேதனைப்பட்டான். நோய் தீரவேண்டுமானால் சிவத்தலம் ஒன்றில் உள்ள தீர்த்தத்தில் நீராட வேண்டுமென அரண்மனை வைத்தியர்கள் கூறினர். நோய் தீர தன் பரிவாரங்களுடன் இத்தலத்தின் அருகில் உள்ள கடலில் நீராட வந்தான். அப்போது இந்த பகுதி முழுவதும் முல்லை கொடிகளாக இருந்தது. எனவே இவர்கள் வந்த குதிரையின் குளம்பு முல்லை கொடிகளில் சிக்கிக் கொண்டது. அதற்கு மேல் குதிரைகளால் நகர முடியவில்லை. 

முல்லைக் கொடிகளை கிள்ளிவளவன் வாளால் வெட்டும் போது, அதன் கீழேயிருந்த சுயம்பு மூர்த்தியின் மீது பட்டு ரத்தம் பெருகியது.அதிர்ச்சியடைந்த கிள்ளிவளவன், ஏதோ ஒரு உயிரை வெட்டி விட்டோமே என பார்க்க, அங்கே லிங்கம் ஒன்று ரத்தம் வழிய காட்சியளித்தது. தெரியாமல் மாபெரும் தவறு செய்து விட்டோமே என வருந்திய வளவன், தன்னைத்தானே வெட்ட முற்பட்டான். உடனே ஈசன் பார்வதியுடன் ரிஷபாரூடராக காட்சி தந்து கிள்ளிவளவனை காப்பாற்றினார்.எனவே தான் இத்தலத்திற்கு திருமுல்லை வாசல் என்று பெயர் வந்தது. லிங்கத்தில் வாளால் வெட்டுப்பட்ட காயத்தழும்பை இன்றும் காணலாம்.

     
             
    சிறப்பம்சம்:   
             
      அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் மூன்றரை அடி உயரத்தில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்குள்ள லிங்கத்தில் வாளால் வெட்டுப்பட்ட காயத்தழும்பை இன்றும் காணலாம்.
274 சிவாலயங்கள் -6

அருள்மிகு திருமேனியழகர் திருக்கோயில்

        மூலவர்    :     திருமேனியழகர்
      உற்சவர்    :     -
      அம்மன்/தாயார்    :     வடிவாம்பிகை
      தல விருட்சம்    :     கண்ட மரம், தாழை
      தீர்த்தம்    :     கோயில் எதிரே உள்ள மயேந்திர தீர்த்தம்
      ஆகமம்/பூஜை     :     -
      பழமை    :     1000-2000 வருடங்களுக்கு முன்
      புராண பெயர்    :     திருமகேந்திரப் பள்ளி
      ஊர்    :     மகேந்திரப் பள்ளி
      மாவட்டம்    :     நாகப்பட்டினம்
      மாநிலம்    :     தமிழ்நாடு
 
    பாடியவர்கள்:   
             
     

சம்பந்தர்
தேவாரப்பதிகம்

கொண்டல்சேர் கோபுரம் கோலமார் மாளிகை கண்டலும் கைதையும் கமலமார் வாவியும் வண்டுலாம் பொழிலணி மயேந்திரப் பள்ளியில் செண்டுசேர் விடையினான் திருந்தடி பணிமினே.

-திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 6வது தலம்.

     
             
     திருவிழா:    
             
      மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குஉத்திரம், திருக்கார்த்திகை      
             
     தல சிறப்பு:    
             
      பங்குனி மாதத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. அலங்காரப்பிரியரான திருமால் அழகர் என்று அழைக்கப் படுவது தெரிந்த விஷயம்தான். மகேந்திரப் பள்ளி தலத்தில் சிவபெருமானை அழகர் என்று அழைக்கிறார்கள்.      
             
    திறக்கும் நேரம்:   
            
     காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.     
           
    முகவரி:   
           
      அருள்மிகு திருமேனியழகர் திருக்கோயில், மகேந்திரப்பள்ளி -609 101. கோயிலடிப் பாளையம், நாகப்பட்டினம் மாவட்டம்.      
           
    போன்:   
           
      +91-4364- 292 309.     
            
     பொது தகவல்:   
             
     

பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர், மனைவியுடன் இருக்கிறார். விநாயகருக்கு தனிசன்னதி இருக்கிறது. இவருக்கு இருபுறமும் ராகு, கேது இருவரும் உள்ளனர். விஸ்வநாதர், விசாலாட்சி, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், பைரவர், சனீஸ்வரர், சூரியன், சந்திரன் ஆகியோரும் இருக்கின்றனர். நவக்கிரக சன்னதி இல்லை.

     
             
 
    பிரார்த்தனை   
            
     

முன்வினைப்பயனால் சிரமப்படுபவர்களும், ஜாதகத்தில் சூரிய, சந்திர தசை நடப்பவர்களும் இங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி இங்கு வேண்டிக் கொள்கிறார்கள். பிரம்மனுக்குரிய தீர்த்தம் என்பதால் இங்கு நீராடினால், துன்பப்பட வேண்டும் என எழுதப்பட்ட தலையெழுத்து மாறி, நல்விதி ஏற்படும் என்பது நம்பிக்கை. கல்வியில் சிறக்கவும், நாகதோஷம் நீங்கவும் இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

     
            
    நேர்த்திக்கடன்:   
            
      முகப்பொலிவு வேண்டி இத்தலத்தில் பக்தர்கள், சுவாமிக்கு வெண்ணிற வஸ்திரம், அம்பாளுக்கு மஞ்சள் நிற வஸ்திரம் அணிவித்து வேண்டிக்கொள்கிறார்கள்.     
            
     தலபெருமை:   
             
     

அழகு தரும் சிவன்: சிவன், அம்பாள் இருவரும் மிகவும் அழகாக காட்சி தருகின்றனர். எனவே சுவாமி, "திருமேனி யழகர்' என்றும், அம்பாள் வடிவாம்பிகை' என்றும் அழைக்கப்படுகின்றனர்.  இங்கு வந்த திருஞானசம்பந்தர் சுவாமியை, "அழகர்' என குறிப்பிட்டு பாடியிருக்கிறார். மதுரை அருகிலுள்ள அழகர் கோவிலில் உள்ளபெருமாள் "சுந்தரராஜன்' என்று சமஸ்கிருதத்திலும், "அழகர்' என்று தமிழிலும் வழங்கப்படுகிறார். அதுபோல, இத்தலத்தில் சிவன் "அழகர்' என்ற பெயரில் அழைக்கப்படுவது விசேஷம்.

சூரியன், சந்திரன், இந்திரன், பிரம்மா ஆகியோரால் பூஜிக்கப்பட்ட தலம் இது. பங்குனி மாதத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. சிவன் சன்னதி கோஷ்டத்தில் (சுற்றுச்சுவர்) தெட்சிணாமூர்த்தி மட்டும் இருக்கிறார்.

     
             
      தல வரலாறு:   
             
     

இந்திரன், கவுதம மகரிஷியின் மனைவி அகலிகை மீது ஆசை கொண்டதால், அவரிடம் உடம்பெல்லாம் கண்ணாகும்படி சாபம் பெற்றான். விமோசனத்திற்காக பூலோகம் வந்த அவன், பல தலங்களில் லிங்க பிரதிஷ்டை செய்து, சிவனை வழிபட்டான். அதில் ஒன்று மகேந்திரப்பள்ளியாகும். சிறப்பு மிக்க (மகா) இந்திரன் வழிபட்டதால், "மகேந்திரப்பள்ளி' என்ற சிறப்பு பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது. பிற்காலத்தில் இவ்விடத்தில் கோயில் எழுப்பப்பட்டது.

     
             
    சிறப்பம்சம்:   
             
      அதிசயத்தின் அடிப்படையில்: பங்குனி மாதத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது.
274 சிவாலயங்கள் -5
அருள்மிகு சிவலோகத்தியாகர் திருக்கோயில்

 மூலவர்    :     சிவலோகத்தியாகர்
      உற்சவர்    :     திருஞான சம்பந்தர்
      அம்மன்/தாயார்    :     திருவெண்ணீற்று உமையம்மை, சுவேத விபூதி நாயகி
      தல விருட்சம்    :     மாமரம்
      தீர்த்தம்    :     பஞ்சாக்கர, பிருகு, அசுவ, வசிஷ்ட, அத்திரி, சமத்கனி, வியாச மிருகண்டு தீர்த்தம்
      ஆகமம்/பூஜை     :     -
      பழமை    :     1000-2000 வருடங்களுக்கு முன்
      புராண பெயர்    :     சிவலோகபுரம், நல்லூர்பெருமணம், திருமண நல்லூர் , திருமணவை
      ஊர்    :     ஆச்சாள்புரம்
      மாவட்டம்    :     நாகப்பட்டினம்
      மாநிலம்    :     தமிழ்நாடு
 
    பாடியவர்கள்:   
             
     

சம்பந்தர்

தேவாரப்பதிகம்

அன்புறு சிந்தைய ராகி அடியவர் நன்புறு நல்லூர்ப் பெருமண மேவிநின் இன்புறும் எந்தை இணையடி ஏத்துவார் துன்புறுவார் அல்லர் தொண்டு செய்வாரே.

திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 5வது தலம்.

     
             
     திருவிழா:    
             
      மகா சிவராத்திரி      
             
     தல சிறப்பு:    
             
      இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.இக்கோயிலின் பிரகாரத்தில் ருணலிங்கேஸ்வரர் அமைந்திருப்பது தலத்தின் சிறப்பு.      
             
    திறக்கும் நேரம்:   
            
     காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.     
           
    முகவரி:   
           
      அருள்மிகு சிவலோக தியாகராஜ சுவாமி திருக்கோயில், ஆச்சாள்புரம், சீர்காழி- 609 101. நாகப்பட்டினம் மாவட்டம்.      
           
    போன்:   
           
      +91- 4364 - 278 272     
            
     பொது தகவல்:   
             
     

இக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்து ஐந்து நிலைகளுடன் கூடிய ராஜ கோபுரத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது. ராஜ கோபுரத்தை அடுத்து நந்த மண்டபமும், அடுத்து நூற்றுக்கால் மண்டபமும் அமைந்துள்ளது.

நூற்றுக்கால் மண்டபத்தில் சம்பந்தப்பெருமான், ஸ்தோத்திர பூராணாம்பிகையோடு மணக்கோலத்தில் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். அடுத்து கிழக்கே பார்த்தபடி சிவலோகதியாகராஜர் சன்னதியும், திருவெண்ணீற்று உமையம்மையின் சன்னதியும் அமைந்துள்ளது.

திருமால், காகமுனிவர், வசிட்டர், பராசரர், பிருகு, ஜமதக்னி ஆகியோர் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர்.

     
             
 
    பிரார்த்தனை   
            
     

இத்தல இறைவனை தரிசித்து செல்லும் பக்தர்களின் வாழ்க்கையில் தரித்திரம் நீக்கி, முக்தி கிடைப்பது நிச்சயம். இங்குள்ள ருணலிங்கேஸ்வரை வழிபட்டால் கடன் பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.

     
            
    நேர்த்திக்கடன்:   
            
      சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.     
            
     தலபெருமை:   
             
     

சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பு வேத நெறி தழைத்தோங்கவும், சைவத்துறை விளக்கம் பெறவும் திருஞான சம்பந்தர் அவதரித்த தலம் சீர்காழி. அதேபோல் தனது திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் அனைவருடன் தானும் சிவ ஜோதியில் கலந்த தலம் ஆச்சாள்புரம். இவரை உடலால் சிறியவர், உணர்வால் பெரியவர் என சேக்கிழார் போற்றுகிறார்.

ஆச்சாள், ஆயாள் என்பது அம்பிகையின் பெயர்கள். ஆச்சாளே நேரில் வந்து ஞானசம்பந்தரின் திருமணத்திற்கு வந்திருந்தவர்களுக்கு திருநீறு அளித்ததால் அம்மனுக்கு திருவெண்ணீற்று உமையம்மை என்ற திருநாமமும், இத்தலத்திற்கு ஆச்சாள்புரம் என்ற பெயரும் ஏற்பட்டது.

 
வசிஷ்டர், பராசரர், பிருகு, ஜமத்கனி முனிவர் ஆகியோர்களுக்கு இறைவன் கயிலை காட்சி காட்டி அருள்புரிந்து உள்ளார். பிரம்மா இங்கு வந்து வழிபட்டு படைப்பு தொழிலை கைவரப்பெற்றார். விஷ்ணு வந்து வழிபட்டு அசுரர்களை வெல்லும் வரம் பெற்றார். இந்திரன் போகம் பெற்றான். சந்திரன் அபயம் பெற்றான். கங்கா தேவி தவம் செய்து இங்குள்ள வாசலில் எழுந்து இறைவனை வழிபட்டாள். இங்கு வந்து வழிபட்டால் வினைகள் நீங்கும். பந்த பாசம் விலகும். சம்பந்தருக்கு சிவஜோதியில் கலக்க செய்த இறைவனை வழிபடுபவர்களுக்கு முக்தி நிச்சயம்.


காக முனிவர் இத்தலத்தை காலால் மிதிப்பதற்கு பயந்து தலையால் நடந்து வந்து நிருதி திசையில் அமர்ந்து தவமிருந்தார். சம்பந்தர். திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலநக்கநாயனார் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.


திருநீறு பிரசாதம்: இந்த அம்மனின் சன்னதியில் திருநீறு தான் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதைப் பூசினால் நோய் விலகும், முன்ஜென்ம பாவம் விலகும், தரித்திரம் நீங்கி சரித்திரம் படைக்கலாம், பெண்களுக்கு தாலி பாக்கியம் நீடித்திருக்கும் என்பது ஐதீகம்.


     
             
      தல வரலாறு:   
             
     

சீர்காழியில் சிவபாதஇருதயரின் மகனாக அவதரித்தவர் சம்பந்தர். இவருக்கு 16 வயது நடக்கும் போது, இவரை திருமணம் செய்து கொள்ளும்படி தந்தை கூறினார். முதலில் மறுத்த சம்பந்தர், பின் "இறைவனின் விளையாட்டு தான் இது', என்று சம்மதித்தார். மயிலாப்பூரில் சிவநேச செட்டியாரின் மகளை பெண் பார்த்து முடித்தனர். அவள் திடீரென இறந்து போனாள். அவளுக்கு உயிர் கொடுத்த சம்பந்தர் அவளை தன் மகளாக ஏற்றார். அப்பெண் இறைப்பணியில் மூழ்கி விட்டார்.

இதன்பிறகு, நல்லூரில் உள்ள நம்பியாண்டார் நம்பியின் மகள் மங்கை நல்லாள் நிச்சயித்தார் சிவபாத இருதயர். ஞானசம்பந்தரும் மணக்கோலம் பூண்டார். ஆச்சாள்புரம் கோயிலில் திருமணம் நடக்க இருந்தது. திருநீலக்க நாயனார் மணவிழா சடங்குகளை செய்தார். சம்பந்தர் அக்னியை வலம் வரும் போது "இருவினைக்கு வித்தாகிய இல்வாழ்க்கை நம்மை சூழ்ந்ததே, இனி இவளோடும் அந்தமில் சிவன் தாள் சேர்வேன்'' என்று கூறி, "கல்லூர்ப் பெருமணம்' என தொடங்கும் பதிகம் பாடி சிவனின் திருவடியில் சேரும் நினைவோடு இறைவனை வழிபட்டார். அப்போது எல்லாம் வல்ல ஈசன் ஜோதிப்பிழம்பாக தோன்றி,""நீயும் உனது மனைவியும் திருமணம் காண வந்தோர் அனைவரும் இந்த ஜோதியில் கலந்து விடுக''என்று அருள்புரிந்தார்.

இந்த காட்சியைக்கண்ட ஞான சம்பந்தர் மெய்சிலிர்த்து
""காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது
வேத நான்கினு மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமசிவாயவே''
எனத் தொடங்கும் நமசிவாய திருப்பதிகம் பாடி அனைவருக்கும் சிவலோகம் வழங்கி, தாமும் தன் துணைவியார் மங்கை நல்லாளுடன் சிவஜோதியில் கலந்தார். இந்த பதிகம் தான் சம்பந்தர் தன் வாழ்நாளில் பாடிய கடைசிப்பதிகமாகும்.

ஆண்டு தோறும் வைகாசி மூல விழாவில் இந்த காட்சி திருவிழாவாக நடக்கிறது.
     
             
    சிறப்பம்சம்:   
             
      அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்
274 சிவாலயங்கள் -4

அருள்மிகு பால்வண்ணநாதர் திருக்கோயில்
 மூலவர்    :     பால்வண்ணநாதர்
      உற்சவர்    :     -
      அம்மன்/தாயார்    :     வேதநாயகி
      தல விருட்சம்    :     வில்வம்
      தீர்த்தம்    :     கொள்ளிடம்
      ஆகமம்/பூஜை     :     -
      பழமை    :     1000-2000 வருடங்களுக்கு முன்
      புராண பெயர்    :     திருக்கழிப்பாலை, காரைமேடு
      ஊர்    :     திருக்கழிப்பாலை
      மாவட்டம்    :     கடலூர்
      மாநிலம்    :     தமிழ்நாடு
 
    பாடியவர்கள்:   
             
     

அப்பர், சம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர்

தேவாரப்பதிகம்

எங்கேனும் இருந்துன் அடியேன் உனைநினைந்தால் அங்கே வந்து என்னொடும் உடனாகி நின்றருளி இங்கே என்வினையை அறுத்திட்டு எனையாளும் கங்கா நாயகனே கழிப்பாலை மேயானே.

-சுந்தரர்.

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 4வது தலம்.

     
             
     திருவிழா:    
             
      தைப்பூசம், நவராத்திரி, கார்த்திகை சோமவாரம், ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை.      
             
     தல சிறப்பு:    
             
      இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். குதிரையின் கால் குளம்பு பட்டு பிளந்து போன வெண்ணிற லிங்கத்திற்கு தான் இன்றும் பூஜை நடக்கிறது. லிங்கத்திற்கு பின்னால் சிவனும் பார்வதியும் திருமணக்கோலத்தில் உள்ளனர்.      
             
    திறக்கும் நேரம்:   
            
     காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.15 மணி வரை திறந்திருக்கும்.     
           
    முகவரி:   
           
      அருள்மிகு பால்வண்ணநாதர் திருக்கோயில், திருக்கழிப்பாலை-608 002, சிவபுரி போஸ்ட், அண்ணாமலை நகர், சிதம்பரம் தாலுகா, கடலூர் மாவட்டம்.      
           
    போன்:   
           
      +91- 98426 24580.     
            
     பொது தகவல்:   
             
     

கிழக்கு நோக்கிய 3 நிலை ராஜ கோபுரம். உள்பிரகார நுழைவு வாசலின் இருபுறமும் அதிகார நந்தியர் தமது துணைவியருடன் உள்ளனர். பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியர், கஜலட்சுமி, விஷ்ணு, பிரம்மா, அகோர மூர்த்தி, முயலகன் மாறிய நிலையில் தெட்சிணாமூர்த்தி, கிராதமூர்த்தி, நாயன்மார்கள், சதுரா துர்க்கை, புவனேஸ்வரி ஆகியோர் உள்ளனர்.

இத்தலம் முன்பு கொள்ளிட ஆற்றின் வடகரையில் கரைமேடு என்னுமிடத்தில் இருந்ததால், இத்தலத்திற்கு கழிப்பாலை என்ற பெயர் இருந்தது.

கொள்ளிட ஆற்றின் வெள்ளப்பெருக்கால் கோயில் முழுவதும் சிதலமடைந்து விட்டது. எனவே தற்போது உள்ள இடத்தில் கோயில் கட்டி, அதில் கழிப்பாலை இறைவனையும், இறைவியையும் பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.

     
             
 
    பிரார்த்தனை   
            
      லிங்கத்திற்கு அபிஷேகம் செய்த பாலை அருந்தினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும், உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய் விலகும் என்பது நம்பிக்கை.     
            
    நேர்த்திக்கடன்:   
            
      எல்லா செயல்களிலும் வெற்றிகிடைக்க இங்குள்ள விஜய விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தியில் அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு.     
            
     தலபெருமை:   
             
     

இங்குள்ள பைரவர் காசியில் உள்ளது போல நாய் வாகனம் இல்லாமல், 27 மண்டை ஓட்டுடன், பூணூல் அணிந்து, சர்ப்பத்தை அரைஞான அணிந்து, ஜடாமுடி, சிங்கப்பல்லுடன் தனிக்கோயிலில் அருளுகிறார். காசியில் பைரவரை வடிவமைத்த சிற்பியே இங்குள்ள பைரவரையும் வடிவமைத்ததாக கூறப்படுகிறது.

இத்தல பைரவரை வணங்கினால் காசி பைரவரை வணங்கிய பலன் கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன. எனவே இப்பகுதி மக்கள் இத்தலத்தை பைரவர் கோயில் என்றே அழைக்கின்றனர். தேய்பிறை அஷ்டமி இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

அகத்தியருக்கு காட்சி தந்த தலங்களில் இதுவும் ஒன்று. வால்மீகி முனிவர் இங்கு வழிபாடு செய்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. அருணகிரிநாதர் இத்தல முருகன் மீது திருப்புகழ் பாடியுள்ளார்.

இங்குள்ள நடராஜரின் சடைமுடி அள்ளிமுடிந்த கோலத்தில் உள்ளது. அருகில் சிவகாமியம்மன், தன் தோழிகளான விஜயா, சரஸ்வதியுடன் உள்ளது தனி சிறப்பாகும்.

     
             
      தல வரலாறு:   
             
     

கபிலமுனிவர் ஒவ்வொரு சிவத்தலங்களாக தரிசித்து வரும் போது, வில்வ வனமாக இருந்த இப்பகுதியில் தங்கி சிவபூஜை செய்ய நினைத்தார். இப்பகுதியில் பசுக்கள் தானாக பால்சுரந்து வந்த காரணத்தினால் மணல் முழுவதும் வெண்ணிறமாக காட்சியளித்தது.

முனிவர் இந்த வெண்ணிற மணலை எடுத்து லிங்கம் அமைத்து வழிபாடு செய்தார். ஒருமுறை அந்த வழியாக வந்த மன்னனது குதிரையின் கால் குளம்பு, மணல் லிங்கத்தின்மீது பட்டு லிங்கம் பிளந்து விடுகிறது.

வருந்திய முனிவர் பிளவுபட்ட லிங்கத்தை எடுத்துவிட்டு வேறு லிங்கம் பிரதிஷ்டை செய்ய நினைத்த போது, இறைவன் பார்வதி சமேதராக காட்சி தந்து,""முனிவரே! பசுவின் பால் கலந்த வெண்ணிற மணலில் செய்த லிங்கம் பிளவு பட்டிருந்தாலும் அதை அப்படியே பிரதிஷ்டை செய்து விடுங்கள்.

காமதேனுவே பசுவடிவில் இங்கு வந்து பால்சொறிந்துள்ளது. எனவே இந்த லிங்கத்தை வழிபடுபவர்கள் சகல செல்வங்களும் அடைவார்கள்,'என்றார்.

     
             
    சிறப்பம்சம்:   
             
      அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். குதிரையின் கால் குளம்பு பட்டு பிளந்து போன வெண்ணிற லிங்கத்திற்கு தான் இன்றும் பூஜை நடக்கிறது. லிங்கத்திற்கு பின்னால் சிவனும் பார்வதியும் திருமணக்கோலத்தில் உள்ளனர்.