செவ்வாய், 9 ஜூலை, 2019

நூத்திஎட்டு திவ்ய தேசங்கள்
அருள் மிகு கோவர்த்தநேசன் திருக்கோவில்.

மூலவர் : கோவர்த்தநேசன், பால கிருஷ்ணன்
தாயார் : சத்யபாமா நாச்சியார்
தீர்த்தம் : இந்திர தீர்த்தம், கோவர்த்தண தீர்த்தம், யமுனா நதி
பழமை : 3000 வருடங்களுக்கு முன்
ஊர் : மதுரா
மாவட்டம் : மதுரா
மாநிலம் : உத்திர பிரதேசம்
பாடியவர்கள் : பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப் பொடியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகிய 5 ஆழ்வார்களால் மொத்தம் 50 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்விக்கப்பட்டது.

மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்
தூய பெரு நீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய

என்று திருப்பாவையில் ஆண்டாள் அகம் மகிழ வாயார வாழ்த்திய வடமதுரைத் தலத்தை பார்த்தால் உடல் தானாகச் சிலர்க்கும்.
 
திருவிழா :  கிருஷ்ண ஜென்மாஷ்டமி இங்கே மிகவும் விசேஷம். அந்த விழாவின் முதல் ஒரு வாரம் வரை கிருஷ்ண சரிதம் முழுவதையும் நாடகமாக நடிக்கிறார்கள். பல லட்சம் மக்கள் அதைக் கண்டுகளிப்பார்களாம். 
     
திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 12 மணி வரை, மாலை 2 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
விலாசம் : அருள்மிகு கோவர்த்தநேசன் திருக்கோயில் மதுரா. 
   
தகவல் :  மதுராவிலிருந்து பிருந்தாவனத்துக்கு 11 கி.மீ தொலைவிலும், கோவர்த்தனத்துக்கு 22 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
மதுராவில் கோயில் முற்றத்தில் துளசிச் செடிகளுடன் யாக குண்டம் ஒன்று தென்படுகிறது. சிற்ப வடிவில் தேவகியும் வசுதேவரும் கையில் வாளோடு கம்சனும் நிற்கிறார்கள். விலங்கோடு வசுதேவரும் தேவகியும் உட்கார்ந்திருக்கும் சிற்பம். ஒரு குழந்தையைத் தலைகீழாகப் பிடித்திருக்கும் கம்சன் என மேலும் பல சிற்பங்களையும் பார்க்க முடிகிறது. சன்னதிக்கு வெளியே தசாவதாரக் காட்சிகளை வரைந்து தொங்கவிட்டு இருக்கிறார்கள். ஆஞ்சநேயர் சன்னதி ஒன்றும் அங்கே அழகுறக் காட்சி தருகிறது.
 
ஸ்தலபெருமை :  கண்ணன் அவதரித்த ஜென்ம ஸ்தலம் தான் மதுரா. விரஜ பூமி எனப்படும் புண்ணிய பூமியின் மையம் தான் இந்த நகரம். கண்ணன் பிறந்தது மதுரா நகர் பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப் பொடியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகிய 5 ஆழ்வார்களால் மொத்தம் 50 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்விக்கப்பட்ட திவ்ய க்ஷேத்திரமாகும். ஆழ்வார்களில் பாடல் பெற்ற கோயில்கள் தற்போது இல்லை. பிற்காலத்தில் கட்டப்பட்ட துவாரகாநாதர் மற்றும் மதுராநாதர் ஆலயங்கள் தான் இருக்கின்றன. மதுராவை அரசாளும் கண்ணனை மனம் உருகிச் சேவித்தால் செய்த பாவம் எல்லாம் தீ முன் பஞ்சு போல் வெந்து போகும் என்ற மேற்படி பொருள் பொதிந்த திருப்பாவைப் பாடல் வரிகள் மனத்தில் ஒலித்த படி இருந்தன. மதுரா கோயிலில் அருளும் மூலவரின் திருநாமம் கோவர்த்தநேசன். கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். உடனுறைபவர் சத்யபாமா தாயார். இத்தலத்தில் உள்ள விமானம் கோவர்த்தன விமானம். கோயில் மிகவும் விஸ்தாரமாக இருக்கிறது. செயற்கையாக ஒரு குன்றை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். குன்றுக்குள் போய்ப் பார்த்து விட்டும் வரலாம். சற்று உள்ளே போனால் கல் கோட்டை போன்ற ஒரு பகுதி. வலது புறம் இருக்கும் பெரிய கதவுகளை அடுத்து அமைந்திருக்கும் அறையில் ஒரு மேடை இருக்கிறது. எல்லோரும் அந்த மேடையைக் கண்ணில் ஒற்றிக்கொண்டு செல்கிறார்கள். சிலர் அங்கேயே தியானம் செய்கிறார்கள். அந்த மேடை தான் பகவான் கிருஷ்ணர் அவதரித்த இடம் என்கிறார்கள் அந்த மேடைக்கு உயரமான மேற்கூரை அமைத்திருக்கிறார்கள். அந்த திவ்ய இடத்தை தரிசித்து விட்டு வெளியே வந்தால் கோயில் கட்டடத்தை ஒட்டியே இன்னொரு பெரிய கட்டடம் தென்படுகிறது. விலாசமான படிகளின் வழியாக ஏறினால். அதற்குள் செல்லலாம். எதரே மிகப் பெரிய ஹால் அங்கே எக்கச்சக்கமான தூண்கள். அவை சதுர வடிவில் அமைந்திருக்கின்றன. தூண்களில் மகாபாரதம் மற்றும் ராமாயணக் காட்சிகள் சித்திரிக்கப்பட்டு இருக்கின்றன. சன்னிதியில் பளிங்கினால் ஆன கடவுள் திரு உருவங்கள் காணப்படுகின்றன.
மதுராவின் சரித்திரத்தை புரட்டினால் பல காலங்களில் வேறு வேறு வகையில் அங்குள்ள கோயில் புதுப்பிக்கப்பட்டு வந்திருக்கிறது என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது.
 
ஸ்தல வரலாறு :  கிருஷ்ணன் பிறப்பிற்கு முன் வாசுதேவர் சிறை வைக்கப்பட்டது. தேவகியின் வயிற்றில் வரும் ஏழாவது கர்ப்பத்தில் தனக்கு மரணம் என்பதையறிந்த கம்சன் மற்ற குழந்தைகளை எல்லாம் கொன்றது. கிருஷ்ணன் பிறந்தவுடன் ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர என்றார் போல் சிறைச்சாலையில் தேவகிக்குப் பிறந்து அன்று இரவே ஆயர் பாடிக்கு கொண்டு செல்லப்பட்டு நந்த கோபாலன் வீட்டில் யசோதை மகனாக வளர்ந்தது. அங்கு லீலா விநோதங்கள் புரிந்து கோபிகைகளின் இல்லங்களிலெல்லாம் ஆடிக்களித்து. அதன் பின் வாலிபனாகி மீண்டும் மதுரா வந்து கம்சனை வதம் செய்தது என்று இவ்வாறான வரலாறுகளுடன் துவாரகையில் கண்ணன் புதிய மாளிகை கட்டிச் செல்லும் வரை உள்ள கிருஷ்ண வரலாற்று நிகழ்ச்சிகள் இந்த மதுராவின் தல வரலாற்றாகப் பேசப்படுகிறது.
மகாபாரதம் மற்றும் பாகவத புராணங்களின்படி சூரசேன வம்சத்தினரின் தலைநகராக இருந்தது இது. அந்த வம்சத்தினரில் குறிப்பிடத் தக்க மன்னன் கம்சன். இவன் கண்ணனின் ஒன்று விட்ட தாய்மாமன். ராமாயணத்திலும் மதுராவைப் பற்றிய குறிப்பு வருகிறது. ராமன் யமுனை நதிக்கரையில் அர்த்தசந்திர வடிவில் மாட மாளிகைகள், தடாகங்களுடன் மதுரா நகரை அமைத்தான். சத்ருக்னனுக்குப் பிறகு மதுரா நகரம் யாதவர்கள் வசமானது. வசுதேவர் பரம்பரையினர் இந்த நகரை ஆண்டதாகவும் புராணங்களில் சொல்லப்பட்டுள்ளன. புருரவாவுக்கும் ஊர்வசிக்கும் பிறந்த மூத்த மகனான ஆயுவினால் உருவாக்கப்பட்டது தான் மதுரா என்றும் புராணங்களில் தகவல் காணப்படுகிறது. கி.மு 1600 களில் இப்பகுதியை ஆட்சி செய்த மது என்ற மன்னனின் பெயரால் இந்த நகர் மதுரா எனப் பெயர் பெற்றதாகச் சொல்வோரும் உண்டு. மெதோரா என்ற பெயரில் மதுரா அழைக்கப்பட்டதாக மெகஸ்தனிஸ் என்ற வரலாற்று ஆய்வாளர் குறிப்பிடுகிறார். ஏராளமான மரங்களைக் கொண்டு இருந்ததால் இந்தப் பகுதி மதுவனம் எனப்பட்டது. பின்னர் மதுபுரா என்று அழைக்கப்பட்டு அதுவே இப்போது மதுரா ஆனது. இந்த இடம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த இடம்.


அருள்மிகு சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில்

மூலவர் : சுந்தர்ராஜப்பெருமாள்
உற்சவர் : வடிவழகிய நம்பி
தாயார் : அழகியவல்லி
தல விருட்சம் : தாழம்பூ
தீர்த்தம் : மண்டுக தீர்த்தம்
ஆகமம் பூஜை : பாஞ்சராத்ரம்
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திரு அன்பில்
ஊர் : அன்பில்
மாவட்டம் : திருச்சி
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள் : திருமழிசையாழ்வார்
     
நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள் நாகத் தணையரங்கம் பேர் அன்பில்-நாகத் தணைப் பாற்கடல் கிடக்கு மாதி நெடுமால் அணைப் பார் கருத்தனாவான்.திருவிழா:மாசியில் தீர்த்தவாரி திருவிழா மற்றும் வைகுண்ட ஏகாதசி. 
     
ஸ்தல சிறப்பு : பாற்கடலில் பள்ளி கொண்ட கோலத்தில் இருப்பதை போல இங்கும் சுவாமி தாரகவிமானத்தின் கீழ் இருக்கிறார். இவ்விமானம் ராஜகோபுரம் போன்ற அமைப்பில் இருப்பது சிறப்பு. இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 5 வது திவ்ய தேசம் 
     
திறக்கும் நேரம் : காலை 7 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். முகவரி : அருள்மிகு சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில், திரு அன்பில்- 621702. திருச்சி மாவட்டம் போன் : +91- 431 - 6590672. 
     
தகவல்:108 திவ்ய தேசங்களில் இத்தலம் 4வது தலமாக கருதப்படுகிறது. பிரகாரத்தில் நரசிம்மர், வேணு கோபாலர், லட்சுமி நரசிம்மர், வீர ஆஞ்சநேயர் 12 ஆழ்வார்கள் ஆகியோர் இருக்கின்றனர். இத்தலத்தில் இருந்து சுமார் 2 கி.மீ.தூரத்தில் திவ்யதேசங்களில் ஒன்றான திருப்பேர்நகர் அப்பக்குடத்தான் கோயில் இருக்கிறது. இங்கும் பெருமாள் பள்ளி கொண்ட கோலத்தில் இருக்கிறார். திருச்சி திருப்பேர்நகர் திரு அன்பில் என அருகருகே மூன்று பள்ளி கொண்ட பெருமாள்களை தரிசனம் செய்வது விசேஷமான பலன்களைத் தரும் என்கிறார்கள். மூலவரின் விமானம் தாரக விமானம் எனப்படுகிறது. 
     
பெருமை : சுதபா எனும் மகரிஷி ஒருவர் தன் தவ வலிமையால் நீரிலும், நிலத்திலும் வாழும் பண்புகளைக் கொண்டவராக இருந்தார். மஹா விஷ்ணுவின் மீது பக்தி கொண்டிருந்த அவர் ஒரு நாள் தண்ணீருக்கடியில் தவம் செய்து கொண்டிருந்த போது அவரைப் பார்க்க துர்வாச முனிவர் வந்தார். சுதபா தவத்தில் இருந்ததால் துர்வாசர் வந்ததை கவனிக்கவில்லை. நீண்ட நேரம் வெளியில் காத்திருந்ததால் கோபம் கொண்ட துர்வாசர் அவரை தண்ணீரில் வாழும் தவளையாக மாறும் படி சபித்து விட்டார். இதனால் சுதபா மகரிஷிக்கு மண்டுகர் (மண்டுகம் - தவளை) என்ற பெயர் ஏற்பட்டது. துர்வாசரின் சாபத்திற்கு ஆளான மண்டுகர் அவரிடமே தனது சாபத்திற்கு விமோசனம் கேட்டார். துர்வாசர் அவரிடம் உனக்கு கிடைத்த இந்த சாபம் முற்பிறவியில் செய்த கர்மத்தால் கிடைத்ததாகும். தகுந்த காலத்தில் மஹா விஷ்ணுவின் தரிசனம் கிடைக்கப்பெற்று சாப விமோசனம் பெறுவாய் என்றார். அதன் படி மண்டுக மகரிஷி இத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் (மண்டுகதீர்த்தம்) சுவாமியை எண்ணி தவம் செய்து வந்தார். மஹா விஷ்ணு அவருக்கு சுந்தர்ராஜராக காட்சி தந்து சாபவிமோசனம் கொடுத்தார். சுவாமி கருவறையில் ஆதிசேஷன் மீது பள்ளிகொண்ட கோலத்தில் ஸ்ரீதேவி,பூதேவி, நாபியில் பிரம்மாவுடன் இருக்கிறார். உத்தமர் கோயிலில் தன் பிரம்மஹத்தி தோஷம் நீங்கப்பெற்ற சிவன், இத்தலம் வந்து இங்குள்ள பெருமாளை தரிசனம் செய்து விட்டுச் சென்றார்.

அமர்ந்த நிலையில் ஆண்டாள் முன்மண்டபத்தில் ஆண்டாள் தனிச்சன்னதியில் தெற்கு நோக்கியபடி இருக்கிறாள். இவள் நின்ற கோலத்தில் இருக்க உற்சவர் ஆண்டாள் அமர்ந்த கோலத்தில் இருக்கிறாள். ஒரே சமயத்தில் ஆண்டாளின் இரு கோலங்களையும் தரிசனம் செய்வது அபூர்வம். திருமண தோஷம் உள்ளவர்கள் இவளிடம் வேண்டிக் கொண்டால் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. தேவலோக கன்னியான ஊர்வசி தன் அழகு மீது கர்வம் வந்துவிடாமல் இருப்பதற்காக இவரை வணங்கிச் சென்றுள்ளாள்.
 
ஸ்தல வரலாறு : ஒருசமயம் பிரம்மாவுக்கு உலகில் உயிர்களை நாமே பிறக்க வைக்கிறோம். ஒவ்வொரு உயிரும் அழகுடன் இருப்பதற்கும் நாம்தான் காரணமாக இருக்கிறோம். அந்த அழகிய உயிர்களுக்கெல்லாம் மூலாதாரமாக இருக்கும் நாம்தான் அனைவரிலும் அழகானவர் என்ற ஆணவம் உண்டானது. மேலும் அனைவரையும் படைக்கும் தன்னை யாரும் வணங்குவதில்லையே என்ற ஆதங்கமும் எழுந்தது. பிரம்மாவின் எண்ணத்தை அறிந்த மஹா விஷ்ணு அவரது ஆணவத்தை விட்டு விடும் படி சொல்லிப்பார்த்தார். பிரம்மாவோ கேட்பதாக இல்லை. எனவே அவரை பூலோகில் சாதாரண மனிதனாக பிறக்கும் படி சபித்து விட்டார் மஹா விஷ்ணு. பூலோகம் வந்த பிரம்மா ஒவ்வொரு தலங்களுக்கும் சென்று சுவாமியை வணங்கி தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டு வேண்டி வந்தார். இத்தலம் வந்த அவர் சுவாமியை எண்ணி தவம் இருந்தார். அப்போது மஹா விஷ்ணு பேரழகு வாய்ந்த மனிதராக அவர் முன்பு வந்தார். அவரைக் கண்ட பிரம்மா இவ்வளவு அழகான எவரையும் இது வரையில் நான் பார்த்ததில்லையே நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?எனக்கேட்டார். அவரிடம் அன்பாக பேசிய விஷ்ணு அழகு என்பது நிலையற்றது. ஆணவம் ஒருவனை அழிக்கக்கூடியது. இவ்விரண்டு குணங்களையும் கொண்டிருப்பவர் சிறப்பான வாழ்க்கையைப் பெறுவதில்லை என உபதேசம் செய்து பள்ளிகொண்ட கோலத்தில் அவருக்கு காட்சி தந்தார் மஹா விஷ்ணு. உண்மையை உணர்ந்து கொண்ட பிரம்மா ஆணவம் ஒழியப்பெற்றார். பிரம்மாவின் வேண்டுதலுக்காக விஷ்ணு இத்தலத்தில் பள்ளி கொண்ட கோலத்திலேயே எழுந்தருளினார். பிற்காலத்தில் சோழமன்னர் ஒருவர் இங்கு கோயில் கட்டினார். பிரம்மாவின் மீது அன்பு கொண்டு அவருக்காக மஹா விஷ்ணு எழுந்தருளிய தலம் என்பதால் இத்தலம் அன்பில் என்ற பெயரும் பெற்றது.


சோமப்ப சுவாமிகள்{பகுதி-2}

சோமப்பா சுவாமிகள் 1968 ல் மகா சமாதி அடையும் வரை இந்த அன்பான கவனிப்பை இருளப்ப கோனாரும் அவரது வாரிசுகளும் தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர்.

ஒரே காலத்தில் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளும் சோமப்பா சுவாமிகளும் திருக்கூடல்மலையில் இருந்து ஆன்மிகப் பணியாற்றி பக்தர்களைத் தங்கள் பக்கம் ஈர்த்தர்கள். மாயாண்டி சுவாமிகளின் காலத்துக்குப் பிறகு அவர் விட்ட இறைப் பணிகளை சோமப்பா சுவாமிகள் தொடர்ந்தார். திருக்கூடல் மலையின் அறிவிக்கப்படாத ஒரு வாட்ச்மேன் போல் மலை எங்கும் திரிந்து உலவுவார் சோமப்பா. ரொம்பவும் எளிமையாக இருப்பார். இரவு நேரங்களில் மாயாண்டி சுவாமிகளின் சமாதிக்கு அருகில் படுத்திருப்பார். பல நேரங்களில் மலையின் பிரமாண்ட பாறைகளிலோ மரங்களின் அடிப் பாகத்திலோ தோதாகக் கால்களை நீட்டிப் படுத்திருப்பார். சில நேரங்களில் தனக்குத் தானே ஏதாவது பேசிக் கொண்டிருப்பார்.

சோமப்பாவைப் பொறுத்தவரை படுத்தல் என்பது ஒரு செயல். தூங்க மாட்டார். ஒரு பாயை விரித்து அதில் படுத்திருப்பார். பாய் போட்டு சோமப்பா படுத்திருக்கும் இடத்தைச் சுற்றி கரையான்கள் கூட்டம் கூட்டமாகச் சுற்றிக் கொண்டே இருக்கும். ஆனால் இவர் படுத்துக் கொண்டிருக்கும் இடத்துக்குக் கரையான்கள் வரவே வராது. சோமப்பா தூங்கி எவரும் பார்த்ததில்லை அது போல் குளித்தோ மல ஜலம் கழித்தோ எவரும் பார்த்ததில்லை. விசேஷ நாட்கள் என்றால் மலைக்கு மேல் தண்டாயுத பாணி ஸ்வாமி கோயிலுக்கு போய் அந்த சந்நிதிக்கு அருகில் உடலைச் சுருக்கிப் படுத்துக்கொள்வார். மற்ற வேளைகளில் திருக்கூடல் மலையின் பிற பகுதிகளில் திரிவார். அவர் எங்கு போகிறார் என்ன செய்கிறார் என்பது எவருக்கும் தெரியாது. மலையில் தண்டாயுத பாணி ஸ்வாமியைத் தரிசிக்கச் செல்லும் பக்தர்கள் வழியில் பாயில் அமர்ந்திருக்கும் சோமப்பா சுவாமிகளைக் கண்டு கையெடுத்துக் கும்பிட்டு வணங்குவர். அப்போது சோமப்பா சுவாமிகள் சோமப்பா இங்கே இல்லை. மலை மேல் கோயில்ல நிக்குது என்பார். என்னடாது... கண்ணுக்கு நேரே தரிசனம் தருகிறார். பிறகு சோமப்பா மலைக்கு மேலே இருக்கு என்கிறாரே... என்று குழம்பி அவரது பக்தர்கள் மலைக்கு மேலே போவார்கள். பொதுவாக எவரையும் சோமப்பா என்றே அழைத்துப் பழக்கப்பட்டவர் இந்த சித்த புருஷர் என்று  ஏற்கெனவே சொல்லி இருந்தோம். மலைக்கு மேல் குடி கொண்டிருக்கிற ஸ்ரீதண்டாயுத பாணி யையும் சோமப்பா என்பார். மாயாண்டி சுவாமிகளையும் சோமப்பா என்பார்.

நல்ல உள்ளத்தோடு தன்னைத் தரிசிக்க வரும் அன்பர்களிடம் இன்னருள் பொழிவார் சோமப்பா. தூய உள்ளத்துடன் வரும் ஏழை எளியவர்கள் தரும் பழங்கள் திண்பண்டங்கள் போன்றவற்றை ஆர்வத்துடன் சாப்பிட்டு. அவர்களுக்கு மிச்சம் மீதியைத் தருவார். சில வேளைகளில் அவர்களிடம் இருந்து பிடுங்கிக்கூடத் தின்பார் சோமப்பா. அவர்கள் கைகளில் வைத்திருக்கும் மாலைகளை சில நேரம் வெடுக்கெனப் பிடுங்கித் தன் கழுத்தில் போட்டுக்கொண்டு காட்சி கொடுப்பார். இதைக் கண்டு பரவசமாவார்கள் பக்தர்கள். ஆசி வழங்குவார் சோமப்பா. அதே வேளையில் உயர்ந்த அந்தஸ்திலும் பொறுப்பிலும் உள்ள சிலர் சோமப்பாவைத் தரிசிக்க மலர் மாலைகள் ஏராளமான பழங்கள் அடங்கிய தட்டுகளைக் கொண்டுவந்து சுவாமிகளின் முன்னால் வைப்பார்கள். அவர்கள் எத்தகையவர்கள் எதற்காகத் தன்னிடம் வந்திருக்கிறார்கள் என்பதை சோமப்பா அறியாமல் இருப்பாரா?சுவாமிகளை தாஜா செய்து தாங்கள் சில காரியம் சாதித்துக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்துடன் வந்த இவர்கள் கொண்டு வந்திருக்கும் தட்டுகளைக் காலால் எட்டி உதைப் பார் சோமப்பா. போ... இங்க நிக்கவே நிக்காதே... சோமப் பாவை ஏமாத்த நினைக்காதே... சோமப்பா ஏமாறாது... போயிடு என்று கோபமாகக் கூறிவிட்டு. அந்த இடத்தை விட்டு எங்கேனும் ஒடிப் போய் விடுவார். சோமப்பா சுவாமிகள் நிகழ்த்திய ஸித்து விளையாடல்கள் நிறைய உண்டு.

கட்டிக்குளத்தில் வசித்து வந்த ஆசிரியர் திருவாசகத்தின் உறவினர் பெயர் ராமு. இவருக்கு சோமப்பாவைக் கண்டால் ஏனோ பிடிக்காது. ஆனாலும் ராமுவின் மேல் சோமப்பாவுக்கு அளவு கடந்த  அன்பு உண்டு. ஒரு நாள் ராமுவை நெருங்கி அவரது வலக் கண்ணின் அருகே தன் வலக் கையைக் கொண்டு சென்று ஓங்கிக் குத்தட்டுமா? என்று கேட்டார். சுவாமிகள் அடிக்கடி தன்னிடம் இப்படி விளையாடுவார் என்பதால் ராமு இதை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. ஆனால் அடுத்த சில நாட்களிலேயே ராமுவின் வலக் கண் ஓர் அறுவை சிகிச்சைக்கு உள்ளானது. இப்படி நடக்கப் போவதை முன்கூட்டியே குறிப்பால் உணர்த்துவார் சோமப்பா. பஜணைக்கார அம்மா என்று ஒருவர் வசித்து வந்தார். ஒரு நாள் அந்த அம்மாளைத் தேடி அவரது வீட்டுக்குப் போன சோமப்பா அந்த அம்மாவை அழைத்து உன்னைப் பூச்சி கடிக்கும். ஆபத்து சூழும் என்று சொல்லிவிட்டுப் போனார். சுவாமிகள் என்ன சொல்ல வருகிறார்? என்கிற குழப்பத்தில் எதுவும் புரியாமல் தவித்தார். பஜனைக்கார அம்மா. ஆனால் இதை அடுத்த ஒரு சில நாட்களில் பஜனைக்கார அம்மா பாம்பு கடித்து இறந்தே போனார். பூச்சி கடிக்கும் என்று சுவாமிகள் குறிப்பிட்டது பாம்பை.

மாயாண்டி சுவாமிகள் சமாதி ஆகிவிட்டதை (1930 ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் 11 ஆம் தேதி) அறிந்து எங்கிருந்தோ வந்து சேர்ந்தார். சோமப்பா மாயாண்டி சுவாமிகளின் திருமுகத்தை திருச்சமாதி வைப்பதற்கு முன் ஒரு முறையாவது பார்த்து விட வேண்டும் என்கிற ஆவலில் எத்தனையோ பக்தர்கள் எங்கெங்கிருந்தோ வந்து குவிந்திருந்தனர். சமாதி நிலையை எய்து விட்ட சுவாமிகளின் திருமுகத்தையே வைத்த கண் வாங்காமல் வெகு நேரத்துக்குப் பார்த்துக் கொண்டிருந்தார் சோமப்பா. முகம் இறுகிப் போயிருந்த சோமப்பா திடீரென மலர்ந்தார். மாயாண்டி சுவாமிகள் இதழ்களில் ஒரு புன்னகை அரும்பியதை அப்போது சோமப்பா கவனித்து தான் இதற்குக் காரணம். இதை அடுத்து அங்கு நிலவிய நிசப்தத்தைக் கலைக்கும் வகையில் சோமப்பா சாகவில்லை. சோமப்பா சாக மாட்டான் என்று பெருங்குரல் எடுத்துக் கத்திக்கொண்டே மலைக்கு ஓடி விட்டார். அதாவது என் உடல் என்னை விட்டுப் பிரிந்தாலும் நான் என்றென்றும் உன்னுடனும் என் பக்தர்களுடன் இருந்து அருள் பாலிப்பேன் என்கிற செய்தியை சோமப்பா வாயிலாக நமக்கெல்லாம் உணர்த்தி இருக்கிறார் மாயாண்டி சுவாமிகள். சமாதி ஆன பிறகும் மாயாண்டி சுவாமிகள் அருளிய புன்னகை இதைத்தான் நமக்குச் சொல்கிறது. மாயாண்டி சுவாமிகளைப் போலவே தான் திருச்சமாதி ஆகும் தினத்தையும் நேரத்தையும் முன்கூட்டியே சொல்லி விட்டு தான் சோமப்பா சுவாமிகளும் சமாதி ஆனார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி இருந்து. இவரது திரு சமாதி நிகழ்வு நடந்தது. தூய உள்ளமும் நற்சிந்தனைகளும் இருப்பவர்களைத்தான் இன்றைக்கு சோமப்பா தன் ஜீவ சமாதிக்கு வரவழைத்து அருள் புரிகிறார். சித்தர்களை தரிசிப்பதில் ஆர்வம் உள்ள ஒவ்வொருவரும் அவசியம் தரிசிக்க வேண்டிய திருச்சமாதி இது!

தலம்:திருப்பரங்குன்றம் காகபுசுண்டர் மலை.

சிறப்பு : சோமப்பா சுவாமிகள் ஜீவ சமாதி(மற்றும் கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் திருச்சமாதி)

இருப்பிடம் : மதுரை மாநகரத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் திருப்பரங்குன்றத்தில் அமைந்திருக்கிறது காகபுசுண்டர் மலை.

செல்லும் வழி : மதுரையில் அமைந்திருக்கும் பெரியார் பேருந்து நிலையம். மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் மற்றும் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் ஆகியவற்றில் இருந்து திருப்பரங்குன்றத்துக்குப் பேருந்து வசதி அடிக்கடி உண்டு. திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லுரி நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டு அங்கிருந்து பத்து நிமிடங்கள் நடந்தால் காகபுசுண்டர் மலை வந்துவிடும்.

தொடர்புக்கு : செயலாளர்; சூட்டுக்கோல் ராமலிங்க விலாசம் திருக்கூடல் மலை என்கிற காகபுசுண்டர்மலை திருப்பரங்குன்றம்; மதுரை : 625 005.
சோமப்ப சுவாமிகள்{பகுதி-1}

திருப்பரங்குன்றத்தில் காகபுசுண்டர் மலை எனப்படும் திருக்கூடல் மலையின் உச்சியில் பிரதான தெய்வமாக ஸ்ரீ தண்டாயுத பாணி பிரதிஷ்டை ஆகி உள்ளார். கீழே அதாவது அடிவாரத்தில் மாயாண்டி சுவாமிகளின் திருச்சமாதியையும் இன்ன பிற தெய்வங்களின் சந்நிதிகளையும் தரிசிக்கலாம்.

மாயாண்டி சுவாமிகள் திருச்சமாதியை வணங்கி விட்டு தண்டாயுதபாணி ஸ்வாமி சந்நிதியைத் தரிசிக்க திருக்கூடல் மலையில் அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டுகள் மீது ஏறி நடந்தால் முதலில் ஸ்ரீவீர ஆஞ்சநேயர் தரிசனம். இதை அடுத்துச் சிறிது தொலைவு நடந்தால் சோமப்பா சுவாமிகளின் ஜீவ சமாதியைத் தரிசிக்கலாம். மிக அற்புதமான சித்த புருஷர் என்று மாயாண்டி சுவாமிகளால் அடையாளம் காணப்பட்டவர் சோமப்பா சுவாமிகள். தரை மட்டத்தில் இருந்து சுமார் ஐம்பதடி உயரத்தில் சோமப்பாவின் சமாதி அமைந்துள்ளது. அமைதி தவழும் ரம்மியமான சூழ்நிலை. தியானம் செய்பவர்களுக்கு ஏற்ற இடம்.

பலிபீடம் நந்திதேவர் லிங்கத் திருமேனி பிரதிஷ்டை பிராகாரம் என்று சோமப்பா சுவாமிகள் திருச்சமாதி முழுமையான அமைப்புடன் காணப்படுகிறது. கருவறையில் லிங்கத் திருமேனியுடன் சோமப்பா சுவாமிகளின் திருவுருவப் படமும் உள்ளது. சுவாமிகளின் அபிமானத்துக்கும் ஆசிர்வாதத்துக்கும் உள்ளான மதுரை பக்தர்கள். தினமும் இவரது திருச்சமாதிக்கு வந்து தியானம் மேற்கொள்கிறார்கள். தங்கள் குருநாதரைத் தொழுதுவிட்டு அன்றாடப் பணிகளைக் கவனிப்பவர்களும் இருக்கிறார்கள். சோமப்பா சுவாமிகளின் இயற் பெயர் எவருக்கும் தெரியாது. தன்னைத் தரிசிக்க வரும் பக்தர்கள் உட்பட அனைவரையும் சோமப்பா... சோமப்பா என்றே அழைப்பார் இவர். இதனாலேயே சோமப்பா சுவாமிகள் என்று அழைக்கப்பட்டார்.

சோமப்பா சுவாமிகளின் ஆசிர்வாதத்தைப் பரிபூரணமாகப் பெற்ற உள்ளூர் பக்தர்கள் பலர். சுதந்திரப் போராட்டக் காலத்தின் போது பசும் பொன் முத்துராமலிங்கத் தேவர். மாதம் இரு முறை இந்த மலைக்கு வருவது வழக்கம். சோமப்பா சுவாமிகளின் தீவிர பக்தர் அவர். சுவாமிகளை நேருக்கு நேர் பார்த்துப் பேசி அவரை வணங்கி ஆசி பெற்றவர் தேவர். சோமப்பா சுவாமிகள் பக்தர்களுக்குத் தரிசனம் தந்து கொண்டிருக்கும் இடத்திலேயே ஒரு மூலையில் அமர்ந்து தியானம் மேற்கொள்வார் முத்துராமலிங்கத் தேவர். சோமப்பா போ....போ என்று ஓங்கிய குரலில் சுவாமிகளிடம் இருந்து உத்தரவு வரும் வரையில் கடும் தியானத்தில் இருப்பார் முத்துராமலிங்கத் தேவர். இந்த உத்தரவு சோமப்பாவின் திருவாயில் இருந்து வந்தவுடன் சந்தோஷத்துடன் தியானத்தை முடித்துக்கொண்டு சாஷ்டாங்கமாக அவரை நமஸ்கரிப்பார் தேவர். அதன் பின் சுவாமிகளின் ஆசி தனக்குக் கிடைத்து விட்ட திருப்தியுடன் சந்தோஷமாக அங்கிருந்து நகர்வாராம் முத்துராமலிங்கத் தேவர்.

கலைமாமணி மதுரை சோமு நாதஸ்வரக் கலைஞர் எம்.எஸ்.பொன்னுத்தாயி உட்பட பல மதுரைக் கலைஞர்களும் சோமப்பா சுவாமிகளின் பக்தர்கள். சுவாமிகளின் குரு பூஜையின் போது (ஸித்தி ஆனது 1968 ஆனி மிருகசீரிஷம்) மதுரை நாடகக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டு இந்தக் கைங்கர்யத்துக்கு உதவி வருகிறார்கள். சோமப்பா சுவாமிகள் சமாதித் திருக்கோயிலுக்குக் கடந்த 2003-ஆம் ஆண்டு அவரது குருபூஜை தினத்தில் திருக்குட நன்னீராட்டு நடைபெற்றது.

தினமும் காலை மாலை வேளைகளில் இவருடைய சந்நிதியில் வழிபாடு நடந்து வருகிறது. அமாவாசை பௌர்ணமி மற்றும் பிரதோஷ தினங்களில் சோமப்பா சுவாமிகள் திரு சமாதியில் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. திரளான பக்தர்கள் கூடுகிறார்கள்.

எங்கேயோ திரிகால ஞானியாகச் சுற்றிக் கொண்டிருந்த சோமப்பா சுவாமிகளைத் திருக்கூடல் மலைக்கு வரவழைத்ததே மாயண்டி சுவாமிகளின் விளையாடல் என்று தான் சொல்ல வேண்டும். நிரந்தரமாக இந்த மலையில் தங்கி ஸ்ரீ தண்டாயுத பாணி திருக்கோயிலின் திருப்பணிகளை மாயாண்டி சுவாமிகள் மேற்கொண்டிருந்த காலம் அது. 1920 களில் திருக்கூடல் மலைக்கு வந்தார் சோமப்பா. அவர் இங்கு வந்த கதையைப் பார்ப்போம். ஒரு நாள் யாரோ ஆசாமி ஒருவர். அடிவாரத்தில் கொட்டப்பட்டிருக்கும் மணல் மேட்டில் வெகு நேரமாக அமர்ந்திருக்கும் தகவல் மாயாண்டி சுவாமிகளை அடைந்தது. அவருக்குத் தெரியாதா புதியவன் எப்போது வருவான் என்று?சோமப்பாவின் வருகை மாயாண்டி சுவாமிகளை ரொம்பவே பரவசப்படுத்தியது. அவரது முகத்தில் புன்கை ததும்பியது.

இருளப்ப கோனாரை இன்முகத்துடன் அழைத்தார். அப்பு.... திருக்கூடல் மலைக்குள் ஒரு சிவக்கனி வந்தாச்சு. போ உடனே போய் அதைப் பத்திரமா  அழைச்சிட்டு வா என்று உத்தரவு போட்டார் மாயாண்டி சுவாமிகள். சுவாமிகளே இப்படிச் சொல்கிறார் என்றால் வந்திருப்பவர் யாரே ஒரு சித்த புருஷராகத்தான் இருக்கும் என்று தெளிந்த இருளப்ப கோனார் வெளியே வந்தார். அங்கே கட்டட வேலைகளுக்காகக் குவித்து வைக்கப்பட்டிருந்த மணல் மேட்டில் கால்களை நீட்டிக் கொண்டு. கைகளைப் பின் பக்கம் ஊன்றியபடி கெச்சலான முகத்துடனும் மீசை தாடியுடனும் ஒரு ஆசாமி உட்கார்ந்திருந்தார். இவரைத்தான் சுவாமிகள் சொல்லி இருக்கிறார் போலிருக்கிறது என்பதாக அவரை நெருங்கி. ஐயா... ஐயா என்று மெள்ளக் குரல் கொடுத்தார் இருளப்ப கோனார்.

அவ்வளவு தான் அந்த ஆசாமியின் முகத்தில் பிரகாசகளை கட்டியது.  உத்தரவு வந்து விட்டது அவருக்கு. குதியாட்டம் போட்டு மணல் மேட்டில் இருந்து எழுந்தார். மலை உச்சியைப் பார்த்தவாறு சோமப்பா சொல்லி விட்டயா? அப்ப சரிதான் நீ போ சோமப்பா இனிமே இங்கே தான் தங்கப் போவுது என்று இருளப்ப கோனாரைப் பார்த்துச் சொல்லி விட்டு மலை உச்சியை நோக்கி ஒரு குழந்தை போல் குதூகலத்துடன் ஓட ஆரம்பித்தார் அந்த ஆசாமி. அவர் தான் சோமப்ப சுவாமிகள். சோமப்பா சுவாமிகள் யார் என்பதை அடையாளம் கண்டு கொண்டார் மாயாண்டி சுவாமிகள். இனம் தானே இனத்தை அறியும்? எத்தனையோ காலத்துக்குக் காடு மேடு என்று அலைந்து திரிந்து உருண்டு திரண்டு பழுத்துப் பக்குவப் பட்ட ஞானிதாம்ப்பா சோமப்பா என்று இருளப்ப கோனாரிடம் சொன்னார் மாயாண்டி சுவாமிகள்.

சோமப்பா சுவாமிகளை மிகப் பெரிய சித்த புருஷர் என்று அவருடைய பக்தர்கள் சொல்கிறார்கள். இவர் பிறந்த ஊர் கொட்டாம்பட்டி என்றும் பசுமலை என்றும் இரு விதமான தகவல்கள் இருகின்றன. பெற்றோர் எல்லப்பர் எல்லாம்மாள் என்பது செவி வழிச் செய்தி முந்நூறு ஆண்டுகள் வாழ்ந்த சித்தர் இவர் என்று சொல்லப்படுகிறது. சோமப்பாவைக் காணும் போதெல்லாம் மனம் இளகி அவருடன் உரையாடுவார். மாயாண்டி சுவாமிகள். அப்பு... என்னை எப்படி கரிசனத்துடன் பார்த்து கொள்கிறாயோ அது போல் சோமப்பாவையும் நீ கண்ணும் கருத்தமாகக் கவனித்துக்கொள்ள வேண்டும். அது சாதாரண ஆள் இல்லை அப்பு. குருநாதரை விடப் பெரியவர் என்று இருளப்ப கோனாரிடம் அவ்வப்போது சொல்வாராம் மாயாண்டி சுவாமிகள்.

இந்த வார்த்தைகளைத் தனக்கு இட்ட உத்தரவாகக் கருதி. சோமப்பாவையும் நன்றாகவே கவனித்து வந்தார் இருளப்ப கோனார். இது குறித்து சோமப்பா சுவாமிகளை நன்கு அறிந்த ஒருவர் நம்மிடம் சொன்னார் இருளப்ப கோனார் மாயாண்டி சுவாமிகளையும் சோமப்பா சுவாமிகளையும் தன் இரு கண் போல் கவனித்து வந்தார். மாயாண்டி சுவாமிகள் ஏதாவது ஒரு உத்தரவிட்டால் தெய்வமே தனக்கு இட்ட பணியாக அதை நினைப்பார் இருளப்ப கோனார்!

தொடரும்...
கர்ம வினையை அனுபவித்தே தீர்க்க வேண்டும்

ஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார்.! யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் என்றார்.! பின் சித்திரக்குப்தனை யமன் ரிஷியுடன் செல்ல பணிந்தார்.! சித்திரக்குப்தன் யமன் ஆணைக்கு இணங்க ரிஷியுடன் சென்றார். யமலோகம் விசித்திர லோகம். அங்கே நடக்கும் ஒவ்வொரு காரியத்துக்கும் உண்டான காரணம், பாகுபாடற்ற பாரபட்சமற்ற நீதி, நிலை நிறுத்தப்படும் தர்மம் அத்தனையையும் பார்க்கப் பார்க்க அந்த ரிஷியே ஆடிப்போனார். தண்டனைகளுக்கான காரணங்களில் அத்தனை துல்லியம். ‘இப்படி நரகம் என்று ஒன்று இருப்பது தெரிந்தும் தண்டனை கிடைக்கும் என்பதை அறிந்தும் ஏன் இந்த மனிதர்கள் பாவங்களைச் செய்கிறார்கள்?’ நினைக்க நினைக்க அவருக்கு ஆச்சர்யமாக இருந்தது. 

மனிதர்கள் தங்கள் பாவங்களுக்காக அனுபவிக்கும் கொடூர தண்டனைகள் அவரை சஞ்சலம்கொள்ள வைக்கவில்லை. பந்த பாசங்களுக்கு அப்பாற்பட்ட அனைத்தையும் கடந்த சித்தி பல பெற்ற முனிவர் அல்லவா? சந்தேகம் எழும் இடங்களில் எல்லாம் சித்ரகுப்தனைத் திரும்பிப் பார்ப்பார். அவரின் குறிப்பை உணர்ந்தவனாக சித்ரகுப்தனே அவருக்கு அனைத்தையும் விளக்குவார். இருவரும் நடந்துவரும் வழியில் ஓர் இடத்தில் ஐந்தடி உயரத்துக்கு கற்பாறை ஒன்றைக் கண்டார் முனிவர்.

“இது என்ன... கற்பாறை?”

“ஒன்று இல்லை மஹாமுனி! ஒரு சிறுவனின் பாவம்... இப்படி வளர்ந்து நிற்கிறது!’’

“சிறுவன் செய்த பாவமா? அது என்ன பாவம்?’’

''பூலோகத்தில் ஒரு முனிவரின் ஆசிரமத்துக்கு தினமும் பல அதிதிகள் வருவது வழக்கம். முனிவரும் வருபவர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்று உபசரித்து உணவு அளிப்பார். அந்த முனிவருக்கு ஒரு பிள்ளை. அந்தப் பிள்ளை மிகவும் சேட்டைக்காரன். எப்போதும் ஏதாவது குறும்புகள் செய்து கொண்டே இருப்பான். அதிதியாக வருபவர்களுக்கு முனிவர் பரிமாறும் உணவில் சிறு சிறு கற்களைப் போட்டு அவர்கள் சாப்பிடும் போது படும் கஷ்டத்தை ரசித்துப் பார்ப்பான். அப்படி அவன் அதிதிகளுக்கு செய்த பாவமான அந்தக் கற்கள் தான் சிறுவன் வளர வளர சிறு பாறையாக இப்படி வளர்ந்து நிற்கிறது. விதி முடியும் நேரத்தில் அவன் யமலோகத்துக்கு வரும் போது இந்தப் பாறையை அவன் உண்ண வேண்டும். இது தான் அவனுக்கான தண்டனை'' என்றான் சித்ரகுப்தன்.

அசந்து போனார் முனிவர். இருவரும் நடந்தார்கள். முனிவருக்கு அந்தச் சிறுவன் யார் என அறிந்து கொள்ள ஆர்வம். இது எங்கோ நடந்ததை தான் அறிந்ததாக அவருக்குள் ஒரு நினைவு நிழலாட்டம். ஆனால் சித்ரகுப்தனிடம் கேட்கத் தயக்கம். அவன் வேறுபுறம் சென்றதும் ரிஷி தன் ஞான திருஷ்டியில் அந்தச் சிறுவன் யார் எனப் பார்த்தார். அது வேறு யாரும் அல்ல... சாட்சாத் அவரே தான். தன் தவறை உணர்ந்தார் யமதர்மனிடம் போனார். நடந்ததைச் சொன்னார். யமதர்மா... நான் முக்தி பெற்று இறைவனடி சேர விரும்புகிறேன். அதற்குத் தடையாக நிச்சயம் இந்தக் கல் இருக்கும். எனவே இந்த ஜன்மத்திலேயே அந்தப் பாவத்தைப் போக்க விரும்புகிறேன். நானே கொஞ்சம் கொஞ்சமாக இந்தக் கல்லை தின்று செரித்து விடுகிறேனே...’’

முனிவரின் கோரிக்கையை யமதர்மன் ஏற்றான். கல்லைச் சிறிது சிறிதாக அரைத்து உண்டார் முனிவர். `சிலா’ என்றால் கல் என்று பொருள். கல்லை உண்டவர் என்பதால் அந்த முனிவர் `சிலாதர்’ ஆனார்.

எத்தனை சக்தி பெற்றவராக இருப்பினும் எண்ணற்ற தவம், ஞானம் பெற்றவராக இருந்தாலும் ஒருவர் பிறருக்கு செய்யும் தீமை அவரைச் சும்மா விடாது. பெரும் கர்ம வினையாக வளர்ந்து கொண்டே போகும். ஒரு நாள் மொத்தமாகத் திரும்பக் கிடைக்கும். அப்போது நாம் அந்த கர்ம வினையை அனுபவித்தே தீர்க்க வேண்டும்.! இதை உணர்ந்தவர்கள் எறும்புக்குக்கூட இன்னல் விளைவிக்க நினைக்க மாட்டார்கள். சிலாதரின் கதை எத்தனை யாகம் ஹோமம் தவம் பரிகாரம் இறைவழிபாடு செய்தாலும் நம் கர்மவினை நம்மை விட்டு அகலாது அதை கல் போல் மனம் இல்லாமல் உண்டு அனுபவித்து கழிக்க வேண்டும் இந்த நீதியைத்தான் அழுத்தமாக உணர்த்துகிறது.
அருள்மிகு படம்பக்கநாதர் திருக்கோயில்

மூலவர் : படம்பக்கநாதர், ஒற்றீஸ்வரர், ஆதிபுரீஸ்வரர், புற்றிடங்கொண்டார், எழுத்தறியும் பெருமாள், தியாகேசர், ஆனந்தத்தியாகர்
அம்மன்/தாயார் : வடிவுடையாம்பிகை, வட்டப்பாறையம்மன், திரிபுரசுந்தரி
தல விருட்சம் : மகிழம், அத்தி
தீர்த்தம் : பிரம்ம, நந்தி தீர்த்தம்
ஆகமம்/பூஜை  : காரணம், காமீகம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருவொற்றியூர்
ஊர் : திருவொற்றியூர்
மாவட்டம் : திருவள்ளூர்
மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், காளமேகப்புலவர், இரட்டைப்புலவர்கள், தியாகராஜ சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், மறைமலையடிகளார்

தேவாரப்பதிகம்:மனமென்னும் தோணிபற்றி மதியெனும் கோலையூன்றிச் சினமெனும் சரக்கையேற்றிச் செறிகடல் ஓடும்போது மதமெனும் பாறைதாக்கி மறியும்போது அறியவொண்ணா துணையுனும் உணர்வை நல்காய் ஒற்றியூர் உடைய கோவே.
திருநாவுக்கரசர்தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 20வது தலம்.

திருவிழா:சித்திரையில் வட்டப்பாறையம்மன் உற்சவம், வைகாசியில் வசந்தோற்ஸவம், சிவராத்திரி, திருக்கார்த்திகை, மாசி மகம். 
     
தல சிறப்பு:இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். எல்லாம் இரண்டு: திருவொற்றியூர் தலத்தில் மூலவர் ஆதிபுரீஸ்வரர், ஒற்றீஸ்வரர் என இரண்டு மூர்த்திகள் பிரதானம் பெற்றிருக்கின்றனர். தவிர, வடிவுடையாம்பிகை, வட்டப்பாறையம்மன், அத்தி, மகிழம் என இரண்டு தலவிருட்சம், பிரம்ம தீர்த்தம், அத்தி தீர்த்தம் என இரண்டு தீர்த்தங்கள், காரணம், காமீகம் என இரண்டு ஆகம பூஜை என்று இத்தலத்தில் இரண்டு என்ற எண்ணிக்கை பிரதானம் பெற்றிருக்கிறது. இங்கு, சிவன் பாணலிங்க வடிவில் உயரமாகக் காட்சியளிக்கிறார். ஆவுடையார் கிடையாது. பைரவர், இத்தலத்தில் நாய் வாகனம் இல்லாமல் காட்சியளிக்கிறார். கோஷ்டத்திலுள்ள துர்க்கையின் காலுக்குக் கீழே மகிஷாசுரன் இல்லை. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது இஷீ சக்தி பீடம் ஆகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 253 வது தேவாரத்தலம் ஆகும். 
திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
   
முகவரி:அ/மி. தியாகராஜசுவாமி திருக்கோயில், திருவொற்றியூர்- 600 019. திருவள்ளூர் மாவட்டம். போன்:+91-44 - 2573 3703.

 பொது தகவல்:சென்னை சுற்றுவட்டாரத்தில் மூன்று அம்பிகையர் இச்சா, கிரியா, ஞான சக்திகளாக இருந்து அருளுகின்றனர். பல்லாண்டுகளுக்கு முன்பு மேலூர் திருமணங்கீஸ்வரர் கோயிலில் பிரதிஷ்டை செய்வதற்காக சிற்பி ஒருவர், பெரிய பாறையைக் கொண்டு சென்றார். வழியில் அந்த பாறை வெடித்து மூன்று பாகங்களாகச் சிதறியது. கலங்கிய சிற்பி, தன் உயிரை விடத்துணிந்தார். அப்போது அம்பிகை அவருக்கு காட்சி தந்து, தன்னை மூன்று வடிவில் சிலையாக வடித்து மேலூர், திருவொற்றியூர், திருமுல்லைவாயில் ஆகிய தலங்களில் பிரதிஷ்டை செய்யும்படி கூறினாள். அதன்படி சிற்பி மூன்று சிலைகள் வடித்து இக்கோயில்களில் பிரதிஷ்டை செய்தார்.

இதில் இத்தலம் ஞானசக்திக்குரியதாகும்.இக்கோயிலில் இருந்து 15 கி.மீ., தூரத்திலுள்ள மேலூரில் திருவுடைநாயகி இச்சா சக்தியாகவும், 25 கி.மீ., தூரத்திலுள்ள திருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் தலத்தில் கொடியிடைநாயகி கிரியா சக்தியாகவும் அருளுகின்றனர். இந்த மூன்று அம்பிகையரையும் பவுர்ணமியன்று காலை, மதியம், மாலை என மூன்று வேளைகளில் வழிபடுவது விசேஷ பலன்களைத் தரும். அன்று இந்த மூன்று கோயில்களும் நாள் முழுதும் திறந்திருக்கும். இத்தலவிநாயகர் செல்வ விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். அம்பாள் வடிவுடைநாயகி, வட்டப்பாறையம்மன் இருவரும் தனித்தனி கொடிமரத்துடன் கூடிய சன்னதிகளில் காட்சி தருகின்றனர். தியாகராஜர் கோயிலில் இருந்து சற்று தூரத்தில் வங்காளவிரிகுடா கடற்கரையில் பட்டினத்தார் கோயில் உள்ளது.

பிரார்த்தனன திருமணம், புத்திர தோஷங்கள் நீங்க இங்கு வேண்டிக்கொள்ளலாம்.
   
நேர்த்திக்கடன்:சுவாமி, அம்பாளுக்கு விசேஷ அபிஷேகம் செய்து, நைவேத்யம் படைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
   
தலபெருமை:மாணிக்க தியாகர்: சப்தவிடங்கத் தலங்களில் இத்தலமும் ஒன்றாகும். இத்தலத்து தியாகராஜர் பிரசித்தி பெற்ற மூர்த்தி என்பதால், இவரது பெயரிலேயே தலம் அழைக்கப்படுகிறது. இவ்வூரில் வசித்த ஏலேலசிங்கர் என்பவர், மன்னனுக்குக் கொடுப்பதற்காக மாணிக்க நகைகள் வைத்திருந்தார். அச்சமயத்தில் காசியில் வசித்த சிவபக்தர்கள் இருவர், இங்கு வந்தனர். அப்போது சிவன் ஏலேல சிங்கரிடம், அந்த பக்தர்களுக்கு மாணிக்கத்தைத் தரும்படி கூறவே, அவரும் கொடுத்துவிட்டார். மன்னன் ஏலேல சிங்கரிடம் மாணிக்கம் கேட்டபோது, அவர் செய்வதறியாது திகைத்தார். அப்போது, சிவனே அவருக்கு மாணிக்கம் தந்து அருள் செய்தார். எனவே இவர், "மாணிக்க தியாகர்' என்றும் அழைக்கப்படுகிறார்.

பெட்டி வடிவ லிங்கம்: வாசுகி என்னும் நாகம், உபமன்யு முனிவரின் ஆலோசனைப்படி இத்தலத்தில் முக்தி வேண்டி சிவனை வழிபட்டது. வாசுகிக்கு அருள்புரிய எண்ணிய சிவன், புற்று வடிவில் எழுந்தருளி தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டார். எனவே இவர், "படம்பக்கநாதர்' என்று பெயர் பெற்றார். இவருக்கு மேலே பெட்டி போன்ற அமைப்பில் கவசம் அணிவித்திருக்கிறார்கள். சுவாமி இங்கு தீண்டா திருமேனியனாகக் காட்சி தருவதால், இவருக்கு அபிஷேகம் செய்வதில்லை. ஆவுடையாருக்கு மட்டும் அபிஷேகம் செய்கின்றனர். அர்ச்சகர்கள் சுவாமியைத் தொட்டு பூஜை செய்வதில்லை.
இத்தலத்தில் மூலவர் படம்பக்கநாதர் எப்போதும் கவசத்துடன் மட்டுமே காட்சி தருவார். கார்த்திகை பவுர்ணமியை ஒட்டி 3 நாட்கள் மட்டும், இவரது கலசம் களைந்து தைலாபிஷேகம் செய்யப்படும். பவுர்ணமியன்று மாலையில் இவருக்கு புனுகு மற்றும் சாம்பிராணி தைலத்தால் அபிஷேகம் செய்கிறார்கள். மூன்றாம் நாள் இரவில் மீண்டும், சுவாமிக்கு கவசம் சாத்தி விடுவர். வருடத்தில் இந்த மூன்று நாட்கள் மட்டுமே, சுவாமியின் சுயரூப கோலத்தை தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் சிவனின் லிங்க ரூபத்தைக் காண முடியாது. இம்மூன்று நாட்களும் பிரம்மா, விஷ்ணு, வாசுகி ஆகிய மூவரும் சிவனைப் பூஜிப்பதாக ஐதீகம்.

மூன்று அம்பிகையர் தரிசனம்: அம்பிகை வடிவுடைநாயகி, தனிச்சன்னதியில் தெற்கு நோக்கி தனிச்சன்னதியில் அருளுகிறாள். 51 சக்தி பீடங்களில் இத்தலம் "இக்ஷீ' பீடமாகும். அம்பாளுக்குக் கீழே ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. கேரள நம்பூதிரிகளே இவளுக்குப் பூஜை செய்கின்றனர். தினமும் காலை 9 மணி, மாலை 6 மணிக்கு இவள் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, "புஷ்பாஞ்சலி சேவை' காட்சி தருகிறார். திருமணத்தடை உள்ளவர்கள் இவளுக்கு இந்த அலங்காரம் செய்வித்து வேண்டிக்கொள்கிறார்கள். இதை, "சுயம்வர புஷ்பாஞ்சலி' என்கிறார்கள்.

வட்டப்பாறை அம்மன்: பாண்டியன் அரசவையில் அநீதி இழைக்கப்பெற்ற கண்ணகி, மதுரையை எரித்துவிட்டு உக்கிரத்துடன் கிளம்பினாள். அவள் இத்தலத்திற்கு வந்தபோது சிவனும், அம்பிகையும் சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்தனர். அவளது உக்கிரத்தைத் தணிக்க எண்ணிய சிவன், தாயக்கட்டையை உருட்டி அருகிலிருந்த கிணற்றில் விழச்செய்தார். கண்ணகி, தாயக்கட்டையை எடுக்க கிணற்றிற்குள் இறங்கினாள். அப்போது சிவன், அங்கிருந்த வட்ட வடிவ பாறையால் கிணற்றை மூடி விட்டார். பின்பு, கண்ணகி பாறையின் வடிவிலேயே எழுந்தருளினாள். எனவே இவள், "வட்டப்பாறையம்மன்' என்று பெயர் பெற்றாள். பிற்காலத்தில் இந்த பாறையின் அருகில், தனியே சிலை வடிக்கப்பட்டது. வட்டப்பாறையம்மனின் உக்கிரம் குறைப்பதற்காக, இச்சன்னதியில் ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரம் ஸ்தாபித்துள்ளார். பக்தர்கள் இங்கு மஞ்சள், குங்குமம் போட்டு வேண்டிக்கொள்கிறார்கள்.

சுந்தரர் திருமணம்: சென்னை செங்குன்றம் அருகிலுள்ள ஞாயிறு என்னும் ஊரில் பிறந்த சங்கிலியார், சிவ பக்தையாக திகழ்ந்தார். இளவயதிலேயே இத்தலம் வந்து சிவனுக்கு சேவை செய்தார். திருவாரூரில் பரவையாரை திருமணம் செய்திருந்த சுந்தரர், இத்தலம் வந்தார். சங்கிலியாரின் சிவசேவையைக் கண்ட சுந்தரர் அவர் மீது காதல் கொண்டார். தனக்கு அவரை மணம் முடித்துத் தரும்படி சிவனிடம் வேண்டினார். அவரும் ஒப்புக்கொண்டு சங்கிலியாரிடம், சுந்தரரை மணந்து கொள்ளும்படி அருளினார். அப்போது சங்கிலியார் சிவனிடம், சுந்தரர் ஏற்கனவே பரவையாரை மணந்து கொண்டதால், இரண்டாவதாக தான் எப்படி மணக்க முடியும்? எனக்கேட்டாள். சிவன் அவளிடம், சுந்தரரை அவளை விட்டு பிரிந்து செல்லாதபடி சத்தியம் வாங்கித்தருவதாகக் கூறினார். இதையறிந்த சுந்தரர், தான் சன்னதி முன்பு சங்கிலியாருக்கு சத்தியம் செய்து தருவதாகவும், அப்போது பிரகாரத்திலுள்ள மகிழ மரத்தடியில் எழுந்தருளும்படியும் சிவனிடம் வேண்டிக்கொண்டார். ஆனால், சிவன் சங்கிலியாரிடம் சுந்தரரை மகிழ மரத்தடியில் சத்தியம் வாங்கும்படி சொல்லிவிட்டார். அதன்படி இங்குள்ள மரத்தடியில் சத்தியம் செய்து சுந்தரர், சங்கிலியாரை மணந்து கொண்டார்.
மாசி மாதம், மகம் நட்சத்திரத்தன்று சுந்தரர் திருமணம் நடக்கிறது. இவ்விழாவின்போது சிவன் மகிழ மரத்தடியில் எழுந்தருளி, சுந்தரருக்கு திருமணம் செய்து வைப்பார். மாசியில் நடக்கும் இந்த விழாவை, "மகிழடி சேர்வை' என்கிறார்கள். இவ்விழாவின்போது அறுபத்துமூவரும் எழுந்தருளுவர். இங்குள்ள மகிழ மரத்தடியில், சிவன் பாதம் இருக்கிறது. இதற்கு சந்தனக்காப்பிட்டு அலங்கரிக்கிறார்கள். நீண்டநாட்களாக திருமணத்தடை உள்ளவர்களும், திருமணமான தம்பதியரும் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

கலிய நாயனார் முக்தி: கலியனார் என்னும் சிவபக்தர், இங்கு சுவாமிக்கு தினமும் விளக்கேற்றி வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவரது பக்தியை சோதிக்க எண்ணிய சிவன், வறுமையை உண்டாக்கினார். ஆனாலும் அவர் விளக்கிட்டு சிவனை வழிபட்டார். ஒரு கட்டத்தில் அவரிடம் தீபத்திற்கு எண்ணெய் வாங்கக்கூட பணமில்லை. எனவே தனது கழுத்தை அறுத்து, ரத்தத்தில் தீபம் ஏற்ற முயன்றார். அப்போது சிவன் அவருக்குக் காட்சி தந்து, அவரது பக்தியை உலகறியச் செய்தார். கலியனார் நாயன்மார்களில் ஒருவரானார். இவருக்கு இக்கோயிலில் தனிச்சன்னதி இருக்கிறது. ஆடி கேட்டை நட்சத்திரத்தன்று குருபூஜை நடக்கிறது. இங்கு சிவனுக்கு அதிகளவில் தீபம் ஏற்றி வைத்து வழிபடுகிறார்கள்.

பட்டினத்தார் கோயில்: காவிரிப்பூம்பட்டணத்தில் வசித்த பட்டினத்தார் என்னும் வணிகர், முக்தி வேண்டி சிவனை வழிபட்டார். அவருக்குக் காட்சி தந்த சிவன், கையில் ஒரு கரும்பைக் கொடுத்து, ""இந்த கரும்புடன் செல்! எவ்விடத்தில் நுனிக்கரும்பு இனிக்கிறதோ, அங்கு முக்தி கிடைக்கும்!'' என்றார். கரும்புடன் பல தலங்களுக்குச் சென்ற பட்டினத்தார், இங்கு வந்து சிவனை வழிபட்டார். அப்போது நுனிக்கரும்பு இனித்தது. தனது முக்திக்காலம் நெருங்கியதை உணர்ந்த அவர், இங்கிருந்தவர்களை அழைத்து தன்னை ஒரு பாத்திரத்தால் மூடும்படி கூறினார். அவர்களும் அவ்வாறு செய்யவே, லிங்க வடிவமாக மாறி முக்தி பெற்றார். பிற்காலத்தில் இவ்விடத்தில் பட்டினத்தாருக்கு கோயில் எழுப்பப்பட்டது.
இங்கு பட்டினத்தார் லிங்க வடிவில், காட்சி தருகிறார். இவரை சிவனாகவே கருதி பூஜிக்கின்றனர். பிரதோஷம், சிவராத்திரி பூஜை மற்றும் ஐப்பசியில் அன்னாபிஷேகமும் செய்யப்படுகிறது. ஆடி பவுர்ணமியை ஒட்டி வரும் உத்திராடம் நட்சத்திரத்தன்று இவரது குருபூஜை விழா கொண்டாடுகின்றனர்.

வள்ளலாருக்கு அருளிய அம்பிகை!: வள்ளலார் வடிவுடையநாயகி மீது அதீத பக்தி கொண்டிருந்தார். தினமும் இங்கு அம்பிகையை வழிபடுவார். ஒருசமயம் கோயிலில் அர்த்தஜாம பூஜையைப் பார்த்துவிட்டு, வீட்டிற்கு தாமதமாகச் சென்றார். கதவு அடைத்திருக்கவே, சாப்பிடாமல் பசியுடனே வெளியில் திண்ணையிலேயே படுத்து விட்டார். வள்ளலாருக்கு அருள்புரிய எண்ணிய அம்பிகை, ஒரு இலையில் வெண்பொங்கல் வைத்து அவருக்குக் கொடுத்துச் சென்றாள். இதை வள்ளலார் தனது அருட்பாவில் குறிப்பிட்டிருக்கிறார். இவ்வாறு பசி நீக்குபவளாக இத்தலத்தில் அம்பிகை அருளுகிறாள்.

கலங்கரை விளக்கம்!: வங்கக்கடற்கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு வந்த திருநாவுக்கரசர் கடலில் திசை தெரியாமல் செல்லும் கப்பல்களுக்கு, கரையிலிருக்கும் கலங்கரை விளக்கம் வழி காட்டுவதைப்போல, வாழ்க்கையில் வழி தெரியாமல் செல்பவர்களுக்கு ஒளி கொடுக்கும் "ஞான தீபமாக' இத்தலத்து சிவன் அருளுகிறார் என்று பாடியிருக்கிறார். வாழ்வில் பிடிப்பில்லாதவர்கள் இங்கு வேண்டிக்கொள்ள, வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கும் என்பது நம்பிக்கை.

வரி இல்லாத தலம்!: சூரிய குலத்தைச் சேர்ந்த மாந்தாதா என்னும் மன்னனின் ஆளுகைக்குட்பட்டு, இப்பகுதியை சிற்றரசன் ஒருவன் ஆண்டு வந்தான். ஒருசமயம் அம்மன்னன், இப்பகுதிக்கு வரி கேட்டு ஓலை அனுப்பினான். அந்த ஓலையில் "இவ்வாணை ஒற்றியூர் நீங்கலாகக் கொள்க' என்று திருத்தம் செய்யப்பட்டிருந்தது. இறைவனே இவ்வாறு ஓலையில் திருத்தம் செய்ததாக கருதிய மன்னன், இவ்வூருக்கு வரி விதிக்காமல் விலக்கி வைத்தான். இதனாலும் இவ்வூருக்கு "திருவொற்றியூர்' என பெயர் உண்டானதாகச் சொல்வர்.
இதை சேக்கிழார் பெரியபுராணம்,
""ஏட்டுவரியில் ஒற்றியூர் நீங்கல் என்ன எழுத்தறியும்
நாட்டமலரும் திருநுதலார்,'' என்கிறார்.

சிவன் இக்கோயிலில் கௌலீஸ்வரர் என்ற பெயரில் தனிச்சன்னதியில் இருக்கிறார். சுயரூபத்துடன், யோக நிலையில் அமர்ந்த கோலத்தில் இருக்கும் இவர், இடது மேல் கையில் ஓடு வைத்து, கீழ் கையை மார்புக்கு கீழே வைத்தபடி இருக்கிறார். வலது கையில் சின்முத்திரை காட்டுகிறார். "என்னை மனதில் நிறுத்தி வழிபடுபவருக்கு ஞானம் தருவேன்' என்று சொல்லும்படியாக இவர் இந்த கோலத்தில் காட்சி தருகிறார். குழந்தைகள் இவரிடம் வேண்டிக்கொண்டால் அவர்களது கல்வி சிறக்கும்.
படம்பக்கநாதர் சன்னதி முன்மண்டபத்தில் உள்ள விநாயகர்,"குணாலய ஏரம்ப விநாயகர்' என்று அழைக்கப்படுகிறார். இவரிடம் வேண்டிக்கொள்ள நற்குணம் உண்டாகும் என்பது நம்பிக்கை. எனவே இவர் இப்பெயரில் அழைக்கப்படுகிறார். குணாலயச்செல்வர் என்றும் இவரை அழைக்கிறார்கள்.

பிரகாரத்தில் 27 நட்சத்திரங்களின் பெயரில் வரிசையாக சிவலிங்கங்கள் இருக்கிறது. இந்த லிங்கங்கள் அனைத்தும் வடக்கு நோக்கியிருக்கிறது. மாசி மாதம் சிவராத்திரியன்று மாலையில் இந்த லிங்கங்களுக்கு விசேஷ அபிஷேக, அலங்காரங்கள் நடக்கும். ஜாதகத்தில் தோஷம் உள்ளவர்கள் தங்களுக்கான நட்சத்திர நாட்களில், அந்தந்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வித்து, சர்க்கரைப் பொங்கல் படைத்து, நெல் தானியத்தை தானமாகக் கொடுத்து வேண்டிக்கொண்டால் தோஷ நிவர்த்தியாவதாக நம்பிக்கை.

திருப்தி தரும் சிவன்: வட்டப்பாறையம்மன் சன்னதிக்கு அருகில் "திருப்தீஸ்வரர்' என்ற பெயரில் சிவன் காட்சி தருகிறார். இவர், ஒரு சதுர வடிவ கல்லில் புடைப்புச் சிற்பமாக இருக்கிறார். வாழ்வில் திருப்தியில்லாதவர்கள் இவரிடம் நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபடுகிறார்கள். இதனால் வாழ்க்கை சிறக்கும் என்பது நம்பிக்கை.

சுவாமி, கஜபிருஷ்ட விமானத்தின் கீழ் காட்சி தருகிறார். பிரகாரத்திலுள்ள நந்தி, ஒரு உயரமான பீடத்தின் மீது அமைக்கப்பட்டிருக்கிறது. பிரகாரத்தில் ஆகாச லிங்க சன்னதி இருக்கிறது.

சிறப்புகள் சில வரிகளில்...
முக்தி தலம், ஆதிபுரி, பூங்கோயில், பூவுலகச் சிவலோகம் என்பன இத்தலத்தின் சிறப்பைக் காட்டும் பெயர்கள்.

நந்திதேவருக்காக சிவன், பத்ம தாண்டவம் ஆடிக்காட்டிய தலம் இது.

கார்த்திகை 3ம் திங்களன்று, தியாகராஜர் சன்னதியில் சங்காபிஷேகம் நடக்கும். ஐப்பசி பவுர்ணமியன்று ஆதிபுரீஸ்வரருக்கு மட்டும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

இங்குள்ள அருள்ஜோதி முருகன், அருணகிரியாரால் பாடப்பெற்றவர் ஆவார். வயிற்று வலி நீங்க இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். சங்கிலியாருடன், சுந்தரருக்கு சன்னதி இருக்கிறது. பவுர்ணமிதோறும் இவருக்கு விசேஷ அபிஷேகம் நடக்கிறது.புத்திரபாக்கியம் இல்லாதவர்கள் இங்குள்ள குழந்தீஸ்வரரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

தல வரலாறு:பிரளயகாலத்தில் உலகம் அழிவுற்று, மீண்டும் புதிதாக உலகம் தோன்றும். அப்போதெல்லாம் பிரம்மா தோன்றி, உயிர்களைப் படைப்பார். ஒரு பிரளயகாலம் வந்தபோது, உலகம் அழிவதை பிரம்மா விரும்பவில்லை. எனவே, உலகம் அழியாமல் காக்கும்படி சிவனை வேண்டி யாகம் நடத்தினார். யாகத்தின் மத்தியில் அக்னி வடிவில் தோன்றிய சிவன், அவரது வேண்டுதலை ஏற்றார். பின், பிரம்மாவின் வேண்டுதலுக்காக லிங்க ரூபமாக எழுந்தருளினார். யாக குண்டம் கோயிலாக உருவானது. பிரளயம் நீங்கி, உலகம் மீண்டும் துவங்கிய வேளையில் இங்கு எழுந்தருளியதால் இத்தலத்து சிவன், "ஆதிபுரீஸ்வரர்' என்று பெயர் பெற்றார். பிரளய வெள்ளத்தை ஒற்றச் செய்து (விலகச்செய்தல்) அருளியதால் தலம் "திருவொற்றியூர்' என்று பெயர் பெற்றது. 
     
சிறப்பம்சம்:அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு, சிவன் பாணலிங்க வடிவில் உயரமாகக் காட்சியளிக்கிறார். ஆவுடையார் கிடையாது.
Maakaraleeswarar Temple, thirumAgaral, thoNdai nAdu thEvAra Temple 7] Kanchipuram, Tamilnadu, thirumagaral, thirumakaral, (Thiru Magaral Village)             
This Shivastalam is located at a distance of about 10 miles south of Kanchipuram in Tondai Naadu, enroute to Uttiramerur, and there are are several features of interest here. Magaral lies on the Northern banks of the Cheyyar river. Across the river is the Kadambarkoyil temple. This is the 7th Thevara Koil in the Thondai Naadu.

Legends: Shiva is said to have manifested himself as a giant golden lizard to Rajendra Cholan here and in another legend, an Udumbu (giant lizard) is said to have worshipped Shiva in an ant hill. Indra is said to have worshipped Shiva here.

The Temple: This beautiful temple is located in pleasant surroundings in a small village. A gajaprashta Vimanam crowns the sanctum as in most others in this area (Tondai Nadu). The Rajagopuram is visible from a distance as one approaches this village. Sambandar is said to have visited this shrine after composing a Patikam at Cheyyar.

Tirumaakaral was a prominent place during the Chola period. The present structure is attributed to the period of Kulottunga Chola II (1133-1150) of the later Cholas. Inscriptions speaking of his grants to the temple are seen here. Also seen here, are inscriptions from the period of Rajaraja II and Rajaraja III, and the later Pandyas. In its recent renovation, much of the older features of this temple have been lost.


மூலவர் : திருமாகறலீஸ்வரர், உடும்பீசர்
உற்சவர் : சோமாஸ்கந்தர், நடராஜர்
அம்மன் : திரிபுவனநாயகி
தல விருட்சம் : எலுமிச்சை
தீர்த்தம் : அக்னி
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருமாகறல்
ஊர் : திருமாகறல்

மன்னுமறை யோர்களொடு பல்படிம மாதவர்கள் கூடியுடனாய்
இன்னவகை யால்இனிது இறைஞ்சி இமை யோரிலெழு மாகறலுளான்
மின்னை விரி புன்சடையின் மேல்மலர்கள் கங்கையொடு திங்களெனவே
உன்னுமவர் தொல்வினைக ளொல்கவுயர் வானுலக மேறலெளிதே -திருஞானசம்பந்தர்!

இராசேந்திரசோழனுக்கு, இறைவன் பொன் உடும்பாகத் (மாகறம் - உடும்பு)தோன்றி, அவன் துரத்த, புற்றில் ஓடி ஒளிந்து பின் சிவலிங்க வடிவமாக வெளிப்பட்ட தலம். இங்கு திங்கள் கிழமை தரிசனம் விசேஷமாக சொல்லப்படுகிறது. இத்தலத்தின் அபிஷேக தீர்த்தத்தை சாப்பிட்டால் ரத்தம் சம்பந்தப்பட்டவை, எலும்பு முறிவு, கண்பார்வை குறைவு, பக்கவாதம் ஆகிய நோய்களின் தாக்கம் குறையும் என்பது நம்பிக்கை. பிரிந்த தம்பதியினர் ஒன்று சேரவும், கிரக தோஷம் விலகவும் பூஜை செய்யலாம். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்கு அங்க பிரதட்சணம் செய்கிறார்கள்.
சம்பந்தரின் இப்பதிகம் 'வினை நீக்கும் பதிகம்' என்னும் சிறப்புடையது. இக்கோயிலில் யானைமீது முருகன் அமர்ந்திருக்கும் அபூர்வ திருமேனி அழகுறக் காட்சித் தருவதைக் காணலாம்.

திருமுறைத்தலங்கள்
தொண்டை நாட்டுத் தலம்

மாகறல்.

தொண்டை நாட்டுத் தலம்.

காஞ்சிபுரத்திலிருந்து செல்லாம். காஞ்சிபுரம் - உத்திரமேரூர் (வழி) ஓரிக்கை - பேருந்துப் பாதையில் உள்ள தலம். காஞ்சிபுரத்திலிருந்து இவ்வூர் வழியாக உத்திரமேரூருக்குப் பேருந்து செல்கிறது. செய்யாற்றின் கரையில் உள்ள ஊர். சாலை ஓரத்திலியே கோயில் உள்ளது. சிறிய அழகான கோயில். நன்கு பராமரிக்கப்பட்டு வருகின்றது.

இந்திரன் வழிபட்ட தலம். இராசேந்திரசோழனுக்கு, இறைவன் பொன் உடும்பாகத் தோன்றி, அவன் துரத்த, புற்றில் ஓடி ஒளிந்து பின் சிவலிங்க வடிவமாக வெளிப்பட்ட தலம். உள்ளது. சுயம்பு மூர்த்தி. ஆவுடையார்தான் கட்டப்பட்டது.

இறைவன் - திருமாகறலீஸ்வரர்.

இறைவி - திரிபுவன நாயகி, புவன நாயகி,

தீர்த்தம் - அக்கினி தீர்த்தம்.

தலமரம் - எலுமிச்சை.

இறைவனுக்கு வழங்கப்படும் வேறுபெயர்கள், அடைக்கலங்காத்த நாதர், மகம் வாழ்வித்தவர், உடும்பீசர், பாரத்தழும்பர்,புற்றிடங்கொண்டார், நிலையிட்ட நாதர், மங்கலங் காத்தவர், பரிந்து காத்தவர், அகத்தீஸ்வரர் முதலியன. மாகறம் - உடும்பு. 'மாகறலீஸ்வரர்' என்ற பெயரே மக்கள் வழக்கில் உள்ளது. மாகறன், மலையன் என்னும் இரு அசுரர்கள் வழிபட்ட தலம். இத்தலத்திற்குரிய பல விநாயகர், பொய்யா விநாயகர் - ஊருக்கப்பால் செய்யாற்றின் கரையில் உள்ள மண்டபத்தில் இவர் உள்ளார்.

இங்குத் திங்கட்கிழமை தரிசனம் விசேஷமாகக் சொல்லப்படுகிறது. மக்கட்பேறு வேண்டுவோர் இங்கு அங்கப்பிரதட்சணம் செய்யும் வழக்கம் முன் காலத்தில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

சம்பந்தர் பாடல் பெற்றது. இப்பதிகம் 'வினை நீக்கும் பதிகம்' என்னும் சிறப்புடையது.

இத்தலம் தொடர்பாகக் கிடைத்த செவி வழிச்செய்தி வருமாறு, இராசேந்திர சோழ மன்னனுக்கு நாடொறும் இங்கிருந்து, கோயிலில் இருந்த பலா மரத்திலிருந்து பலாப்பழம் ஒன்று அனுப்பப்பட்டு, அது வழியில் தில்லையில் நடராசப் பெருமானுக்கு நிவேதனம் செய்யப்பட்டுப் பின்பு மன்னனுக்குப் பிரசாதமாகத் தரப்பட்டு வந்தது. காலப்போக்கில் இக்கோயிலில் பணிசெய்தோர் இம்மரத்தைத் தீயிட்டு அழித்துவிட்டனர்.

பலாப்பழம் வாராதது அறிந்த மன்னன் ஆள் அனுப்பிச் செய்தியறிந்தான், அவர்களைத் தண்டிக்க எண்ணினான். ஆனால் கோயிற் பணியாளரைத் தண்டித்தலாகாது என்றெண்ணி, அவர்கள் அனைவரையும் இரவோடு இரவாக ஊரைவிட்டு அழைத்துச் சென்று, மறுநாள் பொழுது விடியும் இடத்தில் விட்டுவிடுமாறு உத்திரவிட்டான். அவ்வாறே அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு விடப்பட்ட ஊர் (திருத்தணிக்கும் திருவள்ளுருக்கும் இடையில்) 'விடிமாகறல்' என்று வழங்கப்படுகிறது.

கோயிலுக்கு செல்லும், புதியதாகக் கட்டப்பட்டுள்ள ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரம் கிழக்கு நோக்கியிருந்து வரவேற்கிறது. உட்புகுந்தால் விசாலமான இடம். கோயில் தூய்மையாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. துவஜஸ்தம்பம் - அதன் முன்னால் உயர்ந்த பலிபீடம். பலிபீடத்தின் முன் விநயாகர் காட்சி தருகிறார். ஆம், எழுந்தருளும் நாற்கால் மண்டபம் உள்ளது. வெளிப்பிரகாரம் விசாலமானது. வலமாக வந்து படிக்கட்டுக்களையேறி, விநாயகரையும், கடந்து உட்புகுந்தால் நேரே மூலவர் காட்சி தருகிறார். வலமா வரத்தொடங்கும் நாம் இடப்பால் உள்ள ஆறுமுகப்பெருமானை - மயிலேறிய மாணிக்கத்தைத் தரிசிக்கலாம். பக்கத்தில் நால்வர் பெருமக்கள் தனியே புதிதாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர்.

இப்பிரதிஷ்டை, ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு சங்கராசார்ய ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் பொன் விழா ஆண்டுப் பணிகளுள் இடம் பெற்று 1985 மார்ச்சில் நிறைவேற்றப்பட்டுக் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது .

வலமாக வரும் நாம் கருவறையிலுள்ள கோஷ்டமூர்த்தங்களை - விநாயகர், சிறிய தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை முதலிய திருமேனிகைளத் தரிசித்தவாறே வலம் வரலாம்.

இடப்பால் வரிசையாக அறுபத்துமூவர் திருமேனிகள் விநாயகர் சந்நிதி, சுப்பிரமணியர் சந்நிதிகள். தலமரம் - எலுமிச்சை, தழைத்து உள்ளது.

ஆலய விமானம் 'கஜப்பிரஷ்ட' அமைப்புடையது. நடராசர் சந்நிதியைத் தரிசித்து எதிர்ப்புறம் திரும்பினார் நவக்கிரக சந்நிதி, யானைமீது முருகன் அமர்ந்திருக்கும் ஆபூர்வ திருமேனி அழகுறக் காட்சிதருகின்றது. பள்ளியறை கடந்து, பைரவரை வணங்கி, அம்பாளை வலமாக வந்து படியேறிச் சென்றால் மூலவரைத் தரிசிக்கலாம். சதுர பீடம். உடும்பு வால் போன்ற அமைப்பில் - சிறுத்த வடிவில் சிவலிங்கம்.

உற்சவத் திருமேனிகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. அம்பாள் சந்நிதி - நின்ற திருக்கோலம். திருப்பனந்தாள் ஸ்ரீகாசி மடத்துக் கட்டளை 'சிவசிவ ஒலிமண்டபம்' உள்ளது. திரமுறைப் பாராயணக் கட்டளை நித்தம் காலை மாலை நடைபெறுகிறது. கோயில் உள்ளேயும், இக்கோயிற்பதிகம் சலவைக்கல்லில் திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடத்தினாரால் பொறித்துப் பதிக்கப்பட்டுள்ளது. வெளிப் பிரகாரத்தில் திருமண மண்டபம், வாகன மண்டபம், யாகசாலை முதலியவைகள் உள்ளன.

ஆண்டுதோறும் மாசி மகத்தில் 10 நாள்களுக்குப் பெருவிழா சிறப்பாக நடைபெறுகின்றது. இதன் பரம்பரை அறங்காவலராக இருந்துவருபவர் வேலூர் பாங்கர், திரு. எம்.டி. நடராச முதலியார் அவர்கள். சேலம் சுப்பராயப் பிள்ளை என்பவர்தம் உடலில் இடுப்பின் கீழ் செயலற்றுப் போக எல்லாவதி மருத்துவமும் செய்தும் பயனின்றிப் போக, திருமுறையில் கயிறுசார்த்திப் பார்த்து, இத்தலப்பதிகம் வர, இங்கு வந்து தங்கி, நாடொறும் இறைவனை வழிபட்டுத் தலப் பதிகத்தைப் பாராயணம் செய்து சிலகாலம் வாழ்ந்து இப்பெருமானருளால் உடல் பூரணகுணம் பெற்றுத் திரும்பினார். இந்நிகழ்ச்சி அண்மைக் காலத்தில் நடைபெற்றதாகும். இப்பகுதியில் உள்ள சமய அன்பர்கள் அனைவரும் இதை அறிவர்.

1971ல் கும்பாபிஷேகம் நடத்தப் பெற்றுள்ளது. கல்வெட்டில் இத்தலம் சயங்கொண்ட சோழமண்டலத்துப் பொற்கோட்டத்து மாகறல் நாட்டு மாகறல் என்று குறிக்கப்படுகிறது. குலோத்துங்க சோழன், சுந்தரபாண்டியன், விசயகண்ட கோபாலதேவர் காலத்திய கல்வெட்டுக்கள் உள. கோயிலுக்கு நிலங்கள் விடப்பட்ட செய்திகள் இவற்றில் குறிக்கப்பட்டுகின்றன.

"விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள் பாடல் விளையாடல் அரவம்

மங்குலொடு நீள்கொடிகள் மாடமலி நீடு பொழில் மாகறல் உளான்

கொங்குவிரி கொன்றையடு கங்கைவளர் திங்களணி செஞ்சடையினான்

செங்கண் விடை அண்ணலடி சேர்பவர்கள் தீவினைகள்

தீருமுடனே."

"கடை கொள்நெடு மாடமிகு ஓங்குகமழ் வீதிமலி காழியவர்கோன்

அடையும் வகையாற் பரவிஅரனை அடிகூடு (ம்) சம்பந்தன் உரையால் மடைகொள் புனலோடு வயல் கூடுபொழில் மாகறலு ளான் அடியையே

உடையதமிழ் பத்தும் உணர்வார் அவர்கள் தொல்வினைகள் ஓல்குமுடனே."

(சம்பந்தர்)

பொய்யா விநாயகர் துதி

வெய்யாக் கதிரவன்முன் இருள்போல வினையகற்றும்

கையானே யான்தொழ முன்நின்று காத்தருள் கற்பகமே

செய்யாற்றின் வடபால் இருக்கின்ற செங்கண் மால்மருகா

பொய்யா விநாயகனே திருமாகறல் புண்ணியனே

(தனிப்பாடல்)

-"தோயுமன

யோகறலிலாத் தவத்தோருன்ன விளங்குதிரு

மாகறலில் அன்பர் அபிமானமே"

(அருட்பா)

அஞ்சல் முகவரி

அ.மி. மாகறலீஸ்வரர் திருக்கோயில்

மாகறல் கிராமம் , அஞ்சல் - 631 603. (வழி) காஞ்சிபுரம்.

உத்திரமேரூர் மாவட்டம் - காஞ்சிபுரம் மாவட்டம்.
திருமுறைத்தலங்கள்

பாண்டிய நாட்டுத் தலம்

திருநெல்வேலி

திருநெல்வேலி, மாவட்டத் தலைநகரம். சென்னையிலிருந்து விரைவுப் பேருந்துகளும், புகைவண்டி வசதிகளும் உள்ளன. மதுரையிலிருந்தும், பிறவூர்களிலிருந்தும் மதுரை வழியாகவும் நெல்லைக்கு அடிக்கடி பேருந்துகள் உள்ளன.

வேதபட்டர், இறைவனுக்குத் திருவமுது ஆக்குவதற்கு உலரப்போட்டிருந்த நெல், மழையினால் நனையாதவாறு இறைவன் வேலியிட்டுக் காப்பாற்றியமையால் இறைவனுக்கு நெல்வேலிநாதர் என்று பெயர் ஏற்பட்டது. ஆகவே இத்தலம் நெல்வேலி (திருநெல்வேலி) எனப் பெயர் பெற்றது.

பாற்குடம் சுமந்து சென்ற அன்பனை (முழுதுங்கண்ட ராமக்கோன்) இறைவன் மூங்கில் வடிவமாக இருந்து இடறச் செய்து பாலைத்தன்மீது கவிழச்செய்து, அதனால் வெட்டுண்டு, காட்சி தந்தருளியதால் சுவாமிக்கு வேணுவனநாதர் என்றும் பெயர். இத்தலமும் வேணுவனம் என்று வழங்கலாயிற்று.

ஊர்ப்பெயர் - வேணுவனம், நெல்வேலி, நெல்லூர், சாலிவேலி, சாலிவாடி, சாலிநகர், பிரமவிருந்துபுரம், தாருகாவனம் என்பன. கோயில் கல்வெட்டுக்களில் இத்தலம் 'கீழ்வேம்பு நாட்டுக் குலசேகர சதுர்வேதி மங்கலம்' என்று காணப்படுகிறது.

இறைவன் - நெல்லையப்பர், வேணுவனநாதர், வேய்முத்தநாதர், நெல்வேலிநாதர், சாலிவாடீசர், வேணுவனேஸ்வரர், வேணுவன மகாலிங்கேஸ்வரர், மூலவர் சுயம்பு மூர்த்தி.

இறைவி - காந்திமதி அம்மை, வடிவுடையம்மை.

தலமரம் - மூங்கில் (வேணு, வேய்)

தீர்த்தம் - பொற்றாமரைக்குளம் (ஸ்வர்ண புஷ்கரணி) கருமாறித் தீர்த்தம்,

சிந்துபூந்துறை.

சம்பந்தர் பாடல் பெற்ற தலம்.

இக்கோயிலில் மிகப் பழமையான கல்வெட்டுக்கள் உள. இக்கோயில் 14 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. காமிக ஆகம முறைப்படி அமைந்து நாடி வருவோர்க்கு நலமருளும் இத்திருக்கோயில் திருநெல்வேலி நகரின் நடுவண் அமைந்துள்ளது.

கோயிலுள் பொற்றாமரைக் குளம் உள்ளது. நாற்புறமும் நல்ல படிகள். நடுவில் நீராழி மண்டபம் உள்ளது. இக்கோயிலில் உஞ்சல் மண்டபம், திருக்கல்யாண மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், வசந்த மண்டபம், சங்கிலி மண்டபம், சோமவார மண்டபம், நவக்கிரக மண்டபம், மகா மண்டபம் போன்ற மண்டபங்கள் சிற்ப வேலைப்பாடுகளுடன் விளங்குகின்றன.

மூன்று தெப்பக் குளங்கள் இக்கோயிலில் உள்ளன. சுவாமிக்கு நான்கு ராஜகோபுரங்களும் அம்பாளுக்கு ஒரு கோபுமும் உள்ளன. சுவாமி, அம்பாள் ஆகிய இரு சந்நிதிகளும் கிழக்கு நோக்கியவை. நந்தி பெரியது - சுதையாலானது சுவாமி. சந்நிதிக்குச் செல்லும் வழியில் இசைத்தூண்கள் உள்ளன. துவாரபாலகர்களைக் கடந்து மகா கணபதி, முருகன் சந்நிதிகளைத் தரிசித்து உட்புகுந்தால் சுவாமி மிகவும் விசாலமானது.

நெல்லையப்பர் - சிவலிங்கத் திருமேனி, மேற்புறம் வெட்டப்பட்ட அடையாளம் உள்ளது. இப்போதுள்ள 21 ஆவது ஆவுடையார் என்றும் 20 ஆவுடையார்கள் பூமியின் கீழ் உள்ளன என்றும் சொல்லப்படுகிறது. இம்மூர் ¢தி 'மிருத்யஞ்சமூர்த்தி' ஆவார்.

அன்வர்கான் என்ற இஸ்லாமியரின் மனைவிக்கு உண்டான வயிற்றுவலி நீங்காமையால் அவன் வழிபட்டுப் பேறு பெற்ற சிவலிங்கம் 'அனவரத லிங்கம்' என்று வழங்கப்படுகிறது. இதற்கு அவர் தந்துள்ள நகை முதலியவைகளும் உள்ளன.

நாள்தோறும் ஆறுகால பூஜைகள் முறையாக நடைபெறுகின்றன. இவற்றுள் உச்சிக்காலத்தில் மட்டும் காந்திமதி அம்பிகையே - இறைவியே நேரில் வந்து சுவாமியை வழிபட்டுச் செல்வதாக ஐதீகம். அகத்தியருக்கு இறைவன் கல்யாண காட்சியைக் காட்டி அருளிய தலமிதுவே. சுவாமிக்குப் பக்கத்தில் கோவிந்தராஜர் சந்நிதி உள்ளது.

இங்குள்ள உற்சவத் திருமேனி கையில் தாரை வார்த்துத் தரும் பாத்திரத்துடன் இருப்பதைக் காணலாம். திருமால் பார்வதியைத் தாரை வார்த்துத் தர இரைவன் மணந்து கொள்ளும் நிகழ்ச்சியை இது நினைவூட்டுகிறது. திருமாலின் மார்பில் சிவலிங்க அடையாளம் உள்ளது.

இன்றும் ஐப்பசியில் நடைபெறும் திருக்கல்யாண விழாவில் ஒரு நாள் வைணவர் வந்து தாரை வார்த்துத் தர, சிவாசாரியார் பெற்றுக் கொள்ளும் ஐதீகம் நடைபெறுகின்றது. சுவாமி பிராகாரத்தில் கன்னி விநாயகர், நந்தி தேவர், பாண்டியராஜா சந்நிதிகள் உள்ளன. பிட்சாடனர், ரிஷிபத்தினியர் உருவங்கள் கல்லில் வண்ணந் தீட்டப்பட்டுள்ளன.

அகத்தியர் பிரதிஷ்டை செய்த சால்வடீஸ்வரர், சிவலிங்கத் திருமேனி சற்றுத் தாழ்வில் உள்ளது. இத்தலம், பஞ்ச சபைகளுள் தாமிரச் சபையாகும். இச்சபை தனியே உள்ளது. இங்குள்ள நடராஜர் 'தாமிர சபாபதி' என்றழைக்கப்படுகிறார். சபைக்கு மேலே தாமிரத் தகடு வேயப்பட்டுள்ளது. பின்னால் உள்ள நடராஜர் - சிலாரூபம் - சந்தன சபாபதி என்றழைக்கப்படுகிறார்.

உள்ளே ருத்திர விஷ்ணு, பேதங்கள், ரிஷிகளின் உருவங்கள் உள்ளன. கீழே மரத்தாலும் மேலே தாமிரத்தாலும் ஆக்கப்பட்டு ஏழு அடுக்குகளைக் கொண்டு திகழும் இச்சபை சித்திர வேலைப்பாடுகளுடன் அருமையாகத் திகழ்கின்றது. சபைக்குப் பக்கத்தில் தலமரம் உள்ளது.

இக்கோயிலில் இரு துர்க்கைச் சந்நிதிகள் உள்ளன. மகிஷாசுரமர்த்தினி சந்நிதி தெற்கு நோக்கியும், பண்டாசுரமர்த்தினி சந்நிதி வடக்கு பார்த்தும் உள்ளன.

ஆறுமுகர் சந்நிதி இங்கு மிகவும் விசேஷமானது. வள்ளி தெய்வயானையுடன் ஆறு முகங்களும் சுற்றிலும் திகழ, ஒவ்வொரு முகத்திற்கும் நேரே இரண்டிரண்டு திருக்கரங்கள் வீதம் சுற்றிலும் திகழ, அவ்வவற்றிற்குரிய ஆயுதங்களும் கொண்டு மயில் மீது அமர்ந்துள்ள பாங்கு அற்புதமானது. அமாவாசைப் பரதேசி என்பவர் ஒருவர் 120 வயது வரை வாழ்ந்திருந்து இச்சந்நிதியை விசேஷித்துக் காவடி எடுத்து இறுதியில் ஓர் அமாவாசையில் சித்தியடைந்தார். இவராலேயே இச்சந்நிதி மிக்க சிறப்பு பெற்றது. பாம்பன் சுவாமிகள் பதிகம் சுவரில் பதிக்கப்பட்டுள்ளது.

இக்கோயிலில் உள்ள 'சுரதேவர்' - 'ஜ்வரதேவர்' சந்நிதி மிகவும் சிறப்புடையது. மூன்று தலைகள், மூன்று கால்கள், மூன்று கைகளுடன் இம்மூர்த்தி, கையில் தண்டம், மணி, சூலத்துடன் காட்சி தருகின்றார். எவருக்கேனும் சுரம் இருப்பின், இம்மூர்த்திக்கு மிளகு அரைத்துச் சார்த்தி வெந்நீரால் அபிஷேகம் செய்தால் தீரும் என்னும் செய்தி மக்கள் வழக்கில் சொல்லப்படுகிறது.

பொல்லாப் பிள்ளையார் சந்நிதி இங்கு மிகவும் விசேஷமானது. புத்திரப்பேறில்லாதவர்கள் நாற்பத்தொரு நாள்கள் விரதமிருந்து, கருப்பமுற்று, குழந்தையைப் பெற்றெடுத்தபின் இச்சந்நிதிக்கு எடுத்து வந்து இங்கு சன்னல் போல் உள்ள பகுதியில் உட்புறமாகத் தந்து வெளிப்புறமாக வாங்கும் பழக்கம் உள்ளது. இதனால் இவருக்குப் 'பிள்ளைத் துண்ட விநாயகர்' என்றும் பெயர்.

அறுபத்துமூவர் மூலத் திருமேனிகளைத் தொடர்ந்து மேலே கயிலாய பர்வதக் காட்சி உள்ளது. இங்குப் பெருமான் இராவணனை அழுத்திய - நொடித்த பாவனை நன்கு சித்தரிக்கப்பட்டுள்ளது.

நடராஜர் சந்நிதி மற்றொன்று தனியே உள்ளது. இப்பெருமான் அக்கினி சபாபதி என்றழைகக்ப்படுகிறார். சிவகாமி உடன் நிற்க, காரைக்காலம்மையார் கையில் தாளமிட்டுப் பாட, சிரித்த முகத்துடன் ஆடும், அம்பலக்வத்தன் அழகைக் காணக்கண் ஆயிரம் வேண்டும்.

காந்திமதி அம்பாள் சந்நிதி தனியே உள்ளது. கிழக்கு நோக்கியது. நின்ற திருக்கோலம், வியாழன் தோறும் அம்பாளுக்குத் தங்கப் பாவாடை சார்த்தப்படுகிறது. அம்பாள் சந்நிதி முன்புள்ள மண்டபத்தில் உள்ள இரு தூண்கள் இசைத் தூண்களாக விளங்குகின்றன.

இத்தலத்திற்குத் தல புராணம் உள்ளது. 'காந்திமதியம்மை பிள்ளைத் தமிழ்' சிறப்புடைய நூலாகும்.

ஆனியில் 41 நாள்களுக்குப் பெருவிழா, மண்டலாபிஷேகத்துடன் சேர்ந்து நடத்தப்படுகின்றது.

ஆடிப்பூர உற்சவம் அம்பாளுக்குப் பத்து நாள்களுக்குச் சிறப்பாக நடைபெறுகின்றது. ஐப்பசியில் கல்யாண உற்சவம் 10 நாள்களுக்கு நடைபெறுகின்றது.

கார்த்திகை மாதத்தில் காலை 4 மணிக்கெல்லாம் கோயில் தரிசனத்திற்காகத் திறந்திருக்கும். நான்கு சோம வாரங்களும் சிறப்பானவை.

மார்கழித் திருவாதிரை உற்சவம், தைப்பூச உற்சவம், பங்குனி உத்திரத்தில் செங்கோல் உற்சவம் முதலியவை ஒவ்வொன்றும் பத்து நாள்களுக்குச் சிறப்பாக நடைபெறுகின்றன. மாசி மகத்தில் அப்பர் தெப்பம் சிறப்பு. வைகாசி விசாகத்தில் சங்காபிஷேகம் விசேஷமானது.

இத்திருக்கோயிலின் சார்பில், தேவாப் பாடசாலை நடைபெறுகின்றது. சமய நூலகம் உள்ளது. (காந்திமதி) அம்பாள் மகளிர் மேல் நிலைப்பள்ளி 2) நெல்லையப்பர் ஆதாரப் பள்ளி 3) ஞானசம்பந்தர் பாலர் பள்ளி முதலியவை நடைபெறுகின்றன.

"மருந்தவை மந்திர மறுமை நன்னெறியவை மற்றுமெல்லாம்

அருந்துயர் கெடுமவர் நாமமே சிந்தைசெய் நன்னெஞ்சமே

பொருந்து தண் புறவினிற் கொன்றை பொன் சொரிதரத்துன்றுபைம்பூ

செருந்தி செம்பொன்மலர் திருநெல்வேலியுறை செல்வர்தாமே

"வெடிதரு தலையினர் வேனல் வெள்ளேற்றினர் விரிசடையர்

பொடியணி மார்பினர் புலியதளாடையார் பொங்கரவர்"

வடிவுடை மங்கையோர் பங்கினர் மாதரைமையல் செய்வார்

செடிபடு பொழிலணி திருநெல்வேலியுறை செல்வர்தாமே". (சம்பந்தர்)

உட்டிரு விளக்கான அகரமுகரம் மகரம்

ஒளிர்விந்து நாதவடிவாய்

உயர்மந்த்ர பதவன்ன புவன தத்துவ கலைகள்

ஓராறி னுக்குமுதலா

மட்டில் குடிலைப்பொரு ணிறைமுறையுஞ் சொல்ல

மாட்டாத படியினாலே

மனத்தெழு மகந்தையா னானென்னும் வறுமைதனை

மாற்றியருள் வாழ்வு தரவே

எட்டிருங் கைக்கமல னைக்குட்டி யேபின்

இருஞ்சிறையிலிட்டு வைத்தே

இருநூ றெனுங்கணக் கோடுநா லாறா

மெனும் புவன மண்டகோடி

சிட்டியுஞ் செய்துபின் அயன்சிறை விடுத்தவா

செங்கீரை யாடியருளே

செல்வந்த தழைத்து வளர் நெல்வேலி வாழ்செட்டி

செங்கீரை யாடியருளே (க்ஷேத்திரக்கோவை பிள்ளைத் தமிழ்)

-"பொற்றாம

நல்வேலி சூழ்ந்து நலன்பெறுமொண் செஞ்சாலி

நெல்வேலி யுண்மை நிலயமே" (அருட்பா)

அஞ்சல் முகவரி -

அருள்மிகு. நெல்லையப்பர் திருக்கோயில்

திருநெல்வேலி 627 001.
அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:பிரம்மபுரீஸ்வரர்
அம்மன்:பிரம்மநாயகி(பிரம்ம சம்பத்கவுரி)
தல விருட்சம்:மகிழமரம்
தீர்த்தம்:பிரம்ம தீர்த்தம்
ஆகமம் பூஜை:காரண ஆகமம்
பழமை:2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:திருப்பிடவூர்,திருப்படையூர்
ஊர்:சிறுகனூர்,திருப்பட்டூர்
மாவட்டம்:திருச்சி
மாநிலம்:தமிழ்நாடு
திருவிழா:இங்கு பங்குனி மாதத்தில் பத்துநாள் விழா நடக்கும். 
     
தல சிறப்பு:பிரம்மன் வழிபட்ட ஷோடசலிங்கம்(பதினாறு பட்டை உடையது)தனி மண்டபத்தில் உள்ளது பிரம்ம சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்த தலம்.சிவன் கோயிலாக இருந்தாலும் இங்கு பிரம்மனுக்கு பிரம்மாண்டமான சிலையுடன் தனி சன்னதி உள்ளது.காலபைரவர் இங்கு மேற்கு நோக்கி உள்ளார்.கோயிலை வலம்வரும் போது சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி (குரு)அடுத்து அருகில் தனிசன்னதியிலுள்ள பிரம்மா அடுத்து சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள விஷ்ணு அதன்பின் மூலவர் பிரம்மபுரீஸ்வரர்(மகேஸ்வரர்)என வரிசையாகத் தரிசிக்கலாம்.இந்த அமைப்பு மிக விசேஷமானது. 
     
திறக்கும் நேரம்:காலை 7.30 மதியம் 12 மணி மாலை 4 இரவு 8 மணி.வியாழனன்று காலை காலை 6 மதியம் 12.30 மணி. 
   
முகவரி:அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் சிறுகனூர் திருப்பட்டூர்-621 105 திருச்சி மாவட்டம். போன்: +91 431 2909 599 (தொடர்பு நேரம்:காலை 9.30 மாலை 6 மணி)போன்:+91- 431 2909 599 
பொது தகவல்:இது தஞ்சாவூர் கோயிலுக்கும் முற்பட்டதாக தெரிய வருகிறது.இங்குள்ள நந்தியை தடவிக் கொடுத்தால் நிஜ காளையை தடவிக் கொடுத்த உணர்வு ஏற்படுகிறது பிரதோஷ நாளில் இந்த நந்தியை மக்கள் மொய்ப்பர்.

குழந்தைகளுக்காக பைரவர் வழிபாடு:சில குழந்தைகள் இரவு வேளையில் தூங்காமல் தொடர்ந்து அழுது கொண்டிருக்கும்.இவ்வாறு குழந்தைகள் அழாமல் இருக்கவும் அவர்கள் நிம்மதியாக தூங்கவும் இங்குள்ள கால பைரவரை வழிபடுகின்றனர்.அர்த்தஜாமத்தில் இவரது சன்னதியில் சாவி வைத்து பூஜை நடக்கும்.இவ்வேளையில் தரப்படும் விபூதியைப் பெற்றுச்சென்று குழந்தைக்கு கொடுக்கின்றனர். இவ்வாறு செய்வதால் குழந்தைக்கு பைரவர் காவலாக இருப்பார் என்பது நம்பிக்கை.

ஞானஉலா அரங்கேற்றம்: சுந்தரருடன் சேரமான் கயிலாயம் சென்றபோது சிவனை பெண்ணாக உருவகப்படுத்தி சிற்றிலக்கியம் இயற்றினார்.அதை ஐயனார் இத்தலத்தில் அரங்கேற்றம் செய்தார்.இவர் இக்கோயிலில் இருந்து சற்று தூரத்தில் ஞானஉலா அரங்கேற்றிய ஐயனார் என்ற பெயரில் அருளுகிறார்.ஆடி சுவாதியில் திருக்கயிலை ஞானஉலா விழாவன்று சுந்தரருக்கும் சேரமானுக்கும் பூஜை நடக்கும்.அன்று சேரமான் கையில் ஞானஉலா சுவடி வைத்து கயிலாயத்தில் அரங்கேற்றம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும்.ஏழாம் தேதி பிறந்தவரா?ராஜகோபுரத்தில் இருந்து 7 நிலைகளைக் கடந்து 300 அடி தூரத்தில் பிரம்மபுரீஸ்வரர் இருக்கிறார்.ஆனாலும் சுவாமி சன்னதிக்குள் சூரிய வெளிச்சம் இருக்கும்படியாக கோயில் கட்டப்பட்டுள்ளது.சூரியனுக்குரிய ரதம் ஏழு குதிரைகள் பூட்டியது. இதன் மீது வரும் சூரியன் ஏழு நிலைகளையும் கடந்து தினமும் பிரம்மபுரீஸ்வரரை தரிசிப்பதாக ஐதீகம். பங்குனியில் மூன்று நாட்கள் காலையில் சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும்.ஏழு நிமிடங்கள் இந்த ஒளி இருக்கும்.ஜாதகத்தில் ஒருவரது ஏழாம் இடத்தைப் பொறுத்தே மனைவி நண்பர்கள் அமைவர்.இது தொடர்பான தோஷ நிவர்த்திக்கு இங்கு வழிபடுகின்றனர்.ஏழாம் எண் ஆதிக்கத்தில் பிறந்தோருக்கான பரிகார தலமாகவும் இக்கோயில் உள்ளது.
 
பிரார்த்தனை:குருபகவானுக்குரிய அதிதேவதை பிரம்மா என்பதால் குரு தோஷ நிவர்த்திக்காக வியாழக்கிழமைகளில் விசேஷ பூஜை நடக்கிறது.மேலும் திங்கள் கிழமை திருவாதிரை,புனர்பூசம், சதயம் மற்றும் ஜென்மநட்சத்திர நாட்களில் பக்தர்கள் இவரை வணங்குவது விசேஷ பலன் தரும்.  குருபெயர்ச்சியன்று பிரம்மாவிற்கு பரிகார யாகபூஜை நடக்கும்.திருமணத்தடை பிரிந்த தம்பதிகள் சேருதல்,தொழில்,வியாபார,பணி விருத்திக்காக பிரம்மனிடம் வேண்டலாம்.மிக முக்கியமான பிரார்த்தனை புத்திரப்பேறு வேண்டுதல் தான்.ஏனெனில் பிரம்மன் தானே படைத்தாக வேண்டும். அவ்வகையில் இது மிகச்சிறந்த புத்திரப்பேறுக்கான பிரார்த்தனை ஸ்தலம்.
 
தலபெருமை:வித்தியாசமான அமைப்பு:குருர் பிரஹ்மா;
குருர் விஷ்ணு; குருர் தேவோ மகேச்வர;
குரு ஸாட்ஷாத் பர ப்ரஹ்மை
தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ''

என்ற குருமந்திரப்படி அமைந்த கோயில் இது.கோயிலை வலம்வரும் போது சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி (குரு)அடுத்து அருகில் தனிசன்னதியிலுள்ள பிரம்மா அடுத்து சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள விஷ்ணு அதன்பின் மூலவர் பிரம்மபுரீஸ்வரர்(மகேஸ்வரர்)என வரிசையாகத் தரிசிக்கலாம்.இந்த அமைப்பு மிக விசேஷமானது.

முருகன் வணங்கிய சிவன்:முருகப்பெருமான், அசுரர்களை அழிக்கச் செல்லும்முன் இத்தலத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து வணங்கி அதன்பின் படை திரட்டிச் சென்றாராம்.இதனால் திருப்படையூர் எனப்பட்ட தலம் திருப்பட்டூர் என மருவியதாகச் சொல்வர்.முருகன் வழிபட்ட சிவன் கந்தபுரீஸ்வரர் என்ற பெயரில் இங்கிருக்கிறார்.

எல்லாமே மஞ்சள் நிறம்:பிரம்மா மங்கலம் தந்து வாழ்க்கையை சிறக்கச்செய்பவர் என்பதால் பூஜையின்போது இவருக்கு மஞ்சள் காப்பிட்டு புளியோதரை படைத்து மஞ்சள் பிரசாதம் தருகின்றனர். மற்ற சன்னதிகளிலும் மங்கல சின்னமாகிய மஞ்சள் நிற வஸ்திரங்களையே பயன்படுத்துகின்றனர். பிரம்மன் வழிபட்ட பழமலைநாதர் கந்தபுரீஸ்வரர் பாதாள ஈஸ்வரர் தாயுமானவர் மண்டூகநாதர் ஏகாம்பரேஸ்வரர் அருணாசலேஸ்வரர் கைலாசநாதர் ஜம்புகேஸ்வரர் காளத்தீஸ்வரர் சப்தரிஷீஸ்வரர் தூயமாமணீஸ்வரர் ஆகிய லிங்கங்கள் சிவன் சன்னதி எதிரிலுள்ள நந்தி உட்பட பெரும்பாலான பரிவார மூர்த்திகளுக்கும் மஞ்சள் வஸ்திரமே அணிவித்து பூஜிக்கின்றனர்.பிரம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் வியாழக்கிழமைகளில் காணப்படுகிறார்.குருவுக்கு அதிதேவதை பிரம்மா. எனவே வியாழன் இங்கு விசேஷம்.யாருக்கு தலையெழுத்து மாற வேண்டும் என்ற விதி உள்ளதோ அவர்களே இக்கோயிலில் பிரம்மனின் பார்வையில் படுவார்கள் என்பது ஐதீகம்.அதுபோல் தலையெழுத்து மாற தகுதியுள்ளவர்கள் குறைந்த பாவக் கணக்கில் இருப்பவர்கள் பக்திமான்களின் தலைவிதி மாற்றப்பட்டு விடுகிறது.உதாரணமாக நோய் தாக்க வேண்டும் என்ற விதி இருந்தால் அது மாறிப் போகிறது.ஆபரேஷன் செய்ய வேண்டும் என்ற விதியுள்ள கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஆகும். விரயச் செலவுகள் தடுக்கப்படும்.பெயிலாகிக் கொண்டிருக்கும் மாணவன் நன்றாக படிக்க ஆரம்பித்து உயர்நிலைக்குச் செல்வான்.நியாயமற்ற கோரிக்கைகளை பிரம்மன் கவனிப்பதில்லை என்பதுடன் மேலும் நமது நிலையை மோசமாக்கி விடுவார்.நரசிம்மர் மண்டபம்: நரசிம்மரின் லீலைகளை விளக்கும் வகையில் ஒரு மண்டபத்தில் சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் துரோபாவம் என்ற வகையில் நரசிம்மர் அவதாரமானது இரண்யனுக்கு நல்லொழுக்கம் போதித்தது அவன் கேட்காததால் சம்ஹாரம் செய்தது பிரகலாதனுக்கு அருள் செய்தது ஆகிய காட்சிகள் சிற்பங்களாக எழிலுற வடிக்கப்பட்டுள்ளன.நாத மண்டபத்தில் ராவணன் அகந்தையினால் மேருமலையை சிவ பார்வதியுடன் சேர்ந்து தூக்குவது போலவும் அது முடியாமல் போகவே சாமகானம் இசைத்து சிவனை வசப்படுத்தும் முயற்சியில் இம்மண்டபத்தில் இசைத்தூண்கள் அமைந்ததாகவும் கூறப்படுகிறது.பிரம்மன் வழிபட்ட சோடசலிங்கம்(பதினாறு பட்டை உடையது)தனி மண்டபத்தில் உள்ளது.இந்த மண்டபத்தின் உச்சி மரத்தால் ஆனது.

எலும்பு நோய்க்கு பூஜை:பதஞ்சலி மகரிஷி ராமேஸ்வரம் உட்பட 10 தலங்களில் ஐக்கியமானதாக சொல்லப்படுகிறது.அதில் இத்தலமும் ஒன்று.இவர் ஐக்கியமான இடத்தில் ஒரு லிங்கமும், ஓவியமும் உள்ளது.அமாவாசையன்று இந்த லிங்கத்திற்கு தயிர் சாதம் படைத்து பூஜை நடக்கும்.வைகாசி சதயத்தன்று இவரது குருபூஜை நடக்கிறது.சித்தர்பாடலில் இத்தலம் பதஞ்சலி பிடவூர் எனக் கூறப்பட்டுள்ளது.மனஅமைதி கிடைக்க எலும்பு தொடர்பான நோய் நீங்க கல்வி கலைகளில் சிறப்பிடம் பெற, குருவருள் கிடைக்க திங்கள் வியாழக்கிழமைகளில் இவரை வழிபடுகின்றனர்.

பதஞ்சலியின் ஜீவசமாதி:ஜோதிடக்கலையின் தந்தையும் பாம்பு உடலைக் கொண்டவருமான பதஞ்சலி முனிவர் பத்து இடங்களில் ஜீவசமாதி அடைந்ததாக ஒரு தகவல் உண்டு.அதில் இத்தலமும் ஒன்று. பதஞ்சலி முனிவரின் சமாதி இக்கோயிலுக்குள் இருக்கிறது.அவர் யோகசூத்ரம் என்ற நூலை எழுதியவர். முக்தியடைந்தாலும் கூட இன்றும் உயிருடன் இருந்து அவர் அருள்பாலிக்கிறார்.
வேதங்களை ஈசன் அம்பிகையிடமும் அம்பிகை பிரம்மாவிடமும் பிரம்மா நந்தியிடமும் நந்தி தேவர் ரிஷிகளிடமும் சொன்னதாக காஞ்சிப்பெரியவர் சொல்வார்.அது இங்கு தான் நிகழ்ந்திருக்குமோ என எண்ண வேண்டியுள்ளது.ஏனெனில் இங்கு பிரம்மபுரீஸ்வரர் பிரம்மநாயகி பிரம்மா பிரம்மாண்ட நந்தி பதஞ்சலி ரிஷி ஆகியோர் உள்ளனர்.இவ்வகையில் இது மிக விசேஷமான கோயில்.
பிரம்மன் வழிபட்ட 12 லிங்கங்களும் இங்கு உள்ளன.எனவே ஜோதிர்லிங்கங்களை தரிசித்த பலன் இங்கு சென்றாலே கிடைத்து விடுகிறது.தெற்கு நோக்கி இருக்க வேண்டிய காலபைரவர் இங்கு மேற்கு நோக்கி உள்ளார்.பிரம்மனுக்கு 36 தீபம் (27 நட்சத்திரம், 9 கிரகம்)ஏற்றி 108 புளியோதரை உருண்டைகளை படைத்து வழிபடுவது சிறந்தது.ஒன்பது முறை பிரம்மனை வலம் வர வேண்டும்.
 
தல வரலாறு:பிரம்மன் இவ்வுலகத்தை படைக்கும் ஆற்றலை சிவனிடமிருந்து பெற்றிருந்தார்.தன்னைப் போலவே பிரம்மனுக்கும் சம அந்தஸ்து கொடுக்கும் வகையில் ஐந்து தலைகளை அவருக்கு கொடுத்தார்.படைப்புத் தொழிலில் அனுபவம் பெற்ற பிரம்மன் தன்னையும் சிவனையும் ஒன்றாகக் கருதி ஆணவம் கொண்டார்.அவருக்கு பாடம் புகட்ட விரும்பிய சிவன் ஐந்து தலை இருப்பதால் தானே அஞ்சுதல் இல்லாமல் இருக்கிறாய் எனக்கூறி ஒரு தலையைக் கொய்து விட்டார்.படைப்புத்தொழிலும் பறி போனது.நான்முகனான பிரம்மா இறைவனிடம் தனது தவறுக்காக சாப விமோசனம் கேட்டார்.பூலோகத்தில் திருப்பட்டூர் என்ற தலத்தில் குடிகொண்டிருக்கும் தன்னை 12 லிங்க வடிவில்(துவாதசலிங்கம்)வணங்கி சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்தார்.மேலும் பிரம்மனின் தலையெழுத்தை மாற்றி மீண்டும் படைப்புத்தொழிலை அருள்வதாகக் கூறினார். பிரம்மனும் இங்கு வந்து துவாதச லிங்க வழிபாடு செய்து சாபம் நீங்கப் பெற்றார்.என்னை மகிழ்வித்த உன்னை வழிபடுகிறவர்களின் தீய தலையெழுத்தை மங்களகரமாக மாற்றுவாயாக என வரமும் கொடுத்தார்.அன்று முதல் இந்த பிரம்மன் தன்னை வழிபடும் பக்தர்களின் தலையெழுத்தை மாற்றி அருள் செய்கிறார்.பிரம்மன் இத்தலத்தில் சிவனை வழிபட்டதால் பிரம்மபுரீஸ்வரர் என சிவனுக்கு பெயர் ஏற்பட்டது.அம்பாள் பிரம்மநயாகி அல்லது பிரம்ம சம்பத்கவுரி எனப்படுகிறாள்.
 
சிறப்பம்சம்:பிரம்மன் வழிபட்ட ஷோடசலிங்கம்(பதினாறு பட்டை உடையது)தனி மண்டபத்தில் உள்ளது பிரம்ம சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்த தலம்.சிவன் கோயிலாக இருந்தாலும் இங்கு பிரம்மனுக்கு பிரம்மாண்டமான சிலையுடன் தனி சன்னதி உள்ளது.காலபைரவர் இங்கு மேற்கு நோக்கி உள்ளார்.கோயிலை வலம்வரும் போது சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி (குரு)அடுத்து அருகில் தனிசன்னதியிலுள்ள பிரம்மா அடுத்து சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள விஷ்ணு அதன்பின் மூலவர் பிரம்மபுரீஸ்வரர்(மகேஸ்வரர்)என வரிசையாகத் தரிசிக்கலாம்.இந்த அமைப்பு மிக விசேஷமானது.
தமிழ்த் தொகை அழகு

ஒருமை - இறையுணர்வு

மலைநாட்டு சிவாலயம் - திருவஞ்சைக்களம்

இரண்டு

அயனம் - தட்சணாயனம், உத்ராயனம்

அறம் - இல்லறம், துறவறம்

ஆன்மா - ஜீவான்மா, பரமான்மா

இடம் - செய்யுளிடம், வழக்கிடம்

இதிகாசம் - பாரதம், இராமாயணம்

முதுகுரவர் - தாய், தந்தை

இருமை - இம்மை, மருமை

உலகம் - இகலோகம், பரலோகம்

எச்சம் - பெயரெச்சம், வினையெச்சம்

எழுத்து - உயிரெழுத்து, மெய்யெழுத்து

கலை - சூரியகலை, சந்திரகலை

கந்தம் - நற்கந்தம், துர்கந்தம்

கிரகணம் - சூரிய கிரகணம், சந்திரகிரகணம்

சுடர் - சூரியன், சந்திரன்

திணை - உயர்திணை, அஃறிணை

போது - பகல், இரவு

மரபு - தாய் மரபு, தந்தை மரபு

வினை - நல்வினை, தீவினை

மூன்று

அரசர் - சேர, சோழ, பாண்டியர்

இடம் - தன்மை, முன்னிலை, படர்க்கை

உயிரிலுள்ள b - உதரத்தீ, விந்துத்தீ, சினத்தீ

உலகம் - பூலோகம், பரலோகம், பாதாளம்

கடுகம் - சுக்கு, மிளகு, திப்பிலி

காலம் - இறப்பு, நிகழ்வு, எதிர்வு

குணம் - சாத்வீகம், இராஜசகுணம், தாமச குணம்

குற்றம் - காமம், வெகுளி, மயக்கம்

சக்தி - இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி

சாத்திரம் - சாங்கியம், பதஞ்சலியம், வேதாந்தம்

சீவதேகம் - தூலம், சூக்குமம், காரணம்

சுடர் - சூரியன், சந்திரன், அக்கினி

தமிழ் - இயல், இசை, நாடகம்

b - அகவனீயம், தக்கிணாக்கிளீயம், காருகபத்யம்

தொழில் - ஆக்கல், காத்தல், அழித்தல்

நூல் - முதல், வழி, சார்பு

பொறி - மனம், வாக்கு, காயம்

மலம் - ஆணவம்மலம், கன்மமலம், மாயாமலம்

முக்கனி - மா, பலா, வாழை

பொருள் - பதி, பசு, பாசம்.

நான்கு

அரண் - மலை, காடு, மதில், கடல்

அளவு - எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல்

அழகை - இளிவு, இழவு, அசைவு, வறுமை

ஆச்சிரமம் - பிரமசரியம், இல்வாழ்க்கை, வானப்பிரத்தம், சந்நியாசம்

இழிச்சொல் - குறளை, பொள், கடுஞ்சொல், பயனில் சொல்

உண்டி - உண்டல், தின்னல், நக்கல், பருகல்

உபாயம் - சாமம், தானம், பேதம், தண்டம்

உரை - கருத்துரை, பதவுரை, பொழிப்புரை, அகலவுரை

கதி - தேவகதி, மக்கள்கதி, விலங்குகதி, நாகர்கதி

கணக்குவகை - தொகை, பிரிவு, பெருக்கு, கழிவு

கவிகள் - ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரகவி

சதுரங்கம் - தேர், கரி, பரி, காலாள்

சொல்வகை - பெயர், வினை, இடை, உரி

தோற்றம் - பை, முட்டை, நிலம், வியர்வை

நிலம் - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்

பண் - பாலை, குறிஞ்சி, மருதம், செவ்வழி

பதவி - சாலோகம், சாமீபம், சாருபம், சாயுச்சியம்

பா - வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா

பூ - கொடிப்பூ, கோட்டுப்பூ, நீர்ப்பூ, புதர்ப்பூ

பொருள் - அறம், பொருள், இன்பம், வீடு

பொன்வகை - ஆடகம், கிளிச்சிறை, சாதகம், சாம்பூநதம்

பெண் குணம் - அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு

மார்க்கம் - சரியை, கிரியை, யோகம், ஞானம்

யுகங்கள் - கிரிதம், திரேதம், துவாபரம், கலியுகம்

ஐந்து

அகிற்கூட்டு - சந்தனம், கற்பூரம், எரிகாசு, தேன், ஏலம்

அங்கம் - FF, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம்

அரசர்க்குழு - மந்திரி, புரோகிதர், சேனாதிபதியர், தூதர், சாரணர்

அவத்தை - சாக்கிரம், சொப்பனம், துருத்தி, துரியம், துரியாதீதம்

இலக்கணம் - எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி

ஈஸ்வரன்முகம் - ஈசானம், தற்புருடம், அகோரம், வாமம், சத்தியோசாதம்

உலோகம் - பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம்

ஐங்காயம் - கடுகு, ஓமம், வெந்தயம், உள்ளி, பெருங்காயம்

ஐம்புலநுகர்ச்சியில்

இறப்பன - மீன், வண்டு, யானை, அகணம், விட்டில்

கன்னிகை - அகலிகை, திரௌபதி, சீதை, தாரை, மண்டோதரி

குரவர் - அரசன், உபாத்தியாயன், தந்தை, தேசிகன், மூத்தோன்

குற்றம் - கொட்டாவி, நெட்டை, குறுகுறுப்பு, மூச்சிடல், அலமரல்

சத்தி - இச்சாசத்தி, கிரியாசத்தி, ஞானசத்தி, பராசத்தி, ஆதிசத்தி

திருமால் ஆயுதம் - சக்கரம், தனு, வாள், தண்டு, சங்கம்

தேவர் - பிரமன், விஷ்ணு, உருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன்

புலன் - சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்

யாகம் - பிரமம், தெய்வம், பூதம், பிதிர், மானுடம்

வண்ணம் - வெண்மை, கருமை, செம்மை, பசுமை

வாசம் - இலவங்கம், ஏலம, கருப்பூரம், சாதிக்காய், தக்கோலம்

விரை - கோட்டம், துருக்கம், தகரம், அகில், சந்தனம்

சுத்தி - ஆன்மசுத்தி, தானசுத்தி, திரவியசுத்தி, மந்திரசுத்தி, இலிங்கசுத்தி

முடிஅழகு - கொண்டை, பனிச்சை, குழல், முடி, சுருள்

ஆறு

அங்கம் - படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண்

அந்தணர் தொழில் - ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல்

ஆதாரம் - மூலம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை

உட்பகை - காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம்

சக்கரவர்த்திகள் - அரிச்சந்திரன், நளன், முசுகுந்தன், புருகுச்சன், புரூரவன், கார்த்தவீரியன்

சுவை, - இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கார்ப்பு, துவர்ப்பு, கைப்பு

தானை - தேர், பரி, கரி, ஆள், வேல், வில்

பருவகாலம் - கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்

ஏழு

அகத்தினை - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை,

பெருந்திணை

இசை - குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்

இடைஏழு

வள்ளல்கள் - அக்குறன், சந்திமான், அந்திமான், சிசுபாலன்,

தந்த வக்கிரன், கர்ணன், சந்தன்

உலகம் - பூலோகம், புவலோகம், மகாலோகம், சனலோகம்,

தவலோகம், சத்தியலோகம்

கடல் - உவர்நீர், நன்னீர், பால், தயிர், நெய், கருப்பஞ்சாறு, தேன்

கடைஏழு

வள்ளல்கள் - எழினி, ஓரி, காரி, நள்ளி, பாரி, பேகன், மலையன்

உலோகம் - செம்பொன், வெண்பொன், இரும்பு, ஈயம், வெங்கலம், தரா

முதல் ஏழு

வள்ளல்கள் - குமணன், சகரன், சகாரன், செம்பியன், துந்துமாரி, நளன், நிருதி

கீழ்ஏழ் உலகம் - அதலம், விதலம், சுதலம், தராதலம், மகாதலம், ரசாதலம், பாதாளம்

சப்தவிடத்தலம் - திருவாரூர், நாகப்பட்டினணம், திருநள்ளாறு, திருமறைக்காடு, திருக்காறாயில் திருவாய்மூர், திருக்குவளை

சீரஞ்சீவியர் - அசுவத்தாமன், மகாபலி, வியாசன், அனுமான், வீடணன், மார்க்கண்டன், பரசுராமன்

நதி - கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவேரி, குமரி, கோதாவரி

தாதுக்கள் - இரதம், உதிரம், எலும்பு, தோல், இறைச்சி, மூளை, சுக்கிலம்

தாளம் - துருவம், மட்டியல், ரூபகம், சம்பை, திரிபுடை, அடதாளம்,

ஏகதாளம்

பாதகம் - ஆங்காரம், உலோபம், காமம், பகை, போஜனப்பிரியம், காய்தல், சோம்பல்

பிறப்பு - தேவர், மக்கள், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, நிற்பன

மோட்ச புரி - காஞ்சி, காசி, அவந்திகை, துவாரகை, மதுரை, அயோத்தி,மாயை

பெண்கள் பருவம் - பேதை, பெதும்மை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை,

பேரிளம்பெண்

மண்டலம் - வாயு, வருணன், சந்திரன், சூரியன், நட்சத்திரம், அக்னி, திரிசங்கு

மாதர் - அபிராபி, மகேஸ்வரி, கௌமாரி, நாராயணி, வாராகி, இந்திராணி, காளி

முனிவர் - அத்திரி, குச்சன், கௌதமன், பிருகு, காசிபன், அங்கிரா, வசிட்டன்

வித்யா தத்துவம் - காலம், நியதிகலை, வித்தை, கிராகம், புருடன், மாயை

எட்டு

அட்டவீரட்டம் - கண்டியூர், திருக்கடவூர், திருஅதிகை, வழுவூர், திருப்பறியலூர், திருக்கோவலூர், திருக்குறுக்கை, திருவிற்குடி

அளவை - காட்சி, அனுமானம், ஆகமம், அருத்தாபத்தி, உபமானம்,

அபாவம், சம்பவம், ஐதீகம்

அஷ்டபந்தனம் - சுக்கான்கல், ஜாதிலிங்கம், செம்பஞ்சு, தேன்மெழுகு, எருமைவெண்ணெய், குங்கிலியம், நற்காவி, கொம்பரக்கு

எட்டுத்தொகை - நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு

எண்சுவைத்தமிழ் - சிங்காரம், வீரியம், பெருநகை, கருணை, ரவுத்திரம், குற்சை, அற்புதம், பயம்

எண்வகைவிடை - சுட்டு, மறை, நேர், ஏவல், வினா, உற்றுதுரைத்தல், உறுவதுகூறல், இனமொழி

ஐஸ்வரியம் - தனம், தானியம், GF, பசு, புத்திரர், வாகனம், சத்தம், தைரியம்

சித்தி - அணிமா, மகிமா, லகிமா, கரிமா, பிரார்த்தி, பிராகமியம், வசித்துவம்

மெய்ப்பாடு - நகை, அழுகை, அச்சம், இளிவரல், மருட்கை, பெருமிதம்,

வெகுளி, உவகை

ஒன்பது

நவ GF - சங்கம், பதுமம், மகாபதுமம், மகரம், கச்சபம், முகுந்தம், குந்தம், நீலம், வரம்

ராட்சதகணம் - கார்த்திகை, அயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டம்,

மூலம், அவிட்டம், சதயம்

நவமணி - கோமேதகம், நீலம், பவளம், புஷ்பராகம், வைடூரியம், மரகதம், மாணிக்கம், முத்து, வைரம்,

ஒரெழுத்து ஒருமொழி

ஆ - பசு, கோ - தலைவன், ஈ - கொடு, பூ - மலர்,

நா - நாக்கு, கா - காப்பாற்று, மா - பெரிய, ஐ - சளி,

சா - மடி, சே - எருது, பா - பாடல், கை - கரம், தை - மாதம்

ஆதாரம் - அபிதான சிந்தாமணி