வெள்ளி, 5 ஜூலை, 2019

ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாள்-பகுதி:1
           (ஸ்ரீதர ஐயாவாள்)

எத்தனையோ மகான்கள் பகட்டையும் படாடோபத்தையும் விரும்பாமல் எளிமையாக வாழ்ந்த ஒழுக்கசீலர்களாக இருந்திருக்கிறார்கள் இவர்களுடைய சரிதத்தைப் புரட்டினால் கண்கள் கசியும் இதயம் இளகும்.தங்களுக்கென வாழாமல் பிறரது நலன்களை முன்னிறுத்தியே இவர்களது வாழ்க்கை அமைந்துள்ளது.இவர்களுடைய  ஜீவன் அடங்கி இருக்கும் சந்நிதியை தரிசிப்பதே பெரும் பாக்கியம்.நம் முன்னோர் செய்த தவப்பயனின் விளைவாகவும் நமக்குள் இருக்கும் ஆன்மிக ஆற்றாலும்தான் அந்த பாக்கியம் நமக்குக் கிடைக்கிறது.

கும்பகோணத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் இருக்கிறது திருவிசலூர் என்கிற கிராமம்.  திருவிசநல்லூர் என்றும் சொல்வது உண்டு.திருஞானசம்பந்தர் தனது தேவாரத்தில் வியலூர் என்று இந்த ஊரைக் குறிப்பிடுகிறார்.இங்குள்ள சிவாலயம் பாடல் பெற்றது தவிர அருளாளர்களின் திருவடிபட்ட திவ்ய பூமி இது.போதேந்திரர்,மருதநல்லூர் சத்குரு ஸ்வாமிகள்,சதாசிவ பிரம்மேந்திரர்(காஞ்சி காமகோடி பீடத்தில் வந்த பரமசிவேந்திரரின் சிஷ்யர்).ராமபத்ர தீட்சிதர்,ராமசுப்பா சாஸ்திரிகள் முதலானோரின் வாழ்க்கையுடன் தொடர்புகொண்ட ஊர் திருவிசநல்லூர்.ஸ்ரீஐயாவாள் என்று அழைக்கப்படும் ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாள் கன்னடப் பிரதேசத்தில் பிறந்திருந்தாலும் தனது வாழ்நாளின் பிற்பகுதியை இங்குதான் கழித்தார்.

திருவிசநல்லூர் அக்ரகாரத்தில் வசித்து வந்தார் ஐயாவாள்.அருகில் பிரமாண்டமாக ஓடும் காவேரி நதிக்கு அக்கரையில் திருவிடைமருதூர்.அப்போதெல்லாம் இந்தப் பகுதியில் சிவக்ஷேத்திரம் என்றால் அது திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்க ஸ்வாமி கோயிலைத்தான் குறிக்கும்.எனவே தினமும் அர்த்தஜாம பூஜை வேளையில் மகாலிங்க ஸ்வாமியைத் தரிசிக்க திருவிசநல்லூரில் இருந்து பரிசலில் அக்கரைக்குச் சென்று வருவார்.தவிர ஒவ்வொரு பிரதோஷ வேளையின்போதும் தவறாமல் அங்கு இருப்பார் ஐயாவாள்.ஒருநாள் அர்த்தஜாம் தரிசனத்துக்காக ஐயாவாள் மகாலிங்க ஸ்வாமி சந்நிக்கு வந்தபோது அவர் முகத்தில் கூடுதல் பிரகாசம்.தன்னுடன் இருந்த பக்தர்களுக்குப் பல உபதேசங்களை உருக்கமாக வழங்கினார்.அன்றைய தினம்.இறை இன்பம் குறித்த அவரது செயல்பாடுகளைக் கண்டு பக்தர்கள் பிரமித்து நின்றனர்.ஐயாவாள் சிவ நாமத்தை ஜபித்துக்கொண்டே இருந்தார்.கர்ப்ப கிரகத்துக்குள் மகாலிங்க ஸ்வாமி ஜோதி சொரூபமாகக் காட்சி தந்து கொண்டிருந்தார்.அடுத்த சில நிமிடங்களில் தன் சந்நிதி முன் நடக்கப் போகும் சிலிர்ப்பான அந்தக் காட்சியை மகாலிங்கம் மட்டும்தானே உணர முடியும்?ஆம் திட்டமிடுதலும் தீர்மானிப்பவனும் அவன்தானே.

உணர்ச்சிப் பெருக்குடன் நமசிவாய நாமத்தை மனமுருகி நெடுநேரம் உச்சரித்துக் கொண்டிருந்த ஐயாவாள்.திடீரென கருவறையை நோக்கி ஓட ஆரம்பித்தார்.கர்ப்ப கிரகத்துக்குள் இருக்கும் லிங்கத் திருமேனியை ஆலிங்கனம் செய்துகொள்ளும் மனோபாவத்துடன் ஏதோ ஒரு சக்தியுடன் ஓடி வந்த ஐயாவாளை ஆலய அர்ச்சகர் தடுக்க முற்பட்டார் முடியவில்லை.ஈசனின் சந்நிதிக்குள் நுழைந்து.  பொன்னார் மேனியனின் ஆவுடை அருகே வந்ததும் ஐயாவாள் பொசுக்கென மறைந்துவிட்டார்.ஆம் மகாலிங்கத் திருமேனியில் ஐக்கியமாகிவிட்டார் ஐயாவாள்.இந்தக் காட்சியை நேரில் கண்ட அர்ச்சகர்.பக்தர்கள் மற்றும் ஆலய சிப்பந்திகள் உட்பட பலரும் நடந்த சம்பவத்தின் தாக்கம் குறையாமம் மூர்ச்சையாகிக் கிழே விழுந்தனர்.இன்னும் சிலர் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தனர்.

ஸ்தூல உடம்புடன் ஜோதிர்லிங்க சொரூபனுடன் இரண்டறக் கலந்துவிட்டார் ஸ்ரீஐயாவாள்.எனவே அவருக்கு அதிஷ்டானம் என்று கிடையாது.அவர் வாழ்ந்து அனுபவித்து பல நல் உபதேசங்களை பக்தர்களுக்கு வழங்கிய திருவிசநல்லூர் வீட்டையே திருக்கோயிலாக பாவிக்கிறார்கள்.அவரது நினைவுகளை வாழ்க்கைச் சம்பவங்களைச் சொல்லும் இடமாக இன்று காட்சியளிக்கிறது அந்த சந்நிதி.ஸ்ரீ ஸ்ரீதர ஐயாவாள் சேரிடபிள் டிரஸ்ட் என்கிற அமைப்பு தற்போது அவரது கோயிலை நிர்வாகித்து வருகிறது.கிருஷ்ண ப்ரேமியின் முயற்சியால் இது நன்றாக நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது.சித்திரையில் வசந்தோற்சவம் ஆவணியில் கோகுலாஷ்டமி உற்சவம் கார்த்திகையில் கங்காவதாரண மகோற்சவம் மார்கழியில் ராதா கல்யாண மகோற்சவம் என்று பல விழாக்கள் சிறப்பாக நடந்து வருகின்றன.ஸ்ரீதர ஐயாவாளின் வீட்டுக் கிணற்றில் கங்காதேவி நிரந்தர வாசம் செய்கிறாள்.  இதை, ஐயாவாளே தனது ஸ்லோகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.இந்தக் கிணற்றில் ஸ்நானம் செய்தால் கங்கையில் நீராடிப் பலன் உண்டு.

ஒவ்வொரு வருடமும் கார்திக்கை அமாவாசை தினத்தன்று கங்கை இந்தக் கிணற்றில் பொங்கி வருகின்றது.எனவே அன்றைய தினத்தில் புனிதம் வாய்ந்த இந்தக் கிணற்றில் நீராட எங்கெங்கிருந்தெல்லாமோ பக்தர்கள் சாரை சாரையாக வந்து சேர்வார்கள்.இந்துக்கள்தான் என்றில்லை...இஸ்லாமிய பெண்மணிகள் உட்பட அனைத்து மத்தினரும் இந்த மகானின் மகிமையை உணர்ந்து நீராடும் வைபவத்தில் கலந்து கொள்கிறார்கள்.மூலவர் சந்நிதியில் ஐயாவாளின் உற்சவர் விக்கிரகம் கோதண்டராம ஸ்வாமி விக்கிரகம் நவநீதகிருஷ்ணன் மற்றும் நடராஜரின் படங்கள் ஆகியவை இருக்கின்றன.விகட ராமசாமி சாஸ்திரிகள் என்பவரது காலத்தில்தான் ஐயாவாளுக்கு விக்கிரகம் செய்யப்பட்டு முறையாக ஆராதனையும் உற்சவமும் தொடங்கப்பட்டன.கார்த்திகை அமாவாசைக்கு முதல்நாள் இரவு இடைவிடாமல் பஜனை நடைபெறும்.அதிகாலை பஜனை முடிந்ததும் பாகவதர்கள் அனைவரும் காவேரிக்குச் சென்று சங்கல்பம் செய்து ஸ்நானம் செய்வார்கள் கங்காஷ்டக ஸ்லோகம் சொல்வார்கள்.உடன் ஏராளமான பக்தர்களும் சென்று காவேரியில் ஸ்நானம் செய்வார்கள்.பிறகு அங்கிருந்து நாம கோஷத்துடன் புறப்பட்டு வந்து ஸ்ரீமடத்தை அடைவர்.

அங்கு கங்காதேவி வாசம் செய்யும் புனிதக் கிணற்றுக்கு விசேஷ பூஜைகள் செய்து அதில் ஸ்நானம் செய்வார்கள்.இதைத் தொடர்ந்து.பக்தர்களும் புனித நீராடுவார்கள்.இதற்கென்றே நான்கு பக்தர்கள் கிணற்றின் அருகில் இருந்துகொண்டு பக்தர்களது தலையில் கிணற்றுநீரை இரைத்து ஊற்றுவார்கள்.  கிணற்றில் நீராடுவதற்கு முன் காவிரி ஸ்நானம் செய்யவேண்டும்(இந்தக் கிணற்றில் பக்தர்கள் எப்போதும் நீராடலாம்).கார்த்திகை அமாவாசை காலத்தில் வரும் பக்தர்கள் தங்குவதற்கு விரிவான ஏற்பாடுகளை டிரஸ்ட் செய்கிறது.அதுபோல் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் குறைவில்லாமல் நடைபெறுகிறது.நித்திய வழிபாடுகள் அனைத்தும் நன்றாகவே நடந்து வருகின்றன.சுப்ரபாதம்,ராமாயணம்,பாகவதம்,விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்,டோலோற்சவம்,பஜனை,நாம கோஷம் என்று எதற்கும் இங்கே குறையவில்லை.ஏகாதசி,அமாவாசை ஆகியவை விசேஷமாக அனுஷ்டிக்கப்படுகின்றன.

கர்நாடக பிரதேசத்தில்.மைசூர் சமஸ்தானத்தில் ஆஸ்தான வித்வானாக இருந்த லிங்கார்யர் என்பவருக்கு மகனாகப் பிறந்து.தன் கடைசிக் காலத்தை திருவிசநல்லூரில் கழித்து அந்தப் பூமிக்கு புண்ணியம் தேடித்தர வேண்டும் என்பதற்காகவே ஐயாவாள் இங்கு வந்து குடிகொண்டார் போலும்.தகப்பனாருடைய மறைவுக்குப் பிறகு சமஸ்தானத்திலிருந்து அவரைத் தேடி வந்த உயர் பதவியையும் ஏற்காமல் மனைவி லட்சுமி மற்றும் தாயாருடன் யாத்திரையாகப் புறப்பட்டு தமிழகம் வந்தார் ஐயாவாள்.உலகில் பக்தி மார்க்கத்தைப் பரப்ப வேண்டும் என்பது மட்டுமே ஐயாவாளின் சிந்தையில் மேலோங்கி இருந்தது.திருச்சி தஞ்சாவூர் கும்பகோணம் திருபுவனம் திருநாகேஸ்வரம் ஆகிய தலங்களை தரிசித்து கடைசியாக திருவிசநல்லூர் வந்து சேர்ந்தார்.எண்ணற்ற பண்டிதர்கள் நிறைந்த இந்தத் தலமே தான் தங்கவேண்டிய க்ஷேத்திரம் என்பதை உணர்ந்து அக்ரகாரத்தில் குடி அமர்ந்தார்.அந்த ஊரில் இருந்த அந்தணர்கள் ஐயாவாள் மீது பொறாமை கொண்டனர்.ஆனால் ஆண்டவன் அவர் மீது அன்பு கொண்டான்.தஞ்சையை ஆண்ட மன்னன் ஷாஹாஜியின் அன்புக்குப் பாத்திரமானார் ஐயாவாள்.

எண்ணற்ற நுல்களையும் ஸ்லோகங்களையும் எழுதி உள்ளார் ஐயாவாள்.கோவிந்தபுரத்தில் ஸித்தி ஆன போதேந்திரருடன் இணைந்து பல கிராமங்களுக்குப் பயணித்து நாம ஜபத்தின் மேன்மையை மக்களிடையே பரப்பினார்.தீவிரமான சைவர் என்று ஐயாவாளைப் பற்றிச் சொல்லப்பட்டாலும் பேதம் பார்த்து எதையும் அவர் செய்தில்லை.சிவபெருமானையும் கிருஷ்ணனையும் அவர் ஒன்றாகவே பார்த்தார்.திருவிசநல்லுரில் தங்கி நாம சங்கீர்த்தன மகிமை பற்றித் தொடர்ந்து பிரசாரம் செய்து வந்தார் ஸ்ரீதர ஐயாவாள்.இதையறிந்த ஆன்மிக அன்பர்கள் பல்வேறு ஊர்களிலிருந்து திருவிசநல்லுருக்கு வந்து ஐயாவாளின் உபதேசங்களைக் கேட்டுப் பேறு பெற்றனர்.ஐயாவாளின் பெருமையையும் நாம மகிமை குறித்து அவர் செய்த பிரசங்கத்தைப் பற்றியும் தங்களுக்குள் உற்சாகமாக விவாதித்துக் கொண்டனர்.இப்பேர்ப்பட்ட ஒரு மகான் வாழும் காலத்தில் நாம் வாழ்வதே நமக்கெல்லாம் பெருமை என்று கூறி பூரித்துப் போயினர்.

புகழும் பெருமையும் ஒன்று சேர்ந்து ஒரு மனிதரை உயர்த்தும்போது அதே துறையில் கொஞ்சம் பிரகாசித்து வரும் மற்றவர்களின் மனநிலை இந்தக் கலியுகத்தில் நாம் அறியாதததா?ஆம் ஊரெல்லாம் ஸ்ரீதர் ஐயாவாளின் பெருமையை புகழ்ந்து பேசும்போது திருவிசநல்லூர் அக்ரகாரத்தில் வசித்த ஏனைய அந்தணர்கள் உள்ளுக்குள் புழுங்கினார்கள்.எங்கிருந்தோ வந்த ஓர் அந்தணருக்கு இவ்வளவு பேரும் புகழுமா?ஏன் நமக்கெல்லாம் திறமை இல்லையா?பக்தி இல்லையா?என்று எரிச்சல் பொங்கத் தங்களுக்குள் கூடிப் பேசினர்.ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவரை மட்டம் தட்டவேண்டும் என்றும் முடிவெடுத்தார்கள்.அப்போது கோகுலாஷ்டமி உத்ஸவம் வந்தது.திருவிசநல்லூரில் வசித்த அந்தணர்கள் இந்த விழாவை ஒவ்வொரு வருடமும் விமரிசையாகக் கொண்டாடுவர்.அந்த வருடமும் உத்ஸவம் களை கட்டியது.உள்ளூரில் வசிப்பவர் என்ற ஒரே காரணத்தால் ஐயாவாளை ஒதுக்கித் தள்ள முடியாமல் தாங்கள் நடத்திய உத்ஸவத்துக்கு கடனே என்று அழைத்தனர்.ஆனால் பக்திக்கு முக்கியத்துவம் தராமல் பகட்டுக்கு முன்னுரிமை கொடுத்து அந்த உத்ஸவம் நடத்தப்படுவதாக ஐயாவாள் கருதியதால் அவர் உத்ஸவத்துக்குச் செல்லவில்லை.இது உள்ளூர் அந்தணர்களை இன்னும் கோபப்பட வைத்துது.பாரேன் உத்ஸவத்துக்கு வாரமல் நம்மைப் புறக்கணிக்கிறாரே இந்த பிராமணன் என்று ஆத்திரத்தைக் கொட்டித் தீர்த்தனர்.

அன்றிரவு இல்லத்தில் தனியே அமர்ந்து பாகவதம் படித்துக் கொண்டிருந்தார் ஐயாவாள்.அப்போது கோகுலாஷ்டமி உதஸவத்தின் ஒரு பகுதியாக வீதியில் கிருஷ்ண பரமாத்மாவின் வீதியுலா ஆடம்பரமாக ஐயாவாள் வீட்டை நெருங்கிக் கொண்டிருந்தது.அலங்கரிக்கப்பட்ட கிருஷ்ண பகவானின் படத்தை மேளதாளம் முழங்க வீதியில் எடுத்து வந்தனர்.அந்தணர்கள் மேளச் சத்தமும் நாம கோஷ முழக்கமும் வெகு அருகில் கேட்கவே ஆகா கிருஷ்ணன் வந்துவிட்டார்.வீடு தேடி வந்தவருக்கு தீபாராதனை கொடுக்க வேண்டுமே என்று பதற்றத்துடன் எழுந்தார் ஐயாவாள்.தீபாராதனைக்குத் தேவையானவற்றை ஒரு பித்தளைத் தாம்பாளத்தில் எடுத்துக்கொண்டு வெளியே வந்தார்.கிருஷ்ண ஊர்வலம் அவருடைய வீட்டு வாசலில் நின்றது.கிருஷ்ணனின் படத்துக்கு சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்துவிட்டு தீபாராதனைத் தட்டைக் கொடுத்தார்.ஆனால் உள்ளூர் அந்தணர்கள் அதை வாங்க மறுத்துவிட்டனர்.உள்ளத்துக்குள் கனன்று கொண்டிருந்த ஆத்திரத் தீயை அவர் மேல் அள்ளி வீசினர்.கொஞ்சமும் கூட கிருஷ்ண பக்தி இல்லாத உம்மை போன்றவர்களது தீபாராதனையை ஏற்பதற்காக கிருஷ்ணன் இங்கே வீதி வலம் வரவில்லை.உமது தீபாரதனையை கிருஷ்ணனுக்குக் காட்டினால் தெய்வ நிந்தனைதான் எங்களை வந்து சேரும் என்று வெறுப்புடன் முகத்தைத் திருப்பிக்கொண்டனர்.

ஐயாவாளுக்கும் கோபம் எழுந்தது.ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அந்தணர்களே எனது பக்தியை உங்களால் அறிய முடியாது.அதை அந்த கிருஷ்ண பகவான் மட்டுமே அறிவார் என்றார் அமைதியாக.இதைக் கேட்டு அந்தணர்கள் சிரித்தனர்.அதில் ஒருவர் உமது பக்தியை எங்களாலேயே புரிந்துகொள்ள முடியவில்லை.இந்த நிலையில் கிருஷ்ண பகவானுக்கு மட்டும் உமது பக்தியின் திறன் தெரியுமோ?நன்றாக இருக்கிறது.உம்முடைய நகைச்சுவைப் பேச்சு.எதற்கு இந்த வீண் பேச்சு?நீர் உண்மையான பக்தன் என்றால் இதோ இந்தப் படத்தில் இருக்கும் மாயக் கிருஷ்ணனைக் கூப்பிடும்.உமது பக்திக்கு இரங்கி அவன் வருகிறானா என்று பார்ப்போம் என்றார் சவாலாக.

ஐயாவாளுக்கு அவமானமாகவும் தர்மசங்கடமாகவும் ஆனது.ஒட்டுமொத்த பக்தர்களும் தன்னையே கவனிப்பதாகப் பட்டது.இது தனக்கு ஏற்பட்ட சோதனை.கிருஷ்ணனுக்கும் தனக்குமான நட்பை அவர்களுக்கு  எப்படியாவது உணர்த்த வேண்டும் என்று தீர்மானித்தார்.படத்தில் இருக்கும் கிருஷ்ண பகவானைக் கண் குளிரப் பார்த்து ஸ்லோகம் ஒன்றைப் பாடினார்.பின்னர் விருட்டென்று தனது வீட்டுக்குள் சென்று விட்டார்.அவரைப் பரிகாசம் செய்தபடி ஊர்வலத்தை மேற்கொண்டு நகர்த்திச் சென்றனர் அந்தணர்கள்.அடுத்த வீட்டு வாசலில் ஊர்வலம் நின்றது.அந்த வீட்டில் இருந்த ஒரு பாகவதர் தீபாராதனைத் தட்டைக் கொடுத்தார். அதை வாங்கிய அந்தணர் கிருஷ்ணனுக்கு ஆரத்தி காண்பிப்பதற்காக படத்தைப் பார்த்தவர் திடுக்கிட்டார்.அங்கே கிருஷ்ண பகவானது படத்தைக் காணவில்லை.வெறும் சட்டமும் கண்ணாடியும் மட்டுமே இருந்தன.பதறிப்போன அந்தணர்கள் நடந்ததை ஒருவாறு ஊகித்துக்கொண்டு ஐயாவாளின் வீட்டுக்குள் ஓடிவந்தனர்.உள்ளே ஊஞ்சலில் கிருஷ்ணனின் ஓவியம் புன்னகையுடன் காட்சி தந்தது.இதுவரை வீதிவலம் வந்த அதே கிருஷ்ணன் போலவே விளங்கியது.கிருஷ்ணனைத் துதித்து மனம் நிறைய ஆனந்தத்துடன் ஸ்லோகம் பாடிக்கொண்டிருந்தார் ஐயாவாள்.இந்த ஸ்லோகங்களுக்கு டோலோ நவரத்னமாலிகா என்று பெயர்.

ஐயாவாளின் பிரார்த்தனைக்கு இரங்கி வீதியில் உலா வந்து கொண்டிருந்த கிருஷ்ணன் அவரது வீட்டுக்குள்ளே சென்று அவரது பாடலைக் கேட்டுக் மயங்கிக் கிடக்கிறார் என்றால் ஐயாவாளின் பக்தித் திறத்தை என்னவென்பது.திரவிசநல்லூர் அந்தணர்கள் அனைவரும் ஐயாவாளிடம் தங்களது தகாத செயலுக்காக மன்னிப்புக் கேட்டனர்.அன்றிரவு அந்தணர்கள் அனைவரும் ஐயாவாளின் வீட்டிலேயே தங்கி.நாமகீர்த்தனம் செய்துவீட்டு மறுநாள் காலைதான் சென்றனர்.ஒருமுறை ஐயாவாளின் ஆத்மார்த்தமான பக்தியுடன் விளையாடிப் பார்க்க வேண்டும் என்கிற ஆசை சாட்சாத் பரமேஸ்வரனுக்கு வந்துவிட்டது.(ஐயாவாளே பரமேஸ்வரனின் அவதாரம் என்றும் சொல்வார்கள்)திருவிளையாடலுக்கான தினத்தைக் குறித்தும் விட்டார்.

அன்றைய தினம் இரவு வேளையில் திருவடைமருதூர் மகாலிங்கத்தைத் தரிசிக்கப் புறப்பட்டார் ஐயாவாள்.அப்போது காவேரியில் வெள்ளம் அதிகம் ஓடியது.பரிசல் ஓட்டிகள் எவரும் காவிரிக்கரையில் இல்லை.இந்த வெள்ளத்தில் பரிசல் ஓட்ட முடியாது என்பதால் அனைவரும் விட்டிலேயே முடங்கிவிட்டனர்.காவிரியின் இக்கரையிலேயே நின்றுகொண்டு என்ன செய்வது?என்று தவிர்த்துப் போனார் ஐயாவாள்.சிவபெருமானை தரிசிக்காமல் வீட்டுக்குப் போவது அபசாரமாகப்பட்டது அவருக்கு.நேரம் ஓடிக்கொண்டே இருந்தது.காவேரியில் தண்ணீர் அதிகமாகிக் கொண்டிருந்ததே தவிர குறைவதாகத் தெரியவில்லை.சற்றுநேரம் காத்திருந்தவர் இக்கரையில் இருந்தபடியே திருவிடைமருதூர் மகாலிங்க ஸ்வாமி ஆலய ராஜகோபுரத்தைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொண்டார்.சிவபெருமானை நேரில் தரிசிக்க முடியாத ஏக்கத்தில் அவரது கண்களில் இருந்து நீர் கரகரவென வழிந்தது.அப்போது ஈஸ்வரனை தியானித்து.ஆர்த்திஹர ஸ்தோத்திரம் எனும் ஸ்லோகத்தைப் பாடினார்.

இப்படி ஐயாவாள் காவிரிக்கரையில் நின்றபடி ஈஸ்வரனைத் தியானித்திருந்த வேளையில்... திருவிடைமருதூர் மகாலிங்க ஸ்வாமி ஆலயத்தில் அர்ச்சகராக இருந்தவரும் ஐயாவாளுக்குப் பழக்கமானவருமான சிவாசார்யா ஒருவர் அவர் முன் தோன்றினார்.ஐயாவாளுக்குப் பிரமிப்பு விழிகளை இமைக்க மறந்து சிவாசார்யரையே பார்த்துக் கொண்டிருந்தார்.காவிரியில் வெள்ளம் அதிகமாக ஓடுகிறது.அதனால் ஆற்றைக் கடந்து வந்து ஈசனைத் தரிசிக்க முடியவில்லையே என்று தாங்கள் மிகவும் வருந்தியிருப்பீர்கள் என்று அறிவேன்.தங்களது மனம் புண்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அர்த்தஜாம பூஜை முடிந்ததும் விபூதிப் பிரசாதம் எடுத்து வந்தேன்.இந்தாருங்கள் என்று கொடுத்தார் சிவாசார்யர்.

ஆகா சிவ தரிசனம் செய்ய முடியாமல் போய்விடுமோ என்று கவலைப்பட்டேன்.ஆனால் அந்த மகாலிங்கமே அர்ச்சகரை நேரில் அனுப்பி விபூதிப் பிரசாதம் கொடுத்திருக்கிறார்.இனி எனக்குக் கவலை இல்லை.ஈஸ்வரனையே தரிசித்த பாக்கியத்தை அடைந்துவிட்டேன் என்று கண் மூடி பிரசாத்தை இட்டுக்கொண்டு நிமிர்ந்து பார்த்தார்.அர்ச்சகரைக்காணவில்லை.பிரசாதம் கொடுத்துவிட்டு நேரமாகிவிட்டது என்று கிளம்பி போய்விட்டார் போலிருக்கிறது என்று நினைத்த ஐயாவாளுக்கு அப்போதுதான் பிரக்ஞை வந்தது.அதுசரி வெள்ளம் கரை புரண்டு ஓடும் இந்த வேளையில் நம்மால் அக்கரைக்குச் செல்ல முடியவில்லை.அப்படியானால் அர்ச்சகர் மட்டும் எப்படி வந்தார்?வேட்டி துண்டு நனையாமல் இட்ட திருநீறு கலையாமல் இருந்தது எப்படி?வந்தவர் ஒரு வேளை மகாலிங்க ஸ்வாமியாகவே இருக்குமோ?சரி நாளைக்குத் திருவிடைமருதூர் போகும்போது அந்த அர்ச்சகரிடமே கேட்டுவிட்டால் ஆச்சு என்று நினைத்து வீடு திரும்பினார்.மறுநாள் காவேரியில் வெள்ளம் வடிந்திருந்தது.பரிசல் மூலம் அக்கரைக்குச் சென்றவர் மகாலிங்க ஸ்வாமியைக் கண்குளிர தரிசித்தார்.தரிசனம் முடிந்த பின் முந்தைய தினம் விபூதிப்பிரசாதம் கொடுத்த அர்ச்சகர் கண்ணில் பட்டார்.பயபக்தியுடன் அவர் அருகே சென்றார்.

நேற்று திருவிசநல்லூருக்கு வந்து எனக்குப் பிரசாதம் கொடுத்தீர்களே ஏன்? என்று கேட்டார்.

நானா?காவிரியில் நேற்று கரை புரண்டு ஓடிய வெள்ளத்தைத் தாங்கள் பார்க்கவில்லையா?அதைக் கடந்து எவர் வர முடியும்?நான் வர வில்லை ஸ்வாமிகளே.ஐயாவாளுக்குப் பிரமிப்பு.அப்படியெனில் நேற்று திருவிசநல்லூருக்கு வந்து விபூதிப் பிரசாதம் தந்தருளியது சாட்சாத் பரமேஸ்வரன்தானா?தயாபரனே என்னே உனது கருணை.உன்னைத் தரிசிக்க இயலாமல் நான் தவித்து நின்றபோது என் குரலுக்கு செவி சாய்த்து என்னையே தேடி வந்துவிட்டாயே என்று உருகினார்.
திருவிசநல்லூர் ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாள்-பகுதி:2
                           ஸ்ரீதர ஐயாவாள்

{ஐயாவாள் வீட்டுக் கிணற்றில்,கங்கை பொங்கி வந்த கதையைப் பார்ப்போம்}

ஒருமுறை ஐயாவாள் வீட்டில் சிரார்த்தம் வந்தது.பிராமணர்கள் சாப்பிடுவதற்காக வீட்டில் சமையல் தயார் செய்யச் சொல்லிவிட்டு காவிரியில் குளிக்கக் கிளம்பினார் ஐயாவாள்.வழியில் யாரோ ஓர் ஆசாமி பசியால் துடித்துக் கொண்டிருந்தான்.அவனது நிலையைப் பார்த்ததும் ஐயாவாள் மிகவும் வருந்தினர்.கொஞ்சமும் தாமதிக்காமல் அவனைத் தனது வீட்டுக்கு அழைத்து வந்தார்.பிரமாணர்களுக்கென்று ஆசாரத்துடன் சமைத்து வைக்கப்பட்டிருந்த சிராத்த உணவை அவனுக்குக் கொடுத்தார்.பசியால் தவித்த அந்த ஆசாமியை ஈசனின் வடிவமாக எண்ணி போஜனம் செய்வித்து அனுப்பினார் ஐயாவாள்.பிறகு சாஸ்திரக் கோட்பாடுகள் கருதி வீட்டை மறுபடியும் நீரால் கழுவி சுத்தம் செய்தார்.புதியதாக வேறு ஆசாரமான சமையல் தயாராவதற்கு ஏற்பாடுகள் செய்தார்.இன்னொரு முறை ஸ்நானம் செய்வதற்காகக் காவிரிக்கரைக்குச் சென்றார்.எல்லாம் வீட்டில் தயாரான பின் உணவு உண்பதற்கு ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த அந்தணர்களை வீட்டுக்கு அழைத்தார்.ஐயாவாளின் மேல் வெறுப்பில் இருந்த சில அந்தணர்கள் இன்னும் மனம் மாறாமல் இவரைக் காயப்படுத்துவதற்குத் தகுந்த சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருந்தனர்.

சிராத்தம் நடக்கும் நாளன்று பிராமணர் அல்லாத ஆசாமியை அழைத்து போஜனம் செய்து வைத்திருக்கிறார்.எனவே இவரது வீட்டுக்கு எந்த ஓர் அந்தணரும் சிராத்த உணவு உட்கொள்ளச் செல்ல வேண்டாம் என்று சொல்லிவிட்டனர்.சாஸ்திரப்படி இது தவறில்லை என்று ஐயாவாள் எவ்வளவோ விளக்கியும் எவரும் சமாதானம் அடையவில்லை.இறுதியில் ஐயாவாளை ஜாதிப் பிரஷ்டம் செய்வதாகச் சொல்லி அவரை விலக்கி வைத்துவிட்டனர்.எல்லாம் ஈசனின் செயலே என்று தீர்மானித்து அன்றைய சிராத்தத்தை பிரமாணர்கள் இல்லாமல் ஒருவாறு செய்து முடித்தார் ஐயாவாள்.இதோடு முடியவில்லை அந்த அவஸ்தை.அடுத்த சில நாட்களுக்குள் ஐயாவாள் இல்லத்தில் இன்னொரு சிராத்தம் வந்தது.அதையாவது பிராமணர்களை வைத்து முறையாக நடத்த வேண்டும் என்று முடிவெடுத்தார் ஐயாவாள்.

எனவே ஏற்கனவே வீட்டுக்கு வருவதாக இருந்த பிரமாணர்களை நேரில் சந்தித்து மன்னிப்புக் கேட்டு தகுந்த பிராயச்சித்தம் செய்யத் தயாராக இருந்தார்.அதன்படி பிராமணர்களைச் சந்தித்துக் கேட்டார்.அதற்கு கங்கையில் மூழ்கிவிட்டு வந்தால் உங்களை மீண்டும் எங்களோடு இணைத்துக் கொள்கிறோம்.உங்கள் வீட்டில் நடக்கும் சிராத்தத்தில் சாப்பிட வருகிறோம் என்றனர்.நீங்கள் இப்போது சொன்ன பிராயச்சித்தம் சற்று கடினமாக இருக்கிறது.அத்தனை தூரம் யாத்திரை செல்ல எனது உடல் நலம் ஒத்தழைக்காது தவிர அடுத்தடுத்த நாட்களில் என் முன்னோருக்குச் செய்ய வேண்டிய சிராத்தங்களும் வருகின்றன.எனவே இப்போது நான் பயணிக்க முடியாது.வேண்டுமானால் கங்கையை இந்த இடத்துக்கே வரவழைத்து ஸ்நானம் செய்துவிடுகிறேன்.எனக்கு மீண்டும் ஆதரவளியுங்கள்.ஓகோ கங்கே கங்கே என்று கங்காதேவியை நினைத்து துதித்து உம் வீட்டுக் கிணற்றில் முழுகிவிட்டால் கங்கையில் குளித்த பலன் கிடைத்துவிடும் என்று பார்க்கிறீரா?அப்படியே இனத்தாரோடு சேர்ந்துவிட்டலாம் என்று கணக்குப் போடுகிறீர்களா?என்றெல்லாம் கேலி பேசினர்.

அதற்கு ஐயாவாள் உறுதியாக நான் கங்கையில் ஸ்நானம் செய்கிறேன் என்று அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை.எல்லோரும் பார்க்கும்படி காசியம்பதியில் ஓடும் கங்காநதியை இந்தத் திருவிசநல்லூருக்கு வரவழைத்து பொங்கிப் பிரவகிக்கும் கங்கை நீரில் ஸ்நானம் செய்கிறேன் என்றுதான் சொன்னேன் என்றார்.இதைக் கேட்டு அங்கு திரண்டிருந்த அந்தணர்கள் அனைவரும் எகத்தாளமாகச் சிரித்தனர்.பிறகு அவர்களில் ஒருவர் என்ன ஓய் உமக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது?கங்கையை எப்படி உம்மால் வரவழைக்க முடியும்?என்று பரிகசிக்க அனைவரும் கைகொட்டிச் சிரித்தனர்.ஐயாவாளுக்கு அவமானம் பிடுங்கித் தின்றது.மிகவும் மனம் வருந்தி தன் வீட்டு முற்றத்தின் ஓரத்தில் உள்ள கிணற்றடிக்குச் சென்றார்.கங்காஷ்டகம் எனும் ஸ்தோத்திரத்தை மனம் உருகிப் பாடினார்.ஈசனின் அம்சாவதாரமான ஐயாவாள் உருகி அழைக்க அங்கே கங்கை வந்ததில் வியப்பு என்ன இருக்க முடியும்?ஆம் ஐயாவாளுக்கு அருகில் இருந்த கிணற்றில் கங்கையானவள் பொங்கிப் பெருகி கடகடவென்று வெளியே வழிந்தாள்.பல மாநிலங்களை வாழ வைக்கும் கங்காதேவிக்கு திருவிசநல்லூர் என்கிற சிறு கிராமம் எம்மாத்திரம்?

அக்ரகார வீதி எல்லாம் கங்கை நீர் கொப்பளித்து ஓடியது.இதுவரை ஐயாவாளைப் பரிகசித்து வந்த அந்தணர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.தெருவெங்கும் வெள்ளம்.இனியும் இது தொடர்ந்தால் ஆபத்து என்பதை உணர்ந்த அந்தணர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து ஐயாவாளின் இல்லத்துக்கு ஓடோடி வந்தனர்.ஐயா எங்களை மன்னிக்கவேண்டும்.உங்களைத் தவறாக நினைத்து விட்டோம்.நீர் உண்மையிலேயே மகா புருஷர்தான்.கங்கையை உடனே அவளது பிரதேசத்துக்குத் திருப்பி அனுப்பவிடும் என்று பதறினார்கள்.ஐயாவாளின் முகத்தில் மலர்ச்சி.திருவிசநல்லூர் வாழ் அந்தணர்களே புனிதமான இந்த கங்கையில் நான் ஸ்நானம் செய்துவிட்டேன்.கங்கை இப்போது போய்விட்டால் நீங்கள் எல்லாம் வெகுதூரம் பயணித்துத்தான் ஸ்நானம் செய்ய வேண்டும்.எனவே எல்லோரும் இப்போதே ஸ்நானம் செய்து கொள்ளுங்கள் என்றார்.ஆனால் திருவிசநல்லூர் அந்தணர்களுக்கு ஏற்பட்ட பிரமிப்பு முற்றிலும் அகலாததால் அப்போது ஸ்நானம் செய்யும் எண்ணத்தில் அவர்கள் இல்லை.

ஐயாவாளே உண்மையான சாதுக்களிடம் சகல தீர்த்தங்களும் வாசம் செய்கின்றன.எனவே உம் வடிவில் கங்கையை நாங்கள் தரிசிக்கிறோம்.அந்த பாக்கியமே எங்களுக்குப் போதும்.இந்த கங்கையைத் திருப்பி அனுப்பிவிடுங்கள்.சரி கங்கா ஸ்நானம் வேண்டாம் என்று இப்போது நீங்கள் சொன்னாலும் உலகத்தாரின் நலனுக்காக கங்காதேவியானவள் என்றென்றும் இந்தக் கிணற்றில் வாசம் செய்யட்டும்.இந்தப் பகுதியில் உள்ள மக்கள் சுலபமாக கங்கா ஸ்நானம் செய்யட்டும் என்று கூறிய ஐயாவாள் ஸ்லோகம் ஒன்றைச் சொல்லிப் பிரார்த்திக்க கங்காதேவியானவள் அந்தக் கிணற்றுக்குள் தன்னை அடக்கிக் கொண்டாள்.
இந்தச் சம்பவம் கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தில் நடந்தது.எனவே இப்போதும் கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று அந்தக் கிணற்றில் கங்காதேவி பொங்கி வருகிறது.எனவே இந்தப் புனித நாளில் இங்கு ஸ்நானம் செய்ய ஏராளமானோர் வருகிறார்கள்.மகான் வரவழைத்த கங்கையில் நீராடினால் சகல வளங்களும் வாழ்வில் பெருகும்.

திருநாமம் : ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாள்

தலம் : திருவிசநல்லூர் என்கிற திருவிசநல்லூர்

சிறப்பு : ஸ்ரீ ஐயாவாள் திருமடம்

எங்கே இருக்கிறது : கும்பகோணத்தில் இருந்து காவிரிக்கரை ஓரமாகச் செல்லும் சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவு;கும்பகோணத்திலிருந்து 2, 2ஏ, 2பி, 38 ஆகிய நகரப் பேருந்துக்கள் உண்டு.தவிர தனியார் பேருந்துகளும் உண்டு.இறங்க வேண்டிய இடம்:திருவிசநல்லூர் மடம்.அங்கிருந்து சுமார் 10 நிமிடம் நடந்தால் ஐயாவாள் மடத்தை அடைந்துவிடலாம்.

தொடர்புக்கு:ஸ்ரீ ஸ்ரீதர ஐயாவாள் சாரிடபிள் டிரஸ்ட்
திருவிசநல்லூர் அஞ்சல்,பின்கோடு 612 105.
வேப்பத்தூர் வழி,கும்பகோணம் ஆர்.எம்.எஸ்
தஞ்சை மாவட்டம்;போன்:0435-246 1616.
ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி  ஸ்வாமிகளின்  உபதேசங்கள்  

ஞானமலர்கள்,, விவேகமும்  வைராக்யமும்,,, ஆத்ம ஞானமும்  அதன் ஸ்தானங்களும்,,,,,

நமது பாரத தேசத்தின் அனாதியான  மதம் வைதீக மதம். இதனை சநாதன மதம் என்பர். மற்ற மதங்கள் எவரேனும் ஒரு மஹானால் தொடங்கப்பட்டிருக்கும். அதனால்
அந்த மதத்திற்கு அவரது பெயரை  வைத்திருப்பார்கள். அந்த மதம்  ஆரம்பித்த நாட்குறிப்பு உண்டு. நம்மதம் ஒன்றே அநாதியானது. வேதத்தை அடிப்படையாகக் கொண்டபடியால் வைதிக மதம் என்றும் என்றும் நிலைத்திருக்கக் கூடிய தானதாலும் தொடங்கியவர்  இல்லாமையாலும் ஸநாதனம்  என்றும் வழங்குவர்,,, இந்து மதம்  என்ற பெயர் கூட  இடத்தைக்  குறிப்பதாக அமைந்துள்ளது,,, இதற்கு ஆதார நூல் வேதம்,,,,,

வேதம் நான்கு,,, நடக்கிற  கலியுகத்தின் முன் யுகமாகிய  துவாபரம் வரை அது ஒரே வேதமாக   இருந்தது. துவாபரத்தின் இறுதியில் மனிதர்களின் அறிவும் ஆற்றலும்
குறையத் தொடங்கியதால்  வேதவியாசர் அதனை நான்காகத்  தொகுத்தார். 

வேதம் ஒலி  வடிவமானது. அதுவும்  அநாதி என்றும் ஒலி வடிவில்  ஆகாயத்தில் நிலைத்திருக்க
கூடியது. ஆகாயத்திற்கும் ஒலிக்கும்  ஒரு நிலைத்த தொடர்பு உண்டு. அலை வடிவில் இருந்த வேத  ஒலியை மஹரிஷிகள் தியானத்தில்  அமர்ந்து கேட்டனர். தியானமும்
தவமும் காரணமாக அவர்களுடைய  காதுகளுக்கு அந்த தெய்வீக வேத  ஒலியைக் கேட்கின்ற திவ்ய  ஸ்ரவண சக்தி கிட்டியது! ஒவ்வொரு  மந்திரத்திற்கும் அப்படி  திவ்ய
ஸ்ரவணம்  செய்த  ரிஷி  உண்டு அதற்குள்ள சந்தம்  உண்டு தேவதை  உண்டு,,,,

தொடரும்,,, ஜய  ஜய  சங்கர  ஹர  ஹர  சங்கர
அத்தி வரதரை ஒவ்வொரு ராசியினரும் எவ்வாறு தரிசிக்க வேண்டும் என ஆன்மிக சொற்பொழிவாளர் ராஜயோகம் கே ராம் கூறிய தகவல்களை கூறியுள்ளார்.

அவர் கூறும் போது, அத்தி வரத பெருமாளை தலையிலிருந்து கால் வரை பார்த்து வணங்குதல் மிகவும் நல்லது. குறிப்பாக ஒவ்வொரு ராசியினரும் பெருமாளை முழுவதுமாக பார்ப்பதோடு, அவர்களின் ராசிக்கேற்ப எப்படி வணங்க வேண்டும் என்பதையும் இங்கு தெரிந்து கொள்வோம்.

மேஷம்
பெருமாளின் நெற்றியைப் பார்த்து வழிபடுவது மிகப்பெரிய தீட்சிதை கிடைக்கக் கூடிய வாய்ப்பு உண்டு.

ரிஷபம்
ரிஷப ராசியைச் சேர்ந்த ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் பெருமாளின் கன்னங்களை பார்த்து சேவிப்பது சிறந்தது.
ஆண்கள் வலது கன்னம், பெண்கள் இடது கன்னம் பார்த்து பிரார்த்தனை வைப்பதோடு, முழு பெருமாளையும் பார்த்து வணங்குவது நல்லது.

மிதுனம்
மிதுன ராசியை சேர்ந்தவர்கள் பெருமாளுடைய இடது தோள் அல்லது வலது தோள் பார்த்து பிரார்த்திக்க வேண்டும்.
ஆண்கள் வலது தோள், பெண்கள் இடது தோள் பார்த்து பிரார்த்தனை வைத்து பெருமாளை முழுவதுமாக கண்டு தரிசிக்க வேண்டும்.

கடகம்
பெருமாளின் கை மேல் நோக்கி காட்டும் கையின் உள்ளங்கையை பார்த்து பிரார்த்தனை செய்ய வேண்டும்
.
சிம்மம்
பெருமாளின் தாடையை பார்த்து பிரார்த்திக்க வேண்டும். சமூதாயத்தில் பிரபலாமாக வாழ வேண்டும் என நினைக்கும் சிம்ம ராசிக்காரர்கள் தாடையை பார்த்து பிரார்த்தனை வைக்க வேண்டும்.

கன்னி
பொதுவாக வயதானாலும், இளமையாக தோன்றக்கூடிய கன்னி ராசிக்காரர்கள் வசீகரமான தோற்றம் உள்ள கன்னி ராசிக்காரர்கள், பெருமாளின் இடுப்பு பகுதியைப் பார்த்து பிரார்த்தனை வைப்பது நல்லது.

திருப்பதி ஏழுமலையானை இப்படி வணங்கினால் பூரண பலன் கிடைக்கும்!

துலாம்
துலாம் ராசியினர் பெருமாளின் முழங்கால் பார்த்து பிரார்த்தனை செய்வது நல்லது. துலாம் ராசியினர் நேர்மையானவர்கள் என்பதால், கலியுகத்தில் அதிக சிக்கலை அனுபவிப்பவர்.
அதனால் அவர்கள் பெருமாளின் முழங்கால் பகுதியை பார்த்து பிரார்த்தித்துக் கொள்ளலாம்.

விருச்சிகம்
பெருமாளின் பாதத்தைப் பார்த்து விருச்சிக ராசியினர் வணங்குவது நல்லது. பாதத்தைப்பார்த்து வழிபட்டால் எந்த வித சனி பகவானின் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.
சனி பகவானின் ஆதிக்கத்தை தட்டிக் கேட்கக் கூடியவர் இந்த அத்தி வரதர்.

தனுசு
தனுசு ராசியினர் பெருமாளின் கை புஜம் பகுதியைப் பார்த்து வழிபாடு செய்வது நல்லது .

மகரம்
பெருமாளின் நெற்றி மற்றும் முழங்கால் பகுதியைப் பார்த்து வணங்க வேண்டும்.

கும்பம்
மகரம் மற்றும் கும்ப ராசியின் அதிபதி சனி என்பதால் இரு ராசியினரும் பெருமாளின் முழு உருவத்தைப் பார்த்து வழிபாடு செய்வதுடன், வேண்டுதல் வைக்கும் போது பெருமாளின் உதட்டு பகுதியையும், பெருமாளின் பாதத்தைப் பார்த்து வைத்தால் வாதம், வம்பு, வழக்குகளிலிருந்து விடுபட முடியும்.

மீனம்
மீன ராசியினர் பெருமாளின் கண்களைப் பார்த்து பிரார்த்தனை செய்தால், அருமையான, பெருமையான வாழ்க்கை வாழ முடியும்.

அத்தி வரதரை இப்படி வணங்குவதன் மூலம் ஜாதகத்தில் நவகிரகங்கள் அமைப்பு எப்படி ஹஜ் இருந்தாலும் அவர்கள் வாழ்க்கையில் சிறப்பான ஏற்றமும், நிம்மதி, மகிழ்ச்சியும் கிடைக்கும்.
கோயில்களில் எத்தனை மண்டபங்கள் உண்டு தெரியுமா?

கோயில் மண்டபம் என்றால் பலருக்கும் அர்த்த மண்டபம், மகா மண்டபம் இவைதான் நினைவுக்கு வரும். ஆனால் பாரம்பரியமும் பழமையும் மிக்க கோயில்களில் எத்தனை மண்டபங்கள் உண்டு தெரியுமா? 

இதோ ...🌹🌿

1. அர்த்த மண்டபம்
2. மகா மண்டபம் 
3. நிருத்த மண்டபம்
4. பதினாறு கால் மண்டபம்
5. நூற்று (அ) ஆயிரங்கால் மண்டபம்
6. ஸ்நபன மண்டபம்
7. கேய மண்டபம்
8. வாத்திய மண்டபம்
9. முக மண்டபம்
10. சோபான மண்டபம்
11. கோபுரத் துவார சாலா மண்டபம்
12. ஆஸ்தான மண்டபம்
13. யாக மண்டபம்
14. புஷ்ப மண்டபம்
15. பூசை மண்டபம்
16. விஜய மண்டபம்
17. சுற்று மண்டபம்
18. உத்யான மண்டபம்
19. வல்லி மண்டபம்
20. சூர்ண மண்டபம்
21. நறுமணக் கலவை மண்டபம்
22. நீராழி மண்டபம்
23. கந்த மண்டபம்
24. ஆபரண மண்டபம்
25. மஞ்சன மண்டபம்
26. அலங்கார மண்டபம்
27. வசந்த மண்டபம்
28. உபசாரமண்டபம்
29. முரசு மண்டபம்
30. தமிழ்வேதப் பயிற்சி மண்டபம்
31. தமிழ் ஆகம மண்டபம்
32. புராண விரிவுரை மண்டபம்
33. தீட்சை மண்டபம்
34. வீணா மண்டபம்
35. கொடியேற்ற மண்டபம்
36. தேர் மண்டபம்

இப்படி பல மண்டபங்களைக் கொண்டது நம் கோயில்கள்.
தஞ்சாவூரில் பிரகதீஸ்வரர்
திருவாரூரில் தியாகராஜர்
திருநெல்வேலியில் நெல்லையப்பர்
திருவையாறில் ஐயாறப்பர்

திருவண்ணாமலையில் அண்ணாமலையார்
திருவாவடுதுறையில் கோமுக்தீஸ்வரர்
திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர்
திருவானைக்காவலில் ஜம்புகேஸ்வரர்

திருக்கருகாவூரில் முல்லைவனநாதர்
திருவாலாங்காட்டில் வடாரண்யேஸ்வரர்
திருமருகலில் ரத்தினகிரீஸ்வரர்
திருவிசநல்லூரில் யோகநந்தீஸ்வரர்

திருப்புகலூரில் வர்த்தமானீஸ்வரர்
திருத்தங்கூரில் வெள்ளிமலைநாதர்
திருக்கழுகுன்றத்தில் வேதகிரீஸ்வரர்
திருநீலக்குடியில் நீலகண்டேஸ்வரர்

திருச்சியில் தாயுமானவர்
திருநள்ளாரில் தர்ப்பாரண்யேஸ்வரர்
திருமணஞ்சேரியில் உத்வாகநாதர்
திருவேள்விக்குடியில் கல்யாண சுந்தரேஸ்வரர்

திருவேற்காட்டில் வேதபுரீஸ்வரர்
திருக்கண்ணபுரத்தில் ராமநாதர்
திருமழபாடியில் வைத்தியநாதர்
திருக்கோவிலூரில் வீரட்டேஸ்வரர்

திருப்புனவாசலில் விருத்தபுரீஸ்வரர்
திருவண்டுதுறையில் வண்டுறைநாதர்
திருமாணிக்குழியில் வாமனபுரீஸ்வரர்
திருவாளப்புத்தூரில் மாணிக்கவண்ணர்

இப்படி ஒரே ஒரு கடவுளுக்கு பல்வேறு பெயர்களில் பல்வேறு இடத்தில் கோவில் அமைத்து தேவாரத்தையும் திருவாசகத்தையும் பாடி, ஆறு கால பூசையில், ஒவ்வொரு பூசையையும் ஒவ்வொரு ஊரில் சிறப்பாக செய்து தமிழையும் கடவுளையும் ஒன்றாகவே வணங்கி இருக்கின்றனர் நம் முன்னோர்கள்.

'த' வரிசையில் ஒரு பாதி ஊர்களை மட்டுமே எழுதியிருக்கிறேன். இதற்கே மூச்சு வாங்குது.

இன்னும் மயிலாப்பூரில் காபாலீஸ்வரர் , சிதம்பரத்தில் நடராஜர், வைத்தீஸ்வரன் கோவிலில், வைத்தியநாதர் என ஆரம்பித்தால் பதிவு நீண்டு கொண்டே இருக்கும்.

தேவாரம் பாடப் பெற்ற தலங்கள் மட்டுமே 274. இதில் சோழநாட்டில் காவிரியின் தென்கரையில் அமைந்த தலங்கள் மட்டுமே 128. வடகரையில் அமைந்த தலங்கள் 63.

ஈழத்தில் உள்ள திருகோணமலையில் அமைந்த திருக்கோணேஸ்வரர் கோவில் மற்றும் திருக்கேதீச்சரத்தில் அமைந்த திருக்கேதீஸ்வரர் கோவிலும் தேவாரம் பாடப் பெற்ற தலங்களே.

தமிழையும் கடவுளையும் ஒன்றாக பார்த்த தலைமுறை இவர்களுடையதாகத் தான் இருக்கும். ஊரின் சிறப்பைக் கொண்டே அந்த ஊர்களுக்கு பெயர் வைத்து, அந்த பெயரைக் கொண்டே அந்த ஊர் கடவுளையும் வணங்கி இருக்கின்றனர்.

எடுத்துக்காட்டு : திரு + ஐந்து +ஆறு = திரு ஐயாறு, இதுவே காலப்போக்கில் திருவையாறாக மாறி இருக்கிறது. காவிரி, குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு எனும் ஐந்து ஆறுகள் அந்த ஊரில் ஓடுவதால் இந்தப் பெயரை வைத்து கடவுளையும் ஐயாறப்பர் என்று அழைத்து இருக்கின்றனர்.

இப்போதெல்லாம் நம்ம பெயருக்கு காரணம் கேட்டாலே நம்மால் சொல்ல முடிவதில்லை. அவர்கள் ஊருக்கு பெயர் வைப்பதில் கூட இவ்வளவு கவனமாக இருந்திருக்கின்றனர். வாழ்க தமிழர்களின் புகழ்.

ஓம் நம சிவாய

செவ்வாய், 2 ஜூலை, 2019

*அமாவாசை தர்பணம்*  {யஜுர்வேத ஆபஸ்தம்ப  தர்ப்பணம்}

யஜுர் வேதம் ஆபஸ்தம்ப சூத்திரம் அமாவாசை தர்ப்பணம். காலையில் ஸ்னாநம். சந்தியா வந்தனம், காயத்ரி ஜபம், ஒளபாஸனம் செய்யலாம். மறுபடியும் பத்து மணிக்கு ஸ்னானம் செய்து விட்டு மடி உடுத்தி மாத்யாணிகம் செய்து விட்டு தர்பணம் செய்யவும்.

அமாவாசை தர்ப்பணம்

முதலில் ஆசமனம் அச்யுதாய நமஹ அனந்தாய நமஹ கோவிந்தாய நமஹ கேசவ, நாராயணா, மாதவ, கோவிந்த, விஷ்ணு, மதுஸூதனா,  த்ரிவிக்ரமா, வாமனா, ஶ்ரீதரா, ஹ்ரிஷீகேசா, பத்மநாபா, தாமோதரா.

பவித்ரம் {மூன்று புல்} வலது கை பவித்ர விரலில் போட்டு கொள்ளவும். இரண்டு கட்டை தர்பம் காலுக்கு அடியில் போட்டு கொள்ளவும். ஜலத்தால் கை அலம்பவும். மூன்று கட்டை தர்பம் பவித்ரத்துடன் வைத்து கொள்ளவும்.

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சஸீவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ண உபசாந்தயே.

ஒம்பூஹு ஓம்புவஹ ஓம் சுவஹ;ஓம் மஹஹ ஓம் தபஹ ஓகும் சத்யம் ஓம் தத் ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோனஹ ப்ரசோதயாத்.ஓமாபோ ஜோதீ ரஸோ அம்ருதம் ப்ர்மஹ ஓம் பூர்புவசுவரோம்.

மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத் துவாரா ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்தம் அபவித்ர பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா யஸ்மரேத் புன்டரீகாக்ஷம் சபாஹ்யா அப்யந்தரஹ சுசீஹி
மானசம் வாசிகம் பாபம் கர்மனா ஸமுபார்ஜிதம் ஶ்ரீ ராம ஸ்மரணே னைவ வ்யபோஹதிஹி நஸம்சயஹ ஸ்ரீ ராம ராமராம திதிர் விஷ்ணு ததா வார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவச யோகஸ்ச கரணஞ்சைவ சர்வம் விஷ்ணு மயம் ஜகத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த அத்ய ஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராஞ்யயா ப்ரவர்தமானஸ்ய ஆத்ய ப்ரம்மண: த்வதீய பரார்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டா விம்சதீதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ: தக்ஷினே பார்ஸ்வே ஷகாப்தே அஸ்மின் வர்தமானே வியவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே ஹேமளம்ப நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஹேமந்த ருதெள மகரமாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாம் புண்ய திதெள பௌம  வாஸர யுக்தாயாம் பூர்வாஷாடாநக்ஷத்ர யுக்தாயாம் ஏவங்குண விஷேஷன வஸிஷ்ட்டாயாம் வர்தமானாயாம் அமாவாஸ்யாம் புண்ய திதெள (பூணல் இடம்) ப்ராசீணாவீதி வாதுள கோத்ராணாம் பாலசுப்பிரமண்ய, வெங்கட்ராம, சுப்பிரம்மண்ய ஸர்மணாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் வாதுள கோத்ரானாம் விஜயலக்ஷ்மி, மீனாக்ஷி சுந்தராம்பாள், முத்து லக்ஷ்மி தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் மாத்ரு பிதாமஹீ ப்ரபிதாமஹீனாம் கௌசிக கோத்ராணாம் ஸ்ரீராம, கோதண்ட ராம, வைத்தியநாத சர்மனாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் சபத்னீக மாதா மஹ மாது:பிதாமஹ: மாது:ப்ரபிதாமஹானாம் உபய வம்ஸ பித்ரூணாம் அக்ஷய த்ருப்த்யர்தம் அமாவாஸ்ய தர்ஸ ஸ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

கையில் பவித்ரதுடன் இருக்கும் கட்டை பில்லை மட்டும் கீழே போடவும். பூணல் வலம் போட்டு கொள்ளவும். கையை ஜலத்தால் துடைத்து கொள்ளவும்.

பூணல் இடம் : தர்ப்பையால் தர்ப்பணம் செய்யும் இடத்தை துடைக்கவும். அபே தவீத வி ச ஸர்ப தாதோ. யேத்ர ஸ்த புராணா யே ச னூதனாஹா

அதாதிதம் யமோ வசானம் ப்ருதிவ்யாஹா அக்ரன்னிமம் பிதரோ லோகமஸ்மை. தர்பையை எறிந்து விடவும் கையில் கருப்பு எள்ளு எடுத்து கொண்டு தர்பணம் செய்யும் இடத்தில் இரைக்கவும்.
இந்த மந்த்ரம் சொல்லி.

அபஹதா அசுரா ரக்ஷாகும்ஸி பிஸாசா யே க்ஷயன்தி ப்ருதிவி மனு அன்யத்ரே தோகச்சந்து யத்ரைஷாம் கதம் மன:

பூணல் வலம்.: தண்ணீரால் ப்ரோக்ஷிக்கவும். (தெளிக்கவும்)

அபவித்ர பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா . ய:ஸ்மரேத் புன்டரீகாக்ஷம் ஸ பாஹ்யா அப்யந்த்ர சுசிஹி பூர்புவஸ்ஸுவோ பூர்புவஸ்ஸுவோ பூர்புவஸ்ஸுவஹ.

பூணல் இடம் : தர்பை கூர்ச்சம் தெற்கு நுனியாய் ஸம்ப்ரதாயப்படி போட்டு ஆள் காட்டி விரல் தவிர மற்ற விரல்களால் கருப்பு எள் எடுத்துகொண்டு ஆவாஹனம் செய்யவும்.

“ஆயாத பிதரக: ஸோம்யா கம்பீரை: பதிபிஹி பூர்வைஹி ப்ரஜா மஸ்மப்யம் தததோ ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச ஸதஸாரதஞ்ச” அஸ்மின் கூர்ச்சே வாதுள கோத்ரான் பாலசுப்பிரமணிய, வெங்கட்ராம, சுப்பிரம்மண்ய ஷர்மனஹ வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபான் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹான் வாதுள கோத்ரா: விஜயலக்ஷ்மி, மீனாக்ஷி சுந்தராம்பாள், முத்து லக்ஷ்மி  சர்மனாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாஹா அஸ்மத் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீ ஸ்ச ஆவாஹயாமி. கௌசிக கோத்ரா: ஸ்ரீராம, கோதண்ட ராம, வைத்தியநாத ஸர்மனஹ வசு ருத்ர ஆதித்யஸ்வரூபான் அஸ்மத் ஸ பத்னீக மாதா மஹ மாதுஹு பிதாமஹ மாதுஹு
ப்ரபிதாமஹான் ஆவாஹயாமி. “ ஆயாத பிதரச் என்ற மந்த்ரம் சொல்லி எள்ளு போட்டு ஆவாஹனம் செய்யவும்.

ஆஸன மந்த்ரம்: ஸக்ருதாச் சின்னம் பர்ஹி ரூர்னம் ருது ஸ்யோனம் பித்ருப்யஸ்த்வா பராம்யஹம் அஸ்மின் ஸீதந்துமே பிதரஸ் ஸோம்யா: பிதாமஹா: ப்ரபிதாமஹா:ச அனுகை ஸஹ. என்று சொல்லி பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீனாம் சபத்னீக மாதாமஹ மாதுஹு பிதாமஹ மாதுஹு ப்ரபிதாமஹானாம் இதமாஸனம் என்று சொல்லவும்மூன்று தர்ப்பத்தை கூர்ச்சம் பக்கத்தில் வைக்கவும்.

வர்கத்வய பித்ருப்யோ நமஹ என்று சொல்லி கருப்பு எள்ளு எடுத்து ஸகல ஆராதனைஹி ஸ்வர்சிதமென்று சொல்லி கூர்ச்சத்தில் போடவும்.

இடது காலை முட்டி போட்டு கொண்டு தெற்கு முகமாய் ப்ராசீனாவீதியாய் தர்பணம் செய்யவும்.

1.1: உதீரதாம் அவர உத்பராஸ உன்மத்யமாஹா பிதரஹ ஸோம்யாஸஹ அசூம்ய ஈஉஹு அவ்ருகா ரிதக்ஞாஸ் தேனோ வந்து பிதரோஹ வேஷூ வாதுள கோத்ரான் பாலசுப்பிரமணிய ஷர்மனஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

1.2: அங்கிரஸோன: பிதரோ நவக்வா அதர்வானோ ப்ருகவ: ஸோம்யாஸஹ தேஷாம் வயகும் ஸுமதெள யக்ஞியானாமபி பத்ரே ஸெளமனஸே ஸ்யாம வாதுள கோத்ரான் பாலசுப்பிரமணிய சர்மனஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

1.3: ஆயந்துனஹ பிதரஸ் ஸோம்யாஸோ அக்னிஷ் வாத்தா: பதிபிஹி  தேவயானை: அஸ்மின் யக்ஞே ஸ்வதயா மதந்த்து வதி ப்ருவந்துதே அவந்த் வஸ்மான் வாதுள கோத்ரான் பாலசுப்பிரமணிய ஸர்மணஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

2.1: ஊர்ஜம் வஹந்தீ ரம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் வாதுள கோத்ரான் வெங்கட்ராம சர்மணஹ ருத்ரரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி .

2.2: பித்ருப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ பிதா மஹேப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ ப்ரபிதா மஹேப்யச் ஸ்வதா விப்ய: ஸ்வதா நமஹ வாதுள கோத்ரான் வெங்கட்ராம சர்மணஹ ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

2.3: யே சே ஹ பிதரோ யே ச நேஹ யாகும்ச்ச வித்ம யாகும் உசன ப்ரவித்ம அக்னே தான் வேத்த யதிதே ஜாத வேத ஸ்தயா ப்ரதக்குஸ் ஸ்வதயா மதந்து வாதுள கோத்ரான் வெங்கட்ராம ஸர்மணஹ ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

3.1: மது வாதா ரிதாயதே மது க்ஷரந்தி ஸிந்தவ: மாத்வீர் நஸ்ஸந்த் வோஷதீ வாதுள கோத்ரான் சுப்பிரமணிய ஸர்மணஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

3.2: மது நக்த முதோஷஸீ மது மத் பார்த்திவகும் ரஜ; மது த்யெள ரஸ்து ந:பிதா வாதுள கோத்ரான் சுப்பிரமணிய சர்மணஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

3.3: மது மான் நோ வனஸ்பதிர் மது மாகும் அஸ்து சூர்யஹ மாத்வீர் காவோபவந்து ந: வாதுள  கோத்ரான் சுப்பிரமணிய ஸர்மனஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

மாத்ரூ வர்க்கம்:

வாதுள கோத்ராஹா விஜயலக்ஷ்மி தாஹா: வஸு ரூபாஹா மாத்ரூ: ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை

வாதுள கோத்ராஹா மீனாட்சி சுந்தராம்பாள் தாஹா ருத்ர ரூபாஹா பிதாமஹி ஸ்வதா நமஸ். தர்பயாமி மூன்று முறை.

வாதுள கோத்ராஹா முத்துலக்ஷ்மி தாஹா ஆதித்ய ரூபாஹா ப்ரபிதாமஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை.

மாதா மஹ வர்க்கம் தர்பணம்:

1.1: உதீரதாம் + ஹவேஷு கௌசிக கோத்ரா னு ஸ்ரீராம ஸர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

1.2 கௌசிக கோத்ரான் ஸ்ரீராம சர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

1.3 கௌசிக கோத்ரான் ஸ்ரீராம ஸர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

2.1  கௌசிக கோத்ரான் கோதண்ட ராம ஸர்மனஹ ருத்ர ரூபான் மாதுஹு பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

2.2 கௌசிக கோத்ரான் கோதண்ட ராம ஸர்மனஹ ருத்ர ரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

2.3 கௌசிக கோத்ரான் கோதண்ட ராம ஸர்மனஹ ருத்ர ரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

3.1 கௌசிக கோத்ரான் வைத்தியநாத ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

3.2 கௌசிக கோத்ரான் வைத்தியநாத ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

3.3 கௌசிக கோத்ரான் வைத்தியநாத ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது:ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

1.1,2,3: கௌசிக கோத்ராஹா மீனாட்க்ஷி தாஹா வசு ரூபாஹா மாதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை

2.1,2,3: கௌசிக கோத்ராஹா முத்துலக்ஷ்மி தாஹா ருத்ர ரூபாஹா மாதுஹு பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை

3.1,2,3: கௌசிக கோத்ராஹா வாளாம்பால் தாஹா ஆதித்ய ரூபாஹா மாதுஹு ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை.

ஞாத அஞ்ஞாத வர்க த்வய பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை

ஊர்ஜம் வஹந்தீஹி அம்ருதம்+பித்ரூன் த்ருப்யத த்ருப்யத த்ருப்யத

பூணல் வலம் : தேவதாப்பிய: ______

இதை சொல்லிக் கொண்டே மூண்று தடவை ப்ரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்து அபிவாதயே சொல்லவும். பூணல் இடம்.

உத்திஷ்ட்த பிதரஹ ப்ரேத சூரா யமஸ்ய பந்தாமன்வேதா புராணம் தத்தாதஸ்மாஸு த்ரவிணம் யச்ச பத்ரம் ப்ரணோ ப்ரூதாத் பாகதான்தேவதாஸு. அல்லது ஆயாத பிதரஹ+ஷதஷாரதம் அவரவர் ஸம்ப்ரதாயப்படி கூறி அஸ்மாத் கூர்ச்சாத் பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹான், மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹி, ஸபத்னீக மாதா மஹ. மாது:பிதாமஹ, மாது:ப்ரபிதா மஹான் யதாஸ்தானம் ப்ரதிஷ்டா பயாமி.

பவித்ரத்தை காதில் தரித்து, உபவீதியாய் ஆசமனம் செய்து பவித்ரத்தை போட்டுக் கொண்டு, ப்ராசீனாவீதியாய் கூர்ச்சத்தை பிரித்து

கையில் எடுத்து, யேஷாம் ந மாதா ந பிதா ந பந்து: நான்ய கோத்ரிண :தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோத் ஸ்ருஷ்டை:குசோதகை:த்ருப்யத த்ருப்யத த்ருப்யத என்று சொல்லிக்கொண்டு ஜலம் விடவும். பவித்ரம் அவிழ்க்கவும். பூணல் வலம். ஆசமனம். செய்ய வேண்டும்.

காயேன வாசா மனசேந்த்ரி யைர்வா புத்யாத் மனாவா ப்ரக்ருதிஸ்வபாவாத் கரோமி யத்யத் சகலம் பரஸ்மை நாராயணா யேதி சமர்பயமி.

ஞாயிறு, 30 ஜூன், 2019

ஸ்ரீ நிவாசா கோவிந்தா
ஸ்ரீ வெங்கடேச கோவிந்தா
பக்தவத்சல கோவிந்தா
பாகவதப்பிரியா கோவிந்தா
நித்ய நிர்மல கோவிந்தா
நீலமேகஸ்யாம கோவிந்தா
புராணபுருஷ கோவிந்தா
புண்டரீகாக்ஷ கோவிந்தா
நந்த குமாரா கோவிந்தா
நவநீதசோர கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா கோகுல நந்தன கோவிந்தா
பசுபாலக கிருஷ்ணா கோவிந்தா
பாபவிமோசன கோவிந்தா
துஷ்டஸம்ஸஹார கோவிந்தா
துரித நிவாரண கோவிந்தா
சிஷ்ட பரிபாலன கோவிந்தா
கஷ்ட நிவாரண கோவிந்தா
வஜ்ரமகுடா கோவிந்தா
வராஹமூர்த்தி கோவிந்தா
கோபீ ஜனலோல கோவிந்தா
கோவர்த்தநோத்தார கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா கோகுல நந்தன கோவிந்தா
தசரத நந்தன கோவிந்தா
தசமுகமர்த்தன கோவிந்தா
பக்ஷிவாஹன கோவிந்தா
பாண்டவப் பிரியா கோவிந்தா
மத்ஸ்ய கூர்மா கோவிந்தா
மதுசூதன ஹரி கோவிந்தா
வராஹ நரசிம்ஹ கோவிந்தா
வாமன ப்ருகுராமா கோவிந்தா
பலராமானுஜ கோவிந்தா
பௌத்த கல்கீ கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா கோகுல நந்தன கோவிந்தா
வேணுகானப் பிரிய கோவிந்தா
வெங்கட்ரமண கோவிந்தா
சீதாநாயக கோவிந்தா
ஸ்ரீ தர பரிபாலக கோவிந்தா
தரித்ரஜன போஷக கோவிந்தா
தர்ம ஸம்ஸ்தாபக கோவிந்தா
அனுதரக்ஷக கோவிந்தா
ஆபத்பாந்தவ கோவிந்தா
சரணாகதவத்ஸல கோவிந்தா
கருணாஸாகர கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா கோகுல நந்தன கோவிந்தா
கமலாதளாக்ஷõ கோவிந்தா
காமுதபலதா கோவிந்தா
பாபவினாஸக கோவிந்தா
பாஹிமுராரே கோவிந்தா
ஸ்ரீ முத்ராங்கித கோவிந்தா
ஸ்ரீ வத்ஸாங்கித கோவிந்தா
தரணி நாயக கோவிந்தா
தினகரதேஜோ கோவிந்தா
பத்மாவதி பிரிய கோவிந்தா
ப்ரஸன்ன மூர்த்தி கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா கோகுல நந்தன கோவிந்தா
அபயஹஸ்தா கோவிந்தா
அர்ச்யாவதார கோவிந்தா
சங்குசக்ரதார கோவிந்தா
சாரங்கதாதர கோவிந்தா
விரஜாதீர்த்தா கோவிந்தா
வீரோதி மர்தன கோவிந்தா
சாலக்ராம ஸாரா கோவிந்தா
ஸஹஸ்ரநாமா கோவிந்தா
லக்ஷ்மீவல்லப கோவிந்தா
லக்ஷ்மணாக்ரஜா கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா கோகுல நந்தன கோவிந்தா
கஸ்தூரி திலகா கோவிந்தா
காஞ்சனாம்பரதா கோவிந்தா
கருடவாஹனா கோவிந்தா
கஜராஜரக்ஷக கோவிந்தா
வானரஸேவித கோவிந்தா
வாரதிபந்தன கோவிந்தா
ஏழுமலையானை கோவிந்தா
ஏகஸ்வரூபா கோவிந்தா
ராமகிருஷ்ணா கோவிந்தா
ரகுகுலநந்தன கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா கோகுல நந்தன கோவிந்தா
ப்ரத்யக்ஷதேவா கோவிந்தா
பரமதயாகர கோவிந்தா
வஜ்ரகவசாத கோவிந்தா
வைஜயந்தீமாலா கோவிந்தா
வட்டிகாசனே கோவிந்தா
வசுதேவசுதனே கோவிந்தா
பில்டபத்ராதர கோவிந்தா
பிக்ஷúக ஸம்ஸ்துத கோவிந்தா
மோஹனரூபா கோவிந்தா
சிவகேஸவமூர்த்தி கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா கோகுல நந்தன கோவிந்தா
ப்ரம்ஹாண்டரூப கோவிந்தா
பக்தரக்ஷக கோவிந்தா
தித்யகல்யாணா கோவிந்தா
நீரஜநாப கோவிந்தா
ஹத்தீராமப்ரியா கோவிந்தா
ஹரிஸர்வோத்ம கோவிந்தா
ஜனார்தனமூர்த்தி கோவிந்தா
ஜகத்சாக்ஷிரூபா கோவிந்தா
அபிஷேகப்ரிய கோவிந்தா
ஆபத்பாந்தவா கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா கோகுல நந்தன கோவிந்தா
ரத்னகிரீட கோவிந்தா
ராமானுஜ ஹரி கோவிந்தா
ஸ்வயம் பிரகாஸா கோவிந்தா
ஆஸ்ரிதபக்ஷõ கோவிந்தா
நித்யசுபதப கோவிந்தா
நிகிலலோகேஸ கோவிந்தா
ஆனந்தரூபா கோவிந்தா
ஆத்யந்தரஹிதா கோவிந்தா
இஹபர தாயக கோவிந்தா
இஹபர ரக்ஷித கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா கோகுல நந்தன கோவிந்தா
பத்மதளாக்ஷõ கோவிந்தா
பத்மநாபஹரி கோவிந்தா
திருமலை நிவாஸ கோவிந்தா
துஸசீ தளமால கோவிந்தா
சேஷாயி கோவிந்தா
சேஷாத்ரி ஹரி நிலயா கோவிந்தா
ஸ்ரீ நிவாச கோவிந்தா
ஸ்ரீ வேங்கடேச கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா கோகுல நந்தன கோவிந்தா

வியாழன், 27 ஜூன், 2019

சூரியன் உபதேசித்த சுக்ல யஜுர் வேதம்!

இறைவனுடைய உள்ளிழுக்கும் காற்றாகவும் வெளிவிடும் காற்றாகவும் விளங்குவது வேதம். பகவானுக்கும் சுவாசம் உண்டு என்கிறது வேதம். இந்த வேதத்தை நான்காக  வகுத்தவர் வியாசர். அவை ருக் யஜுர் சாமம் அதர்வணம் என்று எல்லாருமே அறிவார்கள். இதைத்தவிர சுக்ல யஜுர் வேதம் என்று மொரு வேதம் உண்டு. இந்த வேதத்தை யாக்ஞவல்கியர் என்ற மகான் சூரிய பகவானிடமிருந்து கற்று உலகிற்கு அளித்தார். யாக்ஞவல்கியர் இந்த வேதத்தைக் கற்ற வரலாறு சுவையானது. வைசம்பாயனர் என்ற ரிஷி வியாசரிடம் கற்ற யஜுர் வேதத்தை பல சிஷ்யர்களுக்கு கற்றுக்கொடுத்தார். ஒருநாள் வைசம்பாயனர் அதிகாலையில் நீராடிவிட்டு ஏதோ சிந்தனை செய்தவாறு ஆசிரமத்தை நோக்கிவந்தார். அப்போது நடுவழியிலே வேதத்தை பூரணமாகக் கற்றுணர்ந்த பிரம்மச்சாரி சிறுவன் ஒருவன் படுத்துக்கொண்டிருந்தான். அதையறியாமல் அந்த சிறுவனின் வயிற்றில் காலை வைத்து விட்டார் வைசம்பாயனர். அந்த சிறுவன் துடிதுடித்து இறந்துபோனான். அதனால் வைசம்பாயனருக்கு பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது.

வருத்தம் தாங்காமல் ஆசிரமத்தில் அமர்ந்திருந்தார் அவர். சீடர்கள் வழக்கம் போல வந்து வணங்கினார்கள். ஆச்சாரியர் முகம் வாட்டமாக இருப்பதைக் கண்டு பணிவோடு காரணம் கேட்டனர். வைசம்பாயனர் நடந்த விவரங்களைச் சொன்னார். சீடர்கள் செய்யும் பாவம் ஆச்சார்யர்களை வந்தடையும். இங்கே ஆச்சார்யரே பாவம் செய்து விட்டார். சீடர்கள் எல்லாருமாக சேர்ந்து ஏதாவது பிராயச்சித்தம் அனுஷ்டித்தால் அந்த பாவம் போகும். வைசம்பாயனரும் அவர்கள் அவ்வாறு அனுஷ்டித்து பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து தன்னை விடுவிக்கும்படி கேட்டுக்கொண்டார். சீடர்கள் எல்லாரும் அப்படியே நாங்கள் செய்கிறோம். அதைக் காட்டிலும் ஒரு கடமை எங்களுக்கு உண்டா? ஆச்சார்யாருக்கு ஏற்பட்ட சிரமத்தைப் போக்கவில்லையென்றால் சீடர்கள் எதற்கு? என்றார்கள். அப்போது அவர்களுள் ஒருவரான யாக்ஞவல்கியர் குருவே உங்கள் தோஷத்தை நிவர்த்திசெய்ய இத்தனை பேர் எதற்கு?நான் ஒருவனே பிராயச்சித்தம் செய்து சிரமத்தைப் போக்கிவிடுவேன் என்றார்.

வைசம்பாயனருக்கு கடும் கோபம் வந்து விட்டது. எல்லாரையும் சாமானியர்கள் என்று மதித்து நீ ஒருவனே உயர்ந்தவனென்று காட்டிக்கொள்கிறாய். அது உன் அகங்காரத்தைக் காட்டுகிறது. இவ்வளவு அகங்காரமுடைய சீடன் எனக்குத் தேவையில்லை. நீ ஆசிரமத்தை விட்டு வெளியே போ! என்று கோபத்தோடு சொன்னார். யாக்ஞவல்கியருக்கு அதற்கு மேல் கோபம். ஆச்சார்யரே தங்களிடத்தில் இருக்கிற அன்பினால் மதிப்பினால் சொன்ன வார்த்தைகளே தவிர இவர்களைக் குறைத்துக் கூறுவதற்காக நான் பேசவில்லை. அப்படி நீங்கள் நினைப்பதும் ஏற்றதல்ல. என் எண்ணத்தைப் புரிந்து கொள்ளாமல் என்னை போகச் சொல்கிறீர்கள். உங்களுடைய ஆச்சாரியத்துவம் எனக்கு வேண்டியதில்லை என்றார். அதற்கும் மேலே வைசம்பாயனர் என்னுடைய ஆச்சார்யத்துவம் வேண்டியதில்லையானால் என்னிடம் கற்ற வேதத்தை மட்டும் எடுத்துக்கொண்டு போகமுடியுமா? அதனால் வேதத்தை முழுக்க கக்கிவிட்டுப் போ என்றார்.

யாக்ஞவல்கியரும் சளைக்கவில்லை. கற்ற வேதங்களை எல்லாம் மொத்தமாக ஒரு மாமிசக் கோளமாகக் கக்கிவிட்டு கோபத்தோடு வெளியேறிவிட்டார். மகான்களின் தவவலிமையால் இப்படி எல்லாமே சாத்தியமாகும். வேதவித்தை கேட்பாரில்லாமல் ஒரே மாமிசக் கோளமாகக் கிடந்தது. வைசம்பாயனர் வேதம் இப்படி இருப்பதைக் கண்டு மனம் வருந்தி மற்ற சீடர்களை அழைத்து அவர்களை தித்திரா என்ற பறவைகளாக மாற்றி கிழே கிடந்த மாமிசத்தை உண்ணும்படி சொன்னார். அவர்களும் குரு சொன்னபடி செய்தார்கள். இவ்வாறு வேதவித்தைகள் கக்கப்பட்டு மறுபடியும் கொள்ளப்பட்டு தரித்தது. அதனால் இதற்கு கிருஷ்ண யஜுர் வேத தைத்ரீய சம்ஹிதை என்று பெயர். தித்திரா என்ற பறவையின் பெயரால் தைத்ரீயம் என்ற உபநிடதம் உள்ளது. வேதமிழந்த யாக்ஞவல்கியர் கங்கை நதி தீரம் சென்று நீராடி ஸ்ரீமந்நாராயணனைக் குறித்து பலவாறாக ஸ்தோத்திரம் செய்தார். பிறகு காயத்ரி தேவியைக் குறித்து பல நாட்கள் தவமிருந்தார். அவரது தவத்திற்கிரங்கிய காயத்ரி தேவி அப்பனே நீ வேண்டிய வரமென்ன என்று அன்புடன் கேட்டாள். அவளை வணங்கிய யாக்ஞவல்கியர் தாயே ஸ்ரீ வைசம்பாயனர் என்னிடம் கற்ற வித்தைகளைக் கொடு என்று கேட்டார். மறுக்க வழியில்லாமல் கொடுத்து விட்டேன். இப்பொழுது எனக்கு யஜுர் வேதம் வேண்டும். நீங்களே குருவாக இருந்து வேதத்தை எனக்கு உபதேசிக்க வேண்டும் என்றார்.

அதைக்கேட்ட காயத்ரி தேவி முன்னொரு காலத்தில் நைமித்திக பிரளயம் ஏற்படப் போகிறதென்று அறிந்த பிரம்மதேவர் விஷ்ணு லோகம் சென்று சுவாமி வரப்போகும் பிரளயத்தில் அசுரன் ஒருவன் வேதங்களை அபகரிப்பான் என்கிற பாடம் பயம் உண்டாகிறது என்றார். அதைக்கேட்ட விஷ்ணு, குழந்தாய் கவலை வேண்டாம். வேதத்தின் ஒரு பகுதியாக யஜுர் வேதத்தை சூரிய பகவானிடத்தில் வைப்போம் என்று சொன்னார். அதன்படியே இந்த வேதமானது அயாதயாமம் என்பது சூரியனிடம் வைக்கப்பட்டிருக்கிறது. நீ சூரிய பகவானைக் குறித்து தவமிருப்பாயாக. நீ வேத வியாசரிடம் வேத அத்யயனம் செய்திருக்கிறாய். அந்த பிரகஸ்பதியே உனக்கு அட்சராப்யாசம் செய்து வைத்திருக்கிறார். எனது கடாக்ஷத்தால் உன் விருப்பம் நிறைவேறும் என்று அருள் புரிந்து மறைந்தாள். அது முதல் யாக்ஞவல்கியர் சூரிய பகவானைக் குறித்துத் தவமிருந்தார். சூரியன் ஒரு குதிரை வடிவில் அவர் முன் தோன்றினான். {அதனால் முறைப்படி சந்தியா வந்தனம் செய்து முறைப்படி முத்திரையிட்டு, சூரியனைப் பார்த்து விட்டு கண்களை மூடினால் குதிரை ரூபம் கண்ணுக்குள் தெரியும்.} சூரியதேவன் யாக்ஞவல்கியரிடம் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டான். யாக்ஞவல்கியர் என் ஆச்சாரியர் வைசம்பாயனர் என்னை அனுப்பி விட்டார். அவருக்குத் தெரியாத வேதம் முழுவதும் எனக்கு வேண்டும் என்றார். யாக்ஞவல்கியரின் தவத்திற்கு மெச்சிய சூரியன் குருவுக்கு என்ன தெரியாதோ அந்த வேதத்தை சீடருக்கு உபதேசம் செய்து விட்டார். அப்படி சூரியன் உபதேசம் செய்தது தான் சுக்லயஜுர் வேதம்.
ஸ்ரீ குருவாக்ய பரிபாலனம்
     ***தர்மசாஸ்திரம்***

1. இடது கையால் ஆசனம் போட்டால் ஆயுள் குறைவு;

2. இடது கையால் எண்ணெய் தேய்த்துக் கொண்டால் புத்திர நாசம்;

3. இடது கையால் சாப்பாடு போட்டுக் கொண்டால் செல்வம் அழியும்;

4. இடது கையால் படுக்கையை போட்டால் இருப்பிடம் சேதமாகும்.

5. ஜோதிடர், குரு, நோயாளி, கர்ப்பிணி, மருத்துவர், சந்நியாசி முதலியவர்களுக்கு, அவர்களுடைய ஆபத்துக் காலத்தில் கண்டிப்பாக உதவ வேண்டும். இது மிகவும் புண்ணியம்.

6. சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையிலிருந்தால், அவர்களுக்கு உதவ வேண்டும்.

7. அண்ணியை தினசரி வணங்க வேண்டும்.

8. பசு, தேர், நெய்குடம், அரச மரம், வில்வம், அரசுடன் சேர்ந்த வேம்பு இவைகள் எதிரில் குறுக்கிட்டால், வலது புறம் சுற்றி செல்ல வேண்டும்.

9. குடும்பஸ்தன் ஒரு ஆடை மட்டும் அணிந்து உணவு உட்கொள்ள கூடாது.

10. ஒரு கையை தரையில் ஊன்றி சாப்பிடக் கூடாது.

11. துணியில்லாமல் குளிக்கக் கூடாது.

12. சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக் கூடாது.

13. கன்றுக் குட்டியின் கயிறை தாண்டக் கூடாது. மழை பெய்யும் போது ஓடக் கூடாது. தண்ணீரில் தன் உருவத்தை பார்க்கக் கூடாது.

14. நெருப்பை வாயால் ஊதக் கூடாது.

15. கிழக்கு, மேற்கு முகமாக உட்கார்ந்து மலஜலம் கழிக்கக் கூடாது.

16. எதிர்பாராத விதத்திலோ, தவறு என்று தெரியாமலோ, பெண்கள் கற்பை இழந்து விட்டால், புண்ணிய நதியில், 18 முறை மூழ்கிக் குளித்தால் தோஷம் நீங்கும்.

17. திருமணம் ஆகாமலே ஒரு பெண்ணுடன் வாழ்பவனை சுபகாரியங்களில் முன்னிறுத்தக் கூடாது.

18. சாப்பிடும் போது, முதலில் இனிப்பு, உவர்ப்பு, புளிப்பு, கசப்பு பதார்த்தங்களை வரிசையாக சாப்பிட்டு, பின் நீர் அருந்த வேண்டும்.

19. சாப்பிடும் போது தவிர, மற்ற நேரத்தில் இடது கையால் தண்ணீர் அருந்தக் கூடாது.

20. கோவணமின்றி, வீட்டின் நிலைப்படியை தாண்டக் கூடாது.

21. இருட்டில் சாப்பிடக் கூடாது. சாப்பிடும் போது விளக்கு அணைந்து விட்டால், சூரியனை தியானம் செய்து, மீண்டும் விளக்கேற்றி விட்டு சாப்பிட வேண்டும்.

22. சாப்பிட்டவுடன் குடும்பஸ்தன் வெற்றிலை போட வேண்டும். வெற்றிலை நுனியில் பாவமும், முனையில் நோயும், நரம்பில் புத்திக் குறைவும் உள்ளதால் இவற்றை கிள்ளி எறிந்து விட வேண்டும்.

23. சுண்ணாம்பு தடவாமல் வெற்றிலையை வெறுமனேயோ, வெறும் பாக்கை மட்டுமோ போடக் கூடாது. வெற்றிலையின் பின்பக்கம் தான் சுண்ணாம்பு தடவ வேண்டும்.

24. மனைவி, கணவனுக்கு வெற்றிலை மடித்துக் கொடுக்கலாமே தவிர, கணவன், மனைவிக்கும், மகன், தாய்க்கும், பெண், தந்தைக்கும் மடித்துத் தரக் கூடாது.

25. குரு, ஜோதிடர், வைத்தியர், சகோதரி, ஆலயம் இங்கேயெல்லாம் செல்லும் போது வெறுங்கையுடன் செல்லக் கூடாது.

26. தலையையோ, உடம்பையோ வலக்கையினால் மட்டும் சொறிய வேண்டும். இரண்டு கைகளாலும் சொறியக் கூடாது.

27. இரு கைகளாலும் தலைக்கு எண்ணெய் தேய்க்க கூடாது. வலது உள்ளங்கையில் எண்ணெய் ஊற்றி தலையில் தேய்க்க வேண்டும்.

28. தலைவாசலுக்கு நேரே கட்டில் போட்டோ, தரையிலோ படுக்கக் கூடாது.

29. வானவில்லை பிறருக்கு காட்டக் கூடாது.

30. மயிர், சாம்பல், எலும்பு, மண்டையோடு, பஞ்சு, உமி, ஒட்டாஞ்சில்லி இவற்றின் மீது நிற்கக் கூடாது.

31. பேசும் போது துரும்பைக் கிள்ளிப் போடக் கூடாது.

32. ஈரக்காலுடன் படுக்கக் கூடாது.

33. வடக்கிலும், கோணத் திசைகளிலும் தலை வைத்து படுக்கக் கூடாது. நடக்கும் போது முடியை உலர்த்த கூடாது.

34. ஒரு காலால், இன்னொரு காலை தேய்த்துக் கழுவக் கூடாது.

35. தீயுள்ள பொருட்களை தரை மேல் போட்டு காலால் தேய்க்கக் கூடாது. பூமாதேவியின் சாபம் ஏற்பட்டு, பூமி, மனை கிடைக்காமல் போய் விடும்.

36. பகைவன், அவனது நண்பர்கள், கள்வன், கெட்டவன், பிறர் மனைவி இவர்களுடன் உறவு கொள்ளக் கூடாது.

37. பெற்ற தாய் சாபம், செய்நன்றி கொல்லுதல், பிறன் மனைவி கூடுதல் இவை மூன்றுமே பிராயச்சித்தமேயில்லாமல் அனுபவித்தே தீர வேண்டிய பாவங்கள்.

38. அங்கஹீனர்கள், ஆறு விரல் உடையவர்கள், கல்வியில்லாதவர்கள், முதியோர், வறுமையிலுள்ளவர்கள் இவர்களது குறையை குத்திக் காட்டிப் பேசக் கூடாது.

39. ரிஷி, குரு, ஜோதிடர், புரோகிதர், குடும்ப வைத்தியர், மகான்கள், கெட்ட ஸ்திரியின் நடத்தை இவர்களைப் பற்றி வீண் ஆராய்ச்சியில் ஈடுபடவோ, அவர்களிடம் உள்ள தவறுகளை விளம்பரப்படுத்துவதோ கூடாது.

40. பிறர் தரித்த உடைகள், செருப்பு, மாலை, படுக்கை இவற்றை நாம் உபயோகிக்கக் கூடாது.

41. பிணப்புகை, இளவெயில், தீபநிழல் இவை நம் மீது படக் கூடாது.

42. பசுமாட்டை காலால் உதைப்பது, அடிப்பது, தீனி போடாமலிருப்பது பாவம்.

43. பசு மாட்டை, "கோமாதா வாக எண்ணி, சகல தேவர்களையும் திருப்திப்பட வைப்பதற்கு, அம்மாட்டுக்கு, புல், தவிடு, தண்ணீர், புண்ணாக்கு, அகத்திக்கீரை கொடுப்பது புண்ணியம்.

44. தூங்குபவரை திடீரென்று எழுப்பக் கூடாது; தூங்குபவரை உற்றுப் பார்க்கக் கூடாது.

45. பகலில் உறங்குவது, உடலுறவு கொள்வது கூடாது.

46. தலை, முகம் இவற்றின் முடியை காரணம் இல்லாமல் வளர்க்கக் கூடாது.

47. அண்ணன் - தம்பி; அக்காள் - தங்கை; ஆசிரியர் - மாணவர்; கணவர் - மனைவி; குழந்தை - தாய்; பசு - கன்று இவர்களுக்கு இடையில் செல்லக் கூடாது.

48. வீட்டுக்குள் நுழையும் போது, தலைவாசல் வழியாகத் தான் நுழைய வேண்டும்.

49. நம்மை ஒருவர் கேட்காதவரையில், நாம் அவருக்கு ஆலோசனை கூறக் கூடாது.

தர்ம சாஸ்திரம்
---------------------------------------------------
கனவில் பாம்பு தென்படுவதால் என்ன பரிகாரம்!

பெருமாள் கோயிலில்இருக்கும் கருடாழ்வாருக்கு சனிக்கிழமையில் துளசிமாலை அணிவித்து நெய்தீபம் ஏற்றுங்கள். இந்த பரிகாரத்தை மூன்று அல்லது ஐந்து வாரத்திற்கு தொடர்ந்து செய்யுங்கள்.
----------------------------------------------
ஏழுபடை வீடு!

கோவை மாவட்டம், பல்லடம் தாலுகாவில் உள்ள வானவன்சேரி என்ற கிராமத்தில் அலகுமலை முருகன் கோயில் உள்ளது. ஆறுபடை வீடு முருகன்களும் எந்தெந்த திசையில் உள்ளனரோ, அதே அமைப்பில் இங்கு அவர்களுக்கு சன்னதிகள் அமைந்துள்ளது சிறப்பு. அத்துடன் முத்துக்குமாரசுவாமி, பால தண்டாயுதபாணி சுவாமியையும் சேர்த்து ஏழு சன்னதிகள் உள்ளதால் இந்தக் கோயிலை ஏழு படை வீடு என்கின்றனர்.
----------------------------------------------
கிரகதோஷ நிவர்த்திக்கு யாரை வணங்குவது சிறந்தது?

நவக்கிரக வழிபாடு தற்காலத்தில் அதிகமாகி விட்டது. திருஞானசம்பந்தர் கோளறு பதிகத்தில் சிவனை வழிபட்டால் நவக்கிரகம் அனைத்தும் நன்மை செய்யும் என்று குறிப்பிட்டுள்ளார். தேவராய சுவாமிகள், கந்தசஷ்டி கவசத்தில், முருகவழிபாட்டால், நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும் என்று பாடியுள்ளார். அதனால்,அதிதேவதையான தெய்வத்தை வழிபடுவதே சிறந்தது.
---------------------------------------------------
அமாவாசையன்று நள்ளிரவு 12 மணிக்கு பூஜை நடத்துவது சரியா?

ஆண்டில் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே இரவு நேர பூஜையை ஆகம சாஸ்திரம் அனுமதிக்கிறது. மகாசிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், வைகுண்ட ஏகாதசி போன்ற நாட்களில் மட்டுமே வழிபாட்டுக்காக கோயில் திறந்திருக்கும். மற்ற நாட்களில் வழக்கமான நேரத்தில் வழிபடுவதே சரியானது.
---------------------------------------------------
அம்மாவின் ஆணை!

தசரதருக்கு கோசலை, கைகேயி, சுமித்ரா என்று மூன்று பட்டத்தரசிகள். இந்த மூவருமே மூன்று குணம் கொண்டவர்கள். கைகேயி தன் மகன் பரதனுக்கு பட்டம் சூட்ட விரும்பினாள். அதற்கு தடையாக இருந்தராமனைக் காட்டுக்குஅனுப்பவும் கணவரிடம் வரம் பெற்றாள். தான் வாழ பிறரைக் கெடுப்பது அரக்க குணம்.ராமனுக்கு பட்டாபிஷேகத்திற்கு நாள் குறித்ததைக் கேள்விப்பட்டதும் மகிழ்ந்த கோசலை, அவன் காட்டுக்குச் செல்ல இருப்பதை அறிந்ததும் மனம் துடித்தாள். இன்பத்தைக் கண்டால் மகிழ்வதும், துன்பத்தைக் கண்டால் துவள்வதும் இயல்பு.சுமித்ரை தன் மகன்லட்சுமணனிடம், ராமனிடம் தம்பி என்ற உரிமை எடுத்துக் கொள்ளாதே! ஒருவேலைக்காரன் போல் நடந்து கொள், என்று மகனுக்கு ஆணையிட்டாள். பிறர் நலனுக்காக, மகனைப் பிரியும் துன்பத்தைப் பொறுத்துக் கொண்ட இவளே தெய்வத்தாயாக உயர்ந்து நிற்கிறாள்.
---------------------------------------------------