சனி, 11 ஜூலை, 2020

ஸ்ரீ ரமண மஹரிஷி வாழ்வில்….
காஞ்சி மஹா  பெரியவரும் , ரமணரும்….

ஒருமுறை, மஹா பெரியவா திருவண்ணாமலை போயிருந்தப்போ, கிரிப் பிரதட்சிணம் பண்ணினார். அவரோடு இன்னும் நாலஞ்சு பேர் போனா. கொஞ்ச நேரத்துல, பகவான் ரமணரோட சீடர்கள் சில பேர், கையில் பிட்சைப் பாத்திரத்தோடு எதிரே வந்துண்டிருந்தா.

மஹா  பெரியவாளைப் பார்த்ததும் நமஸ்காரம் பண்ணிட்டு, ‘நாங்க பகவான் ரமணரோட சீடர்கள். பகவான் அங்கே ஆஸ்ரமத்துல இருக்கார்’னு சொன்னா. உடனே மஹா  பெரியவா, ‘அப்படியா’ங்கிறாப்பல தலை அசைச்சுக் கேட்டுண்டுட்டு, புன்னகையோடு அவங்களை ஆசீர்வாதம் பண்ணிட்டு, மேலே நடக்க ஆரம்பிச்சார்.

ரமண பக்தர்கள் கொஞ்சம் தயங்கி நின்னுட்டுக் கிளம்பிப் போனாங்க. அவாளுக்கு வருத்தம்…
ரமணரைப் பத்தி, அவரோட சௌக்கியம் பத்தி, மகா பெரியவா ஒண்ணுமே விசாரிக்கலையே; தெரிஞ்ச மாதிரியே காட்டிக்கலையேன்னு!

அந்த பக்தர்கள் மலையேறிப் போய், ஸ்ரீரமண பகவான்கிட்ட பிட்சையைக் கொடுத்துட்டு, வழியில காஞ்சி மஹா  பெரியவாளைத் தரிசித்ததைச் சொல்லி, தங்களது வருத்தத்தையும் தெரிவிச்சாங்க. அதைக் கேட்டதும் வாய் விட்டுச் சிரிச்சாராம், ரமண பகவான்!
‘அட அசடுகளா?! நாங்க ரெண்டு பேரும் பேசிண்டாச்சு; இப்பவும் பேசிண்டிருக்கோமேடா; இதுக்கா வருத்தமா இருக்கேள்?!’ன்னாராம். திகைச்சுப் போய் நின்னாளாம், பக்தர்கள்!

காஞ்சி மஹா  பெரியவரும் ஸ்ரீரமணரும் மஹா  ஞானிகள்; மஹா தபஸ்விகள்.
அவங்களுக்குள்ளே எப்பவும் சம்பாஷணை நடந்துண்டிருக்குன்னு தெரிஞ்சபோது ஏற்பட்ட நெகிழ்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை!

பால் பிரண்ட்டன் என்பவர் ஆன்மிக விஷயமா பேசறதுக்கு மஹா  பெரியவா கிட்ட வந்தார். அப்ப மஹா  பெரியவா,
‘அவர் ஞான மார்க்கத்துல போயிண்டிருக்கார். நான் கர்ம மார்க்கத்துலே போயிண்டிருக்கேன். உன்னோட கேள்விகளுக்கெல்லாம் பதில் தரக்கூடியவர், திருவண்ணாமலையில இருக்கார். உன்சந்தேகங்களை எல்லாம் அவராலதான் தீர்த்துவைக்க முடியும்’னு சொல்லி, பால் பிரன்ட்டனை ரமணர்கிட்டே அனுப்பி வைச்சார்.

பால் பிரண்ட்டனும் அதன்படியே ரமணரை வந்து சந்திச்சு, தன்னோட சந்தேகங்கள் எல்லாம் விலகி, அவரோட பக்தர் ஆகி, புஸ்தகமே எழுதினாரே!
மஹா  பெரியவாளுக்கும் பகவான் ரமணருக்கும் பரஸ்பரம் அன்பு இல்லேன்னா இது நடந்திருக்குமா?

மொத்தத்துல, காஞ்சி மஹானும் ஸ்ரீரமண பகவானும் நம் தேசத்துக்குக் கிடைச்சது மாபெரும் பாக்கியம்!
ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!!
ஓம் நமோ பகவதே ஸ்ரீ காஞ்சி காமகோடி ஜகத் சந்த்ர சேக ரேந்த்ராய!!!
ஸ்ரீ. சக்ரம்:-

(சிவனுக்கு)பாண லிங்கம், (விஷ்ணுவுக்கு) ஸாளக்ராமம் என்று வைத்துப் பூஜை பண்ணுபவர்களே நிறைய இருக்கிறார்கள். இப்படிப் பஞ்சாயதன மூர்த்திகளில் அம்பாளுக்கு இயற்கையில் கிடைக்கிற கல் 'ஸ்வர்ண ரேகா சிலா'என்பது. ஆனால் அதை வைத்துப் பூஜிப்பவர்கள் துர்லபமாகவே இருப்பார்கள்.

ஸுப்ரஹ்மண்ய பூஜை செய்கிறவர்கள் வேலை வைத்தே பூஜிப்பதுண்டு. ஆனாலும் பொதுவில் மற்ற ஸ்வாமிகளுக்கு ஒன்று, அவயவங்களோடு கூடின மூர்த்தி, அல்லது இயற்கையில் கிடைக்கும் கல்லு ஆகியவற்றை வைத்தே பூஜிப்பது வழக்கமாயிருக்க அம்பாளுக்கு மாத்திரம் ஸ்ரீசக்ரம் என்றே இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சம் அதோடுகூட - தனியாயில்லை, ஸ்ரீசக்ரத்தோடு கூட - அவயங்களோடு கூடிய விக்ரஹமும் வைப்பது வழக்கத்திலிருக்கிறது.

ஒவ்வொரு தேவதைக்குமான எந்த தந்த்ரத்தை (வழிபாட்டு முறையை)எடுத்துக் கொண்டாலும் அதில் 'மந்த்ரம்', 'யந்த்ரம்'என்று இரண்டு இருக்கும்.

ஒவ்வொரு விதமான சப்தக் கோவையை ஜபித்து ஜபித்து ஸித்தி பெற்றால் அதற்குரிய தேவதையை ஸாக்ஷத்கரிக்கலாம். அப்படியுள்ள சப்தக் கோவையே அந்த தேவதைக்கான மந்த்ரம் கர சரணாகதிகள் கொண்ட அவயவ ரூபம் போலவே ஒரு தேவதைக்கு இந்த அக்ஷர ஸமூஹமும் ஒரு ரூபம்,சப்த ரூபம், மந்தர ரூபம் என்பது. அதோடுகூட யந்த்ர ரூபமும் இருக்கிறது. ஏதோ கோடும், கோணமும், கட்டமும், வட்டமுமாகத் தெரிகிற யந்த்ரத்தில் அந்த ஒவ்வொன்றுக்கும் அர்த்தமுண்டு. அபார சக்தியுண்டு.

ஒவ்வொரு யந்த்ரமும் பரமாத்மாவை ஒரு குறிப்பிட்ட தேவதையாகப் பிடித்துத் தர ஏற்பட்டது. மந்த்ரத்தை மனஸுக்குள் ஜபிப்பது மாத்திரமின்றி யந்த்ரத்திலும் அர்ச்சன, ஆவாஹனாதிகளில் ப்ரயோஜனப்படுத்துவதுண்டு. அந்தந்த யந்த்ரத்தின் கோணங்களுக்கும், தளங்களுக்கும் உள்ளேயே அந்த தேவதைக்கான மந்த்ராக்ஷரங்களைப் பொறித்து வைப்பதும் உண்டு.

அவயங்களோடுள்ள விக்ரஹ ரூபத்திற்குப் பண்ணுவதுபோலவே யந்த்ரத்திற்கு அபிஷேகம், அர்ச்சனை, நைவேத்யம் என்று எல்லா உபசாரங்களுடனும் பூஜை பண்ணவேண்டும். ஏனென்றால் அந்த விக்ரஹத்தின் உயிராகவுள்ள தேவதையேதான் இப்படி யந்த்ர ரூபத்தில் இருப்பதும். அந்த தேவதை மட்டுமில்லாமல் அதனுடைய வாஸ ஸ்தானம், அதனுடைய ஸகல பரிவாரங்கள் எல்லாவற்றையும் சேர்த்து வைத்து இந்த யந்த்ர ரூபம் ஏற்பட்டிருக்கிறது.

அம்பாளுக்குப் பல ரூபமிருப்பதில் ஒவ்வொன்றுக்கும் ஒரு யந்த்ரமும் உண்டு. ஆனாலும் மீனாக்ஷி, துர்கை, புவனேச்வரி, சாரதாம்பிகை என்று மூர்த்தி வைத்திருப்பவர்களுங்கூட (அந்தந்த மூர்த்திக்கான யந்த்ரமாக இன்றி)ஸ்ரீசக்ரமே வைத்துப் பூஜை பண்ணுவதையும் பார்க்கிறோம்.

இப்பொழுது ஒவ்வொரு ஆவரணத்தில் எந்த எந்த தேவதைகள் உள்ளார்கள் என்பதை பற்றி எனக்கு தெரிந்த அளவில் பதிவிடுகின்றேன். தவறு இருந்தால் அதை திருத்திக் கொள்ள அம்பிகை அருள்புரியட்டும்.

முதல் ஆவரணம்: இது 'பூபுரம்' எனப்படுகிறது. மூன்று சதுரங்கள் கொண்டது.நம் தேகம் ஸ்ரீசக்ரமாகப் பாவிக்கப்படும்போது, முதல் ஆவரணம், நம் ஜீவாத்மாவின் ஸ்தூல சரீரத்தையும், இந்திரியங்கள், மனம் இவற்றால் உணரப்படும் விஷயங்களையும் குறிக்கும். இதில்,முதலாவது ரேகையில் அஷ்டமாசித்திகளும்மத்திம ரேகையில் ப்ராஹ்மி உள்ளிட்ட அஷ்டமாத்ருகா தேவியரும்,கடைசி ரேகையில்,ப்ரகடயோகினியரும் வசிக்கின்றனர். இது'த்ரைலோக்ய மோகனச் சக்ரம்' எனப்படுகிறது.

இரண்டாம் ஆவரணம்: பதினாறிதழ் கமலத்தைக் கொண்ட‌ இது 'ஸர்வாசாபரிபூரகச் சக்ரம்' எனப்படுகிறது. குப்த யோகினிகள் என்ற பெயர் கொண்ட தேவதைகள் இங்கே வசிக்கின்றனர். ஜீவாத்மாவின், ஸ்வப்னாவஸ்தையையும், சூட்சும சரீரத்தையும் அதில் அடையப்படும் அனுபவத்தையும் குறிக்கிறது.

மூன்றாவது ஆவரணம்: இதன் வடிவம் எட்டிதழ் கமலம். இது 'ஸர்வஸம்க்ஷோபணச் சக்ரம்' எனப்படுகிறது. குப்ததர யோகினிகள் இதில் வசிக்கும் தேவதைகளாவர்.

நான்காவது ஆவரணம்: இது 14 முக்கோணங்களை உடையது. இது 'ஸர்வ சௌபாக்கியதாயகச் சக்ரம்' எனப்படுகிறது. இதில் ஸம்ப்ரதாய யோகினிகள் வசிக்கின்றனர்.

ஐந்தாவதுஆவரணம்: இது 10 முக்கோணங்களை உடையது. இதன் பெயர் 'ஸர்வார்த்தஸாதகச் சக்ரம்'. இதில் குலோத்தீர்ண யோகினியர் வாசம் செய்கின்றனர்.

ஆறாவது ஆவரணம்: இதுவும் 10 முக்கோணங்களை உடையது. இதன் பெயர், 'ஸர்வ ரக்ஷாகர சக்ரம்' என்று பெயர். நிகர்ப்ப யோகினிகள் இதில் வாசம் செய்கின்றனர்.

ஏழாவது ஆவரணம்: இது எட்டுக் கோணங்களை உடையது. இது 'ஸர்வ ரோகஹரச் சக்ரம்' எனப்படுகிறது. ரஹஸ்ய யோகினிகள் இதில் வசிக்கின்றனர்.

எட்டாவது ஆவரணம்: இது முக்கோண வடிவானது. இதற்கு, 'ஸர்வ ஸித்திப்ரதசக்ரம்' என்பது பெயர். ஜீவப்ரஹ்ம ஐக்கியமே ஸர்வசித்தி என்று குறிப்பிடப்படுகிறது.இதில் அதிரஹஸ்ய யோகினிகள் வசிக்கின்றனர்.

ஒன்பதாவது ஆவரணம்: இது 'ஸர்வானந்தமயச் சக்ரம்' ஆகும். இது பிந்து வடிவானது. இதில் சிவனும் சக்தியும் வீற்றிருந்து அருளுகின்றனர்.

சம தளமாக, கிடைமட்டத்தோடு இருக்கும் ஸ்ரீசக்ரத்திற்கு, 'பூப்ரஸ்தாரம்' என்று பெயர்.காஞ்சி காமாட்சி அம்மன் சன்னதியில், உள்ள ஸ்ரீசக்ரம்,' பூப்ரஸ்தாரம்' ஆகும்

தொடக்க ஆவரணங்கள் உயரமாகவும் பின்பு வருபவை சம தளமாகவும் இருப்பவை 'அர்த்த மேரு' எனப்படும். மாங்காடு காமாட்சி அம்மன் சன்னதியில் 'அர்த்த மேரு' உள்ளது.
கணபதி துதிகள்:-

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம் பிறைபோலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்- கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீயெனக்கு
சங்கத் தமிழ் மூன்றுந் தா

அல்லல்போம் வல்லினைபோம்
அன்னை வயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாத்துயரம் போம்- நல்ல
குணமதிகமா மருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்.

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது- பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பதம்
தப்பாமற் சார்வார் தமக்கு

கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
கணபதி என்றிடக் கருமம் இல்லையே.

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும்- உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.
- ஒளவையார்

‘பிடியதன் உருவுமை கொள மிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடி கணபதி வர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை இறையே’
-திருஞானசம்பந்தர்

திருவிளையாடற் புராணம் பாடிய பரஞ்சோதி முனிவர் விநாயகர் வாழ்த்தாக அமைத்திருக்கிற பாடல் அழகானது.

உள்ளமெனும் கூடத்தில் ஊக்கமெனுந் தறிநிறுவி உறுதியாகத்
தள்ளரிய அன்பெனும் தொடர்பூட்டி இடைப்படுத்தித் தறுகட் பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணை என்னும்
வெள்ளமதம் பொழி சித்தி வேழத்தை நினைந்து வல்வினைகள் தீர்ப்பாம்

நாமும் அந்தக் கணநாதன்.. விக்னேஸ்வரனைப் போற்றினால் விநாயகனின் பேரருள் கிடைக்கும் என்பது பேருண்மையாகும்.
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் - இதன் உள்ளுறை அறிந்தோர் மிகச் சிலரே.
இது கணபதி துதி மட்டுமல்ல. (காய) கற்ப மூலிகைகளை விளக்கும் பாடலுமாகும். ஔவையார் இயற்றிய இப்பாடலின் நுண் பொருள் வருமாறு :-
பூ = தாமரை
மேனி = குப்பைமேனி
தும்பி = கவிழ் தும்பை
கையான் = கையான்தகரை / (மஞ்சள் பூவுடைய) கரிசலாங்கண்ணி / பொற்றலைக் கரிப்பான்
பாதம் = சிறு செருப்படை

இவற்றை முறைப்படிப் பயன்படுத்தினால் வாக்குவன்மை, மனவுறுதி, லக்ஷ்மி கடாக்ஷம், அரோக த்ருட காத்ரம் போன்ற பலன்கள் ஏற்படும்.

"தும்பிக்கையான் பாதம்" என்பதிலுள்ள சொல்லாடல் தான் எத்தகையது! அபாரம்!!
விளக்கம்.
ஸ்ரீ.விஸ்வநாத் தாஸ் குருஜி. சென்னை.
@⁨Vishwanath Das⁩
மகாகணேசர் அஷ்டகம்

வறுமை நீங்கி வளமுடன் வாழ

கடினமாக உழைத்தும், ஒழுக்கத்துடன் இருந்தும், கடவுளின் மீது பக்தியுடன் இருந்தும் நமக்குக் கஷ்டங்கள் தீராதிருக்கும். இவ்வாறு பிரச்சனைகளுடன் தொடர்ந்து வாழ்ந்து வருபவர்கள்,நிம்மதியான வாழ்வு பெற கீழ்க்கண்ட ஸ்லோகங்களை, நாள்தோறும் விநாயகருக்கு முறைப்படி பூஜைகள் செய்து பாராயணம் செய்து வந்தால் நற்பலன்கள் கிட்டும். விநாயகரை வழிபடும் போது மோதகம், அவல்பொரி, அப்பம், அதிரசம், விளாம்பழம் போன்றவற்றை நிவேதனமாக வைத்து அருகம்புல்லைக் கொண்டு அர்ச்சனை செய்து இச்சுலோகங்களைப் பாராயணம் செய்தால் விசேஷ பலன்கள் கிடைக்கும்.

1. ஏகதந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன ஸந்நிபம்
லம்போதரம் விசாலாக்ஷம் வந்தே அஹம் கண நாயகம்

2. மௌஞ்சி கிருஷ்ணாஜினதரம் நாகயக்ஞோப வீதினம்
பாலேந்து விலஸன் மௌலிம்வந்தே அஹம் கணநாயகம்

3. அம்பிகா ஹ்ருதயானந்தம் மாத்ருபி: பரிபாலிதம்
பக்த ப்ரியம் மதோன்மத்தம்வந்தே அஹம்கணநாயகம்

4. சித்ர ரத்ன விசித்ராங்கம் சித்ரமாலா விபூஷிதம்
சித்ரரூபதரம் தேவம் வந்தே அஹம் கணநாயகம்

5. கஜவக்த்ரம் ஸுர ச்ரேஷ்டம் கர்ணசாமர பூஷீதம்
பாசாங்குச தரம் தேவம் வந்தே அஹம் கணநாயகம்

6.மூஷிகோத்தம ஆருஹ்ய தேவாஸுர மஹாஹவே
யோத்துகாமம் மஹாவீர்யம் வந்தே அஹம் கணநாயகம்

7. யக்ஷ கின்னர கந்தர்வ ஸித்த வித்யாதரை: ஸதா
ஸ்தூயமானம் மஹபத்மானம்வந்தே அஹம்கணநாயகம்

8. ஸர்வவிக்ன ஹரம்தேவம் ஸர்வவிக்ந விவர்ஜிதம்
ஸர்வஸித்திப் ப்ரதாதாரம் வந்தே அஹம் கணநாயகம்

9. கணாஷ்டகம் இதம் புண்யம் பக்திதோ: ய: படேந்நர
விமுக்த ஸர்வ பாபேப்யோ ருத்ரோம் ஸகச்சதி
ஒரு ஊரிலே இரண்டு வியாபாரிகள் சேர்ந்து வியாபாரம் செய்து வந்தார்கள். இருவரும் மிகுந்த கடவுள் பக்தி உடையவர்கள். தங்களது வருமானத்தில் ஒருபகுதியை தானதருமங்களுக்கும் செலவு செய்வார்கள். அன்றைக்கும் அடுத்த நகரத்தில் வியாபாரம் முடித்து இருவரும் தங்கள் தங்கள்  ஒட்டகத்தையும் அழைத்தக்கொண்டு வீடு நோக்கிப் புறப்பட்டனர்.

மலையடிவாரத்தை அடைந்தபோது வழிப்பறிக் கொள்ளையர்கள் குழுவொன்று அவர்களைத் துரத்த ஆரம்பித்தது. என்னசெய்வது என்று திகைத்த இருவரும் ஒட்டகங்களை விட்டுவிட்டு, இறைவனை வேண்டிக்கொண்டு அருகிலிருந்து ஒரு சிறிய குகையினுள் சென்று ஒளிந்து கொண்டனர்.

கொள்ளையர்களும் நெருங்கிவருவது அவரகளின் காதுகளில் கேட்டது. ஒளிந்திருந்த வியாபாரிகளில் ஒருவன் ”நாமோ இருவர், கையிலே பணம் வேறு, அவர்களோ பலபேர்” என்று மெதுவாக மற்றவனுக்குக் கூறினான். அடுத்தவனோ ”நாம் இருவரில்லை, மூவர்!!! நம் இருவருடன் கடவுளும் இங்கே எம்மைக் காப்பாற்ற இருக்கிறார் என்றான். என்ன அதிசயம்!!!! குகையின் வாயிலில் இருந்த சிலந்தியொன்று திடீரென வேகமாக குகை வாயிலிலே குறுக்கும் மறுக்கமாக வலை பின்னியது.

குகையை அண்மித்த கொள்ளையர்களில் ஒருவன் ”இந்தக் குகைக்குள் அவர்கள் ஒளிந்திருக்கலாம்” என்றான். ஆனால் அவர்களின் தலைவனோ ”அட மூடனே குகை வாயிலிலே சிலந்தி வலை இருக்கிறதே அவர்கள் போவதென்றால் இப்போதானே போயிருக்கவேண்டும்” என்று கூறி அவ்விடத்தை விட்டு நகர்ந்தனர். வியாபாரிகள் சுகமாக வீடு சேர்ந்தனர்.
கோவிலுக்கு கிளம்பறேளா ??

1. பிறருடைய அன்னத்தைப் புசித்த தினத்தில், இறைவனை ஆலயத்தில் வந்து தரிசிப்பது.
2. பிறர் பொருளைக் கொண்டு சுவாமிக்கு நைவேத்யம் செய்வது
3. வீட்டில் செய்துவரும் நித்திய பூஜையை நிறுத்திவிட்டு ஆலயம் செல்வது...
4. ஒருவரைக் கெடுப்பதற்காக சுவாமியை வேண்டிக் கொள்வது
5. தம்பதிகளின் உடலுறுவுக்குப்பின் ஸ்நானம் செய்யாமல் ஆலயம் ப்ரவேசிப்பது
6. ஸ்த்ரீகள் ரஜஸ்வலையாகக்கூடிய நாட்களைக் கணக்கிட்டுக் கருத்தில் கொள்ளாது, அந்நாட்களில் ஆலயம் செல்லுதல்
7. மாதவிடாய்ப் பெண்டிருடன் பேசிக் கொண்டு இருந்தவரோ, அருகில் சென்றவரோ ஸ்நானம் செய்யாமல் ஆலயம் செல்வது.
8. மரணத்தினால் தீட்டு உள்ளவர்கள் ஆலயம் செல்வது
9. பிணத்தைப் பார்த்தவர்கள், பிணத்தோடு உடன் சென்றவர், மரணத்தினால் தீட்டு உள்ளவர்களைத் தீண்டியவர்கள் ஆகியோர் ஸ்நானம் செய்யாமல் ஆலயம் செல்வது.
10. மலஜலங்களை அடக்கிக் கொண்டு ஆலயம் செல்லுதல்.
11. மலஜலம் கழித்தபின் சுத்தி செய்துகொள்ளாமல் ஆலயம் புகுதல்.
12. கருப்பு வஸ்திரம் தரித்துக் கோயிலுக்குச் செல்லுதல், பூஜை செய்தல்
13. கோபத்துடன் ஆலயம் செல்லுதல், பூஜை செய்தல்
14. துவஜஸ்தம்பமும் பலிபீடமும் கடந்து உள்ளே சென்றபிறகு, எங்கேயாவது கீழே விழுந்து நமஸ்காரம் செய்தல்
15. பகவானுக்கும் நந்திக்கும் இடையே குறுக்காக நடத்தல் அல்லது பிரதக்ஷிணம் செய்தல்
16. ஈர வஸ்திரங்களையோ, விழுப்பு வஸ்திரங்களையோ அணிந்து ஆலயம் செல்லுதல்
17. சாப்பிட்டுவிட்டுக் கோயிலுக்கு வழிபாட்டிற்காகச் செல்லுதல்
18. இடுகாடு அல்லது சுடுகாடு சென்று வந்த நாட்களில் ஆலயம் செல்லுதல்
19. புலாலோ, வெங்காயம், பூண்டு போன்றவற்றையோ உண்ட நாட்களில் திருக்கோயில் செல்லுதல்
20. கால் அலம்பாமல் ஆலயத்திற்குள் அடியெடுத்து வைத்தல்
21. மூர்த்திகளைத் தொடுதல்.
22. மூர்த்திகளின் அருகில் கற்பூரம் ஏற்றுதல், அல்லது தீபம் ஏற்றுதல்
23. கோயில் உள்ளே தீபத்தினை விரலால் தூண்டுதல், கைகளைச் சுவரிலும் மற்றுள்ள இடங்களிலும் துடைத்தல்.
24. எச்சில் துப்புதல்
25. நைவேத்யம் ஆகும்போது பார்த்தல்
26. சிவ நிர்மால்யங்களை மிதித்தல் அல்லது தாண்டுதல்
27. விமானம், த்வஜஸ்தம்பம், பலிபீடம், விக்ரஹம் ஆகியவற்றின் நிழலை மிதித்தல்
28. உடலின் மேல் பாகத்தை புருஷர்கள் மூடிச் செல்லுதல்
29. நெற்றிக்கு விபூதி இடாமை
30. சிகை (குடுமி) இல்லாமை
31. தலைமயிரை அவிழ்த்துத் தொங்கவிடுதல்
32. தலைமயிரை ஆற்றுதல்
33. மூக்கைச் சிந்துதல்
34. தும்முதல்
35. கோட்டுவாய் (கொட்டாவி) விடுதல்
36. வாயில் எதையேனும் அடக்கியிருத்தல்
37. பேசுதல்
38. வேகமாக வலம் வருதல்
39. தீபம் அணையும்படி மூச்சுக் காற்று விடுதல்
40. மற்ற ஆலயங்களை பற்றி இங்கு கூறுதல்
41. கை-கால்களை நீட்டிக் கொண்டு உட்காருதல்
42. படுத்தல்
43. உறங்குதல்
44. சிரித்தல்
45. அழுதல்
46. அடித்தல்
47. சண்டையிடுதல்
48. எச்சில் துப்புதல்
49. மலஜலம் கழித்தல்
50. விளையாடுதல்
51. விக்ரஹங்களுக்குப் பின்புறத்தைக் காட்டி நிற்றல்
52. தாம்பூலம் தரித்தல்
53. வாஹனத்தின் மீதமர்ந்தோ, பாதரøக்ஷயுடனோ ஆலயத்துள் செல்லுதல்
54. உற்சவ காலங்களில் விழாக்களைக் கண்டு களித்துவிட்டு, இறை வணக்கம் செய்யாதிருத்தல்
55. தெரிந்து தெரியாமலும் தகாதவற்றைச் செய்தல்
56. உடல் சுத்தம் இல்லாதபோது தொழுதல்
57. ஒரு கையை மட்டும் தூக்கிக் கும்பிடுதல்
58. அப்பிரதக்ஷிணமாகச் சுற்றுதல்
59. மூர்த்திகளுக்கு எதிரில் காலை நீட்டி உண்ணல்
60. தின்பண்டங்களைச் சுவைத்துக்கொண்டிருத்தல்
61. பொய் பேசுதல்
62. உரத்துப் பேசுதல்
63. வாதம் செய்தல்
64. எதையோ நினைத்து வருத்தத்துடன் அழுதல்
65. சண்டை சச்சரவுகளில் ஈடுபடுதல்
66. தன்னை உயர்வாக எண்ணிக்கொண்டு, தன்னை அணுகுபவர்க்கு அருள் புரிதல்
67. தன்னை உயர்வாக எண்ணிக்கொண்டு, மற்றவர்க்குச் சாபம் அளித்தல்
68. ஆடவர் பெண்டிரை நோக்கியும், பெண்டிர் ஆடவரை நோக்கியும் கடும் சொற்களைக் கூறுதல்
69. கம்பளம் முதலியவற்றால் உடலை மறைத்துக் கொள்ளுதல்
70. நர ஸ்துதி செய்தல்
71. பிறரை இழிவு படுத்துதல்
72. அபானவாயு விடுதல்
73. அமங்கலச் சொற்களைக் கூறுதல்
74. வசதிகள் இருந்தும், அவற்றிற்கேற்ப சிறப்பான இறைப்பணிகளும் வழிபாடுகளும் செய்யாமல், நடுத்தரமான அல்லது அதற்கும் குறைவான வகையில் அவற்றைச் செய்தல்
75. கடவுளுக்கு நிவேதனம் செய்யப்படாததைப் புசித்தல்
76. அந்தந்தக் காலகட்டத்தில் விளையும் பழங்கள் போன்ற பொருள்களை இறைவனார்க்கு அளிக்காமல் இருத்தல்
77. வேறு வகைகளில் பயன்படுத்திய பிறகு, எஞ்சியதைக் கடவுளுக்கு அளித்தல்
78. ஸந்நிதிக்குப் பின்புறத்தில் அமர்ந்திருத்தல்
79. ஆலயத்துள், பிறரை வணங்குதல்,
80. ஆலயத்தில் கண்ட தனது ஆசிரியரைக் காணாதது போல் இருத்தல்
81. தற்பெருமை பேசுதல்
82. எந்த ஒரு ஆலயத்தையும் சார்ந்த எந்த ஒரு தேவதையையும் இழிவு படுத்திப்பேசுதல்.
பெரிய்ந்வா சரணம்.

அழகான தரிசனம் கண்டதும், மனதிற்குள்ளே “நான் இருக்கேன்”னு அவர் சொல்வது போலத் தோன்றுகிறதல்லவோ! 

கும்பகோணம் ஸ்ரீசந்த்ரசேகர பவனத்திலே வீற்றிருந்து நம்மை ரக்ஷிக்கும் அம்மையப்பனை ஜகன்மாதாவாகவும் ஜகத்பிதாவாகவும், ஜகத்குருவாகளும் விளங்கும் என் தெய்வத்தின் தரிசனம் கண்டீரோ!

இந்தத் தரிசனம் கண்டதுமே மனம் வெகுவான பாசுரம் ஒன்றை வழிய விட்டதென்றால், அது சாக்ஷாத் ப்ரத்யக்ஷ பரமேஸ்வர சங்கரனான மஹாபிரபுவின் அருளால் தாமே!  மனம் வெகுவாய் ஆனந்திக்கும் போதும், ஆராதிக்கும் போதும், ஏன்… அழுது புலம்பும்போதும் கூட அடியேன் அறிந்த தமிழிலே புலம்பிக் கரைக்க எத்தணிக்கின்றேன். 

இவ்வெழுத்துக்களிலே அறியாமல் அடியேன் செய்த பிழையேதுமிருக்குமானால், எம் ஆசார்யர் அனுக்ரஹத்தில் அனைவரும் அடியேனை மன்னித்தருள வேண்டுகிறேன்.  அடியார்க்கும் அடியாராய் இருப்பதிலே உள்ள ஆனந்தத்தின் சுகமே வேறு தான்.  உங்கள் அனைவரின் உள்ளத்திலேயும் நிறைவாய் நிறைந்திருக்கும் ஸ்ரீமஹாஸ்வாமிகளை அனுதினமும் துயிலெழுப்பித் தொழும் பாக்கியம் கிடைக்கின்றதே! இப்பிறப்பு மட்டுமின்றி எப்பிறப்பிலும் இதனை ஏத்திவாழ மனதார பிரார்த்திக்கின்றேன்.

************************************************

#ஸ்ரீகுருதுதி

நின்றுயெங்கும் பரவியே நிருத்தமாகித் தோன்றியே
ஒன்றியிங்கும் உடலிலே ஒத்தமானுடப் பொருள்
மூன்றுசோதி மூன்றுமாய்த் துளக்கமில் விளக்கமாய்
கன்றுகாக்குங் கூலமொத்த உன்னையேத்த வல்லனே!

************************************************

பேரிறைவன் படைத்த இப்பரவெளியிலே ஆடியாடி ஒன்றியதோர் உத்தமனமாய் ஸ்தூல சரீரம் கொண்டு இவ்வுலகைக் காக்கவந்த பரம்பொருளே!

மூப்பெருந்தேவரும், முப்பெருஞ்சக்தியும் கூடி ஓருருவிலே உதித்தாற் போல வந்து, எம்முள்ளே இருக்கின்ற கலக்கங்களைத் தீர்க்கவல்லதொரு ரக்ஷகனே! 

கன்றினைப் பேணிக்காக்கும் தாய்பசுவைப் போலே உள்ள உம்மைச் சரண்புக யாம் மஹா பாக்கியம் செய்திருக்கின்றோமல்லவோ! 

இதனையே இந்த துதியிலே நினைந்துத் தொழ விழைந்துள்ளேன். 

ஓசைக்கு உயிருண்டு; அரும்பெரும் பலனுமுண்டு என்பர்.  தேவபாஷையான சமஸ்கிருதத்திலேயும் சரி; தெய்வீக பாஷையான தமிழிலேயும் சரி; நல்ல ஓசைகட்டு நற்பலனைத் தரும் சக்தியுண்டு. அவ்வகையிலான ஓசைகளுடனானதோர் பாசுரத்தினை யெழுப்பி அதன் மூலம் நலனடைய அடியேனின் சிறிய முயற்சியே, அனுதினமும் ஆச்சார்ய பாதந்தொழும் பாமாலைகளும், விருத்தங்களும், கானங்களும், கவிதைகளும் எழுப்பிட முயற்சிக்கின்றேன் அவர் அருளால்!

ஆம்! அனுதினமும் இவ்வகையிலாக ஆச்சார்யன் திருப்பாதம் தொழுவோம்! அவனியிலே வாழுங்காலத்தே அவர் அனுக்ரஹத்துடன் கூடி இன்புற்று வாழ்வோம்!

குருவுண்டு – பயமில்லை;  குறையேதும் இனியில்லை.

பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம்.

நமஸ்காரங்களுடன்
சாணு புத்திரன்.
*தேன்கூடு தினம் ஒரு கதை..

_*நம்பிக்'கை' வை*_
ஓர் அரசன் மிகவும் முன் கோபக்காரன்.. தன் கெட்ட குணம் தெரிந்தும் அவனால் அதை மாற்றிக் கொள்ள முடிய வில்லை..

ஒரு நாள் அறிஞர் ஒருவர் அந்த நாட்டுக்கு வந்து இருந்தார்.. அவரை சந்தித்து தன் குறையை சொன்னான் அந்த மன்னன்..
அவர் மன்னனிடம்..
*என்னிடம் அதிசயமான பொன்னால் செய்த ஒரு குவலை ஒன்று இருக்கிறது.. அதில் தண்ணீரை நிரப்பி குடித்து வந்தால் நாளடைவில் உன் சினம் இல்லாமல் போய்விடும்* என்று சொல்லி அந்த குவளையை அவனிடம் கொடுத்தார்..

*உனக்குச் சினம் எப்போது எல்லாம் வருகிறதோ, அப்போது இதில் மூன்று முறை தண்ணீர் நிரப்பிக் குடி.. பிறகு சினமே வராது..* என்று கூறிவிட்டு சென்றார்..

அன்றில் இருந்து அரசன் அப்படிச் செய்யத் தொடங்கினான்.. சில நாட்களில் அவன் சினம் அவனை விட்டு விலகியது..

பல வருடங்கள் சென்றன.. அந்த குவளையை கொடுத்த அந்த அறிஞர் மீண்டும் அந்த நாட்டுக்கு வந்தார்..

அரசன் அந்த அறிஞரை சந்தித்து குவலை கொடுத்ததற்காக பலமுறை நன்றி கூறித் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தான் மன்னன்..

*மன்னனே.. உன்னை ஏமாற்ற நான் விரும்ப வில்லை.. அது அதிசயமான குவளை அல்ல.. சாதாரணமான குவளைதான்..*

_*சினம்*_ *வரும்போது சிந்திக்க நேரம் இருக்காது.. சிந்தனை வந்தால் சினம்தானே குறையும்..*

*தண்ணீரை மூன்று முறை ஊற்றிக் குடிக்கும் போது நேரம் கிடைக்கிறது.. அப்போது சிந்திக்க முடிவதால் புலன்கள் அமைதி பெறுகின்றன..*

*ஆத்திரம் நியாயத்திற்குத் தன் இடத்தைக் கொடுக்கிறது..* என்று கூறினார்..
🐝
_மற்றவர்கள் நம்மிடத்தில் கோபப்பட்டாலும்,  அதை சகித்துக் கொண்டு பேசாமல் அமைதியாக உட்கார வேண்டும். இதனால் நமக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.._

_நாம் கோபப்படும் போது மற்றவர்கள் நம்மீது கோபப்படும் போதும், நாம் அமைதியாகவும், பக்குவமாகவும் இருப்பது நல்லது.._

_எல்லா நேரங்களிலும் நாம் நிதானத்தோடு இருந்தால் நிம்மதியாக வாழலாம்.._
🙏
ஸ்ரீ ரமண மஹரிஷி வாழ்வில்….
காஞ்சி மஹா  பெரியவரும் , ரமணரும்….

ஒருமுறை, மஹா பெரியவா திருவண்ணாமலை போயிருந்தப்போ, கிரிப் பிரதட்சிணம் பண்ணினார். அவரோடு இன்னும் நாலஞ்சு பேர் போனா. கொஞ்ச நேரத்துல, பகவான் ரமணரோட சீடர்கள் சில பேர், கையில் பிட்சைப் பாத்திரத்தோடு எதிரே வந்துண்டிருந்தா.

மஹா  பெரியவாளைப் பார்த்ததும் நமஸ்காரம் பண்ணிட்டு, ‘நாங்க பகவான் ரமணரோட சீடர்கள். பகவான் அங்கே ஆஸ்ரமத்துல இருக்கார்’னு சொன்னா. உடனே மஹா  பெரியவா, ‘அப்படியா’ங்கிறாப்பல தலை அசைச்சுக் கேட்டுண்டுட்டு, புன்னகையோடு அவங்களை ஆசீர்வாதம் பண்ணிட்டு, மேலே நடக்க ஆரம்பிச்சார்.

ரமண பக்தர்கள் கொஞ்சம் தயங்கி நின்னுட்டுக் கிளம்பிப் போனாங்க. அவாளுக்கு வருத்தம்…
ரமணரைப் பத்தி, அவரோட சௌக்கியம் பத்தி, மகா பெரியவா ஒண்ணுமே விசாரிக்கலையே; தெரிஞ்ச மாதிரியே காட்டிக்கலையேன்னு!

அந்த பக்தர்கள் மலையேறிப் போய், ஸ்ரீரமண பகவான்கிட்ட பிட்சையைக் கொடுத்துட்டு, வழியில காஞ்சி மஹா  பெரியவாளைத் தரிசித்ததைச் சொல்லி, தங்களது வருத்தத்தையும் தெரிவிச்சாங்க. அதைக் கேட்டதும் வாய் விட்டுச் சிரிச்சாராம், ரமண பகவான்!
‘அட அசடுகளா?! நாங்க ரெண்டு பேரும் பேசிண்டாச்சு; இப்பவும் பேசிண்டிருக்கோமேடா; இதுக்கா வருத்தமா இருக்கேள்?!’ன்னாராம். திகைச்சுப் போய் நின்னாளாம், பக்தர்கள்!

காஞ்சி மஹா  பெரியவரும் ஸ்ரீரமணரும் மஹா  ஞானிகள்; மஹா தபஸ்விகள்.
அவங்களுக்குள்ளே எப்பவும் சம்பாஷணை நடந்துண்டிருக்குன்னு தெரிஞ்சபோது ஏற்பட்ட நெகிழ்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை!

பால் பிரண்ட்டன் என்பவர் ஆன்மிக விஷயமா பேசறதுக்கு மஹா  பெரியவா கிட்ட வந்தார். அப்ப மஹா  பெரியவா,
‘அவர் ஞான மார்க்கத்துல போயிண்டிருக்கார். நான் கர்ம மார்க்கத்துலே போயிண்டிருக்கேன். உன்னோட கேள்விகளுக்கெல்லாம் பதில் தரக்கூடியவர், திருவண்ணாமலையில இருக்கார். உன்சந்தேகங்களை எல்லாம் அவராலதான் தீர்த்துவைக்க முடியும்’னு சொல்லி, பால் பிரன்ட்டனை ரமணர்கிட்டே அனுப்பி வைச்சார்.

பால் பிரண்ட்டனும் அதன்படியே ரமணரை வந்து சந்திச்சு, தன்னோட சந்தேகங்கள் எல்லாம் விலகி, அவரோட பக்தர் ஆகி, புஸ்தகமே எழுதினாரே!
மஹா  பெரியவாளுக்கும் பகவான் ரமணருக்கும் பரஸ்பரம் அன்பு இல்லேன்னா இது நடந்திருக்குமா?

மொத்தத்துல, காஞ்சி மஹானும் ஸ்ரீரமண பகவானும் நம் தேசத்துக்குக் கிடைச்சது மாபெரும் பாக்கியம்!
ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!! 
ஓம் நமோ பகவதே ஸ்ரீ காஞ்சி காமகோடி ஜகத் சந்த்ர சேக ரேந்த்ராய!!!

புதன், 1 ஜூலை, 2020

சியாமா சாஸ்திரி!

சியாமா சாஸ்திரி!

அம்பிகையை கோலாகலமாகக் கொண்டாடி மகிழும் அற்புதமான விழா நவராத்திரி.சிவன் விஷ்ணு கோயில்களில் ஹோமங்கள் லட்சார்ச்சனை போன்றவை சிறப்பாக நடத்துவர்.கன்னிப் பெண்களுக்கும் சுமங்கலிகளுக்கும் இது ஆனந்த நாட்கள்.மந்திர தீட்சை பெற்ற ஸ்ரீவித்யா உபாசகர்கள் லலிதா சகஸ்ரநாமம் திரிசதி அஷ்டோத்ரம் கட்கமாலா கமலாம்பா நவாவரண கீர்த்தனைகள் பாடி நெகிழும் நாட்கள் நவராத்திரி.

{நவராத்திரிக்குரிய அம்பாளின் பக்தர் தான்  சியாமா சாஸ்திரிகள்}

சங்கீத மும்மணிகளான தியாகையர் முத்து சுவாமி தீட்சிதர் சியாமா சாஸ்திரிகள் ஆகிய மூவருமே அம்பிகையைப் பாடியுள்ளனர்.தியாகையர் ராமபக்தர்.முத்துசுவாமி தீட்சிதர் எல்லா தெய்வங்களையும் பாடியுள்ளார்.இவரது 481 பாடல்களில் சிவனைப் பற்றி 132 பாடல்கள் பாடியுள்ளார்.அதைவிட அதிகமாக அம்பாள்மீது 197 பாடல்கள் பாடியுள்ளார்.எனவே அவர் தேவி உபாசகர்(ஸ்ரீவித்யா தீட்சை உபதேசம் பெற்றவர்)என்பது ஊர்ஜிதமாகிறது.சங்கீத மும்மணிகளும் பிறந்தாலே முக்தி தரும் திருவாரூரில் பிறந்தவர்கள்.அவர்கள் தேகத்தை நீத்த இடங்கள் வெவ்வேறு.தியாகையர் திருவையாறு தீட்சிதர் எட்டயபுரம் சாஸ்திரிகள் தஞ்சாவூர். மேற்கண்ட மூவருமே சமகாலத்தவர்.இவர்களில் முதலில் தோன்றியவர் சியாமா சாஸ்திரிகள்.அவர் தீவிர தேவி உபாசகர்.தஞ்சை பங்காரு காமாட்சியைப் பூஜித்துப் பாடியவர்.பிரம்மாவால் உருவாக்கப்பட்ட பங்காரு (தங்க) காமாட்சி முதலில் காஞ்சியில் இருந்தாள்.அங்கிருந்து தஞ்சைக்கு எப்படி வந்தாள்? கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப்பின் அந்நியர்கள் படையெடுப்பால் கோயில்களை இடித்தல் விக்ரகங்களைக் களவாடுதல் போன்ற கொடூர சம்பவங்கள் நடைபெற்றன.எனவே காமாட்சியின் தங்க விக்ரகத்துக்கு புனுகு பூசி வெளிக்கொணர்ந்தனர்.

15 ஆண்டுகள் செஞ்சியிலும் 1624-லிருந்து திருச்சி உடையார் ஜமீன்தார் பராமரிப்பில் 60 வருடங்களும் பின்னர் ஆனைக்குடியில் 15 வருடங்களும் அடுத்து நாகூர் சிக்கல் விஜயபுரத்திலும் திருவாரூர் கமலாம்பாளுடன் 70 வருடங்களும் காமாட்சி விக்ரகம் இருந்தது.1780-ல் தஞ்சை சரபோஜி மன்னர் தஞ்சையில் கோயில்கட்டி பங்காரு காமாட்சியைப் பிரதிஷ்டை செய்தார்.

காஞ்சியில் பங்காரு காமாட்சி இருந்தபோது அவளுக்குப் பூஜை செய்ய வேதாகமத்தில் தேர்ச்சி பெற்ற ஒருவரை ஆதிசங்கரர் நியமித்தார்.அந்த பரம்பரையே இன்றும் ஆராதனை செய்துவருகிறது.அம்பாள் திருவாரூரில் இருந்த காலத்தில் அவளுக்குப் பூஜை செய்தவர் வேங்கடாத்ரி அய்யர்.அவர் புதல்வரான விஸ்வநாதய்யர் வேதாகம ஜோதிட நிபுணர்.காமாட்சி பக்தியில் தோய்ந்தவர்.அவர் மனைவியும் தேவி பக்தை.நெடுநாள் அவர்களுக்குப் பிள்ளைப் பேறில்லை.ஒருநாள் விஸ்வநாதய்யர் அருகிலுள்ள வீட்டில் நிகழ்ந்த வேங்கடாசல சமாராதனைக்குச் சென்றிருந்தார்.(சமாராதனை அந்தணருக்கு உணவளித்தல்). அப்போது ஒரு பெரியவருக்கு ஆவேசம் வந்து அடுத்த சித்திரை கிருத்திகையில் தேவிபக்த சங்கீதமணியாக ஒரு புதல்வனைப் பெறுவாய் என்று கூறினார்.அதன்படியே சித்ரபானு ஆண்டு(1763) சித்திரை மாத கிருத்திகை நட்சத்திரத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.

விஸ்வநாதய்யர் தங்கள் குலதெய்வம் வேங்கடேசன் என்பதாலும் வேங்கடேச சமாராதனையின்போது அருளுரைக்கப்பட்டதாலும் தனது தந்தையின் பெயர் வேங்கடாத்ரி என்பதாலும் முருகனுக்குகந்த கிருத்திகையில் பிறந்தாலும் குழந்தைக்கு வேங்கட சுப்பிரமணியன் என்று பெயரிட்டார்.செல்லமாக சியாமா என்றழைத்தார்கள்.அவருக்கு அடுத்து பிறந்தவள் மீனாட்சி.அவர்கள் வீட்டில் கிருஷ்ண விக்ரகம் உண்டு.இருவருக்குமே அந்த கிருஷ்ணரிடம் பிரியம்.எனவே அவர் சியாமா கிருஷ்ணன் என்றும் அழைக்கப்பட்டார்.சாஸ்திரம் அறிந்து உகந்து செய்ததால் சியாமா சாஸ்திரி என்ற பெயர் நிலைத்தது.சியாமாவுக்கு இளம்வயதிலேயே சங்கீதத்தில் ஈடுபாடு.ஆனால் அவரது தந்தைக்கு அதில் சம்மதமில்லை.எனினும் தாயின் ஆதரவிலும் தேவியின் அருளாலும் அவரது சங்கீதம் வளர்ந்தது. தந்தையிடம் சமஸ்கிருதமும் தெலுங்கும் கற்றார்.மாமாவிடம் சங்கீதம் பயின்றார்.

திருவாரூரிலிருந்த காமாட்சி விக்ரகத்தை தஞ்சைக்குக் கொண்டுசென்று 1780-ல் பிரதிஷ்டை செய்த சரபோஜி மன்னர் விஸ்வநாதய்யரை தஞ்சைக்கு அழைக்க 1781-ல் சியாமா சாஸ்திரியின் குடும்பம் தஞ்சை வந்தது.ஒருமுறை சியாமா லலிதா சகஸ்ரநாமத்தை நன்றாக அனுபவித்து ராகமாலிகையாகப் பாடி தேவியைப் பூஜித்தார்.அப்போது அங்கு வந்திருந்த மிராசுதார் ஒருவர் அதைக் கேட்டு நெகிழ்ந்து சால்வை ஒன்றை சியாமாவுக்குப் பரிசளித்தார்.அந்த சால்வையை ஆர்வத்துடன் எடுத்துச் சென்று தன் மாமாவிடம் காண்பித்து விவரம் கூற அவர் பொறாமையுடன் உனக்கா சால்வை?போடா என்று கூறி அவருக்கு சங்கீதம் கற்றுத் தருவதை நிறுத்திக் கொண்டார்.ஆனால் அம்பாளோ அதை வளர்ப்பதிலேயே விருப்பம் கொண்டாள்.

அந்த சமயத்தில் காசியிலிருந்து ராமேஸ்வரத்துக்குச் சென்றுகொண்டிருந்த சங்கீத சாமி என்ற துறவி இடையில் சாதுர்மாஸ்ய விரதத்திற்காக தஞ்சை காமாட்சி கோயிலில் தங்கினார்.சங்கீதம் பாடி நடனமும் செய்பவர் அவர்.அவருக்கு விஸ்வநாதய்யரும் சியாமாவும் பணிவிடைகள் செய்தனர். சியாமாவின் தந்தைக்கும் மாமாவுக்கும் அவரின் சங்கீத ஈடுபாடு பிடிக்காததால் தன் தாயின் ஆலோசனைப்படி கோயில் நடைசாற்றியபிறகு காமாட்சியை குருவாக எண்ணி சங்கீதம் பாடினார் சியாமா.அதைக் கேட்ட சங்கீத சாமி மகிழ்ந்து விஸ்வநாதய்யரிடம் சியாமா மிகச்சிறந்த தேவி பக்தனாகவும் சங்கீதத்தில் சூடாமணி ரத்னமாகவும் திகழ்வான் என்று கூறி ஆதியப்பையாவிடம் சங்கீத நுணுக்கங்களை அறியட்டும் என்றும் சொன்னார்.அதன்பிறகு விஸ்வநாதய்யர் சியாமாவை கண்டிக்கவில்லை ஆதியப்பையா அரச சமஸ்தானத்தில் ஆஸ்தான வித்வான்.அவன் சியாமாவின் சங்கீதப் புலமையைப் பாராட்டி மேலும் செம்மையுறக் கற்றுக்கொடுத்தார்.

சாஸ்திரியார் ஆஜானுபாகுவாக காதில் கடுக்கன் அணிந்து ஜரிகை பஞ்சகச்சம் அங்க வஸ்திரத்துடன் விபூதி சந்தனம் குங்குமம் அணிந்து அம்பாளுக்கு நிவேதனம் செய்த வெற்றிலைப் பாக்கை வாயிலிட்டுக்கொண்டு வீதியில் நடந்தால் மக்கள் வெகு மரியாதையுடன் இதோ காமாட்சிதாசர் சங்கீத சாகித்ய கலாநிதி போகிறார் என்று ஒதுங்கிக்கொள்வார்கள்.சாஸ்திரியாரின் முதல் பாடல் சாவேரி ராகத்தில் மூன்று சரணங்களுடன் அமைந்த ஜனனி நத ஜன பாலினி பாஹிமாம் பவானி என்னும் உருக்கமான சமஸ்கிருதப் பாடல்.சாஸ்திரியார் தியாகராஜ பாகவதருடன் கலந்து, இருவரும் தமது பாடல்களைப் பாடி ரசிப்பார்கள்.சாஸ்திரியின் இரண்டாவது மகன் சுப்பராய சாஸ்திரி முத்துசாமி தீட்சிதரிடம் வயலின் கற்றுக்கொண்டார் ஆக மும்மணிகளும் சங்கீதத்தை பரஸ்பரம் வளர்த்தனர் போற்றினர்.சியாமா சாஸ்திரிகள் ஆனந்த பைரவியிலும் சாவேரி ராகத்திலும் 300-க்கும் மேற்பட்ட பாடல்களைச் செய்துள்ளார்.அவற்றில் ஒருசில தவிர மற்றவை யாவும் அம்பாள்மீது பாடப்பட்டதே.அவர் பாடல்கள் நிறைய சரணங்கள் கொண்டவை.சங்கீதக் கச்சேரிகளில் அவர் பாடல்களைப் பாடுவது மிகக் குறைவே. எல்லா சரணங்களையும் பாடுவதென்பது அரிது.

சங்கீத சாமி சொல்லி ஆதியப்பையாவிடம் சியாமா வந்தபோது அவர் பாடியதைக் கேட்ட ஆதியப்பையா சியாமா உன் வாக்கில் காமாட்சி தாண்டவமாடுகிறாளப்பா!என்றார்.அப்போது ஆதியப்பையாவின் வயது 50 சியாமாவின் வயது 18.ஒருமுறை சியாமா பதறி அபச்சாரம் மன்னிக்கவேண்டும் என்று சொல்லி நீர்கொண்டு வந்து துடைக்க எழுந்தபோது ஆஹா!இது அம்பாள் பிரசாதமல்லவா!என்று கண்களில் ஒத்திக்கொண்டார் ஆதியப்பையா.பொப்பிலி கேசவய்யா என்ற சங்கீத வித்வான் இருந்தார்.திறமைசாலியான அவர் ஆணவம் மிக்கவராகவும் இருந்தார்.மற்ற வித்வான்களைப் போட்டிக்கழைத்து அவர்களை வென்று தன் அடிமைகளாக்குவதில் ஆனந்தம் கண்டுவந்தார்.இப்படி எங்கெங்கும் வெற்றிகொண்ட அவர் ஆணவம் தலைக்கேறி தஞ்சைக்கு வந்து சரபோஜி மன்னரிடம் சவால்விட்டார்.அரண்மனை ஆஸ்தான வித்வான்கள் அஞ்சினர்:சியாமாவை பாடச் சொல்லலாம் என்றார். சியாமாவுக்கு போட்டியிட விருப்பமில்லை.என்றாலும் சங்கீதமென்பது இறைவனுக்கு ஆராதனையாகப் பாடப்பட வேண்டியது.அதில் அகங்காரம் கூடாதே என்றெண்ணி போட்டிக்கு இசைந்தார்.காமாட்சியை நன்கு உபசரித்து சிந்தாமணி என்னும் அபூர்வ ராகத்தில் ப்ரோவ ஸமயமிதே (காப்பாற்ற இதுவே தருணம்)என்ற பாடலைப் பாடி அம்பாள் குங்குமத்தை அணிந்துகொண்டு அரண்மனை சென்றார்.இந்த சிறுவனா என்னுடன் போட்டியிடுவது!என்று ஏளனம் செய்தார் கேசவய்யா.போட்டி தொடங்கியது. ஒருவருக்கொருவர் மாறி மாறிப் பாடினர்.இறுதியில் கேசவய்யா நான் தோற்றேன் காமாட்சியின் அருள் பெற்ற சியாமாவே வென்றார் என்று கூறி தலைகவிழ்ந்தார்.மகிழ்ந்த மன்னர் சியாமாவுக்கு பரிசுகள் வழங்கினார்.

அதேபோல நாகப்பட்டினம் அப்புக்குட்டி பாகவதரும் அகங்காரம் கொண்டவர்.பலரையும் போட்டிக்கழைத்து அவமானப்படுத்திவந்த அவர் சியாமாவிடம் போட்டியிட்டுத் தோற்றார்.அதன்பின் மைசூர் அரண்மனை சென்ற அப்புக்குட்டி பாகவதர் சியாமாவின் பாடலை அங்கு பாடி சியாமாவின் பெருமையையும் மைசூர் மன்னரிடம் கூறினார்.அதைக்கேட்ட மன்னர் மகிழ்ந்து சியாமாவை மைசூர் வருமாறும் அவருக்கு கனகாபிஷேகம் செய்வதாகவும் சொல்லியனுப்பினார்.ஆனால் சியாமாவோ எனக்கு அரச கனகாபிஷேகம் வேண்டாம் கனக காமாட்சிக்கு சங்கீத அபிஷேகம் செய்யவே விரும்புகிறேன் என்று சொல்லி மறுத்துவிட்டார்.

தியாகையரும் சியாமா சாஸ்திரிகளும் அதிக தலங்களுக்குச் சொல்லவில்லை.சாஸ்திரிகள் பங்காரு காமாட்சி தவிர மீனாட்சி புதுக்கோட்டை பிரஹன்நாயகி திருவாடி தர்மசவர்த்தனி நாகை நீலாயதாட்சி, திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி ஆகியோரைப் பற்றிதான் பாடியுள்ளார்.ஒருசமயம் புதுக்கோட்டை பிரஹன் நாயகிமீது பாடியபோது பெரியவர் ஒருவர் மதுரை மீனாட்சியைப் பாடி அருள்பெறுவாய் என்று ஆசீர்வதித்தார்.மீனாட்சி பற்றி ஏழு பாடல்கள் இயற்றிய நிலையில் இன்னும் இரண்டு பாடல்கள் செய்துகொண்டு மதுரைபோய் நவரத்ன மாலையாகப் பாடுவோம் என்று எண்ணியிருந்தார் சாஸ்திரியார்.அப்போது அந்தப் பெரியவர் சாஸ்திரியின் கனவில் வந்து இன்னுமா மதுரை செல்லவில்லை?என்று கேட்டார்.வியந்த சாஸ்திரிகள் மறுநாளே மீதமிருந்த இரண்டு பாடல்களை இயற்றி மதுரை சென்று அம்பிகைமுன் நவரத்னமாலையாகப் பாடினார்.மகிழ்ந்த அர்ச்சகர் பரிவட்டம் கட்டி சாஸ்திரியை உபசரித்தார்.செல்வந்தரான ரசிகர் ஒருவர் யாளிமுக தம்புராவைப் பரிசளித்தார்.

சாஸ்திரியாரின் மனைவி மகாஉத்தமி.காமாட்சியிடம் வேண்டிக்கொண்டு மஞ்சள் குங்குமத்துடன் சுமங்கலியாய் இவ்வுலக வாழ்வை நீத்தார்.துக்கம் விசாரிக்க வந்த ஒருவரிடம் சாஸ்திரியார் சிலேடையாக அவ சாக அஞ்சி நாள் செத்து ஆறு நாள் என்றார்.வந்தவருக்கு அவர் சொன்னது புரியவில்லை.மனைவி இறந்த ஆறாம் நாள் தன் மகனின் மடிமீது தலைவைத்துப் படுத்தபடி சிவேபாஹி காமாக்ஷி பரதேவதே என்றுகூறி தை மாதம் சுக்ல தசமியன்று(1827)அம்பிகையின் தாள்சேர்ந்தார். கிரகஸ்தர் என்பதால் சமாதி கிடையாது.காமாட்சி அருளாளர் சியாமா சாஸ்திரிகளின் உருக்கமான பாடல்களைப் பணிந்து பாடி தேவியருள் பெறுவோம்.சங்கீதம் தெரியாதவர்கள் அவர் பாடலை துதிபோல சொல்லி நெகிழலாம்.