சனி, 24 ஆகஸ்ட், 2019

சிதம்பர ரகசியம் பகுதி : 15

யோகப் பயிற்சியில் "பிராணாயாமம்" என்ற ஒரு பயிற்சி சொல்லிக் கொடுப்பார்கள். அது சாதாரணமான மூச்சுப் பயிற்சி. ஆஸ்த்மா வியாதியஸ்தர்களுக்கும் இன்னும் சிலருக்கு மூச்சு ஒழுங்கு செய்யவும் பயன்படும் இது. இதற்கும் குண்டலினி யோகம் என்பதற்கும் ரொம்பவே வேறுபாடு உண்டு. மூச்சுப் பயிற்சியே ஆசான் இல்லாமலோ சரியாகச் செய்யாவிட்டாலோ பக்க விளைவுகள் ஏற்படும். மூச்சைச் சரியாக உள்ளடக்காவிட்டாலோ வெளிவிடும் போது தவறாய் விட்டாலோ வயிற்றில் அல்சர் உள்ளவர்களுக்குப் பக்கவிளைவுகள் ஏற்படுகிறது. மற்றவருக்கும் ஏற்படும். இது அனுபவபூர்வமான உண்மை. ஆகையால் குண்டலினி யோகம் என்பது நம் உள்ளே தூங்கிக் கொண்டிருக்கும் மூன்றாவது கண் என்று சொல்லப்படும் ஞானக் கண்ணைத் திறந்து அதன் மூலம் இறைவனும் அவன் சக்தியும் நம்முள்ளேயே உறைவதைக் காண்பது. இதைத் தான் சமாதி நிலை என்றும் சொல்லுகிறார்கள். இனி குண்டலினி யோகத்தைப் பற்றி. இதைப் பற்றி இங்கே எழுதுவது தேவையா எனவும் நினைத்தேன். சிதம்பர ரகசியத்தின் உள் அர்த்தம் புரியத் தேவை எனறே தோன்றியது. நம் உடலில் முதுகெலும்பின் கீழ்ப்பாகத்தில் மூன்று நாடிகள் ஒன்று சேர்கின்றன. தலை உச்சியில் இருந்து கீழ் இறங்கி இருக்கும் சூஷ்மன நாடியானது இட பிங்கள நாடியுடன் அங்கே தான் ஒன்று சேர்கிறது. அது ஒரு பாம்பு போல் சுருட்டிக் கொண்டிருக்கும் எனச் சொல்கிறார்கள். இங்கே இருக்கும் உள்சக்தியை எழுப்பிக் கொஞ்சம் கொஞ்சமாக மேலே கொண்டு வந்து தலை உச்சிக் கொண்டு வந்து சேர்ப்பது தான் குண்டலினி யோகம். இந்தப் பிரபஞ்சமானது எவ்வாறு பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் ஆனதோ அவ்வாறே மனித சரீரமும் பஞ்சபூதங்களின் சேர்க்கையால் ஆனது. ஒவ்வொரு இடத்துக்கும் ஒவ்வொரு சக்தி. அதாவது ஒவ்வொரு பஞ்சபூதங்கள் பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றன. நம் நாட்டுக் கோயில்களும் முக்கியமாய்த் தமிழ் நாட்டுக் கோயில்களும் நம் மனித உடல் அமைப்பைக் கொண்டது. இதை மனதில் இருத்திக் கொண்டு சிதம்பரம் கோயிலின் ரகசியத்தைப் பார்க்கவேண்டும்.

மூன்று நாடிகள் ஒன்று சேரும் இடம் "மூலாதாரம்" எனப்படுகிறது. இது நம் உடலில் முதுகெலும்பின் கீழ் மலத்துவாரத்துக்குச் சற்று மேலே அமைந்துள்ளது. 4 இதழ் கொண்ட அமைப்புடன் கூடிய இதைப் பூமிக்குச் சமமாகச் சொல்கிறார்கள். மஞ்சள் நிறம் கொண்ட 4 இதழ் தாமரைப் பூவுக்குச் சொந்தமானது. இதற்கெனத் தனியான குணங்களும் உண்டு. அவை பின்னால் பார்ப்போம்.
மூலாதாரத்துக்கு 2 விரல் கடை மேலே அமைந்துள்ளது "ஸ்வாதிஷ்டானம்" 6 இதழ் கொண்ட தாமரைப்பூவின் அமைப்புக் கொண்ட இது நீருடன் சம்மந்தம் கொண்டது. உருக்கி வார்த்த சுத்த வெள்ளியின் நிறம் கொண்டது.

மிண்டும் நாளை சந்திக்கலாம்
சிதம்பர ரகசியம் பகுதி : 16
இந்த பகுதி சற்று மாருதலும் கொஞ்சம் தேவையானதும் கூட

மூலாதாரம் : 4 இதழ் கொண்ட தாமரைப்பூவின் வடிவில் இருக்கும் இங்கே தான் குண்டலினி சக்தியானது ஒரு பாம்பைப் போல் உறங்குகிறது. மலத்துவாரத்திற்கு மேல் இருக்கும் இது பூமியின் சக்தியைக் கொண்டது. மஞ்சள் நிறமானது. எலக்ட்ரிகல் சர்க்யூட்டில் உள்ள நெகட்டிவ் போலைப் போல் வேலை செய்யும் இது குண்டலினி சக்தி எழும்புவதற்குக் காத்திருக்கிறது. இட, பிங்கள, சூஷ்மன நாடிகள் மூன்றும் இங்கே தான் ஒன்று சேர்ந்து உள்ளது. அதற்கு இது தான் ஆதாரமாயும் உள்ளது. இதன் அதி தேவதை : விநாயகர், இந்திரன், பிரம்மா, தாகினி. இது நம் உடலில் மலத்துவாரம், மூக்குத் துவாரம், பாதங்கள், ஆடுசதை, தொடையின் மறுபக்கம் காலை நம் இஷ்டத்துக்கு வளையவும், நடக்கவும் வைக்கும் நரம்பு மண்டலம். உணர்வுகள்; மலத்தை வெளியேற்றுதல், பலவிதமான அனாவசிய பயங்கள், குற்ற உணர்ச்சி.

ஸ்வாதிஷ்டானம் : மூலாதாரத்திற்கு இரண்டு விரற்கடை மேலே ப்யூபிக் போனில் அமைந்துள்ளது. 6 இதழ் கொண்ட இது நீரின் சக்தியைக் கொண்டது. வெள்ளியை உருக்கி வார்த்தாற்போல் இருக்கும்.

உணர்வுகள் : மயக்கநிலை, தன்னை மறந்த நிலை என்றும் சொல்லலாம். பாலுணர்வுத் தூண்டுதல் ஏற்படும். இங்கே இருந்து குண்டலினையை மேலே எழுப்ப மிகப் பிரயத்தனப் பட வேண்டும். பாலுணர்வை முற்றிலும் வெல்ல வேண்டும். இதன் அதி தேவதை: வருணன், விஷ்ணு, ராகினி நம் உடலில் உள்ள சிருஷ்டிக்குக் காரணமான டெஸ்டெஸ் மற்றும் ஓவரிஸ் இதனோடு சம்மந்தப் பட்டது. செக்ஸுவல் ஹார்மோன் உற்பத்தி ஆகும் இடம்.

மணிப்பூரம் : தொப்புள் இதன் இருப்பிடம். 10 இதழ் கொண்ட தாமரைப் பூவின் அமைப்புக் கொண்ட இது நெருப்பின் சக்தியுடன் சம்மந்தப் பட்டது. சிவந்த நிறம் கொண்டது.

உணர்வுகள் : தாகம், பசி, பொறாமை, ஏமாற்றுதல், வெட்கம், பயம், அசட்டுத் தனம், துக்கம் போன்ற உணர்வுகளைத் தூண்டும். மன உறுதியுடன் சம்மந்தப் பட்ட இது நல்ல ஜீரண சக்தியைக் கொடுக்கும் உறுப்புக்களையும் தூண்டும்.

அதி தேவதை : வாஹினி, ருத்ரன், லாகினி

உடல் பாகங்கள் : ஜீரண உறுப்புக்கள், கண்கள், பாதங்கள், கணையத்துடன் சம்மந்தப் பட்டு ஜீரண நீர் உற்பத்தி அடையச் செய்கிறது.

இந்த சக்கரங்களுக்கும் நாளமில்லச் சுரப்பிகளுக்கும்( endocrine glands) பல நேரடித் தொடர்புகள் உண்டு.

மூலாதாரம் - adrenal gland
அனாஹதம் - thymus
ஆக்ஞா -pieneal
சஹஸ்ராரா - pitutary
விஷுத்தி - thyroid(இதை நீங்களும்
குறிப்பிட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். )

மணிபூரம் - solar plexus (இதுநாளமில்லாச் சுரப்பி அல்ல. நாபிக்கருகிலுள்ள நரம்புக் கூட்டம் )
ஸ்ரீ நாம பலம்

சரி..... இன்னைக்கு மஹாபாரத பதிவு போடலாம்ன்னு யோசிச்சா கடைசி வரை போதாந்திராளே ஞாபகத்துக்கு வந்துட்டு இருக்கார்... எல்லாம் இந்த பயபுள்ள  காலைல பண்ணின வேலையாத்தான் இருக்கும்ன்னு நினைச்சிட்டு பகவான் நாமம் பற்றி கோடானகோடியில் ஒரு துளி எழுதுகிறேன்...

ஏன்னா ! போதாந்திராள் நாமத்துக்காகவே வாழ்ந்து அதை பரப்பி அந்த நாமமாகவே ஆனவர். தன் குரு ஸ்தானத்தில் செய்து கொண்ட சபதத்திற்க்காக தினமும் 100008 ராம நாமம் சொன்னவர். இவரும் நெரூர் சதாசிவ ப்ரம்மேந்திரரும் ஆத்ம நண்பர்கள். சரி... லட்சத்து எட்டாயிரம் ஜபம்தானே அப்படின்னு சும்மாவும் சொல்ல முடியாது. ஏன்னா ஒரு நாளைக்கே 86400 நொடி தான்... அப்ப நீங்களே யோசிச்சுக்கோங்க... இவருதான் இப்படின்னா நம்ம தியாக பிரம்மம் தினமு ம் 125000 ராம நாம ஜபம் முடிச்சார். இப்படி 21 வருடத்தில் 96 கோடி ஜெபத்தை சங்கல்பித்து முடித்தார்...

அந்த நாம சாகரத்தின் மதிப்பு அப்படி....

 போதாந்திராள் பகவன் நாம ரஸாயனம் அப்படிங்கர புத்தகத்தில் சொல்லிருப்பார்...

" ஸதானந்த: ஸ்ரீமான் அனுபதிக்காருண்யவிவாஸோ! ஜகத்ஷேமமாய ஸ்ரீ ஹரிகிரிஸ்ரூபம் வித் ரூதவான்!... " இப்படிங்கர ஸ்லோகத்தில் சொல்லுவார்...

காரணமேதுமின்றி கருணை செய்பவருமான நிர்வ்யாஜ கருணா மூர்த்தியான பகவான் மஹா விஷ்ணு, பரமசிவன் என்ற ரூபம் தரித்தாலும்... இது உலகை உய்விக்க போதாதென்று நினைத்து விஷ்ணு, சிவன் நாம ரூபமாக எழுச்சியுடன் நின்றாராம். (பகவான் நம்ம மேலே கருணை செய்யருக்கு காரணமே வேண்டியதில்லைங்கரார்).

விஷ்ணு சஹஸ்ரநாமம் முன்னுரையில் சொல்லும் போதும்... இதர தர்மத்தை நோக்குங்கால், அவைகளை விட சிறந்ததாக நாம சங்கீர்த்தனம் எல்லாவற்றையும் விட உயர்ந்தது என்று சொல்லப்படுகிறது. ப்ரஹமாண்ட புராண ஆரம்பத்தில் "ஹரி கீர்த்தனம்' என்ற ஸ்துதிக்கு உபதேசம் பெறுதல் என்ற பேச்சுக்கே இடமில்லை. சுத்தம் அசுத்தம் என்ற காரணமும் இல்லை ஆதலால் உடனே சொல்லவேண்டும் என்று சொல்லப்படுகிறது.  அதாவது " ச ஸ்மஸானச்ண்டாலவாடிகாதினிஷித்ததேஸேஸு ந கார்யம் அனிஷித்தேஸேஷ்வேவ கார்யமிதி....." அப்படிங்கர வாக்கியத்தில், இடு/சுடுகாடு, தீண்டத்தகாதோர் வசிக்கும் இடம், புனிதமான இடம், ஜனன, மரண தீட்டுக்கள், நள்ளிரவு, காலை, மாலை என்ற கால நியதியும் இந்த நாம சங்கீர்த்தன ஜபத்திற்க்கு இல்லை. கடுமையான கலிதோஷம் வாசுதேவரின் நாம ஸங்கீர்த்தனத்தால் நீரில் உப்பு கரைவது போலே கரைகிறது.

"ஹரி" என்னும் இரண்டு எழுத்துக்கள் ஒர் எழுத்தாக சொலப்படும் போது நூற்றுக்கணக்கான ஜென்மங்களில் சேற்றுவைக்கப்பட்ட பாவகுவியலை கூட பஞ்சு பொதியை நெருப்பு நிர்மூலமாக்குவது போல பொசுக்கிவிடும் என்று போதாந்திராள் எடுத்துக்காட்டுகிறார். பத்து அஸ்வ மேத யாகம் செய்தவன் கூட மறுபிறவி அடைவான். ஆனால் கிருஷ்ணருக்கு நமஸ்காரம் செய்தவனுக்கு மறுபிறவி இல்லவே இல்லை. கிரஹண காலத்தில் கோடி கோதானம் செய்தல், பிராயகை, காசி, கங்கை முதலிய புண்டணிய ஷேத்திரங்களில் கல்பகோடி காலங்களில் வசித்தல், பல்லாயிரக்கணக்கான வேள்வி செய்தல், மேரு மலையளவு தங்கம் தானம் செய்தல் இவையனைத்தும் " கோவிந்த " சப்தத்திற்க்கு இணையாகா!!! பல்லாயிரக்கணக்கான கொலைகள் செய்த்தல், கடுமையான மதுபானங்கள், கோடிக்கணக்கான ஆசானின் மனைவியை நாடுதல் எண்ணற்ற திருட்டுக்கள் என்ற இவை அனைத்து பாபங்களும் "கோவிந்தா" என்ற நாம சங்கீர்த்தனத்தால் ஒரு நொடியில் அழிக்கப்பட்டு விடுகின்றன.

"நரகே பச்யமானஸ்து" நரகத்தில் வாட்டப்படுபவனுக்கு என்று சொல்லும் போது பூஜை செய்த்தல் என்று சொல்லப்படவில்லை. " கிருஷ்ணருக்கு நமஸ்காரம் " என்று சொன்ன உடனேயே நமஸ்காரம் செய்தல் என்ற செய்கையின் பலன் சென்றடைந்து காப்பாற்றபடுகிறான். ரிக்வேதத்தில் "ஆஸ்ய ஜானந்தோ நாம சித்விவக்தன மஹஸ்தே விஷ்ணோ ஸுமதிம் பஜாமஹே" என்று சொல்லும் பிரஹரணத்தில், ஒரு தடவை உச்சரிக்கப்படும் நாம சங்கீர்த்தனம் தங்கு தடையின்றி ஆத்ம ஸாக்‌ஷாத்காரம் என்ற ஞானத்திற்க்கு வழி வகுக்கும் என்று கூறப்படுகிறது. ஸ்ருதி, ஸ்மிருதி, புராணத்தில் எந்த நாமம் ஆத்யாத்மைகம், ஆதிதைவீகம், ஆதிபூத என்ற தாபங்களை தாண்டுவிக்குமோ எல்லாவித பாபங்களை நீங்க செய்யுமோ எல்லா பாபத்திற்க்கும் பிராய்ச்சித்தமாக அமைகிறதோ இதற்கு மேற்பட்ட புண்ணியம் மூவுலகிலும் இல்லை என்று சொல்லப்படுகிறதே அதுவே "ராம" நாமமாகும் என்று கூறப்படுகிறது.

ஸ்கந்த புராணத்தில் வரும் காசி காண்டத்தில் சொல்லப்படுவது போல ராம நாமமே விஸ்வ நாதர் வாக்கினால் வந்து அனைத்து ஜீவராசிகளை முக்தி அடைய செய்கின்றது. ராம நாமம் அசுரர்களை நடுங்க் வைக்கும் என்று வால்மீகி பகவானும் ராமாயணத்தில் பதிவு செய்கிறார். அதனாலே இது தாரக மந்திரம் என்று சொல்லப்படுகிறது. இதற்க்கு கால நேர விதி நியதி என்ற எந்த தடையுமில்லை. எந்த காலத்திலும் ஜெபிக்கலாம். தியாகராஜர் கீர்த்தனையில் குறிப்பிடும் போது " ராம! உன் நாம பலம் யாருக்கு தெரியும்? ஈஸ்வரரை தவிர? " என்பார். பரமேஸ்வரருக்கு மட்டுமே ராம நாமத்தை பற்றி தெரியுமாம்!!!!.....

"கிரக பலமேமி ராம! நின்னு அனுகிரஹபலமுந்தி"---  கிரஹபலம் என்னை என்ன செய்யும் ராம உன்னுடைய அனுகிரஹ பலம் இருக்கும் போது அப்படின்னு தியாக பிரம்மம் பாடினது போல... எல்லா கிரஹ பிரச்சனைகளை ராம நாம பலம் போக்கிவிடும்... ஆதலால் அனைவரும் தினமும் ஒரு குறிப்பிட்ட 5-10 நிமிடமாவது நாம ஜெபம் செய்து புண்ணியம் தேடிக்கொள்ளுங்கள். நாம ஜெபத்தின் சிகரம் தொட்ட நாம போதாந்திராள் மற்றும் தியாகபிரம்மம் அதிஷ்டானங்களை உங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது தரிசித்து அந்த நாம சாம்ராஜ்யத்தில் இணைய ஆசீர்வாதிக்க பிராத்தனை செய்யுங்கள்.

நாம போதாந்திராள் அதிஷ்டானம் கும்பகோணம் மாயவரம் சாலையில் திருவிடைமருதூர் அடுத்து கோவிந்தாபுரம் என்னும் ஊரில் உள்ளது.

தியாகபிரம்மம் அதிஷ்டானம் திருவையாறு தியாகராஜர் கோவிலுக்கு எதிரில் உள்ளே ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம
கிருஷ்ணர் துதி!

கிருஷ்ணாய வாஸுதேவாய தேவகி நந்தநாய
நந்தகோப குமாராய கோவிந்தாய நமோநம:

பொருள் : தேவகிக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பவனும், வாசுதேவனும், நந்தகோபனின் குமாரனும், கிருஷ்ணனுமாகிய கோவிந்தனை வணங்குகிறேன்.

நம: பங்கஜநாபாய நம: பஞ்சத மாலிநே
நம: பங்கஜ நேத்ராய நமஸ்தே பங்கஜாஸ்ரியே

பொருள் : நாபியில் தாமரையை உடையவரும், தாமரை மாலையைத் தரித்தவரும், தாமரை போன்ற கண்களை உடையவரும், அழகான பத்ம ரேகையைக் கால்களில் உடையவருமான தங்களைப் பலதடவை வணங்குகிறேன்.

மூகம் கரோதி வாசாலம் பங்கும் வங்கதே கிருஹம்
யத்கிருபா பரமம் அஹம் வந்தே பரமானந்த மாதவம்

பொருள் : பேசவே இயலாதவரையும் கூட பேச்சாற்றல் மிக்கவராக மாற்றக் கூடியவரும், குடிசையையே மாளிகையாக்கக் கூடியவருமான அந்தப் பரமானந்த மாதவனின் கருணையை வணங்குகிறேன்.

சங்க சக்ர கதாபாணே த்வாரகா நிலையார்ச்சுத:
கோவிந்த புண்டரீகாக்ஷ ரக்ஷமாம் சரணாகதம்

பொருள் : சங்கு, சக்கரம், கதை ஆகியவற்றைத் தரித்தவரும், த்வாரகாபுரியின் அதிபரும், தாமரை போன்ற கண்களை உடையவரும், பசுக்களைப் பரிபாலிக்கிறவருமான பிரபுவே, தங்களைச் சரணடைந்த என்னைக் காப்பாற்றுங்கள்.

த்வம் ஆதி அந்தோ பூதானாம் த்வமேவ ச பராகதி:
விஸ்வாத்மன் விஸ்வ ஜநக: விஸ்வகர்த்த: பிரபோவ்ய:

பொருள் : உலகத்தை தேகமாகக் கொண்டவரே, உலகத்தைப் படைத்தவரே, உலகத்தை அழிப்பவரே, ஹே பிரபோ, அழிவற்றவரே, பிராணிகளின் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் என (ஆக்கல், காத்தல், அழித்தல்) முத்தொழிலையும் செய்பவரே உம்மை வணங்குகிறேன்.

யத்ர யோகேஸ்வர: கிருஷ்ணோ
யத்ர பாத்ரோ தனுர்த்தர:
பத்ர ஸ்ரீர் விஜயோ பூதிர்
த்ருத்வா நீதிர் மதிர் நம:

பொருள் : எங்கு யோகேஸ்வரனான ஸ்ரீ கிருஷ்ண பகவான் இருக்கிறாரோ, எங்கு வில்லேந்திய வீரன் அர்ஜுனன் இருக்கிறானோ அங்கெல்லாம் மகாலட்சுமியின் கடாட்சத்தோடு மிகுந்த ஜெயமும், அழியாத ஐஸ்வர்யமும், நீதியும் நிச்சயம் இருக்கும்.

தேவகி ஸூத கோவிந்த வாஸுதேவ ஜெகத்பதே
தேஹிமே தநயம் கிருஷ்ணா த்வாம் அஹம் சரணம் கத:

பொருள் : தேவகியின் மகனான கோவிந்தனே வாசுதேவனே, உலகத்தின் தலைவனே எனக்கு ஒரு மகனைத் தந்து அருள்வீர்.

பகவான் கூறியது

நாகம் வஸாமி வைகுண்டே நயோகி ஹ்ருதயே
தத்ர நிதஸ்யாமி யத்ர காயந்தி மத் பக்தா ! நிருத்யே !!

பொருள் : நான் எனது இருப்பிடமான வைகுண்டத்தில் வெகுகாலம் வசிப்பதில்லை. யோகிகளின் இதயத்திலும், வசிப்பதில்லை. எந்த இடத்தில் என் பக்தர்கள் பாடியும் ஆடியும் களிப்படைகிறார்களோ அந்த இடத்தில் நான் வசிப்பேன். அவர்கள் மனதில் நிறைந்திருந்து அவர்கள் வேண்டுவதை அருள்வேன். இது நிச்சயம் !
-----------------------------------------
ராகு வேளையில் துர்க்கை, காளியை வழிபடுவது ஏன்?

ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு அதிதேவதை உண்டு. அதன்படி ராகுவிற்கு துர்க்கை அதிதேவதை. ராகுதோஷம், திருமணத்தடை, புத்திரப்பேறின்மை நீங்க காளி, துர்க்கை வழிபாட்டை ராகுகாலத்தில் மேற்கொள்வது நல்லது.
-----------------------------------------
மூன்று வேளை வணங்க வேண்டிய தேவியர் !

காயத்ரி காலை வணக்கத்துக்குரியவள். இவள் ரிக் வேதத்தின் தலைவியாவாள். வீட்டில் வளர்க்கும் ஹோமத் தீக்கு இவளே அதிபதி. நான்கு முகங்கள், எட்டுக் கரங்களுடன் அன்ன வாகனத்தில் காட்சி தருபவள்.

நண்பகல் பிரார்த்தனைக்குரியவள் சாவித்ரி. யஜுர் வேதம் இவளுக்குரியது, இவள் நான்கு முகங்களையும் அதில் பன்னிரு விழிகளையும், நான்கு கரங்களையும் கொண்டவள். இவளது வாகனம் எருது.

அந்தி வேளை வணக்கத்துக்குரியவள் சரஸ்வதி. சாமவேதம் இவளுக்குரியது. ஆஹ்வனீய தீயின் ஒளி இவள். ஒற்றை முகமும் நான்கு கரங்களும் கொண்டு அருள்பாலிப்பவள். இவளது வாகனம் கருடன்.
-----------------------------------------
ராகு வேளையில் துர்க்கை, காளியை வழிபடுவது ஏன்?

ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு அதிதேவதை உண்டு. அதன்படி ராகுவிற்கு துர்க்கை அதிதேவதை. ராகுதோஷம், திருமணத்தடை, புத்திரப்பேறின்மை நீங்க காளி, துர்க்கை வழிபாட்டை ராகுகாலத்தில் மேற்கொள்வது நல்லது.
-----------------------------------------
மூன்று வேளை வணங்க வேண்டிய தேவியர் !

காயத்ரி காலை வணக்கத்துக்குரியவள். இவள் ரிக் வேதத்தின் தலைவியாவாள். வீட்டில் வளர்க்கும் ஹோமத் தீக்கு இவளே அதிபதி. நான்கு முகங்கள், எட்டுக் கரங்களுடன் அன்ன வாகனத்தில் காட்சி தருபவள்.

நண்பகல் பிரார்த்தனைக்குரியவள் சாவித்ரி. யஜுர் வேதம் இவளுக்குரியது, இவள் நான்கு முகங்களையும் அதில் பன்னிரு விழிகளையும், நான்கு கரங்களையும் கொண்டவள். இவளது வாகனம் எருது.

அந்தி வேளை வணக்கத்துக்குரியவள் சரஸ்வதி. சாமவேதம் இவளுக்குரியது. ஆஹ்வனீய தீயின் ஒளி இவள். ஒற்றை முகமும் நான்கு கரங்களும் கொண்டு அருள்பாலிப்பவள். இவளது வாகனம் கருடன்.
-----------------------------------------
பாவம் போக்கும் 12 ஜோதிர்லிங்க துதி!

புனிதமும் அழகும் நிறைந்த சவுராஷ்டிர தேசத்தில் ஜோதிமயமாக இருப்பவரும்; தலையில் பிறைச் சந்திரனைச் சூடியவரும்; எல்லையற்ற கருணை காரணமாக எல்லாருக்கும் பக்தியை அளிப்பதற்காகவே அவதாரம் செய்தவருமாகிய சோமநாதர் என்ற சிவலிங்கத்தைச் சரணடைகிறேன். மேலான இமயமலையின் தாழ்வுப் பிரதேசத்தில், கேதாரம் என்ற இடத்தில் ஆனந்தமாகக் குடிகொண்டிருப்பவரும்; சிறந்த முனிவர்களாலும் தேவர்களாலும் அசுரர்களாலும் யட்சர்களாலும் நாகர்களாலும் எப்போதும் பூஜிக்கப்படுபவரும்; இரண்டற்றவருமான கேதாரேஸ்வரர் என்ற சிவலிங்கத்தைத் துதிக்கிறேன்.

மிக உயர்ந்த ஸ்ரீசைலம் என்ற மலையில், அறிஞர்களின் சத்சங்கத்தில் மிகவும் மகிழ்ச்சியோடு வசிப்பவரும்; சம்சாரம் என்னும் பெருங்கடலைக் கடப்பதற்கு உதவும் தோணி போன்றவருமாகிய மல்லிகார்ஜுனர் என்ற சிவலிங்கத்தை வணங்குகிறேன். நல்லவர்களுக்கு முக்தி அளிப்பதற்காக அவந்திகா (உஜ்ஜயினி) நகரத்தில் அவதாரம் செய்தவரும்; தேவர்களுக்குத் தலைவனுமாகிய மகாகாலேஸ்வரர் என்ற சிவலிங்கத்தை எனக்கு அகால மரணம் நேராமல் இருக்கும் பொருட்டு வணங்குகிறேன்.  நர்மதை நதி பாயும் தூய்மையான இடத்தில், நல்லவர்களைக் காக்க எப்போதும் மாந்தாத்ரு என்ற ஊரில் வசிப்பவரும்; ஓங்காரேஸ்வரர் என்ற அத்விதீயருமான (இரண்டற்ற) சிவபெருமானை வணங்குகிறேன்.

வடகிழக்கு திசையில் கொழுந்துவிட்டு எரியும் தீ ஜ்வாலை உள்ள மயானத்தில் வசிப்பவரும்; கிரிஜா என்ற பார்வதிதேவியுடன் எப்போதும் சேர்ந்திருப்பவரும்; தேவர்களாலும் அசுரர்களாலும் வணங்கப்பட்ட திருவடிகளை உடையவருமாகிய வைத்தியநாதர் என்ற சிவலிங்கத்தை வணங்குகிறேன். தென்திசையில் மிகவும் அழகிய ஸதங்கம் என்ற நகரத்தில், நன்கு அலங்கரிக்கப்பட்ட அங்கங்களோடு நிகரற்ற செல்வங்கள் நிறைந்தவரும்; உயர்ந்த பக்தியையும் முக்தியையும் வழங்கும் ஒரே தெய்வமாகத் திகழ்பவருமாகிய நாகேஸ்வரர் என்ற சிவலிங்கத்தைச் சரணடைகிறேன்.

தாமிரபரணி நதி கடலில் கலக்கும் இடத்தில், எண்ணற்ற அம்புகளைக் கொண்டு அணையைக் கட்டிய ஸ்ரீராமராவ் பிரதிஷ்டை செய்து பூஜிக்கப்பட்ட ராமேஸ்வரர் என்ற சிவலிங்கத்தை முறைப்படி வணங்குகிறேன்.

அழகாகவும் விசாலமாகவும் இருக்கும் இளாபுரம் என்ற இடத்தில் விளங்குபவரும்; பெருங்கருணையைத் தமது இயல்பாகக் கொண்டவரும்; கிருஷ்ணேஸ்வரர் (குசுருணேஸ்வரர்) என்ற பெயர் பெற்ற வருமாகிய பரமேஸ்வரனைச் சரணடைகிறேன்.

புனிதமான ஸஹ்ய மலையில், பவித்ரமான கோதாவரி நதிக்கரையில் எழுந்தருளியிருப்பவரும்; எவருடைய தரிசனத்தால் எல்லாப் பாவங்களும் விலகி விடுகின்றனவோ, அந்த த்ரியம்பகேஸ்வரர் என்ற சிவலிங்கத்தைத் துதிக்கிறேன்.

டாகினீ, சாகினீ முதலிய பூதகணங்கள் வசிக்கும் இடத்தில், அரக்கர்களால் வணங்கப்படுபவரும்; என்றும் பீமேஸ்வரர் என்று புகழப்படுபவரும்; பக்தர்களுக்கு நன்மை செய்பவருமாகிய சங்கர பகவானுக்கு நமஸ்காரம் செய்கிறேன்.

காசியில் ஆனந்தபவனத்தில் பேரானந்தத்துடன் வசிப்பவரும், மகிழ்ச்சிக் குவியலாக விளங்குபவரும்; பாவம் அகற்றுபவரும்; வாரணாசியின் தலைவரும்; ஆதரவற்ற அநாதைகளுக்கு நாதனுமாகிய விஸ்வநாதரைச் சரணடைகிறேன்.
ஆதி சங்கரர் அருளிய நிர்வாணாஷ்டகம்!

சிவ வழிபாட்டின் உன்னத நோக்கத்துக்கு, பயனுக்கு நம் வேதாந்திகளின் முதல்வர் - மதச் சீர்திருத்தம் செய்தவரும் ஷண்மத ஸ்தாபகருமான ஆதி சங்கரர் அருளிய நிர்வாணாஷ்டகம் என்னும் பாக்களே சிறந்த சான்று. ஆதிசங்கரர் அருளிய ஆனந்த நிலையின் ஆறு சுலோகங்கள் : (நிர்வாணாஷ்டகம்)

1. மனமும் நானல்ல; புத்தியும் நானல்ல;
நான் என்ற அகங்காரமும் நானல்ல;
அறிவும் சக்தியும் நானல்ல.
உடலின் அங்கங்களும் நானல்ல; ஆகாயம், பூமியும் நானல்ல;
ஜோதியும் நானல்ல; காற்றும் நான் அல்ல.
ஆனந்த மயமான சிவனே நான் - நானே சிவன்.

2. உச் சுவாச, நிச் சுவாச மூச்சினால் ஆனவன் அல்ல, நான்.
கப, பித்தம் முதலிய ஏழு தாதுக்களால் ஆனவனுமல்ல; பஞ்ச (ஐந்து) கோசத்தால் ஆனவனும் அல்ல.
வாக்க நான் அல்ல, கை கால்களும் நான் அல்ல.
ஆனந்த மயமான சிவனே நான் - நானே சிவன்.

3. துவேஷம் எனக்கில்லை; ராகமும் (அன்பும்) எனக்கு இல்லை. லோபமும் எனக்கில்லை; மோகமும் எனக்கில்லை.
மதமும் எனக்கில்லை, மாத்சர்யமும் (சினமும்) எனக்கில்லை, தர்மத்துக்கும் தொடிசு இல்லை, சம்பத்துக்கும் சம்பந்தமில்லை.
ஆனந்தமயமான சிவனே நான் - நானே சிவன்.

4. புண்ணிய பாவமும் எனக்கேது? ஓதுவது, தீர்த்தாடனம் எனக்கேது? வேதம், வேள்வி எனக்கேது? சுகம் ஏது? துக்கம் ஏது?
ஹவிஸ் நானல்ல; அனுபவிக்கிறவனும் நானல்ல; அனுபவிக்கப்படுபவனும் நானல்ல!
ஆனந்தமயமான சிவனே நான்; நானே சிவன்.

5. மிருத்யுவிடம் (மரணத்திடம்) எனக்குப் பயமில்லை. ஜாதி வித்தியாசம் எனக்கில்லை.
தகப்பனும் இல்லை; தாயும் இல்லை; பிறவியும் எனக்கில்லை;
பந்துவும் இல்லை; சினேகிதனும் எனக்கில்லை. ஆசானும் இல்லை; சிஷ்யனும் எனக்கில்லை. ஆனந்தமயமான சிவனே நான் - நானே சிவன்.

6. சஞ்சலம் இல்லாதவன்; உருவங்களால் கட்டுப்படாதவன்; இந்திரியங்கள் அனைத்தையும் ஜயித்தவன்; பற்றை அறவே துறந்தவன்; எனக்கு முக்தியே.

பந்தமோ விஷயமோ இல்லை. ஆனந்தமய சிவனே நான் - நானே சிவன். சொல்லும் அதன் பொருளும் போல் இணைபிரியாத ஜகத்துக்கே தாய் தந்தையராக விளங்கும் பார்வதி பரமேசுவரரை நான் வணங்குகிறேன். சொல்லும் அதன் பொருளும் நான் நன்றாக அறிவதற்கு அருள வேண்டும்.
-----------------------------------------
இதை படிச்சாலே மோட்சம் தான்!

ஏகாதசி விரதமிருந்தால் மோட்சம் கிடைக்கும். வைகுண்ட ஏகாதசியன்று, மரணம் அடைபவர்கள் எவ்வளவு பாவம் செய்தவராக இருந்தாலும், வைகுண்டத்துக்கு சென்று விடுவார்களாமே... எனக்கு அந்த விரதம் பற்றி எதுவுமே தெரியாதே! சாப்பிடக்கூடாது, தூங்கக்கூடாது என்கின்றனர். இப்படி, கடுமையாக உடலை வருத்திக் கொண்டால் மட்டும் மோட்சம் கிடைத்து விடுமா என்ன... என்று, பலர் புலம்புவதை கேட்டிருக்கிறோம். ஆனால், இதெல்லாம் இல்லாமலே, பரந்தாமனை அடைந்து விட்டது ஒரு தயிர்ப்பானை. கிருஷ்ணன், ஒரு வீட்டில் வெண்ணெய் திருடிக் கொண்டிருந்தான். அவ்வீட்டுப் பெண், கிருஷ்ணனை விரட்டி வந்தாள். அவன் அருகில் இருந்த ஒரு வீட்டுக்குள் புகுந்து, அங்கிருந்த தன் நண்பன், ததிபாண்டனிடம், கெஞ்சிக்கூத்தாடி, ஒரு பானைக்குள் ஒளிந்து கொண்டான். நண்பனும் கிருஷ்ணனை மறைத்துக் கொள்ளும் விதமாக, பானை மீது ஏறி அமர்ந்து கொண்டான். அந்தப்பெண், அங்கு வந்து, கிருஷ்ணனைத் தேடிய போது, இங்கு வரவில்லையே... என்று சொல்லி விட்டான் நண்பன். அவள் போனதும், நண்பா... பானையை விட்டு இறங்கு. நான் வெளியே வர வேண்டும்... என்றான் கிருஷ்ணன்.

முடியாது. எனக்கு மோட்சம் அளிப்பதாக வாக்கு கொடு. அப்போது தான் இறங்குவேன்... என்று நிர்ப்பந்தித்தான் ததிபாண்டன். வேறு வழியில்லாமல், கிருஷ்ணனும், உனக்கு மட்டுமல்ல. இந்த பானைக்கும் சேர்த்தே மோட்சம் தருகிறேன். முதலில் பானையை விட்டு இறங்கு... என்று வாக்குறுதி அளித்தான். ஆபத்து காலத்தில், உதவி செய்த காரணத்தால், இப்படி, ஒரு ஜடப்பொருள் கூட மோட்சத்தை அடைந்திருக்கிறது. இந்தக் கதையை தெரிந்து வைத்திருந்தார், ஸ்ரீரங்கம் கோவிலில் அர்ச்சகராக இருந்த பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்.
அவர், ஒருமுறை, ரங்கநாதரிடம், ரங்கா... எனக்கு மோட்சம் தா... என்றார். திடீரென ஏன் இப்படி கேட்கிறீர்? என்று ஆச்சரியத்துடன் கேட்டார் ரங்கன். அதென்னவோ தெரியவில்லை. எனக்கு இன்றே மோட்சம் வேண்டும்.... மோட்சம் போவதென்றால் சாதாரண விஷயமா... இந்த உலகம் பொய்யானது என்ற ஞானம் உமக்கு வந்து விட்டதா... ஞானயோகம், கர்மயோகம், பக்தியோகம் பற்றியெல்லாம் தெரியுமா? என்று கேட்டார்.

தெரியாது... போகட்டும். யாருக்காவது அன்னதானம் செய்திருக்கிறீரா அல்லது என் பக்தன் தங்க இடவசதியாவது செய்து கொடுத்தீரா?
இல்லை... ரங்கநாதனுக்கு கோபம் வந்து, பாம்பு படுக்கையை விட்டு, எழுந்து விட்டார். ரங்கநாதனை அமர்ந்த கோலத்தில், அநேகமாக பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் மட்டும் தான் தரிசித்திருப்பார். ஏனய்யா பிள்ளை பெருமாள் ஒன்றுமே செய்யாமல், மோட்சம் கேட்கிறீரே... அதெப்படி தர முடியும்? என்று கேட்டார் ரங்கன். ஐயங்காரும் சளைக்காமல், ஏ பெருமாளே... என்னை இத்தனை கேள்விகள் கேட்கிறாயே... ஒரு பானைக்கு, எதை வைத்து மோட்சம் கொடுத்தாய்... அதற்கென்ன பக்தியோகம், கர்மயோகம் எல்லாம் தெரியுமா... ஒரு ஜடப் பொருளுக்கே மோட்சம் தந்த நீ, எனக்கு தர மறுப்பதேன்? என்றார் விடாக்கண்டனாய். ரங்கநாதனுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. திரும்பவும் படுத்து விட்டார். இந்தச் சம்பவம் மூலம் நாம் அறிவது, ஆன்மிக விஷயங்களை, தெய்வங்களின் வரலாறை நாம் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம், இவன், உலகியல் வாழ்வில் என்ன தான் நாட்டம் கொண்டவனாக இருந்தாலும், பக்தி சமாசாரங்களையும் காது கொடுத்து கேட்டிருக்கிறான். இவனை மோட்சத்துக்கு அனுப்பலாம் என்று, பரந்தாமன் முடிவு செய்வான். எனவே, ஆன்மிக நூல்களை நிறைய படியுங்கள். உடலை வருத்தி பட்டினி கிடப்பது என்பதெல்லாம், இரண்டாம் பட்சம் தான்!
-----------------------------------------
சத்ய நாராயண விரதமுறையும் பலனும்!

அனுஷ்டிக்க விதிமுறைகள்: ஆந்திராவில் மிகவும் பிரபலமானது சத்ய நாராயண விரதம். சமீப காலமாக தமிழக பக்தர்களும் இதைகடைபிடிக்கின்றனர். மகாவிஷ்ணுவே சத்ய நாராயணர். இந்தவிரதத்தை ஒவ்வொரு பவுர்ணமியன்றும் கடைபிடிக்க வேண்டும். (பவுர்ணமியன்று பெண்களுக்கு வசதிப்படாவிட்டால், தமிழ் மாதப்பிறப்பு அல்லது வளர்பிறை ஏகாதசி திதியன்று விரதமிருக்கலாம்) இந்தவிரதம் எளிமையானது. இதைகணவனும், மனைவியும் சேர்ந்து அனுஷ்டிக்க வேண்டும். அன்று பகலில் சாப்பிடக் கூடாது. மாலை 4.30-6.00 மணிக்குள் உறவினர்கள், நண்பர்கள், அயல்வீட்டாரை வீட்டுக்கு வரவழைக்க வேண்டும். சத்ய நாராயணர் படத்தின் முன், நெய் விளக்கேற்ற வேண்டும். பழம், பால், வெல்லம், தேன், கோதுமை நெய் அப்பங்களை சத்திய நாராயணருக்கு நைவேத்யம் செய்ய வேண்டும். அந்நாளில், சத்யநாராயணர் விரதக்கதைகளை படிக்க வேண்டும். இந்தவிரதத்தைகடைபிடிக்க இத்தனை வாரம் தான் நியதி இல்லை. ஒவ்வொரு பவுர்ணமி அன்றும், தொடர்ந்து அனுஷ்டித்தால், நம்மை ஜெயிக்க யாரும் இல்லை என்ற நிலை உருவாகும். பணவசதி பெருகும். புதுமணத்தம்பதிகள், வாழ்வின் துவக்கம் முதலே இதைதகடைபிடித்தால் தீர்க்காயுள் உள்ள புத்திசாலித்தனமான குழந்தைகள் பிறப்பார்கள். வசதி உள்ளவர்கள், கலசம் வைத்து புரோகிதர்களைதகொண்டு இந்தபூஜையை நடத்தலாம்.

ஆந்திராவில் சத்தியநாராயணர்: ஆந்திர மக்கள் சத்யநாராயண விரதத்தை தவறாமல் கடைபிடிக்கின்றனர். செல்வந்ததம்பதிகள், இந்தவிரதம் துவங்குவதற்கு முன்னதாக ஆறுமாதங்கள் வரை, ஏதாவது ஒரு புனிதத்தலத்தில் தங்கி வந்து இந்தவிரதத்தைதுவங்குகிறார்கள். விரதபூஜையை, பவுர்ணமியன்று பிரதோஷ நேரத்தில் (மாலை 4.30-6.00) நடத்துகிறார்கள். அன்று, மாலையில் அன்னதானம் செய்யும் நோக்கத்தில் பெருமளவு சமைக்கிறார்கள். சமைத்ததில் கால் பங்கை மட்டும் தங்களுக்கும், தங்கள் உறவினர்களுக்கும் எடுத்துதகொண்டு, மீதியை தானம் செய்து விடுகிறார்கள்.

பணம் வரப்போகுது சொல்பவர் நாரதர்: கலியுகத்தில், மனிதனுக்கு தேவை அதிகம். அவனது தேவைகளை நிறைவேற்ற பணம் வேண்டும். அது கிடைக்க எளிய வழி சத்ய நாராயண விரதம் என்கிறார் நாரதர்.சுதானந்தர் என்பவர் இந்த விரதத்தை முறையாகக் கடைபிடித்ததால், மறுபிறவியில் சுதாமா (குசேலர்) என்னும் பெயரில் பிறந்து, கிருஷ்ண தரிசனத்துடன் பெரும் செல்வத்தைப் பெற்றார். விறகு விற்றுக் கொண்டிருந்த பல்லன் என்ற தொழிலாளி, இந்த விரத மகிமையால், மறுபிறவியில் குகன் என்னும் பெயரில் பிறந்து ராமதரிசனம் பெற்று, அழியாச் செல்வமான முக்தியை அடைந்தான். உல்காமுகன் என்ற அரசரோ, இதை முறையாகச் செய்து, மறுபிறவியில் தசரதராகப் பிறந்து 60ஆயிரம் ஆண்டுகள் சகல செல்வத்துடன் வாழும் பாக்கியம் பெற்றதுடன், ராமனுக்கே தந்தையும் ஆனார்.  ஸ்காந்த புராணத்தில் (கந்த புராணம்) வரும் ஸ்லோகம் ஒன்றில், இந்த விரதத்தை அனுஷ்டித்தால், கஷ்டங்கள் குறையும். பணமும், தானியமும் பெருகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் வரும். பெற்றோருக்கு நற்பெயர் வாங்கித்தரும் குழந்தைகள் பிறக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.
-----------------------------------------
சத்ய நாராயண விரதமுறையும் பலனும்!

அனுஷ்டிக்க விதிமுறைகள்: ஆந்திராவில் மிகவும் பிரபலமானது சத்ய நாராயண விரதம். சமீப காலமாக தமிழக பக்தர்களும் இதைகடைபிடிக்கின்றனர். மகாவிஷ்ணுவே சத்ய நாராயணர். இந்தவிரதத்தை ஒவ்வொரு பவுர்ணமியன்றும் கடைபிடிக்க வேண்டும். (பவுர்ணமியன்று பெண்களுக்கு வசதிப்படாவிட்டால், தமிழ் மாதப்பிறப்பு அல்லது வளர்பிறை ஏகாதசி திதியன்று விரதமிருக்கலாம்) இந்தவிரதம் எளிமையானது. இதைகணவனும், மனைவியும் சேர்ந்து அனுஷ்டிக்க வேண்டும். அன்று பகலில் சாப்பிடக் கூடாது. மாலை 4.30-6.00 மணிக்குள் உறவினர்கள், நண்பர்கள், அயல்வீட்டாரை வீட்டுக்கு வரவழைக்க வேண்டும். சத்ய நாராயணர் படத்தின் முன், நெய் விளக்கேற்ற வேண்டும். பழம், பால், வெல்லம், தேன், கோதுமை நெய் அப்பங்களை சத்திய நாராயணருக்கு நைவேத்யம் செய்ய வேண்டும். அந்நாளில், சத்யநாராயணர் விரதக்கதைகளை படிக்க வேண்டும். இந்தவிரதத்தைகடைபிடிக்க இத்தனை வாரம் தான் நியதி இல்லை. ஒவ்வொரு பவுர்ணமி அன்றும், தொடர்ந்து அனுஷ்டித்தால், நம்மை ஜெயிக்க யாரும் இல்லை என்ற நிலை உருவாகும். பணவசதி பெருகும். புதுமணத்தம்பதிகள், வாழ்வின் துவக்கம் முதலே இதைதகடைபிடித்தால் தீர்க்காயுள் உள்ள புத்திசாலித்தனமான குழந்தைகள் பிறப்பார்கள். வசதி உள்ளவர்கள், கலசம் வைத்து புரோகிதர்களைதகொண்டு இந்தபூஜையை நடத்தலாம்.

ஆந்திராவில் சத்தியநாராயணர்: ஆந்திர மக்கள் சத்யநாராயண விரதத்தை தவறாமல் கடைபிடிக்கின்றனர். செல்வந்ததம்பதிகள், இந்தவிரதம் துவங்குவதற்கு முன்னதாக ஆறுமாதங்கள் வரை, ஏதாவது ஒரு புனிதத்தலத்தில் தங்கி வந்து இந்தவிரதத்தைதுவங்குகிறார்கள். விரதபூஜையை, பவுர்ணமியன்று பிரதோஷ நேரத்தில் (மாலை 4.30-6.00) நடத்துகிறார்கள். அன்று, மாலையில் அன்னதானம் செய்யும் நோக்கத்தில் பெருமளவு சமைக்கிறார்கள். சமைத்ததில் கால் பங்கை மட்டும் தங்களுக்கும், தங்கள் உறவினர்களுக்கும் எடுத்துதகொண்டு, மீதியை தானம் செய்து விடுகிறார்கள்.

பணம் வரப்போகுது சொல்பவர் நாரதர்: கலியுகத்தில், மனிதனுக்கு தேவை அதிகம். அவனது தேவைகளை நிறைவேற்ற பணம் வேண்டும். அது கிடைக்க எளிய வழி சத்ய நாராயண விரதம் என்கிறார் நாரதர்.சுதானந்தர் என்பவர் இந்த விரதத்தை முறையாகக் கடைபிடித்ததால், மறுபிறவியில் சுதாமா (குசேலர்) என்னும் பெயரில் பிறந்து, கிருஷ்ண தரிசனத்துடன் பெரும் செல்வத்தைப் பெற்றார். விறகு விற்றுக் கொண்டிருந்த பல்லன் என்ற தொழிலாளி, இந்த விரத மகிமையால், மறுபிறவியில் குகன் என்னும் பெயரில் பிறந்து ராமதரிசனம் பெற்று, அழியாச் செல்வமான முக்தியை அடைந்தான். உல்காமுகன் என்ற அரசரோ, இதை முறையாகச் செய்து, மறுபிறவியில் தசரதராகப் பிறந்து 60ஆயிரம் ஆண்டுகள் சகல செல்வத்துடன் வாழும் பாக்கியம் பெற்றதுடன், ராமனுக்கே தந்தையும் ஆனார்.  ஸ்காந்த புராணத்தில் (கந்த புராணம்) வரும் ஸ்லோகம் ஒன்றில், இந்த விரதத்தை அனுஷ்டித்தால், கஷ்டங்கள் குறையும். பணமும், தானியமும் பெருகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் வரும். பெற்றோருக்கு நற்பெயர் வாங்கித்தரும் குழந்தைகள் பிறக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.
-----------------------------------------