வியாழன், 7 செப்டம்பர், 2023

23. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

23. ஸ்ரீ ஸத்சித் சுகேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்



 இருபத்தி மூன்றாவது ஆசார்யர் [கி.பி. 481 - 512]

ஸ்ரீ ஸத்சித் சுகேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஆந்திர அந்தண குலத்தவர். ஸ்ரீ காகுளம் என்ற ஊரைச் சேர்ந்தவர். இவரது தந்தையின் பெயர் ''சோம நாராயணர்''. பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் ''கிரீசர்''.

இவர் சுப்ரமண்ய ஸ்வாமி மீது பெரும் பக்தி கொண்டவர். முருகனை உபாஸனை செய்து குமரனின் பரிபூர்ண அனுக்கிரகத்தைப் பெற்றவர். இவர் காலத்தில் வாழ்ந்த பிர பல வானவியல் அறிஞரான ஆரியபட்டர் நாஸ்திகக் கொள்கையுடன் இருந்தார். அவர் பூஜ்ய ஸ்ரீ பெரியவாளுடன் வாதிட்ட பிறகே தெளிவு பெற்றவராய் வேதாந்தப் பிடிப்புடன் வாழத் தொடங்கினார்.

ஒரு முறை சூரிய கிரகணம் பற்றி ஆராய, கடல் தாண்டிச் சென்றார் ஆர்யபட்டர். அந்நாளில் கடல் தாண்டிச் செல்வது சாஸ்திர விரோதமானது என்பதால் அவர் ''சமூகப் பிரஷ்டம்'’ செய்யப்பட்டார். பூஜ்ய ஸ்ரீ பெரியவாள் தலையிட்டு உரிய பிராயச்சித்தங்களை விதித்து ஆரியபட்டரின் ''பிரஷ்டத்தை'' நீக்கினார்.

இவர் கி.பி. 512 ஆம் ஆண்டு, கர வருடம், வைகாசி மாதம், சுக்ல பட்க்ஷம் சப்தமி திதி அன்று ஜகந்நாத்திற்கு அருகில் சித்தி அடைந்தார்.

இவர் 31 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்தார்.

22. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

22. ஸ்ரீ பரிபூர்ண போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - ஒன்று



இருபத்தி இரண்டாவது ஆச்சார்யர் [கி.பி. 447 - 481]

ஸ்ரீ பரிபூர்ண போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - ஒன்று, இவர் மஹாராஷ்டிர மாநிலத்தின் அந்தண மரபினர்.

இரத்தினகிரி என்னும் ஊரைச் சேர்ந்தவர். இவரது தந்தையாரின் பெயர் ''இராமநாதர்''. பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் ''மதுரா''.

இவர் ''பூலோக தன் வந்தரி'' என்று போற்றும் அளவு மருத்துவத்திறன் வாய்ந்தவர். ''அஸ்மா பிலாபிக'' என்னும் மந்திர வல்லமை பெற்ற மந்திர சாஸ்திர விற்பன்னர். மாபெரும் யோகியாகத் திகழ்ந்தவர்.

இவர் கி.பி. 481 ஆம் வருடம் ரௌத்திரி ஆண்டு, கார்த்திகை மாதம், வளர்பிறை, நவமி அன்று ஸ்ரீ பூரி ஜகந்நாத்துக்கு அருகில் சித்தி அடைந்தார்.

இவர் 34 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்தார்.

21. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

21. ஸ்ரீ ''ஸார்வ பௌம'' சந்திர சேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - இரண்டு.



இருபத்தி ஒன்றாவது ஆச்சார்யர் [கி.பி. 437 - 447]

இவர் கொங்கண அந்தண குலத்தவர். இவரின் தந்தை பெயர் "அச்சுதன்". இவரே மூக சங்கரால் ஆட் கொள்ளப் பட்ட "மாத்ரு குப்தன்". இவர் தம் குருநாதரோடு பல விஜய யாத்திரைகள் சென்றவர். சந்திர மௌலீஸ்வரர் பூஜை செய்வதில் கை தேர்ந்தவர்.

இவர் கி.பி. 447 ஆம் ஆண்டு, விய வருடம் ஆவணி மாதம், கிருஷ்ண ஜெயந்தி அன்று காசியில் சித்தியடைந்தார்.

இவர் 10 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்தார்.

20. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

20. ஸ்ரீ மூக சங்கரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்



இருபதாவது ஆசார்யர் [கி.பி. 398 - 437]

ஸ்ரீ மூக சங்கரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ''நான்காம் சங்கரர்'' என அனைவராலும் அன்புடன் அழைக்கப்படுபவர். இவர் தந்தை பெயர் ''வித்யாவதி'' வானவியல் வல்லுனர்.

பிறவி ஊமையாக இருந்த ஸ்ரீ சங்கரேந்திரருக்கு ''ஸ்ரீ வித்யா கநேந்திரர்'' அருளால் பேச்சு வந்தது. உடனே ''மூகபஞ்ச சதீ'' என்னும் ஐநூறு அருட் பாடல்களைப் பொழிந்தார். அதன் நன்றி கடனாக இவரை மடத்துக்கே இவரைக் கொடுத்து விட்டனர் அவரின் பெற்றோர்.

ஸ்ரீ மூக சங்கரர் காலத்தில் பேரரசனாக இருந்தவர் ''சஹாரி விக்ரமாதித்யன்''. அவனரது ஆட்சி காலம் [கி.பி. 375 - 413] என்று வரலாற்று நூல்கள் கூறுகின்றன.

அவருக்கு கப்பம் கட்டிய வேந்தர்கள் காஷ்மீரப் பகுதிகளை ஆண்ட ''மாத்ரு குப்தனும்'', ''ப்ரவரசேனனுமாவர்''. இருவருக்குமே ஸ்ரீ மூக சங்கரரிடம் பெரும் பக்தி உண்டு. வேலைக்காரனான ''மாத்ருகுப்தன்'' அரசனான கதையை சுருக்கமாக பார்ப்போம்.

சிறு வயதில் ''மாத்ருகுப்தன்'', ''சஹாரி விக்ரமாதித்யன்'' அரண்மனையில் சந்தனம் அரைக்கும் தொழிலை செய்து கொண்டிருந்தார். ''விக்ரமாதித்யன்'' காஷ்மீரத்தை வென்று அங்கு முகாமிட்டிருந்த இரவு நேரம் நள்ளிரவு. எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்க, மாமன்னன் திடீரென விழித்தான். விளக்குகள் எல்லாம் அணைந்திருந்தன. வேந்தன் விளக்கேற்ற காவலரை அழைத்தான். ''மாத்ரு குப்தன்'' விளக்குடன் வந்தான்.

“நீ ஏன் தூங்க வில்லை?" என்று கேட்டான் அரசன். “புதிதாக வெற்றி பெற்ற அரசர் அலுப்பில் உறங்கலாம். இப்படி உறங்கிய பாண்டவர்களின் மைந்தர்களையும், மைத்துனனையும் எதிரிகளின் தளபதியான அச்வத்தாமா வெட்டியது இரவில் தான் எனப் பொருள்படும் ஸமஸ்கிருதக் கவிதையைச் சொல்லிய படியே விளக்கேற்றினான் சிறுவன்.

மன்னன் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சிறுவனுக்கு வெகுமதி தர விரும்பி அவனை காஷ்மீரத்தின் மன்னனாக்க ரசசியமாக அரசாணை பிறப்பித்தான். பிறகு ''மாத்ருகுப்தனிடம்'' தனது முத்திரை மோதிரத்தை அளித்து காஷ்மீர் தலை நகருக்கு அனுப்பினான்.

நகர எல்லையில் தனக்களிக்கப்பட்ட அரச மரியாதைகளைக் கண்டு திக்கு, முக்காடிப் போனான் ''மாத்ரு குப்தன்''. சஹாரி விக்ரமாதித்யன் எதிர் பார்த்ததும் இதைத்தானே.

இப்படி எதிர் பாராத விதமாக மணி முடி சூட்டப்பட்ட ''மாத்ரு குப்தனுக்கு'' நாளடைவில் கர்வம் மிகுந்தது. அதனால் எவரையும் மதிப்பதில்லை. ஸ்ரீ மூக சங்கரருக்கு இச்செய்தி எட்டியது. அவனது குறையை உணர்த்தத் திருவுள்ளம் கொண்டார். அரசன் இருப்பிடம் நெக்கி சென்றார். ராமிலன் என்கிற குதிரை மாவுத்தனையும், மேது [மெந்தன்] என்கிற யானைப் பாகனையும் அழைத்து தனது அருள் நோக்கால் நனைத்தார். இருவரும் கவிபாடும் ஆற்றல் பெற்றனர். ராமிலன் ‘'மணிப்ரபா'' என்ற கவிதை நாடக நூலையும், மேது "ஹயக்ரீவ வதம்" என்கிற நாடக நூலையும் படைத்தனர்.

கவிதைத்திறன் என்பது ''கர்வம் கொள்வதற்கல்ல'' என்று புரிந்து கொண்டான் ''மாத்ருகுப்தன்''. அவனது செருக்கு இருந்த இடம் தெரியாது மறைந்தது. மூக சங்கரரின் திருப்பாதங்களைப் பணிந்தான். “ஸ்வாமி! தங்கள் கட்டளைப்படி ஏதாவது செய்தால் தான் மனம் சமாதானமாகும்” என்று வேண்டினான்.

“மன்னா! ஜீலம் நதி முதல் சிந்து நதிவரை அடர்ந்த காட்டுப்பகுதியாக இருக்கிறது. கொடிய மிருகங்கள் வாழ்கின்றன. முட் செடிகள் அடர்ந்துள்ளன. ஜனங்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். காட்டைத் திருத்திப் ''பாதை அமைத்துக் கொடு” என்றார் ஜகத்குரு.

அதை சிரமேற்கொண்டு நிறைவேற்றினான் ''மாத்ரு குப்தன்'' அந்த நெடுஞ்சாலை ''சுஷ்மா'' என அழைக்கப்படுகிறது. ''மாத்ரு குப்தன்'' ''ஸேது பந்தம்'' என்ற காவியத்தைப் படைத்து ஆசார்யாளுக்கு அர்ப்பணித்தான்.

அரசாட்சியை ராஜ உரிமை பெற்ற ப்ரவரசேனனிடம் ஒப்படைத்து ஆசார்ய ஸ்வாமிகளிடம் உபதேசம் பெற்று ''ஸார்வ பௌமன்’' என்னும் நாமத்தோடு “இளைய குரு" ஆனார். ப்ரவரசேனன், ஸார்வபௌமர் ஜீவிதகாலம் வரை காஷ்மீர நாட்டின் வரி வருமானம் முழுவதையும் ஸ்ரீகாமகோடி பீடத்துக்கு அனுப்பி வந்ததாய் ராஜ தரங்கணீயம் கூறுகிறது.

இப்படி செயற்கரிய செயல்களைச் செய்த மூக சங்கரர் கி.பி. 437 ஆம் ஆண்டு, தாது வருடம், ஆவணி மாதம், பௌர்ணமி அன்று கோதாவரி தீரத்தில் சித்தி அடைந்தார்.

இவர் 39 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்தார்.

19. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

19. ஸ்ரீவித்யா கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - இரண்டு



பத்தொன்பதாவது ஆசார்யர் [கி.பி. 386 - 398]

ஸ்ரீ வித்யா கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - இரண்டு. இவரும் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர். தந்தையார் பெயர் ''உமேச சங்கரர்''. இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் ''ஸ்ரீ கண்டர்''.

சிறு வயதில் இவர் தேகத்தை வெண் மேக நோய் பற்றிக் கொண்டது. அதனால் இவரைத் தினமும் சூரிய நமஸ்காரம் செய்யச் சொன்னார் ஒரு பெரியவர்.

இவரும் தினமும் 1008 சூரிய நமஸ்காரம் செய்தார். நோய் பறந்து போனது. ஆனாலும் இவர் சூரிய நமஸ்காரம் செய்வதை நிறுத்த வில்லை. இவர் தொடர்ந்து விடாமல் சூர்ய நமஸ்காரம் செய்து வந்ததால் இவரை பக்தர்கள் ''சூரியதாசர்'' எனவும், ''மார்த்தாண்ட வித்யாகனர்'' என்றும் அழைக்கப்பட்டார். இவர் தனது பதினெட்டாவது வயதில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதியாக  பொறுப் பேற்று பல திக் விஜய யாத்திரைகள் மேற் கொண்டார்.

இவர் கி.பி. 398 ஆம் ஆண்டு, ஹே விளம்பி வருஷம், புரட்டாசி மாதம், தேய்பிறை நவமியில் திதியில், கோதாவரி நதி தீரத்தில் சித்தி அடைந்தார்.

இவர் 12 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்தார்.

18. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

18. ஸ்ரீ சுரேந்திரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்



பதினெட்டாவது ஆச்சார்யர் [கி.பி. 375 - 385]

ஸ்ரீ சுரேந்திரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் மஹாராஷ்டிர அந்தணர். தந்தையார் பெயர் ''மதுரா நாதர்''. இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் ''மாதவர்''.  

இவருடைய யோக வல்லமை காரணமாக ‘'ஸ்ரீ யோகி திலகர்'' என்று கொண்டாடப் பட்டார். இவர் காலத்தில் "நரேந்திராதித்யன்" காஷ்மீர் மன்னராக இருந்தார். இவருடைய மருமகன் "சுரேந்திரனும்" ஒரு சிற்றரசனே.

சுரேந்திரனின் சபையில் ''துர்தீதிவி'' என்ற நாஸ்திகர், ஆஸ்தான வித்வானாக புகழ் பெற்றிருந்தார். ஸ்ரீ யோகி திலகர் பலரை வாதில் வென்ற அனுபவம் இருந்ததால் இவனையும் வாதில் வென்றார்.

இதை அறிந்த நரேந்திர ஆதித்யன் பெரும் வியப்போடு இவர் காலடியில் வணங்கி “இன்று முதல் இந்த காஷ்மீர் அரசுரிமை உங்களுடையது, உங்கள் ஆணைப்படி செயல் படுவேன்" எனக் கூறினார். அப்பேற்பட்ட பெருமை வாய்ந்தவர் இவர்.

இவர் கி.பி. 385 ஆம் ஆண்டு, தாருண வருடம், மார்கழி மாதம், வளர்பிறை பிரதமை திதி அன்று உஜ்ஜயினி அருகில் சித்தி அடைந்தார்.

இவர் 10 ஆண்டுகள் காலம் தான் பீடத்தை அலங்கரித்தார்.

17. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

 ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

17. ஸ்ரீ கௌட சதாசிவேந்திர ஸரஸ்வதி
ஸ்வாமிகள் [பாலகுரு]



பதினேழாவது ஆச்சார்யர் [கி.பி. 367 - 375]

ஸ்ரீ கௌட சதாசிவேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் [பாலகுரு] காஷ்மீர நாட்டு மந்திரியான ''தேவமிச்ரன்'' என்பவருக்கு மகனாக பிறந்தார். பிறந்து பேசத் தொடங்கியது முதல் அத்வைதத்தைப் பற்றியே பேசினார். இவர் பிறந்த பின் இவரின் தந்தையான தேவமிச்ரன்" ஜைன மதத்தைத் தழுவினார்".

மகனின் அத்வைத நெறியை மாற்ற சாம, தான, பேத, தண்டப் பிரயோகங்களை நடத்தினார். இரணியகசிபுவின் முயற்சிகள் எப்படி பிரகலாதனிடம் பலிக்க வில்லையோ அதே போல் "தேவமிச்ரனின்" முயற்சிகள் மகனிடம் பலிக்காமல் போயின.

இறுதியில் "தேவமிச்ரன்" கோபத்தில் தனது மகனை சிந்து நதியில் தூக்கி வீசி எறிந்தார். நீரில் தத்தளித்துத் தடுமாறிய சிறுவனை பாடலிபுரத்து அந்தணரான ''பூரிவசு'' பார்த்துக் காப்பாற்றினார். இந்த குழந்தை சிந்து நதியில் கிடைத்ததால் குழந்தைக்கு ''சிந்து தத்தன்'' எனப் பெயர் வைத்தார் ''பூரிவசு''. குழந்தைக்கு உபநயனம் செய்து முறைப்படி
வேத சாஸ்திரங்களைக் கற்பித்தார்.

அச்சமயம் காஷ்மீரத்தில் விஜய யாத்திரையாக வந்த ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதியான "ஸ்ரீ உஜ்வல சங்கரேந்திரரிடம் சரஸ்வதி ஸ்வாமிகளிடம்" அச்சிறுவனை ஒப்படைத்தார் "பூரிவசு". இதுவும் கடவுள் சித்தமே.

அவரை ''பாலகுரு'' என மக்கள் அன்போடு அழைத்தனர். இவர் தனது 17 வது வயதில் காஞ்சி ஸ்ரீ மடத்தின் பீடாதிபதியாக பதவி ஏற்றார். இவரின் காலத்தில் மடத்தின் சார்பாக தினமும் ஆயிரக்கனக்கான அந்தணர்களுக்கு அன்னதானம் செய்தது இவரின் சிறப்பு.

பாலிக, பௌத்த மதத்தினரோடு வாதிட்டு அவர்களை நாட்டை விட்டுப் போகுமாறு செய்தார். இதை கண்ட காஷ்மீர் மக்கள் இவருக்குத் "தங்கப் பல்லக்கை" பரிசளித்தனர். அதில் அமர்ந்து பாரதம் முழுவதும் விஜய யாத்திரை புரிந்தார். பல மதங்களை தனது வாதத் திறமையால் நாட்டை விட்டு விரட்டி அடித்து என்பது இவரின் சிறப்பு.

இந்த குருரத்தினம் தமது 25 ஆவது வயதில் கி.பி. 375 ஆம் ஆண்டு, பவ வருடம் ஆனி மாதம் கிருஷ்ண பட்க்ஷம் தசமி திதி அன்று ''நாசிக்'' நகருக்கு அருகிலுள்ள ‘'த்ரயம்பகத்தில்'' சித்தி அடைந்தார்.

இவர் 8 ஆண்டு காலம் தான் பீடத்தை அலங்கரித்தார்.

16. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா.... பதினாறாம் ஆச்ரியர்...

ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா.... பதினாறாம் ஆச்ரியர்...

16. ஸ்ரீ உஜ்வல சங்கரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்...



பதினாறாம் ஆச்ரியர் [கி.பி 329-367]

ஸ்ரீ உஜ்வல சங்கரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் மஹாராஷ்டிர அந்தணர் குலத்தவர். இவரது தந்தையார் பெயர் ''கேசவ சங்கரர்''. பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் ''அச்சுத கேசவர்''.

காஞ்சி காமகோடி பீடாதிபதியான பிறகு இவர் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை இவர் பல முறை விஜய யாத்திரைகளை செய்துள்ளார். அப்போது "ச்யாநந்தூர" நாட்டு மன்னரான "குலசேகரனை" தன் அருள் நோக்கால் கவிஞராக்கினார்.

ஜைன மதத்திற்க்கு மாறிய அந்தணர்களை "ஜராத்ருஷ்டி" எனப் பெயரிட்டு அவர்களை சிந்து நதிக்கு அப்பால் செல்லும் படி கட்டளை பிறப்பித்தார். பிற மதங்கள் இந்து மதத்தை ஆக்கிரமிக்காமல் இருக்க இவர் அரும் பாடுபட்டார்.

இவர் கி.பி. 367ஆம் ஆண்டு, அக்ஷய வருடம் சுகல பக்ஷம், அஷ்டமி திதி அன்று காஷ்மீரத்திலுள்ள ''கலாபூரி'' என்னுமிடத்தில் சித்தி அடைந்தார். அந்த ஸ்தலம் அது முதல் ''உஜ்வல மஹாயதிபுரம்'' என்றழைக்கப்பட்டு வருகிறது.

இவர் 38 ஆண்டுகள் வரை பீடத்தை அலங்கரிதார்.
-------------‐---------------------------------------------

15. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா.... பதினைந்தாவது ஆச்சார்யர்...

ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா.... பதினைந்தாவது ஆச்சார்யர்...

15. ஸ்ரீ கீஷ்பதி கங்காதரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - ஒன்று



பதினைந்தாவது ஆச்சார்யர் [கி.பி. 317 - 329]

கீஷ்பதி கங்காதரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - ஒன்று, ஆந்திராவைச் சேர்ந்த அந்தணர். இவரது தந்தையாரின் பெயர்  “ஸ்ரீ காஞ்சி பத்ரகிரி”. இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் "சுபத்ரர்".

இவர் ஸ்ரீ அகஸ்திய முனிவரை தரிசித்து அவரிடம் “பஞ்ச தசாக்ஷரி” மந்திர உபதேசத்தை வாங்கிக் கொண்ட மஹான். இவர் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதியாகும் போது இவரது வயது பன்னிரெண்டு வயது தான். அந்த சிறிய வயதிலேயே பெரும் புலமையும், ஞானமும் பெற்றிருந்தார். இவரின் பெறும் ஆற்றலை கண்டு மக்கள் வியந்தார்கள்.

இவர் கி.பி. 329 ஆம் ஆண்டு, சர்வதாரி வருடம், சித்திரை மாதம், சுக்லப் பிரதமை அன்று அகஸ்திய மலை அருகில் சித்தி பெற்றார்.

இவர் 12 ஆண்டுகள் வரை பீடத்தில் இருந்தார்.
-------------‐-------------------------------------------

14. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா.... பதிநான்காவது ஆச்சார்யர்...

ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா.... பதிநான்காவது ஆச்சார்யர்...

14. ஸ்ரீவித்யா கநேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் - ஒன்று


பதிநான்காவது ஆச்சார்யர் [கி.பி. 272 - 317]

ஸ்ரீ வித்யா கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஒன்று, ஆந்திர தேசத்து அந்தணர். இவரின் தந்தையின் பெயர் ''பாபண்ண ஸோமயாஜி" அவர்களுக்கு மகனாக பிறந்தார். பெற்றோர் வைத்த பெயர் ''நாயனா''.

இவர் மந்திர சாஸ்திரத்தில் வல்லமை உடையவர். ஒரு முறை மலைய மலைப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் இவர் தங்கியிருந்த சமயம் அப்பகுதியில் உள்ள மக்கள் அவரை வணங்கி ''பைரவ மூர்த்தி'' அப்பகுதியில் உள்ள மக்களை பலி வாங்கிக் கொண்டிருப்பதாகவும், அதன் உக்கிரத்தைத் தணிக்க வேண்டும் என்றும் வேண்டினார்கள். வித்யா கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் தனக்குண்டான சக்திகளை பயன்படுத்தி மந்திரப் பிரயோகம் செய்து அந்த உக்கிரக பைரவரை சாந்தப்படுத்தினார். ஊர்  மக்களின் அச்சத்தை போக்கி அவர்களுக்கு ஆசி வழங்கினார்.

இவர் கி.பி. 317 ஆம் ஆண்டு, தாது வருடம், மார்கழி மாதம், அமாவாசை திதி அன்று மலையமலைத் தொடரில் உள்ள அகஸ்திய கிரியில் சித்தி அடைந்தார்.

இவர் 55 ஆண்டுகள் வரை பீடத்தில் இருந்தார்.
-------------‐--------------------------------------------


13. ஸ்ரீ காஞ்சி காமகோடி குருபரம்பரா.... பதிமூன்றாவது ஆச்சார்யர்...

ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா.... பதிமூன்றாவது ஆச்சார்யர்...

13. ஸ்ரீ சத்சித் கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்



பதிமூன்றாவது ஆசார்யர் [கி.பி.235 - 272]

ஸ்ரீ சத்சித் கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் கெடில நதிக்கரையில் உள்ள ஒரு சிற்றூரில் அந்தண ரத்தினமாக பிறந்தார்.

இவரின் தந்தையின் பெயர் "ஸ்ரீதர பண்டிதர்". இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் "சேஷய்யா".

"குரு எவ்வழி சீடர் அவ்வழி" என்கிற வழியில், குருவைப் போலவே இவரும் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட நிர்வாகத்தை சிஷ்யரான ஸ்ரீ வித்யா கநேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளிடம் அனைத்து நிர்வாகத்தையும் ஒப்படைத்து விட்டு மௌன விரதம் மேற்கொண்டார். இவர் ஒரு  அவதூதர் போல பிரம்ம வரிஷ்டராய் காஞ்சி நகர்ப்புறத்தில் இருந்தார்.

இவர் கி.பி. 272 ஆம் ஆண்டு, கர வருடம், சுக்லபக்ஷம், பிரதமை திதி அன்று காஞ்சியிலுள்ள ஸ்ரீ காயா ரோஹணேஸ்வரர் கோவிலில் சிவலிங்கத்தோடு ஐக்கியமாகி மறைந்தார். [காணாமல் போனார்]

இவர் 37 ஆண்டுகள் வரை பீடத்தில் இருந்தார்.
-------------‐---------------------------------------------------------‐------------