திங்கள், 23 செப்டம்பர், 2019

15:நமது ஆச்சார்ய குரு ரத்தினங்களை பற்றி  தெரிந்துகொள்வோம்!!

காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள இரண்டு ஆச்சார்யர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள்  இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர்.

15:ஸ்ரீ கீஷ்பதி கங்காதரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்-1
(கி.பி. 317  -கி.பி.329 வரை)

ஸ்ரீ கீஷ்பதி கங்காதரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்-1
ஸ்வாமிகள் ஆந்திராவைச் சேர்ந்தவர்.இவரது தந்தையின் பெயர்"ஸ்ரீகாஞ்சிபத்ரகிரி".இவருக்கு பெற்றோர் இட்ட நாமதேயம் சுபத்ரர்.இவர் ஸ்ரீ அகஸ்திய முனிவரை தரிசித்து அவரிடமே"பஞ்சதசாக்ஷரி"என்ற மந்திர உபதேசத்தை வாங்கிக்கொண்டார்.இவர் காமகோடி பீடாதிபதியாகும் போது இவரது வயது பன்னிரண்டு.அப்போதே பெரும் புலமையும்,ஞானமும் பெற்றிருந்தார்.இவர் கி.பி.329-ஆம் ஆண்டு சர்வதாரி வருடம்,சித்திரை மாதம்,சுக்லப்பிரதமையன்று அகஸ்தியமலை அருகில் சித்தியடைந்தார்.
நவராத்திரி மூன்றாம் நாள்: எவ்வாறு வழிபட வேண்டும்?

நவராத்திரி மூன்றாம் நாளில் அம்பிகையை வராஹியாக அலங்கரிக்க வேண்டும். பன்றிமுகத்துடன் கூடியவளாக விளங்கும் இவளை வழிபட்டால் பகைவர் பயம் நீங்கும். மதுரை மீனாட்சியம்மன் நாளை தட்சிணாமூர்த்தி கோலத்தில் காட்சியளிக்கிறாள். தென்முகக்கடவுளான தட்சிணாமூர்த்தி சிவன்கோயில்களில், கல்லால மரத்தின் கீழ் இருப்பார். இவர் முன்னால் சனகர்,சனந்தனர், சனதானர், சனத்குமாரர் என்னும் நான்கு சீடர்கள் இருப்பர். அவர்களுக்கு உபதேசம் செய்கிறார் தட்சிணாமூர்த்தி.

இவருடைய வலக்கை சின்முத்திரை காட்டியபடி இருக்கும். வலக்கைப் பெருவிரல் பரமாத்மாவாகிய கடவுளையும், ஆள்காட்டிவிரல் ஜீவாத்மாவாகிய உயிரையும் குறிக்கும். மற்ற விரல்களான நடுவிரல், மோதிரவிரல், சுண்டுவிரல் ஆகியவை ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றைக் குறிக்கும். ஆணவம் என்பது அகங்காரம். கன்மம் என்பது உயிர்கள் செய்யும் நல்வினை, தீவினைப்பயன்கள். மாயை என்பது இவ்வுலக வாழ்வு உண்மை என எண்ணும் நிலை. இம்மூன்றையும் விட்டு, ஒருவன் நீங்கினால் மட்டுமே கடவுளோடு ஐக்கியமாக முடியும் என்பதே சின்முத்திரை தத்துவம். அம்பாளைத் தட்சிணாமூர்த்தியாக உபதேசிக்கும் கோலத்தை காண்பவர்களுக்கு அஞ்ஞானம் அகலும். கடவுளின் திருவடியே நிலையானது என்ற மெய்ஞானம் உண்டாகும்.

நாளைய நைவேத்யம்: எலுமிச்சை சாதம்
தூவவேண்டிய மலர்கள்: மல்லிகை, செவ்வந்தி.

பாட வேண்டிய பாடல்:

என்குறை தீர நின்று ஏத்துகின்றேன், இனியான் பிறக்கின்
நின்குறை யேயன்றி யார்குறை காண்! இருநீள் விசும்பின்
மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியளாய்
தன்குறை தீரஎங் கோன்சடை மேல் வைத்த தாமரையே.

ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 41 ॐ
  {தில்லை வாழ் அந்தணர்கள்}

மேலே உள்ள ஊர்த்துவத் தாண்டவம் திருவாலங்காட்டில் காணக் கிடைப்பது. இந்தத் திருவாலங்காடு சென்னையிலிருந்து அரக்கோணம் போகும் வழியில் சென்னைக்கு மேற்கே 37 அல்லது 40 மைல் தூரத்தில் உள்ளது. இந்தத்தலம் தான் ரத்னசபை ஆகும். இன்னொரு திருவாலங்காடு ஆடுதுறைக்கு அருகே உள்ளது. அந்தத் தலம் ரத்னசபை அல்ல. சிலர் சந்தேகங்கள் கேட்கும் போது  ஆடுதுறை அருகே உள்ள தலம் தான் ரத்னசபை என நினைத்துக் கொள்கின்றனர். இன்னும் சிலருக்கும் சந்தேகங்கள் ஏற்படலாம். அதற்காகவே மீண்டும் நினைவு படுத்தி உள்ளேன். இங்கே மட்டும் இடக்காலைத் தூக்கி ஆடியபடி நடராஜர் இருப்பார். மற்ற இடங்களில் உள்ள ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி வலக்காலைத் தூக்கித் தலைக்கு மேல் வைத்துக் கொண்டு இருப்பார்கள். அந்தக் கோலத்தைத் தான் நாட்டிய சாஸ்திரத்தில் லலாட திலகம் எனச் சொல்லப்படுகிறது. ஆனால் பேச்சு வழக்கில் இறைவன் தன் காதுக் குழையை மாட்டிக் கொள்ளக் காலைத் தூக்கியதாகச் சொல்லப்படுகிறது. அதுவும் சரி அல்ல. வலக்காலைத் தூக்கி அதன் உதவியால் நெற்றியில் பொட்டு வைத்துக் கொள்ளும் அபிநயம் அது. இப்போது இந்தக் குழப்பம் தீர்ந்திருக்கும் என நம்புகிறேன்.
சிதம்பரத்தில் தனக்குக் கோயில் கட்டிக் கொண்டு இறைவன் குடியேறியதும் சிவகணங்கள் கைலையில் இறைவன் இல்லாமல் அவனைத் தேடிக் கொண்டு காசி நகருக்கு வந்து அங்கிருந்து இறைவன் சிதம்பரத்தில் இருப்பதைத் தெரிந்து கொண்டு அந்தணர்களாக மாறி அந்தணர்கள் உருவில் சிதம்பரத்தை அடைந்ததாகவும் அவர்கள் அனைவரும் இறைவனைப் பிரிய மனம் இன்றி அங்கேயே தாங்களும் குடி கொள்ள விரும்பியதாகவும் இறைவனும் அவ்வாறே அருளியதாகவும் கூறுகின்றனர். அந்தச் சிவ கணங்களே தில்லை வாழ் அந்தணர்கள் என்று கருதப்படுகிறது. இறைவனுக்கு அருகே இருந்து தொண்டு செய்யும் பாக்கியம் பெற்ற அவர்கள் தங்கள் தொண்டைக் கைவிட மனமில்லாமல் சிதம்பரத்திற்கும் வந்து இங்கேயும் அவர்களே தொண்டு செய்யும் உரிமையைப் பெற்றதாயும் சொல்கின்றனர்.

தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்
திரு நீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற் கடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்காளே.

திருத்தொண்டத் தொகையில் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் கூறுகின்றார். திருஞானசம்மந்தரும் தில்லைவாழ் அந்தணர்களைத் தாம் சிவகணங்களாகவே கண்டதாய்க் கூறுகிறார். நடராஜரையும், சிவகாமசுந்தரி அம்மையையும் தங்களில் ஒருவராகவே காணும் அவர்கள் இன்று வரை தில்லைச் சிதம்பரம் கோயிலில் நடராஜருக்குப் பூஜை செய்யும் உரிமையையும் கோவிலின் நிர்வாக உரிமையையும் தாங்களே வைத்துக் கொண்டு பணி செய்து வருகின்றனர். அவர்களைப் பற்றிய சில குறிப்புக்களையும் அவர்களின் பணி எத்தகையது என்பதையும் பார்க்கலாம்.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ
நவராத்திரி வழிபாடு தோன்றிய காரணம்!

நவராத்திரியின் சிறப்புப் பற்றியும், இதை அனுஷ்டிக்க வேண்டிய முறை கிடைக்கக்கூடிய பலன்கள் பற்றியும் தேவி மஹாத்மியத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. முன்னொரு காலத்தில் சும்பன் நிசும்பன் என இரு அசுரர்கள் இருந்தார்கள். அவர்கள் தெய்வங்களிடம் வரம் பல பெற்று தங்களை அழிக்க யாருமில்லை என்று தலைக்கனம் பிடித்துத் திரிந்தார்கள். அவர்களது ஆட்சிக்காலத்தில் மக்கள் மிகவும் அல்லலுற்றனர். தவசீலர்களால் வேள்விகளைச் செய்ய முடியவில்லை. அனைவரும் இந்த இரு அரக்கர்களையும் கண்டு அஞ்சி நடுங்கினர். இனியும் இப்படியே போனால் மக்கள் தாங்கமாட்டார்கள் என்று எண்ணிய தேவர்கள் மஹா விஷ்ணுவிடமும், சிவனிடமும் முறையிட்டனர். அவர்கள் பிரம்மனையும் சேர்த்துக் கொண்டு என்ன செய்வது என ஆலோசித்தனர். ஆண்கள் யாராலும் அந்த இரு அசுரர்களையும் வெல்ல முடியாது என்பது வரம். அதனால் தேவர்களும் மூவர்களும் அன்னை ஆதி சக்தியை நோக்கிப் பிரார்த்தித்தனர்.

மக்களின் துன்பம் கண்டு சகியாத அவளும் மிக அழகான மங்கையின் வடிவம் கொண்டு பூமிக்கு வந்தாள். அவளுடைய அழகுக்கு யாரும் நிகர் இல்லை என விளங்கினாள். பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரும் தங்களுடைய சக்திகளை எல்லாவற்றையும் ஒன்று திரட்டி அன்னைக்கு அளித்துவிட்டு சிலை என ஆனார்கள். அதே போல இந்திரனும் திக்குப் பாலர்களும் தங்களுடைய ஆயுதங்களை எல்லாம் அளித்துவிட்டு சிலையாக நின்றார்கள். அப்படி அவர்கள் நின்றதால்தான் அதைக் குறிக்கும் வகையில் பொம்மைக் கொலு வைக்கும் பழக்கம் வந்தது. அன்னை அந்த ஆயுதங்களை பத்துக் கரங்களில் தாங்கி போர்க்கோலம் பூண்டு சும்ப நிசும்பர்களையும் அவர்களது படைத்தளபதிகளான மது கைடபன், ரக்தபீஜனையும் அழித்து தர்மத்தை நிலைநாட்டினாள்.

அவள் வெற்றி பெற்ற தினமே விஜயதசமி. ஒன்பது நாட்கள் போர் விடாமல் நடந்தது. அதனாலேயே நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம். ஏன் ராத்திரி? ஒன்பது பகலில் கொண்டாடலாம் என்று கேள்வி எழுவது சகஜம். அந்நாட்களில் போருக்கு என்று சில சட்ட திட்டங்கள் உண்டு. மாலை நேரம் சூரிய அஸ்தமனம் ஆன பிறகு போர் புரிய மாட்டார்கள். படைகள் தங்கள் கூடாரங்களில் ஓய்வெடுத்துக் கொள்ளும். அப்போது அன்னையின் படைக்கு ஊக்கம் கொடுக்கவும் மறுநாளைய போரில் உற்சாகமாகப் போரிடவும் வேண்டி அன்னையைக் குறித்த ஆடல், பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இது ஒன்பது இரவுகள் நடந்தது. அதனாலேயே நாம் நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம்.
திருமாலின் தசாவதாரம்!

வைகுண்டத்தை இருப்பிடமாகக் கொண்டிருக்கும் பரம்பொருள் திருமால். பூலோகத்தைக் காப்பதற்காக பல சமயங்களில் பல்வேறு அவதாரங்கள் எடுத்தார். அவருடைய அவதாரங்களைச் சிறப்பாக தசாவதாரம் என்று குறிப்பிடுவர்.

மச்சாவதாரம் : திருமால் எடுத்த முதல் அவதாரம் மச்சாவதாரம். மச்சம் என்றால் மீன் என்று பொருள். இந்த அவதாரத்தில் வேதங்களை அபகரித்துக் கொண்டு போய் கடலில் ஒளித்து வைத்திருந்த சோமுகாசுரனைக் கொன்று அழித்தார்.

கூர்மாவதாரம் : தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக்கடைந்த போது மந்திரமலையைத் தாங்க திருமால் எடுத்த ஆமை அவதாரம் கூர்மாவதாரம். மலையை அசையும் போது தம் களைப்பு தீர்ந்து பெருமாள் நன்கு தூங்கிக்களித்ததாகச் சொல்வர்.

வராக அவதாரம் : பூமியைக் கவர்ந்து சென்ற இரண்யாட்சன் கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். ஆலிலையில் அறிதுயிலில் இருந்த திருமால் வெள்ளை வராகமாக (பன்றியாக) உருவெடுத்து அசுரனைக் கொன்றதோடு அப்பூமியைத் தன் கொம்பில் தாங்கிக் கொண்டு அருள் செய்தார்.

நரசிம்ம அவதாரம் : அசுரன் இரண்யகசிபு நாராயணனே பரம் பொருள் என்று வணங்கி வந்த தன் பிள்ளை பிரகலாதனைத் துன்புறுத்தி வந்தான். பிரகலாதனுக்காக தூணில் திருமால் சிங்கவடிவத்தில் வெளிப்பட்டு அரக்கனைக் கொன்றார்.

வாமன அவதாரம் : பிரகலாதனின் பேரன் மகாபலியின் ஆணவத்தை அடக்க பெருமாள் எடுத்த குள்ள வடிவம் வாமன அவதாரம். தன் அடியில் மூவுலகங்களையும் அளந்து திருவிக்ரமனாக வானுக்கும் மண்ணுக்கும் உயர்ந்து நின்றார்.

பரசுராம அவதாரம் : ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகாவுக்கும் மகனாக எடுத்த அவதாரம் பரசுராமன். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை உலகத்திற்கு உணர்த்திய அவதாரம். இன்றும் மகேந்திர மலையில் சிரஞ்சீவியாக தவம் செய்து கொண்டிருக்கிறார்.

ராமாவதாரம் : ரகுகுலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் திருமால் எடுத்த அவதாரம் ராமன். ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும் அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும் தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும்.

பலராம அவதாரம் : கோகுலத்தில் விஷ்ணுவின் அம்சமாக வசுதேவருக்குப் பிறந்த பிள்ளை பலராமன். பெருமாள் வெண்ணிறத்தில் தோன்றிய அவதாரம் இது. ராமாவதாரத்தில் தம்பியாக இருந்த லட்சுமணனை தனக்கு அண்ணனாக விஷ்ணு ஏற்றதாகக் கூறுவர்.

கிருஷ்ணாவதாரம் : வசுதேவருக்கும் தேவகிக்கும் குழந்தையாக மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் கிருஷ்ணாவதாரம். இந்த அவதாரத்தில் கண்டவர் தம் மனதை கவரும் அழகுடன் கோபியர் கொஞ்சும் ரமணனாக விளங்கினான். கம்சனைக் கொன்றும் பஞ்சபாண்ட வரைக்காத்தும் தர்மத்தை நிலைநாட்டினார்.

கல்கி அவதாரம்: ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் திருமால் ஒரு அவதாரம் எடுப்பார். கல்கி அவதாரமாக கலியுகத்தில் எடுத்து உலகை அழித்து நம்மை முக்தி நிலைக்கு கொண்டு செல்வார் என எதிர் பார்த்து காத்திருப்போம்.

ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 42 ॐ

முன் குறிப்பிட்ட பதிவில் சொன்னாற்போல் திருவாரூர் தியாகேசரால் எடுத்துக் கொடுக்கப்பட்ட வரியான "தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்" என்று சுந்தரர் சிறப்பித்துக் குறிப்பிட்டத் திருத் தொண்டத் தொகையில் வருகிறார்போல் தில்லை வாழ் அந்தணர்களைப் பற்றிச் சில குறிப்புக்களை இங்கே தருகிறேன். காசியில் இருந்து 3,000/- பேராய்க் கிளம்பியதாய்ச் சொல்லப்பட்ட இவர்கள் சிதம்பரத்தை வந்தடைந்தபோது ஒருவர் குறைந்திருந்ததாய்ச் சொல்லப் படுகிறது. திகைத்தவர்களை இறைவன் அந்த ஒருவர் தாமே என உணர்த்துகிறார். கேரளாவின் நம்பூதிரி பிராமணர்களைப் போல் (சிகை) முன் குடுமியுடன் காட்சி அளிக்கும் இந்தத் தீட்சிதர்கள் தங்கள் குலப் பெண்களைத் தங்களுக்குள்ளேயே திருமணம் செய்விக்கிறார்கள். வேறு பெண்களை எடுப்பதும் இல்லை வேறு இடத்தில் பெண்களைக் கொடுப்பதும் இல்லை இதன் காரணமாகவே "தில்லைப் பெண் எல்லை தாண்டாள்" என்னும் பழமொழி ஏற்பட்டதாயும் சொல்கின்றனர். தங்களில் ஒருவராய் நடராஜரை கருதும் இவர்களுக்குத் தான் இந்தக் கோயிலில் பூஜை செய்யும் முழு உரிமையும் இன்று வரை உள்ளது. சிதம்பர மகாத்மியம் நூலில் இறைவனே இவ்வாறு நந்தியிடம் கூறுவதாயும் சொல்லுகின்றனர். ஒரு தீட்சிதர் மட்டுமில்லாமல் தில்லையில் கோவிலைச் சுற்றி இருக்கும் தீட்சிதர்களின் மொத்தக் குடும்பமே இந்த இறை பணியில் தங்கள் வீட்டுப் பணி போல் நினைத்து ஈடு பட்டுள்ளது. தங்களின் குடும்பச் சொத்தாக ஒவ்வொரு தீட்சிதர் குடும்பமும் நினைக்கும் இந்தக் கோயிலின் நிர்வாகமும் அவர்களிடம் தான் உள்ளது. கோவிலின் வருமானத்தில் இருந்தே அன்றாட பூஜைகளையும் தங்களின் குடும்பத்தையும் நடத்தி வருகின்றனர். கோவிலுக்கும் வருமானம் என்பது பக்தர்களின் கட்டளைகளில் இருந்து தான். அது போல இறைவனை வழிபடுவதிலும் அவர்கள் தங்கள் குடும்பத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்றைப் போலவே பாவிக்கின்றனர். மற்றச் சிவன் கோவில்களில் நடக்கும் "சைவ ஆகம முறை" யில் வழிபாடு இங்கே நடப்பதில்லை. முழுக்க முழுக்க வைதீக முறைப்படி வழிபாடு நடக்கும் ஒரே சிவன் கோயில் இது தான். இங்கே ஒரு விஷயம் சொல்லணும் இந்த சைவ ஆகமத்துக்கும் வைதீகத்துக்கும் வேறுபாடுகள் தேடிக் கொண்டே இருக்கேன் சிலரிடம் கேட்கவும் கேட்டிருக்கிறேன் இன்னும் பதில் வரலை. பலவிதமான யாகங்கள், யக்ஞங்கள் செய்ததாயும் இன்றும் செய்வதாயும் சொல்லப்படும் இவர்களை இறைவனுக்குச் சமமாகவும் எப்போது என்று சொல்ல முடியாத காலத்தில் இருந்தே நடராஜருக்கு வழிபாடுகள் இவர்கள் செய்து வந்ததாயும் சொல்லப்படுகின்றது. பொதுவாக இவர்கள் அனைவரும் யஜுர்வேதிகளாய் இருந்தாலும் வெகு சிலர் ரிக்வேதிகளாயும் இருக்கின்றனர். மற்றச் சிவன் கோவில்களில் சேவை செய்யும் சிவாச்சாரியார்களில் இருந்து இவர்கள் வேறுபட்டவர்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்ற அந்தணர்களோடு திருமணம் போன்ற எந்தவிதமான உறவும் வைத்துக் கொள்ள மாட்டார்கள். தில்லைச் சிதம்பரத்தானைத் தவிர இங்கே அவனின் நாட்டியத்தைப் பார்க்கக் கோயில் கொண்டிருக்கும் கோவிந்த ராஜரையும் இவர்களே முதலில் பூஜித்து வந்திருக்கின்றனர். இது திருமங்கை ஆழ்வாரின் பாசுரம் ஒன்றில் இருந்து தெரிய வருகின்றது. மூவாயிர நான் மறையாளர் நாளும் முறையாய் வணங்க அணங்காய் சோதி தேவாதி தேவன் திகழ்கின்ற தில்லைத் திருச்சித்திரக் கூட சென்று சேர்மின்களே! என்று திருமங்கை ஆழ்வார் அவர்களும்
செந்தளிர் வாய் மலர் நகைசேர் செழுந்தண் சோலைத் தில்லை நகர்த் திருச்சித்ர கூடந்தன்னுள் அந்தணர்களொரு மூவாயிரவரேத்த வணிமணியாசனத்தமர்ந்த வம்மான் தானே! எனக் குலசேகர ஆழ்வாரும் பாடியுள்ளார்.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ
14:நமது ஆச்சார்ய குரு ரத்தினங்களை பற்றி  தெரிந்துகொள்வோம்!!!

காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள ஆச்சார்யர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள்  இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர்.

14:ஸ்ரீ வித்யா கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - 1(கி.பி. 272 -கி.பி.317 வரை)
                               
ஸ்ரீ வித்யா கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - 1ஆந்திர தேசத்தவர். 'பாபண்ண ஸோமயாஜி' என்பவரின் புதல்வர். இவருக்கு பெற்றோர் இட்ட நாமதேயம் 'நாயனா'. இவர் மந்திர சாஸ்திரத்தில் வல்லமையுடையவர். ஒருமுறை மலையமலைப் பகுதியிலுள்ள ஒரு கிராமத்தில் இவர் தங்கியிருந்த சமயம் அங்குள்ள மக்கள் அவரை வணங்கி பரவமூர்த்தி அப்பகுதியிலுள்ள மக்களை பலி வாங்கிக் கொண்டிருப்பதாகவும் அதன் உக்கிரத்தைத் தணிக்க வேண்டும் என்றும் வேண்டினார்களாம். இவரும் மந்திரப்பிரயோகம் செய்து பைரவரை சாந்தப்படுத்தி மக்களின் பீதியைப் போக்கினார். இவர் கி.பி.317ஆம் ஆண்டு, தாது வருடம், மார்கழிமாதம் அமாவாசையன்று மலைய மலைத்தொடரில் உள்ள அகஸ்திய கிரியில் சித்தியடைந்தார்.

ஞாயிறு, 22 செப்டம்பர், 2019

அனந்தராம தீட்சிதர்!

சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர் உபன்யாசம், 1940-65ம் ஆண்டுகளில் மிகவும் புகழ் பெற்றது. ராமாயணம், மகாபாரதம், பாகவதம், ஸ்காந்தம், தேவிபாகவதத்தை சங்கீத உபன்யாசமாக நடத்தினார். இவருக்கே உரித்தான மகிஷாசுரமர்த்தினி இன்னிசை, காலத்தால் அழியாதது. குருவாயூரப்பன் பக்தரான இவர், நாராயணீயத்தை மக்களிடம் பரப்பினார். 1903ல், சுப்ரமண்ய தீட்சிதர்-சுப்புலட்சுமி அம்மையாருக்கு மகனாகப் பிறந்த இவர், கடலங்குடி நடேச சாஸ்திரிகளிடம் பாடம் படித்தார். (சாஸ்திரிகள், தீட்சிதருக்கு மாமனாரும் ஆவார்) அக்னிஹோத்ர யாகம் செய்யும் குடும்பத்தைச் சேர்ந்த தீட்சிதர், வேதவல்லுநராகத் திகழ்ந்தார். இவருடைய உபன்யாசத்தை மும்பை, கோல்கட்டா, சென்னை நகரங்களில் மாதக்கணக்கில் மக்கள் கேட்டு மகிழ்ந்தனர். பரந்தமனம் படைத்த இவர், செல்வந்தர்களிடம் ஏழை எளியவருக்கு அறத்தொண்டு செய்யும்படி வலியுறுத்தினார். சடங்கு சம்பிரதாயத்தை முறையாக செய்ய வேண்டுமென வழிகாட்டினார். அமிர்தவர்ஷினி உபன்யாச சக்கரவர்த்தி, வைதீக தரம் சம்ரட்சன ப்ரவசன தாத்ர உபன்யாசகா ஆகிய பட்டங்களைப் பெற்றிருந்தார். ருத்ர சமகம், ஸ்கந்த புராணத்திற்கு உரை எழுதியுள்ளார். காஞ்சிப்பெரியவர், சிருங்கேரி சுவாமிகள், நேருஜி, டாக்டர் ராஜேந்திர பிரசாத், டாக்டர் ராதாகிருஷ்ணன், ராஜாஜி, பிரகாசம், சி.சுப்ரமண்யம், கல்கி சதாசிவம், எம்.எஸ்.சுப்புலட்சுமி, காசா சுப்பாராவ் ஆகியோர் இவரது உபன்யாசத்தை ரசித்ததில் குறிப்பிடத்தக்கவர்கள். பக்திப்பயிர் செழிக்க பாடுபட்ட இவர் 1969, அக்.30ல் இறைவனுடன் கலந்தார். ஸ்ரீஜயமங்கள ஸ்தோத்திரம் என்னும் அரிய பொக்கிஷத்தை நம்மிடையே விட்டுச்சென்ற, அந்த ஆன்மிகச் செல்வத்தை, நன்றியோடு போற்றுவோம்.

சனி, 21 செப்டம்பர், 2019

ॐ சிதம்பர ரகசியம் பகுதி :40 ॐ

மஹாவிஷ்ணு ஒரு சமயம் தனக்குப் பிள்ளை வரம் வேண்டிப் பிரார்த்தித்தார் இறைவனையும் அன்னையையும். அவருக்கு வரம் அளிக்க இறைவன் அன்னையுடன் நேரிலே வந்தார். இறைவனும் விஷ்ணுவுக்கு வரம் அளித்தார். அப்போது அவர் அன்னையுடனும் ஸ்கந்தனுடனும் சோமாஸ்கந்தனாக வந்திருந்த கோலம் விஷ்ணுவின் மனதை மிகவும் கவர்ந்தது. இந்தக் கோலத்திலேயே தான் பூஜிக்க ஒரு சிற்பம் வேண்ட இறைவனும் அருளினார். அந்த மூர்த்தம் தான் இந்தத் தியாகராஜா இவர் தான் சப்த விடங்கர்களில் முதல்வர். முதல் முதல் விஷ்ணுவிடம் இருந்தவர். இவரின் இந்தக் கோலத்தை மனதிலேயே நினைத்து நினைத்து விஷ்ணு அந்தக் கோலத்துக்கு ஏற்றத் தாளத்தை மனதிலேயே கொண்டு வந்து திரும்பத் திரும்ப நினைக்க இறைவனின் நாட்டியக் கோலம் தென்பட்டது அவருக்கு. மனதிலே தாளத்தைச் சொல்லிக் கொண்டதாலும் இறைவனின் அந்தத் தோற்றம் தவளையை நினைவுறுத்துவதாயும் இருந்தமையால் இந்தத் தாளத்துடன் கூடிய வடிவுக்கு அஜபா நடனம் என்ற பெயர் ஏற்பட்டதாய்த் திருவாரூர்த் தல புராணம் சொல்லுகிறது. பின்னர் அந்த விக்ரஹம் ராஜா முசுகுந்தனுக்கு விஷ்ணு அளித்ததாகவும் அதை இந்திரன் கவர்ந்து கொண்டு சென்றதாயும் இந்திர லோகம் சென்று முசுகுந்தன் விக்ரஹத்தைத் திரும்பக் கேட்கும்போது ஒரே மாதிரியான 7 வடிவங்களை இந்திரன் காட்டி இவற்றில் உன்னுடையது எதுவெனத் தெரிந்து நீயே எடுத்துக் கொள் என்றதாயும் இறை அருளால் உண்மையான சிலா வடிவை முசுகுந்தன் கண்டறிந்ததாயும் கூறுகின்றனர். அவனுடைய இறை பக்தியை மெச்சியே இந்திரன் 7 விடங்கர்களையும் அளித்ததாயும் அவையே முன் பதிவுகளில் வந்த கோவில்களில் நிறுவப் பட்டதாயும் கூறுகின்றனர். இதை இங்கேயே நிறுத்திக் கொள்கிறேன்.

கோயில் என்றால் சைவர்களுக்குச் சிதம்பரம் தான். வைணவர்களுக்கோ ஸ்ரீரங்கம் தான் கோயில். இங்கே நடராஜா விழித்துக் கொண்டு இடை விடாது ஆடிக் கொண்டே இருக்கிறார். அங்கேயோ மாறாக ரங்கராஜா நீள நெடுகப் படுத்துக்கொண்டு தூங்கிக் கொண்டே இருக்கிறார். என்றாலும் இருவரின் தொழிலும் நடைபெற்று வருகிறது. சிதம்பரம் கோயிலைப் பல சிவனடியார்களும் வைணவ அடியார்களும் வணங்கி வந்தாலும் குறிப்பிடத் தக்கவர்களில் வியாக்ரபாதர், பதஞ்சலி, வியாக்ரபாதரின் மகன் உபமன்யு, ஜைமினி ரிஷி, பிருங்கி ரிஷி, இந்திரன், வருணன் போன்றோர் குறிப்பிடத் தக்கவர்கள். சரித்திர பூர்வமாய்ப் பார்த்தோமானால் மன்னன் ஹிரண்ய வர்மன் காலத்தில் இருந்து திருநீல கண்டர், திருமூலர், மாணிக்க வாசகர், திருஞான சம்மந்தர், அப்பர், சுந்தரர், நந்தனார் போன்ற நாயன்மார்களும் பின்னர் வந்த நாட்களில் உமாபதி சிவாச்சாரியார், அப்பைய தீட்சிதர், ராமலிங்க ஸ்வாமிகள் போன்ற சிவனடியார்களும் குலசேகர ஆழ்வார், திருமங்கை ஆழ்வார் போன்ற ஆழ்வார்களும் குறிப்பிடத் தக்கவர்கள்.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ